ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“சாரி, உங்க மனநிலை என்னனு அப்போ எனக்கு தெரியாது இல்ல? நீங்களும் எனக்கு தெளிவுபடுத்தலை. ஒருவேளை என்னிடம் நெருக்கமா இருந்துட்டு, நாளைக்கே அந்த எலிசா வந்தால் என்னை விட்டுட்டு போயிடுவீங்களோனு எனக்கு கொஞ்சம் பயமா கூட இருந்துச்சு” என்றாள் மெல்லிய குரலில்.​

“என் மேல இவ்வளவு அவநம்பிக்கையா? என்னை இவ்வளவு கீழ்தரமாவா நினைச்சுட்டு இருந்தே நயனி?” என்றான் சித்தார்த் வலிமிகுந்த குரலில்.​

“இல்லை அது உங்க மேல இருந்த அவநம்பிக்கை இல்லை. என் மேல் எனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை. என்னோட இந்த கருப்பு நிறமும், சோடாபுட்டி கண்ணாடியும், குறைந்த படிப்பும் உங்களுக்கு எப்பவுமே பொருந்தாதுனு நினைச்சேன். அதனால் இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லனு எனக்குள்ள எப்பவும் ஒரு குரல் கேட்டுட்டே இருந்தது. அதுதான் என்னை உங்களிடம் நெருங்க விடாமல் பண்ணிடுச்சு” என்றாள் நயனி​

“நயனி நீ அழகா இல்லனு யாரு உனக்கு சொன்னது? கருப்பு அழகில்லையா? அழகுக்கு கிளியோபாட்ராவை குறிப்பிடாதவங்களே இருக்க மாட்டாங்க. அவங்க நிறம் கூட கருப்பு தானே நயனி. அழகு என்பது வெளிதோற்றத்துல இல்ல. அது அகத்துல இருக்கு. உனக்கு அகமும் புறமும் இரண்டுமே அழகுதான்.​

அப்புறம் படிப்பு நம்மோட அறிவை வளர்த்துக்கிறதுக்கு தானே தவிர. அது ஒரு மனிதனோட ஏற்ற தாழ்வை முடிவு செய்ய முடியாது. ஜாதி மதம் பணக்காரன் ஏழை மாதிரி, படிச்சவன் படிக்காதவன்னு இதை வச்சு எல்லாம் ஒரு மனிதன் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு எப்படி சொல்ல முடியும் சொல்லு?​

ஒருத்தரோட நல்ல குணம் தான் அவங்களை உயர்ந்தவங்களா, தாழ்ந்தவங்களானு முடிவு செய்யுமே தவிர பணமோ, படிப்போ, நிறமோ கிடையாது. அதை நல்லா புரிஞ்சுக்கோ. உன் குணம் சொக்க தங்கம், அப்போ உன்னை விட எனக்கு பொருத்தமானவ யாரு இருக்க முடியும் நீயே சொல்லு?” என்றான் காதலாய்.​

“அப்போ என் சோடாபுட்டி கண்ணாடி?” என்றாள்​

அவள் கேட்ட விதத்தில் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான். மனதில் இருந்த குழப்பம் எல்லாம் தீர்ந்ததில் அவனால் மனம் விட்டு சிரிக்க முடிந்தது, அவளால் அவன் சிரிப்பை ரசிக்க முடிந்தது.​

“நயனி, உனக்கு கண்ணாடி போடறதுனால தாழ்வு மனப்பான்மையா இருந்துச்சுனா, அதுக்கு எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்பு நம்ம மருத்துவத்துல இருக்கு. கான்டேக்ட் லென்ஸ் போட்டுக்கலாம், ஆனால் அதை தினமும் முறையா பயன்படுத்தணும், இல்லைனா லேசர் சிகிச்சை பண்ணிக்கலாம். இந்த வயசுலே பண்ணிக்கிட்டா நல்லது. ஒரு பத்து வருஷத்துக்கு கண்ணாடி போடற தேவையிருக்காது. அப்புறம் மீண்டும் கண்ணாடி போட வேண்டி வரலாம்.​

உனக்கு வேணும்னா சொல்லு நாளைக்கே நம்ம ஹாஸ்பிட்டல்ல லேசர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யறேன். ஆனால் எனக்கு இந்த கண்ணாடி போட்ட மான்விழியை தான் ரொம்ப பிடிக்கும்” என்றான் புன்னகையுடன்.​

“அப்போ உங்களுக்கு பிடிச்ச மாதிரியே இருக்கறேன்” என்றாள் மெல்லிய குரலில்.​

“எனக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் இருப்பியா நயனி?” என்றான் மர்ம புன்னகையுடன்.​

“ம், இருப்பேன்” என்றாள் தலையை பலமாக ஆட்டிக் கொண்டே.​

அங்கே மேஜையின் மேல் இருந்த வெண்கலத்தால் ஆன பெண்ணின் உருவச்சிலையை அவன் கண்களால் காட்டி மனைவியின் காதில் வந்து ரகசியம் பேசினான் கணவன். முகம் செவ்வானமாக சிவந்து போக தன் இருகைகளால் முகத்தை மூடிக் கொண்டாள் நேத்ரநயனி.​

“பதில் சொல்லு நயனி” என்று வம்பிழுத்தான்​

“போங்க நீங்க ரொம்ப மோசம்” என்று சிணுங்கி கொண்டே விலகி ஓட எத்தனித்தவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.​

நயனியின் இடையை தன் கைகளால் சுற்றி வளைத்திருந்தவன், அவளை தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். அதில் மொத்தமாக அவன் மேனியில் அவள் தேகம் உரசிக் கொள்ள, மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வில் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.​

எப்போதும் அவளை ஈர்க்கும் அவனின் உரமேறிய தசைக்கோளங்களின் நடுவே இருந்த மயிற்கால்கள், அவள் முகத்தை மயிலிறகாய் வருட, அங்கே தான் தன் உலகம் இருக்கிறது என்பது போல மேலும் அவனுள் புதைந்துக் கொள்ளவும், ஆண் மகனுக்குள்ளும் சிலிர்ப்பு தோன்றியது.​

அவள் கழுத்துவளைவில் முகத்தை புதைத்துக் கொண்டு, “நயனி” என்றான் காதலாய்.​

கரடியாய் வெளியே பவிஷ்கா கதவை தட்டிக் கொண்டிருந்தாள்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 22

பவிஷ்கா கதவை தட்டிக் கொண்டிருந்தது காதில் கேட்டாலும், சித்தார்த் நயனியின் கழுத்து வளைவிலிருந்து தன் முகத்தை எடுக்காமல், அவளின் வாசம் பிடித்தபடி நின்றிருந்தான்.​

மூச்சை வேகமாக உள்ளே இழுத்து வெளிவிடப்படும் கணவனின் உஷ்ணமான மூச்சுக் காற்றில் நயனியின் தேகம் சிலிர்த்தது. அவள் கழுத்து வளைவில் தன் இதழால் மெல்ல வருடினான். அவள் மேலும் அவனுள் புதைந்து நின்றாள்.​

இப்போது பவிஷ்கா, “சித்து, டேய் சித்து. கதவை திறடா” என்றாள் அவசரமாக. சித்தார்த் தமக்கையின் அழைப்பை சட்டை செய்யாமல் தன் வேலையில் கவனமாக இருக்க,​

“என்னங்க” என்றாள் நயனி. அவளின் அழைப்பில் கிறங்கியவன் “என்னடி” என்றான்.​

“உங்க அக்கா கூப்பிடுறாங்க” என்றாள் மெல்லிய குரலில்​

“அவ கிடக்கிறா. கொஞ்ச நேரம் கூப்பிட்டு பார்த்துட்டு போயிடுவா விடு” என்று தன் வேலையை தொடர்ந்தான்.​

ஆனால் பவிஷ்கா தொடர்ந்து கதவை தட்டுவதும், “சித்து, நயனி” என்று அழைப்பதுவுமாக இருந்தாள்.​

இருவருக்குள்ளும் இருந்த மனதின் ஓ(ஆ)சைகள் காதல் கீதமாக அரங்கேறும் வேளையில் அந்த சத்தம் தொடர்ந்து நாராசமாக கேட்கவும், “ப்ச், இவளை யாருடி இப்போ இந்தியா வரச்சொன்னது” என்று அலுத்துக் கொண்டவனாய் மனைவியை விட்டு மனமே இல்லாமல் விலகினான்.​

