ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் விழியின் மொழி...நானடி - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 26

கதிர் நேராக இமையாவை நோக்கி வர, அவளது கன்னத்தில் இடியாக இறங்கியது அவனது கரங்கள்.

“நீ எல்லாம் மனசாச்சியோடத்தான் பிறந்திருக்கியா? அத்தை மாமா உங்க பொண்ண கூட்டிட்டு போங்க. இவ நல்லா சந்தோஷமா இருக்கனும்னு தான் நான் இவளை கட்டிகிட்டேன். நான் அப்படி என்ன கொடுமை இவளை செஞ்சிட்டேன்னு இவ வீட்டைவிட்டு போனா. பார்வை தெரிஞ்சதும் சொல்லாமா எவ்வளவு பெரிய வேலை பார்த்து வச்சிருக்கா. போங்க இவளை கூட்டிட்டு போய் அவளோட காதலன் கிட்ட சேர்த்து வைங்க"

“மாப்பிள்ளை அவ ஏதோ தெரியாம...”

“இல்லை மாமா அவ தெரிஞ்சி தான் பேசிட்டிருக்கா. தயவு செஞ்சி கூட்டிட்டு போயிடுங்க. என்னால முடியலை போதும். எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. கூட்டிட்டு போங்க உங்க பொண்ண"

“அறிவு கெட்டவளே… உன் வாழ்க்கையில் நீயே மண்ணள்ளி போட்டுக்கிட்டயேடி இப்போவாவது புரியுதா உனக்கு. வந்து தொலை” இமை அம்மா வாயில் கிடைக்கும் அனைத்து சொற்களையும் சேர்த்து வழி முழுவதும் திட்டியே அழைத்து சென்றார். சில மணி நேரத்தில் வீடும் வந்தது சேர,

அழகி கத்திக்கொண்டிருக்க, சரண் தான் அழகியை அடக்கி இமையாவுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னார்.

“இல்லப்பா பசிக்கலை. தூக்கம் வருது பா"

“சரி… தங்கம் நீ தூங்கி எழு எல்லாம் சரி ஆகிடும்"

‘மத்தவங்களுக்கு நல்லது நினைச்சா நம்மளை தான் தப்பு செஞ்சது போல எல்லோரும் கத்துறாங்க. என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டாங்க போல’ இமையா தன் இமையை மூடி தூங்க

சரணும் அழகியும் புலம்பி கதிருக்கு போன் செய்தனர்.

“மாப்பிள்ளை அது...”

“மாமா சாரி.. கொஞ்சம் கோபம். அதான் உங்க பொண்ணை அடிச்சிட்டேன்”

“நீங்க அடிச்சதுல தப்பேயில்லை. டாக்டர்கிட்ட பேசினேன்ப்பா. அவங்க பார்வை சீக்கரம் வந்திடும். அதுக்கு அவ ரொம்ப சந்தோசமா இருக்கனுமாம். டென்சன் ஆகக்கூடாதாம். வீக்கா இருக்க நரம்பு கொஞ்ச கொஞ்சமா சரி ஆகிட்டு வருதுன்னு சொல்லுறாங்க. மனநிலை ஒரு நிலையில் இருக்காது. அதனாலதான் இப்படி ஆகிட்டா. தப்பா நினைச்சிக்காதிங்க. காதல் கீதல்னு ஏதோ பேசிட்டா”

“அத விடுங்க மாமா.. அவளா என்னை தேடுற வரை நான் வரமாட்டேன்” கதிர் உறுதியாக சொன்னான்.

“மாப்பிள்ளை... உங்களுக்கு எது சரினு படுதோ அதை செய்ங்க. நாங்களும் உங்களுக்கு ஏத்தது போல நடந்துக்கறேம்”

“சரி மாமா… அந்த அடங்காதவளை பாத்துக்கோங்க. ரொம்ப சேட்டை இப்போ எல்லாம்"

“ஆமா மாப்பிள்ளை.. சின்ன குழந்தையில் செஞ்சதை விட அதிகம் டார்ச்சர் செஞ்சிட்டிருக்கா"

“அவ என்னை தேடும் போது கூப்பிடுங்க மாமா... உடனே வந்திடுறேன் வச்சிரட்டா மாமா"
இமையா வீட்டு காலிங் பொல் அடிக்க

“யாருப்பா வேணும் ?”

நீட்டாக ஒருவன் வந்து நின்றான். “ஆன்ட்டி இமையாள் அரசி இருக்காளா ?”

“நீங்க ?"

“நான் அரசன்… இமையா வேலை செஞ்ச இடத்தில் பாஸ்"

“ஓ… அப்படியா உள்ள வாங்க. உட்காருங்க இமையா தூங்கிட்டிருக்கா கூட்டிட்டு வரேன்"

“இமையா… உன்னை பார்கக யாரோ உன்கூட வேலை செஞ்சவங்க வந்திருக்காங்க எழுந்திரு"

“யாருமா வந்திருக்கா ?”

“பேரை மறந்துட்டேன்டி.. எந்திரி முதலில்"

“சரிமா இரு முகம் கழுவிட்டு வரேன்"
இமையாவின் கைபிடித்து அழகி அழைத்துவர

“ஆன்ட்டி இமையாவுக்கு என்ன ஆச்சி ?” குரலை வைத்தே இமையா வந்திருப்பது யார் என்று தெரிந்துகொண்டாள்.

“அரசன் சார் எப்படி இருக்கிங்க ?” இமையா எந்த ஒரு தடுமாற்றமும் சலனமும் இல்லாமல் அவனிடம் பேசினாள்.

இமையாவின் கழுந்திலிருந்த தாலியை பார்க்க

“இமையா கல்யாணம் ஆகிடுச்சா ?” அவன் அதிர்ச்சியோடு கேட்க

“ஆமா சார்...” அரசனுக்கு அவளின் இந்த சார் என்ற அழைப்பு புதியது.

‘என்னை இவ்வளவு வெறுத்துட்டியா இமையா?’ மனதில் நினைத்ததை வெளியே சொல்ல முடியவில்லை அவனால்.

“சரி தம்பி நீங்க பேசிட்டிருங்க. எங்களுக்கு தோட்டத்தில் வேலையிருக்கு”

“இமையா எப்படி பார்வை போச்சி"

“ஒரு அக்சிடன்டில் போய்யிடுச்சி சார்”

“ஏன் இமையா புதுசா சார்னு கூப்பிடுற ?”

“வேற கூப்பிட நமக்குள்ள எந்த உறவும் இல்லையே சார்”

“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா சார் ?”

“இல்லை இமையா... நான் இன்னும் உன்னை தான் நினைச்சிட்டிருக்கேன்"

“சார்… இது சரி இல்லை. நீங்க இப்படி பேசிட்டிருப்பது மட்டும் என் புருஷனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்.. உங்க புஸ்ஸுனு இருக்க மூஞ்சில காத்தை இறக்கி விட்டுடுவாங்க" இமையா சொல்வது எதும் காதில் வாங்காமல்

“புரிஞ்சிக்கோ அரசி... நான் ஏதோ கோபத்தில் சிஸ்டர்னு சொல்லிட்டேன்"

“சிஸ்டர்னு சொன்னது சொன்னதாகவே இருக்கட்டும் அரசன். உங்க லைப் பாத்துங்கோங்க. சாகுற வரை தனியா இருக்கேன்னு எந்த முட்டாள் தனமும் செஞ்சிக்காதிங்க. உங்களுக்கே தெரியும் இரண்டு பேரும் செஞ்சது காதலே இல்லை. நீங்க உங்க மனசை சொல்லும் போது நான் ஏத்துக்கலை. நான் உங்க கிட்ட சொல்லும் போது அதை காது கொடுத்து கேட்கும் நிலையிலையும் நீங்க இல்லை. இரண்டு பேருதும் ஒன் சைட் லவ் கணக்குதான். நீங்க நினைச்சது போல துரு துருனு கியூட்டா முக்கியமா நல்ல எண்ணங்கள் உடைய பெண் உங்க வாழ்க்கை துணைவியா வர வாழ்த்துக்கள்”

“அரசி…”

“நான் இன்னும் பேசி முடிக்கலை அரசன் சார். நண்பனா நீங்க என்னை எப்போ வேணும் என்றாலும் பார்க்க வரலாம். கிழிந்த பக்கங்கள் கிழிந்ததுதான். என் கணவனை நான் உண்மையா நேசிக்கிறேன். எங்க வாழ்க்கையை டிஸ்டர்ப் செய்யாதிங்க"

அரசனுக்கு மனம் ரணமாக எரிந்தது. வரேன் என்று கூட சொல்லாமல் அரசன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். நல்ல நோக்கத்தில் இல்லை.. அவளது மனதில் இடம் பிடிக்க மீண்டும் வருவேன் என்ற சபதத்தோடு இந்த வீட்டு வாசலை தாண்டினான்.

இமையாவுக்கு கதிர் நினைவாகவே இருந்தது. ‘ரொம்ப கோபமா இருப்பாரா ? என்னிடம் இனி பேச மாட்டாங்களா ? கதிரா.. மாமா.. சாரி' என மனதில் வருந்தினாள். ஆனால் அவளின் மனதை வெளிப்படுத்த சிறிதும் நினைக்கவில்லை. அவளின் எண்ணம் முழுவதும் 'கதிர் சந்தோஷமாக இருக்கனும்… அவனோட குடும்பத்தோடு' என்று.

