ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 4


வெள்ளிக்கிழமை காலை நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று அன்று இரவே ஹாஸ்டல் வந்து விட்டாள் பனிமலர். தமிழ்ச்செல்விக்கு விடுமுறை கிடைக்காததால் பனிமலர் மட்டும் நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று விட்டு இரவு தாமதமாக வந்ததால் வந்தவுடன் படுத்துவிட்டிருந்தாள்.

அடுத்த நாள் காலை எழும்போதே சண்டை அழுகை பேச்சு என்று கழிந்து விட மதிய உணவுக்கு பின் முடிக்க வேண்டிய அசைன்மென்ட் முடித்தார்கள். அன்று அவர்களால் வெளியே செல்லமுடியவில்லை அதனால் ஞாயிறு காலை ஹாஸ்டலில் உணவு முடித்து கிளம்பி விட்டனர்.

விடுமுறை நாட்களில் ஊர் சுற்றுவது தான் இவர்களின் முக்கிய வேலை. பெரும்பாலும் இவர்கள் இருவர் மட்டுமே வெளியே செல்வர் மற்ற தோழிகள் முக்கிய பொருட்கள் வாங்க என்றாள் தான் உடன் வருவர். காரணம் நாள் முழுவதும் சலிக்காமல் மால், பீச், பார்க், கோயில், சினிமா என்று இவர்கள் சுற்றுபவர்கள். அதனால் மற்ற தோழிகள் மறுத்து விடுவர்.

எப்படி தான் பார்த்த இடத்திற்கே திரும்ப திரும்ப போறிங்க போர் அடிக்காதா என்று கேட்பர். ஆனால் ஒரு முறை கூட இவர்களுக்கு சலிப்பு தோன்றியது இல்லை.

அன்றும் முதலில் கோயிலுக்கு சென்றவர்கள் பிறகு சென்னையில் மிகப்பெரிய பீனிக்ஸ் மால் சென்றனர்.

முதல் இரண்டு தளங்கள் முழுவதும் சுற்றியவர்கள் மூன்றாம் தளம் சென்று எப்போதும் ஐஸ்கிரீம் உண்ணும் கடைக்கு சென்ற போது அவர்கள் பார்வை ஓர் இடத்தை எப்போதும் அலசும் இன்று அதுபோல் பார்க்க அவர்களை ஏமாற்றாமல் அமர்ந்து இருந்தாள் எழில்நிலா.

எழில்நிலாவின் பின்புறம் பார்த்தே அது எழில்நிலா என்று கண்டவர்களுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.

எதிரில் இருந்த அவளின் காதலன் அரவிந்த் உடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது. தங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கியவர்கள் எழில்நிலா அமர்ந்து இருந்த இடத்தில் இருந்த தடுப்புக்கு அடுத்த பக்கம் அவர்கள் அறியாமல் சென்று அமர்ந்தனர்.

உன்னிப்பாக அவர்கள் பேசுவதை கேட்டவர்களுக்கு அவர்கள் பார்த்த புதிய படத்தை பற்றி பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர்.

இவர்கள் இருவரும் குழம்பி போயினர். இரண்டு நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்த நிலையில் தன் காதலனுடன் அடுத்து என்ன செய்வது என்று பேசுவார்கள் என்று பார்த்தாள். சினிமாவில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர் எழில்நிலா, அரவிந்த்.

இருவரும் வாய்திறந்து பேசினால் அந்த பக்கம் இருக்கும் அரவிந்த் எழில்நிலாவுக்கு கேட்கும் என்று ஜாடையில் பேசினர்.

என்னடி இது என்று தமிழ் பனிமலரிடம் கேட்க அவளும் எனக்கும் ஒன்றும் புரியலை என்றாள்.

சிறிது நேரத்தில் எழில்நிலா அரவிந்த் எழுந்து சொல்ல அவர்கள் பார்க்க முடியாதபடி குனிந்து அமர்ந்து கொண்டனர்.

அவர்கள் சென்றதும் "ஏய் என்னடி நடக்குது இரண்டு பேரும் கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்ணுவாங்க என்று பார்த்தா அந்த மொக்கை படத்தை பற்றி பேசிட்டு இருக்கிறாங்க. நீ தான் மெண்டல் என்று பார்த்த உன் அக்காவும் மெண்டல் தான் போல" என்றாள் தமிழ்.

தமிழை முறைத்த பனிமலர் "கொஞ்ச நேரம் சும்மா இருடி என்றவள் ஒரு வேளை இரண்டு பேரும் பிரண்ட்ஸ்சா நம்ப தான் தப்பாக நினைத்துக்கொண்டோமா?..." என்றாள் பனிமலர்.

" ஆமாம் ஆமாம் பிரண்ட்ஸ் தான் ஒரே ஜுஸ் வாங்கி இரண்டு பேரும் ஒரு மணி நேரம் அதை சேர்ந்து குடிப்பாங்க" நக்கலாக கூறினாள் தமிழ்.

"இல்லடி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் ஜாலியா சுத்தறாங்களே அதனால் என்று சில வினாடிகள் யோசித்தவள் ஒரு வேளை ரெண்டு பேரும் பிரிந்திடலாம் பிரண்ட்ஸ்சாக இருக்கலாம் என்று முடிவு செய்து இருப்பாங்களா?... " என்றாள் பனிமலர்.

சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கிருந்த தண்ணீர் கூஜாவை தூக்கி " பப்ளிக் பிளேஸ் என்று பார்க்கிறேன் இல்லை என்றால் இதனால் உன் தலையை பிளந்து இருப்பேன். தலையில் கொஞ்சமாவது மூளை இருந்தா இப்படி எல்லாம் யோசிக்கமாட்ட"

"உன் அக்கா முகத்தை துப்பட்டாவை கொண்டு மூடிட்டு கைகோர்த்து அவர் நெஞ்சில் சாய்யாத குறையா ஒட்டிட்டு போறாங்க அவங்க பிரண்ட்ஸ்சாக பிரிந்திடுவாங்களா?..." என்று கூறியவள் சிந்தித்தபடி தன் முன் இருந்த ஐஸ்கிரீமை காலி செய்து விட்டு "இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாடி" என்று நண்பியை ஏவ அவள் முறைத்தாள்.

"ஹலோ மேடம் இப்ப உனக்காகத்தான் நான் யோசித்திட்டு இருக்கேன். உனக்கு அந்த ராட்சசன் வேணும் என்றாள் செய்துதான் ஆகனும்" என்றாள் தமிழ்.

பனிமலர் எழுந்து சொல்லாமல் அமர்ந்து இருப்பதை கண்டவள். "ஏய் ஏற்கனவே நிறைய யோசித்ததில் மூளை சூடாகிப்போய் இருக்கு நீ இப்படி முறைச்சுட்டு இருந்தா உன் பார்வை சூட்டில் என் மூளை உறுகி வெளியே வந்திடும் அப்புறம் உனக்கு ஐடியா யார் கொடுப்பாங்க."

"உனக்கும் மண்டையில் மசாலா காலி என்று தெரிந்து பேச்சு இப்ப என்னுடையதும் உருகி வந்துட்டா என்ன பண்ணுறது" என்று தமிழ் சொல்லிமுடிக்க பனிமலர் அவள் தலையில் ஓங்கி குட்டியவள்

" நீ எனக்காக யோசிக்கவே வேண்டாம் அதனால் உன் மூளை உருகி வழியறதை நான் பார்க்கிறேன்" என்று கன்னத்தில் கை வைத்து தமிழை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

" ஓஓஹே... உனக்கு இல்லாத மூளை எனக்கு மட்டும் எதற்கு என்ற பொறாமை தானே உனக்கு நீயெல்லாம் எனக்கு பிரண்ட்" என்று கோவித்துக்கொண்டு எழுந்து சென்றவளை பார்த்து சிரித்தாளே தவிர அவளை நிறுத்தவில்லை.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அமர்ந்த தமிழின் முன் இரண்டு கப் ஐஸ்க்ரீம்களை வைத்தாள் பனிமலர்.

" கோபம் கொண்டு போனவள் திரும்ப வந்திட்டேன் என்று நினைக்கிறீங்களா மக்களே நான் கடையவிட்டு வெளியே போகலைங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன் ஹிஹிஹி...."

இரண்டு ஐஸ்கிரீமை ஆசையாக பார்த்தவள் பனிமலர் ஒரு ஐஸ்கிரீம் மட்டும் வைத்து இருப்பதை கண்டவள்

"ஏன்டி எனக்கு இரண்டு வாங்கி இருக்க உனக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டுமே வாங்கி இருக்க" என்று பனிமலரிடம் விசாரித்தாள் தமிழ்.

" உன் சைஸ்சுக்கு நானும் வரனும் நினைக்கிறீயா?..." என்றாள் பனிமலர்.

"ஓஓஹே..... மேடம் டையட்டில் இருக்கீங்களா?... காலையில் இட்லி வடை ஒரு பக்கெட் சாம்பார் பூரி கூடவே பொங்கல் இதெல்லாம் பத்தவில்லை என்று ஒரு ஜுஸ் குடுச்சாங்களே அது யாருங்க மேடம்" என்றாள் குரலில் கேலியாக தமிழ்.

"எங்க பாட்டி சொல்லுவாங்க ஒல்லியாக இருக்கறவங்க உடம்பெல்லாம் வினை அதான் எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு சதை போடலை ஆனால் குண்டாக இருப்பவங்க கள்ளம் கபடம் இல்லாதவங்க அவங்க கொஞ்சம் சாப்பிட்டாக்கூட சதை போடும் என்று சொல்லுவாங்க அதன் அர்த்தம் இப்பதான் எனக்கு தெரியுது" என்றாள்.

" அப்ப நான் வினை பிடிச்சவ, மேடம் கள்ளம் கபடம் இல்லாதவங்க அப்படித்தானே" என்று கூறியவள் தமிழின் கையில் இருந்த இரண்டு ஐஸ்கிரீமையும் பிடிங்கி தன் பக்கம் வைத்து கொண்டு தனதை சாப்பிட ஆரம்பித்தாள்.

" வடபோச்சே" என்று வடிவேலு பாணியில் "ஐஸ்கிரீம் போச்சே" என்று பனிமலரை ஏக்கமாக பார்த்தாள் தமிழ்.