நேத்ரா இன்னமும் அதே நிலையில் உணர்ச்சிகளின் பிடியில் அப்படியே நின்றிருந்தாள். அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கத்துடன் தலை குனிந்திருந்தாள். அவள் வெட்கத்தை பார்க்க பார்க்க சித்தார்த்துக்கு சித்தம் கலங்கியது.​

நீண்ட பெரு மூச்சை எடுத்து வெளியே விட்டவன், “நயனி, அப்படியே இரு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு கதவை கொஞ்சமாக திறந்து தலையை மட்டும் நீட்டி, “என்ன பவி” என்றான் எரிச்சலாய்.​

“ஏன்டா, எவ்வளவு நேரமா காட்டு கத்தல் கத்திட்டு இருக்கேன் கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்றாள் பவிஷ்கா அவனை விட எரிச்சலாய்.​

அக்காவின் முகத்திலும் கோபம், பதற்றம் தெரிய “சரி என்ன சொல்லு” என்றான்.​

“கீழே வா” என்றாள்​

“ப்ச், பவிக்கா படுத்தாதேடி. எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லு. மனுஷன் நிலைமை புரியாம” என்றான் சலிப்பாய்.​

“நேத்ரா என்ன பண்றா?” என்று கேட்டாள் பவிஷ்கா.​

“எதுக்கு? உள்ளே தான் இருக்கா” என்றான் புரியாமல்​

“அவள் கிட்ட எதுவும் சொல்லாதே. அவ இங்கேயே இருக்கட்டும். நீ மட்டும் கீழே வா” என்று சொல்லிவிட்டு பவிஷ்கா மாடிப்படியிலிருந்து கீழே இறங்கினாள்.​

எதுக்கு இவ இப்படி பில்டப் கொடுத்துட்டு போறா என்று சலித்துக் கொண்டே மனைவியை திரும்பி பார்த்தான். நயனி அதே மோன நிலையில் அப்படியே நின்றிருந்தாள்.​

மெதுவாக கதவை சாத்தி விட்டு மாடிப் படிகளில் கீழே இறங்கினான். பவிஷ்கா கைகளை கட்டியபடி நின்றிருந்தாள். “எதுக்கு இப்போ என்னை இங்கே வரச் சொன்னே?” என்று கேட்டபடி தமக்கையின் எதிரே நின்றான்.​

பவிஷ்கா அவன் பின்னால் பார்க்குமாறு தலையை ஆட்டி சமிக்ஞை செய்ய விட்டேற்றியாக திரும்பியவன் விழிகள் அதிர்ச்சியில் இமைக்க மறந்து அப்படியே உறைந்து போயின.​

“ஹாய் ஹனி ஹவ் ஆர் யூ?” என்ற சத்தமாக கூவியபடி எலிசா ஓடி வந்து அவனை இறுக அணைத்தாள். சித்தார்த்தின் மூளை சிறிது நேரம் வேலை நிறுத்தம் செய்திருக்க அவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.​

நேத்ராவிற்கு ஏதோ புதிதாக குரல் கீழே இருந்து கேட்கவும் வெளியே வந்தவள் மாடியிலிருந்து எட்டிப்பார்த்தாள். சித்தார்த்தும் எலிசாவும் கட்டிப்பிடித்து நின்றிருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.​

அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்காத சித்தார்த் நயனியை கவனிக்க வில்லை. ஆனால் பவிஷ்கா அவளை கவனித்து விட்டதால், அசையாமல் எங்கேயோ பார்ப்பது போல நின்றபடி வாயைமட்டும் அசைத்து “சித்து, நயனி பார்க்கிறாடா விலகி நில்லு” என்றாள் அடிக்குரலில்​

அவன் மூளை வேலை நிறுத்தம் செய்திருக்க, காது எங்கே கேட்கப்போகிறது? தன் பார்வையையே நம்ப முடியாமல் நடுங்கும் கால்களோடு படியில் இருந்து இறங்கினாள் நேத்ரநயனி. தடுமாறி விழப்போனவள் படிகளின் கைப்பிடியை பிடித்தபடி மெல்ல இறங்கி வந்தாள்.​

கணவன் நின்றிருக்கும் திசைக்கு எதிர் திசையில் கண்கலங்க நின்றாள். சித்தார்த்தின் பார்வை வட்டத்திற்குள் மனைவியின் உருவம் தெரிந்த பின்பு தான் சுயம் பெற்றான் கணவன். சட்டென்று எலிசாவை உதறி தள்ளினான்.​

அவன் எதிர்பாராமல் தள்ளிவிட்டதில் எலிசா அங்கே இருந்த சோபாவின் மேல் தொப்பென்று விழுந்தாள். “என்னாச்சு ஹனி?” என்றாள் வியப்புடன். எலிசாவிற்கு தமிழ் நண்பர்கள் அதிகம் இருந்ததால் கொச்சை தமிழில் பேசுவாள்​

“நீ இங்கே என்ன பண்றே? எதுக்கு இங்கே வந்தே?” என்றான் சித்தார்த்.​

“என்ன ஹனி? என்னை பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்குவ, ரொம்ப சந்தோஷப்படுவனு நினைச்சு ஆசையா வந்தால், ஏன் வந்தேனு கேட்கிறே? நான் தான் உனக்கு முன்னாடியே இந்தியாவுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தேனே. இரண்டு பேரும் உங்க அப்பா கிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு தானே பேசி முடிவு பண்ணியிருந்தோம். இப்போ எதுவும் தெரியாத மாதிரி புதுசா கேட்கிறே?” என்றாள் எலிசா.​

அவன் இந்தியா வந்த புதிதில் எலிசாவிடம் பேசியதை இப்போது சொல்கிறாள் என்று உணர்ந்து கொண்டவன், “அது அப்போ. உனக்கு தான் வேறே பாய்பிரண்ட் செட் ஆயிட்டான் இல்ல. எதுக்கு என்னை தேடி வந்திருக்க?” என்றான் எங்கேயோ பார்த்தபடி.​

“என்ன ஹனி இது. சராசரி ஆம்பளைங்க மாதிரி சந்தேகத்தோட பேசறே? நம்ம கல்சர்ல பாய் பிரண்ட்ஸ் எல்லாம் சகஜம் தானே. நீ என்கூட இருக்கும் போதே அவங்க கூட எல்லாம் பார்ட்டிக்கு போவேன் தானே? அதுபோல தான் பார்ட்டிக்கு போனேன். மத்தபடி எதுவும் இல்ல. இதுக்கு போய் என் மேல கோவிச்சுக்கிட்டியா?​

நம்ம கல்யாணம் நடக்கட்டும் சராசரி இந்திய பெண் போல நடந்துக்கிறேன். வீட்டுக்குள்ளவே இருப்பேன். சரி தானே” என்று சத்தமாக சிரித்தாள் எலிசா.​

அவள் சிரிப்பை அங்கே யாராலும் ரசிக்க முடியவில்லை. சித்தார்த் நேத்ரநயனியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பொங்கி வந்த அழுகையை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்கு முன் இருந்த ஏகாந்த நிலை இப்பாேது காணாமல் போயிருந்தது.​

எத்தனையோ பிரச்சனைகளுக்கு பிறகு இன்று தான் இருவரும் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். அவர்கள் வாழ்க்கையை தொடங்கும் நேரம் மீண்டுமொரு பிரச்சனை.​

அவன் வாழ்வில் சந்தோஷம் நத்தையாக நகர்ந்து வந்தால் பிரச்சனை மட்டும் குதிரை வேகத்தில் வருகிறது. அவனும் தான் என்ன செய்வான்? இப்போது மனைவியின் மனநிலை என்னவென்று தெரியாமல் தவித்தான்.​

“என்ன ஹனி, நான் பேசிட்டே இருக்கேன். நீ பதில் சொல்லாமல் சிலை மாதிரி இருக்கே” என்றாள் எலிசா​

“லுக் எலிசா, டோன்ட் கால்மீ ஹனி. கால் மீ சித்தார்த்” என்றான் அழுத்தமாக (Look Elisa, Don’t call me honey. call me Siddarth)​

“ஏன்?” (why) என்றாள் வியப்புடன்.​

நேராக சென்று நேத்ராவின் தோள்களில் கைகளை போட்டபடி, “பிகாஸ், ஐயம் மேரிட் அன்ட் திஸ் இஸ் மை வைஃப்” என்றான் (Because I am married, and this is my wife)​

அதிர்ச்சியுடன் சில கணங்கள் இருவரையும் பார்த்தவள், “யு சீட்டட் மீ” என்று கத்தினாள் எலிசா.​

