ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5


குழியினுள் விழுந்துக் கிடந்த இருவரில், முதலில் சுதாரித்துக் கொண்ட பத்மா, மெல்ல எழுந்து நின்று அந்த குழியினை சுற்றிப் பார்த்தாள். அதிகம் அழமில்லாத அதே சமயம் மத்திமமான அகலமுடைய சின்ன குழி அது. சற்று உயரமான பத்மாவே குழியினுள் இருந்து எக்கிப் பார்த்தால் தான் ரோட்டை பார்க்க முடியும். அப்படி இருக்கையில், பத்மாவின் நெஞ்சளவே இருக்கும் அழகி அந்த குழிக்குள் நின்று எவ்வளவு தூரம் எக்கிப் பார்த்தாலும், நிச்சயமாக அவளுக்கு ரோடு தெரிய வாய்ப்பே இல்லை.


அழகியை பற்றிய சிந்தனை வந்ததும் தான், அவள் எங்கே என்று திரும்பி பார்த்தாள் பத்மா.


அழகியோ எப்படி அங்கு விழுந்தாளோ அப்படியே அசையாமல் கிடப்பதை கண்ட பத்மா, பதறியப்படி அவள் அருகில் சென்று அவளை அசைத்து எழுப்ப முயன்றாள்.


அந்த அசைவில் கண் விழித்த அழகி பத்மாவைப் பார்த்து கேட்டாளே ஒரு கேள்வி, ஆடிப்போய்விட்டாள் பத்மா.


"பத்து… நாம சொர்க்கத்துல தானே இருக்கோம் இப்போ! இங்க அந்த அமிர்தம் ஜூஸ் எங்கே விற்பாங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுடி? ஒரு ரெண்டு கிளாஸ் வாங்கி குடிப்போம். வண்டி மரத்துல மோதியும் கீழே விழாம... சும்மா காத்துலையே பறந்து சொர்க்கம் வரைக்கும் வந்து இருக்கிறோம்ல அது வேற ரொம்ப டயர்டா இருக்குடி.

அப்படியே, இந்த படத்துலாம் வர மாதிரி அழகான தேவேந்திரர்கள் எல்லாம் எங்க இருப்பாங்கன்னு கொஞ்சம் கேட்டு அட்ரஸ்சை வாங்கி வைடி பத்து. போய் அவங்கள பார்க்கலாம்… நல்லா இருந்தா கொஞ்ச நேரம் சைட்டிங் அடிச்சிட்டு வரலாம். அப்புறம், முக்கியமா இங்க இருக்குற மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை போய் பார்க்கனும்டி… ரம்பை ஊர்வசிக்கு எல்லாம் போடுற மேக்கப் மாதிரி நாமளும் போட்டுக்கனும் பத்து. இல்லன்னா ஆட் ஒன் அவுட்டா நாம மட்டும் தனியா தெரிவோம்..." அழகி தான் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருந்தாள்.


பேய் முழி முழிப்பதாக சொல்வார்களே! அப்படி ஒரு முழியைத் தான் முழித்துக் கொண்டிருந்தாள் பத்மா, அழகயின் கேள்வியில்.


தனது கேள்விக்கான பதிலை தராமல் தன்னை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பத்மாவை நோக்கி, "அடியே! என்னை அப்புறம் ரசிக்கலாம். இப்போ போய் அமிர்தம் ஜூஸ்சும், மேக்கப் மேன்னும் எங்கன்னு பார்த்துவிட்டு வா..." என்றாள் அழகி ஆர்வமாக. ஆனால் அழகி பேசுகையில் அவளின் குரல், தெளிவில்லாமல் ஏதோ கனவு நிலையில் இருந்து பேசுவது போல் குழறலாகத் தான் இருந்தது.


இம்முறை சற்று நிதானித்த பத்மா, அழகியின் அருகில் சென்று அவளது கைகளைப் பிடித்து அழுத்திக் கிள்ளி… அவளை சுயநினைவிற்குக் கொண்டு வந்தாள்.


பத்மா கிள்ளியதால் ஏற்பட்ட வலியின் விளைவால், கைகளை தேய்த்தவாறு எழுந்தமர்ந்த அழகி பத்மாவை பார்த்து, "பக்கி மாடே பத்து, ஏண்டி! இப்போ என் கைய பிடிச்சு கிள்ளின?" என்றாள் காட்டமாக.


"அடடா! நீ ஏன் பேச மாட்ட அழகி, பைத்தியம் மாதிரி எதையாவது ஓ(உ)ளறிக்கிட்டு இருன்னு உன்னை எல்லாம் அப்படியே விட்டு இருக்கணும்" என்றவள் , இவ்வளவு நேரமும் அமிர்தம் ஜூஸ்சை கேட்டு அழகி செய்த ரகளைகளை எல்லாம் அவளிடம் விலாவாரியாக எடுத்துச் சொல்ல, அதைக் கேட்டு அசடு வழிந்தவாறே,


“சரி.. சரி.. அதை விடு. இப்போ என்ன பண்ணலாம்னு பாப்போம் வா. ஆமா, பத்து! சந்தோவோட புல்லட்டை பார்த்தியாடி.. என்ன நிலைமைல இருக்கு..” என்று பத்மாவிடம் கேட்டவாரே எழுந்து நின்ற அழகி, தன் காலின் கட்டை விரலை மட்டும் தரையில் படும்படி நன்றாக அழுத்தினாள். குதியங்காலை மேலே உயர்த்தி தன்னால் முடிந்த மட்டும் எக்கி நின்று எட்டிப் பார்த்தும், அவளால் அந்த குழிக்கு வெளியில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவே முடியவில்லை.


“விடு அழகி... நீ எவ்வளவு பார்த்தாலும் வெளியே ஒன்னும் தெரியாது. யாரவது அவங்களா பார்த்து வந்து நமக்கு ஹெல்ப் பண்ணினாதான் உண்டு. நீ வந்து இப்படி உக்காரு பாத்துக்கலாம்… என்ன நடக்குதுன்னு... அப்புறம், சந்தோஷ் வண்டிக்கு ஒன்னும் அவ்வளவு அடி பலமில்ல.. அது அந்த மரத்துக்கிட்டையே தான் விழுந்துக் கிடக்குது. நாம தான் ஹேர்ல பறந்து வித்தை காட்டிக்கிட்டே இந்த குழிக்குள்ள விழுந்திருக்கோம்..” என்று கூறிய பத்மாவின் நினைவலைகளில் அவர்கள் இருவரும் வண்டியில் இருந்து பறந்து வந்த காட்சி ஓட … கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் அழகியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் பத்மா.


அவளையே பார்த்துக் கொண்டிருந்த அழகி, “ நீ எதை நினைச்சு இப்படி சிரிக்கிறேன்னு... ஐ நோ டி பத்து…” என்று கூறி பத்மாவுடன் சேர்ந்து தானும் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.


அந்த குழியினுள் இருந்து எவ்வாறு வெளியே செல்வது என்று பலவிதமான யோசனைகளுக்கு பிறகு அழகியும், பத்மாவும் ஒரு முடிவிற்கு வந்தனர்.


அதை செயல் படுத்தும் வகையில், அழகி மண்டியிட்டு அமர… அவள் மீது ஏறி குழியினுலிருந்து வெளியில் சென்றாள் பத்மா. தனது துப்பட்டாவை கழற்றி குழிக்குள் போட்ட பத்மா, அதை குழிக்கு வெளியில் இருந்து இறுக்கிப் பிடிக்குக்கொள்ள... அதை பற்றிக்கொண்டு அழகியை மேலே ஏறி வரச் சொன்னாள். இது தான் அவர்களின் மாஸ்டர் பிளான். இந்த அழகான பிளானை போட்டுத் தந்தது வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம அழகி தான்.


பிளான் செய்த படியே பத்மா குழிக்குள் துப்பட்டாவை போட்டுவிட்டு அதை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நிற்க, உள்ளிருந்த அழகியும் அந்த துப்பட்டாவை கெட்டியாக பற்றிக்கொண்டு மேலே ஏறுவதற்கு முயன்றாள்.


முதல் நான்கு அடிகளை மெல்ல மெல்ல அந்த துப்பட்டாவை பற்றியவாறே ஏறியவளின் கைகள் துப்பட்டாவை விட்டு லேசாக நழுவ, ‘ஐயோ… விட்டுறக் கூடாது.. விட்டுறக் கூடாது..’ என்று பதறியே துப்பட்டாவை விட்டுவிட்ட அழகி, மீண்டும் குழிக்குள்ளேயே விழுந்தாள்.


கீழே விழுந்த அழகியே கத்தாமல் இருக்க, மேலே நின்றுக் கொண்டிருந்த பத்மாவோ, “அழகி… ஒன்னும் ஆகலைல்ல… அழகி…” என்று கத்திக் கூப்பாடு பட்டாள் . பத்மாவின் இந்த கத்தல் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மருதுவிற்குக் கேட்க சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன், கண்டதெல்லாம் விழுந்துக்கிடந்த சந்தோஷின் வண்டியயையும், அதற்குச் சற்றுத் தொலைவில் கத்திக் கொண்டிருந்த பத்மாவையும் தான்.


வண்டி விழ்ந்து கிடந்த நிலையே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்ல, மருதுவிற்கு பின்னால் அமர்ந்திருந்த அமிழ்தினியன் பத்மாவிற்கு உதவலாம் என்று எண்ணி அங்கு சென்றான். மருதுவும் அவனை பின்தொடர்ந்தான்...



அமிழ்தினியனும் , மருதுவும் பத்மாவை நோக்கி நெருங்க, மருதுவை அங்கு கண்ட நொடி அவனிடம் ஒடிவந்த பத்மா, “மாமா… மாமா … நம்ம அழகி அந்த குழிக்குள்ள மாட்டிக்கிட்டா… சிக்கிரம் வந்து காப்பாத்து மாமா…” என்றாள் பதற்றத்துடன்.


'அழகி... குழிக்குள்ள…' என்ற வார்த்தைகளை கேட்டதுமே அந்த குழியருகில் சென்றவன், என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே அழகியிடம் பேச்சுக் கொடுத்தான் அவளை இயல்பாக்கும் பொருட்டு.


ஏன்னென்றால் அளவுக்கு மீறி அழகி பதற்றப்பட்டால் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்றும், அதன் பிறகு அவள் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரக் காலம் கூட ஆகலாம் என்பது மருதுவிற்கு தெரியும். சொல்லப் போனால் சந்தோஷ், மருது, அழகியின் தந்தை வேலுசாமி இவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.


மருது அழகியிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருக்க, சற்றும் தாமதிக்காமல் அந்த குழிக்குள் இறங்கிய இனியன், அழகியின் இடையைப் பற்றி மேலே தூக்கி, மேலே நின்றிருந்த மருதுவின் கைகளை பற்றிக்கொண்டு மேலே செல்லுமாறு அழகியிடம் கூறினான்.


அழகியும் அவன் சொன்னதைப் போல் செய்து மேலேற, அவள் பத்திரம் தானா என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட இனியன். ஒரு தேர்ந்த போர் வீரனைப் போல் லாவகமாக மேலேறி வருவதை வாய்ப்பிளக்க கண்ட அழகி,


“வாவ்… சூப்பர்ங்க. அழகா ஏறுனீங்க..” என்றாள் பாராட்டாக.


