ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 45

அடுத்து வந்த நாட்கள் எல்லாமே அவர்களுக்கு இனிய நாட்களாகவே அமைந்திருக்க கனியும் தனது ஒன்பதாவது மாதத்தில் இருந்தாள்.

கௌரி அனைவருடனும் கலந்து பேசி விட்டு அவளுக்கான வளைகாப்பையும் ஏற்பாடு செய்திருக்க, அந்த வீடே பாட்டு, ஆட்டம் என விழா கோலம் பூண்டிருந்தது.

கனி அவளது அறையில் கண்ணாடியின் முன் நின்று கொண்டு தனது மெடிட்ட வயிற்றை தடவிக்கொண்டிருக்க, அங்கு வந்த சரணித்தும் அவளை பின் பக்கம் இருந்து கட்டிக்கொண்டு, “ பாக்க அப்படியே அம்மன் சிலை போல இருக்க “என்றவன், அவள் கழுத்தில் முகம் பதித்து முத்தம் இட்டான்.

கனியோ, “இப்போ இப்படி காதல் வசனம் எல்லாம் பேசிட்டு அப்புறம் குழந்தை வந்ததும் என்ன கண்டுக்காம இருந்த, மவனே உனக்கு சங்குதான்.”என்று சொல்ல, “முதல்ல எனக்கு நீதான் அப்புறம் தான் குழந்தை. “என்று சொல்லி சிரித்தான் அவன்.

கனியும் அவனை கண்ணாடி வழியே பார்த்து நிற்க்க, “கதவை அடைச்சிட்டு ரொமான்ஸ் பண்ணினா நல்லாருக்கும். வயசு புள்ளைகள் இரண்டு பேர் இருக்குற வீடு. “என்று சொல்லி அங்கே வந்தான் கனிஷ்டன்.

சரணித்தும் கனியில் இருந்து விலகி அவளை தன் கைவளைவுக்குள் வைத்து நின்றவன், “யாரு நீயும் ஹரிணியும் வயசு புள்ளைகளா? நாங்க பாக்கலனு நினைச்சு அப்பப்போ அவள்கிட்ட நீ சில்மிஷம் பண்றது எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா, என்ன பண்றது சின்ஞ்சிறுசுக என்று நாங்க பார்த்தும் பார்க்காத மாதிரி மெயின்டைன் பண்ணிட்டு இருக்கம். “ என்றான்.

கனிஷ்டனோ தலையை சொறிந்தவன், “சரி சரி லவ்கிக வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே!”என்று சொன்னவன், “உங்கள கீழ வர சொன்னாங்க. “என்றான்.

சரணித்தும் கனியை அழைத்து சென்றவன், ஜனனி கொடுத்த மாலையை அவளுக்கு அணிவித்து அவளை அந்த சிம்மாசன இருக்கையில் அமர வைத்தவன், அவளுக்கு பொட்டிட்டு, மஞ்சள் பூசி, வளையல் அணிவித்து விட்டான்.

அவனை அடுத்து துருவன் வந்து சடங்கை முடித்தவன் அவள் நெற்றியில் முத்தம் பதிக்க, “அண்ணா நீ என்னோட கல்யாணத்துக்கு வச்சுட்டு போன கிப்ட்ட நான் இன்னும் போட்டுக்கல, இப்போ நீயே போட்டு விடுறியா? “என்று கேட்ட கனி அவள் கையில் வைத்திருந்த இரு பெட்டிகளையும் அவனிடம் கொடுத்தாள்.

துருவனோ புன்னகையுடனே அதை வாங்கிக்கொண்டவன், அதில் இருந்த மாலையை எடுத்து கனிக்கு அணிவித்து, கைசங்கிலியை எடுத்து சரணித்துக்கு அணிவித்தவன் அவனை அணைத்து விடுவித்தான்.

அடுத்து அடுத்து அனைவரும் அவளுக்குரிய சடங்கை முடித்து, ஒன்றாக அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, கனிக்கு டெலிவரி பெயின் வர ஆரம்பித்து இருந்தது.

சிறிது நேரம் அவள் சமாளித்து இருந்தாலும் பின்னர் வலியால் அலற தொடங்கி விட்டாள். அவளை தூக்கி கொண்டு சரணித் முன் செல்ல துருவன் சென்று காரை ஸ்டார்ட் செய்தவன் ஹாஸ்பிட்டல் விரைந்து இருந்தான்.

மற்றவர்களோ அவளுக்கும் குழந்தைக்கும் தேவையானதை எடுத்துக் கொண்டு கனிஷ்டனுடன் ஹாஸ்ப்பிட்டல் வந்து சில நிமிடங்களில் தன் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு வந்தான் சரணித்.

அவர்கள் வீட்டின் இரண்டாவது வாரிசு அது. அனைவரும் மாறி மாறி குழந்தையை வாங்கியவர்கள் கொண்டாடி தீர்த்து இருந்தனர்.

கனி அப்போதுதான் மயக்கத்தில் இருந்து கண் விழிக்க அவளின் நெற்றியில் முத்தம் பதித்த சரணித் குழந்தையையும் அவளிடம் கொடுத்தான்.

அவளும் குழந்தையுடன் சிறிது நேரம் இருந்தவள், அவள் அருகே தினதரணியை தூக்கிக் கொண்டு நின்றிருந்த கனிஷ்டனை பார்த்து, “என்னடா அடுத்த பாப்பாவ வளர்க்க ரெடியா இருக்கியா? “என்று கேட்டாள்.

