ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் விழியின் மொழி...நானடி - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 11

“என்ன மேடம் பலமாக ஏதோ யோசனை போல?” கதிர் தனது லேப் டாப்பை எடுத்து வந்து அருகில் அமர

“அது... சாரி நான் அப்படி பேசியிருக்க கூடாது. பாஸ்ட் எப்பவும் பாஸ்ட் தான். நான் உங்கிட்ட அவங்கள பத்தி பேசியிருக்க கூடாது மன்னிச்சிடுங்க” இமையா கைகள் மூடி அவன் முன் நீட்டுவதாக வேறு புறம் நீட்ட

கதிர் இமையாவின் கைகளை தன் முன்னால் பிடித்திழுத்து “இமை குட்டி... மாமா இங்க இருக்கேன்”

“சாரி தெரியலை… சாரி” தன் இயலாமையை நினைத்து நொந்தாள்.

“இமையா இந்த சாரி தேங்க்ஸ் எல்லாம் இனி வேண்டா. இருவரும் மாத்தி மாத்தி சொல்ல ஆரமிச்சா ஒவ்வொரு நிமிசமும் சொல்லிட்டு தான் இருக்கனும்” இமையா சமத்து பிள்ளையாக தலை அசைத்தாள்.

“இது தான் என் அழகு பாப்பா”

“கதிர் இது” தன் நீட்டிய கரங்களை இமையா சுட்டிகாட்ட

“என்ன தங்கம் எதாவது கிப்ட் ஒளிச்சி வச்சிருக்கியா?”

“ஆமா.. உனக்கு பிடிச்ச கிப்ட்” என்றதும் கதிர் தனது முதல் பரிசை பார்க்க, அவளது கைகளை ஆர்வமாக பிரிக்க இமையா கையை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அவன் அந்த முதல் பரிசை சீக்கரம் பார்க்க கூடாது என கதிர் பிரித்தெடுத்த கைகளை மீண்டும் மீண்டும் இறுக்க மூடி விளையாட்டு காட்டினாள்.

“இமை எதுக்கு நீ இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்க போ நான் டயர்ட் ஆகிட்டேன் உன் கையை பிரித்தெடுப்பதில்” கதிர் இமையா கையை விட்டுவிட்டான்.

“பாக்கத்தான் ஆளு பைல்வான் போல இருக்க, சத்தே இல்லை கதிர் உன்னிடம்”

“நீ எப்போ என்னை பார்த்த, உனக்கு பார்வை வந்துடுச்சா?” கதிர் இமையாவின் கண்களை ஆர்வமாக நோக்க

‘இமையா.. இப்படி உளரிக்கொட்டிட்டியே அறிவு கெட்டவளே.. சரி சமாளிப்போம்’

“இல்லை கல்யாணத்து அப்போ உறவு பெண்கள் சொன்னது வச்சி சொன்னேன். அதுமில்லாமல் நான் உன்னை அடிக்கும் போது என் கைதான் வலிக்கும். கல்லு உடம்பு. அதை வச்சி சொன்னேன்” சற்றுமுன் மலர்ந்திருந்த கதிரின் முகம் வாடிவிட,

“சரி என் கிப்ட் எப்படி இருக்குனு பாரு” இமையா அந்த பேச்சை மாற்ற, மூடிய தன் கரங்களை விரித்து காட்டினாள்.

கதிருக்கு ஆச்சரியம்! “இமையா இத ஏன் கழட்டிவிட்ட. உனக்கு அழகா இருந்தது இந்த மூக்குத்தி”

“இல்லை கதிர். இது என்னை எவ்வளவு அழகா காட்டினாலும் எனக்கு இது வேண்டாம். உன்னை டவுன் ஆக்குற எந்த விஷயமும் இனி என்னிடம் வேண்டாம்” கதிர் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது.

“கதிர் எவ்வளவு நேரம் பிடித்திருப்பது. வாங்கிக்கோ கை வலிக்குது” கதிரும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டான்.

“இமையா இந்த சந்தோஷத்துக்கு என்கிட்ட எக்ஸ்பிரஸ் செய்ய வார்த்தையே இல்லை. இது ஒன்னு போதும்டி தங்கம். உன்னை டவுன் ஆக்குற உன்னோட பாஸ்ட் உனக்கு வேண்டாம்” இமையாவின் கையிலிருந்த மூக்குத்தியை வாங்கிக் கொண்டான்.

“இமை.. தேங்க்ஸ்”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஒரு பெரிய அறிவாளி வாத்தி எனக்கு பெரிய பாடம் எடுத்தாங்க. தேங்க்ஸ், சாரி எதும் நமக்குள்ள வேண்டாம்னு”

“சரி இனி தேங்க்ஸ் சாரி சொல்ல ஒரு சைன் லேங்குவேஜ் வச்சிக்கலாமா?”

“அது எப்படி?”

“இப்படி..” என்ற கதிர் செயல் முறை விளக்கம் கொடுக்க துவங்கினான்.

கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து “சாரி இனி கன்னத்தில் இப்படி”, நெற்றியிலையும் தன் இதழை பதித்தவன் “இனி தேங்க்ஸ் நெத்தியில் இப்படி”

கணவனிடமிருந்து பெற்ற இந்த முத்தத்தில் இமையா கிட்டத்தட்ட தண்ணீரில் போட்ட ஐஸ் போல உருகி விட்டாள். அவனது முத்தத்தால் அதிர்ந்தாலும், தனது முகத்தை மறைத்தவள் “கதிர் இப்படி எச்சை செஞ்சி வைக்கிறது நல்லா இல்லை பார்த்துக்கோங்க”

“இனி, சாரி தேங்க்ஸ் இப்படிதான். தடை போட முடியாது இமை குட்டி”

“அக்ரிமெண்ட்ல இருக்கு. மறந்துடாத?”

“நல்லா மேடம் யோசிச்சு பாருங்க. உங்க திருவாயால் சொல்லவேயில்லை இதுக்கு எல்லாம் தடை” நக்கல் பதிந்த குரலில் கதிர் வினாவ,

“சரியான நரி டா நீ” இமையா சலித்தாள்.

“அதுக்குதான் தெளிவா கேட்டு வாங்கிக்கோனு சொன்னேன். நீ தான் கேட்டுக்கவே இல்லை, நான் என்ன செய்யறது அதுக்கு”

“நீ மனுசனே இல்லை. பேச்சு வளர்க்காம போய் எனக்கு எதாவது சமைத்து கொண்டு வா”

“சரி பட்டுகுட்டி அரை மணி நேரத்துல சமைத்துக் கொண்டு வரேன்”.

கதிர் மனதில் ஒரு துள்ளல். ‘ஜாலி நான் கஷ்டப்படுரேன்னு உன் லவ்வர்க்காக போட்ட மூக்குத்திய எப்போ கழட்டினியோ அப்போவே உனக்குள்ள நான் வந்துட்டேன் இமையா. ஆனா சோகம் என்னனா உனக்கு அது தெரியலை. புரிஞ்சிப்ப இந்த மாமானோட மனசை, புரிஞ்சிட்டு நம்ம வாழ்க்கை நம்ம குழந்தை குடும்பம்னு சந்தோஷமா இருக்க போறத்துக்கு ரொம்ப தூரமில்லை இமை குட்டி’

கதிர் இமையாவுக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டு சிறு தூக்கம் போட்டு இருவரும் எழுந்தனர்.

இருவரும் நண்பர்கள் போல தயக்கமில்லாமல் பேசத் துவங்கி இருந்தார்கள்.

இமையாதான் இது வரை கேட்ட கதைகளிலிருந்தும், அவளது வாழ்க்கையில் இருந்தும் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தாள் மனதில்.

இருவரும் தினமும் வாக்கிங் போய் வருவது, இரவு உணவு முடித்துவிட்டு தோட்டத்தில் வலம்வருவது என்று ஒரு மாதம் இனிமையாக சென்றது.

என்ன தான் கதிரிடம் இமையா நட்பாக பழகினாலும் அதில் ஒரு எல்லை இருந்தது.

கதிர் எவ்வளவு வற்புறுத்தியும் அழகி, சரணிடம் பேச மட்டும் மறுத்துவிட்டாள் இமையா.

அவள் ஒரு மாதம் முடிவில் கதிரை மிரட்டுவது, வேலை வாங்குவது என அரை நாள் மட்டும் கதிரை விட்டுவிடுவாள் அவனது அலுவலக வேலையை கவனிக்க. மற்ற நேரங்களில் எதாவது புத்தகத்தை அவன் கையில் திணித்து “கதிரா… எனக்கு கதை சொல்லுடா” என்பாள்.

கதிருக்கு அவள் ராகமாக இழுக்கும் “கதிரா” என்ற பெயரை அழைக்கும் போதெல்லாம் இமையா மீது ஆசை பொங்கும். அவளது கன்னத்தை கிள்ளி முத்தமிட தோன்றும். ஆனால் தனது செயல் மீண்டும் அந்த கொடூரமான இருட்டுக்கு அழைத்து சென்றுவிடக்கூடாது என கதிர் முடிந்த அளவுக்கு இரண்டடி தள்ளியே நின்று விடுவான்.

