ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4


“அண்ணா நான் திருவிழாவுல கச்சேரி பார்க்கத்தான் வந்தேன்!! ஆனா!! ஆனா!! அந்த டாக்டர் தான் இடைமறிச்சு என்கிட்ட பேசினாரு!!" அவன் முத்தம் கொடுத்ததை மறைத்துவிட்டு "நான் அத்தை பையன்னு சொன்னாரு அண்ணா! நான் எந்த தப்பும் பண்ணலை உன்னோட தங்கச்சி அண்ணா என்னை நம்புங்க!!" என்று இதழ் பிதுக்கி அழுக ஆரம்பித்தாள் தூரிகா.

“அவன் பேசினா நீயும் பேசுவியா பாப்பா... அவன் குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கு ஆகாது தெரியுமா? அவங்களுக்கும் நமக்கும் தீராத பகை இருக்கு... அவங்க அம்மா நம்ம குடும்பத்துக்கு அவமானத்தை தேடி கொடுத்துட்டு போயிட்டாங்க... அவங்களாலதான் நம்ம தாத்தாவும் அப்பாவும் தலைகுனிஞ்சு நின்னாங்க! எனக்கு இன்னும் நினைவு இருக்கு! இனிமேல அவன் கூட பேசினதை பார்த்தேன் தோலை உரிச்சுப்புடுவேன் பார்த்துக்கோ... நம்ம வீட்டு பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதை கேட்டு நாம வழி நடக்கணும்” என்று தங்கையை நிற்க வைத்து பாடம் எடுத்தான்.

“அவனுக்கு இருக்கு கச்சேரி… கேம்ப் டாக்டரா வந்தா மருந்து கொடுத்துட்டு கிளம்பியிருக்கணும்... இருட்டு கட்டுன நேரத்துல தனியா வர பொண்ணுகிட்ட என்ன வெட்டிப்பேச்சு” என்று பொன்வண்ணனையும் திட்டிவிட்டு “வண்டியில ஏறு வீட்ல விடறேன்” என்றான் அதட்டலுடன்.

தூரிகாவோ ‘அறிவுகெட்ட டாக்டரே உன்னால என் அண்ணா என்னை அடிச்சிட்டாரு... இன்னொரு தடவை நான் உன்னை பார்த்தேன்னா! ஒரு அறை விட்டுத்தான் உன்கிட்ட பேசுவேன் பாரு' கன்னத்தில் கையை வைத்தபடியே பைக்கில் ஏறினாள்.

தூரிகாவை வீட்டில் இறங்கிவிட்டவன் “அந்த டாக்டர் பையன் கூட பேசினதை வீட்ல யார்கிட்டயும் உளறி வைக்காத பாப்பா தாத்தா உன்னை காலேஜ்க்கு கூட அனுப்பி வைக்க மாட்டாரு... ஏன் இன்னொரு முறை நீ அவன்கிட்ட பேசினதை பார்த்தேன்னா உடனே மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணிவச்சிடுவேன்” என்று அதிரடியாக மிரட்டியதும்

“அண்ணா நா.நான் நல்ல பொண்ணா இருப்பேன்!! யார்கிட்டயும் பேசமாட்டேன்... நர்சிங் படிப்பு படிக்கிறதே நம்ம ஊருக்கு சேவை செய்யத்தான்!! எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடாதீங்க!!" என்று துரைசிங்கத்தின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

தங்கையின் கண்ணீரில் மனம் கரைந்தவன் “நீ நடந்துக்கற விதத்துல இருக்கு பாப்பா!! கண்ணைத் துடைச்சிட்டு வீட்டுக்குள்ள போ” என எச்சரிக்கை கொடுத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணியவன் சென்றது திருவிழாவில் கேம்ப் நடந்த இடத்திற்குதான்...

மெடிக்கல் திங்க்ஸை வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர். பொன்வண்ணனோ அங்கே போட்டிருந்த நாற்காலியில் கால் மேல் போட்டு போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்.

துரைசிங்கமோ பொன்வண்ணன் முன்னே ஆஜானுகுபானுவாய் நெஞ்சை நிமிர்த்தி “ம்க்கும்” என்று தொண்டையை செருமினான்.

முருகனோ “உங்க முன்னால கால் மேல கால் போட்டு திமிரா உட்கார்ந்திருக்கான் பாருங்க அண்ணா” என்றான் காதில் கிசுகிசுப்பாக.

துரைசிங்கம் பார்த்த பார்வையில் முருகன் தலையை குனிந்து நின்றான் முருகன்.

தலையை நிமிர்த்தி துரைசிங்கத்தை பார்த்தவன் தானாக எழுந்து நின்றான் “ஹாய்” என்றான் இயல்பாக முகத்தில் பதட்டம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் காட்டாமல் நின்றிருந்தான் புன்முறுவலுடன்
“நான் யாருனு உனக்கு தெரிஞ்சிருக்கும்! நீ யாருனு தெரிஞ்சும் உன்னை ஊருக்குள்ள விட்டதற்கு காரணம் நீ உசிரை காப்பாத்துற டாக்டரா இருக்கனுதான்! ஆனா நீ” என்று பேச ஆரம்பித்தவன்
“முருகா வண்டியில டீசல் கம்மியா இருக்கு போட்டுட்டு வா” என்று பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்ததும் முருகன் கிளம்பிவிட்டான்.

இரு குடும்பமும் பகையாளியாக இருந்தாலும் அடுத்தவர் முன்னே தங்கள் குடும்ப விசயத்தை பேச விரும்பவில்லை துரைசிங்கம்.
“நீ என் தங்கச்சிக்கிட்ட என்ன பேசின! அவ சின்னப் பொண்ணு! அவ மனசை கலைக்க பார்த்தியா! உங்க அப்பனை போல சில்லரைத்தனமா பண்ணினனு எனக்கு காதுக்கு வந்துச்சு நீ டாக்டர்னும்... ஆதிபெருமாள் பையன்னு எல்லாம் பார்க்கமாட்டேன் தோலை உரிச்சு உப்புகண்டம் போட்டு தொங்க விட்டிருவேன் ஜாக்கிரதை” என்று உக்கிரமான பேச்சுடன் பொன்வண்ணனை விரலை நீட்டி எச்சரித்தான்.

பொன்வண்ணனோ “ஓ.கே மச்சான் நான் உங்க தங்கச்சியை தொந்தரவு பண்ணமாட்டேன்... எனக்கு உங்க தங்கச்சியை பிடிச்சிருக்கு... முறையா பொண்ணு கேட்குறேன்!! எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்க” என்றான் தோளைக்குலுக்கி அசால்ட்டாக.

துரைசிங்கத்திற்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது நரம்புகள் புடைக்க “என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே என் தங்கச்சியை பொண்ணு கொடுக்கச் சொல்லி கேட்டிருப்ப” என்று பொன்வண்ணனின் கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டான் துரைசிங்கம்.

சரியாக ஐய்யனாரும் அங்கே வந்து விட “என்ன சிங்கம் எதுக்கு இந்த பையனை அடிக்குற என்ன பிரச்சனை!" என்று அந்த ஊர் தலைவராகவும் எம்.எல்.ஏவாகவும் நடுநாயகமாக நின்றார்.
“ப்பா இவனை ஊருக்குள்ள வரவிடாதீங்கனு சொன்னேன்ல! நீங்க உசிரை காக்குறவங்களை வரவேண்டாம்னு சொல்ல கூடாதுனு சொன்னீங்க இப்ப இந்த நாய் நம்ம தூரிகாவை பொண்ணு கேட்குறான் என்ன நெஞ்சழுத்தம் இவனுக்கு” என்று எகிறி குதித்தான்.

ஐய்யனாரோ “தம்பி நீங்க கிளம்புப்பா! இதுக்குமேல இங்க இந்த இடத்துல உங்களுக்கு வேலை இல்லை” என்று பொன்வண்ணனிடம் அமைதியாக பேசியவர் “சிங்கம் வா கிளம்பலாம்” என்றார் சிறு அதட்டலுடன்.

“என்னங்கப்பா கண்டவனெல்லாம் தூரிகாவை பொண்ணு கேட்குறான் நீங்க பாட்டுக்கு அவனை என்ன ஏதுனு விசாரிக்காம கிளம்புப்பானு மரியாதையா பேசுறீங்க” என்று ஐய்யனாரிடம் சண்டைக்கு நின்றான்.

பொன்வண்ணனோ “சாரிங்க என்னால சண்டை போட வேண்டாம். உங்க வீட்டு பொண்ணை பொண்ணு கேட்டது தப்புதான்” என்று கையெடுத்து கும்பிட்டு அவனது காரில் ஏறியவன் சீட் பெல்ட் போட்டபடியே 'சாரிமா உன்னோட ஆசையை நிறைவேத்த ட்ரை பண்ணினேன்!! இந்த முறை தோத்துட்டேன்! ஆனா என் பொண்டாட்டி தூரிகாதான்!! இந்த மீசைகாரன் ரொம்ப ஆடுறான்! இவன் கண்ணுல மண்ணைத்தூவி இவன் தங்கச்சியை கரெக்ட் பண்ணிக்காட்டுறேன் பாரு!!' என்று அராஜகம் இல்லாமல் அறவழியில் தூரிகாவை தட்டிக்கொண்டு போக திட்டமிட்டு காரை எடுத்தவன் இன்னும் தன்னை முறைத்துக் கொண்டு நிற்கும் துரைசிங்கத்தை பார்த்து மெலிதாக சிரித்துக்கொண்டுச் சென்றான்.

அவன் பிடிப்பது புலிவால் என்று தெரியாமல் பிடிக்கப்போகிறான் பொண்வண்ணன்.

“சிங்கம் உன் கோபத்தை குறைச்சுக்கோ அந்த பையன் நம்ம ஊருக்கு விருந்தாளி போல மருத்துவம் பார்க்க அழைச்சு வந்திருக்கேன்... இப்ப அவன்கிட்ட நாம சண்டைபோடுறது சரியில்லப்பா... கொஞ்சம் பொறுமையா இரு பார்த்துக்கலாம்... நம்ம பொண்ணு மேலயும் ஒரு கண்ணு இருக்கட்டும்” என்று மகனை உசார் படுத்தினார் ஐய்யனார்.

“சரிங்கப்பா” என்றவன் “தூரிகா படிப்பை முடிக்கட்டும்னு இருந்தேன்!! ஆனா இவன் முழிக்கற முழியே சரியில்ல ஏதோ கள்ளனை போல முழுக்குறான்... இப்பவே ஜாதகத்தை எடுத்து தரகர்கிட்ட கொடுத்துடலாம் நல்ல வரனா வந்ததும் கல்யாணம் பண்ணிட்டு அவ படிக்கட்டும்” என்றான் இன்னமும் கோபம் தணியாத குரலில்.

“நீ சொல்றதும் சரிதான் சிங்கம்” என்று பெரும்மூச்சு விட்டார் ஐய்யனார்.

“நான் வீட்டுக்கு கிளம்புறேன்ப்பா நீயும் வரியா” என்றவருக்கு நடையில் சிறு தடுமாற்றமும் குரலில் ஒரு சிறுபடபடப்பும்.

“அப்பா என்னாச்சுப்பா உடம்புக்கு ஏதும் பண்ணுதா ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று படபடத்தான் துரைசிங்கம்.

“இல்லப்பா உன்னோட அத்தை கோதையை நினைச்சுட்டேன்... அவ அந்த நாதாரிப்பயல் கூடத்தான் போவேன்னு சொன்னது என் காதுல இன்னும் மணியோசை போல கணீர்னு ஒலிச்சிட்டேயிருக்கு... இப்ப அவ படற கஷ்டத்தை என் காதுல கேட்கமுடியாம துடிச்சு போறது எனக்குமட்டும்தான்யா தெரியும்” என்று கண்கலங்கிவிட்டார்
பதினெட்டு ஊருக்கும் தீர்ப்பு சொல்லும் ஐய்யனார்.

“உங்களை வேணாம்னு சொல்லிட்டு போனவங்களை நினைச்சு ஏன்ப்பா கவலைப்படுறீங்க!” என்றான் அங்கலாய்ப்புடன்.

“என்னதான் நான் கோதையை ஒதுக்கி வச்சாலும் அவ என் கூட பொறந்த பொறப்பு இல்லாம போயிருமா சிங்கம்” என்றவருக்கு குரல் கரகரத்து வந்தது.

டீசல் போட்டு வந்த முருகனிடம் "காருக்குள்ள தண்ணியிருக்கும் முருகா எடுத்துவா” என்றான் அவசரமாக.

