ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 20

திரும்பி ஸ்டேஷன் செல்லும் வழியில், "சார் அந்த பையன் பேரு ராம்குமார். டெக்ஸ்ட்ரான்னு ஒரு ஐடி கம்பெனியில வொர்க் பண்றான், அடுத்து அவன விசாரிக்க போறோமா சார்?" என்றான் சொக்கலிங்கம் விநாயகம் கொடுத்த தகவலை நீட்டியபடி.

"ம்ம் விசாரிப்போம் சொக்கு. நீங்க எதுக்கும் இந்த விநாயகத்த ஃபாலோ பண்ணவும் ஆளனுப்புங்க"

"சார் இவரு கில்லரா இருக்க சான்ஸ் இருக்கா?" என்றான் ஆர்வமாக,

"ம்ச் சொக்கு ஓவர் ஆர்வத்துல நிறைய கோட்ட விடுறீங்கன்னு நினைக்கிறேன். இந்த விநாயகம் எதுக்கு அந்த ராம்குமார் பத்தி தானா வந்து சொல்லணும்னு யோசிக்கணும். இவருக்கும் ப்ரின்ஸிபலுக்கும் எதும் ப்ராப்ளம் இருக்கா, இல்ல இவருக்கும் அந்த ராம்குமாருக்கும் ப்ராப்ளமா? எதுக்காக அவன பத்தி அன்னைக்கு சொல்லாம இன்னைக்கு வந்து சொல்றாருன்னு தெரியணும். ஃபாலோ பண்ணுங்க எதுக்கு வேணாலும் உதவும்" என்றவன் ஸ்டேஷன் வரவும் இறங்கிக் கொள்ள, சொக்குவும் அடுத்த வேலையாக கைதி ஒருவனை நீதிமன்றம் ஒப்படைக்க கிளம்பிவிட்டான்.

மேலும் நான்கு நாட்கள் சென்றிருந்தது. அன்று சனிக்கிழமை, மரகதவல்லி விடுமுறையென வீட்டில் தான் இருந்தாள். முத்துராமனும் டிவி முன் அமர்ந்திருந்தார். மதிய உணவை முடித்துக் கொண்டு வரவேற்பறையில் தான் மூவரும் அமர்ந்திருந்தனர்.

"ஏங்க நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாக்கு சம்பந்தி வீட்ல எல்லாரையும் வர சொல்லுவோமா? அவுக தெரு கோவில் பொங்கலுக்கு நம்மளயும் கூப்புட்டாங்க தானே அப்ப நம்மளும் கூப்புடனும்ல?" என்றார் அகிலா திடீரென.

"ரெண்டு நாளா தான் அவங்க இந்த பக்கம் வரல, அதான் என் மாமியார தேடுது போல அம்மாக்கு" என்றாள் மரகதவல்லி.

"உனக்காகத்தேன் அவுகட்ட அவ்வளவு பழகுதேன்"

"அடேங்கப்பா அவங்கட்ட நீ என்ன என்னமா புகழுவன்னு பாத்து பாத்து பூரிச்சு போயிட்டேன் போம்மா"

"பாப்பா. அவுக ரொம்ப நல்லமாதிரி பழகுறாங்க. நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உன்ன கட்டி குடுத்துட்டு வருவியா மாட்டியான்னு அவங்கள எதிர்பார்த்து இருக்கணும். இதே அவங்கட்ட நல்லா ஒட்டிட்டா யோசிக்காம‌ நாங்களே வந்து போய் இருப்போம். அதான் அம்மா உன் மாமியார் வீட்டோட ஒட்டி பழகுறா" என்றார் முத்துராமன்.

"அதுமட்டுமில்ல அவுகளும் எந்த பாசாங்கும் இல்லாம பழகுதாங்க. நல்ல மாதிரி மனுஷங்க. இவ எதாவது கோனகால சாய்ச்சா கூட அவ மாமியார் பொறுத்து போயிடுவாக. இவளும் சமத்தா பொழைச்சுகிட்டான்னா போதும். எனக்கு அந்தம்மாவ அம்புட்டு புடிச்சுருக்கு" என்றார் மனதாரவே அகிலா.

"பாத்துக்கோங்கப்பா என்கூட அம்மாவும் கிளம்பி வந்துட்டாங்கன்னா உங்கபாடு திண்டாட்டமாகிடும்"

"போடி உளறாம. இப்ப அவங்கள கூப்பிடணும். நேர்ல போய்ட்டு வருவோமா?" என்றார் முத்துராமனிடம்.

"என்ன வேணா செய்ங்க, என்ன வச்சு மட்டும் எந்த ப்ளானும் செய்யாதீங்க ப்ளீஸ்"

"ரொம்பத்தேன் சலிச்சுக்குறவ மாதிரி நடிச்சுருவா, அப்றம் பாத்தா வேலைல இருக்க மாப்ளைய போட்டு நச்சு பண்ணி கூட்டிட்டு வந்து நிப்ப. ஆனா அம்புட்டு கோவபடுத மனுஷன எப்டிடி பேசி வரவைக்குற? உன் மாமியாருக்கு அதுதேன் ஆச்சரியமே அதான் உன்னயே எல்லாத்தையும் செய்ய வைக்குதாக. நீ மட்டும் எப்டி செய்த? நொரநாட்டியம் நிறைய பேசுவியே நீ எப்டி அவர சமாளிக்குற?"

அவர் பேச பேச இவள் முறைத்தே பார்க்க, "நீ சமாளிப்ப, சாமர்த்தியசாலி தான். இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் உன் பேச்ச அவர் கேக்குறது வேற, இப்பவே எப்டி கேக்காரு?அவர்ட்ட பேச அவுக அம்மாவே அம்புட்டு பயப்புடுதாக நீ எப்டி தைரியமா பேசுத?" அவர் சந்தேகம் நீண்டு கொண்டே செல்ல,

"கூட்டணி அமைச்சு ப்ளான் போட்டு கோர்த்து விட்டுட்டு சந்தேகம் வேற வருதோ உனக்கு? போயிரும்மா இல்ல தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ" என்றாள் கையிலிருக்கும் நோட்பேடை தூக்கிக் காண்பித்து.

"பாத்தீங்களா எப்டி பேசுதான்னு? இப்டி அங்கையும் போய் பேசுனா நல்லா இருக்க மாமியாரையும் இவளே மாத்தி விட்ருவா"

முத்துராமன், "அவளுக்கு எங்க எப்டி பேசணும்னு தெரியும். நீ போய் கிளம்பு போ. அவங்கள கூப்பிடணும்னு சொன்னல்ல போ சேலை மாத்திட்டு வா கிளம்புவோம்" என்கவும்,

"ஆடி மாசமா இருக்கதால, எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்ய‌ வேண்டியிருக்கு. இன்னும் கல்யாண வேலை எம்புட்டு இருக்கு. ஆனா அமாவாசை, பௌர்ணமி, ஆடி பெருக்குன்னு மூணு நல்ல நாள்‌தான் இருக்கு. அதான் வேலை ஓட மாட்டேங்குது. இந்தா வாரேன் இருங்க, இவட்ட பேசிட்ருந்தா ஒரு கதையும் ஆவாது" என சொல்லிவிட்டே எழுந்து சென்றார்.

"என்னைய எதாது சொல்லாம உனக்கு நிமிஷம் கழியாதுல்லம்மா" என இவளும் பேச,

"விடு பாப்பா எதுக்கு அவகிட்ட‌ மல்லுக்கு நிக்கிற?"

"நா நிறைய வாய் பேசுவேனாம் என்னைய கூட்டிட்டு போய் வச்சு பாத்தா தான் இவங்க இங்க படுற கஷ்டம் என்னன்னு அவங்களுக்கும் தெரியுமாம். நேத்து ஃபோன்ல சொல்லிட்ருக்காங்க"

"அவங்க விரசமில்லாம பழகுறதால ப்ரண்டு மாதிரி பழகிட்ருக்கா அதான் அப்டி பேசுதாடா"

"அதுசரி அவங்க ஃப்ரண்டஷிப்ப வளக்க என்ன ஷிப்பா யூஸ் பண்ணுவாங்களா?"

"நீதான் அவங்க ரெண்டு பேரும் ப்ரண்டாகவே காரணம், அப்ப பேச்சும் உன்ன வச்சு உன்ன சுத்தி தான இருக்கும். இதுல ஜோசியர் சொன்னதும் வேற யோசிக்க வேண்டிய இருக்குல்ல?"

"எது எங்கள லவ் பண்ண வைக்குறதா? ஏன்ப்பா நீங்களும்?"

"மாப்ள உன்ட்ட நல்லமாறி பேசுவாரா? அன்னைக்கு என்ட்ட ஃபோன்ல பேசும்போது எடுத்ததும் அவ்வளவு கறாரா பேசுனாரு, என்னடா இவ்வளவு கோவபடுதாரேன்னு கூட இருந்துச்சு ஆனா கோவத்துலயும் அவ ஆசை சரிதான் ஆனா எனக்கு நேரமில்ல பாத்தீங்களான்னு பேசுனாரு எனக்கு அப்படியே புல்லரிச்சுட்டு"

பாவமாக பார்த்தாள் அவரை, 'மத்தவங்களுக்கு புல்லரிக்குறளவுக்கு பொய்ய அவுத்து விடறது, அப்றம் பொய்யா அப்டினாங்குறது, ப்பா அவரு ஒரு ப்ராடு ஏசிபி' என நினைத்துக் கொண்டே தான் பார்த்திருந்தாள்.

"உன்ட்ட நல்லமாறி பழகுவாரு தான? கோவபட்டாலும் நீ கொஞ்சம் பொறுமையா போயிடு பாப்பா. மனுஷனுக்கு வெளில ஆயிரம் டென்ஷன் இருக்கும். நீதேன் எப்பவும் அவருக்கு ஆறுதலா இருக்கணும்"

"அப்படி நல்லா எடுத்து சொல்லுங்க" என்றவாறு பளபளவென்று கிளம்பி அறைக்குள்ளிருந்து பேசிக்கொண்டே வெளியே வந்தார் அகிலா.

'அவருக்கு நாந்தான் என்டர்டெயின்மென்ட்னு தெரியாம இன்னும் நா ஆறுதலா இருக்கணும்னா என்ன சொல்ல, உனக்கு குடுத்து வச்சது அந்த நக்கல் புடிச்ச ஏசிபி தானுங்கும் போது, பொறுமையே பெருமைன்னு போயிடுடி' என எப்போதும் போல் அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.

"எதுக்கு நீ இப்ப பட்டு கட்டிருக்க?"

"பின்ன சம்மந்தி வீட்டுக்கு போறோம்ல?"

"கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்" என விரட்டியவளின் முதுகில் தட்டிவிட்டு அவர்கள் கிளம்பிவிட, இவள் வேலையில் ஆழ்ந்தாள்.

அவர்கள் சென்று அழைத்துவிட்டு வர இரவாகிவிட்டிருந்தது. வந்ததும் மீண்டும் கோவில் கிளம்பி சென்றுவிட்டனர். இவளுக்கு தான் காரணம் புரியவில்லை, "எதுக்கும்மா இந்நேரம் அவசரமா கோவிலுக்கு போறீங்க?" என நிறுத்திக் கேட்டதற்கும் வந்து சொல்றோம் என சென்று விட்டிருந்தனர்.

அவர்கள் வரும் முன் அவன் மூலம் செய்தி வந்திருந்தது. "என்ன மரகதம் நாளைக்கு கூழ் ஊத்த போறீங்களாம்? என்ன வேண்டுதல்? சாந்தி முகூர்த்தம் சாந்தியா நடக்கணும்னா?" என தான் பேச்சையே ஆரம்பித்தான்.

"கூழா?"

"ம்ம் என்ன கூப்பிட மாட்டியா அப்போ? பாசமு இல்ல மரியாதையும் இல்ல உன்ட்ட? இப்படிதான் அந்த மந்தாகினியும் செய்வா"

"ஏங்க நீங்க என்ன சொல்றீங்கனே புரியல"

"மந்தாகினி என்ன சொல்லுவான்னு புரியலையா? இரு தெளிவா சொல்றேன். நீ கேட்டு சொல்லாம இருப்பேனா?"

"நா அத கேக்கல. கூழ் ஊத்தறோம்னு சொன்னீங்களே அத கேட்டேன்"

"நீங்க ஊத்த போற கூழ் பத்தி என்னையே கேப்பியாடி நீ? கயிறு கட்ட இஷ்டமில்லாத மாதிரி இதுக்கும் கூப்பிட இஷ்டமில்லன்னு சொல்லிட்டு போடி. சாந்திய அவங்க பார்க்கட்டும் சாந்தி முகூர்த்தத்த நா பாத்துக்குறேன்"

"ஏங்க" என்றாள் பொறுமை இழந்த குரலில்.

