ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“சித்தார்த் இந்தியா வந்த பிறகு, ஸ்டீவன் ரிச்சர்ட் எனக்கு புதுசா அறிமுகம் ஆனான். அவன் பெரிய மருந்து கம்பெனியோட முதலாளி என்பதால சித்தார்த்தை மறந்துட்டு ரிச்சர்ட்டோட பழக ஆரம்பிச்சேன்.​

அவனோட கம்பெனியில், அவனும் சில ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து சில மருந்துகள் கண்டுபிடிச்சிருக்காங்க. அதை யுஎஸ் கவர்ன்மென்ட் அப்ரூவ் தரலைனு சொல்லி வருத்தப்பட்டான். நிறைய மருந்துகள் தயாரிச்சதுல பணம் வீணானதோடு, அவங்களோட கண்டுபிடிப்போட ரிசல்ட்ம் சரியா தெரியலைனு சொன்னான்.​

அந்த மருந்துகளை சாப்பிட்டால் உடனே எல்லா நோயும் குணமாயிடும். ஆனால் சில பக்க விளைவுகள் வரும். பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் இருக்கா என்னனு என்கிட்ட பேசிட்டு இருந்தான். அப்போ தான் அவனுக்கு ஒரு யோசனை வந்தது.​

இந்த மருந்துகள் எல்லாம் யுஎஸ்ல தானே தடை பண்ணியிருக்காங்க. வேற நாட்டில் புழக்கத்தில் விட்டால் என்னனு யோசிச்சான். அதுக்காக அவன் வளர்ச்சியடையாத நாடுகளில் இருக்கும் மருந்துகளுக்கான டீலர்கள் எல்லாரிடமும் பேசினான்.​

அதுல ஒருத்தர் தான் டாக்டர் கிருஷ்ணன், அவர்கிட்ட பேசும் போது அவர் சொன்ன மருத்துவமனையோட பேரு நலமுடன் மருத்துவமனை. நான் உடனே இது சித்தார்த்தோட மருத்துவமனைனு சொன்னதும், “எலிசா, நீ எனக்காக இந்த சித்தார்த்தோட மருத்துவமனைக்கு போய், என்னோட எல்லா மருந்துகளையும் அந்த நாட்டில் பயன்படுத்தறதுக்கு ஏற்பாடு செய். எல்லா மருந்துகளும் விற்பனை ஆயிட்டால், எனக்கு எந்த அழுத்தமும் இருக்காது. நாம இரண்டு பேரும் திருமணம் செய்துக்கலாம், என்னோட மொத்த சாம்ராஜ்யத்துக்கும் நீ தான் பிரின்சஸ், என்ன சொல்றே?” என்றான் ரிச்சர்ட்.​

எலிசாவின் கண்களில் பேராசை தோன்றியது. பெரிய பணக்காரர்களில் ஒருவனான ஸ்டீவன் ரிச்சர்ட் உடன் டேட்டிங் கிடைத்ததையே பெரிய அதிர்ஷ்டமாக நினைத்துக் கொண்டிருந்தாள். அவனுடைய கேர்ள் பிரண்ட் என்பதற்கே அவளுடைய சகாக்கள் எல்லாம் வாயை பிளந்தனர். அப்படி பட்டவன் அவளை திருமணம் செய்துக் கொள்ள போகிறானாமே. அத்தனை சொத்துக்கும் அவன் ராஜா என்றால் அவள் ராணி அல்லவா?​

கண்களில் ஆர்வத்துடன் அவனை பார்த்தவள், “ரிச்சர்ட், எனக்கு ஓகே தான். ஆனால் சித்தார்த் என்னை அவனோட ஆஸ்பிட்டல்ல அனுமதிப்பான்னு எனக்கு தோணலை” என்றாள் யோசனையோடு​

“ஓகே பேபி, ஜஸ்ட் அவன்கிட்ட நடிச்சு, அந்த மருத்துவமனைக்குள் நுழைய பாரு. அப்படி முடியலைனா டோன்ட் வொர்ரி. வேற ஆஸ்பிட்டல்ல சேர்ந்திடு. மருந்துகளை புழக்கத்தில் விடுவதற்கு டாக்டர் கிருஷ்ணன் உனக்கு உதவி செய்வார்” என்றான் ரிச்சர்ட்.​

அவன் சொன்னபடி எலிசா முதலில் சித்தார்த்திடம் தன் காதல் நாடகத்தை அரங்கேற்றி இருந்தாள். ஆனால் அவனிடம் அவள் எதிர்பார்த்த எதிர்வினை இல்லாமல் போகவும் மருத்துவமனையில் வேலை கேட்டாள். நேத்ராவும் தன் இளகிய மனதால் எலிசாவை வேலையில் சேர்த்துக்கொள்ளுமாறு கணவனிடம் பரிந்துரைக்கவும் எலிசாவின் வேலை சுலபமாக முடிந்தது.​

டாக்டர் கிருஷ்ணன் சித்தார்த்தின் மருத்துவமனையில் ஏற்கனவே பணிபுரிந்து இருந்ததால், எலிசாவிற்கு அவரால் நன்றாக உதவ முடிந்தது. மருந்துகளை மொத்தமாக வாங்க முதலில் ஜனனி தயங்கினாள் தான். ஆனால் டாக்டர் கிருஷ்ணன் அவளுக்கு பெரியதாக ஒரு தொகை தருவதாக சொன்னதும் அவள் ஒத்துக் கொண்டாள்.​

ஆனால் ஜனனிக்கு எலிசா தருவித்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்று தெரியாது. எப்போதும் சில டீலர்கள் தங்களது மருந்துகளை வாங்க சொல்லி சிபாரிசு செய்வது உண்டு. அப்படி அவர்களிடம் மருந்துகள் வாங்கினால், அவர்கள் பரிசோ அல்லது பணமோ தருவது வாடிக்கை தான். டாக்டர் கிருஷ்ணன் இந்த மாதிரி டீலர்ஷிப்பில் இருப்பதும் அவள் அறிந்த விஷயம். எனவே கிருஷ்ணன் ஜனனிக்கு போன் செய்து சிபாரிசு செய்யவும், ஜனனி மொத்தமாக மருந்துகளை வாங்கி அதை எல்லா துறைகளுக்கும் விநியோகம் செய்திருந்தாள்.​

அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை, ஒரு வாரம் சென்ற பின் அந்த மருந்துகளை மற்ற கடைகளிலும் விநியோகம் செய்வதே ஆகும். மருந்துகள் மொத்தமாக புழக்கத்திற்கு வந்த பின் மேலும் சில வாடிக்கையாளர்களையும் டீலர்களையும் கண்டறிந்து தங்கள் தொழிலை விரிவுப்படுத்திக் கொண்டு, மீண்டும் எலிசா யுஎஸ் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள்.​

ஆனால் சித்தார்த் அதற்குள் அவர்களின் திட்டத்தை கண்டு பிடித்து விடுவான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.​

எலிசா இவை அனைத்தும் சொல்லி முடிக்கும் போதே ஜனனியை விசாரித்துக் கொண்டிருந்த பெண் அதிகாரியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து ஜனனியின் வாக்குமூலத்தை கூறினார். “சார் நான் நல்லா விசாரிச்சுட்டேன். இந்த பொண்ணு டாக்டர் சித்தார்த் சேம்பல் வாங்கறதுக்கு சொன்ன புரோசிட் (proceed) என்கிற வார்த்தையை பயன்படுத்தி மொத்த மருந்துகளையும் வாங்கி இருக்காள். ஆனால் அதுக்கு காரணம் எப்போதும் டீலர்ஷிப்பில் கிடைக்கும் கமிஷன் தான். மற்றபடி தடை செய்யப்பட்ட மருந்துனு அவளுக்கு தெரியாதாம்.​

சித்தார்த் ஓகே சொன்ன மருந்து தானே, இதில் டாக்டர் கிருஷ்ணனும் பரிந்துரை செய்றாரேனு வாங்கிட்டதாக சொல்றா” என்றார் அந்த பெண் அதிகாரி.​

தலைகுனிந்து நின்றிருந்த ஜனனியை பார்த்து “இருந்தாலும் நீங்க பண்ணது தப்பு தானே ஜனனி? ஹாஸ்பிட்டலோட விதிமுறையை நீங்க எப்படி மீறலாம்? சித்தார்த் ஒற்றை வார்த்தையில் புரோசிட்னு சொல்லியிருந்தாலும், அதை மொத்த மருந்துகளின் கொள்முதலுக்கான ஒப்புதல்னு நீங்களாவே எப்படி முடிவு செய்யலாம்? அவர்கிட்ட மீண்டும் விளக்கம் கேட்டிருக்கணும் தானே?” என்றான் விக்ரம் கடுமையான குரலில்.​

ஜனனி கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே, “சார், என்னை மன்னிச்சுடுங்க. இந்த மாதிரி பிரச்சனை வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலை, கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்துட்டேன்” என்ற ஜனனியை நோக்கி தன் கையில் கிடைத்த பூச்சாடியை வீசினான் சித்தார்த்.​

நொடியில் விக்ரம் அதை தடுத்திருந்தான். “சித்து, டோன்ட் பி எமோஷனல். நான் பார்த்துக்கிறேன்” என்றான். (Don't be emotional)​

“உனக்கு கமிஷன் பணம் கிடைக்கணும்னு பொது மக்களோட உயிரை பணயம் வைப்பியா? யு டேமிட். உன்னை கொன்னால் கூட என் ஆத்திரம் தீராது. இந்த கடைசி நிமிடம் வரைக்கும் உன் மேல எனக்கு சந்தேகமே வரல. நீ ஏதோ கவனகுறைவால செய்திருப்பேன்னு நினைச்சேன். என் கண்ணு முன்னாடி நிக்காதே. மேடம் இவளை கூட்டிட்டு போங்க” என்றான் சித்தார்த் ஆத்திரத்துடன்.​

விக்ரம் கண் ஜாடைக் காட்ட பெண் அதிகாரிகள் ஜனனியையும் எலிசாவையும் அழைத்துச் சென்றார்கள்.​

