ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

"நடு சாமத்துல என்னத்த புடுங்கி தள்ளிறலாம்னு வெளில வந்தான் அவேன்? செத்து போயிருவோம்னு பயமே இல்லாம தான வந்துருக்கான் போய் சேரட்டும்" என அந்த இருட்டில் நின்று தாளித்து கொண்டிருந்தான் மகிழ், முதல் நாள் இரவு தேட துவங்கியது, போலீஸ் டிப்பார்ட்மெண்ட் மொத்தமும் களத்தில் இறங்கி மதுரையை சுற்றிவர பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் தேடிபார்த்தாகிற்று, சந்தேகபடும்படி வாகனங்கள் கூட கிடைக்கவில்லை.

இதோ மீண்டும் கடத்திய இடத்திற்கே வந்து நிற்க, கடுப்பில் கத்திக்கொண்டிருக்கிறான். உணவுமில்லை தூக்கமும் இல்லை என்கையில் வரும் எரிச்சலில் தான் அவனும் இருந்தான் மற்ற அனைவரும் கூட இருந்தனர்.

"ஒரு சிசிடிவில கூட சிக்காம எப்டி சார்? ஜாமர்லாம் வச்சு பண்றான்னா, செர்வீஸ்ட் கொலைகாரனா இருப்பானோ?" என்றான் தோய்ந்து அமர்ந்திருந்த சொக்கலிங்கம்.

"எங்க வச்சு கொலை பண்றான்? சிட்டிக்குள்ள சிட்டிக்கு வெளியன்னு எல்லா இடமும் இந்த டைம் செர்ச் பண்ணியாச்சு, எப்படி யார் கண்ணுலயும் படாம கொண்டு போய் கொண்டு வர முடியுது கில்லரால? எங்கையோ ஏதோ மிஸ்ஸாகுது" என பேசிக்கொண்டே தீவிரமாக யோசித்து நின்றான் மகிழ்.

அந்நேரம் கமிஷனரிடமிருந்து அழைப்பு வர, "பிடிக்க முடிஞ்சதா பாண்டியன்?" என்றார் அவர்.

"பிடிச்சுருந்தா நானே கால் பண்ணிருக்க மாட்டேனா சார்?" என்றான் இவன் கடுப்புடன்.

அவருக்கும் தெரியுமே, அவருமே பகலில் மொத்த மதுரையையும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார், ஏற்கனவே கைதாகி சிறையிலிருக்கும் கைதிகளிடம்‌ கூட கொலை செய்ய ஏதுவாக அவர்கள் தேர்ந்தெடுக்குமிடங்கள் என விசாரித்து அதையும் சல்லடை போட்டாகிற்று, சிறு துரும்பும் சிக்கவில்லையே, பின் அவனிடம் சாடி என்ன செய்ய என நினைத்தவர், "என்ன செய்யலாம் பாண்டியன்?" என கேட்க

"எனக்கென்னவோ கில்லர் நம்ம டிப்பார்ட்மெண்ட் சேர்ந்தவனா இருப்பானோன்னு தோணுது சார்" என பாண்டியன் சொல்ல,

"ஏன்? யாருன்னு ஐடியா இருக்கா?"

"நம்ம எவ்வளவு தீவிரமா இறங்கி தேடுவோம்னு தெரிஞ்சும், இந்த டைம் ரிஸ்க் எடுத்துருக்கான், கேப்பே இல்லாம அடுத்தடுத்து செய்றான், அப்ப நாம அவன‌ பிடிக்குறதுக்குள்ள எல்லா கொலையும் பண்ணிடனும்ன்ற அவசரம் அவன்ட்ட இருக்கு. இன்னும் மூணு பேரையும் நாம பிடிக்குறதுக்குள்ள கொண்ணுடனும்னு நினைக்கிறான். அதும் நாம எப்டிலாம் தேடுவோம் எங்கெல்லாம் தேடுவோம்னு எல்லாம் தெரிஞ்சுருக்கு, ஈசியா மூவ் பண்ணி போயிட்ருக்கான் சின்ன தடையம் கூட இல்லாம. சர்வீஸ்ட் கொலைகாரனா இருந்தா கூட எதாவது மிஸ் பண்ணுவான், இவன் அதுலயும் ரொம்ப கவனமா இருக்கான், சோ நம்ம டிப்பார்ட்மெண்ட் சைடா இருக்க வாய்ப்பு அதிகம்" அவன் யோசனை முழுவதும் இப்போது அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது என அனைவருக்கும் புரிந்தது.

"சரி எப்படின்னு அதையும் யோசிக்கலாம். நீங்க ஒரு டூ அவர்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க பாண்டியன்" என்றார் அவராகவே.

"எப்டியும் இந்நேரம் அந்த பையன கொன்னுருப்பான், திரும்ப கொண்டு பப்ளிக்ல தான போடணும், அப்ப நம்மட்ட சிக்கணும்ல? ஹேக் பண்றான் சோ இனி சிசிடிவி நம்பி யூஸ் இல்ல, நம்ம தான் நின்னாகணும்"

"ஆல்மோஸ்ட் எல்லாரும் ஃபீல்ட்ல தான் இருக்கோம். ஷிஃப்ட் மாத்தாம இருக்குற எல்லாரையும் மாத்திவிட சொல்லுங்க, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வாங்க, அப்பதான் கில்லர் கண் முன்னால ஓடுனாலும் துரத்தி பிடிக்க முடியும்" என்கவும், அவனுக்கும் அந்த ஓய்வு தேவையாக இருக்க, சரி என கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வரும் வரையும் கூட அதே யோசனைதான், காணாமல் போன மாணவன் காதலியின் எண்ணிலிருந்து அழைத்து தான் அவனை வெளியே வரவழைத்திருக்கிறான் கில்லர். அவன் காதிலியின் மொபைல் தொலைந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது என்கிறாள் அந்த பெண், பத்து நாட்களுக்கு முன் அதெப்படி தொலைந்தது என்றால் தெரியவில்லை அவளுக்கு. தொலைந்த போனை பற்றி அவனுக்கும் தெரியாதாம், ஏனெனில் தொடர் கொலையால் பயந்திருந்தவன் பள்ளியில் வைத்தும் இவளிடம் சரிவர பேசவில்லையாம், அவனும் அவன் நண்பர்களுமாகவே ஏதோ வேலையாக சுற்றி திரிந்தனராம். இதெல்லாம் அந்த பெண்ணை விசாரித்ததில் தெரியவந்தவை. அவ்வளவு பயந்து இருந்தவன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மட்டும் ஏன் வெளியே வர வேண்டும்? ஏதோ எங்கயோ மிஸ் பண்ற மகிழ்? அந்த நீள முடி கண்டிப்பா கொலையான இடத்துக்கு ஒரு பெண் வந்து போறது கன்பார்ம் ஆகுது. ஆனா அந்த பொண்ணு தனியா செய்யல. கொலையாளி ஒரு பெண்ணா இருக்கலாம், இல்ல கொலையாளிக்கு ஒரு பெண் சப்போர்ட்டா கூட இருக்கலாம், கண்டுபிடிக்கனும். மத்த மூணு பேர முடிக்குற வர இன்னும் கவனமா‌தான் இருப்பாங்க, யோசி‌யோசி என்ன பண்ணலாம்' அவன் அவனுக்குள் பேசிக் கொண்டே வர, வீடு வந்திருந்தது.

"குட் நைட் சார்" என்ற பரத்திற்கும், சொக்கலிங்கத்திற்கும் கையசைத்து சென்றுவிட்டான்.

வீட்டினுள்ளே நுழைந்ததுமே ஒரு புதுவித நறுமனம் குப்பென்றடித்தது. சட்டென்று சுதாரித்து வீட்டை சுற்றி நோட்டமிட்டான். எல்லா அறையிலும் விளக்கை ஒளிரவிட்டு சுற்றிவர தேடிவந்தவனுக்கு, சாப்பாட்டு மேசையை கடக்கையில் தான் ஒரு லஞ்ச் பேக் அதன்மேலிருப்பது அவன் கண்ணில் பட்டது. புருவம் சுருக்கி யோசனையாக பார்த்தவன், அதை திறக்குமுன்பே கையிலெடுத்து தட்டி அசைத்து பார்த்தான். நிச்சயம் உள்ளே சில்வர் கேரியர் தான் என வரிவடிவமாக புரிந்தது.

மீண்டும் மேசையில் வைத்துவிட்டு, லஞ்ச் பேக்கை திறந்து கேரியரை வெளியே எடுத்து திறக்க, மேலடுக்கில் இட்லியும், இரண்டாம் அடுக்கில் சாம்பாரும், மூன்றாம் அடுக்கில் சட்னியும் இருந்தது. கூடவே ஒரு மில்க் ஸ்வீட்டும். தனி தனியாக திறந்து வைத்துவிட்டு, இடுப்பில் கைவைத்து யோசித்தவனுக்கு, 'மரகதம் வந்திருக்க வாய்ப்பில்லையே!' என்ற எண்ணம் மட்டுமே.

சாவி அவனிடம் ஒன்று உண்டு மற்றொன்று அங்கு அவன் வீட்டில் தான் கேட்பாரின்றி எங்காவது கிடக்கும். அவன் அம்மா நிச்சயம் அவனை கேட்காமல் இதை செய்யமாட்டார், வேறு யாரும் அவனின் அனுமதி இன்றி வீட்டினுள் நுழைய வாய்ப்பில்லை, இதையெல்லாம் யோசித்தே சென்று குளித்து வெளி வந்தவன், தலையை துவட்டிக் கொண்டே அவளுக்கு தான் அழைத்தான்.

'அவள தவிர வேற யாருக்கு இந்த தைரியம் வரும். ப்ராடு இப்ப பவ்யமா பேசட்டும் வச்சுக்குறேன்' என நினைத்துக் கொண்டிருக்க, "ஹலோ" என்றாள் பாதி தூக்கத்தில் மரகதவல்லி,

"மரகதம்" என்றான் சத்தமாக, பதறி எழுந்தமர்ந்தாள் அவன் காதுக்குள் கத்தியதில்,

"என்ன என்னாச்சு?" என வேக மூச்சோடு கேட்க,

"தூங்கிட்டியா மரகதம்?" என்று வேறு கேட்க,

பாதி தூக்கம், அறையின் இருட்டு என பேந்த பேந்த விழித்தவள் அவன் கேள்வியில் தான் சுயம் பெற்றாள், "எதுக்கு கத்துனீங்க?" என இவளும் திட்டி கேட்க,

"பார்றா மரகதவல்லிக்கு வாய்ஸ் ரைஸ்லாம் ஆகுது" என்றதும், மொபைலை திருப்பி மணியை பார்த்தாள் மணி இரண்டு ஐந்து எ.எம் என்றிருந்தது அதில். 'சரியான ராப்பாடி. ஃபோன் பண்ணிருக்க நேரத்த பாரு' என திட்டியவள், "நீங்க ஏன் திடீர்னு கத்துனீங்க?" என்றாள் இப்போது மெதுவாக.

"நா பேசுறதே கேக்காம‌ பதில் சொல்லிட்டு தூங்கிடுவ நீ. தெளிய வைக்க வேணாமா அதான் கத்தி எழுப்பினேன்"

"ரொம்ப சந்தோஷம். தெளிவா முழிச்சுட்டேன். இப்ப என்ன சாப்டீங்களான்னு கேக்கணுமா?"

"என்ன போனா போகுதுன்னு பேசுற? நீ ஒன்னும் கேக்கவே வேணாம் போடி. ரொம்ப தான் பண்றா" என்றவன் வைத்துவிட‌.

'ஏசிபி' என பல்லை கடித்து விட்டு மீண்டும் அவளே அழைத்தாள், "என்னடி?" என்றான் கடுப்புடன்.

"சாப்டீங்களா?"

"மேகி வந்தா தான?"

"என்னது?"

"மேகி வெந்தா தானடி சாப்ட முடியும்"

'டபுள் மீனிங் மன்னன்' என முனங்கியவள், "நாந்தான் இட்லி வச்சுட்டு வந்தேனே, நல்லா இல்லையா? ஹாட் பாக்ஸ் டைப்‌தான் கெட்டு போக வாய்ப்பில்லையே?" என அவள் பேசிக் கொண்டிருக்க,

"வீட்டுக்குள்ள எப்டி வந்த நீ?" என்றான் இப்போது போலீஸாக,

'அச்சோ!' என நாக்கை கடித்து கொண்டவள், "ஹேர்பின் வச்சு"

"அடி பிச்சுபுடுவேன்டி"

"சும்மா தள்ளுனேன் திறந்துட்டு"

"பொய் சொன்னா நேர்ல பாக்றப்ப வாய்லயே போடுவேன்டி"

"உங்கம்மா தான் சாவிய குடுத்து என்னைய போன்னு‌ அனுப்பிவிட்டாங்க"

"கல்யாணத்துக்கு முன்ன அப்டிலாம் எங்கம்மா உன்ன இந்த வீட்டுக்கு அனுப்புற ஆள் இல்லையே" என்றவன் இட்லியை எடுத்து வைத்து உண்ண‌ துவங்கினான்.

