ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பொன்வண்ணனுக்கு அலர்விழியின் விசயம் தெரிய அடித்து பிடித்து ஓடிவந்திருந்தான் ஹாஸ்பிட்டலுக்கு தூரிகாவுடன்.

ஐசியுவின் முன்னால் அன்பரசி அழுதுக் கொண்டிருக்க... ஐய்யனார் அன்பரசியிடம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். துரைசிங்கம் ஐசியுவை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான் நொடிக்கொருமுறை. தன்னால் ஒரு உயிர் ஊசல் ஆடிக்கொண்டிருக்கிறதே என்ற குற்ற உணர்வில் தவித்துக்கொண்டிருந்தான்.

பொன்வண்ணனும் தூரிகாவும் ஐ.சி.யுவின் கதவின் முன்னே வர துரைசிங்கம் பொன்வண்ணனை பார்த்ததும் முறைப்புடன் விலகிக்கொண்டான்.

தூரிகாவோ கண்கள் கலங்கி துரைசிங்கத்தை பார்க்க “போ” என்றான் தலையசைப்புடன்.

ஐ.சி.யுவின் உள்ளேச் சென்ற பொன்வண்ணனோ “கௌதம் என் தங்கச்சி எப்படியிருக்கா?” என்றான் சிறு பதட்டத்துடன்.

மூக்கில் ட்யூப்புடன் படுத்திருந்தாள் அலர்விழி. “இவங்க உன் தங்கச்சியா ரதி மட்டும்தானே?” என்று புருவம் சுருக்கினான் கௌதம்.

தூரிகாவை ஓரக்கண்ணால் பார்த்தவன் “அப்புறம் சொல்றேன் இப்போ எப்படி இருக்கா?” என்று அலர்விழியின் நாடியை பரிசோதித்தான் பொன்வண்ணன்.

“அவுட் ஆப் டேன்ஜர் டோண்ட் ஒர்ரி” என்றான் கௌதம்.

“அதானே விஷம் குடிச்சு உயிர் போற நிலமையில வந்தவங்களையும் காப்பாத்தாம விட்டுருக்கியாடா கௌதம்” என்று சிரித்தான் பொன்வண்ணன்.

“போடா எல்லாம் அவன் கையில் இருக்கு” என்று தன் எதிரே இருந்த சிவன் படத்தை காட்டினான் கௌதம்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 22


கௌதம் அமெரிக்காவில் பொன்வண்ணனுடன் படித்தவன்... இந்தியாவில் வேலை செய்யும் ஆர்வத்தில் இன்று காலையில்தான் ட்யூட்டியில் ஜாயின் செய்திருந்தான். அவன் அட்டன்ட் செய்த முதல் கேஸ் அலர்விழிதான்.

"அலர்விழிக்கு கான்ஷியஸ் வந்ததும் என்னை கூப்பிடு கௌதம் எனக்கு கேஸ் இருக்கு” என்று கௌதம் தோளில் தட்டிய பொன்வண்ணனோ தூரிகாவை பார்த்தான்.

அவளோ இதுக்கெல்லாம் நீதான் டா காரணமென்று அவனை முறைத்து முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு அலர்விழியின் பக்கம் போய் நின்றுக் கொண்டாள்.

கௌதமோ 'என்னடா இவன் நர்ஸை விழுங்கறது போல பார்க்குறான். அந்த பொண்ணு ஏதோ இவனை முறைக்குது சம்திங் ராங்க்' என்று புருவம் சுளித்து “டேய் மச்சான் நர்ஸை சைட் அடிக்குற அமெரிக்காவுல அரை குறையா சுத்தின பொண்ணுங்களை கூட நீ திரும்பி பார்த்தது இல்லை... ஆனா இந்த பொண்ணை ஏன் டா இப்படி சைட் அடிக்குற?” என்றான் அவன் காதில் கிசுகிசுப்பாக.

“டேய் அவ என்னோட மாமன் மக! நேத்துதான் எனக்கு கல்யாணம் ஆச்சு... மதியம் லன்ச்ல விலாவாரியா பேசலாம்டா கேஸ் இருக்கு” என்று கதவை திறந்து வெளியேச் சென்றவனிடம் அன்பரசியோ “என் பொண்ணு கண்ணு முழிச்சிட்டாளா நான் பார்க்கலாமா தம்பி?” என்று கண்ணீருடன் நின்றார்.

“சித்தி அழாதீங்க அலர்விழி உயிருக்கு ஆபத்து இல்ல... இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு விழிச்சுடுவா நீங்க போய் பாருங்க” என்றான் அன்பரசியின் கையை பிடித்து ஆறுதலாக.

துரைசிங்கமோ எல்லாம் உன்னால தான் டா என்ற ரீதியில் அவனை அக்னி பிளம்பாய் பார்வையால் எரித்துக்கொண்டிருந்தான்.

ஐய்யனாரோ “தம்பி என் மருமகள எப்போ பார்க்கலாம்?” என்றார் கவலையாக.

“கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க அங்கிள்” என்றவனோ துரைசிங்கத்தை அவனுமே முறைப்புடன் பார்த்து அவனது அறைக்கு போய் கொண்டிருந்தான்.

அடித்து பிடித்து ஓடி வந்த கண்ணனை நிறுத்திய பொன்வண்ணனோ “சித்தப்பா தங்கச்சி நல்லாயிருக்கா! பதட்டப்படாதீங்க” என்று அவரை அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்தவன் அவருக்கு தண்ணீரை பிடித்துக்கொடுத்தான்.

தன் பெண்ணுக்கு ஆபத்து இல்லையென்றதும்தான் அவர் நிம்மதியாக மூச்சு விட்டார். தண்ணீரை வாங்கிக்குடித்தவர் “எ.என் பொண்ணை பா.பார்க்கணும் தம்பி” என்றவருக்கு குரல் தடுமாறியது.

பொன்வண்ணனோ அவர் கையை பிடித்து அலர்விழி இருந்த ஐ.சியுவிற்கு அழைத்துச் சென்றான்.

அன்பரசியோ கணவனை பார்த்ததும் “நீங்க ஆயிரம் முறை பொண்ணை பார்த்துக்க சொல்லிட்டு போனீங்களே கொஞ்ச நேரம் அசால்ட்டா இருந்த நேரம் பாவி மக இப்படி பண்ணிட்டாளே” என்று கண்ணனை கட்டிக்கொண்டு அழுதார்.

“நாம யாருக்கு பாவம் செய்தோம் அன்பு... நம்ம பொண்ணு நம்ம கிட்ட வந்துட்டா அதுவே போதும்! இனி கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துக்குவோம்” என்றார் ஆதங்கத்துடன்.

கௌதம் அடுத்த பேஷண்டை பார்த்து போக நகர்ந்த வேளை அலர்விழியின் கண்கள் அசைந்தது. “ப்பா ம்மா” என்று முணகினாள்.

“அலரு” என்று அவளது கையை பிடித்தாள் தூரிகா.

மெதுவாக கண்திறக்க கௌதம் அவள் முன்னே நின்றிருந்தான்.

கண்களை விரித்துப்பார்த்தவளது கண்ணில் நீர் வழிந்தது.

தூரிகா டிஷ்யு எடுத்து கண்ணீரை துடைப்பதற்குள் கௌதமோ தன் கைகுட்டையால் அவளது கண்ணீரை துடைத்து விட்டு “ஆர் யூ ஓ.கே?” என்றான் அவளது நாடியை செக் பண்ணிக்கொண்டே.

“அ.அப்பாவை பா.பார்க்கணும்” என்றாள் மெதுவாய் உதடசைத்து.

“சிஸ்டர் இந்த பொண்ணோட பேரண்ட்ஸை மட்டும் வரச் சொல்லுங்க” என்றான் கௌதம்.

தூரிகா வெளியேச் சென்ற நேரம் அலர்விழியின் பக்கத்தில் கௌதம் மட்டுமே நின்றிருந்தான். அவளுக்கு பயத்தில் கைகள் நடுங்கியது.

“பயப்படாதம்மா!” என்று அவளது கையை பிடித்துக்கொண்டான் அவள் பயத்தை போக்கும் பொருட்டாக.

அவளோ முகம் சுளித்து கையை கௌதமிடமிருந்து எடுத்துக்கொண்டாள்.

கௌதமோ மௌனமாய் சிரித்துக்கொண்டு நின்றான்.

கண்ணனும் அன்பரசியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஐ.சியுவிற்குள் சென்றனர்.

பிடுங்கி போட்ட கடலை கொடி போல கசங்கிய முகத்துடன் படுத்திருந்த மகளை கண்டதும் கண்ணன்,அன்பரசி இருவருக்குமே உயிரே போனது போல் துடித்து போயினர்.

“ஏன் டி இப்படி பண்ணின? இத்தனை வருசமா உன்னை கைக்குள்ள வச்சி பார்த்துக்கிட்டேனே எங்களுக்கு நல்ல பரிசு கொடுத்திட்டியேடி” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார் அன்பரசி.

கண்ணனோ “ஏன்டா இப்படி பண்ணின?” மகளின் கையை பிடித்து குலுங்கி அழுதார்.

“அப்பா ஏதோ அவசர புத்தியில இப்படி பண்ணிட்டேன்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றாள் கதறலாக. அவளது பிபி ஏறி இறங்க...

“சார் பேஷண்ட் எமோஷ்னல் ஆகுறாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பாருங்க” என்றான் கௌதம் பொறுமையாகவே.

கௌதமை பார்த்த கண்ணனோ “நீங்கதான் என் குலசாமியை காப்பாத்தி கொடுத்திருக்கீங்க! புள்ளக் குட்டியோட நீண்ட ஆயுசோடு சந்தோசமாக இருக்கணும்னுங்க டாக்டர்” என்றார் கையெடுத்து கும்பிட்டு கரகரத்த குரலுடன்.

“என்னோட கடமையை நான் செய்தேன்! கடவுளுக்கு நன்றி சொல்லுங்க!” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

கண்ணனும் அன்பரசியும் வெளியே வந்தவுடன் ஐய்யனாரும் துரைசிங்கமும் ஐ.சி.யுவிற்குள் சென்றனர்.

ஐய்யனாரை பார்த்த அலர்விழியோ “மாமா என்னை மன்னிச்சிடுங்க” என்று இதழ் பிதுக்கினாள்.

“அழாதடா கண்ணு... நீ இப்படி பண்ணுவனு நான் நினைக்கவே இல்லைடா! எங்களையெல்லாம் பயமுறுத்திட்டியே இனிமே இப்படி கிறுக்குதனமா பண்ணமாட்டேன்னு இந்த மாமாவுக்கு சத்தியம் பண்ணிக்கொடு” என்று கையை நீட்டினார்.

“பண்ணமாட்டேன் மாமா” என்று ஐய்யனாரின் கை மேல் கையை வைத்தாள்.

துரைசிங்கமோ “டாக்டர் நான் அலருகிட்ட தனியா பேசணும்” என்றதும்

“பேஷண்ட் எமோஷன் ஆகாம பேசுங்க! இதுபோல யாருக்கும் அலோவ் கிடையாது பொன்வண்ணன் பேமலினால பர்மிஷன் கொடுக்கறேன்” என்றவனோ கையில் ஸ்டெதஸ்கோப்புடன் ஐ.சியுவிற்குள் இருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.

