ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் விழியின் மொழி...நானடி - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 21

கையை எடுத்து பூ மீது வைக்க, இமையாவுக்கு அந்த மென்மை ஏதோ செய்தது. அதை மனதார ரசிக்கவும் செய்தாள்.

"சரி தூங்க போலாமா இமை?"

"தூங்கலாம்... ஏமாத்துகாரா கதை சொல்லுறேன்னு ஏமாத்திட்ட"

"ஹாஹா... மறந்துட்டேன் வா சொல்லுறேன்"

"போ எனக்கு தூக்கம் வருது நாளைக்கு சொல்லு" என இருவரும் மனநிறைவோடு தூங்கினார்கள்.

ஆனால் விடியும் நாள் இமையாவுக்கு இடியை இறக்கி இருந்தது.

இமையாவிற்கு ஏதோ கொடூர கனவு. அதனை ஜீரணிக்க முடியாமல் பயத்தில் எழுந்தவள்

“கதிரா… கதிரா” பயத்தில் பேய் போல கத்தினாள்.

“இமை என்னாச்சி" அருகில் வந்து அமர்ந்தவனை தாவி அணைத்து கொண்டாள். இப்போது எல்லாம் அம்மா என்று அலறுவதையே மறந்து இருந்தாள். கதிரா தான் எல்லாம்.

“என்னாச்சி... இமை பேட் டிரீமாஸ்சா" அவளது முகத்தை ஆறுதலாக ஏந்தி பிடித்தான்.

“ம்ம்.. பயமா இருக்கு என்னைவிட்டுடாத” இறுக அணைத்தவள், ஏதேதோ பிதற்றி கொண்டிருந்தாள்.

‘என்ன பெட் ஈரமா இருக்கு... இமையா தண்ணீ கொட்டிட்டாளா ?’ கதிர் சுற்றிப்பார்க்க, இரவு வைத்த தண்ணீர் அப்படியே இருந்தது. தண்ணீ எங்கிருந்து வந்தது.

அப்போது தான் இமையாவை பார்த்தான். பயத்தில் படுக்கையை நனைத்திருந்தாள். இமையாவை விட இப்போது கதிர் தான் பதறினான்.

‘கதிர் எதாவது யோசி... இதை இமையா உணர்வதற்குள். எப்படியாவது குளியல் அறைக்கு கூட்டிட்டு போகனும்’

“இமையா… எழுந்திரு குளிச்சா சரியா போயிடும். இனி பேட் டிரீம்ஸ் வராது. வா எழு குட்டிமா”

“இல்லை இப்படியே இரு இரூட்டு ராட்சசன் வரான். என்னை உன்னிடம் இருந்து பிரிக்க” இமையா ஏதோ உணர்ந்தவள்,

திடீரென கதிரை தள்ளிவிட்டாள் தன் முழு பலம் கொண்டு.

இமையா அலர துவங்கினாள். இந்த வயதில் இப்படி மெத்தையை நனைத்து வைத்திருப்பதை அவமானமாக எண்ணினாள். அவளது நடவடிக்கை கதிர் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்கியது.

தனது டாப்பின் நுனியை பிடித்து கொண்டவள், அந்த இடத்தை விட்டு நான்கு காலில் தவழ்ந்து சென்று மெத்தையின் ஒரு மூலையில் அமர்ந்து அருகில் இருந்த அவளது ஷாலை எடுத்து தன் மீது போற்றிக்கொண்டாள்.

இமையாவின் தலையில் யாரோ வெடி வைத்தது போல வலித்தது.

தலையை பிடித்து கொண்டவளின் அருகில் உட்கார்ந்த கதிரின் கைகள் நடுங்கியது. தைரியத்தை வரவழைத்து கொண்டு இமையாவின் தோளை தோட,

“என்னை தொடாத நான் கெட்ட பாப்பா… மெத்தையை அழுக்கு செஞ்சிட்டேன். பேட் ஸ்மல் வருது. இங்க இருக்காத வெளியே போ”

“இமையா குளிக்கலாம் வாடா… எந்திரி” இமையாவின் தோற்றம் கதிரை நடுங்க செய்தது.

“இல்லை… போ என்னை தொடாத. பயமா இருக்கு இங்கிருந்து போ. நான் உனக்கு வேண்டா. மெத்தை நனைக்காத, நல்ல பொண்ணு பாத்துக்கோ. முக்கியமா உடல்ல எந்த குறையும் இல்லாத பொண்ணா பாத்துக்கோ" இமையா இதையே திரும்ப திரும்ப சொன்னாள்.

“மெத்தையை வீணாக்கிட்டேன். உன் காசு எல்லாம் வீண் செஞ்சிட்டேன்” இப்படி ஏதேதோ சொல்லி புலம்பியவள், ஒரு கட்டத்துக்கு மேலே அடம்பிடிக்க துவங்கினாள்.

“அம்மா வேணும் அம்மா... அம்மா” அழுகையும் விசும்பலும் அதிகரித்துக்கொண்டே போனது.

“இமையா இங்க பாரு ஒன்னுமில்லை. என் தங்கமில்ல. வா எந்திரி குளிச்சிட்டு வந்துடலாம். தங்க பிள்ளை சொன்ன பேச்சி கேட்குமாம்”

“போ... என் பக்கம் வராத போடா... நான் சுச்சு போயிட்டேன். நா...நான் பேட் கேர்ள்” இமையா வெறிபிடித்தவள் போல கதிரை தள்ளி விட்டாள். அவள் எத்தனை முறை தள்ளி விட்டாலும், கதிர் மீண்டும் மீண்டும் அவள் அருகில் வந்து உட்கார்ந்து சமாதானம் படுத்தினான்.

“அத்தை.. மாமா இது கேட்டா ரொம்ப கஷ்டப்படு வாங்க இமையா. என்னை பாரு இது எல்லாம் ஒரு விஷயமே இல்லடா"

இமையா காதை பொத்திக்கொண்டாள் “இங்கிருந்து போ...”

“இல்லை நான் போகமாட்டேன். என் இமையா கூட தான் இருப்பேன்"

“கதிர் பிளீஸ் வெளியே போ... எனக்கு அசிங்கமா இருக்கு போ" இமையாவின் விசும்பல் அதிகரித்துக்கொண்டே போனது.

கதிருக்கு இமையாவை எப்படி சரி கட்டுவது என்று ஒன்றும் விளங்கவில்லை.

கதிர் சொல்லுவது கேட்கும் நிலையிலும் அவள் இல்லை. சைக்காலாஜிக்கலாக இமையா படிபடியாக பின் அடைவு அடைந்தாள், மனதளவிலும் சரி உடலிலும் சரி.

முதலில் காதல் தோல்வி. அதன் பிறகு பார்வை இழந்தது, கட்டாய திருமணம், இவன் மீது காதல், வள்ளி சொன்னது, அவனது தந்தை பேசிய வார்த்தைகள், கதிரின் காதல் என அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவும் அவளது மனதை பாதித்தது.

இதற்கிடையில் இந்த கனவு. அதனின் பயத்தால் ஏற்பட்ட நிகழ்வு என இமையாவின் வாழ்க்கையை புரட்டிபோட போவது இந்த நிகழ்வுதான்.

இது இரண்டாவது முறை. இமையா பெட்டை நனைத்தது. காதல் பிரிவுக்கு முன் ஒரு முறை. அவளது காதலனை பிரிய காரணமாக இருந்தது. இந்த முறை கணவனை பிரிய காரணமாக இருக்க போகிறது.

அழுது அழுது களைத்து போனாள் இமையா. ஒரு கட்டத்துக்கு மேல் தேம்பி அழுததில் மூச்சி பிடித்து கொண்டது. மூச்சி விடவே சிரமப்பட்டாள். உடல் வெட்டிக்கொண்டு, தலை சரிந்தது.

கதிரும் இரண்டடி தள்ளியே அமர்ந்திருந்தான். அவள் அருகில் நெருங்க நெருங்க, அவளின் அழுகை அதிகரித்ததை உணர்ந்தவன் தூரம் இருந்து என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றான்.

தலை சரியவும் அவன் தாங்கி பிடிக்க, பாதி மயக்கத்திலும்

“கதிரா என்னை தொடாதே நா… நான் பேட் கேர்ள்”

“இமையா ஒன்னுல்ல ரிலாக்ஸ். இப்படி டென்சன் ஆகாதே. தலை வலிக்கும்” அவளது வியர்த்து இருந்த முகத்தை துடைத்து விட்டு, முன் கலைந்திருந்த முடியை விலக்கியவன்,

“இமையா… நான் சொன்னா கேட்பில்ல...?”

“ம்ம்..."

"எந்திரி குளிச்சிட்டு வந்துடலாம்"

“அம்மா வேணும்...” பிதற்றினாள்.

“இங்க பாரு நான் தான் இனி உனக்கு எல்லாம். வயசானவங்களை தொந்தரவு செய்யக்கூடாதுடா பட்டு"

“அம்மா வேணும்” பாதி மயக்கத்திலிருந்து அம்மா அம்மா என்று கதறும் சிறுமியை என்ன செய்ய?

