ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 19

சித்தார்த் தினமும் காலை நேத்ராவை கல்லூரியில் விட்டு விட்டு, மருத்துவமனைக்கு செல்ல தொடங்கினான். மாலையில் அவளை அழைத்து வர வேறொரு டிரைவரை ஏற்பாடு செய்திருந்தான்.​

மருத்துவகல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்ததே பெரிய விஷயம், இதில் தினமும் காரில் சென்று வருவது சற்று அதிகப்படியாகவே தோன்றியது அவளுக்கு. கணவனிடம் எத்தனையோ முறை, “நான் பஸ்ஸில் போயிட்டு வர்றேனே” என்றாள் தயக்கத்துடன்.​

சித்தார்த் பதில் ஏதும் பேசாமல் அவளை அழுத்தமாக பார்க்கவும், அமைதியாகி போனாள். இப்படியே ஒரு வாரம் கழிந்தது. சித்தார்த் வழக்கம்போல இரவு உணவை முடித்ததும் படுக்கையை நோக்கி செல்லும் போது நேத்ரா தன் இடத்திற்கு செல்லாமல் தயங்கி நின்றாள்.​

“என்ன?” என்றான் புருவம் உயர்த்தி​

“இன்னைக்கு நடத்தின சப்ஜெக்ட்ல கொஞ்சம் டவுட் இருக்கு. உங்களுக்கு டயர்டா இல்லைனா கொஞ்சம் சொல்லித் தரீங்களா?” என்றாள்.​

உண்மையில் அன்று சித்தார்த்துக்கு அதிகமான வேலையால் சோர்வாக தான் இருந்தான். முதல்முறையாக பாடத்தில் சந்தேகம் கேட்கிறாளே என்று, “சரி உன் புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா, சொல்லி தரேன்” என்றான்.​

உடனே புத்தகங்களை எடுத்து வந்து அவன் கட்டில் முழுவதும் பரப்பி வைத்தாள். சித்தார்த்தும் சுவாரசியமாக தனக்கு பிடித்த மருத்துவ பாடங்களை பற்றி விளக்கி கூறினான். நேத்ராவிற்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கல்லூரியில் பாடம் நடத்திய பேராசிரியர்களை விட சித்தார்த் விளக்கியது நன்கு புரிந்தது. கன்னத்தில் கைவைத்தபடி அவன் பேசுவதையே ஆர்வமாக பார்த்திருந்தாள்.​

முதன் முறையாக தன் கணவனுடன் மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து, அவன் பேச பேச கேட்டுக் கொண்டிருந்தாள். சித்தார்த்தின் அருகாமையும், பிரத்தேயக வாசனையும் அவளின் கவனத்தை திசை திருப்பியது. ஒரு கட்டத்திற்கு மேல் நயனியின் நயனங்கள் தன்னவனின் மேல் ஆராய்ச்சியாக படிந்தது.​

அலையலையான கேசம் நெற்றியில் விழுந்து கொண்டிருக்க, லாவகமாக ஒற்றைக் கையால் அதை புறந்தள்ளிக் கொண்டிருந்தான், அகன்ற நெற்றியில் அடர்த்தியாய் புருவம், கூரான நாசி, அவனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதற்கு சாட்சியாக அவனின் அழுத்தமான உதடுகள் சிவந்திருந்தன. கருகருவென்று அடர்த்தியான மீசை, அவன் முகத்திற்கு அழகாக இருந்தது.​

தாடியை டிரிம் செய்யாமல் விட்டிருக்கிறான். முன்பை விட கொஞ்சம் அதிகம் வளர்ந்திருந்தது. தூங்க போவதால் இலகுவான மேல் சட்டையில் பட்டன் போடாமல் விட்டிருந்தான். சட்டையின் வழியே தெரிந்த அவனின் வெற்றுடம்பில் சதைக் கோளங்கள் உருண்டு திரண்டு இருந்தன. வயிறு ஒட்டியிருந்தது.​

சித்தார்த் புத்தகத்தை பார்த்துக் கொண்டே விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தவன், “புரியுதா?” என்றான். அவளிடம் பதில் இல்லாமல் போகவும் நிமிர்ந்து அவளை பார்த்தான். கட்டிலின் மேல் அவன் எதிரே குத்துகாலிட்டு, கன்னத்தில் கைவைத்தபடி சற்று குனிந்த வாக்கில் அவள் அமர்ந்திருந்த விதத்தை பார்த்து மூச்சடைத்தது அவனுக்கு. மீண்டும் சட்டென புத்தகத்தை நாேக்கி குனிந்தவன், “நயனி” என்றான். அவளிடம் பதில் இல்லாமல் போகவும் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். நயனியின் நயனங்கள் அவன் வெற்றுடம்பில் பதிந்திருந்தன.​

“நயனி” என்றான் சத்தமாக​

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், “ம்” என்றாள்.​

“இப்போ கல்லூரி பாடம் எடுக்கவா? இல்லை காதல் பாடம் எடுக்கவா?” என்றான் ஆழ்ந்த குரலில், அவள் நயனங்களை ஊடுருவும் பார்வை பார்த்தபடி.​

திக்கென்றது அவளுக்கு, உடனே தலையை கவிழ்ந்துக் கொண்டு. “இல்லை சாரி, தாடி ரொம்ப வளர்ந்திருக்கேன்னு பார்த்தேன், வேறொண்ணும் இல்லை” என்றாள் திக்கி திணறியபடி​

“அப்படியா, தாடி இங்கேயா இருக்கு?” என்று தன்னையே குனிந்து பார்த்தான்.​

நயனிக்கு தன் கையாலேயே தலையில் குட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. தலை குனிந்தவள் நிமிராமல், “கொஞ்சம் சர்ட் பட்டனை போட்டுக்கிறீங்களா ப்ளீஸ்” என்றாள் மெல்லிய குரலில்.​

“அப்போ நீயும் உன் சுடிதார் மேல துப்பட்டா போட்டுட்டு வா” என்றான் ஆழ்ந்த குரலில்.​

திடுக்கிட்டு போய் தன்னை குனிந்து பார்த்தாள். வீட்டில் இருப்பதால் துப்பட்டா அணிந்திருக்கவில்லை. அவன் எதிரே சற்றே குனிந்த படி அமர்ந்திருந்ததால்… அய்யோ அதனால் தான் அவன் நிமிராமல் புத்தகத்தையே பார்த்தபடி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தானா? வெட்கம் பிடுங்கி தின்றது அவளுக்கு.​

ஓடிச்சென்று துப்பட்டாவை எடுத்தவள் கழுத்தை சுற்றி போட்டு, தன்னை முற்றிலும் மறைத்துக் கொண்டு வந்து அவன் எதிரே அமர்ந்தாள். அவளை அழுத்தமாக பார்த்தவன், “இதுல எல்லாம் விவரமா இருப்பாளே” என்று எண்ணியபடி தன் சட்டை பட்டனை போட்டுக் கொண்டான்.​

அதன்பிறகு மேலும் சில மணி நேரம் அவளுக்கு சொல்லிக் கொடுக்க, அவளும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் தூக்கத்தினால் சோர்ந்திருப்பதை கண்டவன், “இன்னைக்கு இது போதும், போய் தூங்கு” என்றான்.​

“ம், வந்து ரொம்ப தேங்க்ஸ். நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. நீங்க பேசாமல் எங்க காலேஜ்ல புரபசராக இருந்து இருக்கலாம். எனக்கு பரவாயில்லை, நீங்க சொல்லீட்டிங்க. மத்தவங்களுக்கும் சரியா புரிஞ்சு இருக்காதுனு நினைக்கிறேன்” என்றாள் நேத்ரா மனதை மறைக்காமல்.​

“ஏன் காலேஜ்ல பாடம் சரியா நடத்தலையா?” என்று கேட்டான் யோசனையுடன்.​

“நடத்துறாங்க தான். ஆனால் புரிஞ்ச மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். உங்களை போல தெளிவா சொல்ல மாட்டாங்க” என்றாள் நேத்ரநயனி.​

“சரி, இனி நான் புரபசராக வர்றதெல்லாம் நடக்காத காரியம். தினமும் நான் சொல்லி கொடுக்கறதை உன் பிரண்ட்ஸ்க்கும் தேவைப்பட்டா சொல்லிக் கொடு” என்றான்.​

