ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-21

அழகியின் ஃபோன் சிக்னல் மணமேல்குடி என்னும் பகுதியில் தான் தற்போது செயலில் இருக்கிறது என்பதை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறிந்த இனியன் குழு அங்கு விரைந்துச் சென்றது.


ஜிபிஎஸ்சில் காட்டிய இடத்திற்கு வந்தவர்கள், அது ஒரு வாரச்சந்தை நடைபெறும் இடமாக இருக்கவும், இங்கே எதற்கு அந்த கடத்தல் காரர்கள் அழகியை அழைத்து வந்திருப்பார்கள்?? என்று குழம்பியப்படியே மீண்டும் அழகியின் அலைபேசி சிக்னல் இருக்கும் இடத்தைச் சரிப்பார்க்க. அதுவோ! இந்த இடம் தான் நீங்கள் தேடும் இடம் என்று அடித்துக் கூறியது.


அந்த இடத்தையே சுற்றிச் சுற்றித் தேடியவர்களின் கவனத்தை அங்கிருந்த ஒரு அட்டைப்பெட்டி ஈர்க்க... அதனைத் திறந்துப் பார்த்தால், அழகியின் அலைபேசி உள்ளிருந்து இவர்களைப் பார்த்து பல் இளித்துக் கொண்டிருந்தது.



இது தங்களைத் திசை திருப்பும் முயற்சி என்பதை ஒருவாறுப் புரிந்துக்கொண்டவர்கள், மேற்கொண்டு என்னச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர். அந்நேரம் இனியனின் அலைபேசியிற்கு அழைத்திருந்த மருதுவோ, யாரோ ஒருவர் ராஜனை ஜாமீனில் வெளியே எடுக்க, தங்களது அடையாலங்களை மறைத்து முயன்றுக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது என்று தெரிவித்தான்.


ராஜனை ஜாமீனில் எடுக்க முயல்வது யாராக இருக்கும் என்று யோசித்தவாறே சென்றவனின் கண்ணில் பட்டது ஒரு கைச் சங்கிலி, அழகியின் அலைபேசி இருந்த அட்டைப்பெட்டியின் அருகே.


அந்தக் கைச் சங்கிலியை கையில் எடுத்தவன், நெற்றிச் சுருங்க அதைச் சற்று நேரம் பார்த்துவிட்டு, தன் பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நேரே சென்றது அருணாச்சலத்தின் கோடவுனிற்கு தான்.


************************

தன்னை ஜாமீனில் எடுக்க முயன்றுக் கொண்டிருக்கும் நபரிடம் தனக்கு அதில் விருப்பமே இல்லை என்று ஒரேடியாக மறுத்தாகிவிட்டது தான். ஆனாலும், அவர் இத்துடன் இதை விட்டுவிடுவார் என்று நினைப்பதும் முட்டாள் தனம். சந்தேகமின்றி, நிச்சயம் திரும்பி வந்து அவர் இதே விஷயத்தை மீண்டும் கேட்ட கூடும். இத்தனை ஆண்டுகளில் இல்லாத பாசம் திடிரென்று நான் ஜெயிலில் இருக்கும் போது மட்டும் எப்படி வந்ததோ??. போதும்! இனி தனக்கு யார் நட்பும் தேவையில்லை, யார் பரிவும் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தவன். இனி, அவர் எத்தனை முறை வந்து கேட்டாலும், தனது முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான் ராஜன்.


இந்த யாருமற்ற தனிமை சிறையும் நன்றாக தான் இருந்தது ராஜனுக்கு. கடந்த சில வருடங்களாகவே ஓய்வு என்பது ஏதுமின்றி ஒரே ஓட்டமாக ஒட்டிக் கொண்டிருந்தவனுக்கு இந்த ஓய்வு தேவையானதாகவே இருந்தது.


இந்த தனிமையில் நிறையவே சிந்திந்தவனிற்கு ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்ன்னு சும்மா ஒன்றும் சொல்லி வைக்கவில்லை என்று. தான் செய்தத் தவறை எல்லாம் எண்ணித் தன்னையே சுயப்பரிசோதனைச் செய்துக்கொள்ள இன்னும் கூட நாட்கள் வேண்டும் என்று தான் தோன்றியது அவனுக்கு.


ஆழ்ந்த யோசனையில் இருந்த ராஜனை, 'ராஜன் உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க' என்ற ஏட்டின் குரல் சுயநினைவிற்குக் கொண்டு வந்தது.


'தன்னை தேடி ஒரு பெண்ணா??யார் அது??' என்ற எண்ணிக்கொண்டே ஏட்டுடன் சென்றவன் அங்கு நின்றிந்தவளைக் கண்டுத் திகைத்து 'நீயா??' என்றான் அதிர்ச்சியாக.


சத்தியமாக அவளை இங்கே சற்றும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவனின் திகைத்தக் குரலே கூறியது.


அவளுக்கோ மழிக்கப்பாடாத தாடியுடன், சற்றே இளைத்துக் காணப்பட்ட ராஜனைப் பார்க்க மாட்டாமல், கண்களில் வழியும் கண்ணீருடன் "நானே தான் ராஜன்!!" என்றாள்.


"இப்போ இங்க எதுக்கு வந்திருக்க??" சுல்லென்று எரிந்து விழுந்தவனிடம்,


"நான் வராமல் .. வேற யாரு வருவா ராஜன்?? ப்ளீஸ்.. அந்த ஜாமீனுக்கு மட்டும் ஒத்துக்கோங்களேன்" என்று கெஞ்சாதக் குறையாக கேட்டவளையே நிதானமாக ஆழ்ந்துப் பார்த்தவன், "நான் வெளிய வருவதில் உனக்கென்ன அவ்வளவு சந்தோஷம்??" என்றான் நிதானமாக.


"ஏன்னா நீங்க கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியல ராஜன். நான் உயிரா நேசிக்கிற நீங்க இங்க துன்பத்தில் இருக்கும் போது நான் மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?? நீங்க சந்தோஷமா வாழனும்னு தான் மனசு முழுக்க உங்க மேல காதல் இருந்தும் … உங்க விருப்பப்படி நீங்க அழகியை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னு விலகி இருந்தேன்.. இப்போ தான் அதுவும் இல்லையே!! அப்புறம் ஏன் இன்னும் என்னை விலக்கி வைக்கிறீங்க ராஜன்.. என் காதல் தான் உங்களுக்கு புரியலை. சரி, பரவாயில்லை! ஆனா, ஏன் இப்படி உங்க மேல அன்பு வச்சிருக்க எல்லாரையும் கஷ்டப்படுத்துறீங்க.. நீங்க என் காதலை கூட ஏத்துக்க வேண்டாம். இந்த ஜாமீனுக்கு மட்டும் ஒத்துக்கோங்க ப்ளீஸ்…" என்றாள் கெஞ்சலாக.


"ஹே! ஜஸ்ட் ஷட் அப்! காதல் அது இதுன்னு இங்க நின்னு உளறிக்கிட்டு இருக்காம ஒழுங்கா வீட்டுக்குப் போய் சேரு. நீ சொல்லுறது முதல்ல காதலே இல்லை.. அந்த வயசுல உனக்கிருந்த ஈர்ப்பை தான் நீ காதல்னு நினைச்சிட்டு இருக்க" என்றான் ராஜன் எங்கோப் பார்த்தப்படி.


"நீங்க சொல்லுற இந்த ஈர்ப்பு அந்த பதினஞ்சு வயசுப் பொண்ணுக்கு வேணும்னா இருந்திருக்கலாம். ஆனா, உங்களுக்கு அழகியை பிடிக்கும்னு தெரிஞ்சும் இத்தனை வருஷமா உங்களை மட்டுமே நினைச்சு வாழ்வதற்க்கு பேரு காதல் தான் ராஜன்.."


"இது காதல் இல்ல பைத்தியக்கார தனம். இனியாவது ஒழுங்கா உன்னோட வாழ்க்கையை வாழு.. நா உனக்கு கிடைப்பேன்னு நினைக்குறது எல்லாம் கானல் நீர் மாதிரி தான்.. புரிஞ்சிக்கோ.. அண்ட் அந்த ஜாமீனுக்கு நா சம்மதம் சொல்ல நோ சான்ஸ்.. அதுவும் அவர் ஜாமீன் எடுத்து தான் நான் வெளியே வரணும்னு எனக்கு அவசியமில்லை.." என்றான் இறுகியக் குரலில்.


" இதுக்கு பேரு விடண்டாவாதம் ராஜன்! நீங்க அவர் முழியமா வரும் ஜாமீன் வேண்டாம்னு சொல்லுறதுக்கு காரணம் மதியும் உங்க அப்பாவும் தானே??" என்றவளது கேள்வியில் திகைத்தவன்,


" மதியைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்??"பலவித உணர்ச்சி தலும்பல்கள் அந்த குரலில்.


"நீங்க சொன்னக் கதையை இந்த ஊர் வேணுமன்னா நம்பும். உங்களையே நினைச்சு வாழ்ந்துட்டு இருக்குற எனக்கு உங்க சின்ன சின்ன மாற்றமும் தெரியும் ராஜன். அப்போ நா எப்படி அதை நம்புவேன். உங்க சுகத்துக்கத்தில் உங்க கூடவே இருக்கத் தான் ஆசைப்படுறேன் ராஜன். அது நடக்கலைனாலும் பரவாயில்லை… நீங்க வெளியே வந்தாலே போதும்" என்று தழுதலுத்தக் குரலில் கூறியவளைக் கண்டவனின் விழிகள் இரண்டும் மெல்ல கணிந்தன.


"நா என்ன பண்ணனும்னு நினைக்குற இப்போ??" என்றான் அவளையே பார்த்தவாறு.


"ஜாமீன் வாங்க ஒத்துக்கோங்க.. அது போதும்!!"


" அவர் கிட்ட ஏற்பாடு பண்ணச் சொல்லு.. அப்புறம் அது மட்டும் போதுமா உனக்கு??" என்றவனைப் புரியாமல் பார்த்தவள், 'புரியலை' என்றாள் விழித்தவாறு.


"நேரடியாவே கேக்குறேன்.. கல்யாணம் பண்ணிக்காலமா?? எனக்காக மட்டுமே இத்தனை வருஷம் நா உனக்கு கிடைப்பேனா இல்லையான்னு கூட நிச்சயம் இல்லாத போதும். எனக்காக காத்துகிட்டு இருந்து , இப்போ நா வெளியே வரணும்னு என்கிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கியே.. உன்னை மிஸ் பண்ணா என்ன விட பெரிய முட்டாள் வேற யாரும் இருக்க மாட்டாங்க" என்றான் ஆதூரமாக.


தான் கேட்பது உண்மை தானா?? என்று அவள் திகைத்து நின்றதெல்லாம் ஒரு கணம் தான். மறு கணமே, 'அது உண்மை தான்' என்று மூளை எடுத்துரைக்க ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.


கிட்டத்தட்ட எட்டு ஆண்டு காலக் காதல் அவளுடையது. தன் காதல் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவனைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு வாழ்வதே வரம் என்று நினைத்து வாழ்ந்தவளுக்கு, இன்று தன் கனவு வாழ்வு கைகூடப் போகும் சந்தோஷத்தில் , தன்னையும் மறந்து கைகளை விரித்தவாறு துள்ளிக் குதித்தவளை கண்டுப் புன்னகை கூட எட்டிப்பார்த்தது ராஜனுக்கு.


"இது போதும் ராஜன் எனக்கு… வார்த்தைகளே வரலை.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தேங்க்ஸ் ராஜன் ரொம்ப தேங்க்ஸ்.." என்றவள், ராஜனின் ஜாமீனுக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆயுதமானாள்.


*****************


ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த அழகி, தன் மீது எதுவோ ஈரமாக பட்டென்று படவும் பதறி எழுந்தாள்.


