ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 06

ஜனனி குளித்துவிட்டு கூந்தலை அள்ளி முடிந்தபடி அக்கோன்டஸ் புக்கை எடுத்து வைத்தவள், “கொஞ்சமாச்சும் படிப்பம் இல்லாட்டி அந்த சொட்டை மார்க்ஸ் இல்ல எண்டு கண்டபடி திட்டும்.” என்று முணுமுணுத்துக்கொண்டே படிக்க அமர்ந்து தாள்களை பக்கம் பக்கமாக புரட்டினாளே தவிர அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

அவளோ, “ச்சை…” என்று சலித்துக்கொண்டே மேசையில் இருந்த அவளது புக்கை தூக்கி வீச, அவளது அறை கதவை திறந்து உள்ளே நுழைந்த கனிக்காவின் காலடியில் அது போய் விழுந்தது.

கனிக்காவோ, “ஏய்! எதுக்குடி புக்கை தூக்கி வீசுற?” என்று கேட்டுக்கொண்டே கீழே கிடந்த புக்கை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டவள், “என்னடி உன் பிரச்சனை? “ என்று கேட்டபடி வந்து புக்கை மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்த ஸ்டூலை இழுத்தெடுத்து அதில் அமர்ந்தாள்.

ஜனனி திரும்பி பார்த்து கனிக்காவை முறைத்து , “இவ எல்லாத்தையும் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கா நான் இடைல மாட்டிட்டு முழிக்குறேன் “என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள்,நிதானத்தை இழந்து, துருவனுக்கு கொடுத்த வாக்கையும் மறந்து,“ எல்லாத்துக்கும் காரணம் நீதான் தெரியுமா! நீ பண்ண வேலையால இன்னைக்கு மூணு பேரோட வாழ்கை கேள்வி குறியா நிக்குது. “என்று சொல்ல, கனிக்காதான் குழம்பி போனாள்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, “என்ன ஜனனி சொல்ற? நான் என்ன பண்ணன் ? நீ கொஞ்ச நாளா என்கிட்ட சரியா பேசல, நானும் வேலை டென்ஷன்ல அத பெருசா கண்டுக்காமலே விட்டுட்டன். அதுதான் இப்போ என்ன ஏதுனு கேட்டு பேசிட்டு போகலாம்னு வந்தன். நீ என்னடானா ஏதேதோ பேசிட்டு இருக்க? “என்று கேட்டாள்.

ஜனனி சற்று நிதானமானவள் அதற்குமேல் எதுவும் பேச விரும்பாமல் , கனிக்காவை கடந்து செல்ல, அவளது கைகளை எட்டி பிடித்த கனிக்கா, “என்ன நான் கேட்டதுக்கு ஒன்னுமே சொல்லாம நீ பாட்டுக்கு போய்ட்டு இருக்க? பதில் சொல்லிட்டு போ. “ என்றாள்.

ஜனனியோ, “எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல கனி, ப்ளீஸ் என்ன ஏதும் கேக்காத அப்புறம் ஏதாச்சும்…”என்று இழுத்தவள்,”கையை விடு கனி. “ என்றாள்.

கனிக்காவோ ஜனனியின் கையை விட்டவள், “இப்போ நீ ஏதோ சொல்ல வந்தல.. “என்று கண்கள் கலங்கி கேட்க,” எனக்கு உன்கிட்ட பேசவே புடிக்கல… நீ பண்ணது ரொம்ப தப்பு.” என்றாள் அவள்.

கனிக்காவோ பொறுமை இழந்தவள், “என்னடி லூசு மாதிரி பேசிட்டு இருக்க? நான் பண்ணது என்ன எண்டே சொல்லாம தப்பு பண்ணிட்டேன் என்ற என்னதான் உன் பிரச்சனை? “ என்று கேட்க, ஜனனியோ சற்றும் யோசிக்காமல், “சரணித் விஷயத்துல நீ பண்ணது ரொம்ப தப்பு என்றாள். “

கனிக்காவிற்கோ சரணித் என்ற பெயரை கேட்டதும் தலையே சுற்றுவது போன்ற உணர்வு. அவள் வாழ்கையை புரட்டி போட்டு இன்று வரை ஆறாத வடுவாக அவள் மனதை குடைந்து கொண்டிருக்கும் அவளது கடந்தகாலம் ஒரு முறை அவள் கண் முன் வந்து போனது.

“சர…ணி.. த்.. அவ.. ன் “ என்று சொன்ன கனிக்காவிற்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வராமல், கண்கள் கலங்கி கண்ணீர் மட்டுமே வந்தது.அவள் கண்களிலே அவ்வளவு கோபமும் வலியும் கலந்திருந்தது தெளிவாக தெரிந்தது.

ஜனனியோ, “என்ன பேச முடியலையா? நீ பண்ண தப்பு எல்லாம் இப்போ உன் கண் முன்னாடி வந்துட்டு போயிருக்குமே!, பொம்பள பிள்ளைகள் கண்ணீர் விட்டா விசாரிக்காம எல்லாத்தையும் கண்ணை மூடிட்டு நம்புற சொசைட்டி இருக்குற வரைக்கும் உன்னை மாரி தப்பு பண்ணிட்டு பசங்க மேலே பழி போடுற பொண்ணுகளுக்கு கொண்டாட்டம் தான். அதுமட்டுமா.. “ என்று தொடர்ந்து பேச எத்தணிக்க, ஜனனியை தன்பக்கம் திருப்பிய கனி அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

ஜனனி நிலை தடுமாறி ஓரிரு அடிகள் பின் சென்று திரும்பியவள், கன்னத்தை பிடித்துக்கொண்டு, “இப்போ எதுக்கு என்ன அடிச்ச? எல்லா உண்மையும் எனக்கு தெரிஞ்சு போச்சு என்ற பயத்துலயா? “ என்று கேட்க, கோபத்துடன் அவளை முறைத்து, “இனி ஒரு வார்த்தை பேசின நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். என்னடி தெரியும் உனக்கு அண்டைக்கு நடந்தத பத்தி? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுற. அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு. “என்று அடி தொண்டையில் கத்தினாள்.