முருகனும் தண்ணீரை எடுத்துவந்து ஐய்யனாரிடம் கொடுத்ததும் தண்ணீரை வாங்கிக்குடித்த ஐய்யனார் காரில் ஏறப்போக “ப்பா நீங்க இந்தபக்கம் வந்து உட்காருங்க!! நீங்க இருக்கற நிலமையில காரை ஓட்ட வேண்டாம் நான் காரை ஓட்டுறேன்” என்று ட்ரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்தான் துரைசிங்கம்.

“முருகா பைக்கை வீட்டுக்கு கொண்டு வந்துடு” என்று கூறிவிட்டு காரை கிளம்பிவிட்டான் வீட்டுக்கு.

ஐய்யனாரோ சீட்டில் தலைசாய்த்து கண்ணைமூடிக்கொண்டவரோ சற்று முன் கோவிலில் ஒருவர் சடைமுடியுடன் ஐய்யனார் முன்னே வந்து நின்று தாடியை தடவிய படி “உன் குடும்பத்து பொண்ணுங்க எல்லாம் வீட்டை விட்டு போய் தான் கல்யாணம் பண்ணிப்பாங்க” என்று சொன்னது அவர் மூளையை குடைந்துக் கொண்டிருந்தது.

வீடு வந்ததும் “ப்பா” என்று ஐய்யனாரின் தோளை தட்டினான். ஹான் என்று கண்ணை விழித்தவருக்கு முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்து விட்டது.

“ப்பா உடம்பு முடியலைனா சொல்லிடுங்க இப்பவே வண்டியை திருப்புறேன் ஹாஸ்பிட்டலுக்கு” என்றான் துரைசிங்கம்.

“அட எனக்கு ஒண்ணுமில்லை சிங்கம் இன்னிக்கு நாள் முழுக்க அலைச்சல் அதான் சோர்வா இருக்கு!! குளிச்சிட்டு உங்கம்மா கையால ஒரு கொத்த மல்லி காபி குடிச்சேனா சோர்வு காணாம போய்டும்” என்று சிரித்தபடியே இறங்கினார் ஐய்யனார்.

ஐய்யனார் நடை தடுமாறுவது கண்கூடாக பார்த்துவிட்டான். கருப்பா என் அப்பாவை என்கூடவே இருக்க வைக்கணும் என்றான் நெஞ்சுக்குள் பாரம் ஏறியவனாக..

அவன் மனதிற்குள் ஏனோ ஒரு அசம்பாவிதம் நடந்திடுமோ என்று அலைப்புற்றே இருந்தது.

முருகனும் பைக்கை கொண்டு வந்து விட்டான். “முருகா ஒரு ஐஞ்சு நிமிசம் வெயிட் பண்ணு வந்துடறேன்” என்று வீட்டுக்குள் சென்றான் துரைசிங்கம்.

ஐய்யனார் குளித்து விட்டு வந்து ஹாலில் உட்கார்ந்திருந்தவர் மடியில் தூரிகா படுத்திருந்தவள் அவரிடம் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தாள். அவரும் மகள் கேட்பதற்கு பதில் சொல்லியபடியே தூரிகாவின் தலையை வருடிக்கொண்டிருந்தார்.
துரைசிங்கத்தின் மனது இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்க முருகனுடன் கோவிலுக்குச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் மஞ்சள் நீராட்டு விழா தொடங்கியது... ஊர் மக்கள் வீட்டு முன்னால் மஞ்சள் தண்ணீர் வைத்து இருந்தனர். மாமன் மேல முறைப்பெண்கள் தண்ணீர் ஊற்றி விளையாடிக்கொண்டிருந்தனர்.. குமரன் சந்து பொந்தெல்லாம் ஒளிந்து வந்துக் கொண்டிருந்தான்...

எங்கிருந்தோ ஓடி வந்த தாரகையோ கையில் வைத்திருந்த மஞ்சள் தண்ணீரை குமரன் மேல் ஊத்தி விட்டு “எப்படி” என்று பழிப்பு காட்ட “இருடி வரேன் பழிப்பு காட்டுற லிப்ல அப்படியே கிஸ் பண்ணுறேன்” என்று தாரகையை துரத்திக்கொண்டு ஓடிவந்தவன் துரைசிங்கத்தின் மேல் மோதி நின்றான் குமரன்.

திருவிழாவில் காணாமல் போன ஆடு போல திருதிருவென விழித்தவனை பார்த்து மெல்லிய சிரிப்போடு சென்றிருந்தான் துரைசிங்கம்.

“ஐ அண்ணா சிரிச்சிட்டாரு” என்று குதித்து ஓடியவன் சுவற்றின் மறைவில் மறைந்து நின்ற தாரகையின் நீளமான சடையை பிடித்து இழுத்து தன் அணைப்பிற்குள் வைத்துக்கொண்டு “என்னடி குள்ள வாத்து என்னோட நெஞ்சு உயரம்தான் இருக்க என்கிட்ட உன் வேலையை காட்டுறீயா” என்று அவளது கன்னத்தை அழுந்தப் பிடித்துவிட்டான்.

“மா.மாமா முத்தம் வேண்டாம் ப்ளீஸ்” என்று அவள் கண்களால் கெஞ்ச “ஏய் எனக்கு முத்தம் கொடுக்குற ஐடியாவே இல்ல... இப்ப நீ முத்தம் பத்தி ஞாபகம் படுத்திட்ட ஒரு கிஸ் பண்ணக்குறேன்டி ப்ளீஸ்” என்று கெஞ்சி கெஞ்சி அவளது இதழ் நோக்கி குனிய.. துரைசிங்கத்தின் பைக் சத்தம் கேட்டதும் “அச்சோ துரை மாமா பைக் வந்துடுச்சு போல” என்று குமரனின் மார்பில் கைவைத்து தள்ளி புள்ளிமானை ஓடினாள் தாரகை.

"ம்ம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு கிஸ் பண்ணலாம் நானும் ரொம்ப நாளா முயற்சி பண்ணுறேன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை" என்று புலம்பிக்கொண்டுச் சென்றவன் துரைசிங்கத்தின் மீதே மோதினான்.

“அ.அது அண்ணா இந்த பக்கம் மஞ்சள் தண்ணி யாரும் ஊத்தமாட்டாங்கனு இங்க நின்னேன்” என்று தொண்டைக்குள் எச்சிலை விழுங்கிக்கொண்டு பம்பினான் குமரன்.

“உன் மேல தான் மஞ்சள் தண்ணி ஊத்தியாச்சே... இன்னமும் யாரு மஞ்சத் தண்ணி ஊத்தணும் காத்துக்கிடக்க... சேட்டை பண்ணின தோலை ஊரிச்சு போடுவேன்” என்று நாக்கை கடித்தான் துரைசிங்கம்.
“அச்சோ அண்ணா இதோ ஓடிட்டேன்!” என்று தலைதெறிக்க ஓடினான் குமரன்.

“ஏய் ரதி நில்லுடி போகாதடி!! உன்னைய யாரும் பார்த்தா வம்பாகும்டி!!" என்று மைனா ரதிதேவியை துரத்திக்கொண்டு ஓடினாள்.

“எனக்கும் மஞ்சள் தண்ணியை யார் மேலயாவது ஊத்தணும்னு ஆசையா இருக்குடி” என்று சிதறி விட்ட சில்லறையை போல கலகலவெனு சிரித்துக் கொண்டு சொம்பில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக்கொண்டு தெருவில் ஓடினாள் ரதிதேவி.

அலர்விழியோ இன்னிக்கு நம்ம சிங்கத்து மேல மஞ்சத்தண்ணிய ஊத்தாம விடக்கூடாது என்று துரைசிங்கம் போகும் இடமெல்லாம் மறைந்து மறைந்துச் சென்றாள்...

துரைசிங்கம் இன்றும் ஒயிட் சர்ட் ப்ளு ஜீன்ஸ்தான் போட்டிருந்தான்... தன்மேல மஞ்சள் தண்ணீர் ஊற்றும் தைரியம் இங்கே யாருக்கும் கிடையாது என்று இறுமாப்புடன் முருகனுடன் பேசிக்கொண்டும் களவாணிகள் யாராவது திரிகிறார்களா என்று மீசையை முறுக்கிக்கொண்டே கண்ணை சுழட்டி நோட்டமிட்டான்.

“வாவ் சரியான கிராமத்தான் என்ன ஹாண்ட்சம்மா இருக்கான். மீசை முறுக்குறதே ஸ்டைலா இருக்கு!! நான் தேடி வந்தவனா இருக்குமா! ஹான் யார இருந்தா நமக்கென்ன ஆளு கருப்பா இருந்தாலும் சும்மா கர்லா கட்டைபோல கிண்ணுனு இருக்கான் இவன் மேலலே மஞ்சள் தண்ணியை ஊத்துவோம்” என்று தண்ணீரை துரைசிங்கத்தின் மேல ஊத்திவிட்டாள்.

அலர்விழியோ அவளது தோழிகளிடம் பேசிக்கொண்டே வந்தவள் துரைசிங்கத்தின் மேல மஞ்சள் தண்ணீர் ஊற்றுவதை கண்டு அவளது வழிகளில் கோபத்தில் சிவந்து விட்டது.

“யாருடி என் மாமன் மேல மஞ்சள் தண்ணி ஊத்தினது?” என்று ரதிதேவியை நோக்கி ஓடிவந்தாள்

அதற்குள் “ஏய் பொண்ணு யார் மேல மஞ்ச தண்ணி ஊத்தணும் வரைமுறை தெரியாதா! நீ என்மேல எதுக்கு மஞ்ச தண்ணி ஊத்தின?” என்று கண்ணை அகல விரித்து எரிந்து விழுந்தவன் அவளை அடிக்க கையை ஓங்கி விட்டான் ரதிதேவியிடம்.

“ஹான் பெரிய ஹீரோ இவன்” என்று இதழை சுளித்தாள்... அவள் முகத்திற்கு மாஸ்க் போட்டிருந்தததால் யாரென்று கண்டுபிடிக்கமுடியவில்லை துரைசிங்கத்தால்

“இங்க எல்லாரும் பிடிச்சவங்க மேல தண்ணிய ஊத்தி விளையாடுனாங்க... நான் எனக்கு பிடிச்சவங்க மேல ஊத்தினேன் சிம்பிள்" என்று தெனாவெட்டாக பதில் பேசி அவளது மான்விழிகளை சோளி போல உருட்டினாள்.

இந்த கண்ணை எங்கேயோ பார்த்தது போல இருக்கே என்று அவளது மாஸ்க்கை பட்டென்று இழுத்துவிட்டான்
கோதையின் மறுஉருவம் ரதிதேவி.

ஒரு அடி தள்ளி நின்றான் துரைசிங்கம்.

சிங்கத்தையே சாச்சுப் புட்டாளா நம்ம ரதிதேவி!

பார்க்கலாம் அடுத்த எபியில் இன்னும் நிறைய ட்விஸ்ட்டுன் நாளை மறுநாள் வருகிறேன்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5


கோதையின் உருவத்தில் அச்சு வார்த்தாற் போல வந்து நின்றவளை கண்டவன் ஒரு நிமிடம் ஜர்க்காகி நின்றான்.

துரைசிங்கத்திற்கு ஆறு வயது இருக்கும்போதுதான் கோதை ஆதிபெருமாளை கல்யாணம் செய்துக் கொண்டு வந்து நின்றார்... கோதை அழுதுக் கொண்டே ஊரைவிட்டு போகும் போது "அத்தை அத்தை" என்று கோதையின் பின்னால் ஓடியது துரைசிங்கத்தின் ஆழ் மனதில் அழியாத செப்பேடு தகடுகளாக இருக்கின்றதே!

மயில் தோகை போல முடியும்! வெண்ணிலவை போல வட்ட முகமும்!! நிலா போல பிறை நெற்றியும்! வில்லாளன் அர்ஜுனன் கையில் இருக்கும் வில் போன்று வளைந்த புருவமும்! கெண்டை மீன் கண்களும்! கூர் நாசியும்! செம்பருத்தி இதழும்! உதட்டுக்குள் இருக்கும் முத்துப்பல்லழகும்! பப்பாளி கன்னமும்! கேள்விக்குறிபோல செவி அழகும்!! சங்கு கழுத்தும்!! உருண்டு திரண்ட முன்னழகும்! உடுக்கை குறு இடுப்பழகும்! வாழைத்தண்டு கால்களும்!! செந்தாமரைபூ பாதமும் கொண்டு அழகு தேவையாக ரதி தேவி துரைசிங்கத்தின் முன்னே நின்றிருந்தாள்.

