ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer

அத்தியாயம்
11

சரணித்தும், “சரி அப்போ நானும் புறப்படுறன். கொஞ்சம் வெளியில போற வேலை இருக்கு. “என்று சொல்லி செல்ல மற்றவர்களும் அங்கிருந்த சிறு சிறு வேலைகளை முடித்துக்கொண்டு சைக்கிள் பார்க்கிங் வந்து சேர்ந்தனர்.



இடையில் பெண்கள் கழிப்பறை சென்ற கனிக்காவிற்கு அங்கு தூர்நாற்றம் வீச, “இங்க எப்படி ட்ரெஸ் சேஞ் பண்ண முடியும்? “ என்று நினைத்து சுற்றி முற்றி பார்த்தவள் அங்கு மறைவாக இருந்த மோர்டர்ரூமை கண்டுகொண்டாள்.



நேராக அங்கு சென்றவள், “ஸ்கூல்ல யாருமே இல்ல, இங்க யாரும் வரவும் மாட்டாங்க. நம்ம இங்கையே சேஞ் பண்ணிக்கலாம். “என்று நினைத்துக்கொண்டு, தோள்பையை வெளியில் வைத்து விட்டு உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.



சரணித் அனைவரிடமும் சொல்லி விட்டு போனவன்,அப்போதுதான் மாடி படிகளில் இருந்து இறங்கி வர, அவனை தூரத்தில் இருந்து பார்த்த கனிஷ்டன், “இவன் அப்போவே களம்பிடானே! இப்போதான் கீழ வாறான். “என்று சொல்ல, “இடைல ஏதாச்சும் வேலை வந்திருக்கும். “என்றாள் ஹரிணி.



சரணித் அவன் செல்போனையே உத்து பார்த்தவன், சிரித்துக்க்கொண்டே அவன் அடிவயிற்றை தடவியபடி கனிக்கா சென்றிருந்த அதே மோட்டார்ரூமை நோக்கி வந்தான்.

இந்த சமயம் துருவனும் மாணிக்கத்துடன் பேசிவிட்டு இவர்கள் இருந்த சைக்கிள் பார்க்கிங்கிற்கு வந்தவன், “என்ன நீங்க முணு பேர் மட்டும் நிக்குறீங்க கனிக்கா எங்க? “ என்று கேட்க, ஜனனிதான் நடந்ததை அவனிடம் சொன்னாள்.

துருவனோ கனிஷ்டன் தலையில் லேசாக கொட்டியவன், “பார்த்து பொறுமையா வேலைய முடிக்க மாட்டியா? “ என்று கேட்க, “தெரியாம தட்டுபட்டுடிச்சு துருவ், நீ வேற ஆரம்பிக்காத அவள் ஏற்கனவே என்ன திட்டிட்டா. “ என்றான் கனிஷ்டன்.

இதே நேரத்தில் கனிக்கா தனது ஆடைகளை களைந்தவள், ஜனனி கொடுத்த ஆடைகளை போடுவதற்கு ஆயத்தமாக நிற்க, “கனி.. “ என்று அழைத்துக்கொண்டே அந்த சிறு அறைக்குள் நுழைந்தான் சரணித்.

கனிக்கா அந்த அழைப்பில் அதிர்ந்தவள் திரும்பி பார்க்க அங்கு சரணித் நிற்பது மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு எவ்வாறு எதிர்செயல் ஆற்றுவது என்றே புரியவில்லை.

“ச.. ர.. கிட்..ட வ..ரா..த தள்..ளி போ... “ என்று உளறியவள் காலடிகளை பின்னே வைத்து சென்றாள்.

சரணித்தின் கண்களோ அகல விரிந்து கொள்ள, “ஹேய்!”என்று கொண்டே எட்டி பாய்ந்தவன் அவள் இடையை சுற்றி தன்னுடன் இழுத்து புடித்துக்கொண்டான்.

அதிர்ந்த கனிக்காவோ, அவன் மார்பில் கை வைத்து தள்ளியவள், கீழே கிடந்த அவள் மேலாடையை எடுத்து தன்னை மறைத்துக்கொண்டே, “அண்ணா.... அண்ணா.. துருவ் அண்ணா “என்று அலற ஆரம்பித்து விட்டாள்.

பாடசாலை மாணவர்கள் அனைவரும் சென்றிருக்க அங்கு ஆள் அரவமே இல்லாமல் இருந்ததால் அவள் அலறிய சத்தம் இங்கு நின்றிருந்த அனைவரின் காதுகளிலும் தாராளமாய் ஒலித்தது.

துருவனும் கனிஷ்டனும் அவளின் அலறலை கேட்டு பதறிஅடித்துக்கொண்டு சத்தம் வந்த பக்கம் நோக்கி ஓட, ஜனனி மற்றும் ஹரிணியும் அவர்கள் பின்னால் ஓடினார்கள்.

சரணித்தான் அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க அந்நேரம் புயல் வேகத்தில் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தனர் துருவன் மற்றும் கனிஷ்டன்.

கனிக்கா அவள் மேலாடையை இறுக்கி பிடித்துக்கொண்டவள், கண்ணை மூடிக்கொண்டு, “அண்ணா உள்ளே வராதா.. ப்ளீஸ் வெளியே போ.. “ என்றபடி தரையில் குந்திக்கொண்டாள்.

துருவனுக்கும் கனிஷ்டனுக்கும் அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் நரம்புகள் புடைத்தேழுந்தது, கோபத்தின் உச்சியில் நின்ற இருவரும் அங்கிருந்த சரணித்தின் ஷர்ட் கொலரை பிடித்து வெளியில் இழுத்து வர, நிலைமையை புரிந்து கொண்ட ஜனனி மற்றும் ஹரிணி ஓடிச்சென்று கனிக்காவை அணைத்துக் கொண்டனர்.