கதிர் பார்த்து விரும்பிய அந்த இமையா இவளில்லை, முற்றிலும் மாறுபட்டவள். துருதுரு விழிகளோடு… சேட்டை செய்யும் சிரிப்பு… போனி டெயில் போட்ட தோள் வரை பரவும் கூந்தல்... சத்தமாக பேசும் அவளது குரல்... உலகத்தை சுற்ற நினைத்த எண்ணம்.... என அனைத்தும் மாறிவிட்டது.

தற்போது இருக்கும் இமையாவை ஆராய்ச்சி பார்வை பார்த்தவன், 'கருமை சூழ்ந்த விழிகள். நீண்ட முடி ஆனால் பராமரிப்பதில்லை. இரண்டு அடி தனியாக எடுத்து வைக்க தயங்குகிறாள். பேச்சு குறைந்தது, அதுவும் சத்தமில்லாத அடங்கிய குரல். கதிர் மனம் துடித்தது இமையா வேண்டும் என. பழைய இமையாவாக அந்த பட்டாம்பூச்சி எனக்கு எப்போ கிடைப்பாள்? கடவுளே சீக்கிரம் கொடுத்துடு என் இமையாவை' மனதில் ஒரு வேண்டுதல் வைத்தவன்

இமையாவின் டாக்டருக்கு போன் செய்து நடந்ததை சொன்னான்.

“டாக்டர் இப்ப என்ன செய்றது? அரைமணி நேரமா பேசிட்டிருக்கேன். ஒன்னும் வேலைக்கு ஆகலை. ஏதோ கனவு கண்டிருக்கா பயத்துல இப்படி ஆகிடுச்சி"

“கதிர் ஒன்னுமில்லை. இப்ப அவ குழந்தை மைன்ட் செட்டிலிருக்கா. கொஞ்ச கொஞ்சமா கியூர் ஆகிட்டு தான் வரா… கவலை படுறதுக்கு ஒன்னுமில்லை சரியா. ரிலாக்ஸ்.. இப்பா பாதி மயக்கத்தில் தானே இருக்கா பெட்டர். நீங்க குளிக்க வச்சிடுங்க இல்லனா பக்கத்தில் இருக்கும் யாராவதை குளிக்க வைக்க சொல்லுங்க"

“சரி டாக்டர்" கதிருக்கு காமாட்சி அக்காவை கூப்பிட்டத்தான் நினைத்தான். ஆனால், இது வெளியாட்களுக்கு தெரிய படுத்த கதிருக்கு விருப்பமில்லை.

கதிருக்கு தான் குளிக்க வைப்பதிலும் ஒரு தயக்கம் இருந்தது. ஆனா வேறு வழியில்லை என்று இமையாவை தூக்கி வந்து ஒரு குட்டி நார்காலியில் அமர வைத்தான்.

ஆடையுடன் ஷவரின் கீழ் நிறுத்தினான். இமையாவுக்கு தண்ணார் பட்டதும் மயக்கம் தெளிய துவங்கியது.

கதிரின் கை அணைவில் இருந்து நெளிய துவங்கினாள்.

“இமையா இங்க பாரு நான் வெளியே இருக்கேன் குளிச்சிட்டு வந்துடுறியா. இல்லை நான் இங்கவே இருக்கட்டுமா?”

அவன் கேட்டதில் மீதி மயக்கமும் எங்கோ சென்றது இமையாவுக்கு.

“இல்லை நானே”

“சரி டா”

“முடியுமாடா நிற்க?”

“ம்ம்...”

“சரி.. கதவு தாள் போடாத. நான் வெளியே தான் இருக்கேன். எதாவது வேணும்னா கூப்பிடு”

கதிர் பாத்ரும் அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றவன், கண்கள் மூடியிருக்க காதை கூர்மையாக்கி வைத்திருந்தான். அவனுக்கு தெரியும் இமையா எதாவது என்றால் அவனை உதவிக்கு கூட கூப்பிட மாட்டாள்.

அவளது பூ போன்ற நெஞ்சம் கல்லாக மாறி பல மாதங்கள் ஆகியிருந்தது. யாரிடமும் உதவிக்கு நிற்க கூடாது என்ற எண்ணம் அவளுள் நிறைந்திருந்தது. அது கதிருக்கு மட்டுமில்லை. அவளது அப்பா அம்மாவுக்கும் பொருந்தும்.

தண்ணீர் சத்தம் நின்றது. வேகமாக கண்களை திறந்தவன்

“இமையா... குளிச்சிட்டியா ?”

“ம்ம்....”

ஐந்து நிமிடம் ஆனது. இமையாவிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.

‘இன்னும் என்ன செய்யறா ?’

“இமையா... இன்னும் என்ன பண்ற ?”

“கதிர்… டிரஸ்” வெளிப்படையாகவே தன் தலையை அடித்து கொண்டான்.

‘ச்சே இந்த மன குழப்பத்தில் டிரஸ் எடுத்து வைக்க மறந்துட்டேனே.. ஈஸ்வரா' ஆடையை எடுத்து வந்து கொடுக்க, இமையாவும் சிறு தயக்கத்தோடு கைகளை மட்டும் வெளி நீட்டி வாங்கி கொண்டாள்.

இமையா வாங்கிய ஆடையை கம்பியில் போட்டவள், ஆடை அணியும் போது தான் ஒன்றை கவனித்தாள். ஒரு ஆடவன் தனது அனைத்து உடையையும் எடுத்து தந்தது ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. இமையா ஒன்றை மறந்தாள், சில மாதங்களாகவே அவன் தான் அவளது அனைத்து தேவையையும் எடுத்து வைக்கிறான் என்று.

இன்னும் ஒன்றையும் மறந்திருந்தாள். வேறு ஒரு ஆடவனில்லை அவன் தன்னவன், தன் கணவன் என்பதையும் மறந்திருந்தாள் இமையா.

வெளியே வந்தவள் “கதிர் தேங்க்ஸ்” அதன் பிறகு இமையாவிடம் இருந்து அமைதி மட்டும் தான். போனில் கதையை கேட்க துவங்கியவள், இரவு வரை அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.

கதிரும் அவளிடம் பேச்சு வளர்க்கவில்லை. அவனது வேலை அவளுக்கு நேரத்துக்கு ஊட்டி விடுவது அவ்வளவு தான்.

அந்த நாள் அமைதியாக போனது இருவருக்கும். இமையா மனதில் ஆயிரம் போராட்டங்கள், வேதனைகள். வெளியே சொல்லவும் முடியாமல் உள்வைத்து பூட்டவும் முடியாமல் கலங்கி நின்றாள்.

மாலை கதிர் வெளியே அழைத்து சென்றவன், வழக்கம் போல சுற்றி நடப்பதை சொல்லி, அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க, காலையில் நடந்த அக்கசப்பான நிகழ்வுகளை கொஞ்சம் மறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

கதிரை இமையா மனம் தேடியது. முன்பிருந்த தயக்கம் இப்போதில்லை. எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது. தன்னை குழந்தை போல பார்த்துக் கொள்ளும் கணவன் கிடைக்க.

உரிமையாக தோள் சாய்ந்தாள்.

“கதிரா… நான் உனக்கு ஜடை போட்டு விடட்டா ?” என்று கேட்டாள்.

கதிரே குழம்பினான். காலையில் அந்நிய பார்வை வீசினாள். இப்போது இந்த உரிமை பேச்சு... 'சந்திர முகிக்கே டப் கொடுப்பா போல. இந்த செல்ல ராட்சசி’

“சரி” என்று தலையை தெரியாமல் கதிர் கொடுத்துவிட்டான். சீப்பை வைத்து சீவுகிறேன் என்று மூடியை இன்னும் சிக்காக்கினாள். பின்னுகிறேன் என்ற பெயரில் குதறி வைத்திருந்தாள் அவனது தலை மூடியை.

“கதிரா போட்டு முடிச்சிட்டேன். ஒரு செல்பி எடேன்” கதிர் இருவரையும் சேர்த்து அவளது போனில் நிழல் படம் எடுத்தவனின் மனதில் ஆயிரம் யோசனை.

இவளை அந்த இருள் உலகில் இருந்து எப்போது அழைத்து வருவது? எப்படி அழைத்து வருவது? என்று தான் புரியாமல் கதிர் திகைத்து நின்றான்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 22

"இமையா கதை சொல்லட்டுமா..."

“இல்லை கதிர் டயார்டா இருக்கு. நாளைக்கு கதை சொல்றியா ?”

நேற்று நடந்த நிகழ்ச்சியில் இருந்து இமையாவால் வெளி வரவே முடியவில்லை.

கதிர் அவனது நண்பர்கள் பட்டாளத்தை வீட்டுக்கு அழைக்க நினைத்தவன், முதலில் சதீஸ்க்கும், சந்தோஷிற்கும் கான்பிரண்ஸ் போட்டான்.

“டேய் இந்த வீக் எண்ட் வீட்டுக்கு வரிங்களா? இமையா கொஞ்சம் தனிமையா நினைக்கிறா. நீங்க வந்துட்டு போனா ஒரு மாற்றம் இருக்கும்”

“டேய்… டேய் நிறுத்து. எதுக்கு இவ்வளவு நீண்ட எக்ஸ்ப்ளைனேசன் சொல்லிட்டிருக்க. வாடானா வரப்போறோம்"

“ஹாலோ மிஸ்டர் கதிர் வாடானா வரப்போறோம். அதுக்கு எதுக்கு இவ்வளவு விளக்கிட்டிருக்க ?” சந்தோஷ் திட்ட.