"புகுந்த வீடுன்னு அத்த வீடுதான் கணக்காம். போலீஸ் குவாட்ரஸ் கணக்கில்லையாம்"

"மரகதம் மேட்டர தெளிவா சொல்லுடி" என மிரட்ட,

'இதுக்குத்தான் வேணாம்னு சொன்னேன் கேட்டாங்களா இப்ப‌ என் வாய்ல இருந்தே விஷயத்த கறந்துட்டு என்னையே போட்டு வறுத்தெடுப்பாரு இந்த ஏசிபி. நல்ல வந்து சிக்கிருக்கேன்' என அவள் புலம்ப,

"மரகதம்" என அழுத்தம் கொடுத்தான் அவன் அழைப்பில்,

"ம்ச் உங்கம்மா, ஷீலா, விசாலாட்சி மூணு பேரும் சாயந்தரம் வீட்டுக்கு வந்திருந்தாங்க, என் ஜாதகத்த குடுத்துட்டு அப்படியே பத்திரிகை டிசைனும் கொண்டு வந்திருந்தாங்க, அங்க அத்த வீடு இருக்க தெருல அம்மன் கோவில்ல திருவிழாவாமே அதுக்கும் அழைச்சுட்டு போலாம்னு வந்தாங்களாம்"

"ஓஹோ! சரி அப்றம்?"

"நீங்க சாப்பிடாம வேலை வேலைன்னு அலையறீங்கன்னு ஒரே புலம்பல், நைட்டுக்கு சாப்பாடு செஞ்சு கொண்டு குடுத்துட்டு வரீயான்னு கேட்டாங்க, நா சரின்னு கொண்டு‌ வந்து வச்சுட்டு வந்தேன்"

"இப்பவும் வீட்டுக்குள்ள எப்டி வந்தன்னு சொல்லல"

"சாவிய கையோட கொண்டு‌ வந்துட்டு தான டிஃபனே செய்ய சொன்னாங்க"

"என் குவாட்டரஸ் சாவிய அவங்க எதுக்கு கைல வச்சுட்டு சுத்தணும்? அப்ப வீட்ல இருந்தே உன்ன சாப்பாடு கொண்டு குடுக்க வைக்குற ப்ளானோட தான வந்துருக்காங்க?"

"ஆமா‌ ஆமா"

"ஏன் அப்படி ப்ளான் பண்ணணும்? நீ கல்யாணதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு எதும் சொன்னியா?"

"ஏங்க நா ஏன் அப்டி சொல்லணும். பேலீஸ்காரர்னு நிரூபிக்றீங்க. எத்தன க்ராஸ் கொஸ்டீன்ஸ்"

"சரி வை நா அம்மாட்ட கேட்டுட்டு வரேன். உன்ட்ட கொஸ்டீன் பண்ணல"

"அதான் எல்லாம் சொல்லிட்டேனேங்க"

"இல்ல எனக்கு அவங்க ஏன்‌ அந்த ப்ளானோட‌ வந்தாங்கன்னு தெரியணும்" என்றான் விடாமல்.

அவளுக்கு இதற்கே மூச்சு வாங்கியது. விடுறாரான்னு பாரு, 'ரெண்டு இட்லிதான எடுத்து வச்சமா சாப்டமா படுத்து தூங்கினமான்னு இல்லாம, இந்த ஏசிபி' என நொந்து கொண்டு, "அது நீங்களும் நானும் லவ் பண்ணணுமாம் போதுமா" என்றாள் பட்டென்று.

"லவ்வா?" என்றவனுக்கு குறும்பு சிரிப்பு‌தான் முகமெங்கும் வியாபித்திருந்தது. அதுவரை வேலையிலிருந்த அழுத்தமெல்லாம் பறந்தோடிச்‌ சென்றிருந்தது.

"ஆமா" என்றாள் அந்தபக்கமிருந்தவள் பாவம் போல்.

"கல்யாணமே பண்ணிக்க போறோமே பின்ன லவ் பண்ண மாட்டோமாமா?"

"அது ஏதோ ஜோசியர் சொன்னாராம். காதலிச்சவங்களோட தான் இந்த ஜாதகங்களுக்கு கல்யாணம் நடக்கும் இல்லனா நடக்காதுன்னு. அதான் நம்மள லவ் பண்ண‌ வைக்க போறாங்களாம்"

"யாரெல்லாம்?" என்றவனுக்குள் மீண்டும் அப்படியொரு சிரிப்பு.

"எங்கம்மா, உங்கம்மா, உங்க தம்பி பொண்டாட்டிங்க எல்லாம் மெயின் மத்தவங்களாம் ஹெல்ப்புக்கு"

"ஓஹோ! ஆனா பாரு மரகதம், நா லவ் பண்ண பொண்ணோட தான் கல்யாணம்னா எனக்கு மந்தாகினியோட‌ தான நடக்கணும்? மரகதவல்லியோட எப்டி நடக்கும்?" என்றுவிட, அவளுக்கு தான் கண்கள் கலங்கிவிட்டது. அவன் அப்படி தான் கூறுவான் என முன்பே யோசித்தும் இருந்தாள், ஆனாலும் அவன் வாயால் கேட்கும் போது தான் வலிக்கிறது.

"மந்தாகினிய சொன்னா உனக்கு பிடிக்காதுல்ல சாரி" என்று வேறு சொல்லவும், வலி மறைந்து கோவம் வந்தது.

"அவங்கள பத்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டு அவங்கள தான் அதிகமா பேசுறீங்க"

"ஆமா‌ விடு எதுக்கு ஏமாத்திட்டு போனவள‌ பத்தி பேசிட்டு, நாம பச்ச சேரி மேகிய பத்தி பேசலாம் வா"

"சாப்டீங்களா?"

"இல்லையே இன்னும் பெர்மிஷன் கிடைக்கலையே. உனக்கு அதுக்குள்ள என்ன அவசரம், பொறுமைக்கு தான் ருசி அதிகம் மரகதம்" என்க, முதலில் புரியாமல் விழித்தவள், பின்னரே தன்னை சொல்கிறான் என புரிந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

அவனை அடிக்க முடியாததிற்கெல்லாம் சேர்த்து அவள் தலை தான் வீங்கி கொண்டிருக்கிறது.

"இப்படி பதில் சொல்லத்தான் என்ன சாப்டீங்களான்னு அடிக்கடி கேக்க சொன்னீங்களா?" என்றாள்,

"வக்கீல் மூளை இவ்வளவு ஸ்லோவா? நா உன்ன என்னமோன்னு நினைச்சேனே மரகதம்" என்றவன் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வந்து அறைக்குள்ளேயே நடை பயின்றான்.

"நிஜமா கேக்கணுமான்னு கேட்டதுக்கும் ஆமான்னு சொன்னீங்க"

"நீதான் கேக்கணும் உன்ட்ட மட்டுந்தான் கேக்க முடியும்னு சொன்னனே மரகதம்"

"இட்லி நல்லார்ந்ததா?" இவள் தான் பேச்சை மாற்ற வேண்டியிருந்தது.

"கொண்டு வந்தவ இருந்து பரிமாறியிருந்தா நல்லார்ந்துருக்கும்"

"ரெண்டு மணி‌ வரைக்கும் இருந்தா?"

"எஸ். ஒரு ரெண்டு மணி வர வெய்ட் பண்ண மாட்டனா எப்டி லைஃப் லாங் எனக்காக வெயிட் பண்ணுவ? அண்ட் ஃபோன் பண்ணிருக்கலாமே?"

"நா மார்னிங் பண்ணேன். ஃப்ரீ ஆகிருந்தா நீங்களே என்ன வெறுப்பேத்தவே மறக்காம கூப்பிட்ருப்பீங்கன்னு தெரியும். நீங்க கூப்பிடல சோ பிஸின்னு தான் வச்சுட்டு வந்துட்டேன்"

"வெரி குட் இப்படி தான் அன்டர்ஸ்டாண்டிங் வைஃபா இருக்கணும் மரகதம். பட் வெயிட்டும் பண்ணிருந்தா இன்னும் ஹேப்பியா ஆகிருப்பேன்" என்றான்.

'வெறுப்பேத்துவீங்கன்னு சொல்றேன் பேச்சுக்குனாலும் இல்லன்னு வருதா பாரு. ஏசிபிபிபி' என மனதிற்குள் மட்டுமே பல்லை கடித்தாள்.

"சரி தூங்கலாம். இப்டிலாம் அன்டைம்ல எப்பவும் பேசணும்னு எக்ஸ்பெக்ட் பண்ண கூடாது ஓ.கேவா"

"சரிங்க" என்றுவிட்டாள் உடனே, அவளுக்கு தான் அவனை இப்போது நன்கு பழகிவிட்டதே, அவனும் அவளின் உடனடி ஒப்புதலில் குறும்பு சிரிப்புடனே அழைப்பை துண்டித்தான்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 16

மறுநாள் காலை ஒன்பது மணி வரை அவனுக்கு எந்த அழைப்புகளும் வராததால் நன்கு உறங்கி எழுந்தான், எழுந்ததும் அவளுக்கு அழைத்து வம்பளந்ததில் அன்று அவள் அவன் வீடிருக்கும் தெருவிலிருக்கும் ராக்காயி அம்மன் கோவில் செல்கிறாள் என தெரிந்து கொண்டான். அவன் அம்மா அவனுக்காகவே எதாவது பார்த்து செய்வார் என சிரித்துக் கொண்டே அவனும் வேலைக்கு கிளம்பிச் சென்றான்.

"ஏட்டி அவனுங்க ரெண்டு பேரும் எப்ப வரேன்னு சொன்னானுங்க? அர நாளு வீட்டுல இருக்க மாட்டானுவ, பெரிய வேலைகாரனுவதேன்" என்றார் சத்தமாக வாசுகி. கோவிலில் அம்மன் பாடல்கள் தெருவையே அலறவிட்டுக் கொண்டிருந்தது.

"உங்க மகேன் கேட்டதும் பதில் சொல்லிட்டு தான் மறுவேலை" என்றாள் அவளும் சத்தமாக.

"பிள்ளைகளுக்கும் பூவ சுத்திவிட்டுட்டு நீங்களும் ஆளுக்கு தலைக்கு தேவைக்கு வச்சுட்டு, மூத்த மருமவளுக்கு கொஞ்சம் எடுத்து வைங்க, அவ வச்சுட்டு வந்தாலும், நம்ம வீட்ல இருந்து கொஞ்சம் கொண்டு போனதுல வச்சுவிடுங்கட்டி, அந்த புள்ள அப்டியே கிளம்பிடுவாளாம், அதனால அவள கொண்டு விட மூத்தவன எப்படியாவது வர‌ வைக்கணும்ட்டி. மத்தவுக மட்டுந்தேன் இங்க வந்து மாப்ள வீடு பாத்துட்டு மதியத்துக்கு கைய நனைச்சுட்டு கிளம்புவாக. நாம அதுக்கும் வந்து ஆகுற வேலைய பாக்கணும் நெனவுருக்குதானே, சும்மா மசமசன்னு நிக்காம வெரசா வேலைய பாருங்க. மூத்தவன வரவைக்கவும் யோசன சொல்லுங்கட்டி" என கத்திக்கொண்டே தான் இருந்தார் அவர்.

"அத்தே எல்லாம் எடுத்து வச்சாச்சு வாங்க போவோம், அவங்க வாரேன்னு சொன்னாலும் சொன்னாங்க நேத்துல இருந்து ஒரே சலம்பல் பண்ணிட்டு இருக்கீக. டென்ஷனாகாம இருங்க நாங்க பாத்துகிடுதோம் எல்லாத்தையும்" என்றாள் ஷீலா.

"எவடி இவ, நா சும்மா இருந்தா நீங்களும் சும்மா உக்காந்துக்கலாம்னு நெனப்போ? நா குச்சிய வச்சி குத்தாம நகந்துருவீங்களா அக்காளும் தங்கச்சியும்"

"எத்தே திட்டிகிட்டே நடங்க கிளம்புவோம். இந்த சத்தத்துல பதிலுக்கு பதிலும் சொல்ல முடியல மூச்சு வாங்குது" என்ற விசாலாட்சி எல்லா பைகளையும் எடுத்து வெளியே வைக்க, ஷீலாவும் கையில் பைகளுடன் வெளியேற, வாசுகி இரண்டு பேத்திகளையும் ஆளுக்கொரு கையில் பிடித்துக் கொண்டு வந்தார். வேலைக்கு வரும் பெண்ணை வீட்டில் உக்கார வைத்து விட்டு இவர்கள் கிளம்பினர். நடந்தே கோவில் வந்து சேர்ந்தனர்.

