ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-24(2)

இனியன் சந்தோஷ் தான் பிளாக் ஸ்பார்க் என்று தனது சந்தேகத்தைக் கூறவும், முதலில் திகைத்தது மருது தான்.


ராஜனோ எப்பொதும் போல் நிதனமாகவே, "எப்படி சந்தோஷ் தான் பிளாக் ஸ்பார்க்னு உனக்கு சந்தேகம் வந்தது இனியா??" என்றான் கேள்வியாக.


அழகி கடத்தப்பட்ட அன்று, அவள் பொருத்திருந்த கேமராவின் மூலம் அங்கு கோடவுனின் என்ன நடந்தது என்பதைக் கண்ட இனியன், அங்கு நின்றிந்த இருவரில் ஒருவன் தான் SK என்பதைக் கண்டுபிடித்து விட்டான். அப்படியானால்! அவனுடன் இருப்பவன் தான் பிளாக் ஸ்பார்க்காக இருக்க முடியும் என்று எண்ணியவன், எவ்வளவு ஜூம் செய்துப் பார்த்தும் அந்த பிளாக் ஸ்பார்கின் முகத்தை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால், அந்த பிளாக் ஸ்பர்கின் கையில் இருந்த கைச்சங்கிலியை மட்டும் மனதில் குறித்துக்கொண்டான். அதேப் போன்ற கைச்சங்கிலி தான் அன்று அழகியின் அலைபேசி பக்கத்தில் இருந்தது.


தான் பிளாக் ஸ்பார்க் கையில் பார்த்த சங்கிலியும், இப்போது அழகியின் அலைபேசியுடன் கிடைத்திருக்கும் சங்கிலியும் ஒரே சங்கிலிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், எதர்ச்சியாக அழகியும் சந்தோஷும் சேர்ந்து எடுத்துக்கொண்டப் புகைப்படத்தில், சந்தோஷின் கையில் அதே கைச்சங்கிலியைக் கண்டான்.


முதலில் சந்தோஷின் மீது சந்தேகம் வந்தாலும், அழகியை நிச்சயமாக சந்தோஷ் கடத்தியிருக்க வாய்ப்பில்லை. இதே போன்ற கைச்சங்கிலியை யார் வேண்டுமானாலும் வாங்கியிருக்கலாம் என்று விட்டுவிட்டான்.


சந்தேகம் என்பது நீரில் பட்ட உஜாலா நீலம் போன்றது. ஒரு துளி பட்டுவிட்டாலும் முழுவதும் பரவி விடும். அதுபோல் தான் இனியனின் மனதில் விழுந்த சந்தேக விதையும் வளர்ந்து மரமாகவே ஆகிவிட்டது.


சந்தேகம் என்று வந்தபிறகு யாராக இருந்தால் என்ன?? என்று இரண்டு முறை சந்தோஷைப் பின் தொடர்ந்துச் சென்றும் இனியனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனவே தான், இன்னமும் சந்தோஷ் தான் பிளாக் ஸ்பார்க் என்று அடித்துக் கூறாமல், தன்னுடைய யூகம் என்று மட்டுமே சொன்னான் இனியன்.


இனியன் கூறிய அனைத்தையும் கேட்டிருந்த ராஜானோ, "உன் யூகம் சரியா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு இனியா!! பிளாக் ஸ்பார்க் யாருன்னு நமக்கு சந்தேகம் மட்டும் தான். ஆனா, SK யாருன்னு நமக்கு நல்லாவேத் தெரியும். சோ! முதல்ல SKவை கவனித்தாள் பிளாக் ஸ்பார்க், அழகி, அந்த கடத்தப்பட்ட பன்னிரெண்டு நபர்கள்னு எல்லாரையும் கண்டுப் பிடிச்சிடலாம்" என்றான்.


ஏற்கனவே, ராஜன் கூறிய இடத்திற்கு சென்றிருந்த இனியனின் குழு SKவை கைதுச் செய்திருந்தோடு, அந்த பன்னிரெண்டு பேரையும் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து அவர்களைக் காப்பற்றி அந்த இடத்தையும் சீல் வைத்தனர்.


SK கேங் பற்றி தான் சேகரித்த முழு விபரங்களையும் லாக்கர் ஒன்றி வைத்திருப்பதாக கூறிய ராஜன், அந்த லாக்கரைத் திறக்கும் சாவி இருக்கும் பெட்டியைத் திறப்பதற்கு ஒரு பச்சை நிற மரகத மோதிரம் தான் சாவி என்று கூறினான்.


"ராஜன்! அப்போ அந்த மோதிரம் இப்போ எங்கே இருக்கு??" என்றான் மருது.