ஐய்யனாரும் வெளியேச் சென்றுவிட “ஏன் புள்ள இப்படி பண்ணின..? உனக்கு ஏதாவது ஆகியிருந்தா காலம் முழுக்க நான் குற்றவாளியா இருந்திருக்கணும்ல” என்றான் உடைந்த குரலில்... துரைசிங்கம் யாரிடமும் இப்படி இளகி பேசியதில்லை.

“நான் நேத்து நைட்டே உன்கிட்ட மன்னிப்பு கேட்க நினைச்சேன் அப்பத்தா தான் என்னை பார்த்தா நீ அழுவேனு தடுத்துருச்சு... நீ போல்டான பொண்ணுனு நினைச்சுட்டேன். இப்போதான் தெரியுது நீ கோழைனு! அப்படி என்ன என் மேல உனக்கு காதல்... நான் உன்கிட்ட உன்னை லவ் பண்ணறேன்னு சொல்லியிருக்கேனா சொல்லு! நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதி வாக்கு கொடுத்திருக்கேனா! பெரியவங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க நானும் சம்மதிச்சேன் அவ்ளோதான்” என்றான் அவளுக்கு வலிக்கும்தான் என்று தெரிந்து தான் பேசினான். அவள் தன்னை மறக்கவேண்டும் அவளின் மனதை மாற்ற வேண்டுமே! தன் மனதில் எள்ளளவும் அலர்விழி இல்லையென்று அவன் பேச்சில் காட்டிக்கொண்டிருந்தான் துரைசிங்கம்.

அவளோ இல்லையென்று தலையை ஆட்டினாள் கண்ணீருடன்.

அவளது கண்ணீரை விரலால் துடைத்துவிட்டு “இப்படி அழாத புள்ள மனசுக்குள்ள பிசையுது. என் அத்தை பொண்ணு என்னால இப்படி பண்ணிக்கிட்டாளேனு எதுக்குமே கலங்காதவன கலங்க வைச்சிட்ட” என்றான் ஆதங்கத்துடனே.

“சாரி மாமா என்னை மன்னிச்சிடு! நான் எல்லார் மனசையும் உடைச்சிட்டேன்!” என இதழ் பிதுக்கி அழுக ஆரம்பித்தாள்.

“நான்தான் புள்ள உன்கிட்ட தினமும் மன்னிப்பு கேட்கணும்... இப்போ உன் உடம்பு இருக்க நிலையில அழக்கூடாது... உடம்பு தேறி வந்தபிறகு மாமா உன்கிட்ட பேசுறேன்... என்னைவிட உன்னை நல்லா பார்த்துக்குற மாப்பிள்ளை கிடைப்பான் புள்ள! நான் வரேன்! சும்மா அழாம இரு” என்று அவளது தலையை வருடிச் சென்றான்.

துரைசிங்கம் சென்றதும் 'என்னை நீ மனசார விரும்பவேயில்லையா மாமா... நான் அத்தை பொண்ணுனு மட்டும்தான் என்னை கட்டிக்க சம்மதிச்சியா! நான் தான் கிறுக்கச்சி போல உன் பின்னாடி சுத்தினேனா! ஏன் என்னை உனக்கு பிடிக்காம போச்சு!' என்றெல்லாம் நினைத்தவளுக்கு தலைவலிக்க ஆரம்பிக்க கண்ணைமூடி படுத்துக்கொண்டாள்.

கௌதமோ துரைசிங்கம் சென்றதும் அலர்விழியின் பக்கம் வந்ததும் கண்ணைத்திறந்தாள்.

துரைசிங்கம் வெளியே வந்ததும் தூரிகா ஐ.சியுவிற்குள் உள்ளேச் சென்றவளிடம் “இனிமே பேஷண்டை பார்க்க அலோவ் பண்ணாதீங்க... நாளைக்கு காலையில பார்க்கட்டும் பேஷண்ட் டிஸ்டர்ப் ஆகுறாங்க” என்றவனோ அவள் தூங்குவதற்கு இன்ஜக்ஷனை போட்டு விட்டான். அவளும் கொஞ்ச நேரத்தில் உறங்கிவிட்டாள்.

கண்ணனோ துரைசிங்கத்தையும் ஐய்யனாரையும் கிளம்ப சொல்லி விட்டார்.

“ஏதும்னாலும் போன் பண்ணுங்க மாமா வந்துடறேன்” என்றான் துரைசிங்கம்.

"சரிங்க மாப்பிள்ளை" என்றார் கண்ணன்.

ஐய்யனாரோ அன்புவை பார்த்துக்கோங்க என்று கண்ணை காட்டிச் சென்றார்.

பொன்வண்ணனுக்கு லன்ச் டைம் கூட பேஷண்ட் இருக்க அவனால் கௌதமை பார்க்க முடியவில்லை... பேஷண்டை பார்த்து முடித்து மூணு மணிக்குத்தான் ஐ.சியுவிற்கே சென்றான்.

தூரிகாவோ இன்னம் ஐ.சியுவிற்குள்தான் இருந்தாள். இப்போதும் உறங்கிக்கொண்டிருந்தாள் அலர்விழி.

பொன்வண்ணனோ அலர்விழியின் பக்கம் சென்றவன் அவளது கையை பிடித்தான்.

கௌதம் “ஷி ஈஸ் ஃபைன்டா... என்ன உங்க குடும்பத்து ஆளுங்க எல்லாம் எமோஷ்னலா இருக்காங்கடா! அதுவும் பெருசா மீசை வச்ச ஆளு வந்ததும்தான் இந்த பொண்ணு ரொம்ப அழுதாங்க! பார்க்கவே பாவமா இருந்துச்சு!” என்றான் பெரும்மூச்சுடன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பொன்வண்ணன் கௌதமை தனியாக கூட்டிச் சென்று நேத்து நடந்த பஞ்சாயத்தில் கல்யாண ஆர்ப்பாட்டத்தை பற்றி ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

“ரதி ஏன் இப்படி சீப்பா பிஹேவ் பண்ணியிருக்கா... அவளாலதான் இத்தனை பிரச்சனையும் வந்திருக்கு போலயே!” என்றான் சிறு கோபத்துடனே.

“ரதி தப்பு செய்திருந்தா என்கிட்ட சொல்லியிருக்கணும்ல அதை விட்டு அந்த மீசைகாரன் ரதியை ட்ரக் கலந்த ஜுஸை குடிக்கவச்சி... அந்த வில்லேஜ் மக்கள் முன்னாடி ரதியை காட்சிப்பொருளா நிற்கவச்சி அவளை அவமானப்படுத்திட்டான் அந்த ராஸ்கல்” என்று பல்லைக்கடித்தான் பொன்வண்ணன்.

“எப்படியோ நீ லவ் பண்ணின பொண்ணை கல்யாணம் பண்ணிட்ட... உன் தங்கச்சியும் அவ மாமா வீட்டுக்குதானே போயிருக்கா விடு காலப்போக்குல சரியாகிடும்... மாமன் மச்சான் கட்டிபிடிச்சி உருளப்போறீங்க” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“அதுக்கு வாய்ப்பில்லை மச்சி. என் பொண்டாட்டி ரொம்ப நேரமா என்னை முறைச்சிட்டே இருக்கா... அவ கழுத்துல தாலி கட்டின நொடியிலிருந்து இன்னும் ஒருவார்த்தை பேசல அம்மணி! நானும் அவமேல இன்னும் கோபமாத்தான் இருக்கேன்” என்றான் பெரும்மூச்சு விட்டு.

“நீயெல்லாம் ரொம்ப நேரம் கோபத்தை பிடிச்சி வச்சிருக்கமாட்டியேடா” என்று தோளை தட்டி எழுப்பினான் கௌதம்.

“கொஞ்சம் பர்சனல் மச்சி ரெண்டு பேருக்கும் ஊடல் இருக்கு... எப்போ சரியாகும்னு தெரியலை... நானும் இன்னிக்கு ஐ சி யு ல இருக்கட்டுமா?" என்றவனிடம் "உனக்கு நாளைக்கு ஏர்லி மார்னிங் சர்ஜெரி இருக்குனு டீன் இப்போ தான் சொல்லிட்டு போனாருடா... நீ கிளம்பு நான் பார்த்துக்குறேன்" என்றான் கெளதம்.

"என் தங்கச்சி அலர்விழியை பார்த்துக்கோடா" என்றபடியே கௌதம் கேபினிலிருந்து வெளியே வந்தனர் நண்பர்கள் இருவரும்.

தூரிகாவோ “டாக்டர் நான் வேணா நைட் ட்யூட்டி பார்க்கவா?” என்றாள் கௌதமிடம்.

"நோ நீ கிளம்புமா நான் பார்த்துக்குறேன்... புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே போல யோசிக்குறீங்க" என கண்ணைச் சிமிட்டி சிரித்தான் கெளதம்.

தூரிகாவோ எதுவும் பேசாமல் வெளியேச் சென்றாள்.

"மச்சி உன் பாடு திண்டாட்டம் தான்" என்று நக்கல் செய்தான் கெளதம்.

அந்த நேரம் கண் விழித்த அலர்விழியின் பக்கம் வேக எட்டு வைத்துச் சென்ற பொன்வண்ணனோ "என்ன பண்ணுதுடா?" என்றான் பாசத்துடன்.

அலர்விழியோ “தண்ணீ வேணும்ணா” என்றாள் மெல்லிய குரலில்.

அலர்விழியை கைத்தாங்கலாக உட்கார வைத்து தண்ணீரை ஸ்பூனில் குடிக்க கொடுத்தான்.

தண்ணீரை குடித்து முடித்து “நான் உங்களை எல்லாம் சிரமப் படுத்திட்டேன்ல” என்றாள் உதடு கடித்து அழுகையுடன்.

“நீ மனசு குழம்பி போய் முட்டாள் போல பண்ணி இருக்கேடா பாப்பா! இப்போ எதுவும் பேச வேணாம் ரெஸ்ட் எடு” என்றவன் அவளை படுக்க வைத்து “இந்த டாக்டர் உன்னை பார்த்துப்பாங்க உனக்கு என்ன தொந்தரவு இருந்தாலும் இவர்கிட்ட சொல்லிடணும் சரியா” என்று தங்கையின் நெற்றியில் ஆடிய முடியை ஒதுக்கி விட்டு கெளதமிடம் கண்ணசைத்துச் சென்றான்.

வெளியே வந்த தூரிகாவோ “அத்தை தூரிகாவை எதுவும் சொல்லாதீங்க... ஒரு மாசம் காரமா எதுவும் சாப்பிட கொடுக்க வேண்டாம்... நாளைக்கு காலையில வரேன் எல்லாம் என்னாலதானே அத்தை" என்றவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

“நீ காரணம் இல்லடா பாப்பா எல்லாம் சரியாகும்” என்று தூரிகாவின் கண்ணீரை துடைத்துவிட்டார் கண்ணன்.

பொன்வண்ணனோ “சித்தி உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுக்கட்டுமா?” என்றவனிடம் “இல்லப்பா என் பொண்ணு சாப்பிடாம படுத்துக்கிடக்கும்போது என் தொண்டையில சாப்பாடு இறங்காதுப்பா எழுந்து வரட்டும் நான் சாப்பிடுறேன்” என்றார் அங்கலாய்ப்பாக.

