ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10

அங்கு மரகதவல்லி அவனிடமிருந்து வந்த மெசேஜைப் பார்த்து விட்டு, 'இப்ப போறதா வேணாமா?' என யோசனையில் அமர்ந்திருக்க, அவனிடமிருந்து சாப்பிடும் சுயமி வந்தது.

"சாப்ட்டு கூப்பிட வர்றீங்களா? இல்ல நா கோவிலுக்கு கிளம்பி போய் வெய்ட் பண்ணவா?" அவளே சமாதானம் செய்யும் பொருட்டு கேட்க,

"அப்ப இங்க வரமாட்ட?" என்றான் வாய்ஸ் மெசேஜில்.

"அதான் சாப்பிடுறீங்களே பின்ன என்னதுக்கு நா அங்க வரணும்?" என்றனுப்பினாள். அவன் அவளை தானே சாப்பாடு வாங்கி வர சொல்லியிருந்தான் அதனால் அப்படி அனுப்பினாள்.

"அப்ப உன்மையாவே உன்ன சாப்ட தான் கூப்பிடுறேன்னு நினச்சுட்டியா?" என்றவன் பதிலில் போனை கொண்டே நங்கு நங்கென தலையில் தட்டிக் கொண்டாள்.

'உனக்கு பேச தெரியலையா இல்ல அவருக்கு பேச தெரியலையாடி? ஹிண்ட் குடுத்துட்டே இருப்பியா நீ?' அவளை அவளே திட்டிக் கொண்டிருக்க,

"பாதில ஓடித்தான் பழக்கமா உனக்கு?" என்றான் அடுத்த மெசேஜாக.

'பழசை கேட்கிறானோ? சாப்பிடும் போதும் வாய பாரு' என நினைத்தவள், "நீங்க பேசினதுக்கு என்னைய என்ன பதில் சொல்ல சொல்றீங்க?" என அனுப்பினாள்.

"சாப்பிடுங்க உங்களுக்கு இல்லாததான்னு கேக்கலாம், இல்ல இப்ப முடியாது எல்லாம் கல்யாணதுக்கு அப்றந்தான்னு வெக்கப்படலாம், எதும் சொல்லாம இருந்தா நா என்னுன்னு நினைக்குறது"

"வாய் வாய் என்ன வாய் இவருக்கு, இந்த வாய்தான் வலிக்குமா வலிக்காதா? என்னன்னு நா இவர சமாளிக்க போறேன்?" என புலம்பி, "நீங்க கிளம்பி வாங்க நா கோர்ட் வாசல்ல வெயிட் பண்றேன்" என பதிலை அடித்து அனுப்பிவிட்டு நிமிர, மற்ற மூவரும் இவளைத்தான் பார்த்திருந்தனர்.

"என்ன பார்வை?" என்றாள் அவர்களை முறைத்துப் பார்த்து.

"பொதுவா பொண்ணுங்க தானே புருஷன, பாய் ஃப்ரெண்ட புலம்ப விடுவாங்க இங்க என்ன ஏசிபி உன்ன புலம்ப விட்டுட்டாரு?" என்றான் மதன்.

"ஏசிபி ரொம்ப ஸ்டிரிக்ட்டோ என்னவோ. வக்கீல் மேடத்த எப்டி லாக் பண்ணணும்னு தெரிஞ்சுருக்குமா இருக்கும். அதான் புலம்ப விட்டு வேடிக்கை பாக்றாரு" என்றாள் வைஷ்ணவி.

"ஹே எங்களுக்கு எப்ப இன்ட்ரோ குடுக்க போற? ட்ரீட் கண்டிப்பா வேணும்" என்றான் தர்ஷன்.

"நானே அந்த மனுஷன எப்டி சமாளிக்கன்னு முழிபிதுங்கி போய் உக்காந்துருக்கேன் நக்கலா தெரியுதா உங்களுக்கு?"

"இத்தன நாள் உங்கப்பாவ சமாளிக்க முடியாதுன்ன இப்ப ஏசிபிய சொல்ற, உங்கப்பா அவர போலவே மாப்பிள்ளையையும் பாத்துட்டாரா?" என்ற மதனிற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை, இவள் தான் அடித்துவிட்ட பொய்க்கெல்லாம் அந்த அப்பாவி தகப்பனை காரணியாக்கியிருந்தாளே! இவளை அல்லவா அவர்கள் சமாளிக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த ஏசிபி அப்படியில்லையே, விடாகண்டன் ஆயிற்றே, தலையை தாங்கி அமர்ந்து விட்டவளை புரியாமல் பார்த்தனர் மற்ற மூவரும்.

அவள் அலைபேசி அடிக்க துவங்கவும்‌ எடுத்துப் பார்த்தாள். அவன்தான், உடனே எடுத்தாள்.

"மரகதவல்லி என்ன பண்ற?"

"வந்துட்டீங்களா?"

"அங்க தான் வந்துட்ருக்கேன், வெளில வா‌ நீ"

"சரி வரேன், நீங்க வாங்க"

"நா வர்ற வர பேசிட்டு இருடி"

"பைக் ஓட்டும் போது ஃபோன் பேச‌ கூடாதுங்க. ரூல்ஸ் நீங்களே ப்ரேக் பண்ணாதீங்க, நா கேட்‌கிட்ட நிக்றேன் வாங்க" என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்க,

"என் பழைய காதலி மந்தாகினிட்ட இவ்வளவு அக்கறை இருக்காது தெரியுமா?" என்றதும், அவளுக்கு கண்கள் கலங்க துவங்கியது, அதற்குள் அவள் அம்மாவிடமிருந்து அழைப்பு வர,

"அம்மா கூப்பிடுறாங்கங்க, நா அவங்கட்டயும் சொல்லிட்டு கிளம்பணும் வைக்கிறேன்" என வைத்து விட்டாள். அவள் கலங்கிய குரலைக் கேட்டு திருப்திபட்டுக் கொண்டான் அந்த காவல்காரன்.

அவளும் தன்னைத் திடப்படுத்தி கொண்டு எழ, "அவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லனா இப்பவே உன் வீட்ல இல்ல அவர்ட்ட கூட பேசிடு மேகி" என வைஷ்ணவி அவள் தோளைத் தொட,

"என்னால அவர தவிர வேற யாரையும் இனி என் லைஃப்குள்ள கொண்டு வர முடியாது வைஷ்" என சிரிக்க,

"அப்றம் ஏன்டி அழுற மென்டல்" என்றாள் வைஷு கடுப்புடன்.

"அது அவர் பேச்சுக்கு பதில் பேச‌‌ முடியாதனால வருதுடி"

"பேசி தொலையேன் ஏன் கடிச்சா திண்ணிடுவாரு"

"ம்ம் முழுசா முழுங்கிடுவாரு" என சைகையால் சொல்லிக் கண்ணடித்து கைபையுடன் கிளம்ப, மீண்டும் அழைத்தார் அகிலா. திறந்த வாய் மூடாமல் பார்த்து நின்றாள் வைஷ்ணவி.

"என்னம்மா சொல்லு"

"என்ன சொல்லு. உன் மாமியார் சொல்லுறாங்க, பொண்ண கோவிலுக்கு பையனோட வர‌சொல்லிருக்கேன்னு. நீ கேட்டியாடி போட்டுமான்னு?"

"போயிட்டு வீட்டுக்கு வந்து சொல்லிருப்பேன்மா"

"செஞ்சுட்டு தான் சொல்லுவியோ?"

"இதுவரை அப்டிதானம்மா?"

"இனி அப்டி இருக்க கூடாது அத மொத பழகு. எதுனாலும் உன் மாமியார்ட்ட வீட்டுக்காரர்ட்டன்னு சொல்லிட்டு தான் செய்யணும்"

"ம்மா நீயும் உன் பங்குக்கு படுத்தாதம்மா"

"நா சொல்றத தான் கேக்க மாட்ட, அவங்க சொல்றதையும் எதுத்து பேசி காரியத்த கெடுத்துறாத. கல்யாணம் முடியுற வர கம்முன்னு இருக்கணும். நல்ல புள்ளையா போனமா வந்தமான்னு இருக்கணும்"

"ஏன் கல்யாணத்துக்கு அப்றம் நா பேசினா பரவால்லையா?"

"அதுக்கப்புறம் அவங்களே தெரிஞ்சுப்பாங்க, அவங்களுக்கும் பழகிடும்" என்றார் உண்மையாகவே, இவளுக்கு தான் கடுப்பாகியிருந்தது.

"நிச்சயமா நீ என்ன தவுட்டுக்கு தாம்மா வாங்கிருக்க. வை போன நா வீட்டுக்கு வந்து பேசுறேன் உன்ட்ட" என கோபத்தோடு வைத்துவிட்டு வந்து வாசலில் நிற்க, மகிழும் வந்து நின்றான் சரியாக, அதும் அவளை இடிப்பதுபோல் வந்து வண்டியை அவள் முன் நிறுத்த, பதறி இரண்டடி அவள் தான் விலகி நிற்க வேண்டியிருந்தது.

"பயப்டாத மரகதம், உன் மேல வண்டி ஏத்திட்டு அப்றம் நா யார் மேல் ஏறுறது?" என்றதும் கண்ணை விரித்து அவனை முறைக்க,

"என்ன?" என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி திமிராக.

"இப்ப என்ன கேட்டீங்க?"

"உன் மேல வண்டிய ஏத்திட்டா வண்டில யாரடி ஏத்துறது. சீக்கிரம் வா, கோவிலுக்கு போய்ட்டு நா ஸ்டேஷன் போணும்" என்றதும் அவள் குழப்பத்துடனே அவனைப் பார்த்தவாறு அவன் பின் ஏறி அமர்ந்தாள்.

"உன் ஸ்கூட்டிய என்ன செய்வ?"

"மதன் எடுத்துட்டு போயிடுவான்"

"அப்ப வீட்டுக்கு எப்டி போவ?"

"ஆட்டோ பிடிச்சு போயிடுறேன், இல்லனா அத்த கார்ல தானே வந்துருக்காங்க அவங்கள விட சொல்லிடுறேன்" அவள் அவனுக்கு வேலையிருப்பதாக சொன்னதால் சாதாரணமாகவே அதை சொல்ல,

"எனக்கு யாரையும் அப்டி பாதில விட்டு பழக்கம் இல்ல, சோ வீட்ல விட்டுட்டே போறேன்" என்றவனிடம் அடுத்து பேச முயலாமல் வாயை மூடிக்கொண்டாள்.

இருவரும் கோவிலுக்கு வந்திறங்க, பார்த்திருந்த மூன்று பெண்களும் வாயைப் பிளந்து விட்டனர் வெளிப்படையாகவே. முதல் முறையாக மகிழனை ஒரு பெண்ணுடன் பார்க்கும் அதிசயம் அவர்கள் முகத்திலேயே தெரிய, பல்லைக் கடித்தான், "காணாதத கண்டது கணக்கா மூணு பேரு பார்வையையும் பாரேன்" என முனங்கிக் கொண்டு தான் வண்டியை நிறுத்தினான், அவளும் பட்டென்று இறங்கி அவர்களுடன் சென்று நிற்க, மருமகள்கள் மூவரும் பேசத் துவங்கினர்.

