ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“வரவேண்டாம்னா? என்ன சொல்றீங்க? எனக்கு புரியல?” என்றார் டாக்டர் கிருஷ்ணன்.​

“வரவேண்டாம்னா, இந்த மருத்துவமனை பக்கமே எட்டிக் கூட பார்க்க வேண்டாம்னு அர்த்தம். என் கண்ணுல பட்டுடாதீங்கனு அர்த்தம். அப்படி மீறி வந்தால் கைக்கால் எல்லாம் உடைஞ்சு, முகம் வாய் எல்லாம் கிழிஞ்சு தொங்கி போயிடும்னு அர்த்தம்” என்று அடுக்கிக் கொண்டே போனான் சித்தார்த்.​

“சித்தார்த் நான் ஒரு டாக்டர்,. வார்த்தையை அளந்து பேசுங்க? சரியான காரணம் இல்லாமல் திடீர்னு என்னை வேண்டாம்னு சொல்றதும், அடியாள் போல மிரட்றதும் சரியில்லை. நான் கம்ளெய்ண்ட் பண்ண வேண்டி வரும்” என்றார் கிருஷ்ணன் எச்சரிக்கும் தொணியில்.​

“நல்லதா போச்சு, நானும் கம்ளெய்ன்ட் பண்றேன், என் மருத்துவமனையில் வேலை செய்கிற பொண்ணுங்க கிட்ட எல்லாம் இந்த ஆள் மிஸ்பிஹேவ் பண்றான்னு சொல்லி உங்க மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய வைக்கிறேன். ஐடியா கொடுத்ததற்கு நன்றி” என்று சொல்லி போனை வைத்தான் சித்தார்த்.​

நேத்ரா வாயில் கைவைத்துக் கொண்டாள், “எதுக்கு இப்போ அவரை வேலையை விட்டே தூக்கிட்டிங்க. அவரோட மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய போறதா சொல்றீங்க? இவ்வளவு பெரிய தண்டனை தேவையா? கண்டிச்சு விடலாம் இல்ல?” என்றாள்.​

“உன்னை மாதிரி இன்னும் இந்த ஆஸ்பிட்டல்ல எத்தனை நர்ஸ் இவனை பத்தி வெளியில் சொல்ல முடியாமல் இருக்காங்களோ யாருக்கு தெரியும்? அவங்களால நேரே வந்து என் கிட்ட கம்ளெய்ன்ட் பண்ண முடியாமல் இருந்து இருக்கலாம். உனக்கென்ன கேடு? பிரச்சனை ஆரம்பிக்கும் போதே என்கிட்ட வந்து சொல்றதுக்கென்ன?” என்று கோபத்தில் அவள் மீது காய்ந்தான் இப்போது.​

சித்தார்த்தின் நிர்வாகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் மருத்துவமனையில் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் நடக்கிறதா? இது எதுவுமே தெரியாமல் இருந்து இருக்கிறானே. இவளாவது அவனிடம் சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கத்தில் நேத்ராவின் மேல் கோபம் கொண்டான் சித்தார்த்.​

அவன் கோபமாக பேசியதும் நேத்ராவும், “நீங்க தான் சாதாரண நர்ஸ் கூட எல்லாம் தனியா பேச மாட்டீங்களே? இந்த மாதிரி விஷயத்தை மைக் போட்டு எல்லார் முன்னாடியும் சொல்ல முடியாது. அதனால தான் சொல்லலை. போதுமா?” என்றாள் வெடுக்கென்று.​

அன்று அவன் சொன்னதை குத்திக் காட்டுகிறாள் என்ற கோபத்தோடு, “சரி இப்போ தனியா தானே இருக்கேன். இன்னும் என்னனென்ன பிரச்சனையை எல்லாம் கைவசம் வச்சிருக்க? இப்பவாவது சொல்லித் தொலை!” என்றான் கடுப்பாக.​

அவன் சாதாரணமாக கேட்டிருந்தால் சொல்லியிருப்பாளோ என்னவோ? அவள் என்னவோ எல்லா பிரச்சனையும் எனக்கே வேண்டும் என்று கேட்டு வாங்கியது போல அல்லவா பேசுகிறான்? ஒரு பெண் வெளியே சென்று வந்தாலே இந்த மாதிரி பல பிரச்சனைகளை கடந்து தான் வர வேண்டியிருக்கு. எல்லாவற்றையும் வீட்டில் சொல்லி அவங்களையும் எதுக்கு கஷ்டப்படுத்தனும்னு சமாளிச்சுட்டு போற பெண்கள் எத்தனையோ பேர், அந்த மாதிரி சராசரி பெண்களில் நானும் ஒருத்தி என்று ரோஷமாக மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் “வேறு எந்த பிரச்சனையும் இல்லை” என்றாள் மெல்லிய குரலில்​

அவளுக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை பாண்டி. ஆனால் அவள் தான் மருத்துவமனை விடுதியிலேயே தங்க போகிறாளே! எனவே அவன் தொல்லையும் இனி இருக்காது என்று நம்பினாள்.​

அவள் நம்பிக்கையை பொய்யாக்கவே பாண்டி அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து செக்யூரிட்டியிடம் நேத்ராவை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 14

சித்தார்த் நேத்ராவை பார்த்து முறைத்தான். “உன் பிரச்சனையை தான் என்கிட்ட சொல்ல மாட்டே. குறைந்த பட்சம் இந்த ஆஸ்பிட்டல்ல என்ன நடக்குதுனு மட்டுமாவது பாத்து சொல்லு. வேறே எந்த பெண்களும் என்னோட நிர்வாகத்தில் இந்த மாதிரி எந்த பிரச்சனையிலும் மாட்டக்கூடாது. அவங்க சொல்றதுக்கு தயங்கலாம், தினமும் மருத்துவமனை முழுவதும் ஒரு விசிட் போய்ட்டு வா. உன் கண்ணில் எதாவது பட்டால் எனக்கு சொல்லு. அதாவது முடியுமா?” என்று கேட்டான் அழுத்தமான குரலில்​

சம்மதமாக தலையை மட்டும் ஆட்டினாள் நேத்ரா.​

“இனி ஒரே இடத்தில் இல்லாமல் வாரம் ஒரு முறை உனக்கு டியூட்டி மாத்தி விட சொல்றேன்” என்று சொல்லி விட்டு அங்கே காத்திருந்த நோயாளிகளை உள்ளே அனுப்பும்படி கூறினான்.​

அதன்பிறகு நேரம் போவதே தெரியாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. ஜமுனா ஒரு குரூரத்துடன் அமர்ந்து நேத்ராவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.​

“என்னாச்சுக்கா, ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்ட வசந்தியிடம் தான் அவமானப்பட்டதை சொல்ல விரும்பாமல் “அதெல்லாம் ஒன்னுமில்லை வசந்தி” என்று மழுப்பிவிட்டாள் ஜமுனா.​

பாண்டி டாக்சியில் அமர்ந்தபடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தான். காலையில் அவன் பஸ் நிறுத்தத்தில் நேத்ராவிற்காக வெகுநேரம் காத்திருந்தான். ஆனால் அவள் வரவில்லை. ஒரு வேளை விடுமுறை எடுத்துக் கொண்டாளோ என்று வார்டனிடம் விசாரித்தான். அவரோ ஏற்கனவே அவள் வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.​

காலையில் ஒரு செக்யூரிட்டியிடம் விசாரித்ததற்கு நேத்ரா இன்று வேலைக்கு வந்திருப்பதாக உறுதி செய்தார். எனவே தன் அன்றாட வேலையை முடித்துக் கொண்டு மாலை அவள் எப்போதும் வரும் நேரத்திற்கு முன் வந்து காத்திருந்தான்.​