தோழியின் ஏக்கப்பார்வை கண்ட பனிமலர் இரண்டு ஐஸ்கிரீமை அவள் புறம் நகர்த்தி வைத்து விட்டு தனதை உண்டாள்.

"ஹிஹி ஹிஹி" என்ற புன்னகையுடன் ஆவலாக ஐஸ்கிரீம் எடுத்து உண்டாள் தமிழ்.

எதிர் எதிர் துருவங்கள் தான் ஈர்க்கும் என்று இல்லை ஒரே குணம் இருப்பவர்களும் ஈர்க்கும் என்பதற்கு இவர்கள் தான் உதாரணம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பிகளாக இருக்கின்றனர்.

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழல்களில் பிறந்து வளர்ந்தவர்கள் இன்று ஒருவர் மனதில் நினைப்பது மற்றவருக்கு தெரியும் என்னும் அளவுக்கு நெருங்கிய தோழிகளாக இருக்கின்றனர்.

பலர் இவர்கள் நட்பை கண்டு பாராட்டியும் இருக்கின்றனர் பொறாமை பட்டும் இருக்கின்றனர். இவர்களுக்குள் சண்டை அடிதடி இல்லாத நாளே இல்லை ஆனால் இருவரும் இதுவரை பிரிந்தது இல்லை. துன்பத்தில் தான் உண்மையான நட்பும் உறவும் தெரியும் என்று சொல்லுவார்கள். அப்படி ஒருவர் மனவருத்தும் கொள்ளும் முன்னரே அதில் இருந்து திசை திருப்பிவிடுவர்.

மொத்தத்தில் நட்புக்கு இலக்கணமாக திகழ்பவர்கள் இவர்கள். இவர்களின் துணைகளாக வருபவர்கள் இவர்களின் நட்பை தொடரவிடுவார்களா????...

தமிழ்ச்செல்வியின் ஊர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள சுங்குவார்சத்திரத்திம் தான். தந்தை விவசாயி, வசதியான குடும்பம் இவர்கள் குடும்பம். மூன்று ஆண்களுக்கு பிறகு மிகவும் தாமதமாக பிறந்தவள் தமிழ்ச்செல்வி.

பெரிய அண்ணனுக்கு வயது பதினைந்து இரண்டாம் அண்ணனுக்கு பதிமூன்று மூன்றாம் அண்ணனுக்கு ஒன்பது வயது இருக்கும் போது தமிழ்ச்செல்வி பிறந்தாள். பிரசவத்தில் தாய் இறந்து விட இவளை உறவு முறை அத்தை தான் வளர்த்தார்.

தந்தை அண்ணன்கள் செல்லத்தில் வளர்ந்ததால் எப்போதும் சுட்டித்தனம் அதிகம் இருக்கும். வளர வளர சுட்டித்தனம் அதிகமாகியதே தவிர குறைவில்லை. இவள் மட்டும் செல்வது இல்லாமல் சிறு பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு சுற்றுவாள்.

அவர்கள் தோப்பில் இருப்பதை பறித்து சாப்பிடாமல் அடுத்த தோப்புகளுக்கு சென்று மாங்காய், புளியங்காய், கொய்யாப்பழம் என்று இவளே மரத்தில் ஏறி பறித்து வந்து உண்பாள். உங்க தோட்டத்தில் இருக்கே அங்கேயே பறிச்சு சாப்பிட வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு

திருட்டு மாங்காய் தான் ருசிக்கும் என்பாள். எப்போதும் இவள் பின் ஒரு பட்டாளமே சுற்றும்.

குடும்பத்தையும் இவளையும் பார்த்துக்கொண்ட அத்தைக்கும் உடல் நலம் சரியில்லாமல் போக இவளின் எட்டாவது வயதில் இவளின் பெரிய அண்ணனுக்கு இருபத்தி மூன்று வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அடுத்த அண்ணனுக்கும் திருமணம் முடித்துவிட்டனர். வந்த இரு அண்ணிகளும் இவளின் சொந்தமே இருவரும் நன்றாக பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கும் அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்திவிட தமிழ்ச்செல்வி சந்தோஷமாகிப்போனாள்.

தன்னுடன் விளையாட அண்ணன் பிள்ளைகள் வந்து விட்டனர் என்ற சந்தோஷமே காரணம். ஏனெனில் வயதுக்கு வந்த பிறகு இவள் சுற்றுவதை கண்ட சிலர் தவறாக பேசுவதை கண்ட அண்ணிகள் வெளியே அனுப்புவது கிடையாது. பள்ளிக்கு கூட அப்பாவோ அண்ணன்களோ அழைத்து செல்வது கூட்டி வருவதையும் செய்வதால் முன்பு போல் அவளால் வெளியே செல்லமுடியாமல் போனது.

பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகள் உடன் தான் பொழுது போகும். பத்தாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் இருந்த போது அண்ணன் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள் தமிழ்ச்செல்வி.

உறவில் சிலர் அவர்களின் குடும்பத்தில் நடக்கும் விழாவிற்கு அழைக்க வந்தவர்கள் இவளை கண்டனர். பிள்ளைகளோடு பிள்ளையாக விளையாடுபவளைக்கண்டு என்ன பொறாமையே அவர்களுக்கு

"பெற்றவள் இருந்து இருந்தால் இப்படி வளர்த்து இருப்பாங்களா அடக்க ஒடுக்கமாக வளர்த்து வீட்டு வேலைகள் செய்ய கத்துகொடுத்து இருப்பாள். இப்படி நாலு பேர் பார்க்க குதிக்க விட்டு இருக்கமாட்டார்கள்" என்று பேசியதை கேட்ட அண்ணிகள்

"அவள் சின்ன பெண் தானே" என்று கூறவும்.

வந்தவர்களில் வயதான பெண்" என்னடியம்மா சின்ன பெண் இவள் வயசில் எனக்கு கல்யாணம் முடிந்து புள்ளையே உண்டாகிட்டேன். அவளை போய் சின்ன பெண் என்று சொல்லுறிங்க."

"நாளைக்கு உன் பிள்ளைகள் இந்த வயசு வரும் போது இதே மாதிரி விளையாட விடுவிங்களா எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்கனும் என்றும் வீட்டு வேலைகளையும் செய்ய சொல்லித்தரமாட்டிங்களா?..." என்று பேசினார் அந்தப்பெண்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 5


" எங்களுக்கு அவள் தான் முதல் பெண் அவள் ஒன்னும் தெரியாதவள் இல்லை. சமையல் வேலையில் இருந்து வீட்டு வேலை எல்லாம் நாங்கள் சொல்லாமலே எல்லாம் கத்துக்கிட்டா கொஞ்சம் விளையாட்டு குணம் இருக்கு அதுக்காக இப்படி வாய்க்கு வந்தபடி பேசுவீங்களா வயதில் பெரியவங்க என்று பார்க்கிறோம்" என்று அண்ணிமார்களும் பேசினர்.

" உண்மையச்சொன்னா குறுகுறுக்குதா அதான் ஊரே சொல்லுதே உங்க வளர்ப்பை மரத்தில் ஏறுவது மதில் சுவர் ஏறுவது இதெல்லாம் பொம்பள புள்ளை செய்யுற வேலையா?... இதிலே தெரியுது நீங்க வளர்க்கும் லட்சணம். இப்படிப்பட்ட பெண்ணை நாளைக்கு எவன் வந்து காட்டுவான்?..." என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள்.

முக்கிய உறவினர் என்பதால் இதுவரை அமைதியாக பதில் சொன்னவர்கள் அவர்களின் அளவுக்கு அதிகமான பேச்சால் கோபம் வந்து அண்ணிகளும் பேசும் நேரம் வீட்டு ஆண்கள் வந்து விட அவர்கள் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு அந்த உறவினர்களை திட்டி இனி உங்கள் உறவே வேண்டாம் என்று அவர்களை வெளியே விரட்டினர்.

இவை அனைத்தையும் கேட்ட தமிழ்ச்செல்விக்கு தன்னால் தான் அண்ணிகளுக்கு கெட்ட பெயர் என்று நினைத்தவள் தன் குணத்தை மாற்ற நினைக்காமல் இவர்களிடம் இருந்து விலக நினைத்தாள்.

அதனால் பதினென்றாம் வகுப்பை வேறு ஊரில் ஹாஸ்டலில் படிப்பதாக வீட்டில் சொல்லவும். அவள் சொல்வது எதற்காக என்று தெரிந்து குடும்பத்தினர் மறுக்கவும் உண்ணாவிரதமும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டு அறைக்குள்ளேயே இருந்தாள்.

அப்பா, அண்ணன்கள், அண்ணிகள், பிள்ளைகள் என்று குடும்பமே கொஞ்சியும் கெஞ்சியும் அவளை உண்ண வைக்க முடியவில்லை. கடைசியில் அவள் ஹாஸ்டல் செல்ல அனுமதித்த பிறகே உணவு உண்டாள்.

தூரமாக இல்லாமல் பூந்தமல்லியில் சிறந்த பள்ளியில் சேர்த்து அங்கு இருந்த ஹாஸ்டலில் சேர்த்தனர்.

தமிழ்ச்செல்வி சந்தோஷமாக ஹாஸ்டல் செல்ல குடும்பம் முழுவதும் கண்ணீர் கடலில் தான் வழியனுப்பினர். அப்போதும் தினமும் மாலை பள்ளி விடும் சமயம் வீட்டினர் யாராவது பள்ளி கேட் அருகில் அவளை பார்க்க நின்று இருப்பர்.

வீட்டுக்கு வந்து விடும்படி கெஞ்சி கூத்தாடி தோல்வியுடன் செல்வர். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி விடும்போது காருடன் நிற்பார் தந்தை வேறு வழியில்லாமல் அவருடன் செல்வாள். அப்போதும் வீட்டினர் அங்கேயே படிக்க சொல்லியும் இல்லை என்றால் தினமும் காரில் அழைத்து சென்று வருவதாக கூறுவர்.