எந்த ஆணாக இருந்தாலும் ரதிதேவியை பார்த்த இடத்திலே காதல் மையல் கொள்ள ஆசை வரும்... துரைசிங்கத்தின் அத்தை பெத்த இரத்தினம் ரதிதேவி. மாறாக துரைசிங்கமோ ரதிதேவியிடம் சிங்கமாய் பாய்ந்துக் கொண்டிருந்தான்.

கோதைக்கு துரைசிங்கம் என்றாலே உயிர். கோதை கல்லூரி முடிந்து வந்தால் துரைசிங்கத்துடன் விளையாடுவாள்... தன்னை கொஞ்சி விளையாடிய அத்தை! இன்று தன்னை விட்டு பிரிந்து போகிறாளே! என்று சிறுவயதே உடைய பாலகனுக்கு அதீத வருத்தத்தையும்... தாத்தாவும் அப்பாவும் அத்தையை எதற்காக திட்டுகிறார்கள்!! அத்தையை ஏன் ஊரைவிட்டே போகச் சொல்கிறார்கள் என்றும் அவனுக்கு ஓரளவு புரிந்து விட்டது.

கோதையின் முந்தானையை பிடித்து இழுத்ததும் அவளோ பாசமாய் வளர்த்த மருமகனை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுதவள் “நான் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் துரோகம் பண்ணிட்டேன் சிங்கப்பயலே! என்னால இங்க இருக்க முடியாது! இருக்கவும் கூடாது!" என்று அழுது கரைந்தாள் கோதை.

“அத்தை போகாதே! என்னோட யாரு விளையாடுவாங்க! என்னை யாரு சிங்கப்பயலேனு கூப்பிடுவா! வா இந்த ஆள் நமக்கு வேண்டாம்!! தாத்தா அப்பா எல்லாம் அழறாங்க அத்தை!! நீ ஏன் இந்த ஆளை கல்யாணம் பண்ணினே உனக்கும் கண்ணன் மாமாவுக்கும் தானே கல்யாணம்னு நான் ஆசையா இருந்தேன்! ஏன் இப்படி பண்ணினே அத்தை!!" என்று இதற்கு காரணமான ஆதிபெருமாளை அடித்து விடும் அளவிற்கு முறைத்தான்.

ஆதிபெருமாளோ “போடா” என்று கண்ணால் விரட்டினான்...

“கோதை போகலாம்” என்றான் வெறுப்பான குரலில் ஆதிபெருமாள்.

கோதையோ “இந்த அத்தையை மன்னிச்சிடு சிங்கப்பயலே!" என்று விம்மி விம்மி அழுத கோதையோ துரைசிங்கத்தின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்து “இந்த அத்தையை வெறுத்துடாதடா சிங்கமே!!" என்று துரைசிங்கத்திடமிருந்து பிரிந்து ஆதிபெருமாளுடன் சென்றுவிட்டார்.

ஊர் எல்லை வரை ஓடினான் துரைசிங்கம்... அவனை யாரும் தடுக்கவில்லை!

“என்னை விட்டு போய்ட்ட இல்ல... உன்கூட நான் இனிமே பேசவே மாட்டேன். அத்தைனு கூப்பிடவே மாட்டேன்!” என்று வீராவேசம் பேசினாலும் அவனுக்கு ஏனோ அழுகை நிற்கவேயில்லை...

அழுதுக் கொண்டே நின்றிருந்தவனை தூக்கிக்கொண்டார் ஐய்யனார்.

“இனிமே கோதைய அத்தைனு நாம உரிமை கொண்டாட முடியாதுப்பா! அவ நமக்கு வேண்டாம்... உனக்கு கலையரசி அத்தை மட்டும்தான்... இனிமே கோதையை மறந்துடு” என்று ஐய்யனாரும் தங்கை மேல் இருக்கும் கோபத்தில் மகனிடம் என்ன பேசுகிறோமென்று தெரியாமல் சிறு பாலகனின் மனதில் அப்போதைக்கு நஞ்சை விதைத்து விட்டார்... ஆனால் துரைசிங்கம் பெரியவனாக வளரும் சமயத்தில் உறவுகளின் மகத்துவத்தையும் மகனுக்கு சொல்லி கொடுக்கத்தான் செய்தார். ஆனாலும் கோதை மேல இருந்து வெறுப்பு அவனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்துவிட்டது.

இப்போது கோதையின் உருவத்தில் ரதிதேவியை பார்த்ததும் அவனுக்கு மனதிற்குள் ஏனோ ஒரு புதிய பரிமாற்றம் தோன்றியது... கோதையின் மகள் என்று தெரிந்துக்கொண்டவன் “நீ!! நீ!! இங்க எப்படி வந்த உன்னை யாரு ஊருக்குள்ள விட்டது?” என்று அடங்காத காளையாக துள்ளிக்குதித்தான் துரைசிங்கம்.

ரதிதேவியும் துரைசிங்கத்தை கண்டு பயப்படவில்லை... 'ஓ இவன்தான் அவனா! ம்ம் சரியான நாட்டுக்கட்டைதான்! அப்பா சொன்னதை விட ரொம்பத்தான் அவிழ்த்து விட்ட காளை போல துள்ளுறான்' என அலட்சியபார்வையுடன் பார்த்தாள்.

“ஏய் அண்ணனும் தங்கச்சியும் ஏதோ ப்ளானோடதான் வந்திருப்பீங்க போல!! உன் அப்பன் ப்ளான் போட்டு அனுப்பி வச்சிருக்கானா!! இல்ல உங்கம்மா முறிஞ்சு போன உறவை புதிப்பிக்க அனுப்பினாங்களா! இங்க யாரும் காதுல பூ வச்சுட்டு சுத்தல! வந்த வழியே ஊரை பார்த்து ஓடிப்போயிடு வீணா இந்த துரைசிங்கத்துக்குகிட்ட அடிவாங்காத!! பொட்ட புள்ளைனு பார்க்கமாட்டேன் கன்னம் பழுத்திடும்! இங்கிருந்து கிளம்பு” சட்டையை முழங்கை வரை ஏத்தி விட்டு சிங்கம் போல கர்ஜித்தான் அதிகாரத்தோரணையுடன்.

“ஹலோ எனக்கும் இந்த ஊரு சொந்தம்தான்!! எங்கம்மா பொறந்த ஊரு! இங்க நிற்க வேண்டாம்னு சொல்ல உனக்கு உரிமையில்லைடா!” என்று அலட்சிய பார்வையுடன் தெனாவெட்டாக ஒருமையில் பேசியவள் கன்னத்தை பிடித்துக்கொண்டு ஒரு அடி தள்ளி நின்றாள் ரதிதேவி. ஆம் துரைசிங்கம் ரதிதேவியின் கன்னத்தில் அறைந்துவிட்டான்.

“யாருக்கிட்ட என்ன பேசறோம்னு பார்த்து பேசணும்... உன்னை விட வயசுல மூத்தவன்கிட்ட டா போட்டு பேசுவியா..! கொஞ்சம் கூட மரியாதை தெரியாம வளர்த்திருக்காரு உங்க அப்பா! உன் அப்பா புத்திதான் உனக்கும் இருக்கும்! நான் பத்து எண்ணுறதுக்குள்ள இங்கிருந்து போயிடு!! இல்ல நான் கழுத்தை பிடித்து வெளியே அனுப்ப வேண்டி இருக்கும்... என்ன சொன்ன உங்க அம்மா பிறந்த ஊரா!! ஹா!! ஹா!! அவங்களையே எங்கப்பா ஊரை விட்டு போகச்சொல்லிட்டாரு! நீ என்ன சுண்டக்கா! கிளம்பு! கிளம்பு! உன்னோட நிழல் கூட இந்த ஊருக்குள்ள படக்கூடாது” என்று அவளை கையில் தடியை வைத்து மிரட்டும் ஆசிரியரை போல மிரட்டிக்கொண்டிருந்தான்.

ரதிதேவிக்கோ அவமானமாய் போனது! “இங்க பாருடா என்னையே அடிச்சிட்டல்ல! இதுக்கு நான் பதிலடி கொடுக்கத்தான் போறேன் பாருடா” என்று மீண்டும் திமிராக அவள் பேசி துரைசிங்கத்தின் கோபத்தை அதிகரித்தாள் ரதிதேவி.

“தேவி சும்மாயிருடி அண்ணாவுக்கு கோபத்தை அதிகம் பண்ணாதே" என்று அவள் தோழி மைனா அவள் கையை அழுத்திப்பிடித்தாள்.

“ஏய் நீ அந்தப்பக்கம் போடி! இவனா நானா பார்த்திடுவோம்! என்னை அடிச்சதுக்கு இவன் பதில் சொல்லணும்” என்று மீண்டும் வீராப்பாக பேசிக்கொண்டு துரைசிங்கத்தின் முன்னால் வந்து நின்றாள். அவனது ஐந்து விரல்கள் அச்சாக பதிந்திருந்தது ரதிதேவியின் கன்னத்தில்.

“நான் அடிச்சதுல தப்பே இல்லடி! இப்ப அடிக்கப்போறதும் தப்பில்ல” என்று கையை ஓங்க அங்கே வந்து நின்றார் ஐய்யனார். இங்க கலவரம் முத்தி போக முருகன் ஐய்யனாருக்கு போன் செய்துவிட்டான். ஐய்யனாரும் பொட்ட புள்ள மேல கையை வைச்சிட்டானா! இது தப்பாச்சே என்று பறந்து வந்தார்.

“சிங்கம் என்ன பழக்கம் இது ஊரான் வீட்டு பிள்ளையை கைநீட்டி அடிப்பது” என்று மகனை கடிந்துக் கொண்டதும்

துரைசிங்கம் “மன்னிச்சிடுங்கப்பா இந்த புள்ள என்னைய மரியாதை இல்லாம பேசுச்சு அதான் கை நீட்ட வேண்டியதா போச்சு” என்று கையை கட்டி நின்றான்.

ஐய்யனாரோ “உன் தங்கச்சியை அடிக்க உனக்கு உரிமையிருக்கு சிங்கம் ஆனா இந்த பொண்ணை அடிக்க உனக்கு உரிமை கிடையாதுப்பா!” என்றார் சற்று குரலை உயர்த்தி கண்டிப்புடன்.

“நல்லா கேளுங்க அங்கிள்! உங்க பையன் ரொம்ப ஆணவமா பேசினாரு! அதான் நானும் வாடா போடானு பேசினேன்!!" என்று மூக்கை விறைத்துக்கொண்டு பேசும் பொண்ணை பார்த்தவருக்கு சிரிப்புதான் வந்தது... அப்படியே கோதையை போல இருக்கும் பெண்ணை பார்க்க அவருக்கு ஆனந்தக்கண்ணீர்தானே வந்தது... அவரது கை தானாகவே ரதிதேவியின் கன்னத்தை வருடிவிட்டது.

“கையை எடுங்க அங்கிள்... உங்க பையன் அடிப்பானாம்... நீங்க வந்து பேச்சால மருந்து போடுவீங்களாம்! எந்த ஊரு நியாயம் ஹான்! உங்க பையனை என்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க! நான் அப்ப தான் இங்கிருந்து போவேன்” என்று கழுத்தை வெடுக்கென வெட்டி திமிராக நின்றாள்.

“ஆத்தி நாச்சி பேத்தினு நிரூபிச்சிடாளே இந்த சின்னக் குட்டி!" என்று அங்கே கூட்டத்தில் ஒரு மூதாட்டி அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.

“பெருசு சிங்கம் காதுல விழப்போகுது” என்று கிசுகிசுக்க “அட ஏன் டா இவனே... நம்ம சிங்கத்தையே சாய்க்க வந்த சீனி சர்க்கரை இந்த பொண்ணு” என்று வாயில் கை வைத்து சிரித்தார் அந்த மூதாட்டி.

“பாருங்கப்பா இவளுக்கு கொழுப்பை அவன் இவன்கிறா! இன்னொரு கன்னமும் பழுத்திடும்” என்று ரதிதேவியை அடிக்க பாய்ந்து விட்டான் துரைசிங்கம்.

துரைசிங்கத்தின் கோபத்தை பார்ப்பவர் ஆயிற்றே! ஆனால் பெண் பிள்ளைகளிடம் அவனது கோபம் இந்தளவு இருக்காது! ரதிதேவியிடம் எகிறிக் கொண்டே இருப்பதை பார்த்தவருக்கு இனம் புரியாத கவலை வந்துவிட்டது.

