ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
“சரி இந்த சூப்பையாவது குடி” என்றாள் ரதி சலித்து கொண்டு

“எனக்கு சூப் பிடிக்காது மேடம் சாரி” என்று பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் தூரிகா

‘ச்சே ப்ளான் சொதப்பிடுச்சே’ என்று நிலத்தில் காலை உதைத்து "சரிங்கண்ணா" என்று சாப்பிட ஆரம்பித்தாள்.

துரைசிங்கமோ அந்த அறையில் காலையில்தான் கேமராவை மாட்டியிருந்தான். ரதிதேவியின் சூப்பில் எதையோ கலப்பதை கண்டவனுக்கு அவளை வெட்டிப்போடும் ஆத்திரம்... நீ வச்ச கன்னிவெடியில உன்னையே மாட்டிவிடறேன்டி என்று கோபத்தில் கை முஷ்டியை இறுக்கினான்.

“முருகா இங்கே வா” என்று அவன் காதில் ரகசியமாக எதோ பேசினான்

“சரிங்க அண்ணா நான் பார்த்துக்குறேன்” என்று தலையை ஆட்டி சென்றான் முருகன்.

ஆதிபெருமாளோ “ஓகே வா” என்று கண்களால் கேட்டார் அவளோ “முடியலைப்பா” என்று இதழ் பிதுக்கி தலையை ஆட்டினாள்.

அவரோ “அடுத்த ப்ளான் போடு” என்று இதழ் அசைத்து சென்றார்.

கணவனும் மகளும் ரகசியமாய் பேசுவது கண்டு அவர் மனதிற்கு எதோ தவறாய் பட.. கோதையோ நெஞ்சை பிடித்துக்கொண்டு ‘கடவுளே என் தாய் வீட்டு குடும்பத்துக்கு எந்த அவமானமும் வரக்கூடாது’ என்று மானசீகமாக வேண்டுதல் வைத்தார்.

மாலை கேம்ப் முடியும் நேரம் ஆனதும் முருகன் கேம்ப் டாக்டர்ஸ்க்கு ஜூஸ், ஸ்னாக்ஸ் கொண்டு வந்திருந்தான்.

“அண்ணா இங்க வெட்ட வெளியில சாப்பிட ஒரு மாதிரி இருக்கு நாம சாப்பிட்ட இடத்துல சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம்” என்று கெஞ்சியிருக்க அவனோ “சரி வா போகலாம்” என்று அவர்கள் சாப்பிட்ட வீட்டுக்குச் சென்றனர்.

துரைசிங்கமோ ‘பலி ஆடு தானா சிக்குதுடா இன்னிக்கு கிடாவெட்டு இருக்கு’ என்று கைகாப்பை ஏத்திவிட்டு சமயம் பார்த்திருந்தான்.

“தூரிகா உன் முகம் ரொம்ப சோர்வா இருக்கு.. போய் முகம் கழுவிட்டு வா” என்றதும்

“இல்ல பரவாயில்ல மேடம் நான் வீட்டுக்குப்போய் குளிச்சிக்குறேன்” என்றவளை “ம்ப்ச் நான் சொல்றேன்ல” என்று அவளை அதட்டி அனுப்பி வைத்தாள்.

பொன்வண்ணனுக்கு ஆதிபெருமாள் போன் பண்ணியிருந்தார். என்கிட்ட நேர்ல பேசவே பிடிக்காது.. அப்பாவுக்கு இப்ப என்ன போன்ல வராரு.. என்று போனை எடுத்துக்கொண்டு வெளியே எட்டிப்பார்தான்.

“கேம்ப் முடிச்சதும் நாங்க ரதியை கூட்டிட்டு கிளம்புறோம்... நீ மெதுவா வந்தா போதும்” என்று சொல்லியவர் போனை வைத்து விட்டார்.

"இவரு எதுக்கு தேவை இல்லாம என்கிட்டே பேசுறாரு" என்று சலித்துக் கொண்டான்.

கோதையோ கையை காட்டி "நாங்க கிளம்புறோம்" என்றார்.

“கிளம்புங்க” என்று கையை அசைத்தவனுக்கு போன் வர போனில் பேசிக்கொண்டிருந்தான்

இப்போது உணர்வுகளை தூண்ட கூடிய போதை மருந்தை மருந்தை ஜூஸில் கொஞ்சமாய் கலந்து விட்டு தன் ஜூஸை குடிக்கத் கையில் எடுத்தாள்.

அதே நேரம் முருகனோ “ஸ்பெஷல் ஜூஸ் டாக்டர் மேடம்” என்று ரதிதேவி கையில் கொடுக்க “தேங்க்ஸ் தம்பி” என்று ஜூஸ்ஸை வாங்க முருகனோ வேண்டுமென்றே ஜூஸ்ஸை அவள் மீது ஊற்றி விட்டு “சாரி டாக்டர் தெரியாம ஊத்திட்டேன் வேற எடுத்துட்டு வரேன்” என்று மன்னிப்பு கேட்டான்.

“பரவால்ல விடுங்க.. கொஞ்சம் கவனமா கொடுத்து இருக்கலாம்” என்று முகத்தை சுளித்தவாறு குளியறைக்குள் சென்றாள் ரதி.

தூரிகாவிற்கு வைத்திருந்த ஜூஸ்ஸை மாற்றி வைத்து விட்டு துரைசிங்கத்துக்கு போன் போட்டு “அண்ணா நீங்க சொன்னது போல ஜூஸ்ஸை மாத்தி வைச்சுட்டேன்” என்று சிரித்தான்

ஆனால் துரைசிங்கத்துக்கு ஜூஸ்ஸில் போதை மருந்து கலந்திருப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.. ஏதோ மயக்க மருந்தா இருக்கும் என்று அவ கலந்த மருந்தை அவளே குடித்து மயங்கி கிடக்கட்டும் என்று தான் எண்ணியிருந்தான்.

ரதி மற்றொரு குளியறைக்குள் நுழைந்த தன் சேலையில் பட்ட கரையை துடைத்து கொண்டு வந்து ஜூஸ்ஸை குடித்து விட்டாள்.. அடுத்த நொடி அவளுக்கு தலை கிறு கிறுக்க முகம் கழுவி வரலாம் என்று குளியறைக்குள் சென்றாள்.

ரதி மற்றொரு குளியறைக்குள் நுழைந்தவுடன் தூரிகா வெளியே வந்தாள். துரைசிங்கம் கேமராவில் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்..

பொன்வண்ணனோ போன் பேசி முடித்து உள்ளே வந்தவன் “ரதி எங்கே நீ மட்டும் இருக்க?” என்று தூரிகாவிடம் கேட்டான்.

“மேடம் ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பியிருப்பாங்கனு நினைக்குறேன் டாக்டர் நீங்க ஜூஸை குடிங்க” என்று அவனுக்காக இருந்த ஜூஸை எடுத்துக் கொடுத்து மருந்து கலக்காத ஜூஸ்ஸை குடித்தாள் தூரிகா.

அவனோ ஜூஸ்ஸை குடிச்சு முடித்து அவளது கையை பிடித்தான். “டாக்டர் தப்பு பண்ணுறீங்க” என்று கோபப்பட்டு அவள் கையை உருவிக்கொண்டு வெளியே போக பார்த்தாள்.

துரைசிங்கமோ பொன்வண்ணன் தங்கையின் கையை பிடிப்பதை பார்த்து கழுத்து நரம்பு துடிக்க வேகமாய் எழுந்து பொன்வண்ணன் இருந்த அந்த வீட்டை நோக்கி ஆத்திரத்துடன் ஓடி வந்தான்.

“ஏய் என் மனசை புரிஞ்சுக்கோடி” என்று அவளது கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து விட்டான் பொன்வண்ணன்

தூரிகாவோ பொன்வண்ணனின் கையை தட்டிவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.

பொன்வண்ணனும் “சாரிடி நில்லு” என்று அவள் பின்னாலே ஓடி வந்தவன் துரைசிங்கத்தின் மீது மோதி நின்றான்.

“டேய் என் தங்கச்சி கையை எதுக்கு பிடிச்ச..?” என்று அவனது சட்டையை பிடித்து கோபத்துடன் கேட்டான்.

அவனோ “தூரிகா கால் தடுக்கி கீழே விழப்போனா அதான் சேஃப்டிக்கு பிடிச்சேன்” என்றவன் "சட்டையை விடுங்க" என்று துரைசிங்கத்தின் கையை எடுத்து விட்டு வேகமாய் சென்று விட்டான். அவனுக்கு வீணாய் சண்டை போட இஷ்டம் இல்லை.

ஆதிபெருமாளின் கார் மீண்டும் அங்கே வந்துவிட்டது.

“இருடா என்கிட்ட தப்பிச்சா ஓடுற... உன் தங்கச்சி வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்துறேன்... குடும்பமாய் என் ஊருக்குள்ள வந்து பாரம்பரியமா இருக்க எங்க குடும்பத்தை பழி வாங்க வந்தீங்களா. உங்க மானத்தை கப்பல் ஏத்துறேன் பாரு” என்று ரதிதேவி இருந்த அறைக்குள் சென்றான்.

ரதிதேவியோ முகத்தை கழுவிக்கொண்டு ‘என்னாச்சு எனக்கு இப்படி மயக்கமா வருதே’ என்று தலையை பிடித்துக்கொண்டு வாஷ்ரூமை விட்டு வெளியே வந்தவள் துரைசிங்கத்தின் மீது மோதினாள்.

அவனோ தன் மீது மோதியவளை “ஏய் தள்ளிப்போடி” என்று கோபத்தில் பிடித்து தள்ள.. ரதியோ "ஏ..ஏய் மாமா உ. உன் மீசை அழகா இருக்கு" என்று அவன் சட்டையை இழுத்து அவனை கட்டி பிடித்து விட்டாள். அந்த நேரம் ஆதிபெருமாள் அந்த வீட்டுக்குள் பூனை போல வந்தவர் துரைசிங்கம் ரதிதேவியை தள்ளிவிடுவதை பார்த்து அந்த வீட்டின் வெளிக் கதவை மூடி வைத்து விட்டார். தன் மகள் மானம் போகிறது என்றெல்லாம் அவருக்கு அப்போது தெரியவில்லை. ஐய்யனார் குடும்பத்தை ஊரில் வைத்து அவமானப்படுத்தணும் என்று கங்கணம் கட்டி நின்றவர் மகள் பெயர் கெட்டுவிடும் என்று மறந்து விட்டார்.

கோதையோ எனக்கு மனசே சரியில்லை. நாம ரதியை நம்மோட கூட்டிட்டு போகலாம் என்று காரை திருப்ப சொல்லியிருந்தார் ஆதிபெருமாளிடம்.

ஆதிபெருமாளோ உன் குடும்பம் அவமானப்படுவதை நீயும் கண்குளிரப்பாரு என்று மறுபடியும் கேம்ப் நடந்த இடத்திற்கு கூட்டி வந்துவிட்டார்.

துரைசிங்கமோ அவள் தன்னை கட்டி பிடித்ததும் தீயை சுட்டது போல அவளை வெடுக்கென்று தன்னிலிருந்து விலக்கி விட்டான்.

ரதி தள்ளாடுவதையும் வாய் குளறுவதையும் பார்த்து இப்படி அவள் எதோ குடித்து விட்டாள் என்று நினைத்து “இப்படி குடிச்சுட்டு வந்து எங்க ஊரு கேம்ப்க்கு மருத்துவம் பார்க்க வந்தியாடி? நீயெல்லாம் ஒரு பொண்ணா” என்று அவளது கையை இறுக்கி பிடித்தான்.

அவளோ “டேய் கையை விடுடா பொறுக்கி” என்று அவள் தள்ளாட அவளது முந்தானை விலக அவளது அங்கங்கள் அவன் கண்ணுக்கு பட முகத்தை திருப்பிக்கொண்டு “ஏய் ஒழுங்கா சேலையை இழுத்துவிடுடி” என்று பல்லைக்கடித்தான்.

லம்பாடி உன்னை போல பஜாரியை என் விரல் கூட தீண்டாது” என்று அவளை பிடித்து தள்ளும் வேளையில் ஆதிபெருமாளோ அந்த ஊர்காரர்களிடம் “நீங்க சாமியா நினைக்குற துரைசிங்கம் என் பொண்ணை மானபங்கப்படுத்திட்டிருக்கான்” என்றார் வாய் கூசாமல்.

