ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7


தூரிகா திமிற திமிற அவளின் இதழில் மதுரசம் அருந்திக் கொண்டிருந்தான் பொன்வண்ணன். பெண்ணவளுக்கோ தனக்கு முத்தம் கொடுப்பவனை தடுக்க முடியவில்லையே என்று ஆற்றாமையும் அழுகையும் போட்டி போட்டுக்கொண்டு அவளது கண்ணில் கண்ணீர் ஆறாய் பெருகியது.

அவளது இதழில் இனிப்பு சுவை குறைந்து போய் உவர்ப்பு சுவை அவன் நாவில் உணர்ந்து தன் இதழிலிருந்து அவளது இதழை பிரியவே மனமில்லாமல் பிரிந்தவன் அவளது கண்ணீரை கண்டு மனம் கரைந்து நெற்றியில் முட்டி “ஏன்டி அதிகமாக வாய் பேசி என்னை இம்சை பண்ணுற!! இப்போ பாரு என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம முத்தம் கொடுக்க வேண்டியதாய் போச்சு.. சாரிடி லட்டு சும்மா சொல்லக்கூடாது!! உன் லிப்ஸ்ரொம்ப ஜாங்கிரி ஸ்வீட்டா இருக்கு " என அவளது குண்டு கன்னத்தில் வழியும் கண்ணீரை அவனது இதழால் துடைத்து விட்டான்.

“ஒரு பொண்ணோட இஷ்டம் இல்லாம முத்தம் கொடுக்கறது தப்புனு தோணலையா முட்டாள் டாக்டரே!” என அவளது இதழை துடைத்துக்கொண்டாள் .. அவனது முத்தம் பிடித்து இருந்தாலும் தன் விருப்பம் இல்லாமல் முத்தம் கொடுத்து விட்டானே என்று மனம் அலைப்புற்று அவனை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நான் முத்தம் கொடுத்தபோது நீ இஷ்டப்பட்டு ஏத்துக்கிட்டு என் முத்தத்துல மயங்கி தானே நின்னடி ” என்றான் அவனது கன்னத்தை தட்டிவிட்டு இதழ் வளைத்து சிரித்தான் பொன்வண்ணன்.

ஒரு பொண்ணுக்கு உணர்ச்சியை தூண்டிவிட்டு அதுல குளிர்காய்ச்சிருங்கீங்க! உங்கமேல எனக்கு டாக்டர்னு மரியாதை கூட போச்சு.. இனிமே இதுபோல என்கிட்ட பொறுக்கித்தனமா நடந்துக்கிட்டா என் பெரிய அண்ணாகிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க!” என்று கண்ணை உருட்டி விரலை நீட்டி எச்சரித்தவள் அறைகதவை திறந்து வெளியே போகும் முன் அவளை சடையை பிடித்து இழுத்து நிறுத்தினான் பொன்வண்ணன். தன்னை பொறுக்கி என்றதில் சீற்றம் கொண்டவனாக.

"என்னடி சொன்ன என்னை பார்த்தா பொறுக்கி போல தெரியுதா! நான் டீசன்டா உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்தான் கேட்டேன். நீ தானே அண்ணாகிட்ட கேட்கணும். ஆட்டுக்குட்டிகிட்ட கேட்கணும்னு சொன்ன! நானும் உன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து உன் அண்ணாகிட்ட உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கொடுங்கனு கேட்டேன். ஆனா உன் அண்ணன் நான் என்னமோ நான் கொலை குத்தம் பண்ணிட்டது போல கையை மடக்கி என்னை அடிக்க வந்துட்டாரு. துரைசிங்கம்னு பேரு வச்சா சிங்கம்னு நினைப்பு உங்கண்ணாவுக்கு.. எனக்கு அப்போ கோபம் வந்துச்சுதான். அவரை திருப்பி அடிக்கிற அளவு என் உடம்புலயும் தெம்பு இருக்குடி என் மாமன் மகளே! என்ன மாமன் மச்சான் குள்ள அடிதடி வேணாம்னு எனக்குள்ள இருக்க கோபத்தை அடக்கிகிட்டு நிற்க காரணமே உங்க அப்பா என்கிட்ட பொறுமையா பேசினது தான். அவர் சொல்லுக்கு மரியாதை கொடுத்து உங்க பொண்ணுகூட பேசமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா என்னால உன்னை மறக்க முடியலையே டி. நீ என் கண்ணுக்குள் தூசு போல உறுத்துறடி! உன்னை பார்த்தாவே எனக்கு கிறக்கமாவே இருக்கு எனக்கு நீ வேணும்டி லட்டு! மதுரை வீரன் பொம்மியை தூக்கினது போல உன்னை கட்டம் கட்டி தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன் என் ஜிலேபி " என்று கண்ணை சிமிட்டி அவன் மனதில் உள்ள காதலை அவளிடம் கொட்டிவிட்டான் பொன்வண்ணன்.

அவன் காதலை சொன்ன விதத்தில் உறைந்து நின்றவளோ “உயிரை காப்பாத்துற டாக்டர் இப்படியா கீழ் தரமா ஒரு பொண்ணுகிட்ட பேசுவாங்க. நீங்க நினைக்கறது கனவுல கூட நடக்காது டாக்டர்.. அதுமட்டுமல்ல எங்கண்ணா நீங்க என்கழுத்துல தாலி கட்ட ஒரு போதும் அனுமதிக்க மாட்டாரு. எங்க குடும்பத்துக்கு உங்க குடும்பத்துல உள்ள ஒருத்தரை கூட பிடிக்காது தெரியுமா. உங்க சொந்தம் ஒத்து வராதுனுதானே எங்க வீட்ல உங்க குடும்பத்தை தள்ளி வச்சிருக்காங்க. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா மறுபடியும் எங்க குடும்பம் நிம்மதி இழக்கும் புரிஞ்சுக்கோங்க டாக்டர்.. உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அண்ட் என் மனசுலயும் நீங்க இல்ல போதுமா.. உங்க சொந்தத்துல வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றவளுக்கு நெஞ்சு வேகமாக துடித்தது. கண்ணீர் கடகடவென முத்துக்களாக உதிர்ந்தது. காரணம் அவளுமே அவனை விரும்புகிறாளே. அவன் எப்படி தன் மனதுக்குள் வந்தான் என்றே அவளுக்கு புரியாத புதிராக இருந்தது.. அத்தை மகன் என்ற உறவா! இல்லை மருத்துவமனையில் நோயாளிகளிடம் குணமாக பேசுகிறானே அதுவா! இல்லை அவனின் அழகா! இல்லை அவனின் படிப்பா! தனக்கு முத்தம் கொடுத்ததால் காதல் வந்ததா.. ஒரு நாளில் காதல் வருமா என்றால் அது அவளுக்கே தெரியவில்லை. அவள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தாள் பெண்ணவள்.

அவள் மூச்சு வாங்கி பேசியதை எல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் “நான் கட்டுற தாலி தான் உன் கழுத்துல ஏறும்.. வேற எவனையும் உன் கழுத்துல தாலி கட்ட விடமாட்டேன் பார்த்துக்கோ. ஏன் உன் அண்ணன் கருப்பசாமியா வந்து என்னை தடுத்தாலும் உன் கழுத்துல தாலி கட்டுவேன் பார்த்துக்கோடி” என்றான் புருவம் நெரித்து அதிரடி டாக்டராக.

“நீங்க இவ்ளோ தூரம் என்கிட்ட பேசறதே வேஸ்ட் டாக்டர், எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்று தலையை இரு பக்கமும் ஆட்டியவள் அறைகதவை திறந்து வேகமாக ஓடியவள் குமரனுக்கு போன் போட்டாள்.

தன் ஹேன் பேக்கேலிருந்து போன் எடுத்து “அண்ணா என் ட்யூட்டி முடிஞ்சுருச்சு கூட்டிட்டு போங்கண்ணா” என பதட்டத்துடனே பேசினாள்.

“பாப்பா என்னடா ஆச்சு! ஏன் குரல் பயந்த மாதிரி பேசுற? அந்த டாக்டர் ஏதாச்சும் சொன்னானா... இல்ல அண்ணா கூட சண்டை போட்டாளே ரதி அவ ஏதாச்சும் உன்னை திட்டினாளா?” தங்கையின் குரல் வேறு பாட்டிலேயே குமரன் இங்கே துடித்தான்.

“அ.அது அவங்கெல்லாம் ஒண்ணும் சொல்லலை அண்ணா! பர்ஸ்ட் நாள் ட்யூட்டி டயர்டு அதான்” என்று சமாளித்தாள்.

“சரிடா பாப்பா அண்ணா வந்துடறேன் வெயிட் பண்ணு!” என்றவனோ பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

துரைசிங்கம் ஐய்யனாரை வீட்டில் விட்டவன் வாசலில் குமரனின் பைக் இல்லாமல் இருக்க குமரனுக்கு போன் போட்டான். வண்டியை ஓட்டிக்கொண்டே போனை காதில் வைத்து “சொல்லுங்கண்ணா பாப்பாவை கூட்டிட்டு வர போய்ட்டிருக்கேன். ஏதாவது பேசணுமா!” என்று கழுத்தை சாய்த்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

“ஃபர்ஸ்ட் பைக்கை நிறுத்திட்டு பேசுடா!” என்று அதட்டல் போட்டவுடன் “இதோ ஆஃப் பண்ணிட்டேனுங்கண்ணா” என்று அந்த இடத்திலேயே பைக்கை நிறுத்தினான்.

“பாப்பாவை நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீ வீட்டுக்கு கிளம்பி வந்துடு. நாளைக்கு எக்ஸாம் இருக்குல படிக்கற வேலையை பாரு. ஹான் காலையில தூரிகாவை விடும்போது அந்த டாக்டர் கண்ணுல பட்டானா?” என்றான் நெற்றியை தேய்த்துக் கொண்டே.

பொன்வண்ணனை பார்த்ததும் அவன் தன்னிடம் கேலியாக பேசியதையும் அண்ணாவிடம் சொன்னால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகுமென்று "அ.அது இல்லைங்கண்ணா! அவன் என் கண்ணுல படலை” என்று மழுப்பிச் சொல்லி விட்டான் குமரன்.

“என்னடா வாய் குளறுது! நாளைக்கு பாப்பாகிட்ட அவன் வம்பு பண்ணினான்னு தெரிஞ்சுது தோளை உறிச்சுப்போடுவேன்!! என்னை பத்தி தெரியும்ல” உறுமலாக பேசினான் துரைசிங்கம்.

“நான் நிஜமாலும்தானுங்கண்ணா சொல்லுறேன்!” என்று அழுத்தி சொன்னான் இப்போது.

“ம்ம் நீ வீட்டுக்கு வந்துடு.. நான் போய் பாப்பாவை அழைச்சிட்டு வரேன்! சும்மா அங்க இங்கனு சுத்தாம வீட்டுக்கு நேரமே வந்து சேரணும்” என்று எச்சரிக்கை விடுத்து தான் போனை வைத்தான் துரைசிங்கம்.

“அப்பாடா ஊப்” என்று இதழை குவித்து ஊதிக்கொண்டான் குமரன்.

பொன்வண்ணனோ “கொஞ்சம் ஓவரா அழுக வச்சிட்டோம்னு நினைக்குறேன்! அழுதிட்டே போறா” என்று மனம் கேட்காமல் நெஞ்சை தடவிக்கொண்டே அவனது அறையை விட்டு வேகமாக வெளியே வந்தவன் மனதில் "அவ கண்ணுல தண்ணி வந்தா நமக்கு நெஞ்சுக்குள்ள வலிக்குது போல இருக்குப்பா! அட்லீஸ்ட் சமாதானப்படுத்தி அனுப்பிச்சிருக்கலாம்.. சரி இப்ப என்ன அவ எப்படியும் வெளியேதான் வெயிட் பண்ணிட்டிருப்பா.. அந்த மீசை மீசைக்காரனுங்க வரதுக்குள்ள என் ஜிலேபியை பிடிச்சு சமாதானப்படுத்துவோம்" என்று ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேச் சென்றவன் கன்னத்தை தேய்த்து கொண்டு தன்னவள் எங்கே நிற்கிறாள் என்று கண்களால் தேடினான்.

தூரிகாவோ தான் அழுதது யாருக்கும் தெரியக்கூடாதென வாட்டர் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை கொண்டு முகத்தை அடித்துக்கழுவிக் கொண்டிருந்தாள்.

‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் சோதனையா கொடுக்கற நான் வார வார வெள்ளிக்கிழமை விளக்கு போடுறேனே! இந்த முரட்டு டாக்டர் லிப்ஸ் வீங்குற அளவுக்கு கிஸ் அடிச்சிருக்கான். இவனையெல்லாம் சிங்கம் அண்ணாகிட்ட சொல்லி ரெண்டு கன்னத்துலயும் லெப்ட் அண்ட் ரைட் அடி வாங்க வைக்கணும்... அப்போதான் எனக்கு ஆத்திரம் தீரும்’ என்று புலம்பிக்கொண்டிருந்தவள் முகம் கழுவி விட்டு திரும்ப அவள் முன்னா ல் கையில் கோட்டுடன் நின்றிருந்தான் அவளின் அத்தை மகன்.

அவனை பார்த்ததும் அவளது கண்கள் சாசர் போல அகல விரிந்தது. "இங்க எதுக்கு வந்தீங்க ஒரு நர்ஸ் பக்கம் டாக்டர் நிற்கறதை பார்த்தா தப்பா நினைக்கமாட்டாங்களா! அதுவும் இருட்டு கட்டிருச்சு என் பக்கம் நிற்காதீங்க. அண்ணன் வர நேரமாயிருச்சு கிளம்புங்க " என்று எரிந்து விழுந்து அவனை அனுப்புவதிலேயே குறியாய் இருந்தாள் அவள்.

“உன் அண்ணன்கிட்ட அடி வாங்கினாலும் பரவால.. உனக்கு முத்தம் கொடுப்பேன்டி! அடி வாங்குறது பார்த்தா ஸ்வீட் கிஸ் கிடைக்குமா என் மாமன் பெத்த மல்லிகையே!" என்றான் கன்னத்தை தேய்த்த படியே ராகமாக.

அவளுக்கோ அவனது குறும்பு தனமாக பேசியது அவளுக்கு ஆத்திரம் வந்தது. அவனது தலையில் நங்கென்று கொட்டு வைக்கணும் போலவே தோன்றியது.. “உங்களுக்கு சூடு சுரணை இருந்தா என்கிட்ட பேசாதீங்க ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டவளின் கையை பிடித்தான் பொன்வண்ணன்.

“ச்சே கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை டாக்டர்” என்று அவனது கையை உதறிக் கொண்டு ஓட அவனோ “ஏய் நில்லுடி” என்று அவளது தோள்பட்டையை பிடிக்க அவள் பின் குத்தியிருந்த ஷால் கழண்டு அவன் கையோடு வந்தது.

சரியாக துரைசிங்கத்தின் கார் தூரிகாவின் முன்னால் நின்றது. அவளுக்கோ மூச்சே நின்றுவிட்டது. நெஞ்சில் கையை வைத்துக்கொண்டாள். கால்கள் நடுங்கியது. அவள் போட்டிருந்த ஷால் பொண்வண்ணனின் கையில் இருந்ததையும் பார்த்துவிட்டான் துரைசிங்கம். சுட்டெரிக்கும் சூரியனை போல சிவந்து போனது அவன் கண்கள்...

காரை விட்டு இறங்கியவனோ வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கை வரைக்கும் சட்டையை ஏத்திவிட்டு மீசையை முறுக்கிய படி பொன்வண்ணன் கையிலிருந்த ஷாலை வெடுக்கென்று வாங்கியவன் பயந்து கைகள் நடுங்கிக்கொண்டிருந்த தங்கையிடம் ஷாலை கொடுத்து “காருக்குள்ள போ” என்று கண்களை உருட்டி அதட்டினான்.

“அ.அண்ணா” என்று அவள் பேச ஆரம்பிக்கும்முன் “ம்ம் உன்னை காருக்குள்ள உட்காரச்சொன்னேன் பாப்பா ” என்ற துரை சிங்கம் கர்ஜித்ததில் பயந்து போய் காருக்குள் ஏறி உட்கார்ந்து வாயை பொத்திக்கொண்டு அழுக ஆரம்பித்தாள் தூரிகா...

பொன்வண்ணனோ தடுமாற்றம் இல்லாமல் தான் நின்றிருந்தான். ஆனால் துரைசிங்கம் தன் முன்னே வந்து நின்ற தோரணை அவனுக்குள் கிலியை உண்டு பண்ணியதென்னவோ உண்மைதான்.

பொன்வண்ணன் முன்னே வந்து நின்ற துரைசிங்கமோ “நீயெல்லாம் சோத்துல உப்பு போட்டுதானே திங்கற! ஒரு தடவை சொன்னா உன் மரமண்டையில ஏறாதாடா! இல்ல நீயும் உங்கப்பனாட்டம் பொம்பளை பொறுக்கிதானோ! உன்னை நம்பி எப்படிடா இந்த ஊரு பொண்ணுங்க வைத்தியம் பார்க்க வரமுடியும்!” என்று பொன்வண்ணனின் உயரத்திற்கு மேல் நின்ற துரைசிங்கமோ அவனது சட்டையை கொத்தாக பிடித்துவிட்டான்.

பொன்வண்ணனுக்கு தன்னை பொறுக்கி என்றதில் சுரென்று உச்சியில் கோபம் எறியவனாக “யாரை பார்த்து பொறுக்கினு சொன்னீங்க! நான் இந்த ஹாஸ்பிட்டல பேமஸ் பீடியாட்ரிக் டாக்டர்! என்னை நம்பி தினமும் நிறைய பேர் வராங்க. மரியாதையா என் சட்டையிலிருந்து கையை எடுங்க துரைசிங்கம்” என்றான் பற்களை கடித்துக்கொண்டே.

“நான் உனக்கு மரியாதை கொடுக்கணுமாடா! நீ டாக்டராக இருக்க கொஞ்சம் நல்லவனா இருப்பேனு நினைச்சேன். ஆனா நீயும் உன் அப்பனை போலதான்னு தோல் உரிச்சு காட்டிட்ட! எப்படிடா அடுத்தவன் வீட்டுப் பொண்ணுங்க மேல கையை வைக்க தோணுது.. உன் வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கால்ல! அவளை நடுத்தெருவுல வச்சி நான் தொட்டு காட்டட்டுமா?” என ஏளனமாக இதழ் வளைத்ததும்

“துரைசிங்கம் வார்த்தை தடிச்சு பேசுறீங்க! மைண்ட் இட்! நான் உங்க தங்கச்சியை தப்பான எண்ணத்தோட தொடல! அண்ட் எங்கப்பா எங்க அம்மாவை லவ் பண்ணித்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. எங்க அப்பா ஒண்ணும் பொம்பளை பொறுக்கி கிடையாது." தன் அப்பாவை ஒருத்தன் பழி சுமத்துவது அவனுக்கு பிடிக்கவே இல்லை! சீற்றமாக சீறினான் பொன்வண்ணன்

அப்போ என் தங்கச்சி மேல எப்படி கையை வைச்ச சரியான பதில் சொல்லுடா என்றான் பற்களை நறநறவெனு கடித்து கொண்டு

"உங்க தங்கச்சி கழுத்தில் இருந்த ஷாலை நான் வேணும்னு பறிக்கலை அவ கழுத்துல வண்டு உட்கார்ந்துச்சு. அந்த வண்டு கடிச்சா டிடி போடணும். அதை தட்டிவிட போகும் போது கை தவறி ஷாலை இழுத்துட்டேன்! அவ்ளோதான் நான் ஒண்ணும் பொம்பளை பொறுக்கி கிடையாது” என்றான் தன் சட்டையில் கைவைத்திருந்த துரைசிங்கத்தின் கையை எடுக்க பார்த்தான்.

அவனோ சட்டையை விடாமல் இறுக்கி பிடித்திருந்தான்! துரைசிங்கத்தின் கையை எடுக்க முடியவில்லை பொன்வண்ணனால்.

காருக்குள் உட்கார்ந்திருந்த தூரிகாவோ ‘நான் சொன்னேன்ல இந்த டாக்டர் கேட்டானா! இப்போ நல்லா அடி வாங்கட்டும் அப்போதான் புத்தி வரும்! என் பக்கம் தலை வச்சுகூட படுக்க மாட்டாரு!’ என்று நினைத்தாலும் அண்ணா கோபத்துல எதாவது அவரை செய்துடுவாரோ என்ற அச்சம் கொண்டவளுக்கு அவள் உடல் முழுவதும் நடுங்கியது

“நான் சத்தம் போட்டு சொல்லுவேன். நீ பொம்பளை பொறுக்கிதான் டா. என் தங்கச்சியோட உதடு ஏன் வீங்கியிருக்கு! நீ என் தங்கச்சியை ஒண்ணும் பண்ணலைனு சொன்னா நான் நம்பிடுவேனா! என்னை பார்த்தா சொம்ப பயலை போல தெரியுதா! நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டர்டா எச்சி…” என்று கெட்டவார்த்தையில் பொன்வண்ணனை வார்த்தையால் கடித்து குதறினான் துரைசிங்கம்.

ஒரு நிமிடம் கண்ணை மூடித்திறந்தவனோ “தூரிகா எனக்கு உரிமை பட்ட பொண்ணு தானே அதான் முத்தம் கொடுத்தேன்!” என்று அவன் அசால்ட்டாய் சொன்னதும் துரைசிங்கத்திற்கு நாடி நரம்பெல்லாம் கோபத்தில் முறுக்கேறியது.

“என்னடா சொன்ன யாருக்கு யார்டா உரிமை பட்டவ! உங்க உறவு முறையை வெட்டி விட்டு பல வருசம் ஆச்சு. அப்படியே உறவு முறை இருந்தாலும் அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுப்பியாடா பொறுக்கி. நான் பரிசம் போட்ட பொண்ணை இன்னிக்கு வரைக்கும் ஒரு பார்வை தப்பா பார்த்ததில்லை. ஆனா நீ யோ படிக்க வந்து புள்ளகிட்ட உன் பொறுக்கி தனத்தை காட்டியிருக்க. உனக்கு உடம்புல எவ்ளோ கொழுப்பு கட்டி இருக்கணும்!” என நாக்கை கடித்து சாமி வந்தவனை போல சட்டையை விட்டு ஓங்கி அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து விட்டான் துரைசிங்கம். அவனுக்கு தங்கையை இப்படி செய்து விட்டானே என்ற ஆத்திரத்தில் பொது இடம் என்று கூட பார்க்காமல் நடந்துக் கொண்டான்.

அவர்கள் மூவரும் நின்றது டாக்டர்கள் கார் பார்க்கிங் ஏரியாவாக இருக்கவும் ட்யூட்டி முடிந்து டாக்டர்கள் சென்று விட்ட நிலையில் இருக்க அங்கே அவர்களை யாரும் கவனிக்கவும் முடியாமல் போனது.

இதற்குமேல் காருக்குள் உட்கார்ந்திருக்க தூரிகாவால் முடியவில்லை. காரிலிருந்து இறங்கி ஓடிவந்தவள் “அண்ணா டாக்டரை விட்டிருங்க! நான் இனிமே இந்த ஹாஸ்பிட்டலுக்கு இன்டன்ஷிப் வரலைங்க அண்ணா.. நான் வந்தாதானே இவரு என்னை பார்ப்பாரு. எல்லா வம்பும் வரும். எதுக்கு பிரச்சனை வாங்க அண்ணா போகலாம்” என்று அடியை வாங்கிக்கொண்டு மரம் போல நிற்பவனை பார்த்தவள் இது உனக்கு தேவையா என்று அவனை முறைத்து பார்த்தாள். அவனோ உன்னை விடமாட்டேன் என்ற விதத்தில் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இந்த கேடு கெட்ட நாய்க்கு பயந்து நீ இன்டன்ஷிப் முடிக்காம விடணுமா பாப்பா! நாளைக்கும் இந்த ஹாஸ்பிட்டல் ட்யூட்டிக்கு வர... கண்ட நாய்களுக்கெல்லாம் பயந்து வீட்டுக்குள்ள இருந்தா நம்ம பரம்பரை மதிப்பு என்னவாவது. இவன் நல்ல சூடு சுரணை இருக்கவனா இருந்தா உன்னை தொடமாட்டான்... அப்படி மீறி தொட்டான்னா அடுத்த நிமிஷம் அவன் உடம்புல கை இருக்காது” என்று துரைசிங்கம் வெறி பிடித்த வேங்கை யை போல பேசுவதையெல்லாம் கேட்டு பல்லை கடித்துக்கொண்டு, கைமுஷ்டியை இறுக்கிக்கொண்டு கால்களை அழுந்த பூமியில் பதித்து நின்றிருந்தான் பொன்வண்ணன்.

“வாங்கண்ணா போகலாம்” என்று துரைசிங்கத்தின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துக் கொண்டு காரில் ஏறினாள்.