“அப்படி சொல்லுடா சந்தோஷ்" என்றான் சதீஸ்.

“இரண்டு பேரும் கூட்டணி சேர்ந்திட்டிங்களா... இனி என் பாடு திண்டாட்டம் தான்” பலமாக சிரித்தான் கதிர்.

“அண்ணா நீங்க ஒன்னும் கவலைபடாதிங்க. மகளிர் அணி எப்போதும் உங்க பக்கம் தான்” என்றாள் சரஸ்வதி.

“டேய் பாத்திங்களா? எங்க மகளிர் அணியை” கதிர் இருவரையும் வாற

“சரி… சரி போதும் விடுங்கடா" சதீஸும் சந்தோஷும் சரண்டர் ஆகினர்.

“தெரிஞ்சா சரி டா. சந்தோஷ் வரும் போது உன்ற மயிலை கூட்டிட்டு வாடா"

“அவ இல்லாமலா... வருவாடா. மயில் அண்ணா பாக்க வரியா ?”

“இதென்ன கேள்வி" என சந்தோஷை முறைத்தாள் மயில்.

“சரிடா நாளைக்கு பார்க்கலாம். என்ன டிஷ் வேணும் சொல்லுங்கடா சமைச்சிடலாம்"

“பறக்கரது ஓடுரது எல்லாம் செஞ்சி வைடா... வந்துடறோம்"

“சந்தோஷ் அப்பா அம்மா சரி ஆகிட்டாங்களா ?”

“அவங்க ஓக்கே தான்… சொன்னத புரிஞ்சிக்கிட்டாங்க"

“சரி டா சந்தோஷம்" என கதிர் இணைப்பை துண்டித்த உடன்

இமையா என்ன செய்கிறாள் என்று ஆராய, அவள் அருகில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தொட்டு பார்த்து தரையின் அடியை அளந்து கொண்டிருந்தாள்.

கதிரும் தொந்தரவு செய்யாமல் அவள் தனியாக கற்றுகெள்ளும் அழகை ரசித்தான் கதிர்.

இமையாவை பற்றி நல்லாவே தெரியும் கதிருக்கு. ஒரு முடிவை இமையா எடுத்துவிட்டால், அதை கற்றுகொள்ளும் வரை விடமாட்டாள். சரியான பிடிவாதக்காரி. தூரமிருந்து அவளுக்கு ஊக்கம் அளித்து கொண்டிருந்தான் கதிர். அது இமையாவுக்கே தெரியாது.

சிறிது நேரத்திலேயே அந்த அறையில் சரளமாக நடந்தாள் இமையா.

“கதிரா இங்க வாயேன்...” சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.

இவ்வளவு நேரம் ஒன்றும் நடக்காதது போல இமையா அருகில் வந்தவன்

“எதுக்கு இமையா கூப்பிட்ட எதாவது சாப்பிட வேணுமா"

“இல்லை… நான் இந்த ரூமில் நடக்க கத்துகிட்டேன். என்னை எங்க விட்டாலும் போர இடத்தை கண்டு பிடிச்சிடுவேன் பாக்குறயா ?“

“சரி இமையாவை செக் செஞ்சிடலாம். நீ இருக்க இடத்திலிருந்து பாத்ரூம் போ”

இமையா சரியாக போய் நின்று கதவை பிடிக்க

“அங்கிருந்து பெட் கிட்ட போ" இமையாவும் சரியாக போய் நின்றவள்

“பாத்தியா கதிரா... நான் சரியா வந்து நின்னுட்டேன். இப்போ நீ இருக்க இடத்துக்கு வரட்டா ?”

இமையா வர, கதிர் பின் நகர்ந்து சென்றான்.

“கதிரா இங்க தானே நின்னுட்டிருந்த எங்க போய் தெலைஞ்ச… இங்க வா பக்கத்தில்"

“முடிஞ்சா என்னை பிடி" இமையாவும் கதிரின் குரல் வந்த திசையில் நடக்க

“ஆஆஆ.. சோபா இடிச்சிடுச்சி" சோபாவை பிடித்து இமையா உட்கார பார்க்க

“என்ன உன் வீரம் எல்லாம் அந்த ரூமில் மட்டும் தானா ?” இமையாவின் தன்மான சிங்கத்தை தூண்டி விட

“உன்னை பிடிக்காம விட மாட்டேன்டா” வீரமாக அவனது குரலை பின் தொடர்ந்தாள்.

“வா வா முடிஞ்சா பிடிச்சி பாரு" கதிர் டைனிங் டேபில் பின் நிற்க, இந்த முறை சேரில் முட்டி நின்றாள் இமையா.

“என்ன செல்லம் அப்படியே நின்னுட்ட. வா வா என்னை பிடி" இந்த முறை சுவர் பக்கம் நின்று கொண்டு அழைத்தான்.

இமையா சரியாக வந்தவள், இந்த முறை சுவரை முட்டி கொள்ளவில்லை. ஒரு அடி இருக்கும் போதே கைகளை நீட்டி சோதித்தாள், எதாவது பொருள் முன்னிருக்கா என்று.

சற்று முன்வரை தன்முன் எதாவது பொருள் இருக்கும் என்ற எண்ணிமில்லாமல் மொத்தமாக சென்றவளை, பொருட்கள் இடிக்க, இப்போது இமையா சுதாரித்து கொண்டாள். இப்படியாக ஹாலில் எந்த பொருள் எங்க இருக்கு என்று கதிர் வாய்விட்டு சொல்லாமல் சொல்லிக்கொடுத்தான்.

இமையாவும் சலிக்காமல் அவன் கூப்பிடும் இடத்துக்கெல்லாம் வர, கதிர் தான் இமையாவின் கைகளுக்கு சிக்கவில்லை.

இப்படியே ஒரு மணி நேரம் கடந்தது. இமையா இப்போது வீட்டில் உள்ள எல்லா மூலைக்கும் நன்றாக பழகி இருந்தாள். எங்கு எந்த பொருள் இருக்கு என்று தெரிந்துகொண்டாள். இருந்தும் ஹாலில் நடக்க ஒரு தயக்கம் அவள் மனதில் இருக்க தான் செய்தது.

கடைசியாக கதிர் சோபாவில் அமர்ந்தவன்,

“இமையா போதும் நடந்தது. நான் டயார்ட் ஆகிட்டேன்”

இமையா சோபாவை பிடித்துக்கொண்டு கதிர் அருகில் வந்து ஒரு வணக்கம் வைத்தாள்.

“என்ன இமையா ஸ்கூல் நியாபகம் வந்துடுச்சா. வணக்கம் எல்லாம் பலமா இருக்கு”

“ஆமா… இவ்வளவு நேரம் நீங்க தானே எனக்கு டிரைனிங் கொடுத்துட்டு இருந்திங்க"

“எவ்வளவு அறிவு கண்டுபிடிச்சிட்டியா ?”

“ஆமா... சரி ஏதோ கேம் போல ஜாலியா இருக்குனு நானும் வட்டம் அடிச்சிட்டு இருந்தேன்”

“என் தங்க கட்டி டயார்டா இருப்ப… இந்தா தண்ணீர் குடி" பாட்டிலில் கதிர் புகட்ட, சமத்து பாப்பாவாக குடித்தவள்

“ஒரு ஐஸ்கிரீம் இருந்தா நல்லா இருக்கும்”

“இப்போ எல்லாம் அதிகமா ஐஸ் சாப்பிடுற நீ. இனி வாரத்துக்கு இரண்டு தான் அதுவும் குட்டி ஐஸ் தான்"

“கதிரா நோ... என்ன நீ ஒன்னு ஒன்னா கட் செஞ்சிட்டு வர. மூன்னாடி பிரைட் ரைஸ் இப்ப ஐஸ்கிரீமா ? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”

“கண்ணடிக்கிறியா… எங்க அடி பாப்போம் பாப்போம்"

“செவுட்டு கிழவா… கண்ணடிக்கிறது இல்லை அது கண்டிக்கிறது”

“ஓ என் காதில் வேறு போல விழுந்தது”

“விழும் விழும்… இப்படியே பேசிட்டு இருந்தா என்கிட்ட நாலு அடியும் விழும் ஜாக்கிரதை” விரல் நீட்டி எச்சரித்தாள் இமையா.

“ஹா…ஹா சரி சரி. நாளைக்கு உன்னை பார்க்க என் நாலு பிரன்ட்ஸ் வராங்க”

“நிஜமாவா… ஜாலி. அப்போ நாளைக்கு மஸ்ரூம் செஸ்வான் செஞ்சித்தா"

“இல்லை இமையா நேத்து தானே செஞ்சி கொடுத்தேன்”

“சரியான லூசா இருக்க நீ போ... எனக்கு டயார்டா இருக்கு” கதிர் மீது சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் நண்பர்கள் வர, மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கலக்கமும் மறந்தாள் இமையா. சரஸ்வதி மயில் இருவரிடமும் நன்றாக ஒட்டி கொண்டாள்.

மூவரும் பேசி கொண்டிருக்க, கதீர் திடிரென இமையா அருகில் வந்து உட்கார்ந்தவன் அவளது ஆடையை தாண்டி மேல் உள்ளாடை வெளியே தெரிய, மற்றவர் கண்களுக்கு தெரியாமல் லாவகமாக சரி செய்தான்.