அவளோ “டேய் நீதான் எனக்கு என்னமோ ஜூஸ்ல கலந்து கொடுத்திருக்க... ஜூஸை குடிச்சதும் ஒருமாதிரி இருக்கு” என்று வாய் குளறி அவன் முதுகில் வந்து மோதி நின்றாள்.

கோதையோ ‘அச்சோ என்ன இது என் சிங்கப் பையல் கண்டிப்பா தப்பு பண்ணியிருக்கமாட்டான். என்பொண்ணு மேல சந்தேகப்படுவேனே தவிர என் குடும்பத்து ஆண்பிள்ளைகள் தப்பு பண்ணமாட்டாங்க’ என்று நெஞ்சைப் பிடித்தார்.

பொன்வண்ணனோ “என்னப்பா சொல்றீங்க! ரதி அந்த வீட்ல இல்லையே நான்தான் கடைசியா வந்தேன்” என்றான் அழுத்தமாய்.

“நான் பொய் சொல்லலை நீயே வந்து பாருடா” என்று மகனின் கையை பிடித்துக்கொண்டு அந்த ஊர்மக்களையும் அழைத்துச்சென்றவர் கதவை தள்ளிக்கொண்டுச் செல்ல... அங்கே ரதிதேவி துரைசிங்கத்தை கட்டி பிடித்து நின்றாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

துரைசிங்கமோ கதவு திறக்கும் முன்பு ரதியை தள்ளிவிட்டிருந்தான். ஆனால் அவளோ போதை மருந்தின் வீரியத்தில் மயக்கமுற்று "மாமா" என்று குளறியபடியே துரைசிங்கத்தை பின்னிருந்து அணைத்திருந்தாள்.

துரைசிங்கம் ஊர் மக்களை பார்த்ததும் அவளை தன்னிடமிருந்து அவசரமாக பிரித்து விட அவளோ முந்தானை விலகியது கூட தெரியாமல் தள்ளாடினாள்.

பொன்வண்ணனோ அதிர்ச்சியாகி ஒரு நொடி உறைந்து விட்டான். தான் போட்டிருந்த கோட்டை வேகமாக கழட்டி தங்கையின் மேல் போட்டு விட்டு ரதிதேவியை தன் தோளோடு அணைத்துக்கொண்டான்.

துரைசிங்கத்தை கண்ணியவான் என்று நினைத்திருந்தானே! இவனா என் தங்கையை இப்படி நாசப்படுத்த திட்டம் போட்டது என்று துரைசிங்கத்தின் மீது வைத்திருந்த மரியாதை கொஞ்ச நேரத்தில் அடிக்கி வைத்திருந்த சீட்டு கட்டு போல சரிந்து விட்டது.

'இது எப்படி நடந்துச்சு..? அப்போ தூரிகாவும் இதற்கு காரணமா இருப்பாளோ? என்று அவனுக்கு சந்தேகம் துளிர்விட்டது. பின்னே தான் போன் பேசி வந்ததும் ரதி எங்கேயென்று தூரிகாவிடம் நான் கேட்டதற்கு மேடம் கிளம்பிட்டாங்கனு சொன்னாளே! ஏன் அவ என்கிட்ட பொய் சொல்லணும்... அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து பக்காவா திட்டம் போட்டு எங்க குடும்பத்தை இப்படியொரு நிலையில கொண்டு வந்து நிறுத்தியிருக்காங்க... இதற்கெல்லாம் துரைசிங்கம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்' என அவன் மனம் எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தது.

அவசரத்தில் தூரிகா தனக்கு துரோகம் செய்து விட்டாள் என அவள் மீது தவறான எண்ணம் விதைத்து விட்டான் பொன்வண்ணன்.

ஆதிபெருமாளோ "பார்த்தீங்களா நீங்கெல்லாம் உங்க ஊரு கருப்பண்ண சாமியா நினைக்கும் துரைசிங்கம் என் பொண்ணுக்கு ஏதோ போதை மருந்து போல ஜூஸ்ல கலந்து குடிக்க வைத்து அவள் நிதானம் இல்லாத பண்ணி அவளோட கற்பை சூறையாட பார்த்திருக்கான இந்த துரைசிங்கம்... நான் அன்னிக்கு தவறு செய்தேன்னு என்னை மட்டும் கோமணத்தோட கட்டி வைச்சு அடிச்சி அவமானப்படுத்துனீங்க... இப்போ உங்க ஊர் தலைவர் மகன் தப்பு பண்ணிட்டு யோக்கியன் போல சீன் போட்டு நிற்குறான் அவனுக்கு தண்டனை கொடுக்கமாட்டீங்களா? இப்ப துரைசிங்கத்தையும் கோமணத்தோட கட்டி வச்சு நான் என் கையால அடிக்கணும்" என்றார் வஞ்சினம் பொங்க.

"யோவ் நிறுத்தியா எங்க வந்து யாரை பத்தி தப்பா பேசி பழி போடற... எங்க துரைசிங்கம் பொண்ணுங்களை தெய்வமா பார்க்குற பையன்... இப்ப கூட உன்னோட பொண்ணுதான் எங்க துரைசிங்கத்தை கட்டிபிடிச்சு நின்னுச்சு... எல்லாரும் பார்த்தோம் தானே!! நான் கூட நல்லா வைத்தியம் பார்க்குற டாக்டருனு தப்பா நினைச்சிட்டேன்" என்று வயதில் மூத்தப் பெண்மணி துரைசிங்கத்தை குறை சொன்ன ஆதிபெருமாளிடம் சண்டைக்குச் சென்று விட்டார்.

தூரிகாவோ இது எப்படி நடந்துச்சு... தன் அண்ணன் மீது பழி போடுவதை அவளால் தாங்கமுடியவில்லை... பெண்கள் என்றாலே ஒரு அடி தள்ளி நிற்பவன் துரைசிங்கம் என்று அவள் அறிந்ததே..

'அலர்விழியிடம் கூட நெருங்கி நிற்க மாட்டாரே அண்ணா... நான் நம்ப மாட்டேன் என் அண்ணா ஒருநாளும் இப்படி கீழ்த்தரமான தரம் கெட்ட செயலை ஒரு நாளும் பண்ணவே மாட்டார்... இவங்க வேணும்னே பழி சுமத்துறாங்க' என்று அவளுக்கு ஆதிபெருமாள் மேல் ஆத்திரம் வந்தது.

ஆதிபெருமாளோ அடங்காமல் “இப்பவே பஞ்சாயத்தை கூட்டுங்க... என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்... கூப்பிடுங்க உங்க ஊர் பஞ்சாயத்து தலைவர் ஐய்யனாரையும், அவரோட அப்பா வீரய்யனையும்” என்றார் அடங்காத கோபத்துடன் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு.

கோதையின் இதயமோ எக்குதப்பாய் துடித்தது. தள்ளாடி நிற்கும் மகளை பார்த்தவருக்கு உயிரே போனது போல இருந்தது. ‘உன்னோட சுயநலத்துக்கு என் பொண்ணோட வாழ்க்கையை பணயம் வச்சிட்டியேடா’ என்று கணவனை அடிப்பட்ட பார்வை பார்த்தார்.

பொன்வண்ணனோ "ம்மா பார்த்தீங்களா உங்க அண்ணன் மகனை ரதிக்கு திட்டம் போட்டு ஜுஸ்ல போதை மாத்திரை கலந்து கொடுத்திருக்காரு! இவரை அப்பா சும்மா விட்டாலும் நான் சும்மா விடமாட்டேன்... எனக்கு பஞ்சாயத்து எல்லாம் முக்கியம் கிடையாது... என் தங்கச்சியை நாலு பேர் அவதூறா பேசறது போல பண்ணிட்டாரே! இதுல அவங்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகுது... இந்த சம்பவம் நம்ம வீட்டுப் பொண்ணோட வாழ்க்கையில கருப்பு புள்ளியா வந்திடுமே அம்மா!" என்றான் ஆத்திரமும் அங்கலாய்ப்புமாக.

“எனக்கு வர கோபத்துக்கு துரைசிங்கம் கன்னத்துல அறையணும் போல இருக்கு... உங்க அண்ணன் எட்டு ஊருக்கு பஞ்சாயத்து பண்ணுறவர்... அவர் மகன் செய்த காரியத்துக்கு என்ன தண்டனை கொடுக்குறாருனு பார்க்குறேன்... அவர் மட்டும் அவர் மகனுக்கு சப்போர்ட் பண்ணி பேசட்டும்... நான் யாருனு காட்டுறேன். பனிஷ்மெண்ட் கட்டாயம் நான் கொடுப்பேன்மா" என்று சீற்றமாக முறுக்கிக்கொண்டு நின்றான்.

கோதையோ “எப்பவும் பொறுமையா இருப்பியேடா வண்ணா... கொஞ்சம் பொறு அண்ணா தீர விசாரிச்சு தீர்ப்பு சொல்லுவாரு” என்றார் அண்ணன் மேல் இருந்த நம்பிக்கையில்.

துரைசிங்கமோ ஆதிபெருமாள் பேசட்டும் என்று வாய்திறக்காமல் மௌனமாகவே நின்றான். புயலுக்கு முன்னே இருக்கும் அமைதி போல.

ஐய்யனாருக்கு விசயம் தெரிந்து விட வீரய்யன் குடும்பம் மொத்தமும் ஊருக்கு நடுவே வந்துவிட்டார்கள் பதட்டத்துடன்.

ரதிதேவிக்கு குமட்டிக்கொண்டு வர பொன்வண்ணனோ தங்கை எங்கே மயங்கி விழுந்துவிடுவாளோ என்று அவனாகவே தாங்கி பிடித்து வாஷ்ரூம் கூட்டிச் சென்றான். கோதையோ பித்து பிடித்தது போலவே நின்றிருந்தார்.

ரதிதேவிக்கு போதை குறைய மருத்துவனாக அவனுக்கு தெரிந்த முறையில் வைத்தியம் செய்து விட்டான். அவளுக்கு போதையும் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிந்துக் கொண்டிருந்தது.

பொன்வண்ணனோட வந்த ரதியின் கையை பிடித்துக்கொண்டு ஐய்யனாரின் முன்பு நின்ற ஆதிபெருமாளோ “என் பொண்ணை உன் மகன் கெடுக்க பார்த்திருக்கான்” என்று வெறி பிடித்தவர் போல கத்தினார்.

ஐய்யனாரோ “வாயை மூடுடா என் மகனை பத்தி எனக்கு தெரியும்... தராதரம் தெரியாம உன்னோட நட்பு வச்சிக்கிட்டதுக்கு என் குடும்பத்துல பிரளயம் கிளப்பிட்டு போனவன் நீ! என் மகனை பத்தி பேச உனக்கு யோக்கியம் கிடையாது... நடந்ததை விசாரிச்சுட்டு அப்புறம் இருக்குடா உனக்கு” என்றார் கர்ஜனையாக.

கோதை ஐய்யனாரின் கோபத்தை கண்டு நடுங்கியதும் பொண்வண்ணன் தாயின் கையை இறுக பற்றிக்கொண்டான் ஆதரவாக.

“அண்ணா” என்று அழுகையுடன் நின்ற தங்கையை பார்த்த ஐய்யனாருக்கு நெஞ்சுக்குள் நெருஞ்சி முள் குத்தியது. கண்மூடி திறந்து தன்னை திடப்படுத்திக்கொண்டார்.

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும்... இவனிடம்தான் ஆதாரம் முழுக்க இருக்கே... கெத்தாக நின்றிருந்தான் துரைசிங்கம். தன்மேல் ஒரு பெரும் பழியை சுமந்தியிருந்தபோதும் என் மேல் உள்ள நம்பிக்கையில் மகன் தவறு செய்யமாட்டான் என்று ஆணித்தரமாக ஆதிபெருமாளிடம் சண்டைக்குச் சென்றது தந்தையின் மீது மலையளவு மதிப்பும் பாசமும் உயர்ந்து இன்னும் சதிராட்டம் ஆடுவதற்கு தயாராகி அதற்கான நேரம் பார்த்து நின்றான் துரைசிங்கம்.

இன்றோடு ஆதிபெருமாளை இந்த ஊர் எல்லைக்கு கூட வரவிடாமல் செய்து விடவேண்டுமென்று கங்கணத்தோடு இருந்தான் துரைசிங்கம்.

