ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 16

கனிஷ்டனும் ஹரிணியும் அவளை தேற்ற, “நான் என்ன தப்பான பொண்ணா? இத்தனை வருஷமா என்ன பக்கத்துல இருந்து பார்த்து காதலிச்சவனுக்கு இப்போ மட்டும் நான் தப்பானவளா தெரியிறேனா?” என்று வலியுடன் கேட்டாள் ஜனனி.

ஹரிணியோ, “அப்படி இல்ல ஜனனி, துருவுக்கு நீ சரணித்தோட பழகுறது பிடிக்கல. அதனாலதான் இப்படி நடந்துக்கிறான். நீ மட்டும் சரணித் கூட பேசுறத ஸ்டாப் பண்ணி பாரு. மறுபடியும் அவன் உன்கூட பழைய மாதிரி பேச ஸ்டார்ட் பண்ணிடுவான்.” என்றாள்.

ஜனனி அவளை முறைத்தவள், “ஆமா அவனுக்கு மட்டும் இல்லை உங்க எல்லாருக்குமே நான் சரணித்தோட பேசுறதுதான் பெரிய பிரச்சனையா தெரியுதுல? முதல்ல ஒன்ன தெரிஞ்சிக்கோங்க நானா போய் அவன்கூட பேசல உங்கள மாதிரியே எனக்கும் அவன் மேலே கோபம், வெறுப்பு எல்லாமே இருந்துச்சு. ஆனா அவன் எனக்கு பண்ண ஒரே ஒரு விஷயத்துல அது எல்லாமே மறைஞ்சு போச்சு. “என்றவள் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

ஆம் சரணித் ப்ரோபஸராக அவளது கல்லூரிக்கு வந்து சேர்ந்த முதல் நாள் அது, அன்று துருவனுக்கும் வீட்டில் வேலைகள் இருந்ததால் தாமதமாகவே கல்லூரிக்கு புறப்பட்டு இருக்க, எப்போதுமே தாமதமாக வரும் ஜனனியும் அவனுடனே ஒட்டிக்கொண்டாள்.

கல்லூரி வளாகத்திற்குள் காரை விட்டவன், “சரி இன்னைக்கு அசைமென்ட் முடிச்சியா? “என்று கேட்க தலையில் கை வைத்தவள், இல்லை என்று தலையை ஆட்டினாள்.

துருவனோ, “அடிபாவி, நேற்று எப்படி பண்ணனும் எண்டெல்லாம் வந்து கேட்டியே? “என்று கேட்க, “ ஆமா நான் வந்து கேட்டேன். நீ எனக்கு அதை சொல்லி தரலையே. எனக்கு நீ எடுத்த பாடமே வேற. அதை நான் இங்க அசைமென்டா பண்ணி கொடுக்க முடியுமா? “என்று வெட்கத்துடனே கேட்டாள்.

அவனும் நெற்றியை நீவிக்கொண்டவன், “சரி சரி, காலைலயே அதெல்லாம் பேசி மூட கிளப்பாத. “என்றவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளை பார்க்க, “என்ன அப்படி பார்க்கிற? “ என்று கேட்டாள் அவள்.

துருவனோ, “ஓஹ்! என்னோட பார்வைக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியாது அப்படித்தானே? “ என்று கேட்க, அவளோ, “இல்லையே தெரியாதே. “ என்று சொல்லி சிரித்துக்கொண்டவள் கதவை திறந்து இறங்க போக, அவள் கைகளை பிடித்து உள்ளே இழுத்தவன் அவள் இதழ்களை தன்வசம் ஆக்கியிருந்தான்.

அவளும் கண்களை மூடி அவனுக்கு ஒத்துழைத்துக்கொண்டிருக்க, கண்களை திறந்து அவளின் தலை முடியை ஒதுக்கிக் கொண்டிருந்தவன் கண்கள் சற்று வெளியிலும் நோட்டமிட அங்கு சரணித் பைக்கை பார்க் செய்வது அவன் கண்களில் பட்டது.

உடனே இதழ்யுத்தத்தை அவன் நிறுத்திக்கொள்ள மெதுவாக கண்களை திறந்த ஜனனி கண்டது என்னவோ அவன் சிவந்திருந்த கண்களையும், புடைத்து எழுந்திருந்த அவன் கை நரம்புகளையும் தான்.

அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டே அவனில் இருந்து பிரிந்தவள், அவன் பார்த்துக்கொண்டிருந்த திசையை பார்க்க அவளுக்கு தூக்கி வாரி போட்டது. “இவன் எப்படி இங்க? “ என்றுதான் நினைத்துக்கொண்டாள்.

அவனை அவள் முறைத்துக்கொண்டிருந்த தருணம், அதிரடியாக காரில் இருந்து இறங்கிய துருவன் சரணித்தை நோக்கி சென்றான்.

ஜனனியோ துருவனின் கோபத்திற்கு கடிவாளம் இட இயலாது என்று தெரிந்தாலும் , “அய்யய்யோ அடிச்சு வச்சுட போறான். யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிடும். “ என்ற பதற்றத்தில் அவன் பின்னால் ஓடிச்சென்றாள்.

துருவன் நேராக சென்று சரணித்தின் முன்னால் நின்று கைகளை பின் கட்டிக்கொள்ள,ஜனனியும் அவன் பின்னால் சென்று நின்றுகொண்டாள்.

சரணித்தின் முகமோ மலர “ஹேய் துருவ்! எப்படி இருக்க? ஜனனி! என்ன இப்படி வளந்துட்ட? எப்படி இருக்க? நான் இங்கதான் ஆர்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல ப்ரோபஸரா ஜோயின் பண்ணிருக்கேன் “என்றான்.

துருவனோ அதற்கு மேல் பொறுமை இல்லாதவன் சரணித்தின் ஷர்ட் காலரை பிடித்து, “இங்க எதுக்குடா வந்த? உன்னை பார்த்தாலே வெட்டி போடுற அளவுக்கு கோபம் வருது எனக்கு. “என்றான்.

சரணித்தோ வெற்று புன்னகையோடு நின்றிருந்தானே அன்றி ஒன்றுமே பேசவில்லை.

ஆனாலும் அவன் மனதிற்குள், “நான் எந்த தப்பும் பண்ணலடா. என்ன நம்புங்க “ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தான்.

துருவனிற்கு அவனது புன்னகை எரிச்சலை கிளப்ப, அவனை அடிக்க கை ஓங்கியே விட்டான்.

ஜனனிதான் அவள் இரு கைகளாலும் அவன் ஒற்றை கையை பிடித்துக்கொண்டவள், “வேணாம் துருவ், ப்ளீஸ் கோவத்தை கண்ட்ரோல் பண்ணு. யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிடும். “ என்றபடி அவனை அங்கிருந்து காரிற்கு இழுத்து செல்ல படாத பாடு பட்டாள்.

