ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 26

சரணித் சொல்வதை கேட்டு அமைதியான கனி ஆழ்ந்து யோசிக்கலானாள். ஆமாம் அன்று ஒரு குறுகிய இடத்திலே அவள் நின்று உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.

கீழே பெரிய இரும்புக்கம்பியும், ஆங்காங்கே வயர்களும் சுற்றிக் கிடந்தது. இது அவளின் நினைவுக்கு வர, “ஆமால, அண்டைக்கு இவன் என்ன புடிச்சு இருக்காட்டி நான் கீழ தானே விழுந்திருப்பேன். அவன் சொல்ற மாதிரி என்னோட தலை அந்த இரும்புல மோதி இருக்கும். “என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

ஆனாலும் அவனில் குறை சொல்ல நினைத்தவள், “ஆஹ்! அத நீ வாயால சொல்றது தானே? எதுக்கு புடிச்ச?” என்று கேட்க, வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்ட சரணித், “நான் சொன்னா அத விளங்கிக்கிற நிலமைலயா நீ இருந்த? “என்று கேட்க அவளுக்குத்தான் சங்கடமாகி போனது.

உடனே அவள் முகத்தை திருப்பி கொள்ள, அவளின் பேச்சிலும், முக பாவனையிலும் சரணித்க்கு சிரிப்பு தான் வந்தது.

சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவ, அதை முடிவுக்கு கொண்டுவந்த சரணித், “ஊ “ என்று ஊதி விட்டு, “நான் சொல்றத நம்புறதும் நம்பாததும் உன்னோட விருப்பம் கனி, அன்னைக்கு நானா ஒன்றும் அங்க வரல. உன்னோட போன்ல இருந்து எனக்கு மெசேஜ் வந்துது. “என்று ஆரம்பித்தவன் நடந்ததை சொல்ல, அவனை விறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் கனி.

இறுதியில்,”நிஜமா சொல்றேன், அப்போ உன்கிட்ட தப்பா நடந்துக்குற எண்ணம் துளி கூட இல்ல. உன்னை தப்பாவும் நான் தொடல. “என்று முடித்தான் சரணித்.

கனியோ, “ஐயோ! நான் எந்த மெசேஜூம் பண்ணல! என்மேல் எதுக்கு பழி போடுற? இதனால தான் ஜனனி கூட என்கிட்ட சரணித் விஷயத்துல நான் பண்ணது தப்பு என்று சொன்னாளா? “என்று பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.

சரணித்தோ, “ஆமா,ஆனா அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது உன்னோட போன் அண்டைக்கு மிஸ் ஆச்சுன்ணு. அதுல இருந்தே நீ அதை பண்ணல என்றும் புரிஞ்சிடுச்சு. “என்றான்.

ஆம், சரணித்,கனியே அவனை அழைத்ததாக சொல்லும் போது ஜனனி, கனிஷ்டன் கூட அதிலே குழம்பி இருக்க வேறு எந்த விடயமும் அவர்கள் நினைவுக்கு எட்டவில்லை.

ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னரே கனிஷ்டனுக்கு சம்பவம் நடந்த அந்த நாளில் கனியின் போன் தொலைந்து போனது நினைவுக்கு வர, அதை உடனே சரணித்க்கும் தெரிய படுத்தினான்.

இருவருக்கும் அது பெரிய குழப்பமாகவே இருந்தது. ஏதேர்ச்சியாக ஏதோ நடந்திருக்க கூடும் என்று நினைத்தவர்களுக்கு, யாரோ பெரிய சதி வேலை செய்துள்ளார்கள் என்று புரிந்து போனது.

ஆனால் பாடசாலையில் சென்று விசாரித்து துப்புதுலக்கிய போதும் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்கவில்லை.

கனி இப்போது மொத்தமாக குழம்பி போய் நின்றிருந்தாள், என்ன நடக்குறது என்றே புரியாத உணர்வு அவளுக்கு. தலையில் கையை வைத்தவள் அப்படியே அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள்.

சரணித்க்கும் அவள் நிலை புரியாமல் இல்லை அதனால் அவளை தொந்தரவு செய்யாமல் கலவர நிலைமை பற்றி அறிய கதவை மெதுவாக திறந்து எட்டிப் பார்த்தான்.

அப்போது அங்கே பொலீசார் ஆங்காங்கே நின்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பது அவனுக்கு தென்பட உடனே, “கனி வெளிய போகலாம். “என்று அவளையும் கூட்டிக்கொண்டு மொலை விட்டு வெளியே வந்தவன், அவளை பார்த்து, “எதுல வீட்டுக்கு போவ? “ என்று கேட்டான்.

அவளோ, “நான் போய்டுவேன். “என்று சொல்ல, “அதான் எதுல போவ? “ என்று அதட்டிகேட்டான் அவன்.

கனியோ நண்பி ஒருத்தியின் பைக்கில் வந்திருக்க, அப்போது அந்த நிலைமையில் அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியாது என்று அறிந்தவள், சரணித்திடம் ஏதும் சொல்லாமலே அவள் பையில் இருந்த போனை எடுத்து அவள் நண்பிக்கு அழைத்திருந்தாள்.

அவளது நண்பியோ,”ஹேய் நான் உனக்கு எத்தனையோ தரம் கால் பண்ணி பார்த்தேன். நீ எடுக்கவே இல்லை. பொலிஸ் வேற இங்க நிக்காதீங்க எண்டு போக சொல்லிட்டாங்க. அதனால நாங்களும் களம்பிட்டோம். நீ சேப் தானே? “ என்று கேட்டாள்.

கனியோ அவள் போனை பார்க்க அது சைலன்டில் போடப்பட்டு இருந்தது, அவளையே கடிந்து கொண்ட கனி, “ஆஹ் நான் சேப்தான். நானே வீட்டுக்கு போய்டுவேன். “ என்றவள் போனை கட் செய்து விட்டு அவள் முன்னே கை கட்டி நின்ற சரணித்தை பார்த்தாள்.

அவனோ புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, “ப்ரெண்ட்ஸ்ஒட வந்தேன் இப்போ அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.” என்றாள்.

சரணித்தோ, “நல்ல பிரென்ட்ஸ். “ என்றவன், அடுத்து அழைத்தது என்னவோ கனிஷ்டனுக்கு தான்.

கனிஷ்டனும் போனை எடுத்திருக்க, “உன்னோட தங்கச்சிய வந்து கூட்டிட்டு போ. “என்றவன் மாலின் பெயரையும் சொல்லிருந்தான்.

கனிஷ்டனோ, “தங்கச்சியா? என்ன உளறுறான் இவன்? ஜனனிய இப்படி சொல்றானோ? “என்று நினைத்து, “ஜனனி எப்படி அங்க வந்தா? அது சரி அவ எப்போ எனக்கு தங்கச்சி ஆனா? “ என்று கேட்டு சிரித்துக்கொண்டான்.

சரணித்தோ, “இல்ல கனிஷ், வந்து கனிய கூட்டிட்டு போ. “என்று சொல்ல கனிஷ்டன் சிரித்துக்கொண்டிருந்தவன், “என்ன? “ என்று அதிர்ந்தே விட்டான்.

