ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 25

"உன் அண்ணன் நம்பர் இருந்தா கொடு அவன் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது" என்று வேதா கேட்கவும், முதலில் தங்கிய குணா பின்னர், அவன் மீண்டும் மீண்டும் நச்சரிக்க நீலகண்டனின் அலைபேசி எண்ணை கொடுத்தான்.


"வீட்டுல போயி நிதானமா அவன் கிட்ட பேசணும்…" என்றபடி அலைபேசி எண்ணை பதிவு செய்து வைத்துக் கொண்ட வேதாச்சலம் "சரி குணா அப்போ நாங்க கிளம்புறோம்" என்றான்.


"அதுக்குள்ள என்ன அவசரம்? கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாமே" என்ற குணாவின் பார்வை யசோதாவின் மீதே பதிந்து இருந்தது.


"ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு குணா, வொயிப் வந்திடுவா இன்னொரு நாள் பார்கலாம்" என்றபடி வேதா அங்கிருந்து கிளம்ப…


"ஒரு நிமிஷம்" என்ற குணா, அவனை தடுத்து நிறுத்தி யசோதவின் கரத்தில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தான்.


"இது எதுக்கு அங்கிள்?" என்று அவள் வாங்க மறுக்க,


"வாங்கிக்கோ" என்றவன் அவளது கரத்தை பற்றி பணத்தை கொடுக்க முயற்சித்தான்.


"பணம் எல்லாம் வேண்டாம் குணா"


"நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?"


"இல்ல வேண்டாம் அங்கிள்"


"அவள் கண்டிப்பா வாங்க மாட்டாள்" என்று வேதா சொல்வதை போலவே பிடிவாதமாக வாங்க மறுத்து நின்றாள் யசோதா.


"பொண்ணையும் உன்னை மாதிரியே வளர்த்து வச்சுயிருக்க வேதா" என்றபடி யசோதாவின் தலையை பொல்லா ஆசையுடன் வருடி விட்டான் குணசேகரன்.


"என் பொண்ணு என்னை மாதிரி தானே இருப்பாள்" கர்வம் கொண்டு சொன்னான் வேதாசலம்.


"உண்மை தான், சரி உன் வீடு எங்கன்னு சொல்லு நானே உன்னை கொண்டு போய் விட்டுடுறேன்"


"இல்ல வேண்டாம் உனக்கு எதுக்கு சிரமம்"


"இதுல என்ன சிரமம் இருக்கு? பேசாமல் வா"


"வீடு பக்கத்தில தான் இருக்கு, நாங்க நடந்தே போயிக்கிறோம்" என்ற வேதாவின் கரத்தை பிடித்து இழுத்தாள் யசோதா.


"என்ன யசோ" என்று அவர் அவள் உயரத்துக்கு குனிய, "அப்பா இந்த அங்கிள் கூடவே கார்ல போகலாம் ப்பா ப்ளீஸ்" என்று சொன்னாள்.


விவரம் அறிய சிறு பிள்ளை தானே, காரினை கண்டதும் அதில் செல்ல வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அதனால் வேதாவினாலும் மறுக்க முடியவில்லை 'சரி' என்று கூறி அங்கிருந்து இருவரும் குணாவின் காரில் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.


அவர்களை இறக்கி விட்ட குணா "வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டியா வேதா" என்று கேட்டான்.


"அச்சோ மறந்துட்டேன் வாடா, ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம்"


"இல்லை வேண்டாம் சும்மா தான் கேட்டேன், இன்னொரு நாள் பார்க்கலாம்" என்றவனின் பார்வை கழுகை போல யசோதாவை வட்டமிட்டது.


யசோதாவை விட்டுவிட்டு வீடு திரும்பிய குணாவின் உள்ளம் முழுக்க ஒருவித அலைவரிசை நேரிடைலை கொடுத்தது, சொல்ல முடியாத அவசத்தையை அவன் உடல் உணர்ந்தது. தன்னிலை தொலைத்த தாபத்தின் தாகம் தணிக்க அப்பெரும் தவறுக்கு அடித்தளமிட்டது அவனது இந்த எண்ணம்.


****


இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாள் இந்திரா… வீட்டுக்குள் வந்தவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை நேராக குளியலறைக்குள் சென்றவள் அங்கிருந்த குளிர் நீரை எடுத்து ஆடை மீதே தலை வழியாக ஊற்றிக் கொண்டாள்.


நீரின் குளுமையிலும் விழியோரம் துளிர் விட்ட கண்ணீர் துளிகள் கன்னம் தாண்டி வழிந்தது.


குளித்து முடித்து ஆடை மாற்றி விட்டு வெளியே வந்தவள் நேராக பூஜை அறையில் போய் நின்றாள். 'எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்வை கொடுத்தாய்' என்று மனம் நொந்து இறைவனிடம் வேண்டியவளின் கண்களில் கண்ணீர் வற்றி போனது.


இந்திராவும், யசோதாவும் ஒரே படுக்கை அறையில் உறங்க, வேதாசலம் ஹாலில் படுத்துக் கொள்வார்.


எப்போதும் காலை ஐந்து மணிக்கு எழுந்து விடும் இந்திரா இன்று 7 மணி ஆகியும் வெளியே வர வில்லை என்றதும் அவளை காண அறைக்குள் சென்றான் வேதாசலம்.


யசோதா ஒரு பக்கம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, இந்திராவின் அருகில் சென்றவன் அவளை எழுப்ப முயற்சிதான்.


"இந்து" என்று அவன் கரம் பட்டதும் உடல் நடுங்கி கண் விழித்து கொண்டவள், எழுந்து கொள்ள முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.


"என்ன ஆச்சு உனக்கு? நீ இவ்ளோ நேரம் எல்லாம் தூங்க மாட்டியே?"


"கொஞ்சம் அசதி தூங்கிட்டேன்"


"யசோவுக்கு இன்னிக்கு ஸ்கூல் இருக்கு சமைக்கணும்ல"


"அது எனக்கு தெரியாதா? கவலைபடாதீங்க உங்களுக்கு பொங்கி வைக்காமல் நான் போயி சேர்ந்திட மாட்டேன்.. நேரத்துக்கு ஆக்கி போட தானே பொம்பளை நான் ஒருத்தி இங்க இருக்கேன். சாஞ்சா சடைஞ்சா எனக்கு ஒரு வாய் தண்ணி தர இங்க நாதி இருக்கா? எல்லாம் நானே தான் பண்ண வேண்டியது இருக்கு" என்றவள் தடுமாறி எழுந்து நின்றாள். கண்கள் இருட்டி கொண்டு வந்தது மீண்டும் கட்டிலில் அமர்ந்து விட்டாள்.


அமர்ந்து இருந்தவளின் தலையை தொட்டு பார்த்தான் வேதாசலம். காய்ச்சலில் அவள் உடல் கொதித்தது.


"என்ன உடம்பு இப்படி கொதிக்குது மாத்திரை ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?" என்று கேட்டான்.


"அதுக்கும் என்கிட்ட தானே காசு கேட்பீங்க?" என்று குத்தலாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து கொண்ட இந்திரா, சமையலறை நோக்கி சென்றாள்.


காய்சலில் உடல் கொதித்து கொண்டிருக்க, அப்போதும் அவளது வேலையை அவள் தான் செய்து முடித்தாள். எளிமையாக காலை மற்றும் மதிய உணவை செய்து வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றாள்.


ஒருநாள் விடுமுறை எடுத்தாலும் அடுத்த மாத பண தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்பதால் வேலைக்கு கிளம்பி சென்றாள்.


வீட்டிலும் இவளுக்கு நிம்மதி இல்லை வேலை செய்யும் இடத்திலும் இவளுக்கு நிம்மதி இல்லை… சுமந்து பெற்ற பிள்ளைக்கு மூன்று வேலை உணவும், உடுத்த உடையும், நல்ல கல்வியும் கொடுக்கவே பிடிக்காத இடத்தில் மனதை கல்லாக்கி கொண்டு மாடாக வேலை செய்து ஓடாக தேய்கிறாள்.


தலைவன் தூக்கி சுமக்காத குடும்ப பாரத்தை தலைவி தூக்கி சுமக்கையில் பல இழப்புகள் நிகழ்வது நிதர்சனமான ஒன்று தான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 26

அன்று இரவு பதினோரு மணி போல வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள் இந்திரா.


அவள் வரும் வரை சோபாவில் கோவத்துடன் அமர்ந்து இருந்தான் வேதா. செலவுக்கு பணம் கேட்டு வாங்க வேண்டி அவளது அலுவலகத்திற்கு சென்று திருப்பி வந்ததில் இருந்து கோவத்தில் இருக்கின்றான்.


அலுவலகத்தில் வைத்து ஊழியர்கள் பேசிய பேச்சு எல்லாம் இன்னும் அவன் சிந்தையில் ஒலித்துக் கொண்டிருந்தது, அந்த சிறு துளி சந்தேகம் முழு நஞ்சாக மாறி அவனது நெஞ்சை அரித்தது.


அசதியாக வீட்டுக்குள் நுழைத்தவளிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்க ஆரம்பித்தான்.


"ஏன் இவ்ளோ லேட்? போன் பண்னேன் எதுக்கு எடுக்கலை?"


"வேலை அதிகம்"


"பதினோரு மணி வரை அப்படி என்னடி வேலை உனக்கு?" என்று கேட்டவனை முறைத்து ஒரு பார்வை பார்த்தவள் அங்கிருந்து செல்ல பார்க்க அவளது கரத்தை வலிக்க பற்றி நிறுத்தினான் வேதா.


"உன்கிட்ட தான் கேட்குறேன் எவனோட போயி சுத்திட்டு வர" என்று அவன் கேட்டதும் 'பளார்' என அவன் கன்னம் சிவக்க ஒரு அறை விழுந்தது.


அவள் அறைந்ததும் கோவம் தலைக்கேறி சட்டென அவள் உச்சம் தலை முடியை கொத்தாக பற்றி இழுத்தவன் "உண்மையை சொன்னா வலிக்குதா? உன் கூட வேலை பார்க்குறவங்க உன்னை பத்தி எல்லா உண்மையையும் சொல்லிட்டாங்கடி"


"அதான் அவங்க சொன்னதை அப்படியே நம்பிட்டல்ல அப்புறம் எதுக்கு இந்த விசாரணை எல்லாம்?"


"அப்போ அவங்க சொன்னது எல்லாம் உண்மை தானா?"


"உண்மைன்னு நம்பி தானே என்கிட்ட இந்த கேள்வியை கேட்கிற?"


"அப்போ உண்மையாவே உனக்கும் அந்த மேனஜருக்கும் தொடர்பு இருக்கு அப்படி தானே? அதை நீ ஒத்துக்குறியா?"


