ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 24



அவன் யார்?... ஏன் அவனை அப்பாவுடன் மனம் ஒப்பிடுகிறது. குழந்தையை யார் பார்த்திருந்தாலும் தூக்கி சென்று பெற்றவர்களிடம் ஒப்படைத்து தான் இருப்பார்கள். சிலர் திட்டிவிட்டு குழந்தையை கொடுத்து இருப்பார்கள். நானே அந்த குழந்தையை தூக்கி இருந்தாலும் அதை தான் செய்து இருப்பேன். அவன் அப்பா போல் கோபமுற்று அடித்ததால் எனக்கு அவன் அப்பா போல் தோன்றியதா?... ஆனால் முதலில் அவனை பார்க்கும் போது மனம் ஏன் வேகமாக துடித்தது?...

அவனை முன்பே பார்த்து இருக்கிறேனா?... எங்கே?... எப்போது?... என்று நினைவுகளில் தேட அவளுக்கு கிடைத்த விடை பூஜ்யம். அவன் ஏன் திரும்ப திரும்ப என்னை பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வு இல்லை ஆனால் அவன் பார்வையில் எதுவே இருந்தது என்ன அது?... என்று விடை தெரியா பல கேள்விகள் வந்தன. ஆனால் ஒரு கேள்விக்கு கூட விடை தான் அந்த பதினேழு வயது பெண்ணுக்கு தெரியவில்லை.

வெயில் நன்றாக உறைத்ததும் தான் குளத்து கரையில் இருந்து எழுந்தாள். நேராக பஸ் நிலையம் வந்து தன் வீடு செல்ல மாங்காடு பஸ்சில் ஏறினாள் பனிமலர். வழி முழுவதும் சிந்தனையில் இருந்தவள் வீடு வந்த போது பெரிய தந்தையும் மற்றவர்களும் படையல் போட்டு முடித்து அமர்ந்து இருந்தனர்.

அசோகன் எப்போதும் மதிய வேளை வீட்டுக்கு வருவதில்லை இன்று இறந்தவர்களுக்கு படையல் போட வந்திருந்தார். பனிமலர் இருந்தால் படையல் போடும்போது அறையை விட்டு வெளியே வரமாட்டாள். படைத்து முடிக்கும் வரை கதவை அடைத்துக் கொண்டு இருப்பாள்.

இன்று அவள் இல்லாததால் படையல் போட்டு முடித்து சாப்பிட ஆயத்தமாகிக்கொண்டு இருந்தனர். ஆகாஷ் உடன் அவள் இருந்தால் அவன் எப்படியும் சாப்பிட வைத்து விடுவான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் உணவு வேளையில் பனிமலரை கண்டதும் "சித்துமா வா.. வா... சாப்பிடலாம்" என்றார் அசோகன்.

"டாடி பைவ் மினிட்ஸ் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்" என்று அறைக்கு சென்றாள். அவளின் பேச்சை கேட்டவர்களுக்கு ஆச்சரியமே இந்த நாளில் அவளை சாப்பிட வைப்பது கடினம் ஆனால் இன்று அவள் வருகிறேன் என்று சந்தோஷக்குரலில் சொல்லி சென்றதால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

சொன்னதை போல ஐந்து நிமிடத்தில் புன்னகையுடன் வந்தவள் தன் பெரிய தந்தையின் ஒரு பக்கம் எழில்நிலாவும் மறுபக்கம் அகிலேஷ் அமர்ந்து இருப்பதை கண்டவள் அகிலேஷ் பின் சென்று அவனை தள்ளிவிட்டு தன் பெரிய தந்தையின் அருகில் அமர்ந்தாள். அன்று டைனிங் டேபிளில் அமராமல் தரையில் அமர்ந்து இருந்தனர்.


"ஏய் சத்துமாவு" என்றான் அகிலேஷ் கோபமாக

"என்னடா அகல்விளக்கு" என்றாள்.

"நான் தானே அங்க உட்கார்ந்து இருந்தேன் எழுந்திரு" என்றான்.

"முடியாதுடா" என்றாள் பனிமலர்.

"எவ்வளவு இடம் இருக்கு அங்க உட்கார வேண்டியது தானே ஏன் என் இடத்தில் உட்கார்ந்த எழுந்திரு" என்றான் அகிலேஷ்.

"என்னது உன் இடமா அப்படி எதுவும் உன் பெயர் இங்க எழுதி இல்லையே" என்று தான் உட்கார்ந்து இருந்த இடத்தை சுற்றி பார்த்தாள் பனிமலர்.

அகிலேஷ்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தந்தை இல்லையென்றால் உருண்டு பிரண்டு சண்டை போட்டு இருப்பான். அதுவும் இல்லாமல் இன்றைய நாள் எப்படிப்பட்ட நாள் அவனுக்கும் தெரியுமே படையல் போடும் போது பாட்டி அம்மா வாய்விட்டு அழுதார்கள் என்றால் தந்தை மௌனமாக கண்ணீர் வடித்தாரே ஏன் இவனும் எழில்நிலாவும் கூட கண்ணீர் வடித்தனரே பிரியமான சித்தப்பா சித்தியை தாத்தாவையும் அவர்களால் எப்படி மறக்க முடியும்.

இத்தனை ஆண்டுகளாக பனிமலர் எவ்வளவு அழுது இருக்கிறாள் இந்த நாளில் அவளை ஆறுதல் செய்யக்கூட விடாமல் அறையை பூட்டிக்கொண்டு இருப்பவள் இன்று புன்னகை முகத்துடன் எப்போதும் போல் அவனிடம் சண்டைக்கு வந்து இருப்பது அகிலேஷ்க்கு நிம்மதி தர அவளை முறைப்பது போல பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் முறைப்பவனை கண்டதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது. அசோகன் வாய்விட்டே சிரித்தார் அவரை தொடர்ந்து அனைவரும் சிரித்தனர்.

அதன் பிறகு பேச்சும் சிரிப்புமாக உணவு முடித்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுக்க அறைக்கு சென்ற அசோகன் பின் சென்றாள் பனிமலர்.

அறைக்கு தன் பின் பனிமலர் வருவதை கண்ட அசோகன் "வாடா சித்துமா" என்று கட்டிலில் தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார்.

எதையோ சொல்ல தயங்குகிறாள் என்று அசோகனுக்கு புரிந்தது.

"டாடி கிட்ட எதாவது சொல்லனுமாடா" என்றார் அசோகன்.

"ஆமாம் டாடி" என்று சற்று தயங்கியவள் பின் தான் பொய் சொல்லி வெளியே சென்றதையும் கோயில் சென்றதால் மனம் நன்றாக இருப்பதாகவும் இனி பொய் சொல்லமாட்டேன் டாடி என்று கூறி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டாள் அங்கு அவனை பார்த்ததையும் நடந்ததையும் கூறவில்லை.

அனைத்தையும் கேட்ட அசோகன் "நீ செய்தது தப்பு தான் என்று உனக்கே தெரிந்து இருக்கு சித்துமா இனி செய்யமாட்டேன் என்று நீயே சொல்லிட்ட அதனால் டாடி உன்னை எதுவும் சொல்லலை. ஆனால் இனி எங்காவது போகனும் என்றால் சொல்லி விட்டே போகனும்" என்றவர் மேலும் சிறிது நேரம் பேசினார்.

அதன் பிறகு அவளிடம் நிறைய மாற்றங்கள் பழையபடி குறும்புகள் சேட்டைகள் செய்தாள். கல்லூரி சேர்ந்தபோது தமிழ் இவளுடன் வந்து இணைந்து கொண்டாள்.

நண்பியின் மாற்றம் தமிழுக்கு சந்தோஷமாக இருந்தது. கல்லூரிக்கே உரிய கலாட்டாக்களுடன் நாட்கள் சென்றன.

பனிமலருக்கு இப்போது எல்லாம் தாய் தந்தை நினைவு வரும்போதே அவன் நினைவும் வந்தது. நண்பியுடன் ஊர் சுற்றும் போது கண்கள் எங்காவது அவன் தென்படுகிறானா என்று தேடுவாள்.

முதல் வருடம் முடித்து மீண்டும் அந்த நாள் வந்தபோது வீட்டில் சொல்லிவிட்டே வெளியே வந்தாள் பனிமலர். பாட்டியும் பெரியண்ணையும் உடன் வருகிறேன் என்றவர்களை மறுத்து விட்டு வந்திருந்தாள்.

இந்த வருடம் சற்று சீக்கிரம் வந்தவளின் கண்கள் சுற்றி சுற்றி அவனை மட்டுமே தேடியது. அவன் வரமாட்டான் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை கண்டிப்பாக வருவான் என்று மனம் சொன்னது. அவளை ஏமாற்றாமல் வேக நடையுடன் வந்து கொண்டு இருந்தான் அவன்.

பனிமலரின் கண்கள் விரிந்தன ஒரு வருடத்தில் இவ்வளவு மாற்றமா என்றது மனம். உயரமாக சிவந்து ஒல்லியான தோற்றத்தில் ட்ரிம் செய்யப்பட்ட மீசையுடன் கல்லூரி செல்லும் தோற்றத்தில் சென்ற ஆண்டு பார்த்திருந்தாள்.

ஆனால் இன்று அடர்ந்த மீசை தாடி இல்லாத இறுக்கமான முகம் முறுக்கேறிய உடல் தினமும் சில மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை காட்டியது.

வேகமாக வந்தவனின் பார்வை சட்டென்று இவள் இருக்கும் பக்கம் படிந்து மீண்டது. அவன் பார்வையை சந்தித்த போது இவளின் இதயம் வெளியே குதித்து விடும் அளவுக்கு துடித்தது. அவன் பின்னே இடைவெளி விட்டு சென்றாள்.

அன்றும் அவன் பார்வை அடிக்கடி அவள் மீது பட்டு விலகியதே தவிர அவன் இவளிடம் பேசவும் இல்லை ஒரு புன்னகை கூட செய்யவில்லை.