இமையாவுக்கு தான் சங்கடமாகி போனது. கதிரை இன்னும் காதலித்தாள். எல்லை இல்லாத அன்பு அவன் மீது பொங்கியது.

உணவு சாப்பிடும் போது சதீஸ் சந்தோஷின் கலகலப்பான பேச்சிலும் கலந்துகொண்டாள் இமையா.

இவர்களிடம் பேசும் போது பல நாள் பழகிய உணர்வு ஏற்பட்டது இமையாவுக்கு.

நண்பர்கள் இரண்டு மாதம் கழித்து நடக்கும் திருமணத்திற்கு இப்பவே பத்திரிக்கை வைத்தார்கள். இரண்டு நாள் முன் சந்தோஷ்ஷிற்கு, இரண்டு பின் சதீஸ்க்கு.

கிளம்பும் போது இமையாவுக்கு இருவரும் திருமணம் அன்று அணிந்து வரும் ஆடை கொடுக்க

“இது எல்லாம் வேண்டாம்...” இமையா மறுக்க.

“வாங்கிக்கோ இமையா எல்லாம் நம்ம குடும்பம் தான்”

“சரி டா வரோம். கல்யாணத்துக்கு வந்துடுங்க”

சந்தோஷ் "சதீஸ் நம்ம கல்யாணத்துக்கு தான் நீயும் வர முடியாது நானும் வர முடியாது”

“அதனால என்ன. ஒரு நாள் இதே போல பாத்துக்கிட்டா போச்சி"

“அதுவும் சரி தான்” விடைபெற, மனமே இல்லாமல் இரு ஜோடிகளும் கிளம்பினார்கள்.

உள்ளே வந்த கதிர் வீடு இருக்கும் நிலையை பார்த்து அதிர்ந்து நின்றான்.

நண்பர்கள் வந்து வீட்டை தலை கீழாக மாற்றி சென்றார்கள்.

கதிரும் இமையாவிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே சுத்தம் செய்து முடித்து

"இமையா முகம் ரொம்ப சோர்வா இருக்கு தூங்குடா தங்கம்" என்றான்.

"இல்லை கதிரா... உன் கூடவே இப்படியே இருக்கேன்" இமையாவின் செயல் கதிருக்கு புரியத்தான் செய்தது
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 23

.

'இவன் கணவன் அல்ல என்னை மனதால் காக்க வந்த ரச்சகன். இவனில்லை எனில் தன் வாழ்வு முழுமை அடைந்திருக்காது'

இப்போதெல்லாம் இமையா வீட்டுக்குள் நடப்பதில் நன்கு பழகி இருந்தாள். ஒரு பட்டாம் பூச்சியை போல வட்டமடித்தாள். அவள் சரியாக நடப்பதை பார்த்து கதிருக்கே ஆச்சரியம்.

இமையா கதிரிடம் 'உன் பிரண்ட்ஸ் நாலு பேரும் எப்படி இருப்பாங்க' என கேட்டு அவர்களை பற்றி இன்னும் தெரிந்து கொண்டாள்.

"கதிரா... எதாவது கதை சொல்லேன்"

"எனக்கு கதை படிக்கற பழக்கமே இல்லை இமையா. நீ சொல்லேன் இது வரை எவ்வளவு கதை படிச்சிருப்ப... நீ சொல்லு" கதிர் கேட்டது மட்டுமில்லாமல் இமையாவின் மடியில் படுத்தான், கதை கேட்கும் செட்டப்பில்.

"ஏன் துரைக்கு உட்காந்து கதை கேட்டா காது கேட்காதா ?"

"இல்லை... கதை எல்லாம் இப்படி தான் கேட்கனும்னு எங்க ஆயா சொல்லி இருக்கு. நீ கதை சொல்ல ஆரம்பி" கதிரின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் இமையா.

"இருக்கும் இருக்கும்... அடங்காத வாலு பையா"

"நான் பையனா? சரி தான் கதை சொல்லு..."

"என்ன கதை சொல்லலாம்..." கன்னத்தில் கைவைத்து தீவிரமாக இமையா யோசித்தாள்.

கதை சொல்வது போல ஒரு ஆர்வம். வழக்கம் போல ஆரம்பித்தவள்

"ஒரு ஊருல... ஒரு ஆறு இருந்ததாம்... அதுக்கு பக்கத்துல ஒரு நரி இருந்ததாம்..." இமையா ஒரே இழுவையாக இழுக்க

"ஐய்யோ பாட்டி இழுக்காம.. நரிக்கு அப்புறம் என்ன ? அதை சொல்லு"

"நரி இருந்ததாம்... அதோட சரியாம்.. கதை முடிஞ்சது" இமையா கையை விரித்து சொன்ன அழகில் படுத்திருந்தவன் எழுந்து இமையாவை கட்டிக்கொண்டு அவளை திக்குமுக்காட செய்தான்.

"கதிர் என்ன செய்யற... விடு"

"கதை எவ்வளோ அழகா எக்ஸ்பிரசனோட சொன்ன. அதுக்கு சூப்பர் சொல்ல வேண்டாமா ?" அணைத்திருந்தவன் விடவே இல்லை.

இமையா கதிரின் இடுப்பை பிடித்து நறுக்கென கிள்ளிவைக்க.

"ஆஆ... சரியான பூனைடி நீ... "

"ஆமா நான் பூனை தான் போ..."

"சரி சரி போதும் விடு உடனே கோச்சிக்காத" இமையாவை வெளியே கூட்டி போனவன், கடையை திருப்பி போட்டு கொண்டிருந்தான்.

"கதிரா இப்போ எதுக்கு டிரஸ் எடுக்க வந்திருக்கோம் ?"

"இது உன் பர்த் டேக்கு இமையா"

"அடேய் ஆர்வ கோளாறு. அதுக்கு இன்னும் பல மாசமிருக்கு"

"வீட்டிலேயும் தெரிஞ்ச இடத்துக்கும் எத்தனை முறை போரது. அதான் டிப்ரென்டா இன்னைக்கு இங்க சுத்தி பார்க்கலாம்னு"

"அடப்பாவி! அப்போ டிரஸ் எடுக்க வரலையா ?"

"எடுக்கத்தான் போறோம் நிறையா. அன்னைக்கு வேற உனக்கு டிரஸ் விலகி இருந்தது, உனக்கு சங்கடமா போய்யிடுச்சில. அதுக்கு ஏத்தது போல டிரஸ் எடுக்கலாம்" இமையா நெகிழ்ந்தாள் அவனது வார்த்தையை கேட்டு.

'இவன் ஏன் இப்படி செய்யறான். ஒன் சைட் லவ்க்கு பவர் இருக்குனு தெரியும். ஆனால் இப்படி பைத்தியக்கார அன்பு இருக்கும்னு நினைக்கல. அதுவுமில்லாமல் அந்த முழு அரவணைப்பு எனக்கு கிடைக்கும்னு நினைக்கலை..'

'கதிரா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்' என இமையா மனதில் நினைக்க

"சொல்லு இமையா ?" இமையா விழிவிரித்து நின்றாள். 'இவன் என்ன மனசுல கேட்க கேள்விக்கு நிஜத்தில் பதில் சொல்லுறான் ?'

"கதிரா... உனக்கு பைத்தியம் முத்திடுச்சிடா"

"என்ன இமையா உன்ற மாமாவை பார்த்து இப்படி சொல்லிட்ட"

"சேட்டை செஞ்சது போதும் வா டிரஸ் எடுக்கலாம்"

கழுத்தை ஒட்டியது போலிருக்கும் உடைகளை எடுத்து போட சொன்னவன், இமையா மீது வைத்து பார்த்து பொருந்தும் உடைகளை எல்லாம் எடுத்து குவித்தான்.

"கதிர் எதுக்கு இவ்வளவு டிரஸ் காசு நிறையா இருந்தா என்கிட்ட கொடுத்துடு. நான் ஐஸ்கிரீம் ஆவது நிறையா வாங்கி சாப்பிடுவேன்"

"திங்கிறுதலையே இரு பாப்பா நீ. சரி வீட்டுக்கு போடும் டிரஸ் எடுப்பது முடிந்தது சுடி பார்க்கலாமா"

"கதிரா சுடி எல்லாம் ரவுண்டு நெக்கில் போட்டா நல்லாவா இருக்கும்"

"இமையா காலர் டைப் எடுத்துக்கலாம். உனக்கு அது நல்லா இருக்கும்"

"என்னவே செஞ்சி தொலை... எனக்கு என்ன தெரியவா போவுது"

"பாப்பா எதுக்கு இங்கே சலிச்சிக்கிற... இப்படி சிரிச்ச முகமா வை புரியுதா ?"

"சரி... தெய்வமே சிரிச்சி தொலையறேன். நீங்க சீக்கிரம் எடுத்து முடிங்க"

"சுடிதார் போதும் சேரி எடுக்கலாம்" என்றதும் இமையா தயங்கி நின்றாள்.

'இவன் சரியான மக்கு. மத்த டிரஸ்னா பரவாயில்ல நானே போட்டுப்பேன். சேரி யார் கட்டிவிடுவா'

அவளின் மனசாச்சி..