சரணித்தை இழுத்து வந்து நிலத்தில் தள்ளி விட்ட துருவன் மற்றும் கனிஷ்டன் அவனை அடித்து துவைத்துக்கொண்டிருக்க, “ப்ளீஸ் அடிக்காதீங்கடா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. “ என்று சொன்ன சரணித்தின் கெஞ்சல்கள் எல்லாம் அவர்கள் காதுகளிற்கு விழவே இல்லை.

இந்த சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்த மாணிக்கம், “டேய் பசங்களா! என்னடா பண்றீங்க? “ என்று கேட்டு ஓடி வர அவர் பின்னாலே செக்யூரிட்டியும் வந்தார்.

அவர்கள் பிடியில் இருந்து சரணித்தை பிரித்து எடுக்கவே அவர்களுக்கு படாத பாடு ஆகிப்போனது. சரணித் வாய், முகம் என இரத்தம் சொட்ட வலியில் துடித்து நின்றிருக்க, “இது ஸ்கூலா இல்ல வேற எதுமா? எதுக்குடா இவனை இப்படி போட்டு அடிக்குறீங்க? “ என்று கேட்டார் மாணிக்கம்.

துருவனோ, “இவன் பண்ண வேலைக்கு இவனை அடிக்காம..கொஞ்சுவாங்களா“ என்றவன் அவன் கண்டதை மட்டும் வைத்து அங்கு நடந்ததை யுகித்து மாணிக்கத்திடம் சொல்ல, அவரோ, “என்ன சரணித்தா??? “ என்று அவனை பார்த்தவர், “சரி இதை நான் பார்த்துக்குறேன். “என்றபடி அவனை அங்கிருந்து அழைத்துச்செல்ல, “இவனை எங்க சார் கூட்டிட்டு போறீங்க? இவனை எல்லாம். “ என்று சொல்லி மறுபடியும் அவன் மீது பாய்ந்தான் துருவன்.

மாணிக்கமோ மறுபடியும் அவனை தடுத்தவர், “அதான் நான் இதை பார்த்துக்கிறேன் என்று சொல்றன் தானே. இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ அதை நான் கொடுக்கிறேன். “என்றவர் அவனை அங்கிருந்து அழைத்து செல்வதிலே குறியாக இருந்தார்.

அவருக்கு தெரியும் சரணித் அங்கு நின்றால் அவர்கள் இருவரும் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று.

கனிஷ்டனோ மாணிக்கம் அழைத்து சென்ற சரணித்தை பார்த்து, “ஒரு நிமிஷம். “ என்றவன் அவன் முன்னே சென்று நின்று கொண்டு, “உன்ன எவ்வளவு நம்புனேன்டா. உன்னை நம்பி தானே வீட்டுக்குள்ள சேர்த்தோம்? எங்க அம்மா உன்னையும் புள்ளையா நினைச்சு எத்தனை நாள் அவங்க கையால உனக்கு சோறு போட்டிருப்பாங்க? எங்களுக்கு ஏன்டா இப்படி ஒரு கேவலத்தை பண்ண? “என்று கேட்கும் போதே அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

சரணித்தோ, “கனிஷ் நான்.. “ என்றும் போதே, “இனி என்னோட வாழ்நாள்ல உன் முகத்தை நான் பார்க்க கூடாது. “என்றவன் அவனை கடந்து சென்று துருவன் பக்கத்தில் நின்று கொண்டான்.

இந்த கணத்திலே அவர்களில் அத்தனை வருட நட்பும் உடைந்து பகையாக மாறியது.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 12

ஜனனி மற்றும் ஹரிணி கனிக்காவை ஓரளவு சமாதானம் செய்தவர்கள் அவளுக்கு உடையை அணிவித்து வெளியில் அழைத்து வர, அவளோ ஓடிச்சென்று துருவனை அணைத்துக்கொண்டவள், “எனக்கு என்னவோ மாதிரி இருக்கு, உடம்பெல்லாம் கூசுது அண்ணா.“ என்றாள்.

துருவனுக்கும் என்ன சொல்வது, நிலைமையை எவ்வாறு கையாள்வது என்று ஒன்றும் புரியவில்லை.

அவனோ அவள் தலையை தடவி விட்டவன், “ஒன்னும் இல்ல, நாங்க உன் கூட இருக்கம்ல, நீ பயப்பிடாத.”என்றவன் அவள் அழுகையில் மொத்தமாக உடைத்துதான் போனான்.

கனிஷ்டனுக்கும் அதே மனநிலை தான் ஆனால்அதிலும் மேலாக உயிர் நண்பன் துரோகம் செய்துவிட்டானே என்ற வலிவேறு ஓட்டிக்கொண்டது.

அவளை சமாதானபடுத்தி அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றாலும், வீட்டில் கௌரியை பார்த்ததுமே ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டவள் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

தினகரன், சுந்தரம், வாணி, கௌரி என அனைவரும் பதறிப்போனவர்கள் நடந்ததை வினவ, துருவன் நடந்தவை அனைத்தையும் அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னான்.

அத்தோடு நின்றுவிடாதவன், “அப்பா இப்போவே வாங்க பொலிஸ் ஸ்டேஷன் போய் அவன் மேலே கம்பளைண்ட் கொடுக்கலாம். “ என்றெல்லாம் பேச தொடங்கிவிட்டான்.

கனிக்காவோ, “ஏன் நான் இன்னும் அவமான படணுமா? இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியவா? ப்ளீஸ் துருவ் அண்ணா இதை இப்படியே விடு.எனக்காக ஏதும் பண்ணனும் எண்டு நினச்சா இனி என்னோட வாழ்நாள்ல அவனோட பெயரையோ அவனையோ நான் பார்க்க கூடாது. அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணு. “ என்றவள் கௌரியில் இருந்து விலகி விறுவிறுவென அவள் அறைக்குள் சென்றுவிட, பக்கத்தில் நின்றிருந்த ஜனனியிடம், “அவ கூட போய் இரு. “என்று சொன்ன துருவனுக்கு சரணித் மேல் கொலைவெறி எழுந்ததும்.

