ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 24​

பவிஷ்கா தந்தையையும் மகளையும் அழைத்துக் கொண்டு காரில் மகாபலிபுரத்திற்கு பயணமானாள். அவள் செல்லும் போதே சமையல் மற்றும் வீட்டு வேலை ஆட்களிடம் அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ள சொல்லி அனுப்பியும் விட்டாள்.​

அவர்கள் கிளம்பும் போது ரம்யா தான், “அத்தை நீங்களும் என்கூட வாங்க, நாம ஒண்ணா பீச்சுல விளையாடலாம்” என்று அடம்பிடித்தாள். நேத்ரநயனி கணவனை கெஞ்சுதலாக பார்த்து, “அபி, நாமும் போகலாமா? நானும் இதுவரைக்கும் மகாபலிபுரம் கடற்கரைக்கு போனதே இல்லை” என்றாள் கெஞ்சுதலாக.​

“நயனி, உனக்கு கிளாஸ் இருக்குனு சொன்னேன் இல்ல? நாம இன்னொரு நாளைக்கு போகலாம்” என்றான் ஆழ்ந்த குரலில்.​

‘டாக்டர் புருஷனை வச்சிகிட்டு, மருத்துவம் படிச்சால் இப்படி தான் போல’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு அவர்களுக்கு கைகளை ஆட்டி வழி அனுப்பி வைத்தாள் நயனி.​

அவர்கள் சென்றதும், “நான் குளிச்சுட்டு வர்றேன், நீ தயாரா இரு” என்று சொல்லி குளியலறை நோக்கி சென்றான்.​

“காலையில் தானே குளிச்சீங்க? இப்போ என்ன மறுபடியும் குளிக்கறேன்னு சொல்றீங்க? நான் தயாரா தானே இருக்கேன்?” என்று கேட்டவளை அழுத்தமாக பார்த்துவிட்டு குளியலறைக்குள் சென்று விட்டான்.​

அவன் சென்றதும் தன் புத்தகங்களை எல்லாம் எடுத்து அவன் கட்டிலின் மீது கடைப்பரப்பினாள். தன் சந்தேகங்களை எல்லாம் அவனிடம் கேட்க குறிப்பெடுக்க தொடங்கி விட்டாள். குளித்துவிட்டு வந்தவன், இடையில் டவலுடன் கைகளை கட்டிக் கொண்டு அவள் அமர்ந்திருந்த கோலத்தை ரசித்தபடி அப்படியே நின்றிருந்தான்.​

ஏதோ நிழலாடுவதை போல தோன்றவும் நிமிர்ந்து பார்த்தவள், கணவன் நின்றிருந்த கோலத்தை பார்த்து மூச்சடைத்து போனாள். வெற்று மார்புடன் இடையில் டர்க்கி டவலுடன் நின்றிருந்தவன் அவளை விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.​

“எஎன்னங்க, போய் டிரஸ் போட்டுட்டு வாங்க” என்று திணறினாள்.​

“எதுக்கு இப்போ இந்த புக்ஸை எல்லாம் இங்கே வச்சிருக்க?” என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி.​

“நீங்க தானே கிளாஸ் எடுக்க போறதா சொன்னீங்க?” என்றாள் கேள்வியாக அவனை பார்த்து.​

“ஆனா நான் பிராக்டிகல் கிளாஸ் தானே எடுக்கிறதா சொன்னேன்?” என்றான் மர்ம புன்னகையுடன்.​

அந்த புன்னகையின் அர்த்தம் புரியாமல், “இங்கே எந்த எக்யூப்மென்ட்ம் இல்லாமல் எப்படி பிராக்டிகல் கிளாஸ் எடுப்பீங்க?” என்றாள் யோசனையுடன் அவனை பார்த்து.​

“அந்த கவலை உனக்கு எதுக்கு? முதல்ல இந்த புக்ஸை எல்லாம் எடுத்து வச்சிட்டு வா” என்றான்.​

நயனியும் தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு அலமாரியில் அடுக்க தொடங்கினாள். அவளறியாமல் அவள் பின்னே சென்றவன் தன்னவளின் முழங்கைகளை புறங்கையால் வருடினான். குளித்துவிட்டு வந்ததால் சில்லென்று இருந்த அவன் கை விரல்கள் அவளின் முழங்கைகளை வருடவும், மயிற்கால்கள் கூச்சறிந்தன, “எஎன்ன?” என்றாள் காற்றாகி போன குரலில்.​

“நயனி, மனித உடல்ல இருக்கிறதுல மிகப்பெரிய ஆர்கன் எது தெரியுமா? இந்த ஸ்கின் தான், அதாவது மனிதனுடைய தோல். இதை நான் இப்படி வருடும் போது உனக்கேன் உடல் சிலிர்க்குது தெரியுமா?” என்றான் அவள் காதருகே குனிந்து மெல்லிய குரலில். அவளுக்கு மூச்சடைத்தது, தெரிந்தாலும் அதை சொல்லும் மனநிலையில் அவள் இல்லை என்பதால் அமைதி காத்தாள்.​

சித்தார்த் மேலும் நயனியின் தோள்களை அழுத்தமாக பிடித்து, “நான் இப்படி பண்ணும் போது ஏற்படும் அழுத்தம், மின்சமிக்கைகளாக மாறி நரம்பு வழியாக உன் மூளையை போய் அடையும். இந்த தொடுகை உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்பதை உன் மூளை முடிவு செய்யும், அது உனக்கு பிடிச்சிருக்கும் பட்சத்தில் மூளை Oxytocin என்ற காதல் ஹார்மோனை வெளிவிடும். அந்த ஹார்மோன் தான் உன்னை இப்படி என்கிட்ட மயங்கி நிக்க வைக்குது, இதோ உன் மேனி எப்படி சிலிர்த்து இருக்குது பாரு, இதுக்கெல்லாம் காரணம் அந்த ஹார்மோன் தான்” என்றபடி அவளை தன்னை நோக்கி திருப்பினான்.​

மேலும் அவளை தன்னோடு இறுக்கி அணைத்தபடி தன் கைகளால் அவள் உடலை ஆரத்தழுவினான். நமக்கிடையில் இந்த ஹார்மோன் தான் எமோஷனல் பாண்டிங்கை கொடுக்குது. இப்போ நான் எங்கே தொட்டாலும் உன்னால மறுக்க முடியாது என்று அவன் குரல் ஆழ்ந்து ஒலித்துக் கொண்டிருக்க, பேச்சற்ற நிலையில் உணர்வுகளின் பிடியில் இமை மூடி அவன் சொல்வதை உள்வாங்கிக் கொண்டிருந்தவளின் கண்ணாடியை கழற்றிவிட்டு, தன் கைவிரல்களால் அவள் நெற்றியிலிருந்து கண்கள், மூக்கு, கன்னம் என்று மென்மையாக மீட்ட தொடங்கி விட்டான். இப்போது அவன் விரல்கள் நயனியின் இதழ்களை வருடியது.​

அவன் விரல் பட்ட இடமெல்லாம் நாணத்தால் சிவந்து உடல் உஷ்ணமேறிக் கொண்டிருந்தது. கணவனின் விரல் ஸ்பரிசத்தையும் அவன் குரலையும் தவிர அவளுக்கு எந்த நினைவுகளும் இல்லை. ஏகாந்த உலகில் மெளனத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளின் பெண்மை விழித்துக் கொண்டது. ஆம் அவள் கணவனின் விரல்கள் இப்போது கழுத்தை நோக்கி பயணித்து மெல்ல மெல்ல கீழிறங்கி கொண்டிருந்தது.​

அடுத்து அவனை கைகள் எங்கே பயணிக்கும் என்பதை நொடியில் உணர்ந்து சட்டென கண்திறந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள். ரசனையோடு தன் மனைவியின் மேனியை மீட்டிக் கொண்டிருந்தவனுக்கு தடங்கல் ஏற்படவும், “என்னடி?” என்றான் பொய் கோபத்துடன்.​

“பிராக்டிகல் கிளாஸ் எடுக்க போறதா சொன்னீங்க, மறந்துட்டிங்களா?” என்றாள் திக்கி திணறிய குரலில்.​

“ப்ச், இது தான்டி அந்த பிராக்டிகல் கிளாஸ்” என்றவன் அவளை தன்னோடு இறுக அணைத்தான், அவன் கைகள் மேலும் அவள் மேனியில் அத்துமீறி பயணிக்கவும், ஓடிச்சென்று அங்கிருந்த சுவற்றில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு நின்றாள்.​

