ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 16


டைரியின் பக்கங்கள்:


“ராஜ்ஜ்ஜ்…”

“சொல்லு பேபி…”

“எழுதுங்க ராஜ்…”

“என்ன எழுதணும்டா…”

“டைரி தான்…”

“நாளைக்கு எழுதுறேன் பேபி… லவ்வர் பக்கத்தில் இருக்கும் போது எவனாவது அந்த வாய்பை விட்டுவிட்டு டைரி எழுதுவானா??”

“அப்போ நான் பாசமில்லையா?? நா சொன்னா பண்ண மாட்டிங்களா??”

“ச்சே… ச்சே… என் தேவதை குட்டி சொல்லி நான் அதை பண்ணாமல் இருப்பேன்னா… அதுவும் இன்றைக்கு வேற நமக்கு ரொம்பவே ஸ்பெஷலானா நாள். என் தேவதை வேற பக்கத்தில் இருக்கும் போது. எப்படி இந்த அழகான தருணத்தை மிஸ் பண்ணுவேன். நிச்சயம் பதிவு பண்ணியே ஆகவேண்டுமே …”

பிப்ரவரி 14, 2015

இன்று காதலர் தினம்… காதலர்களுக்காகவே ஆன தினம். இந்த நாள் பொதுவாகவே எல்லாக் காதலர்களுக்கு மிகவும் ஸ்பெசலான நாளாக இருந்தாலும், எனக்கும் என் தேவதைக்கும் இது இன்னும் இன்னும் ஸ்பெசலான நாள்.

"ராஜ்! நீங்க இன்னைக்கு ஃபிரீயா??" என்ற என் தேவதையின் அழைப்பில் துடங்கியது இன்றைய மாலைப் பொழுதிற்கான இன்ப நேரம்.

இன்று காலையில் இருந்தே, நானும் சரி! அவளும் சரி! நேரில் என்ன? ஃபோனில் கூட பேசிக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இருவரும் வேலையில் படு பிஸி இன்று.

ஆனால், இதற்க்காகவெல்லாம் எப்படி இன்றைய கொண்டங்களை விடுவது? அதுவும் இது எங்க தல லவ்வர்ஸ் டே வேற! ஜாமாய்சிடமும் இல்லையா? அதனால் தான் நான் ஒரு பிளான் போட்டு, என் தேவதையை சர்ப்ரைஸ் செய்ய எண்ணினேன். ஆனால், என்னச் செய்வது? எப்படிச் செய்வது? என்பதில் எனக்கே இன்னமும் சரியான தெளிவில்லை.

எனவே, என் தேவதையின் கேள்விக்கான விடையாக, "எஸ் மதிமா! நா இப்போ ஃப்ரி தான்டா" என்றேன் கூலாக இருப்பது போல் காட்டிக்கொண்டு. ஆனால், உள்ளுக்குள் மூளை அதுப்பாட்டிற்கு பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருந்தது.

“அப்போ! நாம ரெண்டு பேரும் ஒரு லாங் டிரைவ் போகலாமா? இன்னைக்கு வேற ஸ்பெஷல் டே.. சோ, அப்படியே ஒரு ஸ்பெஷல் டின்னர் முடிச்சிட்டு… பீச்சுக்கும் போகலாம் ராஜ்” என்று குதுகலமாய் என் தேவதை கேட்கவும். அதற்கு மறுப்பேனா நான்??

“போகலாமாவா?? கண்டிப்பா போறோம். எனக்கு ஒரு அரை மணிநேரம் மட்டும் டயம் கொடுப் பேபி… நானே உன்னை ஹாஸ்டல வந்து பிக்கப் பண்ணிக்குறேன்” என்றேன் புன்னையுடன். என் தேவதைக்கான இன்றைய என் சர்ப்ரைஸ் என்னவென்று முடிவெடுத்துவிட்ட மகிழ்ச்சியில்.

சொன்னதுப் போலவே அரைமணி நேரத்தில், செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் செய்து முடித்துவிட்டு. என் தேவதையை அழைக்க அவள் ஹாஸ்டலிற்கு சென்றேன்.

செவ்வூத நிறத்தில் புடவை கட்டி, தேரென நடந்து வந்த என் தேவதையை பார்த்து அசந்துப்போய் அப்படியே அசைவற்று நின்ற என்னிடம் நெருங்கி வந்து, என் முகத்தின் முன் கைகளை ஆட்டி என்னை நினைவிற்கு கொண்டு வந்தாள் என் தேவதை. புடவையில் அவளை தூரத்தில் பார்த்தப்போதே மயங்கியவன். அந்த மதிமுகத்தை அருகில் கண்டதும், என்னையே அறியாமல் என் இதழ்கள் பாட ஆரம்பித்தன என் தேவதையைப் பற்றி,


‘ தேவதை அவளொரு தேவதை…

அழகிய பூமுகம் காணவே …

ஆயுள் தான் போதுமோ!!!

காற்றிலே அவளது வாசனை …

அவளிடம் யோசினை கேட்டு தான்...

பூக்களும் பூக்குமோ !!! ’


“அடடா! சார் அவரோட தேவதையைப் பார்த்ததும் தேவதைப் பாட்டேயே பாடிடாரே!!” என்று கூறிவிட்டு என் முகம் பார்த்து நின்றாள் குறுஞ்சிரிப்புடன்.

அவளின் சிரிப்பைக் கண்டதும் தான், அவள் தேவதை என்று தன்னையேக் கூறிக்கொண்டது நியாபகம் வந்தது எனக்கு.

“ஹே! இப்போ என்ன சொன்ன பேபி" என்றேன் ஆச்சரிய குரலில்.

"ஒன்னுமில்லை.. நா உங்க தேவதைன்னு சொன்னேன்.. வண்டியை எடுங்க"

"உனக்கு எப்படித் தெரியும்.. நீ தான் என் தேவதைன்னு??" என்றக் கேள்வியை கேட்டதும் தான், எனக்கே ஞாபகம் வந்தது. என் டைரியை காணாமல் நா தேடித் திரிந்தது.

"எங்கே என் டைரி??"

"என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும் ராஜ்ஜ்ஜ்ஜ்…" என்றவள் ரகம் பாட.

"சரி! நானும் பாக்குறேன் எங்கே தான் அதை நீ வச்சி இருக்கன்னு" என்றேன் சிரிப்புடன்.

"அதை அப்புறம் பார்பீங்க... இப்போ முதல்ல ஒழுங்கா ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க"

"எப்படியும் என்கிட்ட தான் கடைசியா அது வரும்" என்றுவிட்டு வண்டியை கிளப்பினேன்.

இருவரும் நேரே சென்றது முதலில் பீச்சிற்குத் தான். அதுவொரு பிரைவேட் பீச். பொது மக்கள் வர அங்கு அனுமதியில்லை.. அங்கு வரவேண்டும் என்றால் வருவதற்கு முன்பே நம் பெயரில் அந்த இடத்தைப் பதிவுச் செய்திருக்க வேண்டும்.

அங்கு சும்மாவே நிரம்பி வழியும் கூட்டம் இருக்கும்.. இன்றோ காதலர் தினம்… கேட்கவா வேண்டும்… நான் பதிவு செய்யும் முன்னமே அனைத்து இடங்களும் புக் செய்யப்பட்டிருக்க. என் நண்பர்களின் நண்பர்கள் மூலம் பேசி எங்களுக்கான இடத்தைப் பதிவு செய்திருந்தேன் நான்.

வண்டியில் இருந்து இறங்கி, மெல்ல முன்னோக்கி இருவரும் நடக்க.. நா முன்னமே ஏற்பாடு செய்து வைத்ததுப் போல் அங்கே பிங்க்கும் வெள்ளையும் கலந்த வெல்வெட் துணிகளும், பிங்க் மற்றும் வெள்ளை நிறப் பூக்களாலும் அமைக்கப் பட்டிருந்த ஆர்ச் போல் வேலைப்பாடுகளுடன் இருந்த இடத்தை நோக்கி என் தேவதையை அழைத்துச் சென்றேன்.

அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும், எங்களைச் சுற்றி அமைக்கப் பட்டிருந்த இதய வடிவிலான மின்விளக்குகள் ஒவ்வொன்றாக ஒளிர்ந்தன… அப்போது, என் தேவதையின் முகத்தில் ஏற்பட்ட அந்த பிரமிப்பு... இன்னமும் என் கண்ணுக்குள் நிற்கிறது.

இருவரும் அந்த ஆர்ச் அருகில் சென்றதும்.. எங்களை சுற்றி அதே பிங்க் மற்றும் வெள்ளை நிற பலூன்கள் பறந்தன. இதுவும் என் தேவதைக்கு ஆச்சரியம் தான்… இத்தனை ஏற்பாடுகளை அவள் எதிர்ப் பார்த்திருக்கவில்லை போலும். அந்த பலூன்களைக் கண்டுக் குழந்தையாய் ஆர்ப்பரித்தவளை வாஞ்சையுடன் பார்த்திருத்தேன் நான்.

"ராஜ்! இவ்வளவும் எனக்காக ஏற்பாடு பண்ணுனீங்களா?? அதுவும் இவ்வளவு கம்மியான நேரத்துல…" என்று கேட்ட என் தேவதையின் விழிகள் இரண்டும் கணிந்திருந்தன.

மெல்ல அவள் முன் மண்டியிட்ட நான், " மதிமா! மை ஒன்லி ஏஞ்சல்! எனக்கு ப்ரொபோஸ் பண்ணத் தெரியாது… அதுனால, எனக்கு தெரிந்த வகையில் தெரிந்த மாதிரி பண்ணுறேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.. உன்னைப் பார்த்த அந்த செகண்ட்ல இருந்து உன்னை மனசார விரும்புறேன். ரெண்டு மனமும் புரிந்து இணைந்த பிறகு எதுக்கு அதை சொல்லிக்கிட்டுன்னு நினைச்சு தான் இவ்வளவு நாள் என் காதலை உன்கிட்ட சொன்னதில்லை. ஆனா, நாம எந்த அளவுக்கு ஒருத்தரை நேசிக்கிறோமோ … அதே அளவிற்கு நாமலும் அவங்களால நேசிக்க.. படுறோம்னு தெரியும் போது அப்படியொரு சந்தோசம் வரும். அந்த சந்தோஷத்தை என் தேவதையும் அனுபவிக்கணும்னு நினைச்சேன் அதான் இந்த ப்ரொபோசல்" என்று கூறியப் படியே என் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய இதய வடிவிலான பெட்டியை எடுத்து, அதனுள் இருந்த RM என்ற எழுத்துகள் ஒன்றோடு ஒன்று இணைந்த மாதிரியிலான மோதிரத்தை கையில் எடுத்து, என் தேவதையின் விழிகளை நோக்கி ,

"இனி என் வாழ்க்கையில் நா கடக்கப் போற எல்லா சுகத் துக்கத்திலும் என் கூடவே இருந்து.. நா தப்பு செய்யும் போது எல்லாம்.. இதே மாதிரி என்னைக் கண்டிச்சு .. ஒழுங்கப் படுத்தி .. என் கூட சேர்ந்து பிளாக் காபி குடிச்சு…. அந்த மாலைப் பொழுதை ரசிச்சு.. இனி வாழப் போற வாழ்நாள் பூராவும் என்கூடவே பயணிச்சு … என் வாழ்க்கை… என் வீடு .. என்ற சொற்களை எல்லாம் இனி நம் வாழ்க்கை , நம் வீடு என்று மாற்றி ஒரு அழகான எதிர்காலத்தை என்னோட பகிர்ந்துக்க வருவியா மதிமா.." என்றேன் ஆழ்ந்த குரலில்.

என் ஒவ்வொரு வார்த்தைக்கும் என் தேவதையின் கண்களின் இருந்து கண்ணீர் வழிந்தது. சோகத்தில் மட்டும் தான் கண்ணீர் வருமா என்ன?? சந்தோஷத்திலும் வரும் என்று கூறாமல் கூறியது என் தேவதையின் கண்ணீர் துளிகள்.

"சம்மதமா??" என்ற என் கேள்விக்கு விடையாக, கண்களில் கண்ணீரும், இதழ்களில் புன்னையுடனும் 'சம்மதம் ' என்று புன்னகைத்தாள் என் தேவதை.

நான் கையில் வைத்திருந்த மோதிரத்தை, என் தேவதையின் பட்டுப்போன்ற விரலில் அணிவித்து விட்டு.. அந்த அழகிய விரல்களில் என் இதழ்களைப் பதித்து.. மென்மையாக முத்தமிட்டப் படியே "ஐ லவ் யூ பேபி" என்று என் காதலை தெரிவித்தேன் மென்மையாக.

