ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 11

நேத்ரா தன் தந்தை சிவக்குமார் வருத்தமாக செல்வதை உணர்ந்தே இருந்தாள். ஆனாலும் அவளின் தற்போதைய நிலை அவருக்கு தெரியக்கூடாது. தன் வாழ்க்கைக்கு ஒரு முடிவு தெரிந்த பின்பு பொறுமையாக சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனாலும் தந்தையின் சோர்வான முகம் மனதை என்னவோ செய்தது. கலங்கிய விழிகளை தன் கட்டுக்குள் கொண்டுவந்து ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மீண்டும் மருத்துவமனையின் உள்ளே சென்றாள்.​

அங்கே டாக்சியில் நேத்ராவை கவனித்துக் கொண்டிருந்தவன், அங்கிருந்த செக்யூரிட்டியிடம், “இவங்க இங்கே என்ன செய்யறாங்க?” என்றான்.​

“ஓ அவங்களா, புதுசா நர்ஸ் வேலைக்கு வந்திருக்காங்க” என்று கேள்வி கேட்டவனுக்கு பதிலை சொல்லிவிட்டு. “ஏன் இன்னும் யுனிமார்ம் போடாமல் இருக்காங்க?” என்று தனக்குத்தானே கேள்வியையும் கேட்டுக் கொண்டான் அந்த செக்யூரிட்டி.​

நேத்ரா உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றி வெளியே வந்ததும், ஜமுனா, வசந்தி முதல் அனைவருமே அவளை வித்தியாசமாக பார்ப்பது போல தோன்றியது. யோசனையுடன் அவளுக்கான வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.​

“நயனி” என்ற சத்தமான அழைப்பில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.​

சித்தார்த் தான் அவர்கள் இருந்த ஹாலுக்கு எதிரே சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தான். இவள் நிமிர்ந்து பார்த்ததும், ஆட்காட்டி விரலை நீட்டி தன்னருகே வருமாறு சைகை செய்தான்.​

நேத்ரா திரும்புவதற்குள் அங்கிருந்த மொத்த ஊழியர்களும் சித்தார்த்தின் அழைப்பில் திரும்பியிருந்தார்கள். ஏற்கனவே ஜமுனா கொளுத்திவிட்ட வதந்தீ பெரும்பாலும் அனைவருக்கும் பரவியிருந்ததால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்களுக்குள் அர்த்தத்துடன் பார்வையை பறிமாறிக் கொண்டனர்.​

நேத்ராவுக்கு அவர்களின் செயலில் ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. ஆனால் அது என்ன என்று தான் அவளுக்கு புரியவில்லை. சித்தார்த் அவளை எப்போதும் நயனி என்று அழைப்பதால் அவளுக்கு வித்தியாசம் தோன்றவில்லை. எதற்காக அழைக்கிறான் என்று அவனை நோக்கி சென்றாள்.​

“பாத்தியா அக்கா, நயனியாம், நமக்கெல்லாம் நேத்ரா, டாக்டருக்கு மட்டும் நயனி” என்றாள் வசந்தி ராகமாக.​

“பார்த்துட்டு தானே இருக்கேன். வந்து ஒரு மாசம் கூட ஆகலை. ஆஸ்பிட்டல் முதலாளியையே கைகுள்ள போட்டுக்கிட்டாளே? இவ என்ன அவ்வளவு அழகியா? அதுதான் வசந்தி எனக்கு புரியல” என்றாள் ஜமுனா.​

“அவர் என்ன கல்யாணமா பண்ணிக்க போறோரு, அழகை பத்தி கவலைப்பட, ஏதோ கிடைச்ச வரைக்கும் லாபம்னு இருக்காரு போல” என்றாள் வசந்தி.​

“நீ சொல்றதும் சரிதான்., இப்போ என்ன பேசறாங்கனு தெரியலையே வசந்தி” என்றாள் ஜமுனா.​

“அக்கா, நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? நேத்ராவுக்காக நீ ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணின தானே? அதை அவர்கிட்ட கொடுக்கற மாதிரி எடுத்திட்டுப் போ. என்ன பேசறாங்கனு தெரியும்” என்றாள் வசந்தி.​

“நான் போனதும் அவங்க பேச்சை நிறுத்திடுவாங்கடி” என்றாள் ஜமுனா.​

“பரவாயில்லை. உன் ரிப்பாேர்டை பார்த்திட்டு, டாக்டர் என்ன தான் முடிவெடுக்கிறார்னு பார்க்கலாம் இல்ல. நீ போ அக்கா” என்றாள் வசந்தி.​

“அப்படியா சொல்றே? சரி அதையும் பார்த்திடலாம். அந்த ரிப்போர்டை எடுத்திட்டு வா” என்றாள் ஜமுனா.​

அதற்குள் நேத்ரா, சித்தார்த்தை நெருங்கி இருந்தாள். கேள்வியாக நிமிர்ந்து என்ன? என்று பார்வையாலே கேட்டவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான்.​

“மாமா கிளம்பிட்டாரா?” என்றான்.​

“ம்ம்” என்றாள் ஒற்றை வார்த்தையாக.​

“நான் தான் அவரை இரண்டு நாள் இருந்துட்டு போக சொல்லி கூப்பிடுனு சொன்னேன் தானே. நீ அமைதியாகவே இருக்கே? அவர் என்ன நினைப்பாரு? பாவம் மாமா முகமே சரியில்லை” என்றான் அவளை கண்டிக்கும் குரலில்.​

“அவரை கூப்பிட்டு எங்கே தங்க வைக்கிறது? எங்க விடுதியில் பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி” என்றாள் மெல்லிய குரலில்.​

“அவர் ஏன் விடுதியில் தங்கணும்? நம்ம வீடு கடல் மாதிரி இருக்கும் போது” என்றான்.​

“நம்ம வீடா?” மீண்டும் நிமிர்ந்து விழி அகல பார்த்தாள்​

“என்ன பார்க்கிற? வீட்டுக்கு வர்றதா ஐடியாவே இல்லையா உனக்கு?” என்றான் அழுத்தமாக அவளைப் பார்த்து.​

இதற்கு என்ன பதில் சொல்வது? என்று கண்களை உருட்டி திருதிருவென விழித்தாள்.​

“ரொம்ப உருட்டாத, கண்ணு வெளியே வந்து விழுந்துட போகுது” என்றான் சீரியசான குரலில்.​

அதற்கும் அவள் திகைத்து போய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஜமுனா அவர்கள் அருகே வந்தாள்.​

ஜமுனாவை பார்த்து புருவம் சுருக்கியவன், “என்ன சிஸ்டர்?” என்றான்.​

“சார் நேத்ராவோட பெர்பாமன்ஸ் ரிப்போர்ட் சார்” என்றாள் ஜமுனா பவ்யமான குரலில்.​

அதை யோசனையோடு கையில் வாங்கியவன், “நயனி, எல்லாம் கத்துக்கிட்டியா?” என்றான்.​

“ஓரளவுக்கு அடிப்படை தெரிஞ்சு வச்சிருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில்.​

“நான் நேரடியாக இவங்க பெர்பாமன்ஸை செக் பண்ணிக்கிறேன், இந்த ரிப்போர்ட் வேணாம். எப்படியும் நீங்க நயனிக்கு சாதகமாக தானே எழுதியிருப்பீங்க?” என்றான் சித்தார்த் புன்னகையுடன்.​

“தன்னை எவ்வளவு தவறாக புரிந்து வைத்திருக்கிறார் இந்த டாக்டர்” என்று மனதிற்குள் நினைத்தவள், “ஆ…ஆமா டாக்டர், கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க” என்றாள் ஜமுனா தடுமாற்றத்தோடு.​

“சரி வாங்க, நாம ரெண்டு பேரும், இவங்க பிராக்டிகல் வொர்க்கை டெஸ்ட் பண்ணிடுவோம்” என்றான் சித்தார்த்.​

இப்படியாவது ஒரு வழி கிடைத்ததே! எப்படியும் நேத்ரா எதாவது தவறு செய்து அவனிடம் மாட்டிக் கொள்ள மாட்டாளா? என்ற நப்பாசையுடன் ஜமுனா சித்தார்த்தின் பின்னால் நடந்தாள்.​

“ஓகே, மிஸ்.நயனி. வாங்க என்னோட” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான் சித்தார்த்.​

வெளிநோயாளிகள் காத்திருந்த பகுதிக்கு சென்று ஒவ்வொரு நோயாளியாக பரிசோதித்து, அவளிடம் மாத்திரை, ஊசிக்கான குறிப்புகளை அவன் சொல்ல சொல்ல அவள் அனைத்தையும் வேகமாக செய்து கொடுத்தாள். நோயாளிகளுக்கு ஊசியையும் போட்டு, மருந்து உண்ண வேண்டிய கால நேரத்தையும் பக்குவமாக சொல்லிக் கொடுத்தாள்.​

அடுத்து உள் நோயாளிகள் இருந்த பகுதிக்கு சித்தார்த் போக வேண்டிய நேரம் என்பதால் அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே இருக்கும் நர்ஸ்களுக்கு முன்னால் சென்று நேத்ரா அவர்களின் இரத்த கொதிப்பை பரிசோதித்து, அவர்களின் தற்போதைய உடல் உபாதைகளை கேட்டறிந்தாள். சித்தார்த் அவர்களின் ரிப்போர்டை பார்த்து முடிக்கும் முன்பே, தன் பரிசோதனை விவரங்களை அவனுக்கு விளக்கினாள்.​

சித்தார்த் மெச்சுதலோடு நயனியை பார்த்தான். எப்படியும் கொஞ்சமாவது கத்துக்கொண்டிருப்பாள் என்று அவனுக்கும் நம்பிக்கை இருந்தது தான். ஆனால் பலவருட அனுபவம் இருப்பவள் போல, அனைத்தையும் அவள் சீக்கிரமாக செய்து முடிக்கும் பாங்கும், நோயாளிகளிடம் பேசும் போது காட்டும் அன்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மாதத்திற்குள் இவ்வளவு கற்றிருக்கிறாள் என்றால் என் மனைவி புத்திசாலிதான் போல என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவனின் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்தது.​