"ஏங்கங்க?"

'கொழுப்பெடுத்த ஏசிபி' என வாய்க்குள் திட்டிவிட்டு, "என்ன பண்றீங்க? சாப்டீங்களா?" என்றாள் பேச்சை மாற்ற எண்ணி.

வீட்டிற்கு வந்திருந்தவன் சட்டையை கழற்றி ஹாங்கரில் மாட்டிவிட்டு, "சாப்பிடத்தான் ஆசையா இருக்கு. ஆனா கைக்கிட்ட இல்லையே?" என அவன் கையைத் தூக்கி அலுப்பெடுத்துக் கொண்டு சொல்ல,

"டிஃபன கேட்டேங்க" என்றவள் இப்போதே தலையை தாங்கி விட்டாள்.

"நானு மேகிய தான்டி சொன்னேன். காலி ஆகிடுச்சு கடை தூரமா இருக்குன்னு"

'இவர்ட்ட அது இது எதுல வர்ற மாத்தி யோசி மாதிரி மாத்தி மாத்தியே தான் பேசணும் போல' என புலம்பி விட்டு, "வீட்டுக்கு வந்துட்டீங்களா?" என்றாள்.

"நா உனக்கு ஃபோன் பண்ணத வச்சே கண்டுபுடிச்சுருக்க வேணாமா நீ?"

"சரிங்க சாரிங்க. இங்க மாரியம்மன் கோவில் தெருகட்டு பொங்கல். அதுக்கு அங்க உங்க வீட்ல எல்லாரையும் வர சொல்லலாம்னு அம்மாவும் அப்பாவும் போய்ட்டு வந்தாங்க"

"ம்ம் அங்க வச்சுதான் உங்கப்பா ஃபோன் போட்டு நாளைக்கு நம்ம வீட்டு சார்பா மாரியம்மனுக்கு கூழ் ஊத்துறோம் வந்துடுங்க மாப்ளன்னு கூப்பிட்டாரு. எனக்கு வர கஷ்டம் மாமா அம்மா வருவாங்கன்னு சொல்லிட்டு வச்சேன். ஆனாலும் வருங்கால பொண்டாட்டி கூப்பிட்டா வரலாம்னு பாத்தா கூப்பிட‌கூட மாட்டேன்ற நீ?"

"உங்களுக்கு வேலை இருக்கும்னு தான் கூப்பிடலங்க. கூழ் ஊத்துற விஷயமே நீங்க சொல்லித்தான் தெரியுது. அப்றம் வந்தாலும் நீங்க வீட்டுக்கு வர மாட்டீங்களே, இங்க எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணுவாங்க"

"சோ வாட் நா கோவில் வந்துட்டு கிளம்பிடுறேன் நீ எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திடு"

"எதே மறுபடியுமா?"

"என்ன மறுபடியுமா? இனி வாழ்க்கை முழுக்க நீதான சாப்பாடு போடணும்"

"சும்மா இருங்க. நீங்க தப்பு தப்பா சொல்லி தந்து எனக்கு எல்லாம் தப்பு தப்பாவே கேக்குது" என்றதும் அவன் குலுங்கி சிரித்தான், ஆனால் அதும் அவளுக்கு தெரியாமல்.

"லாயர் மேடத்துக்கு எல்லாத்திலையும் சந்தேகம். சரி வருவியா மாட்டியா"

"நா வரமாட்டேன் ஆள விடுங்க"

"இந்த மந்தாகினி இருக்கால்ல"

"அவதான் இப்ப இல்லைல விடுங்க. நாளைக்கு வாங்கன்னு நா கூப்பிடணும் அவ்வளவு தானே? ப்ளீஸ் வாங்க, வரும்போது ஒரு ஃபெவிகால் வாங்கி வாய ஒட்டிட்டு வாங்க போதும் எனக்கு"

"கட்டிவிட தான் மாட்டனா ஒட்ட வைக்கவும் மாட்டியா?"

"ஏங்க"

"பெவிகால கேட்டேன் டி"

"முடியலங்க"

"கோட்டா ஓவர். பரவால்ல நல்லா ட்ரைன் ஆகுற"

"ஆமா இந்த ஏசிபிய சமாளிக்க ட்ரைன் ஆகிட்ருக்கேன்" என்றாள் தலையில் தட்டிக்கொண்டு.

"உன்னால முடியும் மரகதம். உன்னால மட்டுந்தான் முடியும்" என்றான் அந்த மரகத கள்வன் முகம் நிறைந்த குறும்புடன்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21

பாண்டியன் மரகதத்திடம் பேசி முடித்து வெளியே வர, அந்நேரம் "சார்" என அழைத்துக் கொண்டு டிஃபன் கேரியருடன் உள்ளே வந்தான் சொக்கலிங்கம்.

"வாங்க சொக்" என்றவாறு இவன் சாப்பிட அமர்ந்து விட, காலிங் பெல் அடித்தது.

"இந்நேரத்துல யார் சொக்கு?"

"தெரியல சார். வெளில பரத் நின்னானே" என்றவன் பாதி மூடியிருந்த கதவை நன்கு திறந்து வெளிக் கேட்டை பார்க்க,

"சார பாக்கணும்னு நிக்காரு சார். காலைல வாங்கன்னு சொன்னாலும் கேக்கல" என்றான் பரத்.

"சார் யாரோ வயசான ஒருத்தர் வந்துருக்காரு" என்றான் திரும்பி மகிழிடம்‌.

"வர சொல்லுங்க" என்றவன் உண்ணத் துவங்க, அந்த வயதானவர் உள்ளே வந்தார்.

"யார் நீங்க?" என்றான் சொக்கலிங்கம்,

"சார் என் பேரு அழகர், உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டு போலாம்னு வந்தேன். போலீஸ் ஸ்டேஷன் வந்தா பாக்கவே விடமாட்டுக்காங்க. அதான் வீட்டுக்கே வந்துட்டேன்" என்றார் உள்ளே அமர்ந்திருந்தவனையும் பார்த்தவாறு.

"உள்ள வாங்க, சொக்கு கூட்டிட்டு வாங்க" என்றதும் இருவரும் உள்ளே செல்ல,

"உக்காருங்க" என எதிர் இருக்கையைக் காண்பித்துத் தண்ணீர் டம்பளரையும் அவர் முன் வைத்தான்.

"சார், இப்ப தொடுத்து கொலை நடக்குதுல்ல சார், அந்த கொலைகள ஆவி வந்து பழிவாங்குதுன்னு சொல்லுதாங்க தான சார், அது பொம்பள ஆவியா சார்?" என்றதும் பாண்டியனும் சொக்குவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"எதுக்கு கேக்றீங்க?"

"அது என் பொண்டாட்டியான்னு தெரியணும் சார்"

"உங்க பொண்டாட்டி ஏன் ஆவியா வந்து அவங்கள பழி வாங்கணும்?" என்றவன் தண்ணீரை எடுத்துப் பருகினான்.

"ஆறு மாசத்துக்கு முன்ன நானும் என் பொண்டாட்டியும் ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வண்டில வீட்டுக்கு போயிட்ருக்கும் போது, அவ கழுத்துல கிடந்த பத்து சவரன் செயின அத்திழுத்து போட்டானுங்க, அதுல கீழ விழுந்து படுக்கைல கடந்து ரெண்டு மாசம் முன்னதான் மனசு நொந்து போய் சேந்தா சார்" என அவர் குலுங்கி அழ,

மீண்டும் தண்ணீர் டம்பளரை அவரிடம் நகர்த்தி வைத்தவன், "போலீஸ்ல அவங்கள கம்ப்ளைண்ட் பண்ணலையா?"

"பண்ணேனே நடையா நடக்க தான் உட்டாங்களே தவிர எதுவும் செய்யலையே. சீர்‌ திருத்த பள்ளில கூட புடிச்சு போட முடியல சார் அவனுங்கள, சின்ன பசங்களா சார் அவனுங்களாம்? சும்மா" என அவர் கொலைவெறியோடு பேசப் பேச சாப்பிட்டு முடித்து அமைதியாகக் கேட்டிருந்தான் பாண்டியன்.

"அது ஆவிலாம் இல்ல எவனோ கொன்னுட்டு ஆவி பக்கம் திருப்பிவிட ட்ரை பண்றான், நாங்க ஆள‌ சீக்கிரம் புடிச்சுருவோம் நீங்க இப்ப போய்ட்டு வாங்க" என அவன் எழுந்து கொள்ள,

"அப்படி கொல்றவன் இருக்காம்னா அவனும் என்னமாதிரி பாதிக்கபட்ட ஒருத்தனா தான் சார் இருக்கும்"

"சரி பாக்கலாம்" என்றவன், "கிளம்ப சொல்லுங்க சொக்கு" என்றவன் செல்லைப் பார்த்துக் கொண்டே கையை கழுவ சமையலறைக்குள் சென்று விட்டான்.

சொக்கலிங்கம், அழுபவரை சமாதானம் சொல்லி அழைத்துச் சென்று வெளியே விட்டு வந்தவன், "சார் அந்த பசங்க மேல நிறைய கம்ப்ளைண்ட் இருக்கும் போலயே சார். எம்.எல்.ஏ சப்போர்ட்ல தப்பிச்சுருப்பானுங்களோ?"

"இருக்கலாம் சொக்கு. இவரையும் ஃபாலோ பண்ண ஆள் போடுங்க. நாளைக்கு அந்த ராம்குமார மீட் பண்ண அரேஞ் பண்ணுங்க. குட் நைட் சொக்கு" என்றுவிட, சொக்கலிங்கமும் இரவு வணக்கத்துடன் கிளம்பி விட்டான்.

அதே நேரம் அங்கு அகிலாவும், முத்துராமனும் வீட்டினுள் நுழைய, "ம்மா அம்மனுக்கு கூழ் காய்ச்ச போறியா?" என்றாள் மரகதவல்லி அவர்களை வாசலிலேயே நிறுத்தி,

"ஆமாடி உனக்கு மாப்ள சொன்னாகளா? வர சொல்லி நீயும் கூப்டியா? உங்கப்பா கூப்டதுக்கு நேரமில்லன்னுட்டாரு. வழிய விடு. நாங்க சாப்டாச்சு. உனக்கு மட்டும் தோசை ஊத்திக்கிறியா? நா படுக்கேன். காலைல எந்திச்சு நிறைய வேலை கடக்கு" அவர் போக்கில் அவர் பேசி செல்ல,

"ம்மா தோசை சுட்டு குடுத்துட்டு போம்மா"

"கல்யாணமாக போகுது இன்னும் சுட்டு சுட்டு உனக்கு ஊட்றேன். காலைல எழுப்பி விட்ருவேன், அதனால சீக்கிரம் தூங்கு சும்மா எதாவது புக்க திறந்து வச்சுட்டு விட்டத்த பாத்து உக்காந்துருக்காத, வீடெல்லாம் அலசணும் பூச சாமான விளக்கி எடுத்து வைக்கணும், கூழு காய்ச்சணும். உன் அத்த, சித்திமாறுலாம் நேரத்துக்குதேன் வருவாளுக, அதனால் நீதேன் சீக்கிரம் எந்துச்சு எனக்கு ஒத்தாசை பண்ணணும். பத்து மணிக்குள்ள கோவில்ல கூழ வச்சு சாமி கும்பிட்ரணும்"

"யார கேட்டு நீ இப்படி திடீர் ப்ளான்லாம் போட்டு வச்சருக்க? கோவில் திருவிழாக்கு கூப்பிட போறேன்னு தான போன?"

"ஆமா ஆனா உன் மாமியார்தேன் சொன்னாக, காத்துகருப்பு அண்டாம இருக்க வேண்டிக்கிட்டு மாரியாத்தாளுக்கு மருமவ கையால கூழ் காய்ச்சி நாலு பேருக்கு குடுப்போம்னு"

"உன்ன என்ன சொல்லிவிட்டேன் என்ன வேணா செய் என்னைய வச்சு செய்யாதன்னு சொல்லித்தான விட்டேன்" என இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

"சாமி விஷயம்டி சொன்னா சரின்னு கேக்க பழகு"

"ம்மா சாமிய நா மனசார கும்பிடுறேன் அத மாட்டேன்னு சொல்லல, மத்ததெல்லாம் நீயும் உன் ஃப்ரண்டுமா பாருங்க எனக்கு தெரியாது" என அறைக்குத் திரும்பியவள் மீண்டும் அவரிடம் வேகமாக வந்து, "இப்ப நா சொன்னத நாளைக்கு அவங்கட்ட அப்டியே டெலிகாஸ்ட் பண்ணுன?" என மிரட்ட,

"என்னடி மிரட்டுற? அலைஞ்சுட்டு வந்தவள நிக்க வச்சு படுத்துற. உங்கப்பாவ பாரு கூட‌ வந்தவ என்ன ஆனான்னு பாக்காம போய் நீட்டி நிமிந்தாச்சு" என இவளைத் தள்ளிவிட்டு கடந்து முத்துராமனைத் திட்டிக்கொண்டு அவர்கள் அறை சென்றார்.

