ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 30

அவன் வெளியே வரும்போது வைஷ்ணவி எதிரே உள்ளே வந்தாள், முகமெங்கும் பதட்டமாக இருந்தது, ஆனாலும் திடமாக காட்டிக்கொண்டாள். உடன் இரு பெண்களும் வந்தனர்.

அவளை புருவம் சுருக்கி பார்த்தவாறே வந்தவன், "வைஷ்ணவி?" என்றான் அவளை கேள்வியாக,

"எஸ் சார், அந்த ரெண்டு பசங்களுக்கும் ஜாமின் வாங்க வந்துருக்கேன்" என்றதும் தான்‌ பக்கத்தில் நின்ற இரு பெண்களை பார்த்தான், முதல் நாள் இரவிலிருந்து போராட்டம் என அமர்ந்திருந்தவர்கள் இப்போது தான் காவல்துறையின் முறைகளை தெரிந்தவர்கள் போன்று ஜாமினுக்கு வக்கீலுடன் வந்திருந்தனர்.

போராட்டம் பண்ணினால் அஞ்சுவான், மக்கள் கூட்டத்திற்கு பதில் சொல்ல முடியாமல் பிள்ளைகளை வீட்டிற்கு விட்டுவிடுவான் என்றெல்லாம் கதிர் பெற்றோர் சொல்ல கேட்டு, ராமுவின் பெற்றோரும் போராட்டம் செய்து பார்த்தனர். ஆனால் ப்ரஸ் மக்களோடு கொஞ்சம் கூட்டத்தை தவிர அவர்கள் பக்கம் யாரும் நிக்கவில்லை. அதிது என ஆராய்ந்து சமூக வலைதளங்களில் அந்த பள்ளியையும் அங்குள்ள மானவர்களையும் என அவரவர் இஷ்டத்திற்கு கதையை அடித்து விட்டிருக்க, மொத்தத்தில் வயது பிள்ளைகள் வாழ்க்கை கெடுகிறது என ஒரு சாராரும், அவர்கள் எதோ செய்திருக்க பழிவாங்கவே தொடர் கொலையை எவனோ செய்கிறான் என மறுசாராரும் பிரிந்து வாக்கு வாதத்தில் இருக்கின்றனர்.

ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாண்டியன் முதல் நாள் இரவும் கிளம்பி சென்று விட்டான், இதோ இன்றும் எவ்வளவு தாமதமாக வந்தும் அவர்களை கண்டுகொள்ளவில்லை, கமிஷனரும் கூட அன்று போல் இன்று கண்டு கொண்டதாக தெரியாததால், வைஷ்ணவியை கெஞ்சி அழைத்து வந்திருந்தார் அவளின் அம்மா. அதுவரை அவளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாக தான் அவளும் இருந்து கொண்டாள்.

"எப்.ஐ.ஆர் போட்டாச்சு, கோர்ட்ல தான் இனி நீங்க பாத்துக்கணும். அண்ட் பசங்க அப்ரூவ் ஆகிருக்காங்க, சோ நா கோர்ட்ல தான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்"

"ஓகே சார்" என்றவள், "நாளைக்கு கோர்ட்ல பாக்கலாம் வாம்மா" என அதில் ஒருவரை அழைத்துக் கொண்டு திரும்ப போக,

"உனக்கும் அவன் தம்பி தானடி? ஒரு வாரமா நாங்க என்ன பாடு படுறோம்னு பாத்துட்ருந்தும் எனக்கென்னன்னு இருந்துட்ட, இன்னைக்கும் எனக்கென்னன்னு இதென்னடி பேச்சு? தாயில்லா புள்ளை ஆயிட்டான்டி? உன் தம்பி போனதுல இருந்து இவனத்தான நா அவன் இடத்துல வச்சு பாத்துட்ருக்கேன். இவனையும் இப்ப தூக்கி குடுக்க போறியா? நம்ம குடும்பத்துல என்ன நடக்குன்னே புரியலடி!" என கத்தி திட்டி அழுதார் அந்த பெண்மணி,

இவள் திரும்பி பாண்டியனை பார்த்துவிட்டு, "கிளம்பும்மா, அவன் ஏதோ செய்ய போய் தான இங்க வந்து உக்காந்துருக்கான்? தப்பு பண்ணா அனுபவிக்க தான செய்யணும்?" என்றாள் மெதுவாக அதட்டி,

"உங்க தம்பி பேரென்ன வைஷ்ணவி?" என்றான் இவன் பின்னிருந்து,

"எனக்கு தெரியும் சார் உங்களுக்கு இப்ப என்ன பத்தின ஃபுல் டீடெயில்ஸும் தெரியும்னு தெரியும். ஆனா எல்லாம் தானா வெளிய வர வைப்பீங்க. நானும் வருவேன் சார், மொத்தமா முடிஞ்சப்றம்" என்றாள் லேசான கன்றலுடன்.

"அதுக்கு நா விடமாட்டேனே வைஷ்ணவி?"

"நா ட்ரை பண்ணுவேன் சார்"

"பாக்கலாம் நாளைக்கு கோர்ட்டுக்கு கண்டிப்பா வந்திடுங்க" என்றதும்,

"ஸுயர் சார்" என்றவள் விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

"சார் என் புள்ளைய அடிக்காதீங்க சார், வலி தாங்க மாட்டான்" என்றார் வைஷ்ணவியின் தாயார்.

"உங்க பையனா? உங்க தங்கச்சி பையனா? சரி யாரா வேணா இருக்கட்டும். அவன நீங்க சரியா கவனிக்கலம்மா, சோ நாங்க நல்லா கவனிச்சு தான் அனுப்புவோம், முடிஞ்சா கமிஷனர்ட்ட பேசிக்கோங்க" என்றவாறு சொல்லிக்கொண்டே அவரை கடந்துச் சென்றுவிட்டான். கமிஷனரிடம் அனைத்தையும் தகவலாக ஒப்படைத்துவிட்டான்.

அன்றைய இரவில் மரகதத்திடம் போனில் பேசும்போது கூட, அவளை எப்போதும் போல் கலாய்த்து தான் பேசிக் கொண்டிருந்தான், வைஷ்ணவி அவளிடம் பேசியிருக்கவில்லை என அவளாகவும் ஆரம்பிக்காததில் புரிந்திருந்தான்.

'ஆனாலும் நம்புறதுக்கில்ல, விஷயம் தெரிஞ்சுருந்தா கூட முழுசா முழுங்கிருவா ப்ராடு. அவளே ஆரம்பிக்கட்டும் பேசிக்கிறேன்' என அவளை மனதினுள் திட்டியும் கொண்டவன், "அப்றம் மரகதம் என்ன சாப்பாடு?" என்றான் சாதரணமாக,

"ஆப்பம் கடலை கறிங்க"

"நா மேகி எப்ப சாப்ட?"

"இன்னுமா சாப்டல நீங்க?"

"இல்ல நேரம்‌ பாத்துட்ருக்கேன், கைக்கு வந்ததும் ஸ்வாஹா தான்"

மூஞ்சை சுருக்கி திருதிருத்தவள், "இன்னைக்கு அத்த வீட்டுக்கு போயிருக்கலாம்லங்க?" என்றாள் பேச்சை மாற்ற எண்ணி.

"அங்க எல்லாம் பிஸி, நா போனா அம்மா எல்லா வேலையும் விட்டுட்டு வீட்ல இருந்துப்பாங்க"

"நீங்க யாருக்கும் இன்விடேஷன் வைக்கலையா?"

"மந்தாகினிக்கு மட்டும் வைக்கணும் இப்ப எங்க என்ன பண்ணிட்ருக்காளோ? கல்யாணம் ஆகி பிள்ளைங்கலாம் இருக்கும்ல மரகதம்?"

"ஏங்க?" என்றவள் தலையை தாங்கி விட்டாள், 'எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாரே இந்த ஏசிபி' நினைக்க மட்டுமே முடிந்தது.

"ஆமால்ல உனக்குத்தான் அவள‌பத்தி பேசினா பிடிக்காதுல்ல?" என்றான் அவனேவும்.

"ஆமாங்க நாம வேற‌ பேசலாம். அந்த தொடர் கொலை வழக்குல கில்லர் யாருன்னு சொல்லுங்களேன்"

"சொல்லலாமே? அதுக்கு முன்ன நீ சொல்லு வைஷ்ணவி பத்தி உனக்கு எந்தளவுக்கு தெரியும்?" என பிடித்துக் கொண்டான்.

"வைஷுவா?" அவள் திணற,

"ஆமா உன் கூட ஜீவானந்தம் சார்ட்ட வேலை பாக்குற அதே வைஷு தான்"

'நீயா தாண்டி எப்பவும் வாய குடுத்து மாட்ற?' என புலம்பி நகம் கடித்தவள், "தெரியுங்க கூடவே வேலை பாக்றாளே அதனால தெரியும்"

"அதான் எந்தளவுக்குன்னு கேக்றேன்டி?"

"அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, கூட பிறந்தவங்க ஒரு அண்ணா, ஒரு தம்பின்ற அளவுக்கு தெரியும்"

"அந்த தம்பி இப்ப உயிரோட இல்லன்னு தெரியுமா?"

"ஆமா உடம்பு சரியில்லாம நாலைஞ்சு மாசம் முன்ன இறந்துட்டான்னு சொல்லியிருந்தா"

"நீ போகலையா அந்த டெத்துக்கு?'

"போனேன் அந்த டைம்கு மட்டும் போய்ட்டு வந்துட்டேன்"

"க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தான ரெண்டு பேரும்?"

"ஆமாங்க ஆனாலும் அவளா சொல்லாத எதையும் நா கம்பல் பண்ணி தெரிஞ்சுக்க மாட்டேன். இப்பலாம் எதுவும் சொல்றதுமில்ல"

"சரி உனக்கா தெரிஞ்சத சொல்லேன் கேட்போம்"

"என்னங்க என்னையே கில்லர் போல விசாரிக்றீங்க? ஆமா வைஷ்ணவிய எதுக்கு இவ்வளவு விசாரிக்றீங்க சொல்லுங்க?"

"உனக்கு தெரிஞ்சத நீயே சொல்லிட்டா பெட்டர் மரகதம்" கோவமாக தான் வந்தது அவன் குரல்.

