ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் விழியின் மொழி...நானடி - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 1

“மா.. என்னால முடியல மா. உங்க சந்தோஷத்துக்குனு நினைச்சி இப்ப பெரிய தப்பு செய்வது போலிருக்கு மா, என்னை உங்களுக்கு பாத்துக்க கஷ்டமாயிருந்தா அனாதை ஆசிரமத்தில சேர்த்திடுங்க" என தன் இயலாமையை நினைத்து கலங்கினாள் இமையா.

‘தன்னால் தனியாக எழுந்து நிற்க கூட வழியில்லாத போது இந்த திருமணம் தேவையான ஒன்றா? எதுக்கு என்னை என் பெற்றோருக்கு பாரமாக்கிவிட்டாய்’ என்று தன் மனதால் கடவுளிடம் சண்டைக்கு நிற்கத்தான் தோன்றியது.

ஆனால் அந்த கடவுளிடம் மட்டுமல்ல யாரிடமும் அவளுக்கான பதிலில்லை. “என்னால எதும் செய்ய முடியாத நிலையில் இருக்கோம் இமை. அப்பா முகமே சரியில்லை. என்னத்தான் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க நினைத்தாலும் அவருக்குள்ளும் வலி இருக்கு மா புரிஞ்சிக்கோ. எங்களை விட மாப்பிள்ளை உன்னை கண்ணும் கருத்துமா பாத்துப்பார். கொஞ்சம் சிரிச்ச முகமா இரு கண்ணு" என்று இமையாவின் அம்மா உடைந்த குரலில் சொல்லிவிட்டு செல்ல,

“கண்ணுப்போல...எப்படி பாத்துப்பான்னு நானும் பார்க்கத்தானே போறேன்" என அவளை திருமணம் செய்ய இருப்பவனை மனதில் நிறுத்தி 'உன்னை நான் படுத்துர பாட்டுல ஓடிப்போக வைக்கிறேன் பாருடா. நீ என்ன பெரிய தியாகியா? என்னை உயிரா நினைச்சவனையே அடித்து விரட்டிய வீர மங்கைடா.. நீ எல்லாம் எனக்கு பிஸ்கோத்து டா மடப்பயலே! என்னோட ஒரு நாள் கூட உன்னால வாழ முடியாது. கை, கால் நல்லா இருக்கும் போதே நான் டெவில். இப்ப சொல்லவாவேணும். என் உடல் நலம் வேணும்னா ஊனமா இருக்கலாம் என் விஷம் தடவிய நாக்கு உன்னை சும்மா விடாதுடா’ மனதில் ஒரு பெரிய பட்டிமன்றத்துக்கு பேசுவது போல ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தாள்.

பெண்ணை அழைத்து செல்ல கதிரின் கார் வந்து நின்றது. இமையாவையும் அவள் குடும்பத்தையும் ஒரு காரில் அனுப்பிவிட்டு, கதிர் அவனது நண்பனின் காரில் முன்னே சென்றான்.

மண்டபத்தில் அனைத்து சொந்தங்களும் மணமக்களுக்காக காத்திருந்தது.

கதிர் வரவும், எளிமையாக ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்கள்.

வழி முழுவதும் அம்மா இமையாவுக்கு பாடம் எடுத்துக்கொண்டு வந்தார். “சிரித்த முகமாக இருக்க வேண்டும் புரியுதா. வெளி ஆளுங்க கண்ணை உறுத்தாத வகையில் இரு” இமையா காதில் இரத்தம் வரவில்லை. மற்றபடி காது வலிக்க வலிக்க அட்வைஸ் கேட்டுக்கொண்டு வந்தாள். அதன் விளைவாக இமையா மண்டபத்தின் வாசலில் சிரித்த முகமாக காரிலிருந்து இறங்க, அவளுக்கு உதவிக்கு இரு பெண்கள் இருபுறமும் துணையாக நடந்து வந்தார்கள்.

கதிர் இமையாவை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘வீட்டில் எளிமையான அழகிலிருந்தவள், இந்த புடவை அலங்காரத்தில் தேவதை போல காட்சியளித்தாள். ஆம் இவள் என் தேவதை. என் கைகளில் தவழவிருக்கும் என் முதல் குழந்தை. இனி அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கசிந்தால் கூட என் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்' என நிலா, வானம், காற்று இந்த பசுமை மரங்களுக்கு மத்தியில் நின்று இயற்கையின் மீது மனதாக சத்தியம் செய்து முடித்தவன், தன்னவள் சிரித்த முகமாக வருவதை பார்த்து பூரித்து நின்றான்.

‘அழகி.. அவளது செவ்விதழ்களை விட, அவளது கண்கள் நூறு அபினயங்கள் காட்டுது என் செல்ல ராட்சசி. ஆனால் அந்த கண்ணில் எப்போது பழைய மகிழ்ச்சியை பார்ப்பேன்' என ஏக்கத்தில் தவித்தவாறு நின்றிருந்தான் கதிர்.

வானவேடிக்கைகள் சூழ, இருள் வானத்தில் நட்சத்திரம் வானவேடிக்கையுடன் போட்டிப்போட்டுக் கொண்டிருந்தது. யார் அதிகம் ஜொலிப்போம் பாப்போமா? என்பது போல நட்சத்திரமும், பட்டாசுகளும் பேசிக்கொள்வதாக ஒரு பின்பம் தோன்றியது கதிருக்கு.

‘கதிரு ஓவரா கற்பனைக்கு போகாதடா… பைத்தியம்’ என்று தன்னை தானே தலையில் அடித்துக்கொண்டு அவளது சிரித்த முகத்தை ரசித்தான்.

மற்றவர்களுக்காக சிரித்த முகத்தோடு வரும் அவளை பார்த்ததும் கண்டுகொண்டான். ஒரு காலத்தில் அந்த சிரித்த முகத்துக்கு அடிமையாகித்தான் பின்னாடி சுற்றித் திரிந்திருக்கிறான். அவனுக்கு தெரியாதா அவளது உண்மை முகம்?

'சரி போகப்போக சரி செய்துவிடலாம்' என்ற நம்பிக்கையில் வாசலில் நின்றிருந்தான்.

அருகில் இருந்த அவளது சொந்தகார பெண்

“ஏய் மாப்பிள்ளை முடி எல்லாம் வளர்த்து, கொஞ்ச தாடி.. ஜிம்பாடி… அப்படியே துல்கர் சல்மான் போல செமையா இருக்கார்டி" என சொன்னதும் அவளது கண்கள் விரிந்துகொண்டது.

‘இது எப்படி சாத்தியம். கல்லூரி படிக்கும் போது தனது கணவனுக்கு ஒரு பின்பம் வைத்திருந்தாள். அது அப்படியே இவனிடம் எப்படி பொருந்துகிறது' என்ற ஒரு குழப்பத்தில் நடந்துவந்தவளின் முகத்தில் ஒரு ஒளிப்பட்டது.

அவ்வொளியை உணர்ந்த பிறகு, அவள் மனதில் ஒரு உற்சாகம் பிறந்தது. அந்த உற்சாகத்தின் காரணத்தை அம்மா அழகியிடம் பகிர்வதற்கு தேட, கல்யாண வேலையில் வர முடியாமல் போனது அவரால். அதில் கோபம் கொண்ட இமையா ‘நல்ல விஷயம் சொல்ல கூப்பிட்டா வரலையில்ல. பாத்துக்கறேன் உங்களை.. இந்த விஷயத்தை என் வாயால் சொல்ல மாட்டேன்’ என்று மனதில் அழகியை அழகாக திட்டிக்கொண்டு வந்தாள் இமையா.

வானவேடிக்கைக்கு எல்லையேயில்லாமல் படபடவென.. மழை ஜோராக பொழிவது போல விடாது வெடித்துக்கொண்டிருந்தது.

அந்த வெளிச்சம் இமையா மீதும் அவள் அணிந்திருந்த ஆபரண கற்கள் மீதும் பட, இமையா மின்னிக் கொண்டிருந்தாள்.

ஊரில் உள்ள அனைத்து பெண்களும் இமையாவை சுற்றித்தான் வந்துகொண்டிருந்தனர்.

வானத்தில் இருளில் வண்ண வண்ண பூக்களை போல சிதறிக்கொண்டிருந்தது வானவேடிக்கைகள்.

கதிர் கண்கள் எனும் கேமராக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். அந்த அழியாத புகைப்படத்தை, தனது நெஞ்சம் எனும் சேமிப்புகிடங்கில் பதுக்கிவைத்தவன், நாளை நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணி கனவுகளில் மிதக்க துவங்கினான்.

இங்கு நடக்கும் அனைத்தையும் ஆ.. வென பார்த்துக்கொண்டிருந்தான் கதிர். அவன் வந்த போது ஏதோ பெயருக்கு ஒரு ஆரத்தி எடுத்தார்கள். ஆனால், இமையாவுக்கு ஆரத்தி எடுக்க வரிசையாக நின்றனர், வீட்டு பெண்கள்.

அவை அனைத்தும் முடிந்துவிட, கடைசியாக அந்த ஊரின் மூத்த பெண்மணிகள் இமையாவின் முன் வந்து நின்று சுற்றிப்போட்டார்கள்.

“ஊரு கண்ணில் தொடங்கி…, மிருகங்கள், பறவைகள்.. பூச்சாண்டி, பேய் பிசாசு… கடைசியாக மாப்பிள்ளை வரை பட்ட கண்ணு.. எல்லாம் பட்டு போக" என்று முடித்து அந்த திருமணம் விழாவை, இன்னும் மகிழ்ச்சியாக துவங்கி வைத்தார்கள் அந்த கிண்டலுக்கு பேர் போன கிராமத்து கிழவிகள்.