ஆனால் நேரம் கடந்ததே தவிர அவள் வெளியே வருவதாக தெரியவில்லை. பொறுமையிழந்த பாண்டி செக்யூரிட்டியிடம், “சார் இன்னும் நர்ஸ் டே ஷிப்ட் டியூட்டி முடியலையா? இல்ல ஏதாவது ஓவர் டைம் வேலை இருக்கா?” என்றான்.​

“அதை நீ ஏன் கேட்கிறே?” என்றார் செக்யூரிட்டி அவனை சந்தேகமாக பார்த்து, காலையிலும் அவன் வந்து விசாரித்து சென்றது நினைவு வந்தது அவருக்கு.​

“இல்ல சார், டாக்சி புக் பண்ணியிருந்தாங்க, அதான் கேட்டேன்” என்றான் சமாளிப்பாக.​

“அப்போ, அவங்களுக்கே போன் செய்து கேட்க வேண்டியது தானே?” என்றார் செக்யூரிட்டி​

“அது… அவங்க போன் செய்தால் எடுக்கலை சார்” என்று தலையை சொரிந்தான்.​

“சரி அவங்க பேர் என்ன?” என்று கேட்ட செக்யூரிட்டியிடம், “நேத்ரா” என்றான்​

“கொஞ்சம் இரு, போன் செய்து பார்க்கிறேன்” என்று சொல்லி அட்மினில் இருக்கும் ஜனனியிடம் பேசிவிட்டு, “அவங்க டாக்சி புக் செய்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா அவங்க மருத்துவமனை விடுதியில் தான் தங்க போறாங்கனு அட்மின்ல சொல்றாங்களே?” என்ற செக்யூரிட்டி அவனை மேலும் சந்தேகமாக பார்த்தார்.​

“என்ன? இனிமே இங்கேயே தங்க போறாளமா?” என்றான் பாண்டி அதிர்ச்சியில் வாயை பிளந்து.​

“ஏய், உன்னை பார்த்தா ஆளும் முழியும் சரியில்லையே? யார் நீ? எதுக்கு எங்க ஸ்டாஃப் பத்தி விசாரிச்சுட்டு இருக்கே” என்று செக்யூரிட்டி பாண்டியை பார்த்து அதட்டவும், அங்கிருந்த மற்ற செக்யூரிட்டிகளும் அவனருகே வந்து விசாரிக்க வந்து விட்டனர்.​

“நான் இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்னு எல்லாரும் இப்படி வரிஞ்சி கட்டிட்டு வர்றீங்க” என்று பாண்டியும் கத்திப் பேச அந்த இடத்தில் லேசாக சலசலப்பு எற்பட்டது.​

ஜமுனா எப்போதும் போல தன் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தாள். குடும்பம் குழந்தைகள் என்று இருப்பதால் மருத்துவமனை விடுதி எல்லாம் சரி வராது என்று வெளியில் தான் தங்கியிருக்கிறாள். தனக்கு இன்று நடந்த அவமானத்தை நினைத்து மனதிற்குள் புலம்பியபடி வந்தவள் கேட்டருகே ஏதோ பிரச்சனை போலிருக்கிறதே என்று வேகமாக அவர்களை நோக்கி சென்றாள்.​

ஒரு செக்யூரிட்டி பாண்டியின் சர்ட் காலரை பிடித்திருக்க, அவரும் அவன் சட்டையை பிடித்திருந்தார். மற்றவர்கள் இருவரையும் விலக்கிக் கொண்டிருந்தனர்.​

“என்ன பிரச்சனை இங்கே? இது என்ன மீன் மார்க்கெட்டா இல்லை ஆஸ்பிட்டலா? முதல்ல இரண்டு பேரும் அடிச்சுக்காமல் விலகுங்க. டாக்டர் சித்தார்த் சார் வெளியே போகும் நேரம் இது” என்று கத்தினாள் ஜமுனா.​

சித்தார்த்தின் பேரை கேட்டதால் மற்ற செக்யூரிட்டிகள் அமைதியாக பின் வாங்க, பாண்டி மட்டும் கத்திக் கொண்டிருந்தான். “நான் என்ன கேட்டேன் இப்போ? எனக்கு வேண்டியவங்க இங்கே வேலை செய்யறாங்க, அவங்களை காரில் பிக்கப் பண்ண வந்தேன். அவங்க இன்னும் வெளியே வரலியேனு கேட்டேன். இது ஒரு தப்பா? கேட்டதுக்கு பதில் சொல்லாமல் என்னையே அடிக்க வர்றாங்க சிஸ்டர்” என்று ஜமுனாவிடம் முறையிட்டான் பாண்டி.​

“உனக்கு வேண்டியவங்களா? யாரது?” என்றாள் ஜமுனா அவனை பார்த்து.​

பாண்டியை பார்க்க கரடுமுரடான அடியாள் போல இருந்தான். இப்படிப்பட்டவனுக்கு போய் இங்கே யார் வேண்டியவர்கள் இருக்க போகிறார்கள் என்று சந்தேகத்துடன் அவன் பதிலுக்காக அவனையே கூர்ந்து பார்த்தாள் ஜமுனா.​

“இங்கே நர்ஸ் வேலை பாக்குதே நேத்ரா, அந்த புள்ள தான்” என்றான் பாண்டி.​

“நேத்ராவா? நேத்ராவை உனக்கு தெரியுமா?” என்றாள் ஜமுனா ஆர்வமாக.​

“தெரியுமாவா? மேடம் ஊருல அவ பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு என் காதலை சொல்லி கல்யாணம் வரைக்கும் போனவன் நான். என்கிட்ட போய் அவளை தெரியுமானு கேக்கறீங்க?” என்றான் பாண்டி.​

என்ன கல்யாணம் வரைக்கும் போனானா? என்று வாயை பிளந்தாள் ஜமுனா. பின்பு செக்யூரிட்டிகளிடம் திரும்பி, “நீங்க உங்க வேலையை பாருங்க. நான் என்ன விஷயம்னு விசாரிக்கிறேன்” என்றாள்.​

அதற்குள் மற்ற மருத்துவர்களின் கார்கள், ஊழியர்களின் இருசக்கரவாகனங்கள் என்று வரிசைக்கட்டி வெளியே செல்ல காத்துக் கொண்டு நின்றிருக்கவும், செக்யூரிட்டிகள் அதை கவனிக்க அவசரமாக அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.​

அவர்கள் சென்றதும் பாண்டியிடம் திரும்பி, “எதுக்கு வீணா செக்யூரிட்டிங்க கிட்ட சண்டை போடறே? முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் வந்து இங்கே வேலை செய்யும் பெண்ணை பற்றி விசாரித்தால் அவங்க சந்தேகப்பட மாட்டாங்களா? அவங்க வேலையை அவங்க சரியா தானே செய்யறாங்க?” என்று கேட்டாள் ஜமுனா.​

“என்னா சிஸ்டர் நீங்களும் அவங்களை மாதிரியே பேசறீங்க. நான் என்ன முன்ன பின்ன தெரியாத ஆளா? நேத்ராவை கேட்காம இவங்களா ஒரு முடிவெடுத்துட்டா எப்படி?” என்றான் பாண்டி ஆதங்கத்துடன்​

