ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11

துரைசிங்கம் அலர்விழி திருமணம் ஏற்பாடாகி இருக்கு என்று கேள்விப்பட்ட நாளிலிருந்து தன்னால் தன் ஆசை மருமகனின் கல்யாணத்திற்கு போக முடியாதே என்று கவலையில் மனம் வெதும்பி கிடந்தார் கோதை.

தன் தாய் வீட்டு குடும்பத்தில் நடக்கும் முதல் விஷேசம் தன்னை கூப்பிடமாட்டார்களா என்று கூட மனம் ஏங்கி தவித்தது.

அவரது மனம் ஒருநிலையில் இல்லாமல்ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் ஆடிக்கொண்டே இருந்தது.

வீட்டு வேலையெல்லாம் முடித்த கோதையோ தோட்டத்தில் நடந்துக் கொண்டு இருக்கும் போது துரைசிங்கம் சிறுவயதில் தன்னுடன் பேசியது அவரது மனதில் நிழலாடியது.

“டேய் சிங்கப் பையா நீ பெரியவனான பிறகு எனக்கு பிறக்க போற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்... நீ என்னோட மருமகனா வரணும்னு கொள்ளை ஆசைடா... உனக்கு மைனர் சங்கிலி பண்ணிபோடணும். உன் கைக்கு தங்க காப்பு பண்ணிபோடணும்...” என்று அடுக்கடுக்கான ஆசைகளை துரைசிங்கத்திடம் சொல்லி மகிழ்ந்துக் கொண்டிருந்தார்.

“கண்டிப்பா அத்தை உன்னோட பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்... நீ கவலைப்படாதே..! நாச்சி அப்பத்தா கைகாட்டுற பொண்ணைக்கூட நான் கல்யாணம் கட்டிக்கிட மாட்டேன் போதுமா” என தலையை சாய்த்து கண்ணைச்சிமிட்டினான் துரைசிங்கம்.

“அச்சோ என் சிங்கக்குட்டி நீதான் டா என் மருமகன்” என்று அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார் கோதை.

“சிங்கப்பையா இந்த அத்தைக்கு கொடுத்த வாக்கு காத்தோட கரைஞ்சு போச்சாடா என் தங்கமே” என்றவருக்கு கண்கள் கண்ணீர் கோடுகளாக வழிந்தது.

“கோதை..! ஏய்! கோதை..! காபி கொண்டு வா..!" என்ற கணவனின் அதட்டலில் கண்ணீரை துடைத்துக்கொண்டு சமையல்கட்டில் காபியை போட்டு ஆதிபெருமாளிடம் காபி கப்பை நீட்டினார்.

கோதையின் முகத்தை பார்த்தவாறே “என்னடி நீ பாசம் வச்சு வளர்த்தியே உன்னோட சிங்கப்பையன் அவன் கல்யாணத்துக்கு போக முடியலையேனு வருத்தப்பட்டு அழுகிற போல!" என்று நக்கல் சிரிப்புடன் காபியை வாங்கி குடித்தார் ஆதிபெருமாள்.

கோதையோ ஆதிபெருமாளை எதிர்த்து பேச முடியாமல் முறைத்து பார்த்து விட்டு அழுகையுடன் அங்கிருந்து நகர்ந்துச் சென்றவரை “ஒரு நிமிசம் நான் சொல்றதை கேட்டுட்டு போடி” என்றார் எள்ளல் சிரிப்புடன்.

“சொல்லுங்க” என்றார் வெறுப்பான குரலில் அவர் புறம் திரும்பாமலேயே வெறுப்பாகவே...

“உன் மனசுல நினைச்சி இருக்கிறது கூடிய சீக்கிரம் நடக்கப்போகுது. அது என்னனு மட்டும் சொல்லமாட்டேன். இந்தா காபி கப்பை பிடி” என்று வெடுக்கென்று அவர் கையில் திணித்து விட்டு வெளியேச் சென்றார்.

கணவன் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் புரிந்தவராக வேகமாக ஓடிவந்தவர் ஆதிபெருமாள் முன்னே நின்று நெஞ்சுக்கூடு ஏறி இறங்க “இன்னும் என் அப்பா குடும்பத்துல என்ன குழப்பம் பண்ண இருக்க... தயவு செய்து சொல்லிடு..! என் குடும்பம் பாவம்... என்னால பட்ட அவமானமே இன்னும் அவங்க மனசுல தீயாய் கொழுந்துவிட்டு எரிஞ்சிக்கிட்டு இருக்கும்... நீ ஏதாவது நடக்க இருக்க கல்யாணத்துல குதர்க்கம் பண்ணிடாத..! உன்னை கையெடுத்து கும்பிடறேன்" என்று அவரது காலில் விழாத குறையாக கெஞ்சினார் கோதை.

“ஹா... ஹா... என்னை அவமானப்படுத்திய உன் குடும்பத்தை எப்படி நிம்மதியா வாழ விடுவேன்னு நினைச்ச” என்று கோபத்தில் கோதையின் கையை பிடித்து அழுந்தப்பற்றினார்.

சரியாக பொன்வண்ணனின் கார் வீட்டுக்குள் நுழைய கையை லாவகமாக எடுத்துக்கொண்டு “உன் மகன் வரான் அவன்கிட்ட என்னை பத்தி சொல்லி வைச்ச... என்னை பத்தி தெரியும்ல” என்று கண்ணை உருட்டி மிரட்டினார் ஆதிபெருமாள்.

கோதையோ “நா.நான் வண்ணாகிட்ட உங்களை பத்தி சொல்லமாட்டேன். என் அண்ணா குடும்பத்துல குழப்பம் வர வைக்காதீங்க ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டார்.

“பார்க்கலாம்... பார்க்கலாம்...” என்று நயவஞ்சக சிரிப்புடன் சென்றுவிட்டார். கோதையோ நெஞ்சை பிடித்து நின்றிருந்தார்.

பொன்வண்ணனோ கையில் கோட்டுடன் நுழைந்ததும் தன் கவலையை மகனிடம் காட்டாது “வா வண்ணா காபி போட்டு தரட்டுமா?” என்று பாசத்தோடு மகனின் தோளை தொட்டார்.

“என்னாச்சு என் கோதை அம்மாவோட முகம் சரியில்லையே! உங்க பாச மருமகனுக்கு கல்யாணம்னு சந்தோசமா இருப்பீங்கனு நினைச்சேன்” என்று கிண்டல் செய்து தாயின் தோளில் கைபோட்டபடியே வீட்டுக்குள் சென்றவன் சோபாவில் சோர்வாக அமர்ந்தான்.

மகனின் சோர்வை கண்டு “இருப்பா காபி போட்டு எடுத்துவரேன்” சமையற்கட்டிற்கு ஓடியவர் போட்டு வைத்திருந்த காபியை கப்பில் ஊற்றி வந்து மகன் கையில் கொடுத்து அவன் பக்கம் உட்கார்ந்தவர் “உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கேனோ அதே அளவு பாசம் இம்மி அளவு குறையாம என் சிங்கம் மேலயும் வச்சிருக்கேன்டா” என்று சிறு சிரிப்புடன் மகனின் தலையை கலைத்து விட்டார்.

“ஓ பெத்த மகனை விட மருமகன் மேல பாசம் அதிகமா” என்றான் வேண்டுமென்ற பொய் கோபத்துடன்.

“டேய் படவா நீயும் சிங்கமும்... எனக்கு ரெண்டு கண்ணுபோல... ரெண்டு கண்ணுல எதை பிடிக்கும்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்..!" என்று கண்ணை சுருக்கி மகனின் கையை பிடித்துக்கொண்டார் கோதை.

“நீங்க துரைசிங்கம் மேல இன்னும் அளவு கடந்த பாசம் குறையாம இருக்கீங்கம்மா... ஆனா அந்த துரைசிங்கம் அப்படி இல்லையே. என்னை ஒரு மனுசனா கூட மதிக்காம அடிச்சு தரக்குறைவா கெட்ட வார்த்தையெல்லாம் பேசினான் தெரியுமா?” என்று சிறுபிள்ளை போல கோபப்பட்டு பேசினான்.

“ஹான் நீ பண்ணின காரியத்துக்கு பூ போட்டு கொஞ்சுவாங்களா!” என்று மகனை முறைத்தார் கோதை.

“நான் லவ் பண்ணுற பொண்ணுக்கு முத்தம் கொடுக்க எவன்கிட்டயும் பர்மிஷன் கேட்கணும்னு அவசியம் இல்லம்மா” என்றவனோ பட்டென்று எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான்.

“இப்ப எல்லாம் இவனுக்கு மூக்குக்கு மேல பொசுபொசுக்குனு கோபம் வருது. எங்க போய் முடியுமோ தெரியலையே... கருப்பா நீதான் என் குடும்பத்தை காப்பாத்தணும்” என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டார்.

கல்யாண வேலைகள் ஜோராக நடந்துக் கொண்டிருந்தன.

நாச்சி மட்டும் பெரிய மகள் கோதை இல்லையே என்று வருத்தத்தில் இருந்தார். அன்பரசி தாயின் முகத்தில் வடியும் கவலையை கண்டு “ஏன்மா ஓடிப்போன கோதையை நினைச்சு கவலைப்படுறியா? இல்ல கோதை மக அந்த ராங்கி ரதியை துரைசிங்கத்துக்கு கல்யாணம் பண்ண முடியலையேனு வருத்தப்படுறியா?” என்று அவர் ஆதங்கத்தில் கேட்டுவிட்டார்.

“உன்னை பெத்த வயித்துலதான்டி கோதையையும் பெத்து வளர்த்தேன்... அவ தப்பு பண்ணிட்டு போனானா அவளை ஒரேடியா வெறுத்து ஒதுக்கிட முடியுமா என்ன? நம்ம வீட்டுல முதன் முதலில் விஷேசம் நடக்குது... அவ இங்க இருந்தா நல்லாயிருக்கும்னு எனக்கு தோணுச்சு அவ்ளோதான்... நான் தான் உன் பொண்ணு அலர்விழியை சிங்கத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முதல் பேச்சை எடுத்ததே! சும்மா வாய் இருக்குனு என்ன வேணும்னாலும் பேசாத டி அன்பரசி" என கோபத்தில் கத்தியும் கூட விட்டார்.

“அதானே உனக்கு என்னை விட கோதை அக்கா மேலதான் பிரியமே! எதுக்கெடுத்தாலும் கோதை உன் கைதான் ராசி நல்லா இருக்கும் வந்து நாத்து நடு... உன் கையால பணம் வாங்கிட்டு போனா அந்த காரியம் ஜெயம் ஆகும்னு அவளைத்தான் தலையில வச்சு கொண்டாடினீங்க... அன்னிக்கு அவ கல்யாணத்துல பண்ணின கூத்துல எனக்கு கண்ணன் மாமாவை பிடிச்சிருக்கா இல்லையானு கூட கேட்காம பலியாடா போய் மணவறையில உட்கார வச்சீங்க... கண்ணன் மாமா நல்லவரா இருக்க போய் என் வாழ்க்கை நந்தவனமா இருக்கு... இதே ஒரு குடிகாரன் கையில நான் சிக்கியிருந்தா... என் நிலைமை அதோகதியாகி மண்ணோட மண்ணா போயிருப்பேன்” என்று இத்தனை நாளாய் மனதில் போட்டு அழுத்திக்கொண்டிருந்ததை கொட்டினார் அன்பரசி.

