ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer


அத்தியாயம் 40

ஆரியன் சிறையில் இருப்பதை நினைத்து வாடிய நீலகண்டன் இப்போதெல்லாம் சரியாக அலுவலகத்திற்கு செல்வதில்லை. தொழிலை முழுமையாக வேதா தான் பார்த்துக் கொண்டார்.

இப்போதெல்லாம் வேதா இல்லாமல் அலுவலகத்தில் சிறு தூசி கூட அசையாது என்ற நிலைதான். வேலையாளாக அலுவலகத்துக்குள் நுழைந்தவன் இப்போது பங்குதாரராகவும் மாறினான்.

ஆரியன் கைது செய்யப்பட்டவுடன் அய்யாகண்ணு வீட்டில் இருந்த தனது மகள் கயல் விழியை தன்னோடு அழைத்து வந்து விட்டாள் சாருலதா.

மதுப்பழக்கம் அதிகம் இல்லாத நீலகண்டன் இப்போதெல்லாம் எப்போதும் மது பாட்டலும் கையுமாகவே இருந்தார். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாருலதா "எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டாள்.

நாற்காலியில் அமர்ந்தபடியே அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவர் எதுவும் பேசவில்லை அமைதியாக மீண்டும் மதுபானத்தை அருந்த தொடங்கியிருந்தார். தனது பேச்சுக்கு மரியாதை இல்லாமல் அவர் செய்யும் செயலில் சினம் கொண்ட சாருலதா அவர் கையில் இருந்த மது குவலையை தட்டி விட்டாள். அதில் கோபமடைந்த நீலகண்டன் அவளை அடிக்க கை ஓங்கினார். ஆனால் அவளது கூர்மையான பார்வையில் நீண்ட கை அப்படியே பின் வாங்கியது.

"எதுக்கு நிறுத்திட்டீங்க? அடிங்க, அடிங்க மிஸ்டர் நீலகண்டன். தைரியம் இருந்தா அடிச்சு பாருங்க, நீங்க அடிச்சா அமைதியா வாங்கிட்டு போயிடுவேன்னு நினைக்காதீங்க, உங்களுக்கு நல்லா தெரியும் நான் மத்த பொண்ணுங்களை மாதிரி கிடையாது" என்று அவள் நிமிர்ந்து பேச, சலித்துக் கொண்ட நீலகண்டன் அங்கிருந்து செல்ல பார்த்தார்.

"எங்க போறீங்க? உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்"

"உண்மைதான் நீ மத்த பொண்ணுங்கள மாதிரி கிடையாது என் பிரச்சனையே அது தான்" என்று திரும்பி நின்றபடி அவர் பேச, அவரது கரத்தை பிடித்து இழுத்து தன் பக்கம் திருப்பிய சாருலதா

"என்ன சொல்லணும்னாலும் நேரடியா சொல்லுங்க" என்றாள்..

அவளது கரத்தை ஆக்ரோஷமாக உதறி விட்டவர் "என்ன சொல்ல சொல்ற? ஹான் என்ன சொல்ல சொல்லுற? நம்ம பையன் இப்ப ஜெயில்ல இருக்கான் அந்த கவலை உனக்கு வேணா இல்லாம இருக்கலாம் ஆனா என்னால உன்னை மாதிரி சாதாரணமா இருக்க முடியாது. அவன் என் பையன், என் ரத்தம் எனக்கு வலிக்கத்தான் செய்யும்.. அதை மறக்க தான் இந்த கருமத்தை குடிச்சிட்டு இருக்கேன், இதுக்கெல்லாம் உனக்கு விளக்கம் கொடுக்கணுங்கிற அவசியம் எனக்கு கிடையாது. என்ன சொன்ன அடிச்சா அமைதியா இருக்க மாட்ட! ம்ம்ம் சரி தான். உன்னை அடிக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்லைம்மா தாயே... இது என் வீடு!! இங்க நான் இப்படித்தான் இருப்பேன். உனக்கு விருப்பம் இருந்தா இங்க இருக்கலாம் இல்லையா தாராளமா நீ இங்க இருந்து கிளம்பலாம், நான் உன்னை தடுக்க மாட்டேன்" என்று அவர் சொல்ல கண்கள் சிவக்க அவரையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த சாருலதா உடனே தன் அறைக்குச் சென்று தனது உடமைகளை எல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தாள். அவளது செயல் புரிந்ததும், விட்டத்தை பார்த்து பெருமூச்சு விட்ட நீலகண்டன் அப்படியே ஓய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தார்.

தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் சாருலதாவை பார்த்தபடியே அமைதியாக இருந்தார் நீலகண்டன். அவள் வாசல் தாண்டி வெளியே செல்லவும், கயல்விழி வீட்டுக்குள் வரவும் நேரம் சரியாக இருந்தது.

வாசலில் மகளை கண்டவுடன் "கயல் வந்துட்டியா? சீக்கிரம் ட்ரெஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணிட்டு வா, இங்கேயிருந்து கிளம்பணும்" என்று சொன்னாள்.

"எங்க மம்மி?" என்று குழந்தை புரியாமல் கேட்டது.

"உன் பாட்டி வீட்டுக்கு போறோம்"

"பெங்களூருல இருக்காங்களே அவங்க வீட்டுக்கா?"

"ப்ச் ஆமாம் டி சீக்கிரம் கிளம்பிவா?"

"எதுக்கு திடீர்னு கிளம்புறோம் மம்மி என்ன ஆச்சு?"

"சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்காத விழி, கிளம்பி வர சொன்னா வர வேண்டியது தானே? எதுக்கு இவ்ளோ கேள்வி கேட்டுட்டு இருக்க? போ" என்றவர் கயலின் முதுகில் கைவைத்து வலுக்கட்டாயமாக அவளை உள்ளே பிடித்து தள்ளினாள்.

அதனை கண்டா நீலகண்டன் "என் பொண்ணை எதுக்குடி கூப்பிடுற? அவள் எங்கேயும் வர மாட்டா, போகணும்னா நீ போ, என் பொண்ணு என்கூட தான் இருப்பாள்" என்று வாதம் புரிந்தார்.

அதற்கு சாருவும் "அவள் எனக்கும் பொண்ணுதான்.. அவள் என்கூட வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று பதில் வாதம் புரிந்தாள்.

ஆனால் இவர்கள் இருவரது சண்டையையும் பார்க்கும் மனநிலையில் இல்லாத கயல்விழி அமைதியாக தன் அறை நோக்கிச் சென்று விட்டாள்.

இங்கு இத்தனை பிரச்சனை நடந்து கொண்டிருக்க அதனை பற்றி எல்லாம் கவலையே இல்லை என்பது போல முழு போதையில் தன் அறையில் சுருண்டு கிடந்தான் குணா.

வாசலில் கணவன் மனைவியின் சண்டை இன்னும் ஓயவில்லை.

"மரியாதையா கயலை என் கூட அனுப்பி வையுங்க" என்று ஆக்ரோஷமாக கத்தினாள் சாருலதா.

"முடியாது" என்று அவளுக்கு சற்றும் குறையாத வேகத்தில் பதில் சொன்னார் நீலகண்டன்.

"ஏன் முடியாது? உங்க பையனை போலவே இவள் வாழ்க்கையும் சீரழிஞ்சா தான் உங்களுக்கு சந்தோஷமா"

"என்னடி பேசுற நீ? ஒரு அம்மா மாதிரியா பேசுற?"

"நான் அவளோட அம்மாவா பேச போயி தான், நீங்க இப்படி தைரியமா நின்னு என்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க"

"கொஞ்சமும் உனக்கு ஆரியன் மேல அக்கறை இல்லையா லதா? ஏதோ மூணாவது மனுஷனை பத்தி பேசுற மாதிரி பேசுற?"

"என் அக்கறையையும், பாசத்தையும் எல்லார் கிட்டயும் வெளிச்சம் போட்டு காட்டணுங்குற அவசியம் எனக்கு இல்லை, உங்க பையன் தப்பு பண்ணான் அதுக்கான தண்டனையை இப்போ அனுபவிச்சிட்டு இருக்கான் அவ்ளோ தான்"

"எப்படி உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது? தப்பே பண்ணி இருந்தாலும் அவன் நம்ம பிள்ளை, அவனை காப்பாத்த வேண்டியது நம்ம கடமை லதா"

"அப்படி ஒரு கடமை எனக்கு கிடையாது... தப்பு பண்ணவன் யாராயிருந்தாலும் தண்டனை அனுபவிக்கணும். நம்ம பையன் அப்படிங்குறதால பண்ண தப்பு சரியாகிடுமா? இல்லை போன உயிர் தான் திரும்பி வந்திடுமா?"

"எதிர் தரப்பு வக்கீல் மாதிரி பேசாமல் நம்ம பையனுக்கு அம்மா மாதிரி யோசிச்சு பாரு அப்போதான் உனக்கு என் வலி புரியும்"

"என்னால அப்படி எல்லாம் யோசிக்க முடியாது. உங்க வலி உங்களுக்கு பெருசு, என் பையன் இப்படி கொலைகாரணா ஆகிட்டானேங்குற என்னோட வலி எனக்கு பெருசு, வெளியே தலை காட்ட முடியல, என்னோட ஜுனியர்ஸ் எல்லாம் என்னை முன்னாடி விட்டு பின்னாடி பேசுறாங்க, அந்த இடத்தில் அவமானப்பட்டு கூனி குறுகி நிற்கிற எனக்கு தான் உங்களை விட வலி அதிகம்" என்று பேசுபவளை கண்டு நீலகண்டனுக்கு எரிச்சலாக இருந்தது.

இப்படி ஒரு தாயை அவன் கற்பனையிலும் சிந்தித்து இருக்க மாட்டான். தன் மனைவி நீதி, நியாயம் என்று பேசுபவள் என்பது இவனுக்கு தெரியும், ஆனால் மகன் விஷயத்தில் கூடவா இப்படி இருப்பாள் என்று நினைக்கும் போது வேதனையாக இருந்தது.

இவர்களது சண்டை தடுப்பணை இல்லாத நதி போல நீண்டு கொண்டே இருந்தது, ஒருகட்டத்தில் தன் மகளையும் எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்பி இருந்தாள் சாருலதா.

அங்கு தன் அறைக்குள் வந்த கயல் விழி கதறி அழுது கொண்டிருந்தாள்.

எப்போதும் "அண்ணா, அண்ணா" என்று ஆரியன் பின்னே சுற்றி திரிந்த இந்த பட்டாம் பூச்சியின் வண்ணங்கள் எல்லாம் கலைந்து போயிருந்தது.

"ஆரியன் கொலை செய்திருக்க மாட்டான்" என்று நம்பிய இரு ஜீவனில் இவளும் ஒருவள். மற்றொருவன் விவேக்.

'ஆனால் அவன் ஏன் தன் மீது அக்கறை இல்லாமல் விட்டு சென்றான்' என்ற ஆதங்கமே அவளை இன்று இவ்வாறு அழ வைத்தது.

'இன்று அவன் மட்டும் என்னோடு இருந்திருந்தால் தாய், தந்தை என யாரையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாக இருந்திருப்பேனே' என்று யோசித்தவள் கலங்கி நின்றாள்.

அந்நொடி அவளது அலைபேசியில் 'டிங்' என்று ஒரு சத்தம். கண்ணீரை துடைத்துக் கொண்டு அதனை எடுத்து பார்த்தாள். ஒரு அலைபேசி எண்ணில் இருந்து இவளது எண்ணிற்கு இவளின் குளியல் வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. அதனை பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இவளது எண்ணிற்கு அந்த குளியல் அறை புகைப்படத்தை ஒருவர் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அந்த எண் அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு எண் என்பதால் எதுவும் செய்யமுடியாத நிலையில் அமைதியாக இருந்தாள். அதனை யாரிடமும் அவளால் பகிர்ந்து கொள்ள கூட முடியவில்லை.

வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஒரு காரணம் என்றால், ஆர்யனை வைத்து எந்நேரமும் தாயும், தகப்பனும் கீரியும் பாம்புமாக சண்டையிட்டு கொள்வது இன்னொரு காரணம்.

அந்த நாள் முதல் தொடர்ந்து தவறான புகைப்படங்களும் குருஞ்செய்திகளும் கயலுக்கு வந்து கொண்டே இருந்தது. மேலும் ஆபாச வீடியோக்களை அனுப்பி "இது எப்படி இருக்கு? உனக்கு சம்மதமா?" என்பது போல எல்லாம் குருஞ்செய்தி வந்து கொண்டிருந்தது.

ஒருகட்டத்தில் பொருக்கமுடியாமல் அவள் அந்த நபரின் எண்ணை பிளாக் செய்தாள். அடுத்தநொடி அந்த நபரின் மற்றுமொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பு வந்ததும் அவளது சப்த நாடிகளும் அடங்கியதை போல உணர்ந்தவள் அழைப்பை ஏற்க மறுத்தாள்.

கல்லூரி முடிந்ததும் அவள் வெளியே வர.. அங்கு அவளை அழைத்து செல்ல குணாவின் கார் நின்று கொண்டிருந்தது.

அதனை பார்த்தவள் உடனே அங்கிருந்து செல்ல பார்த்தாள். அவள் செல்லும் முன் அவளை அங்கு பார்த்துவிட்ட குணா "விழி செல்லம்" என்று அழைக்க, இவளுக்கு முகம் எல்லாம் வியர்த்து போனது.

காரணம் இவளுக்கு வந்த அத்தனை குறுஞ்செய்திகளும் குணாவின் தனிப்பட்ட அலைபேசி எண்ணில் இருந்து வந்ததாகும். அந்த எண் அவளது குடும்பத்தில் உள்ளவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

"விழி செல்லம் அங்க எங்க போற? நம்ம கார் இங்க இருக்கு" என்றவன் அவளது கரத்தை பிடித்து காருக்குள் இழுக்க, அவளோ செய்வதறியாது துடித்து நின்றாள்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 41

"இங்க ஒரு வேலை விஷயமா வந்தேன், காலேஜ் முடியுற டைம் தானே அதான் உன்னை அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன்" என்றவன் இன்னும் அவளது கைகளை இறுக பற்றி இருக்க,

"விடுங்க" என்று கூறி சுற்றுப்புறம் பற்றி யோசிக்காமல் வேக வேகமாக அங்கிருந்து கிளம்ப பார்த்தவள் எதிரில் வந்த வாகனத்தை கவனிக்க தவறினாள். ஆனால் குணா அதனை கவனித்து விட்டான். விரைந்து வந்து கயலை தன் பக்கம் இழுத்தவன், அவளை தன் நெஞ்சோடு மறைத்து இறுக பற்றி இருந்தான்.

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் எதிரில் வந்த வாகனம் கயல்விழியை அடித்து தூக்கி இருக்கும்... இதை எதையும் கருத்தில் கொள்ளாத கயல்விழி சட்டென அவனிடமிருந்து விலகி அவனை அருவருப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகில் நின்ற ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

"விழி, என்ன ஆச்சு உனக்கு?" என்று கேட்டபடி குணா அங்கு நின்றுகொண்டிருக்க, கயலோ ஆட்டோவை எடுக்க சொன்னாள்.

ஆட்டோ அங்கிருந்து செல்ல, அதனை பார்த்தபடி நின்ற குணா "பிரெண்ட்ஸ் கூட வேற ஏதாவது கமிட்மெண்ட்ல இருப்பா நினைக்கிறேன், அதான் நம்ம வந்ததும் கோபப்படுறா போல" என்று சிந்தித்தபடி அங்கிருந்து சென்றான்.

நேற்று நடந்த இந்த நிகழ்வை நினைத்து பார்த்து தான் கண் கலங்கி அமர்ந்திருந்தாள் கயல்.

தன் தந்தை அவரது தம்பியின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார் என்பதை அறிந்த விழிக்கு இதனை யாரிடமும் சொல்ல வழி இல்லாமல் போனது. அவளுக்கென இருப்பது ஒரே ஒரு தோழி மட்டும் தான் ஆனால் அவளிடத்தில் கூட இந்த விஷயத்தை சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

இன்று முழுவதும் குணாவின் எண்ணில் இருந்து தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என்றதும் கயல்விழி சற்று நிம்மதியாக இருந்தாள்.

அடுத்தநாள் வழக்கம் போல அவள் கல்லூரிக்கு கிளம்பிக் செல்ல, எதிரில் வந்தான் குணசேகரன்.

அவனை பார்த்தும் பாராததை போல அவள் அங்கிருந்து செல்ல பார்க்க, "செல்லம் கிளம்பிட்டியா? சித்தப்பா வேணா உன்னை டிராப் பண்ணட்டுமா?" என்று கேட்டான்.
அதற்கு அவளோ அவனது முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றாள். அதனை மேல் தளத்தில் இருந்து இதழ் வளைத்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் வேதாசலம்.

நடக்கும் அனைத்தும் அவன் மேற்பார்வையில் அல்லவா நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அந்த பூரிப்பில் அவன் முகம் மலர்ந்தது.

கயல்விழி கல்லூரிக்கு வந்தாள். அவளது வலது பக்கத்தில் குழுவாக நின்று என். சி. சி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிறிந்தனர் சில மாணவ மாணவிகள், அதில் அவளது தோழி நிவேதனாவும் அடக்கம். கல்லூரிக்கு வந்த நாள் முதல் இவளுக்காக இருக்கும் ஒரே தோழி அவள் மட்டும் தான்.

அங்கு அவளை கண்டத்தும் கயலின் இதழ்கள் விரிந்து கொண்டன... ஆனால் அவளோ பயிற்சியின் நிலையால் இதழ்களை பிரிக்காமல் நின்றாள் ஆனால் கண்கள் சிரித்தது. அதனை புரிந்து கொண்ட விழியும் அமைதியாக அவர்களை கடந்து சென்றாள்.

அன்று ப்ரொபசர் இல்லாத நேரம் கயல்விழி வகுப்பில் அமர்ந்திருக்க, அவளது சக மாணவர்கள் போனில் எதையோ பார்த்து விட்டு அப்படியே திருப்பி கயல்விழியை பார்த்தனர்.

முதல் முறை அவள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... பின்னர் ஒவ்வொரு நபராக அவளை பார்த்தபடியே தங்களுக்குள் கிசு கிசுவென பேசிக் கொண்டிருந்தனர்.

அத்தோடு நிற்காமல் இவளால் நிராகரிப்பப்பட்ட மாணவன் ஒருவன் "கயல், யூ சோ ஹாட்" என்று வகுப்பில் உள்ள அனைவர் முன்பும் கமெண்ட் செய்தான்.

"வாட்?" என்று அவள் முழிக்க, அவனோ அவளுக்கு நேராகவே அந்த வீடியோவை காட்டி அவள் கண் முன்னாலே அதனை ரசித்து சக மாணவர்களுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டு இன்புற்றான்.

குணாவின் எண்ணில் இருந்து இவளுக்கு அனுப்பபட்ட வீடியோ தான் அது. அன்று தான் மட்டும் பார்த்த தனது வீடியோவை இன்று வகுப்பில் உள்ள அனைவரும் பார்க்கும் சூழ்நிலை வந்ததை எண்ணி உள்ளம் நடுங்கியது.

பக்கத்தில் இருக்கும் பெண்ணோ அந்த வீடியோவை எடுத்து பார்த்து விட்டு, "கயல், நம்ம பிரெண்ட்ஸ் க்ரூப்பில தான் இந்த வீடியோ சேர் ஆகியிருக்கு? ஆனால் இது யார் நம்பர்னு தெரியலடி," என்றதும், நடுங்கிய விரல்களுடன் அலைபேசியை வாங்கி அந்த எண்ணை கண்டதும் விழி விளிம்பில் ஒரு துளி கண்ணீர் வெளிப்பட்டது. அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வகுப்பை விட்டு நுழைவாயில் நோக்கி வெளியே ஓடி சென்றாள். அவள் செல்வதை என்.சி.சி ட்ரைனிங்கில் இருக்கும் அவளது தோழி நிவேதனா பார்த்து விட்டாள்.

"இவள் எதுக்கு அழுதுகிட்டே இவ்ளோ வேகமா வெளியே போறாள்?" என்று யோசித்தவள் பனிஷ்மெண்ட் கிடைக்கும் என தெரிந்தும் "எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று கூறிவிட்டு விறுவிறுவென கயல் பின்னால் ஓடினாள்.

நான்கு நாட்களாக வகுப்பிற்கு செல்லாமல், பயிற்சியில் இருந்ததனால் தான் கயலின் முகம்வாட்டத்தை நிவேதனா கவனிக்காமல் போயிருந்தாள். அவளுடன் இருக்க நேரம் கிடைத்திருந்தால் நிச்சயம் அவளது பிரச்சனைகளுக்கு முடிவு சொல்லி இருந்திருப்பாள்.

நிவேதனா வருவதற்குள் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றிருந்தாள் கயல். உடனே மீண்டும் கல்லூரிக்குள் வந்த நிவேதனா வேறு வழியில் அவளது வகுப்பு நோக்கி சென்றாள். வந்த வழியில் சென்றால் தனது பயிற்சியாளர் கண்ணில் சிக்கி விடுவோம் என்று மாற்று பாதையில் தன் வகுப்பை வந்தடைந்தாள்.

வகுப்பில் இன்னும் மாணவர்கள் எல்லோரும் கயலின் வீடியோவை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பற்றி ஒரு அளவுக்கு இவளால் புரிந்து கொள்ள முடிந்தது. உடனே அருகில் இருந்த ஒரு மாணவியின் போனை வாங்கி தங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்து இருந்த அந்த வீடியோவை பார்த்தாள்.

இதனை பேசு பொருளாக மாற்றி கமெண்ட் செய்து கொண்டிருந்த அந்த மாணவர்களை பார்த்தாள், இதில் வருத்தம் எதுவெனில் அதில் சில மாணவிகளும் இருந்தனர்.

"கயல் மாதிரி ஒரு கேர்ள் ப்ரெண்ட் எனக்கு கிடைச்சா போதும்டா செம்ம வாழ்க்கை தான்" என்று ஒருவன் சொல்ல, மற்றும் ஒருவனோ "இவள் எல்லாம் ஜஸ்ட் ஒன் நயிட் ஸ்டாண்ட், மத்தபடி கூடவே வச்சிட்டு சுத்துர அளவுக்கு எல்லாம் வோர்த் இல்லை" என்று சொல்ல, அதனை கேட்டு அனைவரும் "ஓ யா" என்று கரத்தை தட்டி கொண்டனர். அதனை பார்த்து கோவம் கொண்ட நிவேதனா "ஸ்டாப் இட்" என்று கத்தினாள்.

உடனே தோழி ஒருவள் "பிரச்சனை வேண்டாம்டி" என்று தடுக்க போக...

"ஸ்டே அசைடு" stay aside என்றபடி அந்த மாணவர்கள் முன்பு வந்து நின்றவள் "நீங்க எல்லாம் மனுசனாடா? உன் கூட படிக்கிற ஒரு பெண்ணு, அவள் குளிக்கிற வீடியோவை எவனோ எடுத்து குரூப்ல போட்டிருக்கான்... அது என்ன ஏதுன்னு விசாரிக்காமல் கொஞ்சமும் மனித தன்மை இல்லாமல் அவள் சதையை பத்தியும், அவள் கேரக்டர் பத்தியும் கொச்சையா பேசிட்டு இருக்கீங்க? உங்க அம்மாவோட வீடியோ வந்தாலும் இப்படி தான் உடம்பை பத்தி கமெண்ட் பண்ணுவிங்களா?" என்று அவள் கேட்க, அதில் கோவமான கயலால் நிராகரிக்கபட்ட அந்த மாணவன் இவளை அடிக்க வரவும் அவனது கரத்தை பிடித்து முறுக்கி இருந்தாள் நிவேதனா.