“அடக்கிழவிங்களா.. உங்களுக்கு கலாய்க்க நான் தான் கிடைச்சனா?” மனதில் அர்ச்சித்தவன், இமையாவை கண் சிமிட்டாமல், மீண்டும் ரசிக்க துவங்கியிருந்தான்.

இமையா, கதிர் என ஒருவன் இருப்பதை கூட கண்டுகொள்ளாது தன் தோழிகளுடன் எதையோ சிரித்துப் பேசிக்கொண்டே போனாள்.

கதிரும் இமை கண்டுகொள்ளாது போனதை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ளவில்லை. அந்த பெண் கூட்டத்தை தொடர்ந்து போனான் கதிர்.

அடுத்ததாக நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியது. இமையா முகத்தில் இப்போது நன்றாகவே சிரிப்பு வந்திருந்தது. கதிரும் குடும்பத்தினரும் இமையாவின் திடீர் சந்தோஷத்தில் காரணம் புரியாமல் ஒரு வித பதற்ற குழப்பத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர்.

கிராமத்து முறைப்படி நிச்சயத்தார்த்தம் நடக்க துவங்கியது.

மண்டபத்தின் வாசலிலிருந்து பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என இரண்டு பக்கமும் இமையாவின் உறவினர்கள் தான் இருந்தார்கள்.

கதிர் குடும்பத்திற்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என ஒருத்தரும் வர தயாராகயில்லை. கதிருக்கு வருத்தம்தான் இருந்தாலும் இமையாவை இந்த நிலையில் விட மனம் கேட்கவில்லை.

இமையாவுக்கு அத்தை முறை இருப்பவர்கள் முதலில் வரிசையாக இமையாவுக்கு தேவையான புடவை, பூ, நகை, பழம் என சீர்வரிசை வைத்தனர்.

அதன் பின் இமையாவிற்கு சித்தி, பெரியம்மா, அக்கா முறையிலிருப்பவர்கள் கதிருக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வர, இரண்டு குழுவும் வந்து மேடையை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

நிச்சய உடை கொடுத்து மாற்றி வர மணமக்களை அனுப்பிவிட்டு காத்திருந்தனர், குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இருவரும் வர ஆளுக்கு ஒரு மோதிரம் கொடுத்து மாற்றிக்கொள்ள கொடுக்க, கதிரிடமிருந்த ஆர்வம் இமையாவிடமில்லை. கதிர் அவளையே பார்த்து மோதிரம் போட்டுவிட, இமையா மோதிரத்தை வேகமாக போட்டுவிட்டு தன் கையை விலக்கி கொண்டாள். கதிருக்கு அவள் விலகலை ஏற்க முடியவில்லை, இருந்தாலும் கதிர் மனதில் 'கதிர் இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு இதுக்கே சோர்ந்துட்டா எப்படி' என மனதை தேற்றிக்கொண்டான்.

அடுத்து உணவு சாப்பிட போக, சிட்டியில் உள்ளது போல ஒன்றாக எல்லாம் மணமக்களை உட்காரவைத்து சாப்பிட வைக்க மாட்டார்கள். திருமணம் முடிந்த பின் தான் ஒன்றாக சாப்பிட விடுவார்கள்.

எதிர் எதிரே அமரவைத்து சாப்பாடு பரிமாற, கிண்டலும் கேலியுமாக அந்த நாள் முடிந்திருந்தது.

கதிர் கண்கள் இமையாவை மாலை நேரத்தில் இருந்தே மலரை சுற்றும் வண்டாக சுற்றிக்கொண்டிருந்தது. இமையா தனக்கான தனி உலகில் எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு நாள் உடைந்திருந்த அவளது உள்ளம் ஒரு நொடியில் தேறினது போல உணர்ந்தாள். கதிரும் இவளது மாற்றத்தை மனதில் குறித்துக்கொண்டு, தூங்க சென்றான் பல திருமண கனவுகளோடு.

அடுத்த நாள் காலையில்… என்னடா வாழ்க்கையிது என்ற ரீதியில் நினைக்க வைத்தாள் இமையா கதிரை.

காலை விடியலில் எழுந்து திருமண நலங்கு முடிந்ததும் தயாராகி மணமேடையில் உற்சாகத்தோடு கதிர் அமர்ந்திருக்க, மணமேடைக்கு வரவே மாட்டேன் என முகத்தை ஒரு முழம் தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள் இமையா.

அம்மா அழகிக்கும், அப்பா சரணுக்கும் என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு நாள் அப்பா செண்டிமென்ட் வைத்து செய்துவிட்டார்கள். ஆனால் இன்று, இருவரும் என்ன செய்வது என்று திணறினார்கள்.

சரியாக அந்த நேரம் ஐயர் வழக்கமான டையலாக் சொல்லிக்கொண்டிருந்தார் “நல்ல நேரம் வந்துடுச்சி பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ…” என அழைக்க இமையாவின் காதுகளில் விழுந்தாலும் எனக்கென்ன என்பது போல அமர்ந்திருந்தாள்
 
Last edited:

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 2

அழகி மனதில் ‘கதிர் வந்தால் தான் சரிவரும்’ நினைத்தவர் பக்கத்திலிருக்கும் ஒரு சிறுமியிடம் கதிரை அழைத்துவர சொல்லிவிட்டு அவனுக்காக காத்திருந்தார்.

உள்ளே வந்தவன் யாரும் சொல்லாமலேயே அங்கு நடக்கும் நிலைமையை புரிந்து கொண்டான்.

“அத்தை மாமா கொஞ்சம் வெளியே நில்லுங்க" என சொன்ன கதிர் கதவை தாழிட்டான்.

“இனி.. இப்ப என்ன பிரச்சனை..?” என்று கதிர் கேட்க, அவன் நிற்கும் திசையை கூட திரும்பி பார்க்காமல் பேச துவங்கினாள்.

“கொஞ்சம் நீங்க புரிஞ்சிக்கோங்க. நான் வேண்டாம் உங்களுக்கு… எதுக்கிந்த பிடிவாதம். நல்லா தான இருக்கிங்க. உங்களுக்கு ஊனமில்லாத நல்ல பொண்ணு கிடைப்பா" என இமையாவின் குரல் உடைந்து வெளியே வர, என்னதான் மனதில் உள்ள பாரம் இமையாவை அழுக தூண்டினாலும், அவளின் கண்ணீர் பொக்கிஷத்தை இமை சிறையிலிருந்து கீழ் விழாமல் பாதுகாத்தாள் இமையா.

கதிருக்கு அவளின் மன வருத்தம் புரிந்தது. அவன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன்

“சரி… நான் என்ன செஞ்சா இந்த கல்யாணம் நடக்கும்?”

கதிர் பிடிவாதமாக திருமணத்தை எப்படி முடிப்பது என்ற முனைப்பிலேயே நின்றிருந்தான்.

இருவரின் பிடிவாதத்தில் யார் பிடிவாதம் அதிகம் என்று பார்ப்போம் என நின்றனர்.

“நான் என்ன சொல்லிட்டிருக்கேன்னு புரியலையா? இல்லை காது கேட்கலையா?” ஆத்திரத்தில் எரிந்து விழுந்தாள் இமையா.

“இப்ப கல்யாணம் நிறுத்த முடியாது. அத்தை மாமா பத்தி நினைச்சிப்பாரு" கதிரின் வார்த்தைகள் அழுத்தமாக தெறித்தது.

“என்னால முடிலயங்க.. நான் யாருக்கும் பாரமாயிருக்க கூடாதுன்னு பார்க்கிறேன்” இமையா சொல்ல.

“நீ எனக்கு பாரமில்லை. உன் அப்பா போல இல்லை என்றாலும் ஒரு அளவுக்கு உன்னை பார்த்துக்க என்னால முடியும். உடல் ஊனத்தைவிட மனதில் ஊனமிருப்பது தான் தவறு. அந்த வகையில் நீ எங்களோட தங்கம்" கதிர் சொல்லும் போது, இமையா இடை மறித்து,

“எனக்கு மனதிலும் ஊனமிருக்கு. அதனாலத்தான் என்னை உயிராக நினைத்தவன், என்னை விட்டுட்டு போயிட்டான். அவன் விட்டுட்டு போனாலும் அவன்தான் என் மனதில் இப்பவும் நிறைந்திருக்கான். இனி இந்த கல்யாணம் நடக்காதுனு நினைக்கிறேன்" இமையா வெற்றிப்புன்னகை வீசினாள்.

கதிரிடமிருந்து அமைதி மட்டும்தான் வெளிப்பட்டது.

“நான் சொன்னத மாப்பிள்ளை சார் நம்பல போல. என் போனில் அதற்கான ஆதாரமிருக்கு" அவள் அருகிலுள்ள மேஜையின் மீது இமையாவின் போனை வைத்து

“குகூல் போட்டோ போங்க.. அதில் எங்க இருவரது போட்டோக்கள் தான் நிறைந்திருக்கும்" எடுத்து பார்த்ததும் கதிரின் கைகள் நடுங்கியது.

இமையா அவனின் அமைதியில் புரிந்துக்கொண்டாள், கதிர் திருமணத்தை நிறுத்திவிடுவான் என்று.

கதிரின் கண்கள் கலங்கியது. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நின்றிருந்தான் ஆதரவற்ற குழந்தையாக.

“என்ன மாப்பிள்ளை எப்படி இவ்வளவு தூரம் வந்துட்டு எஸ்கேப் ஆகலாம்னு யோசனை போல. கவலையே வேண்டாம்… நானிருக்கேன். அதோ தெரியுது பார் அந்த கதவு வழியா மாடிக்கு போயி ஓடிடு" இமையா கிண்டல் கலந்த குரலில் சொல்ல.

