ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 29



"பாப்பு டால் உனக்கு நான் எவ்வளவு பெரிய மாப்பிள்ளை பார்த்து வச்சிருந்தேன் நீ என்னடா போயும் போயும் இந்த சிடுமூஞ்சிக்காரனை கல்யாணம் பண்ணிட்ட" என்று சோகமாக கேட்டவனை பார்த்து பல்லை கடித்தான் சூர்யா.

"டேய் உன்னை யாருடா அழைச்சது முதலில் வெளியே போடா" என்று தன் கோபத்தை காட்டமுடியாமல் கை முஷ்டியை இறுக்கி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பேசினான் சூர்யா.

" அடேய் உன் கல்யாணத்திற்கு நான் வரலை என் பாப்பு டால் கல்யாணத்திற்கு வந்து இருக்கேன். என்னை பத்திரிகை வைத்து அழைச்சா தான் நான் வரனும் இல்லை. என் பாப்பு டால் கல்யாணத்தை முன்னாள் நின்று செய்யவேண்டிய உரிமை எனக்கு இருக்கு." இனி இப்படி ஓவரா துள்ளதடா அப்புறம் சோதாரம் அதிகம் ஆகும் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்" என்றான் நக்கல் சிரிப்புடன் ஆகாஷ்.

" ஏய் என்னடா ஓவரா பேசிட்டு இருக்க இவ்வளவு பேர் இருக்காங்களே என்று அமைதியா இருந்தா இஷ்டத்திற்கு பேசிட்டு இருக்க என்னடா சோதாரம் ஆகும்" என்றான் சூர்யா.

" அது இப்ப சொல்ல முடியாதுடா நீயே கூடிய விரைவில் லைவாக பார்ப்படா" என்று சொன்னவன் "என்ன பாப்பு டால் நான் சொன்னது சரிதானே" என்றான் புன்னகையுடன்

அதுவரை அமைதியாக இருந்த பனிமலரின் முகம் இப்போது புன்னகையுடன் " செய்திட்டா பேச்சு ஆக்கு நீ சொன்ன பிறகு செய்யாமல் இருப்போனா" என்றாள் பனிமலர்.

" ஏய் என்னடி இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா பில்டப் கொடுத்துட்டு இருக்கிங்க நான் நினைச்சா இரண்டு பேரையும் என்ன பண்ணுவேன் தெரியுமா?..." என்றான் சூர்யா.

"ஹலோ சார் அதெல்லாம் க மு இப்ப க பி" என்றாள் பனிமலர்.

சூர்யா அவள் சொன்னது புரியாமல் "என்னடி சொன்ன திரும்ப சொல்லு அது என்ன க மு க பி" என்றான்.

" ஆக்கு எப்படிடா இது கூட தெரியாமல் இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனாக இருக்கார் உன் பிரண்ட்" என்றாள் பனிமலர்.

" அவன் அப்படி தான் பாப்பு டால் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று இருப்பான். நம்பலை மாதிரி யூத் பேசுற பாஷை புரியாது" என்று புன்னகை செய்தான் ஆகாஷ்.

" ஏய் என்ன ரெண்டு பேரும் பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கிங்க" என்று பல்லை கடித்தான் சூர்யா.

" ஹலோ சார் புரியலைனா என்ன என்று கேட்கனும் அதை விட்டுவிட்டு பைத்தியம் என்று சொல்லக்கூடாது.
க மு என்றால் கல்யாணத்திற்கு முன்பு க பி என்றால் கல்யாணத்திற்கு பின்பு என்று அர்த்தம். நான் இப்ப மிஸ்ஸஸ் சூர்யபிரகாஷ் அதனால் என்னையும் என் பிரண்டையும் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது" என்றாள் புன்னகையுடன் பனிமலர்.

" சூப்பர் பாப்பு டால் உன்னை பத்தி சாருக்கு நான் ரொம்ப வருஷத்திற்கு முன் சொன்னது எல்லாம் மறந்து போச்சு போல அதான் துள்ளுறான் இனி லைவாக காட்டிடுடா பாப்பு" என்றான்.

" ஓகே ஓகே" என்றாள் பனிமலர்.

சூர்யா கோபமாக பேச ஆரம்பிக்கும் முன்

"ஏன்டா இவ்வளவு பேர் நின்னுட்டு இருக்காங்க நீங்க ஜாலியாக பேசிட்டு இருக்கிங்க. அப்புறம் ஃபிரியா இருக்கும் போது உங்க அரட்டையை தொடங்குங்க" என்று வந்தார் ஆகாஷின் அம்மா உடன் ஆகாஷ் தந்தையும் கோபி மாலினி ஹரி விஷால் எல்லோரும் இருந்தனர்.

அதன் பின் அனைவரும் நின்று புகைப்படம் எடுக்க நிற்க ஹரி விஷால் ஆகாஷ் மூவரும் பனிமலர் அருகில் நிற்க சண்டை போட மாலினி தான் மூவரை ஒவ்வொருவராக நின்று புகைப்படம் எடுக்க வைத்தார். ஹரி பனிமலர் பக்கத்தில் நின்ற போது ஆகாஷ் சூர்யாவின் பக்கத்தில் நின்று அவன் மேல் கையை போட்டு கொண்டு நின்றான்.

சூர்யா ஆகாஷ்சை முறைத்து மெல்லிய குரலில் "டேய் கையை எடுத்திட்டு தூரமா போய் நில்லுடா" என்றான்.

"டேய் மச்சான் நாம இப்ப நெருங்கிய சொந்தமாகிட்டோம் இனி இப்படி தான் இருக்கனும்" என்றான் ஆகாஷ்.

போட்டோ எடுப்பவர் "சார் கொஞ்சம் நேராக பாருங்க" என்று குரல் கொடுத்ததும் நேராக நின்று கொண்டனர்.

மேலும் குடும்பத்தினர் உடன் நின்று புகைப்படம் எடுத்து முடித்து உணவு உண்ண சென்றனர். அங்கும் புகைப்படம் எடுப்பவர் வந்துவிட இப்போது ஆகாஷ் ஹரி விஷால் சாருமதி எல்லாம் சேர்ந்து சூர்யா பனிமலர் இருவரையும் ஒரு வழி செய்தனர்.

பனிமலரின் பார்வை தன் நண்பியை தேடியது. சற்று தொலைவில் தன் குடும்பத்தினர் உடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் தமிழ். அவளின் பார்வை பனிமலர் மீது தான் இருந்தது.

பனிமலருக்கு கண்கள் கலங்கின இந்த திருமணம் தன்னையும் தமிழையும் பிரித்து விடுமோ என்ற பயம் அவளின் மனதை வறுத்திக்கொண்டு இருக்கிறது. . அவளின் வறுத்தத்திற்கு காரணமான பேச்சு இப்போதும் அவளின் செவியில் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறதே.

"இன்னைக்கு தான் கடைசியாக இருக்கனும் நீ அவங்க கிட்ட பேசுறது நாளையிலிருந்து அவங்க உன் பக்கம் வந்தா உனக்கு எதுவும் ஆகாது ஆனால் அவங்களுக்கு என்னவென்றாலும் ஆகலாம் என்றானே" என்று அவன் கூறியதை நினைத்து உண்ணாமல் உணவை அலைந்து கொண்டு இருந்தவளின் காதோரம்

"மேடம் அதுக்குள்ள கனவு காண போயிட்டிங்களா அதை நைட் நினைவிலேயே பார்க்கலாம் இப்ப சாப்பிடுங்க நிறைய வேலை இருக்கு" என்றான் சூர்யா.

பனிமலர் சூர்யாவை முறைத்து பார்த்தாள்.

"அத்தானை அப்புறம் பார்க்கலாம் சாப்பிட்டாச்சினா வா முக்கியமான வேலை இருக்கு மாடியில் எல்லாம் ரெடியாக இருக்கு" என்று கண்சிமிட்டலுடன் சூர்யா கூறியதும் பனிமலரின் உடலில் வேர்வை முத்துக்கள் பூத்தன.

அவளின் உடலில் மெல்லிய நடுக்கமும் வர அதன் பிறகு ஒரு பருக்கை கூட உண்ணமுடியாமல் அமர்ந்து இருந்தாள்.

அவளின் கை பிடித்து எழுப்பியவன் வா என்று இழுத்து சென்றான். அவனின் இழப்புக்கு அவன் பின்னால் சென்றவள் "பிளீஸ் நான் எங்கேயும் வரலை நீங்க போய் வாங்க" மெல்லிய தடுமாற்றத்துடன் கூறினாள் பனிமலர்.

"என்னது நான் மட்டும் போகனுமா?... நீயில்லாமல் நான் மட்டும் போய் என்ன பண்ணுறது" என்றவன் அவளின் கையை பிடித்து நீரில் கழுவியவன் தன் கையில் இருந்த கர்சீப் கொண்டு அவள் கையை துடைத்துவிட்டு" வா" என்று மீண்டும் கை பிடித்து அழைத்து சென்றான்.

அவன் விடமாட்டான் என்று அறிந்தவள் கண்கள் தன் நண்பியை தேடியது. அவளின் மனதை அறிந்தவள் போல அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தாள் தமிழ். அவள் பின் சாருமதியும் மகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தாள்.

"சித்து" என்ற அழைப்பில் வேகமாக சென்று கொண்டு இருந்த சூர்யா நின்றான். காருண்யா வேகமாக வந்து சூர்யாவை கட்டிக்கொண்டு "சித்து நீயும் சித்தியும் எங்க போறீங்க?..." என்றாள்.

சூர்யாவின் பார்வை சாருமதி மீது படிந்து பின் காருண்யாவை பார்த்து "அம்மு நானும் சித்தியும் மாடியில் போட்டோ சூட் எடுக்கப்போறோம்" என்றான்.

"போட்டோ எடுக்க நானும் வரேன் சித்து" என்றாள் காருண்யா.