பின்னால் நின்றிருந்த ஜமுனாவின் முகத்தில் ஈயாடவில்லை. இவள் எப்போது இதையெல்லாம் கத்துக்கிட்டாள்? சும்மா தானே நிக்க வைச்சிருந்தோம் என்று திகைப்புடன் நேத்ராவையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜமுனா.​

சித்தார்த் ஜமுனாவை நோக்கி கை நீட்டினான். எதற்கு என்று புரியாமல் பார்த்த ஜமுனாவின் கைகளை தானாகவே பற்றி கை குலுக்கினான். “நல்லா டிரைனிங் கொடுத்திருக்கீங்க சிஸ்டர், வெரிகுட், சீனியரா இருந்துக்கிட்டு, புதுசா வந்தவங்களுக்கு உங்களுக்கு இணையா தயார் பண்ணி வச்சிருக்கீங்க. நீங்க ரியலி சூப்பர். இனி புதுசா வர்ற நர்ஸ் எல்லாருக்கும் நீங்க தான் டிரைனர்” என்றான்.​

“ஹிஹி, தேங்க்ஸ் சார்” என்று சிரித்தாள் ஜமுனா, திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருப்பவளை கண்டு நேத்ராவுக்குமே சிரிப்பு வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தாள்.​

“நயனி, நீங்க டாக்டர் கிருஷ்ணனுக்கு அசிஸ்ட் பண்ணுங்க. அவருக்கு ஒரு நர்ஸ் தனியா வேணும்னு கேட்டிருந்தாரு. அவர் வெளி நோயாளிகளை பார்க்கும் போது அங்கே இருங்க. உள் நோயாளிகளை பார்க்கும் போது இங்கே வந்துடுங்க, ஓகே தானே?” என்றான் சித்தார்த்.​

நேத்ராவும் சம்மதமாக தலையசைத்தாள், அதற்குள் சித்தார்த்திற்கு வேறு அழைப்பு வரவும், “எக்ஸ்க்யூஸ்மீ” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.​

தன்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த நேத்ராவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்து வயிற்றெரிச்சலாக இருந்தது ஜமுனாவிற்கு. இவள் முகத்தில் கவலையை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றியது.​

“ஆமா நேத்ரா, காலையில் வந்ததும் டியூட்டி பார்க்காமல் எங்கே போனே?” என்றாள் ஜமுனா எதுவும் தெரியாததுபோல.​

நேத்ரா பதில் சொல்வதற்குள், “உன்னை டாக்டர் சித்தார்த் அறையில் பார்த்ததா யாரோ வந்து சொன்னாங்க. என்ன பண்ணிட்டு இருந்தீங்க இரண்டு பேரும் ரூமுக்குள்ள? டாக்டர் யாரையும் அறைக்குள்ள விடக்கூடாதுனு சொல்லிடாராமே?” என்றாள் ஜமுனா வக்கிரமான குரலில்.​

“இல்ல அது வந்து” என்று நேத்ரா சொல்வதற்குள், இடைப்புகுந்தாள் ஜமுனா.​

“இங்கே பாரு நேத்ரா. உனக்கும் பணத்தேவை இருக்கும். டாக்டருக்கும் சின்ன வயசு, தன்னோட இளமைக்கு உன்னை பயன்படுத்திக்க நினைக்கலாம். அதுக்காக எல்லாம் மருத்துவமனைக்குள்ளே வச்சுக்கிட்டா எப்படி? வெளியே வச்சுக்கலாம் இல்ல?” என்றாள் ஜமுனா​

“அடச்சே நிறுத்துங்க, நரம்பில்லாத நாக்குனு என்ன வேணாலும் பேசிடுவீங்களா?” என்றாள் நேத்ரா கோபமாக.​

“அட! என்மேலே எதுக்குமா கோபப்படுறே? நீ இன்னைக்கு சீக்கிரமா வந்து டாக்டர் ரூமுக்குள்ளே இருந்ததை நிறையே பேர் பார்த்திருக்காங்க. அவங்க பேசினதை தான் நான் உனக்கு சொன்னேன். இதில் என்னோட கருத்து எதுவுமே இல்லை.​

அது மட்டுமில்ல, ஒரு வேளை இந்த பொண்ணு பாவம் டாக்டரை காதலிக்குது போல. ஆனால் அவருக்கு இருக்கிற அழகுக்கும் அந்தஸ்த்துக்கும், படிப்புக்கும் இந்த பொண்ணு எப்படி சரியா வருவாள்?​

அவர் சும்மா இவளை யூஸ் பண்ணிட்டு விட்டுட போறோர்னு பேசிக்கிட்டாங்க” என்றாள் ஜமுனா நேத்ராவின் முகத்தை பார்த்துக் கொண்டே.​

அவள் எதிர்ப்பார்த்தது போல நேத்ராவின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஆனால் ஜமுனா சொன்ன விஷயத்தை ஆராயாமல் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி சுயபச்சாதாபத்தில் மூழ்கினாள். எங்கு போனாலும் நான் சித்தார்த்துக்கு பொருத்தமில்லை என்ற பேச்சு தான் என் வாழ்நாள் முழுவதும் என்னை தொடருமா? உண்மையில் நான் அவனுக்கு பொருந்தவே மாட்டேனா?​

இன்று சிவக்குமார் வந்ததால் தான் தன்னிடம் அவன் புதிதாக நெருக்கத்தை காட்டினானா? இல்லையென்றால் மனைவி தானே என்ற உரிமை உணர்வில் அப்படி நடந்துக் கொள்கிறானா?​

சித்தார்த் தான் முதல் நாள் இரவன்று அவள் தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாதவள் என்று சொல்லிவிட்டானே. ஏதோ கட்டாயத்திற்காக என்றால் அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம். அதைவிட அவன் அவனுக்கேற்ற பெண்ணை மறுமணம் செய்து கொள்வதே மேல். என்னை, என் நிறத்தை, முக்கியமாக என் கண்ணாடியை அவனுக்கு பிடித்திருந்தால் மட்டுமே நான் அவனுக்கு மனைவியாக வாழ்வதை பற்றி யோசிக்க முடியும். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை என்பது அவளுக்கே நன்றாக தெரியுமே என்று தனக்குள் யோசித்தபடி ஜமுனாவுடன் சென்றாள் நேத்ரா.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அன்று தன்னுடைய வேலையை எல்லாம் முடித்துவிட்டு டாக்டர் கிருஷ்ணனிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.​

ஐம்பதை தாண்டியிருந்த அந்த டாக்டர் பெயருக்கேற்றோர் போல கிருஷ்ணனாகவே இருந்தார். எந்த வயது பெண்ணாக இருந்தாலும் சரி, அவரை பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான். பெண் என்று எழுதி வைத்தாலே வெறித்து பார்த்து விட்டு செல்லும் ரகம். அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் சித்தார்த் வயதில் பெரியவர் என்பதால் நேத்ராவை அவரிடம் அனுப்பி இருந்தான்.​

“நேத்ரா, நல்ல பெயர், எனக்கு நல்லா ஒத்துழைக்கணும் சரியா?” என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார் அந்த டாக்டர்.​

நேத்ரா யோசனையோடு பார்க்கவும், “நான் எந்த வேலை கொடுத்தாலும் சரியா செய்யணும், அதை சொன்னேன்” என்றார் அவர்.​

“சரிங்க டாக்டர், நாளையிலிருந்து உங்க அறையில் வேலை பார்க்கிறேன், இப்போ நேரமாச்சு கிளம்பட்டுமா டாக்டர்?” என்று கேட்டாள் நேத்ரா.​

நேத்ரா சென்றதும், “என்ன ஜமுனா, இந்த பொண்ணு எப்படி? நல்லா ஒத்துழைப்பாளா?” என்றார் கிருஷ்ணன்.​

“நீங்க கேக்கிற தொணியே சரியில்லையே டாக்டர்” என்றாள் ஜமுனா கிண்டலாக அவரை பார்த்து.​

“அது அது வந்து, நீ எதுவும் தப்பா நினைக்காதே ஜமுனா. அந்த பொண்ணு புதுசு ஆச்சே., வேலை எல்லாம் கத்துக்கிட்டாளானு கேட்டேன்” என்றார் கிருஷ்ணன் மழுப்பலாக சிரித்துக் கொண்டே.​

“அது சரி உங்கள பத்தி எனக்கு தெரியாதா? ஆனா உங்களுக்கேத்த ஜோடி தான் வந்து மாட்டியிருக்கு, என்ஜாய்” என்றாள் ஜமுனா பெருமூச்சுடன்.​

“என்ன? என்ன சொல்றே ஜமுனா? எனக்கேதும் புரியலையே?” என்றார் கிருஷ்ணன் ஆர்வமாக.​

ஜமுனா காலையில் நேத்ரா டாக்டர் சித்தார்த் அறையில் இருந்ததாக தொடங்கி, அவனாக ஹாலில் அவளை அழைத்து தனியாக பேசியதுவரை தனக்கு தெரிந்த அர்த்தத்தில் கூற தொடங்கினாள்.​

கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு பேரானந்தமாக இருந்தது. அதை ஜமுனா எதிரில் காட்டிக் கொள்ளாமல், “சரி சரி மத்தவங்க கதை நமக்கெதுக்கு. நீங்க போய் உங்க வேலையை கவனிங்க” என்றார் அதட்டலாக.​

“எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு, என்னையே அதட்டறத பாரு” என்று முனகிக் கொண்டே அங்கிருந்து அகன்றாள் ஜமுனா.​

மறுநாள் நேத்ராவுடன் சேர்ந்து பணிபுரியும் நாளை எண்ணி அப்போதே கனவு காண ஆரம்பித்து விட்டார் டாக்டர் கிருஷ்ணன்.​

நேத்ரா எப்போதும் போல் மருத்துவமனை கேட்டை கடந்து அரசு பேருந்து நிலையத்தை நோக்கி போகும் போது, அவளை காலையில் பார்த்த அதே டாக்சி டிரைவர் அவளை பின் தொடர்ந்து சென்றான்.​