“பேசுவது எல்லாம் பேசி முடிச்சிட்டியா.. ஸ்டேஜிக்கு வா கல்யாணம் செஞ்சிக்கலாம் அதுக்கு அப்புறம் உனக்கு என்ன வேணும் சொல்லு அதை நான் பாத்துக்கறேன்”

இந்த முறை இமையா அதிர்ந்து நின்றாள்.

இமையா தன் ராஜத்தந்திரம் அனைத்தும் தவிடுபிடியாகியதை நினைத்து, மனதில் சற்று முன் இமயமாக உயர்ந்திருந்த குதூகலம் அனைத்தும் வடிந்தது. மீண்டும் இருள் என்னும் சோகம் அவளை சூழ்ந்து கொண்டது.

அவளின் முக வாட்டத்தை உணர்ந்தவன், அருகில் வந்து கதிரை பார்க்குமாறு இரு விரல்களின் உதவியோடு அவளது கன்னத்தை பிடித்து திருப்பினான்.

“நீ எது சொன்னாலும் நான் கேட்கிறேன். பிரண்டா கூட பார்க்க வேண்டா. லைக் சர்வன்ட் போல பாரு. உனக்கு எதுவாயிருந்தாலும் நான் செய்ய தயார் லைக் பெட் அனிமல் போல உன் கூட இருக்க ஆசைபடுறேன்" என கதிர் முடிக்க,

“என்ன சர்வன்டா.. பெட் அனிமலா… இப்படி வாழனும்னு உங்களுக்கு என்ன தலை எழுத்து சொல்லுங்க?”

“உனக்கும் புரியும்ல காதல்னா என்னானு.. எல்லாம் காதல் செய்யும் மாயம்" இமையாவுக்கு கோபம் முகத்தில் பரவியது.

“என் காஞ்ச மிளகா…” என கதிர் முனுமுனுத்தான்.

“நான் டார்ச்சர் செய்வதில் தெறித்து ஓடிடுவ” என்றாள் இமையா.

“நான் ஓட மாட்டேன். என்ன பெட் வச்சிக்கலாம்" என குதூகலமாக கேட்டான் கதிர்.

“ஒரு மாசத்துல உன் வாயால என்னை பிடிக்கலைனு சொல்ல வச்சிட்டா… நீ இனி என் கண்…" என ஆரம்பித்தவள், சிறு இடைவெளிவிட்டு "என் முன்னாடி பின்னாடி சைடுனு எப்பவுமே வர கூடாது புரியுதா"

“இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்குடி பொண்டாட்டி”

“என்னாது டி யா “

“ஆமா இப்ப பொண்டாட்டியாக போற இன்னும் சில நிமிசத்தில்" என்று பல கனவுகள் சுமந்த கண்களோடு அவன் இமையாவின் பதுமை முகத்தை பார்க்க

“உன் வாயால சொல்ல வைக்கிறேன் டா பொறுக்கி"

“ஆமா பொறுக்கி தான் உனக்கு மட்டும். உனக்கு எதாவது கண்டிசன் இருந்தா தாலி சடங்கு எல்லாம் முடியரத்துக்குள்ள சொல்லிடு. அதுக்கு அப்புறம் சொன்னா செல்லாது"

“என்னா டா திமிரா… ராட்சசா! நான் என்ன சொல்லிட்டிருக்கேன். நீ என்ன பேசிட்டிருக்க. ஒழுங்க போய் கல்யாணத்தை நிறுத்து"

“டீல் போட்டாச்சு. ஒரு மாசத்துல என்னை ஓட விரட்டிடு ஓடிடறேன். அப்படி நடக்கலனு வையேன். காலம் முழுக்க எனக்கு உன்கூடத்தான்" என்று இமையாவின் பதற்றமான முகத்தை ரசித்தவன் வெளியே செல்லும் போது திரும்பி

“உனக்கு வேற ஆப்சனேயில்ல.. கண்டிசன் மறந்துடாத. எதாவது கேட்க மறந்துட்டா உனக்கு தான் பிரச்சனை. எக்சாம்பில் ஒன்னு சொல்லவா?" இமையாவுக்கு வேறு வழியேயில்லை, இவன் பேசும் எல்லாம் கேட்கும் நிலையில் தான் இருந்தாள்.

“சொல்லி தொலையும் இல்லைனா கேட்கவா போற" என அவனிருக்கும் திசையை பார்த்து எண்ணையில் போட்ட காய்ந்த மிளகாபோல காரமாக காய்ந்து விழுந்தாள் அவன் மீது.

“பா… ஸ்பைசி கொஞ்சம் ஓவராயிருக்கே” என கிண்டல் செய்தவனின் மீது சிக்கன் மாசாலா தடவி, அன்னியன் போல எண்ணெய் சட்டியில் இவனை வறுத்து எடுத்தால் என்ன என எண்ணம் இமையா மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

“என்ன பொண்டாட்டி யோசனை, இவனை வறுத்தெடுக்கலாமா? இவளை குழம்பு வைக்கலாமா?" என்றான் தீவிரமாக யோசனை போல்.

“பாதி தப்பு. எண்ணையில் போட்டு எடுக்கலாம்னு மட்டும் தான் நினைத்தேன்" கதிரிடமிருந்து மெல்லிய புன்னகை வெளிப்பட்டது.

“எக்சாம்பில் வேண்டாமா?" என அவன் சொல்ல வருவதிலேயே குறியாகயிருந்தான். இமையாவிடமிருந்து அமைதி மட்டும் தான் கிடைத்தது.

அவளின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு “அது தான் பர்ஸ்ட் நைட் நடக்கும்ல இப்போ வேண்டா சொன்னினா, நான் உன்னை நெருங்க மாட்டேன். கண்டிசன் போட மறந்துட்டினா இந்த ஒரு மாதம் கணவன் மனைவிக்குள் நடக்கும் அனைத்தும் நடக்கும்" என விளக்கமாக கதிர் சொல்ல,

“அதுமட்டுமில்ல நான் செய்யறது செய்ய கூடாததுனு எது வேணும்னாலும் நீ சொல்லலாம் அனைத்தும் இந்த மண்டபம் விட்டு வெளியே போகும் வரை தான். அதுக்கு அப்புறம் நீ எந்த கண்டிசன் போட்டாலும் நான் ஏத்துக்க மாட்டேன். அதனால யோசி... மாமாட்ட என்ன என்ன வேணும் வேண்டாமோ கேட்டு வாங்கிக்க புரியுதா இமை" என கதிர் ஏற்கனவே குழம்பிய குட்டையை குழப்பிவிட்டு சொன்றான்.

இதுவரை இவன் சாந்தமான பையன் என நினைத்த இமையாவிற்கு இப்போது ஒரு டெரர் பீஸ் போல தெரிந்தான்.

“ஐயோ கடவுளே இவன் கிட்ட நல்லா மாட்டிவிட்டுட்டியே.. நான் என்ன செய்வேன்" என வாய்விட்டு புலம்பியவள் கடைசியாக வேறு வழியில்லாத முட்டுசந்தில் நிற்க ‘அவன் வழியிலேயே போய் விரட்டனும். அதுக்கு முன்னாடி நம்ம சேப்டி முக்கியம்' என மனதில் ஒரு கணக்கு போட்டு

அவனிடன் என்னென்ன கண்டிசன் போடனும் என மனதில் குறித்துக்கொண்டு தோழிகள் சூழ மணமேடைக்கு வந்து கதிர் அருகில் அமர்ந்தாள். தொண்டையை செறுமிக்கொண்டு கதிரை அழைத்தாள். அவனும் அவளது உயரத்துக்கு குனிந்து “என்ன லிஸ்ட் ரெடியா?” என இமையாவை அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான்.

“எனக்கு இந்த ஒரு மாசம் டீலிங் ஓகே. ஆனா என்னை நெருங்கி... என் கற்புக்கு ஆபத்து வரக் கூடாது"

“சரி… அடுத்து" மந்திரத்தை சொல்லிக்கொண்டே கதிர் கேட்க,

“எனக்கு நீ சர்வன்ட், அதை மறக்க கூடாது” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஐயர் தாலியை கட்ட சொல்ல

கதிரும் மனநிறைவோடு தாலியை கட்ட இமையாவின் விழிகள் கண்ணீரால் நனைந்தது, அவளது முறிவு பெற்ற காதலை நினைத்து. கதிருக்கும் அது புரியத்தான் செய்தது.

அவளது மனநிலையை மாற்ற “அடுத்து என்ன கண்டிசன்?” கதிர் கேட்க

“உன் பேர் எனக்கு பிடிக்கல மாத்திக்கோ”

“சரி அர்ஜுன்னு மாத்திக்கறேன்” அவன் பதிலை கேட்டு அதிர்ந்த இமையா,

‘இவனுக்கு எப்படி தெரியும்?’ அவளது தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டு.

“உனக்கு.. உங்களுக்கு எப்படி தெரியும்"

“என்னவளை பற்றி நான் அறியாமல் யார் அறிவார்?”

அதன் பிறகு சடங்கு அனைத்தும் முடிக்கும் வரை இருவரும் பேசவில்லை. அவளுக்கு பிடித்தது போலவே திருமணம் நடந்தது. அதை பார்க்கும் நிலையிலும், அதனை கவனிக்கும் நிலையில் தான் இமையா இல்லை.

இமையா மனதில் என்ன செய்வது, ஒரு மாதத்தில் அவனை வீழ்த்த முடியுமா? இல்லை அவனது அப்பழுக்கற்ற பாசத்திலும் காதலிலும் நாம் விழுந்துவிடுவோமா? என்ற குழப்ப இருள் அவள் மனதில் சூழ்ந்தது மட்டுமில்லாமல் அவளது மனதை ஆக்கிரமித்து, ஆட்சி செய்யத் துவங்கியது.