"அங்கிள் உங்க மகன் துரைசிங்கம் கொடுத்த கிரேப் ஜுஸ்லதான் ட்ரக் கலந்திருக்கு இதோ அந்த டம்ளர்" என்று ஐய்யனாரிடம் டம்ளரை நீட்டினான்... துரைசிங்கத்தை பார்த்து முறைத்தவாறே முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு.

ஐய்யனரோ அந்த டம்ளரை வாங்கி அதில் இருந்த ஜுஸை அங்கே நின்ற பொது ஆளிடம் நீட்டி பரிசோதனை பண்ண சொல்லி ஆணையிட்டார்.

அவர்களும் வாங்கி பரிசோதித்து விட்டு “ஆமாங்கய்யா இதுல போதை மருந்து கலந்திருக்கு” என்றிருந்தனர்.

“ம்ம் இன்னும் என்ன ஆதாரம் வேணும் உங்களுக்கு” என்று கோதையின் பக்கம் நின்றிருந்த பொன்வண்ணனோ கோபம் கொப்பளிக்க துரைசிங்கத்தின் சட்டையை பிடித்துவிட்டான்.

துரைசிங்கமோ பொன்வண்ணனின் கையை லாவகமாக எடுத்துவிட்டு “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு அப்புறம் யாரு அடிக்கறதுனு முடிவு பண்ணிக்கலாம்... என் சட்டையை பிடிக்க உனக்கு என்ன தைரியம்டா" என்று பல்லைக்கடித்து நெஞ்சை நிமிர்த்தி கை காப்பை ஏத்தி விட்டான்.

வீரய்யனோ தன் குடும்பத்தை மீண்டும் பாழ்படுத்த வந்த ஆதிபெருமாளை என்ன செய்வது என்று மருகிக்கொண்டிருந்தார்.

நாச்சியோ ‘குடிகெடுத்தவன் மறுபடியும் எங்ககுடியை கெடுக்க வந்துட்டான் நாசமா போறவனே’ என்று ஆதிபெருமாளை திட்டிக்கொண்டு நின்றிருந்தார்.

அலர்விழியோ தன் வாழ்க்கையில் புயல் வீசிவிடுமோ! எங்கே தன் மாமன் தனக்கு கிடைக்காமல் போய் விடுவானோ என்ற மனத்தாங்கலில் தந்தையின் கையை இறுகபற்றியிருந்தாள்.

கண்ணனோ “மாப்பிள்ளை மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா... நீ பயப்படாம இரு” என்று மகளின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டார்.

அலர்விழியோ “எனக்கும் மாமா மேல நம்பிக்கை இருக்குப்பா... ஆனா அந்த ரதிதேவி மேல நம்பிக்கை இல்லை” என்றாள் கண்ணீல் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே.

அன்பரசியும் மனம் பதைபதைப்புடன்தான் நின்றிருந்தார்.

“அண்ணி என்ன இது கோதை வீட்டுக்காரரு கல்யாண நேரத்துல இப்படி வந்து கூத்து கட்டுறாரு” என்றார் கவலையுடன் கோமதியிடம்.

கோமதியோ “என் புள்ள சொக்கத்தங்கம் அவன் தப்பே செய்திருக்க மாட்டான்... அந்த ஆள் என்ன குதி குதிச்சாலும் என் மகன் அவனுக்கு பாடம் புகட்டுவான்... அவன் அமைதியா இருக்கான்னாவே அதுல ஆயிரம் அர்த்தம் பொதிந்து இருக்கும்... நீ அழுகாம நில்லு அன்பு” என்று அன்பரசிக்கு ஆறுதல் கொடுத்தார் மகன் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையில்.

ஊர் பெரியவர்களோ துரைசிங்கத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும் பெண் பிரச்சனை என்று வரும்போது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.

“சம்பந்தபட்ட பொண்ணை விசாரனை நடத்தணும் ஐய்யனார்" என்றார்கள் ஊர் பெரியவர்கள்

ஐய்யனாருக்கோ ஆதிபெருமாள் மீது ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது. என்னை பழிவாங்கணும்னு சொந்தப் பொண்ணை பகடை காயா நகர்த்தியிருக்கானே! தூரிகா போலத்தானே ரதிதேவியும் அவளை எப்படி கேள்வி கேட்பது என்று முதன் முறை பஞ்சாயத்தில் திணறினார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமே என்ற விதத்தில் மனம் கலங்கி இருந்தாலும் தீர்ப்பை விசாரிக்க ஆரம்பித்தார் ஐய்யனார்.

ஆதிபெருமாள் அணைப்பில் நின்ற ரதிதேவியை “இங்க வாம்மா” என்று மென்மையாக தலையை அசைத்து கூப்பிட்டார்.

ஆதிபெருமாளோ “என்னோட பொண்ணு என்கூடத்தான் நிற்பா... நீ கேள்வி கேளு” என்றார் திமிராக.

துரைசிங்கமோ ஆதிபெருமாளை ஏளனச் சிரிப்புடன் பார்த்தான்.

பொன்வண்ணனோ ஏளனமாக சிரிக்கும் துரைசிங்கத்தை கண்டு ‘பண்ணுறதை பண்ணிட்டு எப்படி இவனால் சிரிக்க முடியுது... இவன் தங்கச்சியை கையை பிடிச்சு இழுத்தேன்னு சட்டையை பிடித்தான். இன்னிக்கு நான் பண்ணுற அலப்பறைல உன் குடும்பமே நிலை குலையப்போகுது பாருங்கடா’ என்று பல்லைக்கடித்து தூரிகா எங்கே நிற்கிறாள் என்று கண்களால் தேடினான்.

அவளோ நாச்சியின் பக்கம் என்ன நடக்குமோ என்று படபடப்புடன் கண்கள் கலங்க நின்றிருந்தாள்.

ஆதிபெருமாளோ ரதியிடம் "துரைசிங்கம் என்னை ரேப் பண்ண பார்த்தான்னு சொல்லு ரதி! அப்பதான் துரைசிங்கத்தை கட்டி வைச்சு அடிக்க முடியும்... ஐய்யனார் குடும்பத்தையும் அவமானப்படுத்தமுடியும்... உன்னோட அப்பா இன்னும் இந்த ஊருக்கு தலைநிமிர்ந்து வரமுடியாத பண்ணியிருக்காங்கல்ல! அவனுங்களையும் தலை நிமிர விடக்கூடாது.. உன் கையிலதான் எல்லாம் இருக்கு" என்று மகள் காதில் மந்திரம் ஓதினார்.

அவளோ அப்பன் பேச்சை குருட்டுத்தனமாக கேட்டு "என்னையும் நான் ஊருக்குள்ள வந்த முதல் நாள் அடிச்சு இழுத்துட்டு போய் ஊருக்கு வெளியே விட்டான்லப்பா அந்த சிங்கம். இப்போ என்னோட நேரம்... ரேப் பண்ண பார்த்தான்னு சொல்லுறேன்... குடும்பம் தலை தொங்கி போய் நிற்கட்டும்" என்றாள் தன் வாழ்க்கை பயணம் மாறப்போகிறது என்று தெரியாமல்.

ஐய்யனாரோ “பெருமாள் இது பொண்ணோட மானப்பிரச்சனை... ஊருக்கு முன்னால இப்படி வச்சு பேசறதே எனக்கு மனுசு உறுத்தலா இருக்கு” என்று காட்டமாய் பேசினார்.

ரதி போதை மருந்து லைட்டாக தானே கலந்திருந்தாள். அவளுக்கு இப்போது போதையும் தெளிந்திருந்தது.

அவளோ “விடுங்கப்பா நான் பேசிட்டு வந்திடறேன்” என்று மெதுவாக நடந்து ஐய்யனாரின் பக்கம் நின்றாள்.

“சிங்கம் நீயும் வாப்பா” என்றார் ஆணையிடுவது போல.

துரைசிங்கமோ தோளைக்குலுக்கிக்கொண்டு ஐய்யனார் பக்கம் நின்றான்.

“இங்க பாருமா உண்மையை மட்டும் பேசணும்” என்றார் ஐய்யனார்.

“நான் உண்மையைதான் பேசுவேன் நீங்க கேளுங்க” என்று கையை கட்டி நின்றாள் ரதி திமிராக.

“என் மகன் உன்கிட்ட தவறாக நடந்துக்கிட்டானா! உண்மையை மட்டும் சொல்லு!" என்றார் குரலை உயர்த்தி.

“ஆமா உங்க மகன் என்னை அணைச்சிக்கிட்டாரு... நான் போதையிலும் அவரை விட்டு தள்ளித்தான் போனேன்! என்கிட்ட எல்லை மீறி நடந்துக்கிட்டாரு! உங்க தீர்ப்பை சொல்லுங்க... வழக்கமா இந்த ஊர்ல பொண்ணுங்க கிட்ட எல்லை மீறி நடந்தா கட்டி வைச்சு அடிப்பீங்களாமே நான் அடிக்கணும் உங்க மகனை” என்றாள் துரைசிங்கத்தை ஏளனச்சிரிப்போடு பார்த்து.

ஐய்யனாரோ “இருமா அவசரப்படாதே! என் மகனையும் ஒரு வார்த்தை நான் கேட்கணும்ல... பொண்ணு சொன்னதும் கண்ணை மூடிக்கிட்டு ஒருதலைபட்சமா தண்டனை கொடுத்திட முடியாது” என்றவரோ மகனை பார்த்தவாறே

“துரைசிங்கம் நீ என்ன நடந்துச்சுனு சொல்லுப்பா” என்றார் அதட்டலுடன்தான்.

“முருகா சிசி டிவி ஃபுட்டேஜ் எடுத்துட்டு வா” என்றான் கம்பீரமான குரலில் ரதிதேவியை பார்த்து மீசையை முறுக்கி எப்படி என்று புருவம் உயர்த்தினான்.

ரதிதேவியோ முகத்தில் அச்சம் கலந்து ஆதிபெருமாளை பார்த்தாள்.

அவரோ ‘பார்க்கலாம் இரு’ என்று உதடசைத்தார்.

முருகன் சிசி டிவி ஃபுட்டேஜ் கொண்டு வந்து துரைசிங்கத்திடம் கொடுத்து விட்டுச் சென்றான்.

“இதுல என்ன நடந்துச்சுனு இருக்குங்கப்பா! நான் தப்பு பண்ணலைங்கப்பா” என்றான் நிறுத்தி நிதானமாகவும் அழுத்தமாகவும்.

அவரோ ஃபுட்டேஜில் ரதிதேவி முதல் முறை போதை மருந்து கலப்பதையும் அடுத்த ஜுஸில் கலப்பதையும் பார்த்தவர் முருகன் ஜுஸை மாத்தி வைப்பதையும் பார்த்துவிட்டு பெரும்மூச்சு விட்டு துரைசிங்கத்தை முறைத்தார்.

அவனோ “என்னோட தரப்புல நான் செய்தது நியாயம்தான் அப்பா... என் தங்கச்சியோட மானம் போகணும்னு இவ செய்திருக்கா... அதான் அவளுக்கே திருப்பி செய்தேன்... ஆனா இது போதை மருந்துனு தெரியலை... வேற எதுவும்னு இருந்தேனுங்கப்பா! இவளோட அண்ணன் போதை மருந்துனு சொன்னதும் தான் எனக்கே தெரிஞ்சுச்சு... நான் இவளை தப்பான எண்ணத்தோட தொடவே இல்ல” என்று திடமாக தலையை ஆட்டினான்.

அங்கே நின்ற ஊர் பெரியவர்களும் ஃபுட்டேஜை பார்த்தார்கள். ‘என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணியிருக்கு' என்று அவளைத்தான் தவறாக நினைத்தனர்.

ஊர்மக்கள் என்ன நமக்கு சொல்லாம எல்லாம் குசுகுசுனு பேசுறாங்க என்று உண்மையை தெரிந்துக் கொள்ள ஆவலாய் நின்றனர்.

