ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 14



ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கல்லூரியில் படிப்பவர்களின் திறமையை அறிய இந்த விழாவை ஏற்படும் செய்வார்கள் கல்லூரி நிர்வாகம். மாணவ மாணவிகள் தங்கள் முழு திறமையையும் காட்டி உடைகளை டிசைன் செய்து அதை அணிந்து இந்த பேஷன் சோவில் கலந்து கொண்டால் முக்கிய பேஷன் டிசைனர்கள் பெரிய கார்மெண்ட்ஸ் ஓனர்கள் இந்த விழாவிற்கு வந்து சிறந்த உடைகளை தேர்ந்தெடுப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் உடைகளின் டிசைன்களை சிலர் தங்கள் கம்பெனியில் வெளியிடவும் முன் வருவர்.

அதனால் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். முதல் மூன்று ஆண்டுகள் பனிமலர், தமிழ் இருவரும் இணைந்து செய்த டிசைன்களே இவர்கள் பிரிவில் முதல் பரிசு பெற்றது. இந்த ஆண்டும் முதல் பரிசை பெறவேண்டும் என்று பனிமலர், தமிழ் இருவரும் முனைப்பாக இருந்தனர்.

இந்த ஆண்டு இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான பிரகாஷ் கார்மெண்ட்ஸ் முதல் இடம் பிடிக்கும் உடையை தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்து இருக்க அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பாக செய்து கொண்டு இருந்தனர்.

பனிமலரும் தமிழும் இணைந்து அழகாக வடிவமைத்து இருந்தனர். அந்த உடையை தமிழ் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று அவளின் அளவுக்கு தைத்து முடித்து அணிந்து பார்த்த போது இருவருக்கு திருப்தியாக இருந்தது. மறுநாள் விழா நடைபெற இருந்தது.

சந்தோஷமாக உறங்கிய நண்பிகள் அதிகாலையில் ஒலித்த போன் ஒலியில் எழுந்தனர். தமிழின் போன் தான் ஒலித்தது. அவளின் மூன்றாவது அண்ணன் தான் செய்து இருந்தான். ஆன் செய்து காதில் வைத்தாள் தமிழ் எதிர் முனையில் அவளின் அண்ணன் கீழே வரும்படி சொல்லவும் இந்த நேரத்தில் என்று வேகமாக நண்பிகள் இருவரும் கீழே சென்றனர்.

முகம் முழுவதும் சோகத்துடன் நின்று இருந்தான் தமிழின் அண்ணன்.

"அண்ணா யாருக்கு என்ன ஆச்சு?..." என்று அண்ணனிடம் கேட்டவளிடம் அவன் "அத்தை" என்று சொன்ன ஒரு வார்த்தையில் அனைத்தும் விளங்கியது. நீண்ட வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அத்தை உயிர் பிரிந்து இருக்கிறது என்று அறிந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தன் நண்பியை அணைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த பனிமலர் அப்போதே அந்த உடையை தன்னுடைய அளவுக்கு மாற்ற சில வேலைகளை செய்தாள்.

ஒவ்வொரு வகுப்பாக நடப்பதால் இவளின் வகுப்பு வரும் போது மாலை நான்கு ஆகியிருந்தது. அந்த நேரத்தில் தான் சூர்யா கல்லூரிக்கு வந்திருந்தான் அதற்கு முன்பு வரை அவனின் கம்பெனியில் இருந்து வந்தவர்கள் தேர்வுக்குழுவில் இருந்தனர்.

வந்தவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்து முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டான் சூர்யா. அவனின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவனை கண்டு முறைத்து விட்டு திரும்பினான் சூர்யா.

அவன் முறைத்தது ஆகாஷ் PMC கார்மெண்ட்ஸ் ஓனர். சூர்யபிரகாஷின் முதல் எதிரி அவன் தான் சூர்யாவின் இன்றைய நிலைக்கு காரணமானவன். படித்து வெளிநாட்டில் சென்று ஜாலியாக வாழ்க்கை வாழ வேண்டியவனை இன்று இறுகி போய் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தொழில் தொழில் என்று ஓடவைத்தவன் இந்த ஆகாஷ் தான் அவனை கண்டால் கொலைப்பண்ணு அளவுக்கு வெறி வரும் இன்றும் அந்த வெறி வந்த போதும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் சூர்யா.

மேடையில் நிகழ்ச்சி ஆரம்பிக்க ஒவ்வொருவராக வந்து தங்கள் ஆடைகளை அணிந்து நடந்து காட்டி சென்றனர். பனிமலர் நடந்து வந்தபோது அவளின் உடையின் கைப்பகுதி சற்று லூசாக இருந்ததால் சற்றே தோளில் இருந்து விலகியதால் அவளின் கழுத்து பகுதி சற்றே கீழே இறங்கியிருந்தது. அது இன்னும் அந்த உடையை அழகாக காட்டியது.

அனைவரும் வியந்து அந்த உடையை ரசித்தனர் என்றால் ஒருவன் முகம் மட்டும் கல் போல இறுகியது. பக்கத்தில் இருந்த ஆகாஷின் குரல் வேறு அவனை இன்னும் கோபம் கொள்ளச்செய்தது.

"பாப்பு டால் சூப்பர்டா" என்று மெல்லிய குரலில் ஆகாஷ் கூறவும் அவனை முறைத்தான் சூர்யா.

"என்னடா பார்வை என் பாப்பு டால் அவள்" என்று பெருமையாக தன் காலரை தூக்கி காட்டினான் ஆகாஷ்.

பல்லை கடித்து தன்னை சமன் செய்தவன் பனிமலரின் உடைக்கு மதிப்பெண் குறைத்து போட்டான் சூர்யா.

அதை கண்ட ஆகாஷ் "ஏய் ஏன்டா அந்த டிரஸ்சுக்கு என்ன குறை?..." என்றான்.

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மேடையை பார்த்தான் சூர்யா.

அனைத்தும் முடிந்து பரிசு பெற்றவர்களை அறிவித்த போது பனிமலர் உடைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பனிமலர் மனம் வருத்தமாக இருந்த போதும் இயல்பாக இருந்தாள்.

இரண்டாம் பரிசு பெற்றவள் அதை கிரிஜாவிடம் கொடுத்து விட்டு வாஷ் ரூம் சென்று வருவதாக கூறி அங்கிருந்து வெளியேறி இருந்தாள் பனிமலர். சிறிது நேரத்தில் வந்த ஆகாஷ் அவளின் முன் வந்து "பாப்பு டால்" என்றதும் "ஆக்கு" என்று அவனை அணைத்துக்கொண்டாள்.

" ஏன்டா இப்படி தனியாக வந்து இருக்க உனக்கு முதல் பரிசு கிடைக்கலை என்ற வருத்தமா?...." என்றான். "இல்ல ஆக்கு தமிழ் ரொம்ப எதிர்பார்போட இருந்தா முதல் பரிசு கிடைக்கும் என்று இப்போ இல்லை என்று சொன்னால் ஏற்கனவே அத்தை இறந்ததில் வருத்தமாக இருப்பாள் இதை சொன்னாள் இன்னும் வறுத்தப்படுவாள்" என்றாள் கலங்கிய கண்களுடன்

அந்நேரம் சூர்யா அவர்களை தாண்டி சொல்ல "உனக்கு முதல் பரிசு கிடைக்காமல் செய்தவன் இவன் தான்" என்று சூர்யாவின் கை பிடித்து நிறுத்தி இருந்தான்.

" ஏய்" என்று ஆகாஷ் கையை உதறியவன் அவனை அடிக்க கையை ஓங்க இடையில் வந்து நின்றாள் பனிமலர்.

"ஏய் நகரு அவனை போனால் போகுது என்று விட்டால் ரொம்ப ஓவரா பண்ணுறான்" என்று தன் சட்டையின் கைகளை ஏற்றிக்கொண்டு நின்றான் சூர்யா.

"பாப்பு டால் நீ நகருமா இவனை இன்னைக்கு ஒரு கை பார்க்கிறேன்" என்றான் ஆகாஷ்.

இருவரும் சண்டைக்கு தயாராக ஆகாஷை கை பிடித்து " ஆக்கு என் பேச்சை கேளு நான் அவருகிட்ட பேசிக்கிறேன் நீ கொஞ்ச நேரம் தூரமாக போ" என்றாள்.

அவளின் பேச்சை தட்டாமல் கேட்டவன் சூர்யாவை முறைத்து விட்டு சற்று தூரம் தள்ளி சென்று நின்றான்.

"உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினை சார் அவன் நீங்க தான் எனக்கு முதல் பரிசு கிடைக்காததற்கு காரணம் என்று சொல்லுறான்?..." என்று சூர்யாவிடம் பனிமலர் கேட்க

"உன்கிட்ட காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றான்.

"சார் நீங்க என் டிசைனில் என்ன குறை என்று சொன்னால் தானே அடுத்த முறை அந்த தவறு நடக்காமல் டிசைன் செய்யமுடியும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறேன்" என்றாள் பனிமலர்.

"உன் பேச்சுக்கு உன் செயலுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கு இப்படி ஒன்னுமே தெரியாதவள் போல் பேசுனா நீ பண்ணது இல்லை என்று ஆகிவிடுமா" என்றான் சூர்யா.

பனிமலருக்கு அவன் பேசுவது ஒன்றும் புரியாமல் குழம்பியவன் "சார் நீங்க என்ன சொல்லுறீங்க என்று புரியவில்லை" என்றாள்.

