ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் விழியின் மொழி...நானடி - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 6

வண்டி வீட்டை அடைந்துவிட்டது என்பதை அறிவுருத்தியது வண்டியின் குழுங்கல். அந்த திடீர் அசைவில் கனவுலகிலிருந்து மீண்ட இமையா தனது கைகளை காற்றில் தூலாவினாள்.

“எங்கே இருக்கோம்... வந்துட்டோமா?” இமையாவின் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது.

கதிருக்கு இமையாவின் இந்த பதற்றம் மனதை பிசைந்தது. ‘எப்படி பட்டாம்பூச்சியாக சிறகடித்த இவளது வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே. இவளது பேசும் கண்களில் ஒளி வந்தாலும் சரி வராமலிருந்தாலும் சரி. இந்த நீங்காத இருளையும் அவளை ரசிக்க வைக்க வேண்டும்'

“நம்ம வீட்டுக்கு வந்துட்டோம் இமை” இறங்கியவன் மறு புறம் சென்று, இமையா இறங்க உதவி செய்வதற்காக அவளது தோள்களை தொட.

“பொறுக்கி தொடாதே.. கண்டவன் எல்லாம் வந்து என்னை தொட கார்ப்பரேசன் பைப்பா நான்" அளவுக்கு அதிகமாக காய்ந்த எண்ணையில் படும் தண்ணீர் போல எரிந்து விழுந்தாள்.

‘கதிர் ஆரம்பமே அமோகமா தொடங்குதேடா’ சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

இவள் இவ்வளவு பேசியும் அமைதியாக இருந்த கதிரும் சளைக்காமல்

“தொடக்கூடாதுன்னு நீ அக்ரிமென்டில் போடல இமை குட்டி” அவளது பொன் கன்னங்களை தட்டி வம்படியாக அவளது தோள் தொட்டு காரிலிருந்து இறங்கியவன்,
அவளை வாசலில் நிற்க வைத்தான்.

ஆரத்தி கரைத்து எடுத்துவரும் பக்கத்துவீட்டு பெண்மணி,
“கதிர் தம்பி இரு. நான் வந்து இரண்டு பேருக்கும் ஆரத்தி எடுக்கிறேன்"

“என்னக்கா நீங்க? ஆசையா என் அழகு தேவதைக்கு சுத்தி போடலாம்னு நினைச்சா இப்படி வந்து கெடுக்குறிங்க"

“உன் ஆசைக்கெல்லாம் அப்புறமா சுத்திப்போட்டுக்கோ. முதல் ஆரத்தி தனியா எல்லாம் எடுக்கக் கூடாது" என்று கதிரின் கையிலிருந்த ஆரத்தி தட்டை பிடுங்கிக்கொண்டது, பக்கத்து வீட்டு காமாட்சி அக்கா.

கதிரை இமையா பக்கம் நிறுத்திவிட்டு ஆரத்தி எடுக்க துவங்கினார்.

“மகாலஷ்மி கணக்கா இந்த குடும்பத்தை நல்லா பாத்துக்கோமா” ஆரத்தியை முடித்துவிட்டு.

“நீங்க வலது கால் எடுத்து வச்சி உள்ளே போங்க. நான் ஆரத்தியை வெளியே ஊத்திவிட்டு வரேன்"

இமையா மனதில் திடீரென ஒரு பல்ப் எரிய, இடதுகாலை எடுத்துவைக்க முன் நகரும் போது, இமையா காற்றில் மிதந்தாள். இமையா செய்யப்போவதை புரிந்துகொண்ட கதிர் ஒரே தூக்கு.

“என்ன இமை... என்கிட்ட எல்லாம் உன்னோட தில்லுமுல்லு செல்லாது. நீ எந்த கால் எடுத்துவச்சி வந்தாலும் உன்னை பார்த்துட்டே இருக்கறது தான், என் வாழ்க்கையின் லட்சியம்"

“போதும் காது வலிக்குது. நைட் முழுசும் காதல் படம் பார்த்துட்டு இங்க வந்து காதல் வசனம் பேசி தள்ளவேண்டியது. ஐ ஹேட் இர்ரிட்டேட்டிங் காதல் வசனங்கள்" இமையாவின் திட்டுகளோடு இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

“ஓ அப்படியா மேடம்! சரி. இது இன்னும் எத்தனை நாளுக்குனு பார்க்கலாம்"

“பாரு பாரு… அதுக்கு முன்னாடி இறக்கி விடுடா பிச்சக்காரா”

“எது பிச்சைக்காரனா?”

“உன் மூடி வெட்ட கூட காசு இல்லாத பிச்சக்காரன் என்னை ராணி மாதிரி வச்சி இருக்க போரானாம். என் பர்ஸ்ல நூறு ரூபா எடுத்துட்டு போய் முதலில் முடியை வெட்டு. அதுக்கு முன்னாடி இறக்கி விடு. உன் உடம்பிலே இருக்க எழும்பு எல்லாம் குத்துது”

இமையை இறக்கிவிட்டவன், "இமை கண்ணுல எதாவது தெரியுதா?” ஆர்வமாக இமையாவை பார்க்க,

“ரொம்ப டிரீம்ஸ்க்கு போகாத. பக்கி நீ தூக்கும் போது உன் முடி என் மூக்குக்குள்ள போயிடுச்சி” இமையா சலித்துக்கொண்டு சொன்னாள்.

சற்றும் முன் ஆர்வமாக இருந்த கதிரின் முகம் சுருங்கியது.

“சரி இரு சாப்பிட எதாவது செஞ்சி எடுத்துட்டு வரேன்" கதிர் கிட்சனுக்குள் நுழையவும் காமாட்சி அக்கா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“ஏமா இமையா... கதிர் தம்பி எங்க”

“அக்கா அவர் உள்ள சமைக்க போய்யிருக்கார்" இமையா சொன்ன பதில் காதில் விழ

‘என் செல்ல ராட்சசி! பரவால்ல மத்தவங்க கிட்ட பேசும் போது மரியாதை தூள் பறக்குது. அவராம்ல' கதிர் காய்கறிகள் வெட்டிக்கொண்டே, தன் இதய ராணியை மனதால் ஆராதித்தான்.

“சரி மா. நான் உள்ள பார்த்துட்டு வரேன்" காமாச்சி அக்கா அதிரடியாக உள்ளே வந்து

“கதிரு இன்று சமைக்க வேண்டாம். நீ போய் இமையாக்கு வேற டிரஸ் எடுத்து கொடு. காலையில இருந்து அந்த புடவை கசகசனு இருக்கும். நான் இன்னும் ஒரு மணி நேரத்துல சமைச்சி கொண்டு வரேன்"

“சரிக்கா”

காமாட்சி அக்கா கிளம்பும் வரை அமைதியாக இருந்த இமையா, அவர் வாசலை தாண்டும் சத்தம் கேட்கவும்

“டேய் எங்க டா சாப்பாடு"

“அக்கா சமச்சி கொண்டு வராங்களாம். நீ வா குளிச்சிட்டு வேற டிரஸ் போட்டுக்கோ” கதிர் சொன்னதை கேட்டு, இமையாவின் முகத்தில் ஒரு வித கலவரம் பரவியது.

“இல்ல.. நான் இதுலையே இருந்துக்கிறேன்" அவளது தயக்கத்தை புரிந்துக்கொண்ட கதிர்

“இமையா நான் என் லிமிட்ஸ் எப்பவும் தாண்ட மாட்டேன். நீயா என்னை நெருங்கும் வரை கொஞ்சம் கொஞ்சமா சில விஷயத்தை மாத்திக்க பாரு தங்கம். வா நான் உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன். குட்டிப்பாப்பா சமத்தா குளிச்சிட்டு வந்ததும், நானே ரெடி செய்து விடுவேனாம்" சிறு குழந்தையிடம் பேசுவது போல கதிர் பேசி பேசி இமையாவை சரிகட்டி குளிக்க அனுப்பி வைத்தான்.

கதிரின் இந்த அக்கறையில் அவன் பக்கம் சாயத்தொடங்கிய மனதை, தன் பிடிவாதம் என்னும் கயிறு கொண்டு, தரி கெட்டு ஓடும் தன் மனதை இழுத்து பிடித்து வைத்தாள் இமையா.

குளித்து முடித்தாள், ஒரு பெரிய போராட்டத்துக்கு பிறகு. அங்கு கதிர் வைத்திருக்கும் ஆடையை கண்டுபிடித்தவள், எடுத்து உடுத்திக்கொண்டு தலையில் ஈரம் சொட்ட நின்றாள்.

‘அறிவு கெட்டவன் எங்க எது இருக்குனு சொன்னானா பாரு… இவன் என்னை ராணி போல பாத்துக்க போறானாம்’ மனதில் இமையா அர்ச்சிக்க,

குளியலறையில் வெளியே நின்ற கதிருக்கு ஒரு பதற்றம். முதல் நாள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வாசலில் நிற்கும் தாய் போல பதற்றமாக நின்றிருந்தான்.

முதலில் எங்கு எது இருக்கு என சொல்லிவிடத்தான் நினைத்தான் கதிர். அவளாக தெரிந்துகொண்டால்தான் சீக்கிரம் கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்று அமைதியானவன், அவள் வெளியே வரும் வரை காதை கூர்மையாக்கி நின்றிருந்தான்.