பொன்வண்ணனோ வேகமாய் சென்றவன் “என்கிட்ட காட்டுங்க” என்று ஃபுட்டேஜை பார்த்தவன் “ஏன் ரதி இப்படி பண்ணின.. இப்படி பண்ணுனு அப்பா சொல்லிக்கொடுத்தாரா! நீ டாக்டர்க்கு படிச்சு என்ன பிரயோஜனம்... அறிவே இல்லையா? இப்போ எல்லார் முன்னாடியும் நம்ம தலைகுனிஞ்ச நின்னாச்சு” என்று தங்கையின் தவறை சுட்டிக்காட்டி அவள் மீது கடும் கோபத்தில் பேசினான்.

ஆதிபெருமாளிடம் ஃபுட்டேஜை காட்டி “என் மகன் உன் மகளை தொடவே இல்லை... அவன் செய்தது உன் பொண்ணு கலந்த ஜுஸை அவளுக்கே கொடுத்ததுதான்... அதுக்கு ஊர் முன்னால என் மகனை உன் பொண்ணு கிட்ட மன்னிப்பு வேணா கேட்கச் சொல்லுறேன் அவனை கட்டி வச்சு அடிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்” என்று தலையை ஆட்டினார்.

வீரய்யன் குடும்பம் மொத்தமும் ஐய்யனார் பக்கம் வந்துவிட்டனர். கோதையோ பொன்வண்ணன் பக்கத்தில் வந்து நின்றவர் ஃபுட்டேஜை வாங்கி பார்த்து தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

“பாவி மகளே என் நெஞ்சுல நெருப்பை அள்ளி போட்டுட்டியே” என்று ரதிதேவியின் முதுகில் நாலு அடிபோட்டார்.

ஊர் மக்களோ "நம்ம துரைசிங்கம் தம்பி தப்பு பண்ணியிருக்காது... அந்த பொண்ணுதான் ஏதோ அவ அப்பன் பேச்சு கேட்டு கிறுக்குதனம் பண்ணியிருக்கணும்" என்று கிசுகிசுத்துக்கொண்டனர்.

அலர்விழி மனதிற்குள் ஏதோ தவறாய் நடந்து விடுமோ என்று மனம் பதைபதைப்புடன் நின்றிருந்தாள்.

ரதிதேவி ஆதிபெருமாளின் கையை பிடித்து நின்றுக் கொண்டாள்.

பொன்வண்ணனோ “என் தங்கச்சி பண்ணியது தப்புதான் நான் இல்லைனு சொல்லல... ஆனா உங்க பையன் நீதி மான் ஆச்சே! ஏன் டி இப்படி பண்ணினனு ரதியை அடிச்சிருந்தா கூட அவ தப்பு பண்ணியதுக்கு தண்டனைனு ஏத்துக்கிட்டிருப்பேன்... உங்க பையனும் என் தங்கச்சிக்கு ஜுஸை குடிக்க வச்சது தப்புதானே! இதுக்கு நீங்க நியாயம் சொல்லித்தான் அங்கிள்" என்றான் துரைசிங்கத்தை துளைக்கும் பார்வையில் பார்த்தபடி.

“துரைசிங்கம் அந்த பொண்ணு காலுல விழுந்து மன்னிப்பு கேளு” என்று ஆணையிட்டார் ஐய்யனார்.

“அவ தப்பு பண்ணினா நான் தண்டனை கொடுத்தேன் அவ்ளோதான் எவ காலுலயும் நான் விழமாட்டேன்ப்பா” என்று அழுத்தமாக தலையை ஆட்டினான்.

“சிங்கம் நான் சொல்றதை கேட்க மாட்டியா?” என்று குரலை உயர்த்தியவர் எழுந்து வந்து துரைசிங்கம் கன்னத்தில் அறைந்துவிட்டார்.

பொன்வண்ணனோ “ஏன் உன் தங்கச்சி கையை பிடிச்சேன்னு என்னை சட்டையை பிடிச்சீங்கல்ல... இப்ப நானும் பிடிக்குறேன்” என்று துரைசிங்கம் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் அறைய கையை ஓங்கிவிட்டான்.

‘சபாஷ்டா மகனே இப்பதான் நீ என் புள்ளனு காட்டியிருக்க’ என்று மார்த்தட்டி நின்றார் ஆதிபெருமாள்.

துரைசிங்கம் கோபத்தில் கைமுறுக்கி அவனது கையை தடுக்கும் முன் “வண்ணா” என்று மகனின் கையை பிடித்து “சிங்கத்தை அடிக்க உனக்கு உரிமையில்லைடா... நீயும் தப்பு பண்ணியிருக்க... அதான் அவன் உன்னை அடிச்சிருக்கான்... உன் தங்கச்சியும் எந்த பொண்ணும் செய்ய கூடாததை பண்ணியிருக்கா... அவளுக்குத்தான் நாம தண்டனை தரணும்” என்று மகனை அடக்கினார்.

அங்கேயிருந்த ஊர்மக்களோ "இந்த பொண்ணை இனி யார்தான் கல்யாணம் பண்ணிப்பாங்க. உள்ளூர்க்குள்ள மாப்பிள்ளை பார்க்க முடியாது... அசலூர்காரனுக்குதான் கல்யாணம் பண்ணி வைக்கணும்... இன்னிக்கு நடந்த காரியம் காத்து போல ஊர் முழுக்க பரவும்... அவ அப்பன் சீர் சினத்தி அள்ளிக்கொடுத்துதான் கல்யாணம் பண்ணனும்... எப்படி பார்த்தாலும் ஒருத்தனை கட்டிபிடிச்சு நின்னதை ஊர் முழுக்க பார்த்தாச்சே!" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேசியதை கேட்டு கோதை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தார்.



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 16


நாச்சியோ “அம்மாடி கோதை” என்று பதறி வந்தார்.

அதற்குள் பொன்வண்ணன் கோதையை மடியில் படுக்க வைத்து அவரது கன்னத்தை தட்டினான். தூரிகா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அவளிடமிருந்து வெடுக்கென தண்ணீரை வாங்கி முகத்தில் தெளித்தான்.

கோதையோ மெல்ல கண்விழித்தவர் எழுந்து ஐய்யனார் முன்னே மண்டியிட்டு “அண்ணா என் பொண்ணு பேரு உங்க பையனோட சேர்ந்து வந்துருச்சு. இனி அவளை யாரு கல்யாணம் பண்ணினாலும் அவ வாழ்க்கை நல்லாயிருக்காது... உங்களை நான் இதுவரை எதுவும் கேட்டதில்லை... இப்ப முதன் முறையா கேட்கிறேன் என் பொண்ணை உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்க” என்று ஐய்யனாரின் காலிலேயே விழுந்துவிட்டார்.

“எழுந்திரு கோதை” என்று வெகு வருடங்கள் கழித்து தங்கையிடம் பேசினார்.

அவரோ ஏதோ வாடி வதங்கி உயிர் விட்டு போகும் செடிக்கு தண்ணீர் பாய்ச்சியது போல முகம் தெளிந்து இருந்தார்.

“அம்மா எழுந்திருங்க நீங்க ஏன் அவரு முன்னால மண்டியிட்டு இருக்கணும்... நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க!” என்றான் பொன்வண்ணன் ஆதங்கத்தில்.

கோதைக்கு அண்ணனே ஆனாலும் அவர் முன்னே மண்டியிடுவது பொன்வண்ணனுக்கு மனம் வலித்தது.

“டேய் நீ சும்மா இரு வண்ணா... ஒரு பொண்ணோட பேரு ஒரு பையன் கூட சேர்ந்து வந்துட்டா அது காலம் முழுக்க நெருப்புல சுட்ட காயம் போல ஆறாத வடுவா இருக்கும்டா” என்று மனம் வருந்தி கண்ணீர் விட்டவர் ஐய்யனார் முன்னே மீண்டும் மண்டியிட்டு "சிங்கப் பயலுக்கு என் மகளை கல்யாணம் பண்ணி வச்சிடுங்க... உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை... இனிமே என் பொண்ணை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க! உங்களை கெஞ்சிக் கேட்குறேன்... ரதியை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கோங்க அண்ணா" என்று முந்தானையை பிச்சை எடுப்பது போல வைத்துக் கொண்டு நின்றவரை கண்டு பொன்வண்ணன் அழுதேவிட்டான்.

கோதை கேட்டதில் வீரய்யன் குடும்பத்தினர் அனைவருமே அதிர்ச்சியாகி நின்றனர்.

வீரய்யனும் நாச்சியும் பித்துபிடித்து நின்றனர்.

பொன்வண்ணனோ “துரைசிங்கம் ரதிக்கு வேணாம் மா அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா நான் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்றான் மனத் தாங்கலோடு.

துரைசிங்கமோ “நீ என்னடா என்னை வேண்டாம்னு சொல்ற... உடம்பு முழுக்க கொழுப்பு பிடிச்ச உன்னோட தங்கச்சியை நான் கட்டிப்பேன்னு கனவுல கூட நினைக்காதே!" என்று முகத்தை கடுகடுவென வைத்து பேசியவன் ஐய்யனாரை பார்த்து “அப்பா நான் யார் சொன்னாலும் இந்த பஜாரி கழுத்துல தாலி கட்டமாட்டேன்" என்று ஆணித்தரமாய் பொட்டில் அறைந்தாற் போல சொல்லிவிட்டான்.

ரதியோ "அப்பா, அம்மா ஐய்யனார் அங்கிள் காலுல விழறது எனக்கு பிடிக்கலை” என்று கோதை பக்கம் போக அடி எடுத்து வைத்தாள்.

“கண்ணு ஒரு நிமிஷம் நில்லும்மா... உங்கம்மா பயங்கரமான திட்டத்தை எனக்கு போட்டு கொடுத்திருக்கா... நீ பேசாம அமைதியா நில்லு... எல்லாரும் சேர்ந்து உன்னை அந்த துரைசிங்கத்துக்கு கல்யாணம் செய்து வச்சிடுவாங்க... நீ ஐய்யனார் வீட்டுக்குள்ள போய் அவங்களை ஆட்டி வைக்கணும்” என்று எந்த அப்பனும் மகளுக்கு சொல்லாத வார்த்தையை சொல்லிக்கொடுத்தார் ஆதிபெருமாள்.

"நோ! நோ! நான் அந்த பேட்டை ரௌடி துரைசிங்கத்தை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என்று மறுத்த ரதியை “கண்ணு நீ இங்கதான் உஷாரா யோசிக்கணும்... அவன் கூடவே இருந்து நீ அவனை தினமும் டார்ச்சர் பண்ணு! அந்த குடும்பத்தை நீ நிம்மதியா இருக்க வைக்கவே கூடாது... எல்லாரும் அழுது புலம்பணும்... அந்த ஐய்யனார் ஊருக்குள்ள தலை காட்ட முடியாம வீட்டுக்குள்ள முடங்கி கிடக்கணும்... நான் சுதந்திரமா அரசியலில் ராஜாங்கம் பண்ணுவேன்... அந்த வீரய்யனும், நாச்சியும் பேரன் வாழ்க்கை இப்படி நிம்மதி இழந்து போறதுக்கு நாம காரணம் ஆகிட்டோம்னு நினைச்சு உயிரை விடணும்” என்று மகளை மூளை சலவை செய்துக் கொண்டிருந்தார்.

ரதியோ “நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு... ஆனா இப்போ கல்யாணம் நடக்குமா அப்பா.” என்றாள் ஏதோ திருவிழா எப்போ நடக்கும் என்று கேட்பது போல.

“பொறுமையா நில்லு உன் கழுத்துல அந்த வீரதீர சிங்கம் தாலி கட்டுவான் பாரு” என்று விஷம சிரிப்பு சிரித்தார்.

அடுத்து கோதை சென்றதும் வீரய்யனிடமும் நாச்சியிடமும்தான்.

“அம்மா, அப்பா என் பொண்ணுக்கு வாழ்க்கை பிச்சை போடுங்க” என்று மடியேந்தினார் கோதை.

“அச்சோ ஏன் டி பாவி மகளே! எங்களை எப்பவும் இக்கட்டுலயே கொண்டு வந்து நிறுத்துற” என்று நாச்சி நெஞ்சில் அடித்துக்கொண்டு குய்யோ முறையோவென்று கதறினார்.

கோமதிக்கோ கோதை அழுவதை கண்டு அவருக்குமே அழுகை வந்துவிட்டது. ‘அலர்விழியை மருமகளாக பரிசம் போட்டாச்சே இப்போ இப்படி நடக்கும்னு கனவுலயும் நினைக்கலையே! கடவுளே என் குடும்பத்தை ஏன் இப்படி சோதிக்கற’ என்று மனதிற்குள் அழுது புலம்பிக்கொண்டிருந்தார்.