" நல்லா நடிக்கவும் செய்யுற மூன்று வருஷம் இப்படி நடிச்சு தான் முதல் பரிசு வாங்கினியா, இந்த வருடம் அது என்னால் கிடைக்காமல் போனதால் என்னையும் உன் வலையில் வீழ்த்த இப்படி ஒன்னும் தெரியாதது போல நடிச்சிட்டு இருக்க" என்றான் ஏளனக்குரலில் சூர்யா.

அதை கேட்டவளுக்கு கோபம் வர "சார் எங்க திறமையில் தான் மூன்று வருடங்கள் பரிசு வாங்கி இருக்கோம். எனக்கு நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை உங்களை வலை பிடிக்க வேண்டியதும் இல்லை. உங்க கிட்ட என் உடையில் என்ன குறை கண்டுபிடிச்சிங்க என்று மட்டும் தான் கேட்டேன் அதுவும் அடுத்த முறை தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்று தான் கேட்டேன் ஆனால் நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு என்னென்னவே பேசறீங்க" என்று கூறியவள் அவனிடம் அதற்கு மேல் பேசபிடிக்காமல் நகரப்போனவளை கை பிடித்து நிறுத்தினான் சூர்யா.

அவனின் கையை உதறியவளுக்கு முடியாம‌ல் போனது அவனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது.

"சார் பிளீஸ் விடுங்க நான் போறேன்" என்றவளின் குரல் கலக்கத்துடன் இருந்தது.

"கேள்வி கேட்டுட்டு பதில் தெரிந்து கொள்ளாமல் போனால் எப்படி?..." என்றான் சூர்யா.

அதுவரை குனிந்து அவனின் கையை விலக்க போராடியவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியே வரவா என்று தத்தளித்துக்கொண்டு இருந்தது.

அதை கண்டவனுக்கு என்ன தோன்றியதோ சட்டென்று கையை விலக்கியவன் திரும்பி நின்று ஆழமூச்செடுத்து விட்டு தலை கோதிக்கொண்டே திரும்பி பார்க்க பனிமலர் சில அடிகள் நடந்து சென்று இருந்தாள்.

வேகமாக சென்று அவள் முன் நின்றவன் "இங்க படிக்கறவங்க திறமையை காட்டத்தான் இந்த நிகழ்ச்சி நடத்துவது. அதில் உடையின் அழகை பார்த்து தான் தேர்ந்து எடுப்பாங்க. உடம்பை காட்டி இல்லை" என்றவனின் ஒரு விரல் நீண்டு அவளின் சற்றே இறங்கி முன்னழகை காட்டிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகே சொல்ல

அதை கண்ட பனிமலர் சட்டென்று இரண்டு அடி பின்னே சென்றவள் தன் கை வைத்து மறைத்திருந்தாள்.

இப்போது அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. " அது.... அது..." என்று வார்த்தை வராமல் கண்ணீர் விட்டாள் பனிமலர்.

"இதுக்கு தான் மார்க் குறைந்தது" என்று சொல்லி திரும்பி நடந்தவனை

தன்னை தவறாக நினைத்துவிட்டானே அதை இல்லை என்று நிருபிக்கும் வேகத்தில் அவனின் முன் சென்று "இது என் பிரண்ட் தமிழுக்கு தைத்தது அவள் அத்தை இறந்திட்டதால் வீட்டுக்கு போய் விட்டாள். அதனால் நான் இந்த டிரஸ் போட்டேன் இரண்டு பேரும் ஒரே ஹைட் என்பதால் கை ஆல்ட்ரேஷன் பண்ணாமல் விட்டுட்டேன்" என்று கூறியவள் அவனின் பதிலுக்காக தலைகுனிந்து நின்று இருந்தாள் பனிமலர்.

அவன் பேசும் முன் ஆகாஷ் அங்கு வந்தவன் பனிமலர் கண்ணீருடன் நிற்பதை கண்டு

" டேய் என்னடா சொன்ன என் பாப்புவை" என்று சூர்யாவின் சட்டையை பிடித்து இருந்தான்.

சூர்யாவிற்கு ஆகாஷின் செயல் கோபத்தை கொடுக்க அவனின் சட்டையை பிடித்தவன் "உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் சட்டையை பிடிப்ப" என்று அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

ஆகாஷ்சும் சூர்யாவின் முகத்தில் குத்த அதை லாவகமாக தன் மீது படாமல் விலகி இருந்தான் சூர்யா.

இருவரின் சண்டை கண்டு அதிர்ந்தவள் சில வினாடிகளில் தன்னை சமாளித்து ஆகாஷ் கை பிடித்து இழுத்தாள்.

" பாப்புமா உன்னை அழவச்ச இவனை சும்மா விடமாட்டேன்" என்று மீண்டும் சூர்யாவின் முகத்தில் குத்த அதில் இருந்தும் விலகி இருந்தான் சூர்யா.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 15




"ஆகாஷ்..." என்று கோபமாக பனிமலர் கத்தியதும் பட்டென்று சூர்யாவின் மீது இருந்த கையை எடுத்து இருந்தான் ஆகாஷ். சிறு வயதில் அவனின் பெயர் ஆகாஷ் என்று அழைக்க வராமல் ஆக்கு என்று தான் அழைப்பாள் பனிமலர் வளர்ந்த பிறகும் அவனின் பெயரை ஆக்கு என்றே அழைப்பாள். கோபத்தில் மட்டுமே ஆகாஷ் என்று அழைப்பவள் அதன் பிறகு அவனிடம் பேசமாட்டாள். அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகவும் மாட்டாள். எனவே தான் அந்த அழைப்பு வந்ததும் சண்டையை நிறுத்தி விலகி நின்று இருந்தான் ஆகாஷ்.

"வா போகலாம்" என்று ஆகாஷ் கை பிடித்து அழைத்து சென்றவளை

"ஹலோ நீ சொன்ன சப்பைக்கட்டுக்கு என்னோட பதிலை கேட்காமல் போகிறாய்?..." என்றதும் பனிமலர் அப்படியே நின்றுவிட்டாள். திரும்பி பார்க்காமல் நின்று இருந்தவளின் முன் வந்தவன் "நம்ப செய்யுற தொழிலில் எப்பவும் உன்னிப்பாக செயல்படனும் சின்ன தவறு இருந்தால் அது செய்த வேலையை எல்லாம் வேஸ்ட் செய்திடும் இப்ப நீ சொன்ன இல்ல அந்த காரணமும் அப்படி தான் இருந்தது."

"இப்படிபட்ட ஆட்களுக்கு நான் எப்பவும் என் கம்பெனியில் இடம் கொடுக்கமாட்டேன். அதனால் என் கம்பெனி பக்கம் எப்பவும் வந்திடாத
என் கம்பெனி வாசற்படியில் கூட கால் வைக்க அனுமதிக்க மாட்டேன்" என்றான்.

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் மனதை ரணமாக்கியது கம்பெனியிலேயே அனுமதிக்காதவன் எப்படி வாழ்க்கையில் அனுமதிப்பான் என்ற எண்ணம் அவளின் இதயத்தை வலிக்கச்செய்தது. அதுவரை கண்ணீரை கட்டுப்படுத்தியிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவனின் முகத்தை கூட பார்க்கமுடியாமல் தலைகுனிந்து கண்ணீர் விட்டு கொண்டு இருந்தாள் பனிமலர்.

அதுவரை பனிமலரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்த ஆகாஷ் பனிமலரின் கண்ணீரை கண்டதும்

"டேய் அவள் ஏன்டா உன் கம்பெனிக்கு வரப்போறா அவளே ஒரு கம்பெனியோட முதலாளி. அவளின் கீழே வேலை செய்ய ஆயிரம் பேர் காத்திட்டு இருக்கும் போது உன் கம்பெனிக்கு வேலைக்கு அவள் வரமாட்டாள். அவள் என்னைக்கும் முதலாளியாகத்தான் இருப்பாள். அவளுடைய திறமைக்கு அவள் உனக்கு மேலேயே தொழிலை வளர்ப்பாடா, நீயே அவளின் திறமையை கண்டு ஆச்சரியப்படும் நாள் கண்டிப்பா வரும் அப்ப நீயே வந்து அவளுக்கு வாழ்த்து சொல்லுவாய்" என்றவன் பனிமலரின் கண்ணீரை துடைத்துவிட்டு அவளை தோளோடு அணைத்துக்கொண்டு ஹாஸ்டல் நோக்கி சென்ற ஆகாஷ் திரும்பி சூர்யாவை முறைத்துவிட்டே சென்றான்.

"பாப்பு டால் அவன் சொன்னதை நினைச்சா இப்படி அழுகுற அவன் ஈகோ பிடிச்சவன் தன்னை தவிர மற்றவர்கள் எல்லாம் திறமை இல்லாதவங்க என்று நினைப்பவன். அவன் பேச்சை கேட்டு இப்படி அழுதிட்டு இருக்க உன் திறமை மேல் உனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஆனால் எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு கண்டிப்பா அவனே உன்னை அவனுடைய கம்பெனிக்கு கூட்டிட்டு போவான் இது கண்டிப்பாக நடக்கும்."

பலவாறாக சமாதானம் செய்து ஹாஸ்டல் அனுப்பி வைத்துவிட்டு சென்றான் ஆகாஷ். ஹாஸ்டல் அறைக்கு வந்தவள் கதவை தாளிட்டு நேராக கண்ணாடி முன் நின்று அந்த உடையை கண்டாள்.