“ஓகே, தேங்க்ஸ்” என்றவள் தன் புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, அவள் படுக்கையின் அருகே இருந்த அலமாரியில் வைத்துவிட்டு வந்து அவன் முன்னே நின்றாள்.​

“என்ன?” என்றான் கேள்வியாக​

“குட்நைட்” என்றாள் சிநேகமாக அவனை பார்த்து சிரித்து​

“ம் நல்ல முன்னேற்றம் தான்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி “குட்நைட்” என்று புன்னகைத்தான்.​

அதற்கடுத்த நாளில் இருந்து இருவரும் சற்று சகஜமாக பேச தொடங்கியிருந்தனர். நேத்ரநயனியும் யாரோ போல் அவனிடம் ஒதுங்கி இருக்காமல், அவன் மருத்துவமனையில் இருந்து வந்ததும், அவனருகே சென்று அன்று கல்லூரியில் நடந்தவற்றை பற்றி பேச ஆரம்பித்து விடுவாள்.​

அவள் ஆர்வமாக சொல்வதால் சித்தார்த்தும் முகம் கோணாமல், அவள் பேச்சை கேட்டபடி அவளுடன் சாப்பிட்டு முடிப்பான். இரவில் கொஞ்ச நேரம் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு உறங்கி விடுவான்.​

வீட்டில் இருந்த வேலைக்காரர்களுக்கு இப்போது சித்தார்த்தும் நயனியும் மனமொத்த தம்பதிகள் போல காட்சியளித்தனர். சரோஜாவும் வேலுவும் நயனியிடம் மிகுந்த மரியாதையுடன் நடக்க தொடங்கியிருந்தனர்.​

அன்று சித்தார்த் மருத்துவமனை போகாமல் கேஷூவல் உடையணிந்து கொண்டிருந்தான். “இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலையா?” என்றாள் நயனி​

“இல்லை இன்னைக்கு தான் அப்பா வரப்போறாரே. அவர்கூட கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சு, லேட்டா வர்றதாக சொல்லியிருக்கேன்” என்றான்.​

“அப்போ நானும் இன்னைக்கு காலேஜூக்கு லீவு போட்டுடட்டமா?” என்றாள்​

“இல்லை நான் போய் அப்பாவை கூட்டிட்டு வர்றேன். நீ ரெடியாயிட்டு இரு. அவர் வந்ததும் அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, நீ காலேஜ் போயிடு. ஈவ்னிங் அவர்கிட்ட பேசிக்கலாம்” என்றான்.​

“இல்ல நானும்..” என்று தயங்கியவளை, “அப்பா எதுவும் நினைச்சிக்க மாட்டார். நீயும் டாக்டருக்கு படிக்கிறனு தெரிஞ்சா சந்தோஷம் தான் படுவார். அவரே உன்னை லீவு எடுக்க விடமாட்டார்” என்றான்.​

சம்மதமாக தலையசைத்துவிட்டு, கல்லூரிக்கு தயாராக சென்றாள். சித்தார்த் ஏர்போர்டிற்கு தன் தந்தையை அழைத்து வரச் சென்றான். இன்ப அதிர்ச்சியாக மகேந்திரனுடன் அவன் அக்கா பவிஷ்காவும் அவளின் செல்ல மகள் ரம்யாவும் வந்திருந்தனர்.​

ரம்யா சித்தார்த்தை கண்டதும், “மாமா” என்று பாய்ந்து ஓடி வந்து அவன் மேல் ஏறிக் கொண்டாள். அவளை அள்ளி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டபடி,​

“வாட் எ சர்ப்பரைஸ், ஏய் பவிக்கா, நீ வர்றதா சொல்லவே இல்லை” என்றான் சித்தார்த் சந்தோஷமாக.​

“உன் கல்யாணத்துக்கு தான் வர முடியல. உன் பொண்டாட்டியை பார்த்து அறிமுகமாவது ஆக வேண்டாமா? அதுதான் உன் மாமாவையே அங்கே பார்த்துக்க சொல்லிட்டு அப்பா கூட வந்துட்டேன்” என்றாள் பவிஷ்கா சிரித்துக் கொண்டே​

சித்தார்த் தந்தையின் முகஜாடை என்றால், பவிஷ்கா அவர்கள் தாயின் முக ஜாடை. ஐந்தடியில் சற்றே பூசினாற் போன்ற உடல்வாகுடன் இருப்பாள். ஆனால் நிறம் மட்டும் சித்தார்த்தை போல நல்ல சிவந்த நிறம்.​

“சரி வா போகலாம்” என்றபடி அக்காவின் தோள்மேல் கைப்போட்டபடி நடந்தான் சித்தார்த்.​

“இல்லடா, உங்க மாமா வீட்டு சொந்தகாரங்க எல்லாம், அது வேணும் இது வேணும்னு ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருந்தாங்க. அதெல்லாம் லக்கேஜ்ல போட்டு எடுத்து வந்திருக்கேன். நான் முதல்ல அவங்க கிட்ட எல்லாத்தையும் கொடுத்திட்டு சாவகாசமாக இரவு எட்டு மணிக்கு மேல் வர்றேன், நீ அப்பாவை மட்டும் கூட்டிட்டு போ. நான் டாக்சியில் போய்க்கிறேன்” என்றாள் பவிஷ்கா.​

“சரி, ரம்யா குட்டி எங்க கூட வரட்டும். நீ மட்டும் போய் எல்லாத்தையும் கொடுத்திட்டு பேசிட்டு வா. எப்போ வர்றியோ எனக்கு போன் பண்ணு, நானே கார் எடுத்திட்டு வர்றேன்” என்றான் சித்தார்த்.​

“இல்ல சித்து. என் மாமியார் வீட்டில் அவளையும் கேப்பாங்க. ரம்யாவும் என் கூட வரட்டும். எனக்கென்ன நம்ம வீட்டுக்கு வர வழி தெரியாதா? நானே வந்துடுவேன். தேவைப்பட்டா உனக்கு போன் பண்றேன்” என்ற பவிஷ்கா தம்பியின் உதவியுடன் கொண்டுவந்திருந்த லக்கேஜ்களை எல்லாம் டாக்சியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினாள்.​

காரில் தந்தையுடன் பேசிக் கொண்டே வீட்டை அடைந்தான் சித்தார்த்.​

நேத்ரா கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாகி அமர்ந்திருந்தவள், மகேந்திரனை கண்டதும், “மாமா” என்று ஓடி அவர் காலில் விழுந்து வணங்கினாள்.​

“நல்லா இரும்மா, ரொம்ப சந்தோஷம்மா. சித்தார்த் உன்னை மருத்துவம் படிக்க காலேஜ் சேர்த்திருக்கானாமே. நல்லா படிச்சு நீயும் டாக்டர் ஆயிட்டால், சித்துக்கு கொஞ்சம் வேலை சுமை குறையும். இரண்டு பேரும் சேர்ந்து ஆஸ்பிட்டல் நிர்வாகத்தை பார்த்துக்கலாம்” என்றவர் மேலும் தொடர்ந்து​

“ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம் தான்” என்றார் சற்று கவலையாக​

“என்ன மாமா அது” என்றாள் நேத்ரா பதட்டமாக. சித்தார்த்தும் கேள்வியுடன் தந்தையை பார்த்தான்.​

“சீக்கிரம் குழந்தையை பெத்துக் கொடுக்க சொல்லி கேட்ட நானே, இப்போதைக்கு குழந்தை எல்லாம் வேண்டாம்னு சொல்லும்படி ஆயிடுச்சு. உடனே குழந்தை குட்டினு ஆயிட்டால் உனக்கு படிப்புல கவனம் குறையும். அதனால கொஞ்ச வருஷம் இதெல்லாம் தள்ளிப்போடறது நல்லது” என்றவர் சித்தார்த்திடம் திரும்பி, “சித்து நான் சொல்றது புரியுது இல்ல?” என்றார்.​