பொன்வண்ணனோ "தாலினு ஒன்னு கட்டினா உன் தங்கச்சி கழுத்துல தான் சிங்கம்!! உன் கண்ணு முன்னாடி உங்க தங்கச்சிக்கு முத்தம் கொடுப்பேன் அதையும் நீ பார்க்கத்தான் போற " என்றான் இதழ் வளைப்பு சிரிப்புடன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 8


பொன்வண்ணன் ஹாஸ்பிட்டலிலிருந்து வீட்டுக்குச் சென்றதும் குளித்து விட்டு வந்து தலையை துவட்டி விட்டு கண்ணாடி முன்னே நின்றவன் கன்னம் சிவந்திருப்பதை கண்டு விரலால் கன்னத்தை வருடிக்கொண்டு கண்ணை இறுக மூடித் திறந்தான். தன்னவளுக்காக கன்னத்தில் அடிவாங்கியிருந்தாலும் துரைசிங்கம் அடித்தது அவன் மனதில் நெருடலாகத்தான் நெருஞ்சி முள்ளாய் அழுந்தியது.

கன்னத்தை வருடிக்கொண்டே "வெறி பிடிச்சவன் போல அடிச்சு இருக்கானே இந்த துரைசிங்கம்! எங்க குடும்பத்து மேல அப்படி என்ன கோபம்..? எங்க அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது பெரிய கொலை குத்தமா என்ன? எங்களை அந்த ஊருக்குள்ள விடாம இருக்காங்களே... ஒருவேளை அப்பா அடிக்கடி அம்மாகிட்ட எப்பவும் உன்னால தான்டி எல்லாம் என்று அம்மாகிட்ட சண்டை போடுறாரே! ஏதோ ஐய்யனார் அங்கிள்க்கு பெரிய துரோகத்தை பண்ணியிருக்கணும் அப்பா... இல்லைனா ஏன் எங்களை அம்மா பிறந்த ஊருக்குள்ள விடாம இருக்கணும்... அம்மாகிட்ட கேட்டாலும் அப்போ நடந்த முழு உண்மையை சொல்லமாட்டாங்களே..." என்ற அங்கலாய்ப்புடன் மனதில் புழுங்கிக் கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

ஐய்யனாரின் குடும்பத்துக்கு செய்த நம்பிக்கை துரோகம் தன் குழந்தைகளுக்கு தெரியக்கூடாதென பொன்வண்ணனையும், ரதிதேவியையும் சிறு வயதிலேயே லண்டன் அனுப்பிவிட்டார் ஆதிபெருமாள்.

பொன்வண்ணன் ஊருக்கு வரும் போதெல்லாம் ஆதிபெருமாள் தங்களது வயற்காட்டிற்கு வரும் வேலை ஆட்களுக்கு குறைந்த கூலியை கொடுப்பது... அவர்களை அதட்டி அதிக நேரம் வேலை வாங்குவதுமாய் நாயை விட கேவலமாக நடத்துவதும் அவனது நண்பர்கள் மூலம் தந்தை செய்யும் அழிச்சாட்டியங்களை பற்றி அவன் காதுக்கு வந்துக் கொண்டுதான் இருந்தது.

வீட்டுக்கு வெளியே ஒருவன் அலறும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தான் பொன்வண்ணன்.

ஆதிபெருமாள் ஒருவனை கட்டி வைத்து அடித்துக்கொண்டிருந்தார்.

அவனோ “ஐயா என்னை விட்டுருங்க என்னால அடி தாங்க முடியலை” என்று கதறிக்கொண்டிருந்தான்.

“டேய் என்ன தைரியம் இருந்தா... என்னோட ஊருக்குள்ள குடியிருந்துட்டு என்னோட பரம எதிரி அந்த ஐய்யனார் தோட்டத்துக்கு வேலைக்கு போயிருப்ப” என்று அந்த தொழிலாளியை ஆக்ரோசத்துடன் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தார் ஆதிபெருமாள்.

பொன்வண்ணனோ டீசர்ட் ட்ராக் பேண்ட் எடுத்து அவசரமாக போட்டு ஆதிபெருமாள் இருந்த இடத்திற்கு வந்தவன் “ப்பா நிறுத்துங்க எதுக்கு அவரை மாட்டை போட்டு அடிக்கறது போல அடிக்குறீங்க! அவரும் மனுசன்தானே... ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமா நடந்துக்குறீங்க... அவங்க எந்த தோட்டத்துக்கு வேலைக்கு போகணும்னு விருப்பமோ அங்கே போகட்டும்... உங்களுக்கு அவங்களை என்னோட தோட்டத்துக்குதான் வேலைக்கு வரணும்னு சொல்றதுக்கு அதிகாரம் கிடையாது...” என்று ஆதிபெருமாளின் செயலில் ஆத்திரம் அடைந்தவனாக சீற்றமாகவே பேசினான்.

ஆதிபெருமாளோ “நீ இந்த விசயத்துல தலையிடாத பொன்வண்ணா... எனக்கு ஆர்டர் போடற அளவு நீ இன்னும் வளரலைப்பா” என்றார் அடக்கப்பட்ட கோபத்துடனே!

“நீங்களெல்லாம் மனுச ஜென்மமே கிடையாது” என்று கோபத்தில் கத்தியவன் அடிவாங்கிய ஆளை பார்த்து “இப்படி வாங்க அண்ணா ரத்தம் வர காயத்துக்கு மருந்து போடணும்” என்று அவரது கையை பிடிக்க... அவரோ “சின்ன ஐயா என் கையை தொடாதீங்க” என்று பதட்டத்துடன் அவனது கையை விலக்கிவிட்டார்.

பொன்வண்ணனோ இதற்கெல்லாம் காரண கர்த்தாவான தந்தையை முறைத்துவிட்டு அந்த தொழிலாளியின் கையை பிடித்து தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

வீட்டுக்குள் நுழையும் முன் “தம்பி நான் வெளியே நிற்குறேனே” என்று அவர் தயக்கம் காட்டினார் ஆதி பெருமாளுக்கு பயந்து.

“நீங்க இப்படி தாழ்வுமனப்பான்மையோட இருக்க போய் எங்க அப்பா போல அதிகாரவர்க்கத்துல இருக்கவங்க... இன்னும் திருந்தாம சண்டித்தனத்தோடு அலையுறாங்க” என்று தந்தையையும் திட்டியவன் “இங்கயே உட்காருங்க நான் பர்ஸ்ட்எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வரேன்” என்றவன் எதிரே வந்த கோதையிடம் “அம்மா வெளியே இருக்கவருக்கு குடிக்க எதாவது கொடுங்க மயங்கிட போறாரு” என்று அடிவாங்கியவரின் மேல் கரிசனத்தோடு பேசி அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

கோதையோ மகனின் முகத்தை உற்றுப்பார்த்தவர் ‘என்ன இவன் கன்னம் சிவந்து போயிருக்கு!’ என்று சிறு கலக்கத்தோடு சமையல்கட்டுக்குள் சென்று கையில் மோருடன் வெளியே வந்தவர் அங்கே களைப்பாக உட்கார்ந்திருந்த தொழிலாளியிடம் “இந்தாங்க மோரை குடிங்க... கொஞ்சம் உடம்புக்கு தெம்பா இருக்கும்” என்று அவரிடம் மோர் டம்ளரை நீட்டினார் கோதை.

“ஏய் கோதை! அந்த பஞ்ச பரதேசிக்கு நம்ம வீட்டு டம்ளர்ல மோர் குடுக்குறியா?” என்று ஆவேசமாக கத்திக்கொண்டு வந்தார் ஆதிபெருமாள்.

ஆதிபெருமாள் கோதையை திட்டுவதை கண்டு என்னால பெரியம்மா ஏன் வீணா திட்டு வாங்கணும் என்று கவலைப்பட்டவர் “ம்மா எனக்கு மோர் வேண்டாம்” என்று அந்த தொழிலாளி சோர்வாக இருக்க தூணில் சாய்ந்து உட்கார்ந்தார்.

ஆதிபெருமாளோ “இவனுங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்... நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்ச கதையாகிடும்! இவன் கெட்ட கேட்டுக்கு மோர் கொடுக்கணுமா! போடி உள்ளே” என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து கோதையை விரட்டிக்கொண்டிருந்தார்.

“ஐயா அம்மாவை திட்டாதீங்க நான் இதோ கிளம்பிடறேன்” என்ற அவர் தட்டு தடுமாறி எழுந்திருக்கும் நேரம் சரியாக பர்ஸ்ட் எய்ட் பாக்ஸுடன் வெளியே வந்த பொன்வண்ணனோ “அண்ணா உட்காருங்க காயத்துல இரத்தம் வருது பாருங்க” என்று அவரிடம் குணமாக பேசி அவரது கையை பிடித்து ஆதிபெருமாள் உட்காரும் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டான் பொன்வண்ணன்.

“டேய் வண்ணா என்னடா பண்ணுற..? நான் உட்காருற நாற்காலியில போயும் போயும் நம்ம வீட்டு வேலைக்காரனை உட்கார வைக்குற என்னோட மரியாதை என்னடா ஆகறது” என்று ஏகத்துக்கும் எகிறி குதித்தார் ஆதிபெருமாள்.

அவனோ தந்தை பேசுவதை சட்டை செய்யாமல் கோதை கையில் வைத்திருந்த மோர் டம்ளரை வாங்கி அடிப்பட்ட தொழிலாளியை குடிக்க சொல்ல அவரோ ஆதிபெருமாளை பார்த்துக் கொண்டே தயங்கிய படியே மோரை குடித்தார்.

அவர் மோர் குடித்ததும் அவரது காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

“பாருடி உன் பிள்ளையை நான் சொல்றதை கொஞ்ச கூட காதுகொடுத்து கேட்குறானா!” என மகன் மேல் இருக்கும் கோபத்தை கோதையிடம் காட்டினார்.

கோதையோ “நீங்க உங்களுக்கு கீழ வேலை செய்யும் ஆட்களை அடிச்சு கொடுமைபடுத்திய பாவத்துக்கு நம்ம மகன் புண்ணியம் தேடுறான்... அவனை திட்டாம இருங்க... நான் இதுல தலையிட மாட்டேன் நீங்களே வண்ணன்கிட்ட பேசிக்கோங்க" என்று அந்த தொழிலாளி குடித்த மோர் டம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளேச் சென்றார் கோதை.

“ஏய் அந்த பரதேசி குடிச்ச டம்ளரை வீட்டுக்குள்ள கொண்டு போகாதே! மீசை முளைச்ச மகன் இருக்கான்ங்குற தைரியத்துல என்கிட்ட பேசிட்டு போறியாடி” என்று பேசியதெல்லாம் காற்றோடு கரைந்து போனது.

“ம்ம் இந்த வீட்ல என் பேச்சை மதிக்க யாரு இருக்காங்க” என்று மூச்சு வாங்க பேசியவர் அங்கே நின்ற தன் ஆளிடம் “நான் உட்கார புது நாற்காலி வேணும்... ஆசாரிகிட்ட சொல்லி பண்ணச் சொல்லிடு” என்று தன் பேச்சை காது கொடுத்து கேட்காமல் இருந்த மகனை பார்த்து கறுவிக் கொண்டுச் சென்றார் ஆதி பெருமாள்.

‘நீ சொல்றதை நான் கேட்கணுமா’ என்ற இறுமாப்போடு காயத்துக்கு மருந்திட்டு முடித்தவன் இன்பெக்ஷன் ஆகாமல் இருக்க ஊசியும் போட்டுவிட்டு “ஒரு வாரத்துக்கு மாத்திரை எழுதியிருக்கேன்” என மருந்து சீட்டை அவரது கையில் கொடுத்தவன் தன் வாலட்டிலிருந்து பணத்தை எடுத்து அடிவாங்கியவரின் சட்டையில் வைத்தவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டார் அந்த தொழிலாளி.

“ம்ம் இதுபோல கூழைக்கும்பிடு போடுற பழக்கத்தை விடுங்க அண்ணா... அப்புறம் நீங்க எங்க வேணாலும் வேலைக்கு போகலாம்... இனி யாரும் உங்களை எங்க வீட்டுலதான் வேலை செய்யணும்னு அதிகாரம் செய்தா என்கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்குறேன்” என்றவனை பார்த்து “ரொம்ப நன்றிங்க தம்பி” என்ற அந்த நபர் மெதுவாய் நடந்துச் சென்றார்.

ஆதிபெருமாளின் வலது கை பழனியோ மனதிற்குள் ‘அப்பன் பாவம் செய்யுறான் மகன் புண்ணியம் தேடி வைக்குறான்' என்று பிரமிப்பாய் பார்த்தார் பொன்வண்ணனை.

“பழனி அண்ணா அவர்னால நடக்க முடியலைல... அவரை வீட்ல விட்டுடடு வந்துடுங்க” என்றவனோ விறுவிறுவென வீட்டுக்குள் சென்றான்.

டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவரோ “கோதை உன் மகனுக்கு என்ன தர்ம பிரபுனு நினைப்போ! என்னோட காசுலதான் படிச்சிருக்கான் அவன்கிட்ட சொல்லுடி! என்னை மதிக்காம நடக்குறான்... என்னோட காலுக்கு கீழ வேலை பார்க்குறவங்க இனிமே என்னை மதிப்பாங்களா என்ன? உன் மகனை ஒழுங்கா என் பேச்சு கேட்டு நடக்கச் சொல்லு. இல்லைனா மகன்னு கூட பார்க்க மாட்டேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றார் கோபமாய் அப்பாவி கோதையிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

“என்னை பத்தி ஏதோ பேச்சு அடிபடுதே... எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரிடையா பேசுங்க” என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்தான் பொன்வண்ணன்.

ஆதிபெருமாளோ அவனிடம் பேசாமல் தட்டில் கைகழுவி விட்டு மகனை முறைத்தபடியே ரதி தேவியை பார்த்து பேசுவதற்கு அறைக்குச் சென்றுவிட்டார்.

“ம்மா பசிக்குது தோசையை போடுங்க” என்றான் டேபிளில் தாளம் தட்டியபடி.

கோதையோ அவன் கன்னத்தை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே தட்டில் தோசையை வைத்தவர் சாப்பிட்டு முடிக்கட்டும் கேட்டுக்கொள்ளலாம் என்று தக்காளி சட்னியை தட்டில் வைத்தார்.

அவனோ தோசையை பிய்த்து சட்னியில் வைத்து வாயில் போட்டவன் “ம்மா சட்னி சூப்பர். உங்க கைப்பக்குவம் யாருக்கும் வராது” என்று தாயை பாராட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்து “ம்மா எனக்கு தூக்கம் வருது நான் கிளம்புறேன் ரொம்ப நேரம் சமையல்கட்டுல இருக்காம தூங்க போங்கம்மா” என்று கோதையின் முந்தானையில் வாயை துடைத்துக்கொண்டு நகரப்போனவனின் கையை பிடித்த கோதை மகனின் கன்னத்தை பிடித்து “என்ன கண்ணா கன்னத்துல வரி வரியா கோடு போட்டது போல சிவந்து கிடக்கு?” என்றார் வலியோடு நிறைந்த குரலில்.

“அ.அது ஹாஸ்பிட்டல விட்டு வரும் போது வண்டு வந்து முகத்துல பட்டுச்சுங்கம்மா... அதான் சிவந்து இருக்கு நத்திங்... நான் ஆயிட்மெண்ட் போட்டுதான் இருக்கேன்” என்று தலையை குனிந்தபடியே தாயின் நெற்றியில் முட்டியவனை கண்டு “கண்ணா அம்மாகிட்ட பொய்தானே சொல்லுற அம்மா கண்ணை பார்த்து பேசு” என்றார் தழுதழுத்த குரலில் கோதை.

“ம்மா உங்க அண்ணா மகன் துரைசிங்கம்தான் என்னை அடிச்சது” என்றவனோ அங்கிருந்து நகர “நீ என்ன பண்ணின வண்ணா?” என்று பதறி கேட்டார் கோதை.

அவனோ “நா.நான் தூரிகாவை கிஸ் பண்ணிட்டேன் அதான் துரைசிங்கம் என்னை அடிச்சிட்டாரு” என்று எச்சிலை விழுங்கிக்கொண்டு கோதையை பார்க்க முடியாமல் தலையை குனிந்துக் கொண்டான்.

அவன் முகத்தை நிமிர்த்திய கோதையோ “ஏன்டா பொறுக்கித்தனமா பண்ணின... உங்கப்பன் பண்ணிய காரியத்தை நீ இப்ப பண்ணிட்டு வந்திருக்க” என்று அழுதவர் அப்படியே நிலத்தில் பொத்தென்று விழுந்துவிட்டார்.

“ம்மா என்னாச்சு?” என்று பதறியவன் கோதையின் பக்கம் உட்கார்ந்து கோதையின் முகத்தை கையில் ஏந்தியவன் தாயின் கண்ணீரை துடைத்துவிட்டு “ம்மா தூரிகாவை நான் லவ் பண்ணுறேன்... உங்களுக்கும் தெரியும்ல... எனக்கு அவ உரிமைபட்டவனு தான் முத்தம் கொடுத்தேன்ம்மா... அவளுக்கும் என்மேல காதல் இருக்கு ஆனா அவ மாமா குடும்பத்தை நினைச்சு என்னை வெறுக்கறது போல நடிக்குறாம்மா... நான் லவ் பண்ணுற பொண்ணுக்கு முத்தம் கொடுக்கறது தப்பில்லையே... நீயே சொல்லும்மா” என்றான் நலுங்கிய வார்த்தைகளுடன்.

கோதைக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “தூரிகா உன்னை லவ் பண்ணுறேன்னு மனம் திறந்து உன்கிட்ட சொன்னாளா கண்ணா?” என்றார் மருமகள் மகனை மனதார விரும்புகிறாளா என்று தெரிந்துக் கொள்ள ஆவலுடன்.

அவனோ இதழ் பிதுக்கி “இல்லை” என்று தலையை ஆட்டியவன் “அவ வாய்திறந்து சொல்லல. ஆனா என்னை விரும்பறானு எனக்கு தெரியுதுமா... நான் விருப்பம் இல்லாத பொண்ணுக்கு முத்தம் கொடுப்பேனா சொல்லுங்க... எனக்கு தூரிகா வேணும்மா... நீ. நீ ஐய்யனார் மாமாகிட்ட எப்படியவாது பேசி எனக்கு தூரிகாவை கல்யாணம் பண்ணிவச்சிடுமா” என்றான் கலங்கிய விழிகளுடன்.

“வண்ணா என் அண்ணாகிட்ட பேசியே பல வருசம் ஆச்சு... என் பையனுக்காக நான் மடிப்பிச்சை கேட்டாலும் அவர் பொண்ணை நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்கமாட்டாரு தம்பி” என்றார் துடித்து வந்த அழுகையை அடக்கிக்கொண்டு.

“அப்படி என்ன தப்பு செய்தீங்கம்மா நீங்க... நீங்களும் அப்பாவும் விரும்பித்தானே மேரேஜ் பண்ணீங்க... அந்த காலத்துல அது தப்பா தெரிஞ்சிருக்கலாம்... இப்போ காலம் மாறிப்போச்சே இன்னமுமா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டிருக்காங்க. நான் யாரு அவரோட தங்கச்சி பையன்தானே... உரிமைபட்டவனுக்கு பொண்ணு குடுக்கறதுல என்ன தயக்கம்... ஏன் நம்ம குடும்பத்தை விரோதியா பார்க்குறாங்க சொல்லுங்கம்மா சொல்லுங்க” என்றான் பொன்வண்ணன்.

கோதையோ “என்னை எதையும் கேட்காதே வண்ணா... என்னால எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுக ஆரம்பித்தார்.

“ம்மா ம்மா அழாதீங்க” என்று தாய் அழுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்தவன் கோதையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

“என் மகன் யார்கிட்டயும் அடிவாங்கி கூனி குறுகி... பொறுக்கினு பட்டம் வாங்கக்கூடாது வண்ணா ப்ளீஸ்... நீ இனிமே தூரிகாவை லவ் பண்ண சொல்லி வற்புறுத்தமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு..." என கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டு கையை நீட்டினார்.

“ம்மா ப்ளீஸ் தூரிகாவை என்னால மறக்க முடியாது! அவளைத் தவிர யார் கழுத்துலயும் தாலி கட்டமாட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என்று ஆணித்தரமாக கூறிச் சென்றான் பொன்வண்ணன்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9

தூரிகாவோ காரில் வரும்போது அழுதுக் கொண்டே இருந்தாள்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த துரைசிங்கமோ “எதுக்கு பாப்பா ஓயாம அழுதுட்டே இருக்க... நீ அழறதுனால ஒண்ணும் நடந்தது மாறப்போறது கிடையாது... சும்மா அழுதுட்டே இருக்காதே... உடம்புதான் சோர்வாகும்” என்று சிறு அதட்டல் போட்டும் அவள் அழுகையுடனே துரைசிங்கத்தை பார்த்தவள் "அண்ணா நான் தப்பு பண்ணலனு என்னை நம்புறீங்கல்ல" என்றவளை துரைசிங்கம் பார்த்த பார்வையில் உதடுகள் பயத்தில் தந்தியடித்தது.

காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு “நீயும் அந்த டாக்டரை விரும்புறியாடா பாப்பா... உன் மனசுல உள்ளதை சொல்லிடு! ஏன்னா அவன் உனக்கு முத்தம் கொடுக்கற அளவுக்கு போயிருக்கான்... நீயும் அவனுக்கு வழி கொடுத்திருக்கதானே... உன்னோட விருப்பம் இல்லாம அவன் எப்படி முத்தம் கொடுக்க முடியும்... ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழைய முடியும் பாப்பா... என்கிட்ட ஒண்ணும் நீ நடிக்கலையே” என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு மென்மையாகவேதான் பேசினான்.

“நா.நான் துரைசிங்கத்தோட தங்கச்சி... ஒருநாளும் தப்பு பண்ணமாட்டேன்... நான் யாரையும் லவ் பண்ணலை... இப்போதைக்கு என்னோட நோக்கம் படிப்பு மட்டும்தான்... நீங்க என்னை நம்பணும்” என்றவளோ தன் அண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டு விசும்பினாள் தூரிகா.

“சரிடா நான் நம்புறேன் ரொம்ப அழாதே! கண்ணெல்லாம் சிவந்து போச்சு பாரு... அப்பாவுக்கு தெரிஞ்சா மனசு சுணக்கப்படுவாங்க... இப்போ நாம ரெண்டு பேரும் ஹோட்டல்க்கு போறோம் உனக்கு பிடிச்ச பிரியாணி சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்... போனதும் டயர்டா இருக்குனு உன் அறைக்கு போய் படுத்துக்கோ யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க” என்றவனோ தங்கையின் தலையை வருடிக்கொடுத்தான். தங்கையை நீ இனிதான் கண்ணுக்குள் வைத்து கண்காணிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டான்.

தூரிகாவிற்கு பிடித்த சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்திருந்தான். பிரியாணி என்றாலே வயிறு முட்ட சாப்பிடும் தூரிகாவோ தன் முன் வைத்திருந்த பிரியாணியை சாப்பிட மனமில்லாமல் அப்படியே பித்து பிடித்தவள் போல உட்கார்ந்திருந்தாள். பொன்வண்ணன் ஏற்படுத்திய சுனாமி அலையிலிருந்து இன்னுமே வெளியே வரமுடியாமல் விரக்தியாகவே உட்கார்ந்திருந்தாள் தூரிகா.

“பாப்பா சாப்பிடு” என்று அதட்டல் போட்டவனிடம் “அண்ணா என்னால சாப்பிட முடியலை... எனக்கு அழுகையாவே வருது... அம்மாவும், அப்பத்தாவும் என்னை இந்த கோலத்துல பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பாங்க” என இதழ் பிதுக்கினாள்.

“உனக்கு நடந்ததை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு” என்று அழுத்தமாக சொன்னவன் பிரியாணியை கையில் எடுத்து அவளுக்கு ஊட்ட... வாய் திறந்து மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொண்டாள் கண்ணீருடனே.

“அழாதே! துரைசிங்கத்தோட தங்கச்சி இப்படி கோழையா இருப்பாங்களா. அவன் கன்னம் பழுக்குற அளவு அறைவிட்டிருக்க வேணாம் நீ” என்று கோபத்துடன் பேசிக்கொண்டே தங்கைக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.

அவளோ “என் பங்குக்கும் சேர்த்து அந்த டாக்டரை நீங்க அடிச்சீட்டிங்களே!” என்றாள் மெல்லிய சிரிப்புடனே.

“நீ தடுக்காம இருந்திருந்தா அவனை இன்னும் நாலு அடி மொத்தியிருப்பேன்” என்று பல்லைக்கடித்தான் துரைசிங்கம்.

“விடுங்கண்ணா நான் இனிமே அவர் இருக்க பக்கம் போகமாட்டேன்!” என்றாள் பெரும்மூச்சுவிட்டு.

“அண்ணா எனக்கு மட்டுமே ஊட்டிட்டு இருக்கீங்க! நீங்களும் சாப்பிடுங்க” என்றாள்...

எங்கே தன்னை சந்தேகப்பட்டு தவறாக எண்ணி அடித்துவிடுவானோ என்று பயத்தில் இருந்தவளுக்கு இப்போது துரைசிங்கம் ஆதுரமாக பேசியதும் தன்னை நம்பியிருக்கான் அண்ணன் என்று நிம்மதியாக துரைசிங்கத்திடம் பேசினாள்.