“ஒரு கல்யாணம் ஆகாத பெண்ணை பற்றி யாரோ ஒருத்தன் வந்து விசாரிச்சா செக்யூரிட்டி எப்படி விவரம் சொல்லுவாங்க நீயே சொல்லு? கல்யாணம் ஆகியிருந்தால் அவ புருஷன் வந்து விசாரிக்கலாம். கல்யாணம் ஆகலைனா அவளோட அப்பாவோ அண்ணனோ வந்து விசாரிக்கலாம். இப்போ நீ யாரு சொல்லு? உன்னை பார்த்தால் நேத்ராவோட அப்பா மாதிரி தெரியல? அவளுக்கு கல்யாணம் ஆகாததால புருஷனா இருக்கவும் வாய்ப்பில்ல. ஒரு வேளை நீ அவளோட அண்ணனா?” என்றாள் ஜமுனா நக்கலாக.​

“அய்யோ சிஸ்டர் வாயை கழுவுங்க முதல்ல. பொண்டாட்டியை போயி யாராவது அண்ணன்னு சொல்வாங்களா?” என்றான் பாண்டி முகத்தை சுழித்து. பின்பு நினைவு வந்தவனாக, “இப்போ என்ன சொன்னீங்க? நேத்ரா கல்யாணம் ஆகாத பொண்ணா? அவ இன்னும் கல்யாணம் ஆகலைனா சொல்லி வச்சிருக்கா?” என்றான் இப்போது கண்கள் மின்ன​

“ஆமா, கல்யாணம் ஆகாதவள்னு சொல்லி தான் வேலைக்கே சேர்ந்தாள். நீ ஏதோ கல்யாணம் வரைக்கும் போனதாக சொன்னியே? ஏன் கல்யாணம் நடக்கலயா?” என்றாள் ஜமுனா அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்து.​

பாண்டியின் மூளை இப்போது குரூரமாக யோசித்தது. “என்ன? கல்யாணம் ஆகலைனு சொல்லியிருக்காளா? அப்போ அந்த டாக்டர் இவளை கழட்டி விட்டுட்டான்னு தானே அர்த்தம். இத முதல்லயே என்கிட்ட சொல்லியிருந்தால் நானே அவளுக்கு மறுபடியும் வாழ்க்கை கொடுத்திருப்பேனே?​

இப்போ மட்டும் என்ன கெட்டு போச்சு? நேத்ராவை மணமேடை வரைக்கும் கூட்டிட்டு போனவன் நான்தானே? இடையில் யாரோ ஒரு மூணாவது மனுஷன் வந்து ஒரு கயிற்றை கட்டிட்டால் அவன் என் நேத்ராவுக்கு புருஷன் ஆயிடுவானா? அவன் தான் அவளை வேண்டாம்னு தள்ளி வச்சிருக்கானே? யாருமில்லாத நிலத்தில் நான் உடனடியா பட்டா போடலைனா, வேற யாராவது பட்டா போடவும் வாய்ப்பிருக்கு. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டு அவளை என் மனைவினு சொல்லி அழைச்சிட்டு போயிட்டா என்ன?” என்று பலமாக யோசித்தான் பாண்டி.​

“என்னப்பா பலமா யோசிக்கிறே? அப்போ நீ சொன்னது பொய் தானே? இந்த மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம்? யாராவது தனியா போற பொண்ணுங்களை ஃபாலே பண்ணி வரவேண்டியது. அப்புறம் அவகிட்ட பேசறதுக்காக, எனக்கு அந்த பெண்ணை தெரியும், நான் அவளுக்கு உறவு அப்படி, இப்படினு சொல்லி இங்கே வந்து தொந்தரவு செய்ய வேண்டியது” என்றாள் ஜமுனா பொய் கோபத்துடன்.​

“அய்யோ இல்லை சிஸ்டர் நேத்ரா என்னோட மனைவி தான். குடும்பத்தில் ஒரு சின்ன பிரச்சனை” என்றான் பாண்டி அவசரமாக.​

“கொஞ்சம் முன்னாடி தான் கல்யாணம் வரைக்கும் போனேன்னு சொன்னே, இப்போ நேத்ரா உன் மனைவினு சொல்றே. எதுவும் சரியா படலையே?” என்றாள் ஜமுனா பாண்டியை ஏற இறங்க பார்த்து.​

“நீங்க நம்பலையா? இருங்க இப்பவே நிருபிக்கிறேன்” என்று தன் பாக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து, “இதோ எங்க கல்யாணத்தப்போ எடுத்த போட்டோ என் மொபைல்ல இருக்கு. நீங்களே பாருங்க” என்று திருமண வரவேற்பில் எடுத்த போட்டோக்களை எல்லாம் காண்பித்தான்.​

அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்த்த ஜமுனா, ஆர்வம் தாங்காமல் அவன் கையிலிருந்த மொபைலை அவசரமாக பிடுங்கி, அவளே அதில் இருந்த அனைத்து போட்டோக்களையும் நகர்த்தி பார்த்தாள். சந்தேகமே இல்லை பாண்டியின் அருகில் நின்றிருப்பது நேத்ராவே தான். வரவேற்பு முடிந்து காலையில் நடந்த முகூர்த்தத்திற்கான போட்டோக்களை தேடினாள். ஒன்றும் கிடைக்காமல் போகவே பாண்டியை பார்த்து, “தாலி கட்டின போட்டோ ஒன்னையும் காணோமே” என்றாள்.​

“அது வந்து, அது இன்னும் போட்டோகிராபர் எனக்கு அனுப்பலை சிஸ்டர்” என்று சமாளிக்க பார்த்தான் பாண்டி.​

ஜமுனாவுக்கு நன்றாகவே புரிந்தது, இரவு திருமண வரவேற்பு வரை நன்றாக நடந்த இவர்களின் கல்யாண ஏற்பாடு ஏதோ காரணத்தால் நின்று போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் மணமேடை வரை சென்றதாக உளறிட்டான். இப்போது சமாளிக்க பார்க்கிறான்” என்று யோசனையாக பார்த்தாள் ஜமுனா.​

“சிஸ்டர் என்ன அப்படி பார்க்கறீங்க? என்னை நம்புங்க. நீங்க தான் எனக்கு உதவி செய்யணும் சிஸ். ப்ளீஸ்” என்று ஜமுனாவின் கைகளை பிடித்து கெஞ்ச தொடங்கினான் பாண்டி​

“என்ன தான் நீ சொன்னாலும் என்னால நம்ப முடியலை. உண்மையை சொல்லு, அவ கழுத்தில நீ தாலி கட்டினியா இல்லையா?” என்றாள் ஜமுனா.​

திருதிருவென விழித்தான் பாண்டி. “சிஸ்டர், நேத்ராவை முறையா கல்யாணம் பேசி பத்திரிக்கை அடிச்சு, அதை ஊர் முழுக்க கொடுத்து எல்லா ஏற்பாடுகளையும் நான் தான் செஞ்சேன். இந்த போட்டோவ பாருங்க, இது நான் தான் உங்களுக்கு தெரியலையா?” என்றான் தடுமாறிய குரலில்​

“அது எல்லாம் நீயா இருக்கலாம், ஆனால் நீ தாலி கட்டினியா? அது தான் என் கேள்வி, பதில் சொல்லு” என்றாள் ஜமுனா அழுத்தமான குரலில்​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“அது அது” என்று தயங்கியவனை பார்த்து, “அந்த பக்கம் தனியா போய் பேசலாம் வா” என்று முன்னால் நடந்தாள் ஜமுனா. பாண்டியும் அவள் பின்னால் சென்றான்.​

பெரிதான மரத்திற்கு பின்னால் மறைவாக சென்று நின்ற ஜமுனா, “என்கிட்ட மறைக்காமல் உண்மையை சொல்லு. எதுவா இருந்தாலும் சரி. நான் உனக்கு உதவி செய்கிறேன். நேத்ராவுக்கு நீ தாலி கட்டலை தானே” என்றாள் ஜமுனா.​