அவனும் சாதாரண ஆண்மகன் தானே! ஆசை பாசங்கள் இருக்கத்தான் செய்யும். இருந்தும் எதாவது அவசரப்பட்டு மீண்டும் ஒரு முறை அவளது இதயத்தை உடைக்க விரும்பவில்லை அவன்.

அழகாக நாட்கள் நகர்ந்தது. கல்யாண நாள் வர “வா தனியா நடக்க கத்துக்கலாம்” என்று அழைத்ததும், இமையா முதல் இரண்டு அடி ஆர்வமாக எடுத்து வைப்பாள். அடுத்த அடிக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.

“கதிரா நாளையிலிருந்து கத்துக்குறேன்” என்று நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் நேரம்.

எவ்வளவு நாள் தான் மகளின் பாரா முகத்தை தாங்க முடியும் பெற்ற உள்ளங்களால். அடுத்த மாத தொடக்கத்தில் பெட்டியை கட்டிக்கொண்டு மகள் வீட்டில் தங்க ஓடிவந்துவிட்டார்கள் சரணும் அழகியும்.

கதிர் தலையில் துண்டை சுற்றி, சாட்ஸ் போட்டுக்கொண்டு பார்க்க பக்கா பரம்பரை சமையல்காரன் போல தீவிரமாக சமையல் வேலை பார்க்க,

இமையா வழக்கம் போல, ஏதோ ஒரு கதையை கேட்க துவங்கினாள்.

மகளுக்கு பிடித்த அனைத்து பலகாரத்தையும் அழகி தன் கையால் சமைத்து, இருவர் தூக்க முடியாத பாரத்தை தூக்கி வந்தனர்.

சமைத்துக்கொண்டே கதிர் வாசலை பார்க்க, இவ்வளவு நாள் தனியாக இருந்ததுக்கு, குடும்பத்தில் இருவர் வருவதை பார்த்து சிறு பிள்ளையாக அடுப்பை கூட அணைக்காமல் அவர்களை நோக்கி ஓடி போனான்.

இருவரும் வேர்க்க விறுவிறுக்க வருவதை பார்த்து கதிருக்கு சற்றுமுன் இருந்த உற்சாகம் வடிந்தது.

இன்னும் வேகமாக முன்னேறி, “மாமா.. உங்களுக்கு தான் அறிவில்லை. அத்தை நீங்களாவது வரதை முன்னவே சொல்லி இருக்கனுமில்ல” இருவரையும் முறைத்தவன் கையிலிருந்த கனமான பையை கிட்டத்தட்ட பிடிங்கி கொண்டு உள்ளே போனான்.

“அப்போவே சொன்னேன். என் பேச்சை எங்க கேட்டிங்க. இப்போ பாருங்க மாப்பிள்ளை கோச்சிக்கிட்டாங்க. போங்க நல்லா இன்னும் கதிர் தம்பிகிட்ட வாங்கி கட்டிக்கோங்க” அழகி முணுமுணுக்க

“அங்க என்ன வெயில்ல நின்னு கதை அடிச்சிட்டிருக்கிங்க உள்ள வந்து உட்காருங்க” பேனை போட்டுவிட்டான் கதிர்.

உள்ளிருந்து இமையாவின் குரல்

“டேய்.. கதிரா அடுப்பு தீயுது பாரு”

“இதோ பாக்குறேன்மா” கதிர் அவசரமாக சமையல் கட்டுக்குள் போனான்.

அவன் வைத்த ரசம், புளிக்குழம்பாக மாறியிருந்தது.

“போச்சா…” அடுப்பை அணைத்துவிட்டு, இன்னும் சிறிது புளி கரைத்து விட்டு சிறிய வெங்காயம், வெந்தயம், காய்ந்த மிளகாய் அனைத்தையும் அரிந்தவன், அனைத்தையும் போட்டு வதக்கி கரைத்து வைத்த புளியுடன், சுண்டிய ரசத்தை கலந்து, கொதிக்க விட்டு இறக்கினான்.

மருமகனின் சமையல் திறமையை பார்த்த அழகி “ஓ.. இப்படி கூட செய்யலாமா? சுண்டி போன ரசத்தை வைத்து”

“ஈஈஈஈஈ… அத்தை புகழாதிங்க. நான் இமையாவை கூட்டிட்டு வரேன்” என்று சிறு புன்முறுவலோடு அறைக்குள் நுழைந்தான்.

“இமையா அப்பா அம்மா வந்திருக்காங்க வா”

“அத்தை, மாமா வந்திருக்காங்களா? உங்க மேலிருந்த கோபம் எல்லாம் போய்டுச்சா? அச்சோ முன்னவே சொல்லியிருந்தா சேரி கட்டிருக்கலாமில்லை?” இமையா கதிர் சொல்ல வருவதை கேட்காமல் படபட வென்று பேச,

“இமை குட்டி எங்க வீட்டிலிருந்து யாரும் வரலை வரவும் மாட்டாங்க. உன் அப்பா, அம்மா வந்திருக்காங்க” இமையாவின் முகம் சுருங்கி போனது.

“சரி சரி மூஞ்சை அப்படி வைக்காதே. வா வெளியே போலாம்.”

“இல்லை கதிர் நான் வரலை”

“ஏன் இமை குட்டி”

“கதிர் சும்மா கடுப்பு கிளப்பாம வெளியே போ” என்றாள்.

கதிரும் தொங்கிய முகத்தோடு வெளியே வர, இமையா பேசியதை காதில் கேட்ட இருவருக்கும் சங்கடமாக போனது.

“அத்தை… மாமா… அது” கதிர் தயங்க

“சரி விடுங்க மாப்பிள்ளை. அவ வரலைனா என்ன, நாங்க உள்ள போய் பாத்துட்டா போச்சி
 

Bindusara

Well-known member
Wonderland writer

விழிமொழி: 12

“சரி மாமா நீங்க பேசிட்டிருங்க நான் மட்டன் சிக்கன் எதாவது வாங்கிட்டு வரேன்”

“இமையா நான் கடைக்கு போய்யிட்டு வரேன் பத்திரமா இரு கண்ணு. கோபம் அதிகம் படக்கூடாது. மறப்போம் மன்னிப்போம். பாத்து இரு டா” கதிர் இமையாவுக்கு பல பல பத்திரங்கள் சொல்லி செல்ல,

இமையாவை தன் கண் போல பாத்துக்கொள்ளும் கதிர் மீது பெற்றவர்களுக்கு இன்னும் மரியாதை கூடியது.

கதிர் பையை எடுத்துட்டு கிளம்ப, சரணும் அழகியும் இமையா அருகில் வந்து அமர்ந்தனர்.

“இமையா எல்லாம் உன் நல்லதுக்கு தானே. இதில் கோச்சிக்க என்ன இருக்கு, அப்பாவை பார்த்தா பாவமாயில்லையா தங்கம்?” இமையா இன்னும் ஒரு முழத்துக்கு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

“ஏய் என்னடி பழக்கம் மரியாதை இல்லாம. அப்பா தான் இவ்வளவு இறங்கி வந்து பேசராங்க, ஒரு வார்த்தை பேசினால் உன் முத்து கொட்டிடுமா?”

“அழகி.. நீ அமைதியா இரு. இன்னும் ஏத்தி விடாத” மனைவியை சரண் அதட்டவும், இமையாவின் இதழின் ஓரத்தில் ஒரு புன்னகை ஒட்டி இருந்தது. யாரும் பார்த்து விடக்கூடாது என்று நொடி பொழுதில் முகத்தின் பாவனையை மாற்றினாள் இமையா.

தாய் அறியாத சூழ் உண்டா? இருவரும் தங்கள் மகளின் திருட்டுத் தனத்தை கண்டு கொண்டனர்.

‘இப்படியே பேசி பேசி சரி கட்டிடனும்’ என அதன் பிறகு அரைமணி நேரம் அழகி, சரண் ஏதேதோ பேச, இமையா காதுக்கு கூட உறைக்கவில்லை என்பது போல அமர்ந்திருந்தாள்.

‘இவளை பேசி எல்லாம் சரி கட்ட முடியாது. செயலில் இறங்கிடணும்’ அழகி அடுத்து கையில் எடுத்த ஆயுதம் பால் கோவா. தான் கொண்டுவந்த பையில் தேடிபிடித்து எடுத்தவர்

“இமையா, உனக்கு பிடித்த பால் கோவா ரசகுல்லா எல்லாம் என் கையால செஞ்சியிருக்கேன் சாப்பிடு” என ஒரு டப்பாவை திறந்து ஊட்டி விட வர, இமையா பிடிவாதமாக முகத்தை வேறுபுறம் திருப்ப, அழகி திருப்பிய பக்கமும் ஊட்டிவிட கையை கொண்டு போக

‘ஐயோ.. இமையா வாசம் தூக்குதே. முடியலையே, கோபத்தை விட்டுட்டு சாப்பிட்டிடலாமா? இல்லை இமை வேண்டா எவ்வளவு கொடுமை படுத்தி கல்யாணம் செஞ்சி வச்சாங்க. பேசாத இமையா, ஐயோ! இந்த பால்கோவா வாசம் வேற வெக்கமே இல்லாமல் மனசை பிராண்டுதே. கோபத்தை ஒரு ஐஞ்சி நிமிசத்துக்கு ஒதுக்கி வச்சா என்னா?’ இமையாவின் வாய் சிறிதாக திறக்க

“நல்லா தான் வாயை திறக்குறது” எப்போதும் இமையாவிற்கு இரண்டு வாய் இனிப்பு தான் கொடுப்பார். இன்று மகளின் கோபம் போய்விட்டது என்றதும், அரைகிலோ டப்பாவின் பாதியை இமையாவின் வயிற்றில் பயணம் செய்து கொண்டிருந்தது.

