ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 31

கனிஷ்டன் ஜனனிக்கு சாப்பாடு எடுப்பதற்காக வந்தவன், துருவன் அங்கு நின்று சரணித் மற்றும் கனியின் திருமண புகைபடத்தை பார்த்து நிற்பதை கண்டு கொண்டான்.

தலையை இரு பக்கமும் ஆட்டியவன், “இவன் இன்னும் என்ன என்ன பஞ்சாயத்தை கூட்ட போறானோ தெரியலையே!” என்று நினைத்த படி நகர அவனை கண்ட துருவனோ, “என்னடா நடக்குது இங்க? எனக்கு எதுவுமே புரியல. இவனுக்கும் கனிக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு, அப்போ அவினேஷ்? கனி எப்படி இதுக்கு சம்மதிச்சா? எல்லாத்துக்கும் மேலே அப்பா, அத்தை, மாமா எல்லாரும் நல்லாத்தானே இருந்தாங்க அவங்க எப்படி திடீர்னு இறந்தாங்க? “ என்று பல கேள்விகளை கனிஷ்டனிடம் கேட்டான்.

கனிஷ்டனோ, “இரண்டு வருஷம் எங்கள பத்தி நீ யோசிக்கவே இல்லையே! இப்போ என்ன இவ்வளவு அக்கறை உனக்கு? ஆனா ஒண்டு துருவ், நம்மளோட அப்பா இறந்து போறதுக்கும், ஜனனி இன்னைக்கு அவங்க அப்பா அம்மாவை இழந்துட்டு நிக்குறதுக்கும் ஒரே காரணம் நீ மட்டும் தான். ஏதோ பாப்பா வந்ததுக்கு பிறகுதான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தோம். இப்போ மறுபடியும் நீ வந்து அந்த சந்தோஷத்தை எல்லாம் கலச்சு விட்டுடாத. “என்றவன் சமையல் அறைக்குள் சென்று ஜனனிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனான்.

துருவனுக்கு கனிஷ்டனின் பேச்சு மிகுந்த மனவேதனையை கொடுத்தது,ஒரு காலத்தில் அவர்களுக்காகவே வாழ்ந்தவன் அவன், அவன் பார்த்து பார்த்து வளர்த்த கனிஷ்டன் அவனிடத்தில் வேண்டாவெறுப்பாக பேசிச் செல்வதை துருவனால் சற்றும் ஏற்க முடியவில்லை.

இடைப்பட்ட காலத்தில் அங்கு என்னதான் நடந்தது என்று அறிந்து கொள்ள அவன் மனம் அவா கொண்டாலும், அங்கு யாரும் அதை அவனுக்கு தெரிய படுத்தும் மனநிலையில் இல்லை. ஆனாலும் யாரும் அவனை வீட்டை விட்டு வெளியேறும் படியும் சொல்லவில்லை.

கௌரிக்கு என்னதான் அவர் மகன் மேல் கோபம் இருந்தாலும் அவனை பட்டினி போட விரும்பாதவர், சமைத்து அவனுக்கு உணவு எடுத்து வைத்து , “வீட்டுக்கு வந்தவங்க யாரும் பட்டினியா இருக்க தேவல. “என்று மட்டும் சொல்லி சென்றார்.

கனிஷ்டனுடன் அவன் இருந்து சாப்பிட்டாலும், கனிஷ்டன் துருவனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.துருவன் வந்திருந்ததால் அந்த நேரத்தில் ஜனனியை தனியாக விட்டு சென்றால் ஏதும் பிரச்சனை ஆகிவிடும் என்று நினைத்த கனிஷ்டன் வீட்டிலே இருந்துவிட்டான்.

ஜனனியை பற்றி சொல்லவே வேண்டாம் அவள் அறையில் அவள் முடங்கி விட, கனிஷ்டன் தான் வேளைக்கு அவளுக்கு உணவு கொண்டு கொடுத்தான்.

அப்படியே நேரம் நகர, மாலை நேரமதில் ஜனனியிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு வந்த கனிஷ்டன் ஹாலில் அமர்ந்து அவளுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.

தினதரணி அவளுக்கே உரித்தான மழலை பாஷையில் கனிஷ்டனுடன் பேசி சிரித்திருக்க இது அங்கு நின்றிருந்த துருவனின் மனதிற்கும் இதமாகதான் இருந்தது.

உடனே அவர்கள் அருகில் வந்து அமர்ந்தவன், “பாப்பாவோட பெயர் என்ன? “ என்று கனிஷ்டனிடம் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குழந்தையுடன் விளையாடிக்கொண்டே, “தினதரணி “ என்றான் கனிஷ்டன்.

சிறிது நேரம் யோசித்தவன், “அப்பா, அத்தை, மாமாவோட பெயர்களை எல்லாம் சேர்த்து பாப்பாவுக்கு பெயர் வச்சிருக்க. நல்ல விஷயம் தான். “ என்றான்.

கனிஷ்டனும் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருக்க, தினதரணி அவளது மழலை குரலில், “ப்பா “ என்று கனிஷ்டனை அழைத்தவள் வெளியே கைகளை காட்டினாள்.

கனிஷ்டனோ,”ஓஹ் பாப்பாக்கு வெளிய போகணுமா? சரி வாங்க நம்ம அம்மாகிட்ட போய் பெர்மிஸன் கேட்டுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வரலாம். “என்றபடி அவளை தூக்க, “ இது உன்னோட குழந்தையா கனிஷ்? “ என்று கேட்டான் துருவன்.

கனிஷ்டன் குழந்தையை தூக்கிய படியே, “ஜனனியோட குழந்தையும் கூட. “ என்றான்.

துருவனுக்கு இது வரை சந்தேகமாகவே இருந்தது இப்போது உறுதியாகி விட, “ஏன் டா உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துகிட்ட? அவளை பத்தி உனக்கு முழுசா எதுவுமே தெரியாது கனிஷ், இரண்டு துரோகிகளை நீ கூடவே வச்சுட்டு இருக்க. உன்னோட வாழ்க்கையையும் கனியோட வாழ்க்கையையும் ஜனனியும் சரணித்தும் மொத்தமா அழிச்சிட்டாங்க. “என்றான்.

கனிஷ்டன் நிதானமாகவே அவன் பேசுவதை கேட்டு நின்றவன், “நீ இன்னுமே திருத்தல துருவ். “ என்று சொல்லும் போதே துருவ் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த கௌரி, “ யாருடா துரோகி? எங்கள பொறுத்த வரைக்கும் நீதான் துரோகி. ஜனனியும் சரணித்தும் சொக்க தங்கம்டா. அந்த பசங்க கால் தூசுக்கு கூட நீ வரமாட்ட. உன்னோட கோவத்துக்கு பயந்து நாங்க உன்னை கண்டிக்காம விட்டது பெரிய தப்பா போச்சு. உன்னை நம்பினதுக்கு நீ எங்களுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? “ என்று ஆவேசமாகவே கேட்டு விட்டார் அவர்.

சத்தம் கேட்டு ஜனனியும் கீழே வர, கனிஷ்டனோ, “அம்மா வேணாம்!” என்று தடுத்தான்.