தன்னுடைய விரலில் இருக்கும் சற்றே பெரிய அளவிலான பச்சை நிற மரகத மோதிரத்தை மருதுவிடம் காண்பித்த ராஜன், "இது தான் அந்த மோதிரம் மருது. இதே மாதிரி இன்னுமொரு மோதிரம் அழகியுடைய கையிலும் இருக்கும். நிச்சய மோதிரமா போட்டேன். ஒரு பேக்கப் மாதிரி.. ஒன்னு தொலைந்தாலும்.. இன்னொன்னு இருக்கும்ல" என்ற ராஜனை முறைதான் இனியன்.


"அடேய்! அது அப்போ போட்டதுடா.. நீ இப்படி முறைக்காத.." என்று சிரித்துக் கொண்டே கூறிய ராஜனையும், அதற்கு சிரிப்புடனே அவனது தோளைத் தட்டும் இனியனையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான் மருது.


மருதுவின் ஆச்சரியப் பார்வையைக் கண்டு சிரித்த ராஜன், "ரொம்ப ஷாக்கா பார்க்காதே மருது.. நாங்க இப்போ பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்" என்றான்.


அதன்பிறகு மூவரும் ராஜனின் இல்லத்திற்குச் சென்று, ராஜன் சேகரித்த தகவல்களை எடுத்து வரலாம் என்று கிளம்பினர்.


ஆனால், அவர்கள் செல்லும் முன்பே அந்த லாக்கர் திறக்கப் பட்டிருக்க, நிச்சயம் அழகியின் கையிலிருந்த மோதிரத்தைக் கொண்டுத் தான் இதை திறந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துக்கொண்டவர்கள். யார் ராஜனின் வீட்டிற்கு வந்து அந்த தகவல் கோப்புகளை எடுத்துச் சென்றதோ அவர்களிடம் தான் அழகி இருக்கிறாள் என்று தேடினர்.


ராஜனின் வீட்டில் அழகி பொருத்தி இருந்த கேமராவை பற்றி மருதுவிற்கு நினைவு வரவும். மூவருமாக அந்த கேமரா காட்சிகளைப் பார்வையிட்டனர். அவர்கள் சந்தேகத்தை ஊர்ச்சிதப் படுத்தும் வகையில் அங்கு வந்திருந்தவன் சந்தோஷே தான்.


அதன்பிறகு, SKவிடம் சந்தோஷும் அழகியும் எங்கே என்று விசாரித்ததற்கு, எங்கே என்று தெரியாது என்று அவன் கூறவும், அவனையும் அழைத்துக் கொண்டு சந்தோஷின் வீட்டிற்கு சென்றனர் மூவரும்.


சந்தோஷின் அறையில் தேடினால் ஏதாவது தடயம் கிடைக்கும் என்று தேடியவர்களுக்கு புதையலே கிடைத்ததுப் போல் கண்ணில் பட்டது ட்ரெஸ்ஸிங் டேபிலிற்கு பின்புறம் இருந்த செவ்வக வடித்திலான பொத்தான். அந்த பொத்தானைச் சந்தேகத்துடன் இனியன் அழுத்தவும் அலிபாபா குகை திறப்பது போல திறந்தது அந்த சுவர்.


யோசனையுடனும், ஆச்சரியமாகவும் திறந்திருந்த அந்த சுவற்றினுள் சென்றவர்கள் கண்டது கையில் ஊசியுடன் அழகியிடம் பேசிக் கொண்டிருந்த சந்தோஷைத் தான்.


அழகியிடம் அவன் கூறிய அனைத்தையும் இம்மி பிசராமல் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், உள்ளே வந்து சந்தோஷையும் அவனுடன் சேர்த்து SKவையும் கட்டிவைத்தனர்.


கட்டப்பட்ட நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்த சந்தோஷை அறைந்த இனியனோ,"என் மதியைக் கொல்லச் சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு…" என்றான் ஆக்ரோஷமாக.


அதுவரையும் சந்தோஷ் கூறும் மதியை ராஜனின் தங்கையாக மட்டுமே எண்ணியிருந்த அழகி, அந்த மதி தான் இனியனின் காதலி.. அவளின் மதி அக்கா என்று தெரியவும் சந்தோஷை திகைப்புடன் பார்த்தாள்.


சந்தோஷோ இனியனின் கேள்வியில் அதிரிந்துப்போனான்.


" நா ஒன்னும் பண்ணல. மதியை நான் கொல்லச் சொல்லலை… என்ன வெறுத்துவிடாதே அழகி… ப்ளீஸ் என்ன விட்டுப் போய்விடாதே.. கயலை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க… என்னை வெறுத்துடூவீங்களா… நான் வேணும்னு அப்படி பண்ணல… மிரட்ட மட்டும் தான் சொன்னேன் … இப்படி ஆகிடுச்சு. என்னை வெறுத்துடாதீங்க.. ஓதிக்கிடாதீங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…கயலை பிரிச்சிடாதீங்க.." என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.


