ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 36

கனிஷ்டனோ, “கூட இருந்து குழி பறிச்சு இருக்கியேடா. இது துருவுக்கு தெரிஞ்சா உனக்கு சங்கு ஊதிருவான்.”என்று சொல்ல,” அவன் எதுக்கு நானே அதை பண்றேன். “என்ற சரணித் பக்கத்தில் இருந்த கனமான பொருள் ஒன்றை எடுத்து அவனது தலையில் அடிக்க ஒங்க, அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள் கனி.

சரணித்தோ, “விடு கனி இவனை இப்படியே விட சொல்றியா?” என்று கேட்க, “சரணித் பிரச்சனை எதுவும் வேணாம். ஏற்கனவே இரண்டு பேரும் இத்தனை நாள் பிரிஞ்சு இருந்துடீங்க. இப்போ இவனை கொன்னுட்டு ஜெயில் போய்ட்டா என்னோட தங்கச்சி வாழ்கை என்ன ஆகுறது?”என கேட்டான் கனிஷ்டன்.

சரணித்தும், ஜனணியும் கனியை பார்த்து அதிர்ச்சியாக விழி விரித்துக்கொள்ள, “என்னடா அப்படி பாக்குற? நீ மட்டும் இல்ல, மேடமும் உன் மேல செம்ம லவ்வு. நேற்று உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் என்கிட்டயே இதை சொன்னா. கார்ல ஒரே அழுகை, உங்க எல்லார் கிட்டயும் பேசினத்துக்கு அவன் என்கிட்ட பேசி இருக்கலாமே என்று. எனக்கும் இவனோட கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது இந்த விஷயத்தை எப்படி முவ் பண்றது என்றே தெரியல. இப்போதான் எல்லாமே சரி ஆகிடிச்சே. துருக்கும் இனி எல்லாத்தையும் சொல்லிடலாம். “என்று சொன்ன கனிஷ்டன் போனை எடுத்து பொலிஸிற்கு அழைத்திருந்தான்.

கனி அவளை அதிர்ச்சியாக பார்த்து நின்ற சரணித்தின் கைகளை இழுத்துக் கொண்டு ரூமின் முன் அறை பகுதிக்கு வந்தவள், “இப்போ எதுக்கு அப்படி பார்க்குற? அவன் சொன்னது எல்லாமே உண்மைதான். நீ சொல்லுவனு தான் நான் வெயிட் பண்ணன். ஆனா இடைல ஏதோ எல்லாம் நடந்து போச்சு. ஆனாலும் நீ முதல்ல வந்து என்கிட்ட பேசி இருந்தா நானே உன்னை அக்செப்ட் பண்ணி இருப்பேன். “என்று சொன்னாள்.

சரணித்தோ இடுப்பில் கைகளை குற்றிக் கொண்டு அவளையே பார்த்து நின்றவன், “இதெல்லாம் நிஜம் தானா? “என்று கேட்க, அவனின் முகத்தை எட்டி தாங்கியவள், அவன் கண்களோடு கண்கள் கலந்தவாறே அவன் இதழில் முதல் முத்தம் பதித்து அதன் மூலம் அவள் அவனை காதலித்தது உண்மை என அவனுக்கு உரைத்தாள்.

இதை தான் துருவன் பார்த்து தவறாக புரிந்து கொண்டதும். சரணிததின் முதுகு புறம் மட்டுமே அவனுக்கு தெரிய கற்பனையின் உச்சிக்கே சென்றவன் மொத்தமாக அங்கிருந்து புறப்பட்டுஇருந்தான்.

இதை அனைத்தையும் துருவன் அறிந்ததும் தன்னை எண்ணி வெட்க்கித்தான் போனான் அவன். தன்னிடம் இருந்தவை அனைத்தையும் இழந்து விட்ட உணர்வு அவனுக்கு.

தலையை பிடித்துக்கொண்டே சோபாவில் அமர்ந்தவன் முதல் முறையாக உடைந்து அழ ஆரம்பித்தான். அவன் அழும் சத்தம் அங்கிருந்த எல்லோரையும் சற்று இரங்கததான் செய்தது.

அந்நேரம் அங்கு குழந்தையோடு வந்த ஜனனியின் கண்களிலும் தன்னவன் அழுவதை பார்த்து கண்ணீர் சொரிந்தது.

அவளுக்கே அவ்வாறு என்றால் பெற்ற மனம் தாங்குமா என்ன? ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டவர், “அழாதப்பா, எல்லாரும் ஒரு கோவத்துல உன்னை ஏதேதோ பேசிட்டோம். மத்த படி நீ இங்க இல்லாம நாங்க எல்லாரும் எத்தனை நாள் தூங்காம அழுது இருக்கோம் தெரியுமா?” என்று துருவனை தேற்ற முயன்றார்.

துருவன் சிறிது நேரம் அவர் அணைப்பிலே அழுது இருந்தவன், அவரை விலக்கி விட்டு எழுந்து கனிஷ் பக்கம் திரும்பியவன் அவன் கைகளை பற்றிக் கொண்டு, “நீ சொன்னது சரிதான். ஜனனிய என்ன விட நீதான் ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்க. இதுக்கு மேல நான் இங்க இருந்தா அது உனக்கும் அவளுக்கும் தான் சங்கடமா போகும். சோ நான் இருந்த இடத்துக்கே மறுபடியும் போயிடுறேன். “என்று சொன்னான்.

கனிஷ்டன் அவனுடன் பேச எத்தணிக்க, அதை தடுத்து, “கனிஷ் இரு. “என்ற ஜனனி குழந்தையை கொண்டு வந்து துருவனிடம் கொடுத்தவள் “இதுக்கு அப்புறம் நீ இங்க இருந்து போனா, உன்னை நினைச்சு போன மூணு உசுரோட சேர்த்து அடுத்து இரண்டு உசுரும் போயிடும். “என்றுவிட்டு அவனை முறைத்துக்கொண்டே சென்றாள்.

துருவன் ஏதும் புரியாமல் கையில் குழந்தையை வைத்து நின்றிருக்க, அவள் சொன்னதை கேட்ட கௌரி அங்கிருந்து அவள் பின்னாலே சென்று விட, கனிஷ்டனும் கனியை அழைத்துக் கொண்டே ஜனனியை சமாதானபடுத்த சென்றவன், சரணித்திடம் கண்களை காட்டி விட்டு சென்றான்.