ஜனனியோ, “எனக்கு எல்லாம் தெரியும் கனி. சரணித் என்கிட்ட எல்லாமே சொல்லிட்டான். ஆனா அப்போ கூட அவன் உன்னை தப்பா ஒரு வார்த்தை சொல்லல தெரியுமா? ஏதோ பதட்டத்துல நீ அப்படி எல்லாம் பண்ணிட்டனு சொன்னான்.“என்று கனிக்கு சளைக்காமல் கத்த, கனிக்காவுக்கு தான் அடுத்த இடி இறங்கிய உணர்வு, “என்னது சரணித் இங்க இருக்கானா? உன்கூட பேசினானா? “ என்று கேட்டாள் அவள்.

இதற்கிடையில் துருவனும்ம் , கனிஷ்டனும் அவர்கள் அறையில் இருந்து அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கும் ஜனனி மற்றும் கனிக்காவின் குரல் கேட்க, “என்னடா இவ்வளவு சத்தம் போட்டு பேசிட்டு இருக்காளுக? “ என்று கேட்டான் துருவன்.

கனிஷ்டனோ, “தெரியலயே.. கொஞ்ச நாளா ஜனனி என்கூட சரியா பேசல எண்டு சொல்லி கனி புலம்பிட்டே இருந்தா. அதான் போய் பேசி என்ன ஏதுனு கேட்டுட்டு வாறன்னு போனா. சும்மா ஏதும் சில்லறை விஷயத்துக்கு இரண்டும் முட்டிட்டு இருக்கும் “ என்று சாதாரணமாக சொன்னவன் அவனது லேப்டாப்பை தட்ட, துருவன் தான் ஏதோ சரி இல்லையே என்று நினைத்தவன், எழுந்து ஜனனியின் அறையை நோக்கி வந்தான்.

ஜனனியோ கனிக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவள், “ஆமா.. சரணித் இங்கதான் இருக்கான். என்னோட காலேஜ் ப்ரொபேசர் . “என்றவள், “நீ எதுக்கு இப்படி பயப்படுற?? எங்க நீ பண்ண தில்லு முல்லு எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுடும் என்ற பயமா? “ என்று கேட்க, சத்தம் கேட்டு ஜனனியின் அறைக்கு வந்திருந்த துருவனுக்கு ஜனனி பேசியது தெளிவாக கேட்டது.

கனிக்காவிடம் சரணித் பற்றி ஜனனி பேசியதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற துருவன், பாதி மூடியிருந்த அவள் அறைக்கதவை எட்டி உதைத்து உள்ளே நுழைந்து ஜனனியின் கன்னத்தில்ஓங்கி அறைந்தவன் , “வாயை மூடு ஜனனி. “ என்றான்.

ஜனனி துருவன் அறைந்ததில் நிலை தடுமாறி நிலத்தில் சுருண்டுவிட, துருவன் எதற்கு வருகிறான் என்று தெரியாமல் அவன் பின்னால் வந்த கனிஷ்டனும், அங்கே அழுது கொண்டு நின்றிருந்த கனிக்காவுமே, “துருவ் என்னடா பண்ற? “ என்று கேட்டபடி அவளை தூக்கி விட்டனர்
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 7

ஜனனிக்கு துருவன் அவளை அறைந்ததும் பேச வார்த்தைகள் ஏதும் வரவில்லை கண்கள் குளமாகி அவள் நின்றிருக்க, இவர்களுக்குள் நடக்கும் இந்த சண்டைகள் அவர்களின் பெற்றோர்க்கு தெரிய வேண்டாம் என்று நினைத்த கனிஷ்டன் ஓடிச்சென்று கதவை தாளிட்டவன் , “என்ன நடக்குது இங்க? துருவ் எதுக்கு இப்போ நீ ஜனனிய அடிச்ச? “ என்று கேட்க, அவனை முறைத்த துருவன், “உனக்கு நான் அவளை அடிச்சது மட்டும்தான் கண்னுக்கு தெரியுதா, ஏன் நம்ம தங்கச்சி அழுதுட்டு இருக்குறது தெரியலையா? “என்று கேட்டான்.

அப்போதுதான் கனிஷ்டன் கனிக்காவை பார்த்தவன், “ஏய்! என்னாச்சு கனி?” என்று கேட்டான். துருவனோ ஜனனி பக்கத்தில் நின்றிருந்த கனிக்காவை தன் பக்கம் இழுத்து கொண்டவன், அவள் கண்களை துடைத்து விட, “சரணித் இங்கதான் இருக்கானா? உங்க காலேஜ்ல தான் இருக்கானா? “ என்று பயம் கலந்த தொனியில் கேட்டாள் கனிக்கா.

கனிஷ்டனும், “என்னது சரணித்தா? “ என்று கேட்டவன், “அவனுக்கு வாங்கின அடி பத்தலயா? இப்போ அவன் எங்க இருக்கான்? “ என்று கேட்டு அவன் அணிந்திருந்த டீஷர்ட் கைகளை மடித்து விட்டு சண்டைக்கு செல்ல ஆயத்தமாக நின்றிருந்தான்.

துருவனோ, “கனிஷ் இப்போ நீ அவன் மேலலாம் கை வைக்க முடியாது. நம்ம வீட்டுலயே அவனுக்கு சப்போர்ட்க்கு ஆள் இருக்கு. “ என்று சொல்ல, கனிஷ்டனோ, “நம்ம வீட்டுலயா? என்ன சொல்ற நீ? “ என்றுதான் கேட்டான்.

