ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 40

"உங்களுக்கு இதுல பங்கில்லையா மந்தாகினி?" என்றாள் இப்போது அவளிடம் திரும்பி,

மந்தாகினி திரும்பி வைஷ்ணவியை பார்க்க, அவள் இவள்புறம் திரும்பவே இல்லை, "அவங்கள ஏன் பாக்றீங்க? உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லணும். உண்மைய சொன்னதான் தண்டனைகள் குறையும், இல்லனா நிரபராதி கூட பாதிக்கப்படலாம். உங்க மேல தப்பில்லன்னா நீங்க தைரியமா பேசலாம் மந்தாகினி" என்றாள்,

ஏசிபி கையை நாடிக்கு கொடுத்து தாங்கியவாறு அவன் மரகதத்தை தான் பார்த்திருந்தான். அவனுக்கு உண்மை முழுவதும் தெரியும். அவனுக்கு தெரியும் என தெரிந்தும் அவனிடம் எதையும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் அவளே தான் அனைத்தையும் விசாரித்தாள். வைஷ்ணவி மந்தாகினி இருவரையும் தனி தனியே கடந்த பத்து நாட்களில் பார்த்து பேசியுமிருந்தாள். தெரிந்ததை அவனிடம் பகிர்ந்து கொள்ளவுமில்லை அவள்.

"நாந்தான் செஞ்சேன்னு ஒத்துகிட்டேன்ல அப்றமு அவள கேட்டு குழப்ப பாக்றீங்க? என் கூட பொறந்த தம்பி விஷ்ணு, என்னவிட பனிரெண்டு வயசு சின்னவன், அவன அதிகமா பாத்துகிட்டது நானு. எங்கம்மாக்கு லேட்டா பிறந்ததால அதிக இம்யூனிட்டி இல்லமாதான் பொறந்தான், லேசானாலும் ஃபீவர், கோல்டுன்னு படுத்துப்பான். ஃபீவர் இல்லாம ஒரு மாசத்த கடத்துனாலே எனக்கு அது பெரிய விஷயம். பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சுட்ருந்தவன, சித்தி இருக்காங்க அண்ணன் இருக்கான் பாத்துப்பான்னு இங்க மாத்துனது என் தப்பு தான். அப்றமு அவன் கொஞ்சம் ஸ்லிப்பாகுறான்னு தெரிஞ்சதுமாது அங்கிருந்து மாத்திருக்கணும், நா அதபத்தி யோசிச்சு முடிக்றதுக்குள்ளயே அவன் செத்து போயிட்டானே. கோவத்த யாருமேல காட்ட முடியும், அவன இப்டி சாவடிச்சவனுங்க இன்னும் எத்தனபேர இப்டி கொல்லுவானுங்களோ! இவனுங்களாமா நாளைக்கு நம்ம நாட்ட காப்பாத்த போறானுங்க? நா கொன்ன அஞ்சுபேரும் நாளைக்கு சையின்டாஸ்டாவா ஆகி வெளியவருவானுங்க? ரவுடி பொறுக்கி தீவிரவாதின்னு தான் ஆக போறானுங்க, அத்தோட போகாது கும்பல் கும்பலா உருவாக்குவானுங்க, இப்பவே அந்த ஸ்கூல்ல எத்தன பேருக்கு பழக்கி விட்ருக்காங்களோ தெரியல, அது கேஸாகுற‌ வர போலீஸ் அத விசாரிக்க மாட்டாங்க, போலீஸ் அங்க எவனையாவது புடிச்சு கொண்டு நிறுத்துறவர கோர்ட்லயும் அத விசாரிக்க மாட்டாங்க. இதுதான் நம்ம சர்கிள், ஆனா பாதிக்க பட்டவங்க வேடிக்கை பாத்துட்டே இருக்கணுமா? அதான் கொன்னேன் அவனுங்க இந்த நாட்டுக்கு தேவையில்லன்னு நானே டிசைட் பண்ணி கொன்னேன்"

"என்ன சார் இப்படி பேசுறா பாத்துட்ருக்கீங்க, எங்கட்ட விடுங்க சார், என்ன செய்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம், நாங்க ஆச ஆசையா பெத்து வளர்ப்போமாம் இவ தேவையில்லன்னு கொல்லுவாளாம். உன்ன சும்மா விட்டேனா பாருடி. நீயெல்லாம் பொம்பளையா? கொஞ்சம் கூடவா இரக்கம் வரல. மென்டலா நீ? எம்புள்ளைய அப்படி கொதறி போட எப்டிறி மனசு வந்தது" என இறந்த பையன்களின் பெற்றோர் கொதித்து எழ, ஆளாளுக்கு கத்த துவங்க, "சைலன்ஸ்" என்றார் நீதிபதி.

"சோ நீங்க தான் கொன்னீங்க இல்லையா?" என்றாள் மறுபடியும்.

"ஆமா"

"எப்டி கொன்னீங்க?"

"என்ன அவனுங்களுக்கு நல்லா தெரியும். என்ட்ட மந்தாகினிட்ட நல்லா பேசுவானுங்க, அதவச்சு ஒவ்வொருதனையும் தனியா வரவச்சு, தூக்குனோம், எங்களுக்கு தெரிஞ்ச எங்க மாமாவோட கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி ஒன்னு இருக்கு, அங்க மெஷின் சத்தம் கேட்டுட்டே இருக்கனால யாருக்கும் சந்தேகம் வரல, அங்கவச்சு தான் கொல்லுவோம். முக்கியமா நா லாயர்ன்றதாலயும் அடிக்கடி அங்க போயிட்டு வருவேன்றதாலயும் யாரும் எதும் தப்பா யோசிக்கல, கடத்தி ஊருக்குள்ளயே சுத்திட்ருந்துட்டு இருட்டுற நேரத்துல தான் உள்ள போவோம், கொலை பண்ணி விடியுற நேரத்துல வெளில கொண்டு வந்துருவோம்"

"போவோம், வருவோம், செய்வோம்னு சேத்து சேத்து சொன்னீங்களே அது யாரெல்லாம்?" என்றாள் மரகதவல்லி.

பேசிக் கொண்டே வந்ததில் தனியாக செய்ததாக சொல்ல வேண்டியதை எப்படி செய்தார்களோ அப்படியே சொல்லியிருந்தாள் வைஷ்ணவி, மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டு, "எனக்கு ராமனும் ஹெல்ப் பண்ணுவான்"

"எல்லா கொலைக்கும் ஹெல்ப் பண்ணானா?"

"ஆமா" என்றாள் சற்று தடுமாற்றமாக,

"ஹெல்ப் மட்டுந்தான் பண்ணாணா? இல்ல கொலையே அவன்தான் பண்ணாணா? ஏன் கேட்குறேன்னா போஸ்ட்மார்ட்டம்ல நகக்கீரலோட அழுத்தம் ஒரு ஆணுக்குரியதுன்னு இருக்கு"

"அது யூகமா சொல்றது தானே? ஏன் ஒரு பெண்ணுக்கு ஆணுக்குரிய அழுத்தம் இருக்க கூடாதுன்னு இல்லையே?"

"இருக்கலாமே? வொய் நாட்? சரி எம்.எல்.ஏ விஜயம் அவரோட மருமகனுக்கு மந்தாகினி மேல லவ்வாமே? ப்ரபோஸ் பண்ணி ரிஜெக்ட்லாம் ஆச்சு இல்லையா மந்தாகினி?" என்றாள் அவளிடம்.

"ஆமா, என்னவிட சின்ன பையன், என் தம்பி கூட‌ படிக்றவனுக்கு என் மேல லவ்வுன்னா நல்லா இல்லதானே? எனக்கு பிடிக்கல அதனால‌ வேணாம்னு சொல்லிட்டேன்" என்றாள் மந்தாகினி, அதுதான் உண்மையும் என்பதால் திக்காமல் திணறாமல் சொல்லிவிட்டாள்.

"உடனே கேட்டுக்கிட்டானா அவன்? டார்ச்சர் எதும் பண்ணலையா?"

"நா எங்கம்மாட்ட சொல்லி கண்டுச்சுட்டேன்"

"உங்கம்மா சொன்னதும் கேட்டுகிட்டானா அவன்?"

"அது எனக்கு தெரியல ஆனா அடுத்து எங்கிட்ட வம்புக்கு வரல"

"ரைட். ஸ்டேஷன்ல இருந்த உங்க தம்பி இன்னைக்கு காலைல சூசைட் பண்ணிட்டானாம் தெரியுமா?" என்றதும் மந்தாகினி அதிர்ந்து கண்ணை விரித்தாள், வைஷ்ணவி திரும்பி ஏசிபியாக அமர்ந்திருந்தவனை மட்டுமே பார்த்தாள்.

ஒரு கையை சாய்வாக குடுத்து, நிமிர்ந்து அமர்ந்து அவர்கள் விசாரணையை கூர்ந்து கவனித்திருந்தவன், வைஷ்ணவி பார்வையில் அவளை இன்னும் கூர்மையாக பார்க்க, பட்டென்று திரும்பி கொண்டாள் அவள்.

"தெரியாதா?"

"இல்ல எங்களுக்கு யாரும் சொல்லல" என்ற மந்தாகினி அழுகையை அடக்கிக் கொண்டு அவள் தகப்பனை தான் பார்த்தாள், கண்ணீர் வற்ற அமர்ந்தார் அந்த மனிதர், அவ்வளவு தளர்ச்சி அவரிடம். வைஷ்ணவி அம்மா மட்டுமே குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

"நீங்க போலாம்" என்றவள், நீதிபதியிடம் திரும்பி, "இந்த கேஸை ஆய்வு செய்த போலீசாரை விசாரிக்க வேண்டும் மை லார்ட்" என்றதும், சொக்கலிங்கம் அவன் செல்வதா இல்லை பாண்டியன் செல்வானா என பார்த்திருக்க, அவன் சொக்கலிங்கத்திற்கே கண்ணை காட்ட, அவன் எழுந்து வர, "ஏசிபி சாரே வந்துருக்காரே, அவர் விளக்கம் குடுக்கட்டுமே?" என்றாள் மரகதம், குனிந்து எழுதி கொண்டிருந்த நீதிபதியே சிரிப்புடன் நிமிர்ந்து பார்த்தார், அவளை பார்த்தவாறே எழுந்து வந்தான் அவளிடம், சொக்கலிங்கமும் உடன் வந்து நின்று கொண்டான்.

"தொடர் கொலை வழக்கு முடிவுக்கு வந்துட்டா ஏசிபி சார்?" என்றாள் எடுத்ததும்.

"ம்ம் எதிர் சைடு ஆளே இல்ல எட்டும் அவுட்டு"

"ஏசிபி சார்" என அவள் முறைக்க,

"சொல்லுங்க லாயர் மேடம்"

"இங்க நக்கலா பதில் சொல்ல கூடாது. கேட்குறதுக்கு‌ மட்டும் கரெக்ட்டா பதில் சொன்னா போதும்"

"தப்பாவா சொன்னேன் நானு? எட்டுல ஒன்னுகூட பேலன்ஸ் இல்லல்ல சொக்கு?" என்க,

"பாண்டியன்" என்றார் நீதிபதி,

"சொல்லுங்க சார்"

"கில்லர் யாருன்னு கன்பார்ம் பண்ணீங்களா? அந்த ரிப்போர்ட்ஸ் எங்க?"

"லாஸ்ட்டா இறந்து போன பையன் ராமன், அவங்க அக்காதான் கொலை பண்ணதா வாக்குமூலம் குடுத்துருக்கான், அவன் அக்கான்னு பாத்தா மந்தாகினி தான் கில்லர், பட் வைஷ்ணவி பெரியம்மா பொண்ணு முறைல அக்காவா வர்றாங்க, அவங்க அவங்களே தான் கில்லர்னு சுய வாக்குமூலம் குடுத்துருக்காங்க"

"அப்ப கில்லர் ஒருத்தரா இல்ல ரெண்டு பேருமா?"

