ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 30

ஓரு வாரத்திற்கு முன்பு...



"இந்த எலி தொல்லை பெரும் தொல்லையா இருக்கு, ஒருநாள் மருந்து வச்சா தான் சரி வரும்" என்று கடையின் முதலாளி புலம்பிக் கொண்டிருக்கும் போது சரியாக கடைக்குள் நுழைந்தாள் சங்கவி.


"வணக்கம் அண்ணா" என்று சொன்ன சங்கவியை பார்த்து ஒரு சிறு தலையசைப்புடன் "உள்ள போயி வேலையை பாருமா" என்று சொன்னான் அந்த முதலாளி.


ஒரு சிறிய உணவகத்தில் தான் இவள் வேலை செய்கிறாள். காய்கறி வெட்டிக் கொடுப்பது, உணவை பொட்டலம் கட்டுவது, உண்பவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வைப்பது என சின்ன சின்ன வேலைகளை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருப்பாள்.


காலை 8 மணிக்கு வேலைக்கு வருபவள் இரவு எட்டுமணி வரை அங்கு தான் இருப்பாள்.


அங்கு வேலை செய்பவர்களில் இவள் தான் சிறியவள், அதனால் அங்குள்ள அனைவரும் இவளிடம் பரிவாக நடந்து கொள்வார்கள். அதனால் வேலை பளு எவ்வளவுதான் இருந்தாலும் சிறு புன்னகையுடன் அந்த நாளை கடந்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவாள்.


அப்படியான ஒருநாளில்


எப்போதும்போல் இல்லாமல் அதீத முக வாட்டாத்துடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள் சங்கவி.


எப்போதும் தன் பாட்டியின் நலனை கேட்டறிந்து கொண்ட பின்னே தன் அறை நோக்கி செல்பவளின் கால்கள் இன்று அன்னிசையாக அவளின் தாய், தந்தையின் புகைப்படத்தை நோக்கி நகர்ந்தது, இரு நொடி தாயின் முகத்தை பார்த்தவள், அப்படியே அந்த புகைப்படத்தின் கீழே அமர்ந்து கொண்டாள்.


சங்கவியின் முகவாட்டத்தை கவனித்த அவளது பாட்டி "என்னடா இவ்ளோ நேரம் ஆகிடுச்சு வேலை அதிகமா?" என்று கனிவாக கேட்டார். அவரது குரலில் கண்களை துடைத்துக் கொண்டு திரும்பினாள் சங்கவி.


"அப்படி எல்லாம் இல்ல பாட்டி"


"குரல் ஒரு மாதிரி இருக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா?"


"அப்படி எல்லாம் இல்லை பாட்டி" எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தான், கலங்கி இருந்த தன் கண்ணை மறைத்துக் கொண்டு பதில் கொடுத்தாள்.


"அப்புறம் எதுக்குடா வேலை விட்டு வந்ததில் இருந்து அப்படியே உட்கார்ந்து இருக்க? இன்னும் சாப்பிட கூட இல்லையே"


"பசிக்கல பாட்டி… நீ சாப்பிட்டாச்சா? தூங்கு, நான் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டுகிறேன்" என்றவள் மாற்று துணியை எடுத்துக் கொண்டு பின்பக்கம் இருக்கும் குளியல் அறை நோக்கி சென்றாள்.


"இந்த நேரத்தில் குளிச்சு உடம்புக்கு எதாவது வந்திட போகுது சங்கவிமா" என்று பாட்டி சொல்ல சொல்ல அதனை செவிமடுக்காமல் நேரகா குளியலறைக்குள் புகுந்தாள்.


அவள் குளித்து முடித்து விட்டு வெளியே வரவும், அந்நேரம் அவர்கள் வீட்டின் பின் பக்கம் ஏதோ உருட்டுவது போல சத்தம் கேட்டது.


அவள் திரும்பி பார்க்கவும் ஒருவன் அவர்கள் வீட்டு சுவரின் மீது ஏறி குதித்து எழுந்து நின்றான். திடுமென அவனை கண்டதும் ஒரு நொடி அப்படியே உறைந்து நின்றாள் பெண்ணவள், வார்த்தை கூட வெளிவர மறுத்தது. பயத்தில் பின்னால் நகர்ந்தவள் அங்கிருந்த வாளி மீது மோதினாள், அந்த சத்தத்தை கேட்ட அந்த புதியவன் நேராக அவளை நெருங்கி வர, உடனே "ஐயோ திருடன்" என்று கத்த வாயெடுத்தாள் சங்கவி,


அவனோ விரைந்து வந்து தன் ரத்தம் தோய்ந்த கரத்தினால் அவளது வாயை மூடியவன் "ஷ் கத்தாத" என்றான்.


அவளோ பயத்தில் மிடறு விழுங்கி அவனை பார்க்க, "வெளியே என்னை போலீஸ் தேடுது கொஞ்ச நேரத்தில் நானே இங்கே இருந்து போயிடுவேன், அதுவரை சத்தம் போடாதே" என்றவனை பிடித்து தள்ள பார்த்தாள்.


அவனும் அவளுக்கு இடைவெளி கொடுத்து விலகினான், மீண்டும் அவள் கத்த வாயெடுக்க, புறம் கையினால் ஓங்கி ஒரு அடி அவள் கன்னத்தில் விழுந்தது, அவன் அறைந்த வேகத்தில் அப்படியே பொத்தென்று கீழே விழுந்தாள் சங்கவி.


விழுந்த வேகத்தில் அவளது ஆடைகள் அலங்கோலமாக சரிந்து கிடக்க, கொடியில் கிடந்த ஒரு புடவையை தூக்கி அவள் மீது வீசியவன், தன் முதுகை பிடித்துக் கொண்டு அப்படியே அங்கிருந்த சுவரின் அருகே அமர்ந்தான்.


சுவர் எகிறி குதித்தில் கால் வேறு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டது போல, அது ஒரு பக்கம் வலி என்றால், முதுகில் வேலி கம்பி கிழித்ததால் ஏற்பட்ட காயத்தின் வலி வேறு உயிர் போகும் அளவுக்கு ரணமாக இருந்தது. இதில் இவளும் கத்தி கூப்பாடு போடுகிறாளே என்ற எண்ணத்தில் தான் அடித்து விட்டான்.


சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அங்கு மயங்கி கிடந்த சங்கவியை கண்டான். 'இன்னும் எழுந்திருக்காமல் இருக்கா? ஒருவேளை செத்துகித்து போயிட்டாளா' என்று தனக்குள் பேசிக்கொண்டவன், தன் அருகில் இருந்த பக்கெட்டில் இருந்து நீரை கோரி அவள் முகத்தில் ஊற்றினான்.


முகத்தில் தண்ணீர் படவும் கண் விழித்து கொண்டவள் மீண்டும் அவனை கண்டு மிரண்டு கத்த போக, அவனோ மறுபடியும் தண்ணீரை கோரி அவள் முகத்தில் ஊற்றினான் "கத்தாதன்னு சொன்னா புரியாதா உனக்கு?" என்றவனை இரண்டு நொடி அமைதியாக பார்த்தவள் மெதுவாக அவன் அசந்த நேரம் வீட்டுக்குள் செல்ல பார்த்தாள்.


வலி பொறுக்க முடியாமல் கண் மூடி கிடந்தவன், அவளது கொலுசு சத்தம் கேட்டதும் தன்னை கடந்து சென்றவளின் காலை வலுவாக பிடித்து நிறுத்தினான்.


கதவருகே அமர்ந்து இருந்தவன், தலை உயர்த்தி அவளை பார்க்க "என்னை விடு" என்று காலை உதறினாள் சங்கவி.


அவள் உதறிய வேகத்தில் மேலும் கோவமானவன் அவளது காலை பிடித்து இழுக்க வலுவிழந்து தடுமாறியவள் அப்படியே கீழே விழுந்தாள்.


சிறு இடைவெளியில் தலையானது தரையில் மோதாமல் தப்பித்தாள்.


அதை எண்ணி நிம்மதியடைய கூட விடாமல் அருகில் இருந்த கொடியவன் அவளது தாடையை வலிக்க பற்றி இருந்தான்.


"அமைதியா இருந்தா உன்னை அப்படியே விட்டுட்டு போயிடுவேன்… இல்லை கத்தி கூப்பாடு போட்டு ஊரை கூட்டுவேன்னு சண்டித்தனம் பண்ணன்னு வையேன், சத்தம் கேட்டு இப்போ வந்து போலீஸ் என்னை பிடிச்சிடும், ஆனா ஒரு நாள் கண்டிப்பா நான் திரும்பி வெளியே வருவேன், அப்படி வந்தேன்னா அப்புறம் உன்னை உரு தெரியாம சிதைச்சிடுவேன்… யோசிச்சு அப்புறம் கத்தி ஊரை கூப்பிடு" என்றவன் அவளை விடுத்து அமைதியாக கண்களை மூடி சுவரில் சாய முற்பட்டான், அதனால் அதீத வலியால் பல்லை கடித்துக் கொண்டு பெரு மூச்சு விட்டான்.


"ஸ்ஆ" என்று முதுகை பிடித்துக் கொண்டு அவன் கத்தவும், அவன் அருகில் கல் குண்டு போல அமர்ந்து இருந்தாள் சங்கவி.


அவனை கண்டு சிறிதும் அவள் பரிதாப படவில்லை… அதனை அவனும் எதிர்பார்க்கவில்லை இருந்தும் இந்த காயத்துக்கு மருந்தாக ஏதாவது கிடைத்தால் நலமாக இருக்குமே என்ற எண்ணத்தில் அவளது முகத்தை நேருக்கு நேராக பார்த்தான்.


கலங்கம் இல்லாத அந்த பிறை முகத்தின் கண்கள் கவலைகளை சுமந்தபடி இருந்தது.


அதனை உணர்ந்தவன் தன் வலிகளை மறந்து "உனக்கு ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.


இப்போதைக்கு அவளது பிரதான பிரச்சனையாக நாம் நினைக்க கூடிய இவனே அவளிடம் 'என்ன பிரச்சனை?' என்று கேட்க…


'உன்னை மீறிய பிரச்சனையில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்… நீயோ! இல்லை இப்போது நாம் இருக்கும் இந்த சூழ்நிலையோ! இதை எல்லாம் சிந்திக்க கூட மனமில்லாமல் தவிக்கும் ஒரு வாழ்க்கையை தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்பது போல விரக்தியாக அவனை ஒரு பார்வை பார்த்தாள் அந்த பதினேழு வயது இளம் பெண்.


அந்த பார்வைக்கான அர்த்தம் இவனுக்கு விளங்கவில்லை… ஆயினும் அந்த பார்வை இவனது மனதை சற்று அசைத்து பார்த்தது.


இருமுறை இமை தட்டி முழித்தவன் "காயத்துக்கு போட மருந்து ஏதாவது வச்சு இருக்கியா?" என்று கேட்டான்.


"ஹான்" சட்டென கேட்டதும் அவளுக்கு விளங்கவில்லை.


"மருந்து இருக்கான்னு கேட்டேன்"


"எதுக்கு?" என்று அவள் கேட்டதும்… தன் சட்டை பட்டனில் கை வைத்து, அதனை கழட்ட ஆரம்பித்தான்.


"என்ன பண்ணுற" என்றவள் அமர்ந்தபடியே ஒரு அடி தள்ளி நகர, அவளை சலிப்பாக ஒரு பார்வை பார்த்தவன் கடினப்பட்டு தன் சட்டையை கழட்டி முதுகு புறத்தை காட்டினான்.


வேலி கம்பி நன்றாக குத்தி கிழித்ததில் சதை வரை ஆழமாக காயம் ஏற்பட்டிருந்தது… இன்னும் அவ்விடத்தில் எல்லாம் ரத்தம் கசிந்த வண்ணம் இருக்க… மிடறு விழுங்கி முகம் சுளித்தாள் பெண்ணவள்.


ஒருபக்கம் அவனை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் "மருந்து கொடுத்தா இங்கிருந்து போயிடுவீங்க தானே?" என்று மெதுவாக கேட்டாள்.


"ம்ம்ம்" என்ற ஒரு ஒலி மட்டுமே அவனிடம் இருந்து பதிலாக வந்தது.


'தனியாக வேறு இருக்கிறோம், இவன் வேறு பார்ப்பதற்கே பொறுக்கி போல இருக்கிறான். இப்போது கத்தி கூப்பாடு போட்டு இவனை பிடித்து கொடுத்து விட்டோம் என்றால், நாளை இவன் சொன்னது போலவே திரும்பி வந்து நம்மை ஏதாவது செய்து விட்டால் என்னவாவது? அதனால் இப்போதைக்கு பொறுமையாகவே இருப்போம்… எப்படியாவது ஆர்ப்பாட்டமில்லாமல் இவனை இங்கிருந்து அனுப்பி வைத்து விடுவோம். அது தான் நமக்கு நல்லது' என்று யோசனை செய்து கொண்ட சங்கவி அமைதியாக உள்ளே சென்று மஞ்சளை எடுத்துக் கொண்டு வந்தாள்.


உள்ளே அவள் பாட்டி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். உள்ளே சென்ற சங்கவியை நோட்டமிட்டு கொண்டே பின்னே வந்து நின்றான் அந்த கொடியவன்.


"இங்க எதுக்கு வந்தீங்க?" என்றவள் அதீத பயத்தில் அவளது பாட்டியை பார்க்க…


"இது யாரு?" என்று அவளது பாட்டியை குறிப்பிட்டு கேட்டான் அவன்.