சரணித்க்கும் அதன் அர்த்தம் புரிந்து போக, துருவனின் தோளில் கை போட்டவன், “இங்க பாரு துருவ் இதுவரைக்கும் நீ எல்லாத்தையும் தப்பா யோசிச்சு நிதானம் இல்லாம முடிவு எடுத்து இருக்க. இனியாவது கொஞ்சம் யோசிச்சு முடிவு எடு.’என்று சொல்ல, “சாரி சொல்லி முடிக்குற அளவுக்கு நான் உனக்கு கஷ்டம் கொடுக்கல. ஆனாலும் கேக்குறன் சாரி டா. “என்று சொன்னவன், “அப்பா, மாமா, அத்தை எல்லாரும் என்னால தான் இறந்து போனாங்களா? “என்று இயலாமையில் கேட்டான்.

சரணித் துருவனின் தோளில் தட்டியவன், “அப்பாக்கும் மாமாக்கும் ஹார்ட் அட்டாக் துருவ். உன்னால என்று சொல்ல முடியாது. எல்லாருட வாழ்க்கையும் இப்படி போச்சுனு கவலை அவங்களுக்கு. நீ இங்க இருந்து போன நாலு மாசத்துலயே சுந்தரம் மாமா தவறிட்டாரு. அடுத்த இரண்டு மாசத்துல மாமாவும் போய்ட்டாரு. அத்தை தான் ஜனனிட வாழ்கை கேள்வி குறி ஆகிடிச்சே என்ற கவலை ஒரு பக்கம், புருஷனும் அண்ணனும் அடுத்து அடுத்து இறந்த சோகம் ஒரு பக்கம்னு அதை யோசிச்சு யோசிச்சே ஜனனிக்கு டெலிவரி ஆகுறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க. “என்றவன், “நீ போனதுல இருந்து ஜனனி முகத்துல யாரும் சந்தோஷத்தையே பார்க்கல. ஏதோ குழந்தை வந்த அப்புறம் தான் அவ கொஞ்சமாச்சும் சிரிக்குறா. “ என்றான்.

துருவனோ சாரணித்தை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன், “கனிஷ்டன் அவளை நல்லாத்தான் பார்த்துப்பான். “என்று மட்டும் சொல்லி கண்களால் வழிந்த நீரை துடைத்துக்கொண்டான்.

சரணித்தோ சிரித்துக்கொண்டே, “கண்டிப்பா துருவ், அவன் தான் அவ கன்சிவ் ஆனதுல இருந்து அவளை தங்க தட்டில வச்சு தங்கினான். இரவு பகலா அவ கூடவே இருந்து பார்த்துக்கிட்டான், அதுக்கும் மேலே அவளுக்கு டெலிவரி ஆகும் போது கூடவே இருந்து குழந்தையை கையில வாங்குனது கூட அவன்தான். ஆனா அவன் அத ஜனனிய தன்னோட அண்ணனோட வைப் என்று நினைச்சித்தான் பண்ணானே தவிர அவனோட வைப்பா நினைச்சு பண்ணல.” என்றான்.

துருவனுக்கு இப்போது தலையே சுற்றியது. சரணித்தை அவன் கேள்வியாக பார்த்து நிற்க,” ஹேய் உனக்கு இன்னுமா புரியல, ஜனனி உன்கிட்ட குழந்தைய கொடுத்து நீ திருப்ப இங்க இருந்து போன இரண்டு உசிரு போகும் என்றாளே!”என்று கேட்க, குழந்தையையும் சரணித்தையும் மாறி மாறி பார்த்தவன், “தினதரணி என்னோட குழந்தையா? “ என்று கேட்டான்.

சரணித்தும் சிரித்துக்கொண்டே தலையை ஆட்ட அடுத்த கணம் குழந்தையோடு ஜனனியிடம் ஓடினான் அவன். சரணித்தும் இருபக்கம் தலையாட்டி சிரித்து விட்டு அவன் பின்னாலே சென்றான்.





 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 37

ஜனனியை அனைவரும் சமாதானபடுத்திக் கொண்டிருக்க அவள் எதிர்பார்த்து இருந்தது என்னவோ தன்னவனுடைய சமாதானத்தை தான். அவனுக்கு இன்னுமே ஏதும் புரியவில்லை என்பதை நினைத்து வேறு அவளுக்கு அவன் மேல் கோபம் மூண்டிருந்தது.

அந்த நேரத்தில் குழந்தையை கையில் எந்தியவாறே துருவன் ஜனனியின் அறை கதவை திறந்து உள்ளே வர அவன் பின்னால் சரணித்தும் வந்து நின்றான்.

கனிஷ்டன் துருவனை தாண்டி சரணித்தை பார்த்தவன் புருவம் உயர்த்தி என்ன என்பது போல் கேட்க அவனும் பெருவிரலை காட்டி எல்லாம் ஓகே என்பது போல சைகை செய்தான்.

துருவன் குழந்தையுடன் வந்து ஜனனியின் முன் மண்டியிட்டவன், “ தப்பு பண்ணிட்டேன் ஜனனி. உன்கிட்ட மன்னிப்பு கேக்குற தகுதி கூட எனக்கு இருக்கானு எனக்கு தெரியலடி. ப்ளீஸ் எனக்கு இன்னுமொரு சான்ஸ் கொடு கண்டிப்பா உன்னையும் குழந்தையையும் நல்லா பார்த்துப்பேன். “என்றான்.

ஜனனி எழுந்து கொண்டவள் கண்களை துடைத்துக்கொண்டே, “மாட்டேன்.. உனக்கு இன்னொரு சான்ஸ் எல்லாம் எப்பவுமே கிடையாது. நான் எவ்வளவு கஷ்ட பட்டேன் அதுபோல நீயும் கஷ்டபடனும் “என்று இல்லாத ஒரு கோபத்தை அவன் மீது காட்டிக்கொண்டிருந்தாள்.

ஆம் எப்போதும் அவன் அருகாமையை நாடுபவளுக்கு,அவன் அவள் முன் மண்டியிட்டு கெஞ்சியதிலே அவள் கோபம் எல்லாம் பறந்து போனது. அவன் அவளை கஷ்டபடுத்தி விட்டு சென்ற போதும் கூட, அவள் தனது தாய் தந்தையை இழந்த போது அவன் அருகாமையை தானே நாடியது அவள் உள்ளம். அந்த அளவுக்கு அவன் மீது காதல் பித்து அவளுக்கு. அது பார்ப்பவர்களுக்கு பைத்தியகாரதனமா தெரிந்தாலும் அவளை பொறுத்த வரை அவனே அவள் உலகம்.