“இல்லனா மட்டும் உங்க மருமக குழந்தை குட்டினு பெத்து தள்ளிடுவா பாருங்க” என்று மனதிற்குள் முனகிக் கொண்டு நயனியை அழுத்தமாக பார்த்தான்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அவள் குனிந்த தலையை நிமிரவே இல்லை. “சித்து உன்கிட்ட தான் கேட்கிறேன்” என்றார் மகேந்திரன் மீண்டும்.​

“டாடி, ஐ நோ தீஸ் ஆல், ஐ வில் டேக் கேர்” என்றபடி நேத்ராவிடம் திரும்பி, “நயனி கிளம்பு போகலாம்” என்றான்.​

நேத்ரா தன் மாமானாரிடம் சொல்லிக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள். ஆனால் அன்று மாலை வழக்கத்துக்கும் மாறாக சற்று சீக்கிரமாக வீட்டிற்கு வந்தவள், மாமனாருக்காக தானே உணவு தயாரிக்க சமையலறைக்கு சென்றாள்.​

அவருக்காக விதவிதமாக சமைத்து டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போதே சித்தார்த் உள்ளே நுழைந்தான். “பார்த்தியா சித்து, என் மருமகள் எனக்காக விருந்தே சமைச்சு வச்சிருக்காள்” என்றபடி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார் மகேந்திரன்.​

நயனியை பார்த்து முறைத்தபடி வந்தான் சித்தார்த். இத்தனை நாளில் ஒரு நாள் கூட அவள் அவனுக்காக சமைத்ததே இல்லை. ஏன் ஒரு காபி கூட கொடுத்ததில்லை. அவன் மனப்போக்கை உணராதவளாக, “வாங்க நீங்களும் மாமா கூட உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றாள்.​

“இல்ல எனக்கு வேண்டாம்” என்றான் சித்தார்த் பட்டென்று​

“சித்து, சமைக்கும் போதே வாசனை நல்லா இருந்ததுடா, எப்போ என் மருமக சாப்பிட கூப்பிடுவாள்னு காத்திட்டு இருந்தேன். சும்மா பிகு பண்ணாமல் என்கூட வந்து சாப்பிடு” என்றார் மகேந்திரன்.​

வேறுவழியில்லாம் மனைவியை அழுத்தமாக பார்த்தபடி சாப்பாட்டு மேஜை அருகே அமர்ந்தான். முதன்முறையாக கணவனுக்கு உணவு பறிமாறினாள். சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மாசாலாவையும் எடுத்து வாயில் வைத்தவன், அதன் ருசியில் மெய்மறந்து போனான். நேத்ரா கணவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். முதன்முறையாக சமைத்திருக்கிறாள், அவன் எப்படியிருக்கு என்று சொல்வானா? என்று சித்தார்த்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.​

சித்தார்த்தோ, அவ என்ன எனக்காகவா சமைச்சா? அவளோட மாமனாருக்காக சமைச்சிருக்கா என்று மனசுக்குள் புகைந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நேத்ரா ஆர்வமாக கணவனை பார்ப்பதும், அவன் கண்டுக் கொள்ளாமல் உண்பதையும் கவனித்த மகேந்திரன், “மருமகளே, அருமையா சமைச்சிருக்க மா, என் மனைவி இறந்ததுக்கு அப்புறம் இப்போ தான் இவ்வளவு ருசியா சாப்பிடுறேன். என் மகன் ரொம்ப கொடுத்துவைத்தவன், என்ன சித்து சொல்றே?” என்று மகனையும் தன் பேச்சில் இழுத்தார்.​

“இந்த மாதிரி சாப்பாடு எல்லாம் தினமும் சாப்பிடக்கூடாது, ஹெவி கொலஸ்ட்ரால்” என்றான் வேண்டுமென்றே.​

அவள் என்ன தினமுமா செய்ய போகிறாள்? நல்லா இருக்குனு சொன்னால் குறைஞ்சுடுவானா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.​

சித்தார்த் பவிஷ்கா தான் வந்திருப்பாள் என்று நினைத்தவனாக சாப்பாட்டிலிருந்து எழ எத்தனித்தான்.​

“பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்திரிக்காதீங்க, நான் யாருனு பார்க்கிறேன்” என்றவள் வாசலை நோக்கி சென்றாள்.​

கதவை திறந்ததுதும் பவிஷ்கா நின்றிருந்தாள். நேத்ராவை பார்த்து சிநேகத்துடன் சிரித்து, “ஹாய்” என்றாள்.​

நேத்ராவோ புருவம் சுருக்கி வந்திருந்தவளை ஆராய்ச்சியாக பார்த்தாள். இவங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்தவள், “நீங்க அந்த அபியோட அக்கா தானே?” என்றாள் அழுத்தமாக​

சிறுவயதில் சித்தார்த்தின் அம்மா அவனை அபிமன்யு என்று தான் அழைப்பார்கள். அதனால் மகேந்திரனின் சொந்த ஊருக்கு அவர்கள் செல்லும்போதெல்லாம் சித்தார்த்தை அந்த ஊரில் இருக்கும் அவன் நண்பர்கள் அபி என்று தான் அழைப்பார்கள்.​

எனவே பவிஷ்கா, “ஆமா நான் அபியோட அக்கா தான்” என்றாள்.​

“உங்களை தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்” என்றாள் நேத்ரா.​

“என்னையா? எதுக்கு?” என்றாள் பவிஷ்கா ஒன்றும் புரியாமல்.​

“உங்களைனா உங்களை இல்லை, உங்க தம்பி அபியை. அவனை தான் ரொம்ப வருஷமா தேடிட்டு இருக்கேன். அவன் மட்டும் என் கையில் கிடைச்சான்னா நல்லா நாலு வார்த்தையாவது கேட்கணும்னு வெறியோட இருக்கேன். எங்கே அவன்? உங்களோட வந்திருக்கானா?” என்றாள் சற்று கோபமாக.​

வாசலுக்கு சென்றவள் ஏதோ சத்தமாக பேசுவது போல தோன்றவும் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவசரமாக எழுந்து வெளியே வந்தனர்.​

அங்கே நேத்ரா வாசலிலேயே பவிஷ்காவை நிற்க வைத்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள்.​

“நேத்ரா என்னாச்சும்மா?” என்றபடி மகேந்திரன் அவள் அருகில் வந்து நின்றார். மகளை கேள்வியாக பார்க்க, அவளோ தோளை குலுக்கி உதடு பிதுக்கினாள்.​

“இல்ல மாமா? இவங்களோட தம்பி சரியான பொறுக்கி பையன். அதனால தான் அவங்க கிட்ட அவங்க தம்பியை பத்தி விசாரிச்சுட்டு இருக்கேன்” என்றாள் நேத்ரா.​

சித்தார்த்துக்கு பலமாக புரை ஏறி விட்டது. தலையில் தட்டிக் கொண்டே பவிஷ்காவை அழுத்தமாக பார்த்தான். அவளும் தம்பியை பார்த்துக் கொண்டே, “ஏன் என்னை மட்டும் அடையாளம் தெரியுதே. என் தம்பியை உனக்கு அடையாளம் தெரியலயா?” என்றாள் கிண்டலாக​

“அவன் சைக்கிள்ல வேகமாக வருவான், நல்லா நெடுநெடுன்னு உயரமா இருப்பான். என்னை சோடாபுட்டினு சொல்லிட்டு வேகமா போயிடுவான். அவன் முகம் சரியா எனக்கு நினைவில் இல்ல. ஆனால் அவன் உங்க தம்பி என்றும் அவன் பேரு அபி என்றும் எனக்கு தெரியும். முழு பேர் அபிஷேக்கா?” என்றாள் நேத்ரா யோசனையாக பவிஷ்காவை பார்த்து.​

சித்தார்த்தும் பவிஷ்காவும் இப்போது அர்த்ததுடன் பார்வையை பறிமாறிக் கொண்டார்கள். மகேந்திரனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.​

“என்னம்மா சொல்றே? புரியற மாதிரி சொல்லு” என்றார்​

“மாமா, நான் ஆறாவது படிக்கும் போது கண்ணாடி போட வேண்டியதா போயிடுச்சு, நானே அந்த கவலையில் இருந்தால், இவங்க தம்பி அபி என்னை எப்போ பாரு சோடாபுட்டினு கிண்டல் பண்ணுவான் மாமா. இத்தனைக்கும் என்னைவிட எவ்வளவு பெரியவன் தெரியுமா? என்னை எங்கே பார்த்தாலும் சோடாபுட்டினு சொல்லிட்டு சைக்கிள்ல வேகமா போயிடுவான்.​