'இவங்கள அங்க போக விட்ருக்கக் கூடாது. இல்லாத பேய்க்கு பயந்து ஒரு வேண்டுதல் வேறன்னு சொன்னா காதுல வாங்காம போறத பாரு' என நொந்து கொண்டு தோசையை ஊற்றச் சென்றாள்.

மறுநாள் காலையில் மகிழ்நன் பாண்டியன் வீட்டில், "ஏலேய் இன்னைக்கு லீவு தான, இந்த நாய்ங்க ரெண்டையும் குளிப்பாட்டி விட்டு கூட்டிட்டு வா, நானும் ரெண்டு வாரமா சொல்லுதேன் கேக்க மாட்டேங்க நீயி" என‌ வாசுகி வரதனை சொல்லிக் கொண்டிருக்க,

"உன் மூத்த மவேன் தனியா போனப்பவே இதையும் கூட்டிட்டு போ வேண்டியது தான? வாங்கி இங்கன விட்டுட்டு போவான் அத நாங்க குளிக்க வச்சு கக்கா கழுவி விட்டுன்னு பண்டுவம் பாக்கணுமோ?" என்றான் வரதன்.

"அவனையே நா இங்க கூப்பிட நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீ அவேன் வாங்குன நாய கூட அவங்கூட அனுப்பி வச்சுட்டு மொத்தமா விரட்டி விட்ரலாம்னு பாக்கியோ?"

"அவன நா ஒன்னும் போ சொல்லல"

"போ சொல்லித்தான் பாரேன். அவன்ட்ட நின்னு பேசுனாலே ஒன்னுக்கு போயிருவியான். ஆனா அவேன் இல்லாத நேரத்துல மட்டும் சத்தத்த பாரு, போன போட்டு அம்புட்டையும் சொல்லிருவேன் பாத்துக்க‌"

"அத்தே அவுக அத பாக்கட்டும். நீங்க பலகாரம்லாம் எடுத்து வச்சது போதுமான்னுட்டு ஒரு பார்வை பாருங்க. பூவும், புது பட்டும் கூட எடுத்து வச்சுட்டேன்" என வந்தாள் ஷீலா.

"மொதயே தெரிஞ்சுருந்தா சட்டையும் தச்சு வாங்கிருக்கலாம். நேத்தைக்குதான முடிவே பண்ணோம். சரி‌ இருக்கட்டும் அவட்ட இதுக்கு பொருந்துதாப்ல எதாது வேத்து சட்டை இருந்தா போட்டுக்க சொல்லுவோம். கிளம்புவோமா?"

"ம்ம் போலாம் த்தே, பிள்ளைகளுக்கு தலைய மட்டும் வாரி விட்ருதேன்"

"ஏட்டி அவள எங்க? விசாலா என்னட்டி பண்ணுத உள்ள இன்னும்" என்றவர் எடுத்து வைத்த பைகளை சரி பார்க்க,

"இந்தா வாரேன் த்த" என வெளியே வந்தவள் முகம் கலங்கி இருந்தது. அவள் பின்னரே வந்த அரசு முனங்கி கொண்டே வெளியேறிவிட்டான்.

"புருஷன் பொண்டாட்டி சண்டை போல அத்த விசாலாட்சி முகம் அழுத மாதிரி இருக்கு" என்றாள் அவரிடம் குனிந்து.

"அழுவுதாளா?" என வேகமாக திரும்பியவர், "ஏட்டி என்னாச்சு ஏன் முகத்த இப்டி வச்சுருக்கவா, அரசு என்னமு சொன்னானோ?" என்க,

"நல்ல புடவையா ஒன்னு எடுத்து தரலாம்லன்னு சும்மா விளையாட்டாதான் கேட்டேன் அதுக்கு புடிச்சு, என் அம்மா அப்பாவலாம் சொல்லி திட்டிட்டு போறாகத்தே உங்க புள்ள" என்றாள் அவள் கோவமாக.

"அவேங்கடக்கான் சோலியத்தவேன். வருமானத்த பெருக்க தெரியாம உன்னுட்ட எகிறிட்டு போறியான் போல விடு. மூத்தவன் கல்யாணதுக்கு ஒன்னுக்கு ரெண்டா நாம எடுப்போம் நீ முகத்த சரி பண்ணிட்டு வா, இப்டியே அழுதாக்குல வந்தா அவுக வீட்ல என்ன நெனப்பாக போ" என்றவர் "ஷீலா அம்புட்டையும் வண்டில ஏத்த சொல்லு உன் புருஷன" என்க,

"இந்தா தான உக்காந்துருக்காக நீங்களே சொல்லத்தான?"

"நா சொல்லி அவேன் எதையும் கேக்க மாட்டியான்னு தெரிஞ்சுட்டு, நீயே அவன மேச்சு கட்டு, நா உன் மாமாக்கு ஒரு ஃபோன போட்டு சொல்லிட்டு வாரேன் கிளம்புவோம்" என்றவர் போனுடன் பின் வாசல் செல்ல.

ஷீலா வரதனிடம், "ஏங்க இந்த பைய எடுத்து கார்ல வைங்க" என்றுவிட்டு இரு குட்டிகளுக்கும் குடுமி போட்டுக் கொண்டிருந்தாள்.

"நல்லா ரெண்டு மருமகளும் மாமியார கைக்குள்ள போட்டுக்கிட்டு எங்களுக்கு ஆட்டம் காமிக்கிறீங்கல்ல? இதுல அந்த வக்கீல் அம்மா வேற வந்து என்ன செய்ய போறாங்களோ? ஏற்கனவே என் அண்ணன் ரொம்ப பொறுமசாலிதேன், வரட்டும் அவேன் யார் பக்கம் பஞ்சாயத்து அப்ப நிப்பான்னு பாக்கணும்" என்றான் நக்கலாக.

"உங்க அண்ணன் சாமர்த்தியம்லா உங்களுக்கும் உங்க தம்பிக்கும்‌‌ சுட்டு போட்டாலும் வராது. போயி பைய அடுக்குங்க"

"நல்லா அவேன் கல்யாணம் முடிவானதுல இருந்து ஒரு சனி ஞாயிறும் பொம்பளைங்க வீடு தங்குறதில்ல சொல்லிட்டேன். நாங்க இங்க அவேன் கல்யாண வேலைய பாக்கணும் ஆனா அவேன் வேலை மட்டும் எப்பையும் போல கரெக்ட்டா நடக்கும், இத சொன்னா நாங்க பொல்லாதவனுங்க" என புலம்பிக் கொண்டே தான் அனைத்தையும் எடுத்து வைத்தான்.

"பிள்ளைக அம்புட்டையும் கேட்கிட்டு இருக்காங்க, அத்தான் வர்றப்போ செமத்தியா எதாது குடுத்தா, நீ சொன்னியா நீ சொன்னியான்னு என்னையும் அத்தையையும் கேக்க கூடாது நானும் சொல்லிபோட்டேன்" என்றாள் ஷீலா.

"விசாலா கிளம்பிட்டியா? சீக்கிரம் போனா மருமவளுக்கு கொஞ்சம் உதவலாம்னு நெனச்சேன் மணி இங்கேயே எட்ட தாண்டிட்டு கிளம்புங்கட்டி" என வேகமாக வாசுகி வரவும் தான் இருவர் பேச்சும் நின்றது. பின் பெண்கள் மூவருமாக காரில் ஏறி மரகதவல்லி வீடு வந்திறங்கினர்.

அங்கு அகிலா இரவே சொன்னது போல் மகளை எழுப்பி விட்டு எல்லா வேலையையும் செய்ய‌ வைத்திருந்தார். வேப்பிலை தோரணம் வாசலில் இருக்க, மஞ்சள் தண்ணி தெளித்து கலர் கோலம் வந்தவர்களை வரவேற்றது.

"என் மருமவ எம்புட்டு அழகா கோலம் போட்ருக்கா?" என்றார் வாசுகி அதை ரசித்து.

"அப்ப எனக்கு இனி கோலம் போடுற வேலை மிச்சம்னு சொல்லுங்கத்த" என்றாள் ஷீலா,

"அத அக்காளும் தங்கச்சியுமா பேசி‌‌ முடிவெடுங்கட்டி. ஆரு போட்டா என்ன எனக்கு வாசல்ல கோலமிருக்கணும் அவ்வளவுதேன். பாத்தியா வீட்டுக்குள்ள நுழையும்போதே எம்புட்டு நிறைவா இருக்கு"

"வாங்க வாங்க" என முத்துராமன் வரவேற்றதில், சமையலறையில் நின்ற அகிலா மரகதவல்லி இருவரும் வெளியே வந்து அவர்களும் வீட்டினுள் அழைத்தனர்.

"கோலம் நல்லா போட்ருக்க கண்ணு" என்றார் மருமகளிடமும்.

"அதெல்லாம் நல்லா போடுவா ஆனா போட‌ வைக்கதேன் நம்ம கடந்து இடிபடணும் மதினி" என்றார் அகிலா.

"ஏன்ம்மா அவங்கள என்ன முழுசா பாராட்ட கூட விட மாட்டேங்குற" என மரகதவல்லி அவர் காதுக்குள் திட்ட,

"அவங்க பாட்டுக்கு உன்ட்ட நெறையா எதிர்பாத்து ஏமாந்து நிக்கவா? பாவம் வெள்ளந்தியான மனுஷி வேற மனசு பொக்குன்னு போவும்ல?"

"உன்ன வச்சுகிட்டு" என முறைத்துவிட்டு திரும்ப ஷீலாவும், விசாலாட்சியும் அவளைதான் சிரிப்புடன் பார்த்திருந்தனர். வாசுகி முத்துராமனுடன் வர்ற வழியில நடந்த கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார். பிள்ளைகள் இருவரும் வீட்டைச் சுற்றிவரத் துவங்கியிருந்தனர். அடிக்கடி வருவதால் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கமாகியிருந்தது மரகதம் வீடு.

"எல்லாம் முடிச்சுட்டீகளா மதினி சீக்கிரம் வந்தா உங்களுக்கு உதவியா இருக்கும்னு வந்தேன். நீங்க எல்லாம் முடிச்சிட்டீகளோ?"

"கோயில போய் கேட்டோம் மத்தியானம் அன்னதானம் உண்டாம் அதனால கூழு குடுக்குறதுலாம் பத்து மணிக்கு முன்ன குடுத்துருங்கன்னு சொல்லிட்டாங்க மதினி அதேன் வேலைய விரசா முடிச்சுட்டோம். கூழும் வேக வச்சு இறக்கி ஆற வச்சாச்சு, தயிறு விட்டு கிண்டிட்டா போதும் கோயிலுக்கு கிளம்பலாம்"

"சரி அம்புட்டு தான நாம அந்த வேலைய பாக்குவோம். ஏட்டி புது சீலைய எடுத்து மருமவட்ட குடுங்க" என்றவர், "கண்ணு மஞ்ச கலருல எதாது வேற சேலைக்குள்ள சட்டை இருந்தா போட்டுக்கோ. நைட்டு போயி அவசரமா பாத்து எடுத்தோம், அதனால் நின்னு நிதானமா பாத்து எடுக்கல. மஞ்ச கலருதேன் முக்கியம்னு எடுத்துட்டு வந்தாச்சு. நீ சீலைய மாத்திட்டு வா, கோவிலுக்கு போவோம். என் மவன வர சொல்லிட்டல்லத்தா?" படபடவென அவர் பேசியதில் விழிக்கவே செய்தாள் மரகதம்.

"சொல்லிருக்கேன் அத்த ஆனா வருவாங்களான்னு தெரியாது"

"அதெல்லாம் நீ சொல்லி வராமையா போவியான். வந்துருவியான். கிளம்பிட்டானான்னு ஒரு ஃபோன போட்டுட்டு உடுப்ப மாத்திட்டு ஓடியா" என்க,

"எதுக்கு மதினி புது சேலைலாம்?" என அகிலா கேட்க,

"மருமவ வேண்டுதல் வைக்கா நாந்தானே புதுசு எடுத்து குடுக்கணும், அதானே முறை" என இருவரும் பேசிக்கொண்டே சமையலறை செல்வது தெரிய,

"எங்க பொருத்தத்த விட இவங்க ரெண்டு பொருத்ததந்தான் அமோகமா இருக்கு. வேண்டுதல இவங்க வச்சுட்டு நா வச்சேன்றாங்க" என சொல்லி திரும்ப, ஷீலாவும், விசாலாட்சியும் பூஜை அறையை அலங்கரிக்கத் துவங்கியிருந்தனர். அவர்களையும் பார்த்து சிரித்துக் கொண்டே கையிலிருந்த புடவையுடன் அவள் அறை சென்றாள்.