“என்ன இமை தலையை துடைக்காம நின்னுட்டிருக்க. அச்சோ துண்டு வைக்க மறந்திட்டேன் போல” என்று புலம்பியவன்

பக்கத்திலிருக்கும் ஒரு துண்டை எடுத்து இமையாவுக்கு துவட்டி விட்டான்.

‘இமையா இவன் உன்னை மடக்குறதுக்கு ஏதோ பிளான் போடுறான் மயங்காதே’ என்று தனது மனதுக்கு ஒரு பெரிய பூட்டை பூட்டியவள்,
கதிரின் கைகளை தட்டிவிட்டாள்.

“போதும் உன் நடிப்பு. எனக்கு கண்ணு தான் இல்லை. இரண்டு கையும் நல்லாவே வேலை செய்யும்” என்றவள் காற்றில் துலாவி அவன் கையிலிருக்கும் துண்டை பறித்து துவட்ட ஆரம்பித்தாள்.

‘பச்ச மிளகா.. இன்னைக்கு ஓவர் காரமா இருக்கு கதிரு வாய் கொடுத்து வாங்கி கட்டிக்காத’ கதிரின் அமைதியை இமையா தனது முதல் வெற்றியாக நினைத்தாள்.

‘இந்த புள்ளபூச்சி சத்தம் போட்டா அடங்கிடுறான். இனி இதையே வச்சி செய்யலாம்' என்று மனதில் கணக்கு போட்டவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. சில நிமிடங்களில் திரும்ப அவனது விளையாட்டை துவங்குவானென்று.

காமாட்சி அக்கா சாப்பாடு எடுத்து வந்தவர், கூடவே தன் மகள் சக்தியை அழைத்துக்கொண்டு வந்தார். வரும் போதே ஸ்பீக்கர் முழுங்கிய குரலோடு வந்தாள் சக்தி.

“கதிர் மாமா என்னை ஏமாத்திட்டிங்கல. அப்படி என்ன இந்த மூஞ்சில இருக்கு" சக்தி கத்திக்கொண்டே உள்ளே வர

‘அய்யோ... இவ வேற நேரங்காலம் புரியாம ஜோக் பேசறேன்னு பேசறா. இமையா எதாவது நினைச்சிக்கிட்டா என்ன செய்றது’

“ஏய் அதிகம் பேசாதே. வாயை கிழித்து சுண்ணாம்பு வச்சிடுவேன்" காமாச்சி மகளை அதட்டிவிட்டு

“இமையா எதும் நினைச்சிக்காத. இந்த ராட்சசி இப்படி தான் பைத்தியம் போல உளறுவா” காமாட்சி இமையாவுக்கு விளக்கம் கொடுக்க

“அது எல்லாம் ஒன்னும் இல்ல அக்கா”

“சக்தி மாமாக்கும் அக்காக்கும் சாப்பாடு பரிமாறிட்டு, சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்துட்டு வா… புரியுதா. உன் அப்பா பசி தாங்க மாட்டார் நான் போய் அவரை பார்க்குறேன்"

“என்ன மம்மி பேச்சில கொஞ்சம் வெட்கம் தெரியுது என்ன விசயம்?”

“இவளை... வீட்டுக்கு வா கண்டதை பேசும் இந்த வாய்க்கு சூடு வைக்கறேன்" காமாட்சி அர்ச்சித்தவாறு வீட்டைவிட்டு போக

“ஆனா மாமா இந்த மொக்க மூஞ்சிக்கு நீ என்னவே கட்டி இருந்திருக்கலாம்" இமையாவுக்கு சுள்ளென்று கோபம் வர

‘இமையா அமைதியா இரு. சாந்தி… சாந்தி… இவ இங்க இருந்து கிளம்புட்டும். இந்த ஜடமூடிக்காரனின் ஜடையை பிடித்து ஆஞ்சிபுடுரேன் ஆஞ்சி'

அதன் பிறகு சக்தி இமையாவிடம் வம்பு வளர்க்காமல், மூச்சுக்கு முன்னூரு முறை கதிர் மாமா.. கதிர் மாமா தான். இமையா காதில் ரத்தம் ஒன்று தான் வரவில்லை, அந்த வார்த்தையை கேட்டு.

இமையாவுக்கு தனியாக இலை வைக்காமல், இருவருக்கும் ஒரே இலை போட சொன்னான் கதிர்.

சக்தியிடம் கதை அளந்துகொண்டே இமையாவுக்கு ஊட்டிவிட, இமையா தன் மனதை பூட்டி இருந்த பூட்டை பிடிவாதத்தால் பிடித்து வைத்திருந்தாள்.

‘அது எப்படி ஒரே நாளில் ஒருவன் பக்கம் மனம் சாயும்? அப்போது நேற்றுவரை நான் ஒருவனை காதலித்து வந்தேனே... அந்த காதல் பொய்யா?' இமையாவின் மனம் எனும் குட்டையை கலங்கடித்தது இந்த எண்ணங்கள்.

இந்த மனம் என்னும் போர்களத்தில் யார் யாரை வீழ்த்தப் போகிறார்கள்?

இருவரும் தான் வீழப்போவதில்லை என்று நினைத்திருக்கும் இருவரில் வெற்றிவாகை சூடப்போவது யார்?
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 7

இருவரும் சாப்பிட்டு முடித்ததும், சக்தி அவளது வீட்டிற்கு கிளம்பினாள்.

இமையாவை எழுப்பி, “இமையா நீ இங்க படுத்துக்கோ”

“நான் தரையில் படுத்துக்கிறேன். கட்டில்ல இருந்தா விழுந்துடுவேன்”

“இமை நம்ம வீட்டில் கட்டில் மெத்தை உயரம்தான். அதும் சுவர் ஒட்டி போட்டிருக்கேன்” என்றவன் இமையாவை கை தாங்களாக பிடித்துக்கொண்டு படுக்க வைத்தான்.

சிறிது நேரத்தில் வெளிவேலையை எல்லாம் பார்த்துவிட்டு வந்த கதிர்,
தூங்காமல் விழித்திருக்கும் இமையாவை பார்த்து அவள் அருகில் வந்து படுத்தான்.

“இமையா இன்னும் தூங்கலையா” இமையா துள்ளி விழுந்தாள் திடீரென அருகில் கேட்ட கதிரின் குரலின் தாக்கத்தால்.

“சாரி இமையா. பயப்படுத்திட்டேனா? நீ தூங்கு” அவளை தூங்க சொல்லிவிட்டு இரவு விளக்கை ஒளிர செய்தவனின் மனதில் ஒருவித அமைதி நிலவியது. பல வருடம் தவத்திற்கு பிறகு இமையா கிடைத்திருப்பதை எண்ணி கண்களை மூட, கதிருக்கு நேர் மாறாக அவளின் இதயம் புயல் வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது இமையாவின் மனதில். 'ஒருவனின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டோமே’ என்ற உணர்வில் கண்ணீர் கோடுகள் இமையாவின் விழிகளிலிருந்து பயணித்து தலையணையை நனைத்தது.

உடல் அழுப்பில் சீக்கிரமாக தூங்க போன இமையாவின் கண்ணீர் தடத்தை பார்த்த கதிருக்கு வாழ்வின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். சிரிப்பால் மட்டும் தான் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வரணும். 'கவலைப்படாத இமை. உன்னை எப்படியும் இதிலிருந்து மீட்பேன்' இவ்வாறே கதிர் பல வகையன சிந்தனையில் தூங்கப்போனான்.

மறு நாள் விடியலில் எழுந்தவன், சிறிது செவ்விதழ்கள் பிரித்து, குழந்தை போல படுத்திருக்கும் இமையாவை தன் கண்ணின் இமையை கூட சிமிட்டாமல் பார்த்தான்.

பேன் காற்றின் உபயத்தால், அவளது முன் நெற்றியில் சில்மிஷம் செய்துகொண்டிருக்கும் முன்முடி மீது கோபம் கொண்டவன் அந்த முடிகளை விளக்கி விட்டு நெற்றியில் தன் முதல் அச்சாரத்தை பதித்தவன், சிறிது விலகி,

‘நீ முழித்திருக்கும் போது இந்த முத்தத்தை கொடுக்கும் நாள் என்னாளோ’ ஒரு பெரும் மூச்சி விட்டான். வழக்கமாக யோகா செய்யும் இடத்தில் அமர்ந்து, சூரிய நமஸ்காரம் தொடங்கி தேவையான சில உடற்பயிற்சி முடித்தவன், உள்ளே வரும் போதும் இமையா ஏதோ கனவில் மிதந்து கொண்டிருப்பது போல தெரிந்தது.

அவள் முகத்தில் ஒரு ஒளி. அந்த ஒளி கதிரை ஈர்க்க, அருகில் வந்து அமர்ந்தவனின் காதில் கேட்ட செய்தி அவனை உயிரோடு புதைத்தது.

“டேய்.. நான் சாப்பிட்டதை எதுக்கு சாப்பிடுற. எச்சை பையா. யாருக்கோ மனைவி ஆகப்போரவ மிச்சம் வைப்பதை சாப்பிடுற மறந்துடாத” அவளது காதலனுடன் விளையாட்டுக்கு பேசியது கனவில் வந்திருந்தது.