துருவனோ ஜனனியை பார்த்துக்கொண்டே, “இதோ இந்த மேடம் தான். அவனுக்கு கேரக்டர் செர்டிபிகேட் எல்லாம் கொடுக்குற அளவுக்கு மேடம் பெரிய மனுஷி ஆகிட்டாங்க.அதுமட்டும் இல்ல இவங்க இரண்டு பேருக்கும் நடுவுல லவ்னு காலேஜ் முழுக்க பேச்சு. “ என்று சொன்னவனுக்கு இதயம் வலிகின்ற உணர்வு.

கனிஷ்டனோ, “என்ன ஜனனி? “ என்று கேட்க, “ஐயோ! ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாத துருவ். மத்தவங்க பேச்சை கேட்டுட்டு அவசர பட்டு வார்த்தை விடுற. எங்க இரண்டு பேருக்கும் நடுவுல அப்படி ஒன்னும் இல்ல. “என்ற ஜனனிக்கு கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

துருவனோ, “அழுது சீன் போடாதடி.. ஏதோ நீ எப்படியாச்சும் போ. ஆனா நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? சரணித் என்ற பெயரையே நீ கனி கிட்ட சொல்ல கூடாது என்று சொன்னனா இல்லையா? அப்படி இருக்க ஏன்டி இவகிட்ட அவனை பத்தி பேச்சை எடுத்த? “ என்று சீறியவன், “ ஒரு காலத்துல் உன்னை லவ் பண்ணி தொலைச்சுட்டனே என்று நீ பண்றது எல்லாமே பொறுத்துட்டு இருந்தேன். ஆனா இப்போ சொல்றேன் இனி நமக்குள்ள எதுவுமே இல்ல. உன்னை போய் இத்தனை வருஷமா லவ் பண்ணன் பாரு என்ன நானே செருப்பால அடிச்சுக்கணும். “ என்று சொன்னவன் கனிக்காவை கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

கனிக்காவோ அந்த நிலையிலும் , “துருவ்! என்ன சொல்ற நீ... இப்படி எடுத்தோம் கவுத்தோம் என்று எல்லா முடிவும் எடுக்காத. அவ ஏதோ புரியாம பேசுறா. நம்ம இதை பேசி தீர்த்துக்கலாம்.” என்று ஜனனிக்கு ஆதரவாக பேச , “நான் முடிவு பண்ணா அது பண்ணதுதான் கனி இவ கூட எல்லாம் இனி வாழ்றத என்னால யோசிச்சி பார்க்க முடியாது. “என்றவன் கனிக்காவையும் அழைத்துக் கொண்டு அவன் அறைக்குள் புகுந்தான்.

ஜனனிக்கு அதுவரையில் அவர்கள் காதல் மீதிருந்த நம்பிக்கை அவனது பேச்சில் மொத்தமாக உடைந்து விட உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள் பெண்ணவள்.

கனிஷ்டனுக்குதான் எதுவும் புரியாத உணர்வு. முதலில் ஜனனியை சமாதான படுத்த நினைத்து அவளை கட்டிலில் அமர வைத்தவன், அவளின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, “அழாத ஜனனி. இங்க பாரு நீ ஏதும் தப்பு பண்றியா? “ என்று கேட்க, “நீயுமா என்ன சந்தேகபடுற? “ என்று கேட்டு முகத்தை மூடி அழ தொடங்கிவிட்டாள் அவள்.

கனிஷ்டனோ, “அப்படி இல்லடி.. எனக்கு இங்க என்ன நடக்குதுனே புரியல. துருவ் என்னடானா நீ சரணித்க்கு சப்போர்ட் அது இதுன்னு சொல்றான்.கொஞ்ச நாளாவே உனக்கும் துருவுக்கும் இடைல ஏதோ பிரச்சனை ஓடிட்டு இருக்குன்னு நல்லாவே தெரிஞ்சுது. சரி நீங்களே சரியாகிடுவீங்க என்று நினைச்சிதான் விட்டன். இப்போ என்னடானா அவன் இப்படி பேசிட்டு போறான். உண்மைல என்னதான் ஆச்சு? இதுக்கு நடுவுல சரணித் எங்கிருந்து வந்தான்? “என்று அவனது மனதில் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளை அடுக்க, “கனிஷ்.. நான் எந்த தப்பும் பண்ணலடா.ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி.... “என்று ஜனனி பேச தொடங்க, “கனிஷ் இங்க என்ன பண்ற நீ? “என்று கேட்டு வந்த துருவன், “இவ கிட்ட என்ன பேச்சு உனக்கு? “ என்று கேட்டு அவனை தன்னுடன் அழைத்து சென்று விட்டான்.

ஜனனியோ, “நான் பேசுறத அவனும் கேட்க மாட்டான். யாரும் கேட்க ரெடியா இருந்தாலும் விட மாட்டான். “ என்றவள் படுக்கையில் விழுந்து தலையணையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.

இது எதுவுமே தெரியாமல் கீழே ஹாலில் இருந்து பேசிக்கொண்டிருந்த தினகரன் மற்றும் சுந்தரம்,”பசங்க வீட்டுல இருந்தாத்தான் வீடு வீடாவே இருக்கும். காலைல முழுக்க பசங்க சத்தமே இல்லாம ஏதோ மாதிரி இருக்கும். இப்போ பாரு பசங்க பேசிகிட்டு எவ்வளவு ஜாலியா இருக்காங்கனு “என்று அவர்களது பிள்ளைகள் சண்டை போட்டதே தெரியாமல் இருக்க, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த கௌரி, “டின்னெர் ரெடி சாப்பிட வாங்க. “என்று அவர்களை அழைத்தார்.

வாணி கைகளில் சாம்பார் கோப்பையுடன் வந்தவர் அதை மேசையில் வைத்துவிட்டு, “நான் போய் பசங்கள அழைச்சுட்டு வாறன். “ என்று சொல்லி, “துருவ்... “ என்று அழைத்துக்கொண்டே அவனின் அறையை நோக்கி வந்தார்.

துருவனோ அழுது கொண்டிருந்த கனிக்காவை தன்னுடன் அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க, கனிஷ்டனும் அவளது தலையை கோதிக்கொண்டு இருந்தான்.