“நே, நான் சீட் பண்ணனும்னு நினைக்கலை. சந்தர்ப்ப சூழ்நிலையால எங்க கல்யாணம் நடந்துடுச்சு” என்றவன் சுருக்கமாக நடந்ததை கூறி முடித்தான்.​

“ஓ மை காட், இப்போ தான் நிம்மதியா இருக்கு. கட்டாயத்துல நடந்த கல்யாணம் தானே. நான் கூட நீ என்னை ஏமாத்திட்டியோனு பயந்துட்டேன். அந்த பொண்ணுக்கு எதாவது பணம் கொடுத்து விவாகரத்து பத்தரத்துல கையெழுத்து வாங்கிட்டு அனுப்பிடு. நாம பிளான் பண்ணது போல கல்யாணம் செய்துக்குவோம்” என்றாள் எலிசா​

“ஷட் அப் எலிசா. தி இஸ் த லிமிட்” என்று சித்தார்த் அடிக்குரலில் சீறினான். (shut up Elisa, this is the limit)​

எலிசா சித்தார்த்திடம் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்ப்பார்த்திராதால் ஸ்தம்பித்து போய் நின்றாள்.​

“ஷி இஸ் மை வைஃப் அன்ட் ஐ லவ் ஹர் சோ மச்” (She is my wife and I love her so much) என்றான் அழுத்தமாக.​

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த நேத்ராவிற்கு இப்போது தான் உணர்வு வந்தது போல கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

இப்போது எலிசா அழ ஆரம்பித்தாள். “என்னால உன்னை விட்டு இருக்க முடியாது, நீ வேணும்” என்று ஏதேதோ புலம்பினாள்.​

“ப்ளீஸ் இங்கே அழுதுட்டு இருக்காதே. என் அப்பா, ரம்யா எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க. தயவு செய்து வெளியே போ” என்றான் இறைஞ்சலாய்.​

“எங்கே போக சொல்றே ஹனி. இந்தியாவில் உன்னை விட்டால் எனக்கு யாரை தெரியும்? நீ இருக்கிற தைரியத்தில அங்கே இருக்கிற வேலையை கூட விட்டுட்டு இந்தியாவில் செட்டில் ஆக போறதா சொல்லிட்டு வந்துட்டேன். இப்போ போக சொன்னால் நான் எங்கே போவேன்” என்று அழுதாள்.​

இப்போது பவிஷ்கா பேச ஆரம்பித்தாள், “எலிசா இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிப்பீங்க. முன்னாடியே சித்தார்த்துக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம் இல்ல?” என்றாள் சற்று எரிச்சலான குரலில்.​

“இல்ல ஹனிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன்” என்றாள் எலிசா​

இவளும் இவ சர்ப்பரைசும் என்று மனசுக்குள் நொடித்துக் கொண்டவள், “சரி என்னோட மாமனார் வீடு இருக்கு, கிளம்புங்க இன்னைக்கு ராத்திரி அங்கே தங்கிக்கங்க. காலையில் நீங்க திரும்ப யுஎஸ் போறதுக்கு சித்துவை ஏற்பாடு செய்ய சொல்றேன்” என்றாள் பவிஷ்கா​

“இல்ல, எனக்கு மறுபடியும் யுஎஸ் போக விருப்பம் இல்ல. சித்து உன் ஹாஸ்பிட்டல்லயே நான் டாக்டரா வேலை பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் எலிசா.​

சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.​

“சித்து ப்ளீஸ், நான் இங்கே தான் இருக்க போறேன். எனக்கு உன்னை விட்டால் யாரையும் தெரியாது. என்னை கல்யாணம் தான் பண்ணிக்கலை. இட்ஸ் ஓகே. உன்னோட ஆஸ்பிட்டல்ல கூட வேலை போட்டு தரமாட்டியா?” என்றாள் எலிசா வருத்தமான குரலில்.​

கணவன் அப்போதும் அசையாமல் இறுக்கமான முகத்துடன் நின்றிருக்கவும், “என்னங்க” என்றாள்.​

சற்றே முகம் இளக, “என்னடா” என்றான் கணவன்.​

“உண்மை தெரியாமல் கிளம்பி வந்துட்டாங்க போல இருக்கு. அவங்களுக்கும் ஏமாற்றமா தானே இருக்கும். நம்ம ஹாஸ்பிட்டல்லயே வேலை செய்யட்டுமே” என்றாள் நேத்ரநயனி​

இப்போது மனைவியை ஆழ்ந்து பார்த்தான். “அவளை எப்படிடா இங்கே தங்க வைக்க முடியும்? நம்ம ஆஸ்பிட்டல்ல வேலை செய்தால் சங்கடமா இருக்காதா உனக்கு?” என்றான்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“எனக்கென்ன சங்கடம் இருக்க போகுது? உங்களை பத்தி தான் இப்போ எனக்கு முழுசா தெரியுமே” என்றாள். அவள் சொன்ன விதத்தில் அவன் இதழ்கடையில் மெல்லிய புன்னகை மலர்ந்தது​

“நீ என்னை முழுசா தெரிஞ்சுக்கறதுக்குள்ள தான் சிவபூஜை கரடியா வந்து நிக்கறாளே” என்று மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.​

பவிஷ்காவிற்கு நேத்ராவின் முடிவில் விருப்பமில்லை. “சித்து. எலிசாவை வேறே எதாவது மருத்துவமனைக்கு சிபாரிசு செய். நம்ம ஆஸ்பிட்டல்ல வேணாம்” என்றாள்.​

“நாமளே, சொந்தமா மருத்துவமனை வச்சிட்டு, வேறு இடத்தில் சிபாரிசு பண்ணால் தப்பா நினைப்பாங்க பவிக்கா” என்றான் சித்தார்த் யோசனையோடு.​

எலிசா இப்போது நேத்ராவிடம் வந்து. “சிஸ்டர், நான் என்னவோ நினைச்சு வந்தேன். இப்போ சித்துக்கு கல்யாணம் ஆனதையே என்னால ஜீரணிக்க முடியலை. இந்த நிலையில நான் வெளியே போனால் மன அழுத்தத்தில் நான் எதாவது செய்துக்குவேன். கொஞ்ச நாளைக்கு இங்கேயே தங்க அனுமதி கொடுங்க. அப்புறமா நானே தனியா வெளியே போய் தங்கிக்குவேன், ப்ளீஸ் சித்து கிட்ட சொல்லுங்க” என்றாள் நேத்ராவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சும் குரலில்.​

நேத்ராவிடம் யாருமே இப்படி கெஞ்சியதில்லை. அவள் மனம் பாகாய் உருகி விட்டது.​

“நீங்க கவலைபடாதீங்க. அங்கே இருக்கிற அறையில் போய் தூங்குங்க. காலையில் அவரோட மருத்துவமனைக்கு போய் வேலையில் ஜாய்ன் பண்ணிக்கோங்க” என்று கணவனை கலந்தாலோசிக்காமல் வார்த்தைகளை விட்டாள்.​

சித்தார்த்துக்கும் பவிஷ்காவுக்கும் எலிசாவின் வரவு நல்லதாக படவில்லை. முதலில் சித்தார்த்தை தேடி திருமணம் செய்து கொள்ள வந்ததாக கூறினாள். அவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது தெரிந்ததும் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு இங்கேயே தங்க வேண்டும், ஆஸ்பிட்டலில் வேலை வேண்டும் என்கிறாளே? யுஎஸ்ஸில் இல்லாத வேலையா? அங்கே கிடைக்காதா சம்பளமா? எதற்காக இப்படி செய்கிறாள் என்று இருவருமே யோசனையுடன் எலிசாவை பார்த்திருந்தனர்.​

நேத்ராவின் மேல் சித்தார்த்துக்கு இப்போது கோபம் வந்தது. அவன் எப்படியாவது பேசி அவளை வெளியே அனுப்பி விடலாம் என்று நினைத்திருந்தால் இவளே முடிவெடுத்து எலிசாவை இங்கேயே தங்கு என்கிறாளே. நேத்ரா அவன் முறைப்பை கவனிக்காமல் பவிஷ்காவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.​

“அண்ணி, இப்பவே மணி பதினொன்றை. இந்த ராத்திரில அவங்களை வெளியே எப்படி அனுப்ப முடியும். இன்னைக்கு ராத்திரி கெஸ்ட் அறையில் தங்கட்டும் எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்” என்றாள்.​