“சித்து, இப்போ டாக்டர் கிருஷ்ணனை அரெஸ்ட் பண்ணிட்டா வேலை முடிஞ்சது. மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நோயாளிகளை கவனிச்சு அனுப்பி வை. கோர்ட் விசாரணைக்கு நீ வந்து சாட்சி சொல்ல வேண்டியிருக்கும். அப்புறம் உன் மனைவி நேத்ரா தான் எலிசாவை வேலைக்கு அப்பாயின்ட்மென்ட் பண்ணியிருக்காங்க. அவங்களும் வரவேண்டியிருக்கும்” என்றான் விக்ரம்.​

“என்னடா சொல்றே? அவளுக்கு இங்கே நடப்பது எதுவும் தெரியாது. இந்த விஷயமே நான் அவள் கிட்ட சொல்ல போறது இல்ல. தெரிஞ்சா பயந்துடுவா, அப்புறம் நான் தானே எலிசாவுக்கு சிபாரிசு செய்தேன், எல்லாம் என்னால தான்னு சொல்லி வருத்துப்படுவாடா” என்றான் சித்தார்த்.​

“சரி முடிஞ்சவரைக்கும் சிஸ்டருக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கிறேன். எதுக்கும் நேரம் கிடைக்கும் போது மெதுவா அவங்களுக்கு விஷயத்தை சொல்லிடு. கண்டிப்பா விசாரணைனு வந்தால், அவங்களோட வாக்குமூலமும் தேவைப்படும்” என்றான் விக்ரம்.​

சித்தார்த் நெற்றியை தேய்த்தவாறு யோசனையில் ஆழ்ந்த போது அவன் போன் ஒலித்தது. பவிஷ்கா தான் போன் செய்திருந்தாள்.​

“டேய் சித்து, என்னடா வீட்டை திறந்து போட்டுட்டு இரண்டு பேரும் எங்கே போனீங்க?” என்றாள் பதட்டத்துடன்.​

அப்போதுதான் தன் கைகடிகாரத்தை பார்த்தான் சித்தார்த். மணி ஐந்தரையை காட்டியது. “பவிக்கா நீ எப்போ வந்தே? நான் நம்ம ஹாஸ்பிட்டல்ல இருக்கேன். ஒரு பிரச்சனை ஆயிடுச்சு” என்றான் சித்தார்த்.​

“என்ன பிரச்சனை?” என்றாள் பவிஷ்கா பதறியபடி.​

“நான் நேரில் வந்து விஷயத்தை சொல்றேன், நயனி அங்கே தான் இருப்பா பாரு, அவகிட்டயும் சொல்லிடு, இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்” என்றான் சித்தார்த்.​

“டேய் நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா? நயனி வீட்டில் இல்லை. வீடு திறந்து இருக்கு. யாருமே இல்லையேனு தான் நான் உனக்கு போன் செஞ்சதே” என்றாள் பவிஷ்கா சற்று எரிச்சலாக.​

சித்தார்த் அதிர்ச்சியுடன் விக்ரமை திரும்பி பார்த்தான்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 1

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 27

சித்தார்த்திற்கு நயனி வீட்டில் இல்லை என்று பவிஷ்கா சொன்னதுமே மனதை பிசைந்தது.​

“பவிக்கா, அவ ஒருவேளை வாக்கிங் எதாச்சும் போயிருக்க போறாள். நல்லா பார்த்துட்டு சொல்லு. ஏற்கனவே மண்டை காய்ஞ்சு போய் இருக்கேன். நீ வேறே என்னென்னவோ சொல்லாதே. எங்கே போயிருக்க பாேறாள். நல்லா தேடு. நீ எப்படி இவ்வளவு காலைல ஐந்தரைக்கே வீட்டுக்கு வந்துட்டே?” என்றான் சித்தார்த் தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு​

பவிஷ்காவிற்கு தம்பியின் பதட்டம் நன்றாகவே புரிந்தது. “சரி சித்து நான் இன்னும் நல்லா தேடி பார்க்கிறேன். நைட் உன்கிட்ட அந்த எலிசாவை பத்தி சொல்லிட்டு இருக்கும் போதே நீ போனை கட் பண்ணிட்டே. திரும்பி போன் பண்ணா எடுக்கவே இல்லை. என்னாச்சோ ஏதாச்சோனு பதட்டமா இருந்தது. எப்படா விடியும்னு காத்திருந்து, டாக்சி புக் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் இரண்டு பேரும் வீட்டில் இல்லை. வீடும் திறந்து கிடக்கு. அதனால் தான் பதறி போய் உனக்கு போன் பண்ணேன்” என்றாள் பவிஷ்கா.​

“சரிக்கா, நீ நயனியை நல்லா தேடிப் பார்த்துட்டு, அவள் கிடைச்சதும் எனக்கு போன் பண்ணு” என்று சொல்லி போனை வைத்தாலும் நொடிக்கொரு முறை பவிஷ்காவிற்கு போன் செய்தான்.​

“பவிக்கா நயனி போன் கூட வேலை செய்யலை. கொஞ்சம் நல்லா பாரு. இந்த நேரத்துல அவ எங்கே போயிருப்பா?” என்றான் கவலையான குரலில்.​

“டேய் கொஞ்ச நேரம் நீ போன் பண்ணாமல் இருந்தால் தானே நான் அக்கம்பக்கம் இருக்கறவங்க கிட்ட போய் கேட்க முடியும். விடாமல் போன் பண்ணிட்டே இருந்தால் எப்படிடா?” என்றாள் பவிஷ்கா அலுப்புடன்.​

போனை சோர்வுடன் வைத்தவன் இப்போது விக்ரமிடம் திரும்பி “நான் வேணும்னா நயனியோட அப்பாகிட்ட போன் பண்ணி கேட்கட்டுமா? ஒரு வேளை அங்கே போயிருப்பாளோ” என்றான்.​

“கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு யோசி சித்து. நயனி இந்த நேரத்துல எதுக்கு அவங்க அப்பாவை பார்க்க போக போறாங்க? என்னதான் நாம புத்திசாலியா இருந்தாலும் பர்சனல் விஷயத்துல பிரச்சனை வரும்போது எமோஷனல் ஆயிடுறோம், சிம்பிள் லாஜிக் கூட புரியாமல் குழம்பிடுவோம்” என்றான் விக்ரம்.​

“நீ என்ன சொல்ல வர்ற விக்ரம்” என்றான் சித்தார்த்.​

“இப்போ நேத்து ராத்திரி இருந்து நடந்த விஷயங்களை உனக்கு நடந்ததா பார்க்காமல் வேறெ ஒருத்தருக்கு நடந்ததா நினைச்சு ஒரு மூணாவது மனுஷனா யோசிச்சு பாரு. உனக்கே புரியும்” என்றான் விக்ரம்​

“எனக்கு எதுவும் புரியலைடா” என்றான் சித்தார்த்.​

“நேத்து பிரச்சனைனு கிளம்பி வந்திருக்க, உனக்கும் நயனிக்கும் எதிரிகள் இருக்காங்க. நயனியோட போன் வேலை செய்யல. என்னவா இருக்கும்?” என்றான் விக்ரம்.​

“யாராவது நயனியை கடத்தி இருப்பாங்கனு சொல்றியா?” என்றான் சித்தார்த் நடுங்கும் குரலில். அதை சொல்லும் போதே அவன் நெஞ்சில் நீர்வற்றி போனது போல இருந்தது.​

“வாய்ப்பிருக்கு சித்து. எலிசா நேத்து நைட் டாக்டர் கிருஷ்ணன் கிட்ட பேசியிருக்காள். அவரோட தற்காப்புக்காக கூட அவர் நயனியை கடத்தி வச்சிருக்கலாம் இல்ல? இப்பவே அந்த கிருஷ்ணனோட வீட்டுக்கு போவோம். அவரை மிரட்டுனா விஷயம் தெரிஞ்சுடும்” என்றான் விக்ரம்.​

“என்னடா வாழ்க்கை இது? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு மூணு நாள் ஆகலை. அதுக்குள்ள எத்தனை பிரச்சனை? நயனிக்கு எந்த ஆபத்தும் இருக்காது இல்ல விக்ரம்” என்று குழந்தை போல கேட்ட அந்த ஆறடி ஆண்மகனை ஆச்சரியமாக பார்த்தான் விக்ரம்.​

“சித்து, ஐ திங்க் யு லவ் ஹர் மேட்லி (I think you love her madly)” என்றான்.​

“ஆமாடா, இப்போ ஆஸ்பிட்டலுக்கு வந்த பிரச்சனை எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லைனு தோணுது. எதை இழந்தாலும் என் நயனியை மட்டும் நான் இழக்க கூடாதுடா. எதாவது செய்” என்றான் சித்தார்த்​

அடுத்து விக்ரம் பரபரப்புடன் செயல்பட்டான். அவர்கள் எதிர்பார்த்தது போல கிருஷ்ணன் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, வீட்டில் தான் இருக்கிறார் என்று தகவல் வந்ததும், போலீஸ் படையுடன் அவர் வீட்டை முற்றுகையிட்டனர் சித்தார்த்தும் விக்ரமும்.​

போலீஸ் படையுடன் நின்றிருந்த சித்தார்த்தை பார்த்ததும் கிருஷ்ணனுக்கு இதய துடிப்பே நின்று விடும் போல தோன்றியது. முந்தைய நாள் இரவு தூக்க கலக்கத்திலும் ஆல்கஹாலின் போதையிலும் இருந்தவர், எலிசாவின் பேச்சை முழுவதுமாக உள்வாங்கியிருக்க வில்லை. ஏதோ நிலைமை சரியில்லை என்பது மட்டுமே அவரது புரிதலாக இருந்தது. எதுவாக இருந்தாலும் காலையில் சமாளித்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டார்.​

விடிந்தும் விடியாததுமாக சித்தார்த் இப்படி பெரும் போலீஸ் படையுடன் வந்து நிற்பான் என்று அவர் அணுஅளவும் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படியும் அவர் பெயர் வெளியே வராது என்று நினைத்து கொண்டிருந்தார். எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் தான் எதுவும் உளரக்கூடாது என்று தெளிவாக யோசித்து, “வாங்க சித்தார்த், வாங்க விக்ரம் என்ன காலையிலேயே வீட்டுக்கு வந்திருக்கீங்க?” என்று பதட்டத்தை மறைத்தபடி அவர்களை வரவேற்றார்.​