சரண் மனைவியின் கையை பிடித்து “அழகி போதும் அவளுக்கு உடம்பு சரியில்லாம போய்ட போது”

“ஏன் பா உனக்கு பொறுக்காதே நான் சந்தோஷமாக இருக்க. நீ ஊட்டி விடு மா”

கதிர் கதவின் மீது சாய்ந்து,

மூவரின் பாசப்போராட்டத்தை பார்த்தவனுக்கு, தனது அம்மாவின் நினைவு வரவும் மனம் ரணப்பட்டு தான் போனது. ‘ஏன் மா நீ கூட என்னை புரிஞ்சிக்கலை? அப்பா தான் வரட்டு பிடிவாதத்தில் இருந்தா, நீங்க கூட ஒரு வார்த்தை என்கிட்ட பேசலையே. கல்யாண மண்டபத்தில் கூட நீங்க எப்படியாவது வந்துடுவிங்கனு வாசலையே பார்த்து உட்கார்ந்திருந்தேன் தெரியுமா’ நேரில் பேசமுடியாத தன் அன்னையிடம் மனதால் பேசினான் கதிர்.

அழகியும், சரணும் பின்னாடி யாரோ இருக்கும் அரவம் கேட்டு திரும்பி பார்க்க, கதிர் முகத்தில் அப்படி ஒரு ஏக்கம்.

அழகி அவனது ஏக்கத்தை புரிந்துகொண்டு, “கதிர் தம்பி இங்க வாங்க பால் கோவா சாப்பிடுங்க”

“இல்லை அத்தை எனக்கு ஸ்வீட் பிடிக்காது” கதிரின் இந்த பதிலை கேட்ட இமையா குதூகலமானாள்.

“கதிரா.. உனக்கு ஸ்வீட் பிடிக்காதா! அப்போ இனி உன்னோட பங்கும் எனக்கு தான்”.

“தின்பதிலேயே இரு. ஆனா உடம்பு மட்டும் பஞ்சத்துல வளர்ந்தவ போல இருக்கறது” சைட் கேப்பில் அழகி தன் மகளின் காலை வார,

“அம்மா என்ன நக்கல் அதிகமாகிடுச்சி. நானில்லனு தைரியமா”

“ஆமாடி கொஞ்ச நேரம் அமைதியா இருடி தம்பி பால்கோவா சாப்பிடட்டும்” அழகி சொன்னது மட்டுமில்லாமல், கதிருக்கு இரண்டு வாய் ஊட்டியும் விட்டார். சிறிது நேரத்துக்கு முன்னிருந்த ஏக்கம் அனைத்தும் அழகி ஊட்டிவிட்டதில் கதிருக்கு தீர்ந்துவிட்டது.

‘உடம்புக்கு வேற முடியாம இருந்தாங்க ஹாஸ்பிட்டலுக்கு அப்பா கூட்டி போய்ருப்பாங்களா? இல்லை என் மேலிருக்கும் கோபத்தில் அம்மாவின் உடல் நிலையை மறந்திருப்பாங்களா? இமையா அம்மா அப்பாவை நாளைக்கு அவளுக்கு துணையா இருக்கவச்சிட்டு அம்மாவை பாத்துட்டு வந்துடலாமா?’ பல யோசனைகள் சுழன்றது அவனது நெஞ்சத்தில்.

“இரண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கிங்க. இமையா கூட பேசிட்டிருங்க நான் சமைக்கிறேன்”

“அட நீங்க இருங்க தம்பி நான் பாத்துக்கறேன்”

“அதுலாம் ஒன்னுமில்ல. சமைக்கறது எல்லாம் எனக்கு ஒரு வேலையே இல்லை அத்த. உங்க குட்டி பெண்ணை பாத்துக்கிறது தான் அதிக சிரமம்”

“ஓ..! துரைக்கு நான் சிரமமோ? சரி கதிரா நீ இங்கயே தனியா நிம்மதியா இருந்துக்கோ. நான் பொட்டி படுக்கை கட்டிட்டு என் வீட்டுக்கு போயிடறேன்” இமையா கதிரை மிரட்ட

“அச்சோ.. என் தங்க கட்டியை பார்த்துக்கிறதுல எனக்கு எப்போதும் சிரமமில்லை. ஒரு ஜோக்குக்கு சொன்னா உடனே மூக்கு சிவக்க கோபமா?” கதிரின் கொஞ்சும் குரலில் இமையா மனதில் முளைத்த சிறு கோபமும் மறைந்தது.

“சரி சரி மதிய சாப்பாட்டுக்கு நேரமாகிடுச்சி நான் வேலையை பார்க்கிறேன்” என்று கிளம்பியவன், மும்முரமாக வேலையை பார்க்க மனதில் தாயின் முகம் வந்துவந்து போனது. ஒரு முறை தாயின் வாயால் கதிர் தம்பி என்று கேட்டுவிட மாட்டோமா என தாய் மடித்தேடும் குழந்தையாக மாறி போனான் கதிர். சமைத்து முடிக்கவும், அனைவரையும் கதிர் சாப்பிட அழைத்தான்.

நாலு தட்டு வைத்து பரிமாறப்போகும் போது, சரண் தடுத்தார்.

“மாப்பிள்ளை ஒரே தட்டு போதும்” கதிர் புரியாத பார்வை மாமாவை பார்த்தான்.

“அது ஒன்னுமில்லை வாரத்துல ஒரு முறை ஒன்னா சாப்பிடுவோம். அதான்”

“வாவ் சூப்பர் மாமா. நல்ல பழக்கம் எல்லாம் வச்சி இருக்கிங்க. குடும்பம்னா இது தான்” இதற்கு நேர்மாறான தனது குடும்பத்தை கதிர் மனதில் நினைக்கவும் மறக்கவில்லை.

‘காசு பணம் இருந்து என்ன பிரயோஜனம். காட்டாத பாசமிருந்து என்ன பயன்’ கதிர் நான்கு தட்டையும் எடுத்துவிட்டு, பெரிய தட்டை வைத்து சாப்பிட ஆரம்பிக்க

மூவரும் தாமும் சாப்பிட்டு இமையாவுக்கும் ஊட்டிவிட, பெரிய பாசப்போராட்டத்துக்கு பிறகு மதிய உணவை முடித்தார்கள்.

இமையா அதிகம் சாப்பிட்டதால் உண்ட மயக்கத்தில் அருகிலிருந்த சரண் தோள்மேல் சாய்ந்தாள்.

“அப்பா டைய் அடிச்சியா இல்லை எனக்கு கண்ணு தெரியாதுனு விட்டுட்டியா?”

“அது எல்லாம் கரெக்டா மாச மாசம் அடிச்சிடுறேன் இமை மா”

“அந்த பயமிருக்கட்டும்” காற்றில் துலாவி தந்தையின் மீசை நுனியை பிடித்து இழுத்து “குட் பாய்” என்றாள்.

“சரி அம்மா எனக்கு ஸ்வீட் செஞ்சி எடுத்துட்டு வந்தாங்க. நீங்க எனக்கு என்ன வாங்கிட்டு வந்திங்க?”

“நான் மறப்பேனா? அதுலாம் நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்”

“ஐய்… ஜாலி எடுங்க நம்ம ஆயுதத்தை”

“அழகி அது எடுத்துட்டு வாமா”

கவரை பிரித்து ஒரு சாக்லேட் துண்டை எடுத்து, இமையா வாயில் போட்டாள்.

“அப்பா வாய்குள்ள பட்டாசு” சிறுமியாக மாறி குதூகலித்தாள்.

கதிர் தான் இங்கு நடப்பதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தான். ‘சாக்லேட் சாப்பிடரதுக்கு எதுக்கிந்த அக்கபோரு’

“கதிரா.. உனக்கு” ஒரு சாக்லேட் துண்டை எடுத்து நீட்ட, கதிர் சாதாரணமா வாங்கி வாயில் போட்டவனின் வாயில் எதோ “பட், பட்” சத்தம் கேட்க

“மாமா என்ன இது சத்தம் வருது”

“கதிரா.. இது கூட தெரியாதா?”

“கிராக்கர் சாக்லேட். நம்ம வாய்ல போட்டா வெடிக்கும்” கதிருக்கு இப்போது தான் நினைவுக்கு வந்தது. சிறு வயதில் வெடிக்கும் மிட்டாய் சாப்பிட்டது.

“இன்னுமா இது எல்லாம் விக்கிறாங்க. சின்ன வயசுல சாப்பிட்டது”

“அப்போ இந்தா இன்னும் இரண்டு சாப்பிடு” இமையா கதிரிடம் இன்னும் ஒரு சாக்லேட் கொடுக்க, அழகியும் சரணும் தான் அதிர்ச்சியாக பார்த்து வைத்தார்கள்.