“ஹஹா… தேங்க்ஸ் மதியழகி. அக்சுவலி இது ஒரு குட்டிக் குழி. மிஞ்சிப் போனா ஒரு ஆறே கால் அடி தான் இருக்கும். நீயே கொஞ்சம் முயற்சிப் பண்ணியிருந்தா, மேலேறி வந்து இருக்கலாம்… பட் உயரம் தான் கொஞ்சம் ப்ரோப்லம்மா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...” என்ற இனியனின் பேச்சில் கடுப்பானவள்,


“ஹலோ மிஸ்டர். அமிழ்தினியன் சார்! நீங்க பனைமரம் மாதிரி ஒசரமா இருக்கிறோம்னு ஓவராப் பண்ணாதீங்க. என்னைப் பத்தி என்னவேணா பேசிக்கோங்க… ஆனா என் ஹயிட்ட பத்தி மட்டும் கிண்டாலா பேசுனிங்க.. அவ்வளவு தான் என் எனிமி லிஸ்ட்ல நீங்களும் ஆட் ஆகிடுவீங்கப் பார்த்துக்கோங்க. பீ கேர்லஸ்…” என்றாள் கோபமாக.


“அப்புறம்.. என்ன சொன்னீங்க? ஆறேகால் அடி குழியா... உங்களுக்கு வேணும்னா இது சின்னதா இருக்கலாம். நீங்க தான் பனைமரம் ஆச்சே. ஆனா, நான் பாவம் சின்னப் பொண்ணு… நாளே முக்கால் அடி ஹயிட் இருக்க எனக்கு ஆறே கால் ஹயிட் இருக்க இந்த குழிப் பெருசுத் தான். தெரியுமா...” என்றாள் படப்படப்பாய்.


மூச்சே விடமால் தம்கட்டி பேசிக்கொண்டிருந்த அழகியை இயல்பாக்கும் பொருட்டு, “ ஆமா… ரெண்டு பேரும் எப்படி இதுக்குள்ள விழுந்தீங்க” என்று மருதுக் கேட்க, அதற்கு விடையாக இன்ற காலையயில் சாவி வாங்க அத்தை வீட்டிற்கு சென்றதிலிருந்து இப்போது குழிக்குள் விழுந்ததுவரை அனைத்தையும் கூறி முடித்தவளை அமைதியாகப் பார்த்திருந்தான் மருது.


அழகி அனைத்தையும் கூறி முடித்ததும், “சோ… இப்போ ராஜன் கிட்ட பார்சலைத் திருப்பிக் கொடுக்கத் தான் ரெண்டு பேரும் போய்க்கிட்டு இருந்தீங்க... கரெக்டா..” என்றான் மருது நிதானமாக அவர்களைப் பார்த்து.


“அதே தான்டா மாடு பையா... சீக்கிரம் அந்த காச ராஜன் கிட்ட கொடுக்கணும். அதே மாதிரி அந்த ஃபைன் கட்டினவருக்கும் அந்த ஃபைன் அமௌன்ட்டை கொடுத்திடனும் … அப்போ தான் ரீலாக்ஸ்சா இருக்க முடியும் ” என்றாள் அழகி இனியனை பார்த்தவாறே.


இனியன் எதையோ மறுத்துக் கூற முற்பட, அவனை முந்திக்கொண்ட மருதுவோ, “ஆமா… யாரு அந்த அதிப்புத்திசாலி. மூணு மாங்காக்கு ஐயாயிரம் கொடுத்த மகாபிரபு?” என்று அழகியிடம் கேட்க,


“ நா தான்டா மச்சி… அந்த அதிப்புத்திசாலி… மகா பிரபு…” என்று சிரித்துக்கொண்டே கூறிய இனியனை உலக அதிசயத்தைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்த மருதுவின் தோள்களில் சிரித்தவாறே கைபோட்டு தட்டிய இனியன் அழகியை பார்த்து,


“எனக்கு அந்த காசைத் திருப்பி தரனும்னு எந்த அவசியமும் இல்ல மதியழகி. இந்த பார்சல் அண்ட் அமௌன்ட்டை… யார் அனுபினாங்களோ அவங்களுக்கே திருப்பி அனுப்பிடுங்க. அந்த லெட்டர்ல போட்டு இருந்த மாதிரி நீங்க யாருக்கும் பதில் சொல்லுற ஸ்டேஜ்லையோ... இல்லை கட்டுப்படுற ஸ்டேஜ்லையோ இருப்பதை என்னாலும் அக்ஸப்ட் பண்ணிக்க முடியாது. ஒருவேளை இப்போ அவங்க அனுப்பின இந்த பார்சலை அச்செப்ட் பண்ணி நீங்க என்கிட்ட இந்த அமௌன்ட்டை கொடுத்து செட்டில் பண்ணிட்டாலும்,


இந்த விஷயம் இல்லைனா... இதைபோல வேற விஷயத்தை வச்சி உங்களை கண்ட்ரோல் பண்ணப் பார்பாங்க. சோ… ஜஸ்ட் ரீடர்ன் இட் மதியழகி. என்னடா இவன் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறான்னு நினைக்க வேண்டாம். எனக்கு தோன்றிய விஷயத்தைச் சொன்னேன். அதை ஏத்துக்கிறதும் ஏற்காமல் போறதும் உங்க விருப்பம் தான் . அண்ட் ஓன் மோர் திங்… அந்த ஐயாயிரத்தை உங்களால எப்போ முடியுதோ அப்போ கொடுக்கலாம். உங்களுக்கு எந்தவித பயமும் வேண்டாம் மதியழகி, எங்கே இவன் இந்த காரணத்தைக் காட்டி நம்மகிட்ட ஒவரா அட்வான்டேஜ் எடுத்துப்பானோன்னு…” என்று மிக நீளமாக பொறுமையாய் பேசிக்கொண்டிருந்த இனியனை, ‘நீயாடா மச்சி இது’ என்பது போல் ஆச்சரியமாக பார்த்தான் மருது.


இனியன் சொல்வதெல்லாம் அழகிக்கும் சரி என்று பட, “ கண்டிப்பா இனியன்… இந்த பார்சலை ரீட்டர்ன் பண்ணிட்டு உங்க காசையும் சீக்கிரம் திரும்ப தருவேன்” என்று சிரித்துக்கொண்டே கூறியவளை பார்த்துப் புன்னகைத்தவன், “தட்ஸ் மை கேர்ள்” என்றான்.


“அப்புறம் இனியா… நீ அழகிக் கூடவே ப்ரெசிடென்ட் வீட்டுக்கு போய்டுடா . நா இங்க விழுந்துக்கிடக்குற சந்தோஷ் வண்டிக்குப் பட்டி டிங்கரிங் வேலையெல்லாம் பார்த்துட்டு வரேன்..” என்ற மருதுவின் கூற்றில் குழம்பிய அழகி,



“ஆமா… எங்க வீட்டுல உங்களுக்கு என்ன வேலை?” என்றாள். இனியனை நோக்கி கேள்வியாக.


“உங்க வீடா??”


“ஆமா… ப்ரெசிடென்ட் வேலுசாமி என் அப்பா தான்”



“ஒ!! நானும் மருதுவும் ஒரு சாப்ட்வேர் கம்பனி ஸ்டார்ட் பண்ணப்போறோம் இங்க அழகூர்ல.. அதை பத்தி ஏற்கனவே ப்ரெசிடென்ட் கிட்ட சொல்லி இருந்தோம். இன்னைக்கு பிளான் காட்டி பெர்மிசன் வாங்கணும். அப்புறம் இன்னும் ஒரு ஐடியாவும் இருக்கு. அதை இந்த ஊர்ல செயல்ப்படுத்த எந்த அளவுக்கு பாசிப்பிளிட்டிஸ் இருக்குன்னு பேசனும் மதியழகி” என்று எதற்காக தான் ப்ரெசிடென்ட் வேலுசாமியை காண, அவர் வீட்டிற்குச் செல்கிறேன் என்பதை விளக்கமாக சொன்னான் இனியன்.



“வாவ்!! செம இனியன். புது கம்பனி ஸ்டார்ட் பண்ணப் போறீங்களா... ஆல் தி பெஸ்ட் இனியன்… மருது சொன்ன மாதிரி நீங்க என் கூட வாங்க நா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். மருது வண்டியை சரிப் பண்ணிட்டு வரட்டும்..” என்றாள் அழகி.


சந்தோஷின் வண்டியை எடுத்துக்கொண்டு மேக்கானிக் கடையை நோக்கி மருதுச் செல்ல. மருதுவும், இனியனும் வந்த வண்டியில் அழகி, இனியன், பத்மா மூவரும் பயணப்பட்டனர் அழகியின் இல்லம் நோக்கி.


**********************
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
டைரியின் பக்கங்கள் :

27 ஜூன், 2014

‘வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்... நீ எந்தன் பக்கம் நின்றாலே...’ என்று கவிஞர் எவ்வளவு அழகாக காதலர்களின் காதல் நிலையை சொல்லி இருக்கிறார்.

எப்போதும் பாடல் கேட்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த விசயங்களில் ஒன்று. அதுவும் பெரும்பாலும் ஆங்கில ஆல்பம் பாடல்களை தான் நான் அதிகம் விரும்பி கேட்பது. மற்ற மொழி பாடல்களைக் கேட்டாலும் ஆங்கில பாடல்களே என் ப்ளேலிஸ்டை அதிகம் நிறைத்திருப்பவை. அதில் தமிழ் பாடல்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும். அப்படியே தமிழ் பாடல்களைக் கேட்க நேர்ந்தாலும், அந்த பாடல்களின் இசையையும் பாடுபவரின் குரலையும் தாண்டி பாடலின் வரிகளை அதிகம் உற்று நோக்கியதில்லை நான்.

ஆனால், என் தேவதையை சந்தித்த பிறகு. நான் கேட்கும் பாடல்களில் வரும் வரிகள் அனைத்தும் எனக்கெனவே எழுதியது போல ஒரு எண்ணம் என்னுள். அதே போல் தான் இன்றும் ‘என்னை காணவில்லையே நேற்றோடு’ என்று எ.ஆர். ரகுமானின் இசையில் வாலியின் வரிகளை கேட்கும் பொழுது அப்படியே என் மனம் உருகிவிட்டது போன்றதொரு உணர்வு.

அதிலும், ‘வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்... நீ எந்தன் பக்கம் நின்றாலே...’ என்ற வரிகள் நிச்சயம் நூறு சதவிதம் காதலர்களுக்கு அப்படியே பொருந்தும். அதற்கு நேரடி எடுத்துக்காட்டே நாங்கள் இருவரும் தானே.


நாங்கள் பழக ஆரம்பித்துக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. என்ன அதற்குள் மூன்று மாதம் ஆகிவிட்டதா?? என்று ஆச்சரியப்பட்டாலும். மூன்றே மாதங்களில் மூன்று யுகம் வாழ்ந்த நிறைவை தருகிறது என் தேவதையின் அருகாமையில் அவளுடன் நான் கழித்த நாட்கள்...