அதே போல பனிமலரும் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை. அடுத்து இரண்டாம் வருடம் கல்லூரி முடித்த போதும் இந்த நாளில் வந்து காத்திருந்து அவன் பின் சுற்றினாள்.

அந்த ஒரு நாள் பார்ப்பதை வருடம் முழுவதும் மனதில் நினைக்கொண்டிருப்பாள் பனிமலர்.

பனிமலர் மூன்றாம் வருடம் முதல் செமஸ்டர் தேர்வு முடிந்து அடுத்த செமஸ்டர் வகுப்பு தொடங்கி இருந்தபோது ஒரு விடுமுறை நாளில் வகுப்பு தோழிகள் ஐந்து பேர் ஒன்றாக ஊர் சுற்ற கிளம்பினர். அதில் ஒரு தோழி வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து ஹாஸ்டலில் உள்ள தோழிகளை அழைத்து சென்றாள்.

தேவையான பொருட்களை வெளியில் வாங்கிவிட்டு சும்மா சுற்றுவதற்காக ஷாப்பிங் மால் சென்றனர். கார் பார்க்கிங்கில் காரை விட்டு தோழிகள் பேசிக்கொண்டு லிப்ட் நோக்கி சென்றபோது "அம்மாமா....." என்ற அலறல் வந்தது.

அனைவரும் திரும்பி பார்க்க அங்கு ஒருவன் கத்தியுடன் இன்னொருவனை குத்த முயற்சி செய்ய அந்த மற்றொருவன் அவனின் கையை பிடித்து முறுக்கிக்கொண்டு இருந்தான். ஏற்கனவே அவனின் கையில் இரத்தம் வந்து கொண்டு இருந்தது அந்த கையினாலே குத்த வந்தவனின் கையை முறிக்க வலியில் குத்த வந்தவன் கத்திக்கொண்டு இருந்தான்.

அந்த கத்தலில் அங்கிருந்த காவலாளிகள் ஓடி வந்தனர். அவனின் வயதான கார் டிரைவர் தவிப்புடன் நின்று இருந்தார். அதிக வலியில் குத்த வந்தவன் மயங்கி விழுந்தான்.

அதுவரை அதிர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த பனிமலர் வேகமாக அவன் அருகில் ஓடினாள்.

"ஏய் எங்க போறடி" என்ற தமிழின் குரல் கூட காதில் வாங்காமல் அவனின் அருகில் சென்றவள் இரத்தம் சொட்டிய கைகளை கண்டு கண் கலங்கினாள். அவன் காவலாளிகளிடம் எதையோ சொல்லிக்கொண்டு இருந்தான்.

டிரைவர் அருகில் சென்றவள் "காரில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும் எடுங்க சார்" என்றாள். அவரும் வேகமாக எடுத்து வந்து கொடுக்க அதில் இருந்த மருந்து மற்றும் பஞ்சை எடுத்துக்கொண்டு அவன் அருகில் சென்றாள்.

அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கையை நீட்டினான் மெல்ல பஞ்சை கொண்டு இரத்தத்தை துடைத்தவள் மருந்தை வைத்து கட்டு ஒன்றை போட்டாள் பனிமலர். கத்தி ஆழமாக இறங்கி இருக்கவில்லை லேசாக கீறி இருந்தது இருந்தும் இரத்தம் வந்திருந்தது.

கட்டு போட்டு முடித்தவள் "டாக்டர் கிட்ட ஒரு முறை காட்டுங்க சார்" என்றாள். அவள் ஓடி வரும்போது மற்ற தோழிகளும் அவள் பின் வந்திருந்தனர். அவள் டாக்டர் இடம் காட்டுங்கள் என்றதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை கட்டு போட்டதற்கும் நன்றி சொல்லாமல் அங்கிருந்த காவலாளியை ஒரு பார்வை பார்த்து விட்டு காரில் ஏறி அமர்ந்தான்.

தன் நண்பியை உதாசீனப்படுத்தி விட்டு சென்றவனின் மீது கோபம் வந்தது தமிழுக்கு பனிமலரின் கையை பிடித்து இழுத்து "ஏய் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேளை அவன் உனக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் போறான் திமிர் பிடித்தவன்" என்றாள்.

அங்கிருந்த மற்றொரு தோழி "ஏய் அது யார் என்று தெரிந்தால் இப்படி சொல்லமாட்டாய்" என்றாள்.

"அப்படி என்ன பெரிய அப்பாடக்கரா அவன்?..." என்றாள் தமிழ்.

"நீ சொன்னாலும் சொல்லலை என்றாலும் அவர் பெரிய ஆள் தான். அவர் தான் சூர்யபிரகாஷ் பிரகாஷ் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் எம் டி" என்றாள்.

தோழிகளுக்கு ஆச்சரியம் என்றாலும் ஆச்சரியம் அதிர்ச்சி இரண்டும் பனிமலருக்கு உண்டானது. கம்பெனி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி என்று அறிந்து இருக்கிறாளே அது இவன் தானா பேர் என்ன சொன்னாள் சூர்யபிரகாஷா என்று மனதில் நினைத்தவள் "என் சூரியன்" என்று முனுமுனுத்தது அவளின் உதடுகள்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 25



அடுத்தடுத்த நாட்களில் அவனை பற்றி அறிந்து கொள்ள போன் அவளுக்கு உதவியது அதில் தான் அவன் கம்பெனி பெயர் போட்டால் அவனை பற்றியும் அவனின் வளர்ச்சியையும் விரிவாக காட்டுகிறதே.

மூன்றாம் ஆண்டு கல்லூரி முடித்த போது அதே நாளில் அவள் மீண்டும் கோயில் முன் சென்று நின்றாள். இந்த முறையும் அவன் ஏமாற்றாமல் வந்தான். வந்தவன் தனியாக வரவில்லை உடன் பாடிகார்ட்ஸ் உடன் வந்தான்.

இவளை பார்த்தானே தவிர தெரிந்தவள் என்ற முகபாவனை கூட இல்லை.

எப்படி பார்க்கிறான் பாரு என்னவோ புசுசா பார்க்கிற மாதிரி தான் பார்க்கிறான். இதற்கு முன்பு மூன்று முறை இந்த கோயிலில் பார்த்தான் ஷாப்பிங் மாலில் ஒரு முறை பார்த்தான் ஆனால் அவன் பார்வை என்னவே எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கு ஒரு வேளை கஜினி சூர்யா போல இந்த சூரியனுக்கும் மெமரி லாஸ் இருக்குமோ எப்பவும் புசுசா பார்க்கிறவன் மாதிரியே பார்க்கிறான் என்று மனதில் புலம்பிக்கொண்டு அவன் பின்னால் சென்றாள்.

இப்போது அவனை சுற்றி பாடிகார்ட்ஸ் இருந்ததால் இருவருக்கும் சற்று இடைவெளி அதிகமாகவே இருந்தது. இந்த முறை சிறப்பு பூஜைகள் நடந்தன. அவன் தான் இப்போது பெரிய பிஸ்னஸ் மேன் என்று ஊரறிந்த விஷயம் ஆச்சே அதனால் சிறப்பு பூஜைகள் நடந்தன. எப்போதும் அவனை பார்க்கும் நேரத்தை விட இந்த முறை சற்று அதிகமான நேரம் அவனை பார்க்க முடிந்தது அவ்வளவு தான் மற்றபடி எப்போதும் போல் தான் அந்த நாள் கழிந்தது.

அதன் பிறகு அவனை பற்றிய நிறைய விஷயங்கள் சேஷியல் மீடியாவில் வந்தன. ஒருவன் மேலே வந்து விட்டாள் அவனின் நிறையை விட குறைகள் தான் அதிகம் வளைய வரும் அதுபோல் அவன் பெண்களை தவிர்ப்பதற்கு அதிக காரணங்கள் வந்தன.

காதல் தோல்வி, பெண்களை பிடிக்காது, அவனின் முரட்டு தனத்தினால் பெண்கள் அவனை தவிர்க்கிறார்கள் என்று பல வித வதந்திகள் வந்தன.

கல்லூரியில் பீஜீ சேர்ந்து படித்துக்கொண்டு இருந்த போது அவனின் தொழில் முன்னேற்றம் பற்றி கேள்விபடும் விஷயங்கள் அவளை மலைக்க செய்தன அந்த அளவுக்கு வேகமாக தொழிலில் முன்னேறிக்கொண்டு இருந்தான்.


அது அவளுக்கு ஒரு புறம் சந்தோஷத்தை கொடுத்தாலும் அவனின் பக்கத்தில் நிற்கக்கூட முடியாத உயரத்தில் இருப்பவன் அவளை வாழ்க்கை துணையாக ஏற்பானா என்ற கேள்வி அவளுக்குள் முதன்முதலில் தோன்றியது.

இத்தனை முறை அவனை பார்த்தபோது ஒரு முறை கூட அவளை தெரிந்தது போல் காட்டிக்கொண்டது இல்லை யாரோ என்ற பாவனை தான் அவனிடம் இருந்தது. அவள் தான் அவனை கண்டதும் அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவன் பின் சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.

அவனுக்கு தன்னை பார்த்தால் எந்த ஈர்ப்பும் தோன்றவில்லை என்ற உண்மையை மூன்று ஆண்டுகளுக்கு பின் கண்டறிந்தாள்.

அதனால் தான் தன்னை இயல்பாக பார்த்து கடந்து செல்கிறான் என்று புரிந்தது. அவனை பார்த்த நாளுக்கு பிறகு கண்ணீரை மறந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவன் பக்கத்தில் இருக்கும் போது அவளுக்கு பெற்றவர்கள் உடன் இருப்பது போல் பாதுகாப்புணர்வு தோன்றுகிறதே இவன் தான் உனக்கு எல்லாம் என்று மனம் கூப்பாடு போடுகிறதே ஏன் அவனுக்கு என் மீது சின்ன ஈர்ப்பு கூட இல்லை என்று மனம் தவித்தது.