“எனக்கு நீங்க உதவி செய்ய போறதா சொல்றீங்களே, நான் உங்களை எப்படி நம்பறது?” என்றான் பாண்டி.​

“உன்னை மாதிரி ஒளிச்சு மறைச்சு எல்லாம் எனக்கு பேச தெரியாது. எனக்கு நேத்ராவை இந்த ஆஸ்பிட்டலை விட்டு துரத்தணும். அதுக்காக தான் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன். நான் அவளை உன்னோட அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யறேன். ஆனால் நீ அவளை மறுபடியும் இந்த மருத்துவமனைக்கு வேலைக்கு அனுப்ப கூடாது. இதுக்கு உனக்கு சம்மதம்னா, நான் உதவி செய்வேன்” என்றாள் ஜமுனா.​

“அப்போ எனக்கு டபுள் ஓகே, இந்த ஆஸ்பிட்டல் இல்லைனா என்ன? அவளை வேறே ஆஸ்பிட்டல்ல வேலைக்கு அனுப்பிடுவேன்” என்றான் பாண்டி.​

“தாலி கட்டாத உன் கூட வருவாளானே தெரியலை, இதுல வேலைக்கு அனுப்பறதை பத்தி பேசிட்டு இருக்கே?” என்று சிரித்தாள் ஜமுனா.​

“எப்படி சிஸ்டர், நான் தாலியே கட்டலைனு அடிச்சு சொல்றீங்க” என்றான் அதிர்ச்சியை மறைத்தபடி.​

“அதெல்லாம் பார்த்தாலே தெரியும். உண்மையில் என்ன நடந்ததுனு விளக்கமா சொல்லு” என்றாள் ஜமுனா.​

பாண்டியன் நேத்ராவுக்கும் அவனுக்கும் நடக்கவிருந்த திருமணத்திற்கு முன் குடித்துவிட்டு மயங்கி இருந்ததால் வேறு ஒருவரை வைத்து நேத்ராவின் அப்பா அவள் திருமணத்தை முடித்து விட்டார் என்று நடந்ததை சுருக்கமாக சொன்னான்.​

“சரி நேத்ராவுக்கு தாலி கட்டியது யாரு? அவளோட புருஷன் கூட போகாமல் எதுக்காக அவள் கல்யாணம் நடக்கலைனு பொய் சொல்லிட்டு இங்கே வந்து வேலைக்கு சேர்ந்திருக்கா?” என்றாள் ஜமுனா குழப்பத்தோடு.​

இங்கே பாண்டி உண்மையை முழுவதுமாக சொல்ல தயங்கினான். இந்த மருத்துவமனையின் முதலாளி தான் நேத்ராவிற்கு தாலி கட்டியது என்பது மட்டும் அவனுக்கு தெரியும். அந்த முதலாளி யாரென்று அவன் இதுவரை பார்த்ததே இல்லை. அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையின் முதலாளி தான் நேத்ராவின் கணவன் என்று தெரிந்தால் இந்த பெண்மணி உதவி செய்வது சந்தேகம் தான். பின்னால் அவள் வேலைக்கு பிரச்சனை ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறதே.​

எப்படியும் இவ்வளவு பெரிய பணக்காரனாக இருப்பவன் நேத்ராவை பற்றி கவலைப்பட போவதில்லை. அவளுக்காக வரப்போவதுமில்லை. இந்த ஜமுனாவின் உதவியால் நேத்ராவை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போய்விடலாம். அவளும் சித்தார்த் தான் அவள் கணவன் என்ற உண்மையை யாருக்கும் சொல்ல முடியாமல் என்னுடன் வர வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு கோணங்களில் பலமாக யோசித்தான் பாண்டி​

“என்ன யோசிச்சுட்டு இருக்கே, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அப்போ தான் உனக்கு என்னால உதவி செய்ய முடியும்” என்றாள் ஜமுனா​

“சிஸ்டர் எனக்கு அவன் யாருனு எல்லாம் தெரியாது. கல்யாணத்துல தாலி கட்டிட்டு நேத்ராவை சென்னைக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு அவன் சொல்லாம கொள்ளாமல் போயிட்டான்.​

நேத்ராவோட அப்பாவுக்கோ அவளோட ஊருக்கோ இந்த விஷயம் தெரியாது. ஏற்கனவே நடக்க இருந்த கல்யாணம் நின்னு போக இருந்தது. கட்டாயத்துல யாரையோ தாலிக் கட்ட வச்சு அவனும் தாலிக் கட்டிட்டு ஓடிப் போனதாக சொன்னா ஊர் என்ன பேசும்? அதனால சொந்த பந்தங்களுக்கு அவ புருஷன் விட்டு போனதை யாருக்கும் அவ தெரிவிக்கலை. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் வேலை கன்பார்ம் ஆனதால நேரா இங்கே வந்துட்டா.​

கல்யாணம் ஆயிடுச்சுனு சொன்னால் புருஷன் யாரு என்னனு எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்கணும். அதனால தான் கல்யாணம் ஆகலைனு சொல்லியிருக்காள். நான் காதலிச்ச பொண்ணை இந்த நிலைமையில் பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்? அது தான் வாழ்க்கை கொடுக்கலாமேனு அவளை தேடி இங்கே வந்தேன்” என்றான் பாண்டி.​

“ஓ, அவ்வளவு பெரிய புத்திசாலியா அவ? நான் கூட அவளை என்னவோ புள்ளபூச்சினு இல்லை நினைச்சேன்? அதுசரி, வாழ்க்கை கொடுக்கறேன்னு நீ வந்தால் உன்னை அவ புருஷன்னு சொல்லி ஒத்துக்கிட்டு உன்னோட வருவாளா? எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. அதோட அவள் கழுத்துல தாலி எதுவும் காணோமே?” என்றாள்​

“சிஸ்டர், அவள் கிராமத்துல வளர்ந்தவ, கண்டிப்பாக தாலியை கழட்டி இருக்க மாட்டாள். இங்கே எல்லார்கிட்டயும் கல்யாணம் ஆகலைனு சொல்லி இருக்காள். அதை வச்சு நான் சமாளிச்சுப்பேன். நீங்க உள்ளே இருக்கிறவளை வெளியே வர வைங்க. இல்லைனா நான் உள்ளே வர்றதுக்கு உதவி பண்ணுங்க” என்றான் பாண்டி​

“இதுல நான் உதவி செய்ய என்ன இருக்கு? நீ கார் டிரைவரா வந்து விசாரித்தால் தான் உன்னை உள்ளே விட மாட்டாங்க. அரைமணி நேரம் கழிச்சு எந்த கலாட்டாவும் பண்ணாமல் நோயாளிங்க போற வழியில உள்ளே போ.” என்றாள் ஜமுனா.​

“அட இது தெரியாமல் வீணா அவங்க கிட்ட மல்லுக்கு நின்னேன் பாருங்களேன்” என்று தலையில் அடித்துக் கொண்டான்.​

“சும்மாவா சொன்னாங்க? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று. சரிசரி போய் போதையை ஏத்திட்டு அரைமணி நேரத்தில வந்திடு. நானும் உள்ளே ஏதோ வேலை இருக்கிறதா சொல்லி உள்ளே போறேன்” என்று சொல்லி விட்டு பாண்டியின் காதருகே வந்து அவன் செய்ய வேண்டியதை பற்றியும் பேச வேண்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறினாள் ஜமுனா.​