"ச்சே கையை எடு" என்றபடி ஆக்ரோஷமாக அவன் பிடியில் இருந்து விலகி நின்றவள்… "ஆமா அப்படி தான் இப்போ அதுக்கு என்ன பண்ணனுங்குற? உன்னை மாதிரி ஒரு கையாளாகாதவனை கல்யாணம் பண்ண பாவத்துக்கு கர்ப்பை பத்தி பேசி மண்ணையா அள்ளி திங்க சொல்லுற? நீ ஆம்பளையா ஒழுங்கா சம்பாதிச்சு போட்டு குடும்பத்தை பார்த்துகிட்டு இருந்தா நான் ஏன்யா இந்த வேலையை தக்க வைக்க கண்டவன் பேச்சுக்கும் ஆசைக்கு அடிபணிச்சு போயிருக்க போறேன்?" என்று கோவத்தில் பேசியவளின் கண்கள் வெளிபடுத்தியது அவள் உள்ளத்தில் உறைந்து இருந்த வலியை…


"என்கிட்ட இப்படி எல்லாம் பேச உனக்கு வெட்கமா இல்லையாடி"


"இல்ல சத்தியமா இல்லை, உன்னை போல ஒருத்தனை கல்யாணம் பண்ணி இவ்ளோ நாள் உன் கூட சேர்ந்து வாழ்ந்ததை நினைச்சு தான் நான் வெட்கபடுறேன். உனக்கு வேலை போயி எவ்ளோ வருஷம் ஆச்சு? இந்த பதினேழு வருஷமும் இந்த குடும்பத்தை தூக்கி சுமக்க மனசாலையும் ,உடலாலையும் நான் எவ்ளோ ரணபட்டு இருக்கேன்னு உனக்கு தெரியாது, உண்மையாவே உனக்கு இந்த குடும்பத்து மேலையும் என் மேலயும் அக்கறை இருந்திருந்தா மூட்டை தூக்கியாவது எங்களுக்கு ஒருவேளை சோறு போட்டு இருப்ப, ஆனால் அது தான் இல்லையே, அட்லீஸ்ட் அந்த எண்ணமாவது உனக்கு வந்ததா? கிடையாது, ஏசி காத்துல சட்டை கலையாமல் தான் நான் வேலை பார்ப்பேன்னு சொல்லிட்டு சும்மா சுத்திட்டு இருக்க உனக்கு என்னை நிற்க வச்சு கேள்வி கேட்க எந்த தகுதியும் இல்லை"


"தகுதி இல்லையா நான் உன் புருஷன்டி"


"புருஷனா? அந்த வார்த்தைக்கு மரியாதையா நீ எனக்கு என்ன பண்ணி இருக்க? உனக்கு ஞாபகம் இருக்கா? எட்டு வருஷத்துக்கு முன்னாடி என் ஆபிஸ்ல இந்த மேனஜர் பேச்சே சரி இல்லை, என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுற மாதிரி இருக்குன்னு உன்கிட்ட வந்து சொன்னேன். வேலையை விட்டு நின்னுடட்டுமான்னு கேட்டேன், அதுக்கு நீ என்ன சொன்ன? வேலை செய்யுற இடத்தில் முன்ன பின்ன அப்படி தான் இருக்கும் நீ சரியா இருந்தா எல்லார் பார்வையும் சரியா இருக்கும். எதையும் கண்டுக்காமல் வேலையை செய், அவன் பார்க்குறான்னு சொல்லி நீ பார்க்காத வரை எந்த பிரச்சனையும் இல்லை, இதுக்காக எல்லாம் வேலையை விட்டு நின்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறது? என்னால இனிமேல் எவன்கிட்டயும் கையை கட்டி வேலை பார்க்க முடியாது, நான் சொந்தமா பிஸினஸ் ஆரம்பிக்க போறேன். அதுவரை கொஞ்சம் அடஜஸ் பண்ணிக்கன்னு சொன்ன, அது உனக்கு ஞாபகம் இருக்கா? நானும் எவ்ளவோ பொறுத்தேன், நாளுக்கு நாள் ஆபிஸ்ல எனக்கு பிரச்சனை அதிகமாச்சு… என்னை கார்னர் பண்ண ஆரம்பிச்சான். இதையெல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு நான் எவ்ளவோ முன் வந்தேன் ஆனால் நீ அதை எல்லாம் கேட்குற நிலைமையில் ஒரு நாள் கூட இல்லை… எப்போவும் இந்த மாசம் சம்பளம் அடுத்த மாசம் சம்பளம்னு அதுலயே தான் இருந்த, என்னைகாவது வேலையில் எனக்கு எதாவது பிரச்சனையான்னு ஒரு வார்த்தை கேட்டு இருப்பியா? அவன் தொல்லை தாங்க முடியாமல், வேலையை விட்டு நிற்கவும் முடியாமல் அவன் முடிவுக்கு உடன் படவும் முடியாமல் என் மனசு பட்டபாடு எனக்கு தான் தெரியும். அந்த நேரத்தில தான் யசோவுக்கு கால் பிராக்ச்சர் ஆச்சு ஸ்ரூ வைக்கணும், இல்லனா பிள்ளை கால் கடைசி வரை தென்னி தென்னி நடக்குற மாதிரி ஆகிடும்ன்னு சொன்னாங்க. அதுக்கு பணம் வேணும், என்ன பண்ணுறது? வேற வழி தெரியல என்னோட இயலாமை என்னை அப்படி ஒரு நிலைமையில் கொண்டு வந்து விட்டுடுச்சு. நீ மட்டும் சரியா வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்திருந்தா என்கிட்ட அப்படி கேட்டவனை அன்னைக்கே செருப்பல அடிச்சிட்டு வீடு வந்து சேர்த்து இருப்பேன். ஆனால் என் விதி மறுபடி என் பெண்ணுக்காக அவன் காலடியில கிடைக்க வேண்டியதா போயிடுச்சு, அந்த நாளுக்கு அப்புறம் என் பொண்ணு முகத்தை கூட நேருக்கு நேர் என்னால பார்க்க முடியல, கூனி குறுகி ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருக்கேன்யா அந்த வலி உனக்கு புரியாது, இதை எல்லாம் என் தேவைக்கும் என் ஆசைக்கும் நான் பண்ணுறேன்னு நீ நெனச்சா நினைச்சிக்கோ, உன்கிட்ட எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… ரொம்ப பட்டுட்டேன் இதுக்கு மேல போராடி எந்த உறவையும் தக்க வைக்க எனக்கு தெம்பில்லை" என்றவள் சோர்வாக அங்கிருந்து சென்றாள்.


அவள் வலியை அவள் வழியில் பயணித்தால் மட்டுமே உணர முடியும்.


இந்திரா சொன்ன காரணங்களையும், தன் மீது அவள் சுமத்தும் குற்றங்களையும் ஏற்று கொள்ள முடியாமல், ஒரு ஆண்மகனாக அவள் செய்த துரோகத்தையும் துளியும் தாங்கிக் கொள்ள முடியாமல் சினம் கொண்டு நின்றான் வேதாசலம்.


'மகளுக்காக தானே இதை எல்லாம் செய்தாய் என்றாய் உண்மையை கூறி அந்த மகளையே உன்னை வெறுக்க வைக்கிறேன்' என்று சூழ் உரைத்து கொண்டவன் யசோதாவிடம் அவள் அன்னையை பற்றியே தவறாக சொல்ல ஆரம்பித்தான்.


"அவள் எனக்கு துரோகம் பண்ணிட்டா, அவள் தப்பானவள்" என்று அப்பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்தான்.


அந்த நாளுக்கு பிறகு போகும் வரும் அனைவருடனும் இந்திராவை சேர்த்து வைத்து பேசி அசிங்கபடுத்தினான். அவளை அடித்தான் ஆனால் இது எல்லாம் யசோதாவின் பார்வையில் படாதவாறும் தன் மீது தவறே இல்ல என்றவாரும் பார்த்துக் கொண்டான்.


இந்த இடத்தில் தான் வேதாவின் குணம் முழுக்க மாறுபட்டுப் போனது.


ஏற்கனவே யசோவுக்கும், இந்திராவுக்கு இடையே நல்ல உறவு இல்லை, காலை யசோ எழுந்து கொள்ளும் முன்பு அலுவலகம் செல்லும் இந்திரா யசோ உறங்கும் நேரத்தில் தான் திரும்பி வருவாள்… தாயும் மகளும் அன்பாக பேசிக்கொள்ள நேரமே கிடைப்பது இல்லை. இந்த நேரத்தை எல்லாம் தனதாக்கி கொண்ட வேதாசலம் தன் மனைவியை பற்றி தன் மகளிடம் தவறாக கூறி அவளது வெறுப்பில் குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.


இந்திராவை அந்த அளவுக்கு வெறுபவன் தான் இன்றளவும் அவள் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து உணவு அருந்தி கொண்டிருக்கிறான் அதனை மட்டும் மறந்து விட்டான் போல…


என்ன தான் காதல், காவியம் ஓவியம் என்றாலும் உழைப்பு இல்லாதவனிடம் ஒரு பெண்ணாலும், பொறுமை இல்லாதவளிடம் ஒரு ஆணாலும் எந்த நிலையிலும் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.


என்ன தான் இவர்கள் இருவரும் யசோதாவுக்காக வாழ்கிறோம் என்று அவளை நோக்கி கை காட்டினாலும், அவள் விஷயத்திலும் இவர்கள் இருவரும் தவறிழைத்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.


இரண்டு வாரங்கள் அப்படியே சென்றது. இந்த இடைப்பட்ட நாட்களில் தான் பல பிரச்சனைகள் நடந்தது.


இந்திரா, விஸ்வநாதனிடம் தன் வாழ்க்கையை பற்றி கூறியது, விஸ்வநாதன், வேதாசலம் மீது போலீஸ் புகார் கொடுத்தது. பின்னர் இந்திரா இப்போது வேலை செய்யும் இடத்தில் இருந்து அவளுக்கு வேறு இடத்தில் விஸ்வா வேலை வாங்கி கொடுத்தது.


இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல நட்பு மட்டுமே இருந்தது. ஒரு நல்ல நண்பனாக எப்போதும் இந்திராவுக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.

ஆனால் வேதாவின் பார்வைக்கு இதுவும் தவறாக தான் தெரிந்தது.


என்ன தான் இந்திராவுக்கு இவர் உதவிகள் பல புரிந்தாலும் தன் குடும்பம் எனும் நிலை வந்த போதும் தடுமாறி தான் நின்றார் விஸ்வநாதன்.


நீலகண்டன் திரும்பி வந்ததினால் குணாவால் இந்த இரண்டு வாரத்தில் ஒருநாள் கூட வேதாவின் வீட்டுக்கு வர முடியவில்லை.


இன்று குணாவையும் தங்களோடு அழைத்து செல்லும் நோக்கத்துடன் நீலகண்டன் அங்கு வந்து அமர்ந்து பேசி கொண்டிருந்தான்.


இன்று இரவு இங்கிருந்து எல்லாரும் கிளம்புவதாக இருந்தது.