பலவாறாக சிந்தித்தவளுக்கு அவனுடனான வாழ்க்கைக்கு வாய்ப்பில்லை என்று புரிந்தது. அப்படி அவன் வாழ்க்கையில் தனக்கு இடம் இல்லையென்றாலும் அவனை பார்த்துக்கொண்டு அவனின் சுவாசகாற்று இருக்கும் இடத்திலாவது இருக்க வேண்டும் என்று மனம் உறுதி செய்தது.

அதற்கு அவள் அவனின் கம்பெனியில் வேலை செய்தால் அவள் நினைத்தது நடக்கும் என்று நினைத்தவள் தன் தந்தை கம்பெனியை வாங்க வேண்டும் என்றால் பல கோடிகள் தேவைப்படும். தன் பெயரில் இருந்த பணமும் பெரிய தந்தைக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்ட போது அவர் பெயரில் இருந்த சொத்துக்களை விற்க ஏற்பாடு செய்வதை கண்டவள் அதை தடுத்து தன் பெயரில் இருந்த பணத்தை முழுவதும் எடுத்து கொடுத்திருந்தாள் பனிமலர்.

அந்த நேரத்தில் வேறு வழியின்றி அந்த பணத்தை வாங்கிக்கொண்டார் அசோகன். நம்பிக்கையானவர்கள் என்று நம்பி பணத்தை கொடுத்து ஏமார்ந்திருந்தார் அசோகன். ஏமாற்றியவர்கள் நாட்டை விட்டே ஓடியிருந்தனர். அதன் பிறகு ஆகாஷ் மூலமாக ஓராண்டு கழித்து அவர்களை கண்டு பிடித்து வெளிநாட்டில் இருந்து அவர்களை பிடித்து வந்து போலீஸ் இடம் ஒப்படைத்தனர். அவர்கள் செலவழித்தது போக மீதி பணத்தை வாங்கி அசோகனிடம் கொடுத்தான் ஆகாஷ். வந்த பணத்தை அசோகன் பனிமலர் இடம் கொடுத்து விட்டார். இது நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து இருந்தது.

அதனால் அவளிடம் இப்போது குறைவான பணமே உள்ளது. அவளின் தாய் தந்தை உருவாக்கிய கம்பெனியை வாங்க வேண்டும் என்றால் நிறைய பணம் வேண்டும். அதற்கு அவள் வேலைக்கு சென்று சம்பாரிப்பது என்பது முடியாத காரியம். சிறு வயதில் அவளுக்கு தெரியாததால் பெரிய பெண் ஆனதும் தாய் தந்தை உருவாக்கிய கம்பெனியை வாங்கி விடலாம் என்று இருந்தாள்.

ஆனால் வளர வளர அது எத்தனை கடினம் என்று அறிந்தால் கல்லூரி படிக்க ஆரம்பித்த போதே தாய் தந்தை உருவாக்கிய கம்பெனியில் கடைசி வரை பணியாற்றலாம் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் இப்போது அவள் மனம் சூரியபிரகாஷ் அருகாமையில் இருக்கவேண்டும் என்றது அவனின் அருகாமையில் இருக்கும் போது தாய் தந்தை உடன் இருந்த உணர்வு தோன்றுவதாலா இல்லை அவன் மீது இருந்த ஈர்ப்பா எது அவன் அருகில் இருக்க சொல்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை.

அதனால் ஒரு முடிவை எடுத்து இருந்தாள் பனிமலர். நன்றாக படித்து முடித்து தன் திறமையை காட்டி சூரியனின் கம்பெனியில் அவள் பணிக்கு செல்ல வேண்டும் அடுத்து ஆகாஷ் தமிழை காதலிப்பதால் எப்படியும் திருமணம் செய்து கொள்வான். ஆகாஷ் தமிழ் இருவரும் தாய் தந்தை உருவாக்கிய கம்பெனியை பார்த்துக்கொள்வார்கள் என்று தனக்குள்ளே முடிவு செய்தவள் மேலும் தன் திறமையை வளர்த்து கொண்டிருந்தாள் பனிமலர்.

ஆனால் அந்த ஆண்டு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட போது அவன் அவளை கேவலமானவள் என்றது மட்டும் இல்லாமல் தன் ஆபிஸ் வாசற்படியில் கூட கால் வைக்க கூடாது என்று கூறி சென்றது அவளை வேதனை படுத்தியது.

ஆகாஷின் பேச்சின் மூலம் அவள் திறமையை கண்டு அவனே உன்னை தேடி வரச்செய் என்று ஊக்கம் தந்ததால் அவளும் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

போன வருடம் விடுமுறையில் அந்த நாளில் அவள் தயக்கத்துடன் கோயில் சென்றாள். அவன் கல்லூரியில் அவளை பேசியது போல் இப்போது பேசிவிடுவானே என்று தயக்கத்துடன் சென்றவளுக்கு அவன் பார்வை கூட அவள் மீது படியாமல் சென்றது வறுத்தத்தை கொடுத்தது. இருந்தபோதும் எப்போதும் போல் அவன் பின் சுற்றி வந்தாள். அவனை பார்க்கும் இந்த கொஞ்ச நேரம் தான் அவளுக்கு நிம்மதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது.

இந்த இறுதி ஆண்டும் இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும் என்ற நேரத்தில் தான் தன் தமக்கையின் நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றவளுக்கு மாப்பிள்ளையாக தன் சூரியனை கண்டு அதிர்ந்தாள். பின் அக்காவின் பிடிவாத குணம் தெரிந்தவள் கண்டிப்பாக அவள் காதலித்தவனை தான் மணப்பாள் இந்த திடீரென ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்திவிடுவாள் அப்போது அவனை மணந்து கொள்ள வாய்ப்பு இருக்கு என்று இதுவரை கட்டுப்படுத்தி தனக்குள் இருந்த காதல் உணர்வு தறிகெட்டு ஓடியது.

அன்று தமிழ் ராட்சசன் மீது காதல் எப்படி வந்தது என்று கேட்ட போது அவனை பார்த்தது முதல் அவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் அவனை இந்த நான்கு வருடமாக கோயிலில் தாய் தந்தை இழந்த நாளில் பார்ப்பது பெற்றவர்களை பார்க்கின்ற உணர்வு வருவதையும் அவனுக்குள்ளும் ஒரு நல்ல குணம் இருப்பதால் தான் அன்று குழந்தையை காப்பாற்றியதோடு அந்த குழந்தையின் தந்தையை அடித்து திட்டியும் இருக்கிறான்.

மற்றவர்களுக்கு அவனின் முரட்டுதனம் மட்டுமே தெரிகிறது ஆனால் எனக்கு அவனுக்குள் அன்பு பாசம் என்ற உணர்வுகள் இருப்பது தெரிகிறது. அதுதான் அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இன்றைக்கு காதலாக மாறியிருக்கு என்று கூறியிருந்தாள் பனிமலர்.

அப்போதும் தமிழால் பனிமலரின் வார்த்தைகளை ஏற்க முடியாமல் நேரில் அவன் குணத்தை கண்டாள் மட்டுமே நம்புவேன் என்று கூறியிருந்தாள்.

தமிழின் வார்த்தைகளை கேட்டவள் கண்டிப்பா அவன் நல்ல குணத்தை ஒரு நாள் பார்ப்பாய் என்று கூறி காதல் வானில் சிறகடித்து பறந்திருந்தாள் பனிமலர்.

ஆனால் திருமண நாள் நெருங்க நெருங்க எழில்நிலா எந்த முயற்சியும் செய்யாமல் அமைதியாக இருப்பது அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்ற போதும் எழில்நிலா சந்தோஷமாக வளைய வந்தாள். அதை கண்ட பனிமலரின் கற்பனை கோட்டை அனைத்தும் இடிந்து போயின. மனதுக்கு நெருக்கமானவனை இழக்கப்போகிறோம் என்ற எண்ணம் அவளை வாட்டி வதைத்தது. அதன் வெளிப்பாடுதான் இப்போது அவள் மனம் தாய் தந்தை மடியை தேடுகிறது.

ஆகாஷ் தோள் சாய்ந்து பழைய நினைவுகளில் மூழ்கி கண்ணீர் விட்டு கொண்டு இருந்தவளை ஆகாஷ், தமிழ் இருவரும் ஆறுதல் செய்து கொண்டு இருந்தனர்.

அந்நேரம் அவர்கள் முன் வந்து நின்றான் அந்த நெடியவன். சட்டென்று ஆகாஷ் மீது சாய்ந்து இருந்த பனிமலரின் கை பிடித்து இழுக்க அவனின் இழப்புக்கு வந்தவள் அவன் மீதோ இடித்து கொண்டு பின்னால் சாய அவனின் வலிய கரம் அவளை பின்னேக்கி விழாமல் இடையை சுற்றி வளைத்து தன் மீது சாய வைத்தது.

அதுவரை பழைய நினைவுகளில் இருந்த பனிமலர் அவனின் இழுப்புக்கு சென்றவள் அவனின் தோள் சாய்ந்ததும் தான் அவள் மனம் விழிப்படைந்தது. அவனின் வாசம் அவளின் சூரியன் தான் என்பதை உணர்த்த தான் வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்ததை உணர்ந்து தன் கைகளால் அவனின் இடையை இறுக்கி அணைத்துக்கொண்டு கண்மூடி அவனின் மார்பில் புதைந்தாள் பனிமலர்.

சில வினாடிகளில் இவை அனைத்தும் நடந்து இருக்க ஆகாஷ் தமிழ் இருவரும் திகைத்து பின் தெளிந்தவர்கள்

"டேய்" என்று ஆகாஷ் வேகமாக எழுந்தான்.

"ஏய் என்று எழுந்த தமிழ் பனிமலரை அவனிடம் இருந்து பிரிக்கப்போக அதற்கு முன்பே அவளை தள்ளியிருந்தான் சூர்யபிரகாஷ்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 26



சூர்யா தள்ளியதால் சற்று தள்ளிப்போய் மண்ணில் விழுந்து இருந்தாள் தமிழ். ம‌ற்றொரு பக்கம் ஆகாஷ் "பாப்பு டால்... " என்ற அழைப்புடன் சூர்யாவிடம் இருந்து பிரிக்க வர அவனையும் அருகில் வராமல் தள்ளினான்.