"இந்த கை நீட்டுற வேலை எல்லாம் வேற யாருக்கிட்டாயாவது வச்சிக்க, என்கிட்ட வச்சிக்கிட்ட, ஆறு மாசத்துக்கு கையையே தூக்க முடியாமல் பண்ணிடுவேன், ச்சே உங்களை எல்லாம் பார்த்தாலே அருவருப்பா இருக்கு" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

கயலுக்கு போன் செய்வதற்காக தன் போனை எடுக்க பயிற்சி மேற்கொண்ட இடத்திற்கு மீண்டும் வந்தாள் நிவேதனா. பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில் அனைவரது பையும் என்.சி.சி அறையில் தான் இருக்கும். அந்த அறைக்குள் சென்றவள்
யார் கண்ணிலும் படாமல் குவித்து வைக்கபட்டிருந்த பைகளின் நடுவே தன் பையை கண்டு பிடித்து எடுத்து கொண்டு வெளியே வரவும் அதனை அவளது பயிற்சி மேற்பார்வையாளர் பார்த்துவிட்டார்... உடனே அவருக்கு ஒரு சல்யூட்டை போட்டு விட்டு, அவர் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே அங்கிருந்து குடுகுடுவென ஓடி வந்து விட்டாள்.

பையில் இருந்த கைபேசியை எடுத்து கயலின் எண்ணிற்கு அழைத்தாள். கயல் அழைப்பை ஏற்கவில்லை... "இந்த மாதிரி நேரத்தில அவள் எந்த விதமான தவறான முடிவும் எடுத்து விட கூடாது" என்பதற்காக நேராக விழியின் இல்லம் நோக்கி பயணமானாள்.

***

கயல்விழி அவளது வீட்டிற்கு தான் வந்திருந்தாள். வீட்டில் ஒருவரும் இல்லை, ஆனால் "இது தான் நடக்கும்" என்று தெரிந்ததை போல வேதாசலம் சரியாக அப்போது தான் அந்த வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

அதீத வலியிலும், அவமானத்திலும் கூனி குறுகி யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் தலை குனிந்து சென்ற நீலகண்டனின் மகளை நிம்மதியாக பார்த்தபடி நின்றார்.

என் மகளுக்கு எப்படி வலித்திருக்கும், அது போல உன் மகளின் கண்ணீரை துடைக்க வழி இல்லாமல் நீ கதற வேண்டும் அதை கண்குளிர நான் பார்க்கவேண்டும். அது தான் நீ எனக்கு செய்த துரோகத்துக்கு நான் உனக்கு கொடுக்கும் பரிசு என்று தீரா பழி உணர்வில் நின்று கொண்டிருந்தார் வேதாசலம்.

குணாவின் அலைபேசியை ஹேக் செய்து அவனது எண்ணில் இருந்து கயலுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும், கயலின் குளியல் அறையில் கேமரா பிக்ஸ் செய்து வீடியோ எடுத்ததும் வேதாசலம் தான். இன்று அவளது வகுப்பு நண்பர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததும் இவர் தான்.

தற்போது குணாவின் இன்னொரு கைபேசி இவரிடம் தான் உள்ளது. அந்த கைபேசியை யாரும் அறியா வண்ணம் குணாவின் அறையில் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு திரும்பி வந்தார். குணா அதிகமாக போதையிலேயே வலம் வந்து கொண்டிருக்க இதனை எல்லாம் கவனிக்க முடியாமல் போனது.

செய்த தப்பில் இருந்து எல்லாம் தப்பித்தவன் செய்யாத தப்பில் மாட்டிக் கொண்டு பலியாக போகிறான்.

'தற்கொலை' என்ற முடிவை தான் உறுதியாக எடுக்க போகிறாள் கயல் என்று தெறிந்தும் அமைதியாக தான் இருந்தார் வேதாசலம்.

கயலின் அறையில் உள்ள கேமரா வழியே அங்கு நடப்பதை தன் அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

நிவேதனா கயல்விழியின் எண்ணிற்கு தொடர்ந்து அழைத்தாள். ஆனால் கயல் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை... கல்லூரியில் நடந்த விஷயமே அவள் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது.

தோழி தொடர்ந்து அவள் எண்ணிற்கு அழைக்க, கயல்விழியோ பயத்திலும் பதட்டத்திலும் அவமானத்திலும் தத்தளித்தவள் தடுமாறி அந்த அழைப்பை ஏற்க மறுத்தாள்.

'இதனை எப்படி கையாள்வதென்றே' அந்த இளம்பெண்ணிற்கு தெரியவில்லை. அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தவள் தன் கை நரம்புகளை அறுத்துக் கொண்டாள். அதனை பார்த்த பின்பும் அமைதியாக தான் இருந்தார் வேதாசலம்

தான் கொண்ட வலி ஒருவனை இரக்கமில்லா மிருகமாக்குமா?

ஆம் நிச்சயமாக மாற்றும்... எந்த வித சலனமுமின்றி உயிரோடு இருக்கும் இரையை பிச்சு திண்ணும் ஐனாவாக மாறி நின்றான் வேதா.
 

Mythili MP

Well-known member
Wonderland writer


அத்தியாயம் 42

கை நரம்பு அறுப்பட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக காயத்தின் வழியே ரத்தம் வெளிவந்து கொண்டிருந்தது, அதனை பார்த்த பின்பும் அமைதியாக தான் இருத்தார் வேதாசலம்.

நேரம் போக போக அவளது உடல் வெட்டுபட்டது போல துடிதுடிக்க ஆரம்பித்தது. வலிப்பு வந்து விட்டது. அவளது துடிப்பை கேமரா வழியே பார்த்துக் கொண்டிருந்த வேதாவுக்கு திடீரென மனம் படபடக்க ஆரம்பித்தது.

வலிப்பு வந்து அவள் துடிப்பதை பார்த்தவருக்கு தன் மகனின் நினைவு கண்முன் வந்து போனது. அவர் அவனை தத்து கொடுப்பதற்கு முன்பாக ஒரு முறை அக்குழந்தைக்கு வலிப்பு வந்திருக்கிறது. அப்போது அவனை காக்க எண்ணி இந்திராவும் இவரும் பட்ட வேதனை சொல்லி மாளாது, அன்று அவர் இதயம் உணர்ந்த அதே படப்படப்பை இன்றும் உணர்ந்தார்.

அதனை நினைத்து பார்த்தவர் என்ன யோசித்தாரோ? நேராக கயல்விழியின் அறை நோக்கி செல்ல ஆயத்தமானார். உடலெங்கும் படபடவென வந்தது. 'பெரிய தவறு செய்து விட்டோம்' என்ற எண்ணம் அவர் சிந்தையை மெல்ல மெல்ல ஆட்கொள்ள ஆரம்பித்தது.

இவர் கயலின் அறை நோக்கி செல்லவும், நிவேதனா அவ்வீட்டிற்கு வரவும் நேரம் சரியாக இருந்தது.

உள்ளே வந்த கயலின் தோழி நிவேதனா தனக்கு எதிரில் சென்று கொண்டிருந்த வேதாவை அழைத்தாள் "அங்கிள்" என்ற அவளது அழைப்பில் சட்டென திரும்பி பார்த்தவருக்கு தூக்கி வாரி போட்டது.

'யார் அது? ஒரு வேளை நீலகண்டன் வீட்டுக்கு வந்து விட்டானோ?' என்ற பதட்டத்துடன் அவர் திருப்பி பார்க்க, அங்கு நிவேதனா நின்று கொண்டிருந்தாள்.

அவளை கண்டு புருவம் சுருக்கியவர் "யாருமா நீ என்ன வேணும்?" என்று பதட்டத்தை மறைந்து கொண்டு நிதானமாக கேட்டார்.

"அங்கிள் நான் கயலோட பிரெண்டு, அவள் வீட்டுல இருக்காளா? அவள் கிட்ட நான் கொஞ்சம் பேசணும்" என்றவள் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

தானாக முன் சென்று கயலை காப்பாற்றுவதை காட்டிலும் இவள் சென்று பார்த்த பின்பு காப்பாற்றுவதே சரியானதாக இருக்கும் என்று சடுதியில் யோசித்தவர் உடனே கயலின் அறையை அவளுக்கு காண்பித்து கொடுத்தார்.

"ஓகே அங்கிள் நீங்க அவளுக்கு என்ன வேணும்? சித்தப்பாவா? ஏன் கேட்குறேன்னா அவள் அப்பாவை எனக்கு தெரியும், பட் சித்தப்பாவை பத்தி சொல்லி இருக்கா ஆனால் பார்த்தது இல்லை அதான் கேட்டேன்"

"இல்லம்மா நான் அவள் அப்பாவோட பிரெண்டு"

"ஓ சரி அங்கிள்" என்று பேசியபடியே மேல் அறைக்கு வந்தவர்கள் கயலின் அறை கதவை தட்டினர், ஆனால் அவள் திறக்கவில்லை. எப்படி திறப்பாள்? அவளது உயிர் தான் அங்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டு இருக்கிறதே!

இரண்டு மூன்று முறை தட்டியும் அவள் கதவை திறக்கவில்லை என்றதும் பதட்டமடைந்த நிவேதனா வேகவேகமாக அவள் பெயரை சொல்லி அழைக்க ஆரம்பித்தாள்.

அவள் ஏன் பதட்டப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்டது போல இவரும் "ஏன்மா என்ன ஆச்சு?" என்று கேட்க,

"காலேஜ்ல ஒரு பிரச்சனை ஆகிடுச்சு அங்கிள், அதான் இப்போ நான் இவளை பார்க்க வந்தேன். இவள் வீட்டுகுள்ள தானே இருக்கா? அப்புறம் ஏன் கதவை திறக்க மாட்டிங்குறாள்? எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அங்கிள், ஏதாவது பண்ணி டோரை திறக்க முடியுமான்னு பார்க்குறீங்களா? இல்லன்னா இவள் அம்மாப்பாவுக்கு போன் பண்ணுறீங்களா? நான் போன் பண்ணி பார்த்தேன் இவள் அம்மா கால் எடுக்க மாட்டிங்குறாங்க, அங்கிளோட போனுக்கு காலே போகலை" என்றவள் கதவை போட்டு இடித்தாள்.

வேதாவுக்குமே இந்த சூழலில் என்ன செய்வது என்று புரியவில்லை... அப்படியே சிலை போல உறைந்து நின்றார். அதனை பார்த்த நிவேதனா "என்ன அங்கிள் இப்படி சும்மா நின்னுட்டு இருக்கீங்கா? ஏதாவது பண்ணுங்க?" என்றாள்.

திடீரென அவருக்கு எதுவுமே தோணவில்லை, "வீட்டுல சர்வேன்ட் யாரும் இல்லையா?" என்று கேட்டாள் நிவேதனா.

"இல்லம்மா தீபாவளி வர்றதால ஊருக்கு போயிட்டாங்க, சமையல்காரர் மட்டும் தான் இருக்காரு, அவரும் இப்போ வீட்டுல இல்லை, காய்கறி வாங்க போயிருப்பாருன்னு நினைக்கிறேன்" உதவிக்கு ஆட்கள் அதிகமாக இருந்தால் கதவை உடைத்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கேட்டாள்.

"ப்ச் உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை, இவள் ரூமில பால்கனி இருக்குல்ல?" என்று கேட்டாள்.

"ம்ம்ம், இருக்குமா?"

"ஏணி ஏதாவது இருக்குமா?"

