ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 2


புலர்ந்தும் புலராத அழகிய காலை நேரம் அது. 'ரூக்ளிங்… ரூக்ளிங்...' என்று கொட்டக்காச்சி பறவையின் இனிமையான இசையை ரசித்தவாறே தன் அத்தை மகன் ஹரியுடன் வயலை நோக்கி கையில் டீ தூக்குடன் சென்றுக் கொண்டிருந்தாள் அழகி.


கும்பகர்ணனின் தங்கை போல் தூங்குவதையே முழுநேர தொழிலாகக் கொண்டவள். இந்த அதிகாலை வேளையில் எழுந்து வயலை நோக்கிச் செல்கிறாள் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த பறவைகளின் இன்னிசையைக் கேட்டு ரசிப்பதற்காக மட்டுமே தான்.


"டேய் ஹரி!! எங்கடா... இன்னும் என் செல்லத்தோட கியூட் மியூசிக்கை காணோம்" என்று அழகி புலம்பவும் 'குக்குக் குக்குக் குக்குக் குக்குக்குக்கு… குக்கு…குக்கு…' என்ற பொறிக்குயிலின் சத்தம் தேன் மழைகானமாக அவள் செவிகளை நிறைக்கவும் சரியாக இருந்தது.


அந்த அற்புதத்தருணத்தை ரசித்தவாறே நடந்தவளின் கண்களில் பட்டாள் அந்த வழியாகச் சென்றுக்கொண்டிருந்த கயல்விழி.


"ஹே.. கயலுலுலு… இங்க எங்க சுத்திக்கிட்டு இருக்க" என்று கயலை நோக்கி அழகி குரலெழுப்ப, அந்நேரம் அழகியை அங்குச் சற்றும் எதிர்ப்பார்த்திடாத கயல் தனக்குள் எழுந்த திகைப்பை மறைத்தவளாக அழகியை பார்த்து புன்னைகைத்தாள்.


அதற்குள் அவளை நெருங்கியிருந்த அழகி, “உன்னைத் தான் கேட்டேன் கயலு. என்ன இவ்வளவு வெள்ளன இந்தப் பக்கம்” என்றாள் சந்தேகமாய்.


“எல்லாம் என்ற மாமன் கூட லவ்ஸ் பண்ணத்தான்னு சொல்லுடா என் பஜ்ஜி...”


சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிய அழகி கண்டது புல்லட் வண்டியில் சாய்ந்தவாறு நின்றுக்கொண்டிருந்த சந்தோஷை தான்.


“அடபாவி சந்தோ!! காலங்காத்தால ரொமான்ஸா. நீ கலக்குடா மச்சி... ஆனா இதையெல்லாம் பார்க்கணும் எனக்குத் தான் விதிச்சிருக்கு போல. சே.. இந்த சிங்கள் பொண்ணு சாபம் உன்னை சும்மாவே விடாதுடா சந்தோ...” என்று சோக குரலில் ராகம் பாடியவளை நோக்கி,


“சிங்களா இருக்கோம்னு ரொம்ப வருத்தபடுற போலக் குட்டா. டோன்ட் பீல்டா. உன் ஆளை இன்னைக்கே நீ மீட் பண்ணப் போற பாரேன். நா வேணும்னா கதிர்க்கு ஃபோன் பண்ணி... அழகி எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கா. அவ கிட்ட கொஞ்சம் பேசுங்கன்னு சொல்லட்டுமா?" என்று கிண்டல் செய்த சந்தோவின் சட்டை காலரை பிடித்துக் கீழே குனிய செய்தவள், அவன் தலையில் இரண்டு குட்டு வைத்த பிறகே பேச்சை ஆரம்பித்தாள்.


“அடப்பாவி… எனக்கு வில்லனே நீ தான்டா சந்தோ. பாவம் அவரே இவ வேண்டாம்னு நல்ல முடிவுல இருப்பார். நீ ஆணியே பிடுங்க வேண்டாம். அமைதியா இருந்தா மாட்டும் போதும். நானே இப்போ தான் கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டாங்கன்னு கொஞ்சம் ஜாலியா சுத்துறேன். அது பொறுக்கலையாடா உனக்கு. அதற்கும் வேட்டு வைக்க ரெடி ஆகிட்ட. எப்போடா இவளை மாட்டி விடலாம்னு சுத்தி திரியுற போல. பட்.. அது இந்த அழகி கிட்ட நடக்காது மை மச்சான்.


எனக்குன்னு வரப்போறவனுக்காக... நா சில பேசிக் ரூல்ஸ் வச்சுருக்கேன். அந்த ரூல்ஸ் எல்லாம் யாருக்கு கரெக்டா பொருந்துதோ... அவனைத் தான் நா கல்யாணம் செய்துப்பேன். சோ, உன்னோட வேலை என்னன்னா... என் ரூல்ஸ்க்கு ஏத்த பையனா பார்த்துவைக்கிறது தான் சரியா.. மை டியர் மச்சான்...”


“ஹஹா… அரக்காப்படி சைஸ்ல இருந்துகிட்டு கண்டிஷன்ஸ் வேற போடுறியா நீ… சரி அந்த ரூல்ஸ் என்ன என்னனு சொல்லும்… சொல்லி தொலையும்… நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். அப்படி என்ன ரூல்ஸ் தான் அதுன்னு..” வேண்டாவெறுப்பாகக் கேட்பதுப்போல் கேட்டாலும். சந்தோவிற்கு அப்படி எந்த மாதிரியான ரூல்ஸ்க்களைத் தான் அழகி சொல்லுவாள் என்று தெரிந்துக்கொள்ள அர்வமாகவே தான் இருந்தது.


சந்தோஷ் மட்டுமன்றி அவனுடன் நின்றிருந்த கயலும், ஹரியும் கூட ஆர்வமாக அழகி என்ன கூற போகிறாள் என்று காத்திருக்க. அவள் கூறிய பதிலை கேட்டு கிழே விழுந்து புரண்டு சிரிக்காத குறைதான் மூவருக்கும்.


அப்படி விழுந்து புரண்டு சிரிக்கும் அளவிற்கு என்ன தான் சொன்னாளாம் அவள். இதோ… அழகி கூறியவை எல்லாம் இவை தான்.


“ரொம்பப் பெரிய ரூல்ஸ்லாம் இல்லை சந்தோ… சிம்பிள் தான். எனக்காக வர போறவன் ‘கண்ணை வீசி… கண்ணை வீசி…’ பாட்டுல வர அஷ்வின் மாதிரி இருந்தா போதும். அதே மாதிரி ஹையிட்… இல்ல… இன்னும் கொஞ்சம் ஹையிட் அதிகமா... அதே கலர்ல … அதே போலீஸ் ஹேர் கட்ல இருக்கனும் சந்தோ அவன். முக்கியமா நல்லா பாட தெரியும். அழகா டான்ஸ் பண்ண தெரியனும். அப்போ தானே நாங்க எங்க கல்யாணத்துல ‘மம்பட்டியான்’ சாங்க்கு அழகா சேர்ந்து டான்ஸ் ஆட முடியும். அப்புறம் முக்கியமா நான்-வெஜ்ல மினிமம் ஒரு பத்து வகையான டிஷ்சாவது செய்யத் தெரியனும். இதெல்லாத்துக்கும் மேல அவரு கண்டிப்பா போலீஸா தான் இருக்கனும். பிகாஸ் நான் காக்க காக்க சூர்யா பான்ல அதான்.. இப்போதைக்கு இவ்வளவு தான் எனக்கு ஞாபகத்துல இருக்கு. மிச்சத்த எல்லாம் அப்புறமா யோசிச்சி வாட்ஸப்ல சொல்லுறேன்டா சந்தோ…” என்ற அழகியின் ரூல்ஸ்களைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷ், கயல் மற்றும் ஹரி மூவராலும் சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் சிரித்துக்கொண்டிருக்க. அவர்களை நோக்கி முறைத்த அழகி.


“என்ன.. கிண்டலா!! பார்த்துப் பொறுமையா சிரிங்க.. பல்லு சுளுக்கிக்கப் போகுது” என்றாள் கடுப்புடன்.


“சுளுகினாலும் பரவாயில்லை அழகி. நீயும் உன் போலீஸ் வுட்டுக்காரரும் ஆடுற மம்பட்டியான் டான்சை பார்த்துட்டு தான் நாங்க ட்ரீட்மென்ட் செய்யவே போவோம். நீ கவலையே படாதே…” என்று கயல் கூற,


“அந்தப் பத்து நான்-வெஜ் ஐட்டமை விட்டுட்டியே புஜ்ஜி. அதையும் அவளோட காக்க காக்க சூர்யா கெட்டப்ல இருக்க அஷ்வினே செய்து தருவாரு…” என்று கயலுடன் சேர்ந்துக்கொண்டு சந்தோவும் அவளைக் கிண்டல் செய்யவும். எரிச்சலின் உச்சத்திற்கே சென்ற அழகி. தன் கையிலிருந்த தூக்கை தூக்கி சந்தோவிடம் தந்தவள்.


“ரொம்பப் பெருமையா இருக்கு. என் மம்பட்டியான் டான்சைப் பார்க்க நீங்கயெல்லாம் இவ்வளவு ஆர்வமா இருக்குறதை நினைச்சு. அப்படியே சந்தோ! நீயும் கயலும் சேர்ந்து என் டான்ஸ் ஸ்டெப்ஸ் எப்படி எல்லாம் இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்துகிட்டே. இந்தத் தூக்குல இருக்குற ஆரி போன டீயை சூடு பண்ணி வயல்ல இருக்க ஆயாக்கும் , அங்க வேலை பார்க்குறவங்களுக்கும் கொடுப்பீங்கலாம். இந்தக் கேப்ல நானும் ஹரியும் அப்படியே வொறு ரௌண்ட்ஸ் போயிட்டு வருவோமாம் சரியா…


ஒருவேளை... இப்போ நா சொன்ன இந்த வேலையைச் செய்யாம, எனக்கு டிமிக்கி குடுகலாம்ன்ற எண்ணம் உனக்கிருந்தா அதை அப்படியே மறந்திடு. பிகாஸ் நா சொன்னப்படி நீங்க செய்யலைன்னா… உங்க ரெண்டு பேரை பத்தியும் சரவணன் பெரியப்பா கிட்ட நான் போட்டுக் கொடுத்துடுவேன். சோ, இந்த அழகிக்கிட்ட எப்பவும் ஜாக்கிரதையா இருக்கனும். பீ கேர்லெஸ்…” என்று அவர்களை நோக்கி கூறியவள். ஹரியை அழைத்துக்கொண்டு குளத்தை நோக்கி சென்றாள்.


அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த சந்தோ, “இந்தக் குட்டி சாத்தான். எவ்வளவு நேக்கா நம்மல அம்மாச்சிகிட்ட கோர்த்துவிட்டுட்டுப் போய்டா பாத்தியா பஜ்ஜி. இதுல ‘பீ கேர்லெஸ்’ வேறயாம். அது கேர்புல்ன்னு கூடச் சொல்லத் தெரியலை இவளாம் மிரட்டுற அளவுல இருக்கு நம்ம நிலைமை. எல்லாம் இந்தக் கயலோட அப்பா அந்த கிடா மீசைக்குப் பயந்துதான். ச்ச… வயல் பக்கம் போனா இன்னைக்கு முழுசும் வேலை சொல்லிச் சொல்லியேக் கொல்லுவாங்களே இந்த அம்மாச்சி வேற...” என்று புலம்பிய படியே ‘இந்தக் குட்டா கிட்ட சிக்கி சின்னபின்னம் ஆகப் போற அந்த புண்ணிவான் யாரோ… எவனோ... எங்கு இருக்கானோ… பாவம் அந்த ஜீவன்’ என்றேண்ணினான் சந்தோஷ்.