"மூணு பேரு சார்"

"இன்னொருத்தரா? அது யாரு?"

"விநாயகம், இந்த பொண்ணுங்களோட அண்ணன், விவிகே ஸ்கூல் பிடி வாத்தியார்"

"எப்டி சொல்றீங்க?"

"இந்த பசங்க அவரோட பொண்ண நியூட் வீடியோ எடுத்து மிரட்டுவோம்னு பயமுறுத்தினதா அவரே வந்து சொன்னாரு, அப்டியான்னு அவர ஃபாலோ பண்ணதுல, அவரு பொண்ணுக்கு அஞ்சு வயசுதான் ஆகுது, அவர் பொண்ணா சொன்னது அவரோட தங்கச்சி மந்தாகினியன்னு அப்றமா புரிஞ்சது"

"தெளிவா சொல்லுங்க"

"அது தான் விசாரிச்சுட்ருக்கோம். விநாயகத்த கஸ்டடில எடுக்க நீங்க தான் ஆர்டர் தரணும்"

"ஓகே, நெக்ஸ்ட் வீக் வர டைம், எனக்கு ஃபுல் டீடெயில்ஸ் வேணும், இனியும் இழுத்தடிக்க கூடாது"

"ஸுயர் சார்"

"ஃபாலோ பண்ணிக்கோங்க மேகி. நெக்ஸ்ட் ஹியரிங்ல ஃபைனல் ஆகணும்"

"ஓகே சார்" என்றுவிட்டாள். அவ்வளவு தான் அடுத்த கேஸை விசாரணை செய்ய அழைத்து விட்டார் நீதிபதி. இவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.

"சொக்கு லேடீஸ் ரெண்டு பேத்தோட வண்டில ஏத்துங்க, விநாயகத்த கஸ்டடில எடுக்க ஆளனுப்புங்க" என இவன் சொல்லிக் கொண்டிருக்க,

"நீயெல்லாம் நல்லாவே இருக்க‌மாட்டடி" என வைஷ்ணவியை ஒரு மாணவனின் தாயார் எட்டி அடித்தேவிட்டார், அவரை தடுத்துபிடித்து, இரு பெண்களையும் வண்டியில் ஏற்றுவதற்குள் பெரும் போராட்டமாகி இருந்தது.

"லேடீஸ் எல்லாம் இப்படி வையைன்ஸ்ல இறங்கிட்டா எங்க நிலைமை என்னடி?" என்றான் மரகதத்திடம்.

"கேஸ் ஃபுல்லா தெரியுந்தான உங்களுக்கு? அப்றமு ஏன் விநாயகம் அண்ணன உள்ள கொண்டு வந்து, நெக்ஸ்ட் வீக் டைம் வாங்கிருக்கீங்க?"

"நீ இன்னும் நல்லா விசாரிச்சு முழு உண்மையவும் தெரிஞ்சுக்கோ மரகதம். நானும் ஒருக்கா க்ளியர் பண்ணிக்றேன்"

"ஏதும் விட்ருக்கேனா?"

"இந்த ஏழு கொலைகளுக்கு நடுவுல எம்எல்ஏ தற்கொலை ஏன் வரணும்?"

"அவரும் இந்த கேஸ்ல இருக்காரா?"

"கண்டுபிடிடி"

"ஏங்க அது உங்க வேலைங்க. தண்டனை வாங்கி குடுக்குறது தான் எங்க வேலை"

"அப்ப நா கண்டுபிடிச்சத சொல்லி தந்தா எனக்கென்ன தருவ?"

"லஞ்சமே தப்பு அதையும் கோர்ட் வாசல்ல நின்னு கேட்குறது ரொம்ப தப்புங்க" என்றவள் அவள் அலுவலக அறைக்கு நடக்க துவங்க,

"அப்ப நீயே கண்டுபுடி. ஏய் நில்லுடி"

நின்றவள் திரும்பி, "சரி அப்ப நா கமிஷனர பாத்து பேசிக்கிறேன்" என்றாள்,

"கேளு, நானும் ஆள் மாறாட்டம் பண்ணி, ஏமாத்துனதுக்கு உள்ள தூக்கி வைக்க சொல்றேன்" என்றவன் மெல்ல அவள் பின்னே நடக்க,

"இனி நீங்க ஏமாந்ததா சொல்ல முடியாது, கல்யாணம் பண்ணி கூடவே வச்சுகிட்டு ஏமாந்தேன்னு வேற சொல்லுவீங்களா?" என்றவளும் சற்று மெதுவாக அவனுடன் சேர்ந்து நடக்க துவங்க,

"அன்னைக்கு ஏமாத்துனல்ல? பாதில விட்டுட்டு ஓடுனல்ல? இப்பவும் எஸ்கேப் ஆக தான் பாத்த, உன் கண்ணு காமிச்சு குடுத்ததுனால சிக்கிட்ட"

"பாஸ்ட்லயும் நாம நல்லத மட்டும் பேசலாங்க. என் கண்ண எப்டிங்க அவ்வளவு ஞாபகம் வச்சுருந்தீங்க?"

"நீ ஃபேஸ்புக் ப்ரொஃபல அத மட்டுந்தான் வச்சுருந்த, டவுன்லோட் பண்ணி எத்தனையோ நாள் விடிய விடிய பாத்துட்டே இருந்துருக்கேன்"

"அவ்வளவு பிடிச்சதா உங்களுக்கு?"

"இல்லடி மரகதம் நீ அப்படி எஸ்கேப் ஆகிடுவன்னு என்னோட போலீஸ் மூளைக்கு தெரிஞ்சுருக்கு, அதான் டீப்பா பாத்து மனசுல ஆக்கிருக்கேன் போல. பாத்தியா எட்டு வருஷம் கழிச்சும் வளைச்சு புடிச்சுட்டேன்"

"நீங்களாம் சரியான அழுத்தம் தெரியுமா?"

"ஏன் அதனால மந்தாகினிய மறக்க வைக்க‌ போறியா?"

"முடியலங்க, ஒருநாள் நாலும் பாவம் பாத்து பேசிட்டு போன்னு விட்டு குடுக்றீங்களாங்க?"

"ஏன்டி அங்கிருந்து இங்க வர பேசிட்டே தான வந்த? கல்யாணத்துக்கு முன்ன எம்புட்டு பவ்யமா இருந்த இப்ப வாய் எவ்வளவு வருது?"

"அது சேர்க்கை அப்டிங்க"

"பாத்தியா நீ குசும்பின்னு ஃப்ரூப் பண்ற? நா ரொம்ப வெள்ளந்தியானவன் அதான் மனசுல எதும் வச்சுக்காம பேசுறேன்"

"சாப்பிட வாங்க, மூச்சு வாங்குவது எனக்கு. சத்தியமா என்னால முடியல"

"ஒன்னும் பண்ணாமயே மூச்சு வாங்கிடும் உனக்கு. சாப்பாடு எனக்கும் கொண்டு வந்தியா?"

"ஆமா அதுக்கு தான் கோர்ட் வருவீங்களான்னு கேட்டேன்"

"நீ பெர்ஃபெக்ட் பொண்டாட்டி தான் மரகதம்" என்றவன், சொக்கலிங்கத்தை கிளம்ப சொல்லிவிட்டு இவளுடன் கேன்டீனில் சாப்பிட அமர்ந்தான், ஆனால் இவர்களுக்கு தனிமை தர மனமற்று அவனிடம் பேச என அடுத்தடுத்து ஆட்கள் வந்தமர்ந்து கொண்டனர்.

அவனுக்கென எடுத்து வந்ததை கொடுத்து விட்டு அவளும் அமர்ந்து கொள்ள, ஏற்கனவே அவளால் மனது நிறைந்திருக்க, அவள் கொடுத்த உணவு அவன் வயிற்றையும் நிறைத்தது. அவன் பேச்சை எல்லாம் அசைபோட்டவாறு, 'வாலு மட்டுந்தான் இல்ல இந்த ஏசிபிக்கு, இப்பவே இப்டினா சின்ன வயசுல எப்டியோ அத்த எப்டி சமாளிச்சாங்களோ? கோவில் தான் கட்டணும் அந்த தாய்க்கு' என நினைக்க நினைக்க அவனையே பார்த்திருந்தவளுக்கு சிரிப்புதான், சாப்பாட்டை விழுங்கி சிரிப்பையும் விழுங்கிக் கொண்டாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 41

இரண்டு நாட்கள் சென்றிருந்தது, மறுநாள் சனிக்கிழமை என்பதால், வெள்ளி இரவு சாப்பாடு நேரத்தை கணக்கிட்டு அழைப்பெடுத்தார் வாசுகி, மகன் வந்து விட்டானா என்றும் தெரிந்து கொள்ளும் நோக்கமும் அதில் அடக்கம். வேலை வேலை என குடும்பத்தின் மேல் ஈடுபாடு இல்லாமல் இருந்து விடுவானோ என்ற பயம் இன்னுமே இருந்தது அவருக்கு. அவன் முழு குடும்பஸ்தனாகி மாதமாகிவிட்டது என அறியவில்லை அவர். அவன் தான் அந்தளவிற்கு பில்டப் கொடுத்து வைத்திருந்தானே அதுவும் அவர் நம்பாமலிருப்பதற்கு ஒரு காரணம்.

காதலிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது, பிரித்துவிட்டு அடித்து விரட்டிவிடுவான், பெற்றவர்களையும் நேரில் அழைத்து திட்டுவிட்டு வருவான், அவனுக்காக திருமணத்திற்கு என்று பார்த்த வரன்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முக்கிய காரணமும் அவனே, எத்தனை திருகுதலம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து, அவரை படாதபாடு படுத்தி, கோவில் கோவிலாக ஏறி இறங்க விட்டவன், இன்று திடீரென்று திருமணத்தில் ஒன்றிவிடுவான்‌ என நம்ப தோன்றவில்லை அவருக்கு. அதனாலேயே அவர்களைக் காதலிக்க வைப்பது போன்ற முயற்சிகள் எடுத்ததும், இன்று கண்காணித்து கொண்டே இருப்பதும் என இருக்கிறார்.

"சொல்லுங்க அத்த" என எடுத்து காதில் வைத்துக் கொண்டு, பன்னீரை வெட்டுவதைத் தொடர்ந்தாள் மரகதவல்லி.

"என்ன கண்ணு செய்யுத?"

"நைட் டிஃபன் செஞ்சுட்ருக்கேன், நீங்க எல்லாரும் சாப்டாச்சா?"

"இங்கயும் இப்பதேன் அடுப்ப பத்த வச்சுருக்கோம்த்தா. மூத்தவேன் இன்னும் வரலியோ?"

"இல்லத்த, சீக்கிரம் வந்துடுறேன்னு சொன்னாங்க, வர்ற டைம் தான்"

"கண்ட நேரத்துக்கு வந்து நிப்பியான். நம்மளையும் அதுக்கு பழக்கப்படுத்த பாப்பான் விட்றாத கண்ணு, பத்து மணிக்குள்ள உள்ள நிக்கணும்னு ஸிடிக்டா சொல்லிபுடு. அப்றம் வேலை வந்தா நடுசாமம்னு பாக்காம ஓடத்தான் செய்வியான் அது அவேன் வேலைன்னு ஆகிபோச்சுன்னு விட்ரு, மத்தபடி பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துறணும்னு சொல்லிரு. ரோந்து போறதுலாம் தெனமு இவேனே போணும்னு என்னவாம், மத்த போலீஸுகள போ சொல்ல வேண்டியது தான, ஆனா நாம சொன்னா கேக்க மாட்டியான், நீ விட்றாத அப்றம் புடிக்க முடியாது" என அவர் போக்கில் அவர் சொல்லிக் கொண்டிருக்க, ஸ்பீக்கரில் போட்டு அருகில் வைத்துவிட்டு சிரித்தவாறே அதைக் கேட்டிருந்தவள் கைகள் வேலையிலும் கவனமாக இருந்தது.

