ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 29

“இந்த முறை வெளியூர்ல இருந்து ஆட்களை இறக்குவோம் மாமா!” என்றான் மாணிக்கம்.

ஐய்யனாரோ “அப்ப நாங்க கிளம்புறோம்” என்று கையை கூப்பிவிட்டு சிங்கம் பக்கம் சென்றார். சிங்கமோ “எல்லாருக்கும் வீட்ல இருந்து சாப்பாடு வந்திருக்கு... வயிறார சாப்பிட்டுதான் கிளம்பணும்” என்று அன்பு கட்டளை போட்டு கையை கூப்பிச் சென்றான்.

“ஐய்யனார் போலவே பரந்து மனசு நம்ம சிங்கத்துக்கு” என்று பெரியவர்கள் சிங்கத்தை பெருமையாக பேசினார்கள்.

சிங்கம் ஐய்யனாருக்கு கார் கதவை திறந்து விட்டான். ஐய்யனாரோ காலையிலிருந்த அலைச்சலில் கண்ணயர்ந்து விட்டார்.

வீட்டுக்கு வந்ததுகூட தெரியவில்லை. “ப்பா” என்று சிங்கம் தோளைத் தொட்டதும் எழுந்தவர் “அசதிப்பா” என்று காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

சிங்கமோ அறைக்குள் வர புக் படித்துக்கொண்டிருந்தாள் ரதி.

சிங்கமோ டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போக “ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு?” என்று தலைக்குளித்து காயை வைத்த முடியை கொண்டை போட்டுக்கொண்டே கேட்டாள்.

“வாக்கு பதிவு மெஷின் எல்லாம் சேஃப்பா அனுப்பணும்ல. உங்கப்பன் போல ஆளுங்க ஏதும் கோல்மால் பண்ணாம கண்ணுக்குள்ள எண்ணெய்யை விட்டு கவனிக்க வேண்டி இருந்தது. அப்புறம் இன்னிக்கு நாள் முழுக்க நம்ம கட்சிக்காக வேலை செஞ்ச ஆளுங்களை நன்றி சொல்லி கவனிச்சிட்டு வரதுக்கு நேரம் ஆகிடுச்சு” என்று நிதானமாக அவளுக்கு பதில் கொடுத்தான். ரதி கேட்கும் கேள்விக்கு தான் ஏன் இவ்ளோ நீளமான பதிலை கொடுக்க வேண்டுமென்று அவனுக்கே தெரியவில்லை.

“இன்னும் உனக்கு அங்க நடந்தது ஏதாவது தெரியணுமா என்ன?” என்று அழுத்தி கேட்டவனிடம்.

“அ.அது நான் சும்மா கேட்டேன்” என்று மழுப்பிவிட்டாள்.

அவனோ “உன் அப்பன் இந்த முறையும் தோத்துதான் போவான் சந்தோசப்பட்டுக்கோ” என்று தனது இதழ் வளைப்பு சிரிப்புடன் துண்டை தோளில் போட்டுச் சென்றான்.

“ரொம்ப ஆடாதடா வல்லவனுக்கு வலுக்குபாறை இருக்கும். யானைக்கும் அடி சறுக்கும்... எங்கப்பாவும் ஒருநாள் பதவியில உட்காருவாரு! பாருங்க அப்ப உங்க முகத்தை நான் எப்படி இருக்கும்னு ரசிக்க போறேன்” என்றாள் மனதில் வஞ்சம் கொண்டு.

குளித்து முடித்து வந்ததும் தலையை துவட்டிக்கொண்டு “சாப்பாடு போடு வா“ என்று துண்டை பால்கனியில் போட்டு வந்தான்.

“டயர்டா இருக்குங்க! அத்தையை போடச் சொல்லி சாப்பிடுங்க எனக்கு தூக்கம் வருது” என்று கட்டிலில் படுக்க போனவளிடம்

அப்போ “ஃபர்ஸ்ட் நைட் வேணுமே எனக்கு! இப்பவே டயர்டா இருக்குனு சொல்ற!" என்றான் புருவம் உயர்த்தி.

“என்னது இன்னிக்கேவா! நோ வே என்னால முடியாது” என்று தோளைக்குலுக்கினாள்.

“அப்போ உன் மேல எனக்கு நம்பிக்கை வரலையே! நீ உன் அப்பன் கூட போன் பேசறனா எனக்கு டவுட் வருது நான் உள்ள வரும்போது கூட போன் பேசற சத்தம் கேட்டுச்சே” என்றான் கையிலிருந்த காப்பை கழட்டி வைத்தபடியே.

“என்ன லயன் மாமா என்மேல சந்தேகமா! என் பிரண்ட் கூட தான் போன் பேசினேன்” என்று எழுந்தவள் பனியனுடன் நின்றிருந்த சிங்கத்தின் மார்பில் சாய்ந்து அவனது நெஞ்சில் விரலால் கோடு போட ஆரம்பித்தாள்.

“ம்ம் இப்போ கொஞ்சம் நம்பிக்கை வருதுடி” என்று அவளது இடுப்பை பிடித்து கிள்ளினான்.

“ஆவ் பெயினா இருக்கு கையை எடுங்க!” என்று கூச்சத்தில் நெளிந்தாள்.

“இந்த கிள்ளுக்கே வலிக்குதா அப்போ” என்று அவள் காதில் ரகசியம் பேச “அச்சோ லயன் நீ ரொம்ப மோசம்” என்று அவனது மீசையை பிடித்து திருகினாள்.

“ஏய் மீசையில கையை வைக்காதே கையை எடுடி” என்று அவளது கையை தட்டிவிட்டான்.

“பசிக்குதுனு சொன்னீங்கல்ல வாங்க” என்று அவனது கையை பிடிக்க “ஆமா ரொம்ப பசிக்குது" என்று அவளது சேலையை பிடித்து இழுத்தான்.

“ஏய் லயன் நீ கெட்ட பையன்டா ஃபர்ஸ்ட் வயித்தை பார்ப்போம்” என்று அவனது கையை பிடித்து இழுத்துச் சென்று டைனிங் டேபிளில் உட்கார வைத்தாள்.

பெரியவர்கள் சாப்பிட்டுச் சென்றிருந்தனர். பூரியும் மசாலும் தட்டில் வைத்தாள்.
“நீயே ஊட்டிவிடுடி” என்றான் உதடு கடித்து.

அவளோ பூரியை குருமாவில் நனைத்து அவனுக்கு ஊட்ட அவனோ பூரியை மட்டும் சாப்பிடாமல் அவளது விரலையும் சேர்த்து சாப்பிட்டான்.

“ம்ம் சும்மாயிருங்க லயன் மாமா யாராவது வந்தா தப்பா நினைப்பாங்க” என்று தொட்டா சிணுங்கியாய் சிணுங்கினாள் ரதி.

“இப்ப எல்லாரும் வீட்ல தூங்கியாச்சு. நம்ம ரெண்டு பேரும் இருக்கோம்னு தெரிஞ்சா யாரும் வரமாட்டாங்க ரொமான்ஸ் பண்ண விடுடி!” என்றான் இரகசிய குரலில்.

அவளும் ஊட்டிவிட “நீ சாப்பிட்டியா?” நேசமாய் கேட்டான் சிங்கம்.

“இல்ல பசிக்கல பால் மட்டும் குடிச்சேன் டயட் மெயின்டெய்ன் பண்ணுறேன்” என்றாள் கண்ணைச்சிமிட்டி. தலைக்கு குளித்திருக்க அவளது கூந்தல் காற்றில் அலைஅலையாக பறக்க... முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு கழுத்தை வருடினான்.

அவளோ “இது டைனிங்” என்று கழுத்தை சாய்த்தாள் கண் சொருகி.

அவனோ “எனக்கு போதும் நீயும் சாப்பிடு... பால் மட்டும்தான் குடிச்சிருக்க என்னை தாங்க தெம்பு வேணும்ல” என்றான் ஒற்றைக்கண்ணை அடித்து.

“அதெல்லாம் தாங்குவேன் பெரியதாமரை பூவை சின்ன தண்டுதானே தாங்குது” என்றாள் உதடுகடித்து.

“ம்ம் டாக்டர்ல பேசுவடி” என்று அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானை எடுத்து வாயை துடைத்தவன் அவன் சாப்பிட்ட தட்டில் பூரியை வைத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.

அவளோ மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை வாஷ் பண்ணிவிட்டு அவள் திரும்ப அவளை கைகளில் அள்ளிக்கொண்டான் சிங்கம்.

அவளோ அவன் கனமான நெஞ்சில் தலைசாய்த்து “சும்மா கல்லுமாதிரி இருக்கு” என்று அவனது மார்பை வருடினாள்.

“ம்ம் உடற்பயிற்சி செய்யுறேன்ல” என்று பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்ததும் கதவை காலால் அடித்து மூடியதும் அவளுக்கு குப்பென்று வியர்த்தது.

அவனோ அவளை கட்டிலில் படுக்க வைத்து அவள் பக்கம் படுத்தவன் அவள் காதோரம் “உனக்கு தியரி எல்லாம் தெரியும்தானே நான் எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்ல... டைரக்டா பிராக்டிக்கல்க்கு போயிடலாமா” என்றான் அவளது காதுமடலை நாவால் உரசிக்கொண்டு.

அவளுக்கோ அவன் பேசுவதில் நாணம் வந்து விட திரும்பி படுத்துக்கொண்டாள். மாலையில் கோமதி தோட்டத்தில் பூத்த குண்டுமல்லி சரத்தை ரதிக்கு வைத்துவிட்டிருந்தார். அவன் போட்டிருந்த பனியனை கழட்டி கீழே போட்டவன் அவள் பக்கம் நெருங்கி படுத்து “ம்ம் சும்மா கும்முனு வாசம் ஏறுது எனக்கு” என்று பூவில் வாசம் பிடித்தவன் அவளது வெற்று முதுகில் முத்தம் வைத்தான்.

அவளோ கூச்சத்தில் பாம்பு நெளிவதை போல நெளிந்தாள். அவனோ அவளது இடுப்பில் கைப்போட்டு தன்னோடு இறுக்கினான்.

அவளுக்கோ பேச்சே வரவில்லை வெட்கத்தில் “திரும்பி படு தேவி” என்றான் இரகசியக் குரலில்.

அவளோ “எ.எனக்கு வெட்கமா இருக்கு” என்றாள் காற்றுக்கும் கேட்காதபடி.

"அப்படியா இதோ இப்ப வெட்கம் எல்லாம் போக வைக்குறேன்டி என் அத்தை மகளே” என்று அவளது மறுபுறம் தாவிக்குதித்து அவளை அணைத்துக்கொண்டான்.