இந்த மூன்று மாத காலத்தில், நானும் சரி அவளும் சரி இதுவரை எங்கள் காதலை நாங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்தியதில்லை. அதற்கான அவசியமும் எங்களுக்குள் ஏற்படவில்லை என்பது தான் உண்மை . நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் கூறும் முன்பே அவளும். அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவள் கூறும் முன்பே நானும் புரிந்துகொண்டு விட, இருவருக்குள்ளும் வார்த்தைகள், மொழிகள் என்று எதுவும் தேவைப் படவில்லை. இருவரின் மனமும் காதலை உணர்ந்த பிறகு வார்த்தைகள் வேண்டுமா என்ன??? அதை வெளிப்படுத்த. இதயங்கள் பேசும் பாசை புரிந்துவிட்டப் பிறகு இதழ்கள் பேசும் பாசைகள் தேவைபடுவதில்லை காதல் கொண்ட நெஞ்சங்களுக்கு.


‘அடடா !! என்ன ஒரு ஆச்சரியம்.. நானும் கூட கவித்துவமாக எழுத ஆரம்பித்துவிட்டேனே. காதல் வந்தால் கவிதையும் வருமா என்ன?? சந்தேகம் கேட்க என் நண்பன் அட்லஸ் கூட இப்போது என் பக்கத்தில் இல்லையே ...’ என்று எண்ணி சிரித்துக்கொண்டே இந்த மூன்று மாத நிகழ்வுகளை என் நினைவலைகளில் மீண்டும் நினைத்து சேமித்து வைத்தேன் நான்.


கல்சுரல்ஸ் அன்று கடைசியாக அவளை பார்த்தது தான். அதன் பிறகு ஒரு வாரமாக ஆர்கிடெக்ட் கல்லூரி வாயிலில் தவமாய் தவமிருந்தும் அவளை கண்ணில் காண முடியவில்லை என்னால். இதில் வில்லனாக ஆர்கிடெக்ட் கல்லூரியின் வாட்ச்மேன் வேறு... எதோ நாங்கள் அந்த ஆர்கிடெக்ட் புள்ளைங்களை கடத்திக் கொண்டுப் போக பிளான் போட்டு சுற்றித்திரிகின்ற மாதிரி அப்படியொரு பில்ட்அப் பண்ணுவார் அவர். இதில் கொடுமை என்னவென்றால் ஆர்கிடெக்ட் கல்லூரி இருப்பது இன்ஜினியரிங் கல்லூரியின் வாளகத்திற்குள் தான்.


காதலில் விழுந்து ஒரு வாரமே ஆன நிலையில், என் தேவதையை காணமல் தேவதாசாய் நான் ஒரு வாரம் மழிக்கப்படாத தாடியுடன் எங்கள் கல்லூரி கேன்டீனில் அமர்ந்து, என் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட் நண்பன் அட்லஸிடம்(அட்லஸ் என்பது அவனின் உண்மை பெயரல்ல... நம்ம பயபுள்ள அட்லஸ் மேப் மாதிரி... எங்க போகனும்னாலும் வழி காட்டுவான். அதனால் தான் நாங்கள் அனைவரும் அவனை செல்லமாக அட்லஸ் என்று அழைப்பது. இது தாங்க அட்லஸின் பெயர்காரணம் ) என் தேவதையை காண முடியாத சோகத்தில் நான் புலம்பிகொண்டிருக்க. அதை எதையும் கண்டுக்கொள்ளாமல், வாயில் கூட வைக்க முடியாத அந்த கசப்பு காபியை எதோ தேவாமிருதத்தை குடிப்பது போல் பாவனைச் செய்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தவனை காணக்காண எனக்கு ரத்த அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது.


கையில் இருக்கும் பப்ஸை அவனை நோக்கி வீசலாமா என்று எண்ணியவாறே நான் என் கைகளை தூக்க. சரியா அதே நேரம் எனக்கு பின்புறமிருந்து ‘ஹாய்’ என்ற இனிமையான குரலொன்று கேட்டது.


அந்த குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு தெரிந்துவிட்டது அது என் தேவதையின் குரல் தான் என்று. கண்களில் ஒளியுடன் நான் திரும்ப. என்னை நோக்கி அழகியப் புன்னகையை உதிர்த்த என் தேவதை, “ஹாய்... உங்க கூட கொஞ்சம் பேசணுமே... நீங்க ஃப்ரீயா இருந்தா இப்போ பேசலாமா??” என்று என்னிடம் கேட்க.


கரும்பு தின்ன கூலியா?? என்பது போல் நானும் சந்தோசமாக தலையசைத்தேன். எனக்கே தெரிந்தது அந்த கணம் ‘ஆர்பிட்’ விளம்பரத்தில் வரும் பசு மாட்டை போல தான் நானும் ‘ஈஈ’ என்று இளித்துக்கொண்டிருதேன் என்பது. மிகவும் சிரமப்பட்டு என் ஆர்வத்தை கட்டுக்குள் கொண்டுவந்த நான் இயல்பாய் இருப்பதுபோல் காட்டிகொண்டு “ஒ.. தாரளமா பேசலாமே!அக்சுவல்லி இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு தான். பட் அது பரவாயில்லை... ஐ வில் மேனேஜ் தட்” என்றேன் கெத்தாக கூறுவதாக எண்ணிக்கொண்டு .


என் பதிலை கேட்டு அவள் பார்த்த பார்வையே சொல்லியது ‘உன்னை நான் அறிவேனடா’ என்று.


லேசாக சிரித்தவாறு என்னை நோக்கியவள், “ அப்போ... யூ கேரி ஆன் ராஜ்... நாம அப்புறம் பேசிக்கலாம்” என்றாள்.


அவள் என்னை ராஜ் என்று அழைத்தது எனக்கே ஆச்சரியம் தான். என் பெயர் அவளுக்கு எப்படி தெரியும் என்று.


அதே ஆச்சரியக் குரலில், “ என் பெயர் உனக்கு எப்படி தெரியும் மதி...” என்றேன்.


“என் பெயர் மதின்னு உங்களுக்கு எப்படி தெரிந்ததோ! அப்படி தான் ராஜ்… எனக்கும் உங்க பெயர் தெரிந்தது. அது மட்டுமில்ல எங்க காலேஜ் வாட்ச்மேன் கிட்ட நீங்களும் உங்க பிரெண்ட் அட்லஸும் சேர்ந்து செய்த அணைத்து கலாட்டாக்களையும் யாம் அறிவேன் ராஜ்...” என்று அவள் ரகமாக கூற, அசடுவழிவது என் முறையானது.


சிரித்துக்கொண்டே என்னை நோக்கியவள், “ தேங்க்ஸ் ராஜ்... அன்றைக்கு என்னை கீழே விழாமல் பிடித்துக் காப்பாற்றியதுக்கு ... அக்சுவல்லி அன்னைக்கு என் பெயரை ஸ்டேஜ்ல அன்னௌன்ஸ் பண்ணவும், பதட்டத்துல ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் ஓடிட்டேன். சாரி... உங்க கிட்ட பேசணும்னு ரொம்ப முயற்சி பண்ணேன் ராஜ் . ஆனா, உங்களை பார்க்கக் கூட என்னால் முடியல. இது என்னடா.. என் கண்ணுலயே இவர் சிக்கமாட்டேன்கிறார்னு என் பிரெண்ட் ரியா கிட்ட நான் புலம்பவும்... அவ தான் சொன்னா. உங்களை நான் உங்க காலேஜ்ல தேடின, அதே நேரம் நீங்க இங்க எங்க காலேஜ்ல என்னை தேடுனீங்கன்னு.


அதுவுமில்லாமல், இன்ஜினியரிங் காலேஜ் ப்ரெசிடென்ட்க்கு அர்கிடேக்ட் காலேஜ்ல என்ன வேலை... அவருக்கு இங்க யாரோ ஒரு பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்காம். அவளைப் பார்க்க தான் இங்கேயே தினமும் சுத்திக்கிட்டு இருக்காருன்னு எங்க காலேஜ் முழுசும் உங்களைப் பற்றிய காச்சிப் தான் இப்போ ஹாட் டாக் தெரியுமா??” என்றாள் சிறு புன்னகையுடன்.


“ ஹஹா... அது காச்சிப் இல்லை மதி உண்மை தான். ஆமா... நீ ஏன் என்னை பார்க்க தேடின?” என்ற என் கேள்விக்கு அவள் பதிலளிக்கும் முன் அவள் என்ன கூறுவாள் என்பதை யூகித்து நான்,


“ தேங்க்ஸ் சொல்ல தான் தேடினேன்னு மட்டும் சொல்லாத . நான் நம்ப மாட்டேன்” குறும்பு சிரிப்பு என்னிடம்.


“உண்மை தான் ராஜ்... தேங்க்ஸ் சொல்ல மட்டும் உங்களை தேடல. அதையும் தாண்டி... உங்களோடப் பேசிப் பழகி பார்க்கணும்னு ஆசை. அதான் தேடினேன். நீங்களும் என்னை தேடுனீங்கன்னு ரியா சொல்லவும் அப்படியே வானத்துல பறக்குற பீல். எனக்கே ஆச்சரியமா இருக்கு… இது நான் தானான்னு.


நான் இப்படி இல்ல ராஜ். ரொம்ப ஸ்ட்ரோங்கான பொண்ணு. ஆனா, இந்த மாதிரியான பீலிங் எனக்கு ரொம்பவே புதுசு. இன்னும் சொல்லப்போனா இதுவரைக்கும் யார்கிட்டையும் அனுபவிக்காத ஒரு உணர்வை... உங்களை பார்த்த பிறகு இந்த ஒருவார காலமாகத் தான் அனுபவிக்கிறேன். இந்த உணர்வுக்கு பெயர் என்ன.. அதை பற்றி எனக்கு கவலையேயில்லை ராஜ்.


என் படிப்பு மட்டுமே தான் எனக்கு முக்கியம்னு சுற்றி திரிந்தவள் நான். ஆனா, அந்த படிப்பையும் இரண்டாம் பட்சமாக நினைத்து ஓதிக்கியது இந்த ஒரு வார காலமாகத் தான். ராஜ் !! உங்களை மீண்டும் நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் நித்தமும் எனக்கு. அதை தவிற வேறு எந்தச் சிந்தனையுமே இல்லை என்னுள்.


அதேபோல, உங்களுக்குப் பிடிச்ச அந்தப் பொண்ணு நானாத் தான் இருக்கனும்னு நினைச்சு என்னோட ஹார்ட் பீட் இவ்வளவு வேகமா துடிப்பதுக் கூட ஏன்னு சத்தியமா எனக்கு தெரியல ராஜ். இந்த பீலிங்ஸ் ஒரு புறம் ரசிக்க வைத்தாலும் மறுப்புறம் என்னை கொல்லாம கொல்லுது. இதுக்கு ஒரே தீர்வு உங்க கூட பேசுறது தான்னு தோனுச்சு எனக்கு. அதான் இன்னைக்கு உங்களை பார்த்து பேசியே ஆகணும்னு வந்துட்டேன் ராஜ், உங்க கூடப் பேசவும் செய்துட்டேன்.. எனக்கு இதுவே போதும் ராஜ்… ” என்று அவள் கூறக் கூற... எனக்கோ யாரோ ஹெலிகாப்ட்டரில் இருந்து மூட்டை மூட்டையாகப் பூக்களை என்மீது போடுவதுப் போன்ற உணர்வு.