‘இல்லை இந்த குழப்பத்தில் மூழ்கிவிட்டால் இவன் என்னை வெற்றி கொள்வானா? முடிந்த அளவுக்கு இவனை என் மனதிலும் வாழ்க்கையிலும் நெருங்க விடக்கூடாது' என அவள் மனதில் அவனின் பேச்சை வைத்துக் கண்டு கொண்டதும், அனைத்தும் செயல் படுத்தத் துவங்கினாள். வரிசையாக அவனுக்கு பிடிக்காதது குறிப்பு எடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளுக்கு கிடைத்த பதில் முட்டையில் வந்து நின்றது.

‘அடச்செய்ய்… என்ன இவன் சாதாரணமா கோபம் வர விஷயத்துக்கு கூட இவ்வளவு அமைதியா இருக்கான்' என கறுவிக்கொண்டாள்.

“ம்கும்ம்…” என மென்மையாக கதிரை கூப்பிட

“என்ன என் புலிக்குட்டி கனைக்குது” என்று கிண்டல் நிறைந்த குரலில் கதிர் கேட்க

“நான் என் கண்டிசன்ஸ் சொல்லனும் “

“சொல்லுங்கள் என் இதய ராணியே”

“நிறைய லவ் படம் பாப்பவன் போல” என முனுமுனுத்தவள்,

“சர்வென்ட்னா என்ன வேலை செய்யனும்னு தெரியும்ல… சமைப்பது துணி துவைப்பது, பாத்ரூம் கழுவுரது, அதுக்கு அப்புறம் எல்லாமே… அனைத்தும் நீதான் செய்யனும்"

“நான் தான் காலையிலேயே சொல்லிட்டனே. அடுத்த கண்டிசன் சொல்லு" என்ற கதிர் சாவகாசமாக உணவு உண்ண அவளை அழைத்து செல்ல

இமையாதான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என வெவ்வேறு மனநிலையில் தத்தளித்து கொண்டிருந்தாள்.

‘என்ன கண்டிசன் கூட போட வரலை.. சர்வன்ட், கற்பு சேஃப் இதுக்கு மேல என்ன கண்டிசனிருக்கு' என அதன் பிறகு இமையா கதிரிடம் பேசவில்லை. பசைப்போட்டு தன் வாயை மூடிக்கொண்டவள், வீட்டிற்கு போய் பால் பழம் சாப்பிடத்தான் வாயை திறந்தாள்.

“உன் எச்சையை எல்லாம் நான் சாப்பிட மாட்டேன் முதலில் எனக்கு கொடுத்துடு" என இமையா கதிரிடம் சட்டமாக சொல்ல

“சாரி இமை. இது எல்லாம் நீ கண்டிசனில் சொல்லையே" என்று பெரிய குண்டாக இமையா தலையில் இறக்கினான் கதிர்.

அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து “இதுக்கே பயந்துட்டா எப்படி இமை குட்டி. இன்னும் எவ்வளவு இருக்கு.. இதுவும் உன்னோட கண்டிசன் தான்டி" அவளது பெரிய கண்கள் இன்னும் விரிந்துகொண்டது.

இமையா கதிரை வச்சி செய்ய நினைத்தாள். ஆனால் இந்த கதிர் சரியான கில்லாடியாக இமையாவின் முன் காய்களை நகர்த்திக்கொண்டிருந்தான். யார் யாரை ஆளப்போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.



கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/உன்-விழியின்-மொழி-நானடி-கருத்து-திரி.909/
 

Bindusara

Well-known member
Wonderland writer
பார்வை: 3

கதிர் இமையாவை தனது வீட்டுக்கு அழைத்து கிளம்ப, இமையாவின் மனதும் கதிரின் மனதும் சில நாட்கள் முன்னோக்கி நகர்ந்தது.

அனைத்தும் பொய்த்து போனது, இவளின் முட்டாள் தனமான செயலால்.

ஒரே ஒரு உறவு, கஷ்டத்தையும் சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நம்ம அனைவரையும் நினைத்தது தவறு. மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்தால், உறவு நீடிக்கும். எப்போ பாரு எனக்கு இந்த கஷ்டம் அந்த கஷ்டம்னு சொல்லிட்டு இருந்தா உறவில் விரிசல் விழத்தான் செய்யும். அப்படி பிரிந்தது தான், என் காதல். என் மன அழுத்தத்தின் மொத்த பாரத்தையும் வெறுப்பையும் அவன் மீது நெருப்பாக கக்கி, அவனை கொஞ்சம் கொஞ்சமாக என் அனல் தெறித்த வார்த்தையால் கசக்கிவிட்டேன்.

பலமணிநேரம் தொடர்ந்தது தொலைபேசி பயணம். ஆரம்பித்தது அந்த பக்கமாக இருந்தாலும் தொடர்ந்தது நான் தான்.

இனிமையான நேரங்கள் அனைத்தும் மறைந்திருந்தது இந்த சில மாதங்களில்.

எனக்கு மனநிலை கொஞ்சம் சரி இல்லை. டாக்டரிடம் போய் பாத்தாலும் எதுமே இல்ல, நார்மல்னு சொல்லிட்டாங்க. என்னுடைய மன அழுத்தம்… எங்களின் உறவை பாதிக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் அவனிடமிருந்து கொஞ்சம் இல்ல நிறையவே விலகி இருந்திருப்பேன்.

இவ்ளோ ப்ராப்ளம் அப்பவும் நான்தான் அதிகம் பிரச்சனை செஞ்சேன். அவனும் வருட கணக்காக நான் செய்த அதிகாரத்தில் அடங்கித்தான் போனான். ஆனால் ஒரு நாள் பொங்கிவிட்டான். அவனது வார்த்தைகளும் அனல் கக்கியது.

நான் அவனை மூன்று வருடங்களாக அடிமையாக வைத்திருந்தேன் என்று அவன் உதிர்த்த வார்த்தைக்கு சக்தி அதிகம் போல. கூர்மையான கத்தியை கொண்டு என் நெஞ்சை குத்தி கிழித்தது.

நான் செய்வது தவறு என்று புரிந்தது. இருந்தும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனை தேடிட்டு இருந்தேன். எனக்கான அன்பு பாசம் அவனிடமிருந்து தான் வேண்டும் என்ற ஒரு பிடிவாதம். ஒரு எல்லைக்கு மேல போய் நான் கேட்டே விட்டேன் எனக்கு உன்னிடமிருந்து கேர் கிடைக்காதா? என்று. நான் எவ்வளவு துரதஷ்டசாலி… கேட்டும் கிடைக்கவில்லை பல முறை.

ஒரு எல்லைக்கு மேல நான் அழுது கேட்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா அது என்மேல இன்னும் வெறுப்பு தான் சம்பாதித்து கொடுத்தது. திரும்ப திரும்ப எனக்கு வேணும், எனக்காக ஒரு வார்த்தை பேச மாட்டானானு ஏங்க ஆரம்பித்த நாட்கள் அது. நாட்கள் வாரங்கள்.. வாரங்கள்.. மாதங்கள்… மாதங்கள் ஒரு வருடத்துக்கு மேல் இந்த தனிமை என்னை சிறிது சிறிதாக உடைத்திருந்தது.

உடல் வலி, மனது கடந்த கால வேதனைகள். அது பத்தாது என்று அலட்சிய பதில்கள் என்னை இன்னும் பாதித்தது.

சரி இந்த அழுகை எக்ஸ்பக்ட்டேஷன் விட்டுட்டு, அவனது நட்பு போதும் என்று இயல்பாக நானே போய் பேசினேன். நன்றாக சென்றது, அந்த பாசம். கேர் கிடைத்தது. அப்போ வலிச்சது தனிமையில் கூட.

இயல்பாக பேசும்போது அப்படி ஒரு நெருக்கம். என்ன வகையான உறவுகள் இது? மனதளவில் சரியான நிலையில் இருந்தால் தான், இந்த உறவு நன்றாக இருக்குமோ?

ஒரு நாள் தெரியவந்தது. சிலருக்கு மொபைல் யூஸ் செய்தால் உடம்புக்கு ஒத்துக்காதுன்னு. தெரியும், அதை கேட்டும் கல் போல இருந்தேன்.

அது எனக்கு தெரியாம இப்படி செய்துவிட்டேனே என்று மனம் வருந்தியது. அதன் பிறகு பெரியதாக அவனை தொந்தரவு செய்யவில்லை. ஒரு வாரம் நன்றாக சென்றது. நானும் என்னுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஒதுக்கி வைத்து, அவனே அதிகம் மெசேஜ் கால் செய்தாலும் டைம் பார்த்துக்கொண்டு நான் பேச்சை முடித்து போன் வச்சிடுவேன்.

ஒரு நாள் எனக்கு வலி முடில, அதுகூட ஒரு ப்ராப்ளம். ஒரு ப்ரண்டாய் வாண்ட் டு ஷேர். அதை ஷேர் செய்றதுக்கு முன்னாடியே நான் அவசரமா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியானு கேட்டேன். இங்க ஆரம்பித்தது.

மறுபடியும் நான் என்னுடைய விஷயத்தை பகிராமல் இருந்திருந்தால், எல்லாம் நல்லா இருந்திருக்கும் போல. அன்று வெளியே சென்றிருந்தேன் சரியா பேச முடில. வீட்டுக்கு வந்ததும் ரொம்ப சோர்வு. ஒரு கால் பேசிடலாம்னு கால் செஞ்சப்போ எடுக்கல.