அவள் பேருந்தில் ஏறிய பின்னும் அந்த கார் அவளை பின் தொடர்ந்து சென்றது. கடைசியாக அவள் பெண்கள் விடுதிக்குள் நுழைவதை பார்த்து தாடியை தடவியபடி யோசித்தான் அந்த டிரைவர்.​

தன் போனை எடுத்து யாருக்கோ அழைத்தான், “ராணி அக்கா, நான் தான் பாண்டியன் பேசறேன்” என்றான்.​

“எந்த பாண்டியன்? மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா? விளக்கமா சொல்லு, வேலை கிடக்கு” என்று அலுத்துக் கொண்டாள் ராணி.​

“அதான் நேத்ரா புள்ளைக்கு கல்யாணம் பேசி முடிச்சேனே அந்த பாண்டி பேசறேன் அக்கா” என்றான் அவன் அலுப்புடன்.​

“என்ன பாண்டி? எனக்கு போன் போட்டிருக்க? என்ன விஷயம்?” என்றாள் ராணி அந்த பக்கத்தில்.​

“நீ தானே என் கல்யாணத்தில் நேத்ராவுக்கு மேக்கப் போட்டது? அது தான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு போன் போட்டேன்” என்றான் டாக்சி டிரைவர் பாண்டி.​

“மேக்கப் போட்டது நான் தான், ஆனா அதை உன் கல்யாணம்னு சொல்லாதே. வயிறு முட்ட குடிச்சுட்டு காலம்பற எழ முடியாம விழுந்து கிடந்தவன் தானே நீனு” என்றாள் ராணி லேசான கோபத்துடன்.​

“என்னக்கா பண்றது? எல்லாம் தலையெழுத்து. ஏதோ மட்ட சரக்கை ஊத்தி கொடுத்திட்டு இருக்கானுங்க. தூங்கி எழுந்து பார்த்தால் என்னை அம்போனு மண்டபத்திலேயே விட்டுட்டு போயிட்டு இருக்காணுங்க. நேத்ராவுக்கு வேறே ஒருத்தன் கூட கல்யாணம் ஆயிடுச்சுனு சொல்லவும், எனக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு. அதுக்கு தான் யாருக்கும் சொல்லாமல் அப்பவே சென்னைக்கு கிளம்பிட்டேன்” என்றான் பாண்டி.​

“அதுசரி, இப்போ என்னா விஷயம்?” என்றாள் ராணி.​

“நேத்ராவை யாரு கல்யாணம் கட்டிக்கிட்டாங்க, உனக்கேதும் தெரியுமா?” என்றான் பாண்டி.​

“உனக்கெதுக்கு அது” என்றாள் ராணி சந்தேகமான குரலில்.​

“இல்லக்கா, ஏதோ அவசரத்துல காலி பயலுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களோனு தோணுச்சு. அவ நல்லா இருக்காளானு தெரிஞ்சுகிட்டால் மனசு நிம்மதியாக இருக்கும்” என்றான் பாண்டி தன் மன ஓட்டத்தை மறைத்தபடி.​

“நீ வேணா காலி பயலா இருப்பே. நல்ல வேளை நேத்ரா பொண்ணு தப்பிச்சுக்கிட்டா. நீ குடிச்சிட்டு மட்டையானதும் ஒருவகையில நல்லது தான். அதனால் தான் பெரிய படிச்ச டாக்டர் மாப்பிள்ளை அவளுக்கு கிடைச்சிருக்காரு. நீ சென்னையில தானே இருக்கே, நலமுடன் மருத்துவமனை உனக்கு தெரிஞ்சு இருக்குமே” என்றாள் ராணி.​

“ஆமா தெரியும்! அங்கே டாக்டரா இருக்காரா?” என்று வாயை பிளந்தான் பாண்டி.​

“டாக்டரா மட்டும் இல்ல பாண்டி, அந்த ஆஸ்பத்திரிக்கே அவரு தான் முதலாளி. நம்ம சிவக்குமார் ஐயாவோட நண்பர் மகேந்திரன் சாரோட மகன் தான் சித்தார்த் அபிமன்யூ. அவரை தான் நேத்ரா கல்யாணம் பண்ணியிருக்காள். நீ அவளை பத்தி எதுவும் கவலைப்படாதே, அவ ராணி மாதிரி இருக்காள். நீ உனக்கேத்தவளா பார்த்து கல்யாணம் கட்டிக்கோ” என்றாள் ராணி.​

“அப்படின்னா சரிக்கா, ரொம்ப நல்லது” என்று சொல்லி போனை வைத்த பாண்டி யோசனையில் ஆழ்ந்தான்.​

அவனுக்கு நேத்ராவின் மேல் பெரிதாக காதல் எல்லாம் இல்லை. ஏதோ அவனுக்கேற்ற பெண்ணாக இருப்பாள் என்று அவள் பின்னால் சுற்றினான். அதுக்கு அவள் என்னவோ தன்னை பெரிய அழகினு நினைச்சுட்டு அவனை விரட்டிட்டே இருந்தாள். இப்படி விரட்டறவளையே கல்யாணம் முடிச்சு, அவளை தனக்கு அடிமையாக வச்சிக்கணும்னு நினைத்தே சிவக்குமாரை மூளைச்சலவை செய்து இந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்.​

அதுமட்டுமில்லாமல் சிவக்குமார் அவளுக்கு நர்ஸ் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார். நகையாக எதையும் கொண்டு வரவில்லை என்றாலும் சம்பாதித்து மாதாமாதம் பணம் கொண்டு வருவாளே என்று கல்யாணத்திற்கு எந்த நகையும் வேண்டாம் என்று பெருந்தன்மையாக கூறிவிட்டிருந்தான்.​

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன மாதிரி, எவனோ சித்தார்த்னு ஒருத்தன் ரெடிமேட் மாப்பிள்ளையா மாறி தன் கிளியை கொத்திட்டு போயிட்டானே என்று பாண்டி மனதிற்குள் புலம்பாத நாளில்லை.​

காலை சிவக்குமாருடன் நேத்ராவை பார்க்கும் போது, அவளை எப்படியெல்லாம் மனதிற்குள் கற்பனை செய்து வைத்திருந்தேன். இப்படி தவறவிட்டு விட்டேனே என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.​

இப்போது ராணியிடம் பேசியபின்பே அவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. இவ்வளவு பெரிய மருத்துவமனையின் முதலாளியை கல்யாணம் கட்டிக்கிட்டவ, எதுக்கு அங்கே நர்ஸ் வேலை பார்க்கணும்? எதுக்கு விடுதியில தங்கி இருக்கணும்? இதுல ஏதோ இருக்கு! எப்படியும் எங்கே தங்கி இருக்கா, எங்கே வேலை செய்யறாள்னு தெரிஞ்சு போச்சு. இனி நேத்ராவை பின் தொடர்ந்து தவறவிட்டவளை மீண்டும் என்னுடையவளாக்கி கொள்ள வாய்ப்பு இருக்கா என்று முயற்சி செய்து பார்க்கணும்” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு காரை கிளப்பினான்.​

நேத்ரா அன்று சித்தார்த் அவளின் வேலை திறமையை மெச்சுதலாக பார்த்ததை எண்ணி சந்தோஷத்துடன் தன் அறைக்கு வந்தவள் சுதாவை கட்டிக் கொண்டாள், “சுதா உன்னோட உதவியால தான் எனக்கு வேலை கன்பாரம் ஆகியிருக்கு, ரொம்ப நன்றி சுதா” என்றாள்.​

“நன்றியெல்லாம் வேண்டாம், நாளைக்கு தானே உனக்கு சம்பளம்,. எனக்கு ட்ரீட் கொடு” என்றாள் சுதா சிரித்துக் கொண்டே.​

“அதுக்கென்ன கொடுத்திட்டா போச்சு” என்று தோழியை மீண்டும் அணைத்துக் கொண்டவள், அன்று அவள் செய்த வேலைகளை பற்றி விவரித்தாள். “நியாயமா பார்த்தால் உனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டை டாக்டர் சித்தார்த் அந்த ஜமுனா சிஸ்டருக்கு சொன்னார். ஆனால் அந்த சிஸ்டருக்கு தான் அதை ஏத்துக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிச்சுட்டு இருந்தாங்க. அப்போ பார்க்கணுமே நீ அவங்களை, முகம் அஷ்ட கோணலாயிடுச்சு” என்று கலகலவென்று சிரித்தாள் நேத்ரா.​

சிரிக்கும் தன் தோழியை ஆவென்று பார்த்தாள் சுதா. “என்ன சுதா அப்படி பார்க்கிறே?” என்றாள் நேத்ரா.​

“நேத்ரா, நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? இந்த ஒரு மாசத்துல நீ சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. இப்போ தான் பார்க்கிறேன். தயவு செய்து இப்படியே சிரிச்சுட்டு இரு நேத்ரா, அழகா இருக்கே” என்றாள் சுதா மனதை மறைக்காமல்.​

“ஏய் சுதா, கலாய்க்காதே, என்னை போய் அழகா இருக்கேனு சொல்றே? என்னை பார்த்தியா மாநிறம், ஒல்லிக்குச்சி உடம்பு. இதுல மூக்கு கண்ணாடி வேறே” என்றாள் நேத்ரா.​

“நான் உன்னை கிண்டல் செய்ய சொல்லலை, உண்மையாகவே அழகா இருக்கே நேத்ரா. உன் கண்ணாடி மட்டும் தான் பழைய மாடல். நாளைக்கு சம்பளம் வாங்கி என்கிட்ட கொடு, நான் உன் முகத்துக்கு தகுந்த மாதிரி கண்ணாடி தேர்வு செய்து கொடுக்கிறேன், அதை போட்டுக்க. உன் கண்கள் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? உனக்கு சரியா தான் உங்கம்மா பேர் வச்சிருக்காங்க, நேத்ரநயனினு” என்றாள் சுதா.​

“ஏய் சுதா, என்னாச்சு இன்னைக்கு உனக்கு? கொஞ்சம் ஓவராத் தான் போறே. என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே?” என்றாள் நேத்ரா வடிவேலு மாடுலேஷனில்.​

