ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 41

இதை எல்லாம் கேட்ட துருவன், “ஹேய் என்னடா இன்னும் ஏதும் ட்விஸ்ட் இருக்கா இல்ல இதோட முடிஞ்சா?” என்று கேட்க, அனைவரின் முகத்திலும் ஒரு மென்புன்னகை மட்டுமே இருந்து.

துருவனோ, “ஓகே அப்போ அடுத்து ஒரு வேலை வந்துடிச்சு.” என்றவன், சரணித்தை பார்த்து, “என்ன மச்சி, ஹரிணிய தேடுற வேலைய ஸ்டார்ட் பண்ணலாமா? “என்று கேட்க, “ஊ “என்று ஊதிய சரணித்,”அதெல்லாம் தேடி பார்த்துட்டேன் டா அவ எங்க இருக்கானு எந்த டிடேயிலும் இல்ல.”என்று சலிப்பாகவே சொன்னான்.

துருவன் எழுந்து அவன் தோளில் கைபோட்டவன், “மச்சா இங்க நடந்துட்டு இருந்த பிரச்சனைல நீ தெளிவா யோசிக்க கூட டைம் இல்லாம இருந்திருப்ப. அதுதான் அவள உன்னால கண்டுபிடிக்க முடியல. இப்போ வா நம்ம போய் ஹரிணிய கையோட கூட்டிட்டு வரலாம். “என்றான்.

அனைவருமே அவனை அதிர்ந்து பார்க்க, “ஷாக்க குறைங்க. வரும் போது ஹரிணியோட தான் வருவம். “என்று சரணித்தையும் தன்னுடன் அழைத்து சென்ற துருவன், பின்னால் திரும்பி, “இது கனிஷ்க்கு தெரிய வேணாம். சப்ரைஸ் கொடுக்கலாம். “என்று விட்டு காரில் ஏறிக் கொண்டவன் நேராக சென்றது என்னவோ அவன் கற்பித்த கல்லூரிக்குத்தான்.

சரணித் இடையில் எங்கு போகிறோம் என்று கேட்கும் போது கூட விசிலடித்துக் கொண்டே காரை ஒட்டியவன் வேறு ஏதும் பேசவில்லை. சரணித்தான், “ரொம்ப குஷியோ “என்றெல்லாம் அவனை வைத்து கேலி செய்து வந்தான்.

கல்லூரி வளாகத்தினுள் கார் சென்றதுமே, “எதுக்குடா இங்க? “ என்று சரணித் கேட்க, “இப்போ எதுக்கு நீ எப்படி ஷாக் ரியாக்ஷன் கொடுக்குற. நீயும் இங்கதானே வெர்க் பண்ற? “என்று கேட்டான் துருவன்.

சாரணித்தோ தலையை சொறிந்தவன், “வேர்க் பண்ணன் ஆனா இப்போ இல்ல. “என்று சொல்ல காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, “ஏன்டா ? வேற இடத்தை அப்பொய்ன்மெண்ட் கிடைச்சுடிச்சா? “என்று கேட்ட துருவனிடம், “இல்ல நாங்க பண்ண வேலைக்கு என்ன வேலைய விட்டு தூக்கிட்டானுக. அதுக்கப்புறம் தான் இப்போ வேற காலேஜ்ல லெக்சர் பண்ணிட்டு இருக்கேன். “என்று பதிலளித்தான் சரணித்.

துருவனோ, “அப்படி என்ன பண்ண? “ என்று கேட்க, “பண்ண இல்ல பண்ணம். “என்றவன் மீண்டும் தலையை சொறிந்து கொண்டே, “கனிஷ்க்கும் எனக்கும் இந்த திலீபன் மேலே செம்ம கோவம். ஜனனி கிட்ட அவன் தப்பா நடந்துக்கிட்டதுக்கு அவனை ஏதாச்சும் பண்ணனும் எண்டு தோணிட்டே இருந்துச்சு.

அதுதான் ஒரு நாள் நானும் கனிஷும் அவனை இழுத்து வந்து கிரௌண்ல போட்டு ஜட்டி ஒட வச்சு ஆசை திருற வரைக்கும் புளந்து எடுத்தோம். அதை காலேஜ்ல இருக்குற மொத்த பெயரும் பார்த்தாங்களா அதுதான் அந்த பயந்தாங்கோலி யாராச்சும் ஏதும் கேட்டு அவனோட வேஷம் கலைஞ்சிடும்னு என்னைய வேலைய விட்டு தூக்கிடுச்சு. ஆனா வெளிய வரும் போதும் நான் சும்மா வரல அவனுக்கும் கன்னம் பழுக்குற அளவுக்கு கொடுத்துட்டுதான் வந்தேன். “என்றான்.

துருவனோ சிரித்துக்கொண்டே, “வெல் நல்ல வேளை அப்போ எனக்கு இந்த விஷயம் தெரியல, அப்படி தெரிஞ்சு இருந்தா அவன் இந்நேரம் சுடுகாட்டுல புதைஞ்சு இருந்திருப்பான். “என்று சொன்னவன், “சரி வா நம்ம வந்த வேலையை பார்ப்பம். “ என்று சொல்லி முன்னால் செல்ல, சரணித் அவன் பின்னால் போனான்.

அங்கு ஆபீஸ்க்கு சென்ற துருவன் ஹரிணியின் பேட்ச், ரோல் நம்பர் என அனைத்தும் சொல்லி அவள் செர்டிபிகேட்கள் பற்றி கேட்க, அவர்களோ அதை அவள் பெற்று சென்றதாக சொல்ல, பெற்று சென்ற தேதியையும் வாங்கியவன் நேராக பிரின்சிபல் அறைக்குள் சென்றான்.

அங்கு அவரோ அவனுக்கு வரவேற்பை கொடுக்க, ஹரிணி பற்றிய விபரங்கள் அவருக்கு தெரியுமா என்ற வகையில் அவனும் கேட்டான்.

அவரும், ஆம் என்று சொன்னவர் தானே அவளுக்கு வேலையில் சேர ரிக்வஸ்ட் லெட்டர் கொடுத்ததாகவும் சொன்னார்.