சுற்றி எங்கும் இருட்டாக இருக்க, இவள் கட்டிவைக்கப் பட்டிருக்கும் நாற்காலியின் மேல் மட்டும் ஒரு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் அந்த இருண்ட பகுதியில் யாரேனும் நின்றிருந்தாள் அவர்களால் அழகியைத் தெளிவாக பார்க்க முடியும். ஆனால், அழகியினால் தான் யாரையும் பார்க்க முடியாது.


தன் முகத்தில் இருந்து வழியும் நீரினைத் துடைக்க முடியா வண்ணம் கைகள் இரண்டும் பின்னோக்கி நாற்காலியுடன் கட்டி வைக்கப்பட்டிருக்க. மெல்லத் தன் தோள்களிலேயே முகத்தை துடைத்துக் கொண்டவள். தன்னை சுற்றியிருக்கும் காரிருளைக் கண்டு உள்ளுக்குள் பயந்தாலும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், செவிகளைக் கூர்மையாக்கி தன்னை சுற்றி கேட்கும் சின்ன சின்ன ஒலிகளையும் கூர்ந்து கவனித்தவளின் செவிகளைத் தீண்டியது அந்தக் குரல்.


"வெல்கம் டு அவர் பிளேஸ் அழகி" என்ற குரல் அழகிற்கு மிகவும் பரிச்சயமானது தான்.


இந்த குரலுக்குச் சொந்தக்காரன் தன் குரலை மறைக்க, ஏதோ குரலை மாற்றிக் காட்டும் கருவியைப் பயன்படுத்தி பேசுகிறான் போலும். ஆனால்! அந்தோ பரிதாபம்! அழகி கண்டு பிடித்துவிட்டாளே இது அவளுக்கு பரிச்சயமானக் குரல் தானென்று. யாருடைய குரல் என்பதை தான் அவளால் சரிவர சிந்திக்க முடியவில்லை. மூளை ஒருவித மந்த நிலையிலேயே இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. அது கடத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தின் விளைவாகக் கூட இருக்கலாம்.


யாரிவன்?? எதற்காக என்னை கத்தினான்?? அந்த மயக்கத்தில் இருந்த ஆட்கள் என்னவானார்கள்?? இப்போது பேசுபவன் அந்த மாஸ்க் மனிதனா?? இல்லை மற்றவனா?? பலப்பல கேள்விகள் அழகியின் எண்ணங்களை வியாபித்திருந்தது.


"நம்மளை ஏன்டா தூக்கினாங்கன்னு யோசினையா அழகி??" என்ற குரலில், கனவில் இருந்து விழிப்பதைப் போல் ஒரு திடுக்கிடளுடன் தன்னிலை அடைந்த அழகி, "வாட்??" என்றாள் புரியாமல்.


"உன்னை கடத்தனும் நாங்க பிளான் பண்ணவேயில்லை. நீயா வந்து எங்க கிட்ட சிக்கியிருக்க… " என்று கூறிச் சிரித்தவன். பின் மெல்ல அவளருகே வந்தான்.


"உனக்கு இப்போ என்ன வேணும்?? என் கையை கழட்டி விடு… வலிக்குது.." என்றாள் வேதனையுடன்.


"அச்சோ.. உனக்கு கை வழிக்குதா.. சாரி அழகி .. சாரி.." என்றவன், நாற்காலியுடன் சேர்த்துக் கட்டியிருந்த அழகியின் கைகளை அவிழ்த்து விட்டு, தண்ணீர் பாட்டிலை அவளிடம் தந்து குடிக்கச் சொன்னான் பரிவாக. இருந்தும் அவனது உருவம் அந்த இருட்டில் தான் இருந்தது. கைகள் மட்டும் வெளிச்சத்திற்கு வந்து, அழகியின் கட்டைப் பிரித்துவிட்டது.


சந்தேகத்துடன் அதை அருந்தாமல், அமைதியாக அமர்ந்திருந்தவளைப் பார்த்து புன்னைத்தவன், "அதுல ஒன்னும் கலக்கவில்லை.. நீ பயமில்லாம் குடி" என்றான் மென்னகையுடன்.


இதோ! இந்த மென்மை, பரிவு இதெல்லாம் தான் அழகிற்கு சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.


அதே சந்தேகப் பார்வையுடன் "யார் நீ??" என்றாள் .


"பிளாக் ஸ்பார்க்" என்றான் அவன் கர்வ புன்னகையுடன்.


"பிளாக் ஸ்பார்க்?? ஹே! யூ … என்னை ஏன்டா கடத்துன.. நீ தான் என்னை கடத்தினது இனியனுக்கு மட்டும் தெரிஞ்சது நீ செத்த.." என்று ஆக்ரோஷமாக பேசியவளைக் கண்டுச் சிரித்தவன்.


"யாரு உன் புருஷன் அந்த இனியனா?? என்னை கொன்னுடுவானா?? குட் ஜோக் மிசஸ். மதியழகி அமிழ்தினியன். நா பிளாக் ஸ்பார்க்!! என்னை அவ்வளவு சுலபமா யாரலையும் கண்டிப்பிடிக்க முடியாது.." என்று கர்வத்துடன் கூறிவனிடன்,


"அவ்வளவு நம்பிக்கை இருக்கிறவன், அந்த வாய்ஸ் சேன்ஞ் பண்ணுற டிவைஸ் இல்லாம பேசு பார்ப்போம்" என்றாள் அழகி சவாலாக.


"ஆஹான்! அதை அப்புறம் பார்ப்போம். இப்போ பாண்டிய ராஜன் உனக்கு நிச்சயம் அப்போ போட்டுவிட்டானமே அந்த மோதிரத்தை கழட்டிக் கொடு…" என்றான் கட்டளையாக.


"முடியாதுன்னு சொன்னா என்னப் பண்ணுவ?? முதல்ல நீ அந்த டிவைஸ் இல்லாம உன்னோட உண்மையான குரல்ல பேசு.. இல்லைனா உன் முகத்தை என் கிட்ட காட்டு.. அப்போ நான் அந்த மோதிரத்தை கழட்டி தரேன்" என்றாள் பிடிவாதமாக.


அழகியின் இந்த மறுப்பும், எதிர் பேச்சும் சற்றும் பிடிக்கவில்லை போலும் பிளாக் ஸ்பார்கிற்கு, " எதிர்த்து பேசாம அமைதியா நா கேட்டதை எங்கிட்ட தந்தா நல்லது. இல்லனா வீணா காயப்படுவ அழகி" எச்சரித்தான் அவன்.


"உன்னால முடிஞ்சதைப் பண்ணு. நீ எனக்கு தெரிஞ்ச யாரோ தான் … எனக்கு நல்லா தெரியும் … உன்னால என்னை காயப்படுத்த முடியாதுன்னு.." என்று அழகி கூறி முடிக்கவில்லை, அதற்குள் அவளின் கன்னத்தில் இடியென ஓங்கி அறைந்திருந்தான் பிளாக் ஸ்பார்க்.


இதை சற்றும் எதிர்பார்திராத அழகியோ திகைத்து விழிக்க, அவள் அருகில் வந்த பிளாக் ஸ்பார்க்கோ அவளின் கைகளைப் பற்றி வலதுக் கையின் மோதிர விரலில் அவள் அணிந்திருந்த சற்றே பெரிய அளவிலான பச்சை கல் மோதிரத்தை கழட்ட முயன்றான்.


ஆனால், அந்த மோதிரமோ 'நா அழகி கையில் இருந்து ஒரு இன்ச் கூட நகர மாட்டேன் .. உன்னால முடிஞ்சதை பாருடா' என்னும் விதமாக அசையாமல் இருக்க, கோபம் தலைக்கேறியது பிளாக் ஸ்பார்கிற்கு.


உடனே தன் கைகளில் அழுத்தத்தைக் கூட்டி மேலும் முயற்சித்தான். அப்போதும் அது வராமல் இருக்கவும்.


சற்றும் யோசிக்காமல் தனது சட்டைப் பையிலிருந்து சிறிய பேணா வடிவிலான கத்தியை எடுத்தவன், அழகிக்கு ராஜன் அணிந்திருந்த அந்த பச்சை வண்ண மோதிரத்தை அறுக்க ஆரம்பித்தான். மோதிரத்தை அறுக்கையில் அந்த கத்தி அழகியின் கைகளையும் நன்றாகவேப் பதம் பார்த்தது.


பதினைந்து நிமிடப் போராட்டதிற்கு பிறகு வெற்றிகரமாக அந்த மோதிரத்தை எடுத்தவன், "சாரி அண்ட் தேங்க்ஸ்" என்று அழகியிடம் கூறிவிட்டு அந்த மோதிரத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் பிளாக் ஸ்பார்க்.


கைகளில் இருந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்த அழகியை, அவன் மனிதியாக கூட கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன் வேலை முடிந்தது என்னும் ரீதியில் கிளம்பிச் சென்றிருந்தான் அவன்.


கைகள் வழியாக ரத்தப் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்ல, லேசாக கண்கள் இருட்ட துடங்கியது அழகிற்கு.


மயங்கிவிட கூடாது! கூடாது! என்று தனக்குள்ளேயே உருப்போட்டவாறே அமர்ந்திருந்தாள் அவள்.
 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-22


கைகளில் வழியும் ரத்தத்துடன், தன் சுயநினைவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருந்தாள் அழகி.

இருந்தும் மயங்கிவிட கூடாது என்று தன்னால் முடிந்தமட்டும் முயன்றுக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் முழுவதும் இனியனைச் சுற்றியே இருந்தது.

தனது இடது கையிலிருந்த டாட்டூவை மெல்லத் தடவியப்படியே, "நானும் உங்களைத் தனியா விட்டுட்டு போட்டுவேனோன்னு பயமா இருக்கு இனியன். அப்படி எதுவும் ஆகிட்டா.. உங்களால நிச்சயமா அதை தாங்கக்கொள்ளவே முடியாதுன்னு எனக்கு நல்லாவேத் தெரியும். அதனால தான், என் உயிரைக் கைலப் பிடிச்சிக்கிட்டு உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன் இனியன். சீக்கிரம் வந்துடுங்கப்பா.." என்று எண்ணியவளின் மனமோ, எங்கே! தானும் அவனை தனியேத் தவிக்கவிட்டுச் சென்று விடுவோமோ?? ஓரு இழப்பையேத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தவன், மற்றுமொரு உறவையும் இழக்க நேர்ந்தால் என்ன ஆவானோ?? என்று பலவாறு சிந்தித்து பரிதவித்ததுக் கொண்டிருந்தது.

கலங்கியக் கண்களுடன் அமர்ந்திருந்தவளின் மனதை நிறைத்திருந்தது என்னவோ இனியனின் நினைவுகள் தான்.

இனியனே பலமுறை அழகியிடம் கூறியிருக்கிறான், அவளுடைய காதலுக்கு முன்பு எதுவுமே பெரிதில்லை என்று. ஆனால்! அவனே அறியாத ஒன்று, அழகியிற்கு இனியனின் மீது காதலா?? அல்லது இனியனின் காதலின் மீது காதலா?? என்று கேட்டால், அதற்கான விடை அவளிடமே இல்லை என்று தான் கூறவேண்டும்.

இனியனின் காதல் மன்னன் அவதாரத்தைக் கண்டறிந்த அந்த அழகியத் தருணம் இன்றும் நியாபகம் இருக்கிறது அழகிக்கு.

இனியனுடன் மேற்கொண்ட முதல் பயணமும் அதுதான், இனியன் மறைத்து வைத்திருந்த அவனின் பொன்னான்ன அதேச்சமயம் இருண்ட கடந்தக் காலத்தைப் பற்றி அவள் அறிய நேர்ந்ததும் அந்த பயணத்தில் தான்.

தோழியின் திருமணத்திற்காக இருவரும் சென்னை சென்றதும், அங்கு அவன் வீட்டில் ஒன்றாக தங்கியதும் படம் போல் கண்முன்னே ஓட, மெல்லிய புன்னைகை இந்த இக்கட்டான நிலையிலும் அழகியிடமிருந்து வெளிப்பட்டது.