அவனுடைய செயல்பாடுகளே சற்று வித்தியாசமாக இருக்கவும், குழம்பிய அனைவரும் ஒருவருக்கு ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டனர்.


சந்தோஷோ அவன் பாட்டிற்கு சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லியப்படியே மயங்கிவிட, அழகி தான் பதறிப் போய் அவனிடம் சென்று, "டேய் சந்தோ! என்ன ஆச்சுடா?? எழுந்திடுடா.. கண்ணை திற.." என்று சந்தோஷின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தாள்.


"நீ எவ்வளவு தட்டினாலும் அவன் எழுந்திருக்க மாட்டான். ஒரு அரைமணிநேரம் கழிச்சு அவனா எழுவான் விடு…" என்றான் SK நக்கலான குரலில்.


அதுவரை அமைதியா நின்றிந்த இனியன், SKவின் பேச்சை கேட்டு அவன்புறம் திருப்பி, "நீ எப்படிடா சந்தோஷை உன்கூட சேர்த்த??" என்றான் கேள்வியாக, கூடவே SKவின் முகத்தில் ஓங்கி குத்தொன்றையும் வைத்திருந்தான்.



தனது மூக்கில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தவாறே நிமிந்து அமர்ந்த SK, " என்ன ராஜன் அமிழ்த்தினியன்.. என்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட திமிரில் என்னையே அடிக்கிறீயா??" என்றான் திமிராக.


அவன் என்ன கூறுகிறான் என்று புரியாமல், "வாட்?? என்ன உளறல் இது??" என்றான் இனியன் பற்களைக் கடித்தவாறு.


"எல்லாரும் உண்மை விளம்பிங்களா.. எல்லா உண்மையையும் சொல்லிட்டீங்க.. அப்போ, நானும் என் தரப்பைச் சொல்லணும்ல. எப்படியும் இனி என்னால் தப்பிக்க முடியாது. சரி, போனா போகுது.. உங்களுக்கும் உங்க வாழ்க்கைல என்ன நடந்து இருக்குன்னு தெரியணும்னு ஒரு நல்ல எண்ணத்துல நடந்த அனைத்தையும் சொல்லுறேன்.." என்றான் SK கர்வப் புன்னைகையுடன்.


அவனே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறான் என்று அனைத்தையும் ராஜன் ரெகார்ட் செய்யத் துடங்க SK பேச ஆரம்பித்தான்.


"நான் SK, தி கிரேட் பிசினஸ்மேன் சஞ்சய் கண்ணா.உங்களுக்கே நல்லா தெரிஞ்சு இருக்கும் என்னை. ஆனா, இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரிந்த என்னுடைய ஒரு முகம் தான். யாருக்கும் தெரியாத என்னுடைய இருண்ட பகுதியும் அதனுடைய வேதனையும் எனக்கு மட்டும் தான் தெரியும்.


2009, எனக்கும் என்னோட மனைவிக்கும் டிவோர்ஸ் ஆனது. அவளே விரும்பி கேட்ட டிவோர்ஸ் தான்.. காரணம் பணம். என்னை விட பணம் படைத்தவன் தான் வேணும்னு என்னை விட்டுட்டு போய்ட்டா. அப்போ முடிவு பண்ணேன்.. நிறைய பணம் சேர்க்கணும்னு. ஆனா, அதுக்கு நேர் வழில போனா ரொம்ப வருஷம் ஆகும். ஷார்ட் அண்ட் ஈசியா பணம் சம்பாதிக்குனும்னா அதுக்கு ஒரேவழி போதை மருந்து கடத்தல் தான்னு முடிவுப் பண்ணேன், அதன்படி ஆரம்பிச்சேன். ஆனால், அதை சரியாக செயல்படுத்த எனக்கு
சாப்ட்வேர் சைடுல ஒரு எக்ஸ்ட்ராட்டினரி மூளை உள்ள ஒரு ஆள் தேவை.


அதுக்கு தான் என்னுடைய சாப்ட்வேர் கம்பனி முழியமா, 2013லில் நேஷனல் லெவெல் ஹக்கத்தான் போட்டி நடத்தினேன். நானே ஆச்சரியப் பாடுற அளவுக்கு சவுத் இந்தியாவை சேர்ந்த ரெண்டு பேர் முதல் இரண்டு இடங்களில் இருந்தாங்க.. அதில் ஒருவன் இனியன் மற்றவன் சந்தோஷ்.