அனைத்தையும் மறுத்தவள் தான் நன்றாக படித்து பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் என்று தனது கனவுகளை கூறியவள் தனக்கு கிடைத்த புதிய நண்பி பனிமலர் பற்றி கூறியவள் அவளின் இலட்சியத்திற்கு நான் அவள் கூட இருக்கனும் என்று நினைக்கிறேன். அதனால் இப்படி அடிக்கடி வந்து என்னை பார்க்க வராமல் மாதம் ஒரு முறை மட்டுமே பார்க்க வரவேண்டும் என்றும் நிறைய நாட்கள் விடுமுறை வந்தாள் மட்டுமே வீடு வருவேன் ஒவ்வொரு வாரமும் வரமாட்டேன் என்று பல கண்டிஷன் போட்டு வந்தாள்.

அவளின் கண்டிஷன் மீறினால் என்ன நடக்கும் என்று தெரிந்த குடும்பத்தினர் அவள் விருப்பத்திற்கு விட்டு விட்டனர்.

அதன் பிறகு நண்பிகள் இருவரும் தங்கள் படிப்பு விளையாட்டு கேலி கிண்டல் என்று நாட்களை கடந்தனர்.

பள்ளியில் படிக்கும் வரை வெளியே செல்ல அனுமதி இல்லை. கல்லூரி வந்த பிறகு ஆடைவடிவமைப்பு படித்ததால் அதற்கு தேவையான பொருட்களை வாங்க என்று வெளியே சென்றவர்கள் இப்போது விடுமுறை என்றாலே ஊர் சுற்றுவது அவர்களின் வேலை.

அடுத்தவர்களை எப்போதும் கேலி கிண்டல் செய்யமாட்டார்கள். எல்லாமே அவர்களுக்குள்ளே தான் சில சமயம் அவர்கள் பேசுவதை கேட்பவர்களுக்கு லூசுங்களா என்று நினைக்கத்தோன்றும் அந்த அளவுக்கு நடந்து கொள்ளுவர்.

எந்த ஒரு விசயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செய்பவர்கள் தான் இவர்கள். ஆனால் இவர்களின் விளையாட்டுத்தனத்தை காண்பவருக்கு எதையுமே சீரியஸாக எடுக்காமல் இருக்குதுங்க என்று பேச்சு தான் இவர்களை பற்றி அதிகமாக இருக்கும்.

இவர்களுடன் நெருங்கி பழகுபவருக்கு தெரியும் இவர்களின் திறமை. எதையும் சட்டென கிரகித்து அதற்கான தீர்வு கண்டு விடுவர். படிப்பில் எப்போதும் இவர்கள் தான் முதலில் இருப்பர்.

ஆகமொத்தத்தில் ஏழு வருடங்களாக அவர்களுக்கான சந்தோஷமான உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

அதை கெடுக்க என்று ஒருவன் அவர்களின் வாழ்வுக்குள் முதல் அடியை எடுத்து வைத்துவிட்டான். இனி என்னவாகும்?....

தமிழ்ச்செல்வியும் பனிமலரும் எவ்வளவு நேரம் ஐஸ்கிரீம் கடையிலே இருப்பாங்க அதான் தமிழ் பற்றி சுருக்கமாக சொல்லிட்டேன். ஆனால் நம்ப ஹீரோயின் கதை கொஞ்சம் பெரிசாக போகும் அதனால் பிறகு அவளைப்பற்றி கதையின் போக்கில் செல்லுறேன்.

ஐஸ்கிரீம் உண்டு முடித்தவர்கள் திரும்பவும் சுற்ற ஆரம்பித்தனர். நான்காவது மாடிக்கு வந்து அந்த வளைவில் வந்த போது இருவருக்கும் ஒரே சமயத்தில் அந்த நினைவு மனதில் வந்தது. தமிழிக்கு சற்று பயம் வந்தது என்றாள் பனிமலருக்கு முகத்தில் புன்னகை வந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு இதே போல ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவரும் சுற்றிக்கொண்டு இருந்தனர். பனிமலர் நல்ல சிவந்த நிறத்தில் சற்று ஒல்லியான உடல்வாகுடன் ஐந்தரை அடி உயரத்தில் இருப்பாள்.

தமிழ் சற்று பூசினார் போல அதிக சிவந்த நிறமும் இல்லாமல் அதிக கருப்பும் இல்லாமல் சராசரி நிறத்தில் இருப்பாள். உயரமும் பனிமலர் உயரமே இருப்பாள். தமிழ் ஜோதிகா போல் பூசின உடம்பு என்றாள் பனிமலர் சிம்ரன் போல் ஒல்லி உடம்பு.

ஜோதிகா சிம்ரன் ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா?... அது போல் தான் பார்ப்பவர்களை திரும்பி பார்க்கும் அளவுக்கு அழகாகவும் இருப்பர். அவர்களின் உடை பொரும்பாலும் ஜீன்ஸ் பேண்ட் குர்தா, சட்டை அல்லது டீசர்ட் இருக்கும்.

அன்றும் தன் பின் வந்த ஆண்கள் காதுபட தங்களின் சேட்டை பேச்சை பேச அதை கேட்டவர்கள் அழகாக இருக்கு என்று பார்த்தா ரெண்டும் லூசு போல என்று நினைத்து ஓடிவிட்டனர்.

அதை நினைத்து நினைத்து சிரித்து கொண்டு வந்தவர்கள் ஆளுக்கொரு ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டே வந்த போது பனிமலர் போன் ஒலித்தது அதை எடுத்து பார்க்க தன் உடன் படிக்கும் தோழி ஒருத்தி செய்து இருந்தாள் ஆன் செய்து பேசிக்கொண்டே நடந்தாள் பனிமலர். அந்த தோழி தனக்கு தேவையான பொருட்களை சொல்லி வாங்கி வரும்படி சொல்லிக்கொண்டு இருந்தாள்.

தமிழ் அவளின் ஐஸ்கிரீமை சாப்பிட்டு கொண்டே திரும்பி பார்க்க பனிமலர் போனில் பேசுவதால் ஐஸ்கிரீம் உண்ணாமல் கையில் வைத்து இருப்பதை கண்டவள் அதை பிடிங்கி கொண்டாள்.

பனிமலர் "ஏய் தமிழ் கொடு" என்றவள் போனில் இருந்த தோழியிடம் "அந்த கடைக்கு போயிட்டு உனக்கு கால் பண்ணுறேன்" என்று கூறி வைத்தவள் தமிழின் கையில் இருந்த அவளின் ஐஸ்கிரீமை பிடுங்க வர அதை கண்ட தமிழ் வேகமாக ஓட அந்த வளைவில் திரும்பியவள் மோதிக்கொண்டு இரண்டடி பின்னால் வர பின் வந்த பனிமலர் அவளை பிடித்து நிறுத்த அதே நேரத்தில் பளார் என்று தமிழின் கன்னத்தில் அறைந்து இருந்தான்.

"சிட்.... இடியட்.... இப்படித்தான் பப்ளிக் பிளேசில் ஓடி வருவாங்களா?... இல்லை நான் வருவது தெரிந்தே இப்படி இடிக்க வந்திங்களா?..." என்று கேட்க அதுவரை தன் தோழி அறை வாங்கியதில் அதிர்ந்து இருந்தவள் அவனின் பேச்சில் தான் சுயம் வந்தவள் யார் என்று அவன் முகத்தை பார்க்க இவனா என்று ஒரு மனம் சந்தோஷப்பட இன்னொரு மனம் தன் தோழியை அடித்து விட்டானே என்று வருத்தப்பட்டது.

"ஹலோ சார் தெரிந்தே வந்து உங்களை இடிக்க நாங்க என்ன முட்டாளா?... அதுவும் போயும் போய் உங்களை இடிப்பாங்களா?" என்று அவனை ஒரு இளக்காரமான பார்வை பார்த்தாள்.

"ஏய் என்ன கொழுப்பா?..." என்றான் கோபமாக

"ஆமாம் இவரு கொடுக்கிற பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுறோம் இல்ல அதான் கொழுப்பு அதிகமாக இருக்கு" என்றாள் அவனை கோபப்பார்வை பார்த்து

" ஏய் என்னடி யாருக்கிட்ட பேசிட்டு இருக்க என்று தெரியும் இல்ல?..." என்றான்.

" ஏன் தெரியாது தான் தான் பெரிய அறிவாளி மத்தவங்க எல்லாம் வேஸ்ட் என்று நினைக்கும் பிஸ்னஸ் மேன் கிரேட் சூர்யபிரகாஷ் கிட்ட பேசிட்டு இருக்கேன்" என்றாள்.

"ஏய் என்னடி தப்பு செய்ததும் இல்லாமல் உன் இஷ்டத்திற்கு பேசுற அவளுக்கு கொடுத்த அடி உனக்கும் கொடுத்தா தான் அடங்குவே என்று நினைக்கிறேன்" என்று பேச

அதை கேட்டவள் " அடிப்பிங்க அடிப்பிங்க தெரியாமல் இடித்ததற்கு அவளை அடிச்சுட்டு இப்ப என்னையும் அடிப்பிங்களா எங்க அடிங்க பார்க்கலாம்" என்று அவனை முறைத்து கொண்டு நிற்க

சூர்யபிரகாஷ் அருகில் நின்ற மாதவனும் பாடிகார்ட்ஸ் ஆவென பனிமலரை பார்த்து கொண்டு இருந்தனர். தங்கள் பாஸ் இடம் இப்படி யாரும் பேசியவர்கள் இல்லை அவர் எதிரில் நிற்கக்கூட பயப்படுபவர்களைத்தான்
பார்த்து இருக்கின்றனர். இவளே எதிர்த்து பேசிக்கொண்டு இருப்பதை கண்டவர்கள் அடுத்து என்ன என்று ஆவலாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அதற்குள் சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க மாதவன் மெல்லிய குரலில் "பாஸ் பப்ளிக்" என்று சொல்ல அவளை முறைத்துக்கொண்டு இருந்தவன் தன் முன் நின்றவளை கை பிடித்து தள்ளி நிற்க வைக்க அவனின் வேகத்தில் தடுமாறி கீழே அமர்ந்து விட்டாள் பனிமலர்.