பாண்டி அனைத்தையும் கேட்டுக் கொண்டு, குரூர சிரிப்புடன், “சொல்லிட்டீங்க இல்ல? கொஞ்ச நேரத்தில் என்னோட பெர்பாமன்சை பாருங்க” என்று கடகடவென்று சிரித்தான்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 15

ஜமுனா சொல்லியிருந்தபடி அடுத்த அரைமணிநேரத்தில் பாண்டி நலமுடன் மருத்துவமனைக்குள் நோயாளிகள் செல்லும் வழியில் சென்று அட்மின் பிளாக் முன்னால் நின்றான்.​

ஜனனி தன் வேலையை முடித்துக் கொண்டு, அட்மின் அறைக்கதவை மூடிவிட்டு திரும்ப எதிரில் ஒருவன் கருத்த உருவத்தில் தடிமனாக நின்றிருப்பதை பார்த்து பயந்தே விட்டாள். “யார் நீ? எதுக்கு இங்கே நிக்கிறே?” என்று கேட்டாள்.​

“காலையில் இங்கே நர்ஸ் வேலைக்கு வந்த என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலை. இன்னும் அவ என்ன பண்ணிட்டு இருக்கா இங்கே? அவளை அனுப்புங்க முதல்ல” என்றான் பாண்டியன், போதையில் அவன் நாக்கு குழறியது, கண்கள் சிவந்திருந்தது.​

அவன் மேல் வந்த சாராயத்தின் நெடியை தாங்க முடியாமல் மூக்கில் கைவைத்தபடி “அதுக்கு ஏன் இங்கே வந்து கேட்கறீங்க, விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ணுங்க, போன் செய்யுங்க வருவாங்க. எதாவது அறுவை சிகிச்சை டியூட்டில இருக்காங்களோ என்னமோ” என்றாள் ஜனனி.​

“அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்போ என் பொண்டாட்டி இங்கே வந்தே ஆகணும். அவ வராமல் இங்கிருந்து போக மாட்டேன்” என்றான் பாண்டி ஆக்ரோஷமான குரலில்.​

அப்போது தான் கிளம்புவது போல அந்த பக்கமாக வந்த ஜமுனா, “என்ன ஜனனி, இன்னும் கிளம்பலையா நீ?” என்றாள்.​

“இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு சிஸ்டர். இந்த ஆளு வேறே கிளம்பற நேரத்துல வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு” என்றாள் ஜனனி கடுப்புடன்.​

“ஏன் என்னவாம்?” என்று அப்போது தான் பாண்டியை பார்ப்பது போல அந்நியப்பார்வை பார்த்தாள் ஜமுனா.​

“இவர் மனைவி இங்கே வேலை செய்யறாங்களாம். அவங்களை இப்பவே கூப்பிடனுமாம். இவர் மனைவி யாருனு தெரியலை. அவங்க டியூட்டி முடிச்சுட்டு இன்னும் கிளம்பலைனா எதாவது எமெர்ஜென்சி டியூட்டி போட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ அவங்க யாருனு பார்த்து, அவங்களுக்கு பதிலா நான் வேறே நர்ஸை கன்வின்ஸ் பண்ணி டியுட்டி பார்க்க சொல்லணும். ஏற்கனவே இன்னைக்கு ரொம்ப வேலை சிஸ். டயர்டா இருக்கு” என்றாள் ஜனனி சோர்வாக.​

“ஜனனி உன்னை பார்த்தாலே ரொம்ப டல்லா தெரியறயே. நான் வேணும்னா இவர் மனைவிக்கு பதிலா இன்னைக்கு டியூட்டி பார்க்கிறேன். ஆளை பார்த்தால் குடிச்சுட்டு வந்திருப்பான் போலிருக்கு. அவங்களை கூப்பிட்டு இவரோட அனுப்பிடு.” என்றாள் ஜமுனா.​

“ரொம்ப நன்றி சிஸ்” என்றவள் பாண்டியிடம் திரும்பி, “சரி உங்க மனைவி யாருனு சொல்லுங்க கூப்பிடுறேன்” என்றாள் அலட்சியமாக தன் கைப்பையில் இருந்த அவளின் கைப்பேசியை எடுத்தபடி.​

“என் மனைவி பெயர் நேத்ரா” என்றான் பாண்டி​

ஜனனி அதிர்ச்சியுடன் திரும்பி ஜமுனாவை பார்க்க, அவளும் அதிர்ச்சியான முகபாவத்தை முயன்று வரவழைத்திருந்தாள். “ஹலோ மிஸ்டர்! இங்கே நேத்ராங்கிற பேர்ல ஒரே பெண் தான் வேலை செய்யறாங்க. அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நீங்க ஏதோ இடம் மாறி வந்திருக்கீங்க” என்றாள் ஜனனி.​

“நான் கரெக்டா தான் வந்திருக்கேன்” என்றவன் தன் மொபைலில் அவனுடன் மணக்கோலத்தில் நின்றிருந்த நேத்ராவின் போட்டோவை எடுத்து ஜனனியின் முன்னால் நீட்டி, “நீங்க சொல்ற நேத்ரா இவங்களா பாருங்க” என்றான்.​

அப்போது அந்த பக்கமாக நடமாடிக் கொண்டிருந்த ஊழியர்கள் நோயாளிகள் என அனைவருமே நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.​

ஜனனியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன, “ஜமுனா சிஸ்டர், இந்த நேத்ராவை பார்த்தீங்களா? கல்யாணம் ஆகலைனு பொய் சொல்லி வேலைக்கு வந்து சேர்ந்திருக்காள்?” என்றாள் வாயை பிளந்து.​

“யாரை நம்பறதுனே தெரியலையே ஜனனி. இவ்வளவு பெரிய பொய்யை சொல்லிட்டு உறுத்தலே இல்லாமல் வேலை செய்யறாளே! முதல்ல அவளை கூப்பிட்டு என்ன ஏதுனு விசாரணை செய். நான் போய் நம்ம டாக்டருக்கு விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வர்றேன்” என்றாள் ஜமுனா.​

“சரிங்க சிஸ்டர், அவர் அவளை நல்லவள்னு நினைச்சு நிறைய சலுகை கொடுத்திட்டு இருக்காரு. நீங்க அவரை கூப்பிடுங்க. நான் அந்த நேத்ராவை விசாரிக்கிறேன்” என்றாள் ஜனனி.​

ஜமுனா பாண்டியிடம் கண்களால் ‘நீ நடத்து’ என்பது போல சைகை செய்து விட்டு சித்தார்த் அபிமன்யுவை தேடி அவன் அறைக்கு சென்றாள். அவன் அறையில் இல்லை, லேப்டாப் மட்டும் மேஜை மேல் இருக்கவும், அவன் மருத்துவமனையில் தான் இருக்கிறான் என்று அவனை தேடிச் சென்றாள் ஜமுனா.​

******​

அப்போது தான் நேத்ரா தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று முகம் கழுவி தளர்வான சுடிதாரை அணிந்தாள். அதற்குள் ஜனனியிடமிருந்து அழைப்பு வரவும், “சொல்லுங்க ஜனனி” என்றாள்.​

“நேத்ரா அஞ்சு நிமிஷத்தில அட்மின் பிளாக்கிற்கு வாங்க சீக்கிரம்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் ஜனனி.​

இந்த நேரத்தில் ஜனனி எதற்கு அழைக்கிறாள்? அதுவும் அவசரமாக வரச்சொல்கிறாளே என்ற யோசனையோடு, தன் உடையைப்பற்றி கவலைபடாமல் மேலாடையை போர்த்திக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள் நேத்ரா.​

