ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 39



இரவு மணி ஒன்பதை தாண்டிய நேரம் கையில் பாலுடன் மாடியேறிக்கொண்டு இருந்தாள் பனிமலர். பந்தயக்குதிரையை விட வேகமாக அவளின் இதயம் துடித்துக்கொண்டு இருந்தது. அவனை பற்றி அவள் கண்டறிந்ததை தமிழ், ஆகாஷ் இருவரிடமும் கூறமுடியாமல் போயிருந்தது.

மாலை தன் குடும்பத்தினருடன் தமிழ் வருவாள் என்று எதிர்பார்க்க அவள் வரவில்லை அவளின் நெருங்கிய உறவில் இறப்பு என்று ஊருக்கு சென்றுவிட்டாள்.

ஆகாஷ் போன் எடுக்கவில்லை என்று ஹரிக்கு போன் செய்த போது ஆகாஷ் வேலை விஷயமாக வெளிநாடு போயிருப்பதாக சொல்லினான். இப்போதைக்கு பனிமலரால் எதையும் செய்ய முடியாமல் போனது.

சூர்யாவின் அறைக்கு வெளியே நின்றவளின் மனதில் பல்வேறு உணர்ச்சி போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தன.

ஒரு பக்கம் அவளின் அவன் மீதான காதல் மறுபுறம் நிலாவின் நிலையறிய முடியாத வேதனை அடுத்து பழிவாங்க இந்த கல்யாணம் என்று அவனின் வாக்குமூலம் எல்லாம் அவளின் மனதில் மாறி மாறி வந்து கொண்டு இருக்க அவளால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் என்ன செய்வானோ என்ற பயத்துடன் அறையினுள் கால் எடுத்து வைத்தாள்.

உள்ளே வந்தவளின் பார்வை படும் இடங்களில் சூர்யா இல்லை. பார்வை அறையை சுற்றி வர ஒற்றை சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான். அவன் லேப்டாப்பில் வேலை செய்வதை பார்த்தால் அவள் வந்தது கூட அறியவில்லை என்பது புரிய இப்போது என்ன செய்வது அவனின் முன் சென்று தன் வருகையை உணர்த்த வேண்டுமா இல்லை கட்டிலில் சென்று படுத்துவிடுவோமா என்ற சிந்தனையிடையே பாட்டி சொன்னவை நியாபகம் வர அவனை நோக்கி கால்கள் நகர்ந்தன.

பாலை வேஸ்ட் பண்ணாமல் குடிக்கும்படி பாட்டி சொல்லியிருக்க அதை கொடுத்துவிட்டு படுக்கலாம் என்று அவன் முன் சென்று நின்றவளை ஏறெடுத்தும் சூர்யா பார்க்கவில்லை.

ஒரு காலை மெல்ல அசைத்து கொலுசொலி எழுப்பினாள் . அதற்கும் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மீண்டும் சற்று வேகமாக காலை தரையில் தட்டி ஒலியை அதிகமாக்க இப்போது தலை நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தவனின் முகத்தில் சற்று கோபம் தெரிந்தது.

"பா...பாட்டி... பால்... கொடுத்து விட்டாங்க..." தடுமாற்றத்துடன் கூறினாள்.

"எனக்கு வேண்டாம்" என்றுவிட்டு மீண்டும் லேப்டாப்பில் கண்ணை பதிக்க

"இல்ல... பாட்டி வேஸ்ட் பண்ண கூடாது என்று சொன்னாங்க" என்றாள்.

"ச்சே... என்று சற்று எரிச்சலுடன் தலையை கோதியவன் உனக்கு எடுத்திட்டு மீதியை வச்சுட்டு போ நான் அப்புறம் குடிக்கிறேன் என்று கூறி மீண்டும் லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான் சூர்யா.

சரி என்று தலையாட்டியவள் பிளாஸ்கில் இருந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு அங்கிருந்து விலகி சென்று கட்டிலில் அமர்ந்து பாலை குடித்துக்கொண்டே தன் கையில் இருந்த போனை பார்க்க ஆரம்பித்தாள்.

பாலை குடித்து முடித்தவள் போனில் மூழ்கி இருக்கும் இடம் மறந்து போனாள் பனிமலர்.

வாட்ஸ்அப்பில் தமிழ் ஆன்லைனில் வந்ததை கண்டதும் அவளுக்கு போன் செய்து விட்டாள். அந்த பக்கம் ஒரே ரிங்கில் தமிழ் எடுத்ததும் "எருமை எத்தனை முறை போன் பண்ணினேன் ஒரு மெசேஜாவது ரிப்ளை கொடுக்க தெரியாதா?..." என்று திட்ட ஆரம்பிக்க அந்த பக்கம் எதையோ கேட்க வந்த தமிழ் பனிமலரின் பேச்சில் கேட்க வந்ததை மறந்து போனாள்.

"நீ தான்டி எருமை நானில்லை அதுவும் மூளையில்லாத எருமை இழவு வீட்டில் போனை எடுத்துட்டு போய் உன்கிட்ட கொஞ்சிட்டு இருக்கமுடியுமா என்று கூட யோசிக்க தெரியாத எருமை" என்றாள் தமிழ்.

"ஏன் அங்க தான் பேசனும் இல்லை வீட்டுக்கு வந்ததும் பேசவேண்டியது தானே" என்றாள் பனிமலர்.

" ஏய் கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வந்து குளிச்சிட்டு போய் அங்க சாப்பிட்டு விட்டு வந்து போனை ஆன் பண்ணதும் உன் போன் வந்ததுடி இன்னும் நான் எதையும் பார்க்கக்கூட இல்லை ஆமாம் எதுக்கு போன் பண்ண" என்று தமிழ் பேசிக்கொண்டு இருக்கும் போதே


"ஆஆ.... என்னை விடு." . என்ற பனிமலரின் குரல் தமிழுக்கு கேட்டது.

" ஏய் மலர்... மலர் என்னாச்சு என்னாச்சுடி மலர்... என்ற குரல் போனில் ஒலிக்க சூர்யா பனிமலரின் கை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று பால்கனியில் விட்டு விட்டு அறைக்குள் சென்றவன் பால்கனி கதவை தாளிட்டு திரைச்சீலையை இழுத்து மூடியிருந்தான்.

தமிழிடம் பேசும் போது எங்கு இருக்கிறோம் என்பதை மறந்திருந்த பனிமலர் எப்போதும் போல் சத்தமாக பேச எதிர்புறம் பேசிய தமிழின் குரலும் சத்தமாக இருக்கவே அமைதியாக இருந்த அறையில் சூர்யாவின் காதில் விழாமல் போகுமா?...

தமிழிடம் பேசக்கூடாது என்று கூறியதை மறந்து பேசியதால் தான் கோபத்தில் இழுத்து சென்று பால்கனியில் விட்டு கதவை மூடி இருக்கிறான் நல்ல வேளை போனை உடைக்கவில்லை என்று ஆசுவாசம் அடைந்தவள் இனி அவன் எதிரில் தமிழ் கிட்ட பேசக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு அப்போது தான் எதிர்புறம் மலர்... மலர்... என்று அழைக்கும் தமிழின் குரல் கேட்டது.

"ஏய் கத்தாதடி காது வலிக்குது" என்றாள் பனிமலர்.

"மலர் என்னாச்சிடி என்று அப்போதும் குரலில் பதட்டத்துடன் தமிழ் கேட்டாள்.

" ஒன்னும் ஆகலைடி டிஸ்டர்ப் இல்லாமல் உன்கிட்ட பேசனும் என்று என் புருஷன் என்னை பால்கனியில் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனார் என்றாள்.

பனிமலரின் பேச்சை கேட்ட தமிழ் "ஏய் என்னடி உலருர உன்னை அந்த ராட்சசன் எதாவது பண்ணானா ஒழுங்கா மறைக்காமல் சொல்லுடி" என்றாள் தமிழ்.

"ஏய் நான் எதுவும் உலருல ரூமில் லேப்டாப்பில் வேலை செய்துட்டு இருக்கார் நான் உன்கிட்ட சத்தமாக பேசியது டிஸ்டர்ப்பா இருக்கவே என்னை பால்கனியில் விட்டுட்டு போனார் டி உனக்கு சந்தேகமாக இருந்தா வீடியோ காலில் வா இந்த பால்கனி எவ்வளவு சூப்பராக இருக்கு தெரியுமா" என்றவள் வாட்ஸ்அப் காலில் இருந்தவள் வீடியோ காலில் மாற்றி இருந்தாள்.

தமிழும் வீடியோ காலில் வர ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு இருப்பதை முதலில் காட்டியவள் பின் அங்கிருந்த பூச்செடிகளையும் கொடிகளையும் காட்டி " எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா இந்த பூக்களோட வாசனையில் இப்படி ஊஞ்சலில் ஆடிட்டு இங்கேயே இருந்திடலாம் போல இருக்குடி" என்று பனிமலர் ரசித்து பேசிக்கொண்டு இருந்த போது எதிர்புறம் இருந்த தமிழ் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

"ஏய் நான் எவ்வளவு சந்தோஷமாக பேசிட்டு இருக்கேன் நீ பதில் சொல்லாமல் மூஞ்சியை உம்முனு வச்சிட்டு இருக்க" என்றாள்.

" நிஜமாக நீ சந்தோஷமாக இருக்கியா மலர்" என்ற தமிழின் குரலில் பனிமலருக்கு அதுவரை இருந்த புன்னகை மறைந்து போனது.

"உன் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது அந்த நாளில் இப்படி ராத்திரியில் என்கிட்ட பேசிட்டு இருக்கியே அதிலே நீ எப்படி இருக்க என்று தெரிந்து பேச்சு மலர்" என்றவளின் குரலில் நண்பியின் வாழ்க்கை குறித்த கவலை அதிகமாக இருந்தது.

"ஏய் தமிழ் என்ன பேசுற எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த கல்யாணம் நடந்தது அப்படி இருக்கும் போது" என்று பேசிக்கொண்டு இருந்தவளின் மனதில் எழில்நிலா வந்ததும் தன் தலையில் அடித்துக்கொண்டவள் "தமிழ் நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் அதை விட்டு வேற என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் நிலா" என்று பேசப்போனவள் சட்டென்று பேச்சியை நிறுத்திவிட்டு சுற்றி பார்த்தவள் பின் தமிழை பார்த்து

"தமிழ் இங்க இருந்து கொண்டு பேசவேண்டாம் என்று நினைக்கிறேன் அதனால் மெசேஜ் பண்ணுறேன்" என்று தமிழின் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தவள் வேகமாக அவள் யோசித்ததை அனைத்தும் டைப் செய்து அனுப்பினாள் பனிமலர்.