உடனே அவள் செர்டிபிகேட் எடுத்து சென்ற தேதியை கொடுத்தவன், அதே திகதியில் அனுப்பி இருந்த ரிக்வஸ்ட் லேட்டரின் சாப்ட் காப்பியையும் பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்து வெளியேறினான்.

சரணித்தோ, “மச்சா செம்மடா. இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே. “என்று சொல்ல, “இதுக்கெல்லாம் கொஞ்சம் கிரிமினல் மைண்டும் வேணும். அது உன்கிட்ட இல்லடா. “என்றான் துருவன்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்க, அவர்கள் முன்னால் வந்து கொண்டிருந்தான் திலீபன்.

சரணித்தோ, “அவன் கிரகம் தனியா வந்து மாட்டுறான். “என்று சொல்ல, சரணித்தை பார்த்து பயந்தாலும், “ஹாய் மிஸ்டர் துருவன் எப்படி இருக்கீங்க? “என்று கேட்டு துருவனுக்கு கை கொடுத்தான் திலீபன்.

துருவனோ, “ஐயம் பைன். “என்று மட்டும் சொன்னவன் கையை இறுக்க பிடித்து திருக, “ஆ.. ஆ.. “என்று சொல்லி சிரித்து, ”நீங்க என்னோட கைய ரொம்ப டைட்டா புடிச்சு இருக்கீங்க மிஸ்டர். “என்றான் திலீபன்.

துருவனோ, “தெரியும்டா தறுதலை. “என்க, “வாட்? “என்று கேட்டான் திலீபன். துருவனோ “என்னடா வாட்டு பெட்டு என்னுட்டு, இதுவே நான் பழைய துருவனா இருந்தா நடக்குறது வேற. இப்போ குடும்பம் குட்டி னு இருக்குறதால உன்னை இத்தோட விடுறேன். இனியும் பொண்ணுககிட்ட தப்பா நடந்துகிட்ட என்று ஏதும் நியூஸ் கேள்விபட்டன், ஒட்ட நறுக்கி விட்டுவன்.”என்று கையில் வெட்டும் சைகை செய்தான்.

திலீபன் அதிர்ந்து நிற்க சற்று முன்னால் சென்று திரும்பி அடிகள் எடுத்து வைத்து வந்த துருவன் திலீபன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, “ இது என்னோட பொண்டாட்டி கிட்ட மிஸ் பிகேவ் பண்ணதுக்கு. “என்றவன் அடுத்ததாக மறு கன்னத்திலும் அறைந்து, “இது என்னோட மச்சானை வேலைய விட்டு தூக்குனத்துக்காக. “என்று விட்டு முன்னால் சென்றான்.

பின்னால் வந்த சரணித்தோ, அவன் இரு கன்னத்திலும் அறைந்து அவன் தலையிலும் ஓங்கி கொட்டியவன், “உன்னை பார்த்தாலே அடிக்கணும் போல தோணுதுடா. “என்றவன் துருவனுடன் நடந்து செல்லலானான்.