என்னுள் அவளைப் பார்த்தக் கணத்திலிருந்து ஏற்பட்ட அதே உணர்வுகள் அவளுக்கும் என்னை பார்த்தப் பொழுதிலிருந்து ஏற்பட்டிருகிறது என்பதை அறிந்த போது. என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதே வியப்போடு அவளை சந்திந்த நாளிலிருந்து என்னுள் ஏற்பட்ட அந்த மாய உணர்வுகளை அவளிடம் நான் சொல்ல... அதை கேட்ட அவளுக்கும் ஆச்சரியம்.



இப்படி ஆரம்பித்த எங்கள் உறவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று முக்தி நிலை பெற்றுவிட்டது. ஒரே பார்வையில் ஒரு பெண் என்னை மொத்தமும் வீழ்த்துவாள் என்று யாரேனும் அந்த கல்சுரல்ஸ் இரவிற்கு முன்பு கூறியிருந்தால், நிச்சயமாக கைக்கொட்டி சிரித்திருப்பேன். ஆனால் இன்று... ஒரு பெண்ணின் ஒற்றை பார்வையில் அவளிடம் முழுதாய் தொலைந்து, அவளையும் என்னுள் தொலையவைத்து காதல் என்னும் கடலில் முழ்கி கரை காணும் முயற்சியில் நானும் என் தேவதையும்.


படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 6


" இங்கேயே நிறுத்திடுங்க இனியன்" என்று அழகி கூறவும் வண்டியை நிறுத்தினான் இனியன்.


"அதோ! அங்கே இருக்குப் பாருங்க ப்ளூக் கலர் பெரிய வீடு . அதான் எங்க வீடு… அதாவது நீங்க தேடி வந்த ப்ரெசிடெண்ட் வீடு சரியா... நீங்க இப்படியே நேரா வீட்டுக்கு போங்க.. நாங்க இங்கேயே இறங்கிக்கிறோம். இந்த கோலத்தில மட்டும் நாங்க வீட்டுக்குள்ள போனோம் அவ்வளவு தான் செத்தோம் அத்தோட. நீங்க இந்த பக்கமா நேரா போங்க.. நாங்க பின் பக்கமா போய்.. பிரேஷ் ஆகிட்டு வரோம்.." என்று கூறிவிட்டு வீட்டின் பின்கட்டுப் பக்கமாகச் சென்றாள் அழகி.


அழகிச் சொன்ன அந்த நீல நிறப் பெரிய வீட்டை நோக்கிச் சென்றான் இனியன்.


வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலைப் பாக்கை இடித்துக் கொண்டிருந்த மரகதம் பாட்டிக்கு வந்திருக்கும் புதிய ஆள் யாரென்று விளங்காத காரணத்தினால், "ஆரு அது… " என்று கேட்டவாறே கண்களை சுருக்கிப் பார்த்து இனியனை அடையாளம் காண முற்பட்டார்.


"பாட்டி! நா மருதுவோட நண்பன், இங்க ப்ரெசிடெண்ட் வேலுச்சாமியை பார்க்க வந்திருக்கேன் " என்றான் இனியன் மரகதத்தின் கேள்விக்கு விடைக்கூறும் விதமாக.


"வேலுவ பார்க்க வந்திருக்கியா ராசா… உள்ளார தான் இருக்கான் அவன்.. போய் பாரு" என்று கூறிவிட்டு மீண்டும் தன் வெற்றிலைப் பாக்கை இடிக்கும் வேலையைத் தொடர ஆரம்பித்தார் மரகதம்.


அவரை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் வீட்டினுள் செல்ல, அவனை கண்ட வேலுசாமியோ, “வாங்க தம்பி…” என்று இனியனை வரவேற்றவர். அவனை சோபாவில் அமரச் சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்தார் அவனுடன்.


“வணக்கம் சார்! நான் அமிழ்தினியன் மருதுவோட நண்பன். அன்னைக்கு கூடக் புதுக்கம்பனி ஆரம்பிப்பதைப் பற்றி பேச வந்திருந்தேனே…என்னை நினைவிருக்கா சார் ...” என்று தன்னை ஆறுமுகப் படுதிக்கொண்டவன். இதற்கு முன்னாலானத் தங்களது சந்திப்பையும் அவருக்கு நினைவுப் படுத்த முயன்றான்.



“நினைவிருக்காவா.. நல்லாவே ஞாபகம் இருக்கு தம்பி உங்களை. அப்புறம் கம்பனி வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது தம்பி. சீக்கிரம் அரம்பிச்சிடுவீங்களா?? அன்றைக்கு கூட நாம பார்க்கும் போது ஏதோப் புது பிளானைப் பற்றி பேசணும்னு சொல்லி இருந்தீங்களே… என்ன அது? இப்போ அதைப்பற்றி பேசுவோமா தம்பி?? ” என்றார் வேலுசாமி.


“எஸ் சார்! அந்த ஐடியாவைப் பற்றி உங்கக்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு தான் வந்தேன் சார் ” என்றவன்.


“ சார்! பொதுவா ஐடி கம்பனிஸ் எல்லாமே நல்லா வளர்ந்து வர பிரபலமான இடங்கள்ல தான் இருக்கும். எங்க கம்பனியோட மத்த பிரான்ச்சசும் அப்படி தான் சார். ஆனா, இப்போ இங்க அழகூரை நாங்க சூஸ் பண்ணினதுக்கு முதல் காரணமே .. இங்க இருக்கும் பசங்க தான் சார். இங்க எத்தனை எத்தனையோ பசங்கப் படிச்சி டிகிரி வாங்கி இருந்தும். படிச்சப் படிப்புக்கு ஏத்தச் சரியான வேலைக் கிடக்காம, கிடச்ச வேலையை ஏதோ விதியேன்னு செய்றாங்க.


இது அழகூர்லன்னு மட்டுமில்ல சார். இதை சுற்றி இருக்கிற நிறைய ஊர்களிலும் இதான் இப்போதைய நிலை. இதற்கெல்லாம் முக்கியமா காரணம்,அவங்களுக்கு ஏற்ற வேலை இங்கே இல்லைன்னு சொன்னாலும். அதையும் தாண்டி மிக முக்கியமான விஷயம், இவங்க எல்லாருமே காலேஜ்ல படிச்சப் பாடங்களைத் தவிர வேறு எதையும் புதுசாக் கற்றுக் கொள்ளாம இருந்தது தான் சார்” என்றான் இனியன் அழ்ந்த குரலில்.


“நீங்க சொல்லுவதும் முழுக்க முழுக்கச் சரி தான் தம்பி. அதற்கு நூறு சதவிதம் பொருத்தமான எடுத்துக்காட்டாக இதோ எங்க வீட்டிலேயே ஒருத்தி இருக்கிறாளே…” என்றவர், வீட்டின் உள்பக்கம் பார்த்து ‘அழகி… அழகி… இங்க ரெண்டு காபி கொண்டு வாமா..’ என்றவர். இனியனை நோக்கி, “ இதற்கு தீர்வா இப்போ நாம என்னத் தான் செய்யுறது தம்பி. படிச்சப் பிள்ளைங்களோட வாழ்க்கை…ஏதாவது நல்லது அவங்களுக்கு நாம செஞ்சே ஆகணும் தம்பி...” என்றார் வேலுசாமி உளமாற.


“ ரொம்பவே ஈஸி சார். ஒரு கம்பனிக்கு புதுசா வேலைக்கு சேர்ந்தா, எப்படியும் அவங்க முதல் ஒரு ஆறு மாசம் வரைக்கும் ட்ரைனிங் பீரியட்ன்னு சொல்லி அந்த கம்பனிக்கு எந்த மாதிரியான ஸ்கில்ஸ் வேனும்மோ அதை ஒன்னு ஒன்னாச் சொல்லித்தான் தருவாங்க. அதற்கு பிறகு தான் கம்பனி வேலைகளில் அவங்களை பணி அமர்த்துவாங்க.


இப்போ நாம ஆரம்பிக்க போறக் கம்பனியிலுமே இது தான் ப்ரோசிசர். எடுத்தும் டிரெக்ட்டா யாரையும் வேலைக்கு எடுக்கப் போறது இல்ல சார். அதுவுமில்லாம நிறைய நபர்களை ஒரே சமயத்திலும் கம்பனியில் வேலைக்கு எடுக்க முடியாது. சோ! அதுனால இப்போ நாங்க என்ன யோசிச்சு இருக்கோம் அப்படினா, முதல்ல விருப்பம் இருக்கிறவங்களுக்கு எல்லாம் ஒரு ஆறு மாசம் ட்ரைனிங் கொடுத்து, அதுக்கு பிறகு அவங்களோட திறமைகளை வச்சுக் கம்பனில வேலைக்கு எடுக்கலாம்னு இருக்கிறோம்.


அதே மாதிரிப் இப்போ வேறப் பிரான்ச் கம்பனிக்கும் நாங்க இன்டெர்வியூ பண்ணும் போது.. ஒரு பிரெஷேரை எடுப்பதற்குப் பதில்லா, இந்த ட்ரைனிங்ல ட்ரெயின் ஆனா எக்ஸ்பிரியன்ஸ்ட் ஸ்டுடெண்ட்ஸ்சை வேலைக்கு எடுக்க அதிக வாய்ப்பிருக்கும் சார்.


இதைப் பற்றி இப்போ நாங்க இங்க எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும், எத்தனை பேரு அதை நம்பி இந்த ட்ரைனிங்ல சேருவாங்கன்னு தெரியாது. ஆனா, அதுவே நீங்கச் சொன்னா எல்லாரும் கொஞ்சம் நம்புவாங்க சார். அதுதான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்டோம்.. நாம பண்ணுற உதவி எல்லாரையும் போய்ச் சேரணும்ன்னு நினைப்பவன் சார் நான்... ” என்றான் நீண்ட விளக்கமாக.


அப்போது கையில் காபி ட்ரேயுடன் அங்கு வந்த அழகி இனியன் கூறியத் திட்டத்தைக் கேட்டு, "அடடா!! இது வேற லெவல் பிளான் இனியன். உண்மையா இதுனால நிறைய பேரு பயனடைவங்க . எந்த லாபத்தையும் எதிர்ப்பார்க்காம மத்தவங்களுக்கு உதவி செய்யுற அந்த மனசு இருக்கே… வேற லெவல்.. சூப்பர்ங்க நீங்க" என்றாள் பாராட்டாக.


"அழகி!! உனக்கு இவரை முன்னாடியேத் தெரியுமாடா??" என்றார் வேலுசாமி.


"தெரியுமாவா?? நல்லாவே தெரியும் ப்பா.. நம்ம மருதுவொட தோஸ்து தான் இவரு" என்றாள் சிரித்துக்கொண்டே.


"அப்போ! ரொம்பவே நல்லதாப் போச்சு. தம்பி உங்க ட்ரைனிங் கிளாஸ்க்கு முதல் ஆளா என் பொண்ணு அழகியை சேர்த்துக்கோங்க. வீட்ல சும்மா தான் இருக்குறா, அதுக்கு இந்த மாதிரி நாலு விஷயத்தைக் கத்துக்கிட்ட அவளுக்கும் நல்லது தானே" என்று வேலுசாமி சொல்லியும் முடிக்கவில்லை. அதற்குள் குறுக்கே புகுந்த அழகி,


"அப்பா!! எனக்கு எப்படி இது செட் ஆகும்?? நா படிச்ச பீல்ட் வேற... இது வேற.." என்றாள்.