அங்கே நடக்கும் கலவரச் செய்தி வீரய்யனுக்கும் தெரிந்து விட மொத்த குடும்பமும் ஊருக்குள் கூடிவிட்டது.

வீரய்யனோ ரதியை பார்த்ததும் கண்டுக் கொண்டார்... இந்த கோட்டிப் பயல் ஆதிபெருமாள் இத்தனை வருசமா என் குடும்பத்தை சந்தோசமா விட்டு வச்சிருந்தான்னு நிம்மதியா இருந்தேன் மறுபடியும் மகளை விட்டு வம்பு பண்ணுறானே என்று கலக்கம் கொண்டார். அதே சமயம் மகள் வடிவில் பேத்தியை பார்த்த ஆனந்தம் ஒருபக்கம் இருந்தாலும் அப்பனை போலவே சிலுத்து நிற்குறாளே என்று கவலையும் கொண்டார் வீரய்யன்.

“என் பேராண்டிக்கு சரிசமமா எவடி மல்லுக்கு நிற்கறவ” என்று சேலையை வரிந்து கட்டி கூட்டத்தை கலைத்துக் கொண்டு போன நாச்சி ரதிதேவியை பார்த்ததும் அவருக்கு கண்கள் கலங்கிவிட்டது. மகளின் ஜாடையில் பேத்தியை பார்த்ததும் “ராசாத்தி” என்று பாசத்தோடு ரதிதேவியை அணைத்துக்கொண்டார்.

ஆனால் ரதிதேவியோ “ஏய் கிழவி தள்ளி போ” என்று முகம் சுளித்து அவரை விலக்கிவிட்டாள்.

துரைசிங்கம் நாச்சியை விலக்கி விட்டதும் சீற்றமாகிவிட்டான். “என்ன திமிருடி உனக்கு என் அப்பத்தாவை விலக்கி விடுவ” என்று அவளது பட்டு கையை பிடித்து கூட்டத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு ஊர் எல்லைக்குச் சென்றான்.

ஐய்யனாரும் வீரய்யனும் “சிங்கம் வேண்டாம்பா தப்பு பண்ணாதே!” என்று துரைசிங்கத்தின் பின்னால் ஓடிவந்தனர். அவனோ அவளை தர தரவென இழுத்து வந்து ஊர் எல்லைக்குள் நிற்க வைத்தான்.

ரதிதேவி மயங்கி கீழே விழும் சமயம் தாங்கிப்பிடித்தான் பொன்வண்ணன். அவனுக்கு தந்தை செய்யும் காரியம் பிடிக்காதே தவிர... தங்கையை பிடிக்காமல் போனது கிடையாது... பொன்வண்ணனும் ரதிதேவியும் இரட்டையர்கள்.

லண்டனிலிருந்து போன மாதம் தான் வந்திருந்தாள் ரதிதேவி. அவளும் டாக்டருக்குத்தான் படித்திருக்கிறாள்... தான் வேலை செய்யும் ஹாஸ்பிட்டலில் வேலை வாங்கித்தந்திருந்தான் பொன்வண்ணன். மைனா ரதிதேவி வேலை செய்யும் ஹாஸ்பிட்டலில்தான் டாக்டராக வேலை பார்க்கிறாள்... திருவிழாவுக்கு ரதிதேவியை அழைத்திருந்தாள்...

அதுமட்டுமல்லாமல் ஆதிபெருமாள் மகளிடம் ஐய்யனாரை பத்தியும் துரைசிங்கத்தை பத்தியும் சொல்லி வைத்தவர் துரைசிங்கத்தின் போட்டோவை மட்டும் காண்பித்திருந்தார். இவன் குடும்பம் தான் என்னைய அவமானப்படுத்தி அனுப்பி வைச்சாங்கடாமா! இவனுங்களை நாம பழிவாங்கணும்! அதை விட நாலு பேர் முன்னால நிற்க வைத்து நாக்கை பிடுங்குற மாதரி கேள்விகேட்கணும்.! அவங்களை தலை நிமிர்ந்து நடக்கவிடக்கூடாது என்று மகளின் மனதை கலைத்துவிட்டிருந்தார்... அதுதான் ரதியும் ஊருக்குள் வந்து துரைசிங்கத்திடம் ஆட்டம் போட்டது.

சிங்கத்திடம் பெண்மான் ஜெயிக்க முடியுமா! கடித்து குதறிவிட்டான் ரதியை துரைசிங்கம்.

“அண்ணா” என்று பொன்வண்ணனை கட்டிக்கொண்டு கதறினாள் ரதிதேவி! ஊருக்குள் நடக்கும் விஷயம் கேள்விப்பட்டு தங்கையை காப்பாற்ற வந்துவிட்டான் பொன்வண்ணன்.

தங்கயை கை வளைவில் நிறுத்திக்கொண்டு “எதுக்காக என் தங்கச்சியை இப்படி நாயை இழுத்துட்டு வருவதை போல இழுத்துட்டு வரீங்க! என் தங்கச்சி மேல தப்பு இருந்தா!! உங்களுக்கு பிடிக்கலைனா வாயால சொல்லுங்க! ஒரு பொண்ணை இது போல செய்யறது உங்களுக்கு தப்பா தெரியலையா! இதுதான் உங்க ஊர் தர்மமா! உங்க வீட்டு பொண்ணை நான் இப்படி இழுத்து வந்திருந்தேனோ சும்மா வீடுவீங்களா!!" என்று பொன்வண்ணனும் தங்கையை அடித்து விட்டார்கள் என்று ஆதங்கத்தில் வாயை விட்டான்.

“என் வீட்டு பொண்ணு உன் தங்கச்சி போல பொம்பளை போக்கிரி கிடையாது! பஜாரி போல ஒரு ஆம்பிளைய வாடா போடானு மரியாதை இல்லாம பேசமாட்டா! ஃபர்ஸ்ட் உன் தங்கச்சிக்கு மரியாதைனா என்னனு சொல்லிக்கொடு! அப்புறம் வந்து என்கிட்ட ஏன் அடிச்சனு கேளு! அண்ணனும் தங்கச்சியும் வந்த வழியா போயிடுங்க! எனக்கு கோபத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்காதீங்க! இந்த ஊருக்கு வர உங்க ரெண்டு பேருக்கும் உரிமை கிடையாது! உங்கப்பனை போல துரோகி பெத்த பசங்களை நான் உள்ளே விடமாட்டேன்!!" என்று வேட்டியை வரிந்து கட்டி அனல் தெறிக்கும் பார்வையுடன் பேசிக்கொண்டிருந்தான்.

பொன்வண்ணனுக்கே துரைசிங்கத்தை பார்த்ததும் கொஞ்சம் அச்சம் வரத்தான் செய்தது.

அதற்குள் வீரய்யனும் ஐய்யனாரும் வந்துவிட்டனர். பொன்வண்ணனை பார்த்ததும் “ஏன் தம்பி இப்படி பண்ணுறீங்க உங்க சங்காத்தமே வேண்டாம்னு இருந்தோம் இப்ப உங்கப்பன் பொண்ணை அனுப்பி மறுபடியும் ஊருக்குள்ள கலவரத்தை உண்டு பண்ண பார்க்குறான்... பொட்டப்புள்ளய அடிச்சது தப்புதான் அதுக்காக நான் மன்னிப்பு எங்க வேணாலும் வந்து கேட்குறேன்” என்ற ஐய்யனாரை “அப்பா என்ன பேசுறீங்க இந்த அடங்காபிடாரிக்காக நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும்!” என்றான் இன்னும் அடக்காத கோபத்துடன்.

“ஏய் யாரைடா அடங்காபிடாரினு சொன்னே” என்று அண்ணன் இருக்கும் தைரியத்தில் ரதிதேவி மீண்டும் ஆட்டம் ஆடினாள்.

“பார்த்தியாடா! உன் தொங்கச்சியை நான் அடிச்சதுல தப்பு இருக்கா! இன்னமும் இவளை அடிக்கத்தோணுது!!" என்று பல்லை கடித்துக்கொண்டு ரதிதேவியின் பக்கம் போனவனை ஐய்யனார் பிடித்து இழுத்து விட்டார்.

“ஹேய் ரதி என்ன பழக்கம் இது! நீ ஒரு டாக்டர் இப்படியா நடந்துக்குவ!” என்று தங்கையை கண்டித்தான் பொன்வண்ணன்.

“ம்க்கும் சரியா போச்சு இவ டாக்டராம் டாக்டர் இவகிட்ட மருத்துவம் பார்த்தா பொழைச்சு இருக்க உசிரை கூட இவ வாய் பேசி கொன்னு போட்டிருவா!!" என்று திட்டியே தீர்த்தான் துரைசிங்கம்.

“சாரிங்க என் தங்கச்சி பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கையெடுத்து கும்பிட்டான் பொண்வண்ணன்.

“உன் மன்னிப்பை நீயே வச்சிக்க! உன் தங்கச்சி வாயை அடக்கி வை! இல்ல நான் அடக்க வேண்டியதா இருக்கும்” என்று எச்சரித்து இறுமாப்பாக நின்றான் துரைசிங்கம்.

வீரய்யனோ பொண்ணை அடக்கி வளர்க்காம பையனை அடக்கி வளர்த்துருக்கா இந்த கோதை என்று மகளை நினைத்து கலங்கினார்.

“கார்ல ஏறு” என்று ரதிதேவியை காருக்குள் உட்கார வைத்து காரை எடுத்தான் பொன்வண்ணன்.

“அண்ணா நீ எதுக்கு அந்த திமிர்காரன்கிட்ட மன்னிப்பு கேட்குற! அவன் எல்லாம் ஒரு ஆளு!" என்று மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"வாயை அடக்குடி! எங்கிருந்து தைரியம் வந்துச்சு! இனி அப்பா சும்மா இருக்க மாட்டாரு... தாத்தா வீட்டுக்கு சண்டைக்கு வருவாரு... இத்தனை நாளாய் புகைஞ்சுக்கிட்டு இருந்ததை நீ ஊதி பெருசாக்கிட்ட வந்திருக்க ரதி! இதுல தேவையில்லாம அம்மாவைத்தான் அப்பா திட்டுவாரு... எங்காவது மனுசன் அம்மா மேல கையை வச்சிட்டாரு நான் மனுசாவே இருக்கமாட்டேன் பார்த்துக்க! நீயா போய் அப்பாகிட்ட எதுவும் சொல்லி தொலையாதே!" என்று தங்கையை மிரட்டி வைத்தான்.

ஆனால் ரதிதேவியோ அப்பனை போலவே புத்தி கொண்டவள் தன்னை அடித்த துரைசிங்கத்தை பழிவாங்கவேண்டும் என்ற பழிவெறியை தனக்குள் தூண்டி துளிர்க்க வைத்தாள்.

வீட்டுக்குள் போனதுமே நடு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக ஆவேசமாக நடந்துக் கொண்டிருந்தார் ஆதிபெருமாள்.

கிழிந்த நாராக வந்திருக்கும் மகளை பார்த்தவருக்கு ஐந்துயிரும் பற்றிக்கொண்டது. கோதையோ “என்னடி கோலமிது!” என்று மகளை பார்த்து பதறிவிட்டார்.

“ம்ம் எல்லாம் உன் அண்ணன் மகன் அதான் நீ வளர்த்த சிங்கப்பயல் உன் பொண்ணை அடிச்சிருக்கான்” என்றார் ஆத்திரம் பொங்க ஆதிபெருமாள்.

“சிங்கம் அடிச்சான்னா! நீ என்னடி பண்ணின! ஃபர்ஸ்ட் அந்த ஊருக்குள்ள நீ ஏன் போனே! அவன்கிட்ட திமிரா பேசியிருப்ப அதான் அடிச்சிருப்பான்!” என்று அவர் வாய் திட்டினாலும் மகளின் கன்னத்தை தொட்டு பார்த்தவருக்கு அடிவயிறு வலிக்கத்தான் செய்தது.

“ஏய் உன்னாலதான் டி எல்லாம் வந்துச்சு” என்று கோதையை ஆதிபெருமாள் அடிக்க போனார்.