கனிஷ்டன் அவளது பிஞ்சு குழந்தையை பார்த்ததில் இருந்தே ஆனந்த கண்ணீரில் நின்றிருந்தவன், “இப்போவே குடு தூக்கிட்டு போய் நானே வளத்துக்குறேன் “என்றான்.

கௌரியோ, “ஆளுக்கு ஆள் புள்ளைய பெத்து அவன்கிட்ட கொடுத்துட்டு போனா ஹரிணி கோவிச்சுக்க போறா. “என்று சொல்ல, “நான் எதுக்கு கோவிக்க போறேன். நானும் சேர்ந்தே வளர்த்து கொடுப்பன். இன்னும் எத்தனை பிள்ளை வேணா பெத்து போடுங்க. “என்றாள் ஹரிணி.

துருவனோ, “நாங்க பெத்து போடுறது இருக்கட்டும், நீங்க எப்போ பெத்து போட போறீங்க? “என்று கேட்க, “ஆஹ் கல்யாணம் பண்ணி வச்சீங்கனா அடுத்த பத்து மாசத்துல பெத்து கையில கொடுத்துடுறேன். “என்ற ஹரிணி கனிஷ்டனை பார்க்க அவன் தன்னவளை பார்த்து கண்ணடித்துக் கொண்டான்.

எபிலாக்..

துருவனோ, “ஜனனி சீக்கிரம் ரெடியாகு, மண்டபத்துக்கு போக லேட் ஆகுது. “என்று சொல்ல, “இருடா பாப்பாக்கு தேவையான திங்ஸ் எடுத்துட்டு இருக்கன். “என்று சொல்ல அவனும் வந்து அவளுக்கு உதவியவன் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கனிஷ் மற்றும் ஹரிணியின் திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.

அங்கு நின்ற கனிஷோ, “எத்தனை தடவைடா போன் பண்றது? “ என்று கேட்க “இவ லேட் பண்ணிட்டாடா. “என்று ஜனனியை கை காட்டினான் துருவன்.

சரணித்தோ, “இவ திருந்தவே மாட்டா. எப்போ பாரு எல்லாத்துக்கும் லேட்டாவே வாறது. “என்று சொல்ல, துருவனை முறைத்த ஜனனி, “இவன் பொய் சொல்றான் இவனால தான் லேட். இவன்தான் வீட்டுக்கு போனதும் என்ன ரெடியாக விடாம ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தான். அதான் திருப்ப மண்டபத்துக்கு வர லேட். “என்றவள் உள்ளே சென்றாள்.

கனிஷ்டனோ, “ஜனனி பாப்பா ஹரிணிகூட ரூம்ல இருக்கா. போய் ட்ரெஸ் மாத்தி விட்டுடு. “என்றவன், “தம்பிக்கு கல்யாணத்தை வச்சுட்டு உனக்கு என்னடா ரொமான்ஸ்? “ என்று துருவனின் வயிற்றில் குத்த, “அப்படியும் வாறதான். “என்று சொல்லி சிரித்த துருவன், சரணித் மற்றும் கனிஷ்டனை அழைத்துக்கொண்டு வேலைகளை பார்க்க சென்றான்.

அடுத்த நாள் காலையில் மண மேடையில் கனிஷ்டன் அமர்ந்து ஐயர் சொன்ன மந்திரங்களை சொல்லிக்கொண்டு இருக்க, சிவப்பு நிற புடவையில் தேவதையாக அங்கு ஜனனி மற்றும் கனியால் அழைத்து வர பட்டாள் ஹரிணி.

கனிஷ்டன் கண்வெட்டாமல் அவளையே பார்த்து அவள் அழகில் சொக்கி நிற்க, “ ஜொள்ளு ஊத்துது துடைச்சிக்கோ. “என்று அவனின் காதின் அருகே வந்து சொன்னான் சரணித்.

ஹரிணியும் மணமேடையில் வந்து அமர்ந்து கொள்ள, ஜனனி மற்றும் கனியும் அவரவர் துணையோடு நின்றிருக்க, மூட நம்பிக்கைகள், சம்ராதயங்கள் என அனைத்தும் கடந்து கௌரியையும் அந்த மணமேடையின் மத்தியிலே இருக்க வைத்திருந்தனர் அவரின் செல்வங்கள்.

துருவனோ அவனது குழந்தையை மணமேடையில் இருந்த கனிஷ்டனின் மடியில் வைத்துவன், “அவளோட இன்னொரு அப்பாவோட கல்யாணத்தையும் அவ பார்க்கட்டும். “என்று சொல்லி விலகி கொண்டான்.

கனிஷ், தினதரணியின் கன்னத்தில் முத்தமிட்டவன், அவளை வைத்துக்கொண்டே மங்கள வாத்தியங்கள் முழங்க ஹரிணியின் கழுத்தில் மஞ்சள் கயிறேற்றி அவனின் சரிபாதியாக அவளை ஏற்றுக்கொண்டான்.

அனைவர் முகத்திலும் சந்தோஷம் மட்டுமே குடி கொண்டிருக்க, அவரவர் வாழ்க்கையை சிறப்பாக வாழ தொடங்கியிருந்தனர் அவர்கள்.


 
Status
Not open for further replies.
Top