ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 44



அடுத்த அரை மணி நேரத்தில் அருளானந்தமும் சந்திரபிரகாஷும் வீட்டில் இருந்தனர். அவர்களுக்கும் சூர்யா செய்த செயலை சொன்னதும் அவர்களும் சூர்யாவின் மீது கோபத்தில் காத்திருந்தனர்.

இவ்வளவு பேரின் கோபத்திற்கு ஆளான சூர்யா கோபத்துடன் எதிரிகளை பந்தாடிக்கொண்டு இருந்தான். தன்னை தாக்கியவர்களை பந்தாடிய போதும் அவனின் மனம் முழுவதும் அவனின் பனியிடம் தான் இருந்தது. அதனால் அவனால் முழுமையாக எதிரிகளின் தாக்குதலை தடுக்கமுடியாமல் அவனின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.

இந்த தாக்குதல் பற்றி ஏற்கனவே சூர்யா சொல்லியிருந்ததால் காவல்துறையினர் சரியான நேரத்தில் வந்து தாக்குதல் செய்தவர்கள் அனைவரையும் பிடித்த பிறகு மற்ற வேலைகளை மாதவனை பார்க்க சொன்னவன் வேகமாக காரில் ஏறி வீடு நோக்கி பறந்தான்.

காரின் ஒசை கேட்டு அனைவரும் கோபத்துடன் பார்த்திருந்தவர்கள் அவன் வந்த கோலத்தை கண்டு அனைவரும் எழுந்து நின்று விட்டனர். உடல் முழுவதும் அங்காங்கே இருந்த ரத்த காயங்களுடன் சூர்யாவை கண்டவர்கள் அதுவரை அவன் மீது இருந்த கோபம் மறைந்து இருந்தது.

"சூர்யா... சூர்யா... என்னாச்சு?..." என்று கேட்டவர்களின் குரல் கூட அவன் காதில் விழவில்லை. தன்னை நோக்கி வந்தவர்களை கூட கண்டு கொள்ளாமல் மாடியேறியவன் தன் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று வாடிய கொடியாய் படுத்திருந்த தன்னவளை கண்டு வேகமாக அருகில் சென்றவன் அவளை தொடப்போக

" சூர்யா இந்த கோலத்தில் மலரை தொடாதே முதலில் குளித்து விட்டு வா" என்ற சந்திரபிரகாஷ் குரலில் அவளை தொடாமல் திரும்பி சந்திரபிரகாஷை பார்த்தவனின் கண்கள் கலங்கி இருந்தன.

அறையின் வெளியே நின்று இருந்த சந்திரபிரகாஷ் தம்பியின் கலங்கிய கண்களை கண்ட உடன் அதிர்ந்து "சூர்யா... " என்று அறையினுள் வந்திருந்தான்.

" என்னடா என்னாச்சு ஏன் இப்படி இருக்க எல்லாவற்றையும் எங்ககிட்ட சொல்லாமல் மறைக்கிறாய் என்று பார்த்தால் இன்று மலரை அடித்து இருக்கிறாய் இப்போது இப்படி உடலில் காயங்களுடன் வந்து நிற்கிறாய். இனியும் மறைக்காமல் சொல்லுடா சொன்னால் தான் பிரச்சனையை சரி செய்ய முடியும்" என்றான்.

சூர்யா பதில் சொல்லாமல் தன் கை விரல்களை கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கவும்

" முதலில் குளித்து விட்டு வா" என்று சூர்யாவை குளியல் அறையில் விட்டு விட்டு அறையில் இருந்து வெளியேறி கீழே சென்ற சந்திரபிரகாஷ் மேலே நடந்ததை கூறிவிட்டு சூர்யா வந்தால் வருந்தும் படி பேசவேண்டாம் என்று கூறினான்.

குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக பனிமலர் அருகில் வந்தமர்ந்து அவனின் விரல் தடம் பதிந்து சிவந்து இருந்த கன்னத்தை கண்டவனின் கண்கள் கலங்கின.