நாச்சியோ “ரொம்ப வாயாடாதடி... கண்ணன் மாப்பிள்ளை நல்லவர்னு தெரிஞ்சுதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம்... குடிகாரனா இருந்தா கல்யாணம் பண்ணியிருப்போமா என்ன? முழுசா கோதையை தப்பு சொல்ல முடியாது. அந்த கேடு கெட்ட நாய் ஆதிபெருமாளை நம்பி வீட்டுக்குள்ள விட்டது தான் முதல் தப்பு. என் பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சுட்டான் பாவி..!” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.

நாச்சி அழுவதை கண்ட அன்பரசியோ “அம்மா அழாத! நான் என் மனசுல உள்ள ஆதங்கத்தைதான் கொட்டினேன். உன் மனசை காயப்படுத்த எண்ணி பேசலைமா... என்னை மன்னிச்சுடு உனக்கு ஏதாவது ஆகிடபோகுது” என்று கவலைப்பட்டு தாயின் நெஞ்சை நீவிவிட்டார் அன்பரசி.

வீரய்யனோ பக்கத்து ஊரில் தெரிந்தவர்களிடம் பாலமுருகன் குடும்பத்தை விசாரித்துக்கொண்டிருந்தார். “நல்ல குடும்பம் தாராளமாக நம்ம ஊரு பொண்ணை கொடுக்கலாம்” என்று நம்பிக்கை வார்த்தை கொடுத்தனர்.

ஐய்யனாரோ சென்னையில் அவருடைய நண்பர்களிடம் ஐட்ஜ் பாலமுருகன் பத்தி கேட்டுக்கொண்டார். “பாலமுருகன் நியாயமான பேர்வழி... நீ பொண்ணை கண்ணை மூடிக்கிட்டே நம்பி கொடுக்கலாம்” என்று உறுதியாகவே கூறினார்கள்.

“சிங்கம்... மாப்பிள்ளை வீட்டை பத்தி நான் விசாரிச்ச வகையில் நல்ல பண்பான குடும்பமாக தெரியுறாங்க..! நீ யாருகிட்டயும் தகவல் கேட்டியாப்பா!" என்றார் ஐய்யனார்.

“ம்ம் நல்ல குடும்பம்னுதான் சொன்னாங்கப்பா... அவங்க போன் நம்பர் கூட வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க வீரய்யனும் நாச்சியும் அங்கே வந்தனர்.

“நல்ல விசயத்தை ஏன் தள்ளிப்போடணும். நாமளே போன் போடுவோமா?” என்று நாச்சி ஆவலாய் கேட்டுவிட்டார்.

ஐய்யனாரின் போன் அடிக்க புது எண்ணாக இருக்க புருவம் சுருக்கியவரோ புது நம்பராக இருக்க கட்சி விசயமா யாரும் பேசுவாங்களோ என்று யோசனையுடன் “சொல்லுங்க” என்றார்.

“வணக்கம்ங்க நான் ரிட்டையர்ட்டு ஜட்ஜ் பாலமுருகன் பேசுறேன்... தரகர் உங்க பொண்ணு ஜாதகமும் போட்டோவும் கொடுத்திருந்தாரு... உங்க வீட்டுப் பொண்ணை என் பையனுக்கு பிடிச்சிருக்கு முறைப்படி எப்போ உங்க வீட்டுக்கு நாங்க வரலாம்னு நீங்க சொன்னீங்கனா வசதியா இருக்கும் “என்றார் பாலமுருகன் புன்னகையுடனே.

ஐய்யனாரோ “என் மகனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் வச்சிருக்கோம்... இப்போதைக்கு ஒப்பு வார்த்தை மட்டும் பேசிக்கலாம்! மத்த நிகழ்ச்சியெல்லாமல் ஆர அமர பார்த்துக்கலாம்ங்குறது எங்க விருப்பம்” என்றார் நிறுத்தி நிதானமாக.

“என் மகனுக்கு இனி அடுத்த வருசம் தான் லீவு கிடைக்கும் அதான் இப்பவே கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தோம்" என்று தயங்கிப் பேசினார்.

“எங்க வீட்டுப்பொண்ணும் படிப்பு முடிக்க ஆறுமாசம் இருக்கு... அவ படிப்பு முடிச்சவுடனே கல்யாணத்தை வச்சிக்கலாம்கிறதுல நாங்க தெளிவா இருக்கோம்ங்க” என்று தேங்காயை உடைப்பது போல உடைத்துவிட்டார் ஐய்யனார்.

துரைசிங்கமும் ஆமோதிப்பாய் தலையை ஆட்டினான். பாலமுருகனோ “அப்ப நாங்க நாளைக்கு உங்கவீட்டுக்கு ஒப்பு வார்த்தை பேச வரோம்” என்று சொன்னதும் “நல்லதுங்க” என்றிருந்தார் ஐய்யனார்.

போனை வைத்ததுமே “மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டாங்க சிங்கம்... நீ அதற்கான ஏற்பாடுகளை கவனிச்சுக்கோ... பாப்பாவை லீவு போடச் சொல்லிடலாம்” என்றதும்

“அப்பா இன்டன்ஷிப்ல இருக்கும்போது லீவு கொடுக்க மாட்டாங்க... அவங்க வந்துட்டு போனதும் ஹாஸ்பிட்டல விட்டிரலாம்” என்றிருந்தான் துரைசிங்கம்.

“அதுவும் சரிதான்ப்பா" என்றவர் “அப்பா நம்ம பங்காளி வீட்ல பொண்ணு பார்க்க வரதை சொல்லிடலாம்” என்றவுடன்

வீரய்யனோ “நாம கொஞ்சம் அவசரப்படறது போல இருக்கு தம்பி... ஏற்கனவே கோதையால நாம அவமானப்பட்டு போய் நிற்கிறோம்... நம்ம தூரிகாவுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லைனு தோணுது” என்றார் பெருமூச்சு விட்டு.

தூரிகாவுக்கு கல்யாணம் என்றதிலிருந்து அவளது முகம் சரியில்லாமல் இருப்பதை கண்டுபிடித்து கல்யாணத்திற்கு அவசரப்படவேண்டாம் என்றிருந்தார்.

சரியாக தூரிகா அங்கே வரவும் “பாப்பா இங்கே வாடா” என்று ஐய்யனார் பாசமாக அவளை அழைக்கவும் “ப்பா” என்று அவரின் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
துரைசிங்கமோ “பாப்பா உனக்கு கல்யாணம் பேச்சு ஆரம்பிச்சிருக்கறது தெரியும்தானே! மாப்பிள்ளை லண்டன்ல டாக்டரா இருக்காராம்... நல்ல குடும்பம்... மாப்பிள்ளை போட்டோவும் என் கிட்ட இருக்கு... நீ பார்த்துட்டு ஓ.கே சொன்னினா மேற்கொண்டு மாப்பிள்ளை வீட்ல நாங்க பேச வசதியா இருக்கும்” என்று அவளது கண்களையே பார்த்துக்கொண்டே பேசினான்.

அண்ணனின் பார்வையில் அவளது காதல் தோற்றுப்போனது. குடும்ப மக்களே அவள் கண்முன் வந்து நின்றனர். அத்தை செய்த தவறை நாமும் பண்ணக்கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்து “நீங்க மாப்பிள்ளையை பத்தி விசாரிக்காம... என்னை அந்த வீட்டுக்கு மருமகளா அனுப்ப மாட்டீங்கப்பா! எனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் பண்ணியிருக்கீங்க... எ.எனக்கு கல்யாணத்துல சம்மதம்தான்” என்றிருந்தாள் புன்னகை முகத்துடனே. மனதில் உள்ள காதலை குழி தோண்டி புதைத்து விட்டு கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள்.

“பார்த்தீங்களா அப்பா! என் பொண்ணு நான் பார்த்திருக்க மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சம்மதம் சொல்லிட்டா... நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க" என்று பெருமையாக மார்தட்டிக்கொண்டார்.

“ப்பா எனக்கு படிக்கறதுக்கு இருக்கு” என்று அங்கிருந்து நகர்ந்து அவளது அறைக்கதவை மூடிக்கொண்டு ஓவென்று அழுக ஆரம்பித்தாள் தூரிகா.

அடுத்த நாள் காலையில் பாலமுருகன் அவர் மனைவி கோகிலா மகன் அசோக்குடன் ஐய்யனார் வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்துவிட்டார்.

கண்ணனும் அன்பரசியும் முதல் ஆளாய் வந்து நின்றனர். கண்ணன் பாலமுருகனிடம் அவரது சொந்தங்களை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். அலர்விழியோ தூரிகாவை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள்.

“முகத்தை சிரிச்சாப்புல வைடி! இந்த பட்டுச் சேலைல எம்புட்டு அழகா இருக்கே தெரியுமா! தேவதை போல இருக்கே..! மாப்பிள்ளை டாக்டராமே! டாக்டரும் நர்ஸும் சேர்ந்தா ஜோடிப்பொருத்தம் அம்சமா இருக்கும்டி” என்றாள் சிரித்தபடியே.

நாச்சியோ "அலரு பொண்ணை கூட்டிட்டு வாமா” என்றதும்.

தூரிகாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. முத்தம் ஒருவனுக்கு கொடுத்து விட்டு இன்னொருவனை எப்படி கல்யாணம் செய்வது என்று அவளுக்குள் வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள்.

அலர்விழியோ “ஏய் தூரிகா பொண்ணை வரச்சொல்லுறாங்க... நீ பொறுமையா கனவு காணு..." என்று அவளை கிண்டல் செய்து தூரிகாவை அழைத்துச்சென்றாள் ஹாலிற்கு.

அசோக்குக்கு தூரிகாவை பார்த்ததும் பிடித்துப்போனது. கண்களால் அவளை கபளிகரம் செய்துக் கொண்டிருந்தான்.

துரைசிங்கமோ தங்கையைதான் பார்த்துக்கொண்டிருந்தான். அவளது முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் நின்றிருந்தாள்.

சபையில் பொதுவாக விழுந்து நமஸ்காரம் செய்ய கோகிலா "என் மருமகள் அழகா இருக்கா... போட்டோவுல பார்த்ததை விட அமைதியாவும் அடக்கமாவும் இருக்கா... எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார் வாய் நிறைய புன்னகையுடன்.

பெரியவர் ஒருவர் “மாப்பிள்ளை வாய் திறக்கலையே” என்றதும் “எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் அசோக் குறுநகையுடனே தூரிகாவை பார்த்துக்கொண்டு.

“பொண்ணுக்கு பிடிச்சிருக்கானு சொல்லிடட்டும் மத்த விசயங்களை பேசிடலாம்” என்றார் பாலமுருகன்.

“பாப்பா” என்ற துரைசிங்கத்தின் குரலை கேட்டதுமே தலையை நிமிர்த்தி அசோக்கை பார்த்துவிட்டு “பிடிச்சிருக்கு” என்று தலையை ஆட்டினாள்.

“பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்க மத்த விசயம் பேசிடலாம்” என்று ஐய்யனாரின் பங்காளிகள் சொன்னதும்.

“வர புதன்கிழமை நிச்சயம்போல வச்சுக்கலாம் கல்யாணம் அடுத்த வருசம் பண்ணிடலாம்” என்று முடிவு செய்தனர்.