அன்று, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும், அவசர அவசரமாக புதுக்கோட்டைக்கு கிளம்பிக் கொண்டிருந்த, அந்த பரபரப்புச் சூழலிலும் அழகியின் கண்களைக் கவர்ந்தது அந்த டைரி. மெல்ல அது யாருடைய டைரி என்றுப் பிரித்துப் பார்த்தவள், அப்படியே இனியன் அறியாமல் அதை எடுத்து தன் பையினுள் வைத்துக் கொண்டாள்.

அதன்பிறகு கதிரின் பிரச்சினையால் ராஜனுடன் திருமணம் என்று முடிவாக, அப்போதும் ஏதும் பேசாமல் இருந்த இனியனின் மீது கோபம் கொண்டவள், அந்த டைரியில் அப்படி என்னத்தான் எழுதி வைத்திருப்பான் என்று படிக்கும் ஆவல் எழவும், மற்றவர் டைரியைப் படிப்பது அநாகரிகம் என்றுத் தெரிந்தும் கட்டுப்படுத்த முடியாத ஆவலில் அந்த டைரியைப் பிரித்தாள் அழகி.

முதல் பக்கத்திலேயே 'ராஜன் அமிழ்தினியன் - வெண்மதி' என்ற பெயர்கள் இணைந்து இதயவடிவில் எழுதப்பட்டிருக்க, அதை பார்த்தவளின் மனதில் சுருக்கென்ற வலி எழுந்தாலும் அதனை மறைத்துக்கொண்டு மெல்ல பக்கங்களைத் திருப்பி படிக்கத் தொடங்கினாள்.

என்ன இருந்தாலும் தன் காதலனின் காதல் கதையைப் படிக்கையில் மனம் வலிக்கத்தான் செய்தது அழகியிற்கு.

இனியனின் மீதான தனது காதல் பொய்த்துவிட்டதா?? இதனால் தான் அவனுக்கு என்னைப் பிடித்திருந்தாலும் அதை என்னிடன் சொல்லவில்லையோ?? என்றெல்லாம் எண்ணியவள், தன் மனதை ஒருநிலைப் படுத்தி மீண்டும் டைரியில் இருப்பதைப் படிக்க ஆரம்பித்தாள்.

இந்த அளவிற்கு உருகி உருகி எழுதியிருக்கிறான் என்றால் அந்த மதியை எத்தனைத் தூரம் அவன் நேசித்திருப்பான் என்று வியந்தவள், மதியிடம் ராஜாகிய இனியன் காதலைச் சொல்லிய தருணத்தை படித்தவளுக்கு உள்ளுக்குள் வலி இருந்தாலும் அவன் காதலிலும் மதியின் காதலிலும் கரைந்தேவிட்டாள் அழகி. வலியுடன் கலந்த ரசிப்பு உணர்வு அவளுள்.

இனியன் காதலைத் தெரிவித்தச் சம்பவத்திற்கு பிறகு என்ன நடந்தது?? தற்போது மதி எங்கே?? ஏன் இன்னும் இனியனிற்கு திருமணமாகவில்லை?? என்று பலவிதக் கேள்விகளுடன் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.

டைரியின் பக்கங்கள்:


11 மார்ச், 2016

எதிர் பாராததை எதிர் பார்ப்பது தான் வாழ்க்கை போல. மிகவும் சந்தோஷமாக ஆரம்பித்த நாளின் முடிவை நினைத்தால் இதயம் அதிர்கிறது.

அய்யோ!! எல்லாமே பொய்.. வெறும் கனவு தான் அதுவென்று யாரேனும் கூறி விட மாட்டார்களா?? என்று மனது நொடிக்கொருத் தரம் சத்தம் போட்டு அழுகிறது. மரண வலி என்பார்களே!! அதை தான் நான் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

தாங்க முடியாத வலி… அப்படியே இதயத்தை வெட்டி வெளியே எடுத்து வீசுவது போன்ற வேதனை. என்னை மட்டும் இங்கு இப்படி தவிக்கச் செய்துவிட்டு போய்விட்டாள் என் தேவதை. அவள் நினைவுகளை மட்டும் தந்துவிட்டு நிஜத்துடன் மறைந்தே விட்டாள்.

அன்று அத்தனை சந்தோஷமாக என்னுடன் இருந்தவள், இன்று என்னுடன் இல்லை.. ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. ஆண்டாண்டாய் அழுதுப் புலம்பினாலும் மாண்டவர் மீள்வதில்லை என்று சொல்வது உண்மை தானோ!! என்னவோ!! என் சிறு முகச் சுணுக்கத்தை கூடத் தாங்கக்கமாட்டாமல் என்னை அரவணைப்பவள். இன்று, அவளே என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டுப் போய்விட்டாள்.

அன்று குல்பி வாங்குகிறேன் என்று வெளியேச் சென்றவளைத் தேடி டைரி எழுத்திக் கொண்டிருந்த நான் வாசலை நோக்கிச் சென்றேன்.

ஒரு இரண்டு நிமிடம் சீக்கிரம் போய் இருக்கலாமே என்று இன்று வரையில் நான் நினைக்காத நாளில்லை. அய்யோ என்று அழுகையாக வருகிறது.

இன்னமும் அந்த காட்சி என் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது. என்னை நோக்கி கைகாட்டி அழைத்தவளிடம் மெல்ல நான் செல்ல, என் கையில் ஒரு குல்பியைக் கொடுத்தவள், குல்பிகாரன் அந்த குல்பி உரையிலிருந்து அவளுக்கான குல்பியை உருவிக் கொடுக்கவும், விரிந்தப் புன்னையுடன் அதை வாங்கிய என் தேவதையின் முகத்தில் எதைக் கண்டானோ அந்த குல்பிக்காரன். என்னை நோக்கி, "நீங்க ரெண்டு பேரும் எப்படியாவது தப்பிச்சிடுங்க தம்பி… உங்களை போட்டுதள்ள ஆளுங்க சுத்தி நிக்குறாங்க" என்று கூறியவன், வண்டியைக் கூட எதுக்கொள்ளாமல் அங்கிருந்து ஓடினான்.

குல்பிகாரனின் எச்சரியைத் தொடர்ந்து நானும் என்னைச் சுற்றிப் பார்க்க, அனைத்தும் வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்தது அன்று.

எப்போதும் குறைந்தது நான்கைந்து வண்டிகளாவது செல்லும் இடம். அன்று மயான அமையாக காணப்படவும், '
ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று என் மனம் எண்ணிய அந்த கணப்பொழுதில் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை, ஒரு தோட்டா என் மார்பில் துளைத்தது. அந்த நிமிடம் என் கவனம் முழுவதும் என் தேவதையின் மீது தான். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால்! என் தேவதை.. அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று எண்ணி என்னால் முயன்ற அளவிற்கு அவளைக் காக்க முயன்றேன். நான் தான் என் தேவதையை காப்பதற்கு போராட்டினேனே தவிர, குண்டடிப் பட்ட என் உடலோ மெல்ல தளரத் துடங்கியது.

துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் மட்டும் சரமாரியாக வந்ததேத் தவிர, எங்கிருந்து வருகிறது என்பதை மட்டும் என்னால் அறியமுடியவில்லை. மெல்ல என் தேவதையின் கைகளைப் பற்றினேன்.. எப்படியாவது வீட்டினுள் சென்று விட்டால் போதும்! என் தேவதையை காப்பற்றி விடலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி தட்டுத்தடுமாறி நான் செல்ல, மீண்டும் ஒரு தோட்டா வந்து முதுகைத் துளைத்தது. அங்கு மயங்கியவன் தான், கண்விழித்தது மருத்துவமனையில்.

மருத்துவமனையில் மிகவும் சிரிமத்துடன் கண்களை விழித்ததும், என் விழிகள் முதலில் தேடியது என் தேவதையின் முகத்தைத் தான். ஆனால், எவ்வளவு தேடியும் எனக்கு கிடைத்தப் பதில் ஏமாற்றம் மட்டுமே. அட்லஸிடம் கேட்டாலும் அவனும் மவுனத்தையே பதிலாக தந்தான்.

இப்படியே இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், நான் தீவிர சிக்கிசைப் பிரிவிலிருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டேன்.

அதன்பிறகுத் தான் என்னிடம் சொன்னார்கள், என் தேவதை என்னைவிட்டு ஒரேயடியாக சென்று விட்ட அந்த அகோரமான செய்தியை.

அன்று எங்களை சுட்டவர்களின் நோக்கம்.. என் தேவதையைக் கொள்வதுதானாம். பல நாட்களாகக் காத்திருந்த அவர்களுக்கு அன்று தான் வாய்ப்பு கிடைத்ததாம். இது எங்களை சுட்டவர்கள் போலீசில் அப்ரூவராக மாறிச் சொல்லிய தகவல்.

ஏதோ ஊர் தகராறாம்… என் தேவதையையும், அவளின் தந்தையையும் ஒரே சமயத்தில் கொள்ளச் சொல்லி ஏற்படாம். இதெல்லாம் அட்லஸ் என்னிடம் சொல்லியத் தகவல்கள்.

என் தேவதையின் அண்ணன் இங்கு வந்து அவள் உடலை வாங்கிச் சென்றுவிட்டாராம். எனக்கு இங்கே நடந்த எதுவும் தெரியவில்லை. எல்லாமுமே அட்லஸின் வாய்மொழியாக கேட்டது தான்.

தோற்றுவிட்டேன்! வாழ்க்கையில் அப்பட்டமாக தோற்றுவிட்டேன்! என் தேவதையைக் கண்ணுக்குள் வைத்துக் காத்திருக்க வேண்டிய நானே, அவளைக் காக்க தவறிவிட்டேன்.

சின்ன குண்டூசி வலியைக் கூட தாங்க மாட்டாள். அவளைப் போய்.. துப்பாய்க்கியால் நான்கு இடங்களின் சுட்டிருக்கிறார்கள்.. அவளை காக்காமல் நான் விழுந்து கிடந்திருக்கிறேன்.. ஐயோ!!

நானும் அவளுடனே சென்றிருக்க வேண்டும். என்னை மட்டும் ஏன் காப்பாற்றினார்கள்?? என்ற வருத்தம். என் தேவதையை காக்க முடியாமல் போன என் இயலாமை என்று எல்லாம் சேர்ந்து என்னையே நான் வெறுத்து ஒதுக்கிய நாட்கள் இந்த இடைப்பட்ட நாட்கள்.

குடி, போதை மருந்து, சிகிரேட் என்று எல்லா வகையான போதை வஸ்துக்களையும் உபயோகிக்க ஆரம்பித்தேன். என் தேவதையை மறக்க முடியாமலும், அவள் அருகிலேயே இருந்தும் அவளை காக்க தவறிய எனது இயலமையை தாங்க முடியாமலும், முழு நேரப் போதையில் என் தேவதையுடன் ஒரு கற்பனை வாழக்கையை வாழத் தொடங்கினேன்.

சமயங்களில் நிஜத்தைக் காட்டிலும் நிழல்கள் அழகானவை. அந்த நிழலை தொடர்ந்து நிஜத்தை மறக்க எனக்கு அந்த போதை மருந்துகள் அதிகம் தேவைப்பட்டது. அந்த மருந்துகளைப் பெறுவதற்காக என் நண்பனின் மூலம் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது டார்க்வெப். அதன் மூலம் எந்த வித இடையூறும் இல்லாமல் நான் கேட்பதை காட்டிலும் அதிகம் போதை ஏற்றக் கூடிய பானங்களில் தொடங்கி ஊசிகள் வரை எனக்கு தாராளமாகவே கிடைத்தது அங்கு.

முழு நேர போதையில் என் கற்பனை உலகில் என் தேவதையுடன் நான் இன்பமாக வாழ்வது என்னை பெற்றவர்களுக்கும், என் நண்பனான அட்லஸிற்கும் பொறுக்கவில்லை போலும்.

