ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 18

பொன்வண்ணன் காரை விட்டு இறங்கியதுமே பெண்ணொருத்தியின் கழுத்தில் தாலி கட்டிகொண்டு வைத்திருக்கிறோமென்று திரும்பி கூட பார்க்காமல் வீட்டுக்குள் கோபமாக சென்றவனை "வண்ணா நில்லுடா ஆரத்தி எடுக்கணும்ல அதுக்குள்ள என்ன அவசரம்?" என்ற மகனை கடிந்து கொண்ட கோதை காரை கதவை வேகமாக திறந்து வெளியே வந்தார்.

அவனோ “இது ஒண்ணுத்தான் குறைச்சல் இப்போ” என்று சலித்துக்கொண்டாலும் நெற்றியை தடவிக்கொண்டே காரிலிருந்து இறங்கும் தூரிகாவை பார்த்தான்.

தூரிகாவோ சுடிதாரின் ஷாலை திருகிக்கொண்டே பொன்வண்ணன் பின்னால் அவனை முறைத்தபடியே நின்றாள். ‘பாவி சண்டாளா ஒரு நாளுல என்னை எங்க வீட்ல இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்திட்டியேடா!’ என்று அவனை திட்டிக்கொண்டே இருந்தாள்.

கோதையின் வீடும் பெரியதாகவே இருந்தது. கோதையோ வீட்டுக்குள் வேகமாகச் சென்று ஆரத்தியை கரைத்து எடுத்துவந்தார்.

“தூரிகா கண்ணு வண்ணா பக்கத்துல வந்து நில்லுடா” என்றார் பாசக்குரலுடன் கோதை. தூரிகா பொன்வண்ணன் பக்கதில் வந்து நின்றாள்.

மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுத்து முடித்தவர் “வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வாடா மருமகளே” என கண்ணைச் சிமிட்டி சிரித்தார்.

தூரிகா மருமகளாக வந்ததும் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை கோதைக்கு.

ஆரத்தி எடுத்ததும் தாலி கட்டி கூட்டி வந்தோமே அவளின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போவோம் என்று கூட தோன்றாமல் விறுவிறுவென வீட்டுக்குள் சென்று தன் அறைக்குள் குளிக்கச் சென்றுவிட்டான் பொன்வண்ணன்.

ஆரத்தியை ஊற்றி வந்ததும் தூரிகா வீட்டுக்குள் போகாமல் நிற்பதை பார்த்த கோதை "அந்த ராஸ்கல் உன்னை கூட்டிட்டு போகலையா..? வாடா வீட்டுக்குள் போகலாம்" என்று மகனை கடிந்து கொண்டு மருமகளை வீட்டுக்குள் கூட்டிச்சென்றார் .

அவளோ வீட்டைச் சுற்றிப்பார்த்தாள். தன் அப்பாவின் வீட்டை விட கொஞ்சம் சிறியதாகவேதான் இருந்தது. தூரிகாவிற்கோ நிற்க கூட முடியவில்லை.

அவளது மனநிலையை புரிந்துக் கொண்ட கோதையோ “வாடா குளிச்சிட்டு சாப்பிடலாம்” என்று மருமகளை தன்னுடடைய அறைக்கே அழைத்துச் சென்று டவலை கொடுத்து குளிக்கச் சொல்ல “அத்தை எனக்கு ட்ரஸ்” என்று தயங்கிக்கேட்டுக்கொண்டிருந்த சமயம்

குளித்து விட்டு ட்ராக் பேண்ட்டுடன் பொன்வண்ணன் கோதையின் அறைக்குள் வந்தான்.

தூரிகா பொன்வண்ணனை தினமும் வொய்ட் கோட்டுடன் அதிகம் பார்த்தவள் இன்று ட்ராக் பேன்ட் கையில்லா பனியனுடன் பார்த்ததும் ‘இங்கே எதுக்கு வந்தாரு?’ என்று முகம் சுளித்து திரும்பி நின்றாள்.

“உங்க மருமகளுக்கு ட்ரஸ் கொடுக்க வந்தேன்” என்றவனோ தன்னை பார்த்து முகம் சுளித்து திரும்பியவளை கண்டு ‘இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட ரூம்க்குத்தான் வந்தாகணும் அப்போ எப்படி என்னை பார்க்காம இருப்பனு பார்க்குறேன்டி’ என்று அவளைத்திட்டிக்கொண்டு வெளியேச் சென்றுவிட்டான்.

இரண்டு நாட்களுக்கு முன்னே ரதியை மாலுக்கு கூட்டிச்சென்றிருந்தான் பொன்வண்ணன். பெண்கள் பிரிவில் ரதிக்கு தேவையானதை வாங்கிக்கொண்டிருக்க பொன்வண்ணனுக்கோ தூரிகாவின் நினைவு வர சர்ப்ரைஸ்ஸாக ட்ரஸ் எடுத்து வைப்போம் என்று ரதிக்கு தெரியாமல் இரண்டு செட் சல்வார், நைட்டி, நைட் பேண்ட், சர்ட் என்று வாங்கியிருந்தான்.

கோதையோ “பாருமா என் மகன் எனக்கு தெரியாமலே உனக்காக ட்ரஸ் எடுத்து வச்சிருக்கான்... உன்மேல் காதல் அதிகம்டா அவனுக்கு! அவனை புரிஞ்சுக்கோடி தங்கம்” என கன்னம் தட்டினார்.

“அத்தை உங்க மகனுக்கு உண்மையாவே என்மேல காதல் இருந்தா... அத்தனை பேர் முன்னாலயும் என்னோட விருப்பம் இருக்கா இல்லையானு கேட்காம தாலி கட்டியிருக்கமாட்டாரு ! அதுமட்டுமா உங்க மகன் அத்தனை பேர் முன்னால எனக்கு மு.முத்தம் கொடுத்தாரே ஒரு உயிரை காப்பாத்துற டாக்டர் பண்ணுற காரியமா! நீங்க என்னமோ என் மகன் நல்லவன்னு பாராட்டு பத்திரம் கொடுக்குறீங்க! என்னால உங்க மகனை மன்னிக்க முடியாது இப்போதைக்கு" என்று கோபத்தில் வெடித்துவிட்டாள்.

“கண்ணு என் மகன் உன்னை மனசார விரும்பினது உண்மைடா... கொஞ்ச நாள் முன்னாடி உன்னை கோவில் பார்த்ததும் உன்னை அவனுக்கு பிடிச்சுருச்சு... உன்னை பார்க்கவே திருவிழாவுல கேம்ப் போட்டு வந்தான் தெரியுமா! அவனை வெறுத்து ஒதுக்கிடாதே தங்கமே! ரதியை எல்லார் முன்னாலயும் கேலி கூத்தா நிற்கவச்சுட்டானேனு அவன் கோபமெல்லாம் துரைசிங்கம்மேலதான் இருக்கு... உன் மேல கிடையாது... உன்மேல அவனால கோபம் படவும் முடியாது... மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாள் ஒருவாரம் உன்கிட்ட முகத்தை தூக்கிவச்சு இருப்பான்... அதுக்குமேல அவனா வந்து உட்கிட்ட பேசுவான்டா நீ அவனை வெறுத்து ஒதுக்கிறாதே கண்ணு" என்று மகனுக்காய் பரிந்து பேசினார்.

“அப்போ உங்க மகள் ரதி மட்டும் எனக்கு ட்ரக் கலந்த ஜுஸை கொடுத்திருந்தா! அந்த இடத்துல நான் தானே எல்லாருக்கும் காட்சிப்பொருளா இருந்திருக்கணும் அத்தை... எங்கண்ணா செய்தது நியாயம்னு நான் சொல்லவரலை... அவர் தங்கச்சிக்கு பங்கமா நடக்குதுனா பார்த்துட்டு சும்மா இருப்பாரா! எங்க அண்ணா! சொல்லுங்க அத்தை!" என்றாள் கோபத்துடனே

“டேய் நடந்ததை பேசினா வருத்தம் தான் மிஞ்சும்... எல்லாத்தை மறந்துடுவோம்டா குளிச்சிட்டு வா ஐஞ்சு நிமிசத்துல டிபன் ரெடி பண்ணிடறேன்” என்று மருமகளை சமாளிக்க முடியாமல் சென்றுவிட்டார் கோதை.

சமையல் அறைக்குள் சென்ற கோதையோ 'சிங்க பயலே உன் தங்கச்சியும் காரமாத்தான் இருக்கா... நான்கூட என் மருமகள் அமைதினு நினைச்சேன்! நல்லா படபடனு பேசுறா.. உன்னை பார்க்கும்போது எங்க அம்மாவை பார்க்குறது போலவே இருக்கு’ என்று சிலாகித்து சமையலை கவனித்தார்.

தூரிகாவோ குளித்து முடித்து நைட்டியை போடாமல் சல்வாரை எடுத்து போட்டுக்கொண்டு தலையை துவட்டி முடியை கேட்ச் கிளிப்போட்டவளுக்கு தன் வீட்டு நினைவு வந்துவிட்டது.

"இந்த நேரம் தலைக்கு குளித்திருந்தால் அம்மா தலையை துவட்டி விட்டிருப்பாங்க... அம்மாச்சி சாம்பிராணி போட்டு விடும்... அப்பா மடியில படுத்துப்பேன்! சாப்பிடும்போது குமரன் அண்ணா கிட்ட சண்டைபோடுவேன்... சிங்கம் அண்ணா வந்ததும் சாப்பிட்டியா பாப்பானு கேட்பாரு... எல்லாரையும் மிஸ் பண்ணுறேன்" என்று அழுதுக் கொண்டேயிருந்தவள் அப்படியே படுத்தும் உறங்கிவிட்டாள்.

பொன்வண்ணனுக்கு அறைக்குள் இருக்க முடியவில்லை. சமையல்கட்டுக்குள் வந்தவன் “ம்மா ரதி என்ன பண்ணுறாளோ! அவளை சரியா கவனிப்பாங்களா உங்க அண்ணா வீட்டுல... உங்க மருமகனுக்கு சும்மாவே கைநீளும்... இப்போ ரதி கழுத்துல தாலி வேற கட்டியாச்சு! அப்பா மேல இருக்க கோபத்துல ரதியை கொடுமைபடுத்துவாங்களோ! அம்மாச்சி ரதியை இழுத்துட்டு வேற போனாங்க... எனக்கு இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு... எதுக்கும் நாளைக்கு நீங்க போய் ரதியை பார்த்துட்டு வந்துருங்க! எனக்கு என்னமோ மனசே சரியில்லை” என்றான் புலம்பலாக.

“எங்க வீட்டு ஆளுங்களை உன் தங்கச்சி மிரட்டாம இருந்தா சரிடா... எங்கம்மா ஒரே வார்த்தையில அந்த வீட்டு ஆளுங்களை அடக்கியிருவாங்க... அம்மாவையே இன்னேரம் கதி கலங்க வச்சிருப்பா உன் தங்கச்சி... அவளை யாரும் கொடுமைப் படுத்த வேண்டியதில்லை... அங்க இருக்கவங்களை உன் தங்கச்சி கொடுமைப் படுத்தாம இருந்தா சரி. என் பொண்ணை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வச்சிட்டோம்னு நிம்மதியா இருக்கேன்டா” என்றார் பெரும்மூச்சு விட்டு சந்தோசத்துடன்.