துருவன் அவனது செயலை பார்த்து சிரிக்க, “காமெடி பிஸ்டா இது. போரடிக்குற நேரம் எல்லாம் வந்து அடிச்சுட்டு போவம். “என்று சொல்லி சிரித்து செல்ல, திலீபனுக்கு தான் யார் எதற்கு என்ன சொல்லி அடிக்கிறார்கள் என்று ஒன்றும் புரியாமல் தலையையும் கன்னத்தையும் பொத்திய படி நின்றான்.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 42
அடுத்தது நேராக அவர்கள் சென்றது என்னவோ ஹரிணி வேலை பார்க்கும் ஆபீசை நோக்கித்தான்.
அந்த ரிக்வேஸ்ட் லேட்டரை வைத்தே அவள் வேலை பார்க்கும் இடத்தை அறிந்து கொண்டவர்கள், சில கிலோமீட்டர்கள் கடந்து அவள் இருக்கும் நகரத்தையும் கண்டுபிடித்து இருந்தனர்.
சரணித்தோ, “கில்லாடிடா அவ, யாருக்குமே சந்தேகமம் வராத அளவுக்கு தான் இடத்தை பார்த்து இருக்கா.”என்று சொல்ல,”நானும் அவளை குறைச்சி தான் எடை போட்டுட்டேன். அவ லவ் பண்ணுவா, அதுவும் கனிஷ்ஷ லவ் பண்ணுவா எண்டேல்லாம் நான் கனவுல கூட யோசிச்சு பார்த்ததில்லை.”என்றான் துருவன்.
இருவரும் சந்துகள் பல நுழைந்து இறுதியாக அவள் வேலை பார்க்கும் இடத்தையும் கண்டுபிடித்து அங்கு சென்று அவளை பற்றி கேட்க, அவள் அன்றைய தினம் விடுமுறை எடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.
எப்படியோ அங்கு பேசி நோட்டுக்கள் சில கொடுத்து அவள் வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டவர்கள் அடுத்ததாக அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
துருவன் முன் செல்ல சரணித் கனியுடன் போன் பேசிக்கொண்டு இருந்தவன், “நீ போ நான் பேசிட்டு வாறன். “என்றான்.
துருவனும் அவளது வீட்டு வாசலில் நின்று கொண்டு அழைப்பு மணியை அடிக்க, அங்கு சமையலலூக்காக மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த ஹரிணி கையில் கத்தியுடனே வந்து கதவை திறந்தாள்.
துருவனோ கைகளை உயர்த்தி சாதாரணமாகவே , “ஹாய் ஹரிணி “என்று சொல்ல அவளுக்கோ அவன் மீது கொலை வெறி தான் எழுந்தது. உடனே அவள் கையில் இருந்த கத்தியை அவன் கழுத்தில் வைத்தவள், “என்ன தைரியம் உனக்கு? என்னோட பிரென்ட எப்படி நீ ஏமாத்திட்டு போகலாம்? அவளை விழுந்து விழுந்து லவ் பண்ணல!ஏன் அவளை விட்டுட்டு போன? “என்று காட்டு கத்து கத்தினாள்.
துருவனோ அவள் கழுத்தில் கத்தி வைத்ததில் இரண்டடி பின்வாங்கியவன் , “ஹரிணி நம்ம எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். முதல்ல கழுத்துல இருந்து கத்திய எடுடி. புள்ள குட்டி காரன்டி நானு. “என்று சொன்னான்.
ஹரிணியோ, “ஓஹ் இப்போதான் புள்ள இருக்கு என்ற நியாபகம் வருதா, ஈஸியா ஏமாத்தி புள்ள கொடுத்துட்டு போகும் போது இதெல்லாம் தெரியலையா “என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போது, “இரு ஒரே சத்தமா இருக்கு என்ன எண்டு பார்த்துட்டு கால் பண்றேன். “என்று கனியிடம் சொல்லி விட்டு அவ்விடம் வந்த சரணித், “ஹேய் ஹரிணி என்ன பண்ற? “என்று கேட்டு அவள் கையை பிடித்து கத்தியை வாங்கிக்கொண்டான்.
அதன் பின்னே துருவனுக்கு சற்று நிம்மதியாக இருக்க, “டேய் விட்டிருந்தா கழுத்தை அறுத்து போட்டிருப்பாடா. “ என்ற, “கழுத்தை அறுக்காட்டி என்ன!இப்போ பாரு என்ன பண்றன்னு “என்றவள் விறகுக்காக வைக்கபட்டிருந்த கட்டையை எடுத்து கொண்டு அவனை அடிப்பதற்காக துரத்தினாள்.
துருவனோ, “ஹேய் தப்பு பண்ணிட்டேன், சாரிடி. ஜனனி கூட என்ன அடிக்கலடி. “என்று சொல்லி முன் ஒட, “அவ ஒரு பைத்தியம். நீ அவளை நடுதெருவுல விட்டுட்டு போனபோ கூட உன்னை நினைச்சு அழுதுட்டு இருந்தவ அவ. அவள் எப்படி உன்னை அடிப்பா? “என்று கேட்டு கட்டையை எடுத்துக்கொண்டு துருவன் பின்னால் ஒட, சரணித்தான், “டேய் என்னடா ப்ரெண்ட்ஸ் பட காமெடி போல வீட்டை சுத்தி ஓடிட்டு இருக்கீங்க. நில்லுங்கடா அக்கம் பக்கம் பார்த்தா தப்பா நினைக்க போறாங்க. “என்றபடி அவர்கள் இருவர் பின்னாலும் ஓடினான்.
இறுதியில் வீட்டை ஐந்து, ஆறு தடவைகள் சுற்றி அவர்கள் கால் வலித்ததே மிச்சம். அப்போது கூட துருவனை துரத்தி ஓடிக்கொண்டுதான் இருந்தாள் ஹரிணி.
துருவனுக்கு எட்டி அவளை பிடித்து தடுப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆனாலும் அவளது சிறுபிள்ளை விளையாட்டு அவனுக்கும் பிடித்து இருக்க, அவளின் விருப்பத்துக்கே அவனும் இசைந்துகொடுத்துக்கொண்டு இருந்தான்.
சரணித்தான் இருபக்கம் தலையை ஆட்டி, “இனி நம்மளால ஒட முடியாதுப்பா. “என்றவன், “உன்னை எப்படி இப்போ ஓடி ஒழிய வைக்குறேன் பாரு. “என்று விட்டு, “கனிஷ் இங்க பாரு ஹரிணி உங்க அண்ணன அடிக்குறா!”என்று கத்த, கனிஷ் என்ற பெயரை கேட்டதும் அப்படியே நின்று விட்ட ஹரிணி, கட்டையை கீழே போட்டு விட்டு, “ஐயோ! நான் ஏதும் பண்ணல. “என்றவாறு ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடினாள்.
இதை பார்த்து இருவருக்கும் தங்களை கட்டுபடுத்த முடியாத அளவுக்கு சிரிப்பு வந்தது. இருவரும் கைகளை அடித்து சிரித்துக்கொள்ள, “ஏன்டா? “என்றுதான் கேட்டான் துருவன்.
சரணித்தோ, “பின்ன என்னடா கத்திட்டு பின்னாலயே வந்துட்டு இருக்கன். எதையும் காதுல வாங்காம அந்த ஓட்டம் ஓடுறா! அதுதான் கனிஷ் என்ற பெயரை உள்ள இழுத்து விட்டேன். “என்றான்.
துருவனும், “கத்திய கழுத்துல வச்சதும் எனக்கும் பக்குனு ஆயிடிச்சு. ஆனாலும் அவ பண்றது காமெடியா நல்லாத்தான் இருந்துச்சு அதுதான் கொஞ்ச நேரம் என்ஜோய் பண்ண.. சரி வா உள்ள போய் மேடம் கிட்ட பேசலாம். “என்றான்.
ஹரிணி வீட்டின் சமையல் அறைக்குள் சென்று நின்றவள் திரும்பி கூட பார்க்கவில்லை.
துருவனும், சரணித்தும் அவள் பெயரை அழைத்துக்கொண்டே உள்ளே வர, ஹரிணிக்குத்தான் அவள் இதயதுடிப்பு அவளுக்கே கேக்கும் வண்ணம் இருந்தது.
இறுதியில் அவள் சமையல் அறைக்குள் நிற்பதை பார்த்த சரணித், “என்ன ஹரிணி கனிஷ் வந்திருக்கான் அவனை பார்க்க மாட்டியா?” என்று கேட்க துருவனோ, “அதானே உன்னோட காதல் கணவன் ஆச்சே.. “என்று அவளை கலாய்த்துக் கொண்டு இருந்தனர்.
அவளோ அமைதியாகவே இருக்க, “சரி கனிஷ் நீ வா நம்ம போகலாம். அவளுக்கு இப்போ உன்னை பிடிக்கல போல. “என்று சொன்னான் துருவன்.
ஹரிணியோ, “ஐயோ அப்படி எல்லாம் இல்ல. எனக்கு.. புடிக்கும். “என்று சொல்ல, “எவ்வளவு புடிக்கும்? “என்று கேட்டான் சரணித்.
அவளும், “ரொம்ப புடிக்கும். காலம் முழுக்க அவரை நினைச்சு வாழுற அளவுக்கு புடிக்கும். ஆனா அவருக்கு தான் என்ன புடிக்குமா என்று தெரியல.. “என்று சொல்ல,”அதை கொஞ்சம் திரும்பி நீயே கேட்டுக்கோவன். “என்றான் சரணித்.
அவளும் திரும்பி தலையை குனிந்து கொண்டே, “உங்களுக்கு என்ன புடிக்குமா கனிஷ்? “என்று கேட்க, துருவனும், சரணித்தும் வயிற்றை பொத்திக் கொண்டு சிரித்தனர்.
ஹரிணியோ எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் வெட்கபட்ட படியே நிமிர அங்கு கையில் போனை வைத்துக்கொண்டு அவள் சொல்வதை எல்லாம் வீடியோஎடுத்துக்கொண்டு நின்றான் துருவன்.
ஹரிணியோ, “என்ன வச்சு காமெடி பண்றீங்களா? “என்று கேட்டவள் கையில் கிடைத்த பொருள் எல்லாம் தூக்கி அவர்கள் மீது விட்டேறிந்தாள்.
அவள் தாக்குதலை எல்லாம் பெரிதாக எடுக்காது, அவளின் அருகில் சென்று தோளில் கை போட்ட துருவனும் சரணித்தும் அவளை ஒருவாறு சமாளித்திருந்தனர்.
துருவனோ “கூல் ஹரிணி.. இப்படி எப்போ பாரு அடிதடினு இருந்தா என்னோட தம்பிய நான் உன்னை நம்பி எப்படி கொடுக்குறது? “ என்று கேட்டான்.
ஹரிணி அவனை முறைத்தவள், “நீ பேசாத. உன்மேல நான் கொலைவெறில இருக்கேன். “என்று சொல்ல, “தெரியும்டி “என்றவன் இடைப்ட்ட காலத்தில் நடந்ததை அவளுக்கு எடுத்து சொல்லி ஒருவாறு அவளை நிதானப்படுத்தினான்.
ஹரிணியும் அதை கேட்டுக்கொண்டவள், “சரி சரி போனா போகுதுனு உன்னை மன்னிச்சு விடுறேன்.” என்று சொல்ல, “சரி அம்மா எங்க ஹரிணி. அம்மா கிட்ட பேசிட்டு உன்னை கையோட அழைச்சுட்டு போகத்தான் வந்தம். “என்று கேட்டான் சரணித்.
ஹரிணியின் கண்கள் கலங்கி, “அம்மா கொஞ்சம் உடம்பு சரி இல்லாம இருந்தாங்க. இப்போ ஒரு நாலு மாசம் முன்னாடி தான் ட்ரீட்மென்ட் எதுவுமே சரி வராம இறந்துட்டாங்க. “என்று சொல்ல, “அப்போ கூட உனக்கு எங்கள கான்டெக்ட் பண்ண தோணலல ஹரிணி? “என்று சரணித் கேட்டாலும் துருவனுடன் சேர்ந்து அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
அடுத்து அவளிடம் வீட்டுக்கு வர சொல்லி கேட்க அவளோ, “ஐயோ! நான் வரல எனக்கு ஒரு மாதிரி இருக்கு அங்க வர. லெட்டர் விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும் நான் எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்? “ என்று கேட்க, “அது நீ எழுதி வச்சுட்டு போக முதல் யோசிச்சு இருக்கணும். இப்போ யோசிச்சு நோ யூஸ். “என்றான் சரணித்.
அவளோ அடம் பிடித்து நிற்க, “இப்போ நீயா வரலனாதூக்கி கார்ல போட்டுட்டு நாங்க பாட்டுக்கு போய்ட்டு இருப்பம். “என்று துருவன் சொல்ல நீண்ட நேர உரையாடலின் பின் அவள் அவர்களோடு புறப்பட சம்மதித்தாள்.
பின்னர் அவள் உடைகளை எல்லாம் பேக் செய்யும் வரை காத்திருந்து அவளுக்கு உதவியும் செய்தவர்கள், அவளை அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தனர்.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 43