அதனால காலையில் இருந்து பைத்தியம் பிடித்தது போல சுற்றிக் கொண்டிருந்தான் குணா. யசோதாவின் எண்ணம் இவனை அடித்து வீழ்த்திக் கொண்டிருந்தது.


வெகு நேரம் யோச்சித்தான்… அப்போது தொட்டிலில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தான். குளியல் அறையில் மனைவி குளிக்கும் சத்தம் கேட்டது.


குணா போதை மாத்திரை வேறு உட்கொண்டு இருக்க, அதன் செயல்கள் படு வீரியமாக இருந்தது.


அழகாக அவனின் பிஞ்சு குழந்தை துயில் கொண்டிருக்க அமைதியாக அதன் அருகில் சென்று அமர்ந்தவன் இரண்டு நொடி அதன் முகத்தை லயித்து பார்த்துக் கொண்டிருந்தான் தானாக அவனது கரம் அந்த குழந்தையின் கன்னம் வருட ஆரம்பித்தது, அவன் உள்ளத்தில் பொல்லாத ஒரு திட்டம் தோன்றியது,

ஒரு நொடி ஒரே ஒரு நொடி என்ன நினைத்தானோ திடீரென அவன் முகத்தில் அப்படி ஒரு சீற்றம்!? இரும்பு தூண் கரம் கொண்டு செவ்விதழ் பூ மலரின் அதரங்களை சுவாசிக்க முடியாத அளவுக்கு பிடித்து அழுத்தினான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 27

குழந்தையின் முகத்தை அவன் அழுத்த அழுத்த மூச்சுக்கு சிரமப்பட்ட அந்த சிறு உயிரோ கையை, காலை ஆட்ட ஆரம்பித்தது… சிறிது நேரத்தில் உடல் தளர்ந்து கை, கால்கள் இழுக்க ஆரம்பித்தது. அதன் வேதனை பெற்றவனுக்கு புரியவில்லை கண்களில் வெறி தெறிக்க அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த காமுகன்.


பெற்றவன் தவறவிட, படைத்தவன் பிடித்து கொள்ள நினைத்தானோ என்னவோ குளித்து முடித்து விட்டு வெளியே வந்தாள் குணாவின் மனைவி, அவள் வரும் சத்தம் உணர்ந்து பிள்ளையின் மீதிருந்த கரத்தை எடுத்தவன் "அய்யோ குழந்தை" என்று அப்படியே பதறி கத்தவும், சுமந்தவள் நெஞ்சில் நீர் வற்றி போனது.


"என் பிள்ளைக்கு என்ன ஆச்சு?" என்று நடுங்கி துடித்த குணாவின் மனைவி, ஓடிவந்து குழந்தையை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டு பரிதவித்தாள். அவளது சத்தம் கேட்டு கீழே இருந்த அனைவரும் மேல் அறைக்கு வந்தனர்.


"என்ன ஆச்சு" நீலகண்டன் குணாவிடம் கேட்க,


"தெரியல அண்ணா திடீரென குழந்தைக்கு கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது" என்று இவனும் தன் பங்குக்கு கடினபட்டு இரு துளி கண்ணீரை வரவழைத்து நடித்தான்.


அதன் பின்னர் ஒரு நொடி கூட அங்கு யாரும் நிற்கவில்லை அனைவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவனைக்கு சென்றனர்.


குழந்தைக்கு தீவிரமாக சிகிக்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.. "காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்" என்று கூறி மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிக்சை அளிக்க, உடைந்து போய் அமர்ந்தனர் குடும்பத்தினர்.


நேரம் சென்றது…


அத்தூய உள்ளதை தாங்கிக் கொள்ள இங்கு ஒருவருக்கும் தகுதி இல்லை என்று இறைவன் நினைத்தான் போல அதனை தன்னுடனே அழைத்து சென்றான்.


"என் குழந்தை" என்று குணாவின் மனைவி அழுது கதறியதை கண்டவர்கள் எல்லாம் கண் கலங்கி நின்றனர்.


அப்போதும் கல் போல ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான் குணா, அவன் சிந்தை முழுக்க பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் முதல் யோசனை 'இங்கிருந்து எப்படி வெளியே செல்வது' என்பது தான்.


ஒரு சைக்கோ எப்போதும் தன் நலனையும், தன் தேவையை மட்டுமே மிகையாக கருதுவான், பிறரை பற்றிய சிந்தனை சிறிதளவும் அவன் சிந்தையில் தோன்றாது.


சிறு பிள்ளை என்பதால் பெரிதாக எந்த மருத்துவ கட்டுப்பாடுகளிலும் உட்படுத்தாமல் குழந்தையின் உடலை தங்கள் இல்லத்துக்கே எடுத்து வந்து விட்டனர் குடும்பத்தினர்.

அனைவரும் மனதை கல்லாக்கி கொண்டு விஸ்வநாதனின் இல்ல தோட்டத்திலேயே அந்த உயிரை நல்லடக்கம் செய்தனர்.


இரண்டு நாட்கள் சென்றன…

மூன்றாம் நாள் காரியத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. அதனால் குணாவினால் அங்கிருந்து ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்க முடியவில்லை… நீலகண்டன் வேறு எப்போதும் அவனை ஒரு சிறு சந்தேகத்துடனே கடந்து கொண்டிருந்தார். அதனை உணர்ந்த இவனும் சோகமாக இருப்பது போலவே அவர்கள் முன்பு காட்டி கொண்டான். அனைவரும் நம்பினாலும் ஏனோ நீலகண்டனின் மனம் மட்டும் இவனை நம்ப மறுத்தது.


'தன் தம்பி பிள்ளை இறந்த சோகத்தை மீறிய ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கிறான்' என்பதை நீலகண்டன் கணித்து விட்டார். அதனால் தான் அவனை சந்தேகத்துடன் சுற்றி சுற்றி வருகிறார். இதனை அறிந்த குணாவும் அவர் சந்தேகம் தீரும் வண்ணம் மூன்றாம் நாள் காரியம் முடியும் வேளையில் கண்ணீர் விட்டு கதறி அழுது அனைவரையும் கரைத்து விட்டான். அதில் நீலகண்டனின் சந்தேகமும் கரைந்து விட்டது. 'உண்மையில் தன் தமையன் பிள்ளையை இழந்த வேதனையில் தான் அப்படி இருந்திருக்கிறான்' என்பதை உணர்ந்து அவரும் அவனுக்கு சற்று தனிமையை கொடுத்து விட்டு விலகி நின்றார்.


நாட்கள் செல்ல என்ன தான் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் மனதளவில் தனித்து தான் இருந்தனர். அச்சிறு உயிரின் இழப்பை அவ்வளவு எளிதாக அவர்களால் கடந்து வர முடியவில்லை… பெண்கள் மட்டுமல்ல வீட்டின் ஆண்களும் வெளியே சென்று தங்கள் வேலைகளை கவனிக்க மனமில்லாமல் வீட்டுக்குள்ளேயே தான் இருந்தனர்.


அதனால் வெளியே எங்கேயும் செல்ல முடியாமல் மனதில் நினைத்த காரியத்தை முடிக்க வழி தெரியாமல் தடுமாறி நின்றான் குணா. அவன் உடலும் உள்ளமும் பெண் அணைப்பை கேட்டு பேயாட்டம் போட்டது, அந்த வேதனையை கட்டுப்படுத்த வழியின்றி தவித்தான்.


பிள்ளையை இழந்த சோகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் மனம் நொந்த நிலையில் உடல் மரத்துபோயி சோர்வாக மெத்தையில் படுத்துக் கொண்டிருந்தாள் குணாவின் மனைவி,


சோகத்தில் இருந்தவளை மோகத்தில் நெருங்கியது குணாவின் கரம். அவளோ ஆறுதல் சொல்ல தான் தன் கணவன் தன்னை நெருங்குகிறான் என நினைத்து சற்று ஆசுவாசமாகி அவன் தோள் மீது சாய்ந்தாள். ஆனால் அவளது எண்ணம் பொய் என்பது போல இருந்தது இவனது அடுத்த செயல்.


உள்ளம் வாடிய மனையாளின் துன்பம் புரியாமல் அந்த காமுகன் அவளை தொட்டு தீண்டி முன்னேற, கண்களில் கண்ணீர் வடிய அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவள் அவனது செயலுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் வேதனை பட்டு கிடந்தாள்.


அவளது வேதனை இவனுக்கு ஒரு பொருட்டே இல்லை… இந்நிலையில் இப்படி ஒரு செயலை செய்கிறானே என்று கத்தி சண்டையிடவும் அவளுக்கு தெம்பில்லை… உள்ளுக்குள் மறுகியவள் உணர்ச்சி துடைத்த முகத்துடன் விதி மீது பழி சொல்லி அவனுக்கு உடன் பட்டு கிடந்தாள்.


கோவம் வந்தது, அவனை உதறி தள்ளி விட்டு செல் என்று மூளை கட்டளை இட்டது, ஆனால் முடியவில்லையே சத்தம் போட்டு சண்டையிட்டால் வெளியே கேட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவள் அமைதி காக்க, அந்த அமைதியை தான் சில ஆண்கள் ஆக்ரமித்து கொள்கின்றனர்.


எல்லாம் முடிந்த பரவசத்தில் அவளை விட்டு அவன் பிரிந்து உறங்க, குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் அவனின் மனைவி.


கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தோடியது… முதல் முறை பெண்ணாக பிறந்ததற்காக வருத்தப்பட்டு நின்றாள். அவள் மீதே அவளுக்கு கோவம் வந்தது திருமணமாகி இத்தனை வருடங்கள் கடந்தும் 'கணவன் அவனின் செயல்கள் தனக்கு பிடிக்கவில்லை' என்று வெளிப்படையாக கூற முடியவில்லையே என்பதனால் வந்த கோவம் அது! அவன் செயலையும், தன் இயலாமையையும் எண்ணி அருவறுத்து நின்றாள்.


அடுத்த நாள் தொழில் நிமித்தமாக நீலகண்டனுக்கு ஒரு முக்கிய அழைப்பு வந்தது. அதனை மறுக்க முடியாமல் வேறு வழியின்றி அவனும் ஊருக்கு கிளம்ப தயாரானான்.


தம்பியை தன்னோடு அழைத்தான் ஆனால் அவனோ "இல்ல அண்ணா கொஞ்சம் நாள் ஆகட்டும் அப்புறம் வரேன்" என்றான்.


"இங்கேயே இருந்தா குழந்தையோட நியாபகம் உங்களுக்கு அடிக்கடி வரும் சொன்னா கேளு நம்ம வீட்டுக்கு போகலாம் எல்லாம் சரி ஆகிடும்" என்று அவனை தன்னோடு அழைத்தான். விஸ்வநாதனுக்கும் அது தான் சரியென பட்டது.


இங்கேயே இருக்கும் வரை அனைவரும் இப்படியே தான் இருப்பார்கள் என்பதை உணர்ந்த அவரும் தன் தங்கையை அவளது கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தான்.