அவரது கையை வேகமாக வந்து பிடித்துக்கொண்ட பொன்வண்ணனோ “இன்னொரு முறை அம்மாவால தான்னு சொல்லாதீங்கப்பா!! எனக்கு எல்லாம் தெரியும்! நீங்கதான் எல்லாத் தப்பும் பண்ணியிருக்கீங்க... நீங்க பண்ணின தப்பு எங்களுக்கு தெரிய கூடாதுனுதானே லண்டன் அனுப்பி வைச்சீங்க! அம்மாவை அடிக்கிற வேலை வச்சிக்காதீங்க! இனிமே அம்மா மேல கை பட்டுச்சுனா நான் அம்மாவை கூட்டிட்டு தனியா போயிடுவேன் ” என்று சினம் தணியாத சிறுத்தை போல சீறிவிட்டான்.

“என்னடி பையனை விட்டு என்னை மிரட்டுறியா! போடி எனக்கு எவனும் துணைக்கு வேண்டாம் நானும் என் பொண்ணும் பார்த்துக்குறோம்! அந்த குடும்பத்தை!” என்று ரதிதேவியை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தார்.

ரதிதேவியோ “அப்பா நான் உங்க கூடவே இருக்கேன்“ என்று தந்தைக்கு துணையாக நின்றாள் ரதிதேவி.

இந்த பழிஉணர்ச்சி தன் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று தெரிந்திருந்தால் துரைசிங்கத்தை எதிர்த்து நின்றிருக்கமாட்டாள்.

அன்றிரவு கோதைக்கு உறக்கமே வரவில்லை.. ரதியின் அறைக்குச் சென்றார்... அவளோ அனத்திக்கொண்டு படுத்திருந்தாள். விழுந்த அடி அப்படி!

"ரதி" என்று கன்னத்தை தொட்டுப்பார்த்தார் கோதை. உடல் அனலாக கொதித்தது.

“ஏய் ரதிமா காய்ச்சலா இருக்கு மாத்திரை போட்டியா!” என்று அவள் அருகே உட்கார்ந்து தலையை தடவிவிட்டு கேட்டார் பரிதவிப்புடன்.

“ம்ம் போட்டேன்மா நீ போ தூங்கு! கொஞ்ச நேரத்துல சரியாகிடும்” என்று கண்ணை மூடிக்கொண்டாள்.

கோதையால் எப்படி போகமுடியும். “வண்ணா” என்று மகனின் அறைக்கதவை தட்டினார். தூரிகாவை என்ணிக்கொண்டும் தங்கையை அடித்த துரைசிங்கத்தையும் எண்ணி என்ன செய்வதென்று குழம்பிக்கொண்டிருந்தவன் தாயின் குரலை கேட்டு கதவை திறந்தான்.

“வண்ணா ரதிக்கு காய்ச்சல் கொதிக்குதுப்பா நீ கொஞ்சம் வாயேன்” என்று மகனை கூட்டிக்கொண்டு வந்தார் ரதியின் அறைக்கு.

“ம்மா கொஞ்ச நேரம் முன்னதான் காயத்துக்கு மருந்து போட்டு இன்ஜக்ஷன் போட்டு போயிருக்கேன்... கொஞ்ச நேரத்துல சரியாகிடுவா” என்று அவன் சொன்னாலும் தங்கையின் நெற்றியில் கைவைத்து பார்த்தவன் மீண்டும் ஒரு மாத்திரையை எடுத்து "ரதி எழும்பு மாத்திரை போடலாம்" என்று தங்கையின் தோளை தட்டினான்.

“இல்லண்ணா சரியாகிடும் விடு எனக்கு டயர்டா இருக்கு” என்று அவள் எழும்ப அடம்பிடித்தாள்.

“ரதி காய்ச்சல் நெருப்பா இருக்குடி! மாத்திரை போடு” என்று தாயாக துடித்தார் கோதை.

“அண்ணா இந்தம்மாவ போகச்சொல்லு! சும்மா நொய் நொய்னு பேசிக்கிட்டு” என்று சலித்து எழுந்து உட்கார்ந்தவள் நீளமான கூந்தலை முடியாமல் இருந்தவளின் தலையை கொண்டையாக போட்டு விட்டார் கோதை.

“சும்மா ஃப்ரீயா விடுமா” என்று மீண்டும் முடியை அவிழ்த்துவிட்டு பொன்வண்ணன் கொடுத்த மாத்திரையை போட்டவள் “தயவு செய்து நீ வெளியே இருமா! நான் தூங்கிடுவேன் தொந்தரவு பண்ணாத” என்று கையெடுத்து கும்பிட்டு மீண்டும் படுத்துவிட்டாள் ரதிதேவி.

“பாருடா நான் பாசத்துல பேசினா அவளுக்கு நொய் நொய்னு இருக்குங்குறா” என்று கோதை ஆதங்கப்பட்டார்.

“அவளை ஃப்ரீயா இருக்க விட்டு தூங்குங்க! உங்களை விட தைரியமானவ! ரொம்ப வரட்டு பிடிவாதம் பிடிப்பா! அவ குணம் தெரிந்ததுதானே நீங்க தூங்காம உடம்பை கெடுத்துக்காதீங்க வாங்க” என்று வெளியே கூட்டி வந்துவிட்டான் பொன்வண்ணன்.

துரைசிங்கம் வீட்டில் கோமதியோ “ஏன் துரை பொட்டப்புள்ளைய அடிச்சியா! தப்புபா நம்ம வீட்டுலயும் ஒரு பொண்ணை வைச்சு இருக்கோம் !! நீ பண்ணியது சரி இல்லப்பா” என்றார் கண்டிப்புடன்.

கோமதியும் கலையரசியும் கல்யாண விசயமாக பண்ட பாத்திரங்கள் வாங்குவதற்கு கடைவீதிக்குச் சென்றிருந்தனர்.

“அம்மா அந்த பொண்ணு என்ன வாய் தெரியுமா! என்னையே வாடா போடாங்குறா! விட்டேன் பாரு செவிலு பிய்ஞ்சு போகும் அளவுக்கு!” என்று அப்போதும் ரௌத்திரமாய் பேசினான்.

நாச்சியோ “கண்ணா என்ன இருந்தாலும் கோதை பொண்ணை அடிச்சிருக்க கூடாது! வாயில மிரட்டியிருக்கணும்” என்றார் அங்கலாய்ப்புடன்.

“ஏது!! ஏது! அப்பத்தாவுக்கு புது சொந்தம் வா வா னு அழைப்பு விடுதா!! பேத்தியை பார்த்ததும் மனசு மாறியாச்சா அப்பத்தா” என குரலை உயர்த்தினான். தன் அப்பத்தாவின் பாசத்தில் பங்கு போட ஆள் வந்ததா என்று பொசசிவ் துரைசிங்கத்திற்கு எட்டி பார்த்தது.

“ஹான் எந்த சிறுக்கி வந்தாலும் என் பேரனுக்குதான் முதலிடம்! இருந்தாலும் இன்னொரு முறை பார்த்தா அவகிட்ட வம்பா நடக்க வேண்டாம்” என்றார் தயங்கியபடி.

“ம்ம் அது அவ நடந்துக்குற முறையில இருக்கு அப்பத்தா” என்று சாப்பிட்டவன் கையை கழுவச் சென்றான்.

துரைசிங்கம் ரதிதேவியை அடித்துவிட்டான் என்று தெரிந்ததிலிருந்து சாப்பாடே இறங்கவில்லை தூரிகாவிற்கு.

பொன்வண்ணன் தனக்கு முத்தமிட்டான் என்று தெரிந்திருந்தால் பொன்வண்ணனுக்கு என்ன ஆகுமோ என்று பயந்திருந்தாள்... அவனை பத்தி நாம ஏன் கவலைப்படணும் என்று நினைத்தாலும் முத்தமிட்டவனையே தான் மணந்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணும் பெண்ணாக மாறிவிட்டாள்.

"அவன் முத்தமிட்ட இதழை இன்னொருவனுக்கு என்னால கொடுக்க முடியாது... ஆனாலும் அண்ணாவை மீற என்னால ஒரு அடி கூட எடுத்தும் வைக்க முடியாது! ஏன் டாக்டர் எனக்கு முத்தம் கொடுத்த ஹான்!" என்று முகம் பொத்தி அழுதாள் தூரிகா.

அடுத்த நாள் தூரிகா ஹாஸ்பிட்டலுக்கு இன்டன்ஷிப் செல்லவேண்டும். சாப்பிட்டு முடித்து வந்த ஐய்யனாரோ “தூரி குட்டி இன்னிக்கு உனக்கு ஹாஸ்பிட்டல இன்டன்ஷிப் இருக்குதானே... அண்ணா கூட போய்க்கோ உன் ஸ்கூட்டி ஏதோ ரிப்பேர்னு அண்ணா சர்வீஸ்க்கு விட்டிருக்கான்” என்றதும் சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் விலுக்கென்று நிமிர்ந்தாள்.

அண்ணன் தன்னை கண்காணிக்கிறான் என்று அவள் மனம் வெதும்பினாள். “சரிங்கப்பா” என்றாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை... துரைசிங்கம் எப்போதும் போல் கிளம்பி வந்தவன் நாச்சியின் காலில் விழுந்தான்.

“நல்லாயிருப்பா” என்று ஆசிர்வாதம் செய்தவர் “அடுத்த வாரமே நாள் நல்லாயிருக்கு அந்தனிக்கே கல்யாணத்தை வச்சிப்புடலாம்” என்று உரக்கவே பேசினார்.

சாப்பிட்டு கை கழுவி வந்த வீரய்யனோ “நீ சொல்றது சரிதான் நாச்சி! நம்ம குலத்தெய்வக்கோவிலில் நெருங்கின சொந்தத்தை மட்டும் அழைச்சு கல்யாணத்தை வச்சிக்கலாம் என்னப்பா சொல்ற ஐய்யனாரே” என்றவர் மகனின் வாயிலிருந்து வரும் பதிலையே பார்த்தார்.

“கண்டிப்பா பண்ணிடலாம்ப்பா! தேர்தல் விசயமா கட்சி ஆபிஸ் போயிட்டு வரேன்” என்று கிளம்பினார்.

“அப்பா தங்கச்சியை ஹாஸ்பிட்டல விட்டு நானும் கட்சி ஆபிஸ் வந்துடறேன்” என்றவனோ "பாப்பா கிளம்பிட்டியா?" என்று குரல் கொடுத்தான்.

“இதோ வந்துட்டேன் அண்ணா” என்று பேக்கோடு வந்தாள்.

ஐய்யார் வாசல் படிக்கட்டுக்கு போக அவரது கால் தடுக்கியது. “என்னங்க” என்று கோமதி ஓடிவர “அப்பா என்னாச்சு?” பதறி வந்து ஐய்யனாரின் தோளைப்பிடித்தான்.

“சும்மா கால் தடுக்கிடுச்சு ஒண்ணுமில்லப்பா” என்று காலை உதறினார்.

நாச்சியோ “கோமதி தண்ணி கொண்டு வா! ஐய்யனாரு வீட்டுக்குள்ள வந்து தண்ணி வாங்கி குடிப்பா! இன்னிக்கு நீ கட்சி ஆபிஸ் போக வேண்டாம்” என்றார் மகனுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தில்.

குமரன் எக்ஸாம் முடிந்து செமஸ்டர் லீவில் இருந்தவன் தோட்டத்தில் தென்னை மரத்திற்கு தண்ணீர் காட்டிவிட்டு வீட்டுக்கு அப்போதுதான் வந்தான்.

“குமரா பாப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ! நான் அப்பா கூட கட்சி ஆபிஸ் போயிட்டு வந்துடறேன்! இன்னிக்கு கட்சி ஆபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்கு! கால் தடுக்குச்சுனு வீட்ல இருந்துட்டா எப்படி அப்பத்தா” என்றான் எதற்கும் அஞ்சாத துரைசிங்கம்.

“அப்படியில்லப்பா” என்று வீரய்யன் இடையிட்டு பேச வர “ம்ம் எல்லாம் நம்ம கருப்பன் கூட இருக்கும் போது எந்த மயிராண்டியும் ஒண்ணும் புடுங்க முடியாது” என்றான் ஆவேசத்தில்.

ஆம் இன்றைக்கு மீட்டிங்க்கு ஆதிபெருமாளும் வருகிறார்... அதனால் நாச்சி பயப்படுகிறார்.

ஐய்யனார் தண்ணீரை குடித்து முடிக்க “வாங்கப்பா கிளம்பலாம்” என்று சிங்கமாக தந்தைக்கு காவலனாக ஐய்யனாரின் கையை பிடித்துக்கொண்டுச் சென்றான்.

நாச்சியோ “கருப்பா என்ற மகனையும் பேரனையும் நீதான் காப்பாத்தணும்” என்று கையெடுத்து கும்பிட்டார்.