"அவங்க என் பாட்டி… அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க"


"நாளைக்கு சாகபோற கிழவியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை… அப்படியே வெளியே போயி, என்னை பத்தி சொல்லி உதவிக்கு யாரையும் கூப்பிட்டு வந்திடுவியோன்னு நினைச்சு தான் உன் பின்னாடி வந்தேன்… சரி வா பின் பக்கம் போலாம்"


"நான் எதுக்கு வரணும்? இந்தாங்க இது மஞ்சள் பொடி இதை காயத்துல போட்டுட்டு இங்கயிருந்து கிளம்புங்க"


"உன்னை நான் நம்புறதா இல்லை… வா" என்றவன் அவளது கரத்தை பிடிக்க போக, விலகி கொண்டாள்.


"ஏய் ரொம்ப பண்ணாத என்னால ரொம்ப நேரம் நிற்க முடியல… இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வையேன், ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு அங்க இருக்க அம்மி கல்லை தூக்கி அந்த கிழவி மண்டையில் போட்டு கொன்னுருவேன்" என்றதும் சிறுபிள்ளை மிரண்டது.


இவன் இருக்கும் உடல் நிலைக்கு இதுவெல்லாம் அவனால் செய்ய முடியுமா என்று கூட சிந்திக்க முடியாத பேதையாகி நின்றாள் சங்கவி. அவளது வயதின் முதிர்ச்சி அவ்வளவு தான்.


அவன் சொல்லிற்கேற்ப இருவரும் வீட்டின் பின் புறம் வந்தனர். அப்போது அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தான் அந்த கொடியவன்.


சங்கவியோ அவனை விட்டு இரு அடி தள்ளி நின்று கொண்டிருந்தாள்.


மஞ்சள் தூளை எடுத்து தன் முதுகில் உள்ள காயத்தில் போட பார்த்தான் அக்கொடியவன், ஆனால் முடியவில்லை, வெகு நேரம் முயன்றான், அந்நேரம் சங்கவியோ அமைதியாக எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது உடல் இங்கிருந்த போதும் மனமோ இன்று மாலை கடையில் நடந்த அந்த சம்பவத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தது.


சங்கவி வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் கழிவறைக்கு தாழ்ப்பாள் கிடையாது. நான்கு நாட்களுக்கு முன்பு தான் அது உடைந்தது அதனை இன்னும் யாரும் சரி செய்யவில்லை. அதனால் எப்போதும் கவனமாக தான் உள்ளே சென்று விட்டு வெளியே வருவாள் சங்கவி.


பெண் பிள்ளை ஒன்று இங்கு வேலை செய்கிறது என்ற காரணத்தால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்களும் கூட கொஞ்சம் கவனமாக தான் அங்கு சென்று வருவார்கள். சிறு தயக்கமும் இருக்கும். அதனாலயே சங்கவி எப்போது உள்ளே சென்றாலும் கதவின் மேல் தன் துப்பட்டாவை போட்டு வைத்து விடுவாள். அதனை பார்த்த பிறரும் சரியாக கவனித்து கொண்டு மற்றவர்கள் அங்கிருந்து சென்று விடுவார்கள்.


இன்று அந்த கடையின் முதலாளி சங்கவியை தனியே அழைத்து ஒரு சுடிதாரை பரிசாக கொடுத்தார். ஆரம்பத்தில் அவள் அதனை வாங்க மறுத்தாள், பின்னர் வேறு வழியின்று அதனை வாங்கிக் கொண்டாள்.


எப்போதும் இல்லாத திருநாளாக "சாப்பாடு போடு கவி" என்று சொன்னான் அந்த முதலாளி.


அவன் கேட்டவிதம் பெண்ணவளுக்கு வினோதமாக இருந்தது.


உணவகத்துக்கு ஒட்டி மறைவாக இருந்த ஒரு அறையில் முதலாளி அமர்ந்திருக்க… இலையை எடுத்துக் கொண்டு வந்து போட்டாள் சங்கவி.


"அண்ணா முதலாளிக்கு பரிமாறனும்" என்று கஷ்டமார்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்த ஒருவனிடம் கூறினாள். அவனுக்கோ பெரும் ஆச்சர்யம் 'முதலாளி எப்பவும் இங்க சாப்பிட மாட்டாரே' என்று யோசித்தவன் சந்தேகமாக உள்ளே வரவும்… சிரித்தார் போல முகத்தை வைத்துக் கொண்டு அங்கு உணவுக்காக இலையை வைத்துக் கொண்டு காத்திருந்தார் முதலாளி.


இவனும் கூட்டு, பொரியல் அடுத்து சாதம் என பறிமாறினான். சாம்பார் வாளியை எடுத்து வைத்தவன் அதனை சாதத்தில் ஊற்ற போகவும் கையை வைத்து தடுத்து அவனை பார்த்து ஒரு முறை முறைத்தார் அந்த முதலாளி.


'வெளியே போ' என்று பார்வையாலே அவனை அங்கிருந்து அனுப்பி வைக்க… பாவம் போல ஓரத்தில் நின்ற சங்கவியை ஏதோ போல பார்த்து விட்டு அவனும் அங்கிருந்து சென்றான்.


"அவனுக்கு வெளியே வேலை இருக்கும் கவி… நீ வா வந்து சாம்பாரை ஊத்து" என்ற முதலாளி சாதத்தை விரவியபடி சங்கவியை ஒரு மார்க்கமாக பார்த்தான்.


அவளும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாம்பாரை எடுத்து ஊற்ற போகவும், அவளது கரத்தை பிடித்தவன் 'இப்படி ஊத்தனும் கவி" என்று அவள் கரத்தை வளைக்க… அந்த நொடி அவனது இன்னொரு கரம், பாவையின் உடல் மீது உரசி சென்றது, அதனை உணர்ந்த பெண்ணவளின் உடல் கூசி போனது… உடனே அங்கம் அதிர்ந்து கரத்தை உதறினாள், அதன் விளைவாக அவளது உடை மீது சாம்பார் கொட்டியது.


"ஐயோ கவி என்ன இப்படி பண்ணிட்ட?... சரி போ போயி சுத்தம் பண்ணிட்டு வா போ" என்றவன் அவளை தொட்டு தொட்டு அருகில் வர, வேகமாக வெளியே வந்த பெண்ணவளின் கண்களில் தன்னிசையாக கண்ணீர் வழிந்தோடியது.


நேராக கழிவறைக்குள் புகுந்தவள், தன் துப்பட்டாவை எடுத்து கதவில் போட்டு விட்டு, அழுது கொண்டே தன் மேல் சிந்தி இருந்த சாம்பாரை துடைக்க ஆரம்பித்தாள்.


ஏனோ மனம் எல்லாம் பதறியது… இப்போதே இங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது போல இருந்தது. இந்த சூழ்நிலையை மேலும் சங்கடமாக்கும் விதமாக பட்டென கழிவறை கதவுகளை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தான் அந்த முதலாளி.


அவனை கண்டு அதிர்ந்து போனவளின் உடல் கூசி போனது.


"சுத்தம் பண்ணிட்டியா கவி… சும்மா பார்க்கலாம்னு தான் வந்தேன்…" என்று சொன்னபடி அவளை மேலும் கீழும் பார்த்தவன் "நல்லா சுத்தம் பண்ணல போலயே… இதோ இங்க என்னமோ இருக்கு பாரு" என்று சொல்லி அவள் மார்பில் கை வைக்க, துடித்து போனவள், அவனை தள்ளி விட்டுவிட்டு அழுது கொண்டே வெளியே வந்தாள்.


வெளியே இருந்தவர்கள் நனைத்தபடி வெளியே வந்த அவளை ஒரு மாதிரி பார்த்தனர். அப்போது அங்கு பணிபுரியும் ஒருவன் "என்ன ஆச்சுமா" என்று கேட்டான்.


நடந்ததை வெளியே சொல்ல அவமானமாக இருந்ததால் "பாத்ரூம்ல விழுந்துட்டேன்" என்று கூறியடி நேரத்தை பார்த்தாள். மணி இரவு 8.15, உடனே "நான் கிளம்புறேன் அண்ணா" என்று கூறிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள் சங்கவி.


அந்த முதலாளியோ கதவில் கிடந்த சங்கவியின் துப்பட்டாவை எடுத்து முகத்தில் வைத்து முகர்ந்து பார்த்தபடி கண் சொருகி நின்றான்.


நடந்த இதனை எல்லாம் நினைத்து பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கவியின் கண்களில் சட்டென ஒரு துளி கண்ணீர் வழிய, அதனை கவனித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் அந்த கொடியவன்.


"இப்போ எதுக்கு அழற?" என்று கேட்டான் அவன், அவளிடம் பதில் இல்லை… இன்னும் அழுது கொண்டே இருந்தாள். உடனே "ஏய் உன்னை தான்" என்றவன் அவளது கரத்தை பிடிக்க… "ச்சீ" என்று கூறி கேவலமாக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.


அந்த பார்வை இவனது சுயமரியாதையை சீண்டியது. "இப்போ எதுக்கு ச்சீ ங்குற?" கோவமாக கேட்டான், அவளோ எந்த பதிலும் சொல்லவில்லை அப்படியே அமைதியாக அவனை கடந்து சென்று, அவனை வெளியே விடுத்து விட்டு பின் வாசல் கதவை சட்டென மூடினாள்.


"நான் யார் கிட்டயும் உங்களை பத்தி சொல்ல மாட்டேன்… இருக்குற பிரச்சனையே எனக்கு போதும்… தயவு செய்து இங்கேயிருந்து போயிடுங்க" என்று கூறியவள் அமைதியாக உள்ளே வந்து தன் பாட்டியின் அருகில் ஒரு பாயை விரித்து படுத்துக் கொண்டாள்.


அடுத்தநாள் அவள் எழுந்து வெளியே வர, அந்த கொடியவன் அங்கு இல்லை… ஆனால் அங்கு சிதறி கிடந்த மஞ்சள் தூளும், ரத்த கசடும் அவனை இவளுக்கு நியாபகப்படுத்தியது. பாட்டி எழுந்து வெளியே வரும் முன்னே அவ்விடத்தை சுத்தம் செய்து முடித்தவள் இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

பகுதி 31


******


அடுத்தநாள் சங்கவி வேலைக்கு செல்லவில்லை…


பாட்டி எவ்வளவு தான் காரணம் கேட்டும், ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக அந்த வீட்டையே சுத்தி வந்தாள்.


அப்படியே நேரம் செல்ல… மதியம் ஒருமணி போல சங்கவியின் வீட்டுக்கு வந்தான் அவளது முதலாளி. வந்தவன் இவளது பாட்டியிடம் அன்பாக பேசி விட்டு சங்கவியிடமும் நேற்று நடந்த தவறுக்காக மனதார மன்னிப்பு கேட்டான்.


இவளுக்கும் வேறு வழி இல்லை… வேலைக்கு சென்றால் தான் அடுத்தவேளை உணவு என்ற கட்டாயத்தில் இருந்ததால் அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு மீண்டும் அந்த கடைக்கு வேலைக்கு சென்றாள்.


அடுத்தநாள் எப்போதும் போல வேலைக்கு வந்தாள்… ஒரு நான்கு நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயல்பாக சென்றது. அந்த இயல்பினால் நடந்த கசப்பான சம்பவத்தை கொஞ்சம் மறந்து விட்டு தினமும் வேலைக்கு வர ஆரம்பித்தாள் சங்கவி. அப்படியான ஒருநாளில் இரவு 7 மணி வரை வேலை நன்றாக போனது. அதன் பிறகு காய்கறி வெட்டிக் கொண்டிருக்கும் இடத்துக்கு சங்கவியை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான் அந்த கடையின் முதலாளி. அவனது பார்வையை சங்கவி அறியவில்லை வெளியே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவன் உள்ளே சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு… "ஐயோ" என்று ஒரு சத்தம்.


"வெங்காயம் வெட்டும் போது கையை வெட்டிட்டான், ரத்தம் நிற்காமல் வருது இவனை உடனே ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போ" என்று அந்த காயம் பட்டவனுடன் துணைக்கு இன்னொரு நபரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தான் அந்த முதலாளி.


இப்போது கடையில் மீதம் இருப்பது… இரு வேலையாட்கள் அவர்களுடன் சங்கவி மற்றும் அந்த முதலாளி.


நேரம் சென்றது மணி இரவு 9.30 ஆனது, சாப்பிட வரும் நபர்களை கவனிக்க ஆட்கள் இல்லை என்று கூறி சங்கவியை இன்னுமே கடையில் நிறுத்தினான் அந்த முதலாளி… அவளுக்கும் வேறு வழி இல்லை… அமைதியாக வேலைகளை பார்த்தாள். ஆரியன் அவள் வருகையை எதிர்பார்த்து காத்து இருந்தான்.


***

"என்னடா அவள் இன்னும் வரல" என்று எப்போதும் போல சங்கவியின் வருகையை எதிர்பார்த்து அந்த டீக்கடை மரத்தின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான் ஆரியன்.


"நேரம் ஆச்சு ஆரி… எங்க வீட்டுல தேடுவாங்கடா வா போகலாம்… அவள் ஒருவேளை நம்ம வர்றதுக்கு முன்னாடியே இங்கேயிருந்து போயிருக்கலாம்ல… எதுவா இருந்தாலும் நாளைக்கு காலையில் பார்த்துக்காலம்டா… நம்ம இப்படி அந்த பெண்ணுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறது மட்டும் உன் தாத்தாவுக்கு தெரிச்சா பிரச்சனை ஆகிடும்… சொன்னா கேளு" என்று கூறி ஒருவழியாக ஆரியனை அங்கிருந்து அழைத்து சென்றான் விவேக்.


****


கடைக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது, சங்கவி கண் முன்னே மீதம் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரு நபர்களையும் அங்கிருந்து அனுப்பி வைத்தான் அந்த முதலாளி.


"அப்போ நானும் போறேன்" என்று சொல்லி சங்கவி கிளம்ப தயாராகவும், "பாத்திரத்தை எல்லாம் மட்டும் கழுவி வச்சிட்டு கிளம்பிடு கவி" என்று சொன்ன அந்த முதலாளி அவளது பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.