எல்லோரும் கிளம்ப தயாராக இருக்கும் நிலையில் குணாவும் வேறு வழியில்லாமல் "இப்போ நீயும் அண்ணியும் மட்டும் கிளம்புங்க அண்ணா, நாங்க ஒரு ரெண்டு நாளுக்கு அப்புறம் கிளம்பி வறோம்" என்று கூறினான்.


நீலகண்டனோ 'சரி ரெண்டு நாளுக்கு அப்புறமே எல்லாரும் கிளம்பலாம்' என்று கூறினான். உடனே விஷ்வா "என் பொண்னை உங்க அப்பா வீட்டுல இருந்து அழைச்சிட்டு வந்திடுங்க… என்னமோ தெரியல இங்க இருக்கவே ஒரு மாதிரி இருக்கு… குழந்தைக்களை அழைச்சிட்டு என் மாமியார் வீட்டுக்கு போயிடலாம்னு இருக்கேன்" என்று அவரும் சொன்னார்.


ஒரு இழப்பு மொத்த குடும்பத்தையும் நிலை கொள்ள முடியாமல் செய்தது.


அவரது எண்ணத்துக்கு மதிப்பளித்த நீலகண்டன், ஆரியனிடம் சொல்லி ஜீவாவின் தங்கையை விஷ்வாவின் இல்லதுக்கு அழைத்து வர செய்தான்.


ஆரியனுக்கு அப்போது பத்தொன்பது வயது தொடக்கம். சிறு வயதில் இருந்து அவனும் அவன் தங்கை கயல் விழியும் அவனது தாத்தா வீட்டில் தான் தங்கி இருக்கின்றனர்.


விடுமுறை நாட்களில் கூட தன் தாய், தகப்பனை காண அவர்கள் வீட்டுக்கு வரமாட்டார்கள். விருப்பம் என்றால் இவர்கள் தான் அங்கு சென்று பார்க்க வேண்டும் அந்த அளவுக்கு தாத்தா செல்லம் இருவரும்.


ஜீவாவின் தங்கையை அழைத்து சென்றும் அங்கு தான் தங்க வைத்திருந்தார் நீலகண்டன்.


ஆரியன் அதே ஊரில் இருக்க தாத்தா மீது அவன் கொண்ட அன்பு மட்டும் காரணமல்ல வேறு ஒரு காரணமும் இருந்தது. அந்த காரணம் 'சங்கவி' ஆர்யனின் பருவத்தில் உதித்த முதல் காதல். இவன் கதையின் தொடக்கமும் முடிவும் இவளே!


ஜீவாவின் தங்கையை அழைத்து வந்து விஷ்வாவின் இல்லத்தில் ஒப்படைத்தான் ஆரியன், அப்போது தான் குணாவின் குழந்தை இறந்த விஷயமே இவனுக்கு தெரிய வந்தது. மிகவும் வருந்தினான்… பின்பு ஒரு இரண்டு மணி நேரம் அங்கு இருந்து விட்டு மீண்டும் கிளம்பி சென்றான்.


கயல் இடம் குழந்தையை பற்றிய விஷயத்தை தெரியப்படுத்த வேண்டாம் என்று சொல்லி தான் ஆர்யனை அங்கிருந்து அனுப்பி வைத்தார் நீலகண்டன். குழந்தைகளுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று நினைத்தார்.


விஸ்வநாதன் இப்போது அவர் இருக்கும் இந்த வீட்டை காலி செய்து விட்டு தன் மாமியார் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானர், நீலகண்டன் குணா அவர்களது மனைவி என நால்வரும் நாளை காலை இங்கிருந்து கிளம்புவதாக இருந்தது.


ஊருக்கு கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க பித்து பிடித்து நின்றான் குணா…


யசோதாவின் முகமே அவன் கண் முன் வந்து வந்து போனது…


இப்போது வீட்டில் இருக்கும் ஜீவாவின் தங்கை முகம் இவனை பெரிதாக ஈர்க்கவில்லை… அப்படியே ஈர்த்தாலும் குடும்பத்தினரை மீறி அவன் பார்வை கூட அச்சிறுமியின் மீது பதியாது.


யசோதாவை பற்றிய எண்ணத்தை மறக்க எவ்வளவோ முயன்று பார்த்தான் போதை ஊசி செலுத்திக் கொண்டான்… அதன் விளைவு அவனது தடுமாற்றத்தை நீலகண்டன் கவனித்து விட்டார்.


கவனித்தவர் அவன் செய்த காரியத்தை பற்றி விசாரிக்க 'குழந்தையின் இழப்பை மறக்க தான்' இதனை செய்ததாக கூறி கண்ணீர் வடித்து நின்றான் குணா. எப்போதும் போல இப்போதும் அவன் சொன்னதை உண்மை என்று நம்பினார் நீலகண்டன்.


'இந்த நாளை தவறவிட்டால் தமையன் பார்வையை மீறி, பின்னர் இந்த ஊர் பக்கம் திரும்பி வருவது முடியாத காரியம் ஆகிவிடும் என்று உணர்ந்து கொண்ட குணா ஏதேதோ காரணம் சொல்லி ஒருவழியாக எல்லாரையும் சமாளித்து விட்டு யசோவின் வீடு நோக்கி எதிர்பார்ப்போடு வந்தான். அவன் எதிர்பார்ப்பு பொய்யாக வில்லை அவன் நினைத்தது போலவே யசோ அவள் வீட்டில் தான் இருந்தாள்.


வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த வேதாவும் குணாவும் பேசி கொண்டனர்.


குணா தன் குழந்தை இறந்த விஷயத்தை சொல்லி இவனிடம் அனுதாபம் தேட, இவனும் இவன் பங்குக்கு 'என் மனைவி எனக்கு துரோகம் செய்து விட்டாள்' என்று கூறி அவனிடம் அனுதாபம் தேடினான்.


என்ன தான் குணா, வேதாவிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அவன் பார்வை முழுக்க யசோதாவை தான் தேடியது.


அவளது வருகைக்காக காத்திருந்து எதிர்பார்த்த குணா ஒரு கட்டத்தில் "பாப்பா இல்லையா?" என்று கேட்டு விட்டான்.


"இருக்காள்.. உள்ள தான் படிச்சிட்டு இருக்காள்" என்றான் வேதாசலம்


"ஓ" என்றவன் வெளியே சென்று திருப்ப வரும் போது பழச்சாறு நிரம்பிய நெகிழி குப்பியுடன் உள்ளே வந்தான் "வீட்டுக்கு வரும் போது சும்மா வர கூடாதுன்னு ஸ்நேக்சும் ஜூஸும் வாங்கிட்டு வந்தேன் உன் பொண்ணு கிட்ட கொடுத்துடு" என்றான்.


"இந்த நிலைமையில இது எதுக்குடா"


"வெயில் நேரம்ல அதான் வாங்கிட்டு வந்தேன், ஏன் இது கூட நான் வாங்கி கொடுக்க கூடாதா?"


"அது இல்லடா"


"நான் உனக்கு வாங்கிட்டு வரல உன் பொண்ணுக்கு தான் வாங்கிட்டு வந்தேன்.. அவள் எனக்கும் பொண்ணு மாதிரி தானே நான் வாங்கி கொடுக்க கூடாதா?" என்றான். 'ஏற்கனவே பிள்ளையை இழந்த சோகத்தில் இருக்கிறான்! மேற்கொண்டு எதையும் கூறி அவன் மனதை காயப்படுத்தி விட வேண்டாம் என்று நினைத்த வேதாவும் அதனை வாங்கி கொண்டான்.


தன் கையில் இருந்த இன்னொரு பழச்சாறு பாட்டிலை திறந்து வேதாவை குடிக்க சொன்னான் குணா… வேதாவும் சகஜமாக எண்ணி அதனை குடித்தார்.


அதன் சுவை வேதாவின் நாக்கில் ஒட்டிக் கொண்டது.


அந்நேரம் பார்த்து யசோவும் தண்ணீர் எடுக்க வெளியே வந்தாள்.


அவளை கண்டதும் பரவசமான குணாவோ "பாப்பா இங்க வா" என்று அழைத்து அவளுக்கும் ஒரு கிளாசில் பழச்சாறை ஊற்றி கொடுத்தான். அவளோ வேதாவை பார்த்தாள்.


அவரோ "அங்கிள் உனக்காக தான் வாங்கிட்டு வந்து இருக்கார், குடிடா" என்று சொல்ல, சிறு புன்னகையுடன் அதனை வாங்கி குடித்து கொண்டே தன் அறை நோக்கி சென்றாள். அவள் செல்வதை இதழோரம் குருநகையுடன் ரசித்து பார்த்தான் குணா. வந்த வேலை சுலபமாக முடிந்து விட்டது என்று எண்ணி மனதுக்குள் புல்லரித்து போனான்.


"சரி வேதா அப்போ நான் கிளம்புறேன்" என்ற குணா அவனிடம் இருந்து விடை பெற்று சென்றான்.


வெளியே வந்தவன் அவர்கள் வீட்டை தாண்டி கண் மறைத்த தூரத்தில் காரை நிறுத்தி விட்டு சரியான நேரத்துக்காக காத்திருந்தான்.


சரியாக முப்பது நிமிடம் கழித்து காரை அதே இடத்தில் விட்டு விட்டு நடந்தே மீண்டும் வேதாவின் வீட்டுக்கு வந்தான் குணா..


அவன் உள்ளே நுழைய சோபாவில் முழு போதையில் எழுந்து கொள்ள முடியாமல் படுத்து கிடந்தான் வேதாசலம்.


அவர்களுக்கு கொடுத்த பழசாறில் போதை மருந்து கலந்து வைத்திருந்தான். அதனால் தான் இவன் அதனை முழுவதுமாக அருந்தாமல் அமைதியாக பேச்சு கொடுத்தபடி சமாளித்தான்.


இப்போது இங்க நடக்க இருக்கும் எதுவும் யாருக்கு தெரிய போவது கிடையாது. வேதாவை பொறுத்தவரை தான் சுய நிலையில் இருக்கும் போதே குணா இங்கிருந்து கிளம்பிவிட்டான். அதனால் அவன் மீது துளியும் சந்தேகம் வராது.

அப்படி ஒரு எதிர்பார்ப்பில் திருப்ப வந்த குணா… மயங்கி கிடந்த வேதாவை இழிவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு யசோவின் அறைக்குள் நுழைத்தான்.


ஆனால் யசோ முழுமையாக மயக்கமடையவில்லை… அவளிடம் சிறு அசைவு இருந்தது. அந்த அசைவும் தனக்கு பெரும் போதை தான் என்பதை எண்ணிய குணா அவளை அப்படியே ஆட்கொண்டான், அவனது வெகு நாள் ஆசை நிறைவேற ஆரம்பித்தது.