கனிக்காவோ, “என்னது கனிஷ்ஷா?, அப்போ எல்லாரும் பேசிகிட்டு தான் இருக்கீங்களா? எல்லார்க்கும் எல்லா விஷயமும் தெரியுமா? “ என்று அடுத்து அடுத்து கேள்விகளை அடுக்க அது மறுபக்கம் கனிஷ்டனின் காதுகளிலும் விழுந்தது.

அவனோ, “இவன் எதுக்கு அவளை போய் மீட் பண்ணினான்? “ என்று நினைத்தவன், “நீ எதுக்குடா போய் அவளை மீட் பண்ணின? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அவ ஏதாச்சும் பிரச்சனை பண்ணி குட்டைய குழப்பபோறா இப்போ. “ என்று சொல்ல, “அதெல்லாம் ஒன்றும் பண்ண மாட்டா. “என்று சொல்லி கனியை பார்த்தவன், அவளை சந்தித்த கதையை கனிஷ்டனிடம் சொல்லி முடித்தான்.

கனிஷ்டனும், “கொஞ்ச நேரம் அங்கேயே இரு நான் வந்துடுறேன். “என்றவன் அங்கு புறப்பட்டு இருந்தான்.

கனியோ, “எல்லாரும் சேர்ந்து என்ன முட்டாள் ஆக்கி இருக்கீங்க. “என்று சொல்ல சரணித்தோ ஏதும் பேசாமல் அவள் பக்கத்திலே நின்றிருந்தான்.

அவளும் கைகளை கட்டி அங்கேயே நின்றிருக்க சிறிது நேரத்தித்தில் அங்கு வந்து சேர்ந்தான் கனிஷ்டன்.

காரில் இருந்து இறங்கியவன், “கலவரம் நடந்ததால கொஞ்சம் ட்ராபிக்கா இருந்துச்சு அதான் லேட். “என்று சொல்ல, அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் கனிக்கா.

அவனோ, “இன்னைக்கு நம்ம செத்தம். “ என்று நினைத்தவன், “வா போகலாம். “என்று மட்டும் சொன்னான்.

சரணித்தும், “சரி, நான் களம்புறன். “ என்றவன் அங்கிருந்து செல்ல அவன் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள் கனிக்கா.

அவன் அங்கிருந்து சென்றதுமே வந்து காரில் ஏறிக்கொண்டவள் காரின் கதவை அடித்து சாத்தினாள்.

அந்த சத்தத்திலே அவளுக்கு இருக்கும் கோபம் புரிந்து போக தலையை சொறிந்து கொண்டே காரில் ஏறினான் கனிஷ்டன்.

அவளோ அவனை முறைத்துக்கொண்டே இருக்க, அதை கடை கண்ணால் பார்த்த கனிஷ்டன், “என்ன அப்படி பார்க்காத. “என்றவன் அவளது முகத்தை திருப்பி விட்டான்.

கனிக்காவோ, “எல்லாரும் சேர்ந்து என்ன ஏமாத்திடீங்கல? “என்று கேட்க, “நாங்க என்ன பண்ணம் கனி? சரணித் பத்தி உன்கிட்ட எப்படி வந்து பேச முடியும்? அதனாலதான் அவன் பக்க ஸ்டோரிய கேட்டுட்டு, அண்டைக்கு உண்மைல என்னதான் நடந்துச்சுனு தெரிஞ்சிக்க ரொம்ப ட்ரை பண்ணோம். ஆனா எதுக்கும் பயன் இல்லாம போச்சு. உண்மை என்னனு கண்டுபிடிக்கவே முடியல. அதனால தான் உன்கிட்ட எதுவுமே சொல்லல, ஏதாச்சும் ப்ரூப் இருந்திருந்தால் உன்னட வந்து பேசிருப்போம். ஆனா எல்லாமே அவனுக்கு எதிரா இருக்குற போ எங்களால என்ன பண்ண முடியும்? “என்றுதான் கேட்டான் கனிஷ்டன்.

கனியோ இருக்கையில் சாய்ந்து கொண்டவள், “எல்லாரும் சேர்ந்து தப்பு பண்ணீடீங்க. அவனை நீங்க என்கிட்ட ஒரு தடவை பேச வச்சி இருக்கணும்.”என்றவள் கண்ணில் நீர் துளிகள் அரும்பியது.