" அம்மு காலையில் சீக்கிரம் எழுந்த இல்லையா முகம் எப்படி இருக்கு பார் இப்படியே போட்டோ எடுத்தா நல்லா இருக்காது அதனால் இப்ப போய் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வாடா ஈவினிங் நிறைய போட்டோ எடுக்கலாம்" என்று சூர்யா சொல்லவும்

" சரி சித்து" என்று கூறிய காருண்யா தாயிடம் " அம்மா வா எனக்கு தூக்கம் வருது" என்று கூறி அழைத்து சென்றாள்.

அவர்கள் சென்ற பின் சூர்யாவின் பார்வை தமிழை துளைத்தது. தமிழின் கையுடன் பனிமலரின் கை இணைந்து இருப்பதை கண்டவன் தமிழை பார்த்து "உனக்கு வேற வேலையே இல்லையா?... எதுக்கு இப்ப இவள் கையை பிடித்து இருக்க இப்ப நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி இப்ப கூட எங்களுக்கு பிரைவசி கிடையாதா?...."

"இன்னைக்கு கோபப்படக்கூடாது என்று அமைதியா பேசிட்டு இருக்கேன் என்னை கோபப்பட வைக்காமல் அங்க உன் ஆளு பெண்ணுங்ககிட்ட கடலை போட்டுட்டு இருக்கான் பாரு அவனை கவனி" என்று கூறியவன் இருவர் கையையும் விளக்கி விட்டு பனிமலரை அழைத்துக்கொண்டு லிப்ட் நோக்கி சென்றான்.

போகும் அவர்களையே பார்த்த தமிழுக்கு அப்போது தான் அவன் சொன்ன உன் ஆளு என்பது நினைவில் வர அப்ப எல்லாமே தெரிந்து வைத்துக்கொண்டு தான் பிளான் போட்டு கல்யாணம் பண்ணி இருக்கான். ஒரு வேளை எழில்நிலாவை இவன் கடத்தி இருப்பானோ என்ற எண்ணம் வந்ததும் விதிர்விதித்து போனாள் தமிழ்.

அய்யோ அப்ப இவன் எழில்நிலாவை எதாவது பண்ணிட்டானோ என்ற பயம் தோன்றவும் வேகமாக ஆகாஷ் இருக்கும் இடம் சென்றாள். ஆகாஷ் இரண்டு பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தவன் தமிழ் அவன் அருகில் வந்ததை கண்டதும்

"ஏய் வா வா தமிழ்" என்று அவளின் கைபிடித்து அந்த பெண்களிடம் "நான் சொன்னேன் இல்லையா என் ஆளு தமிழ் இவள் தான்" என்றான் ஆகாஷ்.

அதை கேட்ட தமிழுக்கு கோபம் வந்தது அவனும் உன் ஆளு என்று சொல்லிட்டு போறான் இவனும் என் ஆளு என்கிறான் என்ன நினைச்சுட்டு இருக்கானுங்க என்று நினைத்தவள் தன் கோபத்தை எல்லாம் அவனிடம் காட்ட அவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் தமிழ்.

"அம்மாமா...." என்று ஆகாஷ் அலறவும் இதுவரை அவனிடம் பேசிக்கொண்டு இருந்த பெண்கள் பயந்து அங்கிருந்து வேகமாக சென்றனர்.

"ஏய் எதுக்குடி என்னை குட்டின?... என்றான் வலியில் தலையை தோய்த்துக்கொண்டே ஆகாஷ்.

" உன் பிரண்ட் எப்படி பட்டவன்?..." என்றாள் தமிழ்.

" ஏய் நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நீ எதுக்கு என் பிரண்டை பத்தி கேட்கிற" என்றான். ஆகாஷ்.

" டேய் ஒழுங்கா பதில் சொல்லு இதில் ரெண்டு பெண்ணுங்க வாழ்க்கை அடங்கி இருக்கு உன் பிரண்ட் கேரக்டர் எப்படி?... "என்றாள்.

" ரெண்டு பெண்ணுங்களா யாருடி அது?... " என்றான் ஆகாஷ்.

" டேய் நான் கேட்பதற்கு பதில் சொல்லு பெண்ணுங்க விசயத்தில் அவன் எப்படி பட்டவன்?... என்றாள் கோபமாக தமிழ்.

"ஏய் என்னடி இப்படியெல்லாம் கேட்கிற அவன் அப்படி பட்டவன் இல்லை பெண்ணுங்க கிட்ட அதிகமாக கூட பேசமாட்டான்டி எதுக்கு இப்படி எல்லாம் கேட்கிற" என்றான்.

"உன்னை பழிவாங்க அவன் பிளான் பண்ணி எழில்நிலாவை கடத்திட்டு பனிமலரை கல்யாணம் பண்ணி இருக்கான் என்று தோன்றுது என்றாள் தமிழ்.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 30



"ஆகாஷ் முகத்தில் சட்டென்று அதிர்வு ஏற்பட்டது சில வினாடிகளில் சமாளித்து அப்படியெல்லாம் அவன் செய்யமாட்டான். எழில்நிலா தெளிவாக அவங்க அப்பாக்கு லட்டர் எழுதி வைத்து விட்டு தானே போயிருக்கா நீயா கண்டதையும் போட்டு குழம்பிக்காமல் அடுத்து நம்ப கல்யாணம் தானே அதை பத்தி நம்ப பேரன்ட்ஸ் பேசிட்டு இருப்பாங்க என்ன முடிவு எடுத்து இருக்காங்க என்று தெரிந்துக்கலாம் வா" என்று தமிழின் கையை பிடித்தான் ஆகாஷ்.

தமிழ் கோபத்துடன் கையை உதறி " கல்யாணமா?.... பேரன்ட்ஸ் பேசறாங்களா என்னடா சொல்லுற?..." என்றாள் தமிழ் கோபமாக

" நீ காதல் சொல்லி கல்யாணம் நடக்கனும் என்றால் அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் என்று தெரிந்து பேச்சு அதனால் நேத்து என் அப்பா அம்மா கிட்ட நம்ப லவ்வை பத்தி சொல்லிட்டேன் அவங்க உடனே சம்மதம் சொல்லிட்டாங்க. உன் பேமலி கிட்ட இன்றைக்கே பேசி கல்யாணம் முடிவு பண்ணிடலாம் என்று சொன்னாங்க."

" எப்படியும் இந்நேரம் பேசி கல்யாண தேதி வரை முடிவு பண்ணிட்டு இருப்பாங்க" என்றவனை கண்டவளின் முகம் கோபத்தில் சிவந்தது.

" நான் எப்படா உன்னை லவ் பண்ணேன் உன்னை... உன்னை.... என்று பல்லை கடித்தவள் அவனிடம் பேசுவதை விட தன் குடும்பத்தினரிடம் சென்று பேசிக்கொள்ளலாம் என்று வேகமாக சொல்லப்போனவளை ஆகாஷ் கை பிடித்து தடுத்தான்.

"ஏய் விடுடா" என்றாள் தமிழ்.

" எங்கடி போற" என்றான் ஆகாஷ்.

"என் அப்பா அண்ணன் கிட்ட போகனும் விடுடா" என்றாள்.

"ஏன் தமிழ் என் காதலை உன்னால் உணரமுடியலையா?... ஏன் என்னை அவாய்ட் பண்ணுற உனக்கு என்னை பிடிக்கலையா?... இல்லை உன் மனசில் வேறு யாராவது இருக்காங்களா?..." என்றவனின் குரலில் அவனின் வலி தெரிந்தது.

சில வினாடிகள் அமைதியாக தலைகுனிந்து இருந்த தமிழ் பின் நிமிர்ந்து " இப்ப இதை பத்தி பேச வேண்டாம் இப்ப எனக்கு முக்கியம் மலர் லைப் தான். அவளை அந்த ராட்சசன் என்ன பண்ணுவானோ என்று பயமா இருக்கு அவன் ஒவ்வொரு விசயத்தையும் பிளான் பண்ணி காய் நகர்த்தி இப்ப மலரை கல்யாணம் பண்ணிட்டான்."

"அடுத்து என்ன பண்ண முடிவு செய்து இருக்கான் என்று தெரியலை மலர் முகமே சரியில்லை அவளை அந்த ராட்சசன் கிட்ட இருந்து காப்பாற்றனும் அதுக்கு உன் உதவியும் தேவை" என்றாள்.

" ஏய் தமிழ் ஏன் இப்படி தப்பு தப்பாக கற்பனையை வளர்த்து வச்சு இருக்க ஊரே பார்க்க பாப்புக்கு தாலி கட்டி இருக்கான் அவளை போய் அவனால் என்ன பண்ணமுடியும். அதுவும் இப்ப அவன் மனைவி அவளுக்கு எதாவது ஒரு பாதிப்பு வந்தால் அது அவனையும் பாதிக்கும்."

"பாப்பு ஒன்னும் தனியாக இருக்க போகிறது இல்லை அதுவும் இல்லாமல் நானும் பக்கத்து வீட்டில் தான் இருக்கேன். பாப்பு திடிரென நடந்த கல்யாணத்தால் கொஞ்சம் கலங்கி போயிருக்கா அவள் ஒரிரு நாட்களில் சரியாகிடுவா அதுக்கு அப்புறம் அவன் பாடுதான் திண்டாட்டமாக இருக்கும் உனக்கு உன் பிரண்டு பத்தி தெரியும் இல்ல வீணாக மனசை குழப்பிக்காத வா நம்ப பேமலி என்ன பேசி முடிவு செய்து இருக்காங்க பார்க்கலாம்."