நா எழவும், என் முன் மண்டியிட்ட என் தேவதையோ, நானே எதிர்பார்க்கா வண்ணம் அவள் பையினும் இருந்து, நான் வாங்கியது போலவே அதே RM என்ற எழுத்துக்கள் இணைந்தது போன்ற வேலைப்பாடுகள் கொண்ட மோதிரத்தை எடுத்தவள்,

"உங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நா நினைச்சேன்.. ஆனா, நீங்க என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க ராஜ்.. நீங்க சொன்ன அனைத்துமா இருந்து என் வாழ்க்கை முழுமையும் நீங்க வேணும்னு ஆசைப் படுறேன் ராஜ்… நிறைய நிறைய உங்களை காதலிச்சு.. சந்தோஷமா இனி வாழவிருக்கும் வாழ்க்கை முழுசும் உங்க காதலோட வாழனும்னு நினைக்குறேன்… லவ் யூ எல்லாம் ரொம்ப சுலபமான வார்த்தைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. ஆனா, அந்த மூணு வார்த்தையை சொல்ல நமக்கு இவ்வளவு காலம் ஆகி இருக்கு… இனியும் தாமதிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்... " என்றவள். என் விரலில் மோதிரத்தை அணிவிதந்துவிட்டு, என்னை அணைத்துக் கொண்டவள், நா இத்தனை நாட்களாக கேட்க தவிக்கும் அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையை உதிர்த்தாள் என் தேவதை.

"ஐ லவ் யூ ராஜ்" என்ற அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும் வானத்தில் பார்க்கின்ற உணர்வு எனக்கு.

அதன் பிறகு இருவரும் வெகு நேரம் அந்த கடலைப் பார்த்தவாறே மணலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

என் தேவதைக்கு என்னத் தோன்றியதோ என்னமோ, திடிரென்று என்னிடம் திரும்பியவள் " ராஜ்! எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்.. வரும் போது பாடுனீங்களே .. அவ்வளவு அழகு உங்க குரல்.. அந்த குரல்ல எனக்காக ஒரு பாட்டு.. ப்ளீஸ்" என்று ஆவலே உருவாக என் தேவதை கேட்கும் போது பாடாமல் இருப்பேனா நான்.

முதன் முதலில் என் தேவதையை நான் சந்தித்த அன்று அவள் பாடிய அதே பாடலை அவளுக்காக மீண்டும் இன்று நான் பாடினேன்.


'வாழ்க்கை என்பது என்ன...

பள்ளிபாடமுமல்ல...

கற்று கொண்டதை மெல்ல முன்னேற...

காதல் என்பது என்ன…

புள்ளி கோலமுமல்ல...

காற்றில் கலையும் போது தள்ளாட...

எங்கோ எங்கோ ஓர் உலகம்...

உனக்காக காத்து கிடக்கும்…

நிகழ்காலம் நதியை போல...

மெல்ல நகர்ந்து போகுதே…

நதி காயலாம்…

நினைவில் உள்ள காட்சி காயுமா???'


நான் பாடி முடிக்கவும், மிகுந்த மகிழ்ச்சிழியுடன் என் கன்னத்தில் முத்தமிட்ட என் தேவதை,


"இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ராஜ்! லைக் அ தாலாட்டு போர் மீ.. அதிலும் அந்த வரிகள் எனக்கே எனக்காகவே எழுதின மாதிரி தோன்றும்… இந்த பாட்டை எனக்காக பாடினதுக்காக... உம்மா.." என்றவள் மீண்டும் என் கன்னங்களில் முத்தமிட்டாள்.
ஏதோ ஜென்மம் பயன் அடைந்துவிட்ட திருப்தி எனக்கு என் தேவதை தந்த அந்த ஒற்றை முத்ததில்.

நேரம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தினால், இன்றும் என் தேவதை என்னுடன் என் வீட்டிலேயே இருப்பதாக முடிவு செய்யப் பட இருவரும் வீட்டை நோக்கி சென்றோம்.

வீட்டினுள் சென்றதுமே, காதலர் தினப் பரிசாக என்னுடைய டைரியை எனக்கே கொடுத்தவள், அந்த டைரியில் இன்றைய நிகழ்வுகளை இப்போதே அவள் முன்னே எழுத வேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டாள்.

அவள் சொல்லியதற்காக இங்கு நான் மாய்ந்து மாய்ந்து டைரி எழுதிக் கொண்டிருக்க , என் தேவதையோ எனக்கும் அவளுக்குமாக ரோட்டில் விற்கும் தள்ளுவண்டிக் குல்பியை வாங்கி வர சென்றுவிட்டாள்.

சில உணர்வுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.. மறக்கவும் முடியாதவை. அதைப் போன்ற உணர்வு தான் எங்களுக்கு இன்று. அதே போல் இந்த நாள் வாழ்க்கை முழுவதும் எங்களால் மறக்க முடியாத நாளும் கூட.

இந்த நிமிடம் இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதன் நானாக தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

இந்த இனிய உணர்வை இன்னும் அதிகமாக உணரவைக்க என் தேவதையும் இருக்கிறாள் என்னுடன் .



படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 17


சந்தோஷ் சண்டையிட்டு சென்று மூன்று நாட்களாகியும், இதுவரையில் அழகியிடம் பேசவேயில்லை. அழகியும் அவனைப் பார்க்கப் பலவாறு முயன்றும், திட்டவட்டமாக அவளைப் பார்க்க மறுத்துவிட்டான் சந்தோஷ்.


இன்று எப்படியேனும் அவனைப் பார்த்துவிட்டு தான் மறுவேலை என்பதில் உறுதியாக காத்துக்கொண்டிருக்கிறாள் சந்தோஷின் இல்லத்தில்.


மீனாட்சி வந்து எவ்வளவு சொல்லியும் சாப்பிடக் கூட செய்யாது, 'சந்தோ என்கூடப் பேசினால் தான் சாப்பிடுவேன்' என்று கூறி ஒருச் சொட்டுத் தண்ணீர் கூடப் பருகாமல் அமர்ந்திருந்த அழகியை, அதற்கு மேலும் தவிர்க்க சந்தோஷிற்கு மனம் வரவில்லை.


"மேடம் என்ன உண்ணாவிரதம் இருக்கீங்களா.. என் கோபம் போயாச்சு.. போய் சாப்பிடுங்க.." என்றான் சந்தோஷ்.


"டேய் சந்தோ! பேசிட்டியாடா என்கிட்ட??"


"எஸ்"


"அப்பாடா! எங்கே என்கூட பேசமலேயே போயிடுவியோன்னு பயந்துட்டேன் தெரியுமா"


"உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமா அழகி.. ஏதோ கோபம் அப்படி பேசிட்டேன்.. நீ முதல்ல சாப்பிடு"


"சந்தோ! நா வீட்டிலேயே செம கட்டு கட்டிட்டேன்டா.. அதான் இங்க சாப்பிட முடியல.. அத்தை அதை போய் … நா ஃபீலிங்ஸ்ல சாப்பிடாம இருக்கேன்னு நினைச்சிட்டாங்க" என்றாள் சிரித்தவாறே.


"அதானே நீதான் கேடியாச்சே… ஆமா, என்னதிது பையோட எங்கே கிளம்பிட்ட" என்ற சந்தோஷைப் பார்த்து தயங்கியவாறே,


"அது.. கல்யாணப் பத்திரிக்கை.. ராஜன்கிட்ட கொடுக்க சொல்லி அம்மா கொடுத்தாங்க " என்றாள் அழகி.


அதுவரையில் இயல்பாய் இருந்த சந்தோஷின் முகம் மெல்ல மாறத் துடங்கவும்,


"சந்தோ! ப்ளீஸ் திரும்ப மலை ஏறிடாதேடா.." என்றாள் பாவமாக.


"இல்ல அழகி! மாப்பிளைகிட்ட பத்திரிக்கை கொடுக்க பொண்ணு போறா.. அதுல நா என்ன கோபப்படுறது??"


"பாத்தியா… திரும்ப ஏதோ மாதிரி பேசுற.. அன்னைக்கு நீ பேசினதைக் கேட்டு அப்பா எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா??"


"இப்போ மாமாவைப் பத்தி பேச வேண்டாம்னு நினைக்கிறேன் … நீ போய் உன் வேலை முடி அழகி.. முதல்ல"


"சந்தோ!!"


"என்ன??"


"எனக்கு மும்பைல இருந்து எதுவும் வாங்கிட்டு வரலையா??" என்று கேட்டவளை அருகில் வருமாறு அழைத்தவன். தன் அலமாரியில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அழகியிடம் தந்தான்.


"ஐ!! இதுல என்ன இருக்கு சந்தோ?? மேக்கப் ஐட்டம்ஸ் தானே" என்றவளை நோக்கி,


"இது உனக்கு இல்ல … ராஜனுக்கு.." என்றான் நிதானமாக.


"என்ன சொல்லுற சந்தோ?? உனக்கு தான் அவரைப் பிடிக்காதே??" அப்பட்டமான அதிர்ச்சி அவள் குரலில்.


"ஆமா, பிடிக்காது தான். ஆனா என்னோட அழகிய கட்டிக்க போன்றவர்ல.. அதுனால எனக்கும் இப்போ அவரை பிடிக்கும் " என்றவன்,


"அழகி! இந்த பாக்ஸ்சை அவர் இப்போ பிரிச்சு பார்க்க கூடாது.. இது உங்க மேரேஜ் கிப்ட்.. சோ, கல்யாணம் முடிஞ்சப் பிறகு தான் பிரிக்கணும் நீங்க.. புரிஞ்சதா" என்றான்.


"என்னடா சஸ்பென்ஸ்லாம் வைக்குற.. சரி அப்படியே பண்ணிடலாம்.. உனக்கு இப்போ என்மேல எந்த கோபமும் இல்லைல.."


"இல்லவே இல்லை போதுமா" என்று சிரிப்புடன் கூறிய சந்தோஷைக் கண்டு புன்னகைத்தவள்,


"அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு… நா போய் ராஜன் கிட்ட இந்த பத்திரிக்கையும், பாக்சையும் கொடுத்துட்டு வரேன் சந்தோ.." என்றவள், சந்தோஷிற்கு தன் மீதான கோபம் போய்விட்டது என்ற மகிழ்வில் சந்தோசமாக சென்றாள்.


******************************

"அண்ணே! உங்களைப் பார்க்க அண்ணி வந்திருக்காங்க" என்று செல்வம் கூறவும் மிகுந்த ஆச்சரியம் ராஜனுக்கு, அழகி அங்கு வந்திருக்கும் செய்தியைக் கேட்டு.


நொடியும் தாமதிக்காமல் வீட்டு வாசலிற்கு சென்றவன்,


"வா அழகி ! என்னவொரு ஆச்சரியம்.. இந்தப் பக்கம் வந்திருக்க" என்றான் வியப்புடன்.


"பத்திரிக்கை பிரிண்ட் பண்ணி வந்திருக்கு.. அம்மா உங்ககிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.. அதான்.." என்றாள் தயங்கிய குரலில்.


அவளது குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்தவன், "உள்ளே வா அழகி! எவ்வளவு நேரம் வாசலையே நின்னு பேசுவது" என்று அழகியை வீட்டினுள் அழைக்க, அவளும் மறுப்புத் தெரிவிக்காமல், அவனுடன் சென்றாள்.


இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருக்க, " நம்ம வீட்டுக்கு முதல் முறை வந்திருக்க .. என்ன சாப்பிடுற அழகி.. டீ ஆர் காபி" என்று இதமாக கேட்டவனை நோக்கி,


"கிழி பரோட்டா" என்றாள் அழகி.


"கிழி பரோட்டாவா??"


"ஆமா, அது சாப்பிடணும்னு ஆசை.. ஆனா முடியலை. இங்க தெற்கூர்ல தான் இப்போ அது பேமஸ்ல… வாங்கி தர மாட்டீங்களா ராஜன் எனக்காக" என்று உரிமையுடன் கேட்டவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்.


செல்வத்தை அழைத்து அழகி கேட்டதை வாங்கி வரச் சொல்ல,


"அவர்கிட்ட ஏன் சொல்லுறீங்க?? நா கேட்டது உங்ககிட்ட .. உங்களால முடிஞ்சா வாங்கி தாங்க .. இல்லைன்னா வேண்டாம்" என்றாள் அழகி முகத்தை சுருக்கி.


அழகி, அவளாகவே தன்னிடம் கேட்ட முதல் விஷயம், அதை எப்படியாவது வாங்கித்தர வேண்டும் என்ற முடிவுடன் செல்வத்தையும் அழைத்துக் கொண்டு சென்றான் ராஜன். அழகி கேட்ட கிழி பரோட்டாவை வாங்க.


அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. ஒருவழியாக அந்த கிழி பரோட்டாவை வாங்கி வந்து தந்தவனிடம் இருந்து அதை வங்கியவளோ,


கண்கள் மின்ன ஆர்வமாக அந்த கட்டப்பட்டிருந்த இலையை பிரித்து.. உள்ளே சால்னாவில் ஊறிய அந்த பரோட்டாவை மட்டன் சுக்காவுடன் சேர்ந்து எடுத்து ரசித்து உண்டாள்.


பாதி பரோட்டா காலி ஆகவும் தான் ராஜன் என்ற ஒரு ஜீவனும் அங்கு இருப்பதையே உணர்ந்தவள்.


அவனைப் பார்க்க வைத்து தான் மட்டும் சாப்பிடுகிறோமே என்ற உணர்வு வர. சற்றும் யோசிக்காமல் அந்த பரோட்டாவைப் எடுத்தவள் ராஜனின் வாயருகே கொண்டு சென்று, "டேஸ்ட் பண்ணி பாருங்க ராஜன்.. செமையா இருக்கு" என்று ஊட்டவும், முதலில் திகைத்தவன் பின் கண்கள் கலங்க அவள் கொடுத்த பரோட்டாவை வாங்கிக்கொண்டான்.


அதுவரையில் தான் எடுத்த இந்த திருமண முடிவு சரிதானா என்று எண்ணிக்கொண்டிருந்தவன், அந்த நிமிடம் தன் முடிவு நூறு சதவீதம் சரியே என்ற முடிவுக்கு வந்திருந்தான்.


மொத்தமும் சாப்பிட்ட முடித்தப் பிறகு தான். சந்தோஷ் ராஜனிடம் கொடுக்க சொல்லிய அந்த பாக்ஸ்சின் நினைவு வர,


"ஒன் மினிட் ராஜன். உங்களுக்காக ஒரு கிப்ட் இருக்கு.." என்றவள். உடனே வெளியில் சென்று தனது வண்டியில் வைத்திருந்த அந்த பெட்டியை எடுத்து வந்து ராஜனிடன் தந்து,


"ராஜன்! இது நம்ம மேரேஜ் கிப்ட்" என்று மட்டும் கூறியவள், யார் இதை தந்தது என்று கூறவில்லை.


அழகியிடமிருந்து அந்த பெட்டியை வாங்கிய ராஜன். அதை திருப்பிப் பார்த்தவாறே, "இது யார் தந்தது அழகி??" என்றான் யோசனையாக.


"அது…" என்று அழகி கூற வருகையில், 'சலிர்' என்று கண்ணாடி உடையும் சத்தம் முன் பக்கம் கேட்கவும், கையில் வைத்திருந்த பெட்டியை கீழே வைத்த ராஜன் சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல, அவனைப் பின்தொடர்ந்து தானும் சென்றாள் அழகி.


அங்கு வீட்டின் முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்திருக்க, அதனருகில் பந்தொன்று கிடந்தது.


அங்கே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் செயல் தான் இது என்று பார்த்ததும் தெரிந்து விட, பந்தை தேடி யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள் அழகி.


ராஜன் சென்று அந்த பந்தை எடுக்கவும், ஒரு நான்கு வயது சிறுவன் மெல்ல நடந்து வந்து அழகியிடன், "அக்கா… எங்க கிகேட் பால் இங்க விலுந்திச்சு.. அது எங்க இக்கு" என்று கேட்க.


அந்த சிறுவனின் மழலை மொழியில் ஈர்க்கப் பட்டவளோ, "நீங்க தான் பால் போட்டு இந்த கண்ணாடியை உடைச்சதா??" என்றாள்.


உடைந்த கண்ணாடியை பார்த்து மிரண்டு விழித்தக் சிறுவனோ, "நா உதைக்கல.. அண்ணா தான் பால் போட்டான்.. பால் வேணும்" என்று கண்ணீர் குரலில் கேட்கவும் உருக்கிவிட்டது அழகிக்கு.


"அந்த பால்லை கொடுங்க ராஜன்" என்றாள் உரிமையாக.


" தர முடியாது அழகி.. ஒரு தடவை தந்துட்டா.. அதையே பழக்கப்படுதிக்க அரம்பிச்சிடுவாங்க" என்றவனின் கைகளிலிருந்த பந்தைப் பிடிங்குவதற்காக அவன் அருகில் அழகி நெருங்க.. அவள் ஏன் அருகில் வருகிறாள் என்பதை உணர்ந்தவன், பந்தைத் தலைக்கு மேல் தூக்க, அவன் உயரத்திற்கு அழகியால் ஏக்க முடியாமல் போகவும்...


"கொடுங்க ராஜன்.." என்று சுற்றி சுற்றிப் பந்தை பிடுங்க முயன்றாள் அழகி.

ராஜனோ அவளுக்கு போக்குக்காட்டிக் கொண்டிருந்தான் சிரித்தவாறே. பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் மனம் விட்டு சிரித்திருக்கிறான் அவன்.


சிறிது நேரம் போக்குக் காட்டிவிட்டு, அந்த பந்தை அழகியிடமே கொடுத்த ராஜன்,


"தேங்கயூ அழகி! ரொம்ப வருஷத்துக்குப் பிறகு இன்னைக்கு தான் நா இப்படி சிரிச்சு இருக்கேன்.. தேங்கயூ சோ மச்… எப்பவும் இப்படியே இரு.. யாருக்காவும் மாறிடாதே.. யூ ஆர் அ ஹாப்பினஸ் ஸ்ப்ரேட்டர் … நீ எங்கே இருந்தாலும் அங்கே மகிழிச்சிக்கு குறைவிருக்காது.." என்று நெகிழ்ந்தக் குரலில் பேசியவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவள்,


ராஜனை அவனுடைய எல்லா விதமானஅழுத்தங்களையும் மறக்கச் செய்து, அந்த குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடச் செய்தவள். தானும் அவர்களுடன் இணைந்து சிறிது நேரம் விளையாடிவிட்டு கிளம்பினாள்.


ராஜனிடம் விடைபெறும் முன்,"ராஜன்! நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே??" என்றாள்.


"நிச்சயமா மாட்டேன் அழகி.. சொல்லு"


"எப்பவும் நீங்களே உங்களை ஒரு எல்லைக்குள்ள முடக்கிகாதீங்க ராஜன். நீங்க இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிச்சு சந்தோஷமா இருந்தீங்களே அது தான் உங்களுடைய உண்மையான முகம்.. அதை தொலைச்சிடாதீங்க எப்பவும்… அதே மாதிரி நீங்க சொல்லுற அளவுக்கெல்லாம் நா நல்லவள்ளும் இல்லை ராஜன்.. எனக்கு வேண்டியதை செய்ய சில சமயம் நானும் நிறைய தப்பெல்லாம் செய்வேன் .. இங்க யாரும் நூறு சதவீதம் நல்லவங்க இல்ல.. எல்லாருமே கலப்படம் தான்.. நீங்க வெளியே உங்களை தப்பானவனா காட்டிக்கிட்டாலும் .. நீங்க நல்லவங்கன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் ராஜன்" என்றவள் விடைபெற்றாள் ராஜனிடம்.


ஏதோ சிந்தனையிலேயே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த அழகியின் செவிகளைத் தீண்டியது, 'ஹெலோ மேடம்' என்ற இனியனின் குரல்.


சட்டென்று வண்டியை நிறுத்தியவள் திரும்பிப் பார்க்க, அங்கு நின்றிருந்தான் இனியன்.. முகம் சிவந்து, கண்கள் சிவந்து பார்ப்பதற்கு சற்று பயமாக தான் இருந்தது அவன் தோற்றம்.


"என்ன??" என்றாள் அலட்சியமாக.


"அவன் கூட உனக்கு என்ன விளையாட்டு.. அதுவும் இவ்வளவு நேரம் அங்க இருந்திருக்க" என்றான் இனியன் கோபமாக.


"ஹலோ சார்! என் வுட்பி வீட்டுக்கு நா போறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்…" என்றவள் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வர,


"என்னது வுட்பியா?? அப்படியே அறைஞ்சேன்னா பாரு… "


"என்ன சார் ஓவரா துள்ளுறீங்க.. அறைஞ்சுத் தான் பாருங்களேன் .. என் வுட்பி உங்களை சும்மா விட மாட்டாரு.. எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு .. இந்தாங்க .. பிடிங்க.. என் கல்யாணப் பத்திரிகை … மறக்காம வந்திடுங்க" என்று கூறிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு செல்லும் அவளையே பார்த்திருந்தவனின் ஃபோன் அழைக்க, எடுத்துப் பார்த்தான். அவன் தந்தை தான் அழைத்திருந்தார்.


"ஹலோ அப்பா"

"தம்பி! எப்படியா இருக்க"

"நல்லா இருக்கேன்பா.."

"போன வருஷம் உனக்கு வரன் பார்க்கலாம்னு சொல்லி இருந்த்தோமே என் ஃபிரென்ட்டோட பொண்ணு. அந்த புள்ளைக்கு கல்யாணமாம்.. எல்லறையும் வரச் சொல்லி அழைச்சிருக்கான்.. அதான் உன்னை வரச் சொல்லி போன் பண்ணேன்.. எப்பப்பா வர.."

"அப்பா! இப்போ என்னால எங்கையும் வர முடியாது.. முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு.. நீங்க போய்ட்டு வாங்க"


"அப்போ சரி.. நாங்க பார்த்துக்கிறோம் தம்பி" என்றவர் அழைப்பை துண்டிக்க,


"இங்க என் வாழ்க்கையே அந்தரத்தில தொங்குது.. இதுல நா அப்பா ஃபிரென்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போகாதது ஒன்னுத்தான் குறை இப்போ.." என்று புல்ம்பியப் படியே அழகி தத்துச் சென்ற பத்திரிகையையே பார்த்திருந்தான் இனியன்.



படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-18

காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திரிருக்கதாம். அதேப்போல் தான் யாருக்காகவும் காத்திராமல் விடிந்தது ராஜன் & அழகியின் திருமணநாளும்.


சொசைட்டிக்கு சொந்தமான மண்டபத்தில் எளிமையான அலங்காரங்களுடன், மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன திருமணச் சடங்குகள்.


பட்டுவேட்டிச் சட்டையில் கம்பிரமாக மனையில் அமர்ந்து, ஐயர் கூறும் மந்திரங்களை எல்லாம் அடிப்பிரளாமல் உச்சரித்துக் கொண்டிருந்தான் ராஜன்.


'பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ' என்று ஐயர் குரல் கொடுக்கவும், மணமகள் அறையிலிருந்து குங்கும நிறத்தில் கோல்டன் பார்டர் போட்டு அழகிய பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டப் புடவையில் தேவதையென நடந்து வந்த அழகி, மனையில் ராஜனிற்கு அருகில் அமர்ந்தாள்.


என்னத்தான் தைரியமாக வெளியில் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் உதறலாகத் தான் இருந்தது அவளுக்கு, என்ன நடக்கப் போகிறதோ என்று.


வேலுசாமியோ ஓடியாடி வந்திருந்த விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டிருக்க , சந்தோஷோ மிகவும் இயல்பாக, அமைதியான முகத்துடன் காணப்பட்டான்.


கயலை ஒருவாறாக அனைவரும் சேர்ந்துப்பேசி சமாளித்திருக்க, அவளும் இருமனதாக இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள்.


பத்மாவைத் தான் காணவில்லை காலையில் இருந்தே… ஒருவேளை அவள் இங்கு வரவேயில்லையோ?? என்று எண்ணிய அழகி, கயலை அழைத்துக் கேட்க.


பத்மா அவசர வேலையாக வெளியூர் சென்றிருப்பதாகக் கூறினாள் கயல்.


'கல்யாணத்திற்கு வரப்பிடிக்காமல் சறுக்குச் சொல்லி எஸ் ஆகியிருக்கு பக்கி' என்று எண்ணிக் கொண்டவள், தன் மனதை மீண்டும் ஐயரிடமும் ராஜனிடமும் திருப்பினாள்.


கருமமே கண்ணாக ராஜன் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருக்க, அழகிக்கு தான் ஓமகுண்டத்திலிருந்து வரும் புகை கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது.


அந்த எரிச்சலைப் போக்க சந்தோஷின் குளிர்க் கண்ணாடியை வாங்கி அணிந்துக் கொண்ட அழகி, ராஜனுடன் சேர்ந்து தானும் மற்ற திருமணச்சடங்குகளை செய்ய ஆரம்பித்தாள்.