கௌரியோ இயலாமையின் உச்சியில் இருந்தவர், “நீ சும்மா இரு கனிஷ். “என்றுவிட்டு , “தெரியுமாடா நீ எங்களுக்கு கொடுத்துட்டு போனது என்னனு? உன்னால இங்க மூணு பேரோட வாழ்கை போச்சு. மூணு உசுரு போச்சு. ஏதோ சரணித்ட புண்ணியத்துல கனியோட வாழ்கை தப்பிச்சுது. அந்த தம்பி இல்லனா என்னோட கனிட வாழ்க்கையும் எப்போவோ முடிஞ்சு போயிருக்கும். “என்றவர் அழ ஆரம்பித்து விட்டார்.

ஜனனியோ, “ அழாதீங்க அத்தை, உடம்புக்கு ஏதும் ஆயிட போகுது. இனி யாரையும் இழக்குறதுக்கு எங்க மனசுல தெம்பில்லை. “என்று சொல்ல, கனிஷ்டனும், “ஆமாம்மா, அழாதீங்க “ என்றான்.

அந்த நேரத்தில் சரணித்தின் மலை கிராமம் சென்று விட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டடிற்கு வந்த கனிக்கு துருவனை பார்த்ததும் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

உடனே, “அண்ணா!”என்று ஓடி வந்து அவனை அணைத்தவள் சற்று நேரத்திலே விலகி விட்டாள்.

துருவன் அவளை கண்டதும் சந்தோஷபட்டாலும் அவள் விலகலில் ஏதோ ஒரு வலி அவனுக்கு.

உடனே, “கனி எப்படி இருக்க? என்று கேட்டவன், அவளை நோட்டமிட, அவள் வயிற்றில் குழந்தையை சுமந்து நிற்பதை கண்டுகொண்டான்.

உடனே, “கனி கன்சிவா இருக்கியா? “ என்று கேட்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட, உடை பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சரணித்.

துருவனுக்கோ அவனை கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபங்கள் அனைத்தும் மீண்டும் கொதித்தேழுந்தது.

சரணித் துருவனை கண்டு சந்தோஷபட்டாலும் கூட அதை அவன் முகத்தில் சற்றும் காட்டிக்கொள்ளவில்லை. முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டு நின்றான்.

துருவன் தான் எகிறி சென்று அவன் ஷர்ட்டை பிடித்தவன், “எவ்வளவு தைரியம் உனக்கு? “ என்று கேட்டான்.

கனியோ, “துருவ்!”என்று ஆக்கிரோஷமாக அழைத்து, அவர்கள் அருகில் சென்றவள்,துருவனின் கையை சரணித்தின் ஷர்ட்டில் இருந்து எடுத்து விட்டு, “சரணித் என்னோட புருஷன். அவர் கிட்ட மரியாதை இல்லாம நீ நடக்குறத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது. “என்றாள்.

துருவனோ அவளை விழி பிதுங்கி பார்த்தவன், “இவன் பண்ண வேலை எல்லாம் உனக்கு மறந்து போச்சா கனி? இவன் நல்லவன் எல்லாம் இல்லமா. “ என்று சொல்ல, “அது எங்களோட பர்சனல். அண்ட் இவர் நல்லவன் இல்லனு சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ என்ன யோக்கியமா? உன்னால இன்னைக்கு மூணு பேரோட வாழ்க்கையே போச்சே. உனக்கு யாரை பத்தி பேசவும் யோகித்தை இல்ல. “என்ற கனி சரணித்தின் கையை பற்றிக்கொண்டே மாடிபடிகள் ஏறி சென்றாள்.

ஜனனியும் கௌரியை அழைத்து செல்ல, கனிஷ்டனும் அவர்கள் பின்னாலே குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றான்.

இடையில் துருவனுக்கு தான் உலகமே தன் திசையை மாற்றி சுழல்கிறது என்ற எண்ணம். அவனது தம்பி, தங்கை, அம்மா என அனைவரும் அவனை நடத்தும் விதம் அவனுக்கு பெரும் மனவலியை கொடுக்க, “நான் என்ன பண்ணன்? என்னால யாரோட வாழ்கை போச்சு? தப்பு பண்ணவங்களை கூடவே வச்சுட்டு இவங்க எப்படி இவ்வளவு கன்பிடென்டா பேசுறாங்க? “ என்று நினைத்து குழம்பி போனான்.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 32

இதே சமயம், “இல்ல இப்போதைக்கு துருவ் கிட்ட எதையுமே சொல்ல வேணாம். பண்ண தப்புக்கு எல்லாம் கொஞ்சமாச்சும் அவன் அனுபவிக்க வேணாமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள் கனி.

சரணித்தோ, “கனி கொஞ்சம் அமைதியா இரு. “என்று சொல்ல,கௌரியும் அதைத்தான் சொன்னார் அவள் குழந்தையை சுமந்திருப்பதை கருத்தில் கொண்டு.

அவளும் அதை கேட்டுக்கொள்ள, “ஹ்ம்ம், கனி சொல்றது சரிதான் கொஞ்ச நாளைக்கு அவன்கிட்ட யாரும் பேசவும் வேணாம்,நடந்தத பத்தி ஏதும் சொல்லவும் வேணாம். “என்று சொன்னான் கனிஷ்டன்.

அவர்கள் அனைவருக்கும் துருவன் மேல் கோபம் இருந்தாலும் அவன் மீது அதீத பாசமும் இருந்தது. அவனை அவர்களால் விட்டு கொடுக்கவும் முடியவில்லை விட்டு விலகவும் மனதில்லை.

அடுத்த நாள் காலை துருவன் எழுந்து ஹாலிற்கு வர அங்கு சரணித் தன் கை வளைவுக்குள் அமர்ந்திருந்த கனிக்கு நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

கனியோ, “இங்க இல்ல, இங்க “என்று சொல்லி அவள் உதட்டை காட்ட அவனும் அவள் உதட்டை நோக்கி குனிந்த சமயம், “டேய் காலைலயே நடு வீட்டுல இருந்து என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? “என்று கேட்டபடி ஜோக்கிங் சென்று வந்த கனிஷ்டன் வந்தான்.

சரணித்தும் விலகி கொள்ள, “நீ எதுக்கு சிவ பூஜைல கரடி மாதிரி உள்ள நுழைற? “என்று கேட்ட கனி, “நானும் என்னோட புருஷனும் எப்போ வேணா ரொமான்ஸ் பண்ணுவம். “என்று சொல்ல தலையில் அடித்துக் கொண்டே அவர்கள் முன் வந்து அமர்ந்தான் கனிஷ்டன்.

இதை பார்த்து நின்ற துருவனும் கனிஷ்டன் அருகில் வந்து அமர்ந்தான்.

ஆனால் யாருமே அவனை கண்டுகொள்ளவே இல்லை. கனியோ, “அது சரி ஜனனி எங்க? “ காலைல இருந்து ஆளையே காணும்? “ என்று கேட்க, “நைட் இருந்து செம்ம பிவேர் அவளுக்கு. பாப்பாவ கூட அம்மாதான் வச்சுக்கிட்டாங்க. “என்றான் கனிஷ்டன்.

சரணித்தோ, “ நைட் பாப்பாவ எங்க கிட்ட கொடுத்திருக்கலாமே! “ என்று கேட்க, “இல்லைடா ட்ராவெல் பண்ணி வந்த டையர்ட்ல தூங்குவீங்க. அதுதான் அம்மா தூக்கிட்டு போனாங்க. “என்றான் கனிஷ்டன்.

