ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் விழியின் மொழி...நானடி - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 31

ஆப்ரேசன் வரை போகவில்லை. இமையாவுக்கு மிக பவரான சில மருந்துகள் மெதுமெதுவாக செலுத்த, தலை வலியால் துடித்து போனாள் இமையா.

கதிருக்கு தான் தாங்கிக்க முடியவில்லை அவள் வலியை கண்டு.

"டாக்டர் இந்த ட்ரீட்மென்ட் வேண்டாம் பிளீஸ். அவ இப்படியே இருந்துடட்டும். கடைசி வரை என்னால அவளை பார்த்துக்க முடியும்" என ஹாஸ்பிட்டலை ஒரு வழி செய்து விட்டான்.

இமையா அப்பாவையும் அம்மாவையும் ஒரு வழி படுத்திட்டான், "மாமா அவ இப்படியே இருக்கட்டும். நான் பாத்துப்பேன் அவளை. வலிக்குது அவளுக்கு"

மயக்கத்தில் இருந்து எழுந்த இமையாவிற்கு காது அடைத்தது கதிரின் சத்தத்தில்.

"கதிரா என்ன சத்தம்..."

"இமையா வா வீட்டுக்கு போலாம்" கையை பிடித்து இழுத்தான்.

"கதிரா... கொஞ்சம் பொறுமையா இருங்க. முதல்ல இங்கே பக்கம் வாங்க"

கதிரின் முகம் மங்கலாக தெரிந்தது.

"கதிரா... எனக்கு உன்னை பார்க்கனும். உன் கண்ணை பார்த்து பேசனும். நிறைய சொல்லனும் என்னோட பழைய பக்கங்களை பத்தி"

"எனக்கு எதும் தெளிவுபடுத்த தேவையில்லை இமையா. எனக்கு எல்லாம் தெரியும்"

"எதே எல்லாம் தெரியுமா"

"ம்ம்ம்ம்...அந்த பொருக்கி பையன் உன்னை பார்க்க அடிக்கடி வருவதும் தெரியும்"

"நான் எதும் தப்பா..."

"உன்னை பத்தி தெரியும்டா... நீ படுத்துக்கோ. உன் கூட பழகியவங்களால உன்னை எப்பவும் வெறுக்க முடியாது அதனால வந்து இருக்கான் இனி அவன் வந்தா நான் பார்த்துக்கறேன். நீ படுத்துக்கோ"

"பாவம் அடிச்சிடாதிங்க சமத்தா சொன்னா அவர் கேட்டுப்பார்"

"சரி அது அவன் நடந்துக்கறது பொருத்து" இமையாவை தூங்க வைத்துவிட்டு வெளியே வர

எதிரில் இருப்பவனை பார்த்து கொந்தளித்தான் கதிர்.

"டேய் நீ எங்க இங்க வந்த. இனி இங்க வரும் வேலை வச்சிக்காதே புரியுதா"

"நான் வருவேன் என் இமையாவை பார்க்கனும் உள்ளே விடு" அரசன் சண்டைக்கு நிற்க

கதிர் அவனை விடுவதாக இல்லை புரட்டி புரட்டி எடுத்தான்.

சத்தம் கேட்டு எழுந்த இமையா, இருவரின் குரலை கேட்டு

"கதிரா... எதுக்கு அரசனை அடிக்கற விடு அவரை"

"இமையா இந்த முரடன் உனக்கு வேணுமா. என் கூட வந்திடு நிம்மதியா வாழலாம்"

"அரசன் இப்படி பேசாதிங்க. உங்களை காதலிச்சது உண்மை தான். ஆனா அது முடிஞ்சது உங்க வாழ்க்கைகாக தான் நான் விட்டு போனேன். உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க"

"இல்லை இமையா என்னால் முடியாது" அரசன் திமிராக நிற்க, இமையா மங்கிய பார்வையை வைத்து இருவருக்கும் இடையில் வருவற்குள்

"என்ன சத்தமா இருக்கு" இமையா அப்பா உள்ளே வரவும் சாதாரணமாக இருப்பது போல பேசினார்கள் கதிரும் அரசனும்.

இமையா அப்பா, தன் மாப்பிள்ளையை பார்த்து புன்னகை வீசினார்.

"சரி மாப்பிள்ளை சத்தம் போடாம இருங்க"

இமையா அம்மா உள்ளே வந்து, "தம்பி நீங்களா... இமையா உன் கூட வேலை பார்த்தவங்க வந்து இருக்காங்க. இந்த தம்பி தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சில வேலை எல்லாம் செஞ்சி கொடுப்பாங்க" அந்த பையனை பத்தி அழகி சொல்ல

கதிரின் வயிறு அடுப்பாக பத்தி எரிந்தது.

"டேய் நீ வெளியே போடா"

"இப்போ போறேன். திரும்ப வருவேன்"

"இமையா டார்லிங் வரேன்டா. உன் பார்வை வந்ததும் முதலில் என்னை தான் பார்ப்ப" என்று அரசன் உறுதியாக சொல்ல

"டேய் என் பொண்டாட்டி என்னை தான்டா பார்ப்பா... கிளம்பு முதலில்"

"பார்ப்போம் அதையும்" இரண்டு உருவம் இமையா முன் மீண்டும் சண்டைக்கு சிலுப்பி நிற்க

"போதும்... நிறுத்துங்க இரண்டு பேரும். அம்மா அப்பா காதில் விழுக போவுது. பிரச்சனை வளர்க்காம போங்க"

"சரி அரசிமா நீ சொல்லுவதால போறேன்" என்று அரசன் கதிரை முறைத்து கொண்டே போனான்.

"இமையா அவன் இன்னொரு முறை வந்தான் அவ்வளவு தான். வச்சி செஞ்சிடுவேன்"

"அவர் நல்லவர் ஏதோ கோபத்தில் இப்படி நடந்துகிறாங்க விடுங்க மாமா"

"ஆவுன்னா இந்த மாமா சொல்லியே என்னை அமைதியா ஆக்கிடுற. என்னை பார்க்கனுமா முதலில் இல்லை அவனையா" கதிர் பேச்சில் சிறு பொறாமை இருக்க தான் செய்தது.

"உங்களை தான் மாமா. முதல்ல இந்த தாடி முகத்தை பார்க்கனும்" ஆசையாக அவனது முகத்தை வருடி விட்டாள்.

"ஹாஹா... பார்க்கலாம்"

"மாமா நீ எப்படி இருப்ப"

"கையை கொடு..." கதிர் அவளது கைகளை தன்னிடம் கொண்டு வந்தவன், "இது தான் என் கண், மூக்கு வாய்..." என்று அவளது கைக்கு ஒரு முத்தம் கொடுக்க

"ஏங்க இப்படி செய்யுறிங்க... இது ஹாஸ்பிட்டல்"

"இங்க தான் யாருமே இல்லையே" இமையாவை தன் மடியில் உட்கார வைத்தவன்

"இமையா வலி இருக்கா"

"முதல் ஊசி போடும் போது தான் வலித்தது இப்போ வலி இல்லை கதிரா"

"நிஜமா தான் சொல்லுறியா இல்லை பொய் சொல்லுறியா"

"உண்மை தான்டா ராட்சசா"

"நான் ராட்சசனா டி"

"ஆமா என்னை ஆளும் ராட்சசன். சரியான முறட்டு பீஸ் டா. எல்லாத்திலும் அடாவடி தான் இல்ல உனக்கு"

"ஆமா இவ்வளவு அழகா பொண்டாட்டியை வச்சிட்டு சும்மா வா இருக்க முடியும். இமையா ஆசையா இருக்கு ஒரு உம்மா கொடேன்"

"டேய் யாராவது வந்துடுவாங்க கதிர்... இரண்டு நாள் பொறுத்துக்கோ"

"ஏய் முடியாதுடி"

"அம்மா.... உன்னை வச்சிட்டே சமாளிக்க முடியலை உன் குழந்தையை வச்சி நான் எப்படி சமாளிக்க போறனோ"

"யாரு நான் அடங்காத பாப்பாவா இல்லை நீயா. என் தலை மேல் ஏறி உட்கார்ந்து என்னென்ன ஆட்டம் போடுற தெரியுமா"

"ஈஈஈஈஈ" இமையா அழகாக தன் வரிசை பற்களை காட்டி சிரிக்க

"ரொம்பத்தான்... என்னயவே சமாளிச்சாச்சி. அந்த குட்டி வாலை சமாளிக்க முடியாதா உன்னால. இமையா ஒரு கிஸ் கொடுடி முடியலை மாமா பாவமில்லையா?"

"அம்மா வர போறாங்க விடு டா" அவன் மடியில் இருந்து எந்திரிக்க பார்த்த இமையாவை அப்படியே மெத்தையில் சரித்து இறுக அணைத்துக்கொண்டு, "இப்போ சொல்லு நான் போகட்டா?"

"இல்லை இப்படியே இரு மாமா. உன்னையும் இந்த இறுக அணைப்பையும் ரொம்ப மிஸ் செஞ்சேன். உங்க அம்மா கூட போகனும்னு தான் விட்டு வந்தேன் சாரி. ஆனா என்னால உன்னை விட முடியலைடா. அத்தைக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னாங்க. போய் பார்த்துட்டு வந்தியா?"