இந்த பழக்கத்தை விட்டுவிடும் படி கெஞ்சிய என் பெற்றோர்களின் வார்த்தைகள் என் காதில் விழவேயில்லை. வேறு வழியில்லாமல் அந்த மருந்துகளை எல்லாம் தூக்கி எறிந்த அட்லஸையும், நண்பன் என்றும் பாராமல் அடித்து துரத்தினேன்.

இதை அனைத்தையும் போதை இல்லாமல் நிதானமான மனநிலையுடன் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்க காரணமே அவள் தான்… சோசியல்!! அட்லஸின் சித்தப்பா பெண், குறும்புகளுக்குச் சொந்தகாரி.

என்னை உண்மையாகவே ஹீரோவாக எண்ணிக்கொண்டு வாழும் ஓர் தன்னலமில்லா உன்னத உயிர்.

என் பெற்றோர் கூறிக் கேட்த்காதவன், என் உயிர் நண்பன் கூறிக் கேட்காதவன், இதுவரையில் பார்த்தரியா… வெறும் குரலை மட்டுமே கேட்டு பேசி பழகிய.. இந்த சோசியல் சொல்லிக் கேட்டது எனக்கே ஆச்சரியம் தான்.

அட்லஸின் ஃபோனில் என் தற்போதைய புகைப்படத்தைக் கண்டுவிட்டு என்னிடம் பேசியே தீருவேன் என்று ஆடம் பிடித்து ஃபோன் பண்ணினாலாம். இரு நாட்களுக்கு முன்பு எனது அலைபேசிக்கு அழைத்து அவளே பேசினால் சோசியல்.

மதியின் மறைவைப் பற்றி அவளிடம் சொல்லவில்லை போலும் அட்லஸ். நானும் அதை அவளிடம் சொல்லவில்லை. மதி அக்கா என்று வாய்நிறைய கூப்பிடும் அந்த நல்லுள்ளதை காயப்படுத்த எனக்கும் மனம் வரவில்லை. எனவே, அவள் பேசுவதை அமைதியாக கேட்டிருந்ததின் விளைவு. இந்த இரு நாட்களாக எந்தவித போதை மருந்துகளையும் உட்கொள்ளாமல் என் சுயநினைவுடன் இந்த டைரியை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

"ஹீரோ சார்!! என்ன ஆச்சு உங்களுக்கு?? ஏன் இப்படியொரு கோலம்?? உங்களுக்கு இந்த தாடியெல்லாம் செட்டே ஆகலை. உங்களை முதன் முதல்லா இந்த தடிமாடு ஃபோன்ல நான் பார்த்தப்ப சும்மா போலீஸ் ஹேர் கட்ல செம மாஸ்ஸா இருந்தீங்க. ஏதோ, காக்க காக்க சூர்யா கட் அப்போ பேமஸ்னு நீங்களும் அப்படி வச்சிருந்ததா சொன்னான் இவன். அதே மாதிரி மாஸ்ஸா ஒரு ஹேர் ஸ்டைல் பண்ணுங்க ஹீரோ.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச யாரோ உங்களை விட்டு ரொம்ப தூரம் போயிட்டாங்கலாமே!!அவங்களை நினைச்சு தான் நீங்க இப்படி சோகமா இருக்கீங்களா?? நா ஒன்னு சொல்லுறேன்.. தப்பா நினைச்சுகாதீங்க.. இந்த சின்ன பொண்ணுலாம் நமக்கு அடவைஸ் பண்ணுறாளேன்னு.

நீங்க இப்படி சோகமா இருக்குறதுனால மட்டும் அவங்க திரும்ப வரப்போறது இல்ல ஹீரோ சார். இன்னும் சொல்லப் போனா நீங்க இப்படி கஷ்டப்படுவதைப் பார்த்து அவங்களும் ரொம்ப கஷ்டப்படுவாங்க.. உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியலையேன்னு. அப்படி அவங்களை கஷ்டப்படுத்த அசையா உங்களுக்கு??" என்றவளின் கேள்விக்கு 'இல்லை' என்று தானாகவே பதிலுரைத்தது என் இதழ்கள்.

"இல்ல தானே!! அப்போ இந்த சோகமான கெட்டப்பை மாத்திட்டு உங்களுக்கு பிடிச்ச வேலையை செய்ங்க.. இல்லைனா.. உங்களோட கோபம், ஆற்றாமை இதையெல்லாம் வேற ஒரு வேலையை ஆரம்பிச்சு அதில கவனம் செலுத்தி அதுமேல காட்டுங்க.. சரியா!! இந்த உலகத்துல எதுவுமே நிலை இல்லை ஹீரோ சார். எல்லாக் காயங்களுக்கும் மருந்துண்டு இங்கே. ஆனால், காலம் மட்டும் தான் அந்த மருந்தை சரியான நேரத்தில் நமக்கு தரும். அதுவரைக்கும் நாமும் காத்திருப்போம்.

நமக்கே தெரியாம நம்மளோட அழகான வாழ்க்கைக்கான உலகம் நமக்காக காத்திருக்குமாம் ஹீரோ. அதை அடையப் நாமத் தான் போராடனும். எந்த விஷியத்திற்காகவும் ஓய்ந்து போய் அமர்ந்துவிடக் கூடாது.

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுல இருந்து உங்களுக்காக இந்த வரிகள் டேடிக்கேட் பண்ணுறேன் ஹீரோ சார்.. 'எங்கோ! எங்கோ! ஒரு உலகம் உனக்காக காத்துக் கிடைக்கும்… நிகழ் காலம் நதியைப் போல.. மெல்ல நகர்ந்து போகுதே!!' இந்த வரிகள் தான் நிதர்சனம்.. அதை புரிந்துக்கொண்டு இனி எதற்காகவும் எங்கேயும் தேங்கி நிக்காதீங்க.. மதி அக்காவை கூட்டிகிட்டு இங்க எங்க ஊருக்கு வாங்க ஹீரோ சார். உங்க மனசும் ரீலாக்ஸ் ஆகும்" என்றவளிடம் கண்டிப்பாக அங்கு ஓருமுறை வருவதாக கூறி அழைப்பை வைத்தேன்.

என்னுடன் ஃபோனில் பேசியது சோசியல் தானா?? இல்லை என்னை மீட்டு கொண்டு வர என் தேவதையே சோசியல் ரூபத்தில் பேசினாளா?? என்ற சந்தேகம் தான் எனக்கு. குறிப்பாக அந்த பாடல் வரிகள் என் தேவதையே எனக்காக வந்து கூறியதுப் போல் தோண்றியது.

என் மனதை அழுத்திக்கொண்திருந்த விஷயங்களை எல்லாம் இந்த டைரியில் கொட்டித் தீர்த்தப் பிறகு தான் மனமே லேசானதைப் போன்றதொரு உணர்வு.

என் நலனை மட்டுமே விரும்பும் இவர்களுக்காக, இன்றிலிருந்து புது அவதாரம் எடுக்கப் போகிறேன் என்று உறுதி எடுத்தேன் நான்.

என் வாழ்வில் என் தேவதையின் அத்தியாயம் இத்துடன் இந்த டைரியின் இந்த பக்கத்துடன் எழுத்துவடிவில் முடிந்து விட்டாலும்.. நான் வாழும் ஒவ்வொரு நாளும் என் இதயத்துடிப்பில் எப்போதும் என்னுடனே வாழ்வாள் என் தேவதையும்.

என் தேவதை மட்டுமே அழைத்த, அவளுக்கு மட்டுமே உரிமையான ராஜ் என்னும் அழைப்பு என்றும் என் தேவதைக்கு மட்டுமே உரிமையான அழைப்பாகவே இருக்கப் போகிறது.

இதுநாள் வரை ராஜன் அமிழ்தினியனாக இருந்த நான், இனி வெறும் அமிழ்தினியன் மட்டுமே. என்னை ராஜ் என்று அழைத்த முதலும், கடைசியுமான நபர் என் தேவதையாக மட்டுமே இருக்கவேண்டும்.


என்றும் என்றென்றும் நான் என் தேவதையின் ராஜ் மட்டுமே...
 

T21

Well-known member
Wonderland writer
கண்களில் கண்ணீர் வழிய டைரி முழுவதையும் படித்து முடித்த அழகியின் எண்ணங்கள் முழுவதும், 'நீங்க தான் என் ஹீரோ சாரா.. இனியன்??' என்ற கேள்வி மட்டுமே நிரம்பியிருந்தது.

ஏதோ கற்பனையாக மட்டுமே தன் வருங்கால கணவனைப் பற்றி கூறுவதாக எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு. தன்னுடைய முதல் க்ரஷான அவளுடைய ஹீரோ சாரின் சாயலைத் தான் அனைவரிடமும் தேடியிருக்கிறாள் என்பதும், அந்த ஹீரோ சாரே இனியனாக அறிமுகமாகவும், தன்னையும் அறியாமல் அவனிடம் தான் கவரப்பட்டது புரிய சொல்லிலடங்கா ஆனந்தம் கொண்டாள் அழகி.

ஆனால், அந்த ஆனந்தம் எல்லாம் சில நிமிடங்கள் வரைதான். மதியின் இறப்பு நிகழ்வு நினைவு வரவும் முகத்தை முடிக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தாள் அழகி.

ஓரிரு முறையே அலைபேசியில் பேசி இருந்தாலும் அப்படிவொரு நெருக்கத்தை உணர்திருக்கிறாள் அழகி மதியிடம். அவள் இன்று இந்த உலகிலேயே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அழகியால்.

ஓரிரு முறை பேசிய தனக்கே அவளின் இழப்பு இப்படி இருக்கிறது என்றால். உயிராய் காதலித்த இனியனிற்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி அதற்கும் சேர்த்தழுதபடியே,
இனியனின் டைரியை முடிவைத்த அந்த நொடி ஒரு முடிவெடுத்தாள் அழகி.

இனி ஒருபோதும் இனியனை தனியே விடக்கூடாது என்று. அதனால் தான் ராஜனின் வீட்டில் கேமராவை வைத்து அதன் மூலம் ஏதாவது அவனுக்கு எதிராக ஒரு சாட்சி கிடைத்தாலும் அதை காட்டி திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று இனியனின் ஆருயிர் நண்பனும் தன்னுடைய செல்ல அண்ணனுமாகிய மருதுவின் உதவியுடன் ராஜனின் வீட்டில் கேமராவை வைத்தாள்.

அப்போதும் ராஜனை மாட்டி விட வேண்டும் என்ற என்னமோ, அவனை ஜெயிலுக்கு அனுப்பும் எண்ணமோ அவளுக்கு துளியும் இல்லை.

அவளைப் பொறுத்த வரையில் இனியன் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்கு அவள் அவனுடன் இருக்க வேண்டும், அதனால் தான் அப்படி செய்தாள்.

ஆனால், இதில் அழகியே எதிர்பாராத ஒன்று ராஜனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மருந்துகள் தான். அதுவும் அவள் தந்த பெட்டிட்டியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது அந்த போதை மருந்து என்பது தான் அழகியிற்கு உச்சப்பட்ட குழப்பம்.

இனியனின் டைரியைப் பற்றி ஆரம்பித்த அழகியின் சிந்தனை ராஜனிடம் பயணித்துக் கொண்டிருக்கையில், அவளது சிந்தனையைக் கலைத்தது இடதுகையில் ஏற்பட்ட சுளீரென்ற எரிச்சல் உணர்வு.

எதனால் இந்த எரிச்சல் என்று குனிந்தவளுக்கு, தனது காயப்பட்டக் கைகளுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவனின் பின்னந்தலை மட்டும் தான் காணக்கிடைத்தது.

வெடுக்கென்று தனது கைகளை அவனிடமிருந்து உருவியவள், 'உன் மருந்து ஒன்னும் எனக்கு வேண்டாம்' என்றாள் வீம்பாக.