“எனக்கு அம்மா கையால சாப்பாடு சாப்பிட்டாதான் தூக்கம் வரும்” என்றவனோ கையை கழுவிவிட்டு பிரியாணிக்கு காசு கொடுத்தவன் தங்கையை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.

காருக்கு எதிரே குல்ஃபி ஐஸ்காரர் மணி அடித்துக்கொண்டு வருவதையே தூரிகா பார்ப்பதை கண்டவன் காரை நிறுத்தி “குல்ஃபி ஐஸ் ரெண்டு கொடுங்க” என்றவனோ அவரது முகத்தை எங்கோ பார்த்தது போல இருக்க கூர் பார்வையுடன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்தான் அவர் கையில்.

அவரும் பணத்தை வாங்கிக்கொண்டு குல்ஃபியை துரைசிங்கம் கையில் கொடுத்து “அண்ணா என்னை அடையாளம் தெரியுதுங்களா!” என்றான் சிரித்த முகத்துடன் நடுத்தர வயதையொத்த ஒருவன்.

“நீ பேங்க் முன்னால பணத்தை திருடி ஓடி என்கிட்ட மாட்டினவன்தானே!” என புருவச்சுளிப்போடு குல்ஃபியை வாங்கி தூரிகாவிடம் கொடுத்து “சாப்பிடுடா பேசிட்டு வரேன்” என்றவன் காரை விட்டு இறங்கி “இப்போ திருந்தி ஒழுங்கா இருக்கியா... இல்ல பழைய திருட்டு தொழில் பார்த்திட்டிருக்கியா?” என்றான் மிரட்டலாக கை காப்பை ஏத்திவிட்டுக்கொண்டு.

அன்று முருகன் அவனது நெருங்கிய உறவினர் கல்யாணத்துக்குச் சென்றிருந்தான்... பேங்க் வேலையெல்லாம் முருகன் பார்த்துக்கொள்வான்... பணத்தேவையிருக்க துரைசிங்கம் பேங்கிற்கு போனவன் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த சமயம் அவனுக்கு ஐய்யனார் போன் செய்திருக்க “சொல்லுங்கப்பா” என்று அவன் பேசும் நேரம் அவன் கையிலிருந்த பணப்பையை ஒருவன் பறித்துக்கொண்டு ஓடினான்.

“அப்பா சிக்னல் கிடைக்கல இருங்க கூப்பிடறேன்” என்று அவரசமாக பேசி விட்டு அந்த திருடனை துரத்தி ஓடினான் துரைசிங்கம்.

அவனோ துரைசிங்கம் பாய்ந்து ஓடி வருவதை கண்டவன் தலைதெறிக்க ஓடினான். துரைசிங்கம் அவனை பிடித்து அவன் கையில் வைத்திருந்த பணத்தை பிடுங்கி சட்டைக்குள் போட்டவன் அவனை துவைத்து நாறாய் கிழித்து விட்டான்.

அவனோ அடி தாங்காமல் “அண்ணே என்னை விட்டுடுங்க!” என்று கையெடுத்து கும்பிட்டவனை அனல் தெறிக்க பார்த்த துரைசிங்கமோ “ஏன் டா எடுபட்ட பயலே... என் கிட்ட திருடிட்டு ஓடினது போல எத்தனை பேர்கிட்ட பணத்தை எடுத்து வாயில போட்ட... உன்னை எப்படி விட முடியும்... வா போலீஸ் ஸ்டேசன்ல லாடம் கட்டச் சொல்லுறேன்" என்று அவனது சட்டையை பிடித்து இழுத்தான்.

அவனோ வாயில் இரத்தம் ஒழுக “அண்ணா நான் இது தான் முதல் முறை திருடுறது... சின்ன வயசுல வேலை செய்யும் இடத்துல ஃபயர் ஆக்சிடன்ட்ல என்னோட முகத்துல ஒரு பக்கம் நெருப்புபட்டு அகோரமா ஆகிடுச்சு... என் முகத்தை பார்த்து அருவறுப்பா இருக்குனு என்னை யாருமே வேலைக்கு எடுத்துக்கல... பிச்சை கேட்டா கூட ச்சீ போனு நாயை விட கேவலமா துரத்தி விடறாங்க... நான் என்ன செய்யட்டும் வயிறு பசிக்குதே சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு” என்று வாயில் ஒழுகும் இரத்தத்தை துடைத்துக்கொண்டே வேதனையுடன் பேசினான்.

அப்போது தான் அவனது முகத்தை சரியாக கவனித்தான். சாப்பிட்டு பலநாட்கள் ஆனது போல கண்கள் குழி விழுந்து கிடந்தது. அவனது ஒரு பக்கம் முகம் மட்டும் தீயில் வெந்து இருந்தது போல இருப்பதையும் அவனது முகத்தில் பலநாட்கள் ஷேவ் பண்ணாமல் காடு போல தாடி வளர்ந்திருந்ததை கண்டு மனம் இறங்கியவன் “அப்போ நான் உனக்கு கொஞ்சம் பணம் தரேன்... அதை வச்சி தொழில் பண்ணிக்கோ... நான் கொடுத்த பணத்தை தொழில் தொடங்காம மறுபடியும் திருட்டு வேலை பார்த்தா உடம்புல உசிரு இருக்காது பார்த்துக்கோ” என்று விரலை நீட்டி எச்சரித்தவன் அவன் வைத்திருந்த பணத்தில் ஒரு கட்டு எடுத்து அந்த திருடனிடம் கொடுத்தான்.

அவனோ “அண்ணே என்னை நம்பி பணம் கொடுக்கும் முதல் ஆள் நீங்கதான்” என்று பணத்தை வாங்கி துரைசிங்கத்தின் காலில் விழுந்துவிட்டான்.

“டேய் எழுந்துரு... ஃபர்ஸ்ட் குளிச்சு சாப்பிட்டு நல்ல ட்ரஸ் வாங்கிப்போடு... ஆள் பாதி ஆடை பாதினு பெரியவங்க சொல்லுவாங்க! உன்னோட புதர் போல இருக்க தாடியை ஷேவ் பண்ணி ஒரு நல்ல தொழிலா ஆரம்பி” என்று சொன்னதோடு இல்லாமல் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று காயத்துக்கு மருந்து போட்டு கூட்டி வந்தவன் “இனி ஒழுங்கா இருக்கணும் சரியா” என்று கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்குமென்று பெரியவர்கள் சொன்னது போல அந்த திருடனின் தோளில் தட்டிச்சென்றிருந்தான் துரைசிங்கம்.

இப்போது அந்த திருடன் முகத்தை க்ளீன் ஷேவ் செய்து ஆளே அடையாளம் தெரியாதவனாக இருந்தான்...

“இ.இல்ல அண்ணா நீ அன்னிக்கு அடிச்சு எனக்கு புத்திமதி சொன்னதால திருட்டு தொழிலை விட்டு இப்போ நைட்ல குல்ஃபி ஐஸ் விற்குறேன்... பகல்ல ஆட்டோ ஓட்டுவேன் அண்ணா! என்னை மாத்திய புண்ணியவான் நீங்க... உங்களை என்னோட வாழ்நாளுல மறக்கமாட்டேன் அண்ணா!” என்றான் நன்றிப்பெருக்குடன் கையெடுத்து கும்பிட்டு.

“சாமியை பார்த்து கையெடுத்து கும்பிடு!! நான் மனுஷன் தான் இதே புத்தியோட பொழைச்சுக்கோ” என்று மீசைக்குள் சிரித்து அவனது தோளில் தட்டி விட்டு காரில் ஏறினான்.

தூரிகாவோ இருவரும் பேசிக்கொள்வதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

‘எங்க அண்ணா கரடு முரடா இருந்தாலும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் பெரிய ஹீரோதான்... அந்த டாக்டர் என்ன தான் குழந்தைக்கு பாசமா பேசி வலிக்காம ஊசி போட்டாலும் காசு வாங்கிட்டு தானே போடுறாரு... என் அண்ணா மத்தவங்களுக்கு தன் காசு கொடுத்து உதவி செய்யுறாரு. ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம எனக்கு முத்தம் கொடுத்தாரு அந்த டாக்டர். எப்பவும் எங்க அண்ணா ஜெம் பெர்சன்’ என்று சிலாகித்துக்கொண்டாள்.

காரில் ஏறியவனோ “குல்ஃபி சாப்பிட்டியா பாப்பா?” என்றபடியே காரை எடுத்தான்.

“ம்ம் சாப்பிட்டேன் அண்ணா!” என்றவளோ அண்ணனை பிரமிப்பாய் பார்த்தபடியே இருந்தவள் அப்படியே கண் அயர்ந்து விட்டாள்.

“தூரிகா பிரியாணி வேணும்னு சொன்னாங்கப்பா பாப்பாவை சாப்பிட வைச்சு கூட்டிட்டு வரேன்” என்று ஐய்யாரிடம் முன்னமே போன் பண்ணி சொல்லியிருந்தான்.

ஐய்யனாரோ சாப்பிட்டு முடித்தவர் 10.00 மணியாகியும் மகனும் மகளும் இன்னும் வரவில்லையே... என்று மனம் பதைபதைக்க வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தார்.

'கோதை மகனும் மகளும் வேலை செய்யுற ஹாஸ்பிட்டலுக்குத்தானே பாப்பா இன்டன்ஷிப் ட்யூட்டிக்கு போயிருக்கானு கேள்விப்பட்டேனே... அந்த பொண்ணு அன்னிக்கு துரைசிங்கத்துக்கு கிட்ட வாய் துடுக்கா வம்பிழுத்து பேசுச்சே... இன்னிக்கு தூரிகாகிட்டயும் ஏதாவது சண்டை போட்டிருக்குமா' என்று அவருக்குள் கலக்கம் வந்து விட துரைசிங்கத்தின் கார் வருகிறதா என்று வாசலின் கேட்டை தாண்டி எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் ஐய்யனார்.

அவர் கவலையை தீர்க்கும் பொருட்டாக துரைசிங்கத்தின் கார் வந்து கேட்டின் முன் வந்து நின்றதும் ஐய்யனார் வேகமாகச் சென்று கதவை திறந்ததும் துரைசிங்கம் தந்தையின் பதட்டத்தை அறிந்தவனாக காரை போர்ட்டிக்கோவில் நிறுத்தினான்.

ஐய்யனார் காருக்கு பக்கம் வரும் முன் கார் கதவை திறந்து தூரிகாவை கையில் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றவன் தூரிகாவின் அறைக்குள் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து தங்கையின் சிவந்திருக்கும் கன்னத்தை பார்த்து கண்ணை மூடித் திறந்தவன் தங்கையின் கன்னத்தை மயிலிறகு போல வருடிவிட்டவனின் கையை பிடித்து “என்னை நம்புங்கண்ணா” என்றாள் தூக்கத்தில் உளறலாக.

“நம்புறேன் பாப்பா” என்று தூரிகாவின் கையை மெதுவாய் விலக்கி அவளது தலையை வாஞ்சையாக வருடி விட்டு வெளியே வந்தவன் முன்பு கலக்கத்துடன் நின்றிருந்தார் ஐய்யனார்.

“என்னங்கப்பா இன்னும் தூங்காம முழிச்சிட்டுருக்கீங்க... பிரசர் மாத்திரை போட்டீங்களா என்ன?” மாத்திரை இருக்கும் இடத்தை பார்த்தான். தினமும் இரவில் பிரசர் மாத்திரை துரைசிங்கம் தான் ஐய்யனாருக்கு எடுத்துக்கொடுப்பான்.

“ம்ம் சாப்பிட்டேன்ப்பா... தூரிகாவை அழைச்சிட்டு வர போனியே ஹாஸ்பிட்டல ஏதும் பிரச்சனையா..? இவ்ளோ நேரம் காணோம்னு கொஞ்சம் பதட்டம் பா” என்று சரியாய் கணித்து கேட்கும் தந்தையை அசராமல் பார்த்தான் துரைசிங்கம்.

துரைசிங்கமோ “என்கிட்ட யாரும் பிரச்சனை பண்ணலங்கப்பா! நீங்க மனசுக்குள்ள நினைக்கறது போல எதுவும் நடக்கல... தூரிகா சிக்கன் பிரியாணி சாப்பிடணும்னு ஆசைப்பட்டா இன்னிக்கு வெள்ளிக்கிழமை அம்மா அசைவம் சமைக்க மாட்டாங்கனு வெளியே பிரியாணி வாங்கிக்கொடுத்து கூட்டியாந்தேன்... நீங்கதானே நம்ம வீட்டு இளவரசிக்கு என்ன கேட்டாலும் வாங்கி தரச் சொல்லியிருக்கீங்க” என்று கண்ணைச் சிமிட்டி இதழ் பிரித்து சிரித்தான்.