துருவனோ அவள் முன்னால் நின்று கொண்டு கெஞ்சிக்கொண்டு இருக்க, இது கனி, கனிஷ்டன், சரணித், கௌரிக்கு தான் சிரிப்பாக இருந்தது. ஆனாலும் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் சிரிப்பை அடக்க படாதபாடு பட்டு போயினர்.

ஒரு கட்டத்தில் ஜனனி துருவனின் பேச்சுக்கு பிடி கொடுக்காமல் நின்றிருக்க, அனைவரையும் நிமிர்ந்து பார்த்து விட்டு சாஷ்டாங்கமாக அவள் காலிலே விழுந்து விட்டான் அவன்.

இப்போது ஜனனிக்கும் அவனை பார்க்க சிரிப்புத்தான் வந்தது. காலை பிடித்து சிறு பிள்ளை போல் கெஞ்சும் அந்த ஆறடி ஆண்மகனை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பை அடக்கி வைக்க முடியும்?

ஜனனி அவளை மறந்து சத்தமாக சிரித்து விட, அதுவரை சிரிப்பை அடக்கி அங்கு நின்றிருந்த அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டனர்.

துருவன் தான் சிரிப்பு சத்தம் கேட்டு நிமிர்ந்து எல்லோரையும் பார்த்தவன், “என்னோட நிலைமை உங்க எல்லாருக்கும் சிரிப்பா இருக்குல? என்ன பார்த்தா காமெடி பீஸ் போலவா தெரியுது. “என்று கேட்டு முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

கௌரியோ, “இதோ வேதாளம் திருப்ப மரம் ஏறுது.”என்று சொல்ல, போன வேகத்தில் திரும்பி வந்த துருவன் ஜனனியை காற்று புககூட இடைவெளி இல்லாத வாறு அணைத்துக்கொண்டு, “ப்ளீஸ்டி என்ன படுத்தாத. நான் பண்ண எல்லா தப்பையும் காலம் முழுக்க உனக்கு சேவை செய்தே கழிக்குறன். ப்ளீஸ் என்ன ஏத்துக்கோ. “என்றான்.

கனியோ,”இதுக்கு மேலே நம்ம இங்க இருந்தா சிவ பூஜைல கரடி மாதிரி நிப்பம். வாங்க போகலாம். “என்று அனைவரையும் அழைத்துக் கொண்டே வெளியேற, கனிஷ்டனின் மனதில் சந்தோஷம் இருந்தாலும் அதை தாண்டி ஒரு குற்ற உணர்வும், சோகமும் வந்து அவனுள் குடிகொண்டது.

சரணித் தனது ஆருயிர் நண்பனின் முக போக்கை அறியாமல் இருப்பானா என்ன? அவனின் தோளில் தடவிக்கொடுத்து, “பார்த்துக்கலாம் மச்சி. “என்றவன் அவனை அழைத்து சென்றான்.

இங்கு அவளை அணைத்து நின்ற துருவனிடம், “திருப்ப விட்டுட்டு போக மாட்டியே? “என்று கேட்டாள் ஜனனி.

துருவனோ அவளில் இருந்து பிரிந்தவன், “இனி நான் உன்கிட்ட இருந்து பிரியனும்னா அது நான் செத்தா மட்டும் தான் நடக்கும். “என்று சொல்ல, அவனின் வாயில் கைவைத்து தடுத்த ஜனனி அவன் கண்களையே பார்த்து நின்றாள்.

துருவன் அவளின் பார்வையை தாங்கிய படியே தனக்கான மன்னிப்பை இதழ் வழி கேட்க ஆரம்பித்திருக்க, அவளும் அதை தாராளமாகவே அவனுக்கு வழங்கி இருந்தாள்.

நீண்ட நெடிய முத்தமது இரண்டு வருட பிரிவை எடுத்துரைத்துக்கொண்டிருக்க, “ம்மா.. “என்று தினதரணியின் அழைக்ப்பிலே இருவரும் தன்னிலை அடைந்தனர்.

ஜனனியோ, “ஐயோ! பாப்பா இங்க இருக்கா. “என்று சொல்லி அவளை தூக்கிக்கொள்ள, துருவனோ தலையை சொறிந்து கொண்டே ஜனனியை சுரண்டினான்.

ஜனனியோ, “பாப்பா இருக்கா. “என்று சொல்ல, “ஆமா அதுதான் பாப்பா இருக்கா அது எப்படி? “என்று கேட்டான்.

ஜனனியோ அவனை கேள்வியாக பார்க்க, “சத்தியமா நியாபகம் இல்லடி! எப்போ இந்த வேலைய பார்த்தேன். “என்று கேட்டான் அவன்.

ஜனனி வெளிப்படையாகவே தலையில் அடித்தவள், “அப்போ எதுவும் நியாபகம் இல்லையா? “என்று கேட்டாள். அவனோ இல்லை என்று சொல்லி இதழ் பிதுக்க, “சுத்தம் “என்றவள் குழந்தையை தூக்கிக் கொண்டே வெளியே சென்றாள்.

அவனும், “ப்ளீஸ் டி சொல்லிட்டு போ, சத்தியமா நியாபகம் இல்லடி. “என்றபடி அவள் பின்னே செல்ல வெளியில் நின்றிருந்த கனிஷ், கனி, சரணித் கண்ணில் இது பட்டது.

உடனே அவனை வம்பிழுக்க சென்ற சரணித், அவனின் தோள்களில் கை போட்டவன், “என்ன கனிஷ் உன் அண்ணனுக் எதோ நியாபகம் இல்லையாமே!என்ன விஷயம்? “ என்று கேட்டான்.

கனிஷ்ஷோ சோகம் அடைத்து இருந்தாலும் அதை எல்லாம் மறைத்துக்கொண்டவன் அவர்களுடன் சேர்ந்து கொள்ள நினைத்து, “அதானே என்ன விஷயம்? “ என்று கேட்டான்.