விடாக்கொண்டனாக பின்னாலிருந்து அவள் மேல் மொத்தமாக சாய்ந்து நின்றான் சித்தார்த். அவள் காது மடலில் தன் முதல் முத்திரையை வைத்தான். பின்பக்கமாக நின்றபடி அவன் கைகளை அவள் மேனியெங்கும் படரவிட்டவன் தொடர் முத்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கவும், இன்ப வேதனை தாங்க முடியாமல் திரும்பி அவன் வெற்று மார்பில் தஞ்சம் புகுந்தாள்.​

பூப்பந்தாய் தன்மேல் மோதியவளால் சித்தார்த்தின் சித்தம் கலங்கிவிட ஆவேசமாய் அவளை மேலும் தனக்குள் இறுக்கி கொண்டு “நயனி” என்றழைத்தான். அவள் தன் முகத்தை அவன் நெஞ்சிலிருந்து எடுக்காமல் உள்ளே நுழைந்துக் கொள்பவள் போல அவனுக்குள் மேலும் புதைந்துக் கொண்டாள்.​

“இங்கே பாருடி” என்று அவள் தாடையை பற்றி அவனை பார்க்க செய்தான். முகம் அவனை நோக்கி நிமிர்ந்து இருந்ததே தவிர, அவள் சிப்பி இமைகள் திறக்க வில்லை. “கண்ணை திறந்து பாரு நயனி” என்றான் கிறக்கமாக.​

மாட்டேன் என்று தலையை மட்டும் அசைத்தாள்.​

“ஏன்?”​

“எனக்கு உங்களை பார்க்கவே வெக்கமா இருக்கு” என்று சொல்லி தன் இருகைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். தன்னவளின் வெட்கம் அந்த ஆண்மகனை மேலும் உசுப்பேற்றியது​

“வெட்கப்படாத பூக்களை​

வண்டுகள் தொடாதடி​

முத்தம் தராமல் வெட்கமும்​

சாயம் போகாதடி”​

வண்டுகளே வெட்கப்படும் பூக்களை நோக்கி படை எடுக்கும் போது, சித்தார்த் தன் மனைவியின் வெட்கத்தை பார்த்து சும்மா இருப்பானா என்ன? அவள் கைகளை பிரித்து, தன் இதழால் அவள் நெற்றியில் முத்தமிட்டு, வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை தன் முத்தங்களால் சாயம் போக வைத்துக் கொண்டிருந்தான்.​

சற்று நேரத்தில் நயனியின் இதழ் தேனை பருகும் வண்டாக அவன் இதழ்கள் மாறிப்போனதும் நிற்க முடியாமல் நயனியின் கால்கள் தொய்ந்தது. தன்னவளை அப்படியே கைகளால் ஏந்திக் கொண்டு, கட்டிலை நோக்கிச் சென்றான். அதிர்ச்சியோடு இமை திறந்து விழி விரித்து கணவனை பார்த்தவளை மோகத்துடன் பார்த்தபடி கட்டிலில் கிடத்தினான்.​

கட்டிலில் படுத்திருந்தவளை விழுங்கி விடுபவன் போல மேலிருந்து கீழாக அவன் பார்வை நிதானமாக அவள் மேனியெங்கும் உலா வந்தது.​

கைகளால் தொடாமல் கண்களால் அவள் நெஞ்சை பந்தாடிக் கொண்டிருந்தான். தன் காந்த பார்வையால் ரத்தம் வராமல் அவள் மனதை துண்டாக்கி கொண்டிருந்தான். அதற்கு மேல் தன்னவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் புரண்டு படுத்து கொண்டவளின் மேல் மொத்தமாக படர்ந்து, தன் காதல் கீதத்தை அவள் மேனியில் மீட்ட தொடங்கிவிட்டான்.​

கணவனின் விரல்களும் இதழ்களும், அவன் மேனியும் ஒட்டுமொத்தமாக தன்னை ஆக்ரமித்துக் கொண்டதில் திக்கு முக்காடிப் போனாள் நயனி. அவன் விரல்களும் இதழ்களும் பயணிக்கும் இடங்களை உணர்ந்து மூச்சடைத்து போனது அவளுக்கு…​

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்​

பெண்ணுக்கு தெரியாது​

ஓர் ஆணின் கைகள்​

தீண்டும் மட்டும்​

அவசியம் புரியாது​

என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளை கேட்டிருக்கிறாள். இன்று தான் அவற்றின் முழு அர்த்தமும் அவளுக்கு புரிந்தது. ஒருவித அச்சம், கூச்சம், வெட்கம், மெளனம் என்று உணர்ச்சிகளின் குவியலாய் தன்னருகில் லயித்து கிடந்தவளை மொத்தமாக களவாட ஆசைக் கொண்டான் கணவன். அவள் அச்சத்தையே ஆடையாக்கி, வெட்கத்தை முந்தானையாக்கிக் கொள்ளட்டும் என்று முடிவெடுத்து அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்க தயாராகி போனான் கணவன்.​

அவள் சிணுங்கலுடன், அவன் எண்ணத்திற்கு தடைபோட நினைத்தாலும், அவனிடம் அது எடுபடவில்லை. மொத்தமாக ஆடைகளை களவாடி, அவளையும் களவாட தொடங்கிவிட்டான். நயனியின் மேனியை வீணையாக தன் இதழ்களாலும் விரல்களாலும் மீட்ட தொடங்கிவிட்டான்.​

நயனியும் தன்னவனின் காதல் பாடத்தை கற்றுக் கொள்ள முதலில் முரண்டு பிடித்தாலும், மெல்ல மெல்ல கணவனின் ஆளுமைக்கு கட்டுப்பட தயாராகி போனாள். நயனி என்னும் நதியில் நீந்தி கரைசேர முடியாமல் தன் நீண்ட பயணத்தை இடைவெளி இல்லாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தான் சித்தார்த் அபிமன்யு.​

இடைவிடாமல் அவள் மேனி முழுவதும் அவன் வாரி இறைத்த முத்தங்களின் சத்தங்களால் அவர்களின் மனதின் ஓசைகள் காதல் கீதங்களாய் மாறி அந்த அறையின் நிசப்தத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. உணர்ச்சிகள் ஆழிப் பேரலையாய் அவனை ஆர்ப்பரித்தாலும் பூவை விட மென்மையாக தன்னவளை கையாண்டு கொண்டிருந்தான்.​

அவன் ஒவ்வொரு தொடுகைக்குமே அவள் உடல் முதலில் அதிர்ந்து, பின் சிலிர்த்து அடங்குவதை உணர்ந்தே இருந்ததால், தன் காதல் பாடத்தை மெல்ல மெல்ல மனைவிக்கு சொல்லிக் கொடுத்து தன் ஆளுமைக்குள் அவளை கொண்டுவந்திருந்தவன் மென்மையாக அவளுக்குள் மூழ்க தொடங்கிவிட்டான். வலியிலும் இன்பத்தை உணர வைத்திருந்தான் கணவன். தன் முதல் வெற்றியை முடித்து தன்னவளை தன் நெஞ்சின் மேல் படுக்கவைத்துக் கொண்டு, அவள் கூந்தலை தன் கைகளால் கலைத்து விளையாடிவன் உதடுகள் அவள் நெற்றியில் தொடர் முத்தங்களை வழங்கி கொண்டே இருந்தது.​

நயனியின் இதழ்களும், சித்தார்த்தின் நெஞ்சத்தில் எச்சில் முத்தங்களை வைத்து கொண்டே இருந்தது.​

“நயனி” என்றான்​

“ம்”​

“எப்படி இருந்தது பிராக்டிகல் கிளாஸ்” என்றான்​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“ச்சீ நீங்க ரொம்ப மோசம். இது தான் நீங்க சொன்ன பிராக்டிகல் கிளாசா? அதனால தான் அண்ணி சிரிச்சு இருக்காங்க, இப்படியா பட்ட பகல்ல?” என்று சிணுங்கினாள்.​

அவள் சிணுங்கலில் சத்தமாக சிரித்தவன் “நயனி, ஒரு முறை பிராக்டிகல் கிளாஸ் சொல்லி கொடுத்துட்டா, அடுத்த முறை ஸ்டுடென்ட்டே செய்யணும் தெரியும் இல்ல” என்று நகைத்தான் கணவன்.​

“ம்ஹூம் நான் மாட்டேன்” என்று வெட்கத்துடன் தன்னுள் புதைந்துக் கொண்ட மனைவியை மீண்டும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான் அவள் கணவன்.​