வெண்கலத் தாம்பூலத் தட்டில் மஞ்சள் கலந்த அரிசிப் போட்டு அதன் மேலே தேங்காயில் சுற்றிய தாலியை வைத்து, அனைவரிடமும் கயல் ஆசி வாங்கிக்கொண்டிருக்க, அழகியோ அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.


திடிரென்று மண்டபத்தின் வாயிலில் சலசலப்பு ஏற்பட.. என்னவென்று பார்பதற்காக வேலுசாமி அங்கேச் செல்லும் முன் நான்கைந்து காவலர்கள் மண்டபத்தினுள் நுழைந்தனர்.


'இந்த நேரத்தில் இங்கு போலீசா??' என்று வேலுசாமி அதிர்ந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் " இங்கே எந்த பிரச்சனையும் நடக்கலையே சார்.. நீங்க எதற்கு வந்திருக்கிறீங்க..." என்றார் அங்கு வந்திருந்த காவலர்களை நோக்கி.


"மாப்பிள்ளையே அக்யூஸ்ட்டா இருக்கும் போது… அதைவிட வேற என்னப் பெரிய பிரச்சனை வந்துவிடப் போகுது சார்???" என்ற குரல் மண்டபத்தின் வாயிலில் கேட்கவும், அதிர்ந்துப் போய் மண்டபத்தில் இருந்தவர்கள் திரும்ப, அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் மேலும் அதிர்ந்தனர்.


காக்கி சட்டையும், பேண்ட்டும் அணிந்து, ஒட்டவெட்டிய கிராப்புடன் கிளீன் ஷேவ்வில் அசத்தலான தோற்றத்துடன் நின்றிருந்த இனியனைக் கண்டுத் தான் அதிர்ந்திருந்தனர் அனைவரும்.


இனியனின் இந்தப் புது தோற்றத்தைக் கண்டு, தன்னை மறந்தவளாக 'வாவ்.. இனியன் செம ஹண்ட்சமா இருக்கார்ல' என்று கூறிய கயல்விழியை விழிகளால் எரித்த சந்தோஷ், இனியனைக் கண்டுத் திடுகிட்டாலும், சற்று நேரத்தில் தன்னைச் சமாளித்தக் கொண்டவனாக "இது என்ன புதுக் கெட்டப் இனியன்" என்றான் இயல்பாக இருப்பதுப் போல் காட்டிக்கொண்டு.


ராஜனைத் தேடிப் போலீஸ் வரும் என்பதை எதிர்ப்பார்த்திருந்த சந்தோஷ், சத்தியமாக அந்த போலீஸ் ரூபத்தில் சற்றும் இனியனை எதிர்பார்க்கவில்லை.


அதற்குள் இனியன் இந்த திருமணத்தை நிருத்தத்தான் ஏதோ செய்கிறான் என்றெண்ணிய வேலுசாமியோ, இனியனின் சட்டையைப் பிடித்து, "எங்களை நிம்மதியாவே இருக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு சுத்துறீயாடா நீ… இப்போ எதுக்கு இங்க வந்து தொல்லையை கூட்டுற?? இது என்னப் புது வேஷம்??" என்றார் கோபத்தில் மரியாதைகள் எல்லாம் தூரப்போக. எப்போதும் தம்பி என்று அழைப்பவர், இன்று ஒருமையில் அழைத்திருந்தார்.


அவர் கையைத் தன் சட்டையிலிருந்து மெல்ல நகர்த்தியவன், " நா யாரையும் தொல்லைப் பண்ண வரலை சார். என் வேலையைச் செய்யத்தான் வந்திருக்கேன்" என்றவன்.


தனது பாக்கெட்டில் இருந்து ஒருக் காகிதத்தை எடுத்து அவரிடம் கட்டியவன், " நீங்க மாப்பிளைன்னு சீராட்டிக்கிட்டு இருக்குற ராஜனை.. அதாவது மிஸ்டர் பாண்டிய ராஜனை அரெஸ்ட் செய்யச் சொல்லி கோர்ட் கொடுத்திருக்கும் அரெஸ்ட் வாரண்ட் இது.. அண்ட் மோரோவர் எல்லாரும் கேட்ட மாதிரி இது வேஷமில்லை.. இது தான் ஒரிஜினல்…


ஐ அம் அமிழ்தினியன் IPS … இத்தனை நாளா அண்டர்கவர்ல இருந்தேன்… சோ தட் உங்ககிட்ட எல்லாம் சில உண்மைகளை மறைக்க வேண்டியிருந்தது… அது என் வேலைகாகத் தானே தவிர வேற எந்த பர்சனல் ரீசன்காகவும் நான் பண்ணல.. இனியாவது என் டியூட்டியைச் செய்ய விடுறீங்களா.." என்று நிதானமாக அதே சமயம் கம்பிரமாக அனைத்தையும் சொன்னவன், அதே கம்பிரக் குரலில் "வாங்க மிஸ்டர். பாண்டிய ராஜன்.. ஜெயிலுக்குப் போய்ட்டு வந்தப்பிறகு பொறுமையா கல்யாணம் பண்ணிக்கலாம்.." என்று கூறியப் படியே மேடையில் ஏறியவன் ராஜனின் கையைப் பற்றி எழுப்ப, ராஜனுக்கு முன்பே முகம்கொள்ளா புன்னகையுடன் எழுந்து நின்றாள் அழகி.


மிகவும் நிதனமாக தன் கையைப் பற்றி இருந்த இனியனின் கையை எடுவிட்ட ராஜன், "வாரண்ட் இருந்தாலும் … சாலிட் ப்ரூப் காட்டினால் தான் என்னால வர முடியும் மிஸ்டர். அமிழ்தினியன்.." என்றான் சன்னச் சிரிப்புடன்.


"டோன்ட் பி டூ காண்பிடன்ட் ராஜன். உன் ஒட்டுமொத்த சவுத் இந்தியா டீமும் இப்போ எங்க கஸ்டடில… சோ, ஸ்மார்ட் பிளே பண்ண ட்ரை பண்ணாம..ஜஸ்ட் கம் வித் மீ.. " என்று அடிக்குரலில் சீரிய இனியனைப் பொறுமையுடன் ஏறிட்ட ராஜனோ,


"எந்த டீம்?? ஓ ! SK காங்கோட சவுத் சைட் டீம் பத்திச் சொல்லுறீயா .. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி ஒரு ஏவிட்டேன்ஸ்சை காட்டு.. எந்த கேள்வியும் இல்லாம இப்பவே உன்கூட வரேன்.." என்றான்.


ராஜனின் இந்தப் பொறுமை பேச்சு இனியனை இன்னும் வெறி ஏத்திவிட, " எந்த விஷயத்திலும் நேரடியா செயல் படமா.. எல்லாத்தையும் அருணாச்சலத்தை வச்சே முடிச்சிட்டோம்.. நம்ம பேரு வெளிய வந்திருக்காதுன்னு திமிரா?? " என்றான் இனியன் கழுத்து நரம்புகள் புடைக்க.


"அப்படியும் வச்சுக்கலாம் இனியன்.. எந்த ப்ரூப்பும் இல்லைல… தென் டயம் வேஸ்ட் பண்ணாம இடத்தக் காலிப் பண்ணுங்க .. இல்லைனா என் கல்யாணத்தில பிரச்சனை பண்ணுறதா உங்க மீதே கம்ப்ளைன்ட் பண்ண வேண்டிவரும்.." என்ற ராஜனின் கூற்று இனியனுக்கு எப்படி இருந்ததோ.. அழகிக்கு தூக்கி வாரிப் போட்டது.


மண்டபத்தில் இருந்த அனைவரும் இனியனும் ராஜனும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதைப் புரியாமல் பார்த்திருக்க,


அழகியோ மருதுவிற்கு அழைத்து "டேய் மாடு! எங்கடா போன.. இங்க இனியன் மாஸ் காட்டுறாரு.. அவரை விட ராஜன் அதிகமா மாஸ் காட்டுறாரு.. எனக்கு பயந்துவருதுடா… நா பிக்ஸ் பண்ண கேமரால ஏதாவது சாட்சி கிடைச்சதா??" என்றாள் பதற்றமாக.


" நா முக்கியமான வேலைல இருக்கேன் அப்புறம் பேசுறேன் அழகி… நீ வச்ச கேமரால ஒன்னும் பதிவாகல.. SK காங் மொத்தத்தையும் அரெஸ்ட் பண்ணச் சொல்லி வந்த வாரண்ட்டை மட்டும் தான் இனியன் வச்சி இருக்கான்.. அவன் கிட்ட வேற எந்த ப்ரூப்பும் இல்லை…" என்ற மருது உடனே இணைப்பைத் துண்டித்துவிட… அழகியோ 'போச்சு.. எல்லாம் போச்சு..' என்று தலையில் கைவைத்தவாறே அங்கு நடப்பதைப் பார்த்திருந்தாள்.


"சாலிட் ப்ரூப் தானே ராஜன் உங்களுக்கு வேணும்…" என்ற இனியன்.


தனது ஃபோனை எடுத்து அதிலுள்ள போட்டோவை காட்டி, "உங்க வீட்ல இருந்து கைப்பற்றிய கொக்கேன்.. மொத்தம் 3கிலோ … இந்த ஒரு ப்ரூப் போதுமா ராஜன்.. " என்று இனியன் காட்டிய புகைப்படத்தை நிதனமாக பார்த்த ராஜனோ, திரும்பி அழகியை ஒருப் பார்த்துவிட்டு "போகலாம் இனியன்.. இதைவிட வேற ப்ரூப் எனக்கு தேவையில்லை..'' என்று இனியனிடம் கூறியவன்… நேரே அழகியிடம் வந்து, "இதுக்காகத் தான் அன்னைக்கு வந்தியா அழகி.. இது தெரியாம நா கூட என்மேல உண்மையான பாசம் காட்ட ஆளிருக்குன்னு சந்தோஷப் பட்டேன்.. எனிவே, நா அன்னைக்கு சொன்ன மாதிரி தான் … இப்படியே இரு மாறிடாதே யாருக்காவும்.. இனியன் பெட்டர் சாய்ஸ் தான்.. உனக்கு ஏத்தவன் .. " என்றவனை அதிர்ந்து பார்த்திருந்தாள் அழகி.


ஏனென்றால், இனியன் காட்டிய புகைப்படத்தில் அந்த கொக்கேன் இருந்தது, அழகி அன்று ராஜனிடம் தந்தப் பெட்டியில்.. யார் இதை அதில் வைத்திருப்பார்கள்?? ஒருவேளை இனியனேக் கூட வைத்துவிட்டு ராஜன் மீது பழிப் போடுகிறானா?? ஒன்றும் புரியாமல் குழம்பியப்படி நின்றாள் அழகி.


அழகியிடம் பேசிவிட்டு, இனியனிடம் வந்த ராஜன் , "குட் மூவ்… பட் ராங் டயம்மிங்.." என்றுக் கூறிவிட்டு இனியனுடன் வந்திருந்த காவலர்களுடன் சென்றான் ராஜன்.


மயான அமைதி என்று கூறுவார்களே அப்படியொரு அமைதி நிலவியது அங்கு. சற்று நேரத்தில் நடந்து முடிந்த களபரங்களால் தன் பெண்ணின் திருமணம் நின்றுவிட்டது என்பதை உணரவே சிறிது நேரம் தேவைப்பட்டது மஞ்சுளாவிற்கு.


தன் மகளிற்கான நியாயத்தை இனியனிடம் அவர் கேட்க விளையும் முன், ஒருக் கரம் இனியனின் சட்டையைப் பற்றி, "உன் வேலையைப் பத்தி மட்டும் யோசிச்சியே அந்தப் பொண்ணைப் பத்தி யோசிச்சியா… மணமேடை வரைக்கும் வந்துட்டு கல்யாணம் நின்னா … அது அந்த பொண்ணுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்னு யோசிச்சியாடா…" என்று கேட்டவரைத் திகைப்புடன் பார்த்த இனியன், "அம்மா" என்றான்.


"அம்மானு மட்டும் கூப்பிடாதே ராஸ்கல்.. இந்த போலீஸ் வேலையை விட்டுட்டேன்.. சொந்தமா பிசினஸ் பண்ணப்போறேன்னுச் சொல்லிட்டு.. என்னடா கோலம் இது…" என்றார் இனியனின் அன்னை மணிமேகலை.


"அம்மா! நீங்க எப்படி இங்கே??" என்றான் ஆச்சரியக் குரலில். அவர் கூறிய எதையும் கண்டுக்கொள்ளமல்.