கனிஷ்டனோ காரை பிரேக் அடித்து நிறுத்தியவன், “கனி!!” என்று அதிர்ச்சியாக சொல்ல, “அவனுக்கு அறிவு வேணாமா? என்கிட்ட வந்து பேச வேண்டியதுலாம் உங்க கூட பேசிட்டு இருந்திருக்கான். “என்று சொன்னவள் முகத்தை மூடிக்கொண்டாள்.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 27
இதே சமயம் ஜனனி வீட்டில் பெரியவர்கள் அனைவரும் பத்திரிகை கொடுப்பதற்காக அவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்க, அவள் மட்டுமே அங்கு தனித்து இருந்தாள்.
அவளுக்குள் ஆயிரம் எண்ணம், கவலை என இருந்தாலும், திருமணத்திற்கு பின் எல்லாமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வேருன்றி இருந்தது.
அதிலே அவள் நாட்கள் கழிந்து கொண்டிருக்க, வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தவள், வீட்டாட்களுடனும் ஹரிணியுடனும் மட்டுமே பேசி வந்தாள்.
இதை துருவனும் கவனித்து“அவளோட அப்பாவுக்காக மாறி இருக்கா போல.” என்று நினைத்தவன்,” கல்யாணம் மட்டும் முடியட்டும்டி நீ என்ன ஏமாத்தினதுக்கு உன்னை வச்சுசெய்யிறேன். “என்றுதான் சொல்லிக்கொண்டான்.
ஜனனி ஹாலில் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, அவினேஷால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பச்சுலர் பார்ட்டிக்கு சென்று விட்டு சற்று தள்ளாடிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் துருவன்.
ஜனனிக்கு அவனை பார்த்ததும் குடித்து வந்துருக்கிறான் என்று புரிந்து போக, எழுந்து போய் அவனின் கையை எடுத்து அவள் தோள் மேல் போட்டு தாங்கியவள், அவனை அணைத்துக்கொண்டு அவனின் அறைக்கு கூட்டிச்சென்றாள்.
துருவனோ, “ஓஹ் மேடத்துக்கு என்மேல அக்கறை எல்லாம் இருக்கா? “ என்று கேட்க, “அதெல்லாம் அளவுக்கு அதிகமாவே இருக்கு. “ என்றவள் அவனை கட்டிலில் போட்டாள்.
துருவன் அவளை மேல் இருந்து கிழ் பார்த்து, அவள் கையை இழுத்து தன் மேல் விழ செய்தவன், “வாவ்! “என்றபடி அவள் முகத்தில் இருந்த முடியை தன் கைகளால் ஒதுக்கி, அவளின் கன்னத்தில் முத்தம் பதித்து அவள் இதழ்களுக்கு முன்னேறி, அவள் கழுத்தினுள் முகம் பதிக்க, அவள் கைகளும் மேல் எழுந்து அவன் கேசத்துக்குள் புகுந்து கொண்டது.
தன்னவன் என்ற உணர்வு அவளுக்கு இருக்க, அவனின் தொடுதலில் தன்னை மறந்துதான் போனாள் பாவையவள்.
இதே நேரம் வீட்டுக்கு வந்து சேர்ந்த கனிஷ்டன் மற்றும் கனிக்கா இருவரின் முகமும் ஏதோ இழந்ததை போல் வாடியே இருந்தது.
உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டவர்கள், விட்டத்தை பார்த்திருக்க , எல்லாமே கை மீறி போன உணர்வு அவர்களுக்கு.
நீண்ட நேரத்தின் பின்னரே தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த கனியை பார்த்த கனிஷ்டன், “சாரி கனி. “ என்றான்.
அவளோ, “விடு, இதுக்கு மேலே எதுவும் பண்ண முடியாது. எல்லாத்தையும் மறந்துடலாம். “என்றவள் எழுந்து அவள் அறை நோக்கி சென்றாள்.
கனிஷ்டனும் அவளின் பின்னே சென்று அவன் அறையை திறக்க போன சமயம், அவனுக்கு முன்பாக அந்த கதவை திறந்து வந்து நின்றாள் ஜனனி.
கனியும் கனிஷ்டனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, “நீ இங்க என்ன பண்ற? “ என்று கேட்டான் கனிஷ்டன்.
அவளோ தலையை குனிந்து நின்றவள் கன்னம் இரண்டும் சிவந்து இருக்க, அவள் கழுத்தில் வேறு பூச்சி கடித்தாற் போல் ஆங்காங்கே தடங்கள் இருந்தது.
கனிஷ்டன் இதை கண்டு கொண்டவன், “ஹேய்! எந்த புதருக்குள்ள போய்ட்டு வந்த? இவ்வளவு பூச்சி கடிச்சிருக்கு!” என்று கேட்க, கனிக்காவும், “அதானே, என்ன ஆச்சு? “என்று கேட்டபடி வந்து நின்றாள்.
ஜனனி அவர்களை அங்கு எதிர்பார்க்காதவள், “தள்ளுங்க முதல்ல “என்று சொல்லி அவர்கள் இருவரின் தோளிலும் கை வைத்து தள்ளியவள் வெட்க்க புன்னகைஉடனே அவள் அறைக்குள் ஓடினாள்.
கனியோ, “இவ எதுக்கு இப்போ வெட்க பட்டுட்டு ஓடுறா? “ என்று கேட்க அவனும் புரியாமல் அவளை பார்திருந்தவன், அவள் அங்கிருந்து விலகிய பின்னரே கதவின் இடைவெளி ஊடாக உள்ளே பார்த்தான்.
உடனே விழி விரித்து நின்று கொண்டவன், “நம்ம தப்பான டைம்ல வந்துட்டம் போல. “என்றான்.
கனியோ அவனை புரியாமல் பார்த்து , அவன் பார்த்திருந்த பக்கம் பார்த்தவள் “ச்சீ. “ என்ற படி அவள் அறைக்குள் ஓடி விட்டாள். கனிஷ்டனும் மெல்லிய புன்னகை உடனே தலையில் அடித்துக் கொண்டவன், அதே அறையினுள் புகுந்து கொண்டான்.
அடுத்த நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்த கனிக்கா போனை எடுத்து முதலில் அழைத்தது அவினேஷ்க்கு தான்.
அவனும், “சொல்லு கனி. “ என்று சொல்ல, “நம்ம கொஞ்சம் வெளியில போகலாமா? “என்று கேட்டாள். அவனும் “நான் பிரென்ட்ஸ்க்கு இன்விடேஷன் கொடுக்க வெளிய வந்திருக்கேன்.. “என்றவன், “பிரச்சனை இல்ல நீ எங்க வீட்டுக்கு போய் அம்மா கூட பேசிட்டு இரு நானே வந்து உன்னை வெளிய கூட்டிட்டு போறேன். என்றான்.
கனியும் தெளிவான புன்னகையுடனே எழுந்து ஆயத்தம் ஆனவள், கனிஷ்டனிடம் சொல்லி விட்டு புறப்பட்டிருந்தாள்.
ஜனனி அதன் பின்னரே எழுந்து கீழே வர, அவளை பார்த்து கேலியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் கனிஷ்டன்.
அவளோ சோபாவில் இருந்த தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தவள், “சிரிக்காதடா.. “என்று விட்டு காபி போடும் பொருட்டு சமையலறைக்குள் சென்றாள்.
அவள் பின்னரே துருவனும் அங்கு தலையை பிடித்துக்கொண்டு வர, அவனையும் மேல் இருந்து கீழாக பார்த்தான் கனிஷ்டன்.
துருவனோ அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தவன், “ரொம்ப குடிச்சிட்டேன் போல, தலை ரொம்ப வலிக்குது. “ என்றவன், “உடம்பும் செம்ம பெயினா இருக்கு. “என்று கொண்டிருக்கும் போதே அங்கு நான்கு காபி கப்களுடன் வந்தாள் ஜனனி.
துருவன் அவளை அதிசயமாக பார்த்தவன், “காபி எல்லாம் போட தெரியுமா உனக்கு? “என்றுதான் கேட்டான்.
ஜனனியோ தலையை குனிந்து கொண்டே, “ஹ்ம்ம். “ என்று மட்டும் சொல்ல, “இவ எதுக்கு இப்போ இப்படி குழையுறா? “ என்றுதான் நினைத்தான் துருவன்.
கனிஷ்டனோ ஜனனி தனியாக மாட்டி இருந்தாள் அவளை கலாய்த்து தள்ளியிருப்பான் ஆனால் அங்கு துருவன் இருந்ததால் ஏதும் பேச முடியாத நிலை அவனுக்கு.
துருவன் அவனது தனிபட்ட விடயங்களை எப்போதும் பொதுவெளியில் போட்டுடைக்க விரும்பாதவன் அல்லவா?
ஆனாலும் அவளை வம்பிழுக்க நினைத்த கனிஷ்டன், “எங்க ரூம்ல அந்த பெட்ஷீட்ட மட்டும் துவைச்சு போட்டுடு.”என்றான். துருவனோ அவனை புரியாமல் பார்க்க, அதன் அர்த்தம் புரிந்த ஜனனி எழுந்து அங்கிருந்து ஓடியே விட்டாள்.
துருவன்தான் இதை எல்லாம் வியப்பாக பார்த்து, “எல்லாம் சேர்ந்து லூசாயிடுச்சிங்க. “என்று நினைத்தவன், ஜனனி கொண்டு வைத்த காபியை எடுத்து குடித்தவன், எஞ்சிய ஒரு கப்பை பார்த்து, “கனி இன்னும் எழுந்திரிக்கலையா? “ என்று கேட்டான்.
கனிஷ்டனோ அவள் அவினேஷை பார்க்க சென்றிருப்பதை சொல்ல, மெலிதாக புன்னகைத்துக்கொண்டவன், “இன்னும் கொஞ்ச நாள் தான் அவ நம்ம கூட இருப்பால! அப்புறம் புருஷன் வீட்டுக்கு போய்டுவா. “ என்று தங்கையை விட்டு பிரியபோகும் சாதாரண அண்ணனாக தனது வருத்தத்தை சொல்ல, கனிஷ்க்கும் அதே எண்ணம் தான்.
கனிஷ்டனின் கண்களோ குளமாகி போக, இதை பார்த்து அவனை இழுத்து அணைத்துக் கொண்ட துருவன் அவனை அறியாமலே கண்ணீர்துளிகளை சிந்திக்கொண்டிருந்தான்.
இதன் பின்னர் கனிஷ்டனும் திருமண வேலைகளை கவனிக்கும் பொருட்டு வீட்டில் இருந்து சென்றிருக்க, துருவனும் திருமணத்திற்காக லீவு சொல்லியிருந்தவன் வீட்டிலே தங்கிவிட்டான்.
இருவரும் வீட்டில் தனித்திருந்த போதும் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை. ஜனனி மட்டும் அவனை அடிக்கடி பார்த்து சிரித்துக்கொள்ள ,அவன் அதை பார்த்தும் எந்த ஒரு உணர்வும் இன்றியே இருந்தான்.