நிலையாக நின்று கொண்டவள், 'எதோ இருக்கு அதான் இவ்வளவு போட்டு வாங்குறாருடி மேகி. தெரிஞ்சத சொல்லிடு இல்ல இதுக்கும் சேத்து வச்சு செய்வாரு' என முடிவெடுத்து கொண்டு, "வைஷ்ணவியோட அம்மாவும், சித்தியும் கூட பிறந்த அக்கா தங்கச்சி, வைஷ்ணவியோட சித்தி வள்ளி மேடம் கேகேவி ஸ்கூல் சயின்ஸ் டீச்சர், அவங்க அங்க வொர்க் பண்ணதால ஃபேமிலி எல்லாருமே அந்த ஸ்கூல்ல தான் படிக்றாங்க, வைஷ்ணவி அண்ணா விநாயகம் கூட அங்க தான் பிடி சாரா இருக்காரு. வைஷ்ணவி தம்பி விஷ்ணுக்கும், அவளோட சித்தி மகன் ராமனுக்கும் ஒரே வயசு தான், டென்த் தான் படிக்கிறாங்க, இவங்க ரெண்டு பேருமே இப்ப தொடர்ந்து கொலை நடந்துட்டு வருதே, அந்த கேங்க்ல தான் இருந்தாங்க. இவ ரெண்டு பேரையும் அடிக்கடி கூப்ட்டு திட்டி அனுப்புவா, படிக்க சொல்லுவா, நானும் கூட அட்வைஸ் பண்ணிருக்கேன், சரி‌சரின்னு சொல்லிட்டு போவாங்க, ஆனா படிக்க மாட்டாங்க, அகைன் சில இஷ்யூஸ் வரும், அந்த அண்ணாவும் வைஷ்ணவியும் போய் சமாளிச்சுட்டு வருவாங்க. வைஷ்ணவி அண்ணா சொன்ன சில விஷயங்கள் ரொம்ப ஷாக்கிங்கா கூட இருந்தது. பொண்ணுங்க பசங்களோட நியூட் வீடியோஸ ஸ்கூல்ல வச்சு பாத்தாங்களாம், அதையும் மத்த பொண்ணுங்க, லேடி ஸ்டாஃப்ஸ்னு காமிக்றதும் அவங்க மொபைலுக்கு அனுப்பி வைக்றதும், அத வச்சு காசு கேக்றதும்னு இருந்துருக்காங்க. இதனால அவங்க சித்தி வள்ளி மேடம்க்கு கூட அங்க நல்ல நேம் இல்லாம, நிறைய பேசிருக்காங்க, அவங்களுக்கு இந்த பசங்க வருசையா இறந்து போகவும் அதிக பயம், தன்னோட பிள்ளையையும் இதுமாதிரி கொன்றுவாங்களோன்னு அதிக பயம், மன அழுத்தம். போன வாரம் அவங்களும் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. இப்ப உங்ககிட்ட இருக்க ரெண்டு பசங்கள்ல ராமன் அந்த வள்ளி சித்தி பையன் தான், அம்மா இறந்ததும் அவனுக்கு அதிகமா தப்பு பண்ணிட்ட ஃபீல் போல. உங்க கமிஷனர் ஆபிஸ்ல அவனுக்காக வந்து உக்காந்துருக்குறது, அவனோட பெரியம்மா பெரியப்பா தான், அதாவது வைஷ்ணவியோட அம்மா அப்பா தான். இவளுக்கும் இவ அண்ணனுக்கும் சப்போர்ட் பண்ண இஷ்டமில்ல அதான் அந்த பக்கம் வராம இருக்கா" என படபடவென்று சொல்லி முடித்தாள்.

"அவ்வளவு தானா?" என்றான் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுவிட்டு.

"எனக்கு இதாங்க தெரியும். அவளுக்கு போலீஸ் ப்ரொடக்ஷனுக்கு கூட இவ அப்ளை பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா. நா உங்கள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சதுல இருந்து என்ட்ட எதையும் சொல்றதில்ல"

"இத ஏன் நீ முன்னவே சொல்லல? லாஸ்ட் பிஃப்டீன் டேஸா இந்த கேஸ் தான் பீக்ல இருக்குன்னு தெரியும்ல, நாந்தான் ஹேண்டில் பண்றேன்னும் தெரியும். பின்ன ஏன் மரகதம் என்ட்ட சொல்லல?"

"நீங்க கேக்கல தானே? அந்த பசங்க கேகேவி ஸ்கூல், வைஷுவோட ரிலேடிவ் இத நீங்களே தெரிஞ்சுப்பீங்க நா வேற தனியா என்ன‌ சொல்லிட்டுன்னு தான் சொல்லல"

"ஓஹோ! தென் வேறென்ன தெரியும் ?இன்னும் கடத்தி கொலை எதும் பண்ணதும் தெரியுமா?"

"யாரு வைஷுவா? அவ எப்டிங்க பண்ணுவா? ஏன் பண்ணணும்?"

"உனக்கு தெரியாதுன்ற?"

"ஏங்க கில்லர் லேடின்னு அன்னைக்கு சும்மா சொல்றீங்கன்னு நினைச்சேன் இப்ப என்னன்னா வைஷுவோட கம்பேர் பண்றீங்க? அவளா கில்லர்?" என்றாள் படபடத்து.

"வேற எந்த லேடியும் இதுல சம்மந்தப்படலையே?"

"அதுக்காக சும்மா இருக்கவள‌ புடிச்சு உள்ள போட பாப்பீங்களா? அவ‌ செய்ய வேண்டிய அவசியம்? அவளுக்கு அதுக்கான மோட்டிவ்வே இல்லையே? அவ தம்பிங்களும் சேர்ந்து தான் யாருக்கோ எதோ பண்ணிருக்காங்க. பாதிக்கபட்ட ஒருத்தன் கடத்தி கொல்றான். இவ ஏன் பண்ணணும்?"

"அந்த ராமன், வைஷுவோட சித்தி பையன் ரைட்? அவன் அப்ரூவராகிட்டான். அக்காதான் காரணம்னு தெளிவா சொல்றான். நீதான் இப்ப சொன்னா அவனோட அக்கா வைஷுன்னு?"

"இவ அந்த பையனுக்கு பெரியம்மா பொண்ணு தான். அவனோட கூட பிறந்த அக்கா இன்னொருத்தி இருக்காங்க" என்றாள் தெளிவாகவும் வேகமாகவும்.

"ம்ம் மந்தாகினி இல்லையா அந்த பொண்ணு பேரு?" என்றான் அவன் அவ்வளவு நிதானமாக. அவன் அவளை கொண்டு வர வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்திருந்தான்.

"ஆ ஆ ஆமாங்க" இவளும் மனதிற்குள் என்னவெல்லாமோ யோசித்து பயந்தாள்.


"குட். நாளைக்கு கோர்ட்ல பாக்கலாம் மரகதம். குட் நைட்" என அதற்கு மேல் பேசவிடாமல் வைத்து விட்டான். இவளும் அப்படியே அமர்ந்து விட்டாள். 'மந்தாகினி' என்றோ இவள் விளையாட்டாக முன்னெடுத்து வைத்த பெயர், இன்று வரை விடாமல் துரத்துகிறது.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 31

இரவு மகிழிடம் பேசிவிட்டு வைத்ததிலிருந்து வைஷ்ணவிக்கு முயன்று கொண்டிருக்கிறாள் மரகதவல்லி, அவள் தான் இவள் அழைப்பை ஏற்கவேயில்லை. இவர்கள் இருவரின் சம்பாஷனைகளும் இரு வீட்டாருக்கும் தெரியவில்லை. இருவருமே சொல்ல முயலவில்லை. அவன் எப்போதும் சொல்வது கிடையாது, மரகதம் எதையாவது வீட்டில் வந்து புலம்ப கூடியவள்‌தான், ஆனால் இதை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்து கொண்டாள். அவர்கள் எல்லோரும் இவர்களின் திருமண வேலையில் பரபரப்பாக இருந்தனர்.

மறுநாள் காலையில் நீதிமன்றத்திற்கு கிளம்பி வந்த பின்னரும் அவளுக்கு முயன்று கொண்டிருந்தவளுக்கு அடுத்த சந்தேகமாக, 'இதை ஜீவானந்தம் சார்ட்ட சொல்லிடுவோமா வேணாமா?' என்ற குழப்பமும் வந்திருந்தது.

ஜீவானந்தம் ஒரு அரசாங்க வக்கீல், பொதுநல வழக்குகளும் அவரிடம் தான் வந்து சேரும். இந்த வழக்கும் நீதிபதியின் உத்தரவின் பேரில் தான் இவரிடம் வந்து சேர்ந்தது. இன்னாருக்கு என்றில்லாமல் வழக்கை பொதுவாக விசாரித்து, தவறிருக்கும் பக்கத்தை நீதிபதி முன் நிறுத்துவதே இதில் இவர்களின் வேலை.

இத்தனை நாட்களாக கொலையாளி ஏதோ ஒரு காரணத்திற்காக தான் தொடர் கொலைகள் அதும் ஒரு நண்பர்களின் குழுவை தேர்ந்தெடுத்து கொள்கிறான், அவனிடம் அதற்கான காரணமிருக்கும் அதை வைத்து தண்டனைகள் குறைக்கப்படலாம், ஆனால் நான்கு கொலைகளுக்கான தண்டனை நிச்சயம் தனிதனியாக வழங்கப்படும், வைஷ்ணவியின் தம்பியை அவள் எப்படியும் காப்பாற்றி கொள்வாள், என்றளவில் தான் இவளின் யோசனை இருந்தது. இன்று அந்த கொலையாளியே வைஷ்ணவியாக இருக்குமோ என்பது தான் அதிக நெருடலாக இருந்தது.

'நிச்சயமா அவ இதுல சம்பந்தபட்ருக்கா இல்லாம அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்ட ஏசிபி என்ட்ட சொல்லிருக்க மாட்டாரு' என அவள் நினைத்துக் கொண்டிருக்க,

"காலைலயே கல்யாண கனவா?" என அவள் முன்னிருந்த மேசையில் தட்டி தன்னை பார்க்க வைத்தான் மதன்.

"மதன்?"

"போச்சு இன்னும் தெளியலையா நீ?"

"என்ன கேட்ட நீ?"

"உன்ன சார் ரொம்ப நேரமா ஏலம் விடுறாரும்மா போயி அவர்ட்ட என்னன்னு கேளு"

"சார் வந்துட்டாரா? எப்போ? நா பாக்கவே‌ இல்ல?"

"நீதான் ஏசிபி சார்‌‌ கூட டூயட்ல இருந்தியே எங்களலாம்‌‌ கண்ணுக்கு தெரியுமா? உன்ன பாத்து அவரும் சிரிச்சுட்டே தான்‌‌ போனாரு"

"நா வேற யோசனைல இருந்தேன், சார்‌‌ வரவும் சத்தம் குடுத்துருக்கலாம்ல?"

"நா குடுத்த சத்தம் உனக்கு கேக்காம‌‌ தான் வந்து உன் மேசைய தட்டிட்டு நிக்கிறேன். அப்றம் ஏசிபி சார் கனவுல வந்து என்ன சொல்றாரு?"

"போ லூசு" என்றவள் அவனை தாண்டிக் கொண்டு உள்ளிருந்த ஜீவானந்தம் அறைக்குச் சென்றாள்.

"வா மேகி. என்ன யோசனைல இருக்க? பாண்டியன் என்ன சொல்றாரு?" என அவரும் கிண்டலாகவே ஆரம்பிக்க,

"அதெல்லாம் இல்ல‌‌ சார் நா வைஷ்ணவி பத்தி யோசிச்சுட்ருந்தேன். நாலு நாளா ட்ரை பண்றேன் ஃபோன்ல கூட அவட்ட‌ பேச‌ முடியல"

"நேத்து ஈவ்னிங் பேசினாளே என்ட்ட"

"என்ன சார் சொன்னா?" என இவள் வேகமாக கேட்க,

"அந்த தொடர் கொலை கேஸ்ல மிச்சமிருக்குறதுல ரெண்டு பசங்க கமிஷனர் கஸ்டடில இருக்காங்களே, அதுல ஒருத்தன் ராமன்னு பேரு, அந்த பையன் அவளோட சித்தி பையனாம். ஜாமீன் வாங்கட்டுமா சார்னு கேட்டா. உன் தம்பின்ற வாங்கும்மான்னு சொல்லிட்டு வச்சேன். ஆனா கிடைச்சுருக்காதுன்னு நினைக்கிறேன். பாண்டியன் அவ்வளவு லேசுல கைல கிடைச்சவங்கள விடுற ஆளில்ல"

"சார் இன்னைக்கு அந்த பசங்கள கோர்ட்ல ப்ரொட்யுஸ் பண்ண வருவாங்கன்னு நினைக்கிறேன்"

"ஆமா எஃப்ஐஆர் காபி வந்துருச்சே எனக்கு. நீதான் இப்ப ஃப்ரீ உன்ட்ட தான் இதுக்கு ஃபுல்லா ஹியரிங் சொல்ல நினைச்சேன். பட் நீ மேரேஜ்கு லீவ்ல போறியே, சோ நானே எடுக்கலாம்னு இருக்கேன். மதனுக்கு வேற கேஸ் இருக்கு"

"சார் ஒருவேளை வைஷ்ணவி அவ தம்பிக்காக ஆஜர் ஆனானா?"