இவளும் வேறு வழி இல்லாமல் பத்திரங்கள் கிடக்கும் இடம் நோக்கி சென்றாள். மலை போல குவிந்து கிடந்தது. ஒவ்வொன்றாக கழுவ ஆரம்பித்தாள்.


கிடக்கும் பாத்திரங்களை எல்லாம் விளக்கி கொண்டே கடிகாரத்தை பார்த்தாள் சங்கவி, மணி இரவு பத்தாக இருந்தது.


நேரம் சென்று கொண்டே இருந்தது… குவிந்து கிடக்கும் பாத்திரங்களை கண்டால் அனைத்தையும் கழுவி முடிக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகிவிடும் போல தெரிந்தது, நேரம் ஆக ஆக அவள் மனதில் இனம் புரியாத ஒரு பதட்டம் உருவானது.


அங்கு அவளது கடையின் முதலாளியோ கணக்கு வழக்குகளை பார்த்தபடி அமர்ந்து கொண்டிருந்தான்.


இவளையும் அவரையும் தவிர கடையில் இப்போது ஒருவரும் இல்லை…


நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு வேறு பெண்ணவளின் அடி மனதில் தேங்கி நின்று பெரும் பயத்தை கொடுத்தது.


கைகள் அதன் வேலைகளை வேகவேகமாக செய்து கொண்டிருந்த போதும்… மனம் பதட்டம் கொண்டதனால் காலம் விரயாமானது. அதனால் ஒரு மணிநேரத்தில் முடியவேண்டிய வேலை இன்னும் முடியாமல் இருந்தது. இப்போது மணி இரவு பதினொன்று என கடிகாரம் காட்டியது.


***


இங்கு பேத்தியை காணவில்லை என்று தவித்து போன சங்கவியின் பாட்டி… அந்த முடியாத காலத்திலும் வாசலையே எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.


சுற்றி இருந்த அனைத்து வீடுகளின் விளக்குகளும் அணைக்கபட்டுவிட்டது. தெரு நாய்கள் தொடர்ந்து ஊலையிட்டுக் கொண்டிருந்தது… அந்த சூழல் பாட்டிக்கு மேலதிகமான பயத்தை கொடுத்தது.


பொறுத்து பொறுத்து பார்த்த பாட்டி, தன் பேத்தியின் மீது கொண்ட பாசத்தினால், ஊன்று கோலை எடுத்துக்கொண்டு தள்ளாடி நடக்க ஆரம்பித்து விட்டார்.


சங்கவி வேலை பார்க்கும் கடையை நோக்கி மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தவரை சுற்றி வளைத்து நின்று குறைத்தது அங்கிருந்த தெரு நாய்கள். நாயை விரட்ட வழி தெரியாமல் பதறி போன பாட்டியோ, தன் கையில் வைத்திருந்த கொம்பை கொண்டு அந்த நாய்களை துரத்த பார்த்தார்… ஐயோ பரிதாபம் பிடிமானமின்றி கீழே தடுக்கி விழுந்தார். கீழே விழுந்தவரை அந்த நான்கு கால் பிராணி சும்மா விடுமா? குறைத்து கொண்டே கடிக்க முன்னேறியது.


***


இங்கு கடையில், இன்னும் இரண்டு பெரிய கடாய்கள் கழுவுவதற்காக கிடக்க, அதனை கண்டு பெரும் மூச்சு விட்டாள் சங்கவி,


'இது சரிவராது நேரமாச்சு பாட்டி வேற தேடிட்டு இருப்பாங்க, நாளைக்கு காலையில் வந்து இதை கழுவி போட்டிடுவோம்'

என மனதில் நினைத்துக் கொண்டு இதனை முதலாளியிடம் கூறிவிட்டு இங்கிருந்து சென்று விடலாம் என்று எண்ணி "அண்ணா" என்று அழைத்தவாறு அவள் திரும்ப… ஒரு நொடி திடுக்கிட்டு போனாள், அங்கு அவளை பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான் அவளது முதலாளி.


திடீரென தனக்கு பின்னால் அவனை கண்டதும் திடுக்கிட்டு போனவள், தடுமாறி கீழே விழ போக… "அச்சச்சோ பார்த்து கவி விழுந்திட போற" என்று கூறி அவளது இடையில் கரம் கொண்டு பிடித்தான்.


அவனது கரம் பட்டதும் அனலிடபட்ட புழுவை போல தனக்குள் துடித்து போனவள், உடனே அவன் பிடியில் இருந்து விலகினாள்.


அவன் ஸ்பரிசம் பட்டதும் பெண்ணவளின் உடல் நடுங்கியது "நான்… நான்" வார்த்தை தடுமாறியது.


"என்ன ஆச்சு கவி" என்று அவன் அவளது தோள்பட்டையில் கை வைக்க, தலை குனிந்து நின்றவளின் விழி விளிம்பில் பூத்த கண்ணீர் துளி நொடியில் உதிர்ந்து விழுந்தது.


"கவி அழறியா?" என்று கேட்டவன், அவளது கன்னத்தை தொடவும் "நான் போறேன்" என்று கூறி அங்கிருந்து செல்ல பார்த்தாள்.


"என்ன கவி இப்படி பொறுப்பு இல்லாமல் பேசுற? இப்போ நீ போனால் இந்த பாத்திரம் எல்லாம் யார் கழுவி வைக்கிறது? இன்னைக்கு இதை கழுவி வச்சா தானே நாளைக்கு காலையில ஆளுங்க எல்லாம் வந்து சமைக்க முடியும்"


"நாளைக்கு தான் அந்த அண்ணா வேலைக்கு வந்திடுவாறே… அவரே கழுவிப்பாரு… நேரம் ஆச்சு நான் போகணும்"


"அவன் இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பக்கமே வர மாட்டான் கவி, கையிலே அவளோ பெரிய காயம் அதான் நீயே பார்த்தியே, இப்போ தான் போன் பண்ணான், காயம் ரொம்ப ஆழமா இருக்காம்"


"இல்லை நான் போகணும்"


"இன்னும் ரெண்டு பாத்திரம் தானே கவி… உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு, நான் உதவி பண்ணுறேன் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கழுவி வச்சிட்டு போகலாம்"


"இல்லை வேண்டாம் நான் போகணும்" என்றவள் அதித பயத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.


"அச்சச்சோ கவி இங்க வா ஏன் இப்போ இவ்ளோ பயப்படுற? அன்னைக்கு நடந்த விசயத்தை நீ இன்னும் மனசுல வச்சிட்டு இருக்கியா? இங்க வந்து உட்காரு" என்றவன் குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு ஜூஸ் பாட்டிலை எடுத்து திறந்து அவளிடம் குடிக்க கொடுத்தான்.


"இல்ல வேண்டாம்" அவள் வாங்க மறுத்தாள்.


"இங்க பாரு கவி அன்னைக்கு ஏதோ போதையில் அப்படி நடந்துகிட்டேன் அதான் அடுத்தநாள் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேனே, அப்போ நீ இன்னும் என்னை மன்னிக்கலயா? சரி நீ கிளம்பு நானே இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி போட்டுட்டு போறேன்… நீ கிளம்பு கவி கிளம்பு" என்றதும் ஒரு நொடி யோசித்தவள் அடுத்த கணமே அங்கிருந்த தன் பர்ஸை எடுத்துக் கொண்டு வாசல் நோக்கி சென்றாள்.


வாசல் கதவு தாழிடப்பட்டருந்தது… அதனை கண்டு மீண்டும் அவளது கண்மணிகள் உவர்நீரால் முழ்கி சிவந்து போனது.


உதடு துடிக்க கலங்கி நின்றவள் பூட்டிய கதவை இழுத்தபடியே திரும்பி பார்க்க… அங்கு அவள் முதலாளியோ மது பாட்டில் ஒன்றை கையில் வைத்தபடி சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்தான்.


மதுபாட்டிலை திறந்து, குவளையில் அதனை நிறப்பியபடியே "என்ன கவி இன்னும் போகலயா?" என்று கேட்டான்.


"அண்ணா என்ன அண்ணா இதெல்லாம்? எனக்கு பயமா இருக்கு கதவை திறக்க அண்ணா" என்றதும் ஒரே மடக்கில் குவளையில் ஊற்றிய மொத்த மதுவையும் குடித்தவன்

"அண்ணா அண்ணான்னு சொல்லாதடி எரிச்ச ம*றா இருக்கு" என்று கத்தியபடி கையில் இருந்த கண்ணாடி குவளையை அவளை நோக்கி தூக்கி எறிந்தான்.


அவன் எறிந்த குவளை அவள் கால் அருகே உடைந்து சிதற, பயத்தில் நெஞ்சை பிடித்தபடி துடிதுடித்து நின்றாள் சங்கவி.


***


இங்கு வீட்டுக்கு வந்த ஆரியனுக்கு மனம் இருப்பு கொள்ளவில்லை… சங்கவியின் எண்ணம் அதிகமாக வந்தது. அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று மனம் அடித்துக் கொண்டே இருந்தது. பொருத்து பொருத்து பார்த்தான் முடியவில்லை என்றதும் நேராக சங்கவியின் வீடு நோகி வாகனத்தை செலுத்தினான்.


இந்நேரத்தில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் தன் பேரனை, மேல் அறையின் சன்னல் வழியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டனின் தந்தையான ஆரியனின் தாத்தா.


***

"அண்ணா என்னை விட்டுடுங்க அண்ணா" என்று கதறி துடித்த பெண்ணவளின் ஆடைகளை பிடித்து இழுத்தான் அந்த கடையின் முதலாளி… அவனிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் நோக்கில் அருகில் இருந்த ஒரு சோடா பாட்டிலை எடுத்து அவன் மீது எறிந்தாள் சங்கவி.


அந்த பாட்டில் அவனை காயப்படுத்தியது, வழிந்த ரத்தத்தை மூர்க்கமாக பார்த்தவன், கொலை வெறியுடன் சங்கவியை நெருங்கினான்.


"என் மேலயே கை வைக்கிறியாடி***" என்று தகாத வார்த்தையில் சரமாரியாக திட்டியபடி அவளது கொண்டை முடியை பிடித்து இழுத்தான்.


வலி பொறுக்க முடியாமல் கத்தியவளின் வாயை அழுத்தமாக மூடினான். அவனது பிடியில் இருந்து விடுபட எண்ணி தன் முழு பலம் கொண்டு அவனை பிடித்து தள்ளினாள் சங்கவி. ஆனால் அவன் தடுமாறினானே தவிர கீழே விழவில்லை… உடனே மிகுந்த கோவத்தில் அங்கு அடுப்பில் எரிந்து முடித்து எடுத்து வைக்கப்பட்ட கொல்லி கட்டையை எடுத்து சங்கவியின் முகத்தில் ஓங்கி அடித்தான் அந்த முதலாளி.

அவளது ஆடைகளை களைத்து, அவளது துப்பட்டாவை கொண்டு அவளது இருக்கைகளையும் கட்டி போட்டவன் அவளை நெருங்கிய நொடி, திடீரென பெருச்சாளி ஒன்று அவன் காலில் உரசி செல்ல, ஒரு கணம் பதரியவன் அவளை விட்டு எழுந்து கொண்டான். அந்த நொடியை பயன்படுத்தி கொண்ட சங்கவி கோவத்தில் தலையை கொண்டே அவனை முட்டி தள்ளுனாள். அதன் வேகத்தில் நிலை தடுமாறி அருகில் இருந்த க்ரைண்டரில் தலை மோதி விழுந்தான் அந்த முதலாளி.


அந்நொடி பின் பக்க வழியை கடந்து அந்த ஹோட்டலுக்குள் நுழைந்திருந்தான் இன்னோருவன்.


சங்கவியை காக்க எண்ணி அந்நொடி அங்கு வந்தவன் ஆரியன் அல்ல!

அவள் பார்வையில் நான்கு நாட்களுக்கு முன்பு கொடியவனாக தெரிந்த மதிவாணன்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer



பகுதி 32


தெரு நாய்கள் சங்கவியின் பாட்டியை கடிக்க முன்னேறவும் அதனை அவ்வழியே வந்த மதிவாணன் பார்த்து விட்டான். அன்று முதுகில் காயத்துடன் போலீசுக்கு பயந்து சங்கவியின் வீட்டில் தஞ்சம் புகுந்தவனும் இவன் தான்.


வயதான ஒருவரை நாய்கள் சுற்றி வளைத்ததை கண்டதும் தனது பைக்கில் இருந்து கீழே இறங்கியவன், அந்த நாய்களை அங்கிருந்து விரட்டினான். பாட்டியோ மிரண்டு நடுங்கியபடி கீழே அமர்ந்திருந்தார்.


"ஹே கிழவி என்ன ஆச்சு? அதுங்க எதுவும் உன்னை கடிச்சிடுச்சா?" அவனுக்குத் தெரிந்த மரியாதை இவ்வளவு தான்.


"இல்லப்பா" என்றவர் தடுமாறி எழுந்து நிற்க பார்க்கவும்… "இரு இரு" என்ற மதிவாணன் அவரை பிடித்து தூக்கினான்.


வயதானவர் என்பதனால் கீழே விழுந்ததில் கால் மூட்டுகளிலும் கைமூட்டுகளிலும் பயங்கரமாக வலி ஏற்பட துவங்கியது.


அந்த வலியை மீறியும் தன் பேத்தியை எண்ணி கவலை கொண்ட பாட்டி "யய்யா அந்த கை தடியை எடுத்து கொடுயா" என்று கேட்டார்.