"என்னம்மா பொண்ணு பாத்துருக்க நீ? வந்தாலே வான்னு நின்னு அடம்பிடிக்குறா. முடியாதுன்னா அழுறா. கிளம்பி குவாட்டரஸ் வந்துட்டா, நா அங்க இருக்கேன்னு நீதான் சொன்னியா? இப்படிலாம் பண்ணா எனக்கு பிடிக்காதுன்னு சொல்ல மாட்டியா? இதே லாஸ்ட்டா இருக்கணும் ஒவ்வொரு தடவையும் இப்டி பொறுமையா போயிட்ருக்க மாட்டேன் சொல்லிட்டேன். சீக்கிரம் வா எனக்கு ஸ்டேஷன் போகணும்" என்றவன் பேச்சைக் கேட்டு மொத்தமாக அதிர்ந்து தான் நின்றாள் மரகதவல்லி.

'கோர்த்து விடுறதுல மன்னனா இருக்காறே, இவங்களாம் என்னைய இப்ப என்ன நினைப்பாங்க' என பாவமாக விழித்தாள் மரகதவல்லி.

"டேய் புள்ளைக்கு பூ வாங்கி குடுக்கலையா? கல்யாணம் முடியுற‌வர தினமும் அவளுக்கு பூ வாங்கி குடுக்கணும் நீ, போய் பூ வாங்கட்டு வா மொத"

"ஏன் அதுக்கப்றம் நீங்க வாங்கி குடுத்துக்குறேன்றீங்களா?" என அவன் கடுப்பாக கேட்கவும்,

"இருக்கட்டும் அத்த நா நானே வாங்கிட்டு வரேன்" என மரகதவல்லி நகரப் போக,

"மரகதம் அதான் அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்தாச்சுல்ல இந்த பூ வாங்கி குடுக்குறதுல என்ன எனக்கு பெரிய கஷ்டம்?" என சொல்லியே அவன் நகர, அவள் பெருமூச்சுடன் இவர்களைப் பார்க்க,

அவன் சென்றதை உறுதிப் படுத்திய வாசுகி, "என் சமத்து புள்ள, இப்படிதான் அவன வழிக்கு கொண்டு வரணும் சரியா. யாருக்கும் அடங்க‌ மாட்டியான் கண்ணு எப்டியாது உன் கைக்குள்ள வச்சுக்கத்தா அவன. ஒண்டியா யாரும் அண்டாம எனக்கென்னன்னு ஆசபாசம் இல்லாம ஒரு வாழ்க்கை வாழுதியான் நீதேன் இனி அவேன நல்லா பாத்துகிடணும். உன் பொறுப்புதேன். எப்படியாவது அவன உன்ன லவ்வு பண்ண வச்சுபோடு கண்ணு" என்றதும் மறுபடியும் கண்ணை விரித்து நின்றாள்.

'அவர் ஒரு ரகம்னா அவர் குடும்பமும் ஒரு ரகம் போலயே' என்று தான் பார்த்திருந்தாள்.

"நீ ஒன்னும் கவலையேபடாத உனக்கு அவன‌ ரொம்ப புடிச்சுருக்குன்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு. அதேன் விடாபிடியா நின்னு கூட்டியாந்துருக்க, அதேன் அவனையும் உன் பக்கம் வரவைக்க தினமும் பூ வாங்கி குடுக்க சொல்லிருக்கேன், அவன உன் பக்கம் விரட்டி விட நானும் என்னால ஆனதலாம் செய்றேன் கண்ணு" என அவள் கன்னம் பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்க அதைப் பார்த்தவாறே போனில் யாருடனோ பேசியவாரு வந்தான்.

வந்தவன் அம்மா கையில் பூவை நீட்ட, "அவ கையில குடுடா" என்றதும், முறைத்துக் கொண்டே அவள் கையில் கொடுத்தான், 'என்ன நடிப்புடா சாமி' என நினைத்துக் கொண்டு தான் வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள், அதையும் பார்த்தே இருந்தான் அந்த மரகத கள்ளன்.

பின் எல்லாருமாக கோவிலினுள் செல்ல இவனைக் கண்டதும் கோவில் கமிட்டி ஆட்கள் ஓடிவந்து அழைக்க, அவர்களோடு மரியாதையாக ஓரிரு நிமிடங்கள் நின்று பேசியவன், அவர்களே அவனை ஸ்பெஷல் தரிசனத்தில் அழைத்துச் சென்று சாமி முன் நிறுத்தவும், குடும்பமாக மீனாட்சியை வணங்கி வெளி வந்தனர்.

மறுபடியும் அவனுக்கு அழைப்பு வர, "சொக்கு ஸ்பாட் போயிட்டீங்களா?" என பேசி செல்ல,

"ஆமா சார், காணாம போன மூணாவது பையன் தான், கொலை அதேபோல தான் நடந்துருக்கு"

"ரைட் மேல என்ன செய்யணுமோ செய்ங்க பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்" என வைத்தவன்,

"மரகதம் சீக்கிரம் வா" என வேகமாக வெளியேற,

"வீட்ல கொண்டு விட சொல்லு. பாத்து போய்ட்டு வா. உன்ன அவனோட சேத்து வைக்க வேண்டியது என் பொறுப்பு" என அவர் வாக்கு வேறு தர, மொத்தமாக தலையை உருட்டி வைத்து கிளம்பினாள்.

"எதுக்கு அப்டி சொன்னீங்க?" என்றாள் திரும்பி செல்லும் வழியில்.

"எப்டி மரகதம்?"

"நா அடம்பிடச்சு வந்தேன்னுலாம்?"

"பின்ன நா கூப்பிட்டும் வரலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?" அவனை அப்படியே ரெண்டு கொட்டு கொட்டும் வேகம் தான் ஆனாலும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளை அவள் வீட்டின் முன் இறக்கி விட்டவன் அப்படியே கிளம்பப் போக, "உள்ள வந்துட்டு போங்க" என்றாள்.

"கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தான் இங்க வரணும். அதுக்கு முன்ன வர்ற ஐடியா இல்ல எனக்கு. பாக்கலாம் பை மரகதம்" எனக் கிளம்பியவனைப் பார்க்க மாட்டான் என தெரிந்ததால் முடிந்த மட்டும் முறைத்தாள். ஆனால் அவன் அவளை கண்ணாடி வழி பார்த்துக் கொண்டே தான் சென்று மறைந்தான், அவன் உதட்டில் குறும்பு சிரிப்பு புதைந்து கிடந்தது.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11

உள்ளே வந்த மகளிடம், "மாப்ளைய எங்கடி? அவரோட தான் வாரன்னு உன் மாமியார் சொன்னாங்க" என வாசலை வேகமாக எட்டிப் பார்த்து விட்டுக் கேட்டார் அகிலா.

"விட்டுட்டு கிளம்பிட்டாங்கம்மா. கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம வீட்டுக்குள்ள வரக் கூடாதாம்" என்றவள் கைபையை அப்படியே சோஃபாவில் போட்டு விட்டு சாய்ந்தமர்ந்தாள்.

"கூறுகெட்ட கழுத அவர் என்ன சொன்னாலும், ஒரு நிமிஷம் நில்லுங்க அம்மாவனாலும் வெளில வர சொல்லுதேன்னு எனக்கு சத்தம் குடுத்துருக்க வேணாமா நா வந்து ரெண்டு வார்த்தை பேசிருப்பேன்ல? கல்யாண தேதியே குறிச்சாச்சு இன்னும் நாங்க மாப்ளைய நேர்ல பாக்க முடியல. அவருக்கு இருக்க வேலைல அதுக்குலாம் நேரமிருக்குமா இப்டி வந்த நேரத்துல பாத்தா தான உண்டு" என அவர் புலம்பிக் கொண்டு நடக்க,

"புலம்பாதம்மா போய் தண்ணி கொண்டா போ. கல்யாணத்தன்னைக்கு முன்னாடி சேர்ல உக்காந்து அவர மட்டுமே கூட நல்லா உத்து உத்து கூட பாரு நா தடுக்க மாட்டேன்"

"கிறுக்கி கணக்காவே பேசு. இதுல நா எல்லாத்தையும் உன் கைல கொண்டு வேற குடுக்குறேன்" என்றாலும் உள்ளே சென்று தண்ணீரை கொண்டு வந்துக் கொடுத்தார்.

"பாக்கலன்னு புலம்புரியேன்னு ஐடியா குடுத்தா அதுக்கும் திட்டுற"

"அவங்க என்னமு சொன்னாங்களா?"

"யாரும் எதுவும் சொல்லல, கல்யாண தேதி எப்பவாம்?"

"ஆவணி பதினொன்னு, ஆனா முடிவு மாப்ள தான் சொல்லணுமாம்"

"சரி சொல்லட்டும்"

"அப்றம் நீ மாப்ளைய லவ் பண்ணணுமாம்"

"ஓகே" என்றுவிட்டு, "எது? கல்யாணமே பண்ணிக்க வைக்கப் போறீங்க பின்ன என்ன லவ்வு?" என்றாள் புரியாமல்.

"அது உங்க ஜாதகத்துல" என அவர் அனைத்தையும் சொல்ல,

அவளுக்கு திக்கென்றிருந்தாலும், "கல்யாண வேலைய மட்டும் பாருங்க, எதையாவது செஞ்சு என்ன அவர்ட்ட கோர்த்து விட்டு வேடிக்கைப் பாக்காதீங்க சொல்லிட்டேன்" என எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

"என்ன சொக்கு இன்வெஸ்டிகேட் பண்ணிட்டீங்களா? பேரண்ட்ஸ் பாடிய கன்பார்ம் பண்ணிட்டாங்களா?" எனக் கேட்டுக் கொண்டே தான் வண்டியிலிருந்து இறங்கினான் மகிழ்.

"ஆமா சார், எல்லாம் முடிச்சு இப்பதான் பாடி ஜிஹச் கொண்டுப் போறாங்க"

"ரைட்" என்றவன் அந்த இடத்தை சுற்றி பார்வையால் ஆராய்ந்தான்.

"இந்த பசங்க படிச்ச கேகேவி ஸ்கூல்ல பெரிய இஷ்யூ ஆகிட்ருக்கு. பேரண்ட்ஸ்லாம் போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஸ்கூல் சைட்ல இருந்து இன்னும் எந்த பதிலும் வரல, ஆனா ப்ரொடக்ஷன் மட்டும் கேட்டு லெட்டர் ஃபேக்ஸ் வந்துருக்கும் போல சார்"

"ஓ! எனக்கின்னும் கால் வரல வரட்டும் பார்க்கறேன், இங்க யார் பாத்து கால் பண்ணது? எதுக்கு ஹைவே பாத்து சூஸ் பண்றான்? எப்டியும் ட்வன்டி ஃபோர் அவர்ஸும் பஸ், லாரி போக வர‌ இருக்கும், கில்லர் எப்டி வந்து போட்டுட்டு போறான்?" என நாடி தடவி அவன் யோசிக்க,

"இத்தோட இது நிக்குமா சார்?" என்றான் சொக்கலிங்கம்.

"யாருக்கு தெரியும். அவங்க ஃபிரண்ட் சர்க்கிள்ல விசாரிக்க சொன்னனே விசாரிச்சீங்களா?"

"இவனுங்க ஒரு கேங்கா தான் சுத்துவானுங்களாம் சார். எட்டு பேர் உண்டு போல, எப்பவும் சேர்ந்து தான் சுத்துவானுங்களாம். ஒழுங்கா படிக்றதில்ல போல, வாத்தியார் மிரட்டுனாலும், க்ரூப்பா சேர்ந்துட்டு அவர மிரட்டுறதுன்னு இருப்பானுங்களாம் அதனால் இப்ப‌ யாரும் கண்டிக்றது கூட இல்ல போல. ஸ்கூல்ல, டீச்சர்ஸ்ட்ட, அப்றம் கூட படிக்குற பசங்கன்னு எல்லார்கிட்டயும் விசாரிச்ச வரையில நல்ல அபிப்ராயம் இல்ல சார் இந்த பசங்கட்ட"

"அந்த எட்டு பேர்ல, மூணு பேர முடிச்சு விட்டுட்டான் ஒருத்தன்னு மத்த அஞ்சு பேருக்கும் தெரியும்ல இப்போ?"