காரில் அவனை ஏற்றி, மறுபக்கம் அவளும் ஏறிக்கொண்டவள், “கூல் துருவ்! யாரும் நீ இங்க நிண்டு சண்டை போடுறத பார்த்தால் பிரச்சனை ஆகிடும். “என்று சொல்ல, “அதுக்கு அந்த நாய அப்படியே விட சொல்றியா? என்ன தைரியம் அவனுக்கு? “ என்று எகிறினான் துருவ்.

ஜனனியோ அவனை நெருங்கி சென்று அணைத்துக்கொண்டவள், “ப்ளீஸ்டா இப்படி கோபபடாத. சில விஷயத்துல நம்ம பொறுமையா இருந்துதான் ஆகணும். இல்லனா நமக்குத்தான் பாதிப்பு. “என்றாள்.

துருவனும் அவனவள் அணைப்பில் சற்று அடங்கித்தான் போனவன், சிறிது நேர அமைதியின் பின்னர் அவளை தன்னில் இருந்து விலக்கி எடுத்து, “ஓகே, நான் கோபபடல. ஆனா எனக்கு நீ ஒரு ப்ரோமிஸ் பண்ணி தரணும். “ என்று கேட்டான்.

ஜனனியோ, “என்னது? “ என்று கேட்க, “ நீ இங்க சரணித்த பார்த்தது, அவன் இங்க தான் வேர்க் பண்ண போறான் என்றது எதுவுமே கனிக்காக்கோ, கனிஷ்டனுக்கோ தெரிய வேணாம். “ என்றான் அவன்.

அவளோ இதனால் ஏற்பட போகும் விபரிதம் அறியாமல் அவனுக்கு வாக்கு கொடுத்தவள், “நான் ஏன் இவனை பத்தி கனிட்ட பேச போறேன்! இவனை பார்தாலே எரிச்சலா இருக்கு. “என்றாள்.

ஆனால் ஜனனி சரணித் மேல் கொண்டிருந்த கோபம் வெறுப்பு எல்லாம் ஒரு வார கால இடைவெளியிலே மறைந்து விட்டது.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 17

சரணித் கல்லுரியில் சேர்ந்து ஓரிரு நாட்கள் கடந்திருக்க,ஜனனி மற்றும் ஹரிணியோடு அவன் பேச எவ்வளவு முயற்சி எடுத்தும் அது வீணாகிப்போனது.

துருவனை பற்றி சொல்லவே வேண்டாம் அவனை எங்கு பார்த்தாலும் முறைத்துக்கொண்டே முகத்தை திருப்பிக் கொள்வான்.அவன் அந்தளவு கோபத்தை அடக்கி கொண்டதே அதிசயம் தான்.

இதே சமயம் கல்லூரிகளுக்கு இடையில் நடக்கவிருந்த நடனபோட்டிக்கு ஜனனி மற்றும் சகமாணவிகளுக்கு பயிற்சி அளிக்க சரணித் நியமிக்க பட்டிருக்க ஜனனிக்கு அதில் சற்றும் உடன்பாடில்லை. இருந்தும் அவளால் அதை எதிர்த்து கேட்க முடியாததால் அவனிடமே பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தாள்.

இது துருவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை, போட்டியில் இருந்து விலகிக்கொள்ளும் படி எப்போதும் அவளை வற்புறுத்திக் கொண்டே இருப்பான்.

ஆனால் ஜனனியோ, “ டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம், சோ கண்டிப்பா நான் இந்த போட்டில பார்டிசிபெட் பண்ணுவன். “ என்று உறுதியாக சொன்னவள், “சரணித் கூட டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணிக்குறேன். “ என்றாள்.

இதுவே அவர்கள் பிரிவுக்கு வித்திட்ட விடயமாக பிற்காலத்தில் மாறிப்போனது.

உண்மையில் சரணித் நடனம் என்று வந்தால் கலக்கி விடுவான். எப்போதும் வெஸ்டன்ஸ் நடனத்தில் அவனுக்கு தனி ஆர்வம் இருந்தது. ஜனனிக்கு நடனத்தில் ஆர்வம் எழவும் காரணம் சரணித்தே. பாடசாலை நாட்களில் அவனை பார்த்தே ஜனனியும் நடனம் ஆட ஆரம்பித்து இருந்தாள்.

அன்றைய தினம் சரணித் கல்லூரியில் வந்து சேர்ந்து ஒரு வாரகாலம் கடந்து இருந்தது. எப்போதும் போல காலையில் மண்டபத்தில் டான்ஸ் பர்க்டிஸ்க்கு சரணித் வந்திருக்க, அன்றும் தாமதமாகவே வந்தாள் ஜனனி.

அவனோ, “இவள் மாறவே இல்ல. “ என்று நினைத்கொண்டவன் , “ஓகே கேர்ள்ஸ், டுடே நம்ம நியூ ஸ்டேப் பழக போறோம். “ என்றான்.

மாணவிகளும் அவனை ஆர்வமாக பார்திருக்க, அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தன் கால்களை வைத்து நடனத்தில் வித்தை காட்டியவன், “ஓகே இப்போ இத நீங்க பண்ணுங்க பார்க்கலாம். “ என்றான்.

மாணவிகளும் ஏதோ அவன் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு அவன் மொமெண்டை ஈடு செய்திருக்க, ஜனனி அச்சு அசலாக அவனை போலவே ஆடிக் காட்டினாள்.

சரணித் கைகளை தட்டி அவளை ஊக்க படுத்தியவன், மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்துக்கொண்டு இருந்தான்.

இடையில் இருவர் சேர்ந்து ஸ்டேப் போட வேண்டிய தேவை இருக்க, ஜனனியுடனே இணைத்து அதை ஆடிக்காட்டியவன் மற்ற மாணவிகளுக்கு ஜனனியை பழக்கும் படி சொல்லியிருந்தான்.

சரணித் பள்ளி பருவத்தில் இருந்தே ஜனனியை தன் தங்கையாகவே நடத்தி வந்தவன். அப்போதும் அவ்வாறே நினைத்து அவளுடன் நடனம் ஆடியிருந்தான்.

ஜனனிக்கும் அவன் தொடுதலில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை ஆதலால் அவளும் அதற்கு எதிர்ப்பு ஏதும் சொல்லவில்லை.

ஆனால் வகுப்புக்கு செல்லும் போது இதை ஏதேர்ச்சியாக பார்த்த துருவனுக்கு தான் கோபம் தலைக்கேறியது. ஒன்றும் இல்லாத விஷயத்துக்கே தாம்தூம் என்று குதிப்பவன் இந்த விஷயத்தில் அடங்கி இருப்பானா என்ன?