இதே வேளை காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற கனிஷ்டன் அப்போதுதான் வீட்டுக்கு வந்திருக்க, அங்கு ஒரே பேச்சும் சிரிப்புமாக தான் இருந்தது.

ஹரிணியை அழைத்து வரும் விடயத்தை சரணித் கனிக்கு அழைத்து சொல்லியிருக்க அது ஜனனி மற்றும் கௌரிக்கும் அவள் மூலம் தெரியவந்தது. அதுதான் அவர்களின் சந்தோஷத்துக்கு காரணம்.

கனிஷ்டனோ வந்து அமர்ந்தவன், “என்ன முணு பேரும் ஒன்னா சேர்ந்து பேசி சிரிச்சுட்டு இருக்கீங்க!என்ன விஷயம்?”என்று கேட்க,” வீட்டுல விஷேசம் நடக்க போகுதுல அதுதான் அத எப்படி பண்ணலாம் என்று டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கம். “என்றாள் கனி.

கனிஷ்டனோ,”விஷேசமா? என்ன விஷேசம்? “ என்று கேட்க, “கல்யாணம் தான். “ என்றார் கௌரி.

கனிஷ்டனும், “என்னது கல்யாணமா? “ என்று கேட்டு அதிர்ந்து விட, கௌரியை தட்டிய ஜனனி, “ஆஹ்.. ஆமா கல்யாணம் தான். துருவுக்கும் எனக்கும். “என்று சொல்லி இளித்துக்கொண்டாள்.

கனிஷ்டனும் தலையில் அடித்தவன், “ என்னத்த சொல்ல!”என்றவன், “துருவும் சரணித்தும் எங்க? வெளிய காரும் இல்லையே!”என்று கேட்க, “கல்யாண வேலைக்கு முக்கியமான ஆளை கூட்டிட்டு வர போயிருக்காங்க. “என்றாள் கனி.

கனிஷ்டனோ புரியாமல் புருவம் உயர்த்தி “என்ன உளறுற? “என்று கேட்க, மூவருமே அவனை பார்த்து சிரித்துக்கொண்டனர்.

