ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 8

இனியன் கம்பனியில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் அழகிச் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதக் காலம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதக் காலத்தில் அழகி இனியனிடம் செய்யாதச் சேட்டைகள் என்பதே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு இனியனைப் படுத்தி எடுத்திருந்தாள் அழகி.


வகுப்பில் இருக்கும் அனைவரும் அவனை 'சார்' என்று அழைக்க, இனியனோ சார் என்று சொல்லாமல் பெயரைச் சொல்லியேக் கூப்பிடுங்க, அதான் கார்ப்பரேட் ரூல் என்றான். அதுவரையில் இனியன்! இனியன்! என்று அழைத்துக் கொண்டிருந்தவள், என்று இனியன் பெயரைச் சொல்லிக் கூப்பிடச் சொன்னனோ, அன்றிலிருந்து அவனை 'இனியன் சார்' என்று தான் அழைத்து வருகிறாள் அழகி.


அது மட்டுமில்லை, இனியன் எது சொன்னாலும் அதற்கு நேர் எதிரில் அந்த விஷயத்தை செய்தால் தான் அவளுக்கு உறக்கமே வரும்.


ட்ரைனிங்கிற்கு போனால் தான் 'சோறு' என்று வேலுசாமி திட்டவட்டமாக சொல்லிவிடவும். வேறு வழியின்றி அங்கே சென்றவள், தனக்கென்று ஒரு குழுவையும் அமைத்துக் கொண்டு அவனை படாதப்பாடு படுத்தி எடுக்கிறாள்.


அவள் செய்யும் சேட்டைகளைக் கண்டு முதலில் கடுப்பான இனியன், போக போக அவனுக்கே தெரியாமல் அதை ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.


அழகி செய்யும் குறும்புகள் அவனுக்குப் பிடித்திருந்தாலும், அவன் அதை ரசிக்கச் செய்தாலும், 'ஆமாம் பிடித்திருக்கு ரசிக்கிறேன்' என்பதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் தயாராக இல்லை, அதை அழகியிடம் சொல்ல அவனும் தயாராக இல்லை என்பது தான் உண்மை.


என்றும் இல்லாத திருநாளாய் அழகி இன்று இனியனின் இல்லம் நோக்கி வந்து.. இன்றைய வகுப்பில் அவன் கொடுத்த டாஸ்கில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி அவனிடன் கேட்டபோதே அவனுக்கு உள்ளுக்குள் சந்தேகம் தான் அவள் மீது. 'இவ இப்படிலாம் வந்து டவுட் கேட்கிற ஆள் இல்லையே.. இதுல என்னமோ இருக்கு' என்று எண்ணிக் கொண்டவன் அமைதியாக அவளைக் கவனித்தவாறு நின்றிருந்தான்.


அதிலும் சாகவாசமாக அவன் வீட்டு சோபாவிலேயே அமர்ந்துக் கொண்டு டீயை போட்டுத் தருமாறும், அதற்கு தொட்டுக்கொள்ள 'குட் டே' பிஸ்கெட் தான் வேண்டும் என்றும் அவனிடமே கேட்டுக் கொண்டிருந்தவள், திடீரென்று காலில் சுடுத்தண்ணி கொட்டியதுப் போல் அங்கே நில்லாமல் அவசர அவரசரமாக திருட்டு முழி ஓன்றை முழித்துவிட்டு சென்றவளையே ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறாள் என்று புரியாமல் பார்த்தப்படி நின்றிருந்தான் இனியன்.


அழகியின் வருகையால், அப்போது செய்துக் கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டுவிட்டு சென்றவன், அதை மீண்டும் தொடர்வதற்காக டேபிளின் மீது வைத்திருந்த பென்ட்ரைவ்வை பார்க்க. அந்த இடமோ பென்ட்ரைவ் இல்லாமல் அவனைப் பார்த்துப் பல் இளித்துக் கொண்டிருந்தது.


பென்ட்ரைவ் எங்கே என்று வீட்டை பிரித்துப் போட்டுத் தேடியும் அது கிடைக்காமல் போக. இனியனுக்கு ஒட்டு மொத்தச் சந்தேகமும் அழகியின் மேல் தான் திரும்பியது.


அதிலும் அவள் நான் தான் எடுத்தேன்.. முடிஞ்சா வந்து வாங்கிக்கோங்கன்னு சவால் விடுக்கவும். கிளம்பியே விட்டான் இனியன், அழகியின் இல்லம் நோக்கி.


சரியாக அழகியின் வீட்டிருக்கும் தெருவிற்கு வந்து நின்றவன் அழகியின் அலைப்பேசியிற்கு
அழைத்தான்.


முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தவள், "ஹாஹா.. உங்க கால்காகத் தான் இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணேன் இனியன் சார். இங்க இருக்க எங்க வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு??" என்று கேட்ட அழகியின் குரலில் நக்கல் டன் கணக்கில் வழிந்தது.


"உன்னால இப்போ நான் நடு தெருல நிக்கிறேன் அழகி. ஒழுங்க மரியாதையா அந்த பென் ட்ரைவை கொண்டு வந்து தந்திடு" என்றான் இனியன் உச்சக்கட்டக் கடுப்பில் பல்லைக் கடித்தவாறு.


"உடனே தந்துட்டா... அதுல என்ன கிக் இருக்கும் இனியன் சார். நீங்களே சொல்லுங்க?? சோ.. அதுனால இப்போ நீங்க குளத்துக்கிட்ட போவீங்களாம். நா உங்க பின்னாடியே வருவேணாம்" என்றாள் அழகி அசால்ட்டாக.


“என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற அழகி…”


“இப்போ பென்டிரைவ் வேணும்னா குளத்துக்கிட்ட வாங்க… வேண்டாம்னா எங்கேவேனா போங்க.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை...”


“சரி! வந்துத் தொலைக்கிறேன்.. நீயும் சீக்கிரமா வந்து சேறு..” என்ற இனியன். அழகிச் சொன்னக் குளத்தை நோக்கிச் சென்றான்.


இனியன் சென்றுப் பத்து நிமிடத்திற்கும் மேல் இன்னும் சிலப் பல நிமிடங்கள் சென்ற பிறகு தான் அங்கே வந்தாள் அழகி.


தன்னை வரச் சொல்லிவிட்டு இவ்வளவுத் தாமதமாக வருபவளைக் கண்டு எரிச்சலுற்றவன், " இது தான் நீ வர டைம்மா அழகி! கொஞ்சம் கூட ஒரு பொறுப்புணர்ச்சி இல்லைல்ல உனக்கு. எல்லாத்துலையும் விளையாட்டு தனம்.." என்றவனை இடைமறித்தவள்,


"போதும்.. போதும்.. ஸ்டாப் தி பாட்டு.. ஸ்டாப் தி பாட்டு.. இந்த பாட்டு வேண்டாம் தலைவா.." என்று சம்பந்தமே இல்லாமல் அழகி பாடவும், ஒன்றுமே விளங்கவில்லை இனியனிற்கு.


"இப்போ! எதுக்கு இந்த பாட்டை பாடுற??"


"பின்னே .. டீல் பேச வந்துட்டு.. அதை மறந்து எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே நீங்க. அதான் உங்களை எப்படி ஸ்டாப் பண்ண வைக்குறதுன்னு ரொம்ப யோசிச்சப் பிறகு இந்த பாட்டை பாடிட்டேன். டிரெக்டா சொன்னா மரியாதையா இருக்காதுல்ல.. அதான் சிம்பொலிக்கா பாட்டுலச் சொன்னேன் இனியன் சார்...ஹிஹி.." என்றாள் சிரித்துக்கொண்டே.


"வாறே வா!! நல்ல சிந்தனை.. நல்ல சிந்தனை.. சரி அந்த பென்ட்ரைவ் எங்கே?" என்றான் இனியன் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு.


இனியனின் கடுப்பை புரிந்தக்கொண்ட அழகியோ, அவனை மேலும் வெறுப்பெற்றும் பொருட்டு, "எந்த பென்ட்ரைவ் இனியன் சார்?? எனக்கு எதுவும் தெரியாதே! நீங்க ஃபோன்ல கேட்ட அப்போக் கூட நா சும்மாத் தான் சொன்னேன்.. நா எடுத்தேன்னு.." என்றாள் அப்பாவியாக.


"டோன்ட் ஆக்ட் அழகி! நீ திருடிட்டு வந்தியே அந்த பென்ட்ரைவ்வை தான் கேட்கிறேன். எனக்கு நல்லாவே தெரியும் அழகி நீதான் அதை எடுத்ததுன்னு. சோ! ஒழுங்கா அதை என் கிட்ட கொடுத்திடு" என்றான் நிதானமாக.


"ஹலோ! யாரை பார்த்து திருடிட்டு வந்தேன்னுச் சொல்லுறீங்க. நீங்க தான் என்னைப் பார் என் பென் ட்ரைவைப் பார்ன்னு அசால்ட்டா டேபிள்ல வச்சி இருந்தீங்க. அதை மேக் யூஸ் பண்ணி நா எடுத்து வந்தது எப்படி திருட்டாகும்?? யாரும் இல்லாம பாவமா தனியா இருந்த பென்ட்ரைவ்க்கு அடைக்கலம் கொடுத்து பாசமா எடுத்து வந்த என்னப் போய் திருடின்னு சொல்லிட்டீங்களே… சொல்லிட்டீங்களே…" என்று ஓவர் ஆக்கிட்டிங் பண்ணவும், மேலும் கடுப்பான இனியன்,


"அழகி! எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி. உன் கிட்ட இவ்வளவு நேரம் பொறுமையா நா பேசுறேன்னா அதுக்கு ஒரே காரணம் உன்கிட்ட என் கோப முகத்தை காட்ட நா விரும்பல என்பது தான். ஆனா.. நீ என்னை கோபப்படுத்தாமல் விட மாட்டேன்னு கங்கணம் கட்டிட்டு அலையுற.." என்றான்.


"அந்த கோபத்தையும் தான் காட்டுங்களேன் இனியன் சார். உங்க நவரச பாவத்தையும் பார்க்கனும்னு ஆசையா இருக்கு எனக்கு. ஆமா, இவ்வளவு கேக்குறீங்களே அப்படி அந்த பென் ட்ரைவ்ல என்ன தான் இருக்கு?? இனியன் சார்! சொல்லுங்க இதுக்கு முன்னாடி நீங்க மும்பைல என்ன செஞ்சீகிட்டு இருந்தீங்க??" என்று பாஷாப் படப்பானியில் அழகி கேட்கவும்,


"ஆமா, இது பெரிய பாஷா படம்... கேக்குறப் பாரு ஒரு கேள்வி" என்று சலித்துக் கொண்டவன்,


"அழகி! நா கமிட் ஆகி இருக்குற புது ப்ரொஜெக்ட்காக இவ்வளவு நாள் நா பண்ண ஒர்க் எல்லாமே அந்த பென் ட்ரைவ்ல தான் இருக்கு. அதுக்கு நா பேக்கப்பும் பண்ணி வைக்கல அழகி. அதான் உன் கிட்ட இவ்வளவு டிமாண்ட் பண்றேன் அந்த பென் ட்ரைவ்காக. கொஞ்சமாச்சும் விஷயத்தோட சீரியஸ்னஸைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ.." என்றான் நிதானமாக.