அவளோ அவன் முகத்தை பார்க்க முடியாமல் கண்ணை இறுக மூடிக்கொண்டாள். அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து அவளது புருவத்துக்கும் முத்தம் கொடுத்து மூடியிருந்த இமைகளுக்கு முத்தம் கொடுக்க மெதுவாய் பூ விரிவது போல கண் திறந்தாள்.

“நான் மட்டும்தான் முத்தம் கொடுக்கணுமா? இப்போ நீ முத்தம் கொடு” என்று அவள் இதழ் பக்கம் தன் இதழை கொண்டுச் சென்றான்.

“போடா லயன் என்னால முடியாது” அவள் இதழை கடித்தாள்.

அவனோ “ம்ஹீம் நீதான் கொடுக்குற” என்று நாவை ஈரப்படுத்தினான்.

'இவன் ரொம்ப படுத்துறான் என்னை' என்று மனதில் நினைத்தாலும் அவனது ஆண்மையில் மயங்கினாள் மயிலாக.

கண்ணை மூடிக்கொண்டு அவனது இதழில் தன் இதழை பொருத்தி தனக்கு தெரிந்த விதத்தில் முத்தம் கொடுத்தாள். அவனோ அவளது இதழை விட்டு பிரிய அவளோ “எப்படி என் முத்தம்!” என்றாள் புருவம் உயர்த்தி.

“தத்தி! தத்தி! முத்தம் கூட கொடுக்கத்தெரியலை. நீயெல்லாம் என்ன டாக்டர்க்கு படிச்சியோ ஒரு ரொமான்ஸ் படம் கூட பார்க்கலையா நீ! நான் சொல்லிக்கொடுக்குறேன்” என்றவனோ அவளுக்கு முத்தம் கொடுக்க சொல்லிக்கொடுத்தான் ஆசானாய்.

அவளோ குருவை மிஞ்சும் சிஷ்யனாய் மாறி அவன் கற்றுக்கொடுத்த முத்தத்தை அவனுக்கு கொடுத்தாள்.

அவனது உதடுகள் சிரித்துக்கொண்டது. முத்தமிட்டபடியே அவளது முந்தானையில் கைவைக்க அவளோ அவனது கையை பிடித்துக்கொண்டாள்.

உதடுகளிலிருந்து விலகி “ஏன்டி?” என்றான் தாபத்தில்.

“கூ.கூச்சமா கொஞ்சம் பயமா இருக்கு” என்று அவள் வார்த்தைகள் தடுமாற.

அவனோ அவளை விலகி “நான் தொடுறது பிடிக்கலையா? வலிக்க தொட்டேனா! சாரி” என்று திரும்பி படுத்தான்.

“அச்சோ இல்லிங்க! உங்க கை முரடாதான் இருக்கு. ஆனா எனக்கு வலிக்க பண்ணல” என்று அவளாகவே முந்தானையை விலக்கி அவனை அணைத்துக்கொண்டாள். அவனோ இப்போதும் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான் மாயக்கண்ணனாய்.

இருவரது ஆடைகளும் கலைந்து ஆதிவாசியாய் மாறினர். ஆவனின் இதழ்கள் ஆமை போல அவளது பொன் மேனியை ஊர்வலம் செய்தது. அவனது கற்பாறை நெஞ்சில் கருசுருள்முடிகளை விரலால் சுருட்டி அவளது உணர்வுகளை கட்டுப்படுத்தினாள்.

பெண்ணவளின் அங்கவளைவுகளில் பித்தானான் ஆணவன். அவன் சேயாய் மாறினான் இவள் தாயாய் மாறினாள். அவளது நாபியில் முத்தமிட்டு அவளது அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வைத்தான். பாலாறும் தேனாறும் சேர்ந்து கலந்து விட்டது.

ஆணவனின் வேகம் கண்டு சற்று கண்கள் கலங்கித்தான் போனது.

அவளின் கலங்கிய விழிகளுக்கு முத்தமிட்டு பெண்ணவளுக்குள் மூழ்கி முத்தெடுத்து விலக அவளோ பெட் கவரை இறுக பற்றிக்கொண்டாள். அவன் கொடுக்கும் வலிகளை இதழ் கடித்து பொறுத்துக்கொண்டாள். மாயம் செய்து தனக்குள் கொண்டு வந்து விட்டான் சிங்கம்.

கூடல் முடிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை தன் மார்மீது போட்டுக் கொண்டு “ஹார்ஷா நடந்துக்கிட்டேனாடி” என்று அவளது கலைந்த கூந்தலை வருடிக்கொண்டே அவளது காதில் முத்த ஒத்தடம் கொடுத்து கேட்டான்.

அவளோ “இல்ல ஹார்ஷா எதுவும் நடக்கல” என்றாள் அவன் நெஞ்சில் முத்தம் கொடுத்து...

“அப்போ இன்னொரு முறை உனக்குள்ள நான் வரவா?” என்றான் கள்ளனாய். அவளோ “ம்ம் வரலாமே” என்றாள் கண்ணைச் சிமிட்டி. அவன் விடும் வேக அனல் மூச்சுகளும் இவளின் சிணுங்கல்களும் அறையை நிரப்பியது விடியற்காலை வரை. விடியற்காலையில் பறவைகளின் சத்தம் கேட்டு அவனின் தொல்லை தாங்காமல் “லயன் மாமா விடுடா நேரமாச்சு குளிக்கலாம்” என்று அவனை அணைத்துக்கொண்டே அவன் காதில் கிசுகிசுக்க “இப்போ எழும்பணுமாடி இன்னும் கொஞ்ச நேரம் பஞ்சு மெத்தையில படுத்துக்கலாம்” என்றான் கண்ணைச் சிமிட்டி.

“ம்ம் நோ என்னால தாங்க முடியாது போடா” என்று அவன் அசந்த நேரம் எழுந்தவள் போர்வையை சுருட்டிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

சிங்கமோ அவள் போகும் வரை சிரித்திருந்தவன் “ஏய் உன்னோட தில்லாலங்கடி வேலை என்கிட்ட நடக்காதுடி. நீயும் என்கிட்ட உன் அப்பன் போல தோத்து நிற்க போறடி” என்று சிரித்தான்.

பொன்வண்ணனுக்கு கேஸ் இருக்க தூரிகா கேப் பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டாள். கோதையுடன் பேசி அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

“வண்ணா வர நேரம் ஆகும்போல சாப்பிட்டு நீ தூங்குமா” என்று கோதை சொல்ல அவளும் சாப்பிட்டு உறங்கிவிட்டாள்.

பொன்வண்ணனோ 11 மணி வாக்கில் வந்தவனுக்காக சோபாவில் உறங்காமல் காத்திருந்தார் கோதை.

“ம்ம் எத்தனை முறை சொல்லியிருக்கேன் எனக்காக காத்திருக்காதீங்கனு"

"போடா உனக்கு சாப்பாடு போடாம எனக்கு தூக்கம் வராது குளிச்சிட்டு வாடா சாப்பிடலாம்” என்று சமையல்கட்டுக்குச் சென்றார்.

பொன்வண்ணனோ அறைக்குள் நுழைய அவனின் பத்தினியோ பாவாடை சட்டையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு உடை போடுவதில் சர்வ சுதந்திரம் கொடுத்திருந்தான் பொன்வண்ணன். ஆதிபெருமாள் இருக்கும் நேரம் தூரிகா வெளியே வரமாட்டாள். அப்படியே வந்தாலும் மேலே ஷால் போடாமல் இருக்கவும் மாட்டாள். ஆதிபெருமாள் முன்னே உட்காரவும் மாட்டாள். அவர் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் சொல்வாள்.

தூரிகாவை ரசித்து பார்த்தவன் என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டலடி என்று இன்னும் கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.

குளித்து வந்தவன் சாப்பிட்டு மீண்டும் அறைக்குள் வர. அவளது கால் விரல்கள் இன்னும் மெட்டி போடாமல் இருக்க அவன் தான் எப்படியும் தூரிகாவை திருமணம் செய்வோம் அவளுக்காக முதலிரவில் மெட்டியை சர்பிரைசாக அவளது விரலில் மாட்டிவிடுவோம் என்று நினைத்திருந்தான். ஆனால் நடந்த கலாட்டா கல்யாணத்தில் அனைத்தும் மறந்துபோயிருந்தான்.

இப்போது நினைவு வர வாட்ரோப்பிலிருந்து அவன் வாங்கி வைத்த மெட்டியை கையில் எடுத்தவன் அவளது கால் பக்கம் வந்து அமர்ந்து அவளது பாதங்களை மெல்ல தன் மடியில் பூ போல வைத்து அவள் வெண்டை பிஞ்சு விரல்களில் அவன் வாங்கிய முத்து வைத்த மெட்டியை அவளது விரல்களில் போட்டு மெதுவாய் அவளது கால் விரல்களுக்கு முத்தமிட்டான்.

அவளோ திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் “என்ன பண்ணுறீங்க என் காலை பிடிச்சு?” என கோபமாய் கேட்க.

அவனோ “மெட்டி தான் டி போட்டுவிட்டேன் என்னமோ உன்னை ரேப் பண்ண வந்தது போல காளியாய் கத்துற” என்று அவளது பக்கம் போய் உட்கார்ந்து அவளை தன் மடியில் சாய்த்துக்கொண்டான்.

“விடுங்க எனக்கு உங்களை கண்டாலே பிடிக்கலை... எப்போ பாரு கட்டி பிடிக்கிறது முத்தம் கொடுக்கறது" என்று முகத்தை திருப்பினாள்.

அவனோ “ஏன் டி பிடிக்கலை?” என்றான் அவள் கன்னத்தை அழுந்த பற்றி.

“ம்ம் ஏன்னு உங்களுக்குத்தெரியாதா?” என்றாள் அவனது கையை தட்டிவிட்டு.

“இப்போ பிடிக்க வைக்குறேன்” என்று அவள் முகம் நோக்கி குனிந்து இதழில் முத்தமிட்டான் அவள் உயிர் ஆழம் போய்.

அவளோ கைகளை இறுக்கிக்கொண்டாள். அவனோ அவளை மடியிலிருந்து எடுத்து மெத்தையில் படுக்க வைத்து அவள் கண்களை பார்த்தவனோ “என்கூட ஏன் டி வரமாட்டேன்னு சொன்னே! என்னோட உயிர் அங்கேயே போனபோல வலிச்சுச்சு தெரியுமா!” என்றவனோ அவள் மீது கோபத்தில் அவள் போட்டிருந்த டாப்பிற்கு விடுதலை கொடுத்து “ஐ நீட் யு துகா எனக்கு வேணும் எனக்கு வேணும் நீ” என்றவனோ அவளது இதழ் ரேகை அழியும் வண்ணம் முத்தம் கொடுத்தான். வேகமாய் ஆரம்பித்தாலும் அவளிடம் பூ பறிப்பது போலவே நடந்துக் கொண்டான்.