"இன்னொரு விஷயம் என் அப்பா அம்மா கிட்ட பேசச்சொன்னதே பாப்பு தான்" என்றான். அதுவரை சிந்தனையுடன் நடந்தவள் நின்று ஆகாஷை பார்க்க

" என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா போன வாரமே என்கிட்ட பாப்பு டால் அவளா உனக்கு சம்மதம் சொல்லுவா என்று காத்து இருந்தா பிள்ளையார் மாதிரி காத்திருக்க வேண்டியது தான் அதனால் வீட்டில் பேசி அவங்க பேமலி கிட்ட பேசி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கே என்று அவள் தான் சொன்னாள்" என்று ஆகாஷ் சொன்னதும் தமிழ் பல்லைகடித்து அவளை என்று வாய்க்குள் திட்டிக்கொண்டு இருந்தாள்.

தமிழின் திட்டுகளுக்கு சொந்தக்காரி இங்கு அந்த ராட்சசன் கையில் படாதபாடு பட்டு கொண்டு இருந்தாள். லிப்ட் மூலம் மூன்றாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கு இருந்த ஒர் கதவை திறந்து அவளை அழைத்துச்சென்றான் சூர்யா.

தயக்கத்துடன் சென்றவளுக்கு அந்த அறையில் போட்டோ எடுப்பவர்களும் அவளுக்கு மேக்கப் செய்த பெண்கள் இருவர் இருப்பதை கண்டு சற்றே ஆசுவாசம் அடைந்தாள் பனிமலர்.

அவளை அமரவைத்து மேக்கப் செய்யும் பெண்கள் அவளுக்கு சிறு சிறு ஒப்பணைகள் செய்து உடையை சரி செய்ததும் சூர்யா வந்து அவளின் கை பிடித்து அழைத்து சென்றான்.

ஆரம்பத்தில் சிறு சிறு உரசல்களுடன் போட்டோக்கள் எடுத்த போது இது இப்போது இயல்பாக எடுப்பது தானே என்று அவர்கள் சொல்வதை செய்து கொண்டு இருந்தவளுக்கு போக போக சூர்யாவின் கைகள் உரசிய இடங்கள் அவளின் உடல் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிக்கள் பறந்தன.

அவளின் உடல் முழுவதும் சிவந்து வெட்கத்தில் தலைகுனிந்தாள் பெண்ணவள். அவளால் தலைநிமிர்ந்து எதிரில் இருப்பவர்களை பார்க்க கூட முடியவில்லை.

அவளை மேலும் சிவக்க வைக்கும் விதமாக அவளின் காதோரம் அவனின் மீசை ரோமங்கள் உரச "ஏய் என்னடி பண்ணுற அவங்க சொல்லுற மாதிரி நில்லு" என்றான் சூர்யா.

"பிளீஸ் இதுவரை எடுத்ததே போதும்" என்றாள் மெல்லிய குரலில் பனிமலர்.

"இப்பத்தான் எடுக்கவே ஆரம்பித்து இருக்காங்க அதுக்குள்ள போதும் என்று சொல்லுற இப்படி நீ வெட்கப்படுவதை பார்த்தால் எனக்கு இப்போ இந்த சிவந்த கன்னத்தை கடிச்சி சாப்பிடனும் போல இருக்கு" என்றவனின் உதடுகள் அவளின் கன்னத்தை உரசிக்கொண்டு இருந்தன.

அவன் அவளை முறைத்துக்கொண்டு இருக்கும்போதே அவன் மீது காதல் பித்தில் இருந்தவளுக்கு அவனின் பேச்சு இன்னும் அவன் மீது காதலை அதிகபடுத்தி மற்ற அனைத்தையும் மறந்து அவனின் கைகளில் விளையாட்டு பொம்மையாகி அவனின் இழப்புக்கு சென்று அவனின் விருப்பப்படி போட்டோக்கு இசைந்து நின்று கொண்டு இருந்தாள் பனிமலர்.

போட்டோ எடுப்பவர் "சார் ஒரு லிப் லாக் போட்டோ எடுத்தா எல்லாம் முடிந்திடும்" என்றதும் பனிமலர் உடல் அதிர்ந்து சூர்யாவை பார்த்து வேண்டாம் என்னும் விதமாக தலையாட்ட அவளை தோளோடு அணைத்தவன் போட்டோ எடுப்பவரிடம் "வேண்டாம் இதுவரை எடுத்ததே போதும் நீங்க கிளம்புங்க" என்று கூறிவிட்டு அவளை அழைத்து சென்று அமரவைத்து பழச்சாறு ஒன்றை அவளிடம் கொடுத்தவன் தானும் ஒன்றை எடுத்து குடித்தான் சூர்யா.

அவனின் ஒவ்வொரு செயலும் அவளை சந்தோஷத்தில் திளைக்கவைத்துக்கொண்டு இருந்தன. அவனின் இந்த அன்பும் அனுசரணையும் அவனின் மனைவியனதாலா என்ற எண்ணம் எழும்போதே இன்னொன்றும் தோன்றியது. இந்த இடத்தில் எனக்கு பதில் நிலா இருந்து இருந்தாலும் இப்படி தான் செய்து இருப்பானா என்ற எண்ணம் வந்ததும் குடித்துக்கொண்டு இருந்த பழச்சாறு கசந்தது.

அதற்கு மேல் அவளால் பழச்சாறை குடிக்கமுடியாமல் அங்கிருந்த டீபாயில் வைத்துவிட்டாள். இதுவரை ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்தவளின் சந்தோஷம் அனைத்தும் துணி கொண்டு துடைத்து போல் வாடிய மலரானது அவளின் முகம்.

அவளின் முகத்தை கண்டு கொண்டு இருந்தவன் "ஏய் என்னாச்சு ஏன் ஜூஸ் குடிக்கலை பிடிக்கலையா வேற எடுத்திட்டு வர சொல்லவா?...." என்றான் சூர்யா.

"ஒன்னும் இல்லை எனக்கு போதும் அதான் வச்சிட்டேன் நான் கீழே போகவா?...." என்றாள் பனிமலர்.

"என்னாச்சு இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்த திடீரென என்னாச்சு?... " என்றான்.

" இல்ல கொஞ்சம் டயர்டா இருக்கு" என்றாள்.

" சரி வா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்" என்று அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான் சூர்யா.

இவர்கள் வருகைக்காகவே காத்திருந்தது போல் சூர்யாவின் பாட்டியும் அம்மாவும் அவர்கள் அருகில் வந்தனர்.

" சூர்யா மலர் வாங்க நல்ல நேரம் முடியும் முன் வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்" என்றார் பாட்டி.

"பாட்டி இவளுக்கு டயார்டா இருக்காம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு போகலாம்" என்றான் சூர்யா.

"இல்ல சூர்யா இப்ப வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு தான் மலர் இந்த டிரஸ் மாத்தனும். இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும் சொல்லு" என்றவர் மலரை பார்த்து

" நம்ப வீட்டுக்கு போக இங்கிருந்து ஐந்து நிமிடம் கூட ஆகாதுடா போயிட்டு கொஞ்ச நேரத்தில் வந்துட்டா அதுக்கு பிறகு நீ ரெஸ்ட் எடுக்கலாம்" என்றார்.

பனிமலர் அவருக்கு சரி என்றதும் சூர்யாவின் வீட்டிற்கு கிளம்பினர். பனிமலரின் குடும்பமும் சில முக்கிய உறவினரும் ஒரு வேனில் செல்ல சூர்யா பனிமலரை தன் காரில் அழைத்துச்சென்றான்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே வீடு வந்திருந்தனர். காரில் இருந்து இறங்கிய பனிமலரின் கண்கள் அந்த வீட்டை கண்டதும் திகைப்பு ஏற்பட்டது அந்த வீட்டின் பிரமாண்டத்தை கண்டு திகைத்து நின்றவளின் கை பிடித்து அழைத்து சென்றான் சூர்யா.

ஐந்து பெண்கள் ஆலம் சுற்றி வரவேற்க தன் வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டினுள் சென்றாள் பனிமலர். நேராக பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி கடவுளை வணங்கி விட்டு பால் பழம் உண்ணவைத்து சிறிது நேரத்திலேயே மீண்டும் திருமண மண்டபம் அனைவரும் வந்திருந்தனர்.

அவளை அவள் இருந்த அறைக்கு அழைத்து சென்று விட்டவன் "டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெஸ்ட் எடு" என்று விட்டு சென்றான் சூர்யா. அழகு நிலையப்பெண்கள் வந்து உதவினர். அவர்கள் சென்றதும் இலகுவான உடைக்கு மாறிய நேரம் கதவு தட்டப்பட்டது.

கதவு திறந்தவளின் முன் பெரியண்ணை பாட்டி தமிழ் மூவரும் இருந்தனர். அவர்களை கண்டதும் அதுவரை அவளின் மனதில் இருந்த அழுத்தம் அழுகையாக வெளிவரத்துடித்தது. ஏற்கனவே எழில்நிலாவை நினைத்து வேதனை படுபவர்கள் இவளின் அழுகையை கண்டாள் உடைந்து விடுவர் என்று வெளிவரத்துடித்த கண்ணீரை அடக்கி நின்றாள் பனிமலர்.

"மலருமா என்னடா முகம் வாடியிருக்கு" என்ற பாட்டியை பார்த்து "ஒன்னும் இல்லை பாட்டி கொஞ்சம் டயார்டா இருக்கு படுத்து தூங்கி எழுந்தா சரியா போகிடும்" என்றவள் பாட்டியை கட்டிலில் உட்கார வைத்து அவரின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான் பனிமலர்.

ஊர்மிளாவும் கட்டிலில் அமர்ந்து பனிமலரின் காலை எடுத்து மடிமீது வைத்து மென்மையாக பிடித்துவிட்டார்.

" மம்மி என்ன பண்ணுறீங்க காலை விடுங்க" என்று எழுந்துவளை

"மலருமா அமைதியா படுத்து தூங்கு" என்றார் ஊர்மிளா.

"இல்ல மம்மி நீங்க காலை விடுங்க" என்றாள் பனிமலர்.