"உன் அப்பாவோட ஃபிரென்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போக உன்னை கூப்பிட்டோம்ல.. அந்த கல்யாணம் தான் இந்த கல்யாணம். போன வருஷம் உனக்காக நாங்க பார்த்து வச்சப் பொண்ணு தான் அழகி.."


"என்னம்மா சொல்லுறீங்க?? போட்டோ காட்டவே இல்ல" என்றவனை, ஓங்கி அறைந்தவர்,


"நீ போட்டிருக்க இந்த போலீஸ் ட்ரெஸ்காக ஒரு அடியோட விடுறேன்.. இல்லனா அவ்வளவு தான்.. போட்டோ காட்டலையாமே.. பொண்ணு பார்திருக்கோம்னு சொன்னத்துக்கே அந்த ஆட்டம் அடி.. உன் போட்டோவை கூட பொண்ணு வீட்டுக்கு அனுப்பவிடாம பண்ணிட்டு.. இப்போ கேட்குற பாரு கேள்வி.. " என்று நிறுத்தியவர்,


"அதைவிடு, இப்போ மணமேடை வரை வந்துட்டு.. கல்யாணம் நின்னுச்சே.. இந்த பொண்ணுக்கு என்னப் பதில் சொல்லப் போற…" என்றார் தீர்க்கமாக.


"நானே அழகியை கட்டிக்குறேன்" என்று இனியன் கூறியது தான் தாமதம்… மீண்டும் இனியனின் கன்னத்திலே அறைந்தவர்,


"கல்யாணம்னா விளையாட்டு விஷயமா… நாளைக்கே இதே மாதிரி வேற ஒரு கல்யாணத்தை நிறுத்தினா.. அந்த பொண்ணையும் கட்டிப்பேன்னு சொல்லுவியா ராஸ்கல்…" என்றவரை நிதனமாக பார்த்தவன்,


"சாத்தியமா சொல்ல மாட்டேன்.. ஏன்னா, அவங்க யாரும் அழகி இல்லையே.. ஐ லைக் அழகி .. எனக்கு அவளையே கட்டிவைங்க மா" என்றவன்… அப்போதும் ஐ லைக் அழகி என்றானே தவிர ஐ லவ் என்று சொல்லவில்லை.


அதன்பின் எப்படியோ இனியனின் அன்னையும் தந்தையும் எல்லோரிடமும் பேசிச் சம்மதிக்கவைக்க, அழகியோ 'எனக்கு இதில் விருப்பமில்லை' என்றாள் ஒரே போடாக.


அவளது பதிலில் அனைவரும் அதிர்ந்து நிற்க, இனியனோ அழகியை தான் சமளித்துக்கொள்வதாக கூறியவன், அவளிடம் நெருங்கினான்.


"என்ன மேடம்! உண்மையா உங்களுக்கு இதுல விருப்பமில்லையா??" என்ற இனியனின் கேள்விக்கு,


'விருப்பம் இருக்குத்தான்.. ஆனா, உடனே சம்மதிச்சா எப்படி.. என்கிட்ட கூட உண்மையைச் சொல்லாம மறைச்சத்துக்கு.. குறைஞ்சது ஆறு மாசமாவது உங்கள சுத்தல்ல விடனுமே' என்றெண்ணியவள்.


"ஆமா விருப்பமில்லை.." என்றாள் கெத்தாக.


"அப்போ எனக்கும் வேற ஆப்ஷனில்ல.." என்று அழகியிடம் நெருங்கியவன், மெல்ல அவள் காதோரம் குனிந்து, "எனக்குள்ள அந்த ரெண்டு ஓகே ரூல்ல .. முதல் ரூல் இப்போ சொல்லுறேன் அழகி … என்னை கல்யாணம் செய்துக்கோ.." என்றான் கிசுகிசுப்பாக.


"எதே! முடியாது" என்றவளிடம்…


"டீல் போட்ட நீயே மீறலாமா??" என்றான் இனியன் சிரித்தவாறே.


"சே! இப்படி லாக் பண்ணிட்டானே.." என்றெண்ணியவள், தனக்கு சம்மதம் என்று கூற, அதே மணமேடையில் இருத்தரப்பு பெரியோர்களின் ஆசியுடன்.. எளிதாகவும் நிறைவாகவும் நடந்து முடிந்தது அழகி இனியனின் திருமணம்.



*********************************

அன்றிரவு, இனியனின் அறையே பூக்காடாக காட்சியளித்தது. அனைத்தும், கயல் மற்றும் மருதுவின் கைவண்ணம் தான்.


நடந்து முடிந்த இந்த திடீர் கல்யாணத்திற்கு இந்த சடங்கெல்லாம் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று இனியன் எவ்வளவோ கூறியும் கேட்காமல் இன்றே வைத்துவிட்டனர் பெரியோர்கள்.


கையில் பால் சொம்புடன் அமைதியே திருவுருவாய் நடந்து வந்த அழகி, கையிலிருந்த பால் செம்பை இனியனிடம் தந்தவள், தன் சேலையில் மறைத்து வைத்திருந்த ஹார்லிக்ஸ் குட்டி பாக்கெட்டைப் பிரித்து அந்த பாலில் கலந்து, இனியனின் அருகில் அமர்ந்துக் குடிக்க ஆரம்பித்தாள்.


அவளையே புரியாமல் பார்திருந்தவன், "மேடம் என்ன செய்றீங்க??" என்றான் சிரித்தவாறே.


"எனக்கு பால் பிடிக்காது… அதான் ஹார்லிக்ஸ் கலந்து குடிக்கிறேன்…"


"அதுல பாதி புருஷனுக்கும் தரணும்.. தெரியுமா?? இந்த சினிமாலாம் பார்த்ததில்லையா??" என்றவன். அவனாகவே, "உனக்கு தான் ஷின்ஷான் பார்க்கவே டயம் கரெக்ட்டா இருக்குமே" என்றான்.


"ரொம்ப ஒட்டாதீங்க இனியன்… ஜஸ்ட் மிஸ் .. இல்லனா நா இப்போ மிசஸ் ராஜனாகி இருப்பேன்.." என்றாள் எங்கோப் பார்த்தவாறு.


"அப்படி நடக்க நா விட்டிருப்பேனா அழகி.. மண்டபத்துக்குள்ள புகுந்து தூக்கியிருக்க மாட்டேன்…"


"ம்கூம்…"


"அழகி! கோபமா?"


"லைட்டா.."


"அன்னைக்கு நான் .. நீ என்ன நினைக்குறன்னு தெரிஞ்சும் பேசாம இருந்தற்காவா??"


"ம்ம்ம்ம்.."


"சாரிடா… என் வேலை அப்படி.. அண்டர்கவர்ல இருக்குறப்போ வெளிய யார்கிட்டயும் சொல்லக் கூடாது… அதான் என்னால அப்போ பேச முடியல.. அப்பவும் நா சொல்லலாம்னு வந்தேன் அதுக்குள்ள ராஜன் முந்திக்கிட்டான்…"


"ராஜன் பாவம்...''


" அவன் பண்ணினது தப்பு.. இதுல என்ன பாவம் பாக்குற… அவங்க பண்ணிக்கிட்டு இருந்து இல்லீகல் ட்ரக் ட்ராபிக்கிங்.. அழகி… எத்தனை பேரு இதனால் அவங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறாங்கன்னு தெரியுமா?? கூண்டோடத் தூக்கியாச்சு… இன்னும் அந்த எஸ்கேவையும், பிளாக் ஸ்பார்க்கையும் பிடிச்சிட்டா போதும்.. டோட்டல் சாப்டரும் க்ளோஸ்…" என்றவன்,


"ஆமா, நா போலீஸ்னு தெரிஞ்சதும் ஷாக் ஆகிட்டியா நீ.." என்றான் உல்லாசமாக கட்டிலில் சாய்ந்தமர்ந்தபடி.


"ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்திற்கு போய் யாராவது திரும்ப ஷாக் ஆவாங்களா இனியன்...??"


"வாட்?? ஏற்கனவே தெரியுமா?? எப்படி??" உச்சப்பட்ட அதிர்ச்சி இனியனின் குரலில்.


"அன்னைக்கு பூளியம்பூ பறிச்சு தந்துட்டு என்னைத் திட்டிட்டு போனீங்களே… அன்னைக்கே மருது எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டான். அவனும் இத்தனை நாள் போலீஸ் வேலைல இருந்து நின்னுட்டதா தான் சொல்லி ஏமாத்திட்டான் பக்கி.. என் கைல சிக்கட்டும் இருக்கு அவனுக்கு...அப்புறம் நாம சென்னைல உங்க வீட்டுக்கு போனோம்ல... அப்போ, தலைலயிருந்த கொண்டைய மறந்த மாதிரி .. நீங்க உங்க ரூம்ல போலீஸ் ட்ரஸ்சோட இருந்த ஆறடி போட்டோவை மறைக்க மறந்துட்டிங்க… நா பார்த்துட்டேன்" என்றாள் சிரித்துக்கொண்டே.


"சே! அப்போ எனக்கு தான் திலுவாளே மொமெண்ட்டா… ஆமா, மேடம் எப்போ ராஜன் வீட்டுல கேமரா பிக்ஸ் பண்ணுனீங்க??"


"நீங்க ஏன் ராஜன் வீட்டுக்கு போனேன்னு கேட்டீங்களே அன்னைக்குத் தான் பண்ணேன்..ஆனா பாக்ஸ்ல எப்படி அந்த போதை மருந்து வந்துச்சு… நீங்க ஏதும் வச்சிங்களா இனியன்??" என்றாள் சந்தேகமாய்.


"சே! அந்த கேடுகெட்ட வேலையெல்லாம் நா பண்ணவேமாட்டேன் அழகி… ராஜன் வீட்டில போதைப் பொருள் இருக்குறதா தகவல் வந்துச்சு.. அதான் செக் பண்ணினோம் இருந்துச்சு.. அரெஸ்ட் பண்ணியாச்சு… ஆக்சுவலி அவனையும் SK கேங் கூடத்தான் போட நினச்சோம்.. ஆனா, அவனோட பேரு எங்கேயும் வெளியே வராத மாதிரி பார்திருந்திருக்கான் அவன்.. நேத்து நயிட்டே அவங்க சரக்கு கப்பல்ல டன் கணக்குல கொக்கின் சிக்கியிருக்கு.."


"ஓ…" என்று யோசித்தவளை நெருங்கியவன்,


"உன்னை விட்டா நீ யோசிச்சு.. யோசிச்சு.. கேள்வியா கேட்டு டயம் வேஸ்ட் பண்ணுவ.. இந்த டெக்கரேஷன் எல்லாம் வெஸ்ட்டா போகும்.." என்றவன் மெல்ல அவள் முகம் நோக்கி குனிய,


"போடா பனைமரம்.." என்று வெட்கச்சிரிப்புடன் சினிக்கினாள் அழகி.


"என்னது.. டாவா.. இரு வரேன்.." என்றவன் மேலும் அவள் இதழ் நோக்கி நெருங்கினான்.





படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம்-19


"அழகிமா!! எழும்புடா… எனக்கு டியூட்டிக்கு டயம் ஆச்சு... எழுந்து இந்த காபியை மட்டும் குடிச்சிட்டு தூங்குவியாம்…" என்று கையில் காபி டம்பளருடன் அழகியை எழுப்பிக் கொண்டிருந்தான் டிப் டாப்பாக போலீஸ் உடையில் கிளம்பி நின்ற இனியன்.


திருமணமான இந்த ஒருமாதக் காலமாக இது தினமும் நடக்கும் சம்பவம் தான் என்றாலும் சலிக்காமல் அழகிக்கு காலைக் காபி போட்டுத் தருவது முதல் மதியம் உணவு சமைத்து வைப்பது வரை தினமும் இனியன் தான் எல்லாம் செய்து வருகிறான்.


சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு மாற்றலாகி இருந்தான் இனியன். இன்று முக்கியமான மீட்டிங் ஒன்றிற்கு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நேற்று இரவு தூங்கவதற்கு முன் சொல்லிவிட்டுத் தான் படுத்தான்.


இருந்தாலும், எனக்கு எல்லா நாளும் ஒரே நாள் தானென்று ஒன்பது மணிவரையிலும் தூங்கிக் கொண்டிருக்கிறாள் அழகி. இதை மட்டும் மரகதம் பாட்டிப் பார்த்தார்!! அவ்வளவு தான்!! அழகியைப் பிரித்து மேய்ந்திடுவார்.