அவளது மென்மைகளில் தன்னை தொலைத்தான். அவளது அங்கம் முழுவதும் முத்த அச்சாரம் போட்டான். அவளோ மகுடிக்கு மயங்கும் பாம்பாக அவனின் கைகளில் அடங்கிப்போனாள். அவளும் அவனில் இந்த நேரம் விரும்பியே தன்னை தாரை வார்த்துக்கொடுத்தாள். அவனது அனல் மூச்சுகளை தாங்கமுடியாமல் அவனது முதுகில் கீறல் போட்டாள். கூடல் முடிந்து இருவரும் ஒரே போர்வைக்குள் கட்டியணைத்து கிடந்தனர். அவனோ "சாரிடி எப்பவும் உன்னை ஹர்ட் பண்ணுறேன்..." என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவளுமே "எப்பவும் உங்க மேல கோபம் இருந்தாலும் நீங்க தொட்டதும் நான் உருகிபோய் என்னை உங்களுக்கு கொடுக்குறேன் பாருங்க என்னை தான் திட்டிக்கணும்..." என்று கண்ணீர்விட்டாள்.

“ஏய் நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ்! இப்பவும் என்னோட உயிரே நீதானே டி துகா! ஏதோ கோபத்துல உன்னை காயப்படுத்துறேன். ப்ளீஸ் எல்லாம் மறந்திடலாம்! இந்த இரவிலிருந்து நீயும் நானும் ஹேப்பி கப்பிள்ஸ்” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

அவளோ "இப்பக்கூட அன்னிக்கு என் கழுத்துல என்னை கேட்காம தாலி கட்டியதுக்கும் எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்ததுக்கும் மன்னிப்பு கேட்கலை... தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட உரிமையா சேர்ந்ததுக்கு சாரி கேட்குறாராம்" என்றவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை.

"அழாதடி பட்டு" என்று அவளது முதுகை வருடிக்கொடுத்தான். அவளோ ஊமையாய் அழுதுக் கொண்டே கண் அயர்ந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 30


ரதியோ குளித்து முடித்து வெளியே வந்ததும் புதிதாய் பூத்த ரோஜா மலராய் மலர்ந்த மனைவியை பார்த்த சிங்கமோ தாடையை தேய்த்தபடி "சும்மா சொல்லக்கூடாதடி நீ ரொம்ப அழகித்தான்" என்று அவளை அணைக்கப்போனான்.

“அய்யே! நீங்க அழுக்கு பையன் நான் குளிச்சிட்டேன்!" என்று அவனுக்கு போக்கு காட்டி தள்ளி நின்றாள்.

“ஏய் நான் அழுக்கு பையனா..! இப்போ உன்னையும் அழுக்கு பொண்ணு ஆக்குறேன் பாரு" என்று அவளை மீண்டும் கட்டிலில் தள்ளி கட்டி அணைத்து "டர்ட்டி கிஸ் கொடுக்குறேன்" என்று அவளது இதழில் கவிபாடி கட்டி புரண்டு காதல் போர் செய்து அவளையும் சேர்த்து குளிக்க தூக்கிச் சென்றான்.

“உடம்பெல்லாம் வலிக்குது டா லயன் மாமா” என்று அவன் கைகளில் சிணுங்கி மீனாய் துள்ளினாள்.

“இதோ ஹீட்டர் போட்டு குளிச்சா உடம்பு வலி போயிடும் அம்மணி” என்றான் அவள் குண்டு கன்னத்தில் முத்தமிட்டபடியே.

“டேய் இது வாஷ்ரூம் இங்க வந்தும் என்னை இம்சை பண்ணாதடா” என்று அவளை கெஞ்சும் நிலைக்கு கொண்டு வந்தான்.

“புருசன் பொண்டாட்டி சேர எந்த இடமா இருந்தா என்ன அம்மணி” அவள் கழுத்தோரம் மீசையால் குறுகுறுக்க வைத்தான்.

“அச்சோ சாமி என்னால இதுக்குமேல முடியாது ஆளைவிடுங்க” என் கண்களால் கெஞ்சியவளை கண்டு கடகடவென சிரித்தவன் "உன்கூட இணைஞ்ச ஒருநாளுக்கே என்னால முடியலைனு சொல்லுற... இன்னும் என்கூட காலம் முழுக்க எப்படி என்னை தாங்குவ" என்று அவளது இறுக்கி அணைத்தான்.

அவளோ 'காலம் முழுக்க இப்படியே என்னை இறுக்கி பிடிச்சா நான் மூச்சடிக்கி மேலோகம் போகவேண்டியதுதான்டா! எங்க காரியம் நடக்கும் வரைதான் இதெல்லாம்' என்று அவனை அணைத்தவாறே முகத்தில் சிரிப்பில்லாமல் இறுக்கமாய் வைத்துக்கொண்டாள்.

அவனோ “அம்மணி என்ன பேச்சை காணோம்! நான் காலம் முழுக்க என்னை தாங்கணும்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாக.

“ம்ம் தாங்குவேன்! தாங்குவேன்!” என்றாள்.

இருவரும் குளித்து வர மணி ஏழு ஆனது. டவலோடு குர்த்தியை தேடினாள். குர்த்தி கைக்கு கிடைக்காமல் போனது. இன்னொரு வாட்ரோப்பில் இருக்குமென்று வாட்ரோப்பை திறக்க வாட்ரோப் பூட்டியிருந்தது.

சிங்கம் குளித்து வந்தவன் “என்ன தேடற அம்மணி?” என்று அவளது கழுத்து வளைவில் முத்த ஒத்தடம் கொடுத்தான்.

“என்னோட குர்த்தி, சல்வார் இந்த வாட்ரோப்ல இல்லையே... பூட்டியிருக்க வாட்ரோப் சாவி கொடுங்களேன் குளிருது” என்று சட்டென்று திரும்பி நின்றாள்.

அவளது கூந்தலிலிருந்த தண்ணீர் அவனது முகத்தில் பட்டு தெறித்தது. அவனுமே தலையை சிலுப்பிக் கொள்ள அவன் ஈர முடியிலிருந்து அவளது முகத்திலும் பட்டது. அவன் தலைமுடியிலிருந்த சிதறிய தண்ணீர் மார்கழி பனித்துளி போல அவளது பட்டு ரோஜா இதழில் ஒட்டியிருந்ததை அவனது இதழ் கொண்டு உறிஞ்சினான். அவளோ தன் மார்பிலிருந்து துண்டை விழாமல் பிடித்துக்கொண்டாள். துண்டு நழுவினால் முதலுக்கே மோசம் இன்னிக்கு முழுவதும் சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக்கொள்ளணும் என்று கவனமாக இருந்தவளோ ஒரு கையால் மார்பில் கையை வைத்து அழுத்தம் கொடுத்தாள்.

அவனோ அவள் சிரமப்படுகிறாளோவென்று அவளது இதழிலிருந்து பிரிந்தவனோ அவளது இதழை விரல் கொண்டு பிடித்தவன் “இங்க என்னடி வச்சிருக்க எப்போவும் இனிச்சிக்கிட்டே இருக்கு. நீ இனிமே சேலையே கட்டு அப்போதான் எனக்கு கிக்கா இருக்கும். இந்த குர்த்தியெல்லாம் வேணாம். எனக்கு எதுவுமே தெரியலை” என்று அவன் கையை தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தான் கள்ளச் சிரிப்புடன்.

அவளுக்கு அவன் சொல்வது ஒரு நொடி புரியாமல் இருக்க அவன் கள்ளச் சிரிப்பு கண்டு “நீ பண்றது சரியில்லை காஜி லயன்” என்று அவனது மார்பில் குத்தினாள்.

சேலையை கட்டிக் கொள்வதற்குள் கணவனின் சில்மிஷங்களை தாண்டி வெளியே வருவதற்கு மணி ஏழு ஆனது. கோமதி சமையலை முடித்திருந்தார்.

நாச்சியோ கடுங்காபியை வீரய்யனுக்கு கொண்டு வந்து கொடுத்தவர் “மணி ஏழு ஆச்சு இன்னும் சிங்கம் அறைக்கதவு திறக்கல. நமக்கு கொள்ளு பேரன் சீக்கிரம் வரப்போறான்ங்க” என்று வாயெல்லாம் சிரிப்பாக வீரய்யன் பக்கத்தில் உட்கார்ந்தார்.

“கொள்ளு பேத்தி வந்தா ஏத்துக்க மாட்டியாக்கும் நாச்சி” என்று அவரது தோளில் இடித்தார்.

“எனக்கு ரெட்டை பிள்ளையா வந்தா ரெட்டை சந்தோசம் தான்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் கதவு திறந்து வெளியே வந்த ரதியை தலைமுதல் கால்வரை ஆராய்ந்தார் நாச்சி.

“என்னடி உன் பேரனும் வரானா? அவன் முகத்துல ஜொலிப்பு தெரியுதா?” என்றார் மனைவியின் காதருகே குனிந்து குசு குசுவென.

‘பெரிசு ரெண்டும் எப்பவும் ரொமான்ஸ்’ என்று மனதில் கறுவினாலும் உதட்டில் சிரிப்போடு முகத்தில் வெட்கக் களையோடு மஞ்சள் நிற சில்க்காட்டனில் நாச்சியின் அருகே வந்தவள் “அம்மாச்சி இன்னிக்கு ரெண்டு பேரும் என்னோட ஹாஸ்பிட்டல் வர்றீங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஜெனரல் செக்கப் பண்ணிடலாம்” என்றாள் புன்னகையோடு ஆர்டர் போடுவது போல.

“எங்களுக்கு என்ன ராசாத்தி நாங்க நல்லாத்தான் இருக்கோம். நீ அடுத்த வருசம் ஒரு கொள்ளு பேரனையோ பேத்தியோ பெத்துபோடு எப்படி பார்த்துக்குறேன் பாரு” என சிலாகித்தார் நாச்சி.

“பேரன்தானே பெத்துக்கொடுக்குறேன்” என்றாள் வெட்கப்பட்டே அவள் கன்னம் செவ்வானமாய் சிவந்தது.