இமையாவுக்கு தெரியும் “கதிர் வா” என்ற ஒற்றை அழைப்பு அவனை தன் பக்கம் இழுத்துவிடும் என. இமையா கொஞ்சி பேசினால் போதும் கோபமாவது கீபமாவது சிட்டாக பறந்து வந்திடுவான். ஆனால் இமையா அழைக்க போவதில்லை.

சக்தி காமாட்சியின் பெண் சரணுக்கு கால் செய்து “அங்கிள்… நான் இமையா அக்காகிட்ட பேசனும்”

“இருமா கொடுக்கறேன்”

“இமையா பக்கத்து வீட்டு பொண்ணு உன் கிட்ட பேசனுமாம்”

இமையா ஒரு தயக்கத்தேடு சரணிடம் போன் வாங்கினாள்.

“அக்கா ஏன்க்கா இப்படி... கதிர் அண்ணா பாவம். சாப்பிடாம அடம் செஞ்சிட்டிருக்கார். இப்போ தான் நானும் அம்மாவும் மிரட்டி சாப்பிட வைத்தோம்”

“சரி டா… அவரை பாத்துக்க“

“அக்கா எப்ப நாம நம்ம வேலை ஆரம்பிக்கிறது"

“என்ன வேலை டா ?”

“அது தான்க்கா.. கதை பேசலாம் வாங்க.. யூ டியுப்"

“மெதுவா ஆரம்பிக்கலாம்டா”

“அக்கா… ஆல்ரடி பேசியது தானே ? காலேஜ் முடிச்சு வந்த அடுத்த நாள் ஆரம்பிக்கரதுனு"

“சரி சக்தி... நான் உனக்கு ரெக்காட் செஞ்சி அனுப்பறேன்”

“அக்கா எதாவது காலேஜில் நடந்த இன்சிடன்ட் ஆரம்பிச்சா நல்லா இருக்கும்"

“சரி டா" என்ற இமையாவின் மனதில் கல்லூரியின் கடைசி மாதம் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அதையே கதை போல சொல்ல முடிவெடுத்தவளை பழைய நினைவுகளுக்குள் மனம் எனும் சுழல் அவளை அழைத்து சென்றது.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 27

வீட்டில் அடம் பிடித்து ஆர்க்கிடெக் டிபார்ட்மென்ட் சேர்ந்தாள் இமையா. வீட்டில் இமையா என்று அழைக்க, பள்ளி கல்லூரியில் அரசி என்றால் தான் தெரியும்.

ஒரு வழியாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, கடைசி தேர்வுக்கு காத்திருந்தார்கள் அரசியும் அவளது தோழிகளும்.

நேர்முக தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர்கள் செய்த பிராஜெக்ட்காக.

தேர்வுக்கு தயாராகாமல் யார் எக்ஸ்டர்னல் என நோட்டிஸ் போர்டை பார்க்க அனைவரும் செல்ல, பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு இன்விடேசனை கண்டு பெண்கள் அனைவரும் ஆஆஆஆ என வாயை பிளந்தனர்

அரசி மட்டும் தான் நோட்டிசை படித்தாள். இந்த இன்டர்னலில் முதல் மதிப்பெண் எடுப்பவருக்கு இன்றே வேலைக்கான அப்பாய்ன்ட்மென் ஆர்டர் தரப்படும் என்றிருந்தது. அவள் தோழிகளுக்கு அரசி சொல்ல வாய் திறக்கும் முன், அது எங்கு அவர்கள் காதில் விழுந்தது. அங்கு வரவிருக்கும் எக்ஸ்டர்னல் அழகை வர்ணித்து கொண்டிருந்தார்கள்.

அரசி அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் போனில் ஏதோ தேடி கொண்டிருந்தாள். அந்த கம்பெனியை பற்றிய தகவல் மற்றும் எக்ஸ்டர்னல் செய்ய போகும் நபர் பற்றியும். இன்ஸ்டா பேஸ்புக் என அவனை பற்றி ஆராய்ந்தாள் அரசி. அவனை சைட்டடிக்க இல்லை. இந்த வேலை கிடைத்தால் ஓசியில் ஊர் சுற்றி பார்க்கலாமென ஒரு ஆசைதான்.

பட்டாம்பூச்சி போல பறக்க நினைப்பவள் அரசி. வீட்டில் கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும், இந்த உள் ஊரில் சுற்றுவதை விட தினமும் ஒரு இடம், புது புத மக்கள்கள் புது புது சூழலில் வசிக்க பிரியம் கொண்டவள். அதுமட்டுமல்லாமல் கல்யாணம் என்றால் அலர்ஜி. கொஞ்ச வருசம் அதிலிருந்து தப்பிக்க இந்த வேலை முக்கியமான ஒன்று என, இந்த தேர்வை சிறப்பா செய்து ரிசல்ட் வரும் முன் வேலைக்கு போவதில் தீவிரமாக இருப்பவளை அவளது தோழிகள் பார்த்து

“என்ன ஒரு டிக்கட் அமைதியா இருக்கு” தோழிகள் சுற்றி அரசியை பார்க்க

“இவளுக்கு வேற வேலையில்ல. இந்த வயசுல சைட் அடிக்காமல் அறுபது வயசுலயா சைட் அடிப்ப" என அவளது போனை பறித்து, அரசியையும் இழுத்து சென்றார்கள்.

வாஷ் ரூம் சென்று அவளது தோழிகள் முகம் கழுவி வந்தார்கள்.

அரசி அவர்களை விசித்திரமாக பார்த்து "ஏன்டி எதுக்கு டி பையனை பாத்தா ஜொல்ஸ் விடுறிங்க அப்படி என்ன தான் இருக்கோ சைட் அடிக்கறதுல" அவர்களை திட்டிக்கொண்டு அங்கிருக்கும் மரம் செடி கொடிகளை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தாள்.

அவளது தோழிகள் ஒரு சேர “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என சொல்லி அருகிலிருந்த காரை பார்த்து டச் அப் செய்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் செய்யும் அட்டகாசத்தையும் அரசியையும் இரு விழிகள் ரசித்துக்கொண்டிருந்தது.

அனைவரும் மேக்கப்பை முடித்துவிட்டு அரசியை பார்க்க விரித்துவிட்டிருந்த நூடுல்ஸ் முடி, கண்ணுக்கு தெரியாத அளவுக்கு குட்டியான பொட்டு, பவுடர் கூட பூசாமல் பளிச்சென இருந்தது அரசியின் நிலவு முகம். ஐந்தடியில் அவள் பேசுவதை விட குறும்பு கண்கள் ஆயிரம் மொழி பேசியது. இயற்கையை ரசிப்பவள் என்று நன்றாக தெரிந்தது அவளது செயலால்.

தோழிகள் அவர்களின் வேலையை முடித்துவிட்டதும், அவர்களோடு கிளம்பயிருந்த அரசியை நிறுத்தி "மேக் அப் தான் போடல சரி விடு கொஞ்சமா லிப்ஸ்டிக் போட்டுட்டு வா" என ஒரு சிறு பெட்டியை அவள் கையில் திணித்து சென்றார்கள்.

“ஏய்… இது எல்லாம் எனக்கு வேண்டாம். அதுமில்லாமல் முன் பின் போட்டும் பழக்கமில்லை" என அரசி சொன்னது அவர்கள் காதுக்கு கேக்காத தூரத்தில் இருந்தார்கள்.

“சரி… இவளுங்க போயிட்டாங்க. அப்படி என்ன தான் இருக்கு இதுலனு இன்னைக்கு போட்டு பாத்துடுவோம்" அந்த சிறு டப்பாவை திறக்க, அரசிக்கு மயக்கமே வந்திருந்தது. சிறு சிறு பெட்டிகளாக பிரிக்கப்பட்டு எப்படியும் அதில் முப்பதுக்கு மேல் கலர் இருக்கும்.

“ஏன் கடவுளே. நான் இதுல எத போட எல்லா கலரும் நல்லாதான் இருக்கு" பக்கத்திலிருக்கும் பட்ஸ் போன்ற ஒரு பிரஸ் எடுத்து அடிக்கும் கலர் ஒன்றை தேர்ந்தெடுத்து அதனை உதட்டில் தீட்டுவதற்கு காரை பார்த்து நின்று, கைகளை உதட்டுக்கு அருகில் கொண்டு போக இவளை பார்த்துக்கொண்டிருந்த அந்த உருவம், 'அய்யோ இந்த கலர் இவளுக்கு செட் ஆகாது' என நினைத்து காரின் ஜன்னலை மெதுமெதுவாக திறந்தான். அரசிக்கு முதலில் அவனது தலைமுடிதான் தெரிந்தது.

“அய்யோ நம்ம முடி எப்போ குட்டையா ஆச்சி… ஐய்யோ என் நூடுல்ஸ்" என அரசி வாய்விட்டு புலம்ப, ஒரு மெல்லிய புன்னகையோடு அவன் கார் கண்ணாடியை முழுமையாக திறந்தான்.