"ஏசிபிக்கு ஃபோன் போடுவோமா?" என யோசித்தவள், அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதையும் கணித்தேயிருந்தாள். இல்லையென்றால் எழுந்ததும் அவளுக்கு அழைத்து வம்பளந்துவிட்டு தானே பல்லே துலக்குவான், இன்று இன்னும் போன் வரவில்லை என்றால், 'சாருக்கு இன்னும் விடியல போல. அவர பிடிக்காத ஆவிக்காக நா இங்க காலங்காத்தாலயே எழுந்து இவ்வளவு வேலை பாப்பேனாம், சார் ஹாயா தூங்குவாங்கலாம். எழுப்பி விடுடி மேகி. பேயெல்லாம் இவர பிடிக்காது இவரு வழில போற எந்த பேயவாது வாலன்டியரா பிடிச்சு ஓட்டுனாதான் உண்டுன்னு சொன்னா யாரு இங்க கேக்குறா?' எனத் திட்டிக் கொண்டே அவனுக்கு அழைப்புவிடுத்தாள்.

அங்கு நல்ல உறக்கத்தில் இருந்தவன், அழைப்பு வரவும், ஒற்றைக் கண்ணைத் திறந்து செல்லை எடுத்து யாரென பார்த்தான், "ப்ராட்" என வரவும், அவ்வளவு உறக்கத்திலும் முகத்தில் ஒரு உல்லாச புன்னகை.

மீண்டும் கண்ணை மூடி படுத்தவாறு, அழைப்பை ஏற்று காதில் வைத்தான், "குட் மார்னிங் மரகதம்" என்ற வாக்கியத்துடன்.

"கோவிலுக்கு எப்ப வர்றீங்கங்க?" என்றாள் பவ்யமாக.

"எந்த கோவிலுக்கு மரகதம்?"

"ஏங்க இன்னைக்கு எங்க தெரு கோவில்ல உங்கள எந்த பேயும் பிடிச்சுட கூடாதுன்னு வேண்டிகிட்டு கூழு உத்தணும்னு காலைல இருந்து என்ன எங்கம்மா அந்த பாடு படுத்திருக்காங்கங்க, தயவுசெஞ்சு வந்து அந்த கூழ் ஒரு க்ளாஸ் வாங்கி குடிச்சுடுங்க ப்ளீஸ்"

"ஓ நேத்து உங்கப்பா கூப்பிட்டாறே அதா?"

"கூப்பிட்டது எங்கப்பா தான் ஆனா கூழ் காய்ச்சுற ஐடியா உங்கம்மாவோடது"

"அப்ப கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிகிட்டு நீ செய்யல வேண்டா வெறுப்பா செய்யப் போற?" என்றவன் நீட்டி முழங்கியதில்,

"நடக்காம விட்ர மாட்டீங்கன்னு உங்க மேல ஒரு அபார நம்பிக்கைங்க எனக்கு"

"நா நம்பிக்கை குடுத்து என்ன ப்ரயோஜனம், மரகதம் குடுக்க மாட்டேங்கிறியே" என்றதும் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 22

வெளியே கேட்ட பேச்சு சத்தத்தில் சேலையை கட்டிக்கொண்டேனாலும் பேசுவோம் என நினைத்து போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு சேலையை மாற்ற கை வைக்க, "மரகதம்" என்றவன் அழைப்பு அறை எங்கும் ஒலிக்கவும், பதறி மாராப்பை மீண்டும் போர்த்திக்கொண்டாள். அப்படியொரு படபடப்பாகிவிட்டது அவளுக்கு, அவன் அங்கேயே இருப்பது போன்ற ப்ரமையில்.

"மரகதம் என்ன பண்ற?" என்றான் பேச்சே இல்லை என்றதும்.

"ஒன்னும், ஒன்னும் பண்ணலையே" என்றவளின் படபடப்பில் போலீஸ்காரன் மூளை விளித்துக் கொண்டது,

"எங்க இருக்க நீ?"

"வீட்ல தான்"

"கோவில் கிளம்பலையா? அம்மா எப்ப வரேன்னாங்க?"

"அத்த, ஷீலா, விசாலாட்சி எல்லாரும் வந்தாச்சு, இனி கிளம்பதான்" என்றாள் திணறி.

"ஆனா குட்டீஸ் சத்தம் கூட கேக்கல?" அவன் ஆராய்கிறான் என்று புரியாமல், அவளின் குறுகுறுப்பை விரட்ட வேகமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"பாப்பா சேலைய மாத்திட்டியா? நாங்க எல்லா வேலையும் முடிச்சாச்சு வந்தா சாமி கும்பிட்டு கிளம்பலாம்" என அகிலா கதவை தட்டும் சத்தம் அவனுக்கும் கேட்டது.

"மாத்த தானம்மா போறேன்"

"இன்னும் மாத்தலையா நீ? உள்ள போய் அரைமணி நேரமா என்னடி செய்ற?"

"நீ பேசாம போ நா கட்டிட்டு வந்துருவேன்"

"சீக்கிரம் வா" என்றுவிட்டு அவர் செல்லவும்,

"நானும் பேசாம‌ இருக்கேன் நீ கட்டு மரகதம்" என்றான் அவள் கள்வன்.

"நீங்க வருவீங்கன்னு நம்பிட்ருக்காங்க, கிளம்பி வாங்க. நா வைக்றேன்" என்றாள் உடனே.

"நாம பேசிட்டே கிளம்பலாம் மரகதம்"

"இல்ல இல்ல வேணாம் நா சேரி மாத்தணும்"

"ஏன் வீடியோ கால்லயா இருக்க இப்படி பதறுர? வாய்ல சும்மா பேசிட்டு மாத்துறதுக்கென்ன, நான்லாம் உன்ட்ட பேசிட்டே எத்தன டைம் ட்ரஸ் மாத்திருக்கேன். ஷைனா ரெண்டு பேருக்கும் ஷை தான்மா. நாங்க மட்டும் என்ன வெக்கங்கெட்டவிங்களா?" என்றதும் தலையிலேயே தட்டிக் கொண்டாள்.

"நா எப்பங்க அப்படி சொன்னேன். எனக்கு அப்படி பழக்கமில்லன்னு தான சொல்றேன்"

"பழகிக்கோ மரகதம், என் குரல கேட்டுட்டே சேலை மாத்தவும் கட்டவும் பழகிக்கோ மரகதம்" என்றவன் கட்டிலில் இருந்து குதித்திறங்கி பல் துலக்க பாத்ரூமினுள் நுழைந்து கொண்டான்.

அவள் அங்கு கண்களையும் காதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு, "ஷு சுப்" என்க,

"சூப்பில்லடி அது கூழ். கூழ் தான ஊத்த போற?"

"ஏங்க ப்ளீஸ் முடியல என்னால, வெளில கூப்பிட்டுருக்காங்க. நா போணும்"

"நா வரணுமா வேணாமா?"

"வாங்க"

"வந்தா நீ கயிறு கட்டிவிடலன்னு எங்கம்மாட்ட சொல்லுவேன் பரவால்லையா?"

"நீங்க இன்னும் கட்டலையா அத?"

"ஒரு சொல் ஒரு செயல்னு இருக்குறவன்டி நானு. நீதான் கட்டிவிடணும்னு சொன்னேன்ல அப்ப நீதான் கட்டி விடணும்"

"கஷ்டங்க உங்களோட"

"சரி அப்ப என்ன பண்ணலாம்?"

"என்ன பண்ணணும்?" என்றாள் புரியாமல்.

"ஒன்னு கட்டிவிடுறேன்னு சொல்லு, இல்ல யார்ட்ட வேணா சொல்லிக்கோங்கன்னு சொல்லு, இல்ல வராதீங்கன்னு சொல்லு. வக்கீலுக்கு வாய்தா வாங்கவா தெரியாது"

"சத்தியமா உங்கட்ட பேச தெரியலங்க எனக்கு"

"கண்ணு கிளம்புவோமா?" என இப்போது வாசுகி வந்து கதவை தட்ட,

"டூ மினிட்ஸ் த்த இந்தா வந்துட்டேன்"

"சீக்கிரம் வா கண்ணு. சீலை ரொம்ப மொடமொடப்பா இருக்கா கட்ட வரலியா? பட்டு தானே அப்டிலா நிக்காதே? ஷீலாவ வர சொல்லவா?" என அவர் கேள்விகளை அடுக்க,

"வெளில அம்மா, உள்ள மகன், கடவுளே என்ன காப்பாத்துங்களேன் ப்ளீஸ்" என இவள் புலம்ப, "கண்ணு" என மீண்டும் வாசுகி தட்ட, "இல்ல இல்லத்த கட்டிட்டேன் இந்தா வரேன்" என்றவள், "ஏங்க ப்ளீஸ்ங்க, நீங்க வாங்க, நா சேரி மாத்துறேன். பை" என வைத்துவிட்டவள், அவசரமாக உடுத்த துவங்க,

குறும்பு சிரிப்புடன் அவன் வீடியோ அழைப்பில் வர, பதட்டத்தில் அவன் பெயரை மட்டும் பார்த்து விட்டு அழைப்பை எடுத்துவிட்டவள், "ப்ளீஸ் ப்ளீஸ், நம்ம டீல அப்றமா வச்சுக்கலாம், இப்ப மெனக்கெட்டு அந்த மந்தாகினின்னு ஆரம்பிச்சு வெறுப்பேத்தாதீங்க" என காதில் வைத்து அவள் பாட்டிற்கு பேசியவாரு, மஞ்சள் சட்டையை தேடும் பொறுமையின்றி அடர் நீல நிற சட்டை தான் முதலில் அணிந்திருந்தாள் அதே இருக்கட்டும் என விட்டு, புது புடவையை அதற்கு மேலேயே உடுத்த துவங்க,

"ஒரே இருட்டா தெரியுது மரகதம், எங்க வச்சுருக்க ஃபோன நீ?" என அவன் கேட்டதும் தான் பட்டென்று போனை விலக்கி பார்த்தாள், மொபைல் முழுவதும் அவன் முகம். அதிர்ந்து அவள் கண்ணை விரிக்க, அவள் பாவனையில் ‌அவனுக்கு வந்த சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக் கொண்டான்.

"என்ன மரகதம், பேசிட்ருக்கும் போதே கட் பண்ணிட்ட, ஆக்சுவலி நா மந்தாகினி பத்தி தான் சொல்ல வந்தேன், அது என்னன்னா?"

"அய்யையோ வீடியோ கால்" என்றவள் போனை தூக்கி கட்டிலில் வீசியேவிட்டாள், அங்கு ஒருவன் குலுங்கி சிரித்தது அந்த கவிழ்ந்து கிடந்த போனுடன் அமிழ்ந்து போனது. அவனுக்கு அவள்‌ முகம் தவிர்த்து ஒன்றுமே தெரியவில்லை தான், என்றாலும் அவளை படுத்திவிட்ட திருப்தியோடு கிளம்ப சென்றான்.

இங்கு அவளும் அவளை குனிந்து பார்த்துக் கொண்டாள், நேர்த்தியாக இல்லையானாலும் மேனியில் சேலையை போர்த்தி தான் நின்றிருந்தாள் அந்த வகையில் கொஞ்சம் மனதை நிதானபடுத்திக் கொண்டு, "ஏசிபி ஒருநாள் எனக்கு சான்ஸ் கிடைக்கும் அன்னைக்கு இருக்கு உங்களுக்கு" என கருவிக் கொண்டு, கைகள் நடுங்கவே சேலையை கட்டி முடித்தாள்‌.

அவள் வெளியே வர, இவள் எப்போது வருவாள் என அறையை பார்த்தபடி தான் அங்கு அனைவரும் அமர்ந்திருந்தனர், "எவ்வளவு நேரம்டி?" என திட்டிக்கொண்டே எழுந்து வந்த அகிலா, "சாமி கும்பிடு கிளம்புவோம்" என தீபாராதனை தட்டை எடுத்து நீட்ட, வாங்கி கற்பூரம் வைத்து சாமிக்கு காண்பித்து பின் அனைவருக்கும் அவளே காட்டினாள்.

"புள்ள சட்டை கிடைக்கலன்னு தேடிருக்குமாட்ருக்கு மதினி. பாருங்க போட்டுருந்த சட்டைக்கு மேலதேன் கட்டிருக்கா" என வாசுகி சொல்லவும்,

"ஆமாத்தே கிடைக்கல" என்றுவிட்டாள்.