ரதியின் கன்னம் தாங்கி “என்ற பேரன் சிங்கம் எங்க ரெண்டு பேரையும் மாசம் தவறாம நீ வேலை பார்க்குறியே அந்த ஹாஸ்பிட்டலுக்குதான் செக்கப் கூட்டிட்டு போயிடுவான்” என்றார் சந்தோசப் பூரிப்புடன்.

“ஓ எனக்கு தெரியாதே! அம்மாச்சி இனிமே நானே உங்களுக்கு எல்லா செக்கப்பும் பண்ணிடறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

“நீ பிரசவ டாக்டர் தானே எப்படி அப்பத்தாவுக்கு வைத்தியம் பார்ப்ப?” என்று சட்டையை முழங்கை மடித்து வந்த சிங்கமோ புருவம் உயர்த்தினான். தனது ஆலையில் வேலை செய்த நபருக்கு அடிப்பட்டு ஹாஸ்பிட்டல் போயிருந்த சமயம் ரதி நான் பிரசவ டாக்டர் வைத்தியம் பார்க்க முடியாது என்று சொன்னது நினைவில் வைத்து வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

ரதியோ சமயம் பார்த்து என்னை வைச்சு செய்யுறான் கருவாயன் என்று மனதில் பொங்கினாலும் "நீங்க எந்த சம்பவத்தை வைச்சு இக்கு வைச்சு பேசுறீங்கனு தெரியுது மாமா. அந்த ஆளும் நம்ம வீட்டு ஆளும் ஒண்ணா!! ஆனா நம்ம தாத்தா அம்மாச்சிக்கு நான் தான் வைத்தியம் பார்ப்பேன். நீங்க தடை போடாதீங்க" என்றாள் இதழை சுளித்து.

சிங்கமோ “சரி நீயே அப்பத்தா தாத்தா ஹெல்த் பார்த்துக்கோ. மெடிசின் மட்டும் நான் வாங்கிட்டு வரேன்” என்றவனோ அவளது இதழை குறுகுறுவென பார்த்தான் போதையாக.

அவளோ “தாத்தா அம்மாச்சி இருக்காங்க” என்று சைகை காண்பித்தாள்.

வீரய்யனோ “பேராண்டி நாங்க வேணா எழுந்து போயிடட்டுமா” என்றார் நமட்டுச்சிரிப்புடன்.

“மக்கும்” என்று தொண்டையை செருமியவனோ “ரதி காபி கொண்டு வா” என்றான் சமாளிப்பாக.

அவளும் “இதோ கொண்டு வரேன் மாமா” என்று அன்யோன்ய தம்பதி போல பவ்யமாய் சமையல்கட்டுக்குள் சென்றாள்.

கோமதி சமையலை முடித்து சிங்கில் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். இவங்க என்ன மிஷினா எப்படித்தான் எல்லா வேலையும் இழுத்துபோட்டு செய்யுறாங்களோ என்று தலையை குலுக்கிக்கொண்டு “அத்தை நான் பாத்திரம் கழுவுறேன் உங்க புள்ள காபி கேட்டாரு கொண்டு போங்க” என்று கோமதி கையிலிருந்த பாத்திரத்தை வாங்க பார்த்தாள்.
“உன் கழுத்துல தாலி கட்டி கூட்டிவந்தது என் மகனை கவனிக்கத்தான் பாத்திரம் கழுவுற வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன் மருமகளே!” என்றார் சிரித்தபடி.

'எல்லாம் பாச வேலியை போட்டு என்னை கவுக்கப்பார்க்குறாங்க. இந்த குடும்பத்தை பிரிக்க நான் ரொம்ப மெனக்கெடணும் போலயே' என்று சலித்துக்கொண்டாலும் காபியை கப்பில் ஊற்றி எடுத்துக்கொண்டுச் சென்றாள்.

வீரய்யனும் நாச்சியும் ஐய்யனாரும் அலர்விழியை பார்க்கச் சென்றிருந்தனர். அன்பரசியோ நாச்சியிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லைதான். ஐய்யனாரை பார்த்த அலர்விழியோ “வாங்க மாமா” என்றதோடு அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

“இப்படிதா அண்ணா ஏனோதானோனு பேசுறா... சரியா சாப்பிட மாட்டேன்கிறா! எப்போவும் அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்குறா! என்னால என் புள்ளைய கண்ணு பார்க்கமுடியலை” என்று முந்தானையில் வழிந்த கண்ணீரை துடைத்தார்.

கண்ணனோ “அன்பு அலர்விழி போக்குல விடலாம்... நம்ம புள்ள மறுஜென்மம் எடுத்து வந்திருக்கா. அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுமா!” என்றார் சிறு கோபத்துடன்.

ஐய்யனாரோ “மாப்பிள்ளை அன்புக்கு புள்ளைக்கு கல்யாணம் நடக்கலைனு ஆதங்கத்துல பேசுறா... விடுங்க சந்தர்ப்பம் சூழ்நிலை நமக்கு எதிரா அமைச்சிருச்சு. நல்ல பையனா நான் பார்க்குறேன்” என்றார் பெரும்மூச்சுவிட்டு.

ஹாலில் பேசுவது அலர்விழி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
கோமதியோ மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த மகனிடம் “அலர்விழி யார்கிட்டயும் முகம் கொடுத்து பேசமாட்டேன்கிறாளாம். சரியா சாப்பிடறதும் இல்லையாம் உங்க அப்பத்தா என்கிட்ட சொல்லி அழுதாங்க தம்பி. நீ என்னனு ஒரு எட்டு போய் அலர்விழிகிட்ட பேசிட்டு வந்திடு! நீ சொன்னா மட்டும்தான் அவ கல்யாணத்துக்கு சம்மதிப்பா” என்றார் கவலையுடன்.

“சரிங்கம்மா நான் பேசுறேன்” என்றவனோ சாப்பிட்டு முடித்துச் சென்றது அலர்விழியை பார்க்கத்தான். அவனோ தன்னை பார்த்தால் அலர்விழியின் மனசு சங்கடப்படும் என்றே அவளை பார்க்க போவதை தவிர்த்திருந்தான்.

பைக்கை நிறுத்தி அலர்விழி வீட்டுக்குள் சென்றான். அன்பரசியோ “இப்படியே சாப்பிடாம இருந்தா என்னடி பண்ணறது ஏற்கனவே மருந்து குடிச்சு வயிறெல்லாம் புண்ணா கிடக்கு. இப்போ சாப்பிடாம இருந்தா வயிறும் புண்ணாகி அல்சர் வந்துடும்! கொஞ்சமா சாப்பிடு கண்ணு...” என்று அலர்விழியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

அலர்விழியோ “ம்மா எனக்கு பசிக்கல. ப்ளீஸ் எழுந்து போ” என்று அவரிடம் எரிந்து விழுந்துக் கொண்டிருந்தாள்.

“க்கும்” என்று தொண்டையை செருமினான் சிங்கம்.

அலர்விழியோ மெத்தையிலிருந்து எழுந்து நின்று “வாங்க மாமா” என்றாள் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்.

“அத்தை சாப்பாட்டை என்கிட்ட கொடுங்க” என்றதும் அன்பரசி தட்டை சிங்கத்திடம் கொடுத்து “இவளை சாப்பிட வைக்க நான் தினமும் போராடுறேன் தம்பி... உங்க மாமா இருந்தா மட்டும் சாப்பிடுறா... அவர் பொழப்பை பார்க்காம இவ பின்னாடியே இருக்க முடியுமா என்ன? இப்ப என்கிட்ட சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக்குறா யாருக்கு என்ன பாவம் செய்தோம் என் பொண்ணு இந்த நிலைமையில இருக்கா ” என்று கண்ணை கசக்கினார்.

“நீங்க அழுகாம சோபாவுல உட்காருங்க அத்தை" என்றவனோ "அலர்விழி இங்க உட்காரு" என்று அங்கிருந்த நாற்காலியை காட்ட அவளோ சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை போல நாற்காலியில் உட்கார்ந்தாள்.

சிங்கமோ “இந்த சாப்பாட்டை சாப்பிடணும்” என்று மிரட்டலாக கண்ணை உருட்டினான்.

அவளோ தட்டை வாங்கி ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்க அன்பரசியோ “என் பொண்ணு இப்படி சாப்பிட்டு நாள் ஆச்சு இன்னிக்கு உன் தயவால என் புள்ள வயிறார சாப்பிட்டிருக்கா! ஆனா எங்களுக்குத்தான் உன்னை மருமகனா கொண்டு அதிர்ஷ்டம் இல்லாம போச்சே” என அவர் கண் கலங்கினார்.

“அத்தை நடந்ததை பேசி பிரயோசனம் இல்ல. நீங்க போய் குடிக்க தண்ணி கொண்டு வாங்க” என்றான் அதட்டலாகவே.

அவரும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு மகளை பார்த்துக்கொண்டேச் சென்றார்.

அவனோ அவள் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்தவன் “ஏன் அலரு சாப்பிடாம அடம்பிடிக்குற. சிட்டாக ஓடி பறக்குற பிள்ளை இப்படி முடங்கிக்கிடந்தா பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்!” என்றான் வருத்தமான குரலில் அவள் அவனை ஒரு பார்வை தான் பார்த்தாள்.

“எனக்கு புரியுதுமா உன் மனசை உடனே மாத்திக்க முடியாதுதான். ஆனா பிராக்டிக்கலா திங் பண்ணு... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உனக்கு கல்யாணம் ஆகலைனு எனக்கும் ரொம்ப வருத்தம்மா... உனக்கு கல்யாணம் ஆனா தான் என் வாழ்க்கையையும் ஆரம்பிக்க முடியும்" என்று அவள் மனதை மாற்ற முதல் முறை பொய் பேசினான்.

தன் வாழ்க்கை எங்கே எந்த இடத்தில் விரிசல் வரும் என்று அவனுக்கே தெரியாது. இப்போதை அலர்விழியின் வாழ்க்கையில் வசந்தம் வரவைப்பதே அவனது குறிக்கோளாக வைத்து அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.

“நீங்க சந்தோசமா இருக்கணும் மாமா” என்றாள் கண்ணீரை அடக்கிக்கொண்டு.

“நான் சந்தோசமா இருக்கணும்னுனா நீ கல்யாணம் பண்ணிக்கணும். நான் மாப்பிள்ளை கூட பார்த்திட்டேன் நீ சரினு சொன்னா உடனே கல்யாணம்தான்” அவளிடம் நாளைக் கடத்தினால் அவள் மனதை மாற்றிக்கொண்டே இருப்பாளென்று அதிரடியாக முடிவு எடுத்து பேசினான்.