அதன் பின் கனி யாரோடும் அதிகம் பேசவில்லை, ரூமிலே முடங்கி கிடந்தாள். அவளை பழைய நிலைக்கு அழைத்து வர துருவனும் கனிஷ்டனும் படாத பாடு பட்டுபோயினர்.

அந்த சம்பவத்தில் இருந்து அவள் மீண்டு வரவே பல மாதங்கள் ஆகிவிட்டன.

அப்படி பட்ட ஒரு நிலையில் ஆறு வருடங்கள் கழித்து இன்று ஜனனி மூலம் அவள் தோண்டி புதைத்திருந்த அந்த கடந்த கால கசப்பான நினைவுகள் கண்முன் ஓடிகொண்டிருக்க உடைந்து போயிருந்தாள் அவள்.

துருவன் மற்றும் கனிஷ்டன் தான் அவளை தேற்றி சமாதானம் செய்தவர்கள் அவளை கட்டாயப்படுத்தி உணவும் கொடுத்து தூங்கவைத்தார்கள்.

இப்படியே அன்றைய இரவு ஒவ்வொர்வர்க்கும் ஒவ்வொரு விதமாக கழிய காலையில் முதல் எழுந்து கொண்டான் துருவன்.

உண்மையை சொன்னால் அவன் நிம்மதியாக தூங்கியே பல வாரங்கள் ஆகிவிட்டன, நெஞ்சில் யாரோ கத்தி கொண்டு குத்திய உணர்வு அவனது தூக்கத்தை அவனில் இருந்து தள்ளி வைத்தது.

எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் பக்கத்தில் பார்க்க அங்கு கனிஷ்டன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவனை தொந்தரவு செய்யாமல் மெதுவாக கட்டிலில் இருந்து எழுந்து காலை கடன்களை முடித்து ஷூவை மாட்டியவன் அவனது மன வலிகளை சற்று குறைக்கும் பொருட்டு ஜாக்கிங் சென்றுவிட்டான்.

அதில் இருந்து சற்று நேரம் கழித்தே எழுந்த கனிஷ்டன் ரூமில் இருந்து வெளியே வர அவன் கண்களுக்கு தெரிந்தது பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு பேல்கனியில் நின்றிருந்த ஜனனி தான்.

நேராக அவளிடம் சென்றவன், “என்ன அதிசயம் மேடம் இன்னைக்கு இவளவு ஏர்லியா எழும்பீட்டீங்க!இன்னைக்கு மழை கொட்டபோகுது. “ என்றான்.

ஜனனி ஏதும் சொல்லாமல் வானத்தையே பார்த்து நிற்க, “ இங்க பாரு ஜனனி.. “ என்று சொல்லி அவளை தன் பக்கம் திருப்பியவனின் கண்கள் அவளது வீங்கிய கன்னத்தில் பதிந்திருந்த கைவிரல் அடையாளங்களில் நிலைத்தது.

அவனோ, அவளை பாவமாக பார்த்தவன், “உங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை? “ என்று கேட்டான்.

ஜனனி மீண்டும் திரும்பி வானத்தையே பார்த்து, “ என்மேல அவனுக்கு துளி கூட நம்பிக்கை இல்ல. “என்றவள் கண்ணில் இருந்து நீர்துளிகள் சிந்தியது.

கனிஷ்டனோ, “ஹேய்! இப்போ எதுக்கு அழுற? “ என்று கேட்டு அவள் கண்ணை துடைத்துவிட, “நீ டுடே ஈவினிங் பிரீயா? “ என்று கேட்டாள் அவள்.

அவனும் வேலைபழு இருந்தாலும் கூட அவளின் மனநிலைமையை புரிந்துகொண்டு, “ஹ்ம்ம் பிரீதான். “ என்றான்.

ஜனனியோ, “அப்போ ஈவினிங் நீயே வந்து காலேஜ்ல இருந்து என்ன பிக்அப் பண்ணிக்கோ. எனக்கு கொஞ்சம் பேசணும். “ என்றவள் அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.

கனிஷ்டன் எல்லோர் நிலைப்பாட்டையும் ஆராய்ந்து, யாரையும் பாதிக்காதவாறு நடந்துகொள்பவன். எதிலும் பொறுமையை கையாள்பவன்.

இன்று ஜனனி விஷயத்திலும் அவளது நிலைப்பாட்டை அறிய விரும்பினான் அவன். அவன் கண்முன்னே வளர்ந்த அவர்களது காதல் உடைந்து போவதை அவன் துளியும் விரும்பவில்லை. எப்படியாவது பேசி தீர்த்து வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

அன்றைய காலை பொழுது அப்படியே நகர்ந்துகொண்டிருக்க , ஜனனி சுந்தரத்துடன் கல்லூரிக்கு செல்ல, அதன் பிறகு ஜாகிங் முடிந்து வந்த துருவனும் கல்லூரிக்கு புறப்பட்டு இருந்தான்.

கனிக்கா தான் எதிலும் மனம் ஒட்டாமல் எழுந்து கட்டிலில் சாய்ந்து இருக்க, கம்பனி செல்வதற்காக தயார் ஆகி வந்த கனிஷ், “கனி என்ன ரெடி ஆகலையா? “ என்று கேட்டான்.

கனிக்காவோ, “ இல்ல, நான் டுடே வரல. நீ போய்ட்டு வா. “ என்று சொல்ல, கனிஷ்டனுக்கோ துருவன் வேலைக்கு செல்லும் முன்பு, “ கனி வெர்க் வரல எண்டு ஏதும் சொன்னா அவளை தனியாக விட்டுட்டு நீ பாட்டுக்கு போயிடாத , ஏதாச்சும் சொல்லி அவளையும் கூட்டிட்டு போ. “என்றதுதான் நியாபகம் வந்தது.