அவளின் உடலில் கச்சிதமாக பொருந்தி இருந்தது அந்த உடை. கை மட்டுமே சற்று லூசாக இருந்தது தமிழ் உடல் சற்று சதைபற்றாக இருப்பதால் அது அவளுக்கு சரியாக பொருந்தி இருக்கும். இவளுக்கு அங்கு எலும்புகள் தெரியும் அளவுக்கு இருந்ததால் அந்த உடையின் கைகள் சற்றே தோளில் இருந்து நகர்ந்து இருந்தது.

அதுவும் நன்றாகவே இருக்கத்தான் செய்தது. நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் எப்படி எல்லாம் அணிகிறார்கள் ஏன் இப்பொழுது நடந்த பேஷன் ஷோவில் எவ்வளவு பேர் அறை குறையில் வந்து இருந்தனர். இவளே சிலர் உடைகளை கண்டு முகம் சுளித்தாளே

ஆனால் தன் உடலில் இருந்த உடை சற்றே முன்னாள் இறங்கி இருந்ததே தவிர அவ்வளவு மேசமாக இல்லை. ஆனால் இந்த உடையையே அவன் உடம்பை காட்டுகிறேன் என்று சொல்லிச்சென்றது மீண்டும் கண்கள் கலங்கியது.

"ஏன்டா அப்படி ஒரு வார்த்தையை சொன்ன அதைவிட என்னை கொன்று போட்டு இருக்கலாம் இல்ல. நீ யார் என்று தெரியாமலே உன் மீது ஈர்ப்பு வந்து விட்டது, என்னை விட்டு சென்ற உறவுகளே என்னிடம் வந்துவிட்ட உணர்வு உன்னை பார்க்கும் போதும் தோன்றுகிறது. ஆனால் உனக்கு என்னை பார்த்தாள் அப்படி எந்த உணர்வு வரவில்லையாடா?...."

" உன் உயரம் அறிந்து விலகிச்செல்லமுடியாமல் உன் அருகிலாவது இருந்து உன்னை பார்த்துக்கொண்டு உன் மூச்சு காற்று சுவாசித்து வாழ்ந்துவிடலாம் என்று கனவு கோட்டை கட்டியிருந்தேன் இன்று அதையும் தகர்த்து விட்டு சென்றுவிட்டாய். உன் கம்பெனி வாசற்படியில் கூட கால் வைக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி சென்றுவிட்டாயடா?... "

" உயிர்ப்பே இல்லாமல் வாழ்ந்த எனக்கு உயிர்ப்பை கொடுத்தவன் நீ இப்போது நீயே என் உயிர்ப்பை பிடுங்கி சென்று விட்டாயடா இனி நான் என்ன செய்வேன். "

" உறைந்து இருந்த என் வாழ்க்கை சூரியனின் பார்வையால் உருகி நீரோடையாய் பாய்ந்து செல்லும் என்று நான் நினைத்திருக்க, சூரியன் நீயோ நெருப்பை வீசி பனியை காணமல் போகவைத்து விட்டாயடா. மீண்டும் அந்த உயிர்ப்பு இல்லாத வாழ்க்கையில் என்னை தள்ளிவிட்டாயடா. இப்படி பட்ட வாழ்க்கை வாழ்வதை விட சாவதே மேல்" என்று வாய்விட்டு புலம்பிக்கொண்டு இருந்தவள் வேகமாக தன் டேபிளில் இருந்த சிறு கத்தியை எடுக்க அவளின் போன் அலறியது.

அதில் உணர்வு வந்தவள் தன் கையில் இருந்த கத்தியை கண்டவள் சில வினாடிகளில் தன் மனம் செய்ய இருந்த காரியத்தை நினைத்து இந்த அவளுக்காக என் மனம் அவனை விரும்புகிறது அவனின் உதாசினத்தை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளத்துணிந்தேன்.

அவ்வளவு பெரிய துன்பத்தில் கூட இப்படி ஒரு எண்ணம் எனக்கு வரவில்லையே என்று சிந்தனையில் இருந்தவளை மீண்டும் கலைத்தது போன் ஒலி மெல்ல டேபிளின் மீது இருந்த போனை எடுத்து பார்க்க அதில் ஆக்கு என்று இருக்கவும் ஆன் செய்து காதில் வைத்தவள் ஹலோ எனும் முன்

"பாப்பு" என்ற பாசமான குரல் காதில் ஒலித்தது. எந்த ரத்த உறவும் இல்லாமல் இப்படி பாசத்தை பொழியும் நட்புகளாக இந்த ஆகாஷ்சும் தமிழும் இருக்கும் போது தான் எடுத்த முடிவு அவர்களுக்கு தெரிந்தால் எவ்வளவு வேதனை பாடுவார்கள்.

எனக்காக இந்த ஆகாஷ் எவ்வளவு செய்து கொண்டு இருக்கிறான். தமிழ் என்னை தனியாக விட்டுச்செல்லக்கூடாது என்று தன் குடும்பத்தில் இருப்பவர்களை பார்க்கக்கூட செல்லாமல் என் ஆசையை நிறைவேற்ற அவளும் நான் தேர்ந்தெடுத்த படிப்பையே சேர்ந்து படித்து கொண்டு இருக்கிறாள். படிப்பை முடித்தும் என் இலட்சியத்தை அடைய உறுதுணையாக இருப்பேன் என்று இருக்கிறாள். இவர்களை விட்டு நான் சுயநலமாக முடிவு எடுத்து விட்டேனே என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தவளை

"பாப்புமா பாப்புமா என்னடா என்னாச்சு பேசுடா நான் வரவாடா" என்று குரல் கேட்டுக்கொண்டு இருந்ததில் கலைந்தவள்

" ஆக்கு ஆக்கு சாரிடா சாரி" என்றாள் தன் செய்ய இருந்த செயலை நினைத்து.

"ஏய் பாப்புமா பாப்பு என்னடா என்னாச்சு எதுக்கு சாரி சொல்லுற" என்று கேட்டதும் தான் செயலை உணர்ந்தவள்

" இல்லை ஆக்கு ஒன்னும் இல்லை போன் எடுக்க நேரமாச்சு இல்ல அதுக்கு தான்" என்று சமாளித்தாள்.

" சரி இன்னும் குரல் ஏன் இப்படி இருக்கு அழுதியா?..." என்றான்.

" இல்லை ஆக்கு நான் அழலை" என்றாள்.

" பாப்பு டால் அவன் பேசுனதை மனசில் வச்சுக்காத அவன் என் மேல் இருந்த பகையை உன் மேல் காட்டி இருக்கான். அதனால் தான் மார்க் குறைத்து போட்டு உன்னை முதல் பரிசு வாங்கவிடாமல் செய்துவிட்டான்."

" நீ அதையே நினைத்திட்டு இருக்காமல் அவனின் முன் உன் திறமையை காட்டி முன்னுக்கு வந்து காட்டு அவனின் நினைப்பை பொய்யாக்கி காட்டுடா" என்றான்.

அவனின் பேச்சு அவளை தெளிவு செய்ய " கண்டிப்பா ஆக்கு அவனே பாராட்டுற அளவுக்கு நான் என் திறமையை காட்டுறேன்" என்று தனக்கும் ஆகாஷ்சுக்கு நம்பிக்கை கொடுத்தாள் பனிமலர்.

அதன் பிறகு அவள் மேலும் தன் திறமையை வளர்த்து கொள்ளுவதில் மூழ்கினாள். தமிழ் திரும்பி வந்த போது நடந்ததை சொல்லாமல் தான் உடையை சரியாக ஆல்ட்ரேஷன் செய்யாததால் தான் முதல் பரிசு கிடைக்கவில்லை என்று கூறினாள்.

தமிழும் தன் அத்தையின் இழப்பில் இருந்தவளுக்கு அது பெரிதாக படாமல் விட்டு விட்டாள்.

தன் நினைவுகளில் இருந்து வெளிவந்தாள் பனிமலர். அவளின் முன் இடுப்பில் கை வைத்து நின்று இருந்தாள் தமிழ்.

"என்னடி?..." என்றாள் பனிமலர்.

"இப்படியே அதை பார்த்திட்டு இருந்தாள் கம்பெனிக்கு போயிடமுடியுமா எழுந்து கிளம்புடி அப்புறம் அந்த ராட்சசன் எங்காவது போய் விடுவான் பத்து மணிக்கு அங்க இருக்கனும் என்றும் புரபசர் சார் சொன்னார் லேட்டா போனால் அதை சொல்லி நம்மளை துரத்தப்போறான் அந்த ராட்சசன்" என்றாள் தமிழ்.

நாம் சீக்கிரம் போனா மட்டும் அவன் கம்பெனி உள்ள விட்டு விடுவானா?... என்று பனிமலர் உள்ளம் கேட்டது.

" தமிழ் நம்ப ஆகாஷ் கம்பெனிக்கு போகலாம்" என்றாள்.

" ஏய் என்னடி சொல்லுற புரபசர் நம்பளை இந்த கம்பெனி போங்க நான் சூர்யா சார்கிட்ட சொல்லியிருக்கேன் உங்க திறமை காட்ட சரியான இடம் என்று சொன்னாரே இப்ப அங்க போகலைனா எப்படி என்றாள் தமிழ்.

" அங்க போனால் கண்டிப்பாக நமக்கு ட்ரைனிங் எடுக்க விடமாட்டாங்க என்று தோன்றுது அதனால் வேண்டாம்" என்றாள் பனிமலர்.