அப்போதே பயிற்சி மண்டபத்தினுள் வந்தவன், “ஜனனி! என்னோட ரூம்க்கு வா, உன்கூட பேசணும். “ என்றவன் சரணித்தை எரித்து விடுவது போல் பார்த்து அங்கிருந்து சென்றான்.

ஜனனிக்கோ அது அதிர்ச்சி தான் என்னதான் அவர்கள் காதலர்களாக இருந்தாலும் ஒரு போதும் அதை அவன் கல்லூரியில் வெளிக்காட்டியது இல்லை.

சக மாணவிகளை போலவே அவளையும் நடத்துபவன் அவன், அன்று அங்கு வந்து தனியாக அழைத்தது அவளுக்கு நெருடலாகவே இருந்தது.

அடுத்த கணமே அங்கிருந்து அவன் பின்னால் சென்றவள், சரணித்திடம் கூட அனுமதி பெறவில்லை.

துருவன் அவனது அறைக்குள் நுழைந்ததும், அவன் கையில் வைத்திருந்த புக்கை தூக்கி எறிந்தவன் கைகளை மேசையில் ஓங்கி குற்றினான்.

அப்போதுதான் ஜனனி அங்கு வந்தவள் கதவை மூடிவிட்டு, “டேய்! என்னடா பண்ற? “ என்று கேட்டுவந்து அவன் கையை பிடித்தவள் தடவிக்கொடுத்தாள்.

துருவன் உச்ச கட்ட கோபத்தில் அவன் கையை அவளிடம் இருந்து உருவி எடுத்தவன், “அவன் கூட எதுக்கு டான்ஸ் பண்ற? “ என்று கத்தினான்.

ஜனனிக்கு அப்போது தான் அவனது கோபத்திற்கான காரணம் புரிய, ஹேய்! அவன் சொல்லிக்கொடுத்துட்டு இருந்தான். வேற ஏதும் இல்லை. “ என்றாள் சாதாரணமாக.

துருவனோ, “ஏன் அங்க வேற பொண்ணுக இல்லையா? உன்னை தொட்டு தான் அவன் டான்ஸ் சொல்லி தருவானா? நீயும் அவன் கூடவே ஓட்டிட்டு நிக்குற?என்ன அவனுக்கு கம்பெனி கொடுக்குறியா?“ என்று வார்த்தைகளை வீச “துருவ்!” என்று குரலை உயர்த்தியவள் அவன் முறைத்தத்தில் அமைதியானாள்.

இரண்டு பேரும் கோபப்பட்டால் பிரச்சனை பெரிதாகி விடும் என்று நினைத்த ஜனனி, “இங்க பாரு துருவ், எனக்கு குட் டச் ஏது, பேட் டச் ஏதுனு நல்லாவே தெரியும். அதைகூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அண்ட் அவனோட கம்பெனி கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இது ஜஸ்ட் டான்ஸ் அவளவுதான். “என்று அமைதியாக பேசியவள் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

துருவனுக்கு தான் மனது கொள்ளவில்லை, தன்னவளை இன்னொருவன் தீண்டுவதை அவனால் ஏற்கவும் இயலவில்லை.

இப்படியே அந்த நாள் கழிய வீட்டுக்கு சென்ற ஜனனி துருவனுடன் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

என்னதான் கோபம் இருந்தாலும் அவள் பேசாமல் இருப்பது துருவனுக்கு தான் கஷ்டமாகி போனது. “ கொஞ்சம் ஓவராதான் பேசிட்டமோ? சரி, போய் சமாதான படுத்துவோம். “என்று நினைத்து அவள் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டு கொள்ள, கட்டிலில் இருந்து போன் பார்த்துக்கொண்டிருந்த ஜனனி அவனை நிமிர்ந்து பார்த்தாள் .

சண்டை போட்டு வார்த்தைகளை விடுவதும், வந்து சமாதானம் செய்வதும் அவன் வழமையாக இருக்க,அவளும் அவளவனின் சமாதானத்திற்காகவே காத்திருந்தாள்.

துருவன் அவளின் அருகில் அமர்ந்து கைகளை பிடித்துக்கொண்டவன், “சாரி ஜனனி, ஒரு கோவத்துல கத்திட்டேன். “ என்று சொல்ல அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவன் அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன், “நான் கொஞ்சம் ஓவராதான் பேசிட்டேன். ஒத்துக்கிறன். அவன் உன்னை தொட்டு டான்ஸ் பண்றத என்னால ஏத்துக்க முடியல அதுதான். சாரி டி. “ என்றான்.

ஜனனி, “அது ஜஸ்ட் டான்ஸ்தான். “ என்று சொல்ல, “என்ன கருமமா வேணா இருக்கட்டும். ஆனா எனக்கு மட்டும் சொந்தமான உன்னை யார் தொட்டாலும் என்னால அதை ஏத்துக்க முடியாதுடி. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. “ என்றான் துருவன்.

ஜனனியும் அவளில் அவன் கொண்டிருக்கும் உரிமை கண்டு சிரித்துக்கொள்ள அவளை அணைத்துக்கொண்டவன், “ ஐ லவ் யூடி “என்றான்.

அவளும் அவனை அணைத்துக்கொண்டு, “லவ் யூ டூ துருவ். “ என்று சொல்லி முடிக்க அவள் இதழ்களை கவ்விக்கொண்டவன், அவள் அறைக்கதவு தட்டபட்ட சத்தத்திலே அவளை விடுவித்தான்.

ஜனனியோ அவள் இதழை தொட்டு பார்த்து, “ஆ.. “ என்றவள், “பொறுக்கி, காயம் வாற அளவுக்கா கடிச்சு வைப்ப? “ என்று செல்லமாக அவளை திட்டிக்கொண்டே கதவை திறக்க சென்றாள்.

அன்றைய இரவுதான் இருவரும் சந்தோஷமாக பேசி கழித்த இறுதி இரவாக மாறியது என்னவோ விதியின் விளையாட்டு தான்.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 18

அடுத்த நாள் காலையில் துருவன் அவனது நண்பன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலையில் புறப்பட்டு இருந்தான்.

ஜனனி கல்லூரிக்கு கனிஷ்டனோடு சென்றவள் அன்றைய தினம் டான்ஸ் ப்ரக்ட்டிஸ் இல்லாததால் நேராக வகுப்புக்கு சென்று கற்றல் செயற்பாடுகளில் இணைத்து இருந்தாள்.