அந்நேரம் விஸ்வநாதன் தன் குடும்பத்துடன் வேறு ஊருக்கு செல்லவிருக்கும் தகவலை இந்திராவிடம் கூற எண்ணி அவளது எண்ணிற்கு அழைத்தான். அவளோ அழைப்பை ஏற்கவில்லை?


'இது அவள் வேலை முடிந்து வரும் நேரம் தானே என்று நினைத்து நேராக இந்திராவின் வீட்டிற்கே சென்று பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று கிளம்பினான் விஷ்வா.


விஸ்வநாதன் இந்திராவின் வீட்டுக்குள் நுழைத்தார்.


சோபாவில் வேதாசலம் படுத்து உறங்கியபடி இருந்தார்.


உடனே வெளியே செல்ல பார்த்தார்… அந்நேரம் ஓரளவுக்கு நன்றாக போதை தெளிந்த யசோ "அம்மா" என்று முனகினாள்… அவள் சத்தம் கொஞ்சம் அதிகமாக வெளி வந்தது, அவளோடு சேர்த்து குணாவின் சத்தமும் சற்று மூர்க்கமாக வெளியே வர, விஸ்வநாதனுக்கு நெஞ்சம் ஒரு கணம் பதறியது.


உடனே விரைந்து யசோவின் அறை நோக்கி சென்றார், தயக்கத்துடன் தான் சென்றார். ஆனால் சத்தம் அதிகமாக வெளியே வரவும், வேகமாக அந்த அறைகதவை தட்டினார். கதவு சரியாக தாழிடபடாமல் இருந்தது.


யசோவின் சத்தம் அதிகமாகவும், வேகமாக கதவை தள்ளிவிட்டு உள்ளே வந்தார் விஸ்வநாதன்.


அங்கு யசோ தரையில் கிடைக்க, காண கூடாத அக்காட்சியை கண்டவர் கோவத்தில் திருப்பி இருந்த குணாவினை அடையாளம் காணாமல் அருகில் இருந்த நாற்காலியை தூக்கி அவன் தலையில் போட்டார்.


அவரும் ஒரு பெண் பிள்ளையை பெற்றவர் தானே அந்த காட்சியை கண்டதும் கோவம் தலைக்கேறியது "**** நாயே" என்று திட்டியவர் மேலும் முகம் காணாமல் குணாவின் முதுகில் ஓங்கி மிதித்தார். வலி தாங்க முடியாமல் கதறிய குணா ரத்தம் வழியே விஸ்வநாதனை நோக்கி திரும்பினான்.


அவனது முகத்தை கண்டு அப்படியே உறைந்து போனார் விஸ்வநாதன்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 28


"நீங்களா? என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கீங்க?" என்று குணாவை திட்டியவன், அங்கு குறை மயக்கத்தில் கிடந்த யசோதாவை வேதனையுடன் பார்த்தான்.


குணாவின் முகமும், அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் விஷ்வாவின் முகமும் லேசான புகை பிம்பமாக குறை மயக்கத்தில் கிடந்த யசோதாவின் கண்களில் விழுந்தது… ஆனால் எதுவும் தெளிவுற தெரியவில்லை, அவர்கள் இருவரையும் பார்த்தவாறே கண்களை மூடினாள்.


அன்று அவள் குறையாக கண்ட காட்சி தான் இன்றும் விஸ்வநாதனை குற்றவாளியாக அவள் கண் முன் காட்டி இருக்கிறது.


"ப்ளீஸ் விஸ்வா என்னை தப்பா நினைக்காதீங்க, எனக்கு கொஞ்சம் பிரோப்ளம் இருக்கு" என்று தலையை பிடித்துக் கொண்டு சொன்ன குணா மயக்கமடைய, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி நின்றான் விஷ்வா, அந்நேரம் பார்த்து குணாவின் எண்ணிற்கு நீலகண்டனிடம் இருந்து அழைப்பு வந்தது.


அந்த இடத்தில் திடீரென அலைபேசி சத்தம் கேட்கவும் விஸ்வநாதனுக்கு தூக்கி வாரி போட்டது… பதட்டமாக அவன் அலைபேசியை எடுத்து பார்த்தான். அழைத்தது நீலகண்டன் என்று தெரிந்ததும் கோவமாக அழைப்பை ஏற்றவன்

"உங்க தம்பி என்ன காரியம் பண்ணி இருக்காரு தெரியுமா?" என்று சொன்னான்.


"என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்லுங்க"


"என்ன பேச சொல்லுறீங்க? இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாம் முடிய போகுது உங்க தம்பி ஜெயிலுக்கு போக போறான், என் தங்கச்சி இப்படி ஒருத்தனை கல்யாணம் பண்ணத்துக்கு அசிங்கபட்டு நிற்க போறாள்… இதுனால எங்க எதிர்காலமும் சேர்ந்து பாதிக்கப்படும்" என்றவன் இங்கு அவன் கண்ட காட்சியினை கூறி முடித்தான்.


"ஓகே, கொஞ்சம் பொறுமையா இருங்க, இப்போ நீங்க எங்க இருக்கீங்க? நான் உடனே கிளம்பி வரேன்" என்றவர் அடுத்த அரை மணி நேரத்தில் இந்திராவின் வீட்டை வந்தடைந்தார்.


நீலகண்டன் வரும் வரை விஸ்வநாதனுக்கு இருப்புக்கொள்ளவில்லை 'வேறு யாராவது வந்து விடுவார்களோ? இந்திரா இந்த நிலையில் தன்னை பார்த்தால் என்ன நினைப்பாள்' என்று யோசித்து அச்சம் கொண்டு அந்த அறையையே திகிலுடன் சுற்றி வந்தார்.


உள்ளே வந்த நீலகண்டன் சோபாவில் படுத்துக்கொண்டிருந்த வேதாவை பார்த்து ஒரு கணம் அப்படியே உறைந்து நின்றான்.


அடுத்த நொடி தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தவனாக மனதை கல்லாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.


அவனை கண்டதும் "உங்க தம்பி என்ன காரியம் பண்ணி இருக்காருன்னு பாருங்க?" என்று அலங்கோலமாக கிடந்த யசோதாவை சுட்டி காட்டினார்.


அவளை கண்டு ஒரு கணம் கண்ணை மூடி திறந்த நீலண்டனோ ஆழ்ந்த மூச்செடுத்து "ஒரு தப்பு நடந்துடுச்சுன்னா அதையே பத்தி பேசிட்டு இருக்காமல் அடுத்து என்னன்னு யோசிக்கணும்? அது தான் நமக்கு நல்லது" என்றான்.


"என்ன இவ்ளோ சாதாரணமா பேசுறீங்க? உங்க தம்பி ஒரு சின்ன பொண்ணை ரேப் பண்ணி இருக்கான்…"


"இவன் என் தம்பி மட்டும் இல்ல உங்க தங்கச்சியோட புருஷனும் தான். அதை மறந்துடாதீங்க எது பேசுறதா இருந்தாலும் யோசிச்சு பேசுங்க"


"அப்போ இவர் பண்ணதை நீங்க நியாயப் படுத்துறீங்களா?"


"இங்க பாருங்க விஷ்வா நம்ம பிரச்சனையை வெளியே போயி கூட பேசி தீர்த்துக்கலாம்… தர்க்கம் பண்ணிட்டு இருக்க இது தகுந்த இடம் இல்லை… முதலில் இவனை இங்க இருந்து அழைச்சுட்டு போகலாம்? ஆமா நீங்க எப்படி இங்க வந்தீங்க?"


"இந்த பொண்ணோட அம்மா என் ப்ரெண்டு, அவங்களை பார்க்க தான் இங்கே வந்தேன்"


"ஓகே, அப்போ அவங்க இப்போ எங்க இருக்காங்க? எப்போ வீட்டுக்கு வருவாங்கன்னு மட்டும் கேட்டு சொல்லுங்க? இங்க நடந்த எந்த விஷயமும் அவங்களுக்கு தெரிய கூடாது, எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் வராத அளவுக்கு பேசுங்க"


"எதுக்கு?"


"எதுக்கா? நடந்த இந்த விஷயத்தை மறைக்க வேண்டாமா?" என்று நீலா சாதரணாமாக சொல்லவும் விஸ்வநாதனுக்கு மனம் ரணமாக வலித்தது.


"ரொம்ப யோசிக்காதீங்க விஷ்வா முதலில் இவனை இங்க இருந்து வெளியே அழைச்சிட்டு போகலாம்… வாங்க"


"இல்லை எனக்கு இது எதுவும் சரியாபடலை… மனசுக்கு உறுத்தலாக இருக்கு"


"இதுல உங்க தங்கச்சி வாழ்க்கையும், நம்ம குழந்தைகளோட எதிர்காலமும் அடங்கி இருக்கு விஸ்வநாதன், அதை மறந்துட்டு பேசாதீங்க? ஏற்கனவே இப்பதான் பிள்ளைய பறி கொடுத்துட்டு மொத்தமா உடைஞ்சு போய் உட்கார்ந்து இருக்காங்க உங்க தங்கச்சி, இதுல இந்த விஷயம் அவங்களுக்கு தெரிய வந்தா அவங்களோட நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிங்க? தப்பு நடந்துடுச்சு, இப்போ யாரும் அந்த மறுக்கல, ஜஸ்ட் நடந்த விஷயத்தை மறைக்க போறோம் அவ்ளோதான். ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க விஷ்வா அடுத்தவங்களுக்காக கவலைப்படுற நிலைமையில இப்போ நம்ம இல்ல, நம்மள காப்பாத்திக்க வேண்டிய கட்டாயத்தில இருக்கோம்"


"அப்போ இது எல்லாம் தப்பு இல்லையா?"


"தப்புன்னு நெனச்சா தப்பு தான் ஆனால் தப்பிக்கணும்னு நெனச்சா எதுவும் தப்பில்லை"


எதைஎதையோ பேசி எப்படியோ விஷ்வாவின் மனதை ஒருவழியாக மாற்றினான் நீலகண்டன்.


மயங்கி கிடந்த குணாவை தூக்கிக் கொண்டு வந்து இருவரும் தங்களது காரில் அவனை படுக்க வைத்தனர்.


நீலகண்டன் சொன்னது போலவே இந்திராவின் எண்ணிற்கு அழைத்து அவள் எப்போது வீட்டுக்கு வருவாள்? எங்கு இருக்கிறாள்? என முழு தகவலையும் இயல்பாக பேசி தெரிந்து கொண்டான் விஸ்வநாதன்.


"இப்போ இவரை இங்க இருந்து அழைச்சிட்டு போகுறதால மட்டும் போலீஸ் கேஸ் ஆகாமல் தடுக்க முடியும்னு நீங்க நினைக்குறீங்களா?" என்று குற்ற உணர்வு மேலோங்க நீலகண்டனிடம் கேட்டான்.