ஐய்யனாரோ மகன் எதையும் சமாளிப்பான் அவன் மீது நம்பிக்கை வைத்து “சரி நேரமாச்சு நீ வெளியே சாப்பிட்டிருக்க மாட்ட உங்கம்மா உனக்காக காத்திருந்தா... நான் தான் உனக்கு தூக்கம் கெட்டா சேராதுனு அவளை கட்டாயப்படுத்தி தூங்க போகச் சொன்னேன்பா... வீட்டுப்பொம்பளைங்க நல்லாயிருந்தாதான் நாம வெள்ளையும் சொள்ளையுமா தெருவுல நடமாட முடியும் தம்பி!! நீ சாப்பிட்டு தூங்கு” என்றார் குறுநகையுடன்.

"சரிங்கப்பா" என்றவன் அம்மா மேல அப்பாவுக்கு இன்னுமே லவ் குறையலை என்ற மெல்லிய சிரிப்புடன் வேட்டி நுனியை பிடித்துக்கொண்டு டைனிங் அறைக்குச் சென்று தட்டில் தோசையை போட்ட சமயம் ஐய்யனார் அங்கே வந்து மகனுக்கு அருகே நின்றுக் கொண்டார்.

தோசையை பிய்த்து வாயில் வைத்தவன் “என்னங்கப்பா என்கிட்ட ஏதாவது பேசணுமா?” என்று அவன் சரியாய் கேட்டதும் "தம்பி கல்யாணத்துக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கு... அங்கே இங்கே வெளியே ராத்திரி அலைய வேண்டாம்... நேரத்துக்கு வந்திடு” என்றார் கழுத்தில் போட்டிருந்த துண்டின் நுனியை திருகிக்கொண்டே மகன் மீது கொண்ட அக்கறையில்.

“சரிங்கப்பா! நான் பார்த்துக்குறேன் ரொம்ப நேரம் கண் விழிக்கவேண்டாம் போய் தூங்குங்க” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

ஐய்யனார் சென்றதும் அவன் சாப்பிட்ட தட்டை சிங்கில் கழுவி வைத்து வேட்டி நுனியை பிடித்துக்கொண்டு அவனது அறைக்குச் சென்று படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை.

பொன்வண்ணனை அடித்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான்.

"அந்த டாக்டர் நம்ம குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரவைக்கணும்னு அவன் அப்பனை போலவே நாடகம் போடுறானோ... இந்த துரைசிங்கம் இருக்கும் வரை என் குடும்பத்துக்கு கெட்ட பெயர் வர விடமாட்டேன் டாக்டர்" என்று பொன்வண்ணனை திட்டிக்கொண்டே உறங்கி விட்டான்.

ரதிதேவியை பார்க்க அவளது அறைக்குச் சென்றார் ஆதிபெருமாள். அப்போதுதான் ரதிதேவியோ மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கண்ணு ரதி” என்று பாசத்தில் பொங்கி வழிந்தவராக மகளின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார் ஆதிபெருமாள்.

“என்னப்பா இன்னும் தூங்காம என்ன பண்ணுறீங்க... பிபி மாத்திரை போட்டீங்களா... ஏன் உங்க முகம் வியர்த்து கொட்டுது?” என்று தடாலென எழுந்தவள் டேபிள் மீது இருந்த ப்ளட் பிரசர் டிஜிட்டல் மானிட்டரை எடுத்து ஆதிபெருமாளை பரிசோதித்தாள்.

பிரசர் 180 காட்டியது. “அப்பா அம்மாகிட்ட சண்டைப்போட்டீங்களா இப்படி ஏகத்துக்கும் பிபி ஏறியிருக்கு?” என்று தந்தையை கண்டித்தவள் பிபி மாத்திரை எடுத்து போட வைத்தாள்.

“இதுக்குத்தான் பொண்ணு வேணும்கிறது. உன் அண்ணனும் இருக்கானே. நான் எதை பண்ணவேண்டாம்னு சொல்றேனோ... நான் அப்படித்தான் பண்ணுவேன்னு அடம் பிடித்து செய்து என் பிபியை எகிற செய்துட்டான்” என்றவரோ கொஞ்ச நேரம் நடந்ததை சொல்லிவிட்டார்.

அவளோ “அண்ணா டாக்டராக அந்த தொழிலாளிக்கு பாவம் பார்த்து வைத்தியம் செய்திருப்பாருங்கப்பா... அண்ணாவை அவர் போக்குல விடுங்க... நான் வேணா உங்களுக்கு உதவியா இருக்கேன்” என்றதுமே ஆதிபெருமாளோ “நீதான் எனக்கு அடுத்த வாரிசா அரசியலுக்கு வரப்போற ராஜாத்தி” என்று தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டார்.

“நான் என்ன செய்யணும்னு சொல்லுங்கப்பா செய்யுறேன்” என்றாள் ஆவலுடன்.

“அந்த ஐய்யனார் பேமிலியை நாம அவமானப்படுத்தணும்... அவனுங்க குடும்பம் சென்டிமெண்டலா இருப்பானுங்க... உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்... ஆனா கொஞ்சம் கவனமாக இருந்து செய்ய வேண்டியிருக்கும் கண்ணு... ஒரு சமயம் எனக்கு இந்த விசயத்தை நீ பண்ண வேண்டாம்னு தோணுது... ஆனா உன்னை தவிர இதை யாரும் செய்ய மாட்டாங்க” என்று தாடையை தேய்த்துக்கொண்டே மகளை பார்த்தார்.

“அப்பா எனக்கு அந்த துரைசிங்கத்தை பழிவாங்கணும்... அவன் என்னை அத்தனை பேர் முன்னாலயும் வச்சு என் இழுத்துட்டு போனான். அவனை அந்த ஊர் முன்னால தலை குனிய வைக்கணும்” என்றாள் அப்பனை போலவே கெட்ட புத்தியோடு.

“அப்படி சொல்லு என் சிங்ககுட்டி” என்று தான் நினைத்தது நடக்க போகுது என்ற மமதையில் அவளது காதில் இரகசியமாக சொன்னதும்

“ஃபூ இவ்ளோதானே நான் லண்டன்ல படிச்ச பொண்ணுங்கப்பா... இதை தாராளமா நான் செய்துடுவேன் எனக்கு பிரச்சனை இல்லை” என்று கண்ணைச் சிமிட்டி தோளைக்குலுக்கினாள்.

ஆதிபெருமாளோ “கண்ணு எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை... ஏன்னா அந்த துரைசிங்கம் பலே கில்லாடி... அவனுக்கு முதுகுல கூட கண் வைச்சு பார்ப்பான்... நீ தான் ஜாக்கிரதையா இருக்கணும். சரியான முரட்டு பையன் அவன்... என்னையே ரெண்டு முறை அடிக்க பார்த்திருக்கான்... தெரியுமா” என்று கொஞ்சம் அச்சத்துடனேதான் பேசினார்.

“விடுங்கப்பா இந்த எலக்ஷன்ல நீங்க ஜெயிக்க போறீங்க... நான் உங்க பக்கம் இருப்பேன்” என்று தந்தையின் தோளில் சாய்ந்தாள்.

தந்தை மகள் கூட்டணி சேர்ந்து துரைசிங்கத்தை சாய்க்க முடியுமா..? அவன் என்ன முருங்கை மரமா..! காத்தடிச்சா சாய்ந்து போறதுக்கு... அவன் ஒரு ஆலமரம்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10

அடுத்த நாள் காலையில் துரைசிங்கம் எழுந்ததும் முதலில் சென்றது தங்கையின் அறைக்குத்தான். அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். தங்கையின் கன்னத்தை வருடி போர்வையை போர்த்திவிட்டு ‘நீ இந்த வீட்டோட இளவரசி... உன் கண்ணுல தண்ணியை வர வைச்சுட்டானே அந்த டாக்டர்... அவனை சும்மா விடமாட்டேன் பாப்பா... எப்போ என்கிட்டே வசமா மாட்டுறானோ அன்னிக்கு அவனுக்கு தீபாவளி தான்..!’ கோபத்தில் கொந்தளித்தான்.

துரைசிங்கம் ஜாக்கிங் சென்று வீடு திரும்பும் போது அன்பரசியும் கண்ணனும் ஹாலில் உட்கார்ந்து ஐய்யனாரிடம் கல்யாணம் விசயம் பேசி சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

நாச்சியோ “இதோ என் பேராண்டி சிங்கம் வந்துட்டான்” என்று வாய் நிறைய புன்னகையுடன் கையை நீட்டினார்.

துரைசிங்கமோ “வாங்க மாமா வாங்க அத்தை” என மெலிதாக இதழ் விரித்து சிரித்தவனோ “பேசிட்டிருங்க நான் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

அலர்விழியோ சமையல்கட்டை ரெண்டு பண்ணிக்கொண்டிருந்தாள். "அத்தை இந்த பக்கம் வாங்க! இன்னிக்கு நான் சமையல் பண்ணுறேன்... என்னோட கைப்பக்குவ சமையலை மாமா பழகிடட்டும்... அப்போதான் என் புருசனை என் முந்தானைக்குள் சொருகிக்க முடியும்” என்று சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு அம்மியில் மசாலா அரைக்க ஆரம்பித்தாள். ஐய்யனார் வீட்டில் மித மிஞ்சிய வசதி வாய்ப்பு இருந்தாலும்... தோசை மாவு முதல் மசால் வரை எல்லாம் கையால் அரைத்துக் கொள்வார்கள்.

அங்கே வந்த நாச்சியோ “அடியே அலரு அதிகாரம் தூள் பறக்குது... உன் ராங்கி தனத்தை உன்வீட்டோட உட்டுபுட்டு வந்துடு... உன்னோட வால்தனத்தை காட்டாதே... ஒட்ட நறுக்கிப்புடுவேன் பார்த்துக்கோ... இன்னமும் கோமதி என்கிட்ட கேட்காம ஒரு துரும்பை கூட அசைக்கமாட்டா... நீயும் என்னோட பேச்சைத்தான் கேட்கோணும்டி...” அலர்விழியை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தார் நாச்சி.

கோமதியோ “அத்தை விடுங்க அவ சின்னப் பொண்ணு ஏதோ துரைசிங்கத்துக்கு சமைச்சு போட ஆசைப்பட்டு வந்திருக்கா!! சமைக்கட்டும் விடுங்க” என்று மருமகளுக்காக வக்காலத்து வாங்கி நின்றார்.

“அட நீ சும்மாயிருடி...இந்த காலத்து புள்ளைங்களை நம்ப முடியாது... இப்ப எல்லாம் வேலை செய்யுறேனு பம்மாத்து காட்டிபுட்டு... கல்யாணம் ஆன பிறகு நம்ம தலையில மசாலா அறைச்சுடுவா” என்று கண்ணை சிமிட்டினார் கோதையை பார்த்து.

அலர்விழியோ “அம்மாச்சியோவ் எந்த கொம்பாதி கொம்பி வந்தாலும் இந்த சமையல்கட்டை யாருக்கும் விட்டுத்தரமாட்டேனாக்கும்... கோமதி அத்தை வேணா உனக்கு பயந்து கிடக்கலாம்... நான் சிங்கம் பொண்டாட்டியாகப்போறவ தெரியும்ல... வயசான காலத்துல பொங்கி போட்டதை தின்னோமா... திண்ணையை தேய்ச்சோமானு இரு அம்மாச்சி... சும்மா என்கிட்ட வம்பிழுக்காம... உங்க சிங்கத்தை சாப்பிட ரெடியாகி வரச்சொல்லுங்க...” என்று ராகமாக பேசிய அலர்விழியோ அம்மியில் அரைத்த மசாலாவை கிண்ணத்தில் எடுத்துப்போட்டாள்.

“ம்ம் ரொம்பதான்டி வாய் நீளுது உனக்கு.. வாயை கோந்து போட்டு அடைச்சு விட்டிருவேன் பார்த்துக்கோ” என்று சிரித்தவாறே அலர்விழியின் கன்னத்தில் இடித்துச் சென்றார்.

அன்பரசியோ “அண்ணே கிழக்கால இருக்க பெரிய தென்னந்தோப்பை மாப்பிள்ளை துரைசிங்கம் பேர்ல எழுதி வச்சிடலாம்னு இருக்கேன்” என்றார் பேச்சுவாக்கில்.

“என்ன அத்தை வரதட்சணை கொடுக்கறீங்களோ!” என்று குளித்து முடித்து ரெடியாகி சட்டையை முழங்கை வரை மடக்கிவிட்டு கேட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தான்.