"ஏன்டா மலரு நான் உன் காலை பிடித்து விடக்கூடாதா?... அப்ப நான் உன் அம்மா இல்லையா?... என்னை யாரோவா பார்க்கிறீயா?... " என்று கண்கலங்க கேட்டார் ஊர்மிளா.

பதறி எழுந்த பனிமலர் "மம்மி என் பேசறிங்க நான் எப்பவும் உங்க பெண்ணு தான் நீங்க பட்டு சேலை கட்டியிருக்கிங்க அழுக்காயிடும் என்று தான் சொன்னேன்" என்று அவரை அணைத்துக்கொண்டாள்.

அவளின் முதுகை வருடிய பாட்டி "மலருமா எங்க மேல் உனக்கு கோபம் இல்லையேடா?..." என்று கேட்டார்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 31



பெரியண்ணையிடம் இருந்து விலகி பாட்டியை பார்த்து " எதுக்கு பாட்டி கோபம்" என்றாள்.

" இல்லடா திடீரென இப்படி உன் விருப்பத்தை கேட்காமல் கல்யாணம் பண்ணதற்கு தான்" என்றார் பாட்டி.

"பாட்டி இப்ப நீங்க தான் என்னை பிரிச்சு பார்க்கறீங்க" என்றாள் கண்கள் கலங்க

"அய்யோ... இல்லடா... நிலா இப்படி செய்வாள் என்று நினைக்கலை அவள் காதலிப்பதை சொல்லாமல் இப்படி குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு போயிட்டா அவள் செய்ததற்கு உன் வாழ்க்கையை பணயம் வச்சிட்டோம் என்ற குற்றயுணர்ச்சியா இருக்குடா. உன் மனசில் வேற எதாவது ஆசை இருந்து அது எங்களால் என்று மேலே பேசப்போனவரை இடைமறித்தாள் பனிமலர்.

"அப்படி எந்த ஆசையும் என் மனதில் இல்லை பாட்டி நீங்க கவலைப்பட வேண்டாம். நான் சந்தோஷமாக இருப்பேன் திடீரென கல்யாணம் செய்ததால் கொஞ்சம் தடுமாற்றம் அவ்வளவு தான் இரண்டு நாளில் எல்லாம் சரியாகிடும்."

" டாடி, அகிலேஷ் எங்க மம்மி" என்று பேச்சை மாற்றினாள் பனிமலர்.

" அவங்க வெளியே மாப்பிள்ளையின் அப்பா கூட ஈவினிங் ரிஷப்ஷன் வேலையை பார்த்திட்டு இருக்காங்க" என்றார் ஊர்மிளா.

" மம்மி... அது... நிலாவை பற்றி விசாரிக்க டாடி போகலையா" என்றாள் தயங்கி தயங்கி

" இல்லடா அவதான் தெளிவா எழுதி வச்சுட்டு போயிருக்களே அதுக்கு பிறகு எங்க போய் விசாரிக்கிறது வேண்டாம் என்று டாடி சொல்லிட்டார். இப்ப நல்லபடியாக ஈவினிங் ஃபங்ஷன் நடக்கனும் அதுக்கு டாடி பிஸ்னஸ் பிரண்ட்ஸ் வருவாங்க அவங்களை சமாளித்து அனுப்பனும். போனவள் முன்னாடியே போயிருக்கக்கூடாதா இப்படி இரண்டு குடும்பத்தையும் அவமானப்படுத்திட்டு ஓடியிருக்கா" என்று கண்ணீர் சிந்தினார் ஊர்மிளா.

பெரியண்ணையின் கண்களை துடைத்து விட்டவள் " நிலா" என்று பேச்சை ஆரம்பிக்கும்போதே அதுவரை அமைதியாக அமர்ந்து இருந்த தமிழ்

மலர் எங்கே எழில்நிலா காதல் பற்றி தனக்கு தெரியும் என்று எதாவது உளறி வைப்பாளோ என்று பேச்சை மாற்ற "மலர் ஈவினிங் ஃபங்ஷன் இருக்கு கொஞ்ச நேரம் அமைதியாக படுத்து தூங்கு அப்போது தான் முகம் நல்லா இருக்கும் கண் எப்படி ரெட்டிஷா இருக்கு பார்" என்றாள்.

"ஆமாம் மலருமா கொஞ்ச நேரம் தூங்கு நாங்க போய் வேலையை பார்க்கிறோம்" என்று பாட்டியும் பெரியண்ணையும் அறையை விட்டு வெளியேறினர்.

அவர்கள் சென்றதும் கதவை தாளிட்டவள் மலரை பார்த்து முறைத்தாள்.

" என்னடி?... " என்றாள்.

" இப்ப அவங்ககிட்ட எனக்கு எழில்நிலா காதல் பற்றி தெரியும் என்று தானே சொல்ல நினைச்ச" என்றதும்

"ஆமாம் தமிழ் எனக்கு தெரிந்ததை முன்னாடியே டாடி கிட்ட சொல்லி இருந்தால் இவ்வளவு அவமானப்படாமல் இருந்து இருக்கலாம் இல்லையா?... நான் எவ்வளவு சுயநலம் பிடித்தவளா இருந்து இருக்கேன். கல்யாணம் நின்னு நான் மணப்பெண்ணாகனும் என்று நினைச்சேன் ஆனால் அதில் குடும்பத்திற்கு எவ்வளவு அவமானம் வரும் என்று நினைக்காமல் போயிட்டேன். காலையில் எல்லோரும் எவ்வளவு பேசினாங்க."

" எல்லாவற்றிற்கும் என் சுயநலம் தானே காரணம். முதலிலேயே நிலா காதல் பற்றி டாடி கிட்ட சொல்லி இருக்கனும். அப்ப இப்படி நடந்து இருக்காது இல்லையா?... "என்று கூறியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

" ஏய் லூசு மாதிரி பேசாத அவங்க ஓடிப்போவாங்க என்று நமக்கு தெரியுமா என்ன?... நேற்று வரை கல்யாணத்தில் விருப்பம் இருக்கிற மாதிரி தானே நடந்துகிட்டாங்க ஒரு சின்ன சந்தோகம் கூட இல்லாமல் சரியா பிளான் பண்ணி ஓடி போயிருக்காங்க."

"நம்ம எப்படி இதுக்கு காரணம் ஆவோம். அவங்க கல்யாண நிச்சயம் முடிந்ததும் அந்த அரவிந்தை கூட்டிட்டு வந்து இவனை தான் கட்டுவேன் என்று சொல்லுவாங்க என்றுதானே நம்ப நினைச்சோம். இப்படி அவங்க ஓடிப்போகனும் என்று நம்ப நினைக்கவில்லையே அப்ப எப்படி நம்ப காரணம் என்று சொல்லுற?... " என்றாள் தமிழ்.

" நீ இல்லை நான் தான், நிலா லவ் பண்ணுறதை முன்னாடியே டாடி கிட்ட சொல்லி இருந்தா நிலா கிட்ட பேசி இருப்பார் இல்லையா?... " என்றாள் பனிமலர்.

" நான் லவ் பண்ணலை நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் தான் என்று நிலா சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்ப" என்றாள் தமிழ்.

மலர் பதில் சொல்ல முடியாமல் நண்பியை பார்த்தாள்.

" உன் அக்கா ஒன்றும் தெரியாதவங்க இல்லை படித்து வேலைக்கு போய் சம்பாதிக்கறாங்க. வீட்டில் சொல்லி அரவிந்தை கல்யாணம் பண்ணி இருக்கலாம். வீட்டில் ஒத்துக்கலை என்றாள் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கலாம்."

"அதை எல்லாம் விட்டுட்டு வெளிநாட்டில் வேலை ஏற்பாடு செய்து கொண்டு இரண்டு பேரும் போய் இருக்காங்க. இதில் ஒரு மாதத்திற்கு முன்பே கல்யாணம் நடந்து இருக்கு. எந்த குற்றயுணர்ச்சியும் இல்லாமல் அவங்க தன் வாழ்க்கையை வாழ போயிட்டாங்க ஆனால் நீ தான் எல்லாம் பண்ண மாதிரி உட்கார்ந்து அழுதுட்டு இருக்க மலர்."

"நீ எந்த தப்பும் பண்ணலை அவங்க பண்ண தப்புக்கு தான் நீ தண்டனை அனுபவிப்பாயோ என்று எனக்கு பயமாக இருக்கு" என்று கூறிய தமிழின் கண்கள் கலங்கின.

" ஏய் என்னடி தமிழ் எனக்கு என்ன ஆகப்போகுது நான் தானே சூரியனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன் அது இப்போ நடந்திடுச்சு, இனி என்ன நான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்" என்றாள் பனிமலர்.

" எப்படி இப்படியா?... " என்று பனிமலரின் சிவந்த மணிக்கட்டை தூக்கி காட்டினாள் தமிழ்.

" இது அவன் கொஞ்சம் அழுத்தமாக கையை பிடித்ததால் சிவந்து போச்சு" என்றாள்.

" இதைத்தான் நானும் சொல்லுறேன் கையை கூட இப்படி பிடிச்சு சிவந்து போக வச்சு இருக்கான் அப்படி பட்ட ராட்சசன் உனக்கு எதுக்குடி மலர். பூ மாதிரி மென்மையான உன்னை ஏற்கனவே பார்க்கும் போது எல்லாம் வருத்தி இருக்கான். இப்ப லைப் லாங் அவன் கூட எப்படி இருப்படி" என்றாள் தமிழ்.