“உங்க மருமகன் ரதி கழுத்துல கடைசி வரை தாலி கட்டமாட்டேனு ஒத்து காலுல நின்னாரே... அவரு ரதியை மனதார பொண்டாட்டிய பார்ப்பாராமா! பேசாம ரதியை நம்ம கூடவே கூட்டிட்டு வந்திருக்கணும்... நீங்கதான் அங்க எல்லார் காலுலயும் விழுந்து துரைசிங்கத்தை ரதி கழுத்துல தாலி கட்ட வச்சிட்டீங்க... இப்ப ரதியை இளக்காரத்தோடதானே பார்ப்பாரு உங்க மருமகன்” என்றான் கோபமாகவும் அங்கலாய்ப்பாகவும்.

“எனனோட சிங்கப்பயல் பாசக்காரன் அவன் பாசம் வெளியே தெரியாதுடா! நம்மளை விட நம்ம ரதியை தங்கமா பார்த்துப்பான்... கொஞ்ச நாளுல உன் தங்கச்சி சிங்கத்தோட காலுலயே விழுந்து கிடப்பா பாரு... நான் சொல்றதை எழுதி வச்சிக்கோ... அவனுக்கு பிடிச்ச என்னை உங்கப்பா கூட்டிட்டு வந்துட்டாருனு கோபமா இருக்கான்” என்றவரோ "எனக்கு அன்பு பொண்ணு அலர்விழியை நினைச்சா எனக்கு பெரும் கவலையே!! பாவம்டா அவ... சின்ன வயசுலிருந்து சிங்கப்பயலை விரும்பி இருக்கா... இப்போ சிங்கம் அவளுக்கு இல்லைனு வரும்போது அவ மனசு காயப் பட்டிருக்கும் நான் நாளைக்கு அன்பு வீட்டுக்கு போய் அவகிட்ட மன்னிப்பு கேட்கணும்" என்றார் கோதை மனத்தாங்கலுடன்.

“அலர்விழிக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்டா இந்த ஊரு மாப்பிள்ளை வேணாம் அவளுக்கு ம் உன்னை போல ஒரு டாக்டர் மாப்பிள்ளையை பார்க்கணும்” என்றார் சிலாகித்த படியே.

“எனக்கும் அலர்விழியை பார்க்க கஷ்டமாகத்தான் இருந்துச்சு... எனக்கும் அவ தங்கச்சி தானே அவளுக்கு மாப்பிள்ளை நான் பார்க்குறேன் நீங்க அந்த கவலையை விடுங்க” என்றவனோ "நான் கேட்குற கேள்விக்கு உண்மையை மட்டும் சொல்லுங்க" என்றான் இறுக்கமாக முகத்தை வைத்து.

“ஐய்யனார் அங்கிள் பஞ்சாயத்துல அப்பாவை அவங்க குடும்பத்துல பிரளயம் கிளப்பிட்டாருனு சொன்னாரே! ஏன்? அப்பாவும் நீங்களும் லவ் பண்ணித்தானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க... அதுல என்ன தப்பு இருக்கு... அவங்களை விட அப்பா வசதி குறைவா இருக்காருனு அவரை வேண்டாம்னு ஒதுக்கி வச்சிட்டாரா... அப்பா தப்பு பண்ணினதா அவரை கட்டி வச்சி அடிச்சாங்கனு பஞ்சாயத்துல சொன்னாரே என்ன தப்பு செய்தாருனு எனக்கு சொல்லுங்க எனக்கு உண்மையை தெரியாம மண்டை வெடிச்சிடும் போல” என்று தலையை பிடித்துக்கொண்டான்.

“சொல்ற நேரம் இப்போ இல்லப்பா... நீயும் தூரிகாவும் சந்தோசமா வாழணும் எனக்கு அதுமட்டும் போதும்!” என்றார் கோதை பெரும்மூச்சுடன்.

“ஏய் கோதை டின்னர் ரெடியா?” என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்தபடியே சத்தம் போட்டார் ஆதிபெருமாள்.

“இதோ கொண்டு வரேனுங்க” என்றவரோ.. “உங்கப்பா ரதி ரதினு மகள் பாசத்துல உருகுனாரு... தங்கச்சி அந்த என்ன பண்ணுறாளோனு நீ கூட புலம்பின... ஆனா உங்கப்பாவை பார்த்தியா கூலா பசிதுக்குது சோறுபோடு வந்து உட்கார்ந்திருக்காரு... இதுல இருந்து என்ன தெரியுது... மகளை எங்க அண்ணா வீட்டுக்கு எதிரா அனுப்பி வச்சிருக்காரு உங்க அப்பா... இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதுனு தெரியலைடா” என்று புலம்பிக்கொண்டு தோசையை எடுத்துக்கொண்டுச் சென்றார்.

அலர்விழி வீட்டில் சாப்பிடாமல் கூட அன்பரசியின் மடியில் அழுதுக் கொண்டேயிருந்தாள். தாரகையோ அலர்விழி அழுவதை கண்டு அவளும் அழுக ஆரம்பித்தாள். பஞ்சாயத்து நேரம் தாரகை வெளியேச் சென்றிருந்தாள். வீட்டுக்கு வந்து பார்க்கும்போது துரைசிங்கம் ரதியின் கழுத்தில் தாலிகட்டியதும் பொன்வண்ணன் தூரிகா கழுத்தில் தாலி கட்டியதும் தெரிந்தது அவளுக்கு.

அன்பரசியோ “அழாதடி அலர் நடந்ததை இனி மாத்த முடியாது. எல்லாரும் சேர்ந்து உன் வாழ்க்கையில விளையாடிட்டாங்க. இனிமேல நாம அந்த வீட்டு வாசற்படி மிதிக்க கூடாது. அடியே தாரகை மாமா வீட்டுக்கு போறேன் அத்தையை பார்க்க போறேன்னு சொல்லி அந்த வீட்டு வாசற்படியை மிதிச்ச காலை உடைச்சு அடுப்புல போடுவேன்டி” என்று இருக்கும் கோபத்தை எல்லாம் தாரகையிடம் காட்டினார்.

அலர்விழியை எப்படி சமாதானப்படுத்துவது என்று கவலையுடன் வீட்டுக்குள் நுழைந்தார் கண்ணன். அவர் நினைத்ததுபோல அவள் அழுதுக் கொண்டுதான் இருந்தாள்.


அன்பரசி கண்ணனை கண்டதும் “வாங்க! வாங்க! இன்னும் அந்த கோதைமேல பாசம் குறையாம இருக்கீங்க போல... அவ என்கிட்ட கெஞ்சினது போது என் மக வாழ்க்கை முக்கியம்னு சொல்ல தெரியலையா உங்களுக்கு! நீங்க வாய் திறக்காமதானே ஜடம் போல நின்னீங்க... என் மகளும் சிங்கத்தை விரும்பியிருக்கானு ஒருவார்த்தை நீங்க பேசலையே... எப்படிங்க எல்லாரும் சேர்ந்து என் பொண்ணோட வாழ்க்கையில விளையாடிட்டீங்க... அவளை இனி யாரு கல்யாணம் பண்ணுவாங்க... சிங்கத்தோட பொண்டாட்டினு தானே ஊர் மக்கள் பேசினாங்க... இனி எப்படி அடுத்தவனை என் பொண்ணு கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அன்பரசி.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம் 19

“அம்மா அப்பாகிட்ட எதுக்கு சண்டை போடுறீங்க! சிங்கம் மாமாவை கல்யாணம் பண்ண எனக்கு கொடுத்து வைக்கல அவ்ளோதான்! விடுங்க என் மனசை நான் மாத்திக்குவேன்... ஆனா உடனே மாப்பிள்ளை பார்க்குறேன்... அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்னு சொல்லக்கூடாது... அப்புறம் மாமா வீட்டுக்கு போக வேண்டாம்னு என்னை தடுக்க வேணாம்... நான் முன்ன போலவே போவேன்... அது என் தாய்மாமா வீடு... எனக்கு அந்த வீட்டுக்கு போக உரிமை இருக்கு... அப்படித்தானே அப்பா” என்றவளுக்கு கண்ணீர் மீண்டும் வந்தது.


சிங்கம் பொண்டாட்டி இனி ஆக முடியாதே என்ற வருத்தம் அவளை உயிரோடு கொன்றுக் கொண்டிருந்தது. சிறுவயதிலிருந்து சிங்கத்தை மனதில் கணவனாக நினைத்திருக்கறவள் எப்படி ஒருநாளில் மறக்க முடியும்... அன்னை மடியில் படுத்து அழுதுக் கொண்டிருந்தவள் தந்தையின் தோளுக்கு மாறினாள்.

“அப்பா அக்கா பாவம்ல ஐய்யனார் மாமா ஏன் சிங்கம் மாமாவை அந்த ரதிக்கு கல்யாணம் செய்து வைக்க சம்மதிச்சாங்க” என்று தந்தையின் மற்றொரு தோளில் சாய்ந்துக் கொண்டு கேட்டாள் தாரகை.

“இன்னாருக்கு இன்னார்னு கடவுள் முடிச்சு போட்டு வச்சிருப்பாரு... அதன்படிதான் கண்ணு நடக்கும்” என்றார் சுரத்தை இல்லாத குரலில் கண்ணன்.

“ஆமா எனக்கு உங்க அப்பானு முடிச்சு போட்டு வச்சிருந்த மாதிரி சிங்கத்துக்கு ரதி முடிச்சு போட்டு இருந்திருக்கு என்னங்க” என்று குரல் வலிக்க கேட்டார் அன்பரசி.

கண்ணனோ “அன்பரசி சாப்பாடு போட்டு எடுத்துட்டு வா” என அதட்டினார் அவர் அடுத்த வார்த்தை பேச ஆரம்பிக்கும் முன்பு

அன்பரசி சாப்பாடு போட்டு எடுத்து வந்ததும் “கண்ணு சாப்பிடு” என்று அலர்விழிக்கு சாப்பாட்டை வாயருகே கொண்டுச் சென்றார் கண்ணன்.

“எனக்கு பசிக்கலங்கப்பா” என்றாள் விசும்பலுடன்.

“வயித்தை காயப்போடக்கூடாது கண்ணு.. அப்பாவுக்காக சாப்பிடு” என்றபோது அவருக்குமே கண்கள் கலங்கியது. காதலின் வலி அவருக்கும் தெரியும்தானே... மகளின் மனம் என்ன பாடு படும் என்று தெரியாது போகுமா என்ன?

தந்தையின் கண்ணில் கண்ணீரை கண்ட இரு பெண்களும் கண்ணீரை துடைத்துவிட்டு வாயை திறந்தனர். இருவருக்கும் சாப்பாடு ஊட்டி முடித்தவர் "உங்கம்மா கோபத்துல மாமா வீட்டுக்கு போகாம இருப்பா... ஆனா நாம போகாம இருக்க கூடாது... ஐய்யனார் மாமா அப்பாவுக்கு தொழில் அமைச்சு கொடுத்தாங்க... நான் இந்தளவு முன்னேறி இருக்கேன்னா... அதுக்கு காரணம் ஐய்யனார் மாமாதான் கண்ணுங்களா... செய்த நன்றியை நாம எப்பவும் மறக்ககூடாது" என்றதும் இரு மகள்களும் சரியென்று தலையை ஆட்டினார்கள்.

“ம்க்கும் நன்றியாம் நன்றி... தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கொடுத்தா எல்லாம் வீட்டில் செய்த சீரை செய்தாங்க பெருசா என்னத்தை செய்துட்டாங்காளம்” என்று கன்னத்தில் இடித்துக்கொண்டுச் சென்றார் அன்பரசி.