பவிஷ்கா தம்பியை பார்க்க அவன் பெருமூச்சுடன் மாடிப்படிகளில் ஏறி மேலே சென்று விட்டான். அவளுக்கு தம்பியின் நிலையை பார்க்கவே பாவமாக இருந்தது. நேத்ரா சொல்வது போல வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணை இந்த நடுராத்திரி வேலையில் வெளியே அனுப்பவும் முடியாது என்பதால், “நேத்ரா நான் பார்த்துக்கிறேன். நீ போய் தூங்கு” என்றாள்.​

நேத்ரா அறைக்குள் வந்து கதவை சாத்தவும் பொரிய தொடங்கி விட்டான் சித்தார்த். “யாரை கேட்டு நீ, அந்த எலிசாவை இங்கே தங்க சொன்னே? ஆஸ்பிட்டல் நிர்வாகத்தில் நீ எப்படி முடிவெடுக்கலாம்?” என்று கத்தினான்.​

“சசாரிங்க, எனக்கு உரிமையிருக்குனு நினைச்சு சொல்லிட்டேன்” என்றாள் தடுமாறிய குரலில். அதற்குள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று அருவியாய் கொட்ட தொடங்கிவிட்டது.​

மனைவியின் கண்ணீரை பார்த்ததும், அவள் அருகே வந்து அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். “நயனி, உனக்கு புரியுதா இல்லையா? என்ன இருந்தாலும் அவள் எனக்கு முன்னாள் காதலியா இருந்தவ. அவளை நீ எப்படி நம்ம வீட்டுக்குள் அனுமதிக்கிற? இதுல நம்ம மருத்துவமனையிலேயே வேலை செய்யட்டும்னு வாக்கு கொடுக்கிறே. இதனால் பல சங்கடங்கள் வரும்னு உனக்கு தொியாதா?” என்றான் அவளுக்கு புரியவைக்கும் நோக்கத்தில்.​

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு எனக்கு புரியுது. எனக்கு ஒரு சங்கடமும் வராது. ஏன்னா என் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு வேளை உங்களுக்கு அவங்க மேல இன்னும் எதாவது ஈர்ப்பு இருக்கா?” என்றாள் நேத்ரநயனி கணவனின் கண்களை நேராக பார்த்து.​

“நிச்சயமா இல்லை” என்றான் உறுதியான குரலில்​


“அப்புறம் என்ன? விட்டு தள்ளுங்க” என்றாள்.​

ஆனால் சித்தார்த்தால் அப்படியே விட்டுவிட முடியவில்லை. மனதுக்கு என்னவோ போல் இருந்தது. நேத்ரா இப்போது கணவனின் மார்பில் சாய்ந்து நின்றாள். ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் இப்போது அவன் இல்லை.​

“நயனி, வா தூங்கலாம். காலையில் நீ காலேஜ்க்கு வேறே போகணும் இல்ல” என்று சொன்னவன் அவளை தன் கட்டிலிலேயே படுக்க வைத்துக் கொண்டு அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டான்.​

கணவனின் கை அணைப்பில் இருந்த நயனி சில நிமிடங்களிலேயே உறங்கி விட்டாள். சித்தார்த்துக்கு தான் உறக்கம் தொலைந்திருந்தது. இத்தனை நாளாக ஒரு போன் கூட செய்து அவனிடம் பேசாதிருந்த எலிசா எதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறாள் என்ற கேள்வியே அவன் மூளையை குடைந்து கொண்டிருந்தது.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 23

மறுநாள் சித்தார்த் நயனி இருவரும் தயாராகி கீழே வரும் போது மகேந்திரன் உர்ரென்று அமர்ந்துக் கொண்டிருந்தார்.​

“என்னாச்சுப்பா, ஏன் டென்சனா இருக்கீங்க?” என்றான்​

“நேத்து நைட் மாத்திரை போட்டதால நல்லா தூங்கிட்டேன். இல்லைனா அந்த எலிசாவை வீட்டுக்குள்ளயே விட்டிருக்க மாட்டேன். என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? எதுக்கு அவளை வீட்டுக்கு வர வச்சிருக்க? என் பிரெண்ட் சிவாவுக்கு விஷயம் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவான்? உன்னை நம்பி அவன் பொண்ணை உனக்கு கட்டி வச்சேன் பாரு, என்னை சொல்லணும்” என்று காலையில் அவர் கோபமாக திட்டவும் சித்தார்த் திரும்பி மனைவியை முறைத்தான்.​

“இதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. எதுவானாலும் உங்க மருமக கிட்ட கேட்டுக்கோங்க. ஏன்னா இந்த மேடம் தான் அவளை வீட்டில தங்க சொன்னது” என்று சொல்லி விட்டு நயனியை முறைத்துக் கொண்டே வாசலுக்கு சென்றவன் வழியில் இருந்த பவிஷ்காவை பார்த்து, “எங்கே பவிக்கா அவ?” என்றான்.​

“எலிசாவா? நைட் எல்லாம் தூங்காமல் யார் கூடவோ ரொம்ப நேரம் போன்ல பேசிட்டு இருந்தா சித்து. இப்போ தூங்கிட்டு இருக்கா போல. இன்னும் எழலை” என்று மெல்லிய குரலில் சொன்னவள், “கொஞ்சம் வெளியே வாடா உன் கிட்ட பேசணும்” என்றாள்​

சித்தார்த் திரும்பி மனைவியை பார்த்தான், அவள் மகேந்திரனை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.​

“சரி வா” என்று சொல்லிவிட்டு முன்பக்க தோட்டத்திற்கு சென்றான்.​

“சித்து இந்த எலிசா சரியில்லடா. அவ ஏதோ ஒரு காரணத்துக்காக தான் வந்திருக்கானு தோணுது. இவளால உனக்கும் நேத்ராவுக்கும் இடையில் பிரச்சனை வரக்கூடாது. யுஎஸ்ஸில் இல்லாத வேலையா? அங்கே கிடைக்காத சம்பளமா? உன்னை தேடி இந்தியா வரைக்கும் வந்திருக்கான்னா, கண்டிப்பா உன்னை விட முடியாமல் தான் வந்திருப்பா. நீயும் முன்னாள் காதலினு கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் உனக்கும் நேத்ராவுக்கும் நடுவில் இருக்கிற திருமண வாழ்க்கையில் விரிசல் வந்திடும். அதனால் அவளை முதல்ல இங்கிருந்து அனுப்பி வைக்கிற வழியை பாரு” என்றாள் பவிஷ்கா.​

“பவிக்கா, நான் யோசிச்சது போல தான் நீயும் யோசிச்சு இருக்க. கண்டிப்பா எலிசா ஏதோ திட்டத்தோட வந்திருக்காள். ஆனால் நீ சொன்னது போல அவள் எனக்காக வரல” என்றான் சித்தார்த் அபிமன்யு உறுதியான குரலில்.​

“என்னடா சொல்ற? அவள் உனக்காக வரலைனா, வேறே எதுக்காக வந்திருக்கா?” என்றாள் பவிஷ்கா அதிர்ச்சியோடு.​

“அதை இனிமே தான் கண்டுபிடிக்கணும். அப்புறம் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ, என் நயனியை தவிர நான் யார்கிட்டயும் ஸ்லிப் ஆக மாட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ, கல்யாணம் ஆன பின்னாடி என் வாழ்க்கையில் அவளை தவிர யாரும் கிடையாது. அவளை கரெக்ட் பண்றதுக்கே எனக்கு நேரம் பத்தலை” என்றான் சலிப்பாக.​

“என்னடா பொண்டாட்டியை கரெக்ட் பண்ண நேரம் இல்லையா? நம்ப முடியலையே” என்று பவிஷ்கா கிண்டலாக சிரித்தாள்.​

“ம்ம், என்ன பண்றது? ஒரு பிரச்சனை முடிஞ்சா இன்னொரு பிரச்சனை தொடங்கிடுது” என்றான் எங்கோ இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டு.​

சித்தார்த் சொன்ன விதத்திலேயே அவன் இன்னும் நயனியுடனான தன் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டாள் பவிஷ்கா​

“சித்து வாழ்க்கையில் பிரச்சனை வரும் போகும், அதுக்காக நம்ம சந்தோஷத்தை எதுக்காகவும் நிறுத்தி வைக்க கூடாது. பிரச்சனை முடியட்டும்னு காத்திருந்தால் கடைசி வரைக்கும் காத்திருக்க வேண்டியது தான். அதுபாட்டுக்கு கிடக்கட்டும்னு நம்ம வாழ்க்கையை நாம வாழணும்டா​