இனியன் கூறிய பிற்பாதியை விட்டுவிட்டு, "எதே! புது ப்ரொஜெக்ட்டா... அதுவும் நீங்க பண்ணிய ஒர்க்கா ?? மனசாட்சியே இல்லாம சொல்லுறீங்களே இனியன் சார்... டாஸ்க்.. டாஸ்க்ன்னு சொல்லி என் கிட்ட வேலை வாங்கிட்டு .. இப்போ நீங்களே பண்ணின ஒர்க் மாதிரி சீன் போடுறீங்க.." என்ற அழகியின் பேச்சினால் எழுந்தச் சிரிப்பை எவ்வளவோ கட்டுப்படுத்த நினைத்தும் இனியனால் முடியாமல் போக, வாய்விட்டு சிரித்தான் இனியன்.


அவனின் இந்தச் சிரிப்பை புரியாமல் பார்த்தவள், "இப்போ ஏன் இப்படி சிரிக்குறீங்க இனியன்" என்றாள் குழப்பமாக.


"இல்ல.. நீ டாஸ்க் பண்ண அழக நினைச்சேன் சிரிச்சேன்..ஹாஹா.. என்னால இனி சிரிக்க முடியல அழகி. அந்த பென்ட்ரைவ்வை கொடு நா கிளம்பனும்" என்றான் சிரித்துக்கொண்டே.


"ஹலோ என்ன கிண்டலா?? பரவாயில்லை உங்களால எவ்வளவு முடியுதோ அவ்வளவு சிரிச்சுக்கோங்க இனியன் சார். ஆனா,உங்க பென்ட்ரைவ் உங்களுக்கு வேணும்னா.. நான் சொல்லுற டீல்க்கு ஓகே சொல்லணும்"


"அது என்ன டீல்??" என்றான் சிரிப்பதை நிறுத்திவிட்டு.


"பெரிதாகவெல்லாம் ஒன்றுமில்லை இனியன் சார். ரொம்ப சிம்பிள்.. நா கேக்குற ஐந்து விஷயங்ககுக்கு நீங்க யோசிக்கவே செய்யாம ஓகேன்னு சொல்லி, நா சொன்ன விஷயங்களை எல்லாம் செய்யணும். இது தான் நம்ம டீல் இனியன் சார். இந்த டீல்க்கு நீங்க ஓகே சொன்னா.. உங்க பென்ட்ரைவ் உங்களுக்கு. இல்லனா உங்க பென் ட்ரைவ் உங்களுக்கு கிடையாது" என்றாள் அசால்ட்டாக.


அழகியின் டீல்லைக் கேட்டு அதிர்ந்த இனியன், "வாட்????" என்றான் சப்தமாக. அவனின் குரலில் உச்சக்கட்ட அதிர்வு இருந்தது.


"அவுச்.. ஏன் இனியன் சார் இப்படி கத்தி
காதைச் செவிடாக்குறீங்க" என்றாள் அழகி காதைத் தேய்தவாறு.


" அழகி! உன் லிமிட்டை நீ கிராஸ் பண்ணிப் போற . போனா போகுது சின்னப் பொண்ணு விளையாட்டு தனமா ஏதோ பண்ணுறான்னு அமைதியா இருந்தா. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு ஆடுற. ஒழுங்கா என் பென்ட்ரைவை தந்துட்டு இப்பவே இந்த இடத்தை விட்டு காலி பண்ணு" என்றான் இனியன்.


அவனின் குரலில் உள்ளுக்குள் பயம் எழுந்தாலும், அதை கண்டுக்கொள்ளாமல் ஓரம் கட்டியவள், "கூல்! கூல்! இனியன் சார்" என்று கூறியவள், கையில் வைத்திருந்த பென் ட்ரைவை எடுத்து உடைப்பது போல் செய்கை செய்ய. உண்மையிலேயே பதறிவிட்டான் இனியன்.


இருக்காத பின்ன, அந்த பென்ட்ரைவ்வில் இருப்பது அவனது இத்தனை நாள் அயராத உழைப்பல்லவா.


"சரி அழகி! நா இந்த டீல்க்கு ஓகே சொல்லுறேன். அதை என்கிட்ட கொடு" என்றான் முடிவாக.


இனியன் சரியென்று சொன்ன மாத்திரத்தில் கையில் வெத்துப் பத்திரத்தை எடுத்த அழகி அவனிடன் அதில் கையெழுத்திடச் சொல்ல. இனியனோ வெத்துப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.


பிறகு அந்த பத்திரத்தில், 'இனியன் ஆகிய நான். அழகியிடம் இருந்து என் பென்ட்ரைவை வாங்குவதற்காக அவளிடம் போட்ட ஒப்பந்தத்தின் படி, இன்றிலிருந்து அழகி கூறும் ஐந்து விஷயங்களையும் எந்த வித கேள்வியும் இன்றி செய்வேன் என்று உறுதிக் கூறுகிறேன்' என்று தானே எழுதிய அழகி, அதை இனியனிடம் கொடுத்து கையெழுத்திட சொன்னாள்.


அழகி தந்த பத்திரத்தை வாங்கிப் பார்த்தவன், அதில் அவள் எழுதி இருக்கும் வார்த்தைகளைப் படித்திவிட்டு மீண்டும் அடக்க மாட்டாமல் சிரித்தவன், "ஹாஹா... அழகி வேற லெவல் நீ போ ... அக்ரீமெண்ட்டே போட்டுட்டே... என்னால சிரிச்சு முடியல" என்றவன் சிரித்தவாறே அந்த பாத்திரத்தில் கையெப்பமிட்டு அழகியிடம் தந்தான்.


பத்திரத்தை ஒரு கரத்தில் வாங்கியவள், மறுக் கரத்தில் இருந்த பென்ட்ரைவை இனியனிடம் தந்தாள்.


இனியனிற்கு போன உயிர் திரும்ப வந்த உணர்வு, அந்த பென் ட்ரைவை வாங்கிய போது.


"ஓகே இனியன் சார்! ஆல் செட். சோ.. இன்னையில இருந்து நா சொல்லுற அஞ்சு விஷயத்துக்கு நீங்க ஓகே சொல்லணும் இல்லையா?? அதுனால, இந்த ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடும் போது ட்ரயல் பால்ன்னு சொல்லி ஒரு பால் முன்னாடி போட்டுப் பார்ப்போம்ல. அதே போல இப்போ ட்ரயல் ஓகே ரூல் சரியா. இந்த ட்ரயல் ஓகே ரூல் என்னன்னா... நா எப்போ உங்களுக்கு கால் பண்ணாலும் நீங்க அதை அட்டெண்ட் பண்ணனும். இன்கேஸ் நீங்க பிஸியா இருந்தா .. நீங்க எப்போ ஃப்ரி ஆறீயங்களோ அப்போ எனக்கு கால் பண்ணனும். இதுதான் இந்த ட்ரயல் ரூளோட கண்டிஷன் இனியன் சார்… புரிஞ்சதா?" என்று அழகி கெத்தாக கேட்பதாக எண்ணிக் கொண்டு ஒரு பாவனையில் கேட்க.


மீண்டும் குபீர் சிரிப்பு வந்தாலும் அதை முயன்று கட்டுப் படுத்திக்கொண்டு, "எனக்கு டீல் ஓகே அழகி " என்றான் இனியன்.


"வாவ்! நீங்க இதுக்கும் வாக்குவாதம் பண்ணுவீங்க.. நா நிறைய பேசணும்ன்னு நினைச்சேன். பரவாயில்லை இனியன்.. நீங்களும் கொஞ்சம் சூப்பர் தான்" என்றாள் பாராட்டாக.


"ஹாஹா… தேங்க யூ போர் யூர் காம்ளிமெண்ட் அழகி! நா நினைச்சு இருந்தா.. நீ வந்தப்பவே உன்னைப் பிடிச்சி வச்சிக்கிட்டு என் பென்ட்ரைவ்வை வாங்கி இருக்கலாம். பட் நா அதை விரும்பாமத் தான் அமைதியா இருந்தேன். இன்னும் சொல்லப் போன ரொம்பவே பொறுமையா இருந்தேன், என் லிமிட்டை தாண்டியும். அப்படியும் ஒரு சில இடத்துல அவுட் பர்ஸ்ட் ஆகி இருப்பேன். எப்படியோ உன் பேச்சால் என்னை திரும்ப அமைதி பண்ணிட்ட நீ. தேங்க்ஸ் போர் தட் அழகி. என்னோட அங்கர் கண்ட்ரோல் லெவல்ல நானே டெஸ்ட் பண்ணிப் பார்த்துக்க தெரிந்தோ தெரியாமலோ நீ ரொம்பவே ஹெல்ப் பண்ணிருக்க அழகி.. தேங்க்ஸ்.." என்றவன் அழகியிடம் விடைப்பெற்று கிளம்ப,


அழகியோ, 'இப்போ ! இவ்வளவு நேரம் நாம அவரை வச்சி வம்பு செஞ்சோமா?? இல்ல அவரு அவரையே டெஸ்ட் பண்ணிக்க வான்டட்டா வந்து சோதனை எலியா நாமளா நின்னோமா?? ' என்று புரியாமல் புலம்பியப் படியே நின்றிருந்தவள்,


"எது எப்படியோ ! இனி இனியன் சார் மொத்தமும் என் கண்ட்ரோல்" என்று உல்லாசமாக எண்ணிக் கொண்டு விசிலடித்தப் படி வீட்டிற்குச் சென்றாள் அழகி.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 9 :

டைரியின் பக்கங்கள் :


என் ஆருயிர் நண்பன் அட்லஸ் கருமமே கண்ணாக ஊரிற்கு அவன் சென்றதிலிருந்து நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் விம் பார் போட்டு விளக்கிக் கொண்டிருக்க,


அவன் கூறுவதை நான் கேட்கிறேனா?? அதற்கு பதில் வினையாற்றுகின்றேனா?? என்பதை பற்றியெல்லாம் அவன் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை. நான் இவ்வளவு நேரம் ஃபோனைக் கட் செய்யாமல் இருப்பதே பெரிது என்று எண்ணினான் போலும்.


ஊரிற்கு செல்ல எந்த பஸ் ஏறினான் என்பதில் துடங்கி... வழியில் தண்ணீர் பாட்டில் வாங்க இறங்கியது முதற்கொண்டு... எங்கு உறங்கினான்... என்ன உண்டான் என்பதுவரை அனைத்தையும் விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தான்.


அட்லஸ் எனும் அவன் செல்லப்பெயருக்கு ரம்பம் என்று பதவி உயர்வு தந்துவிடுவோமா என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த என்னை ‘மச்சீசீ...’ என்ற அவனின் கத்தல் தான் நினைவிற்குக் கொண்டுவந்தது.


