ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 34



"பாட்டி நான் அவகிட்ட பேசனும்" என்றான் சூர்யா.

அவனின் தாத்தாவும் பாட்டியும் ஒன்றாக "யாருகிட்ட பேசனும்?..." என்று ஒரே சமயத்தில் கேட்டனர்.

பல்லை கடித்தவன் "அதான் இப்ப எனக்கு கல்யாணம் பண்ண பார்த்து இருக்கிற பெண்ணுகிட்ட" என்றான் சூர்யா.

" ஏன் சூர்யா அவள் பேர் என்ன என்று உனக்கு தெரியாதா?..." என்றார் பாட்டி.

"தெரியாது" என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் சூர்யா.

"அவள் பேர் பனிமலர்" என்றார் பாட்டி.

" சரி நான் இப்ப அவகிட்ட பேசனும் எங்க இருக்கா என்று சொல்லுங்க" என்றான்.

" மலர் மணப்பெண் அறையில் இருக்கா" என்னும்போதே வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான் சூர்யா.

"என் பேரன் இப்படி ஆனதுக்கு நீங்க தான் காரணம் இப்படி அவனை தொழில் தொழில் என்று ஓடவிட்டதால் தான் இப்படி இருக்கான்" என்று தாத்தாவிடம் பொறிந்தார் பாட்டி.

"நான் என்னடி பண்ணேன் அவன் தான் பிஸ்னஸ் பின்னாடி ஓடிட்டு இருக்கான் கல்யாணம் முடிந்தால் அவனும் என்னை மாதிரி பெண்டாட்டி பின்னாடி சுத்த ஆரம்பித்திடுவான்" என்று தன் மீசையை முறுக்க அதில் பாட்டி வெட்கப்பட்டு போனார்.

அதை ஆவென பார்த்துக்கொண்டு இருந்தாள் சாருமதி. சந்திரபிரகாஷ் அவளின் கையில் தட்டி" என்னடி அப்படி பார்த்திட்டு இருக்க?... " என்றான்.

" ஏன் மாமா தாத்தாவும் பாட்டியும் இந்த வயதில் இப்படி ரொமான்ஸ் பண்ணுறாங்களே அப்ப சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பாங்க" என்றவளை

" ஏய் என்னடி உளறிட்டு இருக்க?..." என்றான்.

"அங்க பாருங்க உங்க தாத்தாவையும் பாட்டியையும் இந்த வயதிலும் பாட்டி வெக்கப்பட்டுட்டு இருக்காங்க நீங்களும் இருக்கிங்களே" என்றவள் " நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணியே இப்படி இருக்கிங்க இதில் உங்க தாத்தா சூர்யா கல்யாணம் ஆனால் அவரை மாதிரி பெண்டாட்டி பின்னாடி சுத்துவாராம் இதெல்லாம் கனவில் கூட நடக்காது" என்றவளை

" ஏன்டி நான் உன் பின்னாடி சுத்திட்டு தானே இருக்கேன் இன்னும் என்னடி" என்றான் சந்திரபிரகாஷ்.

" நல்லா சுத்திட்டு இருக்கிங்க உங்ககிட்ட பேசறதை விட அடுத்த வேலையை பார்க்கப்போறது நல்லது" என்று அந்த இடத்தை விட்டு சென்றாள் சாருமதி.

சூர்யா நேராக மணப்பெண் அறை முன் சென்று கதவை தட்ட தமிழ் கதவை திறந்தாள். தமிழை பார்க்காமல் உள்ளே இருந்த பனிமலரை பார்த்துக்கொண்டே "ஆன்ட்டி நான் அவகிட்ட தனியாக பேசனும்" என்றான்.

" உள்ள வா சூர்யா நீங்க பேசுங்க" என்று கூறிய மாலினி தமிழை அழைத்துக்கொண்டு வெளியேறியதும் கதவை தாளிட்டவன் கட்டிலில் அமர்ந்தான்.

அவனின் பார்வை சிறிதும் விலகாமல் அவள் மீதே இருந்தது. அவளோ தலைகுனிந்து நின்றிருந்தாள்.

" இந்த கல்யாணத்தில் உனக்கு முழு சம்மதமா?... " என்றான்.

இந்த கேள்வியை ஒரு நாளைக்கு முன்பு கேட்டு இருந்தாள் துள்ளி குதித்து சந்தோஷத்துடன் சம்மதம் சம்மதம் என்று ஊருக்கே கேட்கும் அளவுக்கு சொல்லி இருப்பாள் ஆனால் இன்று இப்படி ஒரு கேள்வியை ஏன் கேட்கிறான் அதான் நான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு வந்திட்டேனே என்றது அவளின் மனம்.

அவளிடம் இருந்து பதில் வராமல் போகவே மீண்டும் "சொல்லு உனக்கு இந்த திருமணத்திற்கு முழு சம்மதமா?..." என்றான் சற்றே கோபக்குரலில்

"சம்மதம்" என்றாள் தடுமாற்றத்துடன்

"என் முகத்தை பார்த்து சொல்லு" என்றான்.

"அதான் சம்மதம் என்று சொல்லிட்டனே" என்றாள்.

"உன் வாய் தான் சொல்லுது உன் முகம் வேற சொல்லுது எனக்கு தேவை உண்மையான பதில்" என்றான்.

"என் டாடிக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று சொன்னேனே என்றாள்.

" அப்ப உன் டாடி வேற யாரையாவது காட்டி இருந்தாலும் சம்மதம் சொல்லியிருப்பாய் அப்படித்தானே?..." என்றான்.

இல்லை இல்லை அப்படி டாடி வேற யாரையாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன் அப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என் உயிரை விட்டு இருப்போன் என்று அவளின் மனம் கூக்குரலிட்டது. ஆனால் வெளியே அவனுக்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தாள் பனிமலர்.

"உன்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லு" என்று கூறியவன் அவளின் முன் வந்து நின்றான்.

அப்போதும் அவள் தலைகுனிந்து நின்று இருந்தாள்.

அவளின் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் "சொல்லு உன் டாடி வேற யாரையாவது காட்டி கல்யாணம் பண்ணச்சொல்லி இருந்தா பண்ணியிருப்பாயா?.... என்றான்.

முகம் கோபத்தில் சிவந்து கண்கள் கூர்மையாக அவளின் பதிலுக்காக காத்திருப்பது கண்டவளுக்கு உடலில் நடுக்கம் தோன்றியது. அவன் முகம் பார்த்து உண்மையை கூறமுடியாமல் தவித்தவளுக்கு பொய்யையும் கூற வரவில்லை.

அவள் தான் அவனைக்கண்டதும் இணைபுரியா உணர்வுகள் எழுந்து காதலாக மாறி அவனையே நினைத்து பல கோட்டைகள் கட்டி வாழ்ந்து இருந்தாள்.

ஆனால் அவனிடம் இருந்து அவள் ஆர்வமான பார்வை கூட பார்த்ததில்லை. இருந்தும் மனம் அவனிடம் தான் சென்று கொண்டிருந்தது. அவனின் காதல் கிடைக்கவில்லை என்றாலும் அவனின் மூச்சுக்காற்று இருக்கும் இடத்திலாவது வாழ்ந்திடலாம் என்று இருந்தவளுக்கு தன் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையாக வந்தபோது அவளின் மனம் துடிதுடித்தது.

அவளின் அக்காவின் குணம் தெரிந்தவள் தமக்கை கண்டிப்பாக திருமணத்தை நிறுத்துவாள் அப்போது தான் அவனை மணந்துகொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டியவளுக்கு தமக்கை திருமணத்தை நிறுத்த எந்த முயற்சியும் செய்யாமல் சந்தோஷமாக இருக்கவே தன் மனக்கோட்டை தகர்ந்ததை நினைத்து துடித்துக்கொண்டு இருந்தவளுக்கு தமக்கை இப்படி கடைசி நேரத்தில் சென்றது குடும்பத்தினருக்கு வேதனையையும் அவமானத்தையும் கொடுத்ததை பனிமலரால் தாங்கமுடியவில்லை.

திருமணம் நிற்கவேண்டும் என்று எண்ணியது தான் குடும்பம் அவமானப்பட காரணம் என்று நினைத்து அந்த திருமணமே எனக்கு வேண்டாம் என நினைத்திருந்தவளுக்கு அவளை தேடி அந்த வாய்ப்பு வந்த போது ஏற்கமுடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள்.

பெரிய தந்தை வாக்கு கொடுத்த பிறகு தான் மறுத்தால் மீண்டும் தன் குடும்பம் இன்னொரு அவமானத்தை சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தாள். அதுவும் சூர்யா என்பதால் மட்டுமே சம்மதம் சொல்லியிருந்தாள் வேறு யாராக இருந்திருந்தால் அவள் சம்மதம் சொல்ல அவள் உயிர் அவளின் உடலில் இருந்து இருக்காது.

இப்போது அவனுக்கு என்ன பதில் சொல்லுவாள் அவனிடம் எதிர்பார்த்த சிறு ஆர்வப்பார்வை கூட இல்லாமல் இருப்பவனிடம் நீ என்பதால் தான் ஒத்துக்கொண்டேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவனின் ஏளனப்பார்வையை சந்திக்க நேரிடுமே அதை எப்படி எதிர்கொள்வது. அவனாக தன் காதலை உணரவேண்டும் என்று முடிவு செய்தவளாக அமைதியாக நின்று இருந்தாள் பனிமலர்.

அவளிடம் இருந்து பதில் வராது போக கோபத்தின் உச்சிக்கு சென்றவன் அவளின் தாடையை அழுந்த பிடித்தான் அதில் அவளின் முகம் வலியில் சுளித்தது. அவனின் கையை தன் பலம் கொண்டு தட்டி விட்டு அறை வாயில் கதவு நோக்கி வேகமாக நடந்தவளின் கையை பிடித்து இருந்தான் சூர்யா.