“நான் கூட பயந்துட்டேன். ஐய்யயோ இவரா போச்சி” என பதற்றத்தில் அந்த இடத்தை விட்டு நகரயிருந்த அரசியை

“ஓய் கண்மணி…உனக்கு பிங்க் கலர் தான் செட் ஆகும்" என சொன்னவன், காரிலிருந்து இறங்கி கல்லூரியை நோக்கி நடத்தான்.

“இவருதான் சீப் எக்ஸ்டர்னல்! நம்ம பொண்ணுங்க வேற… இவர் இவ்வளவு நேரம் உள்ளேயிருந்தது தெரியாம அட்டகாசம் செஞ்சிவச்சது இல்லாம அவரை பற்றியே பேசிட்டும் சைட் அடிக்கரதை பற்றி பேசிட்டு இருந்திருக்காங்களே” என அரசி வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டாள். சாதாரண விசயத்துக்கு அரசி பதறுவதற்கு காரணம் அவனை பற்றி தேடும் போது கிடைத்த விசயங்கள் அப்படி. என்ன அந்த நபர் பற்றி அரசி தெரிந்துக்கொண்டாள் ? எதற்கிந்த பதற்றம் ?

'பொண்ணுங்களை கண்டாலே அவருக்கு பிடிக்காதே. இவளுங்க வேற ஏதேதோ பேசிட்டாளுங்க. மார்க்குல கை வச்சிட்டார்னா என்ன செய்றது ?' அரசி ஏதோ ஒரு யோசனையில் அன்று நடக்கவிருக்கும் தேர்வு அறைக்கு சென்றாள். இன்டர்னல் எக்சாம் போலில்லாமல் நேர்முக தேர்வு நடப்பது போன்ற காட்சி அளித்தது அந்த அறை.

அந்த கம்பிர குரலுக்கு சொந்தக்காரனிடம் அனுமதி வாங்கி உள்ளே வர, அவன் என்னவோ சாதாரணமாக தான் பார்த்தான். ஆனால் இவளுக்குதான் தான் கொஞ்ச நேரம் முன், அவன் கார் கண்ணாடியை பார்த்து தன் தோழிகள் செய்த அட்டகாசம் நினைவுக்கு வர ஒரு பதற்றம் அவளிடம் தொற்றிக்கொண்டது.

அவளை பார்த்து ஒரு நட்பு புன்னகை வீசினான். அரசன் பெயருக்கேற்ப கம்பிரம் ஆனால் கடின முகமில்லை. மற்றவர்களிடம் அன்பை வாரி வழங்கும் விழிகள் உடையவன். அவனது பார்வை அரசிக்கு ஒரு செய்தி சொன்னது. “ரிலாக்ஸ்…” என்பது போல.

'பதற்றம் ஏனடி… உன் விழி பதற்றம் கண்டு என் மனம் கனக்குதடி…' என அரசனின் மனதில் கவிதை மழை பொழிந்தது. அவன் எண்ணம் போன போக்கை நினைத்து அதிர்ந்தவன்

அவள் பதற்றத்தை போக்க நினைத்ததை மறந்து தன்னை சமநிலை படுத்த, அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினான்.

இருவரும் கட்டாயத்தின் பெயரில் தன் மனதை அடக்கினார்கள்.

“சொல்லுங்க… மிஸ் அரசி"

‘மொட்டையா சொல்லுங்க என்றால் என்ன. அர்த்தம் இன்டர்வியுவ் கூட எடுக்க தெரியலை' என பழையபடி அவளது குறும்புத்தனம் எட்டிப்பார்க்க,

அவளது மைன்ட் வாய்ஸ் புரிந்துக்கொண்டு தெளிவாக கேள்வி கேட்க துவங்கினான்.

“நான் இப்போ உங்களுக்கு ஜாப் தந்தா எப்படி செய்விங்க.. ஜாப் நேச்சர் தெரியும் தானே ?”

“ஊர் சுற்ற யாருக்கு தான் பிடிக்காது சார். அது எல்லாம் சிறப்பாக டையர்டே இல்லாம சுத்த நான் ரெடி" என துடுக்காக பதில் சொன்னாள். அவன் எதிர்பார்த்த பதிலும் அதுதான்.

“சரி… உங்க இன்டர்வியு ஓவர், நாங்க கூப்பிடறேம்" என அரசன் சொல்ல அரசியும் வாசல் அருகில் செல்லும் போது

“மிஸ் அரசி ஒரு நிமிடம்" அவளும் நின்ற இடத்திலிருந்து திரும்பிப் பார்த்தாள்.

“தேங்க்யு நான் சொன்ன கலர் லிப்ஸ்டிக் யூஸ் செஞ்சத்துக்கு. இந்த அலங்காரம் எதுமில்லாமலே நீங்க பெருக்கு ஏற்றார் போல அரசி தான். பதற்றம் வேண்டா உங்க பிரண்ட்ஸ் மார்கில் கைவைக்க மாட்டேன்" என அவளது குழப்பத்துக்கு பதில் தந்திருந்தான் அரசன்.

“ரொம்ப நன்றி சார் நான் பயந்துட்டே இருந்தேன். எங்க மார்க்கில் கைவச்சிடுவிங்களோனு"

“எதுக்கு இந்த பயம். காலேஜ் ஸ்டூடன்ட்னா இது எல்லாம் செய்வது தானே" என அரசன் குழப்பத்தோடு கேட்க, அரசி தயங்கி "நான் உங்க சோசியல் மிடியா அகொன்ட் எல்லாம் செக் செய்தேன்…அதில்" என எப்படி இத சொல்ல என தயங்கி நிற்க

அரசன் புரிந்துக்கண்டு “ஓ இதெல்லாம் ஒன்னுயில்ல. மிஸ் பிகேவ் செஞ்சா தான் கோபம் வரும். இதெல்லாம் பன் தானே" என மயக்கும் புன்னகை அவளை பார்த்து வீசினான்.

அரசி ஒரு நிம்மதியோடு வெளியே சென்றவள், வரிசையாக அவள் வகுப்பில் பயிலும் ஒருவர்பின் ஒருவர், அரசனை சந்தித்து வந்து ஓய்வாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க

“இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லோருக்கும் மீட்டிங் இருக்கு. ஆடிட்டேரியம் வந்துடுங்க" என ஒரு அலுவலக ஊழியர் வந்து சொல்லிவிட்டு போனார்.

தோழிகள் மீண்டும் அரசனை பற்றியும் அவன் குரல் பற்றியும் புகழ்ந்து கொண்டிருக்க, அரசி மனதில் தோழிகளின் அறியாமையை நினைத்து சிரித்துக்கொண்டாள். முதலில் அந்த கார் மேட்டரை சொல்லத்தான் நினைத்தாள். பதற்றத்தில் தேர்வை ஒழுங்காக செய்யவில்லை என்றால், மொத்தமாக இத்தனை வருட உழைப்பு வீணாகிடும் என அமைதியானாள் அரசி. ‘இந்த எருமைங்களுக்கு எதும் தெரியாம திரும்ப சைட் அடிக்க கிளம்பிடுச்சிங்க' என அடங்காத தன் தோழிகளை மனதில் கலாய்த்து மீட்டிங் நடக்குமிடத்துக்கு சென்றாள்.

வழக்கம் போல தோழிகள் அனைவரும் பின் வரிசையில் உட்கார நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதல்வர் தொடங்கி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் வரை பேசி பேசி அறுத்து கொண்டிருந்தார்கள்.

அந்த வகுப்பு மாணவர்கள் காதில் ரத்தம் வருவதை போல செய்கை செய்தும், இன்னொறு மாணவன் கழுத்தை அறுப்பது போல செய்கை செய்து முன்னிருந்த மேஜையில் மயங்கி சரிவது போலவும் கீழே ஒரு நாடகமே அங்கங்கு நடந்து கொண்டிருந்தது.

நம்ம வானரங்கள் கமுக்கமாக கடைசி வரிசையில் அமைதியாக கண்ணும் கருத்துமாய் பேசுபவர்களை ரசிக்க, இடையில் அரசனுக்கு முக்கியமான போன் வர அந்த கட்டிடத்தை விட்டு சற்று தள்ளி நின்று பேசி முடித்து உள்ளே வர, இங்கு தோழிகள் பேசிக்கொண்டிருப்பது அரசனுக்கு கேட்டது. அவனது கண்கள் அரசியை தான் மேய்ந்து கொண்டிருந்தது.