ரெண்டு பேருல யாரை எனக்கு உதவியா தேர்ந்தெடுக்கலாம்னு யோசிச்சேன். எனக்கு அப்போ எமோஷனலி வீக்கா இருக்க ஒரு ஆள் தான் தேவைப்பட்டது. ஏன்னா, அவனை தான் சுலபமா என் வலையில விழ வைக்க முடியும். இனியன் எமிஷனலி ஸ்ட்ராங் பட் சந்தோஷ் ரொம்பவே வீக்கா இருந்தான். அவனுக்கே தெரியாம அவனுக்குள்ள ஒரு இன்செக்கியூரிட்டி ஃபீலிங் இருந்தது. அதுக்கு காரணம் அவன் சின்ன வயசுல மனதளவில் ரொம்பவே காயப்பட்டுருக்கான் என்பது தான்னு எனக்கு பின்னால் தெரிந்தது.


சோ! அப்போ இனியன் எனக்கு செட் ஆக மாட்டான்னு எனக்கு தெரியவும், நா சந்தோஷ் பக்கம் என் கவனத்தை திருப்பினேன். அவன் கூட ஃபிரெண்ட் ஆனேன் . என் நல்லநேரமோ என்னமோ, சரியா அதே சமயம் தான் அவன் ஒரு பொண்ண லவ் பண்ண, அதுக்கு அந்த பொண்ணோட அப்பா இவனையும் இவன் குடும்பத்தையும் ரொம்பவே தரைக்குறைவா பேசியிருக்கார்.


குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும். நானும் முடிந்த அளவுக்கு அவனிடம் பேசி, அவங்களை ஆள் வச்சு மிரட்டிப் பார்க்கச் சொன்னேன்.


அவனுக்கும் அது சரின்னு தோணுச்சு போல, அதே மாதிரி ஆட்களை ரெடிப் பண்ணினான். பட் சந்தோஷிற்கே தெரியாம அவன் லவ் பண்ண பொண்ணையும், அவ அப்பாவையும் போட்டுத்தள்ள சொன்னேன்.


அதன் பிறகு, நீ தான் அவங்களை கொன்னுட்டன்னு சொல்லிச் சொல்லி ஏற்கனவே எமோஷனலி வீக்கா இருந்தவனை கிட்டத்தட்ட முழு டிப்ரஷன்னுக்கு கொண்டு போனேன். அந்த டிப்ரஷனைப் போக்க மருந்துன்னு சொல்லி, அவனை ஒரு விதமான அழுத்தமான மனநிலையிலேயே வைக்கிற மாதிரியான மருந்துகளை கொடுத்தேன். என் திட்டப்படியே சந்தோஷும் முழுசா என் கண்ட்ரோல்ல வந்தான். அவனோட திறமையைப் பார்த்து SK கேங்கோட துணைத்தலைவர் பொறுப்பை கொடுத்தேன்.


ஆறு மாசம் என்கூடவும், ஆறு மாசம் அவன் குடும்பத்துக்கூடவும் இருக்கும் படி பார்த்துகிட்டேன். யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதுன்னு. அதே மாதிரி, நான் டிப்ரஷனுக்கு மருந்துன்னு தந்ததை என் கூட இருக்கும் போது மட்டும் தான் அவனை போட வைப்பேன். அதனாலத்தான் மும்பைக்கு வந்துட்டா அவன் அவனாகவே இருக்க மாட்டான். வேற ஒரு மனிதனா இருப்பான். பிகாஸ் நா கொடுத்த மருந்தை வருஷக் கணக்குல எடுத்துக்கிட்டத்தோட விளைவு அது. அந்த மருந்தை எடுத்துக்கிட்டா சந்தோஷ் அவனோட கண்ட்ரோல்ல இருக்க மாட்டான். அவன் என்னப் பண்றான்னு அவனுக்கே தெரியாது.. என்னோட கையாட்டி பொம்மை தான் அவன் அந்த மருந்தை எடுத்துக்கிட்டா.


இதுக்கெல்லாம் முதல் காரணம், சந்தோஷ் எமோஷனலி வீக்கா இருந்தது தான். அதுக்கு முக்கிய காரணம் உன்னோட குடும்பம் தான்" என்று நேராக SK அழகியைக் குற்றம் சாட்ட, உண்மையிலேயே துடித்துடித்து விட்டாள் அவள்.


நேரே, சந்தோஷிடம் சென்றவள், "சந்தோ!! உணக்குள்ள இருக்க கஷ்டங்ளை எல்லாம் மறைச்சிக்கிட்டு.. எங்க முன்னால சந்தோஷமா இருக்க மாதிரி நடிச்சியாடா. ஏன்டா.. ஏன்?? உனக்கு இதுலாம் பிரச்னைன்னு நீ வாயைத்திறந்து முன்னமே சொல்லி இருந்தா இதுயெல்லாம் நடக்காமல் தடுத்திருக்கலாமேடா.." என்று அழுதவளை நோக்கி,


"உன் புருஷனும் என் வலையில மாட்டி இருக்கனும் தப்பிச்சிட்டான்னு சந்தோஷப்படு.." என்றான் SK.