“உன் வரவேற்பெல்லாம் தேவையில்லை. முதலில் என் மனைவி நேத்ரநயனியை எங்கே கடத்தி வச்சிருக்க, மரியாதையா சொல்லிடு. இல்லைனா போலீஸ் முன்னாடியே உன்னை அடிச்சு துவம்சம் பண்ணிடும் வெறியில் இருக்கேன்” என்றான் சித்தார்த் ஆத்திரத்துடன் பற்களை கடித்துக் கொண்டு​

“என்ன சித்தார்த், உங்க மனைவி எங்கேனு உங்க வீட்ல போய் தேடுங்க. என்கிட்ட வந்து கேட்டால் நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா என் மனைவி ஓகேவானு பாருங்க. ஆனால் அவ உங்க மனைவி போல கொடி போல இருக்க மாட்டா” என்று ஏதோ ஹாஸ்யம் சொன்னவர் போல சத்தமாக சிரித்தார்.​

கணவனின் அருவெருப்பான பேச்சை கேட்டு அவர் மனைவி பங்கஜம் முகம் அவமானத்தால் சுருங்கியது.​

கோபத்துடன் அவரை அடிக்க கைஓங்கிய சித்தார்த்தை விக்ரம் தடுத்து நிறுத்தினான். முறையாக அவன் வாங்கி வந்திருந்த அரெஸ்ட் வாரண்டை அவர் முன்பு நீட்டினான். அதை வாங்கி பார்த்த கிருஷ்ணனுக்கு சிரிப்பு மறைந்து வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.​

கேள்வியாக விக்ரமை பார்த்தவரிடம், “எலிசா எல்லா விஷயத்தையும் சொல்லி அப்ரூவராகிட்டாங்க. நீங்க மறைக்கறதுக்கு வழியே இல்லை. அன்ட் எங்க கிட்ட நீங்க எலிசாவோட வீடியோ காலில் பேசின சிசிடிவி பதிவுகளும் இருக்கு. அத்தோட நீங்க எலிசா மற்றும் ஜனனிக்கிட்ட பேசிய கால்ஸ் வாய்ஸ் ரெக்கார்ட்களையும் எங்க துறையில் இருக்கிறவங்க சீக்கிரமே கோர்ட்ல சப்மிட் பண்ணிடுவாங்க.​

சோ நீங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அதனால நேரடியா விஷயத்துக்கு வர்றேன். இதையெல்லாம் எதுக்கு பண்ணீங்க? அன்ட் இன்னும் என்னென்னவெல்லாம் பண்ணியிருக்கீங்க?” என்றான் விக்ரம் ஆளுமையான அதிகார குரலில்.​

கொஞ்ச நேரம் தனக்கும் நடந்ததற்கும் சம்மந்தமே இல்லை என்று வாதாடி பார்த்தார் கிருஷ்ணன். ஆனால் விக்ரம் அவர் மனைவியிடம் திரும்பி, “உங்க கணவரோட போனை எடுத்துட்டு வாங்க” என்றான்.​

உடனே கிருஷ்ணன் அங்கிருந்து எழுந்து சென்று தன் மனைவியை தடுக்க பார்த்தார். ஆனால் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அவரின் இருபக்கமும் சோபாவில் அமர்ந்துக் கொண்டு, அவர் நகராதபடி இறுக்கி பிடித்துக் கொண்டனர்​

பங்கஜம் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கிளிப்பிள்ளையாக விக்ரம் சொன்னதை செய்து முடித்து கணவரை ஏளன பார்வை பார்த்து விட்டு மீண்டும் தான் இருந்த இடத்திலேயே போய் நின்று கொண்டார்.​

“ம் உங்க மனைவிக்கு நீங்க எந்த அளவுக்கு துரோகம் செய்திருக்கீங்கனு. இந்த ஒரு விஷயத்துலயே தெரியுது” என்று நக்கலாக சொல்லிவிட்டு அவரின் கைப்பேசியை அவர் கைவிரல் ரேகை கொண்டே அன்லாக் செய்துவிட்டு வாட்சஅப்பில் அவர் ஸ்டீவன் ரிச்சர்ட் மற்றும் எலிசாவிற்கு அனுப்பியிருந்த வாய்ஸ் மெசேஜ்களை அவருக்கே போட்டு காண்பித்தான்.​

அதற்கு மேல் மறுக்க முடியாது என்பதால் தலைகுனிந்து கொண்டார் கிருஷ்ணன். “இப்போ சொல்லுங்க, இந்த விஷயத்துல எதுக்கு சித்தார்த்தை மாட்டிவிட நினைச்சீங்க? அவங்க மனைவியை எங்கே கடத்தி வச்சிருக்கீங்க?” என்றான் விக்ரம் அதிகார தோரணையில்​

“சார், நான் மருத்துவம் பார்த்தாலும் மருந்துகளுக்கான டீலர்ஷிப் மூலமாகவும் லாபம் பார்த்துட்டு இருந்தேன். அதன் மூலம் அறிமுகம் ஆனவர் தான் ஸ்டீவன் ரிச்சர்ட். அவர் மருந்துகள் தடைசெய்யப்பட்டதை சொன்னார். ஆனால் பெரிதாக எந்த பக்க விளைவும் இல்லை. யுஎஸ்ஸில் சின்ன விஷயத்தை பெரிசா சொல்றாங்கனு சொன்னார். அதை வித்து கொடுத்து மேலும் அவங்க கம்பெனியோட மார்க்கெட்டை இந்தியாவில் உருவாக்கி கொடுத்தால் ஒரு பெரிய தொகையை கொடுக்கறதா சொன்னாரு.​

அது கிடைச்சால் எனக்கு லைப்டைம் செட்டில்மென்ட்டா இருக்கும். நான் எந்த மருத்துவமனையிலும் முழுநேர மருத்துவரா வேலை செய்யறது இல்லை. பிரபலமான ஆஸ்பிட்டல்ஸ்ல வாரம் ஒரு நாள், இரண்டு நாள்னு போவேன். சர்ஜரிக்கு அப்பாய்ன்ட்மென்ட் இருந்தால் செய்து கொடுத்துட்டு அதுக்கான பணத்தை வாங்கிக்குவேன். இதனால் எனக்கு நிறைய மருத்துவமனையில் கான்டேக்ட் இருந்தது. இதை வச்சு மருந்துகளை சிபாரி செய்வேன். அவங்களும் நான் சொல்றதை மறுக்க முடியாமல் மருந்துகளை வாங்கிப்பாங்க. இதனால் என் பிசினஸ் நல்லாவே போயிட்டு இருந்தது.​

இந்த சித்தார்த்தோட ஆஸ்பிட்டல்ல தெரியாதனமா அவர் மனைவிக்கிட்ட கொஞ்சம் பேசிட்டேன். இதை தெரிஞ்சுக்கிட்டு இவர் என்னை பத்தி மருத்துவர்கள் அசோசியேசனில் கம்ளெய்ன்ட் பண்ணி, என்னோட மருத்துவர் உரிமத்தை முடக்கிட்டாரு. மருத்துவம் பார்க்க முடியாமல் போனதுக்கு கூட நான் வருத்தப்படலை. இவரால என்னோட மொத்த தொழிலும் முடங்கிடுச்சு. யாருமே நான் பரிந்துரைக்கிற மருந்துகளை வாங்க மருத்துட்டாங்க.​

அதனால தான் நானும் ரிச்சர்ட்டும் பேசி எலிசாவை இந்தியா வரவச்சோம். எனக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மாதிரி தான் இந்த திட்டம். எலிசா மூலம் மருந்துகளை நல்ல முறையில் இந்தியாவில் விற்பனை செய்ய ஆரம்பிச்சால் எனக்கு லாபம். இல்லையென்றால் எலிசாவோ, மருந்துகளோ மாட்டிக் கொண்டாலும் அதில் சிக்க போவது சித்தார்த் தான். அவனை நேரடியா என்னால தாக்க முடியாது. இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டேன்.​

ஆனால் இப்படி கையும் களவுமாக மாட்டிப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை” என்றார் கிருஷ்ணன்.​

“எல்லாம் ஓகே, நேத்ரநயனி எங்கே?” என்றான் சித்தார்த்.​

“நான் அவங்களை அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு அப்புறம் பார்க்கவே இல்லை. விஷயம் தெரிஞ்சு இருந்தால் நான் ஏன் இப்படி வீட்டில் தூங்கி, உங்க கிட்ட மாட்ட போறேன்? தப்பிச்சு போயிருக்க மாட்டேனா? நீங்க என்னை இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிப்பீங்கனு நானே எதிர்ப்பார்க்கலை. அதனால் தான் மாட்டிக்கிட்டு வாக்குமூலம் கொடுத்துட்டு இருக்கேன். இதுல நான் உங்க மனைவியை பத்தி யோசிக்க கூட இல்லை. நான் எங்கேயிருந்து அவங்களை கடத்தறது” என்றார் கிருஷ்ணன்.​

அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதாகவே தோன்றியது. சித்தார்த் கவலையுடன் விக்ரமை பார்த்து “இப்போ என்னடா பண்றது?” என்றான்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“சித்து, நான் இவரை நேரா கோர்டில் ஒப்படைச்சுட்டு எல்லா ஆதாரத்தையும் கொடுத்து கேஸ் பைல் பண்ணிட்டு வர்றேன். நீ உன்கூட இரண்டு போலீஸ் ஆட்களை அழைச்சுட்டு போய் யார் மேல எல்லாம் சந்தேகம் இருக்கோ விசாரிச்சுட்டு இரு. நயனி கிடைச்சுட்டால் எனக்கு தகவல் சொல்லு. இல்லைனா வேலையை முடிச்சுட்டு நானும் உன் கூட ஜாய்ன் பண்ணிக்கிறேன்” என்றான் விக்ரம்.​