இப்போது கால் வரும்... அப்புறம் வரும்னு நான் தூங்கி தூங்கி எந்திரித்தேன். பல மணி நேரம் காத்திருப்புக்கு பின் கால் வந்தது இரவில். பேச துவங்கி சில நிமிடங்கள் கூட இல்லை. “என் அப்பா வந்துட்டார்” போனை வச்சாச்சு. எவ்வளவு கட்டுப்பாட்டில் என் மனதை வைத்திருந்தாலும், அந்த ஒரு நிமிடம் அனைத்தும் இழந்தது போல ஒரு உணர்வு.

நான் ஒரு பெண். என் வீட்டில், அப்போதுதான் திட்டி கொண்டு இருந்தாங்க. அதை மீறி தான் அந்நேரத்தில் அவனுடன் பேச நினைத்தேன்.

நான் தூங்கிய நாட்களில் எல்லாம், தூங்க விடாமல் என்னிடம் பேச துடித்த அந்த நபருக்கு, நான் துடிக்கும் போது ஏன் இந்த அலட்சியம். வேதனைக்கு மேல் வேதனை, என் வாழ்வை கூறியது தவறா? அல்லது நானே தவறா? என்றுதான் எனக்கு புரியவில்லை. தவறு, தான் கோபத்தில் மற்றவர்களின் வாழ்வை சபித்தது.

நான் எதுமே அவனிடம் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த உறவு இனித்து இருக்குமோ?

எவ்ளோ கட்டுப் படுத்தியும் என்னால் எதுவுமே செய்ய முடியாமல் அழுதுவிட்டேன். "நல்லா" அழு என்று போன் வைத்தாகிவிட்டது.

என் அழுகைதான் தொந்தரவா? இல்லை நானா? என்றும் எனக்கு புரியவில்லை.

அழுதுகொண்டே பைத்தியம் போல திரிந்தேன். எழுதி கொடுத்தாவது என் நிலையை சொல்ல நினைத்தும் உபயோகம் இல்லை. அழுது மற்றவர்கள் முன்னிலையில் இழிவாக தெரிந்து விட்டேன். என்ன நினைக்க எனக்கே கொஞ்சம் அசிங்கமாக போய்விட்டது.

"நல்ல வேலை, உன்ன கல்யாணம் செஞ்சி, ஒரு பெரிய முட்டாள் தனத்தை பண்ண நினைச்சேன். தப்பிச்சிட்டேன்" அவனிடம் இருந்து வந்த வார்த்தைகள். இந்த ஒரு வார்த்தையே என்னை உயிரோடு புதைத்தது.

அப்போதுதான் எனக்கே புரிந்தது. அவன் வாழ்க்கைக்கு நான் கொஞ்சமும் தகுதியும், பொருத்தமும் இல்லை என்று.

மனதை தேற்றிக்கொண்டு என் பயணம் தொடர்ந்தது. யோசனையோடு என் பாதை அழைத்து செல்லும் இடத்திற்கு சென்றேன். அவனும் நிம்மதியாக இருப்பான், நான் இல்லாமல் என்றால் அவளுக்கும் மன திருப்தியே.

அதன் பிறகு… அனைத்துயிடங்களிலும் என்னை பிளாக் செய்த போதும், தொடர்ந்தது என்னுடைய போன் கால். அவன் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து பேச, பிளாக் எடுத்திருந்தான்.

அவனது குறுஞ்செய்தியை பார்த்து மனம் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறந்தது.

“ஹாய்…” என நான் துவங்கும் முன் அவன் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு மீண்டும் பிளாக்கில் நான்.

அவனையும் அவனது குடும்பத்தையும் தொடர்பு கொள்ளக்கூடாதாம்!

சற்று முன் சிறகை விரித்த பட்டாம் பூச்சி பறக்கும் முன் அதன் சிறகுகளை பொசுக்கிவிட்டது அவனது செயல்.

“இனி பைத்தியம் போல நடந்துகொள்ள மாட்டேன்” என நான் சமாதானம் செய்ய முயற்சிக்கும் போது மீண்டும் மறைந்திருந்தான்.

கட்டுப்படுத்த முடியாத கண்ணீர். நீண்ட விசும்பல்கள். அதிகம் உணர்ச்சிவசப் பட்டு அழுததில் வலிப்பு வந்திருந்தது. ஒரு வழியாக சிறிது நேரத்தில் சரியாகியிருந்தது.

வீட்டிலிருப்பவர்களின் துடிப்பபும் கண்ணீரும் என்னை முழுவதுமாக மாற்றியிருந்தது. தன்னை நிராகரிப்பவர்களை விட்டு விலகியிருப்பது தான் நல்லது என நினைத்து, மனதை திடப்படுத்த எண்ணினாலும் தனிமையில் தவித்துக்கொண்டிருந்தேன். அவனது பாசமான வார்த்தைகள் என் காதில் கேட்காதா இனி? என்று.

பிடிக்காதவர்களின் வாழ்க்கையில் நான் வேண்டாம் என மனதை தேற்றிக்கொண்டு… நானில்லாமல் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ் என்று யோசனையோடு, என் பாதை அழைத்து செல்லுமிடத்துக்கு போக முடிவெடுத்த கொஞ்ச நேரத்தில், வீட்டிற்கு ஒரு உறவினர் மாப்பிள்ளையின் புகைப்படத்தோடு வந்திருந்தார்.

“இனி அவ்வளவு தானா.. அவன் என் வாழ்வில் இல்லையா” என காதல் சொல்லாவிட்டாலும் துடித்தது. மனதால் சில பல ஆசைகள் வளர்த்து வந்திருந்தேன் தனிமையில். இப்போ பேசிய அனைத்தும் காற்றோடு கரைந்த மாயமென்ன?

மனம் பிச்சிபிச்சி இதுவரை நடந்ததை கோர்வையில்லாமல் நினைத்துக்கொண்டிருந்தது.

மாப்பிள்ளை பற்றி வீட்டில் பேசவும், மவுனமாக கடந்து வந்துக்கொண்டிருந்தேன். வீட்டில் மூச்சு முட்டியது. வெளி காற்றை சுவாசிக்க தயாராகி கிளம்பினேன். என் வாழ்வின் திருப்பு முனை.

டமார் என்ற ஒரு சத்தம். பேருந்து ஒரு வேனில் மோதியிருந்தது. உயிர் சேதம் எதுமில்லை. சிறு அடிகள் தான் மற்றவர்களுக்கு, என்னை தவிர. மயக்க நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நான் நினைத்தது நடந்தது. திருமணம் பற்றி இனி பேச மாட்டார்கள். குறையுள்ள பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள யார் முன் வருவார்?

அந்த நிம்மதியோடு மருத்துவ மனையில் உடலை சற்று தேற்றிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி வந்தேன்.

வீட்டிலிருப்பவர்கள் இமையாவை கண்களை போல, குழந்தையை கையாள்வது போல பார்த்துக்கொண்டனர். கிட்டத்தட்ட குழந்தையின் நிலைதான். பக்கத்திலிருக்கும் பொருளை கூட எட்டி எடுக்கமுடியாது. தனியாக இரண்டு அடி கூட சொந்த கால்களால் நடக்க முடியாது.

பெற்றவர்களுக்கு மன வருத்தம் இருந்தாலும், தன் மகள் மனம் கோணாத வகையில் பார்த்துக்கொண்டார்கள். இப்படியே மற்றவர்களின் உதவியோடு மீண்டும் குழந்தையாக மாறினாள் இமையா. அப்பா அம்மா உறவினர்கள் என இந்த குறையுள்ள வாழ்க்கையை நிறையாக நினைத்து வாழ்ந்து வந்தாள்.

அதை கெடுக்கும் வகையில் வந்தான் ஒருவன்.

தொளதொள வென்று ஒரு பேன்ட், டி சர்ட் போட்டு ஹாலில் அமர்ந்திருந்தேன்.

“மாமா" என உரிமையாக பேசினான். அவனிருக்கும் திசை கூட திரும்பாமல், அருகிலிருக்கும் அன்னையின் காதை கடித்துக்கொண்டிருந்தேன்.

“யாருமா இது…மாமா ஓமானு, புதுசா இருக்கு".

“ஷ்சு… அமைதியாயிருடி மாப்பிள்ளையை அப்படி சொல்லாத" என சின்ன குரலில் அம்மா அழகி கடிந்துகொண்டார்.

அம்மாவின் பதில் கேட்ட இமையா "யாரை கேட்டு இந்த முடிவு எடுத்திருக்கிங்க” என வந்திருப்பவனின் புறம் கூட திரும்பாமல் தள்ளாடிக்கொண்டே அவள் அறைக்குள் அடைந்துகொண்டாள்.

சிறிது நேரம் வெளி அறையிலிருந்து அப்படி ஒரு சிரிப்பு “மாமா மாப்பிள்ளை அத்தைனு" வீட்டிலிருக்கும் மூவரும் கும்மி அடித்துக் கொண்டிருந்தனர்.

‘இங்க ஒருத்தி கோச்சிட்டு வந்து உட்காந்திருக்காலே… என்னாச்சினு கண்டுக்காம கண்டவன்கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசிட்டுயிருக்காங்க மனசாட்சியில்லாதவங்க.. இவங்களா கல்யாணம் செய்துக்கொள்ள போராங்க? என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமால் இவங்க இஷ்டத்துக்கு ஆடராங்க' ஆதங்கத்தில் பிதற்றினாள் இமையா.

“என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில், கல்யாணம் ரொம்ப அவசியமா?” என மெல்லிய குரலில் திட்டிக்கொண்டிருந்தாலும் மனதில் அவளது காதலன் துணைவனாக வர வேண்டும் என எண்ணியது நினைவுக்கு வர, பெட்சீட் எடுத்து போர்த்திக்கொண்டு வழக்கம் போல தலையணையிடம் தன் மனக்குமுறல்களை கொட்டி தீர்த்தாள் இமையா.