அன்றைய நாளிலே அவர்கள் தனி ப்ராஜெக்ட் சமர்ப்பிப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது என அறிவிக்கப்பட்டிக்க ஜனனி யின் வகுப்பே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

ஹரிணியோ, “ஜனனி நான் லைப்ரரி போய்ட்டு வந்திடுறேன். “ என்று சொல்லி செல்ல, ஜனனியும் அவளது வேலையில் மூழ்கிவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து கம்ப்யூட்டர் லாபுக்கு சென்றவள், அவளுக்கு தேவைப்பட்ட சில புகைப்படங்களை பிரிண்ட் செய்து, தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்க, அவளை யாரோ உற்றுபார்க்கும் உணர்வு அவளுக்கு எழுந்தது.

உடனே அவள் செய்து கொண்டிருந்த வேலைகளை நிறுத்தியவள் சுற்றும் முற்றும் பார்க்க அங்கு அவளை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

அவளுக்கு அப்போது பயத்தில் இதயம் அடித்துக்கொண்டாலும், “தனியா இருக்குறதால இப்படி தோணுது. “ என்று சொல்லி தன்னை தானே சமாதானம் செய்து கொண்டவள் மீண்டும் அவளது வேலையை ஆரம்பிக்க, “ஹாய் பியூட்டி!” என்று சொல்லிக்கொண்டு கதிரையை இழுத்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான் அந்த கல்லூரி முதல்வரின் மகன் திலீபன்.

பார்ப்பதற்கு மா நிறமும், ஜிம் செய்து மெருகேறி இருந்த உடலையும் கொண்டிருந்தவன் கண்கள் ஜனனியின் மீது தவறான கண்ணோட்டதிலே பதிந்தது.

இதை ஜனனியும் கவனிக்க தவறவில்லை, உடனே கதிரையில் இருந்து எழுந்தவள் நகர போக, அவள் கையை பிடித்த திலீபன், “என்ன அவசரம்? கொஞ்சம் பேசிட்டு போறது. “ என்றான்.

ஜனனிக்கோ அங்கு யாரும் இல்லாதது இன்னும் பயத்தையும் பதற்றத்தையும் கூட்ட, “யாரு நீ? என் கையை விடு முதல்ல. “ என்று கத்த தொடங்கிவிட்டாள்.

அவனோ, “என்ன தெரியாதா? ஓஹ் கோட்! நான் இந்த காலேஜ் ஓனரோட ஒரே பையன் திலீபன். “ என்றவன், “ஷால் வி டேட்? “ என்று கேட்டான்.

இதே சமயம் சரணித்திற்கு பாடங்கள் முடிந்திருக்க நேராக லைப்ரரி சென்று அமர்ந்திருந்தான் அவன்.

அப்போது அங்கே சென்ற ஹரிணி அவள் பார்க்க சென்ற வேலையை மறந்து அவனை பார்த்து முறைத்துக்கொண்டே இருக்க, “இது என்னடா வம்பா போச்சு? “ என்று நினைத்து எழுந்தவன், அமைதியாக இருந்து பாட்டு கேட்பதற்கு இடம் பார்த்து அலைந்துகொண்டிருந்தான்.

அதே நேரத்தில் அதிகாலை முகூர்த்தத்தில் நடந்து முடிந்த நண்பனின் திருமணத்தை பார்த்துவிட்டு, அவனது நண்பர்களோடு விருந்தையும் முடித்த துருவனிடன் அவனது நண்பர்கள், “அடுத்தது உனக்குத்தானே மச்சி கல்யாணம்? “ என்ற கேள்வியையும் எழுப்பி அவனை வெட்கபடவைத்திருக்க, “ஆமாடா இன்னும் ஒரு சிக்ஸ் மந்ல கல்யாணம். “ என்று ஆயிரம் ஆசைகளை மனதில் ஏந்தி சொன்னவன் புறப்பட்டு நேராக கல்லூரிக்கு வந்திருந்தான் அவனுக்கு பெண்டிங் இருந்த வேலைகளை முடிக்க.

சரணித் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தவன் இறுதியாக வந்தது என்னவோ கம்ப்யூட்டர் லாப் இருக்கும் தளத்திற்கு தான் . “இந்த ஐ. டி பசங்களுக்கு லீவ் என்றதால கம்ப்யூட்டர் லாப் பிரீயாத்தான் இருக்கும். பேசாம இங்கேயே இருந்துட வேண்டியதான். “என்று நினைத்தவன் அதை நோக்கி நடந்து வந்தான்.

இதே வேளையில் திலீபனிடத்தில், “மைன்ட் யுவர் வேர்ட்ஸ். எனக்கு ஆல்ரெடி லவ்வர் இருக்கு. “ என்ற ஜனனி அங்கிருந்து செல்ல எத்தணிக்க, “இருந்தா இருக்கட்டும் . இப்போ எனக்கு கொஞ்சம் கம்பெனி கொடுத்துட்டு போ. “ என்ற திலீபன், அவளை பின் புறம் இருந்து பிடித்துக்கொண்டு அவளின் கழுத்தில் முகம் புதைக்க பதறியவள் தன் முழு பலத்தையும் கொண்டு அவனை தடுக்க முயன்றுகொண்டிருந்தாள்.

அந்நேரத்தில் அவளின் நல்லகாலத்திற்கு அங்கு வந்து சேர்ந்தான் சரணித். கண் முன்னே இந்த காட்சியை பார்த்தவனுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு கோபம் தலைக்கேறி இருந்தது.

உடனே அவனின் முன்னால் இருந்த கதிரையை தூக்கி திலீபன் மேல் எறிந்தவன், “என்னடா பண்ற நாயே? “ என்று கேட்டு அவனை சரமாறியாக தாக்க ஆரம்பித்தான்.

இந்த தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு திலீபனிடத்தில் இருந்து விடுபட்ட ஜனனி அங்கிருந்த ஒரு மேசை முன்னால் மண்டியிட்டு இருந்து கொண்டு அழதொடங்கி விட்டாள்.

சரணித்தின் தாக்குதலை தாங்க முடியாத திலீபனோ, “டேய் நான் யாரு தெரியுமா? என்மேல கை வச்சு உன்னோட அழிவை நீயே தேடிக்காத. “ என்று சொல்ல, “நீ யாரா வேணா இரு. ஆனா என்ன தைரியம் உனக்கு அவ மேலே கைவைக்க? “ என்று கேட்டவன் அவனை அடித்துதுவைத்திருந்தான்.

திலீபன் எவ்வளவோ முயற்சி செய்தும் சரணித்தின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் இருக்க, நிலத்தில் கையை வைத்து தடவியன் அவன் கைகளுக்கு மாட்டிய ஒரு பிளக்கை கொண்டு சரணித்தின் தலையில் ஓங்கி அடித்திருந்தான்.