"அதை நீ சொன்னால் போதுமா புரபசர் அவ்வளவு தூரம் பேசின பிறகு நம்ப போகலையினா அந்த ராட்சசன் நம்ப மேல் பழியை போடுவான். அதனால் போய் பார்க்கலாம் கிளம்பு" என்றாள் தமிழ்.

தமிழ் கூறியதற்காக கிளம்பி தரமணியில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் டிராபிக்கில் மாட்டி கம்பெனி சென்றபோது மணி பத்தரையை கடந்து இருந்தது.

அந்த ஏழு அடுக்கு கட்டிடத்தை அன்னாந்து பார்த்தனர் நண்பிகள் இருவரும் பிரகாஷ் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்
என்ற பென்னிற எழுத்துக்கள் மின்னின.

இந்திய முழுவதும் இருக்கும் இவர்கள் நிறுவனத்தை இங்கிருந்து தான் நடத்திக்கொண்டு இருக்கிறான் சூரியபிரகாஷ்.

உள்ளே சென்று ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் தங்கள் கையில் இருந்த காலேஜ் கொடுத்த கடிதத்தை காட்டியதும் அப்பெண்ணும் போன் செய்து மாதவனிடம் சொன்னாள்.

மாதவன் தயக்கத்துடன் சூர்யாவை பார்க்க அதை கண்ட சூர்யா என்ற என்று கேள்வியாக நோக்கினான்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 16



"சார் பனிமலர் மேடமும் அவங்க பிரண்டும் வந்து இருக்காங்க என்றான்.

மாதவனின் கையில் இருந்த போனை வாங்கியவன் " ஸ்பீக்கரில் போடு ஷீலா" என்ற கர்ஜனை குரலில் ரிஷப்ஷனில் இருந்த ஷீலா அதிர்ந்து " எஸ் சார்" என்று ஸ்பீக்கரில் போட்டாள்.

" பத்து மணிக்கு வரவேண்டியவங்க முதல் நாளே இப்படி நேரம் கழித்து வரவங்களுக்கு என் கம்பெனியில் இடம் இல்லை நீங்கள் போகலாம்" என்று அலட்சியக்குரலில் சொல்லிவிட்டு போனை வைத்து இருந்தான் சூர்யா.

பனிமலர் முகம் வாடியதை கண்ட தமிழ் இந்த ராட்சசனுக்கு கொஞ்சம் கூட மனதில் ஈரமில்லை அவனுக்காக இவள் தன்னையே மறந்து உருகிட்டு இருக்கா. நண்பியின் கண்கள் சுழல்வதை கண்டவளுக்கு கோபமே வந்தது. தங்களை நேரில் அழைத்துக்கூட பேசாமல் வெளியே துரத்துபவனை பார்க்க இவள் கண் அலைபாய்ந்திட்டு இருக்கு என்று நினைத்தவள் பனிமலரின் கையை பிடித்து இழுத்து சென்று அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தாள் தமிழ்.

"ஏய் தமிழ் என்ன பண்ணுற அவர் தான் போகச்சொன்னார் இல்லையா?..." என்றாள் பனிமலர்.

"அதை அந்த சுவர் நேரில் வந்து சொல்லட்டும்" என்றாள் தமிழ்.

வெளியே போகாமல் அங்கேயே அமர்ந்தவர்களை கண்ட ஷீலா

"ஹலோ உங்களை சார் போகச்சொன்னார் இல்லையா ஏன் இங்க உட்கார்ந்து இருக்கிங்க கிளம்புங்க" என்றாள்.

" அதை உங்க சார் வந்து சொல்லட்டும்" என்றாள் தமிழ்.

அதை கேட்ட ஷீலா கலகலவென சிரித்து "எங்க சார் வருமா?" என்றாள்.

"ஏன் உங்க சார் வரமாட்டாரா?..." என்றாள் தமிழ்.

" எவ்வளவு பெரிய ஆளுங்க எங்க சாரை பார்க்க காத்திட்டு இருக்கும் போது சார் உங்களை பார்க்க வருவாரா செக்யூரிட்டி வந்து துரத்துவதற்குள் கிளம்புங்க" என்றாள்.

அவளுக்கு பதில் சொல்லாமல் தமிழ் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

" தமிழ் வேண்டாம் நம்ப கிளம்பலாம்" என்று பனிமலர் கூறவும் அவளை முறைத்த தமிழ்

" அமைதியா உட்கார்ந்து நடப்பதை மட்டும் பார்" என்றாள்.

அவர்கள் வெளியேறுவதாக இல்லை என்பதை அறிந்த ஷீலா வெளியே இருந்த செக்யூரிட்டியை அழைத்து வந்தாள். அவர்கள் சொல்லியும் வெளியேறாமல் இருக்கவே மாதவனுக்கு அழைத்து சொன்னாள்.

மாதவன் தயக்கமான குரலில் சூர்யாவிடம் சொல்லவும் "அவங்களை யாரும் எதுவும் சொல்ல வேண்டாம் அவங்கவங்க வேலையைப்பார்க்க சொல்லு" என்றான் சூர்யா.

மாதவனும் அதை ஷீலாவிடம் சொல்லவும் அவளும் சரி என்றவள் பனிமலர் தமிழை முறைத்து விட்டு "நீங்க எத்தனை மணி நேரம் உட்கார்ந்து இருந்தாலும் சார் வரமாட்டார்" என்று ஏளனமாக சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

அடுத்த ஒரு மணி நேரம் கடந்தும் அங்கிருந்து அவர்கள் சொல்லவில்லை மேலும் ஒரு மணி நேரம் சென்ற போது சூர்யாவின் பாடிகார்ட் ஒருவன் வந்து " மேடம்" என்று பனிமலர் முன் நின்றான்.

பனிமலர் கேள்வியாக பாடிகார்டை என்ன என்பது போல் பார்க்க "சார் ரொம்ப பிஸியா இருக்கார் இப்ப உங்களை கிளம்பச்சொன்னார் அப்புறம் உங்கிட்ட பேசுறாராம்" என்றான்.

பனிமலர் பேசும் முன் தமிழ் பாடிகார்டிடம் "அதை உங்க சாரே வந்து சொல்லட்டும் நாங்க போறோம்" என்றாள்.

அங்கு சூர்யாவை சந்திக்க சிலர் காத்திருந்தனர் அவர்களும் இவர்கள் செயலை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தனர். சூர்யா சார் பார்க்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு காத்திட்டு இருக்கோம் இந்த பெண்கள் அவரே வந்து சொல்லட்டும் என்று உட்கார்ந்துட்டு இருக்குங்க அவரை பற்றி தெரியாமல் இப்படி செய்யுதுங்க என்று சிலரும்.

அழகா இருக்குறோம் என்ற திமிரில் இப்படி பண்ணுதுங்க சூர்யா சார் இவங்களை பார்த்தா அழகுல மயங்கிடுவார் என்று நினைக்கிறாங்க போல அவர் இதுவரைக்கும் எந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்த்தது இல்லை என்று தெரியாது போல என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இதை அனைத்தையும் தன் லேப்டாப்பில் பார்த்துக்கொண்டு இருந்தான் சூர்யா.

"சார் நான் போய் பேசிப்பார்க்கிறேன்" என்று மாதவன் கேட்க தலையை மட்டும் அசைத்தான் சூர்யா.

வேகமாக வந்த மாதவன் "மேடம் சார் ரொம்ப பிஸியா இருக்கார்" என்றான்.

"அவர் பிஸியா இருந்தா எங்களுக்கு என்ன?..." என்றாள் தமிழ்.

அன்னைக்கு சார் கிட்ட அடிவாங்கியும் இன்னைக்கு தைரியமாக அவர் கம்பெனிக்கே வந்து அவரே வந்து பேசினால் தான் போவேன் என்று சொல்பவளை பார்த்து மாதவனுக்கு திகைப்பாக இருந்தது.

அவனால் அவர்களை வெளியேற்ற முடியாமல் போகவே என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருக்கும் போது அங்கிருந்த லிப்ட் திறந்த அதிலிருந்து வேக நடையுடன் சூர்யபிரகாஷ் வந்தான்.

அதுவரை அசையாமல் அமர்ந்து இருந்த பெண்கள் அவனை கண்டதும் எழுந்து நின்றனர்.

வந்தவன் எதுவும் பேசாமல் தமிழை முறைத்து விட்டு பனிமலரின் கையை பிடித்து "வா" என்று இழுத்து சென்றான். சில அடிகள் சென்ற பின் திரும்பி பார்க்க பனிமலர் தமிழின் கையையும் பற்றி அழைத்து வந்தாள்.

பனிமலரை ஒரு பார்வை பார்த்தவன் பின் தமிழை முறைக்கவும் அந்த பார்வையில் தன் கையை பனிமலரிடம் இருந்து உருவிக்கொண்டாள் தமிழ்.

அங்கிருந்த ஓர் அறைக்குள் பனிமலரை அழைத்து சென்று கதவை மூடியிருந்தான் சூர்யா.

அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். இதுவரை எந்த பெண்ணுடனும் அவனை பார்த்தும் இல்லை பெண்களை அருகில் நெருங்க விடாமல் இரண்டு அடி தள்ளி வைப்பவன் இன்று ஒரு பெண்ணின் கை பிடித்து அழைத்து சென்றதும் சூர்யா சாரா இது? என்று வியப்புடன் பேசிக்கொண்டனர்.