அவனால என்னோட பிரண்ட்ஸ், ஸ்கூல்லனு எல்லா இடத்திலயும் சோடாபுட்டினு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. என் பேரே எனக்கு மறக்கிற அளவுக்கு போயிடுச்சு. எல்லாரும் என்னை அப்படி கூப்பிட்டதால எனக்கு ஏதோ குறைனு நானே நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அவனால என்னோட தன்னம்பிக்கையே போச்சு.​

எப்படியும் யாராவது ஒருத்தராவது ஒரு நாளாவது சோடாபுட்டினு கூப்பிடாமல் இருக்க மாட்டாங்க. அப்படி அவங்க கூப்பிடும் போதெல்லாம் நான் இவங்க தம்பியை தான் மனசுக்குள்ள திட்டிப்பேன். உங்க மகன் கூட ஒருநாள் அப்படி கூப்பிட்டாரு, அப்பவும் எனக்கு அவன் மேல தான் கோபமா இருந்தது. என்னைக்காவது ஒருநாள் அவன் என் கையில் சிக்கினால் அவன் நாக்கு புடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்காமல் விடக்கூடாதுன்னு நினைச்சுப்பேன். ஆனால் அவனோ இல்ல அவனோட அக்காவான இவங்களோ இதுநாள்வரைக்கும் என் கண்ணில் பட்டதே இல்லை.​

இன்னைக்கு தான் இவங்களை பார்க்கிறேன். அதனால தான் இவங்க தம்பி எங்கேனு கேட்டுட்டு இருக்கேன்” என்றாள் ஆத்திரத்துடன்.​

அதிர்ச்சியுடன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சித்தார்த் சிறு வயதில் அவளை கிண்டல் செய்தது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் அது அவள் மனதை மிகவும் காயப்படுத்திய இருக்கிறது என்பது அவள் பேச்சில் இருந்தே மூவருக்கும் புரிந்தது.​

இப்போது பவிஷ்காவை எப்படியும் உள்ளே அழைத்து தானே ஆகவேண்டும்? அவள் யாரென்று நேத்ராவிடம் அறிமுகம் செய்வது? அந்த அபி தான் இந்த சித்தார்த் அபிமன்யு என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ?​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 20

அதிர்ந்து ஒரு வார்த்தைக்கூட பேசாதவள் இப்போது லோக்கல் ரவுடி போல பேசறாளே என்று இமைக்காமல் மனைவியையே அழுத்தமாக பார்த்திருந்தான் சித்தார்த்.​

பவிஷ்காவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. பொங்கி வந்த சிரிப்பை தம்பியின் முறைப்பால் அப்படியே கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள். மகேந்திரனுக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தார்.​

“சொல்லுங்க, உங்க தம்பி எங்கே? அவர்கிட்ட நான் பேசியே ஆகணும், எதுக்கு என்னை அப்படி கூப்பிட்டாருனு கேட்கணும்” என்றாள் நேத்ரநயனி.​

பவிஷ்கா இப்போது தம்பியை என்ன செய்யட்டும் என்பது போல பார்க்க, அவனோ தொண்டையை செருமிக் கொண்டு, “நயனி, இவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட், வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாமல் நடந்துப்பியா?” என்றான் சற்று அழுத்தமான குரலில்.​

“என்னது கெஸ்டா?” என்று பவிஷ்காவும் மகேந்திரனும் அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்க்க, அவனோ கண்களால் இமைத் தட்டினான்.​

“இல்லங்க அதுவந்து ரொம்ப நாளா இவங்களையும் இவங்க தம்பியையும் மனசுக்குள்ள திட்டிட்டே இருந்ததால நேர்ல பார்த்ததும் படபடன்னு பேசிட்டேன். இவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்டா? எதுக்காக வந்திருக்காங்க?” என்றாள் கணவனை பார்த்து.​

“அது” என்றவன் தலையை கோதியபடி, “இவங்களும் டாக்டர் தான். இவங்களோட ஹஸ்பண்ட் என்னோட பிரண்ட், நம்ம ஆஸ்பிட்டல்ல இவங்களுக்கு வேலை போட்டு கொடுக்க சொன்னான். அது சம்மந்தமா பேச வந்திருப்பாங்கனு நினைக்கிறேன்” என்றபடி அவன் கெஞ்சுதலாய் அக்காவை பார்க்க, அவள் அவனை எரித்து விடுவது போல முறைத்துக் கொண்டிருந்தாள்.​

நிலைமையை அப்போதைக்கு அப்படியே சமாளிக்க எண்ணிய மகேந்திரனும் பவிஷ்காவை பார்த்து, “உள்ளே வாம்மா” என்றார்.​

நேத்ரா எதுவும் பேசாமல் ஒரு வித இறுக்கத்துடன் நின்றிருக்க, பவிஷ்கா தன் தந்தையையும் தம்பியையும் முறைத்தபடி உள்ளே வந்தாள்.​

அதே சமயம் பவிஷ்காவை வீட்டில் டிராப் செய்ய வந்திருந்தான், பவிஷ்காவின் மச்சினன் சங்கர். காரை பார்க் பண்ணி விட்டு ரம்யாவை கையில் தூக்கியபடி உள்ளே வந்தவன், “அண்ணி எனக்கு அவசரமா வேலை இருக்கு. நான் அப்புறமா வந்து உங்களை பார்க்கிறேன்” என்றபடி ரம்யாவை கீழே இறக்கி விட்டு​

“ஹாய் அபி, ஹவ் ஆர் யு? சாரி இப்போ அவசரமா கிளம்பறேன். இன்னொரு நாள் முறையா வந்து உன்னையும் உன் மனைவியையும் விருந்துக்கு அழைக்கிறேன்” என்று சித்தார்த்தை பார்த்து சொன்னான்.​

சங்கரின் அபி என்ற அழைப்பில் நேத்ரா அதிர்ச்சியுடன் திரும்பி சித்தார்த்தை சந்தேகத்துடன் ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.​

சங்கர் இப்போது மகேந்திரனிடம் திரும்பி, “போய்ட்டு வர்றேன் மாமா, உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் கைகளில் இருந்து இறங்கிய சிறுமி ரம்யா தன் மாமனை கண்டதும் ஓடிச் சென்று அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.​

பவிஷ்கா “இப்போ என்ன சொல்ல போறே?” என்று கிண்டலுடன் தன் தம்பியை பார்த்தாள். சித்தார்த் ரம்யாவின் கரத்தை பற்றிக் கொண்டு, திடுக்கிடலோடு மனைவியை திரும்பி பார்த்தான்.​

நயனியோ தன் நயனங்களால், சித்தார்த்தையும் ரம்யாவையும், பவிஷ்காவையும் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள். மகேந்திரன் தனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை என்பது போல “சரி பேசிட்டு இருங்க, எனக்கு டயர்டா இருக்கு, நான் போய் படுக்கறேன்” என்றபடி எஸ் ஆகி போனார்.​

சித்தார்த் தன்னை எப்போதும் போல தூக்கி கொஞ்சுவான் என்று தலையை நிமிர்ந்து மாமனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஆனால் அவனோ நயனியையே பார்த்துக் கொண்டிருக்க, பொறுமையிழந்தவளாய், “மாமா, எவ்வளோ நேரம் அந்த ஆன்டியையே பார்த்திட்டு இருப்ப? தூக்கு என்னைய?” என்றாள் மழலைக் குரலில்.​

சித்தார்த் நயனியை பார்த்தபடி ரம்யாவை தன் ஒற்றைக் கையால் தூக்கிக் கொண்டான். அவள் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டபடி, “மாமா, உன் அக்கா ரொம்ப மோசம், ஒரு ஐஸ் கீரிம் கூட வாங்கி தரமாட்டேங்கிறாங்க. என்னை கூட்டிட்டு போய் ஐஸ் கீரம் வாங்கி தர்றீயா?” என்றபடி ரம்யா சித்தார்த்தின் கழுத்தை தன் கைகளால் மாலையாக கோர்த்துக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.​