“ஏன்டா பன்னி! இப்படி காது ஜவ்வு கிழியுற மாதிரி கத்தி என் காதை செவிடாக்குற...” என்று நானும் பதிலுக்கு கத்த,


“சாரிடா மச்சி!!! இந்த சோசியல் இருக்கால.. அவ என் இடுப்புல கில்லிட்டா டா… அதான் ஒரு ஃப்ளோல கத்திட்டேன்டா.." என்றான் எரிச்சலாக.


யார் இந்த சோசியல்?? எனக்கு உண்மையில் யார் இந்தப் புது வரவு என்று தெரியவில்லை. அதை அறிந்துக்கொள்ளும் எண்ணத்தில், “யாருடா மச்சி இந்த சோசியல்... சொல்லவே இல்லை பாத்தியா நீ.. என்கிட்டே கூட...” என்று நான் ராகமாக இழுக்க.


நான் எதைப் பற்றிக் கூறுகிறேன் என்பதைப் புரிந்துக்கொண்டவன், “ டேய்! டேய்! நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லைடா. நீயே எதையாவது கிளப்பி விட்டுடாத மச்சி… இந்த சோசியல் வேற யாரும் இல்லை என் சித்தப்பா பொண்ணு தான்” என்றான் சிரித்துக்கொண்டே.


“ஹஹா... நான் கூட எங்கே நீ கமிட் ஆகிடியோனு ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்டா. நீங்களாம் யாரு ‘மொரட்டு சிங்கள்ஸ்’ குரூப்பின் தலைவன் ஆச்சே. அதுவுமில்லாம வாழ்க்கை முழுசும் மொரட்டு சிங்கள் ஆகவே இருப்பேன்னு சபதம் வேற எடுத்த ஆளாச்சே. நீ போய் கமிட் ஆகிட்டேன்னு நானும் கூட தப்பா நினச்சிடேன் பாரேன். என்ன கொடுமை சரவணா இது… ச்ச… என்ன கொடுமை அட்லஸ் இது..” என்றேன் நான் வம்பிழுக்கும் விதமாக .


“இப்படிச் சொல்லிச் சொல்லியே என்னை கமிட் ஆக விடாம பண்ணுறீங்களே உங்களுக்கே இது நியாயமா இருக்காடா...” என்று புலம்பவே ஆரம்பித்துவிட்டான் அட்லஸ்.


அவனும் பிறகு என்னத்தான் செய்வான் பாவம். இவனையும் பிடித்துப்போய் யாரேனும் ஒரு பெண் இவனிடம் காதலைச் சொல்ல வந்தால். ‘ அட்லஸ் ஒரு மொரட்டு சிங்கள்... பெண்களைக் கண்டாலே அவனிற்கு சுத்தமாகப் பிடிக்காது’ என்று பசங்களே அவர்களாக ஓரு கதையைக் கற்பனையில் கூறிவிடுவார்கள். போதாக்குறைக்கு
அதற்கு சாட்சியாக, ஒருமுறை போதையில் ‘சிங்கள்ஸ் தான் கெத்து’ என்று குழறிய குரலில் அட்லஸ் நடத்தியச் சொற்பொழிவை வேறு விடியோவாக படம்பிடித்து வைத்திருந்து, அதை அட்லஸிடம் காதல் சொல்ல வந்தப் பெண்களிடம் போட்டுக் காண்பித்து அவர்களை தெறித்து ஓட வைத்தனர் மொரட்டு சிங்கள் பாய்ஸ்.


இந்த விடயங்கள் எல்லாம் அட்லஸிற்கு தெரியவந்த அன்று அனைவரிடமும் சண்டையிட்டவன். தன் உயிரினும் மேலாக எண்ணிய மொரட்டு சிங்கள்ஸ் குழுவின் தலைவன் பொறுப்பையும் துறந்தான்.


இருந்தும் என்ன பயன். ஒரு பெண்ணும் அவனிடம் வந்து தங்கள் காதலைக் கூறத் தயாராக இருக்கவில்லை. போதாக்குறைக்கு இவனின் காதல் விண்ணப்பங்களும் பிரிக்கப் படாமலையே பெண்குயின் வடிவம் கொண்ட எங்கள் கல்லூரிக் குப்பைத் தொட்டியில் தஞ்சமடைந்தது.



பொறுத்து! பொறுத்து! பார்த்த அட்லஸ். நாளைக்கு கிடைக்கும் பலாப்பழத்திற்குப் பதில் இன்றைக்குக் கிடைக்கும் கலாக்காயே மேல் என்பது போல். நாளை கிடைக்கும் காதலன் பதவியைவிட இன்றிருக்கும் மொரட்டு சிங்கள் தலைவன் பதவியே மேல் என்று எண்ணி. தலைவன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டான் அட்லஸ். இந்த நிகழ்வுகளை வைத்து அவனை வெறுப்பெற்றுவதில் எனக்கு அப்படியொரு அலாதி இன்பம்.


நண்பர்களைக் கலாய்ப்பதில் கிடைக்கும் இன்பம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தனர் மட்டுமே அறிவார்கள். அதே போல் இந்தக் கலாய்த்தல்களும், கிண்டல்களும் ஜாலியாக மட்டும் இருக்குமே தவிர. ஒருபோதும் தனிப்பட்டத் தாக்குதலாக அது இருக்காது.


கிண்டலாக ஆரம்பித்த இந்த பேச்சு, எங்கே அவனிற்கு மனச்சோர்வை தந்து விடுமோ என்றெண்ணி பேச்சை மாற்ற முயன்றேன் நான்.


“மச்சி... அப்பறம் ஊரு எப்படி இருக்கு. தாத்தா இப்போ நல்லா இருக்காங்களா??"


“ எனக்கு என்ன குறை மச்சி... போர் அடிக்காம இருக்க தான் என் கூட இந்த சோசியல் இருக்கே. தாத்தா இப்போ கொஞ்சம் சுகமாகிடாறுடா. ஒன்னும் பிரச்சனையில்லை” என்று அவன் கூறும் போதே... ‘ என்னை சோசியல் சொல்லாதேடா தடியா..’ என்ற கீச் கீச் குரல் ஒன்று அவன் பின்னணியில் ஒலித்தது.


“டேய்... யாருடா மச்சி பேசுறது. அந்த சோசியல் தானே...அந்த பிள்ளைக்கு ஏன்டா... இப்படி ஒரு பேரு...”


“ஹஹா… அந்த மேட்டர் உன்கிட்ட சொல்லல நான். அது ஒரு செம காமெடி கதை மச்சி…” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் முன் ‘நோ! நோ! நோ! ’ என்று மீண்டும் அதே கீச் கீச் குரல் கேட்க எனக்கு சிரிப்புதான் வந்தது இவர்களின் கூத்தில்.


என்னையும் கட்டுபடுத்த முடியாமல் நான் சிரித்துவிட. அவ்வளவு நேரமும் பிளாக் காபியுடன் தனி உலகில் சஞ்சரித்திருந்த என் தேவதை மதி, என் சிரிப்பு சத்தத்தில் மோன நிலை களைந்து என்னை நோக்கி ‘என்னாச்சு ராஜ்! ஏன் இப்படி சிரிகிறீங்க..’ என்று கேட்டாள்.


சிரித்தவாறே ஃபோனை ஸ்பிக்கரில் போட்டுவிட்டு, மேலும் அவர்களின் அளப்பரைகளை கேட்க ஆரம்பித்தேன்.


இன்னமும் அவர்களின் சண்டை முடிந்த பாடில்லை. எப்படியோ அவர்களின் அடிபிடிச் சண்டையில் வென்று வெற்றிவாகைச் சூடி ஃபோனைக் கைபற்றியது அட்லஸ் தான்.


“மச்சி! நான் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சோசியளோட பெயர் வரலாற்றை சொல்லிடுறேன்டா. இல்லைனா அப்புறம் திரும்பவும் ஃபோனை பிடிங்கிடுவா இந்த பக்கி” என்றவன் தொடர்ந்து அந்த வரலாற்று பெயர் வைத்தக் கதையைக் கூறலானான்.


“ லாஸ்ட் இயர் செமஸ்டர் லீவ்க்கு நான் ஊருக்கு வந்திருந்தேன்ல. அப்போ தான் இங்க இந்த சோசியல் மேடமோட ஸ்கூல்ல ரேங்க் கார்ட்க்கு கவர் போடணும்னு எதோ புது ரூல் போட்டு இருந்தாங்க.


மேடமும் ரேங்க் கார்ட் கவர் வாங்க என்னை தான் கூப்பிட்டு போனாங்க ஸ்டேஸ்னரிக்கு. நான் அப்போவே எவ்வளவோ சொன்னேன்டா மச்சி.. என்கிட்ட கவரைக் கொடுடி நான் போட்டு தாரேன்னு. எங்கே, மேடம் அதைக் கேட்டா தானே!


கடைக்கார அண்ணாக்கு தான் நல்லா போடத் தெரியும். உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நல்லா வியாகானம் பேசிட்டு ரேங்க் கார்டை அந்த அண்ணன் கிட்ட கொடுத்தா… அவரும் அந்த கார்டை கவர்ல போட்டு கொடுத்துட்டாரு. இந்த மேடமும் ரேங்க் கார்டை வாங்க போகவும் இவகிட்ட அதை தராம.. அவரு அந்த ரேங்க் கார்டை திருப்பி பாத்தாரு…” என்று கூறிகொண்டே வந்தவன்.


திடிரென்று ‘கெக்கே பேக்கே’ என்று சிரிக்கவும் எனக்கும், மதிக்கும் ஒன்றும் புரியவில்லை. இவன் ஏன் இப்படிச் சிரிக்கிறான் என்று.


மெதுவாக அவன் சிரிப்புச் சத்தம் சிறிது சிறிதாக ஓய்ந்து, மீண்டும் கதையை தொடர்ந்தான்.


“ஹஹா… மச்சி அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியுமா?? ஹஹா.. மேடம் அந்த எக்ஸாம்ல சோசியல்ல பெயில் டா… அதை நான் பார்க்கக் கூடாதுனு தான் என்கிட்டே ரேங்க் கார்டை காட்டாமாட்டேன்னு சொல்லி இருக்கா.

ஆனா, அந்த அண்ணன் அதைப் பார்த்துட்டாரு. இதுல இவ பெயில் ஆகி இருக்கான்னு வீட்ல யார்கிட்டையும் சொல்லாம சித்தி கையெழுத்த இவளே போட்டு இருக்கா கேடி. அந்த சம்பவத்துக்குப் பிறகு இவளை எங்கே பார்த்தாலும் அந்த அண்ணன் சோசியல் சோசியல்னு தான் கூப்பிடுவாறு.

இவளும் அதுக்காக அவர்கிட்ட சண்டைக்கு போக. எல்லார்கிட்டயும் வம்பு பண்ணிக்கிட்டு சுத்தும் இந்த மேடமோட விக்னஸ் பாயிண்ட் இதுதான் போலனு எல்லாருக்க்கும் தெரிஞ்சிடுச்சு. அப்போல இருந்து இப்போ வரைக்கும் சோசியல்ன்னு தான் எல்லாருமே இந்த மேடமை கூப்பிடுறோம் டா.