ஆகாஷ் சில அடிகள் பின் சென்று விழாமல் சமாளித்து நின்று மீண்டும் அருகில் வந்தான்.

"டேய் அவளை விடுடா" என்றான் ஆகாஷ்.

"எதுக்கு விடனும்" என்றான் குரலில் திமிருடன் சூர்யா.

" ஏற்கனவே அவளை மனம் வேதனை படும்படி பேசியவன் தானே நீ. இப்ப எதுக்குடா அவளை இப்படி உரிமையா பிடிச்சிட்டு இருக்க உனக்கும் அவளுக்கு என்ன சம்பந்தம் இருக்கு இப்படி அணைச்சிட்டு இருக்க விடுடா பாப்புவை" என்றான் ஆகாஷ்.

"எங்களுக்கு என்ன சம்மந்தம் என்று அப்புறம் சொல்லுறேன் முதலில் உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்" என்றான் சூர்யா.

அவனை பார்த்து பல்லை கடித்த ஆகாஷ் " அவள் என் பிரண்டு டா" என்றான்.

" ஓஓஹே... நீ பிரண்டு தான் நான் யார் தெரியுமா அவளுக்கு உறவுக்காரன். இன்னைக்கு பிரண்டா இருப்பிங்க நாளைக்கு பிரிஞ்சிடுவிங்க ஆனால் நான் அப்படி இல்லை லைப் லாங் அவளின் சொந்தக்காரன்" என்றான் சூர்யா.

சூர்யா தள்ளி விட்டதில் கீழே விழுந்த தமிழ் எழுந்து கோபமாக சூர்யாவை பார்த்துக்கொண்டு இருந்தவள் சூர்யா சொந்தக்காரன் என்று சொன்னதும் ஒரு வேளை அவனும் பனிமலரை விரும்புகிறானோ அதான் சொந்தக்காரன் என்று சொல்லுறான் என்ற எண்ணம் தோன்றவும் "சொந்தக்காரன் என்றால் என்ன சொந்தம்?..." என்ற கேள்வியை மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டாள் தமிழ்.

அவளை ஒரு அலட்சியப்பார்வை பார்த்தவன் "இவளின் அக்கா புருஷன்" என்றான் சூர்யா.

அதை கேட்ட ஆகாஷ் " அக்காவை கல்யாணம் பண்ணுறவன் இவளை ஏன்டா அணைச்சுட்டு இருக்க விடுடா" என்றான்.

"ஏன்னா உங்களை போன்ற துரோகிகள் பிரண்ட்ஸ்ஷிப் இவளுக்கு வேண்டாம் என்று தான் பிடிச்சிருக்கேன் என்றான் சூர்யா.

அவனின் பேச்சை கேட்ட தமிழ் கோபத்தின் உச்சிக்கு சென்றாள். அவன் வேறு ஒருத்தியை கட்டப்போறேன் என்று சொல்லுறான் இவள் அவனை கட்டிப்பிடிச்சுட்டு கனவு கண்டு கொண்டு இருக்கா என்று நினைத்தவள் பனிமலரின் முதுகில் ஓங்கி அடித்தாள்.

வலியில் "அம்மாமா...." என்ற அலறலுடன் சுயநினைவு வந்தாள் பனிமலர்.

ஆகாஷ் உடன் பேசிக்கொண்டு இருந்தவன் தமிழ் அடிக்க வருவதை கவனிக்கவில்லை பனிமலர் மீது விழுந்த அடியின் சத்தமும் அவளின் அம்மா என்ற சத்தத்தில் திரும்பியவன் தமிழை ஓங்கி அறைந்தான் சூர்யா.

சூர்யாவின் அடியில் இரண்டு அடி தள்ளி விழுந்து இருந்தாள் தமிழ் அவளின் உதட்டோரம் இரத்தம் கசிந்தது.

வலியில் துடித்து அம்மா என்றவள் அடுத்து தமிழின் மீது விழுந்த அடியில் "தமிழ்...." என்று அழைத்துக்கொண்டே சூர்யாவின் அணைப்பில் இருந்து வேகமாக விலகி தமிழின் அருகில் சென்றாள் பனிமலர்.

ஆகாஷ்சும் தமிழின் அருகில் சென்று "தமிழ்" என்று அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளின் உதட்டில் கசிந்த இரத்தத்தை தன் கர்ச்சீப் கொண்டு துடைத்தான்.

பனிமலர் தமிழின் மறுபக்கம் அமர்ந்து அவளை தோளோடு அணைத்துக்கொண்டாள்.

அதை கண்ட சூர்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது. பனிமலரின் அருகில் சென்று அவளின் கை பிடித்து "ஏய் உனக்கு இவங்க கூட என்ன பேச்சு இவங்க பிரண்ட்ஸ்ஷிப்பை கட் பண்ணு என்று சொன்னேன் இல்லையா?..." என்றான் சூர்யா.

இந்த முறை அவனின் இழுப்புக்கு வராமல் தமிழை அணைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள் பனிமலர்.

அவனின் பேச்சை கேட்டவள் கோபமாக "இவங்க பிரண்ட்ஸ்ஷிப்பை வேண்டாம் சொல்ல நீங்க யாரு சார்?... " என்றாள்.

" ஏய் நான் இன்னும் இரண்டு நாளில் உன் குடும்பத்தில் ஒருத்தனாகப்போறவன்" என்றான் சூர்யா.

"அது நடக்க இன்னும் இரண்டு நாள் இருக்கு அதுக்குள்ள என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் சார்" என்றாள்.

" ஏய் அது என்ன சார் அத்தான் என்று கூப்பிடு" என்றான் சூர்யா.

" உங்களை எப்படி கூப்பிடனும் என்று நான் தான் முடிவு செய்யனும் நீங்க இல்லை" என்றாள்.


அவளின் பேச்சு அவனுக்கு அவமானமாக இருந்தது தமிழ், ஆகாஷ் அவனை ஏளனமாக பார்த்துக்கொண்டு இருந்தனர். அது அவனுக்கு மேலும் கோபத்தை கொடுத்தது.

"ஏய் இப்ப ஒழுங்கா என் கூட வரப்போறியா இல்லையா?..." என்றான் சூர்யா.

" யார் என்று தெரியாதவங்க கூட நான் எப்படி வருவேன் என்று எதிர்பார்க்கிறீங்க சார். என்னை கூட்டிட்டு போக என் பிரண்ட்ஸ் இருக்காங்க நீங்க கிளம்புங்க சார்" என்றாள்.

"அதை கேட்டவனின் முகம் மேலும் சிவந்தது "நான் யாரேவா கூடிய சீக்கிரம் உனக்கு நான் யார் என்று தெரியும். இப்ப நீ பேசின பேச்சுக்களுக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை இருக்குடி" என்றவன் ஆகாஷ் மற்றும் தமிழை முறைத்து விட்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.

அவன் செல்வதை பார்த்தவளின் கண்கள் கலங்கின அதனை தமிழ் ஆகாஷ்க்கு தெரியாமல் முறைத்தாள் பனிமலர்.

தமிழுக்கு பனிமலர் மீது கோபம் தான் அவன் அணைத்த போதே விலகி வராமல் இவளும் அணைச்சிட்டு நின்றது தானே இவ்வளவும் நடக்க காரணம் என்று நினைத்த போதும் அதனை ஆகாஷ் முன் கேட்க முடியாது. அவனுக்கு இவளின் பைத்தியக்கார காதல் தெரியாது அதனால் அமைதியாக இருந்தாள்.

" சாரி தமிழ், ஆகாஷ்" என்றாள் பனிமலர்.

" ஏய் நீ எதுக்கு சாரி சொல்லுற அவன் பண்ணதுக்கு நீ என்ன செய்வாய் அவனுக்கு ரொம்ப திமிர் ஆகிடுச்சு அதான் என்னை பழிவாங்கனும் என்று உங்களை கஷ்டபடுத்திட்டு போறான் நான் தான் அவனுக்காக மன்னிப்பு கேட்கனும்" என்றான் ஆகாஷ்.

" அவன் என்னை நண்பனாக பார்க்காமல் எதிரியா பார்க்கிறான். நான் காலேஜில் எல்லார் எதிரிலும் அவனை பேசியதை அவமானமாக நினைத்து அன்றிலிருந்து என்னை எதிரி துரோகி என்று கூறிக் கொண்டு இருக்கிறான்" என்று வறுத்தமான குரலில் கூறினான் ஆகாஷ்.

"நீ அவனை பிரண்ட் என்று சொல்லுற அவன் உன்னை எதிரியா பார்க்கிறான். அப்படி என்ன தான் நடந்தது உங்களுக்குள்ள?... " என்று கேட்டாள் பனிமலர்.

வறுத்தத்துடன் இருந்தவனின் முகம் இப்போது புன்னகை பூத்தது. புன்னகையுடனே "அவனுக்கும் எனக்குமான நட்பு நாங்க பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்தது" என்றான் ஆகாஷ்.

அதை கேட்ட பனிமலர், தமிழ் இருவரும் அவனை லூசா நீ என்ற பார்வை பார்த்தனர்.

அதில் இன்னும் புன்னகை அதிகமாக சிரித்தவன் "எங்க வீடு இரண்டும் பக்கத்து பக்கத்து வீடு என் அம்மாவும் அவனுடைய அம்மாவும் பிரண்ட்ஸ். இரண்டு அம்மாக்களும் ஒரே சமயத்தில் கன்சிவ் ஆகி இருந்தாங்க. அப்ப அம்மாக்கள் நட்பாக பேசும் போது வயிற்றுக்குள் இருந்த நாங்களும் அதை கேட்டுட்டு இருந்தோம் இல்லையா அப்ப எங்களுக்குள்ளும் அம்மாக்களின் நட்பு கலந்து இருக்கும் இல்லையா அதை தான் சொன்னேன்."