‘அப்பாடா ஒருவருசம் இருக்குல்ல... அப்பாகிட்ட எப்படியாவது இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடணும்’ என்று கனவு கண்டுக் கொண்டிருந்தாள் தூரிகா...

அவள் கனவை கலைக்கும் விதமாக கோகிலாவோ “இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாத்திக்கலாம்ல” என்றார் நாசுக்காய்.

துரைசிங்கமோ ஐய்யனாரை பார்த்து ‘சரினு சொல்லுங்க’ என்றான் தலையை அசைத்து.

ஐய்யனாரோ “நல்லதுங்க” என்றவுடன்

கோகிலா இரெண்டு பேருக்கும் சேர்த்தே மோதிரம் வாங்கி வந்திருந்தார்.

‘இந்த அம்மா ப்ளானோடதான் வந்திருக்குபோல’ என்று முணுமுணுத்துக்கொண்டாள் அலர்விழி.

தூரிகாவின் முன்னே வந்து நின்றான் அசோக். அவளால் அங்கே நிற்ககூட முடியவில்லை. கால்கள் தரையில் மடிந்து விழுவதுபோல தோன்றியது. கலங்கிய கண்களுடன் நின்றிருந்தவள் விழியின் ஓரம் கசிந்த நீரை யாருக்கும் தெரியாமல் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள். துரைசிங்கமோ தூரிகாவின் பக்கம் வந்தவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த மோதிரத்தை எடுத்து “பாப்பா மாப்பிள்ளை கையை நீட்டுறாரு இந்த மோதிரத்தை போட்டு விடு” என்று அவளது தோளை அழுத்தமாக பற்றினான்.

சுயம் வந்த தூரிகாவோ துரைசிங்கம் கையிலிருந்து மோதிரத்தை வாங்கி கைகள் நடுங்க அசோக் கையில் போட்டுவிட்டாள்.

அசோக் அவளின் பட்டு விரலை பிடித்து மோதிரம் போட்டுவிட்டான். எல்லாம் முடிந்துவிட்டது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தலையை குனிந்துக் கொண்டு ஊமையாக அழுதாள் தூரிகா.

“மோதிரம் மாத்தியாச்சு பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கிடட்டும்... இப்போ எல்லாம் சகஜம்தானே” என்று சபையில் பேச்சு வந்தது.

“கல்யாணத்துக்கு ஒரு வருசம் இருக்கு நாங்க போன்ல பேசிக்குறோம்” என்று அசோக் தூரிகாவை காப்பாற்றி விட்டான்.

“புதன்கிழமை பார்க்கலாம் சம்பந்தி” என்ற பாலமுருகன் குடும்பம் கிளம்பிவிட்டார்கள்.

தூரிகாவோ அவளது அறைக்குள் சென்றதும் சேலையை கழட்டி யூனிபார்ம் போட்டவளுக்கு கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து துடைத்து கன்னம் சிவந்து போய்விட்டது. ட்ரஸ் மாத்தியவள் குளியலறை சென்று முகத்தை தண்ணீரால் அடித்து கழுவிவிட்டு வந்தவள் தான் அழுதது தெரியாமல் இருக்க க்ரீம் போட்டு சிரிப்பை வரவழைத்து அறையை விட்டு வெளியே வந்தாள்.

நாச்சியோ “தூரிகா கண்ணு மாப்பிள்ளையை பிடிச்சிருக்குதானே... நாளைக்கு எங்களை குறை சொல்லக்கூடாது” என்று பேத்தியின் கன்னம் பற்றி கேட்டார்.

“பிடிச்சிருக்கு அப்பத்தா! ட்யூட்டிக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்றாள் சிரித்த முகத்துடனே.

துரைசிங்கம் தூரிகாவை ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றான். அவளோ காரில் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். ஹாஸ்பிட்டல் வந்தவுடன் “கிளம்புறேன் அண்ணா” என்றவளின் கையை பிடித்து “பாப்பா நீ டாக்டரை விரும்புறியா? அவன் உனக்கு ஆசை வார்த்தை காட்டி மயக்கியிருக்கான்... அவன் அப்பா கேடு கெட்ட நாய்... கோதை அத்தை தாத்தா, அப்பா, அப்பத்தா, எல்லாரையும் வேண்டாம்னு உதறி தள்ளிட்டு போயிட்டாங்க... அப்பனை போலத்தான் பிள்ளையும் உன்கிட்ட அத்துமீறி நடந்திருக்கான். அவன் குடும்பமே சரியில்ல... நீ அந்த டாக்டரைதான் கல்யாணம் பண்ணிப்பேனு முடிவு பண்ணியிருந்தா என்கிட்ட மனசு திறந்து சொல்லிடு. நான் அப்பாகிட்ட பேசுறேன். ஆனா அப்படி கல்யாணம் நடந்தா உன்கிட்ட நான் பேசமாட்டேன்” என்றிருந்தான் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு...

கோதையிடமும் துரைசிங்கம் கடைசியாக பேசிய வார்த்தையும் இதுதானே... இனிமே உன்கிட்ட பேசமாட்டேன் அத்தை என்றுதான் கடைசியாக சொல்லி இருந்தான்.

“அண்ணா எனக்கு யாரும் வேண்டாம்... நீ..! நீதான் வேணும்...” என்று துரைசிங்கத்தின் மார்பில் விழுந்து கதறினாள்.

அவனோ “அழாத கண்ணீரை துடைச்சுக்கோ” என்றவன் தங்கையை தன்னிடமிருந்து பிரித்து “அவன் குடும்பத்து மருமகளா போனா அப்பாவும் ஆதிபெருமாளும் பேசிக்கிடணும். ஆதிபெருமாள் அப்பாவையே கொல்ல பார்த்தவன்... உனக்கு நிறைய விசயங்கள் தெரியாதுடா... நம்ம குடும்ப மரியாதை உன் கையிலதான் இருக்கு” என்று அழுத்திச் சொன்னான் துரைசிங்கம்.

“சரிங்கண்ணா ஒரு காலமும் நம்ம குடும்பத்துக்கு கெட்ட பேரு வரவைக்க விடமாட்டேன்...என்னை நம்புங்க” என்று உறுதி வார்த்தை கொடுத்ததும் "போய்ட்டு வாடா” என்று தங்கையின் கன்னத்தை தட்டினான் துரைசிங்கம்.

கண்ணீரை துடைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்குச் சென்றாள் தூரிகா. அவளது வார்டில் கர்ப்பிணி பெண்களுக்கு பிபி செக் பண்ணிக்கொண்டிருந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

மகப்பேறு வார்டில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிபி செக் பண்ணிக்கொண்டிருந்தாள் தூரிகா. அந்த வழியாக ஐ.பி பேஷண்டை பார்த்து முடித்து ஓபி பேஷண்டை பார்க்க ஸ்டெதஸ்கோப்புடன் போன் பேசிக்கொண்டே தூரிகாவை கடந்துச் செல்கையில் எதிரே வந்த நர்ஸ் “குட்மார்னிங் சார்” என்று சொல்லி போவதை பார்த்து தூரிகாவோ எழுந்து நின்று "குட்மார்னிங் சார்" என்றவளுக்கு தலையசைத்தவன் அவளது விரலில் புதிதாய் போட்டிருக்கும் மோதிரத்தை பார்த்துவிட்டான்.

அப்போது கையில் குழந்தையுடன் “டாக்டர் என் குழந்தைக்கு கை கால் இழுக்குது என்னனு பாருங்க” என்று முகமெல்லாம் வியர்த்து பதறி துடித்து ஒரு தாய் பொன்வண்ணன் முன்னே ஓடி வந்தார்.

வார்டு பாய் யாரையும் கூப்பிடாமல் அவனாகவே குழந்தையை தாயிடமிருந்து வாங்கிக்கொண்டு "பயப்படாதீங்கமா" என்றவனோ “சிஸ்டர் கொஞ்சம் எமர்ஜென்சி வாங்க” என்று தூரிகாவை அழைத்தவன் குழந்தையை எமர்ஜன்சிக்கு கொண்டுச் சென்று ட்ரீட்மெண்ட் பண்ண ஆரம்பித்தான் பொன்வண்ணன்.

தூரிகாவோ அவனுக்கு உதவி செய்துக்கொண்டிருந்தாள். குழந்தை சீராக மூச்சு விடவும் “பேபி ஸ்டேபில்” என்று புன்னகை புரிந்தவன் அங்கேயிருந்த வாஷ் பேஷனில் கையை கழுவி விட்டு “குழந்தைக்கு தொந்தரவு இருந்தா எனக்கு கூப்பிடுங்க” அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஓ.பிக்குச் சென்றவன் ஸ்டெதஸ்கோப்பை எமர்ஜன்ஸியில் வைத்து விட்டு வந்தது நினைவு வர. எமர்ஜன்ஸிக்கு இன்டர்காமில் அழைத்தான். குழந்தையின் பக்கம் இருந்த தூரிகாதான் போனை எடுத்தாள். “என்னோட ஸ்டெதஸ்கோப் அங்க இருக்கும் எடுத்துட்டு என்னோட ரூம்க்கு வாங்க” என்று போனை வைத்துவிட்டான்.

இன்று காலை தூரிகாவை பொண்ணு பார்க்க வந்த விசயம் பொன்வண்ணன் காதுக்கு வந்துவிட்டது. அவன் மனம் உலைகலன் போல கொதித்தாலும்! தான் காதலித்து முத்தம் வரை கொடுத்தவளை வேறொருவனுக்கு சொந்தமாக்க பார்த்திருக்கிறார்கள் என்று ஐய்யனார் குடும்பத்து மீது அதீத கோபமும் வந்தது.

‘துரைசிங்கம் நீங்க ரொம்ப அவசரப்படறீங்க... எங்க அப்பா போல அயோக்கியத்தனம் பண்ணாம உரிமையோட வந்து உங்க கிட்ட பொண்ணு கொடுங்கனு பர்மிஷன் கேட்டேன். நீங்க முடியாதுனு முகத்துல அடிச்சு சொல்லிட்டீங்க... என்னால தூரிகாவை யாருக்கும் விட்டு தர முடியாது! நீங்க உங்க தங்கச்சி பாதுகாப்புக்கு இரும்பு வேலியே போட்டு வச்சாலும் அவளை கடத்திட்டு வந்து தாலி கட்டுவேன் பாருங்க' என்று மனதிற்குள் துரைசிங்கத்தை வடசட்டியில் போட்டு வறுத்துக்கொண்டிருந்தான்.

‘எப்படிடி என்னை விட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச' என்று என்று தூரிகாவையும் கறுவி கொட்டி டேபிள் மீது வைத்திருக்கும் பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டேயிருந்தான்.

தூரிகாவோ பொன்வண்ணனை எப்படி சந்திப்பது என்று மனதிற்குள் பெரும் போராட்டமே நடத்திக்கொண்டிருந்தாள். அவன் முகத்தை தனியாக எப்படி எதிர்கொள்வது. தன்னிடம் கல்யாணத்தை பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திணறிக்கொண்டே பொன்வண்ணன் அறைக்கதவை நாக் செய்து உள்ளேச் சென்றாள்.