அலர்விழியோ கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள். தன் சிங்கம் தனக்கு கிடைப்பானா என்று கேள்விக்குறியாக. அவளுக்குமே கோதை இப்படி மடியேந்தி நிற்பது அவள் மனதுக்கு ஒப்பவில்லை. அதற்காக துரைசிங்கத்தை அவளால் விட்டுக்கொடுக்க முடியாது என்று அவளது இதயம் வேகமாக துடிக்க நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அன்பரசியோ கண்ணனை பார்த்து “என்னங்க இது!” என்று கண்ணீர் விட்டார்.

“பொறுடி கோதையும் பாவம்தானே... அந்த கல்நெஞ்சக்காரன் பிடியில மாட்டி இன்னமும் சின்னாபின்னம் ஆகிட்டு இருக்கா... ஐய்யனார் என்ன முடிவு சொல்றாருனு பார்ப்போம்... பொறுமையா இரு’’ என்றிருந்தார் மனைவியிடம்.

வீரய்யனும் நாச்சியும் கோதையை அணைத்துக்கொண்டு அழுதார்களே தவிர உன் மகளை என்வீட்டு மருமகளா கூட்டிப்போறோம் என்று வாய் திறந்து பேசவில்லை.

ஐய்யனாரோ “கோதை துரைசிங்கத்துக்கும் அலர்விழிக்கு நிச்சயம் நடந்து முடிஞ்சாச்சு... வர வெள்ளிக்கிழமை கல்யாணம்னு உனக்கு தெரியும்னு நினைக்குறேன்! அதுவுமில்லாம அலர்விழி துரைசிங்கத்தை மனசுல வைச்சிருக்கா... எப்படிமா உன் பொண்ணை என் வீட்டு மருமகளா கொண்டு போகச் சொல்லுற?” என்றார் மனதை கல்லாக்கிக்கொண்டு.

ஐய்யனாருக்கு ரெண்டு தங்கையும் ஒன்றுதான்... இத்தனை நாளாய் தங்கை மீத கோபமாய் இருந்தவர் அவர் தன்முன்னே மண்டியிட்டு “மன்னிச்சுடுங்க” என்று மண்டியிடும்போது அவர் இரத்தம் துடிக்கத்தான் செய்தது.

கோதையோ “நீங்க இப்படித்தான் சொல்வீங்கனு தெரியும் ண்ணா” என்ற கண்ணீர் வடித்தவர் மகள் வாழ்விற்காக அடுத்துச் சென்றது அன்பரசியிடம்தான்... அன்பரசியோ “கோதை என் பொண்ணும் பாவம்டி! உன் பொண்ணுக்காக மடிபிச்சை கேட்குற நான் அண்ணாகிட்ட கேட்கலை அவ்ளோதான்!” என்றிருந்தார் அழுகையுடனே.

கோதை கடைசியாகச் சென்றது தன் கைக்குள் வைத்து பாசமாய் வளர்த்த துரைசிங்கத்தின் முன்பு நின்றவர் "சிங்கப் பையா நீ அத்தைக்கு வாக்கு கொடுத்திருக்க... என்னோட பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு! அந்த வாக்கை நீ இப்போ நிறைவேத்துவியா" என்றவரின் குரல் கரகரத்து வந்தது.

100 ஆட்கள் தன்னை எதிர்த்து வந்தாலும் அசால்ட்டாய் அடித்து போட்டு நெஞ்சை நிமிர்த்தி இன்னும் எவன் இருக்கீங்க வாங்கடா என்று சூரியனை போல நெருப்பை கக்கிக் கொண்டிருந்தவன் கோதையின் "சிங்கப் பையா" என்ற வார்த்தையில் பனிக்கட்டி போல் கரைந்து விட்டான். ஆனாலும் இறுக்கமான முகத்துடன் கையை கட்டி நின்றிருந்தான். கையை கட்டாமல் நின்றிருந்தால் "அத்தை" என்று கோதையை கட்டி அணைத்திருந்திருப்பான்.

அவனது கால்கள் கோதையை நோக்கிச் சென்றுவிடும் அதனால் கால்களை தரையில் அழுத்தமாய் வைத்திருந்தான்.

“என் பொண்ணை கட்டிக்கோ சிங்கப் பையா! சிங்கப் பையா!!" என்று அவனது கையை பிடித்துக் கொண்டு கதறினார்.

அவனோ கோதையின் கையை உதறிவிடாமலும், கோதையின் முகத்தையும் பார்க்காமல்தான் இருந்தான் அவனது கண்ணின் ஓரம் நீர் கசிந்தது. ஆனால் கண்ணீரை வெளியே விடவில்லை. அவனுக்கு வைராக்கியம் என்னை விட்டு அவன் தான் முக்கியம்னு போனல்ல அத்தை! இப்ப ஏன் என்கிட்ட வந்து கண்ணீர் விட்டு நிற்குற... பொண்ணா பெத்து வச்சிருக்க பஜாரியை பெத்து வச்சிருக்க என்று இப்போதும் ரதியை திட்டிக்கொண்டுதான் இருந்தான்.

ஐய்யனாரோ கண்ணனை பார்த்தார். அவரோ “விட்டுக்கொடுத்திடலாம் மாமா” என்று கண்ணை மூடித்திறந்தார். ஒருகாலத்தில் அவர் விரும்பிய பெண் கோதை. கோதை அழுவதை கண்ணனால் பார்க்க முடியவில்லை.

இப்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் துரைசிங்கததுக்கு மனைவி அலர்விழியா! இரதியா! என்று வைத்துப்பார்க்கும்போது ரதியே முன்னே நின்றாள் கண்ணன் முன்னே.

துரைசிங்கத்திடம் கோதை கெஞ்சிக்கொண்டிருப்பதை பார்க்க முடியாத பொன்வண்ணன் பொறுமை இழந்து யாரும் எதிர்பார்க்காத தருணம் நாச்சியின் பக்கம் அழுதுக் கொண்டிருந்த தூரிகாவின் கழுத்தில் தான் பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அதிரடியாக கட்டியவன் அவள் என்ன என்று சுதாரிக்கும் நேரம் கூட கொடுக்காமல் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “டேய் துரைசிங்கம் உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்டேன்” என வெற்றி பெற்றவனாய் ஏளன சிரிப்புடன் தூரிகாவின் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து அவளை விட்டு விலகிய நேரம் கோதையை மெதுவாய் தள்ளி நிறுத்திவிட்டு பொன்வண்ணனின் சட்டையை பிடித்து இழுத்து அவன் முகத்தில் குத்து விட ஆரம்பித்தான் துரைசிங்கம். இந்த முறை பொன்வண்ணனும் துரைசிங்கத்தை திருப்பி அடித்தான்.

இருவரும் மாறி மாறி அடித்து நிலத்தில் கட்டிப்புரண்டனர். துரைசிங்கம் பொன்வண்ணனை கீழே தள்ளி அவன் மேல் ஏறி உட்கார்ந்த நேரம் ஐய்யனாரும் கண்ணனும் துரைசிங்கத்தை ஒரே பிடியாக பிடித்து இழுக்க காட்டு மரமாக இருந்த அவனை இழுக்கவே முடியவில்லை.

வேகமாக அங்கே வந்த நாச்சியோ “சிங்கம் நம்ம வீட்டு மாப்பிள்ளை மேல இருந்து எழும்புடா” என்று அவர் பெண்சிங்கம் போல கத்தியதும்தான் கண்ணை மூடித்திறந்த துரைசிங்கம் பொன்வண்ணனை விட்டு எழுந்து நின்றான்.

நாச்சியோ துரைசிங்கத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதுவரை அவர் துரைசிங்கத்தை அடித்தது கிடையாது.

“அப்பத்தா இவனுக்காக என்னை அடிச்சிட்டியா?” என்று கன்னத்தில் கையை வைத்தான் அதிர்ச்சியில் துரைசிங்கம்.

ஆதிபெருமாளோ மனதில் ஆனந்த கூத்து ஆடிக்கொண்டிருந்தார். அடிச்சிக்கிட்டு சாவுங்கடா எனக்கு இதுதான் வேணும் என்று சிரிப்பை மறைத்து மகள் முன் நடித்துக்கொண்டிருந்தார்.

“ஆமாடா அவனும் என் பேரன் தானே ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்... ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்கிட்டா எல்லாம் சரியாகிடுமா சிங்கம்” என்றார் ஆதங்கத்துடன்.

“அப்பத்தா அவன் எப்படி தங்கச்சி கழுத்துல தாலி கட்டலாம்? அவனுக்கு என்ன உரிமை இருக்கு? இவன் வேணும்னே தூரிகா கழுத்துல தாலி கட்டியிருக்கான்... இப்போ இவன் தங்கச்சியை கல்யாணம் பண்ண சொல்லி என்னை மிரட்டுவான் பாருங்க” என்று கோபத்தில் கத்தியதும்

வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்த பொன்வண்ணனோ “இதுவரைக்கும் எனக்கு அந்த எண்ணம் கிடையாது... இப்போ சொல்றேன் உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டினதே என் தங்கச்சி கழுத்துல தாலி கட்ட சொல்லதான்” என்று கடகடவென சிரித்தான்.

தூரிகாவோ மனதளவில் நொறுங்கிவிட்டாள் பொன்வண்ணன் பேச்சில்.

ஐய்யனாருக்கோ தன் பெண்ணின் வாழ்க்கையா..! இல்லை தங்கைகளின் பெண்களின் வாழ்க்கையா! என்று மும்முனை தாங்குதலில் நொறுங்கிப்போய் நின்றார்.

கோதையோ அன்பரசி முன்னால் நின்று "என் பெண்ணுக்கு வாழ்க்கை பிச்சை கொடு" என்று கையெடுத்து கும்பிட்டார்.

அன்பரசியோ “முடியாது” என்று தலையை ஆட்டினார். அலர்விழியோ அழுதுக்கொண்டே நின்றாள். “எனக்கு சிங்கம் மாமா இல்லையா” என்ற கவலையில்.

நாச்சியோ இறுதியாக “துரைசிங்கம் நீ நான் வளர்த்த பையனா இருந்தா... என்மேல நீ பாசம் வைத்தது உண்மையா இருந்தா! நீ ரதி கழுத்துல தாலி கட்டு... இது என்னோட ஆணை” என்று குரலை உயர்த்தியிருந்தார் நாச்சி.

இப்போதைக்கு சண்டை முடிவுக்கு வரவேண்டுமென்றால் யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்தான் ஆகவேண்டும். நல்லவர்களே விட்டுக்கொடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டார் நாச்சி.

வீரய்யனோ “நாச்சி அலர்விழி பாவம்டி” என்றார் என்றைக்கும் கண்ணீர் விடாத மனிதர் கண்ணில் கண்ணீர் வந்தது.

“இது நான் போட்ட கணக்கு இல்லங்க... கருப்பன் போட்ட கணக்கு என் நாக்குல வந்து கருப்பன் சொல்லியிருக்கான்” என்றார் பெரும்மூச்சுவிட்டு.

வேறு என்ன வார்த்தை சொல்லியிருந்தாலும் துரைசிங்கம் கேட்டிருக்கமாட்டான். நாச்சி மீது வைத்த பாசத்தை சந்தேகப்பட்டு விட்டாரே அப்பத்தா... என்னோட உசிரே நீதானே அப்பத்தா... என் பாசத்தை நீ எப்படி சந்தேகப்படலாம் என்று நொடிந்தே விட்டான்.

“அப்பத்தா உன் மேல வச்சிருக்க பாசம் உண்மை! நீ என் உயிரை விடச் சொன்னாலும் விடுவேன்! இப்ப சொல்ற காரியம் நியாயமா அப்பத்தா சொல்லு” என்றான் கல்லுக்குள் ஈரம் வருமே! அதுபோல பாறையாய் இறுகியிருக்கும் துரைசிங்கம் கண்ணிலும் கண்ணீர் துளிர்விட்டது.

“இந்த அப்பத்தா முடிவு எப்போதும் தப்பாய் போனது இல்லை ராசா... நீ ரதி கழுத்துல தாலி கட்டு” என்று உறுதியாக சொல்லியவர் அங்கே அம்மன் முன்பு இருந்த தாலியை எடுத்து வந்து துரைசிங்கம் கையில் கொடுத்தார் நாச்சி.