இருபெண்களும் சிரித்துக் கொண்டு கதைகள் பேசியபடி அப்படியே உறங்கி விட்டனர்.​

ஆனால் அதே நேரத்தில் உறக்கம் இன்றி தவித்தான் சித்தார்த் அபிமன்யூ.​

கண்களை மூடினாலே காலையில் நேத்ரா அவன் கைவளைவிற்குள் நடுங்கியபடி நின்றிருந்த தோற்றம் தான் அவன் நினைவில் வந்தது.​

நயனியின் அகன்ற விழிகளின் பயந்த பார்வை சித்தார்த் அபிமன்யூவை உறங்க விடாமல் மிரட்டிக் கொண்டிருந்தது.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 1

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 12

அன்று காலை, நேத்ரநயனி எப்போதும் போல விடுதியில் இருந்து கிளம்பியவள், பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்.​

அப்போது அவள் எதிரே க்ரீச்சென்ற சத்தத்துடன் தீடிரென்று ஒரு டாக்சி வந்து நிற்கவும், பதறி நகர்ந்து நின்றாள்.​

அந்த காரின் கண்ணாடியை இறக்கியபடி, உள்ளிருந்து எட்டி பார்த்து விகாரமாக சிரித்தான் பாண்டி.​

“என்ன நேத்ரா, பயந்துட்டியா? நான் தான். உன்னை இங்கே பார்க்கவும் சடர்ன் ப்ரேக் போட்டேன். அதான்” என்றான்.​

நேத்ரா ஒரு கணம் பாண்டியை கண்டு அதிர்ந்தாலும், நொடிகளில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, அவனை கவனிக்காதவாறு நகர்ந்து நின்று பஸ் வருகிறதா? என்று பார்த்தாள்.​

மீண்டும் காரை அவளருகே கொண்டு சென்று நிறுத்தியவன் “நேத்ரா, ஏன் பேசமாட்டேங்கிறே. ஏதோ போதாத காலம் குடிச்சு தொலைச்சுட்டேன். குடி குடியை கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க. குடியால குடும்பத்தோடு இருக்க வேண்டிய நான் ஒத்தையில சுத்திட்டு இருக்கேன். நான் மட்டும் அன்னைக்கு குடிக்காம இருந்திருந்தா நாம இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆகியிருப்போம், இந்நேரம் நீ வயித்த தள்ளிட்டு இருந்து இருப்பே” என்றான் அவளை வெறித்து பார்த்தபடி.​

“ச்சே” அருவருப்புடன் முகத்தை சுழித்தவள், பஸ்ஸிற்காக காத்திருக்க விருப்பமில்லாமல், அங்கே செல்லும் ஆட்டோவை அழைக்க தொடங்கினாள்.​

“நேத்ரா, ஏன் ஆட்டோவுக்கு எல்லாம் வீணா செலவு பண்றே, என்னோட டாக்சியில வா, நான் உன்னை டிராப் பண்றேன்” என்றான்.​

அவள் பாண்டியை சிறிதும் சட்டை செய்யாமல் அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி சென்றாள்.​

“எவ்வளவு திமிர்? நான் இவ்வளவு பேசறேன். ஒரு வார்த்தை பேசினாளா?” என்று பல்லை கடித்தான் பாண்டி.​

நேத்ரா அவன் ஆட்டோவை பாலோ செய்கிறானோ என்று பயந்து பின்னால் திரும்பி பார்த்தபடி, “அண்ணா “நலமுடன்” மருத்துவமனைக்கு கொஞ்சம் சீக்கிரமா போங்க, நேரா மெயின்ரோடு பக்கமாக போகாமல் வேறே வழியிருந்தால் அந்த பக்கம் போங்க” என்றாள் சற்று பதட்டத்துடன்.​

பாண்டியை கண்டதும் உள்ளுக்குள் பதட்டம் ஏற்பட்டாலும், அவனிடம் தன் பலவீனத்தை காட்டாமல் இருந்தாள். நிச்சயம் அந்த பஸ் நிறுத்தத்தில் ஏதாவது வம்பு செய்வான் என்றே அவள் ஆட்டோவில் ஏறிவிட்டாள். அவளை பின்தொடர்ந்து வந்து அவள் எங்கே வேலை செய்கிறாள் என்று அவன் தெரிந்து கொண்டால் பின்னர் தொடர்ந்து தொல்லை கொடுக்க தொடங்கிவிடுவான் என்பதாலேயே ஆட்டோ டிரைவரை மாற்று வழியில் செல்ல சொன்னாள்.​

ஆனால் பாண்டி இதற்கு முன்பே அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் வைத்து அவளை பார்த்து விட்டான் என்பது நேத்ராவிற்கு தெரியவில்லை.​

நேத்ரா மருத்துவமனையை அடையும் முன்பே பாண்டி அந்த இடத்தை அடைந்து விட்டு, காரை மறைவாக பார்க் செய்துவிட்டு, அங்கிருந்த செக்யூரிட்டி அறையின் பின்னால் ஒளிந்து நின்றான். நேத்ரா அவசரமாக ஆட்டோவில் இருந்து இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு சுற்றும் முற்றும் பாண்டியின் டாக்சி தெரிகிறதா என்று பார்த்தாள், அவன் இல்லை என்றதும் பெருமூச்சுடன் மருத்துவமனைக்குள் சென்றாள்.​

உண்மையில் தான் தனியாக இருப்பது அவனுக்கு தெரியக்கூடாது என்று தான் அவள் பயமே. திருமணத்திற்கு முன்பே பொது இடம் என்றும் பாராமல் அவள் பின்னால் சுற்றித்திரிவான். இப்போது அவளின் உண்மை நிலை தெரிந்தால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள தயங்க மாட்டான். அதுமட்டுமில்லாமல் தன் தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டால், அவர் உடல்நிலை என்னாகுமோ என்ற பயம் வேறு இருந்தது.​

நேத்ரா செல்லும்வரை, ஒருவித குரூரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டி.​

நேத்ரா உள்ளே சென்றதும், ஜனனி அவளை அழைத்தாள், “மிஸ்.நேத்ரா வாழ்த்துக்கள், உங்க வேலையை டாக்டர் கன்பார்ம் பண்ணி இருக்கார். நீங்க வேணும்னா மருத்துவமனை வளாகத்தில் இருக்கிற ஹாஸ்டல்ல இலவசமாக தங்கிக்கலாம். இது உங்களோட சம்பள பணம்” என்று சொல்லி ஒரு கவரை நீட்டினாள்.​

ஹாஸ்பிட்டலுக்கு உட்பட்ட விடுதியில் தங்குவதால், வாடகை பணம் இனி மாதாமாதம் மிச்சமாகும், ஆனாலும் சுதாவோடு இப்போது தான் நல்ல நட்பில் இணைந்திருக்கிறாள். அதற்குள் அவளை விட்டு பிரிய வேண்டுமா? என யோசித்தாள் நேத்ரா.​

ஜனனியிடம் சம்பள கவரை வாங்கியபடி, “தேங்க்ஸ் சிஸ்டர். இப்போதைக்கு நான் ஏற்கனவே தங்கியிருக்கிற விடுதியில் தங்கிக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் உங்களிடம் வந்து கேட்கிறேன்” என்று சொல்லிவிட்டு யுனிபார்ம் மாற்றும் அறைக்கு சென்றாள்.​

அவள் சென்றதும் ஜனனி, “டாக்டர் நீங்க சொன்னது போல, நம்ம மருத்துவமனை வளாகத்தில் இருக்கிற ஹாஸ்டல் இலவசம்னு சொல்லியும், நேத்ரா இப்போதைக்கு வேண்டாம், வேணும்னா சொல்றேன்னு சொல்லிட்டு போறாங்க டாக்டர்” என்றாள் ஜனனி​

“சரி ஜனனி, அவங்க விருப்பம், கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று போனை வைத்தான் சித்தார்த்.​

உண்மையில் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்க, குறைந்தது ஓராண்டாவது வேலை செய்து இருக்க வேண்டும். அப்போது தான் தங்க அனுமதி உண்டு. ஆனால் சித்தார்த், நேத்ராவிற்கு விடுதியை ஏற்பாடு செய்து தரும்படி போன வாரமே ஜனனிக்கு சொல்லியிருந்தான்.​

ஜனனிக்கும் சித்தார்த் எதற்காக நேத்ராவிற்கு சலுகை கொடுக்கிறான் என்ற கேள்வி தோன்றினாலும், அதைப்பற்றியெல்லாம் ஆராய்ச்சி எதற்கு என்று விட்டு விட்டாள். அதற்குள் ஜமுனா ஏற்படுத்தி இருந்த வதந்தி ஜனனிக்கும் தெரிய வந்தது. அவளுமே நேத்ராவை தவறாக தான் நினைத்தாள்.​

ஆனால் தங்கும் அறை இலவசம் என்று சொல்லியும் மறுத்துவிட்டு செல்கிறாளே என்று ஆச்சரியமாக இருந்தது ஜனனிக்கு.​

சித்தார்த் தான் கொதித்துக் கொண்டு இருந்தான். இரவெல்லாம் நேத்ரநயனின் விழிகளில் இருந்து நீந்தி கரையேற முடியாமல் தவித்து தூக்கத்தை தொலைத்திருந்தான்.​

அவனும் எப்படியாவது அவளை நெருங்க தான் நினைக்கிறான். ஆனால் அவள் தான் அதற்காக எந்த வழியையும் கொடுக்காமல் தடை போட்டுக் கொண்டே இருக்கிறாள்.​

விருப்பமில்லாத திருமணத்தை செய்து அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள நானே தயாராக இருக்கும் போது விவாகரத்தை பற்றி பேசுகிறாள். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வராமல் அவளாக விடுதியில் சென்று தங்குகிறாள்.​

நானா அவளை போக சொன்னேன்? அவள் எப்போது என்னை கணவன் என்று உணர்ந்து என்னுடன் வருகிறேன் என்று சொல்கிறாளோ அதுவரைக்கும் நானாக அவளை அழைக்கபோவதில்லை என்பது தான் சித்தார்த்தின் மன ஓட்டமாக இருந்தது. (ஆனால் அவனாகவே அவளை அவன் வீட்டிற்கு இழுத்துச் செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை).​