"மீதி அஞ்சு பேர்ல நாலு பேர் தான் அரண்டு கடக்கானுங்க. ஒருத்தன் நாலு மாசம் முன்னவே உடம்பு சரியில்லாம இறந்துட்டானாம்"

"அந்த நாலுல எம்.எல்.ஏக்கு சம்பந்தப்பட்ட பையனும் இருக்கானா?" என்றதும் சொக்கு விழிக்க,

"அடுத்து அத விசாரிங்க. நாலுபேர் பேரண்ட்ஸ்கும் அலர்ட் குடுங்க. அவங்க பசங்கள சேஃபா பாத்துக்க சொல்லுங்க. எம்.எல்.ஏக்கும் இவனுங்களுக்கும் என்ன தொடர்புன்னு தெரியணும்"

"ஓ.கே சார்"

"சார் ப்ரஸ்" என சொக்கு பின்னால் கண் காட்ட, போலீஸ் தடுப்பின் வெளியே நின்றவாறு இவனைத் தான் அழைத்துக் கொண்டிருந்தனர்.

"ம்ம், குற்றவாளி கிடைக்கலன்னு சொன்னாலும் நம்புவாங்களா சொக்கு?"

"டவுட் தான் சார்"

"உண்மைய சொன்னா கமிஷனரே நம்ப மாட்றாரு, நா என்னவோ பைல வச்சுட்டே கில்லர காப்பாத்துற மாதிரி பேசுறாரு, அப்றம் இவங்க பேசுறதுக்கென்ன"

"ஆனா ஒன்னு மட்டும் கன்பார்ம் சார்"

"என்ன சொக்?" என கை சட்டையை அவன் மேலேற்றி விட,

"இல்ல ஒன்னுமில்ல சார்"

"ஏதோ சொல்ல வந்தீங்களே? நீங்க சொல்லலனா நானா நீங்க என்ன சொல்ல வந்துருப்பீங்கன்னு இமேஜின் பண்ணிக்க வேண்டிய இருக்கும் சொக்கு" அவன் பேசிக் கொண்டே ப்ரஸ் மக்கள் இருந்த திசைக்கு நடக்க,

"சார், நீங்க இந்த கேஸ போனா போகுதுன்னு தான் டீல் பண்றீங்கன்னு தோணுது" என்றான் சொக்கலிங்கமும் உடன் நடந்தவாறு,

"அப்டியா தோணுது?"

"ஆமா சார் நிறுத்தி நிதானமா ஜாலியா டீல் பண்றீங்க. போன வாரம் முடிஞ்ச அந்த ரேப் அண்ட் மர்டர் கேஸ்ல டூ அவர்ஸ்ல அக்யூஸ்ட்ட புடிச்சீங்க. இதே மாதிரி நீங்க ரெண்டு வருஷம் முன்ன ஒரு கேஸ்ல அசால்ட்டா டீல் பண்ணீங்க, அப்றம் இப்ப அதே மாதிரி பண்றீங்க"

"முழுசா சொல்லி முடிங்க சொக்கு"

"எனக்கென்னவோ மிச்சமா உள்ளவனுங்களும் சாவட்டும் விட போறீங்களோன்னு தோணுது"

"இப்டி, கூட இருக்குற நீங்களே வெளில நாலுபேர்ட்ட சொல்லுங்க, நானும் தலைல துண்டப் போட்டுட்டு போய் வீட்ல உக்காந்துப்பேன்" என்றான் சீரியஸான முக பாவனையுடன்.

"இல்ல சார்"

"இல்லன்னு தான் நானும் சொல்றேன்" என இரு கையையும் விரித்து காட்டிவிட்டு நடந்து பிரஸ் முன் வந்து நிற்க, சொக்கலிங்கம் விலகி சென்றுவிட்டான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

"சார் இந்த தொடர் கொலைகளுக்கான மோட்டிவ் என்ன?"

"ஒரு பிரண்ட்ஸ் கேங்க்குள்ள தான் ஒவ்வொருத்தரா காணாம போய் பின்ன கொல்ல படுறாங்க, மேபி அது அந்த ஃபிரண்ட்ஸ்குள்ள எதாது பிராப்ளமா இருக்கலாம், இல்ல இந்த க்ரூப்பால வேற யாருக்காவது ப்ராப்ளம் நடந்துருக்கலாம் அவங்க பழிவாங்க இப்டி பண்ணலாம். கில்லர் கிடைச்சா தான் எதையும் உறுதி பண்ண‌ முடியும்"

"மூணு கொலை நடந்தும் நீங்க எந்த ஆக்ஷனும் எடுத்த மாதிரி தெரியலையே சார்?"

"க்ளூவே இல்லயே. இருந்தாதான கண்டுபிடிக்க முடியும். நாங்களும் ட்ரை பண்ணிட்டே தான் இருக்கோம்"

"எதுக்காக கில்லர் இத சைகோ கொலை மாதிரி பண்றாங்க?"

"மாட்டிக்காம இருக்க தான்"

"அப்போ இது சைகோ கொலை இல்ல அப்டிதான சார்?"

"அதும் கில்லர் கிடைச்சா தான் சொல்ல முடியும். இப்போதைக்கு அடாப்ஸி ரிப்போர்ட் வச்சு பாக்கும் போது, மனரீதியா பாதிக்கபட்ட ஒருத்தரால தான் இப்படி கொலைகள் செய்ய முடியும்னு டாக்டர் சொல்றாரு"

"இது தொடருமா சார்?"

"தொடராம இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்துட்‌ருக்கோம். பேரண்ட்ஸ் கூடவும் மீட்டிங் அரேஞ் பண்ணிருக்கோம்"

"இறந்த பசங்களோட கேகேவி ஸ்கூலுக்கும் இந்த கொலைகளுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமா சார்?"

"இதுவரை வந்த விசாரணைல, பசங்க சைட் தான் ப்ராப்ளம்னு சொல்லிருக்காங்க, பட் அகைன் ஒருக்கா அந்த ஸ்கூல்ல ஒரு இன்வெஸ்டிகேஷன் வச்சு தான் முடிவுக்கு வரணும்"

அவனுக்கு கமிஷனரிடமிருந்து அழைப்பு வரவும், "பை கைஸ்" என விலகி வந்து அழைப்பை ஏற்றான்.

"பாண்டியன், என்ன சிட்யுவேஷன்?"

"சார் என்கொய்ரி போயிட்ருக்கு"

"இப்டியே சொல்லிட்ருங்க, என்னால எனக்கு வர்ற போனுக்கு தான் பதில் சொல்ல முடியல"

"சார் ரஷ்ஷப் பண்ணிட்டு தான் இருக்கேன்"

"சரி அந்த ஸ்கூலுக்கு ப்ரொடக்ஷன் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க, ஈவ்னிங் ஒரு மீட்டிங் அரேஞ் பண்ண சொல்லிருக்கேன் கால் வரும்"

"ஓகே சார்" என அவன் வைக்க, அவன் பேசுவதெல்லாம் அவருக்கு நக்கலாகவே தெரிந்தது.

இங்கு அவன் வீட்டில், "நிச்சயித்துக்கு நாள் குறிக்கணும்னு இல்லாம இவேன் என்னட்டி கொலை கொள்ளைன்னு திரியிறியான். இனி மாலை கழுத்தாச்சே இப்டி விஷயத்தெல்லாம வேற யாரையாவது பாக்க சொல்லிட்டு, இவேன் செத்த செவனேன்னு இருக்கலாம்ல" என டீவியில் பாண்டியனின் பேட்டியை பார்த்து விட்டு வாசுகி புலம்ப,

"உங்க மூத்த புள்ளைக்கு ஃபோன் போட்டு அத அப்டியே சொல்லத்தானத்த?" என ஷீலா சிரிக்க,

"நக்கலாட்டி பண்ணுத? இவன லவ்வு பண்ண வைக்கணும்னு சொன்னீகளே என்னட்டி பண்ண போறீக அதுக்கு. அவேன லவ் பண்ண விட்டா இந்தமாதிரி வேலையெல்லாம் பாக்கமாட்டியான்ல?" என அவர் ஷீலாவிடம் சண்டைக்கு செல்ல,

"ஏட்டி என்ன கோட்டி கணக்கா பேசுறவா? அங்க புள்ளைய பறிகொடுத்தவம்லாம் என்ன நிலமைல இருப்பான்‌. நீ பாட்டுக்கு உன் மகேன் கலியாணந்தாம் உலகத்துலயே முக்கியமாட்டும் பேசிகிட்டு கடக்க?" என்றார் முன்னறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பரஞ்சோதி ‌

"அங்க வேற போலீசே இல்லாதமாறித்தேன் பேசுதீக? என் புள்ள ஒருத்தந்தேன் தான் அங்க வேலை பாக்கானாக்கும்? இருந்திருந்து இப்பதேன் என் புள்ளைக்கு கல்யாண கூடி வந்துருக்கு, அதுக்கு தீட்டாக்குல எதுவும் வரகூடாதுன்னு நா வேண்டிகிட்டு கடக்கேன் உங்களுக்கென்ன ஊர் நியாயம் பேசிட்டு உக்காந்துருப்பீக, பெத்தவளுக்குத்தான வலியும் வேதனையும்" எனத் திட்டிக்கொண்டே வரவேற்பறை நடந்துவிட,

"தப்பிச்சுட்டீக க்கா" என விசாலாட்சி சிரிக்க, ஷீலாவும் சிரித்துக் கொண்டாள்‌.

"ஆமா இவ மட்டும் வலிச்சு பெத்தா மத்த எல்லாரும் கடைல வாங்கியாந்து போலீஸ் ஸ்டேஷனுல வேலை பாக்க உட்ருக்காங்க" என்றார் பரஞ்சோதி நக்கலாக.

"இப்ப என்னங்கேன்? புள்ள வீடு தங்காம ஓடி திரியிறியான் பொண்டாட்டி புள்ளைகன்னு ஆனாத்தேன் கொஞ்சம் வீட்டு நினைப்பும் வரும் அவேனுக்காகவும் வாழுவான்னு நா சொல்லுதேன் கூட கூடவே பேசுதீக" என மூக்கை சீந்த துவங்கவும்,

"சரி நா கூட கூட பேசல, நீ போய் உன் மவேன் கூடவே பேசு போ. ஒரு டிவிய பாக்க விடுதாயில்ல" என எழுந்து வெளியே சென்று விட்டார் பரஞ்சோதி.

"நீங்க என்னட்டி செய்யலாம்னு இருக்கீக?" என மீண்டும் சமையலறைக்குத் திரும்ப,

"அத்தே இன்னைக்கு தான ஒரு ப்ளான் பண்ணிருக்கோம், நாளைக்குக்கு எதாது அமையும் இருங்க யோசிப்போம்" என விசாலாட்சி சொல்ல,

"நீங்க ரெண்டு பேரும் சாப்பிட தாம்டி லாய்க்கு. உங்கள செய்ய வைக்க நாம்ல தாரு குச்சிய வச்சி குத்திட்டே இருக்கணும்" என அங்குமிங்கும் நடந்தார் வாசுகி,

"என்னம்மா போன காரியம் என்னாச்சு?" என வரதன் இவர்கள் சத்தத்தில் வந்தமர,

"பத்திரிகைக்கு டிசைனு விசாரிக்க சொன்னனே செஞ்சியா நீயி?" என்றார் அவனிடம்.

