ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 21

கடந்த கால நினைவில் சுழன்றுகொண்டிருந்தவன் கண்ணில் நீர்துளிகள் அரும்பி , இப்போது அவள் அவனுடன் நடந்து கொண்ட விதமும் அவனை வாட்டி எடுக்க, “இவளுக்காக நான் என் அழணும் ? துரோகி என்னை ஏமாத்திட்டா. “ என்று சொல்லி கண்களை துடைத்துக் கொண்டான்.

அவன் நிதானமாக யோசிக்கும் மனநிலையில் இன்று மட்டும் அல்ல என்றும் இருந்தது இல்லை.

ஜனனிக்கு இது தெரிந்திருந்ததால், “சரி எதுக்கு வந்தான் எண்டு தெரியல. போய் பேசி பார்ப்பம்.” என்று நினைத்தவள் அவனிடம் நெருங்க, “இனி உன்கிட்ட பேச எதுவும் இல்லை. என்ன விட்டு தள்ளியே இரு.” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஜனனிக்கோ அவன் அவளை உயிரோடு கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு மட்டுமே இருந்து கொண்டிருந்தது.

இதே வேளை கம்பெனியில் வேலைகளை முடித்துக்கொண்ட கனிக்கா மற்றும் கனிஷ்டன் வீட்டுக்கு புறப்பட்டு இருக்க, காரை ஓட்டிக்கொண்டு வந்த கனிஷ்டனுக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் சுழன்று கொண்டிருந்தது.

அவனுக்கு கனிக்காவிடம் எதையும் நேராக கேட்டு விட முடியாது. சரணித்தின் பிரச்சனையின் பின்னர் அவள் மனதால் எவ்வளவு பாதிக்கபட்டாள் என்பதை கூட இருந்து பார்த்தவன் அவன்.

ஆனால் அவனுக்கு அன்று என்னதான் நடந்தது என்று தெரிய வேண்டிய கட்டாயம் இருந்தது, அதற்கு காரணம் இப்போதுநடந்து கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி ஆறு வருடங்கள் முன் அரங்கேறிய கனி மற்றும் சரணித்தின் பஞ்சாயத்து தானே.

எல்லாவற்றையும் யோசித்தவன், சரணித்தை சந்தித்து பேசுவதையே அவனது முதல் கட்ட நகர்வாக்க நினைத்திருந்தான்.

கனிக்காவோ இடையில், “என்ன கனிஷ் அமைதியாவே வாற ? “ என்று கேட்க, “ஒன்னும் இல்ல, கொஞ்சம் டயர்ட். “என்றவன் வேறு ஏதும் பேசவில்லை.

கனிக்காதான் வளி முழுக்க, ஜனனி அவளை தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாகவும், எல்லாவற்றிற்கும் காரணம் சரணித் தான் என்று சொல்லி அவனுக்கு திட்டிக்கொண்டே வந்தாள்.

ஆனால் கனிஷ்டன் அதற்கு பதில் ஏதும் பேசவில்லை. இப்படியே வீட்டை வந்து அடைந்தவர்கள் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட, அவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்தது என்னவோ இரவு உணவு உண்ணும் வேளையில்தான்.

வாணி எல்லாருக்கும் உணவு பரிமாறிக்கொண்டிருக்க கௌரியோ , , “என்னப்பா துருவ், அடுத்த மாசமே ஒரு நல்ல நாள் குறிச்சிடுவமா? “ என்று கேட்டார்.

துருவனோ, “எதுக்கு? “ என்று சாப்பிட்ட படியே கேட்க, “ வேற எதுக்கு உனக்கு ஜனனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கதான். “ என்றார் அவர்.

அவனோ கௌரியை முறைத்தவன், “இப்போ அதுக்கு என்ன அவசரம்? “ என்று கோபமாகவே கேட்க, “எங்களுக்கு எந்த அவசரமும் இல்ல உனக்குத்தான்.. “ என்றார் அவர்கள் மனநிலை பற்றி அறியாத கௌரி அவர்களை நக்கல் செய்யும் பொருட்டு.

தினகரன், சுந்தரம் மற்றும் வாணி சிரித்துக்கொள்ள, “என்னாச்சு அம்மா? “ என்று கேட்டாள் கனி.

கௌரி மாலை துருவன் ஜனனி அறைக்கு சென்றதையும் அவள் அலறியதையும் நக்கலாக சொல்ல, கனிக்காவோ, “ஓஹ் அப்போ சேர்ந்துடாங்க போல. “ என்று நினைத்து சந்தோஷபட்டாள்.

கனிஷ்டன் தான், “என்னடி நடக்குது இங்க? எங்கள எல்லாம் பார்த்தா உங்களுக்கு முட்டாள் மாதிரி தெரியுதா? “ என்று பக்கத்தில் அமர்ந்திருந்த ஜனனி காதில் குறுகுறுக்க, “நடந்தது முழுசா தெரியாம பேசிட்டு இருக்காங்கடா. இப்போ அவன் பண்ற ரகளைய மட்டும் பாரு. “ என்றாள் அவள்.

அவள் சொன்னால் போலவே, சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை தட்டி விட்டு, கதிரையை காலால் உதைத்து எழுந்த துருவன், “எத எங்க எப்படி பேசணும் எண்டு உங்களுக்கு விவஸ்த்த இல்லையா அம்மா? “ என்று சத்தம் போட்டான்.

கௌரியோ அவன் பேச்சில் அதிர்ந்து தள்ளி நிற்க, “துருவ் அம்மா கிட்ட பார்த்து பேசு. “ என்றாள் அந்த வீட்டில் அவனை எதிர்த்து பேசும் உரிமம் கொண்ட அவனது தங்கை கனி.

அவன் அவளையும் முறைத்தவன் அங்கே இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து எறிந்து உடைத்துவிட்டுத்தான் சென்றிருந்தான்.

கௌரியோ இன்னும் அதிர்ந்து போய் நிற்க அவர் கண்கள் கலங்கி போய்இருந்தது.

தினகரனோ, “ கௌரி உன்மேல தான் தப்பு. வளர்ந்த புள்ள அவன். அவனோட பர்சனல் விஷயங்களை இப்படித்தான் எல்லார் முன்னாடியும் பேசுவியா? “என்று கேட்டு கைகளை கழுவி விட்டு எழுந்து கொள்ள, சுந்தரமும், “நம்ம துருவ் தானேமா, அவனே கோபம் குறைய வந்து பேசுவான். என்று சொல்லி அவர் பின்னே சென்றார்.

வாணிதான் கௌரியை சமாதானம் செய்ய, கனிக்காவும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.

இடையில் கனிஷ்டன் ஜனனியிடம் நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டவன், “போய்ட்டு இருக்குற பிரச்சனைய சமாளிக்குறதே பெரும் பாடா இருக்கு இதுக்குள்ள இவங்க வேற பிரச்சனைய கூட்டிக்கிட்டே போறாங்க. “என்றான்.

துருவனோ, எதற்கு கோபப்படுகிறோம், ஏன் கோபப்படுகிறோம் என்று ஏதும் புரியாத நிலையில் ஜனனி மீது இருந்த கோவத்தில் எல்லோர் மீதும் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்.