அன்று பகல் முடிந்து இரவான பின்பும் தன் காதல் காரிகையின் மேனியில் காதல் ஓவியங்களை இடைவிடாது தன் விரல் மற்றும் இதழ் என்னும் தூரிகைகளால் வரைந்துக் கொண்டிருந்தான். விலகாதே பகலே விடியாதே இரவே என்று இரு காதல் மனங்களும் வேண்டிக்கொண்டிருந்தாலும் இயற்கை தன் பணியை செவ்வனே செய்து முடித்திருக்க அன்று பகல் முடிந்து, இரவும் விடிந்து தான் போனது, ஆனால் இடையிடையே பழரசத்தை மட்டும் பருகிவிட்டு அவர்களின் காதல் சங்கமம் விடிந்த பின்பும் தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தது.​

வாடிய மலர் போல தன் மேல் அயர்ச்சியுடன் படுத்து இருந்தவளை பார்த்து, “சாரி நயனி, உன்னை படுத்தி எடுத்துட்டேனா? ரொம்ப நாளா காத்திருந்ததால தான் இப்படி…” என்றான் வருத்தமான குரலில்.​

“பரவாயில்லை” என்றவளின் கண்கள் அவளையும் மீறி தூக்கத்தை நாடியிருந்தது. மனைவியை அணைத்துக் கொண்டே படுத்திருந்தவன் இருவரும் நேற்றிலிருந்து சாப்பிடாததை எண்ணி, மெல்ல அவளை விட்டு விலகி எழுந்து அவசரமாக குளித்து விட்டு, லேப்டாப்பில் அவர்களுக்கான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தான்.​

ஒரு மணிநேரம் அவளை தூங்க விட்டவன், பின்பு அவளை எழுப்பி, “நயனி, குளிச்சுட்டு வந்துடு, சாப்பிட்டு மறுபடியும் தூங்கு” என்றான்.​

“அய்யோ காலேஜூக்கு போகணுமே” என்று பதறியடித்தபடி எழுந்து அமர்ந்தாள்.​

“நான் தயா சாருக்கு காலையிலேயே போன் பண்ணி சொல்லிட்டேன். இன்னும் இரண்டு நாளுக்கு என் மனைவி வரமாட்டானு சொன்னதும், அவரும் ஓகேனு சொல்லிட்டாரு” என்றான் சித்தார்த்.​

“அய்யோ காலேஜ்ல என்ன நினைச்சுப்பாங்களோ?” என்றாள் கவலையாக​

“ஏன் அவங்க கிட்ட இங்கே நடந்ததை சொல்ல போறீயா?” என்றான் அவளை அழுத்தமாக பார்த்து.​

“ச்சீ, அதையெல்லாம் நான் எப்படி சொல்வேன்?” என்றாள் கணவனை முறைத்து பார்த்து​


“பின்ன அவங்க என்ன நினைப்பாங்களோனு எதுக்கு சொல்றே?” என்று கேட்டான்.​

“இல்ல என்னோட பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் நீங்க பிராக்டிகல் கிளாஸ் எடுக்க போறதா குரூப்ல மெசேஜ் பண்ணி சொன்னேங்க. அவங்களும் கத்துக்கிட்டு வந்து எங்களுக்கும் சொல்லி கொடுனு சொன்னாங்க” என்றாள் மெல்லிய குரலில்.​

அதைக்கேட்டு சத்தமாக சிரித்தான் சித்தார்த் அபிமன்யு.​

“அபி, சிரிக்காதீங்க. நான் காலேஜ்க்கு போனால் அவங்க என்ன கத்துகிட்டேனு கேப்பாங்க, நான் என்ன சொல்றது?” என்று சிணுங்கினாள்.​

“என் ஹஸ்பண்ட் எப்படி பேபி பார்ம் ஆகும்ங்கிறதை பத்தி பிராக்டிகல் கிளாஸ் எடுத்தாரு. அதை பத்தி நான் சொல்லி தெரிஞ்சுக்கிறதை விட, நீங்களே தெரிஞ்சுக்கறது தான் பெட்டர்னு சொல்லிடு” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான்.​

“போங்க” என்று சொல்லி அவன் வெற்று மார்பில் தன் பிஞ்சு கரங்களால் குத்தினாள்.​

“நயனி உனக்கு கொஞ்ச நேரம் ஓய்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன். சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா, எனக்கும் பசிக்குது, சாப்பிட்டு தூங்குவோம்” என்றான்.​

“நீங்க ஹாஸ்பிட்டலுக்கு போகலையா?” என்றாள் கேள்வியாக.​

“இல்ல நான் ஒரு ரிசர்ச் பண்ண வேண்டியிருக்கு” என்றான் நமுட்டு சிரிப்புடன்.​

“என்ன ரிசர்ச் பண்ணனும்?” என்றாள் ஆச்சரியமாக.​

“சரியான டியூப்லைட்டு டி நீ. உன்னை தான் ஆராய்ச்சி பண்ணி பிஎச்டி வாங்க போறேன்” என்று ஒற்றை கண்ணை அடித்தான்.​

வெட்கத்துடன் குளியலறைக்கு ஓடினாள் நேத்ரநயனி. சித்தார்த் அதுவரை அணைத்து வைத்திருந்த தன் போனை எடுத்து ஆன் செய்தவுடன் ஜனனியிடமிருந்து தவறவிட்ட சில அழைப்புகள் இருந்தது.​

அவன் எடுக்காததால் அவனுடைய வாட்ச்அப் எண்ணிற்கு சில குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தாள்.​

அதில் எலிசா அவசர பிரிவில் சில முக்கிய மருந்துகள் இங்கே ஸ்டாக் இல்லை என்றும் தனக்கு தெரிந்த இடத்தில் வரவழைத்துக் கொடுப்பதாக கேட்டதாகவும் அனுப்பியிருந்தாள். அதற்கு முடிவெடுக்க வேண்டியவன் சித்தார்த் அல்லவா? அதனால் தான் பலமுறை அவனுக்கு அழைத்திருக்கிறாள்.​

எலிசா பரிந்துரைத்த மருந்துகளின் விவரங்களையும் ஜனனி அனுப்பியிருந்தாள். அவற்றை அவசரமாக ஆன்லைனில் செக் செய்தான். நல்ல மருந்தாக தான் தோன்றியது. எதற்கும் தனக்கு தெரிந்த மருந்து கம்பெனிகளில் ஒருமுறை விசாரித்துக் கொள்ளலாம் என்று போனை எடுத்து அவர்களுக்கு அழைத்தான். மறுமுனையில் லைன் கிடைக்காமல் பிசியாக இருந்தது.​

பார்வையை சுழல விட்டபடி இருந்தவனின் கவனம் இப்போது குளியலறை கதவை திறந்து மெல்ல எட்டிப்பார்த்த மனைவியின் மேல் பதிந்தது. குளிக்க சென்றவள் மாற்று உடை எடுத்துச் செல்ல மறந்து விட்டிருக்கிறாள் என்று உணர்ந்தவன் அவளை கவனிக்காத மாதிரி பாவனையோடு போனில் மூழ்கினான்.​

நயனி கழுத்துக்கு கீழே டவலை சுற்றிக் கொண்டு பூனை போல மெல்ல நடந்து வெளியே வந்தாள். அதற்குள் சித்தார்த் ஆன்லைனில் வந்ததை கவனித்திருந்த ஜனனி, “கேன் புரொசிட் சார்?” என்று கேட்டிருந்தாள்.(can proceed sir?)​

மனைவியின் மேனியை ரகசியமாய் கள்ள பார்வை பார்த்திருந்தவனின் கவனம் மற்றதை மறக்கடித்திருக்க, “புரொசிட்” (proceed) என்று ஒற்றை வார்த்தையை குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு போனை அவசரமாக ஆப் செய்து அதை சோபாவில் வீசிவிட்டு, வேகமாக சென்று தன் மனைவியை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு மீண்டும் கட்டிலில் கிடத்தி அவள் மீதிருந்த டவலை உருவி வீசியெறிந்தான்.​

கணவனின் அதிரடியில் அதிர்ந்து விழித்தவளின் பார்வையை தன் பார்வையால் கைது செய்தபடி, அவளை மீண்டும் தன் ஆளுமைக்குள் கொண்டு வரத்தொடங்கிவிட்டான். மனைவி ஏற்கனவே பழகிவிட்டதால் இந்த முறை அவளிடம் தன் அதிரடியை காட்டி அவளை திக்குமுக்காட செய்து கொண்டிருந்தான்.​