இரண்டு அடி சென்றவன் மீண்டும் அவள் எதிரில் வந்து அணிந்து இருந்த கோர்ட்டை கழட்டி "அவன் தங்கச்சி தானே நீ அதான் அவனுக்கு இருக்கும் திமிர் உனக்கும் இருக்குடி" என்று கூறிவிட்டு கோர்ட்டை அவள் முகத்தில் வீசிச்சென்றான்.

"ஏய்" என்று பனிமலர் கத்த அவன் திரும்பிப்பார்க்காமல் வேக நடையுடன் சென்று விட்டான்.


தன் முகத்தில் அவன் வீசிய கோர்ட் விழுந்ததில் அதிலிருந்த ஐஸ்கிரீம் அவள் முகத்தில் அப்பி இருந்தது. அதை கண்டவளுக்கு இன்னும் கோபம் வந்தது. அதை அவனின் கோர்ட் கொண்டே துடைத்தவள் பத்திரமாக அந்த கோர்ட்டை தன் பையில் வைத்த பிறகே தமிழை பார்த்தாள்.

ஒரு ஓரமாக நின்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வலியுடன் கண் கலங்கி நின்று இருந்தாள்.

வேகமாக அவள் அருகில் சென்று "தமிழ் என்னடி?..." என்றதும் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவளின் கைகளை விலக்கி பார்க்க அவனின் ஐந்து விரல்களும் பதிந்து கன்னம் சிவந்து வீங்கி இருந்தது. அவளால் வாய் கூட அசைக்க முடியவில்லை என்று அறிந்து உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றாள் பனிமலர். ஒரு வாரம் ஆகியது தமிழ் பழையபடி பேச அதுவரை பனிமலர் தான் மிகவு‌ம் நொந்து போனாள்.

தமிழின் வீட்டினருக்கு தெரிந்தால் அடுத்து ஊரே கிளம்பி வந்து விடும் என்று அவர்களுக்கு தெரியாமல் மறைக்க நிறைய பாடுபட்டாள். தினமும் போனில் பேசும் குடும்பத்தினருடன் இவள் பேசி சமாளித்து ரொம்பவே திணறியவளின் மனதில் அந்த திமிர் பிடித்தவனைத்தான் திட்டிக்கொண்டு இருந்தாள்.

நினைவுகளில் இருந்து திரும்பிய தமிழ் பனிமலரை முறைத்தாள்.

"எதுக்குடி இந்த முறைப்பு?..." என்றாள் பனிமலர்.

"கொஞ்சம் கூட மனதில் ஈரமில்லாதவனை எப்படி தான் லவ் பண்றேன் என்று சொல்லுறியோ" என்றாள்.

"ஏய் நான் தான் காரணம் சொன்னேனே" என்றாள்.

"நீ சொன்னதை என்னால் நம்பமுடியலை அது நிஜம் என்று எனக்கு எப்ப தெரியுதோ அதுவரை அவன் ராட்சசன் தான்" என்றாள் தமிழ்.

அன்றைய ஊர்சுற்றுவதை முடித்து மாலை ஹாஸ்டல் வந்து சேர்ந்தனர்.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 6


அன்று இரவு உணவுக்கு பின் மறுநாள் காலேஜ் செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டு அவரவர் படுக்கையில் சாய்ந்து அமர்ந்து போனை பார்த்து கொண்டு இருந்தனர்.

தமிழ் அப்போது தான் நியாபகம் வந்தவளாக "ஏய் மலர் நீ நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை. அவன் வேற செல்ஃபியில் முறைச்சுட்டு இருந்தான். அதுவும் அதில் உன் அக்கா இல்லை தனியா எப்படி எடுத்த?..." என்று கேள்வியை அடுக்கிக்கொண்டே போகவும்

தன் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்து வந்து தமிழின் அருகில் அமர்ந்து அவளின் வாயைப்பொத்தி " ஏன்டி இப்படி கே பி சுந்தராம்பாள் போல என்ன? என்ன?.. என்று கேட்டுட்டே போற ஒரு வரியில் கேட்க வேண்டியதை ஒரு பத்தி முழுவதும் இழுத்திட்டு போனா ரீடர்ஸ் ஓடிடுவாங்க."

"நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று தெரியனும் அவ்வளவு தானே கேட்டுக்கே" என்று சொல்ல ஆரம்பித்தாள் பனிமலர்.

திங்கள் முடிவு செய்து வெள்ளிக்கிழமை மதியம் நிச்சயதார்த்தம் வைத்ததால் நிறைய பேரை அழைக்காமல் முக்கிய சொந்தங்கள் மட்டுமே அழைத்து இருந்தனர் இருவீட்டாரும். விழாவை ஓட்டல் ஹாலில் தான் வைத்து இருந்தனர்.

பனிமலருக்கு புதன்கிழமை போன் செய்து அவளின் தாய் விழா பற்றி சொல்லி இருவரையும் அழைத்து இருந்தார்.. வெள்ளிக்கிழமை முக்கியமான தேர்வு இருப்பதால் விடுமுறை கொடுக்கவில்லை. பனிமலர் தந்தை போன் செய்து அனுமதி கேட்டபோது பனிமலருக்கு மட்டுமே விடுமுறை கிடைத்தது அதனால் தன் தோழி இல்லாமல் தனியாக சென்றாள் பனிமலர்.

அவளின் தாய் உடைகள் அவளுக்கும் எடுத்து இருப்பதாக சொல்லியதால் தான் வடிவமைத்து தைத்த உடை ஒன்றையும் எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து சென்று இருந்தாள்.


பனிமலர் வீடு மாங்காடு அங்கு சென்று திரும்ப வடபழனி சென்றாள் நேரமாகும் என்பதால் நேராக நிச்சயம் நடக்கும் வடபழனியில் இருந்த ஓட்டலுக்கு பத்து மணிக்கு சென்றாள்.

அங்கு ஏற்கனவே தனது அப்பா அம்மா அக்கா தம்பி பாட்டி சில நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருக்கும் சிலரும் வந்திருந்தனர்.

நிச்சய விழா ஹால் முதல் மாடியில் இருப்பதையும் பக்கவாட்டில் படி இருப்பதையும் கேட்டு அறிந்தவள் அந்த பக்கம் சென்ற போது முதலில் பார்த்தது மேலிருந்து இறங்கிக்கொண்டு இருந்த கோபி அங்கிளைத்தான் இவர்களின் பக்கத்து வீடு அவர்களுடையது.

அவரும் இவளை பார்த்ததும் "குட்டிமா வாடா" என்று வரவேற்றவர் "எப்படிடா இருக்க நல்லா இருக்கியா?..." என்றார் பாசமாக

"அங்கிள் நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி ஹரி, விஷால் எங்க" என்றாள்.

"ஆன்ட்டி மேலே இருக்கா ஹரிக்கு ஆபிஸ் முக்கிய ப்ராஜெக்ட் போவதால் லீவு கிடைக்கலை விஷாலுக்கும் காலேஜ் இருக்கு லீவு போடமுடியாது என்று சொல்லிட்டான்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மேலிருந்து இவளை கண்டுவிட்ட மாலினி வேகமாக இறங்கி வந்தாள்.

"குட்டிமா நல்லா இருக்கியா?..." என்று அன்பான குரலில் கேட்டார். அவரை அணைத்துக்கொண்டவள்

" நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி இப்ப தான் அங்கிள் கிட்ட உங்களை விசாரித்தேன்" என்றாள்.

"சரிடா வா மேலே பேகலாம்" என்றவர் அங்கு நின்று இருந்த கோபியிடம் "ஏங்க இன்னும் இங்கேயே இருக்கிங்க சீக்கிரம் போய் அய்யர் சொன்னதை வாங்கிட்டு வாங்க" என்று அனுப்பி விட்டு பனிமலரை அழைத்து சென்றாள்.

மேலே சென்றபோது இவளின் பாட்டி சில உறவினர்கள் உடன் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் அருகில் சென்று "பாட்டி" என்று அழைக்க இவளை பார்த்த பாட்டி எழுந்து அணைத்துக்கொண்டு "மலரு நல்லா இருக்கியாடா நேத்தே வந்து இருக்கலாம் இல்லையா?..."

"நான் நல்லா இருக்கேன் பாட்டி எனக்கு நிறைய படிக்க வேண்டியது இருந்தது பாட்டி" என்றவளிடம் அங்கிருந்த உறவினர்களை பாட்டி காட்ட அவர்களிடம் நலம் விசாரித்தாள் பனிமலர்.

"சரிடா மலரு போய் டிபன் சாப்பிட்டு விட்டு அக்காவிற்கு அலங்காரம் பண்ணிட்டு இருக்காங்க நீயும் அலங்காரம் பண்ணிக்கே" என்றவர் அதுவரை அமைதியாக பனிமலர் உடன் இருந்த மாலினியை பார்த்து "மலரை சாப்பிட கூப்பிட்டு போம்மா மாலினி" என்றார்.

"பாட்டி நான் சாப்பிட்டு தான் வந்தேன் நான் அக்கா ரூமுக்கு போறேன்" என்று கூறி மாலியின் கை பிடித்து" வாங்க ஆன்ட்டி" என்று சென்றாள்.

மேடையில் அலங்காரங்ளை பார்த்துக்கொண்டு இருந்த தந்தையும் தம்பியையும் கண்டு அவர்களிடமும் சென்று பேசிட்டு எழில்நிலா இருந்த அறைக்குள் வந்தாள்.

முதுகாட்டி நின்று பியுட்டிஷன் இடம் எதையோ சொல்லிக்கொண்டு இருந்த தாயை பின்னிருந்து அணைத்தாள்.

அணைத்ததிலேயே மகளை அறிந்தவர் "மலருமா" என்று திரும்பி பனிமலரை அணைத்துக்கொண்டவர்

"ஏன்டா இவ்வளவு லேட்டு உன்னை நேற்று ஈவினிங்கே வரச்சொன்னேன் வரலை இன்னைக்கு காலையிலாவது சீக்கிரம் வந்து இருக்கலாம் இல்லையா?..." என்று குறைப்பட்டார்.

"மம்மி உங்களுக்கு தான் போனிலே சொன்னேன் இல்லையா செமஸ்டர் தேர்வு வருவதால் நிறைய படிக்கனும் அசைன்மென்ட் முடிக்கனும்" என்றாள்.