உடனே, “கனி ப்ளீஸ், டுடே நிறைய வேலை இருக்கு. என்னால தனியா சமாளிக்க முடியாது. “ என்று காரணங்களை அடுக்கி அவள் மனதை மாற்றியவன் அவளையும் அழைத்துக்கொண்டே கம்பெனிக்கு சென்றான்
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 13

ஜனனி அன்று முதல் ஆளாக கல்லூரிக்கு வந்தவள் நேராக டான்ஸ் ப்ரக்டிஸ் நடக்கும் மண்டபத்திற்கு சென்று அமர்ந்து கொள்ள அவளது கைகள் அவள் கன்னத்தை வருடிக்கொண்டது.

இன்னும் அவன் அறைந்த வலியை அவள் உடலிலும் மனதிலும் உணர்ந்து கொண்டுதான் இருந்தாள்.

தன்னை பொக்கிஷம் போல் தாங்கி வந்தவன் இன்று அவளை தூக்கிஎறிந்து விட்டு செல்ல ஆயத்தமாவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

நிலைகுலைந்து கண்கள் மூடி இருந்தவள், “என்ன அதிசயம், இவ்வளவு ஏர்லியா வந்திருக்க? “ என்ற சரணித்தின் குரலிலே கண்களை திறந்தாள்.

உடனே தன் முடியை எடுத்து ஒரு பக்க கன்னத்தை மூடிக்கொண்டவள் எழுந்து, “ நீதானே பிரக்டிஸ்க்கு ஏர்லியா வர சொன்ன. “ என்று சொல்லும் போதே அவள் குரல் கரகரப்பை உணர்ந்து கொண்டான் அவன்.

ஏதோ சரிஇல்லை என்று உணர்ந்த சரணித், “என்னாச்சு ஜனனி? திரும்பவும் அவன் ஏதும் பிரச்சனை பண்ணினானா? “ என்று கேட்டு அவளை தன் பக்கம் திருப்ப அவள் அழுதிருப்பது அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

உடனே, “அவனை.. “ என்று ஷர்ட் கையை மடித்து அங்கிருந்து செல்ல முற்பட்ட சரணித்தின் கையை பிடித்த ஜனனி, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. “ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் கஷ்டகாலத்திற்கு அவ்வளியால் வந்த துருவனின் கண்களில் அந்த காட்சி பட்டது.

துருவனுக்கோ மொத்தமாக மரித்துவிட்ட உணர்வு. அவன் வேறு எதையும் யோசிக்கும் மனநிலையில் கூட இல்லை. தன்னவள் அவன் மொத்தமாக வெறுக்கும் ஒருவனுடன் கை கோர்த்து நிற்பதை அவனால் ஏற்கமுடியவில்லை.

சரணித்தோ, “கைய விடு ஜனனி, அவன் உன்னை டார்ச்சர் பண்ணுவான் அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கணுமா? அவனை இப்படியே விட்டா சரி வராது. இன்னைக்கு இரண்டுல ஒன்னு பாத்துடுறேன். “என்று சொல்லி அவன் கைகளை உருவ, அவன் தன்னை தான் சொல்வதாக நினைத்துக்கொண்ட துருவன், கைகளை தட்டிக் கொண்டே அவர்கள் இருவரின் முன் போய் நின்றான்.

ஜனனியின் கண்களோ விரிந்துகொள்ள, சரணித்தோ துருவனை உற்று பார்த்தபடி நின்றிருந்தான்.

துருவன் மன வலியால் உளன்றுகொண்டிருந்தவன், “சார், நீங்க என்ன தேடி வர வேணாம் நானே வந்திருக்கன். என்ன பண்ண போறீங்க சார் என்ன? “என்று கேட்க சரணித்தும் ஜனனியும் தான் இவன் என்ன பேசுகிறான் என்று குழம்பி போனார்கள்.

சில வினாடிகளில் சுதாகரிந்து கொண்ட சரணித் தலையை நீவியபடி, “துருவ் நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட. “ என்று சொல்ல, “இப்போதான் நான் சரியா புரிஞ்சுக்கிட்டேன் சிலபேரை. “என்றான் துருவன் ஜனனியை பார்த்தபடி.

சரணித் துருவன் தோளில் கை வைக்க, அதை தட்டி விட்டவன், “கை வச்சு பேசுறா வேலை எல்லாம் வச்சுக்காத. நீ பண்ண துரோகத்துக்கு அன்னைக்கே உன்னை வெட்டி போட்டிருக்கணும். “ என்றான்.

சரணித்தோ அவன் பேசுவது எதையும் பெரிதாக எடுக்காமல், “இங்க பாரு துருவ் நான் சொல்றத கொஞ்சம் கேளு, அன்னைக்கு நான் எந்த தப்பும் பண்ணல. “என்று சொன்னதுதான் தாமதம், “அப்போ என் தங்கச்சி தப்பு பண்ணாளா?”என்று கேட்டுகொண்டே தான் அடக்கி வைத்திருந்த கோபத்தை மொத்தமாக சேர்த்து சரணித்தின் கன்னத்தில் காட்டியிருந்தான் துருவன்.

ஜனனியோ, “துருவ்! என்ன பண்ற நீ? எதுக்கு இப்படி காட்டுமிராண்டி தனமா நடந்துக்குற? “ என்று கேட்க அவளையும் விட்டு வைக்காமல் அவள் மறு கன்னத்தில் அறைந்திருந்தான் அவன்.

அவனுக்கு அடித்ததை கூட பெரிதாக எடுக்காத சரணித் ஜனனியை அவன் அறைந்ததும், “துருவ் இது ரொம்ப தப்பு. பொண்ணுகளை கை நீட்டி அடிக்குறது எல்லாம் பாவம்டா. “ என்று சொல்ல, “ஓஹ்!அங்க அடிச்சா இங்க வலிக்குது, இங்க அடிச்சா அங்க வலிக்குது. ஹ்ம்ம் அவ்வளவு லவ்வு. “என்றான் அவன்.