அதன் பிறகு ஒரு வாரம் யாரிடமும் பேசாமல் தனிமையில் இசையுடன் நேரத்தை கழித்தாள். அனைத்து பாடல்களிலும் அவளின் முடிந்த அத்தியாயத்தின் சுவடுகள் தானிருந்தது.

மனதில் ஒருவனை சுமந்து இன்னொருவரை எப்படி திருமணம் செய்து கொள்வது. முடியாது இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என மனதில் உறுதி மொழி எடுத்தவள்

வீட்டில் கல்யாணம் செய்துக்கோ என எடுத்து சொல்ல வரும் அம்மா அப்பாவை வார்த்தையால் வதைக்க ஆரம்பித்தாள்.

“இந்த குறையுள்ளவளை உங்களால் பாத்துக்க முடியலைனு, வீட்டைவிட்டு துரத்த பிளான் செஞ்சிட்டிங்க அப்படி தானே" என கதறி அழும் பொண்ணை ஆறுதல் படுத்த கூட முடியாமல், ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்கள்.

இப்படியே இவர்கள் நாட்கள் கண்ணீரும் அமைதியும் சூழலில் செல்ல

வாரம் ஒரு முறை வந்து கொண்டிருந்த, அந்த திடீர் மாப்பிள்ளை இப்போதெல்லாம் தினமும் வர துவங்கியிருந்தான்.

இமையாவின் அம்மா அப்பா சங்கடமாக உணர்ந்தார்கள். மகளுக்கு விருப்பமில்லை என எப்படி முகத்தில் அடித்தார் போல சொல்லுவது என தயங்குவதை புரிந்துக்கொண்ட திடீர் மாப்பிள்ளை, அவனாக

“மாமா.. இனி நீங்க சங்கடமா உணராதிங்க. நான் இனி இங்க வந்து தொந்தரவு செய்யலை. இமையா மட்டும் தான் இந்த பிறவியில் எனக்கு மனைவினு நான் காத்துட்டுருக்கேன் அவளின் நல்ல பதிலுக்காக”

பெற்றவர்களின் மனதில் ஒன்றுதான் தோன்றியது ‘தங்கள் மகள் தங்கமான ஒருவனை இழக்கயிருக்கிறாள், அவளது பிடிவாதத்தை வைத்துக்கொண்டு'

“மாப்பிள்ளை என்னை மன்னிச்சிடுங்க..”



Thread 'உன் விழியின் மொழி...நானடி - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/உன்-விழியின்-மொழி-நானடி-கருத்து-திரி.909/
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 4

"அட என்ன மாமா! பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு. அத்தை பால் எடுத்துட்டு வாங்க காலையிலிருந்து சாப்பிடல பசி வேறு" என இருவரையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நினைத்தான், அந்த திடீர் மாப்பிள்ளை.

அதன் பிறகு, அவனை மனத்திருப்தியாக சாப்பிட வைத்துதான் அனுப்பினர், இமையாவின் பெற்றோர்கள்.

இமையாவின் அப்பா சரணும் அம்மா அழகியும் ஒரு முடிவெடுத்து இமையாவின் அறைக்கு சொன்றனர். தந்தையின் செல்ல மகள், தாயிடம் எதிர்த்து பேசும் அழகு ராட்சசியே இமையா.

அனைவரின் மனமும் அறிந்து நடக்கும் இவர்கள் வீட்டு அழகு தேவதை. கல்யாணம் என பேச்சு வந்தால் மட்டும், அனைவர் மனமும் புண்படுத்துவது போல பேசி வீட்டில் இருப்பவர்களை வதைப்பாள்.

தன் மகள் தவறு செய்த போதும் கோபத்தை காட்டாத தந்தை, முதல் முறையாக நாக்கில் நஞ்சை தடவியது போல பேசிவிட்டார். "உன்னை சுமக்க என் மனசுலயும் உடலிலும் தெம்பில்ல. இந்த கல்யாணம் நடக்கலைனா, வீட்டைவிட்டு கண் காணாத இடத்துக்கு போயிடுவேன்” என விஷ வார்த்தைகளை மகளிடம் கக்கிவிட்டு சென்றார் சரண்.

அவர் சொன்ன வார்த்தை கேட்டு, அழகிக்கு உயிரை பிரித்து எடுப்பது போல உணர்வு. உடலால் துவண்டிருக்கும் மகளை பார்ப்பதா? இல்லை மனதால் இடிந்திருந்த கணவனை பார்ப்பாதா? என புரியாமல் கண்ணீர் கடலில் முழ்கியிருந்தார்.

இமையா தன் இயலாமையை நினைத்து வெதும்பி கொண்டிருந்தாள். மனதில் ஒருவனை சுமந்து கொண்டிருப்பவளுக்கு எந்த விடையையும் சொல்லும் நிலையில் அவள் இல்லை.

சில மாதம் முன்பு தான் இருவருக்கும் ஒத்துவராது என அவளின் காதலன் விட்டு சென்றது மட்டுமில்லாமல், அவள் தன்னை தொடர்பு கொள்ள முடியாத படி அனைத்து சோசியல் மீடியாவிலும் போனிலும் அவளை பிளாக்கில் போட்டிருந்தான். அந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்குள் அவள் உடலில் முக்கியமான ஒரு பாகத்தை இழந்திருந்தாள்.

எதை நினைத்து அழுவது, விடுவது என குழம்பியிருந்தாள். காதல் தோல்வி, உடல் நிலை… இப்போது தந்தை பேசிய வலி என இமையாவுக்கு பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.

கோபமாக வீட்டைவிட்டு கூட போக முடியாது. மற்றவர்களின் உதவியில்லாமல் ஒரு அடி எடுத்துவைக்கவே தயங்கும் இவளால், குடும்பத்துக்கு உதவியாக இல்லா விட்டாலும் உபத்திரமாக இருக்கக்கூடாது என முடிவு எடுத்தவள், தட்டு தடுமாறி வழியில் சில பொருட்கள் மற்றும் சுவற்றின் உதவியோடு வரவேற்பறைக்கு வந்திருந்தாள்.

“அம்மா எங்க இருக்க? உன் புருசன் கிட்ட சொல்லிடு இந்த வீட்டைவிட்டு, அவர் துரத்த முடிவு எடுத்ததற்கு நான் சரி சொல்லிட்டேன்னு" எப்படி யார் உதவியும் இல்லாமல் வந்தாளோ, அதே போல நடக்க நினைத்தவளால் நடக்க முடியவில்லை பக்கத்திலிருந்த நாற்காலியில் இடித்து, "அப்பா…" என வலி பொறுக்காமல் கத்திவிட்டாள்.

அம்மா அவளுக்கு உதவி செய்ய இமையா கைகளை பிடிக்க,

“இனி நான் தான மா பாத்துக்கனும் என்னை. உங்களுக்கு தான் நான் பாரமாக போயிட்டனே” என இமையா தட்டு தடுமாறி அவள் அறைக்குள் வந்து சேர்ந்தாள், சில பல அடிகள் வாங்கிக்கொண்டு.

“இந்த குறையை பார்த்தாலே மாப்பிள்ளை ஓடிடுவான்? எதுக்கு இமை கவலை பட்டுட்டுயிருக்க" என தன்னை சமாதானம் படுத்திக்கொண்டு வழக்கம் போல அவளுக்கு பிடித்த பாட்டை கேட்க ஆரம்பித்தாள்.

இமையாவின் இந்த நிம்மதி அடுத்த நாளே குலைய இருந்தது அவளுக்கு தெரியவில்லையே!

“ஒரு பார்வையிலே என்னை உறையவைத்தாய்!
ஒரு புன்னகையால்...” அவளவனுக்கு பிடித்த சாருக்கான் பாடலை பாடிக்கொண்டிருந்தாள். அவளின் முடிந்து போன அத்தியாயத்தின் நாயகனை நினைத்துக்கொண்டு.

அனைவருக்கும் அழகாக அந்த விடியலிருக்க, சோகமெனும் கடல் இமையாவை சிறிது சிறிதாக மூழ்கடித்தது.

இன்னும் சற்று நேரத்தில் நிச்சயதார்த்தம் என தூங்கி எழும் போதே வீட்டில் ஒரே சலசலப்பு. உறவுக்கார பெண்கள் தயார் செய்கிறேன் என இமையாவை சீண்டி விளையாட துவங்கினர்.

இமையாவின் கனவுகளில் நடந்த அனைத்தும இங்கு வரிசையாக நடந்துகொண்டிருக்கிறது. அவளது காதலனை கணவனாக கண்டவள், அந்த இடத்தில் வேறொருவன் என நினைக்கையில் கத்தி அழுக வேண்டும் போலிருந்தது.

சுற்றிலும் உறவினர்கள் சில நண்பர்களை கூட அப்பா அழைத்திருந்தார் போல. வந்தவர்கள் ஒரே சண்டை, கால் கூட செய்து சொல்லவில்லை என.

அவர்களை சமாளிக்கும் நேரத்தில், அவள் உள்ளிருந்த சோகத்தை மறந்திருந்தாள். அதுவும் சிறிது நேரம் தான், "பொண்ண அழைச்சிட்டு வாங்க" என பெரியவர்களின் குரல் ஹாலில் கேட்க, இமையாவிற்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.

“ஒரு நிமிசம் எல்லோரும் வெளியே போங்க… நான் வரேன்" என அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு, பதற்றத்தில் பக்கத்திலிருந்த போனை எடுக்க, அது கை தவறி கீழே விழுந்து அதன் உயிரை விட்டிருந்தது.