"பொதுவா இந்த மாறி விஷயத்துல கேஸ் கொடுக்க எந்த தாய், தகப்பனும் முன்வருவதில்லை… அப்படியே உங்க பிரண்டு கேஸ் கொடுக்கிறேன்னு சொன்னாலும் அதை தடுத்து நிறுத்த வேண்டியது உங்க பொறுப்பு"


"நான் எப்படி?" பயந்தான் விஸ்வா.


" கேஸ் கொடுத்தா பொண்ணோட லைப் போயிடும்ன்னு பயமுறுத்துங்க… கண்டிப்பா கேஸ் கொடுக்க மாட்டாங்க… இதுல உங்களுக்கு இன்னுமே பயம் இருந்ததுன்னா இன்னொன்னு பண்ணலாம்"


"என்ன?"


"உங்க ப்ரெண்டுக்கும் அவங்க ஹஸ்பண்ட்டுக்குமான ரிலேசன்ஷிப் எப்படிபட்டது?" அங்கு படுத்து கிடப்பது தனது நண்பன் தான் என்று வெளிப்படுத்தாமலே அவர்களைப் பற்றிய தகவல்களை விஸ்வநாதனிடமிருந்து கேட்டறிந்து கொண்டான் நீலகண்டன்.


விஸ்வநாதனும் இந்திராவுக்கும் வேதாச்சலத்துக்கும் இடையேயான பிரச்சனையைப் பற்றியும் அவர்களது உறவுமுறை நெருக்கத்தைப் பற்றியும் ஒன்று விடாமல் நீலகண்டனிடம் கூறினான்.


அதனைக் கேட்டறிந்ததும் இதழ் வளைத்து சிரித்த நீலகண்டன் "இது போதும்" என்றபடி குணா ஆரம்பத்தில் பயன்படுத்திய பழைய எண்ணில் இருந்து வேதாச்சலத்தின் எண்ணிற்கு குறுஞ்செய்திகளை அனுப்பினான்.


"பதினைந்து வயசுல ஒரு பொண்ணை ஏற்பாடு பண்ணு, நீ கேட்ட பணம் உனக்கு கிடைக்கும்" என்று குணாவின் எண்ணில் இருந்தும், அதற்கு வேதாவின் பதிலாக "இந்திரா வீட்டின் முகவரியும்... நேரமும் குறித்து அனுப்பப்பினான்" அனுப்பி முடித்து விட்டு அந்த சிம் கார்டை உடைந்து வீசினான்.


நடந்த இந்த விஷயத்துக்கு முழுக்க முழுக்க வேதாசலம் தான் காரணம் என்பது போல சித்தரித்தான் நீலகண்டன்.


போதாக்குறைக்கு மது பாட்டிலையும் வேதாவின் அருகில் திறந்து வைத்து விட்டு குடிபோதையில் அவர் கிடப்பது போல செய்து விட்டு இவர்கள் மூவரும் தடயம் இல்லாமல் அங்கிருந்து சென்றனர்.


அதன் பிறகு தான் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள் இந்திரா… தன் மகளின் நிலை கண்டு உதவிக்கு விஸ்வநாதனை அழைத்தாள். தனது அலைபேசியில் இந்திராவின் எண்ணை கண்டதும் அச்சம் கொண்டு திகில் அடைந்த விஸ்வநாதன் அழைப்பை ஏற்க மறுத்தான்.


அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் தனக்கு தெரிந்த ஒருவரிடம் இந்திரா உதவியைப் பெற்றார்.


இங்கு நீலகண்டனோ "எதுக்காக நீங்க போனை எடுக்கல? இப்போ நீங்க அவங்க கூட இருந்தா தான் அவங்க அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு நம்ம தெரிஞ்சுக்க முடியும்.. உடனே போன் பண்ணி அவங்க எங்க இருக்காங்கன்னு கேட்டுட்டு, நீங்க முதலில் அங்க கிளம்புங்க?" என்றான், விஷ்வாவோ இன்னும் அச்சம் கொண்டு நிற்க, "பயப்படாதீங்க எல்லாமே நம்ம நினைச்ச மாதிரி தான் நடக்கும்" என்று தைரியம் கூறி அவனை அனுப்பி வைத்தான் நீலன்.


இது போன்ற பல பிரச்சனைகளை கடந்து வந்த நீலகண்டனுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரிய வில்லை… ஆனால் விஸ்வாவுக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது. குற்ற உணர்வில் தள்ளாடினான்.


அதன் பிறகு விஸ்வநாதன் இந்திரா அழைத்த இடத்திற்கு செல்ல, நீலகண்டன் சொன்னது போலவே இவர்கள் நினைத்தபடியே அனைத்தும் நடந்தது, முழு தவறுக்கும் வேதாச்சலம் பொறுப்பானார்.


விஷ்வாவும் இந்த ஊரை விட்டு செல்கிறான் என்று தெரிந்தவுடன், இந்திராவும் அவனுடைய உதவியுடன் தன் மகளை இங்கிருந்து அழைத்துக் கொண்டு அவனது ஊருக்கே சென்றாள்.


இறுதியாக ஊரை காலி செய்து விட்டு, செல்வதற்காக தனது உடைமைகளை எல்லாம் எடுத்துச் செல்ல தங்களது வீட்டிற்கு வந்திருந்தாள் இந்திரா.


அப்போது போதை தெளிந்து எழுந்த வேதாச்சலம், தன்னை சுற்றி உடைந்து கிடந்த பொருள்களை கண்டு சற்று கலவரமானர்.


"யசோ… இந்து" என்று அழைத்தபடியே அவர்களை வீடு முழுக்க தேடினான். உண்மையில் அன்று நடந்த எதுவுமே வேதாவுக்கு ஞாபகம் இல்லை.


வற்றிய கண்ணீருடன், ஆங்காரமாக வீட்டுக்குள் நுழைந்தாள் இந்திரா…


" என்னாச்சு எல்லாரும் எங்க போனீங்க? என்று வேதா கேட்க… அவனை அக்னி பார்வை பார்த்தவள் ஒரு வார்த்தையும் பேசாமல் நேராக தங்களது அறைக்குச் சென்று தங்களது உடைமைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.


"உங்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் யசோ எங்க?" என்று அவர் எதுவும் அறியாதது போல கேட்க கோபமான இந்திரா…


" எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி இப்படி கேவலமா நடிக்கிறியே உனக்கு வெட்கமா இல்ல?"


"என்ன பேசுற இந்து?"


"இனிமேல் என் பேரை சொல்லாத…அவ்ளோதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது… முதலில் பணத்துக்காக என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்ச, இப்போ அதே பணத்துக்காக பெத்த பொண்ணை கூ*டி கொடுத்து இருக்க" என்று அவள் வார்த்தையை முடிக்கும் முன்னே அவளை ஓங்கி அறைந்து இருந்தான் வேதா.


"என்ன வார்த்தைடி பேசுற?"


"உண்மையை சொன்னா வலிக்குதா? சீ தூ நீயெல்லாம் ஒரு அப்பனா" என்றபடி அவனது அலைபேசியில் இருந்த குறுஞ்செய்திகளை அவனிடம் காட்டி, இப்போது தன் மகள் இருக்கும் நிலைமையையும் கதறியப்படியே அவனிடம் கூறி முடித்தாள்.


அனைத்தையும் கேட்டு நெஞ்சம் அதிர்ந்து நின்றான் வேதாச்சலம்.


"இல்லை இதை நான் பண்ணல? அவள் என் பொண்ணு நான் எப்படி என் பொண்ணுக்கு இப்படி ஒருகாரியத்தை பண்ணுவேன்… அவள் என் குழந்தைடி, அவள் என் உயிரு, நான் போயி அவளை! சத்தியமா நான் அப்படி பண்ணலடி, எதோ தப்பு நடந்து இருக்கு… நம்ம பொண்ணு எங்க? அவள் கிட்ட கேட்கலாம், இந்த காரியத்தை பண்ண நாயி யாருன்னு அவள் கிட்ட கேட்கலாம்…"


"காரணமே நீதானே அப்புறம் யாருக்கிட்டபோயி நியாயம் கேட்கிறது?"


"ஐயோ நான் அப்படி பண்ணலடி, என்னை நம்பு" என்று கதறினான்…


"ஐயா சாமி போதும் உன் நடிப்பெல்லாம், எதுக்காக இன்னும் நடிச்சிட்டு இருக்கு? உன் நடிப்பை நம்பி ஏமாந்த இந்திரா என்னைக்கோ செத்து போயிட்டா… இதுக்கு மேல உன்னை நம்ப நான் தயாராக இல்லை… நான் போறேன், நீ செத்தாலும் உனக்காக இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட நான் விடமாட்டேன்" என்றவளின் காலை பிடித்துக் கொண்டு கதறினான் "நான் எதுவும் பண்ணலமா என்னை நம்புமா" அவனை உதறி தள்ளி விட்டு அவளுக்காக வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு அங்கிருந்து மொத்தமாக சென்றாள் இந்திரா.


நாட்கள் சென்றது… நடைபிணம் ஆனான் வேதாசலம்.


குணா, நீலகண்டன் மற்றும் அவர்களது மனைவி ஆகியோர் அவர்கள் ஊருக்கு திருப்பி சென்றனர்.


குணாவை பற்றிய உண்மை தெரிந்ததும் தனது தங்கையை அவனோடு அனுப்பி வைக்க விஷ்வா தயங்கினான். பின்னர் நீலகண்டன் தான் பேசி சமாளித்து அவளையும் இங்கு அழைத்து வந்தான்.


தனது ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக குணாவை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான் நீலகண்டன்… விஷுவாவுக்கு அப்படி ஒரு வாக்கை அளித்து தான் அவரது தங்கையை இங்கு அழைத்து வந்தான் நீலகண்டன். அதனால் குணாவும் அமைதியாக சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டான்.


விஸ்வநாதன் தனது குடும்பத்தோடு தனது மாமியாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். மேலும் அதே ஊரில் இந்திராவிற்கு ஒரு வேலையையும் ஏற்பாடு செய்து கொடுத்தான். இந்திராவும் யசோதாவும் அதே ஊரில் தனியே வீடு எடுத்து தங்கினர்.


ஆரம்பத்தில் யசோவுக்கு அன்று நடந்த எதுவும் பெரிய அளவில் நினைவில் இல்லை… நாட்கள் செல்ல செல்ல குணாவின் முகம் மட்டும் அவள் சிந்தையில் தொன்றி, நடந்த விஷயத்தை ஓரளவுக்கு தெளிவு படுத்தியது. மேலும் நாளாக நாளாக விஷ்வாவின் முகமும் ஒரு நிழல் பிம்பம் போல தெரிய ஆரம்பித்தது.


ஆனால் யசோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை… அவரை தனக்கு தெரியும் என்பதால் தான் இப்படி ஒரு இல்யூஷன் தனக்கு வருவதாக நினைத்துக் கொண்டாள்.