குமரன் குளித்து விட்டு வந்து அவசரமாக சாப்பிட்டு முடித்து தங்கையை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றான். போகும் வழியில் “பாப்பா நேத்து அந்த டாக்டர் பையன் உன்கிட்ட ஒரண்டை இழுத்து அண்ணன்கிட்ட அடிவாங்கினான் போல! நானும் அங்கே இருந்திருந்தேனா என்கிட்டயும் அவன் அடிவாங்கியிருப்பான்!" என்றான் குமரனும் கோபத்துடன்.

"சும்மா ஏன் நாம அவரை வம்புக்கு இழுக்கணும் அண்ணா! அவுகள பார்த்தாலும் நல்ல மனுசனாதான் தெரியுறாரு!! என்கிட்ட வம்பு பண்ணல! அத்தை பையன்னுதான் சொன்னாங்க” என்றாள் குமரனிடம் உண்மையை கூறாமல்.

“பார்த்து சூதானமா இருக்கணும் பாப்பா” என்று ஹாஸ்பிட்டல் முன்னே பைக்கை நிறுத்தினான்...

“ம்ம் நான் பார்த்துக்குறேன் அண்ணா நீ கிளம்பு!! ஈவ்னிங் போன் பண்ணுறேன் வந்துடுங்க” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.

அவர்களை கடந்துச் சென்றது பொன்வண்ணனது கார்... குமரன் பொன்வண்ணனை பார்த்துவிட்டான். “பாப்பா இந்த ஹாஸ்பிட்டல்ல இன்டன்ஷிப் வேண்டாம் வேற ஏதாவது ஹாஸ்பிட்டல் போய்க்கோ” என்றான் பதட்டத்தில் எதற்கும் மீண்டும் பகை வளர குமரன் விரும்பவில்லை...

“அண்ணா காலேஜ்ல சொல்ற ஹாஸ்பிட்டல்தான் இன்டன்ஷிப் போகமுடியும்! இந்த டாக்டர் என்னை ஒண்ணும் பண்ணமாட்டாரு! அண்ணன் மிரட்டி அனுப்பியிருக்கும்! அவரும் என்கிட்ட வம்பு பண்ணமாட்டாரு! ப்ளீஸ் என் ப்ரண்ட்ஸ் எல்லாம் இந்த ஹாஸ்பிட்டலதான் இருக்காங்க” என்று தூரிகா கெஞ்சியதும்

“இரு அண்ணாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்” என்று துரைசிங்கத்திற்கு போன் போட்டான்.

துரைசிங்கமோ “சொல்லு குமரா” என்றதும் “அண்ணா பாப்பா இன்டன்ஷிப் போற ஹாஸ்பிட்டலில் அந்த பொன்வண்ணன் டாக்டரா இருக்கான்! இப்ப நான் செய்ய” என்றான் தயக்கத்துடன்.

“தூரிகாவை ஹாஸ்பிட்டலில் விட்டுட்டு வா பார்த்துக்கலாம்” என்றிருந்தான் துரைசிங்கம்.

“தூரி அண்ணா இந்த ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ண ஓ.கே சொல்லிட்டாரு! இருந்தாலும் அவன்கிட்டயிருந்து ஜாக்கிரதையா இருக்கணும்! அண்ணாவோட கோபத்தை பத்தி தெரியும்ல” என்று தங்கையை எச்சரித்தான்.

“நா.நான் வேலை விசயத்தை தவிர வேற எதுவும் பேசமாட்டேன் அண்ணா என் மேல நம்பிக்கை வைங்க” என்றாள் தீர்க்கமாக.

“உன்னை நம்பாம இருப்பேனா அண்ணன்!" என்று தங்கையின் தோளில் தட்டி விட்டு திரும்ப பொன்வண்ணன் நின்றிருந்தான் கையில் கோட்டுடன்.

பொன்வண்ணனோ “ஹாய் சின்ன மச்சான்!” என்றான் துடுக்குத்தனமாக.

“டேய் என் அண்ணாகிட்ட வாங்கின அடி பத்தலையோ!” என்று குமரன் கோபமாக பேச “நீ கொஞ்சம் நல்லவனா இருக்க போலையே!!” என்று குமரனின் கன்னம் தட்டிச் சென்றவன் தூரிகாவை பார்த்துக்கொண்டேச் சென்றான் பொன்வண்ணன்.

ஒரு பக்கம் கல்யாண வேலைகளும்... ஒரு பக்கம் தேர்தல் வேலைகளும் நடந்துக் கொண்டிருந்தது.

ஆதிபெருமாளோ இந்த முறை தேர்தலில் நான் தான் ஜெயிக்கணும் என்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.

ஊர் மக்கள் அனைவரும் ஐய்யனார் பக்கம் இருந்தனர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
6 அத்தியாயம்


கட்சி ஆபிஸில் ஐய்யனாரின் எதிர்புறம் விஷம் கொண்ட ஆதிபெருமாள் எகத்தாளமான பார்வையுடன் ஐய்யனாரை பார்த்துக்கொண்டிருந்தார்.

“மக்கும்” என்று தொண்டையை செருமினான் துரைசிங்கம்.

துரைசிங்கம் பக்கம் பார்வையை திருப்பினார் ஆதிபெருமாள். ‘என்ன முறைப்பு வேண்டி கிடக்கு' என்ற தோரணையுடன் பார்த்தவன் கழுத்தில் ஒற்றைவிரலை வைத்து சீவி விடுவேன் நாக்கை மடித்து மிரட்டினான்.

“போடா” என்றார் அவரும் அலட்சியமாக.

எல்லாரும் தேர்தலை பற்றி சலசலவென விவாதித்துக்கொண்டிருக்க இருவர் மட்டும் பார்வையால் பேசிக்கொண்டிருந்தனர்.

துரைசிங்கமோ ‘வெளியே வாடா உன்னை போடுவேன்’ முதுகில் சொருகி இருந்த அரிவாளின் முனை தெரியுமாறு வெளியே எடுத்துக்காட்டினான்.

ஆதிபெருமாளுக்கு புரை ஏறியது... தண்ணீரை எடுத்துக்குடித்துக்கொண்டவர் தன் ஆட்களை கண்களால் தேட அவர்களோ வெளியே நின்று புகைப்பிடித்துக்கொண்டிருந்தனர்.

‘அண்டா அண்டாவா சோறு திங்கறானுங்க அவன் மிரட்டும் நேரத்துக்கு எவனும் என் பக்கம் நிற்கமாட்டானுங்க’ என்று அவரது ஆட்களில் ஒருவனுக்கு போன் போட்டு “டேய் பேச்சியப்பா எங்கடா போய் தொலைஞ்சீங்க!! என் பக்கத்துல வந்து ரெண்டு பேரு நில்லுங்கடா” என்று கண்களில் அச்சத்துடன் நாக்கை கடவாயில் சுழட்டியவாறு நின்ற துரைசிங்கத்தை பார்த்தவாறே பேசினார்.

பேச்சியப்பனோ “இதோ வரேனுங்க அண்ணா” என்று ஒருவனை கூட்டிக்கொண்டு வந்தான்.

“இங்கனயே நில்லுங்கடா” என்றவரோ இப்பதான் நிம்மதியாக இருக்கு என்றவாறே மூச்சுவிட்டு கட்சிக்காரர்கள் பேசுவதை கவனித்தார் ஆதிபெருமாள்.

‘அந்த பயம் இருக்கணும் ஆதிப்பெருமாள்’ என்று ஏளனப்பார்வையுடன் சட்டைக்காலரை தூக்கிவிட்டான் துரைசிங்கம்.

ஐய்யனார் ஏதோ கேட்க துரைசிங்கத்தை பார்த்தவர் ஆதிபெருமாளை பார்த்து உதடசைப்பதை கண்டு “சிங்கம் என்னப்பா அவன்கிட்ட என்ன பேச்சு!! கார்ல நம்ம ஊர்க்காரவங்க எழுதிக்கொடுத்த பெட்டிசன் பைல் வைச்சிட்டு வந்துட்டேன்!! நம்ம பசங்க யாரையாவது எடுத்துட்டு வரச்சொல்லு” என்றவர் ஆதிபெருமாளை மறந்தும் கூட அவர் பக்கம் பார்க்கவில்லை.

துரைசிங்கமோ அப்போதும் ஆதிபெருமாளை முறைத்தவாறே முருகனுக்கு போன் போட்டு “உள்ளே வாடா” என்ற அடுத்த நிமிடம் முருகன் துரைசிங்கம் முன்னே நிற்க கார் சாவியை கொடுத்து “காருக்குள்ள ஒரு பைல் இருக்கும் அதை எடுத்துட்டு வா” என்றான் மீசையை முறுக்கியபடியே.

ஆதிபெருமாளோ ‘ஐய்யனாருக்கு கட்சி வாரிசு இந்த கட்டபொம்மன் துரைசிங்கம் இருக்கான். நானும் பெத்து வச்சிருக்கேனே கட்சிக்கு வெள்ளை சட்டை போட்டு வாடானு சொன்னா அவனோ நான் சொல்றதுக்கு எதிரா வெள்ளை கோட் போட்டு பெனாயில் நாத்தம் அடிக்குற ஹாஸ்பிட்டலுக்கு போயிடறான்!! எனக்கு அப்புறம் அரசியல் வாரிசு இல்லாம போயிடுமோனு கொஞ்சம் கவலையாத்தான் இருக்கு!' என்று தனக்குள் புலம்பிக்கொண்டார்.

தொகுதிவாரியாக பிரிக்க ஐய்யனாருக்கு ஒதுக்கிய பகுதிதான் எனக்கு வேணும் என்று ஆதிபெருமாள் ஒற்றைக்காலில் நின்றார்.

அங்கே சலசலப்பு அதிகமானது. அங்கே இருந்த நபர்கள் பாதிக்குமேல் ஐய்யனாருக்கு சாதகமாக நின்றனர்.

ஆதிபெருமாளுக்கு சாதகமாக பேச ஒரு சிலரே இருந்தனர். தலைவரும் ஐய்யனாருக்கு அவர் கேட்ட தொகுதியை கொடுத்துவிட்டார்.

ஆதிபெருமாளோ கோபத்துடன் எழுந்தவர் ‘ஐய்யனார் எப்படி ஜெயிக்குறான்னு பார்க்குறேன்’ என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு துரைசிங்கத்தை பார்த்துக்கொண்டே அவனை தாண்டியவர் “உங்க அப்பன் கூடவே இனிமே நீ அலையணும்! உன் அப்பன் உயிரை எப்படி எடுக்குறேன் பாரு” என்று தொகுதி கிடைக்காத வயிற்றெரிச்சலில் புகைந்து கோபத்தை கக்கினார் துரைசிங்கத்திடம்.

“எங்கப்பாவோட மயிரைக்கூட உன்னால புடுங்க முடியாதுடா! நீ ஆம்பிளையா இருந்தா என் அப்பன் மேல கையை வச்சு பாரு! உனக்கு பேச வாய் இருக்காது! மாறுகால் மாறுகை வாங்கிடுவேன்” என்றான் கண்கள் சிவந்து கைமுஷ்டியை இறுக்கினான்.

“பார்க்கலாம் நீயா இல்ல நானா! உங்கப்பனை போட முன்னே உன்னை போடுறேன்” என்று வார்த்தை ஜாலம் காட்டி தன் ஆட்களுடன் ஆத்திரத்துடன் சென்றார் ஆதிபெருமாள்.

ஐய்யனார் தன் கையில் இருந்த ஊர்மக்கள் கொடுத்த பெட்டிஷனை தலைவர் கையில் கொடுத்தார்... அதில் ஊர்மக்களுக்கு புதிதாக தண்ணீர் தொட்டிக் கொடுக்கவும்... பழுதடைந்த ரோடுகளை சீரமைத்துக் கொடுக்கவும் எழுதியிருந்தது.

“தலைவரே நான் என்னோட ஊர்மக்கள் கேட்டதெல்லாம் செய்யணும்னு நினைக்குறேன்” என்றார் ஆர்ப்பாட்டம் இல்லாத குரலில்.

“சரிப்பா நீ கேட்டது போலவே செய்துடலாம் அந்த தொகுதி ஓட்டு உனக்குதான் விழும்னு நம்பிக்கை இருக்குதானே!” என்றார் தலைவர்.

“எங்க ஊர் ஓட்டு முழுக்க எங்க அப்பாவுக்கு கண்டிப்பா விழும் இதுல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் தலைவரே!" என்று உரக்க குரல் கொடுத்தான் நம்பிக்கையுடன்.