ஜனனியோ முகத்தை திருப்பிக்கொள்ள, “தப்பா பேசாத துருவ். அப்புறம் நீதான் வருத்தப்படுவ. “என்றான் சரணித் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அவனை முறைத்த துருவன், “இந்த கேவலத்தை எல்லாம் பார்த்து நான் படுறத அவஸ்தையை விட பெரிய அவஸ்தை எனக்கு வேற ஒன்னும் வரபோறல. “என்றவன் அங்கிருந்த கதிரையை உதைத்து தள்ளியவாறே வெளியேறினான்.

அவனோ கணைகளை கொண்டு ஜனனியின் இதயத்தை கிழித்து விட்டு வெளியேறி இருக்க, அவளுக்கோ அவன் தன்னை நம்பவில்லை என்ற வேதனை மட்டுமே மிஞ்சியிருந்தது.

துருவன் அங்கிருந்து சென்றதுமே, “சாரி ஜனனி. என்னாலதான் உங்களுக்குள்ள பிரச்சனை.” என்று சொல்ல, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. அவன் என்ன நம்பாம இருக்குறதுக்கு நீ என்ன பண்ணுவ? “ என்று அவள் கேட்கும் போதே மற்றய மாணவிகளும் டான்ஸ் ப்ரக்டிஸ்க்காக அந்த மண்டபத்தினுள் வந்து சேர்ந்தனர்.

அதற்கு மேல் ஏதும் பேசிக்கொள்ளாத இருவரும் அவர்களின் வேலையில் ஈடுபட்டிருக்க, சரணித்க்குதான் அவள் கன்னத்தில் பதிந்திருந்த துருவின் விரல் அச்சுக்கள், “நீ மறுபடியும் இங்க வராமலே இருந்திருக்கலாம் சரணித். உன்னோட வாழ்க்கையை தேடி வந்து இன்னும் இரண்டு பேரோட வாழ்க்கையை அழிச்சிட்ட. “என்று அவனுக்கு எடுத்துரைத்துக்கொண்டு இருந்தது.

சக மாணவிகள், “என்னடி ஆச்சு முகத்துல? “ என்று கேட்கும் போது கூட வீட்டில் அவள் சமாளித்தவாறே, “அலெர்ஜி ஆகிடிச்சு. “ என்று சொன்னவள் வேறு எதுவும் பேசவில்லை.

சரணித்தும் அவர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்தவன் சகமாணவிகளை அங்கிருந்து அனுப்பி விட்டு, ஜனனியை மட்டும் அழைத்துக்கொண்டு கேன்டீனுக்கு சென்றான்.

அவளுக்காக ஜூஸ் மற்றும் ரோல்ஸ் வாங்கி குடுத்தவன் அதை உண்ணும் படி சொல்ல அவள்தான் அதை உண்ணும் மனநிலையில் இருக்கவில்லை.

சரணித்தோ, “என்னால ஆரம்பிச்ச பிரச்சனைய நானே தீர்த்து வைக்குறேன். நீ எதை பத்தியும் யோசிக்காத. “என்று அவளுக்கு ஆறுதல் கூறியவன் அவளை உணவருந்தவும் வைத்திருந்தான்.

இதை பார்திருந்த அங்கிருந்த மாணவர்கள் சிலரும், ப்ரோபஸ்ஸர்களும் அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுத்துக்கொள்ள இந்த கதை துருவனின் காதிலும் வந்து விழுந்து அவனை வதைத்தது.

முன்னரும் இவ்வாறு அவர்கள் சாதாரணமா பேசிக்கொண்டதையே சுற்றி இருந்தவர்கள் ஊதி பெரிதாக்கி இருக்க அதுவே துருவனுக்கும் ஜனனிக்கும் இடையில் இடைவெளியை பெரிதாக்கி விட்டிருந்தது.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 14

என்றும் போல அன்றும் அவள் வகுப்புக்குள் நேரம் கடந்தே செல்ல, அங்கு யூனிட் எக்ஸாமிற்காக வினாக்களை கொடுத்துக்கொண்டிருந்தார் கணக்கியல் ஆசிரியர் குமார்

அவள் வகுப்பின் வாசலில் வந்து, “எக்ஸ்கியூஸ்மி சார்.”என்று சொல்ல, கையில் இருந்த புக்கை மேசையில் போட்டுவிட்டு கைகளை இடுப்பில் குற்றியவர் “இன்னைக்கும் லேட்டா? எக்ஸாம் எண்டு சொன்னது நினைவு இருக்கா இல்லையா? அது சரி கேன்டீன்ல உக்கார்ந்து ரொமான்ஸ் பண்ணிட்டு வரவே உனக்கு நேரம் சரியா இருக்கே.”என்று சொல்ல ஹரிணியை தவிர அந்த வகுப்பைறையே அவளை பார்த்து சிரித்தது.

அவளோ அவமானத்தில் தலையை குனிந்து நிற்க, “உள்ள வந்து தொலை. “ என்றவர்,தொடர்ந்து வினாக்களை கொடுத்துக்கொண்டு இருந்தார்.

ஜனனியும் ஹரிணி அருகில் சென்று அமர்ந்து கொண்டவள் அத்தனை வினாக்களையும் அவளிடம் பார்த்து எழுதிக் கொள்ள அதற்குரிய விடைகள் தான் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

அதனை புரிந்து கொண்ட ஹரிணியும் குமார் பார்க்காத நேரத்தில் ஜனனியின் வினா தாளை பறித்து அவளுக்கு தெரிந்த விடைகளை எழுதியவள், அதை ஜனனியிடம் கொடுத்து விட்டு அவள் வினா தாளை நிரப்ப தொடங்கினாள்.

ஜனனி இதை எல்லாம் பார்த்து இருந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.

சில நிமிடங்களில் கணக்கியல் பாடமும் நிறைவுக்கு வர, அனைவரிடமும் வினாகொத்தை வாங்கிய குமார் அங்கிருந்து வெளியேற,அனைத்து மாணவிகளும் இடைவெளிக்காக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஹரிணி, ஜனனி மற்றும் இன்னும் சில மாணவிகள் அங்கு மிஞ்சியிருக்க, ஜனனியின் கன்னத்தில் கைவைத்த ஹரிணி, “என்னடிஆச்சு? “என்று கேட்டாள்.