"ஆனா இந்த கலரும் சேலைக்கு மேட்சா நல்லாருக்குக்கா உங்களுக்கு" என ஷீலா சொல்லவும் அவளுக்கும் ஒரு தலையசைப்பு தான். அங்கு ஒருவன் தான் பேசியே இவளை டயர்டாக்கிவிடுகிறானே அதனாலேயே மற்றவர்களிடம் அவளுக்கு வெறும் காற்றுதான் வருகிறது என்ற நிலைமை.

அடுத்ததாக எல்லாருமாக கிளம்பி கோவிலுக்கு சென்று கூழை மாரியம்மனுக்கு படைத்து வணங்கி முடித்தனர். ஆனால் ஏனோ மரகதம் கோவில் வாயிலை திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள். எதிர்பார்க்க துவங்கிவிட்டாள் போலும், இல்லை எதிர்பார்க்க வைத்து விட்டானா அந்த கள்வன். எதுவோ ஒன்று, "என்ன இன்னும் காணும்" என தேட துவங்கியிருந்தாள் மரகதவல்லி.

"அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ ஒரே ரேடியோ சத்தம் நல்லாவே பேசிக்க முடியல" என வாசுகி, அகிலாவின் சொந்தங்களுடன் கலகலப்பில் இருந்தார், ஏசிபியின் அம்மா என அவ்வளவு மரியாதையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர் மரகதவல்லியின் சொந்தங்கள்.

"இங்கன வச்சுக்கலாம், சாமி கும்பிட்டு வெளில வாரவங்களுக்கு குடுக்க சரியா இருக்கும்" என கூழ் பானையை ஒரிடத்தில் வைக்க, வரிசையாக மக்கள் அவர்களே வந்து வாங்கிக் கொள்ள துவங்கினர்.

இவர்களும் ஆளுக்கொரு கப்பை ஊற்றி குடித்துக் கொண்டனர், மரகதவல்லி மெதுவாக, "ம்மா கொஞ்சம் தனியா எடுத்து வைக்கலாம் அவங்கள இன்னும் காணும் வரவும் குடுக்கலாம். இல்லனா நா கொண்டு கூட குடுத்துட்டு வரேன்" என்றவளை, அவளை சுற்றி நின்ற அகிலா, ஷீலா, விசாலாட்சி மூன்று பேரும் ஒவ்வொரு பாவனையில் பார்த்தனர்.

"என்ன?" என்றாள்,

"அம்புட்டு நல்லவளாடி நீ?" என்றார் அகிலா,

"ம்மா இத அவருக்குன்னு செய்ய வச்சு தான என்ன காலைல இருந்து வேலை வாங்குன? பின்ன அவருக்கே குடுக்காம எப்டி?"

"அதான‌ பாத்தேன்" அவர் நொடிக்க,

"ம்மா அதெல்லாம் சும்மா, அக்கா சைட் அவுட்டாகியாச்சு, இனி அத்தான் சைடு மட்டும் நாம‌ டார்கட் பண்ணா போதும் கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்திடலாம்" என ஷீலா சிரிக்க,

"ஷீலா" என்றாள் தலையசைத்து மறுத்து.

"அக்கா அப்டிலா இல்லாமையா மீனாட்சிய பாக்க அடம்பிடிச்சு வர வச்சுருப்பாங்க?" என விசாலாட்சியும் சிரிக்க,

"அப்ப நாம நேரடியா கன்பார்ம் பண்ணலல? இன்னைக்கு கண்ணால பாத்து கன்பார்ம் பண்ணிட்டோம்ல விசாலா"

"இவ போனுல நிறையா நேரம் பேசணும்னு எதிர்பாக்கான்னு மாப்ள‌ சொல்லும்போது எனக்கும் சந்தேகந்தான், இவ காரணமில்லாம அப்டிலாம் செய்றவ இல்லையேன்னு. எங்கிட்ட எப்பையும் பிகு பண்ணிக்குவா ஷீலா. இன்னைக்கு தான் நானும் கண்ணால பாக்குறேன்" என்றார் அகிலாவும் சந்தோஷமாக.

'என் நேரம் என் வாயால தான் எல்லாத்துலையும் மாட்டுறேன் நானு' என தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த மூவரையும் முறைத்து பார்த்தாள் மரகதவல்லி. அவர்களையே முறைத்தபடி இருக்க அவர்களுக்கு பின் அவள் பார்வை வட்டத்தினுள் விழுந்தான் ஏசிபி.

சிமிண்ட் வண்ணத்தில் ப்ளைன் சட்டையும், காக்கி பேன்ட்டுமாக வந்து பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தான். சுற்றிலும் அவனது ஆராய்ச்சி பார்வை கூட அவளுக்கு ரசிக்கும் படி இருந்தது.

சட்டையின் கையை மேலே இழுத்துவிட்டவாறு, செல்லை எடுத்து காதில் வைத்தவன், இப்போது இவர்களை சுற்றி தேடினான். ஆர்வத்தில் அவனையே பார்த்திருந்த இவள் கை அசைக்கவும், மற்ற எல்லோரும் அவனை திரும்பி பார்த்தனர். ஆண்கள் அவனருகில் சென்று வரவேற்க நடக்க, அவன் ஒரு தலையசைப்புடன் போனில் பேசி முடித்தே, வந்தவர்களிடம் மெலிதாக சிரித்தான்.

அவன் அழுத்தமான முகமும், மற்றவர்களுக்கு தரும் அளவான சிரிப்பும், விறைப்பான நடையும், கூர்மையான பார்வையும், தன்னிடம் அவன் முற்றிலும் வேறாளாக இருப்பதாகதான் தோன்றியது அவளுக்கு.

"என் மருமக சொன்னா செஞ்சுருவா. ஆனா அவளே கொஞ்ச நேரமா கலங்கிட்டா உன்ன காணும்னு தெரியுமாய்யா. கொஞ்சம் சீக்கிரம் வந்தா என்ன?" என்றார் வாசுகி அவன் கோவில் வாசல் வரவும்.

"விடுங்க சம்மந்தி அவுக வேலை அப்படி" என்றார் முத்துராமன் முந்திக்கொண்டு.

"அவ தேடுனாங்க, அதுமட்டுமா தம்பிக்காக கூழ் எடுத்து வைக்க சொல்லி கூட சொல்லிட்டு தான் இருந்தா" என்றார் அகிலா அவர் பங்கிற்கு.

'சுத்தம் எல்லாருமா கோர்த்து விட்டுட்டாங்க, இவர் இப்ப நக்கலா பாப்பாரோ?' என திரும்பி அவள் அவனை பார்க்க, அவன் முகத்திலிருந்து எதையும் கண்டிபிடிக்க முடியவில்லை அவளால், 'சரியான கல்லூளிமங்கனா இருப்பாரோ. நாம அப்போ பழகின பாண்டியனுக்கும் இவருக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்',

"என்னடி கனா கண்டுட்டு நிக்கிற, மாப்ளைய கூட்டிட்டு போய் சாமி கும்பிட்டுட்டு வா" என அகிலா அவள் தோளில் தட்டவும், அவனை பார்த்து விட்டு அவள் கோவிலுக்குள் நடக்க, அவனும் மெல்ல நடந்தான் அவளுடன்.

"மதினி உங்க மகன வீட்டுக்கு சாப்பிட வர சொல்லுங்களேன். கடைல தான் சாப்பாடு சொல்லிருக்கு உடனே வந்துரும், லேட்டாகாது"

"வேணாம் மதினி கல்யாணத்துக்கு அப்றமே வரட்டும். ஏதோ இந்த மட்டுக்கு வந்துட்டு போயிட்ருக்கான், ரொம்ப எதிர்பாத்தோம்னா பிகு பண்ணிவியான். இன்னும் புது உடுப்பெடுக்கலாம் போணும், வார சனி ஆடி பெருக்கு, அன்னைக்கு போய் முகூர்த்த பட்டெல்லாம் எடுத்துட்டு வந்துருவோமா?"

"ம்ம் மொதயே நானும் இவட்ட சொல்லி வச்சுருதேன். இப்ப எடுத்தாதான் தச்சு வாங்கவும் சரியா இருக்கும். அப்றம் மூணு வாரந்தானே கல்யாணத்துக்கு இருக்கும். பத்திரிகை வேற வைக்க ஆரம்பிக்கணும். பின்ன அலைச்சல்லயே நாள் போயிடும்" இவர்கள் பேச்சு இப்படி சென்று கொண்டிருக்க,

"என்ன மரகதம் ரொம்ப தேடினியாம்?" என்றான் அருகில் நடந்து வந்தவளிடம்.

"ஆமா கூழ் குடிக்கணும்ல?"

"இந்த அக்கறை தான் வேணுங்குறது. அப்படியே அக்கறையா கயிறையும் கட்டி விட்டுறது?"

அவள் திரும்பி முறைத்து விட்டு, "இங்க வச்சு கட்டிவிட்றவா?"

"உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே மரகதம்" என்றவனை அதற்கு மேல் பேசவிடாமல், சாமி முன் நிறுத்தி வேண்டுதலை முடித்துக் கொண்டு, அம்மாவிடம் கூழை வாங்கி வந்து குடிக்க கொடுத்தாள். மற்றவர்கள் இவனிடம் சொல்லி கொண்டு வீடு கிளம்பியிருந்தனர்.

ஒரே மடக்கில் குடித்துவிட்டவன், "நீ சொல்றதெல்லாம் நா செய்றேன். நா ஒன்னே ஒன்னு தான் சொல்றேன் நீ செய்ய மாட்டேங்குற. வாட் மரகதம்?" என்றான் பேப்பர் கப்பை அவளிடம் நீட்டியவாறு.

"வீட்டுக்கு வர்றீங்களா?" என்றாள் அதை வாங்கிக் கொண்டு, அம்மா சொன்னதற்காக மட்டுமில்லாமல், அவளுக்காகவும். இருவரும் அவன் வண்டி அருகில் வந்திருந்தனர்.

"வரலாமே முகூர்த்த நேரத்துல" என்கவும், இவள் முறைக்க, அவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். செல்பவனை உள்ளம் குறுகுறுக்க பார்த்து நின்றாள் மரகதவல்லி.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 23

கேகேவி பள்ளி முதல்வர் மகன் ராம்குமாரை விசாரிக்க அவன் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வந்திருந்தனர் பாண்டியனும், சொக்கலிங்கமும்.

பால்கனியில் நின்று மொத்தக் கட்டிடத்தையும் பார்த்தவன், அப்படியே ராம்குமார் வீட்டின் எதிர்த்த வீடு, பக்கத்து வீடு எனச் சுற்றிப் பார்த்தபடி நிற்க.. சொக்கலிங்கம் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்து‌ நின்றான், பாதி தூக்கத்தோடு வந்துக் கதவைத் திறந்தான் ராம்குமார்.

"யாரு வேணும்?" என வெளியே நின்ற சொக்குவை மட்டும் பார்த்தவன் புரியாமல் பார்த்துக் கேட்க.

"நேத்து இன்பார்ம் பண்ணேனே, தொடர் கொலை கேஸ் விஷயம்?" என சொக்கு சொல்லவும்,

"ஆமா‌ ஆமா சார் வாங்க" என்றான் ஞாபகம் வந்தவனாக, அதன் பின்னரே அவன் கண்ணில் பட்டான் பாண்டியன்.

அவனை யோசனையாக பார்த்தவாறே தான் உள்ளே வந்தான் பாண்டியன், வீட்டினுள்ளேயும் அதே ஆராய்ச்சி பார்வை தான். குப்பையாக கிடக்கும் வீட்டை ஒருப் பார்வை சுற்றிப் பார்த்தான். அதில் வேகமாக அனைத்தையும் ஒதுக்கிய ராம்குமார், சோஃபாவை அவர்களுக்கு முதலில் ஒதுக்கிக் கொடுக்கவும், இருவரும் அதில் சென்று அமர்ந்தனர்.

"டூ மினிட்ஸ் சார் வந்துடுறேன்" என்றவன் வேகமாக முகத்தைக் கழுவி வரச் சென்றான்.

சொக்கலிங்கம் அந்த வீட்டை‌‌ச் சுற்றிப் பார்க்க, "ஏன் சொக்கு? பனிரெண்டு மணிக்கு நாம வந்து எழுப்பிருக்கோம். நைட்டு சாப்ட்டு போட்ட தட்டையே இப்பத்தான் தூக்கிட்டு போய் சிங்குல போடுறான். இந்த சுத்த சோம்பேறி கொலை செஞ்சுருப்பானா அதும் இத்தினி பிசிறு இல்லாம பெர்பெக்ட்டா பண்ணுறளவுக்கு வொர்த்துன்னு உங்களுக்கு தோணுதா?" எனக் கேட்க,

"ஆமா சார் வாய்ப்பில்லன்னு தான் தோணுது. வரிசையா கொலை பண்ணுதவனுக்கு பனிரெண்டு மணி வரைக்கும் தூக்கம்லா வராது சார்" என்றான் சொக்கலிங்கமும் ஆமோதிப்பாக,

"ஒருவேளை நாம வர்றோம்னு இப்டி எல்லாத்தையும் கலைச்சுப் போட்டு சோம்பேறி மாறி நடிக்கிறானோ?" என அடுத்து மாற்றி கேட்கவும்,

"சார்" என விழித்தான் சொக்கலிங்கம்,

"எல்லா பக்கமும் யோசிக்கணும்ல சொக்கு?"