அதை படித்த தமிழும் கடற்கரையில் தனக்கும் சந்தேகம் வந்தது பின் திருமண மண்டபத்தில் சந்தேகம் வந்தது ஆகாஷ் இடம் கூறியதையும் அவனின் பதிலையும் கூறியவள் இப்போது என்ன செய்யலாம் என்றாள் தமிழ்.

இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி சந்தேகம் இருப்பதால் சூர்யாவிடம் தவறு இருக்கிறது என்று உறுதி செய்த பனிமலர் வீட்டில் சொல்லிவிடவா என்று தமிழுக்கு மெசேஜ் செய்தாள். தமிழ் அதற்கு மறுப்பு கூறியவள் எழில்நிலா அரவிந்த் பற்றி விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யலாம் அதுவரை எதையும் வெளிக்காட்டாமல் பத்திரமாக இரு என்றவள் நிலாவை பற்றி எப்படி விசாரிப்பது என்று சில யோசனைகளை கூறியவள் பத்திரம் என்று நண்பிக்கு மெசேஜ் அனுப்பி போனை வைத்து இருந்தாள் தமிழ்.

சிறிது நேரம் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே தமிழ் கூறியதை சிந்தித்து அதன்படி செய்யலாம் இப்போது தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்து ஆக்கு கம்பெனிக்கு போயிட்டு அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தலாம் இப்போது அறைக்குள் செல்லலாம் என்று எழுந்து அறைக்கு உள்ளே செல்ல கதவை திறக்க கதவு திறக்கவில்லை அப்போது தான் அவன் கதவை பூட்டியது தெரிந்தது.

கதவை தட்டினாள் பனிமலர் அவன் கதவை திறக்கவில்லை இரண்டு மூன்று முறை தட்டியும் திறக்காமல் போக தூங்கிட்டானா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே இல்லையே வேலை செய்திட்டு இருந்தவன் அதுக்குள்ள தூங்கியிருக்கமாட்டான் தமிழ் உடன் பேசியதற்காக தண்டனை கொடுத்து இருக்கிறான் என்பதை உணர்ந்தாள் பனிமலர் .

சிறிது நேரம் நேரம் யோசித்தவள் "நீ எனக்கு தண்டனை கொடுத்து இருக்கியா?..." என்று வாய்விட்டு கூறியவளின் இதழோரம் புன்னகை வந்தது.

பனிமலரை மாடிக்கு அனுப்பியதும் பாட்டி பத்மாவதி, மாமியார் அம்பிகா, சாருமதி மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

தாத்தாவும் அருளானந்தமும் படுக்க சென்றுவிட சந்திரபிரகாஷ் காருண்யாவை உறங்க வைத்து விட்டு மனைவியை தேடி கீழே வர அங்கு பாட்டி அம்மா மனைவி மும்முரமாக பேசிக்கொண்டு இருக்கவே அவனும் வந்து அவர்களுடன் அமர்ந்து விட்டான். நேரமாவதை கூட உணராமல் பேசிக்கொண்டு இருந்தனர்.

திருமணத்தில் உறவினர்களின் பேச்சு அவர்களின் பொறாமை எண்ணம் என்று பேசிக்கொண்டு இருந்தவர்களின் பேச்சு சூர்யாவிடம் வந்து நின்றது.

"ஏன் பாட்டி உங்க சின்ன பேரன் அவ்வளவு சீக்கிரம் யார் சொல்லுறதையும் கேட்கமாட்டார் ஆனால் நீங்க பனிமலரை கல்யாணம் பண்ணச்சொன்னதும் பண்ணிகிட்டாரே இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வரலையா?..." என்றாள் சாருமதி.

"அடியேய் இதில் சந்தேகப்பட என்னடி இருக்கு கல்யாணம் நின்னா எல்லாருக்கும் பிரச்சனை என்று எடுத்துச்சொன்னதால் புரிந்துகிட்டு நான் சொன்ன பெண்ணை கல்யாணம் பண்ணிட்டான்" என்று பாட்டி பேசிக்கொண்டு இருந்த நேரம் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

திடீரென கேட்ட ஒலியில் சற்று திடுக்கிட்டனர் நால்வரும் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற எண்ணம் நால்வருக்கும் எழுந்தது. யாராவது வெளியில் இருந்து வந்திருந்தால் செக்யூரிட்டி கால் செய்து கேட்டு விட்டு தானே உள்ளே விடுவார் என்று எண்ணிக்கொண்டே எழுந்து சென்று கதவை சிறிது மட்டும் திறந்து பார்த்த சாருமதி திகைத்து நின்றுவிட்டாள்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 40



"நீ.. நீ..." என்று திரும்பி மாடியை பார்த்து விட்டு மீண்டும் வெளியில் பார்த்த சாருமதியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரியவும் அதுவரை யாராக இருக்கும் என்று பார்வை கதவுப்பக்கம் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு சாருமதியின் அதிர்ந்த தோற்றத்தை கண்டு மூவரும் எழுந்து வந்து சாருமதியின் பின் நின்று பார்த்தவளுக்கும் அதிர்ச்சியே. சில வினாடிகளில் பாட்டி தான் அதிர்ச்சி நீங்காமலே "நீ எப்படி இங்க" என்று கேட்கவும்

"யாரும் பயப்பட வேண்டாம் நான் பேய் எல்லாம் இல்லை" என்று சொல்லி கதவை நன்றாக திறந்து கொண்டு உள்ளே வந்தாள் பனிமலர். அதுவும் மாடிக்கு போனபோது பட்டு புடவை உடுத்தி தலையை பின்னி நிறைய மல்லிகை பூ வைத்து கையில் பாலை எடுத்துக்கொண்டு தயக்கத்துடன் மாடியேறியவள் இப்போது பேண்ட் டீசர்ட் அணிந்து முடியை விரித்து விட்டுக்கொண்டு வீட்டின் வெளியில் இருந்து வந்து நின்றாள் அதிர்ச்சியும் பயமும் வரத்தானே செய்யும்.

"மலர் என்ன ஆச்சு நீ மாடிக்கு போனவள் எப்படி இப்ப வெளியில் இருந்து வர" என்றார் பாட்டி அதிர்ச்சியில் இருந்து மீளாமலே..

"பாட்டி அது ரொம்ப சிம்பிள் உங்க எல்லோருக்கும் நாளைக்கு எப்படி என்று டெமோவே காட்டுறேன் இப்ப நான் மாடிக்கு போறேன்" என்று சொல்லி நடந்த பனிமலரின் கையை பிடித்து இருந்தாள் சாருமதி.

" அப்ப மாலினி ஆன்ட்டி சொன்னது எல்லாம் உண்மையா?..." என்றாள் சாருமதி.

" ஆன்ட்டி என்ன சொன்னாங்க அக்கா?... " என்றாள் பனிமலர்.

" நீ சின்ன வயதிலேயே மரத்தில் ஏறுவது மாடியில் இருந்து பைப் வழியாக இறங்குவது எல்லாம் செய்வாய் என்று சொன்னாங்க அப்ப நான் நம்பவில்லை ஆனால் இப்ப நம்புறேன்" என்றவள் " அதனால் தான் புடவை கட்டும் போது பேண்ட் மேலே புடவை கட்டுறீயே என்று கேட்டதுக்கு இது தான் எனக்கு கம்பர்ட்டபிளா இருக்கும் என்று சொன்னாயா" என்றாள் சாருமதி.

பனிமலரிடம் சாருமதி அப்படி கேட்டதும் பனிமலரின் பார்வை தயக்கத்துடன் சந்திரபிரகாஷ் இருக்கும் பக்கம் பார்க்க அவன் ஏற்கனவே சோபாவில் சென்று அமர்ந்து விட்டு இருந்தான்.

இவர்கள் பேசுவது அவனுக்கு கேட்காது என்று அறிந்து "அக்கா நான் இதுக்காக அப்படி சொல்லலை திரும்ப டிரஸ் சேஞ்ச் பண்ணவேண்டியது இருக்காது என்று தான் அப்படி சொன்னேன்" என்றாள் பனிமலர்.

"சாருமதி இப்ப பேசுற நேரமா இது அதை பற்றி நாளைக்கு விசாரிக்கலாம் இப்ப நீ வா" என்று பனிமலரின் கையை பிடித்துக்கொண்டு பாட்டி மாடியேற அவர் பின் மற்றவர்கள் சென்றனர்.

சூர்யாவின் அறையின் முன் சென்றதும் சாருமதி பனிமலரை சற்று மறைத்து நிற்க வைக்க பாட்டி கேள்வியாக சாருமதியை பார்க்க

" பாட்டி உங்க பேரன் கிட்ட மலரை பார்க்கனும் என்று கேளுங்க என்ன சொல்லுறார் என்று பார்க்கலாம்" என்றாள் சாருமதி.

பாட்டி கதவை தட்ட சிறிது நேரத்தில் சூர்யா வந்து கதவை திறக்க பாட்டி அன்னை சாருமதி சற்று தூரத்தில் சந்திரபிரகாஷ் நின்று இருப்பதை கண்டவன் ஒன்று புரியாமல் "என்ன பாட்டி, அம்மா இந்த நேரத்தில் வந்து இருக்கிங்க எதாவது பிரச்சனையா?..." என்றான்.

"ஒன்னும் இல்லை சூர்யா மலர்கிட்ட முக்கியமான ஒன்று சொல்ல மறந்திட்டேன் அதை சொல்ல வந்தேன்" என்று பாட்டி சொன்ன போது தான் பனிமலரின் நியாபகம் வந்தது சூர்யாவிற்கு தன் வேலைக்கு இடையூறாக பனிமலரின் பேச்சி இருக்கவே கோபத்தில் பால்கனியில் விட்டு கதவை அடைத்து விட்டு வீடியோ காலில் சில வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாடல் பேசி முடித்த போது தான் கதவு தட்டும் ஓசையில் கதவை திறந்து இருந்தான்.