கனிக்கா மற்றும் கனிஷ்டன் வந்து கௌரியிடம் மன்னிப்பு கேட்டு பேசுமாறு சொல்ல அவர்களையும் திட்டி அனுப்பியிருந்தவன் நிதானமாகவே இல்லை.

அடுத்த நாள் காலையில் கண் விழித்த துருவனுக்கு முதல் நாள் அவன் செய்த செயல்களின் வீரியம் புரிய, “எல்லாம் அவளாலதான். “என்று சொன்னவன், கல்லூரிக்கு செல்ல ஆயத்தம் ஆகி வந்து சாப்பிட அமர்ந்து இருக்க, அமைதியாகவே அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் கௌரி.

அவனோ, “அம்மா! சாரிம்மா, நேற்று கொஞ்சம் கோபபட்டுட்டேன். “ என்று சொல்ல, “இல்லப்பா, என்மேலதான் தப்பு. எத பேசணும் எப்படி பேசணும் என்று தெரியாம பேசிட்டேன். “என்றார் கௌரி.

நேற்று இரவு தினகரன் கௌரிக்கு அவர் செய்த தவறை உணர்த்தி இருக்க, தான் அவ்வாறு எல்லோர் முன்னிலையிலும் பேசியது தவறு என்று உணர்ந்து கொண்டாலும் துருவன் அங்கு நடந்து கொண்டது அவருக்கு மனவலியை கொடுத்தது. அவருக்கு மட்டும் இல்ல தினகரன். சுந்தரம் மற்றும் வாணிக்கும் அதே உணர்வுதான்.

துருவனுக்கு கௌரி அவ்வாறு பேசுவது நெருடலாக இருக்க, “சாரிம்மா “ என்று சொன்னவனின் தலையை கோதியவர், “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அம்மாக்கு கோவம் இல்ல. நீ சாப்பிடு. “ என்று தனது வேதனையை தன்னுள் புதைத்துக்கொண்டார் அவன் கலங்கிவிட கூடாது என்பதற்காக.

ஆனால் அவருக்கு தெரியாது அவன் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்து கைவிட்டு செல்ல காத்திருக்கிறான் என்பது.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 22

இப்படியே மூன்று நாட்கள் கழிந்து ஞாயிற்றுக்கிழமையும் வந்திருக்க அன்றுதான் கனிஷ்டன் வேலைகள் இன்றி வீட்டில் ஒய்வாக இருந்தான்.

அவன் உடல் ஒய்வாக இருந்தால் கூட மூளை துரிதவேகத்தில் வேலை செய்து கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இடையில் ஏதோ நியாபகம் வந்தாற் போல் போனை எடுத்தவன் அடுத்து அழைத்தது என்னவோ சரணித்துக்கு தான்.

மறுபக்கம் ஜிம் முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சரணித் போன் அடித்ததும் பைக்கை ஓரம் கட்டியவன் போனை எடுத்து, “ஹலோ!” என்று சொல்ல மறுபக்கம் பதில் ஏதும் வரவில்லை.

சரணித் மறுபடியும், “ஹலோ, யாரு?” என்று கேட்க, மறுபக்கம் இருந்து குரலை செருமிய கனிஷ், “நான் கனிஷ் பேசுறன். உன்னை இன்னைக்கு மீட் பண்ண முடியுமா? “ என்று கேட்டான்.

சரணித்தின் கண்களோ மலர்ச்சி அடைய, “கனிஷ் நீயா? “என்றவன்” கண்டிப்பா மீட் பண்ணலாம். எங்க வரணும்னு சொல்லு. “ என்று கேட்டான்.

கனிஷ்டனும் அவனின் நண்பனின் ஹோட்டல் ஒன்றின் பெயரை சொன்னவன், “லொகேஷன் அனுப்புறேன் ஈவினிங் சிக்ஸ்க்கு வந்துடு. “ என்று சொல்லி வைத்திருந்தான்.

சரணித்க்கு மீண்டும் தனது ஆருயிர் நண்பனை சந்திக்க போகும் மகிழ்ச்சி இருந்தாலும், அவன் மீண்டும் தன்னை நோகடித்து விடுவானோ என்ற பயமும் இருக்கதான் செய்தது.

கனிஷ்டன் சரணித்துடன் பேசி விட்டு கீழே வர, அங்கு அவினேஷும் அவனது அம்மாவும் வந்துகொண்டிருந்தனர்.

கனிஷ்டன் அவர்களை வரவேற்றவன், பெரியவர்களையும் அங்கு அழைத்திருந்தான்.

கௌரி இருவருக்கும் ஜூஸ் கொண்டு கொடுத்து விட்டு நகர, அவினேஷின் அம்மாவான வஜியோ, “அம்மா இருங்க உங்க எல்லார் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். “என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே துருவனும் கனியும் ஜோக்கிங் போனவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

துருவனோ, “டேய் அவினேஷ்! எப்போடா லண்டன் இருந்து வந்த? “ என்று கேட்டு அவனை அணைத்துக்கொள்ள, “நேற்று வந்தேன்டா.”என்றவன், “உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுதான் நேர்ல வந்து பேசிட்டு போகலாம்னு..” என்று இழுத்து அவனது அம்மாவை பார்த்தான்.

வஜியோ, “எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியாது நேராவே சொல்லிடுறேன். அவினேஷ்க்கு உங்க வீட்டு பொண்ணு கனிய பொண்ணு கேட்டு வந்திருக்கேன் “என்றுவிட அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

கனியோ, “என்னது? “ என்று விக்கித்து நிற்க, “இது எப்போ இருந்து? “ என்றுதான் கேட்டான் துருவன்.

அவினேஷோ துருவனை பற்றி தெரிந்தவன் சற்று தடுமாறிய படியே, “ ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே கனிய புடிக்கும். ஆனா அப்போ என்னால சொல்ல முடியல, நான் செட்டில் ஆயி, அவளை நல்லபடியா வச்சு பார்த்துக்குற அளவுக்கு வளர்ந்ததும் அம்மாவை அழசிட்டு வந்து பேசலாம் என்றிருந்தன். “என்றான்.

வஜியும், “அவன் இத்தனை வருஷமா என்ன பிரிஞ்சி லண்டன்ல இருந்ததே அவன் எதிர்காலத்துக்காக சேர்த்து வைக்கதான்.இரவு பகலா தூக்கம் இல்லாம உழைப்பான். ஏன்னு கேட்டா, கனிய நல்லா வச்சு பார்த்துக்கணும் அதுக்கு இப்போ கொஞ்சம் கஷ்டபட்டுக்குறேன் என்று சொல்லுவான். “ என்று அவரது மகனின் காதலுக்காக பேசியிருந்தார்.

அவினேஷோ அவனது அம்மாவை தட்டியவன், “இதெல்லாம் சொல்லுவீங்களா? சும்மா இருங்கம்மா. “ என்று சொல்ல, கனிக்குதான் அங்கு முகம் சிவந்து போனது.

துருவனும் அதை கண்டு கொண்டவன், “என்ன கனி அவன் பேசுனதிலயே விழுந்துட்ட போல? “என்று கேட்க, அவனின் தோளில் தட்டியவள் அதற்கு மேலும் அங்கு நிற்காது குடுகுடுவேன ஓடிச்சென்றாள்.