"ஆமா சார்" என உடனே ஒத்துக் கொண்டான், 'இப்டினா அப்டின்னுவாரு அப்டினா இப்டினுவாரு எதுக்கு வம்பு' என மனதில் மட்டும் நினைத்துக் கொண்டான்.

ராம்குமாரும் சென்ற வேகத்தில் திரும்பி வந்தவன், "சார் டீ ஆர் காஃபி?" எனக் கேட்க,

"நோ தேங்க்ஸ். இங்க உக்காருங்க" என அவன் எதிரில் கைகாட்டவும், பட்டென்று அமர்ந்து கொண்டான்.

கால்மேல் காலிட்டு திமிராக அமர்ந்திருந்தவனை தான் மதுரையின் அசிஸ்டன்ட் கமிஷனர் என எல்லோருக்கும் தெரியுமே, ராம்குமாருக்கு மட்டும் தெரியாமலிருக்குமா, அதனால் கேட்கும் கேள்விகளுக்கு எந்த சொதப்பலும் இல்லாமல் உண்மையை அப்படியே கூறிவிடுவது என்ற முடிவுடன் தான் அமர்ந்திருந்தான்.

அவன் அப்பா, கேகேவி பள்ளி முதல்வர் முந்தைய தினம் இவன் இப்படி மகிழ்நன் பாண்டியன் விசாரிக்க வருகிறான் என சொன்னதுமே சொல்லிவிட்டார், "எதையும் மறைக்காத உள்ளத அப்படியே சொல்லிடு, விஷயம் தெரியாம கண்டிப்பா உன் வீடுவர வரவாய்ப்பில்ல அதனால் மறைச்சனா தான் எதாது ரிஸ்க்காகும், அதும்போக கேஸ முடிக்க வேண்டிய அவசரத்துல இருக்காங்க நாம சொதப்புனா நமக்கே அது வினையா முடியும் ராம்" என்றிருந்தார். அதனால் அவனுக்கு உண்மையை அப்படியே சொல்வதற்கு எந்த முன்னேற்பாடும் தேவைபட்டிருக்கவில்லை, சற்று பயம் மட்டுமே, அதும் பாண்டியனின் பார்வையால் மட்டுமே.

"ராம்குமார்?"

"எஸ் சார்"

"ஏன் தனியா இங்க தங்கியிருக்கீங்க?"

"ப்ரைவஸிக்காக சார். லேட் நைட் பசங்க கூட சேந்து வொர்க் பண்ண வேண்டி இருக்கும்"

"பார்ட்டி பண்ண வேண்டி இருக்கும் சேத்து சொல்லுங்க?" என்றதும் 'ஆம்' என ஒத்துக் கொண்டான்.

"தண்ணி மட்டுந்தானா இல்ல வேறெந்த பழக்கமும் இருக்கா?"

"ட்ரிங்க்ஸ் மட்டும் தான் சார். ஸ்மோக் கூட கிடையாது"

"ம்ம் உங்களுக்கும் இப்ப இறந்து போன பசங்களுக்கும் நடுவுல என்ன பிரச்சனை?"

"அவனுங்களுக்கு ஸ்கூல் குள்ள ஃப்ரீயா இருக்கணும், யாரும் என்னன்னு கேக்க கூடாது அதுக்கு ப்ரின்ஸிபலான என் அப்பா சப்போர்ட் வேணும். எம்.எல்.ஏ வச்சு கேட்டும் அப்பா இறங்கி வரல, ஒழுங்கா இருந்தா இருக்கட்டும் இல்ல வேற ஸ்கூல் பாருங்கன்னு சொல்லிட்டாரு, அது அவனுங்களுக்கு பிடிக்கல, டென்த் தான்னு ஈசியா சொல்லிடலாம் சார் ஆனா ஓவரான ஓவர் வில்லத்தனம் உண்டு அவனுங்கட்ட. என்ன ஃபாலோ பண்ணி, எங்க வீக்கெண்ட் பார்ட்டி டைம் தெரிஞ்சுட்டு, செவன் ஸ்டார் ஹோட்டல்ல குடுத்த பார் டைம்ம யூஸ் பண்ணி என்ன லாக் பண்ணிட்டானுங்க சார். இதோ வீடியோ இத வச்சு மிரட்டி அப்பாவையும் ஆஃப் பண்ணிட்டாங்க" என அவன் போனையும் எடுத்த நீட்ட,

பாண்டியன் சொக்கலிங்கத்திடம் கண்ணைக் காட்டவும் அவன் அதை வாங்கி அன்று பள்ளியில் வைத்து பி.டி., வாத்தியார் அனுப்பிய வீடியோ அதுதானா என ஒப்பிட்டுப் பார்த்தான். இரண்டும் ஒன்று தான் என பார்த்ததும் தெரிய, அதையும் தனக்கு ஒரு காபி அனுப்பிக் கொண்டு திரும்பக் கொடுத்தான் ராம்குமார் போனை ராம்குமாரிடமே.

"அதுக்காக தான் பழி வாங்க கொலை பண்ணீங்களா?" என்றான் பாண்டியன் சாதாரணமாக.

"அந்த அளவுக்குலாம் தைரியம் இருந்துருந்தா, இது நடந்த அன்னைக்கே அந்த நிமிஷமே நாலடி வச்சுருக்க மாட்டேனா சார்? அவ்வளவு கோவம் இருந்தது சார் அவனுங்க மேல. இப்போவும் என்னைய அப்படி நிக்க வச்சானுங்களேன்னு நினைச்சா அவமானமா இருக்கும் சார், ஆனா ஒன்னும் பண்ண முடியாது, சிலநேரம் ஞாபகம் வந்தா, கூட ரெண்டு ரவுண்ட் உள்ள தள்ளிட்டு தூங்குவேன் அவ்வளவு தான். ஆனா ஒரு விஷயம் ஒத்துக்குறேன் சார், அவனுங்க செத்ததுல எனக்கு அவ்வளவு சந்தோஷம். என்னால முடியல தான். ஆனா என்ன மாதிரி வேற எவனோ பாதிக்க பட்ருக்கான் அவனுக்கு தைரியம் அதான் நசுக்கி போடுறான். எனக்கு நிஜமா அதுல சந்தோஷம் தான்" என்றுவிட்டான். அவன் முகத்தில் மனதில் உள்ளதை கூறிவிட்ட திருப்தி தெரிய, எழுந்து கொண்டான் பாண்டியன்.

அவன் கூறிய அனைத்தும் ஆடியோ வீடியோ இரண்டுமாக பதிவு செய்யப்பட்டது, "தேவைபட்டா திரும்ப வருவோம் ராம்குமார். எதும் லிமிட்ல இருக்குற வர தான் உடம்புக்கு நல்லது. அடிக்டாகிட்டா அப்றம் யாருக்கும் யூஸ் இல்லாம‌ போயிடுவீங்க. இன்னும் மேரேஜ் லைஃப்னு ஒரு பார்ட் இருக்குல்ல?" என்றதும் அவன் தலையசைக்க, அதைப் பார்த்தவாறே பாண்டியன் கூலர்ஸை மாட்டிக்கொண்டு வேக நடையில் வெளியேறிவிட்டான்.

திரும்பி செல்லும் வழியில், "ராம்குமார ஃபாலோ பண்ணணுமா சார்?" என்றான் சொக்கு.

"கேஸ் முடியுர வர கண்டிப்பா ஃபாலோ பண்ணணும் சொக்கு" என அதட்டலாக சொல்ல பம்மிவிட்டான் சொக்கலிங்கம்.

அந்நேரத்தில் பாண்டியனுக்கு அழைப்பு வர எடுத்துப் பார்த்தான், வாசுகி தான் அழைத்து கொண்டிருந்தார், "என்னம்மா?" என்றான் அதே அதட்டலோடு,

"எப்புடி சீறுதான் பாரு. இவனுக்காகன்னு நாமதேன் புலம்பணும், அவனுக்கு அவேன் வேலை கெட்டுட்டா நம்மட்ட பாய்வியான்" என அங்கு எல்லோரும் இருக்க மரகதவல்லியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் வாசுகி.

"ம்ச் ம்மா, அங்க யாருட்டையோ பேசுறதுக்கு எதுக்கு எனக்கு ஃபோன போட்ட?"

"யாருட்டையோ இல்ல, உன் பொண்டாட்டிட்ட‌தேன் சொல்லுதேன், நாளைக்கு அவளும் அதுக்குலாம் தயாராவணும்ல அதுக்குத்தேன் சொல்லி வைக்கேன்"

"சரி அவளுக்கு நீ பாடம் எடுத்து முடிச்சுட்டு எனக்கு கூப்டு" என வைத்தே விட்டான்.

"வச்சுட்டியான் பாரு அவசரத்துக்கு பொறந்தவேன். அம்மான்னு ஒருநாளும் ஆற அமர உக்காந்து பேசுவானான்னு பாத்துருக்கியா எனக்கு அந்த குடுப்பனையே இல்ல, மூத்த புள்ளைய பெத்து மதுரைக்கு நேந்துதேன் விட்டேம் போல. மதுரைய ஆண்ட பாண்டிய மன்னன்னு பேரு வச்சதும் நெசத்துக்கும் மதுரைய ஆள போய்ட்டியான்" என அவர் பேசிக்கொண்டே இருக்க,

"எத்தே மறுக்கா கூப்ட்டு பேசி சாப்பாடு குடுத்து விடுங்க, நேரம் போச்சுன்னா அத்தான் வெளில கடைல எங்கையாது சாப்பிட்டுற போறாக" என ஷீலா சொல்லவும்,

"மறுபடியும் கூப்புட்டா என்ன சொல்லுவானோ?"

"எப்புடியும் அடுத்த வாரம் ட்ரெஸ் எடுக்க போறத சொல்லணும்ல? பேசுங்க அதையும் சொல்லிட்டு வைங்க, வர வைக்குறத அக்கா பாத்துக்குவாக" என விசாலாட்சி சிரிக்கவும்,

"ஒவ்வொரு தடவையும் அவர கஷ்டப்பட்டு நா வர வைக்கறதெல்லாம் நீங்க பாத்ததில்ல தான?" என்றாள் அவர்களிடம் நக்கலாக, ஆனால் உள்ளுக்குள், 'எனக்கு முன்ன கிளம்பி நிக்கிற மனுஷனே அந்த ஏசிபி தான்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க? எல்லாம் அவர் பெர்பாமன்ஸ் அப்படி. நமக்கு அது வர‌மாட்டேங்குது வெள்ளந்தியா வளந்துட்டோம் போல விடுடி மேகி' என அவள் மைண்ட் வாய்ஸ் எடுத்துக் கொடுக்க, பவ்யமாக நல்ல பிள்ளையாகவே அமர்ந்து கொண்டாள்.

"மறுபடியும் திட்டிபுடுவானோ?"

"திட்டுனாலும் வாங்கிக்கோங்க. கூப்பிடுங்க" என ஷீலா சொல்லவும்,

"நா வசவு வாங்குனா உனக்கு அம்புட்டு குதூகலமா இருக்குமோ?"

"அப்ப பேசாதீங்க விடுங்க. சாப்பாடும்‌ குடுக்க வேணாம். அக்கா பக்கம் லவ்வு கன்பார்ம் ஆகிடுச்சு, அத்தானும் லவ்வு பண்ண ஆரம்பிச்சுட்டா கல்யாணத்துல தடங்கல் வராதுன்னு நா உங்களுக்காக சொல்லுதேன் நீங்க என்னைய எப்டி சொல்லிட்டீகத்த"

"உடனே சீரியலு ஹ்ரோயினுக்கு போட்டியா நடிப்பா சும்மா இருட்டி. நா பேசுதேன்" என்றவர் மறுபடியும் மகனுக்கு அழைக்க,

"சொல்லும்மா"

"மூத்தவனே எங்க இருக்க?"

"கமிஷனர் ஆபிஸ்ல"

"கண்ணு உனக்கு கமிஷனர் ஆபிஸ் தெரியுமா?" என்றார் திரும்பி மரகதத்திடம்.