“அலரு உன் மனசுல வலி இருக்கும்... உனக்குனு ஒருத்தன் வருவான்டா சிங்கத்தை விட உன்னை தாங்கறவன் வருவான் மனசை இறுக்காதே! பேசாம கண்ணை மூடித்தூங்கு” என்று மகளின் தலையை வருடி விட்டு “தாரகை அக்கா கூடவே இருக்கணும்” என்று கண்ணை காட்டிச் சென்றார் கண்ணன்.

"நம்ம வீட்டுக்கு வந்த மருமகள் எங்கே கோதை... உன்னை வேண்டாம்னு ஒதுக்கி வச்சாலும் உனக்கு சேர வேண்டிய சொத்தெல்லாம் கொடுத்தாங்கல்ல... இப்போ ஐய்யனார் பெத்த பொண்ணுக்கு உனக்கு கொடுத்ததை விட இரண்டு மடங்கு சீர் கொடுக்கணும்... எப்படியும் இனி உன்னோட அண்ணா வீட்டுக்கு போய் வரதான் இருப்ப... அப்போ பேச்சு வாக்குல கேட்டிடு... இல்ல நான் நாலு பேர் மத்தியில வச்சு கேட்பேன் நாக்கை பிடுங்கி சாகறது போல" என்றார் விஷமக்காரன் ஆதிபெருமாள்.

“என்னங்கப்பா வரதட்சனை கேட்குறீங்களா” என்று சமையல் கட்டிலிருந்த கேரட்டை கடித்துசாப்பிட்டு கொண்டு வந்த பொன்வண்ணனை ஆதிபெருமாள் இங்கே இருப்பான் என்று மகனை எதிர்பார்க்கவில்லை. மனைவியை முறைத்தார் "உன் மகன் இங்க தான் இருக்கான்னு சொல்லமாட்டியாடி?" என்று பல்லிடுக்கில் பேசினார்.

“அங்க என்ன அம்மாவை கண்ணால மிரட்டுறீங்கப்பா... நீங்க வேணா வரதட்சனை வாங்கியிருக்கலாம்.. எனக்கு என்னோட பொண்டாட்டி மட்டும் போதும்... அவ சொத்து எனக்கு ஒரு நயா பைசா கூட வேண்டாம். ஏன்னா நான் படிச்சது அம்மாவுக்கு கொடுத்த சொத்து காசுல தானே!" என்றான் தந்தையை ஏளனமாக பார்த்து

ஆதிபெருமாளோ “நாம வரதட்சனை கேட்கலையே! சீர்தானே கேட்கிறோம்... உங்க அம்மாவுக்கு சீரா காசு பணம் கொடுத்தாலும் அதை வைச்சு நான் தொழில் செய்து பலமடங்கா பணத்தை பெருக்கியிருக்கேன்டா” என்றார் பெருமை பீத்திக்கொண்டு

“ம்மா ஐய்யனார் அங்கிள் வீட்ல இருந்து ஒரு பொருள் நம்ம வீட்டுக்கு வரக்கூடாது அவ்ளோதான் பார்த்துக்கோங்க” என்று கோபப்பட்ட பொன்வண்ணனோ “உங்களை போல அடுத்தவங்க காசுக்கு அலையுறவன் என்னையும் எடை போடாதீங்கப்பா நான் சமபாரிக்குற பணம் எனக்கு போதும்” என்று ஆதிபெருமாளின் மூக்கை உடைத்துச் சென்றான் பொன்வண்ணன்.

“ஐய்யனார்கிட்ட பணம் கொட்டிக்கிடங்கு... பொழைக்க தெரியாதவனா இருக்கான்டி உன் மகன்... அவனுக்கு வேணா ஐய்யனார் பணம் வேணாம போகலாம்... எனக்கு இன்னும் வேணும்டி... இப்பதான் உன் அண்ணன் உன்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்கான்ல நம்ம பொண்ணை பார்க்க போகும் நேரம் நகை பணம்னு கேட்டு வாங்கிட்டு வந்துடு” என்றார் பணம் தின்னும் கழுகாக.

“ச்சே என்ன மனசன் நீங்க எங்கண்ணன் கொடுத்த சொத்தே இன்னும் ஒரு தலைமுறை போடுகிற அளவுக்கு வாழலாம்... அப்ப தான் உன் பேச்சை கேட்டு பயந்து இருந்தேன்! இப்போ நான் பயப்படமாட்டேன்... என்ன மீறினா என்னை கொன்னுருவேன்னு மிரட்டுவ... கொன்னா கொன்னுபோடு எனக்கு கவலையில்லை. என் ரெண்டு பிள்ளைகளுக்கு நல்லபடியா வாழ்க்கை அமைஞ்சிடுச்சு.. எனக்கு கவலை இல்லை ” என்று கணவனை எதிர்த்து பேசிட்டு அங்கிருந்து சென்று விட்டார்

“என் பொண்ணு பொன் முட்டைஇடுற வாத்து அவ இருக்கும் போது நீ இனிமே எனக்கு தேவைப்படமாட்டே போடி போ” என்று சிரித்தபடியே தட்டில் கைகழுவிச் சென்றார் ஆதிபெருமாள்.

கோதை தூரிகாவை சாப்பிட கூட்டிவர சென்று பார்க்க அவளோ உறங்கிக்கொண்டிருந்தாள்.

பாவம் புள்ள காலையிலிருந்து கேம்ப்ல அலைஞ்சுது... சாய்ந்தரம் பஞ்சாயத்து அவ நினைச்சு கூட பார்க்காத விசயங்கள் நடந்துருச்சு... அவளது கன்னத்தை வருட கண்ணீர் கோடுகள் வழிந்திருந்ததை கண்டு மனம் துடித்தார். தானும் இது போல நிறைய இரவுகள் கண்ணீருடன் தானே கழித்தேன் என்றவருக்கும் இப்போதும் அந்த இரவுகள் அவருக்கு நரகத்தில் இருந்த உணர்வுகளை உணர்ந்தவர் கண்ணை மூடித்திறந்து "என் மகன் உன்னை ராணி போல வைச்சுப்பான் தங்கமே! நீ அழவேண்டிய அவசியம் உனக்கு இல்லை..." என்று அவளது தலையை வருடிவிட்டு “தூரிகா” என்று மெதுவாய் குரல் கொடுத்தார்.

“அப்பத்தா கொஞ்ச நேரம் தூங்குறேன் அசதியா இருக்கு” என்று சிணுங்கினாள். தன் தாய் வீட்டில் இருக்கும் நினைவில்

பொன்வண்ணன் கோதையின் அறைக்கு வந்தவன் மருமகளை எழுப்பிக்கொண்டிருக்கும் கோதையை கையை கட்டி பார்த்திருந்தான்.

அவளோ “அப்பத்தா நான் தூங்குறேன் எழுப்பாதீங்க!” என்று காலைக்குறுக்கிப்படுத்தாள்.

தூரிகாவின் அருகே வந்தவனோ “ம்மா அவளை என் ரூம்க்கு தூங்கிட்டு போறேன்! நீங்க சப்பாத்தி மட்டும் ஹாட்பாக்ஸ்ல கொண்டு வந்து என்னோட ரூம்ல வச்சிடுங்க” என்றவனிடம் “டேய் அவளே பயந்து இருக்கா... ரெண்டு நாள் என்னோட அறையில இருக்கட்டும் நீ போ” என்று அதட்டினார்.

“ம்மா எப்பவா இருந்தாலும் அவ என்னோடதான் இருக்கணும்... இப்பவே வரட்டுமே! என்ன ரெண்டு பேரும் சண்டை போடுவோம் அவ்ளோதான் நான் பார்த்துப்பேன்... எனக்கு பொண்டாட்டி வேணும்” என்று அடமாய் நின்ற மகனை பார்க்க சிரிப்புதான் வந்தது கோதைக்கு.

“டேய் நீ டாக்டர்டா உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை... பார்த்துக்கோடா... என் மருமகள் பாவம்” என்று மகனிடம் நாசுக்காய் பேசியதும்

“ம்ம் எனக்கு எல்லாம் தெரியும் சும்மா லெக்சர் எடுக்காதீங்க” என்று தாயை முறைத்தவன் தூங்கிக்கொண்டிருக்கும் தூரிகாவை தூக்கிக் கொண்டு தன் அறையின் மெத்தையில் படுக்க வைத்தான். அவனுக்கு தூரிகாவும் அவள் அண்ணாவுடன் சேர்ந்து ரதியை
அவமானப்படுத்தியிருக்கிறாளோ என்று இன்னமும் அவனுக்கு சந்தேகம் தீரவில்லை.

தூரிகாவின் மேல். கோபமும் இருக்கு! காதலும் இருக்கு அவன் காதலிச்ச பெண் தனது அறையில் அதுவும் தன்னுடயை மஞ்சத்தில்... அவனால் சந்தோசப்படவும் முடியவில்லை. மதில் மேல் பூனையாக நின்றிருந்தான்.

“சாரிடி உன்னோட கழுத்துல உன்கிட்ட கேட்காம தாலி கட்டினதுக்கு... எனக்கு என் காதலும் வேணும்... என் தங்கச்சிக்கும் நியாயம் கிடைக்கணும் அதான் தாலி கட்டிட்டேன். அந்த சமயம் எனக்கு வேற வழி தெரியலை..." என்று வருந்தியவன் அவளது கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டான்.

தூக்கத்திலும் அவனது கையை தட்டிவிட்டு புரண்டு படுத்தாள். ‘எழுந்தா சண்டை போடுவா! நானும் கோபாம பேசுவேன்! இதுவரை அவகிட்ட காதலாதான் பேசியிருக்கேன்! கல்யாணம் பண்ணினாலே சண்டைதான் போடணும் போல’ பெரும்மூச்சு விட்டு திரும்பினான்.

கோதை சாப்பாத்தியும் குருமாவையும் ஹாட்பாக்ஸில் எடுத்து வந்திருந்தவர் “ரொம்ப நேரம் அவளை தூங்க விடாதே எழுப்பி சாப்பிட வை... அவ அடிச்சா கூட நீ வாங்கிக்கணும்டா... புள்ளையை எதாவது மிரட்டியிருந்த வேறொரு கோதையை பார்க்க வேண்டியிருக்கும்” என்று ஐய்யானாரை போல மிரட்டினார் கோதை.

“என்னங்கம்மா நீங்களும் உங்க அண்ணா போலவே மிரட்டுறீங்க.. என் தங்கச்சி தப்பு பண்ணினா அப்பவே என்கிட்ட சொல்லியிருக்கணும் அதை விட்டு அவளையும் ட்ரக் கலந்த ஜுஸ் குடிக்கவச்சு ஒரு பொண்ணுனு கூட பார்க்காம அவ அத்தனை முன்னாடி கேலி கூத்தா நிற்க வச்சாருல்ல உங்க சிங்கப்பையன்... அவர் சிங்கமா கர்ஜிச்சா... நானும் புலியா உறும போறேன். அங்க என் தங்கச்சி கண்ணுல தண்ணி வரவச்சாருனா... அவர் தங்கச்சி கண்ணுல நானும் தண்ணி வரவைப்பேன்! எங்க விசயத்துல நீங்க தலையிடாதீங்கம்மா” என்றான் கோபம் கொப்பளிக்க

“டேய் நீ எப்போ வன்மமா மாறினா! போடா எனக்கு இதுக்கு மேல பேச தெம்பில்லை. உன்னால தூரிகாவை அழ வைக்க முடியாதுடா” என்று அவனது தலையை முடியை கலைத்து விட்டுச் சென்றார் கோதை.