நேத்ரநயனி அதிர்ச்சியுடன் இப்போது பவிஷ்காவையும் சித்தார்த்தையும் மாறி மாறி பார்த்தாள்.​

“இவங்க உங்க பிரண்டோட மனைவினு சொன்னீங்க? இந்த பாப்பா உங்களை மாமானு கூப்பிடுறாளே?” என்றாள் சந்தேகத்துடன்.​

பவிஷ்கா “கேளு கேளு நல்லா கேளு” என்று மனதிற்குள் கொக்கரித்தபடி தம்பியை பார்க்க, அவன் அக்காவை கண்களால் அடக்கியபடி, “இவளுக்கு அப்படியே கூப்பிட்டு பழக்கமாயிடுச்சு” என்று திணறினான்.​

என்னை பார்த்து பயந்துகிட்டு புள்ளபூச்சி மாதிரி இருந்தா, இப்போ இவளுக்கெல்லாம் நான் பயப்படுற மாதிரி ஆயிடுச்சே என்று மனசுக்குள் புலம்பினான்.​

ரம்யா, பவிஷ்காவை காட்டி அக்கானு சொன்னது நினைவில் வர, நேத்ரா நேரடியாக ரம்யாவை பார்த்து, “ஹாய் குட்டிமா, உங்க பேர் என்ன?” என்றாள்.​

“ஐயம் ரம்யா டாட்டர் ஆப் செல்வா பவிஷ்கா ப்ரம் யுஎஸ்” என்றாள் மிடுக்குடன்.​

“வெரி குட், எப்போ இந்தியா வந்தீங்க? யாரெல்லாம் வந்தீங்க?” என்றாள்​

“நான் அம்மா, தாத்தா கூட வந்தேன். அப்பா யுஎஸ்ஸில் இருக்கார்” என்றாள் ரம்யா.​

“உன் தாத்தா எங்கே? இங்கே வரலையா?” என்றாள் நயனி.​

“இப்போ தானே டயர்டா இருக்குனு சொல்லிட்டு போனாரு, பார்க்கலையா நீங்க அவர?” என்றாள் ரம்யா​

நேத்ரா கண்களால் சித்தார்த்தை காட்டி, “இவர் யாரு உனக்கு?” என்றாள்​

“இவர் என் மாமா, என் அம்மாவோட தம்பி” என்று தன் அன்னையை காட்டினாள்.​

பவிஷ்கா பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள். நேத்ரநயனி இப்போது சித்தார்த்தை அழுத்தமாக பார்த்தபடி,​

“நீங்க தானே அந்த அபி?” என்றாள் அடிக்குரலில்​

சித்தார்த் மிடறு விழுங்கியபடி, தன் அக்காவை பார்த்தான். அவள் குனிந்த வாக்கில் சிரித்துக் கொண்டிருந்தாள்.​

“பதில் சொல்லுங்க? கொஞ்ச முன்னாடி வந்தவர் கூட உங்களை அபின்னு தானே கூப்பிட்டார். இந்த பாப்பாவும் உங்களை மாமானு சொல்றா, அவங்களை அம்மான்னு சொல்றா? அதுமட்டுமில்லாமல் உங்களை அவங்களோட தம்பினு சொல்றாளே? ஆனா நீங்க உங்க பிரண்டோட மனைவினு சொல்றீங்க, எனக்கெதுவும் புரியல. என்கிட்ட மறைக்காமல் உண்மையை சொல்லுங்க? இவங்க உங்க அக்காவா? இல்ல பிரண்டோட மனைவியா?” என்றாள் அழுத்தமாக​

தொண்டையை செருமியபடி, “இரண்டும் தான்” என்றான் பக்கவாட்டாக திரும்பிக் கொண்டு.​

“எனக்கு புரியல? இரண்டும் தான்னா?” என்றாள் நேத்ரா மீண்டும்.​

“அவன் பிரண்டோட மனைவியான நான் அவனோட அக்காவாகவும் இருக்கலாம் தானே” என்றாள் பவிஷ்கா தன் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்துக் கொண்டே​

இப்போது நேத்ரநயனி அதிர்ச்சியுடன் திரும்பி பவிஷ்காவை பார்க்க இனி மறைத்து என்ன ஆகி போகிறது என்று நினைத்துக் கொண்டு, “நீ இத்தனை வருஷமா திட்டிட்டு இருந்த அந்த அபி, சாட்சாத் உன்னோட புருஷன் சித்தார்த் அபிமன்யு தான்” என்றாள் பவிஷ்கா புன்னகையுடன்.​

நயனி தன் நயனங்களால் எரித்து விடுபவள் போல இப்போது சித்தார்த்தை முறைக்க, அவன் தொண்டையை செருமிக் கொண்டு பலமாக இருமுவது போல பாவனை செய்து, “நயனி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாயேன்” என்றான் இருமிக் கொண்டே​

அசையாமல் அழுத்தமாக தன் கணவனை இப்போது தான் பார்ப்பது போல புருவத்தை சுருக்கி ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரநயனி. தன்னை சைக்கிளில் கிண்டல் செய்துவிட்டு போன நெடுநெடுவென்று வளர்ந்திருந்த மெலிந்த உருவத்திற்கும், இப்போது ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் நிற்கும் இந்த உருவத்திற்கும் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தான் இவன் என்று தெள்ள தெளிவாக புரிந்து போனது​

இப்போது நயனியின் கண்களில் சிவப்பு ஏறியது, மூக்கு கோபத்தில் கிளி மூக்கு போல சிவந்து விடைத்துக் காெண்டது. காதில் புகை வராதது தான் குறை என்ற தோற்றத்தில் நின்றிருந்தவளின் முகம் ரத்தமென சிவந்து போக உடல் கோபத்தால் உஷ்ணமானது.​

“இத்தனை நாளாக அவள் மனதின் ஓரத்தில் எப்போதும் உறுத்திக் கொண்டிருந்தவன், அவளுடைய கணவனா? இவனா அவளை எப்போதும் சோடாபுட்டி என்று அழைத்தது? அதனால் தான் திருமணம் ஆன மறுநாளே அன்று கேண்டினில் வைத்து அவளை மீண்டும் சோடாபுட்டி என்று அழைத்திருக்கிறான்” என்று கோபத்துடன் கணவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.​

நயனியின் நயனங்களில் மருண்ட பார்வையை மட்டுமே பார்த்திருந்தவன் இப்போது தான் முதல்முறையாக மனைவியின் கோபப்பார்வையை பார்க்கிறான். தவறு செய்துவிட்டு மாட்டிக்கொண்ட சிறுபிள்ளை போல திருதிருத்தபடி நின்று மனைவியை பாவமாக பார்த்தான் சித்தார்த் அபிமன்யு.​

ரம்யா நிலைமை புரியாமல் இப்போது, “என்னை மட்டும் யாருனு கேட்டீங்க? நீங்க யாருனு சொல்லவே இல்லையே? உங்க பேரு என்ன?” என்றாள் மழலை குரலில்.​

ரம்யாவின் கேள்வி நேத்ராவின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை, சித்தார்த்தை முறைத்துக் கொண்டு விறைப்புடன் நின்றிருந்தாள். அவள் எந்த பதிலும் சொல்லாததால் சித்தார்த்தின் கன்னத்தை திருப்பி தன்னை நோக்கி பார்க்க செய்த ரம்யா, “மாமா இவங்க யாரு? ஏன் நம்ம வீட்ல இருக்காங்க?” என்றாள்.​

சித்தார்த் மனைவியையே பார்த்தபடி “இவங்க பேரு நேத்ரநயனி, நயனினு கூப்பிடுவோம், இவங்க தான் உன்னோட அத்தை” என்றான்.​

“அத்தையா? இவங்க எப்படி திடீர்னு எனக்கு அத்தையானாங்க?” என்றாள் ரம்யா யோசனையுடன்.​

“ரம்யா குட்டி, உன் சித்து மாமா, இவங்களை தான் கல்யாணம் கட்டிக்கிட்டான். மாமாவோட மனைவி உனக்கு அத்தை. அதனால நீ அவங்களை அத்தைனு கூப்பிடணும்” என்றாள் பவிஷ்கா தன் மகளுக்கு விளக்கும் குரலில்.​