“சரிடா, என்னோட அடுத்த சந்தேகம் அந்த பாண்டி தான். அவன் எங்கே இருக்கான்னு பார்க்கணும்” என்றான் சித்தார்த்.​

“நீ கவலைப்படாதே என் டீம் உனக்கு அவன் எங்கே இருக்கான்னு கண்டுபிடிச்சு சொல்வாங்க” என்று சொல்லி விட்டு, கிருஷ்ணனை கைது செய்து ஜீப்பில் ஏற்றினான் விக்ரம்.​

சித்தார்த் தன் காரில் மற்ற இரண்டு போலீஸ் அதிகாரிகளுடன் பாண்டியை தேடி சென்றான்.​

சித்தார்த்துக்கு பாண்டி ஓட்டிக் கொண்டிருந்த டாக்சி நிறுவனத்தின் பெயர் தெரியும் என்பதால் நேரடியாக அங்கே சென்று அவனைப் பற்றி விசாரித்தான். அவன் கடைசியாக நேற்று இரவு சவாரி சென்றதோடு சரி, காலையில் இருந்து அவனிடம் எந்த தகவலும் இல்லை. அவன் போனும் வேலை செய்யவில்லை என்றனர்.​

பாண்டி கடைசியாக சவாரிக்கு சென்ற இடத்தை விசாரித்தபோது, அது சித்தார்த் வீடு இருக்கும் குடியிருப்பு பகுதி என்று தெரிந்ததும் பாண்டி தான் ஏதோ செய்திருக்கிறான் என்று முழுதாக நம்பினான் சித்தார்த்.​

அவன் காரில் நேற்று இரவு கிளம்பும் போது நயனி கணவனை வாசல் வரை வந்து வழியணுப்ப வந்தாள். அப்போது ஒரு டாக்சி அவர்கள் வீட்டை கடந்து சென்றது அவன் நினைவில் வந்தது. நிறுவனத்தின் மேலாளரிடம் மொபைல் எண்ணையும் அட்ரசையும் வாங்கிக் கொண்டு அவசரமாக பாண்டி இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்றான்.​

எப்படியோ பாண்டியின் வீட்டை கண்டுபிடித்து சித்தார்த்தும் இரண்டு போலீஸ்காரர்களும் அவன் வீட்டு கதவை தடாலடியாக திறந்தனர். பாண்டியை கண்டதும் அடித்து நொறுக்கி விடும் வேகத்தில் சென்ற சித்தார்த், அங்கே ஏற்கனவே அடிப்பட்டு படுத்துகிடக்கும் பாண்டியை பார்த்து அதிர்ந்தான்.​

அரை மயக்கத்தில் இருந்த பாண்டியை தூக்கி பிடித்து அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். “டேய் பாண்டி, என் நயனி எங்கேடா. மரியாதையா சொல்லிடு, அவளுக்கு எதாவது ஆச்சுனா உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்க மாட்டேன்” என்று அவனை உலுக்கி கொண்டு இருந்தான்.​

போலீஸ் அதிகாரிகள் அவனுடைய ஆவேசத்தை கண்டு, “சார் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. ஓவர் எமோஷனல்ல எதாவது செய்து சிக்கலை மேலும் பெரிசாக்கிடாதீங்க” என்றவர்கள், பாண்டியிடம் விசாரிக்க தொடங்கினர்.​

“கடத்தல் கேஸ்ல உன்னை அரெஸ்ட் பண்ணி, ஊருல இருக்கிற எல்லா கேசையும் உன்மேல போட்டுடுவோம். அப்புறம் ஆயுசுக்கும் உன்னால வெளியே வர முடியாது பார்த்துக்க. என்னடா பண்ண சாரோட மனைவியை?” என்று அதட்டினார் ஒரு போலீஸ் அதிகாரி​

“சார் நான் அந்த பெண்ணை எதுவும் பண்ணலை சார். அவளால நான் தான் அடிபட்டு கிடக்கிறேன்” என்று முனங்கினான் பாண்டி.​

“என்ன நடந்ததுனு புரியும்படியா சொல்லு” என்றார் அவர்​

“சார் நேத்து ராத்திரி நான் சவாரிக்கு போனப்போ, இந்த டாக்டர் காரில் ஏறி போனதை பார்த்தேன். நேத்ரா வாசலில் ஏதோ பதட்டமா இவர்கிட்ட பேசிட்டு இருந்தாள். நானும் கண்டுக்காமல் போயிட்டேன். அப்புறம் வீட்டுக்கு போகலாம்னு போகும் போது தான் வழியில் இவரோட ஆஸ்பிட்டல் முன்னாடி நிறைய போலீஸ் ஜீப்புகளை பார்த்தேன். நல்லா எதிலயோ மாட்டிக்கிட்டார்னு தோணுச்சு. செக்யூரிட்டிங்க கிட்ட விசாரிச்சதுல ஏதோ மருந்து மாத்தி கொடுத்திட்டதா கேள்விபட்டேன்” என்றவன் அதற்கு பின் நடந்தவற்றை விளக்கினான்.​

பதட்டத்துடன் இருந்த நயனிக்கு போன் வரவும் யார் என்றும் கவனிக்காமல் அதை எடுத்து காதில் வைத்தாள்.​

“என்ன நேத்ரா? என்னவோ பணக்கார மாப்பிள்ளை கிடைச்சுட்டான்னு அவன் கூட போனீயே, இப்போ என்னாச்சு பார்த்தியா? அவன் கூட நீயும் ஜெயில்ல கம்பி எண்ண போறே” என்றான் பாண்டி வக்கிரத்துடன்.​

“அடச்சீ நீயா? நீனு தெரிஞ்சு இருந்தால் போனை எடுத்திருக்க மாட்டேனே” என்றாள் நேத்ரா எரிச்சலாக​

“இனி உன்னால போனே யூஸ் பண்ண முடியாது. ஜெயில்ல போனுக்கெல்லாம் அனுமதியில்ல” என்றான் வன்மத்துடன் சிரித்துக் கொண்டே.​

“ஏய் என்ன உளர்ற? குடிச்சிட்டு போதையில் உளர்றதுக்கு நான் தான் கிடைச்சேனா? போனை வை” என்றாள் நேத்ரா.​

“குடிச்சிட்டு உளரல மா. உன் புருஷன் வண்டவாளம் எல்லாம் இங்கே தண்டவாளம் ஏறிட்டு இருக்கு. அவனோட ஆஸ்பிட்டல் முன்னாடி ஒரு போலீஸ் பட்டாளமே குவிஞ்சு இருக்கு. அவனை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவாங்க. நல்லா பார்த்து சந்தோஷப்படு” என்றான் நக்கலாக.​

“ஏய் நீ நீ என்ன சொல்றே? பொய் சொல்லாதே. அவரை ஏன் போலீஸ் அரெஸ்ட் பண்ண போறாங்க” என்றாள் பதட்டத்தை மறைத்தபடி​

“நான் ஏன் பொய் சொல்ல போறேன். உன் புருஷன் ஆஸ்பத்திரியில ஏதோ மருந்தை மாத்தி கொடுத்துட்டானாம். எத்தனை உயிர் போயிருக்கோ எல்லாம் காலையில் செய்தியில் தெரிஞ்சுடும். இப்போதைக்கு போலீஸ் நிக்கிற கண்கொள்ளா காட்சியை வீடியோ எடுத்து வாட்சஅப்பில் அனுப்பறேன். கண்குளிர பார்த்து சந்தோஷப்படு” என்றவன் அங்கே மருத்துவமனைக்குள் சென்றுக் கொண்டிருந்த போலீஸ் வேன்களை வீடியோ எடுத்து நேத்ராவிற்கு அனுப்பினான்.​

பாண்டி சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருந்தவள், உடனடியாக கணவனுக்கு போன் செய்தாள். ஆனால் அவன் தொடர்ந்து போனை கட் செய்துக் கொண்டே இருந்தான். அதற்குள் பாண்டி அனுப்பியிருந்த வீடியோ அவள் கைப்பேசியில் வந்திருக்க, நடுங்கும் கைகளால் அதை ஓட விட்டாள். அவன் சொன்னது உண்மை தான். மருத்துவமனை முன்பு போலீசை கண்டதும் பதறி போய்விட்டாள் நேத்ரா.​

உடனே பாண்டி போன் செய்தான். “இப்போ என்ன சொல்றே? பாத்தியா உன் புருஷன் என்ன வேலை செய்திருக்கான்னு” என்றான்​

“என் புருஷனை பத்தி எனக்கு தெரியும். இதுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மூணு நாளா அவர் மருத்துவமனை பக்கமே போகலை. அதனால அங்கே ஏதோ தப்பு நடந்திருக்கும்” என்று அவனுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு தனக்கே சொல்லிக் கொண்டிருந்தவள் யோசனையில் ஆழ்ந்தாள்.​

கடைசியாக கணவன் பவிஷ்காவுடன் எலிசாவை பற்றி பேசிவிட்டு தானே அவசரமாக மருத்துவமனைக்கு சென்றான்? அப்போ எலிசா தான் ஏதோ பிரச்சனை செய்திருக்கிறாள். அய்யோ அபிக்கு அவளை வேலைக்கு அமர்த்துவதில் துளி கூட விருப்பமில்லையே. அவள் தானே அவனை வற்புறுத்தி அந்த எலிசாவை வேலைக்கு அமர்த்தினாள்?​

தன்னுடயை முட்டாள் தனத்தினால் கணவன் எத்தனை பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறான்? இதிலிருந்து எப்படி மீள போகிறான்? என்று பதைபதைத்து போனாள். உடனடியாக போலீசிடம் சென்று, இதற்கும் சித்தார்த்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எலிசாவை நேத்ரா தான் வேலைக்கு அமர்த்தியதால் அவள் தான் அதற்கு முழு பொறுப்பு என்று போலீசாரிடம் சொல்லி அவளை கைது செய்ய சொல்ல வேண்டும். தன் கணவனை இதிலிருந்து காப்பாற்றியாக வேண்டும் என்று உள்ளமும் உடலும் ஒரே நேரத்தில் பதற்றம் அடையவும் மொத்த உடலும் உதற தொடங்கியது.​