ஹார்ட் ரேட் செக் பண்ணும் போது ஏற்றம் இறக்கம் இருந்தால் தான் இதயம் நல்லா இயங்குதுனு முடிவுக்கு வர்றோம். ஒரே நேர்கோட்டில் இருந்தால் வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு அர்த்தம். அதுபோல இயற்கையாகவே மனுஷனோட வாழ்க்கையில் சந்தோஷம் துக்கம் பிரச்சனைனு மாறி மாறி வந்துட்டு தான் இருக்கும். பிரச்சனைனு ஒண்ணு வந்தால் தானே நாம அதில் போராடி ஜெயித்து முன்னேற முடியும்? எல்லாராலும் எல்லா நேரத்திலயும் பிரச்சனைகள் இல்லாமல் சந்தோஷமாவே இருந்திட முடியுமா சொல்லு? இதுவும் கடந்து போகும்னு நினைச்சுட்டு நமக்கான வாழ்க்கைய நாம தான் சந்தோஷத்தோடு அமைச்சுக்கணும்.​

தீதும் நன்றும் பிறர் தர வாரா னு சொல்லுவாங்க. உன்னோட சந்தோஷம் உன் கையில் தான் இருக்கு. எலிசாவால அதை தடுத்து நிறுத்த முடியும்னு நினைக்கிறியா?” என்றாள் பவிஷ்கா.​

“நீ சொல்றது எல்லாம் கரெக்ட் தான். அப்போ நீயே எதுக்கு எலிசாவை வெளியேத்த சொல்றே? அவளால் பிரச்சனை வரும்னு தானே?” என்றான் சித்தார்த்.​

“நான் சொல்ல வர்றது, எலிசா பிரச்சனைக்காக நயனியோடு இருக்க வேண்டிய சந்தோஷமான பொழுதுகளை ஒதுக்கி வைக்காதேனு சொல்றேன் புரியுதா? அவளை வெளியே அனுப்பறதுக்கான ஏற்பாட்டை ஒரு பக்கம் செய், அதே சமயம் நயனியோட வாழ ஆரம்பி” என்றாள் பவிஷ்கா​

தமக்கை சொல்வதிலும் இருந்த நியாயம் புரிய, “சரிக்கா, இப்போ இந்த எலிசா விஷயத்துக்கு வருவோம். இத்தனை நாளா அவ எனக்கு ஒரு போன் கூட பண்ணல. திடீர்னு வந்து நிக்கிறா, எனக்காக வந்திருந்தால் என்னை பத்தி மட்டும் தான் பேசியிருப்பாள். முதல்ல வரும்போது எனக்காக வந்தது போல பேசினாலும், அதுக்கப்புறம் நம்ம மருத்துவமனையில் வேலைக்கு சேர்வதை பத்தி பேசறா. எனக்கென்னவோ அவளோட டார்கெட் நம்ம ஹாஸ்பிட்டல்னு தோணுது” என்றான் யோசனையோடு.​

“நம்ம ஹாஸ்பிட்டல்ல அவ வேலை செய்யறதால அவளுக்கு என்ன லாபம் வந்திட போகுது?” என்றாள் பவிஷ்காவும் பலமாக யோசித்தபடி​

“நீ செல்வா மாமாவுக்கு போன் பண்ணி, இந்த எலிசா அங்கே எதாவது தகிடுதத்தம் பண்ணிட்டு இங்கே வந்திருக்காளானு விசாரிக்க சொல்லு. அவளோட பிரண்ட்ஸ், கடைசியா அவ பழகிட்டு இருந்த பாய் பிரண்டை பத்தியும் விசாரிக்க சொல்லு. அப்படியே அவள் வேலை செய்த ஹாஸ்பிட்டல்லயும் விசாரிக்க சொல்லு. நானும் நம்ம ஹாஸ்பிட்டலுக்கு வந்து அப்படி என்னதான் பண்றாள்னு கவனிக்கிறேன்” என்றான் சித்தார்த்.​

“சரிடா” என்றாள் பவிஷ்கா, அதற்குள் எலிசா எழுந்து தயாராகி வந்து கொண்டிருந்தாள்.​

“எலிசா, எங்களோட ஹாஸ்பிட்டல்ல டாக்டர்ஸ்க்கு நல்ல வசதிகளோட தங்கும் விடுதி இருக்கு. அங்கே நீங்க தங்கிக்கலாம். கிளம்புங்க” என்றான்.​

“என்ன சித்து? உன்னோட வீட்டில தங்க அனுமதிக்க மாட்டியா?” என்றாள் எலிசா ஏமாற்றமான குரலில்.​

“நீ டாக்டர் வேலையில் தானே சேரப்போறதா சொன்னே? உன்னை எமர்ஜென்சி வார்ட்ல தான் அப்பாயின்ட்மென்ட் பண்ண போறேன். சோ நீ அங்கே இருக்கிறது தான் பெஸ்ட் சாய்ஸ் ஆ இருக்கும். உனக்கு விருப்பம் இல்லைனா இப்பவே கிளம்பலாம்” என்றான் சற்றும் முகத்தில் இரக்கம் காட்டாமல்.​

அவன் முகத்தில் இருந்த கடுமையை கண்டு இனி வாதாடினால் பயனில்லை என்று உணர்ந்து கொண்ட எலிசா, “சரி ஓகே சித்து” என்றாள் மனமே இல்லாமல்.​

அவள் வந்த காரணம் வேறாக இருந்தாலும், சித்தார்த்தை கண்டதும் அவன் தோற்றத்தில் எப்போதும் போல ஈர்க்கப்பட்டிருந்தாள் எலிசா. கொஞ்ச நாளாக மறந்து போயிருந்த அவனுடனான உறவு இப்போது மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே அவள் நினைத்திருந்தாள். ஆனால் அதைவிட அவள் வந்த காரியத்தை இங்கே வெற்றிகரமாக செய்து முடிப்பது தான் இப்போது முக்கியம் என்பதால் சித்தார்த்தின் முடிவை ஏற்றுக் கொண்டாள்.​

சித்தார்த் முதலில் சொல்லும்போது அவ்வளவாக நம்பாத பவிஷ்கா இப்போது எலிசா உடனே ஒத்துக் கொள்ளவும் அர்த்தத்துடன் தம்பியை திரும்பி பார்த்தாள். அவனும் தமக்கையை தான் பொருள் பொதிய பார்த்துக் கொண்டிருந்தான்.​

“சரி வாங்க சாப்பிட்டு கிளம்பலாம்” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்​

அதற்குள் நயனி ரம்யாவிற்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். சித்தார்த்தை பார்த்ததும், “மாமா, அத்தை ரொம்ப ஸ்வீட் தெரியுமா? எனக்கு கதை சொல்லிட்டே நிறைய சாப்பாட்டை ஊட்டிவிட்டுட்டாங்க” என்றாள் பெருமையாக.​

“அப்படியா?” என்று ஆச்சரியம் போல கேட்டவன் மனைவியிடம் திரும்பி, “நயனி ரம்யாவுக்கு மட்டும் தான் சாப்பாடு ஊட்டுவியா? எனக்கெல்லாம் ஊட்டி விட மாட்டியா?” என்றான்.​

நாணத்தோடு “அய்யோ, எல்லார்முன்னாடியும் எப்படிங்க, தனியா இருக்கும் போது ஊட்டிவிடுறேன்” என்றாள் மெல்லிய குரலில்.​

“இல்லை எனக்கு இப்பவே ஒரு வாயாவது ஊட்டி விட்டு தான் ஆகணும்” என்று வாயை நன்றாக திறந்து காட்டினான்.​

வேறு வழியில்லாமல் ஒரு கவளத்தை எடுத்து அவன் வாயில் வைத்தாள். உணவோடு சேர்த்து நயனின் வெண்டை பிஞ்சு விரல்களையும் சுவைத்தான். கணவனின் கள்ளத்தனம் புரிந்தவளாக விரல்களை அவன் வாயிலிருந்து விடுவித்துக் கொள்ள அவள் நினைத்தாலும் அவன் விடுவதாக இல்லை.​

அதிர்ந்து போய் கணவனை பார்த்தாள். அவனோ ஒற்றைக் கண்ணை அடித்து அவளை மேலும் திணறச் செய்தான்.​

மகேந்திரன் பெரிதாக இருமிக் கொண்டே சாப்பாட்டு மேஜை அருகே வரவும் தான் அவளை விட்டான். எலிசாவிற்கு இருவரையும் பார்த்து வயிறு எரிந்தது, ஆனால் அவளுக்கு இது முக்கியமில்லை என்பதால் கண்டும் காணாதது போல வந்து சாப்பிட அமர்ந்தாள்.​