"ஹான் வீட்டுக்கு பின்னாடி இருக்கும்"

"அப்போ உடனே என்கூட வாங்க, அந்த ஏணியை எடுத்துட்டு வருவோம்" என்றவள் வேதாவின் உதவியுடன் ஏணியை எடுத்து வந்து கயலின் பால்கனி பக்கத்தில் போட்டாள். பின்னர் அதன் வழியே மேலே ஏறியவள் திறந்து கிடந்த பால்கனி கதவு வழியே கயலின் அறைக்குள் நுழைந்தாள்.

அறையை சுற்றிலும் உதிரம் பரவி கிடந்தது... மேலும் வலிப்பின் காரணமாக வாயில் நுரை வடிந்த வண்ணம் மயங்கி கிடந்தாள் கயல். அந்த கோலத்தில் அவளை கண்டதும் மிரட்டு போன நிவேதனாவின் கால்கள் நகர மறுத்தது.

அதற்க்குள் அந்த பக்கம் வழியே வீட்டுக்குள் வந்த வேதாசலம் கதவை தட்டி "என்ன ஆச்சுமா? அவள் நல்லா இருக்காளா?" என்று சத்தமிட்டார், அவரது சத்தத்தில் நிதானமடைந்தவள் முன்னே சென்று அவருக்காக கதவை திறந்து விட்டாள்.

அறைக்குள் வந்ததும் "ஐயோ கயல்" என்று அவர் துடித்து கதறி நாடகம் நடத்த, பாவம் அதனை உண்மையென நம்பிய நிவேதனா கண்ணீர் விட்டு நின்றாள்.

"தங்கம் உனக்கு என்ன ஆச்சுடா? யார் உன்னை இப்படி பண்ணது? யார் இதுக்கு எல்லாம் காரணம்? எதுவா இருந்தாலும் எங்க யார் கிட்டயாவது சொல்லி இருக்கலாமே" என்று அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவருக்கு ஆறுதல் கூறும் நோக்கத்தில் தனக்கு தெரிந்தவரை கல்லூரியில் நடந்த அனைத்தையும் கூறினாள் நிவேதனா. அதனை கேட்டதும் "எந்த நாய் இந்த வேலையை பார்த்தது? அவனுங்களை எல்லாம் சும்மாவே விட கூடாது"

"அங்கிள் அதை எல்லாம் அப்புறம் பார்க்கலாம், முதலில் இவளை உடனே ஹாஸ்ப்பிட்டல் கூப்பிட்டு போகணும், உங்களுக்கு கார் ட்ரைவ் பண்ண தெரியுமா?" என்று கேட்டாள் நிவேதனா.

வேதாவுக்கு வண்டி ஓட்ட தெரியும், இருப்பினும் கயலின் இந்த ரத்தம் படிந்த கோலத்தை ஒரு தந்தையாக நீலகண்டன் பார்த்தேயாக வேண்டும் என்ற இவரது ஆசை அவளது கேள்விக்கு மறுப்பாக அசைந்தது.

"உங்களுக்கும் டிரைவ் பண்ண தெறியாதா? எனக்கும் கார் ட்ரைவ் பண்ண தெரியாது, இப்போ என்ன பண்ணுறது?" என்று கேட்டாள்.

"நான் கயலோட அப்பாவுக்கு தகவல் கொடுத்துட்டேன்மா அவர் இப்போ வந்திடுவாரு"

"அவர் வரவரைக்கும் நம்ம இப்படி பார்த்துட்டே இருக்க முடியாதுல்ல அங்கிள்? நேரம் ஆக ஆக இவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு, பக்கத்தில யாராவது இருந்தா ஹெல்புக்கு கூப்பிடுங்க அங்கிள், உடனே ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்" என்று சொன்னவளின் கண்கள் கூட கலங்கியது, ஆனால் அந்த கல் நெஞ்சகாரனோ அசையாமல் அப்படியே நின்றான்.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம் ஆம்புலன்சுக்கு போன் பண்ணுறேன், பக்கத்துல உதவிக்கு யாரையும் அழைச்சிட்டு வரேன், அப்படி இப்படி என்று பாசாங்கு செய்தார் வேதாசலம், அதற்குள் நீலகண்டன் வீடு வந்து சேர்ந்து விட்டார்.

"என் பொண்ணுக்கு என்ன ஆச்சு வேதா?" என்று அவனது சட்டையை இயலாமையுடன் பிடித்து இழுத்தார் நீலகண்டன்.

"அது" என்று வேதா தயங்கினார்.

அதற்குள் மேலிருந்த நிவேதனா "அங்கிள் சீக்கிரம் வாங்க, கயலுக்கு மூச்சு வந்த மாதிரியே இல்லை" என்று கத்தினாள். அதனை கேட்ட நீலகண்டன், "என்ன ஆச்சு? என் கயலுக்கு" என்றவர் ஒரு கணம் ஆடி போனார்.

"கயலு" என்று கத்திக் கொண்டு அவளது அறை நோக்கி சென்றவர், அவளை தூக்கி மடியில் போட்டுக் கொண்டு கதறினார்.

"ஐயோ என் குழந்தைக்கு என்ன ஆச்சு? பாப்பா அப்பாவை பாருடா, உனக்கு என்ன ஆச்சுடா எதுக்காக இப்படி பண்ண?" என்றவர் அழுது துடிக்க,

"அங்கிள் ப்ளீஸ் கயலை உடனே ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போங்க, அவள் கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கா" என்று சொன்னதும் தான் நிதர்சனம் நெத்தி பொட்டில் அறையை உடனே அவளை தூக்கிக் கொண்டுபோயி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் கயலுக்கு சிகிக்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.. கேஸ் விஷயமாக ஒரு மீட்டிங்கில் இருந்த சாருலதா வெளியே வந்தவுடன் நிவேதனாவின் அழைப்புகளை பார்த்து அவளுக்கு திருப்பி அழைத்தாள்.

அழைப்பை ஏற்ற நிவேதனா நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். அதனை கேட்டவுடன் பிளைட் பிடித்து இங்கு வந்து சேர்ந்தாள் சாருலதா.

"என்ன பண்ணீங்க என் பொண்ணை? நான் கிளம்பி ரெண்டு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள என் பொண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டீங்க?"என்றவள் நீலகண்டனின் சட்டையை பிடித்து உலுக்க, அவரோ எந்த வித அசைவுமின்றி உயிர் கொண்ட சடலமாக அமர்ந்திருந்தார்.

இரவானது இன்னும் சிகிக்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மருத்துவர்கள் அளிக்கப்படும் சிகிக்சையை அவள் உடல் ஏற்க மறுத்தது.

"ரொம்ப நேரம் ஆகிடுச்சு, நீ வீட்டுக்கு கிளம்புமா" என்று நிவேதனாவை பார்த்து சொன்னார் வேதா, இங்கிருந்து செல்ல அவளுக்கு மனமில்லை இருந்தும் அவள் வீட்டில் இருந்து தொடர்ந்து அழைப்பு வரவும் இவளும் அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை வந்தது.

"ஆண்டி நான் காலையில வரேன், அவள் கண்ணு முழிச்சதும் எனக்கு கால் பண்ணுங்க" என்று லதாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் நிவேதா.

சிகிச்சை முடிந்து கயல் கண்விழிக்க மூன்று நாட்கள் ஆனது. அந்த மூன்று நாட்களும் ஒரு வேளை உணவு கூட ஒழுங்காக உண்ணாமல் பரிதவித்து துடித்த நீலகண்டனை மன நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார் வேதாசலம்.

கண் விழித்த கயல் நிவேதனாவை தவிர யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

"அப்பா கிட்ட பேசுடா?" என்று நீலகண்டன் கேட்க, அவர் முகத்தை கூட இவள் பார்க்கவில்லை.

"கொஞ்சம் தள்ளுங்க நான் என் பொண்ணுகிட்ட பேசுறேன்" என்ற லதா அவள் அருகில் வந்து நின்று "கயல், என்ன பிரச்சனை உனக்கு? எதுக்கு இப்படி பண்ண? ஏதோ வீடியோவை பத்தி நிவேதா சொன்னா? அது யார் எடுத்தது?" என்று அடுக்கடுக்காக வக்கீலாக கேள்விகளை கேட்டாள்.

"தயவு செய்து எல்லாரும் வெளியே போங்க" என்று கத்திய கயலுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அங்கு நின்று அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என எண்ணி நீலகண்டன் வெளியே வந்தார்.

நிவேதனாவிடம் கூட கயல் எதையும் சொல்ல வில்லை, அவளும் அதை பற்றி கேட்டு இவளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

அடுத்தநாள் கயலை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இரண்டு நாட்கள் யாரிடமும் அவள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சரியாக உணவும் எடுத்துக்கொள்ளவில்லை, தன் அறைக்குள் யாரையும் அனுமதிக்கவும் இல்லை... சாருலதா ஒரிரண்டு முறை பொறுமையாக பேசி பார்த்தார், ஆனால் கயல் எந்த பதிலும் சொல்லவில்லை என்றவுடன் கோவம் கொண்டு தன் கணவனிடம் மல்லுகட்ட ஆரம்பித்து விட்டார்.

'நீ என்னை என்ன வேணாலும் பேசிக்கோ' என்பது போல நீலகண்டனும் அமைதியாக இருக்க வெறுத்து போனாள் லதா, பின்னர் அவளுக்கும் முக்கியமான வழங்கு ஒன்றை வாதாடவேண்டிய நிலை வந்துவிட அதற்காக இங்கிருந்து மீண்டும் பெங்களூர் சென்று விட்டாள்.

இரண்டு நாள் கயல் தன் அறையிலேயே அடைந்து கிடக்க, மூன்றாவது நாள் மனம் பொறுக்காமல் தன் மகளிடம் வந்து நின்ற நீலகண்டன் "இப்படி இருக்காத கயல்? என்கிட்ட பேசு? ஏற்கனவே உன் அண்ணனை காப்பாத்த முடியாத பாவியாகிட்டேன், இப்போ உன்னையும் இழக்க அப்பாவுக்கு தைரியம் இல்லடா, உனக்கு என்ன பிரச்சனைன்னு அப்பாகிட்ட சொல்லு, எனக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா, அப்பா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிச்சிடுடா, என்கிட்ட பேசுடா" என்றவர் கயலின் காலில் விழ போக, விலகி கொண்டவள் கண்ணீருடன் அவர் அருகில் அமர்ந்தாள்.

"என்னோட பிரச்சனைக்கு எல்லாம் காரணம் யாருன்னு என்னால சொல்ல முடியும், ஆனால் அவரை உங்களால தண்டிக்க முடியுமா?" என்று கேட்டாள். கண்ணீரை துடைத்துக் கொண்டு மகளின் கன்னத்தை கைகலால் தாங்கிக் கொண்டவர்

"அவன் யாருன்னு மட்டும் சொல்லு அவன் பிறந்த தடமே இல்லாமல் அழிச்சிடுறேன் சொல்லுடா, யார் அவன்?" என்றபடி மகளின் முகத்தை ஆதரவாக பார்த்துக் கொண்டு கேட்டார்.

"உங்க தம்பி தான்" என்று கயல் சொல்லவும், அவரது கைகள் தளர்ந்தது.

"என்ன? இல்லடா அப்படி இருக்காது நீ ஏதோ தப்பா புரிஞ்ச்சுட்டு பேசுற" அவரது குரல் தடுமாறியது.

"நான் தான் சொன்னேனே அப்பா உங்களால எதுவும் பண்ண முடியாது... ப்ளீஸ் இதுக்கு மேல என்கிட்ட இதை பத்தி எதுவும் கேட்காதீங்க, மறுபடியும் நீங்க என்னை நம்பாமல் அவருக்கு சாதகமா ஒரு வார்த்தை பேசினாலும் நான் உயிரோட செத்திருவேன்" என்று சொன்னவளின் விழிகளில் கண்ணீர் கரைபுரண்டோடியது.

இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் நீலகண்டன்...

"நீங்க என்னை நம்ப வேண்டாம் அப்பா, இதை மட்டும் பாருங்க" என்றவள் குணாவின் எண்ணில் இருந்து தனக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் ஆதாரமாக முன் வைத்தாள். வலுவான ஆதாரமாக அவன் குரல் பதிவுகளும் அதில் இடம் பெற்றிருந்தது. அவனை போல குரலை மாற்றி பேச ஆள் ஏற்பாடு செய்து அனைத்தையும் செய்தது வேதா என்று அறியாத நீலகண்டனின் கண்கள் அந்த குரல் பதிவுகளை கேட்டு சிவந்து துடித்தது.

"இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு இந்நேரம் தெரிஞ்சி இருக்கும்னு தான் இப்போவரை அவர் இந்த வீட்டுக்கு வரல" என்று கயல் சொல்ல,

அந்நேரம் "அண்ணா" என்றபடி குணாவின் குரல் வாசலில் கேட்டது, ஐந்து நாட்களுக்கு பின்னான அவன் வருகையும், அவனது குணமும் நீலகண்டனை தற்போது யோசிக்க விடாமல் செய்தது.

மேலும் "உன்னால அவரை தண்டிக்க முடியாது அப்பா, ஏன்னா உனக்கு எங்களை எல்லாம் விட அவர் தான் முக்கியம், பின்ன ஏன் அப்பா எங்கள் மேல பாசம் இருக்க மாதிரி நடிக்கிற?" என்ற கயலின் வார்த்தைகள் தொடர்ந்து அவர் செவியில் ஒலித்த நிலையில் தன்னிலையை மீட்டெடுத்து கயலுக்கு தந்தையாக குணாவை எதிர் கொள்ள தயாரானார் நீலகண்டன்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer





அத்தியாயம் 43

கோபம் கொண்டு நீலகண்டன் வெளியே வர, அங்கு அரைகுறை போதையில் நிலையில்லாமல் நின்று கொண்டிருந்தான் குணா.

அங்கு அவனை கண்டதும் "என்ன? ஏது?" என்று எதுவும் கேட்கவில்லை சரமாரியாக தாக்கத் துவங்கினார் நீலகண்டன்.

தன் அண்ணன் எதற்காக தன்னை அடிக்கிறான் என்பது கூட தெரியாமல் அவரை தடுக்க எண்ணமின்றி "அண்ணா எதுக்கு இப்போ என்னை அடிக்கிறீங்க?" என்று அடிகளை வாங்கிக் கொண்டே கேட்டான்.

"எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்தது? கயல் என் பொண்ணா இருந்தாலும் அவள் உனக்கும் பொண்ணு தானே? அவள் கிட்ட போய் ச்சே" என்றவர் குணாவை கொலை வெறி கொண்டு தாக்கினார்.

"கயல்" என்றதும் அந்த வார்த்தையிலயே குணாவின் மனம் நிலைத்து நின்றது.

"அவள் குழந்தைடா அந்த குழந்தையை இப்படி அசிங்கபடுத்தி பார்க்கணும்னு நினைச்சு இருக்கியே நீ எல்லாம் மனுஷனே இல்லைடா" ஊரம் பிள்ளைக்கு ஒரு நியாயம் தன் பிள்ளைக்கு ஒரு நியாயம் என்று குணாவிடம் வாதாடி கொண்டிருந்தார் நீலகண்டன்.

ஒருகட்டத்தில் அடி தாங்க முடியாமல் தன் அண்ணனை பிடித்து தள்ளி இருந்தான் குணசேகரன்.

"போதும்!!! எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க நீங்க பேசுறது எதுவும் எனக்கு புரியல" என்ற குணாவை முறைத்து பார்த்தபடி எழுந்து நின்ற நீலகண்டன் "என்னடா புரியல? நீ பண்ண பாவத்தை என் வாயால சொல்லனுமா? என் பொண்ணு என்னை நிற்க வச்சு கேள்வி கேட்கிறாள் என்னால அவள் முகத்தை பார்த்து கூட பதில் சொல்ல முடியலடா இதுக்கெல்லாம் காரணம் யாரு? நீ!!! நீ பண்ண தப்பு தான் இதுக்கெல்லாம் காரணம்.. அது உனக்கும் நல்ல தெரியும்"

"கயல் விஷயத்தில நான் என்ன பண்ணேன்?" குணாவுக்கு எதுவும் பிடிபட்டவில்லை


"நடிக்காத குணா, நீ என்னன்ன பண்ணனேன்னு எல்லாமே எனக்கு தெரிஞ்சு போச்சு, எப்போவும் நீ பண்ண தப்பை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருந்தன்ல அதுக்கு தான் இப்போ எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்கு.. இதுக்கு மேல உன்னை இப்படியே விட்டு வைக்கிறது யாருக்கும் நல்லதில்ல உடனே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்" என்றவர் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்.

அவர்களும் "இதோ உடனே அனுப்பிவைக்கிறோம்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தனர்.

குணாவுக்கு அவர் சொல்லும் எதுவும் புரியவில்லை... ஏற்கனவே தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாமல் தடுமாறி நின்றவனுக்கு இது பெரும் இடியாக இருந்தது.

கயல் தற்கொலைக்கு முயற்சி செய்த அந்த நாள் குணா கடத்தப்பட்டு வேதாவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தான். இந்த ஐந்து நாளும் அவனுக்கு தெளியாத வகையில் போதை செலுத்தபட்டது. இன்று காலையில் தான் அவனது காரில் இருந்து கண் விழித்தான் குணா, அதன் பின்னர் இப்போது தான் காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டு பக்கம் வந்து சேர்ந்தான். தன்னை கடத்தியது யார்? திரும்ப அழைத்துவந்து காரில் விட்டது யார்? என்பது எதுவும் குணாவுக்கு நினைவில் இல்லை. அந்த நிகழ்வே பெரும் புதிராக இருக்க, இங்கு வந்து பார்த்தால் நீலகண்டன் பெரும் பழி சுமத்தும் எண்ணத்தில் பேசிக்கொண்டிருகிறார் என்பதை யோசித்தபடி அமர்ந்திருந்தான் குணா.

கயல், மருத்துவமனையிலிருந்த நேரம் குணாவும் உடனிருந்திருந்தான் என்றால் நிச்சயம் நீலகண்டன் குணா மீது இந்த அளவுக்கு கோவம் கொண்டு செயல்பட்டிருக்க மாட்டார். உண்மை எதுவென அமைதியாக அறிய முற்பட்டிருப்பார் என்பதனை அறிந்து கொண்டு தான் குணாவை கடத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்து விட்டு பின்னர் அனுப்பி வைத்திருந்தார் வேதாசலம்.

"அண்ணா இங்க பாரு நம்மளை சுத்தி ஏதோ தப்பு நடக்குது? நீ எதுக்காக ஏன் மேல இப்படி வீண் பழி சொல்லுறன்னு எனக்கு தெரியல ஆனால் ஒன்னு மட்டும் மறக்காத நான் கெட்டவன் தான் ஆனால் உன் விஷயத்தில கண்டிப்பா எந்த தப்பும் பண்ண மாட்டேன்... ஏன்னா நீ தான் என் உலகமே" என்று தெளிவாக பேசினான் குணா, அவன் பேசியதை எல்லாம் கேட்டு நீலகண்டன் மீண்டும் மனம் மாறும் எண்ணத்தில் அமைதி காக்க, அதனை பார்த்துக் கொண்டிருந்த வேதா "கயல்" என்று கத்தி அழைத்தான். அந்த சத்தம் கேட்டு கயல் வெளியே வரவும், தன் மகளது முகத்தை பார்த்ததும் குணாவை மன்னிக்கும் எண்ணம் மலையேறியது.

"நிறுத்து குணா, இதுக்கு மேல எதுவும் பேசாத நீ சொல்லுறதை எல்லாம் நம்பின உன் அண்ணன் இப்போ செத்துட்டான்"

"அண்ணா என்னை பேச விடு நான் சொல்லுறதை கொஞ்சம் தெளிவா யோசி"

"அப்பா" என்று கயல் ஒருபக்கம் கலங்கி அழைக்க, "அண்ணா" என்று மற்றுமொரு பக்கம் குணா கலங்கி நிற்க... இருவர் மீதும் பாசம் கொண்ட நீலகண்டன் நடுவில் தவித்து நின்றார்.

"அண்ணா... அப்பா"

"போதும், போதும், போதும்" என்று இயலாமையால் செய்வதறியாது கத்தியவர் "இதுக்கு மேல பேசுறதுக்கு ஒன்னுமில்லை" என்றபடி பக்கத்தில் இருந்த ஒரு பூஜாடியை தள்ளி விட்டு விசிறியடிக்க, அது குணாவின் நெற்றியில் பட்டு காயத்தை உண்டாக்கியது. அதனை பார்த்ததும் ஒரு அண்ணனாக பதட்டம் அடைந்தவர், அடுத்த நொடியே கயலின் அப்பாவாக அவனை விட்டு ஒரு அடி பின்னே நகர்ந்தார்.

"உன்னை கொன்னு போடுற அளவுக்கு எனக்கு ஆத்திரம் வருது ஆனா என்னால அதை பண்ண முடியல ஏன்னா இப்போ கூட நீ பண்ண தப்பை என்னால பெருசு படுத்தி யோசிக்க முடியல, நீ தெரியாமல் தான் இந்த தப்பை பண்ணி இருப்பன்னு நினைக்க தோணுது, அந்த அளவுக்கு உன் மேல வெச்ச பாசம் என்னை பலவீனமாக்கிடுச்சு" என்று சொன்னவரின் கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.

"அண்ணா என்னை நம்பு... நான் எதுவும் பண்ணல"

"போதும் டா மறுபடியும் மறுபடியும் இப்படி என் முன்னாடி பொய் சொல்லி நடிக்காத?"

"அண்ணா உன்கிட்ட நான் பொய் சொல்லுவேன்னு நினைகிறியா? உன்கிட்ட நடிச்சு எனக்கு என்ன கிடைக்க போகுது?" என்று குணா கலங்கி நின்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் ஒன்று அவர்கள் வீட்டிற்கு வந்தது.

"சார் பேசேண்ட் எங்கே?" என்று வந்தவர்கள் கேட்க, அங்குள்ள அனைவரும் கேள்வியாக நீலகண்டனை பார்த்தனர், அப்போது அவரது கரம் குணாவை நோக்கி நீண்டது. அதிர்ச்சி அடைந்த குணா "அண்ணா? என்ன இது?" என்று கேட்க... "அழைச்சிட்டு போங்க" என்று சொல்லியபடி தன் மகளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு மேல் தளம் நோக்கி சென்றார் நீலகண்டன்.

"அண்ணா... என்னை விட சொல்லுங்க" என்று குணா கதறி துடிக்க, அவனது கரத்தில் ஒரு ஊசி செலுத்தப்பட்டது... அது செலுத்தப்பட்டதும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்க ஆரம்பித்தான். பின்னர் அவர்கள் அவனை ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.

நீலகண்டன் உணர்ச்சி வேகத்தில் குணாவை கொலை செய்வான் என்று எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த வேதாவுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

குணா மீது இத்தனை பெரிய பழி சுமத்தப்பட்டிருந்த போதும் சுலபமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறானே! என்ன நடக்கிறது இங்கு? என்று எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தார் வேதா.

அவனுடைய மனநல பிரச்சனையினால் தான் தன் மகளிடம் இப்படி நடந்து கொண்டானோ என்று எண்ணிய நீலகண்டன், குணாவை மனநல மருத்துவனையில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தான்.