"சாரிடி... சாரிடி..." என்று கூறியவன் குனிந்து கன்னத்தில் மென்மையான முத்தம் பதித்தவன் வாங்கி வந்திருந்த மருந்தை மென்மையாக தடவிவிட்டு அவளின் அருகில் படுத்து அவளை பார்த்துக்கொண்டே

"உனக்கு என்னை பார்த்தால் கொலைகாரன் மாதிரியா தெரியுதுடி. அந்த அளவுக்கு மோசமானவனாக உன் மனசில் இருக்கேன். உன் கண்ணில் என் மீதான காதலை பார்த்திருக்கேனே, எங்கே என்னை தவறவிட்டுடுவியே என்ற தவிப்பையும் உன் கண்ணில் பார்த்திட்டு இருக்கமுடியாமல் என்னென்ன வேலைகள் செய்து நீ சொன்ன வார்த்தைகளை மீறி உன்னை என் மனைவியாக்கிட்டேன். இப்பவும் உன் வார்த்தைக்காக தான் உன்னை நெருங்காமல் விலகி இருக்கேன்."

" அன்னைக்கு உன்னை கோயில் முன்னாடி பார்த்ததும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?... ஓடிவந்து உன் முன்னாடி நின்னு நீ கண் விரிச்சு என்னை முதல் முதலாக பார்த்த போது பார்த்தியே அதை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் நீ சொன்ன வார்த்தைகள் என்னை செய்ய விடாமல் தடுத்தது."

" நீ அந்த குழந்தையை பார்த்திட்டு இருக்கும் போது தான் நான் உன்னை பார்த்தேன். குழந்தையை பார்த்திட்டு இருந்த உன் முகத்திலும் கண்ணிலும் ஏக்கம் தெரிந்தது அது ஏன் எனக்கு அப்ப புரியலை. அடுத்து என்னை பார்த்தும் அந்த கண்கள் விரிந்தது பாரு யப்பா.... எப்படி இருந்திச்சு தெரியுமா அப்படியே அந்த கண்ணளே என்னை கபளீகரம் பண்ணிட்டடி. ஓடுவந்து என்கிட்ட பேசுவாய் என்று பார்த்தால் பேசலை உன் முகத்தில் குழப்பம் தான் வந்தது.

"ஆனாலும் என் பின்னால் வந்திட்டு இருந்த நீ எப்படியும் கண்டு பிடித்து விடுவாய் என்று பார்த்தால் என் பின்னாடி வந்தியே தவிர என்கிட்ட பேசக்கூட இல்லை. கோயிலில் இருந்து போகிறவறைக்கும் உன்னை திரும்பி திரும்பி பார்த்தேன் கடைசி வரை நீ பேசவே இல்லை. "

"நானாக வந்து பேசலாம் என்று பார்த்தால் நீ சொன்ன வார்த்தை என்னை தடுத்தது. அடுத்தது நீ என்னை தெரியலை என்று சொல்லிட்டா அதை என்னால் தாங்க முடியாதுடி. அப்பதான் என் பிரண்ட்ஸ் கிட்ட அவமானம் பட்டுட்டு அவங்களை பிரிந்து இருந்த நேரம் அப்ப நீயும் எதாவது சொல்லி இருந்தால் என்னால் தாங்க முடியாது என்று தான் உன்னிடம் பேசவில்லை."

*அப்பவும் உன் பின்னால் வந்து உன் அட்ரஸ் கண்டுபிடிக்க நினைச்சேன் தான் ஆனால் அப்படி செய்தால் உன் பேச்சை மீறியதாகும் என்று தான் அங்கிருந்து போனேன். அடுத்த மூன்று மாதம் தினமும் காலையில் அந்த கோயில் வாசலில் நின்னுட்டு இருந்தேன் நீ வருவாய் என்று ஆனால் நீ வரவே இல்லை அதன் பிறகு வேலைப்பளுவால் தினம் வரமுடியாமல் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து உன்னை அந்த கோயிலில் தேடிட்டு இருந்தேன்."