ஏதாவது அவசர சிகிச்சைக்காக வரச் சொல்கிறாளோ என்னவோ என்று தன் சீருடையை கையில் எடுத்துக் கொண்டு அட்மினை நோக்கி அவசரமாக ஓடினாள்.​

மூச்சிறைக்க வந்த நேத்ரா, அங்கே கைகளை கட்டியபடி நின்றிருந்த ஜனனியை நெருங்கி அவளை கேள்வியாக பார்க்க, அவளோ தன் எதிரே இருந்த பாண்டியை கண்களால் காட்டினாள். ஒன்றும் புரியாமல் பின்னால் திரும்பி பார்த்த நேத்ராவின் கண்களில் தெரிந்த அப்பட்டமான அதிர்ச்சியை ஜனனி கவனிக்க தவறவில்லை.​

“என்ன நேத்ரா இதெல்லாம்? இவர் நீங்க தான் அவரோட மனைவினு சொல்றாரு. எதுக்கு கல்யாணம் ஆனதை மறைச்சீங்க? நாங்க யாரும் பேச்சிலர்க்கு தான் இங்கே வேலைனு சொல்லலையே?” என்றாள் ஜனனி குற்றம் சாட்டும் குரலில்.​

“என்ன? நான் அவனோட மனைவியா? இல்லை அவன் பொய் சொல்றான்!” என்று அலறிவிட்டாள் நேத்ரா.​

“ஏண்டி, புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வர்றது சகஜம் தான் அதுக்காக நான் உன் புருஷன் இல்லனு ஆயிடுமா? என் கூட கிளம்புடி முதல்ல” என்று அதட்டினான் பாண்டி.​

“ஓ நேத்து ராத்திரி உன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு தான், காலையில் பெட்டி படுக்கையோட மருத்துவமனை விடுதியிலேயே தங்கிக்கிறேன்னு சொன்னியா? கல்யாணம் ஆனவ, எதுக்காக கல்யாணம் ஆகலைனு பொய் சொன்னே?” என்றாள் ஜனனி.​

“அய்யோ ஜனனி, அவன் பேச்சை நம்பாதீங்க. அவன் என்னவோ குடிச்சுட்டு உளர்றான். அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல” என்றவள், பாண்டியிடம் திரும்பி, “ஒழுங்கா இங்க இருந்து போயிடு. இல்லைனா போலீசை கூப்பிடுவேன்” என்றாள் கோபமாக.​

“போலீசை கூப்பிடுவியா? கூப்பிடு, என் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வையுங்கனு அவங்க கிட்டயே நியாயம் கேட்கிறேன்” என்றான் பாண்டி.​

பாண்டி தன்னை பெண்டாட்டி என்று அத்தனை பேர் முன்பு சொல்லவும், நேத்ராவிற்கு கட்டுகடங்காமல் ஆத்திரம் பொங்கிவிட, “யாருக்கு யாருடா பொண்டாட்டி?” என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.​

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜனனி. கொஞ்சநேரத்தில் இங்கே கைகலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எண்ணி, அவசரமாக செக்யூரிட்டிகளை போன் செய்து வரச் சொன்னாள். அதுவரை அசட்டையாக அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் கூட்டமாக கூடி நின்று சுவாரசியமாக வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டனர்.​

நேத்ரா இவ்வளவு தைரியமாக எல்லார் முன்னாடியும் தன் கன்னத்தில் அறைவாள் என்று பாண்டி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் அறைந்த கன்னத்தில் தன் கையை வைத்து தேய்த்தபடி அவளை எரித்துவிடுவது போல கோபமாக பார்த்தான்.​

*******​

அதே நேரம் அறுவை சிகிக்சை முடித்துவிட்டு, தன் மேலங்கியை கழட்டிக் கொண்டிருந்த சித்தார்த்தை நோக்கி வேகமாக வந்தாள் ஜமுனா, “டாக்டர், டாக்டர்” என்று தன்னெதிரே மூச்சிரைக்க வந்து நின்றவளை பார்த்து, “என்னாச்சு சிஸ்டர்? எதுக்கு இவ்வளவு பதட்டமா வர்றீங்க” என்றான்.​

“டாக்டர், இந்த நேத்ரா ஒரு பிராடு. எவ்வளவு பெரிய பொய்யை சொல்லி இங்கே வேலைக்கு சேர்ந்திக்கா தெரியுமா? அது தெரிஞ்சால் நீங்களே அவள் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவீங்க” என்றாள் ஜமுனா பரபரப்புடன் மூச்சு வாங்கியபடி.​

ஜமுனாவின் பேச்சில் சித்தார்த்தின் நரம்புகள் கோபத்தில் முறுக்கேற, “என்ன விஷயம்னு நேரடியா சொல்லுங்க. அதைவிட்டு தேவையில்லாமல் யாரையும் பிராடுனு எல்லாம் சொல்லிட்டு இருக்காதீங்க” என்றான் கோபமாக.​

“சாரி டாக்டர், இங்கே நடக்கிறதை பார்த்த அதிர்ச்சியில் அப்படி பேசிட்டேன். இந்த நேத்ராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம். இங்கே கல்யாணம் ஆகலைனு சொல்லி வேலைக்கு சேர்ந்திருக்கா” என்றாள் ஜமுனா அவசரமாக.​

சித்தார்த் “அப்படியா? இருந்துட்டு போகட்டுமே. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று நிதானமாக கேட்கவும் சப்பென்று ஆகிவிட்டது ஜமுனாவிற்கு.​

இந்த விஷயத்தை சொன்னாலே சித்தார்த்திற்கு கோபம் வந்து நேத்ராவை வெளியே அனுப்பி விடுவான் என்று பார்த்தால் அவன் சாதாரணமாக பேசவும் என்ன செய்வதென்றே புரியவில்லை ஜமுனாவிற்கு​

“எனக்கெதுவும் பிரச்சனை இல்லை டாக்டர். ஆனால் அவளோட புருஷன் தான் வந்து ஆஸ்பிட்டல் முன்னாடி நின்னுட்டு பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு” என்றாள் இறங்கிய குரலில்​

தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை மீண்டும் உறுதி செய்துக் கொள்ளும் பொருட்டு “என்ன சொன்னீங்க? யாரோட புருஷன் வந்து பிரச்சனை பண்றது?” என்றான் அவசரமாக​

“நேத்ராவோட புருஷன் பாண்டி” என்று ஜமுனா சொல்லி முடிக்கும் முன் ஆக்ரோஷத்துடன் அங்கிருந்த ஸ்டாண்டை காலால் எட்டி உதைத்துவிட்டு, தன் முழுக்கை சட்டையினை முழங்கைவரை மடித்து விட்டுக் கொண்டு அங்கிருந்து கோபமாக சென்றான் சித்தார்த்.​

நேத்ராவிற்கு திருமணம் ஆனதை சொன்னதற்கு எந்த எதிர்வினையும் காட்டாதவன், இப்போது அவள் கணவன் பாண்டி பிரச்சனை செய்கிறான் என்று சொன்னதற்கு ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடன் செல்கிறான் என்று யோசித்தபடி, சித்தார்த்தின் பின்னால் ஓடினாள் ஜமுனா. அவன் சென்ற வேகத்திற்கு ஈடாக அவளால் நடக்க முடியாமல் மூச்சு வாங்க ஒடிக் கொண்டிருந்தாள்.​