அனைவரும் காலை உணவை முடித்தபின்பு, சித்தார்த், நயனி மற்றும் எலிசா கிளம்ப ஆயத்தமானார்கள்.​

சித்தார்த் மனைவியை காரின் முன்பக்க இருக்கையில் அமர சொல்லிவிட்டு எலிசாவை பின்னால் அமரச் சொல்லி மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான். முதலில் கல்லூரிக்கு செல்லாமல், மருத்துவமனைக்கே சென்றான்.​

காரிலிருந்து இறங்கியதும் மனைவியின் தோள் மேல் கை போட்டபடி நடந்தான். நேத்ரா நெளிந்தாள், அன்று பாண்டியால் நடந்த பிரச்சனைக்கு பிறகு இன்று தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறான்.​

“என்ன இது, எல்லார் முன்னாடியும், கையை எடுங்க. எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க” என்று சிணுங்கினாள்.​

“எல்லாரும் பார்க்கறதுக்கு தாண்டி தோள்மேல கையை போட்டதே” என்றபடி முன்னால் நடந்தான்.​

எலிசாவிற்கு காதில் புகை வராத குறைதான். ஆனாலும் கண்டுக்கொள்ளாதவள் போல நடந்தாள். செக்யூரிட்டி ஆட்கள் வந்து நயனிக்கு வணக்கம் வைத்தார்கள். மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே எதிரில் தென்பட்ட அனைத்து ஊழியர்களும், “குட்மார்னிங் மேடம்” என்று சொல்லவும் கூச்சமாக உணர்ந்தாள்.​

“என்ன இது? புதுசா வணக்கம் எல்லாம் வைக்கிறாங்க! என்னை ஏதோ விஐபி போல நடத்தறாங்க! என்னை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தீங்க?” என்று மீண்டும் சிணுங்கினாள்​

“ம்ம் நீ இந்த ஆஸ்பிட்டல்லோட முதலாளி, அப்படித்தான் வணக்கம் வைப்பாங்க. இதெல்லாம் நீ பழகிக்கணும் நயனி. அப்போ தான் நீ படிப்பை முடிச்சதும் நிர்வாகத்தையும் சேர்த்து பார்த்துக்க முடியும்” என்றவன் திரும்பி​

“எலிசா நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க, அப்புறமா கூப்பிடுறோம்” என்று சொல்லி விசிட்டர் ஹாலை காட்டினான். எலிசாவின் முகம் கருத்து போனது. வேறு வழியில்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டாள்.​

நேத்ராவின் தோளில் கைப்போட்டபடி ஜனனியிடம், “ஜனனி கொஞ்ச நேரத்துக்கு யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம். மேடம் கூட பர்சனல் மீட்டிங் இருக்கு” என்று நயனியை காட்டினான்.​

ஜனனி ஒரு கணம் திடுக்கிட்டு இருவரையும் பார்த்து பேந்த பேந்த முழித்தவள், “ஓகே சார், குட்மார்னிங் மேடம்” என்று நயனிக்கு வணக்கம் வைத்தாள்.​

நயனி அவளுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு கணவன் பேச்சிலேயே உழன்று கொண்டிருந்தாள். என்னாச்சு இவனுக்கு? காலையில் வீட்டில் எல்லார் முன்னாடியும் அவளை உணவு ஊட்ட சொல்கிறான். இப்போது பெர்சனல் மீட்டிங் என்று சொல்கிறான். அங்கே இருப்பவர்களின் கற்பனை குதிரை எதுவரைக்கும் பாயும் என்று அவளுக்கு தெரியாதா?​

எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. “மீட்டிங் என்று சொன்னால் போதாதா? பெர்சனல் மீட்டிங் என்று சொன்னால் என்னவெல்லாம் நினைப்பாங்களோ” என்று முணுமுணுத்துக் கொண்டு அவனோடு அறைக்குள் நுழைந்தாள்.​

“என்ன நினைப்பாங்க?” என்றான் அவன் வேண்டுமென்றே​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்கவும், அவளின் தாடையை பற்றி நிமிர்த்தி அவனை பார்க்க செய்தான். அவள் கண்களோடு அவன் கண்களை கலக்கவிட்டபடி, “என்னவெல்லாம் நினைப்பாங்கனு எனக்கு விளக்கமா சொல்லு” என்றபடி தன் ஒற்றை விரலால் அவள் இதழை வருடினான்.​

“என்னங்க நீங்க? போங்க” என்று வெட்கத்துடன் சிணுங்கியபடி தலையை குனிந்து கொண்டாள்.​

“ஏய் நயனி, இப்படி எல்லாம் வெட்கப்பட்டு என்னை டெம்ப்ட் பண்ணாதடி. ஏற்கனவே என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியாமல் காஞ்சு போய் கிடக்கிறேன். அப்படியே உன் மேல பாய்ஞ்சுட போறேன்” என்று வேகமாக அவள் இடையை பற்றி இழுத்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.​

தன் இரு கைகளால் அவன் நெஞ்சில் குத்தினாள், “என்ன இது? ஹாஸ்பிட்டல்ல இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க” என்று அவள் சிணுங்கி கொண்டே சொன்னாலும் அவனை விட்டு விலகவில்லை. அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அதற்கு மேல் முன்னேறினால் தன்னாலும் கட்டுப்பாடோடு இருக்கமுடியாது என்பதால் மனைவியை அணைத்தவாறே அப்படியே நின்றிருந்தான் கணவன்.​

பவிஷ்கா சொன்னது போல, அவன் சந்தோஷத்தை யாருக்காகவோ ஏன் தள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றியது. எலிசா, ஐனனி, வசந்தி, பாண்டி, ஜமுனா என்று அவர்கள் வாழ்க்கையில் யார் குறுக்கே வந்தாலும் அவன் வாழ்க்கை அவன் கையில் தானே இருக்கிறது?​

கணவன் மனைவி இருவரின் மன ஓசைகளும் ஓரே கீதத்தை வாசிக்க காத்திருக்கும் போது, இனியும் ஏன் மனைவியை விட்டு தனித்திருக்க வேண்டும்? வீணையாக அவள் இருக்க, அதை மீட்டும் விரல்கள் அவனிடம் தானே இருக்கிறது? காதல் கீதம் வாசிக்க அது போதாதா? அவர்களின் அன்புக்கும் அணைப்புக்கும் யாரால் அணை போட முடியும்?​

“நயனி, ஒன்னு கேட்கட்டுமா?” என்றான்.​

“என்னங்க?” என்றாள்.​

தான் கேட்க வந்ததை மறந்து “என்ன புதுசா அப்படி கூப்பிடுறே?” என்றான். “எப்படி?” என்றாள் அவள் ஒன்றும் புரியாமல்.​

“என்னங்க” என்று அவள் அழைப்பது போல ராகமாய் அழைத்து காண்பித்தான். வெட்கத்தில் மேலும் அவன் மார்பில் புதைந்தாள்.​

“எங்க ஊரு பக்கம் எல்லாம் பொண்ணுங்க அவங்க புருஷனை அப்படி தான் கூப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாமல் உங்களை எப்படி கூப்பிறதுனு எனக்கு தெரியல. பேர் சொல்லி கூப்பிடவும் மனசுவரலை” என்றாள் அவன் மேலிருந்து தலையை நிமிர்த்தாமல்.​

“நீ அப்படி கூப்பிறது என்னவோ கிக்கா தான் இருக்கு. தனியா இருக்கும் போது ஓகே. ஆனால் வெளில எல்லார் முன்னாடியும் பேர் சொல்லி கூப்பிடு” என்றான். சம்மதமாக தலையை மட்டும் ஆட்டினாள்.​

“என்ன சொல்லி கூப்பிடுவ?” என்றான். “அபி” என்றாள் மேலும் அவனுள் புதைந்துக் காெண்டு.​

“நயனி, இன்னும் கொஞ்ச நேரம் நாம அப்படியே இருந்தால் நான் ஆஸ்பிட்டல்னு எல்லாம் பார்க்க மாட்டேன்” என்றான் ஒருமாதிரி குரலில்.​

சட்டென விலகி நின்றாள் மனைவி. அவளை பார்த்து சிரித்தவன், “கொஞ்ச நேரத்துல இங்கே நம்ம ஆடிட்டர் அட்வகேட் எல்லாம் வரப்போறாங்க அதனால தான், அது முடிச்சுட்டு நேரா வீட்டுக்குதான். இன்னைக்கு காலேஜ்க்கு லீவு சொல்லிடு” என்றான்.​