கதிர் இடிந்து போய் அமர்ந்திருந்தான். இதிலிருந்து எப்படி அவளை வெளியில் கொண்டுவருவது என்று புரியாமல் அமர்ந்திருந்தான்.

இமையின் விழி ஓரத்தில் கண்ணீர் கசிந்தது.

“போகாத டா.. தெரியாம அப்படி பேசிட்டேன். இனி எந்த தொந்தரவும் இருக்காது. நம்புடா விட்டுட்டு போகாத” என்று அலற, கதிர் இமையாவின் கன்னம் தட்டினான்.

“இமை.. இமை இங்க பாரு ஒன்னுமில்லை. வெறும் கனவுதான். ஒன்றுமில்லை” கதிர் சமாதானப் படுத்த படுத்த, இமையாவின் அலறல் அதிகரித்துக்கொண்டே தான் போனதே தவிர குறையவில்லை.

கதிர் இமையாவை அணைத்து சமாதானப் படுத்த “என்னை விட்டு போகாத டா. என்னால முடியலை டா. உன் வாழ்க்கை வீணா போகக்கூடாதுன்னுதான் நான் தேவையில்லாத சண்டை இழுத்தேன். நீ நல்லா இருக்கனும்னு தான் அப்படி செய்தேன். ஆனா.. உன் விலகலை என்னால ஏற்றுக்கொள்ள முடியலைடா” என்று அலறியவளை இன்னும் இறுக்க அணைத்தான்.

“மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை..

தண்ணீர் கேட்டேன்… அமீர்தம் தந்தனை..

எதை நான்.. கேட்டால் உனையே தருவாய்..” கதிர் மென்மையாக பாட.

இமையாவின் உடலில் அதிர்வும், பதற்றமும் குறைந்திருந்தது. சற்று முன் கதிர் பாடிய பாடலை முனுமுனுத்துக்கொண்டே இமையா மீண்டும் தன் தூக்கம் தழுவ, அவளை குழந்தைபோல மடியில் படுக்க வைத்து அவளது முடியை பரிவாக வருடினான்.

“அழகு சமத்து பாப்பா இப்படியே அமைதியா தூங்கனும் சரியா.. என் செல்ல ராசாத்தி” தூங்கும் தன் முதல் குழந்தையை கொஞ்சினான்.

அவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு சமைக்கும் வேலையை துவங்கியவன், முதல் நாளே அவளுக்கு பிடித்த மஸ்ரூம் செஸ்வான் ரைஸ் செய்தான். அதன் கார வாசனையில் எழுந்தவள், வாசம் பிடித்துக் கொண்டே தட்டுத் தடுமாறி கிட்சன் வரை வந்துவிட்டாள்.

சமையலை முடித்துவிட்டு அவன் திரும்பவும் இமையா வரவும் சரியாக இருந்தது.

“இமைகுட்டி கூப்பிட்டிருந்தா.. நானே வந்திருப்பேன்ல. சமையல் முடிஞ்சது. உனக்கு பிடிச்ச செஸ்வான் ரைஸ் குட்டி. ரெடி ஆகிட்டு சாப்பிடலாம் வா” அவளது கையை பிடித்து அழைத்து சென்றான்.

நேற்று போலவே இன்றும் அவளுக்கு தேவையான உடையை எடுத்து வைத்தவன், பாத் ரூமில் விட்டுவிட்டான். இமையா நேற்று போல இன்று தட்டுத் தடுமாறவில்லை.

தாழ்பாள் சரியாக இருக்குமிடம் கணித்தாள். ஆடையை கலைய ஆரம்பிக்க, வெளியிலிருந்து கதிர் கதவை தட்டினான்.

“இமை…” கதிர் கூப்பிட்டது இமையாவுக்கு எரிச்சலை கிளப்ப

“என்ன நிம்மதியா குளிக்க கூட கூடாதா. என்னை குழந்தை போல ட்ரீட் செய்றதை முதல்ல விடு. நான் ஒன்னும் நோயாளி இல்லை” வல்லென எரிந்து விழுந்தாள்.

கதிருக்கு முகம் சுருங்கி போனது. “தலைக்கு குளிக்காத இமையா. அது சொல்லத்தான் கூப்பிட்டேன். சாரி மா நீ குளிச்சிட்டு வா” என்றவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

‘இவன் என்ன பெரிய இவனா.. இவன் சொன்னா நான் கேட்கனுமா? இன்னைக்கு தலைக்கு தான் குளிக்க போறேன். இவனால என்ன செய்ய முடியும்’ கதிரை வெறுப்பேற்றவே தலைக்கு குளிக்க துவங்கினாள்.

இருவரும் மட்டும் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிறு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, தண்ணீர் தட்டு என சாப்பிட தேவையானதை அந்த அறையின் ஓரத்தில் அடுக்கி வைத்தவன் இமையாவின் வருகைக்காக காத்திருந்தான்.

மயில் கலர் டாப்ஸ் அணிந்து வந்தவளை கண் கொட்டாமல் பார்த்தான்.

‘என் இமையா எவ்வளவு அழகு’ கன்னத்தில் கை வைத்து வெளிப்படையாக சைட் அடித்தவன், இப்போது தான் கவனித்தான். தலையில் நீர் சொட்டச்சொட்ட, இமையாவின் முகத்தில் ஒரு ஏளன புன்னகை தவழ்ந்தது. ஏதோ பெரிய விஷயத்தை சாதித்த உணர்வு அவளுக்கு. இவனின் முகத்தில் கரி பூசியது போல ஒரு நினைப்பு அவளுக்கு.

கதிருக்கு கோபம் வந்தாலும், பொறுமையாக “இமையா நான் சொன்னது மறந்துட்டியா? தலைக்கு தண்ணீ ஊத்திட்ட”


“நீ சொன்னதாலத்தான் தண்ணீயே ஊத்தினேன். நீ எல்லாம் ஒரு ஆளு. நீ சொன்னா நான் கேட்கனுமா போடா” என்று சண்டை கோழியாக சிலுப்பி நின்றாள்.

“உன் நல்லதுக்கு தான் சொன்னேன். இப்போ சிலுப்பிக்கிட்டு நிக்கிறது எல்லாம். தலை வலி வந்தால் தெரியும் பட்டு தெரிஞ்சிக்கோ” என்றான் பேச்சை வளர்க்காமல்.


“வா சாப்பிடலாம்” இமையா தலையை ஒன்னா பாதியாக துடைத்தவளுக்கு கதிர் ஊட்டிவிட தொடங்க


கதிர் கைகள் அவள் வாய் அருகே வர “இல்ல எனக்கு வேண்டாம். நானே சாப்பிட்டுக்கிறேன். எதாவது கிண்ணத்தில் போட்டு கொடுங்க”

கதிரும் எதும் பேசாமல், போட்டுக்கொண்டு வந்தவன் இமையாவின் கைகளில் கொடுத்தான்.

ரசித்து ருசித்து சாப்பிடத் துவங்கியவள், மறு முறை சாப்பாட்டை கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.

‘நல்லா சமைக்கிரான் பரவால்ல’ மனதில் மட்டும் கதிரை பாராட்ட மனம் வந்தவளுக்கு, நிஜத்தில் ஒரு வார்த்தை சொல்ல வாய் வரவில்லை இமையாவுக்கு. அவள் பாராட்ட வேண்டும் என்று கதிரும் நினைக்கவில்லை. அவளது முகத்தில் தோன்றும் பாவனைகளே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

சாப்பிட்டு முடித்தவளை அழைத்துக்கொண்டு பால்கனிக்கு போனான். அங்கிருக்கும் பெரிய சாய்வு ஊஞ்சலில் உட்கார வைத்தவன் போனில் ஆடியோ நாவலைப் போட்டு கொடுத்ததை கேட்க துவங்கினாள்.

கதிரும் ஒரு பக்கம் அவனது மடி கணினியை எடுத்து உயிர்பித்தவன், அலுவலக வேலையை கொடுத்த நேரத்துக்கு முன்னதாகவே முடித்து நிமிர்ந்து பார்க்க
கதையை கேட்டுக்கொண்டே இமையா தூங்கி இருந்தாள்.

அவளது வதனத்தை வர்ணித்தவன், இமையாவை தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்தான். ஈரமான தலையை துடைத்துவிட்டான்.


‘தூங்கும் போது மட்டும் தான் சமத்து பாப்பா மத்த டைமில் அராத்து பாப்பா. இவளே வளர்ந்து இப்படி அட்டகாசம் செய்யறாளே! குட்டி பாப்பாவா இருக்க அப்போ என்னென்ன செஞ்சிருப்பா. அத்தை மாமா பாவம்’ சட்டென்று நியாபகம் வந்தவனாய்


'ச்சே.. காலையிலையே போன் போடனும்னு நினைத்தேன். இந்த பாப்பாவை கவனிச்சிட்டு எல்லாம் மறந்துட்டேன்' உடனே மாமாக்கு போன் போட்டான்.

“ஹாலோ மாப்பிள்ளை எப்படி இருக்கிங்க. இமையா எதாவது தொந்தரவு கொடுக்குராளா?” சரண் குரலில் அப்படி ஒரு பதற்றம்.