அவனோ அவளை எரிக்கும் பார்வையில் உறுத்துப்பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளோ அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் எச்சிலை விழுங்கிக்கொண்டு “சா.சார் உங்க ஸ்டெதஸ்கோப்” என்று கைகள் நடுங்க ஸ்டெதஸ்கோப்பை அவனது டேபிள் மீது வைத்து விட்டு திரும்பியவளுக்கு கண்ணீல் நீர் கோர்த்தது. கண்ணீரை சுட்டு விரலால் துடைத்து விட்டு கதவை திறக்கும் நேரம் நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து வந்து அவளை தன் பக்கம் பற்றி இழுத்து கதவின் மேல் சாய்த்து தன் இருகரம் கொண்டு சிறைபிடித்தவனோ அவளது முகத்தருகே தன் முகத்தை நெருக்கமாக வைத்து “கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு போல” என நக்கல் தொனியில் கேட்டதும்

“அ.அது வந்து” என்று அவளது இதழ்கள் வார்த்தை வராமல் தந்தியடிக்க... அவனோ அதிரடியாக அவளது இதழை ஆக்கிரமைப்பு செய்துவிட்டான்.

அவளோ “ம்ம்” என்று இதழ்களுக்குள் போராடி அவள் அவனை எதிர்த்தாள். ஆனால் அவன் கொடுக்கும் வன் முத்தத்தை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை தடுமாறினாள்.

அவனோ அவளை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்ற விதத்தில் அவளது இதழில் இரத்தம் கசியும் அளவிற்கு கவி பாடிக்கொண்டிருந்தான். பூஞ்சை பெண்ணாக இருக்க அவன் மீதே மயங்கிச் சரிந்து விட்டாள்.

“ச்சட்” என்று பெரும்மூச்சு விட்டு தூரிகாவை பேஷண்டை படுக்க வைக்கும் மெத்தையில் படுக்க வைத்து அவள் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் சட்டென்று எழுந்தவள் கோப முகத்துடன் அவனது சட்டையை இழுத்து பிடித்து “ஏன் டா என்னை இப்படி சித்ரவதை பண்ணுற!! நீ டாக்டர்தானே இப்படி ஒரு பொண்ணை லிப்ஸ்ல இரத்தம் வருவது போல முத்தம் கொடுக்கறது தப்புனு தெரியலையா! நீ மனுச ஜென்மமா இல்லை... காட்டுமிராண்டி கூட்டத்திலிருந்து வந்தியா” சகட்டு மேனிக்கு திட்டியவள் அவனது கன்னத்தில் அறைந்தே விட்டாள்.

அவனோ "எனக்கு நீ வேணும் அவ்ளோதான் டி! உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது” என்று அவனது பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை கையில் எடுத்து அவளது கழுத்தில் கட்ட போய்விட்டான்.

அவளோ அதிர்ந்து ஒரு அடி தள்ளி நின்று “ப்ளீஸ் பொன்னா என்னை விட்டிரு... எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்” என்று கண்ணீருடன் அவன் கையை பிடித்துக்கொண்டாள்.

“அப்போ நான் உனக்கு முக்கியம் இல்லையாடி! எ.என்னை நீ விரும்பலைனு உன் மனசை தொட்டு சொல்லு! நான் உன்னை விட்டிடுவேன்” என்றான் தழுதழுக்கும் குரலில்.

“நா.நான் உன்னை விரும்புறேன் தான்! நான் என் அண்ணன் மேல் வைத்திருக்கும் பாசத்துக்கு முன்னாடி என் காதல் தோத்து போச்சு... அவர் வார்த்தையை என்னால மீற முடியாது பொன்னா... நான் உங்களுக்கு சொந்தம் கிடையாது... என்னை விட்டிருங்க... உங்க காலுல கூட விழறேன்” என்று அவனது காலை பிடிக்க போனவளை “ஸ்டாப் இட் தூரிகா” என்று அதட்டல் போட்டவன்

“என்னை மனசுல வச்சிட்டு இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்துவியாடி” என்று அவன் அவள் இதயத்தை கூறுபோட்டு கேள்வி கேட்கவும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. முகத்தை பொத்திக்கொண்டு அழுக ஆரம்பித்தாள் பெண்ணவள்.

அவள் கண்ணீரை காண பிடிக்காதவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான். அவளோ அவன் தன் முன்னே இல்லையென்று தெரிந்ததும் அந்த அறையை விட்டு வேகமாக வாஷ்ரூமிற்குள் சென்று முகத்தை தண்ணீரால் கழுவினாள். உதட்டில் அவனது பல்பட்டு காயத்தில் தண்ணீர் பட எரிந்தது. ‘ஸ்ஸ்’ என்று இதழை வருடினாள். பொன்வண்ணன் மீது கோபம் கிளர்ந்தெழுந்தது. எப்படி இவர் மட்டும் என்கிட்ட அத்துமீறியே நடக்குறாரு என்று அழுது புலம்பினாள். தலை வலிக்க ஆரம்பித்தது.

நர்ஸ் ஸ்டேசனுக்கு வந்தவள் அங்கிருந்த டேபிளில் தலை வைத்து படுத்துவிட்டாள். பொன்வண்ணனிற்கோ அவள் அழுது தன்னிடம் கெஞ்சியதே அவன் கண் முன்னே வந்தது. தான் செய்வது தவறு என்று அவன் மூளைக்கு தெரிந்தாலும் அவனது மனதிற்கு தவறாக படவில்லை. அவள் வேண்டுமென்று சிறுபிள்ளை போல அடம் பிடித்தது. அவன் மீதே அவனுக்கு கோபம்... கையை டேபிளில் குத்திக்கொண்டான் ஆத்திரத்தில்.

தூரிகாவோ டேபிளில் படுத்தபடியே உறங்கிவிட்டாள். பொன்வண்ணனுக்கு மனம் கேட்கவில்லை. மதியம் ரௌண்ட்ஸ் சென்று விட்டு வந்தவன் நர்சிங் ஸ்டேசனை எட்டி பார்த்தான்.

தூரிகாவோ டேபிள் மீது படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். எதிரே வந்த சிஸ்டரிடம் “அந்த பொண்ணு தூங்குறாங்க என்னனு பாருங்க” என்றதும் அந்த நர்ஸோ “டாக்டர் அவளுக்கு லைட்டா பீவர் இருக்கு அதான் தூங்குறா போல” என்று சொல்லிருந்தாள்.

“அந்த பொண்ணு எழுந்ததும் என்னோட ரூம்க்கு கூட்டிட்டு வாங்க" என்று சென்றுவிட்டான்.

மாலை 4.00 மணி போல எழுந்தவளுக்கு தலைவலி நின்றிருந்தது. “தூரிகா உன்னை டாக்டர் பொன்வண்ணன் வரச்சொன்னாரு கையோடு கூட்டிட்டு வரச்சொன்னாருடி அவர் நீ தூங்கியதை பார்த்துட்டு ஏன் தூங்குறானு என்கிட்ட கேட்டாரு நான் காய்ச்சல்னு சொல்லிட்டேன்... நீயும் இப்போ கேட்டா காய்ச்சல்னு சொல்லிடு" என்றாள் அந்த நர்ஸ்.

அவளோ “நான் டாக்டரை பார்க்க வரலை” என்றாள் பயத்துடனே.

“ஏய் வந்துருடி அந்த டாக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்டுனு கேள்விப் பட்டிருக்கேன்” என்று சொன்னதோடு இல்லாமல் அவளை கையை பிடித்து கூட்டிச் சென்றிருந்தாள் பொன்வண்ணனின் அறைக்கு.

தூரிகாவோ பொன்வண்ணனின் முகத்தை பார்க்க விரும்பாமல் தலையை குனிந்து நின்றாள். “நர்ஸ் நீங்க கிளம்புங்க” என்றதும் அவள் தூரிகாவை பார்த்துக்கொண்டே வெளியே கிளம்பிவிட்டாள்.

“இப்படி வந்து உட்காரு” என்றதும்

“ஏன் மறுபடியும் என்னோட லிப்ஸை கடிச்சு வைக்கவா... நான் இங்கயே நிற்குறேன்” என்றாள் அவனை முறைத்துக்கொண்டே.

அவனுக்கு அவள் பேசிய விதம் சிரிப்பை வரவழைத்தது. அவனாகவே எழுந்து அவளிடம் வர “இப்ப முத்தம் கொடுத்தா கண்டிப்பா அண்ணாகிட்ட சொல்லிடுவேன் டாக்டர்” என்று மெதுவாக நகர்ந்தாள்.

அவனோ அவளது முகத்தை கையால் தாங்கி டேபிள் மீது வைத்திருந்த ஆயின்ட்மெண்டை எடுத்தவன் அவளது இதழில் மயிலிறகு போல தடவிவிட்டான். அவளோ கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளது நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது பயத்தில்.

இதற்கு மேல் அவள் தன் பக்கம் நின்றால் அவளது கழுத்தில் தாலியை கட்டிவிடுவோமென்று அவனுக்கு ஆப்ரேசன் இருக்க ஆப்ரேசன் தியேட்டருக்குச் சென்றுவிட்டான்.

கண்ணை திறந்தவள் அவன் தன் முன்னே இல்லையென்றதும் மூச்சை ஆழ்ந்து விட்டு அவன் மீண்டும் வந்துவிடுவானோ என்ற அச்சத்தில் நர்ஸிங் ஸ்டேசனுக்குச் சென்றுவிட்டாள்.

ரைஸ் மில்லில் வேலை செய்யும் தொழிலாளிக்கு அடிப்பட்டு விட சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்த துரைசிங்கம் அடிப்பட்ட ஆளை தன் காரிலேயே தூக்கிப்போட்டுக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்குச் சென்றான்.

ஃபர்ஸ்ட் எய்ட் செய்து இன்ஜக்ஷன் போட்டு எமர்ஜென்சியில் படுக்க வைத்திருந்தனர். அடிப்பட்ட ஆளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது. அவனோ கை வலிக்குது என்று வலியில் துடித்து போனான். அவன் துடிப்பதை கண்ட துரைசிங்கம் அங்கிருந்த நர்சிடம் "இன்னும் டாக்டர் வரலையே... பேஷண்ட் வலியில துடிக்குறாங்க சீக்கிரம் டாக்டரை வர சொல்லிடுங்க" என்று சற்று கோபமாக அவசரப்படுத்தினான்.

"சார் ஒரு பெரிய சர்ஜரி நடந்திருக்கு எல்லாரும் அங்கே இருக்காங்க எமெர்ஜென்சி டாக்டர் இப்ப வந்திடுவாங்க... கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று அவர் தன்மையாகவே பதில் கொடுத்தார்.

“இந்த ஹாஸ்பிட்டல இருக்க எல்லா டாக்டரும் ஆப்ரேசன்ல இருக்காங்களா..? வேற டாக்டர் இருந்தா வந்து பார்க்க சொல்லுங்க அடிபட்டவங்க எவ்ளோ நேரம் வலியை பொறுக்க முடியும்... டாக்டர் வர லேட் ஆகும்னா நாங்க வேற ஹாஸ்பிடல் போய்க்குறோம்" என்றான் சீற்றத்துடன்.

“என்ன சத்தம்?” என்று அங்கே வந்த ரதியோ துரைசிங்கத்தை பார்த்து முறைத்தவள் “இது ஹாஸ்பிட்டல் ஃபிஷ் மார்க்கெட் கிடையாது உடம்பு முடியாம நிறைய பேஷண்ட் படுத்திருக்காங்க! கொஞ்சம் அமைதியா பேசுங்க” என்று குரலை உயர்த்தினாள். இது என்னோட இடம்டா என்று அவனை திமிராக பார்த்தாள்.