இப்போது மாமாவின் தாடையை பற்றி தன்னை நோக்கி மீண்டும் திருப்பியவள், “மாமா, நீ இவங்களையா கல்யாணம் பண்ணிக்கிட்டே?” என்றாள் தன் மாமனிடம் உறுதி செய்துக் கொள்ளும் நோக்கில்.​

அவன் ஆமாம் என்று தலையாட்ட, “நீ அந்த எலிசா ஆன்ட்டியை தானே கல்யாணம் பண்ணிக்க போறதா ஒரு நாள் என்கிட்ட சொன்னே?” என்றாள் தாடையில் ஒற்றை விரலை தட்டிக் கொண்டே யோசிக்கும் பாவனையில்.​

அதிர்ந்தே போனான் சித்தார்த் அபிமன்யு.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அவசரமாக இப்போது மனைவியை திரும்பி பார்த்தவன், இல்லை என்பதாக தலையாட்ட, அவள் கண்கள் இப்போது கோபத்தோடு ஏமாற்றம், வலி, துக்கம், ஆற்றாமை என பலவித நவரசங்களை பிரதிபலித்தன.​

உடல் இறுக விறைத்து நின்றிருந்தவளின் கை விரல்கள் அவள் உள்ளங்கையில் அழுத்தமாக சிறைப்பட்டிருந்தன. கால்விரல்களை நிலத்தில் அழுத்தியபடி நின்றிருந்தவளின் தோற்றமே சொன்னது, தன்னை சமாளிக்க மிகவும் பிரத்யதனபடுகிறாள் என்று.​

அவசரமாக ரம்யாவை கீழே இறக்கிவிட்டு, மனைவியின் அருகே சென்றவன், “நயனி, நான் சொல்றதை கொஞ்சம் …” என்றபடி வந்தவனை நோக்கி கை காட்டி நிறுத்தினாள்.​

எதுவும் பேச வேண்டாம் என்றபடி தன் விரலை வாயின் மேல் வைத்து கை அசைத்து காட்டி விட்டு வேகமாக மாடிப்படியை நோக்கி சென்றாள். கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்தபடி அவள் செல்வதை பார்க்க சித்தார்த்தின் மனது வலித்தது.​

பவிஷ்கா முதலில் சிரித்துக் கொண்டே நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் நேத்ரா அழுதுக் கொண்டே தன் அறைக்கு செல்லவும் அதிர்ச்சியுடன் மெல்ல எழுந்து வந்து தம்பியின் அருகில் வந்து அவன் தோள்மேல் கைவைத்து அழுத்தினாள்.​

“சாரிடா, சித்து. அவள் எல்லா மனைவியை போலவும் உன்கிட்ட காச்சுமூச்சுனு கத்துவா, நீ எப்படி பொட்டிபாம்பா அவ முன்னாடி கைக்கட்டி வாய் பொத்தி நிக்க போறீயோன்னு நினைச்சு, அதை பார்க்க ஆவலா இருந்தது. அதுக்கு தான்டா சிரிச்சுட்டே இருந்தேன். இந்த ரம்யா குட்டி கரெக்டான நேரத்துல இப்படி போட்டு கொடுப்பான்னு நான் நினைச்சுகூட பார்க்கலைடா” என்றாள் பவிஷ்கா உண்மையான வருத்தத்துடன்.​

“சரி விடு, என்னைக்காவது இதெல்லாம் அவளுக்கு தெரிஞ்சு தானே ஆகணும்? என்ன? இப்போ தான் கொஞ்சம் சகஜமா பேச ஆரம்பிச்சா. மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்குவா. எப்படி பேசி அவளை கீழே இறக்கிறதுனு தான் தெரியலை” என்றான் சித்தார்த் யோசனையோடு​

“டேய் அவளை வேதாளம்னு சொல்றியாடா?” என்றாள் பவிஷ்கா சிரித்துக்கொண்டே.​

“அம்மா தாயே” என்று இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பியவன், “அம்மாவும் பொண்ணும் போட்டு கொடுத்ததே இந்த ஆயுசுக்கும் போதும். இதுக்கே அவ என்னை எத்தனை நாள் வச்சு செய்ய போறான்னு தெரியலை. இதுல மறுபடியும் நீ அவகிட்ட போய் அவளை நான் வேதாளம்னு சொன்னேன்னு சொல்லி என் வாழ்க்கையில் கும்மியடிச்சுட்டு போயிடாதே” என்றான்.​

அவன் சொன்ன விதத்தை பார்த்து ரம்யா கிளுக்கி சிரித்தாள்.​

“ஏய் குட்டி சாத்தான், நல்லா போட்டு கொடுத்துட்டு சிரிக்கிறியா?” என்றான் பொய்யாய் முறைத்து.​

“மாமா, ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரலாம் வா” என்று சிணுங்கினாள் ரம்யா​

“அங்கே என் பொண்டாட்டி கொதிச்சு போய் இருக்கா, உனக்கு ஐஸ் கேக்குதா, ஐஸ் இல்லை ஒன்னுமில்ல போ” என்றபடி மாடிப்படியை நோக்கி ஓடினான்.​

அதற்குள் ரம்யா அழ தொடங்கவும் திரும்பி அக்காவை பார்த்து, “பவி, காலையிலேயே அவள் ஐஸ் கேப்பாள்னு வாங்கி பிரிட்ஜ்ல வெச்சிருக்கேன். அவளுக்கு எடுத்து கொடு. அப்புறம் ஹாட்பாக்ஸ்ல இருக்கிற சப்பாத்தியை எடுத்து போட்டு நீயே சாப்பிடு” என்றபடி மாடிப்படிகளில் தாவி ஏறினான்​

பவிஷ்கா தம்பியின் நிலையை பார்த்து சிரித்துக் கொண்டே தன் மகளை அழைத்துக் கொண்டு பிரிட்ஜை நோக்கி சென்றாள்.​

நேத்ரா கட்டிலில் குப்புற படுத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். சித்தார்த் அறைக்குள் வந்து கதவை தாழிட்டு விட்டு அவள் படுக்கை அருகே சென்றான்.​

அழுகையில் அவள் உடல் குலுங்குவதை பார்த்து, “நயனி” என்று அழைத்தான் அழுத்தமான குரலில்.​

“நான் உன்கிட்ட பேசணும்” என்றான்.​

அவள் திரும்பவே இல்லை. எதற்கு அழுகிறோம் என்று தெரியாமல் அழுதுக் கொண்டிருந்தாள், அவளை சோடாபுட்டி என்று கிண்டல் செய்தவனே தன் கணவனாக வந்துவிட்டானே என்று அழுகிறாளா? இல்லை எலிசாவை திருமணம் செய்ய நினைத்திருந்தான் என்ற செய்தி மீண்டும் அவள் செவியில் விழுந்ததால் அவளுக்குள் ஏற்பட்ட வலியால் அழுகிறாளா? என்று அவளால் பிரித்தறிய முடியவில்லை.​

“நேத்ரநயனி” என்றான் சற்றே அழுத்தத்தை கூட்டி.​

அவளோ அவன் அழைப்பை சட்டை செய்யாமல் அழுதுக் கொண்டே இருக்க, சற்று நேரம் அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் குலுங்கி குலுங்கி அழுவதை சகிக்க முடியாமல் “எதுக்குடி இப்படி அழுதுட்டு இருக்கே? எழுந்து உட்கார் நயனி. நான் உன்கிட்ட பேசணும்” என்றான் ஆழ்ந்த குரலில்​

அவளிடம் எந்த அசைவும் இல்லை என்றதும் “எந்திரிடி, என் சோடாபுட்டி” என்றான்.​

அவன் சொன்னது தான் தாமதம் வெடுக்கென்று எழுந்தவள் சற்றும் யோசிக்காமல் சித்தார்த்தின் மார்பில் பலம் கொண்டு அடிக்க தொடங்கிவிட்டாள்.​

தன் பஞ்சு போன்ற கைகளால் உரிமையுடன் அவன் நெஞ்சில் குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்தவளை புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தான் சித்தார்த் அபிமன்யு.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 21

நேத்ரநயனி தன் இருகைகளின் விரல்களையும் முஷ்டியாக மடக்கி கணவனின் நெஞ்சத்தில் மாறி மாறி குத்திக் கொண்டிருந்தாள்.​