அவனின் பிடியில் இருந்து தன் கைகளை விலக்க செய்த போராட்டம் எல்லாம் வீணானது இருப்புப்பிடியாக பிடித்திருந்த இடம் வலியைக்கொடுத்தது.

"பிளீஸ் கையை விடுங்க நான் சம்மதம் சொல்லியது உங்களுக்கு பிடிக்கலை என்று தெரியுது என்னால் மறுக்க முடியாமல் ஒத்துக்கிட்டேன். ஆனால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க" என்று பேசிக்கொண்டே போனாவளை இழுத்து அங்கிருந்த சுவற்றில் சாய்த்து இருபக்கமாக கையை வைத்து அவளை விலகி போகாமல் நிறுத்தியவன்.

" ஓஓஹே இதுதான் உன் பிளானா நானாக கல்யாணத்தை நிறுத்திட்டா உங்க குடும்பத்தின் மேல் எந்த பழியும் வராமல் என்னால் தான் உங்க அக்கா ஓடிவிட்டாள் என்று பழியை என் மேல் போட்டுட்டு வேற எவனையாவது உன் டாடி காட்டுவார் அவனை கல்யாணம் பண்ணிட்டு போயிடுவாய் நான் இங்க எல்லா பழியையும் ஏத்திட்டு இருக்கனும் இல்லையா????...."

" அய்யோ.... அப்படி இல்லை உங்களுக்கு என்னை பிடிக்காது அதனால் தான் சொன்னேன்." என்றாள்.

" எனக்கு உன்னை பிடிக்கும் என்றோ பிடிக்காது என்றோ சொன்ன மாதிரி எனக்கு நியாபகம் இல்லையே. அப்படியே உன்னை பிடிக்கலை என்றாலும் இப்ப இந்த கல்யாணம் நடக்கனும் என்று என் தாத்தா பாட்டி விரும்பறாங்க அதனால் இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்."

" அது மட்டும் இல்லாமல் உன் கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கு. அதில் இப்போது உன் அக்கா ஓடிப்போனதும் சேர்ந்திடுச்சு உன் அக்கா ஓடிப்போகப்போறா என்று உனக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கு" என்று பேசிக்கொண்டு இருந்தவனின் பேச்சில் இடையிட்டு

"இல்லை... எனக்கு தெரியாது நிலா ஓடிப்போவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றாள்.

"தெரியாதா?..." என்றவன் அவளின் கையைப்பற்றி தூக்கி அவளின் முகத்துக்கு நேராக காட்டி தெரியாதவள் தான் நிச்சயதார்த்தம் அன்னைக்கு என் கையால் இந்த மோதிரத்தை போட வச்சியா அப்புறம் உன் கழுத்தில் தாலி கட்ட ரெடியாக இருங்க அத்தான் என்று சொன்னாயா?...." என்றான்.

" அது... அது...." என்று தினறினாள் பனிமலர்.

" ம்ம்... சொல்லு உனக்கு எல்லாம் தெரிந்து இருக்கு . ஒரு வேளை உன் அக்காவிற்கு பிளான் போட்டுக்கொடுத்தவளே நீதானா?..."

" இல்லை... அப்படியில்லை... நான் எதுவும் பிளான் போடலை... "என்று கண்களில் நீர் வழியக்கூறியவளை பார்த்தவன்

"நீ என் பின்னாடி சுத்தி சுத்தி வந்தும் நான் உன்னை திரும்பிக்கூட பார்க்கலை ஆனால் உன் அக்காவை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன். அது உனக்கு பிடிக்கலை அதனால் அவளை குழப்பி ஓடவச்சுட்டா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க என்று பிளான் போட்டு எல்லாம் பண்ணிட்டு இப்ப இப்படி கண்ணீர் விட்டு மத்தவங்களை ஏமாற்றலாம் ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. "

" இப்பக்கூட என்னால் இதே முகூர்த்தத்தில் வேறு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும். ஆனால் உன்னை ஏன் பண்ணிக்கிறேன் தெரியுமா நீ பண்ண எல்லாத்துக்கும் உனக்கு தண்டனை தரனும் இல்லையா அதுக்கு தான். "

அதனால் இப்ப போய் எந்த பிரச்சினையும் பண்ணாமல் கல்யாணத்திற்கு ரெடியாகு" என்று கூறிய சூர்யா தன் கையை சுவற்றில் இருந்து எடுத்ததும் பனிமலர் கதவை நோக்கி வேகமாக சென்றாள்.

"ஒரு நிமிஷம்" என்று அவளை தடுத்து நிறுத்தியவன் "நீ எதாவது எனக்கு எதிராக செய்யுற என்று தெரிந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் உன் அக்காவும் அவளின் புருஷனும் இருந்த இடம் தெரியாமல் போயிடுவாங்க" என்றான்.

அதை கேட்ட பனிமலர் அதிர்ந்து பயத்துடன் "இல்லை நான் எதுவும் பண்ணமாட்டேன் அவங்களை எதுவும் பண்ணாதிங்க" என்றாள்.

" அது நீ நடந்துகொள்வதில்தான் இருக்கு அப்புறம் உன் பிரண்ட்ஸ் இன்னைக்கு தான் கடைசியாக இருக்கனும் நீ அவங்க கிட்ட பேசுறது நாளையிலிருந்து அவங்க உன் பக்கம் வந்தா உனக்கு எதுவும் ஆகாது ஆனால் அவங்களுக்கு என்னவென்றாலும் ஆகலாம்" என்று கூறிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறினான் சூர்யபிரகாஷ்.

நின்ற இடத்திலேயே சிலையாக நின்றாள் பனிமலர். என்னவெல்லாம் சொல்லுகிறான் என் மீது சிறு நம்பிக்கை கூட இல்லையா இவனுக்கு என்று எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருந்தவளை கலைத்தது காலடி ஓசையும் பேச்சிக்குரலும் இங்கு தான் வருகிறார்கள் என்று அறிந்து வேகமாக குளியல் அறை புகுந்து கதவை மூடி அதன் மீதே சாய்ந்து நின்றாள் பனிமலர்.

குளியல் அறை கதவு தட்டும் ஓசையில் இதே வரேன் என்று கூறி வேகமாக முகம் கழுவி துடைத்து வெளியே வந்தவளை அங்கிருந்தவர்கள் அழைத்து சென்று எண்ணெய் நலங்கு வைத்து அதன் பிறகு குளித்து வந்தவளுக்கு மணப்பெண் அலங்காரம் செய்து இருந்தனர்.

காலையில் நடந்தவைகளை நினைத்துக்கொண்டு இருந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கி இருந்தாள்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 35



மாலை ஆறு மணியளவில் ரிஷப்ஷன் தொடங்கியது. உறவினர் கூட்டத்தை விட தொழில் முறை தொடர்பானவர்களால் மண்டபம் நிறைந்து இருந்தது. அழகான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சூர்யாவும் பனிமலர் நின்று வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டுயிருந்தனர்.

புகழ்பெற்ற வடிவமைப்பாளரின் கைவண்ணத்தில் உருவான தாமரை பூ நிறத்தில் கவுனும் அதற்கு பொருத்தமான வைரநகைகள் அணிந்து பூக்கள் நடுவே அவளும் பூவாக நின்று இருக்க சூர்யா பனிமலரின் உடைக்கு பொருத்தமாக அதே தாமரை நிறத்தில் சில்வர் கலர் கலந்த ஷெர்வானி அணிந்து ஆணழகனாக நின்றிருந்தான்.

வந்திருந்தவர்கள் அனைவரும் பார்த்ததும் பொருத்தமான ஜோடி என்று நினைத்ததும் இல்லாமல் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டு இருந்தனர். புன்னகை முகமாக வரவேற்று வாழ்த்துக்களை பெற்று புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதுமாக இருந்தனர் சூர்யா பனிமலர்.

பனிமலர் சற்று சோர்வாக தெரிந்தாலும் அவளை அறைக்கு அழைத்து சென்று பழச்சாறு குடிக்க வைத்து மீண்டும் மேடைக்கு அழைத்து வருவான். அவள் வேண்டாம் என்ற போதும் அவளை அழைத்து சென்று பத்து நிமிடங்களாவது அறையில் அமரவைத்து அழைத்து வருவான்.

இரவு உணவு உண்ணவும் அதே போல அழைத்து சென்று உணவு உண்டு வந்த பிறகே மீண்டும் ரிஷப்ஷன் மேடையில் நின்றனர். இரவு பதினோரு மணியை நெருங்கிய போதும் சிலர் தாமதமாக வந்து கொண்டு தான் இருந்தனர்.

பார்வை மேடையில் இருந்தாலும் சிந்தனை எங்கே இருப்பதை போல் அமர்ந்து இருந்த சாருமதியை கண்ட சந்திரபிரகாஷ்

"ஏய் மதி" என்று உலுக்கவும் சிந்தனை கலைந்த சாருமதி

"என்ன மாமா?..." என்றாள்.

"என்ன யோசனை? " என்றான் சந்திரபிரகாஷ்.

"இல்ல மாமா காலையில் கல்யாணப்புடவையோட பிளவுஸ் எழில்நிலா அளவுக்கு தானே தைத்து இருப்பாங்க. ஆனால் மலருக்கு தைத்த மாதிரியே சரியா இருந்தது. அதை கூட ஆல்ட்ரேஷன் பண்ணி இருக்கலாம் என்று சொல்லலாம் ஆனால் இந்த டிரஸ் எழில்நிலா அளவுக்கு தைத்தது. அவளை விட பனிமலர் கொஞ்ச உயரம் அளவும் வேற வேற தான் ஆனால் இப்ப மலருக்கு என்றே தைத்த மாதிரி அவளின் கலருக்கு ஏத்தமாதிரி இருக்கு."