சற்றும் யோசிக்காமல் கையில் போனை மட்டும் எடுத்துக் கொண்டு, எதாவது டாக்சி அல்லது ஆட்டோவில் சென்று விடலாம் என்று அவசரமாக வெளியே ஓடினாள்.​

பாண்டி நேத்ராவை சரியாக கணித்து அவள் வரும் வழியை ஊகித்து, ஒரமாக டாக்சியை நிறுத்திவிட்டு காத்திருந்தான். நேத்ரா ஓட்டமும் நடையுமாக வந்தவள் டாக்சியை கண்டதும் மூச்சிறைத்துக் கொண்டே, “சார் நலமுடன் மருத்துவமனைக்கு கொஞ்சம் அவசரமா போகணும், டாக்சி வருமா?” என்றாள்​

“நீ கூப்பிட்டால் டாக்சி மட்டுமில்ல, நானும் எங்கே வேணா வருவேன் நேத்ரா” என்று பல்லை இளித்தான் பாண்டி.​

“அடச்சீ, நீயா?” என்று வெறுப்புடன் கேட்டு விட்டு திரும்பி வேகமாக நடக்க தொடங்கினாள் நேத்ரா.​

“ஏய் நேத்ரா என்கூட வா, நான் அழைச்சிட்டு போறேன். உன் புருஷனை நேரில் பார்த்து அவனோட நிலைமையை தெரிஞ்சுக்க. அவன் அளவுக்கு பணம் இல்லைனாலும் நான் உன்னை நல்லா பார்த்துப்பேன். நீ அவனோட இருந்தால் ஜெயிலுக்கு போய் களி தான் திங்கணும். என்கூட வா” என்று அவள் கையை பிடித்து இழுத்தான் பாண்டி.​

அவனிடமிருந்து கையை உதறிக் கொண்டு நேத்ரா நடக்க முயன்றாலும் அவன் அவளை இழுத்து அந்த காரினுள் தள்ளவே பார்த்தான். அதிகாலை மணி இரண்டு என்பதால் அந்த சாலையில் ஆளரவமே இல்லை.​

ஏற்கனவே கணவனுக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டத்தில் இருந்த நேத்ராவால் பாண்டியின் செயலை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஆக்ரோஷத்தோடு அவனை பிடித்து தள்ளினாள். ஒரு அடி அடித்தால் சுருண்டு விழுந்துடுவாள், இவ இவ்வளவு பெரிய உருவத்தில் மலைமாடு மாதிரி இருக்கும் என்னை அடித்து தள்ளிட்டாளே என்ற ஆத்திரத்தில் பாண்டியும் எழுந்து அவளை கார் மீது வேகமாக தள்ளிவிட்டான்.​

அதில் மோதியதில் அவள் கையிலிருந்த போன் விழுந்து உடைந்தது. நெற்றியில் சிறு காயத்துடன் எழுந்தவள் மீண்டும் பாண்டியை வெறிக் கொண்டு தாக்கினாள். அவனை பிடித்து வேகமாக தள்ளியதில் கரடுமுரடாக இருந்த அந்த சாலையில் புரண்டு விழுந்தான். அவனுடைய போனும் உடைந்து நொறுங்கியது.​

வலி தாங்க முடியாமல் விழுந்து கிடந்தவனால் மீண்டும் எழக் கூட முடியவில்லை. கற்கள் அவன் உடலில் ஆங்காங்கே குத்தியிருந்தது. ஆத்திரத்தோடு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து நேத்ராவை நோக்கி வீசினான்.​

அந்தக் கல் சரியாக மீண்டும் நேத்ராவின் நெற்றியில் பலமாக பட்டது. நெற்றியில் இருந்து வழியும் ரத்தத்தோடு தள்ளாடிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டிருந்த பாண்டி மயங்கிபோனான்.​

அதன்பிறகு அவன் மயக்கம் தெளியும் போது யாரோ அவனுக்கு முதலுதவி செய்தார்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் கூறியபோது “வேண்டாம் என்னை கொஞ்சம் என் வீட்டில் விட்டுங்க. கொஞ்சமான அடி தான், பக்கத்தில் இருக்கிற ஆஸ்பிட்டல்லுக்கு நானே போய்க்கிறேன்” என்றான்.​

பாண்டி தன்னுடைய காரில் ஏறும் போது அங்கே நேத்ராவும் இருக்கிறாளா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஆனால் அவள் அங்கே இல்லை.​

பாண்டி கூறியவற்றை குறித்துக் கொண்ட போலீஸ்காரர்கள், “ஒரு பெண்ணை கடத்த முயற்சி செய்ததுக்காக உன்னை அரெஸ்ட் செய்யறோம்” என்று அவனை கைது செய்தார்கள்.​

தலையில் ரத்தம் வழிய நடந்து சென்றவள் எங்கே போயிருப்பாள்? என்று யோசித்தவனுக்கு எதுவுமே புலப்படவில்லை. அவசரமாக பவிஷ்காவிற்கு போன் செய்து “பவிக்கா, நயனி வீட்டுக்கு வந்துட்டாளா?” என்றான்​

“இல்ல சித்து, அவ இன்னும் வரல. யாருமே அவளை பார்க்கலைனு சொல்றாங்க. வழக்கமாக நாலு மணிக்கு வாக்கிங் போவாரே அந்த மிலிட்டரிகாரர் கூட நயனியை பார்க்கலைனு சொல்லிட்டாரு” என்று பவிஷ்கா மேலும் ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போதே போனை கட் செய்தான் சித்தார்த்.​

“நயனி எங்கடி போய்ட்ட?” என்று மனதிற்குள் புலம்பிய சித்தார்த்தின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தை தொட்டு கீழே தெறித்து விழுந்தது. முதன்முறையாக கண்களில் ஈரத்தை உணர்ந்து அதை தொட்டு பார்த்தான் சித்தார்த். ஆறடி ஆண்மகனின் கண்களில் வழிந்துக் கொண்டிருந்தது கண்ணீர் அல்ல. அவன் மனைவி நேத்ரநயனி மேல் அவன் கொண்ட காதல்!​

சித்தார்த்தின் புலம்பல் அவன் மனைவிக்கு கேட்டதோ என்னவோ மயக்கத்திலிருந்தவள் மெல்ல கண்விழித்தாள்!​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 1

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 28

போலீஸ் அதிகாரிகள் பாண்டியை அரெஸ்ட் செய்து தங்களுடன் அழைத்துச் சென்றதும் சித்தார்த் மட்டும் காரில் வந்து அமர்ந்தான்​

அவனுக்கு இப்போது எங்கே செல்வது என்றே தெரியவில்லை. என்னவோ வாழ்க்கையே வெறுமையாகி விட்டது போன்ற உணர்வு. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தான் நேத்ரநயனியை அவனுக்கு தெரியும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்து முழுதாக மூன்று நாட்கள் முடிந்திருக்கவில்லை. அதற்குள் மனைவியை தொலைத்துவிட்டு தேடி அலைகிறான்.​

நயனியின் பிரிவு இப்போது அவனுக்கு ஒன்றை தெளிவாக உணர்த்தியிருந்தது. அவன் தன் மனைவியை உயிருக்குயிராக காதலிக்கிறான். அவள் இல்லை என்றால் அவனும் இல்லை. அவளை விட்டு வந்து 12 மணி நேரம் கூட முடிந்திருக்கவில்லை. அவளை காணவில்லை என்ற செய்தி கிடைத்தே இரண்டு மணி நேரம் தான் ஆகிறது. ஆனால் அதற்கே அவன் மனம் சொல்லொண வேதனையை கொடுக்கிறது என்றால், அவள் எந்தளவுக்கு தன் உயிரில் கலந்திருக்கிறாள் என்று அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.​

எலிசாவின் மேல் அவன் கொண்டிருந்தது காதலே இல்லை. ஒருத்தியின் பிரிவு இப்படி அவனை வெகுவாக பாதிக்கிறது என்றால், அது அல்லவா உண்மையான காதல்?​

காரில் அமர்ந்திருந்தவன், எந்த பக்கம் செல்வது என்று புரியாமல் சிலையென சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவன் போன் ஒலிக்கவும் இயந்திர தனத்துடன் அதை இயக்கி தன் காதில் வைத்தான்.​

மறுபக்கத்தில் ஒரு பெண், “ஹலோ, டாக்டர் சித்தார்த்தா?” என்றாள்.​

“யெஸ்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.​

“டாக்டர் உங்க மனைவி நேத்ரநயனியை ஆர்கே மருத்துவமனையில் சேர்த்திருக்கேன். கொஞ்சம் வர்றீங்களா?” என்றாள்.​

நயனியின் பேரைக் கேட்டதும் சித்தார்த்தின் உடலில் உள்ள நாடி நரம்புகளில் எல்லாம் புது ரத்தம் உற்சாகத்தோடு துள்ளிக் கொண்டு ஓட, அடுத்த வார்த்தையில் மீண்டும் உறைந்து போனது போல ஆனது.​

“நயனியை ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்கீங்களா? நீங்க யாரு பேசறது? அவளுக்கு என்னாச்சு? அவ கிட்ட கொஞ்சம் போனை கொடுங்க” என்று பதட்டமாய் பல கேள்விகள் அவனிடமிருந்து வரவும்.​

“சார் பதட்ட படாதிங்க. நேத்ரா நல்லா இருக்காங்க. அவங்களுக்கு தலையில் அடிப்பட்டதால் மயக்கத்தில் இருந்தாங்க. கொஞ்ச முன்னாடி தான் கண் விழிச்சாங்க. உங்க போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு போன் பண்ண சொன்னாங்க. நான் உங்களுக்கு டிரை பண்ணிட்டே இருந்தேன். உங்க போன் பிசியாவே இருந்தது.​

ராத்திரி எல்லாம் தூங்காததாலயும் டிரிப்ஸ் ஏறிட்டு இருக்கறதாலயும் கொஞ்ச முன்னாடி தான் அவங்களையும் மீறி தூங்கிட்டாங்க. நீங்க நேரில் வாங்க பேசிக்கலாம்” என்றாள் அந்த பெண்.​

