ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 9



ஏனெனில் பனிமலர் சொன்னவை அனைத்தும் போனில் போய்க்கொண்டு இருந்தது.

பனிமலர் சூர்யாவுடன் செல்ஃபி எடுத்தவள் அவனிடம் மோதிரம் கொடுக்கும் போதே தன் கையில் செல்ஃபிக்காக ஆனில் இருந்த கோமராவை வீடியோ எடுக்கும் பட்டனை அழுத்தி இருந்தாள் அதனால் அனைத்தும் பதிவு ஆகியிருந்தது.

அனைத்தும் கண்டவள் "எப்பிடி டி அவன் ஒன்றும் பண்ணாமல் இருந்தான்" என்று நம்பமுடியாத பாவனையில் கேட்டாள் தமிழ்.

தன் நைட் டிரஸ்சில் இருந்த காலரை பிடித்த தூக்கிவிட்டவள் "அதான் என்னோட பர்பாமென்ஸ்சில் அசந்து நிக்குறானே தெரியலையா" என்றாள் பனிமலர் புன்னகையுடன்.

"ஏய் அப்புறம் ஃபங்ஷன் முடியுறவரையும் கூடவா அவன் உன்னை ஒன்னும் பண்ணலையா?...." என்றாள் தமிழ்.

இல்லை என்று தலையாட்டினாள் பனிமலர்.

"சரி சரி அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லுடி" என்றாள்.

மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் பனிமலர்.

பனிமலர் சூர்யாவின் அறையை விட்டு வெளியேறியவள் குதுகலத்துடன்

" எனக்கே எனக்கா நீ
எனக்கே எனக்கா
இந்த சூரியன் இனி எனக்கே
எனக்கா..... "

என்று அவளின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் வரிகளை மாற்றி மெல்லிய குரலில் பாடிக்கொண்டு எழில்நிலா அறைக்கு சென்றாள் பனிமலர்.

"ஏய் இவ்வளவு நேரம் எங்கடி போன என்கூட இல்லாமல்" என்று எழில்நிலா கேட்கவும்

" இங்க தான் இருந்தேன்" என்றவள் எழில்நிலாவிடம்

"ஆமாம் நீ உன் பிரண்ட்ஸ் கூட வேலை செய்றவங்க யாரையும் கூப்பிடலையா ஒருத்தர் கூட வரலையே" என்றாள்.

"அது..." என்று சற்று திணறிய எழில்நிலா " இல்லை டி திடீரென ஏற்பாடு பண்ணாங்க அப்புறம் வீக் டோஸ்சில் ஃபங்ஷன் வச்சதால் யாரையும் கூப்பிடலை மேரேஜ்க்கு கூப்பிடலாம் என்று விட்டுவிட்டேன்" என்றாள்.

பனிமலர் அதற்கு மேல் அவளிடம் எதையும் கேட்கவில்லை அவளுக்கான விடையாகத்தான் எழில்நிலா தடுமாற்றத்தை கண்டு கொண்டாளே என்று விட்டு விட்டு வேறு பேசினாள்.

சிறிது நேரத்தில் மாலினி வந்து எழில்நிலாவை அழைத்து செல்ல பனிமலரும் எழில்நிலா உடன் சென்றாள்.

ஏற்கனவே சூர்யபிரகாஷ் மேடையில் வந்திருக்க எழில்நிலாவை அவன் அருகில் நிற்க வைத்தனர். அனைவரரையும் வணங்கிவிட்டு அருகில் இருந்த அலங்கார சேரில் அமரச்சென்னார் ஐயர்.

எழில்நிலா வணக்கம் சொல்லி அமர்ந்தாள் என்றாள் சூர்யா சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமர்ந்தான். ஐயர் இரு மாலைகளை கொடுக்க எழில்நிலாவின் தம்பி அகிலேஷ் ஒரு மாலையை எடுத்து சூர்யாவிற்கு போட்டு விட இன்னொரு மாலையை சூர்யாவின் தங்கை முறையில் இருந்த பெண் எழில்நிலாவிற்கு போட்டுவிட்டாள்.

ஏற்கனவே இருவிட்டனரும் முக்கிய உறவுப்பெரியவர்களும் ஐயர் அருகில் உட்கார்ந்து இருந்தனர். தட்டில் இருந்த நிச்சயதார்த்த ஒப்பந்த காகிதத்தை எடுத்து ஐயர் சத்தமாக படித்தார்.

"இன்னாரின் பேரன் இன்னாரின் மகன் என்று படித்தவர் இளைய மகன் சூர்யபிரகாஷ்க்கும் இன்னாரின் பேத்தியும் இன்னாரின் மூத்த மகள் எழில்நிலாக்கும்" என்று ஐயர் படித்துக்கொண்டு இருக்க

பனிமலர் சற்று தள்ளி சூர்யாவையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஐயர் மணமகள் பெயரை சொல்லும் போது " இளைய மகள் பனிமலர் சித்ரா" என்று யாருக்கும் கேட்காமல் முனகினாள். அந்நேரம் சட்டென சூர்யாவின் பார்வை சில வினாடிகள் பனிமலரை நோக்கியது. அவளின் முகம் தாமரையாக மலர்ந்தது.

ஐயர் மந்திரங்கள் கூறி நிச்சயதார்த்த ஒப்பந்த காகிதத்தை பூ, பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் இருந்த தட்டில் வைத்து எடுத்து கொடுக்க இருவீட்டாரும் மாற்றிக்கொண்டனர்.

அடுத்து சூர்யபிரகாஷ் எழில்நிலா இருவரிடமும் மோதிரம் கொடுத்தனர் மாற்றிக்கொள்ள

மோதிரத்தை எடுத்த சூர்யபிரகாஷ் மேடையில் தன் குடும்பத்தினரை பார்க்க அனைவரின் முகத்திலும் சந்தோஷமும் ஆவலுமாக பார்த்து கொண்டு இருந்தனர். அவனின் பார்வை தன் அண்ணன், அண்ணி நின்று இருந்த இடத்தை சில வினாடிகள் பார்த்துவிட்டு எழில்நிலாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் அதை தொடர்ந்து எழில்நிலா சூர்யாவின் கையில் அணிவிக்க அனைவரும் கைத்தட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆனால் ஒருத்தி மட்டும் அங்கிருந்து நகர்ந்து பின்னால் சென்று தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து "நீ எனக்கு தானே முதலில் மோதிரம் போட்ட அப்ப நீ எனக்குதான் உன்னை நான் யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன். நீ இப்ப நிலாவுக்கு மோதிரம் போட்டு இருக்கலாம் ஆனால் தாலியை என் கழுத்தில் தான் கட்டனும். அப்படி இல்லாமல் நீ வேற யாரு கழுத்திலாவது கட்டனும் என்று நினைத்தாளே அப்புறம் இந்த பனிமலர் உன் கண்ணில் எப்பவுமே படாமல் போய் விடுவேன் சூரியன்" என்று மனதுக்குள் புலம்பியவளின் கண்ணீர் துளி அந்த மோதிரத்தில் பட்டு தெரிந்தது.

" ஏன் மாமா இப்ப கூட உங்க தம்பி முகத்தில் ஒரு சின்ன முறுவல் கூட இல்லை. எவ்வளவு சந்தோஷமான நிகழ்வு இது என்னவோ ரோபோ மாதிரி மோதிரத்தை எடுத்து மாட்டிட்டு நிக்கிறார்" என்றாள் சாருமதி.

"ஏய் சும்மா இருடி யார் காதிலாவது விழப்போகுது. அவன் கல்யாணத்திற்கு ஓகே சொன்னதே பெரிய விஷயம். இப்ப போய் சிரி என்று சொன்னால் எழுந்து போயிடப்போறான்" என்றான் சந்திரபிரகாஷ்.

" க்கும்.. பெரிய தம்பி இவர் இப்படி இருக்க காரணம் நீங்க, மாமா, தாத்தா தான் ஓவரா தலையில் தூக்கி கொண்டாடுனா கொழும்பும் ஏறிடிச்சு திமிறு அதிகமாயிடுச்சு பாவம் அந்த பெண் இவர் கிட்ட மாட்டிட்டு என்ன பாடுபடப்போகுதோ" என்று சாருமதி புலம்பிக்கொண்டு இருக்க

"கவலையே படாதீங்க அக்கா கல்யாணம் முடிந்தால் சிரிச்சிடுவார் அத்தான் " என்று குரல் பின்னிருந்து கேட்க திகைத்து திரும்பினர் சந்திரபிரகாஷ், சாருமதி.

அவர்கள் முன் வந்த பனிமலர் "ஹாய் பெரிய அத்தான் ஹாய் அக்கா" என்றாள்.

அவர்களுக்கு இவள் யார் என்று தெரியவில்லை ஆலம் சுற்றிய போது உறவு பெண்ணாக இருக்கும் என்று அறிந்து இருந்தனர். அவர்கள் எழில்நிலாவை பார்க்க சென்ற போது இன்னொரு பெண் படிக்கிறாள் ஹாஸ்டலில் இருக்கிறாள் என்று கூறியிருந்த போதும் இப்போது இருவருக்கும் நினைவு வரவில்லை.

அவள் பெரிய அத்தான் அக்கா என்ற போது இவ்வளவு உரிமையாக அழைப்பவள் யாராக இருக்கும் என்று யோசனையே

அவர்கள் புரியாமல் பார்ப்பதை அறிந்தவன். "ஹாஹா ஹாஹா என்று புன்னகை செய்து என்ன யாருன்னு தெரியலையா?..." என்றாள் பனிமலர்.

இப்போது தான் அவளை உன்னிப்பாக பார்க்க யார் என்று அவளின் முகம் காட்டிக்கொடுத்தது.

"நீ எழில்நிலா தங்கச்சி தானே" என்றாள் சாருமதி.

ஆமாம் என்று தலையசைத்தார் பனிமலர்.