"ஆகட்டுமே மரகதம். அந்த ரெண்டு பசங்களையும் விசாரிச்சுட்டு வெளியவிடாம தான் வச்சுருக்காங்க. இத்தன நாள் போலீஸ் அவங்க வீட்டுக்கு போய் ப்ரொடக்ஷன் குடுத்துச்சு, இப்ப உள்ள வச்சு ப்ரொடக்ட் பண்ணுறாங்க, அப்ப தப்பு இந்த பசங்க பக்கந்தான் இருக்கும். ஆனா சின்ன பசங்க சோ கேஸ் இழுக்கும்"

"அப்ப நானே எடுக்கட்டா சார்?"

"உன் லீவு?"

"மேனேஜ் பண்ணிடுவேன் சார். ஹியரிங் வந்துடுறேன்"

"கேஸ் டீடெயில்ஸ் எடுக்க உனக்கு டைமிருக்காதே மேகி?"

"மாமியார் ஃபேமிலி கொஞ்சம் சப்போர்டிவ்வா தான் தெரியிறாங்க சார், சோ என்னால பாக்க முடியும்"

"வைஷ்ணவி உன் ஃப்ரண்ட் ஆப்போஸிட்டா ஆஜராகுவான்னு யோசிச்சியா?"

"இல்ல சார், அவகிட்ட ஏதோ சம்திங் ராங். இல்லாம என் ஃபோன அவாய்ட் பண்ண மாட்டா"

"என்னவா இருக்கும் மேகி?"

"கில்லர அவளுக்கு தெரியுமோன்னு இல்லனா கில்லருக்கு எதும் ஹெல்ப் பண்ணிருக்கலாம்னு தோணுது சார். ஏசிபி சார் அவள பத்தி நேத்திக்கு என்ட்ட விசாரிச்சாங்க"

"பாண்டியன் சும்மா விசாரிக்க மாட்டாரே மேகி?"

"அத தான் சார் நீங்க வரும்போது யோசிச்சுட்ருந்தேன்"

"ம்ம் சரி, கேஸ் ஃபைல் வரட்டும் ஸ்டார்ட் பண்ணிடலாம், நீயே ஹியரிங் ஃபுல்லா எடு மேகி" என்றதும்,

"ஓகே சார்" என்றுவிட்டாள்.

பதினொரு மணி போல், இரண்டு மாணவர்களையும் நீதிமன்றம் அழைத்து வந்தனர், சொக்கலிங்கமும், வேறு இரு காவலர்களும்‌ தான் வந்தனர், பாண்டியன் வரவில்லை.

நீதிபதி முன் நிறுத்தப்பட்டு, விசாரிக்க பட்டனர், "பேரென்ன, ஸ்கூல் நேம் என்ன? என்ன செஞ்சீங்க?" என ஒவ்வொன்றாக இவளே விசாரித்தாள்.

"செய்யும்போது எதுவுமே தப்புன்னு தோனலையா?" என்றாள் காட்டமாக,

"இவங்களுக்கு ஆதரவா வாதாட யாரும் வரலையா?" என்றார் நீதிபதி.

"வைஷ்ணவி வருவாங்கன்னு நினைக்கிறேன் சார்" என்றார் ஜீவானந்தம்.

"இவங்க சுயநினைவோடு தான் தன்னிலை விளக்கம் குடுத்தாங்களா இல்ல மிரட்டி வாங்க பட்டதான்னு தெரியணும். அவங்க பக்கமிருக்கவங்க ஒரு வக்கீல ஏற்பாடு பண்ணுங்க. இந்த பசங்க அதுவரை போலீஸ் கஷ்டடிலயே இருக்கட்டும். முழு விசாரணை அறிக்கையும் அடுத்தவார வியாழக்கிழமை எனக்கு தரணும்" என காவல்துறை தந்த அறிக்கையையும் சேர்த்து, அவர் எழுதிய நோட்டீஸோடு நீட்டிவிட்டார்.

சொக்கலிங்கம் மறுபடியும் அவர்களை அழைத்து கொண்டு சென்றுவிட்டான். இவள் மீண்டும் வைஷ்ணவிக்கு முயன்று விட்டு, "சார் வைஷீ என் ஃபோன் எடுக்கல, நீங்களே அவகிட்ட பேசி இந்த கேஸ எடுக்றாளா இல்லையான்னு கேட்ருங்க" என சொல்லிக் கொண்டிருக்க,

"நா ட்ரை பண்றேன்" என அவர் நகரவும், வைஷ்ணவியின் அம்மா அவளிடம் வந்தார்,

"அம்மாடி, என் பொண்ணுக்கு‌ கிறுக்கு தான் பிடிச்சுருக்குன்னு நினைக்கிறேன். அவேன் தப்பே பண்ணிருந்தாலும் சின்ன பையனில்லையா? அவ தம்பி‌தானே? இவளே காப்பாத்தலனா வேற யாரு வருவா? அந்த குடும்பமே சிதைஞ்சு போய் கடக்கும்மா" என அழுதார்.

"அடுத்தவங்கள ட்ரஸில்லாம நிக்க வச்சு பாக்றவன் சின்ன புள்ளையா? தெரியாம செஞ்சானா?" என்றாள் இவள் அவரின் முகத்திற்கு நேராக,

அவர் அதிர்ந்து விழிக்க, "உங்க தங்கச்சி மகன் இப்ப ஜட்ஜ் முன்ன அததான் சொல்லிட்டு போறான். ஏன்டா அப்படி பண்ணண்ணு கூட இனி உங்களால கேட்க முடியாது. ஏன்னா கொலைகாரன்ட்ட இருந்து தப்பிச்சாலும், இனி ஜெயில் வாழ்க்கை தான் குறைஞ்சது மூணு வருஷத்துக்கு. அதுக்கப்பறம் முடிஞ்சா திருத்தி வாழவைங்க. உங்க பொண்ணு இதுல தேவை இல்லாம மாட்டிருக்காளான்னு எனக்கு தெரியல, அத மொத கண்டு பிடிங்க" என்றவாறு அவள் அறைச் சென்று விட்டாள்.

அன்றே காவல் துறையிலிருந்து வந்த கோப்பை மொத்தத்தையும் ஒரு எழுத்து விடாமல் படித்து முடித்திருந்தாள். மணி மாலை ஆறு கடந்து விட்டதால், இன்னும் பார்க்க மிச்சமிருந்த ஆடியோ, வீடியோ பதிவுகளை எடுத்து கைப்பையில் போட்டு கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். அதுவரை அவளும் அவனுக்கு அழைக்கவில்லை அவனும் அவளுக்கு அழைக்கவில்லை.

வீட்டிற்கு வந்தால் அம்மா அப்பா இருவருமே பத்திரிகை வைக்க சென்றிருக்க, இவள் குளித்து வீட்டுடைக்கு மாறிவிட்டு ஒரு டீயையும் போட்டு வந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள். யோசனை மொத்தமும் அந்த கொலை வழக்கில் தான் இருந்தது.

அந்நேரம் அவள் போனுக்கு அழைப்பு வர, வைஷ்ணவியோ என்று தான் சென்று எடுத்தாள், அது அவளின் 'ஏசிபி' என மின்னியது.

"ஹே மரகதம்?" என்றான் துள்ளலான குரலில், நேற்றைய பேச்சு நேற்றோடு போலும். வெளியே எங்கேயோ நிற்கிறான் என அவனுக்கு பின்னால் கேட்ட பாடல் சத்தம் வைத்து புரிந்து கொண்டாள்.

"சொல்லுங்க" என்றாள் டீயை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து கொண்டு.

"என்ன பண்ணிட்ருக்க?"

"இப்பதான் வந்தேங்க. டீ குடிக்கிறேன்"

"அப்றம்? கேஸ நீதான் எடுத்துருக்க போல?"

"ஆமா நீங்க தானே எடுக்க சொன்னீங்க?"

"அப்ப பேலன்ஸ் பண்ணிடுவன்ற?"

"என்னங்க"

"சொல்லுங்க?" என்றான் இழுவையாக,

"கேஸ் எடுக்க சொன்னது நீங்க நா எடுத்துட்டேன், ஹியரிங் போக வர நீங்க தான் சப்போர்ட் பண்ணணும். வைஷு கில்லர் இல்ல தான? அவ வேற போன எடுக்க மாட்டேங்குறா எனக்கு ஒருமாதிரி கவலையா இருக்கு. நீங்க ஏன் இன்னைக்கு வரல?"

"அங்க என்ன நடந்துச்சு?"

"கேஸ எடுக்க சொல்லி ஜட்ஜ் சொன்னாரு. அந்த பசங்க சைடும் ஆஜராக லாயர் எடுக்க சொன்னாரு. பத்து நாள்ல கேஸ் ஃபுல்லா முடிச்சு கொண்டு வர சொல்லிட்டாரு"

"இதுக்கெதுக்கு நானு?"

"வரேன்னு சொன்னீங்களே?"

"நீ மார்னிங் ஒருக்கா கால் பண்ணி கூப்பிட்டிருந்தா வந்திருப்பேன். நீதான் கண்டுக்கவே இல்லையே?"

"ஏங்க? இன்னைக்கே கில்லர கொண்டு நிறுத்துற மாதிரி பேசுனீங்களேங்க?"

"கில்லர் வைஷுவா இருக்குமோன்னு உன்ட்ட கேட்டேன்டி. கூட்டு களவாணிங்க சேர்ந்து என்னலாம் செய்வீங்களோ?"

"நா எதுமே கேட்கலங்க இனி" என்றுவிட்டாள் பவ்யமாக.

"உன்ன கேட்கவேவிடாம பாத்துப்பேன்டி மரகதம். வீட்ல உனக்கு எந்த ஏக்கமுமில்லனா வேலைல தலைவலியே இருக்காதுன்னா பாத்துக்கோ"

"அப்ப நானும் உங்கள ஏங்க விட‌ கூடாதுன்றீங்க?"

"என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும், நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும், உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்" என பின்னால் பாடிய பாட்டுடன் அவன் குரல் வெளிவராமல் முனங்கலாக பாட, அவள் இதழ் கடித்து சிரித்தாள்.

"இப்படிலாம் மந்தாகினி கூட பாடணும்னு நினைச்சேன் ஆனா பாட முடியல" என்றான் அதை தொடர்ந்து.

"ஏன்ங்க" என்றாள் அந்த பரவசம் உடனே போயிவிட பாவமாக,

'ஏங்க இப்டி பண்றீங்க?' என அவள் கேட்பது புரிந்தும், அவள் அவன் பாட முடியல என கூறியதற்கு, 'ஏன்?' என கேட்கிறாள் என அதை முடிவாக்கி, "ஏன்னா கேட்குற? அப்பதான் அந்த படமே வரலையே? அதான் பாடல இல்லனா பாடிருப்பேன்" என்க,

"அத ஒரு செகெண்ட்னாலும் ஃபீல் பண்ண விட்டீங்களா? இதுல நா உங்கள ஏங்க விட கூடாதாம்" என சினுங்கினாள்.