எந்நேரத்தில் சந்தோ அழகியிடம் சிக்கப் போகும் அந்த அ(ட)ப்பாவி ஜீவனைப் பற்றி எண்ணினானோ என்னவோ.


அந்த ஜீவனும் சரியாக அழகி ஹரியுடன் சென்றிருக்கும் குளத்திற்கு எதிர்புறமிருக்கும் பேருந்து நிறுத்ததில் வந்திறங்கினான்.


குளத்தில் இருக்கும் சறுக்கலில் ஹரியுடன் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அழகி. அவளையும் அறியாமல் ஆறு மணி பஸ்சில் வந்திறங்கிய அந்தப் புதியவனைக் கண்டதும் ‘யாருடா இவன் இவ்வளவு ஒசரமா இருக்கான். சரியான பனைமரம் போல இருக்கான்ல’ என்று எண்ணியவாறு தன்னருகில் அமர்ந்திருந்த ஹரியின் கைகளைச் சுரண்டினாள்.


“டேய் ஹரி! யாருடே அது... நம்ம சந்தோ பயலுக்கே டப் கொடுக்குற மாதிரி இவ்வளவு ஒசரமா இருக்குறது. இதுக்கு முன்ன இந்த உருவத்தை நா ஊருக்குள்ள பார்த்த மாதிரி ஞாபகமில்லையே . ஊருக்கு புதுசோ.. வெளியூர் ஆளா…”


அழகி தன் பாட்டிற்குக் கேள்விக்கனைகளை ஹரியை நோக்கி விசிக்கொண்டே செல்ல. ஹரியும் தான் சேகரித்த தகவல்களை எல்லாம் அழகியிடம் கூறலானான்.


“இவரா… இவர் பெயர் அமிழ்தினியன். நம்ம மருது அண்ணன் இருக்காருல அவரோட தோஸ்து. இவரும் மருது அண்ணனும் சேர்ந்து எதோ கம்ப்யூட்டர் கம்பனி வைக்கப் போறாங்களாம் நம்ம ஊருல. அதுக்காக மருதண்ணன் கூட ஒரு முறை இங்க வந்திருந்தாரு அப்போ பார்த்தேன் நான். நீ அந்தச் சமயம் காலேஜ் டூர் போய் இருந்த புள்ள... அதான் உனக்குத் தெரியலை”


“ஒ… அப்போ வந்தாரா. அதான் எனக்குத் தெரியல. இல்லைனா எனக்குத் தெரியாம இந்த ஊருக்குள்ள வொரு ஈ.. காக்கா கூட வர முடியாதே. ஆமா… எந்த ஊருடே ஹரி இவரு”


“ சொந்த ஊரு புதுக்கோட்டை டவுன் தானாம் அழகி. ஆனா படிச்சது வேலைப் பார்ப்பது எல்லாம் சென்னைலயாம்” என்று கருமமே கண்ணாகத் தான் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் அழகியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஹரி.


" அடேய்! இந்த இன்போர்மேஷன் கலெக்ட் பண்ணுற வேலையை மட்டும் பார்காம. கொஞ்சமாச்சும் படிக்கிற வேலையைப் பாருடா. நீ வேற இப்போ பத்தாகுப்பு(பத்தாம் வகுப்பு) போகப் போற. அப்பறம் படிக்காம நல்ல மார்க் வரலைனா. மொத்தக் குடும்பமும் ஒண்ணு சேர்ந்து அழகி தான் இவனைக் கெடுத்து குட்டிசுவர் ஆக்கி வச்சிருக்கான்னு சொல்லி… அறிவுரை சொல்லுறேன்னு ரெண்டு பேருக்கும் சேர்த்து பிளேட் போட ஆரம்பிச்சிடுவாங்க. அதுனால ஒழுங்கா படிப்பை பாருடே. நல்லா படிச்சா தான் என்னை மாதிரி இன்ஜினீயராக முடியும்" என்று அழகி கெத்தாகக் கூற.


அவளை வெத்தாக்கும் பொருட்டு, " எப்படி… உன்னை மாதிரி வெட்டி இன்ஜினீயராவா அழகி ஆகணும்" என்று கூறியவனை அவள் பிடிக்கும் முன்பே மின்னலென மறைந்திருந்தான் ஹரி.


"மவனே … என் கையில் சிக்காமல்லா இருக்கப்போற நீ… வசமா மாட்டுவல அப்போ இருக்கு உனக்கு" என்றெண்ணியவள்.


அடுத்ததாக யாரை வம்பு பண்ணலாம் என்று யோசித்தவாறே நடையை கட்டினாள்.


ஆனால், அழகியின் கேட்ட நேரமோ இல்லை மற்றவர்களின் நல்ல நேரமோ… ஒருவருமே அவளிடம் அகப்படாத காரணத்தினால் சமத்துப் பிள்ளையாக வீட்டிற்கே சென்றாள்.


வீட்டிற்குள் நுழையும்போதே!! வரவேற்பறையில் கேட்ட குரலில் குத்துகலமானவள். ஓடிச்சென்று அந்தக் குரலுக்கு சொந்தக்காரியான பத்மாவை கட்டிக் கொண்டாள் அழகி.


"அடியே பத்து… எப்போடி வந்தே… என்கிட்ட ஒரு வார்த்தைக் கூடச் சொல்லலை பார்த்தியா நீ ஊருக்கு வரேன்னு…" என்று குறையாக அவளிடம் கேட்டாலும், சலுகையாக அவள் மீதே சாய்ந்துக்கொண்டாள்.


"நா வர மாதிரியே ஐடியால இல்லைடா மதிமா. அதான் உன்கிட்ட சொல்லலை. இங்க தெற்கூர்ல என் மாமா பொண்ணுக்கு சடங்கு இன்னைக்கு. நான் வந்தே ஆகனுமாம். சோ.. வேற ஆப்ஷனே இல்லமா வந்துட்டேன்டா" என்றாள் பத்மா.


"அடடே… தெற்கூர் போறீங்களா மேடம். அதான் இம்புட்டு மேக்கப்… ‘சரி சரி’ புரியுது... ரொம்ப நாள் கழிச்சு உன் அவரைப் பார்க்க போற. அப்போ கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கனும் தானே. அதுவும் மாமா பொண்ணுக்கு சடங்கு வேற. அங்க ஹய்லைட்டே அத்தாச்சி நீ தான். என்ஜாய்.. என்ஜாய்.. பத்து.." என்றாள் அழகி உற்சாகமாய்.


அழகி, கயல், பத்மா மூவரும் சிறுவயதில் இருந்தே தோழிகள். பத்மாவும் கயலும் ஒத்த வயதுடையோர். ஆனால், அழகி இவர்களைக் காட்டிலும் வயது குறைந்தவளாகினும் இவர்களுகிடையில் இருக்கும் நட்பு ஆழமானது.


"நீ வேற ஏன்டி… அவரைப் பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. இன்னைக்கும் பார்ப்பேனா மாட்டேனான்னு தெரியல" என்றாள் பத்மா முகம் சிவக்க.


அவள் எப்போதும் அப்படித்தான். அந்த அவளின் அவரைப் பற்றிப் பேசினாலே போதும் அவள் முகம் சிவந்துவிடும். ஆனால் அந்த அவர் யாரென்று தான் இதுவரையிலும் யாருக்கும் தெரியாது. ஏன் கயலுக்கும் அழகிக்கும் கூட அது யாரென்று தெரியாது. அத்தனை ரகசியமாக வைத்திக்கிறாள் பத்மா அந்த அவரை. ஒருமுறை கூட அவள் அந்த நபரின் பெயரை சொல்லியதில்லை யாரிடமும். எப்போதும் 'அவரை ', 'அவர்' என்று தான் அந்த நபரை விளிப்பாளே தவிர ஒருபோதும் பெயரைச் சொல்லியதில்லை. அழகியும் ஹரியும் கூடத் தங்கள் துப்பறியும் வேலையையும் செய்துப் பார்த்துவிட்டார்கள். இருந்தும் அவர்களால் அந்த ‘அவரை’ கண்டுபிடிக்க முடியவில்லை.



"இன்னைக்கு அந்தச் சீக்ரெட் மேன் யாருன்னு நிச்சயம் இந்த அழகி கண்டுப்பிடிக்கிறேன் பாருடி பத்து.." என்று பத்மாவிடம் கூறியவள், ஐந்தே நிமிடங்களில் தயாராகி வந்தாள் பத்மாவுடன் தெற்கூர் செல்வதற்காக.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
***********************

"பத்து … டி.. பத்து… "


"என்னடி"


"இன்னும் எவ்வளவு நேரமாகும்டி பத்து.. என்னால ஒரே இடத்துல இருக்க முடியல.. வெறுப்பாகுது"


"அது… அனவயல்ல இருக்க மாமாவும், வடகாடு பெரியம்மாவும் வர லேட் அழகி. அதான் நேரமாகுது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா செல்லம்ல"


"எதே.. இன்னும் அவங்க வரலையா? என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது பத்து. நா அப்படியே இங்க எங்கேயாவது சுத்திக்கிட்டு இருக்கேன். நீங்க கிளம்பும் போது எனக்கு ஃபோன் பண்ணு. நா வந்து சேர்ந்துக்கிறேன்" என்றவள் பத்மாவின் பதிலை கூடக் கேட்காமல் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.


இனி என்ன?? நண்பர்கள் யார் வீட்டிற்காவது செல்வோமா.. இல்லை இங்கையே சுற்றி திரிவோமா… என்று எண்ணியப்படியே நடந்துக் கொண்டிருந்த அழகியின் விழிகள் ஒரு இடத்தைக் கண்டதும் பளபளத்தன ஆசையில்.


சொசைட்டிக்கு சொந்தமான மாந்தோப்பு அது. அதைக் கண்டுதான் அழகியின் விழிகள் பளபளத்தன. அந்த மாந்தோப்பு வருடா வருடம் ஏலம் விட்டு குத்தகைக்கு விடப்படும். குத்தகைக்கு எடுத்த நபரை தவிர மற்றவர்கள் யாரும் அந்த மரங்களில் இருக்கும் கனிகளையோ காய்களையோ பறிக்கக் கூடாது என்பது அங்குள்ள விதி. மீறி பறித்தால் குத்தகைக்காரர் சொல்லும் அபராத தொகையைப் பறித்தவர் செலுத்த வேண்டும். இல்லையென்றால் பஞ்சாயத்து தான். இந்த மாந்தோப்பு பஞ்சாயத்துக் கதைகள் ஏராளம் அவ்வூரில்.


அழகிக்கு இந்த மரங்களில் இருக்கும் கனிகளைச் சாப்பிட வேண்டுமென்பது நீண்ட கால ஆசை. இந்த மரங்களில் இருக்கும் கனிகள் எல்லாம் மிகவும் சுவையானவை என்று அவளின் நண்பர்கள் கூறி கேட்டிருக்கிறாள். ஆனால்! இதுவரையிலும் அதை ருசித்து பார்த்ததில்லை அழகி … அதற்கான வாய்ப்பும் இதுவரை அமைந்ததில்லை.



எனவே.. இன்று ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும் பொழுது அதை ருசித்துப் பார்த்துவிட வேண்டியது தான் என்றெண்ணியவள். எதைப் பற்றியும் சிந்தித்துப் பாராமல் உடனே அங்கிருந்த மாமரம் ஒன்றில் எறிவிட்டாள்.