"புரியுதா கண்ணு? எட்டு வருஷமா சொல்லிச் சொல்லி நா அழுத்து போயிட்டேன். உனக்கு கொஞ்சம் பயப்படுதியான் அதேன் திட்டிட்டேனாலும் நீ சொன்னதக் கேட்டு நடக்குதான், அத விட்டு குடுத்துறாம புடிச்சுக்கணும் சரியாத்தா?"

"நீங்க அக்காக்கு அத்தான்ட்ட வசவுதேன் இழுத்துவுட போறீகத்த, உங்க மகனுங்கள பத்தி உங்களுக்கு தெரியாதா? சீக்கிரம் வான்னு சொன்னாதேன் வேணும்னே லேட்டா வந்து நிப்பாக, அத்தான் போலீஸ் வேலைல இருக்கவுக அவுகள போய் டான்னு வந்து நில்லுன்னா எப்புடிங்கேன்?" என ஷீலாவின் குரலும் பின்னால் கேட்டது,

"நீங்களாம் பயமில்லாத வேலைல இருக்கீகட்டி, அந்த புள்ளைக ரெண்டும் விரோதம்‌ பொறட்டுற இடத்துல வேலைக்கு இருக்குக, கவனமா இருக்கணும்ல. இதுக்கு முன்னதேன் தனிக்காட்டு ராசாவா சுத்தி வந்துபுட்டான், இனியும் அப்படி இருந்தா இந்த புள்ளைல அங்க தேமேன்னு காத்துகிடக்கும். அஞ்சு மணிக்கே வந்து நில்லுன்னா சொல்லுதோம், பத்து மணிக்கு வரதுக்கு என்னவாம் அவனுக்கு? தும்ப வால புடிச்ச கதையாகிட கூடாது, புது பொண்டாட்டி சொன்னாதேன் கேப்பானுவ, அப்றம்லாம் செல்லுபடியாவாது"

"நீங்க அவுகளுக்கு மாமியாரு தான?" என ஷீலா கேட்கவும்,

"உனக்கும் மாமியாருதேன் பாக்கியா?" என முறைத்தார் வாசுகி.

"எத்தே அதெல்லாம் அக்கா டான்னு டயத்துக்கு வந்து நிக்றீகளா என்னன்னு அத்தான பிடிச்சு போடுவாகத்த, கல்யாணத்துக்கு முன்னயே நாமதேன் பாத்தோமே, அக்கா சொன்னதும் எள்ளுன்னுமுன்ன எண்ணெய்யா வந்து நின்னாகளே" என்றாள் விசாலாட்சி.

"அவ கேக்காமாட்டாகன்றா நீ எல்லாம் கேட்பாகன்ற, என்னைய பாத்தா ரெண்டு பேத்துக்கும் நக்கலாவாட்டி தெரியுது? வெங்காயத்த அரிய சொன்ன கதை பேசுதாளுக நின்னு" என இருவரையும் திட்ட,

"யாரு நாங்க கதை பேசுதோமா? எப்பையும் போல பேச வந்தத விட்டுட்டு நீங்கதேன் அறிக்கை விட்டுட்ருக்கீகத்த" என்றாள் ஷீலாவும் விடாமல்.

"உங்கனாலதாம்டி எல்லாம்" என்றவர், "பேசவே விடமாட்டேங்காளுக கண்ணு, நீ அவனுக்கு போன போட்டு சீக்கிரம் வர சொல்லு. மணி பாரு ஒம்பது தாண்டிருச்சு" என்றார் மரகதத்திடமும்.

"சாப்பாடு செஞ்சு வச்சுட்டு கூப்பிடுவேன்‌ அத்த" என்றவளுக்கும் சிரிப்புதான், 'அம்மாக்கும் மகனுக்கும் பத்துமணி வியாதி போல, பத்து மணியவே பிடிச்சுட்டு தொங்குறாங்க' என நினைத்து இன்னும் சிரித்துக் கொண்டாள்.

"சரிம்மா அப்றம் நாளைக்கு உனக்கு லீவுதான?"

"ஆமா ஏன்த்த எங்கையும் போகணுமா?"

"நாம பொறவு போவலாம். இப்ப நீங்க எங்கையாவது போயிட்டு வாங்க. அவனையும் லீவு போட சொல்லிட்டு இந்தா பக்கத்துல இருக்க கொடைக்கானலுக்குனாலும் போயிட்டு வரலாம்லன்னுதேன் சொல்ல கூப்புட்டேன்"

"ஓ!" என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, 'உங்க மகன் வீட்டையே கொடைக்கானல் மாதிரிதான் யூஸ் பண்ணிட்ருக்காருன்னா சொல்லவா முடியும்? பேசாம சொல்லிட்டா என்ன? மகன் என்னவோ சாமியாரா போயிருவாறோன்னு இந்த அத்த ரொம்ப பயப்படுதாங்களே? சாமியாரா போற ஃபேஸ்கட்டா அது?' என அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டு யோசனையில் இருக்க,

"என்னம்மா அவேன் லீவு போடமாட்டேனேன்னு யோசிக்கியோ?" என்றார் அங்கு வாசுகி அவராகவே.

"ஆமாத்தே, இப்பதானே லீவு முடிஞ்சுருக்கு உடனே கேட்டா குடுக்க மாட்டாங்களே?"

"அதுக்காக நீ இவன்ட்ட கேட்காம இருக்காத, கேட்டு வையி அப்பதேன் இப்ப இல்லனாலும் அடுத்த வாரமாச்சு லீவுக்கு ஏற்பாடு பண்ணிக்குவான். இப்ப போனாதேன் நல்லாருக்கும்"

"சரிங்கத்த அவங்க வரவும் சொல்லிடுறேன்" என்றுவிட்டாள், இல்லையெனில் அவள் சரி என சொல்லும் வரை லேசில் விடவும் மாட்டாரே வாசுகி.

"சரி கண்ணு, நல்லா சத்தா செஞ்சு சாப்புடுங்க. எதும் வேணும்னாலும் சொல்லு செஞ்சு குடுத்தனுப்புதேன்"

"சரிங்கத்த"

"இந்த வாரம் வெளியூர் எங்கையும் போகலனா இங்க வேணா வாங்க கண்ணு, அவேன் வீட்டுக்கு வர அவனையும் வெத்தலை பாக்கு வச்சுதேன் அழைக்கணும், நானா கூப்புடாம வரவே மாட்டியான்"

"நா வரேன் அத்த, அவங்களுக்கு வேலை இருக்குமோ என்னமோ"

"சரித்தா அவனையே கொண்டு விட சொல்லு. நீ இப்ப சாப்பாடு செஞ்சு முடிச்சுட்டியா?"

"ம்ம் முடிச்சுட்டேன்"

"சரி அவனுக்கு போனு போடு, விரசா வர சொல்லு. அப்போ சரி நா வைக்கேன்" என்கவும்,

"குட் நைட் அத்த" என வைத்தவள், சமைத்த வியர்வை போக குளித்து உடைமாற்றி வந்து அவனுக்கு அழைத்தாள்,

"சொல்லு மரகதம், மேகி ரெடியா?" என்றான் அவன் எடுத்ததும்,

"இன்னைக்கு மேகி இல்ல சப்பாத்தி தான்"

"என்ன சாப்பிட்டாலும் லாஸ்ட் டா மேகியும் சாப்பிட்டாதான்டி தூக்கமே வருது. அடிக்டாகிட்டேன்னு நினைக்கிறேன் மரகதம், உனக்கு அப்படி இல்லையோ?"

"எப்புடியும் இல்ல. ஏசிபி சாருக்கு வெளில நின்னுட்டு என்ன பேச்சிது?" என சாப்பிட ஏதுவாக அனைத்தையும் மேசையில் எடுத்து வைத்தவாறு பேசிக் கொண்டிருந்தாள் மரகதவல்லி,

"அப்ப வீட்டுக்குள்ள வந்து மட்டும் கண்ணாபின்னான்னு பேசுனா ஓகேவா மரகதம்? அப்பவும் வாய மூடுங்கங்கன்னு தான் சொல்ற, அப்போ நா எங்க வச்சு தான் பேசுறது?" என அவன் குரல் அவளின் பின்னால் கேட்கவும், திரும்பிப் பார்க்கப் போனவளை, பின்னிருந்தே அப்படியே இடுப்பில் கைகொடுத்து தூக்கிக்கொண்டான் பாண்டியன்.

"நோ நோ நோங்க, ஃபர்ஸ்ட் போய் குளிங்க ப்ளீஸ், என்னவோ நா சொன்னாலும் நீங்க பேசாம இருக்கமாதிரி தான் சொல்றீங்க. விடுங்க என்ன" என அவன் கையிலிருந்து இறங்க முற்பட்டும் முடியவில்லை, அவன் பிடி எப்போதும் இரும்பு பிடிதானே, இப்போதும் முரட்டுத்தனமாக தான் தூக்கி வந்து கட்டிலில் அவளோடு விழுந்திருந்தான். விழுந்ததோடு அவள் கழுத்தில் பின்னிருந்தே கூச செய்ய, துள்ளி உருண்டாள் மரகதவல்லி.

"அழுக்கு அழுக்கு போங்க, போங்கங்க, போய் குளிச்சுட்டு வாங்க, நா எங்கையும் ஓடிட மாட்டேன்" என இன்னுமே திமிறினாள்.

"எப்ப வருவீங்கன்னு ஃபோன் போட்டு கூப்பிட்ட தான? வந்தா துள்ளுறியே மரகதம்" என்றவனின் கைக்குள் கொண்டு வந்திருந்தான் அவன் மரகதத்தை. அவளோடு மல்லுகட்ட அவ்வளவு பிடித்தது அவனுக்கு. தினமும் ஒரு மல்யுத்தம் நடத்தினால் தான் அவனுக்கு அன்றைய நாள் சிறப்பாக முடியும்.

"நா சாப்பிட" என சொல்ல வந்தவள் அதற்கும் என்ன பதில் சொல்லுவான் என தெரிந்ததால், "லேட்டாகிட்டேன்னு கேட்க தான் கால் பண்ணேன்" என திருத்திக் கொண்டாள்.

"அப்ப‌ என்ன தேடலன்ற?" என்றவன் கைகள் அவளிடம் கோலம் போட துவங்கியிருந்தது.

"வீட்டுக்கு எப்ப வருவீங்கன்னு தேடுனேங்க, உங்கள தேடாம எப்டி?"

"எதுக்கு தேடுன மரகதம்?"

"ஏங்க இப்படி கேட்டா நா என்ன பதில் சொல்ல?"

"எதாவது சொல்லு மரகதம் நா கேட்கிறேன்" என்றவன் கைகள் அவளிடம் அத்துமீற ஆரம்பித்திருக்க,

"ஏங்கங்க"

"நீ மொத என்ன ஏங்க விடாதடி மரகதம். நா வருவேன்னு தெரிஞ்சு குளிச்சு ஃப்ரஷா கமகமன்னு இருக்குறது அப்றம் வேணா விடுங்கன்றது. கேடி கள்ளி மரகதம்" என்றவனின் லீலைக்குள் தான் அடுத்து வந்த நொடிகள் மொத்தமாக அடங்கி விட்டாள்.

அவன் ஆளுகைக்குள் அவள், அவனை தனக்குள் போர்த்திக்கொண்ட அவள், இருவரும் ஒருவருக்கொருவரான நொடிகள் அவை. பாண்டியன் மரகத கள்வன் ஆன நிமிடங்கள்.