‘நம்மை பத்தி தான் பேசிட்டிருக்காங்க... அப்படி என்ன பேசராங்கனு கேட்போம்' என இளம் வயது காளை போல அவர்களுக்கு சற்று தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்தான்.
"அமைதியா இருங்கடி ஓவரா பேசுறிங்க… அவர் காதில் விழ போவது. அப்புறம் சங்கடம் உங்களுக்கு தான்"
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 28

“ஏய் அங்க பாத்திங்களா அரசனை. கிளீன் சேவ் நீட்டா பார்மல் டிரஸ் டக்ன் செய்து ஆளு செம ஜம்முனு இருக்கார்” என்று தொடங்கி அவனை மொத்தமாக ரசிக்க, அரசி தோழிகள் பேசுவதை ஆர்வமாக கேட்டாள். அதில் ஒருவள்

“என்னடி நாங்க பாட்டுக்கு பேசிட்டிருக்கோம் நீ அமைதியா இருக்க சரி இல்லையே”

“என் டேஸ்டே வேறடி…" என அவளுக்கு வரப்போகும் கணவன் எப்படியிருக்க வேண்டும் என விவரிக்க துவங்கினாள். தோழிகள் அவளை பார்த்து வாயடைத்து நின்றார்கள்.

“அடிப்பாவி பூனை மாதிரி இருந்துட்டு எவ்வளவு பிளான் போட்டிருக்க" சம்பந்தமே இல்லாமல் அரசன் அதிர்ந்தான். தனக்கு நேர் எதிராகயிருக்கும் குணங்கள் தான் பிடிக்கும் போல என அவளது ஆசைகளை அரசன் மனதில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அப்போதுதான் கவனித்தான். அந்த மேஜை அடியில் ஒரு மினி கேன்டின் இருப்பதை. 'அடிபாவி! நான் கூட சேட்டை செய்யும் பொண்ணுங்களா இருந்தாலும் ஆசிரியர்கள் பேசுவதை சுவாரஸ்யமான கேட்டுக்கொண்டிருக்கும் நல்ல மாணவிகள் என நெனச்சேன் இவர்கள் அமைதிக்கு இது தான் காரணமா…'

அரசி எதை எடுக்கிறாள் என அரசன் பார்த்து வைத்தான். தேன் மிட்டாய், கல்லை பருப்பி, பச்சை மற்றும் சிவப்பு லேஸ் என அவள் ஒன்று விடாமல் வெளுத்து கட்டினாள்.

மீண்டும் அரசனை பற்றி பேச்சு வர, 'இவளுங்க தொல்லை தாங்கலை’ என சலித்த அரசி

“ரொம்ப டிரீம் போகாதிங்கடி. அந்த மனுசனுக்கு கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்" என அரசி தோழிகளின் கனவில் சத்தமில்லாமல் ஒரு பெரிய அணுகுண்டு போட

“ஏய் வாயை கழுவுடி. அபசகுனமா பேசிட்டு" என தோழிகள் சற்று சத்தமாகவே பதற, இவர்கள் அருகில் வந்த அரசன்

“ஐயம் சிங்கிள்" என அடக்கப்பட்ட புன்னகையில் சொல்லி மேடையை நோக்கி நடந்தான்.

அரசன் வேலையை பற்றி அறிவிப்பு கொடுக்க மேடையை ஏறினான்.

என்ன தான் தோழிகள் சேட்டை செய்பவர்களாக இருந்தாலும் மிகவும் திறமை சாலிகள் தான். ஆனால் அரசனின் முகத்தை பார்த்து சைட்டடிப்பதில் இன்டர்வியு டாப்பிக் என்னவென்று பார்க்காமல் சொதப்பி விட்டார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் அவர்களின் சொதப்பல் அவர்களுக்கே தெரியாது.

அரசன் பேச துவங்கும் போதுதான் தெரிந்தது. தோழிகள் மூவரும் விழி விரித்து அரசனை தான் பார்த்து கொண்டிருந்தார்கள்.

தோழிகள் நன்றாக பல்ப் வாங்குவதை அரசி அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தாள்.

“அடிப்பாவி… இங்க என்ன நடக்குது உனக்கு அவரை முன்னவே தெரியுமா!”

“இல்லை… " என்று துவங்கி அவனது காரில் நின்று மேக் அப் போட்டது துவக்கம் சொல்ல அனைத்து தோழிகளும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்கள்.

அரசிக்கு அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரும் கொடுக்க, தோழிகளிடம் இருந்து கண்ணீரால் விடுபட்டு, குடும்பத்தோடு தனது கோடை விடுமுறையை கொண்டாட கிளம்பினாள்.

இன்னும் ஒரு மாதத்தில் வேலைக்கு சேரும் நாளும் வந்தது.

"அப்பா… அம்மாட்ட சும்மா சண்டை போடாம சமத்தா இருங்க புரியுதா" சிறுபிள்ளைக்கு சொல்வது போல எலியும் பூனையுமான சரண் அழகியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

முதல் நாள் சேர்ந்ததும், ஒரு பெண் ஆபிசை சுற்றி காட்டினாள். கடைசியாக அரசனிடம் விட்டுவிட்டு அவளது வேலையை பார்க்க சென்றுவிட்டாள் அந்த பெண்.

"ஹாலே அரசே..." நாட்டில் அரசரை அழைக்கும் பாணியில் அரசனை அழைக்க

"சொல்லுங்கள் அரசியாரே"

"யோவ் எல்லோர் முன்னாடி அரசி பருப்புனு கூப்பிடாத வச்சி செஞ்சிடுவாங்க"

"சரிங்க கண்கமணி..."

"எங்கப்பா எவ்வளவு அழகா இமையாள் அரசினு வச்சிருக்காரு. அத விட்டுட்டு இதென்ன கண்மணி"

"உங்க அப்பா வச்ச பேரை தான் கூப்பிடுறேன் மேடம்"

"பாருடா எனக்கே தெரியாத எங்க அப்பா வச்ச பேர் உங்களுக்கு எப்படி தெரிந்தது அரசே ?"

"இமையா என்றால் கண் தானே அதான் கண்மணி"

"சரி சரி லெசன் எடுத்தது போதும். இங்க என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்றிங்களா?"

"என்ன நடந்தது... அரசியாருக்கு"

"ஊரை சுற்றி காட்ட கூட்டிட்டு போவிங்கன்னு நினைச்சா அந்த பவுடர் மூஞ்சி இந்த ஆபிஸ்சை சுத்திக்காட்டுது"

"பொறுங்க மேடம்… இன்னைக்கு இவ்னிங் டிரைனிங்க்கு சுத்த போறோம். இதோ நம்ம கூட்டம் வந்திடுச்சி"

அரசி திரும்பி பார்க்க... கலை, ராம் அவர்கள் கூட மணி என்ற டிரைவரும் நின்றிருக்க, அரசன் இமையாளுக்கு அறிமுகம் படுத்திவைத்தான்.

"அரசி உன்னோட லக்கேஜ் எல்லாம் எங்க இருக்கு"

"ரிசப்சனில் இருக்கு…"

"மணி அண்ணா லக்கேஜை எடுத்து நம்ம டிக்கில போட்டுடுங்க"

"சரி தம்பி... ஆனா எங்க போறோம்னு சொல்லவே இல்லையே"

"வாங்க அண்ணா மெதுவா சொல்லுறோம். அதுக்கு முன்னாடி ஷாப்பிங் போகனும் போலாமா"

"சரி தம்பி..." நால்வரையும் ஒரு கடைத்தெருவில் விட

இமையா தான் என்ன செய்வது 'நம்ம கிட்டதான் செலவு செய்யும் அளவுக்கு காசு இல்லையே. இருபதாயிரமிருக்கு ரூம் ரெண்ட் அட்வாண்ஸ் சாப்பாட்டுக்கே பத்தாதே. அத்தியாவசிய செலவுக்கு மட்டும் தானே இருக்கு' என தயங்கி நிற்பதை பார்த்த அரசன்

இமையா அருகில் வந்து "அரசி என்னாச்சி ?"

"சார் நீங்க ஷாப்பிங் முடிச்சிட்டு வாங்க. எனக்கு டயார்டா இருக்கு காரில் இருக்கேன்"

"மேடம் ஏதோ மறைக்கறது போலிருக்கே ? அமவுன்ட் பிரச்சனையா"

"அப்படி எல்லாம் ஒன்னுமில்லை சார். டயார்டா இருக்கு"

"என்னா கண்மணி.. நான் உன் பர்ஸ்ட் மேல் பெஸ்ட்டினு சொன்ன. எல்லாம் பொய்யா”

"அதுக்கும் இதுக்கும் எதுக்கு முடிச்சி போடாற ?"

"அப்ப கலை கூட போ. உனக்கு பிடிச்சதை வாங்கிக்கோ. இந்த பேக்கை பிடி. அப்புறம் இது என் கார்ட். இதுதான் என் நம்பர் * 0 * 6" இமையா தடுக்க தடுக்க அவன் செய்ய

"அரசி என்னது எல்லாம் உனக்கும் தான். என்கிட்ட எல்லா உரிமையும் உனக்கு இருக்கு புரியுதா. உனக்கு எப்படி நான் ஸ்பெசல் பிரண்டோ அதே போலத்தான் எனக்கும். என்னோட பேபி ஏஞ்சல் நீ"

அவனது அந்த வார்த்தை இமையாவின் மனதை கலைத்தது. 'நான் என்ன அவ்வளவு ஸ்பெசல்? சரி அதை அப்புறம் பாத்துக்கலாம். இப்போ ஷாப்பிங் பார்க்கலாம்' இமையாவுக்கு கொஞ்சமும் இப்போது தயக்கமில்லை. அரசன் கார்டில் உள்ள பணத்தை செலவு செய்துகொண்டிருந்தாள்.