நாட்கள் வருடமாக ஜீவா அவள் வாழ்வில் வந்தான். அதன் விளைவு அவள் அவனது வீட்டிற்கு சென்றாள். அங்கு இருந்த புகைப்படமே அவளது கேள்விக்கு பதிலானது. அந்த புகைப்படத்தில் அவள் கண்டது விஸ்வநாதனை மட்டும் அல்ல அவனோடு இருக்கும் குணாவையும் தான்… இவர்கள் இருவரும் ஒரே புகைப்படத்தில் எனில் தனக்கு அடிக்கடி வரும் காட்சிகள் எதுவும் காட்சி பிழை அல்ல… அனைத்தும் உண்மையே, அப்போது அன்று இவரும் அங்கு இருந்து இருகிறார்? அப்படி இருக்க இந்த உண்மையை ஏன் தன் தாயிடம் இருந்து இவர் மறைத்தார். தங்கையின் வாழ்வை காக்க தன்னை நம்பியவரின் வாழ்க்கையை அழித்தவராக யசோவின் கண்ணுக்கு இப்போது தெரிந்தார் விஸ்வநாதன்.


****


அனைவரது வாழ்க்கையும் ஏதோ ஒரு வழியில் சென்று கொண்டிருக்கையில் வழி தெரியாமல் பித்து பிடித்த நிலையில் 'அன்று என்ன நடந்தது?' என்று யோசித்து யோசித்தே உடைந்து போனார் வேதாச்சலம்.


மகனை இழந்து, மனைவியை இழந்து ,மகளை இழந்து வீடு வாசலை இழந்து தங்க இடமில்லாமல் தெருவோரத்தில் அமர்ந்திருந்தான் வேதா… அடுத்து என்ன செய்வது? தன் மகளையும், மனைவியையும் எங்கு சென்று தேடுவது? என்று புரியாமல் அமர்ந்து இருந்தான். அவ்வழியே செல்வோர் வருவோரெல்லாம் இவனை யாசகன் என்று நினைத்து சில்லறையை தூக்கி எறிந்து விட்டுப் போக, சிதறி கிடந்த இந்த சில்லறைகளையும் தான் வாழ்ந்த வாழ்க்கையும் நினைத்து அருகில் இருந்து சுவரில் சாய்ந்தவனின் விழியோரத்தில் அமைதியாக ஒரு துளி கண்ணீர் வழிந்து ஓடியது.


அடுத்தவேளை உணவுக்கு வழி இல்லை அந்தச் சில்லறையை எடுத்து ஏதேனும் வாங்கி அருந்திவிட்டு, உயிரை போக்கிக் கொள் என்று மூளை கட்டளையிட்டது.


மனமோ தவமிருந்து பெற்ற மகளை ஒருமுறையாவது கண் நிறைய பார்த்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள் என்று கதறியது.


எப்படியும் இந்த காசு தேவை என்று உணர்ந்தவன் வெட்கம், மானம் என அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு கீழே கிடந்த சில்லறைகளை பொறுக்கி தன் சட்டை பாக்கெட்டில் நிறப்பினான்.


அப்போது தான் அவன் சட்டையில் இருந்த என்றோ குணா கொடுத்த நீலண்டனின் விஸ்டிங் கார்டை பார்த்தான்.


உண்மையை இவன் அறியும் வேலை… ஆரியனின் குடும்பமே அழிந்திருக்கும்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

பகுதி 29


ஒரு விடியல் பொழுதில், பறவைகளின் ஓசைக்கு நடுவே

வாசலை கூட்டி பெருக்கும் சத்தமும் கேட்டது.


அதுவரை கண் மூடி உறங்கிக் கொண்டிருந்த ஆரியன், அந்த அலாரத்தின் இரைச்சலில் சட்டென கண் விழித்தான்.


இப்போது தான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.


"நேரம் ஆச்சு நேரம் ஆச்சு" என்று படபடவென தன் மேல் கிடந்த போர்வையை உதறி வீசிவிட்டு வேகமாக குளியலறை நோக்கி ஓடினான்.


குளித்து முடித்து கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து தானே ரசித்துக் கொண்டவன், வாகனத்தை எடுத்துக் கொண்டு நேராக விவேக்கின் வீட்டுக்கு வந்தான்.


விவேக்கின் தாய் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க, வேகமாக அவர் முன் வந்து வாகனத்தை நிறுத்திய ஆரியன், தன் வண்டி மீது சாய்ந்து நின்றபடியே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.


விவேக்கின் தாய் கோவமாக இவனை பார்க்க, "விவேக்" என்று ஓங்கி குரல் கொடுத்தான் ஆரியன்.


'வந்துட்டான் ஊர் பொறுக்கி' என்று சலித்து கொண்டு முகத்தை வெட்டிய விவேக்கின் தாய், நேராக வீட்டுக்குள் சென்றார்.


அவரது செயலை கண்டு வருத்தம் கொள்ளும் ரகம் எல்லாம் இல்லை ஆரியன்… 'நீ போனா போ எனக்கென்ன' என்பது போல சட்டமாக புகையை இழுத்துக்கொண்டே மீண்டும் விவேக்கின் பெயரை ஏலமிட்டான்.


விவேக்கின் தந்தை, ஆரியனின் தாத்தாவுடைய அரிசி ஆலையில் கணக்காளராகவும், மேற்பார்வையாளராகவும், பணி புரிகிறார்… அதற்காக அவருக்கென அரிசி ஆலை அருகே ஒதுக்கப்பட்ட வீட்டில் தான் இப்போது அவர்கள் குடும்பம் வசித்து வருகின்றனர்.


அதனால் ஆரியன் என்ன செய்தாலும் அவனது தாத்தாவின் முகத்துக்காக இவர்கள் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்.


ஆரியன் கத்தியை கத்தலில் கண்ணை மூடியபடியே எழுந்த விவேக், தன் காதில் இருந்த பஞ்சினை எடுத்து அதனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தான்.


"நீயெல்லாம் வேஸ்ட் என்ன கத்து கத்துறான் பார்த்தியா?" என்று அந்த பஞ்சிடம் தன் கவலைகளை அவன் கூறிக் கொண்டிருந்த நேரம் மீண்டும் 'விவேக்' என்று ஆரியனின் குரல்…


"உள்ளேன் ஐயா" என்றபடி வேகவேகமாக எழுந்து வெளியே வந்தான், அங்கு அவனை முறைத்து பார்த்தபடி நின்றாள் அவனது தாய்.


"ஏன்மா வெளியே நின்னு இந்த கத்து கத்துறானே நான் வீட்டுல இல்லன்னு சொல்லி அனுப்ப வேண்டியது தானே"


"எதுக்கு? அப்படி சொன்னா இது என் தாத்தாவோட வீடு நீங்க வேணா வெளியே போங்கன்னு சொல்லுவான்… எல்லாரும் சேர்ந்து வெளியே போயிடுவோமா?" என்று கேட்டார் அவர்.


"ஓ அப்படி ஒண்ணு இருக்கோ… சரி சரி காபியை கொடு குடிச்சிட்டு கிளம்புறேன்" என்றவன் அவர் கையில் இருந்த காபியை வாங்கி அருந்தியபடியே வெளியே செல்ல பார்க்க,


"நீங்க ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்கன்னு எனக்கு தெரியும்டா ரொம்ப நடிக்காத.. பணக்காரங்க சகவாசம் நம்ம குடும்பத்துக்கு நல்லதுக்கு இல்லைன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன் ஆனால் நீ கேட்குற மாதிரி தெரியல" என்ற தன் தாயை திருப்பி பார்த்து சிரித்த விவேக்…


"என் நண்பன் பணக்காரன் தான் ஆனால் நல்லவன். எந்த சூழ்நிலையிலும் யாராலும் எனக்கு எந்த பிரச்சனையும் வராது… அவன் வரவும் விட மாட்டான்" என்று கூற, கோவத்தில் கையில் வைத்திருந்த துணியை தூக்கி அவன் மீது வீசினார் அவனது தாய்,


"அவன் கூட சேர்ந்து நீயும் உருப்படாம தான் போக போற"


"இது வேணா உண்மை அம்மா, கண்டிப்பா அவனும் உருப்பட மாட்டான், என்னையும் உருப்படவிட மாட்டான்" என்று கூறி, அவர் அடியில் இருந்து தப்பித்து வாசல் நோக்கி ஓடி சென்றான் விவேக்.


விவேக்கை கண்டதும் "நேரம் ஆச்சு வா போகலாம்" என்ற ஆரியன் சிகரெட்டை அணைத்து வீசி விட்டு வண்டியை எடுக்க போக…


"ஒரு நிமிஷம் இருடா" என்றபடி வயிற்றை பிடித்தான் விவேக்.


"எதுக்குடா?"


"ஐயோ காபி வேலையை காட்டிடுச்சுடா… வயிறு கலக்குது ஒரு ரெண்டு நிமிஷம்… இதோ இப்போ வந்திடுறேன்" என்றவன் தன் வீட்டின் பின் பக்கம் டாய்லெட் நோக்கி ஓடினான்.


அங்கு போனால் அவனுக்கு முன்பாகவே ஒருவர் அந்த இடத்தை பட்டா போட்டது போல 'டம் டம்' வெடி சத்ததுடன் விழாவை நடத்திக் கொண்டிருந்தார்.


அந்த சத்ததில் முகம் சுளித்தவனோ "ஓ" என்று சலித்துக் கொண்டு "உள்ள யாரு?" என்று கேட்டான்.


"உன் தாத்தா தாண்டா பேராண்டி" என்றார் அவர்.


"உள்ள என்னயா பண்ணுற?" என்று வயிறை பிடித்துக் கொண்டு நெளிந்தான் விவேக்.


"உள்ள என்னடா பண்ணுவாங்க?" என்று எதிர் கேள்வி கேட்டவர் "டம்" என்று மீண்டும் வாத்தியம் இசைக்க… மூன்று அடி தள்ளி ஓடினான் விவேக்.


"நானும் பார்த்துட்டே இருக்கேன், நீ தினமும் இப்படியே தான் பண்ணிட்டு இருக்க, இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்"


"நல்லா இல்ல தான் என்ன பண்ணுறது?"


"சீக்கிரம் வெளியே வா தாத்தா எனக்கு முக்கியமான வேலை இருக்கு"


"நான் அதை விட முக்கியமான வேலையா தான் உள்ள இருக்கேன்"


'ஐயோ இந்த தேங்கா பூ தலையனோட தொல்லை தாங்கலயே'


"தாத்தா மனுஷன் அவசரம் புரியாமல் எதுகை மோனைல பேசி உயிரை வாங்காமல் வெளியே வா" என்று கதவை பிடித்து ஆட்டினான் விவேக்.


அவரோ "நான் வர நேரம் ஆகும் அப்படியே வெளியே எங்கயாவது போ" என்றார்.


"யோவ் இப்போ மட்டும் நீ வெளியே வரல, உள்ள வந்து குழிக்குள்ளயே முக்கி உன்னை கொண்ணுறுவேன்" என்று கதவை ஓங்கி மிதிக்க… அவரோ 'நல்லா கத்து கதறு' என்று பொறுமையாக உள்ளேயே பொழுதை கழித்தார்.