அவன் என்ன கூறுகிறான் என்று புரியாமல் பார்த்த அழகியை நோக்கி, "என்ன ஒன்னும் புரியலையா?? சந்தோஷ் லவ் பண்ண பொண்ணு தான், இனியனோட லவ்வர்னு எனக்கு லேட்டா தான் தெரியும். எனக்கு விஷயம் தெரியவரும் போது.. சார் அவரோட லவ்வர் இறந்ததற்க்காக கவலைப்பட்டு தேவதாஸா மாறியிருந்தாரு. சரி, நாமக்காகவே வந்து சிக்கியிருக்கான்னு நினைச்சு, வெறும் ட்ரிங்க்ஸ் மட்டுமே சாப்பிட்டுட்டு இருந்தவனை போதை மருந்துக்கு அடிமையாக வச்சேன். அப்படியே அவனை டார்க் வெப்குள்ள வர வச்சேன். அங்க வந்தா சந்தோஷ் முழியமா அவனோட சிஸ்டமை ஹேக் பண்ணி, அதை வச்சி இனியனையும் எங்க குழுவில் இணைச்சிடலாம்னு நான் ஒரு கணக்கு போட்டா!! எந்த தேவதை வந்து அருள்புரிந்ததோ திடீர்னு ஒரு மாற்றம் இனியனிடம். நான் நின்னுச்சே பார்க்காத மாதிரி போதைல இருந்து வெளியே வந்தான்.. கண்சிமிட்டி பார்ப்பதற்குள் போலீஸா வந்து நினைக்கிறான். சரி, இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு நா சந்தோஷ் பக்கம் மட்டுமே என் கவனத்தை திருப்பினேன்.." என்று SK கூறி முடிக்கவில்லை, அதற்குள் அவனை பிரித்து மேய்ந்திருந்தான் ராஜன்.


உடலில் உயிர் மட்டுமே இனி பாக்கி என்னும் நிலை வரும் வரை SKவை அடித்தப்பிறகு தான் ஓய்ந்தனர் ராஜனும், இனியனும்.


எந்த மருந்தைக் கொடுத்து சந்தோஷை இந்த நிலையில் SK வைத்திருந்தானோ, அதே மருந்தை ஒரு வாரத்திற்கு அதிக அளவில் அவனிற்கு கொடுத்தவர்கள்… அதன் பிறகு தான் SKவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.


SK கூறிய அனைத்தையும் ராஜன் பதிவுச் செய்திருந்ததால், அதை வைத்து சந்தோஷிற்கு தண்டனை எதுவும் தராமல், அவனது மனநிலையை சரி செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கும்படி உதரவிட்டவர், SKவிற்கு இரட்டை ஆயுள் தண்டனையும், வாரம் மூன்று நாட்கள் அரசு மனநலக் காப்பக்கத்தில் இருக்கும் நோயாளிகளைப் பராமரிக்கும் பணியையும் தண்டனையாக தந்தார் நீதிபதி.


அந்த தண்டனையில் ராஜனுக்கும், இனியனுக்கும் திருப்தி இல்லை என்றாலும், அவர்கள் அவனுக்கு செலுத்தியிருக்கும் மருந்தின் வீரியம் விரைவில் அவனையும் அந்த மனநலக் காப்பாகத்திலேயே சேர வைக்கும் என்னும் எண்ணத்தில் அமைதியாக இருந்தனர்.


சந்தோஷின் நிலையை அறிந்து கயல் உருக்குலைந்து விட்டாள் என்றால் இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய செயல்கள் தான் என்று தன்னை நினைத்தே வெறுத்துப்போன சரவணன், மீனாட்சியிடமும் குணசேகரனிடமும் மன்னிப்பு கேட்டார் மனதார.


தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவரிடம் என்னத்தான் சொல்லமுடியும் மீனாட்சி தம்பதியால், மன்னித்துவிட்டார்கள் அவரை.


அதன்பிறகு, சந்தோஷ் அனுமதிக்க பட்டிருக்கும் மருத்துவமனையில் அவனுக்கென்று தனி அறையொன்றை ஏற்பாடு செய்து, கயல் முழு நேரமும் அவனுடன் இருந்து பார்த்துக்கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.


வாரத்திற்கு குறைந்தது நான்கு நாட்களாவது மறுத்துவமனைக்கு சென்று சந்தோஷைப் பார்த்துவிட்டு வரும் சரவணன், பிளாட்பார்மில் வீடின்றி, உணவின்றி தவிக்கும் நூற்றிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு மூன்று வேளை உணவளித்து பார்த்துக்கொண்டார்.