பொன்வண்ணனோ தூரிகாவின் மறுபக்கம் வந்து படுத்தவன் அவளை தான் பார்த்திருந்தான். “நான் உன் கழுத்துல தாலி கட்டின பிறகும் என்கூட வரமாட்டேன் உன் தாத்தா அப்பாவை கட்டிபிடிச்சு அழற... எனக்கு மனசு எப்படி வலிச்சுது தெரியுமா... நான் உன்னை எந்தளவு லவ் பண்ணினேனு உனக்கு தெரியும்லடி! எப்படி நீ என்னோட வரமாட்டேனு சொல்லாம் இரு இனி ஒவ்வொருநாளும் வச்சு செய்யுறேன்” என்று கோபம் கொண்டு கண்ணை மூடிப்படுத்தான்.

11 மணி இருக்கும் “ம்மா பசிக்குது” என்று தூக்கத்தில் உளறினாள் தூரிகா. தன்னவளின் குரல் கேட்டதும் கண் விழித்துவிட்டான் பொன்வண்ணன்.

எழுந்து உட்கார்ந்து “ஏய் எழும்புடி பசிக்குது சொன்னா சப்பாத்தி வாய்க்குள்ள வந்து விழுமா” என்றான் அவன் உறுமலாக.

தூரிகாவோ கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவள் எதிரே அவளை முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் பொன்வண்ணன்.

அவளோ தன்னை குனிந்து பார்த்தாள் தன் மேல் ஷால் இல்லாமல் இருக்க ஷாலை தேடினாள்.

“நீ தேடுறதுக்கு இனிமே இங்க வேலை இருக்காது.. நான் பார்க்கத்தானே எல்லாமே! அப்படியே உட்கார்ந்து சாப்பிடு” என்றான் தெனாவெட்டாய்.

அவளோ அவனை முறைத்து விட்டு அங்கிருந்து பெட்சிட்டை எடுத்து போர்த்திக்கொண்டாள்.

பெட்சீட்டை உருவி “ஏய் சாப்பிட்டு படுடி... நீ சாப்பிடாம இருந்து காலையில மயக்கம் போட்டு விழுந்தா கடைசியில நான் ஏதோ உன்னை கொடுமை பண்ணிட்டேன்னு ஊரே பேசுவாங்க... உன் அண்ணன் வேட்டியை மடிச்ச கட்டி வந்து திமிறி நிற்பான்... எனக்கு தேவையா சாப்பிட்டு தூங்குடி” என்றான் காட்டமாக.

அவளோ அவனிடம் பேசவேயில்லை.. அவளுக்கு பசியாகவும் இருக்க டேபிள் மேல் இருந்த டவலை எடுத்து மேல போட்டுக்கொண்டு ஹாட்பாக்ஸை திறந்து சாப்பாத்தியை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

‘புருசன் சாப்பிட்டானானு ஒரு வார்த்தை கேட்கலை இவ மட்டும் கொட்டிக்குறா... ஐய்யனார் குடும்பத்துக்கு இந்த வெட்டி கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என முணுமுணுத்து அவனும் சப்பாத்தியை போட்டு சாப்பிட்டான்.


'ஓ இவன் இன்னும் சாப்பிடல போல.. அதான் இப்ப சாப்பிடுறான்ல' என்று அவள் சாப்பிட்டு சமையல்கட்டுக்குச் சென்று தட்டை கழுவி விட்டு திரும்ப அங்கே நின்ற ஆதிபெருமாளை பார்த்து “அம்மா” என்று கத்திவிட்டாள் தூரிகா.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 20


திடீரென்று ஆதிபெருமாளை சமையல்கட்டில் பார்த்த தூரிகாவுக்கோ நெஞ்சுக்குள் படபடவென்று வந்தது.

"அம்மாடி மருமகளே நான் உன்கிட்ட பேச தான் வந்தேன் பயப்படாதே!" என்று அவளின் பயத்தை தெளிய வைத்தார்.

“அ.அதுக்குனு இ.இப்படியா பேசாமவந்து நிற்பீங்க எ.என்ன வேணும்னு சொல்லுங்க” என்றாள் தொண்டையில் எச்சிலை விழுங்கிக்கொண்டு.

“அ.அது வந்து உனக்கு சேர வேண்டிய சொத்தை பங்கு கேட்டு வாங்கிட்டு வந்துடு கண்ணு! என் மகன் வேண்டாம்னு சொல்லுவான் நீ உனக்குனு வரவேண்டியதை விடக்கூடாது... நமக்கு வரவேண்டியதை வாங்கிட்டு வந்திடணும்” என்றதை கேட்டு தூரிகாவோ சரியான பணபிசாசா இருப்பாரு போலயே என்ற முகம் சுளித்து “எங்கப்பாவுக்கு எனக்கு என்ன செய்யணும்னு தெரியும்... நீங்க பணப்பேயா அலையாதீங்க! கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம மருமககிட்ட வந்து சொத்து வாங்கிட்டு வானு கேட்குறீங்க... இங்க என்ன ஒரு வேளை சாப்பாட்டுக்கா பஞ்சம்! இல்லை இன்னிக்கு நைட்டுக்கு சாப்பாடு செய்ய ஒரு கிலோ அரிசி வாங்கிட்டு வரணுமா?” என்று பொட்டில் அடித்தாற் போல பேசியவள் முகத்தில் ஒரு துளி பயம் இல்லாமல் சிங்கத்தின் தங்கச்சி என்று காட்டினாள் தூரிகா.

பொன்வண்ணனோ தூரிகாவின் சத்தம் கேட்டு வந்தவன் அவள் ஆதிபெருமாளிடம் பேசியதை கேட்டு சிலையாக நின்றுவிட்டான்.

‘சிங்கம் தங்கச்சினு நிரூபிச்சிட்ட பொண்டாட்டி குட் நான் கூட எங்கப்பாகிட்ட பேசறதுக்கே பயந்து கிடப்பனு நினைச்சேன் இந்தளவு போல்டா பேசுவனு நான் எதிர்பார்க்கலைடி’ என்று சந்தோசப்பட்டு நின்றான்.

தூரிகா இப்படி தன்னை எடுத்தெறிஞ்சு பேசவாளென்று எதிர்பார்க்காத ஆதிபெருமாளோ “என் மகனுக்குத்தான் பொழைக்க தெரியலை...சொத்து கேட்கமாட்டேன்னு சொல்லிட்டான்... நீயாவது புத்தியா இருப்பேன்னு நினைச்சேன்! நீ அவனை விட புத்தி கெட்டவளா இருக்கியே” என்று தலையிலடித்துக்கொண்டு திரும்ப பொன்வண்ணன் கையை கட்டி அவரை முறைத்துக்கொண்டு நின்றான்.

தூரிகாவோ அங்கே நிற்க கூட பிடிக்காமல் தந்தை, மகன் இருவரையும் தாண்டி அவர்களது அறைக்குச் சென்றுவிட்டாள்.

“கொஞ்சம் கூட அறிவே இருக்காதா உங்களுக்கு..? வீட்டுக்கு வந்த மருமக கிட்ட இப்படி அசிக்கப்பட்டு நிற்கறது நல்லாவா இருக்கு... என்ன ஜென்மமோ நீங்க அடுத்தவங்க காசுக்கு ஏன் நாக்கை தொங்க போட்டு நாய் போல அலையணும்?” என்று அவனும் திட்டிவிட்டுச் சென்றான்.

தூரிகாவோ “அத்தை பாவம் இந்த ஆள்கூட எப்படித்தான் குடும்பம் நடத்துறாங்களோ?” என்று கோதை மேல் பரிதாப்பட்டுக்கொண்டவள் காலையில ஹாஸ்பிட்டல் போகணுமென்று கண்ணைமூடினாள்.

கோமதியோ “என்னங்க தூரிகா இந்த நேரம் என்ன பண்ணுறாளோ தெரியலையேங்க! தூக்கத்துல எழுந்து பசிக்குதுனு சொல்லுவாளே! மாப்பிள்ளையும் நம்ம சிங்கம் மேல இருக்க கோபத்துல நம்ம பொண்ணை குத்தம் சொல்லுவாரா! எனக்கு படபடனு வருதுங்க” என்று நெஞ்சில் கையை வைத்தார் கோமதி.

வீரய்யனுக்கும் நாச்சிக்குமே தூரிகாவை நினைத்து கலக்கம் இருந்ததுதான். கோதை தூரிகாவை கவனித்துக்கொள்வாள் என்ற சிறு நம்பிக்கையில் நிம்மதியாய் இருந்தனர்.

ஐய்யனாரோ “மாப்பிள்ளை நம்ம தூரிகாவை காயப்படுத்தமாட்டாரு ! நம்ம வீட்டுப் பொண்ணு கோதைக்கு மருமகளா போனதே பாக்கியம்னு நினைப்பா... என் கவலையே அந்த ஆதிபெருமாளை நினைச்சுதான் கோமதி! தூரிகாவுக்கு செய்ய வேண்டிய சீர் முறையை நாம குறைவில்லாம செய்துடணும்பா... நீங்களும் அம்மாவும்தான் கோதை வீட்டுக்கு போகணும்... அதுவும் மாப்பிள்ளை இருக்க நேரம் போனாதான் உங்களையும் கொஞ்சம் மதிப்பான் இல்லைனா உங்களையும் அவமானப்படுத்திடுவான் அந்த துரோகி" என்றார் பெரும்மூச்சுடன்.

வீரய்யனோ “நானும் அதைதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன் ஐய்யனார். பொண்ணுக்கு சீர் செய்யலைனு ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பான்... ஆதிபெருமாள் பேசுற அளவு நாம வச்சிக்க கூடாதுப்பா” என்றார் கவலையாக.

“சரிங்கப்பா சிங்கத்துக்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருக்க

“ம்மா சாப்பாடு எடுத்து வைங்க” என்று அங்கே வந்த துரைசிங்கத்திடம் “தூரிகாவுக்கு சீர் முறை கொடுத்துடணும்னு முடிவு பண்ணியிருக்கேன்ப்பா” என்றவரிடம் “உங்க விருப்பப்படி பண்ணுங்கப்பா நீங்க அந்த வீட்டுக்கு போகவேண்டாம் தாத்தா அப்பத்தா மட்டும் போகட்டும்” என்றதோடு முடித்துக்கொண்டு டைனிங் டேபிளுக்குச் சென்றான்.

இன்னமும் ரதி தேவியின் கழுத்தில் தாலி கட்ட வைத்துவிட்டார்கள் என்ற கோபத்தில்தான் இருந்தான் துரைசிங்கம்.

ரதிதேவியோ ஹாலில் இருப்பவர்களை ஓரு பார்வை பார்த்தவள் “வீட்டுக்கு வந்த மருமகளை சாப்பிட சொல்ல மாட்டீங்களா? இது தான் உங்க வீட்டு முறையா..? ஊருக்குள்ள ஐய்யனார் வீடு பாரம்பரியம் அது இதுனு சும்மா அலப்பறை பண்ணுறாங்க... இங்க வந்து பார்த்தாதான் தெரியுது இவங்களோட வண்டவாளம்” என்று முந்தானையை கையில் வைத்து விசிறிக்கொண்டு திமிராக பேசினாள்.