அவளிடம் மற்றவர்களிற்கு சொன்னதை போல் போலிகாரணங்களை சொல்ல முடியாது என்று அறிந்த ஜனனி அவளை திசை திருப்பும் பொருட்டு, “நேற்று எதுக்குடி துருவ் பேச்சை கேட்டுட்டு அப்படியே போன? எனக்கு அது ஹர்ட் ஆகும்னு உனக்கு தெரியலையா? “ என்று கேட்டாள்.

ஹரிணியோ பெருமூச்சு விட்டவள், “என்னால அங்க என்ன பேசியிருக்க முடியும் ஜனனி? துருவ்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? அந்த சமயத்துல எனக்கு என்ன சொல்றது எண்டே தெரியல அதான் ஏதும் பேசாம களம்பிட்டேன். “ என்றாள்.

ஜனனிக்கோ அவளின் நிலைமையும் புரியாமல் இல்லை, “ஹ்ம்ம். “ என்று மட்டும் அவளுக்கு பதில் அளித்தவள் எழுந்து கொள்ள, அவளின் கைகளை பிடித்து அமர்த்திய ஹரிணி, “முகத்துல என்னடி ஆச்சு? “ என்று சொல்லி அவள் முகத்தில் கைகளை வைக்க, “ஸ்..ஆ.. “ என்று மெல்லிய குரலில் முனங்கினாள் ஜனனி.

ஹரிணி, “என்னடி ஏதோ கை தடம் மாதிரி இருக்கே இரண்டு கன்னத்திலையும். “என்று கேட்க, அதற்கு மேல் உணர்சிகளை அடக்கி வைக்க முடியாமல் ஹரிணியை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் அவள்.

ஹரிணி சுற்றும் முற்றும் பார்த்தவள், தங்களை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து விட்டு தன்னில் இருந்து ஜனனியை பிரித்தெடுத்து அவள் கண்களை துடைத்தவள்,“என்னடி? “ என்று பதறிய படி கேட்டாள்.

ஹரிணிக்கோ சரணித்தான் அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டான் என்ற எண்ணம் வேறு எட்டிப்பார்க்க, “ வாடி நம்ம இப்போவே போய் டீன் கிட்ட கம்பளைண்ட் பண்ணலாம். “ என்று சொன்னாள்.

ஜனனி அவளை புரியாமல் பார்த்தவள், “என்ன கம்பளைண்ட்? யாரு மேலே? “ என்றுதான் கேட்டாள்.

ஹரிணியோ, “சரணித் மேலேதான். அவன் தானே உன்கிட்ட இப்படி நடந்துகிட்டான்? “ என்று கேட்க, அவள் தன்னை பற்றியிருந்த கைகளை உதறிய ஜனனி, “எல்லாரும் என்ன லூஸ் ஆகிடீங்களா? சும்மா சும்மா எல்லா பழியையும் அவன் மேலே தூக்கி போடுறீங்க? “ என்று கோபமாகவே கேட்டாள்.

ஹரிணியோ அதிர்ந்து அவளை பார்க்க, “ என்னடி நான் சொன்னனா சரணித் வந்து என்கிட்ட இப்படி பிஹேவ் பண்ணான் எண்டு. இந்த கை விரல் தடம் ஒன்னும் சரணித்தோடது இல்லை, துருவோடது. “ என்று சற்று உணர்ச்சி மிகுதியில் கத்தியே விட்டாள் ஜனனி.

அதன் பின்னர் தான் அவள் இருக்கும் இடம் உணர்ந்தவள் சுற்றிப் பார்க்க அங்கு எல்லோரும் அவரவர் வேலைகளில் கண்ணாக இருந்தனரே தவிர யாரும் அவர்கள் பேசியதை கண்டுகொள்ளவே இல்லை. அப்போதுதான், “ஊ.. “என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள் அவள்.

ஹரிணியோ, “என்னடி சொல்ற? துருவா? உன்னை அடிச்சானா? “ என்று கேட்க, ஆம் ரீதியில் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள் ஜனனி.

ஹரிணிக்கோ அது ஆச்சரியமாகவே இருந்தது. அவளை பூ போல பார்த்துக்கொண்டவன் இன்று அவளை அடித்து காயப்படுத்தினான் என்று சொன்னால் அவளுக்கு அதை நம்ப முடியவில்லை.

ஹரிணி தயங்கியபடியே, “துருவா? உண்மையாவா? “ என்று கேட்க ஜனனி தான் ஹரிணியை முறைத்துக்கொண்டாள்.

ஹரிணியோ, “சாரிடி முறைக்காத. என்னால நம்ப முடியல அதுதான். “ என்று சொல்ல, “என்னாலையும் துருவ் இப்படி நடந்துக்குறத எத்துக்க முடியல ஹரிணி. அவன் என்ன நம்பாம இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. “ என்றவளுக்கு கண்ணீர் தான் துணையானது.

ஹரிணிக்கு அவள் அழுவதை பார்க்கவே கஷ்டமாகி போனது, “என்னடி நடந்துச்சு? அத சொல்லு முதல்ல? “ என்று ஆறுதல் சொல்லும் பொருட்டு கேட்க, முதல் நாள் இரவு அவர்களுக்குள் நடந்ததை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் ஜனனி.

இப்போது ஹரிணி தான் ஜனனியை முறைத்தவள், “ என்னடி பண்ணி வச்சிருக்க? கனிகிட்ட ஏண்டி சரணித்த பத்தி பேசின? யாரோ ஒருத்தனுக்காக உன்னோட லைப்ப நீ தொலைச்சிட்டு இருக்க. “ என்றாள்.