அவனோ, “பைத்தியம் முத்திடிச்சா? “என்று கேட்டு கனி மற்றும் ஜனனி தலையில் கொட்டியவன்,விசில் அடித்துக்கொண்டே அவன் அறைக்குள் சென்றான்.

அதன் பின்னர் குட்டி தூக்கம் போட்டவன், குளித்து விட்டு இரவு உணவுக்காகவே கீழே வந்தான். அங்கு சாப்பாடும் மேசையில் வைக்கப்பட்டிருக்க, “அம்மா பசிக்குது சாப்பாட எடுத்து வைங்க. “என்று சொல்லி அமர்ந்து கொண்டான்.

கௌரியும், “கொஞ்சம் இருடா எல்லாரும் வந்ததும் சாப்பிடலாம். “என்று சொல்ல, அதற்குள் அங்கு அடிக்கி வைக்க பட்டிருந்த டிஷ் ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவன், “இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? இவளவு ஐட்டம் இருக்கு!” என்று கேட்க, “எல்லாமே இனி ஸ்பெஷல் தான். “ என்றாள் ஜனனி.

கனிஷ்டனோ, “ஹேய் என்னடி நீயும் கனியும் கொஞ்ச நேரமா குதர்க்கமாவே பேசுறீங்க? “ என்றுதான் கேட்டான்.

அதற்கு அவர்கள் இருவரும் சிரித்த படியே நிற்க, துருவனும் சரணித்தும் வீட்டினுள் நுழைந்தனர். பெண்கள் மூவரும் அவர்களை தாண்டி எட்டி பார்க்க, கண்களாலே பொறுத்து இருக்கும் படி அவர்கள் சைகை செய்தனர்.

கனிஷ்டனோ, “டேய் வந்துடீங்களா? சீக்கிரமா வந்து உக்காருங்க டா பசி வைத்த கிள்ளுது. “என்றான்.

துருவன் அவன் பக்கத்தில் வந்தவன், “ உனக்கு ஒரு சப்ரைஸ்டா. “என்றான். கனிஷ்டனோ, “ஆஹ் ஆஹ் தெரியும் தெரியும். ஜனனி சொன்னா உனக்கும் அவளுக்கும் கல்யாணம் என்று. “என சொல்ல, ஜனனியை திரும்பி பார்த்து கண் அடித்த துருவன் , “குழந்தையே இருக்குடா இதுல நாங்க கல்யாணம் பண்றது என்ன சப்ரைஸ்!” என்றுதான் கேட்டான்.

சரணித்தோ, “மச்சி கஷ்டபட்டு அடி எல்லாம் வாங்கி அந்த சப்ரைஸ கடத்திட்டு வந்துருக்கோம். “என்று சொல்ல, “எனன கடத்திட்டு வந்தீங்களா? என்னடா குடும்பமா சேர்ந்து ஏதும் ஆயிடிச்சா என்ன? ஆள் ஆளுக்கு ஒரு மாதிரி பேசிட்டு இருக்கீங்க. “என்று கேட்டான் கனிஷ்.

இதற்கு மேல் அவனை குழப்ப விரும்பாத துருவன் நேராக அவளை இழுத்து சென்று வாசலில் நின்று இருந்த ஹரிணியின் முன்னால் நிறுத்தியவன், “இனி நீயாச்சு இவளாச்சு. “என்றவன் உள்ளே சென்று விட்டான்.

ஹரிணி அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டு நிற்க, கனிஷ்டனோ, “ஹரிணி!” என்று முணுமுணுத்தான்.

இருவருக்கும் இடையில் அமைதி மட்டுமே குடி கொண்டிருக்க இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமலே நின்றிருந்தனர்.

இதை பார்த்த சரணித்தோ, “உன்னோட அண்ணன் என்ன இப்படி இருக்கான் ? பார்த்ததும் கட்டி பிடிச்சு உம்மா கொடுப்பான்னு பார்த்தா இப்படி விறைச்சு போய் நிக்குறான். “என்று சொல்ல, “அவன் கொஞ்சம் ஷை டைப். “என்றாள் கனி.

சரணித் அவளை மேலும் கிளுமாக பார்க்க, துருவனோ, “டேய் இப்படி பார்த்துட்டு நிக்கவா அவ கிட்ட அவ்வளவு திட்டும் அடியும் வாங்கி கூட்டிட்டு வந்தோம்? “ என்று கேட்டான்.

ஜனனியோ, “அடிச்சாளா? “ என்று கேட்க, “ஆமா, கழுத்துல கத்தி வேற வச்சா. “என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

ஜனனி நேராக கனிஷை கடந்து ஹரிணியிடம் சென்றவள், “நான் பண்ண முடியாததை என்னோட பிரென்ட் பண்ணியிருக்கா. “என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டவள் அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

கௌரி மற்றும் கனி கூட அவளை அணைத்து விட்டு அவளுடன் பேசி இருக்க கனிஷ்டன் தான் இதை எல்லாம் பார்த்தவாறே சிலையாக நின்றிருந்தான்.

அவனுக்கும் அவளை இறுக்கி கட்டிக்கொள்ள உள்உணர்வு சொன்னாலும், பார்த்து பேசி காதல் செய்யாமலே அவளை நெருங்கவும் அவனுக்கு மனதில்லை .

துருவன் தான் அவனை இழுத்து வந்தவன், “அதான் வந்துட்டால ஏதாவது பேசுடா. “ என்று சொல்ல, அதற்கும் மௌனமே அவன் பதிலாக இருந்தது.

ஹரிணியோ இதை பார்த்து, “அவர ஒன்னும் போர்ஸ் பண்ணாதீங்க. புடிக்கலனா பரவால்ல நான் போறேன். “என்று சொல்ல, இப்போது தான் கனிஷ்டனுக்கு தூங்கிக்கொண்டு இருந்த ஹார்மொன்கள் விழித்துக்கொண்டன.

இன்னுமொரு தடவை பிரிவை தாங்க முடியாது என்று நினைத்தவன், ஓடிச்சென்று அவளை இறுக்கி அணைத்துக்கொண்டவன் அவள் உச்சம் தலையில் முத்தம் பதித்தான்.