அவளை சோசியல்னு கூப்பிடுற எல்லாரையும் நோஸ்கட் பண்ண அவ டென்த்ல சோசியல்ல சென்டம் வாங்குவாளாம். மேடம் சபதம் போட்டு வெறிக்கொண்டு படிச்சிக்கிட்டு இருகாங்க..” என்றவன் விடாமல் சிரித்துக்கொண்டே இருக்க. அதை கேட்டுக்கொண்டு இருந்த எனக்கும், மதிக்கும் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.


நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டிருந்த நேரம், அட்லஸிடமிருந்து ஃபோனை வாங்கிய… இல்லை.. இல்லை.. ஏறக்குறைய ஃபோனை பிடிங்கிய சோசியல், "நீங்க கூட இந்த தடிமாடு கூட சேர்ந்துகிட்டு என்னை கிண்டல் பண்ணுறீங்களே ஹீரோ சார்! இது உங்களுக்கே நல்லா இருக்கா??" என்றாள் கோவம் போலும் .


அவளின் அந்த 'ஹீரோ சார்' என்ற விளிப்பிலேயே திகைத்து நின்ற நான். 'ஹீரோ சாரா??..' என்றேன் ஆச்சரிய குரலில்.


"ஆமா!! ஹீரோ சார் தான். நான் தான் உங்க போட்டோவை இந்த தடிமாடு ஃபோன்ல பார்த்தேனே. அவ்ளோ அழகா இருந்தீங்க. நீங்க தான் காலேஜ்ல பெரிய ஆளாமே.. இவன் சொன்னான். ஸ்டுடெண்ட்ஸ் எல்லாருக்கும் நீங்க ஹீரோ இமேஜ் ஆம். சரி அதான் நானும் உங்களை ஹீரோ சார்னு பிக்ஸ் பண்ணிட்டேன்" என்றாள் சோசியல் குறும்புச் சிரிப்புடன்.


"அவன் பில்டப் பண்ணுற அளவுக்கெல்லாம் பெரிய ஆள் இல்லைடா நானு. நீ அவன் சொல்லுறதை நம்பி ஏமாந்துறாதே.." என்றேன் சிரிப்புடன்.


"சே!சே! உண்மையா நீங்க சூப்பர்.. ஹீரோ சார். அப்புறம் உங்க ஹீரோனியை நீங்க எப்படி லவ் பண்ணுனீங்க. உங்க ஃபுல் லவ் ஸ்டோரியும் எனக்கு தெரியுமே. கியூட்டா இருந்துச்சு உங்க லவ் ஸ்டோரி. உங்க ஏஞ்சல் .. அதான் ஹீரோனி போட்டோவை இவான் ஃபோனுக்கு அனுப்பி விடுங்க ஹீரோ சார். நான் பார்க்கணும் உங்க ஹீரோனியை" என்று வெட்க சிரிப்புடன் அழகாய் பேசியவளின் குரலில் மயங்கி,


"ஹாய் சோசியல்… என்னை பார்க்க ரொம்ப ஆவலா இருக்க போல. நீ கற்பனை பண்ணி வச்சி இருக்கிற அளவுக்கு எல்லாம் நா சூப்பரா இருக்கேன் மாட்டேன்மா. ஏதோ கொஞ்சம் சுமாரா இருப்பேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று சிரிப்புடனே கூறினாள் என் தேவதை.


"ஐ… அக்கா.. நீங்களும் அங்க தான் இருக்கீங்களா?? உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு க்கா. ஃப்ரீயா இருந்தா நம்ம ஊருக்கு வாங்க க்கா.. ஜாலியா இருக்கும். ஹீரோ சார் நீங்களும் வரணும்.. நா உங்க ரெண்டு பேருக்கும் வெய்ட் பண்ணுவேன்" என்று அன்பு கோரிகையும் வைத்தாள் அந்த கீச் கீச் சோசியல்.


"உங்க ஊரு என்னடா.." என்ற மதியின் கேள்விக்கு சோசியல் பதில் சொல்ல விளையும் போது.


"ஹே… நீ என்ன சொல்ல ஃபோனை வாங்கின.. இப்போ.. என்ன கதை அளந்துக்க்கிட்டு இருக்க. சித்தி உன்னை தேடுறாங்க பாரு.. போ " என்ற அட்லஸின் குரல் கேட்கவும்,


"அட ஆமாம்ல… ஐயோ ஹீரோ சார்.. உங்க கிட்டப் பேசுற ஆர்வத்தில் சொல்ல வந்ததையே மறந்துட்டேன். ஹாப்பி பர்த்டே ஹீரோ சார். பி ஹாப்பி ஆல்வேஸ்... " என்று வாழ்த்தியவள்.


"அம்மா கூப்பிடூறாங்க ஹீரோ சார். நான் போறேன் பை. மறக்காம மதி அக்காவையும் கூட்டிகிட்டு ஊருக்கு வாங்க. பை ஹீரோ சார்.. பை ஹீரோனி மதி க்கா " என்று கூறி விட்டுச் சிட்டாகப் பறந்துவிட்டாள் சோசியல்.


"மச்சி.. பை டா.. சித்தி ஏதோ கடைக்குப் போக தான் கூப்பிடுறாங்க. நா போய்ட்டு அப்பறம் கால் பண்ணுறேன். ஹாப்பி பர்த்டே மச்சி. சிஸ்டர் ஒழுங்கா அவனை பாத்துக்கோ " என்று என்னிடமும் மதியிடமும் விடைபெற்றான் அட்லஸ்.


அதன் பிறகு என் தேவதை செய்த கேக்கை இருவரும் ஒன்றாக சேர்ந்து வெட்டி, மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டோம்.


அருகிலுள்ள கோவிலுக்குப் போய் இருவர் பெயருக்கும் அர்ச்சனை செய்துச் சாமி கும்பிட்டு விட்டு. அப்படியே சினிமா, ஷாப்பிங், ஹோட்டல் என்று நன்றாக என் பிறந்தநாளைக் கொண்டாடினோம்.


அனைத்து வித கொண்டாட்டங்களும் முடிந்து அவளை ஹாஸ்டலில் இறக்கி விட்ட பொழுது. இப்போதே அவள் வீட்டிலும் என் வீட்டிலும் எங்கள் காதலைப் பற்றிக் கூறிக் கல்யாணம் செய்துக்கொண்டால் என்ன?? என்று தான் தோன்றியது எனக்கு. அப்படிச் செயதால் என் தேவதையை நான் பிரியாமல் எப்போதும் அவளுடனே இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமல்லவா.. என்று ஏதேதோ எண்ணம் தோன்றியது என்னுள் .

என் தேவதையுடன் நான் கொண்டாடியா முதல் பிறந்தநாள் இது. இன்று காதலியாக உடனிருப்பவள். அடுத்த முறை மனைவியாக என்னுடன் இருப்பாள்.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 10


இனியனை எந்த எந்த வகையில் எல்லாம் தொல்லைச் செய்யலாம் என்பதைத் தவிர வேற எதைப் பற்றியும் சிந்திக்காமல் இத்தனை நாட்களாகச் சுற்றித் திரிந்த அழகி, இனி அவனைத் தன்னுடைய டீல்லை வைத்து நன்றாகவே படுத்தி எடுக்கலாம் என்ற குஷியில் நிம்மதியடைந்தவள். பத்மாவைச் சிறிது நேரம் வம்புப் பண்ணலாம் என்று எண்ணிக்கொண்டு பத்மாவின் வீட்டிற்குச் சென்றவள் கண்டதெல்லாம் சோகமே உருவாய் அமர்ந்திருந்தப் பத்மாவைத் தான்.


ஏன் இவள் இவ்வாறு இருக்கிறாள் என்று யோசித்துக்கொண்டே சென்ற அழகி, அதையே பத்மாவிடமும் கேட்க, அழகியின் கேள்விக்கு பதிலாக எதையோ சொல்லிச் சமாளித்த பத்தமாவை நம்பாதப் பார்வை பார்த்த அழகி. எத்தனையோ விதமாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தும் அசராமல் சொன்னப் பதிலேயேத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவளை சமாளித்து பதிலை வாங்கும் திறமை கயல் ஒருவளுக்கே இருக்கிறது என்று எண்ணிய அழகி. கயலை அழைத்து வந்து பத்மாவிடம் பேசச் சொல்லி அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டுப்பிடிக்கலாம் என்று எண்ணிக் கயலைக் காணச் சென்றாள்.


அழகிக்கு இன்றைய ராசிப்பலனின் அதிர்ச்சி என்று போட்டிருந்ததுப் போலும். கயலைக் காணச் சென்றவள், கயலின் தோற்றத்தைக் கண்டுப் அப்படியே திகைத்து நின்றாள்.


கண்களின் கீழ் குழிவிழுந்து, கன்னங்கள் ஒட்டிப்போய், உடல் இளைத்து, நிறம் மங்கி பார்பதற்க்கே என்னவோப் போல் இருந்தவளைக் கண்டு அழகிக்கு பேச்சே எழவில்லை.


பத்மாவின் பிரச்சனை என்னவென்றுக் கண்டுப்பிடிக்க வேண்டிக் கயலைப் பார்க்க வந்த அழகி சத்தியமாக அவளை இப்படி ஒரு கோலத்தில் எதிர்ப்பார்க்கவேயில்லை.


“ஹே கயலு! என்ன கோலம்டி இது??” என்று கேட்டவாறு கயல் அருகில் சென்ற அழகியைக் கண்டதும் அவளைக் கட்டிக்கொண்டாள் கயல்.


“கயல்! என்ன கயல் ஆச்சு?? ஏன்டி இப்படி இருக்க?? ” என்று கயலை அணைத்தவாறே கேட்டுக் கொண்டிருந்த அழகியின் கண்களும் கண்ணீரைப் பொழிந்தன.


அழகியின் குரலை வைத்தே அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்த கயல். தன்னை ஒருவாறு கட்டுக்குள் கொண்டுவந்து, “அச்சோ அழகி! என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி அழுதுகிட்டு. நா ஏதோ மூட் அவுட்ல அப்படியே உட்கார்ந்துட்டேன். நீ வரவும் உன் குரலைக் கேட்டுக் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன். அவ்வளவு தான்டா.. மத்தப்படி எனக்கு ஒண்ணுமில்லை” என்று அழகியை கயல் சமாதானம் செய்ய முயல.


அழகியால் எதையும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், அவளுக்கு விருப்பமானவர்களின் சிறு வருத்தமும் அவளைப் பெரிதும் பாதிக்கும். அதனால் தான் கயல் தன் சோகத்தையும் மறைத்துக் கொண்டு அவளை சமாதானம் செய்ய முயன்றாள்.