" ஒரு வார இடைவெளியில் பிறந்தோம், வளர்ந்ததும் ஒன்றாகத்தான் ஸ்கூல் போனது ஒன்றாகத்தான் இப்ப இருக்கிறது அவனின் குணம் இல்லை அவன் எப்பவும் ஜாலி டைப் எதையும் சீரியஸாக எடுத்துக்கமாட்டான். இருக்கிற லைப்பை நமக்கு பிடிச்ச மாதிரி வாழனும் என்று சொல்லுவான். "

" அதுக்கு என்று எப்படி என்றாலும் வாழலாம் என்று இல்லை. கூடப்படிக்கும் பெண்களிடம் ஃப்ரெண்ட்லியா பேசுவான் ஆனால் அதுக்கு என்று ஒரு லிமிட் வச்சு தான் பழகுவான் லிமிட்டை அவனும் தாண்டமாட்டான் பெண்களையும் தாண்டி வர அனுமதிக்கமாட்டான்."

" அவனின் குணத்திற்கே நிறைய பெண்கள் காலேஜ் டைம் லவ் சொல்லி இருக்காங்க அவன் எல்லாத்தையும் மறுத்ததோடு திரும்பி நட்பு கரம் நீட்டி வந்தால் அவர்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டான்."

" அவனுக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போனாலும் ஒரு விஷயத்தில் அடிக்கடி சண்டை வரும். அவன் கல்லூரி சேரும் போது அவங்க தாத்தா, அப்பா அவங்க தொழிலை கவனிக்க பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படிக்க சொன்னால் அதை மறுத்து கம்ப்யூட்டர் படிச்சான்."

" அப்ப நான் ஏன் என்று கேட்டதற்கு அவன் சொன்ன காரணம் எனக்கும் பிடிக்கவில்லை அதில் இருந்து தான் எங்களுக்குள் சண்டை வந்தது. அப்பா தாத்தா அண்ணன் போல் பிசினஸ் உள்ள போயிட்டா அவங்களை போல் நானும் தொழிலின் பின்னால் ஓடிட்டு இருக்கனும் லைப்பை என்ஜாய் பண்ணமுடியாது. அதனால் நான் குடும்ப தொழில் பக்கம் போகமாட்டேன் படிப்பை முடித்து விட்டு வெளிநாடு போய் செட்டில் ஆகப்போறேன் என்றான். "

அவன் முடிவு தப்பு தொழிலை எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கி இருப்பாங்க உன் தாத்தாவும் அப்பாவும் அதை இப்படி உதாசீனம் செய்கிறாயே என்று திட்டினேன் அவன் எதையும் காதில் வாங்கவில்லை. வேலை பற்றி பேசும்போது எல்லாம் அவனுக்கும் எனக்கும் பிரச்சனை வரும் அதனாலே பெரும்பாலும் நான் அவன் கூட இருக்கும் போது வேலை பற்றி பேசுவது இல்லை. "

" கடைசியா எம் ஈ கடைசி வருஷம் படிக்கும் போது பெரிய கம்பெனிகள் கேம்பஸ் இண்டர்வியூ பண்ண எங்க காலேஜ் வந்தாங்க அப்பதான் எங்களுக்கு பேச்சு முற்றியது."

" முன் தினம் கேம்பஸ் இண்டர்வியூ முடிந்து இருந்தது. சூர்யாவிற்கு மிகப்பெரிய வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைத்தது".

கல்லூரி நண்பன் ஒருவன் சூர்யா " நீ நினைச்ச மாதிரியே உனக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டது அதனால் எங்களுக்கு ட்ரீட் கொடுடா" என்றான்.

உடன் இருந்த மற்ற நண்பர்களும் "ஆமாம் சூர்யா நீ நினைச்சது மாதிரியே வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறாய் எங்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்கவேண்டும்" என்றான்.

" ட்ரீட் தானே கொடுத்தாப்போச்சு எங்க போகலாம் என்று சொல்லுங்கடா" என்றான் சூர்யா.

"ஹேய்ய்...." என்று கூச்சலிட்டு சந்தோஷப்பட்டனர் நண்பர்கள்.

" டேய் வீக் எண்டு மகாபலிபுரம் போகலாம்" என்றான் ஒருவன்.

" வேண்டாம் பாண்டிச்சேரி போகலாம்" என்றான் இன்னொரு இப்படியாக ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களை சொன்னார்கள். ஆகாஷ் மட்டும் அந்த பேச்சில் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

அதை கண்ட நண்பன் ஒருவன் "டேய் ஆகாஷ் ஏன் அமைதியா இருக்க நம்ப பார்க்காத இடம் எதாவது இருந்தால் சொல்லுடா" என்றான்.

அவனை முறைத்த ஆகாஷ் "நான் எங்கேயும் வரலை" என்று கூறி அங்கிருந்து எழுந்து செல்லப்போக அவன் கையை பிடித்தான் சூர்யா.

"ஏன்டா வரலை வீக் எண்டு எதாவது வேலை இருக்கா?... "என்றான்.

" எனக்கு எந்த வேலையும் இல்லை" என்றான் ஆகாஷ்.

"அப்ப வரவேண்டியதுதானே" என்றான் சூர்யா.

" எனக்கு விருப்பம் இல்லை அதனால் வரலை" என்றான் ஆகாஷ்.

ஆகாஷ் முன் சென்று நின்ற சூர்யா " ஏன் விருப்பம் இல்லை?..." என்று கேட்டான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 27



" எனக்கு விருப்பம் இல்லை என்றால் விடுடா நீங்க போய் வாங்க" என்று அங்கிருந்த செல்லப்பார்க்க சூர்யா அவனின் கையை இறுக்கமாக பற்றி இருந்தான்.

"சூர்யா விடு இந்த விஷயம் பேசினால் நமக்குள் பிரச்சனை தான் வரும் அதான் நான் பேசலை" என்றான் ஆகாஷ்.

"அப்படி என்ன தான் சொல்லப்போற சொல்லுடா" என்றான் சூர்யா.

"ஏன்டா அவன் தான் விருப்பம் இல்லை என்று சொல்லுறான் இல்லை விடுடா நம்ப போகலாம்" என்றான் ஒரு நண்பன்.

மற்ற நண்பர்களும் ஆமாம் ஆமாம் என்று சொன்னார்கள்.

ஆனால் பிடிவாதத்தின் உருவமான சூர்யபிரகாஷ் விடுவான பிறந்ததில் இருந்து நண்பர்கள். ஆகாஷ் இல்லாமல் எங்கும் போனது இல்லை ஆனால் இன்று அவன் தன்னை ஒதுக்குவது போல் இருக்க அவனை எப்படியாவது பேசி அழைத்து செல்ல நினைத்தான்.

அவனின் பிடிவாத குணம் அறிந்த ஆகாஷ் இவன் காரணத்தை சொல்லாமல் விட மாட்டான் என்று நினைத்து காரணத்தை சொன்னான்.

"நம்ப நாட்டை விட்டு வெளிநாடு போய் எவன்கிட்டையோ கைகட்டி வேலை செய்யப்போறதுக்கு ஒரு பார்ட்டியா?... " என்றான் ஆகாஷ்.

அவன் கூறியதை கேட்ட சூர்யா கோபத்துடன்" டேய்" என்று ஆகாஷ் சட்டையை பிடித்தான்.

" இதுக்கு தான் நான் சொல்லமாட்டேன் சொன்னது இங்க இருக்கிறவங்க யார் கிட்ட வேண்டும் என்றாலும் கேளு அவங்க ஆழ்மனது ஆசையை என்றவன் பக்கத்தில் இருந்த நண்பனிடம் நீ சொல்லுடா உனக்கு ஃப்யூச்சரில் என்ன செய்யனும் என்று பிளான் பண்ணி இருக்க" என்றான்.

அந்த நண்பன் சூர்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு "எனக்கு சொந்தமா பிஸ்னஸ் பண்ணனும் என்று ஆசை தான் ஆனால் அதற்கு தேவையான பணம் இல்லை. நிறைய கமிட்மென்ட் இருக்கு அதனால் கொஞ்ச வருஷம் வேலை செய்துவிட்டு ஓரளவுக்கு செட்டில் ஆன பிறகு பேங்க் லேன் போட்டு சின்ன கம்பெனி ஸ்டார்ட் பண்ணனும் என்று ஆசை என்றான்.

சூர்யாவை பார்த்து கேட்டுதா என்பது போல் பார்வை பார்த்தவன் மற்றொரு நண்பனை பார்த்து "நீ சொல்லுடா" என்றான் ஆகாஷ்.

"இவன் சொன்னது தான் எனக்கும் மூன்று தங்கச்சி இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் நான் தான் செய்யனும் அதனால் என் ஆசையை தூக்கி போட்டுட்டு எவன் கிட்டயாவது கை கட்டி வேலை செய்து தான் ஆகனும்" என்றான்.

சூர்யாவின் முகம் சிவந்தது அதை மேலும் அதிகமாக்கும் விதமாக ஆகாஷ் பேசினான்.

" எல்லோரும் படித்து முடித்து நல்லபடியாக லைப்பில் செட்டில் ஆகனும் சொந்தமாக பிஸ்னஸ் செய்து முதலாளியாக இருக்கனும் என்று தான் நினைப்பாங்க ஆனால் அவங்க சூழ்நிலைகள் அவங்க விருப்பப்படி செய்ய முடியாததால் கிடைக்கும் வேலையில் சேர்ந்து ஓடிட்டு இருக்காங்க."

"ஆனால் நீ கஷ்டப்படாமல் உன் தாத்தா அப்பா ஒரு தொழிலை உருவாக்கி வச்சு இருக்காங்க. அதில் போய் முதலாளியாக உட்காராமல் எவன் கிட்டையே போய் ஆயிரத்தில் ஒருவனா வேலை செய்யப்போறேன் என்று சொல்லுறது எப்படி இருக்கு தெரியுமா உன்னை தேடி வரும் அரியாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்யாமல் நான் கேட்டுக்கு வெளியே காவலாளியாகத்தான் இருப்பேன் என்று சொல்லுறது மாதிரி இருக்கு என்று ஆகாஷ் சொல்லவும்"

சூர்யாவின் முகம் அவமானத்தில் சிவந்தது. தன்னை சுற்றியுள்ளவர்களை பார்த்தவன் அங்கிருந்து வேகமாக பார்க்கிங் நோக்கி சென்றான்.