அந்த நேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையான ஆறுதலான விஷயத்தை சொன்ன அந்த பெண் கடவுளாக தோன்றினாள் அவனுக்கு. “ரொம்ப நன்றிமா. நீங்க யாரா இருந்தாலும் நல்லா இருப்பீங்க. என் மனைவியை கிட்ட இருந்து பார்த்துக்கோங்க. நான் பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்” என்றவன் காரை மின்னல் வேகத்தில் பறக்க விட்டான்.​

ஆர்கே மருத்துவமனை அவனுடைய ஆஸ்பிட்டலுக்கு செல்லும் வழியில் இருக்கும் ஒரு சின்ன கிளினிக். சர்ஜரி செய்யும் வசதிகள் அற்றது, புற நோயாளிகளை மட்டும் கவனிப்பார்கள். அவசரத்திற்கு அட்மிட் செய்ய ஐந்து படுக்கைகளே இருந்தது. ஆனால் பல வருடங்களாக இரவு பகல் என்ற கணக்கின்றி 24 மணிநேரமும் இயங்கி கொண்டிருந்தது.​

சொந்த மருத்துவமனை இருக்கும் போது ஏதோ ஒரு சின்ன கிளினிக்கில் யாருமற்றவள் போல தன் மனைவி யாராலோ அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறாளே என்று கவலையுடன் யோசித்தபடி மருத்துவமனைக்குள் நுழைந்தான்.​

அங்கிருந்த இரண்டு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சித்தார்த் அபிமன்யுவைக் கண்டதும் ஆச்சரியத்துடன் எழுந்து நின்றார்கள். “டாக்டர் நீங்க என்ன இங்கே?” என்று அவனை சுற்றிக் கொண்டவர்களை பார்த்து,​

“என் மனைவி இங்கே இருக்கிறதா போன் வந்தது. எங்கே அவங்க?” என்றான்.​

ஒரு நர்ஸ் அவன் முன்னால் வந்து, “டாக்டர் நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன், வாங்க நேத்ராகிட்ட நான் அழைச்சிட்டு போறேன்” என்றாள்.​

மற்ற மருத்துவர்கள் ஆச்சரியமாக அவன் பின்னால் வரவும், “ப்ளீஸ், ஐ நீட் ஸ்பேஸ் (please I need space) எனவும் மீண்டும் அவர்கள் தங்களது இருக்கைக்கு சென்றனர்.​

அவனை அழைத்துச் சென்ற நர்ஸ்க்கும் அவன் சொன்னது புரிந்திருக்க, ஒரு அறையை காட்டி “உள்ளே தான் இருக்காங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்திடுவாங்க. வேணும்னா நீங்க எழுப்பலாம்” என்றாள்.​

“வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் உள்ளே சென்றான். அங்கிருந்த ஐந்து படுக்கைகளில் நான்கு காலியாக இருந்தது. ஒன்றில் மட்டும் நயனி சோர்ந்து போய் உறங்கி கொண்டிருந்தாள்.​

வேகமாக மனைவியின் அருகில் சென்றவன் அவசரமாக அவளின் தலை முதல் கால் வரை ஒரு மருத்துவனாகவும் கணவனாகவும் ஆராய்ந்தான். நெற்றியில் நான்கு தையல்கள் போடப்பட்டிருக்கிறது. அதைத்தவிர அவள் உடம்பில் எந்த காயமும் இல்லை. அங்கே இருந்த ரிப்போர்ட்களை ஆராய்ந்தான்.​

அதிலும் அதை தான் குறிப்பிட்டு இருந்தார்கள். கடந்த சில நாட்களில் ஏற்பட்ட உடல் சோர்வு, மன அழுத்தம், உறக்கமின்மை, பதட்டம் அத்தோடு தலையில் பட்ட காயம் இவற்றால் மயங்கி இருக்கிறாள். சின்ன வெட்டுகாயம் தான் ஆனாலும் தலையில் நான்கு தையல் போட்டு இருந்தார்கள். உடலுக்கு சற்று தெம்பை கொடுக்க டிரிப்ஸ் ஏற்றி இருந்தார்கள். அதை தவிர வேறெதுவும் பிரச்சனை இல்லை என்று இருந்தது.​

சத்தமில்லாமல் அவள் அருகே குனிந்து பட்டும் படாமல் அவள் நெற்றியில் தன் இதழை பதித்தான். “கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டியேடி” என்று முணங்கி கொண்டே அவள் நெற்றியில் மென்மையாக முட்டினான்.​

கணவனின் மூச்சு காற்று நயனியின் முகத்தில் தென்றலாய் வீசவும், அவன் குரல் தன் காதில் தேனாய் பாயவும், ஸ்விட்ச் போட்டாற் போல கண்களை பட்டென்று திறந்தாள் நேத்ரநயனி.​

தன் முகத்தருகே குனிந்து ஆழ்ந்து தன்னை பார்த்துக் கொண்டிருந்த கணவனை பார்த்ததும் கண்களில் கண்ணீர் அருவி போல கொட்ட தொடங்கியது. தன் இரு கைகளால் அவன் முகத்தை பற்றி அவன் கன்னங்களை வருடியபடி, “உங்களுக்கு எதுவும் ஆகலையே?” என்றாள்​

“எனக்கென்னடி ஆக போகுது? நீ தான் வந்து ஆஸ்பிட்டல்ல படுத்துட்டு இருக்கே. உன்னை காணலைனு பவிக்கா சொன்னதும் கொஞ்ச நேரத்துல எப்படி பயந்துட்டேன் தெரியுமா? உன்னை யாரு ராத்திரி நேரத்தில தனியா வீட்டை விட்டு வெளியே வரச் சொன்னது? எந்த பிரச்சனைனாலும் நான் பார்த்துக்கிறேன்னு தான் வரும்போது சொல்லிட்டு வந்தேனே, என் மேலே உனக்கு நம்பிக்கையில்லை அப்படித்தானே?” என்றான் அழுத்தமான குரலில்​

“இல்லைங்க. இந்த பிரச்சனை வேற தானே? உங்களுக்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லாத போது நீங்க எப்படி அதுக்கு பொறுப்பாக முடியும்? அந்த எலிசாவை வேலைக்கு வைக்க சொல்லி நான் தானே உங்களை வற்புறுத்தினேன். அதுமட்டுமில்லாமல் நீங்க மருத்துவமனைக்கு மூணு நாளாக போகாததற்கு காரணம் நான் தானே. என்னால தானே நீங்க அங்கே போகலை. அதனால தான் போலீஸ் கிட்ட வந்து உண்மையை சொல்லி உங்களை காப்பாத்தலாம்னு ஓடி வந்தேன்” என்றவளை பார்த்து சிரிப்பதா திட்டுவதா என்றே அவனுக்கு தெரியவில்லை.​

“என்னனு வந்து போலீஸ் கிட்ட தகவல் கொடுத்திருப்பே? சம்பவம் நடந்த அன்னைக்கு என் புருஷன் என்னோட படுக்கையில் தான் இருந்தாரு. அவரும் நானும் ஒண்ணா ஒரே அறையில் மூணு நாளா இருந்தோம்னு சொல்வியா?” என்றான் அவளை முறைத்து பார்த்து.​

கணவன் கோபமாக கேட்டாலும் அவன் சொன்ன வார்த்தைகளில் கடந்த மூன்று நாட்களின் நினைவு வர, முகம் சிவந்தாள் நேத்ரா.​

மனைவியின் கன்னசிவப்பில் சித்தார்த்தின் கோப சிவப்பு மாயமாகி போனது.​

சிரித்தபடி அவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்டினான்.​

“என்னால தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை? என்ன தாங்க நடந்தது? எப்படி அதில் இருந்து வெளியே வந்தீங்க?” என்று கேட்டாள் நேத்ரா​

சித்தார்த் நடந்ததை எல்லாம் அவளிடம் விளக்கமாக கூறினான்.​

“ச்சே என்னோட முட்டாள் தனத்தால எத்தனை உயிர்கள் போயிருக்குமோ? நல்ல வேளை நீங்க காப்பாத்தீட்டீங்க. ஒரு உயிர் போயிருந்தாலும் அது என்னால தானேங்கிற குற்ற உணர்வுல புழுங்கி செத்திருப்பேன். அந்த எலிசாவால இப்படி பிரச்சனை வரும்னு நான் நினைக்கவே இல்லைங்க.​

மிஞ்சி போனால் என்னை ஒதுக்கி உங்களை அவ பக்கம் திருப்ப முயற்சி செய்வாள்னு தான் நான் நினைச்சேன். உங்க மேல இருக்கிற முழுநம்பிக்கையில் அவளோட முயற்சி தோல்வியில தான் முடியும்னு நான் நினைச்சேன். அதனால தான் தைரியமா அவளை வேலைக்கு வைக்க சொன்னேன். ஆனால் அவள் தடை செய்யப்பட்ட மருந்துகளை இப்படி நம்ம ஆஸ்பிட்டல்ல இறக்குமதி செய்வாள்னு நான் நினைக்கவே இல்லை.​

அய்யோ, நினைக்கவே பயங்கரமா இருக்கே. நீங்க மட்டும் புத்திசாலிதனமா முன்னெச்சரிக்கை நடவடிக்கையோட செயல்படலைனா என்னவெல்லாம் ஆகி இருக்குமோ?” என்று அவள் சொல்லும் போதே உடல் நடுங்கியது.​

அவளை மென்மையாக அணைத்தவாறு, “நயனி, நீ சொன்னதால தான் எலிசாவை நம்ம ஆஸ்பிட்டல்ல வேலைக்கு சேர்த்தேன். அதனால தான் அவளுடைய திட்டத்தை கண்டுபிடிச்சு உயிர்சேதம் இல்லாமல் மொத்த கும்பலையும் அரெஸ்ட் பண்ண முடிஞ்சது.​

நீ மட்டும் சொல்லலைனா, நான் அவளை அன்னைக்கே வெளியே அனுப்பி இருப்பேன். ஆனால் அவ வேறே மருத்துவமனையில் சேர்ந்திருப்பாள். அங்கே அவளை பற்றி தெரியாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்தி இருப்பாங்க. பக்க விளைவுகள் தெரியறதுக்குள்ள பல இடங்களில் மருந்துகள் விற்பனையாகி இருக்கும்.​

எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் வராமல் போயிருக்கலாம். ஆனால் நான் சொன்ன மாதிரி அவள் வேற மருத்துமனையில் சேர்ந்திருந்தால் அதனுடைய பாதிப்புகள் அதைவிட அதிகமாக இருந்து இருக்கும்.​

என்னோட அப்பா சொல்வாரு, எதாவது ஒண்ணு நம்மையும் மீறி நடக்கும் போது, அதுக்கு ஏதோ காரண காரியம் இருக்கும். கடவுள் ஒன்றை நமக்கு கொடுக்க நினைப்பாரு. இல்லைனா நம்மாள ஒரு காரியத்தை நடத்த வைப்பாருனு சொல்வாரு. அது தான் இப்போ நடந்து இருக்கு. எலிசாவை நமக்கு பிடிக்கலைனாலும் நம்ம ஆஸ்பிட்டல்ல சேர்த்துக்கிட்டோம். ஆனால் சரியான நேரத்தில் அவள் திட்டத்தை கண்டுபிடிச்சு சேதாரம் இல்லாமல் எல்லாரையும் பாதுகாத்திட்டோம்.​

என்ன? இந்த ஜனனி மட்டும் இப்படி செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்றான் சித்தார்த்.​

“சரி விடுங்க, ஏதோ கமிஷனுக்கு ஆசைப்பட்டு அப்படி செஞ்சிருக்கா. எல்லாரும் செய்யறது தானே. அவளுக்கு மட்டும் தடை செய்யப்பட்ட மருந்துகள்னு தெரிஞ்சு இருந்தால் கண்டிப்பா செய்திருக்க மாட்டா. எனக்கு ஜனனியை பத்தி நல்லா தெரியும்” என்றாள் நேத்ரநயனி.​

“எல்லாரை பத்தியும் உனக்கு நல்லா தெரியும்டி. ஆனால் என்னை பத்தி மட்டும் உனக்கு தெரியவே தெரியாது. எந்த பிரச்சனையா இருந்தாலும் நம்மாளு பாத்துப்பான்னு இல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி வந்து அந்த பாண்டிக்கிட்ட அகப்பட்டு இருக்க. அவன் எதாவது செஞ்சிருந்தால் என்ன ஆகி இருக்கும்னு நினைச்சாலே பதறது.​

காலையில் பவிக்கா நீ வீட்டில் இல்லனு சொன்னதும் என் உயிரே என்னை விட்டு போயிட்ட மாதிரி இருந்துச்சு தெரியுமா? இனி ஒரு நாளும் இப்படி பண்ணாதே நயனி. என்னால உன்னோட பிரிவை ஏத்துக்கவே முடியல” என்றவன் கண்கள் லேசாக கலங்கி விட்டிருந்தது.​

“அச்சோ என்னங்க நீங்க? எனக்கென்ன ஆக போகுது? முதல்ல தான் பயந்துட்டு இருந்தேன். அந்த பாண்டி எல்லாம் ஒரு ஆளே இல்லை. குடிச்சு குடிச்சு அவன் உடம்பில் பலமே இல்லை. ஆளு தான் குண்டா இருக்கான். ஒரு தள்ளு தள்ளனதுக்கே உருண்டு விழுந்துட்டான். தரையில் கல் இருந்ததால் குறி பார்த்து அடிச்சுட்டான். இல்லைனா நான் நேராக நம்ம ஆஸ்பிட்டலுக்கு வந்து இருப்பேன்” என்றாள்​

அப்போதும் சமாதானம் ஆகாமல் சித்தார்த் நயனியின் கைகளை பிடித்துக் கொண்டு தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

கணவனின் இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தவள், மெல்ல எழுந்து உட்கார்ந்து அவனை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டாள்.​

“என்னோட அவசர குடுக்கை தனத்தால உங்களுக்கு பிரச்சனை மேல பிரச்சனை வருது. என்னை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னது போல நான் வீட்டில் இருந்து உங்க கூட எப்படியாவது போன்ல பேச முயற்சி செய்திருக்கணும். எல்லாம் என்னால தான், உங்களுக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டத்துல என் மூளை சுத்தமா வேலை செய்யலைங்க சாரிங்க” என்றாள் குற்ற உணர்ச்சியில், கணவனின் முதுகை தடவியபடி.​

நயனியின் விழிகளில் இருந்து கண்ணீர் சித்தார்த்தின் முதுகை நனைத்தது. இவ்வளவு நேரம் அவள் மேல் கோபம் கொண்டிருந்தவன், தன் மனைவியின் செயலுக்கு நியாயம் பேச ஆரம்பித்துவிட்டான்.​

“பரவாயில்லை நயனி. அதுவும் நல்லதுக்கு தான்” என்றான் அவள் மடியில் முகத்தை புதைத்தபடி​

“என்ன சொல்றீங்க?”​

“நீ இல்லைனு தெரிஞ்ச இந்த மூணு மணி நேரத்துல தான் நான் உன்மேல எவ்வளவு காதல் வச்சிருக்கேன்னு எனக்கே தெரிஞ்சது. உன் மேல காதல் அதுக்கு முன்னாடியும் இருந்தது தான், காதல் மோகம், அன்பு எல்லாமே இருந்தது. ஆனால் நீ இல்லைனு சொன்னதும் உயிர்வலியை கொடுக்கிற உயிருக்குயிரான காதல் உன்மேல இருக்குனு என்னால இன்னைக்கு தான் உணர முடிஞ்சது.​

எனக்கு ஒண்ணுனு தெரிஞ்சதும் உன்னை பத்தி நீ கொஞ்சமும் யோசிக்காமல் அந்த நடு ராத்திரியில் கிளம்பி வந்திருக்க. போலீசில் எலிசாவை வேலைக்கு வச்சது நீ தான் சொன்னதும் போலீஸ் உன் மேல ஆக்சன் எடுக்க வாய்ப்பிருக்குனு தெரிஞ்சு என்னை காப்பாத்தி அந்த தண்டணையை நீ ஏத்துக்கணும்னு வந்திருக்க? இதுல உன்னோட அவசர குடுக்கை தனம் எனக்கு தெரியல. நீ என் மேல வச்சிருக்க காதலும் பாசமும் தான் என் கண்ணுக்கு தெரியுது.​

இந்த எலிசா நம்ம வாழ்க்கையில் இன்னொரு முறை வந்ததும் நல்லதுக்கு தான். ஒரு வேளை நமக்கு எதிர்காலத்தில் எலிசாவை சந்திக்கிற வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட சமயத்தில் என்னோட மனசில் எங்காவது ஒரு மூலையில் எலிசாவிற்கு துரோகம் பண்ணிட்டமோனு ஒரு குற்ற உணர்ச்சியோ, முதல் காதல் என்று நினைவுகளோ நூத்துல ஒரு பங்கு வர வாய்ப்பிருக்கலாம். அப்படி வந்தால் நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்டும்.​

எலிசா மேல நான் வச்சிருந்தது காதலே இல்லைனு பட்டவர்த்தனமா தெரிஞ்சுடுச்சு. அவள் எவ்வளவு மோசமானவள்னு கண்கூடா பார்த்திட்டேன். இனி என் மனசில் எந்த குற்ற உணர்ச்சியும் வர வாய்ப்பே இல்ல. அதனால தான் நடந்து எல்லாம் நல்லதுக்கேனு தான் தோணுது.​

நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளும் கவலைகளும் அந்த நேரத்திற்கு மன வேதனையை கொடுத்தாலும், அதில் இருந்து நாம மீண்டு வந்த பின்னால் தான் நம்ம மனசு திடம் ஆகுது. கொஞ்ச நாள் கழிச்சு அந்த நினைவுகளை திரும்பி பார்க்கும் போது எத்தனை தடைகளை உடைச்சுகிட்டு மேலே வந்திருக்கோம்னு நம்மளை நாமே பெருமையா உணர முடியும்.​

தங்கம் கூட அடி வாங்கி வாங்கி தானே அழகான அணிகலனா மாறுது. அதுபோல தான் மனுஷனுக்கு வர பிரச்சனைகளும். மனதைரியத்தோடு போராடி ஜெயிச்சிட்டோம்னா அந்த விஷயத்தில் நாம சிறந்த நிபுணனாக மாறிடுவோம்.​

மூன்று நாட்களாக இரவும் பகலுமா நாம ஒண்ணா இருந்தப்போ உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டோம். ஆனால் நேற்றைய இரவில் ஏற்பட்ட சில மணி நேரப் பிரிவு தான் நம் காதலின் ஆழத்தை நம்ம இரண்டு பேருக்கும் உணர்த்தி இருக்கு. இப்போ சொல்லு, நடந்து எல்லாம் நன்மைக்கு தானே?” என்றான் சித்தார்த் உணர்ச்சிவசப்பட்ட குரலில்.​

“நடந்த பிரச்சனைக்கெல்லாம் இப்படி ஒரு விளக்கம் கொடுத்தால் நான் என்ன சொல்றது? பேசாமல் நீங்க எங்க காலேஜ்க்கு புரபசரா வந்திடுங்க. கல்லூரி பாடத்தோட வாழ்க்கை பாடமும் நிறைய பேருக்கு தேவையா இருக்கு. சின்ன சின்ன பிரச்சனைக்கே மனசு உடைஞ்சு தற்கொலை முடிவெடுக்கிறாங்க. இல்லைனா டாக்டருங்க எல்லாம் யுடியூப்பில் வீடியோ போடறாங்களே, அது போல முயற்சி செய்யலாமா?” என்றவளின் இடையில் கிள்ளினான்.​

“ஆ” என்று அலறினாள் நயனி​

“ஏன்டி நான் பீல் பண்ணி ஒரு விஷயத்தை சொல்லிட்டு இருந்தால், இப்படித்தான் கவுண்டர் கொடுப்பியா? உன்னை…” என்று மீண்டும் கிள்ளினான்.​