அழகியின் மறுப்புகளைச் சட்டைச் செய்யாமல், மீண்டும் அவளது கைகளைப் பற்றியவன் மருந்திட்டு முடித்தப் பிறகே அவளது கைகளை விட்டான்.

உணவு பொட்டலம் ஒன்றை அழகியிடம் கொடுத்தவன், "இதை சாப்பிடு அழகி.. உடம்புல சத்து வேணும்" என்றான் தன்னையும் மறந்து, தன்னுடைய உண்மை குரலில்.

அவனின் குரலைக் கேட்டு அதிர்ந்து, அவனைப் பார்த்தாள் அழகி.


படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே
?
??


https://pommutamilnovels.com/index.php?threads/பேரன்பின்-பிறவி-நீ-கருத்து-திரி.576/
 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-23


இந்த கடத்தல்களுக்கு எல்லாம் பின்புலமாக செயல்படுவது SK தான் என்று தெரிந்தாகிவிட்டது. அதனுடனே அந்த பிளாக் ஸ்பார்க் யாராக இருக்கும் என்ற யூகமும் இருந்தது இனியனுக்கு.


இருந்தும், தன்னுடைய யூகம் இந்த விஷயத்தில் தவறாக தான் இருக்க வேண்டும் என்று அவன் மனமே ஆசைப்படுகிறது. சில நேரங்களில் சில உண்மைகள் தெரியவராமல் இருப்பதே நன்மை தான் போலும்.


எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இனியனால். ஒரு புறம் அழகியின் நினைப்பு வாட்டி எடுக்க, மறுபுறம் இந்த பிளாக் ஸ்பார்க் பற்றிய யூகம் வேறு மண்டையை பிளக்க வைத்தது.


இதில் அழகி எங்கிருக்கிறாள்??எப்படி இருக்கிறாள்?? என்பதற்கு ஒரு சின்ன துப்புக்கூட கிடைக்கவில்லை. யாரை பிளாக் ஸ்பார்க் என்று இனியன் சந்தேகித்தானோ அவனைப் பின் தொடர்ந்து பார்த்தும் அழகி இருக்கும் இடம் தெரியவில்லை.


மதியை காக்கமுடியாமல் போனதைப் போல், எங்கே அழகியையும் இழந்து விடுவோமோ?? என்ற பயமே அவனை கொல்லாமல் கொன்றது.


எல்லாவற்றிற்கும் காரணம் நான் தான் என்று எண்ணித் தன்னையே வருத்திக்கொண்டான் இனியன்.


மதியின் மறைவுக்கு பிறகு, சோசியல் கூறியதைப் போல் தன்னுடைய வருத்தத்தைப் போக்க வேறு ஏதாவது விஷயத்தில் கவனத்தை செலுத்தலாம் என்று எண்ணியவன், அவனது நண்பன் அட்லஸ் அதாவது மருதுவின் வழிக் காட்டலின் பெயரில் ஐபிஎஸ் தேர்வு எழுதி, அதில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிப் பெற்று போலீஸ் வேளையில் சேர்ந்தான்.


தன் தேவதையை தன்னால் காப்பாற்ற முடியாமல் போனதினால் எழுந்த ஆக்ரோஷத்தை முழுவதும் குற்றவாளிகளைத் தேடுவதின் மீது செலுத்தியவன், குறைந்தக் காலத்தில் அதிக குற்றவாளிகளைப் பிடித்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றான்.


தன்னுடைய கலகலப்பான இயல்பை மாற்றிக்கொண்டு தனக்குள்ளேயே ஒடுங்கி, எதற்க்கெடுத்தாலும் கோபம் , எரிச்சல் என்று யாரையும் தன்னிடம் நெருங்க விடாமல் அக்னியாய் தகித்தவனை இயல்பாக்கியது என்னவோ அழகி தான்.


தன்னிடம் நெருங்கவே அனைவரும் பயப்படும் நிலையில், தன்னையே பனைமரம் என்று அழைத்து உரிமையாக உதவி கேட்டவள், முதல் சந்திப்பிலேயே அவனை அசத்திவிட்டாள் தன் குறும்பால்.


அதன் பிறகு நடந்த சந்திப்புகளில் எல்லாம் அழகியின் பால் மேலும் மேலும் ஈர்ப்பு வர, அதுவே ஒரு கட்டத்தில் காதலாக பரிணாமிக்க, தன் தேவதையுடனா காதலை எண்ணித் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டான் இனியன்.


அப்போதும், சென்னை வீட்டில் அழகிப் பாடியப் பாடலை கேட்டதும் அவன் தேவதையே அழகி ரூபத்தில் அவனிடமே திரும்பி வந்த உணர்வு. இனி அழகித் தான் தன் வாழ்க்கை என்று முடிவெடுத்தவனுக்கு தடையாக இருந்தது அவனது அண்டர்கவர் வேலை தான். இந்த கேஸை முடித்தவுடன் அழகியின் வீட்டில் தன் பெற்றோரை பேச சொல்லலாம் என்று இனியன் எண்ணிக்கொண்டிருக்க, அங்கு நடந்ததோ வேறு.


என்ன நடந்தாலும் சரி, அழகியை விட்டுக் கொடுக்க முடியாது என்று எண்ணிக் கொண்டவன். நினைத்தைப் போலவே தன் காதலான அழகியையே கரம் பிடித்திருந்தான்.


காதல் ஒருமுறை தான் வருமென்று யார் சொன்னது?? இல்லவே இல்லை அது மறுமுறையும் வரும் … அதற்கான காலம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும்.


இனியனுக்கு அந்த காதல் ஏழு வருடங்களுக்குப் பிறகு அழகியின் மீது வந்திருக்கிறது. ஒருவேளை அழகியிடம் தெரியும் மதியின் குணாதிசயங்கள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.. அழகி இல்லாமல் இனி இனியன் இல்லை என்ற நிலைக்கு அவன் எப்போதோ வந்துவிட்டான். அதனால் தான் எந்த ஒரு காரணத்திற்காகவும் அவளை இழந்துவிடக் கூடாது என்று மனம் முழுதும் அளவுக்கடங்காத காதல் இருந்தும் அழகியிடம் அவன் அதை வார்த்தைகளால் கூறவேயில்லை.



தனது காதலை மதியிடம் கூறியப் பிறகுத் தான் அவள் தன்னை விட்டுப் பிரிந்தாள் என்பது அவனே அறியாமல் அவன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட, எங்கே அழகியிடம் காதலைச் சொன்னால் அவளையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் தான் அழகியே பலமுறை கேட்டும் வார்த்தைகளால் தன் காதலை வெளிப்படுத்தாமல் இருந்தான் இனியன்.


ஆனால், அன்று கையில் இருவர் பெயரையும் இணைத்து அழகி போட்டிருந்து டாட்டூவைப் பார்த்ததும், அவளது தன்னிலமில்லா காதலில் உருகி தன்னையும் மீறி காதலைத் தெரிவிதிருந்தான் இனியன்.


என்ன இதெல்லாம், காதலை சொன்னால் ஏதாவது ஆகிவிடும் என்று முட்டாள் தனமாக நம்பிக்கொண்டு அவளது எதிர்ப்பார்ப்பை பொய்க்கச் செய்வது தவறு என்று எண்ணியவனின் மனமோ அழகிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று சிறுவனாக பயம் கொண்டது.


ஆனால், அவன் பயந்ததைப் போலவே அழகி கடத்தப்படவும்.. உள்ளுக்குள் நொறுங்கி விட்டான் இனியன். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கம்பிரமாக வெளியில் காட்சியளித்தாலும் உள்ளுக்குள் ஒருவித நடுக்கம் இருந்துக் கொண்டேத்தான் இருந்தது. அழகியை நேரில் காணும் வரை அந்த நடுக்கம் குறையப் போவதில்லை என்பது இனியனுக்கு உறுதி.


கடத்தப்பட்ட அந்த பன்னிரெண்டு நபர்கள் எங்கே?? அழகி எங்கே?? பிளாக் ஸ்பார்க்காக தான் யூகித்திருக்கும் அந்த நபர் தான் உண்மையில் பிளாக் ஸ்பார்க்கா?? என்று பல்வேறு சிந்தனையில் இருந்த இனியனைக் கலைத்தது மருதுவின் குரல்.


"இனியா! ராஜன் ஜாமீன்ல வந்துட்டான்… அவனை ஜாமீன்ல எடுத்தது யாருன்னும் தெரிஞ்சிடுச்சுடா" என்ற மருதுவை யோசனையுடன் பார்த்த இனியன், "யாரது??" என்றான் ஒற்றை கேள்வியாக.


இனியனின் கேள்விக்கானப் பதிலை மருது கூறுவதற்குள், 'நா தான் தம்பி ராஜனை ஜாமீன்ல எடுத்தேன்' என்று கூறியப்படி ராஜனுடன் அங்கே வந்தார் வேலுசாமி.


அழகியின் தந்தை எதற்காக ராஜனை ஜாமீனில் வெளியே எடுக்க வேண்டும்?? அதுவும் அவர் மகள் கடத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்.. அந்த SK கேங்கை சேர்ந்த இவனை?? என்று யோசித்த இனியன், அதையே அவரிடமும் கேட்டான்.


"இவனைப் போய் ஏன் மாமா வெளியே எடுத்தீங்க?? நம்ம அழகியை கடத்தினதே அந்த SK தான்.. இவன் அவனோட ஆளு…"


"நம்ம அழகியை கண்டுப்பிடிக்க நமக்கு உதவ ராஜனை விட ஒரு சிறந்த ஆளு இருக்க முடியாது தம்பி. அதுவுமில்லாமல் தவறே செய்யாமல் ஒருவன் தண்டனை அனுபவிப்பது குற்றம்.." என்றார் வேலுசாமி.


"போதை மருந்தை கடந்துவது குற்றமில்லாமல்.. ரொம்ப உன்னதமான வேலையா சித்தப்பா??" என்று கடுப்புடன் கேட்ட மருதுவை அமைதியாகப் பார்திருந்தவர். மெல்ல இனியன் புறம் திரும்பி,



"நீங்க நினைக்கிற மாதிரி ராஜன் SK கேங்கைச் சேர்ந்தவனோ இல்லை போதைப் பொருள் கடத்துகிறவனோ இல்லை. ஹீ இஸ் எக்ஸ் இண்டெலிஜன்ஸ் பியூரோ ஆஃபீஸ்ர்…" என்று வேலுசாமி, ராஜன் முன்னால் இந்திய உளவுத்துறையை சேர்ந்தவன் என்று கூறவும் திகைத்து நின்றனர் இனியனும், மருதுவும்.



மேலும் அவன் தன்னுடைய தந்தை மற்றும் தங்கையின் இறப்பிற்கு பிறகு வேறு எதுவும் தேவையில்லை என்று செய்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இங்கு அழகூரிற்க்கே திரும்பி வந்துவிட்டதாகவும். தன்னுடைய மேலதிகாரிகள் தன்னிடம் SK கேங்கைப் பற்றியும், அவர்களின் தொழில்களைப் பற்றும் முழு விபரங்களைச் சேகரித்து தருமாறுக் கேட்டுக் கொண்டதிற்காக, அவர்களுக்கு உதவுவது தன்னுடைய கடமை என்றெண்ணி, SK கேங்கில் தன்னையும் யாருமறியாமல் இணைத்துக் கொண்வன். கிட்டத்தட்ட அந்த குழுவைப் பற்றிய முழு விபரத்தையும், அவர்களின் தொழில்களைப் பற்றிய ஆதாரத்தையும் சேகரித்தான்.


யார் அந்த SK என்றும், அவனைப் பற்றிய முழு விபரங்களையும் கண்டுப்பிடித்தவன் அதை தன்னுடைய மேலதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணி, அந்த SK கேங்கை கூண்டோடு ஓட்டு மொத்தமாகப் பிடிப்பதற்காக அழகூரில் மீட்டிங் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தான்.