“சித்தி அலர்விழி இப்போ நார்மலாதானே இருக்கா... நீங்க சாப்பிடாம இருந்தா உங்க ஹெல்த் தான் ஸ்பாயில் ஆகும்... சித்தப்பா நான் டின்னர் வாங்கிட்டு வரேன் ரெண்டு பேரும் சாப்பிடுங்க" என்று திரும்ப வீரய்யனும் நாச்சியும் சாப்பாடு கேரியருடன் வந்தனர்.

துரைசிங்கமோ கைகாப்பை ஏத்திவிட்டுக்கொண்டு வந்தான் பொன்வண்ணனை நோக்கி.

‘அச்சோ முடியலைடா உன்கூட... நாம இங்க நிற்கறது சரியில்லையே' என்று சலித்துக்கொண்டு “தூரிகா கிளம்பலாம்” என்றான் அவனும் வீம்பாக.

நாச்சியையும் வீரய்யனையும் பார்த்ததும் “அப்பத்தா, தாத்தா” என்று இருவரையும் கட்டிக்கொண்டு "என்னாலதான் அலரு இப்படி படுத்துகிடக்கறா” என்று ஒருமூச்சு அழுது தீர்த்தாள் தூரிகா.

அன்பரசிக்கே தூரிகாவை பார்க்க பாவமாய் இருந்தது.

வீரய்யனோ “நீ காரணம் இல்லடா தங்கமே நீ என்ன தப்பு பண்ணின சிறுபிள்ளைதனமாய் பண்ணப்போய் வில்லங்கமாய் முடிஞ்சிருச்சு! நீ கிளம்புடா மாப்பிள்ளை நிற்குறாரு பாரு” என்றார் வீரய்யன்.

‘மாப்பிள்ளையாம் பொல்லாத மாப்பிள்ளை’ என்று பொன்வண்ணனை கறுவிக்கொண்டு திரும்ப துரைசிங்கம் தூரிகாவைத்தான் பார்த்திருந்தான்.

“அண்ணா” என்று சிங்கம் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் தூரிகா.

‘இவளை என்னமோ பெருசா கொடுமைப் படுத்தினது போல ஒவ்வொருத்தர் நெஞ்சிலும் சாய்ஞ்சு அழறா வீட்டுக்கு வாடி பேசிக்கிறேன்’ என்று எரிமலையை போல கொதித்து நின்றான் பொன்வண்ணன்.

துரைசிங்கமோ “எதுக்கு பாப்பா இப்படி அழுதுக்கிட்டு கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு பாரு! நீதான் எல்லாரையும் அழ வைக்கணும்... அதைவிட்டு நீ அழுதுக்கிட்டு இருக்க” என்றான் கடுப்பான குரலில் பொன்வண்ணனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு.

பொன்வண்ணனோ கையை இறுக்கினான். “என்னடா கையை முறுக்குற! வாங்கின அடி பத்தலையா?” என்றான் சிங்கம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பொன்வண்ணனிடம் சண்டைக்குச் சென்றான்.

நாச்சியோ “ராஜாத்தி உன் புருசனை கூட்டிட்டு போயிடு தாயி” என்றார். இரு சண்டைக் கோழிகளும் சிலிர்த்துக் கொண்டு நிற்பதை பார்த்து பதறினார்.

பொன்வண்ணனோ என்ன என்பது போல துரைசிங்கத்தை நெருங்கி வந்தான்.

தூரிகாவோ பொன்வண்ணனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டுச் சென்றாள். இங்கேயும் இருவரும் முட்டிகொள்வார்களோ என்று பயந்து.

காரில் ஏறிய பொன்வண்ணனோ கொஞ்சம் தூரம் சென்றதும் காரை ஓரமாக நிறுத்தி தூரிகாவை பார்க்க அவளோ முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவளது கன்னத்தை அழுந்தப்பற்றி "என்னடி என்னை பார்த்தா கொடுமைக்காரன் போல தெரியுதா. இல்ல நேத்து நான் உன்னை ஏதாவது கஷ்டப்படுத்தினேனா! உன் நொண்ணனை கட்டிபிடிச்சு அழுது பாசம் படம் ஓட்டுற” என்று அவளை அளவிட்டான் கண்களால்.

அவளோ “ச்சே” என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“என்னது ச்சே வா! என்னை பார்த்தா அருவறுப்பா இருக்கா... முகத்தை திருப்புற” என்று அவளது கையை பிடித்து இழுக்க போய் அவள் கழுத்தில் போட்டிருந்த ஷால் பின் கழண்டு கீழே விழுந்தது.

அவளோ அவனை முறைத்துக்கொண்டே கீழே விழுந்த ஷாலை எடுத்து மேலே போட்டுக்கொண்டு மீண்டும் முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டவளின் தோளை பிடிக்க அவனது கையை தட்டிவிட்டதும்... அவள் கழுத்திலிருந்த ஷாலை உருவி பின் சீட்டில் போட்டு அவளை இழுத்து அணைத்துக்கொண்டு “இப்போ என்னடி பண்ணுவ?” என்றான் அரக்கனாக மாறி.

அப்போதும் அவள் அவனை அணைக்காமல் சிலை போல உட்கார்ந்திருந்தாள்.

அவள் அணைக்காத கோபத்தில் அவளை இன்னும் இறுக்கி அணைத்தான். அவளோ ஸ்ஸ் என்றாளே தவிர வேற எதுவும் பேசவில்லை.

“நான் ஒண்ணுமே பண்ணலையே என் கை சும்மாதானே இருக்கு எதுக்கு சத்தம் போடுற பப்பாளி” என்றான் அவள் கன்னத்தோடு கன்னம் உரசி.

அவளோ அவன் தொட்டதும் தன் உடல் மெழுகாக உருகுகிறதே என்று தன்மீதே கோவத்தில் உட்கார்ந்திருந்தாள்.

அவள் இதழோடு இதழை உரசி அவளின் உணர்வுகளை தூண்டிவிட்டான். அவளோ கண்களை மூடிக்கொண்டாள்.

அவனோ ஒருபடி மேலே போய் அவளது இதழ்களை கவ்விக்கொண்டான் ஆக்டோபஸாக... அவள் திமிறினாள் அவன் இதழ்களுக்குள் மாட்டிக்கொண்ட எறும்பாக... அவனோ கரும்பாக அவளது இதழில் தேன் உறிஞ்சினான்.

அவனது முத்தத்தில் மயங்கியவள் அவனை அணைத்துமட்டும் பிடிக்கவில்லை. கைகளை இறுக்கி மூடிவைத்துக்கொண்டாள்.

அவனோ இன்னும் ஒரு படி மேல் போய் அவளது இடையில் அவனது விரல்களை விளையாட விட்டான். அவளுக்கோ கண்ணீர் ஆறாய் பெருகியது. தேன்சுவை போய் உவர்ப்பு சுவை அவன் இதழ்களில் தெரிய அவளை விட்டு மெல்ல பிரிந்தான். பின் சீட்டில் போட்டிருந்த ஷாலை எடுத்து அவள் கழுத்தில் போட்டு விட்டு “சாரி” என்றான் அவள் அழுவதை தாங்கமாட்டாமல்.

அவளோ அதற்கும் முறைப்பையே பதிலாக கொடுத்து அவன் கொடுத்த முத்த ஈரத்தை கையால் துடைத்துக்கொண்டாள். உன் முத்தம் எனக்கு கசக்குதுடா என்றாள் அவள் பார்வையிலே.

“பார்க்குறேன்டி இன்னும் எத்தனை நாளைக்கு பேசா மடந்தையா இருப்பேனு!! அண்ணனும் தங்கச்சியும் ரொம்பத்தான் பண்ணுறீங்கடி” என கோபத்தில் காய்ந்து காரை வேகமாக ஓட்டினான் பொன்வண்ணன்.

காரை நிறுத்திவிட்டு தோளில் கோட்டை போட்டு வீட்டுக்குள் வேகமாக நுழைந்தவனை “டேய் வண்ணா நில்லுடா” என்ற கோதை பேச்செல்லாம் காற்றில் கரைந்து போனது.

‘இப்போ எல்லாம் இவன் ரொம்ப கோவப்படறானே’ என்று புலம்பிய கோதையோ அமைதியாக வந்த தூரிகாவிடம் “என்னாச்சு உன் புருசன் புல்லட் வேகத்துல போறான்..." என்றார் சிரித்தபடியே.

“அ.அது அத்தை அலரு இன்னிக்கு விஷம் குடிச்சிட்டா” என்றாள் கவலையுடன்.

“என்ன சொல்றமா அலருக்கு இப்போ எப்படி இருக்கா!" என்று பதறினார் கோதை.

“இப்போ ஆபத்துகட்டத்தை தாண்டிட்டா பயப்படறதுக்கில்லை... ஆனா இதுக்கு காரணம் உங்க பிள்ளைங்க தானே” என்றாள் ஆயாசமாக.

“ஆமாடி நானும் என் தங்கச்சியும் அலரு கையில விஷத்தை குடிக்கச் சொல்லி சொன்னோம் பாரு!! உன் நொண்ணன் காரணம் இல்ல... அவன் மட்டும் என் தங்கச்சிக்கு ட்ரக்கை குடிக்க வைக்காம இருந்தா நான் ஏன் உன் கழுத்துல தாலி கட்டப்போறேன். நானும் என் தங்கச்சியும் காரணம் கிடையாது... முழுக்க முழுக்க உன் அண்ணா சிங்கம் தான்” என்றான் ஆத்திரத்தோடு.

“நாங்க செய்த தவறுக்கு பிராயச்சித்தமா அலர்விழிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்து வைப்பேன்... உங்களை போல பழிவாங்குற எண்ணம் எங்களுக்கு கிடையாது” என்றான் தங்கையை பற்றி தெரிந்தும் மனைவியின் மீது பாய்ந்து விழுந்தான் பொன்வண்ணன்.

“அத்தை அலர்விழிக்கு மாப்பிள்ளை பார்க்க அப்பா வீட்டு ஆளுங்க இருக்காங்க... இத்தனை வருசமா எங்க போனாராம் தங்கச்சியை தேடி வந்திருக்கலாம்ல... நாங்க ஒரே குடும்பமா சந்தோசமா இருந்தோம்... சந்தோசமா வாழுற குருவிக்கூட்டுல கல்லெறிஞ்சதும் உங்க மகன்தான் அத்தை... அவரை அதை ஞாகப்படுத்திக்க சொல்லுங்க! எங்க அண்ணாவை பேச உங்க மகனுக்கு தகுதியே கிடையாது." என்று பட்டாசாக வெடித்துவிட்டாள்.

“அம்மாடி கொஞ்சம் பொறுமையா இருமா... சண்டையில வார்த்தையை விடக்கூடாது. நெல்லை போட்டா அள்ளிடலாம்... வீணா சொல்லை போட்டா அள்ள முடியாது கண்ணு” என்றார் கோதை பதறியபடிய.

“நீங்க உங்க மகனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க அத்தை, அதிகம் பாதிக்கப்பட்டது எங்க குடும்பம்தான்! அப்போ நானும் அதிகமா பேசுவேன்தான்” என்று நெஞ்சுக்கூடு ஏறி இறங்க பேசியவள் பொன்வண்ணனை பார்க்காமல் அறைக்குள் சென்றாள்.