"அதெல்லாம் உன் மூத்த புள்ளைய பாக்க சொல்ல மாட்டியா? அவேன் கல்யாணந்தான அப்ப அதெல்லாம் அவேந்தான பாக்கணும்? என் கல்யாணத்துக்கு நாந்தான பாத்தேன். எனக்கே ரெண்டு நாளு தான் லீவு, அதுலயும் அத பாத்தியா இத பாத்தியான்னுட்டு இருக்க, போம்மா" என்றவன், "ஷீலா டீ குடு" என அவளை அழைக்க,

"திமிரெடுத்தவன் தலைல கொண்டு கொட்டுட்டி அந்த டீய"

"ம்மா"

"கத்தாதலே, ஒரு வேலைக்கு லாய்க்கில்ல இதுல சவுடாலு பேச வந்துருவியான்" என்றவர் வெளியே செல்ல, அரசு அப்போது தான் உள்ளே வந்தான்.

"உன்ட்ட மண்டபம் விசாரிக்க சொன்னேம்லலே நீயாவது பாத்துட்டு வந்தியா இல்ல நீயும் அடுத்தவன் கல்யாணதுக்கு நா ஏன் செய்யணும்னு இருக்கியா?"

"காலுல வெண்ணிய கொட்டுனாக்குல நிக்காதம்மா. இன்னைக்கு தான தேதி குறிக்கவே போன நீ? தேதிய சொன்னாத்தேன் மண்டபத்துல அந்த தேதிய சொல்லி கேக்க முடியும்" என்றவன் அவரை கடந்து உள்ளே செல்ல,

"அம்மா அண்ணனுக்கு கல்யாணம் முடிவாகவும் ஓவராத்தேன் குதிக்குதுடா‌. கைல பிடிக்க முடியல" என்றான் உள்ளேயிருந்த வரதன்.

"ஆமாலே அப்டின்னே வச்சுக்கோங்க, இனி உங்கள எதுக்கும் நம்பினா கேளுங்க. என் புள்ளைக்கு நா எப்படியும் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றவர் போனை எடுத்துக் கொண்டு பின்வாசலுக்கு செல்ல,

"ம்மா நில்லும்மா, பொறுமையா செய்யலாம்னு சொன்னா அதுக்குலாம் மூஞ்ச தூக்குவியா நீ?" என அவரை நிறுத்த முயன்றான் வரதன்.

"ம்மா தேதிய‌ சொல்லு நாளைக்கு காலைல போய் பாத்து அட்வான்ஸ் குடுத்துடுதேன்" என கத்தினான் அரசு, எதற்கும் நிற்காமல் பின் சென்று விட்டார் வாசுகி.

டீயைக் கொண்டு வரதன் கையில் நீட்டிய ஷீலா, "பேச தெரியலனா பேசாதீங்கன்னு எத்தன தடவ சொல்லணும் உங்களுக்கு? எந்த இடத்துல என்ன பேசணும் எப்டி பேசணும்னு மொத படிங்க" என முறைத்து விட்டு அவளும் பின் வாசல் சென்றாள்.

"ஆவணி பதினொன்னு தான் தேதி. காலைல போனவங்கட்ட சாயந்தரம் வர கேக்காம இருப்பீங்கன்னு அத்த நினைச்சருக்க மாட்டாக. ஆனா உங்களுக்கு அவ்வளவு அக்கறை கிடையாதுன்னு எனக்கு தான தெரியும்" என்றுவிட்டு விசாலாட்சியும் பின் வாசல் செல்ல,

"என்னடா ஒன்னு கூடிட்டாங்க" என வரதன் அரசுவிடம் கேட்க,

"இதென்ன புதுசாவா நடக்கு எப்பவும் நடக்குறது தான? கூட்டணில ஐக்கியமாகலனா நீயும் நானுந்தேன் தனி தீவா கடக்கணும் பாத்துக்கோ, என்னத்தையாது பேசி வாங்கி கட்டிக்காத. அதும் அம்மா அழுதமாதிரி எதாவது அண்ணனுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ, அவேனே உன் மேல பொய் கேஸு போட்டு தூக்கிட்டு போய் வெளுத்து விட்ருவியான். ஜாக்கிரத" என்றுவிட்டு அரசுவும் அவனறைக்குள் சென்றுவிட, டீயுடன் முகத்தை சுருக்கிக் கொண்டு அமர்ந்து விட்டான் வரதன்.

மருமகள்கள் இருவரும் பின் வாசல் செல்கையில், "நல்ல புள்ள மதினி, என் மவன பேசி கூட்டிட்டு வந்துட்டாளே, அது எம்புட்டு பெரிய காரியம் தெரியுமா? அவனுக்குலாம் இவ தான் சரின்னு நானே இப்பதான் சந்தோஷமா இருக்கேன், பிள்ளைய போட்டு பேசாத வைக்காதன்னு எதும் சொல்லாதீக" என வாசுகி அகிலாவிடம் தான் பேசிக் கொண்டிருந்தார்.

"அவ நா சொன்னதும் கேட்டுட்டுதேன் மறுவேலை பாப்பா நீங்க வேற மதினி"

"கோச்சுகிட்டு வந்துட்டாகன்னு பின்னாடியே வந்தா அவுக புது பிரண்டுட்ட மருமக புராணம் படிக்கத பாத்தியா விசாலா" என ஷீலா சத்தமாக சொல்ல, வாசுகி அவள் சத்தத்தில் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் திரும்பி போனில் பேசத் துவங்கினார்.

"அடுத்து என்ன மதினி செய்யலாம். ரெண்டு பேரையும் அடிக்கடி பேச வைக்கணும்ல"

"இவளும் கல்யாணம் ஆக போற புள்ள மாதிரியா இருக்காங்கீக, பேப்பரும் பென்சிலுமா வட்டம் போட்டுட்டே திரியிறா"

"அத்த அவங்கள மாப்ள வீடு பாக்க எப்ப வாராகன்னு கேளுங்க" என நடுவில் ஷீலா எடுத்துக் கொடுக்க,

"ஆமா நீங்க எப்ப எங்க வீடு பாக்க வாறீக?" என கேட்டார் வாசுகி.

"அடுத்த வாரத்துல‌ வரட்டுமா?"

"ம்ம் மொதயே சொல்லுங்க, புள்ளைக லீவு போட்டுகிடுங்க"

"சரிங்க மதினி. அப்ப ஆவணி பதினொன்னு முடிவு பண்ணிக்குவோமா?"

"ஆமா நானும் வீட்டுக்கு வந்து பாத்தேன், நல்ல சித்த யோகம் உள்ள முகூர்த்த தேதி அதேன். அவனுக்கு ஃபோன போட்டா, வேலையா இருக்கேன் எந்த தேதி வேணா உன் இஷ்டம் போல வை, நீ பாத்து நடத்தி வைக்குறதுதேன்னு சொல்லிட்டியான். அதனால அதையே முடிவு பண்ணிக்குவோம்"

"சரிங்க மதினி, இவளுக்கும் தோதான நாளுதேன் அது. சரியாத்தேன் இருக்கும்"

வெளியே வந்து தனது கைப்பையை எடுத்துக் கொண்டு உள்ளே திரும்பும்வரை அவர் பேச்சை கேட்டவள், அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.

"அவர் பேசுறத பாத்தா கல்யாணதுக்கு முன்னவே ஃபர்ஸ்ட் நைட்ட முடிச்சுருவாரு போலயிருக்கு இதுல இவங்களாம் சேந்து எங்கள லவ்வு பண்ண வச்சு, தோதான நாள் வேற பாத்து சேத்து வைக்றாங்களாம். இங்குட்டும் பேச முடியாம அந்த முரட்டு பீஸயும் சமாளிக்க முடியாம என் பொழப்பு தான் சிரிப்பா‌ சிரிக்குது" என இவள் புலம்பிக் கொண்டிருக்க, அழைத்து விட்டான் அந்த காவலன்.

"மரகதம்" அவ்வளவு குதூகலமாக தான் ஆரம்பிப்பான், அவளை வம்பிழுப்பதில் தான் அவனுக்கு அன்றைய நாள் ஆரம்பிப்பதும் முடிவதும்.

"சொல்லுங்க" பவ்யமான குரல் அவனுக்கென்றே உள்ளிருந்து வந்துவிடுகிறது அவளுக்கும்.

"என்ன பண்ற மரகதம்?"

"நாளைக்கு ஒரு கேஸ் ஹியரிங் வருது, நோட்ஸ் எடுத்துட்ருக்கேன்"

"என்ன கேஸ்?"

"அது அந்த வத்தலகுறிச்சி கேஸ், குழந்தைக்கும், பொண்டாட்டிக்கும் விஷம் வச்சு கொண்ணுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிட்டானே அந்த கேஸ்"

"எல்லாமே ரெடி பண்ணிருப்பியே? அவன தூக்குல போடுறளவுக்குப் பேசி நாளைக்கு தீர்ப்பெழுத வச்சுருவ தான?"

நக்கல் பண்றானோ என நினைத்தாலும், "அவனுக்கு அப்படி தண்டனை வேணுந்தான? இவன்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும். அவனோட சுகத்துக்காக பெத்த புள்ளைய கொல்லுவானாமா?" என நொடியில் அவள் வக்கீல் மோடுக்கு மாறிவிட,

"மரகதம்" என்றவனின் அழைப்பில்,

"சொல்லுங்க" என குரலை தாழ்த்தி கொள்ளவும் சிரித்துக் கொண்டான்,

'சரியான ப்ராடு கள்ளி. நல்லா நடிக்குறா' என நினைத்தவன், "நா ஒரு கேஸ் சொல்றேன் அதுக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு சொல்லுறியா மரகதம்?" என்றான்.

'என்னமோ வில்லங்கமா தான் கேக்க போறாரு' என அவளுக்கு தெரிந்தது, ஆனாலும், "சொல்லுங்க" ‌எனக் கேட்டாள்.

"லவ் பண்ணுறேன்னு ஏமாத்துற பொண்ணுங்க, லவ் பண்ணிட்டு பாதில அப்ஸ்காண்ட் ஆகுற பொண்ணுங்களுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?" என்றதும் கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

"மரகதம், மரகதம், மரகதவல்லி" என அவன் ஏலம் விடத் துவங்கவும்,

"இருக்கேங்க, இதுக்குலாம் சட்டத்துல இடமில்ல, போனது போனது தான். உங்களுக்குன்னு வர்ற வைஃப்ப லவ் பண்ணுங்களேன்"

"பொண்டாட்டிய கசமுசாவே பண்ணுவேன் லவ் பண்ண மாட்டேனா? நல்லா பண்ணுவேன் மரகதம், ஆனாலும் அப்டி ஏமாத்துறவங்கள பத்தி நீ என்ன நினைக்குற?"

"நா அதெல்லாம் நினைக்குறதில்லங்க, சோ எனக்கு தெரியாது"

"கசமுசாவ பத்தி உனக்கு எதுக்கு தெரியணும்? எனக்கு எல்லாமே தெரியும் நா எல்லாத்தையும் பாத்துக்குறேன்"

"முடியலங்க என்னால"

"நா இன்னும் ஒன்னுமே பண்ணலயேடி. போன்ல உன்ன என்ன பண்ண முடியும்? நேர்ல கூப்பிட்டாலும் நீதான் பிகு பண்றியே"

"உங்க வாய தாங்க சமாளிக்க முடியலன்னு சொல்லுறேன்"

"அப்ப மத்தபடி என்ன சமாளிப்பேன்ற?"