அறைக்கு அழைத்து சென்று கதவை அடைத்தவன் "ஏய் உன்னை என் கம்பெனி வாசற்படியில் கூட கால் வைக்கக்கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல" என்றான் கோபமாக

"இல்லை அத்தான் புரபசர் தான் இங்க போகச்சொன்னார் நான் தமிழ் கிட்ட சொன்னேன் அவள் சார் சொன்னதுக்கு நம்ப போய் தான் ஆகனும் கூட்டிட்டு வந்தாள்" என்றாள் பனிமலர்.

" அவள் தான் இதுக்கு காரணமா அவள் என்ன சொன்னாலும் செய்வியா உனக்கு என்று சுயமாக சிந்திக்க தெரியாத அவள் பிரண்ட்ஸிப்பை முதலில் கட் பண்ணு அப்பதான் நீயா முடிவு எடுக்கமுடியும். இல்லைனா அவள் உன்னை தலையாட்டி பொம்மையா ஆக்கிடுவா" என்றான்.

"அத்தான் என்னை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கு ஆனால் தமிழை பற்றி பேச உரிமை இல்லை" என்று திடமான குரலில் கூறினாள்.

" ஓஓஹே... அவளை பற்றி பேசக்கூடாதா ஓகே பேசலை ஆனால் உன்கிட்ட பேச உரிமை இருக்கு என்று சொன்ன இல்ல சரி நான் சொல்லுறதை கேட்டுக்கோ உன்னை இந்த கம்பெனியில் சேர்த்துக்கிறேன்" என்ற வார்த்தையை சூர்யா கூறியதும் அதுவரை புன்னகை இழந்த முகம் தாமரையாய் மலர்ந்து

" அத்தான்" என்றாள் புன்னகையுடன்

" நான் சொல்லுறதை முழுசா கேளு உனக்கு மட்டும் தான் இங்க இடம் இருக்கு அதனால் வெளியே போய் அவளை போகச்சொல்லிட்டு நீ ஜாய்ன் பண்ணிக்கே" என்றான்.

அதை கேட்ட மலரின் முகம் மீண்டும் வாடிய சருகானது. "அத்தான் அவள் மேல் உங்களுக்கு என்ன கோபம் அவள் என்னோட பெஸ்ட் பிரண்ட்" என்றாள்.

" பெஸ்ட் பிரண்டா எத்தனை வருஷமா உனக்கு அவளை தெரியும்?... " என்றான்.

" ஏழு வருஷமா" என்றாள் பனிமலர்.

"பிறந்ததில் இருந்து நண்பனாக இருந்தவனே என்னை காலேஜில் எல்லார் முன்னாடியும் அசிங்கப்டுத்தினான் . இன்னிக்கு என் முதல் எதிரியாக இருக்கான் அந்த ஆகாஷ். நீ ஏழு வருஷமாக பிரண்ட் என்று அவள் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டிட்டு இருக்க."

"இப்ப உனக்கு கொடுத்த ஆஃபரை அவளுக்கு கொடுத்தா உன்னை தூக்கி போட்டுட்டு என் கம்பெனியில் ஜாய்ன் பண்ணிடுவா" என்றான் சூர்யா.

இப்போது பனிமலர் சூர்யாவை பார்த்து ஏளனமாக சிரித்தவள் "கண்டிப்பா என் பிரண்ட் உங்க ஆஃபரை ஏத்துக்கமாட்டா அத்தான்" என்றாள்.

" ஏத்துகிறாளா இல்லையா என்று பார்த்திடலாமா?... " என்று சவால் விடும் குரலில் கேட்டான் சூர்யா.

"டெஸ்ட் வச்சு தான் எங்க பிரண்ட்ஸிப்பை பற்றி தெரிந்துக்கனும் என்று இல்லை. அதுபோல எங்க நட்பை உங்களுக்கு நிருபிக்க வேண்டிய அவசியமும் இல்லை."

"அப்புறம் ஆகாஷ் பத்தி சொன்னிங்க இல்ல அத்தான் அவனைப்போல ஒரு பிரண்ட் கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும். அது எனக்கு இருக்கு ஆனால் நீங்க மிஸ் பண்ணிட்டிங்க அதான் அவனை எதிரி என்று சொல்லுறீங்க."

" அவன் கண்டிப்பாக உங்களை அவமானப்படுத்தி இருக்கமாட்டான் அவன் அப்படி பட்டவன் இல்லை. அவன் பேச்சு உங்களை வருத்தப்பட வைத்து இருந்தாலும் அது உங்களுக்கு நல்லதாகத்தான் இருந்து இருக்கும்."

" எனக்கு கடவுள் இரண்டு நல்ல நட்புக்களை கொடுத்து இருக்கார். உங்களுக்கு கொடுத்தும் அதை இழந்துட்டு நிக்கிறீங்க" என்றாள்.

" ஓஓஹே அவ்வளவு நம்பிக்கையா அவங்க மேல்" என்றான் சூர்யா.

" ஆமாம்" என்றாள் பனிமலர்.

" அப்ப அவங்க என்ன சொன்னாலும் செய்வியா?... "என்றான் அவளை கூர்ந்து பார்த்து கொண்டே.

" கண்டிப்பாக அவங்க என்ன சொன்னாலும் செய்வேன்" என்றாள் அவனின் பார்வைக்கு சளைக்காத பார்வை பார்த்து.

" சற்று இடைவெளி விட்டு அவங்க உன்னை சாகச்சொன்னாலும் செய்வியா" என்று குரலில் சற்றே தயக்கம் இருந்தது அவன் குரலில்

ஆனால் சிறிதும் யோசிக்காமல் "கண்டிப்பா அவங்க சாகச்சொன்னால் செத்து போவேன் அந்த வார்த்தை அவங்க சொன்னா அதுவும் என் நன்மைக்காகத்தான் இருக்கும் அதனால் கண்டிப்பாக செய்வேன்" என்றாள் பனிமலர்.

அவளின் பேச்சை கேட்டு திகைத்து நின்று இருந்தான் சூர்யா.

அவனை ஒரு பார்வை பார்த்தவள் " இனி நீங்களாக அழைத்தால் மட்டுமே உங்க கம்பெனியில் என் கால் படும் அத்தான்" என்று கூறிவிட்டு கதவை திறந்து முகம் தெளிந்து நடையில் கம்பீரத்துடன் வந்தவள் தமிழின் கை பிடித்துக்கொண்டு வெளியேறி இருந்தாள் பனிமலர்.

"ஏய் என்னடி பேசுனான் அந்த ராட்சசன் உள்ள போனபோது அழுது வடிந்திட்டு போன திரும்பி வரும்போது பிரைட்டா வந்த ஒரு வேளை கல்யாணம் உன்னை பண்ணிக்கிறேன் என்று சொன்னானா?..." என்றாள் தமிழ்.

"ச்சே... ச்சே... அதைவிட பெரிய ஆஃபர் கொடுத்தார் டி அத்தான்" என்றாள் பனிமலர்.

" என்னது கல்யாணத்தை விட பெரிய ஆஃபரா என்னடி?... " என்றாள் ஆவலாக தமிழ்.

" அதுவா அவருடைய கம்பெனியை அவரால் பார்த்துக்க முடியலையாம் அதனால் என்னை முதலாளியாக ஆக்குகிறேன் என்று சொன்னாரா நான் தான் வேண்டாம் என்று சொல்லிட்டு வந்திட்டேன்" என்றாள் பனிமலர்.

பனிமலரின் கையை பிடித்து நிறுத்திய தமிழ் " உன்னை முதலாளியாக ஆக்குறேன் என்று அந்த ராட்சசன் சொன்னான் நீ வேண்டாம் என்று சொல்லிட்டு வந்தியா?... "என்று முறைப்புடன் கேட்டாள் தமிழ்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 17



" ஹிஹி... ஹிஹி". என்று பனிமலர் சிரிக்க

"சகிக்கலை சிரிப்பை நிறுத்தி என்ன நடந்தது என்று சொல்லுடி" என்றாள் தமிழ்.

" ஏய் ஏன்டி அதையெல்லாம் கேட்குற எனக்கு வெக்கம் வெக்கமா வருது" என்று தரையில் கால் விரலால் கோலம் போட்டவளை விசித்திரமாக பார்த்தாள் தமிழ்.

"ஏய் என்னடி பண்ணுற?..." என்றாள் தமிழ்.

" இப்படித்தானே சினிமாவில் வெட்கப்படுவாங்க அதான்" என்றாள்.

"அவளின் முதுகில் இரண்டு அடிகளை போட்டவள் கண்றாவியா இருக்கு இனி என்ன நடந்தது என்று கேட்கமாட்டேன் அடுத்து என்ன என்று நீயே சொல்லு" என்றாள் தமிழ்.

சொல்லித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தாமல் தன் செயலில் இருந்தே சொல்ல விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்டு அடுத்து என்ன என்று கேட்கும் நண்பியை போய் அவன் எப்படி பேசினான் என்று மனம் கலங்கினாலும் வெளியில் காட்டாமல் " அடுத்து என்ன ஆக்கு இருக்கும் போது நமக்கு எதுக்கு கவலை" என்றவள் ஆட்டோ ஒன்றை நிறுத்தி போரூர் சொல்ல வேண்டும் என்று கூறி அமர்ந்தனர்.

"ஏன்டி அவன் கம்பெனிக்கு தான் போகனுமா வேற கம்பெனி போகலாம்" என்றாள் தமிழ்.

"ஹா ஹா ஹா" என்று சிரித்த பனிமலர் "ஏன்டி அங்க வேண்டாம்" என்றாள்.