ஜனனிக்கும் ஹரிணி அவ்வாறு பேசுவது ஒன்றும் அதிர்ச்சியாக இருக்கவில்லை. அதனால் அவள் அமைதியாகவே இருக்க, “நீ ஏதும் மறைக்குறியா? மனசுல என்ன நினைச்சிட்டு இருந்தாலும் ப்ளீஸ் சொல்லு. எனக்கு உள்ள எக்கசக்கமான கேள்வி ஓடிட்டே இருக்கு. “ என்று சொன்னாள் ஹரிணி.

ஜனனியோ, “ஹ்ம்.. ஈவினிங் கனிஷ் பிக்அப் பண்ண வருவான். நீயும் எங்க கூட வா. இரண்டு பேர்கிட்டயும் எல்லாத்தையும் சொல்லிடுறேன். இதுக்கு மேலே எதையும் மறைக்குறதா இல்ல.” என்று சொல்லிக்கொண்டிருக்க அந்த இடம் சலசலப்பானது.

பேசிக்கொண்டிருந்த இருவரும் நிமிர்ந்து பார்க்க மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் நுழைந்துகொண்டிருந்தனர்.

முன் வரிசையில் இருந்த ஒரு மாணவியோ, “ துருவ் சார் செம ஸ்மார்டா இருக்காருல ? “என்று கேட்க அவள் தலையில் கொட்டிய சஹானா, “என்னோட ஆள சைட் அடிச்ச கண்ணை நொண்டி காக்காய்க்கு போட்டுடுவேன். “ என்றாள்.

பின்னால் இருந்து இதை கேட்டுகொண்டிருந்த ஜனனிக்கு இது நாள் தோறும் நடக்கும் விடயம் என்று தெரிந்திருந்தால் கூட, வழமையாக தன்னவனுக்கும் இருக்கும் மவுசு கண்டு மெச்சிக் கொள்பவளுக்கு இன்று ஏதோ ஒரு இனம் புரியாத வலி எழுந்தது.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 15

மனது வலியில் வெதும்பிய போதும் கூட அதை சற்றும் முகத்தில் காட்டாது கம்பீரமாவே ஜனனியின் வகுப்பறையில் நுழைந்தான் துருவன்.

மாணவிகள் அவனை கண்டதும் எழுந்து கொள்ள அவர்களை கை அசைவில் அமர சொன்னவன், அனைவரின் முன்னும் கைகளை குறுக்காக கட்டியபடி நின்று, “ நீங்க எல்லாம் காலேஜ்க்கு எதுக்கு வாறீங்க? “ என்று சற்று கோபத்துடனே கேட்டான்

மாணவிகள் அவனை புரியாமல் பார்க்க, அவன் பாக்கெட்டில் கை விட்டு ஒரு கடதாசியை எடுத்தவன், “ யாரோட வேலை இது?” என்று கேட்டான்.

இப்போது சஹானாக்குத்தான் இதயம் வேகமாக துடித்தது.ஆம் அவன் கையில் வைத்திருந்தது அவள் அவனுக்காக எழுதிய காதல் கடிதம்.

நேற்றைய தினம் அசைமென்ட் கொடுக்கும் போது இந்த காதல் கடிதத்தையும் இடையில் சொருகி வைத்துவிட்டெல்லவா வந்தாள் அவள்.

அவன் இவ்வாறு எல்லோர் முன்னிலையிலும் அதை காட்டுவான் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.

அந்த இடமே அமைதியாக இருக்க, “எனக்கு இத யார் பண்ணினா எண்டு கண்டு பிடிக்குறது பெரிய வேலை இல்ல. அப்படி கண்டு பிடிச்சு அவங்கள தனியா கூப்பிட்டு என்னால வார்னிங் கொடுத்திருக்க முடியும். ஆனால் இது உங்க கிளாஸ்ல முதல் தடவை நடக்குற விஷயம் இல்ல. இதுக்கு முன்னாடியும் இத மாதிரி நிறைய லெட்டர்ஸ் வந்துருக்கு. சோ, உங்க எல்லாருக்கும் பொதுவா சொல்றதுதான் சரியா இருக்கும். “ என்றவன் ஜனனியை அடிக்கடி பார்க்கவும் தவறவில்லை.

அவளோ அவனையே கண் வெட்டாமல் பார்த்திருந்தாளே தவிர முகத்தில் எந்தவொரு பாவனையும் காட்டவில்லை.

அதே நேரம் அவன் என்ன சொல்ல போகிறான் என்று மாணவிகள் அனைவரும் எதிர்பார்த்திருக்க, “ கேர்ள்ஸ் லிசின், இந்த லவ் லெட்டர்ஸ் தாரது, கார் கண்ணாடில ஹார்ட் வரைறது, என்னோட கேபின்ல சாக்லேட் வைக்குறது இதெல்லாம் வேஸ்ட் ஆப் டைம். எனக்கு இது எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்ல. சோ நீங்க என்ன இம்ப்ரெஸ் பண்ண செலவழிக்குற நேரத்தை உங்க ஸ்டடிஸ்ல செலவழிச்சிங்கனா உங்க பியுசர் நல்லாருக்கும். “ என்று கராராகவே பேசினான்.

அங்கிருந்த சில மாணவிகளின் முகம் தொங்கிப்போக, கூட்டத்தில் இருந்த ஒரு மாணவி, “சார், உங்களுக்கு ஆள் இருக்கா? “ என்று கேட்டாள்.

துருவனோ, “அடிங்க.. “ என்றபடி எட்டி எட்டி பார்க்க யார் பேசியது என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உணர்ச்சியே இல்லாமல் அவன் இதழ்கள் புன்னகைக்க, “இருந்தாஆனா இப்போ இல்ல. “ என்று மட்டும் பதிலளித்தான் அவன்.

ஹரிணியோ அவன் பதிலில் அதிர்ந்து ஜனனியை பார்க்க அவள் அப்போதும் அவனையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சில மாணவிகள், “என் சார்? “, “அவங்க இப்போ எங்க? “, “பிரேக் அப்பா? “ என்று கேள்விகளை அடுக்க, “இட்ஸ் மை பர்சனல். “ என்றவன், ஜனனியை முறைக்க தவறவில்லை.