இமையா இந்த சாக்லேட்டை யாராவது வீட்டிலிருந்தாள் தருவாள் தான். ஆனால் அதன் எல்லை ஒரு முறை மட்டுமே. இரண்டாம் முறை கேட்டால் தரவே மாட்டாள். சிறுவயதிலிருந்து இப்படிதான்.

கதிருக்கு தரவும், இமையா அறியாத கதிர் மீதுள்ள காதலை பெற்றவர்கள் புரிந்து கொண்டனர்.

‘கடவுளே என் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்திட்டிங்க. இப்படியே நூறு வருசம் அவ நல்லா இருக்கணும்‘ அன்று முழுவதும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நால்வரும் கொண்டாடினார்கள்.

இவ்வளவு நாள் அமைதியாக இருந்த வீடு சிரிப்பு, கேலி, நக்கல் நய்யாண்டி என நாள் முழுவதும் மகழ்ச்சி நிறைந்திருந்தது. மாலை ஆனதும் ஆப்பு வைக்கும் விதமாக இமையா, அப்பா அம்மா சொன்ன விஷயத்தை கேட்ட இருவரின் முகத்திலும் சோகம் அப்பிக்கொண்டது.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 13

“மாப்பிள்ளை நாங்க கிளம்பறோம்"

“என்ன மாமா வந்து அரை நாள் கூட முடியலை இப்படி கிளம்பறேன்னு சொன்னா என்ன அர்த்தம். குறைந்தது பத்து நாளாவது இருப்பிங்கன்னு நினைத்து ஆசையா இருந்தேன்" கதிர் சோகம் வழிந்த குரலில் பேச

“நாளை மறுநாள் ஒரு கல்யாணம் இருக்கு மாப்பிள்ளை. அட தம்பி அதுக்கு ஏன் இவ்வளவு சோகம் நாங்க இன்னொரு நாள் வராமல் எங்கே போகப்போறோம்”

“இன்னும் ஒரு நாள் இருக்குள்ள கல்யாணத்துக்கு நாளைக்கு கிளம்பலாம். நீங்க இருப்பிங்க இங்க நாளைக்கு நான் எங்க வீட்டுக்கு போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்னு இருந்தேன்“

“அப்படிங்களா… சரி தம்பி நீங்க போய்ட்டு வாங்க. நாளைக்கு சாயிங்காலமா நாங்க ஊருக்கு போறோம்"

“தேங்க்ஸ்! மாமா"

“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லி பிரிக்காதிங்க மாப்பிள்ளை"

“சரி மாமா…”

இமை கதிரை சுரண்டிக்கொண்டிருந்தாள்.

“கதிரா நானும் வரட்டா?”

“இல்லை இமை குட்டி. அங்க வீட்டு நிலவரம் எப்படி இருக்குன்னு தெரியாது நான் அங்க போயிட்டு வரேன். அங்கே எல்லாம் சரி ஆனதும் போலாம்" என இமையை சரிகட்டினான்.

மாலை நேரத்தில் நால்வரும் சேர்ந்து வாக்கிங் போக,

இமையா சரணின் கையை பிடித்து வந்தவள், வரிசையாக “அப்பா இந்த டர்னிங்கில் இது இருக்கும் பா, இங்க கிட்ஸ் ஸ்கூல் இருக்கும் பா… அடுத்த ரோட்டின் தொடக்கத்தில் ஒரு ஐஸ்கிரீம் கடையிருக்கும் பா. செம டேஸ்ட் பா” இமையா வாய் வலிக்கவலிக்க சொல்லிக்கொண்டு வந்தாள்.

“யாரு மா இந்த ட்ரைனிங் கொடுத்தது?"

“நம்ம கதிர் தான் பா. டெய்லி என்னை வெளியே கூட்டிவந்து எங்க என்ன இருக்கு, வழியில் யாரு வராங்கனு சலிக்காம எனக்கு சொல்லிட்டு வருவான் பா"

இமையாவிற்கு என்ன பிடிக்கும் என கதிரும் அழகி அத்தையிடம் மும்முரமாக பேசிக்கொண்டு வர, இருவரும் பார்க்கில் ஒரே பெஞ்சில் உட்கார்ந்தனர்.

இரண்டு பெஞ்ச் தள்ளி இமையாவும் சரணும் உட்கார,

இமையா பேசி பேசி டயார்ட் ஆனாள் “அப்பா தண்ணீ கொடுங்க தாகமா இருக்கு"

“மூச்சி பிடிச்சி பேசினா அப்படித்தான் இருக்கும்" மெலிதாக மகளை கடிந்து கொண்டவர், தண்ணீர் மூடியை திறந்து கொடுக்க இமையா குடித்துக் கொண்டிருக்கும் போதே சரண், “இமையா உனக்கு கதிர் தம்பியை பிடிச்சிடுச்சி போல" தொண்டைக்கு செல்ல இருந்த தண்ணீர் வழிமாறி மூச்சு குழாய்க்குள் சென்று வேகமாக இமையா இரும,

இமையா இருமும் சத்தம் கேட்டு ஓடிவந்த கதிர், "இமையா, தண்ணீர் குடிக்கும் போது விளையாடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனில்ல" தலையை தட்டிவிட்டவன், கைகுட்டையால் தன்னவளின் முகத்தை துடைத்துவிட்டான்.

இமையா மனதிலும் இந்த குழப்பம் இருக்கத்தான் செய்தது 'காதல் இரண்டு முறை வருமா? இது காதலே இல்லையா? ஒருவேலை கணவன் என்ற ஈர்ப்பாக இருக்குமோ? இல்லை படத்திலும் கதைகளிலும் வருவது போல மஞ்ச கயிறு மேஜிக்கா இருக்குமோ? ஆனா கல்யாணத்துக்கு முன்னால் அரசுவை உண்மையா காதலிச்சேனே… அவன் என்னை வேண்டாம் என்று சொல்ல வைத்தது நானாக இருந்தாலும் என் வாழ்வில் அவனில்லை என்று நினைத்த போது தற்கொலை முயற்சி வேறு தோன்றியதே. எது காதல் அதுவா? இதுவா?’ இமையா முழுவதும் குழம்பி போனாள்.

வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிட உட்கார, சாதம் மட்டும் வைத்துவிட்டு, காலையில் ரசத்தின் சொதப்பல்களை சரி செய்து வைத்த புளிக்குழம்பை மூவரும் பாராட்டி உண்டு முடித்தனர்.

நால்வரும் ஹாலில் படுக்கையை போட்டு மாமா மருமகன் ஒரு புறமும், அம்மா மகள் ஒரு புறமும் படுத்து கதை அளக்க துவங்கி நடு இரவில் தான் தூங்கினார்கள்.

எப்பவும் போல நேரத்தில் எழுந்த கதிர் சமையல் கட்டுக்குள் போக, சரண் தயாராகி வந்தவர் மாப்பிள்ளைக்கு உதவி செய்யத் துவங்கினார்.

கதிர் வழக்கத்தைவிட மாமாவின் உதவியோடு சீக்கிரம் சமைத்துவிட்டு, தயாராகி வெளிவந்தது கூட தெரியாமல் நடு ஹாலில் துயில் கொண்டிருந்தாள் இமையா.

“அத்தை மாமா நான் கிளம்பறேன். எப்படியும் போன உடனே துறத்திவிட்டுடுவாங்க சீக்கிரமே வந்துடுவேன்"

“அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை கொஞ்சம் கோபமா இருக்காங்க. சீக்கிரமே சரி ஆகிடுவாங்க"

“சரி மாமா கிளம்பறேன்" அழகியோ இமையாவை எழுப்ப முயற்சிக்க,

“அத்தை விடுங்க நைட்டு லேட்டா தானே தூங்கினா. தூங்கட்டும்"

“சரி தம்பி"

“சரி அக்கா” என்றான் கதிர் ஒற்றை கண் சிமிட்டி

“எது... இந்த பாட்டி உங்களுக்கு அக்காவா‌"

“என்னா மாமா இப்படி சொல்லிட்டிங்க. எனக்கு அக்கா போல தான் இருக்கு அழகி அத்தையை பார்த்தா. ஆனா உங்களை பார்த்தா தான் எங்க அக்காக்கே அண்ணா போல இருக்கு"

“இந்த இமையா கூட சேர்ந்து ஒரே சேட்டை” சரண் பொய் கோபம் காட்ட,

“சரி சரி கோச்சிக்காதிங்க மாமா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். இமையாவை பாத்துக்கோங்க கிளம்பறேன்"

என்ன தான் கதிர் தைரியமாக போனாலும் அங்கு இருப்பவர்களின் முகத்தில் எப்படி விழிப்பது என்ற தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது.

திருமணம் ஆகாத ஒரு தங்கையை விட்டு விட்டு, தன் வாழ்க்கைதான் முக்கியம் என்று வந்தது மனதை உறுத்தியது. இருந்தும் இன்னொரு மனமோ 'அவள் இப்போது தானே கல்லூரி முடித்திருக்கிறாள். அவளின் கல்யாணத்துக்கு என்ன அவசரம்' தனது மனதின் எண்ண ஓட்டத்தை நிறுத்தியவன் தனது வீட்டை நோக்கி பயணம் செய்தான்.