"தெரியும் த்த ஆனா போனதில்ல"

"இனி போயி பழகிக்க, உன் புருஷன் அங்கனதேன் பாதி நேரம் குடித்தனம் நடத்துவியான், நீயும் கூட போய் உக்காந்துக்கலாம் ஒன்னுஞ்‌ சொல்ல மாட்டாங்க"

"ம்மா, இப்படி அங்கேயே பேச எதுக்கும்மா எனக்கு கூப்பிடுத? இனி கூப்பிட்டா எடுக்கவும் மாட்டேன் பாத்துக்க"

"காத்து கருப்பு வேலைய காட்டுதோ என் புள்ள ரொம்ப கொதிக்கானே நா என்ன செய்வேன் மீனாட்சி" என அவர் வேண்டிக் கொண்டிருக்க,

"அத்தான் வையுததுல தப்பே இல்லத்தே, சொல்ல வந்தத விட்டுட்டு என்னாலாம் செய்றீங்க நீங்க?" என ஷீலா கிசுகிசுக்கவும்,

"உனக்கு மருமவட்ட சாப்பாடு குடுத்து விடுதேன் சாப்புட்டு வேலைய பாரு. அவளே சமைச்சதுதேன். உனக்காகத்தேன் ஆசையா செஞ்சு எடுத்துட்டு வர்றா, மூஞ்ச காட்டாம சாப்பிடு சரியா"

"மூஞ்ச காட்டாம என்னத்த காட்டி சாப்புடுறதுன்னு இப்ப கேட்பாரா அவங்க அம்மாட்ட?" என தீவிர சிந்தனையில் மரகதவல்லி அவரைப் பார்த்திருக்க,

மணியைப் பார்த்தவன், "சரிம்மா, மூணு மணிக்கு ரவுண்ட்ஸ் போயிடுவேன்‌ அதுக்குள்ள வர சொல்லு" என்க,

"சரிடா. அப்றம் அடுத்த வாரம் கல்யாணத்துக்கு புது துணியெல்லாம் எடுத்துரலாமா? மாங்கல்யமு செயிணும் எடுக்கணும்ல உனக்கெப்ப தோதுபடும்?"

"ம்ம் பாத்துட்டு சொல்றேன். நா வரலனாலும் நீங்க போய் எடுத்திடுங்க"

"உனக்குந்தேன் எடுக்கணும்"

"அது நா‌ எடுத்துக்குவேன்மா"

"பத்திரிகைய பாக்க வரலியா நீ? அதையும் குடுக்க ஆரம்பிக்கணும்ல?"

"நைட்டு வீட்டுக்கு வரேன்"

"சரிய்யா, வந்து சின்னவனுங்க ரெண்டு பேரையும் ஒரு அதட்டு போடு, என்ன வேலை சொன்னாலும் சொனங்குறானுவ" என்றார் அவன் வருகிறான் என்ற குதூகலத்துடன்.

"சரி நா வந்து பேசுறேன்மா" என்கவும்,

"சரிப்பா இந்தா கிளம்பிட்டா மூத்த மருமவ, பத்து நிமிசத்துல வந்துருவா"

"பாத்துக்குறேன்மா வர‌சொல்லு. வைக்கிறேன்" என வைத்துவிட்டான்.

"நீங்க அண்ணனையும் சின்ன மாப்பிள்ளைக ரெண்டு பேரையும் வர சொல்லிருக்கலாம்ல மதினி?" என்றார் அகிலா, கேரியரை அவளிடம் கொடுத்தவாறு.

"கடக்குட்டிக்கு தெனமு வேலதேன் மதினி. நடுவுல உள்ளவனுக்கு லீவு அன்னைக்கு வெளில கிளம்பணும்னா அம்புட்டு கடுப்பாவான், ரெண்டு பேரும் வந்த இடத்துலையும் கம்முன்னு நம்மள இருக்க விட மாட்டானுவ கிளம்பு கிளம்புன்னு நிப்பானுவ, அதேன் நாங்க மட்டும் கிளம்பிருதது. அடுத்த வார துணி எடுக்க அவிங்கள கூட்டியாரணும் பிள்ளைகள பாக்க ஆளு வேணும்ல அதுக்குத்தேன் மூத்தவன ஒரு அரட்டு போட சொல்லிருக்கேன். அவேன் சொல்லிட்டாத்தேன் என் வீட்டுகாரக கூட கம்முன்னு வருவாக" என்றார் மூத்தமகன் பெருமையோடு,

"மருமக்கமாறு சண்டைக்கு வர‌ மாட்டாகளா? எங்க புருஷன உங்க மூத்தபுள்ள எப்டி திட்டலாம்னு?" என அகிலாவின் நாத்தனார் கேட்க,

"ம்ம்கூம் கோள் மூட்டிக இந்த ரெண்டும், நல்லா வையட்டும்னு சிரிச்சுட்டே வேடிக்கை பாப்பாளுக. நீங்களும் திட்ட முடியல நாங்களும் பேச‌ முடியல அத்தானாவது வையட்டுந்தே சொல்லி குடுங்க, அப்டின்னு ஏத்தி விடுவாளுவ. நாந்தேன் அவேன் பாட்டுக்கு வஞ்சு விட்ருவியான் சின்னதுக ரெண்டும் பாவமேன்னு பாத்து எதையும் சொல்ல மாட்டேன்"

"எங்கத்தைக்கு அவுகளோட கடைசி ரெண்டு பிள்ளைகளும்‌ இன்னும் மூணாங்கிளாஸுன்னே நெனப்பும்மா, என்ன செஞ்சாலும் கொஞ்சிக்குவாக" என ஷீலா சொல்லவும், அகிலா வியப்பாக பார்த்தார். மரகதவல்லிக்கும் வாசுகியை அதிகம் பிடித்தது. அவர் குணத்தால் தான் இந்த ஒற்றுமை என நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

"சரி விரசா போய் குடுத்துட்டு வா கண்ணு" என அவளை விரட்டவும், தலையசைத்து கிளம்பி விட்டாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 24

கமிஷனர் அலுவலகத்திற்கு அவன் வந்திறங்கியதுமே பார்த்தான், போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் மூன்று மாணவர்களும் அவர்களது பெற்றோருடன் அங்கு அமர்ந்திருந்தனர். அவன் தான் அழைத்து வரச் சொல்லியிருந்தான். இவன் அறை முன் தான் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

இவன் செல்லவும் எல்லோரும் எழுந்து நிற்க, தலையசைத்தவன், "பேரண்ட்ஸ் இருக்கட்டும் மூணு பசங்கள மட்டும் உள்ள கூட்டிட்டு வாங்க சொக்கு" என உள்ளே சென்றுவிட்டான்.

"சார் எதுக்கு சார் பசங்க மட்டும்? மொத எங்கள எதுக்கு வர சொல்லிருக்கீங்கன்னே இன்னும் சொல்லல?" என ஒரு மாணவனின் பெற்றோர் சொக்கலிங்கத்திடம் முன் வந்து பேச,

"பசங்கள ஒழுங்கா வளத்துருந்தா இங்க வர வந்து உக்காரணுமா? உங்க புள்ளையால எங்க தலை தான் உருளுது தெரியுமா? கேள்வி வேற கேக்க வந்தாச்சு என்னமோ அலுசயமா புள்ளைய வளத்துட்டது கணக்கா" என்ற சொக்கு, "உள்ள வாங்கடா" என அரட்டவும் மூவரும் இன்னும் நடுங்கி கொண்டு அவரவரின் அம்மாக்களை ஒண்டி நிற்க,

"சார் இப்படிலாம் மிரட்ட தான் வர சொன்னீங்களா? ஏற்கனவே பிரண்ட்ஸ் இறந்த பயத்துல இருக்க பிள்ளைங்க சார்" என ஒரு அம்மா திட்ட,

"நாங்க கமிஷனர பாத்து பேச வேண்டியதா இருக்கும். பாதுகாப்பு குடுக்குறது தான் உங்க வேலை. எங்க புள்ளைங்கள‌ மிரட்டி தப்ப அவங்க பக்கமே திருப்பிவிட பாக்றீங்களோ?" என ஒரு அப்பா பேச

"இருக்கும் பத்ரிநாத், ஏதோ ஆவின்னு திருப்பி விட பாக்குறாங்களே. கொலைகாரன புடிக்க முடியாததுக்கு இன்னும் நம்மளையே கொலைகாரனா ஆக்குனாலும் ஆக்கிடுவாங்க" என இன்னொருவர் கோவமாக சொல்ல,

"போலீஸ் ஸ்டேஷன்ல நின்னுட்டே அதிகாரமா? நீங்க குடுத்த தைரியந்தான் உங்க புள்ளைகள தறுதலை ஆக்கிருக்குன்னு இப்பதான தெரியுது. மொத உங்க எல்லாரையும் தான் உள்ள தூக்கி வைக்கணும்" என்றான் சொக்கலிங்கம்.

"முடிஞ்சா செய்ங்க. ப்ரஸ்கு போவோம் நாங்க. எனக்கு டிஜிபி வர ஆள் இருக்கு, சும்மா கேஸ திருப்பி விட்டீங்கனா நடக்குறதே வேற" என ஒருவர் எகிறிக் கொண்டிருக்க, அந்நேரம் தான் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தாள் மரகதம்.

"ஆமா சார் வாங்க நாம‌ கமிஷ்னர் பாப்போம், இவங்களாம் மக்களுக்காக எதையும் செய்ய மாட்டாங்க சார். படிக்குற பிள்ளைக வாழ்க்கைன்னு கூட அக்கறை‌ இல்லாம எப்டி பேசுறாங்க பாருங்க சார்" என அவர்கள் மாற்றி மாற்றி பேச,

அதிக சத்தத்தில், வெளியே வந்த பாண்டியன், "சொக்கு க்ரௌட க்ளியர் பண்ணுங்க. இங்க ஒருத்தன் நிக்க கூடாது. அவனுங்களால என்ன புடுங்க முடியுமோ போய் பண்ணட்டும். இவனுங்களுக்கு நம்ம ப்ரொடக்ஷனையும் கேன்சல் பண்ணிடுங்க. கமிஷனர வச்சு எதையோ கிழிப்பேனானுங்க தானே போய் கிழிக்க சொல்லுங்க. க்ளியர் தெம் அவுட்" என்றுவிட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டான்.

"சார் என்ன சார்‌ மரியாதை இல்லாம பேசுறீங்க. நாங்களாம் என்ன போஸ்டிங்கல இருக்கோம்னு தெரியுமா?" என கத்தினார் ஒருவர்.

"போங்க போய் கமிஷனரயே பாத்துக்கோங்க போங்க" என்ற சொக்கு, கான்ஸ்டபிள் இருவரை பார்த்து, "அனுப்பி‌விடுங்க இவங்கள" என்க, எல்லோரையும் தள்ளிச் சென்று வெளியே விட்டனர். கமிஷனரை பார்த்து விட்டு தான் செல்வது என அங்கேயே காத்திருக்க துவங்கினர் அந்த பெற்றோர்கள்.

எல்லாவற்றையும் நின்று பார்த்திருந்தாள் மரகதவல்லி, அவளுக்கு இப்போது அவனிடம் செல்லலாமா வேண்டாமா என்ற யோசனையாகியது, அவன் கோப முகத்தை சில நொடிகளிலேனாலும் பார்த்தாளே, அதை தன்னால் என்றாகிலும் நேர்காண இயலுமா என யோசித்து நின்றாள்.

"வாங்க மேடம். என்ன இங்கேயே நின்னுட்டீங்க" என்ற சொக்குவின் அழைப்பில் நிமிர்ந்தவள்,

"என்ன தெரியுமா உங்களுக்கு?" என்றுதான் முதலில் கேட்டாள்.

"மொத்த குவார்ட்ஸுக்கும் தெரியும் மேடம். எங்க சார் வீட்டுக்குள்ள போன ஒரு லேடினா அது அவங்க வீட்டுகாரம்மாவா தான் இருக்கும்னு அன்னைக்கே நீங்க எங்களுக்கு அறிமுகம் ஆகிட்டீங்க மேடம். வாங்க, சார் ஆபிஸ் உள்ள தான்" என அழைத்து நடக்க, இவளும் அவனுடன் மெல்ல நடந்தாள்.

"ஆனா உங்கள எனக்கு அதுக்கு மொதயே தெரியும் கோர்ட்டுல பாத்துருக்கேன். லாஸ்ட் கேஸ் அந்த ரேப் கேஸ் நீங்க வாதாடும் போது சாட்சி ஒப்படைக்க நானே ரெண்டு டைம் வந்துருக்கேன்"

"ஓ! சாரி சார் நா மறந்துட்டேன்னு நினைக்கிறேன்"

"பரவால்ல மேடம் இனி மறக்கவே மாட்டீங்க பாருங்க. இதான் சார் ரூம் போங்க" என கை காண்பித்து விட்டு அவன் சென்று விட, இவள் சாத்தியிருந்த கதவை மெல்ல தட்டிவிட்டு நிற்க,

"சொக்கு" என்றுதான் அழைத்தான் அவன்,

அவளே மெல்ல திறந்து, "சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்" என அவன் முன் சென்று நிற்க,

"ஹே மரகதம்" என்றவன் நிதானமாக சாய்ந்து அமர்ந்தான், அவன் முகத்தையே பார்த்தாள் கோவமெதுவும் தெரிகிறதா என்று.