பரஞ்சோதி கோவிலில் தான் இருந்தார், "முன்ன போய் பொங்க வைக்க கல்ல பிடிச்சு வைங்கன்னு என்னைய அனுப்பிட்டு ஆடி அசஞ்சு வாரீக பொம்பளைக மூணு பேரும். வார பொம்பளைங்கட்டலாம் பதில் சொல்லி முடியலட்டி" என அவர் கடுப்புடன் மல்லுக்கு வர,

"மூணு கல்ல பிடிச்சு வைக்க இம்புட்டு பேச்சா? வழிய விடுங்க, பேத்திக மேல‌ கவனமா இருங்க, பராக்க பாத்துட்டு நிக்காதீக" என்றவர், மூன்று பக்க கல்லில் சந்தனம் குங்குமம் வைத்து பானையை ஏற்ற, ஷீலா குடத்திலிருந்த தண்ணீரை பிடித்து வந்து ஊற்றினாள்.

"அவுகளுக்கு ஒரு ஃபோன போடுட்டி ஷீலா, சீக்கிரம் வந்தானாக்க, மூத்தவளையும் ஒரு கைபிடி அருசி போட வச்சுபோடுவோம்" என்க,

"இந்த சத்தத்துல போனு போட்டாலும் கேக்காதுத்தே"

"நீ போட்டு சொல்லிட்டு வை. உனக்குதேன் கேக்காது அங்குட்டு உள்ளவுகளுக்கு கேக்கும்" என்றார்,

"ரொம்பத்தேன் பொடு பொடுன்னு நிக்கீக இன்னைக்கு"

"ஆமா கொஞ்சம் படபடன்னுதேன் இருக்கு வாரவுகளுக்கு ஒரு குறையும் இருந்துட கூடாதுத்தா. பொண்ண‌ குடுக்குறவுக மனசு நெறைஞ்சுதேன் போணும்"

"அதையே நினைக்காதீக. நம்ம வீட்ல என்ன குறை காண முடியும் அவுகளால அதெல்லாம் சிறப்பா கவனிச்சுபுடுவோம், விசனபடாம இருங்க"

"சரித்தா நீ போன போடு. பெரியவன எப்டி வர வைக்க?"

"அத உங்க மூத்த மருமகள்ட்ட விட்ருவோமா? அவுகதேன் நேக்கா வரவச்சுருதாகளே"

"ஆமா அப்ப அவ வரவும் அவளயே கூப்புட‌ சொல்லுவோம்" இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கு வந்து சேர்ந்தனர் மரகதவல்லி குடும்பத்தினர், அவள் அம்மா அப்பாவோடு, இன்னும் நாலைந்து பெண்களும் ஆண்களும் வந்திருந்தனர். அரசு தான் அவர்களை தெரு முனையில் பார்த்துவிட்டு அவர்கள் வந்த காரை நிறுத்த இடமும் ஒதுக்கி கொடுத்துவிட்டு இங்கு அழைத்து வந்திருந்தான்.

"வாங்க வாங்க" என வாசுகி வேகமாக சென்று வரவேற்றார்,

"இது என் தங்கச்சி, இது என் அக்கா, அது என் நாத்தனாரு, இவுங்க ரெண்டு பேரும் என் கொழுந்தனாருங்க, அது அவுக பொண்ணு, இது என் நாத்தனார் புருஷனும், மகளும்" என உடன் வந்தவர்களை அகிலா அறிமுகம் செய்ய,

"எல்லாரும் வாங்க, இங்க சத்தத்துல ஒன்னும் நாம விலாவரியா பேச‌முடியாது, பொங்க வச்சுட்டு வீட்டுக்கு போயி பேசுவோம், ராக்காயி ஆத்தால சுத்தி வாங்க, கேட்டதெல்லாம் கொடுப்பா, ரொம்ப சக்தி வாய்ந்த ஆத்தா" அவர் சொல்லவும் கோவிலையும் கட தெருவையும் சுற்றி வர மற்றவர்கள் செல்ல, அகிலா மட்டும் இவர்களுடன் நின்றார்.

"மருமவள எங்க?"

"அவ அவளோட ஸ்கூட்டில வாரா மதினி"

"நாந்தேன் சொன்னேனே என் மவன கொண்டு விட‌ சொல்லுவோம்னு"

"சொன்னேன் கேக்க மாட்டேனுட்டா" என்றார் அவர் சடவாக.

"சரித்தேன். இங்கன வரட்டும் நா சொல்லுதேன், பின்ன எப்டிதேன் ரெண்டு பேத்தையும் பாத்து பழக வைக்கங்கேன்? அருசி கழுவி போடுங்குள்ள வந்துருவாளான்னு இருக்கு" என வழியை கூட்டத்தோடு எட்டிப்‌ பார்த்தார்.

ஷீலா தண்ணீர் கொதித்து பொங்கி வர வேண்டி விறகை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, மரகதம் வந்து நின்றாள், உடன் அவரின் மூத்த மகனும்.

"என் மருமக சமத்து பாத்தீகளாட்டி?" என்றார் முகமெங்கும் சிரிப்புடன். அந்த பாட்டு சத்தத்தில் பேச்செதுவும் இல்லாமல் பொங்கலை சிறப்பாக வைத்திறக்கி ராக்காயி அம்மனை வழிபட்டு கிளம்பினர்.

மரகதவல்லி சாமியை வேண்டி நிற்க, அவளை பார்ப்பதே அவனுக்கு கடமையாக இருந்தது. அவனை அப்படி ஈர்த்துக் கொண்டிருந்தாள் அவனின் மரகதம்.

எல்லாம் முடித்து வீட்டின் அருகில் வரவும், "ம்மா பாதி வேலைல இருந்தவன வந்தாலே வாங்கன்னு இழுத்துட்டு வந்துட்டா, நீங்க இங்க எல்லாரையும் பாருங்க நா அப்டியே கிளம்புறேன்" என்றான்,

"நா சொல்லும்போது அம்புட்டு சிலுப்பிட்டு போன, அப்றம் எதுக்குடி அந்த மனுஷன நச்சு பண்ணி இழுத்துட்டு வந்த?" என்றார் அகிலா மரகதவல்லியிடம்.

மரகதம் அவன் சொன்னதால் கடுப்பிலிருந்தவள், "மாப்ள வீட்ட தான பாக்க வந்த நல்லா பாத்துட்டு வா" என முறைத்தவாறே சொல்லி முன்னே சென்று, வாசுகி, ஷீலா, விசாலாட்சியிடம் சொல்லி கொண்டு கிளம்ப, அவன் பொதுவான ஒரு தலையசைப்பில் கிளம்பிவிட்டான்.

மீண்டும் வண்டியில் செல்கையில், "மரகதம்" என அவனே ஆரம்பித்தான்.

"ம்ம்"

"சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட?"

"உங்கள சமாளிக்க தனி தைரியத்தை குடும்மான்னு கேட்டுகிட்டேன்"

"உன்ன கஷ்டபடுத்தாம எல்லாத்தையும் சமத்தா நடத்திக்க வேண்டியது என் பொறுப்புடி மரகதம்"

"இதோ இந்த வாய சமாளிக்க தான் கஷ்டம்"

"வக்கீல் நீயே இப்டி வாய்தா வாங்கலாமா?"

"உங்கட்ட எப்பேர்ப்பட்ட வக்கீலும் பேசி ஜெயிக்க கஷ்டம்ங்க"

"அப்டியா சொல்ற? அப்ப என் தொழில மாத்திடட்டுமா? வருமானம் வர்ற தொழிலா பாப்போம். என்ன சொல்ற?" அவளிடம் அவனுக்கு அப்படி தான் பேச வருகிறது.

"தெய்வமே நீங்க அங்கேயே இருங்க நாங்கலாம் கொஞ்சம் பொழைச்சுக்குறோம்" என்றுவிட்டாள் அவளும்.

"நக்கல்டி உனக்கு" என்றதும் வாயை மூடிக்கொண்டாள். நீதிமன்றத்திற்குள் அவளை இறுக்கி விடுகையில் விறுவிறுவென உள்ளே வந்த வைஷ்ணவி இவளை கவனிக்காமல் கடந்து செல்ல,

"வைஷு" என அழைத்து அவளை நிறுத்திவிட்டு, "பைங்க" என இவனுக்கு கையசைத்து கிளம்ப,

"இந்த கன்னத்துல முத்தங்குடுத்துலாம் பை சொல்ல பழகலையா நீ?" என்றான் இவன்.

"ம்ம் என்னங்க" என அவள் பார்க்க,

"கல்யாணத்துக்கு அப்புறம் பழகிக்கோ மரகதம்" என்றவன் கூலர்ஸை மாட்டிக்கொண்டு வண்டியை திருப்ப, இவனையே பார்த்து நின்ற வைஷ்ணவியையும் கூலர்ஸ் வழி பார்த்து விட்டே கடந்து சென்றான்.

"இவர வச்சுட்டு முடியல ஆண்டவா" என திரும்ப,

"என்னடி பிக்கப் டிராபப் அளவுக்கு வந்தாச்சு போல"

"ஆமா இனி இப்டிதானே அதான் ப்ராக்டீஸ் பண்ணிட்ருக்கோம்"

"ரொமான்டிக்கா எதாவது பேசுவாரா மேகி? எப்பவும் விறைப்பாவே தெரியுறாரு. ரொம்ப ஸ்டிரிக்டோ?" என பேசிக்கொண்டே, வளாகத்தினுள் நடக்க,

'என்ன எப்போ முழுசா ஸ்வாகா பண்ணலாம்னு கவுண்ட் பண்ணிட்ருக்காருன்னு சொன்னா நம்புவாளா? ம்ம்கூம் நம்ம சொல்லி ஒரு பக்கியும் நம்பாது, விடு மேகி' என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு, "ஃபர்ஸ்ட் நைட்டெல்லாம் முடிஞ்சப்றம் தான்டி தெரியும் ஏசிபி ரொமான்ஸ் பத்தி" என்க,

"அடிப்பாவி அவ்வளவு அவசரம்" என இவள் முதுகில் தட்டிவிட்டு அவள் வெட்கப்பட்டு செல்ல,

"அம்புட்டும் நம்மளுக்குதான் அவசரங்குதுக, நாம அப்படிதான் நிஜமாவே பேசுதமோ?" அவளுக்கே அவள் மீது சந்தேகம் வர வைத்திருந்தனர். அதன்பின் மரகதமும் அவள் கள்வனும் அவரவர் வேலையில் பரபரப்பாகினர்.

அன்றிரவு பதினொரு மணி வரை, எம்.எல்.ஏ மருகனை பத்திய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் கமிஷனர் அலுவலகமே கதி என்றிருந்தனர். காவல்துறை அதிகாரிகள் எல்லாம் மீண்டும் சல்லடையாக தேடி சுற்றிக்கொண்டிருக்க, மணி பனிரெண்டை நெருங்கி கொண்டிருக்கையில் மகிழனின் கீழ் வரும் ஒரு காவல் நிலைய வாசலை நோக்கி ஒரு சூட்கேஸ் தானாக நகர்ந்து வந்தது. அதை காவலுக்கு நின்றவர் பார்த்துவிட்டு அலறியதில், உள்ளே இருந்த ஒன்றிரண்டு பேரும் வெளியே ஓடி வந்தனர், அக்கம்பக்கத்தினரும் எட்டி பார்த்தனர், அனைவரின் பார்வையிலும் அது நகர்ந்து வருவது தெரிந்தது. காவல் நிலைய வாசல் வந்ததுமே, "டெஸ்டினேஷன் ரீச்டு" என்ற செய்தியோடு நின்று கொண்டது.

அது தானாக வந்ததும், நின்றதும் காவல் அதிகாரிகள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் பயமும் பதட்டமும் என அது ஒரு அமானுஷ்ய கதையாக வெளிப்பட்டது.