இமையா எழுந்ததும் “கதிரா… எங்க இருக்க வா" எப்போதும் கூப்பிட்ட அழைப்புக்கு ஓடிவருபவன், இரண்டு நிமிடம் கடந்திருந்த நிலையிலும் வரவில்லை என்றதும் இமையா யோசனையில் இன்னும் சிறிது குரலை உயர்த்தி அழைக்க இந்த முறை.

“இரு இமையா வரேன்” வெளியே தோட்டத்தில் பூ கட்டிக்கொண்டே அழகியின் குரல் கேட்டது.

“கதிரா.. எங்க போய்ட்டான்" சட்டென்று தலையில் கை வைத்தவள், "நேற்று ஊருக்கு போறேன்னு சொன்னானில்ல எழுந்து பாய் கூட சொல்லலையே. இமையா வரவர நல்லா சோம்பேறியா ஆகிட்ட"

சரண் அழகி, தங்கள் மகளை சிறப்பாக கவனித்துக் கொண்டாலும் இமையாவுக்கு கதிரை பிரிந்திருப்பது மன வேதனையை கொடுக்க, கதிர் எப்போ வருவான் என்று காத்திருக்க துவங்கினாள்.

நேரம் போக போக இமையா முகம் வாடிக்கொண்டே இருந்தது. 'தூங்கினால் சரியா போகும்' என திடீர்னு ஏற்பட்ட தனிமையை போக்க நினைத்தவள், தனது தாமரை விழிகளை மூடினாள்.

கனவிலும் கதிர் தான்… இருவரும் யாருமில்லா நடு ரோட்டில் நடந்து செல்ல, இமையாவின் பின்னிருந்து அவளது காதலன் இமையாவின் கரங்களை பற்றினான்.

“இமையா என் கூட வந்திடு. இனி நீ எனக்கு மட்டும் தான்" இமையா வேர்க்க விறுவிறுக்க கதிரை பார்க்க, அவனோ இமையாவின் கரங்களை விட்டுவிட்டு முன் நடந்தான்.

இமையாவுக்கு கதிரை பிரிய மனம் சிறிது கூட ஒப்பவில்லை. “நீ என்னோட முடிஞ்சிப்போன அத்தியாயம். மீண்டும் உள்ளே வர முயற்சிக்காதே" இமையா கடுமையாக பேசி அவனின் கையை உதறிவிட்டு,

“கதிரா… கதிரா… எனக்கு நீ போதும் வேற யாரும் வேண்டாம்" கதிரை நோக்கி ஓட, இவ்வளவு நேரம் தெரிந்திருந்த பார்வை அதிர்ச்சியில் மீண்டும் மங்க துவங்கியது.

கதிரை காற்றில் துலாவிய இமையா பதறி அடித்து எழுந்தாள்.

“கதிரா.. கதிரா.. என்னை விட்டு போகாத" கனவில் இருந்து முழித்தவள், கனவின் தாக்கத்தால் பதறினாள். உடல் முழுவதும் உஷ்ணக்காத்து பரவியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது அவளுக்கு.

சரணிற்கும் அழகிக்கும் மகளை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தத்தலித்தார்கள்.

கதிரும் மாலை நேரத்தில் வந்தவன் இமையாவின் நிலையை பார்த்து பதறித்தான் போனான். முகமெல்லாம் வீங்கி இருந்தது.

“அத்தை என்னாச்சி எதுக்கு இப்படி இருக்கா?“

“ஏதோ கெட்ட கனா கண்டிருக்கா”

“சரி அத்தை நான் பாத்துக்கிறேன்" இமையா அருகில் கதிர் அமர்ந்தான்.

“இமையா!"

“கதிரா.. என்னை விட்டுட்டு போய்டுவியா. நீ இல்லைனா ஒரு மாதிரியிருக்கு. கனவுல நீ என்னை விட்டுட்டு போயிட்ட.. ஏன்டா என்னை விட்டுட்டு போன" இமையா தன் வெட்டாத நகத்தை கொண்டு கதிர் முகத்தில் கீறிவைத்தாள்.

“ஏய் பூனைக்குட்டி கீறிவைக்காத மாமா அழகான முகம் அசிங்கமா ஆகிடும். முதல்ல இந்த நகத்தை வெட்டி விடனும்"

“இப்பமட்டும் என்ன உலக அழகன்ன்னு நினைப்போ… மண்டையில் கொண்டை போடும் அளவுக்கு முடி கரடிகுட்டி போல முகமெல்லாம் முடி அழகாமே அழகு"

“இதுதான் என் தங்க குட்டி. இப்படி தான் வம்பு வளர்த்துட்டு பேசனும் சிரிச்சிட்டே இருக்கனும்"

“சரி.. எனக்கு சத்தியம் பண்ணு. எங்காவது போனா அரைமணி நேரத்துக்கு ஒரு முறை கால் செய்யனும். நானே போறேன்னு சொன்னாலும், என்னை இப்படி கட்டி பிடிச்சிட்டு விடக்கூடாது“ இமையா எதிரில் இருந்த கதிரை அணைத்துக்கொள்ள

கதிர் தன் ஆசை மனைவியின் முதல் அணைப்பில் கிறங்கிதான் போனான்.

கதிர் உடம்பில் ஒரு வகை மின்சாரம் பரவ நெளிந்தான். கதிர் அசைந்து கொண்டிருப்பது இமையாவுக்கு தொந்தரவாக இருந்தது.

“எதுக்கு இப்படி நெளிஞ்சிட்டிருக்க?"

“இது தான் ஒரு பெண்ணை முதல்ல கட்டிப்பிடிப்பது அதான் ஒரு மாதிரி இருக்கு"

“ஆமா நாங்க தினமும் ஒருவனை கட்டிப்பிடித்து டிரைனிங் எடுத்து வந்தோம் பாரு" இமையா கருவிழிகளால் மிரட்ட

“சரி.. சரி கண்ணை உருட்டாத. இன்னைக்கு எப்படி போச்சி"

“போச்சு… போச்சி நல்லா போச்சி. அமைதியா அப்பா அம்மாவிடம் கதை கேட்டுட்டு இடையில் உன்னை நினைச்சிட்டு. அப்புறம் அந்த கெட்ட கனவு அவ்வளவு தான். அங்க நம்ம வீட்டில் என்ன சொன்னாங்க?” கதிர் மனதால் ஒரு குத்தாட்டமே போட்டான்.

‘இமையாவுக்கு என் பிரிவு தாங்கவில்லை. நம் வீடு என்று குறிப்பிடுகிறாள். லவ் வந்துடுச்சா? சரி கேட்டு பார்ப்போம்'

“இமையா... டு யூ லவ் மீ?” கண்களில் பல கனவுகளோடு கேட்க அவனது கேள்விக்கு முதலில் திணறியவள், அவன் கேட்டது காது கேட்காதது போல முக பாவனையை மாற்றினாள்.

“டேய் கதிரா... நம்ம வீட்டுல என்ன சொன்னாங்க?” சற்றுமுன் காலையில் தாமரை போல விரிந்திருந்த முகம் சுருங்கியது.

‘கதிர் கொஞ்சம் சத்தமா கேட்டிருக்கனும். இவளுக்கு காது சரியா கேட்கல போல'

“கதிர் என்னாச்சி.. அங்க திட்டிட்டாங்களா? சோகமா இருக்கியா"

“இல்லை இமை குட்டி எதுமில்ல" கதிர் அங்கு நடந்ததை சொல்லி இமையாவை சங்கடப்படுத்த விரும்பாமல் மழுப்பினான்.

“இமையா… மாப்பிள்ளை” வெளியே இருந்து குரல் வர

“இமை.. அத்தை மாமா கிளம்பிட்டாங்க போல வா போவோம்" இருவரையும் அனுப்பி வைத்தவர்களின் மனதில் குழப்பம்தான் மிஞ்சி இருந்தது.

இமையாவுக்கு ‘கதிரின் மீது காதல் வந்துவிட்டாதா?' என்றும் கதிருக்கும் அதே எண்ண ஓட்டம் தான்.

இமையா தன் காதலை அறிவாளா
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 14

அத்தை மாமா முன் எதையும் காட்டக் கூடாது என்று மனதில் பட்ட ரணத்தை கல்லாக்கி கொண்டிருந்தவனுக்கு, அவர்கள் கிளம்பியதும் வலி மனதில் சூழ்ந்துகொண்டது.

கதிரால்அங்கு நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. 'அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன். பிடிச்ச பெண்ணை கட்டிக்கிட்டது என்ன பெரிய பாவமா? அவளிடமிருக்கும் நிறை யாருக்கும் தெரிவதில்லை அது ஏன் குறை மட்டும் முன் நிற்கிறது? திருமணம் பின் இப்படி ஆகி இருந்தா விட்டுவர சொல்லி இருப்பார்களா?’ கதிர் ஒரு பக்கம் மனதில் உள்ள வலியை ஆற்ற வழி தெரியாமல் கலங்கினான்.