"என்ன அப்டி உத்து பாக்குற, மாறு வேஷத்துலயா உக்காந்துருக்கேன் நானு?" என்றான் வந்ததுமே அவளை வம்பிழுக்கும் பொருட்டு.

"நீங்க மாறு வேஷத்துல இருந்தாலும் உங்க வாய் உங்கள காமிச்சு குடுத்துடுங்க"

"அப்ப என் வாயத்தான் உத்து பாத்தியா நீ? வெறும் பாக்றது மட்டுந்தானா? டேஸ்ட்டுலாம் பாத்து கன்பார்ம் பண்ண மாட்டியா மரகதம், எனக்கு இஷ்யூ இல்ல உன் டெஸ்டிங்கு நா நல்லா கோப்ரேட் பண்ணுவேன்" என்றவனின் வாயில் பட் பட்டென்று ரெண்டு அடி வைக்கும் வேகம் இருந்தும் கையை இறுக மூடிக் கொண்டு நின்றாள்.

"ஏங்க ப்ளீஸ்"

"ஏங்கங்க ப்ளீஸ்னு தாங்க நானும் சொல்றேன்" என்றான் சேரில் சாய்ந்தமர்ந்து இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆடிக் கொண்டு.

"சாப்பிடுறீங்களா. இதோ கேரியர் எங்க வச்சுட்டு நா கிளம்பட்டும்?"

"அடிப்பாவி பரிமாற கூட மாட்டியா? எங்க இந்த அம்மா உன்ன எதுக்கு அனுப்பினாங்கன்னு கேக்குறேன்" என்றவன் போனை எடுத்து வாசுகிக்கு அழைக்க போக,

அதை வேகமாக வாங்கியவள், "நீங்க கை கழுவிட்டு வாங்க நா எடுத்து வைக்கிறேன்" என்றுவிட,

"அப்ப எங்கம்மாக்கு தான் பயப்டுவ?"

"உங்க வாய்க்கு அதைவிட பயப்டுறேங்க, கை கழுவுங்க போங்க" என பவ்யமாகவே சொல்ல,

மெல்ல எழுந்தவன், கையை கழுவி கொண்டே, "அதெப்ட்றி எல்லாத்துக்கும் நக்கலாவே பதில் சொல்ற ஆனா வாய்ஸ் மட்டும் பவ்யமா சொல்ற மாறி மாடுலேட் பண்ணிடுற?" என திரும்பி வந்தான். அந்நேரம் அவன் கண்ணில் பட்ட புதிய விஷயம் அவனை ஈர்க்க தாராளமான ஒரு குறும்பு புன்னகை அவன் முகத்தில் உதயமானது.

அவள் மேசையில் லேசாக சாய்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்ததால் நன்கு தெரிந்தது அவளின் சேலை இடைவெளியில் இடுப்பும் அதன் மடிப்பும். அதில் கையிலிருந்த தண்ணீரால் அழுத்தமாக கோடிழுத்துவிட்டு நகர்ந்து சென்று அவனிடத்தில் அமர்ந்து விட்டான் அந்த கள்வன், அதிர்ந்து நின்றவளுக்கு தான் நிதானத்திற்கு வர சில நொடிகள் தேவைப்பட்டது. நடந்ததை அவளுக்கு கிரகித்துக் கொள்ள நிமிடங்கள் தேவைப்பட்டது.

"மரகதம் என்ன நின்னுட்டே தூங்குற?" என்று அவள் தோளில் தட்ட, திருதிருவென விழித்தவள் அவனையே விழிகளை சுருக்கி பார்க்க,

"உத்து உத்து பாக்குற உம்மா கேட்டாலும் தர மாட்டேங்குற, சோறும் வைக்க மாட்டேங்குற என்னடி ப்ளான்ல இருக்க?"

"என்ன டச் பண்ணீங்களா நீங்க?" என்றாள் கொஞ்சம் மெதுவாக யோசித்தே,

"அங்கிருந்து வரும்போது உன் இடுப்ப தொட்டத கேக்றியா இல்ல வந்து உக்காந்ததும் இப்ப உன் தோள தொட்டத கேக்றீயா?" என கை ரெண்டையும் கன்னத்தில் வைத்து ஆர்வமாக அவன் கேட்டதில், மீண்டும் அவனை கொட்டவே கைகள் பரபரத்தது.

அதை செய்ய முடியாததால், "எதுக்கு தொட்டீங்க அதும் இங்க வச்சு" என முகத்தை பாவமாக வைத்து கேட்டாள்.

"நீதான் என் இடுப்ப தொட மாட்டேன்ட்ட ஆனா நான்லாம் அப்படி பிகு பண்ண மாட்டேன்ப்பா, தாராளமா தொடுவேன்"

"உங்கள?" என அவனை கொட்ட சென்று முடியாமல் தன் தலையில் தட்டிக் கொண்டாள், "சாப்பாடு குடுன்னு சொன்னதும் தூக்கிட்டு வந்தேன்ல என்ன தான் அடிச்சுக்கணும் நானு"

"ஹே இப்ப என்ன பதிலுக்கு நீயும் என் இடுப்ப தொட்டுக்கோ" என பர்ஸை எடுத்து வெளியில் வைத்தவன், "இந்தா இதுல கயிறு இருக்கு பழிவாங்க தொடுறதுன்னு முடிவு பண்ணிட்ட கயிற கட்டியே பழிவாங்கிடு" என பெருந்தன்மையாக சொல்ல,

"என்னால முடியலங்க" என்றாள் அழுவது போல்,

"தெனமு இத சொல்லியே வாய்தா வாங்கிடுற நீ. என்னைக்கு கட்டுறன்னு நானும் பாக்குறேன். சாப்பாட எடுத்து வை. நீ உள்ள‌ வந்து ரொம்ப நேரமா‌ வெளில போலன்னா வெளில உள்ளவன்லாம் என்னதான் தப்பா நினைப்பான். உனக்கு எங்கூடயே இருக்க ஆசையா இருந்தா ஆடி மாசம்லாம் கணக்கில்ல நீ குவாட்ரஸ்கு ஷிஃப்ட் ஆகிடு" என கண்ணடிக்க,

'ம்கூம் இவர பேச விடுறதே தப்புதான்' என்ற முடிவிற்கு தாமதமாக வந்தவள், இலையை விரித்து ஒவ்வொரு பதார்த்தமாக வேகமாக அவன் முன் இலையில் வைக்க, அவள் வேகத்திலும் பாவனையிலும் அவனுக்கு எப்போதும் போல் சிரிப்பு பீறீட்டு கிளம்பியது, மீசைக்கடியில் ஒளித்து கொண்டான்.

"என்ன சைலண்ட் ஆகிட்ட மரகதம்"

"சாப்பிடும் போது பேச‌ கூடாதுங்க" என்றாள் முந்திக்கொண்டு.

"நீயும் உக்காரு சாப்பிடலாம்"

"நா சாப்டேங்க"

"கொஞ்சமா?"

"இல்ல வயிறு ஃபுல்"

"அதான் நெளிய மாட்டாம நிக்றியா?" என்றதும் அவள் முறைத்து பார்க்க,

"இந்த மந்தாகினி இருக்கால்ல அவ கண்ணு இப்படிதான் இருக்கும். நீ முறைக்கும் போது அப்டியே அவ கண்ணு தெரியுது எனக்கு" என்றான். நடுங்கிவிட்டது அவளுக்கு.

"அவங்கள பத்தி பேச மாட்டேன்னு சொல்லிருக்கீங்க" என்றாள் படபடப்புடன்.

"இல்ல பாத்ததும் தோணுச்சு அதான் சொன்னேன்" என்றவன், 'இனி எப்டி முறைக்குறன்னு பாக்குறேன். உண்மைய சொல்ல வருதான்னு பாரு ப்ராடு கழுத' என மனதிற்குள் திட்டிக்கொண்டான்.

"சாப்பாடு எப்டி இருக்குன்னு சொல்லவே இல்லங்க? நாந்தான் சமைச்சேன்" என பேச்சை மாற்ற கேட்க,

"சாப்பிடும் போது பேச கூடாதுன்னு சொன்னியே மரகதம். இதுக்கு எப்டி பதில் சொல்ல நானு?" என்றவனை இப்போது முறைக்கவும் முடியாமல் பாவமாக பார்த்தாள்.

'பேச வேண்டாதத எல்லாத்தையும் மூச்ச பிடிச்சு பேசிட்டு, இதுக்கு மட்டும் பதில் சொல்ல என் பேச்ச கேப்பாராம். பேசாம ஆமா நாந்தான் எல்லாம் பண்ணேன் என் தப்புதான்னு ஒரே தடவைல ஒத்துகிட்டு சமாதானம் ஆகிருவோமா. கல்யாணம் முடியட்டும்னு பொறுமையா இருந்தா ஒவ்வொரு தடவையும் மாட்டிட்டு தான் முழிக்க வேண்டி இருக்கு. என்னடி மேகி உனக்கு வந்த சோதனை. பேசுற பேச்சுக்கு நாலு கொட்டு கூட வைக்க முடியல' என மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தினாலும், அவள் முகம் வர்ணஜாலமாக அனைத்து பாவனைகளையும் காட்ட, சாப்பாட்டை விழுங்கியவன் அவளின் பாவனைகளையும் நிதானமாக அசைபோட்டவாறு தனக்குள் விழுங்கினான்.

ஏதேதோ யோசித்து கொண்டிருந்தாலும், அவனுக்கு சாப்பிட வைக்க வேண்டியதை சரியாக பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தாள். அவள் கையால் சாப்பிட்டதாலோ என்னவோ எப்போதும் சாப்பிடும் அளவை விட சற்று அதிகமாகவே சாப்பிட்டு எழுந்தான். இலையை எடுத்துச் சென்று குப்பை தொட்டியில் போட்டுவிட்டு அங்கேயே அவனறையில் இருந்த வாஷ்பேஷினில் கையை கழுவிக்கொண்டு அங்கிருந்த டவலில் கையை துடைத்துக்கொண்டு வந்தான்.

அனைத்தையும் எடுத்து வைத்து கிளம்ப தயாராக நின்றவள், "கிளம்புறேங்க" என்க,

"ம்ம் ஒரு நிமிஷம் மரகதம்" என்றவன் அவளை நெருங்கி நிற்க, கண்ணை விரித்து என்னவோ என அவள் பார்க்க, அந்த கண்ணை பார்த்தவாறே நெருங்கி நெற்றியில் லேசாக முட்டி, பின் அங்கேயே அழுந்த முத்தமிட்டு, "தேங்க்ஸ் ஃபார் யுவர் வொன்டர்ஃபுல் லஞ்ச் மரகதம். சூப்பர் சாப்பாடு. சீ எனக்கும் ஃபுல்" என விலகியன், "ஃபைவ் மினிட்ஸ் டைம் எடுத்துட்டு கூட கிளம்புடி" என வெளியேறிச் சென்று விட்டான்.

மரகதம் அப்படியே தான் நின்றாள், இரண்டு சொட்டு கண்ணீர் கூட இறங்கிவிட்டது. அவளால் உணர முடிந்ததே, அவனது முழுமையான காதலை அந்த ஒற்றை முத்தத்தில் நிச்சயம் அவளால் உணர முடிந்தது, உணர வைத்துவிட்டே, நேரம் எடுத்துக் கொள் என்றுவிட்டு செல்கிறான். இன்னும் இன்னுமாக பிடித்தது அவனை. உண்மை தெரிந்தாலும் இதே காதலை நிச்சயம் காட்டுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது அவளுக்கு, ஆனாலும் பழையதை பேசி மீண்டும் அவனை கோவமோ கஷ்டமோ படவைக்க அவளுக்கு விருப்பமில்லை அவ்வளவே. அவனுக்கு தானே எல்லாம் அவனுக்காகத்தானே எல்லாம், என நினைத்து கொண்டவள், ஒரு நீண்ட மூச்செடுத்துக் கொண்டு வெளியே வர, அங்கு தான் நின்று மூன்று காவலதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

இவள் அவனுக்கு தலையசைத்து கிளம்ப, திரும்பி பார்த்தவனும் கண்ணை காண்பித்து விட்டான். ஒரு மலர்ச்சியான புன்னகையுடனே கிளம்பிச் சென்றாள் மரகதவல்லி.
 
Last edited:
Status
Not open for further replies.
Top