அந்த சூட்கேஸை யாரும் நெருங்கவே பயந்தனர், ஏசிபி மகிழ், கமிஷ்னர் என அனைவருக்கும் விஷயம் பகிரப்பட்டது, பாம் ஸ்கோடு வரை வந்து பார்த்தபின்னரே உள்ளே பிணமாக இருந்த எம்.எல்.ஏ மருமகனை வெளியே எடுத்தனர். இது ஏதோ அமானுஷ்யத்தின் வேலை, அந்த பிள்ளைகளுக்கு ஆகாத ஒருவன் ஆவியாக வந்து பழிவாங்குவதாக விஷயம் பரவியது. சைகோ கில்லர் என்பது ஆவியின் தொடர் கொலை என்றளவில் தலைப்பானது, "ஆட்டோமேட்டிக் மூவபிள் சூட்கேஸ் பத்தி வேற இனி கிளாஸ் எடுக்கணுமா?" என சொக்கலிங்கத்திடம் கேட்டு முன்னாலிருந்த மேசையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான் நம்ம ஏசிபி.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 17

தானாக வந்த சூட்கேஸை பிரித்து ஆராய்ந்து, டெட்பாடியை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அந்த மாணவனின் பெற்றவர்களையும் சமாளித்து அனுப்பிவிட்டு, ப்ரஸ் மக்களை மட்டும் காக்க வைத்து தான் தாளம் தட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான், "இங்க யாரு சார் அப்டி சூட்கேஸ்லா யூஸ் பண்றாங்க?" என சொக்கு கேட்கவும்,

"டெக்னாலஜி வளந்துருச்சு சொக்கு. நாம அத தூக்கிட்டு போக வேணாம். நம்ம கூடவே அதும் தனியா ரோலாகி வரும். அண்ட் அதுல நாம டெஸ்டினேஷன் குடுத்துட்டா அதுவே நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச்சாகிடும்"

"பாதில எவனாவது கவாத்து பண்ணிடமாட்டானா?"

"அது கவாத்து பண்ணவன ஃபோட்டோ புடிச்சு சூட்கேஸ் சொந்தகாரனுக்கும், அது அப்போதைக்கு இருக்க இடத்துல இருந்து பக்கத்துல இருக்குற சூட்கேஸ் சொந்தகாரனோட சொந்தகாரனுக்கும் மெசேஜ் அனுப்பிடும்"

"நம்மூர்ல பொண்ணுங்களுக்கு கூட இம்புட்டு பாதுகாப்பு இல்லயே சார்?"

"அதான் நாம இன்னும் இப்டியே‌ இருக்கோம். அது ஒரு ரோபோ டைப் சூட்கேஸ்னு நம்பாம, பேயி‌ பிசாசுன்னு புது புரளிய நம்மாளுங்களே கிளப்பிவிட்டு, இப்ப அது தான் வைரலா இருக்கு, நாம சொல்றத எவேன் கேக்குறான்"

"திடீர்னு எதாது தனியா வந்து நின்னா பயம் தானே சார்‌ முதல்ல வரும்" என்றான் சொக்குவுமே கொஞ்சம் பீதியுடன். இருக்கென்று மனது நம்ப துவங்கிவிட்டால் உண்மையிலேயே இல்லை என்றாலும் கண்ணுக்கு இருப்பதாகத்தானே தோன்றும்.

"வேஸ்ட் வேஸ்ட். கிளம்புங்க போய் டாக்டர் பழைய அட்டாப்சி‌ ரிப்போர்ட்ல பேர‌ மட்டும் மாத்தி போட்டு‌தருவாரு‌ வாங்கிட்டு வாங்க"

"இப்பவே ரெடி ஆகிருக்காது சார்"

"காலைல தான் வாங்கிட்டு‌ வாங்கன்னு சொல்றேன் சொக்கு"

"ஓகேசார்" என சல்யூட் வைத்து திரும்பியவன் மீண்டும் நின்று, "வெளில ப்ரஸ்?"

"நாந்தானே பதில் சொல்லணும்? கில்லர் என் பாக்கெட்ல இல்ல இல்லன்னு எத்தன தடவ சொல்றது. சரி நீங்க போங்க" என்றவனும் எழுந்து சட்டையின் கையை மடக்கிவிட்டவாறு வெளியே நடந்தான்.

"ஒருவேளை பேயா இருந்தா, இந்த கேஸ டீல் பண்றதுக்கு நம்மளையும் அடுத்து ஃபாலோ பண்ணி வரும்ல? என்ன செய்ய? இவரு கேஸ விடமாட்டாரு பேயி நம்மள விடாது, மொத்தத்துல பலியாக போறது மட்டும் உறுதி" என சொக்கு புலம்பிக் கொண்டே தான் கிளம்பிச் சென்றான்.

வெளியே ப்ரஸ் மக்கள் தயாராக நின்றனர், அவர்களின் கேள்விக்கு எப்போதும் போல் அவனுக்கு தெரிந்ததையே பதிலாக கூறினான் மகிழ்.

"நாலு கொலை தொடர்ந்து நடந்துட்டு இன்னும் நீங்க கண்டுபிடிக்கமுடியலன்னு சொல்றீங்க? மிச்சமிருக்க மூணு பேராது தப்பிப்பாங்களா இல்ல அவங்களையும் கொன்னப்றம் கொலைகாரனே வந்து சரண்டர் ஆகிடுவானா?"

"தெரியல, நாங்க பிடிச்சா என்ன அவனே வந்து சரண்டர் ஆனா என்ன, நமக்கு கொலையாளி அரெஸ்ட் ஆகணும் அவ்வளவு தானே?"

"என்ன சார் பதில் இது. பிடிப்பீங்களா மாட்டீங்களா?"

"தேடிட்ருக்கோம். கிடைச்சதும் பிடிச்சு உள்ள போட்ருவோம்"

"உங்களுக்கு இதும் ஒரு கேஸ் சார். பிள்ளைய பறி கொடுத்தவங்களுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? அந்த பொறுப்பு உங்களுக்கு இருக்கு தானே?"

"நா உங்களுக்கு அசால்ட்டா பதில் சொல்ற மாதிரி தெரிஞ்சா, அதுக்கு ரீசன் உங்க கொஸ்டீன்ஸ் தான். ஏதோ நாங்க வேலையே பாக்காத மாதிரி பேசுறீங்க. பையன் காணாம போன பிஃடீன் மினிட்ஸ்ல ஸ்பாட்ல இருந்துருக்கோம் நேத்து ஃபுல்லா டோட்டல் சிட்டியவும் செர்ச் பண்ணியாச்சு. மக்களோட மக்களா கலந்து இருக்கறவன கண்டு பிடிக்றது அவ்வளவு ஈசி இல்லங்க. தெரிஞ்சும் கேள்வியா கேப்பீங்கன்னா கேளுங்க என் பதில் இப்படித்தான் வரும்"

"சார் கோவபடாதீங்க? மக்கள் சார்ப்பா நாங்க தானே கேட்டாகணும்?அமானுஷ்யம் அதிதுன்னு சொல்றாங்களே அது உண்மையா?"

"அதும் உங்க இஷ்டம் போல எப்டி தோணுதோ அப்படி நம்பிக்கோங்க. ஆனா அது ஒரு டைப் ஆஃப் மோனோ பேக். ரோபோ டைப் சூட்கேஸ் தான்"

"கில்லர் ஸ்டேஷனுக்கே அனுப்பிருக்காம்ன்னா உங்களுக்கு சவால் விடுறான்னு எடுத்துக்கலாமா?"

"போலீஸ் மொத்தமு அவன் எப்பவும் டெட்பாடிய கொண்டு போடுற ஹைவேல தான் இருந்தோம். எல்லாரும் அங்க போயிட்டீங்கனா போலீஸ் ஸ்டேஷன் காலியாதான கடக்கும்னு இங்க அனுப்பிருப்பான்னு நா நினைக்கிறேன்" அவன் பதிலில் அனைவருக்கும் சிரிப்பும் வரும் போலிருந்தது.

"சார் இறந்த பசங்களோட பேரன்ட்ஸ்கு என்ன சொல்ல போறீங்க?"

"கண்டிப்பா அவங்க பசங்க டெத்துக்கான ரீசன் கிடைக்கும். அதுக்கு நா பொறுப்பு. பட் அவங்களுக்கு மட்டுமில்ல பொதுவா டீனேஜ் பசங்களோட பேரண்டஸ்கு எங்க சார்ப்பா ஒரே ஒரு ரெக்வெஸ்ட். உங்க பையனோ பொண்ணோ என்ன பண்றாங்கன்னு வாட்ச் பண்ணுங்க. நல்லா படிக்குற பையன் தப்பு பண்ண மாட்டான், நல்ல டேலண்ட்டான பொண்ணு தப்பு பண்ண மாட்டான்னு நீங்களே டிசைட் பண்ணாதீங்க. படிக்றானோ இல்ல எல்லா பாடத்துலையும் பெயிலாகுறானோ, அப்பா அம்மா நம்மள கவனிப்பாங்கன்ற எண்ணம் அவங்க மனசுல எப்பவும் இருக்கணும். எனக்கு நம்பிக்கை இருக்கு என் புள்ள தப்பு பண்ணமாட்டா, நா அப்படி வளக்கல, கஷ்டம் தெரிஞ்சு வளருற புள்ள, இப்படி ஒவ்வொரு பேரண்ட்ஸும் ஒவ்வொரு விதமா உங்க பிள்ளைங்கள நம்புறீங்க, நம்புங்க. ஆனா அந்த நம்பிக்கைய அவங்க காப்பாத்றாங்களான்னு வாட்ச்சும் பண்ணுங்க. அவங்க டீனேஜ் தப்ப சரின்னு சொல்லும்‌ சரிய தப்புன்னு சொல்லும், ஆனா வாட்ச் பண்ணிட்ருக்க நமக்கு தான் அவங்களுக்கு எது சரின்னு தெரியும், சமயத்துல அவங்கள காப்பாத்த கூட அது உதவும். சோ பிள்ளைங்கள வாட்ச் பண்ணுங்க"

"கொலையாளி பத்தி எதாது டீடெயில்ஸ் உண்டா சார்? மக்களும் அலெர்டா இருப்பாங்களே?"

"கில்லர் சைகோ கிடையாது. இது ஏதோ ஒரு வகையில ஒரு பழி வாங்கள் தான். மத்த மூணு பசங்கள தீவிரமா விசாரிக்க இருக்கோம். அவங்க சம்பந்தப்பட்டிருந்தா கண்டிப்பா கில்லர் அவங்களையும் கடத்த நினைப்பான். இல்லனா இதோடவும் நிக்கலாம். மக்களுக்கு கில்லரால நிச்சயமா எந்த பாதிப்பும் கிடையாது" மேலும் இரண்டு மூன்று கேள்விகளோடு, "லேட் நைட் கைஸ். பை" என அவன் கிளம்பிவிட்டான்.

அங்கு அவன் வீட்டிலோ, வாசுகி, பேய், பிசாசு என்றதில் காலையிலேயே புலம்பி தள்ளிவிட்டார். மாலை வரை பொறுத்திருந்து, மருமகள்கள் வரவும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் மூத்த மருமகளைத் தேடி.

"மதினி" என வீட்டினுள் நுழையும் போதே அழைத்துக் கொண்டே தான் சென்றார். பகலில் அவரிடமும் ஒரு மூச்சு புலம்பியிருக்க, அதனால் அகிலாவும் அவரை எதிர்பார்த்தே இருந்தார்.

"வாங்க மதினி, வாங்க பிள்ளைகளா, நீங்க வருவீகளான்னு தான் பாத்துட்டுருந்தேன் மதினி" என முகமே பிராகாசிக்க உள்ளே அழைத்துச் சென்றார்.

"எனக்கு படபடன்னுதேன் வருது. பேய் பிசாசெல்லாம் என் மவேன் உள்ள புடிச்சு போடுவான்னு தெரிஞ்சுருந்தா இந்த போலீஸு வேலையே வேணானுருப்பேன். இப்ப பாருங்க என்னைய கடந்து புலம்பவிடுதியான்"

"மொதல்ல தண்ணிய குடிங்க. அதெல்லாம் இல்லன்னு மாப்ளயே டிவில சொல்லிட்டாகளே மதினி"

"அவேன நம்ப சொல்லுதீகளா‌ நீங்க, அது கண்ணு முன்னால வந்து நின்னாலும் அசரமாட்டியான். ஆனா அது வேலைய காட்டாம போவுமா? இவேன் எல்லாரையும் நம்ப வைக்க சூட்டுகேஸு பையின்னு பேசிட்டு திரியிதியான். சூட்டுகேஸுலாம் ரோட்டுல தனியா நடந்து போக ஆரம்பிச்சா நாமலாம் என்ன பறந்தா போவ முடியும்?"

"அதான மதினி? ஒரு சூட்கேஸ கூட தூக்க முடியாதவனுங்களுக்கு எதுக்கு சூட்கேஸுங்கேன்?" என்றார் அகிலாவும்.

"அத்த அப்டிலாம் நிஜமாவே இருக்குத்த. பேய் என்ன சொல்லிட்டா வந்து போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிக்கும்?" என்றாள் ஷீலா.