" ஏய் லூசு மாதிரி பேசிட்டு இருக்கடி தமிழ். கல்யாணத்திற்கு முன்ன நான் தான் அவனை காதலித்தேன் அவனை பொருத்தவரை நான் யாரோ அதனால் என்னை வருத்தப்பட வச்சான். ஆனால் இப்போ நான் அவன் மனைவி அவனில் சரிபாதி அப்படி இருக்கும் போது என்னை வருத்தப்பட வைப்பானா? "

" விடியற்காலையில் எவ்வளவு கோபமாக இருந்தவன் என் கழுத்தில் தாலி கட்டி முடிந்ததும் எப்படி மாறிட்டான் தெரியுமா?... பார்த்து பார்த்து கவனிச்சுகிட்டான். ஒரு சின்ன முகச்சுளிப்பு கூட அவன் காட்டவில்லை. உன் கிட்ட கூட கோபப்படாமல் தான் பேசினான். "

" அதனால் என்னை பற்றி கவலைப்படாமல் உன்னை பற்றி நினை முக்கியமாக ஆக்கு பாவம்டி இன்னும் எவ்வளவு நாள் அவனை காக்க வைப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கே" என்று கூறிய பனிமலரை முறைத்தாள் தமிழ்.

" என்னடி முறைப்பு?... " என்றாள் பனிமலர்.

" நீ தான் அவனுக்கு ஐடியா கொடுத்ததாக சொன்னான் உண்மையா?... " என்றாள் தமிழ்.

" ஏய்ய்.... ஆமான்டி தமிழ் நான் குடுத்த ஐடியா ஒர்க்அவுட் ஆச்சா கல்யாணம் பற்றி பேசி முடிச்சிட்டாங்களா?..." என்று சந்தோஷக்குரலில் பனிமலர் கேட்க

அவளின் முதுகில் இரண்டு அடிகளை போட்டவள் " உன்னை யாருடி அவனுக்கு ஐடியா குடுக்க சொன்னது, அந்த எருமை அப்படியே செய்து இப்ப கல்யாண தேதி முடிவு செய்யும் வரை ரெண்டு பேமலியும் வந்துட்டாங்க" என்றாள் கோபமாக

" ஏய்ய்... அப்படியா?..." என்று குதுகலித்த பனிமலர் "அப்ப நீ ஓகே சொல்லிட்டையா தமிழ்" என்ற பனிமலரை பார்த்து பல்லை கடித்த தமிழ்

" உன்னை...." என்று அடிப்பதற்கு எதாவது கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

" நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் என்ன தேடிட்டு இருக்கடி?..." என்றாள் பனிமலர்.

"உன்னை கையில் அடிச்சா எனக்கு தான் வலிக்குது அதான் எதாவது கிடைக்குதா என்று பார்க்கிறேன்" என்றவளின் கண்ணில் தலையணை தவிர வேறு எதுவும் படாமல் போகவே அதை எடுத்து

"உனக்கு எவ்வளவு கொழுப்பு அவனை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியும் அவனுக்கு ஐடியா கொடுத்து நேரடியாக என் வீட்டில் பேச வச்சு இருக்கிறாய் இப்ப இரண்டு பேமலியும் எப்ப எப்ப என்று காத்திருந்த மாதிரி இவன் சொன்னதும் ஓகே சொல்லி கல்யாணம் பேச ஆரம்பித்து விட்டாங்க. எல்லாம் உன்னால் தான் நான் நிம்மதியாக இருப்பது உனக்கு பிடிக்கலையா?... "

" அந்த எருமை நான் வேண்டாம் என்று சொன்னபோதே என் பின்னால் சுத்திட்டு இருந்தது. இப்ப இரண்டு வீட்டிலும் ஓகே சொன்னதும் ஓவரா பண்ணிட்டு இருக்கான் எல்லாத்துக்கும் நீ தானே காரணம்" என்று தலையணையால் மொத்தினாள் தமிழ்.

" தமிழ் கூறியதை கேட்ட பனிமலர் அடிகளை வாங்கிக்கொண்டே "அப்படி என்னடி பண்ணான் ஆக்கு?..." என்று விரிந்த புன்னகையுடன் கேட்டாள் பனிமலர்.

"அதுவா..." என்று சொன்னப்போனவள் சட்டென அமைதியாகி "அது உனக்கு எதுக்கு இப்ப உன்னை ரெஸ்ட் எடுக்கத்தானே உன்னோட சூரியன் விட்டுட்டு போனார் அந்த வேலையை பாரு" என்றவள் தலையணையை தலைக்கு கொடுத்து படுத்துக்கொண்டாள் தமிழ்.

"ஏய்ய்.... அப்ப என்னவோ நடந்து இருக்கு என்னடி என்ன சொல்லு?..." என்று பனிமலர் ஆவலாக கேட்க

" நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை அந்த லூசு ஓவரா ஜொள்ளு விட்டுட்டு என் பின்னாடியே சுத்திட்டு இருந்தது அதனால் இரண்டு மொத்து மொத்தி அனுப்பினேன் எங்க போனான் தெரியலை" என்றாள் தமிழ்.

" எதுக்குடி ஆக்குவை அடிச்ச பாவம் அவன்" என்று தன் போனை எடுத்து அவனுக்கு கால் பண்ணப்போக அவளிடம் இருந்து போனை பிடுங்கிய தமிழ்.

" ஒழுங்கா படுத்து தூங்கு அவன் எதாவது வேலையா இருப்பான் எங்கேயும் போயிடமாட்டான்" என்றதும் பனிமலரும் புன்னகையுடன் படுத்து கண்முடியவள் நீ என்னதான் அவனை பிடிக்கலை என்றாலும் அவன் உன் மனதில் இருக்கான் தமிழ். நீ எனக்காகத்தான் அவனை தள்ளி வச்சு இருக்க என்றும் எனக்கு தெரியும். நான் லைப்பில் செட்டில் ஆகிறவரைக்கும் நீ உன் வாழ்க்கை பற்றி யோசிக்கமாட்ட என்றும் எனக்கு தெரியும்.

நீ யோசிக்கிற மாதிரி தானே நானும் யோசிப்பேன் நீயும் லைப்பில் செட்டில் ஆகனும் அதுவும் என் சூரியன் எனக்கு கிடைப்பானா இல்லையா என்ற சூழ்நிலையில் அடுத்து என்னோட முடிவு எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியாமல் நான் எதாவது தவறான முடிவு எடுத்து விட்டால் அப்போது உனக்கு ஆக்குவும் அவனுக்கு நீயும் என்று இருந்தால் என் மனது கொஞ்சமாவது நிம்மதி அடையும்.

அதனால் தான் ஆக்குகிட்ட வீட்டில் பேசச்சொன்னேன். ஆனால் இப்ப என் சூரியன் எனக்கு கிடைச்சிட்டான் இனி அவன் என்னை சந்தோஷமாக பார்த்துப்பான். நீயும் ஆக்குவை கல்யாணம் பண்ணிட்டா நம்ப பக்கத்து பக்கத்து வீட்டில் இருப்போம். இந்த சூரியனையும் எப்படியாவது ஆக்கு கூட பழையபடி பிரண்டாக்கி விட்டுட்டா அப்புறம் நம்ப நாலு பேரு லைப் லாங் ஒன்னாகவே இருப்போம்.

ஆனால் இந்த எழில்நிலா ஏன் இப்படி செய்தாள் என்று தெரியலை அவள் கிட்ட நானாவது முன்னாடியே பேசி இருந்தால் இப்படி வருத்தப்படுவதை தடுத்து இருக்கலாம் என்று நினைத்தவளின் மனம் விடியற்காலையில் நடந்தது மனதில் ஓடியது.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 32



நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தவர்களை கதவு தட்டும் ஓசை எழுப்பியது. தமிழ் தான் முதலில் விழித்தாள் உட்கார்ந்து இருந்தபடியே உறங்கியவளால் உடலை அசைக்க முடியாமல் போக கண்விழித்து பார்த்தவளின் கண்ணில் பட்டது பனிமலர் தன் மடியில் படுத்து உறங்குவதுதான்.

மீண்டும் மீண்டும் கதவு தட்டிக்கொண்டே இருக்க வரேன் என்று குரல் கொடுத்த தமிழ் "மலர் மலர்" என்று உலுக்க

அவளே "ஏய் தமிழ் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் டி" என்று கண் திறவாமலே இன்னும் நன்றாக தமிழின் மடியில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

"அடியேய் எழுந்திடுடி கதவு தட்டுறாங்க நீ எழுந்தால் தான் நான் கதவை திறக்க எழுந்துக்க முடியும்" என்று தமிழ் கூறியதும் தலையை தமிழ் மீது இருந்து எடுத்து பெட்டில் வைத்து தூக்கத்தை தொடர்ந்தாள் பனிமலர்.

மறுத்து போயிருந்த கால்களை கடினப்பட்டு சமாளித்து மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி கதவை சென்று திறப்பதற்குள் கதவு பல முறை தட்டப்பட்டு இருந்தது. ஏன் இப்படி தட்டுறாங்க என்று தன் போனில் மணி பார்க்க அது மூன்று என்று காட்டியது.

ஆன்ட்டி நாலரை மணிக்கு தானே எழுந்து வரச்சொன்னாங்க என்று நினைத்துக்கொண்டே கதவை திறந்தவளின் முன் பதட்டத்துடன் நின்று இருந்தார் ஊர்மிளா.

"என்ன ஆன்ட்டி?... என்னும் முன் "நிலா வந்தாளா தமிழ்?... " என்றார் ஊர்மிளா.

அவரின் பதட்டமும் நிலா என்றதும் தமிழுக்கு எதுவோ புரிவது போல் இருக்க அவளின் மனம் அதிர்ந்தது. " இல்லையே ஆன்ட்டி" என்றவள் வேகமாக பனிமலர் அருகில் சென்று" மலர்... மலர்... ஆன்ட்டி வந்து இருக்காங்க எழுந்திரு" என்றதும் மெல்ல எழுந்து அமர்ந்த பனிமலர் அருகில் வந்த ஊர்மிளா கலங்கிய கண்களுடன்

"மலர் நிலாவை காணோம்டா" என்றதும் அதுவரை இருந்த தூக்கம் எங்கு சென்றதோ

" மம்மி... மம்மி... என்ன சொல்லுறீங்க நிலா காணோமா?... என்னாச்சு மம்மி வேற எங்காவது போய் இருப்பா" என்று வேகமாக கட்டிலில் இருந்து இறங்கியவள் பெரியண்ணையின் கை பிடித்து "இங்க தான் மண்டபத்தில் எங்காவது இருப்பா ஒரு வேளை அத்தான் கிட்ட பேச மாடிக்கு போய் இருப்பா நாங்க போய் பார்த்துட்டு வரோம்" என்று தமிழின் கை பிடித்து வேகமாக சென்றாள் பனிமலர்.