"நா அதுலயே உனக்கு பதில் சொன்னேன் மரகதம், என் விரல் இடுக்குல உன் விரல் கிடக்கணும், என் கைக்குள்ள நீ வந்தப்றம் எடுக்குறதும் கொடுக்குறதும் ஈக்குவலாகிடும். நா கொடுத்தாலும் நீ எடுத்தாலும் நன்மை ரெண்டு பேருக்கும் தான்னு சொல்லறேன்"

"போலீஸ் ட்ரைனிங்ல இதெல்லாம் எப்டிங்க படிச்சீங்க?"

"இதெல்லாம் மந்தாகினி சொல்லி கொடுத்ததுடி மரகதம்"

"வேணாங்க ப்ளீஸ்"

"நாந்தான் குடுக்கவேயில்லையே?"

"ஏங்கங்க?"

"முடியலையாங்க?"

"ஆமாங்க" அவள் பாவத்தில் இவன் சிரிக்க, "சார்" என அங்கு வந்துவிட்டான் சொக்கலிங்கம்.

"சரிடி பாக்கலாம். வெளில இருக்கேன். பை" என வைத்தும்விட்டான். அவளையும் கொஞ்சம் இதமான மனநிலைக்கு கொண்டு வந்திருந்தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 32

அடுத்த பத்து நாட்களும் வேகமாக கடந்திருந்தது, வைஷ்ணவி அவளின் விடுமுறையை முடித்துக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்திருந்தாள், ஆனால் மரகதவல்லி அவளிடம் பேசவே முயலவில்லை, வைஷுவும் அவளை அழைக்காமல் அவள் முன் சென்று நின்று பார்ப்பாள், பின் கடந்து விடுவாள், மௌன நாடகம் தான் அவர்களுக்குள் அரங்கேறியது.

அங்கு பாண்டியன், மந்தாகினியையும் அவள் அப்பாவையும் வர சொல்லியிருக்க, துக்கம் நடந்த வீடென்று அவரை எங்கும் விடவில்லை அவர் வீட்டினர், போலீஸ் ஸ்டேஷனிலிருந்தும் இருமுறை சென்று சொல்லிவிட்டு வந்தபிறகு, கடந்த நான்கு நாட்களுக்கு முன் தான் இருவரையும் தனக்கு முன் அமர்த்தி இருந்தான் அந்த ஏசிபி.

"நாலு தடவ நடக்கணுமா உங்கள அழைக்க? கூப்பிட்டா உடனே வர மாட்டீங்களா?" என அரட்டி தான் ஆரம்பித்தான் விசாரணையை.

"என் பொண்டாட்டி இறந்துட்டா, பையன் அல்ரெடி போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கான். இதுல நானும் வந்துட்டா என் பொண்ணு நிலமை என்ன சார்? அதான் அவளுக்கானத ஏற்பாடு பண்ணிட்டு வந்தேன். என் பொண்ண கேஸ வாபஸ் வாங்க சொல்லிருக்கேன். அவ வாங்கிட்டா சரி. இல்லனா நா இப்டியே இங்க தானே இருந்தாகணும். அதுக்கும் தயாரா தான் வந்துருக்கேன்" என்றார் அவர். மிகவும் யோசித்து இந்த முடிவிற்கு வந்திருப்பார் போலும்.

"நா வாபஸ் வாங்க மாட்டேன் சார். நீங்க இவர விசாரிங்க" என்றாள் மகள்.

"விசாரிக்கறதுக்குலாம் எதுவும் இல்ல சார். என்னால தான் என் பொண்டாட்டி செத்தான்னு நானே ஒத்துக்குறேன் சார்" என்றார் அவர் உறுதியாக.

"ஏன் என்ன டார்ச்சர் பண்ணீங்க அவங்கள?" என்றான் சாய்ந்தமர்ந்து இருவரையும் அளவிட்டு கொண்டே.

"அவளுக்கு என் தொழில், வருமானத்துல திருப்தி இல்ல, அவ வருமானம் அதிகம், அதனால என்ன வேற பிஸ்னஸ் பண்ண சொன்னா, நா பண்ணல அதுல எங்களுக்கு அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சது, அப்றம் வெறுப்பாச்சு, ஸ்கூல்ல எங்க பையனோட நடவடிக்கை சரியில்லாம அதும் கொஞ்சம் என்னால தான்னு அவளுக்கு எண்ணம். எல்லாம் சேத்து தான் அவளுக்கு ஹார்ட் அட்டாக்ல கொண்டு விட்ருச்சு சார். அப்படி பாத்தா நாந்தான் காரணம் சார்"

"இருபது வருஷமா நீங்க எல்ஐசி ஏஜெண்ட் தான் இல்லையா?" என்றான் அவரை கூர்மையாக பார்த்தவாறு.

"கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்ச சண்டை தான் சார் இந்த நிலைமைக்கு வந்துருச்சு"

"என்னம்மா உங்கப்பா இப்படி சொல்றாரு?" என்றான் அவளிடம்.

"நீங்க தான் சார் கண்டு பிடிக்கணும் தப்பு யார் செஞ்சுருந்தாலும் அது தப்பு தான் சார்" என்றாள் அன்று சொன்ன அதே வாக்கியத்தை இன்றும் அழுத்தமாக.

ராமன் அவள் அக்கா தான் என‌ சொல்லியும் வைஷ்ணவியையும் மந்தாகினியையும் வெளியில் விட்டு வைத்தே வேடிக்கை பார்த்திருந்தான் பாண்டியன். அவனுக்கு இதற்கு பின்னால் எதுவோ இருக்கிறது என்பது மட்டும் நன்கு தெரிந்தது. அதை அவர்களாக சொல்லும் நேரம் பார்த்திருந்தான்.

"என்ன பண்ணலாம் மந்தாகினி?"

"கண்டு பிடிங்க சார்"

"நீங்க கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க பாலகிருஷ்ணன்" என்றான் அவரிடம்.

"சார் நாந்தான் ஒத்துக்கிட்டேனே சார்"

"நாராயணன்" என்ற சத்தத்தில் அவர் ஓடி வர, "இவர வெளில அழைச்சுட்டு போங்க" என்கவும் அவர் இவரை இழுத்துச் சென்று விட,

"இப்ப பேசுவோமா மந்தாகினி? ஆக்சுவலி உன் வீட்டுக்கு வந்து உன்ன அரெஸ்ட் பண்ணிருக்கணும். பொம்பள புள்ளை வயசு புள்ளன்னு தான் விட்டு வச்சேன், ஆனா வர சொல்லியும் வராம ஆட்டம் காட்டுவியா நீ?"

"அன்னைக்கு நானா தான் சார் வந்தேன்"

"ம்ம் உன் தம்பி இங்க உள்ள உக்காந்துருக்கான், உன் பெரியம்மா இங்க வந்து அவனுக்காக போராட்டம் பண்ணிட்டு வாசல்ல உக்காந்துருக்காங்க, நீ உன் அப்பா மேல கம்ப்ளைண்ட் பண்ண‌ வந்து உக்காந்துருந்த. இதெல்லாம் ஏன்னு நீயே சொல்லிடு பாப்போம்"

"அப்ப நீங்களே கண்டு பிடிக்க மாட்டீங்களா சார்?" என்றாள் அவனிடமே.

"சரி நா கண்டு பிடிச்சத நா சொல்றேன் மீதிய நீ சொல்லு" என்றவன் ஒரு கத்தை பேப்பர் கட்டுகளை அவள் முன் தூக்கி போட்டான்.

"உங்கம்மாவோட லாஸ்ட் ரெண்டு வருஷ ஃபோன் கால் ஹிஸ்டரி. இதுல உங்க ஃபேமிலி ஆள் இல்லாம உங்கம்மா அதிகமா காண்டக்ட்ல இருந்த ஒரு ஆளு எம்.எல்.ஏ விஜயம். போதுமா?" என்றதும், அவள் குலுங்கி அழுதாள் அடுத்த அரைமணி நேரத்தில் அவளிடம் மொத்தத்தையும் வாங்கியிருந்தான் அவன்.

இன்று இதோ அடுத்த ஹியரிங், "எஸ் ப்ரோசீட்" என்றார் நீதிபதி மரகதத்திடம்,

"சார் கேகேவி ஸ்கூல்ல டென்த் படிக்குற பதினைந்து பதினாறு வயசு பசங்க தான், ஆனந்த், ரஞ்சித், சங்கர், பாஸ்கர், விஷ்ணு, கிஷோர், கதிர், ராமன் இந்த எட்டு பேரும். இதுல விஷ்ணுவும், ராமனும் அண்ணன் தம்பி, எயிட்த்ல தான் அந்த ஸ்கூல்ல போய் சேர்ந்து இந்த கேங்குலயும் சேர்ந்துருக்காங்க. படிக்கறத தவிர எல்லா கெட்ட பழக்கங்களையும் தெரிஞ்சு வச்சுருக்காங்க, யாருக்கும் பயப்டுறதில்ல, அதுக்கு ஒரு காரணம் பாஸ்கரோட மாமா மறைந்த எம்.எல்.ஏ விஜயம், அண்ட் ராமனோட அம்மா அங்க சயின்ஸ் டீச்சர், விஷ்ணுவோட அண்ணா அங்க பிடி டீச்சர். இப்படி அவங்க தப்பு வெளிய தெரியாம மறைக்குறதுக்கு கூட அங்க ஆளுங்க இருந்துருக்காங்க. தண்ணி, சிகரெட், போதை பொருட்கள், ஆண்கள் பெண்கள வீடியோ எடுக்குறது, அத வச்சு மிரட்டி காசு வாங்குறதுன்னு இவங்க க்ரைம் லிஸ்ட் அதிகம். இதுல என்னாச்சுன்னா விஷ்ணு, அவனுக்கு இந்த கெட்ட பழக்கங்கள தாங்கிக்க கூடிய உடம்பு ஒத்துழைப்பு இல்ல, அதாவது அவனோட இம்மியூன் ஸிஸ்டம் ஒத்துக்கல, நோய்வாய்ப்பட்டு படுக்கைல இருந்து நாலு மாசம் முன்ன இறந்து போயிட்டான். அவனுக்கு அல்ரெடி ஃபீவர், கோல்ட், ஃபிட்ஸ்னு சின்ன பிள்ளைல இருந்து அடிக்கடி வருங்குறதால அதே தான் இப்பவும்னு விட்டது அவன் உயிர வாங்கிடுச்சு. அதுக்கு காரணம் அவனோட சரியில்லாத ஃப்ரெண்ட்ஸ் சேர்க்கைன்னு யாருக்கும் தெரியாமலே போயிடுச்சு, மத்த ஏழு பேருல, அஞ்சு பேர் கொல்ல பட்ருக்காங்க, ரெண்டு பேர் சரண்டர் ஆகிருக்காங்க. அந்த அஞ்சு கொலையும் சேம் பேட்டர்ன்ல அடிச்சு கொடுமை படுத்தி கொல்லபட்ருக்காங்க, அவங்க டெட்பாடில ஐடென்டிஃபிக்கேஷனுக்காவே ஒரு பெண்ணோட நீளமான முடிய காலோடு பெரிய விரல்ல சேத்து கட்டி போட்ருக்காங்க. ஆனா பிரேதங்களுக்கு மேலிருந்த நகக் கீறல்களோட அழுத்தம் ஒரு ஆணோடது தான். இதுல சந்தேக அடிப்படையிலும், அதாவது ராமனோட வாக்குமூலம் அடிப்படையிலும் அவனோட அக்காக்கள் வைஷ்ணவி மற்றும் மந்தாகினியை விசாரணையில் எடுத்து உண்மையை வாங்க வேண்டும் என்பது எனது வாதத்தின் முடிவு. அதவச்சு தான் கொலையாளியை உறுதி செய்ய முடியும் என்பதையும் சொல்லிக்கிறேன். தேட்ஸ் ஆல் யுவர் ஹானர்" என முடித்தாள்.