"பாத்தீகளா இப்டி நம்ப வைக்கதேன் அவேன் அப்டிலாம் சொல்லி வைக்கியான். ஆனா உண்மைல அது ஆவியோட வேலையா இருந்துட்டா மாலை கழுத்து புள்ள, எனக்கு கதக்கதக்குன்னு இருக்குள்ள மதினி" என்றார் வாசுகி.

"அதும் சரிதான். அப்ப சொல்லுங்க என்ன செய்யலாம்?"

"மந்திரிச்சு கயிறு எதுவும் கட்டிவிட்ருவோமா?"

"சரித்தேன் ஆவிக்கு பதிலா அத்தான் உங்களத்தேன் கொண்டு உள்ள வச்சு வெளுக்கபோறாக போங்க" என்றாள் விசாலாட்சி.

"சும்மா இருட்டி. அவேன் ஒத்துக்கமாட்டான்னு தெரியாமலா பேசிட்ருக்கேன்? நம்ம மருமவள வச்சுதேன் அதையும் செஞ்சு முடிக்கணும்"

"யாத்தே இவளா? இருவது பக்கத்துக்கு பேசுவா மதினி இவ" என்றார் அகிலா‌‌.

"பேய் பிசாசு நம்பிக்கை கிடையாதோ மருமவளுக்கும்?"

"அதுகதேன் இவள கண்டு தெறிச்சு ஓடும். பேசியே விரட்டிறமாட்டா" என்றதும் ஷீலாவும், விசாலாட்சியும் சிரிக்க,

"நீங்கதேன் எப்பவும் இப்டி சொல்லுதீக, ஆனா புள்ள ரொம்ப அமைதியாட்டுல தெரியிது"

"அது கூடவே கூட்டிப்போய் வச்சு பாப்பீகல்ல அப்ப‌ நீங்களும் தெரிஞ்சுப்பீக"

"என்னவோ போங்க. இப்ப என் மவேன்ட்ட அவதான பேசியாகணும். ரெண்டும் வேலைல ஒத்துமை போல இந்தமாதிரி நம்பிக்கைகளையும் ரொம்ப ஒத்தும போலயே?ஆவிகளையும் நடுவுல விட்டு குடும்பம் நடத்துங்களோ?"

"ஆமா செய்வா உங்க மருமக. நிறைய வியாக்கியானம் பேசுவா. பேய நீ நேர்ல பாத்தியா? உன்ன எப்பவாவது வந்து சப்புன்னு அறைஞ்சதா? அப்ப ஏன் கோழி, ஆடுலாம் ஆவியா வந்து நம்மள பழிவாங்கலன்னு வரிசையா கேப்பா மதினி. அவள நம்பி எதையும் முடிவு பண்ணாதீக"

"ஆனா ஏன் எங்க முன்ன பேச மாட்றாங்க அக்கா?" என்றாள் விசாலாட்சி.

"உங்கட்ட இன்னும் நல்லா பழகலல அதான்னு நினைக்கேன்"

"அத்த அப்ப அத்தான்ட்ட நல்லா பழகிட்டாகன்னு நினைக்கேன், அதான் எல்லாத்தையும் சொல்லி செய்ய வச்சுடுதாக. அப்ப லவ் பண்ணுறாங்கன்னு தான் அர்த்தம்" என்றாள் விசாலாட்சி.

"சரிட்டி காதலிக்காகன்னா சந்தோஷந்தேன். இப்ப இதெப்படி செய்ய வைக்க?"

"இப்ப அத்தான சமாளிக்கறத அக்கா பாத்துகிடுவாக, அக்காவ சமாளிக்கறத நீங்க பாருங்க" என ஷீலா சிரிக்கவும்.

"அதெல்லாம் என் மருமக நா சொன்னா, மறுக்காம கேப்பா பாரு"

"கேட்றகீட்ற போறா நீங்க வேற மதினி, அவள ரொம்ப நம்பாதீக சொல்லிட்டேன்" என்றார் அகிலா.

'என்ன வர வர தெனமு நம்ம வீட்டுக்கு விருந்தாள் வர ஆரம்பிச்சுட்டாங்க?' என வாசலில் செருப்பைப் பார்த்து விட்டு உள்ளே வந்தவள் கேட்டது தாயின் கடைசி வாக்கியத்தை தான், 'இரு இரு தவுட்டுக்கு எவனாது கேக்கட்டும் அரை விலைக்கு கேட்டாலும் போதும்னு வித்துடுறேன் உன்ன' என முறைத்துப் பார்த்தாள்.

"இந்தா வந்துட்டா" என அவள் முறைப்பை கவனித்ததும் மற்றவர்களை அவள் பக்கம் திசை திருப்பினார் அகிலா.

"வாங்கத்த, வாங்க ஷீலா, விசாலாட்சி" என்றாள் அவர்களிடம் சிரித்துக்கொண்டு.

"சும்மா வா போன்னு சொல்லுங்கக்கா. எங்களுக்கு உங்கள விட வயசு கம்மிதேன்" என ஷீலா சொல்ல, அதற்கும் மென்மையாக சிரித்துக் கொண்டாள்.

"ஆமா முந்திகிட்டு காதலிச்சுபோட்டாளுவ. நீயி என் மவனத்தேன் காதலிக்கணும்னு இருந்துருக்கு அதேன் இம்புட்டு வயசுக்கு காத்திருந்துக்குற போல கண்ணு" என்றார் வாசுகி.

"ஆமா நாங்க காதலிச்சத தெனமு சொல்லி சொல்லி மளச்சுபோவாகக்கா நம்ம மாமியார். காதலிச்ச எங்கள புடிச்சு திட்டுவாக, ஆனா உங்களுக்கு அவுகளே காதலிக்க ரூட்டு போட்டு குடுப்பாக. என்னத்த சொல்ல" என விசாலாட்சி பேசவும்,

"நீங்க ரெண்டு நீட்டி முழக்காம இருங்கட்டி போதும், வந்த வேலைய விட்டுட்டு வளவளங்காளுக"

"என்னம்மா பேசிக்றாங்க?" என்றாள் மரகதவல்லி ஒன்றும் புரியாமல் அன்னையிடம் மெதுவாக.

"மதினி என்னன்னு இவட்ட நேரா சொல்லுங்க அப்பதான் புரிஞ்சுக்குவா" என அகிலா வாசுகியிடமே கோர்த்துவிட,

"தாயா நீ" என அவரை கடித்துவிட்டே மாமியாரிடம் திரும்பினாள். அவளுக்கு தான் நன்கு தெரியுமே‌ மாமியார் இதைவிட பெரியதாக யோசித்து ட்ரான்ஃபாமரில் கையை வைக்க சொல்லுவார் என்று. அவளிடம் அவர் வந்து நிற்பதே அதற்காகத்தான் என்றாகியிருந்ததே தற்போது.

"இங்க வா கண்ணு" என்றார் அவர் அருகில் அமர கை காண்பித்து.

அவளும் அமைதியாக சென்று அமர்ந்தாலும், 'என்ன உக்காந்து பேச கூப்பிடுதாங்க, விஷயம் ரொம்ப பெருசோ' என நினைத்துக் கொண்டே தான், "சொல்லுங்கத்த" என்றாள்.

"ஏத்தா என்னத்தையோ ஆவிய பிடிச்சு உள்ள போடுவேம்னு வீம்பு பேசிட்டு திரியிதியான்ல அது நமக்கு வேணாம்தா. ஆவியெல்லாம் பிடிக்க முடியாது, அது நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க பகைச்சுக்குற விஷயமே கிடையாது" என அவர் பேச, இவள் திரும்பி அவள் தாயைப் பார்த்தாள், பின் ஷீலா, விசாலாட்சி இருவரையும் பார்த்தாள், மூவரிடமும் ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் போக மறுபடியும் வாசுகியிடம் பார்வையைக் கொண்டு வந்தாள்.

"என்னத்தா சுத்தி பாக்குத?"

"எனக்கு புரியலத்த?"

"உன் புருஷன பேய் புடிச்சுடுங்கேன் புரியலங்கவ? மாலை கழுத்து பாத்துக்கோ, பூ வாடை சுளுவா ஏறி உக்காந்துக்கும்தா, எம்புட்டு பெரிய பதவில இருக்கியான் அவனுக்கு பேய் புடிச்சா ஊருக்குள்ள எம்புட்டு கேவலம். சொன்னா கேக்கமாட்டியான், நீதான் எடுத்துச்‌ சொல்லணும் அவனுக்கு" என அவர் பேசியதைக் கேட்டு பேய் முழி இவள் தான் முழித்தாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 18

"அக்கா ஷாக் ஆகிட்டாக" என்ற விசாலாட்சி, மரகதவல்லி தொடையில் தட்ட,

"பேய் புடிக்குதா?" என்றாள் மரகதவல்லி அதிர்ந்து தெளிந்து,

"ஆமா அவேன் இப்ப எடுத்துருக்க கேஸு, அதுல இவேந்தான் சித்து விளையாட்டாடி சூட்டுகேஸுன்னு கதை விடுதியான், உண்மையிலேயே அது ஆவியாத்தேன் இருக்கும்"

"எப்டித்தே இவ்வளவு ஸ்டராங்கா சொல்றீங்க"

"அவனபத்தி எனக்குத்தேன் முழுசா தெரியுமாக்கும், அந்த சூட்டுகேஸ விட்டதே இவேந்தாம்னு கூட ஒத்துக்க சொல்லு நம்புதேன், தானா வரும்னுதியான், அதெப்படி நம்ப முடியும்?"

"சரித்த அதனால‌ பேய் புடிக்குமா என்ன?"

"ஆமாங்கேன்‌. விளையாட்டில்ல பாத்துக்கோ. பேசாம அந்த கேஸ வேற எவங்கிட்டையாது குடுத்துட்டு ஒரு ரெண்டு மாசம் லீவு கேக்க சொல்லு, இந்த எட்டு வருஷத்துல லீவே எடுக்காம அம்புட்டையும் பத்தரமாத்தேன் வச்சுருக்கியான். சேத்து இப்ப எடுக்க சொல்லு. நாம கல்யாண சோலிய மட்டும் பாப்போம்"

"இதெல்லாம் ஆவுறதே இல்லத்தே. வாய்ப்பே இல்ல, அவங்க கேக்கவே மாட்டாங்க" என்றாள் வேகமாக.

"நீ சொன்னா கேப்பானுத்தா"

"சான்சே இல்ல, ஏதோ கோவிலுக்கு ரெண்டு தடவ வந்துட்டாங்கன்னு இவ்வளவு பெரிய முடிவுக்குலாம் வராதீங்க. அப்றம் அது ஆவி பூதம்லா இல்ல, நிஜமாவே கொலைகாரன் அப்படிதான் கொலை பண்ணி சூட்கேஸ்ல வச்சு அனுப்பிருக்கான். எங்களுக்கு நோட்டீஸ் வந்துருச்சு, கோர்ட்ல கேஸ எடுத்தாச்சு, உங்க புள்ள கேஸ முடிச்சு ஒப்படைச்சே ஆகணும். அதுக்கு முன்ன லீவ்லாம் எடுக்க முடியாது. கோர்ட்டே அலோவ் பண்ணாது"

"என்னத்தா என்னாலாமோ சொல்லுத? பாத்தியா இதும் அந்த ஆவியோட வேலைதேன், நா இங்குட்டு வாரது தெரிஞ்சுட்டு அவன எப்புடி மாட்டிவிட்ருக்கு பாத்தியா? இப்டிதேன் அவன ஒவ்வொரு இக்கட்டுலயா கொண்டு நிறுத்தும்த்தா, கல்யாணத்தையும் நிறுத்திபுடும். சூசகமா அந்த ஜோசியகாரன் இதத்தேன் சொல்லிருப்பானோ?" என அவர் நெஞ்சில் கை வைத்து படபடக்க,

"எத்தே என்ன ஆவி நம்மள ஃபாலோ பண்ணதாட்டம் சொல்லுதீக?" என்ற விசாலாட்சி வாசலையும் ஒரு பார்வை எட்டி வேறு பார்க்க,

"வாசல்ல எழுமிச்சங்காய் இருக்கு விசாலா உள்ள ஒன்னும் வர முடியாது" என்ற அகிலாவின் பதிலில், வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டாள் மரகதவல்லி.

"என்னாச்சுத்தா எதுக்கு தலையில அடிக்குறவ?"

"அவ இந்த ஆவி பேயெல்லாம் நம்ப மாட்டா மதினி. கல்யாணம் எந்த தடையும் இல்லாம நடக்கணும் அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க"

"ஏத்தா அவேன் உன்ன லவ்வு பண்ணுதேன்னு சொல்லிட்டானா? கல்யாணம் அப்ப நடந்துரும்ல?" என்றார் வாசுகி குழப்பத்துடன்.