இனியனின் குரலுக்கு ஒருவாறு செவிமடுத்தவள், கைகளைக் காற்றிலேக் கைகளால் துழாவி டம்பளர் எங்கே என்று தேடியவள், ஒருவழியாக அதைக் கண்டுபிடித்து குடிப்பதற்காக வாயருகே கொண்டுச் செல்ல..


இனியனோ, " இன்னும் பிரஷ் பண்ணல" என்றான் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக.


"கொடுமைப் படுத்துறப் பனைமரம்…" என்று புலம்பியப்படியேக் கண்களைத் திறக்காமல் எழுந்துச் சென்றவள், அதே நிலையில் பல் துலக்கிவிட்டு முகத்தைப் பட்டும்படாமல் கழுவிக்கொண்டு வந்தாள். அப்போதும் கண்களை மட்டும் திறக்கவேயில்லை. கண்களைத் திறந்தால் தான் தூக்கம் கலைந்துவிடுமே!! பிறகு எப்படித் திரும்பப் படுத்து உறங்க முடியும்?? அதனால் தான் அழகி கண்களைத் திறப்பதேயில்லை தூக்கம் களைகின்ற வரையில். அவளாகப் பார்த்து ஒரு பதினொன்று மணியைப் போல் மெல்ல எழுவாள்.


இன்றும் அதேப்போல் கண்களை மூடிக்கொண்டேக் காபியை அருந்தியவள் மீண்டும் படுத்து உறங்கிவிட்டாள்.


இனியன் சோபாவில் அமர்ந்து ஷூவைப் மாட்டிக்கொண்டிருக்க, தன் முன்னே நிழலாடுவதை உணர்ந்து நிமிந்தவனின் முன்பு இரவு உடையுடன், தலைக் கலைந்து, இப்போது தான் தூக்கம் விழித்ததினால் முகம் லேசாக வீங்கியிருக்க… பார்ப்பதற்கே ஓவியம் போல் அவ்வளவு அழகாக காட்சியளித்தாள் அழகி, இனியனின் கண்களுக்கு.


"சார் இன்னும் நா ஆசைப்படுற அந்த ஒரு விஷயத்தை பண்ணவே இல்லையே..." என்றவளது கைகளைப் பற்றிக் கட்டியணைத்தவன், " அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் அதை பண்ணுவேன். ஆமா, எப்படி அழகி இவ்வளவு அழகா இருக்க? அதுவும், உன்மேல மட்டுமிருந்து வர இந்த புதுவிதமான வாசனை… ப்பா… ஆளை மயக்குது.." என்று கூறியப்படியே வாசம் பிடித்தவனிடமிருந்து விலக்கியவள்,


"வாசனையா?? இருக்காதா பின்னே! இன்ஸ்டாக்கிராம்ல ஸ்பெஷல்லா கஷ்டமைஸ் பண்ணி வாங்கின பாடிலோஷன் போட்டிருக்கேன்.." என்றவளைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டான் இனியன்.


"இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமா??" என்ற அழகியின் கேள்விக்கு தெரியாது என்பதைப் போல் தலையசைத்தான் இனியன்.


"அதானே! நார்மல்லா கல்யாணம் ஆகி இருந்தாலே கல்யாண நாளை மறந்துடுவாங்க… நீங்க தான் ஸ்பீட் கல்யாணம் பண்ணுனீங்களே.. எப்படி ஞாபகம் இருக்கும்.." என்றவளின் கூற்றில் குழம்பிய இனியனோ,


"இதை நா கல்யாண நாளை மறந்தா தானே சொல்லணும் நீ??" என்றான் புரியாமல்.


"இன்னைக்குத் தான் நம்ம கல்யாண நாள்!!" என்றாள் அவளும் நிதானமாக.


"வாட்??? இன்னும் ஒரு மாசம் கூட முடியலை.. எப்படி கல்யாண நாள்??"


"இன்னைக்கு நம்ம ஃப்ரஸ்ட் மந்த் அனிவெர்சரி இனியன். இந்த நாளை சிறப்பா கொண்டாட உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.. சோ, இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுங்க " என்றவளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தவன்,


" ஹாப்பி அனிவெர்சரி பேபி… கண்டிப்பா சீக்கிரம் வந்திடுவேன்…" என்று கூறித் தன் புல்லட்டை எடுக்கொண்டு கிளம்பினான்.


*******************************


ஆலங்குடி டி.எஸ்.பி அலுவலகம்,

"இந்த அவசர மீட்டிங் எதற்காகன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்… டெல்லில இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த இருபது பேரில் நான்கு பேர் மிஸ்ஸிங். அதுவும் திருமயம் கிட்ட தான் காணாம போயிருக்காங்க. இது மட்டுமில்லாம இதற்கு முன்பும் அதே இடத்துல மூன்று பேரு மிஸ்ஸிங்ன்னு கேஸ் பைல் ஆகி இருக்கு. அதுல ரெண்டு பேரு வட இந்தியர்கள், ஒரு உள்ளூர் ஆள்.. இதைப் பற்றி விசாரிக்கச் சொல்லி நம்ம அமிழ்தினியன் கிட்ட சொல்லி இருந்தேன்… இனி மத்த விபரங்களை அவரே உங்ககிட்ட சொல்லுவார்" என்றார் சென்னை டி.ஐ. ஜி சுந்தரலிங்கம் காணொளி அழைப்பு வாயிலாக.


சுந்தரலிங்கம் பேசி முடிக்கவும், எழுந்த நின்று பேச ஆரம்பித்தான் இனியன்.


"ஹாய் கைஸ், சார் சொன்ன மாதிரி திருமயம் பக்கத்துல நாலு பேரு மிஸ்ஸிங்.. அதுல ரெண்டு பேரு பெண்கள், ரெண்டு பேரு ஆண்கள். அதே இடத்துல இதுக்கு முன்னாடி மூணு கேஸ் பதிவாகி இருக்கு… அதுல 2 பேரு வடநாட்டு ஆளுங்க.. ரெண்டு பேரும் ஆண்கள் தான்.. ஒரு பொண்ணு.. லோக்கல் ஏரியாவைச் சேர்ந்தவங்க.


இந்த கேஸைக் கிலோஸா வாட்ச் பண்ணிப் பார்த்தப்பத் தான்... நமக்கு ஒரே க்ளு கிடைச்சியிருக்கு.. காணாமல் போன இந்த ஏழு பேருல ஆறு பேரோட ரத்தவகையும் ஒரே ரத்தவகை. அதாவது AB(-ve)... இது ரொம்பவே அரிதான ரத்தவகை. இந்தியால 167 பேருல ஒரு நபருக்கு தான் இந்த வகை ரத்தம் இருக்கும்.


ஒருவேளை காணாமல் போன இந்த ஏழுப் பேரையும் அவங்களோட உடல் உறுப்புகளுக்காக யாராவதுக் கடத்தி இருக்கலாம்.


இது எல்லாம் என்னோட யுகம் தான்.. இப்படியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.


இந்த மாதிரி அறிய ரத்தவகையைச் சார்ந்த உடல் உறுப்புகளுக்களை விற்பதற்காகவே டார்க் வெப்ன்னு சொல்லப்படுற இடத்துல பல விதமான வெப்சைட்ஸ் இருக்கு. அதுல யார் வேணும்னாலும் யாருக்கூட வேணும்னாலும் டீல் பேசிக்கலாம். ஆனா, அவங்க யார்கிட்ட பேசுறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. பொருள் மட்டும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்திடும்.


போலீஸ் நம்மளாலும் அவங்க யாரையும் ட்ரெஸ்சும் பண்ண முடியாது.. சாதாரணமா நம்ம பயன்படுத்துற வெப்சைட்ல … எந்த நபர் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட்டிருக்காங்கன்னு அவங்களோட EMI நம்பர் வச்சோ இல்ல IP அட்ரஸ் வச்சோ கண்டுப்பிடிச்சிடலாம். ஆனா, இந்த மாதிரியான டார்க்வெப்பை பயன்படுத்துறவங்க டார்ன்னு ஒரு ஆப் மூலம் தான் டார்க்வெப் குள்ளப் போவாங்க.


நம்ம பயன்படுத்துற இன்டர்நெட்க்கு எப்படி கூகுள் முழியமா நாம போறோமோ … அதேப் போலத் தான் டார்க்வெப்க்கு டார் ஆப்.


இந்த டார்க்வெப்ல சட்டத்துக்கு புறம்பான பல தொழில்களைச் செய்றாங்க… அதற்கு அவங்களுக்குள்ள நடக்குற பணப்பரிவர்த்தனையை வச்சி பேங்க் டீடெயில்ஸ் கண்டுப்பிடிக்கலாம்னு பார்த்தால்…


அவங்க பரிவர்த்தனைகளைப் பணமா செய்யமா க்ரிப்டோ கரன்ஸி முழியமாக.. அதாவது பிட் காயின்ஸ் முழியமா பண்ணுறாங்க… இந்த பிட் காயின்ஸை யாரு யாருக்கு அனுப்பி இருக்காங்கன்னு எந்த டீடெயில்ஸ்சும் கண்டுப்பிடிக்க முடியாது.. அதுவொரு அடடேட் அட்வாண்டேஜ் இவர்களுக்கு.


நம்ம அரெஸ்ட் பண்ணியிருக்கும் SK கேங்கும் அவங்களோட முக்கியமான டீலிங் எல்லாம் டார்க் வெப் முழியாமத் தான் செய்தாங்க. எனக்கு இந்த டார்க் வெப் பற்றியும், ஹேக்கிங் பற்றியும் கொஞ்சம் தெரியும்.. அதை வச்சி அவங்களை ட்ராக் பண்ணேன். பட் இந்த கேஸ்ல நம்ம அப்போனேன்ட் யாருன்னு தெரியல.. சோ, இப்போ நம்மளோட முதல் வேலை யாரு இதை செய்திருப்பாங்கன்னு கண்டுபிடிக்கிறது தான்.. " என்று விளக்கமாக இனியன் கூறி முடிக்கவும்,


"வெல்டன் யங் மேன்.. கிரேட் ஒர்க்.. இந்த கேஸை சம்பந்தமா உங்களுக்கு எந்த டீடெயில்ஸ் வேணும்னாலும் கேளுங்க நம்ம டீம் முழுசா உங்களுக்கு உதவி செய்ய ரெடியா இருக்காங்க" என்றார் சுந்தரலிங்கம்.


"எஸ் சார்! சுற்றுலா வந்த அந்த இருபது பேரோட மொத்த டீடெயில்ஸ் அண்ட் அவங்க எந்த ஏஜென்சி முழியமா டூர் வந்தாங்க என்கிற விபரம் வேணும்.. அதேப்போல இதற்கு முன் காணாமல் போன அந்த மூன்று பேரோட ஃபுல் டீடெயில்ஸ்சும் வேணும்…" என்றான் இனியன்.


"நீங்க கேட்ட எல்லா டீடெயில்ஸ்சும்… இன்னைக்கு ஈவினிங்குள்ள உங்கக் கைக்கு வந்துச் சேரும் அமிழ்தினியன்… நீங்க ஃபர்தர் இன்வெஸ்டிக்கேஷனை ஸ்டார்ட் பண்ணுங்க" என்றார் சுந்தரலிங்கம்.


அதன் பிறகு வேலையில் மூழ்கியவன்.. அவன் கேட்ட விபரங்கள் வந்தவுடன் அதை தீவிரமாக அலசி ஆராய்ந்ததில் அழகி இன்று சீக்கிரமாக வரச் சொன்னதை அறவே மறந்துவிட்டான்.


அனைத்து விபரக் கோப்புகளையும் பார்த்து ஆராய்ந்து முடிக்க இரவு பன்னிரண்டு மணிக்கும் மேல் ஆகிவிட, அதன் பிறகு தான் அங்கிருந்து கிளம்பினான்.


இனியன் வீட்டை அடையும் போது மணி நள்ளிரவு இரண்டு. தன்னிடம் இருக்கும் மாற்றுச் சாவியைக் கொண்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றவன், திகைத்து நின்றான். அங்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களைக். கண்டு.


வீடெங்கும் பலூன்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்ததைக் கண்டதும் தான் அழகி இன்று சீக்கிரம் வீட்டிற்கு வர சொல்லியதே இனியனின் நினைவில் வந்தது.


"காட்… இதை எப்படி மறந்தேன்.. இப்போ அழகியை என்னச் சொல்லி சமாதானம் செய்றதுன்னு தெரியலையே.." என்று மனதோடு புலம்பியவனின் கவனத்தை ஈர்த்தது டைனிங் டேபிளில் மீதிருந்த அந்த காகிதம்.


மெல்ல அதை எடுத்தவன், அதில் எழுதி இருந்ததைப் பார்வையிட்டான்.