அதனை எடுத்து கொடுத்தவன்… "நீ எங்கே போகணும் சொல்லு அங்கேயே கொண்டுபோயி உன்னை விடுறேன்… ஆமா இந்த நேரத்தில நீ இங்க என்ன பண்ணுற?" இப்போதுதான் நான்கு நாட்களுக்கு முன்பு சங்கவியின் வீட்டில் வைத்து பார்த்த இந்த பாட்டியின் முகம் இவனுக்கு ஞாபகம் வந்தது.


வெகு நேரமாக எங்கேயோ பார்த்த முகமாக உள்ளதே என்று சிந்தித்துக் கொண்டே இருந்தவனுக்கு இப்போது தான் அவரை அடையாளம் தெரிந்தது.


'இந்த நேரத்தில் இந்த கிழவியை வெளியே உலாவ விட்டுட்டு அவள் என்ன பண்ணுற?' என்று சங்கவியை சலித்துக் கொண்டவன் "வா உன்னை கொண்டு போய் உங்க வீட்ல விட்டுடுறேன்" என்று சொல்லியபடியே இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.


"இல்லப்பா வேலைக்கு போன என் பேத்தி இன்னும் வீட்டுக்கு வரல ரொம்ப நேரம் ஆச்சு அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல அதான் அவள் வேலை செய்ற இடத்துக்கு போய் பார்க்கலாம்ன்னு போறேன்"


"அப்படியா…" என்றவன் இரு நொடி மௌனத்திற்கு பிறகு "எப்பவும் உன் பேத்தி இப்படி லேட்டா தான் வீட்டுக்கு வருவாளா?" என்று கேட்டான்.


ஒழுங்காக வாராத தலைமுடி, அழுக்கு கலரில் கட்டம் போட்ட சட்டை அதில் முன் இருபட்டன்கள் திறக்கப்பட்டு உடல் காற்று வாங்கிக் கொண்டிருந்தது, கழுத்தில் ஒரு வெள்ளி சங்கிலி… இப்போதுதான் மதிவாணனின் தோரணையை முழுதாக கண் கொண்டு பார்க்கிறார் சங்கவியின் பாட்டி… 'பார்ப்பதற்கு பொறுக்கி போல இருக்கிறானே இவனிடம் தன் பேத்தியை பற்றி கூறுவதா! வேண்டாமா! என்று வெகு நேரம் சிந்தித்துக் கொண்டு அமைதியாக நின்றார்.


"என்ன கிழவி பதிலே காணோம் ஆமா உன் பேத்தி எங்க வேலை பார்க்கிறா?" முதல் கேள்விக்கே பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் நின்று கொண்டிருந்த பாட்டியிடம் இரண்டாவது கேள்வியை கேட்டான்.


அதன் பேத்தியை பற்றி தன்னிடம் சொல்ல இந்த கிழவி தயங்குகிறது என்பதை ஒரு அளவுக்கு புரிந்து கொண்ட மதி "நானே கொண்டு போயி உன்னை விடுறேன் இடத்தை சொன்னாதானே என்னால முடிஞ்ச உதவியை பண்ண முடியும்" என்ற பின்பு, இவருக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது.


"ஆலமர சிவன் கோயில் பக்கத்துல இருக்க சாப்பாட்டு கடையில தான் என் பேத்தி வேலை பார்க்குறா… எப்போவும் 8 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவா ஆனால் இன்னிக்கு என்ன ஆச்சோ தெரியல இன்னும் அவளை காணோம்"


"சிவன் கோவில் பக்கத்துலன்னா எது? கார்த்திகேயன் ஹோட்டலா!" என்று கேட்டவன் சட்டென அதிர்ந்தான்.


அந்தப் பாட்டி ஆம் என்று சொன்னது தான் தாமதம் உடனே "நீ பொறுமையா நடந்து வீட்டுக்கு போ… உன் பேத்தி வருவாள்" என்று கூறி வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த உணவகம் நோக்கி சென்றான்.


சிறிது நேரத்துக்கு முன்பு, மது அருந்திவிட்டு அந்த ஹோட்டல் இருக்கும் இடத்தை கடந்து தான் வந்தான் மதிவாணன். அப்போது சட்டென ஏதோ ஒரு பெண் கத்துவது போன்று சத்தம் அவன் காதில் கேட்க வாகனத்தை நிறுத்தினான். அதன் பிறகு அந்த சத்தம் கேட்கவில்லை.

இரு நொடி அங்கு நின்று அந்த இடத்தை சுற்றி பார்த்தான். அப்போது அந்த உணவகத்தின் பாதி திறக்கபட்ட சன்னல் வழியே ஒரு பெண்ணின் கரம் நொடியில் வெளி வந்து பின்னர் உள் இழுக்க பட்டது… மேலும் ஹோட்டலுக்குள் நிழலாடுவதும் தெரிந்தது… "இருக்கின்ற பிரச்சனை போதும், வேறு எந்த வித பிரச்னையும் வேண்டாம் என்று நினைத்தானோ அல்லது நடப்பவை எல்லாம் தனது பிரம்மை என்று எண்ணினானோ தெரியவில்லை" பெரு மூச்சு விட்டு அங்கிருந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.


இப்போது நடந்தவைகளை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தி பார்க்கையில் நிச்சயம் அது பிரம்மை இல்லை… உள்ளே இருப்பது ஒருவேளை அந்த பெண் சங்கவியாக இருக்குமோ! என்று எண்ணிக் கொண்டு பயணித்தவன் அந்த ஹோட்டலை அடைந்தான்.


இப்போது அந்த உணவகத்தில் எந்த சத்தமும் கேட்கவில்லை… முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது.


அதனால் பின்பக்கம் ஏதாவது வழி கிடைக்குமா என்று தேடிப் பார்த்தான். பாத்ரூம் பக்கம் கிடைத்த வழியில் கடைக்குள்ளே நுழைந்தான்.


உள்ளே வந்து பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி! கை, மற்றும் வாய் கட்டப்பட்டு மறைப்பில்லாத மேனியை முழங்காலிட்டு மறைத்துக் கொண்டு கண்ணீர் வடிய ஒரு நாற்காலியின் மறைவில் மயங்கி கிடந்தாள் சங்கவி.


அவளுக்கு எதிரே ரத்த வெள்ளத்தில் உயிரற்ற உடலாக கிடந்தான் அந்த முதலாளி.


***


இங்கு சங்கவியின் வீட்டிற்கு வந்து பார்த்தான் ஆரியன், வீடு வெளிபக்கமாக தாழிடப்பட்டிருந்தது, அப்போது தான் அவளின் பாட்டி அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்தார், அவரை கண்ட ஆரியன் தயக்கம் கொண்டான், எப்படி சங்கவியை பற்றி அவரிடம் விசாரிப்பது, இந்நேரத்தில் தான் ஏதாவது கேட்க போக அவர் சங்கவியை தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி நின்றான்.


இப்படியான இக்கட்டான நிலையில் எல்லாம் இவனுக்கு ஒரே ஒரு துணை விவேக் மட்டும் தான், அடுத்து நேராக விவேக்கின் வீடு நோக்கி சென்றான்.


இந்த நேரத்தில் வீடு புகுந்து எல்லாம் விவேக்கை இழுத்து வர முடியாது, என்ன? ஏது? என்று காரணம் கேட்டு அனைவரும் குதறி விடுவார்கள் என்று அறிந்த ஆரியன், தூரத்தில் மறைவாக நின்று கொண்டு விவேக்கின் வீடு மீது கல்லை தூக்கி எறிந்தான்.


அந்த சத்தம் கேட்டு விவேக்கின் தந்தை வெளியே வந்தார். அவரை தொடர்ந்து ஒவ்வொருவரும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.


விவேக்கும் கண்களை கசக்கிக் கொண்டு பாதி தூக்கத்தில் வெளியே வந்து நின்றான்.


இறுதியாக ஆரியன் எறிந்த சிறு கல்லானது விவேக்கின் தோள்பட்டை மீது பட்டது.


கல் வந்த திசையை பார்த்தான், நிலவின் ஒளியில் ஆரியனின் பைக் மறைவாக நின்று கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டான்.


அதற்குள் கல் வந்த திசை நோக்கி "எவண்டா அது" என்று கட்டையை தூக்கிக் கொண்டு முன்னேறினார் விவேக்கின் தந்தை.


அங்கு நிற்பது ஆரியன் தான் என்று அறிந்து கொண்ட விவேக்கோ "அப்பா நில்லுங்க எங்க போறீங்க? இருட்டு நேரம் அந்த பக்கம் முழுக்க புதர் மண்டி கிடக்கு, வேணும்னே எவனது மறைஞ்சி இருந்து உன்னை குத்தி கொன்னுட்டா என்ன பண்ணுறது" என்று சொன்னதும் "அபசகுணமா பேசாதடா எழவு எடுத்தவனே" என்று அவனது முதுகில் ஒரு அடி போட்டாள் அவனது தாய்.


"அபசகுணமா பேசலமா, நடக்கிறத சொன்னேன்… அப்படி ஏதாவது நடந்து அப்பாவுக்கு ஏதாவது ஆனால் நமக்கு யாரு இருக்கா? நீயே சொல்லு…"


"ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க… நான் போயி பார்த்துட்டு வரேன்" என்றபடி மேலும் அவனின் தந்தை முன்னேற,


"உங்க யாருக்குமே அப்பா மேல பாசமே இல்லை அவ்ளோதான் அப்பா போக போறாரு எல்லாம் முடிஞ்சுது, அம்மா, அப்பாவை கடைசியா ஒருமுறை பார்த்துக்கோமா… யோவ் தாத்தா நீயும் உன் மகனை நல்லா பார்த்துக்க, அப்படியே நானும்" என்ற விவேக் நீலிக்கண்ணீர் வடிக்க… அவனது தாய்க்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது உடனே வேகமாக ஓடி சென்று தன் கணவனின் கரத்தை பிடித்து உள்ளே இழுத்து வந்தார்.


"எதுக்குடி இப்படி இழுக்குற? என்னை விடு அவன் யாருன்னு கண்டு பிடிச்சு ஒரு திரதிரைக்காம விட மாட்டேன்"


"கொஞ்ச சும்மா இருங்க, உங்க வீரம் எல்லாம் எதுவரைக்கும்னு எனக்கும் தெரியும், அனத்தாம கிடங்க"


"அடியே"


"போதும் போதும் அதான் இப்போ கல் விழுகுற சத்தம் நின்னுடுச்சே போயி படுங்க… எல்லாரும் போங்க டேய் நீயும் போடா" என்று விவேக்கையும் அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு கதவை தாழிட்டார் விவேக்கின் அம்மா.


அவர்கள் எல்லாம் சென்ற பிறகு மெதுவாக வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் விவேக்… அந்நேரம் வரை அவனுக்காக அங்கு தான் காத்துக் கொண்டிருந்தான் ஆரியன்.


"என்னடா பிரச்சனை உனக்கு?" என்று சலிப்பாக கேட்டாலும் ஆரியனின் சொல்லிற்கேற்ப வாகனத்தில் ஏறிக்கொண்டான் விவேக்.


நேராக சங்கவியின் வீட்டை ஒட்டி வாகனத்தை நிறுத்தினான்.


சங்கவியை காணவில்லை என்று அவள் பெயர் சொல்லி அழுதபடியே வாசலில் அமர்ந்திருந்தார் அந்த பாட்டி…


ஒருவழியாக அவர் அறியா வண்ணம் அதனை பக்கத்தில் இருந்து ஒட்டு கேட்டான் விவேக். பின்னர் அதனை ஆரியனிடம் கூறினான்.


"என்னடா அந்த புள்ளையை காணோம்னு இந்த பாட்டி அழுதுட்டு இருக்கு! என்ன ஆகி இருக்கும்"


"தெரியலடா நீ இங்கேயே இரு, எதுக்கும் நான் அவள் வேலை செய்யுற இடத்துக்கு போயி பார்த்துட்டு வந்திடுறேன்"


"அதை அப்போவே பண்ணி இருக்கலாமேடா"


"உன் வீட்டுக்கு வர முன்னாடியே பார்த்துட்டு தான் வந்தேன் ஆனால் கடை பூட்டி இருந்தது… இப்போ இந்த பாட்டி சொல்லுறதை எல்லாம் பார்த்தா இன்னொரு முறை போயி கவனமா பார்த்துட்டு வரணும்னு தோணுது… சரி நீ இங்கேயே இரு"


"டேய் தனியா இங்க எப்படிடா இருக்கிறது… அதான் சங்கவி வீட்டுல அவள் பாட்டி இருக்காங்கல போ…"


"இந்த நேரத்தில் தலைவிரி கோலமா இருக்குற அந்த பாட்டியை பார்த்தாலே எனக்கு பயமா தாண்டா இருக்கு"


"குழந்தை மாதிரி சினுங்கமா ஒழுங்க இரு… ஒருவேளை அவள் இங்க வந்தா எனக்கு தகவல் கொடு"


"தகவல் கொடுன்னா எப்படி என் கையில போன் இல்லடா" என்ற விவேக்கின் கூற்று காற்றில் கரைந்து போனது, அதனை காதில் வாங்காமல் நேராக சங்கவி வேலை பார்க்கும் இடம் நோக்கி சென்றிருந்தான் ஆரியன்.


***

யாரோ அங்கு வந்த சத்தம் கேட்டு குறை மயக்கத்தில் கிடந்த சங்கவியின் இமைகளில் மெல்லிய அசைவு ஏற்பட்டது.


கீழே விழுந்து கிடந்த அந்த முதலாளியை பார்த்த மதிவாணன் சிறு தயக்கத்துடன் அவரை நோக்கி நகர்ந்தான்.


சற்று குனிந்து அவரின் நாசியின் அருகே விரல் வைத்துப் பார்த்தான். அந்த முதலாளியின் மூச்சு நின்று இருந்தது.