அவர்கள் காதலர்களா ஊர் சுற்றவில்லை, காதல் வார்த்தைகளும் பேசியதில்லை, ஆனாலும் இருவர் இடத்திலும் அப்படி ஒரு காதல் வேறுன்றி இருந்தது.

இதை பார்த்ததுமே அனைவரின் மனதும் லேசாகி போனது. துருவனுக்கும் ஜனனிக்குமே ஒரு குற்ற உணர்வில் இருந்து விடு பட்ட உணர்வு. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, சரணித் துருவனின் காதில் வந்து ஏதோ முணுமுணுத்தான்.

துருவன் அவனுடன் கை அடித்து சிரித்தவன், சென்று அவனது போனை தொலைகாட்சியில் தொடர்பு படுத்தி, ஹரிணி கனிஷ்டனை பிடிக்கும் என்று சொல்லி பேசிய வீடியோவை அனைவர் முன்னும் போட்டான்.

ஹரிணியோ கனிஷ்டனின் மார்பில் இருந்தவாறே, “என்ன நம்ம சத்தம் வேற எங்கயோ கேக்குது. “என்று நினைத்து நிமிர்ந்து பார்க்க அங்கு கனிஷ்டன் அவளையும் டிவியையும் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றான்.

அவளோ திரும்பி டிவியை பார்க்க அவள் பேசியது அனைத்தும் அங்கு படமாக ஓடிக்கொண்டு இருந்தது.

அவளுக்கோ வெட்கம் பிடுங்க ஓடிச்சென்று ஜனனி பின்னால் ஒழிந்து கொண்டவள், ப்ளீஸ்டி அத ஆப் பண்ணு. “என்று சொல்ல அவள் கையில் கிடைத்ததை எல்லாம் அவர்கள் மேல் தூக்கி அடித்ததெல்லாம் அதில் ஓடிக்கொண்டு இருந்தது.

ஹரிணி கையால் முகத்தை மூடிக்கொள்ள, “டேய் பார்த்துடா வருங்காலத்துல கரண்டி, கட்டையால எல்லாம் அடி வாங்க வேண்டி இருக்கும். உடம்பை ஸ்ட்ரோங்கா வச்சுக்கோ. “ என்று கனிஷ்டனை சீண்டினான் சரணித்.

இப்படி அன்று இரவு முழுவதும் அவர்களை வைத்து அந்த வீட்டில் ஒரு காமெடி ஷோவே நடந்தேறி இருக்க, ஹரிணி பயண களைப்பில் கௌரியுடன் சென்று படுத்துக்கொண்டாள்.

கனிஷ்டனுக்குதான் அவளுடன் எப்படி பேசுவது என்று யோசித்து இருப்பதிலே நேரம் போய் கொண்டு இருந்தது.





 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 44

அடுத்த நாள் காலை ஜனனி, துருவன், சரணித், கனி, ஹரிணி என அனைவரும் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருக்க அவர்களுக்கு காபி கொண்டு கொடுத்த கௌரி, “கனிஷ் எங்க?” என்று கேட்டார்.

துருவனோ, “இன்னும் எழுந்திரிக்கல போல.ரூம்ல போய் காபிய வச்சுட்டு வாங்கம்மா.”என்று சொல்ல, அவனின் தொடையில் தட்டிய ஜனனி,”அத்தை நீங்க இருங்க. ஹரிணி நீ போய் காபிய கொடுத்துட்டு வாயேன். “என்றாள்.

ஹரிணியோ, “என்னது நானா?”என்று கேட்க,”ஆமா நீயேதான். “என்றாள் ஜனனி.

ஹரிணி தலையை குனிந்து கொண்டே, “எனக்கு பயமா இருக்கு. நீயும் கூட வா.” என்று ஜனனியை சுரண்ட, “ஹேய், காபி கொடுக்க போறதுக்கு உனக்கு என்ன பயம். என்னோட அண்ணன் உன்னை புடிச்சு கடிச்சு வச்சிட மாட்டான். தைரியமா போ. “என்று நக்கலாக சொன்னாள் கனி.

அனைவரும் அவளை பார்த்து சிரிக்க, காபி கப்பை எடுத்துக்கொண்டு பயத்துடனே அவன் அறைக்குள் சென்றாள் ஹரிணி.

அவனோ அப்போது தான் தூங்கி எழுந்தவன், குளியல் அறைக்கு சென்று முகத்தை கழுவி விட்டு வெளியே வர, அங்கு வந்து நின்றாள் ஹரிணி.

அவனோ வெற்று மார்போடு நின்றிருக்க, அது ஹரிணிக்குத்தான் சங்கடமாகி போனது. உடனே திரும்பி கொண்டவள், “காபி” என்று மட்டும் சொன்னாள்.

அவனும், “அத அங்க வை “என்று சொன்னவன், அவள் பின்னால் சென்று நின்று அவளின் தோளை பற்றி தன் பக்கமாக திருப்பினான்.

அவளோ தலையை குனிந்து கொண்டே நிற்க, தன் ஒற்றை விரலை அவளின் நாடியில் வைத்து அவளை நிமிர செய்தவன், “ எப்போ இருந்து இந்த லவ் எல்லாம் வந்துச்சு? ஒரு தடவை கூட நீ என்கிட்ட அந்த மோடிவ்ல பழகுனதே இல்லையே!”என்றுதான் கேட்டான்.

ஜனனியோ அவனை பார்த்தவாறே, “இல்ல நான் உங்க முன்னாடி எக்ஸ்பிரஸ் பண்ணி இருக்கேன். உங்களுக்கு தான் அது புரியல. “என்று சொல்ல, “எப்போ? “ என்றுதான் கேட்டான் அவன்.

அவளோ, “அதுதான் உங்கள மரியாதையா பேசுறது, முன்னாடி எல்லாம் யோசிக்காம பக்கத்துல வந்து உக்கார்ந்துப்பன், கை போட்டுப்பேன், நான் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்புறம் அது எதுவும் பண்ணல. அப்புறம் அடிக்கடி பார்த்து சைட் அடிப்பேன். “என்று சொன்னாள்.