" உன் பேர்" என்று கூறி சாருமதி யோசிக்க

" ரொம்ப யோசிக்காதிங்க அக்கா என் பேர் பனிமலர் சித்ரா" என்றாள்.

"ஆன்... ஆமாம் உங்க அம்மா பாட்டி ரெண்டு பேரும் உன்னை பத்தி தான் அதிகம் பேசினாங்க அன்னைக்கு வந்த அப்ப ஆனால் பேர் சட்டுன்னு நியாபகம் வரலை" என்றாள்.

அதுவரை அங்கு சூர்யபிரகாஷ் எழில்நிலாவையும் போட்டோ எடுத்து கொண்டு இருக்க பின் குடும்பத்தினரையும் நிற்க சொல்ல இவர்களை அழைக்கவும் அங்கு சென்றனர்.

சூர்யா அருகில் அகிலேஷ் நின்று இருக்க அவனை தள்ளிவிட்டு அந்த இடத்தில் பனிமலர் நின்றாள். அகிலேஷ் அனைவரும் அங்கு இருப்பதால் அவளை முறைத்து விட்டு அவளின் அருகில் நின்றான்.

பனிமலர் மெல்ல உதட்டசைவில் சூர்யாவிற்கு மட்டும் கேட்கும்படி "அத்தான் வீட்டில் இருக்கிற பெரியவங்க கட்டாயப்படுத்தி தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னீங்களா?..."என்று கேட்டாள்.

அனைவரின் முன்பும் அவளிடம் கோபம் கொள்ள முடியாம‌ல் அமைதியாக மெல்லிய குரலில் "ஏன்?..." என்றான் சூர்யா.

"இல்ல மாப்பிள்ளை முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை. ஒரு வேளை பிடிக்காமல் வீட்டில் இருக்கிறவங்களுக்காக சம்மதிச்சாரோ என்னவோ என்று பேசிகிட்டாங்க."

"எனக்கும் அந்த டவுட்டு இருக்கு அதான் கேட்டேன். உங்க முகத்தில் கொஞ்சம் கூட மாப்பிள்ளை கலையே இல்லை, என்னவோ போருக்கு போகுறது மாதிரி விரைப்பா நின்னுட்டு இருக்கிங்க. அதான் உங்க ஜோடி உங்க பக்கத்தில் வந்திட்டேன் இல்லையா கொஞ்சம் சிரிங்க அத்தான்" என்றாள் பனிமலர்.

தன் கோபத்தை கை முஷ்டி இறுக்கி குறைத்த சூர்யா முகத்தில் எதையும் காட்டாமல் " ஒழுங்கா இங்கிருந்து நகர்ந்து போ இல்லைனா என் பாடிகார்ட்ஸ் வந்து உன்னை தூக்கிட்டு போகவேண்டியது வரும்" என்று பல்லை கடித்து பேசினான் சூர்யா.

" அப்படியா அத்தான் இப்பவே நீங்க சொன்னதை செய்யறேன்" என்று சத்தமாக பேசினாள் பனிமலர்.

அங்கிருந்தவர்கள் அப்படி என்ன சூர்யா செய்ய சொன்னான் என்று பனிமலரை பார்த்தனர்.

இவள் ஏன் இப்படி சத்தமாக பேசுறா நான் இவளை தூரமாகத்தானே போகச்சொன்னேன் ஆனால் இவள் நீங்க சொன்னதை செய்யுறேன் என்று சந்தோஷமாக சொல்லுறாளே என்று குழப்பத்துடன் பார்த்தான் சூர்யா.

பனிமலர் தன் கையில் இருந்த போனை எடுத்து கோமராவை ஆன் செய்தாள்.

அதை கண்டவன் மெல்லிய குரலில் "ஏய் நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்யுற" என்றான் சூர்யா.

"எல்லோரும் இங்க பாருங்க அத்தான் என்னை பேமலி செல்ஃபி எடுக்கச்சொன்னார்" என்று போனில் எல்லோரும் கவர் ஆவது போல் வைத்தாள்.

சூர்யா அவளை முறைத்தான் என்றாள் சாருமதி சந்திரபிரகாஷ் ஆவென பார்த்தனர்.

சாருமதி சந்திரபிரகாஷ் எழில்நிலா பக்கத்தில் நின்ற இருந்தனர்.

" பெரிய அத்தான் அக்கா உங்க ஃபேஸ் ஏன் எதோ உலக அதிசயத்தை பார்க்கறது போல வச்சு இருக்கிங்க" என்று கேட்டாள் பனிமலர்.

"உலக அதிசயம் தான் இங்க நடக்குது" என்று சூர்யபிரகாஷை பார்த்துக்கொண்டே சொன்னாள் சாருமதி.

அவனே சாருமதியை முறைத்து விட்டு பின் பனிமலரை முறைத்தான்.

அதை கண்ட பனிமலர் புன்னகையுடன் "அக்கா இனி இதுமாதிரி உலக அதிசயம் அடிக்கடி நடக்கும் அதை பார்க்க தயாராக இருங்க" என்று கூறிவிட்டு சூர்யாவை பார்த்து "அத்தான் கொஞ்சம் உங்க கோப முகத்தை கழட்டி வச்சிட்டு கொஞ்சம் சிரிங்க" என்றாள்.

அதை கேட்ட சாருமதிக்கு சூர்யாவிற்கு ஏற்ற ஜோடி இவள் தான் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

இருகுடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்து சில செல்ஃபிகளை எடுத்துவிட்டே பனிமலர் சூர்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

மேலும் சில உறவினர்கள் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.

அனைவரும் உணவு உண்டு முடித்து இருக்க கடைசியாக உணவு உண்ணச்சென்றனர் சூர்யா எழில்நிலா சாருமதி சந்திரபிரகாஷ் பனிமலர். அனைவரும் ஒரே வரிசையில் அமர பனிமலர் மட்டும் எதிர் வரிசையில் சென்று சூர்யாவிற்கு நேராக அமர்ந்தாள்.

அதை கண்டவன் எவ்வளவு பண்ணனுமே பண்ணுடி எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக திருப்பி கொடுக்கிறேன் என்று மனதில் உறுமியவன் அவளை பார்த்து முறைத்தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 10



முதலில் இலையில் வைத்த ரசகுல்லாவை கண்டவள் "வாவ்வ்.... ரசகுல்லாவா" என்றவள் பரிமாறுபவர் ஒன்றை மட்டும் வைத்து விட்டு செல்ல

"ஹலோ சார்" என்று பரிமாறுபவரை அழைத்தாள் பனிமலர்.

என்னையா என்ற கேள்வியுடன் வந்து நிற்க

"என்ன இது?..." என்று தன் இலையில் இருந்த ரசகுல்லாவை காட்டினாள்.

அவரோ இதுக்கூட தெரியாதா என்ற பாவனையில் "ரசகுல்லா" என்றார்.

"ஹலோ சார் அது எனக்கு ரசகுல்லா என்று தெரியாதா?...." என்றாள் சற்று கடுப்புடன்

"நீ தானே என்ன இது என்று கேட்டமா" என்றார் பரிமாறுபவர்.

"நான் கேட்டது அது இல்லை நான் யார் தெரியுமா?... எனக்கு ஒரே ஒரு ரசகுல்லா வச்சு இருக்கிங்களே" என்றாள்.

" யாருமா நீ" என்று பரிமாறுபவர் கேட்க

" என்னை தெரியாதா?... என்னை தெரியாதா?... என்றாள் சோகமான குரலில்

" ஏம்மா தெரியலை என்றுதானே கேட்கிறேன்" என்றார் அவர்.

"நான் தான் மணப்பெண்" என்று சிறிது இடைவெளி விட்டவள் சூர்யாவை பார்த்து விட்டு" தங்கச்சி" என்றாள்.

" ஏம்மா அதுக்கு என்ன?..." என்றார் பரிமாறுபவர்.

"எனக்கு போய் ஒரே ஒரு ரசகுல்லா வச்சு இருக்கிங்களே" என்றாள் குரலில் சோகத்தை பிழிந்து

"ஏம்மா இன்னொரு ரசகுல்லா வைங்க என்றால் வைக்க போறேன் அதுக்கு இவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டியே எவ்வளவு பேர் காத்திட்டு இருக்காங்க" என்று கூறி இன்னொரு ரசகுல்லா கிண்ணத்தை வைத்து விட்டு சென்றார்.

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த சந்திரபிரகாஷ் வாய்மூடி சிரிக்க சாருமதி சத்தமாகவே சிரித்தாள்.

எழில்நிலா தங்கையை முறைத்துக்கொண்டு இருந்தாள். சூர்யவோ சரியான" தீணிப்பண்டாரம் போல" என்று முனுமுனுத்து விட்டு உண்டு கொண்டு இருந்தான்.

அந்நேரம் வேகமாக வந்த அசோகன் "சித்துமா என்னடா வேண்டும்" என்று மகளிடம் கேட்டார்.

"டாடி எனக்கு ரசகுல்லா ஒன்னு தான் வச்சாங்க திரும்ப வைக்கச்சொல்லியும் ஒன்னு மட்டும் தான் வச்சாங்க என்று சொல்ல

" உனக்கு ரசகுல்லா தானே வேண்டும் அப்பா எடுத்து தரேன்" என்று கூறிச்சென்றவர் இன்னும் இரண்டு கப்புகளை எடுத்து வந்து வைத்தார்.

" தேங்க்ஸ் டாடி" என்று புன்னகை செய்தவளின் தலையை வருடியவர் "இதுக்கு மேல ஸ்வீட் வேண்டாம் சித்துமா" என்று கூறிவிட்டு எதிர்புறம் வந்து மாப்பிள்ளையும் அவனின் அண்ணன் அண்ணிக்கும் தேவையானவற்றை பார்த்து பார்த்து பரிமாற வைத்து கவனித்து கொண்டார்.

ஐஸ் கிரீம் இடத்திலும் வம்பு செய்து இரண்டு ஐஸ்கிரீம் வாங்கி சென்று உண்டாள்.