" சொன்னடா ஆனால் உனக்கு மெகந்தி வைக்க ரொம்ப பிடிக்கும் இல்லையா நீ சீக்கிரம் வந்தா வச்சி விடலாம் பார்த்தேன்" என்றார் ஊர்மிளா.

" மம்மி மெகந்தி தானே வச்சுக்கிட்டா பேச்சு அதுக்கு எதுக்கு உங்க கண்ணு கலங்குது" என்றவள் தாயை அனைத்து " இதுக்கெல்லாமா கண்ணு கலங்குவிங்க மம்மி" என்றாள்.

" இப்ப எப்படிடா டைம் கொஞ்சம் தானே இருக்கு?... " என்றார் ஊர்மிளா.

" எல்லாம் வைக்கலாம் நீங்க உட்கார்ந்து பாருங்க" என்று கூறியவள் எழில்நிலா அருகில் சென்றாள்.

அதுவரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவள் இவள் அருகில் வந்ததும் முகத்தை திருப்பிக்கொள்ள

அடுத்து நீயா எப்பா முடியலை எல்லாரையும் சமாதானம் செய்து செய்து என்று மனதில் கூறிக்கொண்டவள்.

அக்காவின் முகத்தை பற்றி திரும்பியவள் "சாரி நிலா நிறைய அசைன்மென்ட் முடிக்கனும் அதான் நேற்று நீ கூப்பிட்ட அப்பவே சொன்னேன் இல்ல" என்றவள் "இப்ப வீக் டேஸில் பங்கஷன் வச்சதால் தான் பிரச்சனை லீவு கொடுக்க மாட்டேன் சொல்லிட்டாங்க டாடி பேசியதால் தான் லீவே கிடைத்தது. உன் மேரேஜ்க்கு ஒரு வாரம் லீவு போட்டு உன் கூடவே இருக்கேன் சாரி அக்காகா.." என்று ராகம் இழுக்க

அவளின் அக்கா என்ற அழைப்பு வந்ததும் எழில்நிலா முகத்தில் புன்னகை வந்தது. அந்த அழைப்பு எப்போதாவது அபூர்வமாகத்தான் அழைப்பாள். பனிமலரை விட இரண்டு வயது பெரியவள் எழில்நிலா. எப்போதும் சிறுவயதில் இருந்தே பெயர் சொல்லி தான் அழைப்பாள் பாட்டி எவ்வளவு சொன்னாலும் அவளின் வாயில் இருந்து அக்கா என்று அழைப்பு வராது. மிகுந்த சந்தோஷம் இருந்தாள் மட்டுமே அவள் வாயில் இருந்து அக்கா என்று வரும் இன்று அவளின் அழைப்பில் எழில்நிலா சந்தோஷம் அடைந்தாள்.

"அப்பாடி சிரிச்சிட்ட இல்லைனா உன் முகத்தை என்னாலேயே பார்க்க முடியலையே வரப்போகிற அத்தான் பார்த்துட்டு ஓடிடப்போறாரு என்று கவலையாகிடுச்சு" என்றவளை

எழில்நிலா முறைத்தாள் கலகலப்பான பேச்சுக்களின் இடையே பியூட்டி பார்லர் பெண்களிடம் இன்ஸ்டன்ட் மெஹந்தி லிக்யூட் வாங்கி மாலினியிடம் கொடுக்க அவர் அழகாக இரண்டு கை முழுவதும் வைத்து விட்டார்.

அதன் பிறகு தாய் கொடுத்த புடவையை கண்டவள்

" மம்மி நீங்களும் பாட்டியும் புடவை தான் எடுத்து வச்சிருப்பிங்க என்று தெரியும் அதான் நானே எடுத்து வந்து இருக்கேன்" என்று தான் எடுத்து வந்த பையில் இருந்து உடையை வெளியே எடுத்தாள்.

அதை கண்ட மாலினி "மலரும் இது நீ டிசைன் பண்ணி தைத்தது தானே எனக்கு வாட்ஸ்அப்பில் போன மாசம் அனுப்பியது தானே?... "என்றார் பரவசத்துடன்

" ஆமாம் ஆன்ட்டி" என்றவள் ஊர்மிளாவிடம் " மம்மி நான் இந்த டிரஸ் போடுறேன் புடவை எல்லாம் வேண்டாம் நிலாவுக்கு தான் ஃபங்ஷன் அவள் புடவை கட்டுனா ஓகே நான் சின்ன பெண்ணு தானே எனக்கு எதுக்கு புடவை" என்றாள் கொஞ்சலாக

" சரிடா பாட்டி கேட்டா இப்ப சொன்னையே அதையே சொல்லு என்ன" என்றார் புன்னகையுடன்

"மம்மி" என்று காலை உதைத்து கொண்டவளை கண்டு அனைவரும் சிரித்தனர்.

" நீ இதையே போட்டுக்கடா பாட்டி கேட்டா நான் தான் இந்த டிரஸ்ஸை போடச்சொன்னேன் சொல்லுறேன் என்றார் மாலினி.

அந்நேரம் பாட்டியின் குரல் கேட்டது

"இன்னும் ரெடியாகாமல் என்ன பண்ணிட்டு இருக்கிங்க மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரமாச்சு" என்று பேசிக்கொண்டே வந்தவர் பனிமலர் கையில் இருந்த உடையை பார்த்து "உனக்கு தான் புடவை எடுத்து வந்தோமே அதை கட்டாமல் இது என்ன?..." என்றார்.

"அது பாட்டி" என்று பனிமலர் பேச்சை ஆரம்பிக்குபோதே

" நான் தான் பாட்டி இந்த டிரஸை போடச்சொன்னேன் இது மலரே டிசைன் பண்ணி தைத்தது. எனக்கு கூட இதே மாதிரி தைத்து கொடுத்தாளே நீங்க கூட நல்லா இருக்கு சொன்னீங்க இல்ல அதே மாதிரி தான் பாருங்க" என்று தங்கையிடம் இருந்து வாங்கி காட்டினாள் எழில்நிலா.

"பனிமலர் என்ன பண்ணுறா என்று எல்லோரும் உங்க கிட்ட கேட்கறாங்க என்று சொன்னீங்க இல்ல இது மாதிரி அவளே தைத்தது போட்டாதானே எல்லாருக்கு அவளை பற்றியும் அவளின் திறமை பற்றியும் தெரியும்.

தைக்கிறது ஒரு படிப்பா என்று ஊரில் எல்லோரும் கேட்கிறாங்க என்று சொல்லுவிங்க இல்லையா இப்ப இந்த டிரஸ் போட்டா எல்லாரும் எங்க தைத்திங்க என்று கேட்பாங்க அப்ப சொல்லுங்க என் பேத்தியே தைத்தது" என்று பேசிப்பேசி அவரை சம்மதிக்க வைத்தாள் எழில்நிலா.

பாட்டி அந்த காலம் என்பதால் உடை விசயத்தில் கட்டுப்பாடு அதிகம். உடல் தெரிவது போல உடுத்தவே விடமாட்டார்.

பாட்டி சென்றதும் அக்காவை அனைத்து விடுவித்தவள் உடை மாற்றிக் கொண்டு கொஞ்சமாக மேக்கப் செய்து கண்டவள் இடைவரை இருக்கும் கூந்தலை பிரென்ச் பிரைட் பின்னல் போட்டு அதில் சிறு மணிகளை வைத்து விட்டனர் பியூட்டிஷன் பெண்கள்.

பனிமலர் அவளே வடிவமைத்து தைத்த காக்ரா சோளியில் ஜொலித்தாள் என்றாள் எழில்நிலா பட்டு புடவையில் ஜொலித்தாள் அக்கா தங்கை என்பதால் ஒரளவு உருவ ஒற்றுமை உண்டு இருவருக்கும்.

உயரம் மட்டும் எழில்நிலா ஐந்து அடிகள் இருப்பாள்.

பனிமலர் காக்ரா சோளி அணிந்து தாவணியை ஒரு பக்கமாக விட்டு இடுப்பில் சொறுகாமல் அழகாக சிறு சிறு மடிப்பு வைத்து மெல்லிய ஒட்டியாணம் அணிந்திருந்தாள்.

தாவணியின் முன் பக்கம் ஒரு முனையை பின் பக்கம் இருந்த ஒரு முனையுடன் இணைத்து இருக்க அது அலைஅலையாக அழகாக இருந்தது. கரும்பச்சை நிறத்தில் அழகான எம்பிராய்டிங் டிசைன் செய்து அதில் சிற சிறு வெள்ளை கற்கள் பதித்து இருக்க அது விளக்கொளியில் ஜொலித்தன. சிவப்பு கலர் தாவணியில் அதே போல சிறு எம்பிராய்டிங் ஒர்க் செய்து கற்கள் பதித்து இருக்க பேரழகியாக தெரிந்த மகளை கண்ட ஊர்மிளாவின் கண்கள் கலங்கின இவளை தாங்கும் ஒரு நல்ல புருஷனை கொடு இறைவா என்று மனம் வேண்டிக்கொண்டது.

இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுத்தி பொட்டு வைத்து விட்டார் மாலினி.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 7


அந்நேரம் உறவுப்பெண் ஒருவர் வந்து மாப்பிள்ளை வீட்டார் இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்து விடுவாங்களாம் மலர் தான் ஆலம் எடுக்கனும் என்று பாட்டி வரச்சொன்னாங்க என்று சொல்ல எழில்நிலாவுடன் அந்த பெண்ணை உடன் இருக்க சொல்லி விட்டு ஊர்மிளா, மாலினி, பனிமலர் வெளியே சென்றனர்.

எழில்நிலா சொன்னதுபோல் அனைவரும் பனிமலரை கண்டு அசந்து போயினர் அவளின் உடல் அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக அமைந்திருந்தது அந்த உடை. சிறிய காலர் வைத்து சட்டை மாடலில் முக்கால் கை வைத்து தைத்திருந்தது முதுகு பகுதி முழுவதும் மறைத்து அவளின் உடலின் சிறு பகுதி கூட தெரியவில்லை ஆனால் அந்த உடையில் அவளின் அழகு பன்மடங்கா ஜொலித்தது.