பொன்வண்ணனுக்கோ தூரிகா துரைசிங்கத்துடன் ஒப்பிட்டு தன்னை தகுதி இல்லையென்று பேசியதும் அவனுக்கு தன்மானம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

"அம்மா நான் இவகிட்ட வழிய போனேன்னு என்னை கேவலப்படுத்திட்டு போறா, உன் மருமகளை என்ன பண்ணுறேன் பாருங்க" என்று அவனது அறைக்குள் வேகமாகச் சென்றவன் கதவை அடித்து மூடினான்.

தூரிகாவோ குளித்து விட்டு வந்தவள் தலையை துவட்டிக்கொண்டு பால்கனிக்கு போனவளின் கையை பிடித்து இழுத்து கட்டிலில் விழச் செய்து “என்னடி சொன்ன நான் தகுதி இல்லாதவனா..? அப்புறம் ஏன் டி இன்னும் இங்க இருக்க..? உன்னை லவ் பண்ணியது என்னோட தப்பு தான்... எனக்குத்தான் தகுதி இல்லனு சொன்னல்ல... உங்க வீட்டுக்கு போக வேண்டியது தானே என்கூட ஏன் இருக்குற?” என்றான் ஆத்திரத்தில் அறிவிழந்து பேசிக்கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

அவளோ இப்போது தான் அப்பா வீட்டுக்கு போக முடியாதே! தான் போன அடுத்த நொடி அண்ணா ரதி மதினியை வீட்டை விட்டு விரட்டி விடுவார் தன்னால் மறுபடியும் ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை வரக்கூடாது என்று நிதானமாக யோசித்தவள் “நான் ஏன் போகணும் நீதானே என்னை கையை பிடிச்சு கூட்டிட்டு வந்த!! அப்ப நீயே என் வீட்டுல கொண்டு போய் விடு” என்றவளோ அவனது பிடியிலிருந்து எழும்ப பார்த்தாள்.

“உன் கையை பிடிச்சு கூட்டி வந்தது உன்னோட வாழ்க்கை நடத்த தான் உன்னை விட முடியாது... அப்படி உனக்கு என்கூட வாழ பிடிக்கலனா நான் கட்டின தாலியை கழட்டி வைச்சுட்டு போய்ட்டு இருடி” என்றான் என்ன பேசுகிறோம் என்று நிதானம் இல்லாமல்... அவனுக்கு அவள் வேண்டும்... எங்கே தன்னை விட்டு போய் விடுவாளோ என்று அச்சம் வந்துவிட்டது.

தூரிகாவோ தாலியை இறுக பற்றிக்கொண்டு "இதை கட்டியது முதல் கழட்டவே சொல்லிட்டு இருக்கீங்க நீங்க... எங்க ஊரு பொண்ணுங்க எல்லாம் உயிர் போனா கூட கழுத்துல போட்ட தாலியை கழட்டமாட்டோம்" என்றாள் கண்ணீருடன்.

"அப்போ நான் உனக்கு உரிமை உள்ளவன் தானே! உன்னை தொடாலாமா?" என்றதும் அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் கண்ணை மூடினாள். அவள் சம்மதம் கூறிவிட்டாள் என்று நினைத்து அவளை படுக்கையில் தள்ளி அவள் மீது படர்ந்தான் முல்லை கொடிபோல.

“ஏய் விடுடா என்னை” என்று திமிறினாள் தூரிகா.

“விடமாட்டேன்டி நீ எனக்கு பொண்டாட்டி... இப்போ அந்த உரிமையை எடுத்துக்க போறேன் ஐ நீட் யூ” என்றவனோ அவன் போட்டிருந்த டீசர்ட்டை கழட்டி தூரப்போட்டான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 23

அவளுக்கோ மூச்சடைத்து போனது அவனது செயலில்... மடை உடைந்த புது வெள்ளம் போல அவள் மீது பாய்ந்துக் கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

"வே.வேணாம் வி.விடுங்க" என்றவளின் இதழ்கள் நடுங்கியது.

அவளது கண்களை பார்த்துக்கொண்டே அவளது ஈரக்கூந்தலுக்குள் கைகளை நுழைத்து அவளது முகம் நோக்கி குனிய அவளோ இதழை மடித்துக்கொண்டு முகத்தை திருப்பினாள்.

அவனுக்கோ அவளது இதழை கொய்ய ஆசை விடுவானா! நெற்றியில் மென்மையாய் முத்தம் கொடுத்தான். கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய கண் இமைக் குடைகளுக்கு முத்தம் கொடுத்தான். அவளுக்கோ தொண்டைக்குள் பயபந்து உருண்டு வந்தது. அதே சமயம் தனக்கு விருப்பமா என்று கூட கேட்காமல் தன்மீது பாய்பவனை என்னவென்று சொல்வது...

பூஞ்சைப்பெண்ணால் அவனை தடுக்கவும்முடியவில்லை... வாய் விட்டு கத்தவும் முடியாது... கோதையிடம் உங்க மகன் என்கிட்ட இப்படி நடக்குறாருனு சொல்லவா முடியும்... கணவன் மனைவி உறவு அப்படித்தான்னு பழங்காலத்துக்கதையை சொல்லுவாங்க என்றெல்லாம் அவளுக்குள் சுனாமி பேரலையே அடித்துக்கொண்டிருந்தது.

அடுத்து அடுத்து என்ன நடக்குமென்று அறியாத மங்கை கிடையாதே அவள்! அவனோ அவனது காரியத்தில் கண்ணாக இருந்தான். குறுந்தாடியால் பெண்ணவளின் ஒரு கன்னத்தில் தேய்த்தான். அவளோ கன்னத்தை திருப்பினாள்... இந்தப்பக்கமும் கொடுப்பேன் என்று போட்டி போட்டு அவளை முத்த மழையில் நனைய வைத்துக்கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

அவளால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது.

அவனோ "என்னடி முறைக்குற..! பெரிய கண்ணகி பரம்பரையா நீ முறைச்சா நான் சாம்பல் ஆகிடுவேனா! இப்போ நீ என்ன முறைச்சாலும் சரி! அழுதாலும் சரி! நான் இன்னிக்கு உன்னை விடுவதா இல்லை” என்று கண்ணைச்சிமிட்டி அவளது பட்டு ரோஜா இதழோடு தன் இதழை உரசினான்.

அவளுக்கோ அவன் மீது எல்லையில்லா கோபத்தில் கடித்து வைத்துவிடலாமா என்று கூட தோன்றியது.

அவளது இதழழ்கள் இரண்டும் பனித்துளி பட்டது போல நடுங்கியது. அவனோ நடுங்கிய இதழ்களை தன் இதழ்களுக்குள் பூட்டு போட்டுக் கொண்டான்.

“ம்ம்” என்று இதழ்களுக்குள் போராடினாள். அவளது போராட்டம் எல்லாம் இதழ்களுக்குள் கரைந்து போனது. அவனது முத்தத்திற்கு அடிமையாக்கினான் பெண்ணவளை... தன்னவன் தொட்டால் பனிக்கூழ் போல கரைந்து உருகிவிடுகிறாள் அவனது முத்த சூட்டில் பெண்ணவள். அவனோ தன் மனையாளை கைபாவை ஆக்கிக்கொண்டிருந்தான். தன்னால் அவனை எதிர்க்க முடியவில்லையே என்று அவளுக்கு கண்ணீர்தான் வந்தது.

அவளுக்கோ அவன் கொடுக்கும் முத்தத்தில் மூச்சு முட்டியது. மூச்சுக்கு ஏங்க அவளை விட்டு பிரிந்தவனோ அவள் கண்களை பார்த்தவாறே அவள் போட்டிருந்த டீசர்ட்டில் கையை வைத்தான். அவளோ தட்டிவிட்டு எழும்ப பார்த்தாள்.

அவளை கோழிக்குஞ்சு அமுக்குவது போல அமுக்கி கட்டிலில் சாய்த்தான்.

“டேய் என்னை விடுடா!” என்று கையால் அவனது மார்பில் குத்தினாள்.

அவனுக்கோ அவளது அடிகள் எறும்பு கடிப்பது போல இருக்க “நீ வேணாம்னு தடுக்கும்போது எனக்கு நீ வேணும்னு தோணுதுடி பப்பாளி! இப்போ எனக்கு சண்டை போடுற மூடு போயி... லவ் மூடு வந்துடுச்சு... இப்ப நீ என்ன சொன்னாலும் என் காது கேட்காது” என்று இதழ் வளைத்து சிரித்து அவளது இதழை கவ்விக்கொண்டான்.

அவளுக்கோ இவன் விடமாட்டான் போலயே என்று அவளுக்கு தப்பிக்கும் மார்க்கம் இல்லாமல் போனது. நகரவிடாமல் நண்டு பிடியாக பிடித்து விட்டான் பெண்ணவளை.

அவளோ 'என்னவோ பண்ணுடா ஊருக்கு மத்தியில நிற்க வைச்சு எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்தப்பவே! என்னால தடுக்க முடியலை... இப்போ தாலிகட்டி கூட்டிட்டு வந்து என் உணர்வுகளோட விளையாடுற... நானும் உன்கூட குழைஞ்சு கிடக்கேன்' என்று கவலைப்பட்டவள் அவன் கைகளில் பொம்மையாக இருந்தாள்.

அவளது கண்களை பார்த்துக்கொண்டு மீண்டும் இதழ் முத்தம் கொடுத்தான். அவளோ அவனது கண்களை பார்க்கமாட்டேன் என கண்களை மூடினாலும் கண்ணுக்கு முத்தம் கொடுத்து அவனை பார்க்க வைத்து அவனது காந்தக் கண்ணால் தன்னை மயக்கிவிடுகிறானே! நானும் அவனை இரும்பு போல ஒட்டிக்கொள்கிறேன்! என்ன செய்வதென்று புரியாமல் அவன் காட்டும் காதல் மழையில் நனைந்துக் கொண்டிருந்தாள்.

அவனோ அவளது டீசர்ட் பட்டன்களை ஒவ்வொன்றாய் கழட்ட அவளோ கண்களை திறந்து "எ.என்ன பண்ணுறீங்க நா.நான் இ.இன்டன்ஷிப் முடிக்கணும்ல... அதுக்குள்ள என்ன அவசரம்" என்று அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள இப்போது வாய் திறந்து பேசிவிட்டாள்.

"ம்ம் இன்டன்ஷிப்தானே பார்த்துக்கலாம் வா" என்று அவளை நிராயுதபாணியாக வைத்துவிட்டான். இருவரும் ஒரே போர்வைக்குள். அனல் மூச்சு அவனிடமிருந்து... அவளோ திரும்பி படுக்க அவளது தோளைப்பற்றி "அம்மு ப்ளீஸ் ரெண்டு பேர் சண்டையும் இங்க கொண்டு வர வேணாம்... ரொம்ப மனசுக்குள்ள அழுத்தமா இருக்கு... உன்னால மட்டும்தான் என்னோட அழுத்தத்தை குறைக்க முடியும்” என்று அவளது வெற்று முதுகில் முத்தம் கொடுத்தான்.

அவன் கொடுத்த ஒற்றை முத்தத்தில் பெண்ணவளின் பொன்மேனி சிலிர்த்து அடங்கியது. தன் மனதுக்கு பிடித்தவன் தன்னை வேண்டுமென்று கெஞ்சும் போது அவளால் அவனுக்கு தன்னை ஒப்புக்கொடுக்காமலும் இருக்க முடியவில்லை. அவன் தனக்கு செய்த காரியத்தையும் அவளால் மறக்க முடியவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தாள்.