" நிச்சயதார்த்தத்தில் ஒரு சின்ன சிரிப்பு கூட சிரிக்காதவர் இன்னைக்கு வாய்விட்டு சிரிக்கவில்லை என்றாலும் முகம் ரொம்ப பிரைட்டா இருக்கு. அது மட்டுமில்லாமல் பொண்டாட்டியை இவ்வளவு பேர் எதிரில் தாங்கு தாங்கு என்று தாங்கிட்டு இருக்கார்" என்று சாருமதி சொல்லிக்கொண்டு இருக்கும் போது சந்திரபிரகாஷ் இடையிட்டு

" இப்ப நீ என்னதான்டி சொல்ல வர?... " என்றான்

" இல்ல மாமா சூர்யா பனிமலரை லவ் பண்ணுறாரோ என்று தோன்றுது" என்றாள் சாருமதி.

" ஏன்டி இதைத்தான் இவ்வளவு நேரம் யோசித்திட்டு இருந்தியா நீ சொன்னது போல எழில்நிலாவுக்கு தைத்ததாக இருந்தாலும் அதை வடிவமைச்சு தைத்தவங்க இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் அவங்க தைக்கு உடைகளை ஆட்களுக்கு ஏற்ற மாதிரி உடனே மாற்றி அமைக்கும் திறமை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதுமாதிரி தான் இந்த டிரஸை சரி செய்து இருப்பாங்க."

" இவ்வளவு பேர் இருக்குற இடத்தில் உம்முனு இருந்தால் எல்லாரும் ஆளாளுக்கு ஒரு புரளியை கிளப்பி விட்டுடுவாங்க அப்புறம் எழில்நிலா ஓடிப்போனதை பத்தி பேச ஆரம்பித்து விடுவாங்க அதை நினைவு படுத்தாமல் இருக்கத்தான் இப்ப பொண்டாட்டியை பார்த்து பார்த்து கவனிக்கிறான். இப்ப எல்லாரும் எழில்நிலாவை மறந்து பனிமலரை அவன் கவனிக்கிறதை பற்றி தானே பேசுறாங்க."

" அதான்டி அவனுடைய பிஸ்னஸ் மைண்ட் எவ்வளவு ஈஸியா எல்லாரையும் டைவர்ட் பண்ணிட்டான். இது தான் அவன் குறுகிய காலத்தில் தொழிலில் உச்சத்தில் உட்கார வைத்து இருக்கு. அப்புறம் அவன் லவ் பண்ணியிருந்தா நேரடியாக பனிமலரை பெண் கேட்க சொல்லி இருப்பான். இப்படி தலையை சுற்றி மூக்கை தொட்டு இருக்கமாட்டான் அதனால் இது மாதிரி தப்பு தப்பாக யோசிக்காமல் வீட்டுக்கு கிளம்பனும் அந்த வேலையை போய் பார்" என்று கூறி அங்கிருந்து நகர்ந்தான்.

சந்திரபிரகாஷ் கூறியதை கேட்ட சாருமதிக்கு அது சரியாக படவே சூர்யாவை பற்றி தெரிந்த என்னையே இப்படி நினைக்க வச்சி இருக்கான் என்றால் அவனை பற்றி தெரியாதவங்க அவனை பற்றி நல்லதாக நினைக்கத்தான் இப்படி செய்கிறான் என்று நினைத்தாள்.

ரிஷப்ஷன் மேடையில் இருந்த வரை எதையும் சிந்திக்காமல் இருந்த பனிமலர் அனைத்தும் முடிந்து வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்னும் போது தான் இனி சூர்யாவின் வீட்டில் தான் இருக்கவேண்டும் தன் குடும்பத்தினருடனும் தன் நண்பியுடனும் இருக்க முடியாது என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் உருண்டோடியது. பார்வை தமிழை தேடியது.

அவள் தன் பெரியண்ணை மாலினி ஆன்ட்டி உடன் எடுத்து வந்த பொருட்களை எடுத்து வைக்க உதவிக்கொண்டு இருந்தாள். எழுந்து அவளிடம் சொல்ல நினைத்தவளை இருக்கையில் இருந்து எழவிடாமல் கைகளை இறுக்கமாக பிடித்து இருந்தான் சூர்யா.

அவனை பனிமலர் பார்த்து நான் "தமிழ் கிட்ட பேசிட்டு வரேன்" என்றாள்.

"அவள் கிட்ட பேச என்ன இருக்கு அதான் இனி அவகிட்ட பேசக்கூடாது என்று சொன்னேன் இல்லையா இப்படி கண்ணீர் விட்டுட்டு இருக்கிறதை முதலில் நிறுத்து நம்ப வீட்டுக்கு கிளம்பலாம்" என்றான்.

அதில் அவளின் கண்ணீர் இன்னும் அதிகமாகியது.

அதை கண்ட சூர்யா "ஏய் இப்ப என்னடி நடந்திடுச்சு இப்படி அழுதிட்டு இருக்க அங்க பாரு உன் டாடியும் மம்மியும் வராங்க இப்படி அழுவதை பார்த்தா அவங்களும் வருத்தப்படுவாங்க" என்றான்.

சூர்யா மம்மி டாடி வருகிறார்கள் என்றதும் வேகமாக கையில் இருந்த கர்ச்சீப் கொண்டு தன் கண்ணீரை துடைத்தாள் பனிமலர்.

" சித்துமா" என்று வந்த பெரிய தந்தையை " டாடி" என்று அணைத்துக்கொண்டாள் பனிமலர்.

பனிமலரிடம் சிறிது நேரம் மாமியார் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் சொல்ல அனைத்திற்கும் தலையாட்டினாள். அவளிடம் பேசிவிட்டு சூர்யாவிடம் பெரிய தந்தையும் தாயும் பேசவும் அங்கிருந்து மெல்ல நகர்ந்து தமிழ் இருந்த இடம் சென்றவள் அவளின் கை பிடித்து அழைத்து சென்று அறைக்குள் நுழைந்து தமிழை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

பனிமலர் அழுவதை கண்ட தமிழ் அவளை விலக்கி நிறுத்தி "உனக்கு என்னடி ஆச்சு எப்ப பார்த்தாலும் அழுதிட்டு இருக்கிறாய். இவ்வளவு நாள் தான் அவனை கல்யாணம் பண்ண முடியாதோ என்று கவலையில் இருந்த இப்ப தான் அவனை கல்யாணம் பண்ணிட்ட இல்லயா அப்புறம் எதுக்கு இப்படி இருக்க?... உன் இயல்பான தைரியத்தையும் எதையும் ஈஸியா எடுத்துட்டு கடந்து போகும் குணத்தையும் விட்டுட்டு நீ இப்படி அழுதிட்டு இருக்கிறது நல்லாவே இல்லை."

" நீ அவனை கல்யாணம் பண்ணிக்க எந்த முயற்சியும் செய்யலை, நீ எதாவது செய்து அதனால் உன் அக்கா கல்யாணம் தடைபட்டு இருந்தால் நீ வருத்தப்படுறது சரி என்று ஏத்துக்கலாம். ஆனால் உன் அக்கா அவங்களா ஓடிப்போய் இருக்காங்க அவங்களுக்கு உன் காதல் பற்றி கூட தெரிந்து இருக்காது அப்படி இருக்கும் போது செய்யாத தப்புக்கு உன்னையே ஏன் வருத்திட்டு இருக்க."

" நீ இப்படி இருப்பதை உன் டாடி, மம்மி, பாட்டி பார்த்தா பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வச்சுட்டோம் என்று அவங்களும் வருத்தப்படுவாங்க அது தான் உனக்கு வேண்டும் என்றால் இன்னும் நன்றாக அழு" என்று கோபமாக கூறினாள் தமிழ்.

பனிமலர் எப்போதும் தைரியமான பெண் தான் அப்படித்தான் அவளை அவளின் தந்தை கேசவன் வளர்த்து இருந்தார். ஆனால் தாய் தந்தை இறப்பினால் அவளின் இயல்பான துடுக்குத்தனம் மறைந்து எப்போதும் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

ஆகாஷ் தான் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்தான். அதன் பிறகு தமிழின் நட்பு மீண்டும் தன் பழைய துள்ளலை கொண்டு வந்தது. அடுத்து சூர்யாவை கண்ட பிறகு அவளின் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக சென்றது.

நிச்சயதார்த்த விழாவில் மாப்பிள்ளையாக சூர்யாவை கண்டு முதலில் வருந்தியவள் அதன் பிறகு சூர்யாவை திருமணம் செய்ய தனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று சந்தோஷத்துடன் இருந்தாள். திருமண நாள் நெருங்கிய போது தான் எழில்நிலா திருமணத்தை நிறுத்தவில்லை தன் சூரியனை இழந்துவிட்டோம் என்று மனதிற்குள் வேதனைப்பட்டு இருந்தவளுக்கு எழில்நிலா ஓடிச்சென்றது மனதை பாதித்தது என்றால் தன் குடும்பம் அவமானப்பட்டதும் தன் பெரிய தந்தை மன்னிப்பு கேட்டதும் மனதை அதிகமாக பாதித்து இருக்க தன் இயல்பை முற்றிலும் தொலைத்து கண்ணீர் விட்டு கொண்டு இருந்தாள் பனிமலர்.

இப்போது தமிழின் பேச்சு அவளை சிந்திக்க வைத்ததோடு இல்லாமல் தன் அழுகை தன் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்றதும் முற்றிலும் அழுகை நின்றது.

மேலும் அவளை சரியாக சிந்திக்கும் படியாக தமிழின் பேச்சும் இருந்தது.

"நீ இப்படி இருந்தா உன்னை ஈஸியா அவனின் கட்டுபாட்டில் கொண்டு போயிடுவான் என்றாள் தமிழ்.

தமிழின் பேச்சு புரியாமல்" என்னடி சொல்லுற புரியலை?.. "என்றாள்.

" அதான் உன் சூரியன் அவன் இன்னைக்கு நடந்து கொண்டதை பார்த்தவங்க எல்லாரும் அவன் நல்லவன் பாசமானவன் என்று தான் சொல்லுவாங்க ஏன் நீயும் அப்படி தான் நினைக்கிற ஆனால் அது அவனின் நடிப்பு."