"நீ பொய் சொல்லுற கயல். என்கிட்ட எதை மறைகிற நீ?? நா ஒரு முட்டாள்… என்னை சுத்தியே இருக்க உங்க ரெண்டு பேரையும் கண்டுக்காம.. நா மட்டும் தனியா எதையோ பண்ணிக்கிட்டு இருந்துட்டு உங்களை கவனிக்கமா விட்டுட்டேன். இதுவே… நா இப்படி இருந்திருந்தா நீங்க என்னை இப்படியாக் கண்டுக்காம இருந்து இருப்பீங்க. கைல வச்சி தாங்கி இருக்க மாட்டீங்க.. ஆனா, நா எதுக்கும் லாயக்கு இல்லை கயல்.. உங்க பாசத்துக்கு நா தகுதியே இல்லை. என் சந்தோசம் மட்டுமே முக்கியம்னு என்று வாழ்கின்ற ஒரு சுயநல வாதி கயல் நா" என்று அழகி தன் போக்கில் புலம்பிக் கொண்டே இருக்க,


"அழகி! இங்கப் பாரு புள்ள. காலைல அப்பாவுக்கும் எனக்கும் சண்டை .. அதுனால தான் என்னமோ மாதிரி இருந்தேன். நீ அதைப் பார்த்துவிட்டு இப்படி உன்னை நீயே போட்டுக் குழப்பிக்கிற" என்றாள் கயல்.


"எங்க என் தலைல கை வச்சுச் சொல்லுப் பார்ப்போம். இதுதான் நீ இப்படி இருக்க காரணம்னு" என்று அழகி கயலின் கையை எடுத்துத் தன் தலைமீது வைத்துக் கேட்கவும், திகைத்த கயல்.


"லூசா புள்ள நீ! என்ன இதுலாம்.. கையை விடு முதல்ல.. விடு"


"அப்போ! விஷயம் என்னன்னு சொல்லு. நா கையை விடுறேன்" என்றாள் அழகி பிடிவாதமாக.


"எல்லாம் உன் மச்சான் கூட சண்டை அதான்" குரலே வெளிவராமல் மிகவும் நலிந்தக் குரலில் சொன்னாள் கயல்.


"சந்தோவா?? உன்கூட சண்டைப் போட்டானா??" உச்சப்பட்ட அதிர்ச்சி அழகியின் குரலில்.


சந்தோஷிற்கு சண்டைப் போட என்ன.. சத்தமாக அதட்டி பேசக் கூட வராது. அவனின் கோபங்கள் எல்லாம் ஒரு சிலரைத் தவிர வேறு யாரிடமும் வெளிப்படவும் செய்யாது. அந்த ஒருச்சிலரில் ராஜனும் அடங்குவான்.


"அவரே தான்!!" பதில் வந்தது கயலிடம் தழுதலுத்தக் குரலில்.


"ஏன்??"


" அவரு மும்பை போனதுல இருந்து என் கூட பேசறதே இல்லை புள்ள… அதைப்பற்றி நான் கேட்ட அப்போ என்கிட்ட கத்திட்டாரு.. நானும் பதிலுக்கு அவர்கிட்ட கத்திட்டேன். அது அப்படியே சண்டையா ஆகிடுச்சு. அதுக்கு பிறகு அவரும் ஃபோனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சி இருக்காரு… நா எத்தனை தடவை ஃபோன் பண்ணிட்டேன் தெரியுமா?? ஸ்விட்ச் ஆப் தான் வருது. எனக்கு வேற சிந்தனையும் வரல புள்ள… அவக கிட்ட ஒரே ஒரே வார்த்தை பேசி சமாதானம் செஞ்சிட்டாப் போதும்.. எனக்கு அதுவே நிம்மதியா இருக்கும் அழகி" என்றாள் ஏக்கமாக.


கயலின் உணர்வுகளை நன்றாக அழகியால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அவளும் அவனது பிரிவை எண்ணி மீனாட்சியிடம் புலம்பியவள் தானே. தனக்கே இப்படி இருக்கையில் சந்தோஷின் காதலி கயல். அவனின் பிரிவு அவளுள் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை எதையும் மனதில் கொள்ளாமல், எவ்வாறு சந்தோவால் இப்படி பேசாமல் கூட இருக்க முடிகிறது?? வேலை முக்கியம் தான். அதே சமயம் குடும்பமும் முக்கியமல்லவா.


என்னத்தான் கை நிறைய காசு, பகட்டான வாழ்க்கை, பந்தாவாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நல்ல வேலை என்று இருந்தாலும். இவை அனைத்தையும் பகிர்ந்துக்கொள்ள ஒரு குடும்பம் தேவையல்லவா இறுதியில்.


இந்த கனவு வாழ்க்கையை நோக்கி போகும் முயற்சியில், சந்தோ நிகழ்கால வாழ்க்கையின் சுவையை இழந்துக் கொண்டிருக்கிறான். அவனை மணிக்கணக்காக எல்லாம் பேசச் சொல்லவில்லை. ஏதோ, தினமும் ஒரு ஐந்து நிமிடம், அவன் நலத்தை மட்டுமே எண்ணிக்கொண்டு இருக்கும் இந்த ஜீவன்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினால் அதுவே போதுமே இவர்களுக்கு. ஏன் அதைக்கூட செய்யாமல் சுற்றுகிறான் இந்த சந்தோ?? அழகியின் என்னவோட்டங்கள் எங்கெங்கோ சுற்றி பயணித்துக் கொண்டிருந்தது.


கயலை இயல்பாக்கும் பொருட்டு, "கயல்! இந்த சந்தோ பய இப்படி தான். ஏதாவது ஒர்க் டென்ஷன்ல உன்னை கத்தி இருப்பான். நீ வேணும்னா பாரேன். வேலை எல்லாம் முடிஞ்சதும்.. சாரி புஜ்ஜி! லவ் யூ புஜ்ஜின்னு உன் பின்னாடியே தான் அலையப் போறான்" என்று அழகி கூறவும், இவ்வளவு நேரம் இருந்த சோர்வு நீங்கி , சந்தோஷ் எப்போதும் சண்டைகளுக்கு பிறகு இப்படி தானே சமாதானம் செய்வான் என்று எண்ணிய கயலின் முகத்தில் அழகானத்தொருப் புன்னகை வந்தமர்ந்தது.


கயலின் புன்னகையை கண்ட அழகியோ கயலின் சிறு புன்னகை விரிந்த சிரிப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கினாள்.


"அப்போ! இது தான் பசலை நோய்யா கயலு… தலைவனை பிரிந்து வாடும் தலைவியின் நிலை. தமிழ் புக்ல படிச்சது.. ஒருதடவை கூட நேர்ல பார்த்தது இல்லை நானு. நீ உன் வளையலை கழட்டி தாயேன்.. அது உனக்கு ஒட்டியாணம் போல ஆகுத்தான்னு பார்ப்போம்" என்று கிண்டல் செய்த அழகியைக் கண்டு அடக்க மாட்டாமல் சிரித்த கயல்,


"அடியே! என்னையே கிண்டல் பண்ணுறீயா நீ… இரு வரேன்" என்று அழகியை துரத்த, அவளும் கயலிடம் நேக்காக தப்பித்து ஓடிக் கொண்டிருந்தாள்.


எதேதோ குரங்கு சேட்டைகள் எல்லாம் செய்து கயலை சிரிக்க வைத்து , அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்த அழகி, சந்தோவிடம் இதை பற்றிப் பேசி ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்று உறுதிக் கொண்டாள்.


அதே போல் பத்மாவின் சோகத்திற்கு காரணமும் அவளின் 'அவர்' தான் என்று கயல் மூலம் அறிந்துக் கொண்ட அழகி, முதலில் அந்த 'அவர்' யாரென்று கண்டுப்பிடிக்க வேண்டும் என்றும் குறித்துக் கொண்டாள்.


****************************

அன்றைய பயிற்சி வகுப்பிற்க்கான முக்கிய தலைப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான் இனியன். சரியாக அதே நேரம் அங்கு பதட்டத்துடன் வந்த மருது, 'டேய் மச்சி!!' என்று அழைக்க.


அவனை பார்த்து இனியன் முறைக்கவும் தான் அலுவலகத்தில் அவனை மச்சி என்று அழைத்துவிட்டத்தை உணர்தான் மருது. உடனே தன்னை நிலைப் படுத்திக்கொண்டு "இனியா! உன்னைப் பார்க்க ராஜன் வந்திருக்காங்க. உன் ரூம்ல உட்கார வச்சி இருக்கேன். நா என்னனு கேட்டேன்.. உன் கிட்டத்தான் பேசனுமாம்" என்றான்.


"சரி! நீ போய் அவங்களைப் பாரு. நா இதோ பின்னாடியே வரேன்" என்று கூறி மருதுவை அனுப்பிவன். இன்றைய பயிற்சி வகுப்பில் எடுக்கவேண்டிய அனைத்துத் தலைப்புகளையும் எடுத்து முடித்தப் பிறகே ராஜனைக் காணச் சென்றான்.


"வெல்கம் மிஸ்டர். ராஜன்" என்று அழைத்தவாறே தனது இருக்கையில் அமர்ந்த இனியன்,


"சொல்லுங்க ராஜன்! என்ன விஷயமா என்னை பார்க்க வந்து இருக்கீங்க?" என்றான் நிதானமாக.


"அது வேற ஒன்னுமில்லை மிஸ்டர். அமிழ்தினியன். எங்க ஊருக்கு கம்பனி ஆரம்பித்து ஒரு நல்ல விஷயம் பண்ண வந்திருப்பவரு வந்த வேலையை மட்டும் செய்தா நல்லா இருக்கும். அதை விட்டுட்டு தேவையில்லாம மத்த வேறு வேலைகளைப் பண்ணினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்னு எச்சரிக்கை பண்ணிட்டு, அப்படியே ஆஃபீஸ் எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு போகலாம்னு தான் இந்த பக்கம் வந்தேன்" என்றான் ராஜன் அதே நிதானக் குரலில்.


"வாட் டூ யூ மீன்??"


"வெல்… நானே நேரடியா விஷயத்துக்கு வரேன் மிஸ்டர் அமிழ்தினியன். எங்க ஊருக்கு கம்பனி ஆரம்பிக்க வந்தோமா, நாலு பசங்களுக்கு ட்ரைனிங் கொடுத்து அவங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தோமா, அவங்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோமா, நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தோமான்னு இருந்தீங்கன்னா எந்த பிரச்சனையும் கிடையாது. அதை விட்டுவிட்டு எங்க ஊரு புள்ளக் கூடப் பேசி, பழகி, குலத்தாங்கரைக் கிட்ட மீட் பண்ணுற வேலையெல்லாம் செய்தா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது அமிழ்தினியன். நா என்னச் சொல்ல வரேன்னு நல்லாவே புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.. நீங்க வந்த வேலையை என்னவோ அதை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்" என்றான் ராஜன் அழுத்தமான பார்வையுடன்.


"தாங் யூ போர் யூர் லெக்சர் மிஸ்டர் ராஜன். பட் நா என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். யாருடைய அறிவுரையும் எனக்கு தேவையில்லை. சோ.. இந்த விஷயத்தை தவிர வேற உருப்படியான விஷயம் இருந்தா… அதைப் பத்தி இப்போ பேசலாம்... இல்லனா யூ மே கோ நவ்" என்று கூறியப் படி வாசல் புறமாக கைக் காட்டியவனைப் பார்த்துச் சன்னமாக சிரித்த ராஜன், 'வில் மீட் யூ சூன்' என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.