காதல் சங்கமத்திற்கும் கால நேரம் வேண்டும் போலும், இடைவிடாத காமம் மூளையை சில நேரத்தில் மழுங்கடித்து விடும். சித்தார்த் மனைவியுடனான ஏகாந்தத்தில் மற்றதை மறந்து ஜனனிக்கு மருந்து வாங்குவதற்காக தன் அனுமதியை வழங்கிவிட்டு இருந்தான்.​

அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்…​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 25

சித்தார்த்தும் நேத்ரநயனியும் உடலாலும் மனதாலும் ஒருவரை ஒருவர் நன்றாகவே நெருங்கியிருந்தனர். மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் மனைவியுடனே நாட்களை கழித்தான் கணவன். அவன் நடந்துக் கொண்ட விதத்தில் நயனி தன்னுடயை ஒதுக்கம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என அனைத்தையும் மறந்தே போயிருந்தாள். கணவன் அவளை ரசனையுடன் கையாள்கிறான், தன்னை மிகவும் விரும்புகிறான் என்று புரிந்துக் கொண்டாள். அவனுடைய ஒவ்வொரு செய்கையிலும் அவன் அன்பும் காதலும் தெரிந்தது.​

சித்தார்த் ஒரு மருத்துவர் என்பதாலும், மருத்துவமனையை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததாலும் தான் மனைவியை அழைத்துக் கொண்டு அவன் ஹனிமூன் செல்லாமல், தனிமை வேண்டி தன் குடும்பத்தாரை மட்டும் மகாபலிபுரத்திற்கு அனுப்பினான். ஆனால் நேத்ரநயனியின் வெட்கமும் நாணமும் அவனை பித்தங்கொள்ள வைத்திருந்தது. தன்னை முழுவதும் மறந்து மனைவிக்குள் ஐக்கியமாகி இருந்தான்.​

எப்போது போன் செய்தாலும் உடனே எடுத்து பேசுபவன், இப்போது போனை எடுக்காமல் இருக்கவும், ஜனனியும் சித்தார்த்துக்கு அதிகமாக போன் செய்யவில்லை. அவன் ஒப்புதல் கொடுத்த பின்பு எலிசாவிடம் கூறி அந்த மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்கான ஆவணங்களை செய்ய சொன்னாள்.​

மூன்று நாட்களாக சித்தார்த் மருத்துவமனைக்கு வராமல் போகவும் எலிசா சுதந்திரமாக மருந்துகளை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பணியை தொடங்கியிருந்தாள்.​

மூன்றாம் நாள் இரவு பவிஷ்கா சித்தார்த்தை போனில் அழைத்தாள். “சொல்லு பவிக்கா” என்றான்.​

“என்னடா பிராக்டிகல் கிளாஸ் எல்லாம் முடிஞ்சதா? நாங்க வீட்டுக்கு வரலாமா? இல்லை இன்னும் இரண்டு நாள் தங்கிட்டு வரட்டுமா?” என்றாள் கிண்டலாக.​

“பவிக்கா என்னையே கிண்டல் பண்றியா? செல்வா மாமாவும் நீயும் ஹனிமூன் போயிட்டு வர்றவரைக்கும் நான் தான் ஹாஸ்பிட்டலை பார்த்துக்கிட்டேன். நியாபகம் இருக்கட்டும். ஆனால் நான் ஹனிமூன்கூட போகாமல் வீட்ல தான் இருக்கேன்” என்றான் சிரித்துக் கொண்டே​

“டேய் செல்வா மாமானு சொன்னதும் தான் எனக்கு நினைவு வந்துச்சு. உன் மாமாகிட்ட எலிசாவை பத்தி விசாரிக்க சொல்ல சொன்னே இல்ல? அவரும் விசாரிச்சுட்டு உனக்கு போன் பண்ணியிருக்காரு. உன் போன் ஸ்விட்ச் ஆப்னு வந்ததும் எனக்கு போன் பண்ணாரு” என்றாள் பவிஷ்கா.​

“மாமா என்னக்கா சொன்னாரு?” என்றான் அவசரமாக​

“அந்த எலிசா கடைசியா ஒருத்தனோட சுத்திட்டு இருந்தா இல்லை, அவன் பேரு ஸ்டீவன் ரிச்சர்ட், அவன் ஒரு பெரிய மருந்து கம்பெனியோட முதலாளியாம். அவனை விட்டுட்டு எதுக்கு உன் தம்பியை தேடி அவ அங்கே வந்தானு தான் தெரியலைனு சொன்னாருடா”​

சித்தார்த்துக்கு எங்கோ பொறி தட்டியது. எதோ மருந்துகள் பிரச்சனையில் ஸ்டீவன் ரிச்சர்ட் என்ற பெயர் அடிப்பட்டதாக அவன் நினைவில் வந்தது. உடனே பவிஷ்காவின் போனை கட் செய்து ஜனனிக்கு அழைத்தான்.​

“ஜனனி, எலிசா ஆர்டர் பண்ண சொன்ன மருந்தை எல்லாம் வாங்க வேண்டாம், அப்படியே ஸ்டாப் பண்ணுங்க” என்றான் அவசரமாக.​

“டாக்டர் நீங்க தானே புரோசிட் பண்ண சொல்லி மெசேஜ் அனுப்பினீங்க. மருந்து எல்லாம் நேத்தே வந்துடுச்சு. அந்தந்த டிபார்மென்ட்க்கு தேவையான மருந்துகளை இன்னைக்கு காலையில் தான் பிரிச்சு கொடுக்க சொன்னேன்” என்றாள் ஜனனி​

“என்ன சொல்றீங்க ஜனனி, பொதுவா நாம புதுசா ஒரு இடத்துல மருந்துகள் வாங்கணும்னா கொட்டேஷன் வாங்கி அதை பயன்படுத்தி பார்த்துட்டு நம்மோட டாக்டர்கிட்ட எல்லாம் கலந்து பேசிட்டு தானே மொத்தமா வாங்குவோம்? நான் புரோசிட் பண்ண சொன்னாலும் நீங்க சேம்பல்க்கு கொஞ்சம் தானே வாங்கியிருக்கணும்? ஏன் மொத்தமா பர்சேஸ் பண்ண சொன்னீங்க?” என்றான் சித்தார்த் ஆத்திரத்துடன்.​

“அது அதுவந்து டாக்டர் எலிசா மேடம் தான், ஏற்கனவே நல்ல ரிவீவ் வந்த மருந்துகள், நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நீங்களும் பிசி போல இருந்தது. அது தான் எதுக்கு உங்களை டிஸ்டர்ப் பண்ணனும்னு…” என்று இழுத்தாள் ஜனனி.​

“டேமிட்” என்று எழுந்தவன் அவன் எதிரே இருந்த கண்ணாடி டீபாயை எட்டி உதைத்தான். அது சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறியதில் நேத்ரா பதறிப் போனாள்.​

“என்னாச்சுங்க?” என்ற அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவசரமாக உடையை அணிந்துக் கொண்டு “நான் அவசரமா நம்ம மருத்துவமனைக்கு போகணும், முடிஞ்சா நான் சீக்கிரம் வந்திடுறேன். இன்னைக்கு ராத்திரி மட்டும் பத்திரமா வீட்டை பூட்டிட்டு இரு. காலையில் பவிக்காவும் அப்பாவும் வந்திடுவாங்க” என்றபடி கார் சாவியை எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கினான்.​

அவன் பின்னாடியே ஓடியவள், “எதாச்சும் பெரிய பிரச்சனையா அபி” என்றாள் பதட்டத்தோடு​

“தெரியலையேடா, எதுவா இருந்தாலும் சமாளிச்சுக்கலாம். நீ பயப்படாதே” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறி சென்றான்.​

அவன் கார் மறையும் வரை கேட்டருகே நின்றிருந்தவளை அந்த வழியாக சவாரிக்காக டாக்சியில் சென்ற பாண்டி நேத்ராவை யோசனையோடு பார்த்துக் கொண்டே சென்றான்.​

சித்தார்த் காரில் செல்லும் போதே ஜனனிக்கு போன் செய்தான், “ஜனனி ஹாஸ்பிட்டல் கேட்டை இழுத்து மூட சொல்லு. நம்ம ஹாஸ்பிட்டல்ல இருந்து ஒருத்தரும் வெளியே போகக் கூடாது. மருத்துவர்கள், நர்ஸ் மற்றும் நோயாளிகள்னு எல்லாரும் அங்கே தான் இருக்கணும்.​