“என்ன மாமா எல்லாரும் சேர்ந்து எனக்கு கல்யாணம் பண்ணி துரத்தி விடறதுலேயே குறியா இருக்கீங்க. என் மனசு யாருக்கும் புரியலையா?” முகம் பொத்தி குலுங்கி அழுதாள் அலர்விழி.

“உன் மனசு இன்னும் காயம் ஆற உன்னை புரிஞ்சுக்கபோற ஒருத்தனை தான் நான் தேர்ந்தெடுத்து வைச்சிருக்கேன் அலர்விழி.

என்னாலயோ இல்ல அத்தை மாமாவால உன்கிட்ட ஓரளவுதான் நெருங்க முடியும். உன் கழுத்துல தாலி கட்டப்போறவன்தான் உன் ஆழ்மனசையும் படிக்க முடியும். அப்படியொருத்தனை நான் கண்டுபிடிச்சிட்டேன் நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வருவாங்க நீ சரினு சொல்லணும். இந்த மாமாவோட அன்புக்கட்டளை சரினு சொல்லுமா! இந்த மாமாவுக்காக கல்யாணம் பண்ணிக்கோ!! எனக்கு ரொம்ப கில்டியா இருக்கும். ஊருக்குள்ள அத்தை பொண்ணை தவிக்க விட்டு இவன் மட்டும் கல்யாணம் பண்ணி வாழுறான்னு எனக்கு கெட்ட பெயர் வரணுமா சொல்லு” என்றான் அதட்டல் போடாமல் கனிவான குரலில் அவளின் மூளையை சலவை செய்துக் கொண்டிருந்தான்
அவளோ “உனக்காக நான் கல்யாணம் பண்ணிக்குறேன் மாமா! கல்யாணம் நின்னு போன பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க மாமா” என்றாள் விரக்தியாக கண்ணீருடன்.

“இருக்காங்க அலர்விழி நாளைக்கு காலையில வருவாங்க பார்த்து தெரிஞ்சுக்கோ” என்றான் ஆதுரமான புன்னகையுடன்.

வெளியே வந்த சிங்கத்தை பார்த்த அன்பரசியோ “சிங்கம் நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன்னு தெரியலைப்பா... இனி என் பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பானு கவலையில எனக்கு தினம் தினம் ஒரு பொட்டு தூக்கம் வரலைப்பா! இப்போ அவ கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி என் நெஞ்சுல பாலை வார்க்க வச்சிட்டா.. யாருப்பா மாப்பிள்ளை?” என்றார் கண்ணீரை துடைத்து கொண்டு.

“மாமா உங்ககிட்ட விவரம் சொல்லுவாரு நாளைக்கு நம்ம வீட்ல விஷேசம் அத்தை! நான் வரேன்” என்று அன்பரசியின் நெஞ்சில் இருந்த நெருஞ்சி முள்ளை அகற்றிச் சென்றான்.

சிங்கம் சென்றது பொன்வண்ணன் ரதி வேலை செய்யும் ஹாஸ்பிட்டலுக்குத்தான். ஆனால் கௌதமை பார்க்க போயிருந்தான்.

“கௌதம் டாக்டரை பார்க்கணும்” என்றான் அவனும் டோக்கன் வாங்கியே அமர்ந்திருந்தான். அவன் முறை வந்ததும் உள்ளேச் சென்ற சிங்கத்தை பார்த்து புருவம் சுருக்கிய கௌதமோ “வாங்க அண்ணா உங்க உடம்புக்கு ஏதும் ப்ராப்ளமா? அலர்விழி எப்படி இருக்காங்க?” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியலை! எங்க வீட்டு பொண்ணு அலர்விழியை உங்களுக்கு பிடிச்சிருக்கா! அவளுக்கு நீங்க பொருந்தி வருவீங்கனு என் மனசுக்கு பட்டுச்சு!” என்றான் பட்டாசு வெடிப்பது போல பட்டென்று கேட்டுவிட்டான்.

“ம்க்கும்” என்று தொண்டையை செருமிய கௌதமோ “எனக்குனு யாரும் இல்லைங்க நான் ஆஸ்ரமத்துல இருந்தேன். எனக்கு பிரண்ட்ஸ் பொன்வண்ணனும் ரதியும்தான்... மீனாட்சி அம்மா எனக்கு படிக்க ஹெல்ப் பண்ணினாங்க! இப்போ உங்க வீட்டுப்பொண்ணை எனக்கு கொடுக்க சம்மதமா?” என்றான் கௌதம்.

“என்னை கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன சொல்லி கூப்பிட்டீங்க கௌதம்?” என்றான் சிங்கம்.

“அண்ணானு கூப்பிட்டேன்” என்றான் தயங்கி படியே.

சிங்கமோ எழுந்து நின்று “அப்போ இனிமே என் குடும்பத்துல நீயும் ஒருத்தன் என் தம்பியா இன்னிலேர்ந்து தத்து எடுத்துக்குறேன்... நம்ம அத்தை பொண்ணு அலர்விழியை நீ கல்யாணம் பண்ணிக்கோடா கௌதம்” என்றான் உரிமையாக மீசையை தடவியபடி.

“நான் அலர்விழியை கல்யாணம் பண்ணிக்குறேன் அண்ணா” என்று சீட்டிலிருந்து எழுந்து சிங்கத்தை அணைத்துக்கொண்டான்.

“இன்னிக்கு நைட் நம்ம வீட்டுக்கு வந்து தங்கிடு காலையில பொண்ணு பார்க்க போறோம்!” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“வந்திடுறேன் அண்ணா! எனக்கு தாத்தா, பாட்டி, தம்பி, அம்மா, அப்பானு பெரிய உறவு கிடைக்க வச்சிட்டீங்க” என்றவனுக்கு கண்ணில் கண்ணீர் ததும்பியது.

“நான் இந்தியா வரக்காரணமே உங்க வொய்ப் ரதிதான். அவளுக்கு நான் பெஸ்ட் பிரண்ட் அண்ணா! அவளுக்கு நான் முதல் நன்றியை சொல்லணும்” என்றான் சிரிப்புடனே.

“உன் பிரண்ட் எல்லாம் ஹாஸ்பிட்டலோட... வீட்டுக்கு வந்ததும் ரதியை மதனினு மரியாதை கொடுத்து கூப்பிடணும்” என்றான் சிங்கம்.

“சரிங்கண்ணா உங்களை பார்த்ததும் நீங்க கரடு முரடா தெரிஞ்சீங்க! ஆனா நீங்க சோ ஸ்வீட்” என்று சிங்கத்தை மீண்டும் அணைத்துக்கொண்டான்.

ரதியோ கௌதமை பார்க்க வந்தவள் சிங்கத்தை கட்டிக்கொண்ட நண்பனை கண்டு தான் காண்பது கனவா நனவா என்று அவளது கையை கிள்ளிப்பார்த்தாள்.

“இது கனவு இல்ல நிஜம்தான் ரதி” என்ற கௌதமோ சிங்கத்தை ஓரக்கண்ணால் பார்த்து “ரதி மதினி” என்றவனுக்கு வெட்கம் வேறு வந்துவிட்டது. இதுவரை அவனுக்கு எந்த உறவும் கிடையாது. புதிதாய் தனக்கான உறவுகள் கிடைத்ததும் கல்யாணத்துக்கும் சரியென்று சொன்னவன் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தான்.

“ரதி அலர்விழியை கௌதம்க்கு மேரேஜ் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டேன். கௌதமும் அலர்விழியை மேரேஜ் பண்ண சம்மதம் சொல்லிட்டாரு... நாளைக்கு பொண்ணுபார்க்க போறோம் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம். எனக்கு நிறைய வேலையிருக்கு” என்று அவசரமாக கிளம்பிவிட்டான் சிங்கம்.

ரதியோ “என்னடா நடக்குது?” என்றாள் கௌதமின் தோளை தொட்டு.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
“என் அண்ணா சிங்கம் அலர்விழியை கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு நானும் சரினுட்டேன்” என்றான் குறும்புச் சிரிப்புடன்.

“அலர்விழிக்கு வாய் அதிகம்டா.. உன்னால ஹேண்டில் பண்ண முடியுமா? அந்த பொண்ணு அதிகம் படிக்கலை.. நாளைக்கு புரிதல் இல்லாம சண்டை வந்து அலர்விழி கண்ணுல தண்ணி வந்துச்சுனா.. இப்போ கட்டிபிடிச்சு சிரிச்சிட்டு போறாரே என் புருசன் சிங்கம் உன் கழுத்துல கத்தி வச்சு மிரட்டுவாரு. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு” என்றாள் ரதி. கௌதம் அலர்விழியை கல்யாணம் செய்வது அவளுக்கு பிடிக்கவில்லை.

“சிங்கம் அண்ணா சொன்னதால மட்டும் அலர்விழியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லலை. எனக்கு அலர்விழியை பிடிச்சு இருக்கு. அவ இங்க இருந்த நாட்கள்ல அவள் மேல எனக்கு காதல் வந்துருச்சு” என்று கண்ணைச் சிமிட்டி வெட்கப்பட்டு சிரித்தான்.

“என்னமோ பண்ணு நான் சொல்றதை சொல்லிட்டேன்” என்று அவள் டென்ஷனாக சொல்ல... பொன்வண்ணனும் கௌதம் அறைக்கு வந்தவன் “என்ன ரதி டென்ஷனா பேசுற!! என்னாச்சு உன் ப்ரண்ட்டுக்கு” என்றான் கௌதமிடம்.

“அலர்விழியை என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமானு கேட்டாரு சிங்கம் அண்ணா! நானும் சரினு சொல்லிட்டேன்டா!” என்றதும் தாவி அணைத்த பொன்வண்ணன் “டேய் நானே அலர்விழியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கலாம்னு இருந்தேன் சிங்கம் முந்திக்கிட்டாரு! என் தங்கச்சி நல்ல பொண்ணுடா கல்யாணம் பண்ணிக்கோ” என்றான் ஆத்மார்த்தமாக.

“இன்னொரு விசயம் சிங்கம் அண்ணா என்னை தம்பியா தத்து எடுத்துக்கிட்டாங்க” என்றதும் "என்னது!" என்றான் அதிர்ச்சியில் பொன்வண்ணன்.

“டேய் இன்னிக்கு நைட்டே என்னை அண்ணா வீட்டுக்கு வரச்சொல்லிட்டாரு” என்றதும் “டேய் சிங்கத்துக்கு என்னை பிடிக்காதுடா நீயும் என்கூட பேசாம இருந்துடுவியா” என்றான் பொன்வண்ணன் கவலையாக.

“அண்ணா சொன்னா என்ன வேணாலும் செய்வேன்” உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.