எல்லாம் ராஜன் நினைத்தப்படி சரியாகச் சென்றுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தமிழக போலீஸ் களத்தில் இருக்கியது.


அதுவும் தனக்கு சாதகம் தான் என்றெண்ணியவன், அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கு உதவி, இனியனுக்கு SK கேங்கைப் பற்றிய முக்கிய விஷயங்களை எல்லாம் எளிதாக கிடைக்கும் படி செய்தான் ராஜன்.


தவறு செய்பவர்களை யார் பிடித்தாள் தான் என்ன?? அவர்களுக்கு தண்டனை கிடைக்கப்படுகிறதா என்பது மட்டுமே முக்கியம் என்று எண்ணினான். ஆனால், அவனே எதிர்பாராதது இனியன் அவனைக் கைதுச் செய்தது தான்.


வேலுசாமி ராஜனைப் பற்றி அனைத்தையும் கூறி முடிக்கும் வரை அதே திகைப்புடனே நின்றிருந்தனர் இனியனும், ராஜனும்.


ராஜனின் ஒரு முகத்தை மட்டுமே அறிந்திருந்தவர்கள், அவனின் மறு முகத்தை பார்த்து திகைத்து நின்றனர்.


அதிலும் ராஜனுக்கு தங்கை இருந்தார் என்பதே இனியனுக்கு புதிய தகவல் தான். ராஜனைப் பற்றி அவன் விசாரித்த வரியில் அவனது அன்னையையும் தந்தையையும் பற்றி கூறியவர்கள் யாரும் அவன் தங்கையைப் பற்றி கூறயதில்லை.


"ராஜன்!! உங்களுக்கு தங்கை இருந்தாங்களா??" என்றான் இனியன் கேள்வியாக, ராஜனைப் பார்த்து.


இனியனின் கேள்வியையும், அதற்கு ராஜனின் உடலில் ஏற்பட்ட விறைப்பையும் கண்ட மருதுவோ இனியனின் கைகளைப் பற்றி, "விடு இனியா! அவர் தங்கச்சியைப் பத்தி தெரிஞ்சு நாம என்ன பண்ணப்போறோம்.. ராஜனுக்கு SK பற்றிய டீடெயில்ஸ் தெரியும்ல, அவருகூட சேர்ந்து நாம நம்ம அழகியைத் தேடுற வழியைப் பார்ப்போம்" என்றான் படபடப்பாய்.


மருதுவின் இந்த திடீர் படபடப்பு இனியனிற்கு மேலும் சந்தேகத்தை கிளப்ப, "எதை மறைக்கப் பாக்குற மருது … அப்படி என்ன ரகசியம் தான் ராஜனோட தங்கச்சி கிட்ட இருக்கு???" என்றான் நிதானமாக.


"ராஜனோட தங்கச்சியே ஒரு ரகசியம் தான் இனியா… இங்க இருக்குறவங்களுக்கு" என்று இனியனின் கைகளை உதறியவாறு கத்திய மருதுவை புரியாமல் பார்த்தவனிடம்,


"உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சேன் இனியா!! ஆனா, இனியும் சொல்லாம இருந்தா அது தப்பாகிவிடும்…" என்று தயங்கிய குரலில் சொல்லிய மருது, இனியனை நேருக்கு நேராகப் பார்த்து,


"நம்ம மதியோட அண்ணனைப் பார்க்கணும்… பார்க்கணும் என்கிட்ட கேட்டுகிட்டே இருந்தியே!! இப்போ, உன் முன்னால தான் அவர் நிக்கிறார் நீயேப் பாருடா.." என்றான் மருது, கலங்கியக் குரலில்.


"வாட்??" என்று அதிர்ச்சியுடன் கூறிய இனியன், மருது சொன்ன உண்மையின் வீரியத்தைத் தாங்க மாட்டாமல் பொத்தென்று அமர்ந்தான் அங்கிருந்த நாற்காலியில்.


"உண்மை தான் இனியா! மதியோட அண்ணன் இந்த ராஜன் தான். அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து நம்ம மதியோட உடலை வாங்க வரும் போது தான் எனக்கே இந்த விஷயம் தெரியும். அங்க என்னைப் பார்த்து பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. இங்க ஊர்லையும் வடக்கூர் தெற்கூர் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறுல, ராஜனுடைய அப்பாவை வேலு சித்தப்பா தான் ஆள் வச்சு கொன்னுட்டாருன்னு அவங்க ஆளுங்க ராஜனை ஏத்தி விட, ஹாஸ்பிடல்ல என்னை பார்த்ததையும், இந்த கதையையும் நம்பி நம்ம குடும்பம் தான் அவனோட அப்பா, தங்கையின் இறப்பிற்கு காரணம்னு நம்பி நம்மளை பழிவாங்கனும்னு பழிவெறில சுத்தித்திரிந்தான்.



பிறகு எங்களுக்கும் இந்த கொலைகளும் சம்பந்தம் இல்லைன்னு புரிஞ்சப் பிறகு தான் அமைதியானான். அபோதும், சித்தப்பாவை பழி வாங்குவதாக நினைத்து அவன் பண்ணிய செயல்களை நினைத்து கில்ட் பீலிங்ல அவரை பார்க்காம தவிர்த்து வந்தான். ஆனா, ராஜன் முன்னாடி கோபத்தில் பண்ணியதை எல்லாம் நம்ம குடும்பத்தில் இருக்கும் யாரும் இதுவரையிலும் மறக்காம அவனை ஒரு வில்லன் லெவலுக்கு பில்டப் பண்ணி வச்சி இருக்காங்க" என்ற மருதுவின் வார்த்தைகளைக் கேட்ட இனியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.


சில சமயங்களில் எதிர்பாராத சூழலைச் சந்திக்க நேரிடும் போதும் நமது மூளை எதையும் உணராமல் மரத்த நிலையில் இருக்குமாம். அதுபோல் தான் தன்னை சுற்றி நடக்கும் எதையும் உணராமல் அமர்ந்திருந்த இனியனின் மனம் முழுவதும் அவன் தேவதையின் எண்ணங்களே.


சத்தியமாக இந்த ராஜனை மதியின் அண்ணனாக கடற்பனையில் கூட எண்ணியதில்லை இனியன்.


இன்று அது தான் உண்மை என்ற நிலையில் எதுவும் புரியாமல் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்த இனியனின் தோள்களைத் தொட்டது ஒரு வலியக் கரம்.


அந்த கரத்திற்கு சொந்தக்காரன் ராஜன் தான் என்று தெரிந்திருந்தாலும், அமைதியாகவே அமர்ந்திருந்தான் இனியன். அவன் கண்கள் மட்டும் சிவந்து கலங்கி இருந்தது.


"சோ! நான் யாருன்னு இப்போ தெரிஞ்சிடுச்சுல.. இனி நாம ஒன்னாச் சேர்ந்து அழகி எங்கே இருக்கான்னு கண்டுப் பிடிப்போமா ராஜ்ஜ்ஜ்??" என்ற ராஜனை,வியப்பாக பார்த்தான் இனியன்.


"மதி அவளோட ராஜைப் பற்றி நிறையவேச் சொல்லி இருக்கா இனியன்" என்றான் இனியனின் கண்களை ஆழ்ந்து நோக்கியவாறு.


"என்னை முன்னாடியேத் தெரியுமா??"


"நல்லாவே தெரியும்! உங்களைப் சர்ப்ரைஸ் பண்ணத்தான் நான் அன்னைக்கு வந்தது. பட் என்னனென்னவோ நடந்திடுச்சி.. "


" நான் அன்னைக்கு கைது பண்ணப்போ.. ஏன் இதை எதையும் சொல்லாம இருந்த ராஜன்?? என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் மேல வெறுப்பா இருக்குற மாதிரி நடந்துக்கிட்டது எல்லாம் பொய்யா அப்போ?? அழகி கூட நா பேசக் கூடாதுன்னு சொன்னது நான் மதியோட லவ்வர் என்ற காரணத்தினால் தானா??" என்றவனை நிதானமாக பார்த்த ராஜன்,


"சே! சே! அது காரணமில்லை இனியன். இன்னும் சொல்லப் போனா நீயும் அழகியும் இணைந்ததுல என்னை விட வேற யாரும் இந்த அளவுக்கு சந்தோஷமா இருந்திருக்க மாட்டாங்க. மதியோட இழப்புக்கு பிறகு, இந்த ஏழு வருடமா உன்னைப் பார்த்துகிட்டுத் தான் இருக்கேன். எங்கே! இனி இருக்கும் மீத வாழ்க்கையையும் மதியுடைய நினைவுகளுடனே வாழ்ந்துவிடுவியோன்னு பயந்தேன். இப்போ அப்படியில்லைன்னு ஆனாப் பிறகு தான் என்னால் நிம்மதியா மூச்சே விட முடியுது. அதே மாதிரி, உன்னை வெறுக்குற மாதிரி நான் நடந்துகிட்டா தான் உன்னோட கவனம் என்மீது விழும். அப்போ தான், நான் ஏற்கனவே சேகரிச்சு வைத்த SK கேங் பற்றிய விபரங்களை மறைமுகமா நீயே கண்டுபிடிபிடிப்பது போல செய்ய முடியும். அதனால் தான், உன்னை வெறுப்பது போல் நடந்துகிட்டேன். அதே மாதிரி, உனக்கு அழகியைப் பிடிச்சி இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா, நீ அவக்கூட பழகத் தயங்குகிறன்னும் எனக்கு தெரியும். ஒருவேளை, மதியை நினைத்து தான் நீ தயங்குறப் போலன்னு உன்னோட போஸசிவ்னெஸைத் தூண்டிவிட தான் உன்னை அவகிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னேன். அப்புறம் ஏன் அழகியை கல்யாணம் செய்துக்க விருப்பம்னு சொல்லி, கல்யாண ஏற்பாடை பண்ணேன்னு நினைக்குறீயா??


உண்மையைச் சொல்ல போனால், என் அப்பாவுடைய இறப்பிற்கும், மதியுடைய இறப்பிற்கும் அழகியோடக் குடும்பம் தான் காரணம்னு நினைச்சு … அழகியை வச்சி அவ குடும்பத்தைப் பிழிவாங்கனும்னு ஒரு கேவலமான எண்ணத்துல தான் முதல்ல இருந்தேன். ஆனா, அப்புறம் அழகிக் கூட பழக ஓரிரு வாய்ப்பு கிடைக்கவும், அவளுடன் பழகிய பிறகு அந்த நினைப்பே சுத்தமா போயிடுச்சு.


அதன் பிறகு விசாரித்துப் பார்த்ததில் அழகியின் குடும்பத்திற்கும் மதி மற்றும் அப்பாவின் இறப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிய வந்துச்சு. ஆனா, அதற்கு காரணம் யாருன்னு மட்டும் இன்னமும் என்னால கண்டுப்பிடிக்க முடியலை.


அழகி மீதிருந்த வெறுப்பும், பழிவுணர்வும் தான் என்னை விட்டு போனதே தவிர, அவளை ரொம்பவே பிடிக்கும் எனக்கு. அழகி தான் இனி என்னோட வாழ்க்கைன்னு நா முடிவு பண்ணச் சமயம், நீ வந்த.. அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்கவும்.. நான் ஓதிங்கிட்டேன்.


அன்னைக்கு அந்த இடத்துல மத்தவங்க முன்னாடி அழகி அவமானப்பட்டு நிக்கக் கூடாதுன்னு தான், நான் கல்யாணம் செய்திருக்கிறேன்னு சொன்னேன். அப்பவும் எனக்கு உறுதி தான், எப்படியும் நீ அந்த கல்யாணத்தை நிறுதிடுவேன்னு.. அப்படி இல்லனாலும் அழகியை கண்கலங்காம பார்த்துக்க என்னால முடியும்னு ஒரு நம்பிக்கையும் இருந்துச்சு எனக்கு.