சில உறவுகளுக்கு பெயர் வைக்க முடியாது. ஆனால் அது நமக்கு ரொம்ப ஸ்பெசலா இருக்கும். அப்படி பட்ட உறவு தான் இருவருக்கும்.

பெண்கள் இருவரும் பசை போல ஒட்டிக்கொண்டு வேண்டியதை வாங்கி குவித்தார்கள்.

ராம் ரொம்ப அமைதி. அவனுக்கும் சேர்த்து கலை வாயை மூட முடியாத அளவுக்கு பேசிக்கொண்டே இருப்பாள்.

மணி தன் குழந்தைகளின் போட்டேவை பார்த்துக்கொண்டிருந்தான்.

இவர்கள் நால்வரும் கண்ணில் பட்டது எல்லாம் வாங்கி குவித்தார்கள்.

நால்வரும் மாலை வரை அனைத்து சேட்டைகளுடன், ஷாப்பிங்கையும் முடித்துக்கொண்டு ஒருவழியாக காரில் ஏற

"மணி அண்ணா வண்டியை எடுங்க"

"எங்க சார் போகனும் ?"

"சிட்டிக் கிராஸ் செய்ங்க அண்ணா சொல்லுறோம்"

சிட்டி கிராஸ் செய்யும் போது
"அண்ணா அந்த டாபாவில் நிறுத்துங்க சாப்பிட்டுட்டு போகலாம்" ஐந்து பேரும் சாப்பிட்டு முடிக்க, மணி வண்டியை எடுக்க போக

அரசனோ, "அண்ணா நைட்டில் டிரைவ் செஞ்சி ரொம்ப நாள் ஆச்சி. நீங்க பின்னாடி பேக் சீட்டில் உட்கார்ந்துகோங்க"

"தம்பி..." மணி தயங்கி நிற்க.

"அட போங்க அண்ணா. பசங்க வாலு பாப்பா கூப்பிடுறா பாருங்க"

"அண்ணா வா கதை சொல்லு" கலை மணியை பிடித்துக்கொண்டாள். நல்லிரவில் கலையும் இமையாவும் நல்லா தூங்கிக்கொண்டிருக்க மணியும் அசந்து தூங்கிவிட

அரசனும் ராமும் மாற்றி மாற்றி வண்டியை ஓட்டிக்கொண்டு, மணி வீட்டுக்கு முன் வந்து நிறுத்தினார்கள்.

நால்வரும் முதலில் மெதுவாக இறங்கி, மணி வீட்டில் இருப்பவர்களை கூட்டிவந்து

"மணி அண்ணா தூங்கினது போதும் எந்திறிங்க" கலை எழுப்ப

பதறி அடித்து எழுந்த மணி "தம்பி அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா ?"

மணி அப்போது தான் சுற்றி பார்க்க, தனது வீட்டிற்க்கு முன் நின்றிருப்பதை சத்தியமா எதிர்பார்க்கவில்லை அவர். அவரது மனைவி மாசமாக இருந்தார். அவரது நான்கு வயது மகள் மனைவியின் இடுப்பில் அமர்ந்திருக்க

மணி பதற்றமாக இறங்கி
"எதுக்கு பாப்பாவை தூக்கிட்டிருக்க. அம்மா எங்க போச்சி" மகளை தன் கையில் வாங்கி கொண்டார்.

"என்ன தம்பி. இப்படி வந்து ஷாக் கொடுத்துட்டிங்க" நால்வரும் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுக்க

"எங்க உன் தம்பி. கூப்பிடு வீட்டை சுத்தம் செய்ய சொல்லு"

"அதுக்கு தாங்க அனுப்பி வச்சிருக்கேன். எல்லாரும் வாங்க பல் விலக்கிட்டு குளிச்சிட்டு வந்திடுங்க"

ஆளாளுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, ஊர் எல்லைக்கு கூட்டி சென்றார் மணி அண்ணன்.

"என்னா மணி அண்ணா உங்க ஊரில் ஆறு எல்லாம் இருக்கு சொல்லவே இல்லை" ராம் கேட்க

"அட தம்பி இது ஆறு இல்ல. அங்கே இருக்கில்ல மலை அங்கிருந்து தண்ணீர் வரும் மழை காலத்தில் மட்டும்"

இயற்கை சூழலில் சுற்றிக்கொண்டே பல் விலக்கி வந்தவர்கள், அருகில் இருந்த கிணற்றை பார்த்ததும் ராமும், அரசனும் சட்டையை கழற்றி எறிந்து விட்டு குதிக்க

இமையாவிற்கும், கலைக்கும் கிணற்றில் குளிக்க ஆசையாக தான் இருந்தது. ஆனால் இருவருக்குமே நீச்சல் தெரியாது.

"அரசி கலை நீங்களும் வாங்க குளிக்கலாம்"

"இல்லை அரசன் நான் வரலை"

"ஏன் வரலை?" ராம் கேட்க

"நீச்சல் தெரியாதே"

"சரி வா... நாங்க கத்துகொடுக்கறோம்"

"ராம் இங்கே வா நான் குதிக்கறேன். உள்ள போயிட்டா காப்பாத்திடுடா சரியா"

"நீ வா கலை நான் பாத்துக்கறேன்"

கலையும் குதிக்க, ராம் கலைக்கு நீச்சல் கத்துக்கொடுக்க துவங்கினான்.

இமையாவுக்கும் ஆசையாக இருந்தது. பயம் அதற்கு மேலிருந்தது. அமைதியாக மூவரும் போடும் கும்மாளத்தை ஏக்கமாக பார்த்தாள்.

அரசன் அவளை பார்த்து, "கண்மணி இங்க வா… நான் பாத்துக்கறேன் நீ முழுகாம"

"இல்லை எனக்கு பயமா இருக்கு"

"என் மேல் நம்பிக்கை இல்லையா ?"

"இருக்கு ஆனா..." இமையா தயங்கி நிற்க

ராமும் கலையும் ஒருவர் முகம் மாற்றி பார்த்து "டேய் என்னடா ஒரே நாளில் கண்மணி சொல்லுறான். என்ன நடக்குது இங்கே"

"இண்டர்வியூவில் ஒரு பெண் பார்த்தேன் கிரஷ்னு சொன்னான். அதுவா இருக்கும்னு நினைக்கறேன்"

"நல்லா இருந்தா சரி. நீ எனக்கு நீச்சலடிக்க சொல்லிக்கொடு"

கிணற்றின் படிவழியாக ஏறி வந்தவன், "இமையா வா.. குதி"

"எனக்கு பயமா இருக்கு"

அரசன் நொடிப்பொழுதில் இமையாவை தன்னோடு பிடித்துகொண்டு குதித்தான்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 29

"ஏன் ராம் படிகட்டு வழியா கூட்டி வந்திருக்கலாமில்ல"

"செம்ம சீன்ப்பா... ரசிகன்டா என் நண்பன்"

"போதும் போதும் அவனை ரசித்தது. பொண்டாட்டியை ரசிக்க துப்பில்லை. வந்துட்டான் நண்பனை ரசிக்க"

"ஏன்டி என்னை படுத்துற. வீட்டில் சொல்லிட்டு பார்த்துக்கலாம். இன்னும் தாலி கூட கட்டல"

"நீ இப்படியே பேசிட்டு இரு. ஒரு நாள் நான் காணாம போக போறேன். அப்போ தெரியும் உனக்கு"

"வாய் ஓவரா பேசாதே டி. அப்புறம் கடிச்சி வச்சிடுவேன்"

"அப்படியே கடிச்சிட்டாலும். உன்னை லவ் செஞ்சி கல்யாணம் செய்றதுக்கு நான் சும்மா இருந்து இருக்கலாம்"

"ஆமா என்ன பிளான் திடிரென இந்த ஊருக்கு வந்து இருக்கோம்"

"அது சஸ்பென்சாம்... அந்த அரசன் என் கிட்டையே சொல்லலை. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு" இவர்கள் இங்கு பேசிக்கொண்டே இருக்க

"அரசே... என்னை விட்டுடாதே டா. ஐயோ பாம்பு போரது போல தெரியுதே" குரங்கு குட்டி போல பயத்தில் அவனை கட்டி கொண்டாள்.

இமையாள் அரசியின் நெருக்கம் ஏதோ செய்தது அரசனுக்கு. உடனே அவளை படிக்கட்டில் உட்கார வைத்தவன், அருகில் இருந்த படிகட்டில் உட்கார்ந்தான்.

"இங்கவே இரு... நீ ரொம்ப பயப்படுற"

"சரிங்க அரசன்" என்றவள் தன் காலுக்கடியில் எதாவது பூச்சி பாம்பு ஊர்ந்து போகிறதா என்ற ஆராய்ச்சியில் இருந்தாள்.

இப்படியே பல மணி நேரம் நால்வரும் தண்ணீரில் ஊறிக்கொண்டு இருக்க,

இங்கு தான் இருவரும் மனதால் நெருங்கியது.