" கடைசியா நீ ஒரு வருஷம் கழிச்சு அதே நாளில் வந்த அப்பவும் என் பின்னாடியே வந்த எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?... அப்பவும் வந்து பேசுவாய் என்று எதிர்பார்த்தால் நீ பேசவே இல்லை. ஆனால் உன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது."

" ஒரு வேளை நீ வந்து பேசினால் நான் உன்னை தெரியாது என்று சொல்லி விடுவேன் என்று தயங்கிறியா என்று நினைத்தேன். அதனால் உன்னை திரும்பித்திரும்பி பார்த்தால் நீ என்னிடம் பேச நினைத்தால் நான் பார்க்கும் போது உன் முகத்தில் புன்னகை வந்தால் பதில் புன்னகை செய்யலாம் என்று பார்த்தால் நீ ஒரு முறை கூட என்னை பார்த்து சிரிக்கவே இல்லை."

" அப்புறம் என்ன செய்து உன்னிடம் நெருங்கறது என்று தெரியலை நீ வேற சின்ன பெண்ணாக இருந்தாயா அப்ப தான் காலேஜ் முதல் வருடம் முடித்து இருப்பாய் என்று தோன்றியது. அந்த சமயத்தில் உன்னிடம் எப்படி பழகுவது அப்படி பழகினால் அண்ணா என்று சொல்லிடுவியே என்று பயம் வேற இருந்தது. அதான் அப்பவும் பேசாமல் போயிட்டேன்."

" அடுத்த வருஷமும் அதே தான் நடந்தது. நாலாவது முறை அந்த ஷாப்பிங் மாலில் பார்த்தது. ஓடிவந்து என் கைக்கு மருந்து போட்டியே அப்ப உன் முகத்தில் எவ்வளவு வலி தெரிந்தது தெரியுமா எனக்கு அடிபட்டது கூட வலிக்கலை டி ஆனால் அன்னைக்கு உன் கண்ணுல தெரிந்த அந்த வலியை என்னால் தாங்க முடியலைடி அப்பவே உன் தூக்கிட்டு வந்து என்கூடவே வச்சிக்கனும் என்று தோன்றியது."

" அப்பவும் உன் வார்த்தைகள் என்னை தடுத்தது. ஆனால் ஒன்றும் மட்டும் புரிந்தது எனக்கு வலிச்சா உனக்கு வலிக்குது. அதே போல உன் வலி எனக்கும் வலியை தருகிறது என்று தெரிந்தது. அப்ப நீ எனக்குள் இருக்குறது போல் உனக்குள் நான் இருக்கேன் தெரிந்தது."

" அந்த வருடமும் மற்ற மூன்று ஆண்டுகள் போல என் பின்னால் சுற்றினாயே தவிர என்கிட்ட பேசக்கூட முயற்சி செய்யலை. எனக்கு உன் மீது கோபம் தான் வந்தது இன்னும் எத்தனை வருடங்கள் என்னை இப்படி காக்க வைக்கப்போறடி என்று உன்னிடம் கேட்கனும் என்று தோன்றியது. அந்த முறையும் எப்பவும் போல உன் வார்த்தைக்காக தான் அமைதியாக போயிட்டேன்."

" அடுத்து உன்னை பார்த்தது காலேஜ் ஃபங்ஷனில் தான். நிஜமாகவே அங்க உன்னை பார்ப்போன் என்று நினைக்கவில்லை. உன்னை பார்த்து சந்தோஷப்பட்ட அடுத்த நிமிஷமே அது காணாமல் போகவச்சுட்டான் அந்த ஆகாஷ். அவன் உன்னை பார்த்து பாப்பு டால் சொன்ன அடுத்த நொடி என் சந்தோஷம் காணாமல் போயிடுச்சி."