அருவாளை அசால்ட்டாக பிடிக்கும் துரைசிங்கத்தின் கைகள் இப்போது இந்த தாலியை வாங்குவதற்கு நடுங்கியது.

நாச்சியோ துரைசிங்கத்தின் கையில் தாலியை கொடுத்ததும் ஆதிபெருமாள் பக்கம் நின்றிருந்த ரதிதேவியின் கையை பிடித்து “வாடி” என்று துரைசிங்கத்தின் முன்னே நிறுத்தி "கட்டு தாலியை" என்றதும் துரைசிங்கமோ ஐய்யனாரை பார்த்தான்.

ஐய்யனாரோ கண்ணை மூடித் திறந்தார். அலர்விழியோ “அம்மா மாமா எனக்கில்லை” என்று அன்பரசியை கட்டிக்கொண்டு அழுதாள்.

கோமதியோ தன் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடக் கூடாதென அவரும் துரைசிங்கம் ரதியை கல்யாணம் செய்துக் கொள்வதில் எதிர்ப்பு சொல்லமுடியாமல் தவித்து நின்றார்.

துரைசிங்கமோ பாசம் என்ற சிறையில் சிக்குண்டு மனமே இல்லாமல் ரதிதேவியின் முகத்தை கூட பார்க்காமல் அவளது உடம்பில் தன் கையை கூட பட விடாமல் அவள் கழுத்தில் தாலி கட்டியவன் தன் வேலை முடிந்து விட்டது என்று யாரையும் நிமிர்ந்து பார்க்க பிடிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

கோதையோ “அப்பாடா” என்று நிம்மதியாய் இருந்தாலும் தன் மகன் இப்போது செய்த தவறை அவர் மன்னிப்பதாய் இல்லை.

நாச்சியோ “இத பாரு ரதி நீ ஜெயிட்டனு திமிரா இருக்காதே! இனிமே உன் அப்பன் வீட்டை நீ மறந்திடணும்... அப்பன் வீட்டுக்கு போறேன்னு நின்ன காலை உடைச்சு அடுப்புல வச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டியிருந்தார்.

அவளோ “அப்படியா பார்க்கலாம்” என்று திமிர் பார்வை பார்க்க “ஏய் என்னடி உன்னோட திமிரை ஒட்ட நறுக்கிடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டியவர் “வாடி வீட்டுக்கு போகலாம்” என்று ரதியின் கையை பிடித்து இழுத்துச் சென்றவரின் முன்னே நின்றார் அன்பரசி.

“ம்மா என் பொண்ணுக்கு என்ன பதில் சொல்லுற?” என்றார் கோபத்தில் கண்ணில் கண்ணீர் வழிய.

“அன்பு இங்க நடந்தது உனக்கு தெரியாம இல்ல... நீ தான் விட்டுக்கொடுத்து போகணும்.. அலருக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கலாம்... இப்போ ரதியை வீட்டுக்கு கூட்டிட்டு போய் பாடம் எடுக்கணும்” என்றவரிடம்

“ம்மா நானும் என் பொண்ணும் இனிமே உன் வீட்டுக்கு வரமாட்டோம்! இப்பவும் நீ கோதைதான் முக்கியம்னு காட்டிட்ட” என்று கோபத்தில் கத்திச் சென்றார்.

கண்ணனோ “விடுங்கத்தை அவ எப்பவும் கோபத்துல கத்துவா கோபம் தணிஞ்சதும் வந்து பேசிடுவா நீங்க ரதியை கூட்டிட்டு போங்க” என்றிருந்தார் நல்ல மனிதர் கண்ணன்.

தூரிகாவோ “அப்பா நான் அந்த வீட்டுக்கு போகமாட்டேன்” என்று ஐய்யனாரின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 17


நெஞ்சில் சாய்ந்து அழும் மகளை கண்டு மனம் பதறியது ஐய்யனாருக்கு.

மகளை செல்லமாக வளர்த்து இப்போது தன்னோட எதிரி வீட்டுக்கே மருமகளாக அனுப்ப வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டதே என்று மனம் கலங்கியவர் “இனி எப்படிமா அப்பா வீட்டுல நீ இருக்க முடியும். உன் கழுத்துல தாலி ஏறியாச்சு! இனி உனக்கான வீடு உன் புருசன் இருக்கற இடம்தான் பாப்பா... நீ தைரியமா இருக்கணும்... இப்படி எதுக்கெடுத்தாலும் அழுது வடிய கூடாது சரியா... சிங்கத்தோட தங்கச்சினு அவங்களுக்கு எடுத்துக்காட்டணும்” என்று மகளுக்கு தைரியம் கொடுத்து தூரிகாவின் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்தார்.

கோமதியோ மகள் அழுவதை கண்டு “என்னங்க ஒரு ரெண்டு நாள் புள்ள நம்ம கூடவே இருக்கட்டுமே! இப்படி திடுதிப்புனு எப்படி அனுப்பி வைக்கறது” உடனே மகளை பிரிய முடியாமல் தவித்தார் கோமதி.

“அம்மா நான் எப்பவும் உங்ககூடவே இருக்கேன்... நான் அந்த வீட்டுக்கு போகமாட்டேன்” என்று தாயை கட்டிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள் தூரிகா.

பொதுவாக பெரியவர்கள் பார்த்து திருமணம் நிச்சயித்து மாப்பிள்ளையிடம் தினமும் போனில் பேசி பழகிய பெண்களே சிலபேர் திருமணம் முடித்து தாய் வீட்டுக்கு போகும்போது தானாக கண்ணீர் வந்துவிடும். தூரிகாவின் நிலை சொல்லவே வேண்யடிதில்லை. இது ஒரு கட்டாயக் கல்யாணம் போலத்தானே நடந்தது. அதுவும் அத்தனை பேர் மத்தியில் பொன்வண்ணன் கன்னத்தில் முத்தம் கொடுத்ததில் அவள் முற்றிலும் நொடிந்து போய்விட்டாள்.

வீரய்யனோ “தூரிகா உனக்கு எப்ப அந்த வீட்டுக்கு போகத்தோணுதோ அப்ப நீ போகலாம் வாடா” என்று பேத்தியின கையை பிடித்துக்கொண்டார்.

கோதை “அப்பா துரிகாவை என்னை நம்பி அனுப்பி விடுங்க... அவளை நான் என் பொண்ணா பார்த்துப்பேன்" என்றார் மனம் முழுக்க சந்தோசத்துடன். தன் குடும்பத்து சொந்தத்தை தன்னுடன் சேர்த்து வைத்த குலசாமியாக கோதையின் கண்ணுக்கு தெரிந்தாள் தூரிகா.

“நான் வரலை அத்தை எங்க வீட்டுக்கு போறேன்” என்று தலையை ஆட்டி வீரய்யனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

பொறுத்திருந்த பொன்வண்ணனோ “என் பொண்டாட்டியை நான் இப்பவே என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் அங்கிள்... என் கூட அனுப்பி வைங்க” என்று ஐய்யனார் முன்பு வந்து நின்றான்.

ஐய்யனாரோ “ம்ம் கூட்டிட்டு போங்க... என் பொண்ணு கண்ணுல தண்ணி வந்துச்சு அவ்ளோதான் நான் சும்மா இருக்கமாட்டேன்” என எச்சரிக்கையே செய்தார்.

“அப்பா என்னை இவங்க கூட போகச் சொல்லாதீங்க” என்று மீண்டும் ஐய்யனாரின் கையை பிடித்துக்கொண்டாள்.

பொன்வண்ணனோ “எப்பவா இருந்தாலும் எங்க வீட்டுக்கு வந்து தானே ஆகணும்... இப்போவோ வா” என்று தூரிகாவின் கையை பிடித்தான்.

தூரிகாவோ பொன்வண்ணனை முறைத்து கையை அவனிடமிருந்து விலக்கப்பார்த்தாள். அவனோ உன்னை விடமாட்டேன் என்று தன்னவளது கையை இறுக்கமாய் பிடித்திருந்தான்.

இவ்ளோ நேரம் பஞ்சாயத்தில் நடந்தததை மனம் முழுக்க கொண்டாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஆதிபெருமாளோ “பொன்வண்ணா உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வீட்டுக்கு வந்து சேரு... இப்பதான் என்ற மகன்னு நிரூபிச்சிருக்க” என்று அவனது தோளில் தட்டியவர் “இது சும்மா ஜாம்பில்தான்” ஐய்யனாரை ஏளனப்பார்வை பார்த்துச் சென்றார்.

கோதையோ “வண்ணா தூரிகா ரெண்டு நாள் அண்ணா வீட்ல இருந்துட்டு வரட்டும். அவ மனசு சரியானதும் நாம போய் கூட்டிட்டு வரலாம்” என்றார் தன்மையாக.

“அதெப்படி என் தங்கச்சியை மட்டும் இப்பவே கூட்டிட்டு போனாங்கல்ல... என் பொண்டாட்டியும் இப்பவே என்கூட வரணும்” என்றான் அழுத்தமாய்.

“வண்ணா சொன்னா கேளு” என அதட்டல் போட்டார்.

பொன்வண்ணனோ “அதெல்லாம் முடியாதுங்கம்மா” என்றவன்

“இப்போ தூரிகா என்கூட வரலைனா எப்பவும் அவ அவங்க அப்பா வீட்லயே இருந்துக்கட்டும்” என்றதும் கோமதி நெஞ்சை பிடித்துக்கொண்டார்.

ஐய்யனாரோ “என்ன தம்பி வார்த்தை ஏறுக்கு மாறா தடிச்சு வருது... எனக்கும் பேசத்தெரியும். ஊர் தலைவர்ங்கற முறையில நீ பேசறதை கேட்டுட்டு இருக்கேன்! பொண்ணுக்கு விருப்பம் இல்லைனா உன்னோடவே அனுப்பி வைக்க மாட்டேன் தெரியுமா” என்றார் மீசையை தடவியபடி.

“அப்போ நான் கட்டிய தாலியை கழட்டி கொடுக்கச் சொல்லுங்க” என்றான் கையை கட்டிக்கொண்டு.

பொன்வண்ணன் கன்னத்தில் பளாரென அறைவிட்டார் கோதை. “என்னடா பேச்சு பேசுற... உன்னை என் வயித்துல சுமந்து பெத்ததுக்கு நான் வருத்தப்படறேன்டா... உன் அப்பனோட இரத்தம்தானே உனக்குள்ள ஓடுது... அதான் ஆண்பிள்ளை திமிரை காட்டுறியா” என்று வெகுண்டெழுந்துவிட்டார் கோதை.

தூரிகாவோ தாலியை இறுக்கிப்பிடித்துக்கொண்டாள்.

கோதையோ “அம்மா தூரிகா அத்தை உன்கூடவே இருப்பேன் நீ என்னை நம்பி வாடா தங்கமே” என்று தூரிகாவின் கையை பிடித்தார்.

“நா.நான் வரேன்ங்க அத்தை” என்றதும் பொன்வண்ணன் கண்ணைமூடித்திறந்தான். அவன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்ததே அவளை கையோடு கூட்டிப்போகத்தானே!

“தாத்தா நான் போய்ட்டு வரேன்” என்று அவரது காலில் விழுந்தாள் தூரிகா.

“மகராசியா போய்ட்டு வா ராசாத்தி” என்றார் கண்கள் கலங்கி.

பொன்வண்ணனோ 'நானெல்லாம் பேரன் இல்லையா என்னையும் ஆசிர்வாதம் பண்ணலாம்ல!' என்று முறுக்கிக்கொண்டு நின்றான்.

“பொன்வண்ணா என்னோட பேத்தியை கூட்டிட்டு போ” என்று தூரிகாவின் கையை பொன்வண்ணன் கையில் கொடுத்தவர் “நல்லா பார்த்துக்கோடா எங்க வீட்டு இளவரசியை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கோப்பா” என்றிருந்தார் கரகரத்த குரலோடு.

பொன்வண்ணனோ “உங்க வீட்ல வைச்சிருந்ததை விட நல்லாவே பார்த்துப்பேன்” என வெடுக்கென பதில் கொடுத்தவன் தூரிகாவின் கையை பிடித்துக்கொண்டு கார் அருகே சென்றவன் முன் கதவை திறந்து விட்டான்.