ஆனால் அவனோ அவளது மேனியெங்கும் முத்தமிடதுவங்கி அவளை தன்வசப்படுத்தினான். அவளது கைளை எடுத்து தன்னை அணைத்துக்கொள்ள செய்தான். மங்கையவளை மன்னவன் சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளையாக மாற்றினான்.

பெண்ணவளுக்குள் புதைந்துகிடக்கும் பொங்கிஷங்களை களவாடினான கள்வனாக. அவனது இதழ்கள் அவளது மேனியில் படாத இடமேயில்லை. இதழ்களும் கரங்களும் நர்த்தனம் ஆடியது பெண்ணவளின் மேனியில். அவனது அனல் மூச்சில் வெண்ணையாக உருகிக் கொண்டிருந்தாள்.

"துகா! துகா!" என்று செல்லப்பெயர் வைத்து மந்திரம் போல படித்தான்.

"ப்ளீஸ் பெயின்னிங்" என்று அவனது கரங்களை தள்ளிவிட்டாள். அவனோ தலையை ஆட்டி பூவுக்குள் தேனை எடுக்கும் வண்டாக மாறியிருந்தான். அவளோ தன்னை அவனிடம் முழுதாய் ஒப்படைக்கும் நேரம் அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவனுக்கோ பெண்ணவளை ஆண்டுவிடத்துடித்துக்கொண்டிருந்த தருணம்... அவளை இதுவரை மென்மையாகவே நடத்தினான்.

அவளது கண்ணீர் அவனை உலுக்கியது. அவளை முத்தமிட்டு முத்தமிட்டு தன்வசப்படுத்தி பெண்ணவளுக்குள் புதையல் எடுத்தான்.

அவளுக்கோ கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது வலியில்... இறுதியாக அவன் கொடுத்த நெற்றி முத்தம் அவளது வலியை போக்கும் வண்ணம் இதமாய் செய்து விட்டான். அவளது கண்களை காதலாக பார்த்தான் பொண்வன்னன்.

அவளோ “இப்போதும் என்கிட்ட ஏதாவது தேவைப்படுதா?” என்றாள் உதடு கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு அவனை வார்த்தைகளில் வதைத்தாள்.

"ஏய்... ஏன் டி என்னை இப்படி கொல்லுற" என்றவனோ அவளது கண்ணீரை கண்டு அவன் மனது இளகியது. அவளது இதழில் மென்மையாக முத்தமிட்டு அவளை புறாக்குஞ்சாய் அள்ளி எடுத்து தன் மேல் போட்டுக்கொண்டு “பெயின் ஏதும் இருக்காடி? ஆயிண்ட்மெண்ட் கொடுக்கவா..? அப்ளை பண்ணிக்கோ பெயின் இருக்காது” என்றான் ஒரு டாக்டராக.

அவளோ அவனிடமிருந்து பிரிந்து "அப்போ எல்லாம் தயாரா எடுத்து வச்சிட்டுத்தான் என்கூட ப்ளான் பண்ணி இப்படி இருந்தீங்களா?" என்று அவனுக்கு சாட்டையடி கொடுத்தாள்.

“ஏய் சும்மா நிறுத்துடி... என்னோட காதல் உண்மையானதுதான்... நான் உன்னோட உணர்வுகளோடு விளையாடினாலும் நீயும் என்கூட இணைஞ்சுதான் இருந்த. நான் உன்னை காதலா தொட்டதை எப்போ லஸ்ட்டுனு சொன்னியோ அப்பவே என் காதலும் செத்து போச்சு! என்னோட காதலை நீ கல்யாணத்துக்கு முன்னாலயும் புரிஞ்சுக்கல... கல்யாணத்துக்கு அப்புறமும் புரிஞ்சுக்கல..." என்றான் வெறுமையான குரலில்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்லவனை போல நடிக்காதீங்க பத்து மணி டாக்டர்” என சீற்றமாய் சீறிவிட்டாள். அவனோடு பேசக்கூடாது என்று நினைத்தாலும் அவன் மேல் இருக்கும் கோபத்தில் எண்ணெயில் போட்ட கடுகு போல பொரிந்து விட்டாள்.

அவனுக்குமே ஈகோ தலைதூக்கியது. “ஆமாடி எல்லாம் ப்ளான் பண்ணி வச்சிட்டு தான் உன்கூட சேர்ந்தேன் போதுமா?” என அவளது முகத்துக்கு நேராக கத்தி விட்டு அவளது மனதை சுக்கு நூறாக உடைத்து குளியலறைக்குள் சென்றுவிட்டான்.

அவளோ அவன் நான் உன்னை லவ் பண்ணுறேன். ஐ லவ்யுடி செல்லம்னு கொஞ்சுவான் என்று நப்பாசை பட்டுவிட்டாள். அவனோ மாறாக அவன் ‘ப்ளான் பண்ணிதான் பண்ணினேன்’ என்றதும் அவள் உயிரோடு மரித்துவிட்டாள். அவன் மீது வைத்திருந்த கொஞ்ச நஞ்ச காதலும் இப்போது காற்றாகி மறைந்து போனது.

பொன்வண்ணனோ ஷவரை திறந்து விட்டு நின்றவனோ ‘உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்டி! ஏன் பிடிக்கும் எவ்வளவு பிடிக்கும்னு கேட்டா எனக்கு அளவு தெரியாது. ஆனா உன்னை எனக்கு பிடித்த அளவிற்கு இந்த உலகத்துல யாரையும் பிடிச்சதில்லைடி... அம்மா பாசம் வேற... உன் மேல இருக்க காதல் வேறடி துகா! என்னோட காதலை லஸ்ட்னு கொச்சைபடுத்திட்டடி' என்று வருத்தத்தில் நெஞ்சில் குத்திக்கொண்டான்.

அவளுக்கோ எழும்பக்கூட முடியவில்லை. போர்வையை போர்த்திக்கொண்டு நடந்தவளுக்கு கால்கள் தள்ளாடியது.

குளியலறைக்கதவை திறந்து வந்தவன் தள்ளாடி நடந்தவளை பார்த்து அவளை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் விட்டு வந்து பெருமூச்சு விட்டு ட்ராக் பேண்ட்டும் டீசர்ட்டும் போட்டு கட்டிலை பார்த்தான். வெந்நிற மெத்தை விரிப்பில் இரத்த திட்டுக்கள் இருந்ததை கண்டு கண்மூடித்திறந்தவன் மெத்தை விரிப்பை அழுக்கு கூடையில் போட்டு வேறு மெத்தை விரிப்பை மாற்றியும் வைத்து பால்கனியில் போய் நின்றுக் கொண்டான்.

வானத்தில் வெண்ணிலா இருக்குமென்று பார்க்க ஆனால் இன்று நிலாவோ மேகத்திற்குள் மறைந்து அவன் கண்ணுக்கு தெரியாமல் வானம் வெறுமையாய் காட்சி தந்தது.

அவள் குளிப்பதற்கு ஹீட்டர் போட்டு விட்டுத்தான் வந்திருந்தான். ‘இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல’ என்று சலித்துக்கொண்டு தண்ணீரை எடுத்து மேனியில் ஊற்ற அவன் பல்பட்ட காயத்தில் தண்ணீர் பட்டு எரியத்தான் செய்தது. "பத்து மணி டாக்டர் பாய்ஞ்சு பிராண்டி வச்சிருக்கான் ராஸ்கல்" என்று கணவனை திட்டிக்கொண்டே குளித்து நைட்டியை போட்டு அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

பசியில் வயிறு கத்தியது. கோதையோ ஆதிபெருமாளுக்கு சாப்பாடு போட்டு விட்டு மகனும் மருமகளும் சண்டை போட்டு போனார்களே என்ன ஆச்சோ என்று பதறி மகனின் அறையை எட்டி
பார்த்துக்கொண்டிருந்தார்.

'தன் வாழ்க்கை தான் நரகமாய் இருந்தது. அதிலும் வாழ்ந்து இரண்டு குழந்தைகளை மணியாய் பெற்றெடுத்திருக்கிறேன். இப்போ என் மகனும் மருமகளும் இப்படி எலியும் பூனையுமாய் சண்டைபோட்டால் என்னால எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்' என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

மகனின் அறையாய் இருந்தாலும் இப்போது மருமகளுடன் தனித்திருக்கும்போது கதவை தட்டுவது அநாகரீகம் என்று கதவை தட்டவும் தயங்கிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் நேரம் காத்திருந்து பார்த்தவர் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று பொன்வண்ணன் அறைக் கதவை மெதுவாய் தட்டினார்.

பொன்வண்ணனுக்கு கோதைதான் கதவை தட்டுவார் என்று தெரியும் அவனோ தூரிகா கதவு திறக்கட்டும் என்று பால்கனியை விட்டு வரவில்லை.

“அம்மாடி தூரிகா நீங்க இன்னும் சாப்பிடலையே சப்பாத்தி சூடு ஆறிடும். ரெண்டு பேரும் சாப்பிட வாங்கடா” என்றார் கோதை பாசம் பொங்கும் குரலில்.

‘அத்தை கூப்பிடுறாங்கல்ல இவன் காதுல விழலையா என்ன? அத்தை கூப்பிடும்போது போகாம இருக்கவும் முடியாது... இவன் பண்ணின வேலையில் என்னால நடக்க கூட முடியலை!’ என்று சலித்துக்கொண்டு மெதுவாய் நடந்து வந்து கதவு திறந்து விட்டாள்.

கோதையோ அறைக்குள் வந்தவர் “சாப்பிட வரலைனு கூப்பிட வந்தேன்டா!” அறையை நோட்டமிட்டிபடியே தூரிகாவின் கழுத்தில் பற்தடம் கண்ணுக்குத்தெரிய 'படவா ராஸ்கல் புள்ளையை கஷ்டப்படுத்தியிருப்பான் போலயே! என் மருமக பாவம்' என்று மகனை மனதில் அர்ச்சித்தவர் “கண்ணு உனக்கு சாப்பாத்தி அறைக்கே கொண்டு வரட்டுமா?” என்றார் கனிவாக மருமகளின் தலையை வருடிக்கொண்டே.

“நா.நாங்களே சாப்பிட வரோம் அத்தை! காலையிலிருந்து வீட்டு வேலை ஓயாம செய்யுறீங்க! நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றவளின் முகத்தை ஆராய்ந்தவர் அவளது முகம் பொலிவாக இருக்க.

‘நல்லா சந்தோசமாயிருந்தா சரி’ என்று மனதிற்குள் சந்தோசப்பட்டவர் “எங்க என் டாக்டர் மகன்?” என்றார் சிரிப்புடன்.

பால்கனியை கைகாட்டினாள். ‘ஓ என் மகனுக்கு வெட்கம் வந்துருச்சு போல’ என்று ஆனந்தத்துடன் “நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன் நீ வண்ணனை கூட்டிட்டு வாடா” என்று அவளது கன்னம் தட்டி “டேய் வண்ணா சாப்பிட வாடா எவ்ளோ நேரம் பால்கனியில நின்னுக்கிட்டு இருப்ப. சந்தோச சாரலுடன் மகனை சாப்பிட கூப்பிட்டுச் சென்றார் கோதை. இருவரும் கூடலுக்கும் பின்னும் ஊடல் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியாமல்.