துரைசிங்கமோ “அப்போ நீங்க டாக்டர்தானே அடிப்பட்டு வந்து ஒரு மணிநேரம் ஆச்சு... இன்னும் டாக்டர் வரல... இப்படித்தான் கேர்லஸா இருப்பீங்களா! உங்க ஹாஸ்பிட்டலை நம்பி எப்படி மக்கள் வரது?” என்று சட்டை காலரை விட்டு எகிறி குதித்தான்.

“சார் சத்தம் போடாதீங்க” என்றவள் எமர்ஜன்ஸியில் படுத்திருந்த பேஷண்டை பார்த்தவள் “பேஷண்ட் ஸ்டேபிளாதான் இருக்காரு... ஆப்ரேசன்ல இருக்க டாக்டர் வந்துடுவாங்க வெயிட் பண்ணுங்க! அதை விட்டு சும்மா காட்டான் போல துள்ளிக்குதிக்காதீங்க சரியான படிக்காத தற்குறி போல” என்று முணுமுணுத்துவிட்டு அவளது வார்டை நோக்கி போனாள் ரதிதேவி.

“ஏய் டாக்டரே நில்லு” என்று ரதியின் முன்னே வந்து ஆவேசமாய் நின்றான்.

சுற்றிலும் ஒரு முறை பார்த்தவள் யாரும் இல்லையென்றதும் “டேய் இது என் ஏரியா ரொம்ப ஆடின விஷ ஊசி போட்டு கொன்னுடுவேன் ஜாக்கிரதை” என கண்ணை உருட்டி விரலை நீட்டி மிரட்டியவளின் கையை மடக்கி பிடித்து “என்னடி சொன்ன இது உன் ஏரியாவா..! உன்னை பார்த்தாலே என் கையெல்லாம் அடிக்கணும்னு பரபரனு இருக்கு... நான் படிக்காத தற்குறிதான் அதுக்குனு ஹாஸ்பிட்டலுக்கு ட்ரீட்மெண்ட் வரக்கூடாதுனு சட்டம் இருக்கா என்ன? இப்ப நீ என்னோட ஆளுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கணும்... நீ பார்க்கலைனு சொன்னா இந்த ஹாஸ்பிடல் டீன் எனக்கு தெரிஞ்சவர்தான் அவருக்கு போன் போட்டு... உன் பேரு என்ன ஹான் ரதிதேவி டாக்டர் அடிப்பட்டு வந்த பேஷண்டை பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டாங்கனு கம்ப்ளைண்ட் பண்ணுவேன் எப்படி வசதி" என்று புருவம் உயர்த்தி மிரட்டினான்.

“டேய் உன்னோட வம்பா போச்சுடா... நான் பிரசவம் பார்க்குற டாக்டர்... போடா நான் பார்க்கமாட்டேன்" என்று பல்லை கடித்து அவன் நெஞ்சில் கையை வைக்க பார்த்தவளை “ஏய்இஇ” என்று நாக்கை கடித்து “விரலை நீட்டி என் மேல கை வைக்குற வேலை வச்சிக்காதேடி... தோளை உரிச்சு போடுவேன்” என்று எகத்தாளமாக பேசியவன் “பிரசவம் பார்க்குற டாக்டர் படிப்பு படிக்க முன்னே நீ எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டுதானே வந்திருக்கணும்... அப்போ நீ வந்து என் ஆளை பார்த்துத்தான் ஆகணும்” என்று வம்படியாக ஒற்றை காலில் நின்றான் துரைசிங்கம்.

ஒரு கட்டத்தில் அவளாகவே “வந்து தொலைக்கிறேன் போடா” என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்து எமர்ஜன்ஸிக்குள் நுழைந்தாள்.


துரைசிங்கத்தின் ரைஸ் மில்லில் வேலை செய்யும் ஆளிற்கு ட்ரீட்மெண்ட் பார்க்க ஆரம்பித்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13

“கையில பிராக்சர் இருக்கும் போல ஒரு எக்ஸ்ரே எடுத்திடுங்க... வலி இன்னும் இருக்காப்பா” என்று அந்த பேஷண்டிடம் தன்மையாகவே கேட்டாள்.

அவனோ “கொஞ்சம் வலியிருக்கு டாக்டர்” என்றான் வலியில் முகம் சுளித்து.

“நர்ஸ் வலி குறைய இன்ஜக்சன் போட்டிருங்க... எக்ஸ்ரே வந்ததும் ஆர்த்தோ டாக்டர் கிட்ட இவரை கூட்டிட்டு போயிடுங்க” என்று சொல்லி விட்டு வெளியே வந்தவள் துரைசிங்கத்தை தாண்டி அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் சென்றவளை

“ஏய் டாக்டர்” என்று சொடுக்கு போட்டு அழைத்தான்.

அத்தனை பேரும் திரும்பி பார்த்தனர். அங்கே வேலையும் செய்யும் நர்ஸ்கள் உட்பட... ரதிதேவிக்கோ அவமானமாய் போய்விட “மிஸ்டர் மரியாதையா பேச தெரியாதா உனக்கு” என்று பல்லைக்கடித்து அவன் முன்னே வந்து நின்றவள் “உங்க ஆளு நல்லாயிருக்காரு... கையில ஒரு சின்ன பிராக்சர் இருக்கு... ஆர்த்தோ டாக்டர் வந்து மெடிசன் கொடுப்பாரு சரியா” என்று அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றுவிட்டாள்.

அவள் பின்னேயே வேகமாய் சென்றவன் அவளது அறை கதவை படாரென்று திறந்து உள்ளேச் சென்றான்.

“ஏய் அறிவில்லையாடா துறந்த வீட்டுக்குள்ள நாய் போல வர” என்று அவள் பேசி முடிக்க வில்லை. அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் துரைசிங்கம்.

“டேய் என்னையே அடிச்சிட்டியா?” என்று அவளும் அவன் கன்னத்தில் அறைய போக அவளது கையை வலிக்க பிடித்து “பொண்ணுங்களை எங்க குடும்பம் தெய்வமாக பார்ப்போம்... ஆனா உன்ன போல பஜாரிங்களை இப்படி கன்னத்துல நாலு அறை விடுவோம்... பொண்ணுன்னு அடங்கி ஒடுங்கி இருக்கணும்னு சொல்லமாட்டேன். உன்னை போல மனுசங்களை மதிக்காம இருக்க பொண்ணுகளை அடக்கி வைப்பான் இந்த துரைசிங்கம்." என்று சிங்கம் போல கர்ஜித்தான்.

"கையை விடுடா பொறுக்கி நாயே" என்றாள் அப்போதும் அடங்காமல் ரதிதேவி.

"உனக்கு வேப்பிலை அடிக்காம விட மாட்டேன்டி" என்று அவளது கையை விட்டுச் சென்றான் துரைசிங்கம்.

"ராட்சசன் எப்படி கையை இறுக்கி பிடிச்சிட்டான் கையே வலிக்குது" என்று சிங்கத்தை திட்டிக்கொண்டு உட்கார்ந்தாள் ரதி.

கோதைக்கு மனதே சரியில்லாமல் இருக்க பொண்வண்ணனுக்கு போன் போட்டு “வண்ணா நீ கொஞ்சம் நேரமே கிளம்பி வரமுடியுமா என்னை கோவிலுக்கு அழைச்சிட்டு போயேன்! மனசு ஒரு நிலையில இல்லப்பா!” என்றார் ஆயாசமாக.

“ரெண்டு பேஷன்ட் இருக்காங்க பார்த்து முடிச்சிட்டு வரேன்” என்றிருந்தான்.

கோதையோ கோவிலுக்கு கிளம்பி புறப்பட்டு இருந்தார்... பொன்வண்ணன் ட்யூட்டியை முடித்து வந்தவன் எதிரே வந்த ரதியிடம் “ஏய் ட்யூட்டி முடிஞ்சுதா!” என்று புருவம் சுருக்கியவனிடம்

“எனக்கு டெலிவரி இருக்கு நான் வர லேட்டாகும் நீங்க கிளம்புங்க அண்ணா” என்றிருந்தாள்.

“ஓ.கேடா பார்த்து வா... நேரம் ஆச்சுன்னா எனக்கு போன் போடு நான் வரேன்” என்று அவளது கன்னம் தட்டிச் சென்றான்.

கோதையுடன் அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தான் பொண்வண்ணன். கோதை விளக்கு போட போக அங்கே தூரிகாவும் அலர்விழியும் விளக்கு போட்டுக்கொண்டிருந்தனர்.

கோதையின் முகத்தில் சிரிப்பு தவழ்ந்தது. தூரிகாவின் அருகே உட்கார்ந்த கோதையோ “எப்படி இருக்கேமா?” என்றார் பாசம் பொங்கிய குரலில்.

“ந.நல்லாயிருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க அ.அத்தை?” என்று உரிமையாகவே கூப்பிட்டாள் தூரிகா.

இப்போது அலர்விழியும் தூரிகாவும் மட்டுமே கோவிலுக்கு வந்திருந்தனர். அந்த தைரியத்தில் அத்தை என்று கூப்பிட்டுவிட்டாள் தூரிகா.

“கல்யாணம்னு கேள்விப்பட்டேன்டா... சந்தோசமா இரு” என்று தூரிகாவின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.

அவளும் “தேங்க்ஸ் அத்தை” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.

அலர்விழியோ “ஏய் தூரி இவங்ககிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு. இவங்கதான் தாத்தா, மாமா யாரையும் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்களாம்... நம்மகிட்ட மட்டும் ஏன் பேசணும்... துரைசிங்கம் மாமாவுக்கு தெரிஞ்சா நமக்குத்தான் திட்டு விழும் வா போகலாம்” என்றவளோ தூரிகாவின் கையை பிடித்தாள்.

“ஏய் அலரு என் சிங்கப்பயலை நீதான் கல்யாணம் பண்ணிக்க போறியா... ரொம்ப கொடுத்து வச்சவ நீ! அவனை சந்தோசமா வச்சிக்கோமா!.. கோவம்தான் முணுக்குனு வரும்... என் மருமகன் பலாப்பழம் போல வெளியே முள்ளா இருப்பான்... ஆனா பலாப்பழம் உள்ளே பலாச்சுளை இனிப்பா இருக்குல்ல அதுபோல அவன் மனசு இனிப்பு அது வெளியில யாருக்கும் தெரியாது” என்றார் சிரிப்புடனே.

அலர்விழியோ தன்னை துரைசிங்கத்தோட சந்தோசமா இரு என்று சொன்னதும் அவள் உச்சி குளிர்ந்து விட்டாள்.

துரைசிங்கம் வந்து விடுவானோ என்ற பயத்தில் அமைதியாய் நின்றுவிட்டாள்.

“அத்தை நீங்க ஏன் தாத்தா, அப்பா பேச்சு கேட்காம போனீங்க..?” என்றாள் கண்ணீருடன் தூரிகா.

“சூழ்நிலைடா” என்ற கோதைக்கு கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“அழாதீங்க அத்தை எல்லாம் சரியாகும்” என்றவளோ கண்ணீரை துடைத்தும் விட்டாள் தன் தாவணியால்.

கோதைக்கு இப்படி பட்ட மருமகள் தனக்கு கிடைக்காம போய்ட்டாளே! என்று ஆதங்கமாக இருந்தது. தன் மகன் தூரிகாவை ஆசைப்பட்டது தவறில்லை என்றும் கூட தோன்றியது.