ஜனனியோ, “ரொம்பத்தான். “என்று சொன்னாலும் தன்னவனின் திமிரையும் ரசித்துக்கொண்டுதான் இருந்தாள்.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 28

நேரம் அப்படியே ஓடிக்கொண்டிருக்க ஜனனியின் போன் அலறும் சத்தம் கேட்டது துருவனுக்கு.

அவளும் அதை கவனித்தவள் போனை எடுத்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவளது கண்கள் விரிந்துகொண்டது.

துருவனுக்கு அவள் முதுகு காட்டி நின்று கொண்டதால் அவனுக்கு அவள் முகபாவனை எதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஜனனி அவசரமாக போனை எடுத்துக்கொண்டு சென்று உடை மாற்றி வந்தவள், ஹாலில் துருவன் அமர்ந்திருப்பதை பார்த்து, “ஹரிணி கூட வெளிய போய்ட்டு வந்துடுறேன்.” என்று மட்டும் சொல்லி விட்டு அங்கு நிற்காது சென்று விட்டாள்.

அவள் அறிவாள் மேலும் அங்கு நின்றால் துருவன் கேள்வி கேட்டு அவளை ஒரு வழி பண்ணிவிடுவான் என்பது.

துருவன் புருவம் சுருக்கி அவள் செல்வதையே பார்திருந்தவன் அவனும் காரை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றான்.

ஜனனியோ அவர்களது வீடு அமைந்திருக்கும் தெருவுக்கு இரண்டு தெருக்கள் தள்ளி நடந்து சென்றவள் அங்கு நின்ற சரணித்தின் பைக்கில் ஏறி செல்லலானாள்.

இது துருவனின் கண்களிலும் பட்டு விட, அவன் கையை முறுக்கி அவன் தொடையிலேயே குற்றியவன், “நீ ரொம்ப தப்பு பண்றடி, நம்பிக்கை துரோகம்டி இதெல்லாம். “என்று சொன்னவனின் கண்கள் கலங்கி போனதை அவனாலே தடுக்க முடியவில்லை.

துருவன் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல நினைத்தாலும் அவனுக்கு ஜனனி என்னதான் செய்ய போகிறாள் என்று அறிய வேண்டி இருக்க இறுகிய முகத்துடனே அவளை பின்தொடர்ந்தான் அவன்.

சரணித் சிறு தூரம் சென்றதும் அங்கிருந்த ஒரு ஹோட்டலினுள் பைக்கை செலுத்தியவன், அதை பார்க் செய்து விட்டு ஜனனியை அழைத்துக்கொண்டே நடக்கலானான்.

துருவன் ஹோட்டலின் வெளியே காரை பார்க் செய்தவன், ஓட்டமும் நடையுமாக அவர்கள் பார்க்காதவாறு அவர்கள் பின்னாலே சென்றான்.

சரணித்தோ போன் கதைத்துக்கொண்டே, ஜனனியை கூட்டிச் சென்றவன் பின்னர் போனை வைத்து விட்டு, ஹோட்டலில் சாப்பிடும் இடத்தை எல்லாம் கடந்து, அறைகள் இருக்கும் மூன்றாம் ப்லொர்க்கு சென்றவன் அவளை அழைத்துக்கொண்டு ஒரு அறையில் புகுந்து கொண்டான்.

துருவனுக்கு ஏதோ இனம் புரியாத வலி மனதில் எழ அவன் இதயம் குத்தி கிழிக்கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு அவனுக்கு.

மொத்தமாக உடைந்து போனான் அவன். அங்கேயே இருந்த தூணில் சாய்ந்து நின்று கொண்டவன், “உனக்கு நான் என்னடி பாவம் பண்ணினேன்? சின்ன வயசுல இருந்து உருகி உருகி உன்னை காதலிச்சதுக்கு நீ எனக்கு கொடுக்குற தண்டனையா இது. முடியலடி என்னால. “என்றவன் அப்படியே நின்று விட்டான்.

சிறிது நேரம் கழிதே வழமை நிலைக்கு திரும்பியவன், “உன்னை இப்படியே விட்டுட்டு போனா சரி வராது. நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டாத்தான் என் மனசு கொஞ்சம் ஆறும் “என்றவன் அவர்கள் சென்ற அறைக்கு முன் சென்று நிற்க, மீண்டும் நொருங்கி போனான் அவன். அடிக்கு மேல் அவனுக்கு அடி விழுந்து கொண்டிருந்தது.

அந்த அறை கதவு சற்று திறந்து இருக்க உள்ளே நின்று கொண்டு சரணித் ஒரு பெண்ணை முத்தமிடும் காட்சி அவன் கண்களில் பட்டு தொலைந்தது.

அதற்கு மேல் அவனுக்கு அங்கு நிற்கும் தெம்பில்லை, அவன் உடல் அவனையும் தாண்டி ஆட்டம் காண்பது போன்ற உணர்வு அவனுக்கு.

நலிவாகவே அங்கிருந்து நடந்து சென்றவன் கண்களை மட்டும் அடிக்கடி துடைத்துக்கொண்டான்.

அப்படியே சென்று காரில் அமர்ந்தவனுக்கு “பேசாம செத்திடலாமா? “என்ற கேள்விதான் மனதில் எழுந்தது. ஆனால் அந்த அளவிற்கு அவன் மனதில் தைரியம் இல்லை.

யோசித்து கொண்டே காரை ஸ்டார்ட் செய்து ஒட்டியவன் ஆமை வேகதிலையே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டினுள் வந்ததும் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அவர்களது குடும்ப படத்தை பார்த்தவன்,ஜனனியின் முகத்தில் தன் ஆட்காட்டி விரலை வைத்து, “இவ ஒருத்தியால நம்ம குடும்பமே மொத்தமா சிதைஞ்சி போகபோகுது. “என்றவன், அவனது அம்மா அப்பாவின் போட்டோக்களையும், சுந்தரம் மற்றும் வாணியின் போட்டோக்களையும் மெதுவாக வருடிவன், “என்ன மன்னிச்சிடுங்க. “ என்று விட்டு அவன் அறைக்குள் புகுந்து கொண்டு அவன் உடைகளை அடுக்கலானான்.

அவனுக்கு எல்லோரையும் தாண்டி கனி மற்றும் கனிஷ்டனை பிரிந்து செல்வதுதான் கடினமாக இருந்தது.