அங்கிருந்த அனைவரும் அவளின் குறும்புதனத்தை ரசித்தனர்.

சாப்பிட்டு வந்த சூர்யாவை வழிமறித்து நிறுத்தினாள் பனிமலர்.

"ஏய் வழிவிடு" என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்

அவன் பின் வந்த எழில்நிலா பனிமலர் அருகில் வந்து "ஏய் மலர் என்ன பண்ணுற வழியை விடு" என்றாள்.

"ஊகூம்.... என்று தலையாட்டி நான் கேட்கிறது கொடுத்தா அத்தானுக்கு வழிவிடுறேன்" என்றாள்.

" என்னடி வேண்டும் சொல்லு நான் தரேன் என்றாள் எழில்நிலா.

" நீ தரவேண்டாம் அத்தான் தான் தரனும் என்றாள்.

" என்ன வேனும் செல்லுடி" என்றாள் எழில்நிலா.

" அத்தான் எப்படியும் ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டார் அதனால் அவர் பங்கை வாங்கி எனக்கு கொடுக்க சொல்லு" என்றாள் பனிமலர்.

" யார் சொன்னது எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது" என்று கூறியவன் அவளின் கை பிடித்து தள்ளி நிறுத்தியவன் ஐஸ்கிரீம் வாங்கி அவளின் எதிரில் வந்து உண்டான்.

சாருமதிக்கு மயக்கம் வராத குறை தான். " என்ன மாமா இது உங்க தம்பி ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்" என்றாள் கணவனிடம்

சந்திரனும் தன் தம்பியை ஆச்சரியமாக பார்த்து "எனக்கும் ஒன்னும் புரியலைடி நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டா நீ குழந்தையா என்று பிடுங்கி காருண்யாகிட்ட கொடுப்பான் இப்ப மலர் கேட்டாள் என்று அவளை வெறுப்பேற்ற சாப்பிட்டுட்டு இருக்கான்" என்றான்.

"ஆமாம் மாமா நம்ப எதை சொன்னாலும் சட்டை பண்ணாதவர் அவளை வெறுப்பேற்ற செய்யுறாரு என்றாள் என்ன அர்த்தம் என்று தெரியுதா மாமா?... "

" என்ன சாரு சொல்லுற எனக்கு புரியலை" என்றான் சந்திரன்.

" மாமா நம்ப பேச்சை எல்லாம் சட்டை செய்யாமல் போகிறவர் மலர் பேச்சுக்கு எதிர்ப்பா செய்யுறார் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியலையா?... உங்க தம்பி தன் இறுக்கத்தில் இருந்து வெளியே வந்து அவரின் இயல்பான குணத்தை அவகிட்ட காட்டுறார். அவள் கூட சண்டை போடுறார்" என்று சாருமதி கூறியதும் தான் சந்திரபிரகாஷ்க்கு புரிந்தது.

தன் தம்பி தொழிலுக்குள் வந்ததில் இருந்து எந்த உணர்வையும் குடும்பத்தினருடன் வெளியேயும் காட்டியது இல்லை. காருண்யாவைக்கூட அறைக்குள் அழைத்து சென்று நீண்ட நேரம் கழித்து கொண்டு வந்து விடுவான் மகளிடம் விசாரித்தாள் விடியோ கேம் விளையாடினேன் என்று மட்டுமே சொல்லுவாள். வேறெதுவும் சொல்லமாட்டாள்.

இன்று தன் தம்பி மலரிடம் இப்படி நடப்பதும் அவளிடம் அவனின் பழைய குணம் வெளியே காட்டுகிறான் என்று சந்தோஷம் இருந்தாலும் மனதில் வருத்தமே வந்தது.

அவனின் வறுத்தத்தையே அவனின் மனைவி வாய் திறந்து புலம்பினாள்.

"மாமா இது முன்னமே தெரிந்து இருந்தா மலரையே உங்க தம்பிக்கு நிச்சயம் பண்ணி இருக்கலாம்" என்று வறுத்தப்பட்டாள்.

அவளின் முன் ஐஸ்கிரீமை ரசித்து உண்டு விட்டு அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான் சூர்யா.

அவன் சென்றதும் மனதுக்குள் யாகூ... யாகூ.... என்று கூச்சலிட்டு குதித்தாள் பனிமலர்.

அவள் அவனை நெருங்கும் முதல்படியை எடுத்து வைத்து விட்டாள் அல்லவா. எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இரும்பு போன்றவனை இளக வைக்க ஆரம்பித்து விட்டாளே.

இவள் அவனை வழிமறித்து நின்ற போது சூர்யா நிற்காமல் அவளை விலக்கி விட்டு சென்றால் அது அவனின் இயல்பு. ஆனால் இப்போது நின்று அவள் கேட்டதை செய்யக்கூடாது என்றே அவன் ஐஸ்கிரீமை அவளை பார்க்க வைத்து உண்டு சென்றான்.

அவளின் செயலுக்கு எதிர்ப்பாக அவனின் உணர்வை காட்டி சென்றது அவளுக்கு வெற்றி தானே அதை தான் மனதுக்குள் கொண்டாடிக்கொண்டு இருந்தாள்.

அனைத்தும் முடிந்து உறவினர் அனைவரும் சென்று இருக்க இருவரின் குடும்பத்தினர் மட்டுமே அமர்ந்து இருந்தனர்.

சூர்யா தவிர மற்றவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். பெரியவர்கள் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்க

பனிமலர் எழில்நிலா சாருமதி மாலினி தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் காருண்யாவும் அவர்களுடன் இருக்க பனிமலர் அவளை எளிதாக நட்பாக்கிக்கொண்டாள்.

காருண்யாவுக்கும் பனிமலரை பிடித்துவிட அவளுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்.

மாதவன் பெரியவர்கள் இருக்கும் இடம் வந்தவன் பாட்டியிடம் மெல்லிய குரலில் எதையோ சொல்ல பாட்டி

" இன்னைக்கு எந்த மீட்டிங் இருந்தாலும் கேன்சல் பண்ணச்சொல்லு உன் பாஸை நிச்சயம் பண்ணிட்டு நேராக வீட்டுக்கு தான் போகனும்" என்று சொல்லி அனுப்பினார்.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினர். மாப்பிள்ளை வீட்டினரை வழியனுப்பி விட்டு கிளம்ப பெண் வீட்டினர் அனைவரும் வெளியே நின்று இருந்தனர்.

அப்போது மாடியில் இருந்து பாடிகார்ட்ஸ் சூழ இறங்கி வந்து கொண்டு இருந்தான் சூர்யா இப்போது அவன் கண்ணை கூலர்ஸ் மறைத்திருந்தது.

விழியசைக்காமல் அவனை தன் மனதிற்குள் படம் பிடித்துக்கொண்டு இருந்தாள் பனிமலர். முதல் இரண்டு காரில் அவனின் குடும்பத்தினர் ஏறியிருக்க மூன்றாவது காருக்காக காருண்யாவை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தவனின் அருகில் வந்த பனிமலர் "இனியா குட்டி" என்று அருகில் சென்று அவனின் கையில் இருந்த காருண்யாவின் கன்னத்தில் முத்தம் பதித்து "லவ்யூடா" என்றாள். .

காருண்யாவும் பனிமலர் கன்னத்தில் முத்தம் வைத்து "லவ்யூ சித்தி" என்றாள்.

அருகில் இருந்தவனின் வாசத்தை ஆய்ந்து சுவாசித்து தனக்குள் நிரப்பிக்கொண்டு இரண்டடி பின் சென்றாள்.

சூர்யா காருண்யாவை காருக்குள் அமரவைத்து விட்டு எழில்நிலா நின்ற இடத்தை மட்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு காருக்குள் ஏறி அமர்ந்தான்.

கார் மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தவளை கை பிடித்து அழைத்து சென்றான் அகிலேஷ்.

"இன்னும் கூட நீ வளரவே இல்லை சத்துமாவு விட்டா காருண்யா கூடவே போய் விடுவப்போல" என்று கிண்டல் செய்தான்.

அவனின் சத்துமாவு என்ற அழைப்பு அவளின் மனதில் பதியவில்லை. அவளின் எண்ணங்களின் நாயகன் பின்னேயே சென்று கொண்டு இருந்தது. "கூடவே போய் விடுவ" என்பது மட்டும் பதிந்தது.

அத்தான் ஒரு பார்வை பார்த்து இருந்தாக்கூட அவர் பின்னே போய் இருப்பேன்டா என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.

அகிலேஷ் ஆச்சரியமாக பனிமலரை கண்டான் சித்து என்று தந்தை அவளை அழைப்பதை இவன் சத்துமாவு என்று அழைப்பான். அவளும் அகிலேஷை அகல்விளக்கு என்று தான் அழைப்பாள்.

அப்படி மாற்றி மாற்றி அழைக்கும் போது வீட்டில் பெரிய போரே நடக்கும் இப்போது அதுபோல் அவனிடம் சண்டைக்கு வருவாள் என்று பார்த்தாள் அவள் அமைதியாக ஏதோ சிந்தனையில் வந்து கொண்டு இருப்பதை கண்டவன் அவளை நிறுத்தி உலுக்கவும் சுயம் வந்தாள்.

"ஏய் என்னாச்சு அக்கா?..." என்றான் அவளை விட இரண்டு வயது குறைவு பெங்களூரில் டாக்டருக்கு மூன்றாவது வருடம் படித்து கொண்டு இருக்கின்றான் அகிலேஷ்.

"ஒன்னும் இல்லைடா முக்கியமான அசைன்மென்ட் முடிக்கனும் அதை பத்திதான் யோசித்திட்டு இருந்தேன்" என்று கூறி அவனின் விசாரிப்பில் இருந்து தப்பினாள் பனிமலர்.