பாட்டி அவளை கண்டு கேட்டவர்களுக்கு அவளே தைத்தது என்று பெருமையாக கூறிக்கொண்டு இருந்தார்.

அனைவரும் கீழே சென்று மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க காத்திருந்த நேரத்தில் ஐந்து கார்கள் வந்தன.

முதல் காரில் இருந்து சிவபிரகாஷம், பத்மாவதி, அருளானந்தம், அம்பிகா வந்து இறங்க அவர்களை வரவேற்றனர். பின்னர் அடுத்த காரில் இருந்து சந்திரபிரகாஷ், சாருமதி, சாருமதியின் பெற்றோர்கள் இறங்கினர்.

மூன்றாவதாக வந்த காரை கண்டதும் பனிமலர் மனம் இந்த காரை பார்த்து இருக்கின்றேன் எங்கே என்று யோசிக்கும் முன் கார் கதவு திறக்க அதில் இருந்து வெளிவந்தவனை கண்ட பனிமலர் முகம் தாமரையாக விரிய சில வினாடிகளில் அவன் தான் மாப்பிள்ளை என்று மனம் அறிவுறுத்த அடுத்த வினாடி முகம் வாடியது கண்கள் கலங்கின.

எந்த ஆண்களையும் ஏறெடுத்து பார்க்காதவள் முதன் முதலில் பார்க்க வைத்தவன் இவன் அல்லவா இன்று வரை அவன் மேல் இனம்புரியாத ஈர்ப்பில் இருப்பவள் தன் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையாக வந்திருப்பதை பார்த்ததும் எதையோ இழந்தது போல் மனம் தவித்தது.

அங்கிருந்து சென்று தனிமையில் ஓவென்று அழவேண்டும் போல் மனம் தத்தளித்தது.

காரில் இருந்து இறங்கியவன் நல்ல சிவந்த நிறத்தில் ஆறடிக்கு மேல் இருந்தான். ட்ரீம் செய்யப்பட்ட மீசை, கிளின் ஷேவ் செய்யப்பட்ட தாடை நான் பேசுவது குறைவு என்று கூறும் அழுத்தமான உதடுகள் அகன்ற நெற்றி ஜெல் வைத்து சீவிய கருத்தடர்ந்த முடி மற்றவர்களை தன்னுடைய கூறிய விழிகளால் அளவிடுவதை பிறர் அறிக்கூடாது என்று பெரும்பாலும் கூலர்ஸ் அணிந்து இருப்பவன் இப்போதும் அணிந்து இருந்ததால் அவனின் பார்வை இப்போது யாரை அளவிட்டு கொண்டு இருக்கின்றதோ.

கோர்ட் சூட் அணிந்து கையில் காருண்யாவை பிடித்துக்கொண்டு கண்ணில் கூலர்ஸ் அணிந்து நின்று இருந்தவனின் உருவம் அவளின் கலங்கிய கண்களில் படிந்தது. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் கையில் ஆலம் தட்டை மாலினி கொடுக்க அதில் உணர்வு வந்தவள் தன் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனின் முன் சென்று ஆலம் சுற்றினாள் பனிமலர்.

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்று இருந்தவனின் பார்வை தன்னை நோக்குமா?... தன் மனத்தின் வலி அவனுக்கு புரியுமா?... பக்கத்தில் நிற்க வேண்டியவள் முன் நின்று ஆலம் சுற்ற வைத்து விட்ட அந்த விதியின் செயலை இவன் அறிவானா?... என்ற எண்ணங்கள் மனதில் அவளை வாட்டிய போதும் ஆலத்தை சுற்றினாள் பனிமலர்.

ஆலத்தை சுற்றி முடித்து இடதுகை விரலில் ஆரத்தி நீரை தொட்டு அவனின் நெற்றி நோக்கி எடுத்து செல்ல அவனின் பாட்டி "சூர்யா கண்ணாடியை கழட்டு" என்ற குரலில்

அணிந்து இருந்த கூலர்ஸ் கழட்டி சட்டை பட்டன் போடும் இடத்தில் செருகியவன் பார்வை இருந்தது அவளின் முகத்தில் தான் பொட்டை நெற்றியில் பட்டும் படாமல் வைத்து விட்டு நகரப்போனவளை பிடித்து நிறுத்திய மாலினி

"ஆலம் சுற்றி விட்டு வெறுமனே போகக்கூடாது உன் அத்தான் கிட்ட பணம் கேளு" என்றார் மாலினி.

"ஆலம் சுற்றிய மச்சினிக்கு பணம் கொடு சூர்யா" என்று பாட்டி சொன்னதும் தன் பர்சை காரில் வைத்தது நியாபகம் வந்தவன் தன் சுண்டு விரலில் அணிந்து இருந்த மோதிரத்தை கழட்டி தட்டில் போடாமல் அவளின் வலது கையில் கொடுத்தான்.

அவனின் தொடுதலில் உடல் சிலிர்த்தது. தன்னை சமன் செய்து கொண்டு அவனுக்கு வழிவிட்டு விலகி நின்றாள் பனிமலர்.

கையில் இருந்த ஆலம் சுற்றிய தட்டை மாலினி வாங்கி சென்று ஓரமாக ஊற்றிவிட்டு வந்தார். அதுவரை அவளின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள் பனிமலர்.

ஒற்றை கல் வைத்த மோதிரம் அதில் எந்த டிசைனும் இல்லாமல் பிளைனாக இருந்தது.

அருகில் வந்த மாலினி "விரலில் போட்டுக்கொள் மலருமா கையில் இருந்தா மிஸ்சாகிடும்" என்று கூறிவிட்டு செல்ல அவர் பின் இவளும் சென்றாள்.

மாடி ஏறிக்கொண்டு இருந்தவளின் காதில் அரவிந்த் என்று எங்கே அழைக்கும் குரல் கேட்டதும் அப்படியே நின்று விட்டாள் எப்படி மறந்து போனோன்.

எழில்நிலா காதலிப்பது அரவிந்த் அல்லவா அவளின் உடன் வேலை செய்பவன். அவனை விட்டு விட்டு எப்படி இந்த நிச்சயத்திற்கு சம்மதம் சொன்னாள் நிலா என்ற சிந்தனை வர உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்த போதும் அதை இப்போது செயல்படுத்தவும் முடியாது..

எழில்நிலாவுடன் தனியாக பேசமுடியாது அதனால் அதற்கான விடையை தானே சிந்திக்கலானாள்.

ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டினரை அழைத்துக்கொண்டு எல்லோரும் மேலே சென்று இருக்க மாலினியும் பின்னால் திரும்பி பார்க்காமல் சென்று இருக்க இவள் அப்படியே படியில் நின்றவளின் சிந்தனை முழுவதும் எழில்நிலா பற்றியே இருந்தது.

இரண்டு வருடமாக தன் அக்கா காதலிப்பது தெரியும். எழில்நிலா இதுவரை இவளிடம் காதலிப்பது பற்றி சொல்லியது இல்லை. இவளே சில சமயங்களில் அரவிந்த் உடன் மாலில் முகத்தை மறைத்துக் கொண்டு சுற்றுபவளை கண்டுவிட்டு தன் அக்காவின் தோழி கங்காவும் எழில்நிலாவுடன் தான் பணிபுரிகிறாள்.

அந்த கங்காவிற்கு போன் செய்து விசாரித்து தெரிந்து கொண்டவள் விசாரித்ததை எழில்நிலாவிடம் சொல்லவேண்டாம் என்றும் கூறியிருந்தாள் பனிமலர்.

இரண்டு வருஷமாக காதலித்தவனை விட்டு விட்டு வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொள்ளும் ஆள் எழில்நிலா இல்லை. சிறிய பொம்மை கூட அவளுக்கு என்று கொடுத்ததை யாரிடமும் கொடுக்கவும் மாட்டாள், யாரையும் தொடவும் விடமாட்டாள். அவளுடைய பழைய பொருட்களை கூட தூக்கி போடவும் மாட்டாள் யாருக்கும் கொடுக்கவும் மாட்டாள்.

இந்த குணத்தை மாற்ற டாடியும் மம்மியும் எவ்வளவே முயற்சி செய்தும் அவளின் குணத்தை மாற்ற முடியவில்லை. டாடி ஒரு முறை அடித்து கூட விட்டார். அதில் இருந்து தான் டாடியிடம் பேசக்கூட பயந்தாள்.

அப்படி பட்டவள் இரண்டு வருடமாக காதலித்தவரை விட்டு விடுவாளா அரவிந்தை பிடித்து இவள் தான் காதல் சொன்னாள் என்று கங்கா சொன்னாங்க.

கண்டிப்பா இந்த நிச்சயத்தில் அவளுக்கு விருப்பம் இருக்காது. அப்ப கட்டாயப்படுத்தி இருப்பாங்களா டாடியும் மம்மியும் என்று யோசித்தவளுக்கு கண்டிப்பாக இருக்காது என்று தோன்றியது.

கண் மூடி பாட்டி, மம்மி, டாடி, தம்பி முகங்கள் இவள் வந்த போது எப்படி இருந்தது என்று நினைத்து பார்த்தவளுக்கு அவர்களின் முகத்தில் சந்தோஷம் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.

அப்ப எழில்நிலா வீட்டில் இன்னும் சொல்லவில்லை திடீரென ஏற்பாடு நடந்தது என்று மம்மி சொன்னாங்க அதனால் அவளால் இந்த ஏற்பாட்டை தடுக்க முடியவில்லை.

பலவாறு சிந்தித்தவளுக்கு கடைசியாக அவளின் மனதில் தோன்றியது எழில்நிலாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. திடீரென ஏற்பாடு செய்ததால் அவளால் வீட்டில் காதலை சொல்லமுடியவில்லை அதற்குள் வேகமாக நிச்சய வேலைகள் ஆரம்பித்து விட்டார்கள். இப்போது நிறுத்தினாள் உறவினர்கள் அனைவருக்கும் காரணம் சொல்ல வேண்டும். அதனால் இந்த நிச்சயம் முடிந்ததும் அவள் வீட்டில் பேசுவாள் இல்லை அரவிந்தை அழைத்து வந்து பேசலாம். கண்டிப்பாக இந்த திருமணத்தை நிறுத்தி விட்டு அரவிந்தை தான் கல்யாணம் செய்வாள். அப்போது இந்த திருமணம் நிற்கும் என்று நினைத்தவள்

"யாகூகூ..." என்று சத்தமாக கத்திவிட்டாள். கத்திய பிறகே தான் செய்தது புரிய சுற்றி பார்த்தாள். நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து நிம்மதி அடைந்தவள் தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து

"அத்தான் இதோ வந்துட்டேன் நீங்க கொடுத்த மோதிரம் தான் நம்ப நிச்சயதார்த்த மோதிரம் இதை உங்க கையால் போட வைக்கிறேன்" என்று மனதுக்குள் சவாலிட்டவள் மாடியேறி சென்றாள்.