இதன் மூலமாகவாது தன்னுடைய தவறின் வீரியம் குறைந்து சந்தோஷ் சீக்கிரம் குணமாகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-25


இரண்டு மாதங்களுக்கு பிறகு,

பிங்க் வண்ணப் புடவையில் தேவதையென கிளம்பி நின்ற அழகியின் அழகில் மயங்கிய நின்ற இனியனைக் கண்டு தலையில் அடித்தவாறு, "அச்சோ! அப்புறம் வீட்டுக்கு வந்தப் பிறகு பொறுமையா ரசிச்சிக்கோங்க இனியன்.. இப்போ வாங்க நேரமாகுது.. பையன் வீட்டு சைடு நாமளே கல்யாணத்துக்கு லேட்டா போகலாமா?? கிளம்புங்க.. கிளம்புங்க.." என்று காலில் சுடுத்தண்ணிக் கொட்டியதுப் போல் குதித்துக்கொண்டிருந்தாள் அழகி.


இனியும் காலதாமதம் செய்தால் அழகியின் பத்ரகாளி அவதாரத்தைப் பார்க்க நேரிடும் என்று அனுபவித்தினால் கிடைத்திருந்த பாடத்தால், மேற்கொண்டு பேசாமல் சிரிதித்தப்படியே அழகியுடன் சொசைட்டி திருமண மண்டபத்திற்கு சென்றான் இனியன்.


மண்டபத்திற்குள் நுழைந்ததுமே இருவரையும் பிடித்துக்கொண்டான் அன்றைய நாளின் கதாநாயகனான மாப்பிள்ளை ராஜன், 'ஏன் இவ்வளவு தாமதம்' என்று.


என்ன! ராஜன் மாப்பிள்ளையா?? அப்படியானால் இன்று அவனுக்கு தான் திருமணமா?? என்று கேட்டால். ஆம், ராஜனுக்கு தான் இன்று திருமணம். மணப்பெண் வேறுயாரும் அல்ல நம் பத்மா தான். அன்று ராஜனை சிறையில் சந்தித்த பெண்ணும் சாத்சாட் இதே பத்மா தான்.


பள்ளியில் பயின்ற காலத்திலிருந்தே ராஜனை ஒருதலையாக காதலித்தவள். ராஜனின் பார்வை தன் தோழி அழகியின் மீது விழவும், அவனுக்கு அவளைத் தான் பிடித்திருக்கிறது என்று தன் காதலை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு ஒதுங்கி நின்றாள்.


ஆனால், உண்மை காதல் எங்கே சுற்றியும் இறுதியில் உரியவரிடமே வந்து சேரும் என்பது போல். அவளே எதிர்பாரா வண்ணம் ராஜனை அவளிடமே கொண்டு வந்து சேர்ந்தது பத்மாவின் காதல்.


சந்தோஷ் குணமானப் பிறகே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்தனர் ராஜனும், பத்மாவும்.


ஆனால், சந்தோஷ் தற்போது மனதளவில் நன்றாக தெரியிருந்தாலும், அவன் எடுத்துக்கொண்ட மருந்தின் வீரியம் இன்னும் அவன் உடம்பில் இருப்பதால், அது பிற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறிய மருத்துவர்கள், சந்தோஷ் முழுவதும் மனதளவிலும் உடலவிலும் சரியான பிறகே மருத்துவமனையில் இருந்து அனுப்ப முடியும் என்று கூறிவிட, தங்களுக்காக காத்திருக்க வேண்டாம் திருமணத்தை நடத்தும் படி கேட்டுக் கொண்டனர் சந்தோஷும் கயலும்.


அதன்படி இன்று ராஜனுக்கு பத்மாவிற்கும் திருமணம் என்று நிச்சயமாக, அதற்கு தாமதமாக வந்ததிற்காகத் தான் இனியனையும் அழகியையும் திட்டிக்கொண்டிருக்கிறான் ராஜன்.


ஒருவழியாக கல்யாண மாப்பிளையைச் சமாளித்து மணவரையில் உட்கார வைத்தனர் இனியனும் அழகியும்.


ஐயர், கல்யாணப் பெண்ணை அழைத்து வரச் சொல்ல, கிடைப்பதற்கரிய பொருள் என்று எண்ணி ஏங்கிய தனது காதல், இன்று நிறைவேறித் திருமணம் வரை வந்திருக்கிறது என்ற பூரிப்பிலேயே முகம் பொலிவுற, அதில் சிறு வெட்கமும் எட்டிப்பார்க்க, தேவலோகப் மங்கையென நடந்து வந்த பத்தமாவைக் காதலோடு பார்த்திருந்தான் ராஜன்.