" தெரியாத மாதிரி பேசாதடி ஏற்கனவே போற இடத்திற்கு எல்லாம் வந்து தொல்லை பண்ணிட்டு இருக்கான் இப்ப அவன் கம்பெனிக்கு போனால் என்ன பண்ணுவானோ அந்த பைத்தியக்காரன்" என்றாள் தமிழ்.

"ஏய் யாருடி பைத்தியம்" என்றாள் பனிமலர் தமிழை முறைப்புடன் பார்த்து.

"ஏன் தெரியாதா உன் ஆக்கு தான் பைத்தியம் காதல் பைத்தியம்" என்றாள் தமிழ்.

" அவனோட காதலோட அருமை உனக்கு தெரியலைடி தமிழ்" என்றவளின் வாயைமூடினாள் தமிழ்.

"இதுக்கு மேல எதுவும் பேசாத பேசினால் நான் இப்படியே இறங்கி போயிடுவேன்" என்று கூறவும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வந்தனர் இருவரும்.

ஆகாஷ் கம்பெனியின் முன் ஆட்டோ நின்றதும் இறங்கியவர்களின் முன் அந்த மூன்று அடுக்கு கட்டிடம் அவர்களை வரவேற்றது PMC கார்மெண்ட்ஸ் என்ற எழுத்துக்களை கண்டவளின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

தமிழ் மலரை தோளோடு அணைத்து கொண்டு "ஏய் சந்தோஷப்படவேண்டிய நேரத்தில் இப்படி அழுகற" என்ற நேரம் அங்கிருந்த பெரிய கேட் திறக்கப்பட்டது. அதுவரை கண்ணீர் சிந்தியவளின் முகம் மலர்ந்தது கேட்டுக்கு அந்த பக்கத்தை பார்த்ததும்.

தமிழ் புன்னகையுடன் பனிமலர் கை பிடித்து அழைத்து சென்றாள்.

கேட்டை தாண்டி காலை உள்ளே வைத்ததும் பனிமலர், தமிழ் மீது பூக்கள் பூமாரி பொய்தன. வெல்கம் என்ற பலகைகளை தாங்கி சில பெண்கள் நின்று இருக்க கம்பெனியில் நீண்ட காலமாக வேலையில் இருப்பவர்கள் எல்லோரும் அங்கு நின்று வரவேற்றனர். அவர்களை கண்டவளின் கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாக நலம் விசாரித்தவளை அவர்களும் நலம் விசாரித்தனர். அவர்களை தாண்டி உள்ளே சென்ற போது நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி ஆலத்தட்டோடு நின்று இருந்தார்.

"சாந்தி ஆன்ட்டி" என்றாள் பாசமாக

அவரின் கண்களும் கலங்கி இருக்க "வாடா மலரு" என்றவர் ஆலம் சுற்றி பொட்டு வைத்து விட்டு "உள்ளே போடா" என்றார் சாந்தி.

அடுத்து நின்றவர்களை பார்த்ததும் வாய்விட்டு சிரித்தனர் பனிமலர், தமிழ்.

அவர்களின் அருகில் சென்றவர்கள் " ஏன்டா கம்யூட்டரை தட்டிட்டி இருப்பவனுக்கும் காலேஜில் பெண்ணுங்க கிட்ட கடலை போடுறவனுக்கும் இங்க என்ன வேலைடா" என்றாள் பனிமலர்.

அவளை முறைத்த இருவரும் ஒரே குரலில் " இரண்டு காலேஜ் பெண்ணுங்க வராங்க வரவேற்க வாங்கடா என்று இந்த அண்ணன் சொன்னதால் வந்தோம் இங்க வந்தா இரண்டு வால் இல்லாத குரங்குங்க வந்து நிக்குது" என்றதும் மலர், தமிழ் இருவரும் இடுப்பில் கை வைத்து முறைத்தனர்.

"அது மட்டுமா முக்கிய ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு அதை பாதியில் விட்டுவிட்டு வந்தேன் இந்நேரம் பெரியப்பா நான் இல்லாததை கண்டு பிடித்து இருப்பார் இவங்களால் இன்னைக்கு நல்ல மண்டகப்படி வேற வாங்கனும்" என்றான் ஹரி.

"நான் கூட இன்னைக்கு பிரண்ட்ஸ் கூட தியேட்டர் போகலாம் என்று இருந்தேன்டா இந்த அண்ணன் பேச்சை கேட்டு வந்தேன்" என்றான் விஷால்.

ஹரி, விஷால் இருவரும் கோபி, மாலினி தம்பதிகளின் பிள்ளைகள். ஆகாஷ் மாலினியின் அக்கா பையன்.

" ஓஓஹே... அப்படியா இப்பவே ஆன்ட்டிக்கு அங்கிளுக்கும் கால் பண்ணி சொல்லுறேன் நாங்க உங்களுக்கு குரங்குகளா இங்க எல்லாரும் இருப்பதால் தப்பிச்சிங்க இல்லைனா என்ன நடந்து இருக்கும் என்று தெரியும் இல்ல" என்றாள் பனிமலர்.

"ஹாஹா ஹா" என்று சிரித்தவர்கள் பின் "அது தெரிந்ததால் தான் உன் எதிரில் நின்று பேசிட்டு இருக்கோம் இல்லைனா இந்நேரம் குரங்கு கடிச்சி ஆஸ்பத்திரி பெட்டில் இல்ல படுத்திட்டு இருப்போம்" என்றனர்.

அதை கேட்டவள் தன் கையில் இருந்தவற்றை தமிழிடம் கொடுத்து விட்டு இருவர் தலையிலும் குட்டு வைத்தாள் பனிமலர்.

இருவரும்" ஆஆ..." என்று கத்த அந்நேரம் அங்கு வந்தான் ஆகாஷ்.

" டேய் இரண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க விஐபிக்கள் வந்து இவ்வளவு நேரம் ஆச்சு அவங்களை உள்ள அழைச்சிட்டு வராமல் என்ன பண்ணிட்டு இருக்கிங்க" என்றான் ஆகாஷ்.

"இவங்க விஐபியா?... இவங்களை வரவேற்கத்தான் எங்களை வரச்சொன்னீங்களா அண்ணா" என்றனர் ஹரி, விஷால்.

அந்நேரம் வந்த சாந்தி " ஏன் தம்பிகளா வந்தவங்களை உள்ள கூட்டிட்டு போகாமல் இப்படி தான் வெளியவே நிற்க வைத்து பேசிட்டு இருப்பிங்களா" என்றார்.

"ஓஓ... சாரி" என்று கூறிய ஆகாஷ் அங்கு வைக்கப்பட மாலையை எடுத்து பனிமலருக்கு போட்டவன் "வெல்கம் டு யுவர் கம்பெனி" என்றான்.

அவனின் தோளில் சாய்ந்த பனிமலர் " என்ன இது ஆக்கு நான் இங்க ட்ரைனிங் எடுக்கத்தான் வந்தேன்" என்றாள்.

" மலருமா அதெல்லாம் உள்ள போய் பேசலாம் இப்ப உள்ள வாங்க" என்றார் சாந்தி.

"சரி" என்று நடந்தவளை கை பிடித்து நிறுத்திய ஆகாஷை கேள்வியாக பனிமலர் நோக்கினாள்.

"இன்னொரு விஐபியை வரவேற்கனும் இல்ல" என்று தமிழை காட்டினான்.

பனிமலர் புன்னகையுடன் நிற்க இன்னொரு மாலையை எடுத்து தமிழை நோக்கி சொல்ல தமிழ் ஆகாஷை முறைத்தாள். அவன் மாலையை அவளுக்கு போடப்போக இரண்டு அடி பின்னே சென்றவள் அவனை முறைத்துக்கொண்டே கையில் மாலையை வாங்கினாள்.

ஆகாஷ் சோகமாக தமிழை பார்க்க பனிமலர் அருகில் வந்து தமிழின் கையில் இருந்த மாலையை வாங்கி அவளுக்கு போட்டு விட்டு கை பிடித்து தமிழை உள்ளே அழைத்து சென்றாள்.

அனைவரும் உள்ளே செல்ல அங்கு வரவேற்பு பகுதியில் பெரிய கேக் ஒன்று இருக்க அதன் அருகில் சாந்தி இருவரையும் அழைத்து சென்றார்.

புன்னகையுடன் கேக்கை கட் செய்தவள் அதை சாந்தி அக்காவிற்கு ஊட்ட அவர் கண்கள் கலங்கியது. அவர் பனிமலருக்கு ஊட்டி விட்டார். பின் தமிழ், ஆகாஷ் ஹரி, விஷால் என்று ஊட்டி விட அவர்களும் பனிமலருக்கு ஊட்டி விட்டனர்.

பின் சாந்தி கேக் துண்டுகளை கட் செய்து தட்டுகளில் வைத்து கொடுக்க அதை பனிமலர் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்து சென்று கொடுத்தாள். அனைத்தையும் புகைப்படமாகவும் வீடியோவாகவும் இருவர் எடுத்துக்கொண்டு இருந்தனர்.

அனைத்தும் முடிந்ததும் அவளை சாந்தி அக்கா கை பிடித்து ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அந்த அறையை கண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது அந்த அறை அருகில் இருந்த ஆகாஷை அணைத்தவள் "தேங்க்ஸ் தேங்க்ஸ்" என்றாள் அழுகையுடன்

அவளை விலக்கி கண்ணீரை துடைத்தவன் "என் பாப்பு டால் கண்ணுல இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது உன் இடத்திற்கு வந்துட்ட இனி இதை மேலே மேலே கொண்டு போய் இந்த உலகம் புல்லா உன் டிசைன்களை போமஸ் ஆக்கனும் அது தான் உன் இலட்சியம் அதில் மட்டும் கவனம் செலுத்து மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்றவன் அவளை அந்த சேரில் அமரவைத்தான்.