தன் தோளில் கண்மூடி கிடந்தவள் முக வடிவை விரலால் அளந்தவன், "மரகதம்" என்றான் ஹஸ்கியாக,

"ம்ம்"

"தூங்கிட்டியா?"

"இல்லங்க ஏன்?" என நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

"கொஞ்ச முன்னாடி எப்டி கோப்ரேட் பண்ணுன அப்றமெதுக்கு நா வந்ததும் அவ்வளவு பிகு பண்ணுன?" என அவளை மீண்டும் வம்பிழுக்கத் துவங்க,

அவன் வாயிலேயே பட் பட்டென்று அடி வைத்து, "பேசாதீங்க இப்டி. நீங்க ஒரு காரியவாதி ஏசிபி"

"எனக்கு தெரியும் மரகதம். கடைசியா க்ரெடிட் எல்லாம் நீ எனக்கே குடுத்துடுவன்னு, ஆனாலும் உன்னோட பங்களிப்ப நா பாராட்டியே ஆகணும்ல?"

"ஷு சுப், நீங்க எந்துச்சு போங்க முதல்ல"

அவள் பாவனையில் சிரித்தவன், "நீ வரல?"

"எங்க?"

"மேகி கிண்ட தான்"

"அடிவாங்குவீங்கங்க விடுங்க நானாவது போறேன்"

"நா ஹெல்ப் பண்றேன் மரகதம்" என்க,

"ஒரு அணியும் வேணாம் போங்க, செய்றதெல்லாம் செய்வீங்க அப்றம் என்ன சொல்லுவீங்க. நீங்க இங்கயே கிடந்து உருளுங்க, நானே போறேன்" என்றவள் மட்டும் அவனுக்கு வக்கனம் காண்பித்து எழுந்து சென்று விட்டாள்.

அவள் மீண்டும் வரும் வரையிலுமே தலையணையை சேர்த்துப் பிடித்தவாறு குப்புற தான் படுத்திருந்தான். எட்டு வருடங்களாக உண்மையில் இவளை மறந்துதானிருந்தான், ஆனால் மறுபடியும் பார்த்த நொடி காதல் மீண்டெழுந்துவிட்டது போலும். அவ்வளவு ரசித்தான் அவளை, அவளுடனான வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருந்தான்.

மறுபடியும் குளித்து வெளிவந்தவள், 'தூங்கிட்டாங்களா? அச்சோ சாப்பிடல இதுக்குதான் ஃபர்ஸ்ட் அந்த வேலைய முடிங்கன்னு சொன்னேன் கேட்கல' என முனங்கிக் கொண்டே வந்து, துணிகள் அழுக்கை பொறுக்கி மெஷினில் போட்டு விட்டு, மறுபடியும் அவனிடம் வந்தாள், "ஏங்க சாப்பிடலையா?" என அவன் தோளில் தட்ட,

"மந்தாகினி வந்துட்டியா?" என அவன் தூக்கத்தில் சொல்லுவது போல் சொல்லவும்,

"நடிக்கவா செய்றீங்க, வெறுப்பேத்துவீங்களா? செய்ய மாட்டேன்னு சொல்லுங்க சொல்லுங்கங்க" என கட்டிலில் கிடந்த இன்னொரு தலையணையை எடுத்து அவன் முதுகிலேயே அடிக்க, குலுங்கி சிரித்தவன், மீண்டும் அவளை மேலிழுத்து போட்டுக் கொண்டு முத்தமிட துவங்க, அடிபிடி சண்டையோடே சாப்பிட உறங்கச் செல்ல என அவர்களின் அன்றைய இரவும் மற்றைய நாட்களை போல் கழிந்தது. வெளியே வேலையில் இருக்கும் அழுத்தங்களை இருவருமே வீட்டினுள் கொண்டு வராமல் பார்த்துக் கொண்டனர். வீட்டினுள் அவன் மரகதத்தின் பாண்டியன், அவள் பாண்டியனின் மரகதம் மட்டுமே.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 42

மறுநாள் காலையில் ஸ்டேஷன் கிளம்பி ஷு பாலீஸ் போட்டுக் கொண்டிருந்தவன் ஃபோனில் அழைப்பு வர, டீ பாயில் இருந்ததை எட்டி அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, "சொல்லுமா" என்றவாறு மீண்டும் ஷு பாலீஸ் போடுவதைத் தொடர்ந்தான்.

"மூத்தவனே என்ன முடிவெடுத்துருக்கீக?" என்றார் அவர் எடுத்ததுமே.

"என்னம்மா தலையும் இல்லாம வாலுமில்லாம முடிவு சொல்ல சொல்ற?"

"நேத்து மருமவட்ட சொன்னேனே?"

"அப்ப அவட்டதான நீ முடிவையும் கேட்டுக்கணும்?"

"அவ உன்ட்ட சொல்லவே இல்லையா?"

"இல்லையேம்மா? நீ அவகிட்ட என்ன சொன்ன அத மொத சொல்லு"

"ரெண்டு நாளு‌ லீவுக்கு, அவள கொடைக்கானல் கூட்டிட்டுப் போக உன்ட்ட கேளுன்னு சொன்னேன், அதுக்கு உனக்கு தோதில்லன்னா இங்க கூட்டியாந்து விடுன்னு சொன்னனே? அவ ஏன் சொல்லல?"

"நைட்டு நா வந்ததுமே எங்க ரெண்டு பேருக்கும் பெரிய சண்டைம்மா, லேட்டா வந்ததுட்டேன்னு, மூஞ்ச தூக்கிட்டா, மேகி தான்மா கேட்டேன், அதுகூட தர முடியாதுன்னு அப்படி கத்துறா, எனக்கு எவ்வளவு டென்ஷன் தெரியுமா? நீதான பாத்து கட்டி வச்ச நீயே வந்து என்னன்னு கேளு அவள" என்றவன் திரும்பி அடுப்படியில் நின்றவளைப் பார்க்க, அவளும் அங்கு அவன் பேச்சைத் தான் கேட்டுக் கொண்டு முறைத்து நின்றாள்.

"அவ சண்டை போட்டு நீ அமைதியா நின்னியா அது உன்னால முடியாதேய்யா? நம்புற மாதிரி இல்லையே?"

"இனி வேணா வீடியோ எடுத்து வைக்கேன் நீ பாத்து கன்பார்ம் பண்ணிக்கோ. நிறையா பேசுறாம்மா அவ. உன்ன மாதிரி இல்ல" என அவளைப் பார்த்தே கண்ணடித்து குறும்பு சிரிப்புடன் பேசிக் கொண்டிருக்க,

"அப்படினாலும் சின்ன புள்ளதானே குடும்ப பொறுப்புக்கு புதுசு வேற, வேலைக்கும் போறா, சமைக்க செய்ய கஷ்டமா இருக்குமாட்ருக்கு. நீ வேணா ஒரு‌ மாசத்துக்கு இங்க கொண்டாந்து விடுய்யா நா பழக்கி விடுதேன், நீயும் இங்கன இருந்து வேலைக்கு போ"

"அதும் சொல்லிப் பாத்துட்டேனேம்மா, அவளுக்கு தனியாத்தான் இருக்கணுமாம், அங்க வந்து சாணியெல்லாம் தட்ட மாட்டாளாம். என்ட்டையே திமிரா சொல்றா"

"அந்த புள்ளையா வரமாட்டேன்னு சொல்லுச்சு? அப்ப நம்மளோட அண்டாதாய்யா?" என அவர் பயந்து கேட்க,

விறுவிறுவென வந்துவிட்டாள் அவனிடம், "அத்த அவங்கதான் விளையாடுறாங்கனா நீங்களும் அப்புடியான்னு கேட்டுட்ருக்கீங்க. நைட்டு சாப்ட்டு தூங்கிட்டதால நீங்க சொன்னத கேட்க மறந்துட்டேன். இப்ப அவங்க ஸ்டேஷன் கிளம்பினதும் நா அங்க வரேன், அவங்க கோர்த்து விடுறத போய் அப்படியே நம்பிட்ருக்கீங்க" என அவனை முறைத்துக் கொண்டே அவரிடம் பேச,

"சும்மா சாலிக்கு பேசிட்டானோ? நா உண்மைன்னே நினச்சுபுட்டேன். அவேன் இப்புடியெல்லாம் என்ட்ட பேசி விளையாண்டு வருஷமாச்சுத்தா. எப்டியோ இப்படி அவேன் சந்தோஷமா இருந்தா சரித்தேன்" என்றார் அவரும் சந்தோஷமாக.

"அதெல்லாம் மத்தவங்கள வச்சு செஞ்சுட்டு உங்க மகன் சிரிச்சுட்டு தான் இருப்பாங்கத்த. நீங்க இருங்க நா அங்க வந்து பேசுறேன் உங்கட்ட" என அவள் அவன் கைபேசியை எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குள் செல்ல,

"எம்மா சாணி தட்டுவாளான்னு கேளு மொத, எல்லாம் சொன்னாளே அதுக்கு சரின்னு சொன்னாளா பாத்தியா?" என்றவன் அவள் பின்னரே சென்று பின்னிருந்து அணைத்துக் கொண்டு சொல்ல,

"ஏங்கங்க?" என்றாள் பாவமாகவும் மெதுவாகவும்.

"அதெல்லாம் இங்க வந்தா பழகிக்க போறா இப்ப என்ன அவசரம்?" என வாசுகி சொல்லவும், பதில் சொல்ல முடியாமல் திருதிருத்தாள் மரகதவல்லி.

"பழகிடுவியா மரகதம்?" என சத்தமாக கேட்டு அவன் மாட்டி விட,

"உங்கள வச்சுகிட்டு முடியலங்க. ஏங்க இப்படி பண்றீங்க?" என அவனிடம் மெதுவாக கெஞ்சி சொல்ல,

"சரி அப்ப ஒரு உம்மாவோட டீல முடிச்சுக்கலாமா?" என பேரம் பேசினான்.

"என்ன டீலு?"

"சாணி டீலு தான்"

"கருமமா இருக்குமேங்க" என முகத்தை சுருக்க,

"நல்லா இருக்கும் பாறேன்" என்றவன், அவளின் சுருங்கிய முகத்தை, கன்னத்தோடு தாங்கி, அவள் பிதுக்கி நின்ற இதழ்களுக்கு ஆதரவளித்து விட்டான்.

அங்கு கத்திக் கொண்டிருந்த வாசுகி, "என்னங்க பேசிட்ருக்கைலயே கட் பண்ணிட்டு போயிட்டியான். ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குதேன் எம்புள்ள கொஞ்சம் சந்தோஷமா பேசுனியான் அது அங்க எவனுக்கோ பொறுக்கல போ அதான் பாதில கிளம்பிட்டான். வேலை வாங்கியே அவன‌ சிரிக்க விடாம பண்ணி போட்டானுவ" என இவர் பரஞ்சோதியிடம் சொல்லிக் கொண்டிருக்க,

"ஆமா இவேன் சிரிச்சா வேலையவிட்டு தூக்கிருவோம்னுதேன் சொல்லி வச்சுருக்காய்ங்களாக்கும்? உன் மவனுக்கு கலகலன்னு சிரிக்க தெரியலன்னு சொல்லுட்டி" என்றார் பரஞ்சோதியும் பதிலுக்கு.

"ஓஹோ! அம்புட்டுக்கு ஆகி போச்சாக்கும்? இன்னைக்கு ராவுக்கு அவன வரச் சொல்லி உங்க முன்ன சிரிச்சு காட்ட சொல்லுதேன் அப்புறமாது நம்புறீகளான்னு பாக்குதேன்"

"ஆத்தி அவன் முறைச்சுட்டே இருக்கதே தாவலத்தா புண்ணியவதி நீ ஒரண்ட இழுத்துவிடாம சும்மான்னு இருட்டி போதும்" என கும்பிட்டே விட்டார் பரஞ்சோதி.