அதற்குள் போனவனை காணவில்லை என்று ஆரியன் தேடி வந்து விட்டான்.


"இன்னும் இங்க என்னடா பண்ணுற?" என்று அவன் கேட்க, .


"இந்த ஆளு வேணும்னே வெளியே வர மாட்டுறான்டா" என்று தன் தாத்தா மீது குற்ற பத்திரிகை வாசித்தான் விவேக்.


"எந்த ஆளு?" என்று கேட்டான் ஆர்யன்.


"வேற யாரு என் தாத்தன் தான்"


"ஓ" என்று சில நொடி சுற்றும் முற்றும் தேடியவன், கீழே கிடந்த ஒரு கட்டையை எடுத்து பாத்ரூம் கதவில் ஓங்கி வீசினான்… அவன் வீசிய நேரம் சரியாக அவர் கதவை திறக்க, வீசிய கட்டையின் தாக்கத்தில் மீண்டும் அந்த கதவு மூடிக் கொள்ள, கதவு இடித்த வேகத்தில் நெற்றியில் இருந்து சிறிது ரத்தம் வழிய 'ஐயோ' என்று அலறினார் அந்த பெரியவர்.


'ஆஹா கிழவன் போயிட்டான் போலடா' என்று விவேக் தன் நெஞ்சில் கைவைக்க… ஒரு கணம் ஆரியனும் அதிர்ந்து போனான். ஆனால் அவரோ சிறிதாக வழிந்த ரத்தத்தை மெதுமாக துடைத்து விட்டு மீண்டும் கதவை மூடிக் கொண்டார்.


"அதானே பார்த்தேன் இது எங்க போகும்? மறுபடியும் குழிக்குள்ளேயே ஐக்கியமாகிடுச்சு" கடுப்பாகி பேசினான் விவேக்.


"இப்போ நீ வரியா இல்லையா?" என்று ஆரியன் தன் வேலையில் இவனை அவசரப்படுத்த…


"வரேன் ஆனால்" என்று வயிறை பிடித்துக் கொண்டு விவேக் ஒரு மாதிரி நெளிய, "போய்த்தொலை" என்று கூறி விட்டு வாசல் வரை வந்த ஆரியன் என்ன நினைத்தானோ 'அதெல்லாம் இல்ல நீ வா' என்று கூறி விவேக்கை தர தரவென அங்கிருந்து இழுத்து சென்றான்.


"டேய் இதெல்லாம் பெரிய பாவம்டா, வயிறு வலிக்குது என்னை இறக்கி விடுடா" என்று விவேக் வழி நெடுகிலும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண,


"சும்மா வாயை மூடிட்டு வா" அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் வண்டி ஒரு கோவிலில் வந்து நின்றது.


கோவிலுக்கு அருகே சலசலப்புடன் ஓடை நீர் தலும்பி ஓடிக்கொண்டிருக்க, அந்நீரை குடத்தில் நிரப்பிக் கொண்டு அதனை தூக்கி வரும் அந்த பதுமையை அந்நேரத்தில் காணவே இத்தனை போராட்டம்.


மார்கழி மாதத்தில் தினமும் விநாயகருக்கு தண்ணீர் ஊற்றினால் மனம் போல வாழ்க்கை அமையும் என்பார்கள். அதற்காகவே திருமணம் ஆகாத பெண்கள் இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, விநாயகருக்கு தண்ணீர் ஊற்றுவது வழக்கம்.


யாருக்காக இத்தனை தூரம் வந்தானோ, அவளின் ஒற்றை பார்வை எப்போதும் போலவே அவனை கடக்கையில் ஒரு கணம் தீண்டி சென்றது.


அவள் பார்வை பட்டதும் இனம் புரியா மகிழ்ச்சியில் ஆரியனது இதழ்கள் விரிந்து கொண்டது.


கிட்டத்தட்ட இரண்டு வருடமாக இப்படி பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றான்.


ஆரம்பத்தில் இவன் மட்டும் பார்த்தான்… இப்போதும் அவளும் அவ்வப்போது பார்க்கிறாள். இது தான் இவர்கள் உறவு முறையில் ஏற்பட்ட சிறு முன்னேற்றம்.


பிற பெண்களை போல எந்த வித வேடிக்கையும், விளையாட்டும் இல்லாமல் பொறுப்பாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண் தான் இந்த சங்கவி.


பார்க்க பார்க்க திகட்டாத அழகு, அவள் முகம் பார்த்தால் எவர் கொண்ட கோபமும் கரைந்து போகும்… அப்படி ஒரு சாந்தமான அழகு.


விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி விட்டு அவள் கிளம்பி செல்லும் நேரம் வரை அவளை பார்த்துக் கொண்டு அங்கேயா தான் நின்றான் ஆரியன்.


"அதான் போயிட்டால்ல வாடா போவோம்" என்று விவேக் இவனது கரத்தை பிடித்து இழுக்க உறைந்து நின்றான் ஆரியன்.


"எவ்ளோ அழகா இருக்கால்ல" என்று மெய் மறந்து சொன்னவனை சலிப்பாக பார்த்தான் விவேக்.


"நம்ம இப்படி தினமும் நின்னு பார்க்கிறதை மட்டும் எவனாவது பார்த்தான் அப்புறம் அவ்ளோதான்…"


"அதெல்லாம் என்னை ஒன்னும் பண்ண முடியாது" என்று திமிராக சொன்ன ஆரியன், மீண்டும் 'அவள் எவ்ளோ அழகா இருக்கால்ல' என்று ரசனை கொண்டு பிதற்ற, கடுப்பானான் விவேக்.


"டேய் ஆரி உன் பேச்சு நடவடிக்கை எதுவும் சரி இல்லை… அந்த பொண்ணுக்கு வெறும் பதினேழு வயசு தான் ஆகுது… ஏதாவது பிரச்சினை ஆச்சுன்னா அவ்ளோ தான்"


"அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா" என்றவன் அவளை கண்ட மயக்கத்தில் இருந்து இன்னும் தெளியவில்லை…


"என்ன ஒன்னும் ஆகாது, இவ்ளோ நாள் அவள் வேலை செய்யுற இடத்தில போயி பார்த்துட்டு இருந்த, அது அப்படி இப்படின்னு உன் தாத்தா காதுக்கு போச்சு, அப்போ அவர் கேட்ட கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடிச்சுதா? மறுபடியும் இந்த பொண்ணு விஷயம் அவருக்கு தெரிய வந்தா உன்னை ஒன்னும் பண்ண மாட்டாரு அந்த பொண்ணு குடும்பத்தை ஊரை விட்டு அனுப்பிடுவாரு, பரவாயில்லையா"


"ப்ச் அதனால தானடா இப்போ எல்லாம் அவள் வேலை பார்க்குற இடத்துக்கு நம்ம போறது இல்லை" என்று பதில் கொடுத்தான் ஆரியன்.


காலை இங்கு தரிசனம் என்றால், அவள் வேலைக்கு செல்லும் நேரமும், திருப்பி வீட்டுக்கு வரும் நேரமும் சரியாக ஒரு டீ கடையில் நின்று அவளை நோட்டமிட ஆரம்பித்து விடுவான். துணைக்கு எப்போதும் போல விவேக் கூடவே இருப்பான்.


எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது எலி புழுக்கை என்னதுக்கு காயுதுங்குற மாதிரி தான் விவேக்கின் நிலை.


சங்கவி படிக்கவில்லை, குடும்ப சூழ்நிலை காரணமாக பதிநான்கு வயதில் இருந்தே வேலை தான் செய்கிறாள்.


தாய், தகப்பன் இல்லை, வயதான பாட்டி மட்டுமே என்பதால் அவரை கவனித்துக் கொள்ள இவள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.


அடுத்த நாளும் இதே கதை தான். தினமும் வருவான், அவளை பார்ப்பான், அவளும் பார்ப்பாள் அதன் பிறகு இருவரும் அவர்கள் வழியை பார்த்து கடந்து சென்று விவார்கள்.


காலை 8 மணி போல அவள் வேலைக்கு கிளம்பி செல்வதை கவனித்து விட்டு தான் ஆரியன் தன் கல்லூரிக்கு கிளம்பி செல்வான். அதே போல இரவு எட்டு மணிக்கு இவள் திரும்பி வரும் நேரம் பார்த்து அதே கடையில் செட்டில் ஆகி விடுவான் ஆரியன்.


அதனை கண்டு 'இதெல்லாம் ஒரு பொழப்பு' என்று தலையில் அடித்துக் கொண்டு நிற்பான் விவேக்…


இது தான் இவர்களது தொடர் கதையாக இருந்தது… எல்லா நாளும் சரியாக இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு திரும்பி செல்பவள் இன்று இரவு 9 மணி ஆகியும் அவர்கள் நின்ற டீ கடையை கடந்து செல்லவில்லை என்றதும் ஆரியன் சிறுது பதட்டமானான்.


காலையில் வேலைக்கு சென்றவள் 'இன்னும் ஏன் திரும்பி வர வில்லை?' என்று குழப்பமாகி விவேக்கினை போட்டு உலுக்கினான்.


"எனக்கு என்னடா தெரியும்? ஒரு வேளை உடம்பு எதுவும் சரி இல்லன்னு மதியமே வீட்டுக்கு போயிருக்கலாம்… நாளைக்கு வந்து பார்த்துக்கலாம்டா"


"அது இல்ல விவேக்" பதறினான்.


"என்னமோ உருகி வழியுற உண்மை காதல் மாதிரி ஓவரா பண்ணாதடா… முடியல, அழகா இருக்கான்னு தானே இவ்ளோ நாள் அவள் பின்னாடி சுத்திட்டு இருக்க, அப்புறம் என்னடா தெய்வீக காதல் மாதிரி புலம்பி தள்ளுற"


இன்னும் ஆரியன் அமைதியாகவே இருக்க…


"என்னடா ரொம்ப அமைதியா இருக்க… ஒருவேளை உண்மையா காதலிக்கிறியா? அப்படி எதுவும் சொல்லிடாதடா, அப்புறம் அந்த பொண்ணுக்கு மட்டும் இல்ல எனக்குமே சேர்த்து உன் தாத்தா சமாதி கட்டிடுவாரு" என்றான் விவேக்.


"ச்சே அப்படி எல்லாம் இல்லை, சரி வா போகலாம்" என்ற ஆர்யன் மனமே இல்லாமல் அங்கிருந்து சென்றான்.


அடுத்தநாள் எப்போதும் போல கோவிலில் அவளுக்காக காத்திருந்தான், ஆனால் அவள் வரவில்லை, வேலைக்கு செல்லும் வழியிலும் காத்திருந்தான் அப்போதும் அவள் வரவில்லை. இனி அவ்விடம் வரவும் மாட்டாள்.
 
Status
Not open for further replies.
Top