துரைசிங்கமோ கொழுப்பை பாரேன் இவளுக்கு இன்னும் என்ன பேசுகிறாள் என்று கேட்பதற்காக அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

ஐய்யனாரோ ஆதிபெருமாள் பொண்ணு இது போல பேசலைனாத்தான் அதிசயம் என்று பொறுமையாக இருந்து கொண்டார்.

நாச்சியோ “வாடி என் மக பெத்த ரத்தினமே! ஊருக்கே தினமும் சோறு போடுற குடும்பம் நாங்க... இந்த வீட்டு மருமகளுக்கு சோறு போடாம இருப்போமா! ஆனா அதுக்கு முன்ன எங்க வீட்டுக்கு புது மருமக வந்தவுடன் அந்த நேரம் சமையல் அவதான் செய்யணும் உனக்கு சமைக்க வருமா! ராஜாத்தி” என்றார் இழுவையாக.

“எனக்கு சமைக்க தெரியும். டாக்டர்க்கு படிச்சிருந்தா சமைக்க தெரியாதுனு நினைச்சீங்களா... எங்க மீனாட்சி அத்தை எனக்கு நம்ம நாட்டு சைவம் அசைவம் சமையல் செய்வதற்கு சொல்லிக்கொடுத்திருக்காங்க பிரமாதமா சமைப்பேன்” என்றாள் கெத்தாக.

“அப்படியா வாயேன் ஒரு சட்னி மட்டும் அரைச்சு கொடு... உன் புருசன் பசிக்குதுனு சாப்பிட உட்கார்ந்திருக்கான் சீக்கிரம் வா” என்று ரதிதேவியை சமையல்கட்டுக்குள் அழைத்துச் சென்றார் நாச்சி.

துரைசிங்கமோ 'அப்பத்தா பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! நாம கொஞ்ச நேரம் கழிச்சு எடுப்போம்... இப்ப நடக்கறதை அமைதியாக வேடிக்கை பார்ப்போம்' என்று மௌனமாக உட்கார்ந்திருந்தான்.

மார்டன் கிச்சனாக இருக்குமென்று நினைத்த ரதியோ சமையல்கட்டுக்குள் சென்றதும் ஷாக் அடித்ததை போல விழி விதிர்த்துப்போய் நின்றாள். அம்மிக்கல் ஆட்டாங்கல் எல்லாம் இருந்தது... சமையல் மேடையை பார்த்தாள் நல்ல வேளை கேஸ் அடுப்பு மட்டும் இருந்தது.

“சட்னி அரைக்க ஆரம்பிங்க டாக்டரம்மா தோசையெல்லாம் சுட்டு வச்சாச்சு... ஆனா உன்ற புருசனுக்கு உன் கையால சட்னி அரைச்சு சுட சுட தோசை சுட்டு கொடு! நான் இங்கன உட்கார்ந்து நீ செய்யற வேலையை பார்க்குறேன்” என்று அங்கே காய் வெட்ட போட்டிருந்த நாற்காலியில் உட்கார்நதார்.

“என்ன கிழவி மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வாங்க காசு இல்லையா உங்ககிட்ட?” என்றாள் ஏளனத்துடன்.

துரைசிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டான்.

“என்னடி சொன்ன மிக்ஸி, கிரைண்டர் வாங்க காசு இல்லைனா! ஆமாடி எங்ககிட்ட காசு இல்லை... நீ வாங்கி போடு! ஆளபாரு ஆளாக்கு போல இருந்துட்டு வாய் மட்டும் பெரிய வாய்க்கால் போல நீண்டுக்கிட்டு போகுது மெடிக்கல் கேம்ப்ல குக்கர் சாப்பாடு உடம்புக்கு ஆகாது... சாப்பாடு வடிச்சு சாப்பிடணும்னு சொன்ன... ஊருக்கு மட்டும்தான் உபதேசம் போல... எங்க வீட்ல சாப்பாடு வடிச்சுதான் செய்யணும்... சட்னியா இருந்தாலும் சரி கறிக்குழம்புக்கும் சரி! சாம்பாருக்கும் சரி! எல்லாம் கையில அரைச்சுதான் சமைக்கணும்... சும்மா வாய் பேசாம சட்னி அரைடி" என்றவனோ அங்கிருந்த சமையல் திண்டில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான்.

கோமதியோ “என்னங்க அந்த பொண்ணை ஏன் இவங்க கஷ்டப்படுத்துறாங்க... அவளுக்கு ஆட்டாங்கல்லுல அரைக்க வருமோ என்னமோ! பாவம் நான் போறேன்ங்க!" என்று எழுந்தவரை “சரி போய் பாரு” என்று பெரும்மூச்சு விட்டார் ஐய்யனார்.

“எ.எனக்கு இந்த அம்மியில எல்லாம் அரைக்க தெரியாது... மிக்ஸி இருந்தா சட்னி அரைப்பேன் இல்லனா நான் சமைக்க முடியாது” என்று வீம்பாக பேசி இடுப்பில் கை வைத்து நின்றாள் ரதி.

திண்டிலிருந்து குதித்து “ஏன் அப்பத்தா இப்படி சமைக்க தெரியாதவ கழுத்துல தாலிகட்டச் சொல்லி என்னை கட்டாயப்படுத்துனீங்க! இந்த நேரம் அலரு இருந்தா எனக்கு வகை வகையா சட்னி பண்ணி போட்டிருப்பா... ஆடத்தெரியாதவ தெரு கோணலா இருக்குனு சொன்னாளாம் அந்த கதையா இருக்கு... எனக்கு மிக்ஸியில் தான் சட்னி அரைக்க தெரியும்னு சொல்றது” என்றான் அவளை கிண்டல் செய்தபடி.

“இப்ப என்ன சட்னி அம்மியில அரைக்கணும் அவ்ளோதானே அரைச்சு தாரேன்... யார் கூடவும் என்னை கம்பேர் பண்ண வேணாம்... கிராமத்து பொண்ணுங்க செய்யற வேலையெல்லாம் நானும் செய்வேன்” என்று திமிராக பேசியவள் “கிழவி சட்னி அரைக்க தேங்காய் எடுத்துக்கொடு” என்றதும்

“ஏய் யாரை பார்த்து கிழவிங்கிற” என்று கையை ஓங்கி அடிக்கச் சென்றான்.

“சிங்கம் என்ன இது பொண்டாட்டியை கை நீட்டக்கூடாதுப்பா! அவ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் கிழவிதானே! சொல்லிட்டு போறா விடு” என்று பேரனை அடக்க...

"அப்பத்தா நீங்க உங்க வேலையை பாருங்க என் பொண்டாட்டியை சமைக்க சொல்லிட்டிருக்கேன்! உங்க மருமக சமைச்சதை போய் சாப்பிட்டு தூங்குங்க" என்று அவரை அங்கிருந்தே அனுப்பி விட்டான்.

அவரோ துரைசிங்கத்தை கண்டிக்க முடியாமல் திணறி வெளியே வந்துவிட்டார்.

“நான் சட்னி அரைக்குறேன்” என்று வந்த கோமதியை "நீங்க உங்க வேலையை பாருங்க" என்று அவரை மிரட்டி அனுப்பிவிட்டான்.

ஐய்யனாரோ “புருசன் பொண்டாட்டி நடுவுல யாரும் போகாதீங்க கோமதி நீ எங்களுக்கு சாப்பாடு எடுத்து வை” என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்தனர்.

ரதியோ 'வாயை சும்மா வச்சிருக்காம ஏன் டி சமைக்குறேன்னு சொன்னே... இந்த கருவாயன் இதுதான் சமயம்னு என்னை வச்சி செய்யுறான்’ என்று புலம்பிக்கொண்டு பிரிட்ஜை தேடினாள்... அங்கே பிரிட்ஜ் இருந்தால்தானே...

“உங்க வீட்ல பிர்ட்ஜ் இல்லையா?” என்று முகம் அஷ்டகோணலாக்கி கேட்டாள் துரைசிங்கத்திடம்.

அவள் கேட்டதுக்கு பதில் கூறாமல் “எனக்கு கார சட்னி வேணும் சீக்கிரம் அரைச்சு கொடுடி பசிக்குது... உன்கிட்ட சட்னி அரைக்கச் சொல்லி அரைமணிநேரம் ஆகுது... இனிமே காலையில சாப்பாட்டு இப்பவே பசிக்குதுனு சொன்னாதான் காலையில சாப்பாடு நேரமே கிடைக்கும்னு நினைக்குறேன்” என்று அவளை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தான்.

அவளால் அவன் ஒவ்வொரு வார்த்தை தன்னை குறை சொல்வதை பொறுக்கவே முடியவில்லை... தக்காளி, வெங்காயம் எல்லாம் நறுக்கி வைத்து அடுப்பை பற்ற வைத்தாள். 'நல்லவேளை கேஸ் அடுப்பாவது வாங்கி வச்சிருக்காங்களே' என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

“சைவம் சமைக்க மட்டும்தான் கேஸ் அடுப்பு அசைவம் செய்ய விறகு அடுப்புதான்” என்றதும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது.

வாய் பேசவேயில்லை ரதி... கொஞ்ச நேரத்தில் அவளது வாயை அடக்கிவிட்டான் துரைசிங்கம்.

ரெண்டு மிளகாய் போட்டவளை பார்த்து “என்னடி எனக்கு என்ன நாக்கு செத்து கிடக்கா... நாலைஞ்சு மிளகாய் போடு” என்று அதட்டினான்.

“நாலைஞ்சு மிளகாயா அல்சர் வந்துடும்” என்று டாக்டராக அவள் பேச.

“அந்த ஈரவெங்காயம் எனக்கும் தெரியும்டி நீ வளவளனு பேசாம சட்னி அரை” என்றான் எரிச்சலுடன்.

அவளோ வீம்புக்காய் ஆட்டாங்கல்லில் வதங்கிய பொருட்களை போட்டு ஆட்டத்தெரியாமல் திருப்பிக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது. தக்கா புக்கானு கல்லை போட்டு இடித்துக்கொண்டு ஆட்டினாள். கண்களில் வேறு சட்னி தெறித்து கண்கள் எரிய ஆரம்பித்தது.

'என்னையா வலுக்கட்டாயமா தாலி கட்ட வச்சீங்க அப்பாவும் மகளும்... இருடி நான் தினம் டார்ச்சர் கொடுக்கறது என் காலுல விழுந்து கதறப்போற' என்றான் அடங்கா கோபத்துடன் துரைசிங்கம்.

ஒரு வழியாக சட்னியை அரைத்து முடித்து பாத்திரத்தில் எடுத்துப்போட்டு தோசை மாவு எடுத்து தோசையை வார்த்து முடிக்கவே அரைமணிநேரம் ஆனது.

துரைசிங்கமோ “டைனிங் டேபிளுக்கு எடுத்துட்டு வா” என்று டைனிங் ஹாலுக்குச் சென்றுவிட்டான்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

பெரியவர்கள் சாப்பிட்டு தூங்குவதற்குச் சென்றுவிட்டனர்.

“இருடா உன் தலையில வந்து கொட்டுறேன்” என்று அவனை அர்ச்சித்தவள் தோசையும் சட்னியும் எடுத்துக்கொண்டு போக அவனோ கோமதி அரைத்த சட்னியை போட்டு தோசையை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

ரதிக்கோ அவன் தான் சமைத்ததை சாப்பிடாமல் கோமதி சமைத்ததை சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கண்டவளுக்கு ஆத்திரம் வந்தது.