காதலிப்பது ஒருவகைச் சுகமென்றால், காதலிக்கப் படுவது வேறுவகை சுகம். அதிலும், எட்டு வருடங்களுக்கு மேலாக தன்னை மட்டுமே உலகம் என்று எண்ணி, எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் தன்னை காதலித்த அந்த அற்புத பெண்ணையே மனைவியாக அடையப் போகிறோம் என்ற உற்சாகத்தில் ராஜனின் முகமும் பளபளத்தது.


அக்னி சாட்சியாய் பெரியோர்களின் ஆசியுடன், தனது தாய், தந்தை மற்றும் தங்கையை மனதில் நினைத்துக்கொண்டு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மங்கள நாணை பத்மாவின் கழுத்தில் பூட்டினான் ராஜன்.


அதன்பிறகு மற்ற திருமண சடங்குகள் நடைபெற, பத்தமாவையும் ராஜனையும் கேலி செய்து வம்பிலுத்து ஒருவழியாக்கி விட்டு தான் வீடு திரும்பினர் அழகி இனியன் தம்பதி.


***************************

அன்றிரவு,

சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இனியனின் மடியில் வந்தமர்ந்த அழகி, அவனது கழுத்தோடு கையிட்டு அணைத்து மார்பில் சாய்ந்தவாறே, "உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு இனியன் சார்!!" என்றாள் குழைந்தக் குரலில்.


நீண்ட நாட்களுக்கு பிறகான அழகியின் 'சார்' என்ற அழைப்பும், சர்ப்ரைஸ் என்ற வார்த்தையும் இனியனுக்கு பதற்றத்தை ஏற்படுத்த. உடனே, அழகியின் கையைப் பற்றி அப்படியும் இப்படியுமாக திருப்பி ஆராய்ச்சி செய்தவன், "டாட்டூ ஏதாவது திரும்பவும் போட்டுட்டு வந்திருக்கிறீயா??" என்றான்.


"சே! அதில்லை" என்றவள், "ஆமா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமே இனியன்.." என்றாள் ராகமாக.


"இது தான் சர்ப்ரைஸ்ஸா?? சரி சொல்லு" என்றான்.


"இதுவும் ஒருவகைல சர்ப்ரைஸ் தான். அது! உங்களுக்கு ஒன்னு தெரியுமா நீங்க டைரில எழுதியிருந்த அந்த சோசியல் நான் தான்" என்று சிணுங்கியவாறு கூறியவளின் மூக்கைப் பிடித்து ஆடியவன், "இது எனக்கு முன்னாடியேத் தெரியும்.." என்றான் இயல்பாய்.


"எப்படி?? மருது சொன்னன்னா??"


"சே! சோசியல் அட்லஸோட தங்கச்சி, குறும்பு பொண்ணு… இது ஒன்னு போதாதா உன்னைக் கண்டுபிடிக்க.. அதோட உனக்கு பிடிச்ச அதேப் பாட்டு தான் சோசியலுக்கும் பிடிக்கும் சொன்னா.. மதிக்கும் அதே பாட்டு தான் பிடிக்கும்" என்றவன்,


"நான் ரொம்ப லக்கி அழகி. எல்லாருக்கும் வரம் ஒருமுறை தான் கிடைக்கும். எனக்கு மட்டும் ரெண்டு முறை கிடைச்சிருக்கு. நீ என் வாழ்க்கைல வந்திலாம இருந்திருந்தா இந்நேரம் நா எப்படி இருந்து இருப்பேன்னு தெரியலை. தப்பான வழில போக திரிந்த என்னை.. அந்த சமயம் சரியான பாதையில போக திசைத் திருப்பினதும் நீதான். இனி காதலே என் வாழ்க்கைல இல்லைன்னு நான் இருந்தப்போ .. நா இருக்கேன்டா உனக்கு என்று காதலால் திக்குமுக்காட வச்சத்தும் நீதான்.. லவ் யூ டா அழகிமா" என்று அழகியின் மூக்கோடு மூக்கை உரசியப் படியேக் கூறினான் இனியன்.


இனியனின் வார்த்தைகளினால் ஏற்பட்ட சிலிர்ப்பை ரசித்தவாறே, தனது பின்பக்கமாக மறைத்து வைத்திருந்த கிப்ட் பாக்ஸ் ஒன்றை இனியனிடம் தந்தவள், "சர்ப்ரைஸ்" என்றாள் சிரித்தவாறு.


அச்சரியத்துடன் அந்த பாக்ஸை வங்கியவன் மெல்ல கிப்ட் கவரைப் பிரித்து உள்ளிருந்த பெட்டியை திறந்தான்.


அதுவோ முழுவதும் டைரி மில்க் சாக்கலேட்டாக நிறைந்திருக்கவும்,"இது எனக்கான சர்ப்ரைஸ் மாதிரியே இல்லையே அழகி! உனக்கு நீயே பண்ணிய சர்ப்ரைஸ் மாதிரி இருக்கே" என்றான் புன்னகையுடன்.