ஆனாலும் அவன் அங்கு இருந்தால் ஜனனியை கொலை செய்துவிட்டே மறு வேலை பார்ப்பான் என்பது அவனுக்கு தெரியும். அந்தளவு அவன் மனம் காயப்பட்டு இருந்தது.

ஆதலால் மொத்தமாக அவர்களை விட்டு விலகி செல்ல நினைத்தவன், அவர்களுடன் எந்த தொடர்பயும் ஏற்படுத்த விரும்பாது அவன் போனையும் அங்கே விட்டு சென்றவன், கனியின் அறையில், “மிஸ் யூ கனிமா, நான் இல்ல எண்டு எல்லாம் யோசிக்காம அவினேஷை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரு.

கனிஷ்,கனியையும் நம்ம அம்மா அப்பா, அத்தை மாமாவையும் நல்லபடியா பார்த்துக்கோ.உன்னோட வாழ்க்கையையும் நல்ல படியா அமைச்சுக்கோ. என்னோட வாழ்கை மாதிரி உன்னோட வாழ்க்கையும் பாழா போயிட வேணாம். நீயாச்சும் நல்லா இரு.

முக்கியமா, என்ன யாரும் தேடி டைம் வேஸ்ட் பண்ண வேணாம். நான் நீங்க தேடினாலும் கிடைக்க மாட்டேன். அதுக்காக செத்து எல்லாம் போக மாட்டேன். கவலை படாதீங்க. “ என்று ஒரு லெட்டர் எழுதி, அதன் மேல் கனியின் திருமணத்திற்காக அவன் வாங்கிய அன்பளிப்பையும் வைத்தவன், அந்த வீட்டை விட்டு புறப்பட்டான்.

அன்றைய நாள் எல்லோரும் வீடு வந்து சேரவே இரவாகி போயிருக்க, எல்லோர் முகத்திலும் என்றும் இல்லாத அளவுக்கு சந்தோஷம் குடிகொண்டிருந்தது.

அதே நேரத்தில் பத்திரிகை வைப்பதற்காக் ஊருக்கு சென்ற அவர்களின் பெற்றோரும் அங்கு வந்திருக்க, எல்லோரும் தேடியது என்னவோ துருவனை தான்.

ஆனால் அவன் தான் வீட்டை விட்டு சென்று விட்டானே! கனிஷ் துருவனின் போனிற்கு அழைக்க அது அவர்களது அறையில் தான் இருந்தது. ஆனால் அவன் அங்கு இல்லை.

கனிஷ்டனுக்கு அறை கலைந்து போய் இருப்பது தெரிந்தாலும், துருவன்தான் ஏதாவது உடை எடுக்க அதை கலைத்து போட்டதாக நினைத்தவன் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதே நேரத்தில் கனி வாஷ்ரூம் பாவிப்பதற்காக அவள் அறைக்கு வந்தவள், அங்கு அவளின் கட்டிலில் ஒரு காகிதம் வைக்கப்பட்டு அதன் மேல் ஒரு பரிசுபெட்டி இருப்பதையும் பார்த்தாள்.

முதலில் அந்த பரிசு பெட்டியை அவள் எடுக்க, அதில் “அன்பு தங்கைக்கு இந்த அண்ணனின் திருமண பரிசு “என்று போடப்பட்டு இருந்தது.

அவளோ முகம் மலர்ந்து அதை பிரித்து பார்க்க, அதில் அவளுக்கு ஒரு கோல்ட் செயினும், மாப்பிளைக்காக ஒரு மோதிரமும் வைக்கப்பட்டு இருந்தது. அதை வருடிய படியே, “இதை நேர்லயே தந்திருக்கலாமே. “என்று நினைத்தவள் கண்கள் அந்த காகிதத்தை அடைய அதை எடுத்து வாசித்தவளுக்கு உலகமே அசையாமல் நின்ற உணர்வு.

வாய் விட்டே கத்தியவள்,”அம்மா! அப்பா!” என்று அலறிக்கொண்டே ஹாலிர்க்கு வந்தாள்.

அனைவரும், “என்ன? “ “என்ன? “ என்று அவளிடம் பதறிய படி கேட்க சத்தம் கேட்டு அவள் பின்னால் ஓடி வந்து நின்றனர் ஜனனி மற்றும் கனிஷ்டன்.

கனியோ அந்த காகிதத்தை அங்கு போட்டவள், முகத்தை மூடி அழ ஆரம்பிக்க, கனிஷ்டன் தான் அதை எடுத்து படித்தவன் அதிர்ச்சியானாலும் அதை மற்றவர்களுக்கும் சொல்லியிருந்தான்.

துருவனின் இந்த முடிவை யாராலும் ஏற்க முடியவில்லை. அனைவரும் ஒவ்வொரு மூலையில் இருந்து அழுதுகொண்டிருக்க, ஜனனிதான் எதுவும் பேசாமல் கண்களை மூடி இருந்தாள்.

கனிஷ்டனுக்கு எல்லோரையும் சமாதானம் செய்ய வேண்டி இருக்க, ஒவ்வொருவராக சென்று ஆறுதல் சொல்லியவன் வந்து ஜனனியின் தோளில் கைவைக்க அவன் மீது சாய்ந்துவிட்டாள் அவள்.

கனிஷ்டன் பதறிய படி அவள் கன்னத்தில் தட்டி அழைக்க அவளிடம் எந்த அசைவும் இருக்கவில்லை.

இதனை பார்த்து மற்றவர்கள் பதறி எழுந்து ஜனனி அருகில் ஓடி வர, “கனி தண்ணி எடுத்துட்டு வா “என்றான் கனிஷ்டன்.

அவளும் அதை எடுத்து ஜனனி முகத்தில் தெளிக்க அப்போதுதான் கண்களை மெதுவாக திறந்து கொண்டாள் அவள்.

அனைவருக்கும் அவள் கண் திறந்த பின்னரே மூச்சு வந்தது என்றே சொல்லலாம்.

ஜனனியோ பக்கத்தில் இருந்த சுந்தரத்தை கட்டி அணைத்துக்கொண்டவள், “அப்பா என்னோட வாழ்க்கையே போச்சு! ஏன்ப்பா அவன் என்ன விட்டுட்டு போனான்? “ என்று கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.

யாராலும் அவளை சமாதானம் செய்யவே முடியவில்லை.

நாட்களும் அப்படியே நகர அவள் அழுகை மட்டும் நிற்கவில்லை, வீட்டில் இருந்த எல்லோரும் துருவனின் நிலை மறந்து ஜனனியை எப்படி தேற்றுவது என்றே யோசிக்க தொடங்கினர்.

அவ்வாறு ஒரு நாளில் தான் சுந்தரம், “என்னோட பொண்ணுக்கு ஏன் இப்படி ஆகணும். அவளை என்னால பார்க்க முடியல.இரவு பகலா அழுதுட்டே இருக்கா. “என்றவர் கண்ணீர் விட தொடங்கி விட்டார்.