நான் நினைச்ச மாதிரியே நீ கல்யாணத்தை நிறுத்தி, அழகியை கரம் பிடிச்சிட்ட.. உண்மையா எனக்கு அன்னைக்கு அவ்வளவு திருப்தியா இருந்தது.. ஏன்னா, உன் சந்தோஷம் தான் என் தங்கச்சியோட சந்தோஷம். நீ மகிழ்ச்சியா வாழ்வதைப் பார்த்தப் பிறகு தான் அவ நிம்மதியா இருப்பான்னு எனக்குள் ஒரு எண்ணம். அந்த எண்ணம் ஈரேடிவிடும் என்ற நம்பிக்கைல தான் நீ கைதுப் பண்ணும் போதும் சந்தோஷமா போனேன். இவ்வளவு தான் இனியன் என்னை பத்தின ரகசியம் … வேற எதுவும் உனக்கு தெரியனுமா??" என்று சிரித்தவாறு தன்னிடம் கேட்ட ராஜனை அனைத்துக் கொண்ட இனியனோ,


"இந்த நிமிஷம் ஒன்னு மட்டும் நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன் ராஜன். இங்க நல்லவன்னு சொல்லுகின்ற எல்லாரும் நல்லவனும் கிடையாது. கெட்டவன்னு சொல்லுகின்ற எல்லாரும் கெட்டவன்னும் கிடையாது …" என்றான் இனியன் உளமாற.


"அப்போ வேற எந்த டவுட்டும் இல்லனா.. நாம நம்ம வேலையில் இறங்கலாமா??" என்ற ராஜனை நோக்கி, "இன்னும் ஏன் லேட் பண்ணுறீங்க.. அதான் ஒன்னு சேர்ந்துட்டீங்களே.. இனி அந்த SK எங்கே இருக்கிறான்னு தேடுவோம் வாங்க" என்றான் மருது.


அதன் பிறகு, ராஜன் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த தகவலின் படி SK இருக்கும் இடத்தை சரியாக கணித்து அங்கே போலீஸ் குழுவொன்றை அனுப்பி வைத்த இனியன்.. பிளாக் ஸ்பார்க்கைப் பற்றி ராஜனிற்கு எதுவும் தெரியுமா என்று விசாரித்தான்.


"இல்லை இனியன்! நா எவ்வளவோ முயற்சிப் பண்ணியும் அந்த பிளாக் ஸ்பார்க்கை மட்டும் என்னால் கண்டுப்பிடிக்க முடியலை. அதுவும் அவன் யாருன்னு ஒரு சின்ன க்ளு கூடக் கிடைக்கலை" என்றான் ராஜன் ஆற்றாமையுடன்.


"எனக்கு அந்த பிளாக் ஸ்பார்க் யாருன்னு ஒரு யூகம் இருக்கு ராஜன்" என்று நிதானமாக கூறிய இனியனைப் பார்த்த மருதுவும், ராஜனும் குழப்பத்துடன் பார்த்தவாறே "யாரது ??" என்றனர் ஒருசேர.


நிதானமாக இருவரையும் நேருக்கு நேராகப் பார்த்தவாறு, "சந்தோஷ்!!!" என்றான் இனியன்.


அதே சமயம், இங்கு இருட்டியப் பகுதியில் இருந்த அழகியும், தன்னிடம் உணவு பொட்டலத்தைக் கொடுத்து'சாப்பிடு அழகி' என்றவனதுக் குரலைக் கேட்டு திகைத்தவள், "சந்தோ!! நீயாடா இது??" என்று கேட்டாள் அதிர்ந்தக் குரலில் நடுக்கத்துடன்.


படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-24


'சந்தோ!! நீயாடா இது??' என்ற அழகியின் குரலைக் கேட்டு முதலில் திகைத்தாலும். முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று நினைத்தவாறே அந்த காரிருள் பகுதியில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தான் அவன்.


அந்த குரலை வைத்தே அது சந்தோஷ் தான் என்று அழகி கண்டிருந்தாலும். அவள் மனதோ இல்லை இது சந்தோவாக இருக்கக் கூடாது கடவுளே! என்று மானசீகமாக கடவுளிடம் கோரிக்கை ஒன்றையும் வைத்தது.


அவளது அந்த கோரிக்கையை கடவுளே நிராகரித்து விட்டார் போலும். வெளிச்சத்தில் வந்து நின்ற உருவத்தைப் பார்த்ததும், மொத்த சக்தியும் வடிந்தாற்போல் "ஏன் சந்தோ இப்படி பண்ண?? நீ தான் அந்த பிளாக் ஸ்பார்க்கா??" என்றாள் இயலமையுடன் சோர்வாக.


தன் சந்தோவா இது?? அதிர்ந்துக் கூட யாரிடமும் பேசாதவன், இன்று ஒரு போதை மருந்து கடத்தல் குழுவின் துணைத் தலைவன் என்பதை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும் அவன் மீது யாருக்கும் ஒரு சின்ன சந்தேகம் கூட வராத மாதிரி கனகச்சிதமாக எப்படி நடிக்க முடிந்தது அவனால்?? தான் பார்த்து வளர்ந்த சந்தோவிற்கு எந்த வித கள்ளம் கபடமும் தெரியாதே!! அப்போ, இது என் சந்தோவே இல்லையா?? அவனை போலவே இருக்கும் வேற யாரோவா?? என்று யோசித்தவள்,



"நீ என் சந்தோ இல்லை தானே?? அவனை மாதிரி இருக்க வேறு யாரோ தானே நீ??" என்று ஆவலே உருவாக கேட்டாள் அழகி, சந்தோஷைப் பார்த்து.


அழகியின் கேள்வியில் மெல்லச் சிரித்தவன், "என்னை ஏன் இவ்வளவு நம்புற அழகி?? சந்தேகமே இல்லாம நான் தான் சந்தோஷ்.. உன் மச்சான். அந்த பிளாக் ஸ்பர்க்கும் நான் தான். சில சமயங்களின் சில விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பது தான் நல்லதுல.." என்று கூறியவாறே நடந்துச் சென்றவன், அங்கிருந்த பொத்தான் ஒன்றை தட்டவும் அந்த இடம் முழுவதும் இருள் நீங்கி ஒளிப் பெற்றது.


திடீரென்று ஏற்பட்ட வெளிச்சத்திற்கு அழகியின் கண்கள் பழக்கப்பட்ட பிறகு, மெல்ல இமைகளை நிதானமாக மூடித் திறந்தவள், "சரி! நீ அந்த பிளாக் ஸ்பார்க்காகவே இருந்துக்கோ. ஆனா, இனி இந்த வேலை உனக்கு வேண்டாம் சந்தோ. நானும் யார் கிட்டையும் நீ தான் அந்த பிளாக் ஸ்பார்க்னு சொல்ல மாட்டேன். பிளீஸ் இதுல இருந்து வெளியே வாடா.. நீ நான் கயல் இனியன்னு ஒன்னா சேர்ந்து ஒரு அழகான வாழ்க்கையை வாழலாம்.." என்றாள் சந்தோஷிடம் வேண்டுதலாக.


அதுவரையில் பொறுமையாக இருந்தவன். அழகி, 'இந்த வேலை வேண்டாம்.. இதுல இருந்து வெளியே வாடா..' என்று சொல்லியதும், ஆக்ரோஷமாக கத்திக்கொண்டே அந்த அறையினுள் இருந்த எல்லாப் பொருட்களையும் போட்டு உடைக்க ஆரம்பித்தான்.


சந்தோஷின் செயல்களைக் கண்டு திகைத்து விழித்த அழகியின் அருகே வந்தவன், "முடியவே முடியாது அழகி!! எனக்கு நிறைய பணம் வேணும், புகழ் வேணும்.. அதுக்கு நா இந்த வேலைல இருந்து தான் ஆகணும்" என்று வெறிப் பிடித்தவன் போல் கத்தியவனை கண்டு அஞ்சியவள், "பணத்துக்கும், புகழுக்கும் இது சரியான வழியில்லை சந்தோ புரிஞ்சிக்கோடா" என்றாள் நடுக்கத்துடன்.


"என்னையும் என் அப்பா அம்மாவையும் தப்பா பேசும் போது இங்க யாராவது அது சரியா?? தப்பா?? என்று பார்த்தங்களா அழகி?? அப்போ, நா மட்டும் ஏன் அதைப் பார்க்கணும். என்னை பார்த்து ஓடுகாளி பையன்னு சரவணன் மாமாவே எத்தனை முறை சொல்லி இருக்காரு தெரியுமா?? காதல் என்ன அவ்வளவு பெரிய குற்றமா அழகி?? இல்லை அப்படி காதலிச்சு கலப்புத் திருமணம் பண்ணினால் அதைக் பெரிய குற்றமா பார்க்கிற இந்த சமூகத்தில்.. அவர்களை எதிர்த்து திருமணம் பண்ணின என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பையனா வந்து பிறந்தது நான் பண்ண பாவமா?? என்னை மட்டும் ஏன் எல்லாரும் இலக்காரமா பார்த்தாங்க அழகி?? அதுக்கு உன் கிட்ட பதில் இருக்கா இல்லைல… பின்னே ஏன் என்னை மட்டும் இதை விடச் சொல்லுற அழகி. என்னை பார்த்து கேலிப் பண்ணி பேசினவங்க முன்னாடி, அவங்களே என்னை அண்ணாந்து பார்க்குற அளவுக்கு நான் வளர்ந்து நிக்கணும். அதுக்கு எனக்கு பணம் வேணும். இப்போ புதுசா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் அழகி.. அதுக்கு நான் இன்வெஸ்ட் பண்ண முழு பணமும் இந்த SK கேங் மூலமாக நான் சம்பாரிச்சது.. இன்னும் கொஞ்சம் நாள் என் பிசினஸ் பிக்கப் ஆகுற வரை இங்க இருந்துட்டு அப்புறம் வெளியே வந்திடலாம்னு தான் இருந்தேன். ஆனா, அதுக்குள்ள நீ கண்டுபிடிச்சிட்ட. நா நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்திருந்தா.. உங்க யாருக்கும் என் மேல கடைசிவரை சந்தேகமே வந்திருக்கத்துல.. மும்பைல சம்பாரிச்ச பணத்தை வச்சி பிசினஸ் பண்ணியிருக்கேன்னு தானே நினைச்சு இருப்பீங்க.. " என்று சுவற்றை வெறித்தவாறு கூறியவனைப் பார்த்த அழகிக்குப் பாவமாக இருந்தது. சரணவன் பெரியப்பா எந்த அளவிற்கு சந்தோஷைக் காயப்படுத்தி இருக்கிறார் என்பது தான் அவளுக்கு நன்றாகவேத் தெரியுமே.


"டேய் சந்தோ! நீ சொன்ன மாதிரி நடந்திருந்தாலும். சரவணன் பெரியப்பா தான் அப்புறமா மனசு மாறி உன்னை ஏத்துக்கிட்டாரேடா. இப்போ போய் நாம கயலைப் பொண்ணுக் கேட்டாலும் தருவாங்கடா. நீ எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடு.. நா பெரியப்பா கிட்ட பேசுறேன். இங்க நடந்த எதையும் நான் வெளியே சொல்ல மாட்டேன்டா.. அங்கே மயக்கமா இருந்தவங்கல என்ன பண்ணின?? அவங்களையும் விட்டுட்டு நீயும் வாடா … நாமக்கு இது வேண்டாம் சந்தோ.. நாம இங்கே இருந்து போய்டுவோம்டா" என்றாள் கண்ணீர் குரலில்.