சித்தார்த் புன்னகையுடன் சிறிது நேரம் அவளிடம் அடிவாங்கிக் கொண்டு அப்படியே அசையாமல் நின்றான். பின்பு அவள் இடையை தன் இரு கரங்களால் அழுந்த பற்றிக் கொண்டான். ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நிறுத்தி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.​

“ஏன் நிறுத்திட்ட, குத்துச் சண்டை இத்தோட முடிஞ்சாச்சுனா, முத்த சண்டையை ஆரம்பிக்கலாமா?” என்றான் உல்லாசமாக.​

“ச்சே நீங்க ரொம்ப மோசம்” என்று விலகி செல்ல எத்தனித்தவளின் இடையை பற்றி மேலும் இறுக்கினான்.​

“கேளு, என்கிட்ட என்னென்ன கேட்கணுமோ கேளு, திட்டனுமா? திட்டு. அடிக்கணும்னா கூட அடி. எதுவா இருந்தாலும் என் கை சிறையில் இருந்துக்கிட்டே செய்” என்றான்.​

தன்னை சோடாபுட்டி என்று கிண்டல் செய்தவனை பார்த்தால் அவன் காது கிழியும்வரை திட்டணும் என்று தான் நேத்ரா நினைத்திருந்தாள். ஆனால் அவன் கைச்சிறைக்குள் இத்தனை நெருக்கமாக நின்றுக் கொண்டு எப்படி அவனை திட்டுவது. தொண்டைக்குள் இருந்து காற்று கூட வராத போது பேச்சு எங்கிருந்து வரும்?​

அவளிடம் மெளனம் மட்டுமே. “மூக்கு மேல உனக்கு கோபம் வருதேடி. என் அக்கா கிட்ட என்ன சொன்னே? என்னை நாக்கு பிடுங்கிக்கிற மாதிரி கேப்பேன்னு தானே சொன்னே? இந்தா என் நாக்கு என்று அவன் நாக்கை நீட்டி அவள் மூக்கின் நுனியில் வைத்தான்”​

மூச்சடைத்து போனது நயனிக்கு. கண்களை அகல விரித்து அவனை மிரட்சியுடன் பார்த்தாள். கண்கள் ஒரு நிலையில் இல்லாமல் எல்லா பக்கமும் அலைப்புற்றன. அவளின் நிலையை கண்டு பக்கென்று சிரித்து விட்டான்.​

“கொஞ்ச நேரத்துல எனக்கே உன் மேல பயம் வரவச்சிட்டியேடி. எங்கேடா இவகிட்ட மாட்டிக்கிட்டா துவைச்சு காயவச்சுடுவா போல இருக்கேனு நினைச்சேன். உன் வீரம் எல்லாம் என் அக்கா கிட்ட தானா?​

நான் சோடாபுட்டினு உன்னை கிண்டல் செய்துட்டு சைக்கிள்ல போகும்போது கீழே கிடக்கிற கல்லை எடுத்து அடிக்க ஓங்குவ தானே? அப்பவே அடிக்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு என் அக்கா கிட்ட என்னை பத்தி வத்தி வச்சு இருக்கே, மிரட்டிட்டு வேற வந்திருக்க. என்னையே நேர்ல பார்க்கும் போதே திட்டியிருக்கலாம் தானே? இப்பவும் என் அக்காவை தான் மிரட்டிட்டு இருந்தே. நான் தான் தெரிஞ்சுடுச்சு இல்ல? திட்ட வேண்டியது தானே? ஏன் இப்படி திருதிருனு முழிச்சுட்டு இருக்கே? இன்னமும் நீ மாறலைடி” என்றான் குறும்புடன்.​

அதில் ரோஷம் வந்தவளாக, “நீ இப்படி நெருக்கமாக நின்னா எப்படி திட்றது?” என்றாள்.​

பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி அவள் இடையிலிருந்து கையை எடுத்து கொண்டான். “ம் இப்போ திட்டு” என்றான்.​

“எதுக்கு என்னை சோடாபுட்டினு கிண்டல் பண்ணீங்க? எல்லாரும் அதுக்கு பிறகு அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா? ஒருத்தவங்க குறையை கிண்டல் பண்றது தப்பில்லையா?” என்றாள் நேத்ரா அமைதியான குரலில்.​

“முதல்ல இதை குறைனு யார் சொன்னது? கண் பார்வை இல்லாதவங்களையே குறை இருக்கறவங்கனு சொல்ல கூடாதுனு நான் நினைப்பேன். உன்னை ஒரு மூணு வயசுல பார்த்திருக்கேன். நீ எப்பவும் என் கூட தான் விளையாடிட்டு இருப்பே. அதுக்கப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு நான் ஊருக்கு வந்தப்போ நீ கொஞ்சம் வளர்ந்துட்டு இருந்தே.​

அந்த பொண்ணு தான் நீயானு எனக்கு குழப்பம். உன் பேரு எனக்கு மறந்து போச்சு. எத்தனையோ முறை உன்னை கூப்பிட்டு பார்த்தேன். மேடம் சீரியசா உங்க பிரண்டோட கதை பேசிட்டே போனீங்க. வேற வழியில்லாம நீ கண்ணாடி போட்டு இருக்கிறதை பார்த்து அப்போதைக்கு எனக்கு தோணினதை கூப்பிட்டேன். ஆனால் நீ கோபமா கல்லை எடுத்து காட்டவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. நானும் டீன் ஏஜ் தானே அப்போ. வேணும்னு உன்னை வம்பு இழுக்கணும்னு தோணுச்சு. அதனால தான் உன்னை எங்கே பார்த்தாலும் அப்படி கூப்பிடுவேன். அப்படி நான் கூப்பிடும் போது உன் கண்ணை பார்க்கணுமே? அப்பா! ஏதோ மதுரையை எரிக்க வந்த கண்ணகி கையில் சிலம்போட நிக்கிறது போல நீ கையில கல்லோட என்னை எரிக்கிற மாதிரி பார்த்துட்டு இருப்ப. ஆனால் ஒரு நாளும் அடிக்க மாட்டே.​

ஒரு கட்டதுக்கு மேல எனக்கு உன்னோட அந்த போசை பார்க்கணும்னு தோணும், அதனால தான் உன்னை வம்பிழுத்துட்டே இருந்தேன். ஆனா நான் ஒருபோதும் நீ கண்ணாடி போட்டதை குறையா நினைச்சு கிண்டல் பண்ணலை. உன்னையும் உன் முகத்தில் தெரியும் கோபத்தையும் ரசிக்கத்தான் அப்படி பண்ணேன். ஆனால் அது உனக்குள்ள இப்படி ஒரு மனவருத்தத்தை ஏற்படுத்தும்னு நான் அப்போ நினைக்கல. ஐயம் ரியலி சாரி. அந்த நேரத்துல எனக்கும் அவ்வளவு மெச்சூரிட்டி இல்ல” என்று விளக்கம் கொடுத்தான் கணவன்.​

சித்தார்த் சொன்ன விளக்கம் நயனிக்கு கொஞ்சம் ஆறுதலை தந்தது.​

“சரி டீன் ஏஜ்ல தான் மெச்சூரிட்டி இல்ல. கல்யாணம் ஆன மறுநாள் ஏன் அப்படி கூப்பிட்டிங்க” என்றாள் ஆற்றாமையுடன்.​

“உன் கழுத்துல நான் தாலி கட்டும் போது நீ யாரு என்னனு கூட எனக்கு தெரியல. ஏதோ வெறுமையா தான் இருந்துச்சு. உன் முகத்தை கூட நான் சரியா பார்க்கலை. அன்னைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் கேண்டீன்ல தான் உன்னை கண்ணாடியோட பார்த்தேன். என்னையும் அறியாமல் பழைய நியாபகத்துல சோடாபுட்டினு கூப்பிட்டுடேன். நீ தான் அந்த பொண்ணா இருக்குமோனு எனக்கு சந்தேகம் இருந்துச்சு. ஆனால் நீ விவாகரத்து அது இதுனு பேசவும் அதை கேட்காமல் அப்படியே விட்டுட்டேன். அன்னைக்கு ராத்திரி பவிக்கா தான் எனக்கு சொன்னா. அப்போ தான் அட நம்ம மான்விழி தான் நம்ம பொண்டாட்டியா வந்திருக்காளானு எனக்கு சர்ப்பரைஸா இருந்துச்சு” என்றான்.​