அவளுக்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போல்தான் இருந்தது. 'ஏசிபி காப்பாத்துங்களேன் ப்ளீஸ்' என மானசீகமாக அவனிடம் வேண்டுதலே வைத்துவிட்டாள். அவனுக்கு தான் இவள் நினைத்தாலே அலாரம் அடித்துவிடுமே, உடனே அழைப்பெடுத்தும்விட்டான்.

"உங்க புள்ள தான் த்த" என போனை திருப்பி காண்பித்து அவள் வேகமாக எழ‌முயல, "இங்கன உக்காந்து பேசுத்தா, அவேன் உன்ன விரும்புதானான்னு நாங்களும் தெரிஞ்சுகிடுதோம்" என்றார் அவர் இருந்த பயத்தில்.

"அத்த, அவருக்கு தெரிஞ்சா திட்டுவாருத்த"

"நீ சொல்லாத நானும் சொல்ல‌ மாட்டேன் கண்ணு பின்ன எப்புடி தெரியுங்கேன்"

"ஆமா பேசுங்கக்கா, அத்தான் உங்கட்ட எப்புடி பேசுதாகன்னு தெரிஞ்சுக்கலாம்" என ஷீலாவும், விசாலாட்சியும் கூட ஆர்வமாகினர்.

'நல்ல குடும்பம்' என பெருமைபட்டுக் கொண்டு, தயங்கி தயங்கி அவள் அவன் அழைப்பை ஏற்க,

"பேசு‌ பேசு, பராவால்ல ஃபோன் போட்டு பேசுறளவுக்கு கல்யாணத்துல ஈடுபாடாத்தான் இருக்கியான்" என வாசுகி சிலாகிக்க, அது அந்த பக்கம் இருந்தவன் காதிலும் விழுந்தது.

"மரகதம்" என்றான் சந்தேகமாக, அந்த அழைப்பு போதுமே அவளை அவன் மயக்க. முதலில் நக்கலாக தெரிந்தாலும் அழைத்து அழைத்தே இப்போது பிடிக்க வைத்திருந்தானே.

"சொல்லுங்க"

"எங்க இருக்க?"

"வீட்ல"

"எங்கம்மா என்ன என்னைய விட அதிகமா உன்ன சைட்டடிக்க வர்ற மாதிரி இருக்கு"

"ஆமாங்க"

"ரொம்ப பவ்யம் தான்டி நீ" என அவன் சொல்லிக் கொண்டிருக்க,

"என்ன ஒத்த ஒத்த வார்த்தையா பேசுற? அவேன் வேற சும்மா பேசவே காசு கேப்பியான், நீயும் இப்படி பேசுனா என்னன்னு குடும்ப நடத்துவீக?" என வாசுகி மெதுவாக பேசியும் அந்தபக்கம் உள்ளவனுக்கு அவரின் கணீர் குரல் எட்டவே செய்தது.

"பேச்ச குறைச்சுட்டு செய்ற வேலைல முழு ஈடுபாடா இருப்போம்னு சொல்லு மரகதம்"

"என்ன, என்ன வேலை?"

"என் வேலை உன் வேலை நம்ம வேலை மரகதம்" என ராகம் போட்டான்‌.

"வேலை இருக்குங்கானோ? விடாத இப்பதான ஃபோன் போட்ருக்கான பத்து நிமிஷம் நின்னு பேச‌ சொல்லு, சும்மா சுடு தண்ணிய கொட்டுனாக்காலதேன் பறப்பியான்‌. நீ மொல்ல பேசு, அதுக்குள்ள நா எதாவது வழி யோசிக்கேன்‌" என்றவர், "மதினி என்ன செய்வோம்‌? ஏட்டி செதுக்கி வச்சதாட்டம் உக்காரவா உங்கள கூட்டியாந்தேன்?" என அவர் எழுந்து செல்ல, குழுவாக அவர்கள் நால்வரும் அமர, இவள் மெல்ல நகர்ந்து அமர்ந்தாள்.

"அடுத்து என்ன ப்ளானாம்? ஒரே தீவிரவாத கூட்டமால்ல இருக்கு மரகதம், சரியில்லையே" என்றவனின் குரலில் உல்லாசம் கொட்டிக் கிடந்தது. அது இவளிடம் பேசும்போது தன்னால் வந்துவிடும் போலும்.

"உங்கள பத்தி தெரியாம ப்ளான் போடுதாங்க அதான் பாக்க பாவமா இருக்கு"

"ரொம்ப பாவமா இருந்தா, லவ் பண்ணு மரகதம், ஆனா எனக்கு தான் இந்த லவ்வுலையும் லவ் பண்றவங்க மேலையும் நம்பிக்கையே கிடையாது. மந்தாகினி, மந்தாகினி" என்றான் அபிராமி அபிராமி கமல் போன்று.

"லவ்வே பண்ண வேணாம் போதுமா" என்றுவிட்டாள்.

"ஏம்த்தா அப்படி சொல்லுத?" என பதறிக்கொண்டு வந்துவிட்டார் வாசுகி,

"உங்கபுள்ளதாந்த்தே வேணாம்னு சொல்லுறாங்க"

"ஆத்தி அவேன்ட்ட உண்மைய சொல்லாமல்ல வேலைய முடிக்கணும். சொல்லிட்டியோ?" என கிசுகிசுக்க,

"இல்லத்தே, அவங்களே தெரிஞ்சுகிட்டாங்க"

"அவந்தான அவனுக்கு ஊரு பூராவும் ஆளுதேன் எத எங்குட்டிருந்து தெரிஞ்சுக்குவானோ, அவனுக்குன்னு சொல்ல ஆளு அம்புட்டுகுவாய்ங்க போல‌. இனி எப்டித்தா அவன வழிக்கு கொண்டு வர்றது. வீம்பு பிடிப்பானே"

"கல்யாணம் தான் பண்ணிக்க போறோமே அத்த" என்றாள் பாவமாக.

"மரகதம்" அவன் அந்த பக்கம் ஹஸ்கியாக அழைக்க, காதுமடல் முழுவதும் சிவந்து கூசி சிலிர்த்தது அவளுக்கு.

"திட்டுதானோ?" என்றார் எதிரில் இருந்த வாசுகி ஒருபக்கம்.

"இல்ல கொஞ்சிட்ருக்கேன்னு சொல்லு மரகதம்"

அவள் திணறிக் கொண்டு வர, "அத்த நீங்களே பேசுனா அவங்க என்ன பேசுவாங்க, நீங்க இங்க‌ வாங்க, அக்கா சமாளிச்சுப்பாங்க அத்தான, நீங்க போய் பேசிட்டு வாங்கக்கா, நாம இந்த ஆவிக்கு ஒரு முடிவு கட்டிடுவோம்" என்ற ஷீலா அவரை பிடித்து தங்களுடன் வைத்துக் கொள்ளவும்,

"இப்ப வர்றேன்" என அவளறைக்கு ஓடிவிட்டாள்.

"என்ன நீ சமாளிப்பியாமே மரகதம்"

"அதான் முடியலன்னு டெய்லி அழுறேனே?"

"உன்னால மட்டுந்தான் என்ன சமாளிக்க முடியும்னு உனக்கு தான் புரியல மரகதம்" அவன் கூற்றிலும் அதை அவன் கூறிய விதத்திலும், மௌனமானாள். உள்ளுக்குள் அதிகத்துக்கும் இனித்தது அவன் வார்த்தைகள்.

"என்ன சைலண்ட் ஆகிட்ட? ஆமா என்னத்துக்கு அம்மா வந்துருக்காங்க"

"உங்களுக்கு பேய் புடிக்க போகுதாம் அத எப்டி தடுக்கலாம்னு ப்ளான் பண்ண வந்துருக்காங்க" என்றவள் கிளுக்கென சிரிக்க,

"ஆமா கல்யாணம்னு ஆனா அதெல்லாம் வந்து தானாவே ஒட்டிக்கும், கூடவே குடித்தனம் நடத்துறதுலாம் தனி திறமைல சேரும்டி"

"மனசாட்சிய தொட்டு சொல்லுங்க உங்ககிட்ட குப்ப‌ கொட்ட போற நா பாவமா, இல்ல என்ன வச்சு செய்ற நீங்க பாவமா?"

"என் மனசாட்சிய தொட்டு சொல்லணுமா உன் மனசாட்சிய தொட்டு சொல்லணுமா மரகதம். உன் மனசாட்சின்னா நா ரொம்ப உண்மையா இருப்பேன் பாத்துக்கோ"

"எப்படிங்க?"

"எது?"

"எங்க சுத்துனாலும் என்னுட்டையே கொண்டு முடிக்கிறீங்க?"

"எஸ் மொத்த விரதமு உன்ட்ட தானே முடியணும், அதான் உங்கிட்டயே கொண்டு முடிக்கிறேன்"

"அப்பப்பா வாய்? உங்களுக்கு பேச தெரியாதுன்றாங்கங்க உங்கம்மா"

"உண்மை தானே அது. நீதான் என்ன அதிகம் பேசுறீங்கன்ற, ஆக்சுவலி நா இன்னும் லிமிட்டா தான் உன்ட்ட பேசிட்ருக்கேன்"

"முடியலங்க"

"சொல்லிட்டியா? சரி என்ன பேய்? என்ன ப்ளான்?" என்றதும் அவன் அம்மா கூறியதை கூற,

"அப்பப்ப அப்டிதான் எங்கம்மா அதிமேதாவி ஆகிருவாங்க. இதவச்சு மாமியார ஏச்சுபுடலாம்னு நினைக்காத நீ"

"எனக்கு தேவதாங்க"

"என்ன தேவைனாலும் என்ட்ட கேளு நா தீத்து வைக்கிறேன்"

"இப்போதைக்கு நா வெளில போணும், எல்லாம் வெளில இருக்காங்க"

"சரி போ. நாலுபேரும் சேர்ந்து எனக்கு ஃபேவரா எதாவது ப்ளான் பண்ணிருப்பாங்க அத கேட்டு வந்து எனக்கு அப்படியே சொல்லணும் ஓகே"

"சரிங்க" பவ்யமாக கூறவும் சிரித்துக் கொண்டே வைத்துவிட்டான்.

இவள் வெளியே செல்லவும், "ஏத்தா அவேன் கண்டிப்பா லீவெடுக்க மாட்டியான்ல?"

"குடுக்க மாட்டாங்கத்த இப்போ"

"அப்ப உங்கம்மாக்கு தெரிஞ்ச ஒருத்தரு மந்திரிச்ச கயிறு தருவாராம் அத வாங்கி அவனுக்கு கட்டிவிட்ருவோம். காத்துகருப்பு அண்டாம இருக்கணும் புள்ள"

அவள் அம்மாவிடம் சண்டைக்கு செல்வதுபோல் செல்லவும் முடியவில்லை, சரி என‌ மண்டையாட்டவும் முடியவில்லை, விழி பிதுங்கியது அவளுக்கு.

"மந்திரிக்குற இடம்லாம் சும்மா போங்குத்த, உண்மை கிடையாது. உங்க மகன்ட்ட சொன்னா கண்டிப்பா வரமாட்டாங்க"

"அவேன யாரு அங்கன கூட்டிட்டு போ போறா, அவன கூட்டிட்டு போனா அங்க உக்காந்துருக்குறவைங்கள புடிச்சு கொண்டு உள்ள உக்கார வச்சுபோடுவியான், பின்ன யாருட்ட நாம கயிறு வாங்க அலையுறது? அதனால நானும் உன் அம்மாவும் மட்டும் போய்ட்டு வர்றோம், நீ கொண்டு கட்டிவிட்டு வந்துரு"

"நானா?"

"ஆமா நீ சொன்னா கட்டிக்குவான் நா சொன்னா வேணும்னே கட்டமாட்டியா‌ன்"

"அத்த"

"என் கண்ணுல, உங்க கல்யாணத்துக்காகத்தேன் அம்புட்டும்" அவர் கன்னம் தடவி கொஞ்சி சொல்லவும், தலையை ஆட்டிவிட்டாள்.

மறுநாள் காலையிலேயே அகிலா, வாசுகி இருவரும் கிளம்பி சென்றுவிட்டு மந்திரித்த கயிறுடன் வந்துவிட்டனர். இவள் நீதிமன்றத்திற்கு கிளம்பி நிற்க, "இந்தா கண்ணு, மொத கொண்டு அவங்கிட்ட குடுத்து கட்டிக்க சொல்லு, மாட்டேம்பான் எப்படியாது கட்டிக்க வச்சுபோடு" என அவள் கையில் திணித்துவிட்டார்.

"சரித்த" என்றவள் இருவருக்கும் தலையசைத்து கிளம்பிவிட்டாள்.