இது முன்னால் சென்ற ஜனனியின் காதுகளிலும் விழ, திரும்பியவள், ”அவனுக்கு மெமரி லாஸ் ஆயிடிச்சு, குழந்தை எப்படி வந்திச்சுனே சார்க்கு தெரியல! எப்போ இத பண்ணினேன் என்ற டவுட் வேற அவனுக்கு. “ என்று சொல்லி செல்ல, துருவனுக்கு தான் எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

கனியோ, “ஓஹ் அதுவா? சரி வா நாங்க அதை விளக்கமா சொல்றோம். “என்று சொல்ல, “ஒரு அண்ணன் கிட்ட தங்கச்சி சொல்ற விஷயமா இது? “என்று கேட்டான் துருவன்.

கனியோ, “பாருடா “என்று சிரித்துக்கொள்ள, “அது அன்னைக்கு குடிச்சிட்டு வந்து தம்பி தங்கச்சி முன்னாடி அந்த கோலத்துல இருக்குறதுக்கு முதல் யோசிச்சு இருக்கணும் துருவ் அண்ணா.” என்றான் கனிஷ்டன்.

துருவனோ பதறிய படி, “என்ன கோலம்? எப்போ? “ என்று கேட்க, அவன் நெஞ்சை தடவி, “பதறாத துருவ். “என்று சொன்னான் சரணித்.

கனிஷ்டனோ, “ஓஹ் அப்போ உனக்கு உண்மையிலேயே ஒன்னும் நியாபகம் இல்லையா? “என்று கேட்டவன், “அன்னைக்கு குடிச்சுட்டு வந்து நம்ம ரூம்லதான் எல்லாமே நடந்துச்சு, அப்புறம் நான்தான் அலங்கோலமா கிடந்த உன்னை துடைச்சு விட்டு ட்ரெஸ் போட்டு தூங்க வச்சன். “என்றவன், “இதெல்லாம் பண்ணனும் என்று என்னோட தலை எழுத்து. “என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டான்.

துருவனோ, “எனக்கு கிஸ் பண்ணது மட்டும் தானே நியாபகம் இருக்கு. அச்சச்சோ அதுக்கு அப்புறம் இதெல்லாம் நடந்து இருக்கா? “ என்று நினைத்தவன், நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் பொருட்டு, “நீ ஏன் அதெல்லாம் பண்ற அப்படியே விட்டு இருக்க வேண்டியதானே? காலைல எழுந்ததும் எனக்கே தெரிஞ்சிருக்கும். “என்றான்.

கனிஷ்டனோ, “ஆள பாரு!உன்னை அப்படியே போட்டுட்டு பக்கத்துல நான் எப்படி தூங்குறது? “என்று கேட்டவன், “அடுத்த நாள் காலைல கூட உன் முன்னாடி தான் பெட்ஷீட்டை கிளீன் பண்ண சொல்லி ஜனனிய நான் கலாய்ச்சன். “என்றதும் தான் துருவன் அதையும் யோசித்து பார்த்தவன் அன்று ஜனனி வழமைக்கு மாறாக அவனிடம் நெளிந்து குழைந்து கொண்டிருந்ததும் நியாபகம் வந்தது.

அதற்கு மேல் அங்கு நின்றால் அவனை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று நினைத்தவன், அவர்களிடம் இருந்து நழுவி சென்று விட்டான். அப்போதும் அவர்கள் அவனை விட்ட பாடு இல்லை பார்க்கும் இடமெல்லாம் மூவரும் அவனை வெட்க புன்னகை சிந்தவே வைத்துக்கொண்டு இருந்தனர்.

நீண்ட நாட்களின் பின்னர் அனைத்தையும் மறந்து அந்த வீடே சந்தோஷத்தில் மூழ்கி இருக்க, இதில் பங்குபற்றிக் கொண்டே ஒன்றிவிட முடியாமல் தவித்தது என்னவோ கனிஷ்டன் தான்.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 38

அன்றைய நாள் இரவு வேளையதில் சரணித் துருவனிடம் இருந்து குழந்தையை வாங்கியவன், நீண்ட நாள் பிரிவுக்கு பின்னதான கூடலுக்கு ஜனனிக்கும் துருவனுக்கும் வழி வகுத்துக்கொடுத்தான்.

துருவன் ஜனனியின் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொள்ள, அப்போதுதான் குளித்து முடித்து வெளியே வந்தா ஜனனி, “சார் இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.

அவனோ கைகளை கட்டிக்கொண்டே அவளை கிறக்கமாக பார்த்தவன், “பண்றதுக்கு நிறையவே இருக்கு மேடம் பெர்மிஸன் கொடுத்தா பண்ணிடலாம். “என்றான்.

அவளோ, “ஆமா அன்னைக்கு என்கிட்ட பெர்மிஷன் கேட்டுத்தான் எல்லாம் நடந்தது பாரு. “என்றாள் நக்கல் தொனியில்.

துருவன் அவளை நோக்கி வந்து அவள் கட்டியிருந்த டவலில் கைவைத்தவன், “ஹ்ம்ம் அது எதோ போதை மயக்கத்துல நடந்து போச்சு. நீயும் தானே கம்பெனி கொடுத்திருப்ப. சரி இப்போவும் கொடு. அப்போ பார்க்காதது எல்லாம் இப்போ பார்த்திடுவோம். “என்ற படி டவலை அவிழ்த்து விட்டான்.

ஜனனி அவன் கண்களை மட்டும் பார்த்து நிற்க அவன் கண்கள் தான் அவளின் மேல் அத்துமீறியது,இறுதியாக அவள் அடி வயிற்றில் போடப்பட்டிருந்த சீசெரியன் மார்க்கில் படிந்தது.

அவளை கட்டிலில் அமர வைத்து மென்மையாக தழும்பை வருடியவன், “சீசேரியனா? “என்று மென்மையாக கேட்டான்.

அவளும் ஆம் என்று தலையை ஆட்ட, அவன் கண்களில் தான் நீர் சுரந்து போனது.

துருவன் தழும்பில் முத்தம் பதித்தவாறே, “நான் பண்ணின தப்பால என்னோட குழந்தையை முதல்ல கையில எந்துற கொடுப்பணை கூட எனக்கு கிடைக்கல. “என்று சொல்ல அவனை அணைத்துக் கொண்டவளோ, “முடிஞ்சது எத பத்தியும் இனி பேச வேணாம் துருவ். ஆனா எனக்கு நீ ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணனும். “என்றாள்.