ஆனால் அடுத்த பத்து நிமிடம் மண்டபம் முழுவதும் தேடியும் எங்கும் எழில்நிலா இல்லை. குடும்பத்தினர் மட்டும் தேடியவர்கள் அடுத்து உறவினர் காதுக்கு சென்று மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரவி கடைசியில் எங்கும் இல்லாமல் போக மாப்பிள்ளை வீட்டு பக்கம் இருந்த உறவினர் பெண் ஒருத்தி முதலில் ஆரம்பித்தார்.

"பணக்கார சம்பந்தம் என்றதும் பெண்ணை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சு இருப்பாங்க. அதான் பெண்ணு ஓடி போயிருக்கா எதுக்கும் அவள் பொருள் எல்லாத்தையும் செக் பண்ணி பாருங்க எதாவது லெட்டர் எழுதி வைத்து விட்டு போயிருப்பா?..." என்றார் அந்த பெண்.

அதை கேட்ட அசோகன், ஊர்மிளா, பாட்டி தலைகுனிந்தனர் என்றால் பனிமலரும் அகிலேஷ்சும் கோபத்தில் பேசப்போக தமிழ் பனிமலரை பற்றி தடுத்திருக்க அகிலேஷை கோபி தடுத்து இருந்தார்.

அதற்குள் சூர்யாவின் பாட்டி "கனகம் என்ன பேச்சு இது?... "என்று அதட்டலாக கேட்டார்.

ஆனால் அந்த கனகம் "நான் என்ன பொய்யா சொல்லுறேன் சித்தி நடப்பதைத்தானே சொல்லுறேன். ஊரில் பெண்ணே இல்லாத மாதிரி இப்படி ஒன்னும் இல்லாத வீட்டு பெண்ணை பேசியிருக்கிங்க இன்னைக்கு நம்ப வீட்டு பையனும் தானே அசிங்கப்பட்டு நிக்குறான். "

"இதுவே நம்ப வசதிக்கு ஏற்ற வசதியான குடும்பத்தில் பெண்ணு எடுத்து இருந்தாள் இப்படி நடந்து இருக்குமா?... "

" ராஜா மாதிரி இருக்கிற என் அண்ணன் பையனை வேண்டாம் என்று ஓடியிருக்களே" என்று பேசிக்கொண்டே போனவரை சூர்யாவின் பார்வை வாயடைக்க வைத்தது. அதை காணாத இன்னொரு உறவுப்பெண்

" ஆமாம் பெரியம்மா என் வீட்டில் இரண்டு பெண்ணு கனகம் அக்கா வீட்டில் ஒரு பெண் இருக்காங்க அவங்க யாராவது ஒருத்தரை நம்ப சூர்யாவுக்கு பார்க்காமல் இப்படி ஒன்னும் இல்லாத குடும்பத்தில் பெண் எடுக்க போயி இப்ப நம்ப வீட்டு கல்யாணம் நின்னு போச்சி. இப்பக்கூட ஒன்னும் ஆகலை மூன்று பெண்ணில் நம்ப சூர்யாக்கு யார் பிடிக்குது என்று கேட்டு இந்த முகூர்த்ததிலேயே கல்யாணம் முடித்து விடலாம்" என்று அந்த பெண் சொல்ல அவரின் முன் சென்று நின்ற சூர்யாவின் முகத்தை பார்த்ததும் அப்பெண் பத்தடி தூரத்தில் சென்று அவரின் கணவர் பின் நின்று கொண்டார்.

சூர்யாவின் விழிகள் ரத்தமென சிவந்து யாரை துவம்சம் பண்ணலாம் என்ற முகபாவனையை கண்டதும் அந்த பெண் ஓடியிருந்தார்.

தம்பி எதாவது பேசிவிடப்போகிறான் என்று வேகமாக அவனை பிடித்து இழுத்து சற்று தொலைவில் சென்று அவனை அமைதிப்படுத்தும் விதமாக "சூர்யா நீ எதுவும் பேசாத தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா பேசிப்பாங்க" என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே மாலினியும் ஹரியும் கையில் கடித்தத்துடன் வந்து அதை அசோகனிடம் நீட்டியிருந்தனர்.

அந்த பெண்மணி பேசியதும் மாலினி எழில்நிலா இருந்த அறைக்கு சொல்ல அவருடன் ஹரியும் சென்று தேடிப்பார்த்தபோது அவளின் பெட்டியில் இருந்து கடிதத்தை எடுத்து வந்திருந்தனர்.

அசோகன் கைகள் நடுங்க கடிதத்தை பிரித்தவரின் கண்களில் முதலில் பட்டது

சாரி அப்பா சாரி அப்பா என்பது தான் மேலே படிக்க படிக்க அவரின் கண்கள் கலங்கின.

சாரி அப்பா சாரி அப்பா நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணுறேன் என்று எனக்கு தெரியும் ஆனால் எனக்கு இதை தவிர வேறு வழி இல்லை அப்பா.

அரவிந்த் ரொம்ப நல்லவர் அப்பா. நீங்களும் சித்தப்பாவும் எப்படியோ அதே மாதிரி ரொம்ப பொறுப்பானவர் அந்த குணம் தான் எனக்கு அவர் மேல் ஈர்ப்பு வந்து காதலா மாறிச்சு அப்பா இல்லாமல் அவங்க அம்மா கஷ்டப்பட்டு இவரையும் இவரோட மூன்று தங்கச்சியையும் வளர்த்து இருக்காங்க.

அரவிந்த் முதல் வருடம் காலேஜ் படிக்கும் போது அவங்க அப்பா இறந்து படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போக நினைச்சவரை அவரோட பிரண்ட்ஸ் தான் கம்பெல் பண்ணி படிக்க உதவி பண்ணியிருக்காங்க.

அரவிந்த் நல்லா படிச்சு நல்ல வேலை கிடைத்ததும் இரண்டு வருடத்திற்கு முன்பு முதல் தங்கைக்கு திருமணம் முடித்து விட்டார். அடுத்த இரண்டு தங்கைகள் திருமணத்திற்கு இருக்காங்க.

அவர்கிட்ட காதல் சொன்னபோது அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை. நான் தான் அவரை வற்புறுத்தி எப்படியோ சம்மதிக்க வைத்தேன். அவர் தங்கைக்கும் திருமணம் முடித்த பிறகு தான் நம் திருமணம் என்று சொல்லி இருந்தார்.

நீங்களும் என் ஜாதகப்படி திருமணம் லேட்டாக செய்ய வேண்டும் என்று சொன்னதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தேன்.

ஆனால் திடீரென நிச்சயதார்த்தம் என்றதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரவிந்த் இடம் கூறிய போது வீட்டில் வந்து பேசிகிறேன் என்றவரை நான் தான் தடுத்து விட்டேன்.

இப்போது வந்து அவர் உங்களிடம் பெண் கேட்டாள் பணக்கார வீட்டில் தன் மகள் வாழவேண்டும் என்று தான் பெற்றவர்கள் நினைப்பார்கள். இப்படி வசதி இல்லாமல் வறுமையும் பொறுப்புகளும் அதிகம் இருப்பவருக்கு எப்படி திருமணம் செய்து கொடுப்பீர்கள் என்பதால் உங்களிடம் பேசவேண்டாம் என்று கூறிவிட்டேன்.

நீங்கள் அரவிந்தை மறுத்து விட்டாள் அதன் பிறகு உங்கள் பேச்சை என்னால் மீறமுடியாது என்பதால் தான் உங்களிடம் மறைத்து விட்டேன் சாரிப்பா.

அரவிந்த் அவங்க தங்கைகளுக்கு கடன் வாங்கி திருமணம் முடித்து விட்டார். அதன் பிறகு என்னையும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார். இப்போது எங்கள் இருவருக்கும் வெளிநாட்டில் வேலை கிடைத்து இருக்கிறது அங்கு தான் இப்போது சென்று கொண்டு இருக்கிறோம்.

எல்லாரையும் வருத்தபடவைத்ததற்கு சாரி அப்பா எனக்கு வேறு வழியில்லாமல் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.

அப்பா, அம்மா, பாட்டி, மலர், அகி எல்லோரும் என்னை மன்னித்திடுங்க

மிஸ் யூ ஆல் என்று கடிதம் முடிந்து இருந்தது.


கடிதம் படித்து முடித்தவர் அதனை மனைவியிடம் கொடுத்தவர் நேராக சூர்யாவின் குடும்பத்தினர் முன்பு வந்து கை கூப்பி "என்னை மன்னித்து விடுங்க சார்" என்று பேச அதை கண்ட பனிமலரின் மனம் உடைந்தது.

தன் பெரியப்பா இப்படி கை கூப்பி மன்னிப்பு கேட்க நான் தானே காரணம். நான் தான் இந்த கல்யாணம் நிற்கனும் என்று நினைத்தேன். என்னால் தான் என் ஆசை தான் இப்படி என் குடும்பம் அசிங்கப்பட காரணம் என்று உள்ளுக்குள் குமறியவளின் கண்களில் நீர் வழிந்தது.

எல்லாவற்றிற்கும் காரணம் தான் தான் என்று கத்த வேண்டும் போல் இருந்தது. நிலாவின் காதலை வீட்டில் சொல்லி இருந்தாள் இப்படி டாடி அவங்க கிட்ட மன்னிப்பு வேண்டிய நிலைமை வந்து இருக்காது என்று தன் மீதே கோபத்தை அதிகமாக்கி கொண்டு இருந்தவளை நகரமுடியாமல் இறுக்கமாக பிடித்து இருந்தாள் தமிழ்.