இமையா மனதில் 'தான் செய்வது சரியா? கதிர் மீது உள்ளது நட்பா? காதலா? ஏன் அவன் இல்லாத போது மனம் இப்படி பதறியது. அப்பா சொன்னது போல காதலா' இமையா எவ்வளவு தன்னை குழப்பிக்கொள்ள முடியுமோ அவ்வளவு மனம் என்னும் தெளிந்த குட்டையை குழப்பினாள்.

கதிரும் அதன் பிறகு வழக்கமாக செய்யும் வேலையை செய்து முடித்தவன், இமையாவை வெளியே அழைத்து சென்றான். கதிர் ஏதோ ஒரு யோசனையில் வர, இமையா பேசுவது கூட அவனது காதில் விழவில்லை. இப்படியே இரண்டு தினங்கள் மவுனத்திலும் தயக்கத்தோடும் நகர்ந்தது.

பக்கத்து வீட்டு பெண், சக்தி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தாள்.

“கதிர் மாமா அது செஞ்சி கொடுங்க இது செஞ்சி கொடுங்க" என்று அவனை வேலை வாங்கினாள். சக்தி வேலை வாங்க இமையவுக்கு தான் வயிற்றிலிருந்து புகை வந்தது.

‘இவ எதுக்கு என் புருசனை மாமானு சொல்லிட்டு சுத்துறா? அவன் எனக்கு மட்டும்தான் மாமா' இமையாவுக்கே அதிர்ச்சி ஆச்சர்யம் என பல கலவையான உணர்வுகள் வந்து போனது.

‘அப்போ அவர் என்னவன்னு நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேனா?‘

“இமை குட்டி சாப்பாடு போட்டுட்டேன் வா சாப்பிடலாம்"

“கதிர் தனியா பேசனும்”

“அது எல்லாம் முடியாது. இந்த சக்தி இங்கே தான் இருப்பா. என்ன என் மேல பயம் வந்திருச்சி போல” என்றாள் சக்தி.

“உன்னிடம் எனக்கென்ன பயம்? இந்தா பாருடி இவரை இனி மாமா கூப்பிடாத. இவர் எனக்கு மட்டும் தான் மாமா. அப்படி தானே கதிரா?”

“ஆமா டா தங்கம்” இமையாவின் மாற்றத்தை பார்த்து, கதிர் டன் கணக்காக ஜொல்லு வடித்தான்.

“அட போங்கப்பா…! எனக்கு மாமா இல்லையேன்னு கூப்பிட்டா.. ரொம்ப தான். மன்னிச்சிடுங்க அக்கா உங்க புருஷனை இனி நான் உறவு சொல்லி கூப்பிடலை நான் வரேன்" சக்தி கோபித்துக்கொண்டு போனாள்.

“ஏன் இமையா இப்படி? அதை சாதாரணமாக சொல்லி இருக்கலாம். அவளே மாசத்துக்கு ஒரு முறை தான் வரா.. இப்படி விரட்டி விட்டுட்ட. இப்போதைக்கு பக்தத்தில் உறவுன்னு சொல்லிக்க இவங்க தான் இருக்காங்க"

“சாரி சட்டுனு தோனுச்சி சொல்லிட்டேன். இனி பாத்து பேசறேன் மன்னிச்சிடுங்க" இமையா மவுனம் என்னும் திறையில் மீண்டும் ஒளிய துவங்க,

“இமையா கோபமா?“

“இல்லை நான் முன்னாடி இப்படி இல்லை. ஒரு இரண்டு வருசமா வேற போல ஆகிட்டேன். நான் இனி இப்படி எதும் நடக்காமல் பாத்துக்குறேன். எனக்கு தூங்கனும் கதிரா"

“வா படுத்துக்கோ” கதிர் தன் தோளில் சாய்த்துகொள்ள

“என்னாச்சி இமையாவுக்கு? இரண்டு நாளாக சரியில்லையே. எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிற போல இருக்கு?"

“அது.. கதிர்" என தயங்கிய இமையா, ‘இந்த சூழலில் காதல் வந்துவிட்டது உன் மீதுன்னு சொல்வது சரியா? ஒரு மாதத்தில் எப்படி காதல் உனக்கு வந்ததுனு கேட்டா என்னிடம் பதில் இல்லையே'

பேச்சுக்கு சிறு இடைவெளி கொடுத்தவள் “உங்க வீட்டில் என்ன ஆச்சி? என்னால தானே உங்க கிட்ட யாரும் பேசுவதில்லை" இமையாவின் சமாளிப்பு கதிருக்கு தெரிந்தாலும் தோண்டி துருவி கேள்வி கேட்கவில்லை அவன்.

“அது பெருசா ஒன்றுமில்லை. திரும்ப வீட்டு பக்கம் வராதே சொல்லிட்டாங்க. தங்கச்சிக்கு நேத்து நிச்சயம், என்கிட்ட கூட சொல்லை. அதான் வருத்தமா இருக்கு"

“அச்சோ… கதிரா நான் எங்க வீட்டுக்கு போகட்டா? நீ உங்க வீட்டுக்கு போயிடு. அவர்களும் பாவமில்லை உன்னை கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பாங்க"

‘ஏன் இவ மத்தவங்களுக்காக இப்படி யோசிக்கறா தனக்காக எதும் நினைக்க மாட்டாளா?' என்று தான் தோன்றியது கதிருக்கு.

“உனக்காக நினை இமையா” கதிரிடமிருந்து உதிர்த்த வார்த்தையை கேட்டு, கசப்பான ஒரு புன்னகை வெளிப்பட்டது இமையாவின் இதழ்களில்.

“இல்லை கதிர் நான் எனக்குன்னு நினைத்த எதுவுமே என்கிட்ட இல்லை. இருக்கனும் நினைத்த அனைத்தும், என் கையால விரட்டி விட்டுட்டேன். எனக்குன்னு நான் யோசிக்கற எண்ணத்தையே விட்டுட்டேன். நான் இழந்த வரை போதும், உன் பேமிலியை விட நான் ஒன்னும் பெருசு இல்லை கதிர் உனக்கு. என்னை சில வருடமாதான் காதலிச்சி இருப்ப, ஆனா அவங்க நீ உருவாகியதிலிருந்து உன்னை நேசித்த உள்ளங்களின் மனதை நீ உடைத்திருக்க கூடாது கதிரா"

“நீ சொல்வது சரி தான் இமையா. உன்னையும் இந்த நிலைமையில் பாத்துட்டு என்னால முடியலை இமையா. முதலிலேயே வீட்டில் விருப்பம் வாங்கிட்டு தான் கல்யாணம் செய்ய நினைத்தேன். வீட்டில் கூட காதலுக்கு எதிர்ப்பு எல்லாம் இல்லை இமையா. இந்த குறையை காரணம் காட்டியது எனக்கு பிடிக்கலை… அதான்" இமையா முகத்தில் வெற்று புன்னகை.

“சரி.. நடந்ததை மாத்த முடியாது கதிரா. அவங்களை எப்படியாவது சமாதானப் படுத்த பாரு. எனக்கு வீட்டில் நிறைய ஆளுங்க இருந்தா தான் பிடிக்கும்"

“என் தங்க குட்டிக்காக இது கூட செய்ய மாட்டேனா நான். ஆனா கொஞ்சம் தாமதமாகும்"

கதிருக்கு இமையாவின் வார்த்தைகள் பலம் கொடுத்தது. சற்று முன் ‘எப்படி தான் வீட்டிலிருப்பவங்களை சரி கட்ட போறோமோ' என நினைத்தவனின் மனதை மாற்றியிருந்தாள் இமையா. ‘எப்படியும் சரி கட்டி விடலாம்’ என்ற புத்துணர்ச்சி வந்தது.

இமையா கதிருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, தன் மனதில் உள்ள காதலை அறிந்தவளால் அதனை மறைக்க முடியவில்லை. கதிரிடம் எப்படி சொல்லுவது என்று தயங்கி தயங்கியே ஒரு மாதம் கடந்திருந்தது. கதிரின் காதலும் கவனிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தே தான் சென்றது. கதிரிடம் தன் காதல் கொண்ட மனதை மறைப்பது தான் பெரும்பாடாக பட்டது இமையாவிற்கு.

அவன் அருகில் அமரும் போதும் செல்லம் கொஞ்சும் போதும் இமை குட்டி என்று அழைக்கும் போதும் அவனிடம் தன் காதலை வெளிப்படுத்த நினைப்பாள். ஆனால் ஏதோ ஒரு தயக்கம். தனது பழைய வாழ்க்கையை பற்றி பேச வேண்டும். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த ஒரு நல்ல நாளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டு காமாட்சியும் சக்தியும் இனிப்பு செய்து எடுத்து வந்தார்கள்.

“இமையா.. ஸ்வீட் எடுத்துக்கோ மா"

“என்ன ஸ்பெஷல் அக்கா"

“நம்ம சக்திக்கு பிறந்த நாள்மா”

“ஹாப்பி பர்த் டே.. சக்தி" சக்தியிடமிருந்து பதில் தேங்க் யூ மட்டும் தான் வந்தது.