நீதிமன்றத்திற்கு வந்தவள், வண்டியை நிறுத்தி விட்டு அவனுக்கு அழைக்க, "சொல்லு மரகதம்" என்றான் சோம்பலுடன்.

"தூங்குறீங்களா?"

"ஆமா கம்பெனி குடுக்க வரியா?"

"ஏங்க?"

"ஏங்கவிடாம சொல்லுங்க" அவன் நக்கல் செய்ய,

"ம்ச் உங்களுக்கு காத்துகருப்பு அண்டாம இருக்க கயிறு குடுத்து விட்ருங்காங்க, வந்து வாங்கிக்கோங்க"

"கசமுசா பண்ணிட்டா இந்த காத்து கருப்புலாம் அண்டாதாம் மரகதம், ஈசியான வழிய விட்டுட்டு தலைய சுத்தி மூக்க தொடுறீங்க"

கண்ணை இறுக மூடித் திறந்தவள், "நா கோர்ட்டுக்கு வந்துட்டேன் எப்ப வந்து வாங்க வர்றீங்க?"

"குடுக்கணும்னா நீதான் வந்து குடுக்கணும் மரகதம், என்னைய வந்து வாங்குங்கன்னு சொல்ல‌ கூடாது"

"சரி எங்க வந்து குடுக்கணும்? ஸ்டேஷனுக்கு எப்ப கிளம்புவீங்க?"

"நீ வர்ற வர கிளம்பவே மாட்டேன் வா"

"வீட்டுக்கா?"

"ஆமா"

"தனியாவா?"

"வெளுத்துபுடுவேன்டி"

அவன் சூடாகுவது தெரிய, "எதும் செய்ய மாட்டேன்னு சொல்லுங்க" என்றாள் மெதுவாக இறங்கி வந்து.

"கல்யாணத்துக்கு முன்னாடி உன்ன எதுவும் செய்ற ஐடியா இல்ல எனக்கு"

"அப்றம் எதுக்கு தனியா வர சொல்றீங்க?"

"வந்தா காலைல சாப்பாடு எதாது செஞ்சு தருவன்னு பாத்தேன் நீ வரவே வேணாம் போடி" என வைத்துவிட்டு குப்புற படுத்து கொண்டான். வைத்துவிட்டானே இனி நிச்சயம் வருவாள் என தெரியும் அவனுக்கு.

அடுத்த இருபது நிமிடத்தில் அவன் குவாட்ரஸ் முன் நின்றாள்.

"குட்மார்னிங் மேடம்" என்றான் வாசலில் வண்டியை துடைத்து கொண்டு நின்ற பரத். அவனுக்கு தலையசைத்து உள்ளே வந்து காலிங் பெல்லை அழுத்தப்போக,

"கதவு திறந்து தான் இருக்கு மேடம் உள்ள போங்க" என்றான் பின்னிருந்து பரத். கதவை மெல்ல தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

"ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது, மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்,அது நைசா நைசா தழுவி நதி போல, ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்" என பாடிக்கொண்டே தலையை துவட்டிக் கொண்டு நின்றான் மகிழ் அவனறையில்.

அந்த சத்தத்தை வைத்து அவன் எழுந்து விட்டான் என புரிய அங்கு சென்று அறை வாசலில் நின்று கதவை லேசாக தட்ட, பட்டென்று கதவை அகல திறந்தவன், வேஷ்டியும் பனியனுமாக நிற்க, டவ் சோப்பின் நறுமணம் அவளை குப்பென்று தாக்கியது.

"குட்மார்னிங் மரகதம். வெல்கம் ஹோம்" என அவளை லேசாக தோளோடு அணைத்து விடுவிக்க நடுங்கியேவிட்டாள் அவன் கையின் திண்மையில். அவன் சாதாரணமாக செய்துவிட்டு நகர்ந்து விட்டான்.

அவனுக்கு அவளை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததும் கை பரபரத்துவிட்டது, அதனாலேயே அந்த அணைப்பு உடனடி தேவையாக இருந்தது. அவள் நடுங்கவும் பட்டென்று நகர்ந்தும் விட்டான்.

"கயிறு" என படபடப்பை நீக்க முதலில் அதை எடுத்து நீட்ட,

"கட்டிவிடு மரகதம்" என்றான் அவன்,

"சரி, கைய நீட்டுங்க" என்றாள்.

"கைலலாம் நா கட்டிக்க மாட்டேன். வெளில தெரியாம கட்டிவிடுறதுனா ஓகே இல்லனா எனக்கு வேணாம்"

"வெளில தெரியாம கைலயா அதெப்படி கட்ட முடியும்?"

"என் ஹிப்ல கட்டிவிடு மரகதம் உன்ன தவிர யாரும் பாக்க மாட்டாங்க" என்றதும் அதிர்ந்து விழிவிரித்து அவள் நிற்க, அவனுக்கு அப்படியொரு சிரிப்புதான் அவள் பாவனையில், மீசைக்கடியில் அந்த சிரிப்பை அவளுக்கு காட்டாமல் மறைத்தும் கொண்டான்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 19

"இடுப்புலயா?" என்ற அதிர்ச்சியில் அவள் நிற்க.

"என்ன மரகதம் ஃப்ரீஸ் ஆகிட்ட?" என்றவன் தலையை கோதி கொடுக்க அதில் சில துளி தெறித்து அவள் முகத்தில் விழுந்தது, சரியாக துவட்டியிருக்கவில்லை போலும், துவட்டிக் கொண்டிருந்தவன்‌ தான் இவள் அழைக்கவும் அப்படியே பாதியில் வந்திருந்தான். இப்போது வெறும் கையால் கோதிக் கொடுத்து உலர்த்த முயன்றான்.

அவனையும் அவன் தலையில் அவன் செய்வதையும் பார்த்தவளுக்கு அவள் கையும் பரபரத்தது, நறுக்கென்று கொட்டிவிட சொல்லி, 'அசந்து மறந்து நீயே உன் கைய நீட்றதுக்குள்ள ஓடிடுடி மேகி' என சொல்லிக் கொண்டவள், "இந்தாங்க பிடிங்க, நா கிளம்பணும்" எனக் கயிறை நீட்டினாள்.

"வேணும்னா கட்டிவிடு, இல்லனா எடுத்துட்டு போய் உன் மாமியார் கைலயே கட்டிவிட்ரு" என்றவன் சமையலறைக்குள் செல்ல,

"ம்ச் கைலனா கூட கட்டிவிடுறேன் குடுங்க"

நின்று திரும்பி முறைத்தவன், "பேயுமில்ல பிசாசுமில்லன்னு நேத்தைக்கு தான் அத்தன பேர் முன்ன சொல்லிட்டு வந்துருக்கேன். இப்ப நானே என் கைல தாயத்து கட்டிட்டு போனா எவேன் மதிப்பான்? மெனக்கெட்டு கொண்டு வந்துருக்கியேன்னு உனக்காக தான் கட்டிக்கிறேன்னு கூட சொல்றேன். இஷ்டம்னா என் இடுப்புல கட்டு"

"அப்படியே எனக்காக நீங்களே வாங்கி கட்டிக்கலாம்ல?"

"அது முடியாது மரகதம் வெரி‌ சாரி, ஒரு ஆப்ஷன் தான். அண்ட் இதெல்லாம் என் நம்பிக்கைல சேர்த்தியில்ல" என்றவன் ரெடிமேட் சப்பாத்தி பாக்கெட்டை பிரித்து தவாவில் சூடு பண்ணத் துவங்கினான்.

"நா எப்டிங்க கட்டிவிட முடியும்?" என்றாள் கிச்சன் வாசல் வந்து நின்று சிணுங்கலாக,

"கைட்டு தான்டி"

"ஏங்க?" என்றாள் கடுப்பை மறைக்க முயன்று, டிசைன் டிசைனாக யோசித்து வைத்து செய்தால் அவளும் தான் என்ன பண்ணுவாள்.

"இங்க வாயேன்" என அருகில் அழைக்கவும், வாங்கப் போகிறானோ என்ற எதிர்பார்ப்பில் கயிறை நீட்டிக் கொண்டு அவனருகில் செல்ல,

"அடிபிச்சுபுடுவேன், என்ட்ட நீட்டாத" என அவள் கையைத் தட்டிவிட்டான்.

"பின்ன எதுக்கு கூப்டீங்க?" என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டு.

"அதுவா ஒரு விஷயத்தை க்ளாரிஃபை பண்ண"

"என்னது?" என்றாள் சந்தேகமாக, அவனைப் பற்றி தான் தெரியுமே குண்டக்க மண்டக்க அல்லவா கேட்டுத் தொலைவான் என்றே சந்தேகமாக விழித்தாள்.

"என் இடுப்ப இனி பாக்கவே மாட்டியா நீ? என்னைக்குனாலும் பாக்க தான‌ போற? என்னமோ கயிறு கட்ட சொன்னதுக்கு கட்டி பிடிக்க சொன்னமாதிரி பிகு பண்றியே ஏன்?" என்றதும், அவன் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் குனிந்து கொண்டவளுக்கு கோவமும், கூச்சமும் ஒருங்கே வந்து தொலைத்தது.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் குறும்பு சிரிப்புடன் அவளை நெருங்கி வரவும் பட்டென்று விலகி வாசல் சென்று நின்று கொண்டாள்.

"குருமா எடுக்க வந்தேன்டி, விட்டா மருதமலை ஏறி உக்காந்துப்ப‌ போலயே. ச்சி ச்சி‌ச்சிசீ" என உச்சுக் கொட்டியவன், கடையில் வாங்கி வந்திருந்த குருமாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, சப்பாத்தி தட்டும் குருமா கிண்ணமுமாக வெளிய வர, வாசலில் நின்றவள் மெதுவாக நகர்ந்து ‌விலகி வழிவிட, வேண்டும் என்றே அவள் தோளில் இடித்துத் தள்ளிவிட்டே வந்து சாப்பாட்டு மேசை முன் அமர்ந்தான்.

திடீரென அவன் தள்ளியதில் சற்று தடுமாறி பின் சமாளித்து நின்றவள், "இந்த கயிற என்ன செய்ய?" என்றாள் பாவமாக.

"மரகதம்" என்றான் கோவம் போல்.

"அப்ப என்ட்டையே இருக்கட்டும் அத்த கேட்டா கட்டிருக்கீங்கன்னு மட்டும் சொல்லிடுங்க"

"பொய்யா? ச்சி ச்சி எனக்கு அதெல்லாம் வரவே வராது" என்றவன் சாப்பிடவே துவங்கிவிட்டான், பேச்சிற்குக் கூட அவளை அழைக்கவில்லை.

"ஏசிபி இதே பெரிய பொய்யிதான்யா" எனக் கடுப்பானவள், "நா கிளம்புறேன். நீங்க யாரையாவது விட்டு கட்டிவிட சொல்லுங்க" என அதை அவன் அருகில் சென்று வைக்க,

அவனோ எழுந்து சென்று சார்ஜிலிருந்த போனை எடுத்து வந்து மீண்டும் சாப்பிட அமர்ந்தவாறு வாசுகிக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டு மேசை மேல் வைத்துவிட்டான்.

அவள் அவன் செய்கைகளை பார்த்துக்கொண்டே மெல்ல வெளி வாசலை நோக்கி நடந்தவள், "ஹலோ" என்ற வாசுகியின் குரலிலும், அவன், "கயிறு எதுக்கும்மா குடுத்துவிட்ட?" என்ற பேச்சிலும் படக்கென்று நின்று விட்டாள்.

"மூத்தவனே கோச்சுக்காம கட்டிக்கோ உன் கல்யாணத்துக்காகத்தேன் எல்லாம், அதுதேன் மருமவள்ட்டயே குடுத்துவிட்டேன்"

"நா வேணாம்னு ஃபோன்லயே அவ்வளவு சண்ட பிடிச்சும் பாரு வீட்டுக்கே கொண்டு வந்து நிக்கிறா. எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியாதாம்மா உனக்கு? இவளுக்கும் பழக்கிட்ருக்க நீயி?"

"எய்யா கோச்சுக்காத புள்ள நா‌ சொல்லித்தேன் கொண்டு‌ வந்தா, அவளுக்கு உம்மேல கொள்ளை பிரியம்னா பாத்துக்கோ, நம்பிக்கை இல்லைனாலும் நா கொண்டு குடுக்கேன்த்த எங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு எங்கிட்ட சொல்லிட்டுதேன் வாங்கிட்டு வந்துருக்கா. கட்டிக்கோய்யா"

'ஆத்தி குடும்பமா இம்புட்டு பொய் பேசுதாங்களே?' என அதிர்ந்து நின்றவளை இருவரும் மதிக்கவில்லை.

"இத கட்டிட்டு போனா அப்றம் எவேன் என் பேச்ச கேட்பான்?"