அப்போது கௌரியும் அங்கு தினதரணியுடன் வந்தவர் , துருவனை கடந்து சென்று கனிஷ்டனின் மடியில் குழந்தையை வைத்து விட்டு, “யார்ரா பேச்சும் கேட்க மாட்டேங்குற! அவ்வளவு பிடிவாதம். “என்றவர், கையில் வைத்திருந்த பொட்டிபாலை அவனிடம் கொடுத்து,”உன்னால மட்டும் தான் இவளை சமாளிக்க முடியும். எப்படியாவது இந்த பாலை கொடுத்துடு. “என்றுவிட்டு சென்றார்.

தினதரணியும் அவன் மடியில் இருந்து விளையாடிக்கொண்டிருக்க, அவனது ட்ஷிர்ட்டை கழற்றி போட்ட கனிஷ்டன், குழந்தையை தன்னுடன் அணைத்துக்கொண்டு பாலை கொடுக்க தொடங்கினான்.

அவ்வளவு நேரமும் பால் குடிக்க திணறிகொண்டிருந்த குழந்தை இப்போது கனிஷ்டனிடம் இருந்து கொண்டு எந்த வித தொந்தரவும் செய்யாமல் பால் அருந்திக் கொண்டு இருந்தது.

கனியோ, “டேய் நீ குழந்தை வளர்ப்புல பிஎச்டி முடிச்சிட்ட போல இருக்கே. நல்லதுதான். நானும் குழந்தையை பெத்து தாரேன். நீயே வளர்த்து கொடு. “ என்று சொன்னவள், சரணித்தை பார்த்து, “என்ன ஓகே தானே? “என்று கேட்க, “ஹ்ம்ம் கண்டிப்பா. “என்று சொல்லி சிரித்தான் அவன்.

கனிஷ்டனோ, “நீங்க இரண்டு பேரும் ரொமான்ஸ் பண்றதுக்கு இப்போவே பிளான் போடுறீங்க அப்படித்தானே? “என்று கேட்டு சிரித்துக்கொள்ள, அவ்விடம் காபி கப்களுடன் வந்தார் கௌரி.

காபி கப்களை டீ பாயில் வைத்தவர், “என்கிட்ட இவ்வளவு நேரம் பால் குடிக்க அவ்வளவு அடம் பிடிச்சுட்டு இப்போ உன்கிட்ட வந்ததும் எப்படி இருக்கா பாத்தியா? “என்று குழந்தையை பார்த்து கேட்க, “அவன் அவ ஜனனியோட வயித்துல இருக்கும் பொதிருந்தே அவ கூட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கான். நம்மள விட அவன் கிட்ட தான் பாப்பாக்கு போண்ட் கூட. “என்றான் சரணித்.

கௌரியும், “அது என்னவோ உண்மைதான். பாப்பா இவனோட வாய்ஸ் கேட்ட ரொம்பவே குஷி ஆயிடுறா. “ என்றார்.

அந்த நேரத்தில் பாலை குடித்து எழுந்த தினதரணியை, “அம்மாகிட்ட வாங்க. “என்று அழைத்தாள் கனி.

சரணித்தும் எழுந்து கனிஷ்டனிடம் இருந்த குழந்தையை தூக்கி கொள்ள, “ப்பா “என்று அழைத்து சிரித்தவாறே அவனிடம் சென்ற குழந்தை, கனியை பார்த்து, “அம்மா “என்றுதான் அழைத்தது.

துருவனோ அதை கேள்வியாக பார்த்தவன், “பாப்பா என்ன உங்களை அம்மா, அப்பான்னு கூப்பிடுது. “என்று கேட்டே விட்டான்.

கனியோ, “பாப்பாகிட்ட நாங்க என்ன சொல்லி கொடுக்குறோமோ அதுதானே சொல்லும். நாங்க அவகிட்ட எங்களை அம்மா அப்பான்னு தான் கூப்பிட சொல்லிக்கொடுத்தோம். அவ எங்களுக்கும் குழந்தை தான். “என்றாள்.

துருவனோ, “ஹ்ம்ம். “என்று மட்டும் சொன்னவன் ஏதும் பேசாமல் எழுந்து கொள்ள, சரணித்தின் மடியில் தவன்ற குழந்தை துருவனை பார்த்து, “அப்பா “ என்று அழைத்தது.

துருவனை அந்த மழலை மொழி கரைத்து விட, சரணித்தின் மடியில் இருந்து தினதரணியை தூக்கியவன், அவளை முத்த மழையில் நனைத்திருந்தான்.

இதை அந்த குழந்தையும் ரசித்தது போலும். அதுவும் சிரித்துக்கொண்டே அவனிடம் இருந்தாலும் , சிறிது நேரத்திலே கனிஷ்டனிடம் தாவிக்கொண்டது.

குழந்தையை அள்ளி தூக்கும் போதே அவனுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. குழந்தைகள் செய்யும் மாயமும் அது அல்லவா? எப்படி பட்ட ஆறா மன வலியையும் ஆற்றிவிடும் திறமை கொண்டது மழலைதானே.

துருவனுக்கும் அவனிடம் இருந்த முரட்டு குணம் அந்த குழந்தையை அணைத்ததில் இருந்து மறைந்து போக, குழந்தையின் அருகாமையை அடிக்கடி நாடினான் அவன்.

ஆனாலும் தினதரணி அதிகமாக இருந்தது என்னவோ கனிஷ்டனிடம் தான். ஜனனி காய்ச்சலில் உழன்று கொண்டிருந்ததால் குழந்தையை அவளிடம் கனிஷ்டன் கொடுக்கவே இல்லை. குழந்தைக்குரிய அனைத்தையும் அவனே செய்தவன், ஜனனியையும் கவனித்துக் கொண்டான்.

துருவனுக்கு தான் இதை பார்த்து ஏதோ ஒன்றை இழந்து விட்ட உணர்வு, அது அவனது மூளைக்கு புரிந்தாலும் அவன் மனம் இன்னுமே அதை ஏற்கவில்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் காலமும் வெகுதொலைவில் இல்லை.

இரவில் கனிஷ்டன் குழந்தையுடன் துருவனின் அறைக்குள் நுழைந்தவன், “நானும் பாப்பாவும் இங்கேயே இருந்துக்கிறோம். ஜனனி க்கு உடம்பு இன்னும் சரிஆகல. “என்று விட்டு, குழந்தையை தன்னுடன் அணைத்த படியே தூங்கிப்போனான்.

துருவனுக்குதான் மீண்டும் மீண்டும் அந்த மழலை முகம் அவனை கட்டியிழுக்கும் உணர்வு. அவன் அந்த குழந்தையின் தலையை தடவிவிட்டவன் அருகே சென்று நெற்றியில் முத்தமும் பதித்தான்.

இதை கனிஷ்டனும் உணர்ந்து கொண்டவன், கண்களை திறக்காமலே அவன் கையை குழந்தையில் இருந்து எடுத்தான்.

துருவனுக்கு தன் தம்பியின் செயலுக்கு அர்த்தம் புரியாமல் இருக்குமா என்ன? “என்னனு தெரியல கனிஷ். உன் குழந்தையை பார்க்கும் போது ஏதோ ஒரு மாதிரி பீல் ஆகுது, சந்தோஷமா இருக்கு. “என்றவன், குழந்தையை அணைத்துக் கொண்டே தூங்கிப்போனான்.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 33

சில நாட்கள் இப்படியே கடந்து விட துருவன் தான் தினதரணியுடனே ஒன்றிப்போனான். அவளிடத்தே தன் காயங்களுக்கு மருந்து தேடிக்கொண்டான் அவன்.