தினமும் காலை அவசரமாக எழுந்து பஸ் பிடித்து மருத்துவமனைக்கு வந்து செல்கிறாளே, குறைந்தப்பட்சம் மருத்துவமனை விடுதியில் தங்கினால் அவளுக்கு அலைச்சல் இருக்காதே என்று எண்ணி தான் விதிமுறைகளை மீறி ஜனனியிடம் நேத்ராவிற்கு அறையை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கூறியிருந்தான்.​

ஆனால் மகாராணி அதுக்கு கூட ஒத்துக்க மாட்டாளாமே! திமிர், உடம்பெல்லாம் திமிர்! இனி இவளை நம்பி மனசை பறி கொடுக்காதே சித்தார்த்! முக்கியமா அவள் கண்ணை மட்டும் பார்க்காதே! அந்த இடம் மிகவும் ஆபத்தானது! என்று அவனுக்கு அவனே அறிவுரை சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.​

நேத்ரா சித்தார்த்தின் வருகைக்காக காத்திருந்தாள். ஒரு ஊழியராக அவனுக்கு அவள் நன்றி கூற வேண்டும் என்று தோன்றியது. நல்ல சம்பளம் கொடுத்ததோடு, தங்கும் விடுதிக்கும் ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறானே, என்று நினைத்தபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.​

சித்தார்த் நேராக உள் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு செல்லவும், அவன் பின்னால் சென்றாள் நேத்ரா, ஆனால் அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை. வேகமாக நோயாளிகளை பார்த்துவிட்டு, ஆபரேஷன் அறைக்கு சென்றான். நேத்ரா அப்போதும் அவன் பின்னாலேயே சென்றாள்.​

அங்கே டாக்டர் கிருஷ்ணன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்தவர், சித்தார்த்தின் பின்னால் நேத்ரா செல்வதும், அவன் வேண்டுமென்றே அவளை கவனியாதவன் போல மற்றவர்களிடம் கேள்வி கேட்பதையும் பார்த்தார்.​

நேத்ரா பொறுமையிழந்து, “டாக்டர்” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.​

சித்தார்த்தோ சற்றும் நிமிர்ந்தும் பார்க்காமல், ஏதோ ரிப்போர்டடில் தன் பார்வையை பதித்தவாறே, “ம்ம் சொல்லுங்க” என்றான்.​

“நான் உங்க கிட்ட தனியா பேசணும்” என்றாள் நேத்ரா. நன்றியும் சொல்லிவிட்டு அப்படியே பாண்டியை பற்றியும் கூற வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள்.​

“என்கிட்ட தனியா பேச என்ன இருக்கு மிஸ்.நயனி? இங்கே வேலை செய்யற நர்ஸ்கிட்ட எல்லாம் நான் தனியா பேசிட்டு இருந்தால் என் வேலையை யார் செய்வது? எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க” என்றான் எங்கேயோ பார்த்தபடி, அவள் பார்வையை தவிர்க்கிறானாம்!​

சித்தார்த்தின் இந்த பதிலை நேத்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்க்க பிடிக்காதவன் போல முகத்தை திருப்பி கொள்கிறானே! ஆக சற்றுமுன் அவளை கவனிக்காத மாதிரி சென்றது எல்லாம், வேண்டும் என்று உதாசீனப்படுத்த தான் என்று புரிந்து கொண்டாள் நேத்ரா. ஒரு சாதாரண நர்ஸ்ஸிடம் அவன் ஏன் நின்று பேச வேண்டும்?​

“சாரி சார் உங்க நேரத்தை வீணாக்கிட்டேன். உங்களுக்கு நன்றி சொல்ல தான் உங்க பின்னாடி வந்தேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் நேத்ரா இறுக்கமான குரலில்.​

“யு ஆர் மோஸ்ட் வெல்கம்” என்று அதைவிட இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான் சித்தார்த்.​

நன்றி சொல்றாளாம் நன்றி, இவ நன்றி யாருக்கு வேண்டும் உள்ளுக்குள் புகைந்தபடி சென்ற கணவனை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் நேத்ரநயனி.​

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்த டாக்டர் கிருஷ்ணன் சித்தார்த் சென்றதும் அவளருகில் வந்து, “என்ன நேத்ரா, டாக்டர் உன்னை கழட்டி விட்டாரா? நீ ஒன்னும் கவலைப்படாதே. நான் அவரை மாதிரி யூஸ் பண்ணிட்டு தூக்கி போடற ரகம் இல்லை. காலம்பூரா உன்னை பார்த்துப்பேன்” என்றார் பல்லைக்காட்டி.​

நேத்ராவிற்று, அந்த கணமே அவரின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்று கைகள் பரபரத்தது. தன் விரல்களை உள்ளங்கையில் மடக்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். மருத்துவமனையே பரபரப்பாக இருந்தது.​

ஒற்றை விரலை அவரிடம் நீட்டி, “இனி இந்த மாதிரி என்கிட்ட இன்னொரு முறை பேசினே பல்லை தட்டி கையில கொடுத்திடுவேன். ஜாக்கிரதை” என்று மிரட்டல் தொணியில் சொல்லிவிட்டுச் சென்றாள்.​

கிருஷ்ணனுக்கு உடலும் மனமும் கோபத்தால் கொந்தளித்தது. “ப்பூனு ஊதுனா பறந்துடுவா, இவ என்னை அடித்து பல்லை விழ வச்சிடுவாளாமே? என்கிட்ட தானே வேலை பார்க்கணும். இருடி உன்னை எப்படி வழிக்கு வர வைக்கணும்னு எனக்கு தெரியும்” என்று உள்ளுக்குள் கறுவியபடி தன் அறைக்கு சென்றார்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

நேத்ரா எதுவுமே நடக்காதது போல, அவர் உள்ளே நுழைந்ததும், “குட்மார்னிங் டாக்டர்” என்றாள்.​

அவளை வினோதமாக பார்த்தபடி, தன் இருக்கையில் அமர்ந்து, “ஒவ்வொரு பேஷன்டா உள்ளே அனுப்பு” என்றார்.​

“ஓகே டாக்டர்” என்று சொல்லி தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள் நேத்ரா.​

சற்றுமுன் தன் முன்னால் விரலை நீட்டி மிரட்டியவள் இவள் தானா? என்ற சந்தேகமே வந்துவிட்டது டாக்டர் கிருஷ்ணனுக்கு. அவள் அவர் சொன்ன வேலையை கவனமாக கேட்டு சரியாக செய்தாள். ஆனால் நேத்ராவின் முகம் இறுகி போயிருந்தது.​

உடல் வலிமை இல்லை என்றாலும் மனவலிமை சற்றும் அதிகம் இருக்கும் போல. மற்ற பெண்களிடம் நடந்து கொள்வது போல இவளிடம் அத்தனை எளிதில் நெருங்கிவிட முடியாது. எனவே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார் அவர்.​

அன்று வேலையை முடித்து வழக்கம் போல வெளியே வந்தவள் பஸ்நிறுத்தத்தில் காத்திருக்கவும், பாண்டி அவளருகே வந்து நின்றான். மருத்துவமனையில் கிருஷ்ணன் தன்னிடம் பேசிய பேச்சின் கொதிப்பிலிருந்து வெளிவராமல் இருந்தவள், பாண்டியை பற்றி மறந்தே போனாள்.​

சலிப்புடன் முகத்தை வேறுபக்கம் திருப்பி நிற்க, “நேத்ரா என்கிட்ட ஏன் பேச மாட்டேங்கிறே, என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டவ தானே நீ. இப்போ என்னவோ என்னை பிடிக்காத மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டா என்ன அர்த்தம்?” என்றான் பாண்டி.​

ஏற்கனவே மன கொதிப்பில் இருந்தவள் கோபமாக அவனை பார்த்து, “நான் ஒன்னும் உன்னை பிடிச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அதைப்பற்றி பேசறதுக்கு இனி எதுவுமே இல்லை. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் பின்னாடி வர்றதை நிறுத்திட்டு உன் வேலையை மட்டும் பாரு” என்றாள்​

“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தான் நான் ஒத்துக்கிறேன். ஆனா நீ உன் புருஷன் கூட இல்ல போல இருக்கே. ஊருக்காக கல்யாணம் கட்டிக்கிட்டு உன்னை ஒதுக்கி வச்சிருக்கான்னு நல்லாவே தெரியுது. நீ ஏன் அவனுக்காக ஒரு பொய்யான வாழ்க்கையை வாழணும். என்கூட வந்துடு நேத்ரா” என்றான் பாண்டி.​

“நான் பொய்யான வாழ்க்கை வாழறேன்னு உனக்கு யார் சொன்னது? என் வாழ்க்கை பத்தி கவலை படுவதற்கு முதல்ல நீ யாரு? உனக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமே இல்லை. ஒழுங்கா இங்கிருந்து போயிடு. ஏற்கனவே கோபத்தில் இருக்கிறேன், மேலும் என்னை வெறுப்பேத்தாத” என்று சொல்லிவிட்டு அங்கிருக்க பிடிக்காமல் நடக்க தொடங்கினாள்.​

“நேத்ரா, கொஞ்சம் நில்லு, எனக்கொரு சான்ஸ் கொடு” என்று சொல்லியபடி பின்னாலே வந்தான் பாண்டி.​

வழியில் செல்பவர்கள் இவர்களையே திரும்பி பார்க்கவும், அவமானமாக இருந்தது அவளுக்கு. “என்னதான் உன் பிரச்சனை?” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.​

“புத்திக் கெட்டு போய் அன்னைக்கு குடிச்சிட்டேன்,. அதுக்காக உன்னை மொத்தமா இழக்கணும்னா எப்படி நேத்ரா. நீ எனக்கு வேணும். உன்கூட எப்படி எல்லாம் வாழணும்னு கனவு கண்டுட்டு இருந்தேன் தெரியுமா? என் கூட வந்துடு நேத்ரா. நீ தனியா தானே இருக்கே? என்கூட வந்துடு” என்றான் பாண்டி கெஞ்சும் குரலில்.​