"என்ன சித்தி நான் சொன்னது சரியா போச்சா எவனையோ இழுத்திட்டு ஓடியிருக்கா தானே அந்த பெண்" என்றதும் அதுவரை அமைதியாக இருந்த சிவபிரகாஷம்

"கனகம்" என்று கோபக்குரலில் அதட்டவும் சலசலத்துக்கொண்டு இருந்த அந்த இடமே சட்டென அமைதியாகியது.

கை கூப்பி நின்ற அசோகனின் கையை கீழே இறக்கிய சிவப்பிரகாஷம் " இந்த காலத்தில் பசங்க எல்லாம் இப்படி தான் அவசரப்பட்டு முடிவெடுத்து விடுறாங்க அசோகன். இப்ப நம்ப பெண்ணு எங்க இருக்கா என்று தோடறது தான் முக்கியம் தப்பான இடத்தில் எங்காவது மாட்டி இருந்தால் என்ன பண்ணுவது முதலில் அதை பார்ப்போம்" என்றார்.

"இல்லை சார்" என்றவர் மனைவி கையில் இருந்த கடிதத்தை வாங்கி " படிங்க சார்" என்று கொடுத்தார் அசோகன்.

படித்த சிவபிரகாஷம் பெண்ணு தெளிவா எழுதி இருக்கா லெட்டர் அதனால் இப்ப அவசரமாக தோட வேண்டியது இல்லை. அதனால் இப்ப அடுத்த வேலையைப் பார்ப்போம் என்றவர் தன் மனைவி மகன் மருமகளை பார்க்க அவர்கள் சரி என்பது போல் கண்மூடி திறக்க

" அசோகன் இப்ப இந்த கல்யாணம் நின்றால் ஆளாளுக்கு ஒன்று பேசுவார்கள் அதை ஓரளவுக்கு குறைக்கனும் என்றால் இப்போது இந்த திருமணம் நிற்காமல் நடக்கனும்" என்றார்.

"சார் எப்படி அதான் என் பெண்" என்று பேசும் போதே இடையிட்ட சிவபிரகாஷம்

"நான் எங்க விருப்பத்தை சொல்லுறேன் அசோகன் அதை நீங்க உங்க குடும்பத்தாரிடம் பேசி முடிவு சொல்லுங்க. எங்க சூர்யாவுக்கு உங்க இரண்டாவது பெண் பனிமலரை கல்யாணம் பண்ணி கொடுக்க உங்களுக்கு சம்மதமா?... "

அதை கேட்ட சூர்யாவின் குடும்பத்தினர் தவிர மற்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் சூர்யாவும் அடக்கம் மின்னலென அவன் பார்வை பனிமலர் முகம் பார்க்க அதிர்ச்சியும் அழுகையும் வேண்டாம் என்ற தலையாட்டலும் தான் இருந்தது.

கல்யாணம் நின்று விட்டாள் அவர்கள் முன் சென்று நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்பேன் என்று சொன்னவள். இப்ப நீங்க எனக்கு நிச்சய மோதிரம் போட்டுட்டிங்க அடுத்து தாலியையும் கட்ட ரெடியாக இருங்க அத்தான் என்று சொல்லியவள்

இன்று தானாக திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்த போது அவளின் தலை வேண்டாம் என்று மறுத்துக்கொண்டு இருந்தது.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 33



தன் குடும்பத்திற்கு இப்படி ஒரு அவமானத்தை தேடித்தந்தது அவளின் ஆசை தானே காரணம். அவள் மனம் எப்போதும் இந்த திருமணம் நிற்கவேண்டும் நிற்கவேண்டும் என்று நினைத்ததினால் தான் இன்று தன் பெரிய தந்தை இவ்வளவு பேர் முன் தலைகுனிந்து கைகூப்பி மன்னிப்பு வேண்டிக்கொண்டு இருக்கிறார்.

அப்படி அவமானத்தை தந்த அவளின் ஆசை இனி அவளுக்கு வேண்டாம் சூரியனுடனான திருமணம் வேண்டாம் சீக்கிரம் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு இங்கிருந்து சென்று விடவேண்டும் என்று அவள் மனம் நினைத்துக்கொண்டு இருந்த போது தான் சிவபிரகாஷம்

"உங்க இரண்டாவது பெண் பனிமலரை என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க உங்களுக்கு சம்மதமா?... " என்று கேட்கவும் அதிர்ச்சியும் அழுகையும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது. இந்த திருமணம் வேண்டாம் தன் குடும்பத்தை அவமானப்படுத்திய இந்த திருமணம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று மனம் கூறியதன் வெளிப்பாடாக அவளின் தலை மறுப்பாக ஆடிக்கொண்டு இருந்தது.

அதைத்தான் சூர்யாவின் கண்கள் கண்டது. கண்களில் கண்ணீர் வழிய தலையாட்டிக்கொண்டு இருந்தவளை பார்க்க பார்க்க சூர்யாவின் முகம் இறுகியது. அவனின் கால்கள் வேகமாக வெளிவாசல் நோக்கி சென்றன.

இதனை முதலில் கண்டது சாருமதி தான் அச்சச்சே சூர்யா ஏன் வெளியே போறார் இவ்வளவு நேரம் நான் பேசியது எல்லாம் வேஸ்ட்டா போயிடும் போல என்று நினைத்தவள் தன் அருகில் இருந்த கணவனிடம் "மாமா உங்க தம்பி வெளியே போறார் பாருங்க போய் தடுத்து நிறுத்துங்கள்" என்று கூறியவள் பாட்டி மாமியார் அருகில் சென்று "பாட்டி அத்தை சூர்யா வெளியே போறார்" என்றாள்.

சந்திரபிரகாஷ் சாருமதி சொன்னதும் வேகமாக சென்று சூர்யாவை வெளியே சொல்லாமல் தடுத்து நிறுத்தி இருந்தான். பாட்டியும் அவனின் அம்மாவும் கூட சாருமதி கூறியதும் வேகமாக சூர்யாவின் அருகில் சென்றனர்.

"சூர்யா என்னப்பா எங்க போற" என்றார் பாட்டி.

"பாட்டி நான் வீட்டுக்கு போறேன்" என்றான்.

"என்ன சூர்யா கல்யாணம் முடித்து விட்டு போகலாம் என்ன அவசரம்" என்றார்.

"அதுதான் கல்யாணம் நடக்காது என்று தெரிந்து போச்சே அதுக்கு பிறகு இங்க என்ன வேலை நான் வீட்டுக்கு போறேன் நீங்களும் சீக்கிரம் வாங்க" என்று கூறி மீண்டும் வெளியேற போனவனின் கையை கெட்டியாக பற்றினார் பாட்டி.

" சூர்யா இப்படி மண்டபம் வரை வந்த கல்யாணம் நிற்க்கக்கூடாது அது நல்லது இல்லையப்பா ஆளாளுக்கு ஒன்னு பேசுவாங்க. வேண்டாதவங்க இன்னும் வேறுமாதிரி பரப்பி விடுவாங்க." என்றார் பாட்டி.

" அப்படி பேசறவங்களை நான் பார்த்துக்கிறேன் பாட்டி" என்றான் சூர்யா.

"ஒன்றிரண்டு பேர் பேசினால் பரவாயில்லை ஆனால் ஊரே பேசினால் என்ன பண்ணுவ சூர்யா ஒவ்வொருத்தர்கிட்டையும் போய் பேசமுடியுமா?. "

முகம் இறுகி நின்று இருந்தவன் "இப்ப நான் என்ன செய்யனும் என்று நினைக்கிறீங்க பாட்டி" என்றான் கோபக்குரலில்

"இந்த கல்யாணம் நிற்காமல் நடந்தாகனும் சூர்யா அப்ப இந்த பேச்சுகள் வராது" என்றார் பாட்டி.


அதுவரை அமைதியாக நின்று இருந்த சூர்யாவின் அம்மா "சூர்யா இந்த கல்யாணம் நின்றால் நம்பலை விட அவங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஏற்கனவே பெண் வேற போயிட்டா அதுவே அவங்களை எப்படி கூனிக்குருக வச்சிடுச்சி பாரு இப்ப அவங்க சின்ன பெண்ணை உன் தாத்தா உனக்கு பேசிட்டு இருக்கும் போது நீ வேண்டாம் என்று போனால் அது இன்னும் அவங்களுக்கு அவமானத்தை கொடுக்கும்."

" இப்பவே நம்ப சொந்தமும் அவங்க சொந்தமும் வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்காங்க இப்ப இந்த கல்யாணம் நின்றால் வெளியே போய் எல்லாவற்றையும் திரிச்சி அவங்க விருப்பத்திற்கு பேசி பரப்பிடுவாங்க அது அந்த குடும்பத்திற்கு எவ்வளவு அவமானத்தை ஏற்படுத்தும் தெரியுமா?..."

" இப்ப இந்த கல்யாணம் நடந்தால் அந்த பேச்சுக்களை தடுத்திடலாம். எப்படியும் வேறு பெண்ணை பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணுவோம் தானே அது இந்த பெண்ணா இருந்தா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்" என்றார்.

" அம்மா?... "என்றான் கேள்வியாக

" ஏன் சந்தோஷம் என்று கேட்கறியா உனக்கு பாட்டி அவங்க கிட்ட பெண் கேட்டது இந்த பெண்ணை மனதில் வைத்து தான் கேட்டு இருக்காங்க" என்று தாய் கூறியதை கேட்டவன் பாட்டியை பார்க்க

" ஆமாம் சூர்யா மலரை மனதில் நினைத்துத்தான் அவங்க கிட்ட கேட்டேன் ஆனால் அவங்க பெரிய பெண் ஜாதகம் கொடுத்தாங்க. அந்த ஜாதகமும் பொருந்தி நீயும் போட்டோ பார்த்து சரி என்றதும் இந்த கல்யாண ஏற்படும் செய்தோம். இப்ப நான் நினைச்ச பெண்ணே உனக்கு அமைய இருக்கு அதை வேண்டாம் என்று சொல்லாதே" என்று பேசிப்பேசி அவனை சம்மதிக்க வைத்தனர்.