ஜனனியும் இதை எல்லாம் கேட்டுவிட்டு நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை மறந்து கனியின் பின்னால் சென்றவள், அவளை கலாய்த்து தள்ளியிருந்தாள்.

கனிக்கு அன்று பேசியது கவலை அளித்திருந்தால் கூட இன்று அது மொத்தமும் மறைந்து போயிருந்தது அவளது கலக்கலான பேச்சில்.

இடையில் பெண் வீட்டாருக்கு தான் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள், எல்லோரும் கலந்து பேசிவிட்டு , “எங்க பொண்ணுக்கு புடிச்சு இருந்தா எங்களுக்கும் சம்மதம்.“ என்றுதான் சொல்லியிருந்தார்கள்.

வஜியோ, “சந்தோஷம்! அப்போ பொண்ண கூப்பிடுங்க அவகிட்டயே கேட்கலாம். “ என்று சொல்ல, வாணி மற்றும் கௌரி அவளை அழைத்து வர சென்றார்கள்.

இடையில் அவர்களை தடுத்த கனிஷ்டனும் துருவனும், “இருங்க இருங்க! எங்க தங்கச்சிய நாங்க கூட்டிட்டு வாறம். “ என்று சொல்லி முந்திக்கொண்டனர்.

இருவரும் கனியின் அறைக்கு செல்ல அங்கு ஜனனி மற்றும் கனி மாறி மாறி கலாய்த்து சிரித்துகொண்டிருந்த காட்சி அவர்களின் கண்களுக்கும் இதமாகதான் இருந்தது.

சிறிது நேரத்திலே துருவனின் முகம் ஜனனியை கண்டு இறுகி போக, கனிஷ்டன் அவனின் தோளில் கை போட்டு அழைத்து சென்றவன், “ஹேய் உன்னை கீழ வரசொல்றாங்க. “என்றான் கனியை பார்த்து.

அவளோ, “நானா? நான் எதுக்கு? நான் வரல.. “ என்று சொல்ல, அவனது தங்கையின் முகத்தில் இருந்த செழிப்பு துருவனின் காயங்களுக்கு மருந்தாகி விட்டது .

உடனே, “அப்போ வாடா கனிஷ் நம்ம போய் பொண்ணுக்கு பையன புடிக்கல எண்டு சொல்லிடலாம் “என்று அவளை வம்பிழுக்க,”நான் எப்போ அப்படி சொன்னன்!”என்று அதிர்ந்து விட்டாள் கனி.

மூவரும் அவளை பார்த்து சிரித்துக்கொள்ள, “சும்மா சும்மா என்ன கலாய்க்குற வேல வச்சுக்காதீங்க. “ என்றாள் அவள்.

துருவனோ, “சரி சரி வா போகலாம். “ என்று சொல்லி அவள் கையை புடித்து கூட்டி செல்ல, “இரு! இரு! இப்படியா கூட்டிட்டு போவ? “என்று கனி அணிந்திருந்த உடையை காட்டி கேட்டாள் ஜனனி.

துருவனோ, “இப்போ இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்?” என்று அவளிடம் மட்டும் கோபமாகவே பேச, “ அவங்க பொண்ணு பார்க்குற செட்அப்ல வந்திருக்காங்க. இவ இப்படி வேர்த்து வழிய ஜீன்ஸ், டீஷர்டோட போய் நின்னா நல்லாவா இருக்கும்? புடவை கட்டி போனா ஒரு நல்ல வைப் குடுக்கும் “என்று சொல்ல அது துருவனுக்கும் சரியாகவே பட்டது.

தலையை கோதியவன், “சரி கட்டிட்டு கூப்பிடு வெளிய நிக்கிறோம். “ என்று சொல்ல, “எங்க போறீங்க? “ என்று கேட்ட ஜனனி டவலை தூக்கி கனியிடம் கொடுத்தவள், “குளிச்சுட்டு வா. “ என்று விட்டு, “நீங்க இரண்டு பேரும் சாரீ ப்ளீட் பண்ணுங்க . “என்றாள்.

துருவனோ, “என்ன? “ என்று கேட்க, அவளோ, “என்ன கனிஷ் உன் அண்ணனுக்கு காதும் அவுட் ஆயிடிச்சா? “ என்று கேட்டாள்.

துருவனோ, “ஏய்! “ என்று எகிற, கனிஷ்டன் தான், “இவங்க இரண்டு பேருக்கு நடுவுல நம்ம மாட்டிக்கிட்டமே. “ என்று நினைத்துக்கொண்டான்.

ஜனனி எதையும் கண்டுகொள்ளாதவள், கனியின் பீரோவை திறந்து அவளது போன வருட பிறந்தநாளுக்காக வாங்கிய புடவையை எடுத்தவள், “இந்தாங்க புடிங்க “என்று அவர்கள் கையில் அதை கொடுத்து, “ப்ளீட் பண்ணுங்க. “ என்றாள்.

கனிஷ்டனோ, “ஹேய் சத்தியமா எப்படி பண்ணனும் என்றே தெரியாதுடி எங்களுக்கு. “ என்று சொல்ல, “உனக்கு தெரியாதுனு சொல்லு உன் அண்ணாக்கு அதெல்லாம் அத்துப்படி. “என்றாள் அவள்.

கனிஷ்டன் துருவனை மேலிருந்து கீழாக பார்க்க, அவனின் தலையை திருப்பி விட்டு , “ வந்து சொல்றத பண்ணு. “என்றவன் புடவைக்கு அழகாக ப்ளீட் எடுத்துக்கொண்டிருந்தான்.

ஜனனி மேட்ச்சிங்க் ஜாக்கெட்டை தேடி எடுத்தவள் அதை அயன் செய்து கொண்டே, துருவனையே எக்கமாக பார்த்ததாள்.

அவளின் பிறந்தநாளுக்கு சேலை எடுத்துக்கொடுத்தவன், அவளுக்கு கட்ட தெரியாது என்று சொல்ல அன்று இரவு முழுவதும் யூடியூபில் வீடியோ பார்த்து அடுத்த நாள் காலை அவனுக்கு உரித்தான சில்மிஷங்கள் உடனே அவளுக்கு சேலையும் கட்டுவித்திருந்தான்.

இதை நினைத்து பார்த்தவளுக்கு, உதட்டின் அருகில் வெட்க புன்னகையும் மலர, இதை கண்டுகொண்ட கனிஷ்டன், “என்ன ஜனனி எதையோ யோசிச்சு பார்த்து சிரிக்குற போல இருக்கு? “ என்று கேட்டவன், “துருவ் என்கூடதானே இருப்ப இடைல எப்படி இதெல்லாம் பழகி அவளுக்கு கட்டி விடுற அளவுக்கு வளர்ந்த? “ என்று கேட்க அவனின் தலையில் ஓங்கி கொட்டிய துருவன், “சும்மா உளறிட்டு இருக்காம சேலைய ஒழுங்கா புடி “ என்றான்.

பின்னர் கனிக்காவும் குளித்து முடித்து வர, ஜனனி அயன் செய்து வைத்திருந்த ஜாக்கேட்டை அவளிடம் கொடுத்து போட்டு வர சொன்னவள், சேலை கட்டும் பணியில் இருந்து விலகி நின்று விட துருவன்தான் அதை செவ்வனே செய்துகொண்டிருந்தான்.