"நேற்று வரை உன்னை பார்த்தாளே வருத்திக்கொண்டு இருந்தவன் ஒரே நாளில் மாறிட்டான் என்று சொன்னால் நம்பும் படியாகவா இருக்கு. அவன் ஆகாஷால் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான். ஆகாஷை எப்படியாவது பழிவாங்க நினைக்கிறான் அதில் முதல்படியாக நம்ப பிரண்ட்ஸிப்பை கட் பண்ணுவான் தோணுது. நீ இப்படி அழுதுட்டு இருந்தாள் அவன் நினைக்கிறதை ஈஸியா நடத்திப்பான். அதனால் இந்த அழுகையை தூக்கி போட்டுட்டு அவனின் பிளானை தடுக்கனும் என்றால் தூங்கிட்டு இருக்க உன் மூளையை கொஞ்சம் தட்டியெழுப்பி வச்சுக்க."

அடுத்து ஆகாஷ் மீதான தவறான எண்ணத்தை மாற்ற முயற்சி செய் அப்படி செய்தாலே எல்லாம் சரியாகிவிடும். அவன் மீதான உன் உண்மையான காதல் தான் இன்னைக்கு அவனை உன்னிடம் சேர்த்து இருக்கு. அந்த காதல் அவனையும் மாற்றி உன்னுடன் வாழவைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு."

தமிழ் அவன் நம்ப பிரண்ட்ஸிப்பை பிரிப்பான் என்றதுமே பனிமலருக்கு தமிழ் கூறுவது சரியே என்று தோன்றியது. ஏனெனில் அவன் ஏற்கனவே அவர்களின் பிரண்ட்ஸிப்பை பிரிக்க ஆரம்பித்து விட்டானே அதுமட்டும் இல்லாமல் அவளுக்கு தண்டனை கொடுக்கத்தான் இந்த திருமணம் என்றும் சொல்லி இருக்கிறான். தமிழ் அவனை சரியாக கணித்து இருக்கிறாள்.

தமிழ் சொல்வது போல் அவன் விருப்பத்திற்கு தன்னை வளைத்துவிட நினைப்பான் கண்டிப்பாக அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. என்ன தான் அவனை தான் காதலித்தாலும் அவனிடம் அந்த காதல் இல்லையே. அதுவும் இல்லாமல் பழிவாங்க திருமணம் செய்து இருக்கேன் என்று அவனே சொல்லி இருக்கான்.

அதனால் தமிழ் சொன்னது போல் விழிப்புடன் இருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் அவனின் திட்டத்தை செயல்படுத்தும் முன் நான் என் வேலையை காட்டனும் அப்பத்தான் அவனுக்கு நான் யார் என்று தெரியும்.

அவன் ஹீரோவாக நடந்தால் நான் ஹீரோயினாக இருப்பேன். அதுவே அவன் வில்லத்தனம் காட்டினால் நான் வில்லியாக மாறவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தாள் பனிமலர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 36



தோழி சிந்திக்க ஆரம்பித்து விட்டாள் இனி சரியாகிவிடுவாள் என்று தமிழ் நிம்மதியடைந்தாள். அதன் பிறகு மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்களை பாட்டியின் வருகையால் நின்றது.

பாட்டியும் சிறிது நேரம் கண்கலங்க பேசிக்கொண்டு இருந்தார். பின் கிளம்ப வேண்டும் என்று சூர்யா வரவும் அவனுடன் நடந்தாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு வரை அழுது கொண்டு இருந்தவள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் அந்த அளவுக்கு அவளின் முகத்தில் தெளிவும் நிமிர்வும் வந்திருந்தது.

பத்து நிமிடத்திற்குள் அவளிடம் இருந்த மாற்றம் சூர்யாவை ஆச்சரியப்படவைத்தது.

அனைவரிடமும் விடை பெற்று சூர்யாவின் காரில் ஏறியமர்ந்தாள் பனிமலர். புதிதாக திருமணமானவர்கள் கணவனுடன் வாழ்ப்போகும் வாழ்க்கையை பற்றி கனவுகளை சுமந்து கொண்டு செல்வார்கள் என்றால் பனிமலர் அவனின் பழிவாங்கும் எண்ணத்தை எப்படி ஒன்றும் இல்லாமல் செய்வது என்ற சிந்தனையுடன் சென்றாள்.

ஏற்கனவே ஆலம் சுற்றி வரவேற்று விட்டதால் இப்போது நேராக வீட்டினுள் சென்றனர். மணி பதிரெண்டை தொட்டுக்கொண்டு இருந்தது. ஏற்கனவே வீட்டிற்கு வர நேரமாகும் என்பதால் அன்றைக்கு முதலிரவு ஏற்படும் எதுவும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தனர் பெரியவர்கள்.

அதனால் விருந்தினர் அறையில் பனிமலரை அழைத்து சென்று அவளுக்கு சாருமதி உதவி செய்துவிட்டு சென்று இருந்தாள். பனிமலர் குளித்து விட்டு வந்தபோது கதவு தட்டப்பட்டது.

கதவை திறந்த போது பாட்டி நின்றிருந்தார். "மலருமா இன்னைக்கு ஒரு நாள் பாட்டி உன் கூட படுத்துக்கிறேன்டா" என்றார்.

அதுவரை புது இடம் என்பதும் தனியாக படுக்கவேண்டுமே என்று இருந்தவளுக்கு பாட்டி வந்தது ஆறுதலாக இருந்தது. வயதின் காரணமாகவும் மணி பதிரெண்டை தாண்டியதால் பாட்டி படுத்த உடனே உறங்கிப்போனார்.

பனிமலருக்கும் காலையில் சீக்கிரம் எழுந்தது அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளில் உடல் சோர்வாக இருந்தபோதும் மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. தன்னவனிடம் வந்து சேர்ந்துவிட்டதால் வந்ததா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் இதுவரை அழுத்திக்கொண்டு இருந்த பாரம் இறங்கி மனம் லேசாகி இருந்தது.

அதனால் அவளால் உறங்க முடியவில்லை தமிழுக்கு மெசேஜ் பண்ண நினைத்தவள் பிறகு வேண்டாம் என்று நினைத்து தன் போனை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அவள் கை கேலரியை ஓபன் செய்து இருந்தது. தன் தாய் தந்தையுடன் இருந்த புகைப்படத்தை எடுத்தவள்

அப்பா அம்மாவின் உருவத்தை தன் விரல்களால் வருடிக்கொடுத்தாள். நீங்க என் கூடதான் இருக்கிங்க அதான் என் மனசை அறிந்து என் சூர்யாவை கொடுத்து இருக்கிங்க என்று மனதிற்குள் அவர்களிடம் பேசியவள் மெல்ல தாய் தந்தை நிழல் உருவத்திற்கு முத்தம் பதித்து லவ் யூ அப்பா லவ் யூ அம்மா என்று உதட்டசைவில் கூறினாள்.

தாய் தந்தை புகைப்படத்தையே பார்த்திருந்தால் அழுது பாட்டி எழுந்து விடுவார்களோ என்று வேறு புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தாள். அப்படி பார்த்துக்கொண்டு இருந்தவளின் கண்களில் பட்டது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவள் எடுத்த புகைப்படங்கள்.

அவள் எடுத்த செல்ஃபிகளில் இருந்த சூர்யாவை பெரிது படுத்தி அத்தான் நான் சொன்ன மாதிரியே நீங்க எனக்கு தாலி கட்டிட்டிங்க அதே மாதிரி கூடிய சீக்கிரம் என்னை காதலிக்கவும் வைக்கிறேன் என்று மனதில் பேசிக்கொண்டு இருந்தவள் அதன் முதல் படிதான் இது என்று அவனின் நிழற்படத்திற்கு முத்தம் பதித்தவளின் முகத்தில் மெல்லிய வெட்கம் வந்தது. அந்த உணர்வுடனே உறங்கிப்போனாள் பனிமலர்.

அதே வீட்டில் அவளின் அத்தான் அவனின் அறை பால்கனியில் நின்று நிலவை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் முகத்தில் மெல்லிய புன்னகையிருந்தது. அது அவனின் திட்டத்தில் முதல்படியில் வெற்றி பெற்றதின் அடையாளம், அடுத்து என்ன செய்வது என்று திட்டங்களை தீட்டிக்கொண்டு இருந்தான் சூர்யபிரகாஷ்.

சூர்யாவின் திட்டங்கள் வெற்றியடையுமா?... இல்லை பனிமலரின் காதல் வெற்றியடையுமா?.... அது காலத்தின் கையில் தான் இருக்கிறது.

மறுநாள் பனிமலர் எழுந்தபோது நன்றாக விடிந்து இருந்தது. பாட்டியும் எழுந்து சென்று இருந்தார். தன் போனை எடுத்து பார்த்தவளுக்கு அது மணி எட்டு என்று காட்டவும் அச்சச்சே இவ்வளவு நேரம் தூங்கியிருக்கேனே என்று படிக்கையில் இருந்து வேகமாக எழுந்து குளியல் அறை புகுந்து வேகமாக குளித்து வந்தவள் தன் பெட்டியில் இருந்த புதிய ஜீன்ஸ் பேண்ட் டாப்பை எடுத்து அணிந்து கொண்டாள்.

இந்த உடையை திருமணம் முடிந்த பிறகு புடவையை மாற்றிக்கொண்டு இந்த உடையை அணிந்து கொள்ள எடுத்து வந்திருந்தாள் மாலை வரவேற்புக்கு என்று எடுத்து வந்த புடவையும் இருந்தது ஏனோ அதை அணிய விருப்பம் இல்லாமல் இலகுவான ஜீன்ஸ் டாப் அணிந்து ஈரமான முடியை ஹேர்டிரையர் கொண்டு உலர்த்தி முடியை விரித்து விடாமல் ஒரு பேண்ட் கொண்டு அடக்கியவள் மெல்லிய ஒப்பனைகளை முடித்து நெற்றியில் சிறிய பொட்டு வைத்தவள் தன்னை முழுமையாக கண்ணாடியில் பார்த்து திருப்தி அடைந்தவள் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் பனிமலர்.