"நா தூங்கட்டுமா?"

"மணி எட்டு தாண்டி ஆகுது"

"ஆனா நா டயர்டாகிட்டேன். எனக்கு தூக்கம் வருது"

"சரி தூங்கு, ஆனா பத்து மணிக்கு அலாரம் வச்சு எந்துச்சுரு"

"எதுக்கு?"

"நா தூங்குற வர கம்பெனி குடுக்கணும்ல மரகதம், நீதான பொண்டாட்டிய லவ்வு பண்ணுங்கன்னு சொன்ன?"

"கடவுளே"

"சரிடி, நா ஸ்டேஷன் வந்துட்டேன் அப்றம் பேசுறேன் ஓகேவா" என சிரித்துக் கொண்டே வைத்துவிட்டான்.

"உனக்கு நல்லா வேணும்டி. இதுவும் வேணும் இன்னுமு நிறைய வேணும்"

"நீ கேட்காமலே தருவேன் நீ கேட்டு தரமாட்டேனா?" என்ற உள் குரல் அவன் குரலில் கேட்க, "ஐயையோ என் மைண்ட் அவருக்கு ப்ரண்டாகிடுச்சு போலயே, வெளில ஒன்னே சமாளிக்க முடியல இதுல உள்ள மனசாட்சியும் அவர மாதிரி பேச ஆரம்பிச்சா விளங்கிடும்" என்றவள் எழுந்து வெளியே செல்ல, அவள் அம்மா இன்னுமே வாசுகியிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது,

'நாங்க கூட இவ்வளவு நேரம் பேசிக்கல, அப்படி என்னதான் பேசுறாங்க' என அங்கேயே டிவியைப் போட்டு சோஃபாவில் அமர்ந்தாள்,

"அவளா ஒன்னும் செய்யமாட்டா மதினி, எல்லா வேலையும் கத்து குடுத்துருக்கேன் ஆனா நா இல்லனாதேன் செய்வா, நா இருந்தா குடிச்சுட்டு வச்ச டம்ளர் கூட நாலு நாள் ஆனாலும் அவ ரூம்லயே இருக்கும்"

'எந்த அம்மாவாது பொண்ணோட மாமியார் வீட்ல இப்டி பேசுவாங்களா? எனக்கு வாச்ச எதுமே சரியில்ல' என மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டு அகிலாவை முறைத்துப் பார்த்தாள்.

"முறைக்குறா‌ மதினி, பசிக்க ஆரம்பிச்சுட்டு போல இல்லனா இடியே விழுந்தாலும் பாத்துட்ருக்க வேலைய விட்டுட்டு வெளிய வரமாட்டா, அங்க என்ன மதினி நைட்டு சாப்பாடு?" என பேசிக் கொண்டே அவர் சமையலறைக்குள் செல்ல,

விறுவிறுவென பின்னே எழுந்து சென்றவள், "விளாம்பழமும் வேப்பங்குச்சியுந்தான் சாப்பாடாம், உன்னதான் செய்ய கூப்பிடுறாங்க அங்கையும் போய் செஞ்சு வச்சுட்டு வரியா?" என அவரிடம் கோபத்திலும் படபடப்பிலும் மெல்லவே கேட்டாள்,

"என்னடி குசுகுசுங்குற? தோசை ஊத்திட்டேன் போய் உக்காரு கொண்டாறேன். இல்லனா இந்த சட்னிய அரைச்செடு"

"மருமகளா? குடுங்க நா ஒரு வார்த்தை பேசுறேன்" என்று அந்தப் பக்கம் வாசுகி பரவசபடுவது இங்கு வரை இவளுக்கு புரிய, அவளுக்கும் பரபரப்பானது.

"இந்தா" என அகிலா நீட்டி விட்டு, "மரியாதையா பதில் சொல்லணும்" என்றும் சொல்ல,

முறைத்துக் கொண்டே, "அத்த" என்றாள்,

"வீட்டுக்கு பத்ரமா போயிட்டியாம்மா? மூத்தவன் வண்டி நல்லா ஓட்டு தானா இல்ல தூக்கி தூக்கி போடுதானா? எப்பவும் விரட்டித்தேன் போவான், நா பின்ன உக்காந்திருந்தா கொலை நடுங்க வச்சுதேன் கொண்டு இறக்கி விடுவியான். நா திட்டிகிட்டேதேன் வருவேன். உன்ன மெதுவா கூட்டி பேனானா?"

"ஆமாத்த மெல்ல தான் வந்தாங்க"

"கொஞ்சம் அவன இறுக்கி பிடிச்சு உன் கண்டுரோலுல வச்சுக்கோ கண்ணு, நீ சொன்னா கேட்டுக்குவான்னு தான் தோணுது"

புருவத்தைத் தேய்த்து விட்டுக்கொண்டவள், "சரிங்கத்த" என மட்டும் சொல்ல,

"நீ அவன்ட்ட பேசுத மாதிரி என்ட்ட பேசுத்தா, மாமியான்னு நினைச்சு பயந்துக்காத"

"அதெல்லாம் இல்லத்த, கொஞ்சம் டயர்டா இருக்கு சாப்பிட்டு படுக்கணும், அலுப்பா இருக்குறதால என்ன பேசன்னு தெரியல எனக்கு"

"சரித்தா அப்ப சாப்புட்டு தூங்கு. என் மவனுக்கும் ஃபோன போட்டு பேசுத்தா அவனா பேச மாட்டியான் அவனுக்கு நேரமிருக்காதுன்னுவியான். நீ பேசுனாலும் வள்ளுன்னுதேன் விழுவான், கொஞ்சம் கொஞ்சமா சமாளிச்சு உன் வழிக்கு கொண்டு வந்துருத்தா, அத்த இப்படி சொல்லுதாகன்னு எதும் நினைச்சுக்குடாத கண்ணு"

"நா எதும் நினைச்சுக்கல அத்த. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க" என்றாள் சமாதானமாக. அவர் புள்ளையின் மறு ரூபத்தை மொத்தமாக அவள் மட்டுமல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"சரிம்மா போய் தூங்கு போ"

"சரித்த" என்றவள் அம்மாவிடம் போனைக் கொடுத்து விட்டு சென்று டிவி முன்னரே அமர்ந்து கொண்டாள், அங்கு மீண்டும் பேச்சுத் துவங்கியிருந்தது.

அங்கு மகிழுக்கு தொடர் கொலை வழக்கை முடிக்கச் சொல்லி நெருக்கடி அதிகரித்தது‌. இப்போதும் இரவு பத்து மணிக்கு அதற்கான கூட்டத்தில் தான் அமர்ந்திருந்தான்.

"நாம லேட் பண்ண‌ பண்ண கேஸ் சிபிஐ பக்கம் போயிடும், கில்லர பத்தின சின்ன க்ளூ கூட இன்னும் கிடைக்கலன்னு வெளில சொல்ல முடியுமா?" என கமிஷனர் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க,

டேபிளுக்கு அடியில், "தூங்கிடாதடி மரகதம், நா வந்து கால் பண்றேன்" என அனுப்பிக் கொண்டிருந்தான் அந்த மரகத காவலன்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13

"பாண்டியன்" என்ற கமிஷனரின் அழைப்பில் அவர் முகத்தை நிமிர்ந்து நிதானமாகப் பார்க்க,

"என்ன பண்றீங்க? நா இங்க பேசிட்ருக்கேன்"

"என்ட்ட தனியா பேசுனத தான திரும்ப எல்லாரையும் கூப்பிட்டு வச்சும் பேசுறீங்க?"

"கேஸ எப்ப முடிப்பீங்க?"

"கில்லர் கிடைச்சதும்" என்றவன் பதிலில் மற்றவர்களும் திரும்பி அவன் முகம் பார்த்தனர். நக்கல் எல்லாம் இல்லை உண்மையாகவே இதுதான் பதில் எனக் கூறிக் கொண்டிருந்தான்.

"கில்லர் அவனா வந்து உங்க முன்ன கையை நீட்டிட்டு நிக்க மாட்டான் பாண்டியன்" என்றார் கமிஷனர்.

தலையசைப்போடு நிமிர்ந்து அமர்ந்தவன், "கில்லரோட மோட்டிவ் பசங்கள கொல்றது மட்டுந்தான்னு எல்லோருக்கும் தெரியும் ரைட்? தூக்கிட்டு போறான் கொல்றான் கொண்டு வந்து போடுறான், சோ எந்த தடையுமு கிடைக்கல, கைய கால கட்டி வச்சு ஆர்டிஃபிசியல் நகத்தால கீறி வலிக்க வச்சு கொன்றுக்கான் அவ்வளவு தான் அட்டாப்சில கிடைச்ச தகவல். அப்றம் எல்லாரும் ட்ரக் அடிக்ட் எம்.ஏல்.ஏவோட மருமகனும் அந்த கேங்க்ல ஒரு ஆளு. எம்.எல்.ஏவும் மருமகனோட ரொம்ப க்ளோஸா பழகுவாராம் சோ அவன் ஃப்ரண்ட்ஸோடவும் ரொம்ப நெருங்கி பழகிருக்காரு, எந்தளவுக்குனா அந்த எட்டு பேர் கூட சேந்து இவரும் ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர்னு டேட்டூ போட்டுக்குறளவுக்கு. அவங்களுக்கு க்ரூப் ஸ்டடிக்கு, படத்துக்கு போறதுக்கு, எங்கையாது ரெண்டு மூணு நாள் டூர் போறதுன்னு எல்லாம் அரேன்ஞ் பண்ணி குடுப்பாராம், ஆனா அவங்க ட்ரக்ஸ் எடுக்குறது அவருக்கு தெரியாதுன்னு அவர் பி.எ அடிச்சு சொல்றாரு, எம்.எல்.ஏக்கும் அந்த பழக்கம் எதுவும் கிடையாது, அது அவர் அடாப்ஸிலயும் ப்ரூஃப் பண்ணியாச்சு. இதெல்லாம் விசாரிச்சதுல கிடைச்ச தகவல்கள். இனி கில்லர நெருங்கணும்னா அதே க்ரூப்ல இருக்க மத்த நாலு பேர வச்சு தான் பிடிக்க முடியும், யாரையாவது ஒருத்தர கில்லர் கடத்தட்டும்னு விட்டு‌தான் பிடிக்க ட்ரை பண்ணணும். இனி நீங்க சொல்லுங்க யார வெளில விட்டு கில்லர அவன பிடிக்க வரும் போது நாம அவன பிடிக்கலாம்னு நீங்க சொல்லுங்க" என நிறுத்த, எல்லாரும் அவனையே பார்த்தனர்.

"நாலு பேரோட பேரண்டஸ்ம் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. இதுல எதாது ரிஸ்காச்சுன்னா யாருக்குமே பதில் சொல்ல முடியாது நம்மளால" என்றார் கமிஷனர்.