“இல்லை மாமா... சமத்தா குட்டி பாப்பா கணக்கா சாப்பிட்டுட்டு தூங்கரா. இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்திடுவானு நினைக்கறேன். அப்போ அவளை பேச சொல்லுறேன் மாமா”

“சரிங்க மாப்பிள்ளை”

“அத்தை எங்க மாமா. சத்தத்தையே காணம்?”

“ஏதோ வேண்டுதல் வச்சி இருப்பா போல பக்கத்திலிருக்கும் அம்மன் கோவில் வரை போயிருக்கா”

“சரி மாமா சாப்பிட்டாச்சா அங்கே என்ன ஸ்பெஷல்‍”


“ஏதோ கஞ்சி செஞ்சி வச்சிருக்கா மாப்பிள்ளை கருப்பா” சரண் பாவமாக சொல்ல, கதிர் பலமாக சிரித்தான்.


“சூப்பர் அத்தை ஏதோ புது எனர்ஜி டிரிங்க் எல்லாம் செஞ்சி தராங்க... ஒரே ஜாலிதான் இல்ல மாமா”

“நீங்க வேற ஏன் மாப்பிள்ளை.. எத கலந்தான்னு தெரியலை ஒரே கசப்பு”


இமையாவின் காதில் தந்தையின் குரல் கேட்டு எழுந்தவள் “அப்பா வந்திருக்காங்களா?” என்று பக்கமிருக்கும் கதிரிடம் கேட்க

“இல்லை இமையா. போன்ல இருக்கார் பேசுறயா?"

“ஒன்னும் தேவையில்லை. பாரம்னு நினைச்சி துரத்தி விட்டவங்ககிட்ட என்ன இருக்கு பேச” இவ்வளவு நேரம் இருந்த சரணின் உற்சாகம் எங்கோ சென்று மறைந்தது. தன் மகள் உதிர்த்த வார்த்தையின் தாக்கத்தால்.

“மாமா நீங்க எதும் கவலை படாதிங்க. நான் அப்புறமா கூப்பிடுறேன்”

“இமையா நீ இனி இப்படி அத்தை, மாமா கிட்ட எடுத்தெறிஞ்சி பேசாதே. இது நல்லதுக்கில்லை”

“என் அப்பா நான் எப்படி வேணும்னாலும் பேசுவேன். உனக்கு என்ன நீ யாரு?”

கதிர் கோபத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

இமையாவிடம் பேச்சை வளர்க்காமல், அமைதியாக அவன் மதிய உணவு சமைக்க துவங்கினான்.

இமையாவுக்கு கோபம் தலைக்கு ஏறி “இதை கேட்க இவன் யாரு? வந்துட்டான் பெரிய இவன் மாதிரி எனக்கும் என் அப்பாவுக்கும் நடுவில” எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாளித்து கொட்டினாள் கதிரை.

கதிர் தான் விழி பிதுங்கி நின்றான் இமையாவை எப்படித்தான் சமாளிக்க போறோமோ என்று.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 8

ஒரு வாரம் இருவரின் வாழ்வும் எந்த மாற்றமும் இல்லாமல் சென்றது. இமையா கதிரை திட்டுவது குறைந்திருந்தது.

சில முறை பக்கத்து வீட்டு பெண் சக்தி வந்து இமையாவை சீண்டிப்பார்க்க,
“எனக்கு எதும் அப்ஜக்சன் இல்லை மா. உங்க கதிர் மாமாவை தாராளமா கட்டிக்கோ” என்று சாதாரணமாக கூறினாள்.

கதிருக்கு கோபம் வந்தாலும் ‘கதிர் டென்ஷன் ஆகாத, பாவம் அவள் நிலையிலிருந்து பாரு. இந்த உலகின் வண்ணத்தை பார்த்து சிறகில்லாமல் பறந்த தேவதையை ஒரு இருட்டில் பிடித்து அமர வைத்தால் என்ன நிலையோ? அது தான் இங்கு இமையாவின் நிலை.

சிறுவயதில் இருந்து பார்வை இல்லாதவர்கள் கூட தங்கள் வாழ்வை அந்த இருட்டின் அமைதியை வளரவளர பழகிக் கொள்வர்.

ஆனால் புதிதாக ஏற்பட்ட இந்த இழப்பிலிருந்து மீண்டு வர சிறிது காலம் தேவைப்படும். இந்த இருட்டும் அவளுக்கு பழகிவிடும். அதுக்கு உதவியாக எதாவது செய்ய வேண்டுமே! நாள் முழுவதும் இந்த கதையை கேட்டு கேட்டு தூங்க வேண்டியது. எப்படி தான் இவளால் இப்படி தூங்க முடியுதோ... எனக்கு எல்லாம் மதியம் தூங்கினால் அன்று இரவு சிவ ராத்திரி தான்’

என்ன தான் நஞ்சு தடவிய வார்த்தைகளை உதிர்த்தாலும் இமையா செய்வது அனைத்தும் கதிருக்கு அறியாத குழந்தை செய்யும் தவறு போல்தான் தெரிந்தது.

அதிகப்படியாக அவள் பேசுவது கூட பொறுத்துக்கொண்ட கதிரால், இமையாவின் இந்த ஒரு வார அமைதியை ஏற்கவே முடியவில்லை.

கதிருக்கு உள்ளவே அடைந்திருப்பது, ஏதோ போலிருக்க “இமையா பக்கத்தில் ஒரு பார்க் இருக்கு போலாமா?”

“இல்லை” என்பது போல மறுப்பாக தலை அசைக்க

“சரி.. ஸ்டோரி போட்டு தரட்டா கேட்டுட்டிருக்கியா? நான் போய் பஜ்ஜி சுட்டு எடுத்துவறேன்”

“ம்ம்…” என்றவள் விட்ட கதையை கேட்க ஆரம்பித்தாள்.

திடீரென கண்ணில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களை தேய்த்து பார்க்க, இமையாவுக்கு கண்கள் கூச்சமாய் இருந்தது. உத்து உத்து பார்க்க, மங்கலாக சில பொருட்களின் நிழல் தெரிந்தது.

மனதில் ஒரு உற்சாகம், பார்வை தெரிய போகுது என்று.

“கதிர்.. கதிர்” கத்தியவளை நோக்கி அவன் பதற்றமாக ஓடி வர,

‘அச்சோ இவனை எதுக்கு இப்போ கூப்பிட்டோம் இந்த விஷயம் இவனுக்கு தெரிந்தால், காரியம் கெட்டு போகும்’ மங்கலாக தெரிந்த அவனது உருவத்தை குறித்துக்கொண்டாள்.

தோள்பட்டை வரை நீண்டிருந்த முடி, கையில்லாத பனியன் ஒட்டிய வயிறு பார்க்க முரடன் போல காட்சி அளித்தான்.

‘இவனுக்கு போய் எப்படி அப்பா என்னை கட்டிக்கொடுத்தார்?’

இமையாவுக்கு இன்னும் அருகில் வந்து “இமை குட்டி, எதாவது நினைத்து பயந்துட்டிங்களா…?”

இமையா இல்லை.. ஆமா.. என்று எல்லா பக்கத்திலும் தலையை ஆட்ட,

“எதாவது ஒன்னு சொல்லுடா குட்டிமா”

“அது.. அது வெளியே போலாம். உள்ளவே அடைந்திருப்பது ஏதோ போலிருக்கு‍”

“சரி போலாம்” அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

கதவை அடைத்து பூட்டிவிட்டு, மெயின் ரோடு வரை நடந்து செல்ல, வரும் வழியில் கதிர் இருப்பது பற்றி சொல்லிக்கொண்டே வந்தான்.

"நம்ம தங்கி இருக்க தெரு முடிவில் ஒரு கிட்ஸ் ஸ்கூல் இருக்கு. அந்த பக்கம் வந்தா போதும் காது அடச்சிக்கும் அவ்வளவு சத்தம் போடுங்க குழந்தைங்க"

“உனக்கும் குழந்தைங்கனா பிடிக்குமில்ல இமை குட்டி”

“ஆமா குழந்தைங்க பிடிக்கும். ஆனா எந்த குழந்தைக்கும் என்னை பிடிக்குறதில்லை. என்ட வந்தாவே சுச்சு, கக்கா போறது. மேலையே பால் கக்கி வைக்கிறது போல சேட்டைகள் செய்யும்” இமையா தன்னையும் மறந்து பேசிக்கொண்டு வந்தாள்.

கதிருக்கு புரிந்தது 'எதாவது பேச்சி கொடுத்தால் இமையா பேசுபவள், அவளை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு விட்டா, கண்டதை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறாள்' கதிருக்கு ஒரு வழி கிடைத்த உற்சாகத்தில் வர, இமையா சில லேண்ட் மார்க்கை பார்த்துக்கொண்டாள். தெளிவாக தெரியவில்லை என்றாலும் குத்து மதிப்பா கண்டு பிடிச்சிடலாம் எனும் அளவிற்கு.

இவை அனைத்தையும் மனதில் குறித்து வைத்துக்கொண்ட இமையா மனதில் ஒரு பெரிய திட்டத்தை போட்டுக்கொண்டிருந்தாள்.