ஹாலில் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க அவர்களின் அருகில் சென்றாள். அவளை கண்ட பத்மாவதி பாட்டி மலருமா அதுக்குள்ள எழுந்திட்டையா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம் இல்லையா?.. என்று கேட்கவும் அதுவரை இவ்வளவு லேட்டாக எழுந்ததற்கு என்ன சொல்லுவார்களே என்று இருந்த தயக்கம் நீங்கி இல்லை பாட்டி இவ்வளவு நேரம் தூங்கியதே அதிகம் என்றவள்

"குட்மார்னிங் தாத்தா, பாட்டி" என்றாள்.

தாத்தாவும் "குட்மார்னிங் மலர் இது உன் வீடு அதனால் எந்த தயக்கமும் வேண்டாம் கிச்சனில் போய் உனக்கு என்ன வேண்டும் என்று உன் அத்தைக்கிட்ட கேள் கொடுப்பாங்க வாங்கி குடிச்சிட்டு வா" என்றார்.

"சரி தாத்தா" என்று செல்லப்போனவளை

" மலர் கொஞ்சம் என் கூட வாம்மா என்று பூஜை அறைக்கு அழைத்து சென்றவர் சாமி கும்பிட சொல்லி குங்குமம் எடுத்து நெற்றியில் வைத்துவிட்டவர் கொஞ்சம் குங்குமம் எடுத்து தாலியில் வைக்க பாட்டி சொல்ல அதே போல செய்தாள் பனிமலர். பின் அவளை கிச்சன் அழைத்து சென்றார் பாட்டி அங்கு ஏற்கனவே மாமியாரும் சாருமதியும் இருக்க அவர்களுக்கு குட்மார்னிங் சொல்ல அவர்களும் குட்மார்னிங் சொன்னார்கள்.

"மலர் இந்த வீட்டில் வேலைக்கு நிறைய பேர் இருந்தாலும் சமையல் மட்டும் வீட்டு ஆட்கள் தான் செய்வோம். அதனால் இப்பவே உன்னை சமைக்க சொல்லலை நம்ப வீட்டு நடைமுறை பற்றி நீ தெரிந்து கொள்ள சொன்னேன் இப்போதைக்கு நீ பால் மட்டும் காய்ச்சி உனக்கும் உன் புருஷனுக்கு
எடுத்துக்க அப்புறம் ஒவ்வொன்றாக நம்ப வீட்டை பற்றி சொல்லுறேன்" என்றவர் பால் பாக்கெட் பாத்திரம் எடுத்து கொடுத்தார்.

" சரி பாட்டி" என்று வாங்கியவள் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சினாள் பனிமலர்.

" அப்புறம் சூர்யா டீ காபி காலையில் குடிக்கமாட்டான் சத்துகஞ்சி தான் குடிப்பான். இன்னைக்கு ஒரு நாள் பால் எடுத்துக்கொண்டு போய் கொடு நாளையில் இருந்து சத்துகஞ்சியை கொடுக்கிறது உன் வேலை அதை மட்டும் நீ செய் இவ்வளவு நாள் உன் அத்தை தான் அந்த வேலையை செய்திட்டு இருந்தாள் இனி நீ தான் செய்யனும்" என்றார் பாட்டி.

" அச்சச்சே அத்தை இந்த பாட்டியை பாருங்க வந்த முதல் நாளே உங்க புள்ளையை உங்க கிட்ட இருந்து பிரிக்க சொல்லி கொடுக்கிறாங்க என்று சாருமதி சொல்லவும் பனிமலர் முகம் வாடியது அதை கண்ட அம்பிகா சாருமதியின் முதுகில் ஒரு அடியை அடித்து

"அடியேய் நானே எப்படா சின்ன மருமகள் வருவா அவனின் பொறுப்பை அவகிட்ட கொடுத்திட்டு ஜாலியாக இருக்கலாம் என்று பார்த்தால் நீ அதை கெடுப்பதும் இல்லாமல் எனக்கும் என் சின்ன மருமகளுக்கு சண்டை மூட்டி விடுறீயா" என்றார்.

மலரின் கை பிடித்து "அவள் விளையாட்டுக்கு அப்படி சொல்லுறாமா நீ எதுவும் தப்பாக நினைக்காதே" என்றார் அம்பிகா.

" ஏன்டி புதுசா வந்தவளை இப்படியா பயமுறுத்துவ உன்னை" என்று சாருமதியின் காதை பிடித்து திருகினார் பாட்டி.

" அய்யோ பாட்டி வலிக்குது நீங்க நினைப்பது போல பனிமலர் அமைதியான பெண்ணு இல்லை அவளும் ஜாலி டைப் தான் புது இடம் என்றதும் அவள் கொஞ்சம் பயந்த மாதிரி தெரிந்தா அதை அதிகமாக்குவது போல நீங்களும் சமைக்கனும் புருஷனை கவனிக்கனும் என்றதும் மலர் முகம் இன்னும் அதிகமாக பயந்து போயிட்டா அதான் அவளை இயல்பாக்க அப்படி பேசினேன்" என்றதும் தான் பாட்டி சாருமதியை விட்டார்.

" இப்ப தெரியுதா மலர் நம்ப பேமலி எப்படி என்று" சாருமதி கூறியதும் மெல்லிய புன்னகையுடன் தலையாட்டினாள் பனிமலர்.

" இந்த வீட்டில் எல்லோரும் ஜாலியானவர்கள் தான் நீ எப்பவும் எப்படி இருப்பாயே அப்படியே இரு உன்னை மாற்றிக்க வேண்டியது இல்லை. இதில் சூர்யா மட்டும் விலக்கு அதிகமாக பேசமாட்டார் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று ஓடிட்டு இருப்பார் பேமலி கூட நேரத்தை செலவிட மாட்டார் அந்த ஒரு வருத்தம் தான் எங்க எல்லாருக்கும். சூர்யாவின் அந்த ஒரு விஷயத்தை மட்டும் மாற்றினாள் போதும் அது உன்னால் முடியும் என்று நாங்க நம்புகிறேன். இப்ப வா உனக்கு உங்க ரூமை காட்டுறேன்" என்றாள் சாருமதி.

இரண்டு டம்ளர்களில் காய்ச்சிய பாலை அம்பிகா ஊற்றி ட்ரேயில் வைத்து கொடுக்க அதை புன்னகையுடன் வாங்கிக்கொண்டு சாருமதியின் பின் மாடியேறினாள் பனிமலர்.

சாருமதி ஒரு அறையின் முன் நின்றவள் "இந்த அறை தான் உங்க அறை சூர்யா தூங்குறார் என்று நினைக்கிறேன் எப்பவும் ஐந்து மணிக்கு எழுந்து ஜிம் ரூம் மேலே இருக்கு அங்க போயிடுவார் இன்னைக்கு இன்னும் போகலை ரூமில் தான் இருக்கார் உள்ளே போ" என்று கூறிவிட்டு சாருமதி கீழே சென்றாள்.

மெல்லிய அச்சம் இருந்த போதும் கதவை தட்டினாள் பனிமலர் முதல் முறை தட்டிய போது எந்த பதிலும் இல்லாமல் போக இரண்டாம் முறையும் தட்டிய போது" வாங்க" என்ற தூக்க கலக்கத்தில் இருந்து வருவது போல் குரல் வந்தது.

மெல்ல கதவை திறந்தவளுக்கு ஏஸியின் அதிகமான குளுமை உடலை சிலிர்க்க வைத்தது. கட்டிலில் தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு உடல் முழுவதும் கனமான போர்வையை போர்த்திக்கொண்டு படுத்திருந்த சூர்யா கண்ணில் பட்டான்.

அவனை சூரியன் என்று அழைப்பதா இல்லை அத்தான் என்று அழைப்பதா என்று மனதுக்குள் பனிமலர் பட்டிமன்றம் செய்து கொண்டு இருக்க, கதவை தட்டி உள்ளே வந்ததும் தாயின் சூர்யா என்ற அழைப்பு இல்லாமல் போகவே சூர்யா தலையை திருப்பி பார்க்க அங்கே கையில் டிரேவை வைத்து கொண்டு புத்தம் புது மலராக நின்று இருந்தவளை கண்டதும் அவனின் முகம் மலர்ந்து.

"குட்மார்னிங்" என்று கூறி போர்வையை விலக்கி எழுந்தமர்ந்தான் சூர்யா.

சூர்யாவின் தோற்றத்தை கண்டவளின் முகம் மெல்லிய வெட்கத்தை பூசிக்கொண்டது. எப்போதும் புல் பார்மில் உடையணிந்து பார்த்தவளுக்கு இன்று தலை கலைந்து உடலை இறுக்கிய கையில்லாத டீ சர்ட் முட்டி வரை இருக்கும் ஷார்ட்ஸ் அணிந்து இருந்தவனின் தோற்றம் மனதில் பதிந்தது.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 37



"ஒரு நிமிஷம் வந்திடுறேன்" என்று கூறி எழுந்தவன் அங்கிருந்த ஒரு கதவை திறந்து உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் நீர் விழும் சத்தம் கேட்கவே அது குளியல் அறை என்று அறிந்தவள் அந்த அறையை சுற்றி பார்த்தாள்.

பெரியதாக இருந்த அறையில் பொருட்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. குளியல் அறை கதவிற்கு பக்கத்தில் ஒரு கதவும் அதற்கு எதிர்புறமாக ஒரு கதவும் இருந்தது. பெரிய திரைச்சீலை ஒரு பக்கச்சுவர் முழுவதும் மறைத்து இருக்க அங்கு பால்கனி இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே குளியல் அறை கதவை திறந்து கொண்டு டவலால் முகத்தை துடைத்தபடி சூர்யா வந்தான்.