நான் சொல்ற இன்ஸ்ட்ரஷனை ஒழுங்கா பாலோ செய்யலைனா நான் மனுஷனா இருக்க மாட்டேன். காலையில் யார் எல்லாம் வெளி நோயாளிகளா வந்தாங்க, இன்னைக்கு டிரிட்மென்ட் எடுத்துட்டு யாரெல்லாம் டிஸ்சார்ஜ் எடுத்துட்டு போனாங்களோ, அவங்களை எல்லாம் உடனே ஹாஸ்பிட்டலுக்கு வரச்சொல்லு” என்றான்.​

“டாக்டர், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானவங்க வந்து போறாங்க, நான் ஒருத்தி எப்படி அவங்களை எல்லாம் வரச்சொல்றது, அவங்க சொன்னாலும் இப்போ உடனே வருவாங்களா?” என்றாள் ஜனனி.​

“நம்ம ஹாஸ்பிட்டல்ல இருக்கிற நர்ஸ், டாக்டர், செக்யூரிட்டி, அட்டென்டர்னு எல்லார்கிட்டயும் தனித்தனியா லிஸ்ட் கொடுத்து உடனே எல்லாரையும் போன் பண்ணி பேச சொல்லு. இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல டிரிட்மென்ட் எடுத்துக்கிட்டவங்களுக்கு பத்தாயிரம் பணப்பரிசு தர்றதா சொல்லுங்க. பேஷண்ட் கூட வந்தால் தான் தருவதா சொல்லு, கண்டிப்பா வருவாங்க.​

“ஓகே டாக்டர்” என்றாள் ஜனனி.​

“முக்கியமா இந்த விஷயம் எலிசாவுக்கு தெரியக்கூடாது. அவள் எப்பவும் போல எமர்ஜென்சி வார்டுல இருக்கட்டும். ஆனால் எந்த பேஷன்டையும் அவகிட்ட அனுப்ப வேண்டாம், அந்த அறையில் இருக்கிற நர்ஸ்கிட்ட நான் சொன்ன வேலையை கொடுக்காதே. அவங்க எப்போதும் போல அங்கேயே இருக்கட்டும், நான் பத்து நிமிஷத்துல ரீச் ஆயிடுவேன்” என்றான் சித்தார்த்.​

“மொத்தத்துல யாருக்குமே என்ன நடக்குதுனு தெரியக்கூடாது, புரியதா?” என்றான்.​

“எனக்கே என்ன நடக்குதுனு புரியலை டாக்டர்” என்றாள் ஜனனி.​

“ஒகே குட், இது தான் எனக்கும் வேணும்” என்று சொல்லிவிட்டு காரை வேகமாக செலுத்தினான்.​

கார் மருத்துவமனையை அடைந்ததும், அவன் சொன்னது போல கேட் மூடப்பட்டு இருந்தது. சித்தார்த்தின் காரை கண்டபின் செக்யூரிட்டி கேட்டை திறந்தார்.​

காரிலிருந்து எட்டிப்பார்த்த சித்தார்த் செக்யூரிட்டியை அழைத்து, “காலையில் வந்த பேஷண்ட் யாராவது வந்தா மட்டும் புது பில்டிங்கிற்கு அனுப்புங்க” என்று கூறினான்.​

உள்ளே சென்றவன், அனைத்து மருத்துவர்களையும் கான்பரன்ஸ் ஹாலுக்கு வரவழைத்தான்.​

“இன்னைக்கு வந்த புது மெடிசன்ல எனக்கு சந்தேகம் இருக்கு. அதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறதுக்குள்ள எந்த உயிராவது பலி ஆயிடுமோனு கவலையா இருக்கு. அதனால் பேஷன்ட்டுகளுக்கு உடனடியா மாத்து மருந்தோ, இனிமா (Enima) கொடுத்தோ எதாவது ஒரு வகையில் இன்னைக்கு கொடுத்த மருந்து அவங்க வயித்துல தங்க விடாமல் செய்யணும். அதுக்கான வேலையை போர்கால அடிப்படையில் செய்யுங்க. உங்களை கையெடுத்து கேட்டுக்கிறேன். எனக்காக இந்த உதவியை செய்யுங்க” என்றான் சித்தார்த்.​

“அய்யோ சித்தார்த், இதுதான் விஷயம்னு சொல்லிட்டா நாங்க செய்யப்போறோம். ஆர்டர் போட்டாலே போதும் கையெடுத்து எல்லாம் கும்பிட வேண்டாம், ப்ளீஸ்” என்றார் மூத்த மருத்துவர் ஒருத்தர்.​

“ஓகே டாக்டர் நீங்க எல்லாரும் புது பில்டிங்கிற்கு போயிடுங்க. நிறைய பேஷண்ட் வந்தாங்கனா பரவாயில்லை, நான் இன்னும் என் பிரண்ட்ஸ் எல்லாரையும் வரவைக்கிறேன். மெடிக்கல் காலேஜ் ஸ்டென்ட்சை உதவிக்கு கூப்பிடுறேன்” என்றான் சித்தார்த்​

“நோயாளிங்க விஷயத்தை கேள்விப்பட்டால் கோபப்படுவாங்களே சித்தார்த்?” என்றார் ஒரு மருத்துவர்.​

“உயிரை காப்பத்தறது தான் இப்போ முக்கியம். மற்றதை எல்லாம் இந்த ஆஸ்பிட்டல் முதலாளி சித்தார்த் அபிமன்யுகிட்ட கேட்டுகோங்கனு என் பெயரை சொல்லிடுங்க டாக்டர்” என்றான் சித்தார்த் உணர்ச்சியற்ற குரலில்.​

“உங்களை எல்லாரும் சும்மா விடமாட்டாங்க. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கிளம்புங்க சித்தார்த்” என்றார் மற்றொரு டாக்டர்.​

“இல்ல, இந்த விஷயத்துல நான் தான் கவனக்குறைவாக இருந்து இருக்கேன். இதுக்கு நான் மட்டும் தான் முழு பொறுப்பு எதுவா இருந்தாலும் நான் தான் சமாளிக்கணும், நீங்க சீக்கிரமா கிளம்புங்க. உங்களுக்கு தேவையான நர்ஸ் மற்றும் உதவியாளை அனுப்பி வைக்கிறேன்” என்றான்.​

அவர்கள் சென்றதும் ஜனனியை பார்த்து, “நான் பேசினதை எல்லாம் கேட்ட தானே? உடனடியாக அவங்களுக்கு உதவ தேவையான ஆட்களையும் மருந்துகளையும் கொடுக்க ஏற்பாடு செய். ஆனால் அந்த மருந்து நம்ம பழைய ஸ்டாக்ல இருந்து கொடுக்கணும், நேத்து ரீசிவ் பண்ண மெடிசன் மொத்தமும் என்னோட அறைக்கு வந்தாகணும்” என்றான் அதிகாரமான குரலில்.​

“டாக்டர் என்னை எதுவும் தப்பா நினைக்காதீங்க, நான் சேம்பல் ஆர்டர் பண்ணி பார்த்துட்டு தான் மொத்தமாக பர்சேஸ் பண்ணியிருக்கணும், நீங்க சொன்னதை நான் சரியா புரிஞ்சுக்கலை. நான் எதுவும் வேணும்னு செய்யலை டாக்டர், என்னை நம்புங்க ப்ளீஸ்” என்றாள் ஜனனி கலங்கிய கண்களுடன்.​

“நீ இந்த அளவுக்கு உயிரோட விளையாட மாட்டேன்னு எனக்கும் தெரியும். நானும் சேம்பல்க்கு மட்டும் ஓகேனு சொல்லி மென்ஷன் பண்ணியிருக்கணும். இருந்தாலும் நம்ம ஹாஸ்பிட்டல் விதிமுறை உனக்கும் தெரியும் தானே? இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை இப்படி நடந்ததுனா உன் மேல கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.​

இந்த பிரச்சனை சரியாகும் வரைக்கும் நீ ஹாஸ்பிட்டல் விட்டு எங்கேயும் நகர கூடாது” என்றான் சித்தார்த் எச்சரிக்கும் குரலில்.​

“ஓகே டாக்டர், இந்த பிரச்சனைக்கு நானும் ஒரு வகையில் காரணம். கண்டிப்பா அதுக்கான தண்டனையையும் கட்டாயம் ஏத்துக்குவேன். நான் எல்லா மெடிசனையும் இங்கே கொண்டு வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.​

அதற்குள் சித்தார்த் பிரபலமான லேப் டெக்னிஷியன்களை போன் செய்து தன் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களோட உடனடியாக வரச்சொன்னான்.​