ஜனனியும் அன்றுதான் காய்ச்சல் எல்லாம் குணமாகி வழமை நிலைக்கு வந்தவள், காலையில் உணவருந்தி விட்டு, “பாப்பாக்கு சாப்பாடு கொடுத்தீங்களா அத்தை? “ என்று கேட்டாள்.

கௌரியும், “கொடுத்துட்டேன்மா, இருந்தாலும் நீ பாப்பாக்கு பால் கொடுத்துடு. “என்றார்.

ஜனனியும் கனிஷ்டனிடம் தானே குழந்தை இருக்கும் என்று நினைத்தவள், அவனது அறைக்கு செல்ல அங்கு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் துருவன்.

இதை பார்த்தவள் மனதினுள் கலவையான எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்க, துருவன் அவளை பார்த்து, “எதுக்கு அப்படி பார்த்துட்டு நிக்குற? என்ன வேணும்? “ என்று கேட்டான்.

ஜனனியோ, “பாப்பா!” என்று சொல்ல, “நீ போ, நான் கனிஷ்ட கொடுத்து அனுப்புறேன். “என்றான் அவன்.

இதே சமயம் துருவனிடம் இருந்த குழந்தை பக்கத்தில் இருந்த தண்ணீர் குவளையை எட்டி எடுத்ததில் அதில் இருந்த நீர் குழந்தை அணிந்திருந்த உடையில் சிந்தியது.

துருவனோ, “அச்சச்சோ பாப்பாவோட ட்ரெஸ் ஈரமாயிடிச்சே, நம்ம ட்ரெஸ் மாத்திக்கலாமா? “என்று குழந்தையிடம் கேட்டபடி அங்கிருந்த சில உடைகளை கையில் எடுத்தான்.

இதை பார்த்த ஜனனி என்ன நினைத்தாளோ தெரியவில்லை, சட்டென்று அவள் குழந்தையை அவனிடம் இருந்து பறித்துக்கொண்டவள், அவள் அறைக்கு சென்றாள்.

துருவனுக்கும் குழந்தையை அவள் தன்னிடம் இருந்து பறித்து எடுத்தது, கோபத்தை தர, “என்ன நினைச்சிட்டு இருக்கா இவ ? எதுக்கு பாப்பாவ புடிங்கிட்டு போற? “ என்று நினைத்தவன் அதை கேட்பதற்காக அவளிடம் சென்றான்.

ஜனனியோ அறைக்கு வந்தவள் குழந்தையை அணைத்துக்கொண்டு அவளுக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்க, சட்டென்று கதவை திறந்து உள்ளே வந்தான் துருவன்.

ஜனனி அவனையே பார்த்து நிற்க, துருவனுக்கு தான் அது சங்கடமாகி போனது, “சாரி, நான்.. நான்.. “ என்று இழுத்தவன், மீண்டும், “சாரி “என்று விட்டு கதவுகளை அடைத்து,தலையை நீவிக்கொண்டே திரும்ப அங்கு சரணித் மற்றும் கனிஷ்டன் நின்றிருந்தனர்.

துருவனுக்கோ அது இன்னும் சங்கடத்தை கூட்ட, “இல்ல கனிஷ், அவ பாப்பாவ என்கிட்ட இருந்து பறிச்சுட்டு போனா, அதுதான் என்ன எண்டு கேக்க வந்தன். அவ பீட் பண்ணிட்டு இருக்குறது எனக்கு தெரியாது. “என்று தலையை குனிந்து கொண்டே சொன்னான்.

கனிஷ்டனோ துருவன் அருகில் வந்து அவன் தோளில் தட்டியவன்,”பார்த்த அப்படியே நம்புறதுக்கு நான் ஒன்னும் நீ இல்லை. ஜனனிய பத்தி உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும். “என்று சொல்லி துருவன் மனதில் ஆணி அடித்து விட்டு சரணித்துடன் அங்கிருந்து சென்றான்.

துருவனுக்கோ இப்போதுதான் இதயம் தாறுமாறாக துடித்தது. கனிஷ்டனின் வார்த்தைகள் சாதரணமாக இருந்தாலும் அதின் ஆழ் அர்த்தங்கள் ஆயிரம் உண்மைகளை உரைத்துவிடும்.

இப்போதுதான், “நம்ம தப்பு பண்ணிட்டோமா? “ என்று நினைக்க தொடங்கினான் துருவன்.

அவனுக்கு அப்போதும் எதையும் யோசிக்க முடியவில்லை, கனிஷ்டனின் பின்னே ஓடிச்சென்றவன், “என்ன சொல்ற கனிஷ்? “ என்று கேட்டான்.

கனிஷ்டனோ, “என்ன கேக்குற? “ என்று புரியாததை போல் கேட்க, “இப்போ நீ சொன்னியே பாக்குறது எல்லாத்தையும் நம்ப நான் ஒன்னும் நீ இல்லனு, அதுக்கு என்ன அர்த்தம்? “என்று கேட்டான் அவன்.

கனிஷ்டனோ ஏதும் சொல்லாமல் அங்கிருந்து ஹாலிற்கு செல்ல அங்கு கனியும் அமர்ந்து இதை பார்திருந்தாள்.

துருவனும் விடாமல் கனிஷ்டன் பின்னாலே வந்தவன், “ப்ளீஸ் டா, எனக்கு ஏதோ எல்லாம் யோசிக்க தோணுது. என்ன நடந்துச்சுனு சொல்லேன். “என்று கெஞ்சிக்கேட்டான்.

கனிஷ்டனுக்கும் அவனை பார்க்கும் போது பாவமாகத்தான் இருந்தது. அவனே நடந்ததை சொல்லி விடலாம் என்று நினைத்த தருணம், “துருவ்! நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன். “என்றான் சரணித்.

துருவனுக்கு இப்போது அவன் மீது கோபம் எல்லாம் இருக்கவே இல்லை. அதை தாண்டி அவன் தனக்கான பொக்கிஷத்தை இழந்துவிட்டானோ என்றுதான் அவன் மனம் துடித்துக்கொண்டது.

அதனாலேயே, “ஹ்ம்ம் “என்று மட்டும் சொல்ல, “எப்படி துருவ் என்னையும் ஜனனியையும் உனக்கு சந்தேக பட தோணிச்சு? நான் ஜனனிய எப்போவுமே என்னோட தங்கச்சி மாதிரித்தானே ட்ரீட் பண்ணியிருக்கேன். “ என்று கேட்டான் சரணித்.

துருவனோ அவனை பார்த்து நின்றானே தவிர வேறு ஏதும் பேசவில்லை.

அடுத்ததாக ஆரம்பித்த கனிஷ்டனோ, “நீ தானே அவளை சின்ன வயசுல இருந்து லவ் பண்ண? அப்புறம் எப்படி அவளை சந்தேக பட்ட? ஏன் அவளை விட்டுட்டு போன? “என்று கேள்விகளை அடுக்கினான்.

துருவனோ உடைந்து போய் நின்றவன், “சரணித் கனி விஷயத்துல பண்ணது தான் எனக்கு கோபம். அது தான் அவ சரணித் கூட பேசும் போது எல்லாம் எனக்கு கன்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு கோபம் வந்துச்சு. அது மட்டும் இல்லாம காலேஜ் முழுக்க இவங்கள பத்தின பேச்சு. அத எல்லாம் பார்த்துட்டு என்னால என்ன பண்ண முடியும்!” என்று கேட்டான்.