"ம்ம்ம்... போய் பார்த்துட்டு நாலு வார்த்தை கேட்டுட்டு வந்தேன்"

"ஏன் மாமா இப்படி செய்ர. அவங்க பாவமில்ல"

"அவங்களை விட நீ தான் பாவம். அவங்க பொண்ணுக்கு இப்படி ஆகி இருந்தா இப்படி தான் நடந்துப்பாங்களா. சும்மா எது நடந்தாலும் உன்னையவே குத்தம் சொல்லிட்டு இருந்தா எனக்கு கடுப்பாகுமில்ல"

"சரி விடு. அத்தை இப்போ எப்படி இருக்காங்க"

"நல்லாதான் இருக்காங்க பிபி தான் ஏறிடுச்சி. அட்ரஸ் கொடுத்துட்டு வந்திருக்கேன். பார்க்கனும் தோனுச்சினா பஸ் ஏறி வர சொல்லிட்டேன். இனி டென்ஷன் இல்லை"

"அப்போ சரி"

"என்ன சரி... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா சிம்பிளா முடிச்சி இருப்பேன். அதை விட்டுட்டு பெரிய இவ மாதிரி ஊரை விட்டு போவ. அதை கூட மன்னிச்சிடுவேன். லவ்வர் அது இதுன்னு பேசின பாரு அப்ப வந்தது கோபம். மகளே உன்னை கூட வச்சி தான் செய்ய நினைத்தேன். ஆனா முடியலை, எங்கே உன்னை அடிச்சிட்டுவேனோன்னு பயம் உனக்கு வலிக்கிரதை விட எனக்கு தான்டி வலிக்கும் உன் வலிய பார்க்கும்போது"

"அவ்வளவு லவ்வா மாமா என் மேல"

"ஆமா நிறைய லவ்வோ லவ்வு"

"சரி விடு டாக்டர் வரும் நேரம். தள்ளி போ"

"ஒரு உம்மா கொடு உன்னை விட்டுறன்"

"முடியாது போடா"

"அப்போ டாக்டர் வர வரை இப்படியே இருப்போம். இத்தனை நாளா பட்டினி போட்டுட்ட. இந்த மூஞ்ச கூட பார்க்க முடியாம தவிச்சிட்டேன். போடி...."

"திரும்ப ஆரம்பிக்காத மாமா. இனி இப்படி செய்ய மாட்டேன் சொல்லிட்டேன் இல்ல"

"சரி முதல்ல என் மேல சத்தியம் பன்னு. எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு போகமாட்டேனு"

"சத்தியமா இனி உன்னை விட்டு போகவே மாட்டேன் எப்பவும்"

"அது... அந்த பயம் இருக்கட்டும்"

"சரி விடு போதும் யாராவது வந்துட்டா சங்கடமா போய்யிடும்"

"சரி ஒரே ஒரு உம்மா கொடுமா" அவனது கையை கண்டு பிடித்து எழுந்தவள் உம்மா கொடுத்துவிட்டு "அவ்வளவு தான் எந்திரி முதலில்"

"சரி அப்படியே... ஒரு பாட்டு பாடு"

"பாட்டு எதுக்குடா"

"எப்படியும் ஒரு மூனு நாள் ஆகிடும் எல்லாம் முடிச்சி வீட்டுக்கு போக. அதுவரை தாங்கனுமில்ல"

"ம்ம்ம்ம்... என்ன பாட்டு பாடலாம்" கதிரிடமே கேட்க.

"முத்தம் பத்தி பாடு" என்றான் ரகசிய குரலில்

"ச்சி அதே நினைப்பிலேயே இருடா லூசு"

"நீ பாடு டி" இன்னும் நெருங்கி படுத்தான்.

"ஏய் கூசுதுடா பக்கி" அவனை விட்டு எழுந்து, அவனின் தோளில் சாய்ந்து அமர்ந்தவள்

"சைவம் முத்தம் கொடுத்தால் ஒத்து போக மாட்டேன்... சாகசத்தை காட்டு செத்து போக மாட்டேன். கெஞ்ச நேரம் என்னை கொல்லய்யா" பாதியில் நிறுத்தியவள் வெட்கத்தில் அவனை அணைத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்தில் டாக்டர் வரவும், இருவரும் சமத்து பிள்ளையாக விலகி நின்றனர்.

'ச்சே... இந்த டாக்டருக்கு நேரமே தெரியலை. என் இமைக்குட்டி எவ்வளவு அழகா பாடினா. பாராட்டி ஒரு முத்தம் கூட கொடுக்க முடியலை'

"இன்னைக்கு அந்த ஊசி போட்டுடுவோம். ஒரு வாரத்தில் எல்லாம் சரியா போயிடும். இமையா அமைதியா இருக்கனும். டென்ஷன் ஆக கூடாது புரியுதா. நர்ஸ் இவங்களை கூட்டிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

மூவரும் வரிசையாக உட்கார்ந்து இமையா பழைய படி ஆகிடனும் என்று மனதால் பிரார்த்தனையில் இருக்கும் போது, கதிருக்கு கால் வந்தது,

"அண்ணா அம்மாக்கு உடம்பு முடியலை. அப்பா கூட வீட்டில் இல்லை என்ன செய்றதுனு தெரியலை" வள்ளி பதற்றமாக சொல்ல

"சரி நீ பதறாதே... நான் என் ப்ரெண்டை வர சொல்லுறேன்" கதிர் கையோடு அந்த ஊரில் இருக்கும் தனது நண்பனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, அவர்களை அதே ஊரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாடு செய்தான்.

அப்போது தான் இருவரையும் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று கதிர் தெளிவாக திட்டம் போட அவனது தங்கை தான் பொங்கிக்கொண்டு இருந்தாள்.

"இந்த அண்ணாக்கு அறிவே இல்லை. இப்பவும் அவளுக்காகதான் பாடுபட்டுட்டு இருக்கு"
கதிரும் அடிக்கடி தன் அம்மாவை போய் பார்த்து வந்தான்.

அவனது தங்கை தான் முகம் கொடுத்து கூட பேசவில்லை கதிரிடம்.

இப்படியே ஆறு நாள் அனைவருக்கும் மருத்துவமனையே கதி என்று இருக்க

அடுத்த நாள் கண்களை திறக்கும் ஏற்பாடு நடந்துக்கொண்டு இருக்கும் போது,

கதிரின் போன் அலரியது. தாய்க்கு உடல் நிலை மோசமாகிவிட, வெளி ஊரில் உள்ள ஹாஸ்பிட்டலில் சேர்க்க சொன்னாதாக தங்கை சொல்லவும்

கண் முன் இமையாவின் கண் கட்டு அவிழ்த்து கொண்டு இருக்க

தாயா தாரமா என்ற ஒரு இக்கட்டான நிலையில் சிக்கி தவித்தான் கதிர்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 32

"கதிர் என் முன்னாடி தானே இருக்கீங்க"

"ஆமா இமையா... ஆனா" தயங்கினான்.

"என்னாச்சிடா"

"அது அம்மா சீரியசா இருக்காங்க"

"அச்சோ... கிளம்பாம இங்கே என்ன செய்றிங்க அத்தையை பாருங்க முதல்ல"

"முதல்ல என்னை தானே பார்க்கனும்னு ஆசைபட்ட"

"ஆமா மாமா... ஆனா இப்போ அம்மா தான் முக்கியம் கிளம்புங்க"

"அப்போ போகட்டா... இமையா ஜாக்கிரதையா இரு. அம்மா அப்பா இல்லாம எங்கயும் போகாத. நான் ஒரு வாரத்தில் வர பார்க்கறேன்"

"கதிரா அத்தைக்கு உடம்பு சரி ஆகியதும் பார்த்துக்கலாம் புரியுதா"

கதிர் பேக்கெட்டில் போன் வைக்கும் போது தெரியாமல் கீழே விழுந்து சிதற

"அச்சோ போனா உடைந்தது"

"ஆமா இமையா நான் வேற போன் வாங்கிக்கறேன். அத்தை இமையா பத்திரம். மாமா வரேன்" என விடை பெற்று வாசல் வரை வந்தவனுக்கு மனதே கேட்கவில்லை. ஆனால், அம்மா உடல் நிலை தான் முக்கியம் என முடிவு எடுத்தவன் பக்கம் இருக்கும் ஹாஸ்பிட்டல் நோக்கி ஓடினான்.

டாக்டரை பார்த்து அம்மா உடல் நிலையை விசாரிக்க, இரண்டு மூனு ஆப்பரேசன் செய்யனும் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார் மருத்துவர்.

"என்ன டாக்டர் சொல்லுறிங்க!" கதிர் அதிர்ந்து நின்றான்.

"சின்ன பிரச்சனை அதை ஆறப்போட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிங்க. நான் பெங்களூரில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கு சொல்லிட்டேன் நாளைக்கே ஆப்பரேசன் பிரோசிஜர்ஸ் ஸ்டார்ட் செய்யனும்"

"சரி டாக்டர் இன்னைக்கு கிளம்பிடுறேன்" என்று தாயை கூட்டிகொண்டு கிளம்பினான் கதிர்.

இங்கு இமையாவுக்கு கட்டு அவிழ்க்கப்பட்டது. முதலில் கண் கூசியது. ஒரு மணி நேரம் பிடித்தது அவளுக்கு கண்களை திறக்க. அப்போது வந்தான் அவளது முன்னால் காதலன் அரசன்.

அவனை பார்த்தும் முதலில் அதிர்ந்தாலும் பிறகு கத்த துவங்கினாள்.

"அம்மா இவன் எதுக்கு இங்க வந்தான் என் கதிர் இருக்கும் இடத்தில் இவன் எதுக்கு?" என இமையா கத்த

"இமையா கத்தாத... இரு இப்பவே போக சொல்லுறேன்" இமையா அப்பா அவளை சமாதானம் படுத்தினார்.

"தம்பி அவ இப்போ இப்படி டென்ஷன் ஆக கூடாது. என்னாச்சி தெரியலை நீங்க கிளம்புங்க" என வெளியே அனுப்ப, அரசன் உடைந்து அமர்ந்தான்.

"தம்பி..." இமையா அம்மா தயங்கி கொண்டே பேச வர

"ஒன்னுமில்ல நான் கிளம்பரேன்" என்று தளர்ந்த நடையில் போகும் அரசனை பார்த்து கண் கலங்கினார்கள்.

அதன் பிறகு அரசன் அவளை தொந்தரவு செய்யவில்லை.

சரணும் அழகியும் நடக்கும் நிகழ்ச்சியை புரியாமல் பார்ப்பதை பார்த்த இமையா,
அவர்களை திசை திருப்ப

"சிறு பிள்ளை போல அம்மா கலர்ரா அழகா இருக்க. எவ்வளவு நாள் ஆச்சி! உங்களை எல்லாம் பார்க்க முடியாம போச்சி"

அந்த அறையில் இருக்கும் பொருட்களை ஆசையாக பார்த்தாள். ஜன்னல் வழியாக ரோட்டில் போகும் வண்டியில் தொடங்கி மனிதர்கள் செடி கொடி குப்பை என அனைத்தையும் நோட்டமிட்டாள்.