இடைக்கிடையில் ஏதாவது தேவை என்றால் மட்டும் ஜனனியை பார்ப்பான், அவளும் அவன் கண் அசைவினை கரைத்து குடித்திருக்க அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொண்டு அதை செய்து முடிப்பாள்.

சேலையை கட்டி தேவதை போல் நின்றிருந்த கனியை துருவனும் கனிஷ்டனும் மாறி மாறி அணைத்துக்கொள்ள, ஜனனி வந்து அவளை அணைத்தவள், “சாரி கனி. “ என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் இட்டாள்.

கனிஷ்டன், கனி மீது தவறு இருக்காது அங்கு வேறு ஏதாவது நடந்து இருக்கலாம் என்று சொல்ல அவள் மனதும் அதை ஏற்க ஆரம்பித்து கனி மீதிருந்த கோபமும் மறைந்து போனது.

கனியும், “லூசு அதெல்லாம் ஒன்னும் இல்ல. விடு “ என்றவள். அனைவருடனும் கீழே செல்ல, அவளின் வருகைக்காக காத்திருந்த அனைவரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவினேஷோ, கண் வெட்டாமல் அவளையே பார்க்க, “ வாய துடைச்சிக்கோடா ஜொள்ளு ஓவரா வழியுது. “என்று நக்கல் செய்தான் துருவன்.

கனிக்கா வெட்கத்தில் சிவந்திருக்க அவளது சம்மதம் கேட்கபட்டது, சபையிலே அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க அன்றே பஞ்சாங்கம் பார்த்து ஒரு மாதத்திற்கு பின்னர் நல்ல நாள் குறிக்கப்பட்டு அவர்களது திருமணமும் உறுதியானது.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 23

அன்றைய நாளில் அந்த வீடே சிரிப்புக்கு பஞ்சம் இன்றி கலகலப்பாகவே இருந்தது. அந்த வீட்டின் இளவரசிகளில் ஒருத்திக்கு திருமணம் என்றால் கேட்கவா வேண்டும்!

துருவனுக்கும் அவினேஷை சிறுவயதில் இருந்து தெரிந்ததாலும், அவனின் சொந்த உழைப்பில் அவன் முன்னேறியதை கூடவே இருந்து பார்த்ததாலும் கனியை அவனுக்கு திருமணம் செய்து வைக்க அவன் சம்மதம் தெரிவித்திருந்தான்.

துருவனின் சம்மதமே அங்கு எல்லோருக்கும் போதுமானதாக இருக்க திருமண நாள் வரை குறித்து இருந்தார்கள்.

கனிஷ்டன் அந்த சந்தோஷங்களில் பங்கு பற்றிருந்தால் கூட அவன் மனதின் ஓரத்தில், “இந்த சந்தோஷம் கடைசி வரை நிலைக்குமா ? “ என்ற வலியும் இருந்தது. அதற்கு காரணம் ஜனனிக்கும் துருவனுக்கும் இடையில் இருக்கும் மனஸ்தாபங்கள் தான்.

அப்படியே நேரம் கடக்க கனிஷ்டனும் புறப்பட்டு சரணித்தை சந்திப்பதற்காக வந்திருக்க அவனும் அங்கு காத்துக்கொண்டிருந்தான்.

இருவரும் எதிர்எதிரே அமர்ந்திருக்க அவர்கள் மத்தியில் அமைதி மட்டுமே குடிகொண்டிருந்தது.

எப்படி ஆரம்பிப்பது? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று இருவருக்கும் தெரியவில்லை.

சரணித்தோ ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவன், அங்கிருந்த அமைதியை கலைத்து “எப்படி இருக்கடா? “ என்று கேட்டான்.

கனிஷ்னும், “ஹ்ம்ம் நல்லாருக்கன். நீ? “ என்று கேட்க, “நல்லாருக்கன். “என்றான் சரணித்.

கனிஷ்டன் அதன் பின்னர் பேச தொடங்கியவன், “சுத்தி வளச்சு பேச விரும்பல. நான் நேரா விஷயதுக்கே வாறன். அன்னைக்கு ஸ்கூல்ல நடந்த இஸ்சுல உன்னோட சைடு என்னாச்சுன்னு நீ சொன்னத ஜனனி என்கிட்ட சொன்னா.

ஆனா கனி மேலே தப்பு இருக்கும்ணு எனக்கு தோணல. என்னா அவ அதுல இருந்து வெளிய வர எவ்வளவு கஷ்டப்பட்டாணு எனக்கு தெரியும்.“என்று சொல்ல சரணித்தின் முகம் வாடியது.

மேலும் தொடர்ந்த கனிஷ், “எனக்கு இதுல வேற ஏதோ நடந்து இருக்கும்னு தோணுது. சோ நீயும் எனக்கு ஹெல்ப் பண்ணா அன்னைக்கு உண்மையாவே என்ன நடந்துச்சு என்றத கண்டுபிடிச்சிடலாம்.

இதனால துருவுக்கும் ஜனனிக்கும் ஏகப்பட்ட பிரச்சனை போய்ட்டு இருக்கு. உன்மேல தப்பு இல்லணு அவனுக்கு புரிய வச்சுட்டா போதும். அவங்க பிரச்சனை தீர்ந்திடும். “என்றான்.

சரணித்தோ அவன் சொல்வதை எல்லாமே கேட்டிருந்தவன் , “நீ என்ன நம்புறியாடா? “ என்றுதான் முதலில் கேட்டான். கனிஷ்டன் அமைதியாகவே இருக்க, அவனது வாழ்கையின் மறுபக்கத்தை கனிஷ்டனிடம் பகிர்ந்துகொள்ள தொடங்கியிருந்தான் சரணித்.

சரணித்தின் அம்மா மலை கிராமம் ஒன்றில் கூலி வேலை செய்துகொண்டு இருந்தவர், அவருக்கு சொந்தம் என்று சொல்வதற்கு யாருமே இருக்கவில்லை.

இப்படி அவர் வாழ்கை சென்று கொண்டிருந்த போது தான் அங்கு முதலாளியாக வந்து சேர்ந்த ஒருவன் ஆசை வார்த்தை காட்டி அவரை ஏமாற்றி, சரணித்தையும் அவருக்கு கொடுத்து விட்டு மாயமாகி இருந்தான்.

சுற்றார் கண்டபடி இகழ்ந்து பேசினாலும், தன் குழந்தை என்று சரணித்தை ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்தவர் அவனை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

சரணித் ஒன்பதாம் வகுப்பு வரை அந்த மலைகிராமத்திலே படித்து வந்தான். என்னதான் ஒரு வேளை சோற்றுக்கே அவர்கள் வீட்டில் வழிஇல்லை என்றாலும் அவனின் படிப்பை மட்டும் அவனின் அம்மா விட்டுக்கொடுக்கவில்லை.

அவரின் கடந்தகால வாழ்க்கையை கூட சரணித்க்கு சொன்னவர், பெண்களை மதித்து நடக்கவும் அவனுக்கு சொல்லிக்கொடுத்தார்.

அவனும் படிப்பில் கெட்டிக்காரணாகவே இருக்க, அந்த மலை கிராமத்தில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் தான் அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் மாணிக்கத்தின் அறிமுகம் கிடைத்து இருந்தது.