"அண்ணே! நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க… இந்த இனியன் பயலை ஒரே போடா போட்டுட்டு போய்ட்டே இருப்போம் ண்ணே.." என்றான் செல்வம். ராஜனுடன் வந்தவர்களில் ஒருவன்.


அவன் அப்படிக் கூறி முடித்தது தான் தாமதம். ராஜனின் வலது கை செல்வத்தின் இடது கன்னத்தை பதம் பாதிருந்தது.


தன் இடதுக் கன்னத்தைப் பிடித்த வாறு அதிரிந்துப் போய் நின்றிருந்த செல்வத்தின் முன் சுடக்கிட்டு அழைத்த ராஜன், "அவன் ஒரு கம்பனி வச்சி நடத்திக்கிட்டு இருக்கான். நீ அந்த பயல்ன்னு மரியாதை இல்லாம பேசுற. இனி ஒருத்தனும் அமிழ்தினியனை மரியாதை இல்லாம பேசுனா… அவ்வளவு தான்.. வகுந்துடுவேன்.. அப்புறம் அவனை என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும். நீங்க நான் சொல்லுற வேலையை மட்டும் பாருங்க" என்ற ராஜன் விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


"இப்போ நா என்ன தப்பா சொல்லிட்டேன். இவரே அவனை எதிரி மாதிரி பில்ட்டப் பண்ணுவாரம்.. நாம அவனை மரியாதை இல்லாம பேசுனா அடிப்பாராம்.. என்னடா நடக்குது இங்க.." என்று ராஜன் சென்ற திசையைப் பார்த்து புலம்பியப் படியே நின்றிருந்தான் செல்வம்.


******************************


சம்மணமிட்டு அமர்ந்து டிவியில் சிஞ்சான் கார்டூனை மும்மரமாகப் பார்த்துக்கொண்டிருந்த அழகிக்கு திடிரென்று ஒரு ஐடியா தோன்ற. அதை உடனடியாக செயல்ப்படுத்தும் வகையில் இனியனிற்கு அழைத்தாள்.


என்னவொரு ஆச்சரியம் முதல் ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டு மறுபுறத்தில் இருந்து 'ஹலோ' என்ற இனியனின் குரல் கேட்டது.


"அவ்வ்வ்… என்னுடைய ஓகே ரூலை இவ்வளவு சீரியசா எடுத்துக்கிட்டு. ஃப்ர்ஸ்ட் ரிங்லேயே கால் அட்டெண்ட் பண்ணிட்டாறே.." என்று உள்ளுக்குள் துள்ளிக் குதித்தவள். அதை வெளி காட்டாதவாறு,


"ஹலோ இனியன் சார்" என்றாள் உற்சாகமாக.


"ஹே அழகி! நானே உனக்கு ஃபோன் பண்ணனும்னு இருந்தேன். நீயே பண்ணிட்ட.." என்றான் அவனும் துள்ளலாய்.


"அப்படியா?? என்ன விஷயம் இனியன் சார்"


"அது இருக்கட்டும்.. நீ சொல்லு அழகி.. என்ன விஷயமா கால் பண்ணின"


"அது.. நா சொன்னேன்ல அந்த ஓகே ரூல் … உங்களுக்கான முதல் ஓகே ரூல் செய்யுற நேரம் வந்தாச்சு. நீங்க என்ன பண்ணனும்னா…" என்று கூறிக்கொண்டிருந்தவளை இடை நிறுத்தியது இனியனின் குரல்.


"அழகி! உன் ஃபோனுக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன். அதைப் பார்த்துட்டு உன் ஓகே ரூல் என்னனு சொல்லுப் பார்ப்போம்" என்றான் சிரித்துக்கொண்டே.


அவன் சிரிப்பில் இருந்த நக்கலைக் கண்டு யோசித்தவாறேத் தனது மொபைலிற்கு அவன் அனுப்பி இருந்த வீடியோவைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.


"ஹலோ அழகி இருக்கியா??" இனியனின் குரல் மீண்டும் கேட்கவும், போனை காதில் வைத்தவள் "என்ன இனியன் சார் இது?? இந்த வீடியோவை உடனே டெலிட் பண்ணுங்க " என்றாள் படப்படப்பாய்.


"ஹாஹா.. உடனே டெலிட் பண்ணியிட்டா அதில் என்ன கிக் இருக்கும் அழகி. என்னோட பென்ட்ரைவ்வை வாங்க எந்த இடத்துக்கு வரச் சொன்னியோ அதே இடத்துக்கு நீ வா.. டீல் பேசிப்போம் நாம.. வீடியோவை டெலிட் பண்ணுவதை பத்தி.. " என்று உல்லாசமாக கூறியவன் அழைப்பை அணைத்துவிட்டான்.


"இனியன் சார்! இனியன் சார் ! " என்ற அழகி, அவனின் குரல் கேட்காமல் இருக்கவும் ஃபோனை வைத்துவிட்டான் என்பதை உணர்ந்தவள். தனது கையில் இருந்த அலைபேசியின் தொடுத்திரையில் தெரிந்த காணொளியை பாவமாக பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.



படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 11

தனது கையில் இருந்த அலைபேசியின் தொடுத்திரையில் தெரிந்த காணொளியைப் பாவமாக பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் அழகி.


அந்த காணொளியில் இருப்பது எல்லாம் இவை தான். ஆவணந்தான்கோட்டை NKR சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கையில் வைன் பாட்டிலுடன் வெளியே வரும் அழகி, அவசர அவசரமாக அதை தனது ஸ்கூட்டியில் வைத்துவிட்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு அங்கிருந்த சிக்னலை கடந்து செல்லவும் காணொளி முடிந்தது.


அந்த காணொளி முடிந்தும் மீண்டும் மீண்டும் ஓடவிட்டு அதையேப் பார்த்தவள், "இந்த பனைமரம் இதை எப்படித்தான் வீடியோ பிடிச்சாரோ?? சே! அன்னைக்கு நா போட்ட சீன்னுக்கு இன்னைக்கு எனக்கு டபுள் மடங்கு திருப்பி இருக்கும் போலவே" என்று புலம்பியவள், ' எது நடந்தாலும் பார்த்துக்கலாம் அழகி.. நீ என்ன சரக்கா அடிச்ச.. ஜஸ்ட் வைன் தானே.. அதையும் வாங்கினது தானே அந்த வீடியோல இருக்கு. அது மருதுவுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் பண்ண வங்கினதுன்னு ஒரு கதையை காட்டினா இந்த பனைமரம் நம்பிடும்" என்று தனக்கு தானே கணக்கு போட்டவளாக இனியனைக் காண சென்றாள் அழகி.


அதே குளத்தங்கரை அன்று சந்தித்த அதே இருவர், ஆனால் சூழல் மட்டும் வேறு.


"நீங்க சொன்ன இடத்துக்கு வந்தாச்சுல அந்த வீடியோவை டெலிட் பண்ணுங்க" என்று அதிகராமாய் கூறியவளை நோக்கி,


" முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ?" என்றான் இனியன் நிதானமாக.


இதற்கெல்லாம் அசரும் ஆளா நான் என்பது போல் பார்த்த அழகி, "முடியாதுன்னா அந்த வீடியோவை வச்சி பூஜை பண்ணுங்க..போங்க.." என்றாள் அலட்சியமாக.


"ஆஹான்! அறிவுள்ள எவனும் உன் வீடியோ பூஜை பண்ண மாட்டான் அழகி. ஆனா, அந்த வீடியோவை மரகதம் பாட்டிக்கிட்டிப் போட்டு காட்டுவான்" என்றான் சிரித்தப்படி.


அதுவரையயில் அலட்சியமாக நின்றிருந்தவள் மரகத்தின் பெயரைக் கேட்கவும் விறைப்புடன் நின்று, "ஆயா பேரைச் சொன்னா பயந்துடுவேனா என்ன?? இது என்னனே எனக்கு தெரியாது .. இனியன் சார் தான் வாங்கி வரச் சொன்னாருன்னு சொல்லிடுவேன்.. நா சொன்னா என் டார்லிங் மரகதம் அதை அப்படியே நம்பும் தெரியுமா.." என்று பால்லை அவன் புறமாக திருப்பிவிட்டாள் அழகி.


இதை சற்றும் எதிர்ப்பார்க்காதவன் ஒரு கணம் திகைத்தாலும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு, தனது அலைபேசியில் மற்றுமொரு காணொளியை ஓடவிட்டு அதை அழகியிடம் காண்பித்தான்.


"என்ன இது இனியன் சார்? திரும்பலாம் என்னால அதே வீடியோவை பார்க்க முடியாது" என்று அழுத்துக்கொண்டவளை, 'இக்கட சூடு' என்ற இனியனின் குரல் அந்த அலைபேசியைப் பார்க்க வைத்தது அவளை.


பத்மாவையும், கயலையும் இயல்பாக்கும் பொருட்டு அன்று கடையில் இருந்து வைனை வாங்கி வந்த அழகி. அதை அவர்களிம் ஒரு கிளாசில் ஊத்திக் கொடுத்து, "இப்போ நீங்க ரெண்டு பேரும் லவ் பிரோப்ளம்ல இருக்கீங்க. சோ இதை குடிச்சு மனசை திடப்படுத்திக்கோங்க" என்று கூறிவளை திகைப்புடன் கயலும், பத்மாவும் பாரர்த்துக் கொண்டிருக்க அழகியோ ஒரே ஒரு கிளாஸ் வைனை எடுத்துக் குடித்துவிட்டு ஏதோ போதை தலைக்கேரியது போல் குழறலானக் குரலில் எதையோ பேசிக் கொண்டிருந்தவள். திடீரென்று எழுந்து நின்றுக்கொண்டு 'உலக அழகி நான் தான்' என்று பாடியவாறே தனது துப்பட்டாவை கழட்டி தலைக்கு மேல் அதை சுற்றிச் சுற்றி ஆடிக் கொண்டிருந்தவளின் கைகளை பிடித்து இழுத்தவாறு கயலும் பத்மாவும் செல்லுவது போல் முடிந்திருந்தது அந்த காணொளி.


காணொளி முழுவதையும் பார்த்துவிட்டு பேச்சற்று நின்ற அழகி தன்னை சமாளித்துக்கொண்டு, "அது! இனியன் சார்… வைன் சாப்பிட்டா நல்லா பளபளன்னு ஆகிடுவாங்கன்னு டிவில பாத்தேன், அதான் லைட்டா குடிச்சேன். அது இவ்வளவு போதை ஆகிப் போச்சு.." என்றாள் அசடு வழிந்தவாறு.


அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த சிரிப்பை அதற்கு மேலும் அடக்க மாட்டமல் சிரித்தே விட்டான் இனியன்.


"என்ன சிரிப்பு??"