'அதான் வாட்ட சாட்டமா புருசன் இருக்கானில்ல. அவன் கட்டிவிடுவான்'

'எது கதிரா அய்யோ அவன் சரியான அடாவடி பிடிச்சவன் கட்டிவிட்டாலும் விட்டுடுவான். இமையா வேண்டாம் சொல்லி எஸ்கேப் ஆகிடு'

"நீங்க இது எல்லாம் முன்னாடி கொண்டு போய்யிடுங்க. இமையா சேரி பார்க்க போலாமா ?"

"கதிரா... சேரி எல்லாம் வேணாமே"

"உன் பர்த்டேக்கு இப்ப எடுக்க போற சேரி தான் கட்டனும் முதலில் வா"

"லூசு புருசா... என்னால எப்படி கட்ட முடியும்" இமையா மெதுவாக முணங்கினாள்.

கதிருக்கு அவளது வார்த்தை அச்சி பிசகாமல் காதில் விழுந்தது. "நீ ஒன்னும் கவலை படாதே. உன் புருஷன் யூ டியுப் பார்த்தாவது சரியா கட்டிவிடுவேன்"

"சரியான பாம்பு காது யோவ் உனக்கு"

"தெரிஞ்சா சரி"

இமையாவை ஒரு இருக்கையில் அமர வைத்தவன், அங்கு வேலை செய்யும் பெண்ணிடம்

"ஏங்க... இங்க ஒன் மினிட் சேரி ஸ்டிச் செய்து தர முடியுமா ?"

"எஸ் சார் நம்ப கடையில் ஆளுங்க இருக்காங்க. நீங்க சேரி செலக்ட் செஞ்சி கொடுங்க. இவனிங் குள்ள டெலிவரி செஞ்சிடறோம்"

"சரிமா..." என்றவன் இமையா அருகில் வருவதற்குள்,

அங்கு கடையில் வேலைப்பார்க்கும் இரு பெண்கள்...

"பார்க்க நல்லா தானே இருக்காங்க. உலகத்தில் பொண்ணா இல்லை. இந்த குருடிய போய் கல்யாணம் செஞ்சிருக்கார்" இப்படி ஒருவள் சொல்ல

மற்றொருவள், "இவருக்கு உள்ள எதாவது குறை இருக்குமே என்னவோ. யாருக்கு தெரியும்" கதிர் அருகில் வரவும் அந்த இரு பெண்கள் சத்தமில்லாமல் நகர்ந்து விட்டார்கள்.

இமையா மனதில் ஒரு நெருடல் 'என்னால கதிரையும் குறையுள்ளவன்னு நினைக்கறாங்களே' இப்படியே எதாவது ஒன்று இமையா வாழ்வில் நடந்து கொண்டிருந்தது.

யாராவது இமையா மனதை உடைப்பதும், கதிர் கஷ்டப்பட்டு உடைந்த மனதை ஒட்டுவதும், மீண்டும் யாராவது உடைப்பதும் என்று எது இவர்கள் வாழ்க்கையில் நடக்குதோ, இல்லையோ உடைப்பது, ஒட்டுவது என்ற நிகழ்வு மட்டும் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தது.

இமையாவின் சோர்வான முகத்தை பார்த்தவன்,

"இமையா டயார்டா இருக்க ஒன்னும் பிரச்சனையில்லல. நாளைக்கு வந்து எடுத்துக்கலாமா சேரி மட்டும்"

"அட நாளைக்குமா... பாடி தாங்காது. முதல் எடுங்க. ஒரு பத்து நிமிசம் தான் அதுக்குள்ள எடுத்துடனும் புரியுதா ?"

"புரியுதுடா டுபுக்கு பாப்பா"

அழகான இரண்டு சேரி எடுத்தவன்

"இமையா எடுத்தாச்சி கிளம்பலாமா ?"

"ம்ம்ம்... என்ன கலர் சேரி எடுத்திங்க ?"

"ஒன்னு கத்திரிக்காய் கலர் இன்னொன்னு... " சொல்ல வாய் எடுத்தவன்,

"இல்லை அது உன் பர்த்டே அன்னைக்கு தான் சொல்லுவேன்" என்று புடவையை ஒன் மினிட் சேரி போல தைக்க சொன்னவன் பில் போட்டுவிட்டு

"வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க... வண்டி எதும் கொண்டு வரலை" கதிர் கையோடு போன் நம்பர், அட்ரசையும் கொடுத்துவிட்டு வந்தான்.

இருவரும் நடந்தே வந்தார்கள்.

"ஏன் கதிர் இங்க எல்லா கடையும் இருக்கும் போல. பத்து நிமிசத்துல துணிக்கடைக்கு போய்ட்டோம்"

"ஆமா இமையா இங்க இல்லாத கடைங்க இல்லை நான் தான் வசதியா இருக்கும்னு இந்த ஏரியாவில் கஷ்டப்பட்டு வீடு புடிச்சேன்"

"எனக்காகவா கதிர் ?" இமையா மனதில் ஒரு துள்ளல் இருந்தது.

"அப்படி எல்லாம் தப்பா நினச்சிக்காத. நான் ஒரு பெரிய சோம்பேறி. பக்கமே எல்லாம் இருந்தா அலைய தேவையில்லை பாரு"

'எல்லாம் நடிப்பா கோப்பால். இமையா நீ நிறைய இமேஜினேசன் போற அதை குறை. உன்னை கெடுக்கறதே அது தான்'

சுருங்கிய முகத்தை பற்றியவன்

"சும்மா சொன்னேன். இமையா உனக்காகத்தான். தூரமா போனா டயார்ட் ஆகிடுவல்ல அதான்" சற்று முன்

பீஸ் போன இமையாவின் முகம் இப்போது பல்ப் எரிய துவங்கியது.

இமையாவின் முக மாற்றத்தை ரசித்து கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். வழியில் தின்பண்டம் வாங்கி இமையா கையில் திணித்ததை, வாயில் போட்டு அரைத்துக்கொண்டு வந்தவளின் முகத்தில் சாப்பிட்டதின் மிச்சம் ஓட்டி இருந்தது.

"என்ன வாய்க்குள்ள போட சொன்னா காது மூக்குக்கு எல்லாம் ஊட்டி விட்டயா இமையா ?"

"இல்லையை ஒழுங்கா தானே சாப்பிட்டேன்" இமையாவை போட்டோ எடுத்தான்.

"சரி வா முகம் கழுவி விடுறேன்" வாங்கி வந்த பொருளை படிக்கட்டில் வைத்து, தோட்டத்துக்கு அழைத்து சென்றான்.

கதிர் இமையாவை திட்டிக்கொண்டே முகத்தை கழுவிவிட்டான்.

"தலையில சீப்பு படறதில்ல... எண்ணை வைக்க விடுறதில்லை. இப்படி இருந்தா தலை வலி அடிக்கடி வரத்தான் செய்யும். இனி உன் போக்குக்கு விடவே கூடாது" முகத்தை கழுவியவன்,

நெற்றியில் விழுந்த முன் முடியை எடுத்து

"இது தான் என் எனிமி"

"எது உன் எனிமி ?"

"நெத்தில கிஸ் கொடுத்திட்டிருக்கே இந்த முடி"

"போடா காதல் பித்தா. பைத்தியம் பிடிக்க போது. ஓயாமல் காதல் படம் பார்த்து டயலாக் பேசி பேசி.. வேணும்னா பாரு பைத்தியம் பிடிக்கும் உனக்கு"

"ஏற்கனவே புடிச்சிடுச்சி இந்த இமையா பைத்தியம்"
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 24

காதலனின் மனதால் இமையா பலவீனமாகினாள்.
‘இமையா வேண்டாம்… இனி இங்கிருந்தா ஒரு உயிர் போறத்துக்கு நான் காரணமாகிடுவேன். கடவுளே ஒரே ஒரு நாளைக்கு மட்டும் பார்வை கொடு எங்காவது நான் சென்று மறைந்து கொள்கிறேன்'

இமையா வேண்டியது கடவுளுக்கு கேட்டது போல, பயங்கர தலை வலி. தலையை பிடித்து அமர்ந்தவளால் கண்களை கூட திறக்க முடியவில்லை.

கதிருக்கு அவளது மனநிலையை மாற்ற என்ன செய்ய? என்று நினைத்தவனுக்கு சிக்கன் தான் கண் முன் வந்து நின்றது.

“இமையா நான் போய் சிக்கன் வாங்கிட்டு வரேன் பத்திரமா இருக்கனும் புரியுதா ? நடக்குறேன்னு வீர சாகசங்கள் எல்லாம் நான் இல்லாத போது செய்ய கூடாது புரியுதா ?“

இமையாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

‘என்னாச்சி தலை வலி வந்துடுச்சா திரும்ப’ அவளின் தலையை தொட்டு பார்க்க, சூடாகத்தான் இருந்தது. தலைக்கு சிறிது தைலம் பூசி விட்டவன், கடைக்கு செல்ல எத்தனிக்க.

“கதிரா... இங்க வாயேன்”

“சொல்லு இமையா“ அவள் காற்றில் கையை துலாவி அவன் முகத்தை கண்டு பிடித்தவள்

“வேறு எதாவது வேணுமா இமையா செல்லத்துக்கு. கேக் ஆ இல்லை ஐஸ்கிரீமா”

“எனக்கு... " இமையா கதிரை தாவி அணைத்து அவனது இதழ்களை சிறை பிடித்தாள்.

கதிரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. இமையா ஒரு வேகத்தில் கதிருக்கு முத்தம் கொடுத்தாலும், வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள்.