மாணிக்கமும் அவனது திறமைகளை கண்டு மெச்சியவர் அவனை பற்றி தெரிந்ததும் சற்று மனம் உடைத்து போனார்.

உடனே அவனின் அம்மாவிடம் சென்று சரணித்தை தான் படிக்க வைப்பதாகவும், தன்னுடன் அழைத்து சென்று தான் வேலை பார்க்கும் ஸ்கூலிலே அவனை சேர்த்து விடுவதாகவும் சொன்னவர், அவன் அம்மாவின் அனுமதி பெற்று தன்னுடனே அவனை அழைத்துக் கொண்டு வந்தார்.

சொன்னாற்போல் அவனை தன்னுடைய வீட்டிலே தங்க வைத்தவர், அவனை ஸ்கூலிலும் சேர்த்து விட்டிருந்தார்.

அப்போது முதல் நாள் பாடசாலை சென்று கொண்டிருக்கும் போதுதான் கனி தனியாக சைக்கிளில் வந்து அவனுடன் மோதி விழுந்தாள்.

அவனுக்கு முதல் முறை அவளை பார்த்த போதிருந்தே அவள் மீது ஈர்ப்பு உண்டாக, அவளின் இரட்டை ஜடை, நெற்றிப் போட்டு என அவளை ரசித்துப்பார்த்தவன், அவள் விழுந்ததால் ஏற்பட்ட இரத்த காயங்கள் மற்றும் அவளின் ரசிக்கும் படியான அழுகை கண்டு சற்று துடித்துப்போனான்.

அந்த சமயத்தில் தான் கனி போன் போட்டு சொன்னதில் துருவன், கனிஷ்டன், ஜனனி, ஹரிணி என அனைவரும் வந்திருக்க அவர்களுடன் பழக்கம் ஆகிருந்தான்.

பின்னர் அந்த சந்தோஷமான நாட்கள் வருடங்களாக உருண்டோட கனிக்கும் அவனுக்கும் மனகசப்பை ஏற்படுத்திய அந்த நாளும் வந்து சேர்ந்தது.

அந்த நாளின் கசப்பான அனுபவங்களை தொடர்ந்து அவன் அங்கு இருக்கவே விரும்பவில்லை. மாணிக்கம் அவனிடம் எவ்வளவு எடுத்து சொல்லியும், “இனி பொம்புள பொறுக்கி என்ற பெயரோட நான் அவங்க முகத்துல முழிக்க மாட்டேன். “ என்றவன் அடம்பிடித்து அவனது மலைகிராமத்துக்கே சென்றிருந்தான்.

மாணிக்கமும் அவனுக்கு அங்கு சென்று படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்க, நடந்ததை அனைத்தையும் அவனது அம்மாவிடம் இருந்து மறைத்து, “நான் உங்க கூடவே இருந்து படிச்சுக்கிறேன். “என்று சொன்னவன் நல்ல பெறுபெறுகள் உடன் அவனது பள்ளி படிப்பை முடித்து அங்கேயே இருக்கும் கல்லூரியில் சேர்ந்து கொண்டான்.

இடையில் அவனது தாய் கேன்சர் நோயாலும் பாதிக்கப்பட்டிருக்க அவரையும் நல்ல படியாக பார்த்துக் கொண்டவன், கல்லூரி முடிந்து வந்து கிடைக்கும் வேலைகளை செய்து அவரது மருத்துவ செலவையும் ஈடு செய்தான்.

அப்படியே நாட்கள் ஓட, கல்லூரி படிப்பையும் முடித்தவன் அங்கேயே லெக்சரராக சேர்ந்து பணியாற்றிய சமயத்தில் தான் அவனது அம்மாவும் இறைவனடி சேர்ந்திருந்தார்.

அவருக்கு சகல மரியாதையுடன் இறுதி சடங்கை முடித்தவன், முறை கெட்ட பிறப்பு, அப்பன் பெயர் தெரியாதவன் என்று அவனுக்கும் கெட்டு போனவ என்ற அவனது அம்மாவின் களங்க பெயர்களையும் துடைத்து அவருக்கு மரியாதையை வாங்கிக்கொடுத்திருந்தான்.

பின்னர் அவனது நாட்கள் தனியாகவே கழிய,நண்பர்களின் முகங்கள் மட்டும் அவனது நினைவுகளில் இருந்து அகலவில்லை.

அப்போதுதான் கனிமேல் அவனுக்கு இருந்த ஈர்ப்பும் காதலாக மாறி கனிந்து இருக்க அதற்கு மேலும் பொறுமை இல்லாதவன், எது நடந்தாலும் சரி அன்றைய தினம் நடந்ததில் தன் மீது தவறேதும் இல்லை என்று நிரூபிக்க நினைத்து புறப்பட்டு இருந்தான்.

ஆனால் அவனுக்கே அதிர்ச்சி ஜனனி, ஹரிணி, துருவன் இருக்கும் அதே கல்லூரியில் அவனுக்கு வேலை கிடைத்திருந்ததுதான்.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 24

இவை அனைத்தையும் சொல்லி முடிக்கும் போதே சரணித்தின் கண்களில் இருந்து தாரைதாரையாக நீர் வழிந்தது.

கனிஷ்டன் அவனது வாழ்க்கையை அறிந்து வருந்தியவன் உடனே அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து தோளை தடவிக்கொடுத்தான்.

சரணித் அவனது கண்களை துடைத்தவன், “ இப்படி ஒரு சூழல்ல நான் வாழ்ந்து இருக்கும் போது எப்படிடா ஒரு பொண்ணு கிட்ட நான் தப்பா நடந்துப்பேன்? அதுவும் நான் மனசார விரும்புன ஒரு பொண்ணு கூட!” என்று சொல்ல, கனிஷ்டனுக்கு தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்த கனிஷ்டன், “சாரிடா.. “என்றவன்,” உன்னோட பெஸ்ட் பிரன்ட் நான் என்று சொல்லுவியே! ஆனா உன்னபத்தி எதுவுமே என்கிட்ட உனக்கு சொல்ல தோணலல! அப்படி நீ சொல்லி இருந்தாலுச்சும் அன்னைக்கு நான் உன்னோட சைட்டும் யோசிச்சு இருப்பேன். “ என்றான்.

சரணித்தோ வெற்றுப்புன்னகை ஒன்றை பதிலளித்தவன், “அந்த டைம்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கும், என்ன பத்தி யாருக்கும் தெரிஞ்சா எங்க என்கூட பேசாம போயிடுவாங்களோ எண்டு. அதனாலேயே என்ன பத்தி யார்ட்டயும் சொல்லல. “ என்க, அவனை அணைத்துக்கொண்ட கனிஷ்டன், “சாரிடா மச்சான். “ என்று சொல்லி ஆறு வருட பிரிவை அங்கு முடித்துக்கொண்டான்.

அதன் பின்னர் இருவரும் இந்த ஆறு வருட இடைவெளியில் நடந்த சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள, கனிஷ்டனோ இன்று கனியின் திருமணத்திற்கு நாள் குறிக்கபட்டிருப்பதையும் சற்று தயங்கிய படியே சொன்னான்.

சரணித்தின் இதயம் அப்போது நொறுங்கும் அளவுக்கு வலித்தாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாதவன், “அவினேஷா? நல்ல பையன் தான். “என்றான்.