“நீங்க ரொம்ப எமோஷனலா பேசிட்டு இருந்தீங்க. உங்களை நார்மலாக்க தாங்க அப்படி சொன்னேன்” என்று சிணுங்கியவளின் இடையில் மேலும் அழுத்தத்தை கூட்ட, அவள் “ஆ” என்று அலறிவிட்டாள்.​

சத்தம் கேட்டு உள்ளே வந்த நர்ஸ், “என்னாச்சு” என்றாள் பதறியபடி​

அவர்கள் இருவரும் இருந்த கோலத்தை பார்த்து உடனே திரும்பிக் கொண்டாள்.​

நயனி தன் மடியில் படுத்திருந்த கணவனை அவசரமாக எழுப்பியவள். “அபி, இது என் பிரண்ட் சுதா. இவ தான் என்னை ஆஸ்பிட்டலில் சேர்த்தது” என்று மனைவி சொன்னதும்​

அச்சோ என்று நெற்றியில் தேய்த்துக் கொண்டவன் “உன்னை பார்த்ததும் நீ எப்படி இந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தேனு கேட்க மறந்துட்டேன் பாரு” என்றவன் இப்போது சுதாவிடம் திரும்பி “சாரி சிஸ்டர். நீங்க எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கீங்கனு நான் சொன்னால் கூட உங்களுக்கு புரியாது. என் உயிரையே காப்பாற்றி இருக்கீங்க. ஆனால் உங்களுக்கு நன்றி சொல்லாமல் நான் என் மனைவியை பார்த்ததும் மற்றதை எல்லாம் மறந்துட்டேன். சாரி” என்றான் மீண்டும்.​

“அய்யோ சார், நான் உங்களை விட சின்ன பொண்ணு, எனக்கெதுக்கு இத்தனை மரியாதை, சாரி எல்லாம். நேத்ரா என்னோட தோழி. அவளுக்கு உதவி செய்யறது என்னோட கடமை. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு சின்ன அடி தான். மயக்கம் வர வாய்ப்பில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சரியா தூங்கியிருக்க மாட்டா போல இருக்கு. அதனால தான் தலையில் அடி பட்டதும் உடனே மயங்கிட்டானு நினைக்கிறேன்” என்று சுதா சொல்லிக் கொண்டிருக்க​

சித்தார்த் திரும்பி மனைவியை அழுத்தமாக பார்த்தான், கடந்த சில நாட்களாக அவள் சரியாக தூங்காததற்கு அவன் தானே காரணம்? வெட்கத்துடன் தலையை குனிந்துக் கொண்டாள்.​

மனைவியின் வெட்கத்தை பார்த்ததும் தடம் மாறும் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்தபடி சுதாவின் பேச்சை கூர்ந்து கவனித்தான்,​

“இன்னைக்கு அதிகாலையில் இரண்டாவது ஷிப்ட் முடிச்சுட்டு ஹாஸ்டலுக்கு போகலாம்னு போயிட்டு இருந்தேன். நேத்ரா தள்ளாடிக்கிட்டே நடந்து வந்தா. அவளை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. என்னாச்சுனு கேக்கும் போதே மயங்கிட்டாள். உடனே ஒரு ஆட்டோவை வரவழைச்சு நான் வேலை செய்யும் இந்த ஹாஸ்பிட்டலுக்கே அவளை கூட்டிட்டு வந்து சேர்த்தேன்.​

அவகிட்ட போனும் இல்லை. உங்களுக்கு எப்படி தகவல் கொடுக்கிறதுனு தெரியலை. உங்க ஆஸ்பிட்டலுக்கு வந்து பார்த்தால் செக்யூரிட்டிங்க யாரையும் உள்ளே விட முடியாதுனு சொன்னாங்க. ஏதோ பிரச்சனை போல இருக்கு. எதுவா இருந்தாலும் நேத்ரா கண்முழிச்சதும் உங்களோட பேச வைக்கலாம்னு நினைச்சு வந்துட்டேன். அரை மயக்கத்தில் கூட அபி அபினு முனகிட்டே இருந்தாள். எப்படியோ போன் நம்பரை அவகிட்ட கேட்டு உங்களுக்கும் தகவல் சொல்லிட்டேன்” என்றாள் சுதா.​

“ரொம்ப நன்றி சுதா. நீங்களும் நயனியும் எப்படி தோழிகள் ஆனீங்க? நலமுடன் மருத்துவமனையில் ஒரு ஒன்றரை மாசம் தான் நயனி வேலை செய்தாள். நீங்க இங்கே வேலை செய்யறீங்க? எப்படி பழக்கம்?” என்று கேட்டான் ஆர்வமாக​

இப்போது நயனி பேசினாள், “அபி நான் ஹாஸ்டல்ல கொஞ்ச நாள் தங்கி இருந்தேன் இல்ல? அங்கே என்னோட ரூம்மெட் தான் சுதா. அவள் தான் எனக்கு ரொம்ப உதவியா இருந்தாள்” என்றாள்​

“அப்படியா?” என்றான் சித்தார்த் ஆச்சரியமாக​

“ஆமாம் அபி. அந்த ஜமுனா எனக்கு வேலையே சொல்லி தரலை. நீங்களும் ஒரு மாசம் தான் டைம் கொடுத்திருந்தீங்க. அந்த கொஞ்ச நாள்ல சுதா தான் எல்லாம் சொல்லி கொடுத்தாள். தன்னோட டியூட்டி முடிச்சுட்டு மாலை 7மணியிலிருந்து 9 மணி வரை என்னை இங்கே வரவழைச்சு எனக்கு வேலை சொல்லி கொடுத்தாள். இதனால் அவள் இன்னும் அதிகமா இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. எல்லாம் எனக்காக தான் செய்தாள். பாண்டி பிரச்சனை பண்றான்னு தெரிஞ்சதும், இவ தான் ஒன்னு உன் கணவர் வீட்டுக்கு போ இல்லைனா மருத்துவமனையில் இருக்கிற விடுதிக்கு போ என்று சொல்லி அனுப்பி வச்சாள். புதுசா சென்னைக்கு வந்த என்னால தனியா சமாளிக்க முடிஞ்சதுனா, அது சுதாவால தான். இப்படி ஒரு தோழி கிடைக்காமல் போயிருந்தால் நான் என்னவாகி இருப்பேனோ?” என்றாள் நேத்ரநயனி கண்கலங்க.​

“ஷ் நேத்ரா பிரண்ட்ஸ்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வது எல்லாம் சகஜம் தானே. இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப் பண்ணி சொல்லிட்டு இருக்கே. அதெல்லாம் ஒண்ணுமில்ல டாக்டர். நேத்ரா மிகைப்படுத்தி சொல்றா” என்றாள் சுதா கூச்சத்துடன்.​

அதிலேயே சுதாவின் நல்ல குணம் சித்தார்த்துக்கு புரிந்தது. எப்படியோ தன் மனைவிக்கு ஒரு நெருங்கிய தோழி இருப்பதில் அவனுக்கும் சந்தோஷம் தான். இருவரையும் பார்த்து புன்னகையுடன், “என்ன சுதா என் பொண்டாட்டிக்கிட்ட என்னை விட அதிக ஸ்கோர் பண்ணிடுவீங்க போலிருக்கே” என்றான்.​

“அப்படி எல்லாம் இல்லை டாக்டர்” என்றவள், “எனக்கொரு சந்தேகம் கேக்கலாமா?” என்றாள்​

“தாராளமா”​

“உங்க மனைவி உங்களோட மருத்துவமனையில் வேலையை கத்துக்க ஒரு மாதம் தான் டைம் கொடுத்திருக்கீங்க. ஒரு வேளை நான் நேத்ராவோட தோழியா இல்லாமல் போயிருந்தால் அவளால் கொடுத்த நேரத்திற்குள் வேலையை கத்துக்கிட்டு இருக்க முடியாது. அப்போ நீங்க அவளை வெளியே அனுப்பி இருப்பீங்களா?” என்றாள்.​

“நிச்சயமா வெளியே அனுப்பி இருப்பேன்”​

இருவரும் அதிர்ச்சியோடு சித்தார்த்தை பார்த்தார்கள்​

“ஹாஸ்பிட்டல்ல இருந்து வெளியே அனுப்பிட்டு, தரதரனு வீட்டுக்கு அழைச்சிட்டு போறது தான் அப்போதைக்கு பிளான். அடிப்படை வேலை தெரியாதவங்களை நான் மருத்துமனையில் நிறைய நாட்களுக்கு வேலைக்கு வச்சுக்க முடியாது. ஆனால் என் மனைவிக்காக எப்போதும் என் வீட்டு கதவு திறந்து தான் இருந்தது. ஆனால் மேடம் தான் என்னென்வோ கற்பனை பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வராமல் என்னை அலைய விட்டாங்க” என்றான் மனைவியை முறைத்தபடி​

நேத்ரநயனி தவறு செய்துவிட்டு மாட்டிக் கொண்ட சிறுமி போல தலையை குனிந்துக் கொண்டு, “சாரி இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்” என்றாள்.​

அதற்குள் சித்தார்த்துக்கு பவிஷ்கா மற்றும் விக்ரமிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துக் கொண்டே இருக்க, அவர்களின் அழைப்புகளை ஏற்று நயனி நலமாக இருப்பதாகவும் அரைமணி நேரத்தில் அவளை வீட்டிற்கு அழைத்து வருவதாகவும் சொல்லி போனை வைத்தான்.​

“சரி சுதா, ரொம்ப நன்றி. நாங்க கிளம்பறோம். நீங்களும் நைட் டியூட்டி பார்த்துட்டு இன்னும் இங்கேயே இருக்கீங்க. நீங்க இப்போ போய் ரெஸ்ட் எடுங்க. ஆனால் நாளைக்கு கட்டாயம் எங்களோட ஹாஸ்பிட்டலுக்கு வரணும்” என்றான்.​

“எதுக்கு டாக்டர்? என்றாள் சுதா எதுவும் புரியாமல்.​

“நாளைக்கு வாங்க சொல்றேன்” என்ற சித்தார்த்தை சுதாவும் நயனியும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0
Status
Not open for further replies.
Top