"சரி.. அப்போ நாளைக்கே RM பில்டர்ஸ் ராமமூர்த்தி கிட்ட வேலைக்குப் பேசுறேன். அங்கே போறியா?? போறேன்னு ஒரு வார்த்தைச் சொல்லு, இப்போவே அவனுக்கு போன் போடுறேன். வீடு கட்டுற படிப்புத் தானே படிச்ச நீ.. அதனால எந்த கஷ்டமும் இருக்காது, என்ன போறீயா ?? போன் போடவா ?? " என்றார் அவரும் விடாப்பிடியாக.


"ப்பா!! என்ன ப்பா இது… என்னால அங்கே எல்லாம் போக முடியாது. நா கேம்பஸ்ல செலக்ட் ஆனா கம்பனில இருந்து கால் லெட்டர் வரட்டும். நா அங்கே போறேன்" என்றாள் அவளும், உங்களுக்கு நான் சலைத்தவள் இல்லை எனும் ரீதியில்.


"ஆறு மாசமா அது வந்துகிட்டு தான் அழகி இருக்கு. ஆனா, இன்னும் இங்க வந்து சேர்ந்தப்பாடில்லை"


"ப்பா.. அது வரும்போது வரட்டும். உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ அதுல.."


"நீ இதையே காரணம் சொல்லிக்கிட்டு எந்த வேலையும் செய்யாம, வெட்டியா ஊரை சுத்தி வரியே இது தான் என் பிரச்னை. இப்படி சுத்தவா உன்னை நான் படிக்க வச்சேன்" என்றார் காட்டமாக.


" சார்!! பிடிக்காம யாரையும் எந்த விஷயத்தையும் செய்யச் சொல்லி போர்ஸ் பண்ணக் கூடாது சார். அப்படி போர்ஸ் பண்ணி செய்ய வைக்கிற வேலையும் முழுமை அடையாது" அழகியின் சார்பாக அவளுக்காக இனியன் பேசவும், அழகியோ 'மன்னா.. ஒளி வந்துவிட்டது' என்று உள்ளுக்குள் நினைத்தவாறே இனியனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.


"தம்பி!! இவளைப் பற்றி உங்களுக்கு தெரியாது… கேடிக்கெல்லாம் கேடி இவ " என்று இனியனிடன் கூறியவர், அழகியை நோக்கி


"சரிடா.. உன் இஷ்டப்படியே வரேன். உனக்கு எந்த மாதிரியான துறையில் வேலைப் பார்க்க விருப்பம்னு சொல்லு, அந்த துறையிலேயே அப்பா உனக்கு வேலை பார்த்து தரேன் " என்றார் கனிவாக.


" பேச்சு மாறக் கூடாதுப்பா!! அவணத்தான்கோட்டைல இருக்குற ப்ளே ஸ்கூல்ல டீச்சர்க்கு ஆள் எடுக்குறாங்க. அங்கே வேணும்னா எனக்கு வேலை வாங்கி தாங்கப்பா. நா ரொம்ப ஹாப்பியா அங்க வேலைக்கு போறேன் " என்றாள் அழகி சமத்துப் பிள்ளையாக. அவளின் இந்த பதிலில் வியந்துப் போனான் இனியன்.


"வாவ்.. டீச்சிங் ரொம்பவே உன்னதமான தொழில் அழகி. ஆனா, ஏன் ப்ளே ஸ்கூல்க்கு போகணும்னு விருப்பப்படுறீங்க. பெட்டர் நீங்க ஹயர் கிளாஸஸ்கு ட்ரை பண்ணலாம்.. நல்ல ஸ்கோப் இருக்கும் உங்களுக்கும் அதில்" என்றான் பரிந்துரையாக.


"தம்பி!! அவளை நம்பாதீங்க... அப்படியே ஏன் அந்த வேலைக்கு தான் போவேன்னு சொல்ற காரணத்தையும் கொஞ்சம் சொல்ல சொல்லுங்களேன். அதை கேட்டப் பிறகு நீங்களே ஒரு முடிவு பண்ணுங்க, என்ன பண்ணலாம்னு... " என்றார் வேலுசாமி ஆயசத்துடன்.


ஊரில் எத்தனையோ பிரச்சனைகளையும், பஞ்சாயத்துக்களையும் அசால்ட்டாக சமளித்தவரால். அழகி என்னும் அவர் பெற்ற மகளைச் சமாளிக்க முடியவில்லை.


"அதான்… ஏன் அழகி குறிப்பா ப்ளே ஸ்கூலுக்கு போகணும்னு சொல்லுறீங்க" என்றான் அழகியிடம்.


"எனக்குன்னு ஒரு பெரிய லட்சியமே இருக்கு இனியன்.."


"அது என்ன லட்சியம்??"


"இனியன்! நா யோஷிணாக்கா (yoshinaga) மேடம் மாதிரி ஒரு நல்ல மிஸ்சா இருந்து குழந்தைகளை எல்லாம் ரொம்ப நல்லாப் பாரத்துக்கணும். அவங்களைப் போலவே, நானும் சன்பிளவேர் (sun flower) குரூப் மாதிரி ஒரு அழகான குரூப்பை ஆரம்பிச்சு, அந்த குரூப் பசங்களை நல்லப் படியா வழி நடத்தி, அவங்களை எல்லாம் பெரிய ஆளாக்கணும் இனியன்.. இது தன லட்சிய கனவு.." என்று கண்கள் மின்ன சொன்னவளை புரியாமல் பார்த்தான் இனியன்.


வெகுநேரமாக அவள் என்னத்தான் கூற வருகிறாள் என்பதை யோசித்தவனிற்கு, அவள் கூறிய ' யோஷிணாக்கா' 'சன்பிளவேர் குரூப்' என்ற வார்த்தைகள் எல்லாம் எங்கோ கேள்விப்பட்டதுப் போல் தோன்ற, தனது ஃபோனை எடுத்து அதில் சில வார்த்தைகளை டைப் செய்துப் பார்த்தவனுக்கு அவள் எதைப்பற்றி கூறிகிறாள் என்பதுப் புரிந்துவிட, சிரிப்புத்தான் வந்தது அவனுக்கு.


சிரிப்புடனே வேலுசாமியை பார்த்தவன், "சார்!! அழகிக்கு யோஷிணாக்கா மேம் மாதிரி ஆகனுமாம்" என்றான்.


"யார் தம்பி அது??"


"ஹாஹா.. அது டிவியில் போடும் சின்ஷான் (shinchan) கார்ட்டூனில் வரும் ஒரு டீச்சர் கதாபாத்திரம் சார்" என்று இனியன் சொன்னது தான் தாமதம், தன் பக்கத்தில் நின்றிருந்த அழகியின் காதுகளை வலிக்க பற்றிய வேலுசாமி,


"டிவி பார்க்காதேன்னு சொன்னா கேட்குறீயா நீ. எப்போ பாரு அந்த பொம்மை சேனல் தான் பார்க்கிறது, இனி உன்னை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது.. தம்பி நீங்க எப்போ ட்ரைனிங் ஆரம்பிக்கப்போறீங்க.. என்ன நடந்தாலும் சரி அழகி அந்த கிளாஸ்க்கு வருவா தம்பி.. நீங்க ஆக வேண்டிய வேலைகளைப் பாருங்க" என்றார் முடிவாக.


'என்னைச் சேர்த்துக்கொள்ள முடியாதுன்னு சொல்' என்று பார்வையாலே இனியனிடம் கூறினாள் அழகி.


அவள் என்ன கூற வருகிறாள் என்பது புரிந்தாலும்.கண்களைச் சுருக்கி, உதடுகளை முன் நோக்கி குவித்து 'முடியாதுன்னு' சொல்லு எனும் விதமாக பார்வையாலும், தலையசைப்பினாலும் தன்னிடம் வேண்டுபவளை நோக்கி புன்னைக்கித்தவாறே,


"நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஆரம்பிக்கும் சார்" என்றவன்.


அழகியை நோக்கி, " பீ ரெடி போர் தி ட்ரைனிங் அழகி" என்று சிரித்தவாறு கூறியவன். அழகியிடமும் , வேலுசாமியிடமும் விடைபெற்றுச் சென்றான்.



வாயிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனின் முதுகையே வெறித்துப் பார்த்திருந்த அழகி, "நா அவ்வளவு தூரம் ஆக்சன் பண்ணிச் சொல்லியும் புரியாத மாதிரி அக்ட் பண்ணிட்டு.. என் அப்பாகிட்ட கிளாஸ்க்கு ஓகே சொல்லித் தப்பு பண்ணிட்டீங்க இனியன்… தப்பு பண்ணிட்டீங்க. இதுக்கு நிச்சயமா பனீஷ்மெண்ட் இருக்கு உங்களுக்கு இந்த அழகிக்கிட்ட இருந்து …" என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள்.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
**************************

அழகூர் எம்.எல்.எ அருணாச்சலத்தின் பண்ணை வீடு,


ஆறடி உயரத்தில், நல்ல திடகாத்திரமான உடலுடன், கருப்பு கோட் அணிந்த ஆறேழு ஆட்கள் அந்த பருமனான மரச் சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த ஹுசேனைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார் அருணாச்சலம்.


இடது கையில் இருக்கும் சிகிரேட்டைப் புகைத்தவாறே, வலது கையால் தன் மடியில் இருந்த லாப் டாப்பில், இன்றைய பங்குச் சந்தை நிலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த ஹுசேனை மெல்ல அழைத்தார் அருணாச்சலம்.


"ஹுசேன்! ராஜன் வர நேரம் .. நீ இங்க இப்படி சிகிரேட் பிடிச்சா நல்லா இருக்காதுப்பா. வந்ததும் கத்துவான்... அவன் போனதும் உன் இஷ்டம் போல எத்தனை சிகிரேட் வேணும்னாலும் புகைச்சுக்கோ" என்று கூறியது தான் தாமதம்.


ஹுசேனின் மடியில் இருந்த லாப் டாப் அவனை விட்டு நான்கடித் தள்ளிச் சென்று விழுந்தது. அவன் அதை தூக்கி எறிந்த வேகத்தில்.


"ராஜன்! ராஜன்! ராஜன்! எங்க பார்த்தாலும் அவன் பேரு தான். கேட்டவே எரிச்சலா இருக்கு எனக்கு. சே! யாரு அருண் அவன், நேத்து வந்த பொடிப்பையன். அவன் கிட்டயெல்லாம் இப்போ அதிகாரம் இருக்குன்னு எல்லாரையும் சுட்டு விரல்ல ஆட்டி வைக்குறான். இதே நிலைமைல போனாம் கடைசி வரைக்கும் நாம இப்படியே தான் இருப்போம், நேத்து வந்த சுண்டாக்கா பையன் எல்லாம் பொறுப்பை எடுக்கிட்டுப் போய்கிட்டே இருப்பான். ஆனா, நாம கடைசி வரைக்கும் இவனுங்க கிட்ட அடிப்பணிந்தே சாகணும் போல.