கனிக்காவோ, “துருவ்.. அவன் இங்க இருக்குறத நீ ஏன் எனக்கு சொல்லல? மறுபடியும் அவன்....எனக்கு ரொம்ப பயமா இருக்கு. “என்று கரகரத்த குரலில் பேச, “ இதெல்லாம் நினைச்சி நீ ஏன் பயப்படுற? திருப்ப அவனால உனக்கு ஏதும் ப்ரோப்லம் வர்ற மாதிரி இருந்தா அவனை கொண்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போக கூட நான் யோசிக்க மாட்டேன். “என்றான் துருவன்.

கனிஷ்டனோ எதுவும் பேசாமல் யோசனையின் மூழ்கி இருக்க, அவர்களது அறை கதவு வாணியால் தட்டப்பட்டது. துருவனோ, “கனிஷ் போய் டோர ஓபன் பண்ணு “என்றவன், கனிக்காவை தன்னில் இருந்து விலக்கி, “போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா... வீட்டுல இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். “என்றான்.

கனிக்கா குளியல் அறைக்குள் செல்ல, கனிஷ்டன் சென்று கதவை திறந்து விட்டவன், “வாங்க அத்தை. “ என்றான்.

வாணியோ,”நான் கூப்பிட்டுட்டே வாறன் யாருக்கும் கேட்கலையா? “ என்று கேட்க, துருவனோ, “இல்ல அத்தை நாங்க லேப்டாப்ல படம் பாத்துட்டு இருந்தோம் அதுதான்.. “ என்று சமாளிக்க, “இல்லையே எல்லாரும் சத்தம் போட்டு ஏதோ பேசிட்டு இருந்தீங்களே! என்ன விஷயம்? “ என்று கேட்டார் வாணி.

கனிஷ்டனோ துருவனை பார்க்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மாதான் அத்தை “ என்று சொல்ல, குளியல் அறையில் இருந்து முகத்தை துடைத்துக்கொண்டே வெளியே வந்த கனி, “எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் போய் தூங்குறேன். “என்று சொல்லி அங்கிருந்து செல்ல, “கனி சாப்பிட்டுட்டு தூங்குமா. “என்று சொன்னார் வாணி.

கனியோ அவரை நிமிர்ந்து கூட பார்க்காதவள், “இல்லை அத்தை எனக்கு பசியே இல்ல. “ என்றவள் மேலும் அங்கு நிற்காது அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.


 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 08

துருவனும், கனிஷ்டனும் வாணியிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி அவரை கனியிடம் ஏதும் பேச விடாது அங்கிருந்து கூட்டிவந்தவர்கள்,“எங்களுக்கு பசிக்குது சாப்பாடு போடுங்க அத்தை.“ என்று அந்த சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு கேட்டார்களே தவிர அவர்களிற்கும் பசி என்றே உணர்வே இல்லாமல் தான் இருந்தது.

வாணியும், “என்னவோ.. சரி நீங்க வாங்க.” என்று சொல்லி அவர்கள் இருவரையும் அழைத்து செல்ல, “ஆமா இந்த ஜனனி எங்க??”என்று கேட்டுகொண்டே அவள் அறையை எட்டி பார்க்க அவளோ போர்வையில் தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு படுத்திருந்தாள்.

வாணியோ, “என்ன இவளும் தூங்கிட்டாளா? “ என்று கேட்டபடி, “ஜனனி... ஜனனி... “ என்று அழைத்துக்கொண்டு அவள் அறைக்குள் வந்தார்.

ஜனனி அவளது போர்வையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் ஏதும் சொல்லாமல் படுத்திருக்க, துருவன் ஒருவித எரிச்சல் உணர்வில் அங்கிருந்து உணவருந்தும் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.

கனிஷ்டன் தான் ஜனனி ஏதும் பேசி விட்டால் வாணிக்கு ஏதும் தெரிந்துவிடும் என்று பயந்தவன்,வாணியின் பின்னாலே சென்று, “அத்தை.. அத்தை.. அவளை எழுப்பாதீங்க, பாவம் அசந்து போய் தூங்கிட்டு இருக்கா. பசிச்சா அவளே வந்து சாப்பிட்டுப்பா. “ என்று மறுபடியும் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

வாணியும், “இப்படி எல்லாரும் சாப்பிடாம தூங்குறதுக்கு நாங்க எதுக்கு கஷ்டப்பட்டு சமைக்கணும்? “ என்று புலம்பிக்கொண்டு அங்கிருந்து செல்ல,கனிஷ்டன் தான் ஜனனி அருகில் வந்து அவளது தலையை கோதிவிட்டவன்,அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு “ அழாத... துருவ பத்திதான் உனக்கு தெரியும்ல, அவன் நீ கனிய கஷ்டபடுத்திட்ட எண்ட கோவத்துல பேசிட்டான். மத்தபடி ஒன்னும் இல்ல. “என்று சொல்லி எழுந்தவன், “எனக்கு தெரியும் ஏதோ ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ஆகிருக்கு. நம்ம இதை பத்தி தனியா பேசிக்கலாம். “ என்றபடி அவளது அறையில் போடப்பட்டிருந்த லைட்டை அணைத்து கதவை பூட்டியவன் அங்கிருந்து சென்றான்.

ஜனனி அப்போதுதான் போர்வையை விலக்கி வெளியே எட்டி பார்த்து, “பரவால்ல இவனாச்சும் நம்மள புரிஞ்சிக்கிட்டானே. “என்று நினைத்தவள், மறுபடியும் போர்வையை போர்த்திக்கொண்டாள்.

கீழே டைனிங் டேபிளில் துருவன் அமர்ந்திருக்க அவனது யோசனைகள் எல்லாம் எங்கேங்கோ சென்றுகொண்டிருந்தது.