" ஏன் கேட்கறியா அந்த பேரை வச்சு தான் சின்ன வயதில் இருந்து என்னை வெறுப்பேற்றுவான் அவன். என்னைக்கு உன்னை அவன் பார்த்திட்டு வந்தானோ அன்னையில் இருந்து என் பாப்பு டால் என் பாப்பு டால் புராணம் தான். அவன் சொல்லும் போது எனக்கு ரொம்ப பொறாமையாகவும் கோபமும் வரும் முடிந்த அளவு அவன் சொல்லும் போது தவிர்த்து வேறு பேசி திசை திருப்பி விடுவேன். அப்படியும் சில சமயம் கேட்கவேண்டியது வரும் அப்போது எல்லாம் அவன் சொல்லுறதை மனதில் பதியவிடமாட்டேன். அப்படியும் சில விசயங்கள் மனதில் பதிந்து தான் இருந்தது."

அவன் அன்னைக்கு உன்னை பார்த்து பாப்பு டால் என்று சொன்னதும் எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?... என்னுடைய பனியை அவன் எப்படி உரிமை கொண்டாடலாம் என்ற ஆத்திரமும் வந்தது. அந்த நேரத்தில் உன் டிரஸ் கை லூசாக நழுவியதை பார்த்ததும் அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் உன் பக்கம் வந்திடுச்சு வேலையில் சின்சியாரா இல்லாமல் கேர்லஸ்சாக இருந்து இருக்கியே என்று கோபம் எல்லாம் சேர்ந்து தான் உன்னை அன்னைக்கு வாட்டி எடுத்தேன். உன் மனசை குத்தி கிழிக்கும் படியாக பேசினேன்."

" உன் கண்ணில் கண்ணீரை கண்ட பிறகும் என் கோபத்தை எல்லாம் உன் மீது கொட்டினேன். அன்னைக்கு எவ்வளவு வேதனை பட்டுயிருப்பாய் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அன்னைக்கு உன்னை விட அதிகமாக நானும் வேதனை பட்டேன் பனிமா."

" உன்னை வேதனை படுத்திட்டேன் என்ற வேதனை ஒரு பக்கம் என்றால் உன் அப்பா அம்மா இல்லை என்பதே அன்னைக்கு தான் தெரிந்தது. நீ எவ்வளவு தவித்து இருப்ப, அப்ப உன்னை ஆறுதல் படுத்த உன் கூட நானில்லாமல் போயிட்டேனே என்று என் மீதே எனக்கு கோபம் வந்ததுடி. அன்னைக்கு கோயிலில் அந்த குழந்தையை பார்த்த அந்த பார்வைக்கு அர்த்தம் அன்னைக்கு தான் தெரிந்தது. எவ்வளவு வேதனையை அனுபவித்திட்டு இருக்கிற உன்னை நான் இன்னும் வருத்தியிருக்கேன் என்று தெரிந்ததும் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கிட்டேன். இதுதான் என்று தன் கையில் இருந்த பெரிய தழுப்பை காட்டினான். சாரிடி உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல" என்றவன் குனிந்து பனிமலரின் நெற்றியில் முத்தம் பதித்தவன் மீண்டும் தொடர்ந்தான்.

" அதன் பிறகு உன்னை பற்றி நானாக விசாரிக்காமல் எல்லாம் எனக்கு தெரியவந்தது. வார இறுதி நாட்களில் நீ வெளியே சுற்ற கிளம்புவாய் என்று தெரிந்ததும் நேரம் கிடைக்கும் போது நானும் வந்து தூரத்தில் இருந்து உன் பின்னால் சுற்றியிருக்கிறேன்."

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 45



"மீண்டும் அதே நாளில் நீ கோயிலுக்கு வந்த போது உன் மீது கோபம் அதிகமாக இருந்ததால் உன்னை திருப்பிப்பார்க்காமல் செல்வது போல் சென்றேன். ஆனால் ஓரப்பார்வையில் உன்னை பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். உன் முகத்தில் கலக்கம் இருந்தது அதையும் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தேன் ஏன் தெரியுமா அந்த அளவுக்கு உன் மேல் கோபம்."