அருகிலிருக்கும் மெயின் ரோட்டில் இருக்கும் பார்க்குக்கு போகும் வழியும் மனதில் மேப் போட்டு சேமித்து கொண்டாள்.

நிறைய மாதங்களாக இருட்டில் இருந்தவளுக்கு, இந்த சிறு வெளிச்சம் அவளது கண்களுக்கு ஒரு உயிர் கொடுத்தது போலிருந்தது.

அழகாக, அந்த மங்கிபோன பொருட்களை அனைத்தும் ரசித்துக்கொண்டு வந்தாள் கதிருக்கு சந்தேகம் வராத அளவுக்கு.

என்ன தான் கதிரிடம் எரிந்து விழுந்தாலும், அவனது வாழ்க்கையை கெடுக்க கூடாது என்ற எண்ணத்தில் தான், ஒரு வாரம் சூழன்று கொண்டிருந்தாள்.

அவளது மனதின் பூட்டு அவனது கடினமான குரலிலும், பாசமான பேச்சிலும் சாயத்தான் நினைத்தது. ஆனால் இமையா அந்நேரங்களில், அமைதி எனும் ஆயுதம் கொண்டு சாயும் மனதை, பல முறை இழுத்து பிடித்துக்கொண்டாள்.

ஏதோ யோசனையில் அவனது கரம் பிடித்து வந்தவளின் முகத்தை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் கதிர்.

"இமையா இங்கே பக்கத்தில் ஒரு ஐஸ்கீரிம் கடையிருக்கு சாப்பிடலாமா? செம டேஸ்ட்டா இருக்கும்" தலையை அசைத்தவளை அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தான்.

ஆர்டர் கொடுத்துவிட்டு இமையாவின் அருகில் சேரை நகர்த்தி போட்டவனின் மூச்சிக்காற்று அவளது கன்னத்தில் பட, கணவனின் அருகாமையில் பதற்றம் ஏற்பட்டது.

“எதுக்கு இவ்வளவு பக்கம்.. கொஞ்சம் தள்ளி இருங்க” அவளது பேசும் விழிகள் படபடத்தது. கதிருக்கு இமையாவின் தயக்கமும் பதற்றமும் இன்று தான் அவனுக்கு புது மாப்பிள்ளை எனும் உணர்வை கொடுத்தது.

‘ஓ! மேடம்க்கு நம்ம நெருக்கம் ஏதோ வேதியல் மாற்றம் கொடுக்குது போலவே. கடவுளே நன்றி! எனக்கு ஒரு வழியை காட்டியதற்கு’ மனதில் ஒரு உற்சாகம் பிறந்தது. இமையாவை இது வச்சி எதாவது செய்ய நினைத்தான்.

அவளது கலங்கிய கண்கள் இப்போது பதற்றத்தில் இன்னும் அழகாக தெரிந்தது.

அவளை ரசிப்பதற்கு இடஞ்சல் செய்வது போல “சார் உங்க ஆர்டர்” கதிர் கனவில் இருந்து விழித்தவன் போல தலையை சிலுப்பினான்.

‘கதிர் இந்த கண்ணை பார்த்தா இடம், பொருள் எதும் சிந்தையில் பதியமாட்டங்குது சரியான மயக்கும் மாயாவியின் கண்கள் உடையவள்…! என்னவள்!’

“இமை சாப்பிடலாமா? நான் ஊட்டிவிடுறேன்” என்ற கதிர் ஸ்பூனில் எடுத்து அவள் வாய் அருகில் கொண்டு போக,

“இல்லை எனக்கே சாப்பிட்டுக்க தெரியும்” இமையா கப்பை வாங்க கையை நீட்டினாள்.

கதிரும் ‘பட்டு திருந்து என் ராசாத்தி’ என்று கையில் அந்த பெரிய கப்பை கொடுத்தான்.

‘என்னை என்ன பாப்பானு நினைச்சானா.. லூசு பையன்’ வீராப்பாக வாங்கிய இமையாவுக்கு, அந்த கப்பின் மேலிருக்கும் சிறிய ஸ்பூனை கண்டுபிடிக்கவே போராட்டமாகியது. மங்கலாக தெரிந்த கண்களின் ஒளி மறைந்து மீண்டும் இருள் சூழ்ந்து விட்டது. ‘ச்சே.. இந்த நேரம் பார்த்து இந்த மங்கிபோன மங்கி பார்வை சதி செஞ்சிடுச்சே’ இமையா சரமாரியாக தன் கண்ணை வறுத்து வதக்கி முடிக்கவும், கதிர் சிரிக்கவும் சரியாக இருந்தது.

“என்ன சிரிப்பு.. ஹான்”

“வீர வசனம் எல்லாம் வாய் வரை மட்டும் தான் போல. செயலில் ஒன்னும் காணோம்?” நக்கல் குரலில் கதிர் கூற

“சரிதான்.. போடா நீ கிண்டல் பண்ணுரதுக்கு எல்லாம் கலங்கி நிக்குற ஆளு நானில்லை” ஐஸ்கீரிமை முகத்தில் கொஞ்சம் மூக்கில் கொஞ்சம் என குழந்தைகளைவிட மோசமாக சாப்பிட்டு முடித்தவளுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட திருப்தியே இல்லை.

“என்ன சாப்பிட்டது போல இல்லையா? ம்ம்... அதான் சொன்னேனில்ல நானே ஊட்டி விடுறேன்னு”

இமையாவிடமிருந்து அமைதி மட்டும் தான் பதிலாக வந்தது.

கதிர் அவனது கர்ச்சிப் எடுத்து இமையாவின் முகத்திலும் கழுத்திலுமிருந்த ஐஸ்கிரீமை துடைத்துவிட்டான்.

“இமை குட்டி போலாமா?” எழுந்தவன், அவன் அமர்ந்திருந்த சேரை எடுத்து ஓரம் வைத்து அவள் நடக்க வழி செய்து, கடையை விட்டு வெளி வரும்போது நன்கு இருட்டி இருந்தது.

“இமையா இருட்டிடுச்சி. இன்னைக்கு மூன் ஊருக்கு போய்யிடுச்சி” இயற்கையில் தொடங்கி, பக்கத்தில் வயதான தம்பதிகள் கை கோர்த்து வாக்கிங் வருவது வரை வழியில் நடக்கும் அனைத்தையும் விரிவாக விவரித்தான். அவள் பார்க்காத இந்த உலகத்தை கற்பனையில் பார்க்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருந்தான் கதிர்.

இமையாவும் அவன் சொல்வது அனைத்திற்கும் தன் கற்பனையில் வடிவம் கொடுத்து கொண்டே வந்தவள்.

“நம்ம வீடு வந்துடுச்சி இமையா” கதிர் சொல்லவும் தான் நிஜ உலகத்துக்கு வந்தாள்.

“அதுக்குள்ள வந்துடுச்சா?” இமையாவின் குரலில் அப்படி ஒரு சோகம் அப்பி இருந்தது. அவளின் வாடிய முகத்தை பார்த்த கதிர்,

“இனி டெய்லியும் வெளியே போலாம். இப்போ நம்ம வீட்டுக்குள்ள போகலாம்”

“இரு, இரு என்ன! உன் வீடா மறந்திடாதிங்க மிஸ்டர் கதிர். இந்த வீட்டோட சர்வன்ட் நீங்க”

“ஆமால்ல, பாரேன் இமை குட்டி மறந்துட்டேன். இனி அடிக்கடி எனக்கு நியாபகம் படுத்துடா குட்டி” கதிர் தனது கரகரத்த குரலில் சிறு குழந்தையை கொஞ்சும் தோனியில் கூறி கன்னத்தை தட்டி விட்டவனின் கைகளை வேகமாக தட்டி விட்டாள் இமையா.

“என்ன வீட்டு சர்வென்ட் இப்படி தொட்டு தான் பேசுவானா? தொட்டு பேசுற வேலை இனி வச்சிக்காத”

“நீ சொன்ன அக்ரிமென்ட்ல தொட்டு பேசக்கூடாதுனு இல்லையே இமையா”

இமையா முட்டை கண்களை உருட்டி “அக்ரிமென்டில் இருக்கு. என்னை தொடக்கூடாது அவ்வளவு தான்”

“முடியாது இமை குட்டி வாங்க உள்ள போலாம்” என்ற கதிர் வம்படியாக தூக்கிக்கொண்டான் இமையாவை.

மீனை போல துள்ளியவளை பார்த்த கதிருக்கு, அவளை இன்னும் சீண்டும் எண்ணம் மேலோங்க, இமையாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்க காத்திருந்தான் கதிர்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 9

இமையாவை துள்ள துள்ள தூக்கிவந்தவன் அருகிலிருந்த சோபாவில் அமர வைத்தான்.

இமையா அமர்ந்ததும் கதிர் வளர்த்து வைத்திருந்த முடியை கொத்தாக பிடித்தவள், அவனது பல முடிகளை பிடித்து இழுத்து பிச்சி, ஹீரோ போல இருந்தவனை காமெடி பீஸ் கணக்காக ஆக்கியிருந்தாள்.