நேராக ஹாஸ்டல் செல்லுகிறேன் என்றவளை வீட்டுக்கு வந்து இரவு தங்கி நாளைக்கு போ என்றவர்களிடம் பேசிப்பேசி இரவு உணவு உண்ட பிறகு தம்பியுடன் ஹாஸ்டல் வந்து சேர்ந்து இருந்தாள் பனிமலர்.

அனைத்தையும் சொல்லாமல் தோழியிடம் சிலதை மறைத்து கூறினாள். அவளின் கண்ணீர் கதையை சொல்லி தோழியை வறுத்தாமல் தனக்குள் மறைத்து மற்றவைகளை கூறினாள்.

பனிமலர் எழில்நிலாவின் மனநிலையை ஆராய்ந்து அவள் இந்த திருமணம் செய்யமாட்டாள் என்று முடிவு செய்தவள். திருமணத்தை தவிர்த்து வந்தவன் எழில்நிலாவின் புகைப்படம் பார்த்து சம்மதம் கூறியவனின் திருமணத்தை நிறுத்தினாள் என்ன நடக்கும் என்று யோசிக்காமல் போனாள் பனிமலர்.

தொழிலில் சிறு இடையூறு செய்பவர்களையே இருக்கும் இடம் தெரியாமல் அழிப்பவன் தன் வாழ்க்கை துணையாக முடிவு செய்தவளை இழப்பானா?... இல்லை அதற்கு இடையூறாக இருப்பவர்களை இல்லாமல் செய்வானா?... என்று அவனின் மறுபக்கத்தை அறியாமல் அவனுடன் கனவுகளில் காதல் செய்து கொண்டிருந்தாள் பனிமலர்.


"அக்கம் பக்கம் யாருமில்லா...
பூலோகம் வேண்டும்...
அந்திபகல் உன்னருகே...
நான் வாழ வேண்டும்..."


"என் ஆசை எல்லாம் உன்
இருக்கத்திலே...
என் ஆயுள்வரை உன்
அணைப்பினிலே...
வேறென்ன வேண்டும்
உலகத்திலே...
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே... ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்..."

"அக்கம் பக்கம் யாருமில்லா...
பூலோகம் வேண்டும்...
அந்திபகல் உன்னருகே...
நான் வாழ வேண்டும்...



 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 11



அடுத்த மூன்று வாரங்கள் வேகமாக சென்று இருந்தது மலர், தமிழ் இருவருக்கும். முடிக்க வேண்டிய அசைன்மென்ட் முடித்து அடுத்து வந்த மூன்றாவது செமஸ்டர் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வது இடைஇடையே அவர்களின் குறும்புகள் சண்டைகள் எல்லாம் நடந்தது.

அடுத்து பனிமலரின் பாடல் கச்சேரியும் நடக்கத்தான் செய்தது. அதை தாங்கமுடியாமல் தமிழ் எப்போது விடுமுறை வரும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு பனிமலரின் காதல் வளர்ந்து கொண்டு இருந்தது.

தூங்கிட்டு இருப்பவள் திடீரென எழுந்து சூர்யாவுடன் டூயட் பாடுவாள். அதில் அலறியடித்து தமிழ் எழுந்து கொள்வாள். அதன் பிறகு கனவில் நடந்ததை தமிழிடம் கூறி அவளை தூங்கவிடாமல் செய்து கொண்டு இருப்பாள் பனிமலர்.

எப்படியும் எழில்நிலா திருமணத்தை நிறுத்தி விடுவாள் பிறகு தான் சென்று திருமணம் செய்து கொள்கிறேன் என்றால் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று நினைத்து கனவுகளில் சூர்யாவுடன் வாழ ஆரம்பித்தாள் பனிமலர்.

இதனால் நாட்கள் வேகமாக சென்று இருந்தது. தேர்வு முடிந்ததால் கல்லூரி சில நாட்கள் விடுமுறை கிடைக்கவே இருவரும் அவரவர் வீட்டிற்கு செல்ல உடைகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர்.

"அப்பாடி ஒரு வழியாக ஒரு பத்து நாள் இவள் தொல்லை இல்லாமல் நல்லா தூங்கலாம். ஒரு நாள் தவறாமல் 12 மணிக்கு பேய் உலாவும் நேரத்தில் இவளுக்கு அந்த ராட்சசன் கூட டூயட் பாடுற கனவு வருது. அதெப்படி தினமும் ஒரே நேரத்தில் கனவு வரும் ஒரு வேளை அவன் ராட்சசன் என்பதால் 12 மணிக்கு வரானோ?... " என்று புலம்பிக்கொண்டு தமிழ் உடைகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

" என்னடி புலம்பிட்டு இருக்க?..." என்று பனிமலர் கேட்டாள்.

" பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியது என் ரூம்மேட்டாக இருக்கு எப்படா இங்கிருந்து போகப்போறேன் என்று நினைத்திட்டு இருந்தேன். அது இன்னைக்கு நடந்திடுச்சு" என்று சொல்லிக்கொண்டு இருந்தவளின் முன்வந்து இடுப்பில் கை வைத்து முறைத்த பனிமலர்

"யாருடி பைத்தியம்?... " என்றாள்.

" ஏன் உனக்கு தெரியாதா?...."

" ஏய் ஒழுங்கா பதில் சொல்லுடி யாருடி பைத்தியம்?... " என்று மீண்டும் கேட்டாள் பனிமலர்.

" நீ தான்" என்று கூறிவிட்டு தமிழ் தன் பெட்டியில் உடைகளை அடுக்கிக்கொண்டு இருந்தாள்.

அவளின் கையில் இருந்த உடை பிடுங்கி கட்டிலில் போட்ட பனிமலர் தமிழை தன் பக்கமாக திருப்பி

" ஏன்டி காதலிக்கறவங்க உனக்கு பைத்தியமா?" என்றாள்.

"பின்ன இல்லையா நீ கொஞ்ச நாளா எவ்வளவு கிறுக்கு தனம் எல்லாம் பண்ணிட்டு இருக்க திடீரென சிரிக்கிற பாடுற நடுராத்திரியில் அவன் கூட கனவுல டூயட் பாடுற இதெல்லாம் என்னவாம்" என்றாள் தமிழ்.

அதை கேட்ட பனிமலர் புன்னகை செய்ய

" எதுக்குடி சிரிக்கிற?..." என்றாள் தமிழ்.

" உன்னை பார்த்தால் தான் பைத்தியம் போல இருக்குடி காதலிக்கறவங்களுக்கு தான் தெரியும் அந்த பீல் அப்படியே காத்துல பறந்தா எப்படி இருக்கும் உடம்பெல்லாம் லேசான மாதிரி இருக்கும். நம்ப தான் எல்லோரையும் விட சந்தோஷமா இருக்கோம் என்று தோன்றும்."

"வைரமுத்து கவிதையில் சொல்லி இருக்கார்"

"காதலித்து பார்"

"உன்னை சுற்றி ஒளி வட்டம்
தோன்றும்."

"உலகம் அர்த்தப்படும்"

"ராத்திரியின்

நீளம் விளங்கும்."

"உனக்கும் கவிதை வரும்"

"கையெழுத்து

அழகாகும்."

"தபால்காரன்

தெய்வமாவான்"

" உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி
உடையும்"

" கண்ணீரெண்டும் ஒளி
கொள்ளும்"

" காதலித்து பார். "

என்று கவிதை சொல்லியவளின் வாயைமூடினாள் தமிழ்.

" போதும் டி இப்படி உளறுவதை தான் நான் பைத்தியம் சொல்லிட்டு இருக்கேன். அவனும் உன்னை காதலித்தால் ஓகே ஆனால் உன் அக்காவை கல்யாணம் பண்ண சம்மதிச்சவன் எப்படி உன்னை விரும்புவான். ஒரு வேளை உன் அக்காவை அவனுக்கு ரொம்ப பிடிச்சுதான் அவன் கல்யாணத்திற்கு சம்மதித்து இருந்தால் அவன் எப்படி உன்னை கல்யாணம் பண்ணிப்பான்?... " என்று இதுவரை நண்பியின் வாழ்க்கை குறித்து மனதில் இருந்த பயத்தை கூறியிருந்தாள் தமிழ்.

அதை கேட்ட பனிமலர் அமைதியாக கட்டிலில் அமர்ந்து சுவற்றை வெறித்து பார்க்க அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

" ஏய் மலர் அப்படி கண்டிப்பா நடக்கும் சொல்லலை ஆனால் நீ ரொம்ப நம்பிக்கையா இருக்க அது நூற்றில் ஒரு பர்சன்ட் நடக்கலை னா?..."

"நீ இப்படி அதிகமா அவன் மேல் காதலை வளர்த்துக்காத அதுக்கு தான் நான் சொல்லுறேன்."

"ஏற்கனவே நீ படுற கஷ்டம் போதும் டி இனியும் கஷ்டத்தை அதிகபடுத்திக்காத நீ அவன் மேல் பைத்தியமா இருக்கிறதை பார்த்தா எனக்கு பயமாக இருக்குடி."

" உன்னோட காதலுக்கு அவன் தகுதியானவன் இல்லையடி. நீ ஒரு தேவதை உனக்கு அந்த ராட்சசன் வேண்டாம். உனக்குன்னு நல்லவன் வருவான் மலர் உனக்கு இவன் வேண்டாம் அவனை பற்றி நினைக்காமல் உன் நினைவை உன் இலட்சியத்தின் பக்கம் திருப்பு உன் கம்பெனி உன் கைக்கு வரனும் அதுக்கு என்ன பண்ணனுமே அதில் உன் மனசை திருப்பு."