அப்போது சரணித் சற்று தடுமாறி போக அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட திலீபன், “உனக்கு இருக்குடா, தனியா மாட்டாமலா போய்டுவ? “ என்று கேட்டபடி அங்கிருந்து ஓடிச்சென்றான்.

சரணித் தலையை பிடித்துக்கொண்டு அவனை முறைத்தவன், “உன்னால என்ன கிழிக்க முடியும்னு நானும் பார்க்குறேன். இனி இந்த பக்கமே நான் உன்னை பார்க்க கூடாது. “ என்று சொல்லி அவன் எடுத்து அடித்திருந்த பிளக்கை அவன் மேல் விட்டேறிந்தவன், திரும்பி ஜனனியை பார்த்தான்.

அவளோ முகத்தை மூடி அழுது கொண்டிருக்க தயங்கிய படியே அவள் அருகில் சென்றவன், அவள் தலையில் கைவைத்து, “அழாத ஜனனி. ஒன்னும் இல்ல. “ என்றான்.

அடுத்த கணம் கண்களை திறந்து அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டவள், “பயமா இருக்கு. “ என்றாள்.

அவனும் அவளை எழுப்பி கதிரையில் அமர செய்தவன், “பயப்பிடாத, நீ எவ்வளவு தைரியமான பொண்ணு! இதுக்கெல்லாம் உடைஞ்சு போகலாமா? “ என்று கேட்டு ஆறுதல் சொல்லியபடியே விலகி இருந்த அவள் ஆடையையும் சரிசெய்து விட்டான்.

இதை ஜனனியும் கவனிக்காமல் இல்லை, அந்த நொடி அவனின் மேல் அளவுகடந்த மரியாதை உண்டானது அவளுக்கு.

எனினும் அவளினுள் பல கேள்விகள் உறுத்திக்கொண்டே இருந்தது. கண்களை துடைத்துக்கொண்டு அவனை பார்த்தவள், “இப்போ மட்டும் என்ன அவன்கிட்ட இருந்து காப்பாத்துற ஆனா அன்னைக்கு கனிகிட்ட ஏன் இதே மாதிரி நடந்துகிட்ட? “ என்று கேட்டாள்.

சரணித்திற்கோ அவளது அந்த கேள்வி வலியை கொடுக்க, அவள் முன் கதிரையை போட்டு அமர்ந்தவன், “ என்னோட அம்மா மேலே சத்தியம் பண்ணி சொல்றேன் அண்டு நான் கனிய எதுவுமே பண்ணல. நேரமும் காலமும் எனக்கு எதிரா அமைஞ்சிடிச்சு ஜனனி. “என்றான் கலங்கிய கண்களோடு.