இந்த SKக்கு என்ன மூளைக் குழம்பி போயிடுச்சா?? இப்படி யாருனே தெரியாதச் சின்னப் பையனை எல்லாம் போய் துணைத் தலைவரா நியமிச்சு இருக்கான். சரி, அந்த துணை தலைவர் யாருன்னு கேங்ல யாருக்காவது தெரியுமா? அதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனா கேங்கோட ஒன் ஆப் தி மாடரேட்டரான என் அண்ணாவுக்கே அது யாருன்னு தேடியாதுன்னா பாரேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பிளாக் ஸ்பார்க்ன்னு ஒரு ஹக்கர் பையன்னை நம்ம கேங்ல சேர்த்தாங்கல அவன் தான் துணைத் தலைவர்ன்னு சொல்லறாங்க.. ஒன்னும் புரியல. ஆனா, உண்மையா SK அவுட் ஆப் மைன்ட்ல தான் இருக்கார் போல. இஷ்டத்துக்கு எல்லாரையும் உள்ள சேர்த்துக்கிட்டு இருக்காரு.

நாம என்ன கத்திரிக்கா பிசினஸ்சா பண்ணுறோம் அருண் . யாரை வேண்டுமானாலும் உள்ள சேர்த்துக்க. கொக்கைன் மேன் … கொக்கைன்… அதுவுமில்லாம இல்லீகளா கன்ஸ்சும் சப்ளை பண்ணுறோம்… இதுல புது ஆளுங்களுக்கு போய் இவர் இப்படி பொறுப்பைத் தூக்கிக் கொடுக்கிறது.. எனக்கு ஒன்னும் சரியா படல.." என்று ஹுசேன் கத்திக்கொண்டிருக்க.

அந்நேரம், அந்த அறையின் மரக்கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் ராஜன். வெள்ளை வேட்டியும் பர்பில் நிறச் சட்டையும் அணிந்து , இடதுக் கையில் வெள்ளிக் காப்பும், வலதுக் கையில் கருப்பு வாட்சுமாக புயலென வந்தவன், ஹுசேன் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் போடப்பட்டிருந்த மற்றுமொரு சோபாவில் அமர்ந்தான்.


"ஆமா, நா வரும்போது இங்க என்ன சத்தம்…" என்றவனது குரல் நிதானமாக இருந்தாலும், பார்வையோ அழுத்தமாக ஹுசேனின் கையில் இருந்த சிகிரேட்டின் மீது பதிந்தது.


ராஜனின் பார்வைப் போன இடத்தைக் கண்ட அருணாச்சலம், உடனே ஹுசேனின் கைகளில் இருந்த சிகிரேட்டைப் பிடிங்கித் தூரப் போட்டார்.


"யோவ்வ்…" என்று கத்தியப்படியே எழுந்த ஹுசேன், என்ன நினைத்தானோ பிறகு அமையாகவே அமர்ந்து விட்டான்.


இதை அனைத்தையும் நிதானமாக பார்வையிட்டுக் கொண்டிருந்த ராஜன், " உங்கப் பிரச்சனையை அப்புறம் பார்த்துக்கலாம். அடுத்த வாரம் நடக்கப் போற மீட்டிங்க்கு ஏற்பாடு எல்லாம் எந்த நிலையில் இருக்கு" என்றவனதுக் குரலே அவ்வளவு கம்பிரமாக இருந்தது.


"எல்லாம் நல்லபடியா போகுது ராஜன் தம்பி. டெல்லியில் ஷ்ரவன் குழுவுக்கும், உ.பி.யில் சிரிஷ் குழுவுக்கும் அழைப்பு விடுத்தாச்சு. இனி SK அந்த மீட்டிங்கிற்கு வருவாரா இல்லையான்னு மட்டும் தான் முடிவு பண்ணனும்" என்றார் அருணாச்சலம் விளக்கமாக.


"வெல் டன் அங்கிள் … குட் ஒர்க் கையஸ்" என்று அனைவரையும் பாராட்டியவன்,


"இந்த மீட்டிங்கிற்கு பிறகு நம்ம எல்லாருடைய லைப்பும் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு மாறப் போகுது. ஜஸ்ட் ஒரே ஒரு மீட்டிங் தான்… அதுவும் முக்கியமா இந்தியன் ஆர்மில இருக்க நம்ம இண்டெலிஜேன்ஸ் ஆஃபீர் கூட. நமக்கு இருக்கும் எல்லாப் பிரச்சனைகளும் சால்வ். இனி போலீஸ், ஆர்மின்னு எந்த கொம்னாலையும் நம்மை அசைக்க முடியாது" என்றான் ஆவேசமாக.


"ஆமா, வேற யாரும் வேண்டாம் . அதான் நீ ஒருத்தன் இருக்கியே... மொத்த கேங்கையும் முடிச்சு கட்ட.." என்று தன் முழு வெறுப்பையும் ராஜன் மீது உமிழ்ந்தான் ஹுசேன்.


"தட்ஸ் இனாஃப் ஹுசேன்! ஜஸ்ட் ஷட் யூர் மௌத்!" என்று ஆக்ரோஷமாக சீறி எழுந்த ராஜன், எதை பற்றியும் யோசிக்காமல் தன் இடுப்பில் பாதுக்காபிற்காக வைத்திருக்கும் பிஸ்டலை எடுத்து ஹுசேனின் வாயில் சொருகியிருந்தான்.


ராஜனின் தோள்களை அழுத்தமாகப் பற்றித் தள்ளியப் படி அவனிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஹுசேன். எங்கேத் தான் தப்பிக்க முயன்று, அந்த அசைவில் அவன் எக்குத்தப்பாக பிஸ்ட்டலை அழுத்திவிட்டால்? அவ்வளவு தான் மொத்தமும் முடிந்துவிடும் என்று எண்ணியவன். அருணாச்சலத்தை பார்வையால் அழைத்து காப்பாற்றும் படி கூறினான் ஹுசேன்.


அவரும், "விடுப்பா ராஜன்… என்ன இருந்தாலும் அவன் பத்து வருஷமா நம்ம கேங்ல இருக்கான். உனக்கும் சீனியர் … ஏதோ,ஆதங்கத்துல ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் மனிச்சு விட்டுவிடுப்பா. நமக்குள்ள இந்த மாதிரி சண்டையெல்லாம் வரது, எப்படி இருந்தாலும் நமக்கு தான் பிரச்சனை" என்றார் சமாதானமாக.


அவரின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து ஹுசேனின் வாயிலிருந்து பிஸ்டலை எடுத்தவன் அவனை நோக்கி,


"இது தான் லாஸ்ட் வார்னிங் ஹுசேன் உனக்கு. இனி இன்னும் ஒரு சான்ஸ் இப்படி கனவுலக் கூட நினைக்காதே. அப்புறம் கனவுக் காண உயிர் கூட இருக்காது உனக்கு" என்றான் ராஜன் ஆவேசமாக.


"எல்லாம் அதிகாரம் இருக்கிற திமிர்… உன்னால முடிஞ்ச மட்டும் ஆடு ராஜன் நீ. உனக்கும் முடிவு காலம் நெருங்குது… தமிழ் நாடு போலீஸ் நம்ம நெட்வோர்க்கை கிட்டத்தட்ட ட்ரேஸ் பண்ணிடுச்சு தெரியும்ல" என்றான் ஹுசேன் ஆணவமாக. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன்.


"ஸீ.. இந்த மாதிரி சில்லறை விஷயத்துக்கு எல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது ...புரிஞ்சதா. பத்து வருஷமா இங்கே இருக்கேன் எனக்கு எந்த அதிகாரமும் இல்லன்னு நீ சொல்லுறதும், ஆதங்கப்படுவதும் எனக்கு நல்லாவேப் புரியுது.

பட் அதிகாரம் என்பது தானா தேடி வரணுமே தவிர, நாமளா தேடித் போய் பிடிங்கிக்க முடியாது. அப்படியே பிடிங்கினாலும் அது நிலைக்கவே நிலைக்காது ஹுசேன்.


நீ பத்து வருஷமா ஒரே கேங்ல இருக்கேன்னு சொல்லுற. நா இதே பத்து வருஷத்துல அஞ்சு கேங் மாறி இருக்கேன்.


யூ நோ ஒன் திங்! அந்த அஞ்சு கேங்கிலையும் உன்னைப் போல ஆர்வக் கோளாறுகளால தான் நா வெளியே வந்தேன். அப்டர் ஐ கேம் அவுட்… அந்த கேங் எல்லாம் இருந்த இடம் தெரியாம அழிஞ்சிடுச்சு, ஜஸ்ட் பிகாஸ் அவங்களோட ஒட்டுமொத்த மாஸ்டர் மைண்ட் நான் தான். சோ நான் இல்லாம அவர்களால சர்வைவ் பண்ண முடியல இந்த பீல்ட்ல. மொத்தமா பிசினஸ் சொதப்பி, போலீஸ் கிட்ட மாட்டி.. இப்போ கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க.


அண்ட் மோர்ஓவர் SK ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டதால் தான் நா இந்த கேங் உள்ளயே வந்தேன். இந்த வெள்ளை வேட்டி, முறுக்கு மீசை இதை எல்லாம் பார்த்து இந்த பட்டிக் காட்டான் கிட்ட அதிகரமான்னு யோசிக்காதீங்க ஹுசேன். நம்ம கண்ணோட்டம் மட்டுமே எப்பவும் சரியா இருக்காது " என்று ஹுசேனிடம் கூறிய ராஜன் அருணாச்சலத்திடம் திரும்பி,


"அந்த பிளாக் ஸ்பார்க்கை மீட் பண்ணனும்னு நா சொன்னேன்னே அங்கிள். எப்போ மீட்டிங் பிக்ஸ் பண்ணி இருக்கு" என்றவனது கேள்வியில் விழிப் பிதிங்கியவராக.


"அது… அது வந்து தம்பி . பிளாக் ஸ்பார்க்கை நம்ம கேங்ல சேர்ந்த இந்த அஞ்சு வருஷத்துல ஒரு தடவ கூட நாங்களே பார்த்தது இல்லை . அதுவும் துணை தலைவரா ஆனப் பிறகு, முன்னே இருந்ததை விட இன்னும் அதிகப் பாதுகாப்பு தம்பி அவருக்கு… அவரை ரீச் பண்ண எவ்வளவோ முயற்சிப் பண்ணேன், பட் பிடிக்க முடியலை" என்றார் கைகளை பிசைந்தவாறே.


"தட்ஸ் நாட் மை ப்ரோப்ளம் அங்கிள். அவரை எப்படி ரீச் பண்ணனும்ன்னு யோசிக்கிறது உங்க கடமை. அதில் என்னால ஒன்னும் பண்ணமுடியாது .


நம்ம சர்வேரை ஹேக் பண்ணுற அளவுக்கு போய்ட்டாங்க போலீஸும், இண்டெலிஜேன்ஸ் ஆஃபீஸ்ர்சும். என்ன தான் நம்ம ஆளுங்க இண்டெலிஜேன்ஸ்ல இருந்தாலும். நம்ம டேட்டாசை நாம தான் ரொம்ப பாதுக்காப்பா பார்த்துக்கனும் இல்லையா ? அதுக்காக தான் அந்த பிளாக் ஸ்பார்க்கை பார்க்கணும்னு சொல்லுறேன்.


நீங்க சீக்கிரம் எனக்கு அவர் கூட மீட்டிங்கை ஏற்பாடு பண்ணுங்க. ஆன்லைன்ல வீடியோ மீட்டா இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு அவரோட முகம் பார்த்து பேசணும். தட்ஸ் இனாஃப் போர் மீ.." என்று அருணாச்சலத்திடம் கூறியவன். சற்றும் தாமதிக்காமல் எப்படி வந்தானோ அதே போல் புயலென அந்த அறையை விட்டு வெளியேறினான் ராஜன்.