" நீ வீட்டுக்கு போனால் அங்க திருமண ஏற்பாடுகளை பார்த்தா உன் மனசு கஷ்டப்படும் பேசாமல் நீ என் கூட என் ஊருக்கு வந்திடு மலர் உன் டாடி கிட்ட நான் பெர்மிஷன் கேட்கிறேன்" என்று தமிழ் பேசிக்கொண்டு இருந்தவளை இடைமறித்த பனிமலர்

" அப்ப என் சூரியன் எனக்கு கிடைக்கமாட்டானா?... " என்று தமிழை பார்த்து கலங்கிய விழியுடன் கேட்டவளை தன் இடையேடு அனைத்த தமிழ்

" வேண்டாம் டி அவன் உனக்கு, அவன் நல்லவன் இல்லடி, அவன் கூட எப்படி நீ சந்தோஷமாக இருப்ப உன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது அப்படி தாங்குறவனை நான் தேடி கட்டி வைக்கிறேன் மலர். என் போச்சை கேளுடி" என்றாள் தமிழ்.

அதுவரை தமிழ் சொல்வது போல் சூர்யா எழில்நிலாவை விருப்பிகிறானா என்ற எண்ணத்தில் கண்ணீர் விட்டு கொண்டு இருந்த பனிமலர் நண்பி வேறு ஒருவனை கட்டி வைக்கிறேன் என்றதும் தன் மனதில் அவனை தவிர வேறு யாருக்கும் இடமில்லை அவன் கிடைக்கவில்லை என்றால் தானே இல்லை என்று முடிவு எடுத்தது நினைவு வர தன்னால் தன் மனதை மாற்றி கொள்ள முடியாது என்று நண்பியிடம் கூறி அவளை மேலும் வறுத்தக்கூடாது என்று நினைத்து தன்னை திடப்படுத்திக்கொண்டு

"ஏன்டி என் சூரியன் என்னை நல்லா பார்த்துக்க மாட்டான் என்று சொல்லுற என்னை அவனை தவிர வேறு யாரும் நல்லா பார்த்துக்க முடியாது."

"அவனுக்கு நான் எனக்கு அவன் என்று கடவுள் முடிவு பண்ணித்தான் அவனை என் கண்ணில் காட்டினார். எனக்கு நம்பிக்கை இருக்கு அவன் தான் எனக்கு எல்லாம் கண்டிப்பா நடக்கும் நீயும் பார்க்கத்தான் போகிறாய். எனக்காக நீ ஏன்டி இப்படி மனசை போட்டு வறுத்திட்டு இருக்க நான் எல்லாவற்றையும் பார்த்துக்கிறேன்."

" நீ சொன்ன ஒரு பர்சன்ட் கூட இல்லை நூறு பர்சன்ட் நம்பிக்கை இருக்கு அவன் தாலியை என்னை தவிர வேறு யார் கழுத்திலும் கட்ட மாட்டான். அதனால் உன் கவலையை தூக்கி போட்டுட்டு ஊருக்கு போய் உன் வாழ்க்கை பத்தி யோசனை செய்" என்று கூறியவளை

யோசனையாக பார்த்த தமிழை திசை திருப்பும் பொருட்டு " ஏன்டி என்னை பற்றி இவ்வளவு யோசிக்கிற நீ உன்னை பற்றி யோசிக்கவே மாட்டியா?... " என்றாள் பனிமலர்.

" என்னை பற்றி யோசிக்க என்ன இருக்கு படிச்சு முடிச்சுட்டு உன் கூட உன் கம்பெனிக்கு வந்து வேலை செய்யப்போறேன். அப்புறம் கம்பெனியை நல்லா வளர்த்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வைக்கனும்" என்று சொல்லிக்கொண்டு இருந்தவளின் தலையில் குட்டியவள்

" அப்ப கடைசி வரை அவ்வையாரா தான் இருக்கப்போறையா?... கல்யாணம் பண்ணுற ஐடியா இல்லையா உன் பின்னாடி ஒருத்தன் ஐந்து வருஷத்துக்கு மேல் சுத்திட்டு இருக்கானே அவனை என்ன பண்ணப்போறாய்?... " என்றாள்.

" நான் அவனை என் பின்னாடி சுற்று என்று சொல்லலையே அவன் காதல் சொன்ன போது கூட விருப்பம் இல்லை என்று சொல்லிட்டேன் இருந்தும் அவன் என் பின்னாடி சுற்றினாள் நான் அதற்கு பொறுப்பு இல்லை". என்றாள் தமிழ் குரலில் சற்றே கோபம் இருந்தது.

" ஏய் உனக்கு ஏன்டி அவனை பிடிக்கவில்லை அவனும் உன்னை எவ்வளவு லவ் பண்ணுறான் என்று உனக்கு தெரியலையாடி?... அவன் வசதிக்கும் அழகுக்கும் எவ்வளவு பெண்ணுங்க வருது தெரியுமா ஆனால் அவன் உன்னை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று உறுதியாக இருக்கான்."

"ஆன்ட்டி கூட அன்னைக்கு நிச்சயதார்த்ததிற்கு வந்து இருந்தாங்க சூர்யா வயசுத்தான் ஆகாஷ்க்கும் சூர்யா கல்யாணத்திற்கு ஒத்துகிட்டான். உனக்கு பார்க்கவா என்று கேட்டா அவன் கல்யாணம் பண்ணிட்டா நானும் பண்ணிக்கனுமா என்று கேட்குறான். நீ அவன் கிட்ட பேசுடா அவன் யாரையாவது லவ் பண்ணுறானா பெண்ணு வசதி கம்மியா இருந்தால்கூட பரவாயில்லை அவனுக்கு பிடிச்சு இருந்தா போதும் சொல்லு என்று சொல்லுறாங்க நான் என்ன சொல்லுறது."

" அவன் நீ சம்மதித்தால் தான் வீட்டில் சொல்லுவேன் என்கிறான். நீயோ சம்மதம் சொல்லாமல் இருக்க உனக்கு என்னடி பிரச்சினை எப்படியும் உன் வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க அப்படி பண்ணும் போது இவனை கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா?... ஏன் அவனை வேண்டாம் என்று சொல்லுகிறாய்" என்று பனிமலர் கேட்டாள்.

பனிமலரின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் " ஆகாஷ் அம்மாக்கு எப்படி சூர்யாவை தெரியும்?..." என்று கேட்டாள் தமிழ்.

" இரண்டு பேர் வீடும் பக்கத்து பக்கத்து வீடாம்" என்றாள் பனிமலர்.

அடுத்த கேள்வியை கேட்கும் முன் தமிழின் போன் ஒலித்தது எடுத்து பார்க்க அவளின் பெரிய அண்ணன் என்று திரையில் காட்டியது.

ஆன் செய்து பேச அவளின் அண்ணன் கீழே வந்துவிட்டதாக கூறினார்.

" இதே வரேன் அண்ணா" என்று போனை வைத்தவள்

"அண்ணா வந்துட்டார் நான் கிளம்பறேன் எதாவது என்றால் போன் செய் நான் கிளம்பி வரேன் இல்லை நீ என் வீட்டுக்கு வா அதை விட்டுட்டு தனியா எங்கையும் போகாதே" என்று கூறியவள் தன் பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியவள் நின்று திரும்பி "உன் டாடி எத்தனை மணிக்கு வருவார் என்றவள் பின் பேசாமல் என் கூட வா உன்னை விட்டுட்டு நாங்க போறோம்" என்றாள் தமிழ்.

" இல்லை டாடி மம்மி இரண்டு பேரும் வந்திட்டு இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாங்க" என்றாள் பனிமலர்.

சரி என்று தமிழ் கிளம்பினாள் அவள் பின் சொல்லாமல் கட்டிலில் அமர்ந்தாள் பனிமலர். அவளை வழியனுப்ப சென்றாள் திரும்ப அவன் உனக்கு வேண்டாம் என்று ஆரம்பித்துவிடுவாள் என்று பனிமலர் நினைத்தாள் என்றாள்.

தமிழே மீண்டும் ஆகாஷ் பற்றி கேட்பாளோ என்று அவளை அழைக்காமலே சென்று விட்டாள்.

இதுவரை ஒரே எண்ணங்களும் செயல்களிலும் இருந்தவர்களின் நட்புக்கு இடையில் காதல் என்று இருவர் உள்ளே நுழைந்துவிட்டனர்.

இனி இவர்களின் நட்பு நீடிக்குமா?.... இல்லையா?....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 12



பனிமலர் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் சென்று இருந்தது. வீட்டுக்கு வந்தால் பெரும்பாலான பொழுது அவள் மாலினி வீட்டில் தான் இருப்பாள். பாட்டியும் தாயும் கவனிக்கிறேன் என்று அவர்கள் செய்வது இவளுக்கு சில நினைவுகளை நியாபகம் செய்து கொண்டு இருப்பர். அவர்கள் முன் கண்ணீர் விட்டாள் அது இன்னும் அதிக அளவில் பாதிப்பை உண்டு பண்ணும் என்ற காரணத்திற்காகவே அவள் காலையில் தந்தை இருக்கும் வரை தங்கள் வீட்டில் இருப்பவள் பின்னர் மாலினி வீட்டிற்கு சென்று விடுவாள்.


அசோகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் பெரும்பாலும் காலையில் சென்றாள் இரவில் தான் வருவார். மொத்தமாக இடங்களை வாங்கி அதில் மனைகள் போட்டு விற்பனை செய்வார். அதனால் எப்போதும் வேலை வேலை என்று சென்று விடுவார். எழில்நிலாவும்
ஐ டி நிறுவனம் ஒன்றில் மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறாள். தம்பி அகிலேஷ் பெங்களூரில் படித்துக்கொண்டு இருக்கிறான்.

பாட்டி தாயிடம் இருந்து தப்பிக்க இவள் எழுந்ததும் மாலினி வீட்டிற்கு சென்று அவரின் வீட்டில் சமைக்கிறேன் என்று ஒரு வழி செய்வாள். மாலினிக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பதால் பெண்பிள்ளை இல்லாத குறையை இவள் தான் நிவர்த்தி செய்வாள். கோபி, மாலினிக்கு அவர்கள் பிள்ளையை விட இவள் மீது பாசமாக இருப்பர்.