மொத்த மருந்துகளும் அவன் அறைக்கு வருவதற்கும், டெக்னீஷியன் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. அவர்களிடம். “ஆபத்தான இன்கிரிடியன்ஸ் எதாவது இந்த மெடிசன்ல இருக்கானு செக் பண்ணுங்க” என்றான்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

வந்தவர்கள் அரைமணி நேரத்திலேயே, “டாக்டர் சித்தார்த், இந்த மருந்துவகைகளை முதலில் யுஎஸ்ஸில் அறிமுகம் செய்தாங்க. நோய்கள் எல்லாம் சீக்கரமாவே குணமாயிடுதுனு சொல்லி வேகமாவே பிரபலம் ஆச்சு. சோ அந்த கம்பெனிகூட நிறைய மருந்துகளை தயாரிச்சாங்க. ஆனால் இந்த மருந்தை சாப்பிட்டவங்களுக்கு கொஞ்ச நள் கழிச்சு சைட் எபக்ட் வந்ததா சொல்லி பல நோயாளிங்க கம்ளெய்ண்ட் பண்ணாங்க.​

உடனடியா யுஎஸ் கவர்ன்மென்ட் இந்த மருந்தை தடை செய்துட்டாங்க. இது நடந்து ஆறு மாசம் ஆயிடுச்சு. இந்த மருந்து எப்படி இந்தியாவுக்கு வந்தது?” என்று கேட்டார் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர்.​

“என்ன சொல்றீங்க? அந்த மருந்து பெயர் எனக்கும் தெரியும், அதன் பேரு வேறே, இது வேறே தானே?” என்று தன் மொபைலை எடுத்துக் காட்டினான்.​

“உங்க கிட்ட சொன்ன மருந்துல எந்த பிரச்சனையும் இல்லை. அதுவும் அந்த கம்பெனியோட மருந்து தான். அதே கவரை பயன்படுத்தி இவங்க தடை செய்யப்பட்ட மருந்துகளை பேக் பண்ணி இருக்காங்க” என்று கூறியவர் இரண்டும் பயன்படுத்தப்பட்ட ரசாயணப்பொடிகளின் விகிதத்தை விளக்கினார்.​

சித்தார்த் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.​

“நல்ல வேலையா, நீங்க ஒரே நாளில் இதை கண்டுபிடித்து இருக்கீங்க. கொஞ்சம் கவனக்குறைவா இருந்து இருந்தாலும் பெரிய பிரச்சனையில் மாட்டியிருப்பீங்க” என்றார் அவர்.​

“அப்போ யுஎஸ்ஸில் இந்த பிரச்சனை வந்த போது எந்த மாத்து மருந்து கொடுத்தாங்கனு தெரியுமா சார்?” என்று கேட்டான் சித்தார்த்.​

இருங்க விசாரிக்கிறேன், என்றவர் தன் நண்பருடன் போனில் பேசிவிட்டு, அதற்கான மருந்து விவரத்தை கூறினார். சித்தார்த உடனடியாக தலைமை மருந்தகத்திற்கு போன் செய்து விஷயத்தை கூறி, அந்த மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்க சொன்னான்.​

டெக்னிஷியன்களை அழைத்து, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்துகளையும் ஒரு முறை சரிபார்க்க சொல்லிவிட்டு, அவசரமாக புது பில்டிங்கை நோக்கி சென்றான்.​

அங்கே நோயாளிகள், மருத்துவர்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.​

“என்ன மருந்து கொடுத்தீங்க? நாங்க ஏன் மறுபடியும் மருந்து சாப்பிடணும்? என்ன நடக்கது இந்த ஹாஸ்பிட்டல்ல” என்று ஆளாளுக்கு கத்தவும் சித்தார்த் மற்றும் தலைமை மருந்துகளின் ஆராய்ச்சியாளர் இருவரும் சேர்ந்து அவர்களை சமாதானம் செய்தனர்.​

“நீங்க முதலில் இப்போ கொடுக்கிற மருந்துகளை சாப்பிட்டுங்க, ஜஸ்ட் டைரியா பிராப்ளம் வரும், அப்புறம் சரியாக போயிடும், எங்களை நம்புங்க” என்றான் சித்தார்த்.​

“இப்போ கொடுக்கிற மருந்து மட்டும் நல்ல மருந்துனு எப்படி நம்பறது? ஐந்தாயிரம் கொடுக்கறதா பொய் சொல்லி வரவழைச்சுட்டு என்னென்னவோ சொல்லிட்டு இருக்கீங்க? இருங்க போலீசை கூப்பிடுறோம்” என்று கத்தினான் ஒருவன்.​

ஏதோ பேச முனைந்த சித்தார்த்தை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பேச தொடங்கினார் அந்த ஆராய்ச்சியாளர், “நீங்க காலையில் சாப்பிட்ட மருந்தால உடனடியா உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. லேட்டா தான் பிரச்சனை வரும், சிலருக்கு வராமலும் போகலாம். டாக்டர் சித்தார்த் நினைச்சிருந்தால், இதை எல்லாம் உங்களுக்கு சொல்லாமல் அப்படியே விட்டுட்டு இருக்கலாம். அதுதான் அவருக்கும் அவரோட மருத்துவமனைக்கும் பாதுகாப்பு.​

உங்களை எல்லாம் வரவழைச்சு விஷயத்தை சொன்னால் என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு அவருக்கு தெரியாதுனா நினைக்கறீங்க? ஆனாலும் அவர் வாழ்க்கையையே பணயம் வச்சு கொஞ்சம் கூட யோசிக்காமல் உங்க எல்லாரையும் வரவழைச்சு இருக்காரு. அதுக்கான மாத்து மருந்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டாரு. இன்னும் அரைமணி நேரத்துல வந்துடும், உங்களோட உயிருக்கு எந்த ஆபத்தும் வராது.​

அப்புறம் போலீசுக்கு நீங்க போன் பண்ணனும்னு அவசியம் இல்ல. அவரே போன் பண்ணி சொல்லிட்டாரு. அவங்களும் விசாரிக்க வந்துட்டு இருக்காங்க. அதனால பிரச்சனை பண்ணாமல் ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைப்பு கொடுங்க” என்றார் அவர்​

அதன்பின்னரே நோயாளிகளும் அவர்களுடன் வந்திருந்தவர்களும் சிகிச்சைக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தனர்.​

இவை எல்லாம் வேறு கட்டிடத்தில் நடந்ததால் எலிசாவிற்கு எந்த விஷயமும் தெரியவில்லை. மூன்று மணிநேரத்திற்கு மேலாகியும் எந்த நோயாளியும் உள்ளே வராததால் ஜனனிக்கு போன் செய்தாள்.​

“ஏன் ஜனனி இன்னைக்கு பேஷன்ட் யாரும் வரலியா?” என்றாள்.​

“ஆமாம் டாக்டர், நீங்க வேணும்னா உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. எமெர்ஜென்சிக்கு நோயாளிகள் வந்தால் நான் போன் பண்றேன்” என்றாள் ஜனனி எதையும் காட்டிக் கொள்ளாமல்.​

“ஓகே ஜனனி. சும்மா இங்கே இருக்கறதுக்கு நான் என் ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று சொல்லி போனை வைத்த எலிசா வெளியே சென்றாள்.​

மருத்துவமனையே நிசப்தமாக இருப்பது போல தோன்றியது. எதுவோ சரியில்லை என்று மனதில் தோன்ற அனைத்து தளங்களுக்கும் சென்று பார்த்தாள். நர்ஸ், அட்டென்டர், டாக்டர் என யாருமே அந்த கட்டிடத்தில் இல்லை.​

உடனடியாக தன் அறைக்கு சென்று, கதவை மூடிக் கொண்டு அவசரமாக போன் செய்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் தன் மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.​

எலிசா மிகச்சரியாக கேமரா இருக்கும் பக்கமாகவே நின்றிருந்தாள். வீடியோ காலில் அழைப்பு விடுத்து மறுமுனையின் இணைப்புக்காக காத்திருந்தாள். எலிசா அவளுடைய சமீபத்திய காதல் ஸ்டீவன் ரிச்சர்ட் உடன் தான் பேசுவாள் என்று சித்தார்த்தும் அவளின் போன் இணைப்பிற்காக காத்திருந்தான்.​

ஆனால் அவளின் போனில் தெரிந்த வீடியோ காலில் வெளிநாட்டு நபரின் முகம் தெரியாமல் வேறொரு நபரின் முகம் தெரிந்தது. தெளிவாக தெரியாத அந்த முகத்தை மேலும் உன்னிப்பாக பார்த்தான். தன் மொபைலில் தெரியும் திரையை மேலும் பெரிதாக்கினான். இப்போது அதில் தெரிந்த உருவத்தை பார்த்து சித்தார்த் அதிர்ந்து போனான்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 26