சக்தியை அன்று ஹர்ட் செஞ்சிட்டோம் என இமையா தயங்கிக்கொண்டே சக்தியிடம் “சாரி... சக்தி" என்க

“அட விடுக்கா நானும் உன்னை வெறுப்பு ஏற்றத்தான் மாமானு சொன்னேன். நான் கதிர அண்ணா தான் கூப்பிடுவேன்"

“சும்மா சமாளிக்க சொல்லாத. நீ மாமா கூப்பிட்டுக்க. எனக்கு எந்த பிரச்சனையுமில்லை"

“அட.. என்னக்கா நம்பலையா? நீங்க அண்ணாவை கேளுங்க"

“கதிரா.. ஆமாவா?”

“ஆமா..“ என்றான் அவனும்.

“சரியான பிராடு பசங்கடா நீங்க"

“ஆமாக்கா அண்ணா சரியான பிராடு. அதனால தான் இந்த தேவதையை பிராடு செய்து கையோட தூக்கிட்டு வந்துட்டாங்க"

“ஆமா என்ற மாமா சரியான பிராடு" என சக்தியும் இமையாவும் நெருங்கிய தோழி போல ஆனார்கள். இருவரின் பேச்சும் வளர்ந்துகொண்டிருந்தது.

கதிரும் காமாட்சி அக்காவும் மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வர கிளம்பினார்கள்.

மார்க்கெட் சென்றவர்கள் பல மணி நேரம் கழித்து வந்தும், இருவரின் பேச்சும் முடிந்தபாடில்லை.

“என்ன இன்னுமா பேசி முடிக்கல" பைகளை சுமந்து வந்த கதிர் கேட்க

“கதிர்ணா.. அக்கா செமையா கதை சொல்லுறாங்க"

“பாத்தியா இமையா நான் சொன்ன அப்போ நீ நம்பலை. சக்தியே சொல்லிட்டா”

“ஏதோ சொல்றிங்க நம்பித்தானே ஆகனும்”

“நாங்க ஒரு பிளான் செஞ்சி இருக்கோம்”

“என்ன பிளான் ?”

“அக்காவை கதை சொல்ல வச்சி, பிக்சர் எடிட்டிங் போட்டு யூ டியுப் சேனல் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்"

“மத்தவங்க கதை சொன்னா காப்பி ரைட்ஸ் பிராப்ளம் வருமே?"

“மத்தவங்க ஸ்டோரி எழுதினா தான் அந்த பிராப்ளம் வருமாம். அக்கா அவங்க வாழ்க்கையில் நடந்த கதையை சொல்ல போறாங்களாம்"

“இமையா சூப்பர் டா.. இரண்டு பேருக்கும் ஆல் தி பெஸ்ட். எப்போ ஸ்டார்ட் செய்ய போரிங்க"

“சக்திக்கு காலேஜ் இன்னும் இரண்டு வாரத்தில முடிஞ்சிடும். அதுக்கு அப்புறம் ஆரம்பிக்க போறோம்"

“சரி வாங்க சாப்பிடலாம்" சக்தி கிளம்பும் போது இமையா காதில் ஒரு ரகசியம் சொல்லி சென்றாள்.

“இமையா உன் காதலை சொல்ல சரியான நாள். இன்னும் ஒரு வாரம் தான். கதிரா கிட்ட அனைத்தும் சொல்லிடனும். ஆனா கதிரை தான் அவன் கஷ்டப்படுவதை நினைத்து பரிதாபத்தில் ஏற்பட்ட காதல்னு நினைச்சிகிட்டா?... இமையா அதிகம் யோசிக்காத. தைரியமாகவும் இருக்கனும், கதிர் எந்த பதில் சொன்னாலும் ஏத்துக்கனும்”

இமையா தன் காதலை கதிரிடம் சொல்லுவாளா? இல்லை அதனை தடுக்க எதாவது வில்லங்கம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 15

ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. இமையா தன் மனதிற்குள் ஓராயிரம் முறை கதிரிடம் சொல்லவிருக்கும் காதல் வசனங்களை முணுமுணுக்க துவங்கினாள்.

‘கதிர் லவ் டையலாக் எல்லாம் செமையா பேசுவானே? நிறைய டைம் கலாய்ச்சி விட்டோமே! திரும்ப என்னை கலாய்ச்சா என்ன செய்றது' என இமையா காலையிலிருந்து ஏதோ முணுமுணுப்பதை பார்த்த கதிர்,

‘என்ன இவ.. ஏதோ முணுமுணுத்திட்டிருக்கா' கதிரும் அவள் பேசுவதை கேட்பதற்காக அமைதியாய் இமையாவின் அருகில் வந்து காது கொடுத்து கேட்க, கதிருக்கு ஒன்னும் விளங்கவில்லை.

“இமையா என்ன! திடீரென கடவுள் நம்பிக்கை முளைத்து விட்டதா?"

“இல்லையே.. என்னாச்சி கதிரா?” குழப்பம் தோய்ந்த குரலில் கேட்க

“ஏதோ மந்திரம் முணுமுணுத்துட்டு இருக்க காலையிலிருந்து"

“சும்மா பாட்டு பாடிட்டிருந்தேன்" என்று மழுப்பினாள்.

“நம்புவது போல இல்லையே"

“நம்பலனா.. போ எனக்கென்ன"

“சரியான அடமன்ட் டி நீ. சரி நைட்டுக்கு என்ன சமைக்கிறது?”

இமையா தன் கன்னத்தில் கை வைத்தவள்,‘என்ன செய்ய சொல்லலாம்’ என யோசித்தாள்.

“கதிரா.. நான் இன்னைக்கு சமைக்கட்டா?” இமையா ஆர்வமாக கேட்டாள்.

“பாருடா... என் விளையாட்டு பிள்ளைக்கு சமைக்க எல்லாம் ஆசை வருது. போ பொம்மை வச்சி விளையாடு” கதிர் சொன்னது மட்டுமில்லாமல், அருகிலிருந்த ஒரு பொம்மையை தூக்கி அவள் மீது போட

இமையா சில்லரையாக சிரித்ததை ரசனையாக பார்த்தான் கதிர்.

“இமையா குட்டி நீ ஏதோ என்கிட்ட மறைக்கிற செல்லம்"

‘சரியான டிடக்டிவ் மூளை... எப்படி மறைத்து வைக்க நினைச்சாலும் கண்டு பிடிச்சிடுவான்’

“அடியே பட்டு தங்கம் என்ன யோசனை? இப்போ எல்லாம் கனவுலையே மிதந்துட்டிருக்க என்ன விசயம்? இந்த குட்டி மண்டைக்குள்ள என்ன ஓடுது?"

“நிறைய டிராமா பார்த்து கெட்டு போயிருக்க, வா சமைக்கலாம்" கதிரை அதற்கு மேல் யோசிக்க விடாமல் இமையா அவசரப்படுத்தினாள்.

“கதிரா என்ன சமைக்கலாம்?"

“இந்த வீட்டு மகா ராணி எது சொல்றாங்களோ அது சமைக்கலாம்”

“எனக்கு சிக்கன் ரைஸ் வேணும்“

“இமை குட்டி வேற எதாவது சமைக்கலாமா டா"

“இல்லை எனக்கு சிக்கன் ரைஸ் தான் வேணும்" என பிடிவாதமாக நின்றாள்.

“இமை எப்படி உன்னை தனியா விட்டுட்டு கடைக்கு போறது?"

“நான் சமத்தா சோப்பாவில் உட்காந்துக்கிறேன். பூண்டு வெங்காயம் எடுத்து கொடு. உறிச்சிட்டு அமைதியா இருப்பேன் சரியா"

“இல்லை இமையா. நாளைக்கு பாத்துக்கலாம் அடம் பிடிக்காத" என கதிர் அதட்டவும், இமையா தன் பிங்க் நிற இதழ்களை பிதுக்கி அழுக துவங்கவும் சரியாக இருந்தது.

“சரி சரி.. எதுக்கு இந்த பிதுக்கல்” உதட்டை சுண்டிவிட்டான்.

“ஆஆஆ... வலிக்குது” தன் கீழ் உதட்டை தேய்த்துவிட,

“இப்படி தான் அடிப்பேன்... அடங்கினால் தானே. எதுக்கிந்த பிடிவாதம் பக்கி" பிடிவாதம் என்ற வார்த்தையை கேட்டு, இமையா திடீரென்று அமைதியானாள். இமையாவின் மனதில் நிறைய கலக்கங்கள் சூழ்ந்துக்கொண்டது.

“சரி.. சரி நான் போய் வாங்கிட்டு வரேன். சிக்கன் ரைஸ் இல்லை, பிரியாணி செய்யலாம் பாஸ்ட் புட் உடம்புக்கு நல்லதில்ல மாசத்துக்கு ஒரு முறை தான் இனி"

இமையாவின் அமைதியை கலைக்க கதிர்,

“இமையா எதாவது மனசு கஷ்டப் படுவது போல பேசியிருந்தா மன்னிச்சிடு தங்கம்மா!