மூன்றாம் நாள் சூர்யாவின் வீட்டில் இருந்து அவனின் தந்தையும் தாயும் வந்து மறுநாள் காஞ்சிபுரம் சென்று புடவை எடுப்பதை பற்றி பேசிச்சென்றனர்.

பனிமலர் சந்தோஷமாக தமிழுக்கு போன் செய்தாள். பெரும்பாலும் வீட்டிற்கு செல்லும் நாட்களில் நண்பிகள் இருவரும் படுக்கைக்கு செல்லும் நேரம் தான் பேசுவர். ஆனால் இன்று மதிய வேளையில் பனிமலர் போன் செய்து இருப்பதை கண்ட தமிழ் போனை ஆன் செய்து காதில் வைக்கும் முன்பே

"ஏய் தமிழ் நாளைக்கு நாங்க கல்யாண பட்டு எடுக்க காஞ்சிபுரம் வரோம்" என்றாள்.

"அதுக்கு என்ன பண்ணணும் நீ வர வழி புல்லா வாழை மரம் தோரணம் கட்டி வைக்கனுமா?... இல்லை போஸ்டர் அடித்து ஒட்டனுமா?... இல்லை நூறடியில் கட்அவுட் வைக்குமா?..." என்றாள் குரலில் கேலியுடன்.

" ஏய் உதைபடுவ எவ்வளவு சந்தோஷமான விசயம் சொன்னா கிண்டல் பண்ணிட்டு இருக்க" என்றாள் பனிமலர்.

" என்னடி சந்தோஷமான விசயம் போன் பண்ணி கல்யாணம் நின்னுப்போச்சி என்று சொல்லுவ என்று பார்த்தால் புடவை எடுக்க வராங்கலாம் அதுக்கு சந்தோஷபடனுமாம்" என்றாள்.

"ஏய் உனக்கு எதுக்குடி இவ்வளவு கோபம் வருது நானே கூலாகத்தானே இருக்கேன் எல்லாம் சரியா தான் நடக்கும். இன்னும் கல்யாணத்திற்கு முப்பத்தைந்து நாள் இருக்கு அதனால் கவலைப்படாமல் நாளைக்கு காஞ்சிபுரம் காலை பத்து மணிக்கு வந்திடு" என்றாள் பனிமலர்.

"அடியேய் உன் அக்காக்கு புடவை எடுக்கப்போறாங்க அதுக்கு எதுக்கு நான்?... " என்றாள் தமிழ்.

" புடவை அக்காக்கு மட்டுமா எடுக்கப்போறாங்க எல்லாருக்கும் எடுக்கப்போறாங்க. இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு" என்றாள் புன்னகை குரலில்

" அதென்ன முக்கியமான விஷயம்" என்றாள் தமிழ்.

" ஏய் என் ஆளு இரண்டு வாரம் லண்டன் போயிட்டு இன்னைக்கு காலையில் தான் வந்தாராம். அவர்கிட்ட புடவை எடுக்கப்போறதை பத்தி சொன்னதும் நானும் வரேன் என்று சொல்லிட்டாராம் அதனால் நாளைக்கு என் ஆளை பார்க்கப்போகிறேன். அப்ப கூட நீ இருந்தால் நல்லா இருக்கும் அதான் உன்னை கூப்பிடுகிறேன்" என்றாள் பனிமலர்.

" நான் வந்தால் அந்த ராட்சசன் கிட்ட உன்னோடு சேர்ந்து நானும் அடியை வாங்க என்னை கூட்டு சேர்க்கிறீயா?... " என்றாள் தமிழ்.

" ஏய் நாளைக்கு காலையில் பத்து மணிக்கு கடையில் இருக்க" என்று கடையின் பெயரை கூறிவிட்டு வைத்து விட்டாள் பனிமலர்.

"இவள் ஏன் தான் இப்படி இருக்காளோ" என்று வாய்விட்டே புலம்பியவள் சூர்யா நாளை புடவை எடுக்க வருவதை பற்றி பனிமலர் கூறியதை சிந்தித்தாள்.

புடவை எடுக்க வரான் என்றாள் அவனுக்கு எழில்நிலாவை பிடித்து இருக்கா?... அப்படி பிடித்ததால் தான் அவனே தன் வருங்கால மனைவிக்கு புடவை எடுக்க வருகிறான்?.... எழில்நிலா கல்யாணத்தை நிறுத்தினாள் இவன் சும்மா இருப்பானா?... எழில்நிலாவை கண்டிப்பாக விட்டு தரமாட்டான்.

அப்ப பனிமலர் நிலைமை என்னாகும் கடவுளே நீ தான் பனிமலரை காப்பாற்றனும். அவள் ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கா அவளை ஏமாற்றாதே அவளால் தாங்க முடியாது. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அவளுக்கு கிடைக்கனும் என்று மனதோடு கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள் தமிழ்.

மறுநாள் பனிமலர் வரும் முன்னே கடை வாசலில் வந்து நின்று இருந்தாள் தமிழ். காஞ்சிபுரத்தில் இருக்கும் மிகப்பெரிய பட்டு ஜவுளி கடை அது சொந்தமாக தறி வைத்து நெய்து விற்பனை செய்யும் கடை. நமக்கு விருப்பமான வகையில் ஆர்டர் கொடுத்தால் செய்து தருவார்கள். இந்த கடையுடனும் பிஸ்னஸ் தொடர்பு இருப்பதால் சூர்யபிரகாஷ் தான் இந்த கடை பெயரை சொல்லி இருந்தான்.

பனிமலர் வீட்டில் இருந்து இரண்டு கார்களும் சூர்யாவின் வீட்டில் இருந்து இரண்டு கார்களும் கடையின் முன் வந்து நிற்க அனைவரும் இறங்கி கடையின் உள்ளே செல்ல தமிழை கண்ட பனிமலர் ஓடிவந்து அணைத்துக்கொண்டாள்.

அனைவரும் அவர்களை பார்ப்பதை கண்ட தமிழ்

"ஏய் விடுடி எல்லாரும் நம்பளைத்தான் பார்க்கறாங்க" என்றாள் தமிழ்.

"பார்த்தா என்ன என் பிரண்டை தானே கட்டிப்பிடிச்சேன்" என்று அவளின் தோளில் கை போட்டு அழைத்து சென்றாள்.

"எங்கடி அந்த ராட்சசன் வருவான் சொன்ன காணோம்?..." என்று கேட்டாள்.

"ஆபிஸ் வேலை இருக்காம் கொஞ்ச நேரம் கழித்து வருவாராம் என்று அவங்க பாட்டி சொன்னாங்க" என்று பேசிக்கொண்டே உள்ளே சென்றனர்.

கடை முதலாளியே வந்து அவர்களை வரவேற்று அழைத்து சென்றார். அவர்கள் அருகில் சென்றதும் தமிழ் பனிமலர் தாய் தந்தை முதலில் நலம் விசாரித்து விட்டு எழில்நிலா மாலினி இருவரிடமும் விசாரித்து கொண்டு இருந்தாள்.

சூர்யாவின் குடும்பத்தினர் தமிழை பார்ப்பதை பார்த்த ஊர்மிளா இவள் தமிழ்ச்செல்வி பனிமலர் பிரண்ட் என்று அறிமுகம் செய்ய தமிழ் எழுந்து அனைவருக்கும் வணக்கம் சொன்னாள்.

அனைவருக்கும் பழச்சாறு கொடுக்க அதை குடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்த போது தன் கம்பீர நடையுடன் சூர்யபிரகாஷ் இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.

உள்ளுணர்வு உறுத்த சட்டென்று திருப்பி பார்த்த பனிமலரின் கண்கள் விரிந்தன. பெரும்பாலும் அவனை அவள் கோர்ட் சூட் அணிந்து தான் பார்த்து இருக்கிறாள். இப்படி கேஷுவலாக டார்க் ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் உடலை இறுக்கி பிடித்த ஒயிட் கலர் காலர் இல்லாத டீசர்ட் காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து எப்போதும் போல் கண்ணில் கூலர்ஸ் அணிந்து நடந்து வந்தவன் காற்றினால் முன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை கைகளை உயர்த்தி கோதிக்கொண்டே வந்தவனை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

பேசிக்கொண்டு இருந்தவள் திடீரென பேச்சை நிறுத்தவும் நண்பியை திரும்பி பார்த்த தமிழ் அவளின் பார்வை எங்கோ இருப்பதை கண்டவள் அவளும் திரும்பி பார்க்க ஒரு கணம் திகைத்து தான் போனாள் தமிழ்.

சில வினாடிகளில் தெளிந்தவள் அழகா இருந்தா அவன் ராட்சசன் இல்லை என்று சொல்லி விட முடியுமா என்று நினைத்தவள் பனிமலரை முதுகில் தட்டிவிட்டு காதோரம் வந்து "போதும் டி நீ விடுற ஜொள்ளில் கடை அடித்துக்கொண்டு போயிடப்போகுது" என்றாள்.

நண்பியை திரும்பிக்கூட பார்க்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் பனிமலர்.

அதற்குள் அவன் அவர்கள் இருக்கும் இடம் வரவும் கடை ஓனர் வேகமாக வரவேற்றார். அவரிடம் சிறிது பேசிவிட்டு தன் பாட்டி இருக்கைக்கு அருகில் வந்தவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அமர்ந்தான்.

அசோகன், ஊர்மிளா எழுந்து வந்து நலம் விசாரிக்க இவனும் எழுந்து இரண்டு வார்த்தை ஆம் இல்லை என்பதுபோல் பேசிவிட்டு அமர்ந்தவன் பார்வை பனிமலர் இருந்த பக்கம் படிந்தது.

பாட்டியின் அருகில் வந்த போது கூலர்ஸ்சை கழட்டி இருந்தான். இப்போது பனிமலரை பார்த்தவன் அவளின் அருகில் இருந்த தமிழை முறைத்தான்.