'அவனை தண்டிக்க வேண்டும்' என்று மூளை தீர்ப்பு வழங்கினாலும் அதனை ஏற்க மனம் மறுத்தது. அதனால தான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருந்தார்.

மகளுக்கென தகப்பனாக அவனை தண்டிக்கவும் வேண்டும் தமையனுக்கென அண்ணனாக அவனை காக்கவும் வேண்டும் என்று நினைத்தான். எந்த சூழலிலும் தன் கடமையில் இருந்தும் மீறமால் இருக்கு முயற்சித்தார் நீலகண்டன்.

குணாவை அழைத்து சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் வேதா. அது ஒரு மனநல மருத்துவமனை என்பதை பார்த்து புருவம் சுருக்கி யோசித்தவர் அமைதியாக அங்கேயே தன் காரில் அமர்ந்து கொண்டார். இப்போதைக்கு தான் உள்ளே சென்று குணாவை பற்றி விசாரித்தால் எப்படியும் நீலகண்டனுக்கு தன் மீது சந்தேகம் வர வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொண்டவர் சூழ்நிலை உணர்ந்து உடனே அங்கிருந்து சென்றார்.

நாட்கள் அப்படியே சென்றது குணா இருக்கும் அந்த மருத்துவமனை பலத்த பாதுகாப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. குணாவை பார்க்க யாரும் அனுமதிக்கபடவில்லை... குணா கேட்ட அனைத்தும் அங்கு கிடைத்தது, ஆனால் யாரிடமும் தகவலை பரிமாறி கொள்ள முடியாது, அங்கிருந்து வெளியே செல்லவும் முடியாது அது அப்படி ஒரு நவீன சிறையாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

உண்மை அறிந்து சாருலதா, கயலை தன்னோடு தன் அம்மாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாள். நீலகண்டனால் அதனை தடுக்க கூட முடியவில்லை. காரணம் கயலே விருப்பப்பட்டு அவள் தாயுடன் அங்கிருந்து சென்றிருந்தாள்.

இதற்கிடையில் யாரோ நீலகண்டனை கொல்ல முயற்சித்தனர்... பெரும் அளவு காயங்களுடன் எப்படியோ அந்த தாக்குதலிலிருந்து நீலகண்டன் உயிர் தப்பினார். தாக்குதல் நடந்த நேரத்தில் நீலகண்டனுடன் வேதா இருக்கவே அவரே இவரை காப்பாற்ற வேண்டிய நிலை உருவாகி போனது... வேதாவுக்கும் காயம் ஏற்பட்டது ஆனால் அவரை யாரும் கொலைவெறி கொண்டு தாக்கவில்லை அதனால தப்பினார். கொலை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவன், அடையாளம் காண்பிக்கப்பட்டு காவலர்களால் கைது செய்யப்பட்டான்.

நீலகண்டன் மருத்துவமனையில் இருக்க, காவலர்கள் அனுமதியுடன் வேதாவே தானாக முன்வந்து குற்றவாளியிடம் சென்று விசாரித்தான், குற்றவாளியோ "பாண்டியன்" என்ற ஒருவனின் பெயரை கூறினான்.

நீலகண்டனை கொலை செய்ய சொன்னது பாண்டியன் என்ற ஒரு தாதா என்று அறிந்ததும் அதிர்ந்து போனான் வேதாசலம். அவன் எப்படப்பட்டவன் என்பது வேதாவுக்கும் ஒரளவுக்கு தெரியும். இவனுக்கும் நீலகண்டனுக்கு அப்படி என்ன பகை? இவன் ஏன் நீலனை கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான் வேதா.

பாண்டியன்...

நிழல் உலக தாதா, பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்பவன், எந்தத் தவறையும் செய்ய அஞ்சாதவன்... இவனுடைய இந்த குணமே இவன் குடும்பம் இவனை விட்டுப் பிரிய முக்கிய காரணமாக அமைந்தது... இவன் செய்யும் தொழிலையும் இவனது நடவடிக்கைகளையும் வெறுத்த இவனது மனைவி தனது இரு மகன்களையும் இவனிடத்திலேயே விட்டுவிட்டு நிறைமாத கருவை சுமந்து கொண்டு இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று விலகி சென்று வாழ்ந்து வந்தாள்.

பாண்டியன் தன் மகன் மீதும் மனைவி மீதும் உயிரையே வைத்திருந்தான் என்பது உண்மைதான் ஆனால் அந்த அன்பு மட்டும் அவர்களுக்கு போதவில்லை அமைதியான வாழ்வும் தேவைப்பட்டது அந்த வாழ்வுக்காக அவனை விட்டு பிரிந்து சென்றாள் அந்த பேச மடந்தை.

இவனும் தன் மனைவியை தேடாத இடமே இல்லை ஆனால் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது ஞாபகம் நிலைத்து நின்றது தேடுதல் நீர்த்துப் போக ஆரம்பித்தது... வருடங்கள் கடந்தது அப்படியான ஒரு நாளில் தன் மனைவியின் சொந்தக்காரன் ஒருவனை எதேர்ச்சியாக சாலையில் பார்த்த பாண்டியன் அவனை பிடித்து அடித்து தன் மனைவியைப் பற்றி விசாரித்தான். அப்போது அவன் சொன்ன பதிலில் ரத்தம் சூடேறிப் போனவன் தன் மனைவி மற்றும் மகளின் சாவுக்கு பழி வாங்க முடிவு செய்தான்.

இந்த பாண்டியன் வேறு யாரும் அல்ல நீலகண்டன் வீட்டில் வேலை செய்த மல்லிகா என்ற ஊமைப் பெண்ணின் கணவன் தான்.

குணா மல்லியின் மகளிடம் அத்துமீறினான், அதற்கு நியாயம் கேட்டு மல்லிகா நீலகண்டனிடம் செல்ல, அவளையும் வார்த்தையால் புண்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தான் நீலகண்டன். அதன் பின்னர் அவர்களை எதிர்த்து எதுவும் செய்யமுடியாமல் தங்களை தாங்களே அழித்து கொண்டனர்.

மல்லிகாவின் வீட்டு முதலாளி மல்லிகாவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதால் மானதிற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டனர். என்று மல்லிகாவின் சொந்தக்காரன் பாண்டியனிடம் கூற அந்த முதலாளி நீலகண்டன் என்று தவறாக நினைத்து கொண்டு தான் அவனை கொல்ல ஆள் அனுப்பி இருந்தான் பாண்டியன்.

குணாவினால் பாதிக்கப்பட்ட தன் மகளை தீயுக்கு தாரைவாற்று கொடுத்த அந்த தகப்பனும் தன்னை போலவே இக்குடும்பத்தை கூறு போட நினைப்பதை பற்றி கந்தனிடம் கூறினான் வேதாசலம்.

****

இந்த உண்மையை எல்லாம் கேட்டறிந்த பிறகு தலை சுற்றி அமர்ந்தான் கந்தன்.
"நாங்க எல்லாம் பாதிக்கப்பட்டவங்க அதுக்கு காரணமானவர்களை பழிவாங்குறது ஒன்னும் தப்பில்லையே" என்று வேதா சொல்ல...

அதனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த கந்தன் "பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம், அவங்க பண்ணது பாவம் தான் அதுக்காக அவங்க குழந்தைங்களை பழிவாங்கிறது எந்த விதத்தில நியாயம்? அந்த கயல் பொண்ணுக்கும் உன் பொண்ணோட வயசு தானே இருக்கும் அவளை வச்சு உன் வன்மத்தை தீர்த்துருக்கியே, உனக்கும் அந்த குணாவுக்கும் என்னயா வித்தியாசம் இருக்கு?" என்று கேட்டான்.

"ஏய் நிறுத்துடா, பெத்தவன் பண்ண பாவம் பிள்ளையையும் வந்து சேரும்... அதை அவங்க அனுபவிச்சு தான் ஆகணும்"

"ஓ அப்போ நீ பண்ண பாவத்துக்கு தான் உன் பொண்ணுக்கு அப்படி ஒரு நிலமை வந்துச்சோ" என்று கந்தன் கேட்க, கோவத்தில் அருகில் இருந்த ஒரு நாற்காலியை எடுத்து அவன் தலையில் அடித்திருந்தார் வேதாசலம்.

தலை முழுக்க ரத்தத்துடன் குறை மயக்கத்தில் கிடந்த கந்தன் "உனக்காக பழிவாங்க தான் அப்பா நான் ஒரு பொண்ணு வாழ்க்கையை வீணாக்கினேன்னு உன் பொண்ணு கிட்ட சொல்லு உன் பொண்னே உன்னை கேவலமா பார்ப்பா... அப்போ அவள் கண்ணுக்கு நீயும் குணாவும் ஒரே மாதிரி தான் தெரிவீங்க" என்று கந்தன் தட்டு தடுமாறி சொல்லி முடிக்க, கத்தியபடியே அவன் தலையில் ஓங்கி மிதித்தான் வேதாசலம். அதில் அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தான் கந்தன்.

அதன் பிறகு இவனது அடியாள் ஒருவனுக்கு அழைப்பு விடுத்து இவ்விடத்திற்கு வர செய்தான். அவனிடம் கந்தனை குறிப்பிட்டு காட்டி "இவன் இந்த ஊருக்குள்ளேயே இருக்க கூடாது எங்காவது நார்த் பக்கம் தூக்கி வீசிட்டு வந்திடுங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

தன் மகளுக்காக பழி வாங்குகிறேன் என்று சொல்லி சொல்லியே தனது பாவக்கணக்கை கூட்டிக் கொண்டிருந்தான் வேதாச்சலம்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
44


நீலகண்டனை கொலை செய்ய முயற்சி செய்த அடியாட்களில் ஒருவன் காவலர்களிடம் பாண்டியனின் பெயரை கூற, பாண்டியனின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


காவல்துறையில் பாண்டியனுக்கு நம்பிக்கையா இருக்கும் ஒருவர் மூலம் போலீஸ் அவனை கைது செய்ய வரும் தகவல் பாண்டியனுக்கு தெரியவர உடனே தனது இருப்பிடத்தை மாற்றினான். அவர்கள் வசம் சிக்காமல் தப்பித்துக் கொண்டான்.


முதல் முறை அவன் வைத்த குறி தப்பியிருக்கிறது. அதுவும் கொலை முயற்சி வழக்கு தன் மீதே திரும்பி இருக்கிறது என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.


ஏற்கனவே நீலகண்டன் தப்பித்த கோவத்தில் இருந்தவனுக்கு, தனது அடியாள் தன்னை அடையாளம் காட்டியது இன்னுமே அவனது கோபத்தை அதிகப்படுத்தியது.


தனது எதிரியை வீழ்த்தாமலே வீழ்ந்து விடுவோமோ என்ற அவனது கோவம்! வெறியாக மாறியது… தடம் மாறி யோசிக்க ஆரம்பித்தான்.


***

தன்னை கொலை செய்ய முயற்சி செய்தது பாண்டியன் என்பதை அறிந்து கொண்ட நீலகண்டனும் அவனை பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பித்தான்.


“அந்த பாண்டியனை பத்தி ஏதாவது தெரிஞ்சதா?” என்று வேதாவிடம் கேட்டான் நீலகண்டன். வேதாவுக்கு தான் அனைத்தும் தெரியுமே! ஒரு வரி மறைக்காமல் உண்மையை சொன்னான். இதை மறைக்க வேண்டும் என்று அவனுக்கு தோணவில்லை அதற்கு காரணமும் இருந்தது.


“ம்ம்ம் ஒரு விஷயம் தெரிஞ்சது. ஆனால் அதை உன் கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தான் தெரியல”


“எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லு வேதா, யார் அவன்? எதுக்காக என்னை கொல்ல நினைக்கணும்… இதுக்கு தொழில் போட்டி காரணமா இருந்து, இந்த செயல் என்னை மட்டும் பாதிச்சிதுன்னா அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா என்னை சுத்தியிருக்கவங்களை இது பாதிக்க கூடாது.. அதுக்காக நான் அவனை பத்தின உண்மை எனக்கு முழுசா தெரியனும் நினைக்கிறன்” என்றவன் குவளையில் மதுவை நிரப்பிக் கொண்டான்.