அனைவரும் பரபரப்பாக இருந்தனர் வந்தவர்களுக்கு பணியாளர்களை அழைத்து கூல்டிரிங்ஸ் கொடுத்து கொண்டும் பேசிக்கொண்டு இருப்பதை கண்டவள் மணமகன் அறை பக்கமாக சென்று பார்க்க அங்கு சிலர் இருந்தனர்.

ஆனால் அவன் இல்லை எங்க போனான் என்று அந்த ஹால் முழுவதும் பார்க்க எங்கும் இல்லை. தடி தடியா இரண்டு காரில் வந்தாங்களே அவங்க கூட கண்ணில் படவில்லையே என்று சுற்றி பார்வையை ஓட்டியவளின் கண்ணில் மணமகன் அறைக்கு பக்கவாட்டில் ஒரு வழி செல்வதை கண்டவள் அங்கு சொல்ல அங்கு மேலும் சில அறைகள் இருந்தது.

கடைசி அறையின் முன் அவனின் பாடிகார்ட் இருவரை கண்டதும் இங்கதான் இருக்கியா அத்தான் இதே வந்துட்டேன் என்று நடந்தவளுக்கு முன் ஒருவர் கையில் பழச்சாறு கொண்டு செல்வதை கண்டவள் அவரை நிறுத்தி அதை வாங்கி கொண்டு "நான் கொடுக்கிறேன் நீங்க போங்க சார்" என்றாள்.


அந்த பணியாளும் இவளிடம் கொடுத்து விட்டு சொல்ல பனிமலர் அறை நோக்கி சென்றாள்.

பாடிகார்ட்ஸ் இவளை நிறுத்துவர் என்று நினைக்க அவர்களோ இவளுக்கு வழிவிட்டு நின்றனர்.

அவர்களுக்கு தான் இவளை தெரிந்து இருந்ததே ஊரே நடுங்கும் தன் பாஸ் முன் தைரியமாக நின்று சண்டை போட்டவளை மறப்பார்களா அதுமட்டும் இல்லாமல் சற்று நேரத்திற்கு முன் இவள் தானே ஆலம் எடுத்தது அதனால் எந்த தடையும் இல்லாமல் சென்று கதவை தட்டினாள்.

சில வினாடிகளில் கதவு கொஞ்சமாக திறந்து மாதவன் எட்டிபார்க்க "ஹாய்" என்றாள் பனிமலர்.

அவனும் மெல்லிய குரலில் "ஹாய்" என்று கூறிவிட்டு அவளின் கையில் இருந்த பழச்சாறு டிரேவை வாங்க கை நீட்ட அவள் பின்னோக்கி டிரேவை கொண்டு சென்று விட்டு "நானே கொடுக்கிறேன்" என்றாள்.

"இல்ல மேடம் சார் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கார் கொடுங்க" என்றான் மாதவன்.

அவள் பிடிவாதமாக நிற்க அந்நேரம் கணைப்பு சத்தம் கேட்க மாதவன் திரும்பி பார்த்தான் என்ன என்று பார்வையால் கேட்டான் சூர்யா.

மாதவன் கதவில் இருந்த கை எடுக்காமல் கொஞ்சமாக விலகி நிற்க அங்கு பனிமலர் சூர்யாவை பார்த்து " ஹாய் அத்தான்" என்றாள்.

மாதவனுக்கும் வெளியே இருந்த பாடிகார்ட்ஸ்சுக்கும் மயக்கம் வராத குறை தான். அன்று பாஸை அப்படி எதிர்த்து எதிர்த்து பேசியவள் இன்று குரலில் அவ்வளவு இனிமையும் மென்மையும் இருந்தது.

அவளையும் அவளின் கையில் இருந்த பழச்சாறையும் கண்டவன் அவளின் குடுப்பத்தினர் மாப்பிள்ளைக்கு கொடுத்து அனுப்பி இருப்பர் இப்போது இவளை திருப்பி அனுப்பினால் அவர்களும் வர நேரிடும் அதை விட இவளே கொடுத்து விட்டு சொல்லட்டும் என்று நினைத்தவன் மாதவனுக்கு தலையசைத்து அவளை உள்ளே விடும்படி கூறினான் சூர்யா.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 8



லேப்டாப்பில் வீடியோ கால் மூலம் மீட்டிங் பேசிக்கொண்டு இருந்தவன் பிறகு பேசுகிறேன் என்று கூறி வீடியோ காலை அனைத்து விட்டு பார்க்க எதிரில் பழச்சாறுடன் நின்று இருந்தாள் பனிமலர்.

அவனிடம் பழச்சாறு டிரேவை நீட்ட "தேங்க்ஸ்" என்று எடுத்து டேபிளில் வைத்து விட்டு அவளை பார்க்க அவள் நகராமல் நின்று இருந்தாள்.

என்ன?... என்று தன்னையே பார்த்துக்கொண்டு இருந்தவளிடம் கேள்வியாக நோக்கினான்.

"இல்ல என் பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணி நீங்க தான் எனக்கு அத்தானாக வரப்போறீங்க என்று சொன்னால் யாரும் நம்பவில்லை" என்றாள்.

"அதுக்கு என்ன?..." என்றான்.

"என் பிரண்டுங்க இப்பவே ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பு நாங்க நம்புறோம் என்றாங்க அதான் செல்ஃபி எடுத்துக்கவா?..." என்றாள்.

மாதவன் மனதுக்குள் குழப்பம் ஏற்பட்டது அன்னிக்கு இவங்களை தான் மாலில் பார்த்தோமா இல்லை அவங்க வேறா?.... அன்னைக்கு பாஸ்கிட்ட பேசினவங்க ரவடி மாதிரி பேச்சு இருந்தது. இன்னைக்கு ஒன்றும் தெரியாது போல் இவ்வளவு பொறுமையாக பாஸ் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு இருக்காங்க என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவனின் கையில் இருந்த போன் அடித்தது.

சூர்யா மாதவனை பார்க்க "சார் அப்பா தான் கால் பண்ணுறார் வந்திட்டாங்களா என்று பார்த்திட்டு வரேன்" என்று கேட்க "சரி போ" என்று தலையாட்டியதும் மாதவன் வெளியேறி விட்டான்.

அப்பாடி எப்படி வெளியே போகவைப்பது என்று நினைத்தேன் கடவுளே வழிகாட்டிட்டார் என்று புன்னகைத்து கொண்டவள் சூர்யாவை பார்க்க அவன் பார்வை அவளின் முகத்திலே இருந்தது.

அத்தாடி இவன் கண்டுபிடிச்சு இருப்பானோ என்று அதிர்ந்தவள் சட்டென்று தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு "என்ன அத்தான் உங்களை எடுத்துக்கவா?..." என்றாள்.

"ஏய்" என்றான் கோபமாக

அவனின் குரலில் சற்று அதிர்ந்து தான் போனாள் பனிமலர்.

"என்ன அத்தான் செல்ஃபி எடுத்துக்கவா என்று தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படுறீங்க" என்றாள்.

அவனின் பார்வை இப்போது இம்மியளவும் இப்படி அப்படி செல்லாமல் அவளையே முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அய்யோ இப்படி மூஞ்சியை வச்சிருந்தா என்ன நினைக்கிறான் என்று எப்படி கண்டுபிடிக்கிறது. கொஞ்சம் கூட ரியாக்ஷன் இல்லாமல் இப்படியே வாழ்க்கை புல்லா இவன் கூட எப்படி வாழப்போறடி மலரு.

லைப் புல்லா உப்பு சப்பில்லாத வாழ்க்கை தான் போல உனக்கு. நீ எப்ப இவன் முகத்தில் உணர்ச்சிகளை வரவச்சி இவனை லவ் பண்ணவச்சி வாழ்ந்து குழந்தை குட்டி பெத்துகறதுக்குள்ள உனக்கு வயசாகிடும் போலடி மலரு. இப்படி பட்ட ஒருத்தன் தான் உனக்கு வேணுமா மலரு நல்லா யோசிச்சுக்கடி என்று மனம் கேள்வி கேட்க

ஆன்... இவன் தான் என் அத்தான் இப்படி கல்லா முகத்தை வச்சிட்டு இருந்தாலும் பரவாயில்லை இவன் தான் என் அத்தான். ஒரு பழமொழியே சொல்லி இருக்காங்களே

"கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்" என்று இருக்கும் போது நான் எப்படி இவனை வேண்டாம் என்று சொல்லு வேன். இவனை கல்யாணம் பண்ணி என் பின்னாடி சுத்த வைத்து இரண்டு இல்ல.. இல்ல... நாலு பிள்ளையை பெத்துக்களைனா என் பெயர் பனிமலர் இல்லை என்று மனம் சூளுரைத்துக்கொண்டு இருந்த நேரத்தில் மேஜையை தட்டும் சத்தத்தில் நினைவு கலைந்தவளை

"உனக்கு நின்னுகிட்டே தூங்குற வியாதி இருக்கா?...." என்று கேட்டான் சூர்யா எரிச்சலான குரலில்.

"என்னது எனக்கு வியாதியா?...." என்று அதிர்ந்தாள்.

"பின்ன என்ன வந்து பத்து நிமிஷத்துக்கு மேலே ஆகுது அப்படியே நின்னுட்டு கண்ணை திறந்து கொண்டே தூங்கிட்டு இருக்க, உனக்கு தான் எந்த வேலை வெட்டியும் இல்லை ஆனால் எனக்கு நிறைய வேலை இருக்கு நீ கிளம்பு" என்றான் சூர்யா.