தினகரனோ, “அவன் இப்படி பண்ணுவான் என்று நான் நினைச்சு கூட பார்க்கல. இப்படி எல்லாரையும் அழ வச்சுட்டு போய்ட்டானே பாவி. “ என்று துருவனுக்கு திட்டிக்கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் கனிஷ்டன் மற்றும் சரணித் துருவனை தேடி களைத்து போய் வீட்டுக்கு வந்திருக்க, அவர்கள் காதிலும் இந்த புலம்பல்கள் தெளிவாக கேட்டது.

கனிஷ்டனுக்கோ அவனை சார்ந்தவர்கள் இப்படி வருந்திவாடுவதை சற்றும் ஏற்க முடியவில்லை. ஜனனியில் நிலை வேறு மோசமாக சென்று கொண்டிருக்க, எல்லாவற்றையும் யோசித்து ஆழ்ந்த மூச்செடுத்தவன், நேராக சுந்தரத்தின் முன்னால் சென்று மண்டியிட்டுக்கொண்டான்.

அவரோ அவனை நிமிர்ந்து பார்க்க, “நீங்க எதை நினைச்சும் கவலை படாதீங்க மாமா.” என்றவன் கண்களை மூடி திறந்து கொண்டு, “ஜனனிய நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். “என்றான்.

அனைவரும் அவனை பார்த்து அதிர்த்து நிற்க, அவனை இழுத்து அணைத்த தினகரன், “என்னோட புள்ள நீதான்டா. “ என்றார்.

கௌரியும் அவன் அருகில் வந்து அவனை தடவிக்கொடுத்தவர், “ஜனனி இப்போ இருக்குற மன நிலைக்கு உன்னை ஏத்துப்பாளா? “என்று கேட்க, “நான் அவ கிட்ட பேசுறன்.” என்றே பதிலளித்தான் கனிஷ்டன்.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 29

இரண்டு வருடங்களின் பின்னர்...

சிங்கப்பூரில் உள்ள தனியார் பல்கழைகழகம் ஒன்றின் முதல்வரான சிவராமின் ஒரே மகளான திவாத்மி கைகளை பிசைந்து கொண்டே அந்த ஆடம்பர காபிஷாப்பில் அமர்ந்து இருந்தாள்.

அவளினுள் இனம் புரியாத பயம் இருக்க, அடி வயிற்றில் பட்டாம்பூச்சிகளும் பறந்து கொண்டு இருந்தன.

போனையும் காபிஷாப்பின் வாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அந்த ஏசியிலும் வியர்த்துவழிந்தது.

அந்த நேரத்தில் ஆறடி உயரம் கொண்ட ஒரு ஆடவன் அவன் முகத்தில் கண்டமேனிக்கு படர்ந்து இருந்த தாடியை தடவிக்கொண்டே அவள் முன்னால் வந்து நின்றான்.

திவாத்மி அவனையே கண் வெட்டாமல் பார்க்க, அவனது கூர்மையான கண்கள், கூர்ந்த நாசி,அவனது மீசைக்கிடையே தெரிந்த சென்நிற உதடுகள், கட்டழகு மேனி என அனைத்தும் அவளை கவர்ந்திழுத்தது.

அந்த ஆண்மகனோ அவள் முன் கைஅசைத்து அவளை இயல்புநிலைக்கு கொண்டு வந்தவன், புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்டவாறு அவள் முன்னால் அமர்ந்து கொண்டான்.

அவளோ அவனை பார்த்து குழைந்த படி நெளிந்து கொண்டிருக்க, அதை பார்த்து எரிச்சல் அடைந்தவன், “எதுக்கு என்ன இங்க வர சொன்னீங்க மேடம்? “ என்று கேட்டான்.

திவாத்மியோ, “துருவ் அது வந்து... “என்று இழுக்க, “கால் மீ மிஸ்டர் துருவன் ஓர் சார். “என்று கண்டிப்பாக சொன்னான் அவள் முன் அமர்ந்து இருந்த துருவன்.

ஆம், வீட்டை விட்டு வந்ததும் அவனது கல்லுரி நண்பன் ஒருவனின் உதவியோடு சிங்கப்பூர் வந்தவன், ஒரு தனியார் பல்கழைகழகத்தில் லெக்சரராகவும் சேர்ந்து கொண்டான்.

இடை பட்ட காலத்தில் வீட்டில் யாருடனும் அவன் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை, வீட்டை பற்றி அறிந்து சொல்லும் அளவுக்கு யாரையும் அவன் கூட வைத்திருக்கவும் இல்லை.

தனியாகவே அவன் வாழ்வை கழித்து வந்தவன், காலையில் கல்லுரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்து குடித்து விட்டு தூங்கிவிடுவான். இதுவே அவனது டெய்லி ரொட்டினாக மாறி போய் இருந்தது.

இப்போது திவாத்மியின் முன் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்து இருந்த துருவன் அவன் கண்டிப்பாக பேசியதில் அதிர்ந்து இருந்தவளை பார்த்து, “எனக்கு என்னோட ஷார்ட் நேம் சொல்லி கூப்பிட்டா பிடிக்காது. “ என்றான்.

அவளோ, “ஓஹ்,ஓகே பைன் மிஸ்டர் துருவன். நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ரொம்ப நாளா சொல்ல நினைச்சுட்டு இருக்கேன். ஆனா.. “ என்று பேச தொடர்ந்தவளை கைகளை காட்டி நிறுத்தியிருந்தான் அவன்.

அவளோ அவனை கூர்ந்து பார்க்க, “வெல், நீங்க என்ன சொல்ல வாறீங்க என்றது எனக்கு தெரியும். பட் சாரி மிஸ் திவாத்மி நான் லவ் பண்ற மூட்ல இல்ல. எனக்கு அது செட்டும் ஆகாது. சோ நீங்க வேற யாரையும் சுஸ் பண்ணுங்க. “என்றவன் அவளை திரும்பியும் பார்க்காமல் சென்றிருந்தான்.

திவாத்மிதான் அவன் முதுகையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

திவாத்மியின் தந்தையின் கல்லூரியில் தான் துருவன் பணியாற்றிக் கொண்டிருக்க, அடிக்கடி அவளின் தந்தையுடன் அங்கு செல்பவள் துருவனை கண்டு அவன் அழகிலும், ஆளுமையிலும் மயங்கித்தான் போனாள்.

அவள் அவனுடன் நெருங்கி பழக பெரும்பாடு பட்டும் அவனது கன்னியத்தால் அது முடியாமலே போனது.

அதனால் அவனை அழைத்து தன் காதலை சொல்லி அவனை சொந்தமாக்கி கொள்ளலாம் என்று எண்ணியே அவள் அவனை அழைத்திருக்க, அவளின் செயல்கள் கொண்டே அவளின் மனதை கணித்திருந்த துருவன் அவளை நிராகரித்து செல்வதற்காகவே அங்கு வந்திருந்தான்.

காபி ஷாப்பில் இருந்து வெளியே வந்த துருவன், “லவ் பண்ண ஒருத்தன்,ஊரு மேய ஒருத்தன், படுக்குறத்துக்கு ஒருத்தன், கல்யாணம் பண்ண ஒருத்தன் எண்டு வாழுற இவளுக்கு நான் கேக்குதா? “என்று திவாத்மியை பற்றி அவன் அறிந்ததை வைத்து அவளுக்கு திட்டிக்கொண்டு செல்ல,”அண்ணா!” “துருவ் அண்ணா!” என்றபடி ஒருவன் பின்னால் ஓடி வந்தான்.