“டேய் பல வருச நட்பு விட்டு புதுசா முளைச்ச அண்ணன் உறவு உனக்கு உசத்தியா போச்சா!” என்றான் போலிக்கோவத்துடன்.

“சும்மாடா அண்ணா என்னை உன்கூட பேச வேண்டாம்னு சொல்லமாட்டாரு எனக்குனு புதிய சொந்தம் கிடைச்சிருக்கீங்கடா” பொன்வண்ணனை கட்டி அணைத்துக் கொண்டான் கௌதம்.

ஐய்யனாரும் கண்ணனும் கோவிலில் இருப்பதை கேள்விப்பட்ட சிங்கம்
கோவிலுக்குச் சென்றான்.

“மாமா நான் அலர்விழிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் மாப்பிள்ளை நம்ம அலர்விழி உயிரை காப்பாத்திய டாக்டர் கௌதம் தான் மாப்பிள்ளை” என்றவனோ பீடிகை போடாமல் தான் ஹாஸ்பிடல் சென்று கௌதமிடம் பேசியதையும் கூறி விட்டு "உங்க சம்மதம் எனக்கு வேணும் மாமா" என்றான் சிங்கம் பெரும்மூச்சு விட்டு.

“மாப்பிள்ளை உங்க மனசுக்கு நீங்க நல்லாயிருக்கணும் என் பொண்ணு வாழ்க்கை மீண்டும் புதுச்செடி போல துளிர்விடணும்னு நான் கோவிலுக்கு வந்தேன். அப்பாவும் டாக்டர் கௌதம் பையனை மாப்பிள்ளையாக்கினா நல்லாயிருக்கும்னு பேசிக்கிட்டிருந்தாரு... நீ கல்யாண பேச்சையே முடிச்சிட்டு வந்திருக்க” என்று சிங்கத்தை அணைத்துக்கொண்டார்.

பொன்வண்ணன் சாப்பிடும் போது கோதையிடம் அலர்விழி கல்யாணம் பற்றி சொல்ல கோதையோ "நாளைக்கு நாமளும் போவோமா வண்ணா?” என்றார் அவராக

பொன்வண்ணனோ “அலையா வீட்டுக்கு நாம ஏன் போகணும் மா?” என்றான் கோபத்தில்.

தூரிகாவோ எதுவும் பேசவில்லை சாப்பிட்டு எழுந்துச் சென்றுவிட்டாள்.

காலையில் வீரய்யனும் நாச்சியும் சீர் கொண்டு வந்த போது எனக்கு சீர் வேண்டாம் என்று திருப்பி அனுப்பி விட்டான் பொன்வண்ணன்.

காலையிலிருந்து தூரிகா பொன்வண்ணனிடம் பேசாமல் விரதம் இருக்கிறாள்.

அடுத்த நாள் காலை சிங்கம் கெளதமை அழைத்துக் கொண்டு குடும்பமாக அலர்விழி வீட்டுக்கு பொண்ணு கேட்டுச் சென்றான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 31


வீரய்யனும் ஐய்யனாரும் நாச்சியும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க சிங்கம் பக்கத்தில் கௌதம் அமர்ந்திருந்தவன் வீட்டை சுற்றி பார்வையால் அளந்தான். அலர்விழி அறையில் சிரிப்பு சத்தம் கேட்டு. அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

கௌதம் பக்கத்தில் நின்றிருந்த குமரனோ கௌதம் காதுக்கு பக்கம் குனிந்து “அண்ணா நீங்க என் ரூட்டை கிளியர் செய்துட்டீங்க. அலர்விழி மதினி வருவாங்க சும்மா அவங்க அறையை பார்க்காதீங்க! எல்லா பெரியவங்களும் உங்களைத்தான் பார்த்திட்டிருக்காங்க!" என்றான் கிசுகிசுப்பாக.

“மாப்பிள்ளைனா பொண்ணு அறையை பார்க்கத்தான் செய்வாங்கடா பார்க்கட்டும். ஆமா நான் அலர்விழி அறையை பார்க்க ஒரு அர்த்தம் இருக்கு! நீ ஏன் அலர்விழியை அறையை பார்க்குறனு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் புருவம் உயர்த்தி.

“அ.அது நானும் தாரகையும் லவ் பண்ணுறோம். பி.ஜி முடிஞ்சு ஒரு வருசத்துல எங்க கல்யாணம்” என்றவனோ வெட்கத்தில் தலையை கோதிக்கொண்டான்.

“என்னடா வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்க... போய் சமையல் நடக்குற இடத்துல வேலை சரியா நடக்குதானு பாரு" என்ற சிங்கத்தின் அதட்டல் குரலில் "இதோ போறேன்ங்க அண்ணா" என்றவனோ "கௌதம் அண்ணா நைட் பேசலாம்" என்று சமையல்கட்டுக்கு ஓடிவிட்டான்.

நேற்று இரவு கௌதம் சிங்கம் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அதிகம் பேசியது குமரன் தான்... கௌதமிற்கு குமரனை பிடித்து விட்டது. இருவரும் ஒரே இரவில் நண்பர்கள் போல பேசி பழகிக் கொண்டனர்.

கௌதமோ ‘சிங்கம் அண்ணா விரல் அசைத்தாலே எல்லாம் நடக்குதுப்பா!’ ஆச்சரியமாக பார்த்தான் துரைசிங்கத்தை.

கோமதியோ அன்பரசிக்கு உதவியாக சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டார்.

ரதியோ எங்க வீட்டை விட சின்னவீடு தான் என்று சலித்துக்கொண்டே... சிங்கம் வாங்கி வந்திருந்த பூ பழம் பட்டுப்புடவை நகை வைக்க தாம்பூல பையை சமுக்காளத்தில் வைத்து தாம்பூலத்தட்டில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.

வைர நெக்லஸ்சை நகைப்பெட்டியை தாம்பூலத்தில் திறந்து வைத்தவள் ‘எனக்கெல்லாம் இதுபோல ஒரு நகைகூட வாங்கிக்கொடுக்கல தாலிக்கொடி மட்டும் 11 பவுன்னு பெருமைக்கு வாங்கி போட்டுவிட்டாங்க... இதுபோல எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கிறேன் பாரு என் மாமனாருக்கிட்ட’ என்று நினைத்தபடியே வாங்கி வந்த பொருட்களையெல்லாம் தாம்பூலத்தட்டில் அடுக்கி வைத்தாள்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க சிங்கமோ ரதியின் செயல்களை கூர்பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். மற்றவர்கள் பார்வைக்கு மனைவியை சைட் அடித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியும். ரதியோ தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்று தோண நிமிர்ந்து பார்த்தாள். சிங்கமோ அவளை பார்த்து கண்ணைச்சிமிட்டினான்.

அவளோ ‘எல்லாம் இருக்காங்க’ என்று சபையை சுற்றிக்காண்பித்தாள். அவனோ சிரித்துக்கொண்டே மீண்டும் கண்ணைச்சிமிட்டி அவளது இதழ்களை பார்வையை செலுத்தினான். இங்க வந்தும் ரொமான்ஸ் பண்ணுறான் பாரு என்று எழுந்தவள் சமையல்கட்டுக்கு சென்றாள்.

கோமதியும் அன்பரசியும் பேசிக்கொண்டிருந்தனர். “சித்தி காபி போட்டு வச்சிட்டீங்களா! ஸ்நாக்ஸ் ப்ளேட்ல போட்டு வைக்கவா?” என்று சொன்னதோடு இல்லாமல் மிக்சர், முறுக்கு பாக்கெட்டிலிருந்து போட ஆரம்பித்தாள். பம்பரமாக சுழன்று வேலை செய்தாள்.

அன்பரசிக்கு ரதியை பிடிக்கவில்லையென்றாலும் சிங்கத்திற்காக அவளை கடிந்து பேசாமல் தன்மையாகவே நடந்துக் கொண்டார்.

கோமதியோ “ரதி வீட்டுக்கு முதல் நாள் வீட்ல உள்ளவங்களை மரியாதை குறைவா எடுத்தெறிச்சு பேசிக்கிட்டு இருந்துச்சு... இப்போ அப்படியே தலைகீழா மாறி ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ளார சமையல்கட்டுக்குள் எனக்கு உதவி செய்யுறா! அடுத்த நாள் நீங்க உட்காருங்க அத்தை நான் சமையல் வேலை செய்யுறேன்னு என்னை ஒரு வேலை செய்ய விடறதுல இல்ல!! சிங்கத்துக்கு அம்மியில அரைச்சு வச்சாத்தான் சாப்பிட பிடிக்கும்னு அவளே அம்மியில மசாலா அரைக்குறா! சிங்கம் இந்த பொண்ணை பத்து நாளுல நம்ம குடும்பத்துக்கு ஏத்தபடி மாத்திட்டான் அன்பு" என்றான் மனம் நெகிழ்ந்து.

அன்பரசியோ “சிங்கம் போல மகனை பெத்ததுக்கு நீ புண்ணியம் செய்திருக்கணும் கோமதி... நம்ம அலர்விழி மனசை பத்து நிமிசம் பேசி மாத்திட்டானே! சிங்கம் குடும்பம் குட்டினு சந்தோசமா வாழணும்” என்று மருமகனை மானசீகமாக ஆசிர்வாதம் செய்தார்.

“என்னை அத்தை மசமசனு பேசிட்டு இருக்கீங்க பொண்ணை அழைச்சிட்டு வரலாம் வாங்க” என்று கோமதியின் கையை பிடித்துக்கொண்டு அலர்விழியின் அறைக்குச் சென்றாள். தனியாக அலர்விழியை பார்க்க போனாள் அலர்விழி ரதியை பார்வையால் பஸ்பம் ஆகிவிடுவாளோ என்ற அச்சம் ரதிக்கு வந்துவிட்டது.

அன்பரசிக்கு ரதிமேல் பிரியமே வந்துவிட்டது. அந்த அளவிற்கு அங்கே இருப்பவர்களை நம்ப வைக்க நடித்துக்கொண்டிருந்தாள்.

அலர்விழிக்கு மூச்சே விட முடியவில்லை. மனதில் மாமனை நினைத்திருந்து அவன் இன்னொருத்தியின் கழுத்தில் தாலி கட்டியபிறகு தன் காதல் கொண்ட மனதை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கும் நேரம் அவள் குடும்பமும் இன்னொருவனை கல்யாணம் பண்ணிக்க சொல்ல சில நாள் முன்பு வரை அவன் மனதில் நிறைந்திருந்தவன் நீ எனக்காக கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொல்லும் அவள் நிலை தண்ணீரில் தத்தளிக்கும் ஓட்டையான படகு போல தத்தளித்துக்கொண்டிருந்தது.