" அச்சச்சே அத்தான் நான் செல்ஃபி எந்த ஆங்கிள் வச்சா நல்லா இருக்கும் என்று யோசித்திட்டு இருந்தேன்" என்றவள் அவனின் அருகில் சென்று " அத்தான் எழுந்து நில்லுங்கள்" என்றாள்.

அவனுக்கோ கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அவளை இழுத்து சென்று வெளியே தள்ளி விடத்தான் நினைக்கிறான். அவன் பாட்டியும் அன்னையும் இங்கு வருவதற்கு முன்பே உன்னால் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. அங்க வந்து உன் கோபத்தை யாரிடமும் காட்டக்கூடாது என்று அட்வைஸ் மழை பெய்து தான் அழைத்து வந்திருந்தார்கள் அதனால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றான்.

அவனுக்கும் அவளுக்கும் சிறு இடைவெளி விட்டு நின்று இருந்தாள்.

"அத்தான் இங்க பாருங்க" என்று கூறி அவன் போனைப்பார்த்ததும் செல்ஃபி எடுத்தாள். ஆனால் அதில் முறைப்புடன் இருக்க "அத்தான் கொஞ்சம் ஸ்மைல் பிளிஸ்" என்றாள்.

அப்போதும் அவன் முகம் சாதாரணமாகவே இருந்தது. தன் கையில் இருந்த மோதிரத்தை அவனிடம் நீட்டினாள்.

" என்ன?... " என்றான்

"இல்ல அத்தான் நீங்க தான் எனக்கு குடுத்திங்க என்று சொன்னால் நம்ப மாட்டாங்க அதனால் இந்த மோதிரத்தை கொடுக்கிற மாதிரி ஒரு போஸ்" என்றாள்.

தன் நெற்றியை வருடியவன் ஆழமூச்செடுத்து தன்னை சமன் செய்து அவளின் கையில் இருந்த மோதிரத்தை வாங்கி கையில் வைத்து காட்ட

" அய்யோ அத்தான் மோதிரத்தை இப்படி போடுற மாதிரி வச்சு போஸ் கொடுங்க" என்றாள்.

" படுத்துறா" என்று வாய்க்குள் முனங்கியவன் அவள் சொன்னதுபோல் விரலில் போடுவது போல் வைக்க அடுத்த வினாடி அவளின் மோதிர விரலை அதற்குள் விட்டிருந்தாள் பனிமலர்.

என்ன நடந்தது என்று அவன் உணரும் முன் எக்கி அவன் மொழு மொழு என்று இருந்த கன்னத்தில் தன் உதட்டை பதித்தவள் அவனிடமிருந்து விலகி கதவு நோக்கி சென்று கொண்டே "தேங்க்ஸ் அத்தான் இப்ப நீங்க எனக்கு நிச்சய மோதிரம் போட்டுட்டிங்க அடுத்து தாலியையும் கட்ட ரெடியாக இருங்க" என்று கூறிவிட்டு கதவை திறந்து சென்று விட்டாள்.

அதன் பிறகே நடந்தும் அவள் கூறியதும் அவனுக்கு புரிய

"சிட் சிட்.. என்று கையை உதறியவன் என்னையே எவ்வளவு ஈஸியா ஏமாத்திட்டா இடியட் இடியட். உனக்கு இருக்கிடி இரட்சசி இந்த சூர்யா யாரு என்று கூடிய சீக்கிரம் காட்டுறேன்டி என்னையேவா முட்டாளாக்கிட்டு போற அதுவும் தாலி கட்ட ரெடியாகனுமா?...." உன்னை உன்னை என்று புலம்பிக்கொண்டு இருந்த போது அறைக்கதவு தட்டப்பட்டது.

கண்மூடி தன்னை சமம் செய்தவன் " எஸ்" என்றதும் மாதவன் தான் உள்ளே வந்தவன்

" பாஸ் உங்களை பாட்டி அழைச்சுட்டு வரச்சொன்னாங்க முகூர்த்த நேரம் வந்திடுச்சாம் எல்லாம் ரெடி நீங்க வந்தா ஆரம்பிச்சிடலாம் என்று சொன்னாங்க என்றான்.

" ஒகே லெட்ஸ் கோ" என்று அறையை விட்டு வெளியேறினான்.


"ஏய் நிறுத்து நிறுத்து நீ பாட்டுக்கு ரீல் சுத்திட்டே போற" என்றாள் தமிழ்.

நிச்சயதார்த்த விழாவில் நடந்ததை சொல்லிக்கொண்டு இருந்த பனிமலரை இடை நிறுத்தி இருந்தாள் தமிழ்.

"ஏய் என்னடி ரீல் சுத்தினேன் நான் நடந்ததை தானே சொல்லிட்டு இருக்கேன்" என்றாள்.

" எது நீ அந்த ராட்சசன் ரூமுக்கு போனது அவன் கிட்ட பேசினது மோதிரம் போடவச்சது கடைசியா ஒன்னு சொன்னையே கிஸ் பண்ணேன் என்று இதையெல்லாம் என்னை நம்ப சொல்லுறீயா?... அவன் உன்னை ரூமுக்குள்ள வீட்டதே நம்பலை இதில் நீ சொன்னது எல்லாம் செய்யறதுக்கு முன்னே உன்னை அவன் கொன்று இருப்பான்" என்றாள் தமிழ்.

" ஏய் நான் ஏன்டி பொய் சொல்லப்போறேன் நடந்ததைத்தானே சொன்னேன்" என்றாள் பனிமலர்.

" அவனை பற்றி தெரியாதவங்க வேணா நீ சொல்லுறதை நம்புவாங்க. அவனை பத்தி தெரிந்தே நான் எப்படி நம்புவேன். தெரியாமல் இடிச்சதுக்கே அப்படி அடிச்சான். என்னை மட்டுமா நம்ப யுஜி தேர்ட் இயர் படிக்கும் போது பிஜி படிச்ச லதா தெரியும் இல்ல அவங்க எவ்வளவு பெரிய பணக்காரங்க அவங்க ஒரு ஃபங்ஷனில் இவனை பார்த்துட்டு அவன் கூட பேசனப்போனா பேசவே இல்லையாம் அட்லீஸ்ட் போட்டோவாவது எடுக்கலாம் என்று பக்கத்தில் நின்னா அவன் அவங்களை பார்த்த பார்வையில் போட்டோவுக்கே நிற்காமல் வந்துட்டாங்களாம் அப்படி பட்டவன் உனக்கு மட்டும் இந்தா செல்ஃபி எடுத்துக்கே என்று போஸ் கொடுத்தானா அவனுக்கு பெண்ணுங்க என்றாலே அலர்ஜியாம் இதுவரை எந்த பெண்ணுங்க கூடவும் சின்ன கிசுகிசு கூட வந்ததில்லையாம் அந்த அளவுக்கு பெண்ணுங்களை வெறுக்கிறான்."

" எனக்கு என்ன தோனுதுனா அவன் படிக்கும் போது எதாவது பெண்ணை லவ் பண்ணி இருப்பான். அந்த பெண்ணும் இவனின் அழகை பார்த்து லவ் பண்ணியிருக்கும் இவன் கூட பழகிய பிறகு தான் தெரிந்து இருக்கும்" என்றவளை பனிமலர் இடைமறித்து

"என்ன தெரிந்து இருக்கும்?...." என்றாள்.

"ஆன் அதுவா இவன் ஒரு சிரிக்கவே தெரியாத உர்ரான் கோட்டான் என்று அதனால் பிச்சிக்கிட்டு ஓடி போய் இருப்பா அதனால் இவனுக்கு பெண்ணுங்களை பிடிக்காமல் போய் இருக்கும்" என்றாள் தமிழ்.

அவளின் தலையில் இரண்டு கொட்டுக்களை வைத்த பனிமலர் "அப்புறம் அந்த சீனியர் லதா கதை உனக்கு எப்படி தெரியும்?.... " என்று கேட்டாள்.

" அதுவா அவங்க தங்கச்சியும் நம்ப காலேஜ் தான் படிக்கிறாள் இல்லையா ஒரு நாள் கேன்டீனில் நீ வர லேட்டாகும் என்று உட்கார்ந்துட்டு இருந்த போது லதா தங்கச்சி அவளுடைய பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு இருந்தா அப்போ கேட்டேன்" என்றாள்.

" சரி அப்ப நான் சொன்னதை நம்ப மாட்டே இல்லையா?... " என்றாள் பனிமலர்.

" ஆமாம் ஆதாரம் இல்லாமல் நான் நம்ப மாட்டேன்" என்றாள் தமிழ்.

" ஆதாரம் தானே இதை பார்" என்று தன் கையில் இருந்த மோதிரத்தை காட்டினாள் பனிமலர்.

அதை கண்ட தமிழ் "வாவ் சூப்பரா இருக்கு வைரம் தானே?.... "என்றாள் தமிழ்.

" ஆமாம் வைரம் தான் இப்பவாவது நம்பறியா? என்றாள்.

"என்னத்தை நம்பறது" என்றாள் தமிழ்.

"ஏய் அதான் கையில் ரிங் அவன் போட்டது என்று நம்பறியா என்றாள்."

" மோதிரம் ஆலம் சுத்தினதுக்கு கொடுத்து இருப்பான் அதை நீ போட்டு இருக்க அதை நம்புறேன்" என்றாள் தமிழ்.

"அடியேய் உன்னை பத்தி தெரியும்டி இதை பார்த்த நான் சொல்லுறது ரீலா உண்மையா என்று தெரியும்" என்று தன் போனில் எதையோ தேடினாள்.

" ஏய் திரும்ப முறைச்சுட்டு இருக்க செல்ஃபியே காட்ட போற உன் அக்கா கூட எடுத்து இருப்ப அதில் எடிட் பண்ணி அக்காவை எடுத்துட்டு நீங்க இரண்டு பேர் மட்டும் இருக்கற மாதிரி செய்து இருப்ப" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளின் முன் ஒரு வீடியோவை காட்டினாள் பனிமலர்.

அதை கண்ட தமிழின் பேச்சு நின்று போக கண்கள் விரிய நம்ப முடியாமல் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டு இருந்தாள் தமிழ்.

 
Status
Not open for further replies.
Top