"அம்புட்டு பயமிருக்குல்ல அப்றமெதுக்கு அவேன் பின்ன பேசுதீக? அவேன் வேலைதேன் அப்புடி மாத்திபுடுச்சு, அதுக்கு முன்னலாம் நல்லா கலகலன்னு இருந்தவேன் தான் என் புள்ளையும், இப்ப அவேன் உத்தியோகத்துக்கு வெளியே சிரிச்சு பேசுனா ஏச்சுபுட மாட்டாய்ங்க?"

"அம்மையும், மவனும் ரூம பூட்டிட்டு உள்ள உக்காந்து சிரியோ சிரின்னு சிரிங்களேன் வெளியவே தெரியாது" என்றார் அவர், அவர் வாயே சும்மா இருக்க மாட்டேன் என அவருக்கு ஆப்படித்துவிடுகிறது பாவம் அவரும் என்ன செய்வார்.

"நக்கலா பண்ணுதீக? இருங்க மூத்தவேன் வரட்டும் பேசிக்கிறேன்" என இவர் இடுப்பில் கை‌வைத்து முறைக்கவும்,

"ஏண்டி ஒரு பேச்சுக்கு உன்ட்ட விளையாட்டா நா எதுவும் பேசிற கூடாதா? எல்லாத்துக்கும் அவன நடுவுல கொண்டு வருவியா நீயி?"

"விளையாடுத வயசுதேன் உங்களுக்கும் எனக்கும் போங்களேன் சோலிய பாக்க. இன்னமு என்னத்துக்கு இங்கனயே உக்காந்துருக்கீக?"

"இந்த வரதேன் பேங்க்குக்கு கூட்டிட்டு போறேம்னு சொன்னியான் இன்னும் கிளம்ப காணும்"

"என்னத்துக்குதேன் பேங்குக்கு பொழுதனைக்கும் அழையுதீக? அவேன் வேலைய கத்துக்கிட்டு அவேன் சீட்டுல எதும் உக்கார போறீகளோ?"

"இடும்பு தானட்டி உனக்கு? நீ மட்டும் என்னைய பேசுவ இதே நா பேசுனா உன் புள்ளைய கூப்புடு துணைக்கு"

"சரி சொல்லுங்க பேங்க்குல என்ன வேலை?"

"நம்ம நாச்சி(பால்காரன்) சொந்தமா மாடு வாங்க போறானாம் அதுக்கு லோனு கேட்கியான் இவேன் போட்டு அலைக்கழிக்காம்னா பாரு. அதேன் குடேம்லே பாவம்னு சொன்னதுக்கு, சூரிட்டி கையெழுத்து வந்து போடுங்கன்னு நிக்கியான்"

"ஏன் அத அவனே போட மாட்டானாமா?"

"விருதா பிஸ்னாரி பையல பெத்து வச்சுருக்கியே நீதேன். நாச்சி கட்டாம விட்டா பொறுப்பு அவனுதுல்ல அதேன் ஏக்க மாட்டேங்கான்" அவர்கள் பேச்சு அப்படியே நீண்டு சென்று கொண்டிருந்தது, அதை கேட்டவாறே வீட்டினுள் வந்திருந்தான் பாண்டியன்.

நின்று கொண்டிருந்த வாசுகி தான் முதலில் பார்த்து விட்டு, "மூத்தவனே வாய்யா. ஏத்தா வா, உன் வண்டீல வருவேம்ன? வந்த சத்தமே கேக்கல" என இருவரையும் வரவேற்க,

"இவங்க தான் கொண்டு விட்டுட்டு போறேன் வான்னு கூட்டிட்டு வந்துட்டாங்கத்த" என கூறியவள், "மதியத்துக்கு சாப்பாடு ஸ்டேஷன் குடுத்து விடவாங்க?" என்றாள் அவனிடம்.

"இல்ல நா‌ பாத்துப்பேன்" என்றவன் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டான். விட்டதும் கிளம்பிவிடுவேன் என்றவன் வந்தமர்ந்து கொள்ளவும் புரியாமல் விழித்திருந்தாள் மரகதம்.

அந்நேரத்தில், "போலாமாப்பா?" என அறைக்குள்ளிருந்து வந்த வரதன் பாண்டியனை எதிர்பார்க்காது விழிக்க,

"என்ன வரதா சூரிட்டி கேட்டியாம்? அப்பா ஏஜ்கு அவர் சைன் போடுறத விட, நா கவர்ன்மென்ட் எம்ப்ளாயி, நா போடுறது மாடு வாங்குறதுக்கு இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும்ல? வா நா அங்க வந்து சைன் போட்டுட்டு ஸ்டேஷன் போய்க்கிறேன்" என பாண்டியனும் எழுந்து கொள்ள,

"இல்ல நானே போட முடியாது. பேங்க் ஸ்டாஃப்குன்னு ரூல்ஸ் உண்டு" என அமைதியாகவே கூறினான் வரதன்.

"எவ்வளவு சலுகை உண்டுன்னு கூட எனக்கு தெரியும் வரதா" என அவன் கூர்மையாக பார்க்கவும்,

"நானே போடுறேன். சாங்கஷன் பண்ணிடுறேன். அப்பா நீங்க அவர இன்னைக்கு பேங்க் வர சொல்லிடுங்க" என்றவன் நிற்காமல் வேகமாக சென்று விட்டான். பாண்டியனிடம் பயம் அதிகமே அதனால் நின்று சொல்ல கூட முடியாமல் ஓடிவிட்டான்.

"இவேன் ஏன்மா இப்படி இருக்கான்? அம்புட்டையும் கூடவே கொண்டு போ போறானா?" என்றான் சென்றவனைப் பார்த்து சலிப்புடன்.

"எங்க கொண்டு சேத்து வைக்காம்னே தெரியலய்யா. பொண்டாட்டி புள்ளைக்கு கூட ஒன்னும் வாங்கி தர மாட்டுக்கான்"

"எனக்கு இதான் புடிக்கலம்மா. நா இங்க வந்தா இவனுங்கள கண்காணிச்சுட்டே இருக்க மாதிரி இருக்கும். கல்யாணம் ஆகிட்டு இனியும் அவனுங்கள எதாவது நா சொல்லிட்டுருக்கதுலாம் சரியா வராது. அப்பப்ப கேட்டாதான் கொஞ்சம் பயமு இருக்கும்" என்றான் கோவமாகவே.‌

பாண்டியனை இங்கு வந்திருக்க சொல்லி அழைத்துக் கொண்டே இருந்தார் வாசுகி‌. அவனுக்கு தள்ளி சென்றபிறகு மீண்டும் வந்து உள்ளிருக்க மனது உடன்படவில்லை, அதற்கு பல காரணங்கள் இப்படி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்கிறான். இதற்கு தானா என பார்த்திருந்தாள் மரகதவல்லி.

"சரிம்மா கிளம்புறேன். நீ கிளம்பும்போது ஃபோன் பண்ணுடி" என கிளம்பிவிட்டான். பரஞ்சோதியும் காட்டுக்கு கிளம்பிவிட, மாமியாரும், மருமகளும் பாண்டியன் கதைகளை பறிமாறிக் கொண்டனர். அவர் அவனது பால்ய வயதை சொல்ல, இவள் திருமணத்திற்கு பின் அவன் அனுசரணையை சொல்லி அவர் வயிற்றில் பாலை வார்த்திருந்தாள். மாலையில் மற்ற இரு மருமக்களும் வந்துவிட, பெண்கள் ராஜ்யமானது பரஞ்சோதியின் இல்லம். இரவு உணவிற்கு தான் பாண்டியன் வந்து சேர்ந்தான். உணவை முடித்துக் கொண்டு அவன் குவாட்ரஸ் கிளம்பி விட்டனர். இதுவே வழக்கமானது, அவனுக்கு விடுமுறை நாட்களில் அவளை எங்கும் விடாமல் அமுக்கி விடுவான், அவளின் விடுமுறை நாட்கள் அம்மா வீடு அல்லது மாமியார் வீடு என கழியும்.

இதற்கிடையில் அவள் தோழியின் வழக்கும் மரகதவல்லியை கொஞ்சம் படுத்தியது. அவள் மீண்டும் மீண்டும் முயன்றதில் மந்தாகினி, விநாயகம் மூலம் தெரிந்த விஷயங்கள் அவர்கள் செய்தது சரியே என அவள் மனமே விவாதித்தது.

வைஷ்ணவியையும் சென்று பார்த்தாள், "எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு, இதுல மந்தாகினி, என் அண்ணா விநாயகம்னு யாரையும் கொண்டு வர வேணாம் ப்ளீஸ். அண்ணன நம்பி குடும்பம் இருக்கு. மந்தாகினி இன்னும் உலகம் பாக்காத பொண்ணு, அல்ரெடி அம்மா தம்பின்னு அவங்க செஞ்ச விஷயங்கள்ல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா, அதுவே பெரிய தண்டனை தான் அவளுக்கு, இதுல இந்த தண்டனையும் சேர வேணாம். குடுக்குற தண்டனைய எனக்கு மட்டும் குடுக்கட்டும் மேகி, நீ இப்ப எல்லாமே விசாரிச்சுருக்கலாம், நா என்ன நியாயப்படுத்த நினைக்கல, எனக்கு வேறெந்த ஃபேவரும் வேணாம். கேஸ நாளைக்கு ஹியரிங்லயே முடிச்சு எனக்கு ஜட்ஜ்மெண்ட் வாங்கி குடுத்துடு மேகி. ப்ளீஸ்டி" என்றிருந்தாள்.

அந்த வைஷ்ணவியின் கெஞ்சல் குரலே அவள் மனதிற்குள் அன்று முழுதும் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டினுள் நுழைந்து விட்டால் முழுவதுமாக அவளை அவள் ஏசிபி ஆக்கிரமித்து விடுவான், மீண்டும் நீதிமன்றத்திற்குள் நுழைந்ததும் அவள் தோழி வந்து மண்டைக்குள் உட்கார்ந்து விடுகிறாள். இதோ இன்று வழக்கின் இறுதி விசாரணை. அவளுக்காக பார்ப்பதா, இல்லை உண்மையை வெளியே கொண்டு வருவதா என இருவேறு சிந்தனைகள் இருக்க, அவளுக்காகவே அன்றும் நீதிமன்றம் வந்தமர்ந்துவிட்டான் அந்த மரகத காவலன். இனி அவளின் தைரியம் அவனல்லவா! உடன் அவனிருக்க தெளிவான முடிவிற்கும் வந்திருந்தாள் மரகதவல்லி.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 43

நீதிபதி முன் வைஷ்ணவி, மந்தாகினி, விநாயகம் மூவரும் நிறுத்தப்பட்டனர். மறுபடியும் வைஷ்ணவி மந்தாகினியிடம் முதலிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன, அவர்கள் பதில் கூறி முடிக்கவும், விநாயகத்திடம் வந்தாள் மரகதவல்லி.

"இவங்களோட அண்ணன்றதுக்காகவே சந்தேகத்தின் அடிப்படையில் நீங்க அரெஸ்ட்டாகியிருக்கீங்க இல்லையா விநாயகம்? இறந்ததுல ரெண்டு பேர் உங்க தம்பி, குற்றவாளியா சிக்கிருயிருக்க ரெண்டு பேரும் உங்க தங்கச்சி, அதுல ஒருத்தங்க உங்க பொண்ணு மாதிரின்னு உங்க குடும்பமே சொல்லுது, அப்ப சந்தேகம் வரதானே செய்யும்?"