“அத்தை நான் சாப்பிட வரேன்... உங்க மகனும் வருவாங்க” என்று கோதையின் பின்னே வந்துவிட்டாள். டைனிங் டேபிளில் உட்கார்ந்த மருமகளிடம் “நான் கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதடா கண்ணு! என்னடா ரொம்ப கஷ்டப்பட்டியா... அவன்தான் டாக்டராச்சே மருந்து ஏதும் கொடுக்கலையா! நீயும் நர்ஸ் உனக்கு தெரியாம இருக்காது இருந்தாலும் இப்போ நான் உனக்கு அத்தையுமா, அம்மாவுமா இருக்கேன். உன்னை கண்கலங்காம வச்சிருக்கறது என்னோட கடமைடா” என்றார் அவளது நெற்றியில் முத்தமிட்டு.

தூரிகாவிற்கோ கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. தாய் கோமதியை விட ஒரு பங்கு பாசமாய் பார்த்துக்கும் தன் மாமியாரை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டாள்.

தனக்குள் வலியை மறைத்து “எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அம்மாவை போல பார்த்துக்கிற அத்தை இருக்கும் போது எனக்கு என்ன கவலை!” என்று கண்ணைச் சிமிட்டி மெலிதாய் சிரித்தாள்.

“இதுபோதும்டா ரெண்டு பேர் சண்டையும் பார்த்து இந்த அத்தை நெஞ்சுக்குள்ள இந்நேரம் வரை புலுங்கி கிடந்தேன்... நீங்க ரெண்டு பேரும் நகமும் சதையும் போல ஒட்டியே இருக்கணும்... அவன் கோபப்பட்டா நீ விட்டுக்கொடுத்துபோ” என்றார் வீட்டுக்கு பெரிய மனிதராக.

‘அப்போ உங்க மகன்கிட்ட சொல்லமாட்டீங்களா அத்தை’ என்ற விதத்தில் அவள் பார்வை இருக்க புரிந்துக் கொண்டவராக குறுஞ்சிரிப்புடன் “என் மகன்கிட்டயும் பொறுத்து போகச் சொல்றேன்டா!" என்றார் அவளது தோளில் கைவைத்து ஆதுரமாக.

“அத்தை பசிக்குது” என்றாள் கண்ணைச்சுருக்கி.

“நான் ரொம்ப பேசுறேனா மருமகளே” என்று அவளை கிண்டல் செய்தார் கோதை.

“நீங்க எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசுங்க ஆனா இப்ப சாப்பாடு ஊட்டுங்க” என்று கோமதியிடம் சொல்வது போல சொல்லிவிட்டாள்.

ரதிதேவி இந்தியா வரும்போதெல்லாம் அவளுக்கு சாப்பாடு ஊட்ட ஆசையா இருக்கும் கோதைக்கு... ஆனால் ரதியோ நான் என்ன சின்ன பிள்ளையா சாப்பாடு ஊட்டுவதற்கு என்று மறுத்துவிடுவாள். இப்போது தூரிகா சாப்பாடு ஊட்டுங்க என்று கேட்டதும் சாப்பாத்தியை குருமாவில் நனைத்து மருமகளுக்கு ஊட்டிவிட்டார் கோதை.

அவளும் “தேங்க்ஸ் அத்தை” என்று ஆனந்தக்கண்ணீருடன் வாங்கிக்கொண்டாள்.

“காரமா இருக்காடா?” என்றார் கோதை.

“கொஞ்சமா அத்தை” என்றாள் கண்ணைச் சிமிட்டி.

பொன்வண்ணனோ டைனிங் டேபிளில் உட்கார்ந்தவன் “எனக்கு ஊட்டமாட்டீங்களா உங்க அண்ணன் மகளுக்குத்தான் ஊட்டுவீங்களா..? மருமக வந்ததும் மகனை மறந்தாச்சு... நல்லவேளை உங்க ஆசை அன்பு மருமகன் ஒருவேளை நம்ம வீட்டுக்கு வந்துட்டா... என்னை ஒரேயடியா மறந்துடுவீங்கம்மா” என்றாள் பொசசிவ்வில்.

“டேய் வண்ணா என்னடா இப்படி சொல்லிட்ட... நான் ஆரம்பத்திலிருந்து நீயும் என் சிங்கமும் ரெண்டு கண்ணுனு சொல்லியிருக்கேன்” என்றார் மகனை செல்லமாய் கடிந்த படி.

"அத்தை உங்க மகனுக்கு பொறாமை அதிகம் போல” என்றாள் பொன்வண்ணனை முறைத்தபடியே.

“யாருக்குடி பொறாமை?” என்று அவன் சண்டைக்கு வந்தான் தூரிகாவிடம்.

கோதையோ “ரெண்டு பேருக்கும் நானே ஊட்டிவிடறேன் சண்டையை மறுபடி ஆரம்பிக்காதீங்க” என்று மகன் மருமகளுக்கு சப்பாத்தியை ஊட்டி விட்டார்.

சாப்பாடு ஊட்டி முடித்து இருவரையும் உட்கார வைத்து ஊரு கண்ணு முழுக்க ரெண்டு பேர் மேலதான் இருக்குமென்று திருஷ்டி எடுத்தார்.

இருவரும் முறைத்துக்கொண்டேச் சென்றனர். அறைக்குள் நுழைந்ததும் முதுகு காட்டி படுத்துக்கொண்டாள் தூரிகா.

அவனோ "ரொம்பத்தான்டி பண்ணுற" என்று முணுமுணுத்துக்கொண்டு அவனும் முதுகுகாட்டி படுத்துக்கொண்டான். அவனுக்கோ மீண்டும் அவள் மீது ஆசை வந்தது. மானங்கெட்ட மனசே அடங்கியிரு தன் ஆசைக்கு கடிவாளம் போட்டு படுத்துக்கொண்டான்.

ரதிதேவிக்கோ ஹாஸ்பிட்டலிலேயே ஒன்பது மணி ஆனது. நேரம் ஆகுமென்று வீட்டில் யாருக்கும் சொல்லவும் இல்லை. அலர்விழி அதே ஹாஸ்பிட்டலில் தான் விஷம் குடித்து படுத்திருக்கிறாள் என்பது கொஞ்ச நேரம் முன்புதான் தெரிந்தது அதுவும் ஆதிபெருமாள் போன் பண்ணி சொல்லியிருந்தார்.

"கண்ணு நீ அங்க போகாதே எல்லாரும் உன்மேலதான் பழியைபோடுவாங்க... அதுவும் உன் சித்தி அன்பரசி உனக்கு சாபம் கொடுத்தாலும் கொடுப்பா நீ போககூடாது" என்று எச்சரிக்கை கொடுத்தார்.

"சரிங்கப்பா நான் போகமாட்டேன்... ஆனா டாக்டரா என்னை அலர்விழியை செக் பண்ண சொன்னா என்னால மறுக்க முடியாதுப்பா... டாக்டரா போகும்போது என்னை யாரும் பேச முடியாதுங்கப்பா நீங்க கவலைப்படாதீங்க... நீங்க சொல்லிக்கொடுத்தபடிதான் நடந்துக்கிட்டு இருக்கேன்" என்றவுடன் ஆதிபெருமாளோ "நீதான் ராஜாத்தி அப்பாவுக்கு துருப்புச் சீட்டே! நீயும் என்னை கைவிட்டா நான் சாகறதை தவிர எனக்கு வேற வழி கிடையாது... இந்த எலக்ஷன்ல நான் தோற்கக்கூடாது" என மகளிடம் மகுடி வாசித்தார்.

"நான் என்னால முடிஞ்சதை பண்ணுறேன்பா டயர்டா இருக்கு நான் காலையில பேசுறேன்" என்று போன் பேசிக்கொண்டே துரைசிங்கத்தின் மீது மோதினாள். ஏதோ கரும்பாறைமேல் மோதியது போல "ஸ்ஸ்" என்று நெற்றியை தேய்த்துக்கொண்டு நிமிர்ந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 24


“ஏய் உனக்கு நடக்கவே தெரியாதாடி! கண்ணை முன்னாடி வச்சு நடக்கணும்.. நீதான் ஆணவம் பிடிச்ச கழுதையா இருக்கியேடி” என அவளிடம் வம்பு இழுத்தான். மணி ஒன்பதாகியிருக்க ஹாஸ்பிட்டலில் அந்த இடத்தில் அதிகம் கூட்டமும் இல்லாமல் இருந்தது.

அவளுக்கோ தன்னை கழுதை என்றதும் மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது. “யா.யாரு ஆணவம் பிடிச்ச கழுதை நானா? என்னை எப்படி கழுதைனு சொல்றீங்க!” என்று குரலை உயர்த்தினாள அவனிடம்

“இப்போ மணி என்ன ஆச்சு!” என்றான் அவளை முறைத்தபடியே.

“மணி 9.00க்கு மேல ஆச்சு அதுக்கு இப்ப என்ன”? என்றாள் முகத்தை சுளித்தபடியே.

"வீட்டுக்கு போக லேட் ஆச்சுன்னா... வீட்டுக்கு போன் பண்ணி சொல்லணும்னு உனக்கு தெரியாதா டி... யார் போன் நம்பரும் என்கிட்ட இல்லைனு பொய் மட்டும் சொல்லாதே! உங்கப்பன் உன்கிட்ட எங்க வீட்டு ஆளுங்க நம்பர் கொடுத்து வச்சிருப்பான்... நாம எதுக்கு போன் பண்ணனும் திமிரா இருந்திருப்ப.. இதுதான் உனக்கு பர்ஸ் அண்ட் லாஸ்ட்.. இனி எப்போ வீட்டுக்கு வர தாமதம் ஆனாலும் எனக்கு போன் போட்டு சொல்லணும்... நான் சொல்லமாட்டேன் என்னோட இஷ்டம் படிதான் இருப்பேன் இருந்தா... அப்படியே உன் அப்பன் வீட்டுக்கு ஓடிப்போயிடு” என்றான் சீற்றமாக சட்டையை முழங்கை வரை ஏத்திவிட்டுக் கொண்டே.

"மூணு பிரசவ கேஸ் இரண்டு நார்மல்... ஒரு காம்ப்ளிகேட் டெலிவரி... சோ எனக்கு போன் பண்ண நேரமே இல்லைங்க!" என்றாள் சிடுசிடுவென.

“அப்படியா உன் போன் கொடு நான் செக் பண்ணுறேன்” என்று போனை பிடுங்க

அவளோ “என்ன பண்ணுறீங்க இது நான் வேலை செய்யுற ஹாஸ்பிட்டல் உங்க வீடு கிடையாது அதிகாரம் பண்ண வழிய விடுங்க” என்று அவன் மார்பில் கையை வைத்தாள்.

“ஏய் யாரு மேலடி கையை வைக்குற கையை எடுடி” என்று நாக்கை கடித்துக்கொண்டு அவளை அடிக்க கையை ஓங்கி விட்டான் துரைசிங்கம்.

அங்கே வந்த வீரய்ய னோ “சிங்கம் கையை கீழே போடு பொது இடத்துல வந்து பொண்டாட்டி அடிக்க கையை ஓங்குற என்ன பழக்கம்” என்ற அவர் அதட்டலில் சிங்கம் கையை கீழே போட்டு “வீட்டுக்கு வாடி” என்று ரதியை பார்த்து தலையை அசைத்தான்.