கனி இடையில் நுழைந்தவள், “ என்னோட விஷயத்துல சரணித்மேலே எந்த தப்பும் இல்ல. முதல்ல அது உனக்கு தெரியுமா? “என்று கேட்டவள், “மத்தவங்க அவளை பத்தி என்ன சொன்னாலும் நீ நம்புவியா? “என்றும் கேட்டாள்.

துருவனுக்கு முதல் அடியே அதுவாகத்தான் இருந்தது. “என்னது சரணித் மேலே தப்பு இல்லையா? “ என்று கேட்டவன், எண்ணங்கள் சரணித்தையும் ஜனனியையும் அவன் ஒன்றாக பார்த்த தருணங்களை நோக்கி ஒரு கணம் சுழன்றது.

அவனோ, “அது எல்லாம் எப்படி பொய்யாக இருக்க முடியும்? “ என்றும் நினைத்துக்கொண்டான்
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 34

துருவன் அமைதியாக நிற்பதை பார்த்த கனி முதலில் சரணித்தின் மேல் அவனுக்கு இருந்த தவறான அபிப்ராயத்தை போக்க நினைத்து, “அன்னைக்கு உண்மைல என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று ஆரம்பித்து அனைத்தையும் அவனுக்கு சொன்னவள், “அன்னைக்கு நான்தான் சரணித்த தப்பா புரிஞ்சிக்கிட்டன். “என்று சொல்லி முடித்தாள்.

அடுத்தாக துருவனிடம் பேசிய சரணித், “இது எல்லாம் ஜனனிக்கு ஆரம்பத்துல தெரியாது... “என்று ஆரம்பித்தவன், திலீபன் ஜனனியுடன் தவறாக நடந்து கொண்டது பற்றி சொல்லி அப்போதே அவனை பற்றி அவளுக்கு தெரிய வந்ததாகவும் சொன்னவன், திலீபன் தன் தவறை மறைக்கவே அவர்களை பலி ஆடுகளாக்கியதாகவும் சொன்னான்.

துருவனுக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே புரிய ஆரம்பித்தது. “கண்மூடி தனமா இருந்திருக்கமே “என்று நினைத்து அவனையே அவன் கடிந்து கொண்டான்.

கனியோ, “நீ தப்பா பார்த்ததால மட்டும் தான் உனக்கு எல்லாமே தப்பா தெரிஞ்சுது துருவ். உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? எனக்கும் சரணித்க்கும் ஸ்கூல் படிக்கும் போது இருந்தே லவ் இருந்துச்சு. “என்று அடுத்த இடியை இறக்கினாள்.

துருவனோ, “என்ன?” என்று கேட்டு அதிர்ந்து விட, “ஆமா, சரணித்த முதல் தடவை பார்த்ததில இருந்தே அவனை எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு. அவனோட அமைதியான பேச்சு, என்ன கேர் பண்ண விதம் எல்லாமே என்ன அட்ரெக்ட் பண்ணிடிச்சு. ஸ்டார்டிங்ல கிரஷ்ஷா ஆரம்பிச்சது போகபோக லவ்வா மாறிடிச்சு.

அன்னைக்கு ஸ்கூல்ல நடந்த பிரச்சனைல கூட அவன் அங்க வந்ததும் நான் கத்தல, அவனை வெளியில தான் போக சொன்னேன். ஆனா அவன் என்ன வந்து தொட்டதும் தான் எனக்கு தப்பான ஒருத்தனை லவ் பண்ணிட்டமோ எண்டு தோணிச்சு அதனாலதான் பயத்துல கத்திட்டேன்.

ஆனா இவனை திரும்பவும் மீட் பண்ணதுக்கு அப்புறம் தான், என்னோட தலைல அடிபடமா இருக்குறத்துகாக தான் இவன் அப்படி பண்ணான்னு புரிஞ்சுது. சோ அப்போவே எனக்குள்ள இவனை பத்தி இருந்த தப்பான அபிபிராயம் எல்லாம் போயிடிச்சு. “என்றாள் கனி.

சரணித்தும், “ஆமா துருவ், நானும் அப்போ இருந்தே கனிய லவ் பண்ணன். ஆனா இடைல ஏதோலாம் நடந்து போச்சு. நான் இங்க திரும்ப வந்ததே என்மேல தப்பு இல்லனு சொல்லி கனிகிட்ட என்னோட லவ்வ கன்பஸ் பண்றதுக்குத்தான். மற்றபடி எனக்கு வேற எந்த நோக்கமுமே இருக்கல. “என்றான்.

துருவனும் இதை எல்லாம் கேட்டு இருந்தவன், “ஜனனிய நீ பைக்ல கூட்டிட்டு போனது? அந்த ஹோட்டல்ல என்னாச்சு? “என்று மறைமுகமாகவே கேட்டான்.

அவன் பழைய நிலையில் இருந்திருந்தால் இதை எல்லாம் வெளிப்படையாகவே கேட்டிருப்பான். ஆனால் இப்போது தன் மீதுதான் தவறு என்று அவனுக்கு தோன்றியதால் அங்கு அடங்கிப்போனான் அவன்.

சரணித்தோ, “ அன்னைக்கு கனிதான் கனிஷ்க்கு மெசேஜ் பண்ணி எல்லாரையும் அந்த ஹோட்டல்க்கு வர சொன்னா, கனி அர்ஜென்ட் என்று போட்டிருந்ததால கனிஷ் லேட் பண்ணாம அங்க போய்ட்டான்.

என்ன ஜனனிய கூட்டிட்டு வர சொன்னான். வீட்ல நீ இருந்த. ஏற்கனவே என்ன பார்த்தா நீ எரிஞ்சு விழுற, அது மட்டும் இல்லாம அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆக போற டைம் எதுக்கு என்னால உங்களுக்குள்ள பிரச்சனை என்றுதான் ஜனனிய இரண்டு தெரு தள்ளிவர சொன்னேன் .”என்றான்.

கனிஷ்டன் இடையில் குறுக்கிட்டவன், “இந்த விஷயம் எப்படி உனக்கு தெரியும்? சோ நீ ஜனனிய பொல்லொவ் பண்ணிருக்க! ஆம் ஐ ரைட்? “ என்று கேட்க துருவனோ தலையை குனிந்து கொண்டான்.

கனிஷ்டனோ மேலும் தொடர்ந்தவன், “ எனக்கு கூட எல்லாமே தெரியும். எல்லாரும் உன்கிட்ட சொல்ல பயந்த காரணம் என்ன தெரியுமா? உன்னோட கோபம், அவசரபுத்தி, எதுலயும் நிதானம் இல்லாத தன்மை இதெல்லாம் தான். “என்றவன், “உனக்கு இன்னொன்னு தெரியுமா? இந்த பிரச்சனை எல்லாத்துக்குமே புள்ளையார் சுழி போட்டது உன்னோட ஆருயிர் நண்பன் அவினேஷ் தான். “என்று அடுத்த இடியை துருவனில் இறக்கினான்.

துருவனோ, “என்ன சொல்ற நீ? “என்று கேட்க,கனிஷ்டன் நடந்ததை அவனுக்கு சொன்னான்.