பொன்வண்ணன் கையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு தூரிகாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அலர்விழியோ “ஏய் தூரி போகலாம்டி சிங்கம் மாமா வரேன்னு சொல்லியிருக்கார்ல” என்று பரபரத்தாள்.

“என் சிங்கப்பையன் வரேன்னு சொல்லியிருக்கானா... அம்மாடி அவனை கோவில்குள்ள வரவைக்க முடியுமா மருமகளே?” என்று தூரிகாவின் கையை பிடித்துக்கொண்டார் கோதை.

“அ.அத்தை அண்ணா உங்கள பார்த்தா கோபப்படுவாரு வேண்டாம்” என்று தலையை ஆட்டினாள்.

அலர்விழியோ “உங்களுக்கு எங்க மாமாவை பார்க்கணும் அவ்ளோதானே” என்றவளோ உடனே போன் போட்டாள் சிங்கத்துக்கு.

“நான் கோவிலுக்கு வெளியே நிற்குறேன் அலரு சாமி கும்பிட்டாச்சா... ரெண்டு பேரும் வெளியே வாங்க” என்றவனை “ம்க்கும் ரெண்டு வார்த்தை சேர்த்து பேசினா என்ன?” என்று பழிப்பு காட்டி விட்டு...

“மாமா நான் கல்யாணத்துக்கு முன்னால நாம ரெண்டு பேரும் ஒண்ணா கோவிலுக்கு வந்து சாமி கும்பிடறதா வேண்டியிருக்கேன்... ப்ளீஸ் கோவிலுக்குள்ள வர்றீங்களா?” என்று தைரியத்தை வரவழைத்து கேட்டுவிட்டாள் அலர்விழி.

“ம்ம் வரேன்” என்று சொல்லி காரை விட்டு இறங்கினான்.

"அப்பா இன்னிக்கு மழை கொட்டோ கொட்டுனு
கொட்டப்போகுது" என்று ஆச்சரியத்துடன் சிலாகித்து சொன்னவள் “பெரியம்மா நீங்க ஆசைப்பட்ட சிங்கத்தை பார்த்துக்கோங்க கோவிலுக்குள்ள வராரு” என்றதும் கோதை எழுந்து தூணில் மறைந்து நின்றுக் கொண்டார்.

பொன்வண்ணனோ “இதெல்லாம் உங்களுக்கு தேவையா அம்மா... அவருக்கு உங்களை பார்க்க பிடிக்காத போது நீங்க ஏன் அவரை பார்க்கணும்?” என கோபமாக தாயை முறைத்தான்.

“ப்ளீஸ்டா ஒரு வாட்டி பார்த்துக்குறேன்” என்று மகனிடம் கெஞ்சினார் கோதை.

“என்னமோ பண்ணுங்க ஆனா அவர் உங்களை பார்த்து ஏதாவது சொல்லிட்டா!! நான் மனுசனா இருக்கமாட்டேன்” என்றான் சீற்றமாக.

“நான் நிற்கறதே அவனுக்கு தெரியாது அமைதியா நில்லுடா” என்று பொன்வண்ணனின் கையை பிடித்துக்கொண்டார் கோதை.

துரைசிங்கம் கை காப்பை ஏத்தி விட்டுக் கொண்டு மீசையை முறுக்கி நடந்து வரும் அழகை கண் இமைக்காமல் பார்த்தார் கோதை.

“டேய் வண்ணா என் சிங்கப்பையல் சும்மா காட்டுல இருக்க சிங்கம் போல நடந்து வரான் பார்த்தியா” என்று சிலாகித்து சொல்லிக் கொண்டார் கோதை.

“ம்க்கும்” என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் பொன்வண்ணன்.

துரைசிங்கமோ நாலாப்பக்கமும் பார்த்துக்கொண்டே வந்தவன் தூரிகாவை பார்த்துவிட்டான்.

“பாப்பா விளக்கு போட்டாச்சா..? போகலாமா அலர்விழி எங்கே?” என்றதும் “மாமா இதோ மாலை வாங்கிட்டு வந்தேன் வாங்க ரெண்டு பேரும் போகலாம்” என்று அவனது கையை பிடித்துவிட்டாள்.

“ம்க்கும் பாப்பா இருக்கா” என்று கண்ணைக்காட்டி முன்னே நடந்தான்.

“கையை கூட பிடிக்ககூடாதா... ஸப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே” என்று தலையை ஆட்டிக்கொண்டுச் சென்றாள்.

துரைசிங்கமும் அலர்விழியும் சேர்ந்து நின்று சாமி தரிசனம் செய்வதையும் பார்த்து கண்களால் நிரப்பிக்கொண்டார் கோதை. திருமண கோலத்தில் நிற்பதாக நினைத்துக்கொண்டு பார்த்தார் கோதை.

தீபாராதனை காட்டி குங்குமம் கொடுத்தார் பூசாரி. கையிலிருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைத்து விட சொன்ன அலர்விழியை “கல்யாணம் முடியட்டும் வச்சுவிடறேன் அலர்” என்றான் சின்ன சிரிப்புடன்.

“அடுத்த வாரம் கல்யாணம் மாமா” என்றாள் குரலை குழைத்து சிணுங்கினாள்.

“இருக்கட்டுமே எல்லாம் முறையா நடக்கணும் அலர்" என்று அவளிடம் கண்ணைச் சிமிட்டி சென்றான்.

துரைசிங்கம் கண்ணைச்சிமிட்டியதற்கே “ஐ மாமா என்னை பார்த்து கண்ணடிச்சிருச்சு” என்று ஆனந்தக்கூத்தாடினாள் அலர்விழி.

துரைசிங்கம் பக்கம் தூரிகா நடந்து வருவதை கண்டு “இந்த பொண்ணு இன்னும் கொஞ்ச நேரம் என்கூடவே இருந்திருக்கணும்னு தோணுது வண்ணா” என மனம் நினைத்ததை வாய் திறந்து சொல்லி விட்டார் கோதை மகனிடம்.

“உங்க காலம் வரை அவளை உங்க கூடவே வச்சிப்பீங்கம்மா” என்று கண்ணைச்சிமிட்டி சிரித்தான்.

“படவா அவ கல்யாணத்துல ஏதாவது குளறுபடி பண்ணின... இந்த அம்மா உன் கூட பேசவே மாட்டேன் பார்த்துக்கோ” என்று பொய்யாக மிரட்டினார் கோதை மகனை.

“இப்போ சாமி கும்பிடலாம் வாங்க” என்று அன்னையை சாமி கும்பிட வைத்து அவர் நினைத்ததை நிறைவேற்றி வீட்டுக்கு கூட்டிவந்தான் பொன்வண்ணன்.

தூரிகாவிற்கு ட்யூட்டி முடிந்ததும் ரதியிடம் டவுட் கேட்கச் சென்றாள்.

“வா தூரிகா நானே உன்னை கூப்பிடணும்னு இருந்தேன்... நீயே வந்துட்ட நெக்ஸ்ட் வீக் மண்டே உங்க ஊர்ல மெடிக்கல் கேம்ப் போடுறதா இருக்கோம்... நீ எனக்கு ஹெல்ப்பா வந்துடு” என்றாள் ரதி.

தூரிகாவோ “சரிங்க மேடம்” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.

“உட்காரு உன்கிட்ட பேசணும்” என்று எதிரே இருந்த இருக்கையை காட்டினாள் ரதி.

“மேடம் துரைசிங்கம் அண்ணா வந்துடுவார் நான் கிளம்புறேன்” என்றாள் எச்சிலை விழுங்கிக்கொண்டு.

துரைசிங்கம் பெயரை கேட்டதும் ரதிதேவிக்கு சுர்ரென்று ஏறியது.

“நீ எவ்ளோ சாஃப்டா பேசுற... உன் அண்ணா என்ன பேட்டை ரவுடி போல பிஹேவ் பண்ணுறான்... படிக்காத முட்டாள்” என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

ஆனால் அவள் அண்ணனை திட்டியது தூரிகா காதில் விழுந்து “மேடம் என் அண்ணா படிக்காத முட்டாள் கிடையாது சென்னை ஐஐடில மெக்கானிக்கல் கோல்ட் மெடலிஸ்ட்” என்றாள் சற்று கோபத்துடனே.

“ஓ படிச்சு இருக்கானா!” என்று மரியாதை இல்லாமல் பேசிவிட்டாள்.

தூரிகாவோ “நான் வரேன் மேடம்” என்று எழுந்து விட்டாள்.

“ஏய் கூல்!! கூல்!! அண்ணாவை திட்டியதும் தங்கச்சிக்கு கோபம் வருது ரொம்ப பாசமோ?” என்று கேலி செய்து சிரித்தாள்.

“என் அண்ணாவை குறை சொல்லாதீங்க மேம்... எனக்கு கோவம் வந்திடும்” என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டாள் தூரிகா.

“உன் அண்ணாவை ஒன்னும் சொல்லலை தாயே ம்ம் விசயத்துக்கு வரேன்” என்றவள் “ஏன் என் அண்ணாவை ரிஜெக்ட் பண்ணின... நான் உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுறேன். நீங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா யாராலும் உங்களை பிரிக்க முடியாது உன் சிங்கம் அண்ணா கூட” என்று அழகாக பேசி அவளது மனதை மாற்ற பார்த்தாள் தந்திரமாக.

“நோ!! நோ!! மேடம்... எனக்கு எங்க வீட்டுல மாப்பிள்ளை பார்த்தாச்சு... நெக்ஸ்ட் வீக் எனக்கு என்கேஜ்மெண்ட்! உங்க அண்ணாவை நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன். இன்னொரு முறை என்கிட்ட இதுபோல பேசாதீங்க” என்று வெளியே ஓடிவிட்டாள் அழுகையுடனே நடக்க போகும் விபரீதம் அறியாமல்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

மகளிருக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை கேம்ப் நடத்த ஐய்யனாரிடம் அனுமதி கேட்டிருந்தனர் பொன்வண்ணன் வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தினர்.

ஐய்யனாரோ பெண்களுக்காக கேம்ப் என்றதும் மறுப்பு சொல்லாமல் "தாராளமா கேம்ப் நடந்துங்க" என்று பர்மிஷன் கொடுத்துவிட்டார்.

துரைசிங்கமோ "இப்போ எதுக்கு கேம்ப் நடந்துறாங்களாமா... அந்த ஆதிபெருமாள் பொண்ணு நம்ம ஊருக்குள்ள வரது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலைங்கப்பா... எலக்சன் நேரம் ஆதிபெருமாள் அவன் பொண்ணுகிட்ட ஏதாவது திட்டம் போட்டு கொடுத்திருப்பானோனு என் மனசுக்கு படுதுங்கப்பா" என்றான் தாடையை தேய்த்துக்கொண்டே.