“எதுக்கு காலேஜ் லீவு போட சொல்றீங்க? ஆடிட்டர் அட்வகேட் எல்லாம் எதுக்கு இப்போ வர்றாங்க?” என்று கேட்டாள் புரியாமல்.​

மனைவியை அழுத்தமாக பார்த்துக் கொண்டே முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நீயும் நம்ம ஹாஸ்பிட்டல் நிர்வாகத்துல ஒரு பார்ட்னராக இருக்கணும். அதற்கான டாக்குமென்டை தயார் பண்ணி எடுத்து வர சொல்லி இருக்கேன். அதுல நீ கையெழுத்து போட்டதும் நாம கிளம்பலாம்” என்றான்.​

“என்ன? என்னை பார்டனரா ஆக்க போறீங்களா? அதெல்லாம் வேண்டாம். டாக்டருக்கு படிக்க வைக்கிறதே அதிகம். இதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. வாங்க போகலாம்” என்று திரும்பி நடக்க தொடங்கினாள்.​

“அப்போ அந்த எலிசாவை இங்கே அனுமதிக்க முடியாது” என்றான் சித்தார்த் அழுத்தமாக.​

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? அவங்களை இங்கே வரைக்கும் கூட்டிட்டு வந்து இப்போ இப்படி பேசினால் எப்படிங்க?” என்றாள் கணவனை நேராக பார்த்து வருத்தமான குரலில்.​

“நீதானே அவளை இங்கே வேலையில் சேர்த்துக்கிறதா சொன்னே? நீ சொன்னதை செய்யறதுக்கான உரிமையை நான் உனக்கு கொடுக்கிறேன். எனக்கு இங்கே அவளை சேர்த்துக்கிறதுல உடன்பாடு இல்லை. அதனால நான் அவளோட அப்பாயின்மென்ட் லெட்டர்ல கையெழுத்து போட மாட்டேன். உனக்கு வேணும்னா நீ பார்டனரா பொறுப்பேத்துக்கிட்டு உன்னோட அதிகாரத்தால அவளை வேலைக்கு அமர்த்திக்கலாம். இல்லைனா இப்போவே அவளை அனுப்பியும் விடலாம். அது உன்னோட இஷ்டம்” என்று சொன்னான் திடமாக​

“அச்சோ. இது எல்லாம் எதுக்கு? எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. இதை எதுவும் நான் எதிர்ப்பார்க்கல. மாமா, உங்க அக்கா இருக்கும் போது எனக்கு எதுக்கு இந்த பொறுப்பு எல்லாம்” என்று ஏதோதே பேசிக் கொண்டிருந்தவளை இடைமறித்தான்.​

“பவிக்கா கொஞ்ச நாள் தான் இருப்பா, அவள் யுஎஸ் போயிடுவா. அப்பாவுக்கும் ரெஸ்ட் வேணும்ல நயனி” என்றான்.​

அவன் சொல்வதும் நியாயமாக பட்டது. தனியொருவனாக இருந்து அவனும் எத்தனை விஷயங்களை தான் சமாளி்ப்பான். அதன்பிறகு அவனோடு எதிர்வாதம் செய்யாமல் அமைதியாகி போனாள்.​

ஆடிட்டரும் அட்வகேட்டும் சித்தார்த்தின் அனுமதியோடு அறைக்குள் வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த டாக்குமென்டுகளில் எல்லாம் நயனியிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு, மற்ற ஏற்பாடுகளை அவர்களே பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றார்கள்.​

அதன் பிறகு சித்தார்த் ஜனனிக்கு போன் செய்தான், “ஜனனி, இன்னைக்கு நம்ம ஸ்டாப் எல்லாருக்கும் ஒரு மாதம் சம்பளத்தை போனசா கொடுக்க ஏற்பாடு செய்யுங்க” என்றான்.​

“என்ன சார் விஷேசம்” என்றாள் ஜனனி ஆர்வமாக.​

“என் மனைவி நேத்ரநயனி இன்னையிலிருந்து இந்த ஆஸ்பிட்டல் நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருக்காங்க, அதுக்காகத்தான்” என்றான்.​

ஜனனிக்கு பேச்சே வரவில்லை. முதல்நாள் நேத்ரா வேலைக்காக அவள் முன்னே வந்து நின்ற கோலம் அவள் கண்முன் நிழலாடியது. இந்த பெண்ணுக்கு எப்பேர்ப்பட்ட வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று பெருமூச்சு விட்டாள்.​

“என்ன ஜனனி, பதிலே காணோம்” என்றான்.​

“ஒண்ணுமில்லை சார், மேடம்க்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க” என்றாள்.​

“கண்டிப்பா சொல்லிடுறேன். அப்புறம் அங்கே எலிசானு ஒரு லேடி டாக்டர் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, அவங்களை எமர்ஜென்சி வார்ட் டாக்டரா அப்பாயின்மென்ட் பண்ணியிருக்கேன். அவங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரை தயார் செய்து அதை வசந்தி நர்ஸ் கிட்ட கொடுத்து அனுப்புங்க” என்றான்.​

எதற்கு நர்ஸிடம் கொடுத்து அனுப்ப சொல்கிறான் என்று தோன்றினாலும். “ஓகே சார், கொடுத்து அனுப்புறேன்” என்று சொல்லி போனை வைத்தாள் ஜனனி.​

அடுத்த பத்து நிமிடத்தில் வசந்தி அந்த அறை கதவருகே வந்து நின்றாள்.​

“யெஸ் கம் இன்” என்றான் சித்தார்த்.​

உள்ளே வந்த வசந்தி சித்தார்த்தின் அருகே அமர்ந்திருந்த நேத்ராவை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய பாடபுத்தகத்தை படித்தபடி அமர்ந்திருந்தவளின் தோரணையை பார்த்து அயர்ந்து போனாள் வசந்தி.​

அவர்கள் கிண்டல் கேலி செய்த அப்பாவி பெண்ணா இவள்? பார்க்கவே அழகாகவும் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்திருக்கிறாளே? இதே பெண்ணை எத்தனை முறை டீ, காபி, பஜ்ஜி எல்லாம் வாங்கி வரச்சொல்லி இருக்கிறாள். இன்று இந்த மருத்துவமனையின் முதலாளியோட மனைவியாக உரிமையுடன் அமர்ந்திருக்கிறாளே?​

வசந்தி அதிர்ச்சியோடும் பொறாமையோடும் தன் மனைவியையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த சித்தார்த், “என்ன விஷயம் சிஸ்டர்?” என்று தெரியாதது போல கேட்டான்.​

“சார், இந்த அப்பாய்மென்ட் லெட்டர்ல ஜனனி மேடம் உங்க கிட்ட சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க” என்றாள் வசந்தி தயங்கிய குரலில்.​

“அப்படியா? அதை மேடம் கிட்ட கொடுங்க” என்று மனைவியை காண்பித்தான்.​

நேத்ரா புத்தகத்தில் மூழ்கியிருந்தாள். வசந்தி வந்ததையோ, கணவனின் உரையாடலையோ அவள் கவனிக்கவில்லை. சித்தார்த்தும் மனைவியை அழைக்காமல் வேண்டுமென்றே வேலையிருப்பது போல லேப்டாப்பில் மூழ்கினான்.​

சிறிது நேரம் பொறுமையாக நின்றிருந்த வசந்தி, அதற்கு மேல் நிற்க முடியாமலும் வேறு வழியில்லாமலும், “மேடம்” என்றாள் சத்தமாக. நேத்ரா சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் வசந்தியை கண்டதும் முகம் மலர்ந்தாள். “சொல்லுங்க சிஸ்டர், எப்படி இருக்கீங்க?” என்றாள் புன்னைகையுடன்.​

வசந்தி சற்றும் இதை எதிர்ப்பார்க்கவில்லை, முதலாளியின் மனைவி என்று திமிர் காட்டுவாள் என்றே நினைத்திருந்தாள். ஆனால் நொடியில் நேத்ராவின் முகம் புன்னைகையில் மலரவும், வசந்தியின் முகத்திலும் சிறு புன்னகை எட்டிப்பார்த்தது. “மேடம், இந்த லெட்டர்ல கையெழுத்து போடணும்” என்றாள்.​

“எதுக்கு சிஸ்டர் மேடம்னு கூப்பிடறீங்க, நேத்ரானு எப்பவும் போல கூப்பிடுங்க. கொடுங்க” என்று வசந்தியின் கையில் இருந்த கடிதத்தை வாங்கி கையெழுத்து போட்டாள்.​