பின்னர் அவனது பாடத்தை நடாத்தி முடித்தவன், “ஓகே கேர்ள்ஸ். நாளைக்கு மீட் பண்ணலாம். “என்று சொல்லி அங்கிருந்து செல்ல, மாணவிகள் அனைவரும் அவனை பற்றி அவர்களிற்குள் கிசுகிசுக்க தொடங்கினர்.

ஹரிணிக்கோ அது எரிச்சலை கொடுக்க, “எல்லாம் தெரிஞ்சவளுக மாதிரி பேசுறத பாரு. “என்று மனதுக்குள் திட்டியபடி , ஜனனியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியவள், கல்லுரியின் வாசலுக்கு வரவும், கனிஷ்டன் கனிக்காவை ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்துவிட்டு அங்கு வந்து காரை பார்க் செய்யவும் நேரம் சரியாக இருந்தது.

கனிஷ்டன் காரில் இருந்து இறங்கி அவர்கள் அருகில் வந்து நின்றவன், “ஹாய் ஹரிணி! எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!” என்று கேட்டான்.

அவளும், “ஹ்ம் நான் நல்லாருக்கன். நீங்க? “என்று கேட்டவள் வேறு ஏதும் பேசவில்லை.

கனிஷ்டனுக்கோ, “ஏது நீங்களா!, என்ன மரியாதையா பேசுறா. “ என்றுதான் தோன்றியது. அதன் பின்னே அவர்கள் பார்த்து பேசியே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் பாடசாலை காலத்தில் இருந்த அந்த பிணைப்பு இப்போது இல்லை என்றும் உணர்ந்தவன், “ஹ்ம் நல்லாருக்கன். “என்றான்.

அப்போது சரணித் அவனது பைக்கில் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே வர அது கனிஷ்டனின் கண்களில் பட்டது.

கனிஷ்டன் ஆரம்பத்தில் அவனை கண்டு கோபபட்டால் கூட, ஜனனி என்னதான் சொல்கிறாள் என்றும் கேட்க விரும்பியவன் அவனது கோபத்தை புதைத்துக்கொண்டான்.

சரணித்தும் கனிஷ்டனை கண்டுகொண்டவன், அந்த நொடியே பைக்கை நிறுத்தி விட்டு அவன் அருகில் வந்து, “கனிஷ்! எப்படிடா இருக்க? “ என்று எந்த வித குற்றஉணர்ச்சியும் இல்லாமல் சாதாரணமாகவே கேட்டான்.

கனிஷ்டனுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தாலுமே முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாது, ஜனனியின் கையை பிடித்தவன், பக்கத்தில் நின்ற ஹரிணியை பார்க்க, அவளோ, “நான் டுடே பஸ்லதான் வந்தேன். என்னயும் வீட்ல ட்ரோப் பண்ணிடுங்க. “ என்றாள்.

கனிஷ்டன் சரணித்துடன் எதுவும் பேசாமல் அடுத்த கணமே அங்கிருந்து அகல ஹரிணியும் அவர்களுடனே சென்றாள்.

சரணித்திற்குத்தான் முகமே வாடிப்போனது. தன் உயிர் நண்பனை ஆறு வருட காலம் கழித்து சந்தித்து இருக்கின்றான், ஆனால் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அல்லவா!

கவலை தொய்ந்த முகத்துடனே கனிஷ்டனை அவன் பார்திருக்க, காரில் அங்கிருந்து நகர்ந்து சென்ற கனிஷ்டனும் கார் கண்ணாடியில் சரணித்தை பார்க்க தவறவில்லை.

கனிஷ்டனோ , “என்னது? இவ்வளவு காஷ்வலா வந்து பேசுறான்! வேற யாராவதுனா பண்ண காரியத்துக்கு முகமே பார்க்காம தலையை திருப்பிட்டு போயிருப்பானுகளே. “ என்று நினைத்தவனுக்கு, “ஒரு வேளை நம்ம தான் தப்பா நினைச்சிட்டமோ? “ என்ற எண்ணமும் எழ, “ச்ச நம்ம தங்கச்சி மேல ஏதும் பிழை இருக்காது . “என்று அவன் மனம் அடித்துச்சொன்னது.

காரை ஓட்டிக்கொண்டே பக்கத்தில் இருந்த ஜனனியை பார்த்தவன், “எங்க போக? “ என்று கேட்டான்.

ஜனனியோ ஏதும் பேசாமல் அமர்ந்திருக்க, சிறிது தூரம் காரை ஓட்டிச்சென்று ஒரு மர நிழலில் காரை ஓரம்கட்டியவன் அவளை உலுப்பினான்.

அப்போதுதான் ஜனனி சுயநினைவுக்கு வந்தவள், ஆஹ்!” என்க, “என்னடி? நீ இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லையே. எப்பவும் கலகலனு இருக்குற பொண்ணு நீ இப்போ என்னடானா..”என்று இழுத்தவன், “இப்படி உன்னையும் துருவையும் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. “என்றான்.

ஜனனியும் அவனை நோக்கி திரும்பி அமர்ந்து கொண்டவள், “நீயாவது நான் சொல்றத காது கொடுத்து கேட்பியா? நம்புவியா? “ என்று சிறுபிள்ளை போல் கேட்க அதை பார்த்த கனிஷ் மற்றும் ஹரிணிக்குத்தான் பாவமாகி போனது.

அவள் எதையும் கட்டளை போடுகின்ற தோரணையில் சொல்பவள் இன்று இவ்வாறு இறைஞ்சி கேட்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

கனிஷ்டனோ அவள் ஒரு கையை எடுத்து பிடித்துக்கொண்டவன், “நீ என்ன சொல்லணும்? சொல்லு நான் கேட்குறேன். “ என்று சொல்ல அவன் கையை நெற்றியில் வைத்தவள் அழதொடங்கி விட்டாள்.


 
Status
Not open for further replies.
Top