"பெண்களுக்கான கேம்ப் போடுறேனு கேட்கும்போது என்னால மறுக்க முடியல சிங்கம்... நீதான் முன்ன நின்ன கேம்ப்ல நடக்குற இடத்துல எந்த அசம்பாவிதமும் நடக்காம பார்த்துக்கிடணும்... திங்கட்கிழமை நடக்க போற கேம்ப்க்கு ஆதிபெருமாளும் கட்சி சார்பா வரான்... அவன்கிட்ட பார்த்து நடந்துக்கிடணும் நீ... அவசரப்பட்டு கையை நீட்டிறகூடாது... எலக்க்ஷன் டைம் வேணும்னே உன்கிட்ட வம்புக்கு வருவான் நீதான் சூதானமா நடந்துக்கணும்பா" என்று மகனுக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

"நான் பார்த்துக்குறேன்ப்பா... அவர் வம்பு பண்ணினா ஓரளவு பொறுத்துப் பார்ப்பேன்... எல்லை மீறினா நான் சும்மா கையை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டேனுங்கப்பா" என வெடித்து பேசினான் துரைசிங்கம்.

குமரன் காலேஜ் கிளம்பி வந்தவனிடம் “குமரா அடுத்தவாரம் காலேஜ்க்கு லீவு போட்டு அண்ணன் கல்யாண வேலையை பாரு” என்றவரிடம் “நான் எங்க ஹெச்.ஓ.டி. கிட்ட ஒரு வாரம் லீவுனு ஃபார்ம்ல கையெழுத்தே வாங்கிட்டேனுங்கப்பா” என்று அசடு வழிந்து சிரித்தான்.

துரைசிங்கமோ “கல்யாணத்துக்குனு லீவு போட்டுட்டு சும்மா ஜாலியா ஊரை சுத்தக்கூடாதுடா” என்றான் அதட்டலாகவே.

“ம்ம் சரிங்கண்ணா” என்றிருந்தானே தவிர எந்த வார்த்தையும் பேசவில்லை.

கேம்ப்பிற்கு பொன்வண்ணனும் ரதிதேவியும் ஒரே காரில் வந்திறங்கினர். தூரிகா கேம்ப் நடக்கும் இடத்தில் மருத்துவ உபகரணங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

துரைசிங்கம் கேம்ப் நடக்கும் இடத்தை மீசையை முறுக்கிக் கொண்டு கழுகாக கண்காணித்துக் கொண்டேயிருந்தான்.

துரைசிங்கத்தை பார்த்த பொன்வண்ணனோ 'ம்க்கும் தங்கச்சிக்கு மெய் பாதுகாவலன் வந்தாச்சுப்பா... இதுக்குனே உங்க முன்னால லிப்ஸ் அடிக்குறேன் பாருங்க சிங்கம்' என்று மௌனச்சிரிப்புடன் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

ரதிதேவியோ ரோஸ் வண்ணத்தில் சில்க் காட்டன் சேலையில் ஒற்றை ஃபிளீட்டில் மிடுக்காக பொன்வண்ணன் பக்கமிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாள்.

“டாக்டர் வந்தாச்சு” என்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான் துரைசிங்கம்...

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ரதி தேவியை கண்டதும் அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

‘இவளுக்கு அடக்கம் ஒடுக்கமே கிடையாதா’ என்று கோபத்தில் பல்லைக்கடித்தான்.

அவளுக்கு முன்பாக டேபிள் போட்டு இருந்தாலும் அவள் கால் மேல் போட்டு இருக்க அவளது வெள்ளை நிற கெண்டை கால் பளிச்சென்று தெரிந்தது.

‘ச்சே என்ன பொண்ணு இவ... பொது இடத்துல எப்படி உட்காரணும்னு கூட சொல்லி வளர்த்திருக்கமாட்டாங்களா... அதானே அப்பனை போல கிறுக்கு புத்திதானே இவளுக்கும் இருக்கும்’ என முகம் சுளித்து தலையை திருப்பிக்கொண்டான்.

ரதிதேவியோ அவள் முன்னே அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்ணிடம் "இது எத்தனையாவது மாசம் மா. கண்ணு வெள்ளையா கிடக்கு... உடம்பு மெலிஞ்சு இருக்கீங்க...” என்று அவளது கையை பிடித்து பார்த்து “இரத்தம் குறைவா இருக்கும் போல நல்ல ஃப்ரூட்ஸ், காய்கறிகள் சாப்பிடுங்க... சாப்பிடுவதையும் ஐந்து வேளையா பிரிச்சு சாப்பிடுங்க எமர்ஜென்சினா ஹாஸ்பிட்டலுக்கு வாங்க” என்று மாத்திரையும் எழுதிக்கொடுத்து அனுப்பினாள்.

பொன்வண்ணனும் ஒரு குழந்தையை செக் பண்ண குழந்தையோ ஊசி போடுறாங்களோவென்று பயத்தில் அழ ஆரம்பித்ததும்.குழந்தையை தூக்கி மடியில் வைத்து விளையாட்டு காட்டி நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து செக் பண்ணினான்.

துரைசிங்கமோ புறங்கையை கட்டிக்கொண்டு பொன்வண்ணனையேதான் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு சிறுவயது நினைவு வந்துவிட்டது.

'அத்தையும் தான் சிறு வயதில் அழுதால் இப்படித்தான் தூக்கிவைத்து கொஞ்சுவாளே... இவன் அத்தையை போல’ என்று இதழ்கள் விரித்துக்கொண்டான். அடுத்த நிமிடமே பொன்வண்ணன் தூரிகாவிடம் நடந்துக் கொண்டது நினைவில் வர முகத்தில் கோபமாக வைத்துக்கொண்டான்.

“குழந்தைக்கு நெஞ்சு சளி இருக்கும் போல.. சிரப் எழுதி தரேன் வாங்கிக்கொடுங்க” என்று மருந்தை எழுதிக்கொடுத்தான்.

பொன்வண்ணனின் கண்கள் ரதிதேவியின் பக்கம் நின்ற தூரிகாவின் மேல் படிந்தது.

“டேய் ஒழுங்கா வந்த வேலையை மட்டும் பாருங்கடா” என்று குரல் உயர்த்தினான் சிங்கம் பொன்வண்ணனை முறைத்தவாறே.

‘தங்கச்சியை வீட்டுக்குள்ளயே பூட்டி வச்சிக்க வேண்டியதுதானே! கண்ணுன்னு இருந்தா பார்க்கத்தான் செய்வேன்’ என்ற விதத்தில் துரைசிங்கத்தை பார்த்தான் பொன்வண்ணன்.

பொன்வண்ணனை நாக்கை கடித்து விரலை நீட்டி மிரட்டினான் துரைசிங்கம்.

அவனோ மென்சிரிப்புடன் தலையை திருப்பிக்கொண்டான்.

கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல், வயதான பெண்களும், நடுத்தர வயதுப் பெண்களும் ரதிதேவியிடம் ஆலோசனை கேட்டு வந்தனர்.

“டாக்டர் எங்கம்மாவுக்குகெல்லாம் 50 வயசு வரைக்கும் பீரியட்ஸ் வந்துச்சு... எனக்கு 42 வயது இப்பவோ பீரியட்ஸ் நின்னுடுச்சு... என்ன காரணமா இருக்கும் சொல்லுங்களேன்” என்று அவளிடம் நிறைய சந்தேகங்கள் கேட்டு இருந்தனர்.

அவளோ "அந்த காலத்துல எல்லாம் பெண்கள் சத்தான ஆகாரங்கள் கம்பு ராகினு சாப்பிட்டாங்க... இப்போ இருக்கவங்களுக்கு ரைஸ் அதிகமாக எடுத்துக்குறோம். நாமளும், இப்போ குதிரைவாலி, கருப்புகவுனி, நட்ஸ்னு எடுத்துக்கணும்... இப்போ எல்லாம் அவரசமா வேலைக்கு போகணும்னு இன்ஸ்டன்ட் ஃபுட் சாப்பிடுறோம். இது உடம்புக்கு கெடுதல் குக்கர் சாப்பாடு சாப்பிடக்கூடாது... பாத்திரத்துல வடிச்சு தான் சாப்பிடணும்" என்று அங்கே இருந்த பெண்களுக்கு பல அட்வைஸ் செய்துக் கொண்டிருந்தாள்.

“அட இந்த டாக்டர் புள்ள நல்ல கைராசிதான் போல... நாம கேட்குற கேள்விக்கு பட்டு பட்டுனு பதில் சொல்லுது... அதுவும் நல்ல குணமா பேசுதே! நாச்சியோட பேத்திக்கு பேசறதுக்கு சொல்லியா கொடுக்கணும்” மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லி தரணுமா என்ன? என்று அங்கேயிருந்த பெண்கள் குசுகுசுவென பேசிக்கொண்டனர்.

“அப்பனை போலவே மாயப் பேச்சு பேசியே மக்களை மயக்கப்பார்க்குறா ராங்கிகாரி..." என்று துரைசிங்கம் அவளை கரித்துக்கொண்டிருந்தவனின் கண்ணில் மரத்தின் மறைவில் இரண்டு காலேஜ் ஸ்டுடன்ஸ் ரதிதேவியை பார்த்து ஏதோ கிண்டல் செய்து சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டான்.

சத்தம்போடாமல் சென்றவன் அவர்கள் முதுகில் ஓங்கி குத்தியதும் “யாருடா அது?” என்று அவர்கள் திரும்பி பார்த்தவர்களுக்கு துரைசிங்கத்தை கண்டவுடன் பயத்தில் கைகால் வெடவெடவென ஆடியது.

“அ.அண்ணே அது” என்று அவனுங்களுக்கு பேச்சே வராமல் வாய் தந்தியடித்தது.

அவர்கள் கன்னத்தில் ரெண்டு அறை போட்டு “உங்க வீட்டுப் பொண்ணை இப்படிதான் கிண்டல் செய்து சிரிப்பீங்களாடா... இங்க இன்னும் ஐஞ்சு நிமிசம் நின்னிங்கனா அவ்ளோ தான்... தோலை உரிச்சு மரத்துல தோரணமா தொங்க விட்டுருவேன்” என்று பல்லைக்கடித்துக்கொண்டு மிரட்டவும்

துண்டை காணோம் துணியை காணோமென்று ஓடிவிட்டனர் அந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ்.

ரதிதேவியோ களைத்துபோய் விட்டாள். மதிய நேரமாக அவளுக்கு சோர்வாய் வந்தது. ‘இந்த ஊர் சனங்க என்னை கேள்வி கேட்டு சாகடிக்குறாங்க... நான் பணம் கொடுத்து கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன்... இவங்களுக்கு ஓசில மருத்துவம் பார்க்கவா... இந்த அப்பாவோட பேச்சு கேட்டு இங்க வந்து என்னோட எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டிருக்கேன்’ என்று நொந்துக் கொண்டாள் ரதி.

கூட்டம் கூடியதும் ரதிதேவியின் வெள்ளை நிற கெண்டைகால் தெரியாமல் மறைத்துக்கொண்டு நின்றிருந்தனர். இப்போது கூட்டம் குறையவும் பழையபடி அவளது கால்கள் அப்பட்டமாய் தெரிந்தது.

துரைசிங்கமோ அங்கே நின்ற பாட்டியிடம் ஏதோ சொல்ல... அவரோ ரதி தேவியின் பக்கம் சென்றவர் “கண்ணு கால் மேல் கால் போட்டு உட்காராதே... உன்னோட புடவை மேல ஏறி கெண்டை கால் தெரியுது பாரு... நாம அடுத்தவங்க கண்ணுக்கு வேடிக்கை பொருள் ஆகக்கூடாது” என்று அவர் நாசுக்காக சொல்லிவிட்டார்.