 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 19
அவன் கண்களை உற்று பார்த்த ஜனனிக்கு அதில் பொய் இருப்பதாக தெரியவில்லை, உடனே “சரணித் ஏன் இப்போ கண் கலங்குற? “ என்று கேட்டாள் அவள்.
சரணித்தோ கோபம், அழுகை, அவமானம் என எல்லா உணர்ச்சிகளும் கலந்த நிலையில் இருந்தவன், “ ஒருத்தராச்சும் அண்டைக்கு என்ன பேச விட்டீங்களா? இதே மாதிரி தானே அண்டைக்கும் அழுதுட்டு நிண்டன். “ என்று அழுகையை அடக்கிக்கொண்டே கேட்டான்.
ஜனனிக்கு சொல்லுவதற்கு பதில் ஏதும் இல்லாமல் அமைதியாக இருக்க, “ புரியுது, அங்க இருந்த நிலைமைக்கு கண்டிப்பா என்மேல பிழையான அபிப்பிராயம் வரும். ஆனா நீங்க உங்க சைட் மட்டும் இருந்து பார்த்தீங்க. என்னோட சைட் கதையை யாரும் கேக்கல. “என்று சொன்னான் சரணித்.
ஜனனிஅவன் சொல்வதில் ஏதோ நியாயம் இருப்பதாக உணர்ந்தவள், “ இப்போ சொல்லு. அண்டைக்கு என்ன நடந்துச்சு? “என்று கேட்டாள்.
சரணித்தோ, “இத ஒரு ஆறு வருஷம் முன்னாடி கேட்டிருக்கலாம். “ என்றபடி உணர்ச்சிகள் இன்றி மெலிதாக புன்னகைத்தவன், “அண்டைக்கு நான் உங்க கிட்ட சொல்லிட்டு வரும் போது நம்ம மட்ஸ் சார் என்ன புடிச்சு ஏன் கிளாஸ் வரல, மார்க்ஸ் குறைஞ்சிட்டு, இனி நல்லா படிக்கணும் எண்டு வழமையான அவரோட லேக்சர எடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டாரு. அவர்கிட்ட பேசிட்டு வரவே லேட் ஆயிடிச்சு.
அந்த டைம் என்னோட போன் வைபிரேட் ஆச்சினு அதை எடுத்து பார்க்கும் போது கனி மெஸேஜ் பண்ணிருந்தா. இவளவு நேரம் கூடதானே இருந்தா இப்போ எதுக்கு மெஸேஜ் பண்ணிருக்கா எண்டு நினைச்சிட்டே ஓபன் பண்ணி பார்த்தேன்.அதுல, ஸ்கூல் பின்னாடி இருக்குற மோட்டர் ருமுக்கு வா உன்கூட தனியா பேசணும். ரொம்ப அவசரம். “ என்று போட்டிருந்துச்சு.
அதுக்கு பிறகுதான் நான் அங்க போனேன். ஆனா சத்தியமா நான் வேற எந்த நோக்கத்துலயும் போகல.”என்று சொல்லி முடித்தான் .
ஜனனியோ, “இல்லை! என்ன சொல்ற நீ? கனி எதுக்கு உன்னை அங்க கூப்பிடனும்? “ என்று கேட்க, “சத்தியமா எனக்கு தெரியாது ஜனனி. மே பி அவள் மெஸேஜ் பண்ணி ரொம்ப நேரம் கழிச்சு நான் அங்க போயிருப்பன்.அவளும் எனக்கு ரொம்ப நேரமா வெயிட் பண்ணி இருந்துட்டு நான் வீட்டுக்கு போய்ட்டன் எண்டு நினைச்சு அவள் ட்ரெஸ் சேஞ் பண்ணியிருக்கலாம்.” என்று சொன்ன சரணித், “ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். அவ ஒரு பதட்டத்துல கத்திட்டா அது ஓகே. ஆனா கனிஷும், துருவனும் என்ன அடிக்கும் போது ஒரு வார்த்தை அவனை நான்தான் வர சொன்னன் என்று அவ சொல்லலையே. “என்றான்.
ஜனனிக்கு தலையே சுற்றிக்கொண்டு இருந்தது, “கனி எதுக்கு கூப்பிடனும்? அவ எதுக்கு பொய் சொல்லணும்? “ என்று பல கேள்விகள் அவளுள் சுழன்று கொண்டிருந்தது.
சரணித்தோ, “ஹேய்! என்ன இப்படி யோசிக்குற? “ என்று கேட்க, “ஆமா, அவள் உனக்கு மெஸேஜ் பண்ணது உண்மையா? அதை எப்படி நான் நம்புறது? “ என்று கேட்டாள் ஜனனி.
உடனே பாக்கெட்டில் இருந்து அவனது போனை எடுத்தவன் அதில் இருந்த ஸ்கிரீன் ஷாட்டை ஜனனியிடம் காட்டினான்.
அவளுக்கு அதை பார்த்து அதிர்ச்சிதான். கனி மேல்தான் இப்போது அவளுக்கு சந்தேகம் எழுந்தது, “எதுக்கு இப்படி பண்ணினா அவ? “ என்றுதான் யோசித்தாள் அவள்.
சரணித்தோ, “இதெல்லாம் கூட விடு ஜனனி ஆனா இந்த ஆறு வருஷத்துல உங்கள எல்லாம் எவ்வளவு மிஸ் பண்ணன் தெரியுமா? பொம்புள பொறுக்கி என்ற பழியை சுமந்துட்டு வாழ்றதெல்லாம் ரொம்ப கொடுமை. “என்றவன் கண்ணின் ஓரத்தில் நீர் அரும்பியது.
இப்போது அவனை தேற்றியது என்னவோ ஜனனிதான். அவன் சொல்வது உண்மை என்று ஆதாரத்துடன் நிறுபித்து இருக்க அதன் பின் எவ்வாறு அவளால் அவனை விலக்கி வைக்க முடியும்?
அவ்வாறு இருவரும் கடந்தகாலத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்க இருவர் முகத்திலும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை. பாடசாலை நாட்கள் எல்லோருக்கும் சொர்க்கம் தானே!
இந்த சமயத்தில் தான் லேப்டாப்பை தூக்கிக் கொண்டு கம்ப்யூட்டர் லேபினுள் நுழைந்தான் துருவன்.
கதவை திறந்தவனுக்கு ஜனனி சரணித்துடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பது கண்ணில் பட, ருத்ரதாண்டவம் ஆட தயாராக நின்றிருந்தான் அவன்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவர்கள் இருவரும் கூட திரும்பி பார்த்தவர்கள் துருவன் நிற்பதை பார்த்து அதிர்ந்துதான் போனார்கள்.
ஜனனிக்கோ, “ துருவனை என்ன சொல்லி சமாளிப்பது? “ என்ற யோசனை எழ , சரணித்க்கோ, “அவனால் துருவன் ஜனனியை ஏதும் சொல்லிவிடுவானோ? “ என்ற பயம் ஒட்டிக்கொண்டது.
இருவரும் அவனையே பார்த்து நின்றிருக்க, “சரணித் அவுட், நான் ஜனனி கூட பேசணும்.” என்றான் துருவன்.
ஜனனியோ சரணித்தை பார்த்தவள், “இங்க நடந்தது எதுவும் அவனுக்கு தெரிய வேணாம். தெரிஞ்சா பெரிய கலவரமே பண்ணிடுவான். “ என்று திலீபனின் விஷயத்தை முணுமுணுக்க, சரணித்க்கும் துருவனின் குணம் தெரிந்திருந்ததால் அதை அவனே சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்தவன் சிறு தலை அசைப்பை மட்டும் அவளுக்கு பதிலாக வழங்கி அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் துருவன் ஜனனியை வார்த்தை கணைகள் கொண்டு துளைத்திருக்க, அவளோ அதை எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவள், சரணித் பற்றி அவனிடம் எடுத்துச் சொல்ல முயன்று கொண்டிருந்தாள்.
ஆனால் துருவனோ அவனது முன்கோபத்தாலும், அவசர புத்தியாலும் கட்டுண்டு இருந்தவன் எதையும் கேட்கும் மன நிலையில் இல்லை அதற்கு பதிலாக ஜனனியிடமே வார்த்தை போர் புரிந்துகொண்டிருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் தோளை பற்றி கீழே தள்ளி விட்டு , “அந்த கேடுகேட்டவன பத்தி என்கிட்ட பேசாத. இவ்வளவு நாள் கெட்டவனா இருந்தவன் இண்டைக்கு உனக்கு நல்லவனா தெரியுறானா? என்ன உன்னை பேசி மயக்கிட்டானா? “என்று கேட்டவன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றிருந்தான்.
ஜனனியோ, “இவனுக்கு எப்படி சொல்லி புரியவைக்குறது? பேசாம கனிஷ்கிட்ட சொல்லலாமா? “ என்று யோசித்தவளுக்கு முடிவு ஏதும் எடுக்க முடியாமல் போக தன்னுளேயே எல்லாவற்றையும் அடக்கி வைத்திருந்தாள்.
துருவனோ அவளிடம் சண்டை இட்டு விட்டு வந்தவன், அவனது கார் கியை எடுப்பதற்காக செல்ல, அங்கு நின்றிருந்த இரு லெக்சரர்கள், “என்னப்பா ஆர்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல புதுசா ஜோயின் பண்ணி இருக்குற சரணித் சார்க்கும் நம்ம காமெர்ஸ் டிபார்ட்மென்ட் லாஸ்ட் இயர் ஸ்டுடென்ட் ஜனனிக்கும் லவ்வாமே? “, “ஆமா, நம்ம திலீபன் சார் இண்டைக்கு கம்ப்யூட்டர் லாப் போன நேரம் இரண்டு பேரும் நெருக்கமா இருந்தாங்களாம். சார் புலம்பிட்டு இருந்தார். “என்று பேசிக்கொண்டு இருந்தனர்.
இதை கேட்ட துருவனுக்கு இதயமே நொருங்கிப் போனது, அவர்களின் காதல், ஜனனி அவன் மீது கொண்டிருந்த அன்பு, அத்தனை வருடங்கள் இருவரும் சேமித்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் பொய்யாகி போக சந்தேகம் என்ற பீடை அவனில் ஒட்டிக்கொண்டது.
திலீபன் தன் மீது எந்த பழியும் விழுந்துவிட கூடாது என்பதற்காக சரணித் மற்றும் ஜனனி மீது தவறான விம்பத்தை அனைவரிடத்திலும் திணிக்க அதில் மாட்டி உசலாடிக் கொண்டிருந்தது துருவன் மற்றும் ஜனனியின் காதல்.

 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 20

ஜனனி இவை அனைத்தையும் சொல்லி முடிக்க சரணித்தின் பக்கம் இருக்கும் நியாயம், துருவ் மற்றும் ஜனனிக்கு இடையில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை இவை அனைத்தையும் தாண்டி திலீபன் மீது கொலைவெறியில் இருந்தான் கனிஷ்டன்.