தான் கொண்டு வந்த பாத்திரத்தை டொம்மென்று டேபிள் மேல் வைக்க ரதியை நிமிர்ந்து கூட பார்க்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் சிங்கம்.

"என்னைய பார்த்தா கிறுக்கு பிடிச்சது போல தெரியுதாடா உனக்கு!" என்ற போதே சிங்கத்துக்கு சீற்றம் வந்துவிட்டது.

அவளோ அவனின் முழு அவதாரம் தெரியாமல் "என்னைய சமைக்க சொல்லிட்டு நீ உங்கம்மா சமைச்சதை சாப்பிட்டுட்டு இருக்க! ஓ அந்த அலரு வந்து சமைச்சு கொடுத்திருந்தா சாப்பிட்டிருப்பியா... அப்போ அவ தினமும் சமைச்சு கொடுத்திருக்கா போல. அவ சமையலை ருசி பார்த்துட்டு என் சமையல் ருசி பார்க்க பிடிக்கலையா?” என்று என்ன பேசுகிறோம் யார்கிட்ட பேசிக்கொண்டிருக்கிறோமென்று தெரியாமலும் ரெட்டை அர்த்தத்தில் அவள் பேசியதும் அவனுக்கு உச்சி நட்டுக்கொண்டு விட்டது கோபத்தில்... தட்டில் கைகழுவி எழுந்தவன் அடித்த ஒரே அறையில் கீழே விழுந்துவிட்டாள் ரதிதேவி.

“யார் கிட்ட என்னடி பேசுற... டேய் போட்டா பேசுற... பிச்சு புடுவேன் பிச்சி... அலரு என் அத்தை மவ... அவ சமைச்சு கொடுத்தா நான் சாப்பிடுவேன்டி. அவ பாசத்துக்கு முன்னால நீயெல்லாம் கால் தூசுக்கு சமமாவியாடி... அந்த புள்ள ஆசையில மண்ணள்ளி போட்டு என் குடும்பத்து நிம்மதியை கெடுக்க குறுக்கு வழியில வந்தவதானே நீ... உன் புத்தி இப்படி கேவலமாத்தான் இருக்கும்... இன்னொரு முறை அலர்விழியை தப்பா பேசின தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டிருவேன் ஜாக்கிரதை. நீ சமைச்சதை நான் சாப்பிடலைனு கவலைப்பட்டா கேட்டே என்கிட்ட... வேண்டா வெறுப்பாய் சமைச்சதை நான் சாப்பிடுவேனு நினைக்கிறயாடி! புலி பசித்தாலும் புல்லை திங்காது. பொண்டாட்டினா ஆசையா புருசன் வாய்க்கு ருசியா மனசார சமைச்சு போடணும். ஆனா நீ என்ன நினைச்சு சமைச்சு போட்டனு எனக்கு தெரியும்டி. என்கிட்ட உன்னோட பம்மாத்து வேலையெல்லாம் செல்லாது” என்று கோபத்தில் மிரட்டிச் சென்றான்.

கோமதியோ “என்னங்க இது மருமக இப்படியெல்லாம் பேசுறா... எனக்கு நெஞ்சுக்குள்ள அடைக்குறது போல இருக்குங்க... இந்த கோவக்காரன் வேற கைநீட்டியிருக்கான் என்னாச்சுனு போய் பார்க்கட்டுமா?” என்று கலங்கி எழுந்தவரை “வேண்டாம் கோமு புருசன் பொண்டாட்டி சண்டைக்குள்ள நாம போக வேணாம்... சிங்கம் சரி பண்ணிப்பான் நீ தூங்குமா” என்றவரோ கண்ணை மூடிக்கொண்டார்.

வீரய்யனோ “நாச்சி என்னனு போய் பாருடி பேத்தியை அடிக்குற சத்தம் கேட்குதே” என்று பதறி எழுந்தவரை “ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்... பாடுற மாட்டை பாடித்தான் கறக்கணும். இவளும் இவ வாயும் என்ன பேச்சு பேசுறா பாருங்க... அதான் அடிபோட்டிருக்கான் சிங்கம்... ரெண்டு பேரும் கலந்தா சரியா போயிடும் நீங்க தூங்குங்க” என்று வீரய்யனை அடக்கிவிட்டார் நாச்சி.

ரதிதேவி கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்தவள் “என்னையவாடா அடிக்குற இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு உன்னை அழ வைக்குறேன் பாரு” என்று சிங்கத்தை கரித்து கொட்டிக்கொண்டு எழுந்தவள் கன்னம் தீயாய் எரிய இந்த வீட்ல ஐஸ்கட்டி கூட இல்ல... என்று அங்கே இருந்த தேங்காய் எண்ணெய்யை எடுத்து கன்னத்தில் தேய்த்துக்கொண்டு சிங்கத்தின் குகைக்குள் சென்றாள் ரதி.

சிங்கமோ கையை கண்ணை மறைத்தபடி காலை ஆட்டிக்கொண்டு படுத்திருந்தான். ‘இவன் இப்படி கட்டில் முழுக்க படுத்திருந்தா நான் எங்க படுக்கிறதாம்..? இவன் கிட்ட மனுசி பேச முடியுமா! இவன்கூட ஒட்டிக்கிட்டு என்னால படுக்க முடியாது சாமி... எங்கே படுப்பது தரையில என்னால படுக்க முடியாது! என்னோட ரூம்ல இருக்க போல சோபாவும் இங்க இல்ல... பெரிசா ஊருக்குள்ள பணக்காரவங்கனு பேசிக்குறாங்க இங்க எந்த வசதியும் இல்லை’ என்று புலம்பிக்கொண்டே நின்றாள்.

இப்போ இவனை எப்படி கூப்பிடறது என்று குழம்பிக்கொண்டே நின்றவள் “ம்க்கும்” என்று தொடையை செருமினாள்.

சிங்கமோ பேசவேயில்லை... இப்போது கால் ஆட்டுவதை நிறுத்திவிட்டான். அச்சோ தூங்கிட்டான் போலயே இப்போ எப்படி எழுப்ப என்று அவன் பக்கம் போய் நின்றவள் “எ.என்னங்க” என்றாள் மரியாதையாக.

அடி உதவுறது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கனு சொன்னது சரிதான் என்று நினைத்தவன் “என்ன” என எரிச்சலாய் பதில் வந்தது சிங்கத்திடமிருந்து.

இவன்கிட்ட போய் நான் பேசறதா என்னைய அடிச்சிட்டான்ல என்று அவளுக்கு ஈகோ தலைதூக்கி ஆடியது.

முந்தானையை விரித்து அப்படியே தரையில் படுத்துவிட்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை... புரண்டு படுத்தாள். ம்ஹீம் பொட்டு தூக்கம் இல்லை... பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கியவளுக்கு தரையில் படுத்ததும் உறக்கம் வரவில்லை... நடுஜாமத்தில் தோட்டத்திலிருந்து ஜன்னல் வழியாக வந்த ஜிலு ஜிலு வென வீசிய தென்றல் காற்றில் அவளுக்கு வெடவெடவென வந்தது. 'அச்சோ குளிருதே!' என்று இருட்டில் கைக்கு கிடைத்ததை எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள் ரதி.

‘உனக்கெல்லாம் இது பத்தாதுடி இன்னும் டார்ச்சர் பண்ணுவேன் பாரு’ என்றபடியே படுத்து விட்டான் துரைசிங்கம்.

ரதிதேவியோ விடிந்து மணி 7 ஆகியும் கூட எழும்பாமல் தூங்கிக்கொண்டிருந்தாள். துரைசிங்கம் ஐந்து மணிக்கு எழுந்தவன் உடற்பயிற்சி செய்ய தோட்டத்துக்குச் சென்றுவிட்டான்.

“ம்மா காபி கொண்டு வாங்க” என்று அறையிலிருந்து சத்தம் போட்டாள் ரதிதேவி.

ஐய்யனாரோ ஊஞ்சலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். நாச்சி வீரய்யனுக்கு சுக்கு காபியை கொடுத்துக்கொண்டிருந்தார்.

“ம்மா ரதி எழுந்திட்டா போல காபி கொண்டு போய் கொடுங்க” என்றபடியே பேப்பரை படிக்க ஆரம்பித்தார் ஐய்யனார்.

“மணி 7 ஆகியும் இன்னும் தூங்குறா... இவளுக்கு பெட் காபி நான் கொண்டு போகணுமா அவளே எழுந்து குளிச்சிட்டு வரட்டும் ஐய்யனாரு... நம்ம வீட்டு பொண்ணுங்க ஐஞ்சு மணிக்கு எழுந்துதான் பழக்கம்... இவளும் பழக்கப்படணும்.” என்றவரோ அவரும் உட்கார்ந்து காபியை குடிக்க ஆரம்பித்தார்.

ரதிதேவியோ காபி இன்னும் வராமல் இருக்க "என்ன இந்தம்மா இன்னும் காபி கொண்டு வரலையே" என்று கண்விழித்து பார்க்க துரைசிங்கத்தின் வேஷ்டியை போர்த்திக்கொண்டு தரையில் படுத்திருப்பது தெரிந்து "ச்சே இவன் அழுக்கு வேஷ்டியை எடுத்து போர்த்தியிருந்தோமா!” என்று முகம் சுளித்து வேஷ்டியை தூக்கி எறிய அங்கே அறைக்குள் வியர்வையுடன் வந்து நின்றான் துரைசிங்கம்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21


வேஷ்டியை கையில் பிடித்தவன் “எதுக்குடி என்னோட வேஷ்டியை போர்த்தி படுத்த? ஒழுங்கா துவைச்சுக்கொடு... இனி என்னோட அழுக்கு துணியை தினமும் நீதான் துவைக்கணும்" என்றவனோ அவளது முகத்திலேயே வேஷ்டியை தூக்கிப்போட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

“உவேக்” என்று முகத்திலிருந்து வேஷ்டியை எடுத்து ‘இந்த நாத்தம் பிடிச்ச வேஷ்டியை நான் துவைக்கணுமா?’ என்று காலில் போட்டு மிதித்துக்கொண்டிருந்தாள்.

கதவு திறக்கும் ஓசையில் "அச்சோ முரடன் வந்துட்டான்" என்று அவசரமாக வேஷ்டியை கையில் எடுத்துக்கொண்டு பாவமாய் முழித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் பிராடு சும்மா நடிக்காம குளிச்சிட்டு வந்து டிபன் செய்யுற வேலையை பாருடி பசிக்குது” என தலையை துவட்டிக்கொண்டே பால்கனிக்குச் சென்றான்.

‘நேத்து நைட்டு செய்த டின்னரை சாப்பிடலையாம் இப்போ டிபன் பண்ணனுமாம் போடா வெண்ணை’ என்று பழிப்பு காட்டி விட்டு வேஷ்டியை அழுக்கு கூடைக்குள் போட்டு குளியலறைக்குள் சென்றாள் ரதி.

குளித்துவிட்டு வந்தவளோ ‘இப்போ ஹாஸ்பிட்டல் போட்டு போக சுடிதார் இல்லையே’ என்று தலையை துவட்டிக்கொண்டு பால்கனிக்குள் போக சிங்கமும் அறைக்குள் நுழைய வர இருவரும் மோதிக்கொண்டனர்.