“அப்புறம் என்ன தேர்தல் பேனர் வைக்கறது எல்லாம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாம பார்த்துக்கோங்க!" என்று கூறிய தலைவர் மீட்டிங் முடிஞ்சது என்று கிளம்பியவர் “ஐய்யனாருக்கப்புறம் நீதான் கட்சி வாரிசு!! இப்போ இளைஞரணி தலைவரா இருந்து கட்சிக்கு சேவை செய்யணும் துரைசிங்கம்” என்று அவன் தோளில் தட்டி சிரித்தபடியே சென்றார்.

ஐய்யனாரின் முகம் ஆனந்த தாண்டவம் ஆடியது.

காரில் ஏறிய ஐய்யனாரோ “என்னப்பா அந்த ஆதிபெருமாள் உன்கிட்ட வீரமா பேசிக்கிட்டு இருந்தான். குலைக்குற நாய் கடிக்காதுப்பா! நீ அவனை ஏதாவது ஏடாகூடமா பண்ணி வைக்காத! கொஞ்சம் பொறுமையா நடந்துக்கணும்... எனக்கு கெட்ட பேரு வாங்கிக்கொடுத்துடாத சிங்கம்” என்றார் பெரும்மூச்சுடன்.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்ப்பா! நீங்க தேர்தல் முடியும் வரை நான் இல்லாம எங்கேயும் தனியா போக வேண்டாம்!” என்றான் கட்டளையாகவே! ஆதிபெருமாள் மிரட்டியதை தந்தையிடம் மறைத்துவிட்டான் துரைசிங்கம்.

ஹாஸ்பிட்டலில் பொன்வண்ணன் கண்ணில் படக்கூடாதென கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள் தூரிகா. அங்கே இருந்த சிஸ்டரோ "தூரிகா சிஸ்டர் பீடியாட்ரிக் டாக்டர் பொன்வண்ணன் வார்டுக்கு போங்க அங்க தான் ட்யூட்டி” என்றதும் தூரிகாவோ 'கடவுளே! நான் யாரை பார்க்ககூடாதுனு நினைக்கிறேனோ அவருக்கு கீழேயா நான் ட்யூட்டி பார்க்கணும்' என்று புலம்பிக்கொண்டே சென்றாள்.

பீடியாட்ரிக் வார்டில் குழந்தைக்கு ஊசி போடுவதற்கு கையை தொட்டாலே அழுகத்தொடங்கியது! அங்கே இருக்கும் நர்ஸ் அத்தனை பேரும் வந்து ஊசி போட ட்ரை செய்தனர். கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வாந்தி எடுத்ததுதான் மிச்சம்...

அந்த சமயம் ரவுண்ட்ஸ் வந்த பொன்வண்ணனோ “என்னாச்சு ஏன் குழந்தை அழறா! இன்னும் பீவர் சரியாகலையா! இன்ஜக்ஷன் போடச்சொல்லியிருந்தேனே” என்று கேட்டபடியே குழந்தையின் அருகே வந்தவனை பார்த்து குழந்தை ஊசி போட்டு விடுவார்களோ என்று பயந்து அவளது அம்மாவை கட்டிக்கொண்டு “இந்த டாக்டர் வேண்டாம் போகச்சொல்லு” என்று கத்திய குழந்தையின் பக்கம் உட்கார்ந்து “பாப்பா என் கையில ஊசி இல்ல இங்க பாருங்க” என்று மென்மையான குரலில் பேசி குழந்தையின் தோளை தொட்டான்.

குழந்தை ஒற்றை கண்ணை திறந்து பார்த்து டாக்டர் கையில் ஊசி இல்லையென்றதும் “நீங்க எனக்கு ஊசி போடமாட்டீங்கதானே” என்றது பேசவே முடியவில்லை தொண்டை காய்ந்து போய்விட்டது.

“ம்ஹும் ஊசி போடமாட்டேன் இங்க அங்கிள்கிட்ட வா" என்று கையை தூக்கினான். தன்னிடம் வர தயங்கிய குழந்தையை மடியில் தூக்கி வைத்து கையில் போட்டிருந்த குழந்தையின் கையில் இருந்த வென்பிளானை தொட்டுப்பார்த்து “யார் இப்படி போட்டு விட்டது பாப்பாக்கு வலிச்சுதா?” என்று மெதுவாய் கையை நீவி விட்டுக் கொண்டு குழந்தையின் நண்பனை போல சகஜமாய் பேசினான்.

“ஹான் அதோ அந்த நர்ஸ் ஆன்ட்டி” என்று அங்கே மூன்று வருடங்களாக வேலை செய்யும் மாலா நர்ஸை கைகாட்டி "கையை பிடிச்சு அமுக்குறாங்க வலிக்குது!” என்றது குழந்தை அந்த நர்ஸை முறைத்துக் கொண்டே.

“சார் நான் மெதுவாதான் பிடிச்சேன்” என்ற அந்த நர்ஸ் அழும்நிலைக்குச் சென்று விட்டாள்.

பொன்வண்ணனோ “அமைதியாக இருங்க” என்று கையை தூக்கி காட்டிவிட்டு “பாப்பா இன்னிக்கு காலையில என்ன குடிச்சா?” என்று குழந்தையின் கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டான்.

“ஹான் மில்க் கொஞ்சமா குடிச்சேன் அங்கிள்! அம்மா இன்னும் கொஞ்சம் குடிக்க சொன்னாங்க நான் குடிச்சேனா அதெல்லாம் வாந்தி வந்துடுச்சு” என்றது சோர்வான குரலில் அவன் தாடையில் சாய்ந்தவாறே.

“உனக்கு என்ன சாக்லேட் பிடிக்கும்?” என்றான் ராகம் போட்டு.

“டைரி மில்க் சாக்லேட்! அம்மாதான் இப்ப கொடுக்கமாட்டேன்கிறாங்க வாயெல்லாம் கசப்பா இருக்கு அங்கிள்! கொஞ்சமா சாக்லேட் கொடுக்கலாம்ல” என்று சொல்லும்போதே இருமல் வந்தது குழந்தைக்கு.

“பாப்பாக்கு இந்த இருமல் நின்னுடுச்சுனா அங்கிள் நாளைக்கே டைரிமில்க் சாக்லேட் வாங்கிட்டு வருவேன்” என்றபடியே அங்கே நின்ற நர்ஸிடம் “இன்ஜக்ஷன் கொண்டு வாங்க” என்று சைகை செய்தான்.

“இருமல் எப்போ நிக்கும்... அம்மா காய்ச்சல் சரியான சாக்லேட் தருவேனு சொன்னாங்க” அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தது குழந்தை.

அவனோ "உனக்கு நாளைக்கே காய்ச்சல் சரியாகிடும் என் கண்ணையே பாரேன்” என்றபடியே குழந்தையின் கையை மெதுவாக பற்றி வெண்ப்ளானில் மெதுவாக ஊசியை செலுத்தினான். குழந்தையின் கவனம் சிதறாமல் “உனக்கு ஃபீவர் சரியானதும் ஒரு பாக்ஸ் நிறைய சாக்லேட் வாங்கி தரேன்” என்றபடியே ஊசியை போட்டு விட்டான.

“ஐ ஒரு பாக்ஸ் சாக்லேட்டா சூப்பர்!” என்று கண்ணைச்சிமிட்டி புன்னகை பூத்தது.

இதையெல்லாம் அப்போதுதான் அங்கே வந்த தூரிகா பார்த்துவிட்டு ‘டாக்டர் பலே கில்லாடியா இருக்காரு பேசியே குழந்தைக்கு ஊசி போட்டுட்டாரே! நாம எதுக்கும் ஜாக்கிரதையாகவே இருப்போம்’ என்று அங்கே கொடுத்த யூனிபார்முடன் ட்ரைனிங் நர்ஸுடன் வந்து நின்றுக் கொண்டாள் பவ்யமாக.

பொன்வண்ணனோ தூரிகா வந்து நின்றதை பார்த்துவிட்டான்... குழந்தையை இறக்கிவிட்டு “நாளைக்கு ஃபீவர் சரியானதும் சாக்லேட்டோட வரேன் பாப்பா மருந்து குடிச்சு சமத்தா தூங்கணும்” என்று புன்னகை பூத்து குழந்தைக்கு ஊசி போட்ட நர்ஸை தன் பின்னே வரச்சொல்லி அடுத்த குழந்தையை பார்க்கச் சென்றான்.

“மாலா சிஸ்டர் நீங்க எத்தனை வருசமா இங்க ஒர்க் பண்ணுறீங்க நீங்க எக்ஸ்பீரியன்ஸ் ஆனவங்கனு உங்களை நம்பித்தானே குழந்தைகளுக்கு ஊசி போடச் சொல்லியிருந்தேன்... உங்களை குறையா நான் சொல்லல! குழந்தைகிட்ட அன்பா பேசினாலே அவங்க நம்ம பேச்சை கேட்க ஆரம்பிப்பாங்க! குழந்தைக்கு வலிக்க பிடிச்சிருக்கீங்க! பாவம் குழந்தைக்கு வலிச்சிருக்கும்ல! நிறைய குழந்தைகள் பார்க்க உங்களுக்கு கஷ்டமா இருந்தா வீட்லயே இருந்துக்கோங்க சிஸ்டர்!” என்ற அதட்டலுடன் கண்டிப்பும் கூடிய குரலில் பேசினான்.

“சார் நான் உண்மையாவே சொல்றேன் அழுத்தி பிடிக்கலை” என்று மீண்டும் சொல்ல

“குழந்தைகள் பொய் சொல்ல மாட்டாங்க சிஸ்டர்!" என்று அழுத்தி சொன்னவன் "அடுத்த முறை இப்படி குழந்தைகள் கிட்ட கம்ப்ளைண்ட் வராம பார்த்துக்கோங்க! அப்புறம் மேலிடத்தில கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்” என எச்சரிக்கை செய்தான்.

"சாரி டாக்டர் இனிமே தப்பு நடக்காம பார்த்துக்குறேன்! மேலிடத்துல கம்ப்ளைண்ட் பண்ண வேணாம் என்னை நம்பித்தான் என் குடும்பமே இருக்கு” என்று கெஞ்சியே விட்டாள் அந்த நர்ஸ்.

“ஓ.கே” என்றவன் “உங்க பின்னால நின்ன ட்ரைனிங் நர்ஸ் ரெண்டு பேரு நம்ம ஓபிக்கு வரச்சொல்லிடுங்க! வீக் ஃபர்ஸ்ட் கூட்டம் அதிகம் இருக்கும்ல” என்றவனோ அடுத்து பேஷண்டை பார்க்கச் சென்றான்.

மாலா சிஸ்டரோ 'இந்த குழந்தை என்னை மாட்டி விட்டிருச்சு' என்று புலம்பிக்கொண்டே ஓபிக்கு வந்தவள் அங்க நின்ற இன்டன்ஷிப் ஸ்டுடன்ட்களை ஒவ்வொரு வார்டுக்கும் பிரித்து விட்டு “ஓபிக்கு ரெண்டு பேர் இருக்கணும் நீங்க ரெண்டு பேரும் ஓபியில இருங்க” என்று தூரிகாவையும் அவளின் தோழி ராணியையும் ஓபியில் நிற்க வைத்துவிட்டாள்.

குழந்தைகளுக்கு டெம்பரேச்சர் பார்த்துக்கொண்டிருந்தாள் தூரிகா.

ஐபி பார்த்து முடித்து ஸ்டெதஸ்கோப்பை கையில் பிடித்தபடியே ஓபிக்கு வந்தவன் அவனது அறைக்குச் செல்லும் முன் தூரிகாவை பார்த்தான். அவளோ குழந்தைக்கு டெம்பரேச்சர் பார்த்து “ஃபீவர் லைட்டா இருக்கு!! மருந்து குடிச்சா பாப்பாக்கு பீவர் போய்டும்” என்று கண்ணைசிமிட்டினாள். குழந்தையும் அவளை பார்த்து சிரித்தது.

பொன்வண்ணனோ ‘பேஷண்ட்கிட்ட அன்பாதான் நடந்துக்குறா குட்’ என்று தன்னைவளை மெச்சிக்கொண்டு அவனது அறைக்குள் சென்றான்.

அங்கே பேஷண்ட் கேஸ் பைலை அடுக்கிக்கொண்டிருந்த புஷ்பா சிஸ்டர் நிமிர்ந்து பார்த்தவர் “குட்மார்னிங் டாக்டர்” என்றார். 50 வயதிருக்கும் அவருக்கு.