“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட வந்து, என்கூட வந்துடுனு கூப்பிடுறே. சீச்சி, உன் கூட எல்லாம் பேசறதே வேஸ்ட்” என்றபடி வேகமாக நடந்தாள் நேத்ரா.​

“நேத்ரா என்னை பத்தி உனக்கு தெரியும் தானே? நீ எனக்கு கிடைக்கும்வரை உன் பின்னாடியே சுத்தி கல்யாணம் வரைக்கும் போனவன் நான். இப்பவும் நான் அதே பாண்டி தான் நீ என்கூட வர வரைக்கும் உன்னை விடாமல் துரத்துவேன், அதுக்கு பதிலா நீயாவே என் கூட வந்திடு” என்றான் பாண்டி சற்று மிரட்டல் தொணியில்.​

“உன்கிட்ட ஏமாற நான் ஒண்ணும் எங்க அப்பாவை போல அப்பாவி இல்ல. உன்னால் ஆனதை பார்த்துக்க” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று மீண்டும் ஆட்டோவை பிடித்து தன் விடுதிக்கு சென்றாள்.​

அவள் இறங்கும் முன்னே பாண்டி தன் டாக்சியில் சாய்ந்தபடி நின்று கொண்டு அவளை பார்த்து ஏளனமாக சிரித்தான்.​

அவனை சற்றும் சட்டை செய்யாமல் விடுதிக்குள் சென்று தன் அறையிலிருந்த கட்டிலில் தொப்பென்று விழுந்தவள் தாங்க முடியாத மன அழுத்தத்தில் முதன்முறையாக வெடித்து அழுதாள்.​

சுதா அப்போது தான் தன் தோழிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று தன் பணத்திலேயே ஒரு அழகான கண்ணாடிபிரேமை வாங்கி அதை கிப்ட்டாக பேக் செய்து கொண்டு வந்திருந்தாள். அறைக்கு வெளியே நேத்ராவின் காலணியை பார்த்ததும், ஏற்கனவே தோழி வந்துவிட்டிருக்கிறாள் என்று மெல்ல உள்ளே நுழைந்து, “சர்ப்ரைஸ்” என்று கத்தினாள்.​

ஆனால் சுதாவின் சத்தத்திற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் நேத்ரா கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு இருந்தாள். அவள் முதுகு அழுகையில் குலுங்குவதை பார்த்த சுதா பயந்து விட்டாள்.​

“நேத்ரா, ஏன் அழறே? என்னாச்சு? சொல்லுடி?” என்று தோழியை உலுக்கினாள்.​

சுதாவை பார்த்ததும் அவளை கட்டிக்கொண்டு கதறி அழுதாள். நேற்று இரவு தான் முதன் முறையாக நேத்ரா சிரித்ததை பார்த்தாள் சுதா. ஆனால் இன்று இரவு அவள் முதல் முறையாக கதறி அழுவதை பார்க்கக்கூடும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.​

நேத்ராவின் கதறலில் அவள் மிகுந்த மன வலியில் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அவளாக அழுது தேறும்வரை பொறுமை காத்தாள் சுதா. தோழியின் முதுகை வருடி கொடுத்தபடி, “ஒன்னும் இல்ல, எல்லாம் சரியாகிடும். தூங்கி எழுந்தா எல்லாம் சரியாயிடும்” என்றாள் குழந்தையை தேற்றுவது போல.​

தூங்கி எழுந்தால் சரியாக கூடிய பிரச்சனையா இருக்கு அவளிடம்? என்று எண்ணி மீண்டும் கண்ணீரில் கரைந்தாள் நேத்ரா. சுதா தோழிக்கு தண்ணிரை பருகவைத்து, “எதுக்கு அழறேனு என்கிட்ட சொல்ல தோணுச்சுனா சொல்லு. என்னால முடிஞ்சதை செய்யறேன்” என்றாள் சுதா.​

யாரிடமாவது சொல்ல வேண்டும், தன் மனபாரத்தை இறக்கி வைக்காமல் போனதால் தான் இதயம் பாறாங்கல்லாய் கனக்கிறது போலும் என்று நினைத்தவளாய் தன் தோழியிடம் தன் திருமணம் முதற்கொண்டு நடந்ததை அனைத்தையும் கூறி முடித்தாள் நேத்ரா.​

தாலிகட்டிய கணவனுடன் இயல்பான திருமண பந்தத்தை தொடர முடியவில்லை. காரணம் வசதி, அந்தஸ்து, படிப்பு என அனைத்திலும் அவன் மேலானவன். அதே சமயம் அந்த பந்தத்தை உதறவும் முடியவில்லை. இதற்கிடையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவளை ஜமுனா, வசந்தி என்ற கழுகுகள் கொத்தி தின்று கொண்டிருக்கின்றன, இன்று புதிதாக டாக்டர் கிருஷ்ணன் வேறு முளைத்திருக்கிறான். ஏதோ வேலை செய்யும் இடத்தில் தான் பிரச்சனை என்று இருந்தால் பாண்டி வேறு அவளை மிரட்டுகிறான்.​

இனி எப்படி அவள் தினமும் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வருவாள்? இவை அனைத்தும் அவளை அழுத்தியதில் மன வேதனை தாங்காமல் அழுததாக கூறினாள் நேத்ரா.​

பொறுமையாக நேத்ராவின் பேச்சை கேட்டிருந்த சுதா, “நீ சொல்றதை வச்சு பார்த்தால் டாக்டர் சித்தார்த் உன்னை வெறுக்கிற மாதிரி எனக்கு தோணலை நேத்ரா” என்றாள்​

“அதே சமயம், அவர் என்னை விரும்பவும் இல்லை சுதா” என்றாள் நேத்ரா.​

“அது உனக்கெப்படி தெரியும்? அவர் உன்னை விரும்பலைனு உன்கிட்ட சொன்னாரா? என்றாள் சுதா.​

“இல்லை, அன்னைக்கு முதலிரவில் சொன்னார்” என்றாள் நேத்ரா.​

“அன்னைக்கு நடந்த அதிர்ச்சியில சொல்லியிருக்கலாம், மறுபடியும் அவர் மனசு மாறியிருக்கவும் வாய்ப்பிருக்கு. நீ ஏன் அவர்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்ல கூடாது?” என்றாள் சுதா.​

“எல்லாத்தையும் சொல்லலைனாலும் பாண்டியை பத்தி சொல்லலாம்னு தான் அவர்கிட்ட பேசணும்னு இன்னைக்கு கேட்டேன். முகத்தில் அடிச்ச மாதிரி நர்ஸ்ங்க கிட்ட எல்லாம் எனக்கு பேச நேரமில்லைனு சொல்லிட்ட போயிட்டாரு” என்றாள் நேத்ரா கண்கலங்க.​

“அவர் ஏதோ டென்ஷன்ல இருந்து இருப்பாரு, நீ மறுபடியும் முயற்சி செய்” என்றாள் சுதா.​

“இல்லை சுதா, நான் அவர்கிட்ட விவாகரத்துக்கு சம்மதிக்கிறதா வாக்கு கொடுத்திட்டேன். இனி மாற்றி பேச முடியாது, என் பிரச்சனையை நான் தான் பார்த்துக்கணும். வேறே எதாவது வழி இருந்தா சொல்லு” என்றாள் நேத்ரா.​

“அப்போ காலையில் உன்னை மருத்துவமனைக்கு சேர்ந்த விடுதியில் தங்கிக்க சொன்னதாக சொன்னே இல்ல. நீ ஏன் அங்கே போய் தங்க கூடாது? அங்கே போய்ட்டால் நீ வெளியே பஸ், ஆட்டோனு அலைய வேண்டியதே இல்லை. எல்லாமே ஒரே காம்பவுண்டுக்குள்ளே இருக்கு, அந்த பாண்டியால அவ்வளவு சீக்கிரமா உன்னை நெருங்க முடியாது” என்றாள் சுதா.​

“சுதா உண்மையில் இது நல்ல யோசனை தான். ஆனால் உன்னை விட்டு போகணுமே” என்றாள் நேத்ரா கவலையுடன்.​

“நேத்ரா நீ எனக்காக யோசிக்காதே, நாம போன்ல பேசிக்கலாம், நேரம் கிடைக்கும் போது நேரில் சந்திக்கலாம். இப்போ உன்னோட பாதுகாப்பு தான் முக்கியம்” என்றாள் சுதா.​

கண்களை துடைத்துக் கொண்டு, “சரி சுதா, நாளைக்கே நான் போய் அங்கே தங்கறதா சொல்லிடுறேன்” என்றாள் நேத்ரா.​

“என்ன சொல்ல வேண்டி இருக்கு? உன்னோட பொருளை எல்லாம் நாளைக்கே எடுத்துட்டு போயிடு, இந்தா நான் உனக்காக வாங்கி வந்த கிப்ட். இனி இந்த கண்ணாடி தான் நீ போட்டுக்கணும்” என்றாள் சுதா​

“ட்ரீட் கேட்டியே சுதா” என்றாள் நேத்ரா.​

“அதெல்லாம் வேண்டாம் நான் சும்மாதான் கேட்டேன், உன் பிரச்சனை எல்லாம் முடியட்டும். அதுவே எனக்கு போதும்” என்று சொன்ன தோழியை கட்டிக் கொண்டாள் நேத்ரா,​

மறுநாள் பாண்டி நேத்ராவிற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தான். ஆனால் நேத்ரா ஆட்டோவை விடுதிக்கே வரவழைத்து தன் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றாள்.​

பெட்டி படுக்கையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த நேத்ராவை காரை பார்க் செய்து கொண்டிருந்த சித்தார்த் பார்த்தான். புருவ முடிச்சுடன் அவள் பின்னால் சென்றான்.​

நேத்ரா நேராக ஜனனியின் இருப்பிடத்திற்கு சென்றாள். நேத்ராவையும் அவளின் லக்கேஜையும் பார்த்தவாறு, “என்ன மிஸ்.நேத்ரா?” என்று கேட்டாள் ஜனனி.​