ஒருவழியாக இமையா டையார்ட் ஆகி, அவனது முடியை விட்டவள் சோர்ந்து சோபாவில் அமர, அவளது சோர்வை கண்டு, காலையில் போட்டு வைத்த ஜூஸை கொண்டு வந்து இமையா கைகளில் திணித்தான்.

“மேடம் நல்லா குடிச்சிட்டு தெம்பா அடுத்த ரவுண்டு தாக்குதலுக்கு ரெடி ஆகுங்க” கதிர் உதிர்த்த வார்த்தையை கேட்ட இமையா அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்.

‘இவன் ஏன் இப்படி இருக்கான், நான் செய்வதற்கும் கத்தி போன்ற வார்த்தை உபயோகிப்பதற்கும் சரிதான் போடி என்று போய் இருக்கலாமே.. இவன் ஜூஸ் போட்டு அவன் தான் குடிக்கனும் நான் படுத்திய பாட்டிற்கு. எனக்கு கொடுத்தது மட்டுமில்லாமல், குடிச்சிட்டு அடுத்து அடிக்க தயாராகு என்று சொல்லும் இவன் மனிதனா? இல்லை மிருகமா? இல்லை அதற்கும் மேலா?’

“ஹலோ இமை குட்டி முதலில் குடி அதுக்கு அப்புறமா யோசிச்சிக்கலாம். குழந்தை முகம் வாடி போயிடுச்சி” சொன்னது மட்டுமில்லாமல், இமையாவின் முகத்தில் இருக்கும் வேர்வை துளிகளை துடைத்து விட்டு அருகில் அமர்ந்தான்.

“இமை மா, குடி டா”

“இல்லை கதிர் எனக்கு வேண்டாம். எனக்கு தலை வலிப்பது போலிருக்கு, தூங்கனும் பெட் கிட்ட கொண்டு போய்விடுங்க”

“இமை, என்னடா ஆச்சி! உடம்புக்கு எதாவது சரியில்லையா, டாக்டர் கிட்ட போகலாமா” இமையாவின் தலையை தொட்டுப்பார்க்க, தலை மட்டும் சூடாக இருந்தது.

‘காய்ச்சல் வந்திருக்குமோ.. வெளி காத்து ஒத்துக்கலையோ?’ யோசனையில் கன்னத்தையும் கழுத்தையும் தொட்டு பார்த்தவனுக்கு, காய்ச்சலில்லை என்று தெரிந்ததும் தான் நிம்மதி பிறந்தது.

“சரி வா..” கையை பிடித்து அழைத்து சென்றவன், அவளது இடத்தில் படுக்க வைத்துவிட்டு தைலம் எடுக்க எழுந்தவனின் கரங்களை பிடித்துக்கொண்டாள். “என்ன வேணும் என் தங்கத்துக்கு?” குரலில் அப்படி ஒரு பாசத்தை இமையா கண்டாள்.

அவனது பாசமான குரலில் திக்கு முக்காடி போனவளின் செவ்விதழ்களிலிருந்து வார்த்தை வருவதற்கு பதிலாக, காத்து தான் வந்தது. அவளது இதயத்தின் பூட்டும், இழுத்து வைத்திருந்த பிடிவாதமும் இவனது பாசத்தால் சுக்கு நூறாக உடைந்தது.

கனவுலகிலிருக்கும் இமையாவை உசுப்பி விட்டவன் “என்னாச்சி என் கண்ணும்மாவுக்கு”

“அது.. அது ஜூஸ் வேணும்” அவளது தடுமாற்றத்தை குறைத்து வாய்க்கு வந்ததை கேட்க,

“அட மக்கு பாப்பா… இதுக்கா இவ்வளவு தயக்கம். இரு எடுத்து வரேன்” இமையாவின் பட்டு கன்னத்தை கிள்ளிவிட்டு எழ, அவனது நகம் பட்டு விட்டது.

“ஆ… எரியுது” வலி பொறுக்காமல் இமையா கதிரின் கைகளை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ஆஆஆ..” இந்த முறை கதிரை கிள்ளி அலறவிட்டாள் இமையா.

“இமை.. உனக்கு மூக்குக்கு மேலே கோபம் வருது. தெரியாம செய்ததுக்கு எல்லாம் தண்டனை கொடுக்க கூடாது தங்கம்”

“எனக்கு எப்படி வலிக்குதுனு உனக்கும் தெரியனுமில்ல” இமையா முறைத்துக்கொண்டு சொல்ல,

“சரி சரி இப்படி இந்த முட்டை கண்ணை பிதுக்கி பயம் காட்டாதே. நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்” கிட்சனில் இருந்த ஜூஸை கிளாசில் ஊற்றியவனின் கைகளில் ஒரு துளி ரத்தம் எட்டிப்பார்த்தது.

“முதல்ல இவளுக்கு நகத்தை வெட்டி விடணும். ரத்தம் வர அளவுக்கு கிள்ளி வச்சிருக்கா ராட்சசி” செல்லமாக திட்டிக்கொண்டே இமையாவுக்கு ஜூஸுடன் சிறிது ஸ்னாக்ஸ் எடுத்து வந்தான்.

இமையா மனதில் கதிர் சொன்ன வாக்கியம் தான் ஓடியது “முட்டை கண்ணு…” தனது கண்களை ஏக்கமாக தொட்டு பார்த்தாள்.

‘இனி சாகுற வரைக்கும் யாரோ ஒருவர் துணையதான் எதிர் பார்க்கனுமா? இரண்டு எட்டு கூட எடுத்து வைக்க முடியலையே தனியா... குறைந்த பட்சம் என் வேலையாவது நான் நிறைவா செஞ்சிக்கனுமே. சுற்றி இருக்கும் பொருள் எங்கு இருக்கு, பாத்ரூம் செல்லும் திசை கூட இன்னும் தெரியலை. நான் இந்த கதிருக்கு வேண்டாம். கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அடுத்த முறை கண் தெரியும் போது இங்கிருந்தும் கதிர் வாழ்க்கையிலருந்தும் வெளியே போயிடனும். அவன் நல்லா வாழனும் அவன் வாழ்க்கையில் என்னை போல ஒரு சுமை அவனுக்கு வேண்டாம்' சற்று முன் பூத்த காதல் செடியை வெட்டி சாய்த்தாள் இமையா. தன் கண்களை வருடிக் கொடுத்து, சுவற்றில் சாய்ந்திருந்தாள்.

கதிர் இமையாவை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டே நடந்து வந்தான். மனதில் வெதும்பிய இமையாவை உழுக்கினான்.

“இமை… இமை குட்டி”

“ம்ம்…” ஜூஸை கையில் கொடுத்து குடிக்க வைத்தவன், மீண்டும் படுக்க போகும் இமையாவை தடுத்து,

“ஒரு ஐஞ்சு நிமிஷம் இப்படி உட்காரு சாப்பிட்டதும் படுக்க கூடாது. தலை வலி கூட சேர்ந்து, வயிறு வலி வந்திட போது” சுவற்றில் சாய்ந்து கண்களை மூடியவள் அப்படியே தூங்கி போனாள்.

“சொல்லும் பேச்சி கேட்கவே கூடாது என்று கங்கணம் கட்டிட்டு சுத்துறது. பிடிவாதம் பிடிச்சவ…” கதிர் அவளை செல்லமாக திட்டி படுக்க வைத்தான்.

தைலத்தை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு, அவள் அருகில் ஒட்டி படுத்துக் கொண்டான்.

“ஏய்.. இமை குட்டி என்மேலே உனக்கு விருப்பம் வந்திடுச்சி தானே எதுக்கு இப்படி ஒளிஞ்சி விளையாடுற ம்ம்.. ஏதோ என்னிடம் மறைக்கற அது என்னன்னு கூடிய சீக்கிரம் நான் கண்டு பிடிக்கிறேன்” மெதுவாக பேசிக்கொண்டே கதிரும் தூங்கிவிட,

இரவு சீக்கிரமே படுத்ததால் இமையாவுக்கு நடு இரவில் முழிப்பு தட்டியது.

எழுந்து உட்கார நினைத்தவளால் நகர கூட முடியவில்லை. தன் மேல் பாரம் உணர்ந்தவள், தொட்டுப்பார்க்க கதிரின் முறுக்கேறிய கரங்கள் அவளது வயிற்றை சுற்றியிருந்தது.

தள்ளிவிட பார்த்தவளுக்கு தோல்வி தான் மிஞ்சியது.

அவனது புஜங்களை தொட்டு பார்க்க ‘என்ன இவன் காட்டெருமை போல உடம்ப வச்சி இருக்கான்?’ காற்றில் உலாவி, அவன் உடலை தொட்டு ஒரு வழியாக இலக்கை தொட்டாள். அவனது தோள்பட்டையை தொட்டு நீவிவிட்டவள், சரியான சதை பகுதி கிடைத்ததும் பிடித்து நன்றாக நறுக்கென்று கடித்து வைத்தாள்.

பதறி அடித்து எழுந்தான் கதிர்.