கண்ணெதிரில் குலை குலையாகக் காய்த்திருந்த காய்களைக் கண்டு நாவில் எச்சில் ஊறியது அழகிக்கு. அதை எப்படியேனும் சாப்பிட்டே தீரவேண்டும் என்ற எண்ணத்தில்.


மூன்று காய்களைப் பறித்தவள். சற்று தணிந்து அமர்வதற்கு ஏதுவாயிருந்த கிளையின் இருபுறமும் கால்களைப் போட்டு அமர்ந்தவள், அதே வேகத்தில் அந்த மூன்று மாங்காய்களையும் உண்டு முடித்தாள். அதன் பிறகு தான் அவளுக்குச் சுற்றமே உரைத்தது. மரம் ஏற மட்டுமே தெரியும் … இறங்க தெரியாது என்ற உண்மையையும் மூளை எடுத்துக்கூற.


"அய்யோ!! இப்போ எப்படிக் கீழே இறங்குறது. முட்டாள் தனம் பண்ணிட்டியே அழகி… பண்ணிட்டியே… உனக்கு மரம் ஏற மட்டும் தான் தெரியும். இறங்க தெரியாதுன்னு மறந்துப் போய்ட்டியே… இப்போ எப்படிக் கீழே இறங்குவ… கண்ணுல சாப்பிடுற ஐட்டம் பட்டா போதுமே.. சுற்றி இருக்க எல்லாம் மறந்துடுமே உனக்கு. இப்போ கீழே குதிச்சா அடிப்படும்… இப்படி இங்கையே இருந்து யாரும் பார்த்தா பஞ்சாயத்துதான்.. " என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் அமர்ந்திருந்தவள்.


சந்தோஷை அழைத்து இறக்கி விடச் சொல்லாம் என்று எண்ணியவள், அவனுக்கு ஃபோனில் அழைக்க. அவனோ இவள் காலையில் வயலுக்குச் செல்ல சொல்லியதால் வேறு வழியில்லாமல் அங்குச் சென்றதாகவும். அப்போதிலிருந்து இப்போதுவரை அம்மாச்சி ஒவ்வொரு வேலையாகக் கூறி அவனை வேலை வாங்குவதாகவும் சொன்னவன். கயலுடலான அவனது சந்திப்பை கெடுத்ததற்குக் கடவுளாகப் பார்த்துக் கொடுத்திருக்கும் சரியான தண்டனை தானிது என்று கூறியவன். 'மேலையே கிடந்து சாவு' என்று சிரித்தவாறே ஃபோனை அணைத்துவிட்டான்.


"இவனைப் போய் நம்பினேன்ல என்னைச் சொல்லணும்.. சே!!" என்று புலம்பியவள், கீழே இறங்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.


சரியாக அதே நேரம் பச்சை வண்ணச் சட்டை அணிந்திருந்த ஒருவர் அந்தப் பக்கமாக வர, 'செத்தோம் இன்னைக்கு… நல்லா மாட்டப்போறேன்..' என்று எண்ணியவாறு இலைகளுக்குள் நன்றாகத் தள்ளி அமர்ந்து ஒளிந்துக்கொண்டாள் அழகி.


கீழிருந்து பார்த்தால் இவள் இங்கு இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், மேலிருந்து பார்த்தால் கீழே இருப்பவர்கள் நன்றாகவே தெரிவார்கள்.


யார் அந்தப் பச்சை சட்டைக்குச் சொந்தக்காரர் என்று பார்க்கும் ஆவல் எழ, அழகி மெதுவாகத் தன் முகத்தை மறைத்திருந்த இலைகளை ஒதுக்கிவிட்டு கீழே குனிந்து பார்த்தாள்.



பார்த்தவள் நொடி பொழுதும் தாமதிக்காமல், "ஹே பனைமரம்! இங்க மேல பாருங்க… மேல" என்று சத்தமாகக் குரலெழுப்பினாள் கீழே நின்றிருந்த அமிழ்தினியனை நோக்கி.


யார் அந்தப் பச்சை சட்டைக்காரன் என்று தெரிந்துக்கொள்வதற்காக எதார்த்தமாகப் பார்த்தவள் சத்தியமாக அங்கே அமிழ்தினியனை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்படியும் அவன் ஊருக்கு புதிது. இந்தச் சொசைட்டி மரத்தை பற்றியும், பஞ்சாயத்தைப் பற்றியும் நிச்சயம் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் தப்ப வேறு வழியேயில்லை என்பதை நொடி நேரத்தில் கணக்கிட்டவள். எதைப் பற்றியும் சிந்திக்காமல் 'பனைமரம்' என்று அவனை அழைத்துவிட்டாள்.


உண்மையில் அவன் பெயர் 'பனைமரம்' என்று தான் அவளுள் பதிவாகி இருந்தது. அதனால் தான் அவன் பெயரை நினைவு படுத்தக்கூட முற்படாமல், அவனைக் கண்டதும் தப்பிக்க வழி கிடைத்துவிட்டது என்ற உற்சாகத்தில் அவனை அழைத்திருந்தாள் அழகி.


மூன்று முறைக்கு மேல் அழகி அழைத்தும் அவளைக் கவனியாதவன். கருமமே கண்ணாகத் தனது மொபைலில் எதையோ தீவிரமாக 'டைப்' செய்துக் கொண்டிருந்தான்.


'யோவ்வ்! உன்னைத் தான்யா மேல பாரு…' என்று கையில் கிடைத்த மாங்காயை அவனை நோக்கி அழகி எரியவும் தான். 'யாருடா அது' என்னும் லுக்கில் மேல்நோக்கி பார்த்தான் அமிழ்தினியன்.


அவன் மேலே பார்க்கவும். கையில் ஒரு மாங்காவை கடித்துக்கொண்டே, மரக்கிளையின் இருபுறமும் கால்களைப் போட்டுக்கொண்டு குட்டிக் குரங்கு போல் அமர்ந்திருந்தவள் 'ஹாய்' என்று அவனை நோக்கி கைக்யாட்டினாள் அழகி சிரித்தவாறே.


'யாரிவள்' என்று எண்ணியவாறே அவளை நோக்கி பதிலுக்கு இவனும் கையசைக்க.



"ஐ வான்ட் ஹெல்ப்" என்று கத்தினாள் சப்தமாக.


"வாட்??"


"சார்… நா தெரியாம மேல ஏறிட்டேன் சார். எனக்கு மரம் ஏற தெரியும்… ஆனா, இறங்க தெரியாது. எப்படியாவது என்னை இறக்கி விடுங்க. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்…" என்று வார்த்தைக்கு வார்த்தை 'சார்' போட்டு அழகி கெஞ்ச… அமிழ்தினியனிற்குப் பாவமாக போய்விட்டது.


சரி அவளுக்கு உதவுவோம், பாவம் சிறு பெண் என்று எண்ணியவன். அழகியை நோக்கி, "நீ அப்படியே கீழே ஜம்ப் பண்ணு.. நா பிடிச்சிக்கிறேன் " என்றான்.


" விட்டுவிட மாட்டீங்களே!! "



" என் மேல் நம்பிக்கை இல்லையா" என்ற அமிழ்தினியனின் ஒற்றைக் கேள்வியில். மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல் 'தொப்பென்று' அழகியும் குதிக்க, தன் இரு கைகளால் தாங்கிப் பிடித்திருந்தான் அமிழ்தினியன்.


கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்களை இறுக்கி முடியிருந்தவள். இன்னும் தனக்கு எந்தவித வலியும் தெரியவில்லை என்றால், தான் இன்னும் கீழே விழவில்லை என்பதை உணர்ந்தவள், லேசாகக் கண்களைத் திறந்து தன்னைத் தாங்கி பிடித்திருக்கும் வலிய கரங்களுக்குச் சொந்தக்காரனின் வதனத்தைப் பார்த்தன அழகியின் விழிகள்.


'அதே கண்கள்… அதே உயரம் … அதே போன்ற உடல்… மீசை கூட நா சந்தோ கிட்ட சொன்ன மாதிரியே இருக்கே. ஆனா என்ன! ஹேர் கட் மட்டும் போலீஸ் கட் பண்ணியிருந்தா.. என் ரூல்ஸ்க்கு ஏத்த மாதிரி அப்படியே இருந்து இருப்பாங்க… பாட்டு பாட தெரியுமா இவங்களுக்கு.. அப்படிப் பாட தெரியலைனாலும் நானே சொல்லி தந்துடுவேன்… அப்புறம் டான்ஸ்...' என்ற அழகியின் எண்ணவொட்டத்தைத் தடுத்து நிறுத்தியது அமிழ்தினியனின் காந்த குரல்.


"என்ன பாப்பா… நீ மட்டும் தனியா இந்த இடத்துக்கெல்லாம் வரலாமா??" என்றான் அக்கறையுடன்.


"பாப்பாவா…." என்று திகைத்தவள்.



"ஹலோ மிஸ்டர்… யாரை பார்த்து பாப்பான்னு சொன்னிங்க. நா வொரு இன்ஜினியர் தெரியுமா.." என்றாள் கெத்தாக.


அவளின் தோரணையைக் கண்டவனுக்குச் சிரிப்பு வந்தாலும், முயன்று அதைக் கட்டுப்படுத்தியவன்.


"ஹாஹா… சாரி இன்ஜினியர் மேடம். உங்களைத் தெரியாம பாப்பான்னு சொல்லிட்டேன். என்னை மனிச்சு" என்று சிரிப்புடன் கூறியவன்.


"இறங்க தெரியாதுல பின்ன எதுக்கு மேல ஏறின நீ? " என்றான் கேள்வியாக.


"இது எங்க மரம் தான் தெரியுமா. எனக்கு மேல இருக்குற காய் எல்லாம் எட்டவேயில்லை… தொரட்டிக்குச்சி வச்சிக்கூட இழுத்துப் பார்த்தேன் ம்மும்.. எட்டவேயில்லை.. அதான் மரத்துல ஏறி பறிச்சிடலாம்னு நினைச்சு ஏறிட்டேன்..." என்று பாவமாகக் கூறுவதைப் போல் கூறியவள்.


"இஃப் யூ டோன்ட் மைண்ட்… எனக்காக அந்த மூணு மாங்காய்களை மட்டும் பறித்து தர முடியுமா ப்ளீஸ்… ரொம்ப ஹெயிட்ல இருக்கு.." என்றாள்.


அவளின் குரலில் இருக்கும் ஆவலை கண்டவன், அவளின் வேண்டுகோளை மறுக்க முடியாமல், அவள் கேட்ட அந்த மாங்காய்களைப் பறிப்பதற்காக மரத்தில் ஏறினான்.


அவனிற்கே புரியவில்லை.. தான் ஏன் அவள் கேட்டதற்காக இதையெல்லாம் செய்துக் கொண்டிருக்கிறோம் என்று. இருந்தாலும் செய்கிறான் ஏன்னென்ற காரணம் அவனிற்கே தெரியாது.


'டேய் அமிழ்! மாங்கா பறிக்கவாடா இந்த ஊருக்கு வந்த நீ..' என்று கேலி செய்த மனசாட்சியை ஓதிக்கித் தள்ளியவன். அந்த மாங்காய்களை ஒவ்வொன்றாகப் பறித்து அழகியிடம் போட்டான்.


அவளும் அவன் போடும் மாங்காய்களை எல்லாம் அழகாகக் கேட்ச் பிடித்துக் கொண்டிருந்த நேரம். யாரோ அங்கு வரும் அரவம் கேட்க.