கிணற்றில் இருந்து முதலில் இமையா பயத்தோடு வெளியே ஏறி வர

"அரசி பயப்படாம ஏறி வாடா தங்கம் நீ விழுந்தா நான் பாத்துக்கறேன்"

"சரிங்க அரசன்" இப்போது பயம் இல்லாமல் இமையா மேலே ஏறி போக

"கிணறில் குளிக்கறதும் நல்லா தான் இருக்கு அரசன்"

"ஆமா எங்க வீட்டில கூட ஒன்னு இருக்கு. அங்க மணி கணக்கா நீந்திட்டு இருப்பேன் தெரியுமா"

"அப்படியா சரி சரி உங்க வீட்டுக்கு ஒரு நாள் வரணும்"

"போகலாம் அரசி"

இமையா தன் ஆடையின் நுனியை பிடித்து தண்ணீரை பிழிந்துக் கொண்டு இருந்தாள்.

அரசனுக்கு இமையாவை பார்த்து தோன்றிய உணர்வுகளை வெளிப்படுத்த துவங்கினான்.

"இமையாள் அரசி"

"என்ன சார் முழு பேர் எல்லாம் சொல்லி கூப்பிடுறிங்க"

"அது எல்லாம் காரணமாக தான்" இமையா அவனிடம் பேச்சு கொடுத்து ஆடையில் இருக்கும் தண்ணியை உதறிக் கொண்டே அவன் என்ன பேச வருகிறான் என்று ஆர்வமாக கேட்டாள்.

"கண்மணி கல்யாணம் செஞ்சிக்கலாமா?"

இமையாவின் கைகள் தானாக அதன் செயலில் இருந்து அதிர்ச்சியில் நின்றது.

"எதே கல்யாணமா... பார்த்து ஒரு வாரம் கூட முழுதாக முடியலை அதுக்குள்ள கல்யாணமா?"

"இல்லை... இரண்டு மாசம் ஆகிடுச்ச. பார்த்த அப்பவே சொல்லனும்னு நினைத்தேன். ஆனா என்னை தப்பா நினச்சிப்பன்னு தான் இவ்வளவு லேட் ஆகிடுச்சி"

"ஆஆஆஆ..." இமையா வாயை பிளந்துகொண்டு நிற்க

"இப்பவே ஓகே சொல்லனும்னு அவசியம் இல்லை. உனக்கு எப்போ தோனுதோ சொல்லு. ஐ யம் வெயிட்டி பேபி"

"சரி..." இமையாவின் வாயும் தலையும் தன்னையும் மீறி செயல் பட்டது.

"குட் கேர்ள்" அரசன் அவளது கன்னம் தட்டி விட்டு அந்த இடத்தை விட்டு நடக்க துவங்க

பின் வந்த இருவரும்தான் தன் நண்பனின் செயலை நினைத்து விக்கித்து நின்றார்கள்.

"டேய் என்ன டா நடக்குது இங்க"

"கண்டுக்காத மாதிரி வா" ராம் கலைக்கு சொல்லிவிட்டு இமையா அருகில் வர.

"இமையா... என்ன நின்னுட்ட வா போலாம்"

அரசனுக்கு மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சி பரப்பது போல ஒர் உணர்வு.

'எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சாதாரணமாக சமாளிச்சிடுறேன். ஆனா இந்த லவ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள எப்படி எல்லாம் கஷ்ட பட வேண்டியதா இருக்கு'

"மச்சான் சொல்லிட்ட போல"

"ஆமா டா சொல்லிட்டேன். ரிலாக்சா இருக்கலாம் பாரு ராம்"

"அதும் உண்மை தான். நல்ல வேலை நீ சொல்லிட்ட. நான் சொல்லுரதுக்கு இரண்டு வருசம் ஆச்சி"

"உன்னை பார்த்து தான் மச்சான் கத்துக்கிட்டேன்"

"நல்லா இருங்க... ஒருத்தன் பட்டு கத்துக்கிட்டதை வச்சி உசாரா ஆகிடுறிங்க"

"டேய் அரசா... இப்போ என்ன எதுக்கு இங்கே வந்து இருக்கோம்"

"இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்" மணியின் குழந்தையை அரசன் தூக்கி போட்டு விளையாட்டு கொண்டிகொண்டே போனான்.

வீட்டை நெருங்கவும் தான் மணி உத்து உத்து பார்த்தார், நடப்பது கனவா இல்லை நினைவா என்று. பூக்கள் அலங்காரம் கண்ணை பறித்தது.

"ஏன் வீட்டை இப்படி அலங்காரம் செஞ்சி வச்சி இருக்காங்க" கையில் வைத்திருந்த மகளை ராமிடம் கொடுத்துவிட்டு

"சார் இவளை பிடிங்க என்ன நடக்குதுன்னு பார்க்கறேன்"

"இங்க என்ன நடக்குது" மணி வழியில் பார்க்கும் அனைவரிடமும் இதே கேள்வியை கேட்க

அனைவரிடமும் இருந்து ஒரே பதில் தான் வந்தது.

"போய் உன் பொண்டாட்டிகிட்ட கேட்டுகோங்க"

"அவ எங்க இருக்கா?"

"உங்க ரூமில் தான் இருக்கும்"

"ஏய் எங்க டி இருக்க?" மணி கூவிக்கொண்டே உள்ளே வந்து தன் மனைவியை பார்த்து அதிர்ந்து நின்றான்.

முழுநிலவு போல நின்றிருந்தாள், அழகாக பின்னலிட்டு சரம்சரமாக பூவைத்து, மேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் கண்கள் கூசியது மணிக்கு.

"ஏய் என்ன நடக்குது இங்கே"

"அது மாமா வளைகாப்பு"

சந்தோஷம் படுவதற்கு பதிலாக அதிர்ச்சியில் மனம் குழம்பினான்.

"ஏங்க உங்களுக்கு பிடிக்கலையா"

"அப்படி எல்லாம் இல்லை மா... நீ அழகா இருக்க. நம்ம பையன் என்ன சொல்லுறான்"

"அவன் சொல்லுறது இருக்கட்டும். கீழ மடிப்பு நிக்கலை எடுத்து விடுங்க"

"உன் காலில் விழனும் அத இன்டேரக்ட்டா சொல்லுற, அப்படி தானே"

"அப்படியும் வச்சிக்கலாம்" இருவரும் மன நிறைவாக சிரித்தாலும் மணிக்கு மனம் கலங்கியது.

கை பிடித்து மனைவியை உட்கார வைத்து சுற்றியும் ஒரு பார்வை பார்த்தவனின் கண்ணில் ஒரு முறட்டு பீஸ் பட, 'இவனா அசிங்க அசிங்கமா பேசுவானே…' மணிக்கு வயிற்றில் புளி கரைத்தது.

அவருக்கு அருகில் வந்தவன், "அண்ணே என்கூட கொஞ்சம் வாங்க"

"என்ன தம்பி… இந்த நேரத்தில். நல்ல நேரம் முடிய போகுது" அவரும் வந்தார்.

"அண்ணா இப்போதைக்கு இவ்வளவு தான் இருக்கு இன்னும் ஆறு மாசத்தில் உங்க கடன் அடச்சிடுவேன். எதும் பிரச்சனை பண்ணாதிங்க அண்ணா"

"அட என்னப்பா நீ... இதை புடி" அவர் கையில் திணித்தார் அந்த பணத்தை.

"ஏன்னா"

"உங்க பிரண்ட்ஸ் கொடுத்துட்டாங்க பா"

"பிரண்ட்சா...யாரு" மணி குழம்பி போனார்.

"ஊரில் இருந்து இரண்டு தம்பி வந்து இருக்காங்களே அவங்க தான்" மணிக்கு கண் எல்லாம் கலங்கியது, இருவரின் உதவியை நினைத்து.

'ஒரு வேலைக்காரனை போய் பிரண்ட்... பெரிய மனசு'

"அண்ணாவை இன்னும் என்ன ஆளே காணோம்" ராமும் அரசனும் மணியை தேடி வரவும், அந்த வட்டிக்கு கொடுத்த அண்ணா வெளியே போக.

"அண்ணா என்ன செய்றிங்க இங்க. அண்ணி அங்க வெயிட்டிங் வாங்க"

மணி இருவரையும் ஒரு சேர அணைத்துக்கொண்டு

"நான் ரொம்ப பயந்துட்டேன். கடன் காரங்க எதாவது பிரச்சினை செய்வாங்கன்னு"

"அட விடுங்க அண்ணா பாத்துக்கலாம். நம்ம அப்புறம் பேசலாம் வெளியே வாங்க"

"நான் உங்க பிரண்டா தம்பி"

"ஆமா சும்மா அண்ணா கூப்பிட சங்கடமா இருக்கு அதான் உங்களுக்கு ப்ரோமேசன் கொடுத்துட்டேம். வாடா அண்ணி காத்துட்டு இருக்காங்க" இருவரும் அண்ணா கூப்பிடுவதை விட்டு மணியை வாடா என கூப்பிட்டு மனைவி பக்கம் போய் உட்கார வைக்க

வளைகாப்பு சிறப்பாக முடிந்தது. தங்கள் வீட்டு விஷேசம் போல நான்கு பேரும் சிறப்பாக வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.