அப்பா அம்மாவின் முகத்தை ஆசையாக தொட்டு பார்த்தாள்.

"அப்பா அம்மா அழகா இருக்கிங்க"

"என்ன இந்த கிழவன் கிழவி அழகா இருக்கோமா உனக்கு?"

"ஆமா கொள்ளை அழகு. இன்னும் இளமையோட தான் இருக்கிங்க. லவ்வபில் கப்பில் நீங்க"

"ஆமா அப்படியும் வச்சிக்கலாம். லவ் கப்பில் தான்" இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே இமையாவுக்கு கதிரின் எண்ணம் வரவும் அமைதியாக இருந்தாள்.

"ஏன்மா காலையில் அவ்வளவு கோபப்பட்ட"

"அம்மா அப்பா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். அந்த அரசன் என் கூட வேலை பார்க்கும் முன்னவே தெரியும். எனக்கு இண்டர்வியூ செஞ்சாங்கன்னு சொன்னேனில்ல"

"ஆமா... ட்ரைனிங் கூட ஒன்னா போனிங்களே" அம்மா சரியாக சொல்ல

"ஆமா இரண்டு பேரும் லவ் செஞ்சோம்"

"அதுக்கு தான் கல்யாணம் வேண்டான்னு சொன்னியா?"

"ம்ம்ம்... எனக்கு ஒரு பிரச்சனை இருக்குமா. அது வரமா ? சாபமா? தெரியலை. சின்ன வயதில் இருந்து, நடக்க போகும் சிறு சிறு விஷயம் எனக்கு முன்னவே தெரியும். வளர வளர எனக்கு நெருங்கிய யாருக்காவது எதாவது நடப்பது முன்னவே தெரியும். நிறைய இடத்தில் அது நடக்காம தடுத்து இருக்கேன். ஆனா கடைசியா எனக்கு நடக்க போவது தெரிந்து அசால்ட்டா விட்டுட்டேன். அரசனை விலக நினைத்து பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி அனுப்பிட்டேன். ஆனா என்னால முடியலை திரும்ப அவனிடம் பேச முயற்சி செய்த போது அவனுக்கு பிடிக்கலை. அதுக்கப்புறம் தான் நடந்தது தெரியுமே. இன்னைக்கு எனக்கு முதலில் அரசனை பார்த்தது சந்தோஷம் தான். ஆனா திட்டி அனுப்பினேன். என் வாழ்க்கை கதிர் கூட தான். அவனுக்கும் ஒரு துணைவேனும்னு தான் திட்டி அனுப்பிட்டேன்" இமையா இருவரையும் பார்க்க

"சரிமா உன் மனசு புரியுது. விடு அந்த தம்பிக்கும் நல்ல வாழ்க்கை அமையும்"

"ம்ம் மா, கதின் பேசினாரா?"

"போன் உடைஞ்சிடுச்சி இல்ல. அதான் என் போன் கொடுத்து விட்டுருக்கேன். கதிர் அங்கே போனதும் பேசுறேன்னு சொல்லி இருக்கார்"

"இமையா தூங்கலையா"

"இல்லை மா, இந்த வெளிச்சம் பார்க்க ஆசையா இருக்கு"

"சரி நேரத்தோட தூங்குடி. காலையில் வீட்டுக்கு கிளம்பிடுவோம்னு நினைக்கறேன்"

இத்தனை நாள் இருட்டில் இருந்த இமையாவுக்கு தூக்கம் வர மறுத்தது. அது மட்டும் காரணம் இல்லை என்பது இமையாவுக்கு தான் தெரியும்.

நடு இரவில் கதிர் இமைவுக்கு அழைக்க

அழகிமா காலிங் என போன் அதிர்ந்தது.

"ஐ... அவர்தான் கால் செஞ்சி இருக்கார்" துள்ளி குதித்து ஓடிவந்ததில் கட்டிலில் காலை இடித்துக்கொண்டாள்.

'ச்சே...இந்த கட்டிலை யாரு வழியில் வைக்க சொன்னது' காலை பிடித்துக்கொண்டே ஓடி வந்து எடுத்தாள்.

"ஹாலே கதிரா..."

"இமைக் குட்டி என்ன செஞ்சிட்டு இருக்கு"

"கதிர் மிஸ் யூ... அத்தை எப்படி இருக்காங்க" என்று கேட்டாள்.

"அம்மாக்கு ஒன்னுமில்லை நல்லா இருக்காங்க. ஆபரேஷன் தான் செய்யனும் பதினைந்து நாளில் ஒரு ஆபரேசன் செய்யனுமாம். மொத்தம் மூனு செய்யனும். அது வரை வரமுடியாது"

"அதனால என்னங்க கதிர். பரவாயில்லை நான் காத்திருக்கேன். புது போன் வாங்கலையா"

"இல்லை இமையா ஹாஸ்பிட்டலில் இருந்து நகர முடியல"

"சரி... நான் உங்க முகத்தை வீடியோ காலில் பார்க்க நினைத்தேன். சரி விடுங்க நேரில் பாத்துக்கலாம்"

"சரி தங்கம். நீ தூங்காம என்ன செஞ்சிட்டு இருக்க"

"உங்க கால்காகத்தான் வெயிட்டிங் மாமா"

"நான் பண்ணுவேன்னு மேடம்க்கு எப்படி தெரியும்"

"தெரியும்... பீல் ஆச்சி அதான்"

"சரி குட்டி தங்கம் இப்போ தூங்குமாம். நான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கால் பண்ணுவேன்"

"சரி மறக்காம நேரம் கிடைக்கும் போது கால் பண்ணுங்க புரியுதா. நாளு முழுக்க உனக்காக தான் காத்து இருப்பேன். மறந்திடாதிங்க கதிர்"

"சரி டயார்டா இருக்கு தூங்கவா"

"சரி கதிரா... மிஸ் யூ பாத்துக்கோ"

"ம்ம்ம்... இமை குட்டி"

"என்ன குரல் ஒரு தினுசா இருக்கு"

"எதாவது பாட்டு பாடு இல்லை மாமாக்கு தூக்கம் வர அளவுக்கு ஒரு உம்மா கொடு" கதிர் குழைந்தவாறு சொல்ல

"கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா... "
தொடங்கி இரண்டு வரி பாடி முடித்தவள், "சார்க்கு போதுமா... தூங்குங்க"

"பாப்பா..."

"என்ன ஓவர் இழுவையா இருக்கு" கதிர் கேட்க வருவது தெரியாமல் இல்லை அவளுக்கு. அடக்கப்பட்ட புன்னகையோடு கேட்க

"என் இமை குட்டிக்கு தெரியாதா இந்த மாமாக்கு என்ன வேணும்னு"

"தெரியும், ஆனா இப்போ கொடுக்க முடியாது"

பளிச்சென்று இருந்த கதிர் முகம் சுருங்கியது.

"ஏன் நான் பக்கம் இல்லாததால சேட்டை கூடி போச்சி"

"அப்படியும் வச்சிக்கலாம்... அம்மா பக்கம் இருக்காங்கடா புரிஞ்சிக்கோ"

"சரி பாத் ரூம்க்கு வந்து கொடு"

"ச்சி... போடா" இமையா வெட்கத்தோடு போனை வைத்து விட்டாள்.

கதிரும் மனநிறைவோடு அம்மாவை பார்த்துக்கொண்டான். முதல் ஆபரேஷன் முடிந்தது.

இமையாவும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு போய் விட

சாப்பிடுவது தூங்குவது அம்மா அப்பாவுடன் பேசுவது என இமையாவின் நாட்கள் நகர்ந்தது.

அங்கு அம்மா தங்கை மருத்துவ செலவு என கதிருக்கு நேரம் செல்ல,

பத்து மணி ஆனால் போதும் போனை எடுத்துக்கொண்டு ரூமிற்குள் புகுந்து கொள்வாள்.

"இமையா..." வழக்கமான சிணுங்களோடு கதிர் பேச துவங்க.

"டேய் என்ன எடுத்தும் சிணுங்கல். எப்பவும் போன் வைக்கும் போது தானே இப்படி பண்ணுவ"

"இன்னைக்கு உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்"

"பாருடா அதிசயமா இருக்கு"

"இன்னைக்கு உன்னை போலவே ஒரு பொண்ணை பாத்தேன் அதான்"

"போன் வாங்குங்க வீடியே காலிலாவது பார்த்துக்கலாமில்ல"

"நேரில் பார்த்தா தான் கிக்கா இருக்கும் இமையா. அதும் இல்லாம வள்ளி இங்க இருக்கறதும் ஒன்னு இல்லாததும் ஒன்னு அவ பாட்டுக்கு போன் வச்சிட்டு இருக்கா. அம்மாவை நான் தான் பாத்துக்கறேன்"

"சரிங்க..."

"நீ என்ன வீட்டிலே அடஞ்சிட்டு இருக்கன்னு அத்தை மாமா ஒரே சோக கீதம் வாசிக்கறாங்க"

"சரி இப்போ என்ன ? நான் வெளியே போனும் அவ்வளவு தானே நாளைக்கு போறேன் போதுமா?"

"சரி...சமத்து பாப்பா. அப்புறம் இன்னொன்னு பாப்பா கோபம் பட கூடாது ஜாலியான மூடில் இருக்கனும் புரியுதா"

"சரிங்க... இன்னைக்கு நீங்க பாடுங்க"

"என்ன பாட... கவிதை வேணும்னா சொல்லட்டா"

"ஐ ஜாலி சொல்லுங்க"

"ஐம்பது கிலோ உடைய அழகிய கவிதையே என்னிடம் நடந்து வந்து,

கவிதை சொல்ல கேட்கிறதே... அடடே ஆச்சரியக்குறி"

"டேய் கதிர் இது எல்லாம் கவிதையாடா லூசு பயலே. சிவக்கார்த்திகேயேன்னு நினைப்பு"

"ஹா...ஹா எனக்கு இப்படி தான் சொல்ல வரும்"

"இனி தப்பி தவறி நானா கேட்ட கூட சொல்லிடாத தெய்வமே"

"சரி நேரமாச்சி தூங்குடா இமையா"

"பாதி தூக்கத்தில் தான் இருக்கேன்... படுத்தாச்சி"

"சரி டா தங்ககுட்டி. தூங்கு உம்மா..."