அவளோ “கால் வலிச்சுது பாட்டி அதான் கால் மேல கால் போட்டேன்... இப்போ போடலை” என்று சரியாய் வைத்தவள் கோபத்தை அடக்கிக்கொண்டு சிரித்தாள்.

துரைசிங்கமோ ரதிதேவியை பார்த்து ஏளனமாக சிரித்தான்.

‘இதுக்கு காரணகர்த்தா நீதானா... நீ சொல்லி நான் கேட்கறதா’ என்று மீண்டும் கால் மேல் கால் போட்டுக்கொண்டாள். ஆனால் புடவையை கால் தெரியாதவாறு மறைத்துக்கொண்டாள்.

‘என்னமோ பண்ணித்தொலை. புருசன் பார்க்க வேண்டிய இடத்தை பலபேருக்கு காட்சி பொருளா காட்டாம இருந்தா சரி’ என்று தோளை குலுக்கிக் கொண்டான் துரைசிங்கம்.

“அண்ணா எனக்கு வயிறு பசிக்குது. இப்படி மரத்தடியில உட்கார்ந்து மருத்துவம் பார்க்குறோம் இந்த ஊர்க்காரங்க ஒரு டீ கூட கொடுக்க மாட்டாங்களா!! நான்தான் பெரிய ஆளுன்னு சிலர் பேர் சட்டை காலரை தூக்கிவிட்டு திமிரா அலையுறாங்க” என்று சொல்லியவள் துரைசிங்கத்தை முறைத்தாள்.

“ரதி நாம கேம்ப் வந்திருக்கோம் யார்கிட்டயும் வம்பு பண்ணவேண்டாம் அமைதியா இரு! இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் எதுவும் கொடுக்கலைனா நான் போய் குடிக்க எதாவது வாங்கிட்டு வரேன்” என்று தங்கையை அடக்கிவிட்டான்.

பொன்வண்ணனோ நம்ம ஆள் எங்க என்று சுற்றிபார்த்தவன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டவன் “தூரிகா சிஸ்டர் இங்க வாங்க” என்று அவன் அசால்ட்டாய் கூப்பிட்டான்.

அவளோ துரைசிங்கம் நிற்கிறானோ என்று சுற்றி சுற்றிப் பார்த்தபடியே பொன்வண்ணன் பக்கம் சென்றாள் தூரிகா.

“என்ன உங்க ஊர்ல மெடிக்கல் கேம்ப் போட்டிருக்கோம் ஒரு காபி, டீ எதுவும் கொடுக்கமாட்டிங்களா... சும்மா வாயும் கையும் மட்டும் பேசினா போதாது... ஊருக்கு மருத்துவம் பார்க்க வந்தவங்களை கவனிக்கணும்” என்று ஏளனத்தோடு கேட்டதும்.

முருகன் கையில் இளநீரோடு நின்றிருந்தான் பொன்வண்ணன் முன்னே.

“ஓ! நான் கேட்டதுமே உங்க அண்ணா காதுல விழுந்துடுச்சு போல” என்று சிரித்தவன் இளநீரை வாங்கி “ரதி இந்தாடா நீதான் பசி தாங்கமாட்டியே” என்று தங்கைக்கு கொடுத்தான்.

அவளோ “இதுல எதாவது கலந்திருக்க போறாங்கண்ணா” என்றாள் சந்தேகப்புத்தியுடன்.

“டேய் ரதி மா துரைசிங்கம் கோபக்காரர்தான்... பொண்ணுக்கு மருந்து வச்சு கொடுக்கறளவு கெட்டவன் கிடையாது!! நீ நம்பிக் குடிக்கலாம்” என்றான் புன்னகையுடனே.

அவளோ ‘இந்தண்ணா எல்லாரையும் கண்மூடிக்கிட்டு நம்பிடுவாரு நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை’ என்று மனதில் நினைத்து இளநீரை வாங்கிக்குடித்தாள் ரதிதேவி.

முருகனே அடுத்த இளநீரை சீவிக்கொடுக்க பொன்வண்ணனோ “சார் தூரிகாவுக்கு கொடுங்க” என்று தன்னவளை பார்த்து கண்ணைச்சிமிட்டினான்.

அச்சோ இவரு இன்னிக்கு அடிவாங்காம போகமாட்டாரு போல என்று மனதில் அச்சப்பட்டு “நீங்க குடிங்க சார் நான் அப்புறம் குடிச்சுக்குறேன்” என்று அவள் மறுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

பொன்வண்ணனோ இவளை புரிஞ்சிக்வே முடியாது என்று இளநீரை குடித்து முடித்தான்.

மதியம் சாப்பிடும் நேரம் ஆதிபெருமாள் கார் வந்து நின்றது. இன்று அதிசயமாய் கோதையை அழைத்து வந்திருந்தார்.

அவரோ பிறந்த ஊருக்கு வெகு வருடங்கள் கழித்து போகிறோம் என்றதும் மனதில் சந்தோசத்துடன் கிளம்பினார்.

ஆதிபெருமாளோ “காருக்குள்ளயே உட்காரு கோதை” என்று அவளை காரை விட்டு இறங்காமல் செய்தார்.

கோதையோ அவர் பேச்சு கேட்காமல் காரை விட்டு வேகமாய் இறங்கி பொன்வண்ணன் பக்கம் வந்து உட்கார்ந்துக் கொண்டார்.

‘குடும்பமே மெடிக்கல் கேம்ப்பை வச்சு கூத்தடிக்க வந்துட்டாங்க' என்ற துரைசிங்கம் மீசை துடிக்க கோபப்பட்டான்.

தன் தாய் வீட்டு ஆளுங்க யாராவது கண்ணுக்கு தெரியுறாங்களானு சுற்றிப் பார்த்தார் கோதை.

துரைசிங்கமோ கோதை தன்னை பார்ப்பது தெரிந்து முகத்தை திருப்பிக்கொண்டான்.

பொன்வண்ணனோ “நீங்க ஏன்மா உங்களை மதிக்காத ஊருக்கு வந்தீங்க?” என்று தாயை திட்டினான்.

“டேய் உங்கப்பா ஏதோ ப்ளான் போட்டிருக்காருடா! போன்ல குசு குசுன்னு ரகசியம் பேசுறாரு... நான் இங்க இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்பாரு அதான் மெடிக்கல் கேம்ப்க்கு வரது போல வந்துட்டேன். நான் வளர்த்த பயல்தானே சிங்கம் குஞ்சு மிதிஞ்சு கோழி அடிப்படாது” என்று சிரித்துக் கொண்டார்.

ஆதிபெருமாள் ரதிதேவியை தனியாக அழைத்து “நான் சொன்னதை செய்துருடா... கொஞ்சம் கூட நாமதான் பண்ணினோம்னு தெரியக்கூடாது சரியா... நான் அவமானப்பட்டு ஓடினது போல ஐய்யனார் குடும்பம் மானம் கெட்டு நிற்கணும் நடு ஊருக்குள்ள... அதுவும் அந்த சிங்கத்தை என் காலுல மண்டியிட வைக்கணும்" என்றார் ஆத்திரத்துடன்.

“அந்த சிங்கத்தை அசிக்கப்பட்டு நிற்க வைப்பேன்ப்பா... நீங்க கவலைப்படாம ஒரு ஓரமாய் நடக்கறதை வேடிக்கை பாருங்க” என்று சிரித்தாள் பெண் நாகமாக.

மதியம் சாப்பிடுவதற்கென கேம்ப் டாக்டர்ஸ்க்கு ஒரு வீட்டில் விருந்து செய்ய சொல்லியிருந்தான் துரைசிங்கம்.

ஐய்யனார் கேம்ப் நடக்கும் இடத்திற்கு வரவில்லை. கட்டாயம் ஆதிபெருமாள் குடும்பத்தோடு வருவான் என்று தெரிந்தே அவர் வரவில்லை.

ஐய்யனார் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் ஆதிபெருமாள். வினை விதைத்தவன் வினையைதான் அறுக்கணும்...

கோதையை சாப்பிட அழைக்க "நான் இப்போதான் சாப்பிட்டு வந்தேன் நீ சாப்பிட்டு வா வண்ணா" என்றிருந்தார்.

ரதிதேவியும் தூரிகாவும் மட்டும் தாமதமாக சாப்பிடச் சென்றனர். பொன்வண்ணனோ சாப்பிட்டு வந்துவிட்டான்.

“அண்ணா நீங்களும் என்னோட சாப்பிட கம்பெனி கொடுங்களேன்” என்று கெஞ்சியதும்

“அதான் தூரிகா இருக்காங்கல்ல... அவங்க உனக்கு கம்பெனி கொடுப்பாங்க... என்ன தூரிகா என் தங்கச்சி கூட சாப்பிட போக மாட்டியா?” என்றான் கடவாயில் நாக்கை சுழட்டிக்கொண்டு.

“ஹான் போறேன் டாக்டர்” என்றாள் மெல்லிய குரலில்.

“அண்ணா தூரிகா என்கூட சரியா பேசகூட மாட்டா. நீங்களும் வாங்க” என்று அவனை கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்றாள் ரதிதேவி.

பொன்வண்ணனோ கோதை தனியாக இருப்பாரென்று சீக்கிரம் சாப்பிட்டு வந்தான். ஆனால் ரதிதேவி அவனை ப்ளான் செய்து கூட்டிச்சென்றாள்.

பொன்வண்ணனுக்கு போன் வர போனை எடுத்து வெளியேச் சென்றிருந்தான்.

தூரிகா குளியலறை சென்றதும் அவள் ஹாண்ட் பாக்கில் மறைத்து வைத்திருந்த உணர்வுகளை தூண்ட கூடிய போதை மருந்தை அங்கே வைத்திருந்த சூப்பில் கலந்து விட்டாள்..

'அண்ணா உன்னோட லவ் சக்ஸஸ் ஆகப்போகுது... பொண்ணு தரமாட்டேன்னு சொன்னாங்கல்ல... இப்ப அந்த கொழுப்பு பிடிச்ச துரைசிங்கமே என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கோடானு கெஞ்சி கேட்க போறான்... சாரி அண்ணா நீ என் மேல கோபப் படுவேன்னு தெரியும்... ஆனா நீ விரும்பிய தூரிகாவை உன்கூட இப்படி சேர்த்து வைக்கத்தான் இந்த காரியத்தை செய்யுறேன்... அப்பதான் அவங்க நம்ம வழிக்கு வருவாங்க... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடித்தாச்சு' என்று குள்ளநரித்தனமாய் தன் திட்டம் நிறைவேற போகிறதென சிரித்தாள் ரதி.

தூரிகா வந்ததும் “சாப்பிடு தூரி” என்றாள் குரூர சிரிப்பில்.

தூரிகாவோ “மேடம் எனக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கு நான் அசைவம் சாப்பிடக்கூடாது” என்று சைவ பிரியாணியை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஏய் நீ எந்த காலத்துல இருக்கே. நீ கறிக்குழம்பு சாப்பிடறது உன் வீட்டுக்கு தெரியவா போகுது. அதெல்லாம் சாப்பிடலாம் நீ சாப்பிடு” என்று அவளை கட்டாயப்படுத்தினாள்.


போன் பேசி முடித்து வந்து பொன்வண்ணனோ “தூரிகாவுக்கு பிடிக்கலைனா விட்டுடணும் ரதி... அவங்களை கம்பல் பண்ணாதே” என்று காட்டமாக சொல்லிவிட்டான்.
 
Status
Not open for further replies.
Top