கூட்டம் கலையவும் நால்வரும் சாப்பிட உட்கார ராமும் கலையும் பக்கம் பக்கம் உட்கார.

அரசனும் இமையாவும் பக்கம் பக்கம் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

அரசன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

"அரசா இது எனக்கு சாப்பிட முடியலை எடுத்துக்கோங்க" இமையா உரிமையோடு சொல்ல

"நீயே எடுத்து வை கண்மணி"

வடையை எடுத்து வைக்க, முன்ன பின் வடையை பார்த்தே இல்லாதது போல ரசித்து ருசித்து சாப்பிட்டான் அரசன்.

அவனது இந்த செய்கை இமையாவை கட்டி இழுத்தது உண்மைதான். அந்த டிரைனிங் பீரியட் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை உருவாக்கியது. தனிதனி பிராஞ்சில் சேர, பணி அவர்களை பிரித்துவிட்டது.

கிடைக்கும் நேரங்களில் பார்த்து கொள்வார்கள்.

இப்படியே தூரத்தில் இருந்து காதல் வளர்த்தது இரண்டு ஜோடிகளும்.

இமையாவுக்கு அந்த கனவு வரும் வரை.

பார்வை போவது போலவும் அரசன் தன்னை பார்த்து கொள்ள சிரமப்படுவது போலவும் சில காட்சிகள் வந்து அவளை மனதால் குழப்பியது.

சிறுவயதில் பக்கத்து விட்டு தாத்தாவை ஒரு திருடன் கழுத்து அருப்பது போலவும். அவர் சிரமப்பட்டு சாவது போல சில காட்சிகள் வந்து போனது.

இது போல கனவு வர, அப்போது பெரியதாக எடுத்து கொள்ளவில்லை இமையா. ஆனால் அந்த கனவில் வந்தது அப்படியே ஒரு வாரத்தில் நடந்தது.

அதுபோல, ராம் கலையை அரசன் சேர்த்து வைப்பது போல கனவு வர அதுவும் நிகழ்ந்தது.

அதன் பிறகே, அரசனை இனி தொந்தரவு செய்யக்கூடாது உண்மை சொன்னா எதாவது ஆகிவிடும் என்று அரசனை, ஒரு நிமிடம் கூட விடாமல் அவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு டார்சர் செய்தாள். பயம் அவனை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று. கிட்டத்தட்ட சர்வாதிகாரியாக மாறி அவனை ஒதுக்க நினைத்தாள்.

அவனிடம் சிறிது விலகல் தெரியவும், இமையாவல் முடியாமல் அவனிடம் தன் நிலையை எடுத்து சொல்ல நினைத்த போது அவன் கேட்கும் நிலையில் இல்லை. ஒரு எல்லைக்கு பிறகு வாழ்க்கை அழைத்து செல்லும் வழியில் போகலாம் என்று விட்டு விட்டாள். அப்படிதான் அந்த கனவு ஒரு நாள் பழித்தது. பார்வை போய் விதியின் வசத்தால் கதிரிடம் வந்து சேர்ந்து மீண்டும் பிரிந்து ஏதேதோ ஆகிவிட்டது.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 30

இமையா வாழ்வில் முடிந்து போன சில அத்தியாயங்களை கதைவடிவில் சொல்லி முடித்தவள் சக்திக்கு கையோடு அனுப்பியும் வைத்தாள்.

சக்தி கதையை கேட்டுவிட்டு "அக்கா நரேட்டிவ் ஸ்டைல் அவ்வளவு அருமையா இருந்தது. நான் அதுக்கு ஏத்தது போல சில பிக்சர்ஸ் வரஞ்சி அது கூட வாய்ஸ் கம்பைன் செய்யலாம்னு இருக்கேன். ஒரு ஒன் வீக்கில் ரெடி ஆகிடும். இதை ஐஞ்சி எபிச்சோடா பிரிச்சி வச்சிருக்கேன்க்கா. இதோட கண்டினியு என்ன சொல்லலாம்னு யோசிச்சி வைங்கக்கா” செல்வி போனை வைத்தவள் அடுத்து என்ன தேவையோ அதற்கான வேலையில் ஈடுபட,

இமையாவுக்கு பசித்தது.

“கதிரா பசிக்குது… சமையல் ஆச்சா” இமையா கத்துவதை கேட்ட சரணும் அழகியும் “பாருங்க இவளை... புருஷன் வேணாமாம். ஆனா அவன் சமைக்கறது மட்டும் வேணுமாம் இவளுக்கு”

‘இமையா சொதப்பிட்டியே. சரி சமாளிப்போம்’

“அம்மானு கூப்பிட்டா உங்களுக்கு...கதிரானு கேட்குதா?”

“ஆமாடி... நாங்கத்தான் மாப்பிள்ளை நினைப்பா இருக்கோம்" அம்மா சாப்பாட்டை பிசைந்து ஒரு ஸ்பூனில் எடுத்து இமையா கையில் தந்து விட்டு போக

“மா சாப்பாடு ஊட்டி விடுங்க"

“எனக்கு வேலை இருக்கு நீயே சாப்பிட்டுக்க”

“அம்மா... கதிர் எனக்கு எப்படி ஊட்டி விடுவான் தெரியுமா ?”

“அதுக்கு நீ உன் புருஷன் வீட்டுக்கு போ. இல்லை அவரை இங்க வர வச்சி ஊட்டிவிட சொல்லு“

“நீ எதுக்கு பிளான் செய்யறனு தெரியும். கிளம்பு நானே சாப்பிட்டுக்கறேன்” பாதி சாப்பாடு கூட இமையாவால் சாப்பிட முடியவில்லை.

கதிர் ஊட்டி விட சாப்பிட்டவளுக்கு தனியாக சாப்பிட ஏதோ போல இருந்தது. ஏதேதோ பேசுவான் கதிர். ஆனால், இப்போது அமைதியான சூழ்நிலையில் அவளால் சாப்பிட முடியவில்லை.

பாதி சாப்பாட்டில் கைகழுவியவள், கதிரின் நினைவில் அந்த நாளை கழித்தாள்.

அவளது முன்னால் காதலன், அடிக்கடி நண்பன் என்ற போர்வையில் வந்து போய் கொண்டிருந்தான்.

பேசும் போது இடையில் கண்மணி அரசி என்று உபயோகிக்க, இமையா அதனை தடுத்துவிட்டாள்.

“அரசன் இனி அப்படி கூப்பிடாதிங்க. இனி நமக்குள்ள எந்த நெருக்கமும் வேண்டாம்”

“எப்படி அரசி உன்னால எல்லாமே இவ்வளவு சீக்கரமா மறக்க முடிஞ்சது? என்னால முடியலை அரசி. வேறு ஒருத்தவன் மனைவிகிட்ட பேசிட்டிருப்பது எனக்கு நல்லா தெரியுது ஆனா என்னால உன்னை விட முடியலை. அந்த ஒரு மூனு மாசம் எப்படி எல்லாம் இருந்தோம். நான் விரும்பன முதல் பெண்ணும் கடைசி பெண்ணும் நீ தான் அரசி. உன்னை தவிர எனக்கு வேற யாரும் வேண்டாம்”

“போதும் நிறுத்துங்க அரசன். இந்த வார்த்தையையும், உங்கள் உறுதியையும் வைத்து தான் உங்களை காதலிக்க துவங்கினேன். பொண்ணுங்க வீக் தெரியுமா. தன்னை உயிராக நேசிப்பவனிடம் எதையும் மறைக்க மாட்டாங்க. இன்பேக்ட் நீங்க செஞ்சது சரி தான். எனக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அதால உங்க வாழ்க்கை பாதிக்க கூடாதுனு தான் உங்களை விலகினேன். என்னை வெறுக்கும் படி செய்தேன். தவறு என் மீது தான். என்னை சிஸ்டர் என்று அழைத்தது அழைத்ததாகவே இருக்கட்டும். அதை உங்க வாயால கேட்கும் போது இங்க வலிச்சது. உன்னை பிரிய மாட்டேன்னு சொன்ன வாயால் இப்படி எல்லாம் சொல்ல வைத்தது நான் தான். உங்களுக்கு வாழ்க்கை இருக்கு அதை பாருங்க. எனக்கு கதிர் இருக்கான் அது போதும்”

“நீ தெளிவான ரீசன் சொல்லு அரசி நான் போய்யிடுறேன்”

“அப்போ எல்லாம் பிளான் செஞ்சி தான் உன்னை நான் வெறுக்கனும்னு செஞ்சிருக்க? அத சொல்லு முதலில்” அரசனின் குரலில் கோபம் தெரிந்தது. முதல் முறையாக அவனின் கோப குரலை கேட்கிறாள்.

“டென்சன் ஆகாத ஆரசன்... எனக்கு முன்னாடியே தெரியும் பார்வை போறது ?”