"கில்லர் மக்களோட மக்களா இருக்கான் சார், அவன் தனியா வர வைக்க அவனுக்கு தேவையானத அவன் முன்னாடி வைக்கணும், இல்லாம அவன் இங்கேயே உக்காந்திருந்தாலும் நமக்கு தெரியாது"

மற்றவர்கள் எல்லாம் வேகமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, "நீங்களே ரூட் போட்டு குடுத்து யாரையாவது செய்ய வைக்றீங்களா? அப்ப கொலைகாரன உங்களுக்கு தெரியுமா இல்ல கொலைகாரனே நீங்க தானா? அதான் இவ்வளவு அசால்ட்டா இருக்கீங்களா?" என்ற கமிஷனரின் கேள்வியில்,

மொபைலை டேபிளில் வைத்துவிட்டு எழுந்தவன், "இனி நா இந்த கேஸ்ல இருக்குறதே வேஸ்ட் சார்‌, நீங்க வேற டீம்ட்ட குடுத்திடுங்க. நா என் கல்யாண வேலையாவது பாக்றேன்" என்றான்.

"கல்யாணமா?"

"அதுலையும் டவுட்டா சார்?"

"ம்ச் பாண்டியன், நீங்க கல்யாண‌ பிஸில தான் இவ்வளவு கேஸ்வலா இத டீல் பண்றீங்கன்னு தெரியாம தானே நா இத்தன கொஸ்டீன் கேக்குறேன். சொல்லிருக்கலாமே"

"இன்விடேஷன் வராம எப்டி சார் சொல்ல முடியும்?"

"சரி மேரேஜ்கு முன்ன எப்படியாவது இந்த கேஸ முடிச்சு குடுத்துடுங்க"

"எனக்கு என்ன மோட்டிவ்னு அந்த பசங்கள நா கடத்தி கொல்லணும்‌‌ சார்? எட்டு வருஷமா என்ன உங்களுக்கு தெரியும், அப்டியும் நீங்க எப்டி அப்டி சொல்லலாம்?"

"உங்களபத்தி தெரிஞ்சதுனால தான் அந்த சந்தேகமே" என்றார் அவர், திமிரான சிரிப்புடன் கிளம்பியவன், "நானே கேஸ முடிச்சு ஃபைலோட வருவேன், அதுக்கு முன்ன இப்படி அடிக்கடி மீட்டிங் வச்சு உங்க டைம் மட்டுமில்லாம என் டைமையும் சேத்து வேஸ்ட் பண்றீங்க, அத செய்யாதீங்க சார்" என சல்யூட் வைத்து வேக நடையில் வெளியேற,

"கொஞ்சமாது பயமிருக்கான்னு பாரு" என கமிஷனர் முனங்க, மற்றவர்கள் அவரின் அனுமதிக்காக காத்திருந்தனர்.

காரருகில் நின்று பேசிக் கொண்டிருந்த பரத்தும், சொக்கலிங்கமும் அவன் வந்து காருக்குள் ஏறவும் அவர்களும் ஏறிக்கொண்டனர்.

"அடுத்து என்ன சார் பண்ண போறோம்?" என்றான் சொக்கலிங்கம்.

"அந்த நாலு பசங்களும் சேஃப் தானே சொக்கு?"

"ஆமா சார் ஃபுல் ப்ரொடக்ஷன்ல தான் இருக்காங்க. மொத்த ஃபேமிலியும் கூட நம்ம கண்ட்ரோல் தான்"

"அடுத்த பையன எப்டி கடத்துறான்னு பாக்கணும். சிட்டி ஃபுல்லா சந்தேகபடுற‌மாதிரி இருக்க அத்தனை இடத்துலையும் தேடியாச்சு, எங்கையும் வித்தியாசமா சிக்கல, சோ கில்லர் கடத்திட்டு போய் செய்றது நல்ல ஆள் நடமாட்டம் உள்ள ஏரியால தான்னு தெரியுது‌. பாக்கலாம் சீக்கிரம் சிக்குவான்" என யோசனையாக பேச,

"சார் அப்ப நிஜமாவே உங்களுக்கு கில்லர தெரியாதா?"

"சொக்கு" என இவன் திரும்பி அவனை முறைக்க,

"உங்களுக்கு கில்லர் பத்தின க்ளு கிடைச்சுருச்சுன்னு சத்தியமா நம்பினேன் சார்"

"கிடைச்சா கண்டிப்பா உங்களுக்கு மட்டும் சொல்லிடுறேன் சொக்கு"

"ம்க்கும் சொல்லிட்டு தான் மறுவேலை" என மனதிற்குள் நொந்து கொண்டான் அவன்.

வீட்டிற்குள் நுழையும் போதே மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. மரகதவல்லியை பிராண்டும் எண்ணம் வந்துவிட, உடனே அழைத்துவிட்டான். அவன் அனுப்பிய மெசேஜை கூட அவள் இன்னும் பார்த்திருக்கவில்லை, கடைசியாக ஆன்லைன் ஒன்பது மணி என்றிருந்தது.

"நிஜமாவே தூங்கிட்டாளோ? வாய்ப்பில்லையே" என யோசித்தவன் அவள் அழைப்பில் இணையவேண்டி காத்திருக்க, அங்கு அவளோ தலையணையை காதோடு அணைத்து இறுக பிடித்து கண்ணையும் இறுக மூடிப் படுத்திருந்தாள். அவன் படுத்தும் பாட்டில், பதிலும் சொல்லாமல் திணற வேண்டி இருப்பதால், பத்து மணிக்கு அவன் அனுப்பிய தகவலை மேலோட்டமாக வாட்சப்பிற்குள் நுழையாமலே பார்த்துவிட்டு, தூக்கிப் போட்டுப் படுத்தவள் தான், இப்போது வரை தூங்கவுமில்லை, போனை எடுக்கவுமில்லை.

'கூப்பிடுவாறோ போன் இப்ப வருமோ அச்சோ வந்துருச்சோ' என நினைத்து உருண்டே மணி பனிரெண்டை கடந்திருந்தது. அகிலாவும், இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இவளோடு தான் தூங்குவார். இவள் என்று தனியாக வக்கில் தொழிலில் வழக்கெடுத்து வாதாட தொடங்கினாளோ, அன்றிலிருந்து கண்ட நேரத்திற்கும் தூங்குவது, தனியே முழித்து யோசித்துக் கொண்டு அமர்ந்திருப்பது எனப் பார்த்தவருக்கு அவரின் தூக்கமும் கெட, கணவருடன் அவர் அறையில் தூங்கத் துவங்கிவிட்டார். அவர் அத்தனை போராடிய போது கூட டான் என பத்து மணிக்கு படுக்காதவள், இன்று ஒருவனின் போனிற்கு பயந்து கண்ணை இறுக மூடி‌ப் படுத்திருக்கிறாள். பழக்கம் என்ற ஒன்றிருக்குமே, அது படுத்ததும் தூங்கவிட்டு விடுமா என்ன? போதாத காரணமாக அவனின் நினைவுகளும் துரத்தக் கண்ணை மூடியும் விழித்துக் கொண்டிருக்கிறாள்.

"எடுக்க மாட்றாளே" என உடைமாற்றச்‌ சென்றவன், பத்து நிமிட இடைவெளியில் வந்து மீண்டும் அழைத்தான். அந்த பத்து நிமிடத்தில் அங்கு அவள் சொர்க்கமே சென்று வந்திருந்தாள். மீண்டும் அழைப்பு வரவும் மறுபடியும் தலையணைக்குள் தலையை ஒளித்துக்கொண்டாள். மறுபடியும் அழைப்பு வரவில்லை என்றதும் மீண்டும் ஒரு ஆசுவாசம்.

"சரியான இம்சை ஏசிபி, பாவம் பாக்றாரா பாரு" என திட்டிக்கொண்டிருந்தாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

ஆனால் அவன் அடுத்ததாக அவள்‌ அப்பாவிற்கு அழைத்துவிட்டான்.

மாப்பிள்ளையின் எண்ணை அந்நேரத்தில் பார்க்கவும் அடித்துபிடித்து எழுந்தவர், "சொல்லுங்க தம்பி. என்னாச்சு இந்நேரம் கூப்பிடுறீக?" என்றார் பதட்டமாக.

"அத நா கேக்கணும்‌ மாமா. உங்க பொண்ணு பதினாறு மிஸ்ஸிடு கால் குடுத்துருக்கா எனக்கு. நா இப்ப‌தான் வீட்டுக்கு வந்துருக்கேன், என் வேலை பத்தி தெரியுமா தெரியாதா அவளுக்கு? சரி இத்தன டைம் கூப்பிட்டுருக்காளேன்னு இப்ப நா கூப்பிட்டா எடுக்க மாட்டேங்குறா. என்ன கோபத்துல இருக்காளா? எனக்கு இந்த மாறி சில்லி விஷயங்களுக்கு நேரமில்ல மாமா. உங்க பொண்ணுட்ட போன அட்டன் பண்ண சொல்லுங்க, பேசிட்டு நா தூங்கணும், டைம் கிடைக்குற அப்போ தூங்குறது தான் எனக்கு ரெஸ்ட்" என அவன் பேசிய பேச்சில் அரண்டு தான் விழித்தார்.

"நா பேசுறேன் தம்பி, உங்க ஃபோன எடுக்க சொல்றேன். இனி நீங்க கூப்பிடுறப்ப மட்டும் பேச சொல்றேன், தப்பா எடுத்துக்காதீங்க உங்கமேல பிடிப்பு ஜாஸ்தி ஆகிட்டு அதான் அப்படி அத்தனை தடவை போன போட்டுட்டான்னு நினைக்கேன்"

"நானா ஃபோன் போடவும் எனக்கு நேரமிருக்காது மாமா, இப்ப ஒரு கேஸ் போயிட்ருக்கே உங்களுக்கே தெரியுமே?"

"ஆமா ஆமா தம்பி, அப்ப அவள ஒருதடவை போன் போட்டுட்டு விட்ரு, மாப்ளையே திரும்ப கூப்பிடுவாங்கன்னு சொல்லிடுறேன்"

"அதெல்லாம் வேணாம் மாமா, அவ ஆசை எனக்கு புரியுது, அது சரியும் கூட எனக்கு தான் நேரமே கிடைக்க மாட்டேங்குது. நா கூப்பிட்டா எடுக்க சொல்லுங்க. நா டைம்‌‌ கிடைக்குறப்ப தான் கூப்பிடுவேன். அந்நேரம் கோவமா இப்டி பேசமாட்டேன்னு அடம் பண்ணாம இருக்க சொல்லுங்க போதும்" என்றான் நல்ல பிள்ளையாக.

அவன் தன்மையான பேச்சில் சட்டென்று மகிழ்ந்தவர், "சரி சரி மாப்ள" என்றார் பரவசம் பொங்க.

"சரி நா ஒரு பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன் நீங்க உங்க பொண்ண அட்டன் பண்ண சொல்லுங்க மாமா"

"சரிங்க தம்பி" என பவ்யமாக வைத்துவிட்டு எழும்ப, "என்னங்க சொல்றாரு" என தானும் எழுந்து அவர் பின்னரே வந்தார் அகிலா.

"உன் பொண்ணு இப்பவே அவர் பொண்டாட்டி ஆகிட்டா அகிலா, சந்தோஷமாத்தேன் இருக்கு. ஆனா அவரு இதுக்கான்டி கோச்சுகிடுவாறோன்னு பயமாவும் இருக்கு. மொத டென்ஷனா பேசுனாலும் அப்றம் ரொம்ப அமைதியாகிட்டாப்புல. கோவமிருக்க இடந்தேன் ஆனா குணமு இருக்கு" என்றவர் மகளின் அறை கதவைத் தட்டிவிட்டு நிற்க,

"பனிரெண்டு மணி அடிக்காம உங்க மகளுக்கு தூக்கம் வராதுங்க, முழிச்சுதான் கிடப்பா, வழியவிடுங்க நா திறந்து பாக்குறேன்" என அகிலா சொல்லவும், அவர் விலகி நிற்க, அகிலா கதவை திறந்து உள்ளே செல்லவும், 'இந்நேரத்துல இவங்க ஏன் கதவ தட்டுறாங்க' என மரகதவல்லியும் கட்டிலிலிருந்து இறங்கவும் சரியாக இருந்தது.