ஆம், அன்று கனி அவினேஷிடத்தில் கதைத்து விட்டு அவனை சந்திப்பதற்காக அவனது வீட்டுக்கு சென்ற நாளில் ஏதேர்ச்சியாக அவனது அறைக்கு சென்றாள் அவள்.

அந்த அறையே கால் வைக்க முடியாத அளவுக்கு கலைந்து கிடந்தது.அவள் காலில் தட்டுபட்டதை எல்லாம் எடுத்து மேசையில் வைத்தவளின் கண்கள் அந்த மேசையில் இருந்த அவனின் பாஸ்போர்ட் மீது படிந்தது.

அவளின் உள்உணர்வு அதை எடுத்து பார்க்கும் படி அவளிடம் உரைத்துக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அதை எடுத்து பார்த்தவள், அதிர்ந்தே விட்டாள்.

ஆம், அவன் லண்டன் சென்று வந்ததாக சொல்லியிருக்க அந்த பாஸ்போர்ட்டில் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சொல்ல போனால் அது ஏதோ இப்போதுதான் அப்ளை செய்து புதிதாக எடுத்ததை போல் இருந்தது.

கனிக்கு இது சந்தேகத்தை துண்ட, மேலும் அவன் அறையை ஆராய தொடங்கினாள், அப்போதுதான் அவளுக்கு அங்கு சில பெட்டிகளில் பொதிகள் இருப்பது கண்ணில் பட்டது.

ஆரம்பத்தில் அதை அவள் சாதாரணமாக நினைத்தாலும் பின்னர் அதை ஆராய்ந்து பார்த்தவழுக்கு அதில் இருப்பது அனைத்துமே போதை பாவனை பொருட்கள் என்று தெரிய வந்தது.

துரிதமாக செயற்பட்டவள் தாமதிக்காது அது பற்றி பொலிசின் அவசர இலக்கத்துக்கு அழைத்து புகார் அளித்திருந்தாள்.

அவள் அங்கு சென்றது என்னவோ, அவினேஷுடன் கதைத்து திருமணத்தை நிறுத்துவதற்காகவே.

அவளுக்கு சரணித் மேல் இருந்த தவறான விம்பம் மாறிய கணமே தன்னில் புதைந்திருந்த காதலும் வெளிப்பட்டது. அப்போதே இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்தவளுக்கு இது சாதகமாகி போனது.

அடுத்ததாக அவினேஷ் வீட்டில் இருந்து வெளியேறிவிடலாம் என்று நினைத்தவள் அவசரஅவசரமாக அவன் அறையில் இருந்து வெளியே வர, அங்கு கீழே கிடந்த பெட்டி ஒன்றில் தடக்கி கீழே விழுந்தாள்.

பின்னர் ஒருவாறு அங்கிருந்த ட்ரோயர் ஒன்றை பற்றி எழுந்து கொள்ள, அந்த ட்ரோயரும் சற்று திறந்து கொண்டது.

அதை உற்றுப்பார்த்தவள், அந்த ட்ராயறை துறந்து, ஆறு வருடங்களின் முன் தொலைந்து போன அவளது போனை கையில் எடுத்துக்கொண்டாள்.

அப்போதே அவளுக்கு புரிந்து போனது, அவள் போனில் இருந்து சரணித்க்கு மெஸேஜ் அனுப்பியது அவினேஷ்தான் என்று. ஆனாலும் அவளுக்கு அதற்கான காரணம் தான் தெரியவில்லை.

யோசித்து நின்றால் அவினேஷ் வந்து விடுவான் என்று நினைத்தவள், வஜியிடம் சொல்லாமே வீட்டில் இருந்து வெளியே வர அவளின் கஷ்டகாலத்திற்கு அங்கு வந்து நின்றான் அவினேஷ்.

கனிக்கா அவள் கையில் வைத்திருந்த பழைய போனை அவளது பையில் போட்டவள், பதற்றத்தை முகத்தில் காட்டாமலே நின்றிருந்தாள்.

அவினேஷோ, அவளிடம் “கல்யாணம் பிக்ஸ் ஆகி இவ்வளவு நாள் கழிச்சு மீட் பண்ண கூப்பிட்டு இருக்கியே என்ன விஷயம்? “ என்று கேட்க, சற்று அமைதியாக நின்ற கனி, “நம்ம பக்கத்துல இருக்குற ஹோட்டல் போய்ட்டு பேசலாமா? “ என்று கேட்டாள்.

அவினேஷும், “இவ எதுக்கு சம்மந்தமே இல்லாம ஹோட்டல் போகணும் என்றா? “என்று யோசித்தாலும், “பொன் முட்டை இடுற வாத்தை மிஸ் பண்ணிடவே கூடாது. “என்று நினைத்து அவளுடனே புறப்பட்டான்.

கனியும் அவனோடு சென்று கொண்டிருக்கும் போதே, கனிஷ்டனுக்கு லொகேஷன் அனுப்பியவள், “ இந்த இடத்துக்கு வந்துடு. வரும் போது சரணித், ஜனனிய கூட்டிட்டு வா. அர்ஜென்ட். “என்று ஒரு மெசேஜ்ஜயும் அனுப்பினாள்.

கனியின் மெஸேஜை பார்த்த கனிஷ்டன் அதில் அர்ஜென்ட் என்று குறிப்பிட பட்டிருந்ததால், செய்து கொண்டிருந்த வேலைகள் எல்லாம் விட்டுவிட்டு அந்த இடத்தை நோக்கி விரைந்தவன், சரணித்திடம் விஷயத்தை சொல்லி ஜனனியை அழைத்து வர சொன்னான்.

சரணித்தான் ஜனனிக்கு கால் செய்து விஷயத்தை சொல்ல, துருவன் அங்கிருக்கும் போது எப்படி செல்ல முடியும் என்று பயத்தில் விழி விரித்து கொண்டாள் அவள். சரணித்தும் துருவன் அங்கு இருப்பதை அறிந்திருந்தவன் , இரண்டு தெருக்கள் தள்ளி வரும் படி சொல்லியிருந்தான்.

இதற்கிடையில் அவினேஷும் கனியும் அந்த ஹோட்டல்க்கு சென்றிருந்தார்கள். கனியோ அங்கு கபே பகுதியில் சென்று அமர்ந்து கொள்ள, அவினேஷ், “இங்க எதுக்கு? பிரைவசியே இருக்காது. “என்றவன் அவள் கைகளை பற்றி அறைக்கு அழைத்து சென்றான்.

அப்போது கனிக்கு இருதய துடிப்பு வெளியே கேட்கும் அளவுக்கு இருந்தது. மறு கரத்தில் அவளது போனை எடுத்தவள், அவன் அழைத்து சென்ற அறையின் எண்ணையும் கனிஷ்டனுக்கு அனுப்பி வைத்தாள்.

அவினேஷோ அறைக்கு சென்று அவளை அமர வைத்தவன் அங்கு அமர்ந்து கொள்ள அவன் போனும் அலறியது.

அதை எடுத்து காதில் வைத்தவன், முன்னால் அமர்ந்து இருந்த கனியை முறைத்துக்கொண்டிருந்தான். அவனது சாந்தமான முகம் இப்போது கொடூரமாக மாறிக்கொண்டு இருந்தது.

போனை வைத்தவன் சட்டென்று எழுந்து கனியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க,அவளோ வலியில் கண்கள் கலங்கி போய் பயத்துடனே அவனை பார்த்தாள்.