கண்களின் ஒருவித எதிர்பார்ப்புடன், "ரெண்டு பேருக்குமான சர்ப்ரைஸ் தான் இனியன்.. அந்த சாக்கலேட்ஸ் எடுத்துட்டு உள்ளே பாருங்க" என்றவள் கூறியப்படியே, அந்த சாக்கலேட்களை தனியே எடுத்து வைத்துவிட்டு பெட்டியினுள் என்ன இருக்கிறது என்று பார்த்தவன், அப்படியே அந்த பெட்டியை சோபாவின் மீது வைத்துவிட்டு அழகியை கட்டிக்கொண்டு அழுத்துவிட்டான்.


சமயங்களில் தாங்கி கொள்ளமுடியாத அளவிற்கு சந்தோஷம் வந்தாலும் முதலில் வருவது அழகை தான்.


இனியனும் அப்படி தாங்கிக்கொள்ள முடியாத இன்பத்தில் தான் திகைத்திருந்தான் இப்போது.


இனியன் இந்த அளவிற்கு சந்தோஷப் படும்படி அப்படி என்னத்தான் இருந்ததாம் அந்த கிப்ட் பாக்ஸில்??


இரட்டை சிகப்பு நிற கோடுகளைக் கொண்ட ப்ரக்னண்ஸி கிட் தான் அந்த கிப்ட் பாக்ஸில் இருந்தது.


அழகியை அணைத்திருந்த இனியன்,"தான்க்ஸ்டா.. தான்க்ஸ்டா அழகிமா .. எனக்கு பேச்சே வரல… நா அப்பாவாக போறேன்.. நீ அம்மாவாக போற.. நமக்கே நமக்குன்னு நம்ம குட்டி பாப்பா வரப்போறாங்க" என்றான் உற்சாகக் குரலில் தழுதழுதவாறு.


இனியனின் கையை எடுத்து தனது மணிவயிற்றில் வைத்தவள், "மதி அக்கா.. நம்ம கிட்டையே திரும்பி வரப் போறாங்க இனியன்!" என்று லயிப்புடன் அவள் கூற, அவளையே வியப்புடன் பார்த்திருந்தான் அவன்.


விழிகள் இரண்டும் மெல்ல கணிய, அழகியின் நெற்றியில் இதழ் பதித்தவனை அணைத்துக் கொண்டவள், "எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன் இனியன்" என்றாள் ஆசையாக.


சும்மாவே அழகி கூறினால் அதற்கு இனியனிடம் மறுப்பு என்பதே இருக்காது. அதிலும் இப்போது, அவர்கள் காதலின் பரிசை சுமந்தக் கொண்டிருப்பவள் கேட்டப் பிறகு பாடாமல் இருப்பானா என்ன?? அவன் மனதையே பாடலாக பாடினான் இனியன்.


' நான் நேற்று
வரையில் பூட்டி கிடந்த
ஜன்னலாய் தோன்றினேன்!!

உன் பார்வை
பட்டதும் ஸ்பரிசம்
தொட்டதும் காட்சிகள்
காண்கிறேன்!! 'என்று பாடியவனின் கைகளைப் பற்றிய அழகியோ,

'விழிகளை நீ
மூடி வைத்தால் வெளிச்சங்கள்
தெரியாதே!!

வழிகளை நீ மூடி
வைத்தால் பயணங்கள் கிடையாதே!!

விரலோடு தான்..
விரல் சேரவே..
தடை ஒன்றுமே இனி
இல்லை!!' என்றுப் பாடினாள்.


'உன் வார்த்தைகள்
தரும் வேகத்தால்..
நான் மீண்டும் மீண்டும்
காற்றில் போகிறேன்!!' என்று பாடியபடியே மனம் நிறைந்த காதலுடன் அழகியின் நெற்றியில் முத்தமிட்ட இனியனைத் தானும் முகம் கொள்ளாப் புன்னைகையுடன் அனைத்துக் கொண்டாள் அழகி.


கனவில் கூட எதிர்பார்திடாத ஒரு அழகிய இன்பமான வாழ்வை இருவரும் வாழ, இனி எல்லாம் சுகமே என்று வாழ்த்தியவாறு நாமும் அவர்களுக்கான தனிமையை தந்துவிட்டு, சத்தமின்றி செல்வோம் வாருங்கள்.




***** முற்றும்*****
 

T21

Well-known member
Wonderland writer
ஹாய் பட்டூஸ், நம்ம கதை உங்களுக்கு பிடித்து இருந்தால், இந்த திரியில் நம்ம கதைக்கு vote பண்ணுங்க??

 
Status
Not open for further replies.
Top