பெரு மூச்சு விட்டு அருகில் எட்டி பார்த்தான். அந்த மேசை நாற்காலியின் மறைவில் சங்கவியின் கால் மட்டும் தெரிந்தது.


அதனை கண்டு அவன் உள்ளம் ஒரு கணம் பதறியது. மெல்ல தலையை திசை மாற்றி அவன் பார்க்க… அவள் இருந்த கோலம் கண்டு உடனே முகத்தை திருப்பிக் கொண்டான்.


"*** சே" என்று கோவத்தில் கத்தியவன், அங்கு செத்து கிடந்த முதலாளியை அருவருப்பாக பார்த்தான்..


அங்கு சிதறி கிடந்த அவள் ஆடையை கனத்த மனதுடன் அள்ளி எடுத்தவன் துப்பட்டாவை எடுத்து ஒரு அளவுக்கு அவளது உடலை போர்த்தி மறைத்தான், அவளது கை கட்டை அவிழ்த்து விட்டவன், வாயில் இருந்த துணியையும் எடுத்து விட்டான். அடுத்து அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்ததும். மயக்கம் தெளிந்து மெல்ல கண் விழித்தாள் சங்கவி. எதிரில் மதிவாணனை கண்டதும் மிரண்டு போனவள் "என்னை எதுவும் பண்ணிடாதீங்க நான் வேணும்னு பண்ணல அவர் தான் என்னை என்னை" என்று கதறி அழுது நடந்த விஷயத்தை கூற முடியாமல் தவித்து அழுதாள்.


"ஷ்… அழாத" என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லி இதிலிருந்து அவளை காப்பாற்றுவது என்று தெரியாமல் இவனுமே தவித்து தான் நின்றான்.


அவள் மீது அப்படி என்ன அக்கறை என்று கேட்டால் இப்போது அவனிடம் பதில் இல்லை… ஆனால் அவளை எப்படியாவது இதிலிருந்து காத்து விட வேண்டும் என்பது மட்டுமே அவனது எண்ணமாக இருந்தது.


அவள் அழுகையையும், தவிப்பையும் கண் கொண்டு பார்க்க முடியாமல் தவித்தவன் "என்ன வேணா நடந்து இருக்கட்டும்… உனக்குன்னு நான் இருக்கேன்… உனக்கு ஒன்னும் ஆகாது, கண்டிப்பா எல்லாம் சரி ஆகிடும், நான் சரி பண்ணிடுவேன் என்னை நம்பு" என்று சொன்னவனை இதழ் துடிக்க அழுதபடியே பார்த்தாள் சங்கவி.


"எனக்கு பயமா இருக்கு போலீஸ் வந்து என்னை கைது பண்ணிடுவாங்களா? நான் இல்லனா என் பாட்டிக்கு யாருமே இல்லை…" என்று கூறி கண்ணீர் வடித்தவளை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது.


"உனக்கு ஒன்னும் ஆகாது" என்றவன் இரு நொடி யோசித்த பின்பு "துணியை மாத்திட்டு வா… என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்" என்றவன் அவளுக்கு தனிமை கொடுத்து விட்டு விலகி செல்ல… இவள் பயந்து விட்டாள்.


"எங்க போறீங்க… என்னை போலீஸ் கிட்ட பிடிச்சி கொடுக்க போறீங்களா?" என்று கேட்டவளின் கண்களில் அச்சமும், தவிப்பும் அப்பட்டமாக தெரிந்தது.


திரும்பி நின்றபடியே "இல்லை" என்று தலை அசைத்தான் மதி.


மிரட்சியுடனே ஆடையை மாற்றிக் கொண்டவள்… அழுது வீங்கிய முகத்துடன் அவன் முன்னே வந்து நின்றாள்.


"இங்கேயிருந்து எங்கயாவது போயிடு… உன் மேல எந்த தப்பும் வராமல் இதை நான் பார்த்துகிறேன்,"


"எங்க போக சொல்லுறீங்க, எனக்கு யாரையும் தெரியாது" பயந்தாள்.


"அதெல்லாம் பார்த்துக்காலம் முதலில் இப்போ நீ உன் வீட்டுக்கு போ… இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆள் நடமாட்டம் வந்திடும், அதுக்கு முதலில் நீ கிளம்பு" என்று வலுக்கட்டாயமாக அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.


அவள் சென்றபிறகு உள்ளே வந்து பார்த்தான் மதி. அவள் செய்த கொலைக்கு தான் பழி ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் நினைத்தான்.


ஏற்கனவே தான் ஒரு குற்றவாளி… இதில் இவளுக்காக என இந்த குற்றத்தை ஏற்றுக் கொண்டு சிறை செல்வதில் தனக்கு புதிதாக எதுவும் வந்துவிட போவது இல்லை என்று எண்ணினான்.


சிறை வாழ்க்கையை எத்தனையோ முறை பார்த்து வந்தவன்… முதல் முறையாக முழு மனதுடன் அவளுக்காக பழியேற்று சிறை செல்லத் துணிந்தான்.


சிறிது நேரம் யோசித்தான் 'எனக்கு யாரும் இல்லை நான் எங்க போறது' என்ற சங்கவியின் வார்த்தையே அவன் மனதில் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது… சிறு வயதில் இப்படி ஒரு நிராதரவன நிலையில் இவனும் நின்று இருக்கிறான் என்பதனால் அவளது அதீத கரிசனம் உண்டாக்கியது.


இவனுக்கு தெரிந்த ஒரு பாதுகாப்பான இடத்துக்கு சங்கவியை அனுப்பி வைக்க எண்ணினான், அதனால் அந்த இடத்தை பற்றி அவளிடம் கூறி விட்டு வந்து பின்னர் இதனை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் சங்கவியை தேடி அவள் வீடு நோக்கி வந்தான்.


அந்த உணவகத்தில் இருந்து வெளியே வந்தவன் ஏதோ ஒரு ஞாபகத்தில் உணவகத்தின் கதவை மூடாமல் சென்றிருந்தான். அந்நேரம் சரியாக ஆரியன் அவ்விடம் வந்தான்.


ஹோட்டலின் கதவு திறந்திருப்பதை

பார்த்ததும் எதுவும் யோசிக்காமல் உள்ளே சென்றான் ஆரியன்.


முதலாளி இறந்து கிடந்த அறையில் மட்டும் விளக்குகள் அணைக்கப்பட்டியிருந்தது… வழியில் சிதறி கிடந்த பொருளில் கவணமில்லாமல் முன்னே அடியெடுத்து வைத்த ஆரியன் பொத்தென்று கீழே விழுந்தான் அவன் விழுந்த இடத்துக்கு அருகில் தான் முதலாளியின் சடலம் கிடந்தது… சடலத்திலில் இருந்து வழிந்து கிடந்த ரத்தம் ஆரியனின் முன்பக்க சட்டையில் பரவியது…


அந்த இரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தவன் எழுந்து நின்று வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி வந்தான்.


முன் சட்டை முழுவதும் உதிரம் பரவி இருந்ததை கண்டு அதிர்ந்து போனவன், மிரண்டு போய் பின்னே திரும்பி பார்த்தான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

பகுதி 33



மிரட்சியுடன் தன் கையில் வைத்திருந்த அலைபேசியின் பிளேஷ் லைட்டை ஒளிர செய்தான் ஆரியன்.

தலையில் ரத்தம் வழிந்த வண்ணம் மடிந்து கிடந்தார் அந்த ஹோட்டலின் முதலாளி.

திடீரென அதனை கண்டு பயம் அடைந்தவனின் உடலில் ஒருகணம் எந்த வித அசைவும் இல்லை.

பொழுது விடிய ஆரம்பித்தது, மணி அதிகாலை நான்கு என கடிகாரம் காட்டியது. அருகில் மாடுகளின் சத்தம் ஆரவாரமாக இருந்தது. அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவன் என்ன நினைத்தானோ விறுவிறுவென வெளியே வந்தான்.

வெளியே வந்தவன் யாரையும் கவனிக்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

அங்கு அவன் யாரையும் கவனிக்கவில்லை ஆனால் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் வெளியே சென்ற ஆரியனை கவனித்துக் கொண்டார் சற்று தூரத்தில் பால் கறந்து கொண்டிருந்த நபர் ஒருவர்.

"இது அய்யாகண்ணு பேரன் மாதிரி இருக்கே… சட்டையெல்லாம் ரத்ததோடு இந்நேரத்தில கடையில் இருந்து வெளியே வரான்?" என்றவர் ஒருவித சந்தேகத்துடன் உணவகத்தை நோக்கி வந்தார்.

உணவகம் இப்போதும் திறந்து தான் இருந்தது.

"முத்து லிங்கம்" என்று அழைத்தபடி உள்ளே வந்தான் அந்த பால் வியாபாரி. அந்த கடையின் முதலாளி பெயர் முத்து லிங்கம் தான்.

எப்போதும் நான்கு மணிக்கு முதலாவதாக வந்து கடையை திறந்து விடுவார் முத்து லிங்கம். இப்போதும் அவர் தான் கடையை திறந்து இருப்பார் என்ற எண்ணத்தில் இவர் உள்ளே வந்தார்.

ஆனால் அங்கு அவர் கண்ட காட்சியில் அதிர்ந்து போனவர்… அக்கம் பக்கத்தினரை கத்தி அழைத்தார்.

சிறிது நேரத்தில் போலீஸ் அவ்விடத்தில் கூடியது. இது எதுவும் தெரியாமல் சங்கவி வீடு நோக்கி வந்தான் ஆரியன்.

அங்கு சிதறி கிடந்த பொருள்களும் உடைந்து கிடந்த வளையல் துண்டுகளும் ஏனோ சங்கவியை தான் ஆரியனுக்கு ஞாபகப்படுத்தியது.
அங்கு என்ன நடந்திருக்கும், இதற்கும் அவளுக்கு ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? என்பதனை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பித்து பிடித்த மனநிலையில் அங்கு வந்து சேர்ந்தான்.

சட்டை முழுவதும் இருந்த ரத்தத்தை கூட அவன் கவனிக்கவில்லை! அப்படி ஒரு மனநிலையில் தன்னை மறந்து அங்கு வந்து நின்றான்.

அந்நொடி சங்கவியை அங்கிருந்து அழைத்து செல்ல காரினை எடுத்து கொண்டு வந்தான் மதிவாணன்.

மதிவாணன் காரில் அமர்ந்திருக்க... பின் இருக்கையில் தன் பாட்டியை அமரவைத்தாள் சங்கவி, அவரும் அமர்ந்த பிறகு முன் இருக்கை நோக்கி வந்த சங்கவி, எதிரில் சற்று தூரத்தில் வந்த ஆரியனை கண்டதும் அப்படியே நின்றாள்.

"வண்டியில ஏறு" என்று மதி சொல்லவும், அந்நொடி எப்போதும் போல ஆரியனின் விழிகளும் சங்கவியின் விழிகளும் மோதிக்கொண்டது.

மதியின் வாகனம் புறப்பட்டது... ஆரியன் உறைந்து போய் நின்றான். சட்டென அவனால் எந்த வித எதிர்வினையும் புரிய முடியவில்லை.

ஆரியனை கண்டதும் அவனிடம் ஓடி வந்தான் விவேக் "என்னடா இது சட்டையெல்லாம் ரத்தம்" என்று அவன் சொன்னதும் தான் ஆரியனுக்கு நினைவு வந்தது, உடனே குனிந்து தன் சட்டையை பார்த்தான் பின்னர் வெடுக்கென திரும்பி "சங்கவி" என்று அழைத்தான்.

அவன் அழைப்பு அவளின் செவிகளை அடைந்திருந்தது. மதியும் 'யார் அவன்?' என்று கண்ணாடி வழியே பார்த்தான்.

"இந்த நேரத்தில யார் அது? வண்டியை நிறுத்தனுமா?" என்று சங்கவியிடம் கேட்டான் மதி. பின்னால் திரும்பி பார்த்தாள் சங்கவி. ஒரு நொடி மௌனம் அடுத்த கணமே "தேவையில்லை முதலில் இங்கேயிருந்து போயிடலாம்" என்று சொன்னவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கியிருந்தது. இது ஆரியன் மீது அவள் கொண்ட காதலுக்காகவா? அல்லது அவள் செய்த கொலையின் வெளிப்பாடு மனதை அழுத்தியதாலா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

செல்லும் அவளை பின் தொடர சொல்லி ஆரியனின் மனம் உந்தியது உடனே அவனும் பின் தொடர எண்ணினான். ஆனால் அவன் நேரம் வாகணம் கூட சதி செய்தது.

வாகனத்தை அவனால் உரிய நேரத்தில் உயிர்ப்பிக்க முடியவில்லை. தடுமாறி நின்றான். ஒருவழியாக வாகனத்தை உயிர்ப்பித்தபடி மதிவானனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றான் ஆர்யன். அவன் பின் தொடர்வதை அறிந்து கொண்ட மதி, சங்கவியை பார்த்தான். இந்நேரம் சங்கவியின் பார்வையும் அவன் மீது தான் இருந்தது.

"வண்டியை நிறுத்துங்கள்" என்று உயிர்பில்லாத குரலில் சொன்னாள் சங்கவி, அடுத்தகணம் வாகனம் நின்றது. அவர்களது வாகனம் நிற்கவும், பின்னால் வந்த ஆரியனின் இருசக்கர வாகனமும் நின்றது.

நிலைகொள்ள முடியாமல் வெளியே வந்த சங்கவி நேராக ஆரியனை நோக்கி வந்தாள்.

"கெஞ்சி கேட்குறேன் என் பின்னாடி வராதீங்க" என்று சொல்லி அவன் முன்பு கைகூப்பி நின்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவள் அவனிடம் பேசிய முதல் வார்த்தை. அவளிடம் என்ன கேட்பது என்ன பேசுவது என்று இன்னோடி அவனுக்கும் புரியவில்லை.

"எங்க போற?"