"ஹே!! கீழ வாங்க… சீக்கிரம்… பறித்த வரை போதும்.." என்று அழகி அமிழ்த்தினியனை அழைக்க. அந்தோ பரிதாபம், அவள் அழைப்பு அவன் செவிகளை எட்டவேயில்லை.



'சாரி பனை... நீ எப்படியோ தப்பிச்சிடு நா போறேன்' என்று மானசீகமாக அவனுடன் பேசியவள் அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட்டாள்.


கையிலிருந்த மாங்காய்களை எல்லாம் ஓரிடத்தில் பத்திரமாக வைத்தவள். மீண்டும் அந்த மாமரத்திற்கு அருகே வருகையில் அங்கு பஞ்சாயத்துக் கூடிவிட்டிருந்தது.


அமிழ்தினியன் நடுநாயகமாக நின்றிருக்க. அவனை சுற்றி நின்றிருந்தனர் ஊர் பெரியவர்கள்.


யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து நின்று பஞ்சயத்தை வேடிக்கைப் பார்த்த அழகியை கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.


அவனை நிமிர்ந்துப் பார்க்க திராணியற்றவளாய் கீழே குனிந்தவாறே நின்றிருந்தாள் அழகி.


அமிழ்தினியன் வெளியூர் ஆள் என்பதால் அழகூரின் சட்டதிட்டங்கள் தெரியாமல் இவ்வாறு செய்துவிட்டான் என்று கூறி ரூபாய் ஐயாயிரம் அபராதம் கட்டச் சொல்லி அவனை விட்டுவிட்டனர் பஞ்சாயத்துக்காரர்கள்.


ஐய்யாயிரம் அபராத தொகையாகச் செலுத்திவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தவன் எதிரில் வந்து நின்ற அழகி. தன்னிடமிருந்த மாங்காய்களையும், முந்நூறு ரூபாய் பணத்தையும் அமிழிடம் தந்தவள், 'சாரி' என்றாள் ஒற்றை வார்த்தையாக.


அவள் தந்த பணத்தையும், மாங்காய்களையும் அவளிடமே திருப்பித் தந்தவன். "இட்ஸ் ஓகே… நீயே வச்சிக்கோ… உன் பேரென்ன" என்றான்.


"நா மதியழகி… நீங்க அமிழ்தினியன் மருதுவொட ஃப்ரென்ட்... எனக்கு உங்களைப் பற்றிய டீடெய்ல்ஸ் கொஞ்சம் தெரியும். சாரி நா வேணும் அப்படி உங்களை மாட்டிவிட்டுட்டு போகலை. உங்களை இறங்க சொன்னேன்.. உங்களுக்குத் தான் அது கேட்கலை போல" என்றாள் தன்னிலை விளக்கமாக.


"மதியழகி… நைஸ் நேம். என்னைப் பற்றி நிறைய விஷயம் தெரிந்துவைத்திருக்கப் போல" என்றவன், "நீ என்னை கூப்பிட்டு எனக்கு தான் கேட்கலை போல. நீ என்னை விட்டுட்டு போனதுனால எனக்கு ஒன்னும் உன் மேல கோவம் இல்லை அழகி. முதல்ல செம காண்டுல இருந்தேன் அப்புறம் அதுவும் இல்லை. இன்பாக்ட் உன்னோட சூழ்நிலையை … ஐ கென் அண்டர்ஸ்டாண்ட் அழகி. நா வெளிவூர் ஆளு... சோ இது பெரிய பிரச்சனை ஆகாம இருந்துச்சு. இதுவே உள்ளூர் ஆளா இருந்தா அவ்வளவு தான்ல.. இந்நேரம் பெரிய பஞ்சாயத்தாகி இருக்கும்" என்றான் இலகுவாக அவளிடம்.


"ஆமாம் சார்… அதுவும் நா வேற இந்த ஊர் பொண்ணு இல்லை. பக்கத்தில வடக்கூர் ஆளு. நா மட்டும் மாட்டி இருந்தேன்… அவ்வளவு தான்..இது ஊர் பிரச்சனையாகவே ஆகி இருக்கும். நல்லவேளை தப்பிச்சேன்…" என்றாள் நிம்மதி பெருமூச்சுடன்.


"அப்போ!! என்னோட ஐயாயிரம் தான் ஒரு ஊர் கலவரத்தையே தடுத்து நிறுத்தி இருக்குன்னு சொல்லு.."


"ஆமா! நிச்சயமா அதிலென்ன சந்தேகம். ஆனா.. மூணு மாங்காயை ஐய்யாயிரம் ரூபாய்க்கு வாங்கின ஒரே ஆளு நீங்களா தான் இருப்பீங்கல" என்றாள் அடைக்கமுடியா சிரிப்புடன்.


"ஹாஹா… சரியான வாலு " என்று அமிழ்தினியன் கூறவும், வேனில் இருந்து பத்மா "அழகி … இங்க தான் இருக்கியா நீ. உன்னை எங்கெல்லாம் தேடுறது வா.. வந்து வேன்ல ஏறு.." என்று அழைக்கவும் சரியாக இருந்தது.


பத்மாவை நோக்கி, "இதோ… வரேன் பத்து கொஞ்சம் வெய்ட்டீஸ்…" என்று குரல் கொடுத்தவள்.


"பை… இனியன் சார்" என்று கூறிவிட்டு அவன் கைகளில் அந்த மாங்காய்களையும், முந்நூறு ரூபாய் பணத்தையும் தந்து விட்டு தான் சென்றாள்.


போகும் அவளையும், கையிலிருந்த மாங்காய்களையும் பார்த்தவாறே நின்றிருந்த அமிழ், 'கிரேசி கேர்ள்' என்று கூறி புன்னகைக்க.


அவனைப் பார்த்து, 'அடடே! இந்த ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸருக்குச் சிரிக்கக் கூட வருதுப்பா…' என்று ஆச்சரியம் படுவதுப்போல் கிண்டல் செய்த மனசாட்சியை ஓரம்கட்டியவன். தலையில் லேசாகத் தட்டியவாறு தன் வேலைகளைச் செய்ய ஆயத்தமானான்.




கதைக்கான கருத்துக்களை கருத்து திரியில் சொல்லுங்க பட்டூஸ்.
உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கும் நான்.
??
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3 :


டைரியின் பக்கங்கள் :

தினமும் டைரி எழுதும் பழக்கம் இல்லாதவன் நான். என் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும், என் உள்ளார்ந்த உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளவே இந்த டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன்.


சில உணர்வுகள் மிகவும் ரகசியமானவை... ஏன்... அந்தரங்கமானவையும் கூட. அவற்றை பொதுவாக நாம் யாரிடமும் பகிர்ந்துக்கொள்வதில்லை. ஏன்.. அப்படியே பகிர்ந்துக்கொண்டாலும் அந்த ரகசியம் ரகசியமாகத் தான் இருக்குமா.. என்று கேட்டால், அதற்கும் நம்மிடம் பதிலில்லை. அதே போல், நம் உணர்வுகளையும், கேட்பவர் சரிவர புரிந்துக் கொள்வாரா? என்பதும் சந்தேகமே. எனவே எனக்குள் இருக்கும் ரகசியங்களையும் என் உள்ளார்ந்த உணர்வுகளையும் எந்த வித ஒளிவுமறைவும், தயக்கமுமின்றி நான் பகிர்ந்துகொள்ளும் ஒரே இடம் என் டைரி மட்டுமே.


மார்ச் 18, 2014


என் தேவதை பெண்ணை முதன் முதலில் நான் சந்தித்த தினம். அடங்காத காளையாகச் சுற்றித் திரிந்த என்னையும் அடிக்கி ஆள வந்துவிட்டாள் அவள்!! என் தேவதை. இன்னமும் என்னால் இதை நம்ப முடியவில்லை , முதல் பார்வையிலேயே எப்படி ஒருத்தி இப்படி என்னை மாற்றிவிட்டாள்.


“சாரி அண்ணா... கவனிக்கலை... சாரி... சாரி... அண்ட் தேங்க்ஸ் ண்ணா..” அவள் என்னிடம் பேசிய மொத்த வார்த்தைகளும் இவை தான். அது எப்படி... அண்ணன் என்று அழைத்த பெண்ணின் மீது காதல் தோன்றும் என்று என் மனசாட்சியே என்னை காரித் துப்புகிறது தான். இருந்தும் என்ன செய்ய... இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் காதலை சொன்னப்போதும் வராத அந்த உணர்வு. இவளின் ஒற்றை பார்வையிலும், ‘சாரி அண்ணா’ என்ற ஒற்றை விளிப்பிலும் வந்துவிட்டதே. இது எப்படி சாத்தியம்?? எனக்கும் அதுதான் விளங்கவில்லை.. எப்படி சாத்தியம்??!


இந்த இருபத்தியொரு வருட வாழ்வில். நான் இதுவரை அனுபவித்திராத ஒரு நுதன உணர்வை இன்று தான்... அதுவும் அவளை பார்த்த அந்த கணத்தில் இருந்து தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் ஒற்றை பார்வை ஒரு ஆண் மகனை முழுவதுமாக... உள்ளும், புறமும் என்று மொத்தமுமாக கொள்ளையடித்துவிட முடியுமா என்ன?? முடிகிறதே...


இதோ!! தன்னிலை மறந்து, சுற்றமும், முற்றமும், மொத்தமும் மறந்து.. சித்தம் முழுதும் அவள் முகம் மட்டுமே நிறைந்திருக்க... செவி முழுதும் இன்று அவள் பாடிய அந்த பாடலே கானமழையாக பொழிந்துக் கொண்டிருக்க... அவளையே நினைத்து உருகி! உருகி! டைரி எழுதிக் கொண்டிருக்கிறேனே. இதுவே என்னுள் நிகழ்ந்த மாற்றத்திற்கு சான்றல்லவா!!


பாரதியும் 'இன்ப தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாடியது இப்படி ஒரு உணர்வை அனுபவித்ததனால் தானோ?? ஒன்றும் புரியவில்லை. அப்படியே காற்றில் மிதக்கும் உணர்வு. அவளின் அந்த ஒற்றை பார்வை நியூட்டனின் விதிகளை எல்லாம் பொய்க்கச் செய்து... என்னை வானில் மிதக்க வைக்கிறது. இது என்னடா பைத்திகார தனமான சிந்தனை என்று மூளை கேள்வி கேட்டாலும். மனம் அது பாட்டிற்கு என்னென்னவோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது.


காதலும் ஒரு அழகான பைத்திகார தனம் தானே… என்றோ எங்கோ ஒரு புத்தகத்தில் படித்த வரிகள் எல்லாம் இன்று சம்பந்தமே இல்லாம் 'எஸ் சார்' என்று ஆஜர் ஆகிறது.


உண்மையில் இந்த நாளை வரலாற்றில் தான் பொரித்துவைக்க வேண்டும் போலும். பல அதிசய ருசிகர நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றாக நடந்திருகிறதே !!


அதிலும் மிக முக்கியமான ஒன்று... அனைவராலும் ‘மௌனம் பேசியதே’ சூர்யாவாக அறியப்பட்ட நான் ‘வாரணம் ஆயிரம்’ சூர்யாவை போல் காதலில் விழுந்தது ஒரு அதிசயமென்றால். மற்றுமொரு அதிசயமோ எங்க கல்லூரி கல்சுரல்ஸ் தான்.