ஷிட் என்று மனதில் கூறிக்கொண்டே தலையை கோதியவன் முகத்தில் சற்று பதட்டம் ஏற்பட்டது. அவளை பால்கனியில் விட்டு கதவை மூடியது பாட்டி அம்மாவுக்கு தெரிந்தால் என்ன நினைப்பார்கள். கூடவே இரண்டு பேரும் வால்பிடிச்சுட்டு வேற வந்து இருக்குங்க என்று சந்திரபிரகாஷ் சாருமதியை திட்டியவன்.

இந்த பாட்டி ஏன் இப்படி செய்யுறாங்க அவங்களுக்கு இன்னைக்கு என்ன நாள் என்று தெரியும். தெரிந்தும் இப்படி வந்து டிஸ்டர்ப் பண்ணுறாங்களே ஏன் என்று சிந்தித்தவனுக்கு தெரியவில்லை தான் செய்த செயல் தான் அவர்களை இப்படி வரவைத்து இருக்கு என்பதை.

"அவள் ரெஸ்ட் ரூம் போயிருக்கா பாட்டி நீங்க என்ன சொல்லனும் என்று என்கிட்ட சொல்லிட்டு போங்க நான் அவகிட்ட சொல்லிடுறேன்" என்றான் சூர்யா.

அவனின் பதிலில் சாருமதிக்கு சிரிப்பு வர திரும்பி நின்று சிரிப்பை அடுக்கினாள்.

"அது உன்கிட்ட சொல்ல முடியாது நானே மலர்கிட்ட சொல்லிக்கிறேன் நீ நகரு" என்று சூர்யா எதிர்பார்க்காத நேரம் சூர்யாவை நகர்த்தி உள்ளே வந்திருந்தார் பாட்டி.

" பாட்டி என்ன இது இந்த நேரத்தில் வந்து அப்படி என்ன பேசனும் நாளைக்கு காலையில் அவள் கீழே வரும் போது பேசவேண்டியது தானே" என்றவன் பாட்டியின் பார்வை அறை முழுவதும் அலசுவதை கண்டு "அவள் தான் பாத்ரூமில் இருக்கா என்று சொன்னேனே நீங்க கிளம்புங்க" என்று பல்லைக்கடித்துக்கொண்டு கூறினான்.

" இவ்வளவு தூரம் வந்திட்டேன் மலர்கிட்ட பேசிட்டு போயிடுறேன்" என்று பாட்டி குளியல் அறை நோக்கி சொல்ல இதுவரை அடக்கி வைத்த பொறுமை போய் விட தாயை பார்த்து

" அவங்களுக்கு தான் வயசாகிடுச்சு எல்லாம் மறந்து போச்சு உங்களுக்கு தெரியாதா இப்படி ராத்திரியில் வரக்கூடாது என்று தடுத்து இருக்கலாம் இல்லையா?.. . நீங்களும் கூட சேர்ந்து வந்து இருக்கிங்க பத்தாதற்கு கூட இரண்டு பேர்" என்று கோபமாக பேசியவனின் பார்வை சாருமதியை துளைத்தது.

" ஆத்தாடி நான் இல்லை என்று சற்று தள்ளி இருந்த சந்திரபிரகாஷ் அருகில் சென்று நின்றவள் "தப்பு செய்திட்டு எப்படி எல்லாம் பேசுறார் உங்க தம்பி என்ன என்று கேட்காமல் நின்னுட்டு இருக்கிங்க மாமா" என்றாள் சாருமதி.

" ஏன்டி அவங்களையாவது மரியாதையாக திட்டிட்டு இருக்கான் நான் போனால் அவ்வளவு தான் வாயைமூடிட்டு நடக்கிறதை பாரு" என்றான் சந்திரபிரகாஷ்.

" என்னம்மா நான் கேட்டுட்டு இருக்கேன் நீங்க கம்முனு இருக்கிங்க பாட்டியை கூட்டிட்டு போங்க எனக்கு தூக்கம் வருது" என்றான் சூர்யா.

" அதில்லை சூர்யா மலர்" என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே

" சூர்யா மலரை காணோம் எங்க அவள்" என்று கேட்டுக்கொண்டே சூர்யாவின் அருகில் வந்தார் பாட்டி.

இவர்கள் பனிமலர் பார்க்காமல் போகமாட்டார்கள் என்று தோன்றவே வேகமாக பால்கனி கதவை திறந்து பனிமலர் இருக்காளா என்று கூட பார்க்காமல் "இங்க இருக்கா போய் விடியும் வரை பேசிட்டு இருங்க" என்று கூறிக் கொண்டே சென்று கட்டிலில் அமர்ந்தவனின் மனதில் எரிச்சலோடு ஏன் பாட்டி இப்படி செய்யுறாங்க என்ற சிந்தனையும் எழுந்தது.

பாட்டி எட்டி பால்கனியில் பார்த்து விட்டு "சூர்யா இங்கேயும் மலர் இல்லையே?... " என்றதும்

" வாட் இல்லையா?... "என்றவன் வேகமாக பால்கனிக்கு சென்றவன் பனிமலரை தேட சூர்யா கண்களில் பனிமலர் படவில்லை. "எங்க போனாள் இங்கதான் விட்டுட்டு போனோன்" என்றவனின் மனதில் படபடப்பு ஏற்பட்டது.

"என்ன சூர்யா மலர் எங்கேயும் காணலை எங்க போனாள்?..." நீ எதாவது சண்டை போட்டியா?..." என்றவரின் குரலில் கோபம் இருந்தது.

எங்கே போனாள் இவள் என்ற தவிப்புடன் சுற்றி பார்வை பதித்து இருந்தவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனாக இருந்தாலும் சில நேரங்களில் இப்படி சிந்திக்க முடியாமல் போவதுண்டு. பாட்டியின் கேள்வி வேறு அவனை மேலும் சிந்திக்க விடாமல் செய்ய

சூர்யா நான் கேட்கிறதற்கு பதில் சொல்லு பனிமலர் கிட்ட சண்டை போட்டியா?... என்று மீண்டும் பாட்டி கேட்டார்.

இதற்கு மேல் பாட்டியிடம் மறைக்க முடியாது என்று "வெளிநாட்டுகாரர்களுடன் பிஸ்னஸ் மீட்டிங் ஒன்றிற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது அவள் பிரண்டு கிட்ட சத்தமாக போனில் பேசிட்டு இருந்தா அது எனக்கு டிஸ்டர்ப்பாக இருந்திச்சு அதனால் அவளை பால்கனியில் விட்டேன்" என்றான் சூர்யா.

"கதவு வேற தாழ் போட்டு இருக்கே?..." என்றார் பாட்டி.

" மீட்டிங்கில் இருக்கும் போது உள்ளே வந்திடப்போறா என்று தாழ் போட்டேன். மீட்டிங் முடிந்ததும் கதவை திறந்திட நினைச்சேன். மீட்டிங் இப்ப தான் முடிந்தது அந்த நேரம் சரியா நீங்க வந்து கதவை தட்டினிங்க உங்களுக்கு கதவை திறந்தேன் இவ்வளவு தான் நடந்தது. அதில் உங்களுக்கு சந்தேகம் என்றால் என் லேப்டாப்பில் மீட்டிங் ரெகார்ட் ஆகி இருக்கு செக் பண்ணிக்கங்க நான் போய் அவள் எங்க இருக்கா என்று பார்க்க போறேன்" என்று நகரப்போனவனை

பாட்டி கைபிடித்து நிறுத்தி "எங்கேயும் போகவேண்டாம்" என்றார்.

எங்கேயும் போகவேண்டாம் என்ற பாட்டியின் பதிலில் சூர்யாவிற்கு எதுவே புரிவது போல் இருந்தது.
ஷிட் அப்ப எல்லாம் தெரிந்து தான் வந்து இருக்காங்க என்று புரிந்து போனது. இதுவரை பனிமலருக்கு என்ன ஆகியதோ என்ற படபடப்பு போய் இப்போது கோபம் அதிகமாக தலையை கோதி தன்னை சமன் செய்ய முயன்றான்.

"மலர்" என்று பாட்டி குரல் கொடுக்கவும் பனிமலர் மெல்ல அறையினுள் வந்தாள். சூர்யாவின் பார்வை அவளை முழுவதும் ஆராய்ந்து விட்டு அவள் முகத்தில் நிலைத்தது.

சூர்யாவின் கோபப்பார்வையை உணர்ந்த பனிமலர் அவன் பக்கம் பார்க்காமல் பாட்டியை பார்த்தாள்.

"சூர்யா சொன்னது எல்லாம் உண்மையா?..." என்றார்.

ஆமாம் என்று தலையாட்டியவள் "ஆனால் ரொம்ப நேரம் ஆனதால் எனக்கு பயமாக இருந்தது பாட்டி கதவை தட்டினேன் ஆனால் இவர் திறக்கலையா ஒரு வேளை தூங்கிட்டாரே என்று நினைத்து தான் பைப் வழியா கீழே வந்தேன்" என்றாள்.

யாரு நீ பயந்தியா உன்னை பற்றி தெரிந்த சின்ன குழந்தை கூட நம்பாது. இவங்களுக்கு உன்னை பற்றி தெரியாது இவங்க நம்புவாங்க என்று நினைத்தது வேற யாரும் இல்லைங்க சூர்யா தான். அவனுக்கு தான் ஆகாஷின் பாப்பு டால் புராணம் எல்லாம் சின்ன வயதில் இருந்து கேட்டு இருக்கானே அது சற்று நேரத்திற்கு முன் சூர்யாவிற்கு நினைவு வராமல் போனதால் தான் பாட்டி முன் குற்றவாளியாக நின்று இருக்கிறான்.

பாட்டிக்கு மட்டும் இல்லாமல் அங்கிருந்த அனைவருக்கு மாடியில் இருந்து பைப் வழியா இறங்க பயம் இல்லை பால்கனியில் இருப்பதற்கு பயமா என்ற எண்ணம் வந்ததும் இல்லாமல் கூடவே சிரிப்பும் வந்தது.