"ஒரு மாசந்தேன் மூத்தவனே அடுத்து கழட்டி வீசிரு ஆரு கேக்கபோறா?"

"சரி அவளயே கட்டிவிட சொல்லு, நானாலாம் கட்டிக்க மாட்டேன், அதும்" என அவன் மேலும் பேசுமுன் பாய்ந்து வந்து அவன் வாயை பொத்தி விட்டாள்.

"என்னடி?" என்றான் அவள் கைக்குள்ளேயே,

"இடுப்புல கட்டிவிட சொல்லுன்னு அவங்கள விட்டு சொல்ல சொல்ல போறீங்களா?"

"ஆமா, கயிறு மேட்டர ஆரம்பிச்சது அவங்க தான?"

"அலோ எம்மாடி மருமவளே என்ன பேசுத எனக்கு ஒன்னும் கேக்க மாட்டுக்கு" என்றார் அங்கிருந்து வாசுகி, இவள் குரல் கேட்டும் கேட்காமலும் இருக்க அங்கிருந்து கத்திக்கொண்டிருந்தார் அவர்.

"அத்த நா கிளம்பிட்டேன் அவங்களயே கட்டிக்க சொல்லிட்டேன் சரின்னுட்டாங்க" என்கவும், "சரித்தா நீதேன் கெட்டிகாரின்னு எனக்கு தெரியுமே. அதேன் உன்ட்ட குடுத்து விட்டேனாக்கும். பாத்து சூதானாமா கிளம்புத்தா, வண்டில போவும் போதும் வரும்போதும் கவனமா இருக்கணும் சரியா. நா வைக்கேன்" என வைத்துவிட பெருமூச்சோடு அவள் நிமிர்ந்து நின்று நெஞ்சைத் தடவிக் கொடுக்க, அவள் நின்று நெஞ்சை நீவி விடும் நிலையும் அமர்ந்திருந்த அவன் முகமிருக்கும் நிலையும் ஒரே கோட்டிலிருக்க, அவன் பார்க்க அதை அவள் பார்த்துவிட்டு முறைக்க, அவன் கண் சிமிட்ட என அடுத்தடுத்த நொடிகளில், "இந்தாங்க நீங்களாச்சு உங்க காத்து கருப்பாச்சு" என அவன் கையில் வைத்துவிட்டு திரும்பியே பார்க்காமல் ஓடிவிட்டாள்.

"ஹே மரகதம் சாப்பிட்டு போடி" என அவன் கத்தியும் கூட திரும்பாமல் சென்றுவிட்டாள். அவளை இப்படி ஓட‌விடுவதில் தான் அவனுக்கு அப்படி ஒரு‌ ஆனந்தம்.

"அங்கன நிக்கும் போதுலாம் வச்சு செஞ்சுட்டு இப்ப சாப்பாடாம். யாருக்கு வேணும் இவரோட ரெடிமேட் சப்பாத்தி" என நினைத்துக் கொண்டு வண்டியை எடுத்தாலும், "உள்ளூர்லயே வீட்ட வச்சுட்டு ஏன் இங்கிருந்து இப்டி சாப்டணும்" என பாவமும் பட்டுக் கொண்டாள்.

அவனுக்கு அடுத்த அழைப்பு ஸ்டேஷனிலிருந்து வந்தது, "சொல்லுங்க வேலு" என எடுத்தான்.

"சார் மணிமுத்து தெருல கோவில் திருவிழா நடக்கு அங்க தண்ணிய போட்டுட்டு ரெண்டு பேர் ஒருத்தர ஒருத்தர் வெட்டிட்டானுங்களாம் சார்"

"ஒரு திருவிழாவ ஒழுங்கா கொண்டாட மாட்டானுங்களா இவனுங்க. கிளம்பிப் போங்க, இன்னும் அது வேற மாதிரி கலவரம் ஆகுறதுக்குள்ள ஸ்பாட்டுக்கு போங்க, நானும் வர்றேன்" என்றவனும் எழுந்து கை கழுவச்‌ சென்றான். கயிறை அவன் வாலட்டில் பத்திரபடுத்தினான்‌. நம்பிக்கை அடிப்படையில் அதை வைக்கவில்லை அவள் கையால் தான் கட்டுவது என்ற முடிவுடன் வைத்துக்கொண்டான். அவனது அன்றைய பொழுது அந்த வெட்டுகுத்து விசாரணையில் கழிந்தது.

அந்த தொடர் கொலை வழக்கு அப்படியே தான் நின்றது, நீதிமன்றத்திலிருந்து அழைத்து இவனுக்கு சம்மன் கொடுத்துவிட்டனர், 'குற்றவாளியை விரைவில் ஆஜர் படுத்த வேண்டும்' என்று உத்தரவாக வந்திருந்தது அது. ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒரு கடத்தல், மறுநாள் அது கொலை என அடுத்தடுத்து நான்கை தொடுத்து வேகமாக செய்த கொலைகாரன், இப்போது நான்கு நாட்கள் கடந்தும் அமைதியாக இருந்தான். மற்ற மூன்று மாணவர்களும் அவன் பாதுகாப்பில் தான் பத்திரமாக இருந்தனர்.

எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருக்கின்றானா, அல்லாமல் அவன் பழி வாங்கும் படலம் இறந்த நான்கு பேருடன் முடிந்து விட்டதா என்ற யோசனையில் இருந்தான் மகிழ். இறந்தவர்களின் நண்பர்கள் என்ற முறையில் மற்ற மூவருக்கு மட்டும் குத்துமதிப்பாக பாதுகாப்பு கொடுக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

அன்று அவர்கள் பள்ளிக்கு விசாரணை செய்ய வந்திருந்தான் மகிழ். இதுவரை அவன் நேரில் வந்திருக்கவில்லை, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவனே நேரடியாக ஒருமுறை முதலிலிருந்து அனைத்து விசாரணையையும் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க வேண்டும், அதற்காக வந்திருந்தான்.

பள்ளி தாளாளர் துவங்கி, அவர்கள் வகுப்பாசிரியர், இறந்த மாணவர்களின் வகுப்பில் உடன்படிக்கும் மாணவர்கள், ப்யூன், சுத்தம் செய்பவர்கள், அக்கம்பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள், என அனைவரிடமும் மீண்டும் விசாரித்துவிட்டான். முதலில் கிடைத்த அதே தகவல்கள் தான் இப்போதும் கிடைத்தது.

பார்க்கிங்கில் நின்ற காரின் புறம் வந்தவன், "அந்த பசங்க சைட் ரொம்ப வீக்கா இருக்கே சொக்கு. பதினைஞ்சு வயசு பசங்களுக்கு வாழ்க்கைனா அவ்வளவு அசால்ட்டான விஷயமா?" என்றான் ஏதேதோ யோசனையுடன்.

"ஆமா சார், இவனுங்க என்னைக்குனாலும் கம்பி என்னதான் போவானுங்க உருப்படலாம் வழியே இல்லன்னு அந்த பி.டி., சார் கூட அன்னைக்கு அவ்வளவு கோவமா சொன்னாரு"

"அவரா? கூப்புடுங்க இன்னும் ரெண்டு தேருதான்னு பாப்போம்" என்கவும், சொக்கலிங்கம் சென்று அவரை அழைத்து‌ வர, வருபவரை ஆராய்ச்சியாகப் பார்த்தான் மகிழ். அவரிடம் எந்த பதட்டமும் இல்லை, தன்னிடம் கேட்க வேண்டும் தான் சொல்ல வேண்டும் என்றே அவ்வளவு நேரமும் அவர்கள் கண்ணில் பட சுற்றிக்கொண்டிருந்திருப்பார் போலும் அழைத்ததும் அவ்வளவு வேகமாக வந்தார். இறந்த மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களிடம் மட்டுமே அதுவரை விசாரித்திருந்தான்.

பி.டி., வாத்தியாரை யார் தான் மதிக்கிறார்கள், 'அவருக்கு என்ன தெரிய போகுதுன்னு தான அவர்ட்ட கேக்கல' என அவனுக்கு அவனே யோசித்து நிற்க, வந்துவிட்டார் அவரும் அவனருகில்.

"வணக்கம் சார்"

"உங்க பேரு"

"விநாயகம்"

"இறந்த பசங்கள பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா?"

"அன்னைக்கு விசாரிக்க வந்த போலீஸ்ட்ட சிலது நா சொல்லல, காரணம் மிச்சமிருந்த பசங்க பண்ண மிரட்டல்"

"மிச்சமிருந்த பசங்கன்னா?"

"சார் மொத மூணு கொலை வருசையா நடக்கவுமே அந்த பசங்களுக்கு அள்ளுயில்ல, அம்புட்டு பயம். தெனாவெட்டா பேசிட்டு திரிஞ்சவனுங்க பம்மிட்டு திரிஞ்சானுங்க. இதுல எப்படியும் சிக்குவீங்கடா, கொலைகாரன்ட்ட தப்புச்சாலும் உங்க நாலு பேருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தான் களி தான்னு நா அதட்டுனேன், அதுக்கே என்‌ மூக்குல குத்திட்டானுங்க‌ சார். எப்படியும் போட்டும்னு தான் அன்னைக்கு நா போலீஸ் வந்து விசாரிச்சப்ப எதும் சொல்லல"

"என்ன சொல்லல நீங்க?"

"சார் அந்த பசங்க கஞ்சா பிடிப்பானுங்க. ஸ்கூல்லயே ரெண்டு தடவ சிக்கிருக்காங்க, ஒன்னும் ஆக்ஷன் எடுக்க முடியல. ஏன்னா ப்ரின்ஸிபல் பையன அம்மணமாக்கி ஃபோட்டோ எடுத்து அவருக்கே காட்டி அத ஸ்கூல் ஃபுல்லா போஸ்டர் அடிச்சு ஒட்டுவோம்னு மிரட்டி அவர கைக்குள்ள வச்சுட்டு தான் அம்புட்டு அட்டகாசமு செஞ்சானுங்க சார்"

"ப்ரின்ஸிபல் பையன் இந்த ஸ்கூலா?"

"சார் அவருக்கு பெரிய பையன் சார், வயசு இருபத்தஞ்சு இருக்கும். ஆபிஸ் பார்ட்டின்னு போன இடத்துல ஃபுல் போதைல இருந்தவர ட்ரஸெல்லாம் அவர் கையாலயே கழட்ட வச்சு அழ வச்சு கெஞ்ச விட்டு வீடியோ எடுத்துருக்கானுங்க சார். இதோ என்ட்ட கூட ஒரு காப்பி இருக்கு" என எடுத்துக் காட்ட,

அதை சொக்குவிடம் வாங்கி நீட்டியவன், "உங்களுக்கு எப்டி தெரியும்?" எனக் கேட்க.

"அவனுங்க எனக்கு அனுப்பி இதுதான் உன் மகளுக்கும்னு மிரட்ட அனுப்பினானுங்க சார். ப்ரின்ஸிட்ட கூட போய் சொன்னேன்"

"எங்கையாது அவனுங்களே சிக்குவானுங்க. இப்டிலா தப்பு பண்ணிட்டு ரொம்ப நாள் வெளிய சுத்த முடியாதுன்னு பேசுனாரு சார். இப்ப பழி வாங்குறது அதிதுன்னு பேசுறாங்களே ஒருவேளை அந்த பையனே இப்படி பழிவாங்குறானோ என்னமோன்னு தான் உங்கட்ட சொல்ல வந்தேன் சார். அப்படி செஞ்சா எந்த ஆம்பிளையும் பழி வாங்குவான் சார்"

"சரி பாக்கலாம், தேங்க்ஸ் விநாயகம்" என அவர் தோளில் தட்டவும்,

"ப்ரின்ஸிபல் பையனுக்கு பெருசா தண்டனை கிடைக்காது தான சார்?" என்றார் விநாயகம்.

"ஒரு வீடியோ எடுத்ததுக்கு பதில் நாலு கொலைன்றது தண்டனைக்குரிய விஷயம் தானே விநாயகம்?" என்ற பதில் கேள்வியில் திருதிருவென விழித்தார் அவர்.

"போங்க விநாயகம். தண்டனைலாம் கோர்ட் குடுக்க வேண்டியது அத அவங்க பாத்துப்பாங்க" என்றவன் சொக்கலிங்கத்திடம், "ப்ரின்ஸிபல் பையன் டீடெயில்ஸ் வாங்கிக்கோங்க சொக்" என்க அவர் அதை செய்ய, இவன் மீண்டும் அந்தப் பள்ளியை சுற்றிவர ஆராய்ச்சி பார்வைப் பார்த்தான். மனதில் யோசனைகள் அந்த கேஸை சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது.
 
Last edited:
Status
Not open for further replies.
Top