சித்தார்த் தன் போனில் தெரிந்த உருவத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே போலீஸ் அதிகாரிகள் அவன் அறைக்கு வந்தார்கள். அவர்களோடு அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சித்தார்த் இருந்த கான்பரன்ஸ் அறையில் கூடினார்கள். அதற்கு மேல் யோசிக்க வழியில்லாமல் சித்தார்த் அவர்களை வரவேற்றான்.​

“என்னாச்சு டாக்டர் சித்தார்த்? இவ்வளவு பெரிய மருத்துவமனை வச்சு நடத்துற நீங்க எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருந்தீங்க? முதலில் வெளிநாட்டு நபரை இங்கே வேலையில் சேர்ப்பதற்கு சில புரோட்டோகால்ஸ் (Protocols) இருக்கு, அதையெல்லாம் பாலோ பண்ணீங்களா?” என்றார் அசிஸ்டென்ட் கமிஷனர் விக்ரம் அதிகார தோரணையில்.​

“சார், நான் முறைப்படி தான் எலிசாவை அப்பாய்ன்மென்ட் பண்ணேன். அதுமட்டுமில்லாமல் அவங்களை எனக்கு யுஎஸ்ஸில் இருந்தே தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மருந்து விஷயத்துல மாஃபியா பண்ணுவாங்கனு நான் நினைச்சு கூட பார்க்கல. அவங்க லேட்டஸ்டா ஸ்டீவன் ரிச்சர்ட் கூட தான் டேட்டிங்ல இருந்திருக்காங்க. அந்த விஷயம் தெரிஞ்சு இருந்தாலே நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்து இருப்பேன்” என்றான் சித்தார்த்.​

“ஓகே சித்தார்த், அவங்க இந்தியாவிற்கு வந்து வேலை செய்ய நீங்க ரெக்வ்ஸ்ட் பண்ணீங்களா? அவங்களே உங்களை காண்டாக்ட் பண்ணாங்களா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.​

“சார், அவங்களா தான் வந்தாங்க. என்னால அவங்களோட ரெக்வஸ்டை மறுக்க முடியாத சூழ்நிலை உருவாயிடுச்சு” என்று எலிசாவுடன் தன் முதல் காதலையும் பின்பு அவள் நேராக வீட்டிற்கு வந்து பிரச்சனை உண்டு பண்ணியதையும் கூறினான்.​

“அப்போ உங்க மனைவி தான் எலிசாவை வேலைக்கு அமர்த்த முடிவெடுத்து இருக்காங்க அப்படித்தானே?” என்றார் விக்ரம்​

“ஆமா சார்” என்றான் சித்தார்த்​

“என்ன சொல்றீங்க சித்தார்த்? உங்க மனைவிக்கு இந்த துறையில் போதிய அனுபவம் இல்லைனு தெரியுது. அவங்க சொல்றதை வச்சு நீங்க எப்படி இவ்வளவு பெரிய முடிவு எடுத்தீங்க?” என்று விக்ரம் கேள்வி கேட்க,​

சித்தார்த் சில வினாடிகள் அமைதியாக இருந்தான்.​

“ஒரு வேளை, நீங்களும் உங்க மனைவியும் அந்த மருந்துகளை குறைவான விலைக்கு இறக்குமதி செய்து, இங்கே கொள்ளை லாபம் பார்க்கலாம்னு முடிவு செய்தீங்களா? இந்த விஷயம் அரசாங்கத்துக்கு தெரியாமலா போய்டும் மிஸ்டர் சித்தார்த்? பக்கவிளைவு வந்ததாக சொல்லி நோயாளிகள் எல்லாம் கம்ளெய்ண்ட் கொடுக்க ஆரம்பிச்சால், உங்களோட மருத்துவ சாம்ராஜ்யமே அழிஞ்சு போயிடும்னு உங்களுக்கு தெரியாதா?” என்றார் விக்ரம் கடுமையான குரலில்.​

ஜனனி முதல் அங்கிருந்த அனைத்து டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு வியர்த்து வழிந்தது.​

விக்ரம் அங்கிருந்த ஒவ்வொருவரையும் கூர்ந்து நோக்கி, “உங்கள்ல்ல யாருக்காச்சும், இந்த சித்தார்த்தோட சதி வேலையில் கூட்டு இருந்தால் இப்பவே சொல்லிடுங்க. அப்ரூவராக மாறிட்டா தண்டனை கம்மி” என்றார் அழுத்தமான குரலில்.​

எல்லோரும் இப்போது சித்தார்த்தை கவலையோடு பார்க்க, “டேய் விக்ரம், போதும்டா என்னோட ஸ்டாஃப்ஸ்களை மிரட்டினது. எல்லாரும் பயந்து போய்ட்டாங்க பாரு. இங்க இருக்கிற யார் மேலயும் தப்பு இல்ல. நீ முதல்ல வந்து சிசிடிவி கேமராவில் இருக்கும் வீடியோவை பாரு” என்றான் சித்தார்த் மெலிதாக சிரித்தபடி.​

“கொஞ்சம் கூட என்னை பெர்பாமன்ஸ் பண்ண விடமாட்டியாடா?” என்றபடி விக்ரம் சித்தார்த்தின் தோளில் இடித்தான்.​

அந்த அறையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் வாயை பிளந்து நிற்கவும் விக்ரம் பேச தொடங்கினான். “பயப்படாதீங்க, சித்தார்த் எலிசாவை இந்த மருத்துவமனைக்குள் அழைச்சுட்டு வரும்போதே எங்க டிபார்ட்மென்ட்ல் இன்பார்ம் பண்ணிட்டான்” என்று அவர்களுக்குள் நடந்த உரையாடலை பற்றி சொல்ல தொடங்கினான்.​

எலிசா சித்தார்த் வீட்டிற்கு வந்த அன்று இரவு, சித்தார்த்தால் உறங்க முடியவில்லை. அவனுக்கு எலிசா தனக்காக வரவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. ஆனால் எதற்காக வந்திருக்கிறாள் என்று தான் புரியவில்லை. அன்று இரவு ஒரு மணிக்கு மேல் விக்ரமிற்கு போன் செய்தான் சித்தார்த்.​

“என்னடா சித்து இந்த நேரத்துக்கு போன் செய்து இருக்கே? ஆஸ்பிட்டல்ல எதாவது ஆக்சிடென்ட் கேசா? நீ ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுடு. நான் பார்த்துக்கிறேன்” என்றான் விக்ரம்.​

“டேய் நான் அதுக்காக போன் செய்யலைடா” என்ற சித்தார்த் எலிசாவின் வரவை பற்றியும் மனைவி நயனியின் முடிவைப்பற்றியும் கூறினான்.​

“சரி உன் மனைவி கிட்ட போனை குடு, நான் அவங்களுக்கு விளக்கமா சொல்றேன். அந்த எலிசாவை வேலையில் சேர்த்துக்க வேண்டாம்னு புரியற மாதிரி சொன்னால் சிஸ்டர் புரிஞ்சுக்க போறாங்க” என்றான் விக்ரம்.​

“டேய் அவ தூங்கறாடா. என் பொண்டாட்டியை சமாதானம் செய்து அந்த எலிசாவை துரத்தறதுக்கு எனக்கு தெரியாதா? நீ என்ன சிபாரிசு செய்ய வேண்டி கிடக்கு”என்றான் சித்தார்த் எரிச்சலாக​

“இப்போ என்ன தான்டா பண்ண சொல்றே? இன்னைக்கு தான் தூங்கலாம்னு வீட்டுக்கு வந்தேன். அது பொறுக்கலையாடா உனக்கு?” என்று அலுத்துக் கொண்டான் விக்ரம்.​

“டேய் விக்ரம், பி சீரியஸ் (Be Serious) இந்த எலிசாவை நான் விரட்டிட்டால், அவள் வேறே எதாவது மருத்துவமனைக்கு போய் வேலைக்கு சேர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அவள் ஏதோ ஒரு மோடிவ்வோட (Motive) தான் வந்து இருக்காள்னு எனக்கு தோணுது” என்றான் சித்தார்த்.​

“அப்படி என்ன மோடிவ்வா இருக்கும்னு நீ நினைக்கிறே?” என்றான் விக்ரம் சீரியசான குரலில்.​