பாட்டி சிரிப்பை அடக்கிக் கொண்டு "சூர்யா நீ முதலிலேயே அவகிட்ட மீட்டிங் பற்றி சொல்லியிருந்தா இவ்வளவு நடந்து இருக்காது அதுவும் இல்லாமல் கதவை தாழ்ப்பாள் போட்டது தப்பு இனி இப்படி பண்ணாதே" என்றவர் பனிமலரை பார்த்து "நீ கையில் போன் வச்சு இருக்க, கதவை தட்டி திறக்கவில்லை என்றால் சூர்யாவிற்கு போன் பண்ணி இருக்கனும் இல்லை எங்க யாருக்காவது போன் செய்து இருக்கலாம் இல்லையா?.... " என்றார்.

" அப்படி தான் நினைச்சேன் பாட்டி ஆனால் என்கிட்ட உங்க யார் நம்பரும் இல்லையே" என்றாள் பனிமலர் பாவமாக

பாட்டிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை " இதற்கு மேல் இப்படி பண்ணாதே மலர் முதலில் அவன் போன் நம்பர் எங்க நம்பர் எல்லாம் வாங்கி வச்சுக்க" என்று கூறி அங்கிருந்து வெளியே சென்றார்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 41



பனிமலரை முறைத்து விட்டு கதவை தாழ்யிட சென்ற போது சந்திரபிரகாஷ் சாருமதி நின்று சிரித்து கொண்டு இருப்பதை கண்ட சூர்யா பல்லைகடித்துக்கொண்டே "இங்க என்ன காமெடி ஷோவா நடக்குது போங்க" என்றான்.

" அதைவிட இந்த ஷோ சூர்ப்பரா இருந்ததுடா சூர்யா. அதுவும் மிஸ்டர் பெர்பெக்ட் இன்னைக்கு பாட்டிக்கு பதில் சொல்ல முடியாமல் நின்னது இன்னும் சூப்பரா இருந்ததுடா. ரொம்ப வருஷத்திற்கு அப்புறம் என் தம்பியை பார்த்து இருக்கேன். அதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். வெளியில் நீ முகமுடி போட்டுட்டு இருந்தா ஓகே ஆனால் அதை வீட்டிலும் போட்டுட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ நீயாக இருடா கொஞ்ச நேரத்திற்கு முன் உன் முகத்தில் அதிர்ச்சி பதட்டம் பரிதவிப்பு என்று வித விதமான உணர்ச்சிகளை பார்த்தேன்."

" இவ்வளவு நாள் அதை வீட்டு ஆட்களிடமே காட்டாமல் முகமுடி போட்டு மறைத்து இருந்த இனி அப்படி இருக்காத உன்னை நம்பி ஒருத்தி வந்து இருக்கா அவளை சந்தோஷமாக வச்சுக்க அதை கடமையா செய்யாத உண்மையான அன்போட செய். மலர் போல ஒரு பெண் கிடைக்க கொடுத்து வச்சிருக்க அதை மிஸ் பண்ணாதே குட்நைட்" என்று கூறிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு தங்கள் அறை நோக்கி சென்றான் சந்திரபிரகாஷ்.

கதவை தாளிட்டு விட்டு திரும்பியவன் பார்வை பனிமலரை தேடியது. குளியல் அறை கதவு உள்பக்கமாக தாளிட்டு இருப்பதை அறிந்தவன் நேராக பால்கனி சென்று நிலவை பார்த்துக்கொண்டு நின்றவனின் மனதில் சந்திரபிரகாஷ் கூறியதே ஓடியது.

குளியல் அறையில் இருந்து வெளியே வந்த பனிமலர் சூர்யா கோபமாக எதாவது பேசுவான் என்று நினைத்து வந்தவளுக்கு அவன் அறையில் இல்லாமல் பால்கனியில் இருப்பது தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவன் வருவதற்குள் தூங்கிடனும் என்று வேகமாக கட்டிலில் படுத்தவளுக்கு தன் பயத்தை போக்க எப்போதும் தமிழ் தன் அருகில் படுப்பது நியாபகம் வந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தவள் ஓரிடத்தில் பொம்மைகள் விளையாட்டு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டவள் அது காருண்யா உடையது என்பது தெரிந்தது.

அனைத்து பொம்மைகளையும் எடுத்து வந்து தன் பக்கத்தில் வைத்தவள் அதன் மீது கையையும் காலையும் போட்டுக்கொண்டு கண்மூடினாள் பனிமலர்.

நீண்ட நேரம் கழித்து வந்த சூர்யாவிற்கு அவள் படுத்து இருக்கும் கோலம் கண்டு சிரிப்பு தான் வந்தது. நான்கு பேர் தாராளமாக படுக்கும் ஒரு பக்கத்தில் பனிமலர் பொம்மைகளை அணைத்துக்கொண்டு படுத்து இருக்க அடுத்த பக்கத்தில் படுத்துக்கொண்டான் சூர்யா.

"சூரியனைக்கண்டதும் பனி தான் உருகும் என்பார்கள் ஆனால் இந்த சூரியன் இந்த பனியை பார்த்ததில் இருந்து உருகிட்டு இருக்கேன்டி."

"இவ்வளவு நாள் தூரத்தில் இருந்து உன்னை பார்த்து உருக வைத்தாய் ஆனால் இன்று இப்படி பக்கத்தில் வந்த பிறகு என்னை உருகவச்சிட்டு இருக்கியேடி"

"உனக்குள் உருகும் நாள் எப்போதடி இந்த சூரியனுக்கு கொடுப்பாய் என் பனியே?...."

வேகமாக எழுந்தமர்ந்தாள் பனிமலர். சில வினாடிகள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நியாபகம் வர சட்டென்று கட்டிலை பார்த்தாள். அந்த பக்கம் கட்டில் ஓரமாக சூர்யா நேராக படுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை கண்டாள்.

அப்ப இவ்வளவு நேரம் கண்டது கனவா என்று தன் தலையில் தட்டிக்கொண்டவள். முன்னாடி எல்லாம் இவனை நினைச்சுட்டே படுத்து தூங்கினாள் கனவில் வருவான். இன்னைக்கு இவனை நினைக்காமல் படுத்தேன் அப்படியும் கனவு வந்து இருக்கு அந்த அளவுக்கு மனதுக்குள்ள உட்கார்ந்து என்னை ஆட்டிப்படைக்கிறான் இந்த சூரியன்.

கனவில் வந்த மாதிரி இவனை எப்ப லவ் டயலாக் பேச வச்சு என் பின்னால் சுற்ற வச்சு நாலு பிள்ளைகளை பெற்று எப்ப விட்ட சவாலில் ஜெயிக்கப்போறேனோ என்று மனதில் பேசுவதாக நினைத்து தூக்க கலக்கத்தில் வாய்விட்டு புலம்பியவள் மீண்டும் படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

மறுநாள் நன்றாக விடிந்த பிறகே பனிமலருக்கு விழிப்பு லேசாக வந்தது தன் முகத்தை தலையணையில் புரட்ட அது மெத்தென்று இல்லாமல் பாறையில் முகத்தை புரட்டுவது போல இருக்க மெல்ல மெல்ல கண்விழித்தவளின் கண்ணில் பட்டது கேசம் கலைந்து முன்நெற்றியில் படர்ந்து நிர்மலமான முகத்துடன் உறங்கிக்கொண்டு இருந்த அவளின் சூரியனைத்தான்.

சூரியன் என்ற முனுமுனுப்புடன் அவனின் முடியை கோதிவிட சென்ற கைகள் சட்டென அப்படியே நின்றது. வேகமாக தன்னை ஆராய்ந்தாள் தன் தலை சூர்யாவின் நீட்டியிருந்த இடது கையில் இருக்க தன் வலது கை சூர்யாவின் தலைக்கு மேல் இருக்க இடது கை அவனின் வயிற்றை அணைத்து இருக்க தன் இடது கால் சூர்யாவின் இடது தொடையில் இருக்கவும் பதறி விலகியவள் கட்டிலில் இருந்து தட்டுத்தடுமாறி எழுந்து குளியலறை சென்று கதவை அடைத்து அதன் மீதே சாய்ந்து நின்றவளின் இதயம் தாறுமாறாக துடித்தது.

நான் பொம்மைகளைத்தானே அணைச்சிட்டு படுத்தேன் அப்புறம் எப்படி அவன் பக்கத்தில் போய் படுத்து அவன் மீதே என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் நினைக்கமுடியாமல் உடலில் புதுவிதமான உணர்வுகள் தோன்ற கண்மூடி நின்றவளுக்கு அவன் மட்டும் அந்த கோலத்தில் நான் இருந்ததை பார்த்து இருந்தால் என்ன நினைத்து இருப்பான் நல்ல வேளை அவன் நல்லா தூங்கிட்டு இருக்கான் என்று ஆசுவாசம் அடைந்தவளுக்கு தெரியவில்லை அவன் உடல் குலுங்க தலையணையில் முகம் புதைத்து சிரித்துக்கொண்டு இருப்பது.

அவள் அவனை நெருங்கி அணைத்துக்கொண்டு படுத்திருப்பதற்கும் காரணம் அவன் தான் என்று தெரிந்தால் என்ன செய்திருப்பாளோ பனிமலர்.

இரவு தூக்கம் வராமல் புரண்டு படுத்தவன் ஆய்ந்த உறக்கத்தில் இருந்த பனிமலரை பார்த்தவன் அவளின் அருகில் நெருங்கி அவள் அணைத்திருந்த பொம்மையை மெல்ல எடுத்து விட்டு மீண்டும் தன் இடத்தில் படுத்துக்கொண்டான் சூர்யா.

சிறிது நேரத்தில் தூக்கத்திலேயே பனிமலரின் கைகள் பொம்மையை தேடி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சூர்யாவின் அருகில் வந்து அவனை அணைத்துக்கொண்டு உறங்கி இருந்தாள்.

அவள் அணைத்ததும் சூர்யாவின் கொதித்துக்கொண்டிருந்த உடலும் உள்ளமும் குளிர்ந்து அவனையும் உறங்க வைத்தது. இப்போதும் அவளின் அசைவில் துயில் கலைந்தவன் கண் திறவாமல் அவள் என்ன செய்கிறாள் பார்க்கவே உறங்குவது போல இருந்தான். அவள் கட்டிலில் இருந்து இறங்கி ஓடியது அவனுக்கு சிரிப்பு வர சத்தம் இல்லாமல் சிரித்து கொண்டு இருந்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்திய பனிமலர் குளித்து முடித்து வெளியே வந்த போதும் சூர்யா நன்றாக உறங்கியதை கண்டவள் நிம்மதி பெருமூச்சு விட்டு வேகமாக ரெடியாகி கீழே சென்றாள்.