ரதிக்கோ ஏதோ இரும்புகுண்டு மீது மோதிய உணர்வு... “ஆஆ" நெற்றியை நீவிக்கொண்டு "பார்த்து வரலாம்ல” என்று அவள் பேச வாயெடுக்க “கண்ணை என்ன பிடறியிலா வைச்சிருக்க. அறிவு கெட்டவளே போடி அந்த பக்கம்” என்று அவளது கையை பிடித்து இழுத்துவிட்டுச் சென்றான்.

‘அடப்பாவி டேய் நான் டாக்டர்டா என்னை ஒரு மனுச ஜென்மமாகூட மதிக்கலையே! இவனை எப்படி நான் என் வலைக்குள்ள விழவைப்பேன்’ என்று தலையில் வைத்தாள். குருவி தலையில் பனங்காய் வைத்தது போல ஆனது ரதியின் நிலை.

குமரனோ நண்பனின் திருமணத்திற்குச் சென்றிருந்தவன் காலையில்தான் வீட்டுக்கு வந்தான். குளித்து விட்டு வந்த ரதியை பார்த்தவன் “இவ இங்க என்ன பண்ணுறா அப்பத்தா” என்று வெத்தலையை கொட்டிக்கொண்டிருந்த நாச்சியின் பக்கம் உட்கார்ந்தான்.

“அடேய் நாக்கை அடக்கு குமரா!! இப்போ ரதி உன் மதினி சிங்கத்தோட பொண்டாட்டி” என்றதும் “என்ன அப்பத்தா சொல்றீங்க! அப்போ அலரு மதினி! என்ன நடந்துச்சு சொல்லுங்க” என்றான் அதிர்ச்சியுடன்.

நாச்சியோ நடந்ததை ஒன்றுவிடாமல் கூற.. “அப்பத்தா அப்போ எனக்கு தாரகைக்கும் கல்யாணம் நடக்குமா?” என்றான் சோகமாக

“நீ பர்ஸ்ட் படிச்சு முடிடா அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்” என்று அங்கே வந்த ஐய்யானாரை கண்டு எழுந்து நின்று “என்னங்கப்பா அலரு மதினி பாவம்ல” என்ற கவலையாக பேசிய மகனிடம் “எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும் நீ எலக்சன் வேலையை கொஞ்சம் பாரு!” என்றவரோ

“அம்மா, அப்பா எங்கே அன்பு வீட்டுக்கு போய்ட்டு வரலாம்” என்று கேட்டுக் கொண்டிருக்க “இதோ வந்துட்டேன்யா போகலாம்" என்று வீரய்யனும் கிளம்பி வந்தார்.

துரைசிங்கமோ “நானும் வரட்டுமாங்கப்பா” என்றான் சட்டை பட்டனை போட்டுக்கொண்டே..

நாச்சியோ “கண்ணா நேத்துதான் கல்யாணம் ஆகியிருக்கு உன்ற பொண்டாட்டியை கூட்டிட்டு நம்ம அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வந்துடுய்யா. இப்போதைக்கு அலர்விழி உன்னை பார்த்தா அழ ஆரம்பிப்பா! ஒரு ரெண்டு நாள் போகட்டும்” என்றார் தன்மையாக.

“அலர்விழிக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணும் அப்பத்தா!” என்றான் கரகரத்த குரலுடன்.

ஐய்யனாரோ “சிங்கம் அப்பத்தா சொல்றது சரிதான்! நீ ரதியை கோவிலுக்கு கூட்டிட்டு போ நீங்க ரெண்டு சந்தோச வாழ்றதை நாங்க பார்க்கணும்பா. கோவிலுக்கு போய்ட்டு வந்து கட்சி ஆபிஸ் போகலாம்” என்றார்.

வீரய்யனோ “போகலாம்பா” என்று டேபிள் இருந்து துண்டை எடுத்து தோளில் போட்டார்.

கோமதியோ “நானும் வரேனுங்க” என்று புறப்பட்டு நிற்க “சரி வா போகலாம்” என்று நால்வரும் அன்பரசி வீட்டுக்குச் சென்றனர்.

அலர்விழிக்கு விடிய விடிய தூக்கம் வரவில்லை. துரைசிங்கத்தை அவளால் மறக்கவும் முடியவில்லை. இப்போ மாமா வேற ஒருத்திக்கு சொந்தம்... நாம மாமாவை நினைக்கறது தப்புனு அவள் மூளை ஆயிரம் முறை சொன்னாலும். அவளின் காதல் கொண்ட மனது கேட்காமல் அடம்பிடித்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு வீட்டு வேலைகளை சிட்டாக செய்யும் பெண் இன்று படுக்கையை விட்டு எழவேயில்லை. இன்னும் அழுதுக் கொண்டுதான் இருந்தாள்.

அன்பரசியோ புள்ள ஏதாவது தப்பான முடிவு எடுத்துடுவாளோனு மகளின் அறையில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டேயிருந்தார்.

கண்ணனுக்கு காபியை டொம்மென்று வைத்துவிட்டு போன அன்பரசியை “ஏய் அன்பு அலரை விட்டு எங்கும் போகாதே இன்னிக்கு காட்டுல நடவு இருக்கு நான் வயலுக்கு போய்ட்டு வந்துடறேன்” என்றவரோ காபியை குடித்து விட்டு மகளின் அறைக்குள் நுழைந்தார்.

அலர்விழியோ கண்ணை இறுக மூடிக்கொண்டாள். மகள் தூங்கவில்லை என்று தெரிந்தவர் கட்டிலின் ஓரம் உட்கார்ந்து “மனசு போட்டு அழட்டாதே கண்ணு! அப்பாவுக்காக எழுந்துருச்சு குளிச்சு கோவிலுக்கு போய்ட்டு வாடா... எல்லாம் சரியாகும்” தலையை வருடிக்கொடுத்தார்.

அவளோ தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு சத்தமில்லாமல் குலுங்கி அழுதாள்.

ஐய்யனார் கார் சத்தம் கேட்டு “வந்துட்டாங்க சமாதானம் பேச இந்த ஊரு நாட்டாமை” என்று கோபப்பட்டு சமையல் கட்டிலேயே நின்றுக் கொண்டார் அன்பரசி.

கண்ணனோ “கண்ணு ஐய்யனார் மாமா வந்துருக்காரு போல நீ குளிச்சிட்டு வாடா” என்று மகளை எழுப்ப அவளோ கண்களை துடைத்து எழுந்தவள் தந்தையை நிமிர்ந்து பார்க்காமல் “நீங்க போய் மாமாகூட பேசிட்டு இருக்கப்பா நான் வந்துடறேன்” என்று எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.

ஷவரை திறந்து அப்படியே நின்றாள். அவளது கண்ணீர் தண்ணீரோடு கரைந்துச் சென்றது.

ஐய்யனார் வீட்டுக்கு வந்தால் வாங்கண்ணா என்று முகம் முழுக்க புன்னகையுடன் நின்றிருப்பவர் இன்று சமையல்கட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதைக் கண்டு அவருக்கு மனதில் பாரம் ஏறியது.

நாச்சியோ மகளை பார்க்க சமையல்கட்டுக்குச் சென்றதும் “அன்பு” என்று மகளின் தோளை தொட்டார்.

அவரோ கண்ணீரை துடைத்துக்கொண்டு “நாங்க இருக்கோமா போய்ட்டோமானு பார்க்க வந்தீங்களா” என்றார் கோபம் குறையாத குரலில்.

“என்னடி இப்படி பேசுற” அன்பு நாச்சிக்கும் கண்ணீர் வந்தது.

அன்பரசியோ “இங்கிருந்து போயிடுமா நான் எதாவது வார்த்தையை விடறதுக்குள்ள” என்றார் மனத்தாங்கலுடன்.

நாச்சியோ "அன்பு நம்ம அலருக்கு சிங்கத்தை விட நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன்டி!! நீ அழுதா என் மனசும் தாங்கலையம்மா!” என்று மகளை அணைத்துக்கொண்டார்.

அன்பரசியோ அப்படியே தான் நின்றிருந்தார்.

உள்ளே தாயும் மகளும் பேசிக்கொள்வது ஐய்யனாரும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

வீரய்யனோ “ஐய்யனாரு நீ போய் உன் தங்கச்சியை சமாதானப்படுத்துபா” என்றாள் மகள் அழுவது தாங்காமல்.

கண்ணனோ “மாமா நீங்க போய் பேசினாலும் அவ இன்னும் வார்த்தையை விடுவா! ஒரு ரெண்டு நாள் போகட்டும்” என்றார் பெரும்மூச்சுடன்.

அலர்விழி குளித்துவிட்டு கையில் பூக்கூடையுடன் வந்தாள்.

“வா.வாங்க மாமா! வாங்க தாத்தா!" என்றவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தாலும் அடக்கி வைத்துக் கொண்டாள்.

ஐய்யனாரோ எழுந்தவர் அலர்விழியின் தோளை தொட்டு “இந்த மாமா மேல கோபமா இருக்கியாடா” என்று அவளின் தலையை வாஞ்சையாக தடவினார்.

“உங்க மேல எனக்கு கோபம் எப்பவும் இல்லை மாமா! இக்கட்டான சூழ்நிலையிலதானே மாமாவை ரதி கழுத்துல தாலி கட்டச்சொன்னீங்க... இதுதான் கடவுள் சித்தம்னு இருக்கும்போது நாம என்ன செய்ய முடியும் மாமா!” என்றாள் மனதில் பாரத்தை அழுத்தி வைத்துக்கொண்டு வெளியே மெலிதாய் சிரித்து நின்றாள்.

வீரய்யனோ “கண்ணு உனக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன்டா! உன் மனசு எங்களுக்கு புரியாம இல்ல... நீ சிரிச்சு இருந்தாதான் எங்களால நிம்மதியா இருக்க முடியும்டா” என்றவரோ கலங்கி கண்களுடன் பேத்தியை அணைத்துக் கொண்டார்.

“நல்ல இடமா பாருங்க தாத்தா... ஆனா நான் சொல்ற வரை கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண வேண்டாம்” என்றாள் நிதானமாக கண்ணை மூடித்திறந்து.

அங்கே நின்று அனைவரையும் சங்கடப்படுத்த வேண்டாமென்று “நா.நான் கோவிலுக்கு போய்ட்டு வந்துடறேன்” என்றவள் கண்ணனை பார்த்து தலையை அசைத்துச் சென்றுவிட்டாள் அலர்விழி.

துரைசிங்கமோ சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். ரதியோ குளித்து முடித்து சேலையை கட்டி முடியை கேட்ச் கிளிப் போட்டு வெளியே வந்தவளுக்கு போன் வர “ஹலோ ஓ நான் இன்னும் ஹாப்பனர்வல வந்திடறேன்... நீங்க லேபர் வார்டு ரெடி பண்ணி வைங்க” என்று போனை வைத்தவள்

"என்னோட வண்டி அப்பா வீட்ல இருக்கே இப்ப யாரை கூட்டிட்டு போகச் சொல்றது! இதோ சிங்கம் இருக்கு கூட்டிட்டு போகச் சொல்லிடலாம்" என்று சிங்கம் பக்கம் வர அவனோ பேப்பருக்குள் மூழ்கியிருந்தான்.

“என்னங்க என்னோட பேஷண்ட் லேபர் பெயினோட வந்திருக்காங்களாம் நான் அவரசமா ஹாஸ்பிட்டல் போகணும்” என்றாள் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்துக்கொண்டு

ரதியை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசவில்லை. அவள் போனில் பேசியதை கேட்டுக் கொண்டுதானே இருந்தான் கார் கீயை தேடினான்.