"ஆமா மேடம், மந்தாகினி என் பொண்ணு தான். என்ட்ட விசாரிச்சப்பையே எனக்கு தெரிஞ்சத எல்லாத்தையும் போலீஸ்லயும் சொல்லிட்டேன்"

"எங்களுக்கும் மறுபடியும் ஒருக்கா சொல்லிடுங்களேன். எத்தன வருஷமா நீங்க கேகேவி ஸ்கூல்ல வொர்க் பண்றீங்க விநாயகம்?" என ஆரம்பித்தாள்.

"ரெண்டு வருஷமா வேலை பாக்றேன்"

"உங்க சித்தி வள்ளி அங்க சயின்ஸ் டீச்சர், அவங்க ரெகமெண்ட்ல கிடைச்ச வேலை அப்டிதானே?"

"ஆமா ரெஃப்ரன்ஸ் இல்லாம யாரையும் அங்க வேலைக்கு எடுக்க மாட்டாங்க"

"எஸ் எஸ் கேள்விப்பட்டேன். ஆமா உங்க சித்தி அங்க எத்தன வருஷமா வேலை பாத்தாங்க?"

"நாலு வருஷமா பாத்துட்ருந்தாங்க"

"அவங்களுக்கு யாரோட ரெப்பரன்ஸ்ல வேலை கிடைச்சது?" என்றவள் கேள்வியில், மந்தாகினி குனிந்து கொண்டாள், வைஷ்ணவியும் விநாயகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பாண்டியன் இன்றும் தளர்ந்து சாய்வாக நாடி தாங்கி அமர்ந்து மரகதத்தின் லாயர் மூளையை தான் அவதானித்திருந்தான். அவளின் கிடுக்கிப்பிடி கேள்வியில் சிரிப்பு தோன்றி மறைந்தது அவன் முகத்தில்.

"சொல்லுங்க விநாயகம். அவங்களுக்கு யாரு ரெஃப்ரன்ஸ் குடுத்தது?"

"அது எனக்கு சரியா தெரியல, நா சித்திட்ட கேட்டதில்ல" என்றான் விநாயகம்.

"உங்களுக்கு தெரியுமா மந்தாகினி?" அவளும் மெல்ல இல்லை என்று தலையசைத்து மறுத்தாள்.

"நீங்களும் அந்த ஸ்கூல்ல தான படிச்சீங்க மந்தாகினி?"

"ஆமா மேம்"

"ஃபர்ஸ்ட்ல இருந்தே அங்கதான் இல்லையா?"

"ஆமா‌ மேம்"

"இப்ப காலேஜ் செகெண்ட் இயர்ல இருக்கீங்க?"

"எஸ் மேம்"

"ஓகே. உங்கட்ட மொபைல் இருக்கா மந்தாகினி?"

தயங்கினாலும், "எனக்குன்னு நா வச்சுக்கல்ல" என்றாள்.

"இந்த காலத்துல ஒரு காலேஜ் படிக்குற பொண்ணுக்கு கைல ஏன் மொபைல் இல்ல?"

"எனக்கு அது யூஸ் பண்ண பிடிக்கல அதான் வச்சுக்கல"

"எப்ப இருந்து பிடிக்கல?"

"சரியா நியாபகம் இல்ல"

"சுமார் ஆறு மாசம் இருக்குமா?"

"நா எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீங்க என்ன தனியா பாத்தப்பவே சொல்லிட்டேனே மேம்"

"ரைட் நா கேட்டதுக்கு மட்டும் ஆமா இல்லன்னு நீங்க சொன்னீங்க மந்தாகினி. பட் பாருங்க நீங்க சொன்னதோட உங்க அக்கா அண்ணா அப்பா சொன்னதுன்னு எதுமே லிங்க் ஆகல மந்தாகினி, எல்லாம் வேறொரு பாய்ண்ட்ல கொண்டுல விடுது, அப்ப எங்களுக்கு குழப்பம் வருதுல்ல? அத தெளிவு படுத்தினாதான கரெக்ட் ஜட்ஜ்மெண்ட் கிடைக்கும்"

"எனக்கு எதுவும் இப்ப சொல்ல புடிக்கல மேம், விட்ருங்களேன்" என்றாள் அழுகுரலில்.

"இந்த கேஸ்ல தப்பு பண்ணவங்க மாட்டிக்கணும் யாரா இருந்தாலும் தண்டனை கிடைக்கணும்னு ஏசிபி சார் முன்ன போய் உக்கார்ந்திருந்த மந்தாகினி இப்ப இல்லையோ?"

"ஆமா மேடம் அந்த மந்தாகினி இப்ப இல்ல. எனக்கு எதுமே சொல்ல முடியல மேம். பேச புடிக்கல. எனக்கு தண்டனை தரணும்னா எந்த கேள்வியும் கேக்காமலே தாங்களேன் ஏத்துக்குறேன். என்ன பேச விட மாட்டேங்குறாங்க மேம். பேசவும் முடியாம பேசாம இருக்கவும் முடியாம கொடுமையா இருக்கு மேடம். தூக்கு தண்டனைலாம் குடுத்து எனக்கு நிம்மதிய தந்துருங்க மேடம் ப்ளீஸ்" என கதறி அழுதாள் மந்தாகினி. இருபுறமும் நின்ற விநாயகமும், வைஷ்ணவியும் அவளை தாங்கி பிடித்தனர், இருவரின் கண்களும் கூட நிறைந்திருந்தது.

"உண்மை வெளி வர வேணாமா மந்தாகினி? செல்ஃப் டிஃபன்ஸ் ஒன்னும் அவ்வளவு பெரிய அஃப்பன்ஸ் இல்ல. நல்ல பிள்ளைங்கள பெத்து அவங்கள பறிகொடுத்ததா சொல்றாங்க இறந்து போன ஆறு பேரோட பேரண்ட்ஸும். அவங்க தெரிஞ்சே அவங்க பசங்களுக்கு பாவம்ன்ற ஸ்டேட்மெண்ட்டுக்கு கீழ கொண்டு வர ட்ரை பண்ணலாம், இல்ல தெரியாமலும் இருக்கலாம். உனக்கு தெரிஞ்சத வெளிய தெரிய படுத்த வேண்டியது உன் கடமை இல்லையா? யார காப்பாத்த நினைக்குற இறந்து போனவங்களையா?" என்ற தொடர் கேள்வியில் வெடித்து அழுதாள் மந்தாகினி.

"அவ சின்ன பொண்ணு ஏற்கனவே மனசலவுல ரொம்ப பாதிக்க பட்ருக்கா, இன்னும் அவள கன்ஃப்யூஸ் பண்ணி என்ன செய்ய போற மேகி. நாந்தான் பண்ணேன்னு ஆஜர் ஆனப்றம் நீங்க இன்னும் விசாரணைய எந்த அடிப்படையில இழுத்து கொண்டு போறீங்க? யாருக்காக இத பண்றீங்க?" என வைஷ்ணவி கத்திவிட,

"கீப் காம் வைஷ்ணவி. போலீஸ் ரிப்போர்ட்ல உங்க மூணு பேர் பேரும் சந்தேகம் லிஸ்ட்ல இருக்கு. அதனால நீங்க லாயர் கேட்குற கேள்விக்குலாம் பதில் சொல்லி தான் ஆகணும்" என நீதிபதியின் உத்தரவில் மீண்டும் அமைதியாகினர்.

"மந்தாகினி, இது எல்லாத்தோட ஸ்டார்ட்டிங்க் பாயிண்டே நீங்க தான்னு தெரியும்ல?" என்றதும் அழுதுகொண்டே தலையை அசைத்து ஆமோதித்தாள்.

"உங்க தம்பி விஷ்ணு மாதிரி இன்னும் வேற யாரும் வெளில தெரியாம பாதிக்க பட்ருக்காங்கன்னும் வெளில தெரியணும்ல?" என்றாள் மறுபடியும், அதையும் மந்தாகினி ஆமோதித்து ஒத்துக் கொண்டாள்.

"அப்ப ஸ்பீக் அவுட். நீங்க இப்ப சொல்லலனாலும் எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு. நீங்க ஏசிபிட்ட எல்லா உண்மையையும் ஒத்து கிட்ட ரெக்கார்ட் இருக்கு. இதெல்லாம் வச்சு எப்படியும் கேஸ் முடியதான் போகுது, சோ இனியும் அடம்பிடிக்காம நீங்களா ஒத்துப்பீங்கன்னு நினைக்கிறேன், அது தான் உனக்கும் ஒரு ரிலீஃப்ப குடுக்கும் மந்தாகினி"

"நா சொல்லிடுறேன் மேம்" என கண்ணை துடைத்து கொண்டு நிமிர்ந்து அவள் தந்தையை பார்த்தாள், பாவமாக அமர்ந்திருந்தார் அந்த மனிதர்.

"குட் கோ அஹெட்" என மரகதவல்லி கையை கட்டிக்கொண்டு அவள் முன் நின்றுவிட, அந்த தோரணையை கூட ஒரு நொடி ரசித்து பார்த்திருந்தான் பாண்டியன். மந்தாகினியின் குரலில் மறுபடியும் கூர்மை பெற்றது அவன் பார்வை.

"எங்கம்மா வள்ளி, கேகேவி ஸ்கூல்ல நாலு வருஷமா வேலை பாத்தாங்க அதுக்கு முன்ன எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு ப்ரைமரி ஸ்கூல்ல தான் வேலை பாத்துட்ருந்தாங்க. அங்க வருமானம் சரியா வரல எங்கப்பாக்கும் வருமானம் கம்மி, அதுல எங்க அம்மாக்கும் அப்பாக்கும் அடிக்கடி சண்டை வரும், ஆனா எங்க முன்ன பெருசா காண்பிச்சுக்காம என் அப்பா சமாளிச்சுட்டு இருந்துருக்காரு"

"உங்கம்மாக்கு கேகேவில எப்டி வேலை கிடைச்சது?"
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 44

ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் தந்தையை திரும்பி பார்த்துவிட்டு, "எம்.எல்.ஏ விஜயம் ஹெல்ப் பண்ணாரு" என்றாள்.

"அவருக்கும் உங்க குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"எங்க அப்பாட்ட எல்.ஐ.சி சம்மந்தமா விசாரிக்க வந்ததுல இருந்து பழக்கமாம். ஆனா அவரோட மருமகன் என்ன காமிச்சு நா வேணும்னு கேட்டதால தான் எங்கள தேடி வந்துருக்காருன்னு அவனே சொல்லி தான் தெரிஞ்சது"

"அப்பவேவா? அப்ப அவன் சிக்ஸ்த் தானே படிச்சுட்ருந்துருப்பான்? அப்பவே காதல் பண்ற வயசா அவனுக்கு?"

"பிஞ்சுலயே பழுத்தவன் மேம் அவன். அவனா சேத்தவனுங்க தான் மத்த ஆறு பேரும். லேட்டா வந்தும் என்னால மாட்டிகிட்டவனுங்க தான் என் தம்பிங்க ரெண்டு பேரும். எல்லாத்துக்கும் நாந்தான் காரணம், அவேன் கண்ணுல விழுந்து தொலைச்சேனே அது தான் காரணம்" என தலையில் தலையில் அடித்துக்கொண்டாள்.

"நீ இல்லனா உன் இடத்துல வேறொரு பொண்ணு அவ்வளவு தான். அவனெல்லாம் அப்பவே பிடிச்சு நசுக்கி விட்ருக்கணும், தெரியாம போச்சு, பத்து வயசுலயே தன்ன விட மூத்த புள்ளைய பாத்து வேணும்னு கேட்ருக்காம்னா அவன் மனசுல எம்புட்டு கள்ளம் இருக்கும்" என கொந்தளித்தாள் வைஷ்ணவி.

"சைலன்ஸ் வைஷ்ணவி. இங்க நின்னுட்டு வையலன்ஸ் வேர்ட்ஸ் யூஸ் பண்ண கூடாது" என்றார் நீதிபதி.