அவள் சென்றதும் கண் திறந்தவன் சிரித்துக்கொண்டே குளியல் அறை புகுந்தான். அவன் கீழே வந்த போது டைனிங் டேபிளில் அமர்ந்து அனைவரும் உண்டு கொண்டு இருக்க சாருமதி, பனிமலர் பறிமாறிக்கொண்டு இருந்தனர்.

சூர்யா சென்று அமர்ந்தபோது "மலர் சூர்யாவிற்கு பரிமாறிட்டு நீயும் உட்கார்ந்து சாப்பிடு" என்று பாட்டி கூறவும் பனிமலர் சூர்யாவின் அருகில் வந்து பரிமாறினாள்.

"சூர்யா பனிமலரை அழைச்சுட்டு எங்காவது போய் வா" என்று பாட்டி கூறவும்

"இல்லை பாட்டி எனக்கு வேலை நிறைய இருக்கு எங்கேயும் போக முடியாது" என்றான்.

அதுவரை அமைதியாக இருந்த தாத்தா "வேலை எப்பவும் இருந்திட்டு தான் இருக்கும் அதை கொஞ்ச நாள் ஒதுக்கி வைத்து விட்டு போ இல்லை நாங்க மூன்று பேர் இருக்கோம் எங்ககிட்ட சொல்லிட்டு போ நாங்க பார்க்கிறோம்" என்றார்.

" இல்லை தாத்தா இது அந்த புதுசா எடுத்து இருக்க லண்டன் ஆர்டர் வேலை இது அந்த டீடைல்ஸ் நான் விளக்கி சொல்லுற நேரம் நானே முடித்து விடுவேன். இன்னும் பத்து நாளில் முடிந்து விடும் அதற்கு பிறகு நான் அவளை வெளியே கூட்டிட்டு போறேன்" என்றவன் உண்டு முடித்து கைகழுவ எழுந்து சென்றான்.

" பாட்டி எனக்கும் ப்ராஜெக்ட் வேலையிருக்கு நானும் ஆக்கு கம்பெனிக்கு போகனும்" என்றாள் பனிமலர்.

" ஆக்கு கம்பெனியா அது என்ன கம்பெனி" என்று அம்பிகா கேட்டதும் அனைவருக்கும் புன்னகை வர ஒருவனுக்கு மட்டும் காதில் புகை வந்தது.

"அது... அத்தை ஆகாஷை நான் சின்ன வயதில் இருந்தே ஆக்கு என்று தான் கூப்பிடுவேன்" என்றாள் பனிமலர்.

"ஓஓஹோ ஆகாஷ் கம்பெனிக்கு தானே போயிட்டு வா" என்று அம்பிகா சொன்னதும் சூர்யா பேசும் முன்

"என்ன பேசுற அம்பிகா கல்யாணம் முடிந்து இரண்டு நாள் தான் ஆகியிருக்கு அதுக்குள்ள புதுப்பெண் வெளியே தனியாக அனுப்பக்கூடாது என்று தெரியாதா?... " என்று பாட்டி கேட்கவும்.

" அச்சச்சே... ஆமாம் இல்ல, அத்தை எனக்கு மலர் ரொம்ப நாளா நம்ப கூட இருக்குற மாதிரி தான் இருக்கு அதான் அப்படி சொல்லிட்டேன்" என்றார் அம்பிகா.

" ஒரு வாரம் வீட்டில் இரு மலர் அதன் பிறகு நீ பேகலாம்" என்று பாட்டி கூறியதும்

" சரி" என்று கூறினாள் பனிமலர்.

சூர்யா எதுவும் கூறாமல் சோபாவில் சென்று யாருக்கோ காத்திருப்பது போல் அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் மாதவன் சில பைல்களுடன் வர "பாட்டி" என்று அழைத்தான். சிவபிரகாஷம் அருளானந்தம் இருவரும் சூர்யாவின் எதிர் சோபாவில் பேசிக்கொண்டு இருந்தனர். சூர்யா பாட்டியை அழைத்த குரலில் பேசுவதை விட்டு சூர்யாவை பார்த்தனர்.

"என்ன சூர்யா" என்று வந்த பாட்டி மாதவனை கண்டதும் "மாதவா வாப்பா" என்று வரவேற்று விட்டு சூர்யா அருகில் அமர்ந்தார்.

மாதவனும் பாட்டிக்கும் அங்கிருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு சூர்யாவிடம் பைல்களை பற்றி விளக்கிக்கொண்டு இருந்தான்.

"பாட்டி என்னுடைய சில சேர்ஸ் அவள் பெயரில் மாற்றியிருக்கேன் இதில் அவகிட்ட சைன் வாங்கிக்கொடுங்க" என்று பைல்களை கொடுத்தான்.

"என்ன சூர்யா நீ அவளையே கூப்பிட்டு கையெழுத்து வாங்கியிருக்கலாமே எதுக்கு என்கிட்ட கொடுக்கிறாய் " என்றார் பாட்டி.

"அவன் எது செய்தாலும் உன்கிட்ட சொல்லிட்டும் கொடுத்து வாங்கிட்டும் தானே செய்யுறான் அது தெரிந்தும் எதுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்க" என்றார் தாத்தா சிவபிரகாஷம்.

" உன் தாத்தாவுக்கு பொறாமையை பாருடா" என்று சூர்யாவிடம் பாட்டி சொல்ல

"அவரும் உங்ககிட்ட சொல்லியும் உங்க கையால் ஆரம்பித்தும் தானே இந்த அளவுக்கு தொழிலில் வளர்ந்தார் பாட்டி. அதையே நான் செய்தால் அவருக்கு பொறாமை வருது" என்றான் சூர்யா.

அனைவர் முகத்திலும் புன்னகை வந்தது.

" மலர் இங்க வா" என்று பாட்டி அழைக்க அதுவரை சமையல் அறையில் இருந்த பனிமலர், சாருமதி இருவரும் அனைவரும் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்தனர்.

" இங்க வந்து உட்கார் மலர்" என்று சூர்யாவிற்கும் பாட்டிக்கும் நடுவில் இருக்கும் இடத்தை காட்டினார்.

"பாட்டி" என்றாள் தயக்கத்துடன்

"சூர்யா பக்கத்தில் உட்காருமா மலர்" என்று தாத்தாவும் கூறவும் சூர்யாவை ஓரப்பார்வையில் பார்க்க அவன் இதற்கும் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்.

பாட்டியை ஒட்டினார் போல் பனிமலர் அமர்ந்ததும் பைல்களை அவளின் கையில் கொடுத்த பாட்டி" இதில் கையெழுத்து போட்டு சூர்யாகிட்ட கொடுடா" என்றார்.

பனிமலர் எதுவும் கேட்காமல் பாட்டியை பார்க்க

"இது நம்ப கம்பெனி ஷேர்ஸ் சிலது உன் பேரில் மாற்றத்தான்" என்றார்.

"பாட்டி எனக்கு எதுக்கு?..." என்றாள்.

"எப்ப சூர்யா உன் கழுத்தில் தாலி கட்டினானோ அப்பவே நீயும் இந்த வீட்டில் ஒருத்தி. இந்த வீட்டில் இருக்கிறவங்க எல்லாருக்கும் நம்ப தொழிலில் பங்கு இருக்கு அது மாதிரி உன் பேரிலும் இருக்கனும் இல்லையா அதுக்கு தான் அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் கடவுள் கிட்ட வேண்டிட்டு கையெழுத்து போட்டு கொடு மலர்" என்றார் பாட்டி.

வேறெதுவும் பேசாமல் பனிமலரும் கையெழுத்து எங்கு போடவேண்டும் என்று மாதவன் சொல்லச்சொல்ல போட்டுக்கொண்டு இருந்தாள். நிறைய பைல்களில் கையெழுத்து போட்டு முடித்தவள் பைல்களை பாட்டியிடம் கொடுக்க அவரோ " சூர்யாவிடம் கொடு" என்றார்.

சூர்யாவிடம் பைல்களை நீட்டியவளின் பார்வை அவன் முகத்தில் படிய அவன் முகம் எதையும் காட்டவில்லை என்ற போதும் கண்கள் அவளிடம் எதையோ சொல்லியது ஆனால் அது பனிமலருக்கு புரியவில்லை.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 42



சூர்யா பைலை வாங்கி மாதவனிடம் கொடுத்து விட்டு வரேன் என்று பொதுவாக சொல்லி விட்டு செல்ல அருளானந்தமும் அவனுடன் கிளம்பினார்.

பனிமலர் எழுந்து அமைதியாக சமையல் அறை நோக்கி செல்ல சாருமதியும் உடன் சென்று கொண்டே பனிமலரின் கையை பிடித்து "வாழ்த்துக்கள்" என்று சாருமதி கூறவும் எதுவும் புரியாமல் பனிமலர் பார்த்தாள்.

"ஏய் மலர் என்ன எதற்கு வாழ்த்து என்று புரியலையா?..." என்றாள் சாருமதி புன்னகையுடன்

இல்லை என்று தலையாட்டினாள் பனிமலர்.

அதற்குள் இருவரும் சமையல் அறை வந்திருக்க அங்கிருந்த பிரிஜ் திறந்து சாக்லேட் ஒன்றை எடுத்து பிரித்து பனிமலருக்கு ஊட்டிய சாருமதி " இன்னையில் இருந்து பிரகாஷ் குரூப் கம்பெனி எல்லாவற்றிற்கும் நீயும் முதலாளி தான்" என்றாள்.

சாருமதியின் பேச்சில் அதிர்ந்து நின்றாள் பனிமலர். நான் பிரகாஷ் குரூப் கம்பெனியின் முதலாளியா?... என்று நினைத்தவளுக்கு சூர்யாவின் வார்த்தைகள் நினைவு வந்தன. என் கம்பெனி வாசற்படியில் கூட கால் வைக்க அனுமதிக்க மாட்டேன் என்றவனின் கம்பெனியில் நானும் ஒரு முதலாளியா?... என்ற இகழ்ச்சியான புன்னகை தோன்றியது பனிமலருக்கு. எல்லாம் அவன் மனைவி என்ற காரணத்தினால் வந்த உரிமையே தவிர அவனின் முழுச்சம்மதத்துடன் வந்ததாக இருக்காது என்று நினைத்துக்கொண்டு இருந்தவளை உலுக்கினாள் சாருமதி.