“இமையா… நீ… நீ" கதிருக்கு அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை.

“இமையா டூ யூ லவ் மீ ?”

இமையா வேகமாக தலையை அசைத்தவள், “ஆமா" சிறிய தலை அசைப்போடு முகத்தை மூடிக்கொள்ள

“உன்னோட பழைய லவ் எல்லாம் மறந்துட்டியா?”

“ம்ம்ம்ம்… மறந்தனா தெரியலை. உன்னை புருஷனா... நீ மட்டும் தான் எனக்கு”

அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத கதிர், “இமையா தங்கம்… நான் போய் சிக்கன் வாங்கிட்டு வரேன் பத்திரமா இருடா தங்கம்" இமையாவின் கன்னத்தை தட்டிவிட்டு, “சீக்கிரமா வந்துடறேன் லவ் யூ"

இமையாவுக்கு எப்படி இங்கிருந்து போவது எனும் கவலை. 'கதிரை பிரியவும் மனம் வரவில்லை. அம்மா, அப்பாவை தொந்தரவு படுத்தவும் பிடிக்கவில்லை. பார்வை மங்கலாக தெரிந்தால் போதும். எப்படியாவது போய்யிடலாம்' பல யோசனைளில் இருந்தாள்.

கதிர் அருகிலிருக்கும் போது மட்டும், மனம் அவள் சொல் பேச்சை கேட்கவில்லை. கதிரிடம் தன் காதலை சொல்ல அவளது மனம் தவிக்கும். அவன் அருகில் இருக்கும் போது, அவளது திட்டம் எல்லாம் மறந்து போகும் அவன் காட்டிய பாசத்தால்.

கதிருக்கு பறக்காத குறை தான், அவள் தன்னையும் தன் காதலையும் ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில். கடைக்கு சென்று வந்தவனுக்கு சமைக்க சுத்தமாக விருப்பமில்லை. இமையாவுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி வந்தவன், உணவை முடித்து, இமையாவை ஊஞ்சல் அருகில் கொண்டு போனான்.

“இமையா ஊஞ்சல் ஆடலாமா ? இரண்டு பேரும்”

“ம்ம்ம்ம்… உங்க பர்த் டே அன்னைக்கே இது நடந்திருக்கனும். பட் ஏதேதோ ஆகிடுச்சி"

“அதுக்கு தான் என்னை அவசரமா நடு ராத்திரியில் கூட்டிவந்தியா ?”

“ஆமா... "

"இமையா என் ஏஞ்சல்" கதிர் அழைத்த அழைப்பில் இமையாவின் முகம் மாறியது.

“இமையா எதாவது தப்பா சொல்லிட்டனா ?“

“இல்லை கதிரா… ஒன்னுமில்ல உள்ளே போலாமா" கதிருக்கு ஏமாற்றம். இந்த முறையும் ஒன்றாக ஊஞ்சல் ஆட முடியலையே என.

“சரி வா உள்ளே போகலாம்"

இருவருக்கும் இடையில் அமைதி மட்டும் தான்.

“இமையா நான் எதாவது உனக்கு பிடிக்காதது பேசிட்டேனா?"

“இல்லை கதிரா என்னோட பாஸ்ட் என்னை டிஸ்டர்ப் செஞ்சிடுச்சி. உன்கிட்ட எல்லாம் சொல்லனும் கதிரா. நான் என் பாஸ்ட் விட்டு வெளியே வரனும்னு நினைக்கிறேன். சொல்லட்டா ?"

“இல்லை இமையா எனக்கு எல்லாம் தெரியும். நம்ம பத்தி பேசலாம் இமையா"

“ம்ம்... ஆனா என்னைக்காவது ஒரு நாள் நான் உன்கிட்ட எல்லாம் சொல்லனும்"

“ஆனா இப்போ இல்லை இமையா" கதிரை இமையா அணைத்ததும், கதிர் இவ்வளவு நாள் தேக்கி வைத்திருந்த காதலை ஒட்டு மெத்தமாக காட்டினான்.

இருவரும் எல்லையில்லாத மனதில் சேர்த்து வைத்த காதலை மௌனத்தின் தனிமையில் தனக்கான நேரத்தை செலவளித்து அடுத்தக்கட்ட திருமணம் வாழ்வில் அடியெடுத்து வைத்தனர்.

“இமையா இதை சொல்லியே ஆகனும். நாளுக்கு நாள் நீ அழகா ஆகிட்டு போறியா இல்லை. எனக்கு அப்படி தெரியுதான்னு தெரியலை. பைத்தியம் போல ஆகிட்டேன் நான் தெரியுமா. உன் அருகில் இருக்கும் போது எல்லாம் மறந்திடுவேன் தெரியுமா”

“அப்படியா? அப்படி என்ன இந்த மூஞ்சில் இருக்கு”

“நிறையா இருக்கு தங்க குட்டிகிட்ட…”

"பேசிக்கொண்டே போயிட்டு இருக்கலாம் என்று உத்தேசமா இமையா”

இமையா முகத்தில் அப்படி ஒரு வெட்கம். கதிரை அந்த வெட்கம் ஈர்க்க, அவளை அலையாக காதல் மனதோடு இமையாவை முழுமையாக தன்னுடையவளாக ஆக்கிக் கொண்டான்.

ஒருவர் அணைவில் மற்றொருவர் இருக்க, இமையாவை தான் கதிரை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு வெட்கம் அவளை தின்றது.

கதிரும் அவளுக்கு சங்கடம் கொடுக்காமல், விலகியவன்

“இமையா குளிச்சிட்டிரு நான் சாப்பாடு எடுத்து வைக்கறேன்"

“கதிரா...”

“சொல்லு இமையா...”

“இமை குட்டினு கூப்பிட மாட்டியா?" ஆசையாக கேள்வி எழுப்ப.

“கூப்பிடலாமே மேடம் தான கோபத்தில குட்டி பட்டி என்று கூப்பிடாதனு சொன்ன"

“அது ஏதோ கோபத்தில். மறந்துடு டா தங்கப்பையா"

“பாருடா… இந்த தாடி கரடி உனக்கு தங்க பையனா" கதிர் சொன்ன டோனில், இமையா முகத்தில் வெட்கம் எல்லையை கடக்க

“ச்சி மாமா... பேசி பேசி வெட்கப்பட வைக்கர" முகத்தை மூடிக்கொள்ள

“என் அழகி குளிச்சிட்டு வா. டிரஸ் எல்லாம் எடுத்துவச்சிருக்கேன். தலைக்கு குளிக்கனும் சரியா"

“அது எல்லாம் எங்களுக்கு தெரியும். நாங்க எல்லாம் பிக் கேர்ள் தெரியுமா"

“பாறேன். என் இமை குட்டி எப்போ பெரிய பெண்ணா ஆனா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட கண்ண கசக்கி ஒரு எல்.கே.ஜி பாப்பா இருந்தா இங்கு யாராவது பாத்திங்களா ?”

“அது அப்போ.. இது இப்போ. வளவளனு பேசிட்டிருக்காத. நான் ரெடி ஆகிட்டு வரேன் பசிக்குது”

“எப்போ பாரு இந்த குட்டி தொப்பைக்கு பசிச்சிட்டே இருக்குமா ?” கதிர் இந்த முறை உரிமையாக அவளது வயிற்றை தடவ

இருவருக்கும் இந்த உரிமை புதியதாகவும் நிறைவாகவும் இருந்தது.

இமையாவின் நெற்றியில் ஒரு அழுத்த முத்தம் பதித்துவிட்டு “இமையா லவ் யூ… தேங்க்ஸ்… எனக்கு ஒரு ஆசை சொல்லட்டா ?”

“சொல்லுங்க மாமா” நாக்கை கடித்தவள்

“சாரி உனக்கு தான் மாமா பிடிக்காதில்லை"

“இப்படி கூப்பிடலாம் ஆசையா. பயப்பிட்டு தான் கூப்பிட கூடாதுனு சொல்லி இருக்கேன்”

“சரி சரி... உனக்கு என்ன ஆசை அதை சொல்லு"

“அது வந்து... பாப்பா வேணும் உன்னை போல"

“இல்லை தம்பி தான் வேணும்” இருவரும் மாற்றி மாற்றி சண்டையிட

கடைசியில் “சரி விடு எந்த குழந்தையா இருந்தாலும் சரி தான்" ஒருமனதாக முடிவு எடுத்தனர் .

தயாராகி என்றுமில்லாமல் அவ்வளவு பேசிக்கொண்டனர். கல்லூரி வாழ்க்கையில் செய்த சேட்டைகள் என்று துவங்கி இடையில் சாப்பிட்டு முடித்தவர்கள், விடிய விடிய காதல் பாடம் கற்றார்கள்.

விடிந்த பின் தான் தூக்கமே. கதிர் வழக்கத்தை விட தாமதமாக எழுந்து பார்க்க, அருகில் இமையா இல்லை.

‘செல்லக்குட்டி காலையிலையே வீட்டில் நடக்கறேன்னு கிளம்பிட்டா போல. இன்னைக்கு ஓவர் டயார்டா இருக்கு தூங்கி மெதுவா எந்திரிக்கலாம்'

கதிர் கனவில் மிதக்க துவங்கினான்.