எப்போதும் தனித் தனியாக கல்சுரல்ஸ் நிகழ்ச்சியை நடத்தும் எங்கள் இன்ஜினியரிங் கல்லூரியும், ஆர்கிடேக்ச்சர் கல்லூரியும், வரலாற்றில் முதன் முறையாக இன்று தான் ஒருங்கிணைந்த கல்சுரல்ஸ் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.


‘அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான் அமையுது’ என்று என் தலைவன் வடிவேல் சொல்லுகின்ற மாதிரி... மேனேச்மெண்ட் எடுத்த இந்த ஒருகிணைந்த கல்சுரல்ஸ் முடிவுதான் என் தேவதையை நான் கண்டுபிடிக்க எனக்கு மாபெரும் உதவிப் புரிந்த என் தெய்வம்.


இதோ இப்போது கூட… என் தேவதையை பற்றி எழுதும்போதுதே அவளை சந்தித்த அந்த அழகிய தருணம் காட்சியாக கண்முன்னே தோன்றுகிறது. இதுவும் கூட ஆச்சரியம் தான். என்னுள் நடக்கும் இந்த மாற்றங்கள்….


'மயூரி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் இணைத்து நடத்தும் ராப்சர்’14 (RAPTURE’14) இனிதே ஆரம்பமாகிறது... என்ஜாய் கய்ஸ்' என்று விளக்கேற்றி அந்த நாளை குதுகலமாக ஆரம்பித்து வைத்தார் சிறப்பு விருந்தினர்.


எங்கள் கல்லூரியின் சிறப்பு இது. ஒவ்வொரு நிகழ்சிக்கும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களை அழைப்பார்கள். அந்தச் சிறப்பு விருந்தினர்களை காணவேண்டும் என்றே தனி கூட்டம் வரும். இன்றும் அதேப்போல் தான் அமோகமாக ஆரம்பித்தது இன்றைய தினம்.



கல்லூரியின் சார்பாக விருந்தினர்களை அழைத்து வருவதும், வந்த விருந்தினர்களை அழைத்து செல்வதும், மாணவர்களுக்குள் எந்த வித சண்டைச் சச்சரவுகளும் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் ப்ரெசிடென்ட்டாகிய என் கடமை.



அதேப் போல் இன்றும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருக்காமல் கட் அடித்துவிட்டு. மாணவர்கள் யாரும் தங்கள் வகுப்பறைகளில் இருகிறார்களா?? என்பதை கண்காணிக்க வேண்டி ஒவ்வொரு பில்டிங்காக பார்வையிட்டுக் கொண்டிருந்தேன் நான்.


அந்நேரம், பாடல் நிகழ்ச்சி அரங்கத்தில் நடந்துக்கொண்டிருக்க… அங்கு தொகுபாளினி 'யாரோ' ஒரு பெண்ணின் பெயரை அழைத்துக் கொண்டிருந்தாள். அந்த பெண் அங்கே இல்லை போலும். ஸ்டேஜின் கீழேயுள்ள எம்.சி டெஸ்க்கின் அருகே கைகளை பிசைந்தவாறு பதற்றத்துடன் நின்றுக்கொண்டிருந்தனர் மூன்று மாணவிகள். அந்த அழைக்கப்பட்ட பெண்ணின் தோழிக்களாக இருப்பார்கள் போலும்.


அங்கே என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து... பிரச்சனை எதுவும் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது என் கடமை. ஆதலால், அவர்களை நோக்கி விரைவாக நான் செல்ல... எங்கே இருந்து வந்தாளோ.. என்று தெரியவில்லை. புயல் போல் ஓடிவந்து என் மீது மோதி நின்றாள் அவள்... என் தேவதை.


எங்கே அவள் விழுந்துவிடுவாளோ!! என்று பதறி… அவள் விழாமல் இருக்க, அவள் இடைப்பற்றி தாங்கிப்பிடித்து நேராக நிற்க செய்துவிட்டு அந்த முகத்தை ஏறிட்டு பார்த்த அந்த நொடி... சினிமாக்களில் காண்பிப்பது போல,வெள்ளை தேவதைகள் பின்னணியில் ‘நம்தன நம்தன’ என்று பூ தூவி பாடியது போல் தோண்றியது எனக்கு.


நேற்று பிறந்த பூனைக்குட்டி... எப்படி கண்களை மூடிக்கொண்டிருக்குமோ அதே போல் கண்களை மூடிக்கொண்டு, துடிக்கும் இதழ்களுடன் எங்கே கிழே விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் எனது ஷர்ட் காலரை இருக்கிப்பிடித்தவாறு நின்றிருந்தாள் அவள்.


எதோ மாயவலையில் சிக்கியது போல் நானும் அவளின் அருகாமையில் மயங்கி போய் அவளை தாங்கியவாறு அப்படியே நிற்க. எங்கிருந்தோ ஒரு பாடல் குரல் கேட்க... அந்த மாயவலையிலிருந்து சட்டென்று வெளியே வந்தேன் நான்.


அவளும் அந்த பாடல் குரலினால் தெளிந்திருப்பாள் போலும். நான் அவளை அழைக்கும் முன்பே கண்களை திறந்தாள்.


விழிகளா அவைகள்... இல்லவே இல்லை என்று சத்தியம் செய்யவும் தயார் நான். அந்த கண்களின் கருவிழிகளுக்கு பதில் காந்தங்களை சிறு உருண்டைகளாக மாற்றி அவளின் கருவிழியை படைதான் போல் அந்த பிரம்மன். காந்தத்தை கண்ட இரும்பாய் என் இதயமும் அப்படியே அவள் புறம் ஈர்க்கப்பட்டு அந்த விழியசைவில் அவளிடம் கட்டுன்று நின்றது.


எனக்கு பின்னணி இசைபோல் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்று மீண்டும் இதற்கு முன்பு தொகுப்பாளினி அழைத்த அதே பெயரை மீண்டும் அழைக்கப்படவும். என் முன் நின்றிருந்த என் தேவதையின் உடல்மொழியில் திடீர் பதற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன் நான்.


உடனே... என்னிடம் இருந்து விலகியவள், “சாரி அண்ணா... கவனிக்கலை... சாரி... சாரி... அண்ட் தேங்க்ஸ் ண்ணா..” என்று என்னிடம் கூறிவிட்டு அதே புயல் போல் வேகமாக ஓடி மறைந்தாள் .


அவள் சென்றதை கூட உணராமல் திகைத்த நிலையில் நின்றிருந்த என்னை சுயநினைவிற்கு கொண்டு வந்தது என்னவோ அவளது தேன் குரல் தான். மேடையில் நின்று பாடிக்கொண்டிருந்தாள் என் தேவதை.


“சே! இவ்ளோ நேரம் அவ பேரை தான் ஸ்டேஜ்ல நின்னு... இந்த ஹேமா ஏலம் போட்டாளா... அதை கவனிக்காம கோட்டைவிட்டுடேனே...” என்று புலம்பிய நான்.


அவள் பெயர் என்னவென்று அடுத்த ஐந்து நிமிடத்தில் கண்டுபிடித்தாலும்... எனக்கு அவள் என்றும் என் தேவதை தான்.


காதலும் ஒரு வகை பாண்டஸி தான்ல... அந்த பாண்டஸி அனுபவத்தை அனுபவிப்பவரை தவிர வேறாராலும் அறியமுடியாது என்பது தான் அந்த காதலில் விந்தையே.


இதோ இப்போதும் கூட என் செவிகளில் இனிமையாக ஒலித்துகொண்டே தான் இருக்கிறது என் தேவதையவள் இன்று பாடிய அந்த பாடல்.


“வாழ்க்கை என்பது என்ன... பள்ளி பாடமுமல்ல...
கற்றுக்கொண்டு மெல்ல முன்னேற...
காதல் என்பது என்ன... புள்ளி கோலமுமல்ல...
காற்றில் களையும் போது தள்ளாட...
எங்கோ எங்கோ... ஒரு உலகம் ...
உனக்காக காத்துக்கிடக்கும்...
நிகழ்காலம் நதியை போல...
மெல்ல நகர்ந்து போகுதே...
நதி காயலாம்...

நினைவில் உள்ள காட்சி காயுமா??...”
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4


'அத்தி அதிக்கா அத்தை மடிமேல ஆடிக்கிடந்தால் சுகமல்லோ..' என்று பாடியவாறு தன் அத்தையும், சந்தோஷின் அன்னையுமாகிய மீனாட்சியின் மடியில் ஒய்யாரமாக படுத்துக்கொண்டிருந்தாள் மதியழகி.


சரவணன் , மேலுசாமியின் பாசமிகு ஒற்றை தங்கை தான் இந்த மீனாட்சி. இவர்களை வைத்து பாசமலர் பார்ட் 2 படமே எடுக்கலாம். அப்படியொரு பாசமான தங்கை அண்ணன்கள் இவர்கள்.


தன்னுடன் பயின்ற வேற்று ஜாதி பையனை காதலித்த மீனாட்சியின் காதலுக்கு அவர்கள் வீட்டில் தடைவிதிக்க, அனைவரையும் எதிர்த்துக் காதல் கணவனான குணசேகரனை கரம்பிடித்தார் மீனாட்சி.


இவ்வாறு ஜாதி மாற்றி ஜாதித் திருமணம் செய்ததால் ஊருக்குள் பெரும் கலவரம் முகிழ்க்க. அன்றைய ஊர் தலைவரும், மீனாட்சியின் தந்தையுமாகிய சிவராமன் தான் ஊருக்குள் கலவரம் வேண்டாம் என்று முடிவெடுத்து. மீனாட்சிக்கும் தங்கள் குடும்பதிற்குமான தொடர்பை முற்றிலுமாக முறித்துக்கொண்டார்.


மீனாட்சியின் இந்த திருமணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது அவள் மூத்த அண்ணன் சரவணன் தான். ஒரே தங்கை என்று செல்லமாக வளர்த்த சரவணனுக்கு , மீனாட்சி சொல்லாமல் கொள்ளாமல் காதல் திருமணம் செய்ததை, அதுவும் வேற்று ஜாதி பையனுடன் கலப்பு திருமணம் செய்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதன் விளைவு, அந்த நிகழ்விற்கு பின் யாருடனும் அதிகம் பேசாமல் தன்னை தானே அனைவரிடமிருந்தும் ஒதிக்கிக் கொண்டார் சரவணன். அதற்கு மிக முக்கிய காரணம், தங்கையின் இந்த செயலால் தன்னை தாக்கி யாரேனும் ஒரு வார்த்தை இழிந்து பேசிவிட்டாலும் அதை தன்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பது தான்.


இது அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல். சந்தோஷ் பிறந்த பிறகு... மீனாட்சி வீட்டில் சிவராமனும், வேலூசாமியும் அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டது வேறு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போலானது சரவணன் விஷயத்தில்.


மீனாட்சியை மீண்டும் ஏற்றுக்கொண்ட அன்று தம்பியுடனும், தந்தையுடனும் சண்டையிட்டு தெற்கு அழகூரிற்கு சென்றவர் தான். இன்றளவும் ஏதும் விசேஷ நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வடக்கூர் பக்கம் வருவதேயில்லை அவர்.


காலப்போக்கில் அவரும் மீனாட்சியை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும். சமயங்களில் அவரையும் அறியாமல் வார்த்தைகள் கண்டமேனிக்கு விட்டுவிடுவார். அதுவும் அவரின் வசவு சொற்கள் எல்லாம் அதிகம் சந்தோஷை தான் தாக்கி இருக்கும்.