கீழிருந்த போனை எடுத்து அவசரமாக ஆன் செய்ய, அவளது நல்ல நேரம் போன் ஆன் ஆனது. கூகுல் அசிஸ்டன்ட் உதவியோடு, அவளது காதலன் அரசனுக்கு கால் போட சொல்ல, ஒரு ரிங்கில் பிசி என வந்திருந்தது.

“ஏன் டா வேண்டாம்னு விலகி போன என்னையும் என் மனசுலையும் ஆசையை வளர்த்துவிட்டுட்டு. நான் தவறு செய்தேன் தான் அதற்கு காரணமும் நீதானே… நல்ல மெச்சூரிட்டி இருக்கும் பெண்ணை பாசம் நேசம் காதல் என மொத்தமாக காட்டி என்னை குழந்தையாக மாற்றிட்ட. குழந்தை தவறு செய்வது இயல்பு தானே! இத்தனை முறை மன்னிப்பு கேட்டும் இன்னும் என்னை மன்னிக்க மனம் வரவில்லையா?" என ஊமையாக அழுதாள் இமையா. அவளை முழுதாக மனம் வருந்த கூட விடவில்லை. அதற்குள் வெளியிருந்து மீண்டும் ஒரு குரல். "நல்ல நேரம் வந்துடுச்சி இன்னும் என்ன செஞ்சிட்டிருக்கிங்க" குரல் கேட்டு உயிரற்ற உடலாக இமையா கதவை திறந்தாள்.

அதன் பிறகு நடந்த எதிலும் இமையா மனம் வைக்கவில்லை. மோதிரம் மாற்றப்பட்டது, இமையா அனைவரும் இழுக்கும் திசைக்கு பொம்மலாட்ட பொம்மை போல ஆடிக்கொண்டிருந்தாள். மூச்சு முட்டியது. மருந்துக்கு கூட இமையாவின் முகத்தில் சிரிப்பில்லை.

அவளுக்கு நேர் எதிராகயிருந்த கதிர் முகத்தில் அவ்வளவு ஒளி. சில வருடமாக ஒருத்தலையாக காதலித்து தவமிருந்தவன் அல்லவா! அவனது தேவதையை கரம் பிடிக்க போகிறான். அவளின் குறை அவனுக்கு ஒரு பொருட்டாக கூட படவில்லை. ‘இனி இவளை குழந்தை போல என் மார்பில் தாங்குவேன்’ மோதிரம் மாற்றும் போது ரகசியமாக சத்தியம் செய்தான் இமையாவின் கரங்களை பிடித்து.

இருவரும் வெவ்வேறு மனநிலையில் திருமணத்திற்கு தயாரானார்கள். இமையா திருமணத்திற்கு தேவையான எதுவும் வாங்கவும் வர மாட்டேன் என பிடிவாதமாக நின்றிருந்தாள். தாலி எடுக்க கதிர் வந்திருந்தான் இமையா வீட்டில் இருப்பவரை அழைத்து செல்ல,

கதிர் உள் நுழையவும் இமையா காட்டு கத்தல் கத்தவும் சரியாகயிருந்தது.

கதிருக்கு நடக்கவிருக்கும் திருமணம் அவன் வீட்டை எதிர்த்து தான் நடந்தது. “குறையுள்ள பெண்ணை எங்களால் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. மீறினால் இனி வீட்டுப்பக்கம் வரக் கூடாது" என தெளிவாக கதிரின் தந்தை சொல்லிவிட

“எனக்கு இமையா தான் வேண்டும்” என கதிர் சரணிடம் பேச, முதலில் மறுத்தார்.

“குறையுள்ள பெண்ணை கட்டி கொடுக்கும் அளவுக்கு இன்னும் நாங்க சுயநலம் இல்லை" என கதிரை தவிர்த்து வந்தார் ஆறு மாதங்களாக. கதிர் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாகயிருந்த சரணின் மனதை பனி போல கரைத்திருந்தான்.

குறை தெரிந்தும் கட்டிக்கொள்ள இப்படி வந்து தவம் கிடக்கும் கதிரையும் அவனது குணத்தையும் அவருக்கு பிடித்திருந்தது. அவனை பற்றி விசாரிக்க அவன் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு முடிவோட போய் பார்த்தார்.

அங்கு கதிர் பற்றி தெரிந்ததும், இவரை தவிர யாராலும் என் பொண்ணை சந்தோசமாக பார்த்துக்க முடியாது என முடிவு எடுத்தவர், கதிரை நேரில் சந்தித்து பேசினார். நிறைய போராட்டம் கடந்து, இன்று இந்த சுப நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது.

பிறகு இமையா இல்லாமலே திருமணத்திற்கு தேவையானதை வாங்கி குவித்தார்கள்.

இமையாவின் நாட்கள் இறக்கை கட்டி பறந்தது. கதிர் இமையாவிடம் பேச்சிக்கொடுக்க துவங்கினான்.

இமையா அவன் வந்திருப்பது தெரிந்தும் தன் முகம் கூட காட்ட விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தாள்.

“இமை” என கடினமான குரல் இமையாவின் செவிகளை தாக்கியது. இமையா அவனின் குரலை கேட்டு, அவனை துன்புறுத்த வார்த்தைகளை மனதில் கோர்த்தவள்

“உங்க வாய்ஸ் காக்கா போலயிருக்கு” என அவனை எப்படியாவது இந்த திருமணத்திலிருந்து அத்துவிட வேண்டும் என்ற நினைப்பில் சொல்ல

“ஹாஹா…” என அதே குரலில் சிரித்தவன்

“இருக்கட்டும் காக்காவோ கழுகோ இந்த குரலை தான் நீ வாழ்க்கை முழுக்க கேக்க வேண்டும்" என இமையாவை குறும்பு மின்ன பார்த்தான் கதிர்.

இமையாவிற்கு இவனது நக்கல் பேச்சு எரிச்சலை கிளப்பியது. “டேய் முதல்ல வெளியே போடா..” என்றாள் இமையா.

அவள் டேய் என சொன்னதில் கதிர் அதிர்ந்தாலும், அவளது மிரட்டும் குணம் அவனை ஈர்த்தது.

“இமை நீ டென்சன் ஆகும்போது உன் நுனி முக்கு சிவந்திருப்பதை பார்க்க இன்னும் அழகாயிருக்க" என அவள் பதில் கூட எதிர்ப்பாக்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்க, மாப்பிள்ளை வீட்டு பக்கம் அவன் மட்டும் தான்.

பெற்றோர், தங்கை வராதது வருத்தம் தந்தாலும் மனதில் கதிர் சண்டை கோழியாக “எனக்கு என் இமை இல்லைனா வாழ்க்கையே இல்ல. அதுமில்லாமல் அவளுக்கு இப்ப என்னோட தேவையிருக்கு” என்று கதிர் முடிவாக சொல்ல,

கதிரின் தந்தை மிகவும் கோபம் கொண்டு, அவனது பொருட்களை அனைத்தையும் பேக் செய்து வாசலில் விட்டெறிந்தார். கதிரும் சமாதானப் படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும், தோல்வி மட்டுமே மிஞ்சியது
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 5

கதிர் வீட்டைவிட்டு வந்ததும் புதிதாக ஒரு வீட்டை வாங்கத்தான் நினைத்தான். ஆனால், அது இமைக்கு பிடிக்கலைனா என தயங்கி ஒரு நல்ல வீட்டை பார்த்து, அனைத்தும் சரி செய்ய ஆட்களையும் நியமித்திருந்தான்.
இமை வந்து பால் காய்ச்ச, வீடும் தயாராகயிருந்தது.

பெற்றோர்களிடமிருந்து இமை ஒதுங்கி, முடிந்த அளவுக்கு கஷ்டப்பட்டு தன் வேலையை தானே செய்துகொண்டாள்.

முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளை பார்த்த சரண் அழகிக்கு வருத்தமாக இருந்தாலும், 'இப்படியே முகத்தை இவள் வைத்திருந்தாள் பார்ப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது' என வருந்தி கணவன் மனைவி இருவரும் மெல்லிய குரலில் பேசியது, இமையா காதுகளுக்கும் கேட்கத்தான் செய்தது.

இமையா வருந்தினாள். ‘பேசிய வார்த்தைகள் எல்லாம் அப்பா அம்மாவை எப்படி எரித்திருக்கும்’ என வருந்தியவள்,

கோபத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு “ம்மா… ப்பா” என உடைந்த குரலில் அழைக்க, என்னவோ ஏதோ என இருவரும் இமையின் அறையை நோக்கி, பதற்றத்தில் ஓடி வந்தார்கள்.

“என்னாச்சிமா" என சரண் அருகில் வர, இமையா அப்பாவை அணைத்து

“சாரி அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது"

“எங்க மேலையும் தப்பு இருக்கு மா. உன் விருப்பமில்லாமல் நாங்க கட்டாய கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சிட்டிருக்கோம். நீ பிறந்ததிலிருந்தே உன் வாழ்க்கை உன் கல்யாணம்னு எங்க இரண்டு பேருக்கும் நிறையவே கனவுகள் இருக்கு இமையா. எங்க அது எல்லாம் நடக்காம போய்டுமோனு பயம் வந்துடுச்சி அதான்" என்று தங்கள் நிலையை சரண் எடுத்து சொல்ல

“உங்க நிலை புரியுது மா. அந்த பையனுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும் ப்பா. என்ன போல ஒருத்தி எதுக்கு ப்பா” என்ன தான் தைரியமாக இமையா பேச துவங்கியிருந்தாலும் கடைசி வார்த்தை வாயிலிருந்து வெளியே வருவதற்கு முன் அழுகையில் வெடித்தாள்.