சாருமதி அப்பாடி என்று பெருமூச்சு விட்டாள். காரணம் அவள் தான் பனிமலரை சூர்யாவிற்கு திருமணம் செய்யலாம் என்ற ஐடியாவை கொடுத்தது.

பனிமலரை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பார்த்த போதே இவள் சூர்யாவிற்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தாளே. இன்றும் அவளின் உறவினரான கனகம் பெரியம்மாவும் இன்னொரு உறவினர் சித்தியும் தங்கள் வீட்டில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் சூர்யாவிற்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு திருமணம் முடிக்கலாம் என்று பேசியதை கேட்ட சாருமதிக்கு மனதில் அதுகளை கல்யாணம் பண்ணுறதை விட சூர்யா காலம் முழுவதும் கல்யாணம் பண்ணாமலே இருக்கலாம் என்று தான் தோன்றியது.

அந்த நேரத்தில் தான் கண்ணீருடன் நின்றிருந்த பனிமலரை கண்டதும் சூர்யாவிற்கு இவள் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் முன்பே நினைத்தது நினைவில் வர உடனே தன் பாட்டி மாமியார் காதருகில் சென்று "பாட்டி அத்தை இந்த கல்யாணம் நின்றால் அதன் பிறகு சூர்யா கல்யாணம் பண்ணமாட்டார் அதனால் இந்த கல்யாணம் நிற்காமல் நடக்கனும்" என்றாள்.

"கல்யாணம் நடக்க பெண்ணு வேணுமே?....." என்றார் பாட்டி.

"அய்யோ பாட்டி பெண்ணை கண்ணெதிரே இருக்கும் போது இப்படி சொல்லுறீங்க" என்றாள் சாருமதி.

பாட்டி, மாமியார் பார்வை கனகம் இருக்கும் பக்கம் போவதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவள் "அய்யோ அந்த பேய்கள் பக்கம் இல்லை இந்த பக்கம் பாருங்க" என்று பனிமலர் இருந்த பக்கம் காட்ட பாட்டி அத்தை முகம் மலர்வதை கண்டவள்

" பாட்டி நீங்க ஆசைப்பட்டது இந்த பெண்ணைத்தானே, உங்க பேரனுக்கு கல்யாணம் பண்ண நினைச்சதா ஒரு நாள் சொன்னிங்க இப்ப அது நிறைவேற வாய்ப்பு கிடைத்து இருக்கு விட்டுடாதீங்க தாத்தா மாமாகிட்ட பேசுங்க" என்றாள் சாருமதி.

பாட்டி தாத்தாவிடமும் அத்தை மாமாவிடம் கூறிய போது இவளும் சூர்யாவுடன் இருந்த சந்திரபிரகாஷை அழைத்து சொல்லி இருந்தாள். அனைவருக்கும் சம்மதமாக இருக்கவே தாத்தா அசோகனிடம் கேட்டது.

இவர்கள் சூர்யாவிடம் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் சிவபிரகாஷம் கூறியதை கேட்ட அசோகன் அதிர்ந்து சில வினாடிகளில் தன்னை சமாளித்து திரும்பி தன் குடும்பத்தினரை ஒரு பார்வை பார்த்து விட்டு "உங்க பேரனுக்கு என் இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்றால் எங்களுக்கும் சம்மதம் சார்" என்றார்.

"அசோகன் உங்க வீட்டில் இருக்கிறவங்க கிட்ட கலந்து பேசி முடிவு சொல்லுங்க" என்றார் சிவப்பிரகாஷம்

"என் பெண் உங்க குடும்பத்திற்கும் பெரிய அவமானத்தை ஏற்படுத்திட்டு போயிருக்கா நீங்க ஒரு வார்த்தை கூட அதை பற்றி கேட்காமல் என் இன்னொரு பெண்ணை கேட்கறீங்க அதிலே உங்க குடும்பம் எப்படி பட்டது என்று தெரிகிறது."

" இப்படி ஒரு குடும்பத்தில் என் பெரிய பெண்ணுக்கு வாழ கொடுத்து வைக்கலை ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் அந்த வாய்ப்பை என் சின்ன பெண்ணுக்கு கொடுத்து இருக்கிங்க அதை போய் நாங்க எப்படி வேண்டாம் என்று சொல்லுவோம் சார்" என்றார் அசோகன்.

" அசோகன் இப்ப ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்கிங்க அதான் இப்படி பேசறீங்க. நீங்க மட்டும் முடிவு எடுத்தா போதுமா வாழப்போற பெண்ணு சம்மதமும் வேண்டும் அதான் கலந்து பேசி சொல்லுங்க" என்றார் சூர்யாவின் தந்தை.

"என் பெண்ணு சம்மதம் தானே" என்றவர் பனிமலரை பார்த்து "சித்துமா இங்க வாடா" என்று அழைத்தார் அசோகன்.

பெரிய தந்தை திருமணமத்திற்கு சம்மதம் தெரிவித்தை கேட்டு அதிர்ந்து நின்று இருந்த பனிமலரை அசோகன் அழைத்ததும் அவரின் அருகில் வந்தாள். அவளை தோளோடு அணைத்தவர் " சித்துமா என்ன இது?..." என்று தன் கர்ச்சீப் எடுத்து கண்ணீரை துடைத்துவிட்டவர்

"சித்துமா இவங்க பேரனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா இல்லையா என்று நீயே சொல்லுடா" என்றார் அசோகன்.

பனிமலரின் இதயம் வேகமாக துடித்தது ஒரு மனம் வேண்டாம் என்று சொல்லு என்றது இன்னொரு மனம் ஏற்கனவே பெரிய தந்தை திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்க இப்போது வேண்டாம் என்று சொன்னால் அது ஏற்கனவே அவமானப்பட்டு நிற்கும் தன் குடும்பத்திற்கு இன்னும் அவமானத்தை தரும் அதனால் சம்மதம் என்று சொல்லு என்றது.

ஆவலாக தன்னையே அனைவரும் பார்ப்பதை உணர்ந்தவள் தன்னை திடப்படுத்திக்கொண்டு "டாடிக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம்" என்று கூறினாள் பனிமலர்.

அவளை அணைத்து அவளின் உச்சியில் முத்தமிட்டவர் "தேங்க்ஸ் சித்துமா" என்றார் அசோகன்.

"நான் உங்க பெண்ணு டாடி எனக்கு தேங்க்ஸ் சொல்லுவிங்களா" என்றாள் கண்ணீர் குரலில்

"நீ என் பெண்ணு தான்டா அதுக்கு தான் இந்த தேங்க்ஸ் நீ ரூமுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுடா" என்றவர் "தமிழ் கூட்டிட்டு போம்மா" என்றார்.

தமிழ் பனிமலரின் கை பிடித்து அழைத்துக்கொண்டு மணமகள் அறைக்கு சென்றாள். உள்ளே சென்றதும் கட்டிலில் படுத்து சத்தமில்லாமல் கண்ணீர் விட்டாள் பனிமலர்.

" ஏய் இப்ப எதுக்குடி அழற?... "என்றாள் தமிழ்.

"எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றாள் பனிமலர்.

அதை கேட்ட தமிழ் குழம்பிப்போனாள் நேற்று வரை அவனை நினைத்து உருகிட்டு இப்ப அவள் ஆசை நிறைவேறப்போகுது இப்ப வந்து லூசு மாதிரி கல்யாணம் வேண்டாம் சொல்லுறாளே என்னாச்சு இவளுக்கு என்று நினைத்தவள்

"ஏன்டி இதுக்கு தானே இவ்வளவு நாள் ஏங்கிட்டு என் சூரியன் என் சூரியன் என்று சொல்லிட்டு இருந்த இப்ப எல்லாம் சரியாக நடக்கும் போது கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுற" என்னும் போதே கதவு தட்டப்பட்டது தமிழ் கதவை திறந்த போது அங்கு மாலினி நின்று இருந்தார்.

"வாங்க ஆன்ட்டி" என்று அழைத்தாள் தமிழ்.

உள்ளே வந்த மாலினி " மலருமா" என்றதும் எழுந்து அவரை அணைத்துக்கொண்டாள் பனிமலர்.

" எதுக்கு அழுகுற மலருமா திடீரென இப்படி கல்யாணம் என்றதும் பயமா இருக்காடா, அவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கடா நீயே பார்த்த இல்லையா அவங்க எழில்நிலா போனதை பற்றி ஒரு வார்த்தை கூட தப்பாக பேசலை அப்படி தப்பாக பேசியவர்களையும் கண்டித்தாங்க தானே அப்படி பட்ட குடும்பத்தில் வாழப்போற உன்னை நல்லா பார்த்துப்பாங்க அவங்க. "

" சூர்யாவும் நல்லவன் நம்ப ஆகாஷ் பிரண்ட்டு தான் அவன் அதுவும் இல்லாமல் உன் பக்கத்திலேயே உன் பிரண்ட் ஆகாஷ் இருக்கான் அப்புறம் என்ன பயம்" என்றவர் மேலும் சூர்யாவின் குடும்பத்தை பற்றி தனக்கு தெரிந்ததை கூறிக்கொண்டு இருந்தார் மாலினி.

இங்கே சூர்யாவின் கண்கள் பனிமலரை தேடியது அவளும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியதாக தாத்தா பாட்டியிடம் கூறியதை கேட்டவன் உடனே அவளிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்து தேட அவன் கண்ணில் பனிமலர் படவில்லை.


 
Status
Not open for further replies.
Top