வீரய்யனை பார்த்ததும் ரதிக்கு மூச்சே வந்தது.. ‘அப்பா பெரிசு வந்து நம்மளை காப்பாத்திடுச்சு பெரிய சண்டியர்னு நினைப்பு ஆஊனா அடிக்கறதுக்கு கையை ஓங்குறான்” என்று சிங்கத்தை பார்த்து இதழை சுளித்தாள்.

நாச்சியும், வீரய்யனும் அலர்விழியை பார்க்க ஐ.சி.யுவிற்குள் சென்றிருந்த நேரம் அலர்விழிக்கு மருந்துகள் வாங்கி வரச் மருந்துசீட்டை நர்ஸ் கொண்டு வந்து கண்ணனிடம் கொடுக்க “நான் வாங்கிட்டு வரேன் மாமா” என்று மருந்துசீட்டை வாங்கிக்கொண்டு வந்தவன் ரதிதேவியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் துரைசிங்கம்.

நாச்சியோ “ஏத்தா அவன்தான் கோவக்காரன்னு தெரியுதுல கொஞ்சம் நீயும் பொறுத்து பேசமாட்டியா படிச்ச புள்ளதானே” என்றார் கனிவாகத்தான்.

ரதியோ “நான் என்ன உங்க பேரனுக்கு அடிமையா! அவர் என்ன பேசினாலும் வாயை மூடிக்கிட்டு போறதுக்கு... வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண... வயசான காலத்துல வீட்டுக்குள்ள அடங்கி கிடக்க தெரியாதா... இப்படி ஜோடி சுத்தணுமா?" என்று முகத்தில் அடித்தாற் போல பேசியவளின் கன்னம் சிவந்து விட்டது சிங்கம் அடித்த அடியில்.

வீரய்யனுக்கும் நாச்சிக்கும் ரதி பேசியதும் மனதுக்கு பெரும் வருத்தமாய் இருந்தாலும் ரதியை தன்பக்கம் இழுத்துக் கொண்டு “சிங்கம் என்ன நாலு பேர் வந்து போற இடம்னு கூட பார்க்காம அடிச்சுபுட்ட... இந்த நேரம் யாரும் இல்ல... இங்க வேலை செய்யுற ஆளுங்க இப்ப நடக்கறதை பார்த்திருந்தா பேத்தியை யாரும் மதிக்கமாட்டாங்கல்ல ராசா!” என்று சிங்கத்தை தான் கண்டித்தார் நாச்சி.

ஆனால் ரதியோ “விடுங்க என்ன சும்மா குடும்பமே பாச நாடகம் நடத்திக்கிட்டு” எனறு திமிராய் பேசி நாச்சியின் அணைப்பிலிருந்து விலகி அங்கிருந்து வேகமாய் சென்றுவிட்டாள்.

“பார்த்தீங்களா அப்பத்தா இவளுக்கு போய் என்கிட்ட பரிஞ்சு பேசுறீங்களே! இவளை இன்னும் நாலு அடி போட்டிருக்கணும். அவ அப்பனை போல கொழுப்பு உடம்பு முழுக்க இருக்கு... சீக்கிரம் கரைச்சு விடறேன்” என்று பல்லைக்கடித்தவனோ “தாத்தா அவ பேசினது தப்புதான் நீங்க ரெண்டு பேரும் மனசுல எதையும் வச்சிக்காதீங்க” என்றான் இருவரையும் அணைத்துக்கொண்டு

“நீர் அடிச்சு நீர் விலகிடாத சிங்கம்... யாரு அவ என்ற பேத்திதானே சிறுபிள்ளைத்தனமா பேசிட்டு போறா நாங்க பெரிசா எடுத்துக்கல நீ மனசு உடையாதப்பா! மருந்து வாங்கிட்டு வா கொடுத்துட்டு கிளம்பலாம்” என்ற இரு பெரியவர்களுக்கும் முகமே பொலிவு இழந்து விட்டது.

மருந்துகளை வாங்கி கொடுத்துவிட்டு “மாமா அலர்விழிக்கு ஏதும் தேவைனா போன் போடுங்க நான் அடுத்த நிமிசம் வந்துடறேன். இப்போ ஐ.சியுக்குள்ள பார்க்க விட்டாங்களா!” என்றான் அக்கறையாக.

“ம்ம் இப்போ பார்த்துட்டு வரோம்பா நல்லாயிருக்கா... நாளைக்கு ஜுஸ் கொடுக்க சொல்லியிருக்காங்க” என்றார் கண்ணன்.

“சரிங்க மாமா காலையில ஜுஸ் போட்டு எடுத்துட்டு வந்துடறேன்” என்றவனோ அன்பரசியை பார்க்க அவரோ முகத்தை திருப்பிக்கொண்டார்.

கண்ணனோ “விடுப்பா சரியாகிடுவாப்பா!” என்று சிங்கத்தின் தோளை தட்டினார்.

வீரய்யனையும், நாச்சியையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தான் அப்போதும் ஹாஸ்பிட்டல் வாசலிலேயே நின்றிருந்தாள் கையில் கோட்டுடன்.

சிங்கமோ ரதி நிற்பதை பார்த்துவிட்டு பார்க்காதது போல காரில் ஏறிவிட்டான்.

வீரய்யனோ அவள் தன்னை மதிக்காது பேசிய போதும் “கண்ணு வா நம்ம காருல போயிடலாம் இருட்டுக்குள்ள ஏன் நிற்கிற” என்று பேத்தியின் கையை பிடிக்க அவளோ “கேப் புக் பண்ணியிருக்கேன் நீங்க கிளம்புங்க” என முகத்தில் வெறுப்பை காட்டி பேசினாள் ரதி.

நாச்சிக்கும் மனது கேட்கவில்லை. “கண்ணு மணி பத்து ஆகப்போகுது அடம் பண்ணாம வாயி தாயி போகலாம்” என்றார்.

அவள் தங்களை எடுத்தெறிந்து பேசினால் என்ன? ஒரு துளி கூட கவலைப் படவில்லை நாச்சி. மகள் வயிற்று பேத்தியை தனியே விட்டு வர மனமில்லை நாச்சிக்கு. நாச்சி யாரிடமும் இவ்வளவு இறங்கிப்போய் பேசியதில்லை.

அவளே வரலைனு சொல்றா இவங்க போய் வெத்தலை பாக்கு வச்சு அழைச்சிக்கிட்டு இருக்காங்க என்று கோபப்பட்ட துரைசிங்கமோ காரை விட்டு வேகமாய் இறங்கியவன் “அப்பத்தா கார்ல வந்து ஏறுங்க... இத்தனை நாளாய் தனியா வீட்டுக்கு போனவளுக்கு இப்பவும் தனியா வரத்தெரியும்... தாத்தா வாங்க அவ கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு” என்று இருவரையும் கையை பிடித்து வந்து காரில் ஏறிவிட்டு ரதியின் பக்கம் சென்றவனோ “சரியான அகம்பாவம் பிடிச்ச கழுதையா இருக்க அடக்குறேன்டி” என்று மீசையை முறுக்கி காரில் ஏறியவனோ அவளை தாண்டி காரை வேகமாக ஓட்டினான் துரைசிங்கம்.

ரதியின் நேரமோ என்னவோ அவள் புக் செய்த கேப் இடையில் பழுதடைந்து விட்டது “வேற வண்டி அனுப்பறோம்” என்று டிரைவர் போன் செய்தார் ரதிக்கு.

கௌதம் சாப்பிட வந்தவன் ரதி நிற்பதை பார்த்து “ஏய் ரதி இந்த நேரம் இங்க நிற்குற பகல் டியூட்டி தானே?" என்று அவளது தோளை தொட்டான்.

“ஏய் கௌதம் நீ ட்யூட்டியில ஜாயின் பண்ணிட்டேன்னு காலையில தான் தெரிஞ்சுச்சு...எனக்கு இன்னிக்கு காம்ப்ளீகேட் டெலிவரி ஒன்னு உன்னை பார்க்க வரமுடியலைடா சாரி” என்றாள் கண்ணைச்சுருக்கி.

ரதியின் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை பார்த்தவன் “என்னடி உங்க வீட்டுக்காரரு இவ்ளோ பெரிய தாலிக்கயிறு கட்டியிருக்காரு. தேர் வடக்கயிறு போல" என்று பக்கென்று சிரித்துவிட்டான்.

“டேய் நானே கடுப்புல இருக்கேன் நீ வேற என்னை கடுப்பேத்தாத! எல்லாம் அப்பா சொன்னதாலதான் எனக்கு பிடிக்காத ஒருத்தனை கல்யாணம் பண்ணியிருக்கேன்” என்றாள் முகத்தை அஷ்டகோணலாக்கி.

“நீதானே ஜுஸ்ல ட்ரக் கலந்து கொடுத்திருக்க தூரிகாவுக்கு! நீ டாக்டர் தானே டி இப்படியா பண்ணுவ” என்று அவன் நண்பியிடம் கோபப்பட்டான்.

“ஓ அண்ணா எல்லாம் சொல்லிட்டாரா! அண்ணாவோட லவ்வுக்கும், பேமிலி மறுபடியும் ஒண்ணுசேரட்டும்னு நல்லெண்ணத்துல பண்ணினேன்பா! ஆனா எனக்கு கல்யாணம் ஆகும்னு சத்தியமா நினைக்கல... பிடிக்காத வாழ்க்கையா இருந்தாலும் என் அம்மாவோட வீட்ல இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா அந்த வீட்ல இருக்கவங்க ஓவர் பாசம் காட்டுறாங்க என் உடம்புக்கு ஒத்துக்காது... நான் விலகித்தான் நிற்பேன்... எங்க அப்பாவை மதிக்காத குடும்பத்துக்கு நான் மட்டும் மதிப்பு கொடுக்கணுமாடா” என்றாள் கோபப்பட்டு.

“ஏய் உன் மாமியார் வீட்டு ஆளுங்களை பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்கப்பா... கிடைச்ச வாழ்க்கையை வீணடிக்காம வாழப்பாருடி... ஒரு பிரண்டா சொல்லுறேன்” என்றான் கௌதம் அக்கறையுடன்.

“காதுல ரத்தம் வருதுடா நீ பேசறது! எனக்கு எப்போ அந்த வீட்ல இருக்க பிடிக்கலையோ அப்ப கிளம்பி அப்பா போய்ட்டே இருப்பேன். உன் அட்வைஸ் மழையை பொழியாதேப்பா இப்போ எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். என்னை வீட்ல ட்ராப் பண்ண முடியுமா! ரொம்ப டயர்ட்டா இருக்கு” என்றாள் ரதி சோர்வான குரலில்.

“ம்ம் கொண்டு வந்து விடறேன்டி நீ என்னோட பெஸ்ட் பிரண்டாச்சே! இரு கார் எடுத்துட்டு வரேன்” என்று பார்க்கிலிருந்த காரை எடுத்து வந்ததும் அவளும் முன் கதவை திறந்து ஏறிக்கொண்டாள்

ஐய்யனாரோ பாலமுருகனுக்கு போன் செய்திருந்தார். அவரது நெருங்கிய உறவில் இறப்பு நேர்ந்திருக்க சென்னைக்குச் சென்றிருந்தனர்.