ஹரிணியோ, “இவ்வளவு நடந்திருக்கு ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல நீ? “ என்று கேட்க, கனிஷ்டனும் அதைத்தான் கேட்டான்.

ஜனனியோ பெருமூச்சு விட்டவள்,“எனக்கு என்ன சொல்றது, எப்படி சொல்றது ஒன்னும் புரியல. நானே எல்லாத்தையும் சமாளிச்சுடலாம் எண்டு நினைச்சன். ஆனா போக போக எல்லாமே தலைக்கு மேலே போயிடிச்சு. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆயிட்டன். அதுனால தான் நேற்று கனிகிட்ட கூட சண்டை போட்டேன். “ என்றவள், “எல்லாத்துக்கும் மேலே கனி மேலே தப்பு இருக்குனு எப்படி என்னால உங்ககிட்ட வந்து சொல்ல முடியும்? “ என்று கேட்டாள்.

ஜனனி சொல்வதை கேட்டிருந்த கனிஷ், “கனி மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு, அவ இப்படி பண்ற ஆள் இல்லை. ஆனால் சரணித் சொல்ற பார்த்தா வேற ஏதும் நடந்து இருக்கும் எண்டு தோணுது. “என்றான்.

ஜனனி அமைதியாக இருக்க, “எனக்கு சரணித்த மீட் பண்ணனும். அவன் நம்பர் இருக்கா? “ என்று கேட்வன்,அவளிடம் இருந்து எண்ணை பெற்றுக்கொண்டான்.

பின்னர் அங்கிருந்து காரை நகர்த்தியவன் போகும் வளியில் திலீபனை பற்றி கேட்க,ஜனனியும் ஹரிணியும் அவர்களுக்கு தெரிந்ததை அவனிடம் சொல்லியிருந்தார்கள்.

ஜனனி நன்கு அறிவாள் துருவனின் குணத்திற்கு எதிர்மாறானவன் கனிஷ்டன் என்று. அவன் எது செய்வதாக இருந்தாலும் ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து, அதன் விளைவுகளை அறிந்தே காரியத்தில் இறங்குவான். அதனால் அவனின் மேல் எப்போதும் நம்பிக்கை உடையவள் அவள்.

கனிஷ்டன் முதலில் ஹரிணியை அவள் வீட்டில் விட்டவன் அடுத்ததாக ஜனனியையும் வீட்டில் இறக்கி விட்டு, “என்கிட்ட சொல்லிட்டல இனி இதை நான் பார்த்துக்குறேன். நீ யோசிக்காம பிரீயா இரு. “ என்றவன் அங்கிருந்து நேராக கம்பெனிக்கு சென்றுவிட்டான் அவன் பாதியில் விட்டு வந்த வேலைகளை முடிப்பதற்கு.

ஜனனி வீட்டினுள் நுழைய, அங்கிருந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த துருவன் மணிக்கூடையும் அவளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டான்.

ஜனனியும் அதை பார்த்தாலும் அவனை கண்டுகொள்ளவே இல்லை. அவனை கடந்து நேராக அவள் அறைக்கு சென்று விட்டாள்.

துருவனுக்கு தான் அவன் நிலை என்னவென்றே புரியவில்லை, அவளை உருகி உருகி காதலித்தவன் இன்று அவளை முற்றாக வெறுத்து ஒதுக்க நினைக்கின்றான்,ஆனால் அவளை வேறு யாரும் தீண்டுவதையோ பார்ப்பதையோ அவனால் ஏற்க முடியாமல் இருக்க, அவள் அவனை கண்டுகொள்ளாதது வேற அவனை வதைத்துக்கொண்டு இருக்கிறது.

கையில் வைத்திருந்த ரிமோட்டை தூக்கி எறிந்தவன், “என்ன நினைச்சுட்டு இருக்கா இவ? காலேஜ் முடிஞ்சு இவ்வளவு லேட்டா வாறா? “ என்று கோபம் கடந்து அவள் மேல் உரிமையும் எடுத்து கொண்டவன், அங்கிருந்து எழுந்து ஜனனியிடம் சென்றான்.

அவளோ அப்போதுதான் உடைகளை மாற்றிக்கொண்டிருக்க, சட்டென கதவை திறந்து அவள் அறையினுள் நுழைந்திருந்தான் அவன்.

ஜனனி கதவுக்கு முதுகு காட்டி நின்று கொண்டதால் யார் வருவது என்று அவளுக்கு தெரியாமல் இருக்க, கதவு அதிரடியாக திறக்க பட்ட சத்தம் மட்டும் அவளுக்கு கேட்டது.

சற்று பதறியவள், “ஆ... அம்மா!.. “ என்று கத்த, பக்கத்து அறையில் இருந்து உடை மடித்துக்கொண்டிருந்த கௌரி மற்றும் வாணி அவள் கத்திய சத்தத்திற்கு ஓடி வந்தனர்.

அவள் கத்தியதை வியப்பாக பார்த்த துருவன், “இப்போ எதுக்குடி கத்துற? “ என்று கேட்டதும் தான் வந்திருப்பது துருவன் என்றே அவளுக்கு தெரிந்தது.

உடனே சுதாகரித்தவள், “நான் வேற யாரோ எண்டு நினைச்சன். “ என்று சொலல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்திருந்தனர் கௌரி மற்றும் வாணி.

இப்போது சங்கடமாகி போனது என்னவோ அவர்களுக்குதான். “ஓஹ்! துருவ் நீயா? “ என்று கேட்ட வாணி, “சாரிப்பா இவ ஏதோ பேயை பாத்த மாதிரி கத்துனாளா அதுதான் பயந்து ஓடி வந்தோம்.”என்றவர் கௌரியின் கையை பிடித்து அழைத்து செல்ல, “என்னோட புள்ளைக்கு வயசாகிட்டே போகுது என்றத மறந்துட்டேன் வாணி, காலகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும், மருமக படிச்சு முடிக்கட்டும் எண்டு காத்திட்டு இருந்தது தப்பா போச்சு. “ என்று சொல்லிக்கொண்டே சென்றார் அவர்.

இது தெளிவாக துருவனின் காதிலும் விழ, அவள் அருகில் வந்தவன், “எதுக்குடி கத்துன? என் நான் உன்னை முன்ன பின்ன இப்படி பார்த்தது இல்லையா? “என்று கேட்டவன் தலையை நீவிக்கொண்டே, “என்ன அவமான படுத்தணும் எண்டே இதெல்லாம் பண்றல? “ என்று கேட்டான்.