"எங்கேயோ போறேன் தயவு செய்து என்னை விட்டிடுங்க" இந்த அளவிற்கு அவள் பேச கூடியவள் என்பதையே அவன் இப்போது தான் அறிந்து கொண்டான். ஆழ்ந்த மூச்செடுத்தவன் கேட்க எண்ணிய விஷயத்தை நேரடியாக கேட்டான்..

"நீ வேலை பார்த்த கடையில இருந்து தான் வரேன். அங்க அந்த முதலாளி செத்து கிடக்குறான். அதுக்கும் உனக்கும்" என்று அவன் கேட்ட நொடி, மின்சாரம் பாய்ந்த போல அவள் உடல் உதறியது. அவன் முகம் பார்க்க தயங்கினாள். வண்டியில் இருந்து இறங்கி இருக்க கூடாதோ என்று எண்ணினாள்.

அவளது பதட்டமே அனைத்தையும் அவனுக்கு சொல்லாமல் சொல்லியது. "நீ தான் பண்ணியா?" என்று கேட்டான். அந்நேரம் காரில் அமர்த்திருந்த மதி ஹாரனை அடித்து சங்கவியை அழைத்தான்.

"அது யாரு?" காரில் இருக்கும் மதியை பற்றி கேட்டான் ஆரியன்.

"தயவு செய்து இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்க்காதீங்க... நான் எதையும் வேணும்னு பண்ணல, அவர் என்கிட்ட தப்பா, அதனால தெரியாமல் அப்படி பண்ணிட்டேன்... இதை பத்தி யாரு கிட்டயும் சொல்ல வேண்டாம்.. என்னை இங்கேயிருந்து போக விடுங்க. எனக்கு ஏதாவது ஆனால் என் பாட்டிக்கு யாரும் இல்லை. நான் இங்கேயிருந்து போகணும்" என்று கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க கூறியவள் அவனது முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் வேகமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவள் வந்து அமர்ந்த அடுத்தநொடி அவர்களது கார் புயலென அங்கிருந்து புறப்பட்டது.

செல்லும் வாகனத்தை செயலற்று பார்த்துக்கொண்டு நின்றான் ஆரியன். இந்த உலகில் யார் அவளை தேடுகிறார்களோ இல்லையோ ஆனால ஆரியன் அவளை தேடுவான் என்று நினைத்து அவனிடம் உண்மையை சொல்லி சென்றாளோ அந்த பேதை.

மனம் முழுவதும் வலி... நேற்றுவரை நிம்மதியாக உறங்கி கழித்த இரவு இன்று கனலாக மாறி சுட்டு பொசுக்கியது.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தலையை பிடித்துக்கொண்டு அதே இடத்தில் அமர்ந்தான் ஆரியன். அவன் சென்ற பாதையை கவனித்து நடந்தே அங்கு வந்து சேர்ந்தான் விவேக்.

"என்ன ஆச்சுடா? அவள் எங்க? உன் சட்டை எல்லாம் ஏன் இப்படி இருக்கு? என்ன பண்ணி தொலைஞ்ச?" என்று மீண்டும் மீண்டும் கேட்டான் விவேக். ஆனால் ஆரியனின் மனதில் சங்கவியின் எண்ணம் தான் ஓடிக்கொண்டு இருந்தது.

சங்கவி தான் அந்த கொலைக்கு காரணம் என்பது ஆரியனுக்கு தெளிவாக புரிந்து விட்டது.
அவனது புரிதலும் உண்மைதான். உணவகத்தில் வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த முதலாளியை கோவத்தில் பிடித்து தள்ளினாள் சங்கவி, அவரது தலையோ அங்கிருந்த கிரைண்டர் மீது மோத சரிந்து கீழே விழுந்தார்.

தலையில் பலத்த காயம்! உடலில் இருந்து வெளியேறிய அதிகமான ரத்தத்தால் அவரது உயிர் அங்கேயே பிரிந்தது.

அடுத்து என்ன செய்வது என்று ஆரியனுக்கு புரியவில்லை... நிலைகுலைந்து நின்றான்.

"உன்கிட்ட தாண்டா பேசிட்டு இருக்கேன் என்ன ஆச்சு?" என்றபடி தன்னை உலுக்கிய விவேக்கை பார்த்தவன் "ஒன்னுமில்லை... நீ வா உன்னை கொண்டுபோய் வீட்டுல விட்டுடுறேன்" என்றான்.

"பொய் சொல்லாதடா என்னமோ தப்பா இருக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு"

"அதான் ஒன்னுமில்லைனு சொல்லுறேன்ல" என்று கத்திய ஆரியன், ஒரு கட்டத்தில் உடைந்து போயி "ஒன்னும் இல்லடா நான் பார்த்துகிறேன்" என்று சொன்னான். அவன் நிலைகொள்ள முடியாமல் தவிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட விவேக் அடுத்த கணம் அவனை அணைத்துக் கொண்டான். "எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்... உனக்கு நான் இருக்கேன்டா ஆரியா" என்று சொன்னவனின் அணைப்பில் முற்றிலுமாக உடைந்து போனான் ஆரியன்.

விவேக்கை அழைத்து கொண்டு வீட்டில் விட்டு விட்டு நேராக தங்கள் தோட்டத்து வீட்டிற்கு சென்றான் ஆரியன். அங்கு தன் சட்டையை கழட்டி போட்டவன் அந்நேரத்தில் கிணத்தடியில் குளித்து விட்டு கட்டிலில் கண் மூடி படுத்துக் கொண்டான்.

நடந்த நிகழ்வுகளை அன்றே அவன் தாத்தாவிடமோ அல்லது விவேக்கிடமோ கூறி இருந்தால் இப்படி ஒரு நிலை ஆரியனுக்கு வந்திருக்காது. யாரிடமும் எதையும் கூற விரும்பாதவன் தன்னக்குள் துன்பத்தை தாங்கி உறைந்து போனான்.

வீட்டுக்கு வந்த விவேக்கிற்கு நெஞ்சமெல்லாம் படபடவென்று இருந்தது.

ஆரியன் என்ன செய்து தொலைத்தானோ என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது.

இரவு வெளியே சென்ற தன் பேரன் காலை 6 மணியாகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்றதும் அவனைத் தேடி வெளியே வந்தார் அய்யாகண்ணு.

அந்நேரம் அவர்கள் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

போலீசாரை கண்டதும் என்ன? ஏது? என்று இவர் விசாரிக்க, அவர்களது முதல் கேள்வியே "ஆரியன் உங்க பேரனா? இப்ப அவன் எங்க இருக்கான்? வர சொல்லுங்க" என்பதுதான்.

திடீரென தனது பேரனை தேடி காவலர்கள் வந்திருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார் அய்யாகண்ணு.

எதற்காக? ஏன்? என்று போலீசாரிடம் அவர் காரணம் கேட்க...

"கார்த்திகேயன் ஹோட்டல் முதலாளிய கொலை பண்ணிட்டாங்க, ஸ்பாட்ல உங்க பேரனை பார்த்ததா ஒருத்தர் சாட்சி சொல்லி இருக்காரு... அதை பத்தி விசாரிக்கலாம்னு தான் வந்தேன்"

"யார் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா? என் பேரன் அப்படிப்பட்டவன் இல்ல" ஊருக்குள் மதிக்கத்தக்க இடத்தில் இவர் இருப்பதால் போலீசாரும் சற்று மரியாதை கொடுத்து தான் பேசினார்கள்.

"அவன் எப்படிபட்டவன்னு விசாரிச்சா தானே தெரியும்" என்றார் காவலர்.

"அவன் சின்ன பையன், கொலை அது இதுன்னு பெரிய பெரிய விசயமெல்லாம் பேசுறீங்க?"

"ப்ச்" அய்யாகண்ணுவின் பிதற்றலில் சலித்துக் கொண்ட காவலர் "உள்ளே போயி தேடுங்க" என்று சக காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

'என்ன நடக்கிறது?' என்று புரியாமல் அய்யாகன்னு அப்படியே உடைந்துபோய் நாற்காலியில் அமர்ந்தார்.

அந்நேரம் அவர்களது தோட்டத்தில் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் வந்தார் "அய்யா நம்ம ஆரி தம்பி உங்க கிட்ட ஏதோ பேசுனுமாம்... நம்ம தோட்டத்து வீட்டுல தான் இருக்காரு, உங்களை வர சொன்னாரு" என்று இடம் பொருள் அறியாமல் சகஜமாக அவர் சத்தமிட்டு கூறிவிட, அது அங்கிருந்த காவலர்களுக்கும் கேட்டு விட்டது.

தன் பேரனுக்கு இவர்களால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பரிதவித்து போனார் அந்த பெரியவர்.

காவலரோ நேராக அந்த வேலையாளிடம் வந்தார். "எங்க வந்து இடத்தை காட்டு" என்று சொல்ல... அந்த நபரோ அய்யாகண்ணுவை பார்த்தார். "அங்க என்ன பார்வை வா" என்று இழுத்து கொண்டு காவலர்கள் செல்ல, அவர்களது வாகனத்தை தொடர்ந்து அய்யாகண்ணுவின் வாகனமும் இவரது தோட்டம் நோக்கி சென்றது.

இது எதுவும் தெரியாமல் பலத்தை யோசனையில் கண்ணுக்கு குறுக்காக கையை மடக்கிக் கொண்டு கால் நீட்டி கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான் ஆரியன்.

அவனது தோரணை ஏதோ ஒருவிஷயத்தை முடிவு செய்துவிட்டு தான் இப்படி சாதாரணமாக இருக்கிறான் என்பதை அய்யாகண்ணுவிற்கு உணர்த்தியது.

காவலர்கள் நேராக உள்ளே வந்து விசாரிக்க... அவர்களை தடுத்து மறைத்தவாறு தன் பேரனை பின் நிறுத்தி முன் நின்றார் அய்யாகண்ணு.

"அய்யா விலகி நில்லுங்க" என்ற காவலர் "எதுக்கு அந்த ஹோட்டல் முதலாளியை கொன்ன" என்று ஆரியனிடம் கேட்டார்.

"நான் எதுவும் பண்ணல" என்று ஆரியன் சொல்வான் என்று அய்யாகண்ணு எதிர்பார்க்க... எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் ஆரியன்.

அவனது அந்த அமைதி அய்யாகண்ணுவிற்கு பயத்தை கொடுத்தது.

இவனது அந்த அமைதி போதுமே அவர்கள் இவனை கைது செய்ய... கைது செய்து அழைத்து சென்றனர்.

"எதுக்காக கொலை பண்ண" என்ற அவர்களது கேள்விக்கு ஆரியனிடம் பதில் இல்லை.

வெகு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான். அப்போது அவனுக்கு எதிராக இருக்கையை எடுத்து போட சொல்லி அமர்ந்தார் ஒரு காவலர், அவன் கார்த்திகேயன்.

இறந்த முதலாளி முத்துலிங்கத்தின் அண்ணன் மகன்.

தன் சித்தப்பாவின் குணநலனை ஒரு அளவுக்கு அறிந்து வைத்திருந்தான் கார்த்திகேயன்... சங்கவி காணாமல் போனது, மேலும் அவள் சார்ந்த சில பொருட்கள் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தது, அது மட்டும் அல்லாமல் ஆரியன் அவள் செல்லும் இடமெல்லாம் வெறித்து வெறித்து அவளை பார்த்து கொண்டிருந்தது இதை எல்லாம் அடிப்படையாக வைத்து இது தான் நடந்திருக்க வேண்டும் என்று யூகத்தின் அடிப்படையில் ஒரு கதையை சொன்னான் கார்த்திகேயன்.

"சங்கவி யாரு?" என்று கேட்டதும் முதல் முறை அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் ஆரியன்.

"ம்ம்ம்... உனக்கும் அந்த பொண்ணுக்கும் காதல் சரி தானே?" என்று கேட்டதும் மீண்டும் தலையை குனிந்து கொண்டான் ஆரியன்.

"எனக்கு என் சித்தப்பா பத்தி நல்லாவே தெரியும் அப்புறம் அங்க வேலை பார்த்த ஆளுங்ககிட்டயும் விசாரிச்சேன். சோ நேத்து நயிட் அங்க ஏதோ தப்பு நடந்து இருக்கு... நீ போயி ஹீரோயிசம் காட்டியிருக்க! அடுத்து அந்த பொண்ணு இதுக்கு மேல இங்க இருந்தா போலீஸ் கேஸ் அது இதுன்னு அவள் மானம் போயிடும்னு யாருக்கும் தெரியாமல் அவளை இங்கேயிருந்து அனுப்பி வச்சு இருக்க? நான் சொல்லுறது எல்லாம் சரி தானே?" என்றவர் லத்தியை எடுத்து ஆரியனின் முகத்தை நிமிர்த்தினார்.

இவனோ அவரது கேள்விக்கு 'ஆம்' என்றும் சொல்லவில்லை 'இல்லை' என்றும் மறுக்கவில்லை.

"இப்போ அந்த பொண்ணு எங்க? அவளை எங்க மறைச்சு வச்சுயிருக்க? இப்போ நீ சொல்லலனாலும் கண்டிப்பா நாங்க அவளை தேடி கண்டு பிடிச்சிடுவோம்" என்றதும் ஆரியன் சற்று பயம் கொள்ள ஆரம்பித்தான்.

இப்போது ஆரியன் நினைத்தால் கூட இந்த வழக்கில் இருந்து சுலபமாக வெளியே வந்து விடலாம் இவன் 'இல்லை' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் இவர்களுக்கு இருக்கும் பண பலத்தை கொண்டு இந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடலாம்... ஆனால் அடுத்து என்னவாகும்? 'சங்கவியை தேடி பிடித்து விசாரிப்பார்கள் அதன் பிறகு சங்கவி இதில் மாட்டிக் கொள்வாளே' என்று எண்ணி அஞ்சினான்,
இந்த வழக்கில் சங்கவி தண்டனை அனுபவிக்க கூடாது என்று ஆரியன் விரும்பினான்.