“ஏய்.. ரத்தம் வருது” அவள் கடித்த இடத்தை கதிர் ஆராய்ச்சி செய்ய,

“சரியான இரத்த காட்டேறி”

இமையா குழந்தை முகத்தை வைத்துக்கொண்டாள். “அச்சோ… என்னாச்சி ரத்தமா!” இமையா பதறி போனாள். இயற்கையாகவே மென்மையான குணம் படைத்தவள் அவள். இந்த ஒரு வருடத்தில் தான் இவ்வளவு ஆக்ரோசமாக நடந்து கொள்கிறாள், அந்த விபத்து நடந்ததிலிருந்து. லவ் பிரேக் அப்போது கூட, சரி பிடிக்காமல் பிரிந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என விலகியவள், தன் உடைந்த மனதை ஒட்டவைக்கத்தான் முயற்சி செய்தாள். ஓரேடியாக உடைந்து விடவில்லை. தன்னை தேற்றிக்கொள்ளத்தான் நினைத்தாள்.

உடலில் உள்ள பிரச்சனைக்கும், மனதுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல, இரண்டில் ஒன்று பாதித்தாலும் மற்றொன்றும் பழுதாகிவிடுகிறது.

உடல் நலம், மன நலம் இரண்டும் சமமான நேர்க்கோட்டில் இருப்பதே நலம்.

இமையாவின் கலங்கிய முகத்தை பார்த்து “ஏய் இமை நான் சும்மா சொன்னேன். ரத்தம் வரலைடா.. உனக்கு தலைவலி பரவாயில்லையா?” இமையாவின் தலையை தொட்டு பார்த்தான். சூடு இன்னும் அதிகரித்திருந்தது.

“இல்லை, எனக்கு ஒன்னுமில்லை. பொய் சொல்லாத. எங்க ரத்தம் வருது” காற்றில் கைகளால் கதிரை பதற்றமாக தேடினாள்.

“இமை கண்ணு ஒன்னுமில்லை மா”

“இல்லை நீ பொய் சொல்லுற. எனக்கு கண்ணு தெரியாது. இவளுக்கு தெரியவா போதுனு நினைக்கிறியா?”

“ஐயோ, இமை மா… அப்படி எல்லாம் இல்லை தங்கம் கையை கொடு” கதிர் அவளது கையை தனது தோள்பட்டையில் வைக்க, இமையா வருடி பார்த்து பதறித்தான் போனாள். அவளது பல் தடம் நன்கு பதிந்திருந்தது.

“ரொம்ப வலிக்குதா கதிர்?”

“நீ இப்படி தொட்டுட்டே இருந்தா ஒரு வலியும் தெரியலை” அவனின் பதில் கேட்டவள், அவனது தோள் பட்டையிலிருந்து மேல் நோக்கி நகர்த்தி கன்னத்தை தொட்டவள் கன்னம் கிள்ளினாள்.

“எதுக்கு பொய் சொல்லுர? இப்படி நாய் மாதிரி பல்லு பதிந்திருக்கு. வலிக்கலைன்னு சொல்லுற”

“நாய் தான். ஆனா குட்டி நாய்” இமையாவின் கொழுத்த கன்னங்களை ஆட்டி சொல்ல, கதிரின் கைகளை தட்டிவிட்டாள்.

“நான் கோபமா இருக்கேன்”

“ஏனாம்.. இந்த திடீர் கோபம்”

“பொய் பொய்யா செல்லுர தானே? என்கிட்ட”

“இல்லை தங்கம். பொய் இல்லை. உண்மையா வலிக்கவே இல்லை”

இமையா தன் வலது கரங்களை அவன் முன் நீட்டி “அப்போ சத்தியம் பண்ணு நிஜமா வலிக்கலைன்னு”

கதிரும் அவள் கரம் கோர்த்து, கையை திருப்பி ஒரு முத்தம் பதித்தவன், “வலிச்சது. ஆனால் கம்மியா. ஒரு பெரிய சைஸ் எறும்பு கடித்தது போல”

“எல்லாம் பொய். இனி என்னிடம் பொய் சொல்லாத கதிர். வலிச்சா வலிச்சதுனு சொல்லனும் புரியுதா?”

“சரி… சரி இனி நோ பொய்” இமையாவின் வார்த்தைக்கு சரண்டர் ஆனான்.

“மருந்து போட்டு விட்டா, இன்னும் நல்லா இருக்கும்” கதிர் குறும்பு குரலில் கேட்க,

“நான் எப்படி போட்டுவிட முடியும்?”

“உன்னால முடியும் இமை குட்டி. இரு வரேன்” என்று சென்றவன், சில வினாடிகள் கழித்து கையில் மருந்தோடு வந்தான்.

இமையாவின் ஒரு விரலில் மருந்தை தடவி விட்டு, அவனது தோள்பட்டையில் வைத்தான்.

இமையாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கதிருக்கு அழகாக மருந்து பூசிவிட்டவள்,

“கதிர்… சரியா பூசினேனா? எங்காவது மருந்து இல்லாம இருக்கா?”

“என் பட்டு தங்கம். சமத்தா பூசிடுச்சி” கதிர் இமையாவுக்கு இன்னும் உற்சாக படுத்த சொல்ல, இமையாவுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.

“இனி என்னால் முடியும். கொஞ்சம் கொஞ்சமா வேலை கத்துப்பேன்”

“கண்டிப்பா நாளையிலிருந்து ஒரு மணி நேரம் உனக்கு கிளாஸ் ஓகே வா?”

“சரி.. முதல்ல பாத்ரூம்க்கு வழி சொல்லி கொடு. ஒரு ஒரு முறையும் உன்னை கூப்பிடரது கஷ்டமா இருக்கு” இமையா குரலில் அப்படி ஒரு தயக்கம் தெரிந்தது.

“சரி இமை குட்டி”

அவளது ஃபோனை எடுத்து இமையா பூசிய மருந்து இடத்தை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டான்.

‘அவளுக்கு பார்வை வந்ததும், இது தான் முதல்ல பார்க்க வைக்கணும்’ மனதில் குறித்துக்கொண்டான்.

அவளுக்காக பார்த்து பார்த்து செய்ய துவங்கியவனின் மனதில் அப்படி ஒரு நிம்மதி.

இமையா அவளது வெளியேறும் திட்டத்தை மறந்தே போனாள், அவனின் பாசத்தால்.

இப்படியே இமையா இருப்பாளா? இல்லை பழைய படி வெளியேற திட்டம் போடுவாளா? அவளது மனதுக்கு தான் தெரியும்.

நடு ராத்திரியில் கதிருக்கு முழிப்பு தட்ட, எழுந்து இமையாவை பார்கக, தூங்காமல் ஏதோ யோசனையில் இருந்தவளை பார்த்தான்
 

Bindusara

Well-known member
Wonderland writer
உன் விழியின் மொழி...நானடி!: 10

"இமையா இன்னும் தூங்கலையா?" என்று அவள் முகத்தை பார்த்து கேட்க,

"இல்லை... முழிப்பு வந்துடுச்சி"

"என்ன இந்த குட்டி தொப்பைக்கு பசிக்குதா?" கதிர் ஒரு வேகத்தில் இமையாவின் வயிரை தடவ,

இமையாவை கதிரின் இந்த தொடுகை நெளிய வைத்தது.

கதிர் வேகமாக தன் கையை எடுத்தவன், "சாரி இமையா ஏதோ ஒரு வேகத்தில் தொட்டுட்டேன்"

"ம்ம்..." இமையா வேறு புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளும் பெண் தானே. சிறுக சிறுக பிடிவாதம் பிடித்த மனதை மாற்றி, பெண்ணவளின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தருந்தவனின் கரங்கள் பட்ட இடம் ஒரு வித குறு குறுப்பை ஏற்படுத்தியது.

'கதிர் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்ட' மனதில் அவன் செய்த செயலுக்கு தன்னை திட்டி கொண்டவன்,

"நான் எதாவது சாப்பிட எடுத்துவறேன்" கதிர் அந்த இடத்தை விட்டு நழுவி செல்ல,

இமையாதான் குழம்பினாள்.

'கணவன் மீது மனம் சாய்கிறது என்றால், நான் உயிரிக்குயிராய் நேசித்த என் காதலன் மீது வைத்த காதல் பொய்யா. நான் பெண் தானா? எப்படி இது போல பச்சோந்தி வாழ்க்கை வாழ நினைக்கிறேன். நேற்று ஒருவனை காதல் செய்து இன்று ஒருவனை திருமணம் செய்து, சில தினங்களில் இந்த புதியவன் மீது மனம் சாயுமா!' தன்னை தானே தரம் தாழ்த்திக் கொண்டாள் இமையா.

சாதாரணமான நிலையில் இருந்திருந்தாள் இமையாவிற்கு வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்திருக்கும். அவளது பார்வையற்ற நிலை உடன் சேர்ந்து இமையா தன்னை தானே மனதால் இறக்கிக்கொண்டிருந்தாள்.

கதிரோ மனதில் தன்னைத் தானே திட்டிக்கொண்டிருந்தான்.

"கதிர் இனி ஒரு முறை கூட இது போல் செய்யக்கூடாது. இப்போது தான் மனம் வந்து ஏதோ பேசுகிறாள். அதையும் கெடுத்துக்கொள்ளாதோ" கதிர் தனக்கு சில அறிவுரை கொடுத்துக்கொண்டே, பழங்களை கழுவி, அரிந்து எடுத்து வந்தவன் நேரத்தை பார்க்க மணி இரவு ஒன்று.