அகிலாவைப் பார்த்ததும், "என்னம்மா?" என்கவும், உள்ளே வந்தார் முத்துராமன்.

"பாப்பா, நீ மாப்பிள்ளைக்கு ஃபோனு போடுறதுலாம் தப்பில்ல அதுக்காக பதினாறு தடவன்றது ரொம்ப அதிகமா இல்லையா? வேலைல இருக்க மனுஷன இப்படி தொந்தரவு பண்ணலாமா?"

"நானா தொந்துரவு பண்றேன்?" என்றவளுக்கு விஷயம் பிடிபட்டிருந்தது. அவள் எடுக்கவில்லை என்றதும் தந்தைக்கு அழைத்து தோசையை அப்படியே திருப்பி போட்டுவிட்டான் என்று.

"உனக்கு அவர பிடிச்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான் பாப்பா. அதுக்காக சின்னபுள்ளையாட்டம் நடந்துக்க கூடாது. நீ ஒரு வக்கீல் அந்த ப்ரொஃபஸ்ஸனுக்கு தக்கன நடந்துக்க வேணாமா? அவர் வேலையவும் புரிஞ்சு நடந்துக்கணும் பாப்பா"

"அவர‌ லவ் பண்ணுன்னு அவ மாமியாரே சொல்லிச்சுங்க, அதேன் அப்டி பண்ணிருப்பா. விடுங்க அவ தானே அவர என்னைக்குனாலும் சமாளிக்கணும். சமாளிப்பா. எப்படியாவது கல்யாணம் தடை இல்லாம நடந்தா சரித்தேன்" என்றார் அகிலா, மரகதவல்லிக்கு எங்கேயாவது கொண்டு தன் தலையை இடிக்கலாம் போலிருக்க கடுப்புடன் அமர்ந்திருந்தாள்.

"என்ன பாப்பா பேசாம இருக்க?"

"பனிரெண்டு மணிக்கு வந்து கிளாஸ் எடுக்குறீங்களே கவனமா கேட்டுக்க தானே வேணும்"

"இதத்தான் பண்ணாதன்றேன். என்ன அப்படி கோவம் வருது உனக்கு. அவர் ஃபோன் போட்டப்பவும் இப்படிதான் கோபத்துல எடுக்காம இருந்துருக்க" என அகிலா அதட்டவும் அவள் இன்னும் முறைக்கத் துவங்க,

"சரி‌சரி அவர் இப்ப ஃபோன் பண்ணா கோவமில்லாம பேசிட்டு வை. அவருக்கு வேலையே டென்ஷனானது இதுல உன்ட்ட பேச வர்றப்பையும் கோவத்த காட்டாத பாப்பா" என முத்துராமன் சமாதானம் சொல்லி, "நீ வா அவ பேசட்டும். நீயே அவ கோவத்த கிளப்பி விட்ருவ போல" என அகிலாவையும் இழுத்துக் கொண்டு வெளியேற, தலையணையை எடுத்து தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள் மரகதவல்லி.

அந்த நிமிடம் அழைப்பு வர, திரும்பிப் பார்க்க அவன் தான், கண்ணை இறுக மூடி ஒன்று, இரண்டு மூன்று கூறி நிதானித்து அழைப்பை ஏற்றாள்.

"சொல்லுங்க" அதே பவ்யமான குரலில்.

அந்த பக்கம் இருப்பவனுக்கு அப்படியொரு சிரிப்பு. கண்டிப்பா கொலை வெறியில் இருப்பாள் என தெரியும், ஆனாலும் அந்த பவ்யம் அவனை வியக்கவும் வைத்தது சிரிக்கவும் வைத்தது.

"மரகதம் தூங்கிட்டியோ?"

"இல்லங்க"

"அப்றம் ஏன் ஃபோன் எடுக்கல? உன்ன வெயிட் பண்ண சொன்னேன்ல?"

"ஃபோன் சைலண்ட்ல இருந்தது அதான் கவனிக்கலங்க"

"இந்த பவ்யம் தான் உன்ட்ட பேசிட்டே இருக்க சொல்லி என்ன இழுக்குது மரகதம்" என்றான் நக்கலாக, கட்டிலில் சாய்ந்தமர்ந்து ஒரு கன்னத்தில் கைவைத்து அவள் அமர்ந்திருக்கும் நிலையை பார்க்கவே ஓவியமாக இருந்தது. அவனுக்கு பதில் கொடுக்க முடியாமல் மட்டுமே பதுங்கி ஓடுகிறாள் அவள். பதிலுக்கு பதில் பேசுபவளால் அவனிடம் பேசமுடியவில்லை, அவளும் எதிர்த்து பேச முயற்சிக்கவேயில்லை. அவன் போக்கிலே போகட்டும் திருமணம் முடியட்டும் என்றிருக்கிறாள். அவனுக்கும் அது புரிந்திருக்க அவளை பேச வைக்கும் முயற்சியில் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறான்.

"தேங்க்ஸ்ங்க"

"என்ன நக்கலா சொல்றமாதிரி இருக்கு?"

"இல்லங்க. ஆனாலும் ஏன் எல்லாத்தையும் நீங்க செஞ்சுட்டு நா செஞ்சதா சொல்லிடுறீங்கனு சொல்லுங்களேன் ப்ளீஸ்" என்றாள் சந்தேகமாக.

"பின்ன உனக்கு என் மேல பாசமே இல்ல, சாப்டியான்னு கேக்க கூட நேரமில்லன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?"

"நிஜமாவே நா கேக்கணும்னு நினைக்றீங்களா?"

"அப்டி ஒன்னும் நா சொல்லி நீ எதையும் கேக்க வேணாம். மனசுலயிருந்து கேக்கணும் மரகதம். இந்த பொண்ணுங்களுக்கு கழட்டிவிட தான் ஈசியா வரும்னு எனக்கு தான் தெரியுமே, சோ நீ ரொம்ப மெனக்கெட வேணாம் விடு"

அவள் முகத்தில் மெலிதான சிரிப்பு, அவளுக்காக ஏங்குகிறான், அவளிடம் வம்பிழுக்க வேண்டியேனாலும் பேசிக்கொண்டிருக்க நினைக்கிறான் என புரிந்ததில் சிரிப்பு இன்னும் அகல விரிந்தது.

"உங்களுக்கு டைம் எப்டின்னு தெரியாது அதான் கேக்கல. நா எப்ப கால் பண்ணினா உங்களுக்கு ஓ.கேவா இருக்கும்" என்றாள் தன்மையாக.

"அதெல்லாம் சொல்றதுகில்ல. டைம் டேபிள் போட்டு நா வேலை செய்யல, நீ கால் பண்றப்ப ஃப்ரீயா இருந்தா எடுப்பேன் இல்லனா நா பிஸின்னு நீதான் புரிஞ்சுக்கணும்" மறுபடியும் கடுப்பாக்கினான் அவளை.

"அப்ப நீங்களே கால் பண்ணுங்க"

"எப்டி இப்படி உங்கப்பாக்கு கூப்ட்டு உங்க பொண்ண பேச சொல்லுங்கன்னு சொல்லவா" என பேசிக் கொண்டிருந்தவன் அங்கு எதையோ போட்டு உருட்டும் சத்தமும் கேட்க‌.

பேச்சை மாற்ற வேண்டியே, "என்ன செய்றீங்க?" என்றாள்.

"மேகி கிண்டுறேன். எனக்கு பாதி நேர சாப்பாடு மேகி தான் தெரியுமா? மேகினா எனக்கு ரொம்ப ஈசியா இருக்கும். நீ எப்டி?" என்க,

அவள் அங்கு மீண்டும் கன்னத்தை தாங்கி அமர்ந்து விட்டாள். அவன் மேகி மேகி என அழுத்தி சொன்னவிதமே புரிந்ததே, "எனக்கு மேகி அவ்வளவு இஷ்டம் இல்லங்க. அம்மா சாப்பிட விடுறதில்ல"

"எனக்காக மொத்தமா பத்திரபடுத்திட்டாங்களோ? பரவால்ல விடு நானே டேஸ்ட் பண்ணிக்கிறேன்" என்றவனிடம் இப்போதும் பதில் சொல்ல திணறினாள்.

"நா மேகிய சொன்னேங்க"

"நானும் மேகிய தான்டி சொல்றேன். உங்க வீட்ல இருக்க மேகி தனி டேஸ்ட்ல இருக்கும்னு மீன் பண்ணேன்"

"சத்தியமா முடியலங்க"

"எப்ப பாரு முடியல முடியலன்னு நெகட்டிவ்வா பேசுற நீ. முடியும் முடிக்கணும்னு பாஸிட்டிவ்வா பேசி பழகு மரகதம்"

"சரிரிரிரிங்க" என்கவும் அவனுக்கு குபீர் சிரிப்பு தான், ஆனால் அது அவளை எட்டாமல் பார்த்துக் கொண்டான்.

"அப்றம்?"

'இவர்ட்ட வேற எதையாவது பேசினா தான எடக்குமடக்காகுது?' என நினைத்தவள், "இந்த சைகோ கில்லர் கேஸ் எந்த லெவல்ல இருக்குங்க?" என்றாள், நிச்சயமாக எடக்காக தான் பதில் சொல்லுவான் என உறுதியாக நம்பியே கேட்டாள்.

ஆனால் அவன் அவளுக்கு பதில் கூறினான், "போயிட்ருக்குடி. அடுத்த கடத்தல்ல எப்படியாவது அவன‌‌ பிடிக்க ப்ளான் பண்ணிருக்கோம். யார்ட்டையும் சேர் பண்ணாத ஒரு சீக்ரெட் உனக்கு சொல்லவா. கில்லர் மேபி எ எங் கேர்ள்" என்றான்.

அவன் பதில் சொல்வதையே நம்பாதவள், அவன் சொல்லிய ரகசியத்தில் வாயைக் கப்பென்று மூடிக்கொண்டாள்.

"என் கூடவே இன்வெஸ்டிகேட் பண்ற சொக்குக்கு கூட சொல்லல உன்ட்ட சொல்லிருக்கேன், கீப்பிட் கான்ஃபிடென்ஷியல்"

"ஏன் எனக்கு மட்டும் சொன்னீங்க?"

"என் பொண்டாட்டி ஆக போற உனக்கு சொல்லாமலா?" என்றவன் பதிலில் அவனை நம்ப மறுத்தது அவள் உள்ளம், சும்மாவேணும் அவளிடம் விளையாடுகிறான் என அப்படியே விட்டுவிட்டாள்.

"என்ன சத்தத்த காணும்? கேஸ் கோர்ட்டுக்கு வந்தப்றம் வேலை பாரும்மா, இப்பவே ஹிண்ட்ஸ் எடுக்க போய்ட்டியா?"

"நீங்க சொல்றத நா நம்புறதாவே இல்ல, உங்களுக்கு பொண்ணுங்கனாலே பிடிக்கல அதான் எல்லா தப்பையும் அவங்க பக்கமே திருப்ப பாக்றீங்க" என்க.