“நேத்து, என்னை மருத்துவமனையில் இருக்கிற விடுதியில் தங்கிக்க சொன்னீங்களே, அதான் என்னோட பொருளை எல்லாம் எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றாள்.​

“ஆனால் நேத்து, நீங்க இங்கே தங்க போறது இல்லேனு தானே சொன்னீங்க” என்றாள் ஜனனி கேள்வியாக.​

தலைகுனிந்தபடி, “ஆமா, ஆனா இப்போ இங்கே தங்க வேண்டிய நிலைமை வந்திடுச்சு” என்றாள் மெல்லிய குரலில்.​

“ஏன் என்னாச்சு நேத்ரா?” என்றாள் ஜனனி தோழமையுடன். தோழைமயான பேச்சுக்கு காரணம், சித்தார்த் அபிமன்யு பக்கவாட்டாக நின்று கைகளை கட்டிக் கொண்டு அங்கே நடப்பதை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று எதிர் திசையில் நின்று கொண்டிருந்த ஜனனிக்கு நன்றாகவே தெரிந்தது.​

நேத்ரா பதில் ஏதும் கூறாமல், “ப்ளீஸ், என்னோட அறையை காட்டினீங்கனா இந்த பொருட்களை வச்சுட்டு, யுனிபார்ம் மாத்திப்பேன்” என்றாள்.​

“சரி வாங்க, என்னோட அறையில் தான் பெட் காலியா இருக்கு, அங்கே போகலாம்” என்றபடி ஜனனி நேத்ராவை அழைத்துச் சென்றாள்.​

வழியில் சித்தார்த் அபிமன்யு கைகளை கட்டியபடி அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டு இருப்பதை உணராமல் தலை குனிந்தபடி சென்றவளின் விழிகளில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் தரையில் விழுந்து தெறித்து சித்தார்த்தின் கருப்புநிற காலணியில் விழுந்தது.​

நேற்று காலை மருத்துவமனையின் விடுதியில் தங்க இப்போதைக்கு அவசியம் இல்லை என்று சொல்லிச் சென்றவள் மறுநாளே கையில் பெட்டி படுக்கையுடன் இங்கேயே தங்கி கொள்ளவதாக சொல்லி வந்திருக்கிறாள். இந்த ஒரு நாளில் அப்படி என்ன நடந்திருக்கும்? எதற்கும் கலங்காமல் என்னிடம் தைரியமாக பேசுபவள் எதற்கு கண்ணீர் விடுகிறாள்? முன்னால் சென்று கொண்டிருக்கும் தன் மனைவியை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த் அபிமன்யு.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 1

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 13​

சித்தார்த் அபிமன்யு தன்னை கவனிக்கிறான் என்பதை உணராமலே நேத்ரா விழிநீரை அவசரமாக துடைத்துக் கொண்டு ஜனனியுடன் சென்றாள்.​

சித்தார்த் கைப்பேசியில் குறுஞ்செய்தி வரவும் எடுத்து பார்த்தான். டாக்டர் கிருஷ்ணன் சற்று தாமதமாக வருவதாக செய்தி அனுப்பியிருந்தார். அங்கே அட்மின் கேபினில் இருந்த ஜனனியின் அசிஸ்டென்ட் பெண்ணிடம், “டாக்டர் கிருஷ்ணன் தாமதமாக வருகிறாராம், அவர் வர வரைக்கும், அவரோட நோயளிகளை நானே அட்டென்ட் பண்றேன். மிஸ்.நயனி வந்தா சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு நேராக டாக்டர் கிருஷ்ணன் இருந்த அறைக்கு சென்று அவர் இருக்கையில் அமர்ந்தபடி நயனிக்காக காத்திருந்தான்.​

யுனிபார்ம் அணிந்து வந்த நேத்ரா, அட்மின் பக்கமாக செல்லாமல், நேராக வெளி நோயாளிகள் பகுதிக்கு வந்து, டாக்டர் கிருஷ்ணனுக்காக ஒதுக்கப்பட்ட அறை வாசலிலே சித்தார்த்துக்கு முதுகுகாட்டி நின்று கொண்டாள்.​

சித்தார்த் நோயாளிகளை பரிசோதிக்க வந்தது ஒரு காரணமாக இருந்தாலும், முக்கியமாக நேத்ராவின் திடீர் இடமாற்றத்திற்கு என்ன காரணம்? அதுவும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையிலேயே அழுகிறாள் என்றால் என்ன பிரச்சனை என்று தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றியது. எனவே நோயாளிகள் வருவதற்குள் கிருஷ்ணனின் அறையில் அமர்ந்திருந்தான்.​

அறைக்கதவு திறந்திருந்தாலும் பச்சை நிற தடுப்பு துணி அவன் உள்ளே அமர்ந்திருப்பதை மறைத்திருந்தது. எனவே உள்ளே டாக்டர் கிருஷ்ணன் தான் அமர்ந்திருக்கிறார் என்று எண்ணிய நேத்ரா, அவர் தனியாக இருக்கும் போது உள்ளே செல்ல விருப்பமில்லாமல் வெளியிலேயே நின்றாள்.​

அன்றைக்கென்று நோயாளிகள் கூட்டம் குறைந்திருக்கவே, நேத்ரா வெகுநேரம் வெளியிலேயே நின்றாள்.​

நோயாளி வரும்வரை உள்ளே வந்து உட்காரலாம், இல்லை இங்கே அனைத்தையும் சரிப் பார்க்கலாம் என்று இல்லாமல் எதற்கு வெளியே நின்றுக் கொண்டிருக்கிறாள்? என்ற யோசனையோடு இருந்தவன் அதற்கு மேல் பொறுமையில்லாமல், அங்கிருந்த பெல்லை அழுத்தினான்.​

பெல் சத்தம் கேட்டாலும் உள்ளே இருப்பது கிருஷ்ணன் என்று நினைத்து, நேத்ரா அசையாமல் நின்றாள். சித்தார்த் விடாமல் தன் பெல்லை அழுத்திக் கொண்டே இருந்தான். நேத்ரா உடல் நடுங்க கைகளை இறுக்கிபிடித்து அழுத்தமாக நின்றிருக்கவும் சித்தார்த்திற்கு கோபம் வந்து விட்டது.​

நான் உள்ளே இருக்கிறேன்னு தெரிஞ்சு தான் வேணும்னு உள்ளே வராமல் இருக்காள். எவ்வளவு திமிர்? நேத்து நான் நர்சிடம் எல்லாம் பேச நேரமில்லைனு சொன்னதால வேணும்னு உள்ளே வராமல் கல்லு மாதிரி நிக்கிறாளே? அவளை பெயர் சொல்லி அழைக்கவும் விருப்பமின்றி பெல்லை விடாமல் அடித்துக் கொண்டே இருந்தான். பக்கத்து அறையில் இருந்த நர்ஸ் வெளியே வந்து, “என்ன நேத்ரா, உள்ளே டாக்டர் விடாமல் பெல் அடிச்சுட்டு இருக்காரு. என்னனு போய் கேக்காமல் இங்கேயே நின்னுட்டு இருந்தால் எப்படி?” என்றாள் அவள் அதட்டலாக.​

சித்தார்த் தன் கோபத்தை கட்டுப்படுத்த சுழற்நாற்காலியில் சுழன்று கொண்டிருந்தான். சரியாக அவன் சுவரின் பக்கம் திரும்பி இருக்கும் சமயம், ஆத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் நேத்ரா.​

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க என்ன பத்தி? நீங்க பெல் அடிச்சா நான் வந்து நிக்கணுமா? நோயாளிங்க வந்தால் அவங்களை அழைச்சிட்டு தான் நான் உள்ளே வருவேன். உங்க புத்தியை பற்றி தெரிஞ்சும் யாரும் இல்லாத சமயத்தில் நீங்க மட்டும் அறையில் இருக்கும் போது உங்களை நம்பி எல்லாம் என்னால் தனியாக உள்ளே வரமுடியாது” என்றாள் உச்சபட்ச கோபத்தில்.​

பாண்டியின் மீதும், கிருஷ்ணனின் மீதும் இருந்த கோபத்தில் தன்னிலை இழந்து நேத்ரா கோபத்தில் வெடித்திருக்க, சித்தார்த் அபிமன்யுவிற்கு அதைவிட கட்டுக்கடங்காத கோபம் வந்திருந்தது. “நான் தனியாக இருக்கும் போது என்னை நம்பி அறைக்குள் வரமாட்டாளாமா, அப்படி என்ன செய்துவிடுவேன் இவளை?” என்று கோபமாக நினைத்தவன் அதை வார்த்தையாக கூறாமல் தன் செயலில் காட்ட நினைத்தான்.​

நாற்காலியை விட்டு சடாரென்று எழுந்து வேகமாக அவளை தொட்டுவிடும் தூரத்தில் வந்து நின்ற சித்தார்த்தை கண்டு அதிர்ச்சியில் விழி அகல பார்த்தாள். அவள் அதிர்ச்சியை கண்டுக் கொள்ளாமல், அவள் கழுத்தில் கைவைத்து அப்படியே சுவற்றில் சாய்த்து “ஏன் தனியா நான் இருக்கும் அறைக்குள்ள நீ வந்தா உன் மேலே அப்படியே பாய்ஞ்சிடுவேன்னு நினைச்சியா? இல்ல இப்படி கட்டிபிடிச்சுடுச்சு முத்தம் கொடுத்துடுவேன்னு நினைச்சியா?” என்று மூர்க்கத்துடன் அவளை கட்டிப்பிடித்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.​

சித்தார்த் எப்போது உள்ளே வந்தான்? டாக்டர் கிருஷ்ணன் எங்கே போனார்? அவள் டாக்டர் கிருஷ்ணனை நினைத்து பேசியிருக்க, இவனோ தன்னை பேசியதாக நினைத்து கோபம் கொள்கிறானே என்று பதட்டத்துடன், “அய்யோ நான் உங்களை சொல்லலை விடுங்க” என்று அவன் பிடியில் இருந்து திமிறினாள்.​

“இங்கே என்னை தவிர யார் இருக்கா? நான் இருக்கேன்னு தெரிஞ்சு தானே இப்படி பேசினே?” என்று அழுத்தமாக கூறியபடி மேலும் தன் பிடியை இறுக்கினான்.​