********​

கன்னத்தில் கைவைத்தபடி நின்று நேத்ராவை வெறித்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்த பாண்டியின் கண்களில் அவளின் இலகுவான சுடிதாரின் வழியே தாலிக்கயிறு கொஞ்சமாக தெரிந்தது.​

அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் எட்டி, அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பற்றி இழுத்தான். நேத்ரா அதிர்ந்து போய் அவன் கையில் இருந்த தாலியைப் பற்றிக் கொண்டு “மரியாதையா கையை எடு” என்றாள்.​

“யாருக்கு யாருடா பொண்டாட்டினு கேட்டே இல்ல? அப்போ நான் கட்டின தாலியை கழட்டி என்கிட்ட கொடுத்திடு. இல்லைனா மரியாதையா என்கூட வந்திடு” என்று மிரட்டினான்.​

நேத்ரா பாண்டியின் கையில் சிக்கயிருந்த தாலியை எப்படியாவது காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்க, அங்கே ஜனனி, செக்யூரிட்டி, ஊழியர்கள் என அனைவரும் நேத்ராவின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து அதிர்ந்து போய் பேச்சற்று நின்றனர்.​

அங்கிருந்த ஏதோ ஒரு வயதான பெண்மணி, “ஏம்மா, குடும்ப சண்டை எல்லாம் வீட்டுக்குள்ள வச்சுக்கணும். இப்போ பாரு, இந்தாளு தாலியை கழட்ட வர்றான். பேசாமல் புருஷன் கூட போய் வாழற வழியை பாரும்மா” என்று அறிவுரை சொன்னார்.​

“அய்யோ இவன் என்னோட புருஷனே இல்ல? இந்த தாலி அவன் கட்டினது இல்ல? நான் எப்படி அவன் கூட போக முடியும்?” என்று உச்சப்பட்ச கோபத்தில் கத்தினாள் நேத்ரா. கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கன்னங்கள் தான்டி ஓடிக் கொண்டிருந்தது.​


“அப்போ யாரு கட்டினது?” என்று அந்த பெண்மணி மீண்டும் கேள்வி கேட்க, நேத்ரா அங்கிருந்த அனைவரையும் பார்த்து பேச்சற்று போய் தலைகுனிந்து நின்றாள்.​

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாண்டி, மீண்டும் அவளருகே சென்று, அவள் தாலியை கையில் ஏந்தி. “இப்போ தெரியுதா? அவளால பதில் சொல்ல முடியாது, ஏன்னா இந்த தாலியை நான் தான் கட்டினேன்” என்றான் பாண்டி.​

“தாலியை யாரு கட்டினது?” என்று மீண்டும் ஒரு ஆண் குரல் தன் பின்னால் அழுத்தமாக கேள்வி கேட்கவும்,​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

பாண்டி திரும்பி தன் பின்னால் நின்றிருந்தவனிடம் சலிப்புடன் “அட எத்தனை முறை தான் சொல்றது, நான் தான்…” என்று சொல்லி முடிக்கும் முன் “அய்யோ அம்மா” என்று கத்தியபடி கீழே விழுந்திருந்தான்.​

சித்தார்த் அபிமன்யு தன் ஓங்கிய காலை கீழிறக்கவும் தான் அவன் தான் பாண்டியை உதைத்திருக்கிறான் என்றே அங்கிருந்தவர்களுக்கு தெரிந்தது.​

கீழே விழுந்தவனின் சட்டை காலரை கொத்தாக பிடித்து எழுப்பி நிறுத்தினான் சித்தார்த். “இப்போ சொல்லு! அவ கழுத்தில தாலி கட்டினது யாரு?” என்றான் மீண்டும்.​

“நான்” என்று பாண்டி சொல்லி முடிக்கும் முன்பே அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்துக் கொண்டே இருந்தான் சித்தார்த் அபிமன்யு.​

அங்கிருந்தவர்கள் அனைவரும் இமைக்கவும் மறந்து உறைந்து போய் நின்றிருந்தனர். சித்தார்த்தின் நடவடிக்கையை பார்க்கும் போது ஜமுனாவிற்கு காரணம் புரியாமல் தலை கிறுகிறுத்தது. அவன் நிறுத்தாமல் பாண்டியின் கன்னத்தில் மாறி மாறி அடித்துவிட்டு இரண்டு கைகளையும் பின்புறமாக வளைத்து பிடித்து பலமாக முறுக்கியபடி, “சொல்லு, அவ கழுத்தில தாலிகட்டியது யாரு?” என்றான் கர்ஜனையாக.​

சாந்த சொரூபியாக வலம் வந்து கொண்டிருந்த சித்தார்த் ஒரு வெறிபிடித்த அரக்கனை போல பாண்டியை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்த நேத்ராவிற்கே அவனை பார்த்து பயத்தில் உடல் நடுங்கியது.​

அதற்கு மேல் தன்னால் அடிவாங்க முடியாது என்று முடிவு செய்த பாண்டி, “அய்யோ என்னை விட்டுடுங்க. நான் அவ புருஷனும் இல்லை. அவள் கழுத்துல நான் தாலி கட்டவும் இல்லை. இனி அவ இருக்கிற பக்கமே வரமாட்டேன். என்னை தயவு செய்து விட்டுடுங்க” என்று அலறினான்.​

அங்கிருந்த அனைவரும் வாயில் கைவைத்துக் கொண்டனர். இவ்வளவு நேரம் அவன் தான் புருஷன் என்று ஆட்டம் போட்டதென்ன? இப்போது அடிவாங்கிய பின்பு மாற்றி பேசுவதென்ன? ஆனால் நேத்ராவிற்கு தாலிக் கட்டியது பாண்டி இல்லை என்பது சித்தார்த்துக்கு எப்படி தெரியும்? என்று அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமாக அவனையே விழி நகர்த்தாமல் பார்த்துக் கொண்டிருக்க,​

சித்தார்த்தின் பார்வையோ நேத்ராவின் மேல் பதிந்திருந்தது. “இப்போ கூட உண்மையை சொல்ல போறதா உத்தேசம் இல்லையா?” என்றான் கோபமாக.​

நேத்ராவின் தொண்டை குழியில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டிருக்க திகைத்து விழித்தாள். அவளிடமிருந்து பதில் வராததால் மேலும் கோபத்தோடு தன் கைகளில் நெளிந்துக் கொண்டிருந்த பாண்டியை உதைத்து தள்ளிவிட்டு நேத்ராவின் அருகில் வந்தான் சித்தார்த்.​

அனைவரும் ஒரு வித பதட்டத்தோடு சித்தார்த் என்ன செய்ய போகிறான் என்று பார்த்திருக்க, நேத்ரா அதிர்ச்சியுடன் விழிவிரித்து நடுக்கத்துடன் அவனை பார்த்தாள்.​

சித்தார்த் அபிமன்யு நேத்ரநயனியின் நயனங்களை ஆழ்ந்து பார்த்தபடி, அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை தூக்கி அனைவருக்கும் தெரியும்படி காட்டி, “இந்த தாலியை கட்டினது நான் தான்” என்றான்.​

ஜமுனாவின் கண்கள் அதிர்ச்சியில் தெறித்து விடுவது போல ஆனது, திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கனவிலும் அவள் நினைத்துக்கூட பார்க்காத காட்சி அங்கே நடந்துக் கொண்டிருந்தது.​

சித்தார்த் அடித்த அடியில் கீழே விழுந்திருந்த பாண்டிக்கு, அவன் பேச்சில் மொத்த போதையும் இறங்கி விட, தலையை நிமிர்த்தி சித்தார்த்தை நன்றாக பார்த்தான். நேத்ராவிற்காக அவள் கணவன் வரமாட்டான் என்று நினைத்தது எவ்வளவு பெரியமுட்டாள்தனம் என்று எண்ணிக் கொண்டான்.​