அந்த மாணவர்கள் பக்கம் ஆஜராக வந்த வக்கீலும், "இது பொய் குற்றச்சாட்டு, மாணவர்களை தப்பான உதாரணமாக்க முயல்கின்றனர், கொலையாளி கிடைக்காததால் இவர்களை மிரட்டி அப்ரூவராக வைத்திருக்கிறார்கள்" என்றெல்லாம் அவர் பங்கிற்கு பேசி முடித்தார். வைஷ்ணவி என்பவள் அங்கு வெளியே அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை தான் பார்த்திருந்தாள்.

"வைஷ்ணவி, மந்தாகினி இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன். இதன் அடுத்த ஹியரிங் ஆகஸ்ட் முப்பதிற்கு ஒத்தி வைக்கப்படுகிறது" என முடித்தார் நீதிபதி.

பாண்டியன் தனியாக மந்தாகினியை விசாரித்திருந்தான், இனி வீடியோ ஆடியோ ரெக்கார்ட்டாக அதை அவன் வாங்க வேண்டும். தற்சமயம் கமிஷனர் அலுவலகத்தில் அனேகம் பேருக்கு குற்றவாளியாக இந்த பெண்கள் இருவரையும் தான் தெரியும். ஆனால் நீதிமன்றத்தில் சொல்லும் போது தான் கொண்டு ஒப்படைப்பர் அதுவரை பெண்கள் இருவரும் மகளிர் காவலில் அடைக்கப்படுவர்.

அடுத்து வந்த வாரத்தில், பாண்டியன் மரகதம் இருவரும் அவரவர் துறையில் அனைவருக்கும் திருமண அழைப்பு விடுத்துவிட்டு விடுமுறையில் சென்று விட்டனர்.

இதோ இருவரின் வீட்டிலும் கல்யாண கலைதான், சொந்தங்கள் நிறைய துவங்கி இருந்தனர். மாலை பெண் வீட்டில் வைத்து நிச்சயம், அது முடிந்ததும் பெண் அழைப்பு, விடிந்தால் முதல் முகூர்த்தத்தில் திருமணம்.

"ஏட்டி ஷீலா, எத்தன வரிசை தட்டு எடுத்து வச்ச? இங்க ஏழுதேன்‌ இருக்கு?" என ஓடிக் கொண்டிருந்தார் வாசுகி.

"இன்னொரு கட்ட பைல பாருங்கத்த மொத்தமா பதினேழு எடுத்து வச்சுருக்கேன்"

"எங்கன வச்சுருக்கியோ? நீயே சரியா செஞ்சா நா இம்புட்டு பைல அத தேடிட்டு கிடக்கணுமா? செஞ்சுட்டு செஞ்சுட்டு ஒருக்கா அத பாருங்கத்த ஒருக்கா இத பாருங்கத்தன்னுங்குறது" என அவர் புலம்பிக் கொண்டே அனைத்தையும் எடுத்து பார்த்திருக்க,

"ம்மா இன்னும் என்னம்மா செய்யித, லேட்டாகும்னா எங்கள எதுக்கு தெருவுல நிக்க வச்சுட்டு வந்த?" என வாசலில் நின்று கத்தினான் வரதன்.

"நாய புடிச்சு கட்டுன்னுனேன்ல உன்ன? கட்டிட்டியா நீயி?"

"அரசு போயிருக்கான்"

"வேணுக்கு முன்னால தேங்காய் விடலை போடுன்னே செஞ்சுட்டியா?"

"அத கிளம்பும்போது செய்யணுமாம் அப்பா ரெடியா வச்சு நிக்காக"

"ஐயருக்கு பேசுன்னேன்ல பேசிட்டியா?"

"போற வழில பேசிக்கலாம்மா. இப்ப வாயேன் உள்ள நின்னே கேள்வியா கேப்பியா?"

"மொத்தத்துல நீ நா சொன்ன ஒன்னையும் செய்யல அதான? வேண்டா வெறுப்பா நீ ஒன்னுத்தையும் செய்ய வேணாம் போலே"

"ம்மா நீ மறுபடியும் ஆரம்பிக்காத"

"கிளம்புங்க ரெண்டு பேரும் மிச்ச சண்டைய நாளைக்கு கல்யாணத்த முடிச்சுட்டு வந்து போட்டுக்கலாம். இந்தா இருக்குத்த சீரு தட்டு எல்லாம். வாங்க போவோம்" என்ற ஷீலா அவர்களை கடந்து சென்று வேணில் ஏறிக் கொள்ள,

"ஏட்டி விசாலாட்சி வாரியா இல்லையா நீ?" என்றார் வாசுகி இளைய மருமகளிடம்.

"இந்தா வந்துட்டேன், உங்க பேத்தி நா சீலைலாம் மாத்துனப்றந்தேன் கக்கா போய் நனைச்சுவிடுதா, அத்தோடையே வர முடியுமா?"

"பிள்ளைகன்னா அப்டிதாம்டி. போய் ஏறு போ" என்றவர், "ஏலே அரசு, வாடா சீக்கிரம்" என சத்தங்குடுக்கவும், அவனும் ஓடி‌ வர, வீட்டை பாத்துக்கொள்ள சொல்லி அருகிலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

அனைவரும் மரகதவல்லி இல்லம் சென்று இறங்கி மரகதவல்லியையும் கொஞ்சி தீர்க்க, கொஞ்ச வேண்டியவன் தாமதமாக தான் வந்து சேர்ந்தான்.

"லீவ் எடுத்துட்டீங்க தான? அப்றமு ஏன் லேட்டு?" என்றாள் அருகில் வந்து நின்றவனிடம் மெதுவாக.

"வர்ற வழில என் எக்ஸ் மந்தாகினிய பாத்த மாதிரி இருந்துச்சு மரகதம் அதான் அப்படியே பின்னாடி போயிட்டேன்" என்றான் சிரிக்காமலே.

"ப்ளீஸ்ங்க" என்றாள் கண்ணை சுருக்கி கெஞ்சலாக, அந்த முகத்தை இருநொடி அப்படியே உதட்டோர சிரிப்புடன் பார்த்தவன், மெல்ல திரும்பிக் கொண்டான். அவன் கண்களுக்கு அவ்வளவு அழகாக இருந்து தொலைத்தாள் அவன் மரகதம்.

"உடனே வந்தா என் கெத்தென்ன ஆகுறது? அதான் முக்கு கடையில நின்னு டீ குடுச்சுட்டு, இவங்க தட்டெல்லாம்‌ மாத்தி உனக்கு சேலையும் மாத்த குடுத்தது தெரிஞ்சப்றம் கிளம்பி வந்தேன்"

"அதெப்படி இங்க நடக்குறது முக்கு கடைல தெரிஞ்சது உங்களுக்கு?"

"லைவ் அப்டேட் பை மை தம்பி அரசு"

சுற்றி எல்லாரையும் பார்த்தவாறு இருநொடிகள் இருவருக்கும் அமைதியாக கழிய, "மந்தாகினியோட முகத்த கூட நீங்க பாத்ததில்லன்னு எனக்கு தெரியும். எனக்கு தெரியும்னு உங்களுக்கும் தெரியும்" என்றாள் அவளாகவே குனிந்து கொண்டு,

"உனக்கு எப்டி தெரியும் மரகதம்?" என அவன் கேட்கையில்,

"இந்தாய்யா இந்த செயின மருமவ கழுத்துல போட்டுவிடு" என வந்து நீட்டினார் வாசுகி.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, செயினை அவள் கழுத்தில் போட அவன் கொண்டு செல்கையில், "சாரிங்க, நிஜமா ஆர்வ கோளாறுல தெரியாம செஞ்ச தப்பு தான் அது. சாரி, இப்பவே கேட்க தோணுச்சு கேட்டுட்டேன். மன்னிச்சுக்கோங்க ப்ளீஸ்" என முடிக்க, அவளையே பார்த்துக் கொண்டு செயினை அவள் கழுத்தில் போட்டிருந்தான் மகிழ்நன் பாண்டியன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 33

"மதினி பொண்ணழைப்புக்கு இன்னும் எம்புட்டு நேரம் இருக்குன்னு ஒருக்கா சொல்லுங்க?" என்ற வாசுகியின் குரலில் அவரிடம் திரும்பினான் பாண்டியன், அவளும் திரும்பி நேராக நின்று கொண்டாள், ஆனால் அவன் ஏதும் கூறுவான் அல்லது கேட்பான் என நொடிக்கு ஒருமுறைத் திரும்பித் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.

"என்னவாம் மதினி திரும்பித் திரும்பி அண்ணன பாத்த வண்ணமா இருக்கீக, இனி நீங்க பாக்க மட்டுந்தேன் அவுக, ஆர அமர உக்காந்து பாக்கலாம், இப்ப வாங்க, பொண்ணழைச்சுட்டு போணுமாம். குடத்த இடது பக்குட்டு இடுப்புல புடிங்க, வலது கைல இந்த சிணுக்கோலி, எலுமிச்சம்பழம், ஜாடி மூணையும் புடிச்சுக்கோங்க" என நாத்தனார் முறையிலிருக்கும் கண்மணி, அவள் போக்கில் மரகதத்திடம் மெதுவாக பேசிக் கொண்டே மரகதவல்லி கையில் அனைத்தையும் கொடுத்து விட்டாள்.

"விடலை போட மூணு தேங்காய் எடுத்து வச்சியா?" என வாசுகி வரதனிடம் கத்திக் கொண்டிருக்க,

"கண்மணி இந்தா புடி விளக்கு. வெயிட்டா கேட்டல்ல நல்லா வெயிட்டா எடுத்து வச்சுருக்காங்க புடி" என மரகதத்திடம் நின்ற கண்மணி கையில் விளக்கை வைத்தாள் விசாலாட்சி.

அங்கிருந்த எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் பரபரப்பாக இருக்க, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான் பாண்டியன். அவன் அப்படி அமைதியாக இருப்பதே மரகதத்திற்கு அதிகம் உறுத்தியது. அவளிடம் அவன் வாய் மூடி இருந்ததில்லையே! அதனாலேயே கவனம் அவனை விட்டு நகர மறுத்தது.

"நீ முன்ன கிளம்பு மூத்தவனே, உனக்கு காரு வெளில நிக்குது" என்றதும் உடனே சென்று விட்டான் அவன், அவளுக்கு அதுவே வெகுவாக கலங்கி விட்டது, 'இப்போது இதை சொல்லியிருக்க வேண்டாமோ, அவனுக்கு நிச்சயம் உண்மை தெரியும் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை, ஆனால் தெரிந்ததை வைத்து அவளிடம் முகத்தை திருப்பாமல் நன்றாக பேசிக் கொண்டிருந்தானே, இப்போது அதனைத் தானாக சொல்லி அவன் மனநிலையைக் கெடுத்துவிட்டோமோ?' எனக் குழம்பி நின்றாள்.

"ஏன் மதினி வீட்ல இந்த விளக்க தான் புழங்க போறீங்களா? வாரத்துக்கு ஒருக்கா விளக்கி வைக்கவே பெண்ட் நிமுருமே என்ன செய்ய போறீக?" என கண்மணிக் கேட்க,

"நீ வேணா போயி தேய்ச்சு குடுத்துட்டு வாயேன்" என ஷீலா சொல்லி சிரிக்கவும்,

"ஏன் என் அண்ணே வீட்டுக்கு போயி செஞ்சு குடுக்கணும்னா மாட்டேனா சொல்லபோறேன்?" என்றாள் கண்மணியும்,

"சும்மாக்கா எல்லாம் அத்தான பாத்தா அப்டியே பம்மிருவா" என்றாள் விசாலாட்சி.