" அந்த ஆகாஷ், தமிழ், ஹரி, விஷால் எல்லார் கூடவும் ஜாலியாக பேசிப்பழகுறவள் என்கிட்ட மட்டும் பேசத்தயக்கம் எதற்கு பிரண்ட்ஸ் கூட பேசுற உனக்கு என்னிடம் பேசறதில் எதற்கு தயக்கம். அவங்களை விட நான் தானே உனக்கு நெருக்கமானவன் அப்புறம் என்னிடம் பேசாமல் இப்படி கலங்கிட்டு இருக்கியே இதுக்கு மேல உன்னை தனியாக விடக்கூடாது எப்படியாவது உன்னை என் பக்கத்தில் கொண்டு வரனும் என்று நினைத்தேன்."

" அதுவரை உன் படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தேன் ஆனால் இதற்கு மேல் உன்னை தனியாக விடக்கூடாது எதாவது செய்து உன்னை என்னிடம் வரவைக்கவேண்டும் என்று நினைத்தேன்."

" அன்னைக்கு ஷாப்பிங் மாலில் நான் டென்ஷனில் இருந்தேன் அந்த நேரத்தில் தமிழ் வந்து இடித்ததும் அடிச்ச பிறகு தான் அது தமிழ் என்று தெரிந்தது. இருந்தும் அந்த அடி அவளுக்கு கொடுக்க வேண்டியது தான். எதுக்கு தெரியுமா என்னை விட அவள் உன்கூட நெருக்கமாக இருக்காளே என்ற பொறாமை தான்."

" என்னோட பனிக்கு என்னை தவிர எல்லோரும் முக்கியமானவர்களாக இருக்குறதை பார்த்தாலே என்னையும் அறியாமல் கோபமாகிடுறேன். அன்னைக்கு என்னிடம் அவளுக்காக சண்டைக்கு வந்தாயே எப்படி இருந்தது தெரியுமா?..."

" என்னைவிட அவள் தான் உனக்கு முக்கியமானவளா என்று உன்னை உலுக்கி கேட்கனும் என்று தோன்றியது. அந்த கோபம் தான் அன்னைக்கு உன்னை அப்படி பேசவைத்தது. அடுத்து என்று சூர்யா பேசிய போது கதவு தட்டப்பட்டது.

கட்டில் விட்டு இறங்கப்போனவன் மீண்டும் அவளருகில் வந்து நெற்றியில் முத்தம் பதித்தவன் சென்று கதவை திறக்க சந்திரபிரகாஷ் நின்று இருந்தான். "தாத்தா கீழே கூப்பிடுறார் வா" என்றவன் சூர்யாவின் காயத்தை பார்த்து "மருந்து போடாமல் இருக்கியே டா?..." என்றான்.

"சின்ன காயம் தான் சரியாகிடும்" என்றவன் திரும்பி பனிமலரை பார்த்தான்.

"மலருக்கு தூக்கமாத்திரை கொடுத்து இருக்கு எப்படியும் ஈவினிங் தான் எழுந்துப்பா நீ வா" என்று அழைத்துக்கொண்டு கீழே சென்றான் சந்திரபிரகாஷ்.

கீழே அனைவரும் சோபாவில் அமர்ந்து இருந்தனர். சூர்யா சென்ற போது மாதவனும் வந்திருந்தான். அவன் முகத்தை பார்த்தே எல்லாம் சொல்லிவிட்டான் என்று தெரிந்தது.

" சூர்யா என்ன இது காயத்திற்கு மருந்து கூட போடாமல் அப்படியே விட்டு இருக்க?..." என்று பாட்டியும் தாயும் ஒரே நேரத்தில் பேசி அவனருகில் வந்தனர்.

"சின்ன காயம் தான் ஒன்னும் ஆகாது விடுங்க" என்று சொல்லி தாத்தா தந்தை அமர்ந்து இருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் அமர்ந்தான் சூர்யா.

சாருமதி பழச்சாறு எடுத்து வந்து அவன் முன் நீட்ட "வேண்டாம்" என்றான் சூர்யா.

"எடுத்து குடி சூர்யா" என்றார் தாத்தா.