இமையா முகத்தில் எந்த ஒரு துக்கமும் இல்லை. பார்வை இல்லை என்ற ஏக்கம் சிறிதும் இல்லை. இமையா முகம் முழு நிலா முகம் போல ஜொலித்தது.

“கதிரா... வயிரு பெருசா ஆகிடுச்சில?”

“ஆமா முழு மதி போல...”

“அப்படியே உவமை எல்லாம் செமையாயிருக்கு”

“அது எல்லாம் தானா வருது… எனக்கு ஏதோ இரண்டு பாப்பா இருக்கும் தோனுது”

“டேய்… மாசமானது தெரிஞ்சி இரண்டு வாரம் கூட இல்லை. அதுக்குள்ள ஐயாவுக்கு ஆசை தான்"

“எனக்கு தெரியும் பீல் ஆகுது. நாளைக்கு டாக்டர்கிட்ட போலாம்"

“சரி போலாம். இப்போ வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்” நடு இரவில் மரத்தில் உதிர்ந்த மஞ்சள் பூ சாலை நடுவில் நிலா தன் ஒளியை தாராளமாக பரப்ப, இருவரும் கை கோர்த்து நடக்க, கூட்டுக்கு வந்த குருவிகள் தன் குடும்பத்திடம் கிசு கிசுக்கும் சத்தமும் பசுமை மரங்களின் காற்றின் வாசமும் இருவரையும் வரவேற்தது.

அலங்கரிக்கப்பட்ட ஒரு ஊஞ்சல், சாலையின் முடிவில் இருந்தது.

“இமையா… இங்கே ஒரு ஊஞ்சலிருக்கு ஆடலாமா"

“நிஜமாவ கதிரா... எவ்வளவு நாள் ஆசை தெரியுமா! வா போலாம் இரண்டு பேரும் சேர்ந்து ஆடலாம்"

இமையாவை அந்த மரப் பலகையில் உட்காரவைக்க, கதிர் அமர்ந்ததும் இமையா அவன் தோள் சாய்ந்தாள்.

"கதிரு... லவ் யூ”

“இப்படி இல்லை கதிரா லவ் யூ... மாமா லவ் யூனு சொல்லு குட்டிமா"

“முடியாது எனக்கு ஒரு சந்தேகம் வந்துடுச்சி அதை தெளிவு செய் முதலில்” இமையா முறைப்போடு கேட்க.

“சொல்லு இமை குட்டி"

“அது பாப்பா வந்துட்டா நான் குட்டிமாவா... இல்லை அவ குட்டிமாவா”

“அது பாப்பா வந்ததும் குட்டிமா அவ தான். அப்போதான் நீ பெரிய அம்மாவா ஆகிடுவியே”

“உன்னை.. நான் என்ன செய்யறேன் பார்" போட்டு அடி பின்னிவிட்டாள் இமையா.

“ஏய் அடிக்காதடி வலிக்குது" அடி பொறுக்க முடியாமல் கனவில் இருந்து எழுந்தான். இது கனவு என நெற்றிப்பொட்டில் உரைக்கவே சில நிமிடம் பிடித்தது. அவ்வளவும் நேர்த்தியாக நிஜம் போலிருந்தது.

எழுந்து அமர்ந்தவன் “இந்த கனவு செமையா இருந்தது. முதல்ல இமையாகிட்ட சொல்லனும். முதல்ல ரெடி ஆகலாம். இப்படி டேர்ட்டியா சொல்ல வேண்டாம்”

குளித்து முடித்து வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல், கதிர் உல்லாசமாக

“வாடி.. வாடி..போடி போடி கியூட் பொன்டாட்டி” பாடலை தப்பு தப்பாக பாடிக்கொண்டிருக்க

இமையா கதிரை விட்டு நெடுந்தூரம், திக்கு தெரியாத இடத்துக்கு மங்கலான பார்வையின் உதவியோடு கால் போன போக்கில் நடந்தாள்.

கதிர் கண்டுபிடிப்பானா இமையாவை ?
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 25

இமையா அதிசயமாக விடியலிலேயே எழுந்துவிட்டாள்.

காலையில் எழுந்த இமையாவுக்கு, எல்லை இல்லாத ஆனந்தம். அவளது மங்கலான பார்வை வந்திருந்தது. ஆனால் தெளிவாக பார்க்க முடியவில்லை. கதிர் அசந்து தூங்கினான்.

கதிருக்கு கன்னத்தில் ஒரு இச் வச்சிட்டு ‘கதிருக்கு காபி போடுவோமா ?’

“இமைமா டிஸ்டர்ப் செய்யாத தூக்கமா வருது” கதிர் திரும்பி படுத்துக்கொள்ள, அவனது தாடி நிறைந்த கடுமையான முகம் தான் காட்சி அளித்தது.

‘சரியான முரட்டு பீஸ். ஆனா எனக்கு மட்டும் சாக்லேட் பாய்’

சமையல் கட்டில் தட்டு தடுமாறி ஒரு ஒரு டப்பாவாக திறந்தவள், அதன் வாசம் நுகர்ந்து ஒரு வழியாக காபித்தூளை கண்டு பிடித்தவள், பிரிஜ்ஜிலிருக்கும் பாலை எடுத்து காய்ச்சினாள். காபி போட்டு ஒரு பிளாஸ்கில் ஊற்றியவள், கதிர் அருகில் வந்து அமர்ந்து

“கரடிபையா… மூடியை பாரு எவ்வளவு வளர்த்து வச்சிருக்கான்” கதிரின் தலை மூடியை கோதியவளுக்கு, இவனது காதலை நினைத்து மனது நிறைந்தது. அதே சமயம் அவளது முன்னால் காதலனை பற்றியும் நினைக்க மறக்கவில்லை. ‘அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையனும் கடவுளே’ என மனதார பிரார்த்தனை வைத்தாள் இமையா.

“சரியான பைத்தியக்காரன்... காதல் கிறுக்கன்” என கதிரை செல்லம் கொஞ்சினாள். உற்று உற்று பார்த்தவளின் கண்களுக்கு ஒன்னும் தெரியவில்லை. அவனது முகத்தை தொட்டு பார்த்தவளுக்கு முகத்திலுள்ள எழும்பு தான் தட்டுப்பட்டது. இவனை இங்கு தொட்டு பார்க்கும் போது அரசனையும் நினைத்தாள். நல்ல கொழு கொழு முகம். நீட்டாக தலைவாரி சுருக்கம் இல்லாமல் ஆடை அணியும் பழக்கம் உடையவன் அவன்.

“இவன் சாப்பிடுறானா? இல்லையா… முகத்தில் சதையே இல்லை" அவனது முடியை மீண்டும் வருடியவளுக்கு சில தினங்களுக்கு முன், அவனது முடியை ஒரு பாடு படுத்தியது நினைவுக்கு வர, விழுந்து சிரித்தாள்.

“இமையா தூங்காம என்ன செஞ்சிட்டிருக்க" இறுக்க அணைத்தவன், இமையாவின் கண்களுக்கு ஒரு அச்சாரம் கொடுத்து மீண்டும் படுத்துவிட்டான். தூக்கம் அவனது கண்களை சொருக,

அவனிடமிருந்து பிரிந்தவள், தோட்டத்துக்கு போயிட்டு வரலாம் என்று எழவும், கதிரின் போன் அலறவும் சரியாக இருந்தது.

போனை தேடி கண்டெடுத்து காதில் வைக்க

“ஹாலே யாரு…” இமையாவின் குரல் கேட்டதும், வள்ளி பொங்க துவங்கினாள்.

“ஏன் டி நேரில் தான் எங்க உயிரை வாங்குற. போனில் கூட நாங்க பேசிக்க கூடாதா? நீ எல்லாம் சுயநலம் பிடித்தவள்டி உன்னை போய் என் அண்ணாக்கு எப்படி பிடித்தது" கதிரின் தங்கைக்கு போனில் பேசுவதை, அருகில் இருந்து கேட்ட கதிரின் அம்மா திட்டினார்.

“ஏய் அண்ணினு ஒரு மரியாதை இல்லை. போனை என்கிட்ட கொடு" வள்ளியிடமிருந்து போனை வாங்கியவர் “கண்ணு நல்லா இருக்கியா. தம்பியை பாக்கனும் போல இருக்கு அனுப்பி வைம்மா... எனக்கு முன்ன போல உடம்பு சரியில்லை. கடைசியா ஆசை தீர என் புள்ளையை பார்த்துக்கறேன்"

“என்ன மா இப்படி பேசுறிங்க… கதர் இனி உங்க கூடத்தான் இருக்க போறார்மா.. கவலை படாதிங்க" இணைப்பை துண்டித்த இமையா, இரண்டே நிமிடத்தில் கதிரின் பர்சிலிருந்த சில காகித நோட்டுகளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்.

அப்போது தான் கதிர் எழுந்து மீண்டும் உறக்கத்தில் கனவு கண்டிருக்கும் போது, அவன் கனவுக்கு எதிர் மறையாக நிஜத்தில் நடந்தது.

இமையா இத்தனை நாள் கதிர் அழைத்து செல்லும் வழிகளை யூகித்து மெயின் ரோட்டுக்கு வந்தவள், எப்போதும் அவன் அழைத்து செல்லும் பாதையில் செல்லாமல் வேறு புறம் நடந்தாள். அந்த மங்கலான பார்வை தெரியும் வரை நடந்தாள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடந்தவள், பல கிலோமீட்டர் கடந்திருந்தாள்.