கனிஷ்டனும் துருவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டவன் அவனை தட்டி, “இப்படி மூஞ்சை வச்சுட்டு இருக்காத துருவ் அப்புறம் எல்லாருக்கும் எதாச்சும் சந்தேகம் வந்துட போகுது “என்று சொன்னவன் கௌரி தட்டில் இட்ட தோசையை வேண்டாவெறுப்பாக முழுங்கிக்கொண்டு இருந்தான்.

துருவனும் அதே நிலைமையில் முதல் ஆளாக சாப்பிட்டு முடித்து எழுந்து கைகளை கழுவ, “என்னப்பா இன்னும் இரண்டு தோசை வச்சுக்கோ. “ என்றார் தினகரன்.

துருவனோ, “இல்லப்பா போதும். “ என்று விட்டு அங்கிருந்து சில அடிகள் வைத்தவன், திரும்பி வாணியை பார்த்து, “அத்தை ஒரு பிளேட்ல சாப்பாடு வச்சு கொடுக்குறீங்களா? “ என்று கேட்க, அவரும் தாமதிக்காமல் தட்டை எடுத்து இரண்டு தோசை வைத்தவர் சாம்பாரையும் போட்டு கொடுத்தார்.

துருவனும் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட, “பாத்திங்களா அவனுக்கு ஜனனி சாப்பிடாம தூங்குறது பொறுக்கல... அதுதான் சாப்பாட எடுத்துட்டு போறான். “ என்றார் கௌரி.

கனிஷ்டனோ, “நடக்குற பிரச்சனை தெரியாம இவங்க வேற.. “ என்று நினைத்துக்கொண்டவன், எழுந்து கைகளை கழுவிக்கொண்டு துருவனின் பின்னாலே சென்றுவிட்டான்.

துருவனோ நேராக கனிக்காவின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, அவளோ அங்கு தொங்கவிடபட்டிருந்த அவர்களது பள்ளி கால புகைப்படத்தை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

துருவன் அவன் எடுத்து வந்த தட்டை மேசையில் வைத்தவன், “கனி.. “ என்று அழைத்துக்கொண்டு அவள் பக்கத்தில் போக, “நம்ம இந்த டைம்ல எவ்வளவு ஜாலியா இருந்தோம்ல? நீ, நான், கனிஷ், ஜனனி, ஹரிணி. “ என்று சொல்லி அந்த புகைபடத்தில் இருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் தொட்டுபார்த்துக்கொண்டாள் அவள்.

துருவனோ அமைதியாக நின்றிருக்க, பின்னால் வந்த கனிஷ்டன், “ஏன் இப்போ மட்டும் என்ன? நாம அப்படியே தானே இருக்கோம். “ என்றான்.

கனிக்காவோ அந்த புகைபடத்தில் இருந்து கண்ணை எடுக்காமலே, “இல்லை கனிஷ் இப்போ நிறைய மாறிடிச்சு. ஸ்கூல் படிக்கிறபோ நம்ம எல்லாருமே நிறைய பேசுவோம் ஒளிவுமறைவு என்ற ஒன்னே நம்ம கிட்ட இல்ல, ஆனா இப்போ எல்லாரும் உள்ள ஒன்னு வச்சுட்டு வெளிய ஒன்னு பேசிட்டு இருக்கோம். “என்றாள்.

அதன் பின் சில நிமிடங்களிற்கு அங்கு அமைதியே நிலவியது. கனிக்கா அமைதியை கலைத்து மறுபடியும் பேச ஆரம்பித்தவள், “ அந்த ஒரு நாள் மட்டும் என் லைப்ல வராமலே இருந்துருக்கலாம்.” என்று சொல்லி கண்களை மூடியவளுக்கு நினைவுகள் ஆறு வருடங்கள் முன்நோக்கி சென்றது
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 09

அப்போது கனிக்கா தரம் பன்னிரெண்டில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாள். வளமையான ஒரு காலை பொழுததில் பள்ளிசீருடை அணிந்து இரட்டை ஜடை போட்டுக்கொண்டு வந்து ஹாலில் சோபாவில் அமர்ந்தவள், “எங்க இருக்கீங்க இரண்டு பேரும் ஸ்கூல் போக லேட் ஆகுது “என்று கத்திக்கொண்டு இருந்தாள்.

கனிஷ்டனோ, “கத்தாத கனி, ஹோம்வேர்க் முடிக்க லேட் ஆயிடிச்சு. “ என்று சொலிக்கொண்டே புத்தகத்தை தோள் பையில் வைத்துக்கொண்டே வர , “நீ நைட்டே அதை முடிச்சு வச்சிருக்கணும். நான் நேற்று பண்ணும் போதும் சும்மா உக்கார்ந்து கேம் தானே விளையாடிட்டு இருந்த.” என்றாள்அவள்.

கனிஷ்டனோ அவளை முறைத்துக் கொண்டே “சரி.. சரி அதை விடு. நான் மட்டும் வந்தா போதுமா எங்க அந்த மகாராணி?” என்று கேட்டான்.

கனிக்காவோ, “ அச்சோ அவளால ஒவ்வொரு நாளும் ஸ்கூல்க்கு லேட்டா போய் அசிங்க படுறதே வேலையா போச்சு நமக்கு.” என்று கனிஷ்டனிடம் புலம்ப, அவளை தட்டி மேலே கை காட்டிய கனிஷ்டன், “அங்க பாரு. “ என்றான்.

கனிக்காவும் சலித்துக்கொண்டே அவன் கைகாட்டிய திசையை நோக்கி திரும்ப, அங்கு பாடசாலை சீருடையில் ஜனனி சாவகாசமாக வர துருவன் ஷார்ட்ஸ் மற்றும் ஆர்ம் கட் அணிந்து கொண்டு அவள் தோள் மேல் கைபோட்ட படி பேசிக்கொண்டே வந்தான்.

கனிக்காவோ, “அச்சோ இதுக வேற அவசரம் புரரியாம..“ என்று சொன்னவள், அங்கே வந்த துருவனிடம், “நீ ரொம்ப ஓவரா தான் போற. “என்றவள் அவன் கைவளைவுக்குள் இருந்த ஜனனியை தன்பக்கம் இழுத்து, “ஸ்கூல்க்கு லேட் ஆச்சுடி “ என்றாள்.