அவள் சொல்வதை கேட்டு வாய் விட்டு சிரித்த கனிஷ், “ஹேய் ப்ளீஸ்டி இந்த வாங்க போங்கலாம் வேணாம். சகிக்கல, நான் ஏதோ நீ டச் விட்டு போனதுல அப்படி எல்லாம் நடந்துக்குற என்று நினச்சுட்டேன். சத்தியமா நீ லவ் பண்ற என்றே எனக்கு தெரியாது. “என்றான்.

ஹரிணியோ மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாகவே, “தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ணிருப்பீங்க?“என்று சொல்ல, கனிஷ்டனோ கைகளை கட்டி அவளை பார்த்து நின்றான்.

அவளோ, “அய்யய்யோ! மைண்ட் வாய்ஸ் என்று சத்தமா பேசிட்டமே!” என்று நினைத்தவள் அங்கிருந்து ஒட முற்பட, அவளின் கையை புடித்து தன் பக்கம் இழுத்து அவனோடு மோதி நிற்க செய்தவன் அவளின் இடையில் தன் கைகளை கட்டிக்கொண்டான்.

ஹரிணியோ, “ஏதோ தெரியாம சொல்லிட்டேன் விடுங்க. “என்று சொல்ல, “மறுபடியும் சொல்றேன் தயவு செய்து வாங்க போங்கனு கூப்பிடாதடி, ஸ்கூல் படிக்கும் போது எப்படி கூப்பிடுவியோ அப்படியே கூப்பிடு. “என்றவன் அவன் கையை எடுத்து அவள் முகத்தின் மேல் இருந்த முடியை ஒதுக்கி விட்டவன் அவளையே பார்த்து நின்றான்.

ஹரிணியோ,”இப்போ எதுக்கு அப்படி பாக்குறீ.. சாரி பாக்குற? “என்று கேட்க, “நீதான் என்ன பண்ணி இருப்ப என்று கேட்டல? மொத்தமாலாம் இப்போ பண்ணி காட்ட முடியாது, ஒரு ட்ரையல் மட்டும் பண்ணி காட்டுறேன். “என்றவன் அவளின் இதழை தன்னுள் சிறையாக்கி கொண்டு அவளை திணற வைத்தான்.

முதலில் அவள் அதிர்ந்து நின்றாலும், அத்தனை நாள் கத்திருப்புக்கு பின்னதான இணைவு அவளை தன்னிலை மறந்து அவனுக்கு இசைந்து போக வைத்தது.

நீண்ட நேரத்தின் பின்னரே கனிஷ்டன் அவளின் இதழ்களை விடுதலை செய்தவன், “உனக்கு நிறைய கிளாஸ் எடுக்கணும். பெர்போர்மென்ஸ் பத்தாது. “என்று சொல்ல, “ஆமா இவரு மட்டும் பலே கில்லாடி பாரு. “என்று சொல்ல, “ஓஹ் அப்போ சரி வா, இப்போவே நான் என்னோட பெர்போர்மென்ஸ காட்டுறேன். “என்று சொல்லி அவள் அணிந்து இருந்த ட்ஷிர்ட்டை கழற்ற போக, அவனின் கையை தள்ளி விட்டு ஓடிசென்று குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஹரிணி.

கனிஷோ, “நீ ரொம்ப சைலன்டான பொண்ணுனு நினைச்சன், என்னமா வாய் அடிக்குற! எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு உனக்கு கச்சேரி வச்சுக்குறேன். “என்று சொல்லி சிரித்தவன் காபி கப்பை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றான்.

ஹரிணியோ அவனின் செயல்களால் முகம் சிவந்து போனவள், முகத்தை மூடி கொண்டே, “என்னெல்லாம் பேசுறான். “என்று நினைத்துக்கொண்டு, மெதுவாக கதவை திறந்து பார்த்து அவன் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டே வெளியே வந்தாள்.

கனிஷ்டனோ அனைவருடனும் வந்து அமர்ந்து கொள்ள, “ஹரிணி எங்க? “என்று கேட்டாள் ஜனனி.

அவனோ, “வருவா.”என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவளும் அவன் இதழில் ஏற்படுத்தி இருந்த காயத்தை வருடிக்கொண்டே அங்கே வந்தாள்.

இதை கனிஷ்டன் கவனிக்கவில்லை என்றாலும் மற்ற அனைவரும் பார்த்து சிரிக்க,”என்ன கனி உன் அண்ணன் கடிச்சு வைக்க மாட்டான் என்று சொல்லி அந்த குழந்தைய அனுப்பி வச்ச, இப்போ கடிச்சு குதறி வச்சிருக்கான் போலயே. “என்று நக்கல் செய்தான் சரணித்.

கனியோ அவனின் தோளில் தட்ட, கனிஷ்டனுக்கு தான் புரைஏறி போனது. அவனோ நிமிர்ந்து ஹரிணியை பார்க்க அவள் தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பதை போலவே நின்றிருக்க அவள் முகமோ கண்டமேனிக்கு சிவந்து இருந்தது.

அவனுக்கோ அது ரசிக்கும் படி இருக்க இடை இடையே அவளையே பார்த்து இருந்தான் அவன்.

கௌரியோ நீண்ட நாட்களில் பின்னர் எல்லோரும் சேர்ந்து சிரித்து சந்தோசமாக இருப்பதை பார்த்தவர், திரும்பி அங்கே படமாக தொங்கிக்கொண்டு இருந்த தினகரன், சுந்தரம் மற்றும் வாணியின் புகைபடத்தையும் பார்த்து விழ இருந்த கண்ணீரை கஷ்டபட்டு இழுத்துக் கொண்டார் அப்போது அங்கிருந்த சூழ்நிலையை குலைத்துவிட வேண்டாம் என்பதற்காக.

அவரின் பாரங்கள் எல்லாம் ஓரளவு குறைந்து இருக்க, அவர்கள் அனைவர் மத்தியிலும் சென்று அமர்ந்தவரிடம், “அம்மா, கனிஷ் ஹரிணி கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்? “என்று கேட்டான் சரணித்.

ஹரிணியும் கனிஷும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையை குனிந்து கொள்ள, “கனி கன்சீவா இருக்கும் போது கல்யாணம் வச்சா அது அவ்வளவு நல்லாருக்காதுபா. முதல்ல கனிக்கு வளைகாப்பு நடத்தலாம், அப்புறம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா கல்யாணத்தை வச்சுக்கலாம். “என்றார் கௌரி.