“மல்லிகான்னு உனக்கு யாரையும் தெரியுமா?” என்று வேதா கேள்வி கேட்க, நீலகண்டனின் கவனம் சிதறியது… குவளையில் நிரம்ப வேண்டிய மது சற்று கீழே சிந்தியது.

அதனை கண்ட வேதாவின் முகத்தில் கேலி புன்னகை வெளிப்பட்டது.


இதற்கு மேலும் குணாவை பற்றிய உண்மையை தன்னிடம் இவன் எப்படி மறைப்பான் பார்க்கலாம்! என்ற எண்ணத்தில் தான் இந்த உண்மையை நீலாவிடன் சொல்ல முடிவெடுத்தான் வேதா.


“கொஞ்சம் கவனமா இருந்து இருக்கலாம்ல்ல… இல்லன்னா இப்படி தான் எல்லாமே கைமீறி போயிடும்” என்ற வேதாவை சட்டென நிமிர்ந்து பார்த்தான் நீலகண்டன். “பார்த்து ஊத்தி இருக்கலாம் இல்லை, பாரு எல்லாம் கீழே கொட்டிட்டுச்சு” என்ற வேதா, தானே அந்த மது பாட்டிலை வாங்கி, அதனை குவளையில் நிரப்பி அவன் கையில் கொடுத்தான். அதனை வாங்கும் போது நீலகண்டனின் கரத்தில் ஒரு வித தடுமாற்றம் வெளிப்பட்டது.


“சொல்லு நீலா, மல்லிகா யாரு?” மீண்டும் அதே கேள்வி கண்களை மூடி திறந்து தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டவன் “என்ன பேரு சொன்ன? மல்லிகாவா? ஒருவேளை எனக்கு தெரிஞ்சு இருக்கலாம் ஆனால் சரியா ஞாபகமில்லை” என்றபடி மதுவை அருந்த தொடங்கினான். ஆனால் அவனது கண்கள் இப்போது பதட்டத்தில் பரித்தவித்தது.


“சில வருசத்துக்கு முன்னாடி உன் வீட்ல தான் வேலை பார்த்தாங்களாமே? அவங்களுக்கு கூட ஒரு பொண்ணு இருந்ததாமே… பொண்ணு பேர் பார்கவி, வயசு பதினைந்து. எந்த படுபாவியோ அவளை சீரழிச்சுட்டான் போல… பாவம் வாயில்லா பிள்ளை, ஏழ்மையான நிலையில் ஒரு அம்மா… அந்த பாவியை எதிர்த்து போராட முடியாமல் தீ வச்சு இறந்து போயிடதா அந்த அடியாள் சொல்லி கேள்விபட்டேன்.. அந்த மல்லிகாவோட புருஷன் தான் அந்த பாண்டியன். அநியாயமா இறந்து போன அந்த வாய் பேச முடியாத பொண்ணோட அப்பா தான் அந்த பாண்டியன். ஏன் நீலா அந்த வாய் பேச முடியாத பொண்ணை சீராழிச்ச அந்த பாவி யாருன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்ட வேதாவின் கண்கள் ரத்தமென சிவந்து இருந்தது… அவன் சொல்வதை கேட்டு கொண்டிருந்த நீலகண்டனின் உடல் வியர்த்து வடிய, கையில் இருந்த மது குவளை பிடிமானமின்றி கீழே விழுந்து சிதறியது. அதனை வன்ம சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் வேதா.


என்றோ செய்த பாவத்திற்கான தண்டனை இப்போது திரும்பி வருகிறது என்று கவலை கொள்வதா? அல்லது செய்த பாவத்தை சரி செய்ய இனி வழியில்லை என்று நினைத்து வேதனை அடைவதா? புரியாத நிலையில் தவித்து நின்றான் நீலகண்டன்.


“என்ன நீலா? மறுபடியும் கவனமிழந்துட்டியா?” என்று வேதா கேட்க…


“அது இருக்கட்டும் நீ மேல சொல்லு” என்றவனின் பார்வை ஏதோ ஒரு மூலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.


“அந்த பொண்ணுக்கு அப்படி ஒரு நிலைமை வர நீ தான் காரணம்னு நினைச்சு தான் அந்த பாண்டியன் உன்னை கொல்ல முயற்சி பண்ணி இருக்கான்” என்றதும் நீலகண்டனுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


“ஆனால் நீ அப்படி பண்ணி இருக்க மாட்டால்ல நீலா… நீ எவ்ளோ நல்லவன். உன்னை பத்தி அவனுங்களுக்கு என்ன தெரியும்? ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டானுங்க அப்படி தானே… சொல்லுடா அப்படி தானே” என்று வேதா கேட்க கேட்க நீலகண்டனின் இதயம் படபடக்க ஆரம்பித்தது.


“தன்னை மட்டுமே நம்பி இருக்கிறவங்களை தன்னோட சுயநலத்துக்காக ஏமாத்துறது எவ்ளோ பெரிய பாவம்ல்ல நீலா… கேட்க ஆள் இல்லாத மனுசங்க தானே அவனுங்களால நம்மளை என்ன செய்ய முடியுங்குற தைரியத்துல தானே அந்தப் பாவத்தை கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் இவனுங்களால செய்ய முடியுது. இவ்வளவு பெரிய துரோகத்தை கொஞ்சம் நெஞ்சில் ஈரம் இல்லாம பண்ணிட்டு… எப்படி இவனுங்களால சக மனுஷனுங்க கிட்ட முகம் கொடுத்து பேச முடியாது? இரக்கமில்லாமல் எல்லா பாவத்தையும் பண்ணிட்டு அதையெல்லாம் சட்டையில ஒட்டுன தூசி மாதிரி துடைச்சு விட்டுட்டு கடந்து போய்கிட்டே இருக்கானுங்க… நம்ம பண்ற பாவம் நம்ம குடும்பத்தையும் சேர்த்து அழிக்குங்குற எண்ணம் இவனுங்க மனசுல ஏன் வராம போகுது? அந்த அளவுக்கு தன்னோட குடும்பத்த அவன் பாதுகாப்பா வச்சிருக்கிற எண்ணம் தானே? தன்னோட குடும்பத்துக்கு எதுவும் ஆகாதுங்கிற எண்ணத்தில் அவன் கர்வமா சுத்த காரணம்! ஆனா பாதிக்கப்பட்டவன் நினைச்சேன் ஆனா அந்த பாதுகாப்பு எல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிடும். அவன் பண்ண பாவம் அவன் குடும்பத்தை நல்லபடியா வாழ வைக்கும் நினைகிறியா? அந்த குடும்பத்தையே ஒன்னுமில்லாமல் ஆக்கிடும்னு உனக்கு தெரியாதா என்ன? அந்த பாவத்தை நீ எப்படி பண்ணுவா? நீ தான் ரொம்ப நல்லவனாச்சே” நீலகண்டனுக்கு நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது. நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொண்டார். “வேதா” என்று உதவிக்கு அவன் கை நீட்டி அழைக்க… ஒரு அடி பின்னே நகர்ந்து கொண்டான் வேதாசலாம்.


“பாவம் பண்ணவன் மட்டும் குற்றவாளி இல்லை அந்த பாவத்தை பார்த்துட்டு சும்மா இருந்தவனும் குற்றவாளி தான். நீயும் அப்படி தான்… இந்த மண்ணுல வாழ தகுதி இல்லாத பிறவிகள் நீங்க எல்லாம்” என்றவனை கண்ணீருடன் பார்த்தவாறே நீலகண்டனின் கண்கள் மூடியது. மயங்கி போனான்.


திரும்ப கண்விழித்து பார்க்கையில் மருத்துவமனையில் கிடந்தான். உடல் அடித்து போட்டது போல இருந்தது மூச்சு விட முடியவில்லை… மீண்டும் அப்படியே கண்களை மூடிக் கொண்டான்.


வேதா கூறிய வார்த்தைகள் மட்டும் மீண்டும் மீண்டும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.


பாவம் செய்தவன் மட்டும் தண்டனைகுறியவன் அல்ல…

பாவத்திற்கு துணை நின்றவனும் அதனை பார்த்துக் கொண்டு நின்றவனுமே தண்டனைக்குறியவன் தான்.


இந்த வார்த்தை அவனது மனதின் குற்ற உணர்வை அதிகப்படுத்தியது… தன் மனதிற்கு சமாதானம் சொல்ல முடியாத நிலையில் தவித்து நின்றான்.


ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது… இந்த பாண்டியன் மட்டுமல்ல வேதாவும் தனக்கு ஆபதானவன் தான் என்பது மட்டும் புரிந்தது.


தன்னை பற்றி ஏதோ ஒன்று அவனுக்கு தெரிந்து இருக்கிறது. மல்லிகாவின் மகளுக்கு நடந்த விஷயம் மட்டுமே வேதாவை இப்படி பேச வைக்க வில்லை… வேறு ஏதோ ஒரு உண்மை இதில் ஒளிந்துள்ளது. அந்த உண்மையை அறிந்து கொண்டு தான் இவ்வளவு வலுமாக அவன் தன்னிடம் கேள்வி கேட்கிறான்.


இது தனக்கும் தன் குடும்பத்துக்கும் நல்லதல்ல என்பதை மிக தாமதமாக புரிந்து கொண்டான்.


தான் தரையில் மயங்கி சரியும் போது அவன் முகத்தில் வெளிப்பட்ட புன்னகையை நினைத்து பார்க்கையில் இப்போதும் நீலகண்டனின் உடல் நடுங்கியது.


‘குணாவை பற்றிய உண்மையை மட்டுமல்ல அவனது இந்த நிலைக்கும் தான் தான் காரணம் என்பதை வேதா அறிந்து கொண்டானோ’ என்ற பதட்டம் அவரை ஒரு கணமேனும் நிம்மதியாக கண் மூட விடவில்லை.


இப்போது மருத்துவமனையில் இவன் பக்கத்தில் வேதா இல்லை…


****


தன்னுடைய தாக்குதலில் இருந்து தப்பித்த நீலகண்டனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று வெறி கொண்டு காத்திருந்தான் பாண்டியன்.


அந்த கொலை முயற்சிக்கு பிறகு நீலகண்டன் அதிகமாக வெளியே வருவது இல்லை… அவனுக்காக காத்திருந்து காத்திருந்து காலம் தான் விரையமானது. இப்படியே தாமதித்தோம் என்றால் எடுத்த செயலை முடிப்பதற்கு முன்பே போலீஸிடம் மாட்டிக் கொள்வோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தான் பாண்டியன்.


இந்த முறை எப்படியாவது பாண்டியனை கைது செய்து விட வேண்டும் என்று காவல்துறையினரும் அவர்களது வேலையை துரிதப்படுத்த… இவனுக்கு கால அவகாசம் குறைய ஆரம்பித்தது. இதுவரை இவன் மீதிருந்த வழக்குகளுக்கு எல்லாம் நேரடி சாட்சி என்பது இல்லை என்பதனால் தப்பித்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது அப்படி இல்லை நீலகண்டன் வழக்கில் வேதா முக்கிய சாட்சியாக இருந்தான். அதனால் வலுவாக மாட்டி இருந்தான் பாண்டியன். நீலகண்டனும் அவன் தரப்பில் இந்த வழக்கை சீக்கிரமாக முடிக்க காவலர்களை வேகப்படுத்தினான்.


நீலகண்டனின் குடும்பத்தை பற்றிய முழு தகவலும் பாண்டியன் தெரிந்து கொண்டான்.