"எம்.எல்.ஏக்கும் உங்க குடும்பத்துக்கும் எந்த அளவுக்கு பழக்கம்?" என மீண்டும் விட்ட இடத்திலிருந்து கேட்டாள் மரகதம்.

"எங்கம்மாவும் அவரும் அடிக்கடி தனியா பாத்துக்குறளவுக்கு"

"ஓகே தென்? அவர் ஹெல்ப் பண்ணி உங்கம்மா கேகேவி ஸ்கூல்ல ஜாயின் பண்ணிட்டாங்க. அப்றம்?"

"அதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரோட பழக்கம் அதிகமாச்சு, அவர் அவரோட மாமா பையன பத்தி பேசுறேன் கேட்குறேன்னு சொல்லிட்டே எங்க வீட்டுக்கும் அடிக்கடி வருவாரு, அப்பதான் அவனுக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் அதிகமாச்சு"

"பாஸ்கர் தான அந்த பையன் பேரு?"

"ஆமா, பாஸ்கி. டூ இயர்ஸ் முன்ன நா ஸ்கூல்ல இருந்து ட்வல்த் முடிச்சு கிளம்புறப்ப தான் என் தம்பிங்கள அங்க கொண்டு சேர்த்தாங்க, அவனும் அப்பதான் என்ட்ட வந்து ப்ரபோஸ் பண்ணான். நா அக்ஸப்ட் பண்ணலன்னதும் என்ன அப்ரோச் பண்ண என் தம்பிங்கள அவனுக்கு ஃப்ரண்டாக்கி யூஸ் பண்ணிட்டான்"

"நீங்க சொல்லுங்க விநாயகம். அவனுக்கு அப்ப தேர்டீன் உங்க தங்கச்சிக்கு எயிட்டீன் இல்லையா?"

"எஸ் அவன் எயிட்த் ஜாயின் பண்ணும் போது இவ லெஃப்டவுட் ஆகிட்டா, நானும் அப்பதான் ஜாயின் பண்ணிருந்தேன்"

"அப்பவே அந்த பசங்களுக்கு இந்த ட்ரக்ஸ் பழக்கம் இருந்ததா?"

"இருந்துருக்கலாம்னு தான் தோணுது. ஆனா லாஸ்ட் இயர்ல தான் எல்லாருக்கும் தெரியுற அளவுக்கு இருந்தது அவங்க ஆக்டிவிட்டிஸ்"

"வெறும் வீடியோ தானே எடுத்து வச்சு மிரட்டுனாங்க? அதுக்கு பயந்தா எந்த ஆக்ஷனும் எடுக்கல?"

"ப்ரின்ஸிபலே எடுக்காதப்போ நாங்க என்ன செஞ்சுட முடியும். நா என் தம்பிங்கள கூப்ட்டு வார்ன் பண்ணேன், அதுக்கு சாருன்னு பாக்காம என்னையே அடிச்சானுங்க"

"சரி அப்றம் என்னாச்சு மந்தாகினி?"

"நா காலேஜ் ஜாயின் பண்ணேன், அவன் அவனோட ஃப்ரண்ட்ஸோட என் தம்பிய காரணமா வச்சு அடிக்கடி வீட்டுக்கு வருவான். என்ட்ட ரொம்ப நார்மலா பேசுவான். நானும் தம்பியோட பழகுறதுனால என்ட்ட ப்ரபோஸ் பண்ணத காமிச்சுக்காம நடக்குறான்னு நினைச்சேன். அப்பா இருக்காரு, அம்மா இருக்காங்க, ஒன்னுக்கு ரெண்டு தம்பி இருக்காங்க, இவங்களலாம் மீறி என்னைவிட நாலஞ்சு வயசு சின்னவனால எனக்கு என்ன பெரிய ப்ராப்ளம் வந்துட போகுதுன்னு அசால்ட்டா நினைச்சுட்டேன்" என்றவள் மீண்டும் கண்ணீரை உள்ளிழுத்தாள்.

"ஆனா யாருக்கும் என்ன யோசிக்க டைமில்லன்னு அப்பறமா தான் தெரிஞ்சது. அம்மாக்கு அந்த எம்.எல்.ஏவோட டைம் ஸ்பெண்ட் பண்ண மட்டுமே நேரமிருந்துருக்கு, அப்பாக்கு அந்த விஷயம் தெரிஞ்சு அம்மாவோட மறைமுகமா எங்களுக்கு தெரியாம சண்டை பிடிக்கவும், அதனால் மனசலவுல நொந்து போயும் இருந்ததால என்னையும் என் தம்பியையும் கவனிக்க ரெண்டு பேருமே மறந்துட்டாங்க. அவன் புதுசா பழகுன ட்ரக்ஸ்கு அடிமையானான். எங்க வீட்டுக்கே வந்து அந்த போதை பொருள எடுத்துக்க ஆரம்பிச்சுருக்காங்க, நா அதுல பாதிக்க படுற வர எனக்குமே அவங்க அப்படி பண்றது தெரியல, அந்த பாஸ்கர் பார்வை ஒருமாதிரி எனக்கு அன்ஈசியா இருக்கும் அதனாலேயே அவங்க முன்ன போமாட்டேன், ஒதுங்கியே இருப்பேன்"

"உங்கம்மாக்கு அந்த பசங்க அப்டின்னு ஸ்கூல்ல வச்சே தெரியுமே? பின்ன ஏன் வீட்லயும் அலோவ் பண்ணாங்க?"

"எம்.எல்.ஏ அந்த பசங்களோட ரொம்ப க்ளோஸ், என் தம்பிங்களும் அவரோட நல்ல பழக்கத்துல தான் இருந்துருக்காங்க. எங்கம்மாவோட இல்லீகல் லிங்க்க தெரிஞ்சமாதிரியே காமிச்சுக்காதது அவங்களுக்கு இவனுங்கள வீட்டுக்குள்ள விடுறதுக்கு போதுமான ரீசனா போயிடுச்சு"

"அப்ப உங்கம்மா உங்களையும், உங்க தம்பியையும் பத்தி யோசிக்கவே இல்ல ரைட்?"

"யோசிச்சுருந்தா எங்க அப்பாவோடவே இருந்துருப்பாங்களே மேடம், இல்லீகல் அஃபெருக்கு போயிருக்க மாட்டாங்களே?"

"கரெக்ட் தான். தென்?"

"வைஷ்ணவி அக்காவோட தம்பி விஷ்ணு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனான், அதுல தான் வைஷ்ணவி அக்கா விஷயத்த தெரிஞ்சுட்டு அவனுங்கள கூப்பிட்டு வார்ன் பண்ணா, ஆனா அவனுங்க பயப்படல, வைஷ்ணவி அக்காக்கு ஒரு வீடியோ அனுப்பினானுங்க, எங்கள வெளில சொல்லுவியா நீ இதுக்கு அப்றமுன்னு மிரட்டி அனுப்பினானுங்க" என்றவள் மீண்டும் அழுதாள்.

"என்ன வீடியோ அது?" என்ற மரகதவல்லியின் கேள்விக்கு பிறகு பத்து நொடிகள் அவ்வளவு அமைதியாக கழிந்தது.

"என்ன அவனுங்க எல்லாருமா ரேப் பண்ண வீடியோ" என்றாள் அமைதியாக.

"உங்களுக்கு அதுவரை அது தெரியாதா?"

"ம்ம்கூம் இல்லையே. எப்போ எப்டி எடுத்தானுங்க என்ன பண்ணாணுங்க எதுமே தெரியல எனக்கு. அக்கா எனக்கு அனுப்பி கேட்டப்போ நா மயங்கியே விழுந்துட்டேன். இப்ப வர அது எப்ப எடுத்தாங்கன்னு எனக்கு தெரியல மேடம், ஆனா அது எங்க வீடு, என் வீட்ல வச்சே எனக்கு நடந்துருக்கு, அப்ப எனக்கு தெரியாதுன்னு சொன்னா யாரு மேடம் நம்புவாங்க? எனக்கும் ட்ரக்ஸ் மிக்ஸ் பண்ணாணுங்களா? இல்ல மயக்க மருந்து குடுத்தானுங்களா? தெரியலையே என்ன பண்ணாங்கனே தெரியலையே, என்னைக்கு நடந்ததுன்னும் தெரியல, எனக்கு இன்னொரு சந்தேகம் என்னன்னா எங்கம்மா தான் எனக்கு நிச்சயமா ஹெல்ப் பண்ணிருப்பாங்க, இல்லனா மயக்கம் தெளிஞ்சப்பவாது நா இருந்த நிலைமைய வச்சு கண்டுபுடிச்சுருப்பேன்ல மேடம்? அப்படி கூட எனக்கு எதுமே தெரியாம தான் இருந்துருக்கேன், அப்ப எங்கம்மா தான ஹெல்ப் பண்ணிருக்கணும்? அம்மாவே இப்படி பண்ணிருப்பாங்களா மேடம்? அப்ப நா எங்கம்மா என்ன மேடம் பண்ணணும்?" என தேம்பி தேம்பி அழுதவளை, தேற்ற வழியின்றி விழித்தனர் அனைவரும்.

மரகதவல்லி திரும்பி பாண்டியனை பார்த்தாள், ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்றான் கேள்வியாக, பாவமாக பார்த்தே இருந்தாள் பாவனை மாறாமல். மந்தாகினி என்ற பெயருக்கு சொந்தமானவள் என்பதற்காக அப்படி பார்க்கிறாளோ என்றே நினைத்தான்.

"மேகி ப்ரொசீட்" என்றார் நீதிபதி.

அதில் திரும்பி, "உங்க தம்பி?" என்றாள் மந்தாகினியிடம். அவன் அங்கில்லையா என்ற அர்த்தத்தில் தான் அவள் கேட்டது.