"உம்மா நேரில் வந்து கொடு இனி போனில் எனக்கு வேண்டாம். உனக்கும் கிடைக்காது"

"இன்னும் ஒரு மாசம் ஆகும் போல. அம்மாவை வீட்டில் விட்டுட்டு என் தங்கத்தை பார்க்க வரேன். சரியா"

"சரி நீங்க ஒழுங்கா சாப்பிட்டு தூங்கனும் சரியா"

"சரி... நீ கோபப்படக்கூடாது. அத்தை கூட வெளியே எப்பவாவது போ"

"நம்ம வீட்டை பார்க்கனும் போல இருக்குங்க"

"போலாம்டா நான் வந்ததும்"

"முடியாது நீ எப்போ வரது நான் எப்போ போவது... அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன்"

"சரிடா பாய்" போனை வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும் இருவரின் மனமும் ஒன்றாக இருப்பது போல தான் உணர்ந்தார்கள் இருவரும்.[/ISPOILER]
 
Last edited:

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 33

அடுத்த நாள் இமையாவும் அழகியும் கடை தெருவுக்கு போனார்கள். இமையாவுக்கு ஒரு வித பயம் இந்த வெளிச்சத்தை பார்க்க.

"என்னமா சுத்தியும் புது புது கடை எல்லாம் வந்து இருக்கு" சுற்றிலும் நோட்டம் விட்டவளின் கண்ணில் முதலில் பட்டது பலகாரம் கடை தான். அவளது கால்கள் தானாக போக.

“ஏய் அங்க எங்க போர…ஒழுங்கா வாங்க வந்ததை முதலில் வாங்குவோம் வா. கடைசிய கிளம்பும் போது நொறுக்கு தீனியை பார்த்துக்கலாம்”

"ஆமா நானே இன்னைக்கு தான் இந்த பக்கம் வரேன். உனக்கு பொறுக்காதே நான் சாப்பிட்டா"

"வா மா ஒரே போல டிரஸ் எடுக்கலாம்"

துணி கடைக்குள் நுழையும் போதே, கதிர் இமையாவுக்கு அழைத்தான்.

"என்ன சார் மூக்கு வேர்த்துடுச்சி போல"

"ஆமா அதிகமா... இப்போ எந்த கடையில் இருக்கிங்க"

"துணி கடையில் தான். ஏதோ வந்து வாங்கி தரது போல பேசிட்டு இருக்கிங்க. எனக்கு உங்களை பார்க்கனும் போல எவ்வளவு ஆசையா இருக்கு தெரியுமா? உங்களுக்கு ஆசை இருப்பது போல தெரியலையே" இது தான் இமையாவின் பேச்சாக இருந்தது கடத்த ஒரு வாரமாக.

"என் இமையாவை பார்க்க எனக்கும் தான் ஆசை. ஆப்பரேசன் முடிஞ்சிடுச்சி இமை. உடம்பு கொஞ்சம் முன்னேறனுமில்ல அம்மாக்கு"

"அதான் உங்க தங்கச்சி இருக்கு இல்ல விட்டுட்டு வாங்க. ஒரு நாள் மட்டும் போதும். என் கூட இருந்துட்டு போங்களேன் கதிர். இல்லைனா நான் அங்க வந்திடுவேன்.

அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்றிங்க. அம்மா கிட்ட கூட ஆஸ்பிடல் அட்ரஸ் கொடுக்கலை

உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிங்க? வரவர உங்க மேல கோவம் தான் வருது கதிர்" இமையா சங்கடமாக பேச.

"உனக்கு என்ன என்னை பார்க்கனும் அவ்வளவு தானே. உன் போனை எடு அதில் நம்ம எடுத்துக்கொண்ட போட்டோ நிறைய இருக்கும் அதுல பார்த்துக்கோ"

"நிஜமாவா! இதை முதலில் சொல்வதற்கு என்ன"

"அம்மா என் போன் கொடு"

"அடியே கிறுக்கச்சி, அதான் காலையில தண்ணீல போட்டுட்டு, காயவச்சிட்டு வந்தியே"

"அடச்சே மறந்தே போய்யிட்டேன் மா. போங்க கதிர் இப்படியே ஆகிட்டு இருந்தா என்ன செய்யுறது"

"உனக்கு என் மேல கொஞ்சம் கூட ஆசை இல்லை இமையா"

"ஏங்க அப்படி சொல்லுரிங்க. நீங்கனா எனக்கு உயிர் தெரியுமா?"

"அப்போ ஏன் எனக்காக காத்துட்டு இருக்க உனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு. என்னை கொஞ்சமும் புரிஞ்சிக்க மனசே இல்லையா. போனைவிட நேர்ல பாக்க ஆசை இல்லையா உனக்கு" கதிர் வருத்தமான குரலில் சொல்லவும்

"அப்படி இல்லை கதிர். எனக்கும் ஆசையாதான் இருக்கும். உங்க முடியில் ஜடைபோடனும். மீசையை முறுக்கிவிடனும். கொஞ்சனும், ஓடிபிடிச்சி விளையாடனும், என்னை அன்னைக்கு தனியா விட்டதுக்கு பனிஸ்மென்ட் கொடுக்கனும்…" இமையா அடுக்கிக்கொண்டே போக.

"அடி ஆத்தி… இமைகுட்டி இவ்வளவு மிஸ் செய்றிங்களா? புரியுது இமையா... அம்மாவை விட்டுட்டு எப்படி வருவது. நீயே சொல்லு"

"சரி... நான் உங்களை இனி நச்சரிக்க மாட்டேன். நீங்க ப்ரீ ஆகிட்டு கூப்பிடுங்க. அத்தை எப்படி இருக்காங்க?"

"இப்போ பெயின் குறைந்து இருக்கு. அப்பா வந்தார் ஏதோ சொந்தக்காரங்களை பார்க்க வந்தது போல பழம் வாங்கி வந்து பார்த்துட்டு போய்ட்டார். அவர் வந்ததும் விட்டுட்டு வரலாம்னு தான் நினைச்சேன் முடியலை டா"

"சரி விடுங்க பீல் எல்லாம் என் தங்கக்குட்டி படக்கூடாது. உனக்காக காத்திருக்கிறேன்" என்றாள்.

"சரி இமையா குட்டி என்ன வாங்க போகுது"

"இமையா குட்டி சேரி வாங்க போகுது"

"பாருடா மேடம்க்கு சேரி எல்லாம் பிடிக்குமா?"

"எனக்கு பிடிக்காது. என் மாமாக்கு பிடிக்கும்"

"எவன் டி அவன். வந்தேன்னு வை அடிச்சி துவச்சிடுவேன்"

"என்ன கோபம் வருது என் புருஷ்க்கு… எல்லாம் உங்களுக்கு தெரிந்தவன் தான்"

"எனக்கு தெரிந்தவனா யாரு" கதிர் கொஞ்சம் டென்ஷனுடன் பொறாமை கலந்து பேசுவதை ரசித்த இமையா.

"நீயே கண்டு பிடிச்சிக்கோ கதிர் நான் போன் வச்சிடுறேன்"

"போன் வச்ச அடி பிச்சிடுவேன். யாரு அந்த அரசனா?" இமையாவுக்கு திக்கென்று ஆனது. 'என்ன இவர் இப்படி கேட்டுட்டார்'

"இல்லை கதிர் நான் மாமானு சொன்னது உங்களை தான். அவங்க என் பெஸ்ட் பிரண்ட் புரியுதா. என்னையும் அவரையும் சேர்த்து பேசாதிங்க. நான் ஒளிவு மறைவு இல்லாமல் வாழ நினைக்கிறேன்.

அதனால் தான் என் கடந்த காலத்தை உங்க கிட்ட சொன்னேன். வச்சிடுறேன் கதிர்" என பேசிட்டு முடித்து இருவரும் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு உணவகத்துக்கு சென்று அவளும் அழகியும் சாப்பிடும் போது எதர்ச்சையாக இமையா திரும்பி பார்க்க

அங்கே அரசன் அமர்ந்து இருந்தான்.

'இவன் பாலோ செஞ்சி வந்தானா இல்லே. எதர்ச்சையாகவா?' அவளது கால்கள் அவனை நோக்கி போகத்தான் சொன்னது.

ஆனால், தானே சென்று அவனது வாழ்க்கையை கெடுக்க விரும்பாதவள் வேகமாக சாப்பிட்டு, வேலைகளை முடித்து கிளம்புவதற்குள் இன்னொரு முறை இமையா கண்ணில் அரசன் பட்டான்.

இமையாவுக்கு அவன் நிலை புரிந்தாலும், இப்போதைக்கு அவனின் வாழ்க்கைக்கு எதாவது செய்யனும் என்று நினைத்தாள்.

இமையா வேகமாக அரசனை நோக்கி போக, அவனோ இன்னும் வேகமாக ஒழிந்து கொண்டான்.

'எங்கே போனான்? இப்போ அவனிடம் பேசுவது சரியா, இல்லை கதிரிடம் கேட்போமா'

உடனே கதிருக்கு அழைத்தாள்.

"என்ன தங்கம் மாமா மேல கோபம்? போன் வச்சிட்ட"

"இல்லை கதிரா, நம்ம விஷயத்தை அப்புறமாக பாத்துக்கலாம். நேரில் வாங்க கடிச்சி வச்சிடுறேன். இப்போ ஒரு சந்தேகம், அதுக்கு தான் கூப்பிட்டேன்"

"என்ன சந்தேகம்... கிஸ் கொடுக்கறது பத்தியா இல்லை... வேற ஏதும் சந்தேகமா?" கதிர் குறும்போடு கேட்க, அவன் கேட்ட விதத்தில் வெட்கம் வந்ததை மறைக்க படாதபாடுபட்டாள். அதனை மறைத்து கொண்டு கோபமாக பேசுவது போல பேசினாள்.