"இல்லையே அண்ணே இம்புட்டு நேரமு இங்கனதேன் நின்னாக நா மதினிட்ட பேசிட்டுதேன் இருந்தேன், ஆமாதானே மதினி?" என்றாள் மரகதத்திடம்,

அவளுக்கு இவர்கள் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தாலும் கவனம் இங்கில்லாததால் திடீரென கண்மணி கையில் இடிக்கவும் விழிக்கவே செய்தால்,

"விசாலா மதினி, மரகதம் மதினி என்ன இந்த முழி முழிக்காக, நாளைக்கு இந்நேரம் இப்படி முழிச்சா பரவால்ல, இன்னைக்கே ஏன் முழிக்காக?" என்றாள் கிண்டலாக,

"வீட்ட விட்டு கிளம்புதோம்னு வருத்தபடுதாக போல" என்றாள் ஷீலா,

"இதுக்கெல்லாம் வருத்தபடாதீக, என்னையெல்லாம் இருவத்தோரு வயசுலயே கிளப்பி விட்டுட்டாக, நீங்கலாம் எம்புட்டு ஜாலியா இருவத்தெட்டு வர இருந்துட்டுதேன் கல்யாணம் கட்டிக்க போறீக, சந்தோஷமா கிளம்புங்க, அதும் மழிழண்ணே தங்கம் தெரியுமா, நாம கேட்காமலே எல்லா செய்யும், அம்புட்டு பாசமா இருக்கும் ஆனா வெளியேவே தெரியாது, என் புருஷன் என்ன ஒருக்கா கைய ஓங்கிட்டாரு, நா சொல்லவே இல்ல, பக்கத்து வீட்டுகாரகட்ட சொல்லி வச்சுருப்பாக போல, அவருட்ட விசாரிச்சு தெரிஞ்சுட்டு, என் புருஷன தூக்கிட்டு போய் ரெண்டு நாள் எங்கூட‌ இருன்னு, அண்ணங்கூடவே வச்சுக்கிட்டாக, அதுலயிருந்து என் அண்ணனுக்கு பயந்தே எங்கிட்ட குரல உசத்தாது அந்த மனுஷன்" சிரித்தபடி கேட்டிருந்தாள் மரகதம்.

அந்நேரம் வாசுகி வந்தவர், "ஏட்டி என்னத்த நீட்டி முழங்கிட்ருக்க, விளக்க புடிச்சுட்டு முன்னாடி நட" என முதலில் கண்மணியை விரட்டியவர், "நீங்க ரெண்டு பேரும் அணைவா அவளுக்கு ரெண்டு பக்கமும் வாங்கட்டி, முக்குல இருக்க அம்மன் கோவில்ல சாமி கும்பிட்டுட்டு வேணுல ஏறுங்க நீங்களாம்" என மூவருக்கும் சொல்லிய வாசுகி, "வாங்க வாங்க எல்லாரும் வேணுல ஏறுங்க, மண்டபம் நல்ல பெருசுதேன், அங்கேயே தூங்கி எந்துச்சு காலைல குளிச்சு கிளம்பிக்கலாம், வாங்க" என வீட்டிலுருந்த அனைவரையும் கிளப்பிக் கொண்டிருந்தார்.

"நம்ம அத்த இருக்க இடத்துல‌ அவுக சத்தம் மட்டுந்தேன் கேக்கும், அது யாரு வீடா இருந்தாலும் அவுகதேன் அங்கன முதல் மந்திரி" என விசாலாட்சி சொல்ல, மூவரும் சிரித்துக் கொண்டனர்.

மேளதாளம், வெடி முழங்க பெண்ணழைப்பு சிறப்பாகத் துவங்கியது, அடுத்த இருபது நிமிடங்களில் மண்டபம் வந்திறங்கினாள் மரகதவல்லி, அங்கு ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைக்கப்பட்டாள், வந்ததுமே கண்ணை சுழற்றி அவனைத் தேடிப்பார்த்தாள் எங்குமே அவன் தென்படவில்லை.

"அப்படியே நில்லுங்க, ரெண்டு மூணு ஸ்நாப் எடுத்துக்குறேன்" என புகைப்படம் எடுப்பவர் பிடித்துக்கொள்ள, அடுத்த ஒரு மணி நேரம் அதில் தான் சென்றது, பெண்களும் விதவிதமாக நின்று எடுத்துக் கொண்டனர்.

"சாப்புட்டு படுங்கட்டி, காலைல சீக்கிரம் எழுப்பி விட்ருவேன்" என வாசுகி வந்து மறுபடியும் சொல்லி செல்லவும் தான், மரகதத்தை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தமர்ந்தனர், அங்கேயும் அவனைத் தேடினாள் எங்கும் இருப்பது போல் தெரியவில்லை அவளுக்கு.

"இப்டி உக்காரு, ஏன் முகம் சுனங்கி போயி இருக்கு கண்ணு?" என்றார் வாசுகி மூன்று மருமகள்களுக்கும் இலையை போட்டவாறு,

"அவுக வீட்ட‌விட்டு கிளம்பணும்னு சொன்னதுல இருந்து இப்டித்தேன் இருக்காகத்தே, ஒரே பொண்ணுல்ல செல்லமா வளந்துருப்பாகல்ல" என்றாள் ஷீலா,

"ஒரே ஊரு தானத்தா? வேலை முடிஞ்சு ஒருநாளைக்கு இங்காம வந்தா ஒரு நாளைக்கு அங்காம போயிக்க இதெல்லாம் ஒரு விஷயம்னு வருத்தபடுவியாக்கும்? நல்லா சாப்ட்டு உறங்கி எந்தி, அப்பதேன் நாளைக்கு முகம் பாக்க பளிச்சுன்னு இருக்கும்"

"அவங்க சாப்பிட்டாங்களா அத்த?" என்றாள் மெதுவாக,

வாசுகி, "என் கண்ணு" என முகம் கொள்ளா சிரிப்புடன் அவளுக்கு திருஷ்டி எடுத்தவர், "இதாம்டி மூத்த மருமவ, உங்க ரெண்டு பேருக்கும் உங்க புருஷன் பிள்ளைகள பத்தி அக்கறை இருந்துச்சாட்டி?" என்க,

"ஹலோ அத்த, அக்காவுக்கு அவுக மாமியார பத்தி தெரியல அதேன் விசாரிக்காக, எங்களுக்கு எங்க மாமியார நல்லாத் தெரியுமாக்கும், மூணு வருஷமா கூடவே குப்ப கொட்றோம், அப்றமு உங்ககிட்ட இப்டி ஒரு வார்த்தைய கேட்போமா?" என்றாள் விசாலாட்சி,

"ஏன் அப்படி கேட்க கூடாது விசாலாட்சி?" என்றாள் மரகதம்,

"என்னக்கா நீங்க, மருமகளுங்களயே உக்கார வச்சு பரிமாறுறாங்க மகனுங்களையும் பேத்திகளையும் கவனிக்காம விடுற ஆளா இவங்க? அதெல்லாம் கரெக்ட்டா இந்நேரம் எல்லாரையும் செட்டில் பண்ணிருப்பாங்க"

"இப்டி உசுப்பேத்தி தான்டி அம்புட்டையும் என் தலைல கட்டிருதீக? நீங்க செய்ய மாட்டீகன்னு தெரிஞ்சுதேன் நானே செய்ய வேண்டி கிடக்கு" என்றார் அவர்.

"நீங்க நல்லா இருக்க வர நீங்க பாருங்கத்த அப்றம் சொல்லி குடுங்க நாங்க பாத்துக்குறோம்"

"ஆமா அப்றமு உங்கள உக்காத்தி வச்சு பாடம் வேற எடுக்கேன் எனக்கு ரொம்ப தேவட்டி எல்லாம்"

"மதினி உங்க நாத்தனாரு செயின காணுமாம் அங்க அழுகுறாப்ல நிக்கிதாக போய் என்னன்னு பாருங்க, எல்லாருக்கும் தெரிஞ்சா பிரச்சினை ஆயிட போவுது" என பரபரப்பாக ஓடி வந்தார் அகிலா,

"ஆத்தி என் மவேன் ஒருத்தன் போதுமே, அவனுக்கு தெரிய முன்ன நா போயி தடுத்துபுடுதேன், இல்லனா உண்டில்லன்னு ஆக்கி போடுவான்" என ஓடினார் வாசுகி,

"பெரிய பிரச்சினையாம்மா?" என்றாள் யோசனையாக மரகதம்.

"அந்த பெரியம்மாவே பிரச்சினை தான்க்கா, எப்பையும் இப்படிதான் அலப்பறை பண்ணிரும், பேக்குகுள்ளதேன் எங்கனையாவது வச்சிருக்கும், இப்படி எதையாவது சொல்லி எல்லாரையும் அந்தம்மாவ தேடி போய் பேச வைக்கும், அதுக்கு அப்டியொரு வியாதி" என்றாள் விசாலாட்சி,

"நிஜமாவா விசாலா? அழுதுட்ருக்காகளே?" என்றார் அகிலா,

"அப்படி நம்புற மாதிரி அழும்ம்மா, கவனிச்சு பாருங்க அத்த வளசல்ல உள்ள யாரும் சமாதானம் சொல்ல மாட்டாங்க சும்மா வேடிக்கைதேன் பாத்துட்டு நிப்பாங்க, புதுசா உங்கள மாதிரி வந்து சேருத சொந்தங்களதேன் அது வளைச்சு புடிச்சு அலம்பல் பண்ணும்" என ஷீலா சொல்லவும்,

"அப்ப அவங்க பிரச்சினை பண்ணிடுவாங்கன்னு அத்த சொல்லிட்டு போறாங்களே?" என்றாள் மரகதம்.

"ஆமாக்கா, அத்தான் அந்தம்மா எப்ப சிக்கும்னுதேன் பாத்துட்ருக்காக, இப்ப அவங்க கல்யாணத்துலயே பண்ணுறது தெரிஞ்சா அம்புட்டுதேன், அதேன் கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வேணாம்னு அத்த தடுக்க ஓடுதாக"

"சரி சாப்ட்டு போய் படுங்க, நானும் போய் அங்க என்ன நடக்குன்னு பாக்குறேன்" என அவரும் செல்ல,

"அவங்க ரூம் எந்த ப்ளோருன்னு தெரியுமா உங்களுக்கு?" என்றாள் இருவரிடமும்.

"அந்த பெரியம்மா ரூமா?"

"ச்ச‌ ச்ச இவங்கள கேட்கிறேன். உங்க பெரியத்தான் ரூம்"

"எதுக்குக்கா?"

"அவங்கட்ட ஒரு பத்து நிமிஷம் பேசணும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க"

"அக்கா இந்நேரமா?" என ஷீலா அதிர,

"எஸ் ஷீலா, ஒரு சின்ன சண்டையாகிட்டு, என்னால அப்டியே தூங்கவும் முடியாது, நாளைக்கு அப்டியே ஸ்டேஜ் ஏறவும் முடியாது ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க"

"அக்கா அது ரொம்ப கஷ்டம், அத்தானே டென்ஷன் ஆகிடுவாங்க, நாளைக்குல இருந்து ஃபுல் டைம் அவங்களோட‌ தானே, அப்ப சமாதானம் ஆகிக்கோங்களேன்" என ஷீலா சொல்ல,

"உங்கள லவ் பண்ண வைக்க நாங்க அவ்வளவு கஷ்டப்படணுமோன்னு யோசிச்சோம், ஆனா நீங்க லவ் பண்ணி அடுத்த ஸ்டெப்பா சண்டை வர போயிட்டீங்க?" என அதிசயத்தாள் விசாலாட்சி,

"இப்ப ஹெல்ப் பண்ணுங்க. பத்தே நிமிஷந்தான் வந்துடுவேன்"

"பேசாம அத்தைட்டயே கேட்டு பாருங்களேன்" ஷீலா சொல்லவும்,

"சரி நா கேட்டு பாக்றேன்" உடனே எழுந்து விட்டாள் மரகதம்,

"எக்கா உக்காருங்கக்கா, உங்கள கண்ணு கண்ணுன்னு கொஞ்சுறதால இதையும் கேட்ட உடனே ஒத்துப்பாங்கன்னு நெனப்பா? கல்யாணத்துக்கு எந்த பங்கமு வர விட மாட்டாங்க, அதுக்காகவே உங்கள அத்தான் பக்கம் விட மாட்டாங்க, போய் கேட்டு சாந்தமா இருக்க மாமியாருக்கு சண்டைன்னு சொல்லி நெஞ்சுவலி வர வச்சுடாதீங்க" என பிடித்து அமர்த்தி விட்டாள் விசாலாட்சி.