அவினேஷோ, “உன்னை வீட்டுக்கு போக சொன்னது தப்பா போச்சுல, நீதானே பொலீஸ்க்கு கால் பண்ணி போட்டுக்கொடுத்த? “என்று கேட்டவன், அவள் கழுத்தை நெருக்கி பிடித்தான்.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 35

கனியோ, “ப்ளீஸ் அவினேஷ் என்ன விடு, வலிக்குது.” என்று கத்த அது அவன் காதுகளில் விழுந்தால் தானே!

கனிக்கு மூச்சு விடுவதே சிரமமாகி கொண்டிருக்க, அப்போதுதான் கதவை திறந்து அங்கே வந்தான் கனிஷ்டன்.

அவினேஷ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆதலால் தடுமாறித்தான் போனான்.

கனிஷ்டனுக்கு நடந்தது என்னவென்று தெரியாமல் இருந்தாலும் தன் தங்கை மீது தாக்குதல் நடத்தி கொண்டிருப்பவனை அவன் சும்மா விடுவானா என்ன?

அவனை அடித்து துவைத்துக்கொண்டே “கல்யாணம் பண்ண முதலே என்னோட தங்கச்சிய டார்ச்சர் பண்றியா? “என்று கேட்டு அவனை எட்டி உதைத்தவன், “கனிஷ், எல்லாத்துக்கும் இவன்தான் காரணம். சரணித்த நம்மகிட்ட தப்பா ப்ராஜெக்ட் பண்ணது கூட இவன்தான். இங்க பாரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி துலைஞ்சு போன போன். இத இவன் வீட்டுல இருந்துதான் எடுத்தன். “என்று கனி சொல்லவதை கேட்டு, கீழே விழுந்து கிடந்த அவினேஷின் கொலரை பிடித்து தூக்கியவன், அங்கிருந்த டவலை எடுத்து அவன் கைகளை பின்பக்கமாக கட்டி முட்டி இட வைத்தான்.

அதன் பின்னரே கனியிடம் முழுமையாக என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டவன், “எதுக்குடா இப்படி பண்ண? துருவ் உன்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தான் தெரியுமா? “என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே கனிஷ்டனின் போன் அலற, அதை எடுத்து காதில் வைத்தவன், “மச்சி ரூம் நம்பர் 167க்கு வாடா. “ என்று சொல்லியிருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் சரணித் மற்றும் ஜனனியும் அங்கு வர, கனிஷ்டன் நடந்ததை அவர்களிடமும் தெரியபடுத்தினான்.

இப்போது சரணித்க்குத்தான் அவனை கொன்று புதைக்கும் அளவுக்கு கோபம் வந்தது.

முட்டியிட்டு நின்ற அவினேஷின் கன்னத்தில் ஓங்கி அறைந்த சரணித், “எதுக்குடா இப்படி பண்ண? நீ பண்ண வேலையால அன்னைக்கு நான் எப்படி கூனிகுறுகி நின்நென்னு தெரியுமா? “என்று கேட்க கனிதான் அவனை பாவமாக பார்த்து நின்றாள்.

அவினேஷோ, “என்னடா ஆள் ஆளுக்கு ரொம்ப ஓவரா பேசுறீங்க!நீ என்ன சொன்ன கனிஷ் துருவ் என்ன நம்பினானா? “என்று சொல்லி சிரித்தவன், “அவனை நம்ப வைக்க நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும். “என்றவன் அவன் பக்க கதையை சொன்னான்.

அவினேஷின் அப்பாவான முத்து தினகரன் மற்றும் சுந்தரம் நடத்தி வந்த கார்மெண்ட்ஸில் குவாலிடி செக்கராக பணி புரிந்து வந்தவர்தான்.

அதில் வரும் வருமானமும் அவர்கள் மூவர் அடங்கிய குடும்பத்தை நடத்த போதுமானதாகவே இருந்தது. இருந்தாலும் பேராசை யாரைதான் விட்டது.

வடநாட்டுக்காரன் ஒருவனுடன் ஏற்பட்ட நட்பால் முத்துவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டது. கட்டு கட்டாக பணம் கையில் கொடுக்கப்பட முத்துவும் இஷ்டத்துக்கு அதை உதாரி தனமாக செலலவு செய்ய, அங்கேதான் அவருக்கு பெரிய குழியும் தோண்டப்பட்டு இருந்தது.

பணம் கொடுத்தவன் சும்மா கொடுப்பானா என்ன? முத்துவை அழைத்த அவரது வடநாட்டு நண்பன், கார்மெண்ட்ஸில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உடைகளுக்குள் போதை பொருட்களை மறைத்து வைத்து கடத்தல் செய்ய முத்துவை பணித்திருந்தான்.

முத்து ஆரம்பத்தில் மறுத்தாலும், கொலை மிரட்டலாலும், கை நீட்டி பணம் வாங்கிய காரணத்தாலும் அதை செய்ய சம்மதித்து இருந்தார்.

போதை பொருள் கடத்தும் கும்பல் முத்துவை தேர்ந்தெடுத்ததே அவரை வைத்து தங்கள் வேலையை முடிக்க தானே, முத்துவும் அந்த வலைக்குள் சிக்கிகொள்ள அவர்களும் தங்கள் வேலையை முத்துவை வைத்து சாதித்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் அது சில காலம் மட்டுமே, தங்கள் கம்பெனியில் போதை பொருள் கடத்தல் நடக்கிறது என்பதை வேலையாட்களுள் இருந்த விசுவாசிகள் மூலம் அறிந்து கொண்ட தினகரன், அது யார் மூலம் நடக்கிறது என்றும் இலகுவாக கண்டுபிடித்து முத்துவை வேலையை விட்டு தூக்கியவர் அவன் குடும்பம் கருதி அவனை பொலிஸில் ஒப்படைக்காது எச்சரித்து வெளியே அனுப்பினார்.

முத்துவுக்கு அது அவமானமாக போக வீட்டிலே முடங்கி விட்டார் அவர். அது போதாது என்று அந்த கும்பல் வேறு பணம் வாங்கியதால் வேறு எந்த வழியிலாவது முத்துவை தங்களுக்கு உதவும் படி குடைச்சல் கொடுக்க, மன விரக்தியின் உச்சிக்கே சென்ற முத்து தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டார்.

இப்போது எதற்காக தன் தந்தை உயிரை விட்டார், எதற்காக தனது கணவர் உயிரை மாய்த்தார் என்று தத்தளித்து வாடிக்கொண்டு இருந்த அவினேஷ் மற்றும் வஜிக்கு யோசிக்க நேரமே கொடுக்காமல் கடன் தொல்லைகள் வேறு வந்து குவிந்தது.

வஜி முத்துவின் நண்பர்கள் இடத்தே விசாரித்த போது, தினகரன் அவரை வேலையை விட்டு நிறுத்தியத்தை அறிந்து கொண்டவர் அதற்கான காரணத்தையும் அறிந்துகொண்டார்.

அவரும் என்னதான் செய்வார் எல்லாம் கை மீறி போன நிலையில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து வசை பாடி செல்ல, சிலர் அவரின் மானம் களைந்து பணத்தை கழித்து கொள்ளும் படியும் உரைத்துவிட்டு சென்றனர்.

இது பதினாறு வயதே எட்டி இருந்த அவினேஷிற்கு மனதை கலைக்க, அதுவரை அவனிடம் இருந்த நற்குணங்கள் எல்லாம் காற்றில் பறந்து போக, அவன் அப்பா சென்ற அதே வழியில் அவனும் செல்ல முடிவு எடுத்தவன், தினகரனையும் பழி வாங்க எண்ணி இருந்தான். அவனது அப்பாவை அவர் அவமானபடுத்தியதற்காக.