கதிர் எழுந்து தயாராகி கிச்சனுக்கு வர, பிளாஸ்க்கை பார்த்து அதிர்ந்தவன் ‘இது எப்படி இங்க வந்துச்சி..’ கதிர் தொட்டு பார்க்க சூடாக இருந்தது. குழப்பத்தோடு திறந்து பார்க்க, உள்ளே காபி சூடாக இருந்தது.

“ஒரு வேலை அத்தை வந்திருப்பாங்களோ..." காபியை குடித்துக்கொண்டே வீட்டை நோட்டமிட, வாசலில் எந்த செருப்புமில்லை. "அத்தை வந்தது போல தெரியலையே. ஒருவேலை இமையாவுக்கு பார்வை வந்திருக்குமோ?”

கதிர் “இமையா உனக்கு பார்வை வந்திடுச்சா ?" துள்ளி குதித்து தோட்டத்திற்கு ஓடினான்.

தோட்டத்தில் இமையா இல்லை. இமையா நடந்துவந்த சுவடு சொன்னது, அவள் இங்கு வந்திருப்பதை. இரண்டு பூந்தொட்டி நகர்ந்து, சேற்று கால் தடம் ஊஞ்சலை நோக்கி சென்றிருந்தது. அவளது சாலின் நூனி ஊஞ்சலின் ஊக்கில் மாட்டி கிழிந்த துணி இருந்தது. 'வீட்டிலும் இல்லை. தோட்டத்திலும் இல்லை. எங்கே போய் இருப்பா?’ குழப்பத்தோடு வாசலுக்கு வந்து நின்று பார்த்தான்.

பக்கத்துவீட்டு காமாட்சி அக்கா வீட்டின் கதவை வேகமாக தட்டி "அக்கா இமையாவை பார்த்திங்களா ?”

செல்வியும் அன்று தான் கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்திருந்தாள்.

மூவரும் ஆளுக்கு ஒரு புறம் இமையாவை தேட, சரண் அழகிக்கு கதிர் விஷயத்தை சொல்லிவிட்டு, தினமும் செல்லும் பாதையில் வேகமாக நடந்தான்.

ஐஸ்கிரீம் கடை, அவன் வழக்கமாக அழைத்து செல்லும் கடைகள், பார்க் என்று அனைத்து இடங்களிலும் விசாரித்தான்.

அன்று மாலை வரை தேடினார்கள். இமையாவின் பெற்றோரும் பதறி அடித்துக்கொண்டு வர,

இமையா ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள்.

“போச்சி… இந்த பார்வை இப்படி சதி செஞ்சிடுச்சே" எங்க எப்படி யாரிடம் உதவி கேட்பது என ஒன்றும் தெரியாமல், தட்டு தடுமாறி அந்த பஸ் ஸ்டாப் பெஞ்சில் அமர்ந்தாள்.

கதிர் வீட்டை நோக்கி பதற்றத்தோடு வந்த அவள் பெற்றோரின் கண்ணில் இமையா பட, கதிருக்கு உடனே போன் போட்டு கூறினர்.

“நீங்க வீட்டுக்கு கூட்டி வந்திடுங்க நானும் அங்கே வந்திடுறேன்"

வெவ்வேறு திசையிலிருந்து அனைவரும் கதிர் வீட்டை நோக்கி பயணிக்க, இமைய தான் அடம் பிடித்துக்கண்டிருந்தாள்.

“நான் வரலை கதிர் அவன் குடும்பத்துகிட்டையே போகட்டும். அவன் அம்மா பாவம். கதிரில்லாமல் உடம்பு சரியில்லாம இருக்காங்க. அவங்க பாவம். என் ஒருத்தி சந்தோஷத்துக்கு அங்கே ஒரு குடும்பமே ஏங்கிட்டிருக்கு. போதும் இது எல்லாம். அவன் போட்டும். உங்கக்கூட கூட்டிட்டு போங்க இல்ல... என்னை எங்காவது கூட்டிட்டு போய் விட்டுடுங்க"

“இமையா அமைதியா இரு... முதல்ல நீ இங்க எப்படி வந்த அதை சொல்லு. பார்வை வந்ததா ?"

“ம்ம்...” அதன் பிறகு மூவரும் பேசிக்கொள்ளவில்லை.

வீட்டிற்கு வந்ததும் தான் அழகி இமையாவை பிடித்து உழுக்கி "எதுக்கு டி இப்படி செஞ்ச. சொல்லு ? நீ சந்தோஷமா வாழனும்னு தானே கல்யாணம் செஞ்சி வச்சோம்”

“மா… போதும் இதுவரை உங்க பொண்ணுக்காக யோசித்து செய்தது. கதிருக்கு ஒரு குடும்பமிருக்கு அவங்ககிட்ட இருந்து பிரிச்சதே பெரிய பாவம். என்னால அவங்க வீட்டில் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நிச்சியமாகி நின்னுருக்கு. அவன் அம்மாக்கு உடல் நிலை சரியில்லாம போச்சி. போதும்மா இதோடு நிறுத்துங்க… உங்க சுயநலத்துக்காக ஒரு குடும்பத்தின் நிம்மதி போயிருக்கு. அது ஏன் உங்களுக்கு புரியலை"

இமையா சொல்வது சரி தான். ஆனால் கதிர் இதை ஏத்துக்கனுமே! கதிர் வாடிய முகத்தோடு வந்தவன், கிட்சனுக்கு சென்று சமைக்க துவங்கினான். யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

கதிருக்கு டென்சனுடன் சேர்ந்து பசி மயக்கம் வேறு. கதிர் காமாட்சிக்கு போன் போட்டு "அவ வந்துட்டா அக்கா. நீங்க எங்க இருக்கிங்க வீட்டுக்கு வாங்க"

“கதிர் இமையா வந்துட்டாளா சந்தோஷம்ப்பா. நாங்க ஒரு 12 கிலோமீட்டர் தள்ளி இருக்கோம் வந்திடுறோம்"

இருவரும் வந்து சேரவும், கதிர் சமைத்து முடித்து தட்டில் சாப்பாடு கொண்டு வந்தவன் ஊட்டியும் விட்டான். இமையா வாயை இறுக மூடிக்கொள்ள

“வாயை திற டி…” அவனது அழுத்தமான வார்த்தைகளில் அதிர்ந்த இமையா தனது இதழ்களை பிரிக்க ஊட்டிவிட்டான் என்று சொல்வதை விட, அவள் வாயில் உணவை திணித்தான் என சொல்லவேண்டும்.

இமையாவால் அவனது கோபத்தை எதிர் கொள்ளவே முடியலை.

“கதிர் சாரி...” கதிர் இமையா சொல்வதை காதில் கூட வாங்காமல்

“அத்தை பாத்துக்கோங்க.. எனக்கு வெளியே வேலையிருக்கு” வீட்டைவிட்டு நகர்ந்தான். எங்கே இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தால் இமையாவை கை நீட்டிவிடுவேனோ என்ற பயம். கோபமும் அதற்கு இணையாக இருந்தது.

கதிரின் மனம் கதறியது. 'ஏன்டி என்னை இப்படி வதைக்கற. நேத்து நைட் தான் நிம்மதியா இருந்தது. நமக்குனு ஒரு வாழ்க்கை. இனி சோகம் இருக்காது. சந்தோசம் மட்டும் தான். நம்ம குழந்தை குட்டியோட சந்தோஷமா இருப்போம்னு நெனச்சேன். எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா. எல்லாத்திலையும் மண் அள்ளி போட்டுட்டியேடி பாவி. கடன்காரி மனசாச்சி இல்லையா உனக்கு? என் காதல் உனக்கு புரியலையா ? இல்லை உன் பழைய காதலை இன்னும் சுமந்திட்டு இருக்கியா ?’ இதுக்கு எல்லாம் பதில் தெரிந்தே ஆகவேண்டும். வேகமாக வீட்டை நோக்கி நடந்து வந்தவனின் காதில் கேட்ட விஷயத்தின் விஷம் கதிரின் இதயத்தை குத்தி கிழித்தது.

இடிந்து போய் வாசற் படிக்கட்டில் அமர்ந்தான் கதிர்.

‘அப்போ… நான் உன் மனசில் இல்லையா. எவனோ ஒருத்தன் தான் இன்னும் உன் மனசில் இருக்கானா? ஏன் இமையா ஏன்? எனக்கு தண்டனைக்கு மேல் தண்டனை கொடுத்திட்டிருக்க. இதுக்கு ஒரேடியா உன் கையால என் கழுத்தை நெறித்து கொன்னுடு' கதிர் மனம் கதறி அழுதது.

அமர்ந்திருந்தவன் அவள் மனதில் வைத்திருப்பதை மொத்தமாக சொல்லி முடிக்கட்டும் என்று பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“மா... எனக்கு என் லவ்வரை பார்க்கனும் கூட்டிட்டு போங்க" அவ்வளவு தான் பிடித்து வைத்திருந்த பொறுமை அனைத்தும் காத்தோடு கலந்தது கதிருக்கு. கையை ஊன்றி எழுந்தவன் ஆக்ரோஷமாக இமையாவை நோக்கி வந்தான்.
 
Status
Not open for further replies.
Top