அந்த நொடி யாரும் எடுக்கத் தயங்கும் ஒரு முடிவை துணிந்து எடுத்தான் அவன் எடுத்த அந்த ஒரு முடிவு தான் இன்று அவன் அனைத்தையும் இழந்து நிற்பதற்கு ஆரம்பப் புள்ளியானது.

இந்த கொலையை சங்கவி தான் செய்திருப்பாள் என்று ஆரியனுக்கு தெளிவாக தெரிந்து விட்டது. தான் இதில் நிரபராதி என்று நிரூபணம் ஆனால் அடுத்து இவர்களின் குறிக்கோள் சங்கவியை தேடி கண்டுபிடிப்பது தான் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ஆரியன் அவளைக் காப்பாற்ற எண்ணி தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டான்.

அப்போது அவனுக்கு வெறும் 19 வயது தான் எதையும் தீர யோசித்து முடிவெடுக்கும் பக்குவத்தில் அவன் அப்போது இல்லை.

அவளை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததனால் என்ன செய்கிறோம்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? என்று யோசிக்காமல் அதற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இக்கொலையை நான் தான் செய்தேன் என்று தண்டனையை ஏற்க முன்வந்து வாக்குமூலம் கொடுத்தான்.

ஆரியன் சங்கவியை விரும்பியதாகவும் ஆனால் சங்கவி அவன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து தன் முதலாளியிடம் ஆர்யனை பற்றி தெரிவித்து கண்டிக்கச் சொல்லியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபத்தில் ஆரியன் அவரை பிடித்து தள்ளி விட்டதாகவும் அதில் அடிப்பட்ட வேகத்தில் ரத்தம் வெளியேறி முதலாளி இறந்ததாகவும் வழக்கு முடிக்கப்பட்டிருந்தது. தனக்கு பயந்து தான் சங்கவி ஊரை விட்டு சென்றதாகவும் கூறி இருந்தான்.

ஆரியனின் எண்ணம் சங்கவியை காப்பாற்றுவது தான் என்பதை நன்கு உணர்ந்த கார்த்திகேயன், ஆரியனது முதிர்ச்சி இல்லாத அர்த்தமற்ற செயலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்.

அந்த முதலாளியின் மீது எந்த தவறும் இல்லை என்று வழக்கு எழுதப்பட்டால் மட்டுமே சங்கவி இதிலிருந்து முழுவதுமாக வெளியே வர முடியும் என்று ஆரியனின் மனதில் இவன் விதைத்திருக்க, அவனும் அதனை உணர்ந்து அவர்கள் போக்கிற்கே அந்த வழக்கை மாற்றியிருந்தான்.

தன் சித்தப்பாவை கொன்றவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கார்த்திகேயனுக்கு சிறிதும் இல்லை, தனது சித்தப்பா தவறானவர் என்று அவனுக்கும் ஆரம்பத்திலேயே தெரியும். ஆனாலும் என்ன செய்வது சொந்தத்திற்குள் ஒருவன் குற்றவாளி என்றாலும் அவன் மீது குற்றம் சாட்ட இயலாது அல்லவா? அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் இருந்தான் கார்த்திகேயன். தனது சித்தப்பாவிற்காக அவன் இந்த வழக்கை மாற்றவில்லை அவரை நல்லவராக காட்ட வேண்டும் என்றும் அவன் நினைக்கவில்லை... மாறாக இவரால் தன் குடும்ப கௌரவத்திற்கு எந்த வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற சுயநலத்தில் ஆரியனின் அவ்வயது அறியாமையினை பயன்படுத்தி இந்த வழக்கை மாற்றி அமைத்தான் கார்த்திகேயன்.

குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் ஆரியனுக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆரியன் அமைதியாக தண்டனையை ஏற்றுக் கொள்ள முன் வந்ததால் நீலகண்டன் குடும்பத்தினராலும் இவனை வெளியே கொண்டு வர முடியவில்லை. தண்டணை காலத்தை குறைக்க எண்ணி மட்டுமே வாதாட முடிந்தது.

நாட்கள் சென்றது சிறை வாழ்க்கையை ஆரியனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.. ஒரு நாள் அமைதியாக கழிந்தது, இரண்டாவது நாள் மிக மோசமானதாக இருந்தது மூன்றாவது நாள் தன்னால் இங்கு இருக்கவே முடியாது என்ற மனநிலைக்கு வந்தான். தனிமையில் அழ ஆரம்பித்தான் அந்த சுற்றுப்புறம் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உயிரோடு கொள்ள ஆரம்பித்தது.

 

Mythili MP

Well-known member
Wonderland writer




அத்தியாயம் 34

சிறையில் இருக்கும் ஆரியனை பார்ப்பதற்காக அய்யாகண்ணுவுடன் சேர்ந்து வந்திருந்தான் விவேக்.

ஐயாக்கண்ணுவினால் தன் பேரனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை கண்ணீர் மல்க அவனைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே வெளியேறினார்.

விவேக்கிற்கு பெரும் வருத்தம் அதைவிட இவன் மீது அதீத கோபம். இருந்தும் நிச்சயமாக ஆரியன் அப்படி ஒரு தவறை செய்திருக்க மாட்டான் என்று விவேக் நம்பினான்.

"ஏன்டா இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ண?" என்று கேட்டான்.

இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆரியனின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வெளியேற தொடங்கியது. "தெரியலடா அந்த நேரம் அது சரின்னு பட்டுச்சு அவளை எப்படியாவது இதிலயிருந்து காப்பாத்திடனும்னு மட்டும் தான் தோணுச்சு. ஆனா எனக்கு இங்க இருக்க பிடிக்கலடா" என்று முதல் முறை குழந்தை போல அழும் தன் நண்பனை கண்டு விவேக்கின் கண்களும் கலங்கியது ஆனால் இனி என்ன செய்ய இயலும் அதுதான் எல்லாமே முடிந்து விட்டது. இவனே சுயநினைவுடன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் இனி எப்படி இதனை மாற்றி அமைப்பது என்று புரியாமல் விவேக்கும் தடுமாறி நின்றான்.

கண்களை துடைத்துக்கொண்ட ஆரியன் "எனக்கே இந்த ஜெயில் வாழ்க்கை இவ்ளோ கஷ்டமா இருக்குன்னா, பாவம் சங்கவியால எப்படி இதை தாங்கி இருக்க முடியும்? அவளுக்காக தானே இந்த குற்றத்தை ஏத்துகிட்டேன் அது ஒரு விதத்தில் நிம்மதி தான்" இப்போதும் அவளை பற்றியே யோசிக்கும் தன் நண்பன் மீது கோவம் வந்தது.

"அப்புறம் என்னை பார்க்க அப்பாவும், அம்மாவும் ஏன் வரலை?" என்று கேட்டான் ஆரியன்.

"இப்போதான் அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுறாங்களா? கண்டவளுக்காக பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போகும் போது அவங்க உன் கண்ணுக்கு தெரியலயா?"

"நீயும் என்னை திட்டி காயப்படுத்தாதடா விவேக். அவங்க ஏன் வரலன்னு சொல்லு"

"எனக்கு சரியா தெரியலடா ஆரி, ஆனால் அங்க ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க"

"என்ன பிரச்சனை?"

"அம்மாவையும் கயல்விழியையும் எங்க போனாங்கன்னே தெரியல, உன் அப்பாவுக்கு பக்கவாதம் வந்திடுச்சு" என்று விவேக் சொல்ல சித்த பிரம்மை பிடித்தது போல உறைந்து நின்றான் ஆரியன்.

அதற்குள் விசிட்டிங் டைம் முடிய விவேக் அங்கிருந்து சென்றான்.

சிறைக்கு வந்த ஆரியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை தன் குடும்பத்தை பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அய்யாகண்ணு மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் ஆரியனுக்கு தெரிய வந்தது. விவேக்கின் தந்தை மூலம் போலீசிடம் பேசி இறுதிச் சடங்கிற்காக ஆரியனை வெளியை அழைத்து வர செய்தனர்.

தாத்தாவின் உடல் தகனத்திற்கு வைக்கப்பட்டிருக்க... அங்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் நீலகண்டன்.

விலங்கு பூட்டப்பட்டிருந்த கரத்துடன் தன் தந்தையை நோக்கிச் சென்றான் ஆரியன்.. மகனிடம் எதையோ சொல்ல எண்ணி பரிதவித்து கையசைக்க முற்பட்டார் நீலகண்டன் ஆனால் முடியவில்லை. இதனை எல்லாம் கண்களில் வன்மத்தோடு நீலகண்டனின் சர்க்கர நாற்காலியைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம் இந்திராவின் கணவன். யசோதாவின் தந்தை.

ஆரியனின் தாத்தாவுடைய காரியம் முடிந்த அடுத்த நொடி, ஆரியன் காவலர்களால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டான்.

தனது தந்தையிடம் ஒரு கணமேனும் பேச முடியாமல் போனதை எண்ணி நொந்தபடியே கையில் விலங்கு பூட்டப்பட்டு ஜீப்பில் சென்று கொண்டிருந்தான் ஆரியன்.

தன் தந்தையின் இந்நிலைக்கு தான் தான் காரணமோ என்று எண்ணி தவித்தவனின் மனம் அமைதியடைய மறுத்தது.

"தன் தந்தைக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? அதற்கு யார் காரணம்? தன் தாயும், தங்கையும் எங்கே சென்றனர்? ஏன் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு கூட அவர்கள் யாரும் இங்கு வரவில்லை? சித்தப்பா என்ன ஆனார்?" என்ற கேள்வியே தொடர்ந்து அவன் தலையில் ஓடிக் கொண்டிருந்தது.

மூளை கேட்கும் கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் தடுமாறியவனின் தலை சூடானது. "என்ன நடந்தது?" என்பதை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

தனது குடும்பத்தை இப்படி ஒரு நிலையில் விட்டுவிட்டு சிறை செல்ல அவன் தயாராக இல்லை.

தன் அருகில் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு வந்த காவலர்களை பார்த்தான். அதில் ஒருவரின் கையில் தான் கைவிலங்குகாண சாவி இருந்தது அவர்களை பார்த்தவண்ணமே வெளியே கவனத்தை செலுத்தியவன், தகுந்த நேரத்துக்காக காத்திருந்தான்.

ஒரு கட்டத்தில் சாலை குறைபாடு காரணமாக ஜீப் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தது, கண்களை மூடி திறந்தான். இதற்கு மேலும் பயம் கொண்டு தாமதிக்க கூடாது என எண்ணிய ஆரியன், இமைக்கும் பொழுதில் காவலர் கையில் இருந்த சாவியை பிடுங்கி விட்டு, வண்டியில் இருந்து கீழே குதித்தான்.

சுற்றி கண் பார்க்கும் திசை எங்கும் மரங்கள், காடுகளாக காட்சியளித்தது... 'எங்கு செல்கிறோம்?' என்ற கவனம் இல்லாமல் 'இங்கிருந்து தப்பித்தால் போதும்' என ஓட ஆரம்பித்தான் ஆரியன். அவனை பின் தொடர்ந்து காவலர்களும் வந்தனர்.

ஒருகட்டத்தில் அடர்ந்த காட்டு பகுதிக்குள் கண்ணிமைக்கும் நொடியில் அவர்கள் கண் தப்பி ஓடி மறைந்தான் ஆரியன்.

அதன் பிறகு அவனை பின் தொடர வழியில்லாமல், "கைதி தப்பி சென்று விட்டான்" என தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

ஓய்வில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஓடி வந்தவன், உடலில் தெம்பில்லாமல் அதே இடத்தில் அப்படியே தள்ளாடி கீழே விழுந்தான். இன்னும் அவன் கையில் தான் கைவிலங்குகாண சாவி இருந்தது.

சிறிது நேரம் அவன் உடலில் அசைவேதும் இல்லாமல் போனது. கண்கள் திறக்க மறுத்தது, நாவெல்லாம் வரண்டு போய், உயிரை வெறுத்த நிலையில் சருகுகளின் மீது செயலற்று கிடந்தான்.

'எழுந்து செல், அடுத்து என்ன என்று யோசி' என்று மூளை அவனுக்கு தொடர்ந்து கட்டளை விதிக்க, ஒரு கட்டத்தில் கண்களை திறந்தவன் தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்தான். அப்போது அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு எதிரில் ஒரு சிறுவன், வாயில் நுரை வடிய, குறை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

திடீரென அவ்விடத்தில் அவனை கண்டதும் துடித்து ஒரு அடி பின்னே நகர்ந்து அமர்ந்தான் ஆரியன்.

பாம்பு கடித்ததில் விஷம் பரவி கிடந்த அச்சிறுவனோ குறை கண் போட்டு மயக்கத்தில் ஆரியனை நோக்கி கரம் நீட்டினான் "என்னை காப்பாத்து...ங்க" என்று வலியில் அச்சிறுவன் கண்ணீர் வடிய கூறவும், ஒருவாறு நிதானமாகி அவன் அருகில் சென்றான் ஆரியன்.

தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்தவனுக்கு வேறு ஒருவனின் உயிரை காப்பாற்றும் கட்டாயத்தை இறைவன் வகுத்து விட்டான்.

பாம்பின் விஷம் அகற்றும் முறையான முதலுதவி பற்றி இவனுக்கும் எதுவும் தெரியவில்லை என்பதால், கண்டு கேட்டறிந்த ஞானத்தின் படி, பாம்பு கொத்திய தடத்தை கண்டறிந்து விஷத்தை முறிக்கிறேன் என வாய் வைத்து அவ்விடத்தில் உறிஞ்ச ஆரம்பித்து விட்டான்.