"நான் சொல்லுவதை கேளு முதலில். அந்த அரசன் என்னை பின் தொடர்ந்து வரான். என்ன செய்யுறது”

“சும்மா பிரண்ட்லியா பேசு. அதைவிட்டுட்டு எதுக்கு இவ்வளவு கோபம்"

"புரியாம பேசாதே கதிர். அவனுக்குனு ஒரு வாழ்க்கை வேணும். தேவையில்லாத ஆசைய வளர்க்க நான் விரும்பலை. அதும் இல்லாம, எனக்கு அவன் மேல அளவுக்கு அதிகமா கோபம் இருக்கு. காதல்னா என்ன என்று அவனுக்கு தெரியலை. என்னை ஏங்கவிட்டு அழுக வைத்தவனை என்னால எப்போதும் மன்னிக்க முடியாது. நான் இன்று மனதால் உன்னை நினைத்து இருந்தாலும், எனக்கு அந்த கடந்த காலத்து காயம் இன்னும் வலிக்குது கதிர்.

என்னால அவன் செய்த நம்பிக்கை துரோகத்தை ஏத்துக்க முடியலை. ஒருவனை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவனின் கையில் அதுவும் பார்வை இல்லாமல் கையாலாகாத தனத்தால் நான் துடித்தது எனக்கு தான் தெரியும்.

சாரி கதிர் உனக்கு நான் இப்படி பேசுறது வலி தரும். ஆனா என் வலி அத்தகையது. மன்னிச்சிடு... அவனை நாலு வார்த்தை அசிங்கமாக எனக்கு கேட்கனும் போல இருக்கு"

"உன் நிலை புரியுது இமையா. ஆனா அவன் மேல கோபம் காட்டி என்ன வரப்போது. மறப்போம் மன்னிப்போம். சரி விடு நீ வீட்டுக்கு போ, அவனை அப்புறம் பாத்துக்கலாம்"

"ம்ம்ம்... எனக்கு தலை வலிக்குது"

"சரி நீ வீட்டுக்கு கிளம்பு. அத்தைகிட்ட போனை கொடு"

"சரி கதிரா… மா கதிர் பேசனுமாம்"

"புருஷன் பேரை சொல்லு கூப்பிடாதன்னு சொன்னா கேட்குறாளா பாரு" அழகி திட்டிக்கொண்டே போனை வாங்க

"அத்தை அவள் கொஞ்சம் டென்சனா இருக்கா... வீட்டுக்கு போனதும் மாத்திரை கொடுத்து தூங்க வைங்க. அடிக்கடி வெளியே கூட்டிட்டு போங்க. அவளுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்"

"சரிப்பா... அரசன்" அத்தை துவங்கும் போதே

"அத்தை நான் பாத்துக்கறேன். நீங்க கவலை படாதிங்க"

"நீங்க எப்ப இங்க வருவீங்க தம்பி"

"வரேன் அத்தை எனக்கும் இமையாவை பார்க்கனும்னு ஆசையா இருக்கு"

"சரி பா வச்சிடுறேன்"

"அத்தை சாக்லேட் வாங்கியாச்சா"

"ம்ம்... தெரியாம வாங்கிட்டேன். அப்புறம் அவள் பிறந்த நாளுக்கு எல்லாம் கொஞ்ச கொஞ்சமா ரெடி ஆகிட்டு இருக்கு" இமையா அம்மா ரகசியம் பேச.

"என்னாச்சி... என்ன ரகசியம் பேசுறிங்க மாமியாரும் மருமகனும்"

"நீ தூரமா நில்லு எங்க ரகசியத்துக்குள்ள நீ இடையில் வராதே" என்று இமையாவை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று பேசினார்.

இமையா பிறந்த நாளுக்கு இன்னும் இரண்டு தினங்கள் தான் இருக்க, அதற்கான ஏற்பாட்டை தான் ரகசியமாக செய்து கொண்டு இருந்தார்கள் மூவரும்.

வழி முழுவதும் கதிரை இமையா திட்டிகொண்டே வந்தாள்.

'இவன் என்ன. பேக்கா இருக்கான். அவன் செஞ்சதை திருப்பி கொடுக்கனும் என்று நான் நினைக்கும் போது பேக்கு போல பொறுமையா இரு, எருமையா இருன்னு கடுப்பை கிளப்பிட்டு இருக்கான்.

எவ்வளவு செஞ்சான். அந்த டுபாக்குர் அதுக்கு எல்லாம் திருப்பி கொடுத்தே ஆகனும்' மனதில் திட்டிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
வந்ததும் இமையாவுக்கு மருந்து கொடுத்து படுக்க வைத்தார்கள்.

கதிர் இமையாவின் டாக்டருக்கு போன் போட்டான்.

"டாக்டர்... இமையா ரொம்ப டென்சன் ஆகுறா. என்ன செய்ய"

"முன்னவே சொன்னது தான் கதிர். அவளுக்கு கொஞ்ச நேரம் பிடிக்கும் குணம் ஆக. இல்லைனா நிரந்தரமா பார்வை போய்யிடும். கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. அவங்களை டென்சன் படாம பாத்துக்கோங்க"

"சரி டாக்டர்..." என்று வைத்தவன், அழகிக்கு போன் போட்டு சொன்னான்.

"அத்தை அவளை பத்திரமாக பாத்துக்கோங்க. முடிஞ்ச அளவுக்கு நான் சீக்கிரம் வர பார்க்கறேன்"

'இமையா பத்திரமா இரு நான் உன்னை தேடி சீக்கரம் வந்துடுறேன்'
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 34

நிம்மதியாக தூங்கி எழுந்த இமையாவுக்கு, குறைந்து இருந்த கோபம் மீண்டும் தலைக்கு ஏறியது.

இமையாவுக்கு மனசே கேட்கவில்லே. 'இந்த அரசன் என்ன பைத்தியமாக வைக்கிறான்'

'நம்ம கல்சர்க்குன்னு ஒரு மரியாதை இல்லே'

'அவனைவிட முட்டாள் என்னை கட்டிக்கிட்ட தடி மாடு தான். எவ்வளவு தைரியம் இருந்தா அமைதியா போக சொல்லும். இவனை வச்சிட்டு நான் என்ன செய்ய. இன்னைக்கு இருக்கு இவனுக்கு'

இந்த டென்சனில் இமையாவுக்கு மயக்கம் வருவது போல ஆகியது.

ஒவ்வொரு முறை மனதால் அல்லது உடலால் சோர்ந்து போகும் போது இமையா முதலில் தேடுவது கதிரை தான்.

ஆனால் இன்று அம்மாக்கு செக் அப் என்று சொன்னானே கூப்பிட்டு சங்கட படுத்த வேண்டாம் என்று நினைத்தவள்

தடுமாற்றமாக ஹாலுக்கு வந்ததும் மயங்கி சரிய, சத்தம் கேட்ட அழகியும் சரணும் பதறி தான் போனார்கள்.

டாக்டரை வரவழைத்து செக் செய்த போது தான் தெரிந்தது. இமையா மூன்று மாசம் கருத்தரித்து இருக்கிறாள் என.

அழகி முன்னவே இமையாவிடம் கேட்க நினைத்தார் தான்.

எங்கே ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலைவதற்கே நேரம் சரியாக இருந்தது.

இதற்கு இடையில் இமையாவின் மனநிலையை சீராக வைக்கவுமே நேரம் போனது.

கொஞ்ச நேரம் கழித்து இமையா எழவும்,

"என்னாச்சி மா? மயக்கம் வந்திடுச்சா"

"ஒன்னுமில்லை இமையா. நல்ல விஷயம் தான்"

"மயக்கம் போட்டா நல்ல விஷயமா?" இமையா தன் அன்னையை குழப்பத்தோடு பார்த்தாள்.

"அம்மாவாக போற" என்றார் அழகி மெல்லிய குரலில்.

"அம்மா... நிஜமாவா? இந்த பார்வை பிரச்சனையில் எல்லாம் மறந்துட்டேன்" என்று அன்னையை கட்டிக்கொள்ள

"அப்பா எங்க மா காணோம்"

"அவருக்கு தலை கால் புரியலை. உனக்கு ஏதோ வாங்கிட்டு வரேன்னு வீட்டில் இருந்த காசு தொடங்கி... எடிஎம் கார்ட் எல்லாம் தூக்கிட்டு போய் இருக்கார்" தந்தையின் பாசத்தில் நெகிழ்ந்து தான் போனாள் சரணின் குட்டி இளவரசி.

"அம்மா கதிர்கிட்ட சொல்லிட்டிங்களா?"

"இல்லை மா நீ சொன்னா தானே நல்லா இருக்கும்"

"சரி மா... நான் அவருக்கு கூப்பிடுறேன்" போனை எடுக்கும் போது அப்பா அதிரடியாக இரண்டு கூடை பழங்கள் வாங்கி வந்தார். அது பத்தாது என்று இமையாவுக்கு பிடித்தது எல்லாம் கை நிறைய வாங்கி வந்தவர், கட்டிலில் கடை பரப்பினார்.

"பாருடி உன் அப்பாக்கு கொழுப்ப. நான் மாசமா இருக்கும் போது கேட்டா கூட வாங்கி தர மாட்டாங்க. இப்ப பாரு பொண்ணுக்குனு சொன்னதும் கடை கடையா குவியுது. தன் பொண்ணுனா ஒன்னு வேற வீட்டு பொண்ணுனா இளக்காறமா?"