நண்பர்கள் " டேய் சூர்யா... சூர்யா..." என்று அழைத்து பின்னால் சென்றனர். ஆனால் அவன் யாரையும் திரும்பிப்பார்க்காமல் தன் பைக் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

"டேய் என்னடா?..." என்றான் ஒரு நண்பன்.

"அவன் கோபத்தில் போறான்டா கோபம் குறைந்ததும் வருவான்" என்றான் ஆகாஷ்.

ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரி வராமல் இருந்தவன் மூன்றாம் நாள் வந்த போது நண்பர்கள் இருந்த பக்கம் கூட வரவில்லை. இவர்கள் சென்று பேசிய போதும் சூர்யா யாரிடமும் பேசவில்லை. ஆகாஷ் சென்று கை பிடித்த போது அவனின் கையை உதறியவன் "என்னை தொட்ட அவ்வளவு தான்" என்றான் கோபமாக

"என்னடா சும்மா ரொம்ப பிகு பண்ணுற வாடா" என்று கை பிடித்து இழுத்த ஆகாஷ்சை ஓங்கி அறைந்து இருந்தான் சூர்யா.

நண்பர்கள் அனைவரும் அதிர்ந்து "சூர்யா...." என்றனர்.

தன் நண்பர்களை ஒரு பார்வை பார்த்தவன் " இனி எவனாவது பிரண்ட் என்று என்கிட்ட வந்தா எல்லோருக்கும் இதுதான்" என்று சொன்னவன் " எனக்கு முதல் எதிரி நீ தான்டா துரோகி" என்று ஆகாஷ் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

"என்னடா இப்படி பேசிட்டு போறான்" என்றான் நண்பன் ஒருவன்.

" நான் பேசியதை தப்பா எடுத்துகிட்டான் போலடா எப்பவாவது நான் அவனுக்கு நல்லதை தான் சொன்னேன் என்று உணருவான் அப்போ நம்பளை தேடி வருவான்" என்றான் ஆகாஷ்.

அதன் பிறகு சூர்யா கல்லூரி வந்தால் யாரிடமும் பேசுவது இல்லை. நண்பர்களிடம் மட்டும் இல்லாமல் வகுப்பில் யாரிடமும் பேசுவதில்லை. வகுப்பு இல்லாத போது எதாவது மரத்தடியில் அமர்ந்து தன் லேப்டாப்பில் எதாவது செய்து கொண்டு இருப்பான்.

"கல்லூரி முடித்தபோது கூட யாரிடமும் பேசாமல் சென்றான். அதன் பிறகு அவன் தாத்தா கம்பெனியில் சேர்ந்து இன்னைக்கு இந்த அளவுக்கு வந்து இருக்கான். ஆனால் இன்னைக்கு வரைக்கும் யாரிடமும் பிரண்டாக பழகலை பிஸ்னஸ் பிஸ்னஸ் ஓடிட்டு இருக்கான் வீட்டில் கூட யாரிடமும் சரியா பேசறது இல்லை. அவனுக்குள்ளே இறுகி போய் இருக்கான். நான் பேசினது அவனை ரொம்ப பாதித்து இருக்கு அதான் இப்படி என்னை எதிரியா பார்க்கிறான். எனக்கு கிடைக்கவேண்டிய ப்ராஜெக்ட் நிறைய அவன் கைக்கு போயிடுது. என்னை பார்க்கும் போது என்னை மனசு நோகும்படி பேசுறான். என் பிரண்டு என்று தான் உங்களையும் நோகடிக்கிறான்" என்று கவலையான குரலில் சொல்லினான் ஆகாஷ்.

" ராட்சசன் என்று சொன்னதில் தப்பே இல்லை அவன் நல்லதுக்கு சொன்னதை கூட புரிந்து கொள்ளாமல் இருப்பவன் எப்படி இவ்வளவு பெரிய பிஸினஸை பண்ணுறான் என்று தெரியவில்லை வலித்த கன்னத்தை பிடித்துக்கொண்டே தமிழ் கூறினாள்.

"அவனை கூப்பிடறேன் நீயே கேட்டுக்க" என்றான் ஆகாஷ்.

ஆகாஷ் என்ன சொல்லுறான் என்று புரியாமல் அவனை தமிழ் பார்க்க ஆகாஷ் பனிமலரை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான். பனிமலரும் சிரித்துக்கொண்டு இருக்க எதுக்கு இதுங்க ரெண்டும் சிரிக்குதுங்க நான் அந்த ராட்சசனை திட்ட தானே செய்தேன் அதுக்கு இந்த லூசு கூட எதுவோ சொன்னானே என்று யோசித்தவளுக்கு ஆகாஷ் சொன்னது நியாபகம் வந்தது.


"கூப்பிடறேன் நீயே கேட்டுக்க என்றானே" என்ற போது தான் அவன் சொன்ன காரணமும் இப்போது இருவரும் சிரிக்கும் காரணமும் புரிந்தது. அந்த ராட்சசனிடம் கேட்டால் பதில் வராது அதற்கு பதில் இன்னொரு கன்னத்தில் அடிவிழும் என்று தோன்றவும் ஆகாஷ், பனிமலர் இருவரையும் பார்த்து முறைத்தாள் தமிழ்.

"ஆக்கு ஒரு வழியா இல்லாத மூளையை கசக்கி பல்ப் எரிந்திடுச்சி வா நம்ப போயிடலாம்" என்று கூறிக்கொண்டே ஆகாஷ் கை பிடித்து எழுப்பி ஓட ஆரம்பித்தனர் ஆகாஷ், பனிமலர்.

" ஏய் ஒழுங்கா நில்லுங்க நான் அவன் கிட்ட அடிவாங்குறது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கா" என்று ஆகாஷ் பனிமலரை துரத்திக்கொண்டு ஓடினாள் தமிழ். சிறிது தூரம் ஓடியவளுக்கு மூச்சுவாங்கவே நின்று விட்டாள்.

ஓடிய ஆகாஷ் பனிமலர் இருவரும் சற்று தொலைவில் சென்று கடல் நீரில் கால் நனைத்துக்கொண்டு நின்றனர்.

தமிழின் முகத்தில் அவர்களை கண்டு மெல்லிய புன்னகை பூத்தது. சட்டென்று ஏதோ தோன்றவே திரும்பி பார்க்க சற்று தூரத்தில் தன் இருகைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டு நின்று ஆகாஷ் பனிமலரை பார்த்துக்கொண்டு இருந்தான் சூர்யா.

ஆத்தாடி இவன் இன்னும் போகாமல் இங்கேயே இருக்கானே அதுவும் அவன் பார்வை ஆகாஷ் பனிமலர் இருக்கும் இடத்தில் இருக்கே என்று நினைத்தாள் தமிழ்.

அவன் சற்று தூரத்தில் இருப்பதால் அவன் முகத்தில் என்ன பாவனை இருக்கிறது என்று தெரியலை ஆனால் பார்வை ஆகாஷ் இருக்கும் இடத்தில் தான் இருக்கிறது என்று தமிழிக்கு தெரிந்தது.

ஆகாஷ் சொன்னதை பார்த்தால் இவனுக்கு நல்லது தான் செய்து இருக்கான் ஆனால் இவன் ஆகாஷ் மீது இவ்வளவு வன்மம் வச்சு இருக்கானே. ஆகாஷ் பிரண்ட்ஸ் என்ற காரணத்திற்காகவே எங்கள் கிட்டயும் கோபத்தை காட்டுறான் இவனால் மலருக்கு எதாவது பிரச்சனை வருமா?... அவள் வாழ்க்கையில் எதாவது குழப்பத்தை ஏற்படுத்துவானா?.... இல்லை ஒரு வேளை பனிமலரை லவ் பண்ண வைக்க இவனே எதாவது பிளான் பண்ணி இருப்பானா?...

மலர் சொன்னதை வைத்து பார்க்கும் போது ஆகாஷ்சும் இவனும் படிப்பு முடித்த போது தான் பனிமலர் இவனை பார்த்து இருக்கா அப்ப தான் இவனுங்க பிரிஞ்சு இருக்காங்க.

அப்படினா இந்த ராட்சசன் எல்லாம் பிளான் பண்ணி மலரை அவன் பின்னாடி சுத்த வைத்து இருக்கான்.
ஆகாஷ்சும் இவனும் சின்ன வயதில் இருந்தே பிரண்ட்ஸ் பக்கத்து பக்கத்து வீடு அப்படினா ஆகாஷ் பனிமலர் பற்றி கண்டிப்பா அடிக்கடி அவன் கிட்ட பேசியிருப்பான். ஆகாஷை பழிவாங்க பனிமலரை பயன்படுத்தி இருக்கான் என்று ஒன்றோடு ஒன்று இணைத்துப்பார்த்தவள் "அய்யோ...." என்று வாய்விட்டு கத்தி இருந்தாள் தமிழ்.

அவளின் குரலில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவளை பார்த்த போதும் தமிழ் அதை உணராமல் தன் சிந்தனையிலேயே இருந்தாள். அடுத்த அந்த ராட்சசன் பிளான் என்னவாக இருக்கும் என்று யோசனையில் இருந்தவளை உலுக்கினாள் பனிமலர்.

"ஏய் தமிழ் என்னடி ஆச்சு எதுக்கு கத்தின" என்று உலுக்கவும் சுய உணர்வு வந்த தமிழ் தன்னை சமாளித்துக்கொண்டு

"அது.. அது..." என்று யோசித்தவள் நியாபகம் வந்தவளாக "அதுவா மலர் ஆன்ட்டி மருதாணி வைக்கனும் சீக்கிரம் வரச்சொன்னாங்க இல்ல அது நியாபகம் வந்ததா அதான் அய்யோ" என்று சத்தமாக கத்திட்டேன் என்றாள் தமிழ்.