துருவனோ “என்ன அவசரம் கனி இன்னும் டைம் இருக்கு ஸ்கூல்க்கு. “ என்றபடி தலையை கோதிக்கொண்டு ஜனனியை பார்த்து கண்ணடிக்க,ஜனனி அதை பார்த்தும் பார்க்காதவள் போல் அவளது ஜடையில் கட்டப்பட்டிருந்த ரிபனை சரிசெய்துகொண்டிருந்தாள்.

கனிஷ்டனோ, “உனக்கு என்னப்பா நீ ஆறுதலா களம்பி காலேஜ் போவ நாங்க அப்படியா? டைம்க்கு இல்லனா புடிச்சு பனிஷ்மென்ட் தந்துவிட்டுரானுக. “என்று சொல்ல, “என்னோட பெயரை சொல்லுடா, எதுவும் பண்ண மாட்டானுக “ என்றான் துருவன்.

கனிக்காவோ, “கிழிஞ்சுது கதை “ என்று சொல்ல, “ஆமா நீ பண்ணிட்டு போன சேட்டைக்கு எல்லாம் சேர்த்து எங்கள தான் வச்சு செய்றானுக. “ என்றான் கனிஷ்டன்.

துருவனோ தலையை சொறிந்து கொள்ள, டிபன் பாக்ஸ்களை கையில் எடுத்து வந்த வாணியும் கௌரியும் அவரவர் பைகளில் அதை வைத்தவர்கள், அவர்களை கிளப்பி விடுவதில் குறியாக இருந்தனர்.

ஒரு வளியாக வெளியே வந்து அவரவர் சைக்கிள்களை எடுத்து ஆயத்தமாக, நின்றிருக்க,கனிஷ்டனின் காதில் போய், “அந்த தினேஷ் பய கனி கிட்ட வம்பு பண்றான் போல,நேற்றுத்தான் சொன்னா கொஞ்சம் பார்த்துக்கோ. “என்று சொல்ல, “ஆமா என் காதுக்கும் விஷயம் வந்துச்சு. நான் பாத்துக்கிறேன். “ என்ற கனிஷ்டன், “சரி. என்ன பாத்துட்டு நிக்குறீங்க முன்னால போங்க. “ என்று சொல்லி கனியையும் ஜனனியையும் முன்னால் விட்டவன் அவர்களிற்கு பாதுகாப்பாக பின்னால் சென்றான்.

சிறிது தூரத்தில் ஹரிணியின் வீடும் வந்து விட அவளும் இவர்களுக்காக காத்திருந்தவள் அவர்களுடனே பாடசாலைக்கு சென்றாள்.

என்றும் போல அன்றும் அவர்கள் பாடசாலையின் கதவுகள் அடைக்கபட்ட பின்னரே அங்கு சென்று நிற்க, “போச்சு இன்னைக்கும் நம்மள வேலை வாங்க போறாங்க. “ என்றாள் ஹரிணி.

கனிஷ்டனோ, “இது நமக்கு ஒன்னும் புதுசில்லையே. “என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “என்ன மச்சி இன்னைக்கும் லேட்டா? “ என்று கேட்டுகொண்டு கனிஷ்டனின் பக்கத்தில் வந்து நின்றான் சரணீத்.

கனிஷ்டனும் அவனின் தோள்களில் கை போட்டவன், “ஆமாடா... இந்த பொண்ணுகளை மேச்சுட்டு வாறதுனா சும்மாவா? “ என்று சொல்ல, அவனை முறைத்த கனிக்கா, “ஓவரா பண்ணாத நீதான் ஹோம்வேர்க் முடிக்கல அதான் லேட். “என்றாள்.

அவனோ, “ இது நல்ல கதையா இருக்கே! இவளை காலைல எழுப்பி எடுக்குறதே ஒவ்வொரு நாளும் பெரிய போராட்டமா இருக்கு வீட்டுல. இவளால தான் லேட். “என்று ஜனனியை கைகாட்ட, ஜனனியோ, “ஆஹ்! நீ மட்டும் திறமா? நீயும் உங்க அண்ணனும் காலைல எக்ஸ்ஸசைஸ் பண்றன் என்ற பெயர்ல ஒரு அலப்பறை பண்ணுவீங்களே அதால தான் லேட் ஆகுது. “என்று மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு நிற்க ஹரிணி மற்றும் சரணித்தான் இடையில் மாட்டிக்கொண்டனர்.

இவர்களின் சத்தம் கேட்டு அவ்விடம் வந்து சேர்ந்த ஹெட்மாஸ்டரான மாணிக்கம், “ஸ்கூல் வந்ததே லேட் இதுக்குள்ள வெளியில நின்னு என்ன பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க? “ என்று போட்ட சத்தத்தில் அவர்களின் வாய்கள் மூடிக்கொண்டது.

மாணிக்கம் கதவை திறந்து விட்டவர், “எல்லாரும் போய் சைக்கிளை வச்சிட்டு வந்து லைன் பண்ணுங்க.”என்று சொல்ல ஓடிச்சென்று சைக்கிள் பார்க்கிங்கில் சைக்கிளை வைத்தவர்கள், மாணிக்கத்தின் முன்னால் வந்து வரிசையாக நின்று கொண்டார்கள்.

அவரோ அவர்களின் முன்னால் நின்று கையை கட்டிக்கொண்டவர், “ஒவ்வொரு நாளும் இதே வேலையா போச்சு, எவ்வளவு சொன்னாலும் மண்டைல ஏறுதில்ல. இன்னைக்கு நான் கொடுக்குற பனிஷ்மென்ட்ல இனி ஸ்கூல்க்கு லேட்டா வாறதையே நீங்க நினைச்சு பார்க்க கூடாது. “என்றவர் சுற்றும் முற்றும் பார்க்கலானார்.