சரவணன் எவ்வளவு தான் திட்டித் தீர்த்தாலும். அதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அமைதியாக அவரை பார்த்து புன்னகைக்கும் சந்தோஷை அவரால் மீண்டும் திட்டவும் முடியாது. தன் அமைதியான தூய அன்பினால் சரவணன் எனும் பாறையையும் கரைத்துவிட்டிருந்தான் சந்தோஷ்.


என்னத்தான் சிரித்துக்கொண்டே வலிக்காத மாதிரி அவன் நடந்துக்கொண்டாலும். சில சமயங்களில் அந்த பிஞ்சு நெஞ்சு நிறையவே அடிப்பட்டு போகும். தன் வருத்தத்தை எல்லாம் தாய் தந்தையிடம் சொல்லி அவர்களையும் வருந்த வைக்கக் கூடாது என்று எண்ணியவன், தனக்குள்ளேயே அந்த சோகங்களை எல்லாம் அடைத்துக்கொள்வான்.


சோகமே உருவாக இருந்தவனையும் குறும்பு செய்ய வைத்தது அழகி என்னும் வாலில்லா குட்டி குரங்கு தான். அழகியின் நட்பை தொடர்ந்து கிடைத்த கயலின் காதலும் தான் அவனை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.


முன்பு போல் சந்தோஷிடம் சரவணன் மோசமாக நடந்துக்கொள்ளவில்லை என்றாலும். சுமுகமான உறவு என்பதும் அவர்களிடத்தில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இருவருக்குள்ளும் முட்டிக் கொள்ளாமல் என்ற நிலை தான் இன்னமும்.


கயலைப் பெண் கேட்டு செல்லும் போது, தன் தாய் தந்தையின் கலப்புத் திருமணத்தை சுட்டியே தன்னை அடையாளம் காட்டும் சமூகத்திற்கு முன்பு. அதை எல்லாம் பின்னுக்கு தள்ளி 'சந்தோஷ் என்றால் இவன் தான்' என்று அனைவரும் மதிக்கும்படியும், நன்றாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கும் தனக்கானத் தொரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று அயராது உழைத்துக் கொண்டிருக்கிறான் சந்தோஷ்.


இதோ இன்றும் கூட, ஏதோ முக்கியமான ப்ரொஜெக்ட் ஒன்றில் புதிதாக சேரும் படி தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர. உடனே புறப்பட்டு சென்று விட்டான் மும்பைக்கு.


தன் மச்சான் குரங்கு மும்பை போனதில் இந்த குட்டிக் குரங்குக்கு மிகவும் வருத்தம். அந்த வருத்தத்தை குறைத்துக் கொள்வதற்காகத் தான் இப்போது அத்தையின் மடியில் படுத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.


"அத்தை… இந்த சந்தோ எப்போ வருவான். அவன் இல்லாம ரொம்ப வெறுப்பா இருக்கு. தனியா இருக்க..." என்ற அழகியின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்த மீனாட்சி,


"தெரியலையே அழகி. உன் மச்சான் உன்கிட்ட சொல்லிட்டு தான் செய்வான் எல்லாமும். நீயே என்கிட்ட கேட்டா! நா எங்கே போவேன்மா… எங்கே போவேன்.." என்று ராகமாக கூறியவரின் பதிலில் எரிச்சலுற்றவள். அவர் மடியில் இருந்து எழுந்து,


"அத்தை!! நா சீரியஸா கேக்குறேன்.." என்றாள்.


"நானும் சீரியஸா தான் சொல்லுறேன்டா அழகிமா. என்கிட்ட எப்போ திருப்பி வருவான்னு எந்த டீடெயில்ஸ்சும் சொல்லல அவன். உனக்கு அவன் ஃபோன் பண்ணும் போது நீயே கேளு. உன்கிட்ட மட்டும் தான் சொல்லுவான் எல்லாத்தையும் தெளிவா"


"ஆமா அப்படியே சொல்லிட்டாலும்… அவனுக்கு மும்பைக்கு வேலை விஷயமா போயிட்டா போதும். நாமல்லாம் மறந்தே போயிடுவோம் அத்தை. அவனுக்கு நாம ஒரு கண்ணுன்னா, அவன் வேலை மற்றொரு கண்ணு. இங்க இருந்தா நாமதான் ஸ்பெஷல் அவனுக்கு. அதுவே மும்பை போயிட்டா நம்மள கண்டுக்க கூட மாட்டான். சரியான பிராடு" என்று ஆற்றமையுடன் பேசியவளை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்ட மீனாட்சி,


"விடுடா அழகிமா… அவனுக்கும் சட்டுப்புட்டுன்னு நம்ம கயல்விழியை கட்டி வச்சி இங்கையே பிடிச்சு வச்சிட்டலாம்னு பார்த்தா. எங்கே...எங்க அண்ணன் வில்லனால நிக்கிறாரு" என்றார் ஆயாசத்துடன்.


"அத்தை!!!" என்றாள் அழகி, அதிர்ந்த குரலில்.


"என்னடாமா…"


"உங்களுக்கு கயல் மேட்டர் தெரியுமா அத்த.. இந்த சந்தோ பய சொன்னான்னா??"


"அவன் எங்க சொல்லுவான். நானே கண்டுப் பிடுச்சேன்டா அழகிமா. அவங்க ரெண்டு பேரும் என் பிள்ளைங்க.. அவங்க மனசுல என்ன இருக்குன்னு.. இந்த அம்மாவுக்கு தெரியாதா என்ன?? அண்ணனை நினைச்சு தான் கொஞ்சம் பயமா இருக்கு. மத்தபடி வேற எந்த பிரச்சனையும் இல்ல. எல்லாம் நல்லதா நடந்து முடிஞ்சா சந்தோஷம்டா அழகிமா" என்ற மீனாட்சியை அணைத்துக்கொண்டவள்,


"அத்த… நீங்க சோ கியூட் தெரியுமா.. லவ் யூ அத்தை. சரவணன் பெரியப்பாவை சமாதானம் செய்து சந்தோ கயல் கல்யாணத்தை நடத்தி வைக்கிறது இந்த அழகியோடப் பொறுப்பு. நீங்க எதற்கும் ஃபீல் பண்ணாம எப்பவும் ஹாப்பியா இருங்க சரியா.. எல்லாத்தையும் நா பார்த்துக்கிறேன் என் செல்ல அத்தை" என்று செல்லம் கொஞ்சிய அழகியை வெட்கச் சிரிப்புடன் தானும் அணைத்துக்கொண்டார் மீனாட்சி.


"அழகிமா! சாப்பிடுறியா டா.. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா.."


"அய்யோ அத்தை! சத்தியமா இப்போ என்னால சாப்பிட முடியாதுத்த.. கழுத்துவர சாப்பிட்டு இருக்கேன் போல. மூச்சுவிட கூட முடியாம சுத்திக்கிட்டு இருக்கேன். நைட் வந்து டின்னர் இங்க சாப்பிட்டுட்டு இங்கேயே தூங்கலாம்னு பிளான்ல இருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க.. எனக்கு பன் பரோட்டா மட்டும் செய்து வைங்க" என்று அழகி இரவு உணவிற்கான மெனுவைச் சொல்ல,


"என் செல்லத்துக்கு இல்லாததா.. பன் பரோட்டா தானே பண்ணிடலாம்" என்றார் மீனாட்சியும் சிரித்துக்கொண்டே.


"அத்த.. நா எதுக்கு வந்தேன்னு மறந்திட்டு கதைப் பேசிகிட்டு இருக்கேன் பாருங்க... நம்ம சந்தோவோட புல்லட் சாவி வேணும் அத்தை.. அத வாங்க தான் வந்தேன் "


"அவன் டேபிள் மேல தான் இருக்குடா. உனக்கு எதுக்கு அவன் சாவி"


"வேற எதுக்கு கேட்பாங்க.. வண்டியை ஓட்டத்தான்.." என்று கூறிவள். சதோஷின் புல்லட் சாவியை எடுப்பதற்காக அவன் அறைக்குள் ஓடினாள்.


"என்ன!! நீ அவன் வண்டிய ஓட்டப் போறியா?? அழகிமா.. அவன் வந்த பிறகு அவன் கூட ஓட்டு.. இப்போ வேண்டாம்.." என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாவியுடன் சந்தோஷின் அறையில் இருந்து வெளியே வந்த அழகி,


"அதெல்லாம் இந்த அழகி கெத்தாக ஓட்டிடுவா அத்தை… பை.." என்று கூறியவாறே அவருக்கு முத்தமிட்டு ஓடியவள், வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஹரியை அழைத்து அவனிடம் புல்லட் சாவியை கொடுத்து அவனை வண்டியை ஓட்டச் சொல்லியவள், சமத்துப் பிள்ளையாக வண்டியின் பின் பக்க சீட்டில் அமர்ந்து வீட்டிற்கு வந்தாள்.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
வீட்டிற்குள் நுழைந்தவளை கையில் விளக்குமாருடன் வரவேற்றார் அழகியின் அன்னை மஞ்சுளா.


"எங்கடி போன.. கொஞ்சம் கூட பொறுப்பு கிடையாது. எப்போ பாரு எங்கையாவது ஊர் சுற்ற வேண்டியது. உன்னைச் சொல்லிக் குத்தமில்லை... உன் அப்பாவைச் சொல்லனும். எல்லாம் அவர் கொடுக்கிறச் செல்லம் தான். நீ இப்படித் திரியுற.." என்று திட்டிக் கொண்டிருந்தவரை கண்டுக்கொள்ளாமல் அவரைச் சுற்றிக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றவாறே,


"அத்தை வீட்டுக்குத் தான் போய்ட்டு வந்தேன் மா.. அப்புறம் எதாவது புது டயாலாக்ஸா சொல்லி திட்டுமா. ஒரே டயாலாக்கா கேட்டு போர் அடிச்சிப் போச்சு" என்றவள் அவர் கையில் இருக்கும் ஆயுதத்தைக் கொண்டு அடிக்க வருமுன் அறைக்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.


"வாங்க மகாராணி.. என்ன பவனி உலா போய்ட்டு வரீங்களா.." அறைக்குள் வந்த அழகியை பார்த்து கிண்டலுடன் கோரஸாக கேட்டனர். அவளுக்காக அங்கே காத்திருந்த கயலும், பத்மாவும்.


அவர்களை அங்கு சற்றும் எதிர்ப்பாராதவள், " அடடே!! நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்தீங்க.. " என்று கேட்டவாறே கட்டிலிற்கு சென்று 'தொப்' என்று அமர்ந்தாள் அழகி.


"நாங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு.. மேடம் தான் எங்கேயோ கிளம்பி போய்ட்டீங்க" என்றாள் பத்மா.


"டி.. பத்து.. எங்கையும் போகல. நம்ம சந்தோ தான் மும்பை போய்டான்ல அதான் அவன் புல்லட்ட ஓட்டி பார்க்கலாம்னு அத்தைக்கிட்ட வண்டி சாவி வாங்க போனேன். யாரைடா டபுள்ஸ் அடிச்சு வண்டி ஓட்ட பழகலாம்னு யோசிச்சேன். சரி நம்ம பய ஹரி இருக்கான்ல அவனையே வச்சே பழகிடலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா பாரேன், பயலுக்கு ஆயுசு கெட்டி போல. அவனுக்கு பதிலா நீ வந்து சிக்கிட்ட பத்து… வா அப்படியே ஒரு ரௌண்ட் போய்ட்டு வருவோம்" என்று உல்லாசமாக அழகி வண்டி ஒட்டி பழகப் பத்தமாவை அழைக்க.