சூர்யா வேறு வழியில்லாமல் பழச்சாறு எடுத்து வேகமாக குடித்து முடித்து டம்ளரை டீபாயில் வைத்ததும்

"என்னவெல்லாம் செய்து வச்சிருக்க சூர்யா உன் கிட்ட இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கலை. பிஸ்னஸ் நல்லா உயர்த்தி இருக்க என்று பார்த்தால் உன்னை சுற்றி எதிரிகளையும் சம்பாதித்து வச்சு இருக்கிற, உன்னால் பாதிக்கப்பட்டவங்க எல்லோரும் பழிவாங்க கிளம்பினால் என்னாகும்" என்றார் தாத்தா.

" நானாக யாரையும் பகைத்து கொள்ளவில்லை தாத்தா அவங்க தான் நம்ப தொழில் முன்னேற விடாமல் தடுத்தாங்க நான் அவங்களை நம்ப முன்னாடி நிற்க முடியாத அளவுக்கு அவங்க பிஸ்னஸை ஆக்கினேன் அது தப்பா?... " என்றான்.

" தப்பு தான் சூர்யா தொழிலில் இப்படி தடைக்கல் நிறைய வரும் தான் அதை தாண்டி முன்னேறனுமே தவிர அவங்களை இல்லாமல் ஆக்கக்கூடாது. அவங்களை நம்பி எவ்வளவு தொழிலாளிகள் குடும்பம் இருக்கும் அவங்களை நினைத்து பார்த்தியா அவங்க எல்லாம் என்ன ஆகி இருப்பாங்க அதை நினைச்சு பார்த்து இருக்கனும்."

" அதை நம்மை இல்லாமல் ஆக்க நினைச்சவங்க எண்ணி இருக்கனும். அவன் நம்பளை தாக்கும் போது சும்மா இருந்தால் இன்னைக்கு நம்ப தொழிலே இல்லாமல் ஆக்கி இருப்பாங்க" என்றான் சூர்யா.

" சூர்யா நீ சொல்லுறது புரியுது நம்மை தாக்க வந்தால் தடுக்கனும் தான் இல்லை என்று சொல்லலை ஆனால் நீ அதிகப்படியா போய் இருக்க அதைத்தான் வேண்டாம் என்று சொல்லுறேன்."

" இப்ப அந்த ஆர் எம் முப்பை கம்பெனியின் முக்கியமான பிஸ்னஸை பறிச்சி ஒன்னும் இல்லாமல் ஆக்கி இருக்க அதனால் ராகேஷ், முகேஷ் இரண்டு பேர் கிட்டயும் அவங்க அப்பா பிஸ்னஸை இனி நானே பார்க்கிறேன் என்று சொல்லிட்டாராம்.
உன்னால் தானே இந்த நிலைமை என்று அந்த ரெண்டு பேரும் ஆட்களை வைத்து உன்னை தாக்கமுடியாமல் போனதால் இன்னைக்கு பனிமலரை தாக்க பிளான் பண்ணி இருக்கானுங்க."

" அது உனக்கு தெரிந்ததால் இன்னைக்கு பனிமலரை வெளியேற விடாமல் தடுத்து மலரை அடிச்சி இருக்க. இன்னைக்கு காப்பாற்றிட்ட அடுத்த முறை உனக்கு தெரியாமல் தாக்க வந்தால் என்ன பண்ணுவ இனி மலரை வீட்டுக்குள்ளே பூட்டு வைக்க போகிறாயா?... என்றார் தாத்தா.

"அதுதான் எல்லாரையும் போலிஸ் பிடிச்சாச்சு இல்ல இனி நம்ப யாரையும் அவங்க நெருங்க முடியாது" என்றான் சூர்யா.

"அவங்க பெரிய இடம் சூர்யா, அரசியல் செல்வாக்கு நிறைய இருக்கு அதனால் ஈசியாக எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வெளியே வந்து விடுவார்கள். அத்தோடு நிற்காது அவங்க பழி வெறி அதிகமாகும். வேறுமாதிரி பிளான் போட்டு தாக்குவாங்க. எவ்வளவு நாள் அவங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியும்."