அறையில் இருந்து வெளியேறும் அவனையே திகைப்புடன் பார்திருந்த அருணாச்சலம், "ஒழுங்கா எம்.எல்.எ போஸ்ட்டே போதும்னு இருந்து இருக்கணும். மினிஸ்டர் பதவிக்கு ஆசைப்பட்டு இங்கே வந்துச் சேர்ந்தது தப்பாப் போச்சு. ஆளாளுக்கு நம்மள புட் பால் மாதிரி உதைச்சு விளையாடுறாங்களே!! " என்று புலம்பிக்கொண்டிருந்தார்.


*********************

இங்கு இனியனின் வீட்டிலோ மிக முக்கியமான 'பென் ட்ரைவ்' ஒன்றை காணவில்லை என்று வீட்டையே இரண்டாக பிரித்துப் போட்டுத் தேடிக்கொண்டிருந்தான் இனியன்.


அந்த பென் ட்ரைவ் எங்கு தான் சென்றிருக்கும் என்று சிந்தித்தவனுக்கு டக்கென்று நினைவு வந்தது, அழகி இன்று அவன் இல்லத்திற்கு வந்து சென்றது.


'கிளம்பும் போதே அவ முகமே சரி இல்லை, திருட்டு முழி முழிச்சா' என்று எண்ணியவன், உடனே அவளுக்கு அழைத்தான்.


அழகி ஃபோனை எடுத்தது தான் தாமதம். "ஏய்! என் பென் ட்ரைவ்வை எங்கடி வச்சிருக்க… விளையாடாம அதை திருப்பிக்கொடுத்திடு அழகி.." என்றான் கோவமாக.


"எந்த பென் ட்ரைவ்?? எனக்கு ஒன்னும் அதைப் பற்றி தெரியாதே"


"ஹே திருட்டு கொட்டான் !! நீ தான் எடுத்து இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒழுங்கா அதை திருப்பிக் கொடுத்திடு…"


"நா ஒன்னும் அதை திருடலையே… பாசமாத் தான் எடுத்து வைச்சிக்கிட்டேன். முடிஞ்சா இங்க வந்து வாங்கிக்கோங்க… மிஸ்டர் பனைமரம்" என்றவள் இவன் பேச வருகையில் ஃபோனை கட் செய்து விட்டாள்.



அவளது செயலில் கடுப்பாகிய இனியன்.. "அழகிஈஈஈஈ…." என்று பல்லைக் கடித்தவன். அழகியிடம் இருந்து அந்த பென் ட்ரைவ்வை வாங்குவதற்காக அவள் இல்லம் நோக்கி சென்றான்.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 7


டைரியின் பக்கங்கள் :

அக்டோபர் 15, 2014

“என் ஃபோன் எடுக்க இவ்வளவு நேரம்ல” என்று என்னுடன் ஃபோனில் சண்டையிட்டுக் கொண்டிருப்பது வேறு யாரும் அல்ல என் தேவதையே தான். இன்று என்னுடைய பிறந்தநாள். அதற்கான முதல் பிறந்தநாள் வாழ்த்து மேடமுடைய வாழ்த்தாக தான் இருக்க வேண்டுமென்று எண்ணிப் பண்ணிரெண்டு மணியில் இருந்து என் ஃபோனிற்கு அழைக்க... நானோ அசந்து தூங்கியதால் என் தேவதையின் அழைப்பை எடுக்கத் தவறிவிட்டேன்.

மணி ஐந்து, இன்னமும் தூங்காமல் எனக்கு கால் செய்துக்கொண்டே இருந்திருக்கிறாங்க மேடம். ஃபோனை நான் ஆன் செய்ததில் இருந்தே இதே கேள்வியை தான் வெவ்வேறு விதமாக கேட்டுக்கொண்டு இருக்கிறாள். என்னையும் பதிலளிக்க விடாமல்.

‘மிராகல் ஆப்பன்ஸ்’ என்பதை உளமார நம்புகிறவன் நான். ஆனால் அந்த அதிசயம் என் வாழ்வில் என் தேவதை மூலம் வந்ததைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

இவளைக் காணமல்! இவளிடம் பேசாமல்! இத்தனை ஆண்டுக் காலம் எப்படித் தான் நான் வாழ்ந்தேன் என்று நொடிக்கொரு தரம் என்னையே நினைக்க வைக்கிறாள் என் தேவதை. இதோ இப்போதும் கூட அவளுடைய அழைப்பை ஏற்காமல் நான் தூங்கியது தான் அவளின் குற்றச்சாட்டு.


கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில். என்னதான் ஒருக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து முழு திறமையையும் வெளிக்காட்டி வேலைச் செய்தாலும், அதில் ஒரு நிறைவு ஏற்படவேயில்லை எனக்கு . எதோ ஒருவித ஒட்டாத்தன்மயாகவே இருந்தது. அதை ஒருமுறை பேச்சுவாக்கில் என் தேவதையிடம் நான் புலம்ப.அவளோ,
“நீங்களே ஏன் ஒரு கம்பனி ஆரம்பிக்க கூடாது ராஜ். உங்க திறமை மேல எனக்கு ஆபார நம்பிக்கை இருக்கு...” என்றாள் இயல்பாய்.

அவள் கூற்றை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது முதலில். நானே ஒரு பிரெஷேர்(fresher) ஒரு கம்பனி ஆரம்பிக்கும் அளவிற்கு எனக்கு எக்ஸ்பிரியன்ஸ் இருக்கிறது தான். காலேஜ் படிக்கும் போதே பார்ட் டயம் வேலையாக நிறைய ஹான்ட்ஸ் ஆன் ப்ராஜெக்ட்டில் என் சீனியர் மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவமிருக்கிறது தான். போதாக்குறைக்கு இரண்டு மாதம் எங்கள் கம்பனியில் வேலை செய்த அனுபவமும் இருக்கிறதே. இது போதாதா?? என்று ஒரு மனம் நினைக்கையில். மறுமனமோ, ஆம்... போதவே போதாது என்று குரல் எழுப்ப. என் மனக்கேள்விகள் அனைத்தையும் என் தேவதையிடம் தெரிவித்தேன்.

“ஆரம்பிக்கலாம் தான் டா. ஆனா... அதுக்கு இன்னும் அனுபவம் வேணும். அதுவுமில்லாமல முக்கியமா, முக்கியமா நாம இன்வெஸ்ட் பண்ண பணம் வேண்டும். அப்பாக் கிட்ட கேட்டா நிச்சயம் எந்தக் கேள்வியும் இல்லாம நா கேக்குறதை விட அதிகமாவே தருவாங்கத் தான். பட் எனக்கு அவருகிட்ட பணம் கேட்க விருப்பமில்லைடா மதி ...” என்றேன்.

“அப்பாக் கிட்டப் போய் நா ஒரு பிசினஸ் பண்ணப்போறேன்ப்பா ஓன் கம்பனி ஆரம்பிக்க போறேன்னுச் சொல்லி அவருகிட்ட பினான்சியால் ஹெல்ப் கேட்க அப்படி என்ன ஈகோ உங்களுக்கு. அதும் சொந்த அப்பாகிட்டப் போய்...”

“ஈகோ எல்லாம் இல்லைடா மதி. அவருக்கு நான் படிப்பு முடிச்சப் பிறகு நம்ம பாமிலி பிசினஸ்சை எடுத்து நடத்தனும்னு ஆசை. அதவுமில்லாம அப்பா எது சொன்னாலும் அது தான் ஊர்ல இருக்குறவங்களுக்கு வேத வாக்கு அதைப்பற்றி தான் உனக்கேத் தெரியுமேடா.

ஊர் மக்களும் அப்பாவிற்கு பிறகு அவரோட எல்லாப் பொறுப்பையும் நான் தான் எடுப்பேன்னு நினைக்குறாங்க. நா வேற ஒரே பையன்ல என்னை இவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைப்பதே ஆச்சரியம் தான் மதி. அவருடைய ஆசையையும் குறைச் சொல்ல முடியாது. என் மேல ரொம்ப நம்பிக்கை அவருக்கு, எப்படியும் நான் தான் நம்ம பிசினஸ்சை டேக்ஓவர் பண்ணுவேன்னு... இப்போ போய் புதுசா ஒரு கம்பனி ஆரம்பிக்க போறேன்னு சொன்னா, நிச்சயமா எந்தவித கேள்வியும் கேட்காம மொத்தமும் அவரே செட் பண்ணித் தந்துடுவாருத் தான்.


பட் அப்பவும் எனக்குள்ளே எதோ ஒரு எம்டி பீல் தான் இருக்கும் மதி. இப்போ! இந்த கம்பனில வேலை செய்யும் போது வருதே இதே மாதிரி. எனக்குனு ஒரு சொந்தக் கம்பனியை என் முழு உழைப்பில் உருவாக்கின பிறகு நம்ம பிசினஸ்சை டேக்ஓவர் பண்ணினால் இந்த பீல் இருக்காதுன்னு எனக்கு அடிகடி தோணும் தான் மதி. இப்போ நீயும் அதையேச் சொல்லும் போது... ஏன் இப்பவே அதை ஆரம்பிக்ககூடாதுனு தோணுது. பெரிய அளவில் இல்லைனாலும் சின்னதா ஆரம்பிச்சு அப்புறம் அதை டெவலப் பண்ணிக்கலாம். சரி தானே பேபி... ” என்று கூறிவிட்டு அவளின் பதிலிற்காக அவள் முகத்தை ஆவலாக நோக்கினேன்.

“உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்ங்க ராஜ். இந்த பீல்ட் எனக்கு புதுசு... சொல்ல போனால் ஒண்ணுமே தெரியாது. ஆனா... என் ராஜோட திறமை மேல எனக்கு அபரிவிதமான நம்பிக்கை இருக்கு. நீங்க எது செய்தாலும் நல்லா யோசிச்சு தான் செய்விங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் ராஜ். ஒன்னு மட்டும் நினைப்புல வச்சிக்கோங்க எப்பவும் நான் இருப்பேன் ராஜ் உங்க கூடவே. அது உங்க முயற்சி, வெற்றி, தோல்வின்னு எது வேணும்னாலும் இருக்கட்டும். ஐ வில் பி தேர் போர் யூ ராஜ்... எங்கேயும்.. எப்போதும்.. உங்களைத் தனியா விட மாட்டேன் ராஜ்...” என்ற என் தேவதையின் கூற்றை கேட்டு உண்மையில் என் மனம் சிறகில்லாமல் வானத்தில் பறந்தது.


உன்னை நான் முழுவதும் நம்புகின்றேன். உன் வெற்றியோ, தோல்வியோ எதிலும் உன்னை தனித்து விடாமல் உன்னுடன் பக்கப்பலமாக இருப்பேன் என்று கூறும் காதலியைக் காட்டிலும் ஒரு காதலனுக்கு வேறு என்ன இன்பம் வேண்டும். அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, “இது ஒன்னுப் போதும் மதி... நீ என் கூட இருந்தாலே எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை வருது” என்று கூறும்பொழுது என் குரல் எனக்கே அவ்வளவு இனிமையாக இருந்தது.