"ஏய் மலர் என்னாச்சு இப்படி ஷாக் அடித்த மாதிரி நிக்கிறாய் ஓஓ... முதலாளி என்றதாலா நானும் கல்யாணம் ஆகி வந்த ஒரு வாரத்தில் மாமா கையெழுத்து வாங்கிய போது இப்படி தான் அதிர்ந்தேன். அப்புறம் மாமா கம்பெனி வரச்சொன்ன போது என்னால் வரமுடியாது என்று சொல்லி விட்டேன்."

" ஆனால் நீ படிப்பதே அந்த வேலை பற்றி தானே அதனால் சூர்யா உன்னை கூட்டிட்டு போயிடுவார்" என்று பேசவும் மேலும் அதிர்ந்தாள் பனிமலர் நான் அங்கு சென்று வேலை செய்ய வேண்டுமா இல்லை கண்டிப்பாக அந்த கம்பெனிக்கு சொல்லக்கூடாது. ஆக்கு கம்பெனியில் வேலைக்கு போகிறேன் என்று சொல்லி விட வேண்டும் என்ற உறுதி பனிமலருக்கு வந்தது.

அதன் பிறகு பனிமலரின் மனதில் சிந்தனை ஓடினாலும் அனைவர் எதிரிலும் இயல்பாக இருந்தாள். சூர்யா இரவு எட்டு மணிக்கு வந்து குளித்து விட்டு வந்தவன் இரவு உணவு உண்டு விட்டு மேலே சென்று விட்டான். பனிமலர் அறைக்கு வந்த போது சூர்யா உறங்கி போயிருந்தான்.

அவனிடம் பேசவேண்டும் என்று நினைத்தது நடவாமல் போனது அடுத்த மூன்று நாட்களும் அவள் அறைக்கு வரும் போது அவன் உறங்கியும் காலை எழும்போது அவன் எழுந்து சென்று இருப்பதுமாக நடந்தது.

அன்று வெள்ளிக்கிழமை பெண்கள் நால்வரும் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் இருந்து வெளியே வந்த பனிமலர் அங்கிருந்த கடை ஒன்றை கண்டதும் பாட்டி அத்தையிடம் கூறிவிட்டு சாருமதியை அழைத்து சென்று வரைவதற்கு சார்ட் பேப்பர் வரைவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்தாள்.

தினமும் தன் வீட்டினருடனும் தமிழ் உடனும் போனில் பேசுவது சமையல் செய்யும் போது சிறு சிறு வேலைகளை செய்வது என்று சில மணிநேரம் கழிந்தாலும் மற்ற நேரங்களில் சும்மா இருப்பதால் தேவையில்லாத சிந்தனைகள் வருதோடு அவளின் முகத்தை வைத்து என்ன என்று கேட்டால் என்ன செய்வது என்று நினைத்து சும்மா இருக்கும் நேரங்களில் புதிய டிசைன்கள் வரைந்து வைத்தாள். சிலநேரங்களில் வேறு எதாவது வரையவும் செய்வாள்.

சனிக்கிழமை அன்று அதுமாதிரி என்ன வரையலாம் என்று யோசித்தவளின் முன் சூர்யாவின் புகைப்படம் சுவரில் மாட்டியிருந்தது பட்டது. பெரிய அளவில் இருந்த அந்த படம் கல்லூரி படிக்கும் போது எடுத்து இருக்க வேண்டும் மிகவும் அழகான முறுவலுடன் இருந்தவனை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

தன் கையில் பென்சிலை எடுத்து வரைந்தவளின் கைகளில் எங்கும் தயக்கம் இல்லை மூன்று மணி நேரம் வரைந்து முடித்து பார்த்தவளுக்கே ஆச்சரியமாக இருந்தது அச்சாக வரைந்து இருந்தாள் சூர்யாவை அவனின் மார்பில் சாய்ந்திருந்தாள் பனிமலர் இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்திருந்தன.

தன் போனில் ஓவியத்தை புகைப்படங்களாக எடுத்தவள் ஓவியத்தை பத்திரப்படுத்த நினைத்த நேரம் கீழே இருந்த சாருமதி போனில் அழைத்து அகிலேஷ், ஹரி, விஷால் வந்திருப்பதாக கூறியதும் வரேன் என்று போனை வைத்தவளுக்கு ஒரு யோசனை வரவும் தான் வரைந்த சில ஓவியங்கள் சிலவற்றையும் இப்போது வரைந்ததையும் எடுத்து சுற்றி பேக் செய்து எடுத்துக்கொண்டு கீழே சென்றாள்.

மூவரையும் வரவேற்று உபசரித்து பேசிக்கொண்டு இருந்தாள். மறுநாள் அகிலேஷ் பெங்களூர் சொல்ல வேண்டும் என்று தமக்கையிடம் விடை பெற வந்திருந்தான். பேசி முடித்து புறப்படும் போது அவர்களிடம் கொடுத்து அவள் எப்போதும் பிரேம் போட கொடுக்கும் இடத்தில் கொடுக்க சொல்ல அவர்களும் வாங்கி சென்றனர்.

ஞாயிறு காலையில் வெளியே சென்ற சூர்யா அன்று இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு வந்தான். அன்றும் அவனிடம் பேசமுடியாமல் போகவே இனி அவனாக பேசும் வரை பேசக்கூடாது என்று முடிவு செய்தவள் படுத்து உறங்கிப்போனாள்.

"ஏய் பனி இன்னும் எவ்வளவு நாள் இப்படி என்னை எட்ட வைக்கப்போகிறாய். நீ தூரத்தில் இருந்த போது கூட நான் இப்படி இல்லையடி ஆனால் இப்படி பக்கத்தில் இருந்தும் உனக்குள் உருக முடியாமல் இப்படி தள்ளி வைத்து பைத்தியமாக சுற்ற வைத்துக்கொண்டு இருக்கிறாயடி என் பனியே"

பனிமலர் விழிப்பு வந்து எழுந்தமர்ந்தவள் ஏன் இப்போது எல்லாம் கனவு சூரியன் பேசுற மாதிரியே வருதே முன் எல்லாம் சந்தோஷமாக இரண்டு பேரும் பேசி சிரிப்பது போல தானே வரும் என்று யோசித்தபடி சூர்யாவை பார்க்க அவனோ நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான். ஒரு வேளை என் ஆழ்மனது சூரியன் இப்படி எல்லாம் என்னிடம் பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறதா?... அதன் வெளிப்பாடுதான் இப்படி கனவு வருகிறதோ என்ற குழப்பத்துடன் படுத்தவள் நீண்ட நேரம் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லமுடியாமல் திரும்பி திரும்பி படுத்துக்கொண்டு இருக்க சூர்யா அவளின் பொம்மைகளை எடுத்து விட்டு அவளின் அருகில் படுக்க பனிமலரின் கைகள் இப்போது பொம்மைகளுக்கு பதிலாக சூர்யாவை அணைத்துக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

மறுநாள் அலாரம் அடிக்கும் சத்தத்தில் எழுந்த பனிமலர் அதிர்ந்தாள். சூர்யாவும் இவளும் ஒருவரையருவர் அணைத்தபடி இருந்தனர். சூர்யா உறங்குவதால் மெல்ல அவனை விட்டு விலகி குளியல் அறை புகுந்தவள்

அடியேய் மலரு உனக்கு என்னாச்சிடி இது சரியில்லை. பேசாமல் இனி சோபாவில் படுத்திடு அவன் மட்டும் எழுந்து இரண்டு பேரும் இருந்த கோலத்தை பார்த்து இருந்தாள் அப்பவே எல்லாம் முடித்து விட்டு இருப்பான். இனி ஜாக்கிரதையாக இருந்துக்கோ என்று சொல்லிக்கொண்டு வேகமாக குளித்து கீழே சென்றாள்.

சூர்யாவும் எழுந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு குளித்து முடித்து கீழே வந்து காலை உணவை முடித்து மீண்டும் அறைக்கு சென்ற போது அவனுக்கு போன் ஒன்று வந்தது. எடுத்து பேசியவனுக்கு அந்த பக்கம் சொன்ன செய்தியில் முகம் ரத்தமென சிவந்தது.

சில கட்டளைகளை கூறி போனை வைத்தவன் பனிமலருக்காக காத்து இருந்தான். சில நிமிடங்கள் கழித்து வந்தவள் நேராக குளியல் அறை புகுந்தாள் சிறிது நேரத்தில் சுடிதார் அணிந்து வெளியே செல்வது போல் கிளம்பி வந்தவளை கண்டான் சூர்யா.

வேகமாக கபோர்டில் எதையோ தேடி தன் பேகில் வைத்துக்கொண்டு சூர்யாவை கடந்து வெளியே சென்றவளின் கையை பிடித்து நிறுத்தியிருந்தான் சூர்யா.

"எங்க போற?..." என்று கேட்டான்.

"அது.... இன்னையில் இருந்து ப்ராஜெக்ட் ஒர்க் பண்ண போகனும்" என்றாள்.

"சரி என் கூட வா நம்ப கம்பெனியில் கண்டினியூ பண்ணு உன் காலேஜில் நான் பேசுறேன்" என்றான்.

"இல்ல நான் ஆக்குவோட கம்பெனிக்கே போகிறேன்" என்றாள் அவனிடம் இருந்து கையை விலக்க முயற்சி செய்து கொண்டே

" நீ அவன் கம்பெனிக்கு போகக்கூடாது. இதுக்கு முன்னாடி நீ எப்படி என்றாலும் இருந்து இருக்கலாம் ஆனால் இப்ப நீ மிஸஸ் சூர்யபிரகாஷ் அதனால் நம்ப ஸ்டேட்டஸ்க்கு ஏத்தமாதிரி நடந்துக்கனும். நம்ப கம்பெனியில் ப்ராஜெக்ட் பண்ணாமல் வேற கம்பெனியில் பண்ணால் அது எனக்கு தான் அவமானம்."