"எனக்கு இப்ப பாத்தே ஆகணும்"

"அக்கா இப்ப அத்தான் கோவமா இருந்தா, பேசி சண்டை பெருசாகும் நாளைக்கு கொஞ்சம் கோவம் குறைஞ்சுடும் பத்தாதுக்கு ஃபர்ஸ்ட் நைட்ல தான் உங்களுக்கு பேசவே ஸ்பேஸ் கிடைக்கும், அத்தான் மூடெல்லாம் மாறியிருக்கும் இந்த சண்டை காணாமலே போயிடும், நீங்க இப்ப போய் பேசினா தான் அதிகமாகும்"

'மறக்குமா? இல்லையே எட்டு வருஷமா மறக்கலையே? வேற யாரையும் கல்யாணம் பண்ணிருப்பாரான்னு கூட தெரியலையே, நா மொதையே பேசிருக்கணும், இல்லனா இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணிருக்கக் கூடாது, ஓ காட்' என மனதிற்குள் புலம்பியவள் பட்டென்று எழுந்து விட்டாள்.

"என்னாச்சுக்கா?" என அவர்களும் எழுந்து நிற்க,

"எனக்கு பேசியே ஆகணும், என் கண்ணுல கூட படமாட்டேங்குறாங்க, ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு"

"அத்தான் வேற வேலையா கூட இருக்கலாமேக்கா?"

"நோ அவங்க எனக்கு தான் வெயிட் பண்ணிட்ருக்காங்கன்னு எனக்கு தோணிட்டே இருக்கு, நா அப்பாட்ட கேட்டு கூட போய் பாக்றேன் அவங்கள" எனக் கைக் கழுவ நகர்ந்து விட்டாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 34

"என்னக்கா பண்ண?" என்றாள் விசாலாட்சி ஷீலாவிடம்,

"இரு என் புருஷனுக்கு அடிச்சு எங்கன்னு கேக்குறேன்" என்ற ஷீலா வரதனுக்கு அழைத்து, "அத்தானுக்கு ரூம் எங்கங்க?" என்றாள் எடுத்ததும்,

"முதல் மாடி தான்டி, எதுக்கு கேக்குற?"

"அவர காணும்னு அத்த தேடுதாகங்க"

"இப்பதேன் சாப்ட்டு மூணு பேரும் மேல வந்தோம், அம்மா பாத்துச்சே அப்றமு எதுக்கு தேடுது?"

"உங்க மைதிலி அத்த அலம்பல கூட்டிருச்சு, அதேன் அத்தானுக்கு தெரிஞ்சா பிரச்சினை ஆகிடுமோன்னு பயப்டுதாக"

"இந்த அத்தையெல்லாம் கூப்பிடாதீகன்னா கேட்டாதான? அப்றம் கிடந்து புலம்புறது, இரு எட்டி பாக்கேன், அண்ணன ரூம்ல விட்டுட்டுதேன் நானு அரசுவும் வந்தோம்"

"பிள்ளைக எங்க?"

"அரசுதேன் தூங்க வைக்கான், நா போனு வரவும் வெளிய வந்தேன்" என அவன் பேசிக்கொண்டே நடந்து செல்வது புரிந்தது, மரகதவல்லியும் அவளே விசாரிப்பதால் கை கழுவி வந்தவள் அப்டியே கேட்டுக் கொண்டு நின்றாள்.

"அண்ணா ரூம் உள்ள தான்டி பூட்டி இருக்கு, சீக்கிரம் அந்த அத்த வாய‌ மூடித் தூங்கப் போடுங்க"

"சரிங்க சொல்லிருதேன்" என வைத்துவிட்டாள்.

"ஃபர்ஸ்ட் ப்ளோர்ல எந்த ரூம்னு எப்டி தெரியும்?" என்றாள் மரகதம்.

"ஒரு ஃப்ளோர்ல மொத்தமே ஆறு ரூம் தான்னு அன்னைக்கு மண்டபம் பாத்துட்டு வந்தன்னைக்கு பேசிக்கிட்டாங்க, அதுல பொண்ணு மாப்பிள்ளைக்குன்னு தான் கொஞ்சம் வசதி கூடின ரூம் குடுத்துருந்தாங்க, இப்ப கீழ உங்களுக்கு குடுத்துருக்கதுக்கு நேரா மேல தான் இருக்கும்னு நினைக்கேன் வாங்க போயே பாத்துறலாம்"

"நீங்களும் வரீங்களா? ப்ராப்ளம் இல்லையா?"

"அதுக்காக உங்கள எப்டிக்கா தனியா விட முடியும்? மேலதேன் புள்ளைகலாம் இருக்காங்க, அதனால யாராவது கேட்டா கூட நீங்களும் அந்த காரணத்த சொல்லியே எங்களோட வந்துட்டு வந்துரலாம்" என்றாள் ஷீலா,

"எக்கா என்னமா ப்ளான் போடுத நீயி? இப்டிதேன் வரதன் அத்தான சமாளிக்கியோ?" என இதற்கும் அதிசயத்தாள் விசாலாட்சி.

"இவ ஒருத்தி நேரங்கெட்ட நேரத்துலதேன் வாய பிளந்துட்டு நிப்பா, வாங்கக்கா போவோம்" என்ற ஷீலா மரகதம் கைபிடித்து இழுக்கவும், அவள் விசாலாட்சி கையையும் பிடித்திழுத்துக் கொண்டே திருமண ஹாலை அடைந்து, மாடியறைக்கு நடந்தனர், "அத்த சண்டை நடக்குன்னு பாக்க போனாங்களே அது எந்த ஃப்ளோர்?"

"கீழ இல்ல அப்ப ரெண்டாவது மாடியாதேன் இருக்கும், இறங்கி வந்து தேடுறதுக்குள்ள வந்துருங்கக்கா" என பேசிக்கொண்டே முதல் தளம் வந்திருந்தனர், வரதன் அங்குதான் போனை நோண்டிக் கொண்டு நின்றான்.

"பிள்ளையத் தூங்க வைக்காம இங்க என்ன செய்றீங்க?" என ஷீலா கேட்கவும்,

"நீ கூட்டிட்டு போடி பாப்பாவ" என்றவாறு நிமிர்ந்தவன், மரகதத்தைப் பார்த்ததும், "வாங்க" என்றான் பொதுவாக.

"உங்க அண்ணா ரூம் எது?" என்றாள் அவனிடமே,

"ஏன்க்கா?" என்றாள் சங்கடமாக விசாலாட்சி,

"இப்ப நா அவங்க அண்ணா ரூம் போகும் போது அவங்களுக்கு தெரியும் தானே, அதுக்கு அவங்கட்டயே கேட்டு போயிடலாம்ல?" என்றாள் மரகதம் சாதாரணமாக.

வரதன், 'ஙே' என தான் விழித்திருந்தான்.

"ஏங்க அது என்னன்னு நா அப்றம் சொல்றேன்" என ஷீலா சொல்லவும்,

"உங்கண்ணா ரூம் எதுன்னு சொல்லுங்க, டைம்மில்ல அத்த வர்றதுக்குள்ள நா பேசிட்டு வரணும்" என்றாள் அவள் மீண்டும் அவனிடமே,

"அந்த ரூம் தான்" என கைக் காண்பித்து விட்டான், அவளின் நேரடியான கேள்வியில்.

"தேங்க்ஸ், நீங்க இங்க வெயிட் பண்ண வேணாம், நானே வந்துடுறேன்" என இரு பெண்களுக்கும் சொல்லிவிட்டு அவள் வேகமாக அந்த அறை நோக்கி செல்ல,

"என்னடி இது, யாராவது பாத்தா என்ன நினப்பாங்க?" என்றான் வரதன்,

"ஏதோ சண்டையாம் அத்தான் கோச்சுக்கிட்டாங்களாம், அதான் பேச போறாங்க"

"இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" என்றான் அவன்.

"அவங்க பேசிட்டு வரட்டும் நாம பிள்ளைய பாப்போம் வாங்க" என இழுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று விட்டாள் ஷீலா. விசாலாட்சியும் மரகதவல்லியை திரும்பிப் பார்த்து விட்டு ஓடியே விட்டாள் அரசுவிடம்.

மரகதவல்லி கதவை லேசாக தட்டவுமே வந்து திறந்தான் மகிழ், "மரகதம்? வருவன்னு தெரியும், அதுக்காக இவ்வளவு சீக்கிரமாவா?" என்றான் நக்கலாக,

"அதுக்கு தான கோச்சுகிட்டு வந்தீங்க?" என்றாள் அவளும்,

"நா கோச்சிகிட்டதுக்காக வர்றவ எட்டு வருஷமா என்ன பண்ண?"

"அத எக்ஸ்ப்ளைன் பண்ண தாங்க வந்தேன்"

"ஓ! அப்ப நைட் ஸ்டே என்கூடவா?" என்றான் கிண்டலை விடாமல்.

"நீங்க கோவமா இல்லையா?"

"அப்ப நீ உன்ன எக்ஸ்ப்ளைன் பண்ண வரல, நாளைக்கு கல்யாணம் உனக்கு கன்ஃப்யூஸன் இல்லாம நடக்கணும்னு வந்துருக்க இல்லையா?"

"ரெண்டு பேருக்காகவுந்தாங்க வந்தேன்" என்றாள் பாவமாக.

"சரி வா" என அவள் உள்ளே வரவும் கதவை சாற்றிவிட்டு அவளைக் கடந்துச் சென்றவன் கட்டிலில் அமர, அவனெதிரில் வந்து நின்றாள்.

"ஆரம்பி" என்றான் பின்னால் கையை ஊன்றி அவளை அளவிட்டவாறு, மாம்பழ நிறத்தில் பட்டு, அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. மேலிருந்து கீழ் அவன் பார்வை இறங்க, "நா பேசட்டுமா?" என அவனை முகம் பார்க்க வைத்தாள்.

"பேசு மரகதம்" என்றான் இன்னுமே அதே சாய்வான நிலையில் இருந்து கொண்டு.

"அப்ப நா காலேஜ் செகெண்ட் இயர்ல இருந்தேன்"

"அத எங்கிட்ட உண்மையாதான் சொல்லிருக்க, ஆனா ஆர்ட்ஸ் செகெண்ட் இயர்னு சொன்ன, 'லா'ன்னு லாஸ்ட் வர சொல்லல, ரைட்?"