பனிமலரின் முகம் மீண்டும் சோகமாகியது.

அருகில் இருந்த ஆகாஷ்" அப்ப கிளம்பலாம் வாங்க" என்றான்.

மூவரும் ஆகாஷ் கார் இருக்கும் இடம் நோக்கி நடந்தனர். தமிழ் மெல்ல திரும்பி பார்க்க இப்போதும் சூர்யா அங்கேயே நின்று இவர்களைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்போது தான் தமிழுக்கு நாங்க இங்க இருக்கிறது இவங்களுக்கு எப்படி தெரிந்தது என்று தோன்றவும்

"ஆகாஷ் உனக்கு எப்படி தெரியும் நாங்க இங்க இருக்கிறது" என்று கேட்டாள்.

"அதுவா உன் ஜோடிப்புறாவும் உன் பிரண்டும் பீச்சில் காற்று வாங்கிட்டு இருங்காங்க என்று ஒரு பட்சி சொல்லுச்சி" என்றான் ஆகாஷ்.

தமிழ் அவனை முறைத்தாள்.

" ஏய் ஆக்கு ஓழுங்கா உண்மையை சொல்லு உனக்கு எப்படி நாங்க இங்க இருக்கிறது தெரிந்தது" என்று கேட்டாள் பனிமலர்.

"பாப்பு டால் நீ தான் நேற்று காலேஜ் போகனும் கம்பெனி வரமாட்டேன் என்று சொன்ன இல்லையா நான் இன்னைக்கு இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன். வேலை முடிந்ததும் உங்களையும் கூட்டிட்டு போகலாம் என்று காலேஜ் வந்தா அந்த நேரம் நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவில் ஏறுவதை பார்த்தேன். வீட்டுக்கு போகும் பஸ்சில் ஏறாமல் ஆட்டோவில் ஏறியதும் நீங்க ஊர் சுற்ற போறிங்க என்று தெரிந்திடுச்சு அதான் பின்னாடியே வந்தேன்."

"பார்க்கிங்கில் காரை விட்டு விட்டு வரும் போது முக்கிய பிசினஸ் கால் ஒன்னு வந்திடுச்சு அதனால் திரும்ப காரில் உட்கார்ந்து பேசி முடித்து விட்டு உங்களை தேடி வந்தேன்" என்றவன் தமிழ் பக்கம் திரும்பி "என்ன சிஐடி மேடம் உங்க டவுட் கிளியர் ஆச்சா இல்லை சாட்சியோட நிருபிக்கனுமா?... "என்றான்.

" எதுவும் தேவையில்லை" என்று ஆகாஷ்க்கு பதில் தந்தவளின் மனம் அப்ப இவன் பின்னாடியே அந்த ராட்சசன் வந்து இருக்கான் ஆகாஷ் பேனில் பேசிட்டு இருக்கும் போது அவன் எங்க பின்னாடி வந்து இருக்கான். அதான் பனிமலர் அவன் இங்கதான் இருக்கிறான் என்று மனசு சொல்லுது என்று சொல்லியிருக்கா என்று நினைத்த தமிழின் மனம் வேதனைப்பட்டது.

கடவுளே எந்த மாதிரி அவன் மீது அன்பு இருந்தால் அவன் இங்க தான் இருக்கான் என்று அவளால் உணரமுடியுது. ஆனால் அவன் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லாமல் பழிவாங்க பின்னாடி சுத்திட்டு இருக்கான். பனிமலர் இதுவரை பட்ட கஷ்டம் போதாதா இன்னும் அவளை கஷ்டப்படுத்தனுமா கடவுளே நீ தான் அவளை எந்த துன்பமும் நெருங்காமல் பாதுகாக்கனும் என்று மனதில் கடவுளிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டு வந்தாள் தமிழ்.

ஆகாஷ் பனிமலர் பேசிக்கொண்டு சென்றதால் தமிழியை கவனிக்கவில்லை.

வீடு வந்து சேர்ந்தவர்கள் உறவினர்கள் கூட்டத்தில் தங்கள் மனதை மறைத்து சந்தோஷமாக வளைய வந்தனர்.



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 28



மறுநாள் பேச்சு குரலில் இருவரும் உறக்கம் கலைந்தனர். இரவு உறவினர் சிலரும் அவர்கள் இருந்த அறையில் உறங்கியதால் இருவராலும் பேசமுடியவில்லை. தமிழால் கடற்கரையில் இருந்த போது சிந்தித்ததை பனிமலர் இடம் கூறி அவளை அந்த ராட்சசன் இடமிருந்து விளக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தை கூறமுடியாமல் போனது.

இந்த உறவினர் கூட்டத்தில் பனிமலரிடம் கூறமுடியாது என்பதால் பனிமலரை விட்டு சிறிதும் விலகாமல் அவளுடனே இந்த திருமணம் முடியும் வரை இருக்க வேண்டும் என்று முடிவு செய்து உறங்கி இருந்தாள் தமிழ்.

காலை எழுந்து குளித்து காலை உணவு முடித்து எழில்நிலா அறைக்கு சென்று அவளுக்கு மண்டபத்திற்கு எடுத்து செல்ல வேண்டியவைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை பார்க்குமாறு பெரியண்ணை கூறியதை செய்து கொண்டு இருந்தனர் பனிமலர், தமிழ்.

எழில்நிலா முகத்தில் இருக்கும் பூரிப்பை கண்ட பனிமலர் தமிழுக்கு இவள் அந்த அரவிந்தை டைம் பஸ்சுக்காக தான் லவ் பண்ணாளா இவ்வளவு சந்தோஷமாக இருக்காளே என்ற எண்ணத்தோடு பனிமலர் தமிழ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அன்று பகல் பொழுது வேகமாக கழிந்தது. நாளை காலை திருமணம் முடிந்த பிறகு மாலை தான் ரிஷப்ஷன் என்பதாலும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்ததாலும் மாலை மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் இல்லை அதனால் சில முக்கிய உறவினர் உடன் இரண்டு குடும்பத்தினரும் மாலை ஆறு மணிக்கு திருமண மண்டபம் வந்திருந்தனர். அவர்களுக்கு இரவு உணவு மண்டபத்தில் ஏற்படும் செய்யப்பட்டு இருந்தது.

சூர்யா மட்டும் திருமண மண்டபம் வந்திருக்கவில்லை. இரண்டு குடும்பத்தினரும் தங்கள் உறவினர்களை அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டு இருந்தனர். எழில்நிலா மணமகள் அறையில் அமர்ந்து தன் போனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

பனிமலர் வெளியே இருந்தால் உறவினர்களுடன் சிரித்து பேசவேண்டும் இப்போது இருக்கும் நிலையில் எப்போது கண்ணீர் வந்து விடுமோ என்று இருப்பவளுக்கு எப்படி பேசமுடியும் அதனால் எழில்நிலா அறைக்கு தமிழ் உடன் வந்து அமர்ந்து விட்டாள்.

தனியறைக்கும் செல்ல முடியாது பாட்டி பெரியண்ணை இருவரும் எழில்நிலா உடன் இருக்குமாறு சொல்லியிருந்தனர். அதனால் வேறுவழி இல்லாமல் மணமகள் அறையில் அமர்ந்து இருந்தாள்.

எழில்நிலாவை பார்க்க பார்க்க தன் இழப்பு மட்டுமே அவளின் கண்முன் வந்து நின்றது. தமிழ் சொன்னபோதே எழில்நிலாவிடம் பேசி இருக்கலாமோ என்று ஒரு மனம் சொல்ல மற்றொரு மனம் எழில்நிலா அவளுக்கு பிடித்த ஒரு பொம்மையை கூட இதுவரை விட்டுக்கொடுத்தது இல்லை அப்படி இருக்கும் போது அவளுக்கு என்று தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை கேட்டதும் விட்டு கொடுத்திருப்பாளா என்றது மனம்.

தன் நண்பி படும் துன்பத்தை கண்டு தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே என்ற வேதனையில் தமிழ் நண்பியின் கை பிடித்து ஆறுதல் தந்து கொண்டு இருந்தாள்.

இரவு உணவுக்கு பின் எழில்நிலா உடன் பெரியண்ணை படுத்துக்கொண்டதால் பனிமலர் தமிழ் இருவரும் வேறு அறைக்கு சென்றனர். அறையில் தமிழ் கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து இருக்க பனிமலர் அவளின் மடியில் தலை வைத்து படுத்து இருந்தாள்.

இருவரும் எதுவும் பேசவில்லை ஏற்கனவே வேதனையில் இருக்கும் பனிமலரிடம் முன் தினம் தான் அறிந்ததை சொன்னால் இன்னும் அதிகமாக வேதனைப்படுவாளோ என்ற சிந்தனையில் சொல்லாமல் விட்டு விட்டு அடுத்து அந்த ராட்சசன் என்ன செய்வானே என்ற பயமும் எப்படி அதில் இருந்து மலரை காப்பது என்ற சிந்தனையில் இருந்தாள் தமிழ்.

தன் காதல் அத்தியாயம் ஆரம்பிக்காமலேயே முடிவடைந்துவிட்டது என்று பனிமலரின் உள்ளம் துடித்துக்கொண்டு இருந்தது. கண் திறந்தால் கண்ணீர் வெளி வந்து விடுமோ என்று இறுக கண்மூடி இருந்தாள். வெவ்வேறு சிந்தனையில் இருந்தவர்கள் தன்னை மறந்து உறங்கி இருந்தனர்.

மணமேடையில் அக்னியின் முன் அமர்ந்து ஐயர் சொல்வதை செய்து கொண்டு இருந்த சூர்யபிரகாஷ் முகம் எந்த உணர்வுகளையும் காட்டாமல் இருந்தது. ஐயர் பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ என்றதும்

ஊர்மிளா வேகமாக அங்கிருந்த மணமகள் அறைக்குள் சென்றார். அங்கு தேவதையாக அமர்ந்து இருந்தவளை கண்டவரின் கண்கள் கலங்கி உதடுகள் புன்னகை செய்தன. அவளின் கன்னம் வழித்து சிறு திருஷ்டி பொட்டை வைத்தவர் "ரொம்ப அழகா இருக்க மலருமா" என்று அவளின் நெற்றியில் மெல்லிய முத்தம் வைத்தார்.