"பொய் சொல்லுறா இமையா. என்னைக்கு மாசமா இருக்கறது தெரிந்ததோ அப்போ இருந்து இருபத்தி ஐஞ்சி வருசமா நான் தான் வீடு வேலை செய்யுறேன். ஏய் போடி எங்க பாசத்தில் கண்ணு போடாத" இங்கு நடக்கும் செல்ல சண்டையை ரசித்தாலும், இந்த சந்தோஷமான விஷயத்தை கதிருக்கு நேரில் சொல்ல தான் ஆசைப்பட்டாள்.

'எப்படியாவது என் பர்த் டேக்கு கதிர வர வைக்கனும். அந்த ஊஞ்சலில் அவன் மடியில் உட்கார்ந்து தான் சொல்லனும்' என்று ஆசை கொண்டாள்.

கதிருக்கு பல முறை அழைத்தும் அவன் போனை எடுக்கவில்லை. இமையாவுக்கு வெறுப்பாக இருந்தாலும், அமைதியாக ஒரு மெசேஜ் போட்டு விட்டாள், 'மாமா ப்ரீயாகிட்டு கால் பண்ணுங்க' என.

கதிர் மெசெஜ் பார்த்தாலும் பேச அவனுக்கு நேரம் இருக்கவில்லை.

இரவு நேரத்தில் கதிரே இமையாவுக்கு அழைத்தான்.

இமையா தான் படாத பாடுபட்டாள். வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கி கொண்டு பேசினாள்.

'கதிரா… பாப்பா வர போகுது நமக்கு. உன்னை நேரில் பார்த்து சொல்லனும். அதும் அந்த ஊஞ்சலில் இரண்டு பேரும் உட்கார்ந்து.... ' நினைக்கும் போதே இமையாவுக்கு மனதில் ஐஸ் கட்டி வைத்தது போல ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது.

"கதிரா... என் பர்த்டேக்கு வரியா?"

"வரனும்னு ஆசையா தான் இருக்கு இமையா. ஆனா அம்மா... "

"ம்ம்ம்... மிஸ் யூ" என்றாள் ஏக்கமாக.

"பேபி...ஐ வான்ட் டு கிஸ் யூ"

"கிஸ் மட்டும் தானா?" அவனுக்கு குறையாத ஏக்கத்தோடு இமையா சொல்ல

அதன் பிறகு பேசியது எல்லாம் ஏக்கத்தை எடுத்துக்காட்டியது. இருவரையும் இந்த தனிமை வாட்டி வதக்கியது. நிலா தனியாக காய்வது போல வெவ்வேறு இடத்தில் இருந்த இருவரும் தன் துணையின் அருகாமைக்காக ஏங்கினார்கள்.

ஒருவர் முகம் பார்த்தாவது பேச துடித்தனர்.

இப்படியே சில நாட்கள் கடந்தது.

இமையாவின் தனிமையை போக்கும் விதமாக பிறந்த நாளும் வந்தது. வீடே திருவிழா போல இருந்தது. நடு இரவில் கை நிறைய பலுனோடு வந்தார்கள் அழகியும் சரணும். பின் வந்த அரசனை பார்த்து இமையாவிற்கு கோபப்படுவதா இல்லை இன்னும் என் பிறந்தநாளை நினைவு வைத்திருப்பவனை நினைத்து அகம் மகிழ்வதா என இரு வேறுபட்ட மனநிலையில் இருந்தாள்.

'கதிர் வந்து இருப்பாரா' மனதில் எண்ணங்கள் வலம் வந்தது. ஆனால் கதிர் வரவில்லை என்று தெரிந்ததும் முகம் சுருங்கியது.

கேக் கட் செய்து முடித்ததும், கதிரிடமிருந்து கிப்ட் வந்து இருப்பதை பார்த்தாள்.

“ஹேப்பி பர்த்டே இமையா” அரசன் வாழ்த்தினான்.

“லவ் யூ இமையா… மிஸ் யூ” என கூறிவிட்டு அரசன் விடைபெற்றான்.

கதிர் அனுப்பிய கிப்ட்டை அழகி இமையாவிடம் கொடுத்து "இமையா மாப்பிள்ளை இப்பவே பிரிச்சி பார்க்க சொன்னார்"

'லூசு ஒரு ஃபோன் கூட செய்து விஷ் செய்யலை. அவன் கிப்ட்ட ஓப்பன் செய்யவே கூடாது' என மனதில் நினைத்தவள் அதனை ஓரம் வைத்து கட்டிலில் உட்கார்ந்து வெறிக்க வெறிக்க வந்திருந்த கிப்டை பார்த்து கொண்டிருந்தாள்.

"இமையா டைம் ஆகிடுச்சி தூங்கு"

"சரி மா" என்றவள் மெத்தையில் சோர்வாக சரிந்தாள். அடிக்கடி கதிரிடம் இருந்து கால் வருமா என்ற ஏக்கத்தோடு அந்த போனை பார்த்திருந்தாள். ஆனால் வரவில்லை.

ஒரு பக்கம் கதிர் தன்னை அழைத்து விஷ் செய்யவில்லை என்ற கோபமும் மறு பக்கம் அந்த கிப்ட்டை திறந்து பார்க்கும் ஆர்வமும் அவளது மனதை பிராண்டியது.

"சரி பிரித்து தான் பார்ப்போம்" என்று நினைத்தவள், அந்த மீடியம் சைஸ் பெட்டியை எடுத்து மெத்தையில் வைத்து பிரிக்க துவங்கினாள்.

அதில் அன்று, அவன் அவளுக்காக வாங்கி வைத்த புடவை இருந்தது. அதில் ஒரு குறிப்பு வேறு.

“ஆயிரம் முத்தங்களுடன்… உன்ற புருஷன்”

"இது தான் அன்னைக்கு வாங்கியது போல. அதை எப்படி இப்போ அனுப்பிருப்பான்? இருந்தாலும் ரசிகன்டா நீ. என்னமா எடுத்து இருக்கான்" என்று நினைத்து தன் மேல் போட்டு அழகு பார்த்தாள்.

"நாளைக்கு இது தான் போடனும். அதுக்கு முன்னாடி அவனை வச்சி செய்யனும்"

தன்னை கண்ணாடியில் புடவையோடு பார்த்து இருந்தவளுக்கு, போன் சத்தம் கேட்கவும் துள்ளி குதித்து வந்தாள், கதிராக தான் இருக்கும் என்று நினைத்து.

புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

'இந்த நேரத்தில் யாராக இருக்கும்' யோசனையில் போனை எடுத்தவள்

"ஹாலோ யாரு?"

"நான் தான் உன் புருஷனோட தங்கச்சி"

'இவ எதுக்கு கால் செஞ்சி இருக்கா. ஒருவேலை விஷ் செய்யவா இருக்குமோ? அவ்வளவு நல்லவ இல்லையே இவ'

"சொல்லுங்க என்ன விஷயம்"

"உனக்கு மனசாச்சின்னு ஒன்னு இருக்கா?" அவளது பேச்சு இமையாவுக்கு கடுப்பை கிளப்பியது.

பாவம் என்று எவ்வளவு நாளுக்கு தான் அமைதியா இருப்பாள்.

"அதை கேட்கத்தான் இந்த நேரத்தில் போன் செஞ்சியா. என் மனசாச்சியை அடகு கடையில் வச்சி இருக்கேன் போதுமா. உன் சந்தேகம் தீர்ந்ததா. போனை வை. நல்ல நாள் அதுவும் வந்துட்டா"

"என்னடி ஓவரா பேசிட்டு இருக்க"

"பார் யூவர் கையின்ட் இன்பர்மேசன். நானா போன் செய்து ஓவரா பேசலை"

"எங்க அவன்"

"எவன்?"

"அதான் உன் புருஷன்"

"அங்கே தானே இருக்கார். என்கிட்ட கேட்குற"

"அவன் போய் பத்து நாள் ஆச்சி... கொஞ்ச கூட பாசமில்ல பெத்தவ மேல?"

"என்ன சொல்லுற வந்து பத்து நாள் ஆச்சா?"

"ஆமா... இங்க நான் தனியா கஷ்டபட்டுட்டு இருக்கேன். அவன் அங்க வந்து ஜாலியா லவ் ஸ்டேடஸ் பர்த்டே ஸ்டேடஸ் வச்சிட்டு இருக்கான்"

"அவர் என்னை இன்னும் பார்க்க வரலை. நான் அப்புறம் கூப்பிடுறேன் வை" முதலில் அவளது தண்ணீரில் நனைந்த போனை எடுத்து ஆன் செய்தாள்.

'நல்ல வேலை போனுக்கு எந்த பாதிப்பும் இல்லை' மனதில் நிம்மதியோடு நெட்டை ஆன் செய்து வாட்சப் நுழையும் போது போன் சார்ஜ் இல்லாமல் தன் உயிரை விட்டு இருந்தது. அதனை சார்ஜரில் போட்டவள்

தொடர்ந்து கதிரின் நம்பருக்கு அடித்துக்கொண்டு இருந்தாள்.

"என்ன இவன் எடுக்க மாட்டங்குறான். சரி காலையில் பாத்துக்கலம்" என்று தூங்கி போனாள் இமையா.

அடுத்த நாள் அழகாக விடிந்தது. இமையா வேகமாக தயாராகி கதிர் அனுப்பி வைத்த புடவையை எடுத்து அணிந்து போனை எடுத்துக்கொண்டு

"அம்மா அப்பா நான் என் வீட்டுக்கு போறேன். கதிர் அங்க தான் இருக்கார். வரேன் நான் அங்க போற விஷயம் உங்க மாப்பிள்ளைக்கு தெரியக்கூடாது"

இருவரும் எவ்வளவு தடுத்தும் இமையா கார் புக் செய்து தனது வீட்டை நோக்கி போனாள்.

'அவனுக்கு இருக்கு... எவ்வளவு தைரியம். இங்க ஒருத்தி அவன் மேல பைத்தியமா சுத்திட்டு இருக்கா. அதை எல்லாம் விட்டுட்டு வீட்டில் ஜாலியாவா இருக்கான். வீட்டில் வைத்திருந்த புடவைய எப்படி அவன் அனுப்பி இருப்பான். அப்பவே நினைத்தேன். பாசம் இல்லாத சைக்கோ'

இத்தனை நாள் பொறுத்து இருந்த இமையாவுக்கு அந்த அரை மணி நேரம் பொறுக்க முடியாமல் தனது போனை உயிர்ப்பித்தவள், புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தாள்.