“வணக்கம்ங்க முதலில் என்னை மன்னிக்கனும்” என பஞ்சாயத்தில் நடந்தது ஒன்றுவிடாமல் கூறி மீண்டும் மன்னிப்பு கேட்டார் ஐய்யனார்.

பாலமுருகனோ ஒருநிமிசம் பேசாமல் இருந்தவர் “இதுதான் நடக்கணும்னு இருக்கு போலங்க... உங்க வீட்டு சம்மந்தம் எங்களுக்கு கிடைக்கலனு வருத்தம்தான்... நீங்க மனசு சங்கடப்படதேவையில்லை... உங்க பொண்ணுக்கு என்னோட ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்” என சிறு கோபம் கூட காட்டாமல் போனில் பேசினார்.

“ரொம்ப நன்றிங்க என் பொண்ணை நல்லாயிருக்கணும்னு ஆசிர்வாதம் செய்தீங்கல்ல... உங்க மனசு போல நீங்க நல்லாயிருக்கணும்” என்றார் ஐய்யனார் மனச்சுமையை இறங்கி வைத்த நிம்மதியுடன்.

“நன்றியெல்லாம் வேண்டாம் ஐய்யனார்... உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது போன் பேசுங்க... போனை வைக்குறேன்” என்று போனை வைத்துவிட்டார் பாலமுருகன். இவரை போல சில மனிதர்கள் இன்னும் நல்லவர்களாக உலகில் வாழ்கிறார்கள்.

கோமதியோ “என்னங்க மணி பத்தாச்சு மருமகளை இன்னும் காணலையே! ஒருவேளை கோதை வீட்டுக்கு போயிருக்குமோ!” என்றார் கவலையுடன்.

“நம்ம மருமக டாக்டர் உத்தியோகம் பார்க்கறவ அதுவும் பிரசவ டாக்டர் வேற டெலிவரிக்கு வந்திருந்தா நேரம் காலம் பார்க்க முடியாது! கோமதி! சிங்கம் வரட்டும் போய் கூட்டிட்டு வரச் சொல்லுறேன்! நம்ம வீட்டுக்குள்ள ஒரு உயிரை உலகத்துக்கு கொண்டு வர பொண்ணு மருமகளா வந்திருக்கா! ஏதோ மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு கோமு” என்றார் புன்சிரிப்புடன்.

“நானும் மருமககிட்ட போன் நம்பர் வாங்கி வைக்குறேன்ங்க. நேரம் ஆச்சுனா போன் பண்ணி கேட்டுக்கலாம்ல!” என்றார் சிறு புன்னகையுடன்.

சிங்கத்தின் கார் சத்தம் கேட்டதும் சிங்கம் மருமகளையும் ஹாஸ்பிட்டலயிருந்து கூட்டிட்டு வந்திருப்பானோ என்று கோமதி வாசலை எட்டிப்பார்த்தார்.

வீரய்யனும், நாச்சியும் காரை விட்டு இறங்க மருமகளை காணோமோ என்று புருவம் இடுக்கியவரோ நாச்சி வீட்டுக்குள் வந்ததும் கோமதி “மருமகளை அழைச்சிட்டு வரலையாங்க அத்தை” என்றதும் அவரோ பெரும்மூச்சு விட்டு பேச ஆரம்பிக்க கௌதமின் கார் வீட்டுக்குள் நுழைந்தது.

சிங்கம் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவன் திரும்பி பார்த்தான்.

காரிலிருந்து இறங்கிய ரதியோ “பைடா மார்னிங் பார்க்கலாம்” என்று கோட்டை கையில் மாட்டிய படியே துரைசிங்கத்தை ஒரு பார்வை பார்த்துச் செல்ல முற்படுகையில்

கௌதமோ இவ பண்றது சரியில்லையே என்று தலையை ஆட்டிக்கொண்டான்.

“ஏய் நில்லுடி” என்று சிங்கத்தின் அழுத்தமான குரலில் ஆடிப்போனது கௌதம் மட்டுமல்ல ரதி தேவியும்தான். தன் நண்பன் முன்னால தன்னை அதிகாரம் செய்ததை அவளால் தாங்கமுடியவில்லை.

பெரியவர்களுக்கு மறுபடியும் அடிச்சிடுவானோ என்று பக்கென்று இருந்தது.

ரதியோ “எ.என்ன” என்று பார்வை பார்த்தாள்.

“வீடு வரை வந்துருக்கறவங்களை வாசல்ல பை சொல்லிட்டு வரதுதான் அழகா” என்றான் அதிகாரம் செய்யாமல் அதட்டலோடு.

கௌதமிற்கோ ஒரே நாளில் சிங்கத்தை பிடித்துவிட்டது.

“அண்ணா! எனக்கு ஹாஸ்பிட்டல நைட் ரவுண்ட்ஸ் இருக்கு... உங்க வீட்டுப் பொண்ணு அலர்விழியும் ஹாஸ்பிட்டல இருக்காங்கல்ல எனக்கு டைம் ஆச்சு! இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்” என்று புன்னகையுடன் காரில் ஏறப்போனவனின் கையை பிடித்துக்கொண்டான் துரைசிங்கம்.

“அது எப்படி எங்க வீட்டுப் பொண்ணுக்கு வைத்தியம் பார்த்தவரை வாசலோடு அனுப்பமாட்டோம். ஒரு காபியாவது குடிச்சிட்டு போகலாம்” என்று அவனது கையை பிடித்து வீட்டுக்குள் கூட்டிவந்துவிட்டான்.

“சாரிடா அதான் வீட்டு முக்கிய புள்ளியே உன்னை வரச்சொல்லியாச்சு! நான் குளிச்சிட்டு வரேன்” என்று அவளது அறைக்குச் சென்றுவிட்டாள் ரதி.

சிங்கமோ “ம்மா இஞ்சி டீ கொண்டு வாங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோமதி முகத்தில் மென் சிரிப்புடன் டீயை கொண்டு வந்து கொடுத்தார்.

துரைசிங்கம், ஐய்யனார், வீரய்யன், நாச்சி, கோமதி தன்னை சுற்றி பாசத்துடன் விருந்தோம்பல் செய்பவர்களை ஆச்சரியத்தோடு பார்த்தவாறே டீயை குடித்தவனோ “டீ சூப்பர் மா! இனிமே நான் எப்போ வந்தாலும் எனக்கு உங்க கையால இஞ்சி டீ வேணும்" என்றான் புன்முறுவலுடன்.

“அதுக்கென்னப்பா டீ தானே எந்த நேரம் வந்தாலும் போட்டுத்தரேன்” என்றார் சிரிப்புடன் கோமதி.

டீயை குடித்தவன் ரதியின் அறையை பார்க்க அவள் இன்னும் வெளியே வரவில்லை.

“சரிங்க அண்ணா நான் கிளம்புறேன் டைம் ஆச்சு! ரதிகிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடுங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று சிங்கத்திற்கு கையை கொடுத்து கிளம்பினான்.

பெரியவர்கள் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தனர் கௌதமை.

நாச்சியோ “நல்ல பையனா இருக்கான்ல சிங்கம்” என்று தங்களது மனக்கசப்புகளை மீறி புன்னகைத்தார்.

“ஆமாங்க அப்பத்தா இப்படியொரு நல்ல பையன் என் பொண்டாட்டிக்கு எப்படி நண்பனா இருக்காருனு அதிர்ச்சியா இருக்கு வாங்க போகலாம்” என்று சலித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றனர்.

பெரியவர்கள் சாப்பிட்டு முடித்து ஹாலில் உட்கார்ந்திருந்தனர்.

துரைசிங்கம் அறைக்குள் சென்றதும் ரதியை தேடினான் அவளோ பால்கனியில் நிற்பது தெரிய குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். குளித்து முடித்து தலையை துவட்டிக்கொண்டு பால்கனிக்குச் செல்ல ரதியும் பால்கனியிலிருந்து வெளியே வர இருவரும் மோதிக்கொண்டனர்

ரதி கால் தடுமாறி விழப்போக “ஏய் கழுதை” என்று அவளது இடுப்போடு கையை அழுத்தமாக பதித்து விழாமல் பிடித்திருந்தான்.

இருவரது விழிகளும் மோதிக்கொண்டது சிக்கி முக்கி கல்லாக.

ஒரு நிமிடம்தான் அடுத்த நொடியே அவளது இடுப்பிலிருந்து கையை எடுத்து அவளை கண்களால் அளவிட்டான்.

ரதியோ கையில்லா நைட்டியுடன் தலைமுடியை விரித்துப்போட்டிருந்தாள். அதுவும் கையில்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவளது அங்க வளைவுகள் தெரியுமளவிற்கு லோ நெக் நைட்டியை போட்டிருந்தாள்.

“ஏய்! என்னடி ட்ரஸ் இது! எப்போ வாங்கின! நான் தான் நீ போடுறதுக்கு டிரஸ் வாங்கி பீரோ நிறைய அடுக்கி வைச்சு இருக்கேன்ல! அந்த டிரஸ் போடவேண்டியது தானே.. இது என்ன கரகாட்டக்காரி போடறது நீ போட்டு இருக்க " என்று பல்லைக்கடித்தான் சிங்கம்.

“நைட்டினு தெரியாதா! நீங்க எடுத்து வச்சிருக்க சேலையை என்னால தினமும் கட்டிட்டு தூங்க முடியாது... ஹாஸ்பிட்டல் போகும்போதும் சல்வார், குர்தினு போட்டுட்டு போவேன்.. என்னால வாரத்துல ஆறு நாளும் சேலை கட்ட முடியாது! அதான் அப்பா கிட்ட சொல்லி எனக்கான டிரஸ் வாங்கிட்டேன்! வழிய விடுங்க சாப்பிட போகணும் பசிக்குது” என்று கடுப்பாக பேசி அவனது முகத்தை பார்த்தாள்.

அவனோ எதுவும் பேசாமல் அவளது முகத்தை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அவளது முன்பக்க நைட்டியை பிடித்து கிழித்து விட்டான்..

அவளோ “அச்சோ என்ன பண்ணுறீங்க..”என்று அந்த இடத்திலேயே உட்கார்ந்து ஆடை இல்லா பாகத்தை கை வைத்து மறைத்துக்கொண்டாள். கட்டிய கணவனாக இருந்தாலும் தீடிரென தான் போட்டிருக்கும் ஆடையை கிழித்ததும் எவ்ளோ தைரியமான பெண்ணாக இருந்தாலும் பயந்துதான் போவாள் அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.

சிங்கமோ அவளது கண்ணீருக்கெல்லாம் மசியவில்லை. “இங்க பாருடி நம்ம ரும்குள்ள என்ன வேணா போட்டுத்தொலை... நம்ம ரூமை விட்டு வெளியே போகும் போது சுடிதார் போட்டுட்டு போ வேண்டாம்னு சொல்லமாட்டேன். இது போல பாதி உடம்பு தெரிய நைட்டி போட்டுட்டு திரிஞ்சா!! நீ வாங்கி வைச்சிருக்க எல்லா நைட்டியையும் தீயை வச்சி கொளுத்திப்போடுவேன்டி.. அடுத்து உன் அப்பன் எடுத்து கொடுத்த டிரஸ் நம்ம வீட்டுல இருக்கக்கூடாது ” என்றான் கடும் கோபத்துடன் விரலை நீட்டி எச்சரித்தான் சிங்கம்.

 
Status
Not open for further replies.
Top