அவளோ பதறியவளாக, "போவோம். ஆனா, திரும்ப வருவோமா.. கொலைகார பக்கியே… நா தான் கிடைச்சேன்னா உனக்கு வண்டி ஓட்டி பழக. இந்த கயல் சும்மா தானேடி இருக்கா… அவளை கூட்டிகிட்டு போகவேண்டியது தானே. அது என்ன எப்பப்பாரு இந்த மாதிரி விஷப் பரீட்சைக்கு என்னையே கூப்பிடுற. நானே பாவம்.. என் அம்மாவுக்கு ஒரே ஒரே கடைசிப் பொண்ணு" என்று அப்பாவிப் பிள்ளை போன்ற லுக்கில் கூறினாள் பத்மா.


"அது வந்துடி பத்து… வண்டி ஓட்டி பழக பின்னாடி உக்காரவும் ஒரு முகக்கலை வேணும். அந்த கலை உனக்கு தான் பக்காவா பொருந்தி இருக்குடி" என்றாள் அழகி கிண்டலாக.


அதே நேரம், அறை வாயிலிருந்து, "அழகி.. உனக்கு ஏதோ பார்சல் வந்திருக்கு பாரு" என்று குரல் கொடுத்தார் மஞ்சுளா.


"எதே பார்சல்லா!! எனக்கெல்லாம் பார்சல் அனுப்பின அந்த நல்ல உள்ளம் யாருப்பா" என்று யோசித்தவாறே வாயிலுக்கு சென்ற அழகி அந்த பார்சலை வாங்கிக்கொண்டு மீண்டும் அறைக்குள் வந்தாள்.


கட்டிலில் அமர்ந்துக்கொண்டு மூவருமாக அந்த பார்சலை பிரிக்க. அதனுள் அழகிய பிங்க் வண்ண நிறத்தில் கிப்ட் ராப் செய்யப்பட்டிருந்த பெட்டி ஒன்று இருந்தது. அதனுடனே ஒரு லெட்டரும் இருந்தது.


அந்த லெட்டரை கயல் எடுக்க, அழகியோ அந்த கிப்ட் என்னவென்று பார்ப்பதற்காக அதை பிரித்தவள். அவள் பிரிப்பதை வீடியோவாகப் பதிவுச் செய்யுமாறுத் தனது ஃபோனைப் பத்மாவிடம் தந்திருந்தாள்.


"ஓகே கைய்ஸ்… எனக்கு இப்போ ஒரு கிப்ட் பார்சல் வந்து இருக்கு. அதுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியலை.. உள்ள என்ன இருக்கும்ன்னு தெரிஞ்சிக்க நீங்க ஆவலா இருக்க மாதிரியே நானும் ஆவலா இருக்கேன். வாங்க நம்ம இந்த கிப்ட்டை இப்போ அன்பாக்ஸிங் (unboxing) பண்ணுவோம்" என்று அழகி கேமராவை பார்த்துச் சிரித்துக்கொண்டே கூற,


" ஆமா, இது என்ன கிப்ட்?? எதுக்கு வந்து இருக்கு?? யார் அனுப்பினாங்கன்னு ஒன்னுமே தெரியாதாம். இதுல மேடம் இதை அன்பாக்ஸிங் வீடியோ பண்ணி.. அதை நாலே நாலு சப்ஸ்கரைபர் இருக்கிற யூ டூப் சேனல்ல போடுறதுக்காக.. நாங்க வீடியோ எடுக்க.. இவங்க அதுக்காக இன்ட்ரோ வேற கொடுக்குறாங்க. சே… வாயை மூடிட்டு ஓபன் பண்ணுடி குரங்கே…" என்றாள் பத்மா. அழகி செய்யும் அலப்பறைகளை தாங்க முடியாமல்.


"இதோடி ஓபன் பண்ணுறேன்.." என்றவள் மெதுவாக அழகாய் பிரித்தவாறே,


"ஒரு வேளை நம்மைல இந்த ப்ரொடக்ட்டை ப்ரோமோட் பண்ண சொல்லி, யாராவது அவங்களோட ப்ரொடக்ட்டை நமக்கு அனுப்பி இருப்பாங்களோடி பத்து…" என்றாள் அழகி, தீவிர முகபாவத்துடன்.


"அடியே… ஆசை படலாம். அதுக்குன்னு பேராசை படக் கூடாது. வாயை மூடிக்கிட்டு அந்த பார்சலைப் பிரிக்கிற வேலையை பாரு.." என்ற பத்மா, கடுப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தாள். அழகி செய்யும் அட்டகாசங்களில்.


அழகி,அந்த கிப்ட் ரப்பரை பிரித்து அதனுள் இருந்த அட்டை பெட்டியையும் பிரிக்க, அதனுள் வைக்கோலினால் சுற்றப்பட்டிருந்த மாம்பழங்களைக் கண்டவளின் விழிகள் பளபளத்தன மகிழ்ச்சியில்.


"பத்து! இங்க பாரேன்.. யாரோ மாம்பழம் அனுப்பி இருக்காங்கடி. ஆனா, யாரு இதை அனுப்பினாங்கன்னு தெரியலையே. பார்சல்ல கூட 'டூ அட்ரஸ்' தான் இருந்துச்சு.. 'ஃபிரேம் அட்ரஸ்' இல்லையே" என்றாள் அழகி தீவிரமாக யோசித்தவாறே.


"அப்போ.. யார் தான் இந்த பார்சலை அனுப்பி இருப்பாங்க அழகி" என்றாள் பத்மா கேள்வியாக.


"எனக்கு மட்டும் எப்படி தெரியும்டி பத்து. ஆனா, எனக்கு இந்த மாம்பழம் அனுப்பின அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும். இந்த நல்ல காரியத்தை பண்ணினது யாரா இருக்கும்..." என்ற அழகியின் கேள்விக்கு.


" ராஜன்.. " என்று பதில் வந்தது கயலிடமிருந்து.


"ராஜனா???" குரலே எழும்பாமல் கேட்டாள் பத்மா.


"ஆமா.. ராஜனே தான் " என்று பத்மாவிடம் கூறிய கயல். அழகியை நோக்கி,


"இங்க பாரு புள்ள… நீ அந்த சொசைட்டி மாமரத்துல இருந்து மாங்கா பறிச்சியா…" என்றாள் அழுத்தமாக.


"ஆமா கயலு… " என்று அரம்பித்த அழகி அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கயலிடமும், பத்மாவிடமும் கூறினாள்.


அழகி கூறும் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த கயல்விழி.


நிதானமாக அதே சமயம் அழுத்தமான பார்வையுடன். தன் கையில் இருந்த, சற்று முன்பு அந்த பார்சலில் இருந்து எடுத்த கடிதத்தை அழகியிடம் கொடுத்தாள்.


கயல் கொடுத்த கடிதத்தைப் பிரித்துச் சத்தமாக அதை வாசிக்க ஆரம்பித்தாள் அழகி.


"அழகி! அன்று நீ மிகவும் ஆசைப்பட்ட மாம்பழங்கள் இதோ... ரசித்து சாப்பிடு. உனக்காக அந்த அபராத தொகையைக் கொடுத்தப் பையனிடம், இந்த பார்சல்களுடன் நான் இணைத்து வைத்துள்ள கவரில் இருக்கும் ஐய்யாயிரம் பணத்தை கொடுத்துவிடு. யாருக்கும் நீ கடனாளியா இருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. இனி உனக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இங்கு வந்து மாங்காய்களை சாப்பிடலாம். ஒரு பயல் உன்னை ஏன் என்று கேள்வி கேட்க மாட்டான். நீ எப்போ வேண்டுமென்றாலும் இங்கு வரலாம் அழகி. உன் வரவுக்காக ஒவ்வொரு மரமும் காத்துக் கொண்டிருக்கிறது இங்கு.

- ராஜன்" என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை முழுவதையும் அழகி வாசித்து முடிக்கவும். அவளிடம் வந்த கயல்,


" இது எப்படி நடந்துச்சு அழகி. உனக்கு நல்லாவே தெரியும் தானே .. சொசைட்டி மரத்துல கை வச்சா பஞ்சாயத்து ஆகும்னு. தெரிஞ்சே நீ பண்ணின தப்புக்கு. வேற யாரையோ அபராதம் கட்ட வச்சி இருக்க. என்ன பழக்கம் இது.

இது எல்லாத்துக்கும் மேல.. அந்த ராஜன் கூட உனக்கு என்ன பழக்கம். அவர் கூட பேசக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல. பிறகு என்ன இது... முதல்ல அவர் யாரு?? உனக்கு காசு கொடுக்க.. நீ கடனாளியா இருக்குறது பொறுக்க முடியலைன்னு சொல்ல... உன் சொந்தக்காரங்க நாங்க எல்லாம் என்ன பிச்சையா எடுத்துக்கிட்டு இருக்கோம்..." என்று படப்படவென்று கயல் பொரிய.


இத்தனை ஆண்டு காலம் அமைதியின் திருவுருவாய் மட்டுமே பார்த்தறிந்த கயல். இப்படி கோவப்பட்டு இன்று தான் முதன் முதலில் பார்க்கிறாள் அழகி. கயலை பார்த்தது பார்த்தவாறு அப்படியே அழகி திகைத்து நிற்க.


அவள் முன் வந்து நின்ற கயல். அழகியின் தோள்களை பற்றி உலுக்கி, "நா கேட்டதுக்கு பதிலேதும் சொல்லாம… இப்படி பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நின்னுகிட்டு இருந்தா என்னடி அர்த்தம்" என்றாள் கயல்.


"பத்து.. நீயே பாரு. நா என்ன பண்ணேன். நானே பாவம் இல்லையா. மாங்கா சாப்பிட ஆசைப்பட்டு சாப்பிட்டது தப்பா. இந்த கயல் கிட்ட நீயே நியாயத்தைச் சொல்லேன்டி " என்று தனக்காக பரிந்துப் பேசுவதற்காக அழகி பத்மாவை அழைக்க, அவளோ ராஜன் என்ற பெயரை கேட்டதிலிருந்தே திகைத்த நிலையில், உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள்.


பத்மாவின் உறைநிலையை கண்ட அழகி, " இவளுக்கு வேற வேலையே இல்லை. எப்ப பார்த்தாலும் பயம்... எதை பார்த்தாலும் பயம்… அப்படி ராஜன் உங்களை என்ன தான் பண்ணினார். ஏன் தான் இப்படி நீங்க அவரை பார்த்து பயந்து சாகுறீங்களோ… எனக்கு ஒன்னும் புரியலை " என்று வாய்விட்டே புலம்பிய அழகியின் தலையில் 'நங்கென்று' குட்டிய கயல்,


" இங்க எல்லாருக்கும் அவர் மேல பயம் தான் அழகி. நீ மட்டும் தான் பயம் இல்லாம சுத்திக்கிட்டு இருக்க"


"நா ஏன் கயல் பயப்படனும். என்னை பொறுத்தவரை ராஜன் என் கிட்ட நல்லா தான் பேசுறாங்க. இன்பாக்ட் அன்னைக்கு அந்த எம்.எல்.ஏ அருணாச்சலத்தோட பையன் பிரபா என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணி டார்ச்சர் பண்ணப்போ.. எனக்காக அவனை மிரட்டி என் பக்கமே அவனை வரவிடாம பண்ணினது ராஜன் தான். அப்படி பட்ட நல்லவரைப் போய் நீங்க ஏன் இப்படி வில்லன் ரேஞ்சுக்கு உருவாகப் படுத்துறீங்கன்னு எனக்கு சுத்தமா புரியல கயல்"


"அவரை ஒன்னும் நான் வில்லன்னு சொல்லல அழகி. நீ கொஞ்சமாச்சும் உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சு பாரு புள்ள. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற ஆளு நீ. அவங்கலாம் பால் வைக்குற ஆளையே கொத்த காத்திருக்கும் பாம்பு. உன்னை விட ராஜனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். எங்க ஊரு ஆளை பத்தி நா தப்பா சொல்லுவேனா. அவரோட சட்டத்திட்டமே வேற புள்ள. யாரை பத்தியும் கவலையில்ல அவருக்கு. அவரு நினைக்கிறதை செஞ்சே ஆகணும். அது எப்படி வேணும்னாலும் இருக்கலாம் அது பத்தி எல்லாம் அவர் கவலையே பட மாட்டாரு. அவருக்குன்னு தனி கொள்கைகள்.. தனி சட்டங்கள்... நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. பெட்டர் நாம தான் தள்ளிப் போயிடனும்.." என்ற கூறிக்கொண்டே சென்ற கயலை இடைமறித்த அழகி,


"சரி… இதுக்கும் நா அவர் கூட பேசக் கூடாதுன்னு சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம் கயல்" என்றாள் கயலின் வாதம் புரிப்படாமல்.