மாணிக்கத்தின் கண்களுக்கு அங்கு இருந்த சாண்ட் பேப்பர்களும், பெயிண்ட் பிரஷ்கள் மற்றும் வாளிகள் தென்பட,அதை கை காட்டியவர் “இன்னைக்கு நீங்க கிளாஸ்க்கு போக தேவல்ல, அதோ அந்த திங்ஸ்ஸ எடுத்துட்டு போய் சயன்ஸ் லாப கிளீன் பண்ணி பெயிண்ட் அடிங்க “என்றார்.

அனைவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு, “சார்.... “ என்று இழுக்க, “நோ எக்ஸ்கியூஸ், சொன்னத செய்து முடிசுட்டு சொல்லுங்க நான் வந்து பார்க்குறேன். “என்றவர் விறுவிறுவென அங்கிருந்து சென்றார்.

சரணீத்தோ, “ இவங்க செலவை மிச்சம் பண்றதுக்கு நம்மள வேலை வாங்குறாங்க. சரியான கஞ்சூஸ் “என்று சொல்ல, “ ஹ்ம்ம்.. என்ன பண்றது சொல்றத செஞ்சுதானே ஆகணும். “என்ற கனி, “ வாங்க போகலாம். “ என்றவள் சென்று பெயிண்ட் பிரஷ்ஷை எடுத்துக்கொள்ள மற்றவர்களும் ஒவ்வொரு பொருளை எடுத்தவர்கள் சயன்ஸ் லாபை நோக்கி சென்றனர்
.

 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 10

துருவன், கனிஷ்டன், கனிக்கா, ஜனனி, ஹரிணி என அனைவருமே ஒரே பாடசாலையில் கல்வி கற்று உற்ற நண்பர்களாக இருந்தவர்களே.

துருவன் அவனது பள்ளி படிப்பை நிறைவு செய்து கல்லூரி வாழ்க்கைக்குள் சென்று விட, மீதமான கனிஷ்டன், கனிக்கா, சரணித் மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்க, ஜனனி மற்றும் ஹரிணி பத்தாம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தனர்.

கனிஷ்டனின் உயிர்நண்பனே சரணித், கனிஷ்டனை பற்றி அனைத்தும் அறிந்தவன், ஆனால் சரணித் தன்னை பற்றி பெரிதாக யாரிடமும் வெளிப்படுத்தவில்லை, யாரும் அவனை பற்றி கேட்டால் கூட ஏதேதோ பேசி அவர்களை திசைதிருப்பி விடுவான்.

கனிக்கா கூட சரணித்துடன் நல்ல நட்பில் இருந்து வந்தாள் ஆனால் சரணித்திற்கோ அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மை தான். இருந்தும் சரணித் அதை எப்போதும் வெளிப்படுத்தியது இல்லை.

அன்றைய தினம் மாணிக்கம் சொன்னாற்போல இவர்கள் அனைவரும் சையன்ஸ் லாபை துப்பரவு செய்துகொண்டு இருக்க அடிக்கடி மாணிக்கமும் அவ்விடம் வந்து அவர்களை வேவுபார்த்துக் கொண்டார்.

கனியோ, “இனி யாரோ எப்படியோ ஸ்கூல் வந்துகோங்க, நான் உங்களுக்காக எல்லாம் பாத்துட்டு நிற்க மாட்டன். நானே வந்துக்குறேன். “என்று சலித்துக்கொண்டே சொன்னாள்.

ஜனனியோ கனிஷ்டனை பார்த்து சிரிக்க அவனோ, “யாரு நீ “ என்று கேட்டு சிரித்துக்கொண்டவன், “எங்கயாச்சும் போய் முட்டி மோதி விழுந்து வாரிட்டு கால் பண்ணி, அண்ணா! நான் விழுந்துட்டேன். எண்டு சொல்ற கேஸ் தானே நீ!” என்று சொல்ல கனிக்காவோ அவள் கையில் வைத்திருந்த பிரஷ்ஷை தூக்கி அவன் மேல் விட்டெறிந்தவள், “வாய மூடு கனிஷ், அது எப்போவோ நடந்தது. “என்றவள் சரணித்தை பார்த்து சிரித்துக்கொண்டாள்.

அவர்கள் அனைவரும் அதை கேட்டு சிரித்துக்கொள்ள, சரணித்தோ, “அன்னைக்கு மட்டும் நான் பைக்க பேலன்ஸ் பண்ணி நிக்கலனா நேரா பக்கத்துல இருந்த காவாயிலதான் விழுந்திருப்பேன்.. “ என்றான்.

கனிஷ்டன் வந்து சரணித் தோள் மேல் கைபோட்டவன், “ஆமா எனக்கு அந்த நாள் இன்னும் நியாபகம் இருக்கு, நாங்க வரும் போது இவ ஏதோ நீதான் வந்து மோதின மாதிரி கால், கை முழுக்க இரத்த காயத்தோட நின்னுட்டு இருந்தா, நீ வேற பக்கத்துல நின்னு தலையை சொறிஞ்சுட்டு இருந்த. “என்று சொல்ல, “ஆமா! அன்னைக்கு பக்கத்துல நின்னுட்டு இருந்த ஆன்ட்டி மட்டும் இவதான் வந்து சரணித் மேலே மோதுனா எண்டு சொல்லாம இருந்திருந்தா நீயும், துருவும் சேர்ந்து இவனை ஒரு வளி பண்ணிருப்பிங்க. “ என்றாள் ஜனனி.

அனைவரும் சரணித்துடனான அவர்களின் முதல் சந்திப்பை மீட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, “ஹாய்!” என்றபடி பைக் சாவியை விரலால் சுற்றிக் கொண்டே அங்கு வந்தான் துருவன்.

அவர்கள் அனைவரும் அவனை கேள்வியாக பார்க்க, “என்ன துருவ் இந்த பக்கம் காத்து வீசுது? “என்று கேட்டான் சரணித்.