"ஏய் இன்னுமா நின்னுட்டு இருக்க உட்கார வேண்டியது தானே அதுவும் கையில் இருக்கிறதை கூட கீழே வைக்காமல் இருக்க" என்றான்.

"இல்ல.... அது..." என்று அவள் என்ன சொல்வது என்று தடுமாற அதை புரிந்தவன் போல்

"ஓகே வா இப்படி உட்கார்" என்று அங்கிருந்த சோபாவை காட்டினான். அவளும் கையில் இருந்த டிரேவை வைக்காமல் சோபாவை நோக்கி சொல்ல

" ஒரு நிமிஷம்" என்று அவளை நிறுத்தி கையில் இருந்த டிரேவை வாங்கி அங்கிருந்த டீபாயில் வைத்தான்.

பனிமலர் சோபாவில் அமரவும் அவளின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான் சூர்யா.

தன் எதிரில் அமர்ந்து இருந்தவனின் தோற்றத்தை நேரடியாக பார்க்க முடியாமல் தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள் பனிமலர்.

டிரேயில் இருந்த பால் டம்ளர் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்து மற்றொன்றை தனக்கு எடுத்தவன் அதில் இருந்த பாலை பார்த்து "என்ன இது?..." என்றான்.

"பால்" என்றாள் மெல்லிய குரலில்

"பாலா அது நைட்டு தானே கொடுத்து விடுவாங்க ஒரு வேளை நைட் நடக்கலை என்று பகலில் கொண்டாடலாம் என்று எடுத்து வந்தியா?..." என்று கிறக்கமான குரலில் சூர்யா கேட்கவும்.

அதிர்ந்தவள் தன் கையில் இருந்த டம்ளரை டீபாயில் வைத்து விட்டு எழுந்து அறையை விட்டு வெளியேற இரண்டு அடி எடுத்து வைத்தவளால் மூன்றாவது அடி எடுத்து வைக்க முடியவில்லை சூர்யாவின் அணைப்பில் இருந்தாள் பனிமலர்.

அவனிடம் இருந்து விலக நினைத்து திமிறியவளை இன்னும் இறுக்கி அணைத்து இருந்தான் சூர்யா.

"பிளீஸ் விடுங்க நான் போகனும்" என்றவளின் குரலில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

"போகலாம் அதுக்கு முன்னாடி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ" என்றான்.

"என்ன?.... என்று தயக்கத்துடன் கேட்டாள்.

" பால் நைட்டு தானே எடுத்து வரனும் இப்ப எடுத்து வந்து இருக்கியே என்று கேட்டேன் " என்றான்.

" அது.. அது.. பாட்டி தான் என்னை பால் காய்ச்ச சொல்லி அதை எடுத்திட்டு வந்து உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க அதான் எடுத்து வந்தேன்" என்றாள்.

" ஓஓஹோ அப்படியா அப்ப நான் நினைச்சது இல்லையா?... சரி வா முதல் முதலாக எனக்காக பால் காய்ச்சி எடுத்து வந்து இருக்க அதை வேஸ்ட் பண்ணக்கூடாது" என்று கூறியவன் பனிமலரை சோபாவில் அமரவைத்து அவளின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு பால் டம்ளரை அவளின் கையில் வைத்து குடி என்று சொல்லியவன் தானும் எடுத்து அருந்தினான்.

பாலை குடித்துக்கொண்டு இருந்தவளின் மனதில் எழுந்தது எல்லாம் இவன் என்ன இப்படி எல்லாம் பேசுறான். முன்னாடி வில்லன் மாதிரி முகத்தை வச்சிட்டு பார்க்கும் போது எல்லாம் திட்டிட்டு இருப்பான். ஆனால் இப்ப இப்படி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான். எதுக்கு இப்படி பண்ணுறான் ஒரு வேளை தமிழ் சொன்னது போல் என்னை இம்ப்ரஸ் பண்ணி அவன் சொல்லுறதுக்கு எல்லாம் தலையாட்ட வச்சு ஆக்குவை பழிவாங்க நினைக்குறானோ?...

கண்டிப்பாக அப்படி தான் இருக்கும், அடியேய் பனிமலரு இனி அவன் இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணா பனி மாதிரி உருகிடாத ஸ்டெடியாய் இரு என்று தனக்கு தானே மனதில் கூறிக்கொண்டாள்.

பாலை இருவரும் குடித்து முடித்ததும் எழுந்து நின்றவன் கையை அவள் புறம் நீட்ட

அவனை கேள்வியாக என்ன என்று பார்த்தவளின் கண்களில் இப்போது மயக்கம் இல்லை அதற்கு பதிலாக எச்சரிக்கை உணர்வு வந்திருந்தது.

"நம்ப ரூமுக்கு முதல் முதலாக வந்து இருக்க சுற்றி காட்ட வேண்டாமா?..." என்றான்.

ஆமாம் இது பெரிய தாஜ்மஹால் அதை சுத்தி காட்டப்போறானா என்று நினைத்துக்கொண்டே அவனின் கை பற்றாமல் எழுந்து நின்றாள்.

அவனின் கையையே பிடித்து இருக்கலாம் என்று அவள் நினைக்கும் அளவுக்கு அடுத்து அவன் செய்த செயல் இருந்தது. அவனின் ஒரு கை அவளின் இடையை சுற்றி இருந்தது.

அவனின் கையை விலக்கமுடியாது என்று அறிந்தவள் அவனின் இழப்புக்கு சென்றாள் பனிமலர். ஒவ்வொன்றாக காட்டியவன் மூடிய கதவை திறந்து உள்ளே அழைத்துச்சென்றான். அந்த அறை அவனின் அலுவலக அறை என்று பார்த்ததும் தெரிந்தது. அந்த அறையும் நேர்த்தியாக இருந்தது. அறையை விட்டு வெளியே வந்த போது இன்னொரு பூட்டப்பட்ட அறையை காட்டி இந்த அறையை நான் இன்னொரு நாள் காட்டுறேன் என்று கூறியவன் அங்கிருந்த பெரிய திரைச்சீலையை விலக்கியதும் பனிமலரின் கண்கள் விரிந்தன.

முழுவதும் கண்ணாடியால் சுவர் அமைக்க்கப்பட்டு இருக்க அதன் பின்புறம் அழகிய மலர்த்தோட்டமும் அதன் நடுவே ஊஞ்சலும் இருந்தது. சிறிய பால்கனியாக இருக்கும் என்று நினைத்திருந்தவளுக்கு கண்ணாடி கதவை திறந்து அந்த பக்கம் சென்றபோது பெரிய பால்கனியும் அதில் விதவிதமான செடிகளும் கொடிகளும் பூத்துக்குலுங்க பூக்களின் வாசம் அவளை மயக்கியது.

ஒவ்வொரு பூக்களின் அருகில் சென்று அதனின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள் பனிமலர்.

அணிந்திருந்த ஷார்ட்ஸ் பாக்கெட்டில் கைவிட்டு அவளை ரசித்துக்கொண்டிருந்தவன்
பனிமலரின் பின்னால் சென்று நின்று ஒரு கையால் பின்னிருந்து அணைத்தவன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து

"பிடிச்சிருக்கா?" என்று உதடுகள் கன்னத்தில் உரச கேட்டவனின் தாபக்குரலும் எப்போதும் அவனின் அருகில் இருக்கும் போது அவள் உணரும் அவனின் வாசமும், அணைப்பும் அவளின் உடலில் இரசாயன மாற்றங்களை செய்து அடிவயிற்றிலிருந்து ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் உடல் முழுவதும் பறப்பது போன்ற உணர்வும் அவளை நிலையிழக்க செய்ய கண்மூடி அவனின் மார்பில் தன் பின் தலையை சாய்த்து உதட்டசைவில் அத்தான் என்றாள்.

அவளின் முகத்தில் வந்து போகும் பாவங்களை பார்த்து கொண்டிருந்தவனின் கண்களில் சத்தம் வராமல் அவளின் அத்தான் என்ற அழைப்பை கேட்டதும் அவளை தன் பக்கமாக திரும்பி ஒரு கையால் அணைத்தபடி மறு கைகளை அவளின் தாடையில் பதித்து மெல்ல அவளின் முகம் நோக்கி குனிந்த நேரம்

"சித்து" என்ற அழைப்புடன் காருண்யா அந்த அறைக்குள் நுழைந்திருந்தாள். அந்த குரலில் அதுவரை இருந்த உணர்வுகள் அனைத்தும் வடிந்துவிட சட்டென்று அவனிடம் இருந்து விலகி நின்றவளின் உடலில் மெல்லிய நடுக்கம்.

"சித்து எங்க இருக்கிங்க?..." என்ற குரலில் இருவரும் ஆசுவாசமடைந்தனர். எங்கே தாங்கள் நின்ற கோலத்தை காருண்யா பார்த்து இருப்பாளோ என்ற எண்ணம் இருவருக்கும் விலகிச்சென்றது.

வேகமாக அறையினுள் சென்ற சூர்யா "குட்டிமா சித்து இங்க இருக்கேன்" என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் அவளை தூக்கிக்கொண்டு பனிமலர் அருகில் வந்தவன் "உங்க சித்திக்கு குட்மார்னிங் சொல்லுங்கடா குட்டிமா" என்றான்.

"குட்மார்னிங் சித்தி" என்று சூர்யாவின் கையில் இருந்து கொண்டே பனிமலரின் கன்னத்தில் முத்தமிட்டாள் காருண்யா.

"குட்மார்னிங் குட்டிமா" என்று கூறி காருண்யா கன்னத்தில் பனிமலர் முத்தமிட சூர்யாவிடம் இருந்து பெருமூச்சு வந்தது.

அதை கண்ட பனிமலரின் முகம் செம்மையேறியது.

"சித்து, சித்தி ரெண்டு பேரையும் பத்து பாட்டி சாப்பிட வரச்சொன்னாங்க" என்றாள் காருண்யா.