" இன்னைக்கு தெரிந்ததால் மலரை வெளியே விடவில்லை. இதுக்கு பிறகு வேற பெரிய திட்டம் போட்டு அதில் நம்ப குடும்பத்தில் யாருக்காவது எதாவது ஆனால் தாங்க முடியுமா சொல்லு?... " என்றார் தாத்தா.

" தாத்தா அப்படி எதுவும் நடக்காது" என்றான் சூர்யா.

" அப்படி நடக்காது என்று எப்படி உன்னால் நிச்சயம் சொல்ல முடியும். என்ன தான் பாதுகாப்பு போட்டாலும் கிட்ட வந்து தான் தாக்கனும் இல்லை எத்தனையோ முறை இருக்கு இந்த காலத்தில் அப்படி தாக்கி உயிர் போனால் திரும்ப உன்னால் கொண்டு வரமுடியுமா?..." என்றார் தாத்தா.

"தாத்தா ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க, இப்ப உங்களுக்கு என்ன தான் வேனும்?... " என்றான் சூர்யா சற்று கோபமாக.

" நிம்மதியும் சந்தோஷமும் வேனும் யாருக்கு என்ன ஆகுமே என்ற தவிப்பு இல்லாமல் வாழனும்."

" இப்ப நான் என்ன செய்யனும் நினைக்கிறீங்க தாத்தா" குரலில் எரிச்சலுடன்.

" இனி யாரையும் பகைச்சுக்க கூடாது. நட்பை வளர்த்துக்க அப்ப இப்படி தினம் என்ன நடக்குமோ என்ற பயம் இல்லாமல் வாழலாம். அதற்கு முதல் படியாக ஆர் எம் கம்பெனி ப்ராஜெக்ட் அவங்க கிட்ட கொடுத்திடு" என்றார் தாத்தா.

" தாத்தா.... " என்று அதிர்ந்து எழுந்தான் சூர்யா.

" சூர்யா உட்கார் தாத்தா உன் நல்லதுக்கு தான் சொல்லுறார்" என்றார் அருளானந்தம்.

" அப்பா அந்த ஆர்டர் நான் ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கினது அவ்வளவு பெரிய ப்ராஜெக்டை தூக்கி கொடுக்க சொல்லுறாரே" என்றான் சூர்யா.

"அது அவங்க ஆர்டர் தானே இன்னும் ரெண்டு வருஷம் காண்ட்ராக்ட் இருக்கு அதை பறிச்சு இருக்க" என்றார் தாத்தா.

"இல்லை தாத்தா ஆர் எம் கம்பெனி மேல் அவங்களுக்கு கொஞ்ச நாளாக அதிருப்தி இருந்து இருக்கும். அவங்களே நடவடிக்கை எடுக்க இருந்த நேரம் நான் அவங்களை அனுகவும் நம்ப கம்பெனி பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் கொடுத்து இருக்காங்க" என்றான்.

"அந்த லண்டன் கம்பெனி ஆர் எம் கம்பெனி மேல் நடவடிக்கை எடுத்து காண்ட்ராக்ட் கேன்சல் பண்ணிட்டு அதன் பிறகு நம்ப கம்பெனி கூட ஒப்பந்தம் போட்டு இருந்தா எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நடுவில் நீ புகுந்து அவங்க காண்ட்ராக்டை கேன்சல் பண்ண வச்சு ஆர்டரை பறிச்சதா நினைக்கிறாங்க" என்று பேசிக்கொண்டு இருந்த போதே கேட்டில் இருக்கும் செக்யூரிட்டி போன் செய்து ஆர் எம் முப்பை கம்பெனி ஒனர் சீனிவாசன் வந்து இருக்கார் என்றதும் சூர்யா தவிர மற்ற மூன்று ஆண்களும் சென்று வரவேற்று அழைத்து வந்தனர்.