தூரிகாவோ கதவை மூடிவிட்டு பின்னால் ஏறிக்கொண்டாள்.

கோதையோ 'ரெண்டு பேரையும் எப்படி சேர்ப்பேன்னு தெரியலை கடவுளே நீதான் என் மகனையும் மருமகளையும் சேர்த்து வைக்கணும்' என்று வேண்டிக்கொண்டு “நான் போய்ட்டு வரேன்” என்று எல்லாருக்கும் கையை குவித்தவர் காருக்குள் ஏறினார்.

தூரிகாவோ ஐய்யனாரையும் கோமதியை வீரய்யனையும் கண்ணீர் மல்க பார்த்திருந்தாள்.

பொன்வண்ணனோ “ரொம்பத்தான் சீன் போடாதடி” என்று மனைவியை கடிந்துக் கொண்டவன் காரை வேகமாக கிளப்பியிருந்தான்.

நாச்சியோ ரதிதேவியுடன் வீட்டுக்குச் சென்றதும் நாச்சி துரைசிங்கத்துக்கு போன் போட்டார். அவன் போனை எடுக்கவில்லை! மீண்டும் போன் போட்டார். துரைசிங்கம் கோபத்தில் போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டான்.

விடுவாரா நாச்சி முருகன் போனுக்கு போட்டார். துரைசிங்கமோ பண்ணை வீட்டில் அந்த இரவு நேரத்தில் அங்கே இருந்த பிளே கிரவுண்டில் பந்தை கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தான் அவனுக்கு கோபம் வந்தால் விளையாட ஆரம்பித்துவிடுவான். நாச்சி போன் போடும் போது ‘அந்த பஜாரி கழுத்துல தாலி கட்ட வச்சிட்டீங்களே அப்பத்தா’ என்று கோபப்பட்டவன் பந்தை வேகமாக உயரமாய் இருந்த கூடைக்குள் பந்தை காலால் தூக்கி போட்டான் பந்து சரியாக கூடைக்குள் விழுந்தது.

முருகனோ “அண்ணா அப்பத்தா போன் போடுறாங்க நான் எடுக்காம போனா எனக்கு அடிவிழும்” என்று பயந்து போனை ஆன் செய்ய போக “போன் ஆன் பண்ணினா என்கிட்ட உனக்கு அடிவிழும்” என்று மிரட்டினான் முருகனை.

முருகன் மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்றதை போல பாட்டி பேரன் இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு விழித்தான்.

முருகன் போனுக்கு போன் போட்டார் நாச்சி. இரண்டாவது முறையும் போனை எடுக்கவில்லையென்றால் நாச்சியிடம் அடிவாங்க முடியாதென எண்ணியவன் துரைசிங்கத்தை பார்த்தான். அவனோ கோபத்தில் ஓடிக்கொண்டிருந்தான் வியர்வை வழிய போனை எடுத்து வெளியே வந்தவன் "அப்பத்தா சிங்கம் அண்ணா பண்ணை வீட்லதான் இருக்காரு" என்று மெதுவாய் பேசினான்.

"இப்போ என் பேரன் வீட்டுக்கு வரலைனா ரதியை நேரா பண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வருவேன்னு சொல்லுடா” என்றவரை

“அப்பத்தா என் உடம்புல அடிவாங்க தெம்பு இல்ல” என்று அவன் புலம்ப

“சிங்கம் குடும்பம் குட்டினு சந்தோசமா இருக்கணும்னா என் பேரன்கிட்ட போனை கொடு” என்றவுடன்

“சரிங்க அப்பத்தா” என்றவனோ எச்சிலை விழுங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றவன் “அப்பத்தா போன்ல இருக்காங்க” என்று போனை நீட்டினான்.

துரைசிங்கமோ போனை வாங்கி தூக்கி எறிந்துவிட்டான் போன் நாலாக உடைந்துவிட்டது.

“அச்சோ என் போன் போச்சு... நாம இங்க நிற்க கூடாது என்னையும் போனை போல தூக்கி போட்டு உடைச்சுருவாரு” என்று பயந்து அங்கிருந்து ஓடியேவிட்டான் முருகன்.

நாச்சியோ "என் மேல கோபமா இருக்கான் போல என் சிங்கம்!" என்று பெரும்மூச்சு விட்டு திரும்ப “பாட்டி நான் எவ்ளோ நேரம் வெளியே நிற்கறது. இந்த வீட்டு மருமகளை இப்படி வெளியே நிற்க வச்சு வேடிக்கை பார்க்குறீங்களா... இதை கேட்க அக்கம் பக்கம் யாரும் இல்லையா?” என்று அங்கே கலவரத்தை உண்டு பண்ண பார்த்தாள்.

ரதி சத்தம் போடும் போது ஐய்யனாரின் கார் வீட்டுக்குள் வந்துவிட்டது. அவள் கூப்பாடு போட்டதும் அவர் காதில் விழுந்துவிட்டது. காரை விட்டு வேகமாய் இறங்கியவர் ரதியின் முன்னே வேஷ்டியின் நுனியை பிடித்து நடந்து வருவதை பார்த்தவளுக்கு கொஞ்சம் பயம் வரத்தான் செய்தது.

சிங்கத்துக்கு மாமாகிட்டயிருந்துதான் வீரம் வந்திருக்கும்போல. 'ரதி பயப்படாதடி நீ பயந்தா உன்னை தூக்கிப்போட்டு மிதிச்சிடுவாங்க' என்று கையை கட்டிக்கொண்டு திமிர் பார்வை ஐய்யனாரை பார்த்தாள்.

“என்னம்மா சத்தமா இருக்கு... ஏன் வெளியே நிற்குற? வீட்டுக்குள்ள வாடா" என்று தன்மையாக பேசியவரிடம் "ஹான் இந்த வீட்டு மருமகளுக்கு இன்னும் ஆரத்தியே எடுக்கலையே... அப்புறம் எப்படி வீட்டுக்குள்ள போறது? தாலியை கட்டி பொண்டாட்டியை தனியா விட்டுபுட்டு உங்க புள்ளை எங்கேயோ போயாச்சு! நான் மட்டும் தனியா நிற்குறேன்! இந்த அநியாயம் எங்காவது நடக்குமா ?" என்றாள் வார்த்தைகளில் விஷம் வைத்து பேசினாள்.

“கோமதி ஆரத்தி எடுத்து வா” என்றவுடன்

“இதோ போறேனுங்க” அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் உள்ளேச் சென்று சில நொடிகளில் ஆரத்தி தட்டுடன் வந்தார்.

“இந்த வீட்டுல மாப்பிள்ளை இல்லாம பொண்ணுக்கு மட்டும் ஆரத்தி எடுக்கறதை இப்பத்தான் நான் பார்க்குறேன்" என்று குரலில் நக்கல் பொதிந்து பேசினாள்.

துரைசிங்கத்தின் கார் வீட்டுக்குள் சர்ரென்று வந்து நின்றது. காரை கதவை வேகமாய் அடித்து மூடியவன் ரதியை தாண்டி போக முற்படும் முன் “சிங்கம் நில்லு ஆரத்தி எடுக்கணும்” என்ற ஐய்யனாரின் குரலில் அப்படியே நின்றான்.

“யாரும் நம்ப குடும்பத்து மேல பழிப்பு சொல் பேசக்கூடாதுப்பா சிங்கம்" என்றார் ஐய்யனார்.

சிங்கமோ ரதியை எரித்துவிடும் பார்வை பார்த்தவன் அவளிடம் தள்ளியே நின்றான்.

‘மெயின் சுவிட்ச் என் மாமனார் தான் போல பார்த்துக்குறேன்’ என்ற இறுமாப்போடு நின்றிருந்தாள் ரதி.

கோமதியோ இருவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்து “வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாமா” என்றவுடன் அவளோ வேண்டுமென்றே இடது காலை எடுத்து வைக்க போக அவளது கையை இறுக்கி பிடித்து “அம்மா சொல்றது படி கேளுடி இல்லை இடது காலை உடைச்சிடுவேன்” என்று பல்லிடுக்கில் பேசியவன் அவளது கைவிரல்களை வலிக்க பிடித்தான் துரைசிங்கம். அவளோ வலி தாங்க முடியாமல் வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் சென்றாள்.

நாச்சியோ "இப்படியே சண்டை போட்டுக்கிட்டே சந்தோசமா இருங்க" என்று வாழ்த்தினார்.

வீரய்யனோ “அலர்விழியை எப்படி சமாதானப்படுத்துவ நாச்சி? எனக்கு பேத்தியை பார்க்கணும் போல இருக்கு” என்றார் கவலையுடன்.

“இப்பவே வேணாம்ங்க. அன்பரசியும் கோவமா இருப்பா... அவ கோபம் ஆறட்டும்... அலர்விழி புத்திசாலிப் பொண்ணு வாழ்க்கையோட நிதர்சனம் புரிஞ்சுப்பா... என்ன சின்ன வயசுல இருந்து சிங்கத்தையே மனசுல நினைச்சிருந்தா அது நடக்காம போயிடுச்சு எல்லாம் விதி! இதுபோல ஏதாவது நடந்திடும்னுதான் சிங்கத்துக்கும் அலர்விழிக்கும் கல்யாணம் பண்ணிடலாம்னு அவசரப்பட்டேன்... ஆனா அந்த கடவுள் ஒரே நாளுல திருவிளையாடல் பண்ணி என் பேத்தியோட மனசு உடைய என்னை காரணகர்த்தாவாக்கிபுட்டாரே” என்று கண்ணில் வழிந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டார்.

“சரி நாளைக்கு அலர்விழியை பார்க்க போகலாம். இப்போ ஆதிபெருமாள் ரதியை வைச்சு நம்ம குடும்பத்துக்குள்ள நுழைந்து நம்ம நிம்மதியை கெடுக்கப்பார்ப்பான்... ஏன் ஐய்யனார் அரசியல் வாழ்க்கையை தடம் புரளகூட செய்வான்னு எனக்கு கலக்கமா இருக்கு” என்று மனைவியிடம் புலம்பினார் வீரய்யன்.

“என்னங்க ஆதிபெருமாள் சிங்கத்தை சாய்க்க ரதிதேவியை பகடைகாயா பயன்படுத்திக்க பார்த்திருக்கான். ஆனா நம்ம சிங்கம் ஆதிபெருமாளோட முகத்திரையை கிழிச்சு ரதிக்கு உண்மையை புரியவைப்பான். ஆனா இந்த பொண்ணுக்கு ரொம்ப வாய் நீளம்ங்க எனக்கு இவளோட சண்டை போடவே நேரம் சரியா இருக்கும் போல” என்று சிலாகித்துக்கொண்டார் நாச்சி.

ஆரத்தி எடுத்ததும் ரதியின் கையை விடாமல் இறுக்கி பிடித்து வீட்டுக்குள் சென்றதும் அவளை விலக்கி விட்டு விறுவிறுவென அவனது அறைக்குள் சென்றவன் துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றுவிட்டான்.

கோமதியோ பால், பழம் கொண்டு வந்து பார்க்க ஐய்யனார் உட்காரும் ஊஞ்சலில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள்.

அந்த ஊஞ்சலில் ஐய்யனார் தவிர யாரும் அதிகம் உட்கார்ந்ததில்லை... எப்போவாவது நாச்சியும் வீரய்யனும் உட்கார்ந்து வீட்டு விசயங்களை பேசிக்கொண்டிருப்பார்கள். அதுவும் ஐய்யனார் இல்லாத சமயம் மட்டுமே! அதற்காக யாரும் அதில் உட்கார வேண்டாம் என்று சட்டம் எல்லாம் கிடையாது. ஐய்யனார் மீது உள்ள மரியாதைக்காக மட்டுமே.

கோமதியோ பால், பழம் எடுத்து வந்தவர் ரதிதேவி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியே ஆகிவிட்டார்.

ஐய்யனாரோ அவரது அறையிலிருந்து குளித்து வந்தவர் “கோமு ஒரு டம்ளர் கொத்தமல்லி காபி போட்டு குடுமா” என்று ஹாலுக்கு வந்தவர் ரதிதேவி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்ததை கண்டு கோபம் எல்லாம் அடையவில்லை. மாறாக மென்சிரிப்புடன் வெளியே வாசலுக்குச் சென்று அங்கே போட்டிருந்த மரநாற்காலியில் காத்தாட உட்கார்ந்து விட்டார்.