“ஏய் கதிரா அது எல்லாம் ஒன்னுமில்லை டா"

"இரு நான் போய் சிக்கன் வாங்கிட்டு வரேன். கதவை பூட்டிட்டு போறேன் 15 நிமிசத்துல வந்துடுறேன்" கதிர் வேகமாக போய் வாங்கிட்டு வருவதற்குள்

இமையா தன் பழைய நினைவுகளை ஒதுக்கி வைத்தவள், கதிர் எடுத்து வைத்த வெங்காயம் பூண்தடின் தோளை நிதானமாக உறித்து முடித்தாள்.

“அரை மணி நேரம் ஆகியிருக்கும் இந்த கதிரா எங்க போயிருப்பான்?” இமையா மேஜை மீது கத்தியிருக்கா என்று காற்றில் துலாவி கண்டுபிடித்து கத்தியை எடுத்தவள், பெரிய வெங்காயத்தை வெட்டத் துவங்கினாள்.

“பரவாயில்லை இமையா! கண்ணு தெரியலைனாலும் ஒரு வெங்காயத்தை சரியா கட் செஞ்சிட்ட" தனக்குத் தானே சபாஷ் போட்டவள், அடுத்த வெங்காயத்தை வெட்ட துவங்கும்போது தன் கையையும் சேர்த்து வெட்டிக்கொண்டு, “ஸ்ஸ்ஸ்ஸ்....” இமையா கத்தவும், கதிர் கதைவை திறந்து வரவும் சரியாக இருந்தது.

இமையா அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதாரில் ரத்தம் படிந்திருந்தது. கதிர் கையிலிருந்த சிக்கனை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தான்.

“அறிவு கெட்டவளே உன் நிலை என்னான்னு தெரியாம ஏன் இப்படி செய்யற? அதுக்கு தான் சிக்கன் இன்னைக்கு வேணான்னு சொன்னேன். நான் சொல்றது எதும் கேட்க கூடாதுனு கங்கனம் கட்டிட்டு சுத்துறியா" கதிர் சரமாரியாக இமையாவை திட்டிக் கொண்டிருந்தான்.

“நீங்க இப்படி பேசரது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு” தவறும் செய்து விட்டு அதை ஏற்றுக்கொள்ளாமல் தான் திட்டுவது பிடிக்கவில்லை என்று சொல்லும் இமையா மீது அளவுகடந்த கோபம் ஏற்பட

“இமையா தவறு செஞ்சா அதை அக்சப்ட் செய்ய கத்துக்கோ. நீ செய்யவது மட்டும் தான் சரி என்று நினைக்காத"

“கதிர் நீ அதிகம் பேசிட்டிருக்க. இது சரியில்லை இந்த கருமத்துக்கு தான் நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்" இமையா தட்டுத்தடுமாறி அறைக்குள் அடைந்துக்கொண்டாள்.

‘நான் எல்லோருக்கும் பாரம் தான்..' என மனதில் மறுகினாள் இமையா.

கதிரும் இமையாவை சில மணி நேரம் முறைத்து பார்த்தவன், சமைக்க தேவையானதை எடுத்து வைத்தான்.

இங்கு நடந்த கலவரத்தில் இரவு உணவு சமைப்பது தாமதமாக, இமையா வேறு கோபித்துக்கொண்டு அமர்ந்திருக்க, கமகமக்கும் வாசனையில் பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது.

‘கனவில் கண்டது நிஜமாகிடுமா? ஏன் கடவுளே எனக்கு சாபம் கொடுக்குற. இன்னும் எவ்வளவு கனவு கொடுத்து என்னை உடைக்கலாம் என்று பார்த்திட்டிருக்கியா? கொஞ்ச கொஞ்சமா சுத்தி இருக்கவங்க பார்வைக்கு நான் பாரமாகிட்டே போறேன் வலிக்குது. எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்கறது. என்னால முடியலை அடுத்த முறை கண் பார்வை வரும்போது, கதிரா வாழ்க்கையை விட்டு போய்டனும்' மனதில் யோசித்தவளுக்கு கதிரின் பிரியாணி வாசம் சிறிதும் அவளது நாசிக்கு உரைக்கவில்லை.

ரத்தம் படிந்த வெள்ளை உடையில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கண்ணீர் அவளையும் அறியாமல், பட்டு கன்னத்தை நனைத்தது.

கதிரும் அவளின் மனதை புண்படுத்த அவ்வாறு பேசவில்லை. ரத்தம் அப்பி இருந்த ஆடையை பார்த்து பயப்பட செய்தது அவனுக்கு. தான் பெற்ற குழந்தையை பார்த்துக்கொள்ளும் தந்தை இடத்தில் இருப்பவனுக்கு இதயத்தில் உதிரம் வடிந்தது, அவளை அந்த நிலையில் பார்த்து.

இந்த இரண்டு மாதத்தில் கதிர் இவ்வளவு கோபம் காட்டியதே இல்லை. இருட்டில் வாழும் தேவதைக்கு சிறு சத்தம் கூட பயத்தைத்தான் கொடுத்தது.

இமையாவின் மனதில், பழைய காதல் வலம் வந்துக்கொண்டிருந்தது. ‘சாரி அரஸ். நீ என்னை விட்டுட்டு போகனும், உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு உன் மனசை குத்தி கிழித்ததுக்கு மன்னிச்சிடு. உன்னை என் மனம் தேடுது டா. என் நண்பனா என்னை பார்க்க வருவிய அரஸ். நான் நினைப்பது தவறு தான். இந்த காதல் கத்தரிக்கா முன்னாடி நீ என் பெஸ்ட்டிடா. மிஸ் யூ. சாரி டா உன்னை அலைய வச்சதுக்கு. நான் சாகறத்துக்குள்ள எனக்கு உன் மன்னிப்பு கிடைச்சா கூட போதும். கதிராவும் உன்னை போல தான் டா. பாசம் கேர் அனைத்தும் கொட்டி கொடுக்கிறான். உனக்கு செஞ்சதை தான் இவனுக்கும் செய்ய போறேன். நீ நல்லா இருக்கியா அரஸ்? உனக்கான தேவதையை கண்டு பிடிச்சிட்டியா டா. அப்படி இன்னும் கண்டு பிடிக்கலைனா சீக்கிரமே உன் கண்ணுக்கு கிடைப்பாங்க. மிஸ் யூ’ நேரில் பேச முடியாத தன் முன்னாள் காதலனான தன் முதல் நண்பனிடம் மனதில் பேசிக்கொண்டிருக்க

“இமையா..." கதிரின் மெல்லிய அழைப்பில் அதிர்ந்து போனாள்.

“மாமா.. சாரி இனி இப்படி சிக்கன் கேட்க மாட்டேன். நீ எது குடுக்கறியோ அதையே சாப்பிடுறேன். இனி நீங்க திட்டுவது போல நடந்துக்க மாட்டேன். இனி நான் வெஜிட்டேரியனா மாறிடுறேன்" இமையா உதடு துடிக்க கூறினாள்.

ஏற்கனவே அவளை திட்டி மனதால் உடைந்திருந்தவனுக்கு இமையாவின் நடுக்கம், அவனை மண்ணில் புதைத்தது.

“இமை குட்டி....”

“மாமா... இனி செல்லமா கூப்பிடாதிங்க அதனாலதான் குட்டி பாப்பாவா நினைச்சி ஏதேதோ செய்யறேன். இனி தங்க பாப்பா, குட்டி பாப்பா எல்லாம் இல்லை. மத்தவங்களுக்கு தொல்லை தரும் ராட்சசி நான். இந்த கண்ணு போனத்துக்கு என் உயிர் போயிருக்கனும். என்னை சுத்தி இருப்பவங்களுக்கு நான் பாரம் ஆகிட்டேன்" இமையா மனதால் முற்றிலும் உடைந்திருந்தாள். இதழ்கள் துடித்தது. உடலிலும் ஒரு அதிர்வு.

அவளின் புதிய அழைப்பான “மாமா" வை, அவள் வாயால் ஆசையாக கேட்க நினைத்தது அவன் காதுகளில் நாராசமாக விழுந்தது. நடுங்கிய பயக்குரலிலா கேட்க வேண்டும் இந்த மாமாவை.

இமையாவின் நடுங்கிய கையை கதிர் தொட, கரங்களை தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள்.

“நான் தூங்கனும். இந்த இருட்டு பயமா இருக்கு. எனக்காக கனவில் பட்டாம்பூச்சி காத்துட்டு இருக்கும். நான் அவங்ககிட்டையே போறேன். என்னால உங்க யாரையும் உணர முடியலை" என இருந்த இடத்திலே இமையா படுத்துக்கொள்ள,

கதிருக்கு அவளது தனிமையை போக்குவதற்கு, இவ்வளவு நாள் தான் செய்தது அனைத்தும் தவிடுபிடியாகியது.

படுத்த இமையா, "மாமா டைம் என்னாச்சி?” மெல்லிய குரலில் கேட்டாள்.

“எட்டு மணி இமையா" கதிரும் வழக்கமாக கூப்பிடும் இமை குட்டியை தவிர்த்தான். இமையாவுக்கு பிடிக்காதது இனி ஒரு துரும்பு கூட செய்ய கூடாது என்று உறுதி எடுத்தவன், அதை இப்போதே செயல்படுத்த துவங்கினான்
 
Status
Not open for further replies.
Top