கார் கீ இல்லாமல் இருக்க குமரனுக்கு போன் போட்டு “டேய் காரை என்ன கேட்காம எங்கயும் எடுத்துட்டு போககூடாது சொல்லியிருக்கேன்ல.”

“அண்ணா என் பிரண்ட்க்கு சின்ன ஆக்ஸிடன்ட் அதான் உங்ககிட்ட சொல்லாம எடுத்துட்டு வந்துட்டேன் சாரிங்கண்ணா” என்றான் குமரன்

“ம்ம் பார்த்துட்டு பொறுமையா வா” என்றவனோ பைக் கீயை எடுத்துக்கொண்டு வெளியேச் சென்றான்.

‘அப்பாடா சிங்கம் நம்மகிட்ட எகிறலை’ என்று நெஞ்சில் கைவைத்துக்கொண்டு அவன் பின்னால் சென்றதும் பைக்கை ஸ்டார்ட் பண்ணியவன் "உன்னால ஒரு உயிரு பூமிக்கு வரணும்கிறதால உன்னை என் பைக்குல கூட்டிட்டு போறேன் இல்லனா உன்னை எல்லாம் என் பைக்குல ஏத்த மாட்டேன்" என்றான் இறுக்கமாக குரலுடன்தான்.

அவளோ “இந்த ஒரு முறை மட்டும் கூட்டிட்டு போங்க நாளைக்கே என்னோட காரை எங்கப்பா வீட்ல இருந்து எடுத்துட்டு வரச்சொல்லிடறேன்” என்றவளை எரிக்கும் பார்வை பார்த்தவன் “உங்கப்பனோட ஒரு பொருள் இங்க வந்துச்சு எல்லாத்தையும் நெருப்பு வச்சு கொழுத்திடுவேன் பார்த்துக்கோ!” என்று மிரட்டியவன் அவளது கழுத்தை பார்த்தான்.

அவளது கழுத்தில் தாலி கயிறு இல்லை.. குளிக்கும்போது குத்துவது போல இருக்க ச
கழட்டி வைத்துவிட்டாள். திரும்ப போட்டுக்கொள்ள மறந்தும் இருந்தாள் பெண்ணவள்.

“உன் கழுத்துல தாலிகயிறு எங்கடி. தாலிக்கு மரியாதை தெரியாதவ கழுத்துல நான் தாலிகட்டியிருக்கேன்” என பல்லைக்கடித்து மின்னல் வெட்டும் பார்வையுடன் பார்த்தான்

அவளோ “நா.நான் வேணும்னு பண்ணலை குத்துச்சுனு கழட்டி வச்சேன்.. இப்போ ஹாஸ்பிட்டல் போகணும் நைட் வந்து போட்டுக்கறேன்” என்றவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தவன் “போய் தாலியை கழுத்துல போட்டு வாடி எனக்குனு இந்த ஊருக்குள்ள மரியாதை இருக்கு அதை ஒரே நாளுல காத்துல பறக்க விட்டிராதே” என காய்ந்து விழுந்தான் சிங்கம்.

“ஸ்ப்பா சாதாரண ரோப் கயிறுதானே இதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டாமா?” என்று அவள் வாயை விட்டதும் “ஏய்” என்று கன்னத்தில் அறைய போனவன் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நிமிர்ந்து பார்க்க “வேலைய பாருங்க” என்றவன் வீட்டு வாசலில் நிற்கிறோம் என்று கோபத்தை அடக்கிக்கொண்டு “வாயை மூடிக்கிட்டு வண்டியில ஏறுடி” என்றவனோ கோவிலுக்கு விட்டான்.

கோவில் வந்ததும் “இறங்குடி” என்றான் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு

“என்னங்க நாம ஹாஸ்பிட்டல் போகணும்.. இப்ப கோவிலுக்குள் போய் சாமி கும்பிட நேரம் இருக்காது. பேஷண்ட் வலியில துடிச்சிட்டிருக்காங்க நான் போகணும்” என்று டென்சன் ஆனாள் ரதி.

“நீ சொன்ன நேரத்துக்கு ஹாஸ்பிட்டல இருப்ப.. ஹாஸ்பிட்டல் போனாலும் வலியை நிறுத்தி சிசேரியன் தானே பண்ணப்போற... நீதான் காசுக்கு மாறடிக்கற டாக்டர் ஆச்சே!” என்றான் இளக்கார பார்வையுடன்...

அவள் பேச வாயெடுக்க அவளை பேச விடாமல் ரதியின் கையை பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் இழுத்துச் சென்றான்.

‘விடுடா லூசு பயலே கை வலிக்குது’ என்று முணகிக்கொண்டேச் சென்றாள்.

கோவிலுக்குள் சென்றவனோ அங்கேயிருந்த பூசாரியிடம் “நான் சொன்னது போல மஞ்சள் கயிறு அம்மன் பாதத்துல வச்சாச்சுங்களா” என்றான் மீசையை திருகி ரதிதேவியை பார்த்துக்கொண்டே

“வச்சாச்சுங்க தம்பி” என்றவரோ பூஜை செய்ய ஆரம்பித்தார்.

“கயிறு போடாதது ஒரு குத்தமா இவன் எல்லாம் எந்தக்காலத்துல இருக்கான்” என்று புலம்பிக்கொண்டாலும் சாமியை கும்பிட்டாள்.

ரதிதேவி சாமி கும்பிட்டு கண்ணை திறக்கும்போது துரைசிங்கம் அவளின் கழுத்தில் தாலிக்கயிறை கட்டி முடித்திருந்தான்

ரதி கண்ணைத் திறந்து பார்க்க கழுத்தில் மொத்தமான கயிறை அவளின் கழுத்தில் கட்டியிருந்தான். குனிந்து பார்த்தவளுக்கு துரைசிங்கத்தின் மேல் ஆத்திரமாக வந்தது. அவன் தலையில் ஓங்கி கொட்ட வைக்க தோன்றியது.

இப்படியே எப்படிடா ஹாஸ்பிட்டல் போறது என்று அவளுக்கு அழுகையை வந்துவிட்டது. கோபமாக வெளியேச் சென்றவளை நாலே எட்டில் அவளின் கையை பிடித்தவன் “எங்கடி இவ்ளோ வேகமாக போற நீ நடக்குற வேகத்தை பார்த்தா சொன்ன நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் போயிடுவ போல” என புருவம் உயர்த்தி சிரிப்பை அடக்கிக் கொண்டு.

அவளோ "கையை விடுங்க. நான் டாக்டர் தாலியை செயின்ல கோர்த்து போட்டாவே போதும்... இவ்ளோ பெரிய கயிறை போட்டுக்கிட்டா எப்படி ஹாஸ்பிட்டலுக்குள்ள போக முடியும்... தெரியாம கழட்டி வச்சிட்டேன் அதுக்காக இப்படியொரு தண்டனையை எனக்கு கொடுக்கணுமாங்க” என்றாள் ஆற்றாமையாக.

“இன்னும் வாய் பேசினா இதைவிட பெரிய கயிறா வாங்கி உன் கழுத்துல கட்டுவேன்... வாயை மூடிகிட்டு வாடி! அப்பனும் மகளுமா சேர்ந்து எங்க குடும்பத்தையா பழிவாங்க பார்க்குறீங்க... இந்த துரைசிங்கம் இருக்க வரை நீ நினைச்சது நடக்காதுடி” என்று பைக்கில் ஏறி உட்கார்ந்தான் துரைசிங்கம்.

ரதியின் போன் அடிக்க “இதோ இன்னும் பத்து நிமிசத்துல வந்துடுவேன்! கொஞ்சம் சீக்கிரம் போங்களேன்” என்று துரைசிங்கத்தின் முதுகை பிடித்து அவசரப்படுத்தினாள்.

பைக்கில் செல்லும் இருவரையும் பார்த்து கண்ணீருடன் நின்றிருந்தாள் அலர்விழி.

“நான் உன் பொண்டாட்டி ஆகமாட்டேனு தெரிஞ்சுதான் அன்னிக்கு என்னை தள்ளி உட்கார சொன்னியா மாமா! இப்போ அவ கழுத்துல தாலி கட்டி அவளை நெருக்கமா கூட்டிட்டு போறியே! எனக்கு உன்னை கல்யாணம் பண்ண கொடுத்து வைக்கல மாமா! என்னால உன்னைய மறக்கவும் முடியலையே!” என்றவளோ கோவிலுக்கு கூட போகவில்லை மீண்டும் வீட்டுக்குச் சென்றுவிட்டாள் அலர்விழி.

துரைசிங்கம் ரதிதேவி இருவரும் பைக்கில் சென்றது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

ரதிதேவியை ஹாஸ்பிட்டலில் இறக்கிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் சென்றான்.

அலர்விழி வீட்டுக்குள் செல்லும் போது வீட்டில் யாரும் இல்லை. கண்ணன் வயலுக்குச் சென்றிருந்தார். அன்பரசி மாடியில் துணிகாயப்போட்டுக்கொண்டிருந்தார்.

துரைசிங்கத்தின் பக்கத்தில் ரதி நின்றதே அவள் நினைவில் இருந்து கொண்டே இருந்தது.. வீட்டுக்கு பின்னால் வயலுக்கு அடிக்க பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்தார் கண்ணன்.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை வீட்டுக்கு பின்னால் ஓடியவள் சுற்றிப்பார்த்துவிட்டு யாரும் இல்லையென்று "சிங்கம் மாமா உன்னால என்னால மறக்க முடியாது" என்று பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வாயில் ஊற்றிவிட்டாள்.

“அடிப்பாவி மகளே என்னடி காரியம் செய்துட்ட!” என்று அங்கே வந்த அன்பரசியோ அலர்விழி கையிலிருந்த பூச்சி மருந்தை தள்ளிவிட்டிருந்தாள்.

“அம்மா எனக்கு மயக்கம் வருது” என்று அப்படியே மயங்கிச் சரிந்தாள் அலர்விழி.

துரைசிங்கம் ஐய்யனாரை கூட்டிக்கொண்டு கட்சி ஆபிஸ் போக அப்போதுதான் காரில் ஏறினான்.

அன்பரசியோ “அச்சோ யாராவது வாங்களேன் என் பொண்ணு மருந்தை குடிச்சிட்டா” என்று அவர் குய்யோ முறையோவென்று சத்தம் போட்டார்.

ஐய்யனாரோ “சிங்கம் அன்பரசி சத்தம் வருதே என்னனு போய் பார்க்கலாம்” என்று இருவரும் வேகமாக ஓடினார்கள் அன்பரசியின் வீட்டுக்குள்.

“இப்ப போதுமா அண்ணா என் பொண்ணோட உயிரை காவு வாங்கிட்டீங்களே!” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார் அன்பரசி.

“அத்தை தள்ளுங்க” என்று சிங்கத்தின் அதட்டலில “என் பொண்ணை காப்பாத்து சிங்கம்” என்றார் அன்பரசி அழுகையோடு.

அடுத்த அரைமணிநேரத்தில் ஹாஸ்பிட்டலில் ஐசியுவில் இருந்தாள் அலர்விழி.

அலர்விழிக்கு ட்ரீட்மெண்ட் செய்துக் கொண்டிருந்தான் டாக்டர் கௌதம்.

 
Status
Not open for further replies.
Top