துருவன் படித்துக்கொண்டு இருந்த அதே பாடசாலையில் சேர்ந்து கொண்டவன், துருவனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளதான் படாதபாடு பட்டுப்போனான்.

துருவன் தான் அவ்வளவு எளிதில் யாருடனும் ஒட்டிக்கொள்ள மாட்டானே, இருந்தும் தானாக சென்று பேசி ஒருவாறு துருவனின் நட்பை சம்பாதித்துக் கொண்டவன் கண்கள் முதலில் படிந்தது என்னவோ ஜனனியில் தான்.

தினகரனை பழி வாங்கவும் வேண்டும், அதே வேளை தன் தந்தை விட்ட இடத்தை பிடிக்கவும் வேண்டும் என்று திட்டம் இட்டவன், அந்த வீட்டு பெண்ணின் மனதை கலைத்து அந்த வீட்டுக்குள் நுழைந்து பின்னர் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த சாம்ராஜ்யம் மூலம் தனது தொழிலை பெருக்க எண்ணியிருந்தான்.

ஆனால் அவன் திட்டம் இட்டது போல எதுவும் நடக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஜனனி துருவனின் நிழலாக வலம் வர ஜனனியிடம் பேசுவது கூட அவனுக்கு கடினமாகி போனது.

அதனால் அந்த திட்டதை கைவிட்டவன் அடுத்து கனியை தன் வளைக்குள் இழுக்க நினைத்தான். கனியும் துருவனின் நண்பன் என்று அவினேஷுடன் சகஜமாக பேசிய போதும், அவளின் மொத்த கவனமும் சரணித் மேல் தான் இருந்தது.

எப்போதும் கனியும் சரணித்தும் இரகசியமாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வதும், சரணித் கனிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயங்களையும் செய்வது, அதற்கு கனி அவனிடன் குழைந்து பேசி வெட்க புன்னகை செய்வது எல்லாம் அவினேஷிற்கு கோபத்தை தூண்ட, அவளை வைத்து எப்படியாவது அந்த வீட்டினுள் நுழைந்து விட திட்டமிட்டிருந்த அவினேஷ், கையில் ஏந்திய அடுத்த ஆயுதம் தான் சரணித் மேல் அனைவருக்கும் தவறான எண்ணத்தை வர வைத்து அவனை விலக்கி வைப்பது.

அதற்கான நாளுக்காக காத்திருந்தவனுக்கு லாவகமாக அமைந்தது தான் அவன் மாணிக்கமுடன் ப்ராஜெக்ட் விஷயமாக பேச ஏதேர்ச்சியாக பாடசாலை வந்த அந்த நாள்.

அந்த நாளில் அவர்களுடனே இருந்து வேலைகளை செய்தவன்,மாலையில் பார்ட் டைமாக போதைபொருட்களை டெலிவரி செய்யும் வேலையும் பார்த்துக்கொண்டு இருக்க அதற்காக துருவனிடம் பொய்யான காரணம் சொல்லி விட்டு அங்கிருந்து வந்தான்.

கீழே வந்து தனது பைக்கை எடுத்தவனுக்கு போன் வந்து விட அதை கதைத்துக்கொண்டு இருந்தவன் ஏதேர்ச்சையாக திரும்பி பார்க்க அங்கு கனி சீருடை முழுக்க சிவப்பு நிற பெயிண்டோடு அந்த மோட்டர் ரூமை எட்டி பார்த்துக்கொண்டு நின்றாள்.

அவள் என்ன செய்கிறாள் என்று உற்று பார்த்தவன், அவள் பையில் இருந்து உடையை எடுத்துக்கொண்டு வெளியிலே பையை வைத்துவிட்டு போவதை கண்டுகொண்டான்.

உடனே மனதில் திட்டம் திட்டியவன், மறைத்து சென்று சத்தமே இல்லாமல் அவள் பையில் இருந்து போனை எடுத்தவன் அதிலிருந்து சரணித்க்கு மெசேஜயும் தட்டி விட்டான்.

மீண்டும் அந்த மெசேஜை அழித்து விட்டு போனை பையிலே வைத்து விடலாம் என்று நினைத்து அவ்விடம் வந்தவனுக்கு, கனிஷ்டன், ஜனனி, ஹரிணி தூரத்தில் வருவது தெரிய, அவர்கள் பார்த்தால் சந்தேகம் வந்து விட கூடும் என்று நினைத்தவன் அவனுடனே போனை எடுத்துக்கொண்டு, பைக்கையும் சற்று தள்ளி நிறுத்தி வைத்துக்கொண்டு நடப்பதை பார்திருந்தான்.

அப்போதுதான் சரணித் அங்கு வந்தது, கனி சத்தம் போட்டது, கனிஷடனும் துருவனும் சேர்ந்து அவனை துவைத்து எடுத்தது என எல்லா சம்பவங்களும் நடந்துமுடிந்தது. அவினேஷ் தூரத்தில் இருந்து இதை பார்த்தவன், “நம்ம ரூட் கிளியர். “என்று நினைத்துக்கொண்டே துருவனிடம் நல்ல பெயர் வாங்க போராடிக்கொண்டு இருந்தான்.

அவனுக்கு தெரியும் துருவனின் பேச்சுக்கு வீட்டில் மறு பேச்சு இருக்காது என்று. அதனாலேயே தன் மேல் நல்ல எண்ணத்தை துருவனுக்கு வர வைத்தவன், பார்ட் டைம் ஜோப் சென்று வீட்டை பராமரிப்பதாகவும், கல்லூரி முடிந்ததும் ஏஜென்சி மூலம் லண்டனில் சென்று வேலை செய்ய போவதாகவும் சொன்னவன், லண்டன் செல்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றது என்னவோ வடநாட்டுக்கு தான்.

தன் தந்தையை நட்பு பாராட்டி அழித்தவன் உடனே அவினேஷும் கைகோர்த்து இருக்க, சிறு வயதில் இருந்தே அவனின் தந்திரத்தையும் திறமையும் பார்த்து வியந்த வடநாட்டவன் அவனை கூடவே வைத்துக்கொண்டான்.

வஜிக்கும் அனைத்து விடயங்களும் தெரியும் ஆனால் அவருக்கும் கிட்ட தட்ட அவினேஷின் மன நிலைதான். கடனின் பிடியில் அவர் மானத்தை காக்க இந்த வழி மட்டுமே என்ற நிலையில் அவரும் அவினேஷுடனே சேர்ந்து அனைத்துக்கும் ஒத்துழைத்துக்கொண்டு இருந்தார்.

அப்படியே காலமும் கனிந்து வர, அவினேஷ் அடுத்த கட்டத்தில் கால் வைத்தவன், கனியை பெண் பார்க்கும் நாடகத்தையும் நடத்தி அதில் வெற்றியும் கண்டு, திருமணம் வரை தன் திட்டத்தை கொண்டு வந்திருந்தான்.

ஆனால் கனி இப்போது அவன் திட்டம் மொத்ததையும் சுக்குநூறாக்கி இருக்க
, அவளின் மீது கொலைவெறியில் அனைத்தையும் சொல்லி முடித்தான் அவன்.
 
Status
Not open for further replies.
Top