துருவனோ, “என்னடி பண்ணனும்? “என்று கேட்க, “பாப்பா நமக்கு பிறந்து இருந்தாலும் கனிஷ்தான் அவளுக்கு எல்லாமே. நான் கூட சில சமயம் அவளை பார்த்துக்க மறந்து போயிருக்கேன். ஆனா அவன் ஒவ்வொரு நிமிஷமும் அவளை பத்தியே யோசிச்சுட்டு இருப்பான். அவ தான் அவனோட உலகம். அதனால... “என்று இழுக்க, “கண்டிப்பா அவன்கிட்ட இருந்து நான் பாப்பாவ விலக்க மாட்டன். அவ என்னதான் என்னோட பொண்ணா இருந்தாலும் அவளோட முதல் உரிமை கனிஷ்க்குத்தான்.”என்று ஜனனி சொல்லவந்ததை சொல்லி முடித்தான் துருவன்.

ஜனனியும் அவனை காதலோடு பார்க்க, “என்னோட தம்பிடி அவன், அவனோட மனசு எனக்கு தெரியாதா? “ என்று கேட்க, “பாப்பாக்காக அவன் தியாகம் பண்ணது எல்லாம் யாரும் பண்ண மாட்டாங்க துருவ். “என்றாள் ஜனனி.

அவனோ, “ஹ்ம்ம்... என்ன பாப்பா என்கிட்ட இருந்து தாவி தாவி கனிஷ்கிட்ட போகும் போதுதான், எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. அப்பாக்கு உரிய எந்த கடமையும் நான் அவளுக்கு செய்யலனு. “என்று சொல்லி தலையை தொங்கப்போட்டான்.

ஜனனியோ மெலிதாக சிரித்துக் கொண்டே அவன் தலையை தன்பக்கம் நிமிர்த்தியவள், “இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இப்போவே ப்ரோஸஸ் பண்ணி இன்னுமொரு பாப்பாக்கு ரெடி பண்ணுவம். அப்போ உன்னோட கில்டி பீலிங் எல்லாமே போயிடும். “என்றாள்.

துருவனுக்கு தான் தன்னவளை நினைத்து பெருமிதம் எழுந்தது. அவன் அவளை கலங்கடித்து சென்ற போதும், அவனுக்காகவே, அவனை நினைத்தே வாழ்ந்து அவன் குழந்தையும் பெற்று இருக்கிறாள். இப்போது அவன் மன்னிப்பு வேண்டிய கணமே அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு அவனின் காயங்களை ஆற்றவும் காத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த பெண்மையை என்னவென்று சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவளை இனி தாங்கிப் பிடிக்கவே எண்ணினான் அவன்.

ஜனனியோ அவளை மனதினுள் மெச்சிக் கொண்டிருந்த ஆண்மகன் அவனின் இதழை தன்வசம் ஆக்கியவள், அவனுடன் சேர்ந்தே அடுத்த கட்டத்திற்கும் நகர்ந்து இருந்தாள்.

அந்த இரவு அவர்கள் வாழ்க்கையின் மறுஆரம்பமாக அமைத்து போக ஈருடல் ஒருயிராகி சங்கமித்த தருணம், வெளியில் பேல்கனியில் நின்ற ஒருவன் தன் வாழ்வு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று புரியாமல் வானத்தையே பார்த்து நின்றிருந்தான்.

அடுத்த நாள் காலை முதலில் கண் விழித்த துருவன், அவன் மீது தூங்கிக்கொண்டு இருந்த ஜனனியின் நெற்றியில் முத்தம் பதித்தவன், அவளை தலையணையில் படுக்க வைத்து , போர்வையால் அவளை மறைத்து விட்டு தன்னுடைய உடைகளை அணிந்தபடி வெளியே வந்தான்.

அங்கு பேல்கனியில் சரணித்தும், கனிஷ்டனும் நின்றிருக்க அவர்கள் அருகில் சென்று நின்றவனுக்கு என்ன பேசுவது என்றுதான் தெரியவில்லை.

கனிஷ்டனிடமும், சரணித்திடமும் சொல்ல வேண்டிய நன்றிகளும் யாசிக்க வேண்டிய மன்னிப்புக்களும் கணக்கின்றி நீண்டிருக்க என்னதான் பேசுவான் அவனும்.

அவனது தயக்கம் அந்த இருவருக்கும் புரிந்து போக, “அடுத்து என்னடா பண்ண போற “என்று கேட்டான் கனிஷ்.

துருவனும், “ தெரியல டா.. இனி ஏதாச்சும் லேக்சரர் ஜோப்க்கு அப்ளை பண்ணனும். பார்க்கலாம். “என்று சொல்ல, “நீ ஏன் நம்ம கம்பெனிய எடுத்து நடத்த கூடாது? “என்று கேட்டான் கனிஷ்.

துருவனோ கனிஷின் தோளில் தட்டியவன், “அது உன்னோட பொறுப்புடா, அப்போ சொன்னதுதான் இப்பவும் சொல்றேன். கம்பெனி விஷயத்துல என்ன ஹெல்ப் கேட்டாலும் நான் பண்ணுவ. ஆனா அதை டேக் ஓவர் பண்ண சொல்லி மட்டும் என்கிட்ட கேக்காத. அது நீயும் கனியும் சேர்ந்து நிர்வாகம் பண்ண வேண்டிய இடம். “என்றான்.

கனிஷ்ஷோ, “இரண்டு பேரும் இதையே சொல்றீங்க. “என்று சொல்லி சரணித்தையும் பார்க்க, துருவனும் அதை புரிந்து கொண்டவனுக்கு அவனை தவறாக நினைத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு வேறு அழுத்தியது.

அதன் பின் அங்கு அமைதியே நிலவ, எல்லா பிரிவுகளையும் சேர்க்க வார்த்தை ஒன்றும் அவசியம் இல்லையே செயலே அந்த பிரிவை உடைத்து சேர்த்துவிடும் அல்லவா!

அது போல் தான் அங்கு சரணித் துருவனுக்கும் கனிஷ்டனுக்கும் இடையில் வந்து நின்றவன் அவர்கள் பள்ளி நாட்களில் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு நின்று அனைவரையும் தங்கள் பக்கம் தலைசாய்க்க வைப்பது போல, அன்றும் இருவர் தோளிலும் கை போட்டு அணைத்துக்கொள்ள, துருவனும் கனிஷ்டனும் மென்புன்னகையுடனே அவன் செயலை ஏற்க, அங்கு பழைய படி அரட்டைக்கும் கலகலப்புக்கும் பஞ்சம் இல்லாமல் போனது
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 39

இப்படி ஒரு நாளில் கனிஷ்டன் தினதரணியை வைத்து கொஞ்சிக்கொண்டு இருக்க, அங்கு வந்து அவனுடனே அமர்ந்த துருவன், “என்ன அம்மா கனிஷ்க்கு பொண்ணு பார்த்திடலாமா? “என்று கேட்டான்.