" அப்படியா குட்டிமா நீங்க சித்தியை கூட்டிட்டு போங்க சித்து குளிச்சிட்டு வரேன்" என்று கீழே இறக்கிவிட

"வாங்க சித்தி" என்று பனிமலரை கை பிடித்து அழைத்துச்சென்றாள் காருண்யா.

அவர்கள் அறையை விட்டு வெளியே செல்லும் வரை பார்த்திருந்தவன் புன்னகையுடன் குளியல் அறை புகுந்தான்.

குளித்து முடித்து ட்ராக் பேண்ட் டீசர்ட் அணிந்து கீழே வந்தவன் தனக்காக அனைவரும் காத்து இருப்பதை உணர்ந்து தன் கையில் இருந்த போனில் மணியை பார்க்க அது ஒன்பதே முக்கால் மணி என்று காட்ட

"ஏன் பாட்டி இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்கிங்க மாத்திரை போடனும் இல்லையா?..." என்று கேட்டான்.

"இன்னைக்கு எல்லாரும் எழுந்ததே லேட் சூர்யா எழுந்ததும் உன் அம்மா எல்லாருக்கும் சத்துமாவு கஞ்சி தான் கொடுத்தா அது குடிச்சதால் லேட்டாக டிபன் சாப்பிடுறோம். சரி நீயும் மலரும் உட்கார்ந்து சாப்பிடுங்க" என்றார் பாட்டி.

சூர்யா இருக்கையில் அமர்ந்து பனிமலரை பார்க்க அவளே " பாட்டி நான் அப்புறம் சாப்பிடுறேன்" என்றாள்.

" நம்ப வீட்டுக்கு வந்த முதல் நாள் ரெண்டு பேரும் ஒன்றாக உட்கார்ந்து தான் சாப்பிடனும் அதனால் இன்னைக்கு ஒரு நாள் சூர்யா பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடு" என்று அவரே வந்து பனிமலரை சூர்யாவின் பக்கத்து இருக்கையில் அமரவைத்து விட்டு இருவருக்கும் பரிமாறியவர்

"சூர்யா சாப்பிட்டதும் நீயும் மலரும் கோயிலுக்கு போயிட்டு வந்திடுங்க மதியத்திற்கு மேல் பனிமலர் வீட்டில் இருந்து வருவாங்க அதுக்குள்ள வந்திடுங்க" என்றார் பத்மாவதி பாட்டி.

சரி என்று தலையசைத்தான் சூர்யா.

"மலருமா உன் பெட்டியில் புடவை எதாவது இருக்கா இல்லை உன் தம்பிக்கு போன் செய்து எடுத்திட்டு வரச்சொல்லுறியாமா?... " என்று பாட்டி கேட்க பனிமலர் பதில் சொல்லும் முன்

" தேவையில்லை அவளுக்கு தேவையான டிரஸ் ரூமில் இருக்கு பாட்டி" என்றான் சூர்யா.

"அது எழில்நிலாக்கு " என்று சொல்ல வாயை சாருமதி திறந்த போதே அவளை சூர்யா முறைக்க திறந்த வாயை தன் கை வைத்து மூடிக்கொண்டாள் சாருமதி.

உணவு முடித்ததும் பனிமலரை அறைக்கு அழைத்து சென்றவன் ஒரு பக்கம் முழுவதும் இருந்து கபோர்டின் முன் நின்று ஒரு கதவை திறந்து காட்ட அதில் முழுவதும் விதவிதமான சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

"இங்க புல்லா சாரி இருக்கு இன்னொரு கதவை திறந்து இது மார்டன் டிரஸ் அடுத்து சிறிய டிராவை திறந்து இதில் ஜுவல்ஸ் இருக்கு" என்று கூறிக்கொண்டு இருந்தவனை ஆவென பார்த்து இருந்தவளின் மனம் இதெல்லாம் எனக்காகவா வாங்கினான் எனு‌ம் போதே இல்லையே இது எல்லாம் எழில்நிலாவிற்கு வாங்கியது என்று மூளை சொல்லியதும் அதுவரை இருந்த ஆச்சரியம் சந்தோஷம் எல்லாம் வடிந்து முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாக இருந்தாள்.

"ஏய் என்ன அப்படியே இருக்க எந்த சாரி கட்டுறது என்று குழப்பமாக இருக்கா" என்று அவனே கேள்வி கேட்டு பதிலையும் எடுத்துக்கொடுக்க ஆமாம் என்று தலையாட்டினாள் பனிமலர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 38



"கோயிலுக்கு போறதால் பட்டு சாரி கட்டிக்கோ நானே எடுத்து தரேன்" என்று பட்டுப்புடவைகள் இருந்த இடங்களை பார்த்துக்கொண்டிருந்தவனிடம்

" என்னிடமே புது பட்டு சாரி இருக்கு அதை கட்டிக்கிறேன்" என்று நகர்ந்தவளை கை பிடித்து நிறுத்தியவன் தன் தேர்ந்தெடுத்த புடவையை எடுத்து அவள் கையில் வைத்து

" இதை கட்டு" என்று சற்று கோபமான குரலில் சொல்லியவன் அந்த புடவைக்கு ஏற்ற நகைகளையும் அவனே எடுத்து கொடுத்தவன் "டிரஸ்சிங் ரூமில் உனக்கு தேவையான மற்றது எல்லாம் கபோர்டில் இருக்கு" என்று கூறி அவளை அழைத்து சென்று கதவை திறந்து விட்டான்.

குளியலறையில் உள்ளேயே உடை மாற்றும் அறை இருப்பதை கண்டவள் அங்கு சென்று கபோர்டினை திறந்து பார்க்க அங்கு இரவு உடைகள் உள்ளாடைகள் இருப்பதை கண்டவள்

இதை கூட அவனே வாங்கி வச்சிருக்கானே இவனுக்கு அளவுகள் எப்படி தெரியும் என்று நினைத்தவளுக்கு விரைவிலே பதிலும் கிடைத்தது. அவன் தொழிலே உடை வடிவமைத்து தைத்து ஏற்றுமதி தானே அவனுக்கு தெரியாதா என்று சமாதானம் அடைந்தவள் சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிடனும் இல்லை அதுக்கும் எதாவது சொல்லுவான் என்று நினைத்து கையில் இருந்த புடவையை பிரித்து பார்த்தவளுக்கு இந்த புடவையை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தவளுக்கு அதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை. அவள் தான் விடுமுறை நாட்களில் ஷாப்பிங் என்று மாலில் சுற்றுகிறாளே எதாவது கடையில் பார்த்து இருப்பேன் என்று நினைத்தவள் புடவையை கட்டி முடித்து கண்ணாடியில் பார்க்க பச்சையும் பிங்க் நிறமும் கலந்த டபிள் கலர் புடவையில் பார்டர் பிங்க் நிறத்தில் தங்க நிற சரிகையில் டிசைன் செய்யப்பட்ட பட்டு புடவை மிகவும் அழகாக தெரிந்து. பிங்க் நிறத்தில் முந்தியும் அதே நிறத்தில் பிளவுஸ் இருந்தது.

அவளின் பால் போன்ற வெள்ளை நிறத்திற்கு இன்னும் அழகை கூட்டியது அந்த புடவை. அவளின் அளவுக்கு என்றே தைத்தது போல கச்சிதமாக பிளவுஸ் இருக்க அதில் மீண்டும் குழப்பம் வந்தது.

எப்படி இது எனக்கு என்றே தைத்த மாதிரி இருக்கே எழில்நிலா அளவு இது இல்லையே இங்க இருக்கிறது எல்லாம் முன்னாடியே என் அளவில் வாங்கி வச்சு இருக்கான். அந்த கல்யாண பிளவுஸ், ரிஷப்ஷன் டிரஸ் எல்லாமே என் அளவுக்கு தான் இருந்தது அது எழில்நிலா அளவு கண்டிப்பாக இல்லை அப்படினா?... இவன் எல்லாமே பிளான் பண்ணி செய்து இருக்கான்.

என்னை கல்யாணம் பண்ண முன்னாடியே பிளான் போட்டு காய் நகர்த்தி இருக்கான். என்னை கல்யாணம் பண்ணனும் என்றால் எழில்நிலா இருக்கக்கூடாது என்று அவளை அரவிந்த் கூட அனுப்பியிருப்பானா?...

ஒரு வேளை... இவனே எழில்நிலாவை கடத்தியிருப்பானா?... எழில்நிலா இல்லை என்றால் கல்யாணம் நின்று விடும் அந்த நேரத்தில் வேறு பெண்ணை பார்த்து திருமணம் முடிப்பார்கள் இது நிறைய திருமணத்தில் நடந்து இருக்கு அதே மாதிரி இந்த திருமணத்திலும் நடக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் எழில்நிலாவை கடத்திட்டு அந்த இடத்தில் என்னை கல்யாணம் பண்ண நினைத்து இருக்கான். அதன் படியே செய்து முடித்து இருக்கான். எல்லாத்தையும் முன்னாடியே பிளான் பண்ணி தான் செய்து இருக்கான். இவ்வளவும் ஆக்குவையும் என்னையும் பழிவாங்கத்தானா?...

அன்னைக்கு பீச்சில் கூட சொன்னானே "நான் யாரேவா கூடிய சீக்கிரம் உனக்கு நான் யார் என்று தெரியும். இப்ப நீ பேசின பேச்சுக்களுக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை இருக்குடி" என்றானே.

அய்ய்யோ.... என்று நெஞ்சில் கை வைத்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள் பனிமலர். கச்சிதமாக காய் நகர்த்தி இருக்கான் இது தெரியாமல் இவன் தான் எல்லாம் என்று லவ் பண்ணிட்டு இவன் கிடைக்கலைனா சாகனும் என்று இருந்தேனே எவ்வளவு பெரிய முட்டாள் நான். இப்ப நிலாவையும் தொலைச்சிட்டு எல்லார் கிட்டயும் அவமானமும் பட்டுட்டு நிக்குதே என் குடும்பம். இதை நான் சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டாங்க அந்த அளவுக்கு செய்து இருக்காங்க.