"ரொம்பலாம் இல்லங்க நாம பேசிக்கிட்டதே ஆறு மாசந்தான்"

"சிக்ஸ் மந்த்ஸ் மரகதம்"

"ஆமாங்க அதான் நானும் சொல்றேன்"

"சரி மேல சொல்லு"

"நா, வைஷ்ணவி, நதியா, மல்லி இன்னும் எட்டு பேர் சேர்ந்து ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பண்ணோம், சும்மா ஜாலியா பேச, கடல போட வர்ற பசங்கள எல்லாருமா சேர்ந்து பேசி கலாய்க்கன்னு ஆரம்பிச்சது தான் அந்த க்ரூப். காலேஜ்ல நிறையா பேர ரிவென்ச் எடுக்க தான் ஆக்சுவலா அந்த அக்கௌன்ட் ஓபன் பண்ணோம்"

"ஆஹான், என்ன மாதிரி எத்தன பேர பழிவாங்குனீங்க?"

"இல்லங்க அது" என அவள் பாவமாக விழிக்க,

"மந்தாகினி? அந்த நேம் யாரோடது?"

"அது அது" என பயந்தவள், "வைஷ்ணவி தங்கச்சியோடது தான், அவ அடிக்கடி வைஷுவ பாக்க வருவா, அப்ப அவளுக்கு பத்து வயசுதான், நாம ஒரு ரெண்டு வருஷந்தானே அவ நேம் யூஸ் பண்ண போறோம், அதனால அவளுக்கு எதும் ப்ராப்ளம் வராதுன்னு தான் அந்த நேம் யோசிச்சு வச்சோம். அந்த நேம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், அதான் அதையே வச்சோம்"

"நா பேசிட்ருந்தது அந்த மந்தாகினிய நினைச்சுதான் இல்லையா?" என்றான் காட்டமாக, இன்னுமே அவன் அமர்ந்திருந்த விதம் மாறவில்லை, ஆனால் இவளுக்கு தான் கால்கள் நடுங்கத் தொடங்கியிருந்தது.

"இல்லங்க என்ட்ட தான், நீங்க பேசுனது, அழகான கண்கள்னு வர்ணிச்சது, மெசேஜ் அனுப்பினது எல்லாமே எனக்குத்தான். எனக்கு நீங்க நம்பர், அட்ரெஸ்லாம் கேட்கவும் தான் பயமாகிடுச்சு, நீங்க ரெக்வஸ்ட் குடுத்தப்போ, அத மத்தவங்க பாக்றதுக்கு முன்ன அக்ஸப்ட் பண்ணது நாந்தான். நீங்க உங்க ஃபேமிலி பத்தி, போலீஸ் ட்ரைனிங் முடிச்சுட்டு போஸ்டிங் வெயிட் பண்றேன்னு சொன்னதுன்னு எதுமே நா நம்பல, ஏனா நா உண்மைய சொல்லாதனால நீங்களும் பொய் தான் சொல்றீங்கன்னு நினைச்சேன். சும்மா ஃபோளாவா தான் பேசிட்ருந்தேன், உங்க போஸ்டிங் லெட்டர காட்டுற‌வர நம்பவே இல்ல, அத பாத்தப்றம் உண்மையாவே பயமாகிடுச்சு, மாட்டிப்போமோன்னு மத்த எல்லாரும் கலண்டுகிட்டாங்க, ஆனா நா மட்டும் அப்பப்ப அவங்களுக்கே தெரியாம ஓபன் பண்ணுவேன், அப்ப உங்க மெசேஜ் இருந்தா ஒரு ஆர்வகோளாருல்ல ரிப்ளை பண்ணிட்டு வந்துருவேன். நிஜமா அது அப்ப, அப்ப தப்பா தோணல, இப்ப ரொம்ப தப்பா தெரியுது சாரி ப்ளீஸ்ங்க"

"நா உன்ன லவ் பண்றேன்னு எப்ப தெரிஞ்சது?"

"லாஸ்ட் மெசேஜ்ல"

"என்ன அனுப்பியிருந்தேன்"

அவள் குனிந்து கொண்டு எச்சிலை விழுங்கினாள் கண்கள் கரித்தது, இரண்டு சொட்டாக வெளியேறியது, ஆனால் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முடியவில்லை அவளால்.

"மரகதம்"

"சாரிங்க"

"என்ன மெசேஜ் மரகதம்" அவள் அமைதியாகவே நிற்க,

"அதாவது, 'எனக்கு ஒரே ஒருக்கா உன்ன நேர்ல பாக்கணும், வொர்க்ல ஜாயின் பண்ண போறேன் உன்னோட விஷ் வேணும், உன் ஃபேஸ் பாத்து ஒரு விஷயம் நா சொல்லணும், ப்ளீஸ் உன் நம்பர் இல்லனா நம்ம மீட் பண்ணறதுக்கான அட்ரெஸ் சென்ட் பண்ணு, எனக்கு இந்த அழகான கண்களுக்கு சொந்தமான முகத்த பாக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த முகத்த பாத்து நா என்னோட விஷ் கேட்கும்போது அது காட்ற ரியாக்ஷன்ஸ் பாக்கணும். ப்ளீஸ் மெசேஜ் மீ' இல்லையா மரகதம்? இதானே என்னோட லாஸ்ட் மெசேஜ்? இத பாத்ததும் அச்சோ நாம சாதாரணமா பழகினா இவன் லவ்வுன்னு வர போறானோன்னு அக்கௌன்ட்டயே க்ளோஸ் பண்ணிட்டு ஓடிட்டல்ல?" என்றவன் இப்போது கையைத் தட்டிவிட்டு எழுந்து கொண்டான்.

"எனக்கு பயமா இருந்துச்சு"

"ஏன்? அதுவரை உன்ன எதாது அப்யூஸ் பண்ணனா நானு?"

"இல்லங்க அது, சும்மா ப்ரண்ட்லியா பேசலாம்னு ஸ்டார்ட் பண்ணது, யாருனே தெரியாத ஒருத்தரோட லவ்வு வர போகுறதான்னு பயமாகிடுச்சு, அண்ட் நீங்க போலீஸ்னு வேற சொன்னீங்க, இது நா நேம் மாத்தி பேசி, இதெல்லாம் அன்னைக்கே சொல்றதுக்கு பயமா இருந்தது, நீங்க கண்டுபிடிச்சு வந்துடுவீங்கன்னு கூட நினச்சேன்"

"நோ. நா அவ்ளோ சீப் இல்ல. என்ன‌ வேணாம்னு போனவ எனக்கும் வேணாம், நா அடுத்து அந்த ஐடிய திரும்பி கூட பாக்கல, அன்னைக்கு க்ளோஸ் பண்ண என்னோட எஃபி அக்கௌன்ட்ட இன்னைக்கு வர ஓபன் கூட பண்ணல மரகதம், போன மாசம் உன்ன அவ்வளவு கிட்டத்துல பாத்தப்றம் தான் டவுட் கிளியர் பண்ணிடலாம்னு செக் பண்ணி கன்பார்ம் பண்ணேன்"

"சாரிங்க"

"இதே மாதிரி நா உன்ன ஸ்வாஹா பண்ணிட்டு ஏமாத்திட்டு எட்டு வருஷம் கழிச்சு வேற வழியில்லாம உன் முன்ன நிக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால சாரின்னு சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப மரகதம்?"

"நீங்க அப்டி இல்லங்க"

"ஓகே அதெல்லாம் விடு, நா காதலிச்சது மந்தாகினிய, அந்த மந்தாகினிய என்ன செய்யலாம்?"

"நா என் நேம எல்லா கெஜட்ஸ்லயும் மாத்திடுறேங்க"

"உன் ஐடென்டியவே மாத்திடுறியா?" என்றான் நிதானமாக அவளையே பார்த்துக் கொண்டு.

"ம்ம் கண்டிப்பா"

"அப்போ நா இவ்வளவு நாள் பேசி, பழகின மரகதத்த எங்க போய் தேட?"

அவள் அவனை ஆயாசமாகப் பார்த்து, "உங்கள பாத்த அன்னைக்கே சொல்ல எனக்கு பயம் தான், ஆனா எனக்கு கல்யாணம்னு பேசுறப்பலாம் உங்கள தவிர நா வேற யாரையும் யோசிச்சதே இல்ல, நீங்க என்ன வாட்ச் பண்ணிட்டே இருக்கீங்கன்னு தான் நம்பிட்ருந்தேன்"

"ஓ ஒருவேளை நா உன் முன்ன வரமாலே போயிருந்தா. வேற பொண்ண கல்யாணம் பண்ணிருந்தா?"

"தெரியலங்க. என்ட்ட இதுக்கு ஆன்ஸர் இல்ல, நீங்க என்ன நினைச்சு தான் கல்யாணம் பண்ணிக்கலன்னு தான் இவ்வளவு வருஷமு நினச்சுட்ருந்தேன், நீங்க என்ன திரும்பிக் கூட பாக்கலன்னு இப்ப நீங்க சொல்லி தான் தெரியும்" என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவன் மறுபடியும் கட்டிலில் அமர்ந்து அவளையே பார்க்க, மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், "மந்தாகினியாது மரகதமாதுன்னு, தூக்கி கிடாசிட்டு மேகி கிண்டிடலாமான்னு தோணுது, சும்மா கும்முன்னு இருக்க" என்றான் ரசித்து,

"ஏங்க?" என்றாள் பாவமாக,

"கொன்றுவேண்டி மொத இந்த முழிய மாத்து, செய்றதெல்லாம் ஃபோர் ட்வன்டி வேலை, ஆனா முகத்த மட்டும் பவ்யமா வச்சு நடிக்குற‌ நீ?"

"இல்லங்க உங்கட்ட மட்டும் எப்பவும் பயம் உண்டு. தப்பு பண்ணிருக்கேன்ல அதனால அந்த பயம் இருக்கு"

"பயம் இருக்குல்ல" என்றவன் மெல்ல வந்து அவளிடம் நின்றான்.

"ஆமாங்க"

"என்ன பண்ணா பயம் போகும்?"

"நீங்க பழசெல்லாம் மறந்துட்டீங்கனா பயம் போயிடுங்க" என்றாள் லேசான சிரிப்புடன், அவன் சாதாரணமாக பேசத் துவங்கவும் அவளும் கொஞ்சம் நிதானமாக பதில் கூறினாள்.

"நீயும் மந்தாகினிய மறக்க வச்சுடு மரகதம்" என்றவன் அவளை ஒட்டியும் உரசாமலும் நெருங்கி இருந்தான்.

"எப்படிங்க?" என்றவளுக்கு ஏதோ குதர்க்கமாக கேட்க போகிறான் என‌ புரிந்தது, அந்த மாற்றம் தானே அவன் அவளிடம் சாதாரணமாக பேசுகிறான் என்பதற்கான சான்று, அதனால் இந்தமுறை அவன் பேச்சை ஆவலுடனே கேட்டாள்.

"கிட்ட வா சொல்றேன், ஆடக் கூடாது அசையக் கூடாது, தள்ளிவிட கூடாது, ஃபர்ஸ்ட் டைம் பண்ணப் போறேன், டிஸ்டர்பன்ஸ் வர்றத விரும்பல, ட்ஸ்க்ளைமர் புரிஞ்சதா?"

"என்ன பண்ண போறீங்க?" என்றவள் இரண்டெட்டெத்து வைக்க,

"இப்பதான சொன்னேன்டி ஆட கூடாதுன்னு" என்றவன் அவள் கழுத்தோடு சேர்த்து பிடித்து அருகிலிழுக்க,

"ஏங்கங்க"

"அதேன் தானுங்க" என்றவனின் வாய்க்குள் தானிருந்தது அவளின் அடுத்த வார்த்தையான, 'வேணாங்க' என்பது.

வெளியே, "மூத்தவனே?" என கதவைத் தட்டத் தொடங்கியிருந்தார் வாசுகி.
 
Status
Not open for further replies.
Top