அதை கண்ட தமிழ் ஆத்தாடி இவன் என்ன என்னை இப்படி முறைக்கிறான். ஒரு வேளை அன்னைக்கு இடிச்சதை இன்னும் மறக்கலையோ என்று நினைத்தவள் பனிமலரின் காதோரம் சென்று

"ஏன்டி அவன் என்னை முறைக்கிறான்?..." என்றாள் தமிழ்.

"ஏன் முறைக்கிறான் என்று கேட்டு விட்டு வரலாம் வா என்று அவளின் கையை பிடித்தாள் பனிமலர்.

அதை தட்டி விட்டவள் " அவன் கிட்ட அடிவாங்கி கொடுக்காமல் விடமாட்ட போல" என்றவள் தான் அமர்ந்து இருந்த நாற்காலியோடு மாலினி அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

கடைக்காரர்கள் புடவையை எடுத்து காட்ட அனைவரும் புடவைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர். பனிமலர் பார்வை மட்டும் அவனை பார்த்துக்கொண்டு இருந்தது. இப்போது கண்ணில் கூலர்ஸ்சை அணிந்து இருந்தான் சூர்யா.

சிறிது நேரத்தில் கடை ஒனர் வந்து "சார் வாங்க" என்றதும் பாட்டியிடம்

"பாட்டி நான் சொன்னது போல் எல்லாருக்கும் எடுத்துடுங்க நான் நிலாவை கூட்டிட்டு போய் கல்யாண சாரி பார்க்கிறேன்" என்றான்.

அவரும் சரி என்று கூறிவிட்டு எழில்நிலாவை சூர்யாவுடன் சொல்லுமாறு கூறினார்.

எழில்நிலாவும் தாய் தந்தையிடம் தலையசைத்து விட்டு பனிமலரையும் தமிழையும் அழைத்தாள். பனிமலர் உடனே எழுந்து கொள்ள தமிழ் தயங்கினாள். பனிமலர் அவளின் கையை பிடித்து இழுத்து "வாடி" என்று அழைத்து சென்றாள்.

சிறிது தொலைவு சென்றவன் திரும்பி எழில்நிலா வருகிறாளா என்று பார்க்க எழில்நிலா உடன் பனிமலர் தமிழ் வருவதை கண்டு ஏன் என்று கேட்கும் முன் "இவங்க நல்லா செலக்ட் பண்ணுவாங்க" என்றாள் எழில்நிலா.

அதற்கு எதுவும் சொல்லாமல் சென்று அங்கிருந்த லிப்டிற்குள் நுழைய மூன்று பெண்களும் நுழைய லிப்ட் பணியாள் ஐந்தாம் தளத்து பட்டனை அழுத்தினான்.

ஐந்தாம் மாடி வந்தவர்கள் அங்கு கடை முதலாளியும் சில ஊழியர்களும் இவர்களை வரவேற்றனர்.

மூன்று பெண்களின் கண்களும் விரிந்தன. விலையுயர்ந்த பட்டு புடவைகள் அந்த இடம் முழுவதும் ஜொலித்தன. அதன் பளப்பளப்பை வைத்தே அந்த புடவைகள் தரம் அறிந்தனர் பனிமலர், தமிழ் .

புடவைகள் ஒவ்வொன்றாக விரித்து அந்த சேலை பற்றிய விவரங்களை பணிப்பெண்கள் விவரிக்க அதனை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் காட்டிய புடவைகள் அனைத்தும் அழகாக இருக்க எதை எடுப்பது எதை விடுவது என்று புரியாமல் குழம்பினர்.

அதை கண்ட சூர்யா எழில்நிலாவிடம் "இவங்க தான் உனக்கு செலக்ட் பண்ணுறவங்களா?..." என்று கூறியவன் அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அவனே புடவைகளை பார்க்க ஆரம்பித்தான்.


அங்கிருந்த புடவைகள் எதுவும் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 13



"வேறு காட்டுங்க" என்று கூறியவனுக்கு மேலும் காட்டிய எதுவும் பிடிக்காமல் போக மீண்டும் " வேறு காட்டுங்க" என்றவனுக்கு அந்த பணிப்பெண்

"சார் எல்லா டிசைனும் காட்டிட்டோம் உங்களுக்கு எப்படி வேணும் என்று சொன்னால் அது மாதிரி ரெடி பண்ணி கொடுப்போம்" என்றாள்.

சிறிது யோசித்தவன் "யாருகிட்ட கொடுக்கனும்" என்று கேட்டான்.

அங்கு இருந்த சிறு அறை காட்டி "அங்க நீங்க சொல்லுறதை டிசைன் செய்து காட்டு வாங்க" என்று கூறிவிட்டு

" வாங்க சார் நான் கூட்டிட்டு போறேன்" என்று கூறி அழைத்து சென்றாள் பணிப்பெண்.

அவனுடன் எழுந்த பெண்களை இங்கேயே இருங்க என்று கூறி விட்டு சென்றான்.

அவன் சென்றதும் "ஏன்டி இவ்வளவு புடவையில் ஒன்று கூடவா அவனுக்கு பிடிக்கலை எவ்வளவு சூப்பரா இருக்கு எதை எடுக்கிறது எதை வேணாம் என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லாமே நல்லா இருக்கு" என்றாள் தமிழ்.


பனிமலர் முகம் எதோ சிந்தனையில் இருந்ததால் பதில் சொல்லாமல் அமர்ந்து இருந்தாள். பனிமலர் மனம் எதை நினைக்கிறது என்று தமிழ் உணர்ந்தாள்.

இதுக்குத்தான் சொன்னேன் அவன் மேல் காதலை வளர்க்காதே என்று அவன் வருங்கால மனைவிக்கு இப்படி பார்த்து பார்த்து புடவை எடுக்கிறான் என்றாள் கண்டிப்பாக அவன் எழில்நிலாவை விரும்பி தான் திருமணத்திற்கு சம்மதித்து இருக்கான் என்று தமிழின் மனம் சிந்தித்தது.

பனிமலரை திசை திருப்ப அவளின் கை பிடித்து எழுப்பியவள் "வா கீழே போகலாம்" என்றாள். பனிமலரும் அவளுடன் செல்ல எழில்நிலாவிடம்

"அக்கா நீங்க சார் கூட வாங்க நாங்க கீழே போறோம்" என்று கூறிவிட்டு சென்றாள்.

நேராக லிப்டில் வந்தவர்கள் தன் குடும்பத்தினர் இருக்கும் இடம் சொல்லாமல் வேறு தளத்திற்கு சென்று அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றனர் பனிமலர் கண்கள் கலங்கின.

"ஏய் இப்ப எதுக்குடி கலங்குற ஆரம்பத்தில் இருந்தே நான் இதைத்தான் சொல்லிட்டு இருந்தேன். அவன் உன் அக்காக்கு முடிவு பண்ணவன் வீணா ஆசையை வளர்க்காதே என்று கேட்டியா இப்ப உங்கார்ந்திட்டு அழுதுட்டு இருக்க அங்க அவன் பொண்டாட்டிக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கிறான். இனி காதல் கீதல் என்று அவனை பத்தி பேசினால் அவ்வளவு தான் உன் வீட்டில் இருக்கிறவங்க கிட்ட பேசவேண்டி வரும்."

" ச்சே... என்று சளித்தவள் இத பார்க்கத்தான் என்னை கட்டாயப்படுத்தி வரச்சொன்னாயா" என்று பேசிக்கொண்டு இருந்தாள் தமிழ்.

பனிமலர் அமைதியாக சென்று முகத்தை நன்றாகக்கழுவி துடைத்தவள் " இப்ப என்னடி நடந்தது புடவை தானே எடுக்க வந்து இருக்கோம் என்னவோ தாலியே கட்டின மாதிரி குதிக்கிற" என்று கூறிவிட்டு வெளியேறினாள் பனிமலர்.

இப்போது ஆஆவென நின்று இருந்தாள் தமிழ்.

வெளியே சென்ற பனிமலர் திரும்பி பார்க்க நண்பி இல்லாததை கண்டு மீண்டும் ரெஸ்ட் ரூம் கதவை திறந்து வந்தவள் நண்பியின் தலையில் ஒரு குட்டு வைத்து கை பிடித்து இழுத்து சென்றாள்.

குடும்பத்தினர் இருக்கும் இடம் சென்றதும் திருமணத்திற்கு கட்டிக்கொள்ள பனிமலரை புடவை எடுத்துக்கொள் என்று தந்தை கூறியதும் அங்கிருந்த வேறு பகுதிக்கு சென்று பனிமலர், தமிழ் இருவரும் புடவைகளை பார்த்துக்கொண்டு இருந்தபோது எழில்நிலா, சூர்யா வந்தனர்.

சூர்யா ஒர் இடத்தில் அமர்ந்து போனை பார்க்க ஆரம்பிக்க எழில்நிலா இவர்கள் உடன் இணைந்து கொண்டாள். எழில்நிலா சில புடவைகளை எடுத்து தன் தங்கைக்கு வைத்து காட்ட பணிப்பெண்ணிடம் சொல்ல அவரும் ஒவ்வொரு புடவையாக வைத்து காட்டினாள். எல்லாமே அவளுக்கு பாந்தமாக பொருந்தியது. எதை எடுப்பது என்று பனிமலர் குழம்பினாள். அவள் வெளியே இயல்பாக இருந்தாலும் உள்ளே மனம் ஏதேதோ சிந்தனையில் இருக்க அவளால் புடவையை தேர்வு செய்ய முடியவில்லை.

கடைசியாக தமிழ் இரண்டு புடவைகளை தேர்ந்தெடுத்து பனிமலரருக்குகொடுத்தவள் தானும் இரண்டு புடவைகளை எடுத்தாள்.

அனைவருக்கும் புடவை எடுத்து முடிய மாலை ஆனது இடையில் சென்று உணவு உண்டு விட்டு வந்து இருந்தனர். திருமணப்புடவைகள் ஆர்டர் கொடுத்து விட்டதால் மற்றவர்களுக்கு எடுத்த அனைத்துக்கும் சூர்யா பில் போட சென்றான்.