துருவனோ, “அதுவா நம்ம அவினேஷ் மாணிக்கம் சார் கிட்ட ப்ராஜெக்ட் விஷயமா சைன் வாங்கணும் என்று சொன்னான் அதான் நானும் கூட வந்தேன். “என்று சொல்லி அவன் பின் வந்த அவினேஷை கை காட்ட, அவனும், “ஹாய் கைஸ்!” என்றான்.

அவினேஷ் வேறு யாரும் அல்ல துருவனின் கிளாஸ்மேட் தான், இப்போது ஒரே கல்லுரியில் வேறு வேறு பிரிவில் கல்விகற்றுக்கொண்டு இருப்பவர்கள்.

கனிக்காவோ, “அது இருக்கட்டும், அது எப்படி நாங்க இங்கதான் இருக்கோம்னு கரெக்ட்டா கண்டுபிடிச்ச? “என்று கேட்க, “ஆமா இது பெரிய ரகசியம் பாரு, நாங்க மாணிக்கம் சார்ர பார்க்க போனதுமே அவரு உங்கள பத்தி கழுவி கழுவி உத்தினாரு, அப்படியே நீங்க இங்கதான் இருக்கீங்க எண்டு சொன்னாரு அதுதான் நம்மளும் ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன். “என்றான் துருவன்.

ஜனனியோ, “ நீ எதுவும் பண்ணாம இங்க இருந்து போறதே எங்களுக்கு பெரிய ஹெல்ப்பா இருக்கும். “ என்று சொல்ல, “ஓஹ்! அப்படியா மேடம்? “ என்று கேட்டுக் கொண்டே அவளை நோக்கி வந்து அவள் கை கோர்த்து அவள் துடைத்துக் கொண்டிருந்த குழாய்களை அவனும் சேர்ந்து துடைக்க ஆயத்தம் ஆக, “துருவ் என்ன பண்ற? இது ஸ்கூல். “ என்று சொன்ன ஹரிணி ஜனனியை அவள் பக்கம் இழுத்துக்கொண்டாள்.

அவளது செயலை பார்த்து அனைவரும் சிரித்துக்கொள்ள, “புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும் எண்டு நான் கனவா கண்டேன்? “ என்று கேட்டபடி சரணித் பக்கத்தில் வந்த நின்று கொண்ட துருவன் அவர்களுக்கு உதவியாக அங்கேயே இருந்துவிட்டான்.

அவர்கள் பேசிக்கொண்டே வேலைகளை பகிர்ந்து கொள்ள வேலைகளும் இலகுவாகி போனது, கிட்ட தட்ட எல்லா வேலைகளும் முடியும் தருவாயில் பாடசாலை நேரம் முடிந்து மணியும் ஒலித்திருந்தது.

அந்த நேரம் அங்கு வந்த மாணிக்கம் சுற்றி பார்த்து விட்டு, “பரவால்ல சொன்ன வேலைய சிறப்பா முடிச்சிடீங்களே!குட், நாளைல இருந்து எல்லாரும் நேரத்துக்கு ஸ்கூல்ல இருக்கணும் “ என்று சொன்னவர், அங்கு நின்றிருந்த துருவிடம், “துருவ் நம்ம ஸ்கூல் நெஸ்ட் மந் நடக்கபோற ஸ்போர்ட்ஸ் மீட்க்கு நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணி தரணும் முடியுமா? “என்று கேட்டார்.

துருவனோ பாடசாலை நாட்களில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக இருந்தவன் இதை மறுக்கவே இல்லை, “கண்டிப்பா சார். நான் என்ன பண்ணனும்? “ என்று கேட்க, “என்கூட கொஞ்சம் வா. “ என்றவர் முன் சென்று விட்டார்.

துருவனோ, “அப்போ எல்லாரும் கீழ வெயிட் பண்ணுங்க நான் சார் கிட்ட பேசிட்டு வந்துடுறேன். “என்று சொல்ல, “நான் புறப்படுறேன் மச்சான். இன்னைக்கு அம்மாவை கூட்டிட்டு ரிலேடிவ் வீட்டுக்கு போற வேலை இருக்கு. “என்று சொன்ன அவினேஷ் துருவனுடனே அங்கிருந்து சென்று விட்டான்.

கனிஷ்டன் வீட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் அவசரஅவசரமாக அங்கு இருந்த பொருட்களை எடுத்து ஓரத்தில் அடுக்க,அவன் கை தட்டுப்பட்டு அங்கிருந்த சிறிய சிவப்பு நிற பெயிண்ட் கிண்ணம் பக்கத்தில் நின்றிருந்த கனி மீது கொட்டியது.

கனியோ, “ஏய்!!” என்று கத்த கனிஷ்டனோ, “நம்ம சோலி முடிஞ்சுது, காட்டு கத்து கத்தப்போறா. “என்று நினைத்ததற்கு ஏற்ப அவள் அவனை ஒரு வழி பண்ணியிருந்தாள்.

ஹரிணியோ, “கனி இப்படியே இருந்து கத்திட்டு இருக்க போறியா, போய் இதை கழுவிட்டு வா. “ என்று சொல்ல, “ஏய் லூசு கழுவினா போற கறையா இது?இதோட நான் எப்படி ரோட்ல போறது?“என்று கேட்டாள் அவள்.

ஜனனியோ, “இரு பதறாத. என்கிட்ட ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ் இருக்கு, அதை கொடுக்குறேன் மாத்திட்டு வா. “ என்று சொல்லி அவள் பையில் இருந்த உடையை கனிக்காவிடம் கொடுத்தாள்.

அவள் அதை வாங்கிக்கொண்டு கனிஷ்டனை முறைந்தவள், “இரு உன்னை வந்து வச்சுக்கறேன். “என்றபடி அவள் தோள்பையை எடுத்துக்கொண்டு கீழே உள்ள பெண்கள் கழிப்பறை நோக்கி சென்றாள்.


 
Status
Not open for further replies.
Top