அவளும் கண்கள் கலங்க "மம்மி" என்றாள். அதை கண்ட சாருமதி "ஏய் மலர் என்ன பண்ணுற இப்படி கண்கலங்கினா மேக்கப் கலைந்திடும்" என்று டிஷ்யூ எடுத்து மெல்ல ஒற்றி எடுத்தாள்.

" அழக்கூடாது மலருமா வா ஐயர் அழைச்சுட்டு வரச்சொன்னார்" என்று அவளை கை பிடித்து எழுப்பி விட்டவர் "நீங்க இரண்டு பேரும் கூட்டிட்டு வாங்கம்மா" என்று தமிழ், சாருமதியிடம் கூறிவிட்டு முன்னே செல்ல தமிழ் சாருமதி இருபக்கமும் நடக்க நடுவில் தலைகுனிந்து மெல்லிய படபடப்புடன் நடந்து வந்தவளை கண்டவர்கள் மலைத்து போயினர்.

மஞ்சள் கலரில் முகூர்த்தப்புடவை கட்டுவது குடும்பத்து வழக்கம் என்பதால் மஞ்சள் கலரில் மெரூன் பார்டர் வைத்த புடவை தங்க இழைகள் கொண்டு நெய்ததை போல் ஜொலித்தன. பனிமலரின் வெள்ளை நிறத்திற்கு அந்த புடவை அழகாக பொருந்தி இருக்க அதற்கேற்ற பொருத்தமான வைரநகைகள் அணிந்து வானத்து தேவதையாக நடந்து வந்தவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தனர் அனைவரும் அதில் சூர்யபிரகாஷ்சும் ஒருவன்.

அவனின் அருகில் அமரவைக்க பொம்மைக்கு சாவி கொடுத்தது போல் அவனருகில் அமர்ந்தாள். அவனின் பக்கம் சிறிது கூட அவளின் பார்வை திரும்பவில்லை. ஆனால் அவனே அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பனிமலரின் அழகில் பிரமித்து பார்த்திருந்தவர்களுக்கு பனிமலர் சூர்யபிரகாஷ் அருகில் மணமகளாக அமர்ந்த போது தான் அவர்களில் சிலருக்கு இவள் மணப்பெண் இல்லையே இவள் அக்கா தானே என்று நியாபகம் வர அருகில் இருந்தவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

ஏற்கனவே மணப்பெண் மாறியது பற்றி தெரிந்த சிலர் மற்றவர்களுக்கு சொல்ல மண்டபம் முழுவதும் சலசலப்பு குரல் எழுந்தது. ஆனால் மேடையில் இருந்த இருகுடும்பத்தினரும் அதனை கண்டு கொள்ளாமல் ஐயர் சொல்வதை செய்து கொண்டு இருந்த சூர்யாவையும் பனிமலரையும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

விடியற்காலையிலேயே உறவினர்கள் பேசியதை கேட்டு மனம் நொந்து இருந்தவர்கள் மேலும் அதனை அதிகப்படுத்தி கொள்ளாமல் திருமணம் நல்லபடியாக முடியட்டும் என்று கடவுளை பிராத்தனை செய்து கொண்டு இருந்தனர்.

தன் முன் எரிந்து கொண்டு இருந்த அக்னியை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் பனிமலர் சித்ரா.

காதலித்தவனின் மனைவி ஆகப்போகும் மகிழ்ச்சி சிறிதும் அவள் முகத்தில் இல்லை. ஐயர் இரண்டு பேரும் கை நீட்டுங்கே என்ற போது அவள் அதை காதில் வாங்காமல் அக்னியை பார்த்துக்கொண்டு இருக்க அருகில் இருந்த தமிழ் குனிந்து மலர் என்னும் முன் பனிமலரின் கையை சூர்யா தொட்டு இருந்தான்.

அவனின் தொடுகையில் உடல் சிலிர்த்து உணர்வு வந்தவள் என்ன என்பது போல் சூர்யாவின் முகத்தை பார்க்க அவன் கண்களால் ஐயரை காட்டினான். அதன் பின் அவள் ஐயர் சொன்னதை செய்து கொண்டு அலைபாய்ந்த மனதை அடக்கி சடங்குகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் குரல் கொடுக்க மேலும் பல குரல்கள் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று கூற மங்களிசையும் மந்திரங்கள் முழங்க உற்றார் உறவினர் ஆசிர்வாதம் செய்த பொன் தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றை எடுத்து சூர்யாவிடம் ஐயர் கொடுக்கவும் தாலியை வாங்கி பனிமலரின் கழுத்தருகில் கொண்டு சென்றவன் கட்டாமல் அப்படியே இருக்க அதுவரை தலைகுனிந்து இருந்த பனிமலர் தலைநிமிர்ந்து சூர்யாவை பார்த்தாள்.

அவளின் பார்வைக்காக காத்திருந்தது போல இதுவரை அவன் முகத்தில் அவள் கண்டிராத புன்னகையுடன் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவனின் சரிபாதியாக்கியவன் தன்னை இமைக்காமல் விழிவிரிய பார்த்துக்கொண்டிருந்தவளை பார்த்து யாரும் அறியாமல் ஒற்றை கண் சிமிட்டி இதழ் குவித்து முத்தமிடுவது போல் செய்தான்.

அதை கண்ட பனிமலரின் உடல் சிலிர்க்க கண்கள் மேலும் விரிந்தன. அவளின் மனம் கனவு தான் கண்டு கொண்டு இருக்கிறோமோ என்று நினைத்தது. இதுவரை இறுக்கமான தோற்றத்தையும் கோபமுகத்தையும் பார்த்தவளுக்கு இப்போது அவனின் செயல்களை கனவு என்றுதான் நினைக்க தோன்றியது.

ஏனெனில் சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் எப்படி எல்லாம் பேசி கோபப்பட்டான். தமிழ் சொல்வது போல ராட்சசனாக நடந்தவன் இப்போது அதற்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறானே என்ற சிந்தனையுடன் அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் பனிமலர்.

சூர்யா யாரும் அறியாமல் செய்தது இரண்டு பேர் கண்ணில் பட்டிருந்தது. தாலி கட்டும் போது பனிமலர் பின் குனிந்து தாலி கட்ட அவளின் ஜடையை தூக்கி பிடித்து இருந்தார்கள் சாருமதி, தமிழ் இருவரும். அவர்களின் கண்ணில் சூர்யாவின் புன்னகை முகமும் கண் சிமிட்டல் உதட்டை குவித்து முத்தம் இடுவது போல் செய்தது அனைத்தும் பட்டிருந்தன.

தமிழுக்கு சூர்யாவின் செயல் பழிவாங்கும் படலத்தில் வெற்றி பெற்றதால் வந்த சந்தோஷத்தில் அப்படி செய்கிறான் இனி பனிமலரின் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயத்தை கொடுத்தது என்றால் சாருமதி ஆஆ... என வாயைப்பிளந்து பார்த்தாள். சூர்யாவா??.... கண் சிமிட்டி முத்தம் தருவது போல செய்தான் அவளால் நம்ப முடியவில்லை.

கல்யாணமே வேண்டாம் என்று கிளபம்பியவனை பாட்டியும் அத்தையும் கொஞ்சி கெஞ்சி சம்மதிக்க வைக்க போராடியது என்ன?... வேண்டா வெறுப்பாக சம்மதம் சொல்லியவன் இப்போது செய்யும் செயல் என்ன?.... என்று அதிர்ந்து இருந்தவளை பின்னியிருந்த சந்திரபிரகாஷ் உசுப்பிய போது தான் நினைவு வந்தவள் "மாமா... மாமா... உங்க தம்பி இல்ல" என்று பேசியவளை "ஏய் அப்புறம் பேசலாம் அங்க மலரை பாரு" என்றதும் குனிந்து பார்த்தவள்

பனிமலர் சூர்யாவையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டு குனிந்து தாலியை சரி செய்வது போல "உன் புருஷனை அப்புறம் தனியா போய் எவ்வளவு நேரம் என்றாலும் சைட் அடிச்சிக்கலாம் மலர் இப்ப இங்க இருக்கறவங்க எல்லார் பார்வையும் உங்க மேல் தான் இருக்கு அதனால் ஐயர் சொன்னதை செய்" என்றாள்.

சாருமதியின் பேச்சில் சூர்யாவின் மீது இருந்த தன் பார்வையை எடுத்து சுற்றி பார்த்தவளின் கண்களில் தன் பெரியப்பா, பெரியம்மா, பாட்டி, தம்பி நால்வரும் கண்கலங்க நின்று இருந்தனர்.

அதை கண்டவளுக்கு அதுவரை மறந்து இருந்தவைகள் மீண்டும் நியாபகம் வந்து அவளின் கண்களும் கலங்கின மனம் சாரி மம்மி சாரி டாடி சாரி பாட்டி சாரி அகிலேஷ் என்று கூச்சலிட்டன.

ஐயர் சென்னதுபோல் அவளின் பின்புறம் கையை எடுத்து வந்தவன் அவளை அணைத்தார்ப்போல நெற்றியில் குங்குமம் வைத்து விட்டவன் தாலியிலும் குங்குமம் வைத்து விட்டான் சூர்யா.

அவனின் தொடுகையை உடல் உணர்ந்தாலும் மனம் தன் குடும்பத்தினரிடம் மன்னிப்பை வேண்டிக்கொண்டு இருந்தது. அக்னியை வலம் வந்து காலில் மெட்டி அணிவித்து என்று அணைத்து சம்பிரதாயங்களையும் முடிந்ததும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

பின் திருமணத்திற்கு வந்த முக்கியமான விஐபிக்கள் வந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர். அடுத்து வாழ்த்து சொல்ல வந்தவனை பார்த்ததும் சூர்யாவின் முகம் இறுகியது.

 
Status
Not open for further replies.
Top