துருவனோ ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்க்க அங்கு கனிஷ்டனின் நண்பனான சுதர்ஷன் ஓடி வந்து கொண்டிருந்தான்.

துருவன் அங்கிருந்து மறைத்து அவனின் கண்ணில் படாமல் செல்லலாம் என்று பார்த்தாலும், சுதர்ஷன் அவனுக்கு மிக அருகில் வந்து விட்டதால் அது முடியாமல் போனது.

சுதர்ஷனோ, “எப்படி இருக்கீங்க அண்ணா?” என்று கேட்க, “ஹ்ம்ம்.. நல்லாருக்கன். நீ “ என்று கேட்டவன் நலம் விசாரித்து விட்டு செல்லலாம் என்று நினைத்திருக்க, “என்ன அண்ணா வீட்ல அப்பா, மாமா, அத்தைனு யார்ர சாவுக்கும் நீங்க வரல! அப்படி என்ன வேல அண்ணா உங்களுக்கு? கனிஷும் சரணித்தும் தான் எல்லாத்தையும் தனியா நின்னு பண்ணினாங்க. “ என்றதும் துருவனுக்கு தலையில் இடியே இறங்கியது.

கண்கள் கலங்க, “என்னடா சொல்ற? எப்போ? எப்படி? “ என்ற கேள்விகளை கேட்டான் துருவன்.

சுதர்ஷனோ, “என்ன அண்ணா உங்களுக்கு ஏதும் தெரியாதா? “என்று தான் கேட்டான்.

துருவனுக்கும் அப்போதுதான் அவனின் முட்டாள்தனம் புரிந்தது, “வீட்ல யாராவது ஒருத்தர் கிட்டயாச்சும் பேசியிருக்கணும். “என்று தன்னை தானே கடிந்து கொண்டவன், சுதர்ஷனுடன் ஏதும் பேசாமல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக சென்றான்.

சுதர்ஷனும், ஏதோ குடும்ப சண்டை போல என்று நினைத்தவன் மீண்டும் சென்று துருவனை தொல்லை செய்யவில்லை.

துருவன் முதலாவதாக விமான டிக்கெட் போட்டவன் அடுத்த இரண்டு நாட்களில் சொந்த நாட்டுக்கு வந்திருந்தான்.

ஏர்போட்டில் இறங்கி, டாக்ஸி புக் செய்து வீடு சென்றுகொண்டிருந்தவனுக்கு ஆயிரம் யோசனைகள்.

அவனை பார்த்தால் இப்போது அவர்கள் இவ்வாறு எதிர்வினை ஆற்றுவார்கள் என்பது கூட அவனுக்கு தெரியாது.

சுதர்ஷன் வேறு சரணித் அங்கு இருப்பதாக சொல்லியிருக்க, “கனி இதை எப்படி எடுத்திருப்பா? “ என்று நினைத்தவன், தன் கோபத்தை அடக்கி கொண்டு இருக்க வேண்டும் என்று மட்டும் முடிவெடுத்துக்கொண்டான்.

அவனோ சரணித் ஜனனியை திருமணம் செய்து வீட்டினுள் நுழைந்து இருக்குறான் என்று நினைத்திருக்க, இங்கு நிலையே வேறாக இருந்தது.

டாக்ஸி சரியாக அவன் வீட்டு வாசலில் வந்து நிற்க, தன் உடைமைகளை எடுத்து தானும் இறங்கி விட்டு பணத்தை கொடுத்து டாக்ஸியை அனுப்பி வைத்தவன் வீட்டினுள் நுழைந்தான்.

அவன் கால்களே நடுங்கி கொண்டிருந்தது. இந்த இரண்டு வருடத்தில் அவனுக்கு உயிரான மூன்று உறவுகள் அவனை விட்டு விண்லோகம் சென்றதை அவனால் ஏற்க முடியவில்லை.கடைசியாக அவர்கள் முகத்தை கூட பார்க்கவில்லை என்ற ஏக்கம் வேறு அவனுக்கு.

அதை யோசித்துக்கொண்டே அவன் வாசலில் வந்து நிற்க, அங்கு சோபாவில் அமர்ந்து இருந்த கனிஷ்டன் ஒரு குழந்தையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

துருவன் அதையே பார்த்து ரசித்து இருக்க, “கனிஷ் அவளை கொடு, நான் பீட் பண்ணனும். “என்று சொல்லி கனிஷ்டன் முன்னால் வந்து நின்றாள் ஜனனி.

கனிஷ்டனோ, “கொஞ்ச நேரம் என்னோட குழந்தைய கொஞ்ச விடுறியா? “ என்று கேட்டவன், குழந்தையை பார்த்து, “அம்மா கிட்ட போய் பால் குடிச்சுட்டு வாங்க. அப்பா பாப்பாவ பார்க் அழைச்சிட்டு போறேன். “என்று சொல்ல இதை கேட்டு அதிர்ச்சியாக விழி விரித்துக்கொண்டான் துருவன்
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 30

ஜனனியோ, “அதெல்லாம் ஈவினிங் வீட்டுக்கு வந்து பார்த்துக்கலாம். முதல்ல நீ கம்பெனிக்கு போ. கனி கூட ஊர்ல இல்ல. நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். “என்று சொல்லி அவனின் கையில் இருந்து குழந்தையை வாங்கியவள் ஏதேர்ச்சியாக வாசலை பார்க்க அங்கு துருவன் நிற்பதை பார்த்து கலங்கித்தான் போனாள்.



சற்றுநிலை தடுமாறியவள் குழந்தையோடு விழ போக, “ஏய்!” என்றவாறே அவளை தாங்கி பிடித்த கனிஷ்டன்,, “பார்த்து ஜனனி, குழந்தைய வேற கையில வச்சிருக்க. “என்று சொல்லி அவள் பார்த்துநின்ற திசை பார்த்தான்.

அவனுக்கு அவனது ஆருயிர் அண்ணனை இத்தனை நாட்கள் கழித்து பார்த்து சந்தோஷம் சற்றும் முகத்தில் இருக்கவில்லை.

மாறாக துருவனை பார்த்ததும் அடித்துவிடும் அளவுக்கு கோபம் வந்தது. அவன் பக்கத்தில் நின்ற ஜனனியோ, கனிஷ்டனின் கோபத்தை அறிந்து அவன் கரத்தை இறுக பற்றிக்கொள்ள, அவளுக்காக அமைதியாக நிற்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு.

ஆனாலும், “நீ எதுக்கு இங்க வந்த?” என்று கேட்டான் அவன். துருவனின் கண்களோ ஜனனி கனிஷ்டனின் கையை பற்றிக்கொண்டதிலே நிலைத்து இருக்க, “என்னடா நடக்குது இங்க? “ என்றுதான் கேட்டான் அவன்.

கனிஷ்டன் பதில் ஏதும் சொல்லாமல் துருவனை முறைத்து பார்த்துக்கொண்டிருக்க, கோவிலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய கௌரி துருவனை பார்த்ததும் கையில் வைத்திருந்த அர்ச்சனை தட்டை கீழே தவறவிட்டார்.