'இதுதான் உங்க சீக்கிரமா இனியன்?? நா எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணேன் தெரியுமா?? சரி, அதை விடுங்க… பிரீட்ஜ்ல சாப்பாடு வச்சி இருக்கேன்.. சூடு பண்ணிச் சாப்பிடுங்க… ஸ்கின் அலர்ஜிக்காக டேப்லெட் போட்டு இருக்கேன்.. அதுல தூக்க மாத்திரையும் இருக்கு.. சோ, நீங்க வரதுக்குள்ள நா தூங்கினாலும் தூங்கிடுவேன்.. அதான் இந்த பேப்பர்ல எழுதி வச்சிட்டேன்' அந்த காகிதத்தில் இருந்தப் படியே அழகி சமைத்து வைத்திருந்தவற்றை சூடுப் பண்ணி சாப்பிட்டவன், மெல்ல அறைக்குள் சென்று உறங்கிக் கொண்டிருக்கும் அழகியின் முன் அமர்ந்து,


"சாரிடா அழகிமா!! நீ இவ்வளவு ஏற்பாடு பண்ணியிருக்க.. எல்லாம் என்னால வேஸ்ட் ஆகிடுச்சு… ரியலி சாரிடா" என்று அமைதியாக அழகியின் கைகளைப் பற்றியவாறு கூறிக் கொண்டிருந்தான் இனியன்.


ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அழகியோ, இனியன் வந்தமரும் அரவம் கேட்டு விழித்தவள்,


"வந்துட்டீங்களா??" என்றாள் குழறலாக மாத்திரையின் வீரியத்தில்.


"சாரிடா!!" என்று ஏதோ கூற வந்தவனை இடைமரித்தவள்,


"சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேன்ல… மறந்துட்டீங்களா??" என்று மறுக்கேள்வி கேட்டப் படியே எழுந்தமர்ந்தாள்.


"ஹால்ல டெக்கரேஷன்ஸ் எல்லாம் பார்த்தேன்டா… என்னால தான் இந்த சர்ப்ரைஸ் எல்லாம் வினாகிடுச்சுல.." என்றான் வருத்தமாக.


"உங்களுக்கு நிறைய வேலை இருந்திருக்கும்.. என்னால புரிஞ்சுக்க முடியுது இனியன்.. ஆனா, சர்ப்ரைஸ் அதில்லை…" என்று புதிர் போட்டாள் அழகி.


"இது சர்ப்ரைஸ் இல்லைனா … வேற என்ன??" என்று குழப்பத்துடன் கேட்ட இனியனுக்கு விடையாக தனது இடது கையின் மணிக்கட்டை திருப்பிக் காட்டினாள் அழகி.


அழகி காட்டிய இடத்தைப் பார்த்ததும் அதிரிந்தவன், "லூசாடி நீ!! என்ன பண்ணி வச்சிருக்க…" என்றான் அதிரிந்தக் குரலில்.


இனியன் இப்படி அதிரும் அளவிற்கு அப்படி என்னத்தான் இருந்ததாம் அழகி காட்டிய இடத்தில்??


அழகியின் மணிக்கட்டுப் பகுதியில் முடிவிலி வடிவில் அழகி மற்றும் இனியனின் பெயர்கள் இணைத்து அழகாக பச்சைக் குத்தப்பட்டிருப்பதைக் கண்டுத் தான் இனியன் அதிர்ந்து நிற்கிறான்.


"இந்த டாட்டூ தான் … நம்ம அனிவெர்சரி சர்ப்ரைஸ் உங்களுக்காக… எனக்கு உங்க மேல இருக்குற காதலும் இந்த இன்பினிட்டி சிம்பல் மாதிரி தான்.. வரையறுக்க முடியாதது இனியன்! நீங்க உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லுங்க … நா இப்போவே சொல்லுறேன் … ஐ லவ் யூ இனியன்" என்றாள் அழகி, இனியனை அணைத்தவாறு.


பேச்சற்ற நிலை என்பார்களே அது இதுதானா?? என்பது போல் பேசுவதற்கு வார்த்தைகள் அற்று நின்றிருந்தான் இனியன்,அழகியின் காதலின் முன்.


"ஏன் அழகி இப்படி… ரொம்ப வலிக்குமே… இப்போ இந்த டாட்டூ ரொம்ப அவசியம் பாரு…" என்று கடிந்துக்கொண்டவன், மெல்ல மலரினும் மென்மையாக அவள் கைகளை வருடிக் கொடுத்தான்.


"இன்னைக்கு ஒரு புக்ல ஒரு விஷயம் படிச்சேன் இனியன். நாம இறந்த பிறகு எதுவுமே நம்ம கூட வராதாம்… ஈவன் தாலிக்கூட வராதாம். ஆனா, இப்போ பாருங்க! நானே இல்லன்னா கூட நீங்க என் கூடவே இருப்பீங்கல … எப்பவும்… அதான் உங்க பேரை டாட்டூ போட்டுட்டேன். ஆனா, டாட்டூல கூட உங்களை தனியா விட மனசு வரல.. சோ.. என் பேரையும் உங்க பேரோட சேர்த்து போட்டுட்டேன்…" என்று சிரித்துக்கொண்டே கூறியவளை கலங்கிய விழிகளுடன் பார்த்தவன், அவளது நெற்றியில் முத்தமிட்டான்.


அப்படியே சற்றுக் கீழே பயணித்தவன், அழகியின் முக்குடன் மூக்கை உரசியவாறு, " அழகி! உன்னோட இந்த தன்னலமில்லா காதலுக்கு நா தகுதியானவன் தானான்னு எனக்கு உண்மையாவே புரியலை.. ஆனாலும் என் அடிமனசுல இருந்து இந்த நிமிஷம் சொல்லுறேன் அழகி.. இனி வாழப்போற நம்ம
வாழ்க்கை முழுக்க.. உன்னை எங்கேயும் எப்பவும் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன் , கஷ்டப்படுத்தவும் மாட்டேன்டா.. " என்று கூறிக்கொண்டே, இன்னும் சிறிது கீழே வந்தவன் அழகியின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, "ஐ லவ் யூ அழகி!!" என்றான் இனியன் மென்மையான குரலுடன்.


முத்தமிட்ட இனியனின் இதழ்களில் ஏதோ பிசுபிசுப்பு உணர்வு தோன்ற.. தனது இதழ்களைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி, " உதட்டைப் போட்டு ரொம்ப தேய்க்காதீங்க... அது நா முகத்துல போட்டிருந்த பேஸ் சீரம் தான்.. பயப்படாதீங்க.." என்றவள், இனியனிடம் டிஸு பேப்பரைக் கொடுத்து துடைத்துக்கொள்ளச் சொன்னாள்.
அழகி கொடுத்த டிஸுப் பேப்பரை வங்கியவன், அவளைப் பார்த்தவாறே தனது இதழ்களைத் துடைத்துக் கொண்டான்.
 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 20


என்றும் இல்லாத அதிசயமாக தனக்கு முன்பே எழுந்து வீட்டில் அத்தனை வேலைகளையும் பொறுப்பாக செய்து வைத்திருக்கும் அழகியை ஆச்சரியமாகப் பாத்துக்கொண்டிருந்தான் இனியன்.

"என்ன ரொமான்டிக் லுக் எல்லாம் விடுறீங்க…" என்றாள் அழகி ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்று தலைவாரியப் படியே.

"இவ்வளவு சீக்கிரம் எழுந்து வேலையெல்லாம் முடிச்சு இருக்கியே அதான் ஆச்சரியமா இருக்கு.. அதுவுமில்லாம இவ்வளவு மேக்கப் பண்ணிட்டு போய் யாரைப் பயமுறுத்தப் போறீயோ.." என்றவனை நோக்கி கையிலிருந்த சீப்பை வீசியவள்,

" இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது.. பத்மா ஊருல இருந்து வந்துட்டா.. கல்யாணத்துக்கு எதுக்கு வரலைன்னு கேட்க அவளைப் பார்க்க போறேன் இனியன்! ரொம்ப பிஸி ஆகிட்டாங்க மேடம்… இருக்கு அவளுக்கு இன்னுக்கு…" என்றவள் தனது அலங்காரங்களை முடித்துக்கொண்டு கல்யாணத்திற்கு வராமல், முக்கிய வேலை என்று சாக்கு சொல்லிச் சென்ற பத்மாவைப் படுத்தி எடுக்கத் தான் அழகி என்னும் புயல் கிளம்பி, இனியனிடம் சொல்லிவிட்டு பத்மாவின் வீட்டை நோக்கி சென்றது.

பத்மாவின் வீட்டிற்கு வழக்கமாக செல்லும் வழியைத் தவிர்த்து வேறு வழியாக செல்ல வேண்டும் என்று ஏனோ அழகிக்கு தோன்ற, அதன் படியே எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றாள் அவள்.

சிறுது தூரம் செல்லும் வரை அமைதியாக இருந்த அந்த இடம்… ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் ஏதோ வித்யாசமாக தோன்ற.. தனது நடையில் வேகத்தை குறைத்தவள் மெல்ல தன்னைச் சுற்றிக் கவனிக்க ஆரம்பித்தாள்.

எங்கிருந்தோ இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் மட்டும் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி எவ்வித ஓசையும் எழுப்பாமல் மெல்லச் சென்ற அழகி, அங்கு நின்றிருந்த இருவர் பேசிக்கொண்டிருந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ந்தாள்.

வந்தத் தடயம் சிறிதுமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவள், நேரே சென்றது எம்.எல்.ஏ அருணாச்சலத்தின் பண்ணை வீட்டிற்கு பின்புறமிருக்கும் அவருக்குச் சொந்தமான கோடவுனிற்குத் தான்.

அருணாச்சலத்தின் கோடவுனில் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மயக்க நிலையில் இருப்பதை அந்த இரண்டு நபர்களும் பார்த்ததாக தங்களுக்குள் பேசிக்கொள்வதைக் மறைந்திருந்து கேட்ட அழகியிற்கோ, தான் ஒரு போலீஸ்காரரின் மனைவி.. வீரப்புலி… அந்த பத்து பேரையும் விடுவித்தப் பிறகே தனக்கு ஓய்வு… என்று உறுதி ஏற்றவள், நியாபகமாக அன்று பேய்களைப் படம் பிடிப்பதற்காக விளையாட்டுத் தனமாக தான் பொருத்திய கேமராவில் பதிவாகி இருப்பதைப் பார்ப்பதற்கான இணைப்பையும் அதற்கான கடவுச்சொல்லையும் இனியனின் அலைபேசியிற்கு அனுப்பியவள், தான் செல்லும் கோடவுனிற்கு விரைவாக வரும்படி இனியன், சந்தோஷ், மருது மூவருக்கும் தனித்தனியாக குறுந்செய்தியையும் அனுப்பிவிட்டு, தனது மீட்புப் பணியைச் செய்வதற்காகச் சென்றாள் அழகி.

யாரும் அறியா வண்ணம் மெல்ல அந்த கோடவுனிற்குச் சென்றவள், முதலில் அங்கு சிசிடிவி கேமரா போல் எதுவும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அப்படி எதுவும் அங்கில்லை என்று உறுதி செய்துக்கொண்டாள். பின், அங்கு படுக்கையில் மயக்க நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்த பன்னிரண்டு நபர்களையும் அதிர்ந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகிலிருந்த நபரிடம் அசைவு தெரியவும் அவரிடம் சென்று, அவரைத் தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் அழகி.

ஆனால், தான் எப்படி இவ்வளவு சுலபமாக உள்ளே வந்தோம்?? இப்படி கடத்தல் செய்கிறவர்கள் குறைந்தப்பட்ச பாதுக்காப்புக் கூட இல்லாமல்லா இருப்பார்கள் என்பதை யோசிக்கத் தவறிவிட்டாள்.

****************************

"மருது!! காணாமல் போன அந்த லோகல் பொண்ணைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன்னே என்ன ஆச்சு ??"