கண்ணனோ “தப்பா எடுக்காதீங்க மாப்பிள்ளை எங்களுக்கு இருக்கறது ரெண்டு பொட்டப்புள்ளைங்க அவங்களுக்கு செய்யணும்னு உங்க அத்தை ஆசைப்படறா!! நாங்க கொடுக்கறத சீதனமா நினைக்காம அன்பு பரிசா ஏத்துக்கோங்களேன்” என்றார் நாசுக்காக.

ஐய்யனார் பக்கம் வந்து உட்கார்ந்த துரைசிங்கமோ “என் பேருல வேண்டாம்ங்க மாமா... உங்க மக பேருலயே பத்திரம் பதிஞ்சிருங்க... கல்யாணம் தடபுடலா பண்ணவேண்டாம்ங்க மாமா... முகூர்த்ததுக்கு நம்ம நெருங்கிய சொந்தம் மட்டும் அழைப்பு கொடுக்கலாம்... நம்ம குலதெய்வ கோவில சிம்பிளா முடிச்சிடலாம்... அன்னிக்கு ஒருநாள் முழுக்க நம்ம ஊருக்கே கறிசோறு போட்டிருங்க... அனாதை ஆசிரமத்திற்கும் சாப்பாடு நம்ம செலவுல பண்ணிருங்க அது போதும்... என்னோட விருப்பம் இதுதான் பெரியவங்க நீங்க பார்த்து என்ன முடிவு எடுத்தாலும் நான் கட்டுப்படறேன்” என்றான் குரலை உயர்த்தாமல் தன்மையாகவே.

கண்ணனோ "அதெப்படிங்க மாப்பிள்ளை நம்ம ரெண்டு வீட்டுக்கும் முதல் கல்யாணம் விமர்சையா கொண்டாடலாம்னு இருக்கோம்... நீங்க பொசுக்குனு சிம்பிளானு சொல்லிப்புட்டீங்களே!" என்றார் சுரத்தை இல்லாத குரலில்.

வீரய்யனோ “எய்யா சிங்கம் இந்த கிழட்டு கட்டைங்க இன்னம் எத்தனை நாளைக்கு இருக்க போறோம்னு தெரியலை... உன்ற கல்யாணத்தை சிறக்க பார்த்துட்டு போகலாம்னு இருக்கோம்... எங்க ஆசையை நிறைவேத்தி வைச்சுடுப்பா” அவர் மனதில் உள்ள ஆசையை கொட்டிவிட்டார் துரைசிங்கத்திடம்.

“ம்ம் எதுக்கு பணத்தை தண்ணியா செலவழிக்கணும்னு அந்த காசுல ஊருக்கு நல்லது செய்யணும்னு பார்த்தேன் தாத்தா... சரி உங்க ஆசைப்படியே என் கல்யாணத்தை சிறக்க பண்ணுங்க” என்று பெரும்மூச்சு விட்டு எழுந்தான் துரைசிங்கம்.

துரைசிங்கம் சரியென்றதும்தான் பெரியவர்கள் முகத்தில் சந்தோசக் களை தாண்டவமாடியது. நாச்சியோ “இன்னிலேர்ந்து நம்ம வீட்டு கல்யாணக் களை கட்டணும்... மாவிலை தோரணம் எல்லாம் கட்டி வீடு அரண்மனை போல ஜொலிக்கணும்” என்றான் சந்தோசப் புன்னகையுடன்.

அனைவரும் சந்தோசமாக இருக்க “ஐயா வணக்கமுங்க” என்று வாயில் வெத்தலைபாக்கை மென்றுகொண்டு அங்கே வந்தார் தரகர் முனுசாமி.

வீரய்யனோ “வாய்யா முனுசாமி வந்து உட்காரு” என்று அங்கிருந்த நாற்காலியை காட்ட. அவரோ “இருக்கட்டும் ஐயா நான் நிற்குறேனுங்க... நம்ம தூரிகா பொண்ணு ஜாதகத்தை ஐய்யனார் தம்பி என்கிட்டே மாப்பிள்ளை பார்க்க கொடுத்திருந்தாரு... பக்கத்து ஊருக்கு சென்னையில ஐ கோர்ட் ஐட்ஜா இருந்து ரியட்ர்டு ஆனவங்க வந்திருக்காங்க சார். அவரோடு பேரு பாலமுருகன் அவர் மகன் அசோக் வெளிநாட்டுல டாக்டருக்கு படிச்சிட்டு அங்கனயே வேலை பார்க்கறாராம்... கை நிறைய சம்பளம் வாங்குறாராம்... அவர் மகன் ஜாகத்தை கொடுத்து நல்ல பொண்ணா இருந்தா பார்க்க சொல்லியிருந்தாரு... நான் நேத்து நம்ம பொண்ணோட ஜாதகத்தையும் பொண்ணோட போட்டோவையும் கொண்டு போயிருந்தேன்... அவங்களும் ஜாதகத்தை வாங்கி பார்த்துட்டு அப்பவே ஜோசியரை வரவச்சி பொருத்தம் பார்த்தாங்க... பத்து பொருத்தம் பொருந்தி இருக்கு... மாப்பிள்ளை இப்போ லீவுல வந்திருக்காராம்... அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்கா கிளம்பறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாமானு உங்ககிட்ட ஒரு வார்த்தை தகவல் கேட்டுட்டு வரச்சொன்னாங்க... அதான் உங்க முன்னால நிற்குறேன்... நல்ல குடும்பமா தெரியுறாங்க... நம்ம குடும்பத்து வசதிக்கு ஏதுவானவங்கதான்... சென்னையில அப்பார்ட்மெண்ட் கட்டி வாடகைக்கு விட்டிருக்காங்களாம்” என்றார் காரை பற்கள் தெரிய சிரித்தபடியே.

ஐய்யனாரோ துரைசிங்கத்தை பார்த்தார். “அவ படிப்பு முடிக்கணும்னு இருந்தேனுங்கப்பா.. இப்போ நல்ல இடம் ஜாதகப்பொருத்தமும் பொருந்தி இருக்கு... மாப்பிள்ளை வீட்டை பத்தி நாலா பக்கமும் விசாரிச்சிப் பார்க்கலாம்... அசலூர்காரவங்களை சுலபமா நம்பக்கூடாது... நீங்களும் தாத்தாவும் ஒரு எட்டு மாப்பிள்ளை வீட்டை பத்தி அந்த ஊர்காரவங்கவகிட்ட விவரம் கேளுங்க. அப்படி நல்லவங்களா இருந்தா என் கல்யாணம் வெள்ளிக்கிழமை தானே வச்சிருக்கோம். புதன்கிழமையே ஒரு முகூர்த்த நாள் இருக்கு... அந்த முகூர்த்ததுலயே பாப்பா நிச்சயம் மட்டும் பண்ணிப்போம்... கல்யாணத்தை கொஞ்ச நாள் கழிச்சு நடத்திடலாம்” என்றான் தெளிவான முடிவுடன்.

“அப்பா நீங்க என்ன சொல்றீங்க?” என்று வீரய்யனை புருவ முடிச்சுடன் பார்த்தார் ஐய்யனார்.

“துரைசிங்கம் சொன்னது போல நாம மாப்பிள்ளை வீட்டை பத்தி நாலு பேருகிட்ட விசாரிப்போம்... ஆனா கல்யாணத்துக்கு அவசரபடவேணாம்... நல்ல இடமா நமக்கு தெரிஞ்சுதுனா இப்போ ஒப்பு தாம்பூளம் மாத்திப்போம் தூரிகா படிப்பு முடியட்டும் கல்யாணத்தை வச்சிப்போம்” என்றார் அவரது அனுபவத்தில்.

ஹாஸ்பிட்டலுக்கு புறப்பட்டு வந்த தூரிகாவின் காதில் பெரியவர்கள் பேசியதும் விழுந்தது... அவளது கண்கள் கலங்கியது... அப்பா பேச்சை கேட்டு நடக்கணும் என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

நாச்சியோ “வாடா ராசாத்தி உன்னோட கல்யாணத்தை பத்திதான் பேசிட்டிருந்தோம்” என்றதும் அவள் சிரிப்பது போல தலையை குனிந்துக் கொண்டாள்.

“பேத்திக்கு கல்யாண வெட்கம் வந்துடுச்சு!” என்றார் சிரித்தபடியே நாச்சி.

துரைசிங்கமோ தங்கையை ஆழமான பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். கோமதியோ “அண்ணா வாங்க சமையல் ஆகிடுச்சு... எல்லாரும் சாப்பிட வாங்க” என்றதும்

நாச்சியோ “இன்னிக்கு சமையல் அலர்விழிதான் பண்ணியிருக்கா! அவளோட கைப்பக்குவத்தை தான் இனி நாம சாப்பிட்டு பழகிக்கணும்... வாங்க சாப்பிடலாம்...” என்று கிண்டல் செய்துக் கொண்டு சாப்பிடச் சென்றனர்.

இட்லிக்கு குடல் கறி குழம்பு அம்சமாக வைத்திருந்தாள் அலர்விழி... ஒவ்வொருவரும் சாப்பிட்டு "ம்ம் ரொம்ப டேஸ்டா இருக்கு... அற்புதமா சமைச்சிருக்க” என்று பாராட்டு பத்திரம் கொடுத்தனர்.

ஆனால் அலர்விழியோ துரைசிங்கத்தின் வாயிலிருந்து பாராட்டு வரும் என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் எதுவும் பேசாமல் சாப்பிட்டது அவள் முகம் வாடி போனது.

அலர்விழியின் முகத்தை படித்த நாச்சியோ “என்ன சிங்கம் குடல் கறி குழம்பு எப்படி இருக்கு! உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை சொல்லிடு... இல்லைனா அலர்விழி ஒரு சுத்து உடம்பு இளைச்சு போயிடுவா” என்றார் கிண்டலாக.

“ம்ம் நல்லாயிருக்கு அப்பத்தா” என்றவன் அலர்விழியை பார்த்து சிரித்து விட்டுச் சென்றான். அலர்விழிக்கோ ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு... துரைசிங்கத்துடன் கலர் கலர் சேலையில் டூயட் ஆட ஆரம்பித்திருந்தாள்.

துரைசிங்கமோ “அப்பா நான் கட்சி ஆபிஸ் வரை போயிட்டு வரேன் வேலை இருக்கு... பாப்பாவை விட்டுட்டு வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்” என்று கார் சாவியை கையில எடுத்து கிளம்பினான்.

காரில் ஏறியதும் கொஞ்ச தூரம் சென்றதுமே “அண்ணா என் மேல நம்பிக்கை இல்லாம கல்யாணம் பண்ணுறீங்களா” என்றவளுக்கு தொண்டையில் வார்த்தைகள் வரவில்லை அடைத்துக்கொண்டது.

“நீ ஏன் அப்படி நினைக்குற உன்கிட்ட கேட்காம கல்யாணம் ஒண்ணும் முடிவு பண்ணமாட்டோம் மாப்பிள்ளை வீட்டைப்பத்தி விசாரிச்சு அவங்க நல்ல குடும்பம்னு தெரிஞ்சா மட்டும்தான் அடுத்த வாரம் புதன் கிழமை உனக்கு நிச்சயம். என் தங்கச்சிக்கு ஏத்த மாப்பிள்ளையை தான் நான் கல்யாணம் பண்ணிவைப்பேன் மனசை போட்டு குழம்பிக்காம உன் படிப்பை பாரு...” என்று மெல்லிய இதழ் விரிப்புடன் தூரிகாவின் தலையை வருடிவிட்டான் துரைசிங்கம்.

“ம்ம் சரிங்கண்ணா உங்களையெல்லாம் விட்டு தொலைவுல போகறதுக்கு எனக்கு மனசு வரல” என்றாள் விசும்பலுடன்.

“அப்படியா கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைனு வந்துட்டா எங்களை பத்தி நினைக்கவே உனக்கு நேரம் இருக்காது. பண்டிகை, விஷேசம்னாதான் எங்க நினைப்பே உனக்கு வரும். உன் குடும்பத்தை பார்த்துக்கவே உனக்கு நேரம் இருக்காது பாப்பா” என்றான் தங்கையின் அலைபுறும் மனதை அமைதிப்படுத்தினான்.

ஹாஸ்பிட்டல் வந்ததும் “இன்னிக்கு நீ தைரியமா வேலை பார்க்கலாம்... ஈவ்னிங் நானே உன்னை அழைச்சிட்டு போறேன்” என கண்ணைசிமிட்டிச் சென்றான்.

துரைசிங்கம் ஹாஸ்பிட்டல் டீன் அவனுக்கு தெரிந்தவராக இருக்க அவரிடம் பொண்வண்ணன் டாக்டர் விசயமாக பேசணுமென்று மேலோட்டமாக விசயத்தை சொல்லி வைத்தான்.