"சாப்பிட்ட உடனே படுக்க விடக்கூடாது. வெளியே சிறிது தூரம் நடக்க வைக்கலாம்" அவள் சாப்பிட்டு முடித்ததும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு வந்தான்.

"இமையா சாப்பிடு" என்று ஒரு பவுளை அவளிடம் கொடுத்துவிட்டு, தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டான்.

இமையா பலவித யோசனையில் சாப்பிட்டு முடிக்க "இமையா கொஞ்சம் பேசனும். ஒரு வாக் போய்யிட்டு வரலாமா?"

"ம்ம்..."

இமையாவை தோட்டத்துக்கு அழைத்து சென்றான்.

இரவின் நிலா வெளிச்சத்தில் மலர்ந்திருக்கும் பூக்களும், சுற்றியிருக்கும் மரங்களில் பட்டு வரும் தென்றல் காற்றும் இமையாவின் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது.

"கதிர் இது எந்த இடம், பார்க்கா? இவ்வளவு சில்லுனு இருக்கு"

"இல்லை நம்ம வீட்டு தோட்டம்"

"பூக்கள் வாசனை சூப்பரா இருக்கு. இந்த காத்து அப்படியே சிறகில்லாமல் பறப்பது போலிருக்கு"

"ம்ம்..." கதிரும் அந்த ரம்மியமான இரவு சூழலை ரசித்தான்.

"இமையா இங்கு ஒரு ஊஞ்சல் இருக்கு ஆடுறயா?"

"எந்தமாறி ஊஞ்சல்? நம்ம பால்கனியில் இருக்கே அது போலவா?"

"இல்லை. வெறும் பலகை இருப்பது போல"

"அப்போ வேண்டாம் கதிர்"

"ஏன் இமையா பயமா இருக்கா? விழுந்திடுவனு"

"ம்ம்..."

"நான் இருக்கேன். அப்போ எதுக்கு இந்த பயம். வா இரண்டு பேரும் ஒன்னா உட்காந்து ஆடலாம். அப்போ பயம் இருக்காதில்ல" கதிருக்கு நினைத்து பார்க்கவே அவ்வளவு இனிமையான உணர்வு.

'இவன் கூட ஒன்னா எப்படி உட்காந்து ஆடுறது தயக்கத்தோடு ஒரு மனம். இன்னொரு மனம் உன் கணவன் கூட உட்கார என்ன தயக்கம்?' அவள் மனது போன போக்கை நினைத்து திருட்டு முழி முழித்தாள் இமையா.

"ஏன் இமை இந்த தயக்கம். நீ இப்படி ஒதுங்கி நிற்கும் போது எல்லாம் எனக்கு வலிக்குது. நான் ஏதோ பொறுக்கி போல பீல் செய்ய வைக்கர. உன் அனுமதி இல்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன் இமையா. நான் கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னது தான். அதை சாகும் வரை மாற்றமாட்டேன் புரிஞ்சிக்கோ" அவளிடமிருந்து அமைதிதான் வெளிப்பட்டது.

"சரி வா, எனக்கு தூக்கம் வருது தூங்கலாம்"

"இல்லை எனக்கு தூக்கம் வரலை" இமையாவுக்கு ஊஞ்சல் ஆட ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் கதிரிடம் எப்படி கேட்பது அவனுடன் சேர்ந்து ஆட மனமும் ஏற்கவில்லை.

"சரி வா இந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காரு வா" இமையாவை உட்கார வைத்தான்.

கதிரின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தது.

இமையா 'கதிர் பாவம்.. அவனது மனசு கஷ்டப்படுவது போல எதும் இனி செய்யக்கூடாது. குழந்தை போல பாத்துக்கரான். அவனிடம் பாசமா நாலு வார்த்தை பேசலைனாலும் பரவாயில்லை வருத்தப்படுறது போல பேசக்கூடாது. இனி கதிரிடம் உபயோகிக்கும் வார்த்தைகளை பார்த்து உபயோகிக்கனும்'

கதிரும் தன் எண்ணத்தை அடக்கிவிட்டு இமையா பக்கம் திரும்ப, நிலவு ஒளி பட்டு அவளது மூக்குத்தி கல் மின்னியது.

"இமையா மூக்கு குத்தியிருக்கியா?" ஆச்சரியமாக கேட்டான்.

"ம்ம்... என் எக்ஸ்க்கு பிடிக்கும் அதனால குத்தினது" இமையா சொல்லிவிட்டு அவளது பிங்க் நாக்கை கடிக்க,

'அச்சோ.. இமையா ஏன் இப்படி பேசிட்ட? ஒரு கணவனா அவருக்கு எவ்வளவு வலிக்கும். அவரை கஷ்ட படுத்த கூடாதுன்னு உறுதி எடுத்து இரண்டு நிமிஷம் கூட முடியலை...'

"இமையா, உள்ள போலாம், பனி ரொம்ப கொட்டுது வா" இமையாவின் கரங்களை இறுக்கமாக பிடித்து நடந்தவனின், வேகத்துக்கு இமையா ஓடி தான் வரமுடியும்.

கதிரின் பிடி நொடிக்கு நொடி இறுகியது. அவள் படுக்கும் இடத்தில் விட்டவன்,

"நேரமாச்சி படுத்து தூங்கு" அவனது கரகரப்பான குரல் இன்னும் மிரட்டியது இமையாவை.

பூனைக்குட்டி போல பதுங்கினாள் இமையா, அவனது கடினமான குரலில்.

'இமையா.. ரொம்ப ஓவரா போய்யிட்ட போல செம காண்டாகிட்டான்‍. எப்படி இவனை சரி செய்யறது? சரி இப்போ பேசினால் சரிப்பட்டு வராது. தூங்கி எழுந்து காலையில் பேசிக்கலாம்'

கதிர் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினான். 'எவ்வளவு கொழுப்பு இருந்தா என்கிட்டையே வந்து எவனுக்கோ பிடித்தது மூக்குத்தி போட்டிருக்கேன்னு சொல்லுவா. கதிர் நீ அவளுக்கு ஓவரா இடம் கொடுத்துட்ட அதான் இங்க பிரச்சனையே' கதிர் இமையாவின் முகத்தை பல மணி நேரம் முறைத்துக்கொண்டிருந்தான்.

அவள் தூங்கியதை உறுதி படுத்தியவன், அவள் அருகில் படுத்து இமையாவின் நுனி மூக்கை மெளிதாக கிள்ளி "உனக்கு எப்போதான் என்னை பிடிக்கும். உன்னை விட்டு போனவனை நினைத்து என்னத்தை சாதிக்க போற சொல்லு? காலையிலிருந்து இரவு வரை குழந்தை போல உன்னை உள்ளங்கையில் வச்சி தாங்கிட்டு இருக்கேன். அது இந்த அறிவு கெட்ட மூளைக்கு புரியலையா?" இமையாவின் நெற்றிப் பொட்டை ஒரு விரலால் அழுத்தினான்.

"இன்னும் ஒரு டைம் கண்டவன் பத்தி பேசின, நான் மனுசனாகவே இருக்க மாட்டேன் புரியுதா" தூங்கியவளின் முகம் பார்த்து மிரட்டியவன், சிறிது நேரத்தில் தூங்கி போனான்.

இமையா எந்திரிக்கும் போதே நேற்று நடந்த நிகழ்வுகள் மனதில் சுழன்றது.

'கதிர் கிட்ட எப்படி மன்னிப்பு கேட்பது' கதிர் இமையாவுக்கு வேலை வைக்காமல்,

"இமையா எந்திருச்சிட்டயா.. ரெடி ஆகிட்டு வா, சாப்பிடலாம்." கையோடு கூட்டி சென்று, குளியல் அறையில் விட்டான்.

இமையா தயாராகி வந்ததும், கதிர் தன் கையால் ஊட்டியும் விட்டுவிட்டான்.

"கதிர் என் மேல கோபமில்லையா?"

"நிறையா இருந்தது நேத்து நைட். இப்போ இல்லை"

"உன்னை எல்லாம் என்ன சொல்ல போடா... பூமா தேவிக்கு அடுத்து உனக்கு தான் பொறுமை அதிகம்"

"அப்படியா மேடம். சரி சரி கதை அளந்தது போதும். இரண்டு வாய் தான் சாப்பிட்டுக்கோ" சாப்பிட்டதும் வழக்கம் போல மரக்கூடை ஊஞ்சலில் இமையாவை உட்கார வைத்து கதையை ஆன் செய்து வைத்தவன், தனது அலுவலக வேலை செய்ய துவங்கினான்.

இமையாவுக்கு கதையில் மனம் நிலைக்கவில்லை. கதிரிடம் மன்னிப்பு கேட்டால் தான் மனம் ஆறும் என்ற யோசனையில் நேரத்தை கடத்தினாள். எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. கதிர் அதனை பற்றி பேச வாய் எடுத்தாலே பேச்சை மாற்றி விடுகிறான்.

என்ன செய்வது என்ற குழப்பத்தில் கண்ணை மூடி படுத்துவிட்டாள் இமையா.
[/ICODE][/ICODE][/SIZE]
 
Status
Not open for further replies.
Top