"அவனும் என்ன தொட்ருந்தா இந்நேரம் செத்து தொலைஞ்சுருப்பேன் மேடம். அவனும் அங்க தான் இருந்துருக்கான், அக்கான்னு ஒருத்தி நாசமாகிட்ருக்கான்னு தெரியாதளவுக்கு போதைல இருந்துருக்கான். ஆனாலும் அறுவறுப்பு தாங்க முடியாம கையெல்லாம் அறுத்துட்டேன் இதோ இவங்க ரெண்டு பேரும் தான் என்ன‌ விடாம புடிச்சு வச்சுருக்காங்க, எல்லாத்தையும் செஞ்சுட்டு அவனுங்க சுதந்திரமா சுத்தலாம் நீ ஏன் சாகனும்னு சும்மா மிரட்டுனாங்க, ஆனா விஷ்ணுவும் சாகவும் அது வெறியாச்சு, ஒருத்தனையும் விட நினைக்கல, வர வச்சு என் அறுவறுப்பு போகணும்னு நாந்தான் என் கையால அவனுங்கள கிழிச்செருஞ்சேன். கழிசடைங்க, என்ன மாதிரி எத்தன பேர பண்ணாணுங்களோ, இனியும் எதும் பண்ணுவானுங்களோன்னு நினைக்க நினைக்க ஆத்திரம் அதான் கொன்னேன். எனக்கு இவங்க ரெண்டு பேரும் ஹெல்ப் தான் பண்ணாங்க. எம்.எல்.ஏ க்கு வயித்து வலி மருந்த மாத்தி குடுத்ததும் நாங்க தான், அவர் இருக்காருன்னு தைரியத்துல அதுவரை கொஞ்சம் தைரியமா இருந்த எங்கம்மா அதுக்கு அப்புறம் எங்க அப்பா காலுல விழுந்து கதறுறாங்க, ஏத்துக்க சொல்லி கெஞ்சுறாங்க. பாவம் மேடம் அந்த மனுஷன், ரெண்டு வருஷமா பொண்டாட்டி துரோகம் தெரிஞ்சும் அந்த வீட்டுக்குள்ள என்னன்னு நடமாடிருப்பாரு. இதுல எனக்கு நடந்ததுலாம் தெரிய வேணாம்னு நா அவர்ட்ட சொல்லல. என் அம்மாவ அப்படி ஈஸியா விட எனக்கு மனசில்ல. நீயெல்லாம் என்ன அம்மான்னு கேட்டேன், எல்லாருக்கும் உன் விஷயத்த சொல்லுவேன் சொன்னேன், பயமுறுத்துனேன். நிம்மதியா தூங்கவே விடல, ஏற்கனவே பயத்துல இருந்ததால இதுவும் தெரிஞ்சுருமோ எல்லாரும் என்னென்ன பேசுவாங்களோன்னு பயம் அதிகமாச்சு, தூக்கமில்லாம அலைஞ்சாங்க, வைஷ்ணவி அக்கா ராமனுக்கு என் வீடியோ காமிச்சு காமிச்சு அடி உருச்சுட்டா, அதுல தான் தப்பு பண்ணிட்டான்னு புரிஞ்சு அவனும் எங்களுக்கு ஹெல்ப் பண்ணான், அவனாவே ஏசிபி சாருக்கு ஃபோன் பண்ணி அவேன் தான் எல்லாம் செஞ்சதாவும் ஒத்துக்கிட்டான். வெளிய இருந்துருந்தா அவனையும் கொன்னு தான் போட்ருபேன், தப்புச்சுட்டான். எல்லாத்தையும் போலீஸ்ல சொல்லி சரண்டர் ஆகிடணும்னு தான் எங்கப்பாவ அரஸ்ட் பண்ணுங்கன்னு போய் நின்னேன், ஆனா என் அப்பா, வைஷு அக்கா, ரெண்டு பேரும் மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க, அம்மாவ பத்தி சொல்ல கூடாதுன்னு அப்பா ஒருபக்கம், என் விஷயம் வெளில தெரிய கூடாதுன்னு அக்கா ஒருபக்கம்னு சென்டிமென்ட்டா டார்ச்சர் பண்ணிட்டாங்க, என் முடியை தான் அவனுங்க காலுல கட்டிகட்டி விட்டேன், என்ன மறைக்க நா நினைக்கவே இல்ல, அவனுங்க எங்களுக்கு செஞ்சதுல நா பாதி கூட செய்யலயே?"

"தேட்ஸால் யுவர் ஹானர். பதினைஞ்சு வயசுல செய்ய கூடிய தப்ப இறந்து போன பசங்க செய்யல, கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சாலும் அவனுங்களுக்கு தண்டனை கிடைக்காதுன்னு இவங்களே தண்டனை குடுத்துட்டாங்க போல. இது பழிவாங்குதல்ன்ற குற்ற பிரிவுக்கு கீழ வந்தாலும், தன்னமாதிரி இனி ஒரு பொண்ணுக்கு நடக்க கூடாதுன்ற நல்ல எண்ணமு கருத்துல எடுக்கப்படணும்னுன்றது என்னோட வேண்டுகோள். அந்த பசங்களால இன்னும் எத்தன பேரு பாதிக்க பட்ருக்காங்கன்றதும் விசாரித்து கண்டுபிடித்து அனைத்து இளைஞர்களும் அதிலிருந்து மீட்கபடணும்ன்றதைம் என்னோட கோரிக்கையா வச்சுக்குறேன்" என மரகதவல்லி அவள் வாதத்தை முடித்து கொண்டாள்.

"ஜீவானந்தம் யாரையும் விசாரிக்க வேண்டியது இருக்கா?"

"ஏசிபி சார்ட்ட ரெண்டு மூணு கேள்விகள் கேட்கணும் மை லார்ட்"

"ஏசிபி மகிழ் நன் பாண்டியன்" என அவன் பெயர் அழைக்க படவும் எழுந்து வந்தான், "உங்களோட விசாரணை முறைய சுருக்கமா சொல்லுங்க ஏசிபி சார்"

"ஸ்கூல்ல இருந்து தான் விசாரணைய ஸ்டார்ட் பண்ணோம், விநாயகர் அவராவே வந்து சில தகவல்கள குடுத்துட்டு போனாரு, அதுல அவர் மேல சந்தேகம் ஆச்சு, இன்னும் ராம்குமார், ஒரு வயசானவர்னு இந்த பசங்கள காரணமா வச்சு வந்து சிக்குனவங்க எல்லாரையும் தனி தனியா விசாரிச்சாச்சோம். விநாயகத்த ஃபாலோ பண்ணதுலயே அவங்க ஃபேமிலி மொத்தமும் தெரிய வந்துச்சு அப்ப விநாயகம் ரூட் தான் எங்களுக்கு எல்லாவகையிலும் செட்டாகி வந்தது. அப்றம் அந்த ராமன் அவனாவே வந்து சரண்டர் ஆனான். இந்த மந்தாகினியும் அந்த பொண்ணாவே சீனுக்குள்ள வந்தது, அவங்க அம்மா போன் ஹிஸ்டரியே எல்லாத்துக்கும் சொல்யூஷன் குடுத்துருச்சு. எம்எல்ஏவோட நாலு வருஷமா காண்டக்ட்ல இருந்தாலும் ஃபோன் கான்வரசேஷன் அதிகமானது லாஸ்ட் டூ இயர்ஸ் தான் போல. அது வச்சு விசாரிச்சு ஐ இந்த பொண்ணு ஒத்துகிட்டாங்க. எல்லா பாயிண்ட்டும் ஈசியா கனைக்ட் ஆச்சு"

"ரைட் தேங்க்யூ ஏசிபி சார். ஆனாலும் சீக்கிரம் முடிச்சுருக்க வேண்டியத ஏன் டைம் லேக் பண்ணி கொண்டு வந்தீங்க? அண்ட் லாஸ்ட்டா ராமனோட வைஷ்ணவிய பேசவிட்டு வேடிக்கை பாத்துருக்கீங்க, இவங்க பேசுனதுல தான் அந்த பையன் சூசைடே பண்ணிகிட்டானோன்னு ஒரு சந்தேகமு இருக்கு"

எட்டி அவருக்கு பின் நின்ற மரகதத்தை பார்த்தான், 'இந்த பாய்ண்ட் எல்லாம் எழுதி குடுத்துட்டு நல்ல புள்ள மாதிரி பின்ன போய் நிக்றத பாரு குசும்பி, வீட்டுக்கு வாடி வச்சுக்குறேன்' என நினைத்து கொண்டவன், "விசாரணை கமிஷன் முடிச்சு ரெண்டு நாள் தான் சார் ஆகுது, நீங்க வேணும்னா ரிப்போர்ட் அங்க வாங்கிக்கலாம். கண்டுபிடிக்க டிலே ஆச்சு, அதனால் கேஸ் இவ்வளவு நாளாச்சு, நா என்னமோ வேணும்னே எட்டு பேரும் சாகுற‌வர வெயிட் பண்ணி கேஸ முடிச்ச மாதிரி சொல்றீங்க நீங்க?"

"அப்டி இல்லன்றீங்களா?"

"என்ன நம்ப மாட்டீங்களா நீங்க, இன்னும் சரியா லாயர் ஆகாதவங்க பேச்செல்லாம் கேட்டு நடக்காதீங்க சார்?" என்று வேறு அவன் சொல்லவும், மரகதம் அப்பட்டமாக முறைக்க, ஜீவானந்தமும், நீதிபதியும் சிரித்துக் கொண்டனர். சூழ்நிலை கொஞ்சம் இலகுவானது. தீர்ப்பு இரண்டு நாட்களில் என முடிவானது. எல்லாருமே மந்தாகினிக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா என விவாதம் செய்ய‌ துவங்கினர்.

காவல் துறைக்கு அடுத்த வேலையாக, கேகேவி பள்ளியையும், மொத்த மதுரையிலும் போதை ஊடுறுவலை கண்டுபிடித்து தடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. அதில் தீவிரமாக இறங்கினர் காவல் அதிகாரிகள்.

இரண்டாம் நாட்கள் கழித்து, மந்தாகினிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது, "மந்தாகினியின் பாதிப்பையும் அவளின் மன கவலையையும் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் சிறைக்காவலும், ஐந்து லட்சம் அபராத தொகையும் என தீர்ப்பளிக்கப்பட்டது. துணை சென்ற வைஷ்ணவி மற்றும் விநாயகத்திற்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. போதை தடுப்பு சட்டத்தின் கீழ் அதற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும் பெற்றவர்களுக்கு வேண்டுகோளாக, பிள்ளைகளின் வளர்ப்பில் அதிக கவனம் வைக்க கேட்டு கொள்ளப்படுகிறது" என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கை நடத்திய ஏசிபியும், மரகதமும், ப்ரஸ் மக்கள் முன் நின்றனர், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்லி முடிக்கவும், கடைசியாக, பாண்டியன் பேசினான், "டீனேஜ் பசங்க திடீர்னுலாம் கெட்டவனா மாறிட மாட்டாங்க, அவங்களோட மாற்றத்துக்கு வீட்ல இருக்க பேரண்டஸ், ஸ்கூல்ல இருக்க டீச்சர்ஸ், இது எல்லாத்தையும் விட அவங்க அதிக டைம் ஸ்பெண்ட் பண்ற அவங்களோட ஃப்ரெண்ட்ஸ். இவங்க மூணு பேரும் தான் ஒருத்தன் தப்பான வழில போறதுக்கும் காரணமா இருப்பீங்க, சரியான வழில முன்னேறி போறதுக்கும் காரணமா இருப்பீங்க. சோ மூணு பேருமே அதுல கவனமா இருக்க வேண்டியது அவசியம். ஒரு பையன் பதிமூணு வயசுல இருக்காம்னா, அவன் யார்டலாம் பழகுறான்னு பேரண்ட்ஸ்கு தெரியணும், தப்பு பண்ணாலும் கொஞ்சாம நாலு அடி போட்டு திருத்துங்க. அவன் படிப்பு தவிர வேற எதுலையும் கான்சன்டரேட் பண்றானான்னு பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் ரெண்டு பேரும் கவனிக்கணும். அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன் உங்க பிள்ளைங்கள வாட்ச் பண்ணுங்க. வாழ்க்கை பத்தின பயத்த சொல்லி குடுத்து வழங்க, வாழ்க்கை பத்தின பயம் இருக்கவன் தான் தப்பு பண்ண மாட்டான். செல்ல குடுத்து வளர்க்காம சொல்லி குடுத்து வளருங்க. புரியும்னு நினைக்கிறேன்" என்றவன், ப்ரஸ் மக்களுக்கும் கையசைத்து நடந்துவிட்டான். அவனுக்கு, ஏதோ திருட்டு கேஸில் மாட்டி ஒருவனை பொதுமக்கள் கூடி அடி உரித்து விட்டனர் என அடுத்த கேஸ் வந்துவிட அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருந்தான். மரகதவல்லியும் சொத்து கேஸ் ஒன்றை அடுத்த ஹியரிங்காக கையிலெடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். இதுதானே அவர்கள் வாழ்வின் நிதர்சனம், அதில் ஓடவும் துவங்கினர். வீட்டினுள் இல்லற வாழ்க்கையும், அவளை வம்பிழுப்பதும் அடிவாங்குவதுமாக சந்தோஷமாக கொண்டு சென்றான் பாண்டியன், அவனுக்கு ஏற்ற மரகதம் தானே அவன் மனைவியும்.


(இன்னும் ஒரே யூடி குட்டி எபிலாக் மட்டும் இருக்கு, இன்னைக்கு அதும் தந்துடுவேன்)
 
Last edited:
Status
Not open for further replies.
Top