"இல்ல.. ஒரு கிளாஸ் வைனைக் குடிச்சிட்டு நீ பண்ணியிருக்க அளபறைகளை நினைச்சேன்.. சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியல. இதை உன் பாட்டிக்கிட்ட காட்டி அவங்க ரியாக்ஷனை என்னன்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு ஆழகி. வா உன் வீட்டுக்கு போகலாம்" என்றான் சிரிப்பினுடே.


“ஏதே!! சரி நீங்க சுத்தி முத்தி எங்கே வருவீங்கன்னு எனக்கு நல்லாவேத் தெரியும். சோ, நானே கேட்குறேன் டீல் என்ன??” என்றாள் நேரடியாக.


அழகியின் இந்த நேரடிக் கேள்வியில் திகைத்த இனியன், “ நீதான் டீல் பேசுவதில் எக்ஸ்பெர்ட் ஆச்சே… நீயே சொல்லு..” என்றான்.


“ என் திறமை மேல இவ்வளவு நம்பிக்கையா இனியன் சார் உங்களுக்கு??” என்ற அழகியின் கேள்விக்கு சிரிப்பே இனியனின் பதிலாக இருந்தது.


“ஓகே இனியன் சார்! நா சொல்லி இருந்த அந்த ஐந்து ஓகே ரூல்ல.. ரெண்டு ஓகே ரூல்லை நானே வாபஸ் வாங்கிக்குறேன். உங்களுக்கு இதில் சம்மதமா?? இந்த அளவுக்கு தான் என்னால உங்களுக்கு ஆஃபர் பண்ண முடியும் மிஸ்டர் அமிழ்தினியன்" என்றாள் அழகி. ஏதோ உண்மையிலேயே பிசினஸ் டீல் செய்வது போல்.


அவளையே நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தவன், " எனக்கும் இந்த டீல் ஓகே தான் மிஸ் மதியழகி. பட் வித் ஒன் கண்டிஷன்… நீ வாபஸ் வாங்கின அந்த ரெண்டு ஓகே ரூலும் எனக்கு அட் ஆகனும். அதாவது.. நீ சொல்லுற அந்த மூணு ஓகே ரூலும் நா எப்படி மறு பேச்சே இல்லாம கேட்பேனோ.. அதே மாதிரி நா சொல்லுற ரெண்டு விஷயத்துக்கு நீயும் யோசிக்காம ஓகே சொல்லணும். என்ன என் டீல் உனக்கு ஓகேவா??" என்றான் அவனும் பக்கா பிசினஸ் மேன்னாக.


"அது எப்படி முடியும்?? என்னால முடியாது"


"அப்போ என்னாலும் முடியாது.. இந்த வீடியோ மரகதம் பாட்டிக்கிட்ட தான் போகனும்னு இருக்குப் போல"


"ஐயோ! வேண்டாம்.. எனக்கு டீல் ஓகே.. அந்த ஃபோனைக் கொஞ்சம் கொடுங்களேன்" என்றவள் இனியனிடம் இருந்து ஃபோனை வாங்கி அதிலிருந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு. 'இப்போ என்ன செய்வ??' என்பது போல் பார்த்த அழகியை நோக்கி,


"என்ன மேடம் வீடியோவை டெலிட் பண்ணிட்டீங்கப் போல" என்றான்.


"ஆமா! டெலிட் தான் பண்ணினேன்.. இப்போ என்ன அதுக்கு! நீங்கலாம் திடீர் சாமியார் மாதிரி திடீர் கேடி ஆனவங்க.. ஆனா, நாலாம் பிறந்ததுல இருந்தே கேடி" என்றாள் அழகி இல்லாத காலரை தூக்கி விட்டப்படி.


"ஆஹான்! அப்படியா! பரவாயில்லை அழகி… அந்த ஃபோனை நீயே வச்சிக்கோ.. பிகாஸ் உன்னை பத்தி நல்லா தெரிஞ்சு தான் .. இந்த பென்ட்ரைவ்ல அந்த வீடியோவை ஒரு காபி பண்ணி வச்சி இருந்தேன்" என்றான் இனியன்.


இனியனின் கூற்றைக் கேட்டு, இனி தன் வேலையெல்லாம் இவனிடன் எடுபடாது என்பதை உணர்ந்து அழகி அமைதியாக இருக்க. இனியனோ அன்று அழகி வாங்கியது போலவே இவனும் ஒரு பத்திரத்தில் அங்கு நடந்த டீல்லைப் பற்றி எழுதி அழகியிடம் கையெப்பம் வாங்கியவனிடன் முணுமுணுத்துக் கொண்டே கையெப்பமிட்டாள் அழகி.


"டீல் ஓகே ஆகிடுச்சில அழகி. அப்போ இப்பவே என்னோட முதல் ஓகே ரூல்லை சொல்லவா? " என்றவனிடன்.


"ஐ! இது நல்லா இருக்கே. சீனியர் நான் இருக்கேன் இனியன் சார்.. முதல்ல நா தான் சொல்லணும் அந்த ஓகே ரூல்லை சரியா. இப்போ சொல்லுறேன் ஈவினிங் நாலு மணிக்கு இதே இடத்துக்கு வாங்க.. எங்க போகணும், என்னப் பண்ணனும்னு அப்போ சொல்லுறேன்" என்று கூறியவள் ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள்.


*************************

நேரம்: மாலை நான்கு,


இனியன் வரும் முன்னரே அதே குளத்தங்கரைக்கு வந்து காந்திருந்தாள் அழகி. அவளின் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்றான ஒரு விஷயம் இன்று இனியனின் மூலம் நிறைவேற போகிறதே என்ற சந்தோஷத்தில்.


இனியனின் பைக் வந்து அருகில் நிற்கவும், துள்ளிக்கொண்டு அவனிடம் சென்றவள்


"கிளம்புங்க கிளம்புங்க இனியன் சார்! " என்றாள் பரப்பரப்பாக.


"எங்க கிளம்பனும்னு சொன்னா தானே தெரியும் அழகி"


"நம்ம ஊரு எம்.எல்.ஏவோட பண்ணை வீட்டுக்கு" என்றாள் அழகி குஷியாக.


அவள் சொன்ன இடத்தை கேட்டு அதிர்ந்தவன், "அங்கே எதுக்கு இப்போ நீ போகணும்??" என்றான் அதட்டலாக.


அவனின் அதட்டலிற்கு எல்லாம் பயப்பிடுபவளா அழகி. அவனை நிதமாக நோக்கியவள், " நா என்ன சொன்னாலும் எதிர் கேள்வி கேட்காமல் நீங்க அதைப் பண்ணனும் இனியன் சார். அதான் நம்ம டீல்.. நினைவில்லையா??" என்றாள்.


அவ்அவளின் பதிலில் தலையிலேயே அடித்திக் கொண்டவன், "சொன்னா கேட்கவா போற.. ஏறித் தொலை .. போவோம். ஆனா, அங்க ஏதும் பிரச்சனை ஆச்சுன்னா நா பாட்டுக்கு கிளம்பி வந்திடுவேன். நீ தான் தனியா சமாளிக்குனும்" என்றவன் வண்டியைக் கிளப்ப, வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த அழகி


"சே! ஒரு பையன் மாதிரியா பேசறீங்க. ஹீரோஸ் எல்லாம் எவ்வளவு கெத்தா ஹீரோனை ஆபத்துல இருந்து காப்பாத்துவாங்க. ஆனா நீங்க, பாதியில விட்டுட்டு ஓடி வந்திடுவேன்னு சொல்லுறீங்களே" என்றவளைப் பார்த்து,


"அது ஹீரோனிக்காக சண்டைப் போடலாம் .. உனக்காக எல்லாம் எனர்ஜியை வேஸ்ட் பண்ண முடியுமா??" என்றான் சிரித்தவாறே.


"நீங்க சொல்லலைனாலும் என் கதைக்கு நா தான் ஹீரோனி" என்று அழகி கூறிக் கொண்டிருக்கையிலேயே பண்ணை வீடு வந்து விடவும் அமைதியாக இருவரும் இறங்கி, வண்டியை யாரும் கண்டுப் பிடிக்க முடியா வண்ணம் ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு மெல்ல முன்னேறி சென்றனர்.


"இந்த பண்ணை வீட்டைத் தான் எம்.எல்.ஏ பல பல்லான வேலைகளுக்கு எல்லாம் யூஸ் பண்ணிப்பாருன்னு ஊருக்குள்ள ஒரு காசிப் வளம் வருது தெரியுமா??" என்றவளை நோக்கி,


"பல்லான வேலைன்னா??"


"அய்ய.. தெரியாத மாதிரிதான். நிறைய இல்லீகல் டீலிங் எல்லாம் இங்கே தானம். அதை தான் பல்லான வேலைன்னு சொன்னேன் இனியன் சார்"


"ஓ! அதுவா?? நா கூட வேற என்னவோன்னு நினைச்சிட்டேன்"


"என்னன்னு நினைச்சீங்க??" என்றவளை நோக்கி "அது ஒன்னும் இல்லை நீ போ" என்றான் லேசாக தலையைக் கோதிச் சிரித்தவாறு.


"என்னவோ நீங்க சரியே இல்லை. சரி! ஃபோனைக் கொடுங்க என் ஃபோன் வீட்ல இருக்கு" என்றவள். இனியனின் ஃபோனில் இருந்து மருதுவிற்கு அழைத்தவள் அவனையும் அங்கு வருமாறு கூறிவிட்டு வைத்தாள்.


"இனியன் சார்! இந்த இடத்தை தோண்டினா நிறைய பிணங்கள் கூடக் கிடைக்குமாம் தெரியுமா?? அவ்வளவு ஆபத்தான இடம் இது " என்றவள் முன்னே செல்ல. அழகியை பின்தொடர்ந்து தானும் சென்றான் இனியன்.


அங்கு காவலுக்கு இருந்தவர்களின் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவிட்டு இருவரும் மெல்ல உள்ளே செல்ல, அழகி ஒருப்பக்கமும் இனியன் மறுபக்கமும் பிரிந்து சென்றனர். ஒருவரை ஒருவர் அறியாமயிலேயே.


தான் தேடி வந்த பொருளை தேடுவதிலேயே முழு கவனமும் செலுத்திய அழகி, இனியன் தன் பின்னே வரவில்லை என்பதைக் கவனிக்கத் தவறி இருந்தாள்.


அந்த பண்ணை வீட்டின் பின்புறம் இருந்த ஜன்னல் பக்கத்தில், தான் கையோடு கொண்டு வந்திருந்த கேமராவைப் பொருத்தியவள். மெல்ல அடி மேல் அடி வைத்து முன்னேறிச் சென்றாள்.


இந்தப் பண்ணை வீட்டில் பேய்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், அந்த பேய்கள் எல்லாம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் புளியமரத்தில் தான் வசிப்பதாகவும் ஊருக்குள் பேசிக் கொள்ள. அந்த பேய்களை படம் பிடிக்கவே அந்த மரத்தை நோக்கி வீட்டின் பின் பக்கம் கேமராவை வைத்தாள் அழகி.