அந்த சேரை கண்களில் நீரும் உதட்டில் புன்னகையுமாக தடவினாள் பனிமலர்.

" ஹலோ மேடம் இவ்வளவு பெரிய சீட்டில் உட்கார வச்சு இருக்கோம் எங்களுக்கு ட்ரீட் கொடுங்க" என்றான் விஷால்.

அவளை திசைதிருப்பத்தான் விஷால் கூறுகிறான் என்று அறிந்த ஹரி "ஆமாம் ஆமாம் கத்துக்குட்டி உன்னை இந்த சீட்டில் உட்கார வைத்ததற்கு பெரிய ட்ரீட் வேண்டும்" என்றான்.

" யாருடா கத்துக்குட்டி" என்று வேகமாக எழுந்து வந்தாள் பனிமலர்.

"அய்யோ நான் இல்ல" என்று வெளியே ஓடப்போனவனை ஓட முடியாமல் கதவின் மீது சாய்ந்து நின்று இருந்தாள் தமிழ்.

" அய்யோ இரண்டு குரங்குகள் கிட்டயும் மாட்டினேன்" என்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்து விட்டான் ஹரி.

பின் என்ன நடக்கும் ஹரி, விஷால் இருவருக்கு நல்ல பூஜை செய்தனர் பனிமலர், தமிழ்.

"ஏன்டா நாங்க குரங்குகளா" என்று சொல்லி சொல்லி அடி வெளுத்தனர்.

அடித்து அடித்து சேர்ந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தனர் பனிமலர், தமிழ்.

வார விடுமுறையில் ஊர் சுற்றும் போது சில நாட்களில் ஆகாஷ், ஹரி, விஷாலும் இவர்களுடன் சேர்ந்து கொள்ளுவர் அதனால் தமிழுக்கு மூவரும் நண்பர்கள் தான் இதில் பழகிய சிறிது நாட்களிலேயே ஆகாஷ் தமிழிடம் காதலை சொல்ல தமிழ் மறுத்துவிட்டாள். இருந்தும் ஆகாஷ் அவளின் பின் சுற்றிக்கொண்டு தன் காதலை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறான்.

சாந்தி அக்கா அனைவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தார். அதை குடித்து முடித்த பனிமலர் "ஆமாம் ஆக்கு நாங்க வரும் போது எங்க போன?..." என்றாள்.

"ஏய்... சொல்ல மறந்திட்டேன் பாரு நீ கம்பெனி உள்ள கால் வச்ச நேரம் நமக்கு பெரிய காண்ட்ராக்ட் கிடைச்சு இருக்கு அந்த கால் பேச உள்ளே வந்து இருந்தேன்" என்றான்.

"ஹேய்ய்.... அப்ப எங்களுக்கு டபிள் ட்ரீட் வேண்டும்" என்றான் விஷால்.

அவன் முதுகில் தட்டியவள் "சரியான தீணிப்பண்டாரம்" என்றாள் பனிமலர்.

" அதை நீ சொல்லுறீயா" என்றான் விஷால்.


பேச்சும் சிரிப்புமாக சிறிது நேரம் கழித்தவர்கள் உணவு உண்ண வெளியே சென்று விட்டு மீண்டும் வந்த போது ஹரி, விஷால் சென்று இருக்க ஆகாஷ், பனிமலர், தமிழ் மட்டும் கம்பெனிக்கு வந்தனர்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 18



அதன் பின் நாட்கள் வேகமாக சென்றனர். கம்பெனியில் அனைவரும் அவளுக்கு முதலாளி என்று மரியாதை கொடுக்க அதை மறுத்தவள் உங்களை மாதிரி நான் இங்கு வேலைக்கு வந்தவள் என்று எல்லோருடன் இயல்பாக பழக அவர்களும் தங்களில் ஒருத்தியாக நடந்தினர். மேலும் இவளின் கல்லூரி தோழிகள் சிலரும் இவர்களுடன் இங்கேயே வர வேலை கற்றுக்கொள்வது மட்டும் அல்லாமல் பேச்சு சிரிப்பு என்று வேகமாக பகல் பொழுது கழிந்தது.

தினமும் தரமணியில் இருந்து போரூர் வந்து போகவேண்டாம் வீட்டில் இருந்தே செல்லுங்கள் என்று பனிமலர் தந்தை சொல்லி விட பனிமலர், தமிழ் இருவரும் மாங்காட்டில் இருக்கும் வீட்டுக்கு வந்து விட்டனர்.

திருமண வேலைகள் வேகமாக நடப்பதை காணும் போது மலர், தமிழ் இயல்பாக இருந்தாலும் அறைக்குள் சென்றதும் கவலையில் மூழ்குவர். மலரின் நிலையை காணும்போதெல்லாம் தமிழுக்கு சூர்யாவின் மீது கோபம் கோபமாக வந்தது. அவனை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் கண்ணில் தெரியும் காதலைக்கூட கண்டு கொள்ளாமுடியாத ராட்சசன், ஜடம், கல் என்று திட்டிக்கொண்டு நண்பியை தோளோடு அணைத்து ஆறுதல் செய்வாள்.

அன்று வெள்ளிக்கிழமை இந்த ஒரு மாதம் அவர்கள் செய்த ப்ராஜெக்ட்டை கல்லூரியில் சென்று அவர்களின் பிரிவு ஆசிரியர் இடம் சமிட் செய்ய கல்லூரி சென்றவர்கள் அதை முடித்து விட்டு மீண்டும் வீடு திரும்ப விருப்பம் இல்லாமல் தமிழையை அழைத்து கொண்டு பெசன்ட்நகர் பீச் சென்றாள் பனிமலர்.

நாளை மறுநாள் திருமணம் வீடு முழுவதும் உறவினர் கூட்டம் நிரம்பி வழிந்தது. பந்தக்கால் நடுவது நலங்கு வைப்பது என்று சந்தோஷம் நிறைந்து இருந்தது இன்று மாலை கூட மருதாணி வைக்க வேண்டும் என்று சீக்கிரம் வரச்சொல்லி இருந்தார் ஊர்மிளா.

மதிய வெயிலில் கடற்கரைக்கு சென்றவர்கள் அங்கு நிறுத்தி இருந்த படகுகளின் நிழலில் அமர்ந்தனர். பனிமலர் கடலையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

தன் நண்பியின் நிலை கண்ட தமிழின் கண்கள் கலங்கின. சிட்டுக்குருவி போல் துரு துரு என்று ஒரிடத்தில் நிற்காமல் இருந்தவள் இப்போதெல்லாம் ஓரிடத்திலேயே உட்கார்ந்து வெறித்துக்கொண்டு இருக்கும் போது வேதனையை தந்தது.

கடலை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தவளிடம் "எழில்நிலாவிடம் பேசலாம் அவங்க தான் அந்த அரவிந்தை லவ் பண்ணுறாங்களே" என்றாள் தமிழ்.

"அவங்க கல்யாணத்தை நிறுத்தினால் மட்டும் போதுமா அவனுக்கு என்னை பிடிக்காதே அப்ப எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவான்" என்றாள் பனிமலர்.

"அவனுக்கு உன்னை பிடிக்காது என்று தெரியும் இல்ல பிறகு ஏன்டி அவனை லவ் பண்ண?... "என்றாள் கோபமாக தமிழ்.

"புத்திக்கு தெரியுது ஆனால் மனசுக்கு தெரியலையே அவன் தான் வேணும் என்று சொல்லுது" என்றாள் கலங்கிய குரலில் பனிமலர்.

" இப்ப நீ என்னதான்டி சொல்லுற" என்றாள் தமிழ் ஆற்றாமையுடன்

" மனசில் இருப்பவன் அப்படியே இருந்திட்டு போகட்டும்" என்றாள் பனிமலர்.

" ஏய் நீ என்ன சொல்லுற ஒன்னும் புரியல?... " என்றாள் தமிழ்.

" என் சூரியன் என்னைக்கு இந்த பனிக்குள்ளேயே இருக்கட்டும் அவனுக்கு பிடிச்ச நிலாவையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக இருக்கட்டும்" என்றாள் பனிமலர்.

" அப்ப நீ என்ன பண்ணுவ?..." என்றாள் தமிழ்.

" எனக்கு என்ன நம்ப கம்பெனியை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு போகனும் அந்த வேலையை பார்த்திட்டு இருப்பேன்" என்றாள் பனிமலர்.

" அவளை அணைத்த தமிழ் "ஏன்டி இப்படி உன்னை நீயே வருத்தப்படுத்திக்கிற அவன் கிட்ட பேசலாம்டி அவனை ஐந்து வருஷமா உருகி உருகி லவ் பண்ணுற என்று சொன்னால் அவன் கண்டிப்பாக உன்னை கல்யாணம் பண்ணிப்பான்" என்றாள்.

"காதல் என்ன கடையில் விற்கிற பொருளாடி கேட்டு வாங்க. அது ஒரு உணர்வு அவனை பார்த்த நிமிஷத்தில் நான் எனக்குள் உணர்ந்தேன். அதே உணர்வு அவனுக்கும் வரனும் அதுதான் காதல். அவனுக்கு என்னை பார்த்த போது எல்லாம் வெறுப்பு தான் வந்தது."