" அவங்களை விட முடியாது அழகி! இப்போ ஹியூமன் ட்ராபிக்கிங் தான் பீக்ல இருக்க பிசினஸ் தெரியுமா… நீ நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு பணம் புழங்குது அதுல. நீ சொன்ன அந்த பன்னிரெண்டு பேரோட உடல் உறுப்பையும் முதல்ல வித்திடுவோம், இப்போ அவங்கயெல்லாம் நாங்க அவர்களுக்காக செட் பண்ணி வச்சிருக்க வெண்டிலேட்டர் ரூம்ல பத்திரமா தான் அழகி இருக்காங்க.. நீ கவலைப் படாதே. எங்களுக்கு தேவையான அவங்களோட உடல் உறுப்பை எடுத்ததற்கு அப்புறம், அவங்களை ஏதாவது ஆராய்ச்சிகாக யூஸ் பண்ணச் சொல்லி பெரிய பெரிய லேப் சியின்டிஸ் கிட்ட கொடுத்துவோம். அங்கே இருந்தும் பணம் வரும். ஒரே ஆளை வச்சி ரெண்டு விதமா பணம் சம்பாரிக்கலாம்."


"இதே மாதிரி இதுவரை இருபது பேரோட உடல் உறுப்புகளை விற்றிருக்கோம். எல்லாம் நார்த்ல பண்ணினது.. முதல் முறையா சவுத்ல பண்ண ட்ரை பண்ணோம்.. அதுக்கு அந்த ராஜன் பரதேசி டாக் தடையா இருந்தான். எங்க கேங்குள்ளேயே இருந்துட்டு எங்களையே உளவு பார்த்திருக்கான். அவனை எப்படி போட்டுதல்லலாம்னு நினைக்கும் போது தான் உன் கூட கல்யாணம்னு ஒரு பெரிய குண்டைத் தூக்கி போட்டாங்க. அதுவும் மாமாவும் எதிர்ப்பு சொல்லாம சம்மதம் சொன்னது, எனக்கு மிக பெரிய ஏமாற்றம். அதான் அவரை எங்கே தாக்கினால் காயப்படுவார்னு தெரிஞ்சி கரெக்ட்டா ராஜனோட அப்பாவை இழுத்தேன். ஆனா, மனுஷன் அசரவே இல்லையே. அப்புறம் நீயா வந்து சிக்குன.. உன் கிட்ட கொடுத்த பாக்ஸ்ல நான் தான் போதை மருந்தை வச்சி விட்டேன். என் மேல இருக்குற நம்பிக்கைல, நீ அதை பிரிச்சு பார்க்க மாட்டேன்னு எனக்கு நிச்சயம் தெரியும். நீயும் என் எண்ணத்தை போய் ஆக்கமா அதை கொண்டுப் போய் கொடுத்துட்ட.. எனக்கும் வேலை மிச்சமாச்சு. ஒரே ஒரு ஃபோன் கால் தான், போலீஸ்க்கு இன்போர்மேஷன் கொடுத்தேன்.. ராஜன் பிரச்சனை முடிஞ்சது. இனியன் நிச்சயம் என் பக்கம் திரும்ப மாட்டான்னு தெரியும், அதுவுமில்லாம அவன் என் செல்ல அழகியோட உயிர் காதலாச்சே.. அதான் அவனை ஒன்னும் பண்ணாமல் விட்டேன். இந்த ராஜனை தான், இன்னும் இன்னும் கொடுமை பண்ணனும் அழகி. எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பிடிக்கவே முயற்சி பண்ணுவான் ராஸ்கல். அவன் அப்பனையும் தங்கச்சியையும் போட்டுத் தள்ளின அன்னைக்கே இவன் கதையையும் முடிச்சி இருந்தா … இன்னைக்கு இந்த பிரச்சினையே எனக்கு இருந்திருக்காது…" என்றாம் சந்தோஷ், தன் மனதில் இருக்கும் அத்தனையையும் அழகியிடம் கொட்டித் தீர்ந்துவிடும் நோக்கில்.


சந்தோஷ் கூறும் அனைத்தையும் கண்கள் வீரியக் கேட்டுக் கொண்டிருந்த அழகி, 'அவன் அப்பனையும் தங்கச்சியையும் போட்டுத் தள்ளின அன்னைக்கே இவன் கதையையும் முடிச்சி இருக்கணும்' என்று கூறவும், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றவள்,"என்ன சொல்லுற சந்தோ?? நீ தான் ராஜனோட அப்பாவையும், தங்கையையும் கொலை பண்ணியா??" என்றாள் அதிர்ந்த குரலில்.



அதுவரையில் தன் நினைவே இல்லாமல் மனதிலிருந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருந்த சந்தோஷ், அழகியின் கேள்வியில் திகைத்து நின்றான்.


மெல்ல அழகியை நோக்கி சென்றவன், "நான் என் மதியை ஒண்ணுமே பண்ணல அழகி! என்னை நம்பு! அவ என் மதி.. அவளைப் போய் நான் கொலை பண்ணுவேன்னா அழகி.." என்று முகத்தை முடிக்கொண்டு அழுதவன், கணப்பொழுதில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு. முகத்தை துடைத்தவாறே அழகியை நோக்கி,


" சோ! இப்போ உனக்கு என்னைப் பற்றி முழுசும் தெரிஞ்சிடுச்சு தானே அழகி??" என்று கேட்டப்படியே தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பச்சை நிறத் திரவத்தைக் கொண்ட ஊசியை கையில் எடுத்தான் சந்தோஷ்.


அவனது உடல் மொழியை வைத்தே, இந்த ஊசியை தனக்கு செலுத்த தான் கையில் வைத்திருகிறான் என்பதைப் புரிந்துக் கொண்ட அழகியோ, "ஊசி போட்டு மயங்க வைக்க போறீயா சந்தோ?? ஊசி வேண்டாம் .. ஏதாவது டேப்லட் கொடு அதைப் போட்டுக்குறேன்" என்றாள் ஊசிக்கு பயந்தவளாக.


"நீ ஏன் அழகி இவ்வளவு நல்லவளா இருக்க?? நான் யார் முன்னாடி வேணும்னாலும் தப்பானவனா நிப்பேன் … ஆனா, உன் முன்னாடி என்னால அப்படி இருக்க முடியாது அழகி. நீ எல்லாத்தையும் மறந்துடு.. அதான் நமக்கு நல்லது. இந்த ஊசியை மட்டும் உனக்கு போட்டுட்டா.. உனக்கு எல்லாமே மறந்திடும் அழகி.. நீ யாரு, நா யாருன்னு எல்லாமே மறந்திடும்.கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ் மாதிரி. உனக்கு உணர்வே இருக்காது. நான் என் வேலையை முடிச்சிட்ட பிறகு, கயல்கூட கல்யாணம் முடிவானதும் உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டி போறேன்.. அதுவரை நீ நிம்மதியா இரு அழகி.." என்றவன் அழகியின் கையில் அந்த ஊசியைப் போடப் போக,


"சந்தோ!! நீ அப்பருவர் ஆகிவிடுடா.. அந்த பன்னிரெண்டு பேரையும் விட்டுட்டு.. நீ பண்ணினத் தப்புக்கு உனக்கு தண்டனை வேணும்… இந்த ஊசியைப் போடுறதுக்கு பதில் என்னைக் கொலை கூட பண்ணிக்கோடா.. ப்ளீஸ் இதை மட்டும் போட்டுறாதே.. என் இனியனோட நினைவு இல்லாம வாழ்வதற்கு பதிலா நான் சாவதே மேல்டா.. அதேமாதிரி நீ ராஜனோட குடும்பத்தை ஒன்னும் பண்ணியிருக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும் சந்தோ! நீ அவ்வளவு கொடூரமானவன் இல்லை" என்று கண்ணீர் குரலில் கூறியவளைக் கண்டதும் வெறிக்கொண்டவன் போல் கத்தியவன், கிழே அமர்ந்து தரையைக் கைகளால் குத்தியவாறே,


"என்ன ஏன் இவ்வளவு நம்புற அழகி?? நான் கொடூரமானவன் தான்.. நீ நினைக்கிற மாதிரி நல்லவன் கிடையாது… முன்னாடி இருந்த சந்தோஷ் இல்லை அழகி நான் இப்போ… ராஜனோட அப்பாவையும், மதியையும் துடிக்கத் துடிக்க கொன்றது நான் தான்!!" என்றான் சந்தோஷ்.



அவனது பதிலில் அதிர்ந்து நோக்கியவளைப் பார்த்துப் புன்னைகைத்தவன், "எல்லாமே மறந்து தானேப் போக போற. உண்மையை தெரிஞ்சிக்கிட்டே மறந்து போ அழகி" என்று தரையில் குத்தியதால் கைகளில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்தவாறு, எங்கோ பார்த்து சிரித்தப்படியே பேச ஆரம்பித்தான் சந்தோஷ்.


அவனது நடவடிக்கைகள் பயத்தைக் கொடுத்தாலும், அவன் கூறிய செய்தியில் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அழகி.


" நான் காலேஜ் முடிச்ச சமயம் அழகி அது. தெற்கூர் திருவிழாக்கு போனப்பத் தான் அவளைப் பார்த்தேன். ஒரு பொண்ணை பார்த்ததும் இவ தான்டா உனக்கானவ உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்கும். எனக்கும் அது கேட்டுச்சு மதியைப் பார்த்தபோ.
நேரா போய் அவகிட்ட பேசினேன், என் காதலைச் சொன்னேன். அவ ஃபிரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லவும். நானும் அவளோட உணர்வை மதிச்சேன் அழகி. எவனோ நாங்க பேசுவதை தவறா அவளோட அப்பாகிட்ட சொல்ல, அவரும் கண்ணாபின்னான்னு பேசிட்டாரு… எல்லாத்துக்கும் காரணம் சரவணன் மாமா தான் அழகி… மதியோட அப்பா என்னைத் தப்பா பேசுனது கூட எனக்கு பரவாயில்லை. அம்மாவை ரொம்ப தப்பா பேசிடாங்க.. உன்கிட்ட அந்த வார்த்தைகளை கூடச் சொல்ல முடியாது.. அந்த அளவுக்கு காது கூசும் அளவுக்கு இருந்துச்சு அவர் பேசின வார்த்தைகள். அப்பவும், கடைசியா உன் தாய் மாமனே உன்னை மதிக்கல.. எந்த தைரியத்தில் நீ என் பொண்ணை காதலிக்குறா டா ****** ன்னு ரொம்ப கேட்ட வார்த்தையில் பேசி துரத்தினார் அழகி" என்று சோகமாக கூறியவன். மேலும்,


"அதான்.. அவரையும் மதியையும் மிரட்டிட்டு வரச் சொல்லி நான் ஒரு ரவுடி கும்பலை ரெடி பண்ணேன். ஆனா! அவங்க நான் சொன்னதை செய்யாம.. என் மதியையும் ராஜனோட அப்பா மாணிக்கத்தையும் கொன்னுடானுங்க அழகி… என் மதியை நானே கொன்னுட்டேன் அழகி.. நா பாவி" என்று தலையில் ஆடித்துக்கொண்டு அழுதவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அழகி.


அவளின் வெறித்தப் பார்வையை கண்ட சந்தோஷ்,"உனக்கு தெரிஞ்ச உண்மை வரைக்கும் போதும் அழகி…" என்றவன் தன் கையிலிருந்த ஊசியுடன் அழகியை நோக்கிச் செலவும், "அப்படியே நில்லு சந்தோஷ்!!" என்று இனியனின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.


இனியனை குரலைக் கேட்டுத் திகைத்த சந்தோஷ், திரும்பி பார்க்கவும் நகரும் கதவின் அருகில் நின்றிருந்தனர் இனியன், மருது மற்றும் ராஜன். இவர்களுடன் SKவும் நின்றிருந்தான்.



அங்கே இவர்களை கண்டதும் சந்தோஷ் திகைத்து நிற்க, அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட மருதுவோ, திகைத்த நிலையில் நின்றிருந்த சந்தோஷைப் பிடித்து அங்கிருந்த நாற்காலியில் கட்டிவைத்தான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top