"அதுவும் இல்லாமல் அவன் என் எதிரி அவன் கம்பெனிக்கு போனால் அது எனக்கு இன்னும் அசிங்கம் அதனால் இனி அங்க போகக்கூடாது நம்ப கம்பெனிக்கு வா" என்றான் கட்டளை குரலில்.

" அது முதலில் நம்ப கம்பெனி இல்லை உங்க கம்பெனி. அந்த கம்பெனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த கம்பெனி வாசற்படியில் கூட கால் வைக்கும் தகுதி எனக்கு இல்லை என்று நீங்க தான் சொன்னிங்க அதனால் நான் ஆக்குவோட கம்பெனிக்கே போகிறேன்" என்றாள் பனிமலர்.

"ஏய் என்ன கொழுப்பா என் பொறுமையை சோதிக்காமல் ஒழுங்கா என் கூட வா இல்லை வீட்டிலேயே இருந்து உன் வேலையை பாரு நான் உன் காலேஜில் பேசிக்கிறேன். அதை விட்டு விட்டு அவன் கம்பெனிக்கு தான் போவேன் என்றால் அப்புறம் நீ பழைய சூர்யாவை பார்க்க வேண்டியது இருக்கும்" என்றான் கோபத்தை கட்டுப்படுத்திய குரலில்.

" நான் சூர்யபிரகாஷ் மனைவி என்ற பெயரிலோ இல்லை உங்க சிபாரிசிலோ பட்டத்தை வாங்க நினைக்கலை. என் திறமையை காட்டி பனிமலர் கேசவனாகத்தான் பட்டத்தை வாங்க நினைக்கறேன். அதனால் இன்னும் ஒரு மாசம் நான் ஆக்குவோட கம்பெனிக்கு போவேன். வீட்டில் இருக்கிற எல்லார்கிட்டையும் சொல்லிட்டு தான் அங்க போறேன்" என்றவள் அவனின் கையில் இருந்த தன் கையை விலக்கி கொண்டு வெளியேறப்போக அவளின் முன் வந்து கதவை மறைத்து நின்றான் சூர்யா.

" நான் உன் புருஷன் மத்தவங்க பர்மிஷனை விட உனக்கு என்னுடைய பர்மிஷன் தான் தேவை. இனி நான் சொல்லுறதை மட்டும் செய்தால் போதும் முதலில் இந்த டிரஸை மாத்திட்டு புடவை கட்டிட்டு வா நம்ப கம்பெனிக்கு போகலாம்" என்றான் சூர்யா.

"அந்த கம்பெனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது உங்க கம்பெனி மட்டும் தான் எந்த காலத்திலும் என் கால் அந்த வாசற்படியை மிதிக்காது" என்றாள் கோபமாக

அதுவரை கோபத்தை அடக்கி பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அவளின் பேச்சு அதித கோபத்தை கொடுக்க

"அந்த கம்பெனிக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லையா உன் புருஷன் ராத்திரி பகல் என்று பார்க்காமல் ஓடி ஓடி வளர்த்த கம்பெனி அதுடி. எனக்கு எவ்வளவு உரிமை அந்த கம்பெனியில் இருக்கோ அதே அளவு உரிமை நீ என் மனைவி என்பதால் இருக்கு" என்றான்.

"தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து கையில் பிடித்து இதை நீங்க கட்டியதால் எனக்கு எல்லா உரிமையும் வந்திடுமா?... இதை என் கழுத்தில் கட்ட காரணம் என்னை பழிவாங்கத்தானே தவிர உங்க சொத்தில் உரிமை கொடுக்க இல்லை. அதுவும் இல்லாமல் இந்த தாலியை நீங்க என் அக்காவிற்கு கட்டவேண்டியது ஆனால் நீங்க அவளை கடத்திட்டு என்னை கல்யாணம் பண்ணியிருக்கிங்க."

"வாட் நான் உங்க அக்காவை கடத்தினேனா?...."

" ஆமாம் நீங்க என் அக்காவை கடத்திட்டு தான் என்னை கல்யாணம் பண்ணியிருக்கிங்க. எங்க அக்கா உயிரோடு தான் இருக்காளா இல்லை அவளை எதாவது பண்ணிட்டிங்களா என்று கேட்டவளின் கன்னத்தில் பளார் என்று அறைந்து இருந்தான் சூர்யா.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 43



பளார் என்று கன்னத்தில் அறைந்த பிறகே தான் செய்த செயலை உணர்ந்தான் சூர்யா. ஷிட் என்று கையை உதறியவன் பனிமலரை பார்க்க அடிவாங்கிய கன்னத்தை பிடித்துக்கொண்டு மிரட்சியுடன் சில அடிகள் பின் சென்று நின்று சூர்யாவை பார்த்திருந்தாள்.

அதை கண்டவனுக்கு தன் மீதே கோபம், ஓடிச்சென்று அவளிடம் மன்னிப்பு கேட்டு தன்னுள் இறுக்கி அணைத்து கொள்ள விழைந்த மனதையும் உடலையும் கண்டுப்படுத்திக்கொண்டவன் திரும்பி நின்று தலைகோதியவனுக்கு இப்போது இவளை சமாதானம் செய்வதை விட தங்களுக்காக காத்திருக்கும் பிரச்சனையை வேரோடு அழித்து விட்டு வருவது தான் முக்கியம் என்று நினைத்தவன்

தன் முகத்தை இருப்பாக்கி திரும்பியவனுக்கு சிறு குழந்தை ஆதரவுக்காக தாயைத்தேடுவது போல் கண்ணில் மிரட்சியும் ஏக்கமுமாக அவனைத்தான் பார்த்திருந்தாள் பனிமலர். அதை கண்டவனுக்கு தன் கையை வெட்டிப்போடும் வெறி வந்தது. கை முஷ்டியை இருக்கி தன்னை கட்டுப்படுத்தியவன்

"இனி இப்படி தப்பு தப்பாக பேசிட்டு இருந்தா இப்படி தான் நடக்கும் ஜாக்கிரதை நான் திரும்பி வரும் வரை இந்த ரூமை விட்டு வெளியே வரக்கூடாது அப்படி மீறி வெளியே போனால் நீ சொன்னது நடக்கும். உன் அக்காவை கண்டுபிடிச்சி" என்று மேலே பேசப்போனவனை பனிமலரின் குரல் நிறுத்தி இருந்தது.

" இல்ல... இல்ல... நான் இந்த ரூம் விட்டு போகமாட்டேன் என் அக்காவை எதுவும் பண்ணாதீங்க" என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதனை பார்க்கமுடியாமல் திரும்பி நின்று கண்மூடி தலைகோதி நின்றவனின் போன் ஒலித்தது. போனை எடுத்து காதில் வைத்தவன் "ம்ம்..." என்று மட்டும் சொல்ல அந்தப்பக்கம் இருந்து சொன்னதை கேட்டவன்

" இன்னும் பத்து நிமிஷத்தில் வர்றேன்" என்று சொல்லி போனை ஆப் செய்து விட்டு வேறு யாருக்கோ அழைத்தவன் அந்த பக்கம் போனை எடுத்ததும் பேசிக்கொண்டே பனிமலரை திரும்பி பார்க்காமல் வேகமாக அறைக்கதவை திறந்து வெளியேறினான்.

மாடிப்படியில் வேகமாக இறங்கிக்கொண்டே போனில் பேசிக்கொண்டு வரும் சூர்யாவின் பின் பனிமலர் வருகிறாளா என்று பாட்டி பார்த்தார். பனிமலர் வராது போக "சூர்யா மலரை நீயே ஆகாஷ் கம்பெனியில் கூட்டிட்டு போய் விடு" பாட்டி சொல்லிக்கொண்டு இருக்க அதை காதில் வாங்காமல் பேசிக்கொண்டே வெளியே சென்று காரில் ஏறியிருந்தான் சூர்யா.

"இவன் என்ன இவ்வளவு வேகமாக போறான். எப்பவும் என்கிட்ட சொல்லிட்டு தானே போவான். இன்னைக்கு நான் பேசறது கூட காதில் வாங்காமல் போயிட்டு இருக்கான்" என்று தாத்தாவிடம் புலம்பிக்கொண்டு இருந்தார் பாட்டி.

"எதாவது முக்கிய வேலை இருக்கும். போனில் வேற பேசிட்டு இருந்ததால் உன் கிட்ட சொல்ல மறந்திட்டான் போல நீ அதையே புலம்பாமல் மலரை கூப்பிடு நான் என் காரில் அழைச்சிட்டு போய் ஆகாஷ் கம்பெனியில் விட்டுட்டு வரேன்" என்றார் சிவபிரகாஷம் தாத்தா.

பாட்டி "சரி" என்று சொன்னவர் சாருமதியை அழைத்து மலரை போனில் அழைக்கச்சொல்ல சாருமதியும் போன் செய்தாள். போன் முழு ரிங் சென்று முடிந்த போதும் எடுக்கவில்லை " பாத்ரூமில் இருப்பாள் போல பாட்டி" என்று சொல்லி சாருமதி சென்றுவிட்டாள்.

இருபது நிமிடங்கள் ஆகியும் பனிமலர் வராமல் போகவே மீண்டும் சாருமதியை அழைத்து போன் போடச்சொல்ல சாருமதி போன் செய்த போது பனிமலர் போனை எடுக்கவில்லை.

"மேலே போய் பார்த்துட்டு வரேன்" என்று சாருமதி படியேற பாட்டியும் அவள் பின்னால் மாடியேறினார்.

சூர்யா ஆகாஷ் கம்பெனிக்கு போகக்கூடாது என்று சொன்னதும் பனிமலரின் மனதில் தோன்றியது அவனின் பழிவாங்கலை செயல்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பது தான். கண்டிப்பாக அவனின் பேச்சை கேட்கக்கூடாது என்று முடிவுடன் தான் சூர்யா சொன்னதற்கு எல்லாம் எதிர்த்து பேசினாள்.

அடுத்து அவனின் கம்பெனி வாசற்படியில் கூட கால் வைக்க அனுமதிக்க மாட்டேன் என்றவன் இன்றைக்கு அவளை அதே கம்பெனிக்கு வா என்றால் நாய்குட்டி மாதிரி இவன் பின்னால் போகவேண்டுமா?...