"இப்ப கூட அவன் விடும் மூச்சுக்காற்று இங்க இருக்கற மாதிரி இருக்கு இங்க தான் அவனும் இருக்கான் என் மனம் சொல்லுது" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

" ஏய் என்னடி சொல்லுற அவன் இங்க இருக்கானா உனக்கு பைத்தியம் தான் பிடிச்சு போச்சு இந்த வெயிலில் நம்ப தான் வந்து உட்கார்ந்திட்டு இருக்கோம் என்றால் அவன் ஏசி அறையில் உட்கார்ந்து பிஸினஸ் பேசறதை விட்டு இங்க வந்து இருக்கான் சொல்லுற" என்றாள் தமிழ்.

பனிமலர் பதில் எதுவும் சொல்லாமல் தமிழின் தோளில் சாய்ந்து அமைதியாக மீண்டும் கடலை வெறிக்க ஆரம்பித்துவிட்டாள். தமிழும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்து விட்டாள்.

சிறிது நேரத்தில் ஒரு வலிய கரம் பின்னிருந்து இருவரையும் பிரித்தது. திரும்பி யார் என்று பார்க்கும் முன் தமிழை தூக்கி இரண்டு அடி தூரம் தள்ளி அமரவைத்து விட்டு தமிழ் அமர்ந்து இருந்த இடத்தில் அமர்ந்து பனிமலரை தோளோடு சாய்த்துக்கொண்டு அவளின் முதுகை தட்டி ஆறுதல் கொடுத்தது.

யார் என்று கண்டவர்கள் தமிழ் "டேய்" என்று கோபமாக சத்தமிட பனிமலர் "ஆக்கு" என்று அவனை அணைத்தவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"பாப்பு என்னடா பாப்பு என்னாச்சிடா ஏன் அழுற?..." என்று கேட்டான் ஆகாஷ்.

"ஆக்கு... ஆக்கு... எனக்கு... அப்பா... அம்மா... வேணும்" என்று கண்ணீருடன் திக்கி திக்கி கேட்கவும் ஆகாஷ் தமிழ் இருவரும் அதிர்ந்தனர்.

"பாப்பு என்னடா என்னாச்சு என்கிட்ட சொல்லுடா?... " என்றான்.

" ஏன் ஆக்கு என்னை மட்டும் விட்டுட்டு போனாங்க என்னையும் கூட்டிட்டு போயிருந்தாள் நல்லா இருந்து இருக்கும் இல்ல. அப்பா கூப்பிட்டார் எனக்கு தான் புரியல அவங்க கூட போகாமல் டாடி காரில் போனேன் அப்பா கூட போயிருந்தா நானும் அவங்க கூடவே இப்ப சந்தோஷமா இருந்து இருப்பேன் இல்ல என்று கண்ணீர் விட்டபடி புலம்பியவளை எப்படி ஆறுதல் படுத்துவது என்று புரியாமல் இருந்தனர் ஆகாஷ், தமிழ்.

இவ்வளவு நாளில் தன் அம்மா அப்பாவை பற்றி பேசாதவள் இன்று அவர்களை தேடுகிறாள் என்றால் அந்த அளவுக்கு அவளின் மனம் வேதனைப்பட்டு உள்ளது என்று அறிந்தனர் ஆகாஷ், தமிழ்.

மலரின் மற்றொரு பக்கம் அமர்ந்த தமிழ் "அப்பா அம்மா எங்கேயும் போகலை உன்னை சுற்றியே தான் இருப்பாங்க அதனால் நான் எப்பவும் அழமாட்டேன் நான் சந்தோஷமாக இருந்தா அவங்களும் சந்தோஷப்படுவாங்க என்று சொல்லுவியே மலர். இப்ப நீ அழுகறதை பார்த்தா அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்க" என்று அவளின் முதுகை தட்டி ஆறுதல் செய்தாள் தமிழ்.

கருணாகரன், குணவதி தம்பதிகளின் மகள்கள் ஊர்மிளா, பரிமளா.

கருணாகரனின் தங்கை சித்ரா மகன்கள் அசோகன், கேசவன். தங்கையின் கணவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இறந்துவிட தங்கையையும் பிள்ளைகளையும் தன் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார் கருணாகரன்.

அரசு போக்குவரத்து துறையில் பணியில் இருந்ததால் ஓரளவுக்கு வசதியுடன் வாழ்ந்தனர். சென்னையில் மெயினான இடத்தில் சிறு வீடு சொந்தமாக இருந்தது. தங்கையும் பிள்ளைகளும் வந்த பிறகு பிள்ளைகள் படிப்பு வீட்டுச்செலவு என்று செலவு அதிகரிக்கவே செய்தது.

குணவதியும் சித்ராவும் பக்கத்தில் இருந்த சிறு கம்பெனிக்கு வேலைக்கு சென்று செலவை சமாளித்தனர். அசோகன் கேசவன் இருவரும் பதிரெண்டாம் வகுப்பை அரசு பள்ளியில் படித்து முடித்தவர்கள் அதன் பிறகு கல்லூரி செல்ல மறுத்து அசோகன் ரியல் எஸ்டேட் செய்யும் ஒருவரிடம் பணிக்கு சேர்ந்து விட்டார்.

அசோகன் கேசவன் இருவருக்கும் ஒரு வருடம் தான் இடைவெளி மறுவருடம் பள்ளி படிப்பை முடித்த கேசவன் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.

ஊர்மிளாக்கு படிப்பு ஏறாமல் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தாயும் அத்தையும் பணிக்கு போவதால் வீட்டு வேலையை அவள் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

பரிமளாவுக்கு படிப்பு நன்றாக வந்த போதும் அவளுக்கு மிகவும் பிடித்தது தையல் வேலையே அதனால் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு தையல் கல்வியை தேர்ந்து எடுத்து படித்தாள் படிப்பை முடித்து விட்டு தையல் மிஷின் வாங்கி அக்கம் பக்கத்தினருக்கு உடைகள் தைத்து கொடுத்தாள்.

பிள்ளைகள் திருமண வயது வந்த போது திருமணம் செய்து வைத்து பின் பேரப்பிள்ளைகள் பிறந்தால் இருக்கும் வீடு போதாது என்று நினைத்த போது அசோகன் தான் இந்த வீட்டை விற்று விட்டு மாங்காட்டில் குறைந்த விலையில் வீட்டுமனை வாங்கி அங்கு பெரிய வீடாக கட்டிக்கொள்ளலாம் என்றார். வீட்டில் உள்ளவர்களுக்கு அதுவே சரி என்று வீட்டை விற்றனர்.

சிட்டியில் மெயின் இடத்தில் இருந்ததால் நல்ல விலைக்கு விற்பனை செய்துவிட்டு மாங்காட்டில் இரண்டு கிரவுண்ட் நிலம் வாங்கி இரண்டு வீடுகள் ஒரே மாதிரி கட்டி அசோகனுக்கு ஊர்மிளாவையும் கேசவனுக்கு பரிமளாவையும் திருமணம் முடித்து புதுவீட்டுக்கு குடியேறினர்.

திருமணம் முடித்த ஒராண்டுக்குள் அசோகன் ஊர்மிளாவுக்கு எழில்நிலா பிறந்துவிட்டாள். திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும் கேசவன் பரிமளாவிற்கு குழந்தை பிறக்கவில்லை அந்த சமயத்தில் தான் சித்ரா தூக்கத்திலேயே உயிரை விட்டிருந்தார்.

இது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிகு‌ந்த துக்கத்தை கொடுத்தது. அடுத்த ஆறு மாதங்களில் பரிமளா கர்ப்பம் தரித்தார். தன் தாயே தனக்கு வந்து பிறப்பார் என்று கேசவன் அனைவரிடம் சொல்ல அதேபோல் தன் தாயையே உரித்து வைத்தது போல் பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் பரிமளா.

பனியை போன்ற வெண்மை நிறத்தையும் மலரின் மென்மையும் அவர்களின் வாழ்க்கை சந்தோஷத்தை கொடுத்த தேவதைக்கு பனிமலர் என்று பரிமளா பெயர் சொல்ல கேசவன் சித்ரா என்று தாயின் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்ல கருணாகரன் தான் இரண்டு பேரையும் சேர்த்து பனிமலர் சித்ரா என்று வைத்தார்.

கருணாகரன் சித்ரா என்று அழைத்தார் என்றால் அசோகன், கேசவன் சித்துமா என்றும் மற்றவர்கள் மலர் என்று அழைத்தனர்.

பனிமலருக்கு ஆறு மாதம் ஆகிய போது கருணாகரனுக்கு விபத்து ஒன்றில் கால்முறிவு ஏற்பட அது சரியாக ஆறு மாதம் ஆகியது. அதன் பிறகும் அவரால் பேருந்து ஓட்ட முடியாது என்று பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டார்.

அதில் வந்த பணத்தை அசோகன், கேசவனிடம் பிரித்து கொடுத்துவிட்டார் கருணாகரன்.

அசோகன் அந்த பணத்தை வைத்து நிலங்களை வாங்கி மனை போட்டு விற்க ஆரம்பிக்க அதில் நல்ல வருமானம் வந்தது.

கேசவன் பரிமளாவும் சில தையல் இயந்திரங்கள் வாங்கி போட்டு கேசவன் பணி செய்த கம்பெனியில் இருந்து துணிகளை வாங்கி வந்து பத்து ஆட்கள் வைத்து தைத்து கொடுக்க தொடங்கினார்.

 
Status
Not open for further replies.
Top