கௌரியின் முகமோ சுருங்கி போக, கனிஷ்டனிடம் அதுவரை இருந்த சந்தோஷம் மறைந்து போனது.

கனியோ, “துருவ் கொஞ்சம் சும்மா இரு.”என்று சொல்ல, சரணித்தும், ஜனனியும் தான் கனிஷ்டனை பாவமாக பார்த்து நின்றனர்.

எல்லோர் முகத்தையும் பார்த்த துருவ், “ஏன் எல்லாரும் இப்போ முகத்தை தூக்கி வச்சிருக்கீங்க?” என்று கேட்க, கனிஷ்டன் எழுந்து குழந்தையை துருவனிடம் கொடுத்தவன் வீட்டில் இருந்து அவனது பைக்கை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

துருவனோ, “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு சார் முகத்தை தூக்கி வச்சுட்டு போறார்? “ என்று கேட்க, “நீ இங்க இருந்து போனதால மூணு பேரோட வாழ்கை கேள்விகுறியாச்சு என்று சொன்னோமே அதுல ஒன்னு ஜனனி அடுத்த இரண்டு பேரும் கனிஷும் ஹரிணியும் தான். “என்றார் கௌரி.

துருவனோ ஜனனியை பார்க்க அவளும் ஆமாம் என்றவாறு தலையை ஆட்டினாள்.

துருவன், “கனிஷும் ஹரிணியும் லவ் பண்ணாங்களா? “என்று கேட்க,” லவ் பண்ணாங்களா என்று கேட்டா அதுக்கு பதில் இல்ல துருவ்.ஆனா அவங்க லவ்வ எக்ஸ்பிரஸ் பண்ண கடைசி வரைக்கும் வாய்ப்பே கிடைக்கல. “என்றான் சரணித்.

ஆம் ஹரிணிக்கு தான் கனிஷ்டன் மீது முதலில் காதல் மலர்ந்தது. அதுவும் அவர்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி சென்ற நாட்களில்,அதுவரை ஒன்றாக அவளுடன் பயணித்த ஒருவன் தற்போது விலகி இருப்பது அவளுக்குள் ஒரு ஏக்கத்தை உண்டுபண்ண அது சில மாதங்களில் காதலாகவும் மலர்ந்தது.

ஜனனியிடம் அடிக்கடி அவனை பற்றி விசாரிப்பவள், வீட்டில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைபடங்களையும் வாங்கி பார்த்து அதில் கனிஷ்டன் தனியாக இருக்கும் புகைப்படம் சிக்கினால் அதை ஜனனிக்கு தெரியாமலே தன்னுடைய போனுக்கு அனுப்பி விடுவாள்.

இதற்க்கிடையில் எப்போதாவது கனிஷ்டனை சந்திக்க நேர்ந்தால், அவனுடன் மரியாதையாகவே பேசுபவள், அவனின் அருகில் கூட சென்று அமர்ந்து கொள்ள மாட்டாள்.

கனிஷ்டனோ இருவருக்கும் விழுந்த இடைவெளியால் அவள் அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று நினைத்தவன் அதை பெரிதுபடுத்தவும் இல்லை.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் தான் துருவனும் அங்கிருந்து சென்றிருக்க, கனிஷ்டனின் தோளில் அனைத்து பொறுப்புக்களும் வந்து அமர்ந்தது.

துருவனை தேடி களைத்து இனி அவனை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தவன் தான், ஜனனியின் வாழ்க்கையை காக்கும் பொருட்டு அவளை திருமணம் செய்வதாக சொல்லியிருந்தான்.

ஆனால் அவன் மனம் சற்றும் அதை ஏற்கவில்லை.ஆனாலும் அவளுக்காக தன்னை தானே சமாதானம் செய்து கொண்டவன், ஜனனியிடம் இதை பற்றி பேச சென்றான்.

அங்கு துருவன் விட்டு சென்றதில் அழுது வடித்து கொண்டிருந்த ஜனனிக்கு ஹரிணி ஆறுதலாக அமர்ந்திருக்க அவளை எல்லாம் கண்டுகொள்ளாத கனிஷ்டன், “ஜனனி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். “என்றான்.

ஜனனியோ அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், “எனக்காக பாவபட்டு வாழ்கை பிச்சை போடுறியா? “என்றுதான் கேட்டாள்.

கனிஷ்டன் அடுத்த வார்த்தை பேசுவதற்கு முதலே, கௌரி, “ஐயோ!” என்று அலறும் சத்தம் கேட்டது. அதை கேட்டு ஓடிச்சென்ற அனைவரும் பார்த்தது என்னவோ சுந்தரம் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து இருந்ததை தான்.

உடனே கனிஷ்டன் மற்றும் சரணித் அவரை தூக்கிக் கொண்டு வைத்தியசாலை சென்றிருக்க அவரோ அபாய கட்டத்தில் இருப்பதாக வைத்தியசாலையில் அறிவிக்க பட்டது.

இதனிடையில் நண்பியின் வாழ்கை கேள்விக்குறியாய் நிற்பது ஒரு புறம் இருக்க தான் காதலிப்பவன் அவளுக்கு வாழ்கை கொடுக்கிறேன் என்று வந்து நின்றால் ஹரிணியாலும் என்ன செய்ய முடியும் மொத்தமாக உடைந்து போனாள் அவள்.

தன்னுடைய காதலை மொத்தமாக மூட்டை கட்டி வைத்து விட்டு ஜனனிக்காக அடிக்கடி அவள் வீட்டுக்கு ஹரிணி வந்து போனாலும், கனிஷ் அங்கு உடைந்து போய் நிற்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சிறிது நாட்கள் கழித்து சுந்தரமோ, தன்னுடைய பெண்ணின் வாழ்க்கைதான் உசல்ஆடிக்கொண்டிருக்கிறது, தனது இன்னொரு மகளான கனியின் திருமணத்தையாவது கண்ணால் பார்த்து விட வேண்டும் என்ற இறுதி ஆசையை சொல்ல, அதை மறுக்க முடியாமல் அனைவரும் அவரின் விருப்பை ஏற்று, எளிமையாக ஒரு கோவிலில் கூடியிருக்க சரணித் கனியின் கழுத்தில் மஞ்சள் நாண் ஏற்றி அவளை தன்னவள் ஆக்கி இருந்தான்.

எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம் அவசர திருமணமாக அமைந்தது எல்லோருக்கும் வருத்தமாக இருந்தாலும், கனி அவினேஷின் வலையில் சிக்காமல் அவளின் விருப்பப்படி சரணித்தின் கை பற்றியது அவர்களின் மனதிற்கு இதமாகவே இருந்தது.

இந்த திருமணத்தில் நின்று கொண்டு கனிஷ்டனையே பார்த்து நொந்து கொண்டிருந்தது என்னவோ ஹரிணி தான். ஆனால் இதை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும் நிலையில் கனிஷ்டன் தான் இருக்கவில்லை.

திருமணம் முடிந்த சில நாட்களில் சுந்தரம் இறப்பை சந்தித்து இருக்க அந்த வீடே சோகத்தில் மூழ்கி போனது.

அதே நேரம் அழுது அழுது உடல் சோர்வாக இருந்த ஜனனி எழுந்து கொள்ள முயற்சிக்க, அது அவளால் முடியாமல் பக்கத்தில் இருந்த ஹரிணி மீதே மயங்கி சாய்ந்தாள்.

சரணித்தான் அவள் பக்கம் இருந்தவன் தண்ணீர் தெளித்து எழுப்ப, கனிஷ்டனும் அவ்விடம் வந்தவன் அவள் இருக்கும் நிலையை பார்த்து வைத்தியசாலை அழைத்து சென்றான்.

அங்கு அவள் வயிற்றில் கருவை சுமந்து இருப்பதாக சொல்லப்பட யாருக்கு அது சந்தோஷமோ இல்லையோ கனிஷ்டன் வானுக்கும் பூமிக்கும் துள்ளினான்.

தன் அண்ணனின் குழந்தை உலகத்தில் காலடி எடுத்து வைக்க போகிறது என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு. ஆனால் அவர்கள் வீட்டிலோ இந்த செய்தி இடியாகவே அமைந்தது.

அனைவரும் சமூகம் குறித்து கவலை கொள்ள, கனிஷ்டன் இடையில் குறுக்கிட்டவன், “ஜனனி இனி என்னோட பொறுப்பு. அவளுக்கு என்ன வேணுமோ இனி நான் அதை பார்த்துக்கிறேன். என் அண்ணனோட குழந்தை தானே! அந்த குழந்தைக்கு இனிஷல் கொடுக்கவும் நான் தயார். “என்று அனைவர் வாயையும் அடைத்தவன், அன்றில் இருந்து ஜனனிக்கு தாயாகி போனான்.

ஹரிணிக்குத்தான் இதற்கு மேலும் அங்கு இருந்து அவளையே காயபடுத்திக்கொள்ள வேண்டுமா என்ற எண்ணம் வந்தது.

இருந்தும் கனிஷ்டனை பிரிந்து செல்வதற்கும், அவள் காதலை அவனிடத்தில் வெளிப்படுத்தாமல் செல்வதற்கும் மனம் கனத்து போக, அவனுக்காக ஒரு கடிதம் எழுதியவள் அதை கொண்டு கனிஷ்டனின் அறையில் வைத்து விட்டு , ஜனனியிடம் வேலைக்காக வெளியூர் செல்வதாக சொல்லி அவளை அணைத்து விட்டு சென்றாள்.

அன்றுதான் ஹரிணியை அவர்கள் பார்த்த கடைசி நாள்
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 40

அவள் கடிதம் வைத்து சென்ற அன்றைய நாளில் தினகரனும் குடும்ப எதிர்காலம் பற்றி அதிக யோசனையில் இருந்தவர், நெஞ்சை பிடித்துக்கொண்டு அவர் அருகில் இருந்த கனியின் மடியிலே உயிரை விட்டார்.

மீண்டும் அடுத்த சோகம் அவர்களை ஆட்கொண்டு விட, கனிஷ்டன் அவன் அறைக்கு செல்வதே குளிப்பதற்கும், உடை மாற்றவும் என்றாகி போக எங்கனம் அவன் அவனுக்காக அவனவள் எழுதிய மடலை வாசிப்பது.

அடுத்தடுத்த நாட்கள் ஜனனியை கவனித்து கொள்வதிலும் வீட்டாரை தேற்றுவதிலும் சென்றுகொண்டிருக்க, ஏதேர்ச்சியாக கனிஷ் அறைக்குள் ஜனனியின் ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுப்பதற்காக சென்ற சரணித்தின் கண்களில் ஹரிணியின் காதல் கடிதம் மாட்டிக்கொண்டது.

அதில், என்னவனுக்காக.. என்று மட்டும் இருக்க அதை புருவம் சுருக்கி பார்த்தவன், அதையும் கையில் எடுத்துக்கொண்டு, தான் தேடி வந்த ரிப்போர்ட்டையும் எடுத்து ஜனனியின் அறைக்கு சென்றான்.

அங்கு ஜனனி கட்டிலில் அமர்ந்து இருக்க, கௌரி அவளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தார்.

அவர்களையே பார்த்து கனிஷ்டன், கனிக்கா கூட அமர்ந்து இருந்தனர். ரிப்போர்டை கனிஷ் கையில் கொடுத்த சரணித், “இது உன்னோட ட்ரோயர்ல இருந்துச்சுடா.” என்று சொல்லி மடலை அவனிடம் நீட்ட அவனும் அதில் இருந்ததை புருவம் சுருக்கி பார்த்தான்.

பக்கத்தில் இருந்த கனியோ, “என்னடா இது எதோ லவ் லெட்டர் போல இருக்கே!” என்று சொல்ல கனிஷ்டனுக்கும் அதே யோசனை தான். ஆனால் அவன் தான் யாரையும் காதலிக்கவில்லையே!

அதனாலே, “இது எனக்காக இருக்க வாய்ப்பே இல்லை. “என்றவன் அதை கனியிடம் கொடுத்து விட்டான்.