அதன் பிறகு அட்லஸின் உதவியுடன் கம்பனி துடங்குவதற்கான ஆயுத்த பணிகளைச் செய்யும் முயற்சியில் இறங்கினேன். நானும் அட்லஸூம் வாடைக்கு ஒரு வீடெடுத்து தங்கினோம். நான் என் வேளையில் மும்மரமாக இருக்க... அட்லஸ் போலீஸ் எக்ஸாமிற்காக படித்துக்கொண்டே அவ்வபோது எனக்கும் உதவிச் செய்வான். இரண்டு நாட்களுக்கு முன்பு அவனது தாத்தாவிற்கு உடல்நலம் சுகமில்லை என்றும் இவனைப் பார்க்க அவர் விருப்பப் படுகிறார் என்றும் கூறி ஊரில் இருந்து அழைப்பு வர, உடனே அவனும் சென்று விட்டான்.


இவ்வளவு நாட்கள் அவனும் என்னுடன் இருந்ததினால் சேர்ந்து செய்த வேலைகளை எல்லாம் நான் ஒருவனாக செய்ததினால் ஏற்பட்ட அலைச்சலின் விளைவு தான் என் தேவைதை பெண்ணின் வாழ்த்தை கூட கேட்க முடியாமல் நான் அசந்து தூங்கியது.


என் எண்ணங்களில் நான் உழன்றுக் கொண்டிருக்க. என் கையிலிருந்த தொலைபேசியில் என் தேவதையின் குரல் விடாமல் கேட்கவும். இவ்வளவு நேரம் கையில் வைத்திருந்த போனை காதிற்கு கொடுத்து அவள் பேசுவதை கேட்கலானேன்.


“இங்க ஒருத்திக் காட்டுக் கத்து கத்துறாளே... அவளை என்னன்னு கொஞ்சமாச்சும் கண்டுகீறிங்களா ராஜ் நீங்க... நா பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க அமைதியாவே இருக்கீங்களே! என்ன தான் விஷயம்...” அனல் பறந்தது என் தேவதையின் பேச்சில்.


“கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் பேபி... நீ என்ன திட்டனுமோ திட்டிகோடா என் தங்கபட்டாணி”


“என்ன... பேபின்னுலாம் கொஞ்சுறத பார்த்தா... எதுவும் சரியில்லையே... நா பேசின எதையும் காதுல வாங்கல அப்படிதானே..”


“ச்சே .. ச்சே ... அப்படியெல்லாம் இல்லைடா... என் பேபியை நைட் முழுசும் வெயிட் பண்ண வச்சிட்டு தூங்கிட்டேனேனு பீலிங்ல இருந்தேன்டா... வேற ஒண்ணுமில்லை... சாரி பேபி ”


“அச்சோ! என்ன ராஜ் இது. சாரி எல்லாம் கேட்டுகிட்டு. எனக்குத் தெரியாத என் செல்லம் ரொம்ப டயர்ட்ல அசந்து தூன்கிடாங்கன்னு” என்று செல்லம் கொஞ்சியவள்.


“ராஜ் ... சீக்கிரம் வெளிய வந்து கேட் ஓபன் பண்ணுங்க. பூட்டி இருக்கு.. எனக்கு ரொம்ப குளிருது...” என்று நடுங்கிய குரலில் அவள் சொல்லவும். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்த மறுவினாடி வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் பாய்ந்து போய் கதவை திறந்துக்கொண்டு சென்ற நான் கண்டதெல்லாம்.


கேட்டின் வெளியில் சைடு பிளாட்போர்மில் நனைந்த உடையுடன் உடல் நடுங்க உட்கார்ந்திருந்த என் தேவதையை தான். குளிருக்காக துப்பட்டாவை தோள்களைச் சுற்றி போட்டிருந்தாள் போலும். ஆனால் அதுவும் நனைந்துப்போய் இருக்க. அதுவே குளிர்ந்த காற்று பாடவும் மேலும் குளிரெடுக்க செய்தது.


அவளை அப்படி ஒரு நிலையில் காணவும் திகைத்துப்போய் நான் அப்படியே நிற்க. கதவு திறக்கும் சத்தத்தில் என் புறம் திரும்பியவள், இடது கையில் ஒரு கிப்ட் பாக்ஸ்சுடன் என்னை நோக்கி வந்தாள்.


“ஹாப்பி பர்த்டே மை டியர் செல்ல பட்டு..” என்று கூறி, கையில் வைத்திருந்த கிப்ட்டை என்னிடம் நீட்டவும் தான் சுயநிலை அடைந்தேன் நான்.

“ இது என்ன லூசு வேலை மதி... நா போன் அட்டென்ட் பண்ணலைன்னு தெரிஞ்சப் பிறகாவது.. நீ ஹாஸ்டலுக்கு போய் இருக்கலாம் இல்லையா... அட்லீஸ்ட் மழை வந்த அப்போதாவது இங்கே எங்கேயும் ஒதுங்கி நின்னு இருகலாம்ல
... ஏன்டி ... இப்படி நனைஞ்சு போய் நிக்குற...” என்று நான் புலம்ப. அவளோ திடிரென்று ஏதோவொன்று நினைவு வந்தவளாக, ரோட்டோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அயன் செய்யும் தள்ளுவண்டியிடம் போனவள், அதில் வைதிருந்த ஒரு பையைக் கையில் எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தாள்.


“இப்போ எதுக்கு ராஜ் இந்த கோவம்... நா மழைல நனைந்ததற்காகவா?? எனக்கு தான் மழை ரொம்ப பிடிக்குமே ராஜ். நல்லா ஜாலியா இருந்துச்சு தெரியுமா. இப்படி மழைல நனைந்தது. நல்லவேளை இங்க அந்த அயன் பண்ணுற வண்டி இருந்துச்சு. இல்லனா... நா கஷ்டப்பட்டு உங்க பர்த்டேக்காக பண்ணின இந்த கேக் வீணாய் போய் இருக்கும்” என்று கூறியவாறே அவள் கையில் வைத்திருந்தப் பையை பிரித்து உள்ளிருந்த கேக் பாக்ஸ்சை காண்பித்தாள்.


“ எதே... நீயே பண்ணினக் கேக் தானா இது... அப்போ ஒரு முடிவோட தான் வந்து இருக்க. நான் மர்கயா தான் போல இன்னைக்கு” என்று போலியாக நான் அலற.


என் புஜத்தை பிடித்துக் கிள்ளியவள், “ரொம்ப தான் ஓட்டுறிங்க ராஜ். இந்த கேக்கை வார்டன்க்கு தெரியமா பண்ணி, அவங்களுக்கு தெரியாம சுவர் ஏறி குதிச்சி இங்க வந்துன்னு எவ்வளவு பெரிய சாதனையெல்லாம் நா பண்ணி இருக்கேன்னு தெரியுமா. நீங்க என்னடான என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று அழகாக மூக்கை சுருக்கி பாவனையாக அவள் பேச. அவள் பேசும் அழகில் மயங்கி போய் நின்றேன் நான்.


‘அச் ... அச்...’ என்று இருமுறை மதி தும்பிய பிறகுத் தான், அவள் இன்னமும் அதே ஈர உடையில் வீட்டின் வாயிலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயமே அப்போதுதான் என் மூலையில் உரைத்தது.


“எதுவாக இருந்தாலும் வீடுக்குள்ளப் போய்ப் பேசிக்கலாம். நீ உள்ள வா முதல்ல” என்று அவள் கைகளைளப் பற்றி வீட்டினுள் அழைத்து சென்று என் பனியன் ஒன்றையும், சார்ட்சையும் அவளிடம் கொடுத்து மாற்றி வருமாறு கூறிவிட்டு, குளிருக்கு இதமாக என் தேவதை எப்போதும் ரசித்து குடிக்கும் அவளுக்கு மிகவும் பிடித்த சூடனா பிளாக் காபியைப் போட ஆயுத்தமானேன்.


என் பின்னோடு கிச்ச்சனிற்குள் நுழைந்தவள், “ராஜ் இந்த ட்ரெஸ் நான் எப்படி போடுறது... இது ரொம்பவே லூசா இருக்கே...” என்று கையில் வைத்திருந்த உடையை திருப்பி திருப்பி பார்த்தப்படி கேட்டாள்.


“ஹஹா... ட்ரெஸ் கொஞ்சம் பெருசு தான் அட்ஜஸ்ட் பண்ண்டிகோடா செல்லம். இப்போ வேற ஆப்ஷன் இல்லை. விடிந்ததும் முதல் வேலையா போய் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்துடுறேன்டா பேபி...”


“சோ ஸ்வீட் ராஜ் நீங்க.... புது ட்ரெஸ் எல்லாம் வேண்டாம். பர்த்டே பேபிக்கு நான் தான் ட்ரெஸ் வாங்கித் தரனும், பர்த்டேப் பேபி வாங்கி தர கூடாதாம்...” என்று ராகமாக கூறியவள்.


“ நான் போய் பிரெஷ் ஆகிவிட்டு வரேன். நீங்க எனக்கு பிடிச்ச பிளாக் காபியை போட்டு வைங்க...” என்றுவிட்டு நானே எதிர்பாரா வண்ணம் என் கன்னத்தில் முத்தமொன்றை வைத்துவிட்டு குளியலறையை நோக்கி ஓடினாள் என் தேவதை.


ஒரு குட்டி குளியலை போட்டு விட்டு. தொள தொளவென்றிருந்த என் பனியனையும், சாட்சையும் அணிந்து. தோள்களிலிருந்து வழுக்கிய பனியனை சரி செய்துக்கொண்டே மழையில் நணைந்த அழகியப் புத்தம் புது மலராக என்னை நோக்கி வந்த என் தேவதையின் அழகை கண்டு, அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதையும் மறந்தவனாக மயங்கி நின்றேன் நான்.


ராஜ்!!! என்று என் தோள்களை தொட்டு மதி உலுக்கிய பிறகு தான் சுயநினைவிற்கு வந்து, அவளை பார்த்து அசடு வழிந்தவாறே கலக்கி வைத்திருந்த காபி கப்பை அவளிடம் நீட்டினேன்.


அதை வாங்கியவள், ஒரு மிடறு காபியை பருகிவிட்டு ‘பிரமாதம்’ எனும் விதமாக புருவங்களை வில்லென வளைத்து கைகளால் ‘சூப்பர்’என்று சைகைச் செய்தாள் என் தேவதை.


‘நன்றி தேவியே’ என்று நானும் சைகையில் சிரித்தவாறு கூற. அவளும் சிரித்தவாறே ‘யார் போனில்’ என்று கேட்டாள்.


அப்போது தான்... நான் போன் பேசிக்கொண்டிருந்ததே ஞாபகத்தில் வந்தது எனக்கு.


முதன்முதலாக எனது உடையில் என் தேவதையைப் பார்க்கிறேன் அல்லவா. அவளை அப்படி பார்த்ததும், அனைத்தும் மதிமயம் ஆகிவிட்டது எனக்கு.


சிரித்துக்கொண்டே லேசாக தலையில் தட்டிக்கொண்டு போனை பார்த்தால்... என் ஆருயிர் நண்பன் அட்லஸ் கருமமே கண்ணாக அவன் ஊரிற்கு சென்றதிலிருந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாக விம் பார் போட்டு விளக்கிக் கொண்டிருந்தான் அட்லஸ்.


படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 
Last edited:
Status
Not open for further replies.
Top