கனிஷ்டனோ அவனை அதிர்ந்து பார்த்தவன், “உனக்கு வருத்தம் இல்லையா? “ என்று கேட்டான். சற்று முன்னர் அவன் கனியின் மீது காதல் இருப்பதாக சொல்லியிருந்ததை மனதில் வைத்துக்கொண்டு.

சரணித்தும் வலிகளை மறைத்தவன், “இல்லணு சொல்ல மாட்டேன். ஆனா பரவால்ல அவள் நல்லா இருந்தா சரி. நினைச்சது எல்லாமே நடக்குற கொடுப்பனை எனக்கு இல்ல. “என்றான்.

கனிஷ்டன் அவன் முதுகில் தட்டியவன், “உனக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைக்காமலா போய்டுவா? “ என்று கேட்டு சிரித்துக்கொண்டான்.

சரணித்தோ, “அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு லவ் ஏதாச்சும்??? “ என்று கேட்க சலிப்பாக தலையை ஆட்டியவன், “இல்ல டா.. யாரும் என்ன பார்க்கல அதனால நானும் யாரையும் பார்க்கல. “ என்றான்.

அவ்வாறு பேசியே அவர்கள் நேரம் கழிய, மன திருப்தியுடனே அங்கிருந்து வீட்டுக்கு சென்றிருந்தான் கனிஷ்டன்.

ஆனால் சரணித்தின் மனது மட்டும்தான் கனிக்கு திருமணம் என்ற செய்தியை அறிந்ததில் இருந்து வலியால் உழன்றுகொண்டிருந்தது.

இவர்கள் கூட்டணி சேர்ந்திருக்க, இதை ஜனனி மூலம் அறிந்த ஹரிணியும் அவனோடு ஓட்டிக்கொண்டாள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் தான், துருவனின் வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்கும் நாளும் வந்து சேர்ந்தது.

அன்று எல்லோரும் வேலைகளை முடித்து இரவு உணவருந்தி விட்டு தினகரனின் அழைப்பை ஏற்று ஹாலில் ஒன்றுகூடியிருந்தனர்.

தினகரனும் சுந்தரமும் வந்து அவர்கள் முன்னால் அமர்ந்திருக்க, கௌரியோ, “சொல்லுங்க.. சொல்லுங்க.. “ என்று சொல்லி தினகரனை சுரண்டிக்கொண்டிருந்தார்.

துருவனோ அவர்களை கேள்வியாக பார்திருக்க, பேச தொடங்கிய தினகரன், “துருவ்!,மூத்த பையன் உன்னை வச்சிட்டு கனிக்கு கல்யாணம் பண்றது சரியா இருக்காது. அதனால முதல்ல உனக்கும் ஜனனிக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்புறம் கனிக்கும் அவினேஷ்க்கும் வச்சுக்கலாம். “என்றார்.

கனிஷ்டன் மற்றும் கனிக்கா ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்து சபைக்கு தெரியாமல் கைகுலுக்கி கொள்ள, ஜனனி தான், “இவன் என்ன சொல்ல போறானோ? “என்று நினைத்து துருவனை பார்த்து நின்றாள்.

நடப்பது எல்லாம் கனிஷ்டனின் ஏற்ப்பாடாகவே இருந்தது. அவர்கள் இருவரும் இவ்வாறே சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மனதால் விலகி விடுவார்கள் என்று அவன் சரணித்திடம் புலம்ப, அவன்தான், “ என்னோட பிரச்சனைய அப்புறம் பார்த்துக்கலாம், முதல்ல வீட்ல பேசி அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வை. அதுக்கப்புறம் அவங்க பிரச்சனை சரியாகிடும் “ என்று ஐடியா கொடுத்திருந்தான்.ஆனால் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை இதனால் தான் பெரிய கலவரமே வெடிக்க போகிறது என்பதை.

கனிஷ்டனும் அதை கனிக்காவுடன் தன்னுடைய யோசனை என்று சொல்லி பகிர, அவளுக்கும் துருவன் மற்றும் ஜனனியின் பிரிவில் கவலை கொண்டிருந்தவள் கனிஷ் டனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி , ஒரு போலி பூசாரிக்கு பணம் கொடுத்து கோவிலுக்கு சென்ற வாணி மற்றும் கௌரியிடம், “ மூத்த பையன வச்சுட்டு பொண்னுக்கு கல்யாணம் பண்ணினா குடும்பத்திற்கு ஆகாது. “என்று சொல்ல வைத்து மனதை குழப்பி விட்டிருந்தனர்.

உடனே வீட்டுக்கு வந்து தினகரன் மற்றும் சுந்தரத்துக்கு இதை சொன்னவர்கள் அவர்களையும் குழப்பி விட்டு இப்போது துருவனுடன் இது பற்றி பேசும் அளவுக்கு கொண்டுவந்திருந்தனர்.

துருவனுக்கு இதில் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அவனை பொறுத்த ஜனனி இப்போது சரணித்தை காதலித்துக்கொண்டு இருக்கிறாள்.

அவனோ ஜனனியை பார்க்க, அவளோ அவன் முகத்தையே பார்த்து இருந்தாள்.

துருவனோ, “இப்போ ஏன் இந்த திடீர் முடிவு? “ என்று கேட்க, ஜோஷியம், தோஷம்,குடும்பத்திற்கு கூடாது என்று ஆளுக்கு ஆள் பேசி அவனை ஒரு வழி செய்திருந்தனர்.

துருவன் ஏரிச்சலாக எழுந்தவன், “என்னால இவளை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது. “என்று சொல்ல, சுந்தரம் நெஞ்சை பிடித்துக்கொண்டார்.

ஜனனியோ, “ அப்பா! என்னாச்சு? “ என்று அவர் அருகில் ஓடி வர, கனிக்கா ஓடிச்சென்று அவருக்கு நீர் கொண்டு கொடுத்தாள்.

அனைவரும் அவரை சூழ்ந்து கொள்ள, “என்னடா நினைச்சுட்டு இருக்க? அவளும் நீயும் லவ் பண்றது இந்த ஊருக்கே தெரியுமே! இப்போ எதுக்கு இப்படி சொல்ற?” என்று ஒருபோதும் இல்லாததை போல் அதட்டிக்கேட்டார் துருவனின் அம்மாவான கௌரி.

துருவன் சுந்தரத்தின் நிலைமையை பார்த்து பரிதவித்துப் போனவன், என்ன செய்வது என்று தெரியாத நிலைமையில் தான் தனித்துவிட பட்டிருந்தான்.

தன் தந்தையை விட அவன் மீது அளவு கடந்த பாசத்தை பொழிபவர் சுந்தரம். சிறு வயதில் மாரிலும் தோளிலும் போட்டு அவர் வளர்த்த கதைகளை எல்லாம் அவனும் அவனது அம்மாவிடம் இருந்து அறிந்திருந்தான்.

அப்போது இருந்தே, “என்னோட மருமகன். “ என்று கர்வமாக சொல்வார் அவர். அவ்வாறிருக்க துருவன் இவ்வாறு சொன்னதை அவராலும் தாங்க இயலவில்லை.

துருவன் உடனே அங்கிருக்கும் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, “இல்ல! நான் இப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றுதான் சொன்னன். “என்று சமாளித்திருந்தான்.