"எனக்கு இந்த லவ் பண்ணிட்டு ஏமாத்திட்டு போறாங்க பாரு அவங்க மேல மட்டுந்தான் காண்டு மரகதம்" என்றான். பட் பட் என்று கவுண்டர் கொடுப்பவனை என்ன செய்ய என விழிப் பிதுங்கினாள். இப்போதும் அவள் தான்‌ பல்லைக் கடிக்க வேண்டியிருந்தது. 'இவர ஒரே ஒரு தடவ ஏமாத்திட்டு நா படுற‌ பாடு. மீனாட்சி இதுக்கொரு என்டே இல்லையா?' அவளால் புலம்ப மட்டுமே முடிந்தது.

"ஹே எனக்கு வேற கால் வருது. நீ தூங்கு குட் நைட்" என அவசரமாக வைத்துவிட்டான், அவன் குரலிலிருந்த அவசரத்திற்கான காரணம் மறுநாள் தெரிந்தது அவளுக்கு, அடுத்த பையனாக அதே கேங்கை சேர்ந்த எம்.எல்.ஏ மருமகனும் கடத்தப் பட்டிருந்தான். அந்த இரவே தேடுதல் பணியில் இறங்கியிருந்தான் மகிழ்.

"கண்ணு அவனுக்கு நைட்டு அத்தன தடவ போனு போட்டியாமே? தைரியமான பிள்ளதாம்தா நீயி. நானெல்லாம் ஒருதடவ கூப்புட்டுபோட்டு அக்கடான்னு அவேன் திரும்ப கூப்பிடுவியான்னு போனும் கையுமா திரிவேன், அவேன் என்னன்னா ஆத்தாகாரி கூப்படாளேன்னே மறந்துட்டு திரிவியான். மொத நாள் சொல்ல நினச்சத ரெண்டு நாள் கழிச்சுதேன் அவன்ட்ட சொல்லுவேன்னா‌ பாத்துக்கோ. ஆனா நீ அப்டி இருந்துராத கண்ணு. இப்டித்தேன் விடாம போன போட்டு குடும்பம்னு நா ஒருத்தி உக்காந்துருக்கேன்னு அவனுக்கு நெனவு சொல்லிட்டே இருக்கணும். ரொம்ப சந்தோஷம்த்தா. நீ எப்படியும் என் மவன உன் வழிக்கு கொண்டு வந்துருவன்னு தெரிஞ்சு போச்சு" காலையிலேயே மருமகளை அழைத்து வாசுகி பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்க,

"வேலைல இருக்கவன இப்படிதான் போன போட்டு தொந்தரவு பண்ணுன்னு சொல்லிகுடுப்பியா நீயி? அவேன் அந்த புள்ளைட்ட சண்டைக்கு நிக்க போறியான்" என்றார் அவரைக் கடந்து சென்ற பரஞ்சோதி.

"வேலைல இருக்கவனையா புள்ள‌ கூப்புட்டா? பனிரெண்டு மணி ஆகியும் போன காணுமேன்னு கூப்பிட்டுருக்கா. அந்நேரமு பொண்டாட்டியா வர போற புள்ள பேசகூடாதுன்னு சொல்லுவானா இவேன்" என இவளை அழைப்பில் வைத்துக் கொண்டே, வாசுகி அங்கு பரஞ்சோதியிடம் சண்டைக்குச் செல்ல,

'இங்க அப்பாட்ட சொன்னது மட்டுமில்லாம அங்க அத்தைட்டையும் பிட்ட போட்டுட்டு‌தான் போயிருக்காரு போல. நைட்டு என்ட்ட பேசிட்டு வச்சதுல இருந்து இப்ப‌வர எனக்கு ஃபோன் வரல அப்ப ஆள் நல்ல பிஸின்னு தான் அர்த்தம். இதுல எந்த கேப்ல அத்தைட்ட விஷயத்த சொல்லிருப்பாரு' அவள் யோசனை இங்கு இவ்வாறு சென்று கொண்டிருந்தது.

"கோட்டி கணக்கா பேசாத. உன் மவன பத்தி உனக்கு நல்லா தெரியும். எப்ப எப்டி பேசுவியான்னு கணிக்க முடியாது. அந்த புள்ளைய ஏத்திவிட்டு உன் மவேன்ட்ட கோர்த்து விட்டு வேடிக்கை பாக்காத. கல்யாணத்துக்கு முன்னவே சண்டைய மூட்டிவிடாதன்னு சொல்லுதேன்"

"என்னைய கண்டா உங்களுக்கு என்னன்னு இருக்குங்கேன். நானே என்னனாது புள்ளைக ரெண்டு காதலிச்சு சேரட்டும்னு இருக்கேன். நா சண்டைய‌ மூட்டிவிடுதேன்னு பேசுதீக? என் புள்ளைகள நானே அம்புட்டுக்கு நெனப்பேனோ? உங்களுக்கு நான்னா எப்பயும் எகத்தாளந்தேன்" என பேச,

"இப்ப என்ன சொல்லிட்டேன்னு மல்லுக்கு நிக்றவா. போய் அந்த புள்ளைட்ட பேசு, அங்க போன போட்டுட்டு என்னுட்ட எகிறிட்டு வாரா" என்றவர் குளிப்பதற்காக பின் வாசல் சென்றுவிட்டார்.

"காட்டுல இருந்து வந்தவரு அப்டியே போயி குளிக்காம என்ட்ட நின்னு வம்பு வளத்துட்டு இப்ப‌பாரு நா பேசுனேங்குறத" என்றார் இவளிடம்.

"உங்களுக்கு அவங்க தான் சொன்னாங்களத்த?" என்றவளும் நீதிமன்றத்திற்கு செல்ல கிளம்பி சாப்பிட வந்தமர்ந்தாள்.

"அவேந்தான நல்லா சொல்லுவியான். எனக்கு உங்கம்மா‌தேன் சொன்னாக" என முடிக்கும் முன் சாப்பாட்டை வாய்க்கு கொண்டு சென்றவள் அதை அப்படியே வைத்துவிட்டு திரும்பித் தாயை முறைத்துப் பார்த்தாள்.

"என்னடி?" என்றார் அவர் சாப்பாட்டில் தான் குறையோ என்ற குழப்பத்தில்.

"சரிங்கத்த" என வாசுகியிடம் சொன்னாலும் விடாமல் தாயை முறைத்துப் பார்த்தாள்.

"அவேன் கோச்சுகிட்டானோன்னு ரொம்ப வருத்தபட்டாக உங்கம்மா. அதெல்லாம் இல்லன்னு சொல்லிருக்கேன். நீயும் அம்மா வையுதாகன்னு அவனுக்கு போனு போடாம இருந்துராத. அப்பப்ப போட்டு ரெண்டு வார்த்தை பேசிக்கோ"

"சரிங்கத்த"

"சரிம்மா உனக்கு வேலைக்கு லேட்டாவும்ல நீ கிளம்பு. நிச்சய புடவை, கூரை புடவைலாம் எடுக்க போவணும் கண்ணு. நா எப்பன்னு அம்மாகிட்ட சொல்லிவைக்கேன், நீ அவன மட்டும் எப்படியாவது வரவச்சுபுடணும்"

"சரிங்கத்த" வேறு என்ன சொல்லிவிட முடியும் அவளாலும்.

"சரிம்மா நீ கிளம்பு நா வைக்கேன். பேத்திக ரெண்டும் உள்ள என்னத்தையோ போட்டு உடைக்காளுக நா அத பாக்கேன்" என அவரின் அடுத்த வேலையையும் தவறாமல் சொல்லிவிட்டே போனை வைத்தார்.

"எதுக்குடி முறைக்குற? எல்லாம் நல்லாதான இருக்கு? இனி இதுக்குமேலையும் வக்கனை சொல்லிட்ருந்தனா நீயே செஞ்சு திண்ணுன்னு‌ விட்ருவேன்" என அவர்‌ முந்திக்கொண்டுத் திட்ட,

"என் மாமியார்ட்ட அப்டி என்னம்மா உனக்கு பொழுதனைக்கும் பேச்சு?"

"நாங்க பேசிக்க விஷயமா இல்ல? அவங்க வீட்ல மூத்த புள்ள கல்யாணம் இங்க எங்க ஒரே புள்ள கல்யாணம். அப்ப பேச எவ்வளவு இருக்கும்னு உனக்கே புரியுமே"

"கல்யாணத்த பத்தி மட்டும் பேசாம, எதுக்கு நேத்து அவர் ஃபோன் போட்டதெல்லாம் சொல்லிருக்க?"

"பின்ன அவர் எப்டி கோவபட்டாரு தெரியுமா? அவர்ட்ட உன் மாமியார் கொஞ்சம் எடுத்து சொல்லுவாங்கள்ல?"

"அவங்க என்னன்னா நீ சொல்லி தான் அவர் கேப்பாருன்றாங்க, நீ என்னன்னா அவங்க சொல்லிதான் அவர் கேப்பாருன்ற. நா ஒன்னு சொல்லுதேன் கேளு. யார் சொன்னாலும் அந்த ஏசிபி கேக்க மாட்டாரு அவருக்கு தோணுறததான் அவர் இஷ்டம் போல பேசுவாரு செய்வாரு. நீங்க எல்லாரும் என்ன வச்சு செய்யாதீங்க. எனக்கு அவர மட்டும் சமாளிக்குற டாஸ்கே போதும் புரியுதா?"

"கல்யாணமே இன்னும் ஆகல அதுக்குள்ள என்னடி அவர சமாளிக்க போற? சமாளிக்க முடியலன்னு சலிச்சுக்க வேற செய்யிற?"

"நைட்டு நீதான சமாளிக்கணும்னு சொன்ன? கல்யாணத்துக்கு அப்புறம் அவர் எப்டிலாம் சமாளிக்கலாம்னு இப்பவே ட்ரைனிங் குடுக்காரு போதுமா? இனி நீயும் உன் சம்மந்தாரும் கல்யாணத்த எப்டி சிறப்பா முடிக்குறதுன்னு மட்டும் பாருங்க‌ போதும். எங்கள லவ் பண்ண வைக்குற ஆணியெல்லாம்‌ வேணாம். அத நாங்களே பாத்துக்குறோம்" என அவள் பேச அவர், 'ஙே' என விழிக்க, "புரியுதா இல்லையா?" என்றாள் கத்தி.

"கத்தி தொலைக்காத. என்னமு செய்யி போ, மாப்பிள்ளைட்ட இந்த மாதிரி பேசி அவர டென்ஷனாக்காத"

"நா அவர டென்ஷனாக்கினத நீ பாத்த?"

"ஆமா இப்படி பேசினா எனக்கே டென்ஷனாகுது அவர் டென்ஷனாக மாட்டாரா?"

"ம்மா என்ன கொலைகாரி ஆக்காத"

"போடி அந்தாக்குல" என அவளை தள்ளிவிட்டு அவர் பாத்திரங்களை ஒதுக்க செல்ல, மூஞ்சைத் தூக்கி வைத்து கொண்டு, சோஃபாவில் கிடந்த கை பையை எடுத்தவள், வெளியே வந்து அதை ஸ்கூட்டியில் மாட்டியவாறு கிளம்பிவிட்டாள்.

நீதிமன்ற வளாகம் வந்தவள், அவனுக்கு அழைக்க, இரண்டு ரிங்கில் எடுத்தவன், "அப்றம் பேசுறேன்டி" என வைத்துவிட்டான். விளையாட்டு தனம் இல்லாத குரல், அவன் ஏதோ முக்கிய வேலையில் இருப்பதை உணர்த்த, அவளும் அவளின் அலுவலைப் பார்க்கச் சென்றாள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top