“தயவு செய்து என்னை விட்டுடுங்க ப்ளீஸ், ஏற்கனவே உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு இந்த ஆஸ்பிட்டல்ல எல்லாரும் அசிங்கமா பேசிட்டு இருக்காங்க. இதில நீங்க வேற இப்படி செஞ்சா, யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க? உங்களை கையெடுத்து கும்பிடுறேன், என்னை விட்டுடுங்க, எனக்கு நீங்க உள்ளே இருப்பதே தெரியாது. டாக்டர் கிருஷ்ணன்னு நினைச்சுதான் கோபமா பேசிட்டேன். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று நேத்ரா தன்னை மறந்து கதறி அழவும் உச்சபட்ச அதிர்ச்சியோடு விலகி நின்றான் சித்தார்த் அபிமன்யு.​

சித்தார்த்தின் அதிரடி நடவடிக்கையில் நேத்ரா கோழிக்குஞ்சாக நடுங்கி கொண்டிருந்தாள்.​

“ஐயம் சாரி” என்றபடி அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். தயங்காமல் அதை வாங்கி குடித்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.​

அவள் அமைதியாகும் வரை பொறுத்திருந்தவன், “டாக்டர் கிருஷ்ணன்னு நினைச்சு பேசினியா? ஏன்? அவர் ஏதும் உன்கிட்ட தப்பா?” என்று அவன் முடிக்கும் முன், நேத்ரா பலமாக இல்லை என்று தலையாட்டினாள்.​

“நான் அனுமதி இல்லாமல் அவர் என் தலைமுடியை கூட தீண்ட முடியாது” என்றாள் அழுத்தமான குரலில்.​

“அப்புறம் எல்லாரும் மருத்துவமனையில் என்ன பேசிக்கிறாங்க?” என்றான்.​

“உங்களுக்கும் எனக்கும் ஏதோ உறவு இருக்கிறதா பேசிக்கிறாங்க” என்றாள் மெல்லிய குரலில்.​

“இது உண்மை தானே? பேசிட்டு போகட்டும் விடு” என்றான் சாதாரணமாக.​

விலுக்கென்று நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள் நேத்ரா. தொண்டையை கனைத்தவன், “அவங்க எல்லாம் நமக்குள்ள ஏதோ உறவு இருக்குனு அனுமானிச்சு இருக்காங்க. நமக்குள்ள திருமண உறவு இருக்கு தானே? கேட்டால் ஆமாம்னு சொல்லு” என்றான் சித்தார்த்.​

“நீங்க சொல்ற உறவு வேறே, அவங்க புரிஞ்சுகிட்ட உறவு வேறே” என்றாள் நேத்ரா அழுத்தமான குரலில்.​

“தாலியை மறைக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா?” என்று கேட்டான் அவள் கண்களை நேராக பார்த்து குற்றம் சாட்டும் குரலில்.​

“கட்டாயத்தில் நடந்த திருமணம், இது நிலைக்க போவதுமில்லை, அப்படி இருக்கும் போது எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்?” என்றாள் நேத்ரா.​

“நிலைக்காதுனு முடிவே பண்ணிட்டியா?” என்றான் சித்தார்த் இறுக்கமான குரலில்​

சற்று தயங்கி, ஆமாம் என்று அவள் தலையாட்டவும், “அப்படின்னா, எங்கப்பா உங்கப்பா முன்னால தான் இந்த திருமணம் நடந்துச்சு. நாம விலகறதும் அவங்களுக்கு தெரிஞ்சு தான் நடக்கணும். ஏன்னா இது உன்னோட முடிவு, நாளைக்கு என்னை அவங்க தப்பா எடுத்துக்க கூடாது. எங்கப்பா இன்னும் இரண்டு மாசத்துல வந்திடுவார். அப்புறம் பேசி முடிவெடுத்துக்கலாம்” என்றான் சித்தார்த் இறுகிய குரலில்.​

தன் தந்தைக்கு தெரிந்தால் வருத்தப்படுவாரே என்று நேத்ரா மறுப்பாய் தலையசைத்து ஏதோ பேசப் போகும் நேரம், ஜமுனா சடாரென்று ஸ்கிரினை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்.​

டாக்டர் கிருஷ்ணன் அறை என்பதால் சாவதானமாக உள்ளே வந்த ஜமுனா, அங்கே சித்தாரத்தும் நேத்ராவும் அருகருகே நின்றிருந்ததைப் பார்த்து ஷாக் அடித்தார் போல நின்று விழித்தாள்.​

“நயனி இனி இங்கே பேச முடியாது, என் அறைக்கு போகலாம் வா” என்றான் சித்தார்த் வேண்டுமென்றே ஜமுனாவை தீர்க்கமாக பார்த்தபடி.​

ஜமுனாவோ நான் வந்துட்டேன்னு அவர் அறைக்கு என் எதிரிலேயே கூப்பிடுறாரே. இவ்வளவு நேரம் என்ன செய்துட்டு இருந்தாங்களோ? டாக்டர் கிருஷ்ணன் இன்னைக்கு வரலியா? அதுதான் இவர் இவளை பார்க்க நேராக இங்கேயே வந்துட்டாரா? என்ற பலவிதமான எண்ண ஓட்டங்களை ஜமுனாவின் முகபாவத்திலே கண்டுகொண்டான் சித்தார்த்.​

“ஜமுனா நீங்களும் என்னோட அறைக்கு வாங்க” என்றான்​

“நான்? நான் எதுக்கு சார்? பூஜை வேளையில் கரடி போல” என்றாள் ஜமுனா சிரித்துக் கொண்டே​

“இங்கே எந்த பூஜை?” என்றான் சித்தார்த் கைகளைக் கட்டியபடி அழுத்தமாக ஜமுனாவை பார்த்து.​

“அது… அது வந்து நான் எப்படி சார் சொல்றது? நீங்களும் நேத்ராவும் தனியா இருக்கும் போது நான் உள்ளே வந்தா நல்லா இருக்குமா?” என்றாள் ஜமுனா தயங்கியபடி.​

“ஏன் நல்லா இருக்காது?” என்றான் சித்தார்த் ஜமுனாவை நேராக பார்த்து​

“என்ன டாக்டர்? நீங்க இரண்டு பேரும் நெருக்கமா இருக்கும் போது நான் எப்படி உள்ளே இருக்கமுடியும்?” என்றாள் ஜமுனா.​

“அப்போ இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லா டாக்டர் அறையிலும் வேலை செய்திருக்கீங்க. அவங்க அறையில் வேலை செய்யும் போது நீங்க கூட அந்த டாக்டர் கிட்ட நெருக்கமா இருப்பீங்களா ஜமுனா சிஸ்டர்? அப்போ யாராவது பூஜை வேளை கரடியா வந்திருக்காங்களா?” என்றான் சித்தார்த் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து.​

“டாக்டர்?” என்று கத்தியே விட்டாள் ஜமுனா.​

“சொல்லுங்க, எத்தனையோ முறை என் அறையில் நீங்களும் நானும் தனியா இருந்து இருக்கோம். இத்தனை வருஷத்துல எத்தனையோ டாக்டர் கூட தனியா இருந்திருப்பீங்களே? அப்போ பேஷன்டை கவனிக்காமல் அவங்களோட எல்லாம் நெருக்கமா இருந்தீங்களா?” என்று அடிக்குரலில் சீறினான் சித்தார்த்.​

நேத்ராவுமே சித்தார்த்தின் பேச்சில் அதிர்ந்து போயிருக்க, ஜமுனா கதறி விட்டாள். “டாக்டர் என்னை பார்த்து என்ன பேச்சு பேசிட்டீங்க, என்னைப் போய்…ச்சே. இத்தனை வருஷமா இங்கே வேலை செய்யறேனே, எனக்கு கிடைச்ச பரிசு இதுதானா?” என்று அழுதாள் ஜமுனா.​

“அப்போ உங்களுக்கு வந்தால் அது ரத்தம், மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என்றான் சித்தார்த் எள்ளலாக​

“டாக்டர்” என்று ஜமுனா அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்க்க, “நான் இருக்கும் போது என்கிட்டயே தைரியமா இப்படியெல்லாம் பேசறீங்களே? நான் இல்லனா இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பீங்க? ரொம்ப வருஷமா இங்கே வேலை செய்து இருக்கீங்க, உங்களை எல்லார் எதிரிலயும் அவமானபடுத்த விருப்பம் இல்ல. அதனால் இப்போதைக்கு இந்த விஷயத்தை இப்படியே விடுறேன். நயனி கிட்ட மன்னிப்பு கேளுங்க” என்றான் அதிகாரமான குரலில்.​

முகம் கன்ற “மன்னிச்சுடு நேத்ரா” என்று கைகூப்பி கேட்டு விட்டு சித்தார்த்திடம் திரும்பி, “சாரி டாக்டர்” என்றாள் ஜமுனா தலைகுனிந்து.​

“இனிமேலாவது வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க. நீங்க தான் எல்லாரையும் விட சீனியர். நீங்களே இந்த மாதிரி பக்குவம் இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறிட்டு இருந்தால் மத்தவங்க எப்படி நடந்துப்பாங்க? இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. நயனினு இல்ல, எந்த பெண்ணோட தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் இங்கே உரிமையில்லை. புரிஞ்சு நடந்துப்பீங்கனு நம்பறேன்” என்றான் சித்தார்த் அழுத்தமாக.​

புரிந்தது என்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒருமுறை “மன்னிச்சுடுங்க” என்று பொதுவாக கூறிவிட்டு வெளியேறினாள் ஜமுனா.​

அவள் சென்றதும், சித்தார்த் டாக்டர் கிருஷ்ணனுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டான். “சொல்லுங்க சித்தார்த், நான் இன்னும் அரைமணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்திடுவேன்” என்றார் அவர்.​

“இல்ல, வரவேண்டாம்னு சொல்ல தான் கூப்பிட்டேன்” என்றான் சித்தார்த் அழுத்தமாக.​

 
Status
Not open for further replies.
Top