"நா சொல்லுறதை கவனமா கேட்டுக்கோ புள்ள. உன் அக்காவா, தோழியா இந்த விஷயத்தை உன் கிட்ட சொல்லி புரிய வைக்கிறது என்னோட கடமை சரியா. நீ நினைக்குற மாதிரி இந்த உலகம் ஒன்னும் நல்லவங்களால் மட்டுமே நிறைஞ்சது இல்ல அழகி. அதுக்குன்னு இப்போ யாரு நல்லவங்க, யாரு கேட்டவங்க அப்படிங்கிற விஷயத்துக்கு நான் வரலை.

ஆனா ஒன்னு மட்டும் தெளிவா சொல்லுறேன் அழகி நல்லா கேட்டுக்கோ. முன்ன ராஜன் உன்னை பார்க்குற பார்வையே எனக்கு பயமா இருக்கும் புள்ள. அப்படியொரு பார்வை அது… கண்ணுலையே நெருப்பை கக்கி உன்னை எரிக்கிற மாதிரி பார்ப்பாரு. அதுவும் முக்கியமா நீ ஸ்கூல் படிக்கும் சமயம் தான் அந்த அனல் தெறிக்கும் பார்வை இருந்துச்சு.

அப்போ நடந்த ஊர் பிரச்சனை தான் அவரோட அந்த கோபப் பார்வைக்கு காரணம்னு நினைச்சு. உன்னை தனியா எங்கேயும் அனுப்பாம எப்பவும் உன் கூடவே இருந்தேன் புள்ள நானு. எங்கே இந்த விஷயத்தை வீட்டில சொன்னா தேவையில்லமா இதுவொரு பிரச்சனையா ஆகிடுமோன்னு பயந்து தான் யார்கிட்டையும் சொல்லாம நானே உனக்கு துணையா இருந்தேன்.

ஆனா கொஞ்ச காலம் போனதும். ராஜனோட அந்த கோபப் பார்வை அப்படியே மாறி வேற விதமா மாறிடுச்சு. எந்த பொண்ணுகிட்டையும் பேசாம இருக்குறவர். உன்கிட்ட மட்டும் தான் முகம் கொடுத்தே பேசுறார். அதுவும் உன்கூட பேசும்போது அவர் கண்ணுல தெரிக்கின்ற அந்த கனிவு தான் எனக்கு பயத்தையே கொடுக்குது அழகி.

நீயும் எதுவும் புரியாம சுத்தி சுத்தி அவர் கிட்டையே எப்படியும் போய்டுற. உனக்கு இதோட சீரியஸ்னஸ் கொஞ்சம்கூட புரியல. நீ அங்க போய் ராஜனோட மரத்துல காயைப் பறிச்சி இருக்கன்னு மட்டும் உன் அப்பாவுக்கோ இல்ல என் அப்பாவுக்கோ தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு யோசிச்சு பார்த்தியா.

இவங்களை கூட விடு... உன் மச்சான் சந்தோஷிற்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியா. அவகளுக்கு சும்மாவே ராஜனை பிடிக்காது. இப்போ இதுல அவரு உனக்கு இந்த மாதிரி பார்சல் அனுப்பி இருக்க விஷயம் மட்டும் தெரிஞ்சது.. அவ்வளவு தான் இவக சண்டைக்கே போய்டுவாக அங்க" என்று படப்படப்பாய் பேசிய கயலை இடைமறித்த அழகி,


"கூல் கயல்… கூல்… எல்லாத்தையும் ஏன் இவ்வளவு காம்ளிகேட் ஆக்கிக்குற.. ஃபிரீயா விடு. இப்போ என்ன ராஜன் கூட நா பேசக் கூடாது அவ்வளவு தானே. ஓகே விடு இனி நான் பேசல சரியா.

எனக்கு அந்த பிரபா மேட்டர்ல ரொம்பவே ஹெல்ப் பண்ணினது அவர் தான். அந்த நன்றி தான் எனக்கு. அவரும் என்கிட்ட எந்த பந்தாவும் இல்லாம பேசவும், அப்போ.. அப்போ.. எங்கேயாவது பார்த்தா ரெண்டு வார்த்தை பேசுவேன். அவ்வளவு தான். இனி அதையும் பண்ணலை சரியா... நீ ரீலாக்ஸ் பண்ணு முதல்ல. எதுக்கு இவ்வளவு டென்ஷன். ரீலாக்ஸ் கயல் ரீலாக்ஸ் .

ஆனா .. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன் கயலு… மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தா.. எல்லாமே மஞ்சளா தான் தெரியுமாம். அதுக்குன்னு எல்லாமே மஞ்சள் கலர்ல தான் இருக்குன்னு சொல்ல முடியுமா என்ன?? முடியாதுல்ல. நாம தான் அந்த கண்ணாடியை கழட்டிவிட்டுப் பார்க்கணும். அப்போ தான் உண்மை என்னன்னு தெரியும் கயல்"


"பரவாயில்லை புள்ள… நா மஞ்சள் கண்ணாடியோடே இருக்கேன். எனக்கு நீ நல்லா இருந்தா அதுவே போதும். இந்த பணத்தையும் மாம்பழங்களையும் ராஜன் கிட்டையே திரும்ப கொடுத்துட்டு வந்துடு புள்ள. அப்போ தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் " என்றாள் கயல்.


இதுநாள் வரையில் கயல் இவ்வளவு தூரம் பதறியோ.. உணர்ச்சி வசப்பட்டு பேசியோ பார்த்திராத அழகிக்கு, இந்த பார்சலை ராஜனிடன் திரும்ப தந்தால் தான் கயல் இயல்பாய் இருப்பாள் என்பது உரைக்க. அந்த பார்சலை திருப்பி கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்த அழகிக்கு ஒரு விஷயத்தை செய்வதற்கு மட்டும் மனமேயில்லை.


"கயலு… எல்லாம் சரி.. ஆனா இந்த மாம்பழங்களை மட்டும் நாம வச்சிக்கிட்டு.. பணக்கவரை மட்டும் திரும்ப தரலாமா.. " என்று ஆவலே உருவாக அழகி கேட்க,


நெற்றியிலேயே அடித்துக்கொண்ட கயல், " ஏன்டி இப்படி மாம்பழத்துக்கு செத்தவளா இருக்க. இதே மரத்து மாம்பழத்தை சந்தையில வித்தா நா வாங்கியாறேன் உனக்கு.. போதுமா…" என்று கயல் கூறிய பிறகு தான் நிம்மதி பெருமூச்சே வெளி வந்தது அழகிக்கு.


"அப்பாடா… இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு கயலு.. நீ வாங்கி தரேன்னு சொல்லிட்டல. எனக்கிது போதும்.. எனக்கிது போதும்.." என்று குதூகலமாக சிரித்தவள். அப்போது தான் இன்னமும் உறைந்த நிலையிலையே இருந்த பத்மாவை கவனித்தாள்.


"அடக் கொடுமையே!! இங்க எவ்வளவு பெரிய ரகளை நடந்து இருக்கு. அதை எதையும் கவனிக்காம … வேட்டையாபுரம் அரண்மனைக்கு தனியா போய்ட்டு வந்த வடிவேலு மாதிரி இப்படி உறஞ்சி போய் இருக்காளே இந்த பத்து.." என்று புலம்பியவாறே பத்மாவை உலுக்கி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள் அழகி.


"பத்து… கண்ணை முழிச்சிட்டே தூங்கினது போதும். கிளம்பு.. வா போவோம்.." என்று கூறிய அழகியை புரியாமல் பார்த்த பத்மா,


"எங்கடி கிளம்பனும்.." என்றாள் கேள்வியாக.


"அஹான்.. ஜப்பானுக்கு. கேக்குறா பாரு கேள்வியை. அடியே பத்து… தெற்க்கூருக்கு தான் போகணும். நீ எனக்கு துணைக்கு வா.."


"தெ..தெற்க்கூருக்கா!! எதுக்கு அங்கே"


"அய்யோ.. என்னால முடியல.." என்று புலம்பிய அழகி. பத்மாவிடம் ராஜனை பார்த்து அந்த பார்சலை திரும்ப கொடுக்க போகிறோம் என்ற தகவலை கூறியவள், பத்தமாவை பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் படியும். அவள் மட்டும் சென்று பார்சலை தந்துவிட்டு வந்து பஸ் ஸ்டாப்பில் இருக்கும் பத்மாவையும் அழைத்துக் கொண்டு சந்தோவின் வண்டியில் வீடு திரும்புவதாகவும் தனது பிளானை தெளிவாக விளக்கிச் சொல்லி… பலக் கதைகளை பேசி, குறும்பு சேட்டைகளை செய்து அன்னையிடம் திட்டுவாங்கி கயலையும், பத்மாவையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த அழகி பத்மாவுடன் தெற்க்கூருக்குப் பயனப்பட்டாள் சந்தோஷின் புல்லட்டில்.


"டி.. பத்து .. நா அழகா புல்லட் ஓட்டுறேன்ல" என்று கண்ணாடி வழியாக பத்மாவின் முகத்தை பார்த்து கேட்டவளை நோக்கி,


"ரொம்ப அழகா ஓட்டுற டி.. தயவுசெய்து ப்ளீஸ் ரோட்டை பார்த்து ஒட்டு அழகி. எனக்கு இதயம் வாய்வழியா வெளியே வந்து விழுந்திடும் போல.. அப்படி ஸ்பீடா அடிக்குது" என்றாள் பத்மா பயத்தில் குரல் நடுங்க.


"சே.. நோ பயம் பத்து.. என்னை நம்புடி… நாங்களாம் சும்மா கில்லி மாதிரி வண்டி ஓட்டுவோம்ல" என்றவள்.


' றெக்கை கட்டி பறக்குதம்மா… அழகியோட புல்லட்… ' என்று பாடியவாறே வண்டியை வலப்புறமாக திருப்ப. வண்டியோ வலது புறமாக திரும்பாமல் நேராக சென்று மரத்தில் மோதியது.



எந்த நேரத்தில் அழகி றெக்கை கட்டி பறக்குது புல்லட் என்று பாடினாளோ என்னவோ. உண்மையிலேயே புல்லட் பறக்க.. அதனுடனே பறந்துச் சென்று ரோட்டிற்கு மறுபக்கம் இருந்த சின்ன குழியில் விழுந்து கிடந்தனர் அழகியும், பத்மாவும்.

படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 
Last edited:
Status
Not open for further replies.
Top