ஜனனியோ கதிரையில் இருந்த டவலை எடுத்து போர்த்திக்கொண்டே, “ஐயோ அப்படி இல்ல துருவ். சத்தியமா நீ வந்தத நான் பார்க்கல. “ என்று சொல்ல, “என்ன தவிர உன் ரூம உன் பெர்மிஷன் இல்லாம யாரும் ஓபன் பண்றது இல்லையே! என்று கேட்ட துருவன், “ ஓஹ் சாரி, இப்போ தான் எல்லாம் மாறி போச்சுல, நான் உன் பக்கத்துல வந்தா கூட உனக்கு அந்நியமாத்தான் தெரிவன். “ என்று வலி கலந்த குரலில் சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஜனனிதான், “இவன் என்ன லூசாயிட்டானா? எது சொன்னாலும் காது குடுத்து கேட்க மாட்டேங்குறான், எடக்கு முடக்கா பேசுறான், இவனை எப்படித்தான் சரி கட்டுறது? “ என்று நினைத்துக்கொண்டாள்.

இதற்கிடையில் ஜனனியின் அறையில் இருந்து வெளியே வந்த துருவனோ பேல்கனியில் சென்று நின்றவன் , “நீ இப்படி மாறுவனு நான் கொஞ்சமும் நினைச்சு பார்க்கலடி “ என்று முணுமுணுத்துக்கொண்டான்.

அவனது எண்ணமோ கடந்த காலத்தை எட்டிப்பார்த்துக்கொள்ள, இதே மாதிரியான ஒரு நாள் அவன் நினைவுகளை ஆட்கொண்டு இருந்தது.

அன்று கனிக்கா மற்றும் கனிஷ்டனின் இருபத்தோராவது பிறந்தநாள், காலையில் குடும்பத்தோடு கோவில் சென்று வந்தவர்கள் மாலை நேரத்தில் கேக்வெட்டிகொண்டாடியும் முடித்திருந்தனர்.

ஜனனி அப்போது பதின்மவயதின் இறுதியில் இருக்க, அன்றைய தினம் முழுவதும் லேகங்கா அணிந்திருந்தவள், பார்ட்டி முடிந்ததும், “அப்பாடா முதல்ல இந்த ட்ரெஸ்ஸ கழட்டி தூர போடணும். என்ன வெயிடு? “ என்றபடி அவள் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

துருவனும் அவனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தவன், சுற்றும் முற்றும் ஜனனியை பார்க்க அவள் அவன் கண்களுக்குள் புலபடவில்லை.

காலையில் அவளை சேலை கட்டும்படி அவன் சொல்லியிருக்க, “அதெல்லாம் பெரிய வேலை, என்னால முடியாது. “ என்று மறுத்திருந்தாள் அவள்.

அதிலே இருவர் இடையிலும் செல்ல சண்டை மூண்டிருக்க, இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஆனாலும் அந்த லேகங்காவில் அவள் பேரழகியாக தெரிய அவன் அவளை ரசிக்கவும் தவறவில்லை.

துருவனோ, “காலைல இருந்து ஒரு வார்த்தை பேசினாளா பாரு? “ என்று நினைத்துக்கொண்டவன், கௌரியிடம் பேசி அவள் அறைக்கு சென்று விட்டாள் என்று அறிந்து,அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அங்கு சென்றிருந்தான்.

ஜனனியோ தலையை கோதி கொண்டை போட்டுக்கொண்டவள்,அவளது லேகங்காவின் டாப்பை கழற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

கண்ணாடியின் முன் நின்று கொண்டே, “யப்பா இந்த ட்ரெஸ் எல்லாம் போட்டுட்டு எப்படி சுத்துறாங்களோ , காலைல அம்மா குக் போட்டு விட்டாங்க, இப்போ கழட்ட முடியலையே. “என்று அவஸ்தை பட்டுக்கொண்டிருக்க, அவள் அறைகதவை திறந்து வந்து நின்றான் துருவன்.

அவளும் கண்ணாடியில் அதை பார்த்தவள் ஏதும் சொல்லாமல் அவளது வேலையிலே குறியாக இருந்தாள்.

துருவனுக்கு அவளை பார்த்ததும் சங்கடமாகி போக, “ஹேய் சாரி! நான் உன்கூட பேசலாம்னு தான் வந்தேன். சாரி சாரி. “ என்றவன் வெளியே செல்ல போக, “வந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றது. “ என்றாள் ஜனனி.

துருவனோ, “என்னது? “ என்று கேட்க, “காது செவிடா என்ன? வந்து குக்க கழட்டி விடு. “ என்றாள் அவள்.

துருவன் என்னதான் அவளை சிறுவயதில் இருந்து காதலித்து வந்தாலும் அவளை சீண்டி வம்பிழுப்பானே தவிர அவளுடன் நெருங்கியது இல்லை. படிக்கும் அவளின் உணர்வுகளை தூண்டிவிட அவனுக்கும் விருப்பம் இருக்கவில்லை.

அப்படி அவனது நாட்கள் சென்றிருந்த நேரத்தில் இன்று ஜனனி அவனை சோதித்திருந்தாள்.எங்கே தன்னை மீறி உணர்ச்சிகள் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தவன், “இரு கனிய கூப்பிடுறேன். “என்றான்.

ஜனனியோ, “ நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல. காலேஜ் போறன்”என்று சொன்னவள், “வந்து ஹெல்ப் பண்றியா இல்லையா? “ என்று கேட்க அதுற்கு மேல் அவன் மறுப்பானா என்ன?

கதவை சாத்தி விட்டு வந்து அவள் பின்னால் நின்றவன், அவளது குக் ஒன்றோன்றாக அவிழ்த்து விட்டவன், உணர்ச்சிகளை அடக்க படாத பாடு பட்டுக்கொண்டான்.

ஜனனி எதையும் சட்டை செய்யாது அவளது காப்பை கழட்டி போட்டவள், “சரி முடிச்சுட்டியா? “ என்று கேட்டுவிட்டு அங்கிருந்த டவலை எடுத்துக்கொண்டு குளியல்அறைக்குள் சென்றவள் குளித்து முடித்து வெளியே வந்தாலும் துருவன் அங்கேயே நின்றிருந்தான்.

ஜனனியோ, “ ஹேய் நீ இன்னும் போகலையா? “ என்று கேட்க, அவனோ டவலை கட்டிக்கொண்டு நின்றிருந்த அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், “ஆமா நீ ரொம்பத்தான் வளர்த்துட்ட. “ என்றபடி அவளை இழுத்து அவளது உச்சிவகிட்டில் தனது முதல் முத்தத்தை பதித்தவன் அடுத்து அவள் இதழ்களையும் தன்வசபடுத்தி இருந்தான்.


 
Status
Not open for further replies.
Top