அவளோ ஆர்வ மிகுதியில் அதை கிழிக்க அதில் இருந்து சிதறி விழுந்தது என்னவோ அவர்கள் நண்பர்களாக எடுத்துக்கொண்ட புகைபடங்களில் இருந்து தனியாக வெட்டி எடுக்கப்பட்டிருந்த கனிஷ்டன் மற்றும் ஹரிணியின் புகை படங்களே.

அதை பார்த்து அனைவருமே விழி விரித்துக்கொள்ள, கனிஷ்டன் அதில் ஒரு புகை படத்தை எடுத்து பார்த்தவன், “ஹரிணி! யார் இந்த வேலைய பண்ணது. “என்றுதான் கேட்டான் நடந்தது புரியாது.

கனியோ அடுத்ததாக அந்த கடதாசியை பிரித்தவள் படிக்க போக, அவளை தடுத்த சரணித்,”அது கனிஷ்க்காக வந்தது அவனே படிக்கட்டும். “என்றான். கனியும் அதை கனிஷ்டனிடம் கொடுத்து விட அதை படித்த அவனே விக்கித்து நின்றான்.

அதில் இருந்த வரிகள் அப்படி பட்டவை...

“ஹாய் கனிஷ் நான் ஹரிணி.நான் இதுல சொல்லி இருக்குற எல்லாமே ஒரு நாள் நான் உங்கள நேருக்கு நேரா உங்க கண்ணை பார்த்து சொல்லணும் என்று நினைச்ச விஷயங்கள். ஆனால் இரண்டு பேரோட சூழ்நிலையும் இப்போ அதற்கு சாதகமா இல்ல. உங்க பாதை வேற என்னோட பாதை வேற என்று ஆயிடிச்சு. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்.

ஐயம் பால் இன் லவ் வித் யூ கனிஷ். எப்போ எப்படி என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஒருத்தங்களை நமக்கு பிடிச்சு போக காரணம் எதுவும் இருக்காது ரைட்! அதே மன நிலைதான் எனக்கும்.

நீங்க மனசுல என்ன பத்தி என்ன நினைக்குறீங்க என்று எனக்கு எதுவுமே தெரியாது. ஆனாலும் நான் உங்கள லவ் பண்றன், எப்பவும் பண்ணிக்கிட்டு தான் இருப்பேன்.

அடுத்து நான் இப்போ இத சொல்றதுக்கு ரிசன் என்னோட மனசுல இருந்தத சொல்லிட்டு போறேன் என்ற திருப்தியாவது எனக்கு இருக்கும் என்றதால தான். மற்றப்படி வேற எந்த நோக்கமும் இல்லை. ஜனனிய கூட இருந்து பாத்துக்க எனக்கும் தான் ஆசை. ஆனால் உங்க முன்னாடி என்னோட பீலிங்ஸ்ஸ மறைச்சிட்டு ரொம்ப நாளைக்கு என்னால நடிக்க முடியாது அதுனாலதான் நான் போறேன். ஜனனிய நல்லா பார்த்துக்கோங்க அவள் பாவம். “

என்றவாறு அந்த கடிதம் முற்றுப்பெற்று இருந்தது.

கனிஷ்டனோ தலையில் கை வைத்து அமர்ந்தவனுக்கு ஹரிணி மேல் அந்த நிமிடம் காதல் இல்லை என்றாலும், அவனை நினைத்தும் ஓர் உயிர் ஏங்கி இருக்கிறது என்ற எண்ணம் அவனை எதோ செய்தது.

அது மட்டுமா? அவன்தான் வேணும் என்று அடம் பிடிக்காமல் அவனுடைய முடிவுக்கும் மதிப்பழித்து, அவன் சூழ்நிலையையும் புரிந்து கொண்டு, அதே சமயம் தனது நண்பிக்காகவும் அவள் யோசித்து அவனை விட்டு ஒதுங்கி இருக்கிறாள் அல்லவா அவள். அப்படி இருக்கும் பெண்ணை யாருக்கு தான் பிடிக்காது!

வீட்டில் உள்ள மற்றவரும் அந்த கடிதத்தை படித்து விடயம் அறிந்து கொள்ள, ஜனனிக்குத்தான் தான் இருவருடைய வாழ்க்கையையும் சிதைத்து விட்டோமோ என்கின்ற உணர்வு. ஆனால் அவளாலும் அந்த சமயத்தில் ஹரிணியை தேடி அலைய முடியவில்லை.

ஆனால் சரணித் தன்னால் முடிந்தவரை ஹரிணியை தேடி அலைந்தவனுக்கு கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது.

கனிஷ்டன் இதை எல்லாம் மனதில் ஏற்றவில்லை என்று வெளிபடுத்திக்கொண்டாலும் கூட, அவனின் செயல்கள் உணர்த்தி விடும் அவன் மனம் படும் பாட்டை.

காலமும் கடந்து விட அவன் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தாள் ஹரிணி. ஆனாலும் அவனும் அவளை எங்குதான் சென்று தேடுவான்? அவள் காதலை சொல்லாமல் சென்றிருந்தால் கூட அவன் தன் வேலையை பார்த்து சென்றிருப்பான்.

ஆனால் அவள் அவளுடைய காதலையும் வெளிப்படுத்தி அவன் மனதையும் தொட்டு விட்டு சிட்டாக பறந்து இருக்க, அவளுக்கு இடைவெளியால் உருவான காதல் இவனுக்கு விதையாகி கிளை விட்டு வேருன்றி இருந்தது.

இப்படியான நேரத்திலே வாணியும் உடல் நல குறைவால் விண்லோகம் தொட்டிருக்க, அது முடித்து சில நாட்களிலே துருவனின் குழந்தையும் அங்கு பிறந்து அவர்கள் அனைவரின் சோகத்தையும் முழ்கடித்து சந்தோஷ காற்றை அவர்களிடதே பரப்பியது.

கனிஷ்டணும் குழந்தையுடனே காலத்தை செலவிட்டு வந்ததால் ஹரிணி பற்றி நினைப்பது சற்று குறைந்திருந்தாலும் முற்றாக அவள் நினைவை அவனால் ஒதுக்கி வைக்க முடியவில்லை.

யாருக்கும் தெரியாமல் அவளை எண்ணி அவன் கண்ணீர் விட்ட நாட்களை அவன் தலையணை மட்டுமே அறியும். அந்தளவுக்கு அவன் மனம் ஹரிணியை நினைத்துக்கொண்டிருந்தாலும், அவன் எடுத்துக்கொண்ட கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்
.
 
Status
Not open for further replies.
Top