“முன்னாடியேவா... அது எப்படி புரியலை"

“எனக்கு சில சிம்டம்ஸ் தெரிந்தது அதுமில்லாம எனக்கு இன்ஸ்டிங்ஸ் சொல்லிட்டிருந்தது. ஏதோ சொல்லி உன்னை வெறுக்க வச்சிட்டேன். ஆனா என்னால முடியலை உன்னோட சைலன்ஸ் அத தாங்க முடியாமத்தான் திரும்ப திரும்ப உன்னிடம் வந்தேன். என் நேரம் அது உனக்கு இன்னும் வெறுப்பு கொடுத்துடுச்சி. நீ நினைத்த கேரக்டர் நானில்லை. இப்போ இருக்கேனே இது தான் நான். முடிஞ்சதை விடு அரசன். இனி ஆகவேண்டியதை பாரு. உன் லைப் பார்த்துக்கோ இனி என் முன்னாடி வராதே"

“இவ்வளவும் எதுக்கு அரசி செஞ்ச. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.. பார்வை போனா விட்டுட்டு போய்யிடுவேன்னு நினச்சியா? உனக்கு கல்யாணம் ஆச்சி குழந்தை பிறக்கபோகுது எது சொன்னாலும் இனி உன்னை விட்டு போகமாட்டேன் அரசி”

“பைத்தியம் மாதிரி பேசாதே அரசன். நான் வேற ஒருவருக்கு சொந்தம். அவர் ஜிம்பாடி. அவரோட ஒரு அடிக்கு நீ தாங்கமாட்ட. கழக்கழன்னு கழண்டிடும் உன் எழும்பு எல்லாம்”

“நீ என்ன சென்னாலும் இனி உன்னை விட்டு போகமாட்டேன் அரசி. இப்போ நான் கிளம்பறேன்”

“இனி வராத இங்கே” இமையாவும் கடுமையாக சொல்ல.

“இந்த அரசனோட அரசி நீ தான்”

“அரசா இது சரியில்லை. என் புருசன் வரைக்கும் இது போக கூடாதுனு பார்க்கறேன் ஜாக்கரதை" இமையா விரலை நீட்டி எச்சரிக்க

அரசன் இமையாவின் விரலுக்கு மெல்லிய முத்தம் கொடுத்து போக

“ச்சி அசிங்கமா இல்லை வேற ஒருவன் பொண்டாட்டிக்கிட்ட இப்படி நடந்துக்கறது"

“அவனுக்கு பொண்டாட்டி ஆகறத்துக்கு முன்னாடி நீ என் காதலி. நியாபகம் வச்சிக்கோ. இந்த அரசி இந்த அரசனுக்கு தான்” இமையாவிடம் சபதமிட்டவன் கிளம்பி சென்றான்.

இமையாவுக்கு தலையை பிச்சிக்கொண்டது. முதலில் அவன் முத்தமிட்ட கையை அழுத்தி கழுவினாள்.

யாரிடம் சொல்வது? தன் பெற்றேரிடம் அரசனை கெட்டவனாக்கவும் இமையாவுக்கு மனம் வரவில்லை. என்ன தானிருந்தாலும் இமையாவின் ஒரே ஒரு நெருங்கிய நண்பன்.

கதிரிடமும் இதை பற்றி பேச முடியாது. இதையே சாக்கை வைத்து திரும்ப வீட்டில் இருப்பவர்கள் கதிரிடம் அனுப்பி வச்சிடுவாங்க. இப்ப என்ன செய்றது?

‘சரி விடு இமையா... அரசன் இன்னொரு முறை வந்ததும் சொல்லி புரியவச்சிடலாம்’ தனது மனதை தேத்திக்கொண்டு

அடுத்த எபிச்சோடுக்கு என்ன செய்யலாம் என யோசிக்க துவங்கினாள். கதிரின் நினைவு வந்தது. திருமணத்தில் தொடங்கி கதிரை பற்றி கண் தெரியாத தன்னை எப்படி பார்த்துக்கொண்டான். நடந்த சண்டை, இடையில் மலர்ந்த காதல் கதிரின் குடும்பத்தில் சேர்வதற்காக தனியே வந்தது என சில கற்பனையுடன் சேர்த்து இமையா வாய்ஸ் நோட் செய்தாள். கிட்டத்தட்ட இருபது எபிசோட் ஆகியும் கதிருடன் வாழ்ந்த அந்த நினைவுகளை அடக்கி வைக்க முடியவில்லை. எல்லையே இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. இமையாவுக்கு கதையை இழுத்து பிடிப்பதற்குள் திக்கி தினறினாள். கடைசியாக பிரிந்ததில் இந்த பாகத்தை முடித்திருந்தாள்.

கிட்டத்தட்ட இதே வேலையாக இருந்தனர் இமையாவும் சக்தியும். அவர்களின் சேனலுக்கு உழைத்தனர்.

கதிரின் அத்தியாயத்தை திரும்ப பார்க்கும் போது, கதிர் தனக்கே தெரியாமல் தனியே நடக்க எவ்வளவு ஊக்கம் அளித்தது, அவனது பாசம் காதல் என இமையா இப்போது எல்லையில்லாத காதல் சுமந்து கொண்டிருந்தாள்.

கதிரின் அருகாமையை நாடி கணவனை தேடிக்கொண்டிருக்க, ஆனால் மனதில் ‘இமையா சுயநலவாதியா இருக்காதே. கதிர் அவன் குடும்பத்தோட இருக்கனும்’ என்று தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இப்படியே தனிமையில் இமையாவின் நாட்கள் நகர,

இந்த அறிவுக்கெட்ட அரசன் வீட்டில் வந்து ஒரே அட்டகாசம். அவனது குரல் கேட்டாலே எரிச்சல் தான் வந்தது. ஆனால் அவனை திட்ட முடியவில்லை.

இமையாவிடம் தொந்தரவு செய்யவில்லை. அதனால் இமையாவும் அவனை எதும் சொல்லவில்லை. வாரத்தில் இரண்டு நாள் வந்து வீட்டை அலங்கோலம் செய்தான்.

கதிர் தினமும் அத்தை மாமாக்கு வீட்டிலேயே கால் செய்து கொஞ்சிக் குழாவி கொண்டிருந்தான்.

கதிர் இமையாவை பத்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அழகி இமையா பற்றி ஒரு முறை பேசிய போதும்

“அத்தை அவளை பத்தி பேசாதிங்க புரியுதா. அவ யாரோ நான் யாரோ அவளா என்னை புரிஞ்சிக்கிற அன்னைக்கு அவ முன்னாடி நான் இருப்பேன்”

இமையாவின் நாட்கள் அமைதியாக இருக்க, சக்தியின் வழியாக அவர்களது வீடியோ நல்லா ரீச் ஆனது. இமையாவுக்கு சக்தி மட்டும் தான் ஒரு துணையாக இருந்தாள்.

இமையாவுக்கு காலையில் இருந்து தலை பயங்கரமாக வலித்தது. உயிர் போவது போல வலித்தது.
நடு ராத்திரியில் இமையா துடிக்க "அப்பா... மா கதிரை வர சொல்லுங்க நான் பார்க்கனும். இனி கதிரை பிரிஞ்சி என்னால இருக்க முடியாது. தலை வலிக்குது" என கதறிக்கொண்டிருந்தாள்.

அந்த வலியிலும் கதிரை தேடியது இமையாவின் உள்ளம்.

உடனே ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போகவும் கதிர் சில மணி நேரத்தில் வந்து சேர்ந்தான்.

“மாமா என்னாச்சி!” பதற்றமாக ஓடிவந்தான்.

“இமையாவுக்கு பார்வை வரப்போது. செயலில்லாம இருந்த ஒரு நரம்பு வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காம். அதான் கொஞ்ச டிரிட்மென்ட் செய்யனும்னு சொன்னாங்க"

“அப்போ டிரிட்மென்ட் செய்யாம என்ன செஞ்சிட்டிருக்காங்க"

“இமையா உங்களை பார்க்கனும்னு அடம் பிடிச்சிட்டிருக்கா" அழகி அழுதுக்கொண்டே சொல்ல

“இருங்க நான் பார்த்துட்டு வரேன்!"

“இமையா...”

“கதிரா... சாரி உன்னைவிட்டு என்னால இருக்க முடியாது ஐ லவ் யூ. என்னை விட்டுடாத கதிரா"

“நான் எங்க விட்டேன் மேடம்க்கு தான் நான் வேணாம்”

“இல்லை எனக்கு நீ வேணும் தங்கம்" இருவரும் சேர்ந்தார்கள். ஆனால் அரசன் என ஒருவன் இருவருக்கும் நடுவில் நிற்கிறான் என்று தெரியாமல் இனிமையான காதல் வசனங்கள் பேச

“சரி தலை வலி இப்போ பரவாயில்லையா... தங்கம்”

“ஆப்பரேசன் பயமா இருக்கே”

“ஒன்னுமில்ல.. ஆப்பரேசன்னு சொல்ல முடியாது முடிந்த அளவுக்கு மருந்து வச்சி முடிஞ்சிடும். நமக்கு ரிசல்ட் பாசிட்டிவா இருக்கலாம் நெகட்டிவாவும் இருக்கலாம். எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும். நீ எந்த நிலமையில் இருந்தாலும் நான் உன் கூட இருப்பேன் சரியா" இமையாவை சமாதானம் படுத்தி டிரீட் மென்ட்டுக்கு அனுப்பிவைத்து காத்திருந்தார்கள்.
 
Status
Not open for further replies.
Top