அன்றைக்கு அவன் கம்பெனிக்கு சென்ற போது நேரில் பார்க்கக்கூட இல்லாமல் அனுமதி இல்லை என்று போகச்சொன்னானே அந்த ரிஷப்ஷன் பெண் செக்யூரிட்டி எல்லோரும் எப்படி பார்த்தார்கள். இப்போது வந்து வா என்றால் அங்கே போகவேண்டுமா?... என் திறமைக்கு மதிப்பு கொடுக்காமல் விரட்டி அடித்து விட்டு இன்றைக்கு மனைவி என்ற உரிமையில் அழைத்தால் போகவேண்டுமா?... என்ற எண்ணங்களே அவனின் பேச்சுக்களுக்கு எதிர் பேச்சு பேச வைத்தது.

அதுமட்டும் இல்லாமல் அவனின் என் மனைவி என்ற பேச்சு அவளுக்கு கோபத்தை அதிகமாக்கியது. அவளை மனைவியாக்க தானே தன் தமக்கையை கடத்தி இருக்கிறான் என்ற எண்ணமும் வர அவன் மீதான கோபத்தில் அவளின் மனதில் இருந்தது எல்லாம் வெளியே சொல்லி இருந்தாள். அவளை பொறுத்தவரை தமக்கையை கடத்தி தன்னை கல்யாணம் செய்து இருக்கிறான் என்று உறுதியாக எண்ணினாள்.

அவள் விட்ட வார்த்தைகளால் கன்னத்தில் அடியாக வாங்கியிருந்தாள். இதுவரை அவளை யாரும் ஒரு அடி கூட அடித்ததில்லை. தாய் தந்தை இருவரும் கண்டிப்பார்களே தவிர அடித்ததில்லை. பெரிய தந்தை, பெரிய அன்னை, பாட்டி யாரும் அவளை அடித்ததே இல்லை.

தமிழுடன் சண்டை போடும்போது அடித்து கொள்வார்கள் தான் அது வலியில்லாமல் இருக்கும் வலிப்பது போல நடிப்பார்கள். அன்று பீச்சில் தமிழ் அவள் முதுகில் அடித்தபோது கூட சில வினாடிகளில் வலி போகிவிட்டது.

ஆனால் அவன் அடித்த அடி இவ்வளவு நேரம் சென்று கூட வலித்துக்கொண்டு இருக்கிறதே. அவன் அடித்த போது கூட அவன் கோபத்தில் அடித்துவிட்டான் உடனே அவளிடம் மன்னிப்பு கேட்பான் என்று காதல் கொண்ட மனம் நினைத்து தாய் மடி தேடும் கன்றாக அவனைத்தான் ஏக்கப்பார்வை பார்த்து இருந்தாள். ஆனால் அதனையும் அவன் செய்யாமல் மேலும் அவளை வாட்டும் வார்த்தைகளை விட்டு சென்றிருந்தான்.

சாருமதி அறைக்கதவை இரண்டு முறை தட்டியும் திறக்காமல் போக பின்னால் வந்த பாட்டி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பனிமலர் இருந்த கோலம் கண்டவர்கள் அதிர்ந்தனர்.

தரையில் சுவற்றில் சாய்ந்து தன்னை குறுக்கிக்கொண்டு அமர்ந்து கன்னத்தில் கைகளை மறைத்துக்கொண்டு வெறித்த பார்வையுடன் இருந்தவளை கண்டவர்கள் "மலரு மலர்" என்று அவளின் அருகில் சென்றனர்.

சாருமதி, பாட்டி இருவரும் அவளை உலுக்கவும் சுயஉணர்வு வந்தவள் பாட்டியின் கால்களை கட்டிக்கொண்டாள்.

"மலருமா என்னாச்சிடா?..." என்று அவளின் முகத்தை நிமிர்த்த அவளின் கன்னத்தை தொட "ஆஆ...." என வலியில் துடித்தத்தாள் பனிமலர். அவளின் கத்தலில் அருகில் அமர்ந்த பாட்டி அவளின் கைகளை கன்னத்தில் இருந்து விலக்கி பார்த்தவர் அதிர்ந்தார்.

சாருமதியும் பார்த்து விட்டு அதிர்ந்து " பாட்டி சூர்யா அடிச்சி இருக்கார் விரல் பதிந்து இருக்கு" என்றவள் வேகமாக அங்கிருந்த பிரிஜ் திறந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து ஒரு துணியில் வைத்து பனிமலரின் கன்னத்தில் ஒற்றி எடுக்க வலியில் மீண்டும் "ஆஆ..." என்றாள்.

"மலருமா கொஞ்சம் பொறுத்துக்கடா வீக்கம் குறையும்" என்று கூறியவரின் மனதில் சூர்யா மீது கோபம் வந்தது. சின்ன பெண்ணை இப்படி அடித்து இருக்கானே அவன் விருப்பத்திற்கு விட்டதால் தான் இன்னைக்கு இப்படி அடித்து விட்டு போயிருக்கான் இன்னைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டனும் என்று நினைத்தவர்.

" சாருமதி நீ போய் குடிக்க சில்லுனு ஜூஸ் எடுத்திட்டு வா நான் ஒத்தடம் கொடுக்கிறேன்" என்று சொல்ல சாருமதியும் வேகமாக சென்று எடுத்து வந்த போது உடன் தாத்தாவும் அத்தையும் வந்தனர்.

பனிமலரை கண்டு அவர்களும் அதிர்ந்தனர். "ராட்சசன் மாதிரி நடந்து இருக்கான் உங்க பேரன் அவன் கையில் தொழிலை தூக்கி கொடுத்து அவனை தலைமேல தூக்கி வச்சி அவன் விருப்பத்துக்கு தலை ஆட்டினிங்க இல்ல அது எங்க போயி முடிந்து இருக்கு பாருங்க."

"சின்ன பெண்ணு என்று கூட பார்க்காமல் அவனின் கோபத்தை காட்டி இருக்கான்" என்று பாட்டி புலம்பித்தள்ளினார்.

அம்பிகாவும் சாருமதியும் பனிமலரை எழுப்பி கட்டிலில் உட்கார வைத்து பழச்சாறு கொடுக்க கன்னத்தின் வலியால் வாய்திறந்து குடிக்க மிகவும் சிரமப்பட்டாள். மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக சிரமப்பட்டு குடிப்பதை கண்டவர்களுக்கு சூர்யா மீது கோபம் இன்னும் அதிகமாகியது.

"மலருமா ரொம்ப வலிக்குதா டாக்டர் கிட்ட பேகலாமா?..." என்று பாட்டி கேட்கவும் பனிமலர் முகத்தில் பயரேகை வந்தது. வேண்டாம் என்று தலையசைத்து படுக்கையில் படுத்துக்கொண்டவளின் மனம் தாயின் மடியையும் தந்தையின் அரவணைப்பும் தேடியது. இவ்வளவு நாட்களாக தாய் தந்தை நினைவு வரும் போது எல்லாம் அந்த இடத்தில் சூர்யாவை வைத்து பார்த்து இவன் என்னை அம்மா அப்பா பார்த்தது போல் பார்த்துக்கொள்ளுவான் என்று அவளுக்கு தோன்றும் ஆனால் இன்று அவனே தன்னை காயப்படுத்தியதும் இல்லாமல் அவனின் ஆறுதலுக்காக அவள் அவனை பார்த்த போதும் மேலும் வார்த்தைகளை விட்டு சென்றானே என்று கண்கள் கலங்கின.

தன்னை சுற்றி பாட்டி, தாத்தா, மாமியார் சாருமதி என்று இருந்து ஆறுதல் படுத்திய போதும் அவளின் உள்ளமும் உடலும் அவளின் சூரியனை தேடியது அந்த அளவுக்காக அவனை காதலிக்கிறேன் என்ற எண்ணம் அவளுக்கே தோன்றத்தான் செய்தது.

அவளின் காதலுக்கு அவனிடம் இருந்து சிறு எதிர்வினை கூட இதுவரை அவனிடம் இருந்து வரவில்லை திருமணத்தின் போதும் மறுதினமும் அவளிடம் உருகினான் அவளிடம் அக்கறையாக இருந்தான் தான் ஆனால் அதன் பிறகு மீண்டும் பழையபடி அவளிடம் கோபத்தை காட்டவில்லை என்றாலும் அவளிடம் சாதாரணமாக கூட பழகவில்லை.

அவளிடம் அந்த இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று தான் பேசினான். இதுவரை அவன் அவளை பெயர் சொல்லி அழைக்கவே இல்லை. இப்போது என்பது இல்லை இதற்கு முன்பு கூட இதுவரை அவன் அவளை பனிமலர் மலர் என்று ஒரு முறை கூட அழைத்தது இல்லை. என் பெயர் சொல்லிக்கூட அழைக்க விருப்பம் இல்லையா?... அவளின் மனம் வேதனையில் சுழன்று கொண்டு இருக்க கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருக உறங்கி போனாள் பனிமலர்.

அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும் "கீழே போகலாம் வாங்க" என்று தாத்தா சொன்ன போது பாட்டி "நான் இங்கேயே இருக்கேன்" என்றவரிடம் "அவள் குடித்த பழச்சாற்றில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து இருக்கு அதனால் மலர் இப்போதைக்கு எழமாட்டாள் வா" என்று அழைத்து சென்றார் தாத்தா.

கீழே சென்றதும் தாத்தா சூர்யாவிற்கு போன் செய்ய அவன் எடுக்கவே இல்லை. இரண்டு மூன்று முறை செய்த போதும் ரிங் சென்றதே தவிர சூர்யா எடுக்கவில்லை. சந்திரபிரகாஷுக்கு போன் செய்து சூர்யா பற்றி விசாரிக்க அவனுக்கும் சூர்யா பற்றி தெரியவில்லை. விசாரித்து சொல்கிறேன் என்று கூறி வைத்தவன் சிறிது நேரத்தில் போன் செய்த சந்திரபிரகாஷ் சூர்யா ஆபிஸிலும் வேறு எந்த பிரான்சிலும் இல்லை என்றவன் எதற்காக கேட்கீறிர்கள் என்று சந்திரபிரகாஷ் கேட்ட போது தந்தையை அழைத்துக்கொண்டு உடனே வீட்டுக்கு வா என்று மட்டும் கூறி வைத்திருந்தார் தாத்தா.

 
Status
Not open for further replies.
Top