“உன்னை பிடிச்சி தான் மா கட்டிக்க நினைக்கிறான். நான் நல்லா விசாரிச்சிட்டேன் இமையா. அப்பா அப்படி ஒன்னும் சுயநலத்தில் உன்னை தள்ளிவிட மாட்டேன் பாப்பா" தந்தை உடைந்த குரலோடு எடுத்து சொல்ல,

“அப்பா அழுவுரிங்களா" என்று இமையா தந்தையின் கண்ணீரை தட்டு தடுமாறி தொட நினைக்க, சரண் தன் கண்ணீரை மறைக்க முகத்தை திருப்பிக்கொண்டார்.

தந்தையின் முகத்தை கூட தொட்டு ஆறுதல் அளிக்க முடியாத தன் நிலையை எண்ணி வாழ்க்கையை வெறுத்தாள் இமையா..

“அப்பா என்னால சும்மா கூட தனியா எழுந்து நிற்க முடியாது. இந்த குருடியால அந்த பையன் வாழ்க்கை எதுக்கு பா போகனும். என் அப்பா அழும் போது கண்ணீர் கூட துடைத்து விட முடியாத பாவி நான்” என்று கதறினாள். இமையா தந்தை அணைப்பிலிருந்து விடுபட்டு, தள்ளாடியே சுவரை பிடித்து நின்று

“என் அப்பா கண்ணீரை கூட துடைக்க தகுதியில்லா இந்த கை எனக்கு எதுக்கு" என்று பைத்தியம் பிடித்தவள் போல சுவற்றில் மொத்த பலம் கொண்டு தன் கையை வெறிபிடித்தவள் போல குத்தினாள்.

அழகி, சரண் இருவரால் அவளது ஆக்ரோஷத்தை தடுக்க முடியவில்லை. இருவரும் திண்டாடும் சமயம் கதிர் உள்ளே வந்தவன், அதிர்ந்து நின்றான். அவளின் ருத்ர கோலத்தை பார்த்து.

இமையா தொடர்ந்து குத்தியதில் ரத்தம் கொண்டு சுவற்றில் வண்ணம் தீட்டியிருந்தாள். இருவரும் போராடுவதை பார்த்து இமையாவின் நிலை கொடியதுதான்.

வண்ணமையமான உலகை சிறுவயதிலிருந்து பார்த்தவளுக்கு, இத்திடீர் கருப்பு உலகம் அவள் வாழ்வில் வந்தால், மன அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அழுவாள் கலங்குவாள் தான் மூவரும் நினைத்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து வெளி கொண்டுவர நினைத்த இவர்கள், அவளது ஆக்ரோஷத்தை சிறிதும் எதிர் பார்க்கவில்லை. வேகமாக வந்த கதிர், இமையாவை பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டான்.

“இசி… இசி… இமை ஒன்னுமில்லை நாங்கயிருக்கோம். ரிலாக்ஸ்" என்று கதிர் சமாதானப் படுத்த, இன்னும் இன்னும் ஆக்ரோஷமாக இமையா மாறினாள்.

இந்த முறை இமையாவின் மறைக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தும் பீறிட்டு வெளியே வந்திருந்தது.

சுவற்றில் சரமாரியாக குத்தியவள், கதிரை கோபத்தில் தாக்க துவங்கினாள். “உன்னால தான் எல்லாம். எதுக்கு வந்த.. என் வாழ்க்கையில, சொல்லுடா" என்று அவனது காலரை தட்டு தடுமாறி பிடித்து, கோபம் போகும் வரை அடித்தாள். அவளது கைவலிக்கும் வரை அடி தொடர்ந்தது. இருந்த இடத்தில் தோய்ந்து அமர்ந்தவள்

“உனக்கு என்ன பொண்ணா கிடைக்காது? எதுக்குடா இங்க வந்து என் உயிரை வாங்குற” இமையா கத்திக்கொண்டே மயங்கி சரிந்தாள்.

மயங்கி சரிந்தவளை வெறிக்க பார்த்தான் கதிர். இனியும் இந்த கல்யாணம் வேண்டாம் என்ற நினைப்பில் அங்கிருந்து நகர்ந்தவனின் கையை பிடித்த சரண்

“எதும் நினைச்சிக்காதிங்க.. இது எல்லாம் சரி செஞ்சிட்டு நானே உங்களை கூப்பிடுறேன்” எப்படியாவது கதிரை இமையாவுக்கு கட்டிவைக்க ஏதேதோ செய்து பார்த்தவருக்கு, தன் மகளின் இயலாமை ஆக்ரோஷத்தை பார்த்து ‘கதிராவது நிம்மதியா இருக்கட்டும் இமையாவை கட்டிவைத்தால், இன்னும் தன் மகள் நிலை மோசமானால் என்ன செய்வது' என்று தயங்கினார். வாய் நிறைய வந்த மாப்பிள்ளை மறைந்திருந்தது சரணின் அழைப்பில்.

கதிரும் “சரிங்க சார் நான் போறேன்” என்று கிளம்பினான். அந்த வீட்டைவிட்டு கிளம்பியதும், கதிருக்கு அனைத்தும் இழந்த உணர்வு. எப்படியாவது இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றம். இப்படியே நாட்கள் நகர்ந்தது.

இமையாவை பார்க்க வந்த டாக்டர் "இவங்க இப்படி கோபப்பட்டா சரிவராது" என்று எச்சரித்து செல்ல, மீண்டும் பழைய படி சரணும் அழகிக்கும் மனவருத்தம் இருந்தாலும், இமையாவிடம் கலகலப்பாக பேசத் துவங்கினார்கள்.

நாள் முழுவதும் மகளுக்காக மகிழ்ச்சியாக சேவை செய்யும் இருவரும், இரவு மகள் தூங்கியதும் அவளது நிலா முகத்தை பார்த்து கண்ணீர் வடிக்கவும் மறக்கவில்லை. அப்படி தான் ஒரு நாள் இமையா பாதி தூக்கத்தில் இருக்கும் போது, இருவரின் உடைந்த குரல் இமையாவின் கோபம் கொண்ட கல் மனதை அசைத்து பார்த்தது.

அடுத்த நாள் எழுந்தவள் என்றுமில்லாமல் அமைதியாக இருக்க,

இமையாவின் ஆக்ரோஷம் மட்டுமல்ல, மகளின் அமைதியும் ஒருவித பயத்தையும் பதற்றத்தையும் கொடுத்தது இருவருக்கும்.

மதியம் வரை இமையாவின் மீது ஒரு கண் வைத்திருந்த பெற்றோர், இமையாவின் கரங்களை பற்றி

“இமையா நீ எதை நினைத்தும் குழப்பிக்காத. உனக்கு விருப்பமில்லாதது இனி எதும் செய்ய மாட்டோம்"

“அப்பா சாரி அன்னைக்கு பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டேன். எனக்கு புதுசா இருக்குப்பா. பயமாவுமிருக்கு. உங்க தைரியமான இமையா இப்போ இல்லப்பா. நீங்க சுத்தி இருந்தும் தனிமையா தான் ப்பா உணர முடியுது. பயம் என்னும் இருட்டு என்னை சூழ்ந்தது போல இருக்குப்பா" மகளின் நிலை பெற்றவர்களுக்கு புரியத்தான் செய்தது. ஆதரவாக இமையாவை அணைத்துக்கொண்டனர்.

“அது எல்லாம் ஒன்னுமில்லை. நீ இப்போ தான் ஸ்ட்ராங்கா இருக்கனும் இமையா. எல்லாம் கொஞ்ச நாள் தான் மா சரியா போய்டும்”

சிறிது நேரம் பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்தவளுக்கு மனதில் கொஞ்சம் தெளிவு பிறந்திருந்தது.

“அப்பா நான் கல்யாணம் செஞ்சிக்கிறேன். ஆனால் ஒரு கண்டிசன். எனக்கு திரும்ப கல்யாணம் வேண்டாம்னு தோணிச்சினா நிறுத்திடனும்" அழகிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது, 'இமையா அப்படி சொன்னாலும் சரி கட்டிடலாம் இவளை' என்று. சரண் தான் கதிரிடம் பேச சங்கடமாக உணர்ந்தார்.

‘மீண்டும் கல்யாண ஆசையை கதிர் மனதில் வளர்த்துவிட்டு, அப்புறம் மகள் கல்யாணத்தை நிறுத்திட்டா! என்ன செய்வது?' கணவனின் யோசனை படிந்த, கலவர முகத்தை கண்டு, "ஏங்க நம்ம இமை அப்படி எதும் செய்ய மாட்டாங்க நீங்க கவலைபடாதிங்க கதிர் தம்பிக்கிட்ட பேசுங்க” என்று அழகி போனை எடுத்து கொடுக்க,

சரணும் தயக்கத்தோடு போன் போட, அந்த பக்கம் கதிர் யோசனையோடு எடுத்தான். "சரண் மாப்பிள்ளை.." என்று துவங்கும் முன்

“சொல்லுங்க சார்…”

“மாமானே கூப்பிடுங்க தம்பி.. இன்விட்டேசன் அடிக்க எப்போ போகலாம்"

கதிருக்கு புரிந்தது “இமையா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளா மாமா"

“ஆமா மாப்பிள்ளை! நீங்க கிளம்பி வாங்க இன்னைக்கு நல்ல நாள். நம்ம போய்ட்டு வந்துடலாம்"

“சரி மாமா இப்பவே கிளம்பிட்டேன்" இப்படி ஒரு பெரிய போராட்டத்துக்கு பிறகு தான் இந்த திருமணம் நடந்து முடிந்திருந்தது.
 
Status
Not open for further replies.
Top