இப்ப என்ன செய்யுறது நிலாவை எப்படி கண்டு பிடிப்பது. தமிழ், ஆக்குகிட்ட சொல்லி எப்படியாவது நிலாவை காப்பாத்தனும் சீக்கிரம் சொல்லனும் என்று நினைத்தவள் தன் போனை தேட அது அவள் தங்கியிருந்த அறையிலே இருப்பது நியாபகம் வந்தது.

வேகமாக எழுந்து கதவை திறந்து வெளியே வந்தவளின் முன் சூர்யா பச்சை நிற முழுக்கை சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து மாடல் போல நின்று இருந்தான். அவனை கண்டு திகைத்தவள் நிலா என்று கேட்க போனவள் சட்டென்று தன் கைகளால் வாயை மூடிக்கொண்டவள் இல்லை இவனை பற்றி எனக்கு தெரிந்து விட்டது என்று தெரிந்தால் அது நிலாவுக்கு ஆபத்து அதனால் எப்பவும் இருப்பது போல் இருக்கனும் என்று மனதில் நினைத்துக்கொண்டு இருந்தவளின் தோள்களை உலுக்கினான் சூர்யா.

ஏய் என்னாச்சு என்னை பார்த்து இப்படி பிரீஸ் ஆகி நின்னுட்டே அவ்வளவு அழகாகவா இருக்கேன் என்றவனின் பார்வை அவளின் முகத்தில் இல்லாமல் அவளின் உடல் முழுவதும் ரசனையாக படிந்து கொண்டு இருந்தது.

அவனை கண்டதும் அவளின் முகத்தில் வந்த திகைப்பு, கோபம் பயம் என்ற உணர்வுகளை அவன் கண்டிருந்தால் பின்னால் ஏற்படக்கூடிய பல விஷயங்களை தடுத்து இருக்கலாம். ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறது அல்லவா அதில் அவன் மனைவியை பிரியவேண்டும் அவள் நட்பின் துரோகத்தை அறிய வேண்டும் என்று இருக்கிறதே அதனால் அவளின் முகமாற்றத்தை பார்க்காமல் மனைவியின் அழகில் லயித்து இருந்தான் சூர்யா.

மனைவியை ரசித்திருந்தவனின் கண்களில் அவள் கழுத்தில் தாலியைத்தவிர எந்த நகையும் இல்லாததை கண்டவன் இன்னும் நீ ஜுவல்ஸ் போடலையா வா என்று மீண்டும் உள்ளே அழைத்து சென்று அவனே நகைகளை போட்டு விட்டான் அவனின் இழப்பிற்கு சென்று அமைதியாக நின்றவளின் மனம் உலைக்களமாக கொதித்து கொண்டு இருந்தது.

எல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல இருக்கானே இவனிடம் இருந்து நிலாவை காப்பாற்றும் வரை அமைதியாக இருக்கனும் கொஞ்சம் சந்தோகம் அவனுக்கு என் மீது வந்தாலும் நிலாக்கு ஆபத்து.

தமிழ் சொன்ன போதே கேட்டு இருக்கனும் அவள் சரியாக சொன்னால் ராட்சசன் இவன் என்று நான் தான் புரிந்து கொள்ளவில்லை. இப்ப என்னால் நிலா எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்காளோ சாரி நிலா சாரி எல்லாம் எண்ணால் தான் உன்னை எப்படியும் காப்பாற்றி விடுவேன் என்று மனதுக்குள் பேசிக்கொண்டு இருந்தவளை நினைவுக்கு கொண்டு வந்தது சூர்யாவின் அணைப்பு.

அவளின் பின்னிருந்து அணைத்து இருந்தவன் எவ்வளவு அழகா இருக்க தெரியுமா அப்படியே உன்னை கடிச்சி சாப்பிடனும் போல இருக்கு என்றவனின் ஒரு கை அவளின் வெற்றிடையை அளந்து கொண்டு இருக்க மற்றொரு கை அவளின் கன்னங்களை வருடிக்கொண்டுயிருந்தன.

அவனின் செயலில் அவளின் உடலும் உருகியது. அவனின் அருகாமைக்காக அவன் பின் சுற்றியவள் ஆகிற்றே ஒரு நாள் மட்டும் அவனை காண்பவள் அதனை வருடம் முழுவதும் நினைத்து வாழ்ந்திருந்தவளுக்கு அவனின் அணைப்பு கிடைக்கும் போது அவளின் உடலும் உள்ளமும் உருகித்தானே போகும் ஆனால் அவளின் மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவளை சட்டென நிகழ்வுக்கு கொண்டு வந்திட அவனின் கையை பிடித்து விலக்க முயன்று கொண்டே டைம் ஆச்சு பாட்டி கோயிலுக்கு போகச்சொன்னாங்க இல்லையா என்று அவனுக்கு நினைவு செய்ய

அவனும் ஆமாம் இல்ல உன்னை இப்படி பார்த்தா எல்லாம் மறந்து போகுது என்றவன் மனசே இல்லாமல் அவளிடம் இருந்து விலகி சரி வா கிளம்பலாம் என்று அவளின் கை பிடித்து அழைத்து சென்றான்.

வீட்டினரிடம் விடைபெற்று அழைத்து சென்றவன் கார் கதவை திறந்து அவளை அமரவைத்து விட்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான்.

அவனின் பக்கம் திரும்பாமல் வெளிப்பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவளின் மனம் முழுவதும் சிந்தனையே அவனும் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக காரை செலுத்தியவனின் முகத்திலும் சிந்தனை ரேகை.

அவன் அழைத்து சென்றது கபாலீஸ்வரர் ஆலயத்திற்குத்தான். அவளின் மனம் இதற்கு முன்பு இவனுக்காக தான் காத்திருந்து பின்னால் சுற்றியது அனைத்தும் நியாபகம் வந்து கண்களை கலங்கச்செய்தது.

அவளின் கை பற்றி அழைத்து சென்றவள் சாமி தரிசனம் முடிந்து கோயிலை வலம் வரும் வரை எதுவும் பேசாமல் இருந்தவன் கோயிலை விட்டு வெளி வந்த போது

"வேற எங்காவது போகனுமா?..." என்றான்.

சிந்தனையில் இருந்தவள் அவன் கேட்டதும் "ஆமாம் தமிழை பார்க்கனும்" என்று சொல்லிய பிறகே அவனிடம் போய் தமிழை பார்க்கனும் என்று சொல்லி இருக்கேனே என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள்.

அவன் அமைதியாக சென்று காரில் ஏறி அமர்ந்துவிட இவளும் காரில் ஏறி அமர்ந்த அடுத்த நொடி கார் வேகம் எடுத்தது. அவனின் வேகம் கண்டு அவளுக்கு நெஞ்சில் பயப்பந்து உருண்டோடியது. நேராக வீட்டில் வந்து காரை நிறுத்தியவன் அவள் வருகிறாளா என்பதை கூட பார்க்காமல் சென்றான்.

பனிமலர் உள்ளே வந்த போது அவன் கண்ணில் படவில்லை. ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க சமையல் அறை சென்றவள் பாட்டி மாமியார் சாருமதியுடன் சேர்ந்து கொண்டாள்.

மதிய உணவு நேரம் வந்து உணவு உண்டு விட்டு எனக்கு வேலையிருக்கு என்று மேலே சென்று விட்டான் சூர்யா. இவளையும் ஓய்வு எடுக்க சொல்லவும் தனக்கு கொடுத்திருந்த அறைக்குள் சென்றவள் கதவு தாளிட்டு சென்று தன் போனை எடுத்து ஆன் செய்தவளுக்கு அது சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது சார்ஜரை தேடி எடுத்து சார்ஜ் போட்டவள் தமிழ், ஆகாஷிடம் என்ன பேசவேண்டும் என்று சிந்தித்தவள்

ஓரளவுக்கு சார்ஜ் ஏறியதும் எடுத்து தமிழுக்கு முதலில் போன் செய்ய அந்த பக்கம் எடுத்ததும் இவள் "தமிழ்" எனும் போதே

"சத்துமாவு போனை கூட பார்க்க முடியாத அளவுக்கு என்ன பண்ணிட்டு இருக்க காலையில் இருந்து எல்லோரும் எத்தனை முறை போன் பண்ணினோம் தெரியுமா?..." என்று அகிலேஷ் பேசிக்கொண்டே இருக்க

"டேய் அகல்விளக்கு கொஞ்ச நிறுத்திறியா இப்படி பேசிட்டே இருந்தால் நான் எப்படி பதில் சொல்லுறது. போன் சார்ஜ் இல்லாமல் ஆப்பாகிட்டது நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன் நீ முதலில் போனை தமிழ்கிட்ட கொடு" என்றாள் பனிமலர்.

"தமிழ் அக்கா வீட்டில் இல்லை வெளியே போயிருக்காங்க" என்றான் அகிலேஷ்.

" போனைக்கூட எடுக்காமல் எங்கடா போயிருக்கா?... "என்று கேட்டாள்.

" உனக்குத்தான் வாங்க அம்மா அப்பா கூட போயிருக்காங்க. பாட்டி பேசுறாங்களாம் அவகிட்ட கேட்டுக்கோ" என்று பாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டான் அகிலேஷ்.

" மலருமா" என்ற பாசமான பாட்டியின் அழைப்பில் கண்ணீர் வந்த போதும் கட்டுப்படுத்திக்கொண்டு சிறிது நேரம் பேசி வைத்தவள் அடுத்து போன் செய்தது ஆகாஷ்க்கு ஆனால் அவன் போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. இரண்டு மூன்று முறை அழைத்த போதும் சுவிட்ச் ஆஃப் என்று வரவே போனை கட்டிலில் போட்டவள் அப்படியே படுத்துவிட்டாள். அதிகமான அழுத்தமும் சோர்வும் அவளை அறியாமல் உறங்க செய்திருந்தது.


 
Status
Not open for further replies.
Top