“என்ன மான்விழியா?” என்றாள் நயனி ஆச்சரியத்துடன்​

“ஆமா உன்னை சோடாபுட்டினு வெளியே கிண்டல் பண்ணாலும். உன்னோட அகன்ற கண்ணில் இருக்கும் பெரிய கண்மணிகளை பார்க்கும் போது எனக்கு மான் விழி போல இருக்கும். அதுவும் நீ முறைச்சு பார்க்கும் போது, அந்த கண்மணி கொஞ்சமும் அசையாமல் அப்படியே என்னையே பார்க்கும். அந்த மாதிரி சூழ்நிலையில் எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் தான். உன் கண்கள் எப்போதும் என்னை கவர்ந்திழுக்கும். அதனால மனசுக்குள்ள மான்விழினு சொல்லிப்பேன்” என்றான்.​

“இன்னொரு பெண்ணை காதலிச்சுட்டு இப்படி என்கிட்ட காதல் வசனம் பேசறீங்களே அதைத்தான் என்னால நம்ப முடியல” என்றாள் அவனை நம்பாத பார்வை பார்த்து.​

“ஏன்டி காதல் ஒரு முறை மட்டும் தான் பூக்கும், மறுபடியும் பூக்காது காய்க்காதுனு காதல் வசனம் பேச, நான் ஒன்னும் சினிமா ஹீரோ இல்ல.​

பெரும்பாலும் எல்லாருக்குமே கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதல் இருக்கும், குறைந்தபட்சம் ஒரு ஈர்ப்பாவது இருக்கும். அந்த மாதிரி ஒரு ஈர்ப்பு தான் எலிசா மேல எனக்கு இருந்தது. அதைக் காதல்னு நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன். அது எப்படினு பார்க்கறீயா?​

முதல்ல அப்பாகிட்ட சொல்லி எலிசாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னால அப்பா கிட்ட அவளை நான் விரும்பறதா சொல்லவே முடியலை. ஏன்னா அவர் இந்த மருத்துவமனையை எந்த அளவுக்கு வளர்த்து வச்சிருக்கார் தெரியுமா? ஆனால் எலிசா எப்பவும் விருந்து கேளிக்கையில் நாட்டம் இருக்கிறவ. இங்கே இருக்கிற சூழ்நிலையில் எலிசாவால பொருந்தி போக முடியுமானு யோசனையா இருந்தது. குழப்பத்துல இருந்த என்னை அப்பா கூட்டிட்டு வந்து உனக்கு தாலி கட்ட வச்சுட்டாரு.​

கல்யாணம்னு ஆனபிறகு உனக்கு துரோகம் செய்ய கூடாது, அப்பாவுடைய நம்பிக்கையையும் காப்பாத்தணும்னு நினைச்சேன். அதே சமயம் அப்பாவோட பிரண்டான சிவா மாமாவுக்காகவும் நான் உன்னோட வாழணும்னு தான் நினைச்சேன். இதுக்கிடையில் எலிசாவை நான் ஏமாத்திட்டனோனு குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. அதனால தான் உன்னிடம் என்னால நெருங்க முடியல.​

ஆனால் எலிசா வேறே ஒரு ஆண் நண்பரோட பழக ஆரம்பிச்சுட்டதா பவிக்கா சொன்ன பின்னாடி எனக்குள்ள இருந்த குற்ற உணர்ச்சியும் போயிடுச்சு.​

பிறகு என்னையறியாமலே கணவனாக என் பார்வை உன் மேல படிய ஆரம்பிச்சது. அதுக்கு காரணம் மஞ்சள் கயிறு மாஜிக்கா? இல்லை என் சோடாபுட்டியே எனக்கு மனைவியா வந்துட்டாளே என்ற உரிமை உணர்வானு எனக்கு தெரியாது. ஆனால் நீ தான் விலகி விலகி போனே. சரி எதுவரைக்கும் போறாள்னு பார்க்கலாம்னு தான் உன்னை விட்டு பிடிக்க நினைச்சேன்” என்றான்.​

இதையெல்லாம் வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தவளின் மூக்கை பிடித்து ஆட்டினான் சித்தார்த்.​

“இவ்வளவு நாளா ஏன் இதை என்கிட்ட நீங்க சொல்லலை. இப்போ சொல்ற மாதிரி விளக்கமா அப்பவே சொல்லியிருக்கலாம் தானே?” என்றாள் நேத்ரா மன தாங்கலுடன்.​

“இப்போ கேட்கிற மாதிரி உரிமையோட கேட்டிருந்தால் அப்பவே சொல்லியிருப்பேன். நீ தான் விலகி விலகி போனீயே? என்கிட்ட இருந்து விலகி போறவளை இழுத்து வச்சு விளக்கம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல. எது எப்படி இருந்தாலும் உன்னை விட்டு கொடுக்கக் கூடாதுனு மட்டும் உறுதியா இருந்தேன். உன்கிட்ட இருந்து ஒரு காதல் பார்வையோ இல்லை உரிமை உணர்வோ வருவதற்காக காத்திட்டு இருந்தேன்” என்றான் தோள்களை குலுக்கி.​

“இப்போ நான் உரிமையாவா கேட்டேன்?” என்றாள் வியப்புடன் விழிகளை உயர்த்தி​

“ஆமாம் முதல் முறையா மனைவியா என்கிட்ட வந்து என் நெஞ்சுல பலமா குத்து விட்டியே, அதுக்கப்புறமும் சொல்லலைனா எப்படி?” என்று புருவம் உயர்த்தினான்.​

“சாரி ஏதோ வேகத்துல அப்படி பண்ணிட்டேன். ரொம்ப வலிக்கதா?” என்று அவன் நெஞ்சில் தன் பிஞ்சு விரல்களால் தடவிக் கொடுத்தாள்.​

அவள் கைவிரல்களின் மேல் தன் கைகளை வைத்து மேலும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவன், “நானும் உன் கிட்ட சில கேள்வி கேட்கலாமா?” என்றான்.​

“ம் கேளுங்க” என்றாள்.​

“நம்ம முதலிரவு அன்னைக்கு நீ உள்ளே வந்த போது வெட்கத்தோட வந்த நின்னே. அன்னைக்கே நான் உன்னை நெருங்கியிருந்தால் மறுக்காமல் ஏத்துட்டு இருப்பே தானே. ஆனால் அதுக்கப்புறமா நான் பலமுறை உன்னை நெருங்க நினைச்சாலும் ஏன் விலகி விலகி போனே?” என்றான்.​

“முதல் நாள் எனக்கு உங்க மேல எந்த வித எதிர்பார்ப்பும் இல்ல. பல கனவுகளோட அறைக்குள் வந்த என்னை, உங்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவள்னு சொல்லீட்டிங்க. இதுல நீங்க ஒரு டாக்டர் மட்டுமில்ல, அவ்வளவு பெரிய மருத்துவமனையோட முதலாளி, நல்ல வசதி, நல்ல நிறம், அழகு. இத்தனையும் இருக்கிற உங்களுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லனு எனக்கே தோண ஆரம்பிச்சுடுச்சு. நீங்களும் அப்படியே சொல்லவும் என்னை பிடிக்காதவர் கூட எதுக்கு கட்டாயத்துல வாழணும்னு நினைச்சு விலக நினைச்சேன்.​

ஆனால் நீங்க நெருங்கிற போது, ஜஸ்ட் மனைவிங்கிற உரிமையில ஒரு பெண் தேவைபடுற சமயத்துல என்னை நீங்க பயன்படுத்திக்கிறதா தோணுச்சு. இதுல எலிசா என்ற பெண்ணையும் காதலிச்சு இருக்கறீங்கனு தெரிஞ்சதும், அப்போதைய உடல் தேவைக்கு என்னை நெருங்கறீங்கனு நினைச்சுக்கிட்டேன்” என்று நேத்ரா சொன்ன போது சித்தார்த்தின் முகமும் உடலும் இறுகியது.​

 
Status
Not open for further replies.
Top