அதன் பின்னரே எல்லோரும் நிம்மதி அடைய, சுந்தரத்தை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றான் துருவன்.

சுந்தரமோ, “ஒன்னும் இல்ல, சின்னதா வலிச்சுது. “ என்று ஹாஸ்ப்பிட்டல் செல்வதை மறுக்க, “எதுக்கும் போய் செக் பண்ணிடலாம். “ என்றவன் அவரை அழைத்து சென்றிருந்தான்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டரோ, “முதல் அட்டாக் “என குண்டை தூக்கி போட்டார். அதனால் அவரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் துருவனுக்கு வந்து சேர, வேண்டா வெறுப்பாக ஜனனியுடனான் திருமணத்திற்கு அவன் சம்மதம் தெரிவித்து இருந்தான்.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 25

அடுத்த நாள் நேராக ஜனனியை தேடி சென்ற துருவன், “உங்க அப்பாவோட ஹெல்த்த யோசிச்சு தான் உன்னை கட்டிக்க ஓகே சொன்னன். மத்தபடி உன்மேல எனக்கு இருந்த லவ் இப்போ கொஞ்சமும் இல்ல.”என்று சொல்லும் போதே ஜனனி மொத்தமாக உடைந்து போனாள்.

மேலும் தொடர்ந்த துருவன்,”நீயும் இடைல ஏதும் குட்டைய குழப்பி அந்த சரணித் கூட போயிடாத. அப்புறம் உங்க அப்பாக்கு ஏதாச்சும் ஆயிடும். “என்றவன் சுந்தரத்தை யோசித்து பேசினானே தவிர ஜனனியை பற்றி யோசிக்க மறந்தான்.

ஜனனிக்கோ அவன் அவள் இதயத்தை குத்தி கிழித்த உணர்வு. அவன் பேசி சென்றதும் கண்கள் மூடி அமர்ந்தவளுக்கு தன்னவன் தானா இவன் என்ற யோசனை வராமல் இல்லை.

ஆம், சிறு பராயத்தில் இருந்தே வீட்டில் துருவனுக்கு ஜனனி தான் என்று சொல்லி வளர்திருக்க, பதின்ம வயதின் ஆரம்பத்தில் இருந்த துருவனுக்கு இது ஆணி அடித்தாற் போல் மனதில் பதிந்து போனது.

ஜனனி பருவ வயதை எட்டாமல் இருக்கும் போதிருந்தே அவளை தாங்குபவன்,கனி க்கும் கனிஷ்க்கும் சகோதர பாசத்தை அள்ளி வழங்கி,ஜனனிக்கு எப்போதுமே தனிகவனிப்பையும் அன்பு கலந்த கண்டிப்பையும் கொடுப்பான்.

வீட்டில் பேசியபேச்சுக்களுக்கான அவளை தாங்கி வந்தவனுக்கு முதல் முதலில் அவளின் மேல் ஈர்ப்பு வந்தது என்னவோ அவள் பருவம் அடைந்த அந்த நாளில் தான்.

அதுவரை ஷார்ட்ஸ், டீஷர்ட் என்று போட்டு சுற்றி திரிந்தவள் அன்று மட்டும் புடவை அணிந்து, நகைகள் அணிவிக்க பட்டு, நெற்றியில் பொட்டுடன் தேவதையாகவே அவன் கண்ணுக்கு தெரிந்தாள்.

அன்று மொத்தமாக அவளில் தொலைந்தவன் தான் அவன்.

ஜனனிக்கோ அவனது அன்பும் அரவணைப்பும் எப்போதும் பிடித்தமான ஒன்றே.

அவளுக்கு ஈர்ப்பு,காதல் என்பதை தாண்டி அவன் கூடவே இருந்து விட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. பிற்காலங்களில் அவனது கோபங்கள், அவளிடம் அவன் காட்டும் உரிமைகள் என அனைத்தும் அவளுக்கு பிடித்துப் போய் விட காதலும் வந்து குடிகொண்டது.

அவர்கள் வீட்டிலும் இது புரிந்து போக அனைவருக்கும் அது மகிழ்ச்சிதான்.

துருவன் தான் அவள் மீது அளவுகடந்த அன்பை பொழிந்துகொண்டிருந்தான். எப்போதும் அவள் மேல் அதிக உரிமையும் எடுத்துக்கொள்வான். அதனால் அவர்களுக்கு சண்டை என்பது சகஜமே.

ஆனால் அன்றே அதை பேசி தீர்த்து விடுவது அவர்கள் வழக்கம். துருவன் கோபபட்டு கத்தி விட்டு சென்ற பின்னர் எத்தனையோ நாள் அவன் சமாதானத்துக்காகவே காத்திருந்திருக்கிறாள் ஜனனி.

அவனும் ஒரு போதும் அவளை ஏமாற்றியது இல்லை. கோபமும் கொள்வான் பின்னர் வந்து அவளை சமாதானமும் செய்வான்.

இப்படி அவள் மேல் பைத்தியமாக இருந்தவன் தான் இன்று அவளை அணு அணுவாக சித்திரவதை செய்து கொண்டு இருக்கின்றான்.

ஜனனிக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்ட உணர்வு. இதற்கு மேல் எதையும் துருவனிடம் பேசி புரியவைக்க முடியாது என்று நினைத்தவள், நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டாள்.

வீட்டில் இரு திருமணமும் ஒரே நாளில் நடத்துவதாக முடிவெடுத்திருக்க, அவினேஷின் வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவிக்க பட்டிருந்தது.

கல்யாண வேலைகளும் வீட்டில் கலைகட்ட ஜனனி தான் கல்லூரிக்கு போவதையும் தவிர்த்து மொத்தமாக அவள் அறைக்குள் முடங்கிவிட்டாள்.

சரணித் அவளை தொடர்பு கொண்ட போதும், அவனிடம் பெரிதாக ஏதும் பேசாதவள் ,” டான்ஸ் கம்படிஷன்ல இருந்து விலகிக்கிறேன். “என்று சொல்லியிருந்தாள்.

சரணித்க்கும் அவள் மனநிலை சற்று புரிந்து போக, அவனால் அவள் வாழ்வில் பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டான் அவன்.

திருமண வேலைகளிலும் கம்பெனி வேலைகளையும் தனி ஆளாக கையாண்ட கனிஷ்டனுக்கு ஜனனியிடம் பேசுவதற்கு கூட நேரம் இருக்கவில்லை.

இப்படியான ஒரு நாளில் தான் கனிக்கா மற்றும் சரணித்தின் சந்திப்பும் நிகழ்ந்தது. அன்று கனிக்கா அவளது நண்பிகளோடு திருமண ஷாப்பிங்கிற்காக மால் சென்றவள், அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் லிஸ்ட் போட்டு வாங்கிக்கொண்டிருந்தாள்.

அவளது கஷ்டகாலத்திற்கு அன்று அங்கு இரு கட்சிகுழுவினர் இடையே வாய்த்தகரார் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி போக, அங்கிருந்த மக்கள் அனைவரும் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர்.

இதில் அவளது நண்பிகளும் வெவ்வேறு திசையில் பிரிந்திருக்க கனிக்கா தான் தனியாக ஓடிக்கொண்டிருந்தாள்.