துருவனோ சத்தம் கேட்ட பக்கம் திரும்ப, அங்கு அவன் தாய் நின்றிருக்கும் கோலம் அவனை ஆட்டிப்பார்த்தது.

எப்போதும் கண்களை குத்தும் நிறத்தில் புடவை அணிந்து, பூ வைத்து,நெற்றி வகிட்டில் அளவுக்கு அதிகமாகவே குங்குமம் வைத்து நெற்றியிலும் திலகமிட்டு இருப்பவர் அன்று அவை அனைத்தும் துறந்து சாதாரண வெள்ளை நிறம் கலந்த புடவையில் நின்றிருந்தார்.

உடனே ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டவன், “அம்மா!” என்றதுதான் தாமதம், அவனை பிடித்து கீழே தள்ளி விட்ட கௌரி, “யாருடா அம்மா உனக்கு? நான் பெத்த மூணு பிள்ளைகள்ள ஒன்னு எப்போவோ செத்துபோச்சு. இப்போ எனக்கு இருக்குறது இரண்டு பிள்ளைகள் தான். “என்றார்.

துருவனோ அதிர்த்து எழுந்தவன், “என்ன அம்மா இப்படி எல்லாம் பேசுறீங்க? “ என்று கேட்டு அவரது தோளில் கைவைக்க கொதித்தெழுந்த கௌரி, அவனை அடிக்க ஆரம்பித்து விட்டார்.

அவரது அடிப்பது எல்லாம் அந்த படிகட்டு தேகத்தவனுக்கு வலிக்குமா என்ன? ஆனாலும் அவன் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான் தனது தாய் சொன்ன வார்த்தைகளை நினைத்து.

கனிஷ்டனிற்கு என்னதான் கோபம் இருந்தாலும், ஓடிச்சென்று அவன் அம்மாவை பிடித்து நிறுத்தியவன், “வேணாம்மா, இவனை அடிக்குறதால எதுவும் மாற போறல, மாறவும் வேணாம். “என்று அழுத்திசொன்னான்.

துருவனோ, “கனிஷ்.. “என்று சொல்ல, “நீ பண்ணிட்டு போன வேலைக்கு உன்னை தேடி வந்து வெட்டி போடுற அளவுக்கு கோபம் வந்துச்சு. ஆனா என்னால அது முடியல, என்ன பண்றது அண்ணன் எண்டு பாசம் வச்சு தொலைச்சிட்டேன்.” என்றவன் கௌரியை அழைத்துக்கொண்டு சென்றான்.

துருவனோ திரும்பி பின்னால் நின்ற ஜனனியை எரித்து விடுவது போல் பார்த்து நிற்க,அவள் தான் குழந்தையை இறுக்கி பிடித்துக்கொண்டு துருவனை அடிபட்டபார்வை பார்த்தாள்.

துருவன் சீண்டேழுந்தவன், “என்னடி பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இப்போ எல்லாருக்கும் என் மேலே பழி போடுடும் போது அமைதியா பார்த்துட்டு இருக்க, என்ன ஜென்மம்டி நீயெல்லாம்? “ என்று வார்த்தைகளை கொட்ட, கௌரியோ, “யார்ரா தப்பு பண்ணினா? தங்கம்டா அவ. “என்று பேசிக்கொண்டிருக்கும் போதே தடுத்த கனிஷ்டன், “அம்மா, நீங்க உள்ள போங்க நான் பார்த்துக்கிறேன். “என்றவன், ஜனனி அருகில் வந்து, “ஜனனிய பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த அருகதையும் இல்ல துருவ். “என்றவன் ஜனனி கையில் இருந்த குழந்தையை அவன் வாங்கிக்கொண்டு அவளையும் அழைத்து அறைக்கு சென்றுவிட்டான்.

துருவனுக்கு தான் என்ன நடக்கிறது, நடந்தது எதுவும் விளங்கவில்லை, தலையில் கைவைத்து இருக்கையில் அமர்ந்தவன், சில நிமிடங்களின் பின்னரே நிமிர அங்கு சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கனி மற்றும் சரணித்தின் திருமணபுகைப்படம் அவனின் கண்களில் பட்டது.

துடித்துபதைத்து எழுந்தவன், படத்தின் அருகில் நின்றுகொண்டு எத்தனையோ முறை கண்களை கசக்கி பார்த்து விட்டான். அவனால் இன்னும் அது சரணித் கனிக்கா தானா என்று நம்பமுடியவில்லை.

“இது எப்படி? வாய்ப்பே இல்லை. “ என்று நினைத்தவன், “அப்போ அந்த குழந்தை, கனிஷ் தன்ன அப்பா எண்டு சொன்னானே “என்று பல கேள்விகளை தன்னுள் சுமந்து நின்றான்.

இதே நேரம், “அவனை பார்த்ததும் கன்னத்துல இரண்டு அறை கொடுத்திருந்தா உண்மைல நான் சந்தோஷ பட்டிருப்பன் . அப்படியான துரோகத்தை தானே அவன் உனக்கு பண்ணிட்டு போனான். ஆனா நீ என்னடானா அவனை பார்த்ததும் உடைஞ்சி போய் நிக்கிற, இப்போ வந்து தேம்பி தேம்பி அழுற, இதெல்லாம் போதும்டி, நம்ம அழுதது எல்லாமே போதும். இனியாவது சந்தோஷமா இருக்கலாம். “என்று அழுது கொண்டிருந்த ஜனனியை தேற்றினான் கனிஷ்டன்.

ஜனனியோ அவனை பாவமாக பார்த்தவள், “ இனி எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? வந்ததுமே என்னவோ எல்லாம் பேசுறான். “என்று சொன்னாள்.

கனிஷ்டனோ, “சரி இரு, நான் இப்போவே போய் அவனை இங்க இருந்து போக சொல்றேன். “ என்று சொல்ல, “வேணாம் கனிஷ், எனக்காக நீ பண்ணது எல்லாமே போதும். ஏற்கனவே உன்னோட வாழ்க்கையை அழிச்சிட்டன் என்ற குற்ற உணர்ச்சி வேற தினம் தினம் என்ன கொன்னுட்டு இருக்கு. “ என்றாள் ஜனனி.

கனிஷ்டனோ, “லூசு மாதிரி பேசாத ஜனனி அதெல்லாம் ஒன்னும் இல்ல. நானா விருப்ப பட்டுத்தான் இதெல்லாம் பண்றன். அதையும் தாண்டி இதெல்லாம் என்னோட கடமை. “ என்றான்.

அந்த நேரம் கனிஷ்டனின் கையில் இருந்த , “தினதரணி “என்ற பெண் குழந்தை பசியில் அழஆரம்பித்து இருந்தது.

அவனோ குழந்தையை ஜனனியிடம் கொடுத்தவன், “கண்ணை துடைச்சிட்டு குழந்தைக்கு பால கொடு, நான் போய் உனக்கு சாப்பாட எடுத்துட்டு வாறன். “என்றுவிட்டு சென்றான்.

ஜனனியும் குழந்தையை கையில் வாங்கியவள் பசியாற்றிக்கொண்டே, அவளது நிலைபற்றி வருந்திக்கொண்டு தான் இருந்தாள்.





 
Status
Not open for further replies.
Top