தாரகை அலர்விழிக்கு பட்டுப் புடவை கட்டிவிட்டு கீரிம்மை கையில் எடுக்க “எனக்கு பவுடர் போதும்டி கண்ணுக்கு மை மட்டும் போதும்! கொஞ்சமா பூ வைச்சுக்குறேன்” என்று சிம்பிளாக அலங்காரம் செய்துக் கொண்டாள்.

ரதியோ அலர்விழி அறைக்குள் வந்தவள் அலர்விழி கட்டியிருந்த பச்சைநிற பட்டுப்புடவையை பார்த்து “என்ன அலர் சிம்பிளா புடவை கட்டியிருக்க இந்த கலர் உனக்கு நல்லாயில்லையே! வேற புடவை நான் கட்டிவிடறேன்” என்று அவளாகவே பீரோவை திறந்து ஊதாநிறத்தில் பட்டுப்புடவையை எடுத்து “இந்த புடவை கட்டிக்கோ நல்லாயிருக்கும்” என்று அலர்விழி மீது வைத்துக்காட்டினாள்.

அலர்விழிக்கோ அவளை பார்த்ததும் கோவம்தான்.. ஆனால் இவளிடம் கோவம் காட்டி பேசினால் சிங்கம் மாமா மனசு சங்கடப்படுமென்று சபை நாகரீகம் கருதி “இல்லக்கா இந்த புடவையே போதும்... பொண்ணுதானே பார்க்குறாங்க” என்றாள் மெல்லிய குரலில்.

தாரகையோ “எங்கக்காவுக்கு பச்சை கலர் புடவைதான் எடுப்பா இருக்கும்... ஊதாகலர் வேணாம்” என்று வெடுக்கென்று பேசி ரதியை முறைத்தாள்.

“தாரகை அக்காகிட்ட இப்படி பேசாதே சாரி கேளுடி” என்று அதட்டினாள் அலர்விழி.

“விடு அலரு நம்ம தங்கச்சிதானே பேசினா பேசட்டும்... நான் தப்பா நினைக்கல" என்று தாரகையின் தோளில் கைப்போட்டு "உன் காதுல இருக்க ஜிமிக்கி உனக்கு நல்லாயிருக்கு எங்க வாங்கின... சிங்கம் மாமாகிட்ட சொல்லி எனக்கும், அலர்விழிக்கும் ஒரே மாதிரி வாங்கிக்கொடுக்கச் சொல்லணும்" என்று சகஜமாக தாரகையிடம் பேசினாள்.

கோமதியோ மருமகளை பெருமையாக பார்த்தார். தனக்கு பிறகு தன் குடும்பத்தை ரதி பார்த்துக்கொள்வாள் என்று நம்பிக்கை வந்தது அவருக்கு.

அன்பரசி தட்டில் காபியை வைத்துக் கொண்டு வந்து அலர்விழியில் கையில் கொடுத்தார். “வா அலரு போகலாம்” என்று அலர்விழியை அழைத்துக்கொண்டு சபைக்குச் சென்றாள் ரதி.

அலர்விழிக்கு கால்கள் நடுங்கியது. கைகளோ தடுமாற காபி ட்ரேயை அழுத்தி பிடித்தாள்.

“அம்மாடி அலரு மாப்பிள்ளைக்கு முதல் காபி கொடுமா” என்றார் நாச்சி.

கௌதமோ அலர்விழியை சுடிதாரில் தான் பார்த்திருக்கிறான். பச்சை நிற பட்டில் செப்பு சிலையாக வந்த அலர்விழியின் அழகில் மயங்கிவிட்டான். கௌதமுமே பச்சை நிறத்தில் சில்க் காட்டன் சர்ட் போட்டிருந்தான்.

குமரனோ “அண்ணா ரெண்டு ஒரே கலர் ட்ரஸ் போட்டிருக்கீங்க... அலர் மதினிக்கு நீங்க போன் பண்ணி சொல்லி இருந்தீங்களா?” என்றான் கௌதம் காதில் கிசுகிசுப்பாக.

“ம்ம் ஆமாடா” என்றானே தவிர அவனது கண்ணெல்லாம் அலர்விழியின் மேல்தான் இருந்தது. குமரன் பேசியதை கவுதம் காதில் வைக்காமலேயே பதில் கூறி இருந்தான்.

கௌதம் பக்கம் போன அலர்விழிக்கு கைகள் தடுமாற “ஏய் நிதானமா பிடிச்சிக்கோ கீழ போட்டிராதே” என்றாள் ரதி.

“கீழே போட்டிராதே” என்று ரதி சொன்னதும் அவள் கையிலிருந்த ட்ரேயை கைநழுவ விட்டாள்.

ரதியோ ‘அபசகுனம்னு சொல்லப்போறாங்க.. இந்த கல்யாணமும் நடக்காதுடி உனக்கு! +2 படிச்ச உனக்கு டாக்டர் மாப்பிள்ளை கேட்குதா?’ என்று அவள் கண்கள் கூட வஞ்சம் கொண்டு பார்த்தது.

ட்ரே கீழே விழவில்லை. சிங்கம் ட்ரேயை பிடித்துக்கொண்டு ரதியை ஒரு பார்வை பார்த்தவன் “கவனமாக ட்ரேயை பிடிக்கறது இல்லையா அலரு” என்றவனோ ட்ரேயை அலர்விழியிடம் கொடுத்தான்.

அவளோ கண்கள் கலங்கி சிங்கத்தை பார்த்தவள் “இனி கவனமா இருக்கேன் மாமா” என்றவளோ கௌதமிடம் காபியை நீட்டினாள்.

கௌதமோ காபியை எடுத்தவன் “பதட்டப்படாத விழி” என்றான் அவள் கண்களை பார்த்தவாறே. அவள் என்ன நினைத்தாளோ தெரியாது தலையை அசைத்து மற்றவர்களுக்கு காபியை கொடுத்து நாச்சியின் பக்கம் போய் நின்றுக் கொண்டாள்.

பெரியவர்கள் “பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருக்கானு சொல்லுங்க” என்று சம்பிரதாயத்துக்கு கேட்டனர்.

கௌதமோ “எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு” என்றான் பட்டென்று.

அன்பரசியோ "பிடிச்சிருக்குனு சொல்லுடி" என்றார் அவளது தோளில் இடித்து.

“அலர்விழியா சொல்லட்டும் ஃபோர்ஸ் பண்ணாதீங்க அத்தை” என்றான் குறுநகையுடனே கௌதம்.

“எ.எனக்கு உங்ககிட்ட பே.பேசணும்” என்றாள் தைரியத்தை வரவழைத்து பேசி விட்டாள்.

சிங்கமோ “கௌதம் பேசிட்டு வா” என்றான் கட்டளையாக.

“சரிங்க அண்ணா” என்று எழுந்தவனோ அலர்விழியின் பக்கம் போக அவளோ தோட்டத்துக்கு பக்கம் சென்றாள்.

மல்லிகை பந்தலில் சாய்ந்து நின்று முந்தானையை திருகிக் கொண்டு நின்றாள் அலர்விழி. என்ன பேசுவது என்று அவளுக்கு மறந்து போனது.

கௌதமோ கையை கட்டிக்கொண்டு கிணற்றின் மீது சாய்ந்து நின்று அவளைத்தான் பார்த்திருந்தான்.

நேரம் போனதே தவிர அவளால் பேசமுடியவில்லை.

“ம்க்கும்” என்று தொண்டையை செருமியதும் நிமிர்ந்து பார்த்தாள் அலர்விழி

“என்னை உனக்கு பிடிக்கலைனு சொல்லிடலாமா?” என்றவனிடம்

“அ.அச்சோ பி.பிடிச்சிருக்குனு சொல்லலாம்” என்றாள் சிறு பிள்ளை போல கண்ணை உருட்டி

“அப்போ என்கிட்ட என்ன பேசணும் பேசுமா!” மென்மையான குரலில்.

“எ.எனக்கு பே.பேச முடியலை” என்றாள் கண்கள் கலங்கி.

அவனோ அவள் பக்கம் போக அவளோ “ஏ.ஏன் ப.பக்கம் வரீங்க எ.எனக்கு பயமாயிருக்கு” என்றாள் விசும்பியபடி ஒரு அடி தள்ளி நின்றாள்.

கௌதமோ பேண்ட் பாகெட்டிலிருந்து கைகுட்டையை எடுத்து அவளது கண்ணீரை துடைத்துவிட்டு. “உன் மனசு எனக்கு புரியுதுமா உன் லவ் மேட்டர் எனக்கு தெரியும்... அதை குத்திகிளறி உன் மனசை புண்ணாக்க விரும்பல, உன் காயத்துக்கு மருந்து போட வந்த உன் நண்பன்... உன் கழுத்துல தாலி கட்டினாலும் உனக்கு ஒரு நல்ல நண்பனாத்தான் இருப்பேன். உடனே என்னோட நீ வாழ முடியாதுனு எனக்கு தெரியும்... உனக்கு எப்போ லைப் ஆரம்பிக்கலாம்னு தோணுதோ அப்போ ஆரம்பிப்போம்! எனக்கு உறவுனு சொல்லிக்க அப்பா, அம்மா யாரும் கிடையாது.. இப்போதைக்கு உறவு வருதுனா உன் மூலம்தான்" என்றதும் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

"அப்போ அப்பா அம்மா உயிரோட இல்லையா?" என்றாள் கவலையான குரலில்.

“எனக்கு அப்பா அம்மா யாருனே தெரியாதுமா” என்றான் கரகரத்த குரலில்

“ஃபீல் பண்ணாதீங்க நான் உங்க ப்ரண்டா வரேன்ல! நான் உங்களுக்கு எல்லாமுமாக இருக்கேன்!” என்றாள் மெல்லிய குரலில். கௌதமிற்கு யாரும் இல்லையென்றதும் அவள் மனதில் ஏனோ நெருடல் வந்தது. தான் அவனுக்கு உறவாக இருக்கலாமென்று முடிவெடுத்துவிட்டாள் அலர்விழி.

“அப்போ கல்யாணம் பண்ணிக்கலாமா பிரண்ட்?” என்று கையை நீட்டினான். அவளோ கையை கொடுக்க தயங்க “ப்ரண்ட்டுக்கு கை கொடுக்கமாட்டியா?” என்று கண்ணைச்சிமிட்டி.

“என்னால சட்டுனு மனசு மாத்திக்க முடியலைங்க” என்றவளோ கையை கொடுக்கவில்லை.