துருவனோ, “அம்மா அதெல்லாம் பண்ணலாம். முதல்ல ஒரு நல்ல நாளா பாருங்க நான் இங்க வீட்டுல வச்சே அப்பா, மாமா, அத்தை போட்டோ முன்னாடி ஜனனிக்கு தாலி காட்டிடுறேன். “என்றான்.

கௌரியோ, “அதெப்படிடா வீட்டுலயே பண்றது? அது ரொம்ப சிம்பிளா பண்ற மாதிரி இருக்கும் துருவ். “என்றார்.

உடனே கனிஷ்ஷோ, “அம்மா அவனுக்கு புடிச்ச மாதிரி பண்ணட்டும். உங்களுக்கு என்ன துருவோட கல்யாணம் சிம்பிளா நடக்க கூடாது அவ்வளவுதானே! வீட்டுலயே அதை கிராண்டா பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு. “என்றான்.

கௌரியும் சம்மதம் சொன்னவர் அடுத்த மூன்று நாட்களில் நல்ல நாளை குறித்துக் கொடுத்தார்.

கனிஷ்டனுடன் சரணித்தும் சேர்ந்து கொள்ள, இருவரும் சேர்ந்து அவர்கள் வீட்டை அரண்மனை போல் அலங்கரித்து இருந்தனர் துருவனின் திருமணத்திற்காக.

அந்த வீட்டின் நடுவில் விண்லோகம் சென்ற மூன்று பேரின் புகைபடமும் மலர் அலங்காரத்துடன் வைக்க பட்டிருக்க, அவர்கள் ஆசிர்வாதத்துடனே ஜனனிக்கு மாங்கல்யம் அணிவித்து தன் மனைவி என்ற ஸ்தானத்தை அவளுக்கு வழங்கினான் துருவன்.

அந்த நொடியில் அனைவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர்தான் தவழ்ந்து கொண்டிருந்தது.

கனிஷ்டன் தான் தினதரணியை வைத்துக்கொண்டு நின்றவன், புகை படம் எடுக்கும் போது அவளை துருவனிடம் கொடுத்து, “இரண்டு பேருக்கும் நடுவுல வச்சு போட்டோ எடுத்துக்கோங்க. வருங்காலத்துல அம்மா அப்பாக்கு கல்யாணம் நடக்குறத பார்த்த ஒரே ஒரு பிள்ளை நீதான்னு அவள்ட சொல்லலாம். “என்று சொல்லி அவர்களை சீண்டிக்கொண்டான்.

துருவனின் விருப்பப்படியும், கௌரியின் ஆசைப்படியும் அந்த திருமணம் சிறப்பாக நடந்து இருக்க, அன்று இரவு பூக்கள் தூவி துருவனுக்கும் ஜனனிக்கும் அறையை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர் கனிஷ் மற்றும் ஹரிணி.

கனிஷ் கட்டிலில் பூ தூவினானோ இல்லையோ ஹரிணி மீதே மொத்த பூவையும் தூவிக்கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவளை நெருங்கி வந்தவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க, அவள் நெளிந்து கொண்டே நின்றிருந்தாள்.

அந்த சமயம் கதவை திறந்து கொண்டு துருவன் உள்ளே நுழைய அவனை தொடர்ந்து ஜனனியும் வந்தாள்.

கனிஷ்டன் உடனடியாக அவளில் இருந்து விலகி விட, ஹரிணி தான் நெளிந்த படியே நின்றாள்.

துருவனோ, “இது எங்களுக்கு ஏற்பாடு பண்ற மாதிரி தெரியலையே!”என்று சொன்ன சத்தத்தில் தான் தன்னிலை அடைந்த ஹரிணி குடுகுடுவேன வெளியில் ஒட, கனிஷ்டனும் ஏதும் சொலல்லாமல் அங்கிருந்து நழுவி விட்டான்.

ஜனனியோ, “தப்பான நேரத்துல உள்ள வந்துட்டோமா? “ என்று கேட்க, “இல்லையே நல்ல நேரத்துலதான் வந்திருக்கம். “ என்று சொல்லி அவளை தூக்கி கொண்டு மஞ்சத்தில் கிடத்தியவன் அவன் பணியை ஆற்ற தொடங்கிவிட்டான்.

வெளியே ஓடி வந்த ஹரிணியோ பின்னால் வந்த கனிஷ்டனிடம், “உன்னால மானமே போச்சு. “என்றாள்.

அவனோ, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, உனக்குத்தான் கொஞ்சம் எக்ஸ்பிரியன்ஸ் பத்தல. போக போக சரியாகிடும். “என்றவன் மீண்டும் அவளை சீண்ட தொடங்க, “இது நான் பார்த்த கனிஷா எண்டு எனக்கே சந்தேகமா இருக்கு. உனக்குள்ள இப்படி ஒரு காதல் ரோமியோ இருக்குனு தெரியாம போச்சே!”என்று சொன்னாள் ஹரிணி.

கனிஷோ, “இதெல்லாம் பப்ளிக்காவா சொல்லிட்டு சுத்த முடியும். காட்டுறவங்க கிட்ட தான் காட்ட முடியும். “என்றவன் விட்டதை தொடங்க, “ஹரிணி கொஞ்சம் வாயேன் “என்று அழைத்தாள் கனி.

ஹரிணியோ பாவமாக கனிஷ்டனை பார்க்க, “ஷப்பா நிம்மதியா ரொமான்ஸ் பண்ண கூட விடுதுக இல்லையே. “என்று சொன்னவன், “போ. “என்று அவளை அனுப்பி வைத்து ஏக்கமாக அவளையே பார்த்து நின்றான்.

இன்று வரை அவனது அனைத்து கடமைகளையும் குடும்பத்துக்காக சரியாக செய்து கொண்டிருப்பவன் இனி அவனது காதலின் கடமைகளையும் சேர்த்து தன்னவளுக்காக செய்ய காத்திருக்கின்றான்
.
 
Status
Not open for further replies.
Top