பனிமலரை அழைத்துக்கொண்டு தமிழ் பில் போடும் இடம் சென்றவள் அவளின் இரண்டு புடவைக்கும் பனிமலரின் இரண்டு புடவைக்கும் தனியாக பில் போடச்சொன்னாள்.

அந்த பில் கவுண்டரில் இருந்த பெண் " சார் எல்லாத்துக்கும் பே பண்ணிட்டார் மேடம்" என்றாள்.

"இல்லை அந்த நான்கு சாரிக்கு தனியாக பில் போடுங்க நாங்க அவர் பேமலி இல்லை" என்றாள் தமிழ்.

அந்த பெண் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க அந்த நேரம்

"இங்க என்ன பிரச்சினை பண்ணிட்டு இருக்கிங்க?... " என்று அதிகாரக்குரலில் கேட்டுக்கொண்டு வந்தான் சூர்யா.

பனிமலர், தமிழ் இருவரும் அமைதியாக இருக்க அந்த பில் கவுண்டரில் இருந்த பெண் "சார் உங்க பில் கூட தெரியாமல் இவங்க பில்லும் சேர்த்து போட்டுட்டேன்" என்றாள் பயத்துடன்.

" அதுக்கு என்ன?... " என்றான்.

"இப்ப இவங்க புடவைக்கு தனியாக பில் போடச்சொல்லுறாங்க உங்க பேமலி கூட தான் இவங்க வந்ததால் இவங்களும் உங்க பேமலி என்று மொத்தமாக பில் போட்டுட்டேன் சார்" என்றாள் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை வலியுறுத்த.

"இவங்க என் பேமலி இல்லை என்று யார் சொன்னாங்க?... " என்று சூர்யா கேட்க அப்பெண் தமிழை காட்ட

சூர்யா தமிழின் அருகில் வந்து "என்ன வாங்கின அடி மறந்து பேச்சா வந்ததில் இருந்து ஓவரா பண்ணுற" என்றான்.

"சார் நான் ஒன்னும் ஓவரா பண்ணல நாங்க எடுத்த புடவைக்கு பில் போட வந்து இருக்கோம்" என்றாள் தைரியமாக அவனை பார்த்து.

"உன் புடவைக்கு பில் போட்டா ஓகே, ஏன் அவள் புடவைக்கு நீ பில் போடுற அதான் அவளின் அப்பா இருக்கார் இல்லையா?... " என்றான் சூர்யா.

"இந்த புடவை என் பிரண்டுக்காக நான் எடுத்தது அதை நான் தான் பே பண்ணனும்" என்றாள் தமிழ்.

"அவளுக்கு நீ ஒன்னும் எடுத்து தரவேண்டியது இல்லை நான் பே பண்ணிட்டேன் அவள் பிரண்ட் என்பதால் உனக்கும் பே பண்ணிட்டேன்" என்றான் சூர்யா.

"முன்னபின்ன தெரியாதவங்க கிட்ட இருந்து நாங்க எந்த பொருளும் வாங்குறது இல்லை சார்" என்று கூறியவள் தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து பில் கவுண்டர் டேபிளில் வைத்து விட்டு பனிமலரை அழைத்துக்கொண்டு குடும்பத்தினர் இருக்கும் இடம் சென்றாள் தமிழ்.

சூர்யாவின் குரல்" ஏய்" என்று கோபமாக அழைத்த போதும் இருவரும் திரும்பி பார்க்கவில்லை.

"ஏன்டி அத்தானுக்கு என் மேல் கோபம் இருந்தா ஓகே ஆனால் என் மேல் உள்ள கோபத்தை விட அதிகமாக உன் மேல் தான் கோபம் இருப்பது போல் தெரியுது உங்களுக்குள் எனக்கு தெரியாமல் வேற பிரச்சனை இருக்க?..." என்றாள் பனிமலர்.

"ஏய் இன்னொரு முறை அத்தான் என்று என்கிட்ட சொல்லாதே அவனுக்கு எனக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை. இனி அவன் இருக்கிற இடத்திற்கு என்னை கூப்பிட்டால் உன்னை கொலை பண்ணிடுவேன் எவ்வளவு திமிர் இவன் ஓசியில் எடுத்து கொடுத்தா ஈஈ.... என்று இளிச்சுட்டு வாங்கிப்போம் என்று நினைச்சான் போல" என்று அவனை திட்டிக்கொண்டு இருந்தாள் தமிழ்.

பனிமலர் தான் குழம்பிப்போனாள் தமிழின் கோபத்திற்கு காரணம் எங்கே என் வாழ்க்கை இவனால் துன்பப்படுமோ என்று தான் அவன் மீது கோபத்தை காட்டுகிறாள் என்று தெரிந்தது. ஆனால் அவன் எதுக்கு தமிழை பார்க்கும் போது எல்லாம் கோபப்படுகிறான் என்று பனிமலருக்கு விளங்கவில்லை.

ஒரு வழியாக அனைவரும் கிளம்பினர் தமிழை போகும் வழியில் அவர்கள் ஊரில் விட்டு விட்டு சென்றனர். இப்போதும் சூர்யா அவர்களுடன் சொல்லாமல் அங்கே வேலை இருப்பதாக சொல்லி அனுப்பி விட்டு மீண்டும் கடைக்குள் சென்றான்.

அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் சென்னையில் நகைக்கடைக்கு சென்றனர். பனிமலரால் தவிர்க்க முடியாமல் அவளும் சென்று இருந்தாள்.

காஞ்சிபுரம் சென்று வந்ததில் இருந்து அவள் சிந்தனையிலேயே இருந்தாள். அடிக்கடி எழில்நிலாவை நோட்டமிட்டவளுக்கு ஏமாற்றமே அவள் எப்போதும் போல் தான் இருந்தாள்.

அன்று நகை எடுக்க கிளம்ப பனிமலரும் கிளம்பி இருந்தாள். முதலில் தாலியை இருவீட்டாரும் சேர்ந்து எடுத்த பிறகு மற்ற நகைகளை எடுத்தனர்.

சூர்யாவும் வந்திருந்தான் பனிமலர் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எழில்நிலாவை அழைத்துக்கொண்டு வைர நகைகள் பகுதிக்கு சூர்யா சென்ற போது பனிமலரை உடன் அழைத்தாள் எழில்நிலா. பனிமலர் வரவில்லை என்ற போதும் வற்புறுத்தி அழைத்து சென்றாள் எழில்நிலா.

முதலில் அமைதியாக இருந்த பனிமலர் அங்கு இருந்த அழகான டிசைன்களில் கவரப்பட்டு அதனை பார்க்க ஆரம்பித்தாள்.

எழில்நிலா எடுக்கும் நகைகளை தங்கையின் கழுத்தில் வைத்து பார்க்க

" நிலா நீ உன் கழுத்தில் வச்சு பார்த்தா தானே தெரியும்" என்றபோது

"இதை நான் போட்டு பார்க்கறதை விட உனக்கு போட்டு பார்த்தாள் இன்னும் நல்லா பார்க்கலாம்" என்று கூறி அனைத்தையும் இவளுக்கு வைத்து பார்த்தாள்.

இது எதையும் கண்டு கொள்ளாமல் சூர்யா புதிய டிசைன்கள் அடங்கிய புத்தகத்தை புரட்டிக்கொண்டு தனக்கு பிடித்த டிசைன்களை தேர்வு செய்து கொண்டு இருந்தான்.

அனைத்தும் முடித்து வீடு வர அன்றும் மாலை ஆனது. அடுத்தடுத்த தினங்கள் பெரும்பாலும் ஷாப்பிங்கில் கழிந்து இருந்தது. குலதெய்வ வழிபாடு திருமண அழைப்பிதழ் அடித்து கொடுக்கவும் ஆரம்பித்து இருந்தனர்.

இந்த பரபரப்பில் பனிமலரை கவனிக்க மறந்து இருந்தனர் வீட்டினர். விடுமுறை முடிந்து மீண்டும் ஹாஸ்டல் வந்தனர் நண்பிகள் இருவரும்.

பனிமலரின் வாடியமுகம் தமிழுக்கு வேதனையை தந்தது. பனிமலரும் தன்னை இயல்பாக காட்டிக்கொண்டு இருக்க முயன்றாள் முடியவில்லை. எப்போதும் எதோ யோசனையோடு இருந்தாள் பனிமலர்.

தமிழ் அவளை திசை திருப்ப எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. மற்ற தோழிகள் விசாரிக்கும் அளவுக்கு அவளின் உடல் மெலிந்து முகத்தில் இருக்கும் குறும்புத்தனம் அனைத்து இல்லாமல் போயின.

கல்லூரியில் அது இறுதி செமஸ்டர் என்பதால் கல்லூரி சென்று படிக்க தேவையில்லை. சில கம்பெனிகள் முகவரி கொடுத்து அங்கு சென்று மூன்று மாதங்கள் வேலை செய்யும் ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டது. அதில் இவர்களுக்கு வந்த கம்பெனி பெயர்கள் சூர்யாவின் பிரகாஷ் கார்மெண்ட்ஸ், ஆகாஷின் PMC கார்மெண்ட்ஸ் இன்னும் இரண்டு பெரிய கார்மெண்ட்ஸ் பெயர்கள் இருந்தன.

ஹாஸ்டல் அறையில் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தாள் பனிமலர். அவளுக்கு தெரியும் கண்டிப்பாக சூர்யாவின் கார்மெண்ட்ஸ்சில் அவளுக்கு இடம் கிடைக்காது என்று ஏற்கனவே அவன் தான் சொல்லி இருக்கானே நீயெல்லாம் என் கம்பெனி வாசற்படியில் கூட கால் வைக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறினானே என்று நினைத்தவளின் மனம் சென்ற ஆண்டு கல்லூரி நடத்திய விழாவிற்கு சென்றது.

 
Status
Not open for further replies.
Top