ஆனால் சித்தார்த், “அதெப்படி நயனி, அவங்க முதலாளியை பேர் சொல்லி கூப்பிடுவாங்க? வேணும்னா நேத்ரா மேடம்னு கூப்பிடட்டும், சரி தானே வசந்தி சிஸ்டர்” என்றான். அவன் மனைவிக்கு எங்கேயும் மதிப்பும் மரியாதையும் குறைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.​

வசந்தி தடுமாற்றத்தோடு, “ஆமாம் டாக்டர், நீங்க சொல்றது கரெக்ட் தான்” என்று சொல்லிவிட்டு நேத்ராவின் கைகளில் இருந்து அந்த கடிதத்தை வாங்கி கொண்டு நடந்தாள்.​

சித்தார்த் மீண்டும் “வசந்தி சிஸ்டர், உங்க பிரெண்ட் ஜமுனா எப்படி இருக்காங்க?” என்றான் வேண்டுமென்றே​

“தெரியலை சார், அவங்க வீடு எனக்கு தெரியாது, ரொம்ப தூரம், நான் அவங்களோட பேச முடியறது இல்லை. ஆனால் அவங்களுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன்” என்றாள் வசந்தி.​

“அப்படியா? சரி. இந்த ஆஸ்பிட்டல்ல இன்னொரு ஜமுனா உருவாகாமல் பாத்துக்கோங்க” என்றான் தன் லேப்டாப்பை பார்த்தபடி​

ஜமுனாவை போல நீயும் எதையும் செய்து வைக்காதே என்று எச்சரிக்கை செய்கிறான் என்று வசந்திக்கு நன்றாகவே புரிந்தது. “அப்படி எதுவும் நடக்காது டாக்டர்” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல முனைந்தாலும் சித்தார்த்தின் குரல் மீண்டும் அவளை தடுத்து நிறுத்தியது.​

“சிஸ்டர் மேடம் காலையில் சரியா சாப்பிடலை, கொஞ்சம் டீயும் பஜ்ஜியும் வாங்கிட்டு வர்றீங்களா?” என்றான்.​

அதுவரை கணவனின் சம்பாஷனையில் குறுக்கிடாமல் இருந்த நேத்ரா இப்போது கணவனை முறைத்தாள். “பழி வாங்கறீங்களா? என்ன பழக்கம் இது?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கணவனை அதட்டினாள்.​

“என் பொண்டாட்டியை மட்டும் அவங்க வேலை வாங்கலாம், நான் வேலை வாங்க கூடாதா?” என்றான் அவனும் மெல்லிய குரலில் லேப்டாப்பிலிருந்து பார்வையை திருப்பாமல்.​

டாக்டர் குத்தி காட்டுகிறார் என்று இப்போது வசந்திக்கு நன்றாக புரிந்தது. “இதோ வாங்கிட்டு வரேன் டாக்டர்” என்று கதவருகே போன வசந்தியை நேத்ரா அழைத்தாள், “சிஸ்டர் அதெல்லாம் எதுவும் வேண்டாம். நாங்க இப்போ கிளம்ப போறோம். நீங்க உங்க வேலையை பாருங்க” என்று அனுப்பி வைத்தாள்.​

வசந்தி சென்றதும் சித்தார்த்தின் தொடையில் கைவைத்து கிள்ளினாள். “ஏய் வலிக்குதுடி” என்றபடி துள்ளிக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தான்.​

“சரி கிளம்பு போகலாம்” என்று மனைவியுடன் வெளியே வந்தவன் மீண்டும் ஜனனியை தனியாக அழைத்து, “டாக்டர் எலிசா நம்ம ஹாஸ்பிட்டலுக்கு புதுசுங்கறதால, அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்ட்டும், எனக்கு உடனுக்குடன் அப்டேட் பண்ணிட்டே இருங்க. அவங்க தங்கப்போற விடுதியில் பர்சனல் ரூம் தவிர மத்த மறைவான இடங்களில் சிசிடிவி கேமரா பிக்ஸ் பண்ணிட்டு, அதுக்கப்புறம் அவங்களை அழைச்சிட்டு போங்க. அன்ட் அங்கே கேமரா பிக்ஸ் பண்ணியிருக்கிறது அவங்களுக்கு தெரிய கூடாது, புரியுதா?” என்றான் சித்தார்த்.​

“ஓகே சார்” என்றாள் ஜனனி.​

“அன்ட் கீப் இட் மோர் கான்பிடன்ஷியல்” என்றான். “ஷூயர் சார்” என்றாள் ஜனனி​

அதன்பின் மீண்டும் நேத்ராவின் தோளில் கைப்போட்டபடி நடந்த கணவனை அண்ணாந்து பார்த்து கண்களை அகல விரித்தாள். “ஆரம்பிச்சுட்டியா? இப்போ எதுக்குடி உன் கண்ணை விரிச்சு முழுங்கிற மாதிரி பார்க்கிறே?” என்றான்.​

“இல்லை, அந்த எலிசாவை என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கறீங்களே எதுக்கு?” என்றாள். “எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்” என்றவன், “சரி காலேஜூக்கு லீவு சொல்லிட்டியா?” என்றான்.​

“ம் மெசேஜ் அனுப்பிட்டேன். ஆனால் எதுக்கு லீவு போட சொன்னீங்க?” என்றாள்.​

“நானே உனக்கு பிராக்டிகல் க்ளாஸ் எடுக்கலாம்னு தான்” என்றான்.​

“அப்போ நம்ம ஹாஸ்பிட்டலயே பிராக்டிகல் கிளாஸ் எடுக்கலாம் இல்ல? எனக்கு இன்னும் ஈசியா புரியும்” என்றாள் ஆர்வமாக.​

மனைவியை திரும்பி ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு, பதில் பேசாமல் அவளை காரில் அழைத்து சென்றான். தம்பியும் தம்பி பொண்டாட்டியும் மீண்டும் வீட்டுக்குள் நுழைவதை பார்த்த பவிஷ்கா,​

“என்னடா, நேத்ரா காலேஜுக்கு போகலையா இன்னைக்கு, உனக்கும் ஆஸ்பிட்டல்ல வேலையிருக்குமே, இரண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டீங்க?” என்றாள் ஆச்சரியமாக.​

“பவிக்கா, நீ அப்பாவையும், ரம்யாவையும் அழைச்சிட்டு மகாபலிபுரம் போயிட்டு வா. அங்கே ரிசார்ட் புக் பண்ணியிருக்கேன். ரம்யாவுக்கு அந்த இடத்தையெல்லாம் சுத்தி காட்டிட்டு இரண்டு நாள் இருந்துட்டு வாங்க. அவளுக்கும் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்த மாதிரி இருக்கும்” என்றான் சித்தார்த்.​

“நான் என்ன கேட்கிறேன், நீ என்ன சொல்லிட்டு இருக்கே. சரி மகாபலிபுரம் போறதா இருந்தா வாங்க எல்லாரும் ஒண்ணா குடும்பத்தோடு போகலாம்” என்றாள் பவிஷ்கா​

சித்தார்த் தமக்கையிடம் என்ன சொல்வது என்று புரியாமல், முகத்தை திரும்பிக் கொள்ள, “அண்ணி, எங்களால வரமுடியாது, அவர் எனக்கு கிளாஸ் எடுக்க போறார், அதுக்கு தான் காலேஜ் லீவு போட சொல்லிட்டார்” என்றவளை அதிர்ந்து போய் பார்த்தான் சித்தார்த். அவள் கரத்தை பிடித்து அழுத்தினான்.​

அதற்குள் பவிஷ்கா, “என்ன கிளாஸ்?” என்று கேட்டாள்.​

“ஏதோ பிராக்டிகல் கிளாசாம்” என்று நயனி சொன்னது தான் தாமதம் அங்கே நிற்க முடியாமல் சித்தார்த் மாடிப்படிகளில் தாவி ஏறிச் சென்றுவிட்டான்.​

ஒரு கணம் பவிஷ்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. சித்தார்த் நிற்க முடியாமல் அங்கிருந்து ஓடுவதை பார்த்து விஷயம் புரிய சத்தமாக சிரித்தாள்.​

நேத்ரநயனி, ‘இவள் எதற்கு இப்படி சிரிக்கிறாள்? நான் எந்த ஜோக்கும் சொல்லவில்லையே’ என்று திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தாள்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 1
Status
Not open for further replies.
Top