அந்த கேமராவை அதற்குரிய ஆப் ஒன்றில் ரெஜிஸ்டர் செய்து வீட்டில் இருந்தப் படியே ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோகளைப் பார்க்கலாம். எனவே தான் இன்றே அந்த பேய்களை எல்லாம் படம்பிடித்து. ஒரே நாளில் அழகூரில் உள்ள எல்லாரையும் தன்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதே அழகியின் தற்போதைய லட்சியமாக இருக்க, அதை நிறைவேற்றவே இனியனின் துணையுடன் இங்கு வந்துவிட்டாள்.


இனியனைப் பற்றி எண்ணவும் அவன் அங்கு வரவும் சரியாக இருக்க. அப்போது தான் அவன் இவ்வளவு நேரம் அங்கு இல்லாததை கவனித்தாள் அழகி.


"ஹே! என்னை அங்க விட்டுட்டு நீ இங்க என்னப் பண்ற?" என்று கடுப்புடன் கேட்டவாறே வந்த இனியனைப் பார்த்தவள்,


"ஹிஹி.. ஜாரி இனியன் சார்" என்றாள் குழந்தை போல்.


"உங்களுக்கு மரம் ஏற தெரியும் தானே?" அழகியின் கேள்வியில் சட்டெனச் சிரித்தவன் 'ஐயாயிரம்.. ஐயாயிரம்' என்றான்.


"அட ஆமா! அப்போ எனக்காக திரும்ப இந்த புளியமரத்துல ஏறுவீங்களா ப்ளீஸ்.."


"ஏன் இங்கையும் என்னை அபராதம் கட்ட வைக்கவா??" என்றான் சிரித்துக் கொண்டே.


" இல்ல.. இந்த மரத்துப் புளியம்பழம் ரொம்ப இனிப்பா இருக்குமாம் .. நா சாப்பிடணுமே அதை.. ப்ளீஸ் இனியன் தங்க பையன்ல.. செல்ல பட்டுல.. பறிச்சு தாங்கப்பா" என்று தான் அவனை செல்லம் கொஞ்சுகின்றோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் அழகி.


அவளுக்காக அவள் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக மீண்டும் மரம் ஏறினான் இனியன்.


"ரைட் சைடு இருக்க அந்த கொத்து… மேலே இருக்க பழம் .." என்று அழகி சொல்ல இனியன் பறித்துக் கொண்டு கீழே இறங்கினான்.


இனியன் கைகளில் இருந்த புளியம் பழத்தில் ஒன்றை உடைத்து கடித்தவள் அதன் ருசியில் மெய் மறந்து நின்றாள்.


எப்போதும் சாப்பிட்ட மீதத்தை சந்தோஷிடம் தரும் நினைவில் அழகி தான் கடித்த புளியை சிறிதும் யோசிக்காமல் இனியன் தர, முதலில் திகைத்தாலும் சிரிப்புடனே அவள் எச்சில் செய்த அதை புளியை அவனும் ருசித்தான்.


"அந்த புளியம்பூவை பறிச்சு தாங்க இனியன் சார்" என்று அழகி கேட்க.


வழக்கம் போல் இனியனும் பறித்து தர, அங்கு அவர்களுக்கு அருகே ஏதோச் சலசலப்பு சத்தம் கேட்கவும். இருவரும் வந்த வழியே அமைதியாக வெளியே சென்று விட்டனர்.


வண்டி நிறுத்தி இருந்த இடத்திற்கு இருவரும் வந்ததும், தன் கைகளில் இருந்த புளியம்பூவை இனியனிடன் தந்த அழகி அதைச் சாப்பிட சொல்ல.


"பூவைப் போய் யாராவது சாப்பிடுவாங்களா??" என்று தயங்கியவன். அவள் அதை ரசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து தானும் உண்டான். உண்மையில் சொல்லப் போனால் இனியன் தயங்கிய அளவிற்க்கெல்லாம் இல்லை. நன்றாகவே இருந்தது அதன் சுவை.


"நல்லா இருக்கு அழகி! அழகூர்ல எந்த மரத்துல எந்த காய் நல்லா இருக்கும்னு ஒரு பயோ டேட்டாவே கையில வச்சி இருக்கப் போல" என்றான் கிண்டலாக.


"ஆமா இல்லையா பின்ன! சுவை முக்கியம் அமைச்சரே!" என்றாள் அவளும் சிரித்தவாறே.


"உங்களுக்கு ஒன்னு தெரியுமா இனியன் சார்??"


" என்ன??"


"கிட்ஸ் லைக் புளியம்பழம்…
மேன்ஸ்/ வுமேன்ஸ் லைக் புளியங்காய்…
லெஜெண்ட்ஸ் லைக் புளியம்பூ… சோ! இன்னையில இருந்து நாம லெஜெண்ட்ஸ் ஆகிட்டோம்" என்று சிரித்தவளை நோக்கி தானும் சிரித்தான் இனியன்.


என்னவோ இன்று அவன் கண்களுக்கு அழகி மிகவும் அழகியாகவும், ரசனையாகவும் தெரிந்தாள்.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அந்நேரம் மருதுவும் அங்கே வந்துச் சேர. அவனை அங்கு வர சொன்னவளோ புளியம்பழம் சாப்பிடுவதில் பிஸி ஆகி விட. இங்கு இனியனிடம் மருது எதைப் பற்றியோ கூற .. இனியனின் முகம் இறுகிப் போய் இருந்தது.


அதே சமயம் இனியனின் தோள்களைப் பற்றி தன் புறம் அவனைத் திருப்பிய அழகி, "உங்களோட முதல் ரூல்லை வெற்றிக்கரமா முடிச்சிட்டீங்க இனியன். உங்களுக்கான அடித்த ஓகே ரூல் என்னன்னா?? அடுத்த வாரம் .. அதாவது தீபாவளிக்கு மறுநாள் என் ஃபிரென்டிற்கு சென்னைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல கல்யாணம். அதுவும் லவ் மேரேஜ் தெரியுமா??


நா தான் அதுக்கு சாட்சி கையெழுத்துப் போடணும்ன்னு அவளும் அண்ணாவும் ரொம்பவே ஆசைப்பட்டுக் கேட்டாங்க. வீட்டில சொன்னா இந்த விஷயத்தை அவளோட வீட்லப் போட்டுக் கொடுத்திடுவாங்க. சோ! நீங்க தான் சென்னைல இன்டெர்வியூ இருக்குன்னு பொய் சொல்லி என்னை அங்க கூடிப் போகணும் இனியன் சார். செலவு மொத்தமும் என்னோடது பொறுப்பு சரியா. நீங்க என் அப்பாக்கிட்ட பெர்மிசன் வாங்கி, என்னை அங்கே கூட்டிட்டு போனா மட்டும் போதும்…" என்று அழகி தன் போக்கில் அவனின் மூட் தெரியாமல் பேசிக் கொண்டே போக.


"ஜஸ்ட்.. ஸ்டாப் திஸ் ஸ்டுபிட் டாக் அழகி…" என்றான் இனியன் கடுங்கோபத்துடன்.


இனியனின் இந்த கோபம் அழகிக்கு புதிது. அவன் கத்திப் பேசி, ஏன் அதட்டிப் பேசிக் கூடப் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இப்படி கண்கள் சிவக்க, கழுத்து நரம்புகள் புடைக்க இப்படி கடுங்கோபத்துடன் பேசும் இனியன், இதுவரையில் அழகி பார்த்தறியாத ஒருவன்.


இந்த கோபத்தை தான் தன்னிடம் காட்ட விரும்பவில்லை என்று அடிக்கடி கூறுவனோ?? நாம் தான் அதை விளையாட்டு தனமாக எடுத்துக்கொண்டோமோ?? என்று எண்ணிக்கொண்டு இருந்தவளின் கன்னங்களைப் பற்றியவன்,


"நீ என்ன நினைச்சிட்டு இருக்க அழகி… நா வேலை வெட்டி இது எதுவுமே இல்லாம சும்மா சுற்றித் திரியிறேன் என்றா?? நீ எப்போ கூப்பிட்டாலும் எங்கே கூப்பிட்டாலும் நான் உன் பின்னாடியே வால் ஆட்டிக்கிட்டு வரணும்னு நினைக்கிறீயா நீ?? ஒரு திருட்டுக் கல்யாணதுக்கு சாட்சி கையெழுத்துப் போட என்னையவே துணைக்கு கூப்பிடுற… அதுவும் உன் வீட்ல பொய் சொல்லிட்டு நா உன்னை கூட்டிட்டு போகணுமா?? அப்படி என்ன நீ வளர்ந்துட்ட ஒரு கல்யாணம் பண்ணி வைக்குற அளவுக்கு?? எது சரி எது தப்புன்னு உனக்கே இன்னும் ஒன்னும் புரியல… இதுல நீ ஒரு கல்யாணத்துக்கு சாட்சியா போகப் போறியா?? அப்படியே அறைஞ்சேனா பாரு.. பல்லு அத்தனையும் கொட்டிடும்.. ஒழுங்கா போய் வீட்டில சின்சான் பாரு.. அதான் உனக்கு செட் ஆகும் … " என்று கடும்கோபத்தில் ருத்ர தாண்டவம் அடியவனுக்கே தெரியாது.. தான் ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்போது அழகியை திட்டினோம் என்று. அதே கோபம் கலந்தக் குழப்பத்துடன் அங்கிருந்து சென்றான் இனியன்.


அவன் செல்லும் திசையையே பார்த்தவாறு திகைத்துப் போய் நின்றிருந்த அழகி. மருதுவை அழைத்து , " இதுக்கு பேரு தான் கோபம்மா மாடு?? நா இதுவரைக்கும் பாத்ததே இல்ல…" என்றாள் திகைத்தக் குரலில்.


" நீ பார்த்தது அவனுடைய கோபத்தில் பத்து சதவீதம் கூட இல்லை அழகி" என்றவன் சிறிது நேரம் அவளுடன் பேசி, அவள் இயல்பானப் பிறகு அவளை அழைத்துக்கொண்டுச் சென்றான் மருது.


இங்கு கோபத்தில் என்ன செய்கிறோம்! என்ன பேசுகிறோம்! என்பது புரியாமல் அழகியைக் கண்டப் படி பேசிவிட்டு வந்ததை நினைத்து தன்னையே வெறுத்தவனாக வீட்டில் உள்ள அணைத்துப் பொருள்களையும் தூக்கிப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தவனை அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தத்திற்கான ஓசை ஈர்க்கவும்.


அலைபேசியை எடுத்து அதில் வந்திருந்த குறுஞ்செய்தியைப் படித்தவன் அப்படியே ஷோபாபில் படுத்துவிட்டான் நிம்மதியாக.


"அழகி இஸ் சேஃப் இனியா. அவளை வீட்டில் நான் தான் இப்போ விட்டுட்டு வந்தேன். நீ நல்லா ரெஸ்ட் எடு.. நல்லா தூங்கு . பைடா இனியா!" என்று மருதுவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி தான் இனியனை நிம்மதியாக இப்போது படுக்க வைத்தது. தான் ஏன் அப்படி நடந்துக் கொண்டோம் என்று எண்ணியவாறு அப்படியே உறங்கிப் போனான் இனியன்.



படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 
Status
Not open for further replies.
Top