“அது தான் எனக்கு தெரியலைடா. ஆனால் மனசுக்கு தப்பா தோணுது. அவளை எனக்கு நல்லாவே தெரியும். என்னாலயே என்ன விஷயம்னு கெஸ் பண்ண முடியலை. வேறே ஆஸ்பிட்டலுக்கு போய் ஏடாகூடமா எதாவது செய்துட்டாள்ன்னா நஷ்டமாக போறது பணமோ நகையோ இல்லை. பொதுமக்களோட உயிர்” என்றான் சித்தார்த்.​

சற்று நேரம் யோசித்த விக்ரம். “சரி, நீ அவளை உன்னோட ஆஸ்பிட்டல்ல அப்பாய்ன்ட்மென்ட் பண்ணிடு” என்றான்.​

“என்னடா சொல்றே? எனக்கு ஏதும் பிரச்சனை வராதா?” என்றான் சித்தார்த் அதிர்ச்சியாக.​

“நீ இப்போ என்கிட்ட சொன்னதையே நான் கம்ளெய்ன்டா எடுத்துக்கிறேன். நேரம் கிடைக்கும் போது ஸ்டேஷன் வந்து கையெழுத்து போடு. அந்த எலிசாவை உன் ஆஸ்பிட்டல்ல விட்டுட்டு நீ கொஞ்ச நாளைக்கு அங்கே போகாதே. எலிசா சுதந்திரமா செயல்படட்டும், அதுக்கப்புறம் அவளுக்கு யாரெல்லாம் உதவி செய்யறாங்கனு கண்டுபிடிக்கணும்” என்றான் விக்ரம்.​

“எக்ஸாட்லி எனக்கும் அதுதான் தோணிட்டு இருந்தது விக்ரம். ஆனால் இதை நானாக ரிஸ்க் எடுத்து செய்ய முடியாதே. அதனால் தான் உனக்கு போன் பண்ணி உதவி கேட்டேன்” என்றான் சித்தார்த்.​

“சூப்பர்டா, நீ டாக்டர் ஆகறதுக்கு பதில் போலீஸ் ஆகி இருக்கலாம். உனக்கு எப்போ எலிசாவோட மோடிவ் என்னனு தெரிய வருதோ எனக்கு இன்பார்ம் பண்ணு, மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்றான் விக்ரம்.​

நடந்ததை விக்ரம் விளக்கி சொல்லும் போதே சித்தார்த் இடையிட்டான். “நான் பிளான் பண்ணது போல தான் நடந்தது. மருந்துகளை வாங்கறதுக்கும் தெரிஞ்சு தான் proceedனு மெசேஜ் அனுப்பினேன். சேம்பல் மெடிசன் வாங்கி என்னனு தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன். ஒன்லி பார் சேம்பல்னு (only for Sample) நான் குறிப்பிட்டு இருக்கணும்.​

ஜனனிக்கு நம்ம ஆஸ்பிட்டல் விதிமுறை என்னனு தெரியும் என்பதால நான் கொஞ்சம் கவனம் சிதறிட்டேன். ஆனாலும் மொத்தமா எல்லா மருந்தையும் வாங்கி அதை எல்லா டிபார்ட்மென்ட்க்கும் டிஸ்டிரிபியூட் பண்ற அளவுக்கு ஜனனி போவாங்கனு நான் நினைச்சு கூட பார்க்கலை” என்றான் சித்தார்த் இப்போது ஜனனியை பார்த்து குற்றம் சாட்டும் குரலில்.​

ஜனனி எச்சிலை விழுங்கினாள், “டாக்டர், எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் நடுங்கிய குரலில்​

ஜனனி மேல் சித்தார்த்துக்கு முழுமையான சந்தேகம் இல்லை தான். ஆனாலும் அவள் எடுத்த பெரிய முடிவால் தானே இப்போது அவன் போட்ட திட்டப்படி நடக்காமல் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது? அவளை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.​

அசிஸ்டென்ட் கமிஷனர் விக்ரம் தன்னுடன் வந்த பெண் போலீசிடம் ஜனனியை கண் ஜாடைக் காட்ட, அவர்கள் அவளை தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.​

சித்தார்த், தன் மொபைலில் சற்று முன் பதிவு செய்த வீடியோவை விக்ரமிற்கு காட்டினான்.​

“டேய் சித்தார்த், இவர் உன்னோட ஆஸ்பிட்டல்ல வேலை செய்த டாக்டர் கிருஷ்ணன் தானே?” என்றான் விக்ரம்.​

“ஆமாடா என் மனைவிகிட்ட வம்பு செய்தான்னு அவனை என் ஹாஸ்பிட்டல்ல இருந்து விரட்டிட்டேன். அப்புறமா தான் தெரிஞ்சது, அவன் பேரு கிருஷ்ணன் என்பதால அவன் தன்னை உண்மையான கிருஷ்ணனா நினைச்சுட்டு இருக்கான்னு. நிறைய பெண்கள் கிட்ட தப்பா நடந்து இருக்கான், மிரட்டியும் ஆசைக்காட்டியும் தன்னோட இச்சைக்கு பயன்படுத்தி இருக்கான்.​

அதனால மருத்துவர்கள் அசோசேயனில் அவனை பத்தி கம்ளெயண்ட் பண்ணேன். அவங்க விசாரிச்சதுல அவன் சில சமயம் நோயாளிகள் கிட்டயும் தப்பா நடந்து இருக்கானாம், அதுமட்டுமில்லாமல் மற்ற மருத்துவமனைகளில் இருந்தும் அவன் மேல வேற புகார்களும் இருப்பது தெரிய வந்திருக்கு. அதனால மருத்துவர் உரிமத்தை ரத்து செய்துட்டாங்க” என்றான் சித்தார்த்​

“ஓ ஐ சி, (Oh I see) அப்போ அந்த கிருஷ்ணன் உன் மேல இருக்கிற பகையை தீர்த்துக்க தான் இப்படி செய்திருக்காரா? ஆனால் இங்கே இருக்கிற வயதான டாக்டர் கிருஷ்ணனுக்கும் எலிசாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்?” என்று தாடையில் தட்டி யோசித்தான் விக்ரம்.​

“அதுக்கு தானடா உன்னை வரவழைச்சு இருக்கேன். எலிசாவோட அறையை வெளிப்பக்கமா பூட்டி வைக்க சொல்லி இருக்கேன். அவளையும் அந்த கிருஷ்ணனையும் நீதான் விசாரிக்கணும்” என்றான் சித்தார்த்.​

விக்ரம் மற்ற சில அதிகாரிகளை மருத்துவமனையின் மொத்த சிசிடிவி பதிவுகளையும் பார்வையிட சொல்லிவிட்டு, சில பெண் போலீஸ் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, எலிசா இருந்த அறைக்கு சென்றான்.​

எலிசா வெளியே நடப்பதை முழுதாக அறிந்துக் கொள்ளா விட்டாலும், ஏதோ பிரச்சனை என்ற வரையில் புரிந்துக் கொண்டாள். இப்போது ஸ்டீவன் ரிச்சர்ட் உடன் தான் பேசிக் கொண்டிருந்தாள்.​

எதிர்பாராத நேரத்தில் அறைக்கதவை படாரென்று திறந்துக் கொண்டு விக்ரமும் அவன் ஆட்களும் அறைக்குள் நுழையவும் பதறி போனாள் எலிசா.​

விக்ரமின் அனுமதியோடு பெண் போலீஸ் அதிகாரிகள், அவளை அடித்து துன்புறுத்தி விசாரிக்க தொடங்கி விட்டனர்.​

ஏசி அறையில் சொகுசாக இருந்த எலிசாவின் மென்மையான உடல், போலீசாரின் சில ஊமை அடிகளுக்கே தாக்கு பிடிக்காமல் துவண்டு போனது. மருந்துகளை புழக்கத்தில் விட்டு விட்டு கிளம்பி விடலாம் என்பதே அவளின் நோக்கமாக இருந்தது. இத்தனை சீக்கிரம் தான் பிடிபட்டு விடுவோம் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவள்.​

“எலிசா, நீ இப்போ இன்டர்நேஷனல் கிரிமினல், ஒழுங்கா உன் மோடிவ் என்ன? யாரெல்லாம் இதுக்கு பின்னாடி இருக்காங்கனு சொல்லிடு. நீ சொல்லலைனா, இங்கேயே உன்னை சாகடிச்சுட்டு ஆக்சிடென்ட் மாதிரி காட்டிட்டு போயிட்டே இருப்பேன்” என்றான் விக்ரம் இரக்கமே இல்லாத குரலில்.​

பதற்றத்துடன் “நோ, நான் சொல்லிடுறேன்” என்ற எலிசா பேச தொடங்கினாள்.​

 
Status
Not open for further replies.
Top