அவனுக்கு மருந்து போட்டு விட்டது, அவனது தலையில் பேன்ட் கிளிப் வைத்தது, அவள் தூங்கும் போது கலைந்த முடியுடன் எடுத்த போட்டோ என வித விதமான போட்டோக்கள் இமையாவை எடுத்து வைத்திருந்தான்.

ஒன்றில் கூட அவன் முகம் காட்டவில்லை. கைவைத்து மறைத்து இருப்பது போலவும் அவன் தலைமுடி தாடி மட்டும் தெரிவது போலவும் இருந்தது.

'சரியான பிராடு... போட்டோல அவன் இருக்கன்னு பொய் சொல்லி இருக்கான்'

கடைசியாக இருந்த போட்டோவில் அவனது கையை பார்த்து அதிர்ந்தாள் இமையா. அவளது வாய் ஒரு பெயரை முணுமுணுத்தது.

வீடும் சில நிமிடங்களில் வந்தது. வேகமாக இறங்கி வீட்டில் தேடியவளுக்கு இருவரும் கல்யாணத்தின் போது எடுத்துக்கொண்ட ஆளுயர புகைப்படம் தான் இமையாவை வரவேற்தது.

"அப்போ இது இது... கதிரா... " என இமையா மயங்கி சரியவும், அவளை ஓடி வந்து கதிர் என்ற பெயரில் மறைந்து இருக்கும் அரசன் பூ போல தாங்கி பிடிக்கவும் சரியாக இருந்தது.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 35

வாசலில் வந்து இறங்கியவளின் மனதில், 'ஏன் கதிர் இந்த வேசம்? எதுக்கு இப்படி… நீ சொல்லியே கல்யாணம் செஞ்சி இருக்கலாமே'

'மனதில் ஒருவனை வைத்து வேறு ஒருவனிடம் தாலி வாங்குவது எவ்வளவு கொடுமை தெரியுமா?'

'போக போக கதிரை பிடித்து இருந்த போது கூட உன் நினைவு வந்து என்னை வாட்டியதே'

'உன்னை மனதில் இருந்து தூக்கி போட்டு கதிரை மனதால் ஏற்றுக்கொள்ளும் போது மீண்டும் வந்து நான் தான் உன் புருஷன்னு வந்து நிற்கிறியே ஏன்?' என மனதில் ஆயிரம் கேள்விகள் அவளுக்குள்.

குழப்பத்தில் அடி எடுத்து வைத்தவளுக்கு சுற்றி இருந்த புகைப்படத்தை பார்த்து தான் மயக்கம் வந்தது.

"இமையா... என்னாச்சி?" கதிர் தனது குரலில் கதறினான்.

அவளை அப்படியே படுக்க வைத்தவன், தண்ணீரை முகத்தில் அடிக்க

அவள் முதலில் அழைத்தது கதிரை தான்.

மயக்கத்தில் இருந்து எழுந்தவள், முன்னிருக்கும் மலைமாடை சுடும் பார்வையால் வெறித்தாள்.

"கண்ணம்மா சாரி... உன்னை கஷ்டப்படுத்த செய்யலை"

"நீ பேசாத... என்னை கஷ்ட படுத்தி பார்க்க தானே உனக்கு பிடிக்கும்" என்று இமையா கதறினாள்.

"இமை அழுவாத மா... உன்னை விட்டு போகும் எண்ணம் கொஞ்ச கூட எனக்கு இல்லை. நீ என்னை உன் வாழ்ககையில் இருந்து துரத்த செய்தது எனக்கு தெரிய வந்தது.

சரி கொஞ்ச நாள் அமைதியா இருந்தா சரியா போகிடும் என்று நினைத்தேன். ஆனா நீ வேற போல ஆகிட்டு வந்த.

அதான் உன்கிட்ட பேசலை. உனக்கு பார்வை போனப்ப தான் தெரிந்தது, என்னை விலக்கி வைக்க தான் நீ இப்படி செஞ்சி இருக்கன்னு. அதான் நான் வந்த ஏத்துப்பியோ இல்லையோன்னு இந்த கதிர் வேசம்" என்றான் அரசன் தலையை கவிழ்த்து கொண்டு.

இமையாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆம் அவள் மீதும் தவறு இருக்கிறது. அவளாக தான் அவனை முதலில் விலக்க நினைத்தாள், அந்த கனவிற்கு பிறகு. கிட்டத்தட்ட பல மாசம் அரசனை டார்ச்சர் செய்து கொண்டு இருந்தாள்.

அவனும் பொறுத்து பொறுத்து பாரத்தவன், ஒரு நாள் வெடித்துவிட்டான். அதன் பிறகு... ஆறு மாதத்தில் ஏதேதோ ஆகிவிட்டது இமையா வாழ்க்கையில்.

கதிர் நெருங்கி உட்காரும் போதும் சரி கைபிடித்து அழைத்து போகும் போதும் சரி இமையாவுக்கு அரசன் நினைவு தான் வரும். ஆனால், அவள் கதிரை தொட்டு பார்ப்பாள்.

ஆனால் வித்தியாசமாக தான் இருந்தது. அரசன் கைகள் மென்மையாக இருக்கும். கதிரின் கைகளில் நரம்புகள் எல்லாம் புடைத்து இருக்கும்.

சில நேரங்களில் கதிரின் நெருக்கம் அரசனை நினைவு படுத்தும்போது தன்னை தானே கடிந்துகொள்வாள், அவனின் நினைவுகள் வரக்கூடாது என. இனி நமக்கு கதிர் தான் காதலன் கணவன் எல்லாம் என்று முடிவு எடுத்தவள், அதன் பிறகு வந்த நாட்களில் வெற்றியும் கண்டாள்.

கடந்த காலத்தை மறந்து தன் கணவனுடன் எதிர்காலத்தில் பயணிக்க துவங்கினாள்.

"இமையா சாரி... நான் உன்னை ஏமாத்த செய்யலை இது எல்லாம்..... "

"கதிரா..." அவனை தாவி அணைத்துக்கொண்டாள்.

"நான்... வேணும்னு இது செய்யலை. உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு செஞ்சது" என்று இந்த முறை தலை குனிவது இமையாவின் முறை ஆனது. தன்னை அணைத்தவளை பிரித்து எடுத்தவன்

"இமையா இங்க பாரு... இதுல இரண்டு பேர் தப்புமில்லை. நீ என்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைச்ச. நானும் அரசனா உன்கிட்ட திரும்ப வந்து உன்னை சங்கடப்படுத்த விரும்பல அதான். உனக்கு பிடித்தது போல இந்த அப்பியரன்ஸ், தலை தாடி எல்லாம் உனக்கு பிடிச்சது போல வச்சிக்கிட்டேன். பிடிச்சிருக்கா?"

"இது எல்லாம் எனக்காகவா..." இமையாவின் கண்கள் ஆச்சரியத்தல் விரிய

"ஆமா... உனக்காக மட்டும் தான். ஒரு நாள் கோபத்துக்காக உன்னை விட்டு போகும் அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லை இமையா"

"அரசா... ஐ லவ் யூ" அவனை அணைத்து கொண்டவள், அவனது முகத்தை தன்னை நோக்கி பார்க்க வைத்தவள், ஏதோ சொல்ல வருபவனின் இதழை சிறை பிடித்தாள். அவனிடம் இருந்து பிரிந்து

"எந்த எக்ஸ்பிளைனேசனும் தேவையில்லை. எனக்கு புரியுது. சொல்லி தான் தெளிவு படுத்தனும்னு அவசியம் இல்லை" தன் இதயத்தை தொட்டு காட்டி

"இங்கே புரிஞ்சிடுச்சி. இது போதும்" அவனை அனைத்துக்கொண்டாள். எவ்வளவு நேரம் ஒருவர் பிடியில் மற்றொருவர் இருந்தனர் என தெரியவில்லை.

வேகமாக அரசனை விலக்கியவள், அவனை சரமாரியாக அடிக்க துவங்கினாள்.

"ஆ... வலிக்குது இமையா எதுக்கு இப்படி காட்டு தனமா அடிச்சிட்டு இருக்க" அவளது கையை அடிக்க விடாமல் இறுக பிடித்துக்கொண்டான்.

"கையை விடுடா. ஆத்திரம் தீரும் வரை உன்னை அடிக்கனும்"

"என்னான்னு சொல்லிட்டு அடி டி"

"எனக்கு கதிரை லவ் பண்ண தொடங்கும் போது ஏதோ போல இருந்தது தெரியுமா. எப்படி இரண்டு பேர் மேலே லவ் வரும்ன்னு எவ்வளவு வலிச்சது தெரியுமா" இமையா உதட்டை பிதுக்கி அழுக தொடங்கவும்

"என் பட்டு தங்கம்ல எதுக்கு அழுவுது?" அரசன் குரலில் பேச

"நீ பேசாதே என் புருஷன வந்து பேச சொல்லு" இமையா அரசனை முறைக்க

கதிரை தொண்டையை செறுமிக்கொண்டு கதிரின் குரலில் பேசினான். அதே பழைய கரகரப்பான குரல்

"என் குட்டி பட்டு எதுக்கு அழுவுதாம்"

"நீ ஏன் என்னை சீட் செஞ்ச. அதுக்குதா வலிக்குது" என குழந்தையாக முறுக்கி நிற்க

"எனக்கு தெரியும் இந்த குட்டி வயிருக்கு பசிக்குது தானே?" கதிர் அரசன் இமையாவின் வயிற்றில் தனது முரட்டு கைகளை வைத்து வருடி விட

இமையா கூச்சத்தில் நெளிந்து அவனது கைகளை தட்டி விட்டாள்.

"என்னவாம் இன்னும் கூச்சம் போலயா"

"ஆ... புதுசா இருக்கு அரசன். முன்ன விட ரொம்ப கூச்சமா இருக்கு"

"அப்புறம்..." கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு இமையாவை வெளிப்படையாக ரசித்தான்.