“குட்மார்னிங் சிஸ்டர் இன்னிக்கு கூட்டம் அதிகமாக இருக்கு... உங்களுக்கு ஹெல்ப்புக்கு வேணா வெளியே ஒரு பொண்ணு ஒல்லியா நல்லா சிகப்பா நிற்குதே அந்த பொண்ணை கூப்பிட்டுக்கோங்க” என்றான் டேபிள் மேல் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டே.

“யாரு டாக்டர் சிவப்பா ஒல்லியா பயங்கரமா சைட் அடிச்சிருக்கீங்க போல! எங்க டாக்டர் நல்ல பையனாச்சே! அவருக்கு சைட் அடிக்க எல்லாம் நேரம் இருக்காதே! ஓபி ஐபினு பேஷண்ட் பின்னாலயே சுத்தரவராச்சே” என்று அவர் கிண்டலாக சிரித்தார்.

“அப்படியெல்லாம் எதுவுமில்ல சிஸ்டர் அந்த பொண்ணு பார்க்க துறுதுறுனு இருந்தா உங்களுக்கு ஹெல்பா இருக்கட்டும்னு சொன்னேன் அவ்வளவுதான் பேஷண்டை வரச்சொல்லுங்க” என்றான் முதல் பைலை எடுத்து பார்த்தபடியே.

“ம்ம் வரச்சொல்றேன் டாக்டர்” என்றவரோ வெளியேச் சென்று முதலில் வந்த பேஷண்டை உள்ளே போகச் சொல்லிவிட்டு கேஸ் ஹிஸ்ட்ரி எழுதிக்கொண்டிருந்த தூரிகாவின் பக்கம் போனவர் “கேஸ் ஹிஸ்ட்ரி எழுதி முடிச்சாச்சா டாக்டர் ரூம்க்குள்ள வா” என்று அவளை கையோடு அழைத்துச் சென்றார்.

தூரிகாவோ “என்னை பிளான் பண்ணியே உள்ளே வரவச்சிருப்பாரு இந்த டாக்டர்! கடவுளே என்னை காப்பாத்தேன்!” என்று கடவுளை வேண்டிக்கொணடே பொன்வண்ணன் ரூமிற்குள் சென்றாள்.

ரூமிற்குள் சென்றதும் குழந்தையை செக் பண்ணிக்கொண்டிருந்த பொன்வண்ணனோ கண்ணை மட்டும் உயர்த்தி பார்த்தான்.

“கு.குட்மார்னிங் டாக்டர்” என்றாள் மெல்லிய குரலில்... கொஞ்சம் படபடப்பும் இருந்தது அவளுக்கு.

அவள் பயந்து விட்டாளென்று கண்டுபிடித்துவிட்டான்.

"குழந்தைக்கு எத்தனை நாள் டயேரியா போகுது?" என்று கேட்டுக்கொண்டு சிஸ்டரை பார்த்தான் சிஸ்டரோ தூரிகாவிடம் “என்னை கவனி” என்றவர் குழந்தையின் ஹிஸ்ட்ரியை குழந்தையின் தாய் சொல்ல எழுத ஆரம்பித்தார்.

குழந்தையின் வயதை பார்த்து “பால் கொடுக்க வேண்டாம் லிக்விட்டா கொடுங்க” என்று மருந்தை எழுதிக்கொடுத்து "ரெண்டு நாளுல சரியாகிடும்!" என்று புன்னகைத்தான்.

அவர்கள் சென்று விட அடுத்த பேஷண்டை கூப்பிட புஷ்பா சிஸ்டர் வெளியேச் சென்றுவிட்டார்.

தூரிகாவோ காட்டனை உருட்டிக்கொண்டிருந்தவள் மெல்ல விழிகளை உயர்த்தி பொன்வண்ணனை பார்த்தாள்.

“என்னங்க நர்ஸ் மேடம் எப்படியிருக்கீங்க! உன் சண்டைக்கார அண்ணன்கிட்ட என்னை பத்தி என்ன சொல்லிவச்சீங்க! என்னை ரொம்ப மிரட்டினாருப்பா” என்றான் பயந்தவன் போல சுழற்நாற்காலியில் சுற்றிக்கொண்டே

“நா.நான் நீங்க என்கிட்ட அத்தை பையன்னு சொன்னீங்கனு மட்டும்தான் சொன்னேன்... மு.முத்தம் கொடுத்ததை சொல்லலை! சொல்லியிருந்தா நீங்க இங்க உட்கார்ந்திருக்கமாட்டீங்க” என்றாள் தைரியத்தை வரவழைத்து.

“ஏன் என் கழுத்தை சீவிடுவாரோ! உன் அண்ணன் பெரிய சண்டியருனு உன் அண்ணனுக்கு நினைப்பு ம்ம்” என்றான் ரதிதேவியை அடித்ததில் துரைசிங்கத்தின் மேல் காண்டாக இருந்தான்.

“ஆமா எங்கண்ணா சண்டியர்தான்” என்று சொல்லிக்கொண்டிருக்க அடுத்த பேஷண்ட் உள்ளே வந்துவிட்டனர். கீழே விழுந்த காயத்துடன் ஒரு குழந்தை வர குழந்தைக்கு பர்ஸ்ட் எய்ட் செய்து விட புஷ்பா சென்றுவிட்டார்.

“குழந்தை பால் குடிக்கவே இல்லை டாக்டர் அழுதுடேயிருக்கான்” என்று அந்த குழந்தையின் தாய் சொல்ல பொண்வண்ணனோ குழந்தையை தூக்கி பார்த்து “குழந்தை மோஷன் போனானா! வயிறு பொருமி இருக்கு போல!” கேஸ் ஹிஸ்ட்ரி எழுத நோட் பேடுடன் நின்ற தூரிகாவை பார்த்து “சிஸ்டர் ஸ்டெதஸ்கோப்” என்று கண்காட்டினான்.

அவளும் எடுத்துக்கொடுக்க “கழுத்துல போட்டுவிடுங்க” என்றான் குழந்தையை பரிசோதித்துக்கொண்டே.

அவளோ ஹான் என்று விழி விரித்தாள்.

“சிஸ்டர் சொன்னது காதுல விழலையா?” என்றான் குரலை உயர்த்தி.

அவளோ 'ரொம்பதான் பண்ணுறான்ப்பா' என்று பெரும்மூச்சு விட்டு ஸ்டெதஸ்கோப்பை பொன்வண்ணன் கழுத்தில் மாட்டிவிட்டு அவன் பக்கமே நின்றுக் கொண்டாள்.

குழந்தையை செக் பண்ணிவிட்டு “வயித்துல கீரிப்பூச்சியிருக்கும் மோஷன் போனா தன்னை போல பசியெடுக்கும் பால் குடிச்சிடுவான் குழந்தை” என்று புஷ்பா இல்லாததால் அவனாகவே மாத்திரையை எழுதிக்கொடுத்து அனுப்பி வைத்தான்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
“ம்ம் உன் அண்ணன் என்னை மிரட்டுனாரு நான் பயப்படலை! நான் இப்பவும் உன்னை லவ் பண்ணுறேன் நீ என்ன சொல்ற... எங்கப்பா என்கூட வரமாட்டாரு!! எங்கம்மாவை கூட்டிட்டு வந்து பொண்ணு கேட்குறேன் என்னை கட்டிக்குவியா?” என்றான் அழுத்தமான குரலுடன்.

“டாக்டர் இது ஹாஸ்பிட்டல் நான் இன்டன்ஷிப் ஸ்டுடன்ட் என்கிட்ட இதுபோல பேசாதீங்க அப்புறம் நான் மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்” என்றாள் அவனை மிரட்டும் தொனியில்.

“ஹான் எனக்கேவா! எனக்கு எந்த நேரம் எப்படி பேசணும்னு தெரியும்... இப்ப சொல்லப்போறீயா இல்லையா?” என்று எழுந்து வந்துவிட்டான் அவளருகே.

“இப்ப மட்டும் இல்ல எப்பவும் என் அண்ணா சொல்ற மாப்பிள்ளையைத்தான் நான் கட்டிப்பேன் டாக்டர்! இது போல மறுபடியும் என்கிட்ட வம்பா பேசினா என் அண்ணாகிட்ட சொல்லிடுவேன்” என்று அவனை ப்ளாக் மெயிலும் செய்தாள்.

அதற்குள் அடிப்பட்ட குழந்தை வந்ததும் குழந்தைக்கு காயத்தை பார்த்து ட்ரஸிங் பண்ணச்சொன்னான் துரிகாவிடம்.

அவளோ கொஞ்சம் கூட பயம் தெரியாமல் குழந்தையின் காயத்துக்கு ட்ரஸிங் பண்ணிமுடித்தாள்.

தொடர்ந்து பேஷண்ட் வந்துக் கொண்டே மதியம் லன்ச் டைமிற்கு அவளை அனுப்பிவிட்டான். அவளும் சாப்பிட்டு வந்தவள் புஷ்பாவை சாப்பிட போகச் சொன்னாள். அவரும் சென்றுவிட பொன்வண்ணனோ சாப்பிடாமலே பேஷண்டை பார்த்துக்கொண்டிருந்தான்.

“டாக்டர் நீங்க இன்னும் சாப்பிடலையா!” என்று அக்கறையில் கேட்டுவிட்டாள்.

“ம்ம் நான் சாப்பிடலைனா நீ சாப்பாடு கொடுக்கப்போறியா இல்ல ஊட்டுவிடப்போறியா?” என்றான் வம்பு இழுக்கும் நோக்கத்தோடு.

“ச்சே ஒரு அக்கறையில உங்களை கேட்டேன் பாரு” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அடுத்து அடுத்து பேஷண்ட் பார்த்துக்கொண்டேயிருந்தான். மாலை 6 மணி ஆனதும் "பேஷண்ட் அவ்ளோதான்" என்று புஷ்பா வந்து நின்றார்.

“அப்போ நான் கிளம்பட்டுமா சிஸ்டர்?” என்று புஷ்பாவிடம் கேட்டாள் தூரிகா.

“உன் டைம் ஐஞ்சு மணிக்கே முடிஞ்சதுமா நீங்க கிளம்பலாம்!! டாக்டர் கிட்ட சொல்லிட்டு கிளம்புங்க” என்றவரோ அன்றைய கேஸ் பைல்களை சிஸ்டத்தில் ஃபில் பண்ண சென்றுவிட்டார்.

பொன்வண்ணனோ ரெஸ்ட்ரூம் சென்று ஃப்ரெஷ் ஆகி வந்தவனிடம் “டாக்டர் டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்றாள் அவனது முகம் பார்க்காமல்.

அவளது கண்களில் காதல் தெரிந்தது அவனுக்கு... அதனால் தான் காலையிலிருந்து அவளை தன் பக்கமே வைத்திருக்கிறான்.

“உன்னை கூட்டிப்போக யாரு வருவாங்க சின்ன மீசையா! பெரிய மீசையா” என்றான் நக்கல் சிரிப்புடன்.

“கொழுப்பு அதிகமாக இருக்கா!! என் அண்ணாவை பார்த்து கிண்டலா பண்ணுறீங்க! உங்க தங்கச்சி நேத்து என் அண்ணனை வாடா போடானு மரியாதை இல்லாம பேசுனாங்களாமே!! அவங்க என்ன சண்டைக்காரியா அவங்களும் டாக்டர்னு கேள்விப்பட்டேன் எங்க காணோம் இன்னிக்கு அவங்களை பார்த்திருந்தேன்!! ரெண்டு வார்த்தை நறுக்குனு கேட்டிருப்பேன்” என்றாள் கோபத்துடனே.

“ஏய் நான் டாக்டர் என்கிட்ட இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா!” என்றான் அவள் குறும்பு பேச்சை இன்னும் கொஞ்ச நேரம் கேட்கலாமென.

“ஹான் என்னோட ட்யூட்டி டைம் முடிஞ்சிருச்சு! இப்போ நான் ஸ்டுடன்ட் கிடையாது! உங்ககிட்ட பேசி என் டைம்மை வேஸ்ட் பண்ண விரும்பலை!! என் அண்ணா வெளியே நிற்பாங்க நான் கிளம்புறேன்!" என்று கதவு வரை சென்றவளின் கையை இழுத்துப்பிடித்து “என்னடி ரொம்ப பேசற!! எனக்கு கொழுப்பு கிடையாது உனக்குதான்” என்று அவளது கன்னத்தை பிடித்து அவளது இதழில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top