டீனோ “பொன்வண்ணன் டாக்டர் ரொம்ப நல்ல பையனாச்சேப்பா... நீங்க வேற யாரயாவது பத்தி கம்ப்ளைண்ட் சொல்லியிருந்தா நான் நம்பியிருப்பேன் துரைசிங்கம்... இந்த ஹாஸ்பிட்டலோட சீனியர் பிடியாட்டிரிக் இரண்டு மூணு பேர் இருக்காங்க அதுல பொன்வண்ணன் டாக்டர்தான் ஸ்பெஷலிஸ்ட்... நேத்து கூட குழந்தை இறந்துடும் மத்த ஹாஸ்பிட்டல கையை விரிச்சுட்டாங்க. என் குழந்தையை காப்பாத்துங்கனு கதறுன பேரன்ட்ஸ்கிட்ட கொஞ்சம் நேரம் அழாம இருங்க நான் பார்க்குறேன் ஒரு மணி நேரம் போராடி குழந்தையை காப்பாத்தியிருக்கான்.. நீங்க சொல்றது போல பொறுக்கி தனமான ஆள் கிடையாது அவன்...” என்று பொன்வண்ணனுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டார் டீன்.

"துரைசிங்கம் உங்க அப்பா இந்த ஹாஸ்பிட்டலுக்கு நிறைய உதவிகள் செய்திருக்காரு... அதனால வேணா ஒண்ணு பண்றேன் உங்க தங்கச்சியை பொன்வண்ணன் டாக்டர்கிட்ட ட்யூட்டி பார்க்க அனுப்பாம பார்த்துக்குறேன்” என்றிருந்தார்.

“நானும் உங்க ஹாஸ்பிட்டல் டாக்டரை குத்தம் சொல்லலைங்க சார்... என் தங்கச்சிகிட்ட வம்பு பண்ணினான் அதான் சொன்னேன். நீங்க வேணா அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசிங்க... எனக்கு அது இரண்டாம் பட்சம்தான்... எனக்கு என் தங்கச்சி யாரோட தொந்தரவும் இல்லாம வேலை பார்க்கணும் அவ்ளோதான்” என்றிருந்தான் கட் அண்ட் ரைட்டாக.

“ஓ.கே துரைசிங்கம் நான் பார்த்துக்குறேன்... அப்பாவை கேட்டதா சொல்லுங்க” என்று சிரித்த முகமாக பேசியிருந்தார்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஓபி பேஷண்டை பார்த்து முடித்த பொண்வண்ணனின் கண்கள் தன்னவளை தேடியது... ஆனால் தூரிகாவை கைனக் வார்டுக்கு மாற்றியிருந்தனர்.

‘ஓ மீசை மச்சான் தங்கச்சியை என்கிட்டயிருந்து காப்பாத்த முயற்சி பண்ணியிருக்காரு போல பார்த்துக்குறேன்’ என்றான் இதழ் விரிப்பு சிரிப்புடன்

டீனிடமிருந்து போன் வந்தது பொன் வண்ணனுக்கு. “சொல்லுங்க சார் எனிதிங் இம்பார்ட்டன்ட்?” என்றான் நெற்றியை தேய்த்துக்கொண்டே.

“என்ன மேன் லவ் பண்ணுறியாமே என் காதுக்கு நியூஸ் வந்துச்சு... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம இருந்திருக்க... உன் மச்சான் துரைசிங்கம் போன் பண்ணி உன்னை கவனிக்க சொல்லியிருக்காரு... கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க பொன்வண்ணன்... நாமெல்லாம் உயிர் காக்கும் தொழிலில் இருக்கோம்” என்றார் மேம்போக்காக.

“சாரி உங்ககிட்ட கம்ப்ளைண்ட் வரும்படி நடந்துக்கிட்டேன். நான் பார்த்துக்குறேன் சார்” என்றான் தர்மசங்கடமான நிலையில்.

“நத்திங் விடுங்க.. குடும்ப உறவுகள்னா அப்படித்தான் இருப்பாங்க... உங்க லவ் சக்ஸஸ் ஆகணும்னா போராடிதான் ஜெயிக்கணும்...” என்றார் சிரித்தபடியே.

“தேங்க்ஸ் இனி கம்ப்ளைண்ட் வராம பார்த்துக்குறேன்” என்று போனை வைத்தவனுக்கு துரைசிங்கத்தின் மீது ஆத்திரம்தான் வந்தது.

‘நேரிடையா மோதமா மறைமுகமாக மோதியிருக்கீங்க சிங்கம் மச்சான்... என்னோட ஆட்டம் நான் இன்னும் ஆரம்பிக்கல. வெயிட் அண்ட் சீ‘ என்று பெரும்மூச்சு விட்டவன்.. பெல்லை அழுத்தி “நர்ஸ் பேஷண்ட்டை அனுப்புங்க” என்று அனைத்தையும் மறந்து மருத்துவ உலகத்துக்குச் சென்றுவிட்டான்.

கைனக் வார்ட்டில் கேஸ் ஷீட் எழுதிக்கொண்டிருந்த தூரிகாவை “சிஸ்டர் உங்களை ரதி டாக்டர் வரச்சொன்னாங்க” என்றதுமே..

‘நேத்து முழுக்க அண்ணன் தொந்தரவு செய்தான்... இன்னிக்கு அவன் தங்கச்சி என்ன பாடு படுத்தப்போகுதோ தெரியலை’ என்று புலம்பிக்கொண்டே ரதி தேவியை பார்க்கச் சென்றாள் தூரிகா.

“எக்ஸ்கீயூஸ் மீ டாக்டர்” என்று கதவை தட்டி திறந்துச் சென்றாள் தூரிகா.

தூரிகாவை பார்த்ததுமே ‘அழகாத்தான் இருக்கா... அதான் அண்ணா ரூட் விட்டிருக்கான்... ஆனாலும் இவளை நான் அண்ணினு எல்லாம் கூப்பிட முடியாது!’ என்று மனதிற்குள் பொருமியவள் “சிட்” என்று தன் எதிரே இருந்த நாற்காலியை காட்டினாள்.

“இ.இல்ல நான் நிற்குறேன்ங்க டாக்டர்” என்றாள் தயங்கியபடியே...

“இன்னும் இன்டர்ன் முடிய எத்தனை மாசம் இருக்கு?” என்று பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டே கேட்டாள் ரதிதேவி.

“இப்பதான் இன்டர்ன் ஸ்டார்ட் ஆகியிருக்குங்க டாக்டர்” என்றாள் பவ்யமாக.

“ஓஓ நான் கூட லாஸ்ட் மன்த்னு நினைச்சேன்... நீங்க என்னோட வார்டுலதான் இருக்கணும்” என்றாள் அதிகாரமாக.

‘பேய்கிட்டயிருந்து பிசாசுகிட்ட மாட்டின கதைதான்' என்று நொந்துக் கொண்டாள் தூரிகா.

“இன்னிக்கு ஒரு டெலிவரி இருக்கு... என்கூட வா” என்று அவளை டெலிவரி ரூம்மிற்கு அழைத்துச்சென்றாள் ரதி.

தூரிகாவிற்கோ சந்தோசம் தாளவில்லை.. நாலைந்து டெலிவரிதான் பார்த்திருக்கிறாள். இப்போது ஆவலுடன் டெலிவரி அறைக்குள் சென்றாள்.

குழந்தை வெளியே வரும்போது “புஷ்! புஷ் பண்ணுங்க. பேபி தலை தெரியுது. இன்னும் ஐந்து நிமிசத்துல உங்க கையில குழந்தை வந்திடும்” என்று அந்த பெண்ணைத் தைரியப்படுத்தி குழந்தையை வெளியே எடுத்து “இதோ அழகான பெண் குழந்தை வந்துட்டா பாருங்க” என்று தாயின் முகத்தருகே கொண்டு போய் காட்டினாள் ரதி புன்னகை முகத்துடனே.

அந்த தாயோ வலியெல்லாம் மறந்து போய் கண்ணீர் கோடுகளுடன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“சிஸ்டர் குழந்தையை குளிக்க வச்சு கொண்டு வாங்க.. அண்ட் இன்டன்ஷிப் ஸ்டுடன்ஸ்க்கு பேபியை குளிக்க ட்ரெயினிங் கொடுங்க” என்றவள் அடுத்த பேஷண்டை கவனிக்கச் சென்றாள்.

தூரிகாவிற்கு ட்டியூட்டி டைம் முடிந்துவிட்டது. ரதிதேவியிடம் டெலிவரியைபத்தி டவுட் கேட்க ரதியின் அறைக்கதவை கதவை தட்டிக்கொண்டு உள்ளேச் சென்றாள். அங்கே பொன்வண்ணன் ரதி தேவியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அங்கே பொன்வண்ணன் இருப்பான் என்ற தெரியாமல் உள்ளேச் சென்றவள் அச்சோ இவரு இருக்காருன்னு தெரியாம வந்துட்டேன் என்று பம்மியபடி கையை பிசைந்துக் கொண்டு நின்றாள் தூரிகா

“சாரிங்க டாக்டர் ஒரு டவுட் கேட்கலாம்னு வந்தேன்... நாளைக்கு கேட்டுக்குறேன்... என்றவள் பொன்வண்ணனை ஒருமுறை பார்த்துவிட்டு கண்களை திருப்பிக்கொண்டாள். பொன்வண்ணனோ தூரிகாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ரெண்டு பேரும் ஒரு தங்கச்சியை வச்சிகிட்டு என்ன லவ் பண்ணுதுங்க’ என்ற பெரும்மூச்சுவிட்டவள் "அண்ணா நான் கிளம்புறேன்... இந்த பொண்ணுக்கு ஏதோ டவுட்னு கேட்குது சொல்லிக்கொடுத்துடுங்க" என்று டேபிள்மேல் வைத்திருந்த ஒயிட் கோட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டாள்.

“அ.அது ரதி மேம் நா.நான் நாளைக்கே உங்ககிட்ட டவுட் கேட்குறேன்” என்று சிட்டாக பறந்து விட்டாள்.

அடுத்தநாளும் பொன்வண்ணன் கண்ணில் படாமல் தப்பித்துவிட்டாள் தூரிகா.

அன்று நடந்த டெலிவரியில் குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் குழந்தை அழாமல் இருக்கவும் ரதி தேவியும் அவளுக்கு தெரிந்த வைத்தியத்தை செய்து பார்த்தாள். அப்போதும் குழந்தை அழவில்லை. குழந்தையில் வாயில் வாய் வைத்து ஊதிக்கொண்டிருந்தாள் ரதி தேவி..

அங்கே நின்ற தூரிகாவோ அந்த லேபர் வார்டிலிருந்து வேகமாக பொன்வண்ணன் அறைக்கதவை தட்டாமல் கூட உள்ளேச் சென்றாள். அப்போதுதான் பேஷண்டை பார்த்து முடித்து அவர்களும் வெளியேச் சென்றுவிட்டனர்.

பொன்வண்ணனோ அவள் மூச்சு வாங்குவதை கண்டு “ஏய் என்னாச்சு இப்படி மூச்சிரைக்க ஓடி வர ரிலாக்ஸ்” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தான்.

தண்ணீரை வாங்கி குடித்தவள் “டாக்டர் சீக்கிரம் வாங்க அங்க டெலிவரி ரூம்ல குழந்தை பிறந்து அழுகாம இருக்கு... நீ! நீங்க வந்து பாருங்க” என்றதுமே தூரிகாவிற்கு முன்னே டெலிவரி வார்டுக்கு ஓடினான் பொன்வண்ணன்.

“அண்ணா பேபி இன்னும் அழுகாமல் இருக்கா... நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் டிரீட்மென்ட் பண்ணிட்டேன் என்னனு பாருங்க” என்று சிறு பதட்டத்துடன் குழந்தையை பொன் வண்ணனிடம் கொடுத்தாள் ரதி.

அவனோ குழந்தையின் குட்டி வாயில் வைத்து ஊதியவன் அடுத்து குழந்தையை தலை கீழாக பிடித்து குலுக்கினான்.

தூரிகாவோ பொன்னவண்ணன் பக்கம் போய் நின்றுக் கொண்டாள் பதட்டத்துடனே. அடுத்த சில நிமிடத்தில் குழந்தை யூரின் போய் வீல் என்று கத்தியது.

“சூப்பர் டாக்டர்” என்று அங்கே இருந்த மருத்துவர்கள் பொன்வண்ணனை பாராட்டினார்கள்.

தூரிகாவின் மனதில் பொன்வண்ணன் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான்.

அடுத்து அதிரடி திருப்பங்களுடன் அடுத்த எபியில் சந்திப்போம்
 
Status
Not open for further replies.
Top