"என்ன இது. கன்னத்தில் கைவச்சிட்டு பார்த்துட்டு இருக்கிங்க"

"எப்பவும் பார்க்கிறது தானே இது" என்றான் இன்னும் வாகாக அமர்ந்துக்கொண்டு.

"எதே எப்பவுமா? பார்வை இல்லாத அப்போ இப்படி தான் பார்த்துட்டு இருந்திங்களா?"

"ஆமா நினைக்கும் போது எல்லாம் இப்படி தான் பார்த்துட்டு இருப்பேன்"

"சரியான ஜொள்ளு
பார்ட்டி"

"இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே...
ஆமா எப்படி என்னை கண்டு பிடித்த"

"உங்க சுண்டு விரல் மச்சத்தை வைத்து தான்"

“அறிவாளி பொண்டாட்டி. என்னை கண்டு பிடிக்க கூடாதுன்னு நான் பிளான் பண்ணா இந்த இத்துன்டு மச்சம் காட்டி கொடுத்துடுச்சா” என சலித்தவனை வீராப்பாக பார்த்தாள்.

“அது தான் இமையின் திறமை”

அதன் பிறகு இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பார்க்க

"ஏங்க நம்ம கல்யாண போட்டோ எல்லாம் வந்துடுச்சா"

"அது எல்லாம் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்திலேயே வாங்கிட்டேன்"

கதிர் மண்டையில் பலமாக ஒரு கொட்டு கொட்டினாள்.

"அதை காட்டாம இன்னும் என்ன செஞ்சிட்டு இருக்க"

"இதோ காட்டிடுறேன்" என்று கதிர் கரகரப்பான குரலில் சொல்ல

அவனது தொண்டையை வருடி விட்டவள், "குரல் மாத்தி பேசுரதால வலிக்கலையா" பரிவோடு கேட்டாள் இமையா.

"முதலில் வலிச்சது. அதுக்கு அப்புறம் எல்லாம் பழகிடுச்சி" இமையா அவன் குரல் வளைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

"இமை குட்டி கூசுது" கதிர் நெளிந்தான்.

"போதும் அரசா உன் குரலிலேயே பேசு"

"அப்பா இதை எப்போ நீ சொல்லுவன்னு காத்துட்டு இருந்தேன்"

"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு கதிரா"

"என்ன?"

"ஹாஸ்பிட்டலில் இரண்டு பேரும் சண்டை போல கிரியேட் செய்திங்க சரி. வீட்டுக்கு வந்து பார்த்திங்க நினைவு இருக்கு. அப்போ ஏன் அம்மா அப்பா உங்களை தெரிந்தது போல காட்டிக்கல?"

"அத்த மாமாக்கு கல்யாணம் முன்னவே எல்லாம் சொல்லிட்டேன்"

"சரியான பிராடு இரண்டு பேரும். அவங்களுக்கு இருக்கு...

இன்னைக்கு உங்க தங்கச்சி மட்டும் கால் செய்யாம இருந்து இருந்தா என்ன ஆகி இருக்கும். இன்னும் எத்தனை மாசத்துக்கு ஒளிந்து திரிந்து இருப்பிங்க"

"தங்கச்சியை விட்டு பேச சொன்னதே நான் தான்"

"சரியான கேடி டா... உங்க வீட்டில் உன்னை ஏத்துகிட்டாங்களா?"

"ஏத்துக்கிட்டாங்க... உன்னையும் சேர்த்து"

"எப்படி"

" அம்மாவை சாக்கா வச்சி தான்" என தன் ஒற்றை கண்ணை அடித்தான்.

"சரியான பிராடுடா நீ. அத்தை மாமக்கிட்ட பேசலாமா"

"ஓ... பேசலாமே" கதிர் தங்கைக்கு போன் போட்டான்.

"அண்ணா எப்படி இருக்க. அண்ணி எங்கே"

"ம்ம்ம் நலம்... இங்க தான் இருக்கா"

"சாரி அண்ணி. ஏதோ கோபத்தில் அப்படி செஞ்சிட்டேன்"

"உன் நிலை புரியுதுமா விடு. அத்தை மாமா எங்க?"

"அப்பா அம்மாக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு இருக்காங்க" என்றாள் கதிரின் தங்கை வள்ளி.

"எது நம்ம அப்பாவா அதிசயமா இருக்கே"

"எல்லாம் உங்க இரண்டு பேரையும் பார்த்து தான். இருங்க போனை கொடுக்கறேன்" இமைக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது கதிரை பார்க்க.

இமையாவை ஸ்கிரினில் பார்த்ததும்

"மருமகளே எப்படி இருக்க... பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"நன்றி மாமா. அத்தை உடம்பு இப்போ பரவாயில்லையா?"

"பரவாயில்லை மா. உனக்கு இப்போ பரவாயில்லையா?"

"இப்போ நல்லா இருக்கு"

சிறிது நேரம் அனைவரும் பேசிவிட்டு உட்கார

"அரசனுக்கு இப்போ சந்தோஷமா?"

"ரொம்ப சந்தோஷம்...அரசிக்கு சந்தோஷமா?"

"இந்த சந்தோஷத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டா"

"சீக்கிரம் சொல்லு" கதிர் பறந்தான்.

"ஊஞ்சல் கிட்ட கூட்டிட்டு போ. அப்போ தான் சொல்லுவேன்" என்றாள்.

"சரி வா போலாம் அரசி" கதிர் எழுந்து நின்றான்.

"முடியாது கதிர்"

"அப்புறம் எப்படி அங்க போவதாம்?" கொஞ்சும் குரலில் பேச.

"தூக்கிட்டு போ என்னை"

"சரி சரி...." அவளை தூக்கி தோட்டத்துக்கு போனான்.

"கதிரா..."

"சொல்லுடா அரசி"

"அரசி வேண்டாம் இமை குட்டி கூப்பிடு" அவன் தோளில் ஓய்யாரமாக சாய்ந்து கொண்டாள்.

"என்ன ஓவர் சாப்பாடா அம்மா வீட்டில. வெயிட் கூடிட்ட"

"ஆமா ரொம்ப சாப்பிட்டேன். இரண்டு பேர் சாப்பாடு அதான்"

"சரி சரி... ஏன் நீ அரசன்னு கூப்பிடலை. அரசினு கூப்பிட வேண்டா சொல்லுற?"

"அது எனக்கு அந்த அரசனைவிட இந்த தாடி வச்ச கதிர் கரடி தான் பிடித்து இருக்கு"

"சரி சரி..." அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

"தோட்டத்துக்கு வந்துட்டோம். சீக்கிரம் சொல்லு"

"என்ன அவசரம்... ஊஞ்சல் கிட்ட கூட்டிட்டு போங்க"

ஊஞ்சலை நோக்கி நடந்தவன், "இப்போ சொல்லு"

"உட்காருங்க அப்படியே" இமையாவை கையில் ஏந்திக்கொண்டு உட்கார்ந்தான்.

"நீ லவ் தானே சொல்ல போற, எனக்கு தெரியும்" அவளது நெற்றியோடு தனது நெற்றியை மோதி சொல்ல.

"பாப்பா லவ்ஸ் அப்பா"

"என்ன இமையா மூளை குழம்பி போய்யிடுச்சா. லவ் யூவ நேரா சொல்லு"

"இல்ல..." கதிரின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்துக்கொண்டு

"பாப்பா லவ்ஸ் அப்பா"

"இமையா ஆமாவா?"

"ஆமா" இருவருக்கும் இந்த நொடி எல்லை இல்லாத ஆனந்தத்தை கொடுத்தது.

பல போராட்டங்களும் மனவருத்தங்களும் ஒரு வழியாக முடிந்து இருவரும் நிம்மதியாக தங்களது காதலை பரிமாறிக்கொண்டு, இனிமையாக தங்கள் குழந்தையோடு அடுத்த அத்தியாயத்தை தொடங்கினார்கள் மன நிறைவோடு.

இந்த மகிழ்ச்சி என்றும் குறையாமல் காதலை வளர்த்தார்கள் இந்த ஜோடி.

இரட்டிப்பு சந்தோஷம் இமையாவுக்கு அவளது இரண்டு காதலும் ஒருவனே என தெரிந்த போது. அவள் மனதில் தேங்கி இருந்த சிறு குற்ற உணர்ச்சி நீங்கியது.

ஒருவர் மீது ஒருவர் உயிராக இருந்தார்கள். தனது துணையின் வலியையும் தனது வலியாக பாவித்து அப்படி ஒரு பிணைப்பு இருவருக்கும்.

அவளது ஆசைப்படி கதிரின் மடியில் உட்கார்ந்த இமையாள் அரசியின் வயிற்றை பூபோல கட்டி அணைத்திருந்தான் கதிர். இந்த ஊஞ்சல் இருவருக்கும் பேவரேட் இடமாகி போனது.

“டேய் எனக்கு ஒரு டவுட்”

“என்னா டவுட்” என அவளது பின் கழுத்தில் முகம் புதைத்த கதிரின் மண்டையில் கொட்டினாள் இமையாள் அரசி.

“வலிக்குது உன் டவுட்டை சொல்லு டி”

“அது என்ன உலகத்தில் கோடிக்கணக்கான பேர் இருக்கும் போது கதிர்னு ஏன் வச்சிருக்க” யோசனையாக கேட்டாள்.

“என் முழுபெயரில் பாதி”

“பாதியா! அரசன் கதிர் ஆஆ…”

“நல்லா மேட்ச் செய்ற… டுபுக்கு மாதிரி”

“அப்போ நீயே சொல்லுடா”

“கதிரேசன்…”

“ச்சி… நல்லாவே இல்லை. கதிரா தான் நல்லா இருக்கு” என்றவள் அவனை திருப்பி அவனது தலை முடியை இழுத்து அவனது முன் நெற்றியில் முத்தமிட்டாள்.

இப்படியே நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் இந்த காதல் நிரம்பிய காதலர்கள்.
 
Status
Not open for further replies.
Top