"அது லவ் மேட்டர்… அந்தப் பொண்ணு ஒடிப்போய்டான்னுச் சொல்லி கேஸைக் கிளோஸ் பண்ணிடாங்க இனியா!! அந்தப் பொண்ணோட அப்பா அம்மா தான் அதை நம்பாம இன்னும் கேஸை ஆழமா விசாரிக்கச் சொல்லி மினிஸ்டர் முழியமா ரெகமெண்ட் பண்ணியிருக்காங்க…"

"இதே வேலையாப் போச்சு… எப்போ பார்த்தாலும், எந்த பிரச்சனையா இருந்தாலும் குற்றவாளி யாருன்னுத் தேடுறதை விட்டுட்டு… பாதிக்கப்பட்ட பொண்ணோட கேரக்டரைத் தப்பா வெளியே பரப்பிவிடுறது. இந்த மாதிரியான ஆட்களெல்லாம் ஏன் டிபார்ட்மெண்டல இருக்காங்களோ…" என்று எரிச்சலுடன் கூறிய இனியனை நோக்கி ,

" அந்த டூர் வந்த இருபது பேரைப் பத்தி நீ என்ன நினைக்கிற இனியா! நான் அவங்க கிட்ட விசாரித்த வரை… அவங்க எல்லாருமே ஸ்ரேஞ்சர்ஸ் தான்… எதோ ஜீகோ ஸ்டார்ஸ்னு ஒரு புது ஏஜென்சி முழியமாக தான் இவங்க டூர் வந்திருக்கிறாங்க" என்றான் மருது.

"அதே ஜீகோ ஸ்டார்ஸ் ஏஜென்சி முழியமா தான்… அந்த இரண்டு பேர் காணமல் போன டீம்மும் வந்திருக்காங்க… நா தேடிப் பார்த்ததுல , உண்மையில் அப்படி ஒரு ஏஜென்சியே இல்லை… எல்லாமே ஃபேக் டாக்குமெண்ட்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டது. ஈவன் அவங்க வந்த வண்டிக் கூட பொய்யானது தான் மருது! என் சந்தேகம் முழுசும் SK காங் மேலத் தான் திரும்புது…" என்று இனியன் தன் சந்தேகத்தைக் கூறவும், சரியாக அதேநேரம் அங்கு வந்த காவலாளி, யாரோ சந்தோஷ் என்பவர் இனியனைக் காண வந்திருப்பதாக கூற, அவனை உள்ளே அனுப்பும்படி கூறினான் இனியன்.

உட்சகட்டப் பதற்றத்துடன் அறையினுள் நுழைந்த சந்தோஷ், "உங்க ரெண்டு பேரோடு ஃபோனும் என்னாச்சு??" என்றான் வந்ததும் வராததுமாக.

"ஒரு கேஸ் டிஸ்கஷன்ல இருந்தோம் சந்தோஷ். அதான் ஃபோனைச் சைலண்ட்ல போட்டுட்டோம்… ஏதும் முக்கியமான விஷயமா!! ஏன் இவ்வளவு பதற்றமாயிருக்க??" என்றான் இனியன்.

" முதல்ல நீங்க ரெண்டுப் பேரும் உங்க ஃபோனைப் பாருங்க" என்று படப்படப்பாய் கூறியவனை யோசனையுடன் பார்த்தவாறு தங்களது அலைபேசியை எடுத்தவர்கள், அழகியிடமிருந்து வந்திருந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்து நின்றனர்.

"இவளுக்கு மனசுக்குள்ள பெரிய ஜான்சி ராணின்னு நினைப்பு.. இப்போ எங்கே இருக்கா!! அங்க மாமாவீட்ல இருக்காளா?? பைத்தியம் அவனுங்க பேசுவது உண்மையா இல்லையான்னு தெரியாம… லூசு! லூசு! " என்று வாய்விட்டேப் புலம்பியவன், ' அழகி அவள் வீட்டில் பத்திரமாகத் தான் இருக்கிறாள்' என்று தனக்குத் தானே உருப்போட்டுக் கொண்டான்.

"மருது!! நம்ம டீமை அந்த இடத்திற்கு போய் என்னவென்று பார்த்து விட்டு வரச்சொல்" என்று கூறியவன், அழகி அனுப்பியிருந்த இணைப்பினை தொடவும், அதுவோ கடவுச்சொல் கேட்க! அதையும் போட்டு விட்டு உள்நுழைவதற்காக இனியன் காத்திருக்க…

"அங்கே ஒன்னுமேயில்லை மருது. உங்க டீம் போவது வேஸ்ட் தான். அங்கே, அழகி சொன்ன மாதிரியான ஆட்களுமில்லை… அழகியுமில்லை…" என்ற சந்தோஷின் குரலைக் கேட்டு அதிர்ந்து திரும்பிய மருது,

"என்னடா சொல்லுற?? இப்போ அவ எங்க இருக்கா ??" என்றான்.

"எனக்கும் தெரியலை மருது! அழகியோட மேசேஜ் பார்த்ததும் அவ எந்த ஆபத்துலையும் சீக்கிக்க கூடாதேங்கிற பயத்துல… உடனே அங்கேப் போய் பார்த்தேன். அங்கே அழகி சொன்ன மாதிரியான கடத்தல் நடந்தற்கான அடையாளம் எதுவுமேயில்லை… அழகி எங்கேன்னு தேடினேன்… அவளையும் காணோம். உங்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லாம்னு கால் பண்ணா… நீங்க எடுக்கவேயில்லை… அதான் இங்கையே வந்துட்டேன்.

அழகி எங்கே? அவ சொன்ன அந்த மயங்கிய நிலையில் இருந்த பண்ணிரெண்டு பேர் எங்கே?? எனக்கு எதுவும் புரியல மருது… தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு… " என்று கண்ணீர் குரலில் கூறிய சந்தோஷை நோக்கி,

"ஐ திங்க் ஷி வாஸ் கிட்னாப்ட் "தன் கையிலிருந்த அலைப்பேசியைப் பார்த்தவாறே, உணர்வற்றக் குரலில் கூறிய இனியனின் கூற்றில் அதிர்ந்து, " வாட்??" என்றனர் மருதுவும் சந்தோஷும் ஒருச்சேர.

"பேசிகிட்டு இருக்க இது நேரமில்லை…" என்ற இனியன் தனது அலைபேசியிற்கு வந்திருந்தக் குறுஞ்செய்தியை அவர்களிடம் காண்பித்துவிட்டு, அடுத்து என்னச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். உள்ளுக்குள் உயிரைப் பிசைவதைப் போல் உயிர் வலி இருந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே காணப்பட்டான் இனியன்.

**************************

லேசாக மயக்கம் தெளிந்த நிலையிலிருந்த அந்த நபருக்கு முழுவதுமாக நினைவைக் கொண்டு வர எண்ணி, அவரை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்த அழகியின் செயலிற்க்கான பிரதிபலிப்பு அவரிடம் இருக்கவே செய்தது.

கூசிய கண்களைக் கசக்கியவாறே கண்விழித்தவர், தான் இருக்கும் இடம் எதுவென்று புரியாமல் நெற்றிச் சுருக்கி யோசிக்கவும் தான், தான் கடத்தப்பட்ட விஷயம் நினைவிற்கு வர, விழிகளை அந்த அறையை நோக்கி சுழல விட்டவர், தன்னருகே நின்றிருந்த அழகியைப் பார்த்துக் கத்த முயன்ற சமயம். அவர் வாய்யை கைகளால் மூடிய அழகி, 'சத்தம் போடாதீங்க' என்று உதட்டின் மீது விரல் வைத்துச் சைகைச் செய்தவள் பேசிய மொழி புரியவில்லை என்றாலும் அவளது சைகையை புரிந்துக்கொண்டவன் 'ஹு ஆர் யூ?? வொய் டிட் யூ கிடனாப்ட் அஸ்??' என்றான் ஆங்கிலத்தில்.

"ஐ அம் அழகி. ஐ வில் பி ஹியர் போர் யூ பிப்பிள் டு ஹெல்ப்" தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் 'உங்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கிறேன்' என்றவள், கட்டிலோடு சேர்ந்து கட்டிவைக்கப் பட்டிருந்த அவனின் கால்களை விடுவிக்க முயன்றுக் கொண்டிருந்தவளின் நாசியில் ஏதோ உருத்தல் ஏற்பட, அப்போது தான் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளிப்பதை உணர்ந்த அழகி, என்ன இது?? என்று யோசிக்கும் முன் உணர்வற்று மயங்கியிருந்தாள்.

மேல் நோக்கி சொருகிய விழிகளுடன் அறை மயக்க நிலையில் இருந்தவளின் முன் நின்ற மாஸ்க் அணிந்த உருவம், " புருஷன் ஒரு பக்கம் குடைச்சல் கொடுத்தா … பொண்டாட்டி இடத்தையே கண்டுப்பிடிச்சு வந்துட்டா.. இவளையும் சேர்ந்து தூக்கிட்டா.. அவன் இவளைத் தேடி அலைந்தே சாகட்டும்" என்று ஆங்கிலத்தில் சொல்ல, அதற்கு பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்தது மற்றுமொரு குரல்.

முகம் தெரியவில்லை, குரல் மட்டுமே அழகியிற்கு கேட்டது. அந்த மயக்க நிலையிலும் செவிகளைத் கூர்மையாக தீட்டி அவர்கள் உரையடைகள் கேட்டுக் கொண்டிருந்தாள் அழகி. ஒருவேளை தான் தப்பித்தோ அல்லது காப்பாற்றப்பட்டோ திரும்பி வந்தால் இந்த கயவர்களை அடையாளம் காட்ட வேண்டுமல்லவா?? அதனால் தான் தன்னால் முடிந்த மட்டும் தன்னை விழிப்புடன் வைத்துக்கொள்ள முயன்றாள் அழகி.

"அவ மேல கைவைக்க என்ன தைரியம்! இதுக்கு நா ஒத்துக்கவே மாட்டேன்.. அந்த இனியன் கூட மோதனும்னா… அவனை தான் நாம அடிக்கணும்.. இங்க அடிச்சா அங்க வலிக்கும்ங்கிற கதையெல்லாம் இங்க வேண்டாம்" என்ற அந்த இன்னும் ஒருவனின் பேச்சு மாஸ்க் காரனுக்குப் பிடிக்கவில்லைப் போலும்.

"சோ, நௌ யூ கிரௌன் அப் வெரி வெல்.. ரைட்?? அதான்.. யார் உன்னை வளர்த்து விட்டங்களோ அவங்க கிட்டையே எதிர்த்துப் பேசுற??" என்றான் மாஸ்க் காரன் வஞ்சினத்துடன்.

"வேற எதை வேணும்னாலும் பண்ணுறேன்.. ஆனா இதை.. வேண்டாமே…" என்று கூறியக் குரல் மெல்ல தேய்ந்து ஒலிக்க ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றாள் அழகி.

அதன்பிறகு அங்கிருந்த அனைவரையும் , அழகி உட்பட வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அழகி வந்ததற்கான அடையாளங்கள் எதுவுமில்லாமல் அந்த இடத்தை சுத்தம் செய்யும் படி அங்கிருந்த அடியாட்களுக்கு கட்டளையிட்டு விட்டு, தனது அலைபேசியை எடுத்த மாஸ்க் மனிதன், இனியனின் அலைபேசி எண்ணிற்கு ' நீ தொடக் கூடாத இடத்தை தொட்டுட்ட அமிழ்தினியன். இது புலி வாலைப் பிடிச்ச கதை மாதிரித் தான்… நீயே நினைச்சாலும் இனி பின்வாங்க முடியாது… இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்… இன்னும் நீ அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு… தெரிந்தோ தெரியாமலோ நீ எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க… சோ தட்… உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்… இப்போ நீ எடுத்திருக்கும் இந்த கேஸை இத்தோட நிறுத்திக்கிட்டா!! உன் உயிர் உன்கிட்ட இருக்கும். இல்லை … எனக்கு என் மக்கள் தான் முக்கியம்னு சொன்னா, நீ உன் உயிரை மறந்திட வேண்டியது தான். நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்குள்ள உன் பதிலைச் சொல்லு… இல்லை நான் என் முடிவைச் சொல்ல வேண்டி வரும். அண்ட் ஒன்மோர் திங்.. என்னையும் பிளாக் ஸ்பார்கையும் யாருன்னு கண்டுப்பிடிக்கச் சின்னப்பிள்ளை மாதிரி ஹேகிங் ட்ரை பண்ணுறீயாமே! இந்த ஹேகிங் தெரியாத குழந்தையெல்லாம் எனக்கு போட்டியான்னு பிளாக் ஸ்பார்க் ஃபில் பண்றான். சோ, முதல்ல அதை நல்லா கத்துக்கிட்டப் பிறகு எங்களை ஹேக் பண்ணலாம்… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அமிழ்தினியன் - SK" என்று நீண்டத்தொரு குறுஞ்செய்தியை அனுப்பினான் அந்த மாஸ்க் மனிதன், SK.

எஸ்கேவிடம் இருந்து வந்திருந்த இந்த குறுந்செய்தியைத் தான் இனியன் மருதுவிடமும் , சந்தோஷிடமும் காட்டியது.

 
Status
Not open for further replies.
Top