தன்னை போலவே அவனுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கின்றது என்பதை அறிந்து கொண்ட பாண்டியனின் இதழ்கள் கேலியாக விரிந்து கொண்டது.


“என் மகளையும், மனைவியையும் இழந்து நான் எப்படி வாடுகிறேனோ அதே போல நீயும் உன் மனைவி மற்றும் மகளை இழந்து வாடும் போது தான் என் வலி உனக்கு புரியும். அந்த வலியை உன்னை உணர வைக்காமல் நான் ஓய்ந்து போக மாட்டேன்” என்று சூலுரைத்துக் கொண்டவன் கயல்விழியை கடத்தி வர திட்டமிட்டான்.


நீலகண்டனின் கண் முன்னே அவன் கயலை சீரழிக்க வேண்டும் என்று முடிவு செய்தான் பாண்டியன். அதனை பார்த்த பின்பும் எப்படி ஒரு தந்தை உயிர்ப்புடன் இருக்க முடியும்? அவனின் நிம்மதியை குலைக்க இப்படி ஒரு கொடும் தண்டனையை அவனுக்கு கொடுக்க முடிவு செய்தான் பாண்டியன்.


இந்நிலையில் தான் நீலகண்டன் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அந்த நாள் இரவே மருத்துவமனையிலிருந்து அவனை கடத்தியிருந்தனர் பாண்டியனின் ஆட்கள்.


நீலகண்டனை மட்டுமல்ல, பெங்களூருவில் இருந்த கயல்விழியையும், அவளது தாய் சாருலதாவையும் கடத்தி வைத்திருந்தனர்.


***


மூன்று பேரையும் முட்டி போட வைத்து அவர்களது கை, கால்களை கட்டி வைத்திருந்தான் பாண்டியன்.


தனக்கு எதிரே கண்ணீருடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தனது மகளும், மனைவியும் அமர்ந்திருப்பதை பார்த்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் தானும் கட்டுண்டு கிடந்தான் நீலகண்டன்.


கயல்விழி மற்றும் சாருலதாவின் கண்முன்னே நீலகண்டனை அடித்து துன்புறுத்தினர். ஏன்? எதற்கு? யார்? என்று எதுவும் புரியாமல் அடிவாங்கி கொண்டிருந்தான். அப்போது அவ்விடத்திற்கு வந்தான் பாண்டியன். நீலகண்டனின் முன்னே நாற்காலியை எடுத்துப் போடச் சொல்லி அதன் மீது ஏறி அமர்ந்தவன், தனது கால்களினால் நீலகண்டனின் நாடியை உயர்த்தினான் பாண்டியன். முகம் எல்லாம் ரத்தம் வடிய எதிரில் இருப்பவனின் முகத்தைக் கூட தெளிவாக பார்க்க முடியாத நிலையில் இருந்தான் நீலகண்டன்.


அவன் முகத்தில் ஒரு குவளை தண்ணீரை எடுத்து ஊற்றிய பாண்டியன், அவன் உச்சி முடியை கொத்தாக பற்றி இழுத்தான்.


“உனக்கு வயசு என்ன இருக்கும்? ஒரு அம்பது வயசு இருக்குமா? அதான் உன் பொண்டாட்டி கண்ணுக்கு அழகா நல்லா தானடா இருக்கா? அதுக்கும் மேல அறிப்பெடுத்து உனக்கு அடுத்தவன் வீட்டு பொண்ணு கேக்குதா? உனக்கு ஒன்னு தெரியுமா? என் பொண்ணோட முகத்தை கூட நான் பார்த்தது இல்லை… என்னைக்காவது ஒரு நாள் என்னோட மனைவியும் மகளும் என்ன தேடி வந்துருவாங்கங்கற நம்பிக்கையில அவங்களுக்காக நான் காத்திருக்காத நாளே இல்லை… இத்தனை வருஷமா என் மனைவிக்காகவும் மகளுக்காகவும் நான் காத்திருக்கும் போது, உன்ன போல ஒரு நாதாரி அந்த அழகான கூட்ட சிதைச்சு அதை தீயக்கு இரை ஆக்கிட்டான்னு கேட்கும்போது எனக்கு எப்படி இருக்கும்? கடைசி வரை அவங்களுக்காக காத்திருந்த எனக்கு ஒரு பிடி சாம்பல் கூட மிஞ்சலங்கும்போது அது எனக்கு எப்படி வலிக்கும். சொல்லுடா எப்படி வலிக்கும்?” என்று கண்களில் கண்ணீருடன் ஆக்ரோஷமாக கேட்டவன் புறம் கைக்கொண்டு பின்னால் அமர்ந்திருந்த கயல்விழியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அதனைக் கண்டு நீலகண்டனும், சாருலதாவும் கதறி அழுதனர்.


“என் பொண்ணை எதுவும் பண்ணிடாத… அவள் குழந்தைடா அவளுக்கு இது எதுவும் தெரியாது… என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோ… ஆனால் என் பொண்ணை விட்டுடு… பாவம்டா அவள் வலி தாங்க மாட்டாள்” என்று கதறினார் நீலகண்டன்.


“ஓ.. ஏன்டா உன் பொண்ணு பாவம்! வலி தாங்க மாட்டா அப்படின்னா, அப்போ உன் பொண்ணுக்கு மட்டும் தான் வலிக்குமா? என் பொண்ணு வலிச்சு இருக்காதா? உன் பொண்ணாவது வலிக்குதுன்னு சொல்லி அழ முடியும். ஆனால் என் பொண்ணால அப்படி சொல்லி அழ கூட முடிஞ்சு இருக்காதேடா? அவளை காய படுத்த உங்களுக்கு எல்லாம் எப்படிடா மனசு வந்தது. அவள் வாய் பேச முடியாதவள்டா அவள் வேதனையை கூட வெளியே சொல்ல முடியாமல் அவள் எப்படி மனசு நொந்து அழுதுருப்பாள்… அவள் வலி உனக்கும் புரியனுல்ல” என்றவன் நீலகண்டனின் கண்களை பார்த்தவாரே கயல்விழியின் உச்சி முடியை கொத்தாக பிடித்து இழுத்து அவளது முகத்தை தரையில் வைத்து தேய்த்தான்.


கயல்விழியோ வலியில் கதற, அழக்கூட தெம்பில்லாத நிலையில் ஊமையாக கண்ணீர் வடித்தார் நிலகண்டன். இதுவரை தன் தம்பியை காட்டிக் கொடுக்க மனம் இல்லாமல் அமைதியாக இருந்தவன் அதற்கு மேலும் பொறுமை கொள்ள முடியாமல் குணாவைப் பற்றிய உண்மையை எடுத்துக் கூற முடிவு செய்தான்.


“என் பொண்ணை விட்டுடு அவளை விட்டுடு… உன் பொண்ணை நான் எதுவும் பண்ணல… நான் எதுவும்…பண்ணல நான் எதுவும் பண்ணல” என்றவருக்கு இப்போதும் குணாவை காட்டிக் கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை.


உண்மையை கூறினால் இவன் குணாவை கொன்று விடுவான் என்ற பயம்! ஒருபக்கம்.. தம்பியை காட்டிக் கொடுத்துக் விட்டோமே என்று குற்ற உணர்வில் இனி தனது வாழ்நாள் கடந்து விடுமோ என்ற தவிப்பு மறுபக்கம் என உண்மையை சொல்ல முடியாமல் தத்தளித்தான்.


“உன் பொண்ண காப்பாத்தணும்ங்கிறதுக்காக என்கிட்ட பொய் சொல்லி நடிக்கிறியா? இனி உன்னால எதுவுமே பண்ண முடியாது… உன் கண்ணு முன்னாடி உன் பொண்ணு அணு அணுவா சாகுறத நீ பார்ப்ப… இது நான் என் பொண்ணுக்கு செலுத்துற அஞ்சலி”


எந்தப் பெண்ணும் தனக்கு நடந்த கொடுமை வேறு ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என்று தான் நினைப்பாள். ஆனால் இவர்களோ அந்தப் பெண்ணை குறிப்பிட்டுக் காட்டியே அவளுக்காக பழி வாங்குகிறேன் என்ற போர்வையில் இவர்களது வன்மத்தை தீர்த்துக் கொண்டிருந்தனர்.


தவறு செய்தவன் தண்டனைக்கு உரியவன் தான்… ஆனால் இதில் தவறே செய்யாமல் பிற உயிர்கள் வதைக்கப்படுகிறது… அதற்கும் அவன் செய்த குற்றமே காரணமாக கை காட்டப்படுகிறது.


அவன் செய்தது பாவம் என்றால் அதற்கு பழிவாங்குகிறேன் என்று கூறி அவர்கள் வீட்டுப் பெண்ணை காயப்படுத்துவதும் இவர்கள் செய்யும் பாவம் தானே? இதனை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்?


இங்கிருக்கும் அனைவரும் அத்தவறை தான் நியாயப்படுத்த முயற்சி செய்கின்றனர்.


யசோதாவிற்காக பழி வாங்குகிறேன் என்று சொன்ன வேதாவும் கயல்விழியின் வாழ்வின் மீதுதான் கை வைத்தான். இதோ இப்போது பார்கவிக்காக பழி வாங்குகிறேன் என்று முன் வந்த இந்த பாண்டியனும் அவளை சிதைக்கவே ஆவல் கொண்டுள்ளான்.


பாவம் செய்வது ஒருவன் பலியாவது ஒருவன் என்ற நிலையாகி போனது.


கதறி துடித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.


“தப்பு பண்ணது என் புருஷன்னா அவரை என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என் பொண்ண விட்டுடுங்க” என்ற சாருலதா அவர்களின் காலில் விழுந்து கதறினார். இப்போது கூட குணாவைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை நீலகண்டன்.


மகளை விட்டு விடச் சொல்லி கண்ணீர் மட்டும் தான் வடித்தாரே தவிர, குணாவை காட்டிக் கொடுக்கும் மனநிலையில் அவர் இல்லை.


“டேய் இவன் கண்ணு முன்னாடியே இவன் பொண்ணு அணுவணுவா சாகனும்… நீங்க எல்லாத்தையும் முடிச்ச அப்புறமும் இவள் உயிரோட இருந்தான்னா நம்ம சேட்டு கிட்ட இவளை வித்திடுவோம்… இவன் பொண்ணை இப்படி ஒரு நிலைமையிலே இவன் கடைசியா பார்த்ததா இருக்கட்டும்… அதுக்கு அப்புறமும் இவன் எப்படி உயிரோட இருக்கான்னு நானும் பார்க்குறேன்” என்று பாண்டியன் கூற அடியாட்கள் ஆறு பேர் கயல் விழியை காமம் கொண்ட பார்வையுடன் நெருங்க… ஒருவன் மட்டும் பின்னோக்கி நகர்ந்தான். அதனை கவனித்த பாண்டியன் அவனை கேள்வியாக பார்க்க… “இல்லை எனக்கு விருப்பம் இல்ல” என்று அவன் சொன்னான்.


“அவன் காதல் மயக்கத்தில் இருக்கான் அண்ணா, அதான் வேண்டாம்னு சொல்லுறான்… தன்னை நம்பி வந்த பொண்ணுக்கு உண்மையா இருக்கணும் நினைக்கிறான் போல” என்ற அடியார்கள் அவர்களுக்குள் பேசி சிரிக்க, பாண்டியன் இதழ்களும் விரிந்து கொண்டது.


“சரி நீ வெளியே போ” என்று கூறி அவனை அனுப்பி வைத்தான் பாண்டியன். வெளியே வந்தவனுக்கு கயலின் கதறல் சத்தம் தலைவலியை கொடுத்தது. இந்த நிகழ்வில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் சிகரெட் ஒன்று எடுத்துப் பத்த வைத்தவன் அதனை ஊதி தள்ளியபடியே வானத்தை வெறித்து பார்த்தான். அவன் மதிவாணன்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top