சித்தார்த் இப்போது மேலும் நேத்ராவை நெருங்கி நின்று அவள் தோளில் கைப்போட்டு, “இந்த நேத்ரநயனி நான் தாலி கட்டிய என்னோட மனைவி. இதுல யாருக்காச்சும் இன்னும் சந்தேகம் இருக்கா?” என்று கூறி அங்கிருந்த ஒவ்வொருவரையும் அழுத்தமாக பார்த்தான்.​

நேத்ராவோ தன் கணவனின் அதிரடி செயலிலும் பேச்சிலும் உறைந்து சிலையென நின்றிருந்தாள். ஆனால் அவளின் பார்வை மட்டும் தன்னவனை விட்டு விலகவே இல்லை.​

சித்தார்த் ஒவ்வொருவராக நிதானமாக பார்க்கவும், அனைவருமே தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று மெளனமாக தங்களை அறியாமலே தலையசைத்தனர். கடைசியாக சித்தார்த்தின் பார்வை ஜமுனாவின் மேல் நிலைத்தது.​

ஜமுனா பயத்தில் எச்சிலை விழுங்கியபடி சித்தார்த்தை பார்க்க, அவன் ஒற்றை விரலை அசைத்து தன்னருகே வரும்படி கூறினான்.​

உள்ளுக்குள் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்க, ஜமுனா சித்தார்த்தின் முன்னால் வந்து நின்றாள். அவன் தன் சுட்டுவிரலால் அனைவரையும் காட்டி, “இங்கே இப்படி ஒரு பிரச்சனை வர்றதுக்கு நீதானே காரணம்?” என்று கேட்டான் அழுத்தமான குரலில்.​

“இஇல்லை டாக்டர், எனக்கெதுவும் தெரியாது” என்றாள் ஜமுனா திக்கி திணறி.​

“5,30 மணிக்கு கிளம்பி கேட் வரைக்கும் போன நீ, எதுக்கு மறுபடியும் 6 மணிக்கு இங்கே வந்தே?” என்றான் கர்ஜனையான குரலில்​

“அது வந்து” என்று ஜமுனா யோசிக்கும் போதே பேசவேண்டாம் என்று கைக்காட்டினான்.​

“நீ எப்போ என்னை தேடிவந்து நேத்ராவுக்கு பிரச்சனைனு சொன்னியோ, அப்பவே எனக்கு தெரியும். அதுக்கு காரணம் நீதான்னு. வரும் போதே என் போனில் இருக்கிற சிசிடிவி பதிவை பார்த்துட்டே தான் வந்தேன்” என்றான்​

ஜமுனா தலைகுனிந்து கொள்ளவும். “நீயெல்லாம் ஒரு பொம்பளையா? உனக்கு ஏற்கனவே ஒரு முறை எச்சரிக்கை செய்தும் மறுபடியும் நேத்ராவை பழிவாங்க இவ்வளவு கேவலமான வேலை செய்திருக்க! இந்த பாண்டி உன்னோட தூண்டுதலால தான் வந்திருப்பான்னு எனக்கு தெரியும்.​

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது உன் விஷயத்துல நல்லாவே பொருந்துது! ஆணுக்கு பெண் சமம்னு பேசறது போய் பெண்ணுக்கு பெண் சமம்னு வாதாட வச்சிடுவீங்க போல இருக்கே? நீங்களே உங்க வர்க்கத்தை உங்க காலுக்கு கீழே போட்டு மிதிக்க தானே பார்க்கறீங்க. உங்களை அழிக்க வெளியே இருந்து எந்த ஆணும் தேவையில்லை. பெண்குலத்தை அழிச்சுக்க உங்களை மாதிரி பெண்களே போதும்.​

இந்த நேத்ரா இதுவரைக்கும் எதாவது கெடுதல் பண்ணியிருக்காளா உனக்கு? “ என்று கேட்டான் அழுத்தமான குரலில்.​

ஜமுனா இல்லை என்று தலையாட்டவும், “அப்புறம் எதுக்கு இவ்வளவு வன்மம்?” என்றான்.​

பதில் சொல்லமுடியாமல் ஜமுனா தலை குனிந்துக் கொள்ளவும், ஜனனியிடம் திரும்பி, “இந்த பொம்பளையோட சம்பள பாக்கி எவ்வளவு இருக்குனு பார்த்து இப்பவே செட்டில் பண்ணி அனுப்பிடு. இனி இவங்க என் கண்ணுலயே படக்கூடாது” என்றான்​

ஜனனி சரி என்பது போல தலையசைக்கவும், “இனி இந்த மாதிரி யாரையாவது டார்கெட் பண்ணி தனிப்பட்ட முறையில் தாக்கினால் இங்கே வேலை செய்யற எல்லாருக்கும் இது தான் முடிவு. உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன் ஜனனி” என்றான் சித்தார்த் அழுத்தமாக​

ஜனனி அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்க்க, “முன்னெச்சரிக்கைக்காக சொல்றேன், வேற எதுவும் இல்ல” என்றான்.​

செக்யூரிட்டிகளிடம் பாண்டியை கண்களால் காட்டி, “இவனை போலீஸ்ல ஒப்படைங்க. நாளைக்கு நானே ஸ்டேஷன் வந்து கம்ளெய்ண்ட் கொடுக்கறதா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுங்க” என்று கூறி அவர்களை அனுப்பினான்.​

பின்பு தன் கைகளில் கோழிக்குஞ்சாய் உறைந்து நின்றவளை திரும்பி பார்த்து, “கிளம்பு போகலாம்” என்றான்.​

“எங்கே” என்றாள் மெல்லிய குரலில்​

“நம்ம வீட்டுக்கு” என்றான் அவன் அழுத்தமாக​

“இல்ல, நான் இங்கே விடுதியிலே…” என்று அவள் முடிக்கும் முன் அடிக்க கை ஓங்கி விட்டிருந்தான் சித்தார்த் அபிமன்யு.​

அவனின் ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நின்றிருக்க, கண்களில் கோபம் கொப்பளித்தது.​

“அன்னைக்கே உன் கன்னத்தில் ஒன்னு ஓங்கி கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போயிருந்தேன்னா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. காலையில் கூட வேறு எதுவும் பிரச்சனை இருக்கான்னு உன்கிட்டே கேட்டேன் தானே? சொன்னியாடி நீ? என்கிட்ட உனக்கென்னடி அவ்வளவு ஈகோ?” என்றவனை படபடக்கும் இமைகளோடு பயத்தோடு பார்த்தாள் நயனி.​

“இனி உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால விட முடியாது. உனக்கு பத்து நிமிஷம் தான் டைம். உன்னோட பொருட்கள் எல்லாம் எடுத்திட்டு மரியாதையா என்னோட கிளம்பி வா” என்றான் கோபமாக.​

அவள் அப்படியே நின்றிருக்கவும், “சொல்றது காதுல விழலையா?” என்று கத்தினான்.​

கணவனின் புதிய அவதாரத்தில் சற்றே நடுக்கத்துடன் இருந்த நேத்ரநயனி அவள் தோள் மீது அழுத்தி பிடித்திருந்த சித்தார்த்தின் கைககளை பார்த்தாள், அவன் கைகளை எடுத்தால் தானே அவளால் நகரவே முடியும்? எப்படி எடுக்க சொல்வது என்று தெரியாமல் அவன் பிடியில் நெளிந்துக் கொண்டிருந்தாள்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0
Status
Not open for further replies.
Top