ஒருவழியாக காயம்பட்ட இடத்தின் வழியே வாய் வைத்து உறிஞ்சி முடிந்த அளவு ரத்தத்தை வெளியே எடுத்தான். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இவன் மயக்கமடைய ஆரம்பித்தான்.

ஆனால் சிறிது நேரத்தில் அந்த சிறுவன் கண் விழித்துக் கொண்டான்.

அரைகுறை மயக்கத்தில் கிடைந்த அச்சிறுவனுக்கு ஆரியன் செய்த முதலுதவி நினைவில் இருந்தது.
தன் உயிரை காப்பாற்ற நினைத்தவனை அப்படியே விட்டுவிட கூடாது என எண்ணிய அந்த சிறுவன், உடனே ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று கணப்பாடுபட்டு தன் உறவினர்களை அவ்விடம் அழைத்து வர சென்றான். சென்றவனும் பாதி வழிக்கு மேல் நடக்க முடியாமல் சிரமப்பட்டு நின்றான். அந்நேரம் அவனது நல்ல நேரமாக அவன் மாமா அவன் கண்ணில் பட்டார். அவரை உதவிக்கு அழைத்தவன், ஆரியனை பற்றி கூறி அவரை அவ்விடம் அழைத்து சென்றான்.

வந்தவர்கள் உடனே ஆரியணை அவர்கள் இடத்துக்கு அழைத்து சென்றனர்.

விஷத்தை முறித்து, மூர்ச்சையாகி அங்கு விழுந்தது வரை மட்டுமே ஆரியன் நினைவில் இருந்தது, அதன்பிறகு அவன் கண் விழித்து பார்க்கையில் அச்சிறுவனின் குடிசையில் இருந்தான்.

தான் இருக்கும் இடத்தை கண்டு சட்டென எழுந்து அமர்ந்தவன்... எதிரில் இருந்தவரை அதிர்ந்த முகத்துடன் பார்த்தான்.

"எழுந்துட்டிங்களா தம்பி... மலரு தம்பிக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா மா" என்று சொன்னபடி ஆரியனுக்கு எதிரில் வந்து அமர்ந்தார் மலர்கணையாளின் மாமா.

இவ்வாறு தான் மலர்கனையாளுக்கும் ஆரியனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அங்கு பாம்பு கடித்து மூர்ச்சையாக கிடந்தது வேறு யாருமல்ல மலர்கனையாளின் தம்பி தான். அந்நேரத்தில் அவன் உயிரை பற்றி கவலைகொள்ளாமல் தன் தம்பியின் உயிரை காப்பாற்றி இருக்கிறானே என்ற நன்றி எப்போதும் இவளுக்கு உண்டு... தாய், தாந்தை இறந்த பிறகு தன் தம்பி ஒருவனே தனக்கு உலகம் என்று வாழ்ந்தவளுக்கு அவன் உயிரை காப்பாற்றிய ஆரியன் கடவுளாக தெரிந்தான்.

தாய், தந்தை இல்லாத மலரையும், அவளது தம்பியையும் வளர்த்து ஆளாக்கியது அவர்களது மாமா தான்.

கையில் விலங்கோடு இருக்கும் தன்னிடம் எந்த வித நெருடலும் இல்லாமல் பேசும் இவர்களது உபசரிப்பு ஆரியனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

விலங்கு என்றதும் தான் ஞாபகம் வந்ததும் உடனே தனது கரத்தை கவனித்தான். 'இதற்கான சாவி எங்கே?' என்று தன் சட்டை பாக்கெட்டில் துலாவினான்.

"என்ன தேடுறீங்க தம்பி?" என்று மலரின் மாமா கேட்டார்.

"இல்லை ஒரு சாவி" என்றவன் 'ஒருவேளை அதனை வரும் வழியில் எங்கும் தொலைத்து விட்டோமோ' என்று யோசித்து அச்சம் கொண்டான்.

அதற்குள் "தம்பி இது உங்க கையில் இருந்தது" என்று கூறி அவனிடம் அதனை கொடுத்தார் மலரின் மாமா.

அந்த சாவியை கண்டதும் தான் ஆரியனுக்கு மூச்சே வந்தது.

உடனே அதனை பயன்படுத்தி எப்படி தன் கைவிலங்கை விடுவிக்க வேண்டும் என்று அவருக்கு சொல்லிக் கொடுத்தான். அவரும் அவன் சொன்னது போலவே செய்து கைவிலங்கை விடுவித்து விட்டார்.

அதன் பிறகு அவன் மனம் அடைந்த ஆசுவாசத்தை வார்த்தையால் கூற முடியாது.

"ரொம்ப நன்றிங்க" என்றவன் உடனே அங்கிருந்து கிளப்ப வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் அவர் அதற்கு அனுமதிக்கவில்லை.

"இந்த நேரத்தில் இங்க இருந்து போக முடியாது தம்பி, காட்டு விலங்கு எல்லாம் நடமாடும்" இரவு நேரம் என்பதால் அப்படி சொன்னார்.

"ஆமா, என் அம்மாவும், அப்பாவும் புலி அடிச்சி தான் இறந்தாங்க, நீங்க என் தம்பி உயிரை காப்பத்தி இருக்கீங்க உங்க நல்லதுக்கு தான் சொல்லுறோம் நாளைக்கு இங்கேயிருந்து கிளம்புங்க" என்று மலர்கனையாளும் சொன்னாள்.

இப்போது அவனது உடலுக்குமே ஓய்வு தேவை பட்டது போல உடனே சரி என்று கூறினான். ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது, மனதில் பூத்த காதலுக்காக உயிர் கொடுத்த பெற்றோர்களை பற்றி யோசிக்க மறந்து விட்டோமே என்று எண்ணி எண்ணியே நொந்து போனான். அதனால் தூக்கம் தொலைந்து போனது. நடு இரவில் குடிசைக்கு வெளியே வந்து அமர்ந்து கொண்டு வானத்தை பார்த்தபடி அமர்ந்து இருந்தான். அப்போது அவன் தோள் மீது ஒரு கரம் வந்து விழுந்தது. திடுமென திரும்பி பார்த்தான். அவன் அருகில் வந்து அமர்ந்தார் மலர்கனையாளின் மாமா கந்தன்.

"என்ன ஆச்சுங்க தம்பி? எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க" என்று கேட்டார்.

தன் மன வேதனையை யாரிடமாவது சொன்னால் நன்றாக இருக்குமே என்று எண்ணிய ஆரியன், தனக்கு அடைக்கலம் கொடுத்த கந்தனிடன் தன்னை பற்றி அனைத்தையும் எடுத்து கூறினான்.

அதனை கேட்டவர் "தப்பு பண்ணிடீங்க தம்பி, இப்படி தான் என் பையனும் பணத்துக்காக யாரோ ஒருத்தர் பண்ண கொலையை தான் பண்ணதா பழி ஏத்துக்கிட்டு அவங்களுக்காக ஜெயிலுக்கு போனான். அவனை ஜெயில்ல வச்சே அடிச்சி கொன்னுட்டாங்க, அவனுக்கும் உன் வயசு தான் இருக்கும், இன்னிக்கு உன்னை கை விலங்கோடு பார்க்கும் போது எனக்கு என் பையனையே பார்த்த மாதிரி இருந்தது. அதான் எதை பத்தியும் யோசிக்காமல் உன்னை காப்பாத்த முடிவு பண்ணி இங்க அழைச்சிட்டு வந்தோம்"

"நான் பண்ணது தப்பு தான், அது நான் ஜெயிலில் இருந்த போதே எனக்கு புரிய வந்திடுச்சு... அன்னைக்கு எனக்கு அது சரின்னு தோணிச்சு, தண்டணையை ஏத்துகிட்டு அவளை காப்பாத்திட்டோன்னு ஒருவிதத்தில் என் மனசு நிம்மதி அடைஞ்சலும், ஆனால் குடும்பத்தை யோசிக்கும் போதும் கொஞ்சம் அமைதியா இருந்து இருக்கலாமேன்னு இப்போ தோணுது. அவசரப்பட்டு என் குடும்பத்தை பத்தி யோசிக்காமல் விட்டுட்டேனோன்னு ரொம்ப குற்றவுணர்வா இருக்கு. யாருக்காக இதெல்லாம் நான் பண்ணேனோ சொல்ல போனால் அவள் முகம் கூட இப்போ என் நினைவில் வர மாட்டிங்குது... அந்த அளவுக்கு என் குடும்பத்தை பத்தின எண்ணம் எனக்கு அதிக வலியை கொடுக்குது. அவள் உருவமே மொத்தமா என் மனசுல இருந்து அழிஞ்ச மாதிரி இருக்கு. என் மனதில் இருந்த அவள் உருவம் போல என் வாழ்க்கையும் இன்னிக்கு அழிஞ்சி போச்சு"

"அப்படி எல்லாம் சொல்லாத தம்பி... நடக்கிறது எல்லாமே நல்லதுக்காகவா தான் இருக்கும்" என்று அவர் ஆறுதல் கூற விரக்தியாக புன்னகைத்தான் ஆரியன்.

"சார் எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா?" என்றவன் அவரிடம் எதையோ கூறினான். அதன் பிறகு அடுத்தநாளே அவர் துணையுடன் தன் வீட்டிற்கு சென்றான்.

அங்கு சென்றால் போலீசார் கையில் தான் மாட்டிக் கொள்வோம் என்று அவனுக்கு தெரியும், இருந்தும் ஒரு நிமிடமாவது தன் தந்தையிடம் பேசிவிட வேண்டும் என்பதற்காகவே அங்கு செல்ல முடிவெடுத்தான்.

நீலகண்டன் வீட்டு வாசலில் காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். தன் வீட்டை கந்தனுக்கு அடையாளம் காண்பித்து கொடுத்த ஆரியன் பின்பக்க காம்போண்ட் தாண்டி வீட்டுக்குள் நுழைந்தான். கந்தன் காம்போண்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார்.
அவரை அங்கிருந்து செல்ல சொன்னவன், தன் தந்தை அறைக்குள் செல்ல முயல, ஒரு கை அவனை அங்கிருந்து அழைத்து சென்றது.

அது மாணிக்கம் தான் "தம்பி இங்க என்ன பண்ணுறீங்க? வெளியே போலீஸ் நிக்குது முதலில் இங்கேயிருந்து கிளம்புங்க, மறுபடியும் அவங்க கிட்ட மாட்டிக்காதீங்கா" என்று சொன்னார்.

"அதை விடுங்க மாணிக்கம், நம்ம வீட்டுக்கு என்னதான் ஆச்சு? நான் ஜெயிலுக்கு போன நேரத்தில இங்க அப்படி என்ன தான் நடந்தது? அப்பாவுக்கு எப்படி இதெல்லாம் ஆச்சு? அம்மா எங்க? சித்தப்பா எங்க? என் தங்கச்சி கயல் எங்க?"

"எனக்கு எதுவும் தெரியாது தம்பி"

"மாணிக்கம் ப்ளீஸ் என்கிட்ட இருந்து எதையும் மறைக்காதீங்க உண்மையை சொல்லுங்க" என்று கேட்ட ஆரியனின் கண்கள் கலங்கி போனது, அதனை கண்டு மனம் கலங்கிய மாணிக்கம்...

"என்ன நடந்ததுன்னு முழுசா எனக்கு எதுவும் தெரியாது தம்பி, கொஞ்சம் நாள் உடம்பு முடியாமல் நான் வீட்டுல இருந்தேன். குணமாகி திரும்பி வந்து பார்த்தா உன் அப்பா கைகால் விளங்காமல் இருந்தார், என்ன ஆச்சுன்னு வேலை செய்யுற எல்லார் கிட்டயும் கேட்டேன் யாரும் எந்த பதிலும் சொல்லல... எல்லாரும் யாருக்கோ பயந்து எதையோ மறைக்கிற மாதிரி தோணுது, ஆனால் என்ன ஏதுன்னு எனக்கும் ஒன்னும் புரியல... ஆனால் எனக்கு உன் அப்பாவோட தோழானா வீட்டுக்குள்ள வந்த அந்த வேதாசலம் மேல சந்தேகம் அதிகமா இருக்கு தம்பி, இதுக்கெல்லாம் அவர் தான் காரணம்னு தோனிட்டே இருக்கு. அவன் தான் என்னமோ பண்ணி இருக்கான்" என்று அவர் சொல்லி முடிக்கவும், நீலகண்டன் அறையில் இருந்து வெளியே வந்த வேதாசலம் அவர்களை பார்த்து விட்டான்.

"நீ" என்று ஆரியனை பார்த்து அவன் அதிர்ந்து "போலீஸ்" என்று கத்தி குரல் கொடுக்க... சத்தம் கேட்டு வாசலில் நின்ற காவலர்கள் ஆரியனை வளைத்து பிடித்து அங்கிருந்து அடித்து இழுத்து சென்றனர்.

செல்லும் அவனை வஞ்சம் கொண்டு பார்த்த வேதாசலம் சாவகாசமாக கால் மேல் போட்டு சோபாவில் அமர்ந்தார். அதனை கண்ட ஆரியனின் கண்கள் ரத்தமென சிவந்து போனது.

வேதாவின் பார்வையே சொல்லாமல் சொன்னது 'உன் வாழ்வில் நடக்கும் அணைத்துக்கும் நான் தான் காரணம் என்று'

ஆரியனின் 6 வருட சிறை தண்டனை, அவன் தப்பிக்க முயன்றதால் 7 வருடமாக நீடிக்க பட்டது.

அவன் சிறையில் வாடி கொண்டிருக்க, இங்கு வாடிய மலராக இருந்த சங்கவி கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் மறந்து மதிவானானால் சிரிக்க ஆரம்பித்து இருந்தாள்.
 
Status
Not open for further replies.
Top