“எனக்கு இன்னொரு உதவி கேட்பேன் மாட்டேனு சொல்ல மாட்டீங்களே!” என்றாள் அவனது கண்ணை பார்த்தபடியே.

“நான் உன் பிரண்ட் மா உனக்காக என் உயிரை கூட கொடுப்பேன்” என்றான் தோளை குலுக்கி

“அச்சோ அப்படி பேசாதீங்க” என்று அவசரப்பட்டு அவனது வாயை பொத்திவிட அவன் அவளை பார்க்க அவளோ “சாரி பிரண்ட்” என்று கையை எடுத்துக்கொண்டு “நாம எங்க அம்மாவீட்லயே இருக்கலாமா. எங்க வீட்ல பசங்க இல்லை... நீங்க எங்கவீட்டு மருமகனாவும் மகனாவும் இருக்க முடியுமா பிரண்ட்” என மனதில் உள்ளதை அச்சு பிசகாமல் தயங்கியபடியே கேட்டும் விட்டாள்.

“டபுள் உரிமை கிடைக்கும்போது மாட்டேnனு சொல்லுவேனா விழி” என்றான் கண்கள் மின்னச் சிரிப்புடன்.

“நீங்க எப்பவும் இப்படி சிரிச்சிட்டே இருப்பீங்களா கோபப் படமாட்டிங்களா! ஏன் கேட்குறேனா நான் கேள்விப்பட்டிருக்கேன் மருந்து குடிச்சு ஹாஸ்பிட்டல் போனா! டாக்டர் நர்ஸ் ஏன்மா இப்ப பண்ணனு திட்டுவாங்கனு!! என்கிட்ட ஒரு வார்த்தை கூட ஏன்மா மருந்து குடிச்ச... இது தப்பில்லையானு கூட என்னை திட்டாம இருந்தீங்க...” என்றாள் அவனிடம் தயங்காமல் திக்காமல் கேட்டாள் ஒரு நண்பனாக பாவித்து.

“நான் யாரையும் திட்ட மாட்டேன்மா. நீங்களே மனம் உடைஞ்சு போய்தான் மருந்து குடிக்கிறீங்க நானும் உங்களை திட்டி உங்க மனசை குத்திக்கிழிக்கணுமா? அவங்க அடுத்து முறை தற்கொலை முயற்சி பண்ணாம இருக்க அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பேன்” என்றான் மென்சிரிப்புடனே.

“உங்களுக்கு என் வீட்டுல இருக்க மனக்கஷ்டம் இல்லையே” என்று மறுபடியும் கேட்டாள் அலர்விழி.

“சீதை எங்க இருக்காளோ... இந்த ராமனும் அங்கே இருப்பான்” என்றான் கண்ணைச்சிமிட்டி.

அவளுமே தன் மனக்கவலையை மறந்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள். அவள் முழுவதுமாக மாறிவிடவில்லை. தனக்கு ஒரு உயிர் நண்பன் கிடைத்துவிட்டான் என்று சந்தோசம் மட்டுமே கொண்டிருந்தாள் பெண்ணவள்.

இருவரும் ஹாலுக்குள் வந்தவர்கள் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட அடுத்த இரண்டு வாரத்தில் முகூர்த்தம் நடத்திடலாம் என்று முடிவு செய்தனர்.

அனைவரும் சாப்பிட்டு கிளம்பும் நேரம் போய்ட்டு “வரேன் ப்ரண்ட்” என்று உதடசைத்தான் கௌதம் அலர்விழியை பார்த்து. அவளும் போய்ட்டு வாங்க என்று தலையை அசைத்தாள்.

கௌதம் பொன்வண்ணனிற்கு போன் செய்தான். “என்னடா பொண்ணு பார்க்கும் படலம் முடிஞ்சுதா கல்யாணம் எப்போடா? கல்யாணத்துக்காவது என்னை கூப்பிடுவியா?” என்றான் கிண்டலாக.

“டேய் இப்போ பொண்ணு பார்க்க உன்னை கூப்பிட்டிருந்தா... உனக்கு இங்க மரியாதை கிடைக்குமானு தெரியலை... என் நண்பன் எந்த இடத்துலயும மரியாதை இல்லாம நிற்க கூடாதுடா!” என்றான் கௌதம்.

“டேய் நண்பா நான் சும்மா ஃபன் பண்ணேன்டா... உன்னை பத்தி எனக்கு தெரியாதா என்ன? நீ தங்கச்சியை நல்லா பார்த்துக்கிட்டாவே போதும்” என்றான் சிரிப்புடன்.

“ம்ம் அலர்விழியை கண்ணுக்குள்ள பொத்தி வச்சு பார்த்துப்பேன்டா” என்றான் ஆத்மார்த்தமான குரலுடன்.

“கௌதம் யாரு போன்ல?” என்று சிங்கம் அவன் தோளில் கைப்போட “பொன்வண்ணா பேசுறான் அண்ணே!” என்றான் சிறு சிரிப்புடன் “பேசிட்டு வீட்டுக்கு வந்துடு கல்யாண வேலை நிறைய இருக்கு” என்றவனோ மீசையை தடவியபடி காரில் ஏறினான் சிங்கம்.

“பாருடா அண்ணன் தம்பி பாச மழை பொழியுறீங்க!” என்று கிண்டல் செய்தான் பொன்வண்ணன்.

“பொறாமைல பொங்காதே நண்பா!” என்று அவனிடம் போலிக்கோபத்துடன் பேசி போனை வைத்திருந்தான்.

பொன்வண்ணன் போன் பேசி திரும்ப தூரிகாவோ குளித்து விட்டு வந்து யூனிபார்ம் போட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏய் நானும் நேத்துல இருந்து பார்க்குறேன் முகத்தை தூக்கிவச்சிட்டிருக்க என்னதான் டி உனக்கு பிரச்சனை!” என்று அவளது தோளை அழுத்தமாக பற்றி தன்புறம் திருப்பினான்.

“ஏன்னு உங்களுக்கு தெரியாதா! ரொம்ப நடிக்காத டாக்டர்” என்று வெடுக்கென பேசி தலை முடியை கொண்டை போட ஆரம்பித்தாள்.

“தாத்தா பாட்டி கொண்டு வந்த சீரை திருப்பி அனுப்பிட்டேனு உனக்கு கோவமா! நான் ஏன் வேண்டாம்னு சொன்னேனு உனக்கு தெரியாதா டி! எங்க அப்பாவை போல நானும் உங்கவீட்டு சீரை வாங்க விரும்பல! நான் சாம்பாரிக்குற பணமே நமக்கு போதும்னுதான் தாத்தா அம்மாச்சி கொண்டு வந்த பணத்தை வாங்காம விட்டேன்! இதுக்கு நீ சந்தோசம்தான் படணும்... சும்மா சீன் போடாதடி” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
“நீங்க சீர் வேணாம்னு சொன்னதுல எனக்கு சந்தோசம்தான்... ஆனா அதை பக்குவமா தாத்தா அப்பத்தாகிட்ட சொல்லியிருக்கணும். எனக்கு உங்க வீட்டு சீர்பணத்துல சாப்பிட நான் ஒண்ணும் கையாலகாத்தனத்தோட இல்லைனு முகத்துல அடிச்சாப்புல சொல்றீங்க. பெரியவங்க மனசு என்ன பாடு பட்டிருக்கும் சொல்லுங்க... நானும் அந்த வீட்டு சொத்துதான் என்னை மட்டும் ஏன் வச்சிருக்கீங்க! வேண்டாம்னு திருப்பி அனுப்ப வேண்டியதுதானே” என பொரிந்து தள்ளினாள் எண்ணெய்யில் போட்ட கடுகாக.

“ஏய் சும்மா நிறுத்துடி... பழைய டயலாக்கை எத்தனை முறை கேட்கறது... என்னை அம்மாச்சியும் தாத்தாவும். பேரன் போல எப்போ நடத்துனாங்க... அவங்க மூத்த பேரன் சிங்கம் மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சான். நானெல்லாம் இரண்டாம் பட்சம்தான். முறைப்படி சீர் கொண்டு வரது யாரு உங்க அப்பா இல்ல அண்ணன்தானே கொண்டு வரணும். அதைவிட்டு பெரியவங்க கொண்டு வந்திருக்காங்க. எனக்கு மருமகன்னு என்ன மரியாதை கொடுத்திருக்காங்க உங்க வீட்டுல. உன்னை மட்டும் பார்த்தா கண்ணு பொண்ணுனு கொஞ்சுறாங்க. என்னை யாரு மதிக்குறாங்க! எல்க்ஷன் போனப்ப என்கிட்ட உன் அண்ணன் தங்கச்சி புருசன் மரியாதை கொடுத்தானா! இல்லை. உன் கையில மட்டும் ஏதோ இரகசியமா கொடுத்தான் என்னனு என்கிட்ட சொன்னியாடி!” என்று எரிந்து விழுந்தான் பொன்வண்ணன்.

பொன்வண்ணனுக்கு சிங்கம் முறைப்படி வந்து சீர் கொடுக்கவில்லை என்ற கோபம் எல்லாம் கிடையாது. சிங்கத்துக்கு மட்டும் மரியாதை பாசம் எல்லாம் கிடைக்கிறது தனக்கு யாரும் பாசம் மரியாதை கொடுக்க வில்லை என்று பொஸசிவ்வில் சீர் கொடுக்க வந்த பெரியவர்களிடம் காட்டி விட்டான்.

தூரிகாவோ “அண்ணன் தங்கைக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் கிடையாது அதுவும் வலுக்கட்டாயமா என் கழுத்துல தாலி கட்டினவங்களுக்கு பதில் சொல்லணும்னு அவசியம் கிடையாது” என முகத்தில் அறைந்தாற் போல சொல்லிவிட்டாள்.

அவனோ “ஏய்” என்று அவளை அடிக்க கையை தூக்கி விட்டான்.

“ஏன் நிறுத்திட்டீங்க டாக்டர் அடிக்க வேண்டியதுதானே! தாலி கட்டி கூட்டி வந்த பொம்மை நான்... நீங்க என்ன வேணா செய்யலாம்” என்று குலுங்கி அழுவதை பார்த்து "சாரிடி" என்று அணைத்துக்கொண்டான்.

பொன்வண்ணனுக்கு வீரய்யன் நாச்சியும் சிங்கத்திடம் காட்டும் பாசம் தன்னிடம் கட்டவில்லையென்று ஏக்கத்தில் மனம் பாரம் அழுத்தம் தாங்கமுடியாமல் தன் கோவத்தை தூரிகாவிடம் காட்டிவிட்டான்.
 
Status
Not open for further replies.
Top