வீரய்யனும் நாச்சியும் ஹாலுக்கு வந்தவர்கள் சிலையாகி நின்றனர். “என்னங்க கோதை புள்ளையை இப்படி வளர்த்திருக்கா மட்டு மரியாதை தெரியாம” என்று மகளை திட்டிக்கொண்டார்.

வீரய்யனோ “உன்ற பேத்தி நம்ம ஊர்ல எங்கே இருந்தா லண்டன்ல படிச்சு வந்தவளுக்கு நம்ம ஊரு பழக்க வழக்கம் தெரியாதுல்ல... நாமதான் ஒவ்வொன்னா சொல்லிக்கொடுக்கணும்” என்றார் வீரய்யன் பெருந்தன்மையாக.

“ஐஞ்சுல வளையாதது ஐம்பதுல வளையவா போகுது! என் சிங்கத்துக்கு வர கோபத்துக்கு இவ தினமும் அடிவாங்கப்போறானு தெரியுது... சிங்கம் வெளியே வரமுன்ன இவளை இந்த ஊஞ்சல்ல இருந்து எழுப்புவோம்” என்று நாச்சி ஊஞ்சல் அருகே போனவர் “கண்ணு ரதி” என அவர் பாசமாய்தான் அழைத்தார்.

ஆனால் ரதியோ “என்ன கிழவி சொல்லு! என் ரூம் எங்க இருக்கு எனக்கு குளிக்கணும்... இந்த புடவையை மாத்தணும்” என்று சலித்துக் கொண்டு கிளிப் போட்டு இருந்த முடியை விரித்து வேறு விட்டாள்.

கோமதியோ “ஏய் ரதிமா என்ன இது நடு ஹாலுக்குள்ள முடியை விரிச்சு போடுற பழக்கம்? முதலில் முடியை கொண்டையாவது போடு... இன்னேரம் நீ குளிச்சிட்டு வந்திருப்பேனுதான் பாலும் பழமும் எடுத்துட்டு வந்தேன்... நீ என்னடானா உட்கார்ந்து முடியை விரிச்சு போடுற... இந்த ஊஞ்சல்ல உங்க பெரிய மாமாவை தவிர யாரும் உட்கார மாட்டாங்க... அந்த ஊஞ்சலில் நீ உட்கார்ந்தது கூட பரவாயில்லைடா ஆனா முடியை விரிச்சு போடறது தப்பு” என்று கோமதி மென்மையாக அவளிடம் பேசினார்.

“உங்க மகன் பண்ணின கூத்துல என் உடம்பெல்லாம் ஒரே டஸ்ட்டா இருக்கு... தலையெல்லாம் வியர்த்து ஸ்மெல்லா இருக்கு... குளிக்க முன்ன தலையை விரிச்சு விட்டேன்!! என்னமோ நான் கொலை குத்தம் பண்ணிது போல குதிக்குறீங்க இதுதான் மாமியார் குசும்பா!! அப்புறம் இந்த ஊஞ்சலில் நான் உட்கார்ந்தா என்னவாகிடும்... உங்க வீட்டுக்காரர் மட்டும்தான் உட்காரணுமா ஐய்யனாருனு இந்த ஊஞ்சலில் பேரு எழுதி ஒட்டியிருக்கா என்ன?” என்று கொஞ்சம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்று புத்தியில்லாமல் தந்தை சொல்லே மந்திரம் வாக்கு என்பது போல் ஐய்யனார் வீட்டுக்கு வந்த முதல் நாளே ஆட்டிப்படைக்க தன் ஆட்டத்தை ஆரம்பித்தாள் ரதிதேவி.

நாச்சியோ ‘ஐயா கருப்பா நீதான் இந்த புள்ளையை என் பேரன்கிட்ட இருந்து காப்பாத்தணும்’ என்று நெஞ்சில் கைவைத்துக்கொண்டார்.

துரைசிங்கம் குளித்து முடித்து வெள்ளை வேட்டி பனியனோட ஹாலுக்கு வந்தவன் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த தனது மனையாளை பார்த்து வெறி கொண்ட வேட்டை சிங்கமாக “ஏய் பஜாரி ஊஞ்சலை விட்டு எழுந்திரிடி” என்று ஊஞ்சலின் சங்கிலியை பற்றி ஆட்டினான்.

அவளோ “அச்சோ என்னை அடிக்குறாங்க” என்று ரதி வாயை திறக்க ஐய்யனார் ரதிதேவி அழும் சத்தம் கேட்டு உள்ளே வருவதற்குள் துரைசிங்கம் ரதியின் கன்னத்தில் இடியாய் ஒரு அறையை இறக்கி விட... கன்னத்தை பற்றிக்கொண்டு இதழ் பிதுக்கி ஊஞ்சலை விட்டு எழும்பி நின்றவளை “தலை முடியை கட்டுடி” என்று அதற்கும் அவன் சிங்கம் போல கர்ஜிக்க தானாகவே முடியை முடிந்துக் கொண்டாள்.

ஐய்யனார் உள்ளே வந்ததும் “மாமா என்னை உங்க பையன் அடிச்சிட்டாரு என்னனு கேளுங்க... நான் இந்த ஊஞ்சல உட்கார கூடாதா! நான் என்ன தீண்டத்தகாதவளா! உங்க தங்கச்சி பொண்ணுதானே!எனக்கு இந்த ஊஞ்சலில் உட்கார உரிமையில்லையா சொல்லுங்க மாமா” என்று எங்கே நடித்தால் தன் நாடகம் எடுபடும் என்ற சூட்சமம் தெரிந்து ஐய்யனார் முன் நீலிக்கண்ணீர் வடித்தாள்.

அடுத்த பக்கமும் தொடர்ச்சி இருக்கு

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஐய்யனாருக்கு அங்கே என்ன நடந்திருக்கும் என்பது தெரியாமல் இல்லை. வீட்டுக்கு வந்த மருமகளை மகளாக நடந்த வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

“நீ தாராளமா இந்த ஊஞ்சலில் உட்காரலாம் கண்ணு! உனக்கு அந்த உரிமை இருக்கு. ஆனா பெரியவங்க இருக்கும் போது மரியாதையா இருந்து பழகணும்... நீ தப்பு பண்ணாம என் மகன் உன்னை அடிக்கமாட்டான்” என தன்மையாக எடுத்து சொல்லிவிட்டு

“சிங்கம் தாலிகட்டின பொண்டாட்டியை நம்ம வீட்டுக்கு வந்த முதல் நாள் அடிச்சிருக்க... நம்ம குடும்பத்துக்கு இது அழகு கிடையாது. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்குறேன்” என் சிறு அதட்டல் போட துரைசிங்கம் அமைதியாகி விட்டான்.

“நீ போய் குளிச்சிட்டு சாப்பிட வாடா சாப்பிடலாம்” என்று மருமகளின் தலையை வாஞ்சையாக தடவிகொடுத்தார். அவள் விஷம் கொட்டும் நாகம் என்று தெரிந்தும் ஐய்யனார் அவளுக்கு பாசத்தையே கொடுத்திருந்தார்.

“எப்படி” என்று துரைசிங்கத்தை பார்த்து புருவம் உயர்த்தினாள் தான் ஜெயித்து விட்ட இறுமாப்பில்.

“உள்ள வாடி இருக்கு” என்று நாக்கை கடித்து அவனது அறைக்குள் சென்றுவிட்டான் துரைசிங்கம்.

ரதிதேவியோ அச்சோ இவன் என்ன வெறியோட அடிக்குறான் கன்னம் இன்னுமே எரியுது... ஒரு ராத்திரி முழுக்க இவன்கூட எப்படி தங்குறது... வாயை மூடிக்கிட்டு அமைதியா இருந்திடுவோம் என்று யோசனையுடனே துரைசிங்கத்தின் அறைக்குள் சென்றாள்.

துரைசிங்கம் தன் அறையை விளக்கி வைத்த வெள்ளிப்பாத்திரம் போல அத்தனை நேர்த்தியாக வைத்திருந்தான். அவளது அறையில் ஒவ்வொரு பொருளும் அங்கொன்றும் இங்கொன்றும் கலைந்து கிடக்கும். துரைசிங்கம் கூடைபந்தில் கோல்ட் மெடல் வாங்கியிருந்தான். பாலை கூடைப்பந்தில் போடுவது போல அவனது பெரிய போட்டோவை கண்டதும் ‘ம்ம் பெரிய ஸ்போர்ட்ஸ் மேன் போல’ என்று இதழ் பிதுக்கிக் கொண்டாள்.

“ஏய் என்னடி என் போட்டோவை வெறிச்சி பார்க்குற போய் குளிச்சிட்டு வாடி சும்மா பராக்கு பார்த்துட்டு நிற்காம” என்று அவளது தோளை பிடித்து அழுத்தி குளியலறைக்குள் தள்ளிவிட்டான் துரைசிங்கம்.

“ஏய் என்ன மேன் தள்ளிவிடற” என்று கத்திக்கொண்டே குளியலறைக்குள் ஷவரை திறந்து தன் சோர்வு நீங்க குளித்தாள்.

குளித்து முடித்து டவலை இடுப்பில் கட்டியவளுக்கு அப்போதுதான் தனக்கு மாற்று உடை இல்லையே அதுவும் இரவு தூங்கும்போது நைட் பேண்ட் டீசர்ட் போட்டுதானே பழக்கம் இன்னிக்கு எப்படி எந்த ட்ரஸோடு தூங்கறது என்று யோசித்துக்கொண்டே அறைக்குள் வந்தவள் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள்.

துரைசிங்கம் முதுகு காட்டி நின்றிருந்தான்.

“இந்தா மேன் வெளியே போ நான் ட்ரஸ் சேன்ஜ் பண்ணனும்” என்றாள் திமிராக.

“அம்மா உனக்கு ட்ரஸ் கொடுத்துவிட்டாங்க அதுதான் நான் இங்க நிற்குறேன்... உன்னை பார்த்து இரசிக்க நான் இங்க நிற்கலைடி” என்றவனோ அங்கிருந்து நகர்ந்தவனுக்கு இதழில் வன்ம புன்னகை வந்தது.

அவளுக்கு புடவையை அல்லவா கொடுத்துவிட்டிருந்தார் கோமதி.

புடவையை கையில் எடுத்து பார்த்த ரதிதேவியோ “ஹலோ மேன் நில்லு!” என்றதும் பல்லைக் கடித்து திரும்பியவன் அவள் பக்கம் ஒரே எட்டில் வந்து “மேன் கீன்னு சொன்னே தோலை உரிச்சி தொங்கபோட்டிருவேன்! ஒழுங்கா வாங்க போங்கனு மரியாதையா பேசுடி” என்று அவளது முகம் பக்கம் வந்து அவனது மூச்சுக் காற்று படும் படி பேசினான்.

“எ.எனக்கு இந்த புடவையெல்லாம் நைட் முழுக்க கட்டியிருக்க முடியாது!! எனக்கு நைட் ட்ரஸ் வேணும்” என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.

“என்னது நைட் ட்ரஸா! நான் நைட்டியே போடக்கூடாதுனு சொல்றவன்! நைட் ட்ரஸா கேட்குற!! பல்லை கழட்டிடுவேன் இந்த துரைசிங்கத்தோட பொண்டாட்டி அடக்க ஒடுக்கமா இருக்கணும்... அதைவிட்டு நைட்டியை போட்டு ஆட்டிக்கிட்டு திரிவேனா இப்பவே இந்த வீட்டை விட்டு உங்கப்பன் வீட்டுக்கு போயிடலாம் எப்படி வசதி... நைட் ட்ரஸ்ஸா இல்ல புடவையா?” என்றான் கன்னத்தில் நாக்கை சுழட்டியபடி.

“புடவையே கட்டித்தொலைக்குறேன் ”என்று முகத்தை கடுகடுவென வைத்து புடவையை கையில் எடுத்தவள் “வெளியே போ மேன்” என்று வாயை திறக்க அவன் கையை ஓங்கிக்கொண்டு அடிக்க போக “வெளியே போங்க” என்றாள் மரியாதையாக.

“அது... அந்த பயம் இருக்கணும்டி!” என்று விரலை நீட்டி எச்சரித்துச் சென்றான் துரைசிங்கம்.
 
Status
Not open for further replies.
Top