வந்தவர் நேராக சூர்யாவிடம் வந்து தன் மகன்கள் செய்ததற்கு மன்னிப்பு கேட்டார். அவரின் அந்த செயலால் சூர்யாவும் மற்றவர்களும் வியந்தனர்.

சூர்யா எழுந்து அவரை அணைத்து அவரின் குற்றயுணர்ச்சியை போக்கினான். பின் அவரை பற்றியும் குடும்பத்தை பற்றி கூறியவர் தங்கள் பிள்ளைகளின் தவறை மன்னிக்கும்படி பேசியவர் அவர்கள் இனி எந்த தவறும் பண்ணாமல் பார்த்துக்கொள்வதாக சொன்னார்.

தாத்தாவும் தங்கள் பக்கம் நடந்ததை கூறியவர் லண்டன் ஆர்டரை மொத்தமாக நிறுத்துவது கடினம் அதற்கான செலவு செய்து ஏற்பாடுகள் நடப்பதால் நிறுத்தினால் நஷ்டம் ஏற்படும் என்பதால் இப்போதைக்கு இரண்டு கம்பெனிகளுக்கும் நஷ்டம் இல்லாமல் லண்டன் ப்ராஜெக்ட் இரண்டு கம்பெனியும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அதில் சீனிவாசன் சந்தோஷம் அடைந்தார். அதற்கான செய்ய வேண்டியவைகளை பேசியவர்கள் இடையே போலீஸ் கம்ப்ளைன்ட் திரும்ப பெற ஏற்பாடு செய்து இருந்தனர்.

மறுநாள் மகன்களுடன் வருவதாக சொல்லி சென்றார் சீனுவாசன்.

அனைவருக்கும் மனதில் நிம்மதி பரவியது. சீனிவாசன் தமிழ் நாட்டில் இருந்து சென்று மும்பையில் பெரிய தொழில் அதிபரின் பெண்னை திருமணம் செய்து இருந்தார். மாமனார் வட இந்தியர் என்ற போதும் ஒரே மகளின் ஆசைக்காக சீனிவாசனை வீட்டு மாப்பிள்ளையாக ஆக்கி தொழிலை இவர் கையில் கொடுக்க இவரும் இத்தனை ஆண்டுகள் திறன்பட வளர்த்து இந்தியாவில் முன்னனி நிறுவனமாக வளர்த்து இருக்கார். மகன்கள் கையில் கொடுத்ததை மகன்கள் சரியாக செய்யவில்லை என்ற வறுத்தம் கொஞ்ச நாளாக இருந்தது. இப்போது இது மாதிரி மகன்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தொழிலில் இருந்து மகன்களை விலக்கி வைத்தால் திருந்தி வருவார்கள் என்று நினைத்தது தப்பு. இனி அவர்களை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் இருந்தேன். இப்போது இந்த ஆர்டர் கிடைத்தது கொஞ்சம் அவர்களை மாற்றுவது மட்டும் இல்லாமல் உங்களுடன் பிஸ்னஸ் கிடைத்ததால் அவர்களின் பழியுணர்ச்சி நீங்கி உங்களுடன் நட்பு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்து இருக்கு என்று கூறி நன்றி சொல்லி சென்று இருந்தார் சீனிவாசன்.

"இப்ப தெரியுதா சூர்யா பகையை வளர்க்கிறதை விட நட்பு வளர்த்தால் நல்ல உறவுகள் கிடைக்கும். அவர் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் அவர் நினைத்து இருந்தால் ஈசியாக நம்பளை இல்லாமல் ஆக்க முடியும். அவ்வளவு பெரிய அளவில் அரசியல் சொல்வாக்கு இருக்கு. ஆனால் அவர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன அர்த்தம். அவருக்கு பகையை வளர்க்க ஆசை இல்லை அதான் நம்மை தேடி வந்து இருக்கார்."

" இனி நீ கம்பெனி முடிவுகளை எங்களிடம் பகிர்ந்த பிறகு செய்" என்றார் தாத்தா.
 
Status
Not open for further replies.
Top