அங்கிருந்த ரௌடிகள் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்தவர்கள் இப்போது அப்பாவி மக்களையும் தாக்க ஆரம்பித்திருந்தனர்.

அந்நேரம் பார்த்து அவளது காலணிகள் தடக்கி கீழே விழ, அங்கிருந்த ஒரு ரவுடியின் கண்ணில் பட்டுவிட்டாள் அவள்.

கையில் ஒரு கட்டையை வைத்து அவளை அடிப்பதற்காக ஓடி வந்த சமயம், கீழே விழுந்து இருந்தவளை தூக்கி, அந்த ரவுடியையும் எட்டி உதைத்து, அவளின் கையை பற்றிக்கொண்டு மறைவான இடம் நோக்கி ஓடினான் சரணித்.

கனிக்கா அந்த ரவுடி அவளை தாக்க வந்ததில் அதிர்ச்சி அடைந்திருக்க, சரணித்தான் அவளை இழுத்து செல்கிறான் என்பது கூட அவளுக்கு அப்போது தெரியவில்லை.

சரணித் அந்த மாலில் உள்ள ஒரு கடையில் முந்தைய நாள் போன் சர்வீஸ் செய்தவன் , டேம்பேட் ஒட்டாமல் மறதியில் சென்றுவிட்டான். வீட்டுக்கு சென்ற பின்தான் அது அவனின் நியாபகத்திற்கு வர, நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவன் இன்று அந்த வேலையை முடிக்கும் பொருட்டு வந்திருந்தான்.

அப்படி அவனது வேலையை முடித்து வரும் வளியில்தான் கனி அவனின் கண்களில் பட, ஆறு வருடங்கள் கழித்து அவளை பார்த்தவன் தன்னை அறியாமலேதூரத்தில் இருந்து அவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்தே அவள் இன்னொருவனின் மனைவி ஆக போகிறாள் என்ற நினைப்பு வர, தன்னையே கடிந்து கொண்டவன் அங்கிருந்து செல்ல நினைத்தான்.

ஆனால் அந்த சமயத்தில் அங்கு கலவரமும் முள, அந்த கூட்டத்தில் திக்குமுக்காடியவன் கனியை ஒரு ரவுடி அடிக்க வருவதை கண்டுகொண்டான்.

உடனே அவளுக்கு உதவியவன் இப்போது அவளை இழுத்துக்கொண்டு வந்து, அவர்கள் இருந்த அதே ப்லொரின் களஞ்சிய அறைக்குள் வந்து கதவை அடைத்துக்கொண்டான்.

கனிக்கா ஓடி வந்ததில் மூச்சு வாங்கியவள், அவளை நிதானபடுத்தி விட்டு அப்போதுதான் அவன் முகத்தை பார்த்து , “தேங்க்ஸ்ங்க. “என்றாள்.

சரணித் தலையை குனிந்து கொண்டு நிற்க, அவளுக்கு மறக்க கூடிய முகமா அவனது முகம்! அடுத்த கணமே, “ச.. ரணித்.. “என்று பதறியே விட்டாள்.

அப்போதும் அவன் குனிந்து கொண்டே நிற்க, அவனை பார்த்து பயந்து போனவன், “ஐயோ! காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!” என்று அலற ஆரம்பித்துவிட்டாள்.

சரணித்க்கு அது வலியை கொடுத்தாலும், “ப்ளீஸ் கனி கத்தாத. வெளிய பெரிய கலவரமே போய்ட்டு இருக்கு. நீ சத்தம் போடுறது வெளிய கேட்டா இரண்டு பேரையும் வெட்டி போட்டுட்டு போய்டுவானுக. “ என்றான்.

கனியோ, “மானம் கெட்டு சாகுறதுக்கு அவனுக வெட்டி போடுறதே மேல். “ என்று சொல்ல, சரணித்தின் பொறுமை காற்றில் பறந்தது.

கொதித்தெளுந்தவன், “வாயை மூடு கனி. இப்போ நான் உன்னை ஏதாச்சும் பண்ணினனா? எதுக்கு இப்படி பேசி என்ன கொல்லுற? “ என்று கேட்டான்.

கனியோ அவனது கோபத்தில் அதிர்ந்து போனவள் அமைதியாகவே நின்றிருக்க, மீண்டும் பேச ஆரம்பித்த சரணித், “என்ன பார்த்தா உனக்கு எப்படிடி தெரியுது? அவ்வளவு மோசமானவனா நான்? “என்றுதான் கேட்டான்.

கனியோ, “உன்னை பார்த்தாலே என் உடம்பு கூசுது. பண்றது எல்லாமே பண்ணிட்டு இப்போ நல்லவன் வேசம் போடுறியா? “என்று கேட்க, “நான் என்னடி பண்ணினேன்? அன்னைக்கு நீ டிரஸ் சேஞ் பண்ணிட்டு இருக்கணு தெரியாமதானே உள்ள வந்தேன். அதை தாண்டி நான் எதுவுமே பண்ணலயே!” என்றான் சரணித்.

கனியோ அவனை முறைத்தவள், “ ச்சீ அசிங்கமா இல்லையா உனக்கு, வாய் கூசாம பொய் சொல்ற. நீ தெரியாம உள்ள வந்தேனுதா நான் ஆரம்பத்துல கத்தாம பயந்துகிட்டே உன்னை வெளிய போக சொன்னேன்.ஆனா அதுக்கு அப்புறம் நீ பண்ணது தான் உன்மேல இருந்த... “என்று இழுத்தவள், “ச்சீ.. “என்றாள்.

சரணித்தோ புரியாமல் அவளை பார்த்தவன், “சத்தியமா எனக்கு தெரியல. நான் தப்பா ஏதும் பண்ணல கனி. “ என்றான் தொய்வான குரலில்.

கனிக்கோ அவன் மீது ஆத்திரம் எழ, அவன் ஷர்ட் கொலரை எட்டி பிடித்தவள், “எதுக்குடா நடிக்குற? அண்டைக்கு நீ என்ன கண்ட இடத்துல தொடல? “ என்று கேட்டாள்.

சரணித் முதலில் அதிர்ச்சியானாலும், பின்னர் அமைதியாக அன்றைய நாளை நினைத்து பார்த்தவன், அவள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கும் அவனது செயலின் அர்த்தம் புரிந்தவனாக, நெற்றியை நீவிக்கொண்டு , “ஹேய் பைத்தியமே, அண்டைக்கு நான் மட்டும் உன்ன தாங்கி புடிக்கலனா இண்டைக்கு நீ செத்து உன்னை புதைச்ச இடத்துல செடி என்ன மரமே முளைச்சு இருக்கும். “ என்றான்.

கனியோ அவன் ஷர்ட்டில் இருந்து கையை எடுத்தவள் புரியாமல், “என்ன உளறுற? “ என்று கேட்க, “நான் ஒன்னும் உளறல, அண்டைக்கு என்ன பார்த்ததும் நீ பின்னாடி போய்ட்டு இருந்த.உன் பின்னாடி தரைல இருந்த மோட்டர் கம்பியை நீ பார்க்கல.நான் அதை கவனிச்சு உன்னை தாங்கி புடிக்கலனா நீ அதுல தவறி விழுந